news_id
int64
201
2.26M
news_date
stringlengths
25
29
news_category
stringclasses
3 values
news_title
stringlengths
1
636
news_article
stringlengths
1
138k
2,428,674
2019-12-07T11:25:00+05:30
தமிழகம்
தேசிய மருந்தியல் வாரம் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்: தேசிய மருந்தியல் வார விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. 'மருந்தாளுனர் உங்கள் மருந்து ஆலோசகர்' என்ற தலைப்பில் நடந்த தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணியை, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து, டாக்டர் குழந்தைவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது நகரின் பிரதான சாலைகள் வழியாக, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. அதில், அனுமதி பெற்ற மருந்தகங்களில் மருந்து வாங்க வேண்டும். மருந்து சீட்டின்றி மருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகித்தும் சென்றனர். தனியார் கல்லூரி முதல்வர் அருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.
2,428,675
2019-12-07T11:25:00+05:30
தமிழகம்
நாமக்கல்லில் உலக மண்வள தினவிழா
நாமக்கல்: நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தினவிழா, 'மண் அரிமானத்தை குறைப்போம்; நிலையான எதிர்காலத்தை பெறுவோம்' என்ற நோக்கில் நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா விவசாயிகளை வரவேற்று, மண்பரிசோதனையின் அவசியம் குறித்து பேசினார். மண்வள மேம்பாட்டு முறை, மண் அரிமானத்தை தடுத்து நிலையான மண் வளத்தை பாதுகாப்பது குறித்து, உதவிப் பேராசிரியர் சத்யா விளக்கமளித்தார். மண் அரிமானத்தை தடுக்கும் முறை, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து, செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மண்வள அட்டைகள் உர பரிந்துரைகளுடன் வழங்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
2,428,676
2019-12-07T11:25:00+05:30
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு 'ஸ்மார்ட்' அட்டை முகாம்
நாமகிரிப்பேட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாமகிரிப்பேட்டையில் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தற்போதுள்ள அடையாள அட்டைக்கு பதில், 'யுடிஐடி' என்றழைக்கப்படும் பிளாஸ்டிக்கால் ஆன, ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு முகாம், நாமகிரிப்பேட்டையில் நடந்தது. ஏற்பாடுகளை, உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க தலைவர் வேணுகோபால் செய்திருந்தார். அ.தி.மு.க., நகர செயலாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பழைய அடையாள அட்டை நகல், விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. விரைவில், இதற்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். முகாமில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
2,428,677
2019-12-07T11:26:00+05:30
தமிழகம்
வாழைத்தார் விலை உயர்வு
ப.வேலூர்: ப.வேலூர் தினசரி வாழைத்தார் ஏல சந்தையில், விலை உயர்வடைந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ப.வேலூரில் வாழைத்தார் சந்தை நடந்தது. கடந்த வாரம், 600 மற்றும் இந்த வாரம் 1,000 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. பூவன் 100 - 250; ரஸ்தாளி, 150 - 250; பச்சைநாடன், 150 - 200; கற்பூரவல்லி, 200 - 400 மற்றும் மொந்தன் வாழைக்காய் ஒன்று, ஐந்து ரூபாயிலிருந்து, ஆறு ரூபாய்க்கு விற்பனையானது.
2,428,678
2019-12-07T11:26:00+05:30
தமிழகம்
பள்ளிகளுக்கு கணினி: ஆசிரியர்கள் கோரிக்கை
ப.வேலூர்: பரமத்தியில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக்கூட்டம் நடந்தது. தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார். தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாய தேர்ச்சி தொடர வேண்டும். ஆசிரியர்கள் உயர் கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகளை விரைவில் வழங்க வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு கணினி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் முருகேசன், பொருளாளர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
2,428,679
2019-12-07T11:26:00+05:30
தமிழகம்
தமிழகம், கேரளாவில் முட்டை விலை 415 காசாக நிர்ணயம்
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 415 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 425 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 10 காசு குறைத்து, 415 காசாக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு நாட்களில், முட்டை கொள்முதல் விலை, 18 காசு குறைந்துள்ளது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 478, ஐதராபாத், 430, விஜயவாடா, 457, பர்வாலா, 451, மும்பை, 499, மைசூரு, 469, பெங்களூரு, 465, கோல்கட்டா, 511, டில்லி, 485. பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கிலோ, 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த கறிக்கோழி விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
2,428,680
2019-12-07T11:27:00+05:30
தமிழகம்
பஸ் மோதி விபத்து மூதாட்டி பலி
ப.வேலூர்: பரமத்தி அருகே, தனியார் கல்லூரி பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்தார். பரமத்தி அருகே, வசந்த புரத்தை சேர்ந்த நடேசன் மனைவி கண்ணம்மாள், 70; இவர், நேற்று மாலை, பரமத்தி - திருச்செங்கோடு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த தனியார் கல்லூரி பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2,428,681
2019-12-07T11:27:00+05:30
தமிழகம்
அரசுப் பள்ளியில் பாம்பு மீட்பு
பள்ளிபாளையம்: அலமேடு அரசுப் பள்ளி சுவரோரத்திலிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். பள்ளிபாளையம் அடுத்த, அலமேடு அரசுப் பள்ளி பாதுகாப்பு சுவர் பின்புறத்தில் வயல்வெளிகள் உள்ளன. நேற்று மதியம், 1:00 மணிக்கு அந்த சுவரோரத்தில் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஆசிரியர்கள், குமாரபாளையம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பாம்பை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 'இது கட்டுவிரியன் பாம்பு; மிகவும் விஷம் கொண்டது. வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம்' என்றனர்.
2,428,682
2019-12-07T11:27:00+05:30
தமிழகம்
பெண்ணிடம் வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது
நாமக்கல்: நடந்து சென்ற பெண்ணிடம், 99 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல், வண்டிக்கார தெருவை சேர்ந்த பொரி வியாபாரி விஜயகுமார், 60. அவரது மனைவி மரகதம், 58. அவர், கடந்த செப்., 30ல், நாமக்கல்லில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், ஐந்து பவுன் நகையை அடமானம் வைத்து விட்டு, 99 ஆயிரம் ரூபாயை, ஒரு பையில் வைத்து கொண்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மஜித்தெரு அருகே, மோட்டார் பைக்கில் இரண்டு பேர், பணப்பையை பறித்துச் சென்றனர். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ., சந்திரன் தலைமையிலான தனிப்படையினர், நேற்று மாலை, 6:00 மணிக்கு, நாமக்கல் உழவர்சந்தை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, நெம்பர் இல்லாத மோட்டார் பைக்கில் வந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சீனிநாதன், 24, முத்துகுமார், 24 என, தெரிந்தது. மரகதத்திடம் இருந்து, 99 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றதையும் ஒப்புக் கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 85 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். இருவர் மீதும், சேலம் மாவட்டம், சங்ககிரி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2,428,683
2019-12-07T11:28:00+05:30
தமிழகம்
பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியம்: மேம்பாலம் கட்டும் இடத்தில் மீண்டும் விபத்து
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, மேம்பாலம் கட்டும் இடத்தில் ஆம்னி பஸ் மீண்டும் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்தனர்.குமாரபாளையம் அடுத்த, சேலம்-கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. நேற்று அதிகாலை, 4:45 மணியளவில், கோவை சென்ற, புதுச்சேரியை சேர்ந்த, தனியார் டிராவல்ஸ் ஆம்னி பஸ், கட்டுமானம் நடைபெறும் பகுதியில் நுழைந்து மண் திட்டு மீது ஏறியது. இதில், பஸ் டிரைவர் கடலூர் சாமுவேல், 42, அரியலூரை சேர்ந்த லலிதா, 45, ஆகியோருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டது. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.பாதுகாப்பில் அலட்சியம்: பாலம் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு முன்னதாக, எச்சரிக்கை போர்டு, சிவப்புவிளக்கு இல்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் பலமுறை செய்தி வெளியாகியுள்ளது. ஆனாலும், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சில மாதங்களுக்கு முன், ஆம்னி பஸ் மண் திட்டு மீது ஏறி நின்று விபத்துக்குள்ளாகி, பலர் படுகாயமடைந்தனர். இரு மாதங்களுக்கு முன், பவானி பக்கமிருந்து வந்த கார், கட்டுமான இடத்தில் மோதி, மூன்று பேர் படுகாயமடைந்தனர். 'இனியாவது, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் வைக்கப்பட்டுள்ளது போல், அதிக எச்சரிக்கை போர்டுகள், சிவப்பு பிளாஸ்டிக் குடங்களில் மின் விளக்குகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2,428,684
2019-12-07T11:29:00+05:30
தமிழகம்
சாலையை பராமரிக்க நடவடிக்கை தேவை
பள்ளிபாளையம்: காடச்சநல்லூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையை பராமரிக்க, கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையின் இருபுறத்திலும் முட்புதர் வளர்ந்து மையப்பகுதி வரை வந்துவிட்டதால், வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் அவதிப்படுகின்றனர். மேலும், இருபுறத்திலும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. விஷப் பூச்சிகளும் உலா வருவதால், மக்கள் அச்சப்படுகின்றனர். இதே நிலையில் காணப்பட்டால், இந்த சாலை பயன்பாடின்றி போய்விடும். இந்த சாலையை பராமரித்து, சுகாதார பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,428,685
2019-12-07T11:29:00+05:30
தமிழகம்
தண்ணீர் தொட்டி தேவை: பொதுமக்கள் கோரிக்கை
வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. அங்கிருந்து வரும் தண்ணீர் நேரடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படுகிறது. இதனால், மின்சாரம் இல்லாதபோது, தண்ணீரை ஏற்ற சிரமம் ஏற்படுவதுடன், குடிநீரை வினியோகிப்பதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, மின்சாரம் இல்லாதபோதும், குடிநீரை சேமிக்க வசதியாக நிலமட்ட தொட்டி அமைக்க வேண்டியது அவசியம்.
2,428,686
2019-12-07T11:30:00+05:30
தமிழகம்
மேம்பால சாலையில் மின் விளக்குகள் அவசியம்
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அடுத்த, கொன்னையார் திருமணிமுத்தாறு மேம்பால சாலை, திருச்செங்கோடு- ராசிபுரம் சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் இரவு, பகல் பாராமல் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. வாகனஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். விஷ ஜந்துகளாலும், திருடர்களாலும் தங்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, மேம்பால சாலையில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,428,687
2019-12-07T11:30:00+05:30
தமிழகம்
குப்பை குவிப்பால் துர்நாற்றம்: பள்ளி மாணவர்கள் அவதி
குமாரபாளையம்: குமாரபாளையம், கோட்டைமேடு, நாராயண நகர் சர்வீஸ் சாலை அதிக குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். இந்த சாலையில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேட்டால், அவ்வழியாக பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, பகுதியினரை துன்புறுத்தி வருகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டியது அவசியம்.
2,428,688
2019-12-07T11:31:00+05:30
தமிழகம்
வடிகால் இல்லாததால் மக்கள் கடும் அவதி
நாமகிரிப்பேட்டை: சாக்கடை வசதியில்லாமல், கொல்லிமலை அடிவார மக்கள் அவதிப்படுகின்றனர். கொல்லிமலைக்கு, முள்ளுக்குறிச்சி வழியாக மாற்றுவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கொல்லிமலையில் வடக்கு பக்கம் உள்ள கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். ஆனால், இந்த சாலை அமைத்த பிறகு முள்ளுக்குறிச்சியில் சில பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். முள்ளுக்குறிச்சியில் இருந்து, கொல்லிமலைக்கு செல்லும் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இப்பகுதியில் போதுமான சாக்கடை வசதி அமைக்கவில்லை. இப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், சாக்கடை ஆகியவை சாலை ஓரத்திலேயே வழிந்தோடுகிறது. சில சமயம் சாலைக்கு நடுவிலேயே செல்கிறது. முக்கியமாக மதுரை வீரன் கோவில் பின்புற பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டதால் சாக்கடை குழாய்கள் உடைந்தன. இதனால், கழிவுநீர் வெளியேறி வருகிறது. எனவே, இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
2,428,689
2019-12-07T11:31:00+05:30
தமிழகம்
புகார் பெட்டி - கரூர்
நடைபாலத்தில் தடுப்பு தேவை: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் பகுதியில் மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து கட்டளை புதிய வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவே மக்கள் செல்லும் வகையில் நடைபாலம் உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அது சேதமடைந்துள்ளது. மக்கள் வாய்க்கால் நடுவே, பாலம் வழியாக அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.- த.பிரபு, பொய்கைப்புத்தூர்.மோசமான சாலையால் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்த, நந்தன்கோட்டையில் இருந்து சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில் பகுதி வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அருகில் விவசாய சாகுபடி நடந்து வருகிறது. இந்த நிலங்களுக்கு வாகனங்களில் இயற்கை உரம் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, பல இடங்களில் சாலை மோசமாக உள்ளது. விவசாயிகள் அவதிப்படுகின்றனர். புதிய சாலை அமைக்க வேண்டும்.- வி.ஆண்டியப்பன், சிந்தலவாடி.
2,428,690
2019-12-07T11:31:00+05:30
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல்: தே.மு.தி.க., நேர்காணல்
கரூர்: கரூரில், தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கியவர்களிடம் நேர்காணல் நடந்தது. மாவட்டச் செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்., கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்., தலைவர், பஞ்., வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும் நேர்காணல் நடந்தது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் விஜயகுமார் நேர்காணல் நடத்தினார். மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
2,428,691
2019-12-07T11:31:00+05:30
தமிழகம்
இயற்கை உரம் தயாரிப்பு பயிற்சி
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையத்தில், வாழை சாகுபடியில் இயற்கை உரமிடுதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையத்தில் வாழை விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்து, அதை எவ்வாறு வாழைக்கு இடுவது குறித்து பயிற்சி முகாம் நடந்தது. திருச்சி மண்டல மத்திய பயிர் பாதுகாப்பு அலுவலர் அமுதா தலைமை வகித்தார். இயற்கை உரம் கொண்டு வாழைக்கு உரமிடுதல், அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் மகசூல் மற்றும் நோய் தாக்குதல் தவிர்த்தல் பற்றி எடுத்து கூறப்பட்டது. 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
2,428,693
2019-12-07T11:32:00+05:30
தமிழகம்
பா.ம.க., சார்பில் விருப்ப மனு
கரூர்: கரூரில், பா.ம.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது. மாநில துணைப்பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்து, விருப்ப மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட பஞ்., கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
2,428,694
2019-12-07T11:33:00+05:30
தமிழகம்
பழையஜெயங்கொண்டத்தில் துவரை சாகுபடி அமோகம்
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் பகுதியில், துவரை சாகுபடி பயிர்கள் பசுமையாக வளர்ந்து வருகின்றன. கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதியில் பரவலாக மானாவாரி விளைநிலங்களில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், துவரை செடிகளுக்கு அதிகமான தண்ணீர் கிடைத்ததால், செடிகள் பசுமையாக வளர்ந்து வருகின்றன. இதனால், கூடுதலாக பூக்கள் பிடித்து, மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது இந்த பகுதியில், 50 ஏக்கரில் துவரை சாகுபடி நடந்துள்ளது.
2,428,695
2019-12-07T11:33:00+05:30
தமிழகம்
ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு: கட்டளைமேட்டு வாய்க்காலை புனரமைக்க முடிவு
குளித்தலை: மாயனூர், கட்டளை மேட்டு வாய்க்காலை, கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, மாயனூர் கதவணையில் இருந்து, திருச்சி மாவட்டம் தாயனூர் வரை, 62.124 கி.மீ., நீளத்திற்கு கட்டளை மேட்டு பாசன வாய்க்கால் செல்கிறது. கடைமடையில் உள்ள விவசாய நிலத்திற்கு சரிவர தண்ணீர் செல்லாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த வாய்க்காலை புனரமைக்க வேண்டுமென, காவிரி டெல்டா பாசன விவசாயிகள், 2011 முதல் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கட்டளை மேட்டுவாய்க்காலை புனரமைக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது.குளித்தலை, பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் கூறியதாவது: கட்டளைமேட்டு வாய்க்காலிலிருந்து, கரூர் மாவட்டத்தில், 20 ஆயிரத்து, 185 ஏக்கர் விவசாய நிலம், திருச்சி மாவட்டத்தில், 3,588.94 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பாசன வாய்க்காலில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள், ரெகுலேட்டர், ஷட்டர்ஸ் ஆகியவற்றை புதுப்பிப்பதோடு, பாசன வாய்க்கால், முற்றிலும் கான்கிரீட் வாய்க்காலாக மாற்றப்படும். கரைகளின் இருபுறமும் தார்ச்சாலை அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக, தமிழக அரசு, 335.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
2,428,696
2019-12-07T11:34:00+05:30
தமிழகம்
மதுரை வீரன் கோவில் குதிரை வாகனத்திற்கு கண் திறப்பு
குளித்தலை: குள்ளரெங்கன்பட்டியில், மதுரைவீரன் கோவில் குதிரை வாகனத்திற்கு கண் திறப்பு விழா நடந்தது. குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா, மத்தகிரி பஞ்., குள்ளரெங்கன்பட்டியில் மதுரைவீரன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மதுரைவீரன் சுவாமிக்கு புதிதாக குதிரை வாகனம் அமைக்க பக்தர்கள் முடிவு செய்தனர். கோவில் முன், வெள்ளை நிற குதிரையில் மதுரைவீரன் சுவாமி அமர்ந்து கையில் பட்டாக்கத்தியுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வடிவத்தில் அமைத்தனர். அதன் பின்னர், குதிரை வாகனத்திற்கு கண் திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கோவிலில் வைத்து பூஜை செய்தனர். நேற்று காலை, 10:00 மணியளவில் குதிரை வாகனத்திற்கு கண் திறப்பு விழா நடந்தது. பின்னர், தீபாராதனை, அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
2,428,697
2019-12-07T11:34:00+05:30
தமிழகம்
8ம் ஆண்டு பூக்குழி விழா: ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பு
குளித்தலை: தரகம்பட்டி, மாரியம்மன்கோவில், பூக்குழி விழாவில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். குளித்தலை அடுத்த, தரகம்பட்டி மாரியம்மன் கோவில் முன் ஐயப்ப பக்தர்கள், கிராம மக்கள் சார்பில், எட்டாம் ஆண்டு பூக்குழி விழா, தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த மாதம், 28ல் காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அன்று முதல் பூஜைகள் நடத்தி வந்தனர். தொடர்ந்து, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியையொட்டி, கிராம பொதுக் கிணற்றில் இருந்து கரகம் பாலித்து, ஐயப்ப ஆபரண பெட்டியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஏழு சப்தகன்னிகள் கையில் நெய்விளக்குகளை ஏந்தி, ஊர்வலமாக பூக்குழி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து அக்னி குண்டத்திற்கு தீ மூட்டினர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
2,428,698
2019-12-07T11:34:00+05:30
தமிழகம்
ஓய்வு அஞ்சல் ஊழியர்களுக்கு குடும்ப நலத்திட்டம் துவக்கம்
கரூர்: தமிழகத்தில், முதன்முறையாக ஓய்வுபெற்ற கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு குடும்ப நலத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கரூரில், கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு குடும்ப நலத்திட்டம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மத்திய மண்டலச் செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். மத்திய அரசின், கிராமிய அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு, அஞ்சல் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக குடும்ப நலத்திட்டம் என்ற புதிய திட்டம் நேற்று முன்தினம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கரூர் அருகில் புஞ்சைகடம்பங்குறிச்சி அஞ்சலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முருகேசன் என்பவருக்கு நிதியுதவியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அகில இந்திய துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன், மாநில தலைவர் முனிரத்தினம், கோட்ட தலைவர் சுந்தரம், பொருளாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
2,428,699
2019-12-07T11:34:00+05:30
தமிழகம்
அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அம்மா திட்ட முகாம்
கரூர்: அரவக்குறிச்சி ஒன்றியம், அம்மாபட்டியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இதில், அரவக்குறிச்சி சிறப்பு திட்ட தனி தாசில்தார் ரவிகுமார் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட, 25 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் ஐந்து மனுக்களுக்கு, முகாமில் உடனடியாக தீர்வு அளிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு, உரிய ஆய்வுக்கு பிறகு தீர்வளிக்கப்பட உள்ளது. முகாமில், தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கோமதி, பள்ளபட்டி வரி ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் தாரணி உட்பட பலர் பங்கேற்றனர்.
2,428,700
2019-12-07T11:34:00+05:30
தமிழகம்
வழிகாட்ட 'காலைக்கதிர்' ரெடி... மாணவர்களே சாதிக்க தயாரா: கரூரில் இன்று 'வெற்றியின் ரகசியம்': புது பாடத்திட்ட சந்தேகங்களை தீர்க்க வாங்க...
கரூர்: 'காலைக்கதிர்' சார்பில், 'வெற்றியின் ரகசியம்' நிகழ்ச்சி, கரூரில், இன்று நடக்கிறது. அதில், புது பாடத்திட்டத்தில் சாதிக்க, பல்வேறு ஆலோசனை வழங்கப்படவுள்ளதால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பயன்படுத்தி, பொதுத்தேர்வில் சாதிக்கலாம்.தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டம், தேசிய அளவில் போட்டித்தேர்வை சந்திக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதை எதிர்கொள்வதில் பல்வேறு தடுமாற்றங்கள், மாணவர்கள் இடையே நிலவுகிறது. அதைப்போக்க, எப்போதும், மாணவர் நலனில் தனி அக்கறை காட்டும், 'காலைக்கதிர்' நாளிதழ், தற்போது புது பாடத்திட்டத்தை எளிதாக எதிர்கொண்டு, பொதுத்தேர்வில் மதிப்பெண்களை அள்ளும் வித்தையை கற்றுத்தரவுள்ளது. அதற்காக, 'வெற்றியின் ரகசியம், ஜெயிப்பது நிஜம் 2.0' எனும் நிகழ்ச்சியை, அமிர்தா விஸ்வ வித்யாபீட நிறுவனத்துடன் இணைந்து, கரூர், அழகம்மை மஹாலில், இன்று காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை நடத்துகிறது. சிறப்பு அழைப்பாளராக கல்வி ஆலோசகர்கள், பாடத்திட்ட தயாரிப்பு குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள், அமிர்தா விஸ்வ வித்யாபீட நிறுவன பேராசிரியர்கள், தன்னம்பிக்கையூட்டும் வல்லுனர்கள் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக, புது பாடத்திட்டம் குறித்து, பொள்ளாச்சி, கோமங்கலம் புதூர், அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் தியாகராஜன்; மன நலம், உடல் நலம் குறித்து, சேலம், உளவியல் நிபுணர் அமுல்ராஜ் விளக்கம் அளிக்கவுள்ளனர். இதில், புது பாடத்திட்டத்தை எளிதாக எதிர்கொள்வது எப்படி; தேர்வு நேரங்களில், உடல்நலம், மனநலத்தை பாதுகாக்கும் முறை; பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் விதம்; மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்று, மதிப்பெண்களை அள்ளும் வித்தை; தேர்வின்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்; தேர்வு நேரத்தில், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, முக்கிய வினாக்கள், குறிப்புகள் அடங்கிய புத்தகம், இலவசமாக கிடைக்கும். அனுமதி இலவசம் என்பதோடு, முழுக்க முழுக்க மாணவர் நலனுக்கு நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், அரசு, தனியார் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோர், ஆசிரியர்களுடன் பங்கேற்று, பயன்பெற, காலைக்கதிர் அன்புடன் வரவேற்கிறது.
2,428,701
2019-12-07T11:35:00+05:30
தமிழகம்
மேளதாளத்துடன் மனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்: தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் ஏமாற்றம்
கரூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு மேள தாளத்துடன் மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர், ஆணையத்தின் உத்தரவு காரணமாக ஏமாற்றத்துடன் சென்றார்.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும், இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கும் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், வார்டு வரையறை விவகாரம் தொடர்பாக, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், நேற்று காலை, 10.00 மணிக்கு, 'மறு உத்தரவு வரும் வரை வேட்பு மனுக்கள் பெற வேண்டாம்' என, கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு அந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒன்பது மாவட்டங்கள் தவிர, மற்றவைகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என, உத்தரவிட்டது.இந்த தீர்ப்பு காரணமாக ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. இந்நிலையில் நேற்று, 12:00 மணிக்கு கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஆத்தூர் பூலாம்பாளையம் பஞ்., தலைவர் பதவிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்ய மேள தாளத்துடன், 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வேட்பாளர் வந்தார். ஆனால், 'தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை வேட்பு மனு பெற முடியாது' என, வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
2,428,702
2019-12-07T11:35:00+05:30
தமிழகம்
ஜி.ஹெச்., போராட்டம் வாபஸ்: விவசாய சங்கம் அறிவிப்பு
கடவூர்: மைலம்பட்டி, அரசு மருத்துவமனை முன் விவசாய சங்கம் நடத்துவதாக இருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், கரூர் மாவட்டம், மைலம்பட்டி அரசு மருத்துவமனை முன், வரும், 9ல் பாடை கட்டும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில், மைலம்பட்டி அரசு மருத்துவமனை, 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவமனையாக இல்லை. சடலக் கூறாய்வு அறை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதற்கான அமைதி பேச்சுவார்த்தை, கடவூர் தாசில்தார் மைதிலி, முதுநிலை டாக்டர் சாந்தாதேவி முன்னிலையில் நடந்தது. அப்போது, கடந்த ஒரு மாதமாக, ஆறு டாக்டர்களுடன் மருத்துவமனை இயங்குகிறது. 2016ம் ஆண்டு வட்டத் தலைமை மருத்துவமனையாக மாறியது. அதற்கான போதிய டாக்டர்கள் பற்றாக்குறை இருந்தது. இது சம்பந்தமாக கடிதம் அனுப்பப்பட்டு கூடுதல் டாக்டர்களை நியமிக்க ஆணை வந்துள்ளது. மேலும், சடலக்கூறாய்வு அறை உள்பட அமைத்துத் தரக்கோரியும், உபகரணங்கள் பெற அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆணை வரப்பெற்ற பின் பின் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். விவசாய சங்க ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் இலக்குவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
2,428,703
2019-12-07T11:35:00+05:30
தமிழகம்
200 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி: விலை கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்: மஞ்சள் சாகுபடி நடந்து வரும் நிலையில், அறுவடை காலத்தில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மற்றும் க.பரமத்தி பகுதிகளில், பொங்கல் பண்டிக்கைக்காக மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி, 200 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன் அறுவடை செய்யப்படும். சிறிய அளவிலான மஞ்சள், தோகையுடன் பறிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படும். மற்ற பெரும்பாலான மஞ்சள், வெட்டியெடுத்து பதப்படுத்தப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும்.இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் போதிய பருவமழை, கிணற்று பாசனம், ஆறு, வாய்க்கால் பாசனத்தை நம்பி இப்பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். குறைந்தளவு நீரிலும், மஞ்சள் துளிர் விட்டு நன்கு வளர்ந்துள்ளது. இதனால் அறுவடை காலத்தில் விளைச்சல் அமோகமாக இருக்கும் என நம்பிக்கையுள்ளது. எனவே, இந்தாண்டு மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர், கூறினர்.
2,428,704
2019-12-07T11:36:00+05:30
தமிழகம்
அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
திறந்து கிடக்கும் மின்சார பெட்டி: கரூர், வடக்கு காந்திகிராமம் பெரியார்நகர், 2வது கிராசில் தாழ்வான நிலையில் மின்சார பெட்டி உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால், மின் பெட்டி திறந்து கிடக்கிறது. இதன் ஒயர்கள் வெளியில் தொங்கிக் கிடக்கிறது. விளையாட்டாக சிறுவர்கள் தொட்டு விட வாய்ப்புள்ளது. இதுகுறித்து, புகார் தெரிவித்தும், நகராட்சி பணியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு கருதி, மின் பெட்டிகளை உயரமான இடத்தில் வைத்து, பூட்டி வைக்க வேண்டும்.துர்நாற்றத்தால் பயணிகள் தவிப்பு: கரூர், மினி பஸ் ஸ்டாண்ட் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சேகரிக்கும் குப்பையை, மினி பஸ் ஸ்டாண்டில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுகினறனர். ஆனால், நகராட்சி சார்பில் நாள்தோறும் இந்த குப்பையை அகற்றாததால் தொட்டி நிரம்பி வழிகிறது. துர்நாற்றத்தால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பையை அகற்ற வேண்டியது அவசியம். இதுகுறித்து, மக்கள் பலமுறை புகார் அளித்தும் பலனில்லையென, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதர்மண்டியுள்ள பொது கழிப்பிடம்: கரூர், நரிக்கட்டியூர் பொது கழிப்பறை சேதமடைந்து, மக்கள் பயன்பாடு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது. நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பின், அந்த கழிப்பறை கேட்பாரற்று கிடப்பதால், முற்றிலும் சேதமடைந்துள்ளது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை நீடிக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தாழ்வான நிலையில் மின்ஒயரால் அச்சம்: கரூர், மணவாடி அருகில் மின் ஒயர்கள் தாழ்வான நிலையில் உள்ளன. பலத்த காற்று வீசும்போது, அறுந்து கீழே விழுந்து விடும் வாய்ப்புள்ளது. இங்கு, அதிகளவில் மக்கள் நடமாட்டம் உள்ளது. ஒயர் அறுந்து விழும் போது, மின் கசிவால் விபத்து ஏற்படலாம். மேலும் கனரக வாகனங்கள் பொருட்கள் எடுத்து செல்லும் போது, அதில் ஏதாவது உரசினால் உயிரிழப்பு அபாயம் உண்டு. மின் ஒயர்களை உயர்த்திக் கட்ட, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெள்ளைக்கோடு வரையப்படுமா? கரூர், ராமகவுண்டனூர் செல்லும் சாலையில் விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வேகத்தடையில் 'ஜீப்ரா லைன்' என்ற வெள்ளை கோடுகள் இல்லை. இரவில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது சரிவர தெரியாமல், விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வேகத்தடை இருப்பது தெரியும் வகையில், வெள்ளைக் கோடு வரைய வேண்டும்.
2,428,705
2019-12-07T11:36:00+05:30
தமிழகம்
சிறுமிக்கு திருமணம்: 6 பேர் மீது போக்சோ வழக்கு
கரூர்: சிறுமியை திருமணம் செய்து வைத்த வழக்கில், ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், க.பரமத்தியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவர், தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்த பூபதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது, இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், சிறுமி சார்பில், கரூர் எஸ்.பி., பாண்டிராஜனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சிறுமியின் தாய் செல்வி, பூபதி, மாமனார் சண்முகம் உட்பட, ஆறு பேர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2,428,706
2019-12-07T11:36:00+05:30
தமிழகம்
பள்ளி ஆசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
கரூர்: கரூர், வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் கோபால், 50. அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மார்க்கெரட் தெரசா, 45. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். வீட்டில் பின்பக்க கதவை உடைத்து கொண்டு புகுந்த மர்ம நபர்கள், வீட்டிலிலிருந்த, ஒன்றரை பவுன் நகை மற்றும் மார்க்கெரட் அணிந்திருந்த, 5.5 பவுன் செயின் என மொத்தம், ஏழு பவுன் நகைளை திருடிச் சென்றனர். நேற்று காலையில் எழுந்தவுடன், இவர்களுக்கு நகை திருடு போனது தெரிந்தது. புகாரின்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
2,428,707
2019-12-07T11:36:00+05:30
தமிழகம்
மகள், பேரன் மாயம்: தாத்தா போலீசில் புகார்
குளித்தலை: குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தாராபுரத்தனூரைச் சேர்ந்த தொழிலாளி பிச்சை, 60. இவருடைய மகள் நாகலெட்சுமி, 27. இவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், மூன்று ஆண்டுகளாக மகன் தயாளனுடன், 6, தந்தை வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 20 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து மகள் மற்றும் பேரனை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. பிச்சை அறித்த புகார்படி, மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
2,428,708
2019-12-07T11:36:00+05:30
தமிழகம்
வடிகால் அமைக்கப்படுமா?
கரூர்: கரூர், பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அணுகு சாலை, பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வழியாக செல்கிறது. ஸ்டேஷன் எதிரில் உள்ள சாலை புதிதாக அமைக்கப்பட்டதால், சாலையின் உயரம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது பெய்யும் மழைநீரானது பள்ளமான பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே புகுந்து விடுகிறது. அந்த வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் போலீசார் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் தண்ணீர் புகுந்து பழுதாகி விடுகிறது. இந்த பகுதியில் வடிகால் அமைத்தால் மட்டுமே, நீர் புகுவதை தடுக்க முடியும். போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,428,709
2019-12-07T11:37:00+05:30
தமிழகம்
சாலையோரங்களில் கழிவு பொருட்கள்
கரூர்: சின்னதாராபுரத்தில் உள்ள கரூர், தாராபுரம் நெடுஞ்சாலையில் கடைகளின் கழிவு பொருட்களை, இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு சென்று சிலர் கொட்டுகின்றனர். மேலும் சிலர், வாகன ஓட்டிகளுக்கு, வழி கொடுக்க முடியாமல் பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். இவ்வழியாக வாகனங்களில் செல்லும் பலர், கழிவு வாழை தண்டுகளால் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, கழிவு பொருட்களை சாலையோரத்தில் கொட்டுவோர் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,428,710
2019-12-07T11:37:00+05:30
தமிழகம்
குறுகிய பாலத்தால் தவிப்பு; அகலப்படுத்தலாமே?
கரூர்: கரூர் அருகே உள்ள, கோம்புபாளையம் பஞ்சாயத்து, முனிநாதபுரத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சிறியபாலம் உள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களையும், வயலுக்கு வேளாண் இடுபொருட்களையும் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, பாலம் குறுகியதாக இருப்பதால் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் ஆற்றுக்கு சென்று வர, இந்த பாலத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, குறுகிய பாலத்தை அகலப்படுத்தி கட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2,428,711
2019-12-07T11:37:00+05:30
தமிழகம்
பாலத்தில் சிமென்ட் தளம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
குளித்தலை: குளித்தலை, முசிறி காவிரி பாலத்தில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, இரும்பு கம்பி வெளியே தெரியும் வகையில் உள்ளது.குளித்தலை, முசிறி தந்தை பெரியார் காவிரி பாலத்தில், சிமென்ட் தளம் விரிசல் விட்டு, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் இருந்தது. நவ., 12 ல் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கூட்டமைப்பு சார்பில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளித்தனர். இதையடுத்து, பாலத்தின் விரிசல் தற்காலிகமாக சிமென்ட் தளம் போட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று, தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிமென்ட் தளம் மீண்டும் சேதமடைந்தது. இதில், வாகனங்களின் டயர்கள் சிக்கி பஞ்சராகி வருகின்றன. இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை ஏ.டி., முரளிதரன் கூறிகையில்,''கடந்த ஒரு வாரமாக மழைபெய்ததால் தற்காலிகமாக போடப்பட்ட சிமென்ட் தளம் சேதமடைந்துள்ளது. நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
2,428,712
2019-12-07T11:50:00+05:30
தமிழகம்
தங்கம் விலை சவரன் ரூ.224 சரிவு
சென்னை : தங்கம் விலை இன்று(டிச.,7) சவரன் ரூ.224 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,612க்கும், கிராமிற்கு ரூ.28ம், சவரன் ரூ.224ம் குறைந்து, ரூ.28,896க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,940க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.46.60க்கு விற்பனையாகிறது.
2,428,713
2019-12-07T11:55:00+05:30
தமிழகம்
கோவை தனியார் நிறுவனத்தில் தீ
பெரியநாயக்கன்பாளையம்: கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னீர்மடை - கணுவாய் சாலையில், காட்டன் மில்களுக்கு தேவையான உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று(டிச.,7) அதிகாலை ஒரு மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த கோவை வடக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், லட்சகணக்கான மதிப்பு பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. இது குறித்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2,428,714
2019-12-07T12:06:00+05:30
இந்தியா
நெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள்
லக்னோ : உ.பி.,யின் உன்னாவ் நகரில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பெண் கடைசியாக போலீசாரிடமும், தனது குடும்பத்தினரிடமும் பேசிய வார்த்தைகள் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
2,428,715
2019-12-07T12:09:00+05:30
தமிழகம்
நளினி உண்ணாவிரதம் வாபஸ்
வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, விடுதலை, பரோல் தாமதம் காரணமாக கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன், கேட்டு கொண்டதால், நளினி, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டார்.
2,428,716
2019-12-07T12:29:00+05:30
இந்தியா
உன்னாவ் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: யோகி உறுதி
லக்னோ : பலாத்காரம் குறித்து புகாரை அளித்த இளம்பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.உ.பி.,யின் உன்னாவ் நகரில், பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் கொடுத்த இளம்பெண்ணை, குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில், பலத்த காயமடைந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
2,428,718
2019-12-07T12:37:00+05:30
தமிழகம்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறு 6 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2,428,719
2019-12-07T12:41:00+05:30
தமிழகம்
45 நாளில் வெங்காய விலை குறையும்
திருவாரூர்: அமைச்சர் காமராஜ் கூறுகையில், வெங்காயத்தின் விலை 45 நாட்களில் குறையும். வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, மலிவு விலையில் விற்பனை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
2,428,720
2019-12-07T12:45:00+05:30
தமிழகம்
பிட்காயின் முதலீடு; 2,000 கோடி மோசடி
உடுமலை : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், பிட்காயின் முதலீடு மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். உடுமலையை சேர்ந்த ராஜதுரை, சுவேதா உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. போலி இணையதள பக்கத்தை உருவாக்கி, முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
2,428,721
2019-12-07T12:54:00+05:30
இந்தியா
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் கவலை
திருவனந்தபுரம்; கேரளாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், சுல்தான் பதேரி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது : நாடு முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளதையும், சட்டம் ஒழுங்கு இல்லாததும், பெண்களுக்கு எதிரான தாக்குதலும் அதிகரித்துள்ளதை நீங்கள் பார்க்கலாம். பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது, பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது குறித்த செய்திகள் தினசரி வெளியாகின்றன.
2,428,722
2019-12-07T13:09:00+05:30
தமிழகம்
தமிழக நிதிநிலை மோசம்: ஸ்டாலின்
சென்னை:திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்தியதால், மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையை வழங்க போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால், வழங்க முடியது என பா.ஜ., அரசு கைவிரித்துள்ளது. இதனை கண்டு கொள்ளாத அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பீடு, நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை முதல்வரும், நிதியமைச்சரும் வெளியிட வேண்டும். தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக அரசுஎவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, தமிழகத்திற்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2,428,723
2019-12-07T13:47:00+05:30
இந்தியா
பலாத்கார குற்றவாளிகள் : கொதித்தெழும் மக்கள்
புதுடில்லி : நாட்டுல் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரம் சம்பவங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் நேற்று (டிச.,06) பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் அதிக அளவில் கொதித்து எழுந்து வருகின்றனர்.
2,428,724
2019-12-07T13:51:00+05:30
இந்தியா
வெங்காயம் திருடிய நபருக்கு அடி உதை
புதுச்சேரி : புதுச்சேரியில் வெங்காய மூட்டையை இருசக்கர வாகனத்தில் திருடியவரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.140 ஐ தாண்டியுள்ளது. இங்கு பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு காரணமாக சமீபநாட்களாக வரத்தும் குறைந்துள்ளது.
2,428,725
2019-12-07T13:58:00+05:30
General
Twitter
ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காகவும், புதிய ஜார்க்கண்ட் உருவாக்கவும் மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
2,428,726
2019-12-07T13:59:00+05:30
General
Twitter
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
2,428,727
2019-12-07T14:00:00+05:30
General
Twitter
''ஜிஎஸ்டி சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய GST வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பாஜக அரசு கைவிரித்துள்ளதை, அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2,428,728
2019-12-07T14:27:00+05:30
இந்தியா
உன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா
லக்னோ : உன்னாவ் பலாத்கார சம்பவத்தின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு செய்தியாளர்களிடம் பேசிய போது காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கண்ணீர் விட்டு அழுதார்.
2,428,729
2019-12-07T14:47:00+05:30
தமிழகம்
ஹிந்தி கற்பிக்கப்படாது; அமைச்சர்
சென்னை : அமைச்சர் மாபா. பாண்டியராஜன் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஹிந்தி கற்பிக்கப்பட மாட்டாது. ஹிந்திக்கு ஒதுக்கப்படும் நிதி தெலுங்கு மொழிக்கு ஒதுக்கப்படும். இந்த மையத்தில், ஒரு உலக மொழி, ஒரு இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.உலக தமி்ழ் ஆராய்ச்சி மையத்தில் ஹிந்தி கற்பிக்கப்படுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
2,428,730
2019-12-07T15:42:00+05:30
General
அமெரிக்காவின் இன்னொரு முகம்: அடிதடியில் முடியும் ‛பிளாக் பிரைடே'
நியூயார்க்: அமெரிக்காவில் 2011க்குப் பிறகு, இந்த ஆண்டு நடந்த ‛பிளாக் பிரைடே' விற்பனையில் பல அடிதடி சம்பவங்கள் அரங்கேறி, அந்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளன.அமெரிக்காவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடக்கும் நன்றி தெரிவிக்கும் (தேங்க்ஸ் கிவ்விங்) விழாவுக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமையை , அந்நாட்டு வணிக நிறுவனங்கள் ' பிளாக் பிரைடே' என அழைக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, மக்கள் ஏராளமான பொருட்களை வாங்குவர் என்பதால், இந்நாளில் பெரிய கடைகள், நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கும். இதற்காக, அந்த கடைகள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். அப்போது, அடிதடி, தள்ளுமுள்ளு நடப்பது வாடிக்கை. அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். அவர்களை போலீசார் வந்து அப்புறப்படுத்தும் சம்பவங்கள் எல்லாம் நடப்பது உண்டு.
2,428,731
2019-12-07T15:52:00+05:30
இந்தியா
நீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது: தலைமை நீதிபதி
புதுடில்லி : நீதி வழங்குவதில் அவசரம் காட்ட முடியாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தெரிவித்துள்ளார்.
2,428,732
2019-12-07T16:18:00+05:30
General
Twitter
ஆயுதப்படைகளின் கொடி நாளில், நமது படைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம். நமது படைகளின் நலனுக்காக பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
2,428,733
2019-12-07T16:24:00+05:30
இந்தியா
கருணை மனுவை திரும்பப் பெறும் நிர்பயா குற்றவாளி
புதுடில்லி : ஜனாதிபதிக்கு அனுப்பும் கருணை மனுவில் கையெழுத்திட மறுத்திருப்பதுடன், தனது பெயரால் அனுப்பப்பட்ட கருணை மனுவை திரும்பப் பெறுவதாகவும் நிர்பயா பலாத்கார குற்றவாளி வினய் சர்மா தெரிவித்துள்ளான்.
2,428,734
2019-12-07T16:33:00+05:30
தமிழகம்
ஆழியாறில் நீச்சலடித்த யானை: வைரலாகும் வீடியோ
ஆணைமலை: ஆழியாறு அணையில் தண்ணீர் குடிக்க வந்து நீச்சலடித்த யானையின் வீடியோ சமூக வலைதளங்களின் வைரலாக பரவுகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். நேற்று ஆத்தாடியம்மன் கோயில் அருகே அணைக்குள் இறங்கிய யானை நீச்சல் அடித்தபடி அணைக்குள் சுற்றி திரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பலர் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2,428,735
2019-12-07T17:06:00+05:30
தமிழகம்
டிச.,27, 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்
சென்னை: டிச.,27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,428,736
2019-12-07T17:28:00+05:30
தமிழகம்
நான் 'ரெடி': நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட துடிக்கும் தமிழக ஏட்டு
சென்னை : நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தான் தயாராக உள்ளதாக டில்லி திகார் சிறை அதிகாரிகளுக்கு, ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன், 42, விண்ணப்ப கடிதம் அனுப்பி உள்ளார்.
2,428,737
2019-12-07T18:09:00+05:30
தமிழகம்
நாட்டில் சுதந்திரம் இல்லை: ப.சிதம்பரம்
சென்னை: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சென்னை வந்தார். அவர் நிருபர்களிடம் பேசுகையில்; நாட்டில் தற்போது சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நாட்டில் சுதந்திர குரல் நெறிக்கப்படுகிறது. சுதந்திர எழுத்து முடக்கப்படுகிறது. சுதந்திரத்தை பிரிக்க முடியாது. உங்கள் சுதந்திரம்தான், என்னுடைய சுதந்திரம். உங்களின் சுதந்திரத்தை நான் பாதுகாக்காவிட்டால் , எனது சுதந்திரத்தை நீங்கள் பாதுகாக்க முடியாது. ஒருவரின் சுதந்திரம் மறுக்கப்பட்டால் அனைவரது சுதந்திரமும் பறிக்கப்பட்டதற்கு சமம். காஷ்மீரில் இன்று 75 லட்சம் மக்களின் பேர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பா.ஜ., அரசு ஒரு பாஸிச போக்கை நோக்கி நடந்து வருகிறது. தென்நாட்டு மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் காட்டும் எச்சரிக்கையை நாடு முழுவதும் என்று காட்டுகிறார்களோ அன்று தான் சுதந்திரம் வரும். பா.ஜ.,வுக்கு எதிரான எண்ணம் தமிழகம் என் மன உறுதியை குலைக்க நினைத்தார்கள் நான் குலையவில்லை , நான் வீழ்வேன் என்று நினைத்தால் நான் வீழ மாட்டேன். தொடர்ந்து போராடுவேன். நாட்டு மக்களை சந்தித்து பேசுவதற்கு சோனியாவிடம் கூறினேன். தொடர்ந்து பேசுங்கள் என்றார். இந்திய பொருளாதாரம் மோசமாக நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான் தொடர்ந்து எழுதுவேன், பேசுவேன். நிர்பயா நிதியின் கீழ் ரூ.3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட நிர்பயா நிதி பயன்படுத்தவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். நாடு முழுவதும் பெண்களின் நிலை கொலைகளமாக மாறி வருகிறது. அரசு மட்டுமல்ல, ஆண்மகன்களும் பாதுகாப்பை வழங்க வேண்டும். பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தூக்கி நிறுத்த முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
2,428,738
2019-12-07T18:41:00+05:30
இந்தியா
ஏழைகளுக்கு நீதி கிடைப்பதில் சிரமம்: ஜனாதிபதி கவலை
ஜோத்பூர்: நீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த கோர்ட் திறப்பு விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:
2,428,739
2019-12-07T18:46:00+05:30
தமிழகம்
மீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன்: ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'உச்சநீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் மாநில தேர்தல் கமிஷன், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிமுக. அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் கமிஷன் மாறியுள்ளது. ஜனநாயகத்திற்கு வெட்ககேடாக உள்ளது. புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தப்படவில்லை. நேர்மையான உண்மையான தேர்தல் என்ற விஷயத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறுவழியில்லை' இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2,428,740
2019-12-07T18:57:00+05:30
General
தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்
காத்மாண்டு: 13வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளம் காத்மாண்டுவில் நடக்கிறது. இதில் பளூ தூக்கும் போட்டியில் 87 கிலோ பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டியை சேர்ந்த அனுராதா தங்க பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே அனுராதா தங்கம் வென்றுள்ளார், இவர் தஞ்சை தோகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2,428,741
2019-12-07T20:19:00+05:30
இந்தியா
சுட்டுத் தள்ளுங்க:உன்னாவ் பெண்ணின் தந்தை ஆவேசம்
லக்னோ : உ.பியில் உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகையை உ.பி அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளுமாறு அப்பெண்ணின் தந்தை கோரி உள்ளார்.