news_id
int64
201
2.26M
news_date
stringlengths
25
29
news_category
stringclasses
3 values
news_title
stringlengths
1
636
news_article
stringlengths
1
138k
586
2010-04-26T00:54:00+05:30
இந்தியா
ஐ.பி.எல்., கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்
மும்பை:மும்பையில் இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக லலித் மோடி அறிவித்து உள்ளார். இதனால், ஐ.பி.எல்., விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவு முறைகேடு செய்துள்ளதாக, அதன் தலைவர் லலித் மோடி மீது, சரமாரியான குற்றச்சாட்டுகள் தெரிவிக்க பட்டுள்ளன. பார்லியிலும் இந்த விவகாரம் புயலை கிளப்பியது. இதையடுத்து, ஐ.பி.எல்., தலைவர்பதவியில் இருந்து லலித் மோடியை நீக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக உள்ளது. இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல்., நிர்வாக குழு கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால்,நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என, லலித் மோடி தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், நேற்று திடீரென நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக லலித் மோடி அறிவித்தார்.இதுகுறித்து அவர், "நிர்வாகக் குழு கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்பேன். எனக்கு எதிராக புகார்தெரிவிக்கும் உறுப்பினர்கள் ஆதாரத்துடன், எழுத்து மூலமான அறிக்கையை நிர்வாகக் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யலாம்' என்றார்.
587
2010-04-26T00:57:00+05:30
தமிழகம்
3வது ஐ.பி.எல்., டுவென்டி-20 : கோப்பை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை : மும்பையில் நடந்த பரபரப்பான  மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஐ.பி.எல்.,லில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தோனி பெற்றார். இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  சச்சின் பங்கேற்பு:வலது கை விரல் பகுதியில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது மும்பை கேப்டன் சச்சின் பங்கேற்றார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி எதிர்பார்த்தது போல பேட்டிங் தேர்வு செய்தார். மந்தமான துவக்கம்: சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் இணைந்து மந்தமான துவக்கம் தந்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஹைடன் திணற, 4 ரன் தான் எடுக்க முடிந்தது. அடுத்த ஓவரில் மலிங்கா 2 ரன் தான் கொடுத்தார். பின் ஹர்பஜன் பந்தில் ஹைடன் ஒரு சிக்சர் அடித்து நிம்மதி தேடினார். மறுபக்கம் ஜாகிர் பந்தில் முரளி விஜய் ஒரு சிக்சர் அடித்தார். பெர்ணான்டோ வேகத்தில் விஜய்(26) அவுட்டானார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் ஹைடன்(17) வீழ்ந்தார். பெர்ணான்டோ பந்தில் பத்ரிநாத்தும்(14) அவுட்டாக, சென்னை அணி 11.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அதிவேக அரைசதம்:இதற்கு பின் தோனி, சுரேஷ் ரெய்னா இணைந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் ரன் மழை பொழிந்தனர். மும்பை அணி மோசமாக பீல்டிங் செய்ய, இரு முறை கண்டம் தப்பிய ரெய்னா கலக்கினார். ஜாகிர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் போலார்டு ஓவரில் 2 சூப்பர் சிக்சர் விளாசிய இவர், ஐ.பி.எல்., அரங்கில் 9வது அரைசதம் அடித்தார். 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்த இவர், ஐ.பி.எல்., பைனல்களில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். தோனி 22 ரன்களுக்கு ஜாகிர் பந்தில் வெளியேறினார். மார்கல் 15 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல்., பைனல்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ரெய்னா 57 (3 பவுண்டரி, 3 சிக்சர்), அனிருதா ஸ்ரீகாந்த் 6 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை வெற்றி :  இதன் பின்னர்  மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் துவக்க வீரர்களாக டெண்டுல்கர் மற்றும் தவானும் களமிறங்கினர்.  தவான் ரன் ஏதும் எடுக்காமல்  போலீங்கர் பந்தில் அவுட்டானார். நாயர்  27 ரன்களுக்கு அவுட்டானார். சச்சின் 49 ரன்களுக்கும் ராய்டு 20 ரன்களுக்கும், போலார்டு 27 ரன்களுக்கும் அவுட்டாயினர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில்    9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடை ந்தது முதல் இந்தியர் : பைனலில் சென்னை அணி வெற்றி பெற்றதன்மூலம், ஐ.பி.எல்., கோப்பை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வார்ன் (2008, ராஜஸ்தான்), கில்கிறிஸ்ட் (2009, டெக்கான்) கோப்பை வென்றனர்.
590
2010-04-26T01:40:00+05:30
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: அண்ணாதுரை மறைந்தபோது அவரது வங்கி இருப்பு 100 ரூபாய், காமராஜர் மறைந்த போது அவருக்கு வங்கிக் கணக்கே இல்லை. இத்தகைய தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் உலக அளவில் சொத்து குவித்து உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் தலைவர்கள் உருவாகி விட்டனர். அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு: அரசின் நிர்வாக சீர்கேட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளனர். இதை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டு. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசுகள் அகற்றப்பட வேண்டும். இதற்கு மக்கள் தயாராக வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா பேச்சு: ஐ.பி.எல்., சூதாட்டம் பற்றி பார்லிமென்ட் கூட்டுக் குழு முறையான விசாரணை நடத்த வேண்டும் என இடதுசாரிகள் கோருகின்றன. ஆனால் ஐ.பி.எல்., விவகாரத்தில் மத்திய அரசு நிலை தடுமாறி செயல்படுகிறது. இதில் பல மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் பேட்டி :விலைவாசி உயர்வின் கடுமையை எதிர்த்து, 13 கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அமைச் சரவையில் ஆதரித்து விட்டு, எதிர்ப்பது போன்று, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது ஏமாற்று வேலை. தமிழக வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் அறிக்கை: நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட, விலைவாசி குறைய, வேளாண் விளைபொருட்களுக்கும், சிறு தயாரிப்பு பொருட்களுக்கும் லாபகரமான விலை கிடைக்க, தவறான பொருளாதாரக் கொள்கையிலிருந்து நாடு விடுபட வேண்டும். நாமக்கல் காங்., எம்.எல்.ஏ., ஜெயகுமார் பேச்சு: அரசியல் சாக்கடை என்ற காலம் மாறி அரசியலால் மட்டும் தான் நாட்டை வழி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. எனவே பட்டதாரிகள், அரசியலுக்கு வரவேண்டும். அப்போது தான் நேர்மையான, அறிவுபூர்வமான, உண்மையான, தெளிவான அரசியல் மாற்றம் ஏற்படும். கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கண்ணதாசன் பேச்சு: ஒவ்வொரு மாணவர்களும் சுயமாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தற்போதைய தொழில் நுட்பத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றங்கள் வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவரும் சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை படிக்க வேண்டும்.
592
2010-04-26T01:44:00+05:30
General
பயங்கரவாதி கசாப்பை ஒப்படைக்கவேண்டும்: பாகிஸ்தான் கேட்கிறது
இஸ்லாமாபாத்:மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பை ஒப்படைக்கும்படி பாகிஸ்தான், இந்தியாவிடம் கோரியுள்ளது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் கசாப்பை தவிர மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை சிறப்பு கோர்ட், வரும் 3ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூற உள்ளது. மும்பைத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கூறப்படும் புகாருக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என, பாகிஸ்தான் மறுத்து வந்தது. எனினும் பாகிஸ்தான் கேட்ட ஆதாரங்கள் மூன்று முறை இந்தியா சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, நாளை மறுதினம் மற்றும் 29ம் தேதிகளில் பூடானில் சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது. எனவே, இருநாட்டுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு கசாப் விவகாரம் தடையாக உள்ளதால், மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது. மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு உள்ளது. லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜக்யூர் ரெஹ்மான் லக்வி உள்ளிட்ட ஏழு பேர் மீது இந்த கோர்ட்டில் வழக்கு நடக்கிறது.கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தால் இந்த கோர்ட்டில் விசாரணை நடத்த உதவியாக இருக்கும் என பாகிஸ்தான், தனது வெளியுறவு துறை அதிகாரிகள் மூலம் இந்திய தூதர் ராகுல் குல்ஷ்ரெஸ்திடம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியா அளித்துள்ள மூன்று ஆவணங்களின் அடிப்படையில் கசாப்பிடம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும், கசாப் ஏற்கனவே, லாகூர் கோர்ட்டால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்படடுள்ளதாகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். கசாப்பையும், மும்பைத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த பாகிம் அன்சாரியையும் கைது செய்ய ராவல்பிண்டி கோர்ட் பிறப்பித்த கைது உத்தரவை, இந்திய தூதரிடம், வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கசாப்பை பாகிஸ்தான் கோர்ட்டில் ஒப்படைத்தால், கசாப்பின் வாக்குமூலத்தை பதிவு செய்ய இந்திய தரப்பில் இரண்டு மாஜிஸ்திரேட்களையும், ஒரு ஆய்வாளரையும் அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
594
2010-04-26T01:46:00+05:30
General
சீன பெருஞ்சுவரை சீரமைக்க ஆய்வு
பீஜிங்:பழுதடைந்த சீன பெருஞ்சுவரின் படிகட்டுகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர், கி.மு. 770-476ம் ஆண்டுகளில் 8,851 கிலோ மீட்டர் நீளத்துக்கு குய் மன்னர் வம்சத்தால் கட்டப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய சின்னத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகின்றனர்.பாதுகாப்பு அரணாக செயல்பட்ட இந்த பெருஞ்சுவர் பல்வேறு கால கட்டங்களில் சில இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.ஷான்டாங் மாகாணத்தில் 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஜினான் நகரத்திலிருந்து குயிங்டோ வரை இந்த பெருஞ்சுவர் சேதமடைந்துள்ளது. எனவே இதை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
596
2010-04-26T01:51:00+05:30
இந்தியா
அம்மன், சுவாமி வேடம் போட்டது மகிழ்ச்சியாக இருந்துச்சு': சிறுவர்கள் குதூகலம்
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஏப்.,24ல் நடந்த திக்விஜயத்தில், இரு சிறுவர்கள் அம்மன், சுவாமி வேடமிட்டு வீதி உலா வந்தது பக்தர்களை கவர்ந்தது.கோயில் பட்டர்கள் குடும்பங்களைச் சேர்ந்த இச் சிறுவர்களுக்கு, வேடமிடுவதற்கான பின்னணி தெரியாவிட்டாலும், "அம்மன், சுவாமிக்காக தாங்கள் அலங்கரிக்கப்படுகிறோம்' என்று மட்டும் நன்றாக தெரிந்திருக்கிறது.அம்மன் வேடமிட்ட ஹரிவிக்னேஷ்(10), டால்பின் பள்ளியில் 5ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார். அப்பா சுப்பிரமணியம் கோயில் பட்டர். ஏற்கனவே 2008ல் ஹரிவிக்னேஷிற்கு, அம்மன் வேடமிட்ட அனுபவம் உண்டு. ""எனக்கு இந்த வேடம் ரொம்ப பிடிக்கும். அம்மனுக்காக எனக்கு பெண் வேடம் போட்டாங்கனு தெரியும். ஐந்தாம் வகுப்பு பாஸ் ஆயிர வேண்டும்னு அம்மனிடம் வேண்டிகிட்டே வந்தேன். போன தடவையும், இந்த முறையும் வேடம் போட்டது ஜாலியா இருந்துச்சு. பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணமாட்டாங்க. மேலமாசிவீதி பக்கம் வீதி உலா போனபோது, பிரண்ட்ஸ் திருமலை, பாபி, அழகேசன் ஆகியோர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு "ஹாய்' சொன்னார்கள். நான்எதுவும் பேசாமல் "டாட்டா' மட்டும் காட்டினேன். வேடம் போடுவதற்காக திக்குவிஜயத்தன்று மதியம் குளித்துவிட்டு, பகல் 3 மணிக்கெல்லாம் தயாரானேன். வீதி உலா போது "யூரின்' வந்துவிடக்கூடாது என்பதற்காக, எதுவும் சாப்பிடவில்லை. அத்தை சுவேதா, சின்ன பாட்டி வேம்புதான் எனக்கு "மேக்கப்' செய்தார்கள். இரவு 8 மணிக்குதான் அம்மன் வாகனத்தில் ஏற்றினர். இரவு 1.30 மணிக்கு மீண்டும் வீட்டில் இறக்கிவிட்டார்கள். வீதி உலா போது ஒருமுறை மட்டும் ஜூஸ் வாங்கி கொடுத்தார்கள்,'' என்றார் ஹரிவிக்னேஷ். சுவாமி வேடமிட்ட ஆறு வயதுசிவாவிற்கு, இது புது அனுபவம். இவரது தந்தை சுகுமார் பட்டர். தற்போதுமகராஷ்டிராவில் குடும்பத்துடன்வசிக்கிறார். மகன் சுவாமி வேடம் போடுவதற்காகவே, பள்ளிவிடுமுறையில் இங்கே அழைத்துவந்திருக்கிறார். பூணூல் போடுவதற்கு முன், 12 வயதிற்குட்பட்டசிறுவர்களுக்குதான் வேடம் போடும் "லக்' அடிக்கிறது. சிவா கூறுகையில், நான் யூ.கே.ஜி., படிக்கிறேன். சுவாமிக்காக எனக்கு வேடம் போட்டு, ஊர்வலமா அழைத்து வந்தது நல்லா இருந்துச்சு. வில்லில் அம்பு எய்தும் போட்டியில் நான்தான் ஜெயித்தேன். கூட்டத்தை பார்த்துட்டே சென்றதால் தூக்கம் வரலை. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்துச்சு,'' என்றார்.
597
2010-04-26T01:53:00+05:30
இந்தியா
இன்று மாலை மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்
அழகர்கோவில்:மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக இன்று மாலை ஆறு மணிக்கு கள்ளழகர்மலையிலிருந்து புறப்படுகிறார்.அழகர்கோயில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரை திருவிழா ஏப்.,24ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலையில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதற்காக இன்று மாலை ஆறு மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார். இரவு முழுவதும் வழியில் உள்ள மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார். நாளை காலை ஆறு மணிக்கு மூன்றுமாவடியிலும், மாலை ஆறு மணிக்கு அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலிலும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்குதல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவு ஒரு மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் அவர், தல்லாகுளம் கருப்பணசுவாமி சன்னதி எதிரில் உள்ளஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். வைகை ஆற்றில் இறங்குகிறார்: ஏப்., 28ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் காலை 7.30 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள்மத்தியில் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின் காலை எட்டு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு அழகர் வேடமணிந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் கள்ளழகர் ஆறு மணிக்குஅங்கிருந்து புறப்படுகிறார். அன்று நள்ளிரவு 12 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் சென்றடைகிறார். ஏப்., 29ம் காலை ஐந்து மணிக்கு திருமஞ்சனம், ஏகாந்தசேவை முடிந்து, ஆறு மணிக்கு சேஷவாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்தடைகிறார். மண்டூகமுனிவருக்கு காட்சி கொடுத்து பகல் இரண்டு மணிக்கு மதுரை புறப்படுகிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.30ம் தேதி காலை ஆறு மணிக்கு மோகனஅவதாரத்தில் புறப்பட்டுமண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். பகல் 12 மணிக்கு ராஜாங்க திருக்கோலத்தில், அனந்தராயர் பல்லக்கில் புறப்படுகிறார். மே 1ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மன்னர் சேதுபதிமண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. காலை ஒன்பது மணிக்கு அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலில் வையாழி நிகழ்ச்சி முடிந்து அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். மே 2ம் தேதி அழகர்கோயில் வந்தடைகிறார். மே 3ம் தேதி உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.
598
2010-04-26T01:54:00+05:30
General
மிசிசிபியில் மோசமான புயல்கூரைகள் பறந்தன; 10 பேர் பலி
வாஷிங்டன்:அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் சூறாவளி புயல் வீசியதில், 10 பேர் பலியாயினர்.அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் நேற்று முன்தினம் கடும் சூறாவளி காற்று வீசியது. இந்த புயல் காற்றால் வீட்டின் கூரைகள் பறந்தன; சில வீடுகள் சேதமடைந்தன; சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாகனங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தலைகீழாகக் கவிழ்ந்தன.மிசிசிபி மட்டுமல்லாது லூசியானா, அலபாமா, ஆர்கன்சாஸ் மாகாணங்களும் இந்த பயங்கர புயலால் பாதிக்கப்பட்டன. மிசிசிபி மாகாணத்தில் உள்ள சாக்டா மாவட்டத்தில் ஐந்து பேரும், யாசூ என்ற பகுதியில் ஐந்து பேரும் பலியாயினர். இறந்தவர்களில் பெரும்பாலும் குழந்தைகள்; இன்னும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த புயலையொட்டி, பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இன்னும் சேதத்தின் மதிப்பு அறியப்படவில்லை. இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்திருக்கலாம். எனவே, இந்த புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
599
2010-04-26T01:54:00+05:30
தமிழகம்
ஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்
தர்மபுரி:ஒகேனக்கலில் கோடை விடுமுறையையொட்டி, தற்போது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவியத் துவங்கி உள்ளனர். நேற்று ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் 50 ஆயிரம் பேர் திரண்டனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றலாதலமாக உள்ளது. கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். கடந்த ஆறு மாதமாக மழை இல்லாததால், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்று வழித்தடங்களில் தண்ணீர் வரத்து குறைந்தது. ஆற்றுப்பாதைகள் வறண்டு, பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை துவங்கி விட்டதால், ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும், தினமும் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவியத் துவங்கி உள்ளனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், ஓரே நாளில் 50 ஆயிரம் பேர் திரண்டனர். சாலைகளில் சுற்றுலா பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த முடியாமல் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தினர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு விழும் குறைந்த அளவு தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு கூட்டம், கூட்டமாக குளித்துச் சென்றனர். சினிபால்ஸ், மெயின் அருவி மற்றும் பெரியபானியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும்போது, ஆற்றுப்படுக்கையில் பரிசலில் செல்லும் சுற்றுலா பயணிகள், அருவிகளை நெருங்க முடியாது.தற்போது அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுவதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு பரிசலில் சென்று நீர்வீழ்ச்சிகளை கண்டும், அருவி சாரலில் நனைந்தும் மகிழ்ந்தனர். கர்நாடகா எல்லையில் உள்ள ஐவால்பானியில் ஐந்து அருவிகள் கொட்டும் பகுதியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. இதனால், அங்கு தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவி, சினிபால்ஸ், பெரியபானி அருவி ஆகிய இடங்களுக்கு செல்லும் நடைபாதையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.கூட்டாறு, மணல்மேடு, ஊட்டமலை, மாறுகொட்டாய் மற்றும் பிலிகுண்டு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று, ஒகேனக்கல் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையொட்டி மசாஜ் தொழில் மற்றும் மீன் வியாபாரம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
600
2010-04-26T01:55:00+05:30
General
சொந்த நாட்டிலேயே சிறுபான்மையா?ஆஸி., மக்களுக்கு ஏற்படும் பரிதாபம்
மெல்போர்ன்:இன்னும் 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மக்கள், அவர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக வசிக்கக் கூடிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "டெய்லி டெலகிராப்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வு தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:வெளிநாடுகளில் இருந்து வந்து, ஆஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து, அளவுக்கு அதிகமானோர் ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர். இந்த நிலை நீடித்தால், இன்னும் 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மக்கள், அவர்களது சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக மாறிப் போகும் பரிதாப நிலை ஏற்படும். இந்தியாவில் இருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆஸ்திரேலியாவில் அவர்களின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஆஸ்திரேலியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை நிலவரப்படி, பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 14.2 சதவீதமும், நியூசிலாந்து நாட்டினர் 11.4 சதவீதமும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 11.2 சதவீதமும், சீனா நாட்டினர் 10.சதவீதம் பேரும் வசிக்கின்றனர்.இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
602
2010-04-26T01:56:00+05:30
General
200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழி: மீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்
நியூயார்க்:அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன் சிவப்பிந்தியர்கள் இருந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட மொழிகள் அக்கண்டத்தில் பேசப்பட்டன. அவற்றில் இன்றிருப்பவை 175 மட்டுமே. அவையும் காக்கப்படாவிடில், 2050ம் ஆண்டில் 20 மொழிகள் தான் இருக்கும் என்று அமெரிக்காவில் இயங்கி வரும், "உள்நாட்டு மொழிகள் கழகம்' கவலை தெரிவித்துள்ளது. நியூயார்க் அருகிலுள்ள "லாங்' என்ற தீவில் 200 ஆண்டுகளுக்கு முன், "ஷின்னெகாக்' மற்றும் "அன்கெசவுக்' என்ற பழங்குடி மொழிகள் பேசப்பட்டன. இன்று "ஷின்னெகாக்' மொழியைப் பேசும் பழங்குடிகளாக 1,300 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சவுதாம்ப்டன் நகரில் இருக்கின்றனர்."அன்கெசவுக்' மொழி பேசுபவர்களாக 400 பழங்குடியினர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாஸ்டி நகரில் வசிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் "ஸ்டோனி புரூக்' பல்கலைக்கழகம், அப்பழங்குடி வம்சத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மீண்டும் இந்த இரு மொழிகளையும் உருவாக்குவதில் முனைந்துள்ளது. இதற்காக அவர்கள், கி.பி., 1791ல் தாமஸ் ஜெபர்சன் உருவாக்கிய பழங்குடியினர் மொழிகளின் சொற்களஞ்சியம் போன்ற பழைய ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சமீப காலமாக, அமெரிக்காவில் பழங்குடியின மொழிகளை மீட்டுருவாக்கம் செய்வதில் அந்நாட்டுப் படித்த பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர். "எங்கள் மொழிகள், எங்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதில் உதவுகிறது. எங்கள் குழந்தைகள் அவர்களின் சொந்த மொழியில் சொந்த கலாசாரத்தைப் படிக்கும் போது படிப்பில் சிறப்படைகின்றனர்' என்கிறார் இப்பணியில் ஈடுபட்டுள்ள "அன்கெசவுக்' பழங்குடிகளின் தலைவர் ஹாரி வாலஸ்."மனிதப் பண்புகளுக்கான தேசிய அறக்கட்டளை'யின் தலைவர் புரூஸ் கோல், "மொழி என்பது கலாசாரத்தின் டி.என்.ஏ.,' என்று குறிப்பிடுகிறார். ஸ்டோனி புரூக் பல்கலை மொழியியல் தலைவர் ராபர்ட் டி.ஹாபர்மேன், "ஷின்னெகாக் மற்றும் அன்கெசவுக் இரு மொழிகளும் ஒத்த தன்மை கொண்டவை. இவை இரண்டும், "அல்கான்குயன்' மொழிக் குடும்பத்தில் தோன்றியவை' என்கிறார்.இவற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கின்றனர் என்று அவர் கூறுகையில், "முதலில் அந்த மொழிகள் எப்படி இருக்கின்றன என்பதை அவற்றில் புழங்கி வரும் பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள், உரையாடல்கள் மற்றும் சொற்பட்டியல்கள் மூலம் கண்டறிவோம். பின், அவற்றில் எந்த சொற்கள் ஒரே வடிவத்திலும் திரிவாகியும் புழங்குகின்றன என்பதைப் பார்ப்போம். பின், படிப்படியாக மீட்டுருவாக்கம் செய்வோம்' என்கிறார்.மேலும் அவர் கூறுகையில், "வழக்கிழந்து போன மொழிகளை மீட்டுருவாக்கம் செய்வதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அந்த மொழிகளின் அகராதிகள் யாவும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது என்பது கடினம் தான்' என்கிறார்.
603
2010-04-26T01:59:00+05:30
தமிழகம்
இன்று கணிதமேதை ராமானுஜன் 90ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை:கணிதமேதை ராமானுஜனின் 90வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது.இத்தினத்தையொட்டி, சென்னையிலுள்ள பி.கே.சீனிவாசன் கணிதக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., ஓய்வு பெற்ற பேராசிரியர் கேசவன் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். சரோ குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் மாரிமுத்து, ரோல்வெல் ரோலர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெயப்பிரகாஷ் மற்றும் இந்தியன் வங்கி சம்பத் குமார், கணிதமேதை ராமானுஜன் தொடர்பாக சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சீனிவாசன் கூறுகையில், "" கணிதமேதை ராமானுஜன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேற்றங்களை உருவாக்கியவர். அதை எப்படி உருவாக்கினார் என்று இன்றுவரை பல கணித நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்குத்தான் அறிஞர்களைப் பற்றியும், பிரபலமானவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் திறன் உருவாகிறது. தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்த ராமானுஜனை மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சி, 14/20, 25வது தெரு, நங்கநல்லூர் என்ற முகவரியில் உள்ள பி.கே.எஸ். அலர்ஸ்ரீ இல்லத்தில் மாலை 6 மணிக்கு துவங்குகிறது. மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 98400 38327.
604
2010-04-26T02:12:00+05:30
தமிழகம்
நெல்லையில் யாதவ மகாசபை மாநில மாநாடு
திருநெல்வேலி:நெல்லையில், யாதவ மகாசபை மாநில மாநாடு நேற்று நடந்தது. டவுன் பொருட்காட்சி திடலில், மாநாட்டிற்காக கோட்டை வடிவில் பிரம்மாண்ட நுழைவாயிலும், மெகா பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. காலையில் மாநாட்டு பந்தல் திறக்கப்பட்டது. தொடர்ந்து யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன், கொடியேற்றினார். மாநாட்டு ஜோதியை தேவநாதன் மகள்கள் ஹரிஸ்மா, ஹரிணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.தென் மண்டல யாதவர் மகாசபை தலைவர் மரியசுந்தரம் யாதவ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலர் நம்பி துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் ஊத்துமலை சரவணன், வக்கீல் முத்துகிருஷ்ணன், மாநகர தலைவர் முத்து உட்பட பலர் பேசினர்.மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று மதியம் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் வந்ததால், நெல்லை ஜங்ஷன், நெல்லை டவுன், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியத்திற்கு மேல் நெல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நெல்லை டவுன் வழியாக செல்லும் வாகனங்கள் தச்சநல்லூர் வழியாக திருப்பி விடப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி, மருத்துவ முகாம் வசதி உட்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
605
2010-04-26T02:14:00+05:30
தமிழகம்
ஒருங்கிணைந்த விவசாயத்தில் சாதிக்கும் ஸ்ரீவி., விவசாயி
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் அதிக வருமானம் பெற்று சாதனை படைத்து வருகிறார் விவசாயி.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மார்ட்டின் லூதர். இவருக்கு சொந்தமாக அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் செய்து வருகிறார். இதில் 50 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.இம்மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்தை பயன்படுத்தி சாண எரிவாயு தயார் செய்து அதன் மூலம் இப்பகுதியிலுள்ள எட்டு விளக்குகளை எரியச் செய்து மின் சக்தியை சேமித்து வருகிறார். மேலும் சாணத்தை கொண்டு தினமும் இரண்டு டன் மண் புழு உரம் தயாரித்து ஸ்ரீவி., விருதுநகர், கேரளா மாநிலம் போன்ற பகுதிகளுக்கும் அனுப்பியும் வருகிறார்.இவர் கடந்தாண்டு தமிழகத்தில் அதிகளவு பால் உற்பத்தி செய்து மாநிலத்திலேயே முதலாவதாக வந்து தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளார். மேலும் ஸ்ரீவி., சுற்று வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் இங்கு ஒருங்கிணைந்த விவசாயத்திற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மார்ட்டின் லூதர் கூறியதாவது:கடந்த 1986ம் ஆண்டு முதல் விவசாயத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வருகிறேன். மண்புழு தயாரிப்பதற்காக முதலில் மாடுகளை வளர்த்து வந்தேன். தற்போது அதில் இருந்து கிடைக்கும் பால் உற்பத்தியால் மாநில அளவில் முதல் பரிசை பெற்றுள்ளேன்.மாட்டின் சாணத்தை கொண்டு அதிகளவில் மண்புழு உரம் தயாரித்து வருகிறேன். இதற்காக அருப்புக்கோட்டை, கோபிச்செட்டி பாளையத்திலிருந்து மண் புழுவை கிலோவிற்கு 500 ரூபாய் வீதம் வாங்கி தொட்டிகளில் போட்டு தினமும் சாணத்தை கரைத்து ஊற்றி வளர்த்து, 45ம் நாளிலிருந்து உரம் தயாரித்து கிலோவிற்கு ஐந்து ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகிறேன்.இவ்வாறு மார்ட்டின் லூதர் தெரிவித்தார்.
607
2010-04-26T03:59:00+05:30
இந்தியா
ஆபாச புத்தகத்தால் கூண்டில் ஏறிய 71
மும்பை: ஆபாசப் படம் போட்ட புத்தகத்தை வினியோகித்ததால், 71 வயது பெரியவர் இப்போது கோர்ட் கூண்டில் நிற்கிறார். அவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.மும்பையைச் சேர்ந்தவர் ஹரிகிஷன் சத்லானி (71). இவர் "இந்தியா புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (பாம்பே) லிமிடெட்' என்ற பெயரில், புத்தக விற்பனை நடத்தி வருகிறார். இவர் மீது, 1995ல், ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும், "அமெரிக்கன் போட்டோ' என்ற புத்தகத்தை இவர், 1995ல் வினியோகம் செய்திருக்கிறார்.அப்புத்தகத்தில், ஆடையில்லாத ஆணும், பெண்ணும், சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பது போல் ஒரு படம் அச்சிடப்பட்டிருந்தது. அவர்களின் அந்தரங்க உறுப்புகள் தாமரை இலையால் மறைக்கப்பட்டிருந்தன. அவர்களில், ஆணின் உடம்பில் யானைத் தலை இருந்தது .அந்த ஆண் படம், இந்துக் கடவுளை இழிவுபடுத்துவதாகக் கூறி, சத்லானி மீது வழக்குத் தொடரப்பட்டது. அவர் தனது தரப்பு வாதத்தில், அந்தப் புத்தகம் ஏழு அல்லது எட்டுப் பேருக்கு மட்டுமே வினியோகிக்கப்பட்டிருந்தது என்றும், தான் ஒரு விற்பனையாளர் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், அந்தப் புத்தகத்தின் சந்தாதாரர்களிடமிருந்து, இது குறித்து எவ்வித புகாரும் வரவில்லை என்றும் சுட்டிக்காட்டி, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மார்ச் மாதத்தில், தன் மீது போடப்பட்டிருந்த எப்.ஐ.ஆர்.,ஐ தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்திருந்த மனுவை இவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.இதுவரை எட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதியில் இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.
608
2010-04-26T04:04:00+05:30
தமிழகம்
மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தாரை சிறை பிடித்தனர் மக்கள்: ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு:கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த தால், ஈரோடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட பைபிள் மாணாக்கர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம் பாளையம் பகுதியில் நேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ரெவின்யூ காலனியில் வசிக்கும் கேசவன் வீட்டுக்கு நான்கு பேர் சென்றனர். அவரது வீட்டில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து, "மக்களாட்சி முடிவுறப் போகிறது; இனி தெய்வ ஆட்சி நடக்க உள்ளது. ஏசுவை பின்பற்றுபவர் மட்டுமே உலகில் நிலைத்திருப்பர்' என்றனர்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கேசவன், "பிரச்னை எதற்கு செய்கிறீர்கள்; ஊருக்குள் சென்றால் பிரச்னையாகி விடும், திரும்பச் செல்லுங்கள்' என்றார் . அதற்குள் மற்றொரு குழுவினர் ஊருக்குள் சென்றனர். குழுவைச் சேர்ந்த திருச்செங்கோடு தனியார் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன்(38), வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் ஹென்றி மோகன்தாஸ்(65), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பொக்கிஷம்(61), யெப்சிபா (45), அண்ணா பல்கலை தொலைதூரக் கல்வி மாணவி கவுசல்யா(28), மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தார் ஜான்சன் ஆகியோர் பிர சாரத்தை துவக்கினர். அப்பகுதி மக்கள், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அவர்களை சிறை வைத்தனர். மேலும், அவர்கள் வந்த ஆம்னி வேன் பின் டயர் காற்றை இறக்கிவிட்டனர். சொட்டையம் பாளையம் ஜெயந்தி கூறுகையில்,""ஏசுவை கும்பிடுவோர் இந்த உலகத்தில் இருப்பர்; மற்றவர்கள் அழிந்து விடுவர்' என்று கூறி பயத்தை ஏற்படுத்தி, மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் அவர்களை சிறை வைத்தோம்,'' என்றார். ஒன்பதாம் வகுப்பு மாணவி நிவேதா கூறுகையில், ""எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள், "சாமியார்கள் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. ஏசு ஒருவர் தான் உலகை ரட்சிப்பவர்; ஏசுவை கும்பிட்டால் எந்த பிரச்னையும் வராது' என்று கூறி பிரசாரம் செய்தனர்,'' என்றார். கவுரி சங்கர் என்பவர் கூறுகையில், ""நான் முதலில் ஏதோ இன்சூரன்ஸ் நிறுவனத்தார் என்று நினைத்தேன். இறுதியாக துண்டு பிரசுரம் கொடுத்த போது தான், மதப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிந்தது. அந்த துண்டு பிரசுரத்தில், மற்ற மதத்தினர் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்டு, கிறிஸ்துவ மதத்தில் சேரும் படி இடம் பெற்றிருந்தன,'' என்றார். பைபிள் மாணாக்கர் குழுவினர் கூறுகையில், "இந்த உலகம் நிலையற்றது. கடவுளால் அழிக்கப்படும். ஏசுவை நம்புவோர் கைவிடப்படமாட்டார். எல்லா வேதங்களும் இதையே கூறுகின்றன என்று தான் கூறினோம். யாரையும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை' என்றனர். தகவலறிந்த சித்தோடு இன்ஸ் பெக்டர் முத்துசாமி, எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர முடியாது எனக் கூறிய போலீசார், அவர் களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். அதனால், அப்பகுதி மக்கள் சற்று சமாதானமாயினர்.தனி துணை தாசில்தார் ஜான்சன் கூறுகையில், ""நான் இடம் பார்ப்பதற்காக இங்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு வேண் டப்பட்டவர்களை பிடித்து வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்கும்படி கூறினேன்.என்னையும் பிடித்துக் கொண்ட னர்.இன்று நடக்கும் மக்களாட்சியால் நன்மையில்லை; தெய்வீக ஆட்சி தான் வருங்காலத்தில் ஆளப்போகிறது,'' என் றார். லாரி மீது ஜீப் மோதி விபத்து மாணவன் உட்பட மூவர் பலி சேலம்:சேலம் அருகே. லாரி மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவன் உட்பட மூன்று பேர் பலியாயினர்.மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி (70). கடந்த வாரம் சிவாஜி உட்பட அவரது உறவினர்கள் 14 பேர், போர்ஸ் மாடல் டிராக்ஸ் ஜீப் ஒன்றில் சுற்றுலா புறப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் பெங்களூருக்கு வந்தனர்.அங்கிருந்து நேற்று இரவு ஈரோடுக்கு புறப்பட்டனர். ஜீப்பை வெங்கட்வாமன் ராவ் என்பவர் ஓட்டினார். அதிகாலை 4.15 மணிக்கு மேச்சேரி - தொப்பூர் பிரிவு ரோட்டில் ஜீப் வந்தது.பெங்களூருல் இருந்து திருப்பூருக்கு பனியன் லோடு ஏற்றிச் சென்ற லாரி, மேச்சேரி- தொப்பூர் ரோட்டில் திரும்பியது. அப்போது, ஜீப் நிலை தடுமாறி லாரி மீது பலமாக மோதியது.விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த எட்டாம் வகுப்பு மாணவன் சுபம்(13), கஜேந்திரன்(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். படுகாயம் அடைந்த சுஜாபாய்(65), தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜீப்பில் பயணம் செய்த அஞ்சலி, வனிதா, டிரைவர் வெங்கட்வாமன் ராவ் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவ மனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, ராமதாஸ், சுஜிதா, சுவாதி, சிவாஜி உள்ளிட்டோர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர். டயர் மாற்ற நின்றிருந்த பஸ் மீது லாரி மோதல் அதிகாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாப பலி திண்டிவனம்:திண்டிவனம் அருகே பஞ்சரான முன்பக்க டயரை மாற்றுவதற்காக சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில், பயணிகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர்; மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து சர்மா டிராவல்ஸ் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமம் அருகே வந்த போது, பஸ்சின் முன்புற டயர் பஞ்சரானது. நேற்று அதிகாலை 2 மணியளவில், தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள ஓட்டல் ஒன்றின் முன் சாலையோரம் பஸ்சை நிறுத்தி, டயர் மாற்றும் பணி நடந்தது.சென்னையில் இருந்து உலோக பைப்புகளை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று திடீரென பஸ்சின் பின்புறம் மோதியது. இவ்விபத்தில், நின்றிருந்த பஸ் திடீரென முன்புறம் ஓடியது. முன்புற டயர் மாற்றிக் கொண்டிருந்த பஸ் டிரைவர் துறையூர் தாலுகா மங்கப்பட்டி பாலு(40), பஸ்சின் எதிர்புறம் காற்றோட்டத்திற்காக நின்றிருந்த பயணிகள் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் முருகன்(35), காரைக்குடி தாலுகா சவரம்பட்டி சுப்ரமணி(23) ஆகிய மூவரும் அதே இடத்தில் இறந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாம்பரம் சோமசுந்தரம் மகன் சங்கிலிராஜன், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உளுந்தூர்பேட்டை தாலுகா கொளத்தூர் தாண்டவராயன் மகன் தங்கதுரை(23), புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர், சேலம் கெங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார்(24), புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் புத்தூர் அடுத்த உக்கூர் சுரேஷ்(38), சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். துவரங்குறிச்சி அடுத்த தவசிப்பட்டி பழனிசாமி(42), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அடுத்த சிலையாவூரணி சுரேஷ்குமார்(28), சென்னை மடிப்பாக்கம் சுரேஷ்(38) ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்தில் காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை எஸ்.பி., பகலவன், டி.ஆர்.ஓ., வெங்கடாசலம், சப்-கலெக்டர் மஞ்சுளா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், சலவாதி கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.ரோஷணை போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ்காரர் வெட்டிக் கொலை களக்காடு அருகே பயங்கரம் களக்காடு:களக்காடு அருகே பழிக்கு பழியாக போலீஸ்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.களக்காடு அருகேயுள்ளது நடுச்சாலைப்புதூர். இங்கு வசிப்பவர் பன்னீர். வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வரும் இவருக்கும், கீழசாலைப்புதூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி கீழசாலைப்புதூரை சேர்ந்தவர்களால் பன்னீர் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த இவர், தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான முத்துராமலிங்கத்தை பன்னீர் மற்றும் அவரது உறவினர் மகன்கள், 2009 மார்ச் 30ல் வெட்டிக் கொன்றனர்.இந்நிலையில், நேற்று காலையில் பன்னீர் மகன் கோபாலகிருஷ்ணனை (27) அவரது தோட்டத்தில் எதிர்தரப்பினர் சரமாரியாக வெட்டினர். வலது கையை மணிக்கட்டிற்கு கீழ் வெட்டி எடுத்துச் சென்றனர். படுகாயமடைந்த இவரை போலீசார் மீட்டு நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த கோபாலகிருஷ்ணன் மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் போலீசில் பணிபுரிந்து தற்போது சஸ்பெண்டில் உள்ளார். சம்பவம் குறித்து திருக்குறுங்குடி எஸ்.ஐ., வேலுச்சாமி, ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பழிக்கு பழியாக நடந்த இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிச்சைக்காக "தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள்: இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் மதுரை:"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். இதற்காகவே யானைகளை, போட்டி போட்டுக்கொண்டு என்ன விலை கேட்டாலும் கொடுத்து வாங்கி அழைத்துவரும் தனியார்கள், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியது. கோயில் யானைகள் பக்தர்களிடம் பிச்சை கேட்பதும் நடக்கிறது.எந்த விலங்கு என்றாலும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கு வாங்கி வர, அந்தந்த மாநில தலைமை வனஉயிரின பாதுகாப்பாளரிடம் அனுமதி பெறவேண்டும். விலங்குகளின் நகம், தோல் போன்றவைகூட விற்றாலும், வாங்கினாலும் இவரது அனுமதி தேவை. விற்கும் மாநிலத்தின் தடையில்லா சான்றிதழும் அவசியம். 1972ல் கொண்டுவரப்பட்ட வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, யானையை பணம் கொடுத்து வாங்கக்கூடாது. அன்பளிப்பாக வழங்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன், 50-60 வயதுடைய யானை 1.50 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. அதேசமயம் 5-10 வயதுடைய யானை 10 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. தற்போது 35 லட்சம் வரை விற்கப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில்தான் யானைகள் விற்பனை அதிகம். யானையை வளர்க்க, வனத்துறை அனுமதி வழங்கும் போது, அதை பராமரிக்க வசதி உண்டா, பாகன் உள்ளார்களா, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது போன்ற விபரங்களை கவனிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்பது உண்மை. அவர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும், "புளூகிராஸ்' அமைப்பினரும் கூட நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது மிருகவதை தடுப்பு சட்டம். பிச்சை எடுக்கும் யானைகள், பராமரிப்பு இல்லாத யானைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், பாகன்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என இச்சட்டம் பச்சை கொடி காட்டுகிறது. ஆனால் அந்த சட்டம் குறித்து யானை "அறியாததானோ', இன்றும் பாகன்களிடம் வதைபட்டுக் கொண்டிருக்கிறது.விலைக்கு வாங்குவது ஏன்: பல லட்சம் ரூபாய் கொடுத்து யானையை விலைக்கு வாங்கும் உரிமையாளர்களில் சிலர், தினமும் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு பாகன்களுக்கு விடுகின்றனர். கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் யானையை பங்கேற்க செய்து, கட்டணமாக 25,000 ரூபாய் வரை பாகன்கள் பெறுகின்றனர். இல்லாதபட்சத்தில் தினமும் பிச்சை எடுக்க வைத்து, ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாகன்கள் சம்பாதிக்கின்றனர். தந்தங்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்கின்றனர். அதேசமயம் யானைக்கு தேவையான உணவை கொடுக்காமல், மலிவாக கிடைக்கும் கரும்பு, நாரைப் புற்களை மட்டும் கொடுக்கின்றனர். "இதனால் யானையின் எடை குறைவதோடு, நோய்வாய்ப்படவும் வாய்ப்பிருக்கிறது' என்கின்றனர் டாக்டர்கள். சில உரிமையாளர்கள், வயதான யானைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி பிச்சை எடுக்க வைக்கின்றனர். கடும் வெயில், உணவு கிடைக்காமை போன்ற காரணங்களால் அது இறந்தவுடன், யானைக்கு செய்த இன்சூரன்ஸ் பணமும் கிடைத்து விடுவதால், இதை தொழிலாகவே செய்து வருகின்றனர். சட்டம் என்ன சொல்கிறது: கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி, பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும். பிரிவு 4ன்படி, விலங்குகள் நல வாரிய குழு பரிந்துரையின் பெயரில் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.மேலும் 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, தேசிய விலங்குகள் நல வாரியம் பரிந்துரையின்கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.சட்டம் தயாராக இருந்தாலும், அதை நிறைவேற்ற அதிகாரிகள் தயாராக இல்லை. இனியாவது மனிதனை போல் புத்திகூர்மை உடைய யானையை காப்பாற்ற வன அதிகாரிகளும், ஆர்வலர்களும் முன்வரவேண்டும். ஆம்பூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல் மாஜி எம்.பி., ஜெயமோகன் உட்பட 2 பேர் பலி வேலூர்:ஆம்பூர் அருகே நேற்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜெயமோகன் உட்பட இருவர் உடல் நசுங்கி இறந்தனர்; எட்டு பேர் படுகாயமடைந்தனர்.வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயமோகன்(58); தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவராக உள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு எம்.பி.,யாக இருந்தார்.நேற்று முன்தினம் சென்னையில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து வாணியம்பாடி செல்வதற்காக பெங்களூரு செல்லும், "ரோடுலைன் இண்டியா' என்ற ஆம்னி பஸ்சில் சென்றார்.பஸ்சை கர்நாடக மாநிலம் ஹாசனைச் சேர்ந்த டிரைவர் சிவண்ணா(44) ஓட்டினார். சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் மாற்று டிரைவராக இருந்தார். டிரைவர் சீட்டுக்கு பின்னால் ஜெயமோகன் அமர்ந்திருந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆம்பூர் அடுத்த ஜமீன் குளத்திகை அருகே நான்கு வழிச்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் முன்னால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்கள் ஏற்றி கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத வகையில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், முன்னால் சென்ற கிரானைட் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. பஸ்சின் முன்பகுதி சீட்டில் அமர்ந்து பயணம் செய்த முன்னாள் எம்.பி., ஜெயமோகன் மற்றும் கேபினில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் பிரகாஷ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.பெங்களூருவைச் சேர்ந்த மணி பிரகாசம்(25) லாரன்ஸ்(45) மனோகரன்(33) பாத்திமாபீவி(24) உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், வேலூர் சி.எம்.சி., மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் பலியான முன்னாள் எம்.பி., ஜெயமோகனுக்கு, மல்லிகேஸ்வரி என்ற மனைவியும், விஜய் இளஞ்செழியன் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். விபத்தில் பலியான ஜெயமோகனின் உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.காங்., தலைவர்கள் இரங்கல்: வாகன விபத்தில் இறந்த முன்னாள் எம்.பி., ஜெயமோகனுக்கு தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளனர். அனுமதி பெறாத கட்டடங்களில் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: ஊட்டியில் அதிரடி நடவடிக்கை ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், விதிமுறையை மதிக்காமல், கவுன்சிலர்கள், அதிகாரிகள் சிலர் ஆதரவுடன் விதிகளுக்கு புறம்பாக கட்டடம் கட்டியவர்கள், இன்று பெரும் அவலத்தில் நிற்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றியும், விதி மீறியும் 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், "அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதன்படி, 32 கட்டடங்களில், விதிமீறிய பகுதிகள் இடிக்கப்பட்டன. பலர், சுப்ரீம் கோõர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.சென்னை ஐகோர்ட்டில் நடந்த கட்டடங்கள் தொடர்பான விசாரணையில், ஊட்டியில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்ட கட்டடங்களில், வழக்கு நிலுவையில் உள்ளதை தவிர, 985 கட்டடங்களின் பட்டியலை தயாரித்து, இதற்கான மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது."பணிகளை மேற்கொள்ள, போலீசார் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; பணிகள் முடிந்து, வரும் 29ம் தேதி ஊட்டி நகராட்சி கமிஷனர், ஊட்டி மின்வாரிய கண்கணிப்பு பொறியாளர், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆஜராகி, கோர்ட் உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' எனவும் உத்தரவிடப்பட்டது.உத்தரவுக்கு பின், மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்கும் பணிக்கான கூட்டம் நடந்தது. நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, கமிஷனர் கிரிஜா உத்தரவின் படி, பொறியாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில், நீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவங்கியது. ஊட்டி சவுத்விக், குன்னூர் சாலை, கோடப்பமந்து, பிங்கர்போஸ்ட், ஹில்பங்க் பகுதிகளில், நகராட்சி ஊழியர்கள், துண்டிப்பு பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய செயற்பொறியாளர் ஆல்துரை மற்றும் உதவி பொறியாளர் சிவகுமார் தலைமையில், மின் இணைப்பு துண்டிப்பு பணி நடந்து வருகிறது. மதுக்கடையில் தீ "சரக்கு' எரிந்து நாசம் கோவை:கோவை டாஸ்மாக் மதுபானக் கடையில் ஏற்பட்ட தீயில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள "சரக்கு' எரிந்து சேதமடைந்தது.கோவை பெரிய கடைவீதி, மாநகராட்சி அலுவலகம் எதிரே டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. காந்தி சிலைக்கு எதிரே இருக்கும் இந்த கடையை அகற்ற வலியுறுத்தி, இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தின.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.50 மணிக்கு, கடையின் வெளிப்பகுதியில் திடீரென தீப்பற்றியது. காற்று பலமாக வீசியதால், கடை முழுவதும் தீ வேகமாக பரவியது. கடைக்குள் இருந்த மதுபாட்டில்கள், தீப்பற்றி வெடித்துச்சிதறின.மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதமடைந்ததாக கணக்கிடப் பட்டுள்ளது. உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர். தலைமைச் செயலகத்தில் லிப்டில் சிக்கிய அதிகாரிகள் சென்னை:தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில், "லிப்ட்' பழுதாகி ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்டோர் வெளிவர முடியாமல் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இக்கட்டடத்தில் அனைத்து தளங்களுக்கும், "லிப்ட்' வசதி உள்ளது. இதில், ஒரு லிப்டில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிவாசன், மக்கள் தொடர்பு துறை அதிகாரி சாந்தகுமார் மற்றும் ராமச்சந்திரன், ரகுபதி, ஜான் பால் செல்லையா உள்ளிட்ட சிலர், மேல் தளத்தில் இருந்து தரை தளம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.ஆறாவது தளத்தில் இருந்து, "லிப்ட்' ஐந்தாம் தளத்திற்கு இறங்கியது. அப்போது மின்சாரம் தடைபட்டதால், லிப்ட் இரண்டு தளத்திற்கும் இடையில் நின்றது. இதனால், லிப்ட்டில் சிக்கிக் கொண்டவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதுகுறித்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. எஸ்பிளனேடு மற்றும் தலைமைச் செயலக தீயணைப்பு படையினர், சம்பவ இடம் வந்து லிப்ட்டிற்கான சாவியை பெற்று அதன் மூலம் லிப்டை இயக்கி சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவர் கைது பொன்னேரி: போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பீர், பிராந்தி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தில் "டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த லோகு (எ) லோகநாதன்(45) என்பவர், அரசு அனுமதியுடன் பார் நடத்தி வந்தார். இங்கு போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., வனிதா உத்தரவின்பேரில், ஏ.டி.எஸ்.பி., சிற்றரசு, டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், பொன்னேரி இன்ஸ்பெக்டர் குலசேகரன், தலைமை காவலர் சைமன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு புங்கம்பேடு "டாஸ்மாக்' கடை அருகில் இயங்கி வந்த பாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதும், அவை போலியானவை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பார் உரிமையாளர் லோகநாதனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், "டாஸ்மாக்' கடை மூடிய பிறகு இரவு முழுவதும் இந்த போலி மாதுபானங்களை பாரில் விற்பனை செய்வதும், இதற்காக புதுச்சேரி பகுதியில் இருந்து மொத்தமாக சரக்குகள் கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.மேலும், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்படும் பீர், பிராந்தி உள்ளிட்ட போலி மதுபானங்களை பிரபல பீர் கம்பெனி பெயரிலும், லேபிள் ஒட்டி விற்பனை செய்துள்ளனர். பார் அருகில், அன்சாரி(23) என்பவருக்கு சொந்தமான குடோனில் இவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்திலும், போலி மதுபானங்கள் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிந்தது.இதையடுத்து மதுவிலக்கு போலீசார், பார் உரிமையாளர் லோகநாதன்(45) குடோன் உரிமையாளர் அன்சாரி(23) பார் பணியாளர்கள் கணேஷ்(56) முத்து(26) மற்றும் கணேசன்(28) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 840 போலி பீர் பாட்டில்கள், 96 பிராந்தி பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வெவ்வேறு வகை 204 பிராந்தி பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.போலி மதுபான தொழிற்சாலைக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் (கூN 03 ஃ 3 ) வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் வேறு யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்? வேறு எங்கெல்லாம் இவர்கள் சப்ளை செய்து வந்தனர்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம் கடலூர்:ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு 9.50 மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது. மயிலாடுதுறையில் 5.30 மணிக்கு புறப்படும் எண்.814 பாசஞ்சர் ரயில் விழுப்புரத்திற்கு 9.15க்கு சென்று சேரும்.இந்த ரயில் இன்ஜின் பழுதானதால், மயிலாடுதுறையில் காலை புறப்படவில்லை. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று சேர்ந்த ரயில் எண்.813 இன்ஜின் மாற்றப்பட்டு நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதனால், கடலூருக்கு 7.40 மணிக்கு வர வேண்டிய பாசஞ்சர் ரயில் 12 மணிக்கு வந்தது. ஒரே நாளில் இரு திருமண மண்டபங்களில் திருட்டு 17 சவரன் நகை; ஒரு கிலோ வெள்ளி, பரிசுகள் மாயம் ராயபுரம்:ராயபுரத்தில் ஒரே நாளில் இரண்டு திருமண மண்டபங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி, 17 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் சென்றனர்.வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரபேட்டை, ராயபுரம், ஆர்.கே., நகர், கொருக்குபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாகவுள்ளன. மணமகள் மற்றும் மணமகன்களின் அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் நகை, பணம் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் செல்வதை, மர்மநபர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.கடந்த 21ம் தேதியன்று, புது வண்ணாரபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமண மண்டபத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொய் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில், ராயபுரத்தில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பாஸ்கர்(25). பெங்களூரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் மஞ்சுளா(19). இருவருக்கும் நேற்று ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் சீர்வரிசை கொடுப்பதற்காக நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மணமகள் அறையில் வைத்திருந்தனர். திருமணம் முடிந்து பார்த்தபோது, 10 சவரன் நகைகள், ஒரு கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது. மேலும், மணமகன் அறையில் இருந்த பரிசு பொருட்களும் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த மணமகள் மற்றும் மணமகன் வீட்டார், மண்டபத்தின் பல இடங்களில் தேடியும் அவை கிடைக்கவில்லை. மற்றொரு சம்பவம்: திண்டிவனத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகனுக்கு, ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. அப்போது வசூலான மொய் பணம் 20 ஆயிரம் ரூபாய், ஏழு சவரன் நகைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களை மணமகன் அறையில் வைத்திருந்தனர். திருமணம் முடிந்து மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட தயாரானபோது பார்த்தபோது அவை மாயமாகி இருந்தது.மர்மநபர்கள் அவற்றை திருடிச் சென்றது தெரிந்தது. இவ்விரு சம்பவங்கள் குறித்து ராயபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை, போலீசார் வழக்கம் போல் தேடி வருகின்றனர்.
609
2010-04-26T04:08:00+05:30
தமிழகம்
லாரி மீது ஜீப் மோதி விபத்து மாணவன் உட்பட மூவர் பலி
சேலம்:சேலம் அருகே. லாரி மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவன் உட்பட மூன்று பேர் பலியாயினர்.மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி (70). கடந்த வாரம் சிவாஜி உட்பட அவரது உறவினர்கள் 14 பேர், போர்ஸ் மாடல் டிராக்ஸ் ஜீப் ஒன்றில் சுற்றுலா புறப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் பெங்களூருக்கு வந்தனர்.அங்கிருந்து நேற்று இரவு ஈரோடுக்கு புறப்பட்டனர். ஜீப்பை வெங்கட்வாமன் ராவ் என்பவர் ஓட்டினார். அதிகாலை 4.15 மணிக்கு மேச்சேரி - தொப்பூர் பிரிவு ரோட்டில் ஜீப் வந்தது.பெங்களூருல் இருந்து திருப்பூருக்கு பனியன் லோடு ஏற்றிச் சென்ற லாரி, மேச்சேரி- தொப்பூர் ரோட்டில் திரும்பியது. அப்போது, ஜீப் நிலை தடுமாறி லாரி மீது பலமாக மோதியது.விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த எட்டாம் வகுப்பு மாணவன் சுபம்(13), கஜேந்திரன்(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். படுகாயம் அடைந்த சுஜாபாய்(65), தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜீப்பில் பயணம் செய்த அஞ்சலி, வனிதா, டிரைவர் வெங்கட்வாமன் ராவ் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவ மனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, ராமதாஸ், சுஜிதா, சுவாதி, சிவாஜி உள்ளிட்டோர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
610
2010-04-26T04:10:00+05:30
தமிழகம்
டயர் மாற்ற நின்றிருந்த பஸ் மீது லாரி மோதல் அதிகாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாப பலி
திண்டிவனம்:திண்டிவனம் அருகே பஞ்சரான முன்பக்க டயரை மாற்றுவதற்காக சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில், பயணிகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர்; மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து சர்மா டிராவல்ஸ் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமம் அருகே வந்த போது, பஸ்சின் முன்புற டயர் பஞ்சரானது. நேற்று அதிகாலை 2 மணியளவில், தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள ஓட்டல் ஒன்றின் முன் சாலையோரம் பஸ்சை நிறுத்தி, டயர் மாற்றும் பணி நடந்தது.சென்னையில் இருந்து உலோக பைப்புகளை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று திடீரென பஸ்சின் பின்புறம் மோதியது. இவ்விபத்தில், நின்றிருந்த பஸ் திடீரென முன்புறம் ஓடியது. முன்புற டயர் மாற்றிக் கொண்டிருந்த பஸ் டிரைவர் துறையூர் தாலுகா மங்கப்பட்டி பாலு(40), பஸ்சின் எதிர்புறம் காற்றோட்டத்திற்காக நின்றிருந்த பயணிகள் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் முருகன்(35), காரைக்குடி தாலுகா சவரம்பட்டி சுப்ரமணி(23) ஆகிய மூவரும் அதே இடத்தில் இறந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாம்பரம் சோமசுந்தரம் மகன் சங்கிலிராஜன், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உளுந்தூர்பேட்டை தாலுகா கொளத்தூர் தாண்டவராயன் மகன் தங்கதுரை(23), புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர், சேலம் கெங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார்(24), புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் புத்தூர் அடுத்த உக்கூர் சுரேஷ்(38), சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். துவரங்குறிச்சி அடுத்த தவசிப்பட்டி பழனிசாமி(42), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அடுத்த சிலையாவூரணி சுரேஷ்குமார்(28), சென்னை மடிப்பாக்கம் சுரேஷ்(38) ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை எஸ்.பி., பகலவன், டி.ஆர்.ஓ., வெங்கடாசலம், சப்-கலெக்டர் மஞ்சுளா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், சலவாதி கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.ரோஷணை போலீசார் விசாரிக்கின்றனர்.
611
2010-04-26T04:11:00+05:30
தமிழகம்
போலீஸ்காரர் வெட்டிக் கொலை களக்காடு அருகே பயங்கரம்
களக்காடு:களக்காடு அருகே பழிக்கு பழியாக போலீஸ்காரர் வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.களக்காடு அருகேயுள்ளது நடுச்சாலைப்புதூர். இங்கு வசிப்பவர் பன்னீர். வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வரும் இவருக்கும், கீழசாலைப்புதூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி கீழசாலைப்புதூரை சேர்ந்தவர்களால் பன்னீர் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த இவர், தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான முத்துராமலிங்கத்தை பன்னீர் மற்றும் அவரது உறவினர் மகன்கள், 2009 மார்ச் 30ல் வெட்டிக் கொன்றனர்.இந்நிலையில், நேற்று காலையில் பன்னீர் மகன் கோபாலகிருஷ்ணனை (27) அவரது தோட்டத்தில் எதிர்தரப்பினர் சரமாரியாக வெட்டினர். வலது கையை மணிக்கட்டிற்கு கீழ் வெட்டி எடுத்துச் சென்றனர். படுகாயமடைந்த இவரை போலீசார் மீட்டு நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த கோபாலகிருஷ்ணன் மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் போலீசில் பணிபுரிந்து தற்போது சஸ்பெண்டில் உள்ளார். சம்பவம் குறித்து திருக்குறுங்குடி எஸ்.ஐ., வேலுச்சாமி, ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பழிக்கு பழியாக நடந்த இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
613
2010-04-26T04:15:00+05:30
தமிழகம்
ஆம்பூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல் மாஜி எம்.பி., ஜெயமோகன் உட்பட 2 பேர் பலி
வேலூர்:ஆம்பூர் அருகே நேற்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜெயமோகன் உட்பட இருவர் உடல் நசுங்கி இறந்தனர்; எட்டு பேர் படுகாயமடைந்தனர்.வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயமோகன்(58); தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவராக உள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு எம்.பி.,யாக இருந்தார். நேற்று முன்தினம் சென்னையில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து வாணியம்பாடி செல்வதற்காக பெங்களூரு செல்லும், "ரோடுலைன் இண்டியா' என்ற ஆம்னி பஸ்சில் சென்றார்.பஸ்சை கர்நாடக மாநிலம் ஹாசனைச் சேர்ந்த டிரைவர் சிவண்ணா(44) ஓட்டினார். சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் மாற்று டிரைவராக இருந்தார். டிரைவர் சீட்டுக்கு பின்னால் ஜெயமோகன் அமர்ந்திருந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆம்பூர் அடுத்த ஜமீன் குளத்திகை அருகே நான்கு வழிச்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் முன்னால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்கள் ஏற்றி கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத வகையில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், முன்னால் சென்ற கிரானைட் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. பஸ்சின் முன்பகுதி சீட்டில் அமர்ந்து பயணம் செய்த முன்னாள் எம்.பி., ஜெயமோகன் மற்றும் கேபினில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் பிரகாஷ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.பெங்களூருவைச் சேர்ந்த மணி பிரகாசம்(25) லாரன்ஸ்(45) மனோகரன்(33) பாத்திமாபீவி(24) உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், வேலூர் சி.எம்.சி., மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான முன்னாள் எம்.பி., ஜெயமோகனுக்கு, மல்லிகேஸ்வரி என்ற மனைவியும், விஜய் இளஞ்செழியன் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். விபத்தில் பலியான ஜெயமோகனின் உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.காங்., தலைவர்கள் இரங்கல்: வாகன விபத்தில் இறந்த முன்னாள் எம்.பி., ஜெயமோகனுக்கு தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
614
2010-04-26T04:16:00+05:30
தமிழகம்
அனுமதி பெறாத கட்டடங்களில் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: ஊட்டியில் அதிரடி நடவடிக்கை
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், விதிமுறையை மதிக்காமல், கவுன்சிலர்கள், அதிகாரிகள் சிலர் ஆதரவுடன் விதிகளுக்கு புறம்பாக கட்டடம் கட்டியவர்கள், இன்று பெரும் அவலத்தில் நிற்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றியும், விதி மீறியும் 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், "அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதன்படி, 32 கட்டடங்களில், விதிமீறிய பகுதிகள் இடிக்கப்பட்டன. பலர், சுப்ரீம் கோõர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.சென்னை ஐகோர்ட்டில் நடந்த கட்டடங்கள் தொடர்பான விசாரணையில், ஊட்டியில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்ட கட்டடங்களில், வழக்கு நிலுவையில் உள்ளதை தவிர, 985 கட்டடங்களின் பட்டியலை தயாரித்து, இதற்கான மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. பணிகளை மேற்கொள்ள, போலீசார் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; பணிகள் முடிந்து, வரும் 29ம் தேதி ஊட்டி நகராட்சி கமிஷனர், ஊட்டி மின்வாரிய கண்கணிப்பு பொறியாளர், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆஜராகி, கோர்ட் உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' எனவும் உத்தரவிடப்பட்டது.உத்தரவுக்கு பின், மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்கும் பணிக்கான கூட்டம் நடந்தது. நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, கமிஷனர் கிரிஜா உத்தரவின் படி, பொறியாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில், நீர் இணைப்பு துண்டிக்கும்பணி துவங்கியது. ஊட்டி சவுத்விக், குன்னூர் சாலை, கோடப்பமந்து, பிங்கர்போஸ்ட், ஹில்பங்க் பகுதிகளில், நகராட்சி ஊழியர்கள், துண்டிப்பு பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய செயற்பொறியாளர் ஆல்துரை மற்றும் உதவி பொறியாளர் சிவகுமார் தலைமையில், மின் இணைப்பு துண்டிப்பு பணி நடந்து வருகிறது.
617
2010-04-26T04:19:00+05:30
தமிழகம்
போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவர் கைது
பொன்னேரி: போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பீர், பிராந்தி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தில் "டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த லோகு (எ) லோகநாதன்(45) என்பவர், அரசு அனுமதியுடன் பார் நடத்தி வந்தார். இங்கு போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., வனிதா உத்தரவின்பேரில், ஏ.டி.எஸ்.பி., சிற்றரசு, டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், பொன்னேரி இன்ஸ்பெக்டர் குலசேகரன், தலைமை காவலர் சைமன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு புங்கம்பேடு "டாஸ்மாக்' கடை அருகில் இயங்கி வந்த பாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதும், அவை போலியானவை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பார் உரிமையாளர் லோகநாதனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், "டாஸ்மாக்' கடை மூடிய பிறகு இரவு முழுவதும் இந்த போலி மாதுபானங்களை பாரில் விற்பனை செய்வதும், இதற்காக புதுச்சேரி பகுதியில் இருந்து மொத்தமாக சரக்குகள் கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.மேலும், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்படும் பீர், பிராந்தி உள்ளிட்ட போலி மதுபானங்களை பிரபல பீர் கம்பெனி பெயரிலும், லேபிள் ஒட்டி விற்பனை செய்துள்ளனர். பார் அருகில், அன்சாரி(23) என்பவருக்கு சொந்தமான குடோனில் இவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்திலும், போலி மதுபானங்கள் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிந்தது.இதையடுத்து மதுவிலக்கு போலீசார், பார் உரிமையாளர் லோகநாதன்(45) குடோன் உரிமையாளர் அன்சாரி(23) பார் பணியாளர்கள் கணேஷ்(56) முத்து(26) மற்றும் கணேசன்(28) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 840 போலி பீர் பாட்டில்கள், 96 பிராந்தி பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வெவ்வேறு வகை 204 பிராந்தி பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். போலி மதுபான தொழிற்சாலைக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் (கூN 03 ஃ 3 ) வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் வேறு யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்? வேறு எங்கெல்லாம் இவர்கள் சப்ளை செய்து வந்தனர்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
618
2010-04-26T04:20:00+05:30
தமிழகம்
ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம்
கடலூர்:ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு 9.50 மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது.  மயிலாடுதுறையில் 5.30 மணிக்கு புறப்படும் எண்.814 பாசஞ்சர் ரயில் விழுப்புரத்திற்கு 9.15க்கு சென்று சேரும்.இந்த ரயில் இன்ஜின் பழுதானதால், மயிலாடுதுறையில் காலை புறப்படவில்லை. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று சேர்ந்த ரயில் எண்.813 இன்ஜின் மாற்றப்பட்டு நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதனால், கடலூருக்கு 7.40 மணிக்கு வர வேண்டிய பாசஞ்சர் ரயில் 12 மணிக்கு வந்தது.
619
2010-04-26T04:21:00+05:30
தமிழகம்
ஒரே நாளில் இரு திருமண மண்டபங்களில் திருட்டு 17 சவரன் நகை; ஒரு கிலோ வெள்ளி, பரிசுகள் மாயம்
ராயபுரம்:ராயபுரத்தில் ஒரே நாளில் இரண்டு திருமண மண்டபங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி, 17 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் சென்றனர்.வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரபேட்டை, ராயபுரம், ஆர்.கே., நகர், கொருக்குபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாகவுள்ளன. மணமகள் மற்றும் மணமகன்களின் அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் நகை, பணம் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் செல்வதை, மர்மநபர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.கடந்த 21ம் தேதியன்று, புது வண்ணாரபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமண மண்டபத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொய் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில், ராயபுரத்தில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பாஸ்கர்(25). பெங்களூரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் மஞ்சுளா(19). இருவருக்கும் நேற்று ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் சீர்வரிசை கொடுப்பதற்காக நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மணமகள் அறையில் வைத்திருந்தனர். திருமணம் முடிந்து பார்த்தபோது, 10 சவரன் நகைகள், ஒரு கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது. மேலும், மணமகன் அறையில் இருந்த பரிசு பொருட்களும் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த மணமகள் மற்றும் மணமகன் வீட்டார், மண்டபத்தின் பல இடங்களில் தேடியும் அவை கிடைக்கவில்லை.
620
2010-04-26T04:22:00+05:30
தமிழகம்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை சிறிதாக்கினார்சசி தரூர் தோழி சுனந்தா பற்றிய பரபரப்பு தகவல்:பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்
மும்பை:சசி தரூரின் தோழி சுனந்தா, பத்து ஆண்டுகளுக்கு முன், தனது மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பெரிய இடத்து சிபாரிசு காரணமாக, இந்த சர்ஜரிக்காக அவரிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட வில்லையாம்.ஐ.பி.எல்., சர்ச்சையில் சிக்கியதால் பிரபலமானவர் சுனந்தா புஷ்கர். அழகு கலை நிபுணரான சுனந்தாவுக்கு தற்போது 47 வயதாகிறது. தோற்றத்தை பார்த்தால், இந்த பெண்ணுக்கா 47 வயது என, கேட்கத் தோன்றும். ஐ.நா.,வில் முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், சில நாட்களுக்கு முன், மத்திய அமைச்சராக இருந்தவருமான சசி தரூர், சுனந்தாவின் நெருக்கமான நண்பர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் (இருவருக்குமே இது மூன்றாவது திருமணம்) தகவல் உண்டு. வசீகரமான தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் சுனந்தாவின் நிகழ் காலம், கடந்த காலம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே தற்போது பரபரப்பு செய்தியாகி விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன், அவர் தனது மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இயற்கையிலேயே சுனந்தாவுக்கு சற்று பெரிய மூக்கு. சிறிய மூக்காக இருந்தால், தனது அழகு மேலும் ஜொலிக்குமே என்ற எண்ணம் அவருக்கு உருவானது.இதையடுத்து, மும்பையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் நிபுணரான டாக்டர் அசோக் குப்தாவை சந்தித்து, மூக்கை சர்ஜரி செய்து கொண்டு, சிறியதாக மாற்றிக் கொண்டார். இதுகுறித்து டாக்டர் அசோக் குப்தாவிடம் கேட்டபோது, துவக்கத்தில் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டார். பின் தயக்கத்துடன் அது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார். அசோக் குப்தா கூறியதாவது:கடந்த 2000ம் ஆண்டில் சுனந்தா என்னை சந்தித்தார். தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் என்னைப் பற்றி அவரிடம் தகவல் தெரிவித்ததாக கூறினார். தனது மூக்கை சற்று சிறியதாக்கினால் நன்றாக இருக்கும் என்றார். இதையடுத்து, அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். அவரது மூக்கில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப, அவரது மூக்கு சற்று கூர்மையாக்கப்பட்டது. மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன், கொழுப்பை குறைப்பதற்கான இரண்டு சர்ஜரிகளையும் செய்து கொண்டார்.பத்து ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு மூன்றில் இருந்து நான்கு லட்சம் வரை செலவாகும். ஆனால், முக்கியமான இடத்தில் இருந்து சிபாரிசு செய்யப்பட்டவர் என்பதால், சுனந்தாவிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. மருத்துவமனை கட்டணம் மட்டுமே அவரிடம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு டாக்டர் குப்தா கூறினார்.
621
2010-04-26T04:23:00+05:30
தமிழகம்
நடுவானில் அதிபயங்கரம்: பயணிகள் விமானம் குலுங்கியது அதிர்ச்சியில் 20 பேர் காயம், விசாரிக்க உத்தரவு
கொச்சி:துபாயில் இருந்து 364 பேருடன் கொச்சி வந்த எமிரேட்ஸ் விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதால், பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர். பெங்களூருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் இகே 530 ரக விமானம், நேற்று 350 பயணிகள் மற்றும் 14 பணியாட்களுடன் துபாயில் இருந்து கொச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 8.50 மணி அளவில் பெங்களூரு பிராந்தியத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், அங்கிருந்த காற்றழுத்தத்தில் வேறுபாடு ஏற்பட்டது. உடன் விமானம் அதிபயங்கரமாக குலுங்கியது. நிலைகுலைந்து தள்ளாட்டம் போட்டது . வானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், காற்றழுத்த மாற்றம் காரணமாக திடீரென 1,000 முதல் 1,500 அடி கீழே இறங்கியது. இதனால், நடுவானில் அதிர்ச்சியும், புரட்டிப்போடும் அளவுக்கு பெரிய குலுக்கலும் ஏற்பட்டது. இந்த நிகழ்வு நடந்த போது, பயணிகள் யாரும் "சீட்' பெல்ட் அணியாததால், அங்கும் இங்கும் தூக்கியெறியப்பட்டனர். ஜன்னல்கள், கேபின் சீலிங்குகள் மற்றும் இருக்கைகளில் மோதியதில் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. என்ன நிகழ்ந்தது என்பதை அறியாத பயணிகள் பலர் உதவி கோரி கத்தினர். விமானம் நொறுங்கி விழுவதாக நினைத்து பீதியில் அலறினர். பல பயணிகள் ஆக்சிஜன் முகமூடியை வேகமாக இழுத்ததால், கேபினின் மேல் பகுதியில் உள்ள கூரை சேதம் அடைந்தது. பின், விமானம் கொச்சியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது."சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே விமானம் நாட்டை விட்டுச் செல்லும். காயமடைந்தவர்களிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானப் பணியாளர்கள் மற்றும் பைலட்களிடமும் விசாரணை நடத்தப்படும்' என, சிவில் விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் நசீம் சைதி கூறியுள்ளார்.விமானம் கடுமையாக குலுங்கியவுடன் அதில் பயணித்த பலர், அதிர்ச்சியுடனும், கவலையுடனும் இருந்தனர். எனவே, விமானம் தரையிறக்கப்பட்ட உடன் பைலட், மருத்துவ உதவி கோரினார். முதல் கட்டமாக விமான நிலையத்தில் உள்ள அம்ரிதா மருத்துவக் குழுவிடம் பயணிகள் ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கழுத்து,தோள்,கண் இமைப்பகுதி என,பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.மேலும், அம்ரிதா மருத்துவமனை யைச் சேர்ந்த டாக்டர் ராகுல் தம்பி கூறுகையில், ""அனைத்து பயணிகளுக்கும் முதலுதவி அளிக்கப் பட்டது. சிலருக்கு எக்ஸ் ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனை டாக்டர் நாயகர் சிகிக்சை அளித்தார்,'' என்றார். இதையடுத்து, விமானம் உடனடியாக துபாய் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், ""என் குடும்பத்தினருடன் விமானத்தில் வந்தேன். திடீரென ஆக்சிஜன் தரும் முகக் கவசம் கீழே விழுந்தது. உடன் நாங்கள் பயந்து விட்டோம். இதை எங்களுக்கு மறு பிறப்பு என்றே சொல்ல வேண்டும். பயணிகள் பலர் அவர்களின் இருக்கையில் இருந்து விழுந்து விட்டனர்,'' என்றார்.
622
2010-04-26T04:24:00+05:30
தமிழகம்
கொசு விரட்டி சுருளுக்கு அஞ்சாமல் பெருக்கம்
கோல்கட்டா:கொசுக்களை விரட்டுவதற்காக வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசுவத்திச் சுருள், கொசு விரட்டித் திரவம் ஆகியவற்றையும் மீறி கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பதாக, கோல்கட்டாவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். கொசுக்களிலிருந்து உருவாகும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும் கோல்கட்டா மாநகராட்சியின் தலைமை "என்ட்டோமாலஜிஸ்ட்' தேபாசிஷ் பிஸ்வாஸ் என்ற நிபுணர் நேற்று, உலக மலேரியா தினத்தை ஒட்டி கூறியதாவது:முன்பு மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு, டி.டி.டி., மாலதியான் போன்ற ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தினோம். ஆரம்பத்தில் அதன் பயனாக கொசுக்கள் உற்பத்தி குறைந்தாலும், தற்போதைய ஆய்வுப்படி, இவற்றில் தயாரிக்கப்படும் கொசுவத்திச் சுருள் மற்றும் கொசு விரட்டித் திரவம் ஆகியவற்றையும் தாண்டி, தங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வல்லமை உடையனவாகக் கொசுக்கள் மாறியுள்ளன.கொசுக்களை விரட்டுவதற்காக ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும் 80 முதல் 85 சதவீதம் பேர் தான் மலேரியாவால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், கொசு வலைகளைப் பயன்படுத்துவோர் மூன்றிலிருந்து 4 சதவீதம் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.கோல்கட்டாவில் நீர்நிலைகளில் கப்பி மற்றும் கம்பூசியா போன்ற மீன்களை விட்டு, அவற்றின் மூலம் கொசுக்களை அதன் முட்டை நிலையிலேயே அழித்து வருகின்றனர்.இவ்வாறு பிஸ்வாஸ் தெரிவித்தார்.
624
2010-04-26T04:25:00+05:30
தமிழகம்
ஊனமாக பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க சொன்ன தாய்
கனிகிரி (பிரகாசம்):இரண்டாவது பிறந்த பெண்குழந்தையும் ஊனமாக பிறந்ததால், சுடுகாட்டில் உயிருடன் புதைத்து விடும்படி, அதன் தாயே, ரிக்ஷாக்காரரிடம் கொடுத்தனுப்பிய பரிதாப சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கனிகிரியை சேர்ந்தவர் மஸ்தான்பீ. இவருக்கு, கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. இது, இரண்டாவது குழந்தை.குழந்தையின் கால்கள் இரண்டும், வளைந்து ஊனமுற்ற நிலையில் பிறந்தது. குழந்தையை வளர்ப்பது சிரமம் என்பதால், மஸ்தான்பீ, 18ம் தேதி ரிக்ஷாக்காரர் ஒருவரை அழைத்து, குழந்தை இறந்துவிட்டதாக பொய் சொல்லி, சுடுகாட்டில் புதைத்து விடும்படி பணம் கொடுத்து அனுப்பினார். குழந்தையை சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்ற ரிக்ஷாக்காரர், அங்கு காவலாளிகளாக உள்ள வெங்கடசாமி, அச்சம்மா தம்பதியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு திரும்பி விட்டார்.அவர்கள், குழந்தையை புதைப்பதற்காக கையில் எடுத்தபோது, குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சுடுகாட்டு தம்பதி, குழந்தையை கொல்வதற்கு மனமில்லாமல், தாங்களே பாலூட்டி வளர்த்து வருகின்றனர். மற்றொரு சோகசம்பவம்:ஆந்திரமாநிலம் நிஜாமாபாத்,போதன் நகரில் பிறந்து சில மணி நேரமேயான பச்சிளங்குழந் தையை அடையாளம்தெரியாத நபர்கள், உயிருடன் கைப்பையில் திணித்து, குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து சென் றுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.குப்பைத் தொட்டியில் வீசியெறிந்த குழந்தை, கடும் வெயிலி னால் அலறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு,அருகிலிருந்த சிமென்ட் வியாபாரி ரவூப், அங்கு சென்று பார்த்த போது எறும்புகள் மொய்த்த நிலையில், குழந்தை உயிருடன் இருப்பதை கண்டார்.அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவசர சிகிச்சை அளித்த பின், அக்குழந்தையை அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்.
625
2010-04-26T04:26:00+05:30
தமிழகம்
எல்லையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பதான்கோட் (பஞ்சாப்):இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் போலீசார் நடத்திய சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இரண்டு போலீசார் பலியாயினர்.பஞ்சாப் டி.ஜி.பி., பி.எஸ்.கில் இது பற்றி கூறியதாவது:பஞ்சாப்பில் ரதர்வான் கிராமத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன், எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் தரப்பில் இருவரும், போலீசார் தரப்பில் இருவரும் பலியாயினர்.குர்தாஸ்பூர் எல்லையை ஒட்டிய கிராமங்களில் தேடுதல் வேட்டையில் பி.எஸ்.எப்., போலீசார் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் ஊடுருவிய சிலரைக் கைது செய்துள்ளோம். எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு பி.எஸ்.கில் தெரிவித்தார்.
626
2010-04-26T04:26:00+05:30
தமிழகம்
தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு
சென்னை:இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் அனுமதி வழங்கிய தமிழக கல்லூரிகள் சிலவற்றில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் துவங்க, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய், விதிமுறைகளை மீறி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி அளித்ததாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில் இவர் லஞ்சம் பெற்ற போது, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய் யப்பட்டார். இவரது மருத் துவக் கல்லூரி மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் பணமும், 1,500 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க இவர் 35 கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சம் பெற்ற தகவல்கள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, கேதன் தேசாய் அனுமதி அளித்த புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்த பட்டியலை தயாரித்து அதன் மூலம் விசாரணையை நடத்தும் முயற்சியில் சி.பி.ஐ., அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் அனுமதி பெற்றுள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், சி.பி.ஐ., சிறப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் விசாரணையை துவக்கியுள்ளதாக கூறப்பட்டது.
627
2010-04-26T04:27:00+05:30
தமிழகம்
மலையாள நடிகர் ஸ்ரீநாத் சாவில் மர்மம் உள்துறை மந்திரியிடம் புகார் செய்ய முடிவு
திருவனந்தபுரம்:ஓட்டல் அறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் சாவில் மர்மம் இருப்பதாக, உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உள் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப் போவதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில், "கிரீடம், சி.பி.ஐ., டைரி குறிப்பு' உள்ளிட்ட படங்களில் கடந்த 30 ஆண்டுகளாக நடித்து வந்தவர் ஸ்ரீநாத்(30); பிரபல நடிகை சாந்தி கிருஷ்ணாவின் முன்னாள் கணவர். எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தில் "சிகாரி' என்ற படப்பிடிப்பில் கலந்துகொள்ள அங் குள்ள ஓட்டலில் தங்கியிருந்த இவர், கடந்த வெள்ளியன்று உடலில் பல இடங்களில் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில், நடிகரின் சாவு குறித்து அவரது சகோதரர் சேதுநாத் கூறுகையில், "எனது சகோதரர் ஸ்ரீநாத் இறப்பதற்கு சற்று முன்பாக அவரை ஒரு நடிகரும், திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவரும் சந்தித்துள்ளனர். அதற்கு பிறகுதான் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். எனவே அவர் தானாக இம்முடிவை எடுத்தாரா அல்லது அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இந்த சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து உள்துறை அமைச்சரிடமும் புகார் செய்யப்படும்' என்றார்.
628
2010-04-26T07:17:00+05:30
தமிழகம்
வறுமையால் பயிற்சியை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு! : கிராமிய கலைக்கு ஆசிரியர் தேவை
கடலூர் : கடலூர் அரசு இசை பள்ளியில் கிராமிய கலைகளுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், விழுப்புரம், சீர் காழி, திருவாரூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி, புதுக் கோட்டை, கரூர், ராமநாதபுரம், திருநெல் வேலி, பெரம்பலூர், தூத் துக் குடி உள்ளிட்ட 17 மாவட் டங்களில் அரசு இசைப் பள்ளிகள் உள்ளன. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அரசு இசைப்பள்ளி கடந்த 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் பாடுதல், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் உள் ளிட்ட கலைகள் கற்றுத்தரப்படுகிறது. இதில் ஒரு தலைமை ஆசிரியர் உட் பட 9 ஆசிரியர்கள் இசை கற்று கொடுக்கின்றனர். வயலின் ஆசிரியர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.பாட்டு, பரதநாட்டியம் பயிற்சிகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சியும் மற்ற கலைகளுக்கு எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. மூன்று ஆண்டுகள் நடக்கும் இசை பயிற்சி முடிவில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். இங்கு பயிற்சி பெற்றவர் கள் வெளிநாடுகள் உள் ளிட்ட பல இடங்களில் கச்சேரி நடத்தி பிரபலமாகியுள்ளனர். கடலூர் இசை பள்ளியில் தற்போது 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரு மாணவர் ஆண் டிற்கு 150 ரூபாய் பயிற்சி கட்டணமாகவும், தேர் வின் போது 200 ரூபாய் கட் டணமாக செலுத்தினாலே போதுமானது. மேலும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், 10 ஆஸ்டல், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட் டுள்ளது.அதே சமயத்தில் கிராமியக் கலைகளில் தெருக் கூத்து, பம்பை, உடுக்கை, கை சிலம்பு, கரகாட்டம், வில்லுபாட்டு, தாரை-தப்பட்டை, வீதி நாடகங்கள், நையாண்டி, ராஜ கொம்பு உள்ளிட்ட கலைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 8,000க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் உள்ளனர். தமிழகத்தில் நடக்கும் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்துவதில் கடலூர் மாவட்ட கலைஞர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். அதே போல் தமிழகத்தில் நடக்கும் அரசு விழாக்களில் கடலூர் மாவட்ட கிராமிய கலைஞர்கள்தான் அதிகளவில் அழைக்கப்படுகின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த கர்நாடக கவிஞர் சிலை திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை வரவேற்க ராஜ கொம்பு கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் இருந் துதான் அழைக்கப் பட்டிருந்தனர்.ஆனால், இவ்வளவு சிறப்பு மிக்க கிராமிய கலைகளுக்கென்று பயிற்சி அளிக்க கடலூர் அரசு இசை பள்ளியில் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள இசை பள்ளிகளில்தான் அதிகளவு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியின் போது பாதியிலேயே நிற்கும் சூழல் ஏற்படுவதால்  அவர்களது எதிர்காலம் பாதிக் கப்படுகிறது. கடலூர் அரசு இசை பள்ளியில் பயிற்சி பெற வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சில மாணவர் களால் குடும்பச் சூழல், வறுமை உள்ளிட்ட பொரு ளாதாரச் சூழல் காரணங் களால் மூன்று ஆண் டுகள் வரை தொடர்ந்து பயிற்சி பெற இயலாமல் பாதியிலேயே நின்று விடும் சூழலும்  ஏற்படுகிறது.கிராமிய கலைகளில் சிறந்து விளங்குவது கடலூர் மாவட்டம் என்பதால் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கடலூர் அரசு இசை பள்ளியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி கிராமிய கலைகளுக்கென்று தனி ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்வதுடன், இங்கு பயில வரும் மாணவர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகளையும் ஏற் படுத்தி கொடுத்தால் அவர் களின் எதிர்காலம் சிறப் பாக அமையும்.
629
2010-04-26T07:17:00+05:30
தமிழகம்
பண்ருட்டியில் சிறுவர் பூங்கா பராமரிப்பன்றி பாழாகும் அவலம்
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி  சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.பண்ருட்டி நகராட்சி 26வது வார்டு பஞ்சமுக  ஆஞ்சநேயர் கோவில் முன் சிறுவர் விளையாட்டு திடல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களாக  நகராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. இதனால் பேரிங் ராட்டினம், ஊஞ்சல், சறுக்கு மரம், பேலன்ஸ் வெயிட் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் வீணாகியது. விளையாட்டுத் திடல் தடுப்புக் கட்டைகள், இரும்பு தடுப்பு வேலிகள், அழகு மின் விளக்குகள் ஆகியவற்றை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாலை நேரங்களில் சமூகவிரோதிகள் குடிபோதையில் சிமென்ட் கட்டைகளில் உட்கார்ந்து பள்ளி மாணவிகளை "ஈவ் டீசிங்' செய்வது தொடர்கிறது. விளையாட்டு திடல், பூங்காவை  சீரமைக்காததால் கோடை விடுமுறையில் குதூகலிக்கும் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விளையாட்டு திடல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
630
2010-04-26T07:17:00+05:30
தமிழகம்
வளர் இளம்பருவ திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் : நேரு யுவகேந்திரா வளர் இளம் பருவ  திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.நேரு யுவகேந்திரா கடலூர் மாவட்ட  அலுவலகத்திற்கு வளர் இளம் பருவத்தினர் நலம் மற்றும் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் புவனகிரி மற்றும் நல் லூர் ஒன்றியங்களில்  திட்ட பணிக்கு தொண்டர் கள்  நியமிக்க  உள்ளனர். இந்த  பணிக்கு 30 வயதுக்குட்பட்ட  பட்டப் படிப்பு முடித்த ஆண் கள் மற்றும் பெண்களிடமிருந்து  விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.அந்தபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு  செய்யப்படுவர்களுக்கு   மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை  வழங்கப்படும். விருப்பம்  உள்ளவர்கள்  தக்க சான்றுகளுடன் பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப் பங்களை  ஏப்ரல் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரு யுவகேந்திரா, 34, ராமதாஸ் தெரு, புதுப் பாளையம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
631
2010-04-26T07:18:00+05:30
தமிழகம்
முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடலூர் : கடலூர் மஞ்சக்குப்பம் சேட் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், கும்ப அலங்காரம் நடந்தன. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண் ணியா வாகனம், இரண்டாம் கால ஹோமங்கள், ரஷாபந்தனம், நாடி சந்தனம், கடம் புறப்பாடு நடந்தது. காலை 10.10 மணிக்கு  முத்து மாரியம்மன், விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
632
2010-04-26T07:19:00+05:30
தமிழகம்
கும்பாபிஷேகம்
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை முத்து மாரியம் மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு முகப் பில் உள்ள முத்து மாரியம்மன்,  விநாயகர், பாலமுருகன், துர்கை அம்மன் கோவில் கும் பாபிஷேகம் இன்று (26ம் தேதி) நடக்கிறது.  23ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை வினாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம், அக்னிசங்கிரஹணம், முதல் கால பூஜை, பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால பூஜை ஹோமம் நடந் தது.  நேற்று காலை 9 மணிக்கு விசேஷ சாந்தி, 2வது கால பூஜை, யாகசாலை பூஜையும், மாலை 6மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் 3ம் கால பூஜைகள், பூர்ணாகுதி ஹோமம் ஆகியவை நடந்தது. இன்று (26ம் தேதி) திங்கட்கிழமை காலை 6 மணிக்கு 4வது கால பூஜையும் தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக் கிறது.
633
2010-04-26T07:24:00+05:30
தமிழகம்
ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம்
கடலூர் : ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு 9.50 மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது. மயிலாடுதுறையில் 5.30 மணிக்கு புறப்படும் எண்.814 பாசஞ்சர் ரயில் விழுப்புரத்திற்கு 9.15க்கு சென்று சேரும்.இந்த ரயில் இன்ஜின் பழுதானதால், மயிலாடுதுறையில் காலை புறப்படவில்லை. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று சேர்ந்த ரயில் எண்.813  இன்ஜின் மாற்றப்பட்டு நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதனால், கடலூருக்கு 7.40 மணிக்கு வர வேண்டிய பாசஞ்சர் ரயில் 12 மணிக்கு வந்தது.
634
2010-04-26T07:25:00+05:30
தமிழகம்
ஏ.இ.ஓ., அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை! :விக்கிரவாண்டி பகுதி ஆசிரியர்கள் அவதி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத் தில் பணியாளர்கள் இல்லாத தால் ஆசிரியர் பிரச்னை தீர்க்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி வட்டார தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தின் கீழ் 57 துவக்கப் பள்ளிகள், 21 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 4 மேல்நிலைப் பள்ளிகளும் செயல் படுகின்றன. துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஆகிய 78 பள்ளிகள் இந்த அலுவலகத்தின் முழு செயல்பாட்டில் இயங்கி வருகிறது. வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 328 ஆசிரியர்களில் தற்போது 310 ஆசிரியர்களுக்கு, சம்பளம், பதவிஉயர்வு, சரண்டர், ஓய்வூதியம், பணி பதிவு (சர்வீஸ் ரெக்கார்டு) பராமரிப்பு பணிகள்  இந்த அலுவலகம் மூலம் நடைபெற வேண் டும். அலுவலகத்தில்  தொடக்கக் கல்வி, கூடுதல் தொடக்க கல்வி என இரண்டு அதிகாரிகள் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் என மூன்று பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தேவையான மூன்று  உதவியாளர்கள் பணியிடம் கடந்த 2007ம் ஆண்டிலிருந்தும், ஒரு பதிவறை எழுத்தர் பணியிடம் 2009 ம் ஆண்டிலிருந்தும், தட்டச்சர் பணியிடம் 2007ம் ஆண்டிலிருந்தும், இரண்டு அலுவலக உதவியாளர்கள் பணியிடம் 2008-09ம் ஆண்டிலிருந்தும், மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்தப் பணியில் யாரும் இல்லாததால் தினமும் அலுவலகத்தை திறந்து கூட்டி மீண்டும் மாலையில் அலுவலகத்தை பூட்டி செல்வது உள்ளிட்டவற்றை கண் காணிப்பாளர் மட்டுமே செய்து வருவதாக அலுவலகத்திற்கு செல் லும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். அலுவலக பணியிடத்தில் யாரும் இல்லாததால் ஆசிரியர் பிரச்னைகள் ஏதும் உடனடியாக தீர்க்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒரு பிரச் னையை தீர்க்க குறைந்த பட்சம் 7 மாத காலம் ஏற்படுவதாக  ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். ஒன்றியத்தின் நீண்ட தூர இடமான முட்டத்தூர் , செ.புதூர் பகுதியிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள் தங்களது பிரச்னைகளை தீர்க்க அலுவலகத்திற்கு நடையாய் நடந்து அலைய வேண்டியுள்ளது. இப்பிரச்னையை தீர்க்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாள் பிரச்னை: நடவடிக்கை அவசியம்  : õலி பணியிடம் நிரப்பாததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் நடராஜன் கூறியதாவது: விக்கிரவாண்டி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஏ.இ.ஓ., மற்றும் கண்காணிப்பாளர் பணியிடம் தவிர அனைத்து பணியிடங்களும் காலியாக உள்ளதால் ஆசிரியர்களின் குறைகள் ஏதும் தீர்க்க முடியவில்லை. ஆசிரியர்கள் அலுவலகத் திற்கு தேவையின்றி வந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.  காலி பணியிடங்களை நிரப்பிட அரசு உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என நடராஜன் கூறினார்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் சரவணன் நிருபரிடம் கூறியதாவது: அலுவலகத்தில் எந்த பணியும் நடைபெறுவதில்லை. வெளியூரில் பணியாற்றும் ஆசிரியர்கள் 4 மணிக்குமேல் அலுவலகத்திற்கு செல்லும்போது, அவர்களின் குறைகளை கேட்டறிய அலுவலர்கள் யாரும் இல்லை. கண்காணிப்பாளர் ஒருவர் மட்டுமே அனைத்து பணிகளை செய்வதால் கால தாமதம் ஏற்படுகிறது. குறைகளை போக்க  காலி பணியிடங்களை நிரப் பிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணன் கூறினார்.
635
2010-04-26T07:25:00+05:30
தமிழகம்
கூத்தாண்டவர் கோவிலில் 28ம் தேதி தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில், பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும் விழாவையொட்டி, அரவாணிகள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.கடந்த 13ம் தேதி சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது. முக்கிய விழாவான சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நாளை இரவு நடக்கிறது.  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அரவாணிகள், தங்களை மணப்பெண்ணாக அலங்கரித்து கொண்டு, பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப் பாடி மகிழ்வர்.நாளை மறுநாள் (28ம் தேதி) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தின் போது, விவசாயிகள் வேண்டுதலின் பேரில் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை கூத்தாண்டவர் மீது வீசி, சூடம் ஏற்றி வழிபடுவர். அரவாணிகள் சூடம் ஏற்றி கும்மியடித்து பாட்டுப் பாடி மகிழ்வர். தேர் அழுகளம் புறப்பட்டவுடன், அரவாணிகள் ஒப்பாரி வைத்து அழுது, தேரை பின்தொடர்ந்து செல்வர்.பகல் 1.30 மணிக்கு அழுகளம் எனப்படும் பந்தலடிக்கு தேர் சென்றடையும் போது, அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, அரவாணிகள் தாங்கள் அணிந்துள்ள மங்களப் பொருட்களை உடைத்து,  தாலியை அறுத்து விதவைக் கோலம் பூண்டு, சோகத்துடன் ஊர் திரும்புவர்.தொடர்ந்து மாலையில் உரிமை சோறு படையல் நடக்கிறது. இச்சோற்றை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்புவதால், மக்கள் முண்டியடித்து வாங்குவர்.
636
2010-04-26T07:25:00+05:30
தமிழகம்
டயர் மாற்ற நின்றிருந்த பஸ் மீது லாரி மோதல் அதிகாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாப பலி
திண்டிவனம் : திண்டிவனம் அருகே பஞ்சரான முன்பக்க டயரை மாற்றுவதற்காக சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில், பயணிகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர்; மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.சென்னையில் இருந்து சர்மா டிராவல்ஸ் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமம் அருகே வந்த போது, பஸ்சின் முன்புற டயர் பஞ்சரானது. நேற்று அதிகாலை 2 மணியளவில், தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள ஓட்டல் ஒன்றின் முன் சாலையோரம் பஸ்சை நிறுத்தி, டயர் மாற்றும் பணி நடந்தது.சென்னையில் இருந்து உலோக பைப்புகளை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று திடீரென பஸ்சின் பின்புறம் மோதியது. இவ்விபத்தில், நின்றிருந்த பஸ் திடீரென முன்புறம் ஓடியது. முன்புற டயர் மாற்றிக் கொண்டிருந்த பஸ் டிரைவர் துறையூர் தாலுகா மங்கப்பட்டி பாலு(40), பஸ்சின் எதிர்புறம் காற்றோட்டத்திற்காக நின்றிருந்த பயணிகள் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் முருகன்(35), காரைக்குடி தாலுகா சவரம்பட்டி சுப்ரமணி(23) ஆகிய மூவரும் அதே இடத்தில் இறந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  முதலுதவி சிகிச்சைக்கு பின், ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  தாம்பரம் சோமசுந்தரம் மகன் சங்கிலிராஜன், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உளுந்தூர்பேட்டை தாலுகா கொளத்தூர் தாண்டவராயன் மகன் தங்கதுரை(23), புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர், சேலம் கெங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார்(24), புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் புத்தூர் அடுத்த உக்கூர் சுரேஷ்(38), சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். துவரங்குறிச்சி அடுத்த தவசிப்பட்டி பழனிசாமி(42), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அடுத்த சிலையாவூரணி சுரேஷ்குமார்(28), சென்னை மடிப்பாக்கம் சுரேஷ்(38) ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்தில் காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை எஸ்.பி., பகலவன், டி.ஆர்.ஓ., வெங்கடாசலம், சப்-கலெக்டர் மஞ்சுளா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், சலவாதி கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
637
2010-04-26T07:28:00+05:30
தமிழகம்
போலி கையெழுத்திட்டு வங்கி பணம் கையாடல்?
மடத்துக்குளம் : மடத்துக்குளம் நஞ்சாயப்பிள்ளைபுதூரை சேர்ந்தவர் போஸ்(50);  இவர் இங்குள்ள கனரா வங்கியில் தனிநபர் சேமிப்பு கணக்கு தொடங்கி பல ஆண்டுகளாக வரவு- செலவு செய்துள்ளார்.  2008ம் ஆண்டு  தனது கணக்கில் 37 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பு வைத்துள்ளார்.இந்நிலையில், அவர் எந்த தொகையும் தனது கணக்கில் இருந்து எடுக்கவில்லை.  2009 ல் நவம்பரில் தனது பணத்தேவைக்காக வங்கியை அனுகி தனது கணக்கில் இருக்கும் பணத்தில் 30 ஆயிரத்தை எடுக்க முயன்றபோது, கணக்கில் ஏழாயிரம் மட்டும்  இருப்பதாக வங்கி ஊழியர்கள் கூறவே அதிர்ச்சி அடைந்தார்."வங்கி ஊழியர்கள் நீங்கள் தான் மூன்று மாதத்துக்கு முன் பணம் எடுத்துள்ளீர்கள்' எனக்கூறிவிட்டனர். இதனால் ஆவேசமடைந்த போஸ் ; தன் பணம் திருடப்பட்டிருப்பதாகவும், அதற்கு வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர் எனக்கூறி மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் இது குறித்து போலீசார்  வழக்குபதிவு செய்துள்ளார். வங்கி ஊழியர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
638
2010-04-26T07:28:00+05:30
தமிழகம்
பொள்ளாச்சி, உடுமலைப்பகுதியில் சூறாவளி! வேரோடு மரங்கள் ரோட்டில் சாய்ந்தன
உடுமலை : உடுமலை அருகே பலத்த சூறாவளிக்காற்று வீசியதில், மரங்கள் வேரோடு சாய்ந்து, கிராம இணைப்பு ரோடுகளில் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. தேவனூர்புதூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. மாலை 6.00 மணிக்கு துவங்கிய சூறைக்காற்று அரைமணி நேரத்திற்கும் அதிகமாக வீசியது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அப்பகுதியில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தது.புங்கமுத்தூர் கிராமத்திலிருந்து செல்லப்பம்பாளையம் செல்லும் ரோட்டில் பல ஆண்டுகள் வளர்ந்திருந்த புங்கை மரம் பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது. அப்போது, அருகிலிருந்த மின்கம்பிகள் மீது மரத்தின் கிளைகள் விழுந்தது.  உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மின் விபத்து தவிர்க்கப்பட்டது.இதனால், இரவு முழுவதும் கிராமம் இருளில் மூழ்கியது. ரோட்டில் விழுந்த மரத்தை அகற்ற முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிராம இணைப்பு ரோட்டில் செல்லும் வாகனங்கள் பி.ஏ.பி., வாய்க்கால் கரை வழித்தடத்தில் சென்றன.  நேற்று காலை ஊராட்சி பணியாளர்கள் ரோட்டில் சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். செல்லப்பம்பாளையத்திலிருந்து அண்ணாநகர் வழியாக தேவனூர்புதூர் செல்லும் ரோட்டில் பல பனை மரங்களும், வேப்பமரமும் வேரோடுசாய்ந்தது. மரக்கிளைகள் முழுவதும் ரோட்டில் விழுந்ததால் இரவு முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம் கிராமங்களில் தோட்டம் மற்றும் குடியிருப்பு குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டது. சாகுபடி பாதிப்பு: தேவனூர்புதூர், புங்கமுத்தூர், செல்லப்பம்பாளையம் பகுதியில் கிணற்றுப்பாசனத்திற்கு வெள்ளைசோளம், பருத்தி அதிகளவு பயிரிடப்பட்டிருந்தது. சூறைக்காற்றால் காய்களுடன் இருந்த பருத்தி செடிகள் முறிந்து விழுந்தது. சோளப்பயிர்கள் தண்டோடு உடைந்து விளைநிலத்தில் சாய்ந்தது. அரைமணி நேரத்திற்கும் அதிகமாக வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் செல்லப்பம்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தென்னை எரிந்தது: நேற்று முன்தினம் மாலை 5.00 மணி முதல் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டியில் உள்ள தோட்டத்தில், மின்னல் தாக்கியத்தில இரண்டு தென்னை மரங்களில் தீ பிடித்தது.  உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் மற்ற மரங்களில் தீ பரவாமல் பலத்த சேதம் தவிர்க்கப்பட்டது.தேர்நிறுத்தம், திருவள்ளுவர் திடல் உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் சாக்கடையில் நீர் நிறைந்து ரோட்டில் வெள்ளம் சென்றது. நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு(அளவு மில்லி மீட்டரில்):  பரம்பிக்குளம்- 12, தூணக்கடவு- 8, பெருவாரிப்பள்ளம்- 11, மேல்நீராறு- 1, கீழ்நீராறு- 8, வால்பாறை- 8, பொள்ளாச்சி- 18, வேட்டைக்காரன்புதூர்- 7  என்ற அளவில் மழை பெய்தது. கிணத்துக்கடவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.00 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், கோடை வெயிலின் வெப்பம் தணிந்துள்ளது. மழைக்காக காத்திருந்த மானாவாரி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.விளைநிலங்களை உழும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:சித்திரை பட்டத்திற்காக மானாவாரி பயிர்களை சாகுபடி செய்ய எப்போது மழை பெய்யும் என நீண்ட நாட்களாக காத்திருந்தோம். தற்போது பெய்த மழையால் பூமியில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொறியல் தட்டையை சாகுபடி செய்ய, மானாவாரி விளைநிலங்களை உழும்பணி தீவிரமாக நடக்கிறது என்றனர்.
639
2010-04-26T07:30:00+05:30
தமிழகம்
பி.ஏ.பி., பிரதான கால்வாயில் தண்ணீர் திருடிய 4 பேர் சிக்கினர்
உடுமலை : பி.ஏ.பி., பிரதான கால்வாயில் தண்ணீர் திருடிய நான்கு விவசாயிகளை பொதுப்பணித்துறையினர் பிடித்து தளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீட்டால் வழக்கு பதிவு செய்யாமல் தண்ணீர் திருடியவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தில் நான்காம் சுற்றுக்கு ஏப்., 18 ம் தேதி திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 94,446 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நான்காம் சுற்றில் பிரதான மற்றும் கிளை கால்வாயில் தண்ணீர் திருட்டு நடக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், மண்டல பாசனம் துவங்கியதிலிருந்தே   போதுமான தண்ணீர் கிடைக்காமல் பயிர்களை காப்பற்ற கடைமடை பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில்,  இரவு நேரங்களில் பி.ஏ.பி., பிரதான கால்வாயின் இருகரைகளை ஒட்டி குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடக்கிறது. கரைகளிலுள்ள செடிகளின் மறைவில் குழாய்கள் அமைத்து அருகிலுள்ள தோட்டங்களுக்கு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.இத்தகவல் தெரிந்ததும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளை துவக்கியுள்ளனர். நேற்று முன்தினம் பெரியபாப்பனூத்து பகுதியில் பெரியபாப்பானுத்து,  உடுமலை ஆனைமலை ரோடு, பல்லடம் கிளை வாய்க்கால் ஆகிய பகுதிகளில் தண்ணீர் திருட்டிற்காக குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் தொடர்புடைய நான்கு பேரை அதிகாரிகள் பிடித்து தளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இத்தகவல் தெரிந்ததும் நான்கு பேருக்கு ஆதரவாக  தளி பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் களத்தில் இறங்கி, அவர்களை போலீஸ்  ஸ்டேஷனிலிருந்து மீட்டுள்ளார். முதல் சம்பவமாக இருப்பதால் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
640
2010-04-26T07:30:00+05:30
தமிழகம்
மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தடை வருமா? சாலை மறியலாக மாறுவதால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் : பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடக்கும் சாலை மறியலால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படுகிறது;  பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே, ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் இடத்தை வேறிடத்துக்கு மாற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோரிக்கை அல்லது கண்டனங் களை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் ஆர்ப் பாட்டம், சாலை மறியல் போன்ற வற்றில் ஈடுபடுகின்றன. பொதுமக்கள் மற்றும் அரசின் கவனத்தை ஈர்ப்பது தான் இவற்றின் நோக்கம் என்றாலும், பெரும்பாலான சமயங்களில் இடையூறாகவே இப்போராட்டங்கள் அமைகின்றன. திருப்பூரில் குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் என இரண்டு இடங்களில் மட்டுமே பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரத போராட்டங்களும் நடக்கின்றன.கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றாலும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. அரசு ஊழியர் சங்கங்கள் மட்டும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை கலெக்டர் அலுவலகம் முன் நடத்துகின்றனர். சில நிமிடங்களில் இவை முடிந்து விடுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. குமரன் சிலை அருகே அதிக பரப்புள்ள இடம் இருப்பதாலும், மாற்று வழித்தடத்துக்கு ரோடு வசதி இருப்பதாலும், சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டங் களால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதில்லை.ஆனால், மாநகராட்சி அலுவலகம் முன் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்கு கின்றன. ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் போலீசாரிடம் அனுமதி பெறப்படுகிறது. ஆனால், மாநக ராட்சி அலுவலகத்தில் இருந்து பார்க் ரோடு செல்லும் ரோடு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, சாலை மறியலாக மாறி விடுகிறது. ஆர்ப் பாட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ரோட்டில் போக்குவரத்து முழுமை யாக துண்டிக்கப்படுகிறது. மங்கலம் ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.மாநகராட்சி அலுவலகத்துக்கு இடதுபுறமுள்ள அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்குச் செல்ல முடியாது. பார்க் ரோடு ஒரு வழிப்பாதை என்பதால், நடராஜ் தியேட்டரில் இருந்து, பார்க் ரோடு வழியாகவும் எதிர்ப்புறமாக வாகனத்தை ஓட்ட முடியாது.டவுன்ஹால் அருகே சென்று குமரன் ரோடு வழியாக திரும்பி வந் தாலும், மாநகராட்சி அலுவலகத்தின் எதிர்ப்புறமாக காமராஜ் ரோட்டில் மட்டும் வாகனத்தை இயக்க முடி யும். அங்கு வாகனங்களை எந்த இடத் திலும் நிறுத்த முடியாது; பார்க்கிங் வசதி இல்லை. இதனால், பொதுமக் கள் கடுமையாக அலைக்கழிக்கப்படு கின்றனர். எனவே, மாநகராட்சி அலுவல கம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.கடந்த 23ம்தேதி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த போது, பார்க் ரோடு வழியாக சில வாகனங் கள், வளர்மதி வளாகத்துக்கு செல்ல முயன்றன. அங்கு நின்றிருந்த டிராபிக் வார்டன்கள் அனுமதி மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிராபிக் வார்டன்கள், கடிவாளம் இட்ட குதிரையைப் போல் சிந்தித்தனரே அன்றி, சூழ் நிலைக்கு ஏற்றவாறு செயல்பட வில்லை. ஒரு வழிப்பாதை என்ற போதும், ஒரு புறம் சாலை மறியலாக மாறி பாதை அடைக்கப்பட்டு விட்டதால், வாகனங்கள் எதிரே வர வாய்ப்பு இல்லை.எனவே, இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதித்து இருக்கலாம். ஆர்ப்பாட்டம் முடிந்த பின், வழக்கம் போல், செயல்பட்டு இருக்கலாம். ஆனால், டிராபிக் வார்டன்கள் அந்த நிலையில் யோசிக்காததால், வரும் வாகன ஓட்டிகள் போலீசாரை சாடி னர். இதைத்தவிர்க்க சூழ்நிலைக்கு தக்க முடிவெடுக்கும் திறனுள்ள டிராபிக் போலீசாரை, போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இடங்களில் பணியமர்த்த வேண்டும்.அவசியம் தடை தேவை: மாநக ராட்சி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த கட்டாயமாக தடை விதிக்க வேண்டும். மக்களின் கவனத்தை ஈர்க்கவே மக்கள் கூடும் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, என்ற வாதத்தை அரசியல் கட்சியினர் முன்வைக்கலாம்.அதேசமயம் மாநகராட்சி அலுவல கத்தின் வலதுபுறம் மங்கலம் ரோட் டில் அதிக இடவசதி உள்ளது. சில உண்ணாவிரதங்கள் கூட, அந்த இடத்தில் நடத்தப்பட்டன. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால், பக்க வாட்டில் நீண்ட தூரத்துக்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க முடியும்; போக்குவரத்தும் துண்டிக்கப் படாது. பொதுமக்கள் இடையூறு இன்றி செல்ல முடியும்.மக்களுக்காகவே ஆர்ப்பாட்டம் நடத்துவதாக, அரசியல் கட்சியினர் தெரிவிப்பதால், இடையூறு இன்றி நடத்தவும் முன்வர வேண்டும். திருப்பூரில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம்.
641
2010-04-26T07:30:00+05:30
தமிழகம்
ரத்த தான முகாம்
திருப்பூர் : முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 11வது ரத்த தான முகாம், முயற்சி அலுவலகத்தில் நடந்தது; அதன்  தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார்.முகாமை, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் சிவபாலன் துவக்கி வைத் தார். 60 நபர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டது.  தாராபுரம் அரசு மருத்துவமனை அலுவலர் கள் மங்கையற்கரசி மற்றும் குழுவினர் தலைமையில் ரத்த சேகரிப்பு பணி நடந்தது. கடந்த மாதம் ரத்த தான செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்பட்டது. முயற்சி அமைப்பு நிர்வாகிகள் ஜாகிர் உசேன், முரளி குமார், பாலசுப்ர மணியன், பிரபு, ராஜ மாணிக்கம், தமிழ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
642
2010-04-26T07:31:00+05:30
தமிழகம்
தேரில் எழுந்தருளினார் அவிநாசிலிங்கேஸ்வரர்
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரில் நேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது; முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு - 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி, கடந்த 23ம் தேதி இரவு 7.00 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 2.30 மணிக்கு நிறைவடைந்தது. திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.ரதோற்சவ தினமான நேற்று அதிகாலை 5.00 மணிக்கு விநாயகர், சோமாஸ்கந்தர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கரிவரதராஜ பெருமாள் தேர்களுக்கு எழுந்தருளினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாத பக்தர்கள் நேற்று காலை முதல் மாலை வரை தேர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டன. சுகாதாரத்துறை சார்பில், கோவில் வளாகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது; திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையம் சார்பில், தீயணைப்பு வாகனம் கோவில் முன் நிறுத்தப்பட்டிருந்தது.தேரோட்டத்துக்காக, பெரிய தேரின் இருபுறத்திலும் 100 அடி நீளம் கொண்ட வடக்கயிறு இணைக்கப்பட்டது. திருச்சி "பெல்' நிறுவனத்தில் இருந்து வந்த பொறியாளர்கள், சக்கரங்களின் "ஹைட்ராலிக்' பிரேக் சிஸ்டத்தை பொருத்தினர். டி.எஸ்.பி., காமராஜ் தலைமையில் 500 போலீசார், தேரோட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
644
2010-04-26T07:32:00+05:30
தமிழகம்
ஊதிய கமிஷன் குறைபாடு நீக்க நீதித்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
கோவை : ஆறாவது ஊதிய கமிஷன் குறைபாட்டை நீக்க வலியுறுத்தி, கோவையில் நீதித்றை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இதில், பல்வேறு குறைபாடு இருப்பதாக அரசு ஊழியர்கள் கூறினர். அதையடுத்து, ஊதிய கமிஷனில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இக்கமிஷன் தயாரித்த அறிக்கையை வெளியிடக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் கோவை ஒருங்கிணைந்த கோர்ட் முன், கோவை மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மதன், தெற்கு வட்ட கிளைத்தலைவர் அழகிரிசாமி, செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், ஒரு நபர் கமிஷன் அறிக்கையை வெளியிட வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
655
2010-04-26T23:06:00+05:30
தமிழகம்
வேலை நிறுத்தத்தை முறியடிக்க ஆளுங்கட்சி தீவிரம்
எதிர்கட்சிகளால் இன்று நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தை முறியடிக்க, ஆளுங்கட்சி தீவிரம் காட்டியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்ததன் மூலம், ஆளுங்கட்சியிடம் இணக்கம் காட்டும் முயற்சியில் பா.ம.க., இறங்கியுள்ளது. முழு அடைப்பு போராட்டம் நடத்த, கோர்ட் தடை விதித்ததில் இருந்து, தமிழகத்தில், "பந்த்' போராட்டங்கள் நடத்தப்படுவது வெகுவாக குறைந்தது. தி.மு.க., தரப்பிலோ, ஆளும் கட்சியாக இருக்கும் போது நடத்தப்படும் போராட்டங்கள் முழுமையாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெயரளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும்.ஆனால், அ.தி.மு.க., தரப்பிலோ முழு அடைப்பு, கடையடைப்பு போன்ற போராட்டங்கள் அத்திப்பூத்தாற் போல் நடத்தப்படுகிறது. இன்று அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் சார்பில், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.இதுவரை ஒரே கூட்டணியில் இருந்தாலும், தனித்து செயல்பட்டு வந்த அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள், இந்த கடையடைப்பு போராட்டத்தின் மூலம் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்படத் துவங்கியுள்ளன. கடையடைப்பு போராட்டத்தையும், அதற்கு ஆதரவாக அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் தொழிற்சங்கங்களின் சார்பில், பஸ், ஆட்டோ போன்றவற்றை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தி வைத்து, தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை, திருவண்ணாமலைக்கு மட்டும் அங்கு நடைபெறும் சித்திரை திருவிழா, பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் விலக்கு அளித்துள்ளன. அதே சமயம், தமிழகத்தின் மற்ற பகுதிகளில், "பந்த்' போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவும் அவை திட்டமிட்டுள்ளன. "பந்த்' வெற்றி பெற்றால், அது எதிர்க்கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு பெருகியுள்ளது என்பது போன்ற தோற்றத்தை காட்டும் என்பதால், போராட்டத்தை முறியடிக்க தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை திறந்து வைக்கவும், வணிக சங்கங்களை அதற்கு ஆதரவாக வளைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள தொழிற்சங்க பிரமுகர்கள் இன்று விடுமுறை எடுக்காமல், பஸ், ஆட்டோக்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவற்றை வழக்கம் போல் இயக்க வேண்டுமென ஆளுங்கட்சி உத்தரவு இட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளதன் மூலம் ஆளுங்கட்சிக்கு இணக்கமான நிலையை பா.ம.க., எடுத்துள்ளது. பென்னாகரம் தேர்தல் முடிவுக்கு பிறகு, ஆளுங்கட்சியுடன் நெருக்கம் காட்ட வாய்ப்பு தேடிவந்த பா.ம.க., இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர்-
656
2010-04-26T23:08:00+05:30
தமிழகம்
மதுரை, விருதுநகரில் கூட்டுக்குடிநீர் திட்டம்
சென்னை:மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில் நேற்று நடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து, அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் தொற்றுநோய் மருத்துவமனைக்கு 360 படுக்கைகளைக் கொண்ட புதிய கட்டடங்களைக் கட்டவும், வசதிகளை அதிகரிக்கவும் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் 16 கோடி ரூபாய், கேளிக்கை வரி வருவாய் இழப்பீடு ஈடுசெய் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து கோடி ரூபாயை சென்னை மாநகராட்சி ஏற்கும். இத்திட்டம், ஒரே ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.சென்னை மாநகராட்சிப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்த, 12.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இ-கவர்னன்ஸ் திட்டம், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.கோவில்பட்டி நகராட்சிக்கு 80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒரு குடிநீர்த் திட்டம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் செயல்படுத்த, விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. நிதியாதாரம் இறுதி செய்யப்பட்ட உடன், இத்திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி, நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 200 புதிய குடியிருப்புகள், 11.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேரூராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாக நிலை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னை கோயம்பேட்டில், கூடுதலாக ஒரு நாளைக்கு 120 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் செயல்படுத்தப்படும்.மதுரை மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், அவனியாபுரம் நகராட்சிகள், அ.வெள்ளாளப்பட்டி, பரவை, விளாங்குடி, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள், 1,430 குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 12 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 806 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் நிதி ஆதாரம் பெற்று எடுத்துக்கொள்ளப்படும். விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களைச் சேர்ந்த 1,457 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 572 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம், குறைந்தபட்சத் தேவைத் திட்ட நிதியாதாரத்துடன் செயல்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தரமான குடிநீர் வழங்க உருவாக்கப்பட்ட ஜல்மானி திட்டத்தின் கீழ், குடிநீர் சுத்திகரிப்புக் கலன்கள் 6,000 பள்ளிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்படும்.மத்திய அரசின் கிராமக் குடிநீர்த் திட்ட விதிமுறைகளின்படி 8,009 கிராமக் குடியிருப்புகளில் 554.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் குடிநீர் வசதி செய்து தரப்படும்.இவ்வாறு ஸ்டாலின் அறிவித்தார்.
657
2010-04-26T23:09:00+05:30
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு
சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வரியில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் சம்மதித்துள்ளதாக, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலுரை:கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் வரும் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் குடிசைப் பகுதிகளை, ஜாதி, மத இன வேறுபாடின்றி அகற்ற இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு உண்ண உணவு அளிக்க, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. உடுத்த உடைக்காக, இலவச வேட்டி, சேலையும், இருக்க இடத்துக்காக கலைஞர் வீட்டு வசதித் திட்டமும் நிறைவேற்றப்படுகிறது.குடிசை வீடுகளை கணக்கிடும் பணி வேகமாக நடந்து வருகிறது. இப்பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான பணியாளர்களை நியமிக்க, முதல்வரிடம் பேசி உத்தரவிடப்படும். தேவையான பணியாளர்கள் நிச்சயம் நியமிக்கப்படுவர். நகராட்சிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் 784.42 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவற்றின் நிதிநிலை சீரானதுடன், புதிய வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற முடிகிறது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் கண்டறியப்பட்டு, அவை வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன.இதனால், இவற்றுக்கு குடிநீர் வசதி, சாக்கடை வசதி மற்றும் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளன. இதன் மூலம், நகராட்சிகளுக்கு 106 கோடி ரூபாய் கூடுதல் வருவாய்க்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகரில் 39 திட்டங்களுக்கு 3,091 கோடி ரூபாயில் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மதுரையில் எட்டு பணிகள் 831 கோடி ரூபாய் செலவிலும், கோவையில் ஐந்து பணிகள் 826 கோடி ரூபாய் செலவிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவையில் இவற்றுக்கான உள்ளாட்சிகளின் பங்கு 248 கோடி ரூபாய்.மொத்தம் 5,526 கோடி ரூபாய் மதிப்பில் 52 பணிகள் இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை 232 கோடி ரூபாய் செலவில் ஏழு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன; 12 பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், குறித்த காலத்துக்கு முன்னரே நிறைவேற்றப்படும். ஊரக வளர்ச்சித் துறையில் தான் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டு, புதிதாக 18 ஆயிரத்து 632 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் 21 ஆயிரத்து 597 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.ஊரக வளர்ச்சித் துறையில் இதுவரை 87 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 83 நிறைவேற்றப்பட்டுள்ளன; செயல்பாட்டில் நான்கு பணிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் 298 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 191 நிறைவேற்றப்பட்டுள்ளன; 104 செயல்பாட்டில் உள்ளன; மூன்று திட்டங்கள் கைவிடப்பட்டன. வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் பற்றிய பட்டியல் தயாரிப்பதில், புதிய வழிமுறைகளை மத்திய அரசு வகுக்க உள்ளது. அதை பின்பற்றும் போது, நடைமுறை சிக்கல் மற்றும் குறைபாடுகள் சரி செய்யப்படும்.மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகள் விதிக்கும் தொழில் வரியை ரத்து செய்ய, கோரிக்கை வைக்கப்பட்டது. இது பற்றி முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டது. உடனே ரத்து செய்யும்படி அவர் தெரிவித்துள்ளார். விரைவில், இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும், "தமிழ் வாழ்க' என்ற பெயரில் "நியான்' விளக்குகள் வைக்கப்படும்.இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.
663
2010-04-26T23:17:00+05:30
தமிழகம்
குடிசைகள் கணக்கெடுப்பு:துணை முதல்வர் அறிவிப்பு
சென்னை:வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரம் குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து, அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:வீட்டு வசதி திட்டத் தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசைகளுக்கான கணக்கெடுப்பு, கடந்த மார்ச் 29ம் தேதி துவக்கப்பட்டு, விரைவாக நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி வரை, 14 லட்சத்து 25 ஆயிரம் குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஒரு லட்சத்து இரண்டாயிரம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக தமிழக அரசு, 268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும். புது வீட்டுக்கான தொகை, 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக இந்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும்.இந்த ஆண்டும் 50 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.ஏலகிரியில் 80 ஏக்கர் பரப்பளவில், தமிழகத்திலேயே மிகப் பெரிய தாவரவியல் பூங்கா, உலகத் தரத்துடன் 20 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் அறிவித்தார்.
665
2010-04-26T23:20:00+05:30
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பேச்சு:தமிழகத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது; தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. அதற்கெல்லாம் திறமை வாய்ந்த, தேர்ந்த அறிவாளிகள் இருக்கின்றனர். மயிலாடுதுறைக்கு வரும் போது கூட சென்னை ஏர்போர்ட்டிலிருந்து தாம்பரம் வந்து, அங்கிருந்து ரயில் மூலமாக போய் விடுவேன். பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா பேட்டி: ஐ.பி.எல்., கிரிக்கெட் சர்ச்சை குறித்து லோக்சபாவில் கூட்டுக் குழு நேர்மையான விசாரணை நடத்த வேண்டுமானால், மத்திய அமைச்சர்கள் சரத் பவாரும், பிரபுல் படேலும் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேட்டி: இளைஞர் காங்கிரசில் எவ்வித பிரச்னையும் கிடையாது. எங்களின் ஒரே தலைவர் ராகுல் மட்டும் தான். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கிராமங்களில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்பது ராகுலின் கனவு. .மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் பேச்சு: தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில், எல்லா துறைகளும் சிறப்பாக முன்னேற்றமடைந்து வருகின்றன. குறிப்பாக, தொழிற்துறையை குறிப்பிடலாம். தொழிலதிபர்கள் தமிழகத்தில் வந்து தொழில் துவங்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் பேச்சு: சமூகத்தில் பின்தங்கிய மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் மற்றும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கவே, சட்ட உதவியாளர் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேச்சு: இது தேர்தல் நேரம் இல்லை என்பதால் கூட்டணி குறித்து இப்போது கூற முடியாது. பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் பென்னாகரம் இடைத் தேர்தல், "பார்முலா'வின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்வோம். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் பேச்சு: நான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப் பேற்ற குறுகிய காலத்தில், இந்திய தலைவர்களைச் சந் தித்து பேசும் வாய்ப்பு கிடைத் துள்ளது. இது, எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் நான் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன்.
668
2010-04-26T23:25:00+05:30
இந்தியா
மம்தா போன் ஒட்டுக் கேட்பு:திரிணமுல் புகார்
கோல்கட்டா:ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முகுல் ராய் கூறியதாவது:எங்கள் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான மம்தா பானர்ஜியின் டெலிபோன் உரையாடல்கள், மேற்கு வங்க மாநில அரசால் ஒட்டு கேட்கப்படுகிறது. மம்தாவின் டெலிபோன் மற்றும் மொபைல் போன் என, இரண்டுமே ஒட்டு கேட்கப்படுகின்றன. இதற்கான பொறுப்பு, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தரப்பட்டுள்ளதுஇது மட்டுமல்லாமல், எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுபேந்து அதிகாரி உள்ளிட்ட மேலும் சில தலைவர்களின் டெலிபோன் பேச்சும் ஒட்டு கேட்கப்படுகிறது. இதுகுறித்து, ஏற்கனவே மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.இவ்வாறு முகுல் ராய் கூறினார்.
669
2010-04-26T23:27:00+05:30
இந்தியா
அரசுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம்:கட்சிகளுக்குள் திடீர் குழப்பம்
மத்திய அரசுக்கு எதிராக பார்லிமென்டில் இன்று வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதால், வெட்டுத் தீர்மானத்தை இன்று எடுத்துக் கொள்ளும்படி சபாநாயகரிடம் வலியுறுத்தப்படுமா அல்லது 29ம் தேதி எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தப்படுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. விலைவாசி பிரச்னையை காரணம் காட்டி, மத்திய அரசுக்கு எதிராக பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வர அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன. பா.ஜ., உட்பட 15க்கும் மேற்பட்ட கட்சிகள் இதுகுறித்து சபாநாயகரிடம் வெட்டுத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.பார்லிமென்டில் இன்று, நீர்வளத்துறை சம்பந்தமான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பொதுவாக முன்பெல்லாம் ஒவ்வொரு துறையின் கீழும், மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று அவற்றிற்கு ஒப்புதல் பெறப்படும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒரு சில முக்கியமான துறைகளின் மானியக் கோரிக்கைகள் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.பிற துறைகளின் மானியக் கோரிக்கைகள் எல்லாமே நிறைவேற்றப்பட்டு விட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கும் பார்லிமென்ட் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு, அங்கேயே பல விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு விடுவதால் இது போன்ற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக கில்லட்டின் எனப்படும் ஒட்டுமொத்த நிறைவாக இன்று கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதனால், வெட்டுத் தீர்மானத்தை இன்று கொண்டு வருவது என, எதிர்க்கட்சிகள் தீர்மானித்து இருந்தன.இருப்பினும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அளித்திருக்கும் வெட்டுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாமென முலாயம், லாலு போன்ற தலைவர்கள் கருதுகின்றனர். தே.ஜ., கூட்டணி கட்சிகள் தங்கள் எம்.பி.,க்களுக்கு கொறடா உத்தரவு நேற்றே பிறப்பித்து விட்டாலும் கூட, இவர்களது வெட்டுத் தீர்மானத்தை ஆதரிக்க மூன்றாவது அணி கட்சிகள் தயங்குகின்றன. வெட்டுத் தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட கட்சியிடம் வெட்டுத் தீர்மானத்தை வலியுறுத்துகிறீர்களா என்று கடைசி கட்டமாக சபாநாயகர் கேட்பார். அதுபோன்று இன்று சபாநாயகர் கேட்டால், இன்றைக்கே வலியுறுத்தலாமா, வேண்டாமா என்பதே மூன்றாவது அணி கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள குழப்பம். இதற்கு இன்று நடைபெறவுள்ள பாரத் "பந்த்'தே காரணம்.வெட்டுத் தீர்மானத்தை இன்றே வலியுறுத்தினால், விலைவாசி உயர்வுக்காக நடத்தும் "பந்த்' பற்றிய செய்தி அமுங்கிவிடும் என இக்கட்சிகள் நினைக்கின்றன. எனவே, வரும் 29ம் தேதியன்று நிதி மசோதா கொண்டு வரப்படவுள்ள நேரத்தில், வெட்டுத் தீர்மானத்தை வலியுறுத்திக் கொள்ளலாம். இன்று "பந்த்' காரணமாக அரசுக்கு எதிராக ஒரு தோற்றத்தையும், 29ம் தேதி அன்று அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு தோற்றத்தையும் விலைவாசி பிரச்னையில் உருவாக்க முடியும் என்று மூன்றாவது அணி கட்சிகள் நினைக்கின்றன. இருப்பினும், இன்று காலை பார்லிமென்ட் துவங்கும் முன், மூன்றாவது அணி கட்சித் தலைவர்கள் கூடி இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், வெட்டுத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இன்று முடிவு செய்கிறது. பா.ஜ., மற்றும் இதர எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் வெட்டுத் தீர்மானத்தை, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்காது என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூன்று வரி கொறடா உத்தரவு:"பார்லிமென்டில் கொண்டு வரப்படும் வெட்டுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்; கட்சியின் 115 எம்.பி.,க்களும் தவறாமல் ஆஜராக வேண்டும்' என பாரதிய ஜனதா கட்சி, மூன்று வரியில் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ., கட்சியின் ராஜ்ய சபா துணைத் தலைவர் அலுவாலியா நேற்று கூறுகையில், ""தேசிய ஜனநாயக கூட்டணியின் சபைத் தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. அதில், வெட்டுத் தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது,'' என்றார். நிதி மசோதா நிறைவேறும்வீரப்ப மொய்லி நம்பிக்கை:""எதிர்க்கட்சிகள் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தாலும், பார்லிமென்டில் நிதி மசோதா நிறைவேறும் என, மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்,'' என சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:பல்வேறு பிரச்னைகளில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் என்பதால், எதிர்க்க வேண்டியது அவர்களின் கடமை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, இரு தரப்பினரும் பார்லிமென்ட் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளதால், இப்படி நடக்கிறது. லோக்சபாவில் எங்களுக்கு போதுமான பலம் இருப்பதால், நிதி மசோதா கட்டாயம் நிறைவேறும்.இவ்வாறு மொய்லி கூறினார். -நமது டில்லி நிருபர் -
671
2010-04-26T23:30:00+05:30
இந்தியா
டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம்: பார்லி இரு அவைகளும் முடங்கின
அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு மற்றும் ஐ.பி.எல்., ஊழல் சர்ச்சை ஆகியவற்றின் காரணமாக, பார்லிமென்டின் இரு அவைகளும் முற்றிலுமாக நேற்று முடங்கின. தொலைபேசி ஒட்டுக் கேட்பு குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் சமர்ப்பித்த அறிக்கை மற்றும் விளக்கத்தை, எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்தன. பிரதமர் மன்மோகன் சிங்கே வந்து இப்பிரச்னைக்கு விளக்கம் அளித்தால் மட்டுமே ஏற்க முடியும் என்று கூறி அமளியில் இறங்கியதால், அவை செயல்படாமல் அலுவல்கள் முடங்கின. முக்கிய அரசியல் கட்சிகள் தலைவர்களின் தொலைபேசி பேச்சுகள், அரசு அனுமதியுடன் ஒட்டுக் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படுவதாக ஒரு ஆங்கில வார ஏடு வெளியிட்ட செய்தி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உட்பட நிறைய தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம், நேற்று பார்லிமென்டின் இரு அவைகளிலும் பெரும் பிரச்னையாக வெடித்தது. லோக்சபா கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இப்பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பின. ஆனால், சபாநாயகர் மீரா குமார் இதை ஏற்க மறுத்துவிட்டார். மாறாக, எதிர்க்கட்சி தரப்பில் மூத்த தலைவர் அத்வானியை மட்டும் பேச அனுமதி வழங்கினார்.அப்போது அத்வானி, "நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்த காலகட்டங்களில் தான், தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. வாஜ்பாய் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது முக்கிய பத்திரிகையாளர்கள் தொலைபேசி எண்களும் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதுபோல, இப்போதும் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல; கேடு விளைவிக்கக் கூடியது. இவ்விஷயம் தொடர்பாக பிரதமர், அவைக்கு வந்து விளக்கம் அளித்திட வேண்டும்' என்று கூறினார். அதற்கு அவை முன்னவர் பிரணாப் முகர்ஜி, "ஆப்கானிஸ்தான் பிரதமர் டில்லி வந்துள்ளார். அவருடனான விருந்தில் பிரதமர் பங்கேற்று இருப்பதால், மதியம் அவைக்கு வந்து விளக்கம் அளிப்பார்,' என்று கூறினார்.இருப்பினும் அத்வானி தவிர பிற தலைவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதால், அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. இதனால், அவை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் 12 மணிக்கு கூடியது. அப்போது, ஐ.பி.எல்., விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பின. அப்போது, அவையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் எழுந்து, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக அறிக்கை வாசித்தார். மிகுந்த கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் சிதம்பரம் பேசும் போது, "அவுட் லுக் இதழில் வெளியாகியுள்ள செய்தி குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் தரப்பில் எந்த அனுமதியோ அல்லது அங்கீகாரமோ யாருக்கும் வழங்கவில்லை. ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமைகளை காப்பதில் அரசு கவனமாக இருக்கிறது' என்று கூறினார்.ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள், பிரதமர் அவைக்கு வர வேண்டும் என்றும், இப்பிரச்னை குறித்து ஆராய, பார்லிமென்டில் கூட்டுக் குழு அமைத்திட வேண்டுமென கோஷங்கள் இட்டபடி நின்றனர். இதனால் எழுந்த கூச்சல் குழப்பம் காரணமாக, அவை அமளியாகக் காணப்பட்டது. இதையடுத்து, அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும் இதே நிலை தொடரவே, வேறு வழியின்றி நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.ராஜ்ய சபாவிலும் இதே நிலை காணப்பட்டது. அவை கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்யும்படி பா.ஜ., எம்.பி.,க்கள் வெங்கையா நாயுடு, அலுவாலியா ஆகியோர் முறையிட்டனர். "அவுட் லுக்' இதழை உயர்த்திக் காட்டி, ஜனநாயகத்தை சாகடிக்கும் செயல் என்று கூறி இவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆனாலும், அவையை நடத்த அனுமதிக்கும்படி இவர்களை அவைத் தலைவர் அன்சாரி பலமுறை கேட்டுக் கொண்டார்.அமைச்சர் பிருதிவிராஜ் சவுகான் எழுந்து, இது குறித்து அறிக்கை சமர்பிக்கப்படும் என்று கூறினார். ஆனால், பிரதமர் அவைக்கு வந்தே ஆக வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒற்றைக் காலில் நின்றன.இதனால், அவைத் தலைவரின் வேண்டுகோள் பலனில்லாமல் போகவே, அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கூடியபோதும், இதே கோஷங்கள் காணப்படவே, ராஜ்ய சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. - நமது டில்லி நிருபர் -
673
2010-04-26T23:33:00+05:30
இந்தியா
தகவல் பெற சித்ரவதை:தடுக்க மசோதா அறிமுகம்
புதுடில்லி:தகவல்களைப் பெறவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ எந்த ஒரு நபரை பொது ஊழியர்கள் சித்ரவதை செய்தாலும், அவர்களுக்கு பத்தாண்டு சிறைத் தண் டனை அளிக்க வகை செய் யும் சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட் டது."சித்ரவதை தடுப்பு மசோதா 2010'ஐ, மத்திய உள்துறை இணை அமைச்சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நேற்று லோக்சபாவில் அறிமுகப் படுத்தினார். இந்தச் சட்டத்தில், "சித்ரவதை' என்றால் என்ன என்று விவரிக்கப் பட்டுள்ளதோடு, அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கவும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. "சித்ரவதை, கொடுமை, மனிதாபிமானமற்ற செயல்கள், அவமரியாதையாக நடத்துதல்' என்ற தலைப்பில், 1997 அக்டோபரில் ஐ.நா., மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக் கொண்டு இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அதன்படியே இச்சட்டம் இயற்றப் பட்டுள்ளது.எந்த ஒரு நபரையும் தகவல்களைப் பெறவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ அல்லது ஜாதி, மொழி, மதம், இனம் ரீதியான பிரச்னைகளுக்காகவோ பொது ஊழியர்கள் துன்புறுத்தினால், அவர்களுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை வழங்க தற்போதைய சட்ட மசோதா வகை செய்கிறது.
674
2010-04-26T23:35:00+05:30
இந்தியா
அசாமில் பா.ஜ., கூட்டணிமுறிவு
கவுகாத்தி: தொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் தோல்விகளால், அசாம் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அசாம் கண பரிஷத் (ஏ.ஜி.பி.,), பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொள்கிறது .அசாம் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஏ.ஜி.பி., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அக்கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், நான்கு பா.ஜ., எம்.பி.,க்கள், கூட்டணிக்கு எதிராக செயல்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இந்தத் தொடர் தோல்விகளால் மாநிலத்தில் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதால், 2011ல் மாநில சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் பா.ஜ., வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று ஏ.ஜி.பி., முடிவு செய்துள்ளது.
675
2010-04-26T23:36:00+05:30
General
மலேசிய இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி
உலு சிலாங்கூர்:மலேசியாவில் உலு சிலாங்கூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், ஆளும் கட்சி வேட்பாளர் கமலநாதன் வெற்றி பெற்றுள்ளார்.மலேசிய இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டணியான தேசிய முன்னணி, தற்போது ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2008ல் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.மலேசிய இந்திய காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற உலு சிலாங்கூரில் கடந்த தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜைனல் அபிடின் வெற்றி பெற்றார். ஆனால், இவர் சமீபத்தில் மூளை புற்றுநோயால் காலமானார். இதையடுத்து, உலு சிலாங்கூரில் இடைத்தேர்தல் நடந்தது.ஆளும் தேசிய கூட்டணி சார்பில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் கமலநாதன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பி.கே.ஆர்., கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் இப்ராகிம் போட்டியிட்டார். நேற்று முன்தினம் இரவு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கமலநாதன் 1,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடித்தார்.இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது குறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த வெற்றி மூலம் விரைவுபடுத்தப்படும்' என, அவர் தெரிவித்துள்ளார்.
676
2010-04-26T23:37:00+05:30
General
சர்வதேச போதை கடத்தல்: இந்தியர்களுக்கு பிரிட்டனில் சிறை
லண்டன்:போதை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பிரிட்டன் சிறையின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் ஜோகிந்தரநாத் ராஜ்கூமர் (57). இவரது மகன் சுனில் ராஜ்கூமர் (25). சர்வதேச போதை கடத்தலில் கைதேர்ந்தவன் அந்தோணி ஸ்பென்சர். ஹாலந்திலிருந்து பிரிட்டனுக்கு போதை கடத்துவதில் ஸ்பென்சருடன் ஜோகிந்தர், ராஜ் உள்ளிட்ட ஏழு பேர் உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளனர்.சிமென்ட் கலவை இயந்திரம் என்ற பெயரில் அத்துடன் உயர் ரக போதை பொருட்களையும் இவர்கள் பிரிட்டனுக்கு கடத்தி வந்துள்ளனர். ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள போதைக் கிடங்கை ராஜ் பராமரித்து வந்தார். இங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி 140 கிலோ எடையுள்ள உயர் ரக அபின் போதை மருந்தை இவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்பாக, கடந்த ஆண்டு நெதர்லாந்திலிருந்து ஸ்பென்சர், பிரிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டான்.இந்த வழக்கை, பிர்மிங்காம் கோர்ட் விசாரித்து, ஏழு பேருக்கும் சிறை தண்டனை அளித்துள்ளது. இதில், ஜோகிந்தரநாத்துக்கு 3.9 ஆண்டு சிறையும், ராஜ்கூமருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
677
2010-04-26T23:38:00+05:30
General
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 5000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு
கொழும்பு:போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்கா சார்பில், இலங்கையில் புதிய தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில்களை துவங்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபலமான தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்த பகுதிகளில் தோட்டக்கலை, ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வவுனியா அருகே ஓமந்தையில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் துவங்கப்படவுள்ளது. நீண்ட கால போரால் பாதிக்கப்பட்டு, போதிய வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வரும் குடும்பங்களுக்கு, இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
680
2010-04-26T23:46:00+05:30
இந்தியா
திருப்பதி கோவில் உண்டியலில் அம்பானி மனைவி போட்டது என்ன?
திருப்பதி : தன் அணியான மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் குழு, இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, திருப்பதியில் தரிசனம் செய்த முகேஷ்  அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ் பணத்தையும் ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் போட்டார்.ஐ.பி.எல்.,லில் தங்கள் அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவராக திருப்பதி வந்து தரிசனம் செய்திருக்கின்றனர்  என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பெங்களூரு அணி ஜெயிக்க வேண்டும் என்று அதன் தலைவர் விஜய் மல்லையா, கடந்த  25ம் தேதி தரிசனம் செய்தார்.அதற்கு முதல்நாள், மும்பை அணி ஜெயிக்க வேண்டும் என்று, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும்  தாயார் கோகிலா பென் இருவரும், மும்பை அணியின் 13 பேருடன், சிறப்பு விமானத்தில் 24ம் தேதி இரவு திருப்பதி வந்து இறங்கினர்.மறுநாள்  25ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில்  முதல் நபராக தரிசனம் செய்தனர். பின், சுப்ரபாத சேவையில் இவர்கள் பங்கேற்றனர்.தரிசனம் முடிந்த பின், அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணத்தையும், ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் செலுத்தியதாக கோவில் வட்டாரங்கள் கூறுகின்றன.அம்பானி குடும்பம்,  சமீப காலங்களில்  திருப்பதிக்கு வருவது இது மூன்றாவது முறை. முதல் முறை முகேஷ் அம்பானி தரிசனம் செய்து, விமானத் தங்கத் தகடு திருப்பணிக்காக ஐந்து கோடி ரூபாய் அளித்தார். பின், இரண்டாவது முறை வந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்  என்று கூறப்பட்டது.
682
2010-04-26T23:48:00+05:30
தமிழகம்
ரூ.4 கோடி ஏப்பம் விட்ட சென்னை கவுன்சிலர்
கோவை : மோசடி நிதி நிறுவன பெண் உரிமையாளரை காப்பாற்றுவதாகக் கூறி, நான்கு கோடி ரூபாய் பணம் பறித்த சென்னை மாநகராட்சி கவுன்சிலரை விசாரிக்க, கோவை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சசிரேகா (45): ஷேர் புரோக்கராக தொழிலை துவக்கிய இவர், கணவர் கல்கி, ஈரோட்டைச் சேர்ந்த சுதர்ஸன் ஆகியோர் ஆலோசனையில், "கே.எஸ்.மெர்கன்டைல்'என்ற ஆன் லைன் நிதி நிறுவனத்தை துவக்கினார். பீளமேடு - காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகர் வீட்டில் அலுவலகத்தை செயல்படுத்தினார்.நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில், முதலீடு செய்த தொகையுடன் அதே அளவு வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை உண்மையென நம்பி, தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள் என பலதரப்பட்டவர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதிக வாடிக்கையாளர்களை பிடித்து தருபவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட ஆயிரக்கணக்கானோர், 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்தனர். அதிகளவு தொகை செலுத்தியவர்களுக்கு முதல் தவணையாக தர வேண்டிய வட்டிக்கான செக் வழங்கப்பட்டது. ஆனால், செக்கை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. அதிருப்தி அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணி, பீளமேடு கே.எஸ்.மெர்கன்டைல் நிறுவனத்தை அனுகிய போது அது மூடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அவர் கொடுத்த புகார்படி விசாரித்த கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருந்ததை கண்டு பிடித்தனர். நிதி நிறுவன பெண் உரிமையாளர் சசிரேகா, இவரது கணவரும் வங்கி அதிகாரியுமான கல்கி, நிதி நிறுவன துவக்க ஆலோசனை கூறிய சுதர்ஸன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.தலைமறைவான மூவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடினர். ஐந்து மாதங்களுக்கு பின், பாஷா மகன் சித்திக் அலியால் கடத்தி, அடைத்து வைக்கப்பட்டிருந்த சசிரேகாவை போத்தனூர் போலீசார் மீட்டனர். அதோடு சசிரேகாவை கோவை மாநகர் மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைத்தனர். கைதான சசிரேகாவிடம் போலீசார் விசாரித்தபோது, போலீசார் தேடுவதை அறிந்து, சென்னை கே.கே.நகர் பகுதி தி.மு.க., கவுன்சிலரிடம் உதவி கேட்டுச்சென்றதாகவும், அவர் தன்னை இரண்டு மாதம் அடைத்து வைத்திருந்ததாகவும், கணவரை அவரது ஆட்கள் தாக்கி துரத்தி விட்டதாகவும் தெரிவித்தார். "வழக்கில் இருந்து காப்பாற்றுவதாகக்கூறி, நான்கு கோடி ரூபாய் வரை சென்னை கவுன்சிலர் வாங்கி விட்டார். மேலும் அதிக பணம் கேட்டபோது, கோவையில் பாதுகாப்பாக வைத்துள்ள பணத்தை எடுத்து வருவதாக்கூறி தப்பி வந்து விட்டதாகவும் சசிரேகா போலீசாரிடம் புலம்பியுள்ளார்.இதன் பிறகு தான் சசிரேகாவிடம் பணத்தை பறிகொடுத்த பாஷாவின் உறவினர்கள், அவரது மகன் சித்திக்அலியின் உதவியை நாடியுள்ளனர். சித்திக் அலி மற்றும் சிலர், கோவைப்புதூருக்கு வந்த சசிரேகாவை போத்தனூருக்கு கடத்தினர்.விசாரணையில், இந்த விபரங்களை அறிந்த குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருக்கும் கல்கி, சுதர்ஸன் ஆகியோரை தேடி, சென்னைக்கு சென்றனர். அப்போது, சசிரேகாவை பிரச்னையில் இருந்து காப்பாற்றுவதாகக் கூறி, நான்கு கோடி ரூபாய் பணம் பறித்த ஆளுங்கட்சி கவுன்சிலரை சந்தித்து விசாரித்தனர்.அவரும், "தன்னை இவ்வழக்கில் சேர்த்து விட வேண்டாம், தேவையான உதவிகளை செய்வதாக' உறுதி அளித்து, கெஞ்சியுள்ளார். மேலும், இரண்டு முறை கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டுள்ளார். தி.மு.க.,முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிக்கொள்ளும் சென்னை கவுன்சிலரிடம், "முறைப்படி' விசாரிக்கவும், சசிரேகாவிடம் அவர் வாங்கிய பணத்தை பறிமுதல் செய்யவும், குற்றப்பிரிவு போலீசார், தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
684
2010-04-26T23:50:00+05:30
தமிழகம்
கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அமோக வரவேற்பு
சென்னை : சென்னை எழும்பூர் - நாகூர் இடையே விழுப்புரம் - மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இரு வழி மார்க்கத்திலும் வரும் மே 8ம் தேதி வரை, அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையேயான மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டதால், அந்த வழியாக இயக்கப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களும் நான்கு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்தன. அகலப்பாதை பணி முடிந்து, கடந்த 23ம் தேதி முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கப் பட்டது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மூன்று பாசஞ்சர் ரயில்களும் மற்றும் 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இப்பாதையில் எழும்பூர் - நாகூர் இடையே இயக்கப்படும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சை வழியாகச் செல்கிறது. சென்னை எழும்பூரில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு நாகூர் சென்றடைகிறது.நாகூரிலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரயில் போக்குவரத்து துவங்கிய நாளிலிருந்தே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.இப்பாதையில் சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு நேற்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.6853) எழும்பூரிலிருந்து காலை காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.35 மணிக்கு திருச்சி சென்றடையும். நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து குறித்து பயணிகள் கூறியதாவது:நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே நாகூருக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது சந்தோஷமாயிருக்கிறது. ஆம்னி பஸ்சில் கூடுதல் கட்டணம் செலுத்தி, சிரமப்படும் நிலை இனி குறையும். இந்த ரயிலில் ஒரு, "ஏசி' இரண்டாம் வகுப்பு பெட்டி, ஒரு, "ஏசி' மூன்றடுக்கு பெட்டி,  ஐந்து, இரண்டாம் வகுப்பு பெட்டி (தூங்கும் வசதி) முன்பதிவு செய்யப் படாத இரண்டாம் வகுப்பு பெட்டி ஐந்தும் இணைத்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்தே பயணிகள் கூட்டம் உள்ளது. இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) பெட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த ரயில் தற்போது தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை மற்றும் திருவாரூர் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது. இந்த வழியில் உள்ள  சீர்காழி, ஆடுதுறை, பாபநாசம் நிலையங்களிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து குறித்து பயணிகள் கூறியதாவது:சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், ஆறு, இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகிறது. பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கு வசதியை பயன்படுத்துவோர் குறைவாகவே இருப்பர். இந்த பெட்டிகளில் ஐந்து பெட்டிகளை சேர் கார் பெட்டியாக மாற்றி இயக்கினால், அதிகமான பயணிகள் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.சென்னை எழும்பூரிலிருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி 336 கி.மீ., தூரத்தில் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணி 20 நிமிடத்தில் சென்றடையும். இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) கட்டணம் 164 ரூபாய் தான். சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி செல்ல 401 கி.மீட்டர் தூரத்திற்கு 9 மணி 25 நிமிடம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) கட்டணம் 184 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், இந்த ரயிலில் திருச்சி செல்லும் மக்களை விட தஞ்சை செல்லும் பயணிகள் அதிகமாக இருப்பர். இந்த ரயிலில் சேர் கார் வசதி செய்யப்பட்டால் கட்டணம் குறையும்; பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை - திருச்சி வழியாக மதுரைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் வரும் 30, மே 2, 7 மற்றும் 14ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு (தூங்கு வசதி), "ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.இப்பாதை வழியாக  ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசிக்கு வரும் மே 2ம் தேதியிலிருந்தும், வாரணாசியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் மே 5ம் தேதியிலிருந்தும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து விருத்தாசலம் - திருச்சி வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல்  விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை - திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.சென்னை எழும்பூரிலிருந்து விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்படும் திருச்செந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் வரும் ஜூலை 29ம் தேதியிலிருந்து விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை - திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. வரவேற்பு: நேற்று காலை 9.10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 9.58 மணிக்கு தஞ்சாவூருக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் அயனாபுரம் நடராஜன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் தங்கராஜு, செயலர் கலியபெருமாள், சட்ட ஆலோசகர் ஜீவகுமார், விவசாயிகள் சங்கம் துரைமாணிக்கம், சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைத் தலைவர் கணபதி உட்பட பலர், ரயிலுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 10.02 மணிக்கு தஞ்சையில் இருந்து இந்த ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது குறித்து பயணிகள் கூறியதாவது: இந்த ரயில் தற்போது காலை 9.10 மணிக்கு புறப்படுவதை சற்று முன்னதாக 6 மணிக்குள் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும்படி செய்தால், சென்னையில் அன்றே பணிகளை செய்வதற்கு ஏதுவாகும்.தற்போது இந்த ரயில், தஞ்சாவூரிலிருந்து சென்னை செல்ல எட்டு மணி நேரமாகிறது. இதை முன் போல ஐந்து முதல் ஆறு மணி நேரத்துக்குள் பயணிக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
685
2010-04-26T23:51:00+05:30
இந்தியா
சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல்
பெங்களூரு : சாமியார் நித்யானந்தாவின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, சாமியார் நித்யானந்தாவை பின் வாசல் வழியாக அழைத்துச் சென்றனர். ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா தனது சகாக்களுடன், இமாச்சல பிரதேசத்தில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள், அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் விமானம் மூலம் பெங்களூரு  அழைத்து வரப்பட்டார். பெங்களூரிலிருந்து கார் மூலம் ராம் நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு பின், ராம் நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சாமியார் நித்யானந்தாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நான்கு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது.பெங்களூரு சி.ஐ.டி., அலுவலகத்தில் நான்கு நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு சாமியார் ஒத்துழைப்பு கொடுத்ததாக சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விசாரணைக்கு பின், நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன், ராம் நகர் நீதிமன்றத்துக்கு சாமியார் நித்யானந்தா அழைத்துச் செல்லப்பட்டார். சைரன் பொருத்திய போலீஸ் வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன், சாமியார் நித்யானந்தா பயணம் செய்தார். முன்னும் பின்னும்  ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சென்றன.ராம் நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில், நீதிபதி நாராயண பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்; 6.10 மணியளவில் வெளியே அழைத்து வரப்பட்டார். செஷன்ஸ் நீதிமன்ற அரசு வக்கீல் லோகேஷ் கூறுகையில், ""ராம் நகர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி நாராயண பிரசாத் முன்னிலையில் சாமியார் நித்யானந்தா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சி.ஐ.டி., போலீசார், சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் நான்கு நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். நீதிபதி நாராயண பிரசாத் இம்மனுவை விசாரித்து, சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் இரண்டு நாள் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.போலீசார் துன்புறுத்தினார்களா? என்று சாமியாரிடம் நீதிபதி கேட்ட போது, "போலீசார் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை; நல்ல முறையில் கவனித்தனர். தியானம் செய்வதற்கு நேரம் ஒதுக்கி கொடுத்தனர்; கேட்கும் உணவை வழங்கினர்' என்றார்.பின்னர், சாமியார் நித்யானந்தாவை ஏற்றிக் கொண்டு போலீஸ் வாகனங்கள், பெங்களூரு திரும்பின. சாமியாரிடம் விசாரணை தொடர்ந்தது.கடந்த முறை ராம் நகர் நீதிபதி வீட்டில், சாமியார் நித்யானந்தா ஆஜர்படுத்தப்பட்ட போது, செருப்பு வீசப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் சுற்றுப்புறப் பகுதிகளின் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.சாமியாரை அழைத்து வந்த வாகனத்தின் 100 அடி தூரத்திலேயே, பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாமியார் நித்யானந்தாவை, நீதிமன்றத்தின் முன் வாசல் வழியாக அழைத்துச் செல்லவில்லை. பின் வாசல் வழியாகத்தான் சாமியாரை அழைத்துச் சென்றனர்.மின் தடை காரணமாக சாமியார் நித்யானந்தா, நீண்ட நேரம் நீதிமன்றத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழக போலீசார் மனு : சாமியார் நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி, கர்நாடகா கோர்ட்டில் தமிழக போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.சென்னையில் பெண் வக்கீல் அங்கயற்கண்ணி கொடுத்த மோசடி புகாரின் பேரில், நித்யானந்தா மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. தற்போது நித்யானந்தா கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் விசாரணை நடந்து வரும் நிலையில், சென்னையில் இருந்து உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையும் பெங்களூரு சென்றுள்ளது.  தொடர்ந்து, சாமியார் நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவையும் அவர்கள் கோர்ட்டில் அளிக்க உள்ளனர்.
687
2010-04-26T23:53:00+05:30
தமிழகம்
பெற்றோரை புறக்கணித்த வாரிசுகள் பணம் வழங்க உத்தரவிட்ட கலெக்டர்
நாமக்கல் :நாமக்கல்லில், பெற்றோரை புறக்கணித்தவர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார்.  10 வாரிசுகளிடம் இருந்து  பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.வயதான பெற்றோரை கவனிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், "பெற்றோர் மற்றும் முதியோர்கள் வாழ்க்கை பொருளுதவி சட்டம் 2007' அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சூரியம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம்(77) என்பவர், மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் அளித்த புகாரின் பேரில், அவரது மகன் சாமிநாதனை போலீசார் கைது செய்தனர்.மாவட்டம் முழுவதும், வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோரை அழைத்து வரும்படி கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து 80 பேரை வி.ஏ.ஓ.,க்கள் அழைத்து வந்தனர்.  அவர்களில் பலர்,  வாரிசுகள் நல்ல நிலையில் இருந்தும், தங்களை கவனிப்பதில்லை என்று தெரிவித்தனர்.அதன் பேரில், கலெக்டர் சகாயம், வாரிசுகளிடம் விசாரணை நடத்தி, வருமானத்துக்கு ஏற்ப, பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் வழங்க வேண்டும் என,  அறிவுறுத்தினார். உதவித்தொகை வழங்குவது மட்டுமின்றி, 15 நாட்களுக்கு ஒரு முறை தாய், தந்தையரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து, தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதை வி.ஏ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.விசாரணை முடிவில், 10 பெற்றோருக்கு வாரிசுகள் மூலம் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இளநகரை சேர்ந்த காளியம்மாள் என்பவருக்கு, அவரது மகன் சுப்ரமணி, 500 ரூபாயை கலெக்டர் சகாயம் முன்னிலையில் வழங்கினார்.
688
2010-04-26T23:57:00+05:30
தமிழகம்
எம்.எல்.ஏ., உதவியை நாடும் கண்பார்வை இழந்த சுரேகா
சென்னை : டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையால் அலர்ஜி ஏற்பட்டு கண்பார்வை பறிகொடுத்த வடசென்னையை சேர்ந்த மாணவி, கண் அறுவை சிசிச்சை மேற்கொள்ள எம்.எல்.ஏ., உதவி கேட்டு, சட்டசபை வளாகத்திற்கு நேற்று தனது பெற்றோருடன் வந்தார்.வடசென்னை சுங்கச்சாவடி அருகேயுள்ள டி.எச்., சாலையில் வசிப்பவர் தேவேந்திரன். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு சுரேகா (13) என்ற மகளும், நவீன்குமார் (8) என்ற மகனும் உள்ளனர். தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பள்ளியில் சுரேகா, ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நவீன்குமார் நான்காம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுரேகாவிற்கு காய்ச்சல் வந்துள்ளது. வீட்டின் அருகில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சுரேகாவை, தேவேந்திரன் அழைத்து சென்றார். டாக்டரும், சுரேகாவுக்கு காய்ச்சல் குணமாகுவதற்குரிய மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்திற்குள் சுரேகாவின் உடலில் அலர்ஜி ஏற்பட்டது. கண்கள் வீங்கி மூடிக் கொண்டன. உடலிலும் வீக்கம் காணப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேகாவை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அலர்ஜியின் காரணமாக அவரது உடலில் ஏற்பட்ட கோளாறு குணமானது. ஆனால், கண்களை திறக்க முடியவில்லை. "எழும்பூரிலுள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு சுரேகாவை அழைத்து செல்லுங்கள்' என, ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சுரேகாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின், சுரேகாவின் கண்கள் திறக்கப்பட்டன. ஆனால், பார்வை சரியாக தெரியவில்லை. சுரேகாவுக்கு மீண்டும் பழைய நிலையில் பார்வை தெளிவாக தெரிய வேண்டும் எனில், ஐதரபாத்தில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறினர். மேல் சிகிச்சைக்கு செலவு செய்ய சுரேகாவின் பெற்றோரிடம் வசதி இல்லை.இதனால், எம்.எல்.ஏ., மூலம் அரசு உதவி கேட்பதற்காக சுரேகா தனது பெற்றோருடன் நேற்று சட்டசபை வளாகத்திற்கு வந்தார். ஏதாவது ஒரு எம்.எல்.ஏ.,வின் உதவி மூலம், தனக்கு பறிபோன கண் பார்வை மீண்டும் வராதா? என எதிர்பார்த்து சுரேகா காத்துக் கொண்டிருக்கிறார்.
690
2010-04-27T00:02:00+05:30
தமிழகம்
கந்தகோட்டம் தெப்பத் திருவிழா இன்று கோலாகலமாக துவக்கம்
பாரிமுனை : கந்தகோட்டம், கந்தசாமி கோவிலில் ஐந்து நாள், நூதன தெப்பத் திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. சென்னை ராசப்ப செட்டி தெருவில் கந்தகோட்டம், கந்தசாமி கோவில் என அழைக்கப்படும் முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.  மிகவும் பழமைவாய்ந்த இக்கோவிலில், இன்று முதல் நூதன தெப்பத் திருவிழா கோலாகலமாக துவங்குகிறது. ஐந்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில், முதல் நாளான இன்று துவங்கி வரும் 29ம் தேதி வரை மூன்று நாட்கள் முத்துக்குமார சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வரும் 30ம் தேதி சொக்கநாதரும், வரும் 1ம் தேதி ஆறுமுகசாமிகளும் தெப்பத்தில் எழுந்தருள்வர்.  ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு, சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தெப்பத் திருவிழா துவங்கும்.தேவார திருப்புகழ் மற்றும் பக்திபாடல்கள் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கோவிலின் சீனியர் அறங்காவலர் முத்து, அறங்காவலர்கள் திலக்குமார், ஏகாம்பரம், பழனிதாஸ், லட்சுமி நாராயணா ஆகியோர் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
693
2010-04-27T00:03:00+05:30
தமிழகம்
கடும் வெயிலால் விளைச்சல் குறைவு : தக்காளி விலை தாறுமாறாக உயர்வு
கோயம்பேடு :  கடும் வெயிலால் விளைச்சல் குறைந்து, தக்காளி கடும் விலையேற்றம் கண்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து இருக்கிறது. கடந்த மூன்று மாதமாக 70 லாரி தக்காளி வரத்து இருந்தது. கடும் வெயிலால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தினமும் 50 லாரி தக்காளி மட்டுமே மார்க்கெட்டிற்கு வரத்து உள்ளது.கடந்த மூன்று மாதமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 4 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ தக்காளி 16 ரூபாய் முதல் 18 வரை விற்கப்படுகிறது. இது குறித்து, கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத்தலைவர் தியாகராஜன் கூறியதாவது: கடந்த மூன்று மாதமாக தக்காளி விலை குறைவாக இருந்ததால், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடைந்தனர். வசதியான பெரிய விவசாயிகள் சிலர், துணிச்சலாக தக்காளியை பயிரிட்டனர். தற்போது கடும் வெயிலால் விளைச்சல் குறைந்து விட்டது. அதனால், முன்பு இருந்ததை விட, பல மடங்கு விலை எகிறி விட்டது. இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
694
2010-04-27T00:04:00+05:30
தமிழகம்
விசா சிக்கல்: சிங்கப்பூர் பெண் திருப்பி அனுப்பப்பட்டார்
திரிசூலம் : சிங்கப்பூரை சேர்ந்தவர் அலெக்சியா(45). இவர், தமிழகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், நேற்று முன்தினம் பாங்காக்கில் இருந்து வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.  விமான நிலையத்தில் அவரிடம் வழக்கமான குடியுரிமை சோதனைகள் நடத்தப்பட்டன.  அப்போது, அலெக்சியாவின் விசாவில் சிக்கல் கள் இருப்பதும், அவர் இந்தியா வர போதுமான ஆவணங்கள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதனால், அலெக் சியா  இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
695
2010-04-27T00:04:00+05:30
தமிழகம்
இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது
சென்னை : இந்திய கடல் எல்லைக்குள் விசைப் படகு மூலம் அத்துமீறி நுழைந்த ஐந்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் எல்லைக்குள் அவ்வப்போது அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,நேற்று முன்தினம் நாகப்பட்டினம் தென்கிழக்கு பகுதியில் 41வது நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு ஒன்றை மடக்கி பிடித்தனர்.  அதில், இருந்த கிங்ஸ்லி(52), நாராயண டவுஹா (44), நிர்மல்(44), தன்னன்பாலா(52)மற்றும் ஆரியசின்னா(53) என்ற  ஐந்து இலங்கை மீனவர்கள் இருந்தனர். அவர்களை பிடித்த கடலோர காவல் படையினர், சென்னை போலீசார் வசம் ஒப்படைத்தனர். இதையடுத்து, துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் குணவர்மன் விசாரணை நடத்தினார். பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதத்தில் அத்துமீறி நுழைந்த 77 படகுகள் சிக்கின. அதிலிருந்த 399 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
696
2010-04-27T00:05:00+05:30
தமிழகம்
அசோக் நகர் கொலை வழக்கு : 4 பேர் சிறையில் அடைப்பு
சென்னை : அசோக்நகர் மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய நால்வரையும், போலீஸ் காவல் முடிந்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அசோக் நகர், நடேசன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (74). கனிமவளத்துறை முன்னாள் தலைவரான இவர், இவரது மனைவி மற்றும் வீட்டு பெண் பணியாளர் ஆகிய மூவரும் கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.  இதில், தொடர்புடைய யாசிம், உதயா, மோகன்தாஸ், சத்தியபாமா ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நால்வரையும், கடந்த 19ம் தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ரவி முன்பு  ஆஜர்படுத்தினர். அவர், இவர்களுக்கு 8 நாள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டார்.  நேற்று மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.  ரூ.20 லட்சம், யூரோ டாலர்கள் பறிமுதல்: டாமின் சேர்மன் சரவணன் கொலை வழக்கில் சிக்கிய யாசின், உதயா உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார், பாதுகாப்பில் எடுத்து விசாரித்தனர். கொள்ளையடித்த நகை, பணம் பற்றியும் துருவித் துருவி விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பல இடங்களிலிருந்தும் 20 லட்ச ரூபாய் ரொக்கம், 20 யூரோ டாலர்கள்,  40 சவரன் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
699
2010-04-27T00:06:00+05:30
தமிழகம்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
காசிமேடு : டிரான்ஸ்பார்மரில் சிக்கிய பந்து எடுக்கும் போது, மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலியா னார்.தண்டையார்நகர், ஐந்தாவது தெருவை சேர்ந்த மோகன் மகன் வெங்கடேசன் (26); பெயின்டர். இவரது மனைவி காயத்திரி (23). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆறுமாத கர்ப்பிணியான காயத்திரி, கடந்த வாரம்  தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் வெங்கடேசன் மட்டும் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் மாலை ஞாயிற்றுக் கிழமை என்பதால், வீட்டிற்கு அருகில் நண்பர் களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, பந்து மின்சார டிரான்பார்மரில் சிக்கியது. அதை எடுக்க முயன்றபோது, வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
700
2010-04-27T00:06:00+05:30
தமிழகம்
இது உங்கள் இடம்
கட்டணத்தை உயர்த்த அனுமதியுங்கள்!பெயர் வெளியிட விரும்பாத தனியார் பஸ் உரிமையாளர் கோவில்பட்டியில் இருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் பஸ் கட்டணம், மின் கட்டணத்தை உயர்த்த அரசு தயக்கம் காட்டுகிறது. அவற்றை உயர்த்தினால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என கருதுகிறது. இந்நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி உட்பட பலவும் உயர்ந்து விட்டது. அதேநேரம் பஸ் கட்டணத்தை உயர்த்த முடியாததால் நாங்கள் தவிக்கிறோம்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது இருந்த கட்டணமே இன்று வரை தொடர்கிறது. அன்றைய காலகட்டத்தில் டீசல் லிட்டருக்கு 18 ரூபாயாக இருந்தது. தற்போது விலை இருமடங்கு உயர்ந்து விட்டது. ஆனால், "ஒரு கி.மீ.,க்கு 28 காசுகளே பஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, அரசு உத்தரவு உள்ளது. அதேசமயம் பிற மாநிலங்களில் விøவாசி உயர்வுக் கேற்ப 60 காசு வரை வசூலிக்கின்றனர்.டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, பஸ் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பராமரிப்பு உட்பட மற்ற பொருட்களுக்கும் விலை உயர்ந்துவிட்டது. இந்தியா முழுவதும் பஸ்களுக்கான சேசிஸ் விலை ஒன்றுதான். அவற்றுக்கான டயர், டீசல் உட்பட அனைத்தும் ஒரே மாதிரிதான் உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்தும் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு தயக்கம் காட்டுகிறது.அரசு பஸ்கள், மினி பஸ்களை பொறுத்தவரை இப்பிரச்னை இல்லை. ஏனெனில் கூடுதல் கட்டணம் என அறிவிப்பு செய்யவில்லையே தவிர, பஸ்களின் நிறங்களை மாற்றியோ அல்லது பாயின்ட் டூ பாயின்ட், எல்.எஸ்.எஸ்., ஒன் டூ திரீ, எக்ஸ்பிரஸ், மிதவை பேருந்து என வகை மாற்றம் செய்து கட்டணத்தை 2 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலித்து விடுகின்றனர். அப்படியிருந்தும், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் என கூறுகின்றன. அப்படி இந்த சூழ்நிலையில், தனியார் பஸ்களை எப்படி கட்டண உயர்வின்றி இயக்க முடியும்? மினி பஸ்களுக்கும் குறிப்பிட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் இல்லை. பஸ்களின் வசதிக்கு தகுந்தவாறு கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றனர். எனவே, ரெகுலரான ரூட்களில் இயங்கும் தனியார் பஸ்கள் தான் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. எங்களூரில் பஸ் உரிமையாளர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டது, நினைவிருக்கலாம். எனவே, கட்டண உயர்வு குறித்து அரசு பரிசீலனை செய்து, பொதுமக்களுக்கும், பஸ் உரிமையாளர்களுக்கும் பாதிப்பின்றி அறிவிக்க வேண்டும். எல்லாம் வீணே! சிவ.நேசன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: "பத்து மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, 18 கோடி ரூபாய்  செலவிடப்படும்' என்று  துணை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது ஆனைப் பசிக்கு சோளப் பொரியைக் கொடுத்தமைக்குச் சமம்.கூவம் சீரமைப்பு பணி, 1800 கோடி ரூபாயில்  துவங் கப்பட்டுள்ளது. அதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, கணிசமான நிதியை வறட்சி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ஒதுக்க வேண்டும்.குடிநீர் தருவது அரசின் தலையாய கடமை. பென்னாகரம் தொகுதி மக்களில் 85 சதவீதம் பேர், குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என்று கருத்துக் கணிப்பில் கூறியிருந்தனர். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!' சென்னைக்கு கிருஷ்ணா, வீராணம் என்று பல திட்டங்கள் மூலம் குடிநீர் வரத்து உள்ளது. ஆனால், ஏனைய மாவட்டங்களில் இந்த நிலை இல்லை.அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கூடுதலான நிதி ஒதுக்கி, மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். அரும்பசிக்கு உதவாத அன்னம், தாகத்துக்கு உதவாத தண்ணீர், மக்களுக்கு உதவாத அரசு எல்லாம் வீணே. பழசு மறந்து போச்சு! கே.அமுதா, பி.என்.பாளையத்திலிருந்து எழுதுகிறார்: இப்போது நிறைய பேர் அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளில் இருந்து, கூட்டம், கூட்டமாக,  அறிவாலயத்துக்குள் புகுந்து கருணாநிதி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்; இதில், ஆச்சரியம் எதுவும் இல்லை.இவர்கள், 1996க்கு முன், ஏன் இணையவில்லை? அப்போது, தி.மு.க., ஆட்சியில் இல்லை; இப்போது, ஆட்சியில் இருக்கிறது... அதுதான் காரணம்.இப்போது, அன்பு வசப்பட்டு, தி.மு.க.,வில் இணைபவர்கள் எல்லாம், நாளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அப் போது போயஸ் கார்டனுக்கு ஓடிப்போய், அ.தி.மு.க., வில் இணைய தயாராக இருப்பவர்கள் தான்.தொண்டர்கள் பலம் ஒன்றையே நம்பி, கருணாநிதியின் பண பலம், அதிகார பலம் போன்றவற்றை, எம்.ஜி.ஆர்., ஜெயித்தார்.எப்போதும் கருணாநிதிக்கு, தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதில், ஒரு தனி சுகம் உண்டு. முன்பு, சென்னை மாநகராட்சியை  கைப்பற்றியபோது,  நடந்த வெற்றி விழாவில், கருணாநிதியின் சேவையை பாராட்டி, அண்ணாதுரை மோதிரம் அணிவித்தார். அப்போது, கண்ணதாசனுக்கு கோபம் வந்து, "அப்படியானால், இந்த வெற்றிக்கு நாங்கள் உழைக்கவில்லையா?' எனக் கேட்டார்."தம்பி கருணாநிதி மோதிரம் கொடுத்தார், போட்டேன். நீ கொடுத்திருந்தால், உனக்கும் போட் டிருப்பேனே...' என்று, சொன்னார் அண்ணாதுரை.கருணாநிதிக்கு, வரவர பழசெல்லாம் மறந்து விடுகிறது. அதை, வரும் தேர்தலில் மக்கள் தான் ஞாபகப்படுத்த வேண்டும். தகுதி படைத்தவர் என்பவர் யார்?கே.சாவித்திரி, சரவணம்பட்டி, கோவையிலிருந்து எழுதுகிறார்: "தகுதி படைத்தவர்களுக்கு மட்டும் மின்சாரக் கட்டணம் உயர்த் தப்படும்' என்று, அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.யார் அந்த தகுதி படைத்தவர்கள்? தகுதி என்பது என்ன, தகுதியை எப்படி நிர்ணயிக்கின்றனர்? இதற் கெல்லாம் சரியான விளக்கம் இல்லை. ஒருபக்கம், "பிறப்பொக்கும்' என்கிறார்; சமத்துவப் புரங்களைக் கட்டுகிறார். இன்னொரு பக்கம், "தகுதி உள்ளவர்கள், தகுதி இல்லாதவர்கள்' என்று சமூகத்தை இனம் பிரிக்கிறார்.எனக்குத் தெரிந்த உண்மை இது: பல பேருக்கு வசதி இருக்கிறது, தகுதி இருக்கிறது.  அதாவது,  மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பேராசிரியர்களும், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும், ஏன் கோவையில் சில  மில்  அதிபர்களும் கூட, தங் களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்ய, இலவச மின்சாரம் பெற்று வருகின்றனர். அதே சமயம், விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பங்கள், லட்சக்கணக்கில் இருக் கின்றன. தரம் பிரித்தா இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது?கட்சிக்காரர்களே, தங்கள் நிகழ்ச்சிகளுக்கு கொக்கி போட்டு மின்சாõரம் திருடுகின்றனர். சில நகராட்சிகளில், பகலிலேயே தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் மின்சார விளக்குகள் வெளிச்சத்தில், புதிய சட்டசபையை இரவெல்லாம் அரசு கட்டியது. அதற்கு மின்கட்டணம் செலுத்தப் பட்டதா என்று தெரியவில்லை.இந்த கொள்கை, வீணான சமூகச் சிக்கல் களை ஏற்படுத்தப் போவது நிச்சயம். ஒரே பஸ்சில் பயணம் செய்கிறவர்களிடம், நின்று செல்பவர்களிடமும், உட்கார்ந்து செல்பவர்களிடமும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கின்றனர். தகுதி அடிப்படையிலா கட்டணம் வசூலிக்கின்றனர்? இதற்குப் பெயர் தான், வைத்தால் குடுமி, சிரைத் தால் மொட்டை என்பதோ?
701
2010-04-27T00:07:00+05:30
தமிழகம்
சுய உதவி குழுவிடம் ரூ.1.27 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலை
பூந்தமல்லி : சுயதொழில் துவங்க, சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, கடன் பெற்றுத் தருவதாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:பூந்தமல்லி, பஜார் தெருவை சேர்ந்தவர் காமினி (54). இவர், இப்பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுவை நடத்தி  வருகிறார். இவரிடம் 254 பேர் உறுப்பினர் களாக உள்ளனர். இதையறிந்த பொழிச்சலூர் ஆரோக்கிய அன்னை கோவில் தெருவை சேர்ந்த, வேளாங்கண்ணி (36) என்ற பெண், காமினியை அணுகினார். சுயதொழில் செய்வதற்கு, சுய உதவிக்குழுவை சேர்ந்த உறுப் பினர்கள் ஒவ்வொருவரும் 500 ரூபாய் கொடுத்தால், தனியார் வங்கிகளில் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறினார். இதை நம்பி, தனது குழுவில் உள்ள  உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து, மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை வேளாங் கண்ணியிடம் காமினி கொடுத் தார். பணத்தை வாங்கிக் கொண்ட வேளாங்கண்ணி, வங்கியிலிருந்து கடன் வாங்கி தரவில்லை. கேட்டதற்கு பல காரணங்களை வேளாங்கண்ணி கூறினார். ஒரு கட்டத்தில், அடியாட்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப் படுகிறது. இதையடுத்து, காமினி தனது குழு உறுப்பினர் களுடன்  வேளாங்கண்ணி மீது, போலீசில் புகார் அளித்தனர்.  பூந்தமல்லி போலீசார், வேளாங்கண்ணி மீது  மோசடி மற்றும் கொலை மிரட்டல்  ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். கடன் தொகை ரூ.6 லட்சம் மோசடி: வாங்கிய கடனை திருப்பி தராமல் 6 லட்சம் ரூபாயை ஏமாற்றிய பெண் மீது, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் முதியவர் ஒருவர் புகார் அளித்தார். மேற்கு வேளச்சேரி, நேதாஜி நகரை சேர்ந்தவர் சுப்புராம் (55), புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: பழவந்தாங்கல், தில்லைகங்கா நகரை சேர்ந்த பெப்சிகுமாரி, இப்பகுதியில் கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறார். உடல் சரியில்லாதவர்களின் வீடுகளுக்கு பெப்சிகுமாரி சென்று, அவர்களுக் காக  பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்த வகையில் பெப்சி குமாரிக்கும், எங்கள் குடும்பத் திற்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் கேட்டபோதெல்லாம், பணம் கொடுத்து வந்தேன். மேலும், நகை மற்றும் கார் வாங்குவதற்கு பணம் தேவைப் படுவதாக பெப்சிகுமாரி கூறினார். என்னிடம் பணம் இல்லாத போதும், கடன் வாங்கி பணம் கொடுத்தேன்.  இதுவரை 6 லட்சம் ரூபாய் வரை என்னிடம், பெப்சிகுமாரி கடன் வாங்கியுள்ளார். என் வீட்டு செலவுக்கு பணம் தேவைப் பட்டதால், கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி பெப்சிகுமாரியிடம் கேட்டேன். ஆனால், அவர் பணம் தர மறுத்துவிட்டார். பலமுறை அவரது வீட்டிற்கு சென்று கேட்டும், பணம் தர மறுத்ததோடு மிரட்டி வருகிறார். என்னிடம் வாங்கிய கடன் தொகையை ஏமாற்றும்  பெப்சிகுமாரி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. புகாரை பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.
702
2010-04-27T00:07:00+05:30
தமிழகம்
தலைமைச் செயலகம் முன் போராட்டம் : நடத்த முயன்ற மாற்று திறனாளிகள் கைது
சென்னை : புதிய தலைமைச் செயலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். மாற்றுத் திறனாளிகள் நலனில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சமீபத் தில் சிறப்பு ஆணை மூலம், பார்வையற்ற பட்டதாரிக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதுபோன்றே, மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் உள்ள, இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற தங்களுக்கும் ஆசிரியர் பணயிடங்கள் வழங்க வேண்டுமென உடல் ஊனமுற்றோர் கோரி வருகின்றனர்.தங்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில்,  ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் புதிய தலைமைச் செயலகம் முன் நேற்று உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். சங்கத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மெரினா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். உண்ணாவிரதம்: சமூக நலத்துறையில் பணியாற்றும், நாற்காலி பின்னும் பார்வை யற்ற ஊழியர்கள் நேற்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.பணியில் சேர்ந்த நாளிலிருந்து கால முறை ஊதியம் வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு தர வேண்டும், பணி ஓய்வு பெற்றதும், நாற்காலி பின்னுவோர் பணியிடங்களை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தும் உண்ணாவிரதத்தில், சங்கத் தலைவர் மலைகொழுந்து மோசஸ் உள் ளிட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
704
2010-04-27T00:07:00+05:30
தமிழகம்
புதிய ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பொறுப்பேற்பு
சென்னை : தமிழகத்திற்கு புதிதாக 14 பேர் ஐ.பி.எஸ்., அதிகாரி களாக தேர்வாகி உள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வாகியுள்ள இவர்கள், 2011 ஜனவரியில் பணியில் சேர உள்ளனர்.இதில் முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் சொந்த மாநிலத் திலேயே பணியிடம் பெற்று சிறப்பு சேர்த்துள் ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(யு.பி.எஸ்.சி.,) மூலம் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., மற்றும் ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட பணியிடங் களுக்கு அதிகாரிகள் தேர்ந் தெடுக்கப்பட்டு வருகின் றனர்.அந்த வகையில், 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ்., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் களுக்கு ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகடமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஐ.பி.எஸ்., காலிப் பணியிடத்தை பொருத்து, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணி இடம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, 2011ல் தமிழகத்துக்கு 14 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். இதில், சி.விஜயகுமார், சிபிசக்கரவர்த்தி, தர்மராஜ், துரை, பி.விஜயகுமார் ஆகிய ஐந்து பேர் தமிழகத்திலேயே பணியிடம் பெற்றுள்ளனர். இதில், சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் பயிற்சி பெற்ற நான்கு பேர், ராம்குமார் மற்றும் அம்பிகா ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலத் திலும், சத்யசுந்தரம் டெல்லியிலும், ஸ்ரீதரன் மேற்கு வங்கத்திலும் பணி யிடம் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒரே நேரத் தில் 14 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றார் ஐதராபாத்தில் பயிற்சி பெற்று வரும் ஐ.பி.எஸ்., அதிகாரி சிபிசக்கரவர்த்தி. கடலூரை சேர்ந்த இவர் ஏற்கனவே, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர் பதவிக்கு தேர்வாகி இருந் தார். சீருடைப் பணியாளர் மூலம் மக்களுக்கு சேவையாற்றுவதை குறிக் கோளாகக் கொண்ட சிபிசக்கரவர்த்தி இப்போது ஐ.பி.எஸ்., ஆகியுள்ளார்.
705
2010-04-27T00:07:00+05:30
தமிழகம்
ராமானுஜர் நினைவு தினம் அனுசரிப்பு
சென்னை : கணிதமேதை ராமானுஜம் அவர்களின் 90வது நினைவு நாள் தினம்,  நங்கநல்லூர், தில்லை கங்கா நகரில் உள்ள, டி.கே. சீனிவாசன் கணித ஆராய்ச்சி அறக் கட்டளையில் நேற்று அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற சென்னை ஐ.ஐ.டி., இயற்பியல் பேராசிரியர்  கேசவன், "ரோல்வெல் ரோலர்ஸ்' நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெயபிரகாஷ், ஷீரடி பைரவ சாய் திருக் கோவில் அறக்கட்டளை நிறுவனர் மீனாட்சி சுந்தரம், பாஞ்சாலம் சம்பத்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள், "ராமானுஜரை அனை வரும் தெரிந்துகொள்ள வேண்டும். அவர், கணிதத் தில் மட்டுமின்றி எண் கணிதத்திலும் வல்லவர். அவர், கணிதத்தின் மீது வைத் திருந்த ஆர்வம், இப்போதைய மாணவர்களும் கடைபிடிக்க வேண்டும். தற்போதைய அறிவியல் வாழ்க்கையில், மாணவர் களுக்கு கணிதத்தின் அவசியத்தையும் விளக்கினர். ஆலந்தூர் நகராட்சியின் முன்னாள் தலைவர், ஆர்.எஸ். பாரதி, கவுன்சிலர் பாஸ் கரன் மற்றும் கணித ஆர் வலர்கள் பங்கேற்றனர். கணிதமேதை ராமானுஜத் தின் மகன் கண்ணன் வாழ்த் துரை வழங்கினார். முடிவில், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறும் படம் காண்பிக்கப்பட்டது.
706
2010-04-27T00:08:00+05:30
தமிழகம்
சோமவார பிரதோஷம்
மயிலாப்பூர் : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாதம் தோறும் பவுர்ணமி, அமாவாசைகளுக்கு முன்பு வரும் திரயோதசி திதியின் மாலை பொழுது சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப் படுகிறது. அதிலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கள் கிழமையும், விஷ்ணுவிற்கு உகந்த சனிக்கிழமையும் வரும் பிரதோஷ தினங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது.அந்த விதத்தில் திங்கள் கிழமையான நேற்று பிரதோஷ தினம், சோமவார பிரதோஷமாக, சிவன் கோவில்களில் நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. இதை ஒட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷத்தை ஒட்டி, கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் சர்வ அலங்காரத்துடன் உட் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தார். அப்போது பக்தர்கள் தேவார, திருவாசக பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடினர். முன்னதாக நந்தியம்பெருமானுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், வாசனை திரவியங் களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சோமவார பிரதோஷத்தை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
707
2010-04-27T00:08:00+05:30
தமிழகம்
ரத்னமங்கலம் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை
தாம்பரம் : வண்டலூர் அருகே ரத்னமங்கலம் லட்சுமி குபேரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன் னிட்டு, சிறப்பு  பூஜை நாளை நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, குபேரரின் தேவியான சித்ரலேகாவிற்கு சிறப்பு அலங்கார பூஜை; சித்ரகுப்தருக்கு ஏடு, எழுத்தாணியுடன்  பூஜை; புதன்கிழமையில் பவுர்ணமி வருவதால், புதனின் அதிதேவதையான குபேர லட்சுமிக்கு பச்சை நிற பொருட்களால் பூஜை; சந்திர பகவானுக்கு குளிர்ந்த பாயசம் நெய் வேத்தியமும், கோ, அஷ்ட லட்சுமி பூஜையுடன் கூடிய சிறப்பு குபேரர் பூஜை ஆகியவை  நடைபெறும்.பூஜை செய்யும் பக்தர் களுக்கு சித்ரகுப்த பூஜை செய்த ஏடும், தன பூஜை நாணயம் மற்றும் தன ஆகர் ஷண ஏடும் வழங்கப்படும். ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் சார்பில் சிறப்பு அன்னதானமும், பச்சை நிற கைக்குட்டையும் அன்றைய தினம் வழங்கப்படும்.
708
2010-04-27T00:08:00+05:30
தமிழகம்
பொருள் வாங்காத ரேஷன் கார்டு: நிறுத்தினால் புகார் செய்யலாம்
சென்னை : தொடர்ந்து மூன்று மாதங்களாக பொருட் கள் வாங்கவில்லை என்ற காரணத்திற் காக, ரேஷன் கார்டை நிறுத்தி வைத்தால், அதுகுறித்து புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணை ஆணையர் அண்ணா மலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:"ரேஷன் கார்டில் தொடர்ந்து மூன்று மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால், அக்கார்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது' என புகார்கள் வந்துள்ளன. ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதோ, வாங்காமல் இருப்பதோ அட்டைதாரர்கள் உரிமை. தொடர்ந்து பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்பங்களின் ரேஷன் கார்டுகள், பொருள் வாங்காததற்காக நிறுத்தி வைக்கக்கூடாது என மீண்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக பொருட்கள் வாங் காமல், தேவைப்படும் பொழுது பொருள் வாங்க செல்லும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்க மறுக்கக் கூடாது. ரேஷன் கார்டுதாரர்கள், அக்கார்டை பயன்படுத்தி தொடர்ந்து எல்லா மாதங் களிலும் பொருட்களை வாங்க வேண்டும் என நிர்பந்தம் கிடையாது.இக்காரணத்திற்காக ரேஷன் கார்டு நிறுத்தி வைக்கப்பட்டால், சிதம்பரனார் மண்டலம் 25267603, ராயபுரம் மண்டலம் 25953285, பெரம்பூர் மண்டலம் 25593050, அண்ணாநகர் மண்டலம் 28363265, அம்பத் தூர் மண்டலம் 26570570, வில்லிவாக்கம் மண்டலம் 26171451, திருவெற்றியூர் மண்டலம் 25992828, ஆவடி மண்டலம் 26375560, துணை ஆணையர் (நகரம்) வடக்கு அலுவலகம் 28551028 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
709
2010-04-27T00:09:00+05:30
தமிழகம்
பால்குட விழா
சென்னை : மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவிலில், நாளை (28ம் தேதி) காலை 7 மணிக்கு, 1008 பால்குட விழா நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, உலக நன்மைக் காகவும், பக்தர்கள் நலனுக்காகவும், கோடை வெப்பம் நீங்கி வானம் குளிர்ந்து மழை பெற வேண்டியும், 1008 மகளிர் விரதத்துடன்  பங்கேற்று, 1008 பால்குடங்களை எடுத்து வந்து வழிபடுவர். பகல் 12 மணியளவில், விசேஷ அபிஷேகம், மூலவர் அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கு செய்யப்படுகிறது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு, உலக நன்மைக்காக சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, விசேஷ தீபாராதனை நடைபெறும். பால்குடம் எடுக்க விரும்புபவர்கள் ரூ.100/- மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் உதய குமார், கோவில் நிர்வாக அதிகாரி மோகனசுந்தரம், அறங்காவலர்கள் வாசுதேவன், டில்லி, கிருஷ்ணவேணி, ராமநாதன் ஆகியோர் செய்துள்ளனர்.
710
2010-04-27T00:09:00+05:30
தமிழகம்
எம்.எல்.ஏ., உதவியை நாடும் கண்பார்வை இழந்த சுரேகா
சென்னை : டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையால் அலர்ஜி ஏற்பட்டு கண்பார்வை பறிகொடுத்த வடசென்னையை சேர்ந்த மாணவி, கண் அறுவை சிசிச்சை மேற் கொள்ள எம்.எல்.ஏ., உதவி கேட்டு, சட்டசபை வளா கத்திற்கு நேற்று தனது பெற்றோருடன் வந்தார். வடசென்னை சுங்கச் சாவடி அருகேயுள்ள டி.எச்., சாலையில் வசிப்பவர் தேவேந்திரன். இவரது மனைவி கலாவதி. இவர் களுக்கு சுரேகா (13) என்ற மகளும், நவீன் குமார்(8) என்ற மகனும் உள்ளனர். தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ் கோடி பள்ளியில் சுரேகா, ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நவீன்குமார் நான் காம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுரேகாவிற்கு காய்ச்சல் வந்துள்ளது. வீட்டின் அருகில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சுரேகாவை, தேவேந்திரன் அழைத்து சென்றார். டாக்டரும், சுரேகாவுக்கு காய்ச்சல் குணமாகுவதற் குரிய மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்திற்குள் சுரேகாவின் உடலில் அலர்ஜி ஏற்பட்டது. கண்கள் வீங்கி மூடிக் கொண்டன. உடலி லும் வீக்கம் காணப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேகாவை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப் பட்டது. அலர்ஜியின் காரண மாக அவரது உடலில் ஏற் பட்ட கோளாறு குணமானது. ஆனால், கண்களை திறக்க முடியவில்லை. "எழும்பூரிலுள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு சுரேகாவை அழைத்து செல்லுங்கள்' என, ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் பரிந் துரைத்தனர். சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சுரேகா வுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின், சுரேகாவின் கண்கள் திறக்கப் பட்டன. ஆனால், பார்வை சரியாக தெரியவில்லை. சுரேகாவுக்கு மீண்டும் பழைய நிலையில் பார்வை தெளிவாக தெரிய வேண்டும் எனில்,  ஐதராபாத்தில் உள்ள பிரபல கண் மருத் துவமனையில் மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறினர்.  மேல் சிகிச்சைக்கு செலவு செய்ய சுரேகாவின் பெற் றோரிடம் வசதி இல்லை. இதனால், எம்.எல்.ஏ., மூலம் அரசு உதவி கேட்பதற்காக சுரேகா தனது பெற் றோருடன் நேற்று சட்டசபை வளாகத்திற்கு வந்தார்.
711
2010-04-27T00:09:00+05:30
தமிழகம்
உண்ணாவிரதம்
சென்னை : பதவி உயர்வு வழங்கக் கோரி, தமிழக போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப பணியாளர்கள், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழக போக்குவரத்து துறையில், டிப்ளமோ படித்துவிட்டு தொழில்நுட்ப பணியாளர்களாக உள்ள வர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகி யும் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.  இவர்களுக்கு பணியிடம் தருவதற்கு பதிலாக, போக்குவரத்து துறை உயர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யப் பட்டு வருகிறது. இதை கண்டித்தும், டிப்ளமோ படித்த தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தொழில்நுட்ப பணியாளர் சங்கத்தினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாநில பொதுச் செயலர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார்.
712
2010-04-27T00:10:00+05:30
தமிழகம்
முற்றுகை
சென்னை : சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.,க் கள்  தங்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கூறி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 400 பேர் வேறு பணிக்கு சென்று விட்டதால், அந்த பணியிடங்கள் காலியானது. இதையடுத்து, வி.ஏ.ஓ., பணிக்கான தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் கள் சான்றிதழ் சரிபார்ப் பிற்கு அழைக்கப்பட் டனர்.இதுகுறித்து சம்பந்தப் பட்டவர்கள் டி.என்.பி. எஸ்.சி., அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, மார்ச் 31ம் தேதிக்குள் நியமன ஆணை வழங்கப் படும் என்று தெரிவித் திருந்தனர். இதற்கிடையில் சட்ட சபையில், வருவாய்த் துறை அமைச்சர் பெரிய சாமி, விரைவில் 1,576 வி.ஏ.ஓ.,க்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருந்தார்.இதையடுத்து, ஏற் கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 400 பேர் தங்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை  நுங்கம்பாக்கம், கிரீம்ஸ் சாலையில் உள்ள டி.என். பி.எஸ்.சி., அலுவலகத்தை நேற்று முற்றுகை யிட்டு மனு அளித்தனர்.
714
2010-04-27T00:15:00+05:30
தமிழகம்
மாமல்லபுரம் கடலில் மாற்றம்
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கடற்கரை கோவில் அருகில் மணல் திட்டு மறைந்து கடல்நீர் உட்புக துவங்கியுள்ளது. வங்கக்கடலில், குறிப் பிட்ட காலத்திற்கு ஒருமுறை கடல் நீரோட்டத் தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.  சில மாதங்கள் கரையில் நீண்ட தொலைவு வரை கடல்நீர் சூழ்ந்திருக்கும்.  சில மாதங்கள் கடல்நீர் உள்ளே சென்று மணல்திட்டு ஏற்பட்டு மணல்வெளி உருவாகிறது. இத்தகைய மாற்றத்தை மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் அருகில் காணமுடிகிறது. கடற்கரை கோவில் தெற்கில் 300 மீட்டர் தொலைவிற்கு மணல் திட்டு உருவாவதும், பின்னர் கடல்நீர் சூழ்வதும் வாடிக்கையாக உள்ளது.  கடந்த ஆறு மாதங்களாக மணல் திட்டு உருவாகி இருந்தது. கோவிலைச் சுற்றி குவிக்கப்பட்டிருக்கும் பாறாங்கற்களுக்கும், கடலுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. தற்போது நீரோட்டம் மாறியிருப்பதால் கடல்நீர் மணல்திட்டை படிப்படியாக கரைத்து வருகிறது. சில நாட்களில் கடல்நீர் மணல் திட்டை முழுமையாக சூழ்ந்துவிடும் நிலை உள்ளது.
715
2010-04-27T00:15:00+05:30
தமிழகம்
புதிய கட்டடத்தில் கலெக்ட்ரேட் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி எல்லப்பா நகரில் இயங்கி வந்தது. புதிதாக திருப்பருத்திக்குன்றம் சாலையில் விவேகானந்தர் நகர் எதிரில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.  ஸ்ரீசத்ய சாய் நிறுவனங்கள் தெற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார், வடக்கு மாவட்டத் தலைவர் வரதன் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர். ஆசூர் பிரசாந்தி குருகுலம் முதல்வர் சத்யநாராயணன் சொற்பொழிவாற்றினார்.பாலவிகாஸ் குழந்தைகளுக்கிடையே பேச்சுப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வேத பாராயணம், சாய் பஜன் நடந்தது. அமைப்பாளர் ராமசாமி வரவேற்றார். பிரகாஷ்குமார் நன்றி  கூறினார்.
716
2010-04-27T00:15:00+05:30
தமிழகம்
பஸ் நிலையத்தில் கழிவுநீர்: பயணிகள் முகம் சுளிப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. காஞ்சிபுரம் நகரின், மையப் பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. காஞ்சி புரம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினமும் ஏராளமானோர் காஞ்சி புரம் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலையம் பராமரிப்பின்றி சீரழிந்து வரு கிறது. நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டதால் மக்கள் வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. கடந்த சில நாட்களாக, பஸ் நிலையம் நுழைவுப் பகுதியில் கழிப்பிடம் அருகே, கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் அந்தப்பக்கம் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. நகராட்சி கழிப்பிடங்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் நகராட்சி கண்டு கொள்ளவில்லை. நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, பஸ் நிலையத்தில் கழிவு நீர் அடைப்பை சரி செய்து சுகாதாரத்தை ஏற்படுத்த, நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
717
2010-04-27T00:16:00+05:30
தமிழகம்
வரி வசூல் மையம் துவக்கம்
திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில் வரி வசூல் கணினி மையம் துவக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி, தொழில்வரி ஆகியவற்றை பேரூராட்சி ஊழியர்கள் நேரில் சென்று வசூலித்து ரசீது கொடுத்து வந்தனர்.  பொதுமக்கள் சிலர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து வரி செலுத்தி, ரசீது பெற்று சென்றனர். இந்நிலையில், தற்போது பேரூராட்சி அலுவலகத்தில் வரி வசூலிப்பிற்கான கணினி மையம் ஏற்படுத்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன் னிலை வகித்தார். காஞ்சிபுரம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுந்தரம் மையத்தை துவக்கி வைத் தார். செயல் அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.
718
2010-04-27T00:16:00+05:30
தமிழகம்
தாமதங்கள் பெரும் தடை: வீரப்ப மொய்லி வருத்தம்
ஸ்ரீபெரும்புதூர் : சட்டத் துறையில் தாமதங்கள் பெரும் தடையாக உள்ளது என ஸ்ரீபெரும்புதூரில் நடந்த சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனை குறித்த மையம் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி வருத்தத்துடன் பேசினார். ஸ்ரீ பெரும்புதூர் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணையமும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையமும் இணைந்து தேசிய அளவிலான சட்டபயிற்சி, சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனை பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது.  ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு துணைத் தலைவர் சி.ஆர்.கேசவன் தலைமை தாங்கினர். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் எச்.எல். கோகலே, சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவிளான சட்ட பயிற்சி, சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனை பயிற்சி மையத் துவக்க விழாவை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.விழாவில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைகள் அமைச்சர் வீரப்பமொய்லி பேசியதாவது, சட்டத்துறையில் தாமதங்கள் பெரும் தடையாக உள்ளது.  கர்நாடக மாநிலம் ஆசன் மாவட்டத் தில் நீர்பாசனத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. நீர்ப்பாசன திட்டத்திற்கு நில எடுப்பு குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் போடப் பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் முடிக்க நீதித்துறையிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் வழக்கை விரைவில் முடித்தனர்.  இதனால், ஆசன் நீர்ப்பாசன திட்டம் நிறைவேற்றப்பட்டு, 20 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. தண்ணீர் கிடைப்பதற்கு நீதி மறுக்கப்பட்டால் அது அனைத்து குடிமக்களுக்கும் நீதி மறுப்பதற்கு சமம். நீதியின் நோக்கமே கடைசி குடிமகன் வரை நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். தற்போது, தேசிய அமைப்புக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை வழக்கறிஞர்களுக்கு நீதித்துறையில் உயர் பதவிகள் அடையும் வகையில் சட்டப் படிப்பில் மாற்றம் கொண்டு வரவும் முயற்சி நடந்து வருகிறது. இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சட்ட கல்வி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் வீரப்பமொய்லி பேசினார். விழாவில், ஐகோர்ட்  தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் பேசியதாவது: புதிய சட்ட உதவி கல்வித்திட்டத்திற்கு நீதித்துறை சார்ந்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் இளைஞர்களை சட்ட உதவி வல்லுனர்களாக ஆக்க பயிற்சி  அளிக்கப்படுகிறது.  தேசிய சட்ட உதவி ஆணையம் மற்றும் மாநில சட்ட உதவிகள் ஆணையம் இணைந்து துணை சட்டப் பயிற்சி மற்றும் உதவிகள் வழங்கும் ஆலோசனை மையங்கள் உருவாக்கப்படுகின்றது. ஆணையத்தின் நோக்கம் அனைவருக்கும் எந்தவிதமான பாகுபாடு இன்றி நீதி கிடைக்க வேண்டும் என்பது தான். அதே நேரத்தில் இம்மாதிரியான உதவிகள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் உள்ளது.  இந்த சிக்கலை போக்க சட்ட உதவியாளர்கள் பயிற்சி துவங்கப் பட்டுள்ளது. இந்த பயிற்சி தேசிய நாட்டு நலப்பணி தொண் டர்கள், நேரு யுவக்கேந்திரா உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.விழாவில் பல்வேறு மாநில  ஐகோர்ட்  நீதிபதிகள், மாவட்ட தலைமை நீதிபதிகள், நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள், நேரு யுவக்கேந்திரா தொண்டர்கள் என 500 பேர் கலந்துகொண்டனர்.ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய இயக்குனர் மைக்கேல் வேத சிரோண்மணி வரவேற்றார். தேசிய சட்ட பயிற்சி, சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
719
2010-04-27T00:17:00+05:30
தமிழகம்
மாமல்லபுரத்தில் கருடசேவை
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் கருடசேவை உற்சவம் சிறப்பாக நடந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாள் உற்சவமான கருடசேவை உற்சவம், நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. உற்சவத்தையொட்டி, மாலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு சுவாமி வைரமுடி சேவையுடன், கருட வாகனத்தில் வீதியுலா சென்றார். கங்கைகொண்டான் மண்டபத்தில், மண்டகப்படி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. உற்சவ உபயதாரர் சீனிவாசன், கோவில் செயல் அலுவலர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று காலை 6 மணிக்கு சுவாமி தேரில் வீதியுலா செல்கிறார்.
720
2010-04-27T00:17:00+05:30
தமிழகம்
வாலிபருக்கு கத்திக்குத்து
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த காசி மகன் பிரகாஷ் (32). கடந்த 24ம் தேதி, அப்பகுதியிலுள்ள ஹார்டுவேர் கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.  அப்போது வழியில் சங்குமேட்டுத் தெருவை சேர்ந்த, அனீபா மகன் ரஹமதுல்லாவுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரஹமதுல்லா கத்தியால் பிரகாஷை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பலத்தக் காயமடைந்த பிரகாஷ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்து வரும், திருக்கழுக் குன்றம் போலீசார் ரஹமதுல்லாவை தேடி வருகின்றனர்.
721
2010-04-27T00:20:00+05:30
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
திருவள்ளூர் : மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும், நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும் அவர் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வாரந்தோறும் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் எழுத ரூ.30 முதல் ரூ.50 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இத்தொகை அவர்களுக்கு பெரிய தொகையாக இருப்பதால் மனுக்கள் எழுதக்கூட இயலாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையை களைய மாவட்ட திறனாளிகள் நல  அலுவலகம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே எவ்வித கட்டணமும் இன்றி மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை எழுத வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவ்வலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைக்கப்பட்ட உதவி மையத்தை நேற்று மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் திறந்து வைத்தார். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி மனுக்கள் இலவசமாக எழுதி தரப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான படிவங்கள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டு அவை பூர்த்தி செய்தும் கொடுக்கப்படும். அரசு நலத்திட்டங்கள் குறித்தான மாற்றுத்திறனாளிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமும் அளிக்கப்படும். இதற்கென தொண்டு நிறுவனம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட தன்னார்வலர்கள் இம்மையத்தில் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள்.மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கலெக்டர் நேரடியாக மனுக்களை பெற கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் ஒரு மணி நேரத்திலேயே மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று நடந்த மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் மூன்று சக்கர வாகனத்தையும், சக்கர நாற்காலியையும் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி. ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர். மாவட்ட கலெக்டர் வழங்கினார்
722
2010-04-27T00:20:00+05:30
தமிழகம்
3 மாதத்தில் விபத்தில் 83 பேர் பலி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மாவட் டத்தில் 295 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 83 பேர் பலியாகி உள்ளனர். 371 பேர் காயம் அடைந்துள் ளனர்.  இதேபோல், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 55 டன் ரேஷன் அரிசி போலீசாரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதுவரை 33 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 45 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். அரிசி கடத்திய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. மணல் கடத்தல் சம்பந்தமாக மூன்று மாதத்தில் 127 வழக்குகள் பதிவு செய்யயப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 லாரிகள், 52 டிராக்டர்கள், 4 ஜே.சி.பி., இயந்திரங்கள், 47 மாட்டு வண்டிகள் உட் பட 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு எஸ்.பி., வனிதா கூறினார்.
723
2010-04-27T00:20:00+05:30
தமிழகம்
வழிப்பறியில் இழந்த 40 சவரன்...மீட்பு! : திருட்டு வழக்கில் 12 பேர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட, 12 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 40 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பெண்களை பைக்கில் தொடர்ந்து வந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்வது, தொடர் கதையாகி வந்தது. இதையடுத்து திருவள்ளூர் எஸ்.பி.,வனிதா உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் திருவள்ளூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பைக்கில் வேகமாக வந்த திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராஜேஷ் (22) சிக்கினார். விசாரணையில், அவர் ஊத்துக்கோட்டை அடுத்த என்.எம்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த ராஜாவுடன் சேர்ந்து, திருவள்ளூரில் மூன்று செயின் பறிப்பு வழக்கிலும், பெரியபாளையத்தில் வீடு புகுந்து வழிப்பறி செய்த வழக்கிலும், கார் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.இவர்களிடமிருந்து, இருபது சவரன் நகைகள், ஒரு குவாலிஸ் கார், மூன்று பைக்குகள், இரண்டு டி.வி.டி பிளேயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். திருத்தணியில் நான்கு பைக்குகளில் வந்த அம்பத்தூர் பீட்டர் (37), காவேரிப்பாக்கம் சரவணன் (24), அரியூர் செல்வம் (26), வேளச் சேரி ரமேஷ்குமார் (38), வேலூர் லோகநாதன் (25), பானாவரம் நித்தியானந்தம் (24), கொண்டபாளையம் தசரதன் (23) ஆகிய ஏழு பேரை சந்தேகத்தின் பேரில், கைது செய்து போலீசார் விசாரித்தனர். இவர்கள் அனைவரும் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் வழிப்பறி, செயின் பறிப்பு, பைக் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சவரன் நகைகள், 6 பைக்குகள், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை பகுதியில் வாணியன்சத்திரம் அருகே, பைக்கில் வந்த புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்த விஜி (23), ராஜேஷ் (23), ரூபன் (22) ஆகிய மூவரையும் சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில், இவர்கள் அனைவரும் ஊத்துக்கோட்டை, ஆரணி, வெங்கல், சோழவரம் ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடமிருந்து 10 சவரன் நகைகள், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு மாவட்டத்தில் மொத்தம் 40 சவரன் நகைகள், ரொக்கம் ரூபாய் ஒரு லட்சம், ஒரு குவாலிஸ் கார், 10 பைக்குகள், 2 டிவிடி பிளேயர்கள், 2 மொபைல் போன்கள் மற்றும் 2 வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 16 லட்சம் ரூபாய். இவ்வாறு மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 12 குற்றவாளிகளையும் கைது செய்த போலீசார் குற்றவாளிகளை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
724
2010-04-27T00:21:00+05:30
தமிழகம்
தமிழக அரசு சார்பில் விளையாட்டு போட்டி
திருவள்ளூர் : தமிழக அரசின் விளையாட்டு விடுதி மற்றும்  பள்ளிகளுக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தந்த ஊராட்சிகளில் நடத்தப்படவுள்ளது. வரும் மே மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. 7,8,9 மற்றும் 11ம் வகுப்பிற்கான தடகளம், கூடைபந்து, கால்பந்து, ஹாக்கி, கைபந்து, கிரிக்கெட்,  நீச்சல், குத்துச் சண்டை ஆகிய விளையாட்டுகளில் சேர்க்கை நடைபெறுகிறது. மே 3ம் தேதி வில்லிவாக்கம், பூண்டி, 4ம் தேதி பூந்தமல்லி, திருவாலங்காடு, 5ம் தேதி ஆர். கே.பேட்டை, கடம்பத் தூர், மீஞ்சூர், திருவள் ளூர், 6ம் தேதி பள்ளிப் பட்டு, சோழவரம், புழல், கும்மிடிப்பூண்டி பகுதிகளிலும், 7ம் தேதி எல்லாபுரம், திருத்தணி பகுதிகளில் இந்த தேர்வு போட்டி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: மாவட்ட விளையாட்டு அலுவலர் மொபைல் எண் 99403 41482, 98412 58123 தொடர்புக் கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
725
2010-04-27T00:21:00+05:30
தமிழகம்
போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது
பொன்னேரி : போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஐவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பீர், பிராந்தி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தில் "டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது.  இந்த கடைக்கு அருகில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த லோகு (எ) லோகநாதன்(45) என்பவர் அரசு அனுமதியுடன் பார் நடத்தி வந்தார்.  இங்கு போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., வனிதா உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., சிற்றரசு, டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு புங்கம்பேடு "டாஸ்மாக்' கடை அருகில் உள்ள பாரில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலி மது விற்கப்படுவது தெரிந்தது.  இதையடுத்து பார் உரிமையாளர் லோகநாதனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் "டாஸ்மாக்' கடை மூடிய பிறகு, இரவு முழுவதும் இந்த போலி மதுபானங்களை விற்பனை செய்வதும், இதற்காக புதுச்சேரி பகுதியில் இருந்து மொத்தமாக சரக்குகள் கொண்டுவரப்பட்டதும் தெரிந்தது. மேலும் புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்படும் பீர், பிராந்தி உள்ளிட்ட மதுவை பிரபல பீர் கம்பெனி(கிங்பிஷர்) பெயரிலும், எம்.சி., பிராந்தி பெயரிலும் லேபிள் ஒட்டி விற்பனை செய்துள்ளனர். பார் அருகில் அன்சாரி(23) என்பவருக்கு சொந்தமான குடோனில் இவற்றை பதுக்கி வைத்ததும் தெரிந்தது. சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்திலும் போலி மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது.  மதுவிலக்கு போலீசார் லோகநாதன்(45), குடோன் உரிமையாளர் அன்சாரி(23), பார் பணியாளர்கள் கணேஷ்(56),  முத்து (26), கணேசன்(28) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 840 போலி பீர் பாட்டில்கள், 96 பிராந்தி பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 204 பிராந்தி பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். போலி, மதுபான தொழிற்சாலைக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ காரையும் (டிஎன் 03 எல் 3) பறிமுதல் செய்தனர்.
726
2010-04-27T00:22:00+05:30
தமிழகம்
23 அடி உயர ஆஞ்சநேய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் : ஸ்ரீபக்த விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தனம் மற்றும் விமான மகா சம்ப்ரோக்ஷணம்(கும்பாபிஷேகம்) நேற்று காலை நடந்தது. இக்கோவில் சன்னிதி எதிரே அமைக் கப்பட்டுள்ள 23 அடி உயர ஆஞ்சநேய சுவாமி சிலைக் கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் பாலாம்பிகை உடனுறை தழுவகொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஸ்ரீபக்த விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி கோவிலும் உள் ளது. சிவாலயத்தில் ஆஞ்சநேயசுவாமி கோவிலும் உள்ளது விசேஷமாகக் கருதி, பக்தர்களால் வணங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைத்து, கடந்த 24ம் தேதி முதல் கால யாக பூஜையும், நேற்று முன்தினம் இரண் டாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு திருவாராதன நிகழ்ச்சியும், தொடர்ந்து கும்பம் புறப்பாடும் நடந்தது. காலை 9.30 மணிக்கு கோவில் கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதே நேரத்தில், சன்னிதிக்கு முன் அமைந்துள்ள 23 அடி உயர ஸ்ரீபக்த விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷே கமும் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.
728
2010-04-27T01:37:00+05:30
தமிழகம்
பொது வேலை நிறுத்தம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தர்மபுரி: நாடு முழுவதும் இன்று நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பந்த் நடத்திட எதிர்கட்சிகள்  அழைப்பு விடுத்துள்ளது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  நாளை (ஏப்., 28) சித்ரா பவுர்ணமி என்பதால், தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் கோவில்களுக்கு நேற்று முதல் செல்ல துவங்கினர். இதற்காக மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள்  இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பழநிக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல் மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொது வேலை நிறுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டுள்ளது.இது குறித்து தர்மபுரி எஸ்.பி., சுதாகர் கூறும் போது,""இன்று நடக்கும் பொது வேலை நிறுத்தத்தினால் மக்களுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள்  ச்சமின்றி வழக்கம் போல் தங்கள் பணிகளை கவனிக்கலாம்,'' என்றார். பஸ் ஸ்டாண், அரசு அலுவலங்கள், ரயில்வே ஸ்டேஷன், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும், ரோந்து பணியிலும் போலீஸார் ஈடுபடுகின்றனர்.
730
2010-04-27T01:38:00+05:30
தமிழகம்
இன்று ஸ்டிரைக் : அ.தி.மு.க., அழைப்பு
தர்மபுரி: நாடு முழுவதும் இன்று நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை இன்று நடத்துகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகிறது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு  விடுத்திருப்பதோடு, கூட்டணி கட்சிகள் முழு அளவில் "பந்த்' போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.  நேற்று அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து கடைகளில் நோட்டீஸ் விநியோகம் செய்து ஆதரவு கேட்டனர்.ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து துவங்கிய இந்த அழைப்பு பிரச்சாரம் நகரின் முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்த சாலைகளில் உள்ள கடைகளில் அழைப்பு விடுத்தனர். "இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் "பந்த்' போராட்டத்தின் போது, கடைகள் அடைக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தனர்.
731
2010-04-27T01:39:00+05:30
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், டவுன் பஞ்சாயத்து மற்றும் மாரண்டஹள்ளி லயன்ஸ் சங்கம், சி.எஸ்.ஐ.,சீயோன் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமை டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு துவக்கி வைத்தார். சங்க தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் டாக்டர் நம்ருதா தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனைகள் செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. கண் புரை உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஏற்பாடுகளை சங்க நிர்வாக செயலர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.