url
stringclasses
24 values
title
stringclasses
24 values
body
stringclasses
24 values
https://tamil.goodreturns.in/news/tamilnadu-cm-mk-stalin-travel-to-4-countries-for-11-days-on-23rd-may-what-are-the-trip-main-agenda-035035.html
முக ஸ்டாலின்: 4 நாடுகள் 11 நாள் சுற்று பயணம்.. இது தான் விஷயமா..?!
இந்தியாவில் கல்வி, தொழிற்துறை, உற்பத்தி, ஏற்றுமதி, சேவை துறை, வேலைவாய்ப்பு என அனைத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் தொழிற்துறை முதலீட்டையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான திட்டத்துடன் சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றம் நடந்தது.இந்த மாற்றத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தொழிற்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா, நிதியமைச்சகம் மற்றும் மனிதவள துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளதன் மூலம் அடுத்த 2 வருடத்தில் தமிழ்நாட்டின் முதலீட்டு மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் தான் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் முக்கியமான நோக்கமே தமிழக அரசு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பது தான்.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், புதிய முதலீடுகளை அறிவிக்கவும் உலக நாடுகளின் முன்னணி கார்ப்பரேட் நிறுவவன தலைவர்களை அழைப்பது தான் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தின் முக்கிய காரணமாக உள்ளது.இந்தியாவின் பணக்கார முதல்வர் யார்? ரூ.1 கோடி கூட இல்லாத மம்தா பானர்ஜி..! முதல்வர் ஸ்டாலின் 4 நாட்களுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவும், அதற்கான அடித்தளமிட்டது தமிழ்நாடு தொழில் துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உருவாக்கிய Guidance Bureau தான். இந்த நிலையில் முதல்வருடன் இவ்விரு பிரிவின் முக்கிய தலைவர்களும் செல்ல உள்ளனர்.சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பணத்தின் மூலம் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பிரிவு நிறுவனங்கள் முதல் முன்னணி முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்கவும், முதலீடுகள் ஈர்க்கப்படும் என நம்பப்படுகிறது.இதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை உற்பத்தி துறைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து துறைகளுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிஸ்கோ, அதன் முக்கிய இரு தயாரிப்பு பிரிவுகளை தமிழ்நாட்டில் அமைக்கவும், இதற்காக 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்யவும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் இணைய சேவைகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில் இந்தியாவில் நெட்வொர்க் கருவிகளை உருவாக்கும் திட்டத்தை சென்னையில் அமைக்க சிஸ்கோ அறிவித்துள்ளது.இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் ஹூண்டாய் 20000 கோடி ரூபாய் முதலீடு, sunroof தயாரிக்க நெதர்லாந்து நாட்டின் Inalfa Roof Systems 170 கோடி ரூபாய், Mitsubishi உடனான ஒப்பந்தம் என கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டு தொழிற்துறையும் முதலீட்டு சந்தையும் பரபரப்பாகவே உள்ளது.மே 2021 முதல் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு சுமார் 2.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 70 சதவீத நிறுவனங்கள் கட்டுமான அல்லது உற்பத்தி பணிகளை துவங்கியுள்ளது. மீதமுள்ள 30 சதவீத நிறுவனங்கள் நிலத்தை தேடும் பணியில் உள்ளன.
https://tamil.goodreturns.in/news/soon-malaysia-may-cut-palm-oil-export-tax-upto-50-as-global-supply-crisis-028171.html
பாமாயில் ஏற்றுமதி வரியை 50% குறைக்கும் மலேசியா, இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையுமா?
மலேசியா விரைவில் பாமாயில் ஏற்றுமதி வரியை 50 சதவீதம் வரை குறைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை 3 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெய் மீதான பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், உலகின் இரண்டாம் மிகப் பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான மலேஷியா ஏற்றுமதி வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?மலேசியாவில் இப்போது பாமாயில் ஏற்றுமதிக்கு 8 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதை தற்காலிக நடவடிக்கையாக 4 அல்லது 6 சதவீதமாகக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பாமாயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் இந்தோனேசியா அங்கு ஏற்பட்ட எண்ணெய் தட்டுப்பாட்டால், பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மலேஷாவின் இந்த எண்ணெய் விலை குறைப்பு ஜூன் மாதம் முதல் வரும் என கூறப்படுகிறது.இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்குத் தடைவிதித்து இருந்தாலும், அங்கு அதைச் சேமிக்கத் தேவையான வசதிகள் அதிகளவில் இல்லை. எனவே விரைவில் மீண்டும் ஏற்றுமதியைத் தொடங்கும். அப்போது ஜூன் மாதம் இறுதியிலிருந்து சமையல் எண்ணெய் விலை குறையும் என கூறப்படுகிறது.இப்போது மேலும் சாதகமாக மலேசியாவும் பாமாயில் ஏற்றுமதி வரியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.இந்தியா தங்களது சமையல் எண்ணெய் நுகர்வுக்கு 55 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதியைத் தான் நம்பி உள்ளது. சர்வதேச அளவில் சமையல் எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 7.2 மில்லியன் டன் பாமாயிலை இந்தோனேசியாவிலிருந்தும், 5.4 மில்லியன் டன் பாமாயிலை மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.இந்திய அரசும் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலை குறைப்பைச் சமாளிக்க கனோலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் மற்றும் பாம் கர்னல் எண்ணெய் மீதுள்ள 35 சதவீத இறக்குமதி வரியை, 5 சதவீதமாகக் குறைக்க இந்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெரும் அளவில் குறையும் என கூறுகின்றனர்.
https://tamil.goodreturns.in/news/sicci-lisha-raised-1-million-for-india-covid-relief-023950.html
இந்தியாவுக்கு உதவிய சிங்கப்பூர் அமைப்புகள்: நிதியமைச்சர் தியாகராஜன்
சிங்கப்பூர் SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கிய நிகழ்வு. காணொளி மூலம் நடந்த நிகழ்வில் நிதியமைச்சர் கலந்துகொண்டார்.இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல நாடுகளும், அமைப்புகளும் உதவி செய்து வரும் நிலையில் Singapore Indian Chamber of Commerce and Industry மற்றும் Little India Shopkeepers & Heritage Association இணைந்து சுமார் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டி நன்கொடை அளித்துள்ளது.இதுகுறித்து டிவிட்டரில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எல்லை கடந்து நான் சிங்கப்பூரில் கொண்ட நட்பு, தக்க சமயத்தில் உதவ முன்வந்து, SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கியது மகிழ்வை அளிக்கிறது. இந்த உறவு மேலும் நீடித்து மக்கள் முன்னேற்றத்திற்காகச் செயலாற்றுவோம் என டிவீட் செய்துள்ளார்.
https://tamil.goodreturns.in/news/india-bribery-rate-of-39-worst-in-asia-021534.html
39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..!
ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் அதிகளவிலானோர் லஞ்சம் வாங்குவதாகவும், தனிப்பட்ட தொடர்புகளைப் பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக ஊழல் குறித்த உலக நாடுகள் முழுவதும் கண்காணிப்பு செய்யும் ஒரு அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக முன்னேற வேண்டும் என இலக்குடனும், எளிதாக வர்த்தகத்தைத் துவங்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என முக்கிய இலக்குடன் இந்தியா இருக்கும் இந்த வேளையில் லஞ்சம் குறித்த Global Corruption Barometer அமைப்பின் இந்த ஆய்வு உலக நாடுகள் மத்தியில் பின்னடைவாக அமைந்துள்ளது.அதள பாதளம் நோக்கி சென்ற இந்திய ரூபாய்.. ஆசிய நாணயங்களில் மிக மோசமான வீழ்ச்சி.. நிபுணர்கள் பகீர்..! Global Corruption Barometer அமைப்பு இந்தியாவில் ஜூன் 17 முதல் ஜூலை 17 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 2000 பேரிடம் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் 50 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், 49 சதவீதம் பேர் தனிப்பட்ட தொடர்புகளைப் பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.பர்சனல் கான்டாக்ட்ஸ் அதாவது ஒருவருக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களின் ஆதிக்கம், பெயர் போன்றவற்றைப் பயன்படுத்தி அரசு மற்றும் பிற இடங்களில் காரியங்களைச் சாதித்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆய்வில் 49 சதவீதமாக உள்ளது.இவர்கள் கூறும் ஒற்றைக் காரணம் என்னவென்றால், பர்சனல் கான்டாக்ட்ஸ்-ஐ பயன்படுத்தாவிட்டால் எங்களுக்கான சேவை கிடைப்பது இல்லை என்பது தான். இந்தியாவில் பொதுத்துறை சேவைகளில் லஞ்சம் அதிகளவில் இருக்கிறது. மெதுவான இயக்கம், கடுமையான நடைமுறைகள், தெளிவற்ற அரசு வடிவுமுறைகள் போன்றவற்றின் காரணமாக மக்கள் மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த லஞ்சம் அனைத்தும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை சேவைக்கானது என்பது தான் தற்போதைய பிரச்சனை என Global Corruption Barometer தெரிவித்துள்ளது.மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் அனைத்தும் மத்திய மாநில அரசுகள் ஒழுங்கு முறைப்படுத்தி, லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை முழுமையாகக் குறைக்கும் வகையில் வடிவத்தை உருவாக்க வேண்டும் என இந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.இந்த ஆய்வின் படி இந்தியாவில் 89 சதவீதம் பேர் அரசு அமைப்புகளில் இருக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தைப் பெரிய பிரச்சனையாகக் கருதுகின்றனர். 18 சதவீதம் பேர் ஓட்டுப் பணம் தருவதைப் பெரிய பிரச்சனையாகக் கருதுகின்றனர், மீதமுள்ள 11 சதவீதம் பேர் sextortion பெரிய பிரச்சனையாகக் கூறுகின்றனர்.
https://tamil.goodreturns.in/news/india-vs-malaysia-trade-war-restrictions-on-the-import-of-refined-palm-oil-017363.html
காஷ்மீர் விஷயத்தில் கருத்து சொல்வதா.. மலேசியாவுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடித்த இந்தியா!
டெல்லி: சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு, நேற்று, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை மலேசிய பிரதமர் விமர்சித்த நிலையில், அந்த நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்திய தொழில் மற்றும் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், பாமாயில் இறக்குமதி என்பது கட்டுப்பாட்டுக்கு உள்ளே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, ரீபைன் செய்யப்பட்ட பாமாயில்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாகவும், இதன்மூலம் கச்சா பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.இதன் மூலம், மலேசியாவுக்குதான் வணிக ரீதியாக பாதிப்பு அதிகம். ஏனெனில் ரீபைன்ட் செய்யப்பட்ட பாமாயில்களை அதிகப்படியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது மலேசியா. ஆனால் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை மூலம் கச்சா பாமாயில்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்க கூடிய இந்தோனேசியாவுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.இதுபற்றி ராய்ட்டர் செய்தி நிறுவனம் மேலும் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்டதாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடியாக மோடி அரசு, ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசு வட்டாரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன என்று, ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக, இந்தியாவிலுள்ள, பாமாயில் ரீபைன்ட் செய்யக்கூடிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு தகவலை மத்திய அரசு பரிமாற்றம் செய்ததாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. மலேசியாவிலிருந்து பாமாயில்களை வாங்கக் கூடாது என்பதுதான் அந்த செய்தி.இதில் மற்றொரு விஷயத்தையும் பார்க்கவேண்டி இருக்கிறது. ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி இல்லை என்ற மத்திய அரசின் முடிவு காரணமாக, இந்தியாவில் பாமாயில் ரீபைன் செய்யக் கூடிய தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். காய்கறி எண்ணெய் தயாரிப்புக்கும் ஊக்கம் கிடைக்கும்.மலேசிய பொருளாதாரத்தில் பாமாயில் ஏற்றுமதி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதம் அளவுக்கு பாமாயில் ஏற்றுமதி பங்களிப்பு வைக்கிறது. மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய மொத்த பொருட்களில் 4.5% பாமாயில் சார்ந்த பொருட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
https://tamil.goodreturns.in/world/what-india-can-learn-from-malaysia-s-gst-failure-011452.html
மலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?
மலேசியாவின் புதிய பிரதமர் மகாதிர் முகமது தேர்தலில் தான் அளித்த வாக்குறிதியை நிறைவேற்றும் படி சென்ற வாரம் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி-ஐ ஜூன் 1 முதல் 0% ஆக்குவதாக அறிவித்தார். ஜிஎஸ்டி-க்கு பதிலாக மலேசியாவில் விரைவில் விற்பனை மற்றும் சேவை வரி எனப்படும் எஸ்எஸ்டி முறை அமலுக்கு வர வாய்ப்புள்ளது.எனவே மலேசியாவில் தோல்வி அடைந்த ஜிஎஸ்டி வரி முறையில் இருந்து இந்திய கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.மலேசியாவில் பெயருக்கு ஏற்றார் போல ஒரே விகித ஜிஎஸ்டி ஆகும். இந்தியாவைப் போன்று பல விகிதங்கள் அல்ல. ஆனால் தென் கிழக்கு ஆசிய மக்கள் அதனை வரவேற்கவில்லை. ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்தியது முன்னால் முதல்வரான நஜிப் ரசாக்கால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கான ஒரு முக்கியக் காரணம் ஆகும். அன்மையில் முதல்வராகப் பொறுப்பேற்ற மகாதிர் முகமது தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது போன்று ஜிஎஸ்டி-ஐ நீக்கியுள்ளார். இந்தியாவிலும் வணிகர்கள் & நிறுவனர்கள் பலர் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அரசு மீது மிகவும் கோபமாக உள்ளனர்.வரிகளுக்கான கிரெடிட்டினை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு இறுதியில் அதனைத் திருப்பி அளிப்பது என்பது மலேசியர்களுக்குப் பிதிய முறையாகும். இது சிறிய வரி செலுத்துனர்களின் குழப்பத்தினை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் 2015-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிறகு எண்ணெய் விலை சரிவு மற்றும் கரன்சி மதிப்புச் சரிவு போன்றவை அரசுக்கு பெரும் தலைவலியாக்க மாறியது.மலேசியாவில் ஒரே வரி விகிதம் என 6 சதவீதம் ஜிஎஸ்டி ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் 4 வரி விகிதங்கள், அதாவது அதிகம் நுகரப்படும் பொருட்களுக்கு 5%, பின்னர் 12%, 18% மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் என்பது ஜிஎஸ்டி ஆக வசூலிக்கப்படுகிறது.இந்தியாவில் அதிகம் நுகரும் பொருட்களுக்கு வாட் போன்றே 5% அல்லது அதற்கும் குறைவான அளவில் வரி விதிக்கப்பட்டதால் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ளது போன்ற ஒற்றை வரி ஜிஎஸ்டி முறையானது இந்தியா அல்லது மலேசியா போன்ற விவசாய வருவாய்க் கொண்ட நாடுகளுக்கு ஒத்துப்போகாது. சிங்கப்பூர் போன்று விவசாய வருவாய் இல்லாத சேவை துறையினை நம்பி உள்ள நாடுகளுக்குத் தான் ஜிஎஸ்டி ஏற்றதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அது நிலையாகும் வரை காத்திருக்க வேண்டும். சிறு வணிகங்களில் உள்ள 70 சதவீத ஜிஎஸ்டி சிக்கல்கள் நீங்கியுள்ளது, இன்னும் நிறைய மாற்றங்கள் நடைபெற உள்ளது. ஐடி நெட்வொர்க் சேவையினை மெறுகேற்றுவதன் மூலமாகவும், எளிமையாக வரி தாக்கல் செய்யக் கூடிய புதிய படிவங்கள் அறிமுகம் செய்வதன் மூலமாகவும், வேகமாக வரிப் பணத்தைத் திருப்பி அளிப்பதன் மூலமாகவும் இந்தியாவில் ஜிஎஸ்டி-ஐ வெற்றிபெற வைக்க வாய்ப்புள்ளது.சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி பிரதமர் மோடி தலைமையிலான அரசால் இந்தியாவில் 2017 ஜூலை 1 முதல் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி இந்திய வணிகர்கள் பலரின் எதிர்ப்பைச் சந்தித்துள்ள நிலையில் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..!பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..!மோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..!
https://tamil.goodreturns.in/news/2017/08/14/independence-day-special-what-has-changed-70-years-india-008662.html
70 வருட சுதந்திர இந்தியா எப்படி உருமாறியுள்ளது..? பாகிஸ்தான் உடன் ஒரு ஒப்பீடு..!
சென்னை: 70 வருட சுதந்திரத்தை கொண்டாடும் இந்தியா கல்வியறிவு, வாழும் காலம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்திருந்தாலும் மக்களின் வருமானம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றில் குறைவான அளவிலேடே வளர்ச்சி அடைந்துள்ளது.சுதந்திர தினத்தை கொண்டாடும் தருவாயில் இருக்கும் நாம், இந்தியாவின் வளர்ச்சியை சீனா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளோம்.இந்தியாவின் இன்றைய நிலையை 1960வது ஆண்டுடன் சீனா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, பிரேசில் ஆகிய 5 நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாடு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது, எதில் உயர்ந்துள்ளது ஆகியவற்றை முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியும்.இந்த 5 நாடுகளை தேர்வு செய்தற்கான காரணங்கள்.சீனா: 1960ஆம் ஆண்டில் மக்கள்:வருமான அளவீட்டில் சீனாவும் இந்தியாவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தது.தென் கொரியா: 1947களில் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்த தென் கொரியா தற்போது வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளது. இதே படலத்திற்கு தற்போது இந்தியா வந்துள்ளதால் இந்த நாட்டுடன் ஒப்பிடுவது சரியாக இருக்கும்.பாகிஸ்தான்: இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை பங்கிடு செய்வதால் இந்த ஆய்வில் பாகிஸ்தான் சரியான தேர்வு.பிரேசில்: பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளில் கடந்த 30 வருடத்தில் பெரிய அளவிலான பொருளாதார மாற்றத்தை சந்தித்தது பிரேசிஸ்.மலேசியா: இந்தியா போல் அல்லாமல் பல கலாச்சாரம், பல பிரச்சனைகளை சந்தித்த மலேசியா இன்று எப்படி உருமாறியுள்ளது என்பதை இந்தியாவுடன் கணக்கிடுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கடந்த 56 வருடத்தில் இந்தியாவின் தனிமனித வருமாத்தின் அளவு 81.3 (1960 ஆம் ஆண்டு) டாலரில் இருந்து 1,709.4 டாலராக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 21 மடங்கு அதிகமாகும்.ஆனால் இது சீனா, மலேசியா, பிரேசிஸ், தென் கொரியா ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா குறைவான அளவிலேயே இதில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் மனிதர்களின் வாழும் காலம் 1960-2015ஆம் ஆண்டுக்கு மத்தியிலான காலத்தில் சுமார் 65.8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.இந்தியாவில் 1960ஆம் ஆண்டு சராசரியாக மக்கள் வாழும் காலம் 41 ஆண்டாக மட்டுமே இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இது 68ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாட்டின் சுகாதாரம், முதல் பிறந்த நாளுக்குள் இறக்கும் குழந்தையின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். இது 1000 குழந்தைகளை கொண்டு கணக்கிடப்படும்.இந்தியாவில் 1960ஆம் ஆண்டில் 1000 குழந்தைக்கு 165 குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே இறந்தனர். தற்போது இதன் அளவு 38ஆக குறைந்துள்ளது. இந்திய மக்கள் மத்தியில் 1980களில் வெறும் 40.8 சதவீதம் மக்கள் மட்டுமே எழுத, படிக்க தெரிந்தவர்களவும், கல்வியறிவு உடையவர்களாகவும் இருந்தனர். தற்போது இதன் அளவு 71 சதவீதமாக உயர்ந்துள்ளது.காடுகளின் பரப்பளவு ஒரு நாட்டின் காற்று, குடிநீர், பருவகால மாற்றம் ஆகியவற்றை காக்கும் முக்கிய காரணியாகும். இந்நிலையில் கடந்த 25 வருடத்தில் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகள் இருக்கும் இடம் கணிசமாக உயர்ந்துள்ளது.1990ஆம் ஆண்டில் இதன் அளவு 21.5 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 23.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. புகைப்படம்: இந்தியாஸ்பென்ட்
https://tamil.goodreturns.in/news/india-malaysia-can-now-trade-in-indian-rupee-inr-settlements-for-imports-034590.html
இந்தியா மலோசியா இனி டாலர், யூரோ தேவையே இல்லை.. ரூபாய் மட்டும் போதும்..!
இந்தியா மலோசிய நாடுகள் மத்தியிலான வர்த்தகத்திற்கு இனி ரூபாய் நாணயத்தின் வாயிலாக செட்டில்செய்துக்கொள்ள முடியும். தற்போது டாலர், யூரோ போன்ற முக்கியமான நாணயத்தின் வாயிலாக பேமெண்ட் செய்யப்பட்டு வரும் நிலையில் இனி ரூபாய் வாயிலாகவே செலுத்த முடியும்.இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 2022ல் ரூபாய் வாயிலாக வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பைனான்சியல் செட்டில்மென்ட் செய்யும் முறையை அறிமுகம் செய்து அதற்கான கட்டமைப்பையும் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் ரூபாயும் முக்கிய வர்த்தக நாணயமாக மாறும்.இதற்காக கோலா லம்பூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியா இண்டர்நேஷ்னல் பேங்க் ஆப் மலேசியா, ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை துவங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சிறப்பு ரூபாய் Vostro கணக்கை திறந்துள்ளது.ChatGPT முடக்கிய இத்தாலி அரசு.. இதுதான் காரணம்..!!மலேசியா இந்தியாவின் 13 வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், மலேசியாவுக்கு இந்தியா 10 வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஆசியாவில் கணக்கெடுத்தால் இந்தியாவுக்கு 3வது பெரிய வர்த்தக கூட்டாளியாக மலேசியா விளங்குகிறது.மலேசியாவிற்கு இந்தியாவில் இருந்து கனிம எரிபொருள்கள், கனிம எண்ணெய்கள்; அலுமினியம் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள், இறைச்சி மற்றும் உண்ணக்கூடிய இறைச்சி கழிவுகள், இரும்பு மற்றும் ஸ்டீல், தாமிரம் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள், கரிம இரசாயனங்கள், அணு உலைகள், கொதிகலன்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்; மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக உள்ளது.இதேபோல் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு பாமாயில், கனிம எரிபொருள்கள், கனிம எண்ணெய்கள், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்; விலங்கு அல்லது காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள்; அணு உலைகள், கொதிகலன்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்; தாமிரம் மற்றும் அதன் பொருட்கள், மரம்; மர கரி, அலுமினியம், கரிம இரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இதர ரசாயன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.இந்தியா மலேசியாவுக்கு மத்தியிலான வர்த்தக தொடர்பு பல தசாப்தங்களாக உள்ளது. இரு நாடுகளிலும், இரு நாட்டு கூட்டணியில் பல வர்த்தகம் அமைப்புகள் பல துறைகளில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மலேசியா மத்தியிலான ரூபாய் அடிப்படையிலான வர்த்தகம் மிகவும் முக்கியமானது. ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்திற்கு அடிப்படை எங்கிருந்து துவங்கியது..?இந்திய அரசு மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக மாற வேண்டும் என்ற இலக்குடன் இயங்கி வரும் வேளையில், முன்னணி இறக்குமதி நாடாகவும் உள்ளது. இந்த நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி சந்தையில் டாலர், யூரோ நாணயங்களை நம்பி இயங்குவது மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதால் ரூபாயில் வர்த்தகம் செய்ய ஊக்குவித்து வருகிறது.ரஷ்யா கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் ஆகியவற்றின் மூலம் முதல் முறையாக இந்தியா மற்றும் ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்திற்கு இரு நாடுகளும் தங்களுடனை உள்நாட்டு நாணயத்தை பயன்படுத்த துவங்கியுள்ளது. இது பெரிய அளவில் பலனளிக்கும் காரணத்தால் இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து உள்நாட்டு நாணய பரிமாற்ற முறை உலகின் பிற நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்தது.உதாரணமாக இந்தியா ரஷ்யாவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, ரஷ்ய நாணய மதிப்பிற்கு இணையாக ரூபாய் மதிப்பில் பணம் செலுத்தும். இதேபோல் ரஷ்யாவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ரூபிள் நாணயத்தில் பணத்தை பெறும். இந்த தொகையை ரஷ்ய வங்கியில் இருக்கும் இந்திய வங்கி கணக்குகளில் வைக்கப்படும். இதேபோல் இந்தியாவில் இருக்கும் ரஷ்ய வங்கி கணக்கில் ரூபாயில் வரவு வைக்கப்படும்.இந்த பண பரிமாற்றத்தில் எந்த ஒரு நாட்டின் நாணயத்தையும் டாலருக்கு மாற்றி, அதற்கு கமிஷன் கொடுக்கும் வேலை இருக்காது. இதனால் டாலருக்கான டிமாண்ட் குறைந்து அதன் ரூபாய்க்கு எதிரான மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் சந்தை மதிப்பீடுகளில் பெரும் மாற்றம் உருவாகுவது மட்டும் அல்லாமல், வளரும் நாடுகளுக்கு இது அதிகளவில் நன்மை அளிக்கும்.
https://tamil.goodreturns.in/news/cooking-oil-import-duty-slashed-prices-fall-upto-rs-6-8-kg-but-malaysian-prices-hiked-025279.html
சமையல் எண்ணெய் விலை குறைப்பு.. சரியான நேரத்தில் மத்திய அரசு அறிவிப்பு..!
இந்தியா முழுவதும் அடுத்த 20 நாட்களுக்குப் பண்டிகை காலம் என்பதால் மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு சமையல் எண்ணெய் மீது விதித்து இருந்த அதிகப்படியான இறக்குமதி வரியை கணிசமாகக் குறைக்க முடிவு செய்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தும் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள வேளையில் சாமானிய மக்கள் பண்டிகையைக் கொண்டாடுவதற்குக் கூட யோசிக்கும் நிலையில் விலைவாசி உயர்ந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில் பண்டிகை காலத்திற்கு ஏற்ப இக்காலகட்டத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் ஆயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது இருந்த இறக்குமதி வரியை 16.5 முதல் 19.25 சதவீத அளவில் குறைத்துள்ளது.இந்தக் குறைக்கப்பட்ட வரி அளவீடுகள் அக்டோபர் 14 முதல் மார்ச் 31 வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் செப்டம்பர் மாதமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவு 25 வருட உச்சத்தைச் செப்டம்பர் மாதம் அடைந்துள்ளது. இந்த உயர்வுக்கு இந்தியாவில் பண்டிகை காலம் மூலம் ஏற்பட்ட அதிகப்படியான டிமாண்ட் தான்.தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது விலை குறைப்பு மூலம் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஒரு டன்னுக்குச் சுமார் 14,000 ரூபாய் வரையில் குறையும், இதேபோல் சுத்திகரிக்கப்படாத சோயாபீன் ஆயில் மற்றும் சூரியகாந்தி விதை எண்ணெய் விலை 20,000 ரூபாய் வரையில் குறையும்.இதன் மூலம் ரீடைல் சந்தையில் ஒரு கிலோ எண்ணெய்க்கு 6 முதல் 8 ரூபாய் வரையில் குறையும், இது பண்டிகை காலத்தில் சாமானிய மக்களுக்குப் பெரும் நன்மையை அளிக்கும் என்றால் மிகையில்லை. ஆனால் தற்போது இதற்குப் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.இந்தியாவில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி குறைக்கப்பட்ட செய்தி வெளியான அடுத்த நொடியே மலேசியாவில் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரீடைல் சந்தையில் விலை குறையாது என SEA நிறுவனத்தின் தலைவர் பிவி மேத்தா தெரிவித்துள்ளார்.இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 4 முதல் 6 மாதத்திற்குச் சமையல் எண்ணெய் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது, அப்படி இருந்தாலும் மிகவும் குறைவான அளவில் தான் இருக்கும் என பிவி மேத்தா தெரிவித்துள்ளார்.
https://tamil.goodreturns.in/news/tata-sons-plans-to-take-100-stake-in-airaisa-jv-020858.html
ஏர்ஏசியா-வின் 49% பங்குகளை வாங்க திட்டமிடும் டாடா குழுமம்..!
கொரோனா பாதிப்பால் இந்தியாவின் விமானச் சேவைத் துறை அதிகளவில் பாதித்த நிலையில், நாட்டின் முன்னணி பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்எசியா அதிகளவிலான வர்த்தகத்தையும் வருவாயும் இழந்து நிற்கிறது. இந்நிலையில் ஏர்ஏசியா நிறுவனம் வர்த்தக வளரச்சிக்காகப் புதிய நிதியை முதலீடு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மலேசியாவின் முன்னணி பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமாகத் திகழும் ஏர்ஏசியா, இந்தியாவில் டாடா குழுமத்துடனான கூட்டணியில் விமானச் சேவை அளித்து வருகிறது. இந்தக் கூட்டணி நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை டாடா குழுமத்தின் நிர்வாக நிறுவனமான டாடா சன்ஸ் வைத்துள்ளது. மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ஏர் ஏசியா வைத்துள்ளது.இந்த 49 சதவீத பங்குகளை வாங்கவே தற்போது டாடா நிர்வாகம் மலேசிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.கொரோன பாதிப்பால் மிகவும் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டுள்ள ஏர்ஏசியா இந்தக் காலாண்டில் மோசமான வருவாய் அளவீட்டைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ஏர்ஏசியா நிர்வாகம் வர்த்தகத்தை மீட்க வேண்டும் எனத் திட்டமிட்டு மலேசியாவிற்கு வெளியில் இருக்கும் வர்த்தகத்தில் பங்கு விற்பனை வாயிலாகவும், கடன் வாயிலாகவும் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்ட முடிவு செய்துள்ளது.ஏர்ஏசியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி பெர்னாண்டஸ் சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா வர்த்தகம் வெளிச் சந்தை தான். ஒரு நாள் வெளியேற வேண்டிய நிலை வரும் எனஇதுமட்டும் அல்லாமல் ஏர்ஏசியா தற்போதைய கடன் மற்றும் நிலுவைத் தொகையில் வர்த்தகம் செய்தால் ஏர்ஏசியாவின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையை அடையும் என EY தெரிவித்தது.ஏர்ஏசியாவின் நிதி நெருக்கடியின் காரணமாக இந்திய வர்த்தகத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியாத நிலையில் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் டாடா குழுமம் ஏர்ஏசியாவின் கடன் சுமையைக் குறைக்கும் நோக்கில், டாடா சன்ஸ் கூட்டணி நிறுவனத்தில் இருக்கும் ஏர்ஏசியா பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மலேசிய நிறுவனமான ஏர்ஏசியா இந்தியாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது என மத்திய விமானத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே டாடா சன்ஸ், கூட்டணி நிறுவனத்தில் இருக்கும் 49 சதவீத பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
https://tamil.goodreturns.in/world/malaysia-remove-gst-on-june-1-011414.html
மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!
கோலா லம்பூர்: மலேசியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2018 ஜூன் 1 முதல் 0% என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.தற்போது மலேசியாவில் 6 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 0 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அடுத்து வரும் அறிவிப்புகளில் தேசிய அளவில் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த முடிவு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (விலக்கு வழங்கல்) ஆணை 2014 இல் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.அனைத்துப் பதிவு பெற்ற வணிகர்களும் இப்போது பூஜ்ஜிய விகிதத்தின் முடிவைப் பின்பற்ற வேண்டும், அதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகங்கள் அனைத்தும் தற்போதைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத் தான் இருக்கின்றன எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
https://tamil.goodreturns.in/world/malaysian-govt-waives-off-visa-fees-indian-tourists-007461.html
மலேசியா விசா கட்டணங்களில் திடீர் உயர்வு.. இந்தியர்களுக்கான 15 நாள் சுற்றுலா விசாவில் அதிரடி சலுகை..!
மலேசிய இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்தியர்களுக்கான சுற்றுலா விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இப்புதிய அறிவிப்பின் படி 1 ஆண்டுக்கான இந்திய விசா கட்டணம் 457 ரிங்கிட் 56 காசுகள் எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..ஏப்ரல் 1 முதல் இந்தப் புதிய விசா கட்டணம் அமலுக்கு வந்த நிலையில் ஓராண்டு காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியர்கள் மலேசியாவிற்குப் பயணம் செய்யலாம்.இதற்கு முன் ஒரு மாத விசா கட்டணம், 3 மாத விசாகட்டணம் மற்றும் 6 மாத விசா கட்டணம் எனப் பலபிரிவுகளில் விசா கட்டணங்கள் இருந்தது. தற்போது ஒரே கட்டணமாக 457 ரிங்கிட் 56 காசுகள் வசூலிக்கப்படும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.அனைவருக்கும் எவ்விதமான தடையுமின்றி ஓராண்டுக்கான விசாவாக வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதுவரையில் இந்தியா செல்லும் மலேசிய சுற்றுப் பயணிகளுக்கான விசா கட்டணம் 190 ரிங்கிட்டாகத்தான் இருந்தது.ஏப்ரல் 1 முதல் அது 457 ரிங்கிட் 56 காசுகளாக அதிகரிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில் படிக்கும் மலேசிய மாணவர்களுக்கான விசா கட்டணம் 359 ரிங்கிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விசா அவர்களின் படிப்பு முடியும் வரை அல்லது 5 ஆண்டுகள் வரைக்குமான பலமுறை பயணத்திற்கான விசா கட்டணமாகும். புதிய விண்ணப்பப் பரிசீலனைக் கட்டணத்தைத் தவிர மலேசியாவுக்கான 15 நாள் விசா கட்டணம் இந்தியப் பயணிகளுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும் என் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், இந்திய பயணத்தின் போது அறிவித்தார். இதுப்புதிய அறிவிப்பு மலேசிய சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய அளவிலான உந்துதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2017-18 நிதியாண்டில் மட்டும் மலேசியா 31 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. அந்த முயற்சிக்கு இந்திய பயணிகளுக்கான இந்தச் சிறப்புத் திட்டம் மிகப்பெரிய அளவில் உதவும் என்று அந்நாட்டுச் சுற்றுலாத் துறை தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ மிர்ஷா முகமட் தாய்ப் தெரிவித்துள்ளார்.இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு 15 நாள் விசா விண்ணப்பப் பரிசீலனைக் கட்டணமாக 20 அமெரிக்க டாலர் அல்லது 88.50 ரிங்கிட் மட்டுமே இனி செலுத்தவேண்டியிருக்கும்.இந்தப் புதிய விசா திட்டத்தின்வழி இந்தியாவிலிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை மலேசியாவிற்கு ஈர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மலேசிய ரிங்கட் நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்..!
https://tamil.goodreturns.in/news/2017/01/07/aircel-rcom-merger-anil-ambani-facing-new-problems-006753.html
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: அனில் அம்பானிக்கு வந்தது புதிய பிரச்சனை..!
வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்குள் இக்கூட்டணியின் மலேசிய தலைவர் டி. அனந்தகிருஷணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், இக்கூட்டணிக்கு சொந்தமான அனைத்து அலைக்கற்றைகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் உச்சி நீதிமன்றம் அறிவித்துள்ளது.இதனால் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்களின் இணைப்புக் கேள்விக்குறியாக மாறியுள்ளது.இவ்வழக்கின் விசாரணையின் தீர்ப்பில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குறித்து எதுவும் கூறப்படவில்லை, வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட படி, ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமம் பிற நிறுவனங்கனங்களுக்கு மாற்றுவதில் எவ்விதமான தடையும் அறிவிக்கவில்லை.தற்போதைய நிலையில் வழக்கு முழுவதும் 2ஜி அலைக்கற்றை மட்டும் சார்ந்துள்ளதால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தின் 3ஜி மற்றும் பிற அலைக்கற்றைகளை எவ்விதமான பிரச்சனைகளுமின்றிப் பயன்படுத்த முடியும்.ஆனால் இவ்வழக்கின் காரணமாக இரு நிறுவனங்களின் இணைப்பு மற்றும் மதிப்பீட்டில் பிரச்சனைகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைய நிலையில் ஏர்செல்-இன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 2ஜி அலைக்கற்றை மட்டுமே வைத்து இயங்கி வருகின்றனர்.இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்திற்குச் சொந்தமான 2ஜி அலைக்கற்றைகள் மத்திய அரசு எடுத்துக்கொண்டால், இதன் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்வார்கள். ஏர்செல் நிறுவனத்தை அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்குவது குறித்துச் செப்டம்பர் 2016ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கின் காரணமாக இருநிறுவனங்களின் இணைப்புக் காலதாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://tamil.goodreturns.in/world/malaysia-cuts-interest-rates-first-time-7-years-005702.html
7 வருடத்திற்குப் பின் வட்டி குறைந்தது மலேசியா..!
கோலா லம்பூர்: தொடர்ந்து சரிந்து வரும் ஏற்றுமதி அளவுகள், சர்வதேச சந்தைகளின் மோசமான சூழ்நிலை ஆகியவை மலேசிய நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டிவைத்துள்ளது.இந்த இக்காட்டான சூழ்நிலையில் இருந்து தப்புவதற்காக மலேசிய நாட்டின் மத்திய வங்கி கடந்த 7 வருடங்களில் குறைக்கப்படாத வட்டி விகிதத்தை, நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.சரிவு பாதையில் செல்லத் துவங்கிய மலேசிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்நாட்டு மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25% குறைந்து 3.00 சதவீதமாக அறிவித்துள்ளது.மலேசியா நாட்டிற்கு முன் சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய வங்கிகளும் தங்களது வட்டி விகிதத்தைக் குறைந்துள்ளது. மேலும் உலக நாடுகளில் இருந்து பிற முக்கியப் பொருளாதார நாடுகளில் மத்திய வங்கிகளும் தங்களது நாணயக் கொள்கையில் வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.இதனால் அடுத்தச் சில வாரங்களில் வளரும் பொருளாதார நாடுகளில் பணப்புழக்கம் அதிகரித்துக் காணப்படும் எனத் தெரிகிறது. சர்வதேச சந்தைகளின் தேவைகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் மலேசிய நாட்டின் ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து சரிவு பாதையில் உள்ளது. அடுத்தச் சில மாதங்களுக்கும் இதே நிலையில் தான் இருக்கும் என நீக்ரா வங்கி தெரிவித்துள்ளது.கடந்த 5 காலாண்டுகளாக இந்நாட்டின் ஏற்றுமதி அளவுகள் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திய மலேசிய மத்திய வங்கி 2009ஆம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாகப் புதன்கிழமை தான் தனது வட்டி விகிதத்தைக் குறைந்துள்ளது.2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசிய நாட்டின் பொருளாதாரம் 4.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மலேசிய மத்திய வங்கியின் கவர்னராக 16 வருடம் இருந்த Zeti Akhtar Aziz பணியிடத்தில் தற்போது முகமத் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்ராஹிம் பதவியேற்றிய 2 மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 
https://tamil.goodreturns.in/world/malaysia-airlines-cuts-6-000-jobs-as-new-ceo-rolls-up-sleeve-004208.html
6,000 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிய மலேசிய ஏர்லைன்ஸ்.. புதிய சிஇஓ-வின் அதிரடி முடிவு!!
கோலாலம்பூர்: வர்த்தக ரீதியில் செயல் இழந்துள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிலையை சீர்படுத்தவும், மேம்படுத்தவும், இந்நிறுவனம் புதிய ஜெரமன் நாட்டை சேர்ந்த கிரிஸ்டோப் முல்லர் அவர்களை சீஇஓ-வாக நியமனம் செய்தது.கிரிஸ்டோப் தலைமையிலான மலேசிய ஏர்லைன்ஸ் தற்போது 6,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்கியுள்ளது. இதனால் மலேசிய நிறுவனத்தின் செலவீணம் அதிகளவில் குறையும் எனவும் நிதி நிலை மேம்படும் எனவும் இந்நிறுவனம் நம்புகிறது.இந்நிறுவனத்தில் முல்லர் கடந்த மே 1ஆம் தேதி புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டப் பின் முதல் முறையாக தனது திட்டங்களை செய்தியாளர்கள் முன்னர் தெரிவித்தார்.6000 பணியாளர்களின் பணி நீக்கம் மட்டும் அல்லாமல், விமான இயங்கு தளத்தை குறைக்கவும், நிறுவனத்தின் பெயர் நம்பிக்கை உடையதாக மாற்றவும், நிறுவனத்தின் செயல் திறன் மற்றும் செயல் முறையை மேம்படுத்தவும் உள்ளதாக கிரிஸ்டோப் முல்லர் தெரிவித்தார்.கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய விமானமான எம்ஹெச் 370 239 பயணிகளுடன் காணாமல் போனது, எம்ஹெச் 17 298 பயணிகளுடன் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது போன்ற காரணங்களால் இந்நிறுவனத்தின் நம்பிக்கை சந்தையில் முழுவதும் பறிபோனது.திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் 20,000 பணியாளர்களுக்கு பணி நிக்க ஆணையை அறிவித்து, பின்னர் 14,000 பணியாளர்களுக்கு புதிய பணி நியமன ஆணையை அளித்துள்ளது மலேசிய ஏர்லையன்ஸ்.இதன் மூலம் மலேசிய ஏர்லைன்ஸ் சுமார் 6,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கு முன்னர் கிரிஸ்டோப் முல்லர் அயர்லாந்து நாட்டின் ஏர் லிங்கஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டின் சபானா நிறுவனத்தில் பணியாளர்கள் குறைப்பில் மிகப்பெரிய பங்காற்றினார். வர்த்தக உலகில் கிரிஸ்டோப் முல்லர் அவர்களை தி டெர்மினேட்டர் என்று தான் அழைக்கின்றனர்.
https://tamil.goodreturns.in/news/2014/12/17/india-exported-94-billion-illegal-capital-2012-study-003434.html
அரசை ஏமாற்றி 439 பில்லியன் டாலர் பணம் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்!!
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரையில் சுமார் 439 பில்லியன் டாலர் அதாவது 43,900 கோடி டாலர் முறைகேடான முறையில் வெளியேறியுள்ளது. இதில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 9,500 கோடி டாலர் வெளிநாடுகளுக்கு முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என குளோபல் பைனாசியல் இன்டகிரிட்டி (GFI) என்ற ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இந்நிறுவனம் 2003-2012ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் முறையற்ற வகையில் பண பரிமாற்றம் செய்ய பல நாடுகளை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது இதில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் சீன, ரஷ்யா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவை அடுத்து மலேசியா 5வது இடத்தை பிடித்துள்ளது.இத்தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவான 1.87 டிரில்லியன் டாலரில் 23 சதவீதமாகும். இவ்வாறு முறைகேடாக பண பரிமாற்றம் செய்யப்படுவதால், மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய பரிமாற்றக் கட்டணம் மற்றும் வரி பணம் என அனைத்தும் இழப்பு.மேலும் இத்தகைய பரிமாற்றத்தின் அளவு ஒவ்வொரு வருடத்திற்கு 9.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது, இது உலக மொத்த உற்பத்தி அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இத்தகைய நிலையில் உலக பொருளாதாரத்தின் ஸ்திர தன்மை கண்டிப்பாக பாதிப்புக்குள்ளாகும். எனவே இப்பிரச்சனையை அனைத்து நாட்டு தலைவர்களும் கருத்தில் கொண்டு முக்கிய தீர்வுகளை அளிக்க வேண்டும் என GFI நிறுவனத்தின் தலைவர் ரேமண்டு பேக்கர் தெரிவித்தார்.இத்தகைய முறைகேடான பரிமாற்றத்தை இரு முறையில் நடக்கிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.1. வேண்டுமென்றே வர்த்தக அறிக்கைகளை மாறி அமைப்பது.2. செலுத்துமதி நிலுவை அறிக்கையில் பொய்யான தகவல்களை அளித்தல்.இத்தகைய முறையில் சீன 1,252 பில்லியன் டாலர் அளவு பணத்தை முறைகேடாக பரிமாற்றம் செய்துள்ளது. அதை தொடர்ந்து ரஷ்யா 974 பில்லியன் டாலர், மெக்ஸிக்கோ 514 பில்லியன் டாலர், இந்தியா 439 பில்லியன் டாலர், மலேசியா 395 பில்லியன் டாலர், கடைசியாக பிரேசில் 217 பில்லியன் டாலர் அளவு பணத்தை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளது.
https://tamil.goodreturns.in/news/2014/07/23/sun-tv-shares-plunge-sharply-on-attorney-general-ruling-002853.html
2ஜி வழக்கில் தயாநிதி மாறன் கலாநிதி மாறனுக்கு சிக்கல்.. சன் டிவி பங்குகள் சரிவு..
சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் இருவரையும் குற்றம்சாட்ட போதுமான சாட்சியங்கள் தயாராக உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி புதன்கிழமை காலையில் தெரிவித்தார். இதனால் சன் டிவி நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் சரிந்தது.ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திற்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், மாறன் சகோதரர்களுக்கு உண்டு. இந்நிலையில் வலுக்கட்டாயமாக சிவ குழுமத்தின் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பின்பே முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் 2ஜி அலைக்கதிரை ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்கியதாக வழக்கில் உள்ளது. இதற்கான முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் உள்ளதாக முகுல் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை மேலும் சூடு பிடிக்க துவங்கியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை இன்னும் முடப்படதாக நிலையில் சன் குழுமத்திற்கு மேலும் ஒரு தலைவழியாக மேக்சிஸ் வழக்கு கிளம்பியுள்ளது.அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அளித்த தகவல் இந்தியா முழுவதும் பேஸ்புக்கை விட வேகமாக பரவியது இதனால் சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் 459 என்ற நிலையில் துவங்கி 415 ரூபாய் வரை சரிந்தது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கி முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் 9.60 சதவீதம் சரிவை தழுவியது.மேலும் முகுல், தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் இருவரையும் இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய போதுமான தகவல்களை உள்ளதாகவும், மாறன் சகோதரர்கள் செய்த முறைகேடான விஷயங்கள் மற்றும் ஏர்செல் மற்றும் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் உள்ள குளறுபடிகள் உள்ளடக்கிய அறிக்கையை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்தார்.முகுல் அளித்த சாட்சியங்களை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் மாறன் சகோதரர்களை விசாரணை முடிவு செய்திருக்கும் வேலையில், சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.கடந்த நவம்பர் மாதம் சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, இதில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை ஆய்வு செய்ததில் மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணன் அவர்களுக்கும் இந்த வழக்கிற்கு எந்த விதமான சம்மந்தம் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் இருந்தது.சன் டிவி பங்கு 10 சதவீதம் சரிந்திருக்கும் நிலையில் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 0.56 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
https://tamil.goodreturns.in/news/2014/07/21/higher-weight-food-items-causing-high-retail-inflation-govt-002839.html
உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு.. நடுத்தர மக்களின் நிலை??
டெல்லி: கடந்த ஒரு மாத காலமாக உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடந்த வாரம் 40 ரூபாயாக இருந்த ஒரு கிலோ தக்காளி, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் 100ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது, இதனால் வடமாநிலங்களில் சில இடங்களில் வெங்காய திருட்டுக் கூட நடந்தது.வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு, அண்டை நாடுகளிடம் இருந்து அதிகளவில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்தது. உணவு பொருட்களின் விலை உயர்வு இந்தியாவில் மட்டும் அல்ல உலக நாடுகளிலும் இதே நிலையை தான் சந்தித்து வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் உணவு பொருட்களின் விலை குறைய அதிகளவில் வாய்ப்பு உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் காய்கறியின் விலையில் ஒரு சிறு தாக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.பணவீக்கத்தின் காரணமாக இந்தியாவில் உணவு பொருட்களின் விலை 50 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளது. இதே நிலையில் கொரியா மற்றும் சீனாவில் 14 சதவீதம் மற்றும் 32 சதவீதம் மட்டுமே உயர்வை சந்தித்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உணவு பொருட்களின் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது குறைவான பருவ மழை, விவசாயிகளுக்கு குறைவான மானியம் மற்றும் ரியல் எஸ்டேட். இதில் ரியல் எஸ்டேட்டின் பங்கு மிக அதிகம் என்று சொன்னால் மிகையாகது, குறிப்பாக தமிழ்நாட்டில். இந்தியாவில் 2012ஆம் ஆண்டு உணவு பணவீக்கம் 10.2 சதவீதமாக இருந்தது, அதேபோல் 2013ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாக இருந்தது.பொருளாதாரம் மற்றும் வாழ்வாதரத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நாடான பாகிஸ்தான் உணவு பணவிக்கத்தில் 2013ஆம் ஆண்டு 7.4 சதவீதமாகவு, 2012ஆம் ஆண்டில் 11 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடதக்கது.2013ஆம் நிதியாண்டில் உலக நாடுகளில் உணவு பொருட்களின் மீதான மொத்த விலை பணவீக்கம் சீனாவில் 2.6%, கொரியாவில் 1.3%, இலங்கை 6.9%, இன்தோனேஷியா 6.4%, மலேசியா 2.1% மற்றும் தாய்லாந்தில் 2.2% என்ற அளவில் இருந்தது. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகளவில் உள்ளது.மத்திய அரசு நாட்டில் அதகரித்துள்ள உணவு பணவிக்கத்தின் நிலையை கூர்ந்து கவணித்து வருவதாகவும், அதை மேலும் அதிகரிக்க விடமால் குறைக்கவும் வழிவகை செய்து வருவதாக சில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.பணவீக்கத்தை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் இந்தியாவில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் எண்ணத்துடன் விவசாயத்தை வளம் பெற செய்யவும், உற்பத்தியை பெறுக்கவும் சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது.பசுமை புரட்சி என்பசு நீண்ட கால குறிக்கோள் என்றாலும், உணவு பொருட்களின் விலையை குறைக்கவும், சீர்படுத்தவும் மத்திய அரசு பல தரப்பட்ட முயற்சிகளை செய்து வருகிறது.2014ஆம் ஆண்டு ஜூன் மாத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர் விலைக் குறியீடு ஒரு மாத சரிவை சந்தித்தது, இதனால் மே மாதத்தில் 8.28 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.31 சதவீதமாக குறைந்தது. மேலும் உணவு பணவீக்கமும் 7.97 சதவீதமாக குறைந்தது குறிப்பிடதக்கது.
https://tamil.goodreturns.in/news/2014/03/26/nominee-to-wait-7-years-for-dead-person-s-insurance-cla-002300.html
இன்ஷூரன்ஸ் இழப்பீட்டைப் பெற 7 வருடம் காத்திருக்க வேண்டும்!!
மும்பை: ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர் காணாமல் போய் விவரம் ஏதுமின்றி இருப்பின், சட்டப்படி அவரின் வாரிசுதாரரோ அல்லது அவரால் முன்மொழியப்பட்ட நபரோ இழப்பீட்டைப் பெற ஏழு வருடம் வரை காத்திருக்கவேண்டும் என காப்பீட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்."இந்திய சாட்சிகள் சட்டப்படி, காணாமல் போன ஒரு நபர் ஏழு வருடம் கழிந்த பிறகே இறந்தவராகக் கருதப்படுவார்" என இண்டியா ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இழப்பீட்டுத் துறைத் தலைவர் எஸ். ஹேமலாபதி தெரிவித்தார்.சமீபத்தில் மிகப்பெரிய தேடுதலுக்கு பிறகு கிடைத்த மலேசிய விமானமான எம்எச்370 விமானத்தில் பயணித்த பயணிகளுக்கான இழப்பீட்டை அவர்களது வாரிசுகள் பெறத்தேவையான வழிமுறைகள் பற்றி அவரிடம் கேட்டபோது, "விமானத்தில் பயணிகள் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் அவர்களது வாரிசுகள் இறப்புச்சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக இறப்புச் சான்றிதழ் வழங்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது."மலேசிய விமானத்தில் இறந்தவர்களின், இறப்புச் சான்றிதழ் மற்றும் உறுதிமொழிப்பத்திரம் அளித்த 24 மணி நேரத்தில் அவர்களுக்கான இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.விபத்துகள் தொடர்பான இறப்புகளில், இறப்புச் சான்றிதழ் விபத்து நிகழ்ந்த பகுதியின் உள்ளூர் நிர்வாகத்தால் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.வாரிசுதாரர்கள் அல்லது முன்மொழியப்பட்டவர்கள் காப்பீட்டுப் பாலிசியை பத்திரமாக வைத்து இறந்தவர் குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு வரும் வரையில் பிரிமியத் தொகையைச் செலுத்தவேண்டும்."விமான நிறுவனங்கள் இது தொடர்பான நபர் பயணம் செய்ததை உறுதிசெய்து அதற்குண்டான சான்றை அளிக்கவேண்டும். இந்தியாவில், இரயில் பயணங்களின்போது ஒருவர் மற்றொருவர் பயணச்சீட்டில் பயணிக்கும்போது சிக்கல் உருவாகிறது. ஏனென்றால் இறந்த பயணி ஒரு சரியான பயணச்சீட்டை வைத்திருந்தார் என இரயில்வே நிர்வாகம் உறுதியளிக்காது" என காப்பீட்டுத் துறை சீரமைப்புக் குழுவான மல்ஹோத்ரா குழுவின் உறுப்பினரும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி-யின் முன்னாள் செயல் இயக்குனருமான ராமகிருஷ்னன் தெரிவித்தார்.இன்ஷுரன்ஸ் நிறுவன அதிகாரிகள் பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற பயங்கர சம்பவங்களின்போது இழப்பீட்டு வழிமுறைகள் எளிதாக்கப்படும் எனத் தெரிவித்தனர்இதனிடையே, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான விமானத்தின் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனத்தின் காப்பீட்டு நிறுவனமான அல்லியன்ஸ் ஆப் ஜெர்மனி-யிடமிருந்து பெறத்துவங்கியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்த விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களின் குடும்பம் மிகவும் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் 2 இளைஞர்கள் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் (தந்தை, தாய், மகன்) ஆகியோர் அடக்கம்.
https://tamil.goodreturns.in/world/is-leonardo-dicaprio-involved-malaysia-1mdb-scam-006229.html
மலேசியா ஊழல் வழக்கில் சிக்கினார் 'ஆஸ்கர்' நாயகன்..!
வாஷிங்டன்: மலேசியாவில் நடந்த ஒரு ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ நடித்த தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டிரீட் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஊழல் வழக்கிற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று டிகாப்ரியோ-விடம் விசாரணை செய்யப்பட உள்ளது.மலேசியாவில் நடத்த ஊழலுக்கும் தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டிரீட் படத்திற்கும் என்ன சம்மந்தம். ஆனால் ஊழல் செய்யப்பட்ட தொகையை கேட்டால் நீங்க ஆடிப்போயிருவீங்க.மலேசிய நாட்டின் முதலீட்டு நிதி நிறுவனமான 1MDB நிறுவனத்தில் செய்யப்பட்ட 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊழல் செய்யப்பட்டுள்ளது என்றும், ஊழல் செய்யப்பட்ட தொகையில் பாக்ஸ் ஆபிஸ் படமான தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டிரீட் படம் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகத்துடன் இப்படத்தில் நடித்த நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ-வை விசாரிக்க வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின் லியனார்டோ டிகாப்ரியோ அமெரிக்க நிதித்துறையின் உதவியை நாடியுள்ளார். 2 வருடத்திற்கு 1MDB நிறுவனத்தில் ஒரு பல்லியின் டாலருக்கும் அதிகமான தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மீது சர்வதேச ஊழல் மற்றும் பணச் சலவை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினால் மலேசிய அரசியலே ஆடிப்போனது. காரணம் 1MDB நிறுவனம் என்பது ஒரு அரசு நிறுவனமாகும்.மலேசியாவின் 6வது பிரதமர் நாஜிப் ரசாக் தலைமையில் தான் 2009ஆம் ஆண்டு 1MDB என்னும் அரசு முதலீட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.அமெரிக்க நிதி அமைப்பு செய்த விசாரணை மற்றும் ஆய்வில் பிரதமர் நாஜிப் ரசாக் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் தான் இந்த 1 பில்லியன் டாலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஊழலில் நாஜிப் ரசாக் மற்றும் 1MDB எவ்விதமான தவறும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.இந்த நிறுவனத்தில் ஊழல் செய்யப்பட்ட தொகை அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக அமெரிக்க நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பணத்தில் தான் ரெட் கிரானைட் பிச்சர்ஸ் என்னும் புரொடக்ஷன் ஹவுஸ் உருவாக்கப்பட்டது.ரெட் கிரானைட் பிச்சர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்களில் ஒருவர் Riza Aziz. இவர் மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக்-இன் வளர்ப்பு மகன் ஆகும். இங்குத் தான் அமெரிக்காவிற்கும் மலேசிய நாட்டிற்கும் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ மீது சந்தேகம் எழுந்துள்ளது.'ஜியோ' உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே.. மகிழ்ச்சி பொங்கும் அனில் அம்பானி..!சன்னி லியோன்-க்குள் இப்படியொரு திறமையா..? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..! 
https://tamil.goodreturns.in/news/2016/03/08/engineering-exports-19-nations-dip-sharply-eepc-005279.html
டாப் 19 நாடுகளுக்கான இன்ஜினியரிங் ஏற்றுமதியில் இந்தியா சரிவு..!
டெல்லி: சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக நாட்டில் இன்ஜினியரிங் ஏற்றுமதி அளவு அதிகளவில் குறைந்துள்ளது. இந்தியாவின் இன்ஜினியரிங் ஏற்றுமதிக்கான சிறந்த டாப் 25 நாடுகளில் 19 நாடுகளுக்குச் சராசரியாக 50 சதவீதம் குறைவான அளவில் ஜனவரி மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.(நீங்கள் மாத சம்பளம் வாங்குபவரா..? சிடிசி பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா..?)இதில் மலேசியா நாட்டிற்கான ஏற்றுமதி அளவுகள் மட்டும் சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இன்ஜினியரிங் ஏற்றுமதி மதிப்புகளின் அளவுகள் மட்டும் 6.70 பில்லியன் டாலரில் இருந்து 28 சதவீதம் குறைந்து 4.82 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.இந்திய நாட்டின் இன்ஜினியரிங் ஏற்றுமதியின் டாப் 25 வாடிக்கையாளர்களில் மிகமுக்கியமாகக் கருதப்படும் மலேசியாவிற்கு மட்டும் ஏற்றுமதியின் மதிப்பு 830.88 மில்லியன் டாலரில் இருந்து 78.22 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது எனப் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (EEPC) அமைப்பின் தலைவர் டி.எஸ்.பாசின் தெரிவித்துள்ளார்.அதேபோல் டாப் 25 லிஸ்டில் 2வது இடத்தில் இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி அளவுகள் 50 சதவீதம் குறைந்து 484.12 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் எஞ்சினாகக் கருதப்படும் சீனா நிதிநெருக்கடியில், பொருளாதாரச் சரிவிலும் தவித்து வருவதால் சர்வதேச நாடுகளின் உற்பத்தி அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது.இதன் ஒருபகுதியாகவே இந்திய தற்போது இன்ஜினியரிங் ஏற்றுமதி அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் எஃகு, ஸ்டீல், காப்பர் பொருட்களின் வர்த்தகம் இந்திய சந்தையில் வரலாறு காணாத அளவில் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.கடந்த 14 மாத தொடர் ஏற்றுமதி சரிவில் ஜனவரி மாதம் 13.6 சதவீதம் சரிந்து 21 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.மேலும் கடந்த 8 மாத காலத்தில் நிலக்கரி இறக்குமதியில் முதல் முறையாக உயர்வடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் நிலக்கரி இறக்குமதி அளவு 1.7 சதவீதம் அதிகரித்து 16.79 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு  
https://tamil.goodreturns.in/news/2014/11/12/modi-invites-malaysian-companies-invest-india-003304.html
வாங்க, இந்தியாவில் வந்து தொழில் துவங்குங்கள்: மலேசிய நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு
நாபிடா: இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு பிரமதர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் சென்றுள்ளார். அங்கு அவர் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்கை சந்தித்து பேசினார். அப்போது அவர் நஜீபிடம் கூறுகையில், கடந்த காலங்களில் இந்தியாவும், மலேசியாவும் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்துள்ளது. இந்த உறவை நாம் மேலும் மேம்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.அந்த சந்திப்பிற்கு பிறகு மோடி கூறுகையில், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு மலேசிய நிறுவனங்களை அழைக்க விரும்புகிறேன். இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார்.ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை இந்தியா நம்பி உள்ளது. வரும் 2022ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் மோடி. மலேசியா வீடு கட்டும் தொழிலில் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் இந்தியாவிலும் வீடு கட்டும் துறையில் மலேசிய நிறுவனங்கள் ஈடுபடலாம் என்று மோடி தெரிவித்துள்ளார்.
https://tamil.goodreturns.in/news/2014/07/16/airasia-x-inks-deal-buy-500-units-the-airbus-a330neo-002820.html
50 புதிய ஏர்பஸ் விமானங்களை வாங்கும் எக்ஸ்!!
கோலாலம்பூர்: மலேசிய விமான நிறுவனமான ஏர் ஏசியா எக்ஸ் தனது நிறுவனத்தின் பிராந்திய விரிவாக்கத்திற்காக 50 ஏர்பஸ் ஏ330 நியோ விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்திலும் ஏர்ஏசியா கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடதக்கது.இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து புதிய விமான சேவையை துவங்கியது. இந்த கூட்டு நிறுவனத்தின் வருகையால் இந்தியாவின் பிற விமான நிறுவனங்களுக்கும் போட்டி அதிகரித்துள்ளது.இந்த ஒப்பந்தம் லண்டனில் நடந்த ஃபார்ன்பரோ ஏர்ஷோ நிகழ்ச்சியில் கையெழுத்திடப்பட்டது. இதன் மதிப்பு 13.8 பில்லியன் டாலர் ஆகும், ஆனால் மொத்த விற்பனை காரணத்தால் இந்நிறுவனம் மொத்த மதிப்பு 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை விலையை குறைக்கும்.ஏர்பஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்த விமானங்களை ஏர்ஏசியா நிறுவனத்திற்கு வருகிற 2018-2024 ஆம் ஆண்டு இடைவேளையில் விநியோகம் செய்ய உறுதி அளித்துள்ளது.ஏர்ஏசியா நிறுவனம் ஏர் பஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒரு நிறுவனம். இந்நிறுவனத்திடம் மட்டும் சுமார் 536 ஏர்பஸ் விமானங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.ஏர்ஏசியா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஏர்ஏசியா எக்ஸ் 2007ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனம் அசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 17 இடத்திற்கு விமான சரக்கு மற்றும் போக்குவரத்து சேவை அளித்து வருகிறது.
https://tamil.goodreturns.in/news/2014/01/09/iit-invited-to-open-centre-in-malaysia-001969.html
மலேசியாவில் ஐஐடி கல்லூரியை திறக்க வேண்டுகோள்!! திறக்கப்படுமா??..
டெல்லி: இந்தியாவில் சிறந்த கல்லூரி என்றாலே நாம் அனைவரும் கண்களை முடிக்கொண்டு சொல்வோம் ஐஐடி என்று. உண்மை தான் இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவில் ஐஐடி டாப் 50 சிறந்த கல்லூரிகளில் ஒன்று. இத்தகைய கல்லூரி இந்தியாவில் இருப்பது நமக்கு பெருமையான விஷயம். ஆனால் இதில் ஒரு சங்கடமான விஷயமும் உண்டு. இத்தகைய உலக தரம் வாய்ந்த கல்லூரிகளில் படித்த இந்திய இளைஞர்கள் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். (பிறகு இந்தியாவை யார் வல்லரசு நாடாக மற்றுவது??..)இந்த பெருமைக்குரிய ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியை தங்கள் நாட்டிலும் ஒரு கிளையை துவக்க நம் அன்டை நாடான மலேசியா வேண்டியுள்ளது. இந்த தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் சுமார் 2 மில்லியன் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.இயற்கை வளங்கள் மற்றும் சுற்றச்சூழல்களுக்கான மலேசிய பெடெரல் அமைச்சர் டட்டு செரி ஜி. பழனிவேல், இந்தியாவில் நடைபெற்ற 12-ஆவது பிரவசி பாரதிய திவாஸ் விழாவில் உரையாற்றுகையில், தன் நாட்டில் கிளை திறக்க ஐ.ஐ.டி-க்கு அழைப்பு விடுத்தார்.பல் மருத்துவம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்றவைகளை படித்திட மலேசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த சில கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே மலேசியாவில் கிளைகளை திறந்துள்ளனர் என்று அவர் கூறினார்.பிரவசி பாரதிய திவாசின் சிறப்பு விருந்தாளியாக வந்திருந்த பழனிவேல், மலேசிய இந்தியன் காங்கிரஸின் தலைவராவார். பையோடைவர்சிட்டி துறையில் இந்தியாவுடன் இனைந்து மிகவும் நெருக்கமாக வேலை செய்ய அவர் நாடு விரும்புவதாகவும் அவர் கூறினார்.இயற்களை வளங்கள் மற்றும் பயன்களை பகிர்தலுக்கான வரைவுச் சட்டம் முடிவாக வேண்டிய நேரத்தில், தேசிய உயிரிய வேற்றுமை சட்டத்தை அமுல்படுத்திய இந்தியாவின் அனுபவத்திலிருந்து மலேசிய அரசாங்கம் கற்றுக் கொண்டது என்று அவர் தெரிவித்தார்.மகாத்மா காந்தி, 1915-ஆம் ஆண்டு இதே நாளில் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியதை நினைவு கூறும் வகையில் இந்த விழா ஒவ்வொரு வருடமும் ஜனவரி 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்று அவர் நினைவு படுத்தினார்.இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள நம் மக்கள் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூமியோடு தொடர்பில் இருக்க இந்த கொண்டாட்டங்கள் உதவும் என்று வெளிநாட்டு இந்திய விவகார அமைச்சர் வயலார் ரவி தன் வரவேற்பு உரையில் கூறினார்.
YAML Metadata Warning: empty or missing yaml metadata in repo card (https://huggingface.co/docs/hub/datasets-cards)
Downloads last month
0
Edit dataset card