news_id
int64
201
2.26M
news_date
stringlengths
25
29
news_category
stringclasses
3 values
news_title
stringlengths
1
636
news_article
stringlengths
1
138k
201
2010-03-25T01:55:00+05:30
தமிழகம்
மின் தடையை கண்டித்து கிராம மக்கள் மறியல் : போலீஸ் தடியடியால் பதட்டம்
புதுக்கோட்டை : மின்தடையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் மீது, போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் ஊராட்சி தலைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். ஆவேசமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல்வீசி எதிர் தாக்குதல் நடத்தியதில் போலீசார் ஐந்து பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்பின்றி மின்தடை செய்வதால் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மின்தடை மற்றும் மின்னழுத்த குறைபாடுகளால் ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் ஸ்தம்பித்துள்ளது. விவசாயப் பணிகளுக்கு நாள்தோறும் மூன்று மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. பொறுமை இழந்த விவசாயிகள், பொன்னமராவதி மின்வாரிய கிளை அலுவலக உதவி செயற்பொறியாளரை நேரில் தொடர்புகொண்டு விவசாயப் பணிகளுகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும். முடியாத பட்சத்தில் முன்னறிவிப்புடன் மின்தடை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற மின்வாரிய அதிகாரிகள், முன்னறிவிப்புடன் மட்டுமே மின்தடை செய்வதாக உறுதியளித்தனர். இருந்தும் அப்பகுதிகளில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின் வினியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதர நேரங்களில் மின்னழுத்த குறைபாடுகள் காரணமாக மின் மோட்டார்களை இயக்க முடியாத சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மின் வாரியத்தின் இத்தகைய அலட்சியப் போக்கை கண்டித்தும், தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரியும் பொன்னமராவதி மற்றும் ஆலவயல், நகரப்பட்டி, கண்டியாநத்தம், அம்மாப்பட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை 11 மணிக்கு கொப்பனாப்பட்டி சந்திப்பில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த கிராம மக்கள் தடையை மீறி பேரணியாக சென்றனர். தாலுகா அலுவலகம் அருகே இவர்களை வழிமறித்த போலீசார், கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொறுமை இழந்த போலீசார், பேரணிக்கு முன்னிலை வகித்த ஆலவயல் ஊராட்சி தலைவர் மலையாண்டி கையை பிடித்து இழுத்துத் தள்ளினர். இந்நிலையில், கிராம மக்கள் தரப்பிலிருந்து வீசப்பட்ட ஒரு கல் போலீசார் மீது விழுந்தது. இதில், ஏட்டு கணேசமூர்த்தி தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல் வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் மாறியது. சம்பவத்தை தொடர்ந்து, பொன்னமராவதி மற்றும் கொப்பனாப்பட்டி பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
202
2010-03-25T01:55:00+05:30
தமிழகம்
விஷத்தன்மையுடன் கோதுமை இறக்குமதி; மூவர் கைது
சென்னை : ஆஸ்திரேலியாவிலிருந்து விஷத் தன்மையுடன் சென்னை வந்த 1,250 டன் கோதுமையை, சுங்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். தரமானது தான் என போலி சான் றிதழ் கொடுத்து எடுத்துச் செல்ல முயன்ற சுங்கத்துறை ஏஜன்டுகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். கோதுமை இறக்குமதியில் சதிவேலை உள்ளதா எனவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் துறைமுகத்திலிருந்து எம்.எஸ்.சி.பெக்கி என்ற சரக்கு கப்பல் இரண்டு வாரத்திற்கு முன், சென்னை துறைமுகம் வந்தது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 50 கன்டெய்னர்களில் 1,250 டன் கோதுமை வந்திருந்தது. இவற்றின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய். கோதுமை கன்டெய் னர்கள் மீஞ்சூரில் உள்ள கன்டெய் னர் யார்டில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. மத்திய பூச்சி கட்டுப்பாட்டுத் துறை மற்றும் உணவுப் பொருள் ஆய்வுத்துறையின் அனுமதிக்கு பின், சுங்கத்துறை அதிகாரிகள் கோதுமையை விடுவிக்க முடியும். இந்த நடைமுறைக்காக சுங்கத் துறை அதிகாரிகள், கோதுமை மாதிரி எடுத்து, உணவுப் பொருள் ஆய்வுத் துறைக்கு அனுப்பி வைத்தனர். மைசூரில் உள்ள ஆய்வகத்தில் நடந்த சோதனையில், "பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமாகி கோதுமை விஷத்தன்மை கொண்டதாக உள்ளது' என தெரியவந்தது. இதுதொடர்பாக, சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ., அதிகாரிகள், கன்டெய்னர் யார்டிற்கே சென்று, கோதுமையை முற்றிலும் கொட்டி ஆய்வு நடத்தினர். அடுத்த கட்ட பரிசோதனைக்காக கோதுமை மாதிரிகள் மீண்டும் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோதுமையில் விஷத்தன்மை இருப்பது தெரிய வந்துள்ளதால், 1,250 டன் கோதுமையும், மீஞ்சூர் கன்டெய்னர் யார்டிலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோதுமை தரமானது தான் என, போலி சான்றிதழைக் கொடுத்து எடுத்துச் செல்லவும் முயற்சி மேற்கொண்டது தெரிய வந்துள்ளது. சுங்கத்துறை கமிஷனர் ராஜன் கூறியதாவது: கோதுமையில் பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இதனால் கோதுமைக்கு,"கிளியரன்ஸ்' கொடுக்காமல் முடக்கி வைத்துள் ளோம். கோதுமை தரமானது தான் எனக் கூறி எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் ஏஜன்டுகள் முயன்றனர். போலி ஆவணம் என கண்டறிந்து, ஜவஹர், முத்துபிரபு, ரமேஷ் என்ற மூன்று ஏஜன்டுகளை கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்கிறது. இவ்வாறு ராஜன் கூறினார். விஷத்தன்மை வாய்ந்த கோதுமை இறக்குமதியின் பின்னணியில் சதி வேலை உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில், சீனாவிலிருந்து உடல் நலத்தை பாதிக்கும் வகையில், பிரபல பிராண்டுகளின் பெயரில் போலியான சாக்லெட், பிஸ்கட், தோல் நோய் ஏற்படுத்தும் நறுமணப் பொருட்கள், சோப்பு, ஷாம்புகள், பவுடர்களும் இறக்குமதியாகி வருகின்றன. இவை அவ்வப்போது சுங்கத் துறையினரின் பிடியில் சிக்கிய நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து விஷத்தன்மை வாய்ந்த கோதுமை இறக்குமதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
203
2010-03-25T01:56:00+05:30
தமிழகம்
சாருலதாவுடன் தொடர்பு உதவி கமிஷனர் சஸ்பெண்ட்
சென்னை : போலி ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி சாருலதாவிடம் தொடர்பு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், உதவி கமிஷனர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை நகரில், சாருலதா என்பவர் தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி என்று கூறிக் கொண்டு, பல இளைஞர்களிடம், போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நகை, பணம் பெற்றுள்ளார். காவல் துறையிலேயே இவருக்கு பலத்த செல்வாக்கு இருந்ததால், இவரிடம் பணம் மற்றும் நகைகளைக் கொடுத்த இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த இளைஞர்கள், போலீசாரின் உதவியை நாடினர். போலீசாரும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை சரிபார்த்து, சாருலதா போலி ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதவி கமிஷனர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரடியாக விசாரணை நடத்தி, உதவி கமிஷனர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு பரிந்துறை செய்தார். இந்நிலையில், உதவி கமிஷனர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்து அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
204
2010-03-25T01:56:00+05:30
தமிழகம்
பழைய தலைமை செயலக ராணுவ குடோனில் தீ விபத்து
சென்னை : பழைய தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ குடோனில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய தலைமைச் செயலகத்தில் ராணுவ குடோன் உள்ளது. இந்த குடோனில் ராணுவத்தினர் பயன்படுத்திய தஸ்தாவேஜுகள், நோட்டு புத்தகங்கள், பொருட்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று இரவு 10.30 மணியளவில் ராணுவ குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் கருகிய பொருட்களின் நாற்றம் வரவே, ராணுவ அதிகாரிகள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடினர். தலைமைச் செயலகத்தின் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆறு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. குடோனை திறந்து பார்த்த போது அங்கிருந்த பிளாஸ்ட்டிக் நாற்காலிகள் தீயில் எரிந்தது தெரியவந்தது. தலைமைச் செயலகத்தில் இருந்த போலீசார் விசாரணையில், ராணுவ குடோனுக்கு அருகில், ராணுவ கேன்டீன் உள்ளது. இந்த கேன்டீனில் சேகரிக்கப்படும் குப்பைகள், ராணுவ குடோனுக்கு பக்கத்தில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை தினத்தோறும் தீயிட்டு எரிப்பது வழக்கம். இதே போல் நேற்றிரவு குப்பைகளை தீயிட்டு எரித்துள்ளனர். இதிலிருந்து தீப்பொறி சாரம் வழியே குடோனில் விழுந்து அங்கிருந்த பழைய பொருட்களின் ஊடே நாற்காலிகளிலும் பற்றிக் கொண்டது தெரியவந்தது.
207
2010-03-25T02:00:00+05:30
இந்தியா
11 பேரை பலி வாங்கிய பஸ் ஆற்றில் பாய்ந்தது எப்படி?
கோட்டயம் : கேரள மாநிலம், சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி வந்த தனியார் பஸ் மின் கம்பத்தில் மோதி, ஆற்றில் விழுந்த விபத்தில் 11 பேர் இறந்தனர். ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றப் போனவரும் மூச்சுத் திணறி இறந்தார். கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி நேற்று முன்தினம் பிற்பகல், 40 பயணிகளுடன் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கோட்டயம் அருகே தாழத்து அங்காடி பகுதியில் பஸ் சென்ற போது, பின்னால் வந்த காருக்கு பஸ் டிரைவர் வழி விட்டார். அப்போது, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பஸ் மோதி, அருகே இருந்த மீனாட்சி ஆற்றில் விழுந்தது. பஸ்சின் முன்பகுதி உட்பட பெரும்பகுதி ஆற்றுக்குள் விழுந்தது. இதில், 11 பேர் பலியாயினர். அவர்களது உடல்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களும் மீட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆற்றில் பஸ் விழுந்ததில் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் சேற்றில் புதைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விபத்தில் காயமின்றி தப்பி ஓடி விட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்திய வட்டார போக்குவரத்து அலுவலர், (ஆர்.டி.ஓ.,) பஸ்சில் தொழில் நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. ஸ்டியரிங் வளையமும் சரியாகத் தான் செயல்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து எவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நேற்று காலை அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் கூடியது. அதில், பலியான ஒவ்வொருவரது குடும்பத்திற்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், மீட்புப் பணியில் ஈடுபட்டு இறந்த சதீசன் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
208
2010-03-25T02:00:00+05:30
இந்தியா
மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை
புவனேஸ்வர் : ஒரிசா, பீகார் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நேற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இங்கு நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், பாதுகாப்பு படையினர் மூவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் கோபமடைந்துள்ள மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பீகாரில், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை, குண்டு வைத்து கவிழ்த்தனர். ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தினர். அவர்களின் வன்முறை நேற்றும் தொடர்ந்தது. ஒரிசா, அம்பாஜரி வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக, நக்சல் ஒழிப்பு படை மற்றும் மாநில போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர், நேற்று அதிகாலை தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு மறைந்திருந்த ஏராளமான மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், பாதுகாப்பு படையினர் மூவர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் காயமடைந்தனர். மாவோயிஸ்ட்கள் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை. அருகில் உள்ள மால்காங்கிரி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை, மாவோயிஸ்ட்கள் குண்டு வைத்து தகர்த்தனர். பீகார், கயா மாவட்டத்தில், சுங்க வரி வசூலிப்பு மையம் ஒன்று மீது, மாவோயிஸ்ட் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், பாதுகாவலர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினரின் ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகளையும், மூன்று லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றிச் சென்றனர். மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில், பசீர் கான் என்ற மார்க்சிஸ்ட் பிரமுகரை, மாவோயிஸ்ட்கள் கொலை செய்தனர். தொடரும் வன்முறை சம்பவங்களையடுத்து, பீகார், ஒரிசா, மேற்கு வங்க மாநிலங்களில், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
210
2010-03-25T02:01:00+05:30
இந்தியா
கொலைக் குற்றத்தில் தொடர்பு பாலிவுட் நடிகர் ஹாஸ்மி கைது
புதுடில்லி : பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவன், கொலைக் குற்றத்தில் தொடர்புடையதால் போலீசார் நேற்று அவனை கைது செய்தனர். ரகீமுதீன் என்ற பால்லே என்ற இம்ரான் ஹாஸ்மி (26) என்பவன், டில்லியிலுள்ள வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டான். இவன், உத்தரபிரதேசத்தில் இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடையவன். இவனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முன்பு, 2007ல் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பி ஓடிவிட்டான். பின், மும்பைக்கு தப்பி வந்து பாலிவுட்டில் சில படங்களிலும் "டிவி' சீரியல்களிலும் நடித்தான். இவனை கண்டுபிடிப்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் உ.பி., போலீசாராலும்,மேலும் 50 ஆயிரம் ரூபாய் டில்லி போலீசாராலும் அறிவிக்கப்பட்டிருந்தது . தற்போது அவனை போலீசார் கைது செய்தனர்.
212
2010-03-25T02:02:00+05:30
இந்தியா
குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரி, திப்ராயப்பேட்டையில் அடுக்கு மாடி வீடுகளின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுச்சேரி உப்பளம் தொகுதி திப்ராயப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 12 அடுக்கு மாடி கட்டடங்கள் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம், பராமரிப்பற்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த குடியிருப்பின் இரண்டாவது மாடி வீட்டின் மேல் தளத்தின் ஒரு பகுதி, நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். பக்கத்தில் வசிப்பவர்களும் அங்கு திரண்டனர். வீடு இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இடிந்து விழுந்த வீட்டை, தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். அவரிடம் வீட்டு உரிமையாளர்கள் மனைப் பட்டா வழங்கி, வேறு வீடு கட்டித் தருமாறு முறையிட்டனர். குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேல் தளம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
213
2010-03-25T02:04:00+05:30
தமிழகம்
100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது வெயில்
சென்னை : தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாலை 4 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு, காலை 8 மணி வரை நீடித்தது. பருவ மழை போதியளவு பெய்யாததால் வெயிலின் தாக்கம், பிப்ரவரி மற்றும் மார்ச் மாத துவக்கத்திலே தெரிந்தது. இதனால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில வாரங்களாக பகல் முழுவதும் அனல் காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல இடங்களில் இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. ஆனால், சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், கடல் காற்று வீசுவதால் வெயிலின் உக்கிரம் சற்று குறைந்து காணப்படுகிறது. வெயில் எப்படி? சென்னை நகரில் நேற்று 91.76 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை 100.76, திண்டுக்கல் 102.20, கோவை 99.68, திருச்சி 98.96, சேலம் 101.84, வேலூர் 101.3, பாளையங்கோட்டை 102.38, கடலூர் 93.2, புதுச்சேரி 91.58, நாகை 97.88, தூத்துக்குடி 93.92, கன்னியாகுமரியில் 93.74 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில் பதிவாகியது. சென்னை நகரில் இன்று 94 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் அடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
215
2010-03-25T02:06:00+05:30
தமிழகம்
கதர் வாரியத்தில் அவசியமாகி உபரியாகி போன ஊழியர்கள்
மதுரை : கதர் கிராமத் தொழில் வாரியத்தில் உபரி ஊழியர்கள் அவசியமானவர்களாகி, மீண்டும் உபரியாக மாறிய வினோதம் நடந்துள்ளது. கதர் கிராமத் தொழில் வாரியத்தில், 2001 முதல் 2005 வரை 1196 பதவிகள் நீக்கம் செய்யப்பட்டன. அதில் சில பதவிகள், பதவி உயர்வு பெற முடியாத அளவிற்கு இருக்கிறது. ""இதனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இல்லாமல் இருப்பவரைவிட, இளநிலையில் உள்ளவர் "உதவி இயக்குனர்' பதவியை அடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது'' என வாரிய ஊழியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் நல்லசிவம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: தொழில்நுட்ப பிரிவுகளில் பதவி உயர்வின்றி பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, வாரிய பணி விதிகளில் வழிவகை இருந்தும் "இளநிலை உதவியாளர்' பதவி உயர்வு மறுக்கப் பட்டுள்ளது. மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் பதவிகள் உருவாக்க அரசு உத்தரவிட்டும், இன்னும் உருவாக்கப்படவில்லை. மேலும் உபரி என குறிப்பிடப்பட்ட டைப்பிஸ்ட்களை அவசியமானவர்கள் என கருதி பதவி உயர்வு அளிக்கப் பட்டது. ஆனால் மீண்டும் உபரி ஊழியர்களாக்கிய வினோதத்தால், இரு ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதுபோன்ற குறைபாடுகளை தவிர்க்க, புதிய பணி விதிகள் உருவாக்கிய பின்னரே, அனைத்து பிரிவுகளிலும் ஒரே சமயத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும், என்றார்.
216
2010-03-25T02:06:00+05:30
தமிழகம்
கருத்து கணிப்பு வெளியிட தடை மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை : பிரசாரம் ஓய்ந்த பின்னும், தேர்தல் நாளன்றும் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேர்தல் விதிகளின்படி, தேர்தல் நாளன்று (27ம் தேதி), ஓட்டு அளித்து விட்டு வெளியே வருபவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவதும், அதை தேர்தல் முடியும் வரை வெளியிடுவதும் கூடாது. அது போல், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும், தேர்தல் பிரசாரம் முடியும் இன்று(25ம் தேதி) மாலை 5 மணி முதல் தேர்தல் நடைபெறும் 27ம் தேதி மாலை 5 மணி வரை வெளியிடக் கூடாது. இது அனைத்து "டிவி', ரேடியோ, பத்திரிகை, இன்டர்நெட், மொபைல் போன் என எந்த ஊடகங்களுக்கும், அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
218
2010-03-25T02:08:00+05:30
தமிழகம்
டெண்டர் விண்ணப்பங்களை இணையதளத்தில் எடுக்கலாம்
சென்னை : டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய டெண்டர்களில், கான்ட்ராக்டர்கள் விண்ணப்பம் பெறுவதே பெரும் சிக்கலாக இருந்தது. பல இடங்களில் அரசியல் முக்கிய புள்ளிகளின் தலையீட்டால், கான்ட்ராக்டர்களை விண்ணப்பம் வாங்க விடாமலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்க விடாமலும் அடித்து விரட்டும் சம்பவங்களும் நடக் கின்றன. இந்நிலையில், தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் டுள்ளது. இதன்படி, கட்டுமானப் பணிகளின் மதிப்பீட்டில், 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் கொள்முதல் மதிப்பு இருந்தாலும், கட்டுமானத் துக்கான ஆலோசகர்கள் நியமித்தல் உட்பட மற்ற அனைத்து வகை கொள்முதல்களிலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு இருந்தாலும், அதற்கான டெண்டர் ஆவணங்களை இணையதளம் மூலமே எடுத்துக் கொள்ளலாம். டெண்டர்கள் வெளியீட்டுக்கென அரசு வைத்துள்ள இணைய தளம் மற்றும் டெண்டர் விடும் துறை குறிப்பிடும் இதர இணைய தளங்களில், டெண்டர் ஆவணங்களை இலவசமாக, "டவுண்லோடு' செய்து கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளதாக, நிதித்துறை செயலர் பிறப்பித் துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
219
2010-03-25T02:08:00+05:30
தமிழகம்
மருந்துகளை திருப்பி அனுப்பிய மதுரை வணிகர்கள்
மதுரை : கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் காலாவதியானவை என தெரியவந்ததை தொடர்ந்து, 400 பாட்டில்களை மதுரை மருந்துக்கடை உரிமையாளர்கள் திருப்பி அனுப்பினர். சென்னையில் காலாவதியான மருந்துகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் உயிரோடு விளையாடியவர்களை போலீசார் கைது செய்தனர். மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். "இந்த மருந்துகள் மதுரைக்கு அனுப்பப் பட்டதா' என மருந்து ஆய்வாளர்கள் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து 500 பாட்டில்களில் இருமல் மருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டது. பெட்டியில் 60 பாட்டில்கள் இருப்பதற்கு பதில், 100 பாட்டில்கள் இருந்ததால் மருந்து கடை உரிமையாளர்கள் சந்தேகமடைந்தனர். இதைதொடர்ந்து 400 பாட்டில்களை கோவை டீலருக்கு திருப்பி அனுப்பினர். மருந்து ஆய்வாளர்கள் 100 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுரை மருந்து வணிகர் சங்க செயலாளர் பழனியப்பன் கூறியதாவது : மதுரையில் காலாவதியான மருந்துகள் எதுவும் இல்லை என்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காலாவதியான மருந்து, மாத்திரைகளை மீண்டும் டீலர்களுக்கே அனுப்பி வருகிறோம். காரணம் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பினால் எம்.ஆர்.பி. தொகையில் 30 சதவீதம் திருப்பி தருவர். காலாவதியான மருந்துகளை குப்பைகளில் கொட்டாமல், புதைத்தோ, எரித்தோ அழிக்க வேண்டும் என டீலர்களை அரசு எச்சரிக்க வேண்டும். மருந்துகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் எங்கள் சங்கத்தை (0452- 262 3141) தொடர்பு கொள்ளலாம் என்றார். தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், பொருளாளர் கண்ணப்பன் உடனிருந்தனர்.
220
2010-03-25T02:09:00+05:30
தமிழகம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் புறக்கணிப்பு
திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் மாநில தலைவர் தம்பித்துரை கூறியதாவது: ஏப்ரலில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். விடைத்தாள் திருத்தும் பணியில் இல்லாதவர்கள், அன்று ஆதரவாக மையங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வாகிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில், 10 சதவீதத்தை பறித்து முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் முழுவதையும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை இடைநிலை கல்வி என்றும், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களை மேல்நிலை கல்வி என்று தனியாக இயக்குனரகம் உருவாக்க வேண்டும். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை வேலை நாட்களுக்குள் முடித்திட வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை அரசும், கல்வித்துறையும் இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம், என்றார். கூட்டமைப்பின் தொடர்பாளர் அங்குச்சாமி, நிதிக்காப்பாளர் அருணாச்சலநாதன் உடன் இருந்தனர்.
221
2010-03-25T02:09:00+05:30
தமிழகம்
பென்னாகரத்தில் பட்டுவாடா சுறுசுறுப்பு இன்றுடன் பிரசாரம் முடிவு
தர்மபுரி:பென்னாகரம் தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பணம், பரிசுப் பொருட்கள் வினியோகம் சுறுசுறுப்பாக நடக்கிறது.துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஸ்டாலின் காலை 10 மணிக்கு தின்னப்பட்டியில் பிரசாரத்தை துவங்கி, மாலை 4 மணிக்கு பாப்பாரப்பட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்துடன் பிரசாரத்தை முடிக்கிறார்.தி.மு.க., மத்திய இணை அமைச்சர்கள் காந்திசெல்வம், பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், வேலு, பொன்முடி, நேரு, பன்னீர்செல்வம், அன்பரசு, சாமிநாதன், ராமச்சந்திரன், சுப.தங்கவேலன், மதிவாணன் உள்ளிட்டவர்களும், 17 மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டவர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமங்களில், வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொன்னையன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் தங்கள் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு முதல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க.,வினர் தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பண பட்டுவாடாவில் இறங்கினர். பண பட்டுவாடாவை எதிர்த்தால் மக்களிடம் அதிருப்தி வரும் என்பதால் ஒரு கட்சி வழங்கும் பணத்தை மற்றொரு கட்சி கண்டு கொள்ளவில்லை. 500 முதல் 2,000 ரூபாய் வரை கட்சிகள் தங்கள் செல்வாக்கிற்கு ஏற்ப வினியோகம் செய்து வருகின்றன. ஒகேனக்கலில் அலைமோதிய அரசியல் கட்சியினர் கூட்டம்:பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று காலை ஒகேனக்கலில் குவிந்தனர். வழக்கத்தை விட நீர்வீழ்ச்சி பகுதி, படகு துறையில் கூட்டம் அலைமோதியது.இன்று மாலை 5 மணியில் இருந்து 28ம் தேதி காலை 10 மணி வரையில் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளி மாவட்ட கட்சியினர் நேற்று ஒகேனக்கலில் குளித்து மகிழ்ந்தனர். வெளி மாவட்டம், வெளியூர் அரசியல் கட்சியினர் வெளியேற வேண்டும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைச் சுற்றியுள்ள செக்-போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
223
2010-03-25T02:10:00+05:30
தமிழகம்
கூடுதல் விலை அறிவிப்பால் இனித்த கரும்பு பாசனநீர் பற்றாக்குறையால் கசக்கிறது
தியாகதுருகம் : பருவமழை பொய்த்ததால் தியாகதுருகம் பகுதி கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கிணறுகளில் பாசனத்திற்கு போதுமான நீர் கிடைக்கும் என்று நம்பி கூடுதல் பரப்பில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நல்ல விலை கிடைப்பதாலும், பராமரிப்பு சிரமம் குறைவாக இருப்பதாலும், பல விவசாயிகள், கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதி முழுவதும் கிணற்று பாசனத்தை நம்பியே, கரும்பு பயிரிடப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், பதிவு செய்யாமல் பயிரிட்ட கரும்புக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காமல், பல விவசாயிகள், இடைத்தரகர்களிடம் சிக்கி அலைக்கழிக்கப்பட்டனர். வெட்டுக்கூலி கூட கிடைக்காத நிலையில் கரும்பை தீயிட்டு கொளுத்தினர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில், புதிய தனியார் சர்க்கரை ஆலைகளின் வரவால், விளைவிக்கப்படும் கரும்பை வாங்குவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. இதனால் நெல், பருத்தி, வேர்க்கடலை பயிர்களை தவிர்த்து, அவை சாகுபடி செய்த இடங்களில் எல்லாம் கரும்பு பயிராக காட்சியளிக்கிறது. கரும்பு டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அளிக்கப்படும் என்று, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இனிப்பான செய்தியாக இருந்தது. இருப்பினும், கோடைக்காலம் துவக்கத்திலேயே கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தியாகதுருகம் பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பாததால் ஆயக்கட்டு விவசாயிகள், பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீர்நிலைகளில் விரைவாக நீர் வற்றியதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கோமுகி, மணிமுக்தா ஆறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள், பல இடங்களில் சேதமடைந்து, நீர் கசிந்து விரயமாகி வற்றியது. இதனால், தியாகதுருகம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், "கிடுகிடு'வென குறைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளை போலவே, கடந்த ஆண்டு பருவழை அதிகம் பெய்யும் என்று நம்பி, கூடுதலான பரப்பில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள், நீர் பற்றாக்குறையால் கவலையடைந்துள்ளனர். மின்தட்டுப்பாட்டால் பயிர்களுக்கு போதுமான நீரை பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு, பயிர் காய்ந்து விடுமோ என்ற தவிப்பும் ஏற்பட்டுள்ளது. கோடையின் துவக்கத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் இன்னும் இரு மாதங்களுக்கு சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து கரும்பு பயிரை காப்பாற்ற முடியுமா என்ற அச்சம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
224
2010-03-25T02:11:00+05:30
தமிழகம்
இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்
சென்னை : திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் இளைஞர்களுக்கான பன்னாட்டு பயிற்சி முகாம் ஏப்., 20ல் துவங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ணா தபோவனத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில், ஒரு மாத பன்னாட்டு பயிற்சி முகாம் வரும் ஏப்., 20ம் தேதி துவங்கி, மே மாதம் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த 15 வயதுக்கு மேல், 30 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். கட்டணம் ஏதுமில்லை. நோயாளிகள், துர்பழக்கத்திற்கு ஆளானவர்களும் பங்கேற்கலாம். விண்ணப்பங்கள் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்திற்கு ஏப்., 10ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டுமென தபோவனம் தெரிவித்துள்ளது.
225
2010-03-25T02:11:00+05:30
தமிழகம்
நெல்லை மாநகராட்சி பட்ஜெட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.திருநெல்வேலி மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் சுப்ரமணியன் நேற்று சமர்ப்பித்தார். கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வரவு 91.28 கோடி ரூபாயாகவும், செலவு 101.72 கோடி ரூபாயாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏழு கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறை பட்ஜெட், இந்த ஆண்டில் 10 கோடியானது. பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதால், இலந்தை குளத்தில் தீம் பார்க், நேருஜி சிறுவர் அரங்கத்தை மேம்படுத்தல் என பல ஆண்டுகளாக கூறிவரும் திட்டங்களையே, இந்த பட்ஜெட்டிலும் தெரிவித்திருப்பதாகவும், புதிய வளர்ச்சி திட்டங்கள் இல்லாததை கண்டித்தும், தங்கராஜ் தலைமையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சுயேச்சை கவுன்சிலர் கொப்பரை சுப்பிரமணியன், மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறினார். இதற்கு மேயர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரும், மேயரை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
229
2010-03-25T02:14:00+05:30
தமிழகம்
தமிழகம் முழுவதும் முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாட புத்தகங்கள்
கடலூர் : தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 1 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திலிருந்து, அந்தந்த மாவட்ட, "குடோன்'களுக்கு, புத்தகங்கள் அனுப்பப்படும். மாவட்ட கல்வித் துறையிடமிருந்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்வது வழக்கம். இந்த நடைமுறையில் பல குழப்பங்கள் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு, துவக்கப்பள்ளிகளுக்கு அஞ்சல் வழியே பாட நூல்கள் அனுப்பப்பட்டன. தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகளுக்கு சென்றடைந்ததால், இந்த ஆண்டு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு அஞ்சல் வழியே பட்டுவாடா செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக இவ்விரண்டு வகுப்புகள் மற்றும் பாடத்திட்டம் மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடங்களைத் தவிர, 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கான பாட நூல்களை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம், பள்ளி கல்வித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்ட குடோன்களுக்கும் அனுப்பியது. மெட்ரிக் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று முதல் அஞ்சல் துறை மூலம் அனுப்பப்பட்டது.
230
2010-03-25T02:14:00+05:30
தமிழகம்
இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை
சென்னை:மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் அடங்கிய சட்டசபை தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஓட்டுப் பதிவு எண்ணிக்கை நேற்று மாலை வெளியானது. தோல்வி அடைந்த இளைஞர் காங்கிரசார் மறுதேர்தலை நடத்த வலியுறுத்தி, நாற்காலியை எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளின் தலைவர் உள்ளிட்ட 10 நிர்வாகிகள் மற்றும் 10 பிரிதிநிதிகளின் தேர்தல் நேற்று நடந்தது.காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வாசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லக்குமார், ஜே.எம்.ஆரூண் எம்.பி., ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் வாக்களிக்க வந்த இளைஞர்களின் வாகனங்களை, சத்தியமூர்த்தி பவனில் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தின் வெளியே உள்ள ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தினர். அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் ரஞ்சன்குமார், வாசன் ஆதரவாளர் தியாகு, செல்லக்குமார் ஆதரவாளர் கோபிநாத் ஆகியோர் போட்டியிட்டனர். துறைமுகம் தொகுதிக்கு வாசன் ஆதரவாளர் யோகானந்த், சேப்பாக்கம் தொகுதிக்கு ஜே.எம்.ஆரூண் ஆதரவாளர் ரயான்பஷீர், சாம்பிரசாத், அண்ணாநகர் தொகுதியின் பிரிதிநிதி பதவிக்கு வாசன் ஆதரவாளர் ஜி.ஆர்.கதிரவன், செல்லக்குமார் ஆதரவாளர் அனுராதா, எழும்பூர் தொகுதியின் பிரிதிநிதி பதவிக்கு வாசன் ஆதரவாளர் தாஸ்பாண்டியன் உட்பட ஏராளமானோர் போட்டியிட்டனர்.மாலை 5 மணிக்கு மேல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. சேப்பாக்கம் தொகுதியின் தலைவராக ரயான்பஷீர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என, தோல்வி அடைந்தவரின் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர்."மறுதேர்தல் நடத்த முடியாது' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து விட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் காங்கிரசார் திடீரென்று நாற்காலிகளை தூக்கி சத்தியமூர்த்தி பவன் வெளியே வீசினர். சிலர் உருட்டுக் கட்டை மற்றும் கம்புகளுடன் உள்ளே நுழைந்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, ரகளையில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை வெளியேற்றினர். போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஓட்டு எண்ணிக்கை முடிவில், துறைமுகம் தொகுதியின் தலைவராக வாசன் ஆதரவாளர்கள் யோகானந்த், வில்லிவாக்கம் தொகுதியின் தலைவராக மனோகர், சேப்பாக்கம் தொகுதியின் தலைவராக ரயான் பஷீர் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆயிரம் விளக்கு தொகுதி தலைவராக கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் செல்வம், அண்ணாநகர் தொகுதி தலைவராக செல்லக்குமார் ஆதரவாளர் அனுராதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
231
2010-03-25T02:15:00+05:30
தமிழகம்
பத்து ஆண்டுகளாக புகை பிடிப்பவருக்கு காச நோய் வாய்ப்பு பத்து மடங்கு அதிகம்
தேனி : பத்து ஆண்டுகளாக தொடர்ந்து புகை பிடித்து வருபவருக்கு, காச நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. வளர்ச்சி செயலாக்க குழுமம் மற்றும் பங்குதாரர்கள் சார்பில், உலக காசநோய் தினம் குறித்த கருத்தரங்கம் தேனியில் நடந்தது. திட்ட இயக்குனர் வனஜா தலைமை வகித்தார். தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி துணை முதல்வர் மைத்ரேயி, சுகாதாரப்பணிகள்(காச நோய்) துணை இயக்குனர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் ஹரிஹர சுப்பிரமணியம் பேசுகையில், எச்.ஐ.வி., மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் தேனி. தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 62,300 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 54,200 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 8,100 பேர் இன்னும் குணமடையவில்லை. இந்நோயால் தினமும் 5000 பேர் இறக்கின்றனர். ஆண்டுக்கு 1.8 மில்லியன் பேர் இறப்பதாக உலக சுகதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஒருவர் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து புகைப்பிடித்து வந்தால், அவருக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் உள்ளது. அதேபோல் 30, 40 ஆண்டுகளாக புகைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் காசநோய் இருக்கும். 2006 ல் காசநோய் சிகிச்சை எடுத்தவர்களின் எண்ணிக்கையில், இப்போது இரண்டு, மூன்று மடங்கு குறைந்து விட்டது. காசநோய் என்பது காற்றின் மூலம் பரவக்கூடியது. காசநோய் உள்ள ஒருவரை கண்டறிந்து தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர் மூலம் 25 பேருக்கு காசநோய் பரவுவதை தடுக்க முடியும், என்றார்.
235
2010-03-25T02:17:00+05:30
தமிழகம்
தொழில் நுட்ப உதவியாளர் 2-வது பட்டியல் : மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கு
தேனி : மின்வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் இரண்டாவது பட்டியலை வெளியிடாமல், மின்வாரிய நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. தமிழக மின்வாரியத்தில் 2,600 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,200 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை பூர்த்தி செய்ய நடத்திய போராட்டங்களுக்கு பின், டிச., 2007க்குள் 1100 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பவும், மீதமுள்ள பணியிடங்களை மார்ச் 2008க்குள் நிரப்பவும் மின்வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 5,500 பேர், "அப்ரண்டீஸ்' முடித்தவர்கள் 4,800 பேர் உட்பட 10 ஆயிரத்து 300 பேர் நேர்முகத்தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றனர். நேர்முகத்தேர்வை குறிப்பிட்ட காலத்தில் நடத்தாமல் இழுத்தடித்தனர். ஒரு வழியாக ஜூலை 2009ல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. 1,100 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 10 ஆயிரத்து 300 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் 2,200 காலி பணியிடங்களையும் நிரப்ப மின்வாரியம் முடிவு செய்து ஒப்புதல் அளித்தது. தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து இரண்டு கட்டமாக முடிவுகளை வெளியிட மின்வாரியம் தீர்மானித்தது. இதன்படி,2009 ஆக., 21ல் தேர்வான 1,100 பேரின் பட்டியலை வெளியிட்டது. அடுத்தவாரத்தில் மீதமுள்ள 1100 பேர் பட்டியலை வெளியிடுவதாக கூறினர். அறிவித்தபடி இரண்டாவது பட்டியலை வெளியிடவில்லை. மின்வாரிய பொறியாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ஆற்காடு வீராசாமி,"விரைவில் தகுதியான 1,100 பேரின் இரண்டாவது பட்டியல் வெளியிடப்படும்,' என்றார். அவர் அறிவித்து ஐந்து மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை. நேர்முகத்தேர்வு முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகியும் இரண்டாவது பட்டியலை வெளியிடாமல் மின்வாரியம் இழுத்தடித்து வருகிறது.
236
2010-03-25T02:17:00+05:30
தமிழகம்
சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்
சுற்றுச் சூழல்பாதிப்பால் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது. இதற்கு காரணம் இயற்கையை மனிதர்கள் சின்னா பின்னமாக்குவதே. இன்றைய அவசர உலகில் தம்வீட்டு குப்பையை அடுத்த வீட்டு வாசலில் குவிப்போரே அதிகம். நம்மை சுற்றியுள்ள பகுதியை, சுத்தமாக, ஆரோக்கியமாக, மாசுபடுவதில் இருந்து பாதுகாக்கும் பொதுநலம் உள்ளோர் வெகு சிலரே. சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் தொழில் நிறுவனங்களுக்கு அதிக பங்குண்டு. அவற்றை கட்டுப்படுத்த தனி வாரியமே இருந்தாலும், பல நிறுவனங்களை முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. எனவே அவை தாமாகவே முன்வந்தால் தான், சுற்றுச் சூழலை காக்க முடியும். மதுரை விளாங்குடி பொன்நகர் முதல் தெருவில் ஜோஸ்லின் எலக்ட்ரிக்கல் இண்டஸ் ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. 40க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் இந்நிறுவனம் எலக்ட் ரிக்கல் "பிட்டிங்ஸ்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. டியூப் லைட்டுகளுக்கான பிரேம்கள், பிட்டிங்குகள், அந்த லைட்டுகளை "கவர்' செய்யும் வகையில் தகரத்திலான "ஷேட்'கள், சோக்குகளை தயார் செய்கின்றன. பல ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனம், பத்தாண்டுகளுக்கு முன் தீவிர தயாரிப்பில் இறங்கியது. மாடி வீடுபோன்ற கட்டடத்தில் இயங்கி வருகிறது. சுற்றிலும் குடியிருப்புகள் முளைக்க, இந்நிறுவனத்தினர் சுற்றுச் சூழலில் ஆர்வம் காட்டினர். இங்கு பிட்டிங்குகள் தயாரிக்கப்படுவதால் எந்நேரமும் சத்தம் எழும். அவற்றின் மீது "பெயின்ட்' ஸ்பிரே செய்கின்றனர். வார்னிஷ் பயன்பாடும் உள்ளது. இதனால் அவற்றின் மணம் நிறுவனம் முழுக்க வியாபித்துள்ளது. இது வெளியில் பரவுவதை தவிர்க்க "பெயின்ட் பூத்' என்ற ஒரு சேம்பரை உருவாக்கி உள்ளனர். இதில் வைத்து பெயின்டை ஸ்பிரே செய்யும்போது, அதன் துளிகள், சிதறல்கள் காற்றால் உள்ளிழுக்கப் பட்டு, சிம்னி வழியாக வெளியேறுகிறது. இதனால் அறைக்குள் இருக்கும் பெயின்ட் வாசனை அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெளியில் மரம் இருப்பதால் அது அதிகம் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதேபோல தகடு வெட்டும், பிரஷ்ஷிங் செய்யும் சத்தமும் வெளியில் பரவுவதில்லை. இதற்காகவே காம்பவுண்ட் உள்ளும், புறமும், நெட்டிலிங்கம், அசோகா மரங்களை நட்டுள்ளனர். அருகில் உள்ள காலியிடத்தில் வேம்பு, வாகை, வாவரைக்காய்ச்சி போன்ற மரங்களை வளர்க்கின்றனர். அடுத்து நிறுவனத்தில் சேரும் கழிவு நீரையும் தேவையின்றி ரோட்டில் ஓடவிடுவதில்லை. அருகிலேயே ஐந்தடி அகலம், 15 அடி ஆழத்திற்கு குழிதோண்டி, கூழாங் கற்களால் நிரப்பி, கழிவுநீரை பூமிக்குள் இறக்கி விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப் படுகிறது. விற்பனை பிரதிநிதி ஜெயராஜ் கூறுகையில், ""சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்,'' என்றார்.
237
2010-03-25T02:18:00+05:30
தமிழகம்
போராட தயாராகும் பள்ளி அலுவலர்கள்
மதுரை: தமிழ்நாடு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் துரைராஜ் அறிக்கை:சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. வேலை நியமன தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டு நான்காண்டுகளாகி விட்டது. அதன் பின்னும், பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அனுமதி இல்லை. வேலை நியமன தடைச் சட்டம் அமலில் இருந்தபோது, சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப் பட்ட பணியிடங்களில் உள்ளோருக்கு சில பகுதிகளில் கோர்ட் உத்தரவுப்படி சம்பளம் வழங்கப்படுகிறது. பல மாவட்டங்களில் மேல்முறையீடு செய்துள்ளதால் பணியாளர் வாடும் நிலையில் உள்ளனர். இப்போக்கை எதிர்ப்பதுடன், மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனியாக பணியாளர் விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேலு, மாநில பொதுசெயலாளர் லூர்துமரியராஜ், பொருளாளர் ராஜாமணி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
238
2010-03-25T02:18:00+05:30
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேச்சு :சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு கிடைக்காத வாய்ப்பான தமிழகத்தை ஆளும் வாய்ப்பை கருணாநிதிக்கு மக்கள் கொடுத்தனர். வீராணம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டதைப்போல ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டார். மீனுக்கு தூண்டில் போடுவதுபோல் கலர், "டிவி' உள்ளிட்ட இலவசத் திட்டங்களை நிறைவேற்றி மக்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் அறிக்கை: சிறுபான்மையினருக்கு வாரி வழங்கும் மத்திய, மாநில அரசுகள் பெரும்பான்மையினருக்கு செய்தது துரோகம் தான். மதம் மாறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், தன்மானத்துடன் வாழும் இந்து எஸ்.சி., - எஸ்.டி.,களின் சலுகைகளை பறிக்க துடிக்கின்றனர். இதன்மூலம், ஒட்டுமொத்த மதமாற்றத்தை அறுவடை செய்யலாம் என்பதே அவர்களின் சதி. இதை இந்துக்கள் அனுமதிக்கக் கூடாது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: "பென்னாகரத்தை, "பொன்' நகரமாக மாற்றுவேன்' என, ஜெயலலிதா கூறியுள்ளார். 10 ஆண்டுகால ஆட்சியில் பொன் நகரமாக மாற்றாமல், தகரமாக ஏன் வைத்திருந்தார். பஞ்சம் பிழைக்க சென்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தால், ஏன் வெளியூர் போகின்றனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: காவிரி கரையிலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள பெங்களூருக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கர்நாடகம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், காவிரி கரையில் வாழும் எங்களுக்கு ஆண்டவர்களும், ஆளுகிறவர்களும் இதுவரை தண்ணீரைக் கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை என, பென்னாகரம் மக்கள் ஆதங்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு: சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் பெண்களின் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். வரலாற்றை முன்னோக்கிப் பார்த்தால் போராட்டங்களை சந்தித்து தான் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ராஜேந்திரன் பேச்சு: தமிழ்மொழி தொன்மையான மொழி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. 1956ல் தமிழ்மொழி ஆட்சி மொழியாகச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இதன்படி, அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள் கண்டிப்பாக தமிழ் மொழியிலேயே அலுவலக நடைமுறைகளை மேற் கொள்ள வேண்டும்.
240
2010-03-25T02:19:00+05:30
தமிழகம்
பங்குனி உத்திர திருவிழா பழநிக்கு சிறப்பு பஸ்கள்
திண்டுக்கல்: பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்காக, பல் வேறு இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அறிக் கை:பழநி கோயிலில், மார்ச் 29ல் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற் காக மார்ச் 28 முதல் மார்ச் 30வரை, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, கோவை,திருப்பூர் பகுதிகளில் இருந்து பழநிக்கும், அங்கிருந்து பிற இடங்களுக்கும் பக்தர்களின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.மேலும் பக்தர்களுக்கு உதவும் வகையில், முக்கிய பஸ் ஸ்டாண்ட்களில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
242
2010-03-25T02:20:00+05:30
தமிழகம்
காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த காங்.,தொகுதி பொறுப் பாளர் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. தண்டபாணி எம்.எல்.ஏ., தலையிட்டு சமாதானப்படுத்தினார். திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய மூன்று சட்டசபை தொகுதிக்கு காங்., பொறுப்பாளர் கள் தேர்தல் நேற்று திண் டுக்கல் நாராயண அய்யர் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தலைவர், துணை தலைவர், 10 பிரதிநிதிகள் உட் பட 20 பேர் தேர்வு செய்வதற்கு கட்சியினர் ஓட்டு போட்டனர். வாசன், சிதம் பரம் கோஷ்டியினருக்கு இடையே ஓட்டு கேட்பதில் கடும் போட்டி இருந் தது. வாசன் அணியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக் கும், ஒய்.எம்.ஆர்.,பட்டி யை சேர்ந்த மணிகண்டனுக்கும் ஓட்டு கேட்பது தொடர் பாக பிரச்னை ஏற் பட்டது. இதனால் மண்டபத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. வாசன் அணிக் குள் மோதல் இருக்கக்கூடாது என தண்டபாணி எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர் ரவி சுப்ரமணியம் இவர் களை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் வாக்குவாதம் முற்றியதால் நகர் வடக்கு இன்ஸ் பெக்டர் முருகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதானம் செய்ததையடுத்து அமைதியாக தேர்தல் நடந்தது.
243
2010-03-25T02:20:00+05:30
இந்தியா
தேசிய நெடுஞ்சாலையாக 10 ஆயிரம் கி.மீ., மாநில சாலைகள் தரம் உயர்வு
புதுடில்லி : மாநில அரசின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 50 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தக் கோரி, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலையை, தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, கொள்கையளவில் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அது தொடர்பான நடைமுறைகள் விரைவில் துவங்க உள்ளன. மாநில அரசின் சாலைகளில் எவற்றை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவது என்பது குறித்து அமைச்சரவை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக, எந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்ற முன்னுரிமை பட்டியல் வழங்குமாறு, மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 70 ஆயிரத்து 934 கி.மீ., தொலைவில், தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இப்போது மாநில அரசின் சாலைகளில், 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்தப்பட்டால், பின் நாட்டின் தேசிய நெடுஞ்சாலையின் தொலைவு, 80 ஆயிரம் கி.மீ., ஆக அதிகரிக்கும்.
245
2010-03-25T02:21:00+05:30
இந்தியா
மின் திருட்டால் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு: கட்டண வசூலில் குளறுபடி
புதுடில்லி : இந்தியாவில், மின் திருட்டு மற்றும் சரியான கட்டண வசூலிப்பு நடைமுறை இல்லாமை போன்றவற்றால், மின் துறைக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மின்சாரத்தை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவு, கடந்த 2005-06ம் ஆண்டு யூனிட்டிற்கு 3.60 ரூபாயாக இருந்தது. அது, 2009-10ம் ஆண்டு, யூனிட்டிற்கு 4.16 ரூபாயாக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், மின் கட்டணங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக, உள்ளூர் செல்வாக்கை வைத்து, கொக்கி போட்டு மின் இணைப்பு ஏற்படுத்தி, மின்சாரத்தை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதை தவிர சில மாநிலங்களில், விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப் போன்றவற்றிற்காகவும் மின் திருட்டு நடைபெறுகிறது. இவை மட்டுமல்லாமல், சில மாநிலங்களில் மின்சார வினியோகத்தில் "த்ரீ பேஸ்' போன்றவற்றிற்கு சரியான மின் கணக்கீடு முறை இல்லாமல், குளறுபடிகள் காணப்படுகின்றன. இதனால், மின் திருட்டு மற்றும் சரியான கணக்கீடு இல்லாமையால், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இந்த நஷ்டத்தை சரிசெய்ய, மின் வினியோகத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என, திட்டக் கமிஷனின் இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
246
2010-03-25T02:21:00+05:30
தமிழகம்
மூணாறில் கட்டுமான பணிகள் நிறுத்தத்தால் தொழிலாளர் பாதிப்பு
மூணாறு: மூணாறில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கேரளா ஐகோர்ட் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்துள்ளதால், கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்காத நிலையில் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மூணாறில் அரசு நிலங்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்கப்படும், சட்ட விரோதமாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனால் மூணாறில் சுற்றுப்புற சூழல் பாதிக்கப் பட்டு, பசுமை இழந்து வருவதாக சமூக அமைப்பினர் சார்பில் கேரளா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மூணாறில் கட்டுமான பணிகளை நடத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாக, சென்ற மாதம் கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் பணிகள் இன்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலைத்தோட்ட நிர்வாகம் உள்ள தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வீட்டுடன் சேர்த்து கழிப்பறைகளை கட்டிக் கொடுக்கும் பணி நடந்து வந்தது. ஐகோர்ட்டின் உத்தரவால் இதற்கான பணிகள் பல்வேறு எஸ்டேட்டுகளில் பாதியில் நிறுத்தப் பட்டது. கட்டுமான பணிகள் தொடர முடியாத நிலையில் கழிப்பறை வசதியின்றி தோட்ட தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை ஏதேனும் எடுக்கவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
249
2010-03-25T02:22:00+05:30
தமிழகம்
கேராள செல்லும் ஜீப்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது: அதிவேகம், கூடுதல் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் விபரீதம்.
கூடலூர்: கேரளாவில் உள்ள எஸ்டேட் வேலைக்கு தமிழகத்திலிருந்து பெண்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் அதிவேகமாகவும், கூடுதலான ஆட்களையும் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. கூடலூர், கம்பம் பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட் வேலைகளுக்கு செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்வதற்காக ஏராளமான ஜீப்புகள் உள்ளன. தினமும் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7 மணி வரையில் கூடலூர் மெயின் ரோட்டில் எஸ்டேட் வேலைக்கு ஏற்றி செல்வதற்காக ஜீப்புகள் வரிசையாக நிற்கும். ஒவ்வொரு ஜீப்புகளிலும் குறைந்தது 15 பெண்கள் முதல் 20 பெண்கள் வரை ஏற்றிச் செல்கின்றனர். பெண்கள் மட்டுமின்றி ஜீப்புகளில் கேரளாவிற்கு கொண்டு செல்ல அரிசி, காஸ் சிலிண்டர், காய்கறிகள் உள்ளிட்ட ஏராளமானவைகளும் கொண்டு இதில் எடுத்துச்செல்லப்படுகிறது. ஏற்கனவே பெண்கள் உட்கார முடியாத நிலையில் உள்ள ஜீப்புகளில் பொருட்களும் ஏற்றிச் செல்வதால் ஜீப் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் செல்லும். இது மட்டுமின்றி கேரளாவில் காலை 7.30 மணிக்கு வேலையை தொடங்க வேண்டும் என்பதால் ஜீப் டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டிச் செல்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட ஜீப் விபத்துகள் கூடலூரில் இருந்து குமுளி செல்லும் ரோடுகளில் நிகழ்ந் துள்ளது. குமுளி மலைப்பாதையில் ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் பெண்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அடிக்கடி இதே போல் விபத்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகளோ, போலீசாரோ இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத் துறை போலீசார், தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு வேலைக்கு செல்லும் ஜீப்புகளை வேடிக்கை பார்த்து வண்ணம் உள்ளனர். பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு கூடுதல் பெண்களை ஏற்றிச் செல்லும் ஜீப்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
250
2010-03-25T02:22:00+05:30
இந்தியா
வரதட்சணை தண்டனையில் தப்ப புது சட்டம் வருகிறது
புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அல்லது கொடுக்கும் வரதட்சணையின் மதிப்புக்கு ஈடான அபராதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அது தண்டனையாக வழங்கப்படும். இவ்வாறு சட்டம் இருந்தாலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டுமே வழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார். வரதட்சணை கொடுப்பவர்கள், தானே முன்வந்து புகார் கொடுத்தால், அவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களாக பார்க்க, இந்த திருத்தம் முதல் முறையாக வழி வகுத்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும். இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,"வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், மணமகள் வீட்டார், வரதட்சணை தொடர்பான புகார்களை தெரிவிக்க முன் வருவதில்லை. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார். இதை தவிர மற்றொரு திருத்தமும், இச்சட்டத்தில் மேற்கொள் ளப்பட உள்ளது. அதாவது, மணமகன் அல்லது மணமகள் வீட்டார் தங்களுக்குள் வழங்கும் பரிசு பொருட்களும், தற்போதைய சட்டப்படி வரதட்சணையாக கருதப்படுகிறது. எனவே, இருவீட்டார் இடையே வழங்கப்படும் பரிசுப் பொ ருட்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது; இல்லையென்றால், அதுவும் வரதட்சணையாக கருதப்படும். சமூக நெருக்கடி காரணமாகவே, மணமகள் வீட்டார் வரதட்சணை கொடுக்கின்றனர் என்ற தொடர் விவாதத்தின் காரணமாகவே, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
251
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
தீயணைப்பு வீரர் தற்கொலை
போடி: போடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் (29). போடி தீயணைப்பு நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், மனைவி தாமரைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த முத்துச்செல்வம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிராந்தியில் பூச்சை மருந்தை கலந்து குடித்தார். தேனியில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டதில் இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
252
2010-03-25T02:23:00+05:30
இந்தியா
குளுகுளு சிம்லாவில் வெயில் தலைதூக்குது
சிம்லா : கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 8 டிகிரி முதல் 10 டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, சிம்லா வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது: கடந்த 2004ம் ஆண்டு, மார்ச் மாதம் 7ம் தேதி வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியசை எட்டியது. இந்தாண்டு, குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. சிம்லாவை தவிர தரம்சாலா, பனி சூழ்ந்த பிரதேசங்களான லாகவுல் ஸ்பிட்டி மற்றும் கின்னவுர் ஆகிய இடங்களில் வெப்பம் அதிகமாக நிலவுகிறது. இமாச்சல் பிரதேச மாநிலம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அருகில் உள்ள மாநிலமான ஜம்மு காஷ்மீர் கூட, இம்மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையை குறைக்க உதவவில்லை. எப்போதும் லாகவுல் ஸ்பிட்டி பகுதிக்கு செல்லும் வழியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அப்பகுதிக்கான போக்குவரத்து தடைபடுவது வழக்கம். ஆனால், அந்த பகுதியில் கூட, இந்தாண்டு வெப்பநிலை வழக்கத்தை விட 6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. சுற்றுலா தலமான தரம்சாலாவில், வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்தால் தான், வெப்பநிலை குறையும். ஆனால், அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, இமாலயன் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஜே.சி.குனியால் கூறுகையில்," உலக வெப்பமயமாதல் மற்றும் கார்பன் வெளியேற்றம் அதிகரித்தல் ஆகியவையே இமாலயன் பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பிற்கான காரணங்கள்' என்றார்.
253
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
அரசு இடத்தை அதிக தொகைக்கு வாடகை கேட்டும் குறைவாக விடுவது ஏன் : கவுன்சிலர்கள் கேள்வி
சிவகாசி: சிவகாசி நகராட்சி கூட்டம் தலைவர் ராதிகாதேவி தலைமையில், துணைத்தலைவர் அசோகன், கமிஷனர் விஜயராகவன் முன்னிலையில் நடந்தது.முனீஸ்வரன்: பஸ்ஸ்டாண்டில் காலியிடத்தை மாதவாடகைக்கு குத்தகை அடிப்படையில் விடுவதற்கு 1200, 1300 ரூபாய்க்கு அதிக தொகை என நிர்ணயம் செய்து தீர்மானம் வந்துள்ளது. ஆனால் அதே இடத்தை மாதம் ரூ.3000க்கு வாடகைக்கு எடுத்து கொள்ள டிராப்ட் அனுப்பியுள்ளார்கள். அது பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கவில்லை. ஏன் அதிகமாக வாடகை கொடுப்பதை ஏற்க வில்லை. கமிஷனர்: டெண்டரில் குறிப்பிட்ட விதிமுறைகள் படி டிராப்ட் வரவில்லை. டெண்டரில் குறிப்பிட வேண்டும்.துணைத்·தலைவர்: இந்த இடத்தை வாடகைக்கு விடுவதற்கு நகராட்சி உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் தனியாக கூறுகிறேன்.அய்யப்பன்: நகராட்சியில் டெண்டர் விவகாரத்தில் தவறு நடக்கிறது. இதனை ஏன் கண்டுகொள்வதில்லை என தெரியவில்லை. 1200க்கு வாடகைக்கு கேட்ட இடத்தை 4000 ரூபாய்க்கு எடுத்துக் கொள்ள டிராப்ட் அனுப்பியும் ஏன் நிராகரிக்கப்பட்டது என விளக்கம் தரவேண்டும்.துணைத்தலைவர்: சொத்து வரி, தொழில் வரியில் இதுவரை 95 சதவீதம் வசூல் இலக்கை எட்டியுள்ளோம். மீதியுள்ள தொகையையும் வசூலிக்க கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
254
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
ஹர்கிஷன் சிங் பிறந்த நாள் பிரகாஷ் கராத் புது தகவல்
புதுடில்லி:விவசாய குடும்பத்தில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங்கின் உண்மையான பிறந்த தேதி தெரியாததால், தியாகி பகத் சிங் மறைந்த தினத்தை தனது பிறந்த தேதியாக அறிவித்துக் கொண்டார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் 94வது பிறந்த நாள், டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஹர்கிஷன் சிங்கின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல், இந்த விழாவில் வெளியிடப் பட்டது. முதல் பிரதியை ஹர்கிஷன் மனைவி ப்ரீதம் கவுர் பெற்றுக்கொண் டார். இவ்விழாவில் மா.கம்யூ., பொதுச்செயலர் பிரகாஷ் கராத் பேசுகையில், "ஹர்கிஷன் சிங்கை போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்பது பேரின் புத்தகங்களை வெளியிட திட்டமிட்டுள் ளோம். கடந்த 1916ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் விவசாயக் குடும்பத் தில் பிறந்தவர் ஹர்கிஷன். அவரது பிறந்த நாளை அவரின் பெற்றோர் குறித்து வைக்கவில்லை. பஞ்சாபைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப் பட்ட நாளை, ஹர்கிஷன் சிங் தனது பிறந்த நாளாக அறிவித்துக் கொண்டார் என, இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹர்கிஷன் சிங் மூலம் நாம் நிறைய விஷயங் களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கட்சிக் காகவும், விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும் அவர் ஆற்றிய பணி மகத் தானது' என்றார்.
255
2010-03-25T02:24:00+05:30
இந்தியா
முஸ்லிம் வாரிய பதவிகளில் பெண்கள் பலம் அதிகரிப்பு
லக்னோ : அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் 21வது மாநாடு நடந்தது. இதன் உறுப்பினர்களில் பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே வாரியத்தின் நிறுவனரும் உறுப்பினருமான பேகம் நசீர் இக்தெதார் அலி என்பவருடன், லக்னோவைச் சேர்ந்த ருக்ஷானா லரி மற்றும் சாபியா நசீம், கோல்கட்டாவின் நூர்ஜஹான் ஷகீல், ஐதராபாத்தின் அஸ்மா ஜோரா ஆகிய நான்கு பெண்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிசெய்யும் விதத்தில், வாரியத்தின் விதிமுறைகளில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 41 லிருந்து 51 ஆக உயர்த்துவதற்கு ஏற்பத் திருத்தங்கள் செய்யப்பட்டன. செயற்குழுவில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகாலயா, திரிபுரா, அசாம் மற்றும் லடாக் பகுதிகளிலிருந்தும் பெண்கள் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
257
2010-03-25T02:24:00+05:30
தமிழகம்
கிராமங்களில் மின் தடை நேரம் அதிகரிப்பு: 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு
விருதுநகர்: கிராமப்புறங்களில் மின்தடை அதிகரிப்பு செய்திருப்பதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோடைகாலம் துவங்கி விட்டதால், மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் சப்ளை செய்ய முடியாமல் திணறும் மின்வாரியம் வருகின்றனர். அறிவிக்கப்படாமல் மின் தடை செய்கின்றனர். நகர் புறங்களில் மின் தடை செய்தாலும், நுகர்வோர் தொடர்ந்து "பவர் ஹவுஸ்'க்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை செய்வதாலும், முக்கிய அதிகாரிகள் நகரத்தில் இருப்பதாலும் அதிகநேரம் மின் தடை செய்யப்படுவதில்லை. அதிக பட்சமாக 15 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை மட்டுமே மின் தடை செய்கின்றனர்.கிராமப்புறங்களில் அதிகரிப்பு: ஆனால், கிராமப்புறங்களில் மின் தடை நேரம் பல மணி நேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 3 முதல் 6 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரங்களில் சிம்னி விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றமுடியாத நிலையில் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
258
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ராணுவ வீரர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி அருகே வைத்தியலிங்காபுரத்தை சேர்ந்தவர் அக்னி ராஜ்(27). ராணுவ வீரரான இவரது மைத்துனி சாந்தி(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளி மாணவர் ராஜாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அக்னிராஜ், பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜிடம் சத்தம் போட்டார். இதை தட்டிக் ச்கேட்ட அலுவலக உதவியாளர் சிவ பெருமானை(50), அக்னிராஜ் மிரட்டினார். இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
260
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ராஜதானி எக்ஸ்பிரசை காப்பாற்றியவர்களுக்கு மம்தா பரிசு
புதுடில்லி:புவனேஸ்வரிலிருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில், மாவோயிஸ்ட்களால் தகர்க்கப்பட்ட தண்டவாளத்தில் வரும் போது தடம் புரண்டது. இச்சம்பவத்தில் ரயிலை திறமையாகக் கையாண்டு, பாதிப்பு ஏற்படாமல் காத்த அதன் பணியாளர்களுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பரிசு அறிவித்துள்ளார். சமீபத்தில், ஒரிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ், கயா - மொகல் சராய் ரயில் நிலையம் அருகில் தடம் புரண்டது. மாவோயிஸ்ட்கள் அந்த தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்தது தான், அந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது.இதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, அந்த ரயிலின் ஓட்டுனர் குழுவைப் பாராட்டி வெளியிட்ட அறிக்கையில், "மிகவும் விழிப்புணர்வோடு, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்து, அவசர நிலை பிரேக்குகளை சரியாகச் செயல்படுத்தி, ரயிலை அதன் ஓட்டுனர் குழு நிறுத்தியுள்ளது. இதனால், பெரும் விபத்து மற்றும் சேதம் தவிர்க்கப்பட்டது. ரயில் சூப்பிரண்டு, பயணிகள் மத்தியில் இருந்த பயத்தைப் போக்கி, உடனடியாக அவர்களை மீட்பு ரயிலில் ஏற்றி விட்டுள்ளார்.இதனால், இரண்டு லோகோ பைலட் ஆர்.கே.சிங் மற்றும் கோ பைலட் ஏ.கே.கால்கு ஆகியோருக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், கார்டு ஆர்.மிஞ்ச் மற்றும் சூப்பிரண்டு ஏ.சி.ஓஜா இருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
261
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ஏ.டி.எம்., மையங்களில் கள்ளநோட்டு ?
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், பரமக்குடி பகுதி ஏ.டி.எம்., களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக, வாடிக்கையாளர்கள் பீதியடைந்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேவைக்காக ஏ.டி.எம்., சேவை மையங் களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. இங்கு எடுக்கும் பணத்தில் சில நோட்டுக்கள் கள்ள நோட்டுகளாக உள்ளன. இது தொடர்பாக வங்கிகளில் புகார் கூறினால், "அப்படி ஏதும் இருக்க வாய்ப்பில்லை, ' என, மறுக்கின்றனர். வாடிக்கையாளர்கள் கூறியதாவது: தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையங்களில் அதிகாரிகள் வைக்கும் கரன்சி நோட்டுக்களின் எண்களை பதிவு செய்து வைத்தால், கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவரும்,என்ற னர்.
265
2010-03-25T02:27:00+05:30
தமிழகம்
அழிந்து வரும் தோட்டக்கலை பண்ணை ரூ. பல லட்சம் பொருட்கள் மாயம்
கமுதி: கமுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணை கட்டடம் பராமரிப்பின்றி அழிந்து வருவதோடு, இங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் மாயமாகி உள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மர கன்றுகள் வளர்த்து விற்பனை செய்ய ,கமுதியில் மாதிரி தோட்டக் கலை பண்ணை துவங்கப் பட்டது. இங்கு போதிய இடம் , தண்ணீர் வசதிகள் இருந்தும், பூ ,பழம் உள் ளிட்ட மர கன்றுகளை வளர்க்க, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் இங்கு பல லட்சம் ரூபாய் மதிப் பீட்டில்,அரசால் வழங்கப் பட்ட பூந் தொட்டிகள், கூடாரங்கள் உட்பட உபகரணங்கள் சேதமடைந்து, வீணாகி அழிந்து வருகின்றன. இதனால் இங்குள்ளோர் மர கன்றுகள், பூந்தொட்டிகளை வாங்க உச்சிப்புளி அருகே சுந்தரமுடையான் பண் ணையை நாடி செல்லும் அவலம் ஏற் பட்டுள்ளது. கமுதியில் துவங்கப்பட்டபோதுதான் சுந்தரமுடையானிலும் பணணை ஏற்படுத்தப் பட்டது. ஆனால் சுந்தரமுடையான் தோட்டக்கலை பண்ணை லாபகரமாக செயல்படும் நிலையில் , கமுதி தோட்டக்கலை பண்ணை அழிந்தும், அலுவலக உபகரணங்கள் மாயமாகியும் உள்ளன. கன்றுகள் வளர்க்க வழங்கிய தொட்டிகளும் மணற்குவியல் போல் பயனற்ற நிலையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. தற்போது தோட்டக்கலைத்துறை பண்ணை இருந்த இடம் தெரியாமல், கட்டடங்கள் சேதமடைந்தும் உள்ளன. கொடைக்கானல் போல் கன்றுகள் வளர்க்க குளிரூட்டப்பட்ட அமைப்புகள் இருந்தும், தற்போது அக்கூடாரம் கால்நடைகள் அடைக்கும் இடமாக உருமாறி வருகிறது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தோட்டக்கலை பண் ணைக்கு புத்துயிர் அளிக்க முன்வரவேண்டும்.
266
2010-03-25T02:27:00+05:30
தமிழகம்
புத்தக சுமையை குறைக்க புதிய வழி ஆராய்ந்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : மாணவர்களுக்கு பாடப் புத்தக சுமையை குறைக்கும் புதிய வழிமுறையை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க நான் புதிய வழியை கண்டுபிடித்துள்ளேன். ஒவ்வொரு பாடப் புத்தகத்தையும் நான்கு பகுதிகளாக பிரிக்க வேண்டும். பின், அனைத்து பாடங்களிலும் உள்ள பகுதிகளை ஒன்றாக சேர்க்க வேண்டும். முதல் பருவத் தேர்வு முடிந்த உடன், அந்தப் பாடங்களை அகற்றி விட்டு, அடுத்த தேர்வுக்கான அனைத்து பாடங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு புத்தகத்தை மாணவர்கள் கொண்டு செல்லலாம். பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்தினால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரிய அளவில் சுமையை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. பல பள்ளிகளில் இதுபற்றி விளக்கியுள்ளேன். இதுகுறித்து கல்வித் துறைக்கு மனு அனுப்பியுள்ளேன். தேவையான நடவடிக்கைக்காக பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பியிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேற்கொண்டு எந்த பதிலும் இல்லை. எனது மனுவை பரிசீலிக்க பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.சாந்தகுமாரி வாதாடினார். "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "கல்வித் துறைச் செயலருக்கு விரிவான மனுவை மனுதாரர் அனுப்பலாம். மனுதாரருக்கு சந்தர்ப்பம் அளித்து, புதிய வழிமுறை எப்படி பயன்படும் என அவர் செய்முறை விளக்கம் அளிக்கலாம். இதை செயலர் ஆராய்ந்து மூன்று மாதங்களில் முடிவெடுப்பார்' என கூறியுள்ளது.
268
2010-03-25T02:28:00+05:30
தமிழகம்
மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வக்கீல்கள் வாதம்
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று நடந்த வழக்கு விசாரணைகளின் போது வக்கீல்கள் தமிழில் வாதாடினர். ஐகோர்ட்டில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும், தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், மதுரை ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வக்கீல்கள் துவக்கினர். பிறகு தமிழில் வாதாடுவது உட்பட ஓரிரு கோரிக்கைகளை ஏற்பதாக, பதிவாளர்கள் உதயன், சேஷசாயி தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. தமிழில் வாதாட அனுமதிக்கப்பட்டதற்கு, வக்கீல்கள் நேற்று ஐகோர்ட் கிளையில் இனிப்பு வழங்கி, நன்றி தெரிவித்தனர். பெரும்பாலான வழக்குகளில், வக்கீல்கள் தமிழில் வாதங்களை எடுத்து வைத்தனர். நீதிபதிகளும் வாதங்களை பதிவு செய்தனர்.
272
2010-03-25T02:29:00+05:30
தமிழகம்
மகளுடன் நர்ஸ் தற்கொலை வழக்கு : ஜாமீன் கேட்டு டாக்டர் மனு
கோவை : விஷ ஊசியால் மகளை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்ட நர்ஸ் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி (40). கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திரா நகரில் வசித்து வந்தார். ஐந்து ஆண்டுகளாக, சின்னியம்பாளையத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் தரணிகுமாருடன் நெருங்கி பழகி வந்தார். டாக்டருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ரேணுகாதேவி, தன்னை கைவிட்டு விடுவாரோ என சந்தேகம் அடைந்தார். மன வேதனையில் இருந்தவர், கடந்த 21 அன்று, மகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து, நர்ஸ் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக டாக்டர் தரணிகுமாரையும், எப்.எம்., ரேடியோவில் பணியாற்றும் அருணாராணி(46)யையும் கைது செய்தனர். இவர்களில் டாக்டர் தரணிகுமார் சார்பில் ஜாமீன் கேட்டு, மாவட்ட கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
273
2010-03-25T02:30:00+05:30
தமிழகம்
சிங்கப்பூரில் தமிழர்களுக்கு சித்ரவதை : தப்பி வந்தவர் ஐகோர்ட்டில் தகவல்
மதுரை : சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் சித்ரவதைக்குள்ளாவதாக, 12 ஆண்டுகளுக்கு முன் மாயமான வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை அருகே மேலப்பூங்குடியை சேர்ந்த சிட்டு தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் கணவர் கிருஷ்ணன், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். 1998ல் சொந்த ஊருக்கு வருவதாக அவரிடமிருந்து போன் வந்தது. ஆனால், அவர் வரவில்லை. அவருடைய பாஸ்போர்ட் எனக்கு தபாலில் அனுப்பப்பட்டது. அதன் மூலம் அவர், சென்னை விமான நிலையம் வந்தது தெரிய வந்தது. அதன்பிறகு, அவர் எங்கு சென்றார் என, தெரியவில்லை. அவரை ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் பி.முருகேசன், டி.மதிவாணன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணனை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர் நீதிபதிகளிடம் கூறியதாவது: சிங்கப்பூரில் சீன கம்பெனியில் வேலை செய்தேன். அங்கு எனக்கு சரியாக சம்பளம் கொடுக்காமல், சித்ரவதை செய்தனர். அந்த கம்பெனியில் மட்டும் 15 தமிழர்கள் சித்ரவதைக்குள்ளாகினர். அவர்கள் இன்னமும் அங்கு தான் உள்ளனர். இதுதவிர மற்ற மாநிலத்தவரும் உள்ளனர். நான் கள்ள பாஸ்போர்ட்டில் சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் தப்பி வந்தேன். பிறகு, போலீசார் என்னை மீட்டு ஆஜர்படுத்தினர். இவ்வாறு கிருஷ்ணன் கூறினார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அவரது விருப்பப்படி செல்ல உத்தரவிட்டனர்.
274
2010-03-25T02:31:00+05:30
தமிழகம்
வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன், மாமியாருக்கு சிறை
திருநெல்வேலி : வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்திய கணவர்,மாமியாருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்த பலவேசம் மகள் சங்கரிக்கும், அம்பாசமுத்திரம், வாகைகுளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கணேசனுக்கும் கடந்த 2007 டிச.,16ல் திருமணம் நடந்தது. பெண் வீட்டார், 15 பவுன் நகையும், சீர்வரிசைகளும் செய்தனர். திருமணத்திற்கு பிறகு கணவன் குடும்பத்தினர், மேலும் 10 பவுன் நகைகள் கேட்டு சங்கரியை துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சங்கரி போலீசில் புகார் செய்தார். அம்பாசமுத்திரம் ஜெ.எம்.முதலாவது கோர்ட்டில் நடந்த வழக்கில் மாஜிஸ்திரேட் கலைவாணி, வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணேசன், அவரது தாயார் இசக்கியம்மாள் ஆகியோருக்கு ஒரு ஆண்டுசிறைத்தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
275
2010-03-25T02:33:00+05:30
தமிழகம்
காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த வழக்கு : சரணடைந்த இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
சென்னை : காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளிகள் இருவர், இன்று கோர்ட் அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் காலாவதியான மருந்துகளை சேகரித்து, சென்னை நகர் முழுவதும் விற்பனை செய்த வழக்கில் கொடுங்கையூர் ரவி என்ற பிரபாகரன்(40), டிரைவர் வெங்கடேசன், எழும்பூர் சஞ்சய்குமார், புரசைவாக்கம் சேகர்(35), சூளைமேடு பாஸ்கரன்(35), அரும்பாக்கம் பிரதிப் சோர்த்தியா(32) மற்றும் சின்மயா நகரில், "மீனா ஹெல்த் கேர்' நடத்தி வரும் மீனாட்சிசுந்தரம்(45) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதில், ரவி என்ற பிரபாகரன் எழும்பூர் கோர்ட்டிலும், டிரைவர் வெங்கடேசன் சைதாப்பேட்டை கோர்ட்டிலும் சரணடைந்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை, இன்று காலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். பின், கோர்ட் அனுமதியுடன் அவர்களை காவலில் எடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். இந்நிலையில் ரவி உதவியாளரான கொடுங்கையூர், குப்பை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பாஷா(41) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் பகுதியில் இருந்து காலாவதியான மருந்து, மாத்திரைகளை சேகரித்து ரவியிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஜான் பாஷாவை கைது செய்து, கோர்ட் உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய, தனிப்படை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில், மீனாட்சிசுந்தரம் வக்கீல்கள் உதவியுடன் கோர்ட்டிலோ அல்லது போலீஸ் ஸ்டேஷனிலோ சரணடைவார் என தெரிய வருகிறது.
276
2010-03-25T02:36:00+05:30
தமிழகம்
தந்தையுடன் செல்ல மைனர் பெண்ணுக்கு ஐகோர்ட் அனுமதி
மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடத்தல் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட மைனர் பெண்ணை தந்தையுடன் செல்ல அனுமதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரை சேர்ந்த சாமிநாதன் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் 14வயது மகள் பிப்ரவரி 26ம் தேதி பள்ளி சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரித்த போது அவரை, இடையப்பட்டியை சேர்ந்த சுமன் கடத்தியது தெரிந்தது. அவர் மீது போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. என் மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் பி.முருகேசன், டி.மதிவாணன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்பெண் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள், தந்தையுடன் செல்ல பெண்ணுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
277
2010-03-25T02:36:00+05:30
தமிழகம்
ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு இன்சூரன்ஸ்: ஐகோர்ட் யோசனை
மும்பை : ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வகையில், இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தை மும்பை ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2004ல் சமீர் ஜவேரி (39) என்பவர், புறநகர் ரயிலில் அடிபட்டு தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். ரயில்வே விபத்துக்களில் இறந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர இன்சூரன்ஸ் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. காயமடைந்தோருக்கு அப்படி தனி இன்சூரன்ஸ் திட்டம் இல்லை. இந்த பயணி தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் விசாரணை செய்தது. விசாரணை நடத்திய ஐகோர்ட், ரயிலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை ரயில்வே நிர்வாகத்துக்கு கூறியிருந்தது. ஆனால் அவற்றில் பலவற்றை ரயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றை 2009 நவம்பரில் சமீர் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ரயில்வே விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் இன்சூரன்ஸ் பற்றிய விதிகளை வரையறை செய்யும் படி, மும்பையிலுள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனம் இன்னும் 15 நாட்களில் இன்சூரன்ஸ் விதிகள் பற்றிய விவரங்களை கோர்ட்டில் அளிக்கும். இத்திட்டம் குறித்து பரிசீலிக்கும்படி மும்பை ஐகோர்ட், ரயில்வே நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது. ரயில்வே வளாகங்களுக்குள் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும், மருத்துவமனை செலவுகளை ஏற்கும் வகையிலும், தண்டவாளத்தைக் கடக்கும் போது ஏற்படும் விபத்துக்களையும் சேர்த்துக் கொள்ளும் வகையிலும் இந்த இன்சூரன்ஸ் திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்திட்டம் மேற்கு மற்றும் மத்திய புறநகர் ரயில்வேயில் அமலாக்கப்படலாம் என்று தெரிகிறது.
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
1
Edit dataset card