audio audioduration (s) 10.7 32.7 | transcription stringlengths 88 266 |
|---|---|
அனைத்து மொழி எழுத்துக்களும் அ என்னும் எழுத்தினை. முதலாகக் கொண்டு தொடங்குகின்றன அதேபோல். இந்த உலகமும் ஆதி பகவன் என்னும். கடவுளை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. | |
தூய அறிவின் வடிவமாக விளங்கும் கடவுளின். திருப்பாதங்களை வணங்காமல் இருப்பவர்கள். படித்த படிப்பினால் என்ன பயனை அடைவர்? ஒன்றுமில்லை | |
அன்பர்களின் அகமாகிய மலரில் அமர்ந்திருக்கும். கடவுளின் பெருமைமிக்க திருப்பாதங்களை. தொடர்ந்து வணங்குகிறவர்கள் இந்த நிலவுலகில். நீண்ட நாள் வாழும் தகுதியைப பெறுதல். | |
விருப்பு, வெறுப்பு இல்லாத. கடவுளின் திருப்பாதங்களை. இடைவிடாமல் வணங்குகிறவர்களுக்கு இயங்கும். எப்பொழுதும் துன்பமே இல்லை. | |
கடவுளின் உண்மையான அருளை விரும்பி. அவன் புகழ் பாடும் அன்பர்களுக்கு. அறியாமையால் ஏற்படும் நல்வினை. தீவினை ஆகிய இருவகை வினைகளும். எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. | |
ஐம் பொறிகள் வழியாக வரும். ஆசைகளை நீக்கிய ஆண்டவனின். உண்மையான ஒழுக்க நெறியின்படி நடப்பவர்கள். இந்த நில உலகில். நீண்ட காலம் வாழ்வார்கள். | |
தன்னுடன் ஒப்பிட முடியாத. உயர் குணங்களைக் கொண்ட இறைவனின் திருவடிகளை. அடையாதவர்களால் மனக்கவலையை. மாற்றவே முடியாது. | |
அறக்கடலாக விளங்கும் கடவுளின். மலர் பாதங்களை தொடர்ந்து நினைத்து. வணங்காதவர்களால் பொருள் இன்பம், ஆசை. முதலான பிற கடல்களை கடக்க முடியாது. | |
எட்டு குணங்களை உடைய இறைவனின் பாதங்களை. வணங்காதவர்களின் தலைகள். கேட்க முடியாத காதுகள். பார்க்க முடியாத கண்கள் போல். பயனில்லாமல் இருக்கும். | |
இறைவனின் திருவடிகளை இடைவிடாது. நாளும் வணங்குகிறவர்கள் பிறப்பாகிய. பெரிய கடலினை மிக எளிமையாகக் கடப்பார்கள். வணங்காதவர்கள் பிறவிக் கடலை. கடக்க முடியாமல் துன்பப் படுவர். | |
மழைநீர் வானத்திலிருந்து பெய்வதால்தான். இந்த உலகம் வளமாக உள்ளது, எனவே. உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மழைநீர். அமுதம் போன்றது என்பதை உணர வேண்டும். | |
உண்பவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை விளைவிப்பதற்கு உதவுவதுடன். உண்டவின் பருகுவதற்கும். உணவாகப் பயன்படும் சிறப்பினை உடையது மழைநீர். | |
பெரிய கடல்நீர் இந்த நில உலகத்தைச் சுற்றியுள்ளது. இருப்பினும் வானத்திலிருந்து மழை பெய்யவில்லை என்றால். இந்த உலகில் வாழும் உயிர்களை பசியானது. உள்ளே நிலைத்திருந்து துன்பப்படுத்தும். | |
உலகத்து உயிர்களுக்கு. வானத்திலிருந்து கிடைக்கும் மழைநீர். வருமானம் ஆகும், அது கிடைக்கவில்லை என்றால். உழவர்களும் உழு கருவிகளைக் கொண்டு. விடமாட்டார்கள் | |
வானத்திலிருந்து பெய்யாமல். உயிரினங்களின் வாழ்வை கெடுக்கும் திறனுடையது மழை. அதுவே வளம் கெட்டு வாடும் உயிர்களுக்கு. துணையாய இருந்து வாழ்விக்கும் திறமையும் கொண்டது. | |
வானத்திலிருந்து சிறிதளவேனும். மழை பெய்யவில்லை என்றால் இந்த நில உலகில். ஓரறிவு உயிராகிய பசுமையான புல்லையும். காண முடியாது | |
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு சென்று. அதையே வானத்திலிருந்து மழை நீராக பெய்யவில்லை என்றால். மிகப்பெரிய கடலும் நீர்வளம் இல்லாமல். குறைந்துவிடும் | |
வானத்திலிருந்து மழை பெய்யாமல் இருக்குமானால். இந்தப் பெரிய நில உலகில் தெய்வங்களுக்குச் செய்யும். வழிபாடும் திருவிழாவும் நடைபெறாது. | |
மழை பெய்யவில்லை என்றால் இந்த நில உலகில். பிறருக்கு கொடுக்கின்ற தானமும். தம்மை உயர்த்தும் தவமும் இல்லாமல் போய்விடும். | |
எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் தண்ணீர் இல்லாமல். உலக வாழ்க்கை நடைபெறாது. எனவே. வானம் மழை பெய்யாதிருக்கும் ஆனால். இந்த உலகில் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். | |
சிறந்த ஒழுக்கத்தில் நிலைத்திருந்து. பற்றுக்களை விட்டவர்களின் பெருமையை சிறந்த நூல்கள். பாராட்டிச் சொல்கின்றன. | |
இந்த உலகில் இறந்தவர்களை கணக்கிட்டுச் சொல்ல முடியாது. அதைப்போன்று பற்றுக்களை. துறந்தவர்களின் பெருமையையும் அளவிட முடியாது. | |
பிறப்பு பிறவாமை என்ற. இரண்டு நிலைகளையும் ஆராய்ந்து அறிந்து. அறநெறியில் வாழ்பவர்களின் பெருமைதான் உலகத்தில். மிகவும் உயர்ந்தது. | |
அறிவு என்னும் அங்குசத்தால் மெய் வாய். கண் மூக்கு செவி என்னும். ஐம் பொறிகளாகிய யானையை அடக்கி ஆள்பவன். வீடு பேற்றிக்கு விதையாகும் சிறப்புடையவன். | |
ஐம்பொறிகளின் ஆசைகளை அடக்கிய வனுடைய ஆற்றலுக்கு. வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனை. தகுந்த சாட்சி ஆவான். | |
கடினமான செயல்களையும் சிறப்பாகச் செய்யும் திறமை உடையவரே. பெரியோர் அதுபோல் செய்ய முடியாதவர்களும். செய்ய முடிந்தவற்றைச் செய்யாதவர்களும் சிறியோர். | |
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம். என்னும் ஐந்து வகைத் தன்மைகளைக் கொண்ட ஐம் பொறிகளையும். ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். | |
உலகில் நிறைவான அறிவுடைய சான்றோர்களின் பெருமையை. அவர்கள் மந்திரங்களாகச் சொல்லியுள்ள. மணிமொழிகளை காட்டிவிடும். | |
நல்ல குணங்களாகிய. மலையின் மேல் ஏறி நின்ற பெரியோர். ஒரு கணப்பொழுது கோபம் கொண்டாலும். அந்தக் கோபத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து. காப்பாற்ற முடியாது. | |
அனைத்து உயிர்களிடத்தும் உண்மையான அன்பையும். அருளையும் வழங்கி தாமும் அவற்றை. பேணி நடக்கும் உயர்ந்த. அறத்தின் காவலர்களே அந்தனர் என. அனைவராலும் போற்றப்படுவர் | |
அறம் சிறப்பையும் செல்வத்தையும் அழிக்கும். ஆதலால் உயிர்களுக்கு. அத்தகைய சிறந்த அறத்தைக் காட்டிலும் நன்மையானது. வேறு என்ன இருக்க முடியும் ஒன்றும் இல்லை. | |
ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை விட. நன்மை தருவது வேறு ஒன்றுமில்லை அதேபோல். அறத்தைப் போற்றாமல் மறத்தலை விட. தீமை தருவதும் வேறு இல்லை. | |
செய்யக்கூடிய அளவு செய்யக்கூடிய முறையில். செல்லும் இடங்களிலெல்லாம் இடைவிடாது. தொடர்ந்து அறத்தைப் போற்றிச் செய்ய வேண்டும். | |
ஒருவன் தன் மனத்தில். குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே சிறந்த அறம் ஆகும். மனத் தூய்மை இல்லாத மற்றச் செயல்கள் எல்லாம். வெறும் ஆரவாரமே தவிர அறம் அல்ல. | |
பொறாமை ஆசை கோபம். பிறரைப் புண்படுத்தும் கடுமையான சொற்கள் ஆகிய. இந்த நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல். அவற்றை ஒதுக்கி வாழ்வதே அறம் ஆகும். | |
வயதான காலத்தில் அறம் செய்யலாம். என்று தள்ளிப் போடாமல் இளமை முதற்கொண்டே. அறம் செய்ய வேண்டும், அத்தகைய அறமே. உடலிலிருந்து உயிர் போகும் பொழுது. அழியாத துணையாய் அமையும். | |
பல்லக்கினை சுமந்து செல்பவன். அந்தப் பல்லக்கில் அமர்ந்து செல்பவன் ஆகியோரிடையே உள்ள. ஏற்றத்தாழ்வை வைத்துக்கொண்டு அறத்தின் பயன் இதுதான். என்று சொல்ல வேண்டாம். | |
அறம் செய்யத் தவறிய நாள் என்று ஒன்று ஏற்படாமல். தொடர்ந்து ஒருவன் அறத்தைச் செய்ய வேண்டும் அதுவே. அவன் மறுபிறவி எடுக்கும் வழியை அடைக்க உதவும். கல்லாய் அமையும். | |
அறநெறியால் கிடைக்கும் இன்பமே உண்மையான. இன்பமாகும் மற்றவை இன்பங்கள் போலத் தோன்றினாலும். பின்னர் துன்பத்தில்தான் முடியும். முன்னர் பெற்ற புகழையும் அழிக்கும். | |
ஒருவன் கிடைத்தற்கரிய தன் வாழ்நாளில். முயன்று செய்ய வேண்டியது அறமே செய்யாமல். காத்துக்கொள்ள வேண்டியது பழியே. | |
தன் பெற்றோர் மனைவி மக்கள். ஆகிய மூவருக்கும் நல்ல வழியில். நின்று தகுந்த துணையாக விளங்குபவனே. சிறந்த குடும்பத் தலைவன் ஆவான். | |
துறவிகள் ஏழைகள். யாரும் ஆதரவு இல்லாமல் தன்னிடம் வந்து. யாசிப்பவர்கள் ஆகியோருக்கும் குடும்பத் தலைவன். துணையாக இருக்க வேண்டும். | |
தன் குடிபிறந்த முன்னோர் தெய்வம். விருந்தினர் சுற்றத்தார் தான். என்ற ஐந்து வகையினரையும். அறநெறி தவறாமல் காப்பாற்றுதலே. குடும்பத் தலைவனின் சிறந்த கடமையாகும். | |
பொருள் தேடும்போது அறவழியில் தேடி. செலவு செய்யும்போது பகுத்து உண்பதை கடைப்பிடித்தால். அந்த குடும்ப வாழ்க்கையில் ஒழுங்கு எப்போதுமே. குறைவதில்லை | |
குடும்ப வாழ்க்கை. அன்பும் அறணும் உடையதாய் விளங்க வேண்டும். அதுவே அந்தக் குடும்ப வாழ்க்கையின் பண்பும். பயனும் ஆகும். | |
ஒருவன் அறவழியில். குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும் அவன். அதைவிட்டு வேறு வழியில் சென்று பெறத்தக்கது என்ன? ஒன்றுமில்லை. | |
அறவழியில் குடும்பத்தை நடத்துகிறவன். நடத்த முயல்கிறவன். பிற வழிகளில் வாழ்கிறவர்களை விடவும் சிறந்து. விளங்குபவன் ஆவான். | |
மற்றவரையும் அறவழியில் வாழச் செய்து. தானும் தனக்குரிய அறவழியில். வாழுகின்ற குடும்ப வாழ்க்கை. தவம் செய்வாரைக் காட்டிலும் சிறப்புடைய வாழ்க்கை ஆகும். | |
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது. குடும்ப வாழ்க்கையே ஆகும் அந்தக் குடும்ப வாழ்க்கையும். பிறரால் பழிக்கும் குற்றங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால். இன்னும் சிறப்புடையதாகும். | |
இந்த உலகில் வாழவேண்டிய முறைப்படி. அறவழியில் வாழ்கின்றவன் வானத்தில் வாழ்கின்ற. தெய்வங்களுள் ஒன்றாக வைத்து மதிக்கப்படுவான். | |
குடும்ப வாழ்க்கைக்குத் தகுந்த நல்ல குணங்களைக் கொண்டு. தன் கணவனுடைய வருமானத்திற்குத் தகுந்தபடி வாழ்பவளே. சிறந்த குடும்பத் தலைவி ஆவாள். | |
குடும்ப வாழ்க்கைக்குத் தகுந்த நல்ல குணம். மனைவியிடம் இல்லையென்றால் அவள் கணவன். எவ்வளவு பெருமைகளைப் பெற்றிருந்தாலும் ஒரு பயனும் இல்லை. | |
மனைவி சிறந்த குணங்களை உடையவளாக இருந்தால். குடும்பத்தில் இல்லாதது என்று. எதுவும் இல்லை, அவ்வாறு இல்லையெனில். குடும்பத்தில் உள்ளது என்று எதுவும் இல்லை. | |
ஒரு பெண்ணிடம் கற்பு என்னும் உறுதியான. மனவலிமை இருந்துவிட்டால், அந்தப் பெண்ணை விட. பெருமை உடையவை வேறு என்ன இருக்கின்றன? | |
பிற தெய்வங்களை வணங்காமல் துயில் எழும்போதே. தன் கணவனை தெய்வமாக வணங்கி எழுபவள் பேய். என்று சொன்னால் மழை பெய்யும். | |
கற்பு நெறியில் தன்னைக காத்துக்கொண்டு. தன் கணவனையும் காப்பாற்றி தகுதி நிறைந்த. புகழையும் காத்து உறுதி தவறாமல் வாழ்கின்றவளே. பெண் | |
பெண்களை காவல் வைத்துக் காப்பாற்றும் முறை. எத்தகைய பயனைத் தரும் அவர்கள் நிறை. என்னும் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்வதே. சிறந்த காவலாகும். | |
கணவனைப் போற்றி. கடமைகளை நிறைவாகச் செய்யும் மகளில். மிகுந்த சிறப்புகளைக் கொண்ட. மேலுலக வாழ்வைப் பெறுவர். | |
தன் புகழை விரும்பிக் காப்பாற்றும் மனைவியைப் பெறாத. கணவனால் தன்னை. இகழ்ந்து பேசும் பகைவர்கள் முன் சிங்கம் போல். பெருமிதமாய் நடக்க முடியாது. | |
குடும்பத்திற்கு மங்கலம் என்று சொல்வதே. நல்ல மனைவியைப் பெற்றிருத்தல் ஆகும். அதற்கு நல்ல அணிகலன்கள் என்பவை. நல்ல மக்களைப் பெறுவதே. | |
ஒருவன் பேரு பெறவேண்டிய செல்வங்கள் மிகச் சிறந்த செல்வம். அறிய வேண்டியவற்றை. அறியக்கூடிய குழந்தைகளைப் பெறுவதே ஆகும். | |
பழியில்லாத பண்புகளைக் கொண்ட. குழந்தைகளைப் பெறுகின்ற பெற்றோரை. எழுகின்ற பிறவிகளில் எல்லாம் துன்பங்கள். தொடராமல் இருக்கும். | |
எல்லோரும் தம் குழந்தைகளை தமது செல்வம். என்று ஆசையுடன் கூறி மகிழ்வர் அவர்கள். நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அவர்களின். வினைப் பயனால் உண்டாவதாகும். | |
தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக் கைகளால். பிசைந்த உணவு பெற்றோருக்கு. அமுதத்தைக் காட்டிலும் மிகுந்த. இனிமையைத் தரும். | |
தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு. அதன் இனிமையை அனுபவிக்காதவர்கள். குழல் இசையும் யாழ் இசையும். இனிதாக உள்ளன என்று கூறுவர். | |
படித்தவர் நிறைந்த அவையில். அனைவருக்கும் முன்னவனாக. இருக்கத்தக்க வகையில் தன் மகனை கல்வியில். சிறந்தவனஆக்குவதே தந்தை மகனுக்குச் செய்யும். உதவியா | |
தம் குழந்தைகள் தம்மை விட. சிறந்த அறிவுடையவர்களா் விளங்குவது. உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும். இன்பத்தைத் தருவதாகும். | |
தன் மகன் ஆன்றோர்களால் பாராட்டப்படும். சிறந்த சான்றோம் என்பதைக் கேட்கும் தாய். அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும். மிக அதிகமான மகிழ்ச்சியை அடைவான். | |
மகன் தன் தந்தைக்கு செய்யத்தக்க உதவி என்ன தெரியுமா? இந்தப் பிள்ளையைப் பெற இவன் தந்தை. என்ன தவத்தை செய்தானோ என்று. பிறர் புகழ்ந்து சொல்லும் பாராட்டுரை தான். | |
பிறர் அரியா வண்ணம். அன்பினை அடைத்து வைக்கும் தாழ்ப்பால் இல்லை. அன்புடையவர்கள் சிந்தும் கண்ணீரே. அவர்களின் அன்பினை. பலரும் அறிய வெளிப்படுத்தி விடும். | |
அன்பு இல்லாதவர்கள் அனைத்துப பொருட்களையும். தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழ்வர். அன்புடையவர்கள் தம் உடலையும். பிறருக்கு உரிமையாக்கி மகிழ்வர். | |
அருமையான உயிருக்கு. உடலுடன் பொருந்தி இருக்கின்ற உறவு. அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன். என்று சொல்வர். | |
அன்பு மற்றவர்களிடம். விருப்பம் உடையவராய் வாழும் தன்மையைத் தரும். அதுவே அனைவரிடத்திலும் நட்பு. என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பையும் தரும். | |
உலகில் மகிழ்ச்சியுடன் வாழ்கிறவர்களின் உயர்வுக்குக் காரணமாய் விளங்குவது. அனைவரிடமும் அன்பு செய்து வாழும். வாழ்க்கையே ஆம் | |
அறத்திற்கு மட்டும்தான். அன்பு துணை என்று சொல்லுபவர்கள் அறியாதவர்கள். ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும். துணையாக விளங்குகிறது அன்பு அதுவே. மரக் கருணை என்று சொல்லப்படும். | |
எலும்பு இல்லாத உயிர்களை வெயில். மிக எளிதில் காய்த்து துன்புறுத்தும் அதுபோல். அன்பு இல்லாத உயிர்களை. அறம் வெறுத்து வருத்தும். | |
உள்ளத்தில் அன்பு இல்லாமல். வாழும் உயிர்களின் வாழ்க்கை வளம் இல்லாத. பாலை வனத்தில் பட்டமரம். தளிப்பதை போன்றதாகும். | |
உடலின் உள்ளத்தில் உள்ள. அகவஉறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு. உடலின் வெளியில் உள்ள புற உறுப்புகள் எல்லாம். என்ன பயனைத் தரும்? | |
அன்பின் வழியில் இயங்கும் உடலே. உயிர் வாழும் உடம்பாகும். அன்பு இல்லாதவர்களின் உடம்பு. எலும்பை தோலால் போர்த்திய வெறும் உடம்பாகும். | |
அமுதமாக இருந்தாலும். விருந்தினரை வெளியில் இருக்கும்படி செய்துவிட்டு. தாம் மட்டும் தனித்து உண்பது என்பது. விரும்பத்தகாத செயலாகும். | |
தன்னைத் தேடி நாடி வரும் விருந்தினரை. நாள்தோறும் போற்றுகின்ற வனுடைய வாழ்க்கை. ஒருபோதும் வறுமையால் வருந்தி கெட்டுப்போவது இல்லை. | |
நல்ல விருந்தினராய் வந்தவரை. முக மலர்ச்சியுடன் வரவேற்று. போற்றுகின்ற வனுடைய வீட்டில். செல்வம் கொடுக்கும் திருமகள். மனமகிழ்ச்சியுடன் தங்குவாள். | |
விருந்தினரை முதலில் போற்றி உணவளித்து. பின் மிஞ்சும் உணவை உண்டு வாழ்கின்றவர் நிலத்தில். விதையும் விதைக்க வேண்டுமோ தேவையில்லை. | |
வந்த விருந்தினரைப் போற்றி வழியனுப்பிவிட்டு. இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து காத்திருப்பவன். வானுலகில் உள்ளவர்களுக்கு. நல்ல விருந்தினன் ஆவான். | |
விருந்தோம்பலாகி வேள்வியின் பயன். இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்ல முடியாது. எந்த அளவிற்கு ஒருவன்? விருந்தினரை போற்றுகின்றான் அந்த அளவிற்கு அது. பயன் தரும். | |
விருந்து என்னும் வேள்வியை மேற்கொள்ளாதவர்கள். செல்வர்களாய் இருந்து. அதனை இழக்கும்போது செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியவில்லையே? என்று வருந்துவார்கள். | |
செல்வம் உள்ள காலத்தில் வறுமை எது தெரியுமா? விருந்தினரைப் போற்றாமல் வாழ்வதுதான் இது. விருந்தோம்பலை போற்றாத அறியாமையாகும். அஃது அறிவுஇல்லாதவர்களிடம் உள்ளதாகும். | |
அணிச்சப்பூ முகர்ந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மகிழ்ச்சி இல்லாமல் வேறுபட்டுப் பார்த்தாலும். விருந்தினர் முகம் வாடி ஒதுங்கி விடுவர். | |
அறநெறியை அறிந்து சிறந்த முறையில். வாழ்பவர்களின் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள். வஞ்சனை இல்லாததாயும். இனிமையான தாயும் இருக்கும். | |
உள்ளம் விரும்பி ஒருவருக்குப் பொருள் தந்து உதவுவதைக் காட்டிலும். முகம் மலர்ந்து இனிமையான சொற்களைப் பேசுவது. மிகவும் உயர்ந்தது. | |
முகம் மலர்ச்சியோடு இனிமையாகப் பார்த்து. உள்ளன்போடு இனிமை தருகின்ற. பயனுள்ள சொற்களைப் பேசுவதே அறம் ஆகும். | |
அனைவரிடமும் மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடிய. இனிமையான சொற்களையே பேசுபவர்களுக்கு. துன்பத்தைக் கொடுக்கும் வறுமை என்பதே. இல்லாமல் போகம். | |
பணி உள்ளவனாகவும். இனிமையான சொற்களைப பேசுபவனாகவும் விளங்குவதே. ஒருவனுக்கு உண்மையான அணிகலன்கள் ஆகும். மற்ற அணிகலன்கள் எவையும். அணிகலன்கள் ஆகா. | |
பிறருக்கு நன்மை தரும் இனிய சொற்களை. ஆராய்ந்து அறிந்து இனிமையாகப் பேசினால். அவனுக்கு பாவங்கள் தேய்ந்து குறையும். அறம் வளர்ந்து பெருகும். | |
பிறருக்கு நல்ல பயனைக் கொடுக்கும் இனிமையான. நல்ல குணத்திலிருந்து நீங்காத இனிய சொற்கள். வழங்குவோருக்கு இன்பம் தந்து. நன்மையும் அளிக்கும். | |
பிறருக்கு துன்பம் கொடுக்காத இனிமையான சொற்கள் வழங்குவோனுக்கு. இந்த உலகிலும் மறு உலகிலும். இன்பத்தை அளிக்கும். | |
பிறர் சொல்லும் இனிமையான சொற்கள். தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பின்னரும். மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவது. என்ன பயன் கருதியோ? | |
இனிமையான சொற்கள் இருக்க. அவற்றைச் சொல்லாமல் கடுமையான சொற்களைச் சொல்லுவது. பழத்தை விடுத்து. காயைப பறித்து உண்பதற்கு ஒப்பாகும். | |
நாம் ஒருவருக்கு. எந்த ஓரு உதவியும் செய்யாத பொழுதும் அவர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல். நமக்குச் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகையும். விண்ணுலகையும் கொடுத்தாலும் ஒப்பாகாது. | |
தேவைப்படும் நேரத்தில் ஒருவன் செய்த உதவி. அளவில் சிறியதாக இருந்தாலும். அதன் பயனை நினைத்துப் பார்த்தால் அது. உலகத்தை விட மிகப் பெரியதாகும். |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 5