text
stringlengths
388
164k
நேற்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸின் அடுத்த பதிப்பான Windows 11 ஐ அறிமுகப்படுத்தியது. முதலில் அடுத்த விண்டோஸ் பதிப்பாக windows 10 x வர இருந்தது. இது இரட்டை டிஸ்பிளே கருவிகளுக்காக வர இருந்தது. ஆனால் நடுவில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அதை கைவிட்டுவிட்டு இப்பொழுது அனைவருக்குமான windows 11 பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான ஐந்து மாற்றங்களை கீழே தந்துள்ளேன். மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஸ்டோர் பெரிய அளவில் மாற்றப் படுகிறது. இப்பொழுது இருப்பதை விட அதிக அளவில் மென்பொருட்கள் இதில் கிடைக்கும் என தெரிகிறது. இப்பொழுது ஆன்ட்ராய்ட் செயலிகளை நேரடியாக கணிணியில் உபயோகிக்க இயலாது. ஆனால் விண்டோஸ் 11 ல் அமேசான் ஆப் ஸ்டோர் மூலம் ஆன்ட்ராய்ட் செயலிகளை கணிணியில் உபயோகிக்க இயலும் அலெக்ஸாவில் உபயோகிப்பது மூலம் குரல் வழி கட்டளைகள் குடுக்க இயலும். இதை பற்றி இன்னும் விரிவான தகவல்கள் வர வேண்டும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மென்பொருள் விண்டோஸ் உடன் இணைக்கப்படும் ஒரே கணிணியில் பல்வேறு டெஸ்க்டாப் ஸ்க்ரீன் உருவாக்கிக் கொள்ளலாம். இது லினக்ஸில் ஏற்கனவே உள்ள ஒரு விஷயம். இது எல்லாமே functonality பற்றிய மாற்றங்கள். இது தவிர ஸ்டார்ட் மெனு இடம் மாறுவது, ஒவ்வொரு விண்டோவின் மூலைகளும் ரவுண்ட் ஆவது பற்றியெல்லாம் விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்தப் பின் பதிவாகப் போடுகிறேன். இதுவரை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்யும் முறைகளை கூறவில்லை. எனவே இணையத்தில் இப்பொழுது சுற்றும் விண்டோஸ் 11 பாதிப்புகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் 10 லைசென்ஸ் பதிப்பு வைத்திருந்தால் விண்டோஸ் 11 இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 , வழக்கமான விண்டோஸ் அப்டேட் மூலம் இன்ஸ்டால் ஆகி விடும். அதற்கு இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும். நீங்கள் விண்டோஸ் இன்ஸைட் பிரீவ்யூ மூலம் சோதனை செய்பவர் என்றால் அதில் “Dev Channel ” ( இது பீட்டாவிற்கும் முந்தைய பதிப்பு ) உபயோகிப்பவர் எனில் அடுத்த வாரம் windows 11 அப்டேட் வரும். Hardware requirements for Windows 11 Processor: 1 gigahertz (GHz) or faster with 2 or more cores on a compatible 64-bit processor or System on a Chip (SoC) RAM: 4 gigabyte (GB) Storage: 64 GB or larger storage deviceNote: See below under “More information on storage space to keep Windows 11 up-to-date” for more details. System firmware: UEFI, Secure Boot capable TPM: Trusted Platform Module (TPM) version 2.0 Graphics card: Compatible with DirectX 12 or later with WDDM 2.0 driver Display: High definition (720p) display that is greater than 9” diagonally, 8 bits per colour channel Internet connection and Microsoft accounts: Windows 11 Home edition requires internet connectivity and a Microsoft account to complete device setup on first use.Switching a device out of Windows 11 Home in S mode also requires internet connectivity. Learn more about S mode here.For all Windows 11 editions, internet access is required to perform updates and to download and take advantage of some features. A Microsoft account is required for some features. உங்கள் கணிணியில் விண்டோஸ் 11 இன்ஸ்டால் ஆகுமா என சோதனை செய்ய இந்த தளத்திற்கு சென்று Microsoft PC Health Check Tool டவுன்லோட் செய்து சோதித்து பார்க்கவும். நீங்கள் ஒரிஜினல் வர்ஷன் இன்ஸ்டால் செய்யாவிடில் இதை தவிர்க்கவும்.
சென்னை: சென்னை தீவுத்திடலில் களைகட்ட கூடிய உணவுத் திருவிழாவில் விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. முன்று நாட்கள் உணவுத் திருவிழாவின் இறுதி நாளான இன்றைய தினம் காலை முதல் பொதுமக்களுடைய வருகை என்பது மிக அதிக அளவில் இருப்பதை உணவுத் திருவிழாவில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உணவுத் திருவிழாவில் உணவு பாதுகப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரிய பாரம்பரிய உணவுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த உணவுத் திருவிழாவானது சென்னை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக முதல் இரண்டு நாட்களும் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாமன வரவேற்பை பொதுமக்களிடம் பெற்றிருப்பதையும் அதைநேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உணவுத் திருவிழாவில் வந்து கொண்டிருகின்றனர். குறிப்பாக இங்கு வரக்கூடிய பொதுமக்கள் பராம்பரிய உணவு வகைகளை வாங்கி செல்வது மட்டுமின்றி அது தொடர்பான தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலை முதல் பொதுமக்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் என்பதும் நடைபெற்று வர அந்த கலை நிகழ்ச்சிகளை இளைஞர், பெரியவர்கள் என வௌஅது வித்தியாசமின்றி அனைவரும் கண்டு ரசித்து கொண்டிருகின்றனர். நடைபெற்று வரக்கூடிய உணவித் திருவிழாவில் இன்று இறுதி நாள் என்பதால் இரவு 10 மணி வரை நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருக்கக்கூடிய காரணத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடிதலாக செய்யப்பட்டிருக்கிறது. உணவுகளுடைய இருப்பும் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இங்கு இருக்கக்கூடிய பிரியாணி வகைகளில் பீப் பிரியாணி அதிக அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் தெரிவிக்கக்கூடிய கருத்தானது பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த உணவு வகைகள், நெல் வகைகள், தானிய வகைகள் மற்றும் இதன் மூலம் சமைக்க கூடிய உணவு பொருட்கள் இது குறித்த கருத்து பரிமாற்றங்கள் என்பது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு வரக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி நாள் என்பதனால் விழிப்புணர்வு நடைப்பயணம் பேரணி என்பது நடைபெற்றிருந்தது. இதில் பங்கேற்ற ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் உணவு பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு சுற்றி வந்து விழிப்புணர்வு மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இறுதிநாளில் உணவித் திருவிழாவானது களை கட்டியிருக்கிறது. Tags: சென்னை களை கட்டுகிறது உணவுத் திருவிழா இறுதிநாள் பொதுமக்கள் படையெடுப்பு மேலும் செய்திகள் தமிழகம் முழுவதும் 220 ஜோடிகளுக்கு திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருமணம்: சென்னை திருவான்மியூரில் இன்று நடக்கிறது கொரோனா பணியில் தொற்று பாதித்து உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு மாற்றுத்திறனாளிகள் தினம் தலைவர்கள் வாழ்த்து தமிழ்நாடு ஊர்காவல் படையினரின் பணிநாள் குறைப்பை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வடசென்னை அனல் மின்நிலைய 5 அலகுகளிலும் மின் உற்பத்தி தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
'ஃபுல்மூன் சென்சஸ்' சரியான சாய்ஸ்! பரம்பிக் குளத்தின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு பௌர்ணமி இரவு முழுக்கத் தங்கலாம். ஆனால், அதற்கு உங்களுக்கு ரொம்பவே தில் தேவைப்படும்! டாப் ஸ்லிப்பில் இருந்து 30 கி.மீ. தூரத்தில்இருக் கிறது பரம்பிக்குளம். இன்னமும் வெளியுலகம் அறியாத ரகசியங்களைப் பதுக்கிவைத்திருக்கும் வனப் பகுதி. டாப் ஸ்லிப் தாண்டியதுமே குளிர் டிகிரி டிகிரியாய் எகிறியடிக்கிறது. குறுகலான மலைப் பாதையெங்கும் ஓங்கி உயர்ந்த தேக்கு மரங்கள். ஆனைப்பாடி எகோ சென்டர் அலுவலகத்தில் வரவேற்கிறார் வன இலாகா அதிகாரி சஞ்சயன் குமார் ஐ.எஃப்.எஸ். வனக் குடில்களில் சின்ன ஓய்வுக்குப் பிறகு தொடர்கிறது பயணம். வனத் துறை ஜீப் செல்லும் வழியெல்லாம் மூங்கில் மரங்கள். ஆங்காங்கே மேய்ந்துகொண்டு இருக் கின்றன மான் கூட்டங் கள். சாலையைக் கடக்கின்றன மயில்கள். கும்பலாக நின்று ஜீப்பை முறைக்கின்றன காட்டெருமைகள். காட்டெருமைதான் பரம்பிக்குளம் வனச் சின்னம். ஜீப் ஓரிடத்தில் நிற்க, சில நிமிடங்கள் நடைப் பயணம். அச்சமூட்டுகிறது வன அமைதி. தூரத்தில் எங்கெங்கோ பறவைச் சத்தங்கள். சிறிது தூரத்தில் காடு விலகிக் கண் முன் விரிகிறது பெரிய ஏரி. கரை யோரம் காத்திருக்கிறது மூங்கில் தோணி. அரை மணி நேர ட்ரிப். லைஃப் ஜாக்கெட் கட்டாயம். ஏரித் தண்ணீரை மூங்கில் கட்டை கிழிக்கும் 'ப்ளக் ப்ளக்' சத்தம் மட்டுமே. தூரத்துக் கரையில் ஒரு கறுப்பு முதலை இளம் வெயிலில் சன்பாத் எடுத்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் மான்கள் கூட்டமாகத் தண்ணீர் குடிக்கின்றன. ஏரியில் இருந்து ஒரு மணி நேரம் மோட்டார் போட்டில் தண்ணீரைக் கிழித்தால், ஏரிக்கு நடுவே 4 சதுர கி.மீ. பரந்துகிடக்கிறது பறவைக்கூடு தீவு. தண்ணீர் மட்டம் எவ்வளவு உயர்ந்தாலும் அந்தப் பகுதி மட்டும் மூழ்காதாம். வேம்பு, சந்தனம், எட்டி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பகல் வெளிச்சத்தில் இந்தச் சங்கதிகளை முடித் தால், நிலா வெளிச்சம் வரவேற்கிறது ஃபுல் மூன் சென்சசுக்கு! ஜொலிக்கும் முழு நிலவு வெளிச்சத்தில் காட்டை யும், வன விலங்குகளையும் கொஞ்சம் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மர வீட்டில் தங்கி ரசிப்பது தான் ஃபுல் மூன் சென்சஸ். அந்த மர வீட்டை அடைய எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் காட்டின் மையப் பகுதியை அடைய வேண்டும். இரவு உணவை பார்சல் எடுத்துக்கொள்ள வேண் டும். இரண்டு வழிகாட்டிகள், ஒரு பாதுகாவலர் உடன் வருவார்கள். ஒரு சின்ன ஏரிக்கரையில் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த மரக் குடில். குறுகலான மரப்படிகள், வீட்டைச் சுற்றி நடக்க நடைபாதை. வெளிச்சத்தைக் கண்டால் விலங்கு கள் ஓடிவிடும் என்பதால் மின் இணைப்பு கிடையாது. குடிலெங்கும் வெளவால்களின் வீச்சம். குடிலில் இருக்கும்போது மூச்சைக்கூட அடக்கித் தான் விட வேண்டியிருக்கும். சத்தம் காட்டினால் விலங்குகள் சுதாரித்து காட்டுக்குள் மறைந்து விடும். மாலை 6 மணி... மங்கிய வெளிச்சத்தில் நான் கைந்து உருவங்கள் அசைந்தன. செந்நாய்க் கூட்டம் இறந்த காட்டெருமையைக் கூறு போட்டுக் கொண்டு இருந்தன. கிட்டத்தட்ட நரியைப் போல இருக்கும் இந்தச் செந்நாய்கள் மான் குட்டிகளைத் துரத்தி வேட்டையாடுமாம். இரவு 8.20 மணி... இப்போது வந்தவை சாம்பர் மான்கள். இவை கொஞ்சம் அசமந்த டைப். நம்மைப் பார்த்தால், 'யார்றா இவன்?' என்று நின்று யோசிக்கின்றன. இந்தச் 'சுறுசுறுப்பினாலேயே' புலிகளுக்கு வேலைவைக்காமல் தானாக மாட்டிக்கொண்டு உயிரைவிடும் பாவப்பட்ட ஜீவன்கள்! இரவு 10.50 மணி... ''தூக்கத்துல அசந்திருக்கும்போது படியைப் பிராண்டுற சத்தம் கேட்டா, கீழே இறங்கிப் போகாதீங்க. சமயங்கள்ல கரடி எதுனா ஏறிக்கிட்டு இருக்கும்!'' என்று கிலி ஏற்றினார் பாதுகாவலர். அவரே பிறகு, ''கவலைப்படாதீங்க. டார்ச் லைட்டை முகத்தில் அடிச்சா பயந்து ஓடிரும்!'' என்று உயிர் பயம் நீக்கினார். இரவு 11.05 மணி... 'உஸ்... உஸ்...' எனச் சீறும் சத்தம் கேட்டது. ''ஏதாவது ராஜநாகம் இரையைச் சாப்பிட்டுட்டு இருக்கும். அது ஜீரணமாகாம உடம்பைச் சுத்தி முறுக்கிட்டு இருக்கும்'' என்றார் வழி காட்டி. இரவு 12.15 மணி... ஏதோ வாசனையை முகர்ந்து பரபரப்பான வழிகாட்டிகள் நம்மை அலர்ட் ஆக்கினார்கள். சில நிமிடங்களில் புள்ளிமான்கள் விநோத சத்தம் எழுப்பிக் கலைந்து ஓடின. ''வேட்டைக்காரன் வந்துட்டு இருக்கான்!'' என்றார்கள். அடுத்த நொடி காட்டையே அதிரச் செய்யும் உறுமல். புலி! ஆர்வம், சிலிர்ப்பு, பயத்தோடு எட்டிப் பார்த்தோம். இருட்டில் சின்னச் சின்னச் சலனங்களைத் தொடர்ந்து... திடீரென மழை சடசடக்க... புலி காட்டுக்குள் பதுங்கியது. இரவு 12.55 மணி... மழை ஓய்ந்த நேரம் மூங்கில்கள் உடையும் சத்தம். ''கொம்பன்!'' என்று காது விறைத்தார்கள் வழிகாட்டிகள். புதரை விலக்கியபடி முன்னேறியது ஒற்றைக் கொம்பன் அல்ல... 10 கொம்பன்கள். நனைந்த கறுப்பு நிறத்தில், புஷ்டியாக, கம்பீரமான யானைகள். அதன் ஒவ் வோர் அடிக்கும் அதிர்ந்து அடங்கு கிறது காடு! இரவு 2.10 மணி... தூக்கம் கண்களை அழுத்தியபோது மெள்ள முதுகைச் சுரண்டினார்கள் வழிகாட்டிகள். கொஞ்சம் பார்வையைக் கூர்மையாக்கிப் பார்த்தால் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தது. திடீரென காது விடைத்த சிறுத்தை சடாரெனப் பாய்ந்து புதருக்குள் பதுங்கிவிட்டது. ''நம்ம வியர்வை வாசனையை உணர்ந்திருக்கும். அதான் ஓடிருச்சு!'' என்றார்கள். அதிகாலையில் அடிவாரம் திரும்பிய பிறகும் காதுக்குள் பிளிறல், உறுமல் கர்ஜனைகள். ஆயுளுக்கும் மறக்காது அந்த ஓர் இரவு! வனவாச ட்ரிப் டிப்ஸ்! முதல் நாள் நண்பகல் 12 மணி முதல் மறுநாள் 12 மணி வரை ஒரு ஜோடிக்கு ரூ.4,000. சீஸன் இல்லாத நாட்களில் ரூ.3,500. தங்குமிடம், உணவு, வழிகாட்டிகள், வாகனம் என்று அத்தனை செலவுகளும் இதில் அடங்கும். மது, புகை பிடிக்க அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை. காட்டில் சத்தமாகப் பேசவோ, பாடவோ கூடாது. சிவப்பு, மஞ்சள் வண்ண ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. பொள்ளாச்சியில் இருந்து காலை 6.15 மணிக்கு பரம்பிக்குளம் பேருந்து கிளம்பும். அடுத்த பேருந்துக்கு நண்பகல் 3.15 மணி வரை காத்திருக்க வேண்டும். திட்டமிட்டுக் கிளம்புங்கள்!
Best Save Money Plan நீங்கள் பணத்தை சேமிக்க விரும்புகிறீர்கள் என்றால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம். அதாவது நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிப்பதும் வழியாக எவ்வாறு சிறந்த முறையில் உங்கள் சேமிப்பை தொடங்கலாம் எவ்வாறு சேமிக்க முடியும் என்பது பற்றிய பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் சேமிப்பதன் நன்மைகள் என்ன போன்ற பல்வேறு தகவல்களைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள முடியும். சேமிப்பு :- சேமிப்பு என்பது நிச்சயமாக முதலீட்டில் இருந்து மாறுபட்டது. இன்னும் சிலர் முதலீடு மற்றும் சேமிப்பு என்பது இரண்டும் ஒன்று ஆகும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நிச்சயமாக முற்றிலுமாக மாறுபட்டது என்றுதான் கூறியாக வேண்டும். சேமிப்பு என்பது நீங்கள் உங்களது வருமானம் அல்லது உங்களது ஊதியத்தை ஒரு வங்கிக் கணக்கில் அல்லது உங்கள் வீட்டில் வைத்து பாதுகாக்கும் ஒரு செயலை குறிக்கும். மேலும் முதலீடு என்பது நீங்கள் ஒரு வணிக நிறுவனத்தில் அல்லது பல்வேறு நிறுவனங்களின் மீது முதலீடு செய்வதைக் குறிக்கும். நீங்கள் அந்த நிறுவனத்திற்கு நிதியை கொடுப்பதை முதலீடு என்று கூறலாம். எனவே சேமிப்பு என்பது நிச்சயமாக முதலீட்டில் இருந்து மாறுபட்டது என்று தான் கூறலாம். எனவே நீங்களும் அவர்களைப் போல முதலீடு மற்றும் சேமிப்பு என்பது இரண்டும் ஒன்று என்று நினைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் முதலீடு மற்றும் சேமிப்பு என்பது நிச்சயமாக மாறுபட்டது என்பதை. Read More :- 2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !! சேமிப்பின் தேவை :- சேமிப்பு என்பது நிச்சயமாக மனிதர்களின் வாழ்வில் இருக்க வேண்டிய ஒரு செயல் என்று கூறலாம். மேலும் நீங்கள் சிறிய வயதில் இருந்து உங்கள் வீட்டில் அல்லது பள்ளி போன்றவைகளில் இருந்து நீங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லது சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றிய கட்டளைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. மேலும் சேமிப்பின் தேவை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சேமிப்பு என்பது நீங்கள் பணத்தை சேமித்து வைப்பதை குறிக்கிறது என்பது உங்களுக்கு நிச்சயமாக அறிந்திருக்கும். பணம் எவ்வளவு முக்கியமானது இந்த சூழ்நிலைகள் என்பதை பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். எனவே பணம் அவசியமானது என்றால் நிச்சயமாக அதை சேமிப்பதும் அவசியமான ஒன்று தான் ஆகும். எனவே சேமிப்பின் தேவை என்பதை இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒன்று தான் ஆகிறது. மேலும் நாம் இந்த பதிவில் எவ்வாறு சிறந்த முறையில் சேமிப்பது அதற்கான வழிகள் என்ன என்பதைப் பற்றி விரிவாக நாம் பார்ப்போம். இந்த சூழ்நிலையில் மட்டும் என்று எந்த சூழ்நிலையிலும் பணத்தின் தேவை என்பது மிகவும் முக்கியமானது ஒன்று தான் ஆகிறது. எனவே சேமிப்பின் தேவையும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் வருமானத்தில் அல்லது உங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு சதவீதத்தை நிச்சயமாக சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேடம் இந்த சூழ்நிலையில் இங்கே இருக்கும் அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் பணம் என்பது நிச்சயமாக தேவைப்படுகிறது. மேலும் ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் அது மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. அது போன்ற அத்தியாவசிய தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் நிச்சயமாக பணத்தை சேமித்து தான் ஆக வேண்டும். எனவே இந்த சூழலில் சேமிப்பின் தேவை என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சேமிப்பின் நண்மை :- நிச்சயமாக சேமிப்பதன் வழியாக பல்வேறு நன்மைகள் உங்களுக்கு இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் ஒரு சில உண்மைகளை சற்று உதாரணத்துடன் பார்க்கலாம். நிச்சயமாக நம் அனைவருக்கும் ஆபத்து வரவே வராது என்று கூறவே முடியாது. நிச்சயமாக மனிதர்கள் அனைவருக்கும் எதிர்பாராத சமயத்தில் ஆபத்து வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும். உங்களால் அது போன்ற சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் நீங்கள் அதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தித்து ஆகவேண்டும் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. மேலும் உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சேமிப்பு என்பது நிச்சயமாக உதவும். இப்போது அதை உதாரணத்துடன் பார்க்கலாம். உங்களுக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு ஒரு வேளை பைக் விபத்து ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த விபத்து நிச்சயமாக நாம் எதிர்பார்த்து வருவது கிடையாது மாறாக எதிர்பாராத விதமாக நமக்கு ஏற்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஆகும். எனவே இந்த சூழ்நிலையில் நமக்கு பணம் என்பது நிச்சயமாக தேவைப்படும். மேலும் நாம் அதிகமான வருமானம் அல்லது ஊதியம் வாங்கும் நபராக இருந்தால் நிச்சயமாக அந்த சூழ்நிலையில் நமக்கு சேமிப்பு என்பது தேவைப்படாது. மாறாக சம்பளம் வழியாகவே நாம் அந்த சூழ்நிலையை சமாளித்து விடலாம். ஆனால் நீங்கள் கூறிய அளவு சம்பளம் வருமானம் ஊதியம் போன்றவைகளை பெரும் நபராக இருந்தால் நிச்சயமாக அந்த சூழ்நிலையில் நமக்கு பணம் என்பது அத்தியாவசிய தேவையாக இருக்கும். நாம் பணத்திற்காக வங்கியிடம் அல்லது மற்றவர்களிடம் நிற்கும் சூழல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் அதே சூழ்நிலையில் ஒரு குழி அளவு சேமிப்பை வைத்து இருந்தால் அந்த சூழ்நிலையில் சேமிப்பின் உதவியின் வழியாக அந்த சூழ்நிலை மிகவும் சுலபமாக நம்மால் சரிசெய்துவிட முடியும் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. பணம் :- இந்த சூழ்நிலையில் பணம் என்பது நிச்சயமாக தேவையில்லை ஒரு பொருளாக தான் இருக்கிறது. இது வெறும் காகிதமாக பார்த்தால் நிச்சயமாக பணம் என்பது ஒன்றுமில்லை ஆனால் இந்த உலகம் அதை எவ்வாறு பார்ப்பது இல்லை. மேலும் நம் உறவினை விட மனிதர்கள் அதிகமாக தேடுவது இதைத்தான் விரும்புவதையும் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று கூறலாம். இந்த சூழ்நிலையில் வாழ உங்களிடம் குணம் என்பது நிச்சயமாகத் தேவை இல்லை மாறாக உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. அந்த அளவிற்கு பணம் என்பது நம்மில் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. மேலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களிடம் குறுகிய அளவாவது பணம் இருந்தால் மட்டுமே குறுகிய அளவாவது சமூகத்தில் மரியாதை கிடைக்கும் என்பதுதான் குறிப்பிடத்தக்க உண்மையாக இருக்கிறது. எனவே இந்த சூழ்நிலையில் மட்டுமின்றி எல்லாக் காலத்திலும் பணம் என்பது நிச்சயமாக நமக்கு தேவையானதை மட்டும் என்று நமக்கு மரியாதையும் தரும் ஒரு பொருளாக மக்களிடம் கருதப்படுகிறது. எனவே தான் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. இப்போது நாம் சேமிப்பதற்கான சிறந்த வழிகளைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். செலவு இல்லை திட்டம் : – ஒரு வாரத்திற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு நீங்கள் எந்த பணத்தையும் செலவிட வேண்டியதில்லை. அதாவது, செலவுகளைக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஒரு வருடத்தில் எட்டு வாரங்களுக்கு ஒரு மாதத்தில் இரண்டு வாரங்கள் செலவழிப்பதை நீங்கள் நிறுத்தினால், நீங்கள் எந்த 2 மாதங்களையும் செலவிடவில்லை என்று அர்த்தம், அதனால் 2 மாதங்களுக்கு சேமிப்பு அதிகமாகும். எனவே நீங்கள் இதை முயற்சி செய்யலாம். மேலும் இந்த 10 திட்டங்கள் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இதைப் பயன்படுத்தி 2022 இல் சிறிது சேமிக்கத் தொடங்கலாம். கடன் வாங்குவதை தவிர்க்க :- இது அடுத்த மிக முக்கியமான விஷயம். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நீங்கள் எந்தக் கடனையும் வாங்குகிறீர்கள். மேலும் வாங்கிய கடன்கள் இல்லை. உண்மையில், பொருளாதார வல்லுநர்கள் கடன் இல்லாதது சேமிப்பு என்று கூறுகிறார்கள். மேலும் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வீட்டை சுத்தம் செய்தல் :- வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் எவ்வளவு பொருள் வீணாகிறது என்பது தெரியும். மேலும் அடுத்த முறை நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது யோசித்து வாங்கும் வாய்ப்பு அதிகம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். வங்கி சேமிப்பு :- உங்கள் பணத்தை முதலில் சேமிக்க வங்கி ஒரு சிறந்த இடம் என்று நீங்கள் கூறலாம். மேலும் வங்கி உங்கள் வீட்டில் வைத்திருப்பதை விட அதிக பாதுகாப்பை வழங்கும். உங்கள் சேமிப்புகள் பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் உணரலாம். அதே போல் உங்கள் சேமிப்பைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த வேலையைச் செய்யலாம் என்று சொல்லுங்கள். மேலும் வங்கியில் சேமித்து வைப்பதால் வட்டி கிடைக்கும் என்று சொல்லலாம். அதாவது, நீங்கள் ரூ. அதாவது ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வட்டி விகிதத்தை பின்பற்றும். பெரும்பாலான வங்கிகள் ஆண்டுக்கு 5% -7% வட்டி வழங்குகின்றன என்றும் கூறலாம். இது உங்கள் சேமிப்பை மேலும் அதிகரிக்கும். உதாரணமாக, நீங்கள் ரூ. ஒரு வருடத்திற்கு உங்கள் வங்கியில் 100,000, நீங்கள் ரூ. இதில் உங்களுக்கு 5,000 ரூபாய் கடன் உள்ளது. இதுவும் நீங்கள் சேமித்த தொகையில் இருந்து கிடைக்கும் கிரெடிட் ஆகும். எனவே நீங்கள் வங்கியில் சேமிப்பதைத் தேர்வு செய்யவும். FIXED DEPOSIT என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இதை எந்த நேரத்திலும் நிறுத்தலாம். காப்பீடு : – நிச்சயமாக நீங்கள் காப்பீட்டில் முதலீடு செய்ய வேண்டும். நிச்சயமாக காப்பீடு ஒரு சேமிப்பு. நீங்கள் சேமிப்பதற்கான சிறந்த வழி காப்பீடு என்றும் கூறலாம். இன்ஷூரன்ஸ் மூலம் நீங்கள் எந்த வகையான காப்பீட்டைப் பெற்றிருந்தாலும், விபத்து ஏற்பட்டால் நமக்குத் தேவையான பணத்தை காப்பீட்டு நிறுவனம் திருப்பித் தருகிறது. தங்கத்தில் முதலீடு :- பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தங்கத்தில் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்வது சிறந்தது. மேலும் இது எதிர்காலத்தில் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். மேலும் நீங்கள் இந்த முறையை முயற்சி செய்யலாம். Inex நிதிகளில் சேமிப்பு : – அடுத்ததாக பங்குச் சந்தை பற்றித் தெரியாவிட்டாலும் இதைச் செய்பவராக மாற வேண்டும். பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி, பங்குச் சந்தை உயரும் அல்லது இறங்குவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு குறியீட்டு நிதியில் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பது, பணத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சேமிப்பு & செலவு செலவு & வருவாய்: – அடுத்து, பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இதைப் பின்பற்ற வேண்டும். நீங்களும் உங்கள் மனைவியும் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. எனவே இருவரிடமிருந்து வரும் வருமானத்தை ஒருவரின் வருமானத்தில் செலவு செய்து மற்றொருவரின் வருமானத்தில் சேமிக்கவும். உங்கள் பட்ஜெட்டை திட்டமிடுங்கள் : – படம் தொடங்கும் முன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆரம்பத்திலிருந்தே திட்டமிடுவதே சிறந்த வழி என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நல்ல கிரெடிட் மூலம், உங்களுக்குத் தேவையானதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். செலவுகளைக் காண்க : – அதாவது கடந்த 6 மாதங்களில் அல்லது கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் செய்த செலவுகளை திரும்பிப் பாருங்கள். அதாவது இது தேவையான தொகை மட்டுமே, தேவையற்ற செலவு அல்ல என்பதை அறிவேன். எனவே தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் பட்ஜெட் திட்டத்திலிருந்து தேவையற்ற செலவுகளை விளக்குவதும் நல்லது. பணத்தை சேமிக்க எளிய வழி !! Best Save Money Plan !! Categories Entertainment News Tags Best Save Money Plan, Best Savings, Money Savings, Money Savings Plan, Savings Penny Stock என்றால் என்ன ? அதை வாங்கலாமா ? இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் போதும் நீங்களும் Share Market புலிதான் !! Share Market Global !! Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன் அடுத்தாக அரசியல் பின்னணிகொண்ட கதையைப் படமாக்கவிருக்கிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. ‘வணக்கம் சென்னை’க்குப் பிறகு ‘சுமோ’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். ஹோசிமின் இயக்கும் இந்தப் படத்துக்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாகின்றன. ப்ரியா ஆனந்த் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்திருக்கும் படம், ‘காப்பான்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியான நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது, படக்குழு. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கமிட் ஆகியிருக்கிறார். இவர் விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். மம்மூட்டி நடிக்கும் ‘ஷைலாக்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். மலையாளத்தில் ராஜ்கிரண் நடிக்கும் முதல் படமான இதில், மம்மூட்டிக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி முத்தக் காட்சிகளில் நடிப்ப தில்லை’ என்று முடிவு எடுத்திருக்கிறார், மில்க் நடிகை. இந்த முடிவுக்குப் பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள், சக முன்னணி நடிகைகள். பலதரப்பட்ட பணிகளுக்கு மத்தியிலும் தன்னுடைய அடுத்தப் படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அரசியல் நடிகர். காரணம், ஈழத்துப் பெருநிறுவனத்திடம் ஏற்கெனவே இவர் வாங்கிக் குவித்த கடன்கள்தானாம். சம்பளம் பெறாமல் இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர். முன்னணி நடிகரின் புதுப்படப் பாடல் ஒன்று இணையத்தில் வெளியானதால், அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு. இது, பப்ளிசிட்டிக்காகத் திட்டமிட்டே செய்யப்பட்ட வேலைதான் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
காதல் விளையாட்டு அல்லது சரசமாடுவதில் யார் கில்லாடியோ அவர்கள்தான் அனைவருக்கும் பிடித்த நபர்களாக இருப்பார்களாம். ஆய்வு சொல்கிறது. காதல் துணையுடன் சீண்டி விளையாடுவதில், கொஞ்சுவதில், காதல் மொழி பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் பெண்களுக்கும் நிறையவே பிடிக்குமாம். விதம் விதமாக சீண்டி விளையாடுவோரை மற்றவர்களுக்குப் பிடிக்கும் என்பதோடு, இப்படிப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாகவும் அது நிறைய நல்லது செய்கிறதாம். உடம்பையும், மனசையும் இது ரிலாக்ஸ் ஆக்குகிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது. சரி எப்படியெல்லாம் சீண்டி விளையாடலாம் என்று ஆய்வு செய்து அதை வெளியிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். பார்வை.. இது ஒரு வகையான காதல் மொழி. பார்வையிலேயே பலர் மடக்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மைதான். வெறும் பார்வையிலேயே ஒருவரை நம் வசப்படுத்த முடியும். அப்புறம் கண்ணாலே பேசி பேசி கொல்லாதே என்று காதல் பாடல் பாடுவார் உங்கள் காதலி. ஒருவரை பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அவரைப் பாருங்கள்.. அதாவது கண்ணோடு கண் வைத்து நேருக்கு நேராக.. ஒருமுறை அல்ல, 3 முறை அடுத்தடுத்து அவரைப் பாருங்கள். நான் உன்னைப் பார்க்கிறேன் என்று அவருக்கு இது உணர்த்தும். நீங்கள் இப்படிச் செய்தால், அவர் நிச்சயம் உங்களைத் திரும்பிப் பார்ப்பார். அந்த ரிட்டர்ன் பார்வையின் நேரத்தை வைத்து அவர் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதை அறியலாம். அதாவது சராசரியாக 1.18 விநாடிகள் அவர் பார்க்கிறார் என்றால் அது சாதாரணப் பார்வையாகும். அதுவே 2 அல்லது 3 விநாடிகளுக்குப் போகிறது என்று வையுங்கள், அவர் உங்களை ரொமான்டிக் லுக் விடுகிறார் என்று பொருளாம். அதேபோல செக்ஸியான பேச்சுக்கள், மெசேஜ், புகைப்படங்கள் அனுப்புவது இன்னொரு வகையான சீண்டல். இதை டீன் ஏஜ் வயதுள்ளவர்கள்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது எல்லோரும் இதைச் செய்கிறார்களாம். 18 முதல் 29 வயது வரை ஜாஸ்தி இருப்பினும் செக்ஸடிங் போன்றவற்றை18 முதல் 29 வயது வரையிலானவர்களே அதிகம் செய்வதாக பியூ ஆய்வு மையம் என்ற அமெரிக்க அமைப்பு சொல்கிறது. இதற்காக அவர்கள் 2252 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். செக்ஸியான படம் அனுப்புறாங்க இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேருக்கு நிர்வாணமான, செக்ஸியான புகைப்படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பினார்களாம் அவர்களை விரும்பியவர்கள். அதேசமயம், 13 சதவீதம் பேர் தாங்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு செக்ஸியான படம் அனுப்பியதாக ஒப்புக் கொண்டனர். இப்படிப்பட்ட காதல் சீண்டல்கள், கிண்டல்கள், கொஞ்சல்கள், குலாவல்கள் உடம்புக்கும் நல்லது என்று சொல்கிறது ஆய்வு. குறிப்பாக இப்படிப்பட்ட சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு உடம்பில் ரத்த வெள்ளை அணுக்கள் எப்போதும் பிரஷ்ஷாக இருக்குமாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்குமாம். TAGS உறவு-காதல் Facebook Twitter WhatsApp Viber Previous articleசிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? Next articleஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ.. Suresh Deva RELATED ARTICLESMORE FROM AUTHOR கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா? சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ ன்பம் செய்வதில் கில்லி என்றால், அதிலும் ஆளு ஸ்ட்ராங் தான்! இப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க! வரதட்சணை யோசனை வந்தா வாயிலயே அ டிப்ப சொல்லிட்ட!
குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (32). கூலி தொழிலாளி. அவரது மனைவி ஷர்மிளா (23). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின் விளைவாக ஷர்மிளா கோபித்துக் கொண்டு பெரமண்டூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று பெரமண்டூருக்குச் சென்ற அசோக், மனைவியை சமாதானம் செய்து வைரபுரத்துக்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போதும், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அசோக், மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸார், ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் ஷர்மிளா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் சார் ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடிக்கு மேலதிகமாக ரூபாய் தட்டுப்பாட்டையும் எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வருடாந்தம் இருநூற்றி எண்பது கோடி ரூபாயை செலவிட வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருந்து யானை வெடி கொள்வனவு செய்யப்படுகிறது. வருடாந்தம் சுமார் 14 இலட்சம் யானை வெடிகளை கொள்வனவு செய்ய 2,800 மில்லியன் ரூபாயை அரசாங்கம் செலவிடுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. காட்டு யானைகள் கிராமத்திற்கு வரும்போது அப்பகுதி மக்கள் வனஜீவராசி அதிகாரிகளுக்கு அறிவித்தாலும் நாட்டில் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு உரிய நேரத்திற்கு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கேனும் அரசாங்கம் போதிய வருமானத்தை பெறுவதில்லை என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். நாணய நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் காரணமாக பணத்தை அச்சிடவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் தற்போதுள்ள தொகையை விட அதிக தொகையை யானை வெடிக்கு செலவிட நேரிடும் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். யானை மனித மோதல்கள் இலங்கையின் இருபத்தைந்து நிர்வாக மாவட்டங்களில் பத்தொன்பது இடங்களில் யானை-மனித மோதல்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையின் பத்தொன்பது மாவட்டங்களில் அமைந்துள்ள 133 பிரதேச செயலகங்களில் யானை-மனித மோதல்கள் தற்போது பதிவாகியுள்ளன. பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைகள் இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைக்கு அமைய யானை-மனித மோதலால் உலகில் அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. இலங்கையில் வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழக்கின்றன. மேலும், யானை-மனித மோதலால் வருடாந்தம் சராசரியாக 85 மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில், இலங்கையில் யானை-மனித மோதல்கள் காரணமாக 327 யானைகள் மற்றும் 113 பேர் உயிரிழந்தனர். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, 2019ஆம் ஆண்டு இலங்கையில் மிகவும் கடுமையான யானை-மனித மோதல்களைக் கொண்ட ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தரவுகளுக்கு அமைய, இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 5,879 என்பதோடு, அவற்றில் 55 யானைகள் முதிர்ந்த தந்தங்களுடன் கூடியவை. Prev Post சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு: நாமல் ராஜபக்ச தெரிவிப்பு Next Post தேசிய பிரச்சினைகளுக்கு ரணில் – ராஜபக்ச அரசு ஒருபோதும் தீர்வைக் காணமாட்டாது: சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு
எனக்குப் பெஜவாடாவில் பார்ப்பனரல்லாதார் திருமண ஊர்வலத்தைக் கண்டதும் பரிதாபமும் ஒருபக்கமும் எங்கள் மதம்போச்சு, எங்கள் சாஸ்திரம்போச்சு, வருணாசிரம தர்மத் துக்கு அழிவுவரலாச்சு, எங்கள் பணவரும்படி போச்சுது, எங்கள் தலைவிதி குடிஅரசு வந்து இப்படியாச்சுது என்று கூக்குரலிடும் சில வைதீகர்களிடம் வெறுப்பு ஒருபக்கமும் உண்டாயிற்று. மணமகனும், மணமகளும் பல வர்ணமான, பாசிகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் பல்லக்கில் ஏறி பாண்டு, நாதசுரவாத்தியங்களுடன் ஊர்வலம் வந்தனர். பல்லக்கிற்கு முன்னால் பத்து முதல் பதினெட்டு வயதிற் குட்பட்ட சுமார் பத்து அழகிய வாலிப தாசிச் சகோதரிகள் பாட்டுகள் பாடிக்கொண்டும் நடனம் புரிந்துகொண்டும் வந்தனர், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பணத்திற்காக தங்கள் மானத்தை துறந்து தாங்கள் தொழில் புரிய உதவியாகயிருக்கும் பலருடைய மனது குதூகலமடையும் விண்ணம் பலவிதமான அபிநயங்கள் செய்யுங்காலையில் அது நோக்கும் விசாலபுத்தி படைத்த எவரும் வெட்கத்துடன் துக்கப்படாமலிருக்க முடியாது. இவ்வித இழிதொழிலும் இதுபோன்ற இன்னும் பல அட்டூழியங்களும் நடக்கவிடாமலும், நம் சொந்த சகோதரிகள் பாரத சேய்கள் இக் தொழிலைவிட்டு நன்மார்க்கத்தையடையும் படியான புத்தினய அவர்களுக்கு கொடுக்கும்படியும், இந்தத் தொழில்செய்வதற்குக் உதவியாக இருக்கும் சிலருக்கு நல்ல உணர்ச்சி உண்டாகும்படி செய்யவும் தீவிரபிரச்சாரம் செய்யவேண்டும். அச்சகோதரிகளைச் சுற்றிலும் பல வாலிப மாணவர்கள் நின்று கொண்டு கேலியும் பரிகாசமும் செய்து கொண்டே வந்தனர். அப்பெண்கள் நமது சொந்த சகோதரிகளாயிற்றே ஓர் தாயான பாரத மாதாவின் அரும்புதல்விகளாயிற்றே அவர்கள் இத்தகைய இழிதொழில்புரிந்து வாழ்க்கை நடத்துவது நம்முடைய பாரத நாட்டுக்குத்தானே அவமானம் என்று உணர்ச்சி இல்லாத இந்த வாலிப மாணவர்களின் அறியாமைகுறித்து எனக்குத் துக்கம் ஏற்பட்டது. அந்த ஊர்வலம் பிரதான வீதிகளின் வழியே சென்றது. ஆனால் நான் பார்க்கும்படி நேரிட்டது ஒரு பார்ப்பன அக்கிரஹாரத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொழுதேயாகும். அந்தரஸ்தாவின் இருபுறமுமுள்ள வீடு களில் வசிக்கும் பார்ப்பனப் பெண்கள் எல்லோரும் வாசலில் நின்றுகொண்டு மேற்படி தாசி சகோதரிகள் பாடும் பாட்டுக் களைக் கேட்டும் அவர்கள் நடனம்புரிவதையும் அபிநயங்கள் செய்வதையும், பார்த்தும் சந்தோஷமடைந்தனர். தங்களைப் போன்ற பெண்மணிகள் இவ்வித இழி தொழிலைவிட்டுச் சீர்திருந்தும்படியான வழியை தேட கவலைப்பட வேண்டிய அவர்கள் அக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததைப் பார்க்க நான் பெரிதும் வருந்தினேன். அவ்வூர்வலத்தை முதன்மையாக இருந்து நடத்துபவர் அந்தச் சகோதரிகளை எந்தெந்த வீட்டுவாசலில் பெண்கள் கும்பலாக இருந்தனரோ அந்தந்த இடங்களில் நிறுத்திப்பாடும்படியும் நடனம் புரியும்படியும் செய்துவந்தனர். இதில் இன்னும் ஓர் சம்பவம் குறிப்பிடற்பாலது. மண மகனின் சிநேகிதர்களில் சிலர் அத்தாசி சகோதரிகளில் ஒரு அழகிய மாதை அழைத்து அன்னார் கையில் ஏதோ கொஞ்சம் பணங்கொடுத்து பல்லக்கில் வந்து கொண்டிருக்கும் மணமகனுக்கும் பன்னீர்தெளிக்கும்படி கேட்டு அச்சகோதரி அவ்விதம் செய்யவே எல்லோரும் அதைப்பார்த்து மகிழ்ந்தனர். ஊர்வலங்களில் இந்தவிதமான வாலிப சகோதரி களை நடனம் புரியும்படி செய்ய எந்தச்சாத்திரம் இடங் கொடுக்கிறதோ அறியேன். இப்படிச் செய்வதில் அவர்கள் நோக்கம்தான் என்னவோ? இப்படிப்பட்ட சம்பவங்கள் நமது வாலிப மாணவர்கள் கெடுவதற்கும் நம்முடைய இந்திய சமூகத்தை மிஸ்மேயோ போன்ற அன்னியர் இழிவு படுத்துவதற்கும் சந்தர்ப்பங்களாக இருப்பதுமல்லாமல் இந்த தாசித் தொழிலுக்கு ஊக்கம் அளித்ததுமாகும். இது மாதிரியாக இவ்வூரில் சாதாரணமாக அநேக ஊர்வலங்களில் நடந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். இனியாகிலும் நம் சகோதரர்கள் விழித்துக் கொண்டு சீர்திருத்துவதோடு பார்ப்பனர்களில் வைதீகர் ஓர் சாரார் தாசித் தொழில் செய்வதற்கு தங்கள் சாஸ்திரக்குப்பைகளை கிளப்பி ஆதாரம் காட்டினாலும் அப்படிப்பட்ட சாஸ் திரங்களை தீயில் இட்டுக் கொளுத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
திராவிட கவசம் அணிந்துதான் தமிழ் உடல் தன்னை ஆரியத்தின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள முடியும். ஆரியம் எதிர் நின்றும் தாக்கும் அல்லது பாசம் கொண்டது போல பூதகி வேடம் போட்டு நஞ்சூட்டவும் பார்க்கவும். அதனால்தான் தமிழை எப்போதும் திராவிட அடையாளத்துடன் இணைத்துப் பேசிக் காக்க வேண்டும். அதுவே இருபதாம் நூற்றாண்டில் பெரியாராலும், அண்ணாவாலும் உருவாக்கப்பட்ட திராவிட அரசியல் கருத்தியல். கலைஞர் அரை நூற்றாண்டுக்காலம் கட்டிக் காத்த அரசியல். இந்த உண்மை தெரிந்த ஆரியம், பல கேள்விகளை தந்திரமாக எழுப்பும். திராவிடம் என்றால் இனமா? உயிரியல் அடையாளமா? ஜெனடிக் அடையாளமா? இனவாதம் பேசுகிறீர்களா? தூய இனம் என்பது கிடையாதே? எல்லா இனங்களும் கலந்து விட்டனவே … என்றெல்லாம் கேட்பார்கள். இனவாதம் பேசி பார்ப்பனர்கள் வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று மக்களை பிரிப்பது அவர்கள்தான் என்றாலும் அதை திராவிடத்துக்கு எதிராக வைப்பார்கள். இல்லை, ஐயா, இல்லை. இது உயிரணு சமாச்சாரமில்லை. பண்பாடு. பார்ப்பனர்களை இரு பிறப்பாளர்கள் என்று ஏற்காத, வர்ண தர்மத்தை ஏற்காத திராவிட பண்பாடு என்று கூற வேண்டும். அடுத்து திராவிடம் என்றால் தென்னிந்திய நிலப்பகுதியா என்பார்கள். திராவிட நாடு என்று தென்னிந்தியாவைத்தானே குறிப்பீட்டீர்கள். அதில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலங்களில் திராவிட அடையாளம் குறித்து பேசுவதில்லையே என்பார்கள். அந்த மாநிலங்கள் மட்டுமல்ல. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திராவிட பண்பாட்டை ஏற்பதுதான் நாட்டுக்கு நல்லது என்று கூற வேண்டும். அடுத்து திராவிடமும், தமிழும் ஒன்று என்றால் ஏன் தனித்தனியாக இரண்டு அடையாளம் என்று கேட்பார்கள். அப்போது தமிழ் மொழி அடையாளத்தினுள் ஆரியம் புகாமல் காக்கவும், புகுந்த ஆரியத்தை வெளியேற்றவும்தான் திராவிட அடையாளம் என்று கூற வேண்டும். தமிழில் ஊடுருவிய ஆரியம் பக்தி இலக்கியம் மூலமாகவும், சைவ, வைணவ மத இலக்கியங்கள் மூலமாகவும் ஆரிய பார்ப்பனீயம் தமிழுக்குள் புகுந்தது. தமிழகக் கோயில்கள் பார்ப்பனர்களின் கூடாரமானது. சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் திராவிட சார்பு கொண்ட தமிழுக்கும், ஆரிய சமஸ்கிருதத்துக்கும் முரண்பாடு நிலவினாலும், பல்வேறு காரணங்களால் வரலாற்றுப் போக்கில் பார்ப்பனீய ஆரிய கருத்தியல் கணிசமாக ஊடுருவியது. இதன் விளைவாகத்தான் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்ப ராமாயணமும், பெரிய புராணமும் எழுதப்பட்டன. அவை இரண்டும் ஆரிய கருத்தியலை உள்வாங்கியிருந்ததால்தான் இரண்டு நூல்களையும் தீக்கிரையாக்க முடிவு செய்தது திராவிடர் கழகம். அப்போது அண்ணாவுக்கும் சோமசுந்தர பாரதியார், ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களுக்கும் நிகழ்ந்த வாதங்கள் புகழ்பெற்றவை. அவை “தீ பரவட்டும்!” என்ற பெயரிலே வெளியிடப்பட்டு இன்றளவும் படிக்கப்படுகின்றன. அது தவிரவும் ஆரிய மாயை நூலிலே அண்ணா தமிழில் எப்படி ஆரியம் ஊடுருவியது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார். இவற்றில் பல அம்சங்களை Rule of the Commoner: DMK and the Formations of the Political, 1949-1967 என்ற நூலிலே விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம். அதனால்தான் திராவிட பண்பாட்டு உணர்வுடன், அடையாளத்துடன் தமிழ் அடையாளத்தை இணைத்தால்தான் தமிழின் சீரிளமைத்திறம் தொடர்ந்து காக்கப்படும். இல்லையேல் ஆரியம் அதை கபளீகரம் செய்யவே துடிக்கும். இந்த முயற்சியை வரதராஜுலு நாயுடு துணையுடன் மூஞ்சேவும், சாவர்க்காரும் செய்ய முனைந்தபோதுதான் அண்ணா “ஆரிய மாயை” நூலினை தீட்டினார் என்பதை மறக்க முடியாது! அன்று இந்து மஹாசபா மதுரையில் மாநாடு நட த்தி தமிழை இந்து அடையாளம் என்ற சிமிழுக்குள் அடைக்கப் பார்த்தது! இன்று காசியிலே தமிழ் சங்கமம் நடத்தி தமிழை இந்து கூஜாவிலே அடைக்கப் பார்க்கிறது! இந்த ஆரிய சூழ்ச்சிகளை நன்கு அறிந்த திராவிட மண் ஒரு போதும் இந்து போர்வைக்குள் பார்ப்பனீயம் மீண்டும் மேலாதிக்கம் செலுத்திட அனுமதிக்காது! எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் இந்தி-இந்து-இந்தியா வலைக்குள் புகாது! இங்கு சைவம் சித்தர் வழியிலும், ராமலிங்கர் வழியிலும் பூசக அதிகாரத்தை எதிர்த்து நிற்கும்! வைணவமும் ராமானுஜர் வழியிலே ஜாதி வேற்றுமையை எதிர்த்து நிற்கும்! எல்லாவற்றையும் இந்துவாகச் சேர்த்துக்கட்டி இஸ்லாமிய வெறுப்பரசியல் செய்வதை நாட்டார் மரபுகள் மறுத்து நிற்கும்! மராத்தியம் புகட்டும் படிப்பினை என்ன? மராத்திய அடையாளத்தின், சத்ரபதி சிவாஜியின் அடையாளத்தின் அரசியலாக நிற்க விரும்பும் சிவசேனா, தான் இந்து அடையாளமாகவும் விளங்க விரும்புகிறது. இந்து அடையாளம் பார்ப்பனீயத்தின் முகமூடி என்பதை அறியவிடாமல் அவர்களது மராத்திய சாம்ராஜ்யத்தின் பேஷ்வா ஆட்சிக்கால வரலாறு தடுக்கிறது. இங்கேதான் சமகால இந்திய அரசியலின் நுட்பம் இருக்கிறது. பார்ப்பனீயம் தனியாக எந்த மாநிலத்திலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாது. காரணம் மாநில அடையாளங்கள், மொழி அடையாளங்கள். அந்தந்த மொழி சமூகங்களுக்குள் பெரும்பான்மை என்பது பார்ப்பனரல்லாதோர் சமூகங்களே. எனவே பார்ப்பனர்கள் தங்கள் கருத்தியல் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவித்தால்தான் முடியும். அதைத்தான் பார்ப்பன-பனியா கூட்டணி செய்ய விரும்புகிறது. பாரதீய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றுவதன் மூலம் ஒன்றியத்தின் முழு கட்டுப்பாட்டில் மாநிலங்களைக் கொண்டுவர நினைக்கிறது. சிவசேனா தன்னை பாஜக உட்செரிக்கப் பார்ப்பதை உணர்ந்துதான் அதன் உறவை கத்திரித்துவிட்டு, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸுடன் கூட்டணி கண்டு அரசமைத்தது. பாஜக அங்கே எட்டப்பர்களை உருவாக்கி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது. இந்த நிலையிலும் உத்தவ் தாக்கரே அணி, முழுமையாக பார்ப்பனரல்லாதோர் மராத்திய அடையாளத்தை எடுத்துக்கொள்ள தயங்குகிறது. அவருடைய பாட்டனார் கேஷவ் தாக்கரே அவர்களுடைய சந்திரசேனீய காயஸ்த பிரபு குலத்தின் சத்திரிய தகுதிக்காக பார்ப்பனர்களுடன் வாதாட வேண்டியிருந்தது. கேஷவ் தாக்கரே மராத்திய சாம்ராஜ்யத்தில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோரை ஒடுக்கியது குறித்து எழுதினார். ஒன்றுபட்ட மராத்திய அடையாளத்தை, மாநில உருவாக்கத்தை வலியுறுத்தினார். இப்படியான வரலாறு இருந்தும், சிவசேனா தனக்கு பார்ப்பனீய இந்து அடையாளம் தேவை என்று நினைக்கிறது. ராகுல் காந்தி சாவர்க்காரை விமர்சித்து பேசினால் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பதறுகிறார். அதைச் சமன் செய்ய, பாஜக ஏன் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது தரவில்லை என்று கேட்கிறார். அண்ணாவின் நாடகம் தி.மு.க தொடங்குவதற்கு முன்பே அண்ணா “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்ற நாடகத்தை எழுதினார். அதன் மையக்கருத்து என்னவென்றால் தன் வாளின் வலிமையால் பல கோட்டைகளைக் கைப்பற்றி மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார் மாவீரர் சிவாஜி. ஆனால் அவர் சத்ரபதியாக முடி சூட தடை எழுகிறது. ஏனெனில் அவர் விவசாய குலத்தில், அதாவது பார்ப்பனர்களின் தர்ம சாஸ்திரப்படி சூத்திர குலத்தில் பிறந்தவர். அவர் சத்திரியர் இல்லை. சத்திரியர் மட்டுமே சத்ரபதியாக முடி சூடலாம். அதற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்து அவருக்கு சத்திரிய தகுதியை அளித்து முடி சூட்ட காசியிலிருந்து காக பட்டர் என்ற பார்ப்பனர் வரவழைக்கப்படுகிறார். அவர் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார். ஏராளமான பொன்னையும் பொருளையும் பார்ப்பனர்களுக்கு தானமாக தரச் சொல்கிறார். இப்படி வாளின் வலிமையால் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் சத்ரபதியாக முடி சூட, தர்ப்பைப் புல்லை ஏந்தும் பார்ப்பனர்களின் தயவை நாடி நிற்பது சிவாஜியின் தளபதியான சந்திரமோகனுக்குப் பிடிக்கவில்லை. சிவாஜி அவனை நாடு கடத்துகிறார். பின்னர் அவனை தனிமையில் சந்தித்து மக்கள் மனதை மாற்றும் வரை, பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஒழியாது என்று கூறி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தைத் தொடங்கச் சொல்கிறார். சந்திரமோகன் என்ற தளபதி கதாபாத்திரம் கற்பனையாலும், இந்த காக பட்டர் சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது உண்மைதான். காக பட்டர் என்பவர் காசியிலிருந்து வந்ததும், சிவாஜி சத்திரியர் என்று ஏற்றுக்கொண்டதும், அதற்காக பார்ப்பனர்களுக்கு ஏராளமான பொன்னும் பொருளும் தானம் தரச்செய்ததும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ள உண்மை. மராத்தியத்தில் இந்து என்ற போர்வையில் அன்று தொடங்கிய பார்ப்பனீய ஆதிக்கம், இன்றும் தொடர்கிறது. அன்று சிவாஜியால் மீற முடியாத மேலாதிக்கத்தை இன்று சிவசேனாவும் முறியடிக்க திணறுகிறது. அண்ணா மராத்திய வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று தமிழகத்தில் நாடகம் போட்டு விழிப்புணர்வை உருவாக்கினார். தமிழக அரசியலிலிருந்து மராத்தியம் படிப்பினை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திராவிடம் என்ற கேடயம் திராவிடப் பண்பாடு ஆரியப் பண்பாட்டுக்கு முந்தையது. ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் கருத்தியல் ஆதிக்கத்தை இங்கு ஊடுருவி நிறுவும் முன்பே தழைத்தோங்கிய பண்பாடு, இதற்கு இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள் அனைத்தும் உள்ளன. கணியன் பூங்குன்றனும், வள்ளுவனும் ஆரியக் கோட்பாட்டுக்கான மாற்றுக்களை தங்கள் அற்புதமான வரிகளில் யாத்து வைத்துள்ளார்கள். திராவிடச் சான்று என்பதில் தமிழின் தொன்மை முக்கியமானது. ஆனால் தமிழ் மொழிக்குள் ஊடுருவிய ஆரிய கருத்துகளால் திராவிட பண்பாட்டை நாம் தமிழுக்கு கேடயமாக அணிவிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, ராஜராஜ சோழனை தமிழ் மன்னன், தமிழ் சைவ மதத்தை பின்பற்றியவன் என்போம். ஆரியம் அவனை இப்போது இந்து மன்னன் என்று கூறுகிறது. கேட்டால் சைவம், வைணவம் எல்லாவற்றையும் இப்போது நாங்கள் இணைத்து இந்து என்று பெயரிட்டுவிட்டோம். அதனால் அவனும் இந்து மன்னன் என்று சொல்கிறார்கள். இதன் பொருள் என்ன? மெள்ள, மெள்ள தமிழ் அடையாளத்தை இந்து அடையாளத்தினுள் செரிக்க வேண்டும். அதன் மூலம் சமஸ்கிருத, இந்தி மேலாதிக்கத்தையும் காலப்போக்கில் புகுத்தி தமிழினை பார்ப்பனர்கள் வசமுள்ள கோயில்களில் இருப்பது போல இரண்டாம் நிலை மொழியாக மாற்றிவிட வேண்டும். மாநிலத்தின் அதிகாரங்களைக் குறைத்து ஒன்றிய அரசிடம் அதிகாரங்களைக் குவிக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சியை மெள்ள மெள்ள வலுவிழக்கச் செய்ய வேண்டும். இதுதான் இந்துத்துவ பாசிசத்தின் வேலை திட்டம். அதை முறியடிக்க இன்றியமையாத வழி என்பது பார்ப்பனீய எதிர்ப்பு; அதன் சரியான பொருளில் ஆரிய எதிர்ப்பு. அதற்கான ஆயுதம், கேடயம் எல்லாமே திராவிட அடையாளம் என்னும் கேடயம்தான். கவசம்தான். ஆயுதம்தான். திராவிடம் என்றால் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்க எதிர்ப்பு; திராவிடம் என்றால் சமூக நீதி; திராவிடம் என்றால் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி – திராவிட மாடல்; திராவிடம் என்றால் தமிழின் தனித்துவம்; தமிழின் நவீனத்துவம்; தமிழின் மதச்சார்பின்மை; “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மகத்தான தத்துவங்கள். திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை காசியில் எத்தனை தமிழ் சங்கமங்கள் நடத்தினாலும், தமிழை ஆரியம் கைப்பற்ற முடியாது. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று திராவிடச் சங்கு முழங்கும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
Ameer, Vetrimaaran, Yuvan Shankar Raja, Iraivan Miga Periyavan 14/02/2022 : வெற்றி இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனரான அமீர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் தன் பக்கம் திரும்ப வைத்தார். அதை தொடர்ந்து ஜீவாவின் ராம், கார்த்தியின் பருத்திவீரன், ஜெயம் ரவியின் ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்தார். இவர் சுப்பிரமணியன் சிவாவின் இயக்கத்தில் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பரிமாணம் எடுத்தார். நீண்ட காலத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் தனுஷ்,கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோரோடு நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்புதிய படத்திற்கு ‘இறைவன் மிக பெரியவன்’ என தலைப்பிடப் பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து கதை எழுதும் இப்படத்தை இயக்குனர் அமீர் ஒன்பது வருடங்களின் பின் இயக்கவுள்ளார். இந்நிலையில் இதன் டைட்டில் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். அத்துடன் இறைவன் மிக பெரியவன் தலைப்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மும்மதச்சின்னங்களும் அடையாளப் படுத்த பட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது. Tags: Ameer Iraivan Miga Periyavan Vetrimaaran Yuvan Shankar Raja Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
முன்னாள் சட்டப்பேர்வை உறுப்பினர் திரு.டி.ஆர்.எஸ்.வேங்கடரமணா அவர்கள் இன்றைய (25.10.2021) தினமணியில் அற்புதமான கட்டுரை ஒன்றினை எழுதி இருக்கிறார். வில்லங்கச் சான்றிதழ் போடும் போது மேனுவல், கணிணி சான்றிதழ்கள் போடுவோம். கிராமம், சர்வே எண் ஆகியவைகளை விண்ணப்பத்தில் கொடுத்து கட்ட வேண்டிய கட்டணத்துடன் கொடுக்க வேண்டிய கையூட்டுப் பணத்தையும் கொடுத்தால் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு வில்லங்கச் சான்றிதழ் நகல் கிடைக்கும். இது நடைமுறை. அதுமட்டுமின்றி அடியேன் மேனுவல் வில்லங்கம் போடும் போது மூன்று தடவை ஒரே வில்லங்கத்தைப் போடுவதுண்டு வெவ்வேறு பெயர்களில். காரணம் மேனுவல் வில்லங்கத்தைப் பதிவு செய்யும் அரசு ஊழியரின் போன். பார்த்துப் பார்த்து எழுத வேண்டும். ஒரு பதிவு காணாமல் போனால் வில்லங்கம் இருப்பது தெரியாமல் போய் விடும். பதிவு அலுவலகங்களில் பல விதமான புத்தங்கள் இருக்கின்றன. நீங்கள் வில்லங்கச் சான்றிதழில் படித்திருப்பீர்கள். புத்தகம் 1, 4, 3 என்று. அவைகள் ஒவ்வொன்றும் பதியக்கூடிய பத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அந்தந்தப் புத்தகங்களில் பதிவு செய்து வைப்பார்கள். இப்போது கணிணி வந்து விட்டதால் இன்னும் வசதி. வில்லங்கச் சான்றிதழ் என்பது வில்லங்கம் பார்க்கப் பயன்படுத்தும் ஒரு முறை மட்டுமே. அதில் பதிவு ஏதும் வரவில்லை என்பதால் சொத்து வில்லங்கம் அற்றது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எனது இதர பதிவுகளைப் படித்துப் பாருங்கள். வில்லங்கம் பார்க்க நாமினல் இண்டக்ஸ் எனும் ஒரு முறை இருக்கிறது என்று எனக்கு இன்றைக்குத் தான் தெரிய வந்தது. மூத்தோர் சொல். அது என்ன நாமினல் இண்டக்ஸ் வில்லங்கச் சான்றிதழ் என்கின்றீர்களா? சிட்டா போல என வைத்துக் கொள்ளுங்களேன். ஒரு கிராமத்தில் இருக்கும் சொத்துக்களை பெயரை வைத்துக் கண்டுபிடிப்பது. பெயர் வில்லங்கம் என்று அதற்குப் பெயர். உரிமையாளர் பெயர், அவரின் தந்தையின் பெயரை வைத்து ஒரு கிராமத்தில் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை அறிய முன்னாட்களில் செயல்பாட்டில் இருந்த பெயர் வில்லங்கச் சான்றிதழ் அது. அது இப்போது வழக்கத்தில் இல்லையாம். ஏன் இல்லை? எளிதில் ஊகித்து விடலாம். அரசியல்வியாதிகள் காரணம். அவ்வாறு எளிதில் பெயர் வில்லங்கம் போட்டால் ஊழலைக் கண்டுபிடித்து விடுவார்கள் என சமயோஜிதமாக சிந்தித்து வழக்கொழித்து விட்டனர். மக்கள் இயக்கங்கள் இந்த வகை வில்லங்கத்தைச் செயல்படுத்தக் கூறி தமிழக அரசிடம் மனு அளிக்க வேண்டும். இதற்கிடையில் உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லி விடுகிறேன். ஆன்லைன் பட்டாவில் பெயரை வைத்து தேடும் வசதி இருக்கிறது. அதில் பெயரின் மூன்று எழுத்துக்களைக் கொடுத்து கண்டுபிடிக்கலாம். இருப்பினும் அது சாலச் சிறந்தது இல்லை. ஏனெனில் பட்டாக்கள் அடிக்கடி மாறுபவை அல்லவா? பெயர் வில்லங்கத்தின் அவசியத்தை தமிழக அரசிடம் மனுவாய் அளித்து வசதி செய்து தரும்படி மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இந்திய அரசின் பிராப்பர்ட்டி கார்டு எல்லாப் பக்கமும் அமல்படுத்தப் பட்டால் பினாமி சொத்து சட்டத்தினை அமல்படுத்தி விடலாம். ஊழல் பெரும்பாலும் குறைந்து போகும்.
சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய பதவியைவிட்டு விலகியதோடு, நாட்டை விட்டும் வெளியேறியிருக்கிறார். நாடாளுமன்றம் கூடி புதிய குடியரசுத் தலைவராக ரணில் விக்ரமசிங்கேயைத் தேர்ந்தெடுத்துள்ளது. தன்னைத்தவிர, வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாத ரணில். இராசபக்சேயின் ஆதரவுடன் தலைவர் பதவியை ஏற்றிருப்பதின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடாது. மேலும் பெருகவே செய்யும் இராசபக்சே ஆட்டுவித்தப்படி ஆடும் பொம்மையாக மட்டுமே இரணில் இருக்க முடியும். நாட்டு மக்களை வாட்டி வரும் பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்த பிறகு இராசபக்சே கும்பல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியே தீரும். இராசபக்சேயின் பின்னணியில் சீனா உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ உதவியையும், பொருளாதார உதவியையும் சீனா செய்துள்ளது. சீனாவின் பொருட்களை விற்பதற்கு இலங்கை ஒன்றும் பெரிய சந்தையல்ல. இலங்கையினால் சீனாவுக்கு எந்தவிதமான பிரதிப் பயனும் கிடையாது. அப்படியிருந்தும் இலங்கைக்கு சீனா ஓடோடி வந்து உதவிகளைச் செய்தது ஏன்? இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக நமக்கு இலங்கைப் பயன்படும் என்ற நோக்கத்துடனேயே சீனா இந்த உதவிகளை செய்தது; செய்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை இந்தியாவுக்கு மட்டும் அபாயமல்ல. மாறாக, இந்துமாக்கடலை தங்களது வணிகம், சுற்றுலாத் தொழில் போன்றவற்றுக்குப் பயன்படுத்திவரும் மேற்கு நாடுகளுக்கும் அபாயமாகும். ஈழத் தமிழர் பிரச்சனையும் இந்தியாவின் பாதுகாப்புப் பிரச்சனையும் வெவ்வேறானவையல்ல. இரண்டுமே பின்னிப்பிணைந்து இணைந்திருக்கின்றன. ஒன்றைத் தவிர்த்துவிட்டு மற்றொன்றை நிறைவேற்றிவிட முடியாது என்பதை இந்திய அரசும், மேற்கு நாடுகளும் உணரவேண்டும். இலங்கையில் மூண்டெழுந்துள்ள சிங்கள மக்களின் புரட்சித் தீயை அணைப்பதற்கு இராசபக்சேவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்தே தீரும். இவ்வளவு பாடுபட்டு கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டியுள்ள சினா அவ்வளவு சுலபமாக இலங்கையைவிட்டு வெளியேறிவிடாது. இந்த உண்மையை எவ்வளவோ விரைவில் இந்திய அரசு புரிந்துகொள்கிறதோ அந்தளவுக்கு இந்தியாவுக்கும்நல்லது ஈழத் தமிழருக்கும் நல்லதாகும்.
வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!! பிரம்மாண்டமாக நடந்த கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்., குவியும் வாழ்த்துக்கள்.! அட.. காமெடி நடிகர் சாம்ஸின் மகனா இது.! ஹீரோ மாதிரி சூப்பரா இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!! கோடை விடுமுறையை கணக்கில் வைத்து ரிலீசாகும் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ.. மக்களே ரெடியா?..! ஒரே கும்மாளம்தான்.! வெளிநாட்டில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஹன்சிகா.! வைரல் வீடியோ.!! 18 வயது பட்டாம்பூச்சியான அனிகா.! ப்பா.. பார்ட்டியில் செம ஹாட்டாக எப்படி ஜொலிக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் கிளிக்ஸ்!! 23 ஆண்டுகளுக்கு பின்னர் கடனை திருப்பி கொடுத்த நடிகை மும்தாஜ்.. யாரிடம் எவ்வுளவு வாங்கினார் தெரியுமா?..! #PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..! தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களுக்கு அதிக அளவில் உள்ளனர். ஒருசில பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. தற்போது பிரபுதேவாவுடன் இணையானது தேவி படத்தில் நடித்திருந்தார். தேவி முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 வரும் மே 31 அன்று வெளியாக உள்ளது. தேவி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் தமன்னா. இந்நிலையில் விருதுவிழா ஒன்றுக்கு ப்ரோமஷனுக்கு சென்ற நடிகை தமன்னா படுகவர்ச்சியில் வந்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Thamanna #Latest photo collection Copy Link தற்போதைய செய்திகள் மகளுக்கு பசிக்கு உணவளிக்க முடியாது தவித்த தந்தை.. ஏரியில் வீசி கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.! வடமாநில கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் சோகம்..! தென்காசி அருகே துயரம்.! பெங்களூரில் தமிழனுக்கு புளிப்பு மிட்டாய் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. ரூ.20 க்கு இணங்கி 400 லாஸ்.. குமுறலோ குமுறல்..!
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, வௌிநாடுகளில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், உள்நாட்டு தெங்கு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கரிசனை செய்ய அதிகாரிகள் தவறியுள்ளனர். தெங்கு முக்கோண வலயத்தில் ஒன்றான புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது உற்பத்தியாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். தென்னைகளில் ஒரு வகை நோய் பரவி வருவதால் தேங்காய் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்னை மரங்களில் உள்ள ஓலைகளில் இலை கொட்டியான் என்னும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதினால் தெங்கு உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெங்கு செய்கையாளர்கள் கூறுகின்றனர். இலை கொட்டி நோயை கட்டுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏனைய தென்னந்தோட்டங்களுக்கும் அது பரவக்கூடும் என தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே, இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுங்க அதிகாரிகளாக காட்டிக்கொண்டு இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 47 வயதான நதிஷா ரோஷினி, கடந்த திங்கட்கிழமை இலங்கையில் இருந்து விமானத்தில் வந்ததாக சென்னை பொலிசார் தெரிவித்தனர். இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மின் (31) மற்றும் செல்லையா அரவிந்தன் (40), என அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள், குறித்த நபரை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர். அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்தார். பின்னர், பொலிஸ் இலும் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் சொல்லுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு கலைஞரின் நாடகங்கள் ஒரு சாட்சி. நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில் அவர் வித்தகர். சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசியல் செய்திகள் போன்றவை அவரது நாடகங்களில் பின்னிப் பிணைந்திருக்கும். அடித்தள மக்களின் அவலக் குரல் அவரின் நாடகத்தில் எதிரொலித்தன இவையே பிற்காலத்தில் அவரது அரசியல் நோக்கங்களுக்கு துணை செய்தன. நாடகத்தைப் பற்றி கலைஞர் கூறுகையில் “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை அதனால்தான் அரசியல் கருத்துக்களை பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளி தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்றார். “தூக்குமேடை, மகான் பெற்ற மகான்” போன்றவை அவரது சமூக சீர்திருத்த நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அதேபோல் நச்சுக்கோப்பை, சாக்கிரட்டீசு போன்ற நாடகங்கள் மூடநம்பிக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்தன. “குடிசைதான் ஒருபுறத்தே கூரிய வேல் வாள் வரிசையாய் வைத்திருக்கும்” எனத் தொடங்கும் புகழ்மிக்க வசனம் இடம்பெற்ற நாடகம் “பரப்பிரம்மம்”. புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தஞ்சை புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கலைஞர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், ராமாயணத்தை கிண்டல் செய்து எழுதிய பரதாயனம் போன்ற இலக்கிய நாடகங்கள் பலவற்றை கலைஞர் தனக்கே உரிய தனித்தன்மையுடன் எழுதினார். கலைஞரின் “திருவாளர் தேசியம்பிள்ளை” போன்ற நாடகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் கட்சியை நையாண்டியுடன் விமர்சிப்பதாக அமைந்திருக்கும். திமுகவிற்கு உதயசூரியன் சின்னமாக கிடைத்த பிறகு அதனை பிரபலப்படுத்துவதற்காக “உதயசூரியன்” என்ற பெயரிலேயே நாடகம் ஒன்றை இயற்றினார் கருணாநிதி. இப்படி நாடகத்தை சமூக மாற்றம், பகுத்தறிவு, போன்றவற்றுடன் தேர்தல் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் கலைஞர் திறமையுடன் கையாண்டார். கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கற்றப்பட்டது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அறங்கேற்றம் செய்யப்பட்டது. ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’ உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர். ‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதிய கலைஞர், அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார். 1957-ம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக, ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார்.
தஞ்சாவூர் சூலை 31: வீட்டில் இருந்தே மின்மோட்டாரை இயக்கும் செல்போன் செயலியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் அரவிந்த்‌. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வம் உடையவர். ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும் எப்பொழுது தடைப்படும் என தெரியாத நிலையில் வயலிலேயே நீண்ட நேரம் காத்திருந்து மின்சாரம் வரும்போது மின்மோட்டாரை இயக்குவதும், அதனை நிறுத்துவதும் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் ஒன்று. இதற்காக ஒருவர் வயலிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் வரும் நேரத்தில் மின் மோட்டாரை இயக்க வேண்டும். இந்த சிரமத்தை போக்க பொறியியல் பட்டதாரியான அரவிந்த் செல்போன் மூலம் மின்மோட்டாரை இயக்குவதற்கும், அதேபோல இருமுனை மின்சாரம் மும்முனை மின்சாரம், தண்ணீர் எவ்வளவு தேவை என்பதை அறியும் வகையில் ஒரு செயலியை கண்டறிந்து அதனை ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இதுகுறித்து அரவிந்த் கூறியதாவது: எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் நீண்ட நேரமாக மின்சாரத்திற்காக காத்திருந்து விவசாயம் செய்வதை அறிந்து தான் புதிய முறையில் சிந்தித்து இதனை உருவாக்கினேன். இதை வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் பொருத்திவிட்டால் சுலபமாக எந்த பகுதியில் இருக்கிறோமோ அதே பகுதியில் வேலை செய்து கொள்ளலாம். இதன் மூலம் பல விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அரவிந்தின் இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்கு அரசு அங்கீகாரம் அளித்து, தயாரிப்புக்கு உதவி செய்தால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள்.
நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறன்றன. விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி, மியா ஜார்ஜ், கனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோப்ராவில் 7 தோற்றங்களில் நடிகர் விக்ரம் நடித்துள்ளாராம். சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த விக்ரம் நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், ´´கோப்ராவில் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறேன். அவை திணிக்கப்பட்டதாக இருக்காது. கதைக்கு மிகவும் தேவைப்பட்டது. படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்தப் படத்துக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது. நிச்சயம் திரைக்குவரும். துருவ்வுடன் நான் நடித்த கோப்ரா திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டியது. மிஸ் ஆகிவிட்டது. இந்த ஆண்டு கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் திரைக்குவரவிருக்கிறது´´ என்றார்.
உடல் பருமன் பிரச்னையில் தமிழக பெண்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. உடல் பருமன் என்பது தற்போது அதிகரித்து வரும் ஓர் உடல் நலப் பிரச்னை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வேறுபாடின்றி இருக்கும். மாறி வரும் வாழ்வியல் பழக்கங்கள், உணவு, மன அழுத்தம் என பலக் காரணங்களாக இதற்கு அடுக்குகின்றனர் வல்லுநர்கள். இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதையும் படியுங்கள் - ஒரு ஆண் காமத்திற்காக மட்டும் ஒரு பெண்ணோடு பழகுவதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அறிக்கையின்படி, ஆண்களை விட பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகமாக இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக தென் இந்தியப் பெண்களுக்கு சற்று தீவிரமாக உடல் பருமன் பிரச்னை இருக்கிறது என அறிக்கை முடிவுகள் சொல்கின்றன. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெற்கு மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் 15 முதல் 49 வயதுடைய பெண்களிடம் ஆய்வை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள், கேரளாவில் 14 மாவட்டங்கள், ஆந்திராவில் 13 மாவட்டங்கள், கர்நாடகாவில் 30 மாவட்டங்கள், தெலங்கானாவில் 31 மாவட்டங்கள் அடங்கும். இதையும் படியுங்கள் - திருமணம் செய்த அன்றே கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமா இந்த ஆய்வில், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தென் மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை 24% அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இந்த பிரச்னை 9.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் 6.9 சதவிகிதத்தில் கர்நாடகா, 5.7 சதவிகித அதிகரிப்புடன் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தேசிய அளவில் உடல் பருமன் பிரச்னை 3.3% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
“மனிதகுல வரலாறு குறித்த ஒரு சுவாரசியமான பதிவு இந்தூல். இதை படிக்கத் தொடங்கிவிடடால் கீழே வைக்கவே மனம் வராது” — பிBல் கேட்ஸ் சுவாரஸ்யமான மற்றும் ஆர்வத்தைத்துாண்டும் … இந்த பூமியில் நாங்கள் எவ்வளவு சுருக்கமான காலம் இருந்தோம் என்பதை இது உங்களுக்கு உணர்த்துகிறது – பBராக் ஒபாமா முதலிலிருந்து இருந்து கடைசி வரை ஆச்சர்யமூட்டும் … நான் படித்த சிறந்த புத்தகம் இதுவாக இருக்கலாம்- கிறிஸ் எவன்ஸ் வரலாறு மற்றும் நவீன உலகின் மிகப்பெரிய கேள்விகளைக் கையாளுகிறது … மறக்க முடியாத தெளிவான மொழியில் எழுதப்பட்டது – ஜாரெட் டயமண்ட் திடுக்கிடும் … இது உலகை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது – சைமன் மாயோ நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று … நம் இனங்கள் எவ்வாறு வளர்ந்தன என்பதைப் பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது – லில்லி கோல் உங்கள் மூளையிலிருந்து சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது, உலகத்தை விசித்திரமாகவும் புதியதாகவும் ஆக்குகிறது – சண்டே டைம்ஸ் சேபியன்ஸ் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படட சிந்தனைகளுக்கு மாற்றமாக மற்றும் ஆச்சரியமான உண்மைகளால் நிரம்பியுள்ளது. இந்த புதிரான, புராணத்தை உடைக்கும் புத்தகத்தை எந்த விவரத்திலும் சுருக்கமாகச் சொல்ல முடியாது; நீங்கள் அதை படிக்க வேண்டும் – ஜான் கிரே – பைfனான்சியல் டைம்ஸ் Add to cart We at the Flashbooks.lk are committed to protecting your online privacy. We recognize the need for consumers to control the use and management of personal information. By personal information we mean information that can be used to identify or contact an individual. This includes a first and last name, a physical address, an email address, and your phone number. We may transfer that information within the Flashbooks.lk to employees, to the extent necessary to provide the requested products to you. We do not sell or trade your personal information to unrelated third parties. FLASHBOOKS Flash books is one of the prominent online book sellers in Sri Lanka, specializing in imported English & Tamil Books.
தமிழகத்தில் காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம்... ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்‍கும் அபாயம் பூந்தமல்லி அருகே மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் - இயந்திரங்களை பயன்படுத்தி தான் கழிவுகளை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் அதிகாரிகள் அலட்சியம் சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் அராஜகம் - உதயநிதி பிறந்தநாளையொட்டி தடுப்புகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிப்பு கோவையில் கார் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் - வழக்கு தொடர்பாக திருச்சி இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், லேப்டாப் பறிமுதல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகிறார், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா - தேர்தலில் யாரும் போட்டியிட விண்ணப்பிக்காத நிலையில் ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் - கோவையில் முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதியில் கர்நாடகா போலீசார் விசாரணை மெட்ரோ, மாநகர பேருந்து, புறநகர் ரயில்களில் பயன்படுத்தும் வகையில் பொது பயண அட்டை - சென்னையில் டிசம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென அறிவிப்பு மகாராஷ்டிராவின் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் ராஜஸ்தானில் இந்திய - ஆஸ்திரேலிய ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சி - இன்று தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிப்பு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நடத்திய சி.ஐ.டி.சி.ஏ. மாநாட்டை புறக்கணித்தது, இந்தியா - கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாலத்தீவு, ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு
லண்டன்: படிப்பில் இங்கிலாந்து மாணவர்களை விட இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அபாரமாக படிப்பதாக இங்கிலாந்து அரசின் கல்வி மற்றும் திறன் துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. இங்கிலாந்து கல்வி தர அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் மைக் டாமிலின்சன். இவர் இங்கிலாந்து அரசின் கல்வி மற்றும் திறன் துறை ஆலோசகராக இருக்கிறார். இவர் டெலிகிராப் அளித்துள்ள பேட்டியில், இங்கிலாந்தில் உள்ள இந்தியா மற்றும் சீன வம்சாவளி குழந்தைகள் படிப்பில் அதிக திறமை கொண்டவர்களாக உருவாகி வருகின்றனர். இவர்களது கற்கும் ஆற்றல் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இவர்கள் அதிக அளவில் டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற தொழிலுக்கு செல்கின்றனர். ஆனால், இங்கிலாந்து குழந்தைகள் வகுப்பறையில் தடுமாறி வருகின்றனர். இதற்கு இந்திய மற்றும் சீன பெற்றோர்கள் அளவுக்கு இங்கிலாந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையை கவனிக்காததும், அவர்களில் வளர்ச்சியில் போதிய பங்களிப்பு செய்யாததும் தான் காரணம். இதனால் இங்கிலாந்து குழந்தைகளின் செயல்திறனும், தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளன என்றார் டாமிலின்சன். அமெரிக்காவில் பிபிஓ பணிகளை துவக்கும் காக்னிஸைன்ட் இங்கிலாந்தில் படிப்பில் சிறந்து விளங்கும் இனத்தவரில் சீனர்கள் முதலிடத்தில் உள்ளனர். தேசிய அளவில் தேர்வுகளில் 86 சதவீதம் சீனர்கள் தேர்வு பெற்று விடுகின்றனர். இந்தியர்கள் 85 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளனர். ஆனால் சீனர்களின் அதே தரத்துடன்தான் இந்திய மாணவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மாணவர்களுக்கு 80 சதவீதத்துடன் 3வது இடமே கிடைத்துள்ளது. பரீட்சைகளில் தேர்ச்சி விகிதத்தில் இந்தியர்களின் சதவீதம் 59.1 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து மாணவர்களின் சதவீதம் 44.3 ஆக உள்ளது.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிந்ததும் பாக்யா துணிச்சலான முடிவெடுத்து அவரை விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். கோபி இப்படி குடும்பத்தை விட்டு நடுரோட்டில் வந்ததற்கு தான்தான் காரணம் என ஒருபுறம் ராதிகா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அந்த சமயம் பார்த்து ராதிகாவின் அம்மா, பாக்கியலட்சுமி ஒரு ராட்சசி. கோபியை இப்படி எல்லாம் செய்ததால்தான் அவர் உன்னுடன் வாழ விரும்பி இருக்கிறார் என்று ராதிகாவிற்கு தூண்டி விடுகிறார். Also Read: 50 வயதிலும் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி இதன்பிறகு ராதிகா கோபியை ஏற்றுக்கொண்டு அவருடன் சேர்ந்து வாழும் எண்ணம் ஏற்படுகிறது. மறுபுறம் பாக்யா குடும்ப செலவிற்காகவும் இனியாவின் கல்வி கட்டணத்திற்காகவும் பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார். இனியா தனக்கு கல்வி கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும் என பாக்யாவிடம் சொன்னதால், 5 ஆயிரத்தை மட்டுமே கையில் வைத்திருக்கும் பாக்யா என்ன செய்வது என முழிக்கிறார். கோபி இனியாவின் பள்ளிக்கு சென்று பணத்தை செலுத்தி விடுகிறார். Also Read: பெங்களூர் தக்காளி போல் மாறிய பிரியா பவானி சங்கர் அப்போது இனியாவை சந்தித்த கோபி, அவரிடம் உருகி உருகி பாசமாக பேசுகிறார். கூட்டுக் களவாணியான இனியாவும் கோபி செய்த தவறை எல்லாம் மறந்துவிட்டு, வீட்டிலேயே இருக்க பிடிக்கவில்லை என அழுகிறார். ‘படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, சீக்கிரம் நாம் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கலாம்’ என்று கோபி இனியாவுக்கு நம்பிக்கை அளித்து பள்ளியிலிருந்து கிளம்புகிறார். இது மட்டுமின்றி எழில் புதிதாக எடுக்கவிருக்கும் படத்திற்காக தயாரிப்பாளரை சந்தித்து பேசுகிறார். Also Read: சூடுபிடிக்கும் சக்களத்தி சண்டை, குளிர்காயும் கோபி அப்போது படத்திற்கு கதை மட்டுமல்ல கதையில் ஜீவனும் இருக்கவேண்டும் என எழில் தயாரிப்பாளரிடம் சொல்ல, அதன்பிறகு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு தயாரிப்பாளரின் கோபத்தை எழில் சம்பாதித்து விடுகிறார். இதன் பிறகு எழில் இனி வேறு ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் எழிலுக்கு எந்தவிதமான பணக் கஷ்டத்தையும் காட்டக்கூடாது. அவர் நல்லபடியாக படத்தை எடுத்து முடிக்க வேண்டுமென பாக்யா நினைக்கிறார். Continue Reading Related Topics:இனியா, இன்றைய சினிமா செய்திகள், எழில், கோபி, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பாக்கியலட்சுமி, பாக்யா, ராதிகா, விஜய் டிவி
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. அமைப்பின் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார். குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது. இவரது நியமனத்தை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் பத்திரிகையாளர் வினித் நரேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் அர்ச்சனாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
மக்கள் தங்கள் வாக்குகளால் நேரடியாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின் அவர்கள். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்படுபவரே அன்றி, மக்களுக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. முதல்வர் அரசின் அதிகாரத்திற்கு உரியவர். ஆளுநரின் வேலை கையெழுத்திட்டு ஒப்புதல் அளிப்பது, அவ்வளவுதான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து, அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்ட முன்வடிவுக்குக் கையெழுத்திட்டு, ஒப்புதல் தருவது மட்டுமே ஆளுநரின் வேலை. மாறாகக் கிடப்பில் போட்டு நெடிது காலம் தாழ்த்துவதோ, மறுப்பதோ அல்லது குடியரசுத் தலைவருக்குச் சட்ட முன்வடிவுகளை அனுப்புவதோ ஆளுநரின் வேலை இல்லை என்று பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ..... # தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்ட முன்வடிவு, 2022, # தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச் ) சட்ட முன்வடிவு, 1983, # தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமைச் சட்ட முன்வடிவு, 2022, # தமிழ்நாடு பல்கலைக் கழகச் சட்ட முன்வடிவு, 2022 என்று 21 சட்ட முன்வடிவுகள் ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. 02-05-2022 அன்று கிண்டி ஆளுநர் மளிகைக்குச் சென்று, ஆளுநர் என்.ஆர்.ரவியைச் சந்தித்தார் முதல்வர். அப்போது அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலை நிறுத்தும் வகையில், ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும் சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநரிடம், முதல்வர் வேண்டிக் கொண்டார் என்று அரசுத் தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது. தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வரும் முதல்வருக்கு, ஆளுநரும் துணை நிற்பது அவரின் கடமை. எனவே முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, ஆளுநர் தன்னிடம் இருக்கும் 21 சட்ட முன்வடிவுகளுக்கும் விரைவில் ஒப்புதல் தருவார் என்று நம்புகிறோம்.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி வந்ததும், அது தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக பெரும் கனமழை பெய்யக் காரணமாக இருந்ததும் நம்மில் பலர் அறிந்ததே. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி நேற்றுவரை சென்னையை அச்சுறுத்தி வந்தது. இந்தப் புயலால் ஏற்பட்ட பெருமழையால் இதுவரை தமிழகத்தில் 39 பேர் இறந்துள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இன்று மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இன்று மாலை ஆந்திர மாநிலத்திலுள்ள ஓங்கோலுக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடந்தது. இதனால் ஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாகத் தெரியவருகிறது. தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறிப்பாக குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் 9 செ.மீ., ஆம்பூரில் 8 செ.மீ., சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம், அரூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., தாம்பரம், மதுராந்தகம், திருத்தணி, திருக்கோயிலூர், திருத்துறைப்பூண்டி, தக்கலை, கோபிசெட்டிப் பாளையம், தர்மபுரி, மேலூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card