news_id
int64
201
2.26M
news_date
stringlengths
25
29
news_category
stringclasses
3 values
news_title
stringlengths
1
636
news_article
stringlengths
1
138k
370
2010-03-30T01:16:00+05:30
தமிழகம்
தெருக்களில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் நலம் வாழ இந்திய மனநல மருத்துவர் சங்கம் உதவிக்கரம்
கோவை : உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டிகோவை யில் நடைபாதைகள் அழகு படுத்தப்படுகின்றன.  ஆனால், நடைபாதைகளை  ஆக்கிரமித்துக் கொள்ளும் மனநோயாளிகளை தவிர்க்க வழியில் லாமல் திணறுகிறது மாவட்ட நிர்வாகம். இவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து குணமாக்க, இந்திய மனநல மருத்துவர் சங்கம் முன் வந் துள்ளது. கோவை உட்பட தமிழகம் முழுவதும் ஏராளமான மனநோயாளிகள் ரோட்டில் சுற்றித் திரிகின்றனர். இவர்களில் பலர் பெரும்பாலும் பிறருக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆடை களைந்த நிலையில் பொது இடங்களில் சுற்றித் திரிவதால் பொது மக்களின் வெறுப்புக்கு ஆளாகின்றனர்.வேறு சிலர் கையில் கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதால், இவர்களை காணும் பொதுமக்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். பிச்சைக் காரர்களுடன் கலந்து ஆங்காங்கே சுற்றித் திரியும் இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அப்புறப்படுத்தப்பட்டனர்.ஒரே வாரத்தில் மீண்டும் கோவை திரும்பிய இவர்கள், நகரில் சுற்றித் திரிந்து வருகின்றனர். உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ரோட்டில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை அப்புறப்படுத்துவது மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் சவால் ஆக உள்ளது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அளிக்க முன் வந்துள்ளது இந்திய மனநல மருத்துவர் சங்கம். இச்சங்கம் ஏற்படுத்தியுள்ள கொங்குநாடு மனநல அறக்கட்டளை மூலம், சேவை அடிப்படையில் மனநல சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவையில் சுற்றித் திரியும் மனநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து குணப்படுத்த இச்சங்கத்தினர் முன் வந்துள்ளனர். இது பற்றி இச்சங்கத்தின் கோவை மைய தலைவர் டாக்டர் ஜெயராமன் கூறியதாவது:கோவை வீதிகளில் மனநோயாளிகள் பலர் உண்ண உணவு, உடை, ஆதரவு இல்லாமல், சுத்தமில்லாமல் சுற்றித் திரிகின்றனர். மழையும் வெயிலும், காயமும் காய்ச்சலும் இவர்களுக்கு பொருட்டு அல்ல. மனநலம் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் பசி, உடல் இச்சை, வலி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் உண்டு.பெண் மனநோயாளிகளில் சிலர், பிச்சைக்காரர்களால் கற்பழிக்கப்பட்டு தெருவில் குழந்தை ஈன்றுள்ளனர். பரிதாபத்துக்குரிய இவர்களைக் கண்டு அனைவரும் பயப்படுகின்றனர்; அருவருப்பு அடைகின்றனர். சிலர் இவர்களை ஓட,ஓட விரட்டி தாக்குவதால் கோபத்தில் அவர்களும் திரும்பத் தாக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.சிலரை நள்ளிரவில் "சந்தேக கேஸ்' என போலீசார் கைது செய்து பின் விடுவிக்கின்றனர். நீண்டகால மனநல மருத்துவ சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த எங்கள் டாக்டர்களால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இவர்களுக்கு சிகிச்சை அளித்து, 45-90 நாட்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.சிகிச்சைக்குப் பின் மனநலம் திரும்ப கிடைத்தவர்களை, உறவினர்களிடம் அனுப்பலாம்; தக்க சம்பளம் தரும் பணியில் ஈடுபடுத்தலாம்; தங்குமிட பணி நிறுவனங்களில் சேர்க்கலாம். மனநலம் குன்றியே இருப்பவர்களை உறவினர்களிடம் அனுப்பலாம்; தன்னார்வ மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பலாம்.இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி உதவ வேண்டும். 10-15 பேர் தங்க வசதியாக ஒரு இடம் தேவை. பயன்படுத்தப்படாத பள்ளி, மருத்துவமனை கட்டடங்களை அளிக்கலாம். நான்கு நர்சுகள், ஆறு பணியாளர்களும் தேவை. சேவைக்கென உள்ள எங்கள் டாக்டர் குழுக்களை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, மருந்துகளை இலவசமாக அளிக்க தயாராகஉள்ளோம். பரிதாபத்துக்குரிய மனநலம் குறைந்தவர்களை நிரந்தரமாக மீட்டு, நல் வாழ்க்கைக்கு கொண்டு வர இதன் மூலம் முடியும்.உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், கோவை தெருக்களையும் நடைபாதைகளையும் பளிச்சிட செய்யும் இந்த முயற்சியை நிறைவேற்ற மாநகராட்சி உதவ வேண்டும்.இவ்வாறு, டாக்டர் ஜெயராமன் கூறினார். இது பற்றி மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவை மனநல மருத்துவர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கமிஷனர், தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
372
2010-03-30T03:52:00+05:30
தமிழகம்
இன்று ஓட்டு எண்ணிக்கை
தர்மபுரி:பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று நடக்கிறது.பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் இன்பசேகரன், அ.தி.மு.க., அன்பழகன், பா.ம.க., தமிழ்குமரன், தே.மு.தி.க., காவேரிவர்மன் மற்றும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர்.தொகுதியில் இரண்டு லட்சத்து 1,008 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 27ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவில் 84.95 சதவீதம் பதிவானது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 755 ஓட்டுகள் பதிவாகின.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலை விட, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து கட்சிகளும், வாக்காளர்களை கவர பணம் மற்றும் இலவசப் பொருட்களை வழங்கி, நன்றாக, "கவனித்து'ள்ளதால், வேட்பாளர்கள் ஓட்டுப் பதிவு எண்ணிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.தேர்தல் துவங்கியதில் இருந்து, வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் தி.மு.க., இருந்தாலும், ஓட்டு வித்தியாசத்தின் எண்ணிக்கையை அறிய ஆவலாக அக்கட்சியினர் உள்ளனர். இரண்டாம் இடத்தை பிடிப்பதில், அ.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டது. வன்னிய மக்கள் அதிகம் இருப்பதால், "தங்களுக்கே வெற்றி' என, ஆரம்பத்தில் இருந்து பா.ம.க.,வினர் கூறி வருகின்றனர்."தொகுதியில் வன்னியர்களுக்கு அடுத்தப்படியாக தலித், மலைவாழ் மக்கள் அதிகம் இருப்பதால், அந்த ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும்' என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.மேலும், "கடந்த கால தேர்தல்களை விட, கிராம பகுதியில் ஓட்டு சதவீதம் அதிகரித்து இருப்பதால், வெற்றி கிடைக்கும் அல்லது இரண்டாம் இடம் கிடைக்கும்' என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.இன்று காலை தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக, நேற்று, கலெக்டர் அமுதா தலைமையில், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் 100 ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் அலுவலர் மகேஸ்வரி, தேர்தல் பார்வையாளர் சஞ்சய்பூஸ் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஓட்டு எண்ணிக்கை மையத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில், போலீசார் ஈடுபடுகின்றனர்.ஓட்டப் பதிவு அன்று வன்முறை நடந்த மேச்சேரியிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர்.காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கையும், தொடர்ந்து 14 டேபிள்கள் மூலம் ஓட்டு எண்ணிக்கையும் துவங்குகிறது. 17 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பதால், பகல் 12 மணிக்குள் வெற்றி வேட்பாளர் யார் என்பது தெரிந்து விடும்.வெற்றி பெறுபவர், புதிய சட்டசபைக்கு செல்லும் முதல் வேட்பாளர் என்ற பெருமையை பெறுவதோடு, சட்டசபை வரலாற்றிலும் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
374
2010-03-30T03:56:00+05:30
தமிழகம்
தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக சோனியா நியமனம்
புதுடில்லி:காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2004ம் ஆண்டு தேசிய ஆலோசனை கவுன்சில் அமைக்கப்பட்ட போது அதன் தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். "ஒரே நபர் ஆதாயம் தரும் இரு பதவிகளை வகிக்கக்கூடாது' என்ற பிரச்னை எழுந்ததால், 2006ம் ஆண்டு மார்ச்சில் இந்த பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2008ம் ஆண்டுடன் தேசிய ஆலோசனை கவுன்சிலின் காலம் முடிந்து போனது.தற்போது, புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனை கவுன்சிலின் தலைவராக சோனியா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். காபினட் அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்துள்ள இந்த பதவியின் காலம் நான்கு ஆண்டுகள். இந்த ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினர்களை, சோனியா விரைவில் அறிவிக்க உள்ளார். ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்களின் பதவி காலம் ஓராண்டு மட்டுமே. தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்.கடந்த முறை கூட்டணி ஆட்சி ஏற்பட்டதால் குறைந்த பட்ச பொது அம்ச திட்டத்தைச் செயல்படுத்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். தகவல் அறியும் உரிமை சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவை இந்த ஆலோசனை கவுன்சில் மூலம் ஏற்படுத்தப்பட்டவை. இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்பட, ஆலோசனை கவுன்சில் அதிக கவனம் செலுத்த உள்ளது.
375
2010-03-30T03:58:00+05:30
தமிழகம்
விதித்த வரியை டில்லி அரசு வாபஸ் பெற்றது
புதுடில்லி: டீ, காபி, பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு மீது விதிக்க திட்டமிட்டிருந்த வரி விதிப்பை, டில்லி அரசு நேற்று வாபஸ் பெற்றது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, முதல்வர் ஷீலா தீட்சித் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்தது.டில்லி சட்டசபையில் 2010-11ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்த விவாதம் கடந்த சில நாட்களாக நடந்தது. விவாதத்திற்கு நேற்று பதில் அளித்துப் பேசிய அம்மாநில நிதி அமைச்சர் வாலியா கூறியதாவது:இயற்கை எரிவாயு, தேயிலை, பாத்திரங்கள், பிரஷர் குக்கர் போன்றவற்றின் மீதான வரியை தற்போதுள்ள 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அது வாபஸ் பெறப்படுகிறது.அதேபோல், சமையல் எரிவாயு மீதான 4 சதவீத வாட் வரியும் ரத்து செய்யப்படுகிறது. இருந்தாலும், சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை வாபஸ் பெற்றது தொடரும். எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 310 ரூபாயாக உயரும்.வரி விதிப்பை வாபஸ் பெறுவதன் மூலம், அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். மேலும், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.இவ்வாறு வாலியா கூறினார்.
376
2010-03-30T03:59:00+05:30
இந்தியா
காங்கிரஸ் சேவா தளத்தையும் கவனிப்பார் ராகுல்
புதுடில்லி:காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தற்போது இளைஞர் காங்கிரசுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போல், சேவா தளத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பார் என்ற கருத்து எழுந்திருக்கிறது.டில்லியில், காங்கிரஸ் கட்சியின் "சேவா தள'த்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் சோனியா கலந்து கொண்டார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு அடுத்து, சேவா தளத்துக்கு சோனியா தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய கட்சி பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக், "பொதுச் செயலர் ராகுல், சேவா தளத்தின் மீது கவனம் செலுத்தி ஆதரவளித்தால், அதிலுள்ள சில குறிப் பிட்ட குறைபாடுகளை எங் களால் நிச்சயம் நீக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு பதிலளித்த சோனியா, "வாஸ்னிக்கே இக்கருத்தை ராகுலிடம் சொல்லலாம்' என்றார்.கர்நாடக மாநிலத்தில் உள்ள கதப்ரபா என்ற இடத்தில் நடந்த சேவா தளத்தின் முகாமில் ராகுல் கலந்து கொண்டதிலிருந்து தான், அவரது தீவிர அரசியல் பயணம் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தான் 2004ல் அவர், அமேதி தொகுதியில் வேட்பாளராக நின்றார்.
377
2010-03-30T04:01:00+05:30
General
மெட்ரோ ரயில்களில் பயங்கர குண்டு வெடிப்பு: பலி 37:ரஷ்யாவில் பெண் தற்கொலைப்படை கைவரிசை
மாஸ்கோ:மாஸ்கோவில் மெட்ரோ ரயில்களில் பெண் தற்கொலைப் படையினர் நேற்று நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில், 37 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த பெரிய தாக்குதல் இது என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயணிகள் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருப்பது மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுரங்கப் பாதைகள் வழியாக இயங்கும் இந்த ரயில் போக்குவரத்தின் மூலம், தினமும் 50 லட்சம் பேர் பயணிக்கின்றனர். உலகின் மிகவும், "பிசி'யான போக்குவரத்தில் ரஷ்ய மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு முக்கிய இடம் உண்டு.உள்நாட்டு பாதுகாப்பு மையமாக விளங்கும் ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடத்தின் அருகில் தான் உள்ளன.இங்குள்ள லுப்யங்கா என்ற மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று ஒரு ரயில் நின்றுக் கொண்டிருந்தது. மிகவும், "பிசி'யான நேரம் என்பதால், ஏராளமான மக்கள் ரயிலிலும், நடைபாதையிலும் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ரயிலின் இரண்டாவது பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.அங்கு நின்றுக் கொண்டிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். ரயில்வே ஸ்டேஷன் முழுவதும், ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. குண்டு வெடிப்பில் தூக்கி வீசப்பட்ட உடல்கள், ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில், சிதறிப் போய் கிடந்தன. ரயில் பெட்டிக்குள்ளும், நடைபாதையிலும் உடல்கள் கிடந்தன. இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தோர், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவம் நடந்த 40 நிமிடங்கள் கழித்து, அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முதல் குண்டு வெடிப்பு நடந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, நான்கு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்து உள்ள பார்க் குல்ட்ரி என்ற ஸ்டேஷனில் தான், இரண்டாவது குண்டு வெடிப்பு நடந்தது. ரஷ்யாவின் சிட்டி சென்டரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஒரு ரயில், இந்த ஸ்டேஷனில் நின்றபோது, ரயிலின் மூன்றாவது பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பிலும் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர்.இதில் 12 பேர் பலியாயினர்; மேலும் பலர் காயமடைந்தனர். 40 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர குண்டு வெடிப்புகளில் மொத்தம் 37 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது. பெண் மனித வெடிகுண்டு: குண்டு வெடிப்பு குறித்து மாஸ்கோ மாநகர மேயர் யுரி லுஸ்கோவ் கூறியதாவது:குண்டு வெடிப்பு நடந்த லுப்யங்கா ரயில் நிலையத்தில், சிதறிய நிலையில் ஏராளமான உடல்கள் கிடந்தன. இதில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. அதை சோதனையிட்டபோது, அந்த உடலுடன் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட, "பேக்' இணைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பார்க் குல்ட்ரி ரயில் நிலையத்திலும் இதேபோல் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட் டது. மனித வெடிகுண்டுகளான இந்த பெண்கள் தான், இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களையும் நிகழ்த்தியுள் ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர்கள் டி.என்.டி., ரக வெடிமருந்தை பயன்படுத்தி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின் றன. ரயில் நிலையங்களில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். பிரதமர் விளாடிமிர் புடினுக்கு, இதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்.இவ்வாறு யுரி லுஸ்கோவ் கூறினார். யார் காரணம்?ரஷ்யாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் செசன்யா பயங்கரவாதிகள் இத்தாக்குதலுக்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது. ரஷ்ய குடியரசில் தென்மேற்கில் உள்ளது செசன்யா. இது காகசஸ் மலைப் பகுதியில் உள்ளது.இதன் மக்கள் தொகை எட்டு லட்சம் பேர். இதில் சன்னி முஸ்லிம்களும் ரஷ்ய பாரம்பரிய கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.கடந்த பிப்ரவரியில் இன்குஷெடியா என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகள், ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டனர். இங்கு வாழும் பயங்கரவாத அமைப்பு தலைவர் டொகு உமரோவ் அப்போது, "எங்கள் தாக்குதல் இனி ரஷ்ய நகரங்கள் பலவற்றில் இருக்கும்' என்று கோபமாக பேட்டியளித்தார். தற்போது இந்த பயங்கரவாத அமைப்பின் இணையதளத்தில் இரட்டை குண்டு வெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்தியா கடும் அதிர்ச்சி:ரஷ்யாவில் நடந்த குண்டு வெடிப்புக்கு, இந்தியா கடும் அதிர்ச்சி தெரிவித்ததுடன் கண்டனமும் தெரிவித்துள்ளது.ரஷ்ய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் மெட்வதேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதம்:மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது கேட்டு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானது, அதிர்ச்சி அளிக்கிறது. இது, மிகவும் மோசமான தாக்குதல். இது போன்ற வன்முறை சம்பவங்கள், மிகவும் கண்டனத்துக்குரியவை. விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு, இந்திய மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும், ரஷ்ய குண்டு வெடிப்பை கண்டித்துள்ளார்.
378
2010-03-30T04:01:00+05:30
General
ஆப்கனுக்கு ஒபாமா ரகசிய பயணம்: கர்சாய் அரசு ஊழலை ஆதரிக்கவில்லை
காபூல்:அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு திடீரென ரகசிய பயணம் மேற்கொண்டார். தலிபான்களை ஒடுக்குவதில் முன்னுரிமை காட்டவும், கர்சாய் அரசில் ஊழல் குறைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதிலும் அக்கறை காட்டினார் ஒபாமா.அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்னர் செனட் உறுப்பினராக இருந்த போது, கடந்த 2008ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ முகாம்களுக்கு பயணம் செய்துள்ளார். அதிபராக பொறுப்பேற்ற பின், தலிபான்களை ஒடுக்க கூடுதலாக 30 ஆயிரம் அமெரிக்க வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக உயரும்.ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழ்நிலையை ஆராய்வதற்காக நேற்று முன்தினம் வாஷிங்டனிலிருந்து விமானப் படை விமானம் மூலம் புறப்பட்டு, திடீரென பாக்ரம் விமானப்படை தளத்தில் இறங்கினார். அங்கு, அமெரிக்க தளபதி, "நேட்டோ' தளபதி உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசினார். அதன் பின், காபூல் நகரத்தில் உள்ள கர்சாயின் மாளிகைக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.கர்சாய் அரண்மனையில், ஒபாமாவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒபாமாவும், கர்சாயும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். காபூலில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளும்படி கர்சாய் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களிடம் ஒபாமா வற்புறுத்தினார். மேலும், பல விஷயங்கள் குறித்து விவாதிக்க, மே மாதம் 12ம் தேதி அமெரிக்கா வரும்படி கர்சாய்க்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.முன்னதாக அவர் பாக்ரம் விமானப்படை தளத்தில் அமெரிக்க வீரர்களிடையே பேசியதாவது:அல்-குவைதாவையும், தலிபான்களையும் அடியோடு ஒழிப்பது தான் நமது குறிக்கோள். பாதுகாப்பை பலப்படுத்தாமல், அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் பயங்கரவாதத்தை நம்மால் வேரறுக்க முடியாது. தலிபான் மற்றும் அல்-குவைதாவின் பாதுகாப்பு கூடாரமாக ஆப்கானிஸ்தான் தற்போது இல்லை. தலிபான்களை பலவீனப்படுத்தியுள்ளோம். அல்-குவைதா மற்றும் அதன் தோழமை அமைப்புகள், அமெரிக்கா மற்றும் ஆப்கனுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளன.ஆப்கானிஸ்தான் பாதுகாப்பில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் மேம்பட வேண்டியுள்ளது. ஆப்கன் மற்ற நாடுகளின் தலையீடு இல்லாமல் சுயமாகச் செயல்பட பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியுள்ளது.ஆப்கன் மீண்டும் தலிபான் வசம் சென்றால், இந்நாட்டு மக்கள் வளத்தையும், முன்னேற்றத்தையும் இழக்க வேண்டி வரும். மீண்டும் அல்-குவைதாவின் கூடாரமாக ஆப்கன் மாறிவிடும். இதனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும்.இவ்வாறு ஒபாமா பேசினார்.
380
2010-03-30T04:09:00+05:30
தமிழகம்
விவசாயிகளுக்கு பயிற்சி
திருமானூர்:திருமானூர் வட்டார வேளாண் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் குலமாணிக்கத்தில் நடந்தது.வேளாண் துணை இயக்குனர் சிவகுமார் வரவேற்றார். ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் வில்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட கலெக்டர்(பொ) பிச்சை தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில், பயறு வகை உற்பத்தி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பரவ வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை வேளாண் துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.வேளாண் துணை இயக்குனர் (மத்தியதிட்டம்) விஜயகுமார் பயறு வகைகளின் முக்கியத்துவம், தனி நபர் தேவை ஆகியவை குறித்து விளக்கி பேசினார். ரோவர் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து துவரை, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயறு சாகுபடி முறைகள் குறித்தும், திருமானூர் வட்டாரத்திற்குட்பட்ட பயறு வகை ரகங்கள், உரமிடல் மற்றும் நீர்ப்பாசன முறைகள் குறித்து விளக்கி கூறினார். ரோவர் அறிவியல் மைய விஞ்ஞானி சங்கர் பயறு வகைகளை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கி கூறி,பூச்சி மருந்துகளின் வீரியம், அதனை பயன்படுத்தும் முறைகள் ஆகியவை குறித்தும் விளக்கினார். தனலட்சுமி சீனிவாசன் கலைக்கல்லூரி திட்ட அலுவலர் முத்துகிருஷ்ணன் பயறுகளை தாக்கும் நோய்கள் குறித்தும், இயற்கை முறையில் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினார். பெரம்பலூர் வேளாண் அலுவலர்(மத்திய அரசு) மோகன் தற்போது செயல்பட்டுவரும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.முகாம் ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் காசிநாதன் செய்திருந்தார். உதவி வேளாண் அலுவலர்கள் சீத்தாராம், ராதா, முருகன், வேல்முருகன் மற்றும் 100 விவசாயிகள் கலந்து கொண்டனர். திருமானூர் வேளாண் உதவி இயக்குனர் லதா நன்றி கூறினார்.
381
2010-03-30T04:11:00+05:30
தமிழகம்
ஜெயங்கொண்டம் பகுதியில் மின்தடை நேரம் மாற்றி அமைப்பு
ஜெயங்கொண்டம்:ஜெயங்கொண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் தா.பழூர், உட்கோட்டை, தென்னவநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையும், இரவு 3 மணிமுதல் காலை 6 மணிவரையும் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். கல்லாத்தூர், உடையார்பாளையம், மேலணிக்குழி, ஸ்ரீபுரந்தான், சோழமாதேவி ஆகிய பகுதிகளில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையும் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். மின் தடை நேரம்: கல்லாத்தூர்,மேலணிக்குழி ஆகிய பகுதிகளில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையும், சோழமாதேவி, ஸ்ரீபுரந்தான், உடையார்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரையும், உட்கோட்டை பகுதியில் மதியம் 12 மணிமுதல் மதியம் 3 மணிவரையும், தா.பழூர்,தென்னவநல்லூர் ஆகிய பகுதிகளில் மாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரையும் மின் தடை செய்யப்படும். மற்ற நேரங்களில் இருமுனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.ஆண்டிமடம்: இதே போலஆண்டிமடம் மற்றும் ஓலையூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் ஆண்டிமடம், அய்யூர், அழகாபுரம், சிலம்பூர் ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணிமுதல் மதியம்12 மணிவரை மும்முனை மின் விநியோகம் செய்யப்படும். இதே பகுதியில் மதியம் 3 மணிமுதல் மாலை 6 மணிவரை மின் தடை செய்யப்படும் .பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான் ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணிமுதல் மதியம் 12 மணிவரை மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். அதே பகுதியில் மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை மின்தடை செய்யப்படும். விளந்தை, கவரப்பாளையம், வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையும், மதியம் 1 மணிமுதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். இதே பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை மின் தடை செய்யப்படும். ராங்கியம், ஸ்ரீராமன்,பெரியகருக்கை, நாகம்பந்தல் ஆகிய பகுதிகளில் இரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணிவரையும், மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிவரையும் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். இதேபகுதியில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை மின் தடை செய்யப்படும் என மின் உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ்(ஜெயங்கொண்டம்), தேவேந்திரன்(ஆண்டிமடம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
383
2010-03-30T18:29:00+05:30
இந்தியா
tஞுண்tttt
sdfsdfsdfsdfsdfsd
385
2010-03-31T00:33:00+05:30
இந்தியா
சொல்கிறார்கள்
நல்லவங்க மட்டும் தான் ரோட்ல நடமாடணும் : தஞ்சை எஸ்.பி., செந்தில்வேலன்: எனக்கு சொந்த ஊர் மதுரை. என் அப்பா, தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி, அம்மா ஆசிரியை. எங்கள் வீட்டில், நான் தான் கடைசி பையன். என் தாத்தா போலீசா இருந்தவர். நானும் போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, என் அப்பா டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார். முதலில் அப்பா ஆசையை நிறைவேத்த, டாக்டருக்கு படிச்சேன். நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, அப்பா இறந்துட்டார்.மொத்த குடும்ப பாரமும், என் தோளில். இருந்தாலும், மருத்துவம் முடிச்சு அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்தேன். போலீஸ் கனவோடு இருந்த நான், வேலை பார்த்துக்கிட்டே படிக்க ஆரம்பிச்சேன். வேலை காரணமா, சில நாட்கள் தூங்க முடியாது.நோயாளிகள் வந் துட்டே இருப்பாங்க. டியூட்டி டைமில் படிக்க முடியாது. அதனால், பஸ்ல போகும் போதும், டீ குடிக்கும் போதும், இரண்டு நிமிடம் கிடைச்சாலும் படிச்சேன். தேர்வு எழுத வேண்டிய நேரம் வந்தது.என்மேல் எனக்கே சின்ன சந்தேகம் வந்தாலும், நம்பிக்கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். இந்திய அளவில் 86வது ரேங்க். ஐ.ஏ.எஸ்., ஆகவே வாய்ப்பு கிடைச்சது. ஆனால், ஐ.பி.எஸ்., என் சாய்ஸ்னு உறுதியா இருந்தேன். ஐ.பி.எஸ்., ஆனேன்.ஜம்மு- காஷ்மீரில் கடும் குளிரில் ராணுவப் பயிற்சி, ராஜஸ்தானில் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பல நாட்கள் பயிற்சி. தொடர் பயிற்சியால், உடம்பு உறுதி ஆச்சு; மனசு பக்குவம் ஆச்சு.முதலில் ராமநாதபுரம், சிதம்பரம்னு வேலை பார்த்துட்டு, இப்போ தஞ்சைக்கு இடம் மாறியிருக்கேன். இங்க வந்த கொஞ்ச நாள்ல ரவுடிகள் பட்டியலை எடுத்து, தீவிரமா கண் காணிக்க ஆரம்பிச் சோம்.இதனால் ரவுடிகளின் சேட்டை, குறைய ஆரம்பிச்சிடிச்சு. இது ஒரு நல்ல துவக்கம். நல்லவங்க மட்டும் தான், ரோட் டில் நடமாடணும். அப்படி ஒரு சூழல் வர்ற வரைக்கும், எனக்கு நிம்மதியான உறக்கம் இல்லை.
390
2010-03-31T00:38:00+05:30
தமிழகம்
உலகில் நீளமான புத்தக தலைப்பு: கின்னஸ் சாதனைக்கு ஸ்ரீவி., தொழிலாளி முயற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளி மணிகண்டன், கின்னஸ் சாதனைக்காக, புத்தக தலைப்பை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார்.நகை தொழிலாளியான இவர், தனது தொழிலோடு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியிலும், தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 2007ல் 24 மி.மீ., அகலம், நீளத்தில் செஸ் போர்டை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.மேலும், 163 கிராம் வெள்ளியில் மின் விசிறி, 110 கிராம் வெள்ளியில் மோட்டார் பைக், நான்கு கிராம் தங்கத்தில் மோதிர வாட்ச், 8 மி.மீ., நீள, அகலத்தில் திருக்குறள் புத்தகம் போன்றவற்றை வடிவமைத்து, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.கடந்த 2007ல் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் 1,433 எழுத்துக்களில், 290 வார்த்தைகளில் புத்தக தலைப்பை வைத்திருந்தது கின்னஸ் சாதனையாக உள்ளது. இவர், தற்போது நடிகர் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்திற்கு, 1,458 எழுத்துக்களில் 330 வார்த்தைகளில் தலைப்பு வைத்துள்ளார்.மணிகண்டன் கூறுகையில், "ஒரு கின்னஸ் சாதனையும், நான்கு லிம்கா சாதனையையும் செய்துள்ளேன். தற்போது, இந்த நீளமான புத்தக தலைப்பை, கடந்த ஆறு மாதமாக முயற்சி செய்து முடித்துள்ளேன். இதை, கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்க உள்ளேன்' என்றார்.
391
2010-03-31T00:39:00+05:30
தமிழகம்
பென்னாகரத்திலும் தி.மு.க., அமோகம் : இரண்டாவது இடத்தை பிடித்தது பா.ம.க., : டிபாசிட்டை இழந்தன அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,
சென்னை : மதுரை மத்தி இடைத்தேர்தலில் ஆரம்பித்து, தொடர்ச்சியாக இடைத்தேர்தல் நடந்த 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோடு, 11வதாக நடந்த பென்னாகரம் இடைத்தேர்லிலும் தி.மு.க., அமோகமாக வெற்றி பெற்றது. இரண்டாம் இடம் யாருக்கு என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை பா.ம.க., பிடித்தது. அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும், "டிபாசிட்'டை இழந்தன.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், எப்போதும் இல்லாத தொடர்ச்சியாக இடைத்தேர்தல்கள் வந்தபடி இருந்தன. அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறைவால், மதுரை மத்தி தொகுதிக்கு முதன் முதலில் இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் ஆரம்பித்து, மதுரை மேற்கு, திருமங்கலம், இளையாங்குடி, பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், ஸ்ரீவைகுண்டம், வந்தவாசி, திருச் செந்தூர் என 10 இடைத்தேர்தலில் தி.மு.க.,வும் மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் அமோக வெற்றி பெற்றன.பத்து தொகுதிகளில், மதுரை மேற்கு மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்றனர். மற்ற எட்டு தொகுதிகளிலும் தி.மு.க., போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்நிலையில், பென்னாகரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியண்ணன் திடீர் மறைவால், அத்தொகுதிக்கு கடந்த 27ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.மற்ற இடைத்தேர்தலைப் போல் அல்லாமல், இந்த இடைத்தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, மீண்டும் அங்கிருந்து வெளியேறிய பா.ம.க., பென்னாகரம் தொகுதியில் தனித்து களம் இறங்கியதும், பல இடைத்தேர்தல்களை புறக்கணித்த அ.தி.மு.க., பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டதும் தான் பரபரப்புக்கு காரணம்.மூன்று கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தையும், பொருட்களையும் வாரி இறைத்தன. நான்காவதாக, தே.மு.தி.க.,வும் போட்டியில் இருந்தது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் பிரசாரம் செய்தனர். நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், எதிர்பார்த்தது போல் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்து 669 ஓட்டுகள் பெற்று, 36 ஆயிரத்து 384 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.பா.ம.க., வேட்பாளர் தமிழ்குமரன், அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி 41 ஆயிரத்து 285 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க.,வுக்கு 26 ஆயிரத்து 787 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும், "டிபாசிட்'டை இழந்தன. தே.மு.தி.க.,விற்கு 11 ஆயிரத்து 406 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.  பென்னாகரம் இடைத்தேர்தல் "49-ஓ' பயன்படுத்தியது 10 பேர் : பென்னாகரம் தேர்தலில், வெறும் 10 பேர் மட்டுமே, "49-ஓ' பிரிவை பயன்படுத்தியுள்ளனர்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:இடைத்தேர்தல் நடந்த பென்னாகரம் தொகுதியில், மொத்தம் 84.95 சதவீத ஓட்டுகள் பதிவாயின. அதிகபட்சமாக, எரிமலை ஓட்டுச்சாவடியில் 93.08 சதவீத ஓட்டுகள் பதிவாயின. ஒட்டு மொத்த ஓட்டு சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 18 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. மூன்று ஓட்டுச்சாவடிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாக, 74.95 சதவீதம் என்ற அளவில் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.மூங்கில் மடுவு ஓட்டுச்சாவடியில், குறைந்தபட்சமாக 70.90 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 10 வாக்காளர்கள் மட்டும், "49-ஓ' பிரிவைப் பயன்படுத்தி, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என பதிவு செய்தனர். ஓட்டு எண்ணிக்கை, காலை 8 மணிக்குத் துவங்கி 4 மணிக்கு முடிந்தது. மொத்தம் 18 சுற்றுகளாக, ஒவ்வொரு சுற்றிலும் 14 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். பென்னாகரம் முடிவு: அ.தி.மு.க., அதிர்ச்சி : பென்னாகரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு வெளிவரத் துவங்கியது. முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் அ.தி.மு.க., இரண்டாம் இடத்தில் இருந்தது. அதன்பின் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.அதன் பின் எண்ணப்பட்ட சுற்றுகளில் பா.ம.க., இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதும் சென்னை மாவட்ட அ.தி.மு.க.,வினர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்திற்கும் கட்சியினர் எட்டிப்பார்க்கவில்லை. நேற்று முழுவதும் ஜெயலலிதாவின் வீடு மற்றும் கட்சியின் தலைமை அலுவலகமும் வெறிச்சோடி கிடந்தன. எம்.ஜி.ஆர்., காலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஓசூர், கிள்ளியூர் ஆகிய இரு தொகுதிகளில் டிபாசிட்டை அ.தி.மு.க., இழந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், நடந்த 1996, 2006ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டும் அக்கட்சி டிபாசிட் இழந்துள்ளது.இடைத்தேர்தலில் முதல்முறையாக பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க., டிபாசிட் இழந்ததால் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். அ.தி.மு.க.,விற்கு அடி விழும் வகையில் அக்கட்சியின் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அ.தி.மு.க.,விற்கு செல்வாக்குள்ள தொகுதியான பென்னாகரத்தில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சியின் தொண்டர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை.
392
2010-03-31T00:40:00+05:30
தமிழகம்
தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார்
சென்னை : நடிகையுடன் தொடர்புள்ளதாக சர்ச்சைக்குள்ளான சாமியார் நித்யானந்தா, தியான பீட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமத்தை ஏற்படுத்தி, தியானம் உள்ளிட்ட யோகா கலைகளை போதித்து வந்தார். இந்த ஆசிரமத்தின் தியான மையங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் உள்ளன. கோடிக்கணக்கில் இந்த ஆசிரமத்திற்கு சொத்துக்களும் உள்ளன.இந்நிலையில், பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட பல பெண்களுடன் படுக்கை அறையில் நெருக்கமாக உள்ளது போன்ற படங்கள் வெளியாயின. இதையடுத்து, இவரது தியான மையங்கள் பல இடங்களில் தாக்குதலுக்குள்ளாயின. நித்யானந்தா சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். கர்நாடக போலீசாரும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், தியான பீடத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, நித்யானந்தா மிஷன் வெப்சைட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.வெப்சைட்டில் அவர் கூறியுள்ளதாவது:என்னுடைய ஆன்மிக வாழ்க்கையை மற்றவர்களிடமிருந்து விலகி தனித்து தொடர விரும்புகிறேன். புதிய அறக்கட்டளை உறுப்பினர்கள் தியான பீடத்தை நடத்துவார்கள்.கடந்த மூன்று வாரங்களாக என் மீதும், தியான பீடத்தின் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவின் போது கூடிய ஆச்சாரியர்கள் சிலருடன்  விவாதித்தேன். அவர்களின் ஆலோசனையையும், உதவியையும் கோரினேன்.அவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் நடக்க முடிவு செய்துள்ளேன். இதன் ஒரு கட்டமாக தியான பீட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ஆச்சாரியர்கள் சொன்ன படி தனித்திருந்து நீண்ட கால ஆன்மிக வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளேன்.தியான பீடத்தில் நான் இல்லாமல் செயல்படுவதற்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொள்ளும் படி தெரிவித்துள்ளேன். பிரச்னையை ஏற்படுத்தாத சாதகர்கள் இனி தியான பீடத்தை ஏற்று நடத்துவார்கள்.தியான பீடம், ஆன்மிகத்துறையில் வழிகாட்டியாக விளங்குவதற்கு ஏற்ப உதவும் படி ஆச்சாரியர்களை கோரியுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தியான பீடம் நல்ல முறையில் வளர்ச்சியடைய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தியான பீடத்தில் தீட்சை பெற்றால் மட்டும் போதாது, தொடர்ந்து யோகா சாதனைகளை மேற்கொள்ளும் படி சாதகர்களை வேண்டுகிறேன்.சமீபத்தில் பத்திரிகைகளிலும், "டிவி'க்களிலும் வந்த செய்திகளால் சாதகர்களின் சாதனைகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.தேவைப்பட்டால் நான் மீண்டும் திரும்பி வந்து நடந்த விஷயங்களை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எடுத்துரைப்பேன்.இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளார்.
393
2010-03-31T00:40:00+05:30
தமிழகம்
தென்மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது தமிழகம்
கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதியன்று தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை பெறுவதற்கு, முதல்வர் கருணாநிதி டில்லி வரவுள்ளார்.அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு 2 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.கல்வித் துறைக்கு திட்டமிடப் பட்ட செலவு 936.81 கோடி; ஆனால், செலவிடப்பட்டதோ 837.11 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது. கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை விட ஏன் குறைவாக செலவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.பொருளதார வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. கேரளா 7 சதவீதமும், ஆந்திரா 5.5 சதவீதமும், கர்நாடகா 5.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் தென்மாநிலங்களிலேயே தமிழகம் தான் கடைசியில் உள்ளது.கடந்த நிதியாண்டில் இந்திய அளவில் விவசாயத்துறை தான் கேட்பாரற்று கிடக்கிறது என்றால் தமிழகத்திலும் அதே நிலை தான். விவசாயத் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் 9.4 சதவீதம் வரை தமிழகம் இருந்தது. ஆனால், 2008-09ம் ஆண்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையில் கடந்த 2008-09ம் ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை இருந்த வளர்ச்சி தற்போது குறைந்து 7.6 ஆக ஆகிவிட்டது.கடந்த ஆண்டு ஆய்வின்படி, தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில் தென்மாநிலங்களில் கேரளா 49 ஆயிரத்து 310, தமிழகம் 45 ஆயிரத்து 58, கர்நாடகா 40 ஆயிரத்து 998, ஆந்திரா 39 ஆயிரத்து 590 ரூபாய் என உள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த நிதியாண்டில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற கட்டமைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களுக்கும் 3 ஆயிரத்து 980 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 50.22 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 25 சதவீதமும், மாநில அரசுகள் 35 சதவீதமும் பங்களிப்பதாக தற்போது உள்ளது. இதை மாற்றி இரு தரப்பும் 50 சதவீதம் அளவுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழகம் வலியுறுத்தியுள்ளது. கருணாநிதி 6ம் தேதி டில்லி வருகை : அடுத்த 2010-11ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, வரும் 6ம் தேதி டில்லி வருகிறார். முதல்வரின் வருகை அதிகாரப்பூர்மாக இறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு துணை முதல்வரும் அதற்கு முந்தைய ஆண்டு நிதி அமைச்சர் அன்பழகனும் டில்லி வந்திருந்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நிதி ஒதுக்கீட்டை பெற முதல்வர் வரவுள்ளார். 7ம் தேதியன்று திட்டக்கமிஷன் அலுவலகம் சென்று முறைப்படி நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்துவிட்டு, 8ம் தேதி சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. மேலும், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரையும் முதல்வர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -நமது டில்லி நிருபர்-
394
2010-03-31T00:41:00+05:30
தமிழகம்
டிபாசிட் இழப்பின் பின்னணியில் சதி : கருணாநிதி மீது ஜெ., குற்றச்சாட்டு
சென்னை : பென்னாகரம் தேர்தலில் தி.மு.க., வென்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை:ஓட்டுக்கு பணம் கொடுத்து, ஜனநாயகத்தை பாழாக்காதீர்கள் என்றார் அண்ணாதுரை. இதற்கு முற்றிலும் முரணான வகையில், மக்களாட்சியின் மாண்பையே அழிக்கும் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்  முதல்வர் கருணாநிதி.நான்காண்டு கால ஆட்சியில் நடந்த அத்தனை தேர்தல்களிலும், போலீஸ் துணையோடு, ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்களை மிரட்டுவதுமான ஜனநாயக விரோதச் செயல்கள் தான் நடந்து வருகின்றன.பென்னாகரத்தில் ஆளுங்கட்சியினரால் பணம் தண்ணீர் போல வாரி இறைக்கப்பட்டது. வேட்டி, சேலை, பணம், மதுபானம், மூக்குத்தி, கறி விருந்து, கலர் "டிவி', சமையல் காஸ் சிலிண்டர், கிரைண்டர் என அனைத்தும், வாக்காளர்களுக்கு வெளிப்படையாகவே கொடுக்கப்பட்டன.ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை ஆதாரத்துடன் எடுத்துக் கூறியும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக போலீசாரை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தக் கூடாது என அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தியும், அதை தேர்தல் கமிஷன் அலட்சியப்படுத்தி வருகிறது.பென்னாகரம் இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவது பெரிய சவாலாக உள்ளது என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்ததில் இருந்தும், இதுகுறித்து தலைமைச் செயலருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்ததில் இருந்தும், இந்த இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு அராஜகம் நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு வேண்டிய சேனல் ஒன்று, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முந்தைய நாள் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. கடைசியில் அது தான் நடந்தது.அதே போல, இந்த இடைத்தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் கூறியதையும், ஆளுங்கட்சியாக இருந்த கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுகிறது எனவும், எதிர்காலத்தில் டிபாசிட் இழக்கக்கூடிய நிலைக்கு வருமா என்று, தான் கவலைப்படுவதாகவும் கருணாநிதி கண்ணீர் வடித்ததையும் பார்க்கும் போது, இந்தத் தேர்தல் முடிவில், மிகப் பெரிய சதி நடந்திருப்பது தெளிவாகிறது.தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தோல்வி. இந்த இடைத்தேர்தலில் பா.ம.க.,வும் இதுவரை கண்டிராத வகையில், பெருமளவில் பணத்தைக் கொட்டி, தி.மு.க., கடைபிடித்த அதே முறையைத் தான் கடைபிடித்துள்ளது.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., டிபாசிட் இழப்புக்கு காரணம் உட்கட்சி மோதல் : பென்னாகரம் தொகுதிக்கு டிசம்பரில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தி.மு.க., மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் நடந்தது. அதே நேரம், தர்மபுரி மாவட்ட செயலராக இருந்த கிருஷ்ணமூர்த்தி மாற்றப்பட்டு, பென்னாகரம் தொகுதி வேட்பாளர் அன்பழகன், மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார்.தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர் அன்பழகனுக்கே சீட் கிடைக்கும் என்ற பேச்சு இருந்த போதும், மனு தாக்கல் வரையில் அ.தி.மு.க., தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பொறுப்பாளராக வெள்ளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்த தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.தர்மபுரி மாவட்ட செயலராக இருந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்களை தேர்தல் பணிக்கு அழைக்கவில்லை. இதே போன்று உள்ளூர் வன்னிய மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தம்பிதுரை தன் ஆதரவாளர்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கினார்.பிற கட்சிகளில் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளில் அக்கறை காட்டினர். அ.தி.மு.க.,வில் முழுக்க, முழுக்க வெளியூர் ஆட்களை நம்பி தேர்தல் பணிகளில் இறங்கினர். கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், தொகுதியில் வலு பெற்று இருந்த போதும், அவர்களை காலம் கடந்து சந்தித்தனர்.இதனால், அ.தி.மு.க.,வில் நிலவிய அதிருப்தியாளர்களை தி.மு.க.,வினர் தங்கள் வலைக்குள் எளிதில் விழ வைத்தனர். தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் அதிக கவனம் செலுத்தினர்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ஒரு வாரம் வரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு நாட்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதா பிரசாரத்தில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக பேசினார். அதே போல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், "திட்டப்பணிகள் துவங்கவில்லை' என்ற அவரது பிரசாரம் தொகுதி மக்களை யோசிக்க வைத்தது.ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை முடித்த மறு நாளே தொகுதியில் முகாமிட்டிருந்த அ.தி.மு.க.,வினர் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர்.தேர்தல் கடைசி கட்டத்தில் அ.தி.மு.க.,வின் தேர்தல் பணிகள் பெருமளவில் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க.,வினரின் அக்கறையில்லாத தேர்தல் சந்திப்பு, தலைமையின் சுறுசுறுப்பில்லாத பேச்சு உள்ளிட்ட காரணங்களோடு, ஜாதிய பூசலால் டிபாசிட்டை கூட தக்கவைக்க முடியாமல் பரிதாப தோல்வியை அ.தி.மு.க., இத்தேர்தலில் சந்தித்துள்ளது.பா.ம.க., 1996ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட போது 34 ஆயிரத்து 906 ஓட்டுக்கள் பெற்றனர். அதை விட தற்போது கூடுதல் ஓட்டு கிடைத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம் : பென்னாகரம் இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் உட்பட 31 பேர் போட்டியிட்டனர். அவற்றில் சுயேச்சைகள் ஓட்டுக்களை சில்லரையாக பெற்றதால் அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் டிபாசிட் இழந்துள்ளனர்.வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:இன்பசேகரன் (தி.மு.க.,) 77,669,தமிழ்குமரன்(பா.ம.க.,) 41,285, அன்பழகன்(அ.தி.மு.க.,) 26,787, காவேரிவர்மன்(தே.மு.தி.க.,) 11,406, சுயேச்சைகள்: அண்ணாதுரை 813, தேவேந்திரன் 243, வஜ்ரவேல் 945, சி. அன்பழகன் 238, டி.சி.அன்பழகன் 212, ராமலிங்கம் 215, சிவ.இளங்கோ 313, இளவரசன் 289, கந்தன் 385, கஸ்பா ராஜேந்திரன் 637, குமார் 782, கோபால் 1,053, சாமிக்கண்ணு 718, சிவகுமார் 1,220, தாமோதரன் 1,007, நூர்முகமது 216, பத்மராஜன் 254, பழனி 121, பெருமாள் 158, முருகேசன் 711, முனிராசு 774, முனுசாமி 158, ரத்தினம் 111, ராஜாஜி 211, லெனின் 443, வெங்கடாசலம் 780, ஸ்ரீராமச்சந்திரன் 676.சுயேச்சை வேட்பாளர்கள் ஓட்டுக்களை விழுங்கியதால் அ.தி.மு.க., டிபாசிட் இழக்கும் பரிதாப நிலையை சந்தித்துள்ளது. 2006 சட்டசபை தேர்தலில் 16 பேர் போட்டியிட்ட நிலையில், இத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்ததும் அ.தி.மு.க., - தே.மு.தி.க., தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
397
2010-03-31T00:43:00+05:30
தமிழகம்
கழிப்பறை கட்டுமான பணியில் மாணவர்கள் *பெற்றோர்கள் அதிருப்தி
ராமநாதபுரம் :  ராமநாதபுரம் அருகே பள்ளி கழிப்பறை கட்டுமான பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதால் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி துறை மூலம் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் துவங்கியதிலிருந்தே பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர். அரசும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் லாப நோக்கத்தோடு செயல்படுத்துவதாக தொடர்ந்து எழுந்த புகாரால், மாவட்டத்தில் திட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக முதற்கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 40 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இதை லாபநோக்கோடு மிச்சப்படுத்தும் எண்ணத்தில் பள்ளியில் கட்டமான பணிகளுக்கு பள்ளி குழந்தைகளையே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசு குழந்தை தொழிலாளர்களை ஒழித்து, குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என அரசு பல திட்டங்களை கொண்டு வந்து, கல்வி நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால், சில பள்ளிகளில் இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறையை நடைமுறையில் வைத்து உள்ளதால் ,அரசு திட்டத்தை, அரசு சார்ந்த துறையே கேலி செய்வது போல் உள்ளது. மாவட்டத்தில் வாலாந்தரவை அரசு உயர்நிலை பள்ளியில் இடைநிலை கல்வி திட்ட நிதியின் கீழ், பள்ளி கழிப்பறை கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இப்பணிக்கு பள்ளி மாணவர்களை மணல் அள்ளும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். வாலாந்தரவை பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர் செல்வம் கூறியதாவது: மாணவர்களை பள்ளியில் மணல் அள்ளுவதை பார்த்து இதுபோல் "பணிகளில் ஈடுபடுத்த கூடாது' என கூறினேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. கல்வி துறை அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அவர்களும் இதை பெரிய விஷயமாகவே எடுத்து கொள்ளவில்லை. இடைநிலை கல்வி திட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்துவதில்தான் குறியாக உள்ளனர், என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:பள்ளியில் மாணவர்களை வேலை செய்யவிட கூடாது. வாலாந்தரவை பள்ளியில் மாணவர்கள் மணல் அள்ளியதாக எனக்கு தகவல் வரவில்லை. அது உண்மையாக இருந்தால் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பேன், என்றார்.
398
2010-03-31T00:43:00+05:30
தமிழகம்
ஹெட்லி கூட்டாளி ராணா வழக்கை சந்திக்க தயார்
சிகாகோ : மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிய ஹெட்லியின் கூட்டாளி தகவுர் ஹுசைன் ராணா மீதான விசாரணை, செப்டம்பர் மாதம் அமெரிக்க கோர்ட்டில் நடைபெற உள்ளது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தவன் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் டேவிட் கோல்மேன் ஹெட்லி. மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு பலமுறை வந்து நோட்டமிட்டு, குண்டு வெடிப்புக்கு சதி செய்துள்ளான். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிகாகோ நகரில் அமெரிக்க போலீசார், ஹெட்லியையும் அவனது கூட்டாளி ராணாவையும் கைது செய்தனர்.ஹெட்லி மீது மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 18ம் தேதி நடந்த விசாரணையின் போது மரண தண்டனைக்கு பயந்து, ஹெட்லி 12 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டான்.இதற்கிடையே ராணா மீதான விசாரணை, சிகாகோ கோர்ட்டில் நீதிபதி ஹாரி லீனென்வெப்பர் முன்னிலையில் நேற்று நடந்தது. கனடா நாட்டைச் சேர்ந்த ராணா இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள முன்வரவில்லை. வழக்கு விசாரணையை எதிர்கொள்ள உள்ளதாக, அவனது வக்கீல் பாட்ரிக் ப்ளீஜன் தெரிவித்துள்ளார்.வக்கீல் பாட்ரிக் மேலும் குறிப்பிடுகையில், "ராணா மீதான குற்றச்சாட்டுக்குரிய ஆவணங்களை தயார் செய்யும்படி அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் ராணா மீது விசாரணை நடக்க உள்ளது' என்றார்.
399
2010-03-31T00:44:00+05:30
தமிழகம்
சென்னை கிங்ஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
சென்னை : ஐ.பி.எல்., தொடர் அறிமுகமானபோது சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பும் ஆதரவும், தற்போது குறையத்துவங்கியுள்ளது. மற்ற ஏழு அணிகளுடன் ஒப்பிடும்போது, சென்னை அணிதான் மிக மோசமாக இருக்கிறது. இதற்குகாரணம் என்ன? கிரிக்கெட் புக்கிகளால் மிகைப்படுத்தபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாம் ஆண்டு பைனல் வரை வந்து தோற்றது. இரண்டாம் ஆண்டு அரையிறுதி வரை எட்டி பார்த்தது. இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில், கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி, இம்முறை வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோனி பிரச்னை: சென்னை சூப்பர் கிங்ஸ்சை பொறுத்தமட்டில் அதிர்ஷ்டக்கார கேப்டன், தொட்டது துலங்கும் என்று வர்ணிக்கப்பட்ட தோனி தான் இப்போது பிரச்னைக்கு காரணமாக தெரிகிறார். சென்னை அணியின் தற்போதைய செயல் பாடு குறித்து அடையாளம் காட்ட விரும்பாத இளம்வீரர் ஒருவர், சொன்னது இதுதான்:தோனியின் தன்னிச்சையான செயல்பாடும், யாருக்கும் கட்டுப்படாத அவரது நடவடிக்கை பற்றி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், அணி உரிமையாளர்களிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை. முறையாக பயிற்சிக்கு வருவதில்லை என புகார்கள் முணுமுணுக்கப் பட்டுவருகின்றன. அணியில் உள்ள தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. ரஞ்சியில் சாதித்த கணபதி சிறந்த ஆல்-ரவுண்டர், அனிருத் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. அணியில் உள்ள மூத்த வீரர்களான ஹைடன், முரளிதரன், மார்கல்ஆகியோரைசரிவர நடத்துவது இல்லை. டிரசிங் ரூமில் கூட ஆலோசனை செய்வது இல்லை. பயிற்சியாளர் பிளமிங், 12வது ஆட்டக்காரர் மூலம் சொல்லி அனுப்பும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்பதில்லை என குற்றச்சாட்டுகள் தோனியின் மீது அடுக்கப்படுகின்றன. இந்தாண்டுடன் வீரர்களுக்கான ஏல உரிமை முடிகிறது. அடுத்த சீசனுக்கு அவர் மற்றொரு அணிக்கு பேசப்பட்டு விட்டதால் ஜகா வாங்குவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இன்னும் இருக்கும் ஏழு ஆட்டங்களில் 6ல் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் சென்னை அணி உள்ளது. மற்ற ஏழு அணியின் உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் புதிது. சென்னை அணியை நடத்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாகத்திற்கு 50 ஆண்டுகள் கிரிக்கெட் நடத்திய அனுபவம் இருந்தும் திணறுவது ஏன் என்று தெரியவில்லை. குறிப்பாக சென்னையில் நடக்கும் ஆட்டங்களிலாவது சென்னை அணி சிறப்பாக விளையாடுவதற்கு அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். லாபம் அமோகம் : ஐ.பி.எல்., அமைப்பில் அங்கம் வகிக்கும் அணி உரிமையாளர்களுக்கு, "டிவி' ஒளிபரப்பு உரிமையின் மூலம் அவர்கள் போட்ட முதலீடுக்கு மேல் லாபம் கிடைத்து விட்டது. மூன்றாண்டுகளில் கிடைத்த வருமானத்தை கணக்கு காட்டி, பங்குச்சந்தையில் பட்டியலிடலாமா என்ற ரீதியில் சென்னை, பஞ்சாப் அணிகள் கணக்குபோடத்துவங்கிவிட்டன. இதனால், அணியில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
421
2010-04-04T21:02:00+05:30
தமிழகம்
இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 4ம் மணல் தீடையில் தத்தளிப்பு :கடலோர காவற்படை மீட்பு
மண்டபம் : இலங்கை தப்பிச்செல்ல முயன்று மூன்று நாட்களாக நான்காம் மணல் தீடையில் தத்தளித்த ஆறு அகதிகளை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு மண்டபம் கொண்டு வந்தனர். பவானி சாகர் முகாமிலிருந்து அகதிகள் வீரவிஜயன்(29), ஜெயராஜ்(30), காந்தகுமார்(36), ஆஞ்சோன்(21), கரூர் முகாமிலிருந்து தர்மா(38), திருச்சி முகாமிலிருந்து இளஞ்செழியன்(39) ஆகியோர் இலங்கைக்கு தப்பிச்செல்ல முடிவு செய்து, ஏஜென்ட் மூலம் நபர் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர். கடந்த மாதம் 31ம் தேதி தனுஷ்கோடியிலிருந்து திருட்டுத்தனமாக படகில் இலங்கைக்கு புறப்பட்டுள்ளனர். படகோட்டிகள் இலங்கை வந்து விட்டதாக கூறி நான்காம் மணல் தீடையில் ஆறு பேரையும் அதிகாலை இரண்டு மணிக்கு இறக்கிவிட்டனர். அங்கு ஒரு சில நாட்களாக நடுக்கடலில் மணல்தீடையில் எவ்வித உணவுமின்றி, கடல்நீரை பருகியவாறு தத்தளித்துள்ளனர்.   அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட மண்டபம் இந்திய கடலோர காவல் படையினர் ஆறு பேரையும் மீட்டு, மண்டபம் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
422
2010-04-04T21:02:00+05:30
இந்தியா
சோயப் மாலிக் மீது வழக்கு பதிவு
ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மீது போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சானியா  மிர்சாவுக்கும்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனக்கும், சோயப்பிற்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக ஐதராபாத்தை சேர்ந்த  ஆயிஷா என்பவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோயப் மாலிக், தனக்கும், ஆயிஷாவுக்கும் திருமணம் நடைபெறவில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து  ஐதராபாத்தில் உள்ள பஞ்ரா ஹில்ஸ் போலீஸ்  ஸ்டேசனில் ஆயிஷாவின் தந்தை  போலீசில் மோசடி புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் சோயப் மாலிக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
423
2010-04-04T21:03:00+05:30
தமிழகம்
தொடக்க கூட்டுறவு கடன் சங்க வளர்ச்சி நிதியாக ரூ.65 கோடி
சிவகங்கை : சிவகங்கை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு தொடக்க கூட்டுறவு வங்கிகளுக்கான வளர்ச்சி நிதியாக 65 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது.தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்கவும், கூட்டுறவு நிறுவன வளர்ச்சிக்கு என ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி, தொடக்க கூட்டுறவு வளர்ச்சி நிதியாக ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் வரை வழங்கி வருகிறது. இதில், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் கடன் வழங்க மதுரை, சிவகங்கை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு, இந்நிதியை வழங்க கூட்டுறவு துறை பதிவாளர் ஜதீந்திரநாத் ஸ்வைன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மதுரைக்கு 10, ராமநாதபுரத்திற்கு 2, சிவகங்கைக்கு 16, விருதுநகருக்கு 9, நெல்லைக்கு 22, நீலகிரிக்கு 6 கோடி ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிதி தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் வளர்ச்சிக்காக இருந்தாலும், அந்த நிதியை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பங்கு முதலீடு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
424
2010-04-04T21:04:00+05:30
தமிழகம்
உசிலம்பட்டி அருகே வேன் உருண்டு இரண்டு பெண்கள் பலி, 20 பேர் காயம்
உசிலம்பட்டி : தேனி மாவட்டம் பழனிசெட்டிய பட்டியில் இருந்து உசிலம்பட்டியில் பெண் பார்ப்பதற்காக சந்திரசேகர்(62), மதுரை வீரன்(61) குடும்பத்தினர்கள் மகேந்திரா வேனில் வந்தனர். பெண் பார்த்து விட்டுபழனிசெட்டியபட்டி திரும்பினர். பகல் 1.50 மணியளவில் வேன், தேனி ரோட்டில் வாடிகருப்புகோயில் அருகே சென்றபோது திடீரென ரோட்டில் உருண்டது. இடிபாடுகளுக்குள் சிக்கி சுதா(35), வேன் டிரைவர் ஜெயபிரகாஷ்(26), பிரேமா(61), சந்திரசேகர், மதுரை வீரன், செல்வம்(36), முனியம்மாள்(60), முத்துலட்சுமி(40), வெள்ளைத்தாய்(55), அனுசியா(48), லட்சுமி(30), பாண்டியன் (26), பொன்மாலா(30), கீதா(33), காளீஸ்வரி(42) உள்ளிட்ட 20 பேர் காயங்களுடன் உசிலம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறுகின்றனர். சுதாவும், முத்துலட்சுமியும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.உசிலம்பட்டி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
425
2010-04-04T21:04:00+05:30
தமிழகம்
பழநி அருகே மீண்டும் காட்டுயானைக் கூட்டம் : வனத்திற்குள் விரட்ட விடிய விடிய போராட்டம்
பழநி : பழநி அருகே மீண்டும் காட்டுயானைகள் வருகை தொடர்கிறது. நேற்று தேக்கந்தோட்டம் பகுதிக்குள் வந்த யானைகள் நீண்ட போராட்டத்திற்கு பின் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இவை பட்டா நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கிறது. பல ஆண்டுகளாக இவைகள் இப்பாதையில் வந்து பழக்கப்பட்டதால் இவற்றை இங்கிருந்து வேறு பகுதிக்கு விரட்டுவது சிரமம் என வனத்துறை கூறி வருகிறது. கடந்த சில நாட்களாக தேக்கந்தோட்டம், புளியமரத்துஷெட் பகுதியை சுற்றியுள்ள விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் வந்து தென்னை, வாழை, மாமரங்களை சேதப்படுத்துகின்றன. நேற்று தேக்கந்தோட்டம் பகுதிக்குள் வந்த யானைகூட்டத்தை ரேஞ்சர் தர்மராஜ் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட விடிய விடிய போராடினர். ஒருவழியாக இன்று காலை வனப்பகுதிக்குள் இவைகள் விரட்டப்பட்டன.
426
2010-04-04T21:05:00+05:30
தமிழகம்
விபத்தில் தப்பினார் மத்திய மந்திரி
பரூச்(குஜராத்) : மத்திய பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் துஷார் சவுத்ரி, நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இருப்பினும் சிறிய அளவில் அவருக்கு காயம் ஏற்பட்டது.மத்திய பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் துஷார் சவுத்ரி, குஜராத்தில் நர்மதை ஆற்றின் மீது அமைந்துள்ள சர்தார் படேல் பாலத்தில் தனது காரில்  சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னாள் சென்ற கார்களை சவுத்ரியின் கார் முந்த முற்பட்டதில் விபத்து ஏற்பட்டது. இதில் சவுத்ரியும், அவருடன் இருந்த சூரத் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மோகன் சவுத்ரியும் காயமடைந்தனர்.உடன் அருகில் இருந்த மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். மாலை மருத்துவமனையிலிருந்து சிகிச்சை  முடிந்து  வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
427
2010-04-04T21:05:00+05:30
தமிழகம்
கோவில்பட்டியில் சிக்கிய ஆண் மிளா..!
தூத்துக்குடி : கோவில்பட்டி வனப்பகுதியில் இருந்து தப்பிய மிளா ஊருக்குள் பிடிபட்டது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள குருமலை, ஊத்துமலை ஆகிய வனப்பகுதியில் மயில், மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.தற்போதைய வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குடிநீருக்காக அலைந்து திரியும் வனவிலங்குகள் அருகில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்துவிடுகின்றன. நேற்று மான் வகையை சேர்ந்த மிளா ஒன்று கோவில்பட்டி, அண்ணாமலைநகரில் சுற்றித்திரிந்தது. இதனை பொதுமக்கள் பிடித்து கட்டிப்போட்டனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மாடசாமி, ராமநாதன் ஆகியோர் அதற்கு ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சையளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.
428
2010-04-04T21:06:00+05:30
தமிழகம்
விக்கிரவாண்டியில் லாரி மோதி எஸ்.பி., மகள், மருமகன் பலி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் எஸ்.பி., மகள், மருமகன் பலியாகினர். சென்னையில் செக்யூரிட்டி கன்ட்ரோல் பிரிவில்  எஸ்.பி.,யாக பணிபுரிபவர்  கருணாநிதி. இவரது மகள் ஆர்த்திபிரியா(35) .இவரது கணவர் குளித்தலையை சேர்ந்த உதயகுமார்.  ஆர்த்தி பிரியா, உதயகுமார் இருவரும் குளித்தலையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றனர். அப்போது விக்கிரவாண்டி அருகே முந்தியாநத்தம் பகுதியில் கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆர்த்தி பிரியாவும், உதயகுமாரும் பலியாகினர். காரில் இருந்து சேகர் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் சம்பவம் குறித்துவிசாரித்து வருகின்றனர்.
429
2010-04-04T21:06:00+05:30
தமிழகம்
விக்கிரவாண்டியில் தேனீ கொட்டி 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சவ ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது தேனீ கொட்டியது. இதனால் 12 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
432
2010-04-05T00:53:00+05:30
இந்தியா
முறையாகச் செயல்படுத்தப்படுமா கல்வி உரிமைச் சட்டம்?கல்வியாளர்கள் சந்தேகம்
புதுடில்லி :   நடைமுறைக்கு வந்துள்ள, கல்வி அடிப்படை உரிமைச் சட்டம், முறையாகச் செயல்படுத்தப்படுமா அல்லது பிற சட்டங்களைப் போல கோப்பிலேயே, இருந்து விடுமா என்று கல்வியாளர்களிடையே, சந்தேகம் எழுந்துள்ளது.ஆறு வயது தொடங்கி 14 வயது வரையுள்ள, குழந்தைகள் அனைவரும் கல்வி பெறுவதை உறுதி செய்யும், "கல்வி அடிப்படை உரிமைச் சட்டம்' கொண்டு வரப்பட்டது, மிகப் பெரிய சாதனைதான். இருந்தாலும், அச்சட்டத்தின் முழுப் பலனும், அது முழுமையாகச் செயல்படும் போதுதான் கிடைக்கும்.இன்றைய நிலையில், 6-14 வயதில் பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளில் 92 லட்சம் குழந்தைகள் ஏதாவது ஒரு காரணத்தால், பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். காரணங்களில், வறுமை முதலிடம் பெறுகிறது. அதேநேரம், சமீப ஆண்டுகளில் பள்ளிகளில், குழந்தைகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மதிய உணவுத் திட்டம் போன்றவற்றால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது எனலாம்.ஆனால், இன்று நம்முன் இருக்கும் கல்விப் பிரச்னைகளில், கல்வியைப் பாதியில் விடுவதுதான், கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்னை. ஆரம்பப் பள்ளியில் சேர்பவர்களில், பாதிக்கு மேல் எட்டாம் வகுப்புக்கு மேல் தொடர்வதில்லை. இச்சட்டம், 14 வயது வரை குழந்தைகள், கல்வி பெறுவதை கட்டாயமாக்குகிறது.மற்றொரு பிரச்னை, ஆசிரியர்கள் பற்றாக்குறை. 6-14 வயதுக்குட்பட்ட 25 கோடி குழந்தைகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லை.  40  மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது வரையறுக்கப்பட்டது. அதன்படி, எட்டாம் வகுப்புகளில் மட்டும் 60 லட்சம் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால்  மாவட்டக் கல்வி தகவல் மையத்தின் ஆய்வுப்படி, 57 லட்சம் ஆசிரியர்கள் தான் உள்ளனர். மூன்று லட்சம் பேர் பற்றாக்குறை.ஒவ்வொரு ஆண்டும், மூன்று லட்சத்து 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் 18 லட்சம் பேர் ஓய்வு பெற்று விடுவர். இவர்களின் இடத்தை நிரப்பும் பணியும் மிக மெதுவாகத் தான் நடக்கிறது.தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்துக்கான பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் படி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களில் கால்வாசிப் பேர், உயர்நிலைப் பள்ளி வரை மட்டுமே படித்தவர்கள். இன்னொரு கால்வாசிப் பேர், மேல்நிலைப் பள்ளி முடித்தவர்கள். ஆக, பாதிக்கு மேலான ஆசிரியர்கள், மேல்நிலைக் கல்வி வரை மட்டுமே படித்துள்ளனர். மிச்சப் பேர்களில் 35 சதவீதம் பேர் பட்டதாரிகள், 17 சதவீதம் பேர் முதுகலைப் பட்டதாரிகள். இவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே பணியில் இருக்கும்போது பயிற்சி பெறுகின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசுகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பணியாற்ற வேண்டும். 2006-07ல் கல்விக்கான மொத்தச் செலவே, ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய்தான்.
434
2010-04-05T00:55:00+05:30
தமிழகம்
நோபல் வென்ற எளிமை மனிதர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
இந்த ஆண்டின் பத்ம விருது பெற்றவர்களில் மிக உயர்ந்த சிறப்புடையவராக நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் திகழ்ந்தபோதும், ஜனாதிபதி மாளிகையில் கடந்த புதன் கிழமை மாலை நடந்த விழாவில் அவர் எளிமையாக காட்சியளித்தார்.நீண்ட பிங் கலர் குர்தாவும், கரிய நிற கீழங்கியும் அணிந்த 58 வயதான  அவரை, அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வெங்கி என்று அன்பாக அழைப்பதுண்டு.அசோகா மண்டபத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நாட்டின் இரண்டாவது உயரிய பத்மவிபூஷண் விருதை அவர் பெற்றபோது, கைத்தட்டல்கள் விண்ணை எட்டின.அங்கிருந்து நேராக டில்லி தமிழ்ச் சங்கம் ராமகிருஷ்ணாபுரத்தில் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்ற அவர், தமிழகத்திலிருந்து பத்ம விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுடன் கவுரவிக்கப்பட்டார்.அன்று காலை விழாவில் அவர் கலந்து கொள்வதை உறுதி செய்ய அழைத்த டில்லி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரிடம், எனது குடும்பத்தினர் மூன்று பேரை விழாவுக்கு அழைத்து வரலாமா என கேட்டிருக்கிறார். அதற்கு, தாராளமாக என பதிலளித்திருக்கிறார் திகைத்துப் போன அந்த உறுப்பினர். டில்லியில் அவர் கால்பதித்த சில மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் இவை.அடுத்த நாள், தாஜ்மகால் ஓட்டலில் தன்னை சந்திக்க வந்த நிருபரிடம், தனது ஆடையை தைக்க வரும் தையல்காரருக்காக அமர்ந்திருப்பதாகவும், அவர் வந்து போன பிறகு பேட்டியை வைத்துக் கொள்ளலாமா என்று பவ்யமாக கேட்டார்.டில்லி தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டபோது அந்த நிருபரிடம் பேட்டியளிக்க ஒப்புக்கொண்டிருந்தார். நிறைய பேர் அவரை ஓட்டல் லாபியில் அங்கு இனம் கண்டுகொள்ளவில்லை. தையல்காரர் வர காலதாமதமாக பேட்டி துவங்கியது.வெளிச்சத்தில் இருப்பதை ரசிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, எல்லாம் விரைவில் மறைந்து போகும்; விஞ்ஞானிகள் வெளிச்ச மழையில்  நனைவதை விட, ஆய்வகத்தில் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள் என்றார்.டில்லி சங்க விழாவில் கூட, காலதாமதமாக வந்த இசைப்புயல் ரஹ்மானை பார்த்த மாத்திரத்தில் கூட்டத்தினர் விசில் அடித்தனர்.தனக்கு, தமிழ்ச் சங்க விழாவில் பாராட்டு பெறுவது மகிழ்ச்சிதான். இருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தேன் என்பதை அறிந்து கொள்வதையே தனது மகனும், மருமகளும் விரும்புவார்கள் என்றார். தாய்மொழி தமிழில் கொஞ்சமாய் ஆரம்பித்து பின்னர் ஆங்கிலத்திற்கு மாறிய அவர் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது.தனக்கு மூன்று வயதிருக்கும்போதே தமிழகத்தை விட்டு பரோடா சென்று கல்வி பயிலவேண்டிய சூழல்; அதனால், தமிழிலும், குஜராத்திலும் பேச நேரமின்றி போனதாக சொன்னார். பேட்டியின் நடுவே வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் இந்தியில் சரளமாக பதிலளித்தது அவரது இந்தி மொழி ஆளுமை புரிந்தது.கர்நாடக மற்றும் மேற்கத்திய இசையோடு கொஞ்சமாக இந்துஸ்தானியும் அவருக்கு பிடிக்கிறது.விளையாட்டு: "பிரிட்டனில் கிரிக்கெட் விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிக்க, கட்டணம் செலுத்த வேண்டும். பெரிய அளவில் நடக்கும் கிரிக்கெட் அல்லது டென்னிஸ் விளையாட்டை பார்க்க நீண்ட தொலைவு செல்ல வேண்டும். எனக்கு சொந்தமாக கார் இல்லை; மனைவியோடு டிரக்கில் செல்வதும், கேம்பிரிட்ஜ் வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவதும் பிடித்தமானவை' என்கிறார்.நோபல் பரிசு அவருடைய மற்றும் அவரது மனைவியின் வாழ்க்கையை மாற்றவில்லை. வெங்கியின் மனைவி வெரா ரோசன்பெர்ரி, ஒஹையோவில் வசிக்கும் அமெரிக்கர் என்பதோடு குழந்தைகளுக்கான 30 புத்தகங்களின் ஆசிரியர்.அவரது வளர்ப்பு மகள் டானியா கப்கா ஆரிகானில் மருத்துவராகவும், மகன் ராமன் ராமகிருஷ்ணன் நியூயார்க்கில் வயலின் போன்ற செல்லோ என்ற இசைக்கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர்.அமெரிக்க குடிமகனான ராமகிருஷ்ணன், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.சி., மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானி. - ஆர்.சி.ராஜாமணி -
435
2010-04-05T00:57:00+05:30
இந்தியா
வேண்டாம் இனி பூமி வெப்பமயமாதல் : விடை கொடுக்கும் இன்போசிஸ் நிறுவனம்
பூமி வெப்பமயமாதலை குறைக்கும் உலகளாவிய முயற்சியில் தன் பங்காக பெங்களூரு இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது."உலகில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனம், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனம்' என மற்ற நாடுகளால் மதிக்கப்படுவது, இன்போசிஸ் நிறுவனம். கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை உருவாக்கி, உழைப்புக்கு உதாரணமாய் கூறப்படும் நிறுவனம், தற்போது நவீன தொழில்நுட்பங்களால் பூமி சூடாவதைக் கண்டு, அதைக் குறைக்க தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது. அதில் உதயமானது தான், "கிரீன் இனிஷியேட்டிவ்' என்ற "பசுமை முனைப்பு' திட்டம். இத்திட்டத்தின் தலைவர் ரோஹன் பரேக், எக்ஸ்கியூட்டிவ் திகு ஆறுச்சாமி ஆகியோர் நமது நிருபரிடம் கூறியதாவது:வெப்பமயமாதலுக்கு எங்கள் அலுவலக கட்டடங்களில் உள்ள மின் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், மாசு போன்றவையும் ஒரு காரணம் என நினைக்கிறோம். எங்களது பெங்களூரு அலுவலக கட்டடங்களில் மட்டும் 22 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணம். எனவே, வெப்பமயமாதலை தடுக்க, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.எங்கள் நிறுவன தலைவராக நந்தன் நிகலேனி இருந்தபோது, 2008ல் இத்திட்டம் துவக்கப் பட் டது. மைசூருவில் உள்ள எங்கள் கட்டடங்கள் முற்றிலும் "பசுமை கட்டடங்களாக' வடிவமைக்கப் பட்டது. இப்போது நாட்டின் எந்த பகுதியில் இன்போசிஸ் கட்டடம் உருவாக்கினாலும் அவை வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்படுகிறது. மின் சேமிப்பு: மின்சாரத்தை சேமிக்க மின் விளக்குகளை "எல்.இ.டி.,' விளக்குகளை மாற்றுகிறோம். இதனால், மின் சேமிப்பு அதிகரிக்கும். பகல் நேரங்களில் அதிக அளவு சூரிய வெளிச்சம் அறைகளுக்குள் நுழையும் விதமாக கட்டடம் கட்டப்படுகிறது. எனவே மின் விளக்கு தேவைப்படாது. போதிய வெளிச்சம் இருந்தால், இயல்பாகவே மின்விளக்கு எரியாத வகையில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதே போல, அறையில் ஆட்கள் இல்லாவிட்டால் தானாகவே அணையும் விளக்குகளை பொருத்துகிறோம். தண்ணீர்: வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாகுறையும் ஏற்படுகிறது. இனிமேலும் தண்ணீரை வீணாக்க கூடாது. அனைத்து தண்ணீர் தேவையையும் மழை நீர் சேகரிப்பு மூலம் நிறைவேற்ற உள்ளோம். கழிவு நீரை சுத்திகரித்து, கழிப்பறை, தோட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்துகிறோம். மைசூரு வளாகத்தில் மழை நீரை சேகரிக்க, மூன்று செயற்கை ஏரிகளை உருவாக்கி உள்ளோம். மொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை இந்த ஏரிகள் நிறைவேற்றும். ஐதராபாத் வளாகத்தில் மொத்தம் 19 குளங்களை வெட்ட உள்ளோம். இவற்றில் நான்கு முடிந்துள்ளன. அந்த வளாகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் பணிபுரிவர். சென்ற ஆண்டு ஒரு நாள் பெய்த மழையிலேயே நான்கு குளங்களும் நிரம்பி விட்டன. பசுமை மின்சாரம்: பசுமை மின்சாரம் என்பது, நிலக்கரி, அணுசக்தி போன்றவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படாமல், மாசு ஏற்படுத்தாத நீர் மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவது. இதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே சிறு காற்றாலைகளை வைத்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சக்தியை வீணாக்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டும். ஒரு சதவீத மக்களின் மனம் மாறினால் கூட பெரிய சேமிப்பு கிடைக்கும். சக்தியை சேமிப்பதில் நாங்கள் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்கிறோம். இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுடன் பேசுகிறோம்.கட்டடங்களில் வெப்பத்தை குறைக்க பல தொழில் நுட்பங் களை பயன்படுத்துகிறோம். குளிர்ச்சியை ஏற்படுத்துவது என்பதே, "ஒரு பொருளில் உள்ள வெப்பத்தை வெளியே எடுப்பது தான்'. கட்டட சுவர்களுக்குள் ராக் உல், கிளாஸ் உல், ஸ்டைரோபோம் போன்ற பொருட்களை வைத்து கட்டினால், வெளி வெப்பம் உள்ளே வராது. அறையில் வெப்பம் குறைவாக இருந்தால், "ஏசி' அதிகம் தேவைப்படாது.ரசாயன பூச்சு உள்ள கண்ணாடிகளை ஜன்னல்களில் பயன்படுத்தினால் சூடு உள்ளே வராது. புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்களை இவை தடுத்து விடும். இதனால் வெளிச்சம் மட்டுமே அறைக்குள் ஊடுருவும்.கட்டட சுவர்களில் நேரடியாக சூரிய கதிர்கள் படுவது போல் கட்டக் கூடாது. கட்டடத்தின் மேலே, பளபளப்பான பூச்சு பூசப்பட்ட தடுப்பு வைக்கிறோம். இதில் பட்டு தெறிக்கும் ஒளி, மேலே சென்று இன்னொரு தடுப்பின் மீது பட்டு, திரும்பும். இப்படியே ஒளியை திருப்பி, அறைகளுக்குள் அனுப்பலாம். இந்த ஒளியில் வெப்பத்திற்குப் பதில் வெளிச்சம் மட்டுமே இருக்கும். இப்படி எல்லாம் கட்டடங்கள் கட்ட ஆரம்பத்தில் சற்று செலவு அதிகமானாலும், பின் சில ஆண்டுகளில் மின்சேமிப்பால் அதிக பலன் கிடைக்கும் கம்ப்யூட்டர்கள்: கம்ப் யூட் டர்கள் வெப்பத்தை உமிழுவதை தடுக்க, 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர்களின் மானிட்டர்கள் தானாகவே அணைந்து விடும் வகையில், அமைத்துள்ளோம். இதன் மூலமும் மின்சாரம் சேமிக்கப்படும். ஊழியர்களுக்குள் "ஈகோ கிளப்' (சுற்றுச்சூழல் சங்கம்) ஏற்படுத்தி உள்ளோம். இவர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். பறவைகளை ஈர்ப்பதற்காக எங்கள் வளாகங்களில் இப்போது உள்ளூர் மரக்கன்றுகளைத் தான் நடுகிறோம். மங்களூரு வளாகத்தில், அழிந்து வரும் தாவர இனங்களை காப்பாற்றி வளர்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டரி கார்: மாசுக் கட்டுப் பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களை இவர்கள், வளாகத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. வளாகத்தின் உள்ளே, வாகனங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஏராளமான சைக்கிள்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை எடுத்துக்கொண்டு வளாகத்திற்கு உள்ளேயே சுற்றிவிட்டு, எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம். புகை மாசை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு. கட்டடம் கட்டும் போது, ஏதாவது மரத்தை அகற்ற வேண்டி வந்தால், அதை வெட்டாமல், வேரோடு அகற்றி, வேறு இடத்தில் மீண்டும் நட்டு, உயிர் கொடுக்கின்றனர். இதனால் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.இப்படி சுற்றுச்சூழலை எந்த வழியில் எல்லாம் பாதுகாக்கலாமோ, அத்தனை வழிகளையும் உலகின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் செய்து வருகிறது. புதிதாக கட்டடங்கள் கட்டும் தொழில் நிறுவனங்கள் இவர்களை பின்பற்றினால் சுற்றுச்சூழல் மாசுபடாது. குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிறுவனங்களுக்கும் லாபம்; நாட்டின் எதிர்காலத் திற்கும் நல்லது. வெப்பமயமாதலுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு இன்போசீஸ் வழிகாட்டுகிறது. எல்லா தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனி மனிதர்களும் விழிப்புணர்வு பெற்றால், "பசுமை இந்தியா' என்ற நமது கனவு நிறைவேறும். நமது சிறப்பு நிருபர்
436
2010-04-05T00:58:00+05:30
இந்தியா
அகலப்பாதை திட்டங்கள் மந்தம்: போதிய ஒதுக்கீடு இல்லாததே காரணம்
தமிழகத்தில்   பதினோரு அகலபாதை ரயில் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு  ஒவ்வொரு ஆண்டும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தின் அகலப்பாதை மாற்றும் திட்டங்களுக்கு மொத்தம் 3 ஆயிரம் கோடி வரை தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ரூ.355 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக ரயில் திட்டங்கள் பலவற்றுக்கும் பல ஆண்டுகளாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை இருந்து வருகிறது. போதிய நிதிஒதுக்கீடு இல்லாத காரணத்தினாலேயே இந்த திட்டங்கள் அனைத்தும் ஆமைவேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.மீட்டர் கேஜ் பாதைகளை அகலப்பாதைகளாக மாற்றும் திட்டம் கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது நாட்டிலேயே அதிக தூரம் மீட்டர் கேஜ் பாதை உள்ள மாநிலமாக தமிழகம்தான் இருந்தது. 70 சதவீதம் வரை மீட்டர் கேஜ் பாதைகளாக இருந்தது. இவற்றை அகலப்பாதைகளாக மாற்றும் நடவடிக்கைகள் துவங்கினாலும் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தன. இருப்பினும் கடந்த 2004ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த வேலு மத்திய ரயில்வே இணையமைச்சரான பிறகு, ஓரளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் வேகம் பிடித்தன. ஆயினும் அனைத்து திட்டங்களுக்கும் ரூ.3 ஆயிரம் கோடி வரை தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ரூ.355 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி அன்று கணக்கின்படி தமிழகத்தில் 2 ஆயிரத்து 955 கி.மீ., தூரம் அகலப்பாதையாக  உள்ளன.  ஆயினும் இன்னும் ஆயிரத்து 152 கிலோமீட்டர் தூரம் மீட்டர் கேஜ் பாதைகள் உள்ளன.  இவை அகலப்பாதையாக மாற்றம்பெற இன்னும் பத்துஆண்டுகளுக்கும் மேல் ஆகும்.மதுரை-கோவை அகலப்பாதை பணி நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. கோவை-திண்டுக்கல் இடையிலான 224 கி.மீ., தூரமுள்ள இதை அகலப்பாதையாக்க ரூ.458 கோடி தேவை. ஆனால் இந்த பட்ஜெட்டில் ரூ.65 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில் 15 கி.மீ., தூரமுள்ள  கோவை-போத்தனூர் பாதை மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. இந்த ஆண்டு பழனி-திண்டுக்கல் பகுதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரையிலிருந்து நான்கு மணி நேரத்தில் கோவைக்கு சென்றுவிடலாம்.மயிலாடுதுறை-விழுப்புரம் இடையில் 192 கி.மீ.,பாதை  ரூ.665 கோடி தேவைப்படுகிறது.  கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை-காரைக்குடி,மயிலாடுதுறை-திருவாரூர், திருவாரூர்-திருக்காட்டுப்பள்ளி இடையிலான அகலப்பாதை திட்டம் 2007-08ம் ஆண்டு ஒப்புதல் தரப்பட்டது. இதற்கு ரூ.800 கோடி வரை தேவைப்படும். ஆனால் ரூ.60 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம்-காட்பாடி இடையிலான அகலப்பாதை திட்டம் கடந்த 2000-01 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு ரூ.340 கோடி தேவை. ஒதுக்கீடோ வெறும் ரூ.15 கோடி மட்டுமே.மதுரை- போடி இடையிலான அகலப்பாதை திட்டம் நிறைவேற பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகும். 90 கி.மீ., தூரமுள்ள இந்த திட்டத்துக்கு ரூ.182 கோடி தேவை. ஒதுக்கியதோ ரூ.7 கோடி மட்டுமே. இந்த திட்டம் கடந்த 2008-09ம் ஆண்டு சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - நமது டில்லி நிருபர்
437
2010-04-05T00:58:00+05:30
இந்தியா
காத்திருக்கும் ஐந்து தமிழக ரயில் திட்டங்களுக்கு திட்டக்கமிஷனில் நாளை விடிவு கிடைக்குமா?
தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்த திட்டக்கமிஷனின் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில், ஏற்கனவே முக்கிய கோரிக்கையாக இருந்து வரும் ஐந்து ரயில் பாதை திட்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவிர, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில் பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.தமிழகத்தின் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு கடந்த பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், அந்த திட்டங்கள் துவங்கப்படாமல் இழுபறியாகியுள்ளது. முக்கிய கோரிக்கையாக இருந்து வரும் ஐந்து ரயில் பாதை திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு ரயில்வே ஆணையம் ஒப்புதல் அளித்தும், தமிழக அரசு பாதி அளவு நிதி அளிக்க வேண்டுமென கேட்டதால் அப்படியே அந்தரத்தில் தொங்குகின்றன.அரியலூர் - தஞ்சாவூர், திண்டுக்கல் - குமுளி, தர்மபுரி - மொரப்பூர், திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை, நீடாமங்கலம் - பட்டுக்கோட்டை என ஐந்து திட்டங்களுக்கும் மொத்தம் ஆயிரத்து 551 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில், பாதியை ஏற்றுக்கொள்ளும்படி தமிழக அரசை மத்திய திட்டக்கமிஷன் கேட்டது. ஆனால், முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டுமென தமிழக அரசு கூறிவிட்டது. இது நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன; எதுவும் நடைபெறாமல் அப்படியே கிடக்கின்றன.இந்நிலையில் தான் நாளை, தமிழக ரயில்வே திட்டங்களுக்கான ஆய்வுக்குழு கூட்டத்தை மத்திய திட்டக்கமிஷன் கூட்டியுள்ளது. இதில், தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த கூட்டத்திலாவது தமிழகத்தின் புதிய ஐந்து திட்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது தவிர, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஆறு புதிய ரயில் திட்டங்களுக்கு சொற்ப அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதால், அவையும் கேட்பாரற்று கிடக்கும் சூழ்நிலை உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 700 கோடி  ரூபாய் மதிப்பிலான இந்த திட்டங்களுக்கு வெறும் 120 கோடி ரூபாய் மட்டுமே பட்ஜெட்டில் கிடைத்துள்ளது.சென்னையிலிருந்து மகாபலிபுரம் வழியாக கடலூர் வரைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 523 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த திட்டம் ஒப்புதல் கிடைக்கப் பெற்றும் இன்னும் சர்வே முடியவில்லை. சென்னை - பெருங்குடி - கடலூர் என உள்ள இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.ஈரோடு - பழநி ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. மொத்தம் 228 கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டம் 91 கி.மீ., தூரம் கொண்டது. இதற்கும் பாதை கண்டுபிடிக்கும் பணிகள் முடிவு பெற்று இருந்தாலும், வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதால், திட்டத்தை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை - செஞ்சி புதிய ரயில் திட்டத்திற்கு 2006-07ம் ஆண்டே ஒப்புதல் கிடைத்தாலும், இன்னும் பாதை தீர்மானிக்கும் பணி முடிவடையவில்லை. அதே போல, கரூர் - சேலம் ரயில் பாதை திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதால், இந்த திட்டம் அப்படியே உள்ளது.இது மட்டுமல்லாது, வேறு திட்டங்கள் அனைத்திற்குமே சொற்ப நிதி ஒதுக்கீடே கிடைத்துள்ளது. இதை வைத்துக் கொண்டு திட்டங்களை துவங்குவதும், அதைத் தொடர்ந்து வேகம் பிடிப்பதும் இப்போதைக்கு நடக்காத ஒன்றாகவே தெரிகிறது. இந்த நிலை மாறுமா அல்லது வழி பிறக்குமா என்பது, நாளை நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -நமது டில்லி நிருபர்-
438
2010-04-05T00:59:00+05:30
தமிழகம்
அனைத்து பல்கலை, கல்லூரிகளில் ஒரே நாளில் தேர்வு : தன்னாட்சி கல்லூரிகள் கலக்கம்
ஒரே சமயத்தில் அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடத்தினால், மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் இன்றி, ஏராளமான குளறுபடிகள் ஏற்படுமென தன்னாட்சி கல்லூரி முதல்வர்கள் கருதுகின்றனர்.தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட பல்கலை வாயிலாக 550க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 10 சதவீதத்துக்கும் அதிகமான கல்லூரிகள், "அடானமஸ்' எனும் தன்னாட்சி அந்தஸ்தை பெற்றுள்ளன. அவை, இணைவு பெற்ற பல்கலை பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. தேர்வுகளும் அவர்களாகவே நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் படிக்கும் மாணவர்களுக்கு, பட்டச் சான்று மட்டுமே பல்கலை மூலம் வழங்கப்படுகிறது.இதனால், ஒவ்வொரு பல்கலையும், ஒவ்வொரு தேதியில் தேர்வு துவக்கி, தங்கள் வசதிக்கேற்ப தேர்வு முடிவுகளையும் வெளியிடுகின்றன. பல்கலை தேர்வு துவங்கும் முன்னரே, தன்னாட்சிக் கல்லூரிகள் தேர்வை துவக்கி, அனைத்துக்கும் முன்பாக தேர்வு முடிவுகளையும் வெளியிடுகின்றன.கல்லூரி துவங்கும் நாள், விடுமுறை நாள் என, ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு பல்கலைக்கும் வித்தியாசம் காணப்படுகிறது. இவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இரு ஆண்டுகளாக தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.முதல் முயற்சியாக, அனைத்து பல்கலைகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதில் வரும் பிரச்னைகள் குறித்து எதிர்ப்பு கிளம்பவே, அவை கைவிடப்பட்டது. கடந்த வாரம் நடந்த துணைவேந்தர்கள் மற்றும் தேர்வாணையர் கூட்டத்தில், அனைத்து பல்கலை மற்றும் இணைவு கல்லூரிகளில் தேர்வு துவக்குவது, தேர்வு முடிவு வெளியிடுவது, வகுப்புகள் துவக்குவது உள்ளிட்ட செயல்பாடுகள், ஒரே நாளில் அமையும்படி மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டது.வரும் கல்வியாண்டில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:பொதுவாக பல்கலை தேர்வு துவங்கும் முன்னரே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தேர்வு முடித்து விடுவது வழக்கம். அதேபோல், பல்கலை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு முன்பே தன்னாட்சிக் கல்லூரிகளில் விடைத்தாள் மதிப்பீடும் செய்யப்பட்டு விடும்.இக்கல்லூரிகளில் மதிப்பீடு செய்யப்படும் போது, கல்லூரிகளில் உள்ள 50 சதவீத ஆசிரியர்களும், வேறு கல்லூரிகளில் இருந்து 50 சதவீத ஆசிரியர்களும் கலந்து கொள்வர். பல்கலை மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் போது, கல்லூரி பணிகள் முடிவடைந்து விடுவதால், மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பல்கலைக்கு செல்ல வசதியாக இருக்கும்.பல்கலைகள் பலவற்றில், தேர்வு முடிவு வெளியாக தாமதம் ஏற்படக் காரணமே, விடைத்தாள் மதிப்பீடு செய்ய, போதிய ஆசிரியர்கள் கிடைக்காததே. சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களை கல்லூரி நிர்வாகம், மதிப்பீடு செய்ய சரியாக அனுப்பி வைப்பதில்லை. அரசு கல்லூரிகளிலோ, ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.ஒரே சமயத்தில் அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடத்தினால், மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் இன்றி, ஏராளமான குளறுபடிகள் ஏற்படும். ஒரே சமயத்திலும் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது. காரணம், மதிப்பீடு செய்யும் பணிக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதில்லை. அதிக டி.ஏ., கிடைக்கும் இடத்துக்கு மதிப்பீடு செய்ய போய் விடுகின்றனர். உதாரணமாக, திருச்சியில் இருக்கும் ஒரு ஆசிரியர், திருச்சி பல்கலைக்கு மதிப்பீடு செய்ய சென்றால், 180 ரூபாய் டி.ஏ., கிடைக்கும்; ஆனால், அதே ஆசிரியர் சென்னை அல்லது சேலம் பல்கலைகளுக்கு சென்றால் 1,500 ரூபாய் வரை கிடைக்கும்.அதே போல், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் மதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவர். இப்போதிருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்வு முடிவை வெளியிடுவது சாத்தியமற்றது.மதிப்பீடு செய்யும் பணியை கட்டாயப்படுத்துவது, காலியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவற்றை செய்து முடித்த பின், முயற்சி செய்தாலாவது ஓரளவு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். ---நமது சிறப்பு நிருபர்-
439
2010-04-05T01:03:00+05:30
இந்தியா
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
திண்டுக்கல் : வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென உருவான வறுமையை எதிர்கொள்ள, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு திண்டுக்கல் ரோட்டோரத்தில் தீப்பெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த நாராயணன் மகள் குணசுந்தரி (28). வறுமை தெரியாமல் வசதியாக வாழ்ந்தவர். இவரது கணவர் திருப்பதிக்கு மணம் முடித்து கொடுத்த போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், 45 பவுன் நகையும் வழங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருப்பதியும் எம்.ஏ., பி.எட்., முடித்த ஆசிரிய பட்டதாரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.வேலையில்லாததால் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி குணசுந்தரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. வசதியாக வாழ்ந்தவர் கடன் மற்றும் வறுமையில் மூழ்கினார். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். கடனை அடைத்து இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டும்.எனவே தனக்கு தெரிந்த தீப்பெட்டி விற்கும் தொழிலை கையில் எடுத்தார். சாத்தூரில் இருந்து தீப்பெட்டி வாங்கி வந்து, மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனியாக வந்து, பஸ்ஸ்டாண்ட் அருகில் ரோட்டோரத்தில் நின்று தீப்பெட்டி விற்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வெயிலில் நின்று தீப்பெட்டி விற்று சம்பாதித்து வருகிறார்.இவரது திறமையை மதித்து கணவனும் ஊக்கப்படுத்தி அனுப்பி உள்ளார். மதுரையில் காலையில் கோழிக்கறிக்கடை நடத்தும் திருப்பதி, மாலையில் டீ மாஸ்டராக வேலைக்கு செல்கிறார். இவரும் சேர்ந்து சம்பாதித்து வறுமையை விரட்டியடித்து, குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கின்றனர். குணசுந்தரி கூறியதாவது: நான் வசதியாக வாழ்ந்த போது இருந்த உறவினர்கள் யாரையும் வீழ்ந்த பின்னர் காணவில்லை. எனவே நான் தன்னம்பிக்கை இழக்காமல் தொழிலில் இறங்கினேன். வெயிலில் 8 மணி நேரம், 10 மணி நேரம் நின்று தீப்பெட்டி விற்றால் எனக்கு சாப்பாடு, பஸ் செலவு போக 200 ரூபாய் வரை கிடைக்கும். வசதியாக வாழ்ந்த என்னை கவுரவம் என்ற போர்வையை போர்த்தி முடக்கி வீணடித்து விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி பெண்களும் கவுரவமாக சம்பாதிக்கலாம் என வழிகாட்டியதே என் கணவர் தான். அவரும் கடுமையாக உழைக்கிறார். இருவரும் சேர்ந்து மூன்றாண்டு உழைப்பில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
440
2010-04-05T01:05:00+05:30
இந்தியா
சோயப் மாலிக் மீது மோசடி வழக்கு!சானியா திருமணத்தில் சிக்கல்
ஐதராபாத் : ஆயிஷா குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சோயப் மாலிக் மீது மோசடி, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து மாலிக்-சானியா திருமணத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படுவதால், இவர்களது திருமணத்தை முன்கூட்டியே நடத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடையே வரும் 15ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் ஐதரா பாத்தை சேர்ந்த ஆயிஷா என்ற பெண் சர்ச்சை கிளப்பினார். தனக்கும் சோயப் மாலிக் இடையே கடந்த 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப் படி மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினார். இந்நிலையில் ஐதராபாத் வந்த மாலிக், திருமணம் குறித்து சானியா குடும்பத்துடன் விவாதித்தார். பின் நேற்று முதன் முறையாக பத்திரிகை யாளர்களை சந்தித்து, மாலிக் கூறியது: கடந்த 2001ல் சார்ஜா சென்ற போது, எனது ரசிகர் ஒருவர் மூலமாக, ஆயிஷா போனில் அறிமுகமானார். பின், ஒருநாள் அவரது போட்டோக்களை எனக்கு அனுப்பி வைத்தார். பார்க்க முடியவில்லை: கடந்த 2002ல் அவரை நேரில் சந்திக்க ஐதராபாத் வந்தேன். அப்போது அவசர வேலையாக சவுதி அரேபியா சென்றுவிட்டார். அவர் திரும்பி வரட்டும் என, ஐந்து நாட்கள் ஐதராபாத்தில் காத்திருந்தேன். இறுதியில் அவரது பெற்றோர்,"" தற்போது அதிக எடையாக இருப்பதால், உங்களை சந்திக்க விரும்ப வில்லை,'' என்றனர். போனில் திருமணம்: பின் ஒருநாள் (2002ல்) என்னிடம் ஆயிஷா,"" நமது தொடர்பு குறித்து, ஐதராபாத்தில் பலவாறு பேசுகிறார்கள். இது எனது பெற்றோரை பெரிதும் பாதித்து உள்ளது. இதற்கு ஒரே வழி, போன் மூலம் திருமணம் செய்து கொள்வது தான்,'' என்றார். பெற்றோருக்கு தெரியாது: எனக்கு அப்போது 20 வயது. திருமணம் செய்து கொள்ளும் படி ஆயிஷாவிடம் இருந்து அடிக்கடி நெருக்கடி வந்தது. வேறுவழியின்றி, 2002 ஜூன் மாதம், எனது நண்பரின் கடையில் வைத்து, ஆயிஷாவை போனில் தொடர்பு கொண்டு, திருமணப்பதிவு சான்றிதழில் கையெழுத்திட்டேன். போட்டோவில் இருந்த பெண், ஆயிஷா தான் என்ற நம்பிக்கை யில் தான் திருமணம் செய்தேன். இது என் பெற்றோருக்கு தெரியாது. மோசமான நிகழ்வு: பின் ஆயிஷா குறித்த உண்மை கடந்த 2005 ஆகஸ்டில் தெரிய வந்த போது அதிர்ச்சி அடைந்தேன். சவுதி அரேபியாவில் உள்ள ஒரு பள்ளியில் வேலை செய்த, ஆசிரியை ஒருவர், என்னைத் திருமணம் செய்ததாக அனைவ ரிடமும் கூறியுள்ளார். உடனே எனது மைத்துனர், அவரது போட்டோவை வாங்கி, என்னிடம் கொடுத்தார். அதில் ஆயிஷாவின் மூத்த சகோதரி என கருதப்பட்ட மகா அபாவின் படம் இருந்தது. அப்போது தான் ஆயிஷாவும் மகா அபாவும் ஒரே நபர் என்று தெரிய வந்தது. விவாகரத்து இல்லை: ஆயிஷா என்ற பெயரில் சித்திக் குடும்பத்தினர் வேறு ஒருவரின் போட்டோவை தான் எனக்கு முதலில் அனுப்பியுள்ளனர். அந்த பெண்ணை இதுவரை சந்தித்தது இல்லை. அவரை தான் டெலிபோன் மூலம் திருமணம் செய்தது கொண்டுள்ளேன். ஆக, வேறு ஒருவரின் போட்டோ மூலம் ஆயிஷா குடும்பத்தினர் திட்டமிட்டு மோசடி செய்து உள்ளனர். இஸ்லாமிய மதப்படி, உண்மையான திருமணத்துக்குத் தான், விவாகரத்து தரமுடியும். போலியாக செய்த திருமணத் துக்கு விவாகரத்து தர முடியாது. வெளியிட மாட்டேன்: பின், மோசடியாக அனுப்பிய போட் டோவை, மீடியாவுக்கு தெரியப் படுத்த இருப்பதாக ஆயிஷா விடம் தெரிவித்தேன். அதற்கு, ""அந்த பெண்ணுக்கு, திருமண மாகி விட்டது. அவரது வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும்,'' என, என்னிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் அந்த போட்டோவை வெளியிட வில்லை. மீண்டும் பிரச்னை: இது தொடர்பாக என்மீதான குற்றச் சாட்டுகளை நிறுத்திக் கொள்ளும் படி, ஆயிஷாவின் தந்தை, எம்.ஏ.சித்திக்கிற்கு கடந்த 2008ல் எனது வக்கீல், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் தற்போது, சானியாவை திருமணம் செய்யவுள்ள நிலை யில், மீண்டும் பிரச்னை கிளப்பு கிறார். இதுகுறித்த சட்டபூர்வ மான பிரச்னையை, எனது வக்கீல் கவனித்துக் கொள்வார். சானியாவுக்கு தெரியும்: இந்த உண்மை சானியாவுக்கும் தெரியும். திருமணத்துக்கு பின் சானியா தொடர்ந்து இந்தியாவுக் காக விளையாடுவார். இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.போலீசார் வழக்கு: இதற் கிடையே ஆயிஷாவின் தந்தை சித்திக், நேற்று ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், மாலிக் மீது மோசடி புகார் கொடுத்தார். இதையடுத்து மாலிக் மீது, 506 (அச்சுறுத்துதல்), 420 (மோசடி) மற்றும் 498 ஏ (வரதட்சணை கொடுமை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். பிரச்னை பெரிதாவதால், சானியாவுட னான திருமணத்தை வரும் 15ம் தேதிக்கு முன்பே நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டு வருகின்றனர். ரூ. 5 கோடி பேரம்?சோயப் மாலிக் மோசடி விபரம் குறித்து ஆயிஷாவின் தந்தை சித்திக் கூறுகையில்,"" தன் மீதான குற்றச் சாட்டை வாபஸ் பெறுவதற்கு, சோயப் மாலிக், 5 கோடி ரூபாய் வரை தருவதற்கு முன்வந்தார்,'' என்றார். பாக்., தலையீடு : சோயப் மாலிக் பிரச்னையில் பாகிஸ்தான் அரசு, ஆதரவாக செயல்படவுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில்,"" மாலிக், பாகிஸ்தான் வீரர் என்பதால், இவருக்கு சட்டரீதியில் என்னென்ன உதவிகள் தேவையோ, அவை அனைத்தும் இவருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
441
2010-04-05T01:11:00+05:30
இந்தியா
இது உங்கள் இடம்
கை அசைத்து போஸ்... : எஸ்.சிங்கராயர், வீரபாண்டி, திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: உ.பி., மாநிலத்தில் பகுஜன்  சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு நடந்த புகழாரத்தை, நாம் ஒவ்வொருவரும் பார்த்தோம்.கரன்சி மாலையைப் பார்த்து வெம்பி, கொதித்து போய்விட்டனர். ஒவ்வொரு நாளும் நம் அரசியல்வாதிகள், நம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்றனர்.இவர்கள் எல்லாரும் நாட்டிற்கு நல்லது செய்வர் என்று எண்ணி, நாம் ஓட்டளித்தால், நம் நாடு கெட்டு குட்டிச் சுவராகிவிடும் போல் இருக்கிறது.தொண்டர்கள் இப்படி பணமாலை அணிவித்தாலும், ஒரு மாநில முதல்வர், அரசியல் மூத்த தலைவர் அதை அணிந்து கொண்டு, கை அசைத்தவாறு போஸ் கொடுக்கிறார். என்ன கொடுமையான செயல்?இனிவரும் காலத்தில், ஜனநாயகம் முற்றிலும் பணநாயகம் ஆகிவிடும்.நம் முன்னோர்களோ, நாடு விடுதலை பெற, எத்தனையோ சொல்ல மாளாத கொடுமைகளை தாங்கிக் கொண்டு, சுதந்திரம் அடைய செய்தனர். இப்போது இருக்கும் அரசியல்வாதிகள், நாட்டிற்காக ஒரு சொட்டு கண்ணீர் விடத் தயாராய் இல்லை.சில அரசியல்வாதிகளின் அலுவலகங்களிலும், வீட்டிலும் சோதனை செய்தபோது, கோடி கோடியாக பணம் கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கும் போது, பணமாலை இவர்களுக்கு சாதாரணமே.                                               கோபுர சின்னம் போதும்! பி.சரவணன், இடைக்காட் டூர், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மக்களிடம் இருந்து வசூல் செய்யும் வரிப்பணத்திலிருந்து தான், இந்த அரசு எனும் சக்கரமே சுழல்கிறது. கஷ்டப்பட்டு சம் பாதித்து மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில், ஒவ்வொரு சலுகைகளையும் மறுபடியும் மக்களுக்கே வழங்குகிறது அரசு.அப்படி இருக்கும் போது, எதற்கு ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் தலைவர்கள், தங்களது பெயரை அல்லது புகைப்படத்தைப் போட்டு, இலவசம் அல்லது சலுகைப் பொருட்களை தருகின்றனர்?இது, முழுக்க மக்களை முட்டாளாக்கும் செயல். அரசு என்பதே மக்களால் மக் களுக்காக ஏற்படுத்தப்பட் டது தானே தவிர, எந்த ஒரு தனிப்பட்டவரும் பலனடைய அல்ல.ஆகவே, இதுபோன்று அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் பொருட்களில் ஆட்சி புரியும் தலைவர்களின் புகைப்படம், பெயர் போடாமல், தமிழக அரசு எனும் கோபுர சின்னத்தை போடுவது மிகச் சிறந்தது.இதையே மக்களும் விரும் புவர். இதை விட்டு விட்டு, தங்கள் பெயர், புகைப்படம் போட்டு, கீழ்மட்டத்திலுள்ள பாமர மக்களை ஏமாற்ற வேண்டாம்.ஆட்சி புரிபவர்கள், தங்களின் சொந்த பணத்தில் தான், இது போன்ற சலுகைகள் வழங்குகின்றனர் என தவறான எண்ணம், அவர்கள் மனதில் தோன்ற காரணமாகி விடுகிறது. இதனால், இவர்களின் ஓட்டு, ஆட்சி பீடத்திலிருப்பவர்களுக்கு போய்விடுகிறது.அதனால், தமிழக அரசு எனும் சின்னத்தையே அரசு வழங்கும் அனைத்து சலு கை, பொருட்களிலும் இடம் பெற ஏற்பாடுகள் தேவை. காக்க வேண்டும் சிட்டு குருவியை... :டாக்டர் பி.விஜயன், துணை இயக்குனர் (ஓய்வு), கால்நடை பராமரிப்புத் துறை, பொள்ளாச்சியிலிருந்து எழுதுகிறார்: சிட்டுக் குருவிகளை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை வரவேற்கத்தக்கது.அமெரிக்காவில் கான்கிரீட் வீடுகள் அதிகம். பாதாள சாக் கடை வசதி, எல்லா இடங்களிலும் உண்டு. பல பகுதிகளில், மூன்று மாதங்களுக்கு பனிப் பொழிவு உண்டு. கொடி மற்றும் தாவரங்கள் வீட்டுப் பகுதிகளில் இல்லை; மொபைல் போன் கோபுரங் கள் அதிகம்.இவற்றையும் தாண்டி,  காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கில் சிட்டுக்குருவிகள் பறந்து வருவது கண் கொள்ளா காட்சி. நாங்கள் அங்கிருந்த நாட்களில், நாம் உண்ணும் அரிசியை முற்றத்தில் வைத்தால், ஆனந்தமாக, சிட்டுக் குருவிகள் வந்து உண்பது பார்ப்பதற்கு ஒரு பொழுதுபோக்கு.இங்கு நமது ஊரில் சமீப காலமாக, வெள்ளை மாவு பூச்சிகள் செடிகளிலும், மரங் களிலும் அதிகம் தாக்கி தாவரத்தை அழிக்கின்றன. இதை கட்டுப்படுத்த, சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் ஒரு தீர்வாக இருக்கும்.எறும்புகளும், வெள் ளை மாவு பூச்சிக்கு எதிரி. சிட்டுக்குருவி, தேன் சிட்டு ஆகியவை, செடிகளில் பரவும் வெள்ளை பூச்சியை தின்று கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வரும்.பனிப்பொழிவு காலங்களில், பறவைகளுக்கு உணவளிக்க கூடைகள், கடைகளில் விற்கப்படுகின்றன. அதை மக்கள் வாங்கி செல்கின்றனர். தேவையற்ற பூச்சிகளை ஒழிக்க, பூச்சிக்கொல்லி உபயோகிப்பதற்கு பதில் சிட்டுக் குருவிகளை பாதுகாப்பது ஒன்றே சரியான தீர்வு.  நீதிமன்றங்களை நம்பியுள்ளோம்! கே.சங்கர்பாபு, பழனியிலிருந்து எழுதுகிறார்: கொலை செய்தவர்கள் சிறைக்கு போகும் போது, சிரித்த முகத் துடன், வெற்றிச் சின்னமாக, தங்கள் விரல்களை உயர்த்தி காண்பித்து, ஏதோ கொ டைக் கானலுக்கு சுற்றுலா போவது போல் செல்கின்றனர்.சிறைச்சாலைக்கு போய் விட்டு, காசு பணத்தை கொட்டி, ஜாமீனில் வெளி யே வந்து, பழைய படி தங்கள் பழைய தொழிலையே செய்து வருகின்றனர்.முதலில் ஜாமீன் மறுப்பு, பின் பழைய படியும் மேல்முறையீடு. அதிலே ஜாமீ னை தளர்த்துவது, என்று, சலுகைகள் நீள்கிறது.ஒன்றுமில்லையென்றால், நெஞ்சுவலி என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்து, தனியார் மருத்துவமனைகளில் படுத்துக் கொண்டு, வசதியாக இருந்து வருகின்றனர்.ஆனால், இம்மாதிரி விஷயங்களில் மன சாட்சிக்கு பயந்து வழக்காடுபவர்களின் எண்ணிக்கையை, விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆகவே, பணம் இருந்தால் கொடியவர்களும் தப்பித்து விடலாம் என்ற நிலை உருவாகி வருகிறது.ஆக, குண்டர் சட்டத்தில் நடைமுறை சிக்கல் இல்லை. கலெக்டர் கையெழுத்து போட்டால் போதும், ஒரு வருடத்திற்கு சிறையை விட்டு வெளியே வர முடியாது. ஒரு 10 பேரை அடைத்தால் போதும், தமிழகத்தில் உள்ள 45 ஆயிரம் மருந்து கடைகளும் சுத்தமாகிவிடும். போலி மருந்துகளால் எல்லாரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.கொடுமைகள் இனியும் நடக்காமல் இருக்க, நாங்கள் ஆண்டவனை கூப்பிடப் போவதில்லை. நீதிமன்றங்களை தான் நம்பியுள்ளோம்.                       குற்றம்புரிந்தாயா?நா.மோகன், திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: இடஒதுக்கீடுக் கொள்கைக்கு, முற் றிலும் ஆதரவானவன் நான். வகுப்பு வாரி ஒதுக்கீட்டின் படி, பணி நியமனம் செய்வதில், எனக்கு உடன்பாடே.ஆனால், பதிவுத்துறை போன்ற சிலவற்றில், பதவி உயர்வில் சில பிரிவினருக்கு, வகுப்பு வாரி ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கும் கேலிக் கூத்து, பல்லாண்டுகளாக உள்ளது.பணி நியமனத்தின் போது, ஒரே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு வகுப்பினர், ஒரே கால கட் டத்தில் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், தான் சார்ந்துள்ள வகுப்பால், ஒருவர் மற்றவருக்கு அதிகாரியாகும் அவலம் நிகழ்கிறது.இதை அறியாத பலர், உயர் பதவி அடையாதவரைப் பார்த்து, "நீ ஏதும் குற்றம் புரிந்தாயா? உனக்கு ஏன் வரவில்லை பதவி உயர்வு?' எனக் கேட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றனர்.இந்தச் சமூக அநீதி, இனியேனும் அரங்கேறாமல் தடுக்க புதிய வழியுண்டா?
454
2010-04-08T12:39:00+05:30
இந்தியா
டீ கடை பெஞ்ச்
ஜெ., அறையில் பெருமாள், முருகன், லட்சுமி, சரஸ்வதி...! ''நேத்து ஒரு விவகாரத்தை சொல்ல மறந்துட் டேன் ஓய்...!'' என்றபடியே பெஞ்சில் வந்து அமர்ந்தார் குப்பண்ணா.''எதை மறந்தீங்க...?'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''புதிய சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் பூஜையறையும் வைச்சிருக்கா ஓய்... சமையலறைக்கு பக்கத்தில இருக்கற இந்த அறையில், திருப்பதி வெங்கடாஜலபதி, முருகன், லட்சுமி, சரஸ்வதி படங்கள் வைச்சிருக்கா... அதோட, சரபேஸ்வரர், உவரி சுயம்பு லிங்க சுவாமி, நரசிம்மர் படங்களும் இருக்கு ஓய்... இந்த படங்களுக்கு தினமும் மல்லிகை மலர்கள் வைச்சு அலங்காரமும் நடக்கறது...'' என்றார் குப்பண்ணா.''நானும் ஒரு அ.தி.மு.க., மேட்டர் சொல்றேன் பா...'' என அடுத்த விவகாரத்தில் நேரடியாக நுழைந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...''பென்னாகரத்தில் அ.தி.மு.க., தோல்வி அடைஞ்ச வருத்தமே இன்னும் தொண்டர்களிடம் இருந்து போகலை... அதுக்குள்ள, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் முடிவும் அ.தி.மு.க.,விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு... அங்க, பதினைஞ்சு வார்டுகளில் போட்டி போட்டு, ஒண்ணுலே கூட ஜெயிக்க முடியாம போனதால, ஜெ., ரொம்ப, 'அப்செட்' ஆகியிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''மேயர் விழாவை துணைக் கமிஷனர் புறக்கணிச்சிட்டாருங்க...'' என விவாதத்தை திசை மாற்றினார் அந்தோணிசாமி.''எந்த மாநகராட்சி விவகாரம் வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.''சென்னை மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை காசு கொடுத்து வாங்கும் திட்ட துவக்க விழா நடந்துச்சுங்க... பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்க வேண்டியிருந்ததால், மேயர் சுப்ரமணியன் வருகை தாமதமாச்சுங்க... மேயர் வருகைக்காக சில நிமிடங்கள் காத்திருந்த, துணை கமிஷனர் ஜோதி நிர்மலா திடீர்னு கிளம்பிப் போயிட்டாங்க...''அவர் கிளம்பிப் போன சில நிமிடங்களில், மேயர் வந்து சேர, விழா துவங்கிருச்சுங்க... மேயர், கமிஷனர் கலந்துக்கிட்ட விழாவை துணை கமிஷனர் புறக்கணிச்ச விவகாரம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.''திறப்பு விழா தள்ளிப் போகும் போலிருக்கே பா...'' என கடைசி விவகாரத்தில் நுழைந்தார் அன்வர்பாய்.''என்ன திறப்பு விழான்னு விவரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை வரும் 15ம் தேதிக்குள் துவங்கப்படும்ன்னு ரயில்வே துணை அமைச்சரும், தெற்கு ரயில்வே பொது மேலாளரும் சொல்லிருந்தாங்க பா... நாள் நெருங்கிட்டு இருக்கு... ஆனா, திறப்பு விழாவுக்கு எந்த ஏற்பாடும் நடக்கலைங்க... அதிகாரிகள்ட்ட கேட்டா, வாயைத் திறக்க மாட்டேங்கறாங்க...'' என்றார் அன்வர்பாய்.''ஏதாவது காரணம் இருக்கும் ஓய்...'' என வாயைக் கிளறினார் குப்பண்ணா.''இந்த ரயில்பாதை திறப்பு விழாவுக்கு தேதி கேட்டு, மம்தா பானர்ஜிக்கும், தமிழக முதல்வருக்கும் அதிகாரிகள் கடிதம் எழுதிருக்காங்க... இந்த கடிதத்துக்கு இதுவரை பதில் வரலை... அவங்க இல்லாமல் விழாவை நடத்தறாதான்னு, அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடிக்குது பா... சட்டசபை நடப்பதால் முதல்வர் கலந்துக்குறதுல சிக்கல்... மம்தாவும் பதில் தெரிவிக்கலை... இதுதான் சிக்கலுக்கு காரணம்...'' எனச் சொல்லி முடித்தார் அன்வர்பாய்; பெஞ்ச் அமைதியானது.
455
2010-04-08T14:14:00+05:30
இந்தியா
டவுட் தனபாலு
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:  காங்கிரஸ் கட்சியின் 125ம் ஆண்டு விழாவையொட்டி, உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை நடக்கிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களின் வழியே சென்று வேதாரண்யத்தில் முடிகிறது. அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தொண் டர்கள் குறைந்தபட்சம் 125 பேர் யாத்திரையில் கலந்து கொள்ள மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.டவுட் தனபாலு: எங்கள் தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாதுன்னு அப்பப்ப ஆவேசப்படுறீங்க... ஆனா, மாவட்டத் துக்கு 125 பேரைத் தேத்தறதுக்கு இவ்வளவு சிரமப்பட்டு அறிக்கை கொடுக்கறீங்களே... ஆனாலும், கட்சியின் நிலையை நீங்க இப்படி வெளிப்படையா போட்டு உடைச்சிருக்கக் கூடாது!காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன்: கோவை அம்மன்குளத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகள் புதைந்து கொண்டே போகின்றன. அந்த இடத்தில் வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யும் முன், அந்த இடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? மண் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?டவுட் தனபாலு: வீடு கட்டப்பட்ட இடத்தின் பெயரே அம்மன், 'குளம்'ம்னு இருக்கும்போது, ஆய்வுக்கு அவசியமே இல்லையே... குளத்தில வீடு கட்டினா, புதையாம இருக்குமா...? நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில் அரசே முன்மாதிரியா இருப்பதைத் தான், இந்த விவகாரமும் வெளிப்படுத்தியிருக்கு!முதல்வர் கருணாநிதி: கடந்த 1989ல் தி.மு.க., ஆட்சியில் மேலவை வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்பப் பட்டது. 1991ல் அ.தி.மு.க., அந்த தீர்மானத்தை நீக்கியது. 1996ல் தி.மு.க., ஆட்சியில் மேலவை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினோம். 2001ல் அ.தி.மு.க., தீர்மானத்தை நீக்கியது.டவுட் தனபாலு: மேலவையை கொண்டு வர வேண்டும் என்பதில், உங்களுக்கு உள்ள தீராத ஆர்வம் இதில் இருந்தே தெரியுதே... 1989-91 வரை, இரு ஆண்டுகள், 1996-2001 வரை ஐந்து ஆண்டுகள் என ஏழு ஆண்டு ஆட்சியில் இருந்த போது, ஏன் மேலைவையைக் கொண்டு வரலைங்கறது என், 'டவுட்!'
473
2010-04-17T11:38:00+05:30
இந்தியா
மீண்டும் புகை கக்குகிறது எரிமலை : விமானம் இப்போதைக்கு ஓடாது; பல கோடி நஷ்டம்
லண்டன்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெடித்து சிதறிய எரிமலை மீண்டும் தீயை கக்கியது. இதனால் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே விமான இயக்கம் இல்லாமல் வெளி நாடுகளில் சிக்கிய பயணிகள் கப்பல் மூலம் ஐரோப்பா திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கடந்த வாரம் 14 ம் தேதி ஐஸ்லாந்தில் உள்ள இஜாப்ஜலாஜோகுல் என்ற எரிமலை திடீரென வெடித்து தீ குழம்பை கொப்பளித்தது. இது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. எப்போதும் இல்லாத அளவு இந்த எரிமலை தனது சீற்றத்தை காட்டியது. அருகில் உள்ள பனிமலை மீதும் தாக்கி ஒரு புறம் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடியது. இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய புகை மற்றும் சாம்பல் வானத்தின் 11 கி.மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருந்து வெளியேற , உள்ளே வர வேண்டிய விமானங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.லண்டன், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து . ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் பயணப்போக்குவரத்து பாதிக்கப்பட்டன. முக்கிய விமான நிலையங்களில் பெரும் பணக்கார பயணிகள் எல்லாம் ஆங்காங்கே இரவு முழுவதும் தவித்தனர் .இந்த நிலைமை சீராகும் ஒரிரு நாளில் விமானம் இயக்கம் சீரடையும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் நேற்று இரவில் இந்த ஐஸ்லாந்து எரிமலை மீண்டும் வெடித்தது. இதனால் சாம்பல் புகை அடர்த்தி மேலும் அதிகரித்து விட்டது. லண்டனில் உள்ள தேசிய வான்வழி போக்குவரத்து கன்ட்ரோலர் ஒருவர் கூறுகையில்; சில விமான நிலையங்கள் திறக்கப்படும் என கருதி வந்த நேரத்தில் தற்போதைய எரிமலை கொப்பளிப்பு மேலும் தாமதப்படுத்தும் என தெரிகிறது. லண்டனில் பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.பொருளாதார மந்தம் : ஐரோப்பிய நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தவித்த வண்ணம் உள்ளனர். ஐரோப்பிய கப்பற்படையினர் உஷார் படுத்தப்பட்டு கப்பலில் ஏற்றி வர புதிய கப்பல்கள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கப்பல் மற்றும் தரை வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்றுமதி, இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய எரிமலையால் லண்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரீஸ், ஹங்கேரி, நார்வே உள்ளிட்ட நாடுகள் பாதிப்பில்லை.பல விமான நிலையங்களில் பூக்கள் அனுப்ப முடியாமல் வாடி வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஏற்கனவே உலக அளவில் பொருளாதார மந்தம், இந்த விமான போக்குவரத்து பாதிப்பு மேலும் மந்தத்தை அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.ஐரோப்பா செல்ல வேண்டாம் : லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா , கனடாவுக்கு செல்லும் விமானங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்காகோ - மும்பை, சிக்காகோ - ஆமதாபாத் விமானங்கள் இந்தியா வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் வெளிநாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐரோப்போ நாடுகளுக்கு பயணத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறையினர் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
474
2010-04-17T12:27:00+05:30
இந்தியா
ச்ண்ஞீ
asdasdasd asd asdadasdasdasd
475
2010-04-18T10:11:00+05:30
இந்தியா
பரிதாபமாக காட்சியளிக்கும் மறைமலையடிகள் இல்லம் : தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன் பொலிவு பெறு�
தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி தமிழ் அறிஞர்களை கவுரவிப்ப திலும், தமிழ் அறிஞர்களின் நூல் களை அரசுடமையாக்குவதிலும் எப்போதும் தனி அக்கறை கொண்டவர். இதற்கு முத்தாய்ப்பாக, உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரும் ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒன்றை அவர் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன. மாநாட்டை முன்னிட்டு தமிழ் அறிஞர்களின் நூல்கள், அருமை, பெருமைகள், அவர்களின் நினைவிடங்களை தூசி தட்டி, மிளிர வைக்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், தமிழ் மொழிக் காக பாடுபட்ட 'பைந்தமிழ் வித்தகர்' மறைமலையடிகளாரின் இல்லம் சீர்குலைந்து காணப்படுவது இன்னும் முதல்வரின் கவனத்திற்கு செல்லவில்லை போலும். அதனால், பெருமை பெற்ற ஒரு தமிழ் வித்தகரின் இல்லம் சிதிலமடைந்து போய் உள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம், சாவடி தெருவில் 40 சென்ட் பரப்பளவிலான இடத்தில் மறைமலையடிகளாரின் இல்லம் உள்ளது. அடிகளாரின் மறைவிற்கு பின் கடந்த 1962ம் ஆண்டு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பக்தவத்சலம், அவர் இல்லத்தின் முகப்பில் மறைமலையடிகள் கலை மன்றத்தை திறந்து வைத்தார். தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் இந்த மண்டபத்தில் நடத்தப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடிகளாரின் பேரன் தாயுமானவன், அங்கு மறைமலையடிகள் சிலையை நிறுவினார்.திருநெல்வேலி சைவ சித்தாந்த கழகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த இல்லத்தில் மறைமலையடிகள் பயன்படுத்திய கேசட், மெத்தை, தலையணை, கட்டில், நாற்காலி, பூஜை பொருட்கள், சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் தற்போதும் உள்ளன. முறையாக பராமரிக்காததால், அவை பெரும்பாலும் செல்லரித்துவிட்டன. அடிகளார் மறைவிற்கு பின் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை, அவர் பூஜை நடத்திய அறையில் தெய்வ வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. தற்போது வாட்ச்மேன் ஒருவரை தவிர இல்லத்தை கவனித்துக் கொள்ள வேறு யாரும் அங்கு இல்லாததால், பூஜை அறை கூட இருளடிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் இல்லத்தின் முகப்பில் இருந்த அடிகளாரின் சிலை அடியோடு பெயர்ந்து விழுந்தது. அதை மீண்டும் நிறுவ யாரும் முன்வரவில்லை. இல்லம் சிதிலமடைந்துள்ள நிலையில், இல்லத்தை சுற்றிலும் பாம்புகள் படையெடுக்கும் அளவிற்கு புதர் மண்டியுள்ளது. அத்திப்பூத்தாற்போல எப்போதாவது நகராட்சி சார்பில் இந்த புதர்கள் அகற்றப்படும். மாவட்ட நூலக அலுவலரின் அனுமதியோடு, இல்லத்தின் ஒரு பகுதியில் தற்போது மறைமலையடிகள் பெயரில் நூலகம் இயங்கி வருகிறது. இங்கும் போதுமான புத்தகங்கள் இல்லை. இவ்வாறு பல வழிகளில் சீரழிந்து காணப்படும் மறைமலையடிகளாரின் இல்லம், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள இத்தருணத்திலாவது புத்துயிர் பெறுமா என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.மாயமான அடிகளாரின் 'சமாதி': பழைய பல்லாவரம் பகுதி மக்களுக் காக மலங்கானந்தபுரத்தில் சுடுகாடு உள்ளது. கடந்த 1950ம் ஆண்டு மறைமலையடிகள் மறைந்த போது, இந்த சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு, சமாதி அமைக்கப்பட்டது. நாளடைவில் சுடுகாட்டையே சிலர் ஆக்கிரமித்தனர். தற்போது சுடுகாட்டின் பெரும்பாலான பகுதிகள் வீடுகளாக மாறிவிட்ட நிலையில், எஞ்சிய பகுதி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அடிகளாரின் சமாதி எங்கே இருக் கிறது என்பதை கூட கண்டறிய முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட சுடுகாட்டு இடத் திற்கு வருவாய்த் துறை பட்டா வழங்கிவிட்டதாகவும் புலம்புகின்றனர் உள்ளூர்வாசிகள்.
477
2010-04-18T11:37:00+05:30
தமிழகம்
முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் சங்குகள் : கழிவுகள், இழுவலையால் பாதிப்பு
ராமநாதபுரம்: முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட சங்குகள், தமிழகத்தில் அதிகமாகக் காணப்பட்டாலும், கழிவுகள், இழுவலையால் இதற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மெல்லுடலிகள் எனும் விலங்கினப் பிரிவில் வெண்சங்குகளுக்கு தனிச்சிறப்பு உண்டு .இறை பக்தி கொண்ட இந்தியாவில், சங்குகளை புனிதப் பொருளாகக் கருதி வருகின்றனர். இந்தியாவில், 'சாங்கஸ் பைரம்' என்ற சங்குகளே அதிகம் உள்ளன. தமிழகத்தில் அதிகமாகவும், அந்தமான், குஜராத், இலங்கை கடற்பகுதிகளில் குறைந்த அளவும் இவை காணப்படுகின்றன. வேறு எந்த நாட்டிலும் இவற்றை காண முடியாது. கடலில் சேகரிக்கப்படும் வெண்சங்குகள், முதலில் பழுப்பு நிறமாகவே இருக்கும்.வலம்புரி சங்கு: 'பெரியோஸ்ட்ரேக்கம்' என்ற மெல்லிய சவ்வு, அதன் மீது படர்ந்திருக்கும். இதை நீக்கும் போது தான், சங்கு வெண்மையாக மாறும். சங்குகள் கூட்டமாக கடலடி மட்டத்தில் வாழ்கின்றன. இந்த பகுதி, சங்குப் படுகை என அழைக்கப்படுகிறது. சங்குகள் புழுக்களை விரும்பி உண்கின்றன. வெண்சங்கானது அக்யூட்டா, அப்ட்யூசா, குளோபோசா, கோமாரினென்சிஸ், பியூசஸ் என, ஐந்து உள்ளினங்களைக் கொண்டுள்ளது.வழக்கமாக அனைத்து சங்குகளின் வாய் பகுதியும், இடமாகவே இருக்கும். சில சங்குகளில் மட்டுமே வலமாக இருக்கும். வலது புறம் வாயுள்ள சங்குகளே, 'வலம்புரி சங்கு' என அழைக்கப்படுகிறது. பல லட்சம் இடம்புரி சங்குகள் சேகரிக்கும் போது, அதில் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். சங்கில் இரு பாலினமும் உள்ளது. வெளிதோற்றத்தால் இவற்றை அடையாளம் காண முடியாது.பாதிப்பு: பெரிய சங்குகள் பெண்ணினமாகும். இனச்சேர்க்கைக்கு பின், பெண் சங்கு வெளியிடும் முட்டைக்கூடு, 'சங்குப்பூ' எனப்படுகிறது. இது கேள்விக்குறி போன்ற அமைப்பில் நீண்டு காணப்படும். 300 மி.மீ., நீளம் கொண்ட இம்முட்டைக் கூட்டில், குறுக்குவாட்டில் ஒன்றன் பின்னாக 34 அறைகள் இருக்கும். அவற்றில், கருத்தரிக்கப்பட்ட முட்டைகள் இருக்கும். கூட்டிலிருந்து 10 மி.மீ., நீளமுள்ள இளம் சங்குகள் வெளிப்படும். பெரும்பாலான சங்குகள், 52 முதல் 57 மி.மீ., வளர்ச்சிக்கு பின் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. கொல்லி வலை, படகு வலை, கடலடி வலைகளால் சங்குகள் சேகரிக்கப்படுகின்றன. அண்மை காலமாக சங்குகள் கிடைப்பது அரிதாகிவிட்டன. ஆலைகளிலிருந்து வரும் கழிவுகள், இழுவலை பயன்பாட்டால், சங்கு படுகைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
478
2010-04-18T11:39:00+05:30
தமிழகம்
மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
நாகர்கோவில்:  கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டின் முன்னோடியாக கன்னியாகுமரியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த ஓட்டத்தில் குமரி மாவட்டத்தில் 23 கல்லூரிகளை சேர்ந்த ஐந்தாயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான மாரத்தான் கொட்டாரத்தில் இருந்து தொடங்கியது. இதனை செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்தார். மாணவியருக்கான ஓட்டம் பழத்தோட்டத்தில் இருந்து தொடங்கியது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார்.இரண்டு ஓட்டங்களும் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நிறைவு பெற்றது. இங்கு நடைபெற்ற விழாவில் ஆண்கள் மற்றும் பெணகள் பிரிவில் முதல் பத்து இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்துக்கல்லூரி மாணவர் பிரபு, நாகர்கோவில் புனித சிலுவை கல்லூரி மாணவி ஆஷா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். விழாவில் ஹெலன்டேவிட்சன் எம்.பி., தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத்தலைவர் இரா. பெர்னாடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பதிவாளர் பேராசிரியர் மாணிக்கம், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுந்தரபாண்டி, விவேகானந்தா கல்லூரி செயலாளர் அருண்குமார், பல்கலை கழக நலத்துறை இயக்குநர் பேராசிரியை ரோசாரிமேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பரிதிஇளம் வழுதி மாரத்தானுக்கு அடுத்த படியாக செம்மொழி மாநாடு விழிப்புணர்வை ஏற்படுத்த சுடர் ஓட்டம் நடத்தப்பட இருப்பதாக கூறினார். இந்த ஓட்டம் கன்னியாகுமரி, சென்னை, திருச்சியில் இருந்து தொடங்கி சேலம் சென்று அங்கிருந்து கோவை செல்லும் என்று அவர் கூறினார்.
481
2010-04-19T13:32:00+05:30
தமிழகம்
காரைக்கால் - பேரளம் மார்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் துவக்கப்படுமா?
காரைக்கால்:காரைக்கால் - திருநள்ளார் - பேரளம் இடையே புதிய அகல ரயில் பாதை அமைத்து, மீண்டும் ரயில் சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. திருநள்ளாரில் உள்ள சனீஸ்வர பகவானை தரிசிப்பதற்காகவும், காரைக்கால் அடுத்த நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் காரைக்கால் வருகின்றனர்.தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலத்தில் இருந்து காரைக்காலுக்கு வர ரயில் சேவை இல்லாததால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சாலை போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.காரைக்கால் - திருநள்ளார் - பேரளம் இடையே உள்ள 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீட்டர் கேஜ் பாதையில் ரயில் சேவை துவக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அம்பகரத்தூர், தேவமாபுரம், சுரக்குடி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் இயங்கின.காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் போதிய வருவாய் இல்லை எனக் கூறி, மத்திய ரயில்வே அமைச்சகம், 1984ம் ஆண்டு முதல் இந்த தடத்தில் ரயில் சேவையை நிறுத்தியது. மேலும், காரைக்கால் - பேரளம் இடையே அமைக்கப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. ஆனால், ரயில் போக்குவரத்துக்காக கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே உள்ளன.காரைக்காலில் சுற்றுலா தலங்கள் மட்டும் இன்றி ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகளும், டைல்ஸ் கம்பெனி, ரசாயன தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற் சாலை கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், லாரி மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்களும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இதனால் கால விரயம், பண செலவும் அதிகம் ஏற்படுகிறது.சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக திருநள்ளார் கோவில் நகர திட்டம் உருவாக்கப்பட்டு, முதல்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் முடிவுற்றால் சுற்றுலாபயணிகள் வரத்து மேலும்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொது மக்கள், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக காரைக்கால் திருநள்ளார் வழியாக பேரளம் இடையே அகல ரயில் பாதை அமைத்து ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும்.புதிய ரயில் பாதைக்காக நிலங்கள் கையகப்படுத்த தேவையில்லை.அகல ரயில் பாதைக் கான நிலங்கள் ரயில்வே துறையிடம் உள்ளன. எனவே, காரைக்கால்- பேரளம் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்க மாநிலஅரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
482
2010-04-19T14:17:00+05:30
தமிழகம்
நெய்வேலியில் எம்.ஜி.ஆர்., சிலை: ஜெ., திறப்பு
நெய்வேலி:நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.நெய்வேலி வட்டம் 9ல் கடந்த 1991ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது. பல்வேறு சிக்கல் காரணமாக சிலை திறக்கப்படாமல், மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை திறக்க கடந்த மாதம் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று நடந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் மாலை 3 மணிக்கு நெய்வேலிக்கு வந்தார். அங்கிருந்து காரில் சென்று வட்டம் 9ல் நிறுவப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்தார்.பின், தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டைக் கண்டித்து நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
484
2010-04-20T15:48:00+05:30
இந்தியா
சொல்கிறார்கள்
ஊனம் ஒரு குறையல்ல : மாற்றுத்திறனுடைய 600 பேருக்கெனத் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜான் பாட்ஷா: என் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கால் வலுவிழந்தது. வெயிலிலும், மழையிலும் குடிசை வீட்டில் நாட்கள் நகர்ந்தது. ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் விடவில்லை. பி.ஏ., இரண்டாம் ஆண்டு வரை படித்தாலும் தொடர்ந்து படிக்க உடலும், போக்குவரத்தும் இடையூறானது. மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை.உடல் ஊனம் ஒரு குறையல்ல. ஆனால், எந்தச் சமூகம் என் குறையை சுட்டிக் காட்டி கேலி செய்த தோ, அதே சமூகத்திலுள்ள என்னைப் போன்றவர்களின் நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு மிகப் பெரிய தூண்டுகோல். நான் அனுபவித்த வலிகளையும், வேதனைகளையும் என்னைப் போன்றவர்கள் சந்திக்க கூடாது என்பது தான் என் முதல் நோக்கம். அதற்காக தான் ஊனமுற்றோருக்காக, 2008ம் ஆண்டு, மதுராந்தகத்தில் வின்னர் ஊனமுற் றோர் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினேன்.இதில் உள்ளவர்கள் கூடை பின்னுதல், பூ வியாபாரம் என ஏதேனும் ஒரு தொழிலைச் செய்வதற்கு வழிகாட்டுகிறேன். தொண்டு நிறுவனத்தின் செயல்கள் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக www.winnertrust.webs.com   என்ற வெப்சைட்டை வடிவமைத்து நடத்துகிறேன்.உலக ஊனமுற் றோர் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறன் உடையவர்களுக்கு ஊக்கமளித்து உதவிகள் செய்யும் நோக்கத்தோடு, மோட்டார் பொருத் திய மூன்று சக்கர வாகனம், செயற்கை கை, கால்கள், காது கேட்க உதவும் கருவி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக, இன்னும் போராடிப் பெற வேண்டியவைகள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் ஊனமுடையவர்கள் மட்டுமே, அரசின் முழு பயனையும் அடைய முடியும் என்றில்லை. மாற்றுத் திறனுடைய அனைவருக்கும் அரசு உதவிகள் சென்றடைய வேண்டும்.
485
2010-04-20T16:45:00+05:30
தமிழகம்
இறுதிப் போட்டி முடிந்ததும்
டச்டி ச்டூடூ ணூ ஞூடிணஞு ஞ.. ஞிணிணதிஞுதூ ட்தூ ணூஞுஞ்ச்ணூஞீண் tணி ணீச்ணூஞுணtண்
486
2010-04-20T16:51:00+05:30
இந்தியா
டவுட் தனபாலு
முதல்வர் கருணாநிதி: பிரபாகரனின் தாயார் தமிழகத்தில் வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அதுபற்றி எழுத தயாராக உள்ளோம்.டவுட் தனபாலு: இலங்கைப் போரில் பிரபாகரன் தோற்றால், அவரை போரஸ் மன்னனைப் போல் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தீர்களே... மன்னனின் தாயாருக்கும், அதே மரியாதை கொடுக்கணும்னு எதிர்பார்க்கறதில தப்பு இல்லையே!மத்திய அமைச்சர் சிதம்பரம்: ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2007-08ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நான் தாக்கல் செய்தேன். அதனால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டு, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 61 எம்.பி.,க்களை காங்கிரஸ் கூடுதலாகப் பெற்றது.டவுட் தனபாலு: அப்படிப் பார்த்தால், நீங்களே தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்திருந்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்குமே... அந்த மாதிரி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதுன்னுதான், உங்களை நிதியமைச்சர் பொறுப்பில இருந்து மாத்தி விட்டுட்டாங்களோ...!காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம்: சுபாஸ் சந்திரபோஸ் உயிருடன் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தது போல், பிரபாகரன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துகின்றனர். அவர்கள் அந்த அம்மையாரை திடீர் என தமிழகத்திற்கு அழைத்து வருகின்றனர். தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை.டவுட் தனபாலு: சுதந்திரப் போராட்டத்தின் போது, போராட்ட களத்திலிருந்த சக தலைவர்களை சுபாஸ் சந்திரபோஸ் கொலை செய்தாரா...? புலிகள் தலைவரை, சுபாஸ் சந்திரபோசுடன் ஒப்பீடு செய்வது கொஞ்சம் ஓவராத் தெரியுது!
487
2010-04-20T17:28:00+05:30
தமிழகம்
இறுதிப் போட்டி முடிந்ததும் முடிந்ததும்
தீடதூசt ச்ணூஞு த ஞீணிடிணஞ் ணணிதீ....
489
2010-04-21T10:17:00+05:30
இந்தியா
ஐ.பி.எல்., கிரிக்கெட்டை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி : மகாராஷ்டிரா டி.ஜி.பி.,
மும்பை:மும்பையில் முக்கிய இடங்களை, குண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்கப்போவதாக வந்த தகவலையடுத்து, மும்பை நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மும்பை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தாக்க, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் டில்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, மும்பை போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, மும்பையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடித்ததையடுத்து, ஐ.பி.எல்., கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, மும்பைக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில், மும்பை நகரையும் குண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மகாராஷ்டிரா டி.ஜி.பி., ராய், நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இது குறித்து ராய் கூறுகையில், 'ஐ.பி.எல்., விளையாட்டுகளை நிலைகுலையச் செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விளையாட்டு மைதானம் முழுவதற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்றார்.
490
2010-04-21T10:18:00+05:30
தமிழகம்
ஊராட்சி நிதி ரூ.8 லட்சம் மோசடி தலைவர் கைது
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் , அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வெள்ளங்குழி ஊராட்சி தலைவராக இருப்பவர் காந்திமதி(51). இங்குள்ள கிளார்க் கமலக்கண்ணன் மூலம், பொதுமக்களிடம் வசூலித்த பணம் முறையாக வரவு வைக்கப் படாமலும், செக் கொடுத்ததில் மோசடியாகவும் 8 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். கிளார்க்கிற்கு, தலைவர், துணைத்தலைவர் உடந்தையாக இருந்துள்ளனர்.இதுகுறித்து அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(பி.டி.ஓ).,மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். காந்திமதி அவரது கணவர் ஜானகிராமன், துணைத்தலைவர் வெங்கடாசலம், கிளார்க் கமலக்கண்ணன் ஆகிய நால்வரையும் போலீசார் கைதுசெய்தனர்.
491
2010-04-21T10:20:00+05:30
தமிழகம்
தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதி ராமநத்தம் அருகே விபத்தில் பலி
ராமநத்தம்:தேனிலவுக்கு, புதுமண தம்பதி சென்ற மாருதி கார் ராமநத்தம் அருகே லாரியில் மோதி விபத்துக்குள் ளான தில் பரிதாபமாக இறந்தனர். இருவர் படுகாய மடைந்தனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் காத்தவ ராயன். என்.எல்.சி.,யில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மணிமேகலை (24). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கும் சென்னை அடுத்த மதுரவாயல் சிமென்ட் ஏஜன்சீஸ் வைத்திருக்கும் மோகன் மகன் இன்ஜினியர் அருண்குமார் (26) என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருச்செந்தூர் கோவிலில் திருமணம் நடந்தது. நேற்று காலை நெய்வேலியில் இருந்து, கொடைக்கானலுக்கு தேனிலவிற்காக தனது டி.என்.21 ஏடி. 5306 எண்ணுள்ள மாருதி காரில் அருண்குமார், மணிமேகலை மற்றும் அருண்குமாரின் உறவினர்களான குப்புசாமி மகன் ராஜி (27), இவரது மனைவி இந்து (25) ஆகியோர் சென்றனர்.காரை அருண்குமார் ஓட்டினார்.திட்டக்குடி - ராமநத்தம் நெடுஞ்சாலையில் உள்ள, வாகையூர் அருகே வந்த போது, முன்னால் சென்ற டி.என். 30 ஏபி. 2632 எண்ணுள்ள மணல் லாரி திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால், பின்னால் வேகமாக சென்ற கார் லாரியில் மோதியது. லாரியின் அடியில் சிக்கிய காரை, தீயணைப்பு நிலைய அலுவலர் அசேன்கான் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டனர்.இந்த விபத்தில் மணிமேகலை சம்பவ இடத்திலேயே இறந்தார். அருண்குமார் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். விபத்தில் படுகாயமடைந்த ராஜி மற்றும் இந்து ஆகியோர் மேல் சிகிச்சைக்காக, திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் இறந்த, புதுமண தம்பதிக்கு வரும் 24ம் தேதி மாலை காஞ்சிபுரத்தில் திருமண வரவேற்பு விழா நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
496
2010-04-21T10:27:00+05:30
இந்தியா
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிரிமினல்: அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
ஆலப்புழா: 'கேரளத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிரிமினல் உள்ளனர். இதுபோன்ற நிலைமைக்கு கேரளா மாறிவிட்டது' என, மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜி.திவாகரன் தெரிவித்தார்.அறிவொளி இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திவாகரன் பேசியதாவது:கேரள மாநிலம் கல்வி அறிவு படைத்த முழுமை அடைந்த மாநிலமாக வளர்ச்சி அடைந்து வரும் அதே வேளையில், சமுதாயத்தில் கிரிமினல்கள் அதிகரித்து வருகின்றனர்.கல்வி கற்றதால் மட்டும், சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்ற தவறான பிரசாரத்தை தடுத்து நிறுத்தவேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அத்தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.கேரளத்தில், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிரிமினல் உள்ளனர். திறமைக்கேற்ப கல்வியை புனரமைக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இதற்கான பணியில் அரசுக்கும் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பொறுப்புண்டு.இவ்வாறு அமைச்சர் திவாகரன் கூறினார்.இதுகுறித்து, தகவல் வெளியானதும் பலரும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர், தான் அப்படி பேசவில்லை என மறுத்தார்.
497
2010-04-21T10:28:00+05:30
இந்தியா
மருந்து சாப்பிட்டால் நோய் வரும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கிண்டல்
சென்னை : ''மருந்து சாப்பிட்டால் நோய் வரும் நிலை இந்த ஆட்சியில் நிச்சயம் நடக்கும்,'' என்று, அ.தி.மு.க., உறுப்பினர் பிரேமா தெரிவித்தார்.சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது சட்டசபையில் நடந்த விவாதம்:பிரேமா - அ.தி.மு.க: உடலில் போலி என்றால் டாக்டரிடம் செல்லலாம். டாக்டர் போலி என்றால் யாரிடம் செல்வது. போலி டாக்டர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கருக்கலைப்பு போன்றவற்றை செய்கின்றனர். அதேபோல, வயிற்றில் பெண் சிசு எனத் தெரிந்ததும் கருக்கலைப்பு செய்கின்றனர். இதற்கு சில ஸ்கேன் சென்டர்கள் துணை போகின்றன. இவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகப்பேறு உதவித் திட்டம் பெற, மொபைல் போன், சைக்கிள், 'டிவி' வைத்திருக்கக் கூடாது என்கின்றனர். இவை எல்லாம் அவசியமாகிவிட்டது. எனவே நிபந்தனைகள் விதிக்கக் கூடாது.ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள், நகர்ப்புறங்களில் இருந்து வருகின்றனர். இதனால், இரவு நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவசர சிகிச்சைக்கு நகர்ப்புறங்களுக்கு கிராமத்தினர் செல்ல வேண்டியுள்ளது.நோய் வந்தால் மருந்து சாப்பிடலாம். ஆனால், மருந்து சாப்பிட்டால் நோய் வரும் என்பது உங்கள் ஆட்சியில் நிச்சயம் நடக்கும்.இ.எஸ்.எஸ்.ராமன் - காங்கிரஸ்: ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி அனைத்து மருத்துவமனைகளிலும், ஊழியர்கள் வருகையை பதிவு செய்ய, 'பயோ மெட்ரிக்' முறையை கொண்டு வர வேண்டும். டாக்டர்கள் நியமனத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடாமல், பொது சுகாதாரத் துறையே நேரடியாக நியமிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.தனியார் மருத்துவமனைகள் தகாத விளம்பரங்களை செய்கின்றன. சில வகையான விளம்பரங்கள் மோசடியாக அமையக் கூடும். இதுபோன்ற விளம்பரங்களை தடுக்க வேண்டும். ஆந்திராவில் '104' எண்ணுக்கு போன் செய்தால், டாக்டர் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் முறை உள்ளது. அதை இங்கும் செயல்படுத்த வேண்டும்.பன்னீர்செல்வம் - தி.மு.க: இந்த ஆட்சியில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகளை துவக்க அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ளது போன்று இந்தளவு மருத்துவக் கல்லூரிகள் வேறு எந்த மாநிலத்திலும் உள்ளதா? நான்கு ஆண்டுகளாக, 'மைனாரிட்டி தி.மு.க., அரசு' என்று சொல்லி வந்தீர்கள். இன்று நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. பென்னாகரத்தில் டிபாசிட் போய் உள்ளது.செங்கோட்டையன்: 2001ல் தி.மு.க., 18 ஆயிரம் ஓட்டுகள் பெற்று, அதே தொகுதியில் டிபாசிட் இழந்துள்ளது.
500
2010-04-21T10:32:00+05:30
General
1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
506
2010-04-21T20:50:00+05:30
தமிழகம்
புது சீடருடன் செக்ஸ் சாமியார் நித்யானந்தா சிக்கினார் : இமாசல பிரதேசத்தில் போலீஸ் சுற்றிவளைப்பு
பெங்களூரு : ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குடிசை வீட்டிலிருந்த அவரும், அவரது சீடர் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், 7,000 அமெரிக்க டாலர், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த தகவல் வெளியானது. இந்த தகவலால் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடம் உட்பட இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நித்யானந்தா, ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்றிருப்பதாக, ஆசிரமவாசிகள் தெரிவித்தனர். பிடதி தியான பீடத்திலிருந்து அவரது சீடர்கள் பலர் வெளியேறினர். சீடர்களில் ஒருவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நித்ய தர்மானந்தா என்கிற லெனின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் கூறினார். நித்யானந்தா சம்பந்தப்பட்ட "சிடி'யையும் அவரிடம் ஒப்படைத்தார். சாமியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு விரோதமாக செக்ஸ் உறவு வைத்தல், கொலை மிரட்டல், சதி செய்தல் என ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்குகள் தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகாவில் நடந்துள்ளதால் வழக்குகள், கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா, மூன்று முறை வீடியோவில் தோன்றி, தன் நிலையை விளக்கினார். நித்யானந்தா மீதான இரு வழக்குகளை தவிர, மற்ற வழக்குகள் அனைத்தையும் கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சி.ஐ.டி., போலீசார், பிடதி ஆசிரமத்தில் மூன்று முறை சோதனையிட்டனர். அங்கு முக்கிய தஸ்தாவேஜுகளை கைப்பற்றினர். இந்த சூழ்நிலையில் சாமியார் நித்யானந்தா, ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். கடந்த 20ம் தேதி நித்யானந்தா ஆசிரமத்தில், சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். முக்கியமான டாக்குமென்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சி.ஐ.டி., போலீசார் நடத்திய சோதனையில், நித்யானந்தா இருக்குமிடம் தெரியவந்தது.இதே வேளையில், நித்யானந்தாவை , சி.ஐ.டி., போலீசார், இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியாக தேடி வந்தனர். இமாச்சல பிரதேச போலீசாருடன் இணைந்து, கர்நாடகா மாநில சி.ஐ.டி., போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, அங்குள்ள சோலன் மாவட்ட அர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பதாக தகவல் கிடைத்தது. இரு மாநில போலீசாரும் அங்கு விரைந்தனர். நித்யானந்தாவும், அவருடன் இருந்த நித்ய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டியும் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.முன்ஜாமீன் கோரிய மனுவில், நித்யானந்தாவின் கையெழுத்து வாங்குவதற்காக நித்ய பக்தானந்தா இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது தான் அவரும் பிடிபட்டார்.இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தாவும், நித்ய பக்தானந்தாவும் குடிசை போன்ற வீட்டில் இருந்தனர். போலீசார் அவ்வீட்டை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்த லேப்-டாப், மூன்று லட்சம் ரூபாய் பணமும், ஏழு ஆயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அர்கி கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின், முறைப்படி அனுமதி பெற்று, பெங்களூருக்கு அவர்களை போலீசார் அழைத்து வருகின்றனர்.ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு, நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹூன்குந்த் உத்தரவிட்டார்.
508
2010-04-21T23:07:00+05:30
தமிழகம்
மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
509
2010-04-21T23:26:00+05:30
தமிழகம்
முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் சங்குகள் : கழிவுகள், இழுவலையால் பாதிப்பு
ராமநாதபுரம்: முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட சங்குகள், தமிழகத்தில் அதிகமாகக் காணப்பட்டாலும், கழிவுகள், இழுவலையால் இதற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மெல்லுடலிகள் எனும் விலங்கினப் பிரிவில் வெண்சங்குகளுக்கு தனிச்சிறப்பு உண்டு .இறை பக்தி கொண்ட இந்தியாவில், சங்குகளை புனிதப் பொருளாகக் கருதி வருகின்றனர். இந்தியாவில், 'சாங்கஸ் பைரம்' என்ற சங்குகளே அதிகம் உள்ளன. தமிழகத்தில் அதிகமாகவும், அந்தமான், குஜராத், இலங்கை கடற்பகுதிகளில் குறைந்த அளவும் இவை காணப்படுகின்றன. வேறு எந்த நாட்டிலும் இவற்றை காண முடியாது. கடலில் சேகரிக்கப்படும் வெண்சங்குகள், முதலில் பழுப்பு நிறமாகவே இருக்கும்.
510
2010-04-21T23:54:00+05:30
தமிழகம்
மதுரையில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது
மதுரை : கட்டடத்தின் அருகே செல்லும் மின் வயர்களில் பாதுகாப்பிற்காக பி.வி.சி., பைப்களை பொருத்த, 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாகாளிப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் முருகனை போலீசார் கைது செய்தார். மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(43). கத்தாரில் வேலை பார்த்து, சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். கீரைத்துறை தாயுமானவர் சுவாமி கோயில் தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். மின் வயர்கள் வீட்டின் மிக அருகில் செல்வதால், மாடியில் கட்டட வேலை செய்யும் போது மின் கசிவு ஏற்படலாம். எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக மின்வயர்களில் பி.வி.சி.,பைப்களை பொருத்த அனுமதிக்குமாறு, மாகாளிப்பட்டி மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் முருகனிடம்(40), கிருஷ்ணமூர்த்தி விண்ணப்பித்தார். முருகன், ""நீங்களே பி.வி.சி.,பைப்களை பொருத்திக்கொள்ளுங்கள். எனக்கு 3000 ரூபாய் லஞ்சம் கொடுங்கள்,'' என கூறியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார். பின் பேரம் பேசியதில், 2500 ரூபாய் தர சம்மதித்தார். அவர் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை 6 மணிக்கு முருகனிடம் ரசாயனம் தடவிய 2500 ரூபாயை கிருஷ்ணமூர்த்தி கொடுத்தார். மறைந்திருந்த டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன், முருகனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். ஆரப்பாளையத்திலுள்ள முருகன் வீட்டிலும் போலீசார் இரவு சோதனை நடத்தினர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து, ஓராண்டிற்கு முன் மதுரைக்கு மாறுதலாகி வந்துள்ளார். இதேபோல், இதற்கு முன் அவர் மீது பல புகார்கள் வந்துள்ளன. அதிலிருந்து தப்பிய முருகன், நேற்று சிக்கிக்கொண்டார்.
515
2010-04-22T00:47:00+05:30
தமிழகம்
மொபைல் போனில் கனடாவுக்கு பேசிய நளினி : லண்டனில் உள்ள மகளிடமும் பேசியது அம்பலம்
வேலூர் :  ராஜிவ் கொலையாளி நளினியிடம் பறிமுதல் செய்த மொபைல் போனில் இருந்து அதிகளவு கனடா நாட்டுக்கு பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள், வேலூர் பெண்கள் சிறைக்கு நேற்று  வந்து விசாரணை நடத்தினர். நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போன்கள், சிம் கார்டுகளை ஆய்வு செய்தனர். அதில், நளினி வைத்திருந்தது புதிய ரக "நோக்கியோ' மொபைல் போன் என்பதும், அது இயங்கிய நிலையில் இருந்தது என்றும் சிங்கப்பூர் எண்ணில் அவர் பேசிக் கொண்டிருந்ததும், சென்னையில் பதிவு செய்த எண் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.மொபைல் போனில் இருந்து நளினி யார், யாரிடம் பேசினார் என சிறை அதிகாரிகள் சிம்கார்டை ஆய்வு செய்தனர்.  சமீபகாலமாக நளினி இங்கிலாந்து, கனடா நாடுகளுக்கு அதிகம் பேசியிருப்பது தெரிய வந்தது. நளினியின் மகள் ஹரித்திரா, லண்டனில் தன் தந்தைவழி உறவினர்களுடன் தங்கி இருக்கிறார். அவருடன் மட்டும்  கடந்த மூன்று மாதத்தில் 50 முறை பேசியதும் தெரிய வந்துள்ளது.மேலும், நளினிக்கு அதிகளவில் இலங்கை, கனடா, சிங்கப்பூரில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. தினம் 50 எஸ்.எம்.எஸ்.,கள் வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.நளினியை பிடித்தது எப்படி? சென்னை சிறைத்துறை அதிகாரிகளுக்கு, நளினி மொபைல் போன் வைத்திருக்கும் விவரம் ஐந்து நாட்களுக்கு முன் தான் தெரிந்தது. மூன்று நாட்களாக நளினி அறையை சிறை அதிகாரிகள் 24 மணி நேரமும்  கண்காணித்து வந்தனர். நளினி, செல்லில் இருக்கும் போது மெல்லிய குரலில் பேசுவது தெரிந்ததும், அவருக்கு தெரியாமல் ஒட்டுக்கேட்ட போது மொபைலில் பேசியது தெரிந்தது.நேற்று முன்தினம் அவரது அறைக்கு அதிரடியாக நுழைந்து ஆய்வு நடத்திய போது மொபைல் போன் சிக்கியது. நளினி, மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது சிறை அதிகாரிகள் வந்து விட்டதால், மொபைலை துணிக்குள் மறைத்துக் கொண்டார்.சிறைக் காவலர்கள் சோதனையிட வந்த போது மொபைலை கழிவறைக்குள் போட்டு தண்ணீர் ஊற்றி விட்டார். பின், கழிவறை குழாயை உடைத்து தான் மொபைல் போனை எடுத்ததாக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறைக்குள் மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி இல்லை என்பதால், அவருக்கு நெருக்கமான சிறைக்காவலர்கள் மூலம் இரு நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.சிறையில் உள்ள நளினிக்கு நெருக்கமான சிறைக் காவலர்கள் மூலமாகத்தான் மொபைல் போன் உள்ளே வந்துள்ளது.இதையடுத்து, நளினிக்கு நெருக்கமான சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடப்பதால், பெண்கள் சிறையில் வேலை பார்ப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.சிறை விதிகளின்படி 45 குற்றங்கள் சிறை விதிகள் மீறியதாக கருதப்படுகின்றது. அதில், மொபைல் பயன்படுத்துவதும் ஒன்று. இந்த விதிபடி தவறு செய்தவர்கள் மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்."மொபைல் போன் குறித்து விசாரணை முடிந்த பின், பாகாயம்  போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், நளினியிடம் மொபைல் கைப்பற்றியது தொடர்பாக பத்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்' என, சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன. அதிரடி சோதனை: வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீதர், பர்மா சீனு, சிலோன் சேகர், கோல்டு காயின் சூரியா, கட்டபஞ்சாயத்து ராஜா ஆகியோரிடத்திலும் மொபைல் போன் இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.வேலூர் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 போலீசார் வேலூர் பெண்கள் சிறையில் நேற்று  காலை 6 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர். காட்பாடி டி.எஸ்.பி., பட்டாபி தலைமையில் 100 போலீசார் வேலூர் ஆண்கள் சிறையில் சோதனை நடத்தினர்.ஐந்து மணி நேரம் நடந்த சோதனையில்  கஞ்சா, பீடி, சிகரெட், மது பாட்டில்கள் சிக்கியதாக தெரிந்தது. மதுரை சிறையில் மொபைல் போன்: மதுரை மத்திய சிறையில் சிறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த தண்டனைக் கைதி கருப்புசாமி(33), சிறை கழிவறையில் மொபைலில் பேசிய போது, சிக்கினார். அவரிடம் இருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அலுவலக பொறுப்பாளர் மாரியப்பன், கரிமேடு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.மதுரை மத்திய சிறையில் மொபைல் போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்படுவது புதிதல்ல. இதற்கு முன் நடந்த பல சோதனைகளில் மொபைல் போன்கள் சிக்கியுள்ளன. வக்கீல் மறுப்பு :  நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று  காலை 11. 30 மணிக்கு பெண்கள் சிறைக்கு வந்தார். ஒன்றரை மணி நேரம் நளினியிடம் பேசி விட்டு வெளியே வந்த வக்கீல் புகழேந்தி கூறியதாவது:நளினியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்ததாக வந்த தகவல்களையடுத்து, சிறையில் என்ன நடந்தது என்பதை அவரிடம் கேட்க வந்தேன்.மொபைல் போன், சிம் கார்டுகள் எதுவும் கைப்பற்றவில்லை' என, நளினி தெரிவித்தார். வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம் திட்டமிட்டு நளினி மீது பொய்யான குற்றம் சுமத்தியுள்ளது.நளினி மீது சுமத்தப்பட்ட இந்த பொய்யான குற்றத்தை சட்டரீதியாக எதிர் கொள்வோம். வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம், இங்குள்ள கைதிகளுக்கு செய்யும் கொடுமைகள் குறித்து சிறைத்துறை தலைவருக்கு நளினி கடந்த 12ம் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.இதனால், பயந்து போன சிறைத்துறை அதிகாரிகள் மற்றும்  சில வார்டன்கள், நளினியை பழி வாங்க  இப்படி பொய்யான குற்றச்சாட்டை நளினி மீது சுமத்தியுள்ளனர். பிரபாகரன் தாயாருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. இது மக்கள் மத்தியில் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த பிரச்னையை திசை திருப்பி விட தமிழக அரசு நளினி மீது குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிகிறது.இவ்வாறு புகழேந்தி கூறினார். நளினி மீது வழக்கு பதிவு : ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று  19 ஆண்டாக தண்டனை அனுபவித்து வரும் நளினியிடம் இருந்து  மொபைல்ஃபோன் மற்றும் இரு சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று இரவு வேலூர் பாகாயம் போலீஸார் நளினி மீது வழக்கு பதிவு செய்தனர். எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் போலீஸார் கூற மறுத்துவிட்டனர்.
516
2010-04-22T00:48:00+05:30
இந்தியா
அரசு ஊழியர்களுக்கு எதிராக மூன்று மாதத்தில் 200 வழக்குகள்
புதுடில்லி : லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாத  காலகட்டத்தில் அரசு  ஊழியர்கள்  மீது  சி.பி.ஐ., போலீசார் 200 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்  என, மத்திய  அமைச்சர் பிருதிவிராஜ் சவான்  லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.  மக்கள் குறைகள், ஓய்வூதியம்  மற்றும் பணியாளர்  நலத் துறை  அமைச்சர்  பிருதிவிராஜ்  சவான் லோக்சபாவில் எழுத்து மூலம் அளித்த பதிலில்  கூறியதாவது:அரசு ஊழியர்கள், அதிகாரிகள் உட்பட 2,439 பேர் மீது, லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.  கடந்த வருடம் 795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2007, 2008ம் ஆண்டுகளில் முறையே 688, 744 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 212 வழக்குகளில், 48  வழக்குகளில் குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டில் 230 வழக்குகளில் 216 வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.  லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்படும் நபர்கள் குற்றவாளிகளா என்பதை கோர்ட் தான் முடிவு செய்யும். அரசு அலுவலகங்களில் அதிகரித்துவரும் லஞ்ச ஊழலை  தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு ஊழியர்களை தவிர்த்து, லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., போன்ற உயர் அதிகாரிகள் ஐந்து பேரை, சி.பி.ஐ.,  போலீசார் இந்த ஆண்டு  கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டில் ஏழு அதிகாரிகளும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஐந்து பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அமைச்சர் பிருதிவிராஜ் சவான் கூறினார்.
517
2010-04-22T00:49:00+05:30
தமிழகம்
மின் பற்றாக்குறையால் தவிக்கும் திருப்பூர்
தினமும் மூன்று மணி நேரம் கட்டாய மின்வெட்டு; மாதம் ஒருமுறை காலை முதல் மாலை வரை, பராமரிப்பு பணிக்காக மின்தடை; இதுதவிர, அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு என, கோடையுடன் சேர்ந்து மின்வாரியம் மக்களை பாடாய்படுத்துகிறது. மின் உற்பத்தி குறைந்ததால், மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வினியோகிக்க முடியாமல் மின்வாரியம் திணறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான ஒரு விஷயம், தட்டுப்பாடின்றி கிடைக்கும்போது, அதைப்பற்றிய எண்ணமோ, விழிப்புணர்வோ இல்லாமல் இஷ்டம் போல் பயன்படுத்துகின்றனர்; அது கிடைப்பதில் தாமதமோ, தட்டுப்பாடோ ஏற்படும் போதுதான், இழப்பின் மதிப்பு புரிகிறது.தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்ததால், பற்றாக்குறை காரணமாக தினமும் மின் வினியோகம் தடை செய்யப் படுகிறது என்பதை படித்தவர் முதல் பாமரர் வரை உணர்ந்திருந்தாலும், மின்சாரத்தை சிக்கனப்படுத்த மக்கள் முயற்சிப் பதில்லை என்பதே கசப்பான உண்மை. மின்பயன்பாட்டுக்கான கட்டணம் செலுத்துவது நாம் தானே என்ற மனப்பான்மையால், மின்சக்தியை சிக்கனப்படுத்த நினைப்பதில்லை; அதைப்பற்றிய விழிப்புணர்வும் இருப்பதில்லை.தேவையற்ற முறையில் மின்சாரத்தை தொடர்ந்து வீணாக்கினால், இரண்டு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக கூடுதலாக்கப்பட்ட மின்தடை, நான்கு மணி நேரமாக, ஐந்து மணி நேரமாக உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதை மக்கள் உணர்ந்தாக வேண்டும்; அத்தகைய கட்டாய சூழ்நிலையில் மின்வாரியம் உள்ளது.எனவே, "மின்சிக்கனம், தேவை இக்கணம்' என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட வேண்டும்.ஏனெனில், ஒரு நாளைக்கு 270 மெகாவாட் மின் சக்தி தேவைப்படுகிறது. திருப்பூரை தலைமையாக கொண்ட திருப்பூர், அவிநாசி மின்கோட்டங்களில் 18 துணை மின்நிலையங்கள் உள்ளன. மொத்தம் மூன்று லட்சத்து 36 ஆயிரத்து 320 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதாவது, இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 907 வீட்டு இணைப்புகள்; குடிசைகள் - 9,381; தொழிற்சாலைகள் - 44 ஆயிரத்து 616; தெருவிளக்குகள் 4,062, குடிநீர் தொட்டிகள் - 3,200; பள்ளிகள் மற்றும் சினிமா தியேட்டர்கள் - 636; கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் - 467, குடிசை தொழில்கள் மற்றும் சிறுதொழில்கள் - 341; விசைத்தறி- 1,752; விவசாயம் - 17 ஆயிரத்து 935; வணிகம் சார்ந்த இணைப்புகள் (கமர்ஷியல்) - 49 ஆயிரத்து 830 என 93; எச்.பி., எனப்படும் பெரிய நிறுவனங்களில் உயர் மின் அழுத்த இணைப்புகள் - 223; தற்காலிக இணைப்புகள் உட்பட மொத்தம் மூன்று லட்சத்து 36 ஆயிரத்து 320 இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளனதிருப்பூர் மற்றும் அவிநாசி பகுதிகளில் ஒரு நாளுக்கு 260 மெகாவாட் முதல்  270 மெகாவாட் (40 லட்சம் யூனிட் முதல் 50 லட்சம் யூனிட் வரை) மின் சக்தி தேவைப்படுகிறது. மின்சக்தி மொத்த உற்பத்தியில் பற்றாக் குறை ஏற்பட்டு இருப்பதால், உற்பத்தியாகும் மின் சக்தி தமிழகம் முழுவதும் பற்றாக்குறைக்கு ஏற்ப பிரித்து தரப்படுகிறது.இதில், திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களின்  தேவை அதிகமாக உள்ளதால், தினமும் மூன்று மணி நேரம் என்ற அடிப்படையில் மின் தடை செய்யப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. இத்தருணத்தில், மின் சிக்கனத்தை அனைவரும் கடைபிடிப்பதே சாலச்சிறந்தது.அண்டை மாநிலமான கேரளாவில், இரவு 8.00 மணிக்கே கடைகளை அடைக்கின்றனர். இத்தகைய நடைமுறையை திருப்பூரிலும் அமல்படுத்த முடியுமா என்பதை, மாவட்ட அதிகாரிகள் யோசிக்க வேண்டும்.தொழில் சார்ந்த பகுதி என்றாலும், இரவு 11.00 மணிக்குள் அனைத்து கடைகளும் கண்டிப்பாக அடைக்கப்பட்டு விட வேண்டும் என்பது, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.இதேபோல், இன்னும் இரண்டு மணி நேரத்தை குறைத்து, இரவு 9.00 மணிக்கே அத்தியாவசியகடைகளை தவிர, மற்ற நிறுவனங்களை அடைக்க முயற்சிக்க வேண்டும்.மேலும், பனியன் மற்றும் அதைச்சார்ந்த கம்பெனிகளில் "ஷிப்டு' முறையை, மின் சிக்கனத்தை வலியுறுத்தி, மாற்றியமைத்து, அதற்கேற்ப ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்; உற்பத்தி செய்ய வேண்டும். தொழிலும் முக்கியம்; மின் சிக்கனமும் முக்கியம். எனவே, இரு விஷயத்தையும் கவனத்தில் எடுத்து, மின் சிக்கனத்துக்கேற்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும். மின்சாரத்தை எந்தெந்த வகையில் சிக்கனப்படுத்தலாம் என்று தொழில் துறையினர் கூறியதாவது:ஸ்ரீகாந்த், டெக்பா தலைவர்: பிரின்டிங் மெஷின்களை 1.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கினால், அதை இயக்க இரண்டு லட்சத்தில் ஜெனரேட்டர் வாங்க வேண்டியுள்ளது. பிரின்டிங் தொழிற் சாலைகளில் பகலில் விளக்குகள் எரிய வேண்டியதில்லை.சில "மைனூட்'டான வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.மேலும், மின்சாரத்தை சேமிக்க வேண்டுமெனில், பிரின்ட் ஆன துணிகளை உலர வைப்பதில் முயற்சி செய்யலாம்.சாதாரணமாக, பிரின்ட் செய்யப்படும் துணிகள், "ஐ.ஆர்.,' பல்பு மூலமாக சூடேற்றி உலர வைக்கப்படுகின்றன. இம்முறையை மாற்றி, சிலிண்டர் மூலமாக பிரின்ட் துணிகளை உலர வைக்க முயற்சிக்க வேண்டும். "ஆட்டோமேட்டிக்' மெஷின்கள் மட்டுமே மூன்று "ஷிப்ட்' ஓடுகிறது. மற்றபிரிவுகள் இரண்டு "ஷிப்ட்' மட்டுமே இயங்குகின்றன.மின் தட்டுப்பாட்டால் வேலை தானாக குறைந்து விடுகிறது.மணி, தலைவர், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு: "நிட்டிங்', "காம்பாக்டிங்',"கம்ப்யூட்டர் "எம்ப்ராய்டரிங்' உள்ளிட்ட "ஜாப் ஒர்க்' பிரிவுகளில் மின்சார பயன் பாட்டை எளிதாக குறைக்க முடியாது. தற்போது, மூன்று "ஷிப்ட்'கள் இயங்குகின்றன. மின் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், ஆர்டரை விரைவில் முடிக்கவும் "ஷிப்ட்' நேரத்தை குறைக்க முடிவதில்லை. பகல், இரவு என விளக்கை எரிப்பது இயன்ற வரை தவிர்க்கப்படுகிறது.நிறுவன அலுவலகங்களில் உள்ள "ஏசி'கள், மின்விசிறிகள் கூட தேவையில்லாமல் இயக்குவதில்லை. அவ்வாறு செய்வதால் மின்சாரத்தை சிறிது குறைக்க முடிகிறது. தேவையற்ற அலங்கார விளக்குகள், குண்டு பல்புகளை பயன்படுத்துவது, கடந்த சில மாதங்களாக தவிர்க்கப்படுகிறது. ராஜாசண்முகம் (ஏற்றுமதி பனியன் உற்பத்தியாளர், திருப்பூர்): மின்தட்டுப்பாடு ஏற்படுவது தெரிந்ததும், அலுவலகங்களில் பொருத்தப் பட் டிருந்த "ஏசி'கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. "பையர்'கள் வரும்போது மட்டும் இயக்கப்படும். தற்போது, அனைத்து இடங்களிலும், "எல்.இ.டி., (லைட் எமிட்டிங் டயோடு)' பல்புகள் பொருத்தப் படுகின்றன.அனைத்து வகையான மெஷின்களிலும் "இன்வெர்ட்டர்' பொருத்தி, மின்சாரம் தேவையான போது மட்டும் பயன்படுத்தப்படுகிறது. வேலை முடிந்துசெல்லும் போது ஏற்படும் ஞாபக மறதியால், பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்படுவதில்லை. அதுபோல் நிகழ்வதை தவிர்க்க, "மெயின் சுவிட்ச் ஆப்' செய்யப் படுகிறது. பாலஜெகதீஷ் (சாய ஆலை உரிமையாளர், முருகம்பாளையம்): சாய ஆலைகளின் ஒவ்வொரு இயக்கமும், மின்சாரத்தை சார்ந்தே உள்ளன. விளக்குகள் பயன்பாட் டின் மூலமாக மட்டுமே மின்சாரத்தை குறைக்க முடியும். "சாப்ட் ப்ளோ' மெஷினை இயக்கும் போது, விளக்கு தேவையில்லை. வெளிச்சம் வேண்டுமெனில், சிமென்ட் சீட் மற்றும் ஓடு வேய்ந்த கட்டடங்களில் கண்ணாடி ஓடுகளை பயன்படுத்துகிறோம்.யூனிட் முழுவதும் எல்.இ.டி., பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு போதுமான அளவு இருந்தால், துணி உலர வைக்கும் இடங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. மின்கட்டணம் கழுத்தை நெரிப்பதால், மின் சிக்கனம் வழக்கமாகி வருகிறது. மோகன் (விசைத்தறி உரிமையாளர், மங்கலம்): விசைத்தறி குடோன்களில், பகலில் விளக்குகள் போடுவதை தவிர்க்க வேண்டும். விசைத்தறிகள் இயங்க மோட்டார் ஓடியே ஆக வேண்டும்; அதை ஒன்றும் செய்ய முடியாது. தற்போது, உற்பத்தியாளர்கள் வசதிக்காக, தார்மெஷினுக்கு தனிமோட்டார் வைக்கப்படுகிறது.இது, கூடுதல் மின்செலவை ஏற்படுத்துகிறது. தறிகள் இயங்கும் போது மட்டுமே தார் மெஷினை இயக்க வேண்டும். "ஷாப்ட்' இணைப்பு மூலமாக இயக்கும் போது, மின்சாரம் சேமிக்கப் படுகிறது. தற்போது, "நாட்டிங்' மெஷின்களை பயன்படுத்துவதால், அதிலும் மின்சாரம் செலவாகிறது. அதற்காக, "பேட்டரி'யில் இயங்கும் நாட்டிங்' மெஷின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும்அமைப்பினர் கருத்து:தங்கராஜ், கண்ணாடி கடை உரிமையாளர்: மின் தடையால், தொழிலில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது; வருவாயும் குறைந்துள் ளது. மின்சாரத்தை சிக்கனப்படுத்த, சிறு சிறு எளிய வழிகளை நடைமுறையில் பின்பற்ற வேண்டும். வீடு கட்டும் போதே, அதிக ஜன்னல் வசதியுடன் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால், பகல் நேரங்களில் வெளிச்சம் நன்றாக இருக்கும்; காற்றோட்டமும் இருக்கும். மின்விசிறி, விளக்கு பயன்பாடு குறையும்.கடைகளில், கண்ணாடி வாயிற்கதவுகளை பயன்படுத்தலாம்; வெளிச்சம் கிடைக்கும். அதிக மின்சாரத்தை இழுக்கும் பொருட்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். என்னுடைய வீட்டில், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் என எலக்ட்ரிக் பொருட்களை பயன்படுத்துவதில்லை. பழங்கால முறைகளையே பின்பற்றி வருகிறோம்.மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் மின் சிக்கனம் குறித்து முகாம் நடத்தி, மின் உபகரணங்களை எந்தெந்த தேவைக்கு பயன்படுத்த வேண்டும்; எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாந்தி, குடும்ப தலைவி, கருவம்பாளையம்: வெளியிடங்களுக்கு செல்லும் போது, வீட்டில் உள்ள அனைத்து சுவிட்சுகளையும் "ஆப்' செய்து விட்டுச் செல்ல வேண்டும். "டிவி', கம்ப்யூட்டர் முன் எந்நேரமும் இருப்பதற்கு பதிலாக, புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். தேவையான இடத்தில் மட்டும் மின்விசிறி, விளக்குகளை பயன்படுத்தலாம். ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி., போன்ற சாதனங்களை தேவைப்படும் நேரத்தில் மட்டும் உபயோகித்து, சிறிது நேரம் "ஆப்' செய்து வைக்கலாம். வீதிகளில் தேவை இல்லாமல் பகலில் எரியும் தெருவிளக்குகளை முறையாக அணைக்க வேண்டும். பாலாஜி, பிரவுசிங் சென்டர் உரிமையாளர், குமரன் ரோடு: அலுவலகத்தில் நாம் இருக்கும் இடத்தில் மட்டும் விளக்கு, மின்விசிறி பயன்படுத்த வேண்டும்; மற்ற இடங்களில் "ஆப்' செய்கிறோம். தேவையான இடங்களில் மட்டும் மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர் தவிர மற்றவற்றை "ஆப்' செய்ய வேண்டும்.ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில், விளம்பரத்துக்காக "டிவி' ஓடிக்கொண்டிருக்கும். அரசு அலுவலகங்களில் ஆள் இல்லாத இருக்கைக்கு மேலே மின் விசிறி சுழன்று கொண்டிருக்கும். இவைகளை தவிர்க்கலாம். சிதம்பரம், முயற்சி மக்கள் அமைப்பு தலைவர்: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் குறைந்த வாட்ஸ் பல்புகளை பயன்படுத்த வேண்டும். மின் பயன்பாடு குறைவதோடு, மின் கட்டணமும் வெகுவாக குறையும். பூமி வெப்பமயமாதலும் தவிர்க்கப்படும்."ஜீரோ' வாட்ஸ் பல்புகளை பயன்படுத்துவது இன்னும் நல்லது. பழைய இயந்திரங்கள் "பிக் அப்' ஆவதற்கு அதிக அளவு மின்சாரத்தை இழுக்கும்; இம்போர்ட்டட் ரெகுலேட்டர்களை பயன்படுத்தலாம். சோலார் யூனிட்டை பயன் படுத்தலாம்.வீட்டில் ஹீட்டரை உபயோகிப்பவராக இருந்தால், சோலார் ஹீட்டர் பயன்படுத்தினால் ஓராண்டுக்கு 1,500 யூனிட் மின்சாரம் மிச்சமாகிறது. "ரெடியூஸ்',"ரீயூஸ்', "ரீசைக்கிள்' என்பதை போல், மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.இவ்வாறு, கருத்து கூறினர். மின்சாரத்தை சிக்கனப்படுத்த வழிமுறை :* வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரிய விட வேண்டும்; மின்விசிறிகள் சுழல வேண்டும். யாருமற்ற நேரங்களில், கட்டாயம் "ஆப்' செய்ய வேண்டும்.* அலுவலகங்களில் இரவு 7.00 மணிக்குபின், பணியின் தன்மைக்கேற்ப விளக்குகளை "ஆப்' செய்வது நல்லது.* தெருவிளக்குகள், இருட்டு துவங்கும் நேரத்தில் ஒளிர துவங்கி, காலையில் இருட்டு அகலும் நேரத்தில் அணைக்கப்பட வேண்டும். சில ரோடுகளில் காலை 10.00 மணி வரையும், சில பகுதிகளில் பகல் முழுவதும் தெருவிளக்குகள் எரிவதால் மின்சக்தி விரயமாகிறது.* திருப்பூரில் "செகண்ட் ÷ஷா' காட்சி தடை செய்யப்பட வேண்டும்; தியேட்டர்களில் விரயமாகும் மின்சக்தி சேமிக்கப்படுவதோடு, நகரில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும்.* இரவில் 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் தூங்கும் பழக்கத்துக்கு மக்கள் மாற வேண்டும். பெரும்பாலான வீடுகளில், இரவு 2.00 மணி வரை "டிவி' பார்த்தும், பேசியும் நேரத்தை வீணாக்குகின்றனர்; காலை 10.00 மணி வரை தூங்குகின்றனர். இதனால், இரவிலும் மின்விளக்குகள், மின்விசிறிகள் மின் பயன்பாடு அதிகரித்து, பகலிலும் மின்சக்தி வீணாகிறது.* தனியார் விளம்பர படங்களுக்கு அலங்கார மின்விளக்குள் பயன்படுத்தக்கூடாது; மின்வாரியத்துக்கு அதிக வருவாய் கிடைத்தாலும், இதனால், ஏராளமான மின்சக்தி வீணாகிறது.* பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் அலங்கார விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.* பொதுக்கூட்டங்களை இரவில் இரண்டு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும். மணிக்கணக்கில் ஸ்பீக்கர்களில் பாடல்கள் ஒலிப்பது; மைக் பிரசாரம்; நான்கு மணி நேரத்துக்கு மேல் நடக்கும் பொதுக்கூட்டங்களில் அதிகளவில் மின்விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.* வீட்டை பூட்டி விட்டு செல்வோர், மெயின் பாக்ஸ் "ஸ்விட்ச்'சை "ஆப்' செய்து விடலாம்.* நாள் முழுவதும் "டிவி' பார்ப்பதால் ஏராளமான மின்சக்தி வீணாகிறது. அதேபோல், ஏ.சி., பிரிட்ஜ், அயர்ன் பாக்ஸ் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். வீடுகளில் மின்சாதனங்களை பயன்படுத்தும்போது, முடிந்தவரை நேரத்தை சிக்கனப்படுத்த வேண்டும்; மின்பயன்பாட்டை குறைக்க வேண்டும்.* பெரிய நிறுவனங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை பகல் நேரங்களிலும் நூற்றுக்கணக்கில் எரிய விடுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறை :திருப்பூரில் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பல்வேறு பணிகள் தாமதமாகின்றன. மின்வாரிய அலுவலகங்களில் 40 சதவீதம்; மின்வாரிய கள பணிகளில் 40 சதவீதம் ஆட்கள் பற்றாக்குறை நீடிக்கிறது.பல ஆண்டுகளாகியும், இப்பிரச்னைக்கு தீர்வு காண மின்வாரியம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; பணி மாறுதல், பணி ஓய்வில் சென்றவர்களுக்கு மாற்று அலுவலர்கள், புதிய பணியிடங்கள் நியமிக்கப்படவில்லை.ஒரு பகுதிக்கு ஏழு ஒயர் மேன், ஏழு ஹெல்ப்பர் தேவைப்படும் நிலையில், ஒரு ஒயர்மேன், ஒரு ஹெல்ப்பர் என இருப்பதால், பல பணிகள் நடப்பது இல்லை. இதனால், மின்பழுதுகளை சரிசெய்யவோ, பொதுமக்களின் புகார் தொடர்பாகவோ உடனடி நடவடிக்கை எடுக்க முடியாமல், மின்வாரிய அதிகாரிகள் திணறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, மின்வாரிய பணிகளுக்கு புதிய பணியாளர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டால் மட்டுமே, மக்களுக்கு மின்வாரியத்தின் சேவை முழுமையாக சென்று சேரும். டிப்ஸ்... டிப்ஸ்...:* இரவில் எரியும் உயர் மின்கோபுர விளக்குகள், சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தை கணி சமான அளவு குறைக்க வேண்டும்.* மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் மற்றும் அரசு அலுவலகங்களில் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமான விளக்குகள் எரிய விடுவதை தவிர்க்க வேண்டும்.* மேயர், எம்.எல்.ஏ., அலுவலகங்களில், "யாருமே' இல்லாத நேரங்களிலும் "ஏசி' இயங்குவதை தவிர்க்க வேண்டும்.* "பிரவுசிங்' சென்டர்களில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர் களையும் எப்போதும் "ஆன்' செய்து வைத்துள்ளனர். வாடிக்கையாளர் வரும்போது மட்டும் "ஆன்' செய்தால், மின்சாரத்தை சேமிக்கலாம். சென்னைக்கு மட்டும் விதிவிலக்கு : தமிழக தலைநகரான சென்னையில் மட்டும் 24 மணி நேரம் தடையின்றி மின் வினியோகம் செய்யப்படுவது, பிற பகுதிகளை சேர்ந்த மக்களை கோபமூட்டியுள்ளது. அமைச் சர்கள், உயரதிகாரிகள், ஏராளமான தொழிலதிபர்கள் வசிப்பதால் சென்னைக்கு மட்டும் முன்னுரிமை தந்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை பலரும் எதிர்க்க துவங்கியுள்ளனர்.சென்னையில் ஒரு மணி நேரம் மின்தடை செய்யப் பட்டால், அதில் மிச்சமாகும் மின்சாரத்தை திருப்பூர், கோவை, மதுரை போன்ற தொழில் நகரங்களுக்கு பயன் படுத்தலாம்; இதனால், மூன்று மணி நேர மின்தடையை இரண்டு மணி நேரமாக குறைக்க முடியும்; மக்களின் சிரமமும் ஓரளவு தீரும். தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் விலக்களித்து, 24 மணி நேர மின்சாரம் வினியோ கிப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
518
2010-04-22T00:51:00+05:30
இந்தியா
சாதித்து காட்டியது சச்சின் அணி!பைனலில் சூப்பராக நுழைந்தது வெளியேறியது கும்ளே அணி
மும்பை : ஐ.பி.எல்., தொடரின் பைன லுக்கு சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதி போட்டியில் கும்ளேவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 35 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. கடந்த முறை பைனலுக்கு தகுதி பெற்ற பெங்களூரு அணி, இம்முறை அரையிறுதியுடன் வெளி யேறியது. மும்பை அணியை பொறுத்தவரை ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்று சாதித்தது. இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று நவி மும்பையில் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் மும்பை, பெங்களூரு  அணிகள் மோதின.  டாஸ் வென்ற மும்பை கேப்டன் சச்சின், பேட்டிங் தேர்வு செய்தார். சச்சின் ஏமாற்றம்: மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. முதல் ஓவரில் பிரவீண் குமார் 2 ரன் மட்டுமே கொடுத்தார். ஸ்டைன் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரி விளாசிய சச்சின், 5வது பந்தை தாழ்வாக பறக்க விட்டார். இதனை ரோஸ் டெய்லர் "சூப்பராக' பிடிக்க, 9 ரன்களுக்கு அவுட்டானார். இத்தொடரில் ரன் மழை பொழிந்த சச்சின், முதல் முறையாக ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். சிறிது நேரத்தில் ஷிகர் தவான்(12) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. இதற்கு பின் அபிஷேக் நாயர், அம்பதி ராயுடு இணைந்து விவேகமாக ஆடினர். பிரவீண் குமார் வீசிய போட்டியின் 5வது ஓவரில், இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி அடித்தனர். நாயர் 22 ரன்களுக்கு நடையை கட்டினார். கும்ளே சுழலில் டுமினி(3) வீழ்ந்தார். திவாரி அரைசதம்: கடைசி கட்டத்தில் சவுரப் திவாரி அதிரடியாக ரன் சேர்த்தார். விராத் கோஹ்லி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த இவர், காலிஸ் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். பின் கும்ளே சுழலில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க...ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது. ராயுடு 40 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த போலார்டும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். வினய் குமார் வீசிய 19வது ஓவரில் 2 இமாலய சிக்சர் அடித்தார். கடைசி 5 ஓவரில் 77 ரன்கள் எடுக்கப்பட, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்த திவாரி  52(3 பவுண்டரி, 4 சிக்சர்), போலார்டு 33(1 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்களுடன் அவுட்டா காமல் இருந்தனர். விக்கெட் மடமட: சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணி ஆரம்பத்தில் ஆட்டம் கண்டது. தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலிஸ்(11), மலிங்கா வேகத்தில் காலி யானார். ஹர்பஜன் வலையில் பீட்டர்சன்(19) சிக்கினார். போலார்டு வீசிய 10வது ஓவரில் இரட்டை அடி விழுந்தது. 3வது பந்தில் உத்தப்பா(26) அவுட்டா னார். 4வது பந்தில் டிராவிட் (23)அநியாயமாக ரன் அவுட்டா னார். பின் போலார்டு வேகத்தில் விராத் கோஹ்லி(9), மனிஷ் பாண்டே(5) வெளியேறினர். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. அசத்தல் வெற்றி பெற்ற மும்பை அணி, ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. ஆட்டநாயகன் விருதை போலார்டு வென்றார். "கேட்ச்' சர்ச்சை : நேற்று மும்பை கேப்டன் சச்சின் பிடித்த "கேட்ச்' தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ஜாகிர் கான் வீசிய பந்தை பெங்களூரு அணியின் டிராவிட் அடித்தார். அதனை முதல் "ஸ்லிப்' திசையில் நின்ற சச்சின் மிகவும் தாழ்வாக பிடித்து "அவுட்' கோரினார். ஆனால், பந்து தரையில் பட்டதாக கூறி, டிராவிட் வெளியேற மறுத் தார். இதையடுத்து 3வது அம்பயரிடம் கேட்கப் பட்டது. "ரீப்ளேயில்' பந்து லேசாக தரையில் பட்டது தெரிய வர, "அவுட்' மறுக்கப் பட்டது. சச்சின் காயம்: இதனால், வலது கை விரல்களில் ரத்தம் வழிய சச்சின் பிடித்த "கேட்ச்' வீணானது. பின் காயம் அடைந்த இவரது விரல்களில் 5 தையல் போடப்பட்டது. இது மும்பை அணிக்கு பைனலில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
519
2010-04-22T00:52:00+05:30
தமிழகம்
தேய்ந்து வரும் தேசிய விளையாட்டு : கைதூக்கி விடுமா அரசு
மதுரை : இந்தியாவின் பாரம்பரிய, தேசிய விளையாட்டான ஹாக்கி, தமிழகத்தில் சங்கங்களின் உட்பூசல், போட்டியால் தேய்கிறது. இந்த பின்னணியில், கடந்த ஆறு ஆண்டுகளாக தேசிய போட்டிகள் முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தில் ஏற்பட்ட உட்கட்சி அரசியலால், புதிய தமிழ்நாடு ஹாக்கி, யுனிபைடு ஹாக்கி, ஹாக்கி தமிழ்நாடு, ஹாக்கி யூனிட்ஸ் ஆப் தமிழ்நாடு என ஐந்து சங்கங்கள் மாறி மாறி உருவாக்கப்பட்டன. கடைசியாக , ஹாக்கி இந்தியா தேசிய சங்கத்தின் பரிந்துரையின் பேரில், தமிழக யுனிபைடு சங்கத்தை ஆதரித்து, அதன் செயலாளராக ரேணுகாலட்சுமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் கோஷ்டி பூசலால் ஹாக்கி சங்கம் செயல்படாமல், கோர்ட்டில் வழக்காக மாறியுள்ளது. ஹாக்கி சங்க விதிமுறைகளின் படி 40 சதவீத பெண்கள், 60 சதவீத ஆண்கள் சங்கத்தில் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சங்கங்களின் கோஷ்டிபூசலால் மாநில, தேசிய போட்டிகள் நடக்கவில்லை. வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தேசியளவில் சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. சீனியர் பிரிவுகளில் விளையாடும் வீரர்களுக்கு, அவர்கள் சார்ந்த துறைகளில் பதவிஉயர்வு கிடைக்கும். குறிப்பாக வங்கியில் பணிசெய்யும் வீரர்கள் தொடர்ந்து நான்குமுறை தேசியளவில் விளையாடினால் பதவி உயர்வு உண்டு. ஆனால் இரண்டு, மூன்றுமுறை தேசியளவில் பங்கேற்றதோடு, வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையத்தின் மூலம் மாணவர்களுக்கும், தனிநபர்களின் மூலம் மற்றவர்களுக்கும் போட்டிக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. மாநில, தேசிய சங்கத்தின் மூலம் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த வாய்ப்பும் இப்போது கிடைக்கவில்லை.தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, ஹாக்கி விளையாட்டை மீண்டும் தலைநிமிரச் செய்ய வேண்டும்.
522
2010-04-22T01:13:00+05:30
தமிழகம்
பேரூராட்சி இடைத்தேர்தல் தி.மு.க., - காங்., வெற்றி
திருவாரூர்:திருவாரூரில் கொரடாச்சேரி பேரூராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க., - காங்., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., ஐந்து வார்டுகளிலும், மா. கம்யூ., ஒரு வார்டிலும் டிபாசிட் இழந்ததால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சியல் கடந்த 19ம் தேதி, 15 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடந்தது. தி.மு.க., 12 , காங்., 3, அ.தி.மு.க., 10, இந்திய கம்யூ., 4, மா. கம்யூ., ஒரு வார்டிலும் போட்டியிட்டன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது.ஓட்டு எண்ணிக்கை முடிவில், 15 வார்டுகளில் தி.மு.க., போட்டியிட்ட 12 வார்டுகளிலும், காங்கிரஸ் போட்டியிட்ட மூன்று வார்டுகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றன.அ.தி.மு.க.,வினருக்கு சாதகமான கொரடாச்சேரியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் சொற்ப ஓட்டுகள் மட்டுமே வாங்கினார்.இந்திய கம்யூ., சார்பில் போட்டியிட்ட 4வது வார்டு தஷ்ணாமூர்த்தி 12 ஓட்டுகள், 8வது வார்டு மல்லிகா 8, 10வது வார்டு சாந்தி 22, 11வது வார்டு ஜெகன்நாதன் 37, 15வது வார்டு ஜெகதாம்பாள் 12 மற்றும் 13வது வார்டு மா.கம்யூ., மஞ்சுளா 29 ஓட்டுகள் பெற்றதால் டிபாசிட் பறிபோனது.அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் இரண்டு இலக்கத்தில் மட்டுமே ஓட்டுகள் பெற்றுள்ளனர். கொரடாச்சேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வினர் படுதோல்வி அடைந்துள்ளதால், அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.பெரும்பான்மை பலத்துடன் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால் தலைவர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில், தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தம்பி கலையரசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
523
2010-04-22T01:14:00+05:30
தமிழகம்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது உரிமைமீறல் சட்டசபையில் அ.தி.மு.க., காரசார விவாதம்
சென்னை:அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக, அ.தி.மு.க.,வினர் கொண்டு வந்த உரிமைமீறல் பிரச்னை மீது நேற்று காரசார விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசிய கருத்துக்கு அ.திமு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.செங்கோட்டையன்-அ.தி.மு.க: கடந்த ஏப்ரல் 12ம் தேதி அ.தி.மு.க., உறுப்பினர் பாண்டுரங்கன் பேசியபோது, "உங்கள் ஆட்சியில் 745 ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட அதிகம் தரவில்லை' என, வேளாண் அமைச்சர் கருத்து தெரிவித்தார். இது முற்றிலும் தவறானது. தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் வழக்கு, இந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் வழக்கு இரண்டையும் இணைத்து சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி, 2005ம் ஆண்டு அ.தி.மு.க., அரசு வெற்றி பெற்றது.(அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி குறுக்கிட்டு, "ஜெயலலிதா மீது நான் கொண்டு வந்த உரிமைமீறல் பிரச்னை என்ன ஆனது என அறிய விரும்புகிறேன்' என்றார். இதற்கு அ.தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். அப்போது சபாநாயகர், அ.தி.மு.க., உறுப்பினர்களை கண்டித்தார்.)வழக்கு முடிந்ததும், சர்க்கரை ஆலை அதிபர்களையும், விவசாயிகளையும் அழைத்து பேசி, டன்னிற்கு 1,014 ரூபாய் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது. அமராவதி கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த ராமசாமி உட்பட பலருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சர் ஒரு ரூபாய் கூட அதிகமாக கொடுக்கவில்லை என கூறியது தவறான செய்தி. சட்டசபையில் தவறான தகவல் கொடுத்த அமைச்சர் மீது கொண்டு வரப்பட்டுள்ள உரிமைமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்: கடந்த 2000-01ம் ஆண்டு தி.மு.க., அரசு இருக்கும் வரை 8.5 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் உள்ள ஒரு டன் கரும்புக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊக்கத் தொகையுடன் சேர்த்து மாநில அரசின் பரிந்துரை விலை கொடுத்து வந்தது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு டன் கரும்புக்கு 595 ரூபாயுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையாக 180 ரூபாய் சேர்த்து, 775 ரூபாய் வழங்கப்பட்டது.பின், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, 2001ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மாநில அரசு பரிந்துரை விலை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டு மத்திய அரசுக்கு தெரிவித்தது. 2001-02ம் ஆண்டு முதல் 2004-05ம் ஆண்டு வரை மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை மட்டுமே வழங்கப்பட்டது.2005-06ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு மத்திய அரசு 9 சதவீதம் கட்டுமானம் உள்ள ஒரு டன் கரும்புக்கு 795 ரூபாய் என நிர்ணயித்தது. இந்த ஆண்டு தான் மாநில அரசு பரிந்துரை விலையாக 9 சதவீதம் கட்டுமானத்திற்கு மத்திய அரசு விலையோடு 219 ரூபாய் சேர்த்து 1,014 ரூபாய் என 2005ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அறிவித்தது. 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு ஏப்ரல் 13ம் தேதி வெளியிடப்பட்டு, மே 8ம் தேதி தேர்தல் நடந்தது.
524
2010-04-22T16:47:00+05:30
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: பூகம்பமே வந்தாலும் முல்லைப் பெரியாறு அணை உடைய வாய்ப்பு இல்லை. ஆனால், கேரளா உடைத்து விடுமானால், 65 லட்சம் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் மதுரை உள்ளிட்ட தென் தமிழகம் முழுவதும் சகாரா பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு: முதல்வர் கருணாநிதி சொன்ன வாக்குறுதியை செய்து சாதனை படைப்பவர். சொல்லி ஏமாற்றுவதும், அறியாமையால் போராட்டம் என்ற பெயரில் கூக்குரலிடுவதும் ஜெயலலிதாவின் பாணி. இதை, அப்பாவி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பேட்டி: ஐ.பி.எல்., அமைப்புக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இதே நாட்டில், சக மனிதன் சாப் பாட்டுக்கு கஷ்டப்படுவதும், விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாதாரண மக்கள் அல்லல்படுவதையும் காண்கிறோம்.அ.தி.மு.க., கொறடா செங்கோட்டையன் பேச்சு: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நெசவாளர்களின் துயர் துடைக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் மின் வெட்டாலும், டீசல் விலை ஏற்றத்தாலும், 10 லட்சம் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் தாவூத் மியாகான் பேச்சு: கடந்த ஐந்தாண்டாக வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த அகமது, ஹஜ் விவகாரங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய் துள்ளார். இதை, மத்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம். இதுபற்றி முறையான விசாரணை நடத்தப் பட வேண்டும்.இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே பேட்டி: நானோ, என் கணவரோ, என் குடும்பத்தினரோ ஐ.பி.எல்., உடனோ அல்லது ஏல நடைமுறையிலோ எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்பது மட்டுமே எங்களுக்கும், ஐ.பி.எல்.,க்கும் இடையிலான தொடர்பு.
525
2010-04-23T00:18:00+05:30
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வைவாபஸ் பெற 27ல் வெட்டுத் தீர்மானம்
புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி, பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் உட்பட 13 கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி நேற்று டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:நிதி அமைச்சக மானியக் கோரிக்கை மீதான விவாதம் வரும் 27ம் தேதி நடைபெறும். அப்போது 13 கட்சிகள் சார்பில், லோக்சபாவில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டுவரும் தீர்மானமும் தாக்கல் செய்யப்படும். விலையை உயர்த்தி அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்வதற்காக, இந்த திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. அதே நாளில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, அ.தி.மு.க., - தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக்தளம், ராஷ்டிரிய லோக்தளம் உட்பட 13 கட்சிகள் சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் வெட்டுத் தீர்மானத்தை கொண்டு வரவில்லை. மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறோம்.இவ்வாறு யெச்சூரி கூறினார். அவர் பேட்டி அளித்த போது, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரை, ராஷ்டிரிய லோக்தளம் கட்சியைச் சேர்ந்த அஜித்சிங், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ரகுவன்ஷ் பிரசாத், சமாஜ்வாடியின் ரியோட்டி ராமன்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாசுதேவ் ஆச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா, தெலுங்கு தேசம் கட்சியின் நாகேஷ்வர ராவ் ஆகியோர் உடனிருந்தனர். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரை கூறுகையில், ""விலைவாசி உயர்வு பிரச்னைகள் தொடர்பாக, எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பொது வேலை நிறுத்தம் மற்றும் வெட்டுத் தீர்மானத்தை எங்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கும்,'' என்றார்.ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ரகுவன்ஷ் பிரசாத் கூறுகையில், ""விலைவாசி உயர்வுக்கு எதிராக கட்சிகள் ஏற்கனவே போராட்டத்தை நடத்தி வருகின்றன. பீகார் மற்றும் உ.பி.,யில் "பந்த்' நடந்துள்ளது,'' என்றார்.
527
2010-04-23T18:18:00+05:30
General
ஐ.பி.எல்., 2ல் மேட்ச் பிக்சிங் : மோடிக்கும் தொடர்பு?
புதுடில்லி : ஐ.பி.எல்.,லில் ஏற்பட்ட லலித் மோடிக்கும்-சசிதரூருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வருமான வரித்துறையினர் பல இடங்களில் சோதனை  மேற்கொண்டனர். பலரிடம் விசாரித்தனர். இந்நிலையில் வருமான வரித்துறையினர் இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பினர். அந்தஅறிக்கையில், தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2வது ஐ.பி.எல்., தொடரில் மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும், இந்த தொடரில் பங்கேற்ற 27 வீரர்களுக்கு இதில்தொடர்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் மேட்ச் பிக்சிங்கில் லலித் மோடிக்கும் பங்கு உண்டு எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
528
2010-04-23T18:19:00+05:30
இந்தியா
ஐ.பி.எல்., விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் கவலையில்லை : சரத்பவார்
புதுடில்லி : ஐ.பி.எல்., லில்  மத்திய அமைச்சர் சரத்பவார் குடும்பத்தினரும், மத்திய அமைச்சர் பிரபுல் படேலும் ஆதாயம் அடைந்ததாக  தகவல் வெளியானது. இந்நிலையில் ஐ.பி.எல்., விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பார்லிமென்டில் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் சரத்பவார், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் அது பற்றி கவலையில்லை என்றும், எங்கள் மீது எந்த வித தவறும் இல்லை என்றும் கூறினார்.
529
2010-04-23T23:49:00+05:30
தமிழகம்
கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தில் டிசம்பரில் மின்சார உற்பத்தி துவங்கும்
திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அணுமின் உற்பத்திக்கான மாதிரி எரிபொருள் செலுத்தும்பணி துவங்கியது. வரும் டிச., மாதத்தில மின்உற்பத்தி துவங்கும் என இந்திய அணுமின் கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடற்கரையில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுமின் உலைகள் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. அணுமின் உற்பத்திக்கு எரிபொருளாக யுரேனியம் பயன்படுகிறது. அணுஉலைக் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை சோதித்து பார்க்க நேற்று முதல் அணுஉலையில் மாதிரி எரிபொருளாக "காரீயம்' கொண்ட குழாய்கள் செலுத்தப்பட்டன. இந்திய அணுமின் உற்பத்தி கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் பார்வையிட்டார். 705 கிலோ எடைகொண்ட 4.57 மீட்டர் நீளத்துடன் கூடிய ராடுகளில் காரீயம் அடைக்கப்பட்டு அணுஉலைக்குள் செலுத்தப்பட்டன. மொத்தம் 163 மாதிரி குழாய்கள் செலுத்தப்படுகின்றன. இதுகுறித்து எஸ்.கே.ஜெயின் கூறியதாவது: இங்கு அணுமின் நிலைய பணிகள் திருப்திகரமாக நடந்துவருகிறது. மாதிரி எரிபொருள் செலுத்தும் பணிகள் இன்னமும் சில தினங்களில் நிறைவுபெறும். சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எரிபொருள் யுரேனியம் செலுத்தப்படும். இந்த ஆண்டு டிசம்பரில் முதல் அணுஉலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி துவங்கும். அதே நேரத்தில் இரண்டாவது அணுஉலையில் மாதிரி எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் இருந்து 8 மாதங்களில்(2011 ஆகஸ்ட்) இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி துவங்கும். தமிழகத்திற்கு மின்சாரம்: டிசம்பரில் துவங்கும் மின்உற்பத்தியில், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரம் (ஒரு உலைக்கு 500 மெகாவாட்) தமிழகத்திற்கு வழங்கப்படும். மீதமுள்ள மின்சாரம் மத்திய மின் தொகுப்பிற்கு வழங்கப்படும்.அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படும் யுரேனியம் இன்னமும் 5ஆண்டுகளுக்கு போதுமானவை நம்மிடம் கையிருப்பில் உள்ளன. தற்போது நாடு முழுவதும் 19 அணுமின்நிலையங்கள் உள்ளன. புதிய அணுஉலை கட்டுமான பணிகளும் நடக்கிறது. நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கூடங்குளத்தில் 3வது 4வது அணுஉலைகளுக்கான பணிகள் துவங்கும். அதே காலகட்டத்தில் 700 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவில் மத்திய பிரதேசத்தில் 2 அணுமின் உலைகள், ஹரியானாவில் 2 அணுஉலைகள் துவக்கப்பட உள்ளன. மேலும் கக்ரபாரா மையத்தில் மேலும் 2 அணுஉலைகள் என மொத்தம் 8 அணுமின் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். 12வது ஐந்தாண்டு காலத்தில் கூடங்குளத்தில் 5வது 6வது அணுமின்நிலையங்களும், மேலும் ரஷ்ய துணையுடன் நான்கு, அமெரிக்க தொழில்நுட்பத்துடன் நான்கு, பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் இரண்டு என மொத்தம் 12 அணுமின்நிலையங்கள் அமைய உள்ளன,'' என்றார். பேட்டியின் போது கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குனர் புரோகித், வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, தலைமை கட்டுமான பொறியாளர் பதக், ரஷ்ய நாட்டின் அட்டாம்ஸ்ட்ராய் நிறுவன தலைவர் டுட்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
532
2010-04-23T23:55:00+05:30
தமிழகம்
மின்சார பற்றாக்குறையால் மூடுவிழாவை நோக்கி சிறு ஆலைகள் : பணியாளர் கிடைப்பதிலும் சிக்கல்
சிவகங்கை :மின்சாரம், பணியாளர் பற்றாக்குறையால் ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களில், சிறு தொழில் நிறுவனங்கள் முடங்கி வருகின்றன.இம்மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் களே அதிகம். இது தவிர நூற்பாலை, அதை சார்ந்த சிறு தொழில்கள், செங்கல் சூளை என, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். தேசிய அளவில் ஏற்பட்ட சரிவால், இங்கும் சில நூற்பாலைகள் மூடப்பட்டன. அரசுகளின் தவறான பொருளாதார, தொழில் கொள்கையால், சில சிறு நிறுவனங்கள் மூடு விழா கண்டன. மின்சார நெருக்கடி: தற்போது ஆலைகளுக்கு, மின் பற்றாக்குறையால் கடும்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு நிறுவனங்கள் நலிவடைந்து மூடப்பட் டுள்ளன. பணியாளர் பற்றாக்குறையும் பல நிறுவனங்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மின்சாரம், பணியாளர் பற்றாக்குறைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், கடந்த 18 மாதங்களில் மட்டும், இம்மாவட்டங்களில் 1, 800க்கும் மேற்பட்ட சிறு ஆலைகள் மூடப்பட்டு விட்டன.கடந்த 2008ல் 12 ஆயிரம் சிறு, குறு ஆலைகள்; 126 பெரிய ஆலைகள் இருந்தன. தற்போது 10 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது. பெரிய ஆலைகள் 94 ஆக குறைந்து விட்டது. இதுகுறித்து பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் முரளிதரன் கூறுகையில், ""கடந்த இரண்டு ஆண்டுகளை விட, தற்போது மின் பற் றாக்குறை அதிகரித்துள்ளது. குறைந்த முதலீட்டில் நடக்கும் பிளாஸ்டிக் ஆலைகளில் ஜெனரேட்டர் பயன்படுத்த முடியாது. முழுமையாக மின்சாரத்தையே நம்பி உள்ளோம். பகலில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. பணியாளர் பற்றாக்குறையும் ஒரு காரணம். சில ஆண்டுளில் சிறு ஆலைகளை இல்லாத நிலை ஏற்படும்,'' என்றார். செங்கல் சூளை உரிமையாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ""பணியாளர்களை முன்பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டியுள்ளது. கீழ்தட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசு  பல சலுகைகள் வழங்குவதால், வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. செங்கல் அறுக்கும் கூலி 275 ரூபாயில் இருந்து 400 ஆக உயர்ந்துள்ளது. இருந்தும் ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது,'' என்றார்.
538
2010-04-24T00:10:00+05:30
இந்தியா
சொத்து விவரம் தராத 51 எம்.பி.,க்கள்: சபாநாயகர் எச்சரிக்கை
புதுடில்லி : விரைவில் தங்கள் சொத்துக்கள் குறித்த விவரங்களை எம்.பி.,க்கள் சமர்ப்பிக்கவில்லையென்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் எச்சரித்துள்ளார். பார்லிமென்ட் எம்.பி.,யாக ஒருவர் பதவியேற்றவுடன், 90 நாட்களுக்குள் தன் சொத்துக்கள் பற் றிய கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஆனால், 15வது லோக்சபா அமைக் கப்பட்டு ஓர் ஆண்டு ஆனபின்னும், 51 எம்.பி.,க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கவில்லை.இவர்களில் லாலு, கல்யாண் சிங், திக்விஜய் சிங், பாபுலால் மராண்டி ஆகியோரும் அடக்கம். மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங் என்பவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றவர்.பா.ஜ., - காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தி.மு.க., - தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.,க்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கு சபாநாயகர் மீரா குமார் அனுப்பியுள்ள கடிதத்தில், "சட்டத்தை மீறும் வகையில் செய்யப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் மீது, பார்லிமென்ட் அவமதிப்பு என்ற ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிவரும். ஆகவே உடனடியாக சொத்து விவரங்களைத் தர வேண்டும்' என்று எச்சரித்துள்ளார். கேள்வி நேரத்தை மாற்ற தயார்லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நேற்று கூறியதாவது:கடந்த இரண்டு நாட்களாக உறுப்பினர்களின் அமளி காரணமாக கேள்வி நேரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதன்மூலம், உறுப்பினர்கள், தங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கான ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.இடையூறுகளால் கேள்வி நேரம் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாலை நேரங்களில் கேள்வி நேர அலுவல்களை நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அழகிரி  விவகாரம்: மத்திய அமைச்சர் அழகிரி லோக்சபா கூட்டத் தொடரில் பங்கேற்காதது குறித்து சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் அவரிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை.அவரின் பிரச்னை என்ன என்பது குறித்து அறிந்து கொண்டு, அதற்கு தீர்வு காண விரும்புகிறேன். அதற்கு  தயாராயிருக்கிறேன்.இவ்வாறு மீரா குமார் கூறினார்.
539
2010-04-24T00:11:00+05:30
தமிழகம்
ஓடத் துவங்கியது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்
சென்னை : விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதையில், நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது. இன்று முதல், சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலும், 26ம் தேதி முதல், சென்னை எழும்பூர் - திருச்சி இடையே தினசரி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட மூன்று பாசஞ்சர் ரயில்களும், 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இப்பாதை வழியாக இயக்கப்பட தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து, நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே முதல் ரயில் நேற்று மாலை இயக்கப்பட்டது. இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைந்தது.இன்று முதல் இப்பாதையில் தினசரி மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே மூன்று பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு பாசஞ்சர் ரயில் காலை 5.30, மாலை 6 மணிக்கு இயக்கப்படும். விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.10 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு மயிலாடுதுறை - தஞ்சை வழியாக இன்று முதல் தினசரி நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் (எண்.6175) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு நாகூர் சென்றடையும். நாகூரிலிருந்து நாளை (25ம் தேதி) முதல் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6176) இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.2794) இன்று மதுரையிலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இப்பாதை வழியாக மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.2793) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மதுரை சென்றடையும்.சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு வரும் 26ம் தேதியிலிருந்து தினசரி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.6853) எழும்பூரிலிருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.திருச்சியிலிருந்து (எண்.6854) காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.வாரணாசி - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.4620) வரும் மே 2ம் தேதியிலிருந்து சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.4259) ராமேஸ்வரத்தில் வரும் மே 5ம் தேதியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படுகிறது.தற்போது, சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே விருத்தாசலம் - திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (எண்.6101, எண்.6102) ரயில்கள், வரும் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து மயிலாடுதுறை - கும்பகோணம் - திருச்சி வழியாக இயக்கப்படும்.திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6736) வரும் ஜூலை 29ம் தேதியிலிருந்தும், சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6735) வரும் ஜூலை 30ம் தேதியிலிருந்தும் மயிலாடுதுறை - கும்பகோணம் - திருச்சி வழியாக இயக்கப்படும். விழுப்புரத்திலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்.114) நாளை முதல் அதிகாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
540
2010-04-24T00:12:00+05:30
தமிழகம்
மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ரூ.2 கோடி லஞ்சம்
புதுடில்லி : பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மருத்துவத் துறையின் மிக உயர்ந்த அமைப்பு இந்திய மருத்துவக் கவுன்சில். ஒரு மருத்துவக் கல்லூரிக்கோ, மருத்துவ நிறுவனங்களுக்கு  அங்கீகாரம் வழங்கவோ, ரத்து செய்யவோ, இந்த கவுன்சிலுக்கு முழு உரிமை உண்டு. மருத்துவப் பட்டங்களுக்கு அங்கீகாரம் தருவதும் இந்த அமைப்பின் பணியாகும். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் கேதன் தேசாய்.இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், குஜராத் பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகவும், செனட் உறுப்பினராகவும் இவர் தொடர்ந்து  இருந்து வருகிறார். இவரை கைது செய்ததின் மூலம் மெடிக்கல் கவுன்சில்  பெயர் மிகவும் தரம் தாழ்ந்து, கவுரவத்தை இழந்து நிற்கிறது.கேதன் தேசாய், பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பான புகார் வந்ததும், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்து இடைத்தரகராகச் செயல்பட்ட ஜிதேந்தர் பால் சிங், பாட்டியாலாவைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி டாக்டர் கன்வல்ஜத் சிங்கையும் கைது செய்துள்ளனர்.இவர்களுடைய வீடுகளில் உடனடியாக சோதனை நடத்தப்பட்டது. டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட ஆறு இடங்களில் கேதன் தேசாய் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.நாடு முழுவதும் சீரான மருத்துவக் கல்விக்கு வித்திடும் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் ஹர்ஷ்பால் குறிப்பிடுகையில், "கேதன் தேசாயும், அவரது உதவியாளர்களும் பஞ்சாப் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க 2 கோடி ரூபாய் கேட்கின்றனர் என்ற தகவல் வந்ததும், அவர்கள் அலுவலகத்துக்குச் சென்று கைது செய்தோம்' என்றார்.டில்லியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் இந்த மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஓ.பி.சாய்னி, மூன்று பேரையும் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். வரும் 28ம் தேதி வரை இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.இந்த விசாரணையின் மூலம் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக இன்னும் பலர் இந்த வழக்கில் சிக்கக்கூடும் என, சி.பி.ஐ., அதிகாரி ஹர்ஷ்பால் தெரிவித்துள்ளார்.இந்த ஊழல் வழக்கில், பஞ்சாபில் உள்ள கியான் சாகர் மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர் சுரீந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரூ.212 கோடி பறிமுதல் : சி.பி.ஐ., அதிகாரிகள், 212 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.  ஆமதாபாத்தில் கேதன் தேசாய் நடத்தி வந்த மருத்துவக் கல்லூரியில் இருந்த லாக்கரில் இருந்து இது பறிமுதல் செய்யப்பட்டதாகக்  கூறப்படுகிறது.அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் செயலர் விஷ்ணு தத் தன்னுடைய அறிக்கையில், "எந்தெந்த மருத்துவக் கல்லூரிக்கு எல்லாம் கேதன் அனுமதி தந்தார் என்பதைக் கண்டறிந்து, அவைகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார். மருத்துவ கவுன்சிலில் கோடி கோடியா லஞ்சம் : மந்திரிகளுக்கும் தொடர்பா...?சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். லஞ்சம் பெற்றதாக ஏற்கனவே இவர் மீது வழக்குகள் இருந்தன. இதையெல்லாம் மீறி இந்தப் பதவியில் நீடித்து வருகிறார். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதையும் தாண்டி, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் பங்குதாரராக தன்னைக் இணைத்துக் கொண்டதாகவும் இவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தொடர்ந்து இத்தகைய உயர் பதவியில் இருந்ததன் மூலம், இந்த துறைக்கு பொறுப்பு வகித்த மத்திய அமைச்சர்களுக்கு இவர் லஞ்சம், மருத்துவ சீட் ஒதுக்கீடு என கொடுத்து தன் பதவியை தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி அனுமதிக்கும் குறைந்தது 20 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.இந்த பணம் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், உயரதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கேதன் தேசாயை முறைப்படி விசாரித்தால், எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.இதுபோல நாட்டின் உயரிய பதவிகளில் உள்ளவர்கள் பெரும் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறைக்கு செல்கின்றனர். ஆனால், எந்த தண்டனையும் இன்றி ஓரிரு ஆண்டுகளில் வெளியில் வந்து மீண்டும் அதேபோன்ற உயர் பதவிகளில் அமரும் நிலை நாட்டில் தொடர்கதையாக இருந்து வருகிறது. சென்னையில் கைதான பாஸ்போர்ட் உயர் அதிகாரி, மருத்துவத் துறை இயக்குனர் என லஞ்சத்தில் சிக்குபவர்கள் பட்டியல் நீள்கிறது. ஒரு சிலநாட்கள் பரபரப்பாக விசாரிக்கப்படும் இந்த வழக்குகள் பின்னர் அப்படியே அமுக்கப்பட்டு விடுகிறது. பதவி இழந்தவர்கள் மீண்டும் உயர் பதவிகளில் வலம் வருகின்றனர்.நாட்டிற்கே இச்சம்பவங்கள் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இந்நிலை இனியும் தொடராவண்ணம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
542
2010-04-25T01:04:00+05:30
இந்தியா
டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு. திணறல்! * எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக போர்க
புதுடில்லி : சரத் பவார், நிதிஷ் குமார், பிரகாஷ் கராத் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள், மத்திய அரசால் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக போர்க்கொடி தூக்கியுள்ளதால், மத்திய அரசு திணறி வருகிறது. மேலும், பார்லிமென்டிலும் நாளை இப்பிரச்னையை எழுப்ப கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரபல ஆங்கில செய்தி வார இதழ் ஒன்றில், அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள், மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து, அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி:கார்கில் போர் நடந்த பின், மத்திய அரசால் தேசிய தொழில்நுட்பக் கழகம் என்ற புலனாய்வு அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரின் தொலைபேசி  உரையாடல்களை ஒட்டுக் கேட்டு, பதிவு செய்து வருகிறது.தேசியவாத காங்., தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான சரத் பவாரின் தொலைபேசி உரையாடல்கள், கடந்த இரண்டு வாரங்களாக ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல்., விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து, லலித் மோடிக்கும், சரத் பவாருக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. மோடி விவகாரத்தில், சரத் பவாருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.அடுத்ததாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்தின் தொலைபேசி உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்தது கடந்த 2008ம் ஆண்டில். இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த பிரச்னை, உச்சத்தில் இருந்தபோது, அதை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டது. இந்த நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளும் வகையில் கராத்தின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒட்டு கேட்பு நடவடிக்கையில், அடுத்ததாக சிக்கியவர் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார். பீகார் மாநிலத்துக்கு கூடுதல் நிதியை பெறுவதற்காக அவர் டில்லி வந்தபோது, தனது நண்பர்களிடம் அது குறித்து தொலைபேசியில் பேசிய விவரங்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில் நான்காவதாக இடம் பெற்றுள்ள நபர் தான் விசேஷமானவர். இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங். காங்கிரஸ் காரிய கமிட்டி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் திக்விஜய்சிங் பேசியது ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சித் தலைவர் மற்றும் தங்கள் கட்சி பிரமுகரின் தொலைபேசிகளையும், காங்கிரஸ் அரசு ஒட்டு கேட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் போர்க்கொடி:அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்ட சம்பவத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில்,""இந்த விஷயத்தில் மத்திய அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நடவடிக்கை. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், பார்லிமென்டில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கையால், மத்திய அமைச்சருக்கும், மாநில முதல்வருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பார்லிமென்டில் கிளப்புவோம்,'' என்றார்.மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் கூறுகையில்,""போன் ஒட்டு கேட்கப்பட்ட சம்பவம் சட்ட விரோதமானது. இதை, ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில்,"இந்த விவகாரம் எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லியில் புயல்?தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தால் பார்லிமென்டில் நாளை புயல் கிளம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரின் தொலைபேசி உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.
543
2010-04-25T01:05:00+05:30
இந்தியா
கேதன் தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்
இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில்,  40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது.எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார்.  தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.நாட்டில் தற்போது 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரத்து 742 இடங்கள் உள்ளன. கேதன் தேசாய் எம்.சி.ஐ.,யின் தலைவராக இருந்த  காலகட்டத்தில், 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்.கேதன் தேசாய், புது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் 30 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவர் எம்.சி.ஐ., தலைவராக பதவி வகித்த காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், இதன் மூலமாகவே கேதன் தேசாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.தனியார் கல்லூரிகளிடம், கேதன் தேசாய் தனக்கென சில எம்.பி.பி.எஸ்., இடங்களை கேட்டுப் பெற்றுள்ளார். அந்த இடங்களை ஆண்டுதோறும் விலை பேசி விற்று அதன் மூலமாகவும் பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். மருத்துவக் கல்லூரிகள் முதல் நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ., அனுமதி பெற வேண்டும். இதிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள் சரியில்லை என கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டது. பின், தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டு அனுமதி பெறும் நிலை உள்ளது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என்ன மாயம் செய்தோ(!) அனுமதி பெற்று விடுகின்றன. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, எம்.பி.பி.எஸ்., இடங்களை விற்றது என கேதன் தேசாய் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இந்த ஊழலில் பல தனியார் கல்லூரிகளும், மேலும் பல அதிகாரிகளும் விரைவில் சி.பி.ஐ., பிடியில் சிக்குவார்கள் என தெரிகிறது.கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில், லஞ்சப் புகாரில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) உறுப்பினர் செயலர் நாராயண ராவ், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் யாதவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, யாதவை ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் பதவியிலிருந்து நீக்கியது.தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாக அப்போது புகார் எழுந்தது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல ஏ.ஐ.சி.டி.இ., மண்டல அலுவலகங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொறியியல், மருத்துவம் என இரு முக்கியமான தொழிற்படிப்புகளை கண்காணிக்கும் அமைப்புகள் ஊழல் புகாரில் சிக்கியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டில், பொறியியல், மருத்துவக் கல்வியின் தரம் குறித்து மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அம்மாடியோவ்... மலைக்க வைக்கும் கேதன் தேசாய் ஊழல்1,800 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றரை டன் தங்கம் பறிமுதல்  கேதன் தேசாய் வீடுகளில் இருந்து, ரூ.1,800 கோடி ரொக்கம் மற்றும் 1.5 டன் தங்க நகைளை சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாக, யு.என்.ஐ., செய்தி நிறுவனம்  வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, துவக்கத்தில் ஒத்துழைக்க மறுத்தார். பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களுடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறினார்.சி.பி.ஐ., அதிகாரிகளின் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, பின்னர் ஒவ்வொரு விவரமாக தெரிவித்தார். சில முறை மாறுபட்ட தகவல்களை கொடுத்து,  குழப்பம் ஏற்படுத்தினார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், டில்லி மற்றும் ஆமதாபாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கிருந்த ரூ.1,801 கோடி ரொக்கம் மற்றும் 1.5 டன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. போலியான ஆவணங்கள் மூலம், மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் தேசாயின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.அங்கீகாரம் வழங்குவதற்கான தேதி முடிவடைந்த பின்னரும், சில மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பத்தை அவர் பெற்றதும் தெரியவந்துள்ளது. அங்கீகாரத்துக்காக கல்லூரிகளிடம் இருந்து தலா 25 முதல் 35 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார். மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், அந்த கல்லூரிகளை ஆய்வு செய்வதற்காக 20 கண்காணிப்பாளர்கள் தேசாயால் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தேசாயின் ஏஜன்ட்களாக செயல்பட்டுள்ளனர். அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பதை இவர்களே நிர்ணயித்துள்ளனர்.சமீபத்தில் தமிழகத்தில் மட்டும் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு, இந்த கண்காணிப்பாளர்கள் அதிரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர். அவற்றில் இரண்டு கல்லூரிகள், அங்கீகாரத்துக்காக பணம் கொடுக்க சம்மதித்தன. ஆனால், ஒரு கல்லூரி மட்டும் பணம் கொடுக்க சம்மதிக்கவில்லை.சமீபத்தில், தேசாய் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெறும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அந்த உத்தரவு. சம்பந்தபட்ட மருந்து நிறுவனங்கள், தேசாய்க்கு பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாகவே, அவர் இந்த உத்தரவை பிறப்பித்தாக சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் கேசவன் குட்டி நாயர் உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கைளையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.டில்லியில் உள்ள தனது அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் மசாஜ் ஹெல்த் சென்டர் ஒன்றை தேசாய் நடத்தி வந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்ட  அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஹெல்த் சென்டர் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -நமது சிறப்பு நிருபர்-
544
2010-04-25T01:05:00+05:30
தமிழகம்
ஜெ., அணுகுமுறையில் மாற்றம் : குஷியில் கூட்டணிக் கட்சிகள்
தொண்டர் சந்திப்பு மூலம் கட்சிக்கும், இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க., தலைமையின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வை பொறுத்தவரை அவ்வப்போது அதிரடி நிகழ்வுகள் நடப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சமீபத்திய அதிரடி, தொண்டர்களிடம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்னாகரம் இடைத்தேர்தல் தோல்வியை தாங்க முடியாமல் தீக்குளித்த ஈரோடு தொண்டரைச் சந்தித்து ஆறுதல் கூறி  ஜெ., பரபரப்பு ஏற்படுத்தினார்.இதற்கு அடுத்ததாக, ஜெ.,வின் சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு  உட்பட்ட கடமலைக்குண்டு-மயிலை ஒன்றிய செயலர் தர்மராஜ் ஜீப் விபத்திற்குள்ளானதில், அவர் உட்பட கட்சியினர் படுகாயமுற்றனர். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர்களை சந்திக்க மீண்டும் தனி விமானத்தில் ஜெ., மதுரைக்கு பறந்தார்.அவரது பயணம் முதல் நாள் தான் முடிவு செய்யப்பட்டதால், தொண்டர்களுக்கு கூட இதுகுறித்து அறிவிப்பும் இல்லை. இருப்பினும் ஜெ.,யை வரவேற்கவும், அவரிடம் தங்கள் முகத்தை பதிவு செய்யவும் மதுரையை சுற்றிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் குவிந்தனர்.சரியான ஏற்பாடுகள் செய்யாததால், நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஜெ., வந்து செல்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்று வந்த நிர்வாகிகள், ஜெ., பார்க்க வசதியாக கீழ்தளத்திற்கு காலையில் மாற்றப்பட்டனர்.ஜெ., வருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பாக, தொண்டர்கள் கூட்டம் நிரம்பியது. கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு இல்லை. பாசறை நிர்வாகிகளும், ஜெ., வின் பாதுகாப்பு அதிகாரிகளும், மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மருத்துவமனைகளில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து நலம் விசாரித்த ஜெ., அருகில் நின்ற அவர்களது மனைவிமார்களிடமும் பேசினார். டாக்டர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்."தைரியம், தன்னம்பிக்கையுடன் இருங்கள்' என தெம்பூட்டிய ஜெ., "நான் இருக்கிறேன்' என உருக்கமாக பேசினார். ஜெ.,யின் இத்தகைய நடவடிக்கை சோர்ந்திருந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது போன்ற திடீர் பயணங்களால் தனது அணுகுமுறையை மாற்றி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார் ஜெயலலிதா. தன் கட்சியினர் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஜெ., அணுகுமுறை மாறியுள்ளது.விலைவாசி உயர்வைக் கண்டித்து, நாளை மறுதினம் பொது வேலைநிறுத்தம் தொடர்பாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து ஜெ., ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு, கூட்டணிக் கட்சிகளுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:எங்களது கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி, பிரிக்க வேண்டும் என்ற நோக்கோடு ஆளுங்கட்சி தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியினரை கூட்டணியில் இருந்து பிரிக்க வேண்டும் என்பது ஆளுங்கட்சியின், "ப்ளான்'.பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் தனிமேடையில் பிரசாரம் செய்தது, கூட்டணிக்கு மைனஸ் என்பதை உணர்ந்திருக்கிறோம். இந்த பிரிவை சரி செய்து, இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கோடு, கூட்டணிக் கட்சிகள் இணைந்து, பொது வேலை நிறுத்தம் மேற்கொள்கிறோம்.சமீபத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை சென்னைக்குள் அனுமதி மறுத்தது தொடர்பாக சட்டசபையில் விவாதம் எழுந்தது. இந்த அனுமதி மறுப்புக்கு ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.சட்டசபையில் இந்த விவாதம் வரும்போது, அ.தி.மு.க., மேல் பழியைப் போட்டு, கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த ஆளுங்கட்சி திட்டமிட்டது. இதைத் தெரிந்து கொண்டதால், அந்த விவாதம் நடக்கும்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விவாதத்தில் பங்கேற்காமல், சாதுர்யமாக வெளியேறினர். இதனால், ஆளுங்கட்சியின், "ப்ளான்' தோல்வியில் முடிந்தது.தொண்டர் சந்திப்பு மூலம் கட்சிக்கும், இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் , "அம்மா' வின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். -  நமது சிறப்பு நிருபர்  -
545
2010-04-25T01:06:00+05:30
இந்தியா
இந்தியன் பினாமி லீக்... : ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் ஊழல்:
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக, வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, கடைத் தெரு என, எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல்., பற்றித் தான் பேச்சு. சென்னை அணிக்கு கோப்பை கிடைக்குமா, மும்பை தான் இந்த முறை வெற்றி பெறும், சச்சின் இந்த வயதிலும் அசத்தலாக விளையாடுகிறாரே, இதுபோன்ற விஷயங்கள் தான், தற்போது அதிகம் பேசப்படுகின்றன.இந்த அளவுக்கு இந்திய மக்களை சொக்கு பொடி போட்டு, அடிமையாக்கி வைத்திருக்கும் கிரிக்கெட் போட்டியில் சமீபகாலமாக, சூதாட்டம், வரி ஏய்ப்பு, பினாமி பெயர்களில் மோசடி, கருப்பு பண புழக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கூறப்பட்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, ஐ.பி.எல்., சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஊழல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இந்த ஊழலுக்கான காரணம் என்ன? இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் யார் என்பது போன்ற கேள்விகள், பொதுமக்களிடையே எழுந்துள்ளது. பி.சி.சி.ஐ., : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான், பி.சி.சி.ஐ., என, அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள செல்வாக்கு மிக்க விளையாட்டு அமைப்புகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முக்கிய இடம் உண்டு. பல ஆயிரம் கோடி ரூபாய் பணம், இந்த அமைப்பிடம் உள்ளது. உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வாரியங்களும், ஏன், சர்வதேச கிரிக்கெட் வாரியம் கூட, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டளைப்படி தான் நடக்கும். அந்த அளவுக்கு பணம் இங்கு குவிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பது தான். இந்த அமைப்பின் தலைவராக சஷாங் மனோகர், செயலராக சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இதன் தலைவராக இருந்த மத்திய அமைச் சர் சரத் பவார், விரைவில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். ஐ.பி.எல்., என்ற மாயாஜாலம் : ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே ஆர்வம் குறையத் துவங்கியது. இதன்காரணமாக, போட்டிகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கியுள்ளது. இதனால், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கஜானா குறையத் துவங்கியது. கஜானா எப்போதும் அமுத சுரபி போல் நிறைந்து வழிய வேண்டும் என்ற காரணத்துக்காக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்காக நிர்வாக குழு உறுப்பினர்கள் போன்றோர் இருந்தாலும், அவர்கள் பெயருக்கு தான் பதவி வகித்தனர். மற்றபடி, ஐ.பி.எல்.,லின் ஏகபோக சக்கரவர்த்தியாக விளங்கினார், லலித் மோடி. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவரான இவர், ஐ.பி.எல்., தலைவராக நியமிக்கப்பட்டார். லலித் மோடி :வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் லலித் மோடி. வியாபார திறமை மிக்கவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கஜானாவை நிரப்பியதில் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு. "டுவென்டி-20'போட்டிக்கான ஐடியா இவரது மூளையில் உதித்தது தான். போட்டியை மூன்று மணி நேரம் கொண்டதாக மாற்றி, மேலும் சுவாரசியமாக்கி, கோடிகளை குவித்தவர். இவரது அசுர வளர்ச்சி, மத்திய அரசுக்கே சவால் விடும் வகையில் இருந்தது. கடந்தாண்டு பொதுத் தேர்தல் நடந்ததால், இங்கு ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த முடியாது என மத்திய அரசு கை விரித்து விட்டது. ஆனால், இதற்கு சற்றும் அசராத மோடி, தென் ஆப்பிரிக்காவில் வெற்றிகரமாக போட்டிகளை நடத்தி முடித்து, மத்திய அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். சசி தரூர் பிரச்னை : லலித் மோடியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் வரவு. ஐ.பி.எல்., அமைப்பில் ஏற்கனவே எட்டு அணிகள் இருந்தன. இந்தாண்டு புதிதாக கொச்சி, புனே ஆகிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டன. இதில் கொச்சி அணிக்கு ஆதரவாக களம் இறங்கினார் சசி தரூர். இதற்காக, தனது வெளியுறவு துறை இணை அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தனது தோழியும், பிரபல மாடல் அழகியுமான சுனந்தா புஷ்கருக்கு கொச்சி அணியின் 70  கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இலவசமாக வாங் கிக் கொடுத்தார்.மிகவும் ரகசியமாக நடந்த இந்த விவரங் களை மீடியாக்கு கசியவிட்டார் லலித் மோடி. இங்கு தான் இவருக்கு பிரச்னை துவங்கியது. சசி தரூர்-சுனந்தா விவகாரம் பார்லிமென்டில் புயலை கிளப்ப, வேறு வழியின்றி தனது அமைச்சர் பதவியை சசி தரூர் ராஜினாமா செய்தார். இதில் கடுப்பான சசி தரூர், ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து விஷயங்களையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். களத்தில் இறங்கிய அரசு  :லலித் மோடி விவகாரத்தில் ஏற்கனவே அதிக பட்ச அதிருப்தியில் இருந்த மத்திய அரசு, இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டது. வருமானவரித் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். மும்பையில் உள்ள லலித் மோடியின் அலுவலகம் சோதனையிடப்பட் டது. அங்கு நடந்த சோதனையில், ஐ.பி.எல்., அமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. எது எதில் ஊழல்?* ஐ.பி.எல்., போட்டிகளை "டிவி'யில் ஒளிபரப்புவதற்கான உரிமை, வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு 8,200 கோடி ரூபாய்க்கு வழங்கப் பட்டது. இதை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து, மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் லலித் மோடிக்கு பங்கு உள்ளது என்பது முக்கிய குற்றச் சாட்டு.* ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகளை, புக்கிகளின் விருப்பத் துக்கு ஏற்றவாறு, முன் கூட்டியே தீர்மானிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்ததாகவும், இதில் 5,000 கோடி அளவுக்கு சூதாட் டம் நடந்துள்ளது என்பதும் அடுத்த குற்றச்சாட்டு.* ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட ஐ.பி.எல்,, அணிகளில், பினாமி பெயர்களில் லலித் மோடி பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு.* ஐ.பி.எல்., அணிகளுக்கு கோடிக் கணக்கில் வருவாய் கிடைத்தும், சில அணிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொய் கணக்கு காட்டியுள்ளன.* மொரிஷியஸ், துபாய் போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு பணம், ஐ.பி.எல்., அணிகளுக் காக சட்ட விரோதமாக இந்தியா கொண்டு வரப் பட்டுள்ளது. இதற்காக, முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறப்படவில்லை.*வெளிநாடுகளில் இருந் தும், சுவிஸ் வங்கிகளில் இருந்தும் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப் பட்டுள்ளதாகவும், இந்த பணம் அனைத்தும் கருப்பு பணம் என்பதும் அடுத்த குற்றச் சாட்டு. இந்த கருப்பு பணத்தை, நல்ல பணமாக்குவதற்காகவே, இவை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சோதனை : வருமான வரித் துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஐ.பி.எல்., அமைப்பில் தோண்ட, தோண்ட ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தினர். கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஐதராபாத் டெக்கான் சார்ஜர் உரிமையாளர்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், ஐ.பி.எல்., போட்டிகளை "டிவி'யில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்த மல்டி ஸ்கிரீன் மீடியா, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகியற்றின் அலுவலகங்களும் சோதனைக்கு தப்பவில்லை. இந்த விவகாரத்தில் லலித் மோடி வசமாக சிக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சரத் பவார் போன்ற பெரும் தலைகள் கூட, தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.  இதனால், லலித் மோடியின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், லலித் மோடி கம்பி எண்ணும் நிலை கூட ஏற்படலாம். அடுத்தது என்ன? இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு உள்ள மோகத்தை பயன்படுத்தி, கோடி, கோடியாக ஊழல் நடந்துள்ளது, தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுகளில் சில மூத்த அரசியல்வாதிகள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு உள்ள தொடர்புகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரலாம். ஐ.பி.எல்., போட்டிகளுக்கான நிதி, பயங்கரவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப் பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கண்துடைப்பா? ஐ.பி.எல்., அமைப் புக்கு எதிராக தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பது தான், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. தேவைப்பட்டால், கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தலாம் என்பதும் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இந்த விவகாரத்தில் சசி தரூரின் பதவி பறிபோய்விட்டது. இன்னும் சில நாட்களில் லலித் மோடியின் பதவியும் காலியாகி விடும். இதற்கு அடுத்தபடியாக சிக்கப் போகும் வி.ஐ.பி., யார் என்பதும், இந்த ஊழலின் பின்னணியில் உள்ள பண முதலைகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அப்படியில்லாமல், வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை, பரபரப்பை ஏற்படுத்துவதற்காக நடக்கும் கண் துடைப்பாக இருந்து விடக் கூடாது. இந்தியன் பிரிமியர் லீக்., இந்தியன் பினாமி லீக்.,காக செயல்படுகிறது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான பதில் தேவை. சூதாட்டம் நடப்பது எப்படி?  "ஐ.பி.எல்., "டுவென்டி 20' போட்டிகளில் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்று ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி  முனகூட்டியே திட்டமிட்டு கூறிவிடுவதாகவும், அதன் படி போட்டிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லலித் மோடி இவ்வாறு போட்டி முடிவுகளை கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கோல் கட்டா அணிக்கும் இடையே நடந்த ஐ.பி.எல்., போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது.இந்த போட்டியின் முடிவை லலித் மோடி முன்கூட்டியே தெரிவித்தார். மேலும், நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும். "சூப்பர் ஒவர்' வரை வந்து, ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் என லலித் மோடி தனது நண்பர்களிடம் தெரிவித்தார். அவரது கணிப்பு சரியானது. இவ்வாறு போட்டி முடிவுகளை லலித் மோடி முன்கூட்டியே தெரிவிப்பதால், ஐ.பி.எல்.. போட்டிகளில் சூதாட்டம் நடக்கிறது என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.வருமான வரித்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:லலித் மோடியின் வங்கிக் கணக் குகள், போன் "டீலிங்', மெயில்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டன. இங்கிலாந்து, மொரீசியஸ், அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளில் பதிவு செய்யப் பட்ட, "மொபைல்' எண்களைப் பயன்படுத்தியுள்ளார்.தனது உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம், கிரிக்கெட் சூதாட்டத்தில் மோடி ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நெருக்கடியில் சரத் பவார் கட்சி : ஐ.பி.எல்., அணிகள் தொடர்பான முறைகேடுகளில் தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மருமகன் சதானந்த், மற்றொரு தலைவர் பிரபுல் படேல் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சி அணியின் ஏலம் தொடர்பான விவரத்தை,  மத்திய அமைச்சர் பிரபுல் படேல், ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியின் அலுவலகத்தில் இருந்து கேட்டுப் பெற்றுள்ளார். ஐ.பி.எல்., அலுவலகத்தில் பணிபுரியும் பிரபுல் படேலின் மகள் பூர்ணா மூலமாக, இந்த விவரங்கள் இ-மெயிலாக பிரபுல் படேல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.பி.எல்., போட்டிகளை "டிவி'யில் ஒளிபரப்பும் மல்டி ஸ்கிரீன் மீடியாவில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் சம்பந்தியும், லோக்சபா எம்.பி., சுப்ரியா சுலேயின் மாமனாருமான பி.ஆர்.சுலேவுக்கு 10 சதவீத பங்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், சரத் பவார் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யார் இந்த லலித் மோடி? லலித் மோடி, கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கிருஷ்ண குமார் மோடி, "மோடி என்டர் பிரைசஸ்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர். சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார், மோடி. பள்ளி படிப்பு ஒத்துவரவில்லை. இதற்கு பின், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள பல்கலையில் சேர்ந்து படித்தார். கடந்த 1999ல் இமாச்சல பிரதேச மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்தார். அப்போது அந்த மாநிலத்தில், கிரிக்கெட் ஸ்டேடியம் எதுவும் இல்லை. ஸ்டேடியம் கட்டித் தருவதாக கூறித் தான், சங்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் குழப்பம் விளைவித்ததால், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்தார். இங்கு தனது பெயரை லலித் குமார் என, கூறிக் கொண்டார். அடுத்தபடியாக, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் மோடிக்கு நெருக்கம் ஏற்பட்டது. சரத் பவார் போன்றோருடன் தொடர்பு வைத்துக் கொண்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் பல மடங்கு அதிகரித்தது.கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் துவங்கப்பட்டது. அதன் தலைவர் பதவியும் மோடிக்கே கிடைத்தது. அப்போது தான்"டுவென்டி-20'போட்டிகளை இவர் அறிமுகப்படுத்தினார். கிடு,கிடு, வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த மோடியின் வாழ்க்கையை, சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., கொச்சி, புனே அணிகளுக்கான ஏலம் புரட்டி போட்டு விட்டது. இந்த விவகாரத்தில் சசி தரூருடன் மோதியதால்,மோடியின் "மஸ்தான்'வேலைகள் ஒன்றொன்றாக வெளியில் வரத் துவங்கி விட்டன. மோடியின் ஆடம்பரம் : ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, ராஜஸ்தானில் மன்னர் களால் கட்டப்பட்ட சிறிய அளவிலான இரண்டு அரண்மனைகளை வாங்கி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானை மையமாக கொண்டு ஆட்சி நடத்திய மன்னர்கள், விடுமுறைக் காலங்களில் வசிப்பதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான அரண்மனைகளை கட்டியிருந்தனர். இவை பழம் பெருமை மிக்கவை. இவற்றில் இரண்டு அரண்மனைகளை, 21 லட்ச ரூபாய்க்கு லலித் மோடி வாங்கியுள்ளார். இந்த அரண்மனைகளின் உண்மையான மதிப்பு 1.5 கோடி ரூபாய். இதுகுறித்து மாநில அதிகாரிகள் தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர். மோடிக்கு சொந்தமாக விமானமும் உள்ளது. மத்திய தரைக் கடல் பகுதியில் "ஹாலிடே ஹோம்'ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளார். -நமது சிறப்பு நிருபர்-
546
2010-04-25T01:07:00+05:30
இந்தியா
இது யானைகளின் கதை : தொடர்வதும், முடிப்பதும் உங்கள் கையில்...
கம்பீரத்தின் அடையாளம்; காட்டுக்குள் வலம் வரும் பிரமாண்டம்; குழந்தைகளுக்கு குதூகலம்; பெரியவர்க்கு கடவுளின் மறுவுருவம்; காட்டை விளைவிக்கும் விவசாயி; உலகில் வாழும் வன உயிரினங்களில் உருவில் பெரிய மிருகம்; இத்தனை பெருமைகள் அனைத்தும் கொண்ட வன உயிரினம், வேறெது...நம்ம யானையார்தான். யானை மிதித்து ஒருவர் சாவு; மின்சாரம் தாக்கி ஆண் யானை சாவு...என்று தமிழகத்தில் சமீபத்திய செய்திகளில் யானைகள் இடம் பெறாத நாட்கள் குறைவு. இந்தியாவிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடப்பது, கோவை வட்டாரத்தில்தான் என்கிறது, ஒர் ஆராய்ச்சி.கடந்த ஆண்டில், இந்தியாவில் மனித-வன உயிரின மோதலில் 400 பேர் இறந்திருப்பதாக யானைகள் பாதுகாப்புத்திட்ட இயக்குனர் கூறியதை சுட்டிக் காட்டும் அத்தகவல், இவர்களில் 56 பேர் இறந்திருப்பது, கோவை மண்டல வனப்பகுதியில் மட்டும் என்று அதிர்ச்சியையும் கொட்டியுள்ளது.நடப்பாண்டில் இதே வனப்பகுதியில், யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 என்கிறார் கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன். அடிக்கடி வனத்துறைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. விவசாயிகள் ஒரு புறம் கண்ணீர் விடுகிறார்கள்; மறுபுறம் வன உயிரின ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.என்ன நடக்கிறது காட்டுக்குள்ளே...காட்டு யானைகள் ஏன் நாட்டுக்குள்ளே வருகின்றன...காடுகள் வளர்ப்பில் காட்டு யானைகளின் பங்களிப்பு என்ன என பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடை விரிவானது. இந்த விடையை அறியும் முன், யானைகளைப் பற்றிய மக்களின் பார்வையும், அறிவும் தெளிவாக வேண்டும்.முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் கலைவாணன்(32), கடந்த 9 ஆண்டுகளாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள் பற்றி இவர் பெற்றிருக்கும் அறிவும், அனுபவமும் பெரியது. யானைகள் குறித்து விடிய விடியப் பேசினாலும் முடியாமல் விஷயம் வைத்திருப்பவர். அவர் தரும் தகவல்களிலிருந்து இந்த தொகுப்பு:உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா, பாரஸ்ட் என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் "மொராத்ரியம்' என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் "மாமூத்' என்ற உயிரினமாக மாறி, இறுதியாக இப்போதுள்ள யானை வடிவம் பெற்றுள்ளன. யானைகள் குடும்பமாகச் சேர்ந்து வாழும் தன்மையுடையவை. இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து (ஹெர்டு) ஒரே பகுதியில் வசிக்கும். சில நேரங்களில் பல குடும்பங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து, குதூகலப்படுவதுண்டு. அந்த கூட்டத்தை "கிளான்' என்று சொல்வார்கள். யானைகளின் கூட்டத்தை எப்போதுமே வயதான பெண் யானைதான் (மேட்ரியாக்) வழி நடத்தும். பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண் யானைகள், தனியாகச் சென்று விடும். இந்த வயதுடைய ஆண் யானைகள், தனிக்கூட்டமாகவும் சேர்ந்து கொள்ளும். ஒவ்வோர் யானைக்கூட்டத்துக்கும் தனித்தனி வாழ்விடம் (ஹோம் ரேஞ்ச்) உள்ளது.யானைகள் தங்களின் வழித்தடத்தையோ, வசிப்பிடத்தையோ மாற்றிக் கொள்வதே இல்லை. தொடுதல், பார்த்தல், ஒலி உணர்வுகளைக் கொண்டு யானைகள், தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. சில நேரங்களில் 15 கி.மீ., தூர இடைவெளியில் கூட, இவை ஒலிப்பரிமாற்றம் செய்து கொள்வதுண்டு. உணவு, தண்ணீர், சீதோஷ்ண நிலை, நிழல், வளர்ப்பு, பிரச்னைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக, 50 கிலோ மீட்டரிலிருந்து 10 ஆயிரம் கி.மீ., வரை இடம் பெயர்ந்து செல்கின்றன. தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப் பெயர்ச்சி இருக்கும்.சாதாரணமாக ஒரு யானைக் கூட்டம், 650லிருந்து 750 சதுர கிலோ மீட்டருக்குள் தங்கள் வாழ்விடத்தை நிர்ணயித்துக்கொள்ளும். அப்போதுதான், அவற்றுக்குத்தேவையான உணவு கிடைக்கும். யானைகள், தங்களுடைய எடையில் 5 சதவீத அளவுக்கு உணவு உட்கொள்கின்றன.தினமும் 200லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது யானை. யானையின் ஜீரண சக்தி குறைவு. ஒரு நாளுக்கு 14லிருந்து 18 மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும், ஜீரண சக்தி குறைவு என்பதால், ஒரு நாளுக்கு 15லிருந்து 20 முறை சாணமிட்டு வெளியேற்றிவிடும்.போதுமான உணவு கிடைக்காத போது, அது கோபத்துக்கு உள்ளாகிறது. யானை மற்றும் டால்பின் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி (எமோஷனல் சென்டர்) அமைந்துள்ளது. இதனால், கோபம், பாசம், கண்ணீர் என பல விஷயங்களில் யானைகள், மனிதரை ஒத்திருக்கும். 2 ஸ்பெஷல்: தந்தம், தும்பிக்கை இரண்டும் வேறு எந்த விலங்குக்கும் இல்லாத சிறப்பம்சங்கள், தும்பிக்கையின் மூலமாக 80 சதவீதமும், வாய் வழியாக 20 சதவீதமும் யானை சுவாசிக்கும். ஒரே நேரத்தில் 8லிருந்து 10 லிட்டர் வரை தண்ணீரை, இதில் உறிஞ்சி விடும். யானைகளின் தந்தத்தை கொம்பு என்று பலர் நினைக்கின்றனர்; அது தவறு. யானையின் வெட்டுப் பற்கள்தான், உருமாறி, வளர்ந்து தந்தமாக மாறியுள்ளன. தந்தத்தின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி, வாய்க்குள் இருக்கும். யானையின் பாதுகாப்புக்காக இயற்கை தந்த வரம்தான் இந்த தந்தம்.யானைகளுக்கு கேட்புத் திறன் அதிகமிருந்தாலும், பார்வைத்திறன் ரொம்பவே குறைவு. அதிகபட்சமாக 15 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே, யானைகளால் பார்க்க முடியும். அதிலும், நம்மைப் போல வண்ணங்களைப் பார்க்கும் வாய்ப்பில்லை. எல்லாமே கறுப்பு, வெள்ளைதான். காடுகளின் காவலன்: வனங்களை வளர்ப்பதில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றின் சாணத்தால்தான், காடுகளுக்குள் ஏராளமான தாவரங்கள், மறு விதைப்பு செய்யப்படுகின்றன. காடுகளில் புதர்கள், மரங்களை உடைத்து யானைகள் பாதை ஏற்படுத்துகின்றன. இல்லாவிட்டால், பிற விலங்குகள் இடம் பெயர முடியாது.உயரமான மரங்களில் உள்ள இலை, தழைகளை உயரம் குறைவான விலங்குகளால் சாப்பிட இயலாது. யானைகள் அவற்றை உடைத்துச் சாப்பிட்டு, மிச்சம் விட்டுச் செல்வதை உண்டு ஏராளமான விலங்குகள் உயிர் வாழ்கின்றன. வறட்சி நாட்களில், ஈரப்பதமுள்ள இடங்களைத் தோண்டி, தண்ணீர் எடுப்பதும் யானைகள்தான்.அதேபோல, பாறைகளில் உள்ள தாதுப் பொருட்களை (சால்ட் லிக்ஸ்) கண்டறியும் திறனும் யானைகளுக்கு மட்டுமே உள்ளது. இவற்றை யானைகள் கண்டறிந்து, சாப்பிட்ட பின்பே, மற்ற வன விலங்குகள் அவற்றைச் சாப்பிடும். யானைக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது.யானைகளின் தோல், மிகவும் கடினமானவை. அதன் எடை மட்டும், ஒரு டன் இருக்கும். கால்கள், தூண் வடிவில் எந்த மாதிரியான இடத்திலும் நடக்கும் தன்மை கொண்டிருக்கும். யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஒருவரின் குரலையோ, உருவத்தையோ மறக்காது.யானைகளுக்கும் மனிதனைப்போல் ஆயுட்காலம் அதிகம். பெண் யானை, 13லிருந்து 15 வயதுக்குள் பருவத்துக்கு வருவதுண்டு. யானையின் கர்ப்ப காலம், 18லிருந்து 22 மாதங்கள். 55 வயது வரை, யானைகள் குட்டி போடும். ஒரு பெண் யானை, தன் வாழ் நாளில் 8லிருந்து 12 குட்டிகளை ஈன்றெடுக்கும். ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒரு முறை, "மஸ்து' உருவாகும். அது 3 மாதங்கள் வரை நீடிக்கும். அந்தக் கால கட்டத்தில், ஒரு விதமான "ஹார்மோன்' அதிகம் சுரக்கும்; அப்போது, விதைப்பை 16 மடங்கு பெரிதாகும். ஆண் யானைகள், "மஸ்து'க்கு வராத நாட்களிலும் உறவு கொள்வதுண்டு. ஒவ்வொரு யானைக்கும் குணாதிசயம் வெவ்வேறாக இருக்கும். இதனால்தான், சில யானைகளுக்கு கோபம் அதிகம் வருவதுண்டு. இதை அறியாமல் அவற்றைச் சீண்டும் மாவூத்துகள் (யானைப்பாகன்), பரிதாபமாக செத்துப்போகின்றனர். கேரளாவில் 1974லிருந்து இதுவரை 320 மாவூத்துகள் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்-பெண் விகிதம்: நீலகிரி உயிர்க்கோள மண்டலம் எனப்படும் தமிழக, கேரள, கர்நாடக வனப்பகுதிகளில் ஆண், பெண் யானைகளின் விகிதாச்சாரம், 1:20 என்ற விகிதத்தில் இருக்கின்றன. இது, ஆண் யானைகளின் இறப்பைப் பொறுத்து, அவ்வப்போது மாறுவதுண்டு. அதென்ன அங்குச மந்திரம்: அவ்வளவு பெரிய யானையை, தம்மாத்துண்டு அங்குசத்தில் பாகன்கள் ஆட்டுவிப்பதில் பலருக்கு ஆச்சரியம். இதற்குக்காரணம், யானையின் உடலில் 110 வர்ம இடங்கள் இருப்பதுதான். அந்த இடங்களுக்கு அருகில், எந்த கம்பைக்கொண்டு போனாலும் அவை அடி பணியும்; அடிப்பது அவசியமற்றது. அச்சுறுத்தல்கள்: காடுகளின் காவலனாக இருக்கும் யானைகளுக்கு பல விதமான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் (காரிடார்) துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன.இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது, அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியாகாது. சிறு கூட்டத்துக்குள் இனப் பெருக்கம் நடப்பதால், அந்த குடும்பமே விரைவில் அழிந்து போகும். வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணம். மிரட்டும் மாடுகள்: மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்புவதால், யானைகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த வன உயிரினங்களுக்கும் ஆபத்துள்ளது. இந்த மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி, ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்கள், அவை மேயும் புற்கள், தாவரங்களால் யானைகளுக்குப் பரவி, அவை உயிரிழக்கக்கூடும். மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்த மாட்டின் உரிமையாளர், ஏதாவது சிகிச்சை எடுக்க வாய்ப்புண்டு. ஆனால், காடுகளுக்குள் இருக்கும் பல நூறு வன உயிரினங்களுக்கு இந்த பாதிப்பு பரவினால், அவை ஒட்டு மொத்தமாக அழிந்து, அதனால் காடுகளும் அழிந்து விடும் ஆபத்து காத்திருக்கிறது.இவற்றைத் தவிர்த்து, மனிதர்களால் ஏற்படும் காட்டுத்தீ, விறகு சேகரிப்பதாக யானைகளின் உணவுத்தாவரங்களை அழிப்பது, காடுகளில் விளையும் பொருட்களை சேகரித்து விற்பது, பிளாஸ்டிக் பைகளை காடுகளில் விடுவது என காடுகளுக்கும், காட்டு விலங்குகளுக்குமான அச்சுறுத்தல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.காட்டுத்தீ, காடுகளுக்குள் மாடு மேய்ப்பது, விறகு சேகரிப்பு, காடுகளுக்குள் அமைந்துள்ள கிராமங்கள், களைச்செடிகள் என பலவிதமான அச்சுறுத்தல்கள், காட்டு யானைகளுக்கு உள்ளன. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, விவசாயப் பகுதிகளில் விருப்ப உணவுகள் இருப்பதைப் பார்த்து யானைகள் படையெடுக்கின்றன. வேட்டையே முதலிடம்: இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவீதம் வேட்டையாடப்பட்டவை. விஷ உணவால் 13 சதவீதமும், நோயினால் 10 சதவீதமும், மின்சாரம் தாக்கி 8 சதவீதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவீதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் உயிரிழக்கின்றன.யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும்பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும். மழைக்காடுகள் அழிவதால் மழை குறையும். புல்வெளிகள், சோலைக்காடுகள் அழிவதால், இயற்கை நீரோடைகள் வற்றிப் போகும்; ஆறுகள் மடியும்; இறுதியாக, ஒட்டு மொத்த மனித குலமே மரணத்தை சந்திக்கும். இப்போது சொல்லுங்கள், யானைகள் நமக்குத் தேவையா, இல்லையா? எடை குறைவு;  ஆயுள் அதிகம்! எடை குறைவாக இருப்பவர்களுக்கு நோயும் வராது; ஆயுட்காலமும் அதிகம் என்பது எல்லா மனிதர்களுக்கும் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை. யானைகள் விஷயத்திலும் இதுதான் நடைமுறை. உருவில் பெரிய ஆப்பிரிக்க யானைகளை விட, சிறிதாக இருக்கும் ஆசிய யானைகளுக்கு ஆயுள் அதிகம்.ஓர் ஆப்பிரிக்க ஆண் யானையின் எடை, அதிகபட்சமாக ஆறரை டன் வரை இருக்கும். ஆசிய ஆண் யானையின் எடை, அதிகபட்சமே நாலரை டன் மட்டுமே இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானையின் ஆயுட்காலம் 40லிருந்து 50 ஆண்டுகள் மட்டுமே. ஆசிய யானைகளின் ஆயுட்காலம் 60லிருந்து 70 ஆண்டுகள் வரை. ஆப்பிரிக்க யானைகள், 10லிருந்து 11 அடி வரை வளரும். ஆசிய யானையின் உயரம், 9 அடிதான்.இப்போதே நினைவு படுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாமிசப் பட்சிகளான புலி, சிறுத்தை போன்றவற்றின் அதிகபட்ச ஆயுட்காலம் 20 ஆண்டுகள்தான். ஆனால், தாவர உண்ணிகளான யானை போன்றவற்றின் ஆயுட்காலம் இன்னும் அதிகம். மனிதர்களிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கே ஆயுள் அதிகம் என்பதே நிஜம். மறுபடி வருமா "மாமூத்?' பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், "மாமூத்' என்ற விலங்கினம் இருந்ததாகவும், அதுவே பரிணாம வளர்ச்சியில் தற்போது யானையாக உருமாறியிருப்பதாகவும் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த "மாமூத்' என்ற விலங்கினம், பனிக்கட்டிகள் நிறைந்த குளிர்ப்பிரதேசங்களில்தான் வாழ்ந்துள்ளன.இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்த விலங்கினத்தின் உடல், பனிப்பிரதேசங்களில் புதைந்திருக்க வாய்ப்புண்டு. அவற்றை எடுத்து அதன் அணுக்களில் இருந்து மரபணுவை எடுத்து, "க்ளோனிங்' முறையில் மீண்டும் அதை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன.இந்த முயற்சிகள், வெற்றி பெற்றாலும் தற்போதுள்ள வெப்பமான பூமியில் அவை வாழ்வது கடினம் என்கிறார்கள் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள். அது மட்டுமின்றி, சோதனைக்கு எடுக்கப்படும் "செல்', எந்த விலங்கினத்திலிருந்து எடுக்கப்பட்டதோ, அந்த வயதுள்ள விலங்கினத்தை மட்டுமே "குளோனிங்'கில் உருவாக்க முடியும்.இதனால், மீண்டும் "மாமூத்' உருவாக்கப்பட்டாலும் அது எத்தனை ஆண்டுகள் வாழும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. குளோனிங் முறையில் உருவான கன்றுக்குட்டி, 10 ஆண்டுகளில் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இத்தகைய ஆராய்ச்சிகள் தேவையற்றது என்கின்றனர் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள். அடையாளம் காண்பது எப்படி?ஆண் யானையையும், பெண் யானையையும் தந்தத்தை வைத்து அடையாளம் கண்டு விட முடியும். ஆனால், "மக்னா' யானைக்கு தந்தம் இல்லாததால் அதை அடையாளம் காண்பது சிரமம். தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் பெரிதாக இருக்கும். வாலுக்குக் கீழே சற்று உப்பிய நிலையில் இருக்கும். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். பிரசவம்... பரவசம்!  யானைகளின் பிரசவத்தைப் பார்த்தால், கல் மனதும் கரைந்து விடும். உறவுகளை ஒதுக்கி வாழும் மனிதர்கள் தலை குனிய நேரிடும். ஏனெனில், யானைகள் பிரசவிப்பதே அவற்றின் உறவு யானைகள் தரும் ஆறுதலும், பலத்தினாலும்தான்.பெண் யானைகள் பிரசவிக்கும் போது, மற்ற யானைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும். அதைச் சுற்றிலும் கூட்டமாக நின்று கொண்டு, அதற்கு ஆறுதல் சொல்வது போல, தொட்டுக் கொடுக்கும். ஆனால், பலரும் நினைப்பதைப் போல, குட்டியை வெளியே இழுப்பது போன்றவற்றை யானைகள் செய்வதில்லை.அந்த யானை வலியில் துடிக்கும்போது, அதன் பின் புறத்தைத் தும்பிக்கையால் தொடுவதுண்டு. அதனால், பிரசவிக்கும் யானைக்கு மனோரீதியான தைரியம் ஏற்படும். தொடுதலில் கவனம் திரும்பும். யானைகள் பிறந்த பத்தே நிமிடத்தில் எழுந்து நிற்கும். பால் குடித்தவுடன் அரை மணி நேரத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்து விடும். மிஸ்டர் மக்னா!ஆசிய யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானைகளும் இருக்கின்றன. அவை "மக்னா' என்று அழைக்கப்படுகின்றன. இவை, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், சற்று பெரியதாகவும் இருக்கும். இந்த ஆண் யானைகளுக்கு தந்தம் இல்லாததால், அடையாளம் அறியாமல் பெண் யானைகள் உறவு கொள்ள மறுப்பதுண்டு. இதனால், அவை ஆக்ரோஷமடைந்து, பெண் யானைகளைத் தாக்குவது போன்ற வன்முறையும் நடப்பதுண்டு. இத்தகைய "மக்னா' யானைகளை ஆண்மை இல்லாத யானைகள் என்று நினைக்கின்ற அறியாமை இன்னும் உள்ளது. - நமது சிறப்பு நிருபர் -
547
2010-04-25T01:08:00+05:30
இந்தியா
உரத்த சிந்தனைசுதேசிக் கல்வியே சுயகல்வி-
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (அனுமதி மற்றும் நடைமுறை ஒழுங்குபடுத்தும்) சட்ட வரைவை லோக்சபாவில் அறிமுகப்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வரைவு அனேகமாக இந்த ஆண்டிலேயே, சட்டமாக இயற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களுக்கு, இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கவும், பட்டங்களை அளிக்கவும் இந்த வரைவு அனுமதிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாகவே, பல முனைகளிலிருந்து வந்த எதிர்ப்புகளால், இது கிடப்பில் போடப்பட்டிருந்தது.பின், அரசு செயலர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில பிரிவுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்போது கூட, முக்கிய எதிர்கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும், இந்த வரைவை சட்டமாக்கக் கூடாது என, எதிர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆளுங்கட்சியிலேயே கூட, இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டால், நமது மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கென நிறைய பல்கலைக்கழகங்கள் இருக்கும் எனவும், அதனால் இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு, போட்டி அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் கல்வியின் தரம் உயரும் எனவும், கல்வி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.  உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வளர்ந்த நாடுகளைப் போல, நம் நாட்டிலும் அதிகம் பேர் படிக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.கல்வித்துறை என்பது, நாட்டிலுள்ள மற்ற பல துறைகளைப் போன்றதல்ல. அது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் நிர்ணயித்து, நாட்டின் முன்னேற்றத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் அடிப்படையான துறை. ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்களது குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்க, துணைபுரியும் கல்வியை கொடுத்து அவர்களின் வாழ்வையும், வளத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே, அரசும், அதைச்சார்ந்த சமூகமும், கல்வி குறித்த கொள்கைகளில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்றவுடனே, நமது மனதில் தோன்றும் முக்கியமான நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகள் உள்ளிட்டவைதான். அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரங்களின் தன்மை, அங்குள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி பார்த்தாலே, அவர்களின் உயர்கல்வி பற்றிய நிலைமையை நம்மால் அறிய முடியும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உயர்கல்விக்கு பிரபலமான நாடுகளில், தனிநபர் சுதந்திரம் மேலோங்கி குடும்பங்களும், சமூகங்களும் வெகுவாக சிதைந்துவருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  நாற்பது சதவீதம் குழந்தைகள், திருமணமாகாத உறவுகளின் மூலம் பிறந்துள்ளன.உலகின் பல பெரிய  தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அந்த நாடுகளில், அதிக கல்வி கற்றவர்கள் உயர் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் தவறான வழிமுறைகள் மூலம் தங்களது சுயலாபத்துக்காக அரசையும், மக்களையும் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. அதனால், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கல்வி மற்றும் போதனை முறைகள் கூட முழுமையானதாக இல்லையென, அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். "அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, கடந்த நாற்பது வருடங்களாகத் தாங்கள் போதித்து வந்த தவறான கோட்பாடுகளே காரணம்' என, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற, நிபுணர்கள் தற் போது வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றனர்.மேற்கு நாடுகளின் வரலாற்றை பார்த்தோமானால், அவர் களது சமூக மற்றும் பொரு ளாதாரம் குறித்த பல கோட்பாடுகளும், அவர்களது நாடுகளிலேயே தொடர்ந்து தோற்றுப்போய் வருவது தெரியவரும்.தற்போதைய நெருக்கடியால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம், அவர்கள் இப்போது வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளனர்.அதே சமயம் இந்தியா, பலவிதமான சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு இடையிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதனால், உலகிலேயே அதிகமான வேகத்துடன் வளரக்கூடிய இரண்டாவது நாடாக உருவாகியுள்ளது.  பலவிதமான குறைபாடுகள் இருந்தபோதும், இந்தியாவின் பொருளாதார, குடும்பம் மற்றும் சமூக முறைகளை உலகின் பிற நாடுகள் முன்மாதிரியாக பார்க்கின்றன.அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள், உலகின் எந்த நாட்டோடும் போட்டிபோட்டு வெற்றி பெருமளவு திறமையுள்ளவர்களை உருவாக்கி வருகின்றன.  தேவையான வசதிகளை அரசால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதெனில், அதை நம் நாட்டிலுள்ள தனியார் துறையிடமே கொடுத்து அவற்றை சரியான முறையில் கண்காணிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை பொருத்தவரையில், அவர்கள் இங்கு லாப நோக்கோடுதான் வருவர். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின், அமெரிக்காவில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான நிதி உதவிகளை பல மாநிலங்கள் வெகுவாகக் குறைத்து வருகின்றன.சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தப் பின்னணியில் அவர்களது சில கல்வி நிறுவனங்கள் தங்களைத் தொழிலில் தக்கவைத்துக் கொள்ள, வேறு நாடுகளை நோக்க ஆரம்பித்துள்ளன.அதிலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, வேகமாக வளரும் நாட்டில் வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த சமயத்தில் அவர்கள் இங்கு வர முயற்சிப்பது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே .கல்வித் துறையில் நமது நாடு ஆரம்ப காலத்தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு நடத்திய கணக்கெடுப்புகள் உலகிலேயே அதிக அளவு கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது எனத் தெரிவிக்கிறது. அதற்குப் பின்னர்தான் கல்வித்துறையின் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கல்வியானது கற்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும், நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும். தற்போதைய பாடத்திட்டங்களை பெரும்பாலும், மேல்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கோட்பாடுகளை சார்ந்தவையாகவே உள்ளன. இதைக் களைய பாடத் திட்டங்களிலும், செயல்பாடு முறைகளிலும், உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேவையான முதலீடுகளை செய்வதற்கு நம் நாட்டில் தனியார் துறை தயாராக உள்ளது. எனவே, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது? - பேராசிரியர் ப.கனகசபாபதி - இயக்குனர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்.
550
2010-04-25T01:10:00+05:30
தமிழகம்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி : பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., கோரிக்கை
தமிழக ரயில்வே திட்டங்கள் எல்லாம், நிதி வசதி இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. என வே, புதிய ரயில் வழித்தடங்கள், அகலப்பாதை மாற்றம், இரட்டைப்பாதை ஆக்குதல் மற்றும் மின்மயமாதல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீட்டை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டுமென, பார்லிமென்டில் தி.மு.க.,வும் அ.தி. மு.க.,வும் குரல் கொடுத்துள்ளன. லோக்சபாவில் மத்திய ரயில்வே பட்ஜெட்டின் மானியக் கோரிக்கை மீது கலந்து கொண்டு தி.மு.க., சார்பில் இளங்கோவன் பேசியதாவது:நடப்பு 2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் வருடாந்திர ஒதுக்கீடாக 41 ஆயிரத்து 426 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு போதுமான நதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.தமிழகத்தின் முக்கிய ரயில் திட்டங்கள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. தமிழகத்தில், 1,152 கி.மீ., நீளத்திற்கு மீட்டர் கேஜ் பாதைகள்  உள்ளன. 18ம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட திட்டங்கள் கூட இன்னும் உள்ளன.இவற்றிற்கு 3,000 கோடி ரூபாய் வரை தேவை. ஆனால், 300 கோடி ரூபாய் வரை கூட ஒதுக்கப்படவில்லை. 20ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற இன்னும் 20 ஆண்டுகள் கூட ஆகலாம் போல இருக்கிறது.சென்னை - கன்னியாகுமரி பாதை இரட்டைப்பாதையாக்கப்படாமல் உள்ளது. செங்கல்பட்டு - விழுப்புரம் பாதை ஆமை வேகத்தில் நடக்கிறது. விழுப்புரம் - திண்டுக்கல் பாதை பேப்பர் அளவிலேயே உள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு மேலும் 1,500 கோடி ரூபாயாகிவிட்டது.அதேபோல முக்கிய புதிய ரயில் பாதை திட்டங்களான  திண்டுக்கல் - குமுளி, அரியலூர் - தஞ்சாவூர், திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை, மொரப்பூர் - தர்மபுரி திட்டங்களுக்கு மாநில அரசின் நிதி பங்கு கேட்கப்படுகிறது.இத்திட்டங்களை மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு மகாபலிபுரம் வழியாக அமைக்கப்படும் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். மதுரை - தூத்துக்குடி, மதுரை - கன்னியாகுமரி ஆகிய மார்க்கங்களில் மின்சார பாதை அமைப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைந்து திட்டத்தை முடிக்க வேண்டும்.வட மாநிலங்களின் நலனை கருத்திற்கொண்டு சரக்கு ரயில் பாதை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.அதேசமயம் சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் சென்னை புறக்கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இளங்கோவன் பேசினார். இதே மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுத்து அ.தி.மு.க., எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் பேசியதாவது:தமிழக ரயில்வே திட்டங்கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். குறிப்பாக விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை பாதை அமைக்கும் திட்டம் தூங்கிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தின் ஜீவாதார திட்டமான இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்ற வேண்டும். சேலம் - கரூர் இடையிலான அகலப்பாதை மாற்றும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதை மாற்றி இத்திட்டத்திற்குரிய நிதியை உடனே வழங்க வேண்டும்.தமிழகத்தில் மின்சார ரயில் பாதை என எடுத்துக் கொண்டால், மதுரை வரை மட்டுமே இப்போது நடக்க உள்ளது. இதை மேலும் விரிவாக்கி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி வரைக்கும் நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.மதுரையிலிருந்து கோ வைக்கு பழநி வழியே உள்ள பாதை அகலப்பாதை அமைக்கும் திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மகாபலிபுரம் வழியாக சென்னை - புதுச்சேரி கடலோர ரயில் திட்டம் அனுமதி வழங்கப்பட்டும், நிறைவேற்றப்படாமல் உள்ளது.இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்ற வேண்டும். சென்னையில் மேம்பால ரயில் திட்டம் வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்படவுள்ளதால் அதற்கு வேண்டிய நிதியை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும்.மேலும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில் உள்ள தாம்பரம் சானடோரியம் என்ற பெயரை மாற்றி அதற்கு சிட்லபாக்கம் ரயில் நிலையம் என்று பெயரிட வேண்டும்.இவ்வாறு ராஜேந்திரன் பேசினார். - நமது டில்லி நிருபர் -.
553
2010-04-25T13:29:00+05:30
இந்தியா
மாயாவதியின் சட்ட விரோத சம்பாத்தியம்: சுப்ரீம் கோர்ட்டில் நிரூபிக்க சி.பி.ஐ., தயார்
புதுடில்லி: 'உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி சட்ட விரோதமாக, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளது குறித்த ஆதாரங்கள் தயாராக உள்ளன. எந்தநேரம் வேண்டு மானாலும் அதை கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயார்' என்று, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., கூறியுள்ளது.சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி மீதான தாஜ்மகால் மற்றும் பணமாலை வழக்குகள் சம்பந்தமான ஆதாரங்கள் பற்றிய விளக்கம் அளித்திருந்தது. கடந்த மார்ச் 15ம் தேதி மாயாவதிக்கு அணிவிக் கப்பட்ட பணமாலை, 1,000 ரூபாய் நோட்டுகளால் ஆனது. அதன் மதிப்பு 21 லட்ச ரூபாய் என்று சி.பி.ஐ., தெரிவித்துள் ளது. உத்தர பிரதேச முன்னாள் கவர்னர் டி.வி.ராஜேஸ்வர், 2007ல் மாயாவதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் மீது தாஜ்மகால் நில வழக்கு சம்பந்தமாக வழக்குத் தொடர அனுமதியளிக்க மறுத்து உத்தரவிட்டதையும், வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகளை கைவிட்டதையும் சி.பி.ஐ., தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.'தாஜ்மகாலைச் சுற்றி வணிக வளாகங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பைக் கையகப்படுத்திய வழக்கு, அரசியல் பலன்களுக்காக தன்னைப் பழிவாங்கும் நோக்கில் காங்கிரஸ் அரசால் போடப்பட்டுள்ளது. அதனால் அந்த வழக்கைக் கைவிட வேண் டும்' என்று மாயாவதி மனு செய்திருந் தார். அதை எதிர்த்து அப்போது சி.பி.ஐ., பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இப்போது தாக்கல் செய்துள்ள மனுவில், 'தாஜ்மகால் வழக்குத் தொடர்பான விசாரணை அனைத்தும் முடிந்து விட்டது. அதன் மீதான குற்றப்பத்திரிகையும் தயாராகி விட்டது. எப்போது வேண்டுமானாலும் அதை சமர்ப்பிக்கத் தயார். மாயாவதி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை தன் பெயரில் மட்டுமல்லாமல் தன் உறவினர்கள் பெயரிலும் பதிவு செய்துள்ளார். 'மேலும் ஏழை மக்களிடமிருந்தும், கட்சித் தொண்டர்களிடமிருந்தும் பலவந்தமாகப் பரிசுப் பொருட்கள் வாங்கிக் குவித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருக்கின்றன. 2003ல் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருந்த மாயாவதி, 2007ல் எப்படி 50 கோடி ரூபாய்க்கு அதிபதியானார்?' என்று சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
554
2010-04-25T14:18:00+05:30
தமிழகம்
குரூப்-2 பணியிடங்களில் தலா ஒரு இடம்: காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி பணியிடங்களில் தலா ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி ஆகிய பணியிடங்களில் நேரடி தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இந்தப் பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீதம் ஒதுக்கப்படவில்லை.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது. எனவே, விளம்பரத்தில் வெளியிடப்பட்ட பணியிடங்களில் 3 சதவீத இடங்களை நிரப்பக்கூடாது என டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி பாஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் பாலன் அரிதாஸ், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வக்கீல் கே.சுரேந்திரநாத் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி பாஷா, 'மனு மீதான விசாரணை முடியும் வரை இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி பணியிடங்களில் தலா ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்' என இடைக்கால உத்தரவிட்டார்.
559
2010-04-25T20:37:00+05:30
தமிழகம்
இது உங்கள் இடம்
புறந்தள்ள வேண்டும்!ச.கண்ணன், வத்தலக்குண்டிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சட்டசபை கூட்டம் நடக்கும் போதெல்லாம், எதிர்க்கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கூட்டம் ஆரம்பித்தவுடனோ அல்லது சில மணி நேரங்களிலோ வெளிநடப்பு அல்லது வெளியில் அமர்ந்து தர்ணா என கிளம்பி விடுகின்றனர்.இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தது எதற்காக? தொகுதியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, மக்களுக்கும் நன்மை செய்வதற்காகத் தான். மக்கள் அனைவரும் ஓட்டுப் போட்டு, தங்களுக்காக ஒருவரை தேர்ந்தெடுத்து, சட்டசபைக்கு அனுப்பி வைக்கின்றனர்.ஆளுங்கட்சியிடம் கேள்வி கேட்டு, தொகுதிக்கும், மக்களுக்கும் தேவையானவற்றை போராடி பெறுவதை விட்டு விட்டு, சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக, ஒவ்வொரு நாளும் கூட்டத்தொடர் முடியும் வரை, வெளி நடப்பு செய்தும், வெளியில் வந்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு போஸ் கொடுத்தும் வீணாகப் பேசுகின்றனர்.தொடர்ந்து இதேபோல் செய்யும் எம்.எல்.ஏ.,க்களை மக்கள், அடுத்து வரும் தேர்தலில் புறந்தள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் தண்டனை. தமிழில் பெயர்... :ம.துரைராஜ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் தாய்மொழியாம் தமிழ், உலகில் தோன்றிய மொழிகளிலேயே மிகமிகப் பழமையானது. நம்மை ஆண்டு கொண்டு இருப்பவர்களும், தமிழுக்காக உயிரையும் கொடுக்கத்  துணிந்தவர்கள்.  அம்மொழிக்கு, "செம்மொழி' என்ற அந்தஸ்தும் கிடைக்கப் பெற்று, இன்னும் ஒரு மாதத்தில் அதற்காக, "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என்று ஒரு மாநாடு நிகழவுள்ளது.இச்சூழ்நிலையில், நம் மனதை ஒரு விஷயம் உறுத்திக் கொண்டிருக்கிறது. "தமிழகத்தில் உள்ள எல்லாக் கடைகளுக்கும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்' என வலியுறுத்தும் அரசு, அரசு நடத்தும் மதுக்கடைகளுக்கு மட்டும், "டாஸ்மாக்' என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்து இருப்பது ஏன்? அது என்ன மொழி, அதன் பொருள் தான் என்ன?விற்பது அரசு, விற்பனையாவது தமிழகத்தில்; அதைக் குடிப்பவன் தமிழன். பெயர் மட்டும் ஏன் ஆங்கிலத்தில்? "அரசு மதுக்கடை'  என்று அழகாக, நம் தாய்மொழியில், செந்தமிழில் பெயர் வைத்தால் என்ன? ராகுலுக்கு வயது போதாது! கே.கண்ணன், கோவையிலிருந்து எழுதுகிறார்:  காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த, சோனியாவின் மகன் ராகுல், பம்பரமாய்  சுழன்று, சுறுசுறுப்பாக உழைத்து வருவது உண்மையே! ஆனால், இதுவரை அவர் எந்த தொலைநோக்குத் திட்டத்தையும் சொன்னதாகத் தெரியவில்லை.நதிநீர் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து அவர் சொல்லும் காரணம் வினோதமாக இருக்கிறது."நதிகளை இணைத்தால் எல்லா நதிகளும் மாசுபட்டுவிடும்' என்கிறார். அவர் சொல்வது ஓரளவுக்கு உண்மை தான் என்றாலும், ஒவ்வொரு நதியும், நகர்ப்புறச் சாக்கடை கழிவு நீரால் மாசுபட்டு வருவதைத் தடுக்க முடியாது.திருச்சி நகர சாக்கடைகள் அத்தனையும், புனித காவிரியிலும், மதுரை நகரின் கழிவுகள் அத்தனையும் வைகை நதியிலும் தான் விழுகின்றன. நதிகளை இணைத்தால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், இந்த மாசு குறைந்து போக வாய்ப்பு  உள்ளது. ஒரு தடவை ஊட்டி ஏரியை போய்ப் பார்த்து விட்டு வந்தால், எங்கிருந்து தினமும் தண்ணீர் பாய்கிறது என்பது புரியும்.மூட்டைப் பூச்சிக்கு பயந்து, யாராவது வீட்டைக் கொளுத்துவரா? நதிகளை இணைத்தால், பல நன்மைகள் உண்டு. மழைநீர் வீணாகாது; நதிகள் வற்றாது. விவசாயம் பெருகும்; பொருளாதாரம் வளரும்; புதிய நீர்ப்போக்குவரத்து பாதைகள் உண்டாகும்.தீமைகளை விட இப்படி ஏராளமான நன்மைகள் உண்டு. காங்கிரசின் சரித்திரம் பிரமாண்டமானது. அதைப் புரிந்து கொள்ள கூட, ராகுலுக்கு வயது போதாது. கணக்கெடுப்பு வெற்றி பெற... : பி.சுப்ரமணியன், சேத்துப்பட்டு, சென்னையிலிருந்து எழுதுகிறார்: பத்து வருடங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கு சம்பந்தமாக, அரசு ஊழியர்கள் ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தந்து, தாங்கள் கொண்டு வரும் படிவத்தில் ஒவ்வொரு குடிமகனது விவரங்களையும் பதிவு செய்ய உள்ளனர்.இந்த படிவத்தின் மாதிரியை செய்தித்தாள்களில், முன்னதாகவே வெளியிட்டால், பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதோடு, அரசு ஊழியர்களும் அதிக நேரம் சுணக்கமில்லாமல் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும்.இதுதவிர, இந்த விவரங்கள், தேசிய அடையாள எண் வழங்குவதற்கும் உபயோகிக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அடையாள எண், மிகவும் முக்கியமானதும், அடிப்படையானதுமாகும்.  இதில் தவறு ஏதேனும் நேரும் பட்சத்தில், சரிப்படுத்துவதற்கு எளிய வழிமுறையை நிச்சயித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.எனவே, படிவத்தில் விவரங்கள் பதியும் போது, தெளிவாக, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இருக்க வேண்டும். இந்தப் படிவத்தில் பதியப்பட்ட விவரங்கள் அடங்கிய நகல் ஒன்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டால், விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளவும், தவறுகளை சரிக்கட்டிக் கொள்வதற்கும் உதவியாய் இருக்கும்.  என்ன காரணம்? ஆ.சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டியிலிருந்து எழுதுகிறார்: சத்திஸ்கரில் நக்சலைட்களால் 76 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சமீபத்திய தாக்குதலில் மிகப்பெரியதும், கொடியதுமானது.இதற்காக சிதம்பரத்தை பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தபோது,  அதை காங்., கட்சி எதிர்க்கும் முன், பா.ஜ., வரிந்து கட்டிக் கொண்டு பதவி விலகலை எதிர்த்தது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வர்... "சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்று.காரணம், சிதம்பரம் பதவி விலகினால், சத்திஸ்கரில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., முதல்வரும் பதவி விலக நேருமே என்று, முதல் ஆளாக சிதம்பரத்தை கண்மூடித்தனமாக ஆதரித்தது பா.ஜ.,ஆக, பதவி என்று வரும் போது, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்றெல்லாம் பார்க்காமல், அதிகாரத்திற்காக யாரையும் ஆதரிக்கலாம், யாரையும் எதிர்க்கலாம் என்ற நிலை உருவாகி விட்டது. இது பா.ஜ., என்ற (எதிர்க்)கட்சியின் முன்னேற்றத்தை பாதிக்குமே தவிர உயர்த்தாது.
562
2010-04-25T20:50:00+05:30
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் அறிக்கை: நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட, விலைவாசி குறைய, வேளாண் விளைபொருட்களுக்கும், சிறு தயாரிப்பு பொருட்களுக்கும் லாபகரமான விலை கிடைக்க, தவறான பொருளாதாரக் கொள்கையிலிருந்து நாடு விடுபட வேண்டும். நாமக்கல் காங்., எம்.எல்.ஏ., ஜெயகுமார் பேச்சு: அரசியல் சாக்கடை என்ற காலம் மாறி அரசியலால் மட்டும் தான் நாட்டை வழி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. எனவே பட்டதாரிகள், அரசியலுக்கு வரவேண்டும். அப்போது தான் நேர்மையான, அறிவுபூர்வமான, உண்மையான, தெளிவான அரசியல் மாற்றம் ஏற்படும். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா பேச்சு: ஐ.பி.எல்., சூதாட்டம் பற்றி பார்லிமென்ட் கூட்டுக் குழு முறையான விசாரணை நடத்த வேண்டும் என இடதுசாரிகள் கோருகின்றன. ஆனால் ஐ.பி.எல்., விவகாரத்தில் மத்திய அரசு நிலை தடுமாறி செயல்படுகிறது. இதில் பல மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: அண்ணாதுரை மறைந்தபோது அவரது வங்கி இருப்பு 100 ரூபாய், காமராஜர் மறைந்த போது அவருக்கு வங்கிக் கணக்கே இல்லை. இத்தகைய தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் உலக அளவில் சொத்து குவித்து உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் தலைவர்கள் உருவாகி விட்டனர். கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கண்ணதாசன் பேச்சு: ஒவ்வொரு மாணவர்களும் சுயமாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தற்போதைய தொழில் நுட்பத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றங்கள் வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவரும் சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை படிக்க வேண்டும். அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு: அரசின் நிர்வாக சீர்கேட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளனர். இதை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டு. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசுகள் அகற்றப்பட வேண்டும். இதற்கு மக்கள் தயாராக வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் பேட்டி  : விலைவாசி உயர்வின் கடுமையை எதிர்த்து, 13 கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அமைச் சரவையில் ஆதரித்து விட்டு, எதிர்ப்பது போன்று, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது ஏமாற்று வேலை.
563
2010-04-25T21:05:00+05:30
தமிழகம்
சொல்கிறார்கள்
கற்ற கல்வி  கைகொடுக்கும் : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன்: நாமக்கல் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவின் பொது அறிவு ஆர்வமும், அம்மாவின் தமிழ்ப் பற்றும், என்னை உயர்த்தியது. என் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமானவர் என் பள்ளி ஆசிரியர் குமாரசாமி சார் தான். அவரால் தான் நான் தினமும் நாளிதழ்களை வாசிக்க கற்றுக் கொண்டேன்.பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் என்னை இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்த õங்க. ஆனால் சிவில் சர்வீஸ் படிப்பை என் இலக்காக நினைச்சேன். அப்போதெல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட நேர்முகத் தேர்வை எட்டியிராத காலம். என் முயற்சிக்கு என் அம்மா மட்டும் தான் பக்க பலமாக இருந்தார். விடா முயற்சியோடு படித்தேன், வெற்றி பெற்றேன்.என் அப்பா ஒரு வணிகர். நான் கல்லூரியில் சேரும் காலத்தில் அவர் வியாபாரத்தில் கொஞ்சம் சிரமப்பட்டார். கல்விக் கடனுக்காக வங்கியை அணுகினோம். ஆனால், எனக்கு கடன் தர மறுத்துவிட் டனர். அந்த வலி இன்னமும் உள்ளுக் குள் இருக்கிறது.நான் ஈரோடு கலெக்டராக இருந்த போது, "என் மகனின் எதிர்காலம் உங்க கையில தான் இருக் குன்னு' ஒரு அம்மா என் காலில் விழுந்துட் டாங்க. மறு நாள் காலை அந்த மாணவனுக்கு கல்விக் கடன் பெற்றுக் கொடுத் தேன். அதன் பின் மாவட்டம் முழுக்க 110 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக் கடன்களை வழங்க வைத்தோம்.சிவில் சர்வீஸ் தேர்வில் மானுடவியல் தான் என் விருப்ப பாடம். மனித மனங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படக் கற்றுக் கொடுப்பது. எந்தப் பெரிய செயலையும் சின்ன சின்ன நடவடிக்கைகளாகப் பிரித்துக் கொண்டு வெற்றியைச் சாத்தியமாக்குவது தான் இன்ஜினியரிங் படிப்பின் அடிப் படை. இவை இரண் டும் என் கலெக்டர் வேலைக்கு உறுதுணையாக இருந்தது. உணர்ந்து கற்ற கல்வி தினசரி வாழ்க்கையில் நம் கைபிடித்தே நடக்கும்.
566
2010-04-25T21:56:00+05:30
தமிழகம்
உத்தவ் தாக்கரே ரத்ததானம் செய்து பரபரப்பு
மும்பை:சிவசேனா ஏற்பாடு செய்திருந்த ரத்த தான முகாமில் நேற்று 800க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தோன்றி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, சிவசேனா சார்பில் மாபெரும் ரத்த தான முகாம், மும்பைப் புறநகர் பகுதியான கோரேகானில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பால் தாக்கரே மகனும், கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அவர் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உத்தவ்,"மும்பையை மகாராஷ்டிர மாநிலத்தோடு சேர்க்கக் கோரி மராத்தியர்கள், 50 ஆண்டுகளுக்கு முன் ரத்தம் சிந்தினர். நானோ, நீங்களோ அப்போது இல்லை. ஒன்றிணைந்த மகாராஷ்டிரா என்றும் நிலைக்கத்தான் இந்த ரத்த தான முகாம் நடக்கிறது' என்று குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா, அந்தேரியில் அம்மாநில சமையல் வகைகள் பற்றிய கண்காட்சியை நடத்தியது.
568
2010-04-25T22:03:00+05:30
தமிழகம்
பகுஜன் சமாஜ் கட்சியில் முன்னாள் எம்.பி.,க்கள் நீக்கம்
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியில், குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியிலிருந்து விலக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, நேற்று இரண்டு முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.கடந்த 14ம் தேதி, அம்பேத்கர் பிறந்த நாளுக்குப் பின், குற்றப் பின்னணி உடைய கட்சிப் பிரமுகர்களை களையெடுக்கும் பணியை துவக்கியுள்ளார் முதல்வர் மாயாவதி. கடந்த வாரம், எம்.எல்.ஏ., மோக்தர் அன்சாரி, அவர் சகோதரர் முன்னாள் எம்.பி., அப்சல் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, முன்னாள் எம்.பி.,க்கள் ரிஸ்வான் ஜாகீர் மற்றும் கீர்த்தி வர்த்தன் சிங் ஆகியோரும், முன்னாள் எம்.எல்.ஏ., அஜய் பிரதாப் சிங், கட்சி ஒருங்கிணைப்பாளர் சஜ்ஜூ ராம் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
569
2010-04-25T22:10:00+05:30
தமிழகம்
மாஜி முதல்வர் வீட்டில் குழப்பம்: மகளுக்கும், மகனுக்கும் பனிப்போர்
கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகளுக்கும், மகனுக்கும் பனிப்போர் துவங்கியுள்ளது. இதனால் முரளிதரன், காங்கிரஸ் கட்சியில் சேரும் பகீரத முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் நிலை எழுந்துள்ளது.கேரள மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கருணாகரன் இருந்து வந்தார். அவருக்கு தற்போது வயதாகி விட்டதால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். உடல் நலம் அடிக்கடி குன்றி வருவதாலும் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. தான் உயிரோடு இருக்கும்போதே தனது மகன் முரளிதரனை, எப்படியாவது காங்கிரஸ் கட்சியில் சேர்த்து விட வேண்டும் என்று அவர் படாத பாடுபட்டு வருகிறார். ஆனால், அவரது கோரிக்கையை காங்கிரஸ் கட்சி மேலிடம் கண்டு கொள்ளாமல் காலந்தாழ்த்தி வருகிறது.மாநிலத்தில் அவரை கட்சிக்குள் சேர்க்க மாட்டோம் என முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா போன்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சிக்குள் மீண்டும் கோஷ்டி கானம் பாட அனுமதிக்க மாட்டோம் என்பது அவர்களது வாதம். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல்கள் நடப்பதற்கு முன், எப்படியாவது அக்கட்சியில் சேர்ந்து விட முரளிதரன் டில்லிக்கும், திருவனந்தபுரத்திற்கும் நடையாய் நடந்து வருகிறார். இந்நிலையில், கட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.கட்சியில் கருணாகரன் கோஷ்டி மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி (இவரும் முன்னாள் மாநில முதல்வர்) கோஷ்டி என இரு கோஷ்டிகள் இருந்தன. இதில், சோனியாவை விமர்சித்து விட்டு கருணாகரன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியதும், அவரது கோஷ்டியினரில் சிலர் அவருடன் சென்றனர். ஆனால், பலரும் கட்சியை விட்டு வெளியேறாமல் கட்சிக்குள் இருந்து விட்டனர். அவர் வெளியேறிய பின், கட்சிக்குள் ஒரே கோஷ்டி என்ற நிலை ஏற்பட்டு, கட்சி மீது மாநில மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது. தற்போது நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.உட்கட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கருணாகரனின் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் அவரது மகள் பத்மஜா கலந்து கொண்டார். ஆனால், கருணாகரனோ, அவரது மகன் முரளிதரனோ கலந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அந்தோணி கோஷ்டியுடன் ஒத்துப்போகலாம் என கருத்து தெரிவித்தனர்.அப்போது பேசிய பத்மஜா, "அரசியலில் நிரந்தர எதிரிகளோ, நண்பர்களோ இல்லை. ஆனால், கூட இருந்தே நம் முதுகிலும், நேரிடையாகவும் குத்துவோர் உள்ளனர்' என்றார்.கூட்டத்தில் கட்சித் தேர்தலில் கருணாகரனும், அவரது அரசியல் வாரிசான பத்மஜா வேணுகோபாலும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும், கோழிக்கோட்டில் இருந்த முரளிதரன் ஆவேசமடைந்தார். அவர் கூறுகையில், "திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் கருணாகரன் கலந்து கொள்ளவில்லை. அவர் தற்போது சிலரது பணைய கைதி போல் இருக்கிறார். இருப்பினும் அவர் தற்போதும் காங்கிரசில் மிக உயர்ந்த தலைவராகவே உள்ளார்.இதுபோன்ற செயல்களுக்கு விரைவில் முடிவு வரும். கட்சித் தேர்தல்களுக்கு முன், என்னை கட்சியில் சேர்க்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவேன்' என்று தெரிவித்தார்.இச்சம்பவங்கள் மூலம் முன்னாள் முதல்வரின் வீட்டுக் குழப்பம் வீதிக்கு வந்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -
571
2010-04-25T22:52:00+05:30
இந்தியா
எத்தனை மாவட்டங்கள் என்று தெரியாத பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
புதுடில்லி:அதிர்ச்சி அடையாதீர்கள்... நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன என்று தெரியாத ஒரு மத்திய அமைச்சகம் இருக்கிறது. இவ்வளவுக்கும் அதன் சம்பந்தமான விவரம் தான் அது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயம்.பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பற்றிய கிராம மேம்பாட்டுக்கான நிலைக் குழு, தனது அறிக்கையை பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. பா.ஜ., எம்.பி., சுமித்ரா மகாஜன் தலைமையிலான இக்கமிட்டி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய பஞ்சாயத்து அமைச்சகம், நாடு முழுவதும் எத்தனை மாவட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன என்பதே தெரியாமல் இருக்கிறது. தற்போது நாட்டில் மொத்தம் 608 மாவட்ட பஞ்சாயத்துக்கள் உள்ளன. ஆனால், அமைச்சகம் தந்த தகவலில், 2009 ஏப்ரல் 1 வரை, மொத்தம் 619 மாவட்ட பஞ்சாயத்துக்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலத்தில், மத்திய அமைச்சகம் ஒன்று இன்னும் 2007-08க்கான தகவலைத் தான் தருகிறது. இனியாவது உடனுக்குடன் தகவலைப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
572
2010-04-25T22:56:00+05:30
இந்தியா
போன் ஒட்டுக் கேட்பு: ம.பி., அரசு மீது புகார்
போபால்:என்னுடைய தொலைபேசி பேச்சை மத்திய பிரதேச அரசு ஒட்டுக்கேட்கிறது என, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக் விஜய்சிங் தெரிவித்துள்ளார். திக் விஜய்சிங் மேலும் கூறியதாவது:மத்திய பிரதேச அரசு என் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்பது தெரியும். அதைபற்றி நான் கவலைப்படவில்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் சரத் பவார் ஆகியோரின் தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுகேட்கப்படுவதாக கூறப்படுவதை நான் நம்பவில்லை. மன்மோகன் அரசு இதுபோன்ற நியாயமில்லாத முரண்பட்ட செயல்களை செய்யாது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஊழல் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார். ஐ.பி.எல்., விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஐ.பி.எல்., அமைப்புக்கு தன்னாட்சி உரிமையை கொடுக்கக்கூடாது.இவ்வாறு திக் விஜய்சிங் கூறினார்.
574
2010-04-26T00:26:00+05:30
இந்தியா
மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் அம்பலம்: 3 மாநிலங்களுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
கோல்கட்டா : மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி பயன்படுத்திய லேப்-டாப் கம்ப்யூட்டர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக, மேற்கு வங்கம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு 12 கோடி ரூபாயை, மாவோயிஸ்ட்கள் ஒதுக்கியுள்ள தகவல் இடம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, போலீசாருடன் மத்திய துணை ராணுவப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில், மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சமீபத்தில், மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மெடாலா வனப் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மறைவிடம் ஒன்றில் லேப்-டாப் கம்ப்யூட்டர், மொபைல் போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். லேப்-டாப் மற்றும் ஆவணங்கள் ஆகியவை மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியால் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.இதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களுக்கான மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் பற்றிய தகவலும் இடம் பெற்றுள்ளது. இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கப் பகுதியை விரிவுபடுத்துவதற்காகவும் 12 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, அந்த ஆவணங்கள் வாயிலாக தெரிய வந்தது.மேலும், ஆட்களை கடத்திச் சென்று மிரட்டி பணம் பறிப்பதன் மூலம், மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில் இருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் வசூலித்த தகவலும் தெரிய வந்துள்ளது. ஆயுதங்கள் வாங்குவது, சம்பளம் கொடுப்பது, வெடி மருந்துகள் தயாரிப்பது, எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்காக, மாவோயிஸ்ட்கள் அந்த நிதியைப் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.மேற்கு வங்க எஸ்.பி., மனோஜ் வர்மா இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
575
2010-04-26T00:26:00+05:30
தமிழகம்
கெட்டி மேளம் முழங்க, வேத மந்திரம் ஒலிக்க நடந்தது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை:சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, மதுரைமீனாட்சி கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள், கோவிலுக்கு வந்தனர். காலை 7 மணியளவில் சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை ஊர்வ லம் நடந்தது. பின், சுவாமி சன்னிதி முதல் பிரகாரத்தில் உற்சவர் சன்னிதியில் சுவாமியும், அம்மனும் அலங்கார மாகி, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9.10 மணிக்கு மேற்காடி வீதியாக, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் இருவரும் எழுந்தருளினர். சுவாமி வெண் பட்டும், அம்மன் செந்நிற பட்டும் அணிந்தி ருந் தனர். சுவாமிக்கு வைரக் கிரீடமும், அம்மனுக்கு தங்கக் கவசமும் சாத்தப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தின் போது மட்டுமே தங்கக் கவசம் அணிந்த அம்மனை தரிசிக்க முடியும் என்பது சிறப்பு.செந்தில்பட்டர் சுவாமியாகவும், சிவானந்தபட்டர் அம்மனாகவும் வேடமிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். காலை 9.43 மணிக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. திருமணம் முடியும் வரை மணமக்கள் மேடையை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. சுவாமிக்கு தேவஸ்தானம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சார்பில் பரி வட்ட மும், அம்மனுக்கு பட்டு வஸ்திரமும் சாத்தப்பட்டது.காலை 9.53 மணிக்கு கெட்டி மேளம் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு சுவாமி வைரத் தாலி அணிவிக்க, கோலாகலமாக திருமணம் நடந்தது. பன்னீர் தெளிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. திருமணத்தைத் தொடர்ந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள குண்டோதரன் பூத சிற்பத்திற்கு விருந்து படைக்கப்பட்டது. மாலை 4 மணி வரை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக் கோலத் தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். அபிஷேகத்திற்கு பின், இரவு 8 மணிக்கு சுவாமி யானை வாகனத் திலும், அம்மன் புஷ்ப பல்லக்கிலும் மாசி வீதிகளில் உலா வந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதான மண்டபத் தில் கோவில் சார்பில், அனுமதி சீட்டு வைத்திருந்த 4 ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா:* ஆடி, சித்திரை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.* பாதுகாப்பு என்ற பெயரில் அம்மன் சன்னிதியில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், நெரிசல் ஏற்பட்டது. வெப்பம் தாங்க முடியாமல் குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி மயங்கி விழுந்தனர். * வடக்கு சித்திரை வீதி, மேலாடி வீதியில் பெரிய திரை மூலமும், கோவில் வெப்சைட் மூலமும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இன்று மதுரையில் தேரோட்டம்:மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து, சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் நடக்கிறது. சித்திரைத் திருவிழா ஏப்., 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 23ல் அம்மனுக்கு பட்டா பிஷேகமும், நேற்று திருக்கல்யாணமும் நடந்தது.இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பத்து நாட்களாக தனித்தனி வாகனங்களில் உலா வந்த அம்மனும், சுவாமியும், ஒரே நேரத்தில் பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, இன்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ண சப்பரத்தில் சேர்ந்து உலா வருகின்றனர். கோவிலுக்கு திரும்பிய பிறகு, கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன், 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும். ஆபரணங்கள் கிடையாது:அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த விலை மதிப்பு டைய கற்கள் பதித்த நகைகள்,அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம்.தேரோட்டத்தின் போது மட்டும் அவை அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும் போது அதிர்வு காரணமாக கற்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால், மாலை 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கிரீடம் மற்றும் தங்க நகைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, தேரில் வீற்றிருக்கும் சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்படும்.
576
2010-04-26T00:27:00+05:30
இந்தியா
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றாரா நித்யானந்தா : போலீசார் விசாரணை
பெங்களூரு : அமெரிக்கா உட்பட ஏராளமான வெளிநாடுகளிலிருந்து சாமியார் நித்யானந்தா பணம் பெற்றுள்ளாரா என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப், கம்ப்யூட்டர்கள் மூலம் கர்நாடகா சி.ஐ.டி., போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தியான பீடத்தின் மூலம், அன்னிய செலாவணி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சாமியார் மீது நடவடிக்கை எடுக்க அன்னிய செலாவணி பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பக்தர்களிடமிருந்து, சாமியார் பெருமளவில்  பணம் பெற்றுள்ளார். அவ்வாறு பணம் பெரும் போது, அன்னிய செலாவணி துறைக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், நித்யானந்தா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.லாஸ் ஏஞ்சல்சில் கிடைக்கும் பணத்தை, நன்கொடை என்ற பெயரில், சாமியார் பெற்றுள்ளார். இதற்கான வரியை அவர் செலுத்தவில்லை. இது குறித்து சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட ஏராளமான வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுள்ளாரா என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். சாமியார் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.சாமியார் நித்யானந்தா மீதான போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. சாமியாரிடம் நடத்திய விசாரணை குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ராம்நகர் கோர்ட்டில், சாமியார் நித்யானந்தாவை ஆஜர்படுத்தி, மேலும் சில நாள் விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு, சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
577
2010-04-26T00:28:00+05:30
இந்தியா
வரியிலிருந்து தப்பிக்க ஐடியா சொன்ன வருமானவரித் துறை கமிஷனர் : 1.50 கோடி ரூபாய் ஊழல் :கம்பி எண்ணும் பரிதாபம்
மும்பை : ரொக்கம் 46 லட்ச ரூபாய்; பல்வேறு நாட்டுக் கரன்சியில் ஐந்து லட்ச ரூபாய்; 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள், வங்கிப் பணம் 35 லட்ச ரூபாய்; இவையெல்லாம் அரசியல்வாதியிடம் பறிமுதல் செய்யப்பட்டவை அல்ல; வருமானவரித் துறை கமிஷனரிடம் கைப்பற்றப்பட்டவை.மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் வருமானவரித் துறை கமிஷனர் சுமித்ரா பானர்ஜி. இவர், ஒரு கட்டுமான அதிபரிடம் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு, இப்போது சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சுமித்ரா பானர்ஜி, கட்டுமான அதிபர் செலுத்த வேண்டிய ஒரிஜினல் வரியான 25 கோடி ரூபாயைச் செலுத்தாமல் இருக்க வழி சொல்வதற்காக அவரிடம் பேரம் பேசத் தொடங்கினார். முதலில் பேரம் நான்கு கோடி ரூபாயில் தொடங்கியது; பேரம் படியவில்லை.இறுதியில் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் லஞ்சம் தருவதாக அதிபர் ஒப்புக் கொண்டார். இந்தச் செய்தி சி.பி.ஐ.,க்கு கிடைத்தவுடன் சுமித்ராவையும் அவர் கணவர் சுப்ரோத்தோவையும் கைது செய்துள்ளனர்.தொடர்ந்து அவர்கள் சுமித்ராவின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் கிடைத்த ஆபரணங்கள், ஆவணப் பத்திரங்கள், வெளிநாட்டுக் கரன்சி நோட்டுகளைக் கண்டு மலைத்துப் போயினர். இதுகுறித்து மூத்த சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுமித்ராவின் சொத்துப் பட்டியலைப் பார்த்து நாங்கள் மலைத்துப் போனோம். இன்னும் அவரது வங்கி லாக்கர் திறக்கப்படவில்லை' என்று வியப்புடன் கூறினார். அதிரடி சோதனையில் கிடைத்த பட்டியல் இது:கையிருப்பாக, 46 லட்ச ரூபாய்; பல நாட்டுக் கரன்சிகளாக ஐந்து லட்ச ரூபாய்; மலேசியா, புனே, செம்பூரில் தலா ஒவ்வொரு பிளாட்டுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் வங்கிகளில் தலா இரண்டு கோடி ரூபாய் டிபாசிட்; மும்பை ஐ.டி.பி.ஐ., வங்கியில் 35 லட்ச ரூபாய்; நிரந்தர வைப்பாக 20 லட்ச ரூபாய்; டொயோட்டா மற்றும் ஸ்கோடாவின் அதிநவீன ரக கார்கள், 50 லட்ச ரூபாய் மதிப்புடைய நகைகள்.சுமித்ராவுக்குத் தரகராக வேலைபார்த்த சார்ட்டட் அக்கவுன்டன்ட் அம்லானி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். யார் வரிகட்டாமல் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை சுமித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்து வழியைக் காட்டுவதுதான் அம்லானியின் வேலை. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சுமித்ராவை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
579
2010-04-26T00:29:00+05:30
தமிழகம்
நளினியை கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
வேலூர் : வேலூர் பெண்கள் சிறையில் நளினியிடம் மொபைல் போன் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவரை கண்காணிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம்,  மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள்  இருந்தது குறித்து கடந்த 21ம் தேதி முதல் விசாரணை நடந்து வருகிறது.வேலூர் பெண்கள் சிறை அதிகாரிகள், பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட போலீசார் முதல் சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் வரை விசாரணை நடத்தியும் இதுவரை உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.காட்பாடி அடுத்த கனக சமுத்திரத்தை சேர்ந்த ரவி என்ற பெயருள்ள ஒன்பது பேரை போலீசார் விசாரித்தனர். கடைசியாக கிடைத்த ரவி, பத்மா மூலம் விசாரணை அதிகாரிகளுக்கு சிறிய  தகவல் கிடைத்தது. அவர்களை தினமும் காட்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தனர்.பெண்கள் சிறையில் நளினியை சரியாக கண்காணிக்காமல் விட்டதால், மொபைல் போன் உள்ளிட்ட சகல வசதிகளும் அவரை தேடிச் சென்றுள்ளதாக கியூ பிராஞ்ச் போலீசார் புகார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, வேலூர் பெண்கள் சிறையில் வேலை பார்த்து வரும் நான்கு சிறை அதிகாரிகள், ஆறு சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் நளினியிடம் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 17 சிறைக் காவலர்கள், ஆறு சிறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அதில் பாதி பேர்  ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் மாறுதலாகி வேறு சிறைகளுக்கு சென்று விட்டனர். அனைவரிடமும் விசாரணை நடத்த சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.முதல் கட்டமாக, தற்போது வேலூர் பெண்கள் சிறையில் வேலை பார்த்து வரும் ஐந்து சிறைக் காவலர்கள், மூன்று சிறை அதிகாரிகளிடம் நேற்று சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.சிறையில் மொபைல் போன் வைத்திருந்த குற்றத்திற்காக வேலூர் பாகாயம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போன், இரண்டு சிம்கார்டுகள் வேலூர் நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குக்காக நளினியை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் பெண்கள் சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.சிறையில் இருக்கும் ஒருவர் மீது, மீண்டும் வழக்கு பதிவுசெய்யும் போது, அவரை சிறையில் வைத்து கைது செய்து, அங்கேயே விட்டு விடுவது, "பார்மாலிட்டி அரஸ்ட்.' இது சாதாரண குற்றங்களுக்கு மட்டும் பொருந்தும்.நளினி விவகாரத்தில், "பார்மாலிட்டி அரஸ்ட்' செய்வது சில சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், குற்றத்தின் தன்மையை கருதி நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். நளினியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போகும் நாளை போலீசார் ரகசியமாக வைத்திருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
581
2010-04-26T00:30:00+05:30
தமிழகம்
பிளஸ் 2 தேர்வில் கடினமான கேள்வியால் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் விழுமோ?
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்தாண்டு கணித தேர்வில் அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததால், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவுப்படி, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உழைத்த ஆசிரியர்கள், தேர்ச்சி சதவீத வீழ்ச்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும் என்ற கவலையில் மூழ்கியுள்ளனர்.மார்ச் முதல் தேதி துவங்கிய பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 22ல் நிறைவு பெற்றது. இந்தாண்டு கணித தேர்வில் அனைத்துக் கேள்விகளும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புலம்பினர். அனைத்து கேள்விகளும் பாடப்புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்பட்டன என்றாலும், ஐந்தாண்டுகளாக கேட்கப்படாத புதிய கேள்விகளாக இருந்ததால் விடையளிக்க மாணவர்கள் திணறினர்.வேதியியல், இயற்பியல் தேர்வு வினாக்களிலும் சில குளறுபடிகள் காணப்பட்டன. இது கட்-ஆப் மதிப்பெண்ணில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், இப்பிரச்னை தேர்வு துறையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 23ல் துவங்கி, ஏப்., 20ல் நிறைவு பெற்றது. கணித தேர்வு பற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததால், விடைத்தாள் திருத்தும்போது, இதுபற்றி அரசு பரிசீலிக்கும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.கணித பாட விடைத்தாளை திருத்த வழங்கப்பட்ட "கீ ஆன்சரில்' இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. இதனால் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்குரிய சரியான விடை அளிப்பவர்களுக்கு வழக்கம் போல் மதிப்பெண் வழங்கப்பட்டன.இதுகுறித்து விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்ற ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வழக்கத்தை விட புதிதாக இருந்ததால், பெரும்பாலான மாணவர்களால் விடையளிக்க முடியவில்லை. புத்தகத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன என்றாலும், கேள்விகளை தொகுத்த விதம் தவறு."விடைத்தாள் திருத்தும்போது எவ்வித சலுகையும் வழங்க அறிவுறுத்தவில்லை. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கணித தேர்வில் சுமார் 30 சதவீத மாணவர்கள் தோல்வியை சந்திப்பர். இத்தேர்வுக்கு மட்டும் சலுகை மதிப்பெண் வழங்குவதே இப்பிரச்னைக்கு தீர்வு. தவறினால் இந்தாண்டு பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைவது உறுதி."பிற பாடங்களில் நன்கு படித்து தேர்வு எழுதியுள்ள நன்கு படிக்கும் மாணவர்கள் கூட, கணித தேர்வில் கிடைக்கும் குறைந்த மதிப்பெண்களால் பாதிக்கப்படுவர். "சென்டம்' பெறுவோர் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் இயற்பியல் பாடத்திலும் "சென்டம்' குறைவாகவே இருக்கும். 12 மாணவர்களில் ஐந்து மாணவர்கள் வீதம் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. இது,தொழிற் கல்வி படிப்புகளுக்கு சீட் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்,' என்றனர்.கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் குறைந்த சதவீத தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள், இந்தாண்டு தேர்ச்சியை உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் வலியுறுத்தியிருந்தார். இதைப்பின்பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், "அனைத்து ஆசிரியர்களும் காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும், தேவையில்லாமல் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.கடந்த ஆண்டு அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளில், அப்பாடங்களை கையாண்ட ஆசிரியர்களை வரவழைத்து, பாடம் வாரியாக பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடுகளை செய்தார்.கடந்த முறை 60 சதவீதத்துக்கு குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதோடு, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவோம் என்ற உறுதி மொழியையும் எழுத்துப் பூர்வமாக பெற்றார்.இதே ரீதியில் பிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினர்.விடைத்தாள் திருத்தும் போது கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்த மதிப்பெண்கள், அனைவரின் உழைப்பையும் வீணடிப்பதாக அமைந்து விடுமோ என ஆசிரியர்கள் கவலைப்பட துவங்கியுள்ளனர். - நமது நிருபர் -
585
2010-04-26T00:34:00+05:30
தமிழகம்
கெட்டி மேளம் முழங்க, வேத மந்திரம் ஒலிக்க நடந்தது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை:சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, மதுரை மீனாட்சி கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள், கோவிலுக்கு வந்தனர். காலை 7 மணியளவில் சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை ஊர்வ லம் நடந்தது. பின், சுவாமி சன்னிதி முதல் பிரகாரத்தில் உற்சவர் சன்னிதியில் சுவாமியும், அம்மனும் அலங்கார மாகி, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9.10 மணிக்கு மேற்காடி வீதியாக, பூக்களால் அலங்கரிக் கப்பட்ட மண மேடையில் இருவரும் எழுந்தருளினர். சுவாமி வெண் பட்டும், அம்மன் செந்நிற பட்டும் அணிந்தி ருந் தனர். சுவாமிக்கு வைரக் கிரீடமும், அம்மனுக்கு தங்கக் கவசமும் சாத்தப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தின் போது மட்டுமே தங்கக் கவசம் அணிந்த அம்மனை தரிசிக்க முடியும் என்பது சிறப்பு.செந்தில் பட்டர் சுவாமியாகவும், சிவா னந்த பட்டர் அம்மனாகவும் வேடமிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். காலை 9.43 மணிக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. திருமணம் முடியும் வரை மணமக்கள் மேடையை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. சுவாமிக்கு தேவஸ்தானம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சார்பில் பரி வட்ட மும், அம்மனுக்கு பட்டு வஸ்திரமும் சாத்தப்பட்டது.காலை 9.53 மணிக்கு கெட்டி மேளம் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு சுவாமி வைரத் தாலி அணிவிக்க, கோலாகலமாக திருமணம் நடந்தது. பன்னீர் தெளிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.திருமணத்தைத் தொடர்ந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள குண்டோதரன் பூத சிற்பத்திற்கு விருந்து படைக்கப்பட்டது. மாலை 4 மணி வரை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக் கோலத் தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். அபிஷேகத்திற்கு பின், இரவு 8 மணிக்கு சுவாமி யானை வாகனத் திலும், அம்மன் புஷ்ப பல்லக்கிலும் மாசி வீதிகளில் உலா வந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதான மண்டபத் தில் கோவில் சார்பில், அனுமதி சீட்டு வைத்திருந்த 4 ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா:* ஆடி, சித்திரை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.* பாதுகாப்பு என்ற பெயரில் அம்மன் சன்னிதியில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், நெரிசல் ஏற்பட்டது. வெப்பம் தாங்க முடியாமல் குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி மயங்கி விழுந்தனர்.* வடக்கு சித்திரை வீதி, மேலாடி வீதியில் பெரிய திரை மூலமும், கோவில் வெப்சைட் மூலமும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இன்று மதுரையில் தேரோட்டம்:மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து, சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் நடக்கிறது. சித்திரைத் திருவிழா ஏப்., 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 23ல் அம்மனுக்கு பட்டா பிஷேகமும், நேற்று திருக்கல்யாணமும் நடந்தது.இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பத்து நாட்களாக தனித்தனி வாகனங்களில் உலா வந்த அம்மனும், சுவாமியும், ஒரே நேரத்தில் பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, இன்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ண சப்பரத்தில் சேர்ந்து உலா வருகின்றனர். கோவிலுக்கு திரும்பிய பிறகு, கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன், 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும். ஆபரணங்கள் கிடையாது:அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த விலை மதிப்பு டைய கற்கள் பதித்த நகைகள்,அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம்.தேரோட்டத்தின் போது மட்டும் அவை அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும் போது அதிர்வு காரணமாக கற்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால், மாலை 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கிரீடம் மற்றும் தங்க நகைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, தேரில் வீற்றிருக்கும் சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்படும்.