செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகும் மதுரமும் போலுந் துரியம் பொடிபடி வுள்புகச் சீல மயிர்க்கால் தொறுந்தேக் கிடுமாமே. பொருளுரை: திருவருளால் சிவபெருமான் செயலறலாகிய துரியம் அடங்கிக் கடந்த விடத்துப் பால் போன்ற திருவருள் தட்பமும் தேன் போன்ற சிவனார் வெப்பமும், முப்பழச் சுவையும், தூய 'பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்த' தூய திருவமுதின் இனிமையும் போன்ற தென்பதன்றி இன்னதன்மைத் தென்றுகூற வொண்ணாததாகவுள்ள திருவடி நுகர்வொழுக்கம் மயிர்க்கால் தோறும் நிறைந்து நின்று குறைவிலா இன்பத்தை யருளும். பாலும் தேனும் ஏனைய போன்று சுவைப் பொருளாக எண்ணலும் ஒன்று. குறிப்புரை: வாலிய - பரிசுத்தமான. மதுரம் - சுவை. பண்ணையும். சிவஞானபோதம், . - .
அமரத் துவங்கடந் தண்டங் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. பொருளுரை: சிவபெருமான் பிறப்பில்லாதவன்; அதுபோல் இறப்புமில்லாதவன் அம் முறையால் கூற்றை வென்ற குணக்கடல் என்றருளினன். அமரத்துவம் ஈண்டுக் கூற்றுத்தன்மை. கடத்தல் - வெல்லுதல். சிவன் பல்வேறு அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவன். அவன் முப்பத் தாறாம் மெய்யாகிய ஓசையென்னும் நாததத்துவத்தின்கண் திருவடிவைப்பவன். தமரம் - ஓசை, ஈண்டு நாததத்துவம், ஒப்பில்லாதவன், ஆண்டருளும் அருட்செல்வன். ஆற்றலாகிய திருவருட் சத்தியுடன் பெரும்பொருட்சிவன் கூடியருள்கின்றனன். அதனால் மயக்குடையவனே என்னும் மருளினை நீக்கியருளுகின்றனர். பவழம் போன்ற இதழையும், முத்துப்போன்ற பற்களையும், இனிய மொழிகளையும் உடைய சத்தியாகிய பெண்களுடன் கலந்து நின்றும் புலன்வென்றவன் ஆகின்றான். அத்தகைய மயக்கமில்லாத அறிவுப் பேரொளி. ஆருயிர்களின் நன்மையின் பொருட்டு அவ் வுயிர்களுடன் தொடர்ந்து நின்று 'புறம் புறம் திரிந்த' செல்வனாகின்றனன். குறிப்புரை: அமரத்துவம் கடந்து - கூற்றுவனை வென்று. தமரத்து - நாத தத்துவத்தில். துவள் - மயக்கம். அன்றாலின். அப்பர், . - . " பொறிவாயி. திருக்குறள், .
மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச் சுத்தம தாகுந் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச் சத்திய ஞா னானந்தஞ் சார்ந்தனன் ஞானியே. பொருளுரை: மத்திமமாகிய உண்ணிலைக் கருவிகளையும் முப்பத்தாறு மெய்களையும் திருவருளால் நாமல்ல என்று உணர்வது தத்துவ உண்மையுணர்தல். அங்ஙனம் உணர்ந்து, அவை சிவனுடைமை, அவன் திருவடிசேரத் துணையாகும்படி அவனால் அருளப்பட்ட கருவிப் பொருள்கள் என்று கைக்கொண்டு ஒழுகுதல் மாற்றுதல் என்பதாகும். அவை அங்ஙனம் மாற்றப்படவே தானே நீங்கும். தூய்மையும் தானே வந்து தலைக்கூடும். செயலறலாகிய துரியத் தூவாமையும் நீங்கும். நீங்கவே கட்டு நீங்கும். இக் கட்டு நீங்கவே சிவமாகித் திகழ்வோம். இயற்கையுண்மை அறிவு இன்பவடிவினைச் சார்வோம். சார்ந்து நாமும் அவ்வாறு நிற்பதனால் பொன்றாப் பேரொளிப் பிழம்பாவோம். இது வாயிலாகவே உண்மை அறிவின்பமாகிய ஓங்குயர் விழுச்சீர்த் திருவடியைப் பாங்குற எய்துவோம். இத்தகைய நிலையே ஞான நிலையாகும். இது பெற்றோனே ஞானியாவன். 'சார்' என்பது ஆகுபெயராகச் சார்வோனைக் குறிக்கின்றது. குறிப்புரை: சத்தியஞான ஆனந்தம் இன்னதென இம் மந்திரம் கூறுகின்றது. மத்திமம் - உண்ணிலைக் கருவிகள். ஆறாறு - தத்துவங்கள். துரியத் துரிசு - துரிய அவத்தை. பெத்தம் அற - பாசம் நீங்க. பிறழ்வுற்று - விளங்கி.
சிவமா யவமான மும்மலந் தீரப் பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானானந் தத்தே துவமார் துரியஞ் சொரூபம தாமே. பொருளுரை: திருவருளால் சிவனிலை எய்திய ஆருயிர்க்குப் பிறப்பினைத் திரும்பத் திரும்பத் தரும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங் களும் அறும். அறவே ஆருயிர் திருவடித் தூய்மையை உறும். உறவே பிறப்பினைத் தரும் குற்றமாகிய முப்பாழும் பற்றற அகலும். முப்பாழ் ஆருயிர்த்துரியம், அருட்டுரியம், அருளோன் துரியம் எனவும் கூறப்படும். பாழ் என்பது சொல்லொணா அருவநிலை. அவை அகலவே சிவத்தைப் பேணலாகிய தவத்தால் வரும் இயற்கை உண்மை அறிவின்பப் பற்று வாய்க்கும். அதுவே மேன்மைவாய்ந்த செயலறுதலாகிய துரியமாகும். இந் நிலைமையே உண்மை நிலையாகும். குறிப்புரை: அவமான மும்மலம் - பிறப்பைக் கொடுக்கும் ஆணவம், கன்மம், மாயை, பவமான - குற்றமுள்ள. முப்பாழ் - மும்மாயையை.பற்றற - பாசம் நீங்கும்பொருட்டு. துவம் - மேன்மை.
ஒன்பதாம் தந்திரம். சொரூப உதயம் பரம குரவன் பரமெங்கு மாகித் திரமுற எங்கணுஞ் சேர்ந்தொழி வற்று நிரவு சொரூபத்துள் நீடுஞ் சொரூபம் அரிய துரியத் தணைந்துநின் றானே. பொருளுரை: திருவைந்தெழுத்தினைச் செவியறிவுறுக்கும் சிவகுரு பரமகுரவனாவன். அவன் எண்ணிலவாய் எங்கும் பெருகியுள்ள பரமாகிய ஆருயிர்கள்மாட்டு நீக்கமற நிறைந்து நிற்கின்றனன். யாவும் உறுதிப் பாடெய்தச் சிவபெருமான் உறுதிப்பாட்டுடன் எங்கணும் நிறைந்து நிற்கின்றனன். எங்கணும் நிறைந்துள்ள சிவத்துடன் கூடியவுயிர் சார்பினால் எங்கணும் நிறைந்தனவாகும். அஃது ஆருயிரின் உண்மை நிலையாகும். உண்மை நிலையினைச் சொரூபநிலை என்ப. அவ்வுண்மை நி்லையினுள் நிலைபெற்ற உண்மை நிலையாக நின்றியக்குபவனும் சிவனே. இந் நிலையே அரியதுரிய நிலையாகும். அந் நிலைக்கண்ணும் அவன் அணைந்து நின்றருளினன். நம் பரம குரவரிவரென வருமாறு நினைவு கூர்க: 'நால்வர்நம் மூலர் நயந்தெமையாள் ஐங்குரவர், சால்பாம் 'சிவயசிவ' சார்ந்து. கருவனே. அப்பர், . - .
குலைக்கின்ற நீரிற் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செயு மாறறி யேனே. பொருளுரை: ஒருநிலைப்படாது ஏனையவற்றின் நிலையினையும் குலைத்துத் தாமும் குலைவுறுவன ஐம்பெரும் பூதங்கள். அவை: மண், நீர், அலைக்கின்ற காற்று, அனல், வெளி என்பன. இவற்றுடனும், இவற்றின் சேர்க்கை யாகிய நிலத்துடனும், வானத்துடனும் நீக்கமற விரவி நின்றருள்பவன் சிவன். அத்தகைய நிலைபெற்றுயர்ந்த சிவபெருமானை இடத்தாலும், காலத்தாலும், படிமத்தாலும் ஓர் எல்லைப்படுத்து அளவிட்டுரைத்து வலம் செய்து வழிபடுமாறு எவ்வாறு என்று உன்னின், அஃது உரைக்கவும் உன்னவும் ஒண்ணாததாகும். அக் குறிப்பே ஆறு அறியேனே என்பதாகும். படிமம் - திருவுருவம்; விக்கிரகம். குறிப்புரை: குலைக்கின்ற - நிலையைக் குலைக்கின்ற, தளரச்செய்கின்ற. குவலயம் - மண், பூமி. வரைத்து - ஓர் அளவில் அமைத்து.
அங்குநின் றானயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர் தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை பொங்கிநின் றான்புவ னாபதி தானன்றே. பொருளுரை: உம்பர் உலகத்துள்ள அயன் மால் அரன் முதலிய தேவர்களும், எங்கும் நிறைந்துள்ள யாவர்களும் உய்யுமாறு இறைவனே என்று பாடிப் பரவிப் பணிவார்கள். ஒப்பில் தனி நாயகனாகிய சிவபெருமான் எங்கணும் தங்கி நின்றருளினன். அவன் தனிப்பெரும் விளக்கமாய் இருநூற்றிருபத்து நான்கு புவனங்களென்று சிறப்பித்துச் சொல்லப்படும் உலகங்கட்கும் ஏனைய அண்டங்கட்கும் ஒரு முதலாய்த் திகழ்கின்றனன். குறிப்புரை: பொங்கி-விளங்கி; புவனாபதி - அண்டங்களுக்கெல்லாம் அதிபதி.
சமையச் சுவடுந் தனையறி யாமற் கமையற்ற காமாதி காரணம் எட்டுந் திமிரச் செயலுந் தெளிவுடன் நின்றோர் அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே. பொருளுரை: நன்னெறித் திருவடையாளங்களையும் தன்னையும் சிறப்பாக அறிந்து முழுமுதலை வழிபட்டு அகவிழி பெற்று உய்யவேண்டுவது ஆருயிரின் கடமையாகும். அக் கடமையை வழுவுமாறு செய்து தடுக்குங் காரணங்கள் எட்டு. அவை முறையே செருக்கு, சினம், சிறுமை, இவறன்மை, மாண்பிறந்த மானம், மாணா உவகை, மண், பொன் என்பனவாகும். இவை பொறுமையை யிழப்பித்துச் சிறுமையுறச் செய்யும் தீமைகளாகும். இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக வுள்ளது ஆணவவல்லிருளாகும். அதுவே. திமிரம் எனப்படும். திருவருளால் இவையனைத்தையுங்கண்டு உண்மை யோர்ந்து தெளிந்து நிற்பர் மெய்யடியார். அவர்கள் நன்னெறிக்கு நற்றூணாவர். அவர்கள் உம்பர்வாழ் தேவர்கட்கும் முதல்வராவர். குறிப்புரை: சுவடு - குறிகள். கமை - பொறுமை. காமாதி எட்டு - பெண்ணாசை, குரோதம், மதம், மோகம், உலோபம், மாச்சரியம், பொன்னாசை, மண்ணாசை ஆக .
மூவகைத் தெய்வத் தொருவன் முதலுரு வாயது வேறா மதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே. பொருளுரை: உடல் மெய்யாகிய இருபத்து நான்காம் மெய்யுச்சியில் அயன் அரி அரன் என்னும் மூவரும் நின்றனர். இவர்கள் படைப்போன், காப்போன், துடைப்போன் என்னும் பெயரானும் அழைக்கப்படுவர். இம் மூவருள் ஒருவனாகிய அரன் தொழிலால் இவர்கள் வரிசையின் வைத்து எண்ணப்படுவன். ஆயினும் ஏனையிருவகையினரையும்போன்ற பெருமயக்குறுவோனல்லன். அதனால் அவன் வேறுபட்டவனுமாவன். அதுபோல், அணுவாகிய ஆருயிரும், பரனாகிய சிவனும் கலப்பால் ஒன்றாய் விராஅய் நிற்பினும் பொருட்டன்மையால் சிவன் வேறாவன். சிவபெருமான் நினைப்பிற்கும் எட்டா நெடுஞ்சேய்மைக் கண்ணுள்ளவனாவன். ஆருயிர்ச் செயலறல், அருட் செயலறல், அருளோன் செயலறல் ஆகிய மூன்றும் முத்துரியமாகும். இவற்றான் ஆருயிர்கள் சிவபெருமானின் திருவடியிணையினை எய்துதல் கூடும். எய்துதற்குரிய வழிகளும் இவையே என்று இறை நூல் இயம்பும் என்க. இறை நூல் என்பன செந்தமிழ் நெறி நூலும் துறை நூலுமாகும். நெறி நூல் வேதம், துறை நூல் ஆகமம். இவ்வுண்மை 'வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க' என்னும் சேக்கிழாரடிகள் அருண்மொழியான் உணரலாம். குறிப்புரை: மூவகைத் தெய்வம் - அயன், அரி. அரன். ஒருவன் முதல் உருவாயது வேறாம் - ஒருவனாகிய அரன் அம் மூவரில் ஒருவனாகியும் வேறாகியும் நிற்பதுபோல. அணு-சீவன். சேய-எண்ணுதற்கரிய. முத்துரியம்-சிவ, சீவ, பரதுரியங்கள். இறைநூல் - தமிழ் வேதங்களும், தமிழ்ச் சிவாகமங்களும்.
உருவன்றி யேநின் றுருவம் புணர்க்குங் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்குங் கூடவொண் ணாதே. பொருளுரை: சிவபெருமான் தனக்கென ஓர் உருவம் இல்லாதவன். அங்ஙனமிருந்தும் ஆருயிர் உய்தற்பொருட்டு அவ் வுயிர்கட்கு மாயையினின்றுங் காரியப் பொருளாக முதலுடம்பு, மீநுண்ணுடம்பு, குணவுடம்பு, நுண்ணுடம்பு, பருவுடம்பு என்னும் ஐவகை உரு வுடலையும் படைத்தருளி நல்குகின்றனன். இதுவே அவன் உயிர்க்கு உருவம் படைத்துப் புணர்க்கும் உண்மையாகும். தனக்கோர் காரணமின்றித் தானே முழுமுதலாய் நிற்பவன் சிவன். ஆயின் அவன் எல்லாவற்றிற்கும் எஞ்ஞான்றும் வினைமுதற் காரணமாக இருப்பவன் ஆவன். அவன் எல்லாவற்றுடனும் விரவி விட்டுப் பிரிவின்றி நிற்பினும் அருவ நிலைகூட எய்துதலில்லாத சிவன் உயிருடனும் உடல் உலகுகளுடனும் புணர்ந்து நிற்கும் மாயப்பெருமானாக விளங்குகின்றனன். அப் பெருமானைக் கண்டு அவனருளால் அவன் திருவடியிற் கூடும் பெருவாழ்வினை எய்துதல் கூடும். அவ் வாழ்வு எய்துவதற்கு அவனே சிவகுருவாக எழுந்தருளி வந்தால் மட்டும் முடிவதாகும். வேறு ஒன்றாலும் முடியாதாகும். குறிப்புரை: கருவன்றி - தனக்கு ஒரு காரணம் இன்றி. மருவன்றி - ஒன்றோடும் கூடுதல் இன்றி. நோக்காது. சிவஞானபோதம், . - . " உலகமே. சிவஞானசித்தியார், . - . " மந்திரத்தான். " . - .
உருவ நினைப்பவர்க் குள்ளுறுஞ் சோதி உருவ நினைப்பவர் ஊழியுங் காண்பர் உருவ நினைப்பவர் உம்பரு மாவர் உருவ நினைப்பவர் உலகத்தில் யாரே. பொருளுரை: சிவபெருமானின் திருவுருவினைக் குறித்து நாடுங் குணமுடையோர் சித்தத்துள் அறிவுப் பேரொளியாய் நின்று அவன் விளங்குவன். நினைத்தல் - தியானித்தல்; தேனித்தல். அம் முறையான் திருவுருவினை அன்புடன் நாடுவார் பலவூழிகளையும் அருளால் காண்பர். அத்திருவுருவினையெப்போதும் நினைப்பவர் சிவ வுலக வாழ்வினராவர். சிவ வுலகம் - திருக்கயிலை. மேலும் அக் குறியா நினைவுடையார் உலகத் தோடியைந்து நடப்பினும் அவர் உலகங் கடந்தவராவர். இவ் வுண்மையினை உலகிடை உண்மையாலறிவார் எவர்? சிரிப்பார், . கோயின் மூத்த திருப்பதிகம், .
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி என்னுட் படிந்ததற் பின்னைப் பரஞ்சோதி யுண்ணான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே. பொருளுரை: திருவருளால் பரஞ்சோதியாகிய பேரொளிப் பெரும் பொருளைப் பற்றும் பேறு பெற்றேன். பற்றவே அச் செம்பொருளும் என்னுள் படிந்தருளிற்று. அங்ஙனம் படிந்தருளியபின்னை அப் பேரொளிப் பெரும்பொருளினகத்து அடியேனும் மெள்ள மெள்ளப் படிவிக்கப் பெற்றேன். அங்ஙனம் படியப்படியப் பேரொளிப் பெரும் பொருள் தன்னை யுணர்த்தி உரைத்தருளவும் கண்டேன். பறைதல் - பறைபோல் பலரும் அறிய விளம்பல் 'யுண்ணான்' :யள் + நான்.
சொரூபம் உருவங் குணந்தொல் விழுங்கி அரியன வுற்பல மாமாறு போல மருவிய சத்தியாதி நான்கு மதித்த சொரூபக் குரவன் சுகோதயத் தானே. பொருளுரை: அரியனவாகிய செங்கழுநீர் மலரின்கண் சொரூபமாகிய மணமும், உருவமாகிய வடிவழகும், குணமாகிய மென்மையும் பண்டே நிறைந்துள்ளன. அவற்றுடன் அரியனவாகிய தூய்மையும் சேர நான்காகும். அதுபோன்று பொருந்திய சிவம், ஆற்றல், அருள்,. ஆருயிர் நான்கும் கலந்த பேருயிர் வடிவம் சிவகுரவன் ஆவன். அச் சிவகுருவின்பால் பேரின்பப் பெருந்தோற்றம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு பொலியும். பொலியும் - மிக்கு விளங்கும். சொரூபம் - இயற்கை உண்மைத் தன்மை. குறிப்புரை: சத்தியாதி நான்கு - சத்தி, சிவன், பரம், சீவன். மதித்த - கலந்த.
உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன் கரையற்ற சத்தியாதி காணில் அகார மருவுற் றுகார மகாரம தாக உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே. பொருளுரை: சொல்லொணாப் பேரின்ப மோன உண்மை வடிவினன் சிவகுரவன். அவன்பால் எல்லையில்லாத அருட் பண்புகள் சேர் சத்தி முதலியவற்றைத் திருவருளால் காணுங்கால், இயற்கை ஒலியாகிய அகரமும், அவற்றொடு கூடும் உகரமகரங்களும் ஆகித் தோன்றும். அத் தோற்றமே ஒமொழி மறையாகும். அம் மறையின்கண் அறிவுப் பேரொளியாய் உள்ளொளியாய் விளங்குவது திருவருளாகும். குறிப்புரை: தாரம் - பிரணவம்.
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனிற் கண்டுகொண் டேனே. பொருளுரை: முதன்மையும், சிறப்பும், மூவா மேன்மையும் உடைத்தாய் ஓங்கி யுயர்ந்து தலையாக நின்ற திருவருள் தாழும் திருமலை திருக்கயிலை. தாழ்தல் - தங்குதல். அத் திருக்கயிலையின்கண் ஒப்புயர்வில்லா ஒரு பெரும் நற்றவம் புரிபவள் உலகறி அன்னை. அவளாலறியப்படும் வள்ளல் சிவபெருமான். அத் திருவருளால் அடியேனும் தூயதல்லாதவை நிறைந்துள்ள அழகின்மையும் குற்றமும் பொருந்திய பிறவியைக் கடந்துள்ளேன். அன்பின் பிணிப்பில் கள்வன்போல் கட்டுண்டு நின்ற அச்சிவபெருமானைத் திருவருளால் கண்டுகொண்டேன். குறிப்புரை: தலைநின்ற தாழ்வரை-கயிலை. முலைநின்ற மாது-வயதுவந்த உமை. குரும்பைமுலை. நம்பி, . - . " அள்ளலைக். அப்பர், . - . " வெள்ளிநீர்ச். " " - .
ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமா றறிந்தேன் புகுமாறு மீதென்றே ஏமாப்ப தில்லை இனியோ ரிடமில்லை நாமா முதல்வனும் நானென லாகுமே. பொருளுரை: திருவருள் துணையால் உயிரினுக்கு உயிராய் அகத்தே நிற்கும் அரும்பொருளாகிய சிவபெருமானைக் கண்டுகொண்டேன். கண்டதும், அவனுடன் கலந்து போமாறும் புகுமாறும் ஈதென்றே அறிந்துள்ளேன். அதனால் செருக்குறுவதில்லை. விட்டு நீங்கி ஒட்டி வாழ்வதற்குச் சிவபெருமான் திருவடியையன்றி வேறோர் இடமில்லை. சிவபெருமான் தண்ணருளால் நம்முடன் கலந்து நம்மையும் அவன் வண்ணமாகச் செய்தருளினன். அதனால் நாமும் அவனென்றே கூறும் அருள் உரிமையையும் பொருளாகப் பெற்றுள்ளோம். பேரருள் கூர்ந்து அறியாமை வயப்பட்டு நிற்கும் மாணவர்களை வலிய அழைத்துக் கற்பித்து அறிவுடையவர்களாக்கித் தன்போல் விளக்கமுறச் செய்கின்றனன் பேராசான். அந்நிலையில் அம் மாணவர்களும் அறிவு விளக்கம் விளங்கப் பெற்றவராய்த் திகழ்கின்றனர். அப்பொழுது அவர்களும் அறிவுடையாசான் என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலை மேலதற்கு ஒப்பாகும். குறிப்புரை: போமாறு - புகுமாறு, ஊன் உயிர் வேறுபடவும் கூடவும்.
ஒன்பதாம் தந்திரம். ஊழ் செற்றிலென் சீவிலென் செஞ்சாந் தணியிலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரன்றே. பொருளுரை: உள்ளம் திருவருள் வயப்பட்டு ஒழுகும் விழுமிய தொண்டர்கள் தங்கள் உடம்புக்கு என்ன நேர்ந்தாலும் மனங்கொள்ளார். விற்ற வீட்டை வாங்கினவன் இடிக்கும் பொழுதும் புதுப்பிக்கும் பொழுதும் விற்றவனுக்கு முறையே புலம்பலும் மகிழ்வும் ஏற்படாமலிருப்பன இதற்கு ஒப்பாகும். கருமமே கண்ணாயினார்க்கு முயற்சியான் வரும் மெய் வருத்தம் அவர்தம் உள்ளத்தைத் தாக்காமையும் இதற்கு ஒப்பாகும். திருவருளால் மெய்யுணர்ந்து நன்னெறி நான்மைக்கண் நின்று இடையறாது ஒழுகும் ஒழுக்கமுடைய உரவோர்பால் அறியாமையால் பகைமை பூண்டு அவர்தம் உடம்பினைக் கூரிய கருவி கொண்டு செதுக்கினால்தான் என்ன? அல்லது சீவினால்தான் என்ன? உண்மையுணர்ந்து பேரன்பால் அவர் தமக்கு அடிமை பூண்டு செஞ்சாந்தினை நறுமணக் கலவை கூட்டி உறுமகிழ்வுடன் இனிது மொழிந்து கனிமனத்தினராய் நனிமிகப் பூசினால் தான் என்ன? உச்சித்துளையின்கண் வைரமிக்க ஆப்பினையும் பிளக்கும் வன்மை வாய்ந்த கூரிய உளியினையும் நாட்டி அடித்தால்தான் என்ன? வியத்தகும் அருளிப்பாடுடைய நந்தியின் திருவடியினை நினைந்து நிகழ்ந்தது ஏதும் உணராது அத் திருவடி நினைவு மாறாத ஒழுக்கத்தின் வழியே நிற்பர். அங்ஙனமன்றித் தம் தன்மையில் என்றும் குன்றா இயல்பினராவர். இவர்நிலை அகத்தவத்தோர், ஐந்தாம் உடம்பாகிய இன்பஉடம்பின் கண்ணிற்கும் எழினிலையாகும். குறிப்புரை: செற்றிலென் - செதுக்கினால் என். மறிக்கில் - அடித்தால். கொள்ளேன். . மெய்யுணர்தல், . " ஊழையு. திருக்குறள், . " வாய்ச்சிவா. சீவக, .
தான்முன்னஞ் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னஞ் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னஞ் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னஞ் செய்ததே நன்னில மானதே. பொருளுரை: உயிர் தான் முன் செய்த வினைக்கீடாகப் பயனைச் சிவபெருமான் வரையறுப்பான் என்பதை உணர்தல் வேண்டும். அதுவே விதி என்றும் ஊழ் என்றும் உரைக்கப்படும். அம் முறையானன்றி மேன்மை மிக்க சிவபெருமான் தானாகவே செய்தமைத்ததோர் விதித் தொடர்பு ஏதும் இன்று கோனாகிய சிவபெருமான் திருமுன் நன்னெறி நான்மைக் குறிவழியே சென்று சென்னிவணங்கித் திருவடி பணிந்தேன். அப் பணிவினால் நான் கருதிச் செய்தது திருத்தொண்டாயது. அதனால் என் உள்ளம் சிவன் தங்கும் நன்னிலமாயது. ஊழின் தன்மையினை வருமாறு நினைவுகூர்க: 'நீங்கா வினைப்பயனே நேரும்ஊழ் மற்றுவினை, ஈங்கறிவால் நாமாக்கல்எண்.' குறிப்புரை: முன்னம் - முன் பிறப்புக்களில். விதி - கன்மபலனை அனுபவிக்க ஈசனால் விதிக்கப்பட்ட. வான் - மேன்மை உள்ளதாக. மாட்டு - சம்பந்தம். கோன் - சிவன். முன்னம் - சந்நிதானத்தில். பெரியாரைப். திருக்குறள், . " பரியினும். " .
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டென் னுள்ளம் பிரியகி லாவன்றே. பொருளுரை: திருவாணையின் வழி அவரவர் செய்த வினைப்பயனை அவரவரே நுகர்வர். அப் பயனைக் கூறிட்டுக்கொண்டு நுகர்வார் எவருமிலர். அங்ஙனம் நுகர்விப்பதும் நடுநிலை முறைமையாகாது. வெள்ளப் பெருக்கினால் ஆற்றின்கண் மேடுபள்ளங்கள் உண்டாகின்றன. அவற்றைத் தாங்கி நிற்பது அவ்வாறே யன்றிப் பிறிதன்று என்க. ஆறொக்கும்உயிர், ஆற்றின் நீரொக்கும் வினை, வினையின்வகையொக்கும் மேடுபள்ளங்கள். அவற்றை அவ் ஆறு சுமத்தல் அவ் வுயிர் வினைப்பயன்களை நுகர்வ தொக்கும். முழுநீறு சண்ணித்த திருமேனியும், நீண்ட திருச்சடையும் உடைய நந்தியை வழிபட்டு அவன் திருவடியே பெரும் பேறெனக் கொண்டு என்னுள்ளம் இமைப்பொழுதும் வேறெதற்கும் விலகாதென்க. குறிப்புரை: ஆறிட்ட நுண்மணலாறு - ஆற்றில் உள்ள நுண்ணிய மணல்போல் அளவற்ற கன்மபலனை. பேறிட்டு - அடையும் பொருட்டு. யாதுமூரே. புறநானூறு, . " ஆறிடு. நல்வழி, .
வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென் கானின்ற செந்தீக் கலந்துடன் வேகிலென் தானொன்றி மாருதஞ் சண்டம் அடிக்கிலென் நானொன்றி நாதனை நாடுவன் நானன்றே. பொருளுரை: உண்மைச் சிவனடியார்கள் எஃது எவ்வாறு நிகழினும் தங்கள் உண்மை அன்புள்ளம் சிவன் திருவடியினின்று மொருகாலும் நிலைபெயரவொட்டார். செருமுகம் நோக்கிச் செல்லும் மறவன் உள்ளம் போன்று மெய்யடியார் உள்ளம் ஒருமுகப்பட்டுத் திருவடியினையே நோக்கிநிற்கும். வானம் விழும்போல் பேரிடிமுழங்கினால்தான் என்ன? பெருங்கடல் பொங்கிப் பெருவெள்ள ஊழி நேர்ந்தாற்றான் என்ன? பெருங்காட்டுத்தீ முறுகி நாடெலாம் வெந்து நண்ணரிய உலகங்களும், பிற அண்டங்களும் வெந்தாற்றான் என்ன? காற்று, பெருங்காற்று, ஊழிக்காற்று முதலியன தோன்றி எல்லாம் அழியநேர்ந்தாற்றான் என்ன? நெஞ்சே! நான் ஒன்றுதலாகிய ஒருமுகப்பட்டு என்னுள்ளே நாதனை நாடுவன். வானந். அப்பர், . - .
ஆனை துரக்கிலென் அம்பூ டறுக்கிலென் கானத் துழுவை கலந்து வளைக்கிலென் ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த ஞானத் துழவினை நானுழு வேனன்றே. பொருளுரை: ஆனை மதம்பொழிந்து நெறியல்லாநெறிச் சென்று என்னைத் துரத்தினாலென்ன? கண்ணேரனைய கூர்ங்கணை நெஞ்சூடு சென்று அறுத்தாற்றானென்ன? காட்டில் வாழும் வலியும் ஆண்மையும் ஊக்கமும் மிக்க புலிவந்து வளைத்துக் கொண்டாற்றானென்ன? சிவவுலகத்தின்கண் திருவடிப்பேறு எய்துமாறு எம்பெருமான் அமைத்தருளிய மெய்யுணர்வு உழவாம் 'ஞானநூல்தனை ஓதல் ஓதுவித்தல்' முதலிய அறிவினில் அறிவாம் தொண்டினை அடியேன் ஆற்றுவேன் என்க. உழுவென்பது ஈண்டு ஞானவழிபாட்டின்மேற்று. அது ஞானத்துழவு என்பதனாலும் விளங்கும். குறிப்புரை: அம்பு ஊடு அறுக்கிலென் - அம்பு ஊடுருவிப் பாய்ந்தாலென். உழுவை - புலி. ஏனைப் பதி - ஞானபூமி. ஞானத்துழவு - ஞானம் அடைவதற்கு உரிய ஆராய்ச்சி. மெய்ம்மையாம். அப்பர், . - . " பலபல. கொலைவரி, அப்பர், . - , . " ஞானநூல். சிவஞானசித்தியார், . - .
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வானுளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும் பாடது நந்தி பரிசறி வார்கட்கே. பொருளுரை: கூடு பழுதுற்றால் மற்றோர் கூடு அமைப்பது உலகியல் வழக்கல்லவா? அதுபோல் இவ்வுடம்பு கேடெய்துமானால் வினைக்கீடாக மற்றோர் உடம்பினைச் சிவபெருமான் படைத்தளிக்கின்றனன். அங்ஙனம் புத்துடல் படைத்தளிக்கப்படினும் ஆருயிர் முன்னியைந்துள்ள பழைய உயிரேயாகும், என்னை? உயிர் படைக்கப்படுவதொன்றன்றாகலானென்க. ஒருநாடு மழையின்மை முதலியவற்றான் கேடெய்தின், அந்நாட்டவர் வேற்றுநாடு புக்குக் குடியேறி வீற்றிருப்பரன்றோ? அந்நிலை இதற்கொப்பாகும். அக்குறிப்பு 'நாடுகெடினும் நமர்கெடுவாரில்லை' என ஓதியதனால் விளங்கும். மேலும் எவ்வகையாலேனும் குடியிருக்கும் வீட்டினுக்குக் கேடெய்துமானால் அவ்வீட்டவர் புதுவீடு குடிபுகுந்து பீடுற வாழ்வதும் இதற்கொப்பாகும். பெருமைமிக்க நந்தியின் பேரருட்டன்மையினை அறியம் மெய்யுணர்வினர்க்கு இத் தன்மை எளிதின் விளங்கும். குறிப்புரை: நமர் - நாட்டில் வாழும் நம்மவர். கண்ட. சிவஞானபோதம், . - .
ஒன்பதாம் தந்திரம். சிவதரிசனம் சிவதரிசனம்சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படுஞ் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையி னுள்ளே சிவனிருந் தானன்றே. பொருளுரை: அரசனைத் தாங்கும் அரசு கட்டில் அரசனெனவே மதிக்கப்படும். அதுபோல் கொற்றந்தரும் முரசுகட்டில் கொற்றவை எனவே மதிக்கப்படும். இம்முறையே சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிந்தை சிவனெனவே மதிக்கப்படும். அக்குறிப்புத் தோன்றச் 'சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை,' என ஓதினர். பாற்கலமும் பால் போல் மதிக்கப்படும். மேலும் உயிருள்ள உடலும் உயிர்போன்றே மதிக்கப்படுமல்லவா? அஃதும் ஒப்பாகும். நீங்காநினைவுடன் திருவைந் தெழுத்தினை நினைவார் ஓங்கும் செந்நெறிச் செல்வராவர். அத்தகையார் திருவுள்ளத்தின்கண் சிவனும் வெளிப்பட்டருள்வன். திருவருளால் உள்ளந்தெளியக் 'கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகிளத்தல்' என்னும் முறையான் தெளியவல்ல நற்றவத்தார்க்குச் 'சிந்தையினுள்ளே சிவன்' எழுந்தருளி வெளிப்பட்டு வீற்றிருந்தருள்கின்றனன். கேட்டலுடன். சிவஞானசித்தியார், . - . " புத்தன். . திருத்தோணோக்கம், .
வாக்கு மனமு மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்று மில்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்கட்கே. பொருளுரை: மாற்றம் மனம் கழியநின்ற மறையோனாகிய சிவபெருமானை வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் என்றோதினர். திருவருளால் அவனை நோக்குங்கள். அவன் நோக்கப்படும் நுண்ணிய பொருளாவன். அவன் இடம்விட்டு இடம்பெயரும் போக்குவரவுகள் இல்லாதவன். அவன் என்றும் ஒன்றுபோல் நின்றுநிலவும் மன்றவாணன். பிறப்பும் இறப்புமில்லாச் சிறப்பினன். அதனால் கேடில்லாதவன் என ஓதினர். அத்தகைய அத்தனைத் திருவருளால் ஆய்ந்து உளங்கொண்டு திருவடியுணர்வில் திளைப்பார்க்கு அதுவே ஆக்கமாகிய பிறவிப் பயனாகும்.
பரனாய்ப் பராபர னாகியப் பாற்சென்று உரனாய் வழக்கற வொண்சுடர் தானாய்த் தரனாய்த் தனாதென வாறறி வொண்ணா அரனா யுலகில் அருள்புரிந் தானே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் மேலோனாயுள்ளான். மேலோர்க்கும் மேலோனாயுள்ளான். மெய்களனைத்திற்கும் மேற்சென்றவன். இயற்கைப் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்த உரனாய் உள்ளவன். ஏனைய வொளிகளெல்லாம் வழக்கற்று ஒழிந்து மங்கிய காலத்தும் வழக்கறுதலும் மங்குதலும் இன்றி என்றும் ஒன்றுபோல் வழக்கறா ஒண்சுடர் தானாய் உள்ளவன். தானாய் என்பது இயற்கையாய் என்பது பொருள். எல்லாவற்றையும் ஒருங்குதாங்கும் ஆறறிவுகளாலும் அறியவொண்ணா அரனாகவுள்ளவன். இவ்வகையாக இயைந்துநின்று இன்னருள்புரிந்து இடையறாது ஓம்புகின்றனன். ஆறறிவு: ஐம்புலனும் இறுப்புமெய்யும் கருவியாகக் கொண்டறிவது. இறுப்பு - புத்தி. "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே ஆறறி வதுவே யவற்றொடு மனனே "ஈண்டு மனம் என்பது இறுப்பு மெய்யாகிய புத்தியினைக் குறிக்கும். அது புத்திக் காட்சியினை மானதக் காட்சியென்று வழங்குவதனான் உணரலாம். 'காண்டல் வாயின் மனந்தன் வேதனையோ டியோகக் காட்சி'என்பதனான் உணர்க. மெய்கள் - தத்துவங்கள். ஆறு: நன்னெறி எனலுமொன்று. குறிப்புரை: தானாய் - யாவற்றிற்கும் ஆதாரமாய். ஆறு அறிவு - ஐந்து புலனறிவும் மன அறிவும்.
ஒன்பதாம் தந்திரம். சிவசொரூப தரிசனம் ஓதும் மயிர்க்கால் தொறுமமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை வேதம தோதுஞ் சொரூபிதன் மேன்மையே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் அளித்தருளும் திருவடிப்பேரின்பம் வேறுபட்டே யிருக்குமெனவும், ஒன்றாய்க் கலந்து ஒழிந்துவிடும் எனவும் கூறுவதற்கு ஓர் இயைபுமின்று. மாறுபடாது என்றும் ஒன்றுபோல் வேறற ஆருயிர்களுடன் கலந்துநிற்கும் இயல்பினது. அதனால் சிறப்பித்துச் சொல்லப்படும் மயிர்க்கால்தோறும் அப்பேரின்ப அமுது அளவிறந்தூறித் தெவிட்டா இன்பம் தேக்கிடச் செய்யும். உருவம் அருவம் உருஅருவம் என்று கொள்ளப்படும் பொது நிலைத் திருவுருவங்கள் மூன்றும் கடந்து இன்ன தன்மைத்தென எவராலும் சொல்லவொண்ணாத இயற்கை உண்மை அறிவு இன்ப வடிவினனாக என்றும் விளங்குபவன் சிவன். இதுவே செந்தமிழத் திருமறையோதும் சிவன்றன் சிறந்த திருவுருவ மேன்மையாகும். குறிப்புரை: பிறழாத ஆனந்தம் - தவறுபடாத ஆனந்தம். வேதம தோதும் - தமிழ் வேதத்திலே கூறப்படும்.
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி யவனே இணரும் அவன்தன்னை என்னலு மாகான் துணரின் மலர்க்கந்தந் துன்னிநின் றானே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமானும், கெழுமிய அடிமையாம் ஆருயிரும் மலர்மணம்போன்று வேறற விரவி என்றும் அழியாது ஒழியாது வழிநிற்கும் பழியில் பொருள்கள். அதனால் ஆருயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே, நெஞ்சத்தாமரையாகிய இணரின்கண் அவன் இடையறாது கலந்திருந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தானன்றி எழுந்து மொழிவதாகிய சொல்லாற் கூறுவதற்கு முன்னிலையாகிய எண்ணத்தான் எண்ணவும் ஆகான். புலப்பு - புலத்தல்; புலவி. துணர் - இணர்; பூங்கொத்து. குறிப்புரை: புலவி - பிணக்கு. இணரும் - இதயத்துள் கலந்திருக்கும். துணர் - கொத்து. சூடுவேன். . திருவம்மானை, .
இணங்க வேண்டா இனியுல கோருடன் நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும் வணங்க வேண்டா வடிவை யறிந்தபின் பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே. பொருளுரை: உண்மைச் சிவனுடன்கலந்த திருவடியுணர்வுடையார், 'மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்கும் சிறப்பிலாரா'கிய உலகோருடன் சேரார். அதனால் இனி உலகோருடன் இணங்க வேண்டாவென்று ஓதினர். இது நல்லார் பொல்லாருடன் இணங்கா இயல்பினையொக்கும். நுணங்கிய கல்வியும் நூல்களும் புணர்ந்தார்க்கு என்ன பயனைச் செய்யும். வழி நடப்பார்க்கு வழிகாட்டும் நூலும் பொருளும், வழியும், மொழித் துணையாலும், விழித் துணையாலும், அழிவில் காற்றுணையாலும் கற்றும் கண்டும் நடந்தும் பேரூர் சென்ற பெருமக்களுக்குப் பின் அவை பயன்படாமை இதற்கு ஒப்பாகும். திவருடிக் கலப்பு எய்தியபின் வேறு நில்லாமையின் வேறு நின்ற காலத்துச் செய்து போந்த வணக்கங்கள் இப்பொழுது அந்த முறையில் செய்யவேண்டாவென்க. இஃது ஒருவர் கையினை மற்றொருவர் வேறு நின்றுதொட்டு இரண்டு கையும் கூடிய கூட்டம் பின் கூடவேண்டா என்பதும், பெருவிரலும் ஆட்காட்டி விரலும் ஒன்றாய்ப் புணர்ந்து வேறற நின்றபின் புணரவேண்டா என்பதும் எப்படியோ அப்படியாகும். மேலும் "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை" என்பதன்கண் சிவபெருமானுக்குரிய எட்டுத் திருவுருவங்களுள் ஆருயிர்த் திருவுரு நீங்கலாகிய ஏனைய ஏழு திருவுருவங்களையும் 'தெய்வம்' என ஓதினர். தெய்வம் ஆகுபெயராகத் தெய்வவுருவினைக் குறிக்கும். அவ்வுருவங்களை வணங்கிக்கடந்தவர் மீண்டும் வணங்கவேண்டாவென்பதும் இதற்கு ஒப்பாகும். இவ்வுண்மைப் பொருளினைத் திண்மையுற உணராது பிணங்குவார் பலர்; பிதற்றுவாரும் பலர். அவரைநோக்கிப் பிணக்கத்தையும் பிதற்றையும் ஒழிமின் என்று ஓதினர். சாத்திரத்தை. திருக்களிற்றுப்படியார், .
துன்னிநின் றான்தன்னை யுன்னிமுன் னாவிரு முன்னி யவர்தங் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமன்றே. பொருளுரை: திருவருளால். உன்னுடன் விட்டுநீங்காது ஒட்டிநிற்கும் சிவபெருமானைக் கனிமனத்தான் நினைந்து அவன் திருவருளை மறவா நினைவாய் அவன் திருமுன் இருப்பாயாக. முன்னிருப்பதென்பது சிவபெருமான் எப்பொழுதும் நம்மகத் திருப்பதுபோல் புறத்தும் இருக்கின்றான் என்னும் எண்ணம் திண்ணமாகக்கொண்டு ஒழுகுதல். அவ்வாறு நினைப்பவர்தம் குறையாகிய இன்றியமையாமையுள்ள வேண்டுகோளை முடித்திட்டருள்வன். நினைப்பார் குறையை முடிப்பான் என்பதற்கு ஒப்பு, பக்கமிருக்கும் கைக்குடையை விரிப்பார்க்குத் தக்க நிழல்தரும் தன்மையாகும். அச் சிவபெருமான் நிலைபெற்ற கேட்டுய்வதற்கு வாயிலாகிய திருவைந் தெழுத்தாவன். விதிப்படி கணிக்கும் அவ்வெழுத்தின் பெறுபேறாம் பெருந்தவத் தோனும் ஆவன். ஆருயிர்களின் உச்சிக்கணின்று தெளிவிக்கும் தேற்றத்தனும் ஆவன்.
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலுந் தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற் றறிபவன் என்விழித் தானன்றே. பொருளுரை: திருவருளால் விளக்கமிக்க என் சிந்தையாகிய அகக்கண் திறக்கப்பட்டது. நான் விழித்து நோக்கினேன். நோக்கலும், தானே இயற்கை உண்மை அறிவுப் பிழம்பாயுள்ள சிவன் அடியேனைச் சிறப்பாக அறிவானாயினன். இது கற்பிப்பாரால் கற்பிக்கப்பட்ட மாணவரைத் தேர்வாளர் வந்து தேர்தல் புரிதலை யொக்கும். அச் சிவபெருமானே தலைவனாவன். அவன் ஒப்பில்லாதவன். செம்பொன் போலும் திருமேனியினையும், பின்னல் வாய்ந்த திருச்சடையினையும் உடையவன். அவன் என்னைச் சிறப்பாக உற்றறிபவனாவன். என்னையும் அவன் திருக்கடைக் கண்ணோக்கம் செய்தருளினன். அவன் நந்தி என்னும் திருப்பெயருடையவன். நந்தி நாமம் 'நமசிவய' என்பதனால், எல்லாம் அவனுடைமை என்பது விளங்கும். உற்று - நோக்கி. குறிப்புரை: மின்னுற்ற - விளக்கம் பொருந்திய. தன்னுற்ற - தானே விளங்குகின்ற. என் உற்று அறிபவன் - என்னையே உற்று நோக்குபவன். பின்னுவார். அப்பர், . - .
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தஞ் சித்தத்தி னில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியந் துரியத்துள் உய்த்த துரியத் துறுபே ரொளியன்றே. பொருளுரை: தனிமுதற் பெரும்பொருள் சிவன். அவன் இயற்கை உண்மை அறிவு இன்பவடிவினன். சித்தமெனப்படும் இறுப்பின்கண் நில்லாத சிவப்பேரின்பப் பேரொளி. திருவருட் செயலறலாகிய துரியம் சுத்தப் பிரமத்துரியம் எனப்படும். அத் துரியத்துள் செலுத்திய மற்றோர் செயலறல் உய்த்த துரியமாகும். அத் துரியத்துள் மிக்க பேரொளியாக இருப்பவனும் அவனே. இத் துரியம் அருளோன் செயலறல் எனப்படும்.
பரனல்ல நீடும் பராபர னல்ல உரனல்ல மீதுணர் ஒண்சுட ரல்ல தரனல்ல தானவை யாயல்ல வாகும் அரனல்ல ஆனந்தத் தப்புறத் தானே. பொருளுரை: "சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மானாம்" செம்பொருள் பரன் அல்லன், அதனினும் சிறந்த நிலை பேறுள்ள பராபரனும் அல்லன், பேரறிவுப் பேராற்றல் வாய்ந்த பெரும் பொருளும் அல்லன், புணர்ப்பாய்நின்று மேலுணரும் ஒண்சுடரும் அல்லன். அனைத்தையும் தாங்கும் அரும்பொருளும் அல்லன். அவையனைத்தும் அல்லவாகும். அரனல்லன். திருவருளின்பமும் அல்லன். அவன் எல்லாவற்றுக்கும் அப்புறத்தாகநிற்கும் செப்பம்சேர் ஒப்பில் ஒருபெரும் பொருளாவன். அல்லன் என்பன அல்ல எனக் கடை குறைந்து நின்றன. மண்ணல்லை. அப்பர், . - .
முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற் சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே. பொருளுரை: முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோனாவன். ஞானம் - திருவடியுணர்வு. ஞானத்தோன் - திருவடிசேர் அடிமை; நாயன்மார். அத் திருவடியுணர்வு கைவந்தபின் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப் பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருட் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கை யுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோராவர். அவரே பேரின்பப் பேரறிவினராவர். குறிப்புரை: மாசத்தி - திருவருட்சத்தி. தத்துவம் - மெய்யறிவு. சுத்தி அகன்றோர் - சுத்தாவத்தையைக் கடந்து சென்றவர்.
துரிய அதீதஞ் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியுங் குவியும் விள்ளா மிளிருந்தன் உருவுந் திரியும் உரைப்பதெவ் வாறே. பொருளுரை: செயல்நுதலாகிய துரியமும், நினைவு அறுதலாகிய துரியா தீதமும் இத் தன்மைய என்று எவராலும் சொல்லொணாப் பாழாகும். அப்பால் நிலையாகிய துரியாதீதம் உயிர்ப்படங்கலாகும். அந்நிலையை எய்தினால், விரிதலாகிய நினைப்பும் குவிதலாகிய மறப்பும் உண்டாகா. ஆருயிர்களின் சுட்டறிவும் சிற்றறிவும் பேரறிவாகத் திரிந்துவிளங்கும். அவ் விளக்கத்தின்கண் சிவபெருமான் அவ்வுயிரைத் தானாக்கி நின்றருள்வன். அந்நிலையினைச் சொல்லால் சொல்லுவதெவ்வண்ணம். குறிப்புரை: சொல்லறும் - மோனம் உண்டாம். பாழாம் - வேறுபாடு இன்றாம். விள்ளா - உண்டாகா. தன்னுருவு - சீவபோதம். உலகந். திருக்குறள், .
ஒன்பதாம் தந்திரம். முத்தி பேதம் - கரும நிருவாணம் ஓதிய முத்தி யடைவே உயிர்பர பேதமி லச்சிவம் எய்துந் துரியமோடு ஆதி சொரூபஞ் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. பொருளுரை: சிறப்பித்துச் சொல்லப்படும் வீடாவது முறையாக ஆருயிரும், பேரருளும், பெரும்பொருளும் என்னும் செயலறலாகிய துரியத்தின்கண் எய்தும். ஆருயிர் - சீவன். பேரருள் - பரம். பெரும்பொருள் - சிவம். இவற்றை ஆருயிர், அருள், அருளோன் எனவுங் கூறுப. இம் மும்மை வேறுபாடுமின்றிச் செம்மை ஒருமையாய் நிற்குங்கால் ஆருயிரின் நீங்கா இயற்கை உண்மை தோன்றும். அஃது இயற்கை உண்மை அறிவின்ப வடிவினனாகிய சிவத்துடன் கூடுவதாகும். இந்நிலையே குற்றமில்லாத பேற்றுநிலையாகும். நிருவாணம் - பேறு. பேற்றிலெய்தும் குற்றம் வழிப்பேறாய் மீண்டும் பிறத்தல்; விழுப்பேறெய்தாமை. குறிப்புரை: அடைவே - முறையாக. நிருவாணம் - முத்தி.
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரன்றே. பொருளுரை: பற்றற்றான் பற்றினைப் பற்றுவதே பற்றறும் வாயில்: அதனால் பற்றற்றவர் பற்றி மீளாவடிமையாய் நிலைத்துநிற்கும் நிலைக்களப் பொருள் சிவபெருமானாகிய பரம்பொருள் என்றனர். அவனே ஓதியுணர்ந் தடங்கிய ஓங்குயர் விழுச்சீர் நல்லார் வல்லவாக் கருதும் கண்ணுதலாவன். கண்ணுதல்: நுதற்கண்; நெற்றிக்கண். மெய்யடியார் திருக்கூட்டம் மிளிர்ந்து சூழ்ந்து சிவ ஒளியுடன் நிற்குமாறருளும் பேரறிவுப் பேரொளிப் பிழம்பும் அவனே. அவன் திருவடியை அருளால் பெற்றவர்கள் மாறுபாட்டுரையாகிய பிதற்றுதலை ஒழிந்தனார். குறிப்புரை: கற்று அற்றவர் - கற்று அறிந்து அடங்கினவர். சுற்று - சுற்றம். பெற்று உற்றவர் - அடைந்து அனுபவிப்பவர். பிதற்று - பேசுதல்.
சித்தஞ் சிவமாம் சிவஞானி சேர்விடம் சத்தச் சிவாலயம் தொல்பாச நாசமாம் அத்த மழையகம் அனந்த மேலிடும் முத்தம் பெருகும் முழுப்பொரு ளாகுமே. பொருளுரை: மறவா நினைவால் சிவநாட்டமே மிக்குடையார் சிவஞானியாவர். அவர் சேரும் திருவிடம் இயற்கை உண்மை அறிவுப் பெருங்கோவிலாகும். அத் திருக் கோவிலினைக் கேட்டாலும் கண்டாலும் நாட்டமுற்று வழிபட்டாலும் வாட்டமுறச் செய்யும் பழமலங்களெல்லாம் அழிந்தடங்கும். பேரூழிக்கால எல்லையில் மழைபோன்று உள்ள முழுவதும் திருவடிப் பேரின்பப் பெருவெள்ளம் மிகும். அளவிலா அழிவிலா உளமகிழ் பேரின்பம் முத்தம் போன்று பெருகும். அவ் வுயிரும் முழுப் பொருளாகிய சிவனாம் விழுப் பொருளைச் சார்ந்தமையால் முழுப் பொருளாம் விழுப்பொருளாகும். இந் நிலையினையே "சிவமாக்கி எனையாண்ட அத்தன்" எனச் செந்தமிழ்த் திருமறை முடிவு ஓதியருளிச் செப்பா நிற்கும். முத்தம் - முத்து.
ஆணவ மூலத் தகார முதித்திடப் பேணி யுகாரங் கலாதி பிறிவிக்கத் தாணு மகாரஞ் சதாசிவ மாகவே ஆணவ பாச மடர்தல்செய் யாவன்றே. பொருளுரை: மூலாதாரத்தினிடத்து அகரந் தோன்றுகின்றது. அங்கு நின்றே ஆணவ மூலமும் தோன்றுகின்றது. ஆருயிர் அகர நிலையில் நிற்குங்கால் ஆணவம் அடங்கிவிடும். உகாரம் பேணி ஒன்றாம் கலாதியினைப் பிறிவித்திடும். மகரம் தாணுவாகக் காணப்படும் சதாசிவமாக நின்று எல்லாவற்றையும் ஒடுக்கி அருள் புரியும். மகரம் இனம்பற்றி மாயையின் மூலப்பகுதி யொடுக்கமாகக் கொள்க. இம் முறையால் ஆணவமாகிய கட்டு அடர்தல் செய்யாது.
நெற்றி நடுவுள் நினைவெழு கண்டமும் உற்ற விதையமு மோதிய நாபிக்கீழ்ப் பெற்ற துரியமும் பேசிய மூலத்தே உற்ற அதீதம் ஒடுங்கும் உடனன்றே. பொருளுரை: நெற்றியின் நடுவுள் வெளிப்படும் நினைவு உண்டாம். இதுவே நனவாகிய சாக்கிரமாகும். கண்டமாகிய கழுத்தின்கண் எழு நினைவு ஆகிய கனவுண்டாம். இது சொப்பனம் எனப்படும். பொருந்திய நெஞ்சத்தினிடத்து உறக்கம் எனப்படும் சுழுத்திநிலை உண்டாம். கொப்பூழின் கீழ்ப் பேருறக்கமாகிய துரியநிலை உண்டாகும். சொல்லப்படும் மூலத்திடத்து உயிர்ப்படங்குதலாகிய துரியாதீத நிலை உண்டாகும்.
ஒன்பதாம் தந்திரம். மறைபொருட் கூற்று காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம் ஏய பெருமா னிருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனன்றே. பொருளுரை: உடம்புடன் கூடிய ஆருயிர்களின் வாழ்க்கை ஒரு கவறாட்டம் போன்றது. கவறு - சூது. உடம்பு பலகையாகவும், ஐம்புலன்களும் கவறாடு கருவியாகவும், வலம் இடம் புருவநடு என்னும் மூன்றும் இடமாகவும், ஐம்பத்தோ ரெழுத்தும் சூதாடும் காய்கள் நிரப்பும் அறையாகவும் கொண்டு என்றும் ஆருயிருடன் பிரிப்பின்றி நின்று பொருந்தி அருள் செய்யும் சிவபெருமான் ஆருயிர்களைக் கையாளாக வைத்து கவறாடாநிற்கின்றான். இத்தகைய மாயக் கவற்றின்வழிச் செய்யும் அவன்றன் மறைப்பாற்றலின் பண்பை அறியேன் என்க. கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்றலும் ஒன்று. குறிப்புரை: காயம் பலகை - உடம்பானது சூதாடு பலகை போன்றது. கவறு ஐந்து - ஐம்பொறிகளும் சூதாடு கருவிபோன்றது. கண்மூன்றா - வலம், இடம், புருவமத்தி ஆகிய மூன்றும் மூன்றிடங்களாக. ஆயம் - சூதாடு கருவியிலுள்ள அறை. மாயம் - வஞ்சகம். எண்ணரு. காஞ்சிப். அனந்த, . " சூதினில். . மூர்க்கநாயனார், . " நிலமிசை. புறநானூறு, .
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானன்றே. பொருளுரை: காமம் வெகுளி மயக்கமென்று சொல்லப்படும் தடைகளாகிய சின்னஞ்சிறு செடிகள் முளைத்து உடம்பகத்துக் காணப்படுகின்றன. அருளால் அவற்றினின்றும் நீங்கித் தூய சிவ நன்னெறிக்கண் நிற்கும் வகையறிவாரில்லை. அங்ஙனம் நீங்கி நிற்கும் வகையறிந்து ஒழுகும் வாய்மையாளர்க்குச் சிவன் வெளிப்பட்டருள்வன். அவர்பால் என் உள்ளம் அன்பூறி ஆர்வம் பெருகிக்கிடந்தது என்க. குறிப்புரை: தூறு - சிறுசெடி. தூநெறி மாறி - நீங்கித் தூய்மையான நெறியில். ஊறி - சுரந்து.
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற் சாறு படுவன நான்கு பனையுள ஏறற் கரியதோர் ஏணியிட் டப்பனை ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனன்றே. பொருளுரை: உடம்பினகத்து ஆறு நிலைகள் உள்ளன. இவற்றை ஆறு ஆதாரங்கள் என்ப. அவை, மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பன. இத்தகைய ஆறு தெருவில் அகப்பாட்டுச் சந்தி என்று சொல்லப்படும் மூலாதாரத்தில் தேன்போல் இனிமை தரும் சாறுமிக்க நான்கு பனைகள் உள்ளன. ஈண்டுப் பனையென்றது மூலாதாரத்தில் காணப்படும் நான்கிதழ்த் தாமரையை. புறக்காலால் ஏணி வைத்து எட்ட முடியாத வொன்றென்க. ஆனால் அகக்காலால் எட்ட முடியும். அகக்கால்: உயிர்ப்பு; பிராணவாயு. ஏணி என்பது சுழுமுனையாகிய நடுநாடி என்ப. அவ் வேணியினை அருளால் அமைத்து அப்பன் திருவடிக்கண் பொருந்தலுற்றேன். அதனால் எல்லையில் கடல் ஏழ்போல் காணப்படும் பிறவியேழும் நீங்கக் கண்டேன். குறிப்புரை: ஆறுதெரு - ஆறு ஆதாரங்கள். அகப்பட்ட சந்தி - மூலாதாரம். சாறுபடுவன - இனிமை உண்டாவதான. நான்குபனை-நான்கு இதழ்களையுடைய பனைபோன்ற மலர். ஏணி - சுழுமுனை. கடலேழ் - எழுவகைப் பிறப்பு.
வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே. பொருளுரை: அருளால் வழுதலங் கத்தரிக்காயை விதைத்தேன். அஃதாவது அகத்தவமாகிய யோகப்பயிற்சியினை மேற்கொண்டேன். அவ் வித்தின்கண் விளைவாகப் பற்றறுதி என்று சொல்லப்படும் வைராக்கியம் வளர்ந்தது. இப் பற்றறுதியினைப் பாகல் என்று ஓதினர். தத்துவங்களாகிய மெய்யினை ஆராயத் தொடங்கினேன். ஈண்டுப் புழுதியைத் தோண்டினேன் என்பது தத்துவ ஆராய்ச்சி செய்தேன் என்பதாம். இவ் வாராய்வின் பயனாகப் பூசணியாகிய சிவம் பூத்தது. தோட்டக் குடிகளாகிய ஐவரும் தொண்ணூற்றறுவரும் அதனைக் கண்டு தொழுதுகொண்டோடினர். திருவடிப் பேறாகிய வாழைக்கனி முழுதும் பழுத்து விழுப்பயனாயது. வாழ்வைத் தருங்கனி வாழைக்கனி. நெடு வாழ்வைத்தரும் ஈடும் எடுப்புமில் பீடு சேர் திருவடிப்பேற்றினுக்கு வாழைக்கனியே ஒருபுடை யொப்பாம் என்க. வாழை மா பலா மூன்றும் முறையே அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுங் குறிக்கும் குறிப்பாகும். குறிப்புரை: வழுதலை வித்து-யோகப்பயிற்சி. பாகல்-வைராக்கியம். புழுதியைத் தோண்டினேன் - தத்துவ ஆராய்ச்சி செய்தேன். பூசணி பூத்தது - சிவம் வெளிப்பட்டது. தோட்டக் குடிகள் - இந்திரியாதி விடயங்கள். பழுத்தது - கிடைத்தது. வாழைக்கனி - ஆன்மலாபம்.
ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவறி வாரில்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன்று மின்றிப் பகஎளி தாகுமே. பொருளுரை: ஐம்பூதக் கூட்டரவால் அமைந்த இவ் வுடம்பாகிய வித்தினை விதைக்கும் செய் நடப்பாகிய மறைப்பாற்ற லென்க. அவ் வித்தினிடமாக விருந்து ஆனை யென்று சொல்லப்படும் ஆருயிர்த் தொழில் தோற்றம் உறுவதாயிற்று. அச் செய்யாகிய நடப்பாற்றலின் உண்மைத் தெளிவை அறிவாரில்லை. உண்மைத் தெளிவாவது ஆருயிர்கள் அவ் வித்தினிடத்துக் கொள்ளும் மயக்கம் நீங்கிச் சத்தாகிய சிவத்தினிடத்துக் கொள்ளும் முயக்கம் ஓங்கி வாழுமாறு செய்வதே அதன் தொழிலென்பது. அவ் வாற்றல் மையணி கண்டனின் வழிநிலையாகும். அந் நிலையினைக் குறிக்கொண்டு நாடுவதாகிய மனம் பெறுதல் வேண்டும். அதுவே தியானம் என்ப. ஈண்டுத் தெளிவென்பது உண்மை யுணர்வதாகிய தூய்மையின் மேற்று. அப்பொழுது அந் நடப்பாற்றலாகிய அந்நிலம் மெய்யாகவே ஆருயிர் புகத்தகும் உலையா நிலைசேர் சீரிடமாகும் புகுதலும் எளிதாகும். குறிப்புரை: ஐயெனும் வித்து - ஐம்பூதங்களாகிய வித்து. ஆனை - சீவனை. செய் - திரோதாயி, திருவருட்சத்தி.
பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள கள்ளச்செய் யங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் யங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானன்றே. பொருளுரை: பள்ளச் செய் என்று சொல்லப்படும் செயலறலாகிய உறக்கநிலை ஒன்றுண்டு. அதன்மேல் பாழ்ச் செய்யாகிய இன்பமில்லாத கனவும் நனவும் இரண்டுண்டு. அவற்றூடு உயிர்க்குயிராய் யாண்டும் கரந்து நிற்கும் கள்ளச் செய்யாகிய சிவபெருமானும் அங்குக் கலந்து நிற்கின்றனன். இம் மூன்று நிலையினும் ஆருயிர்களின் மனமாகிய வயலின்கண் மெய்யாகிய தத்துவ ஆராய்ச்சி என்னும் உழவினைச் செய்தல்வேண்டும். அவ் வுழவு செய்தார்க்கு வெள்ளச் செய் என்று சொல்லப்படும். திருவருளின்ப விளை நிலம் விளைந்து கைகூடிற்று. வெள்ளச் செய் : அருள் வெள்ளம் - பேரின்பப் பெருவெள்ளம் பெருக்கெடுத்து உருக்கொடு நிலையும் நிலைக்களம். குறிப்புரை: பள்ளச்செய் - சுழுத்தி. பாழ்ச்செய் இரண்டு-இன்பம் இல்லாத நனவு - கனவு. கள்ளச்செய் - கரந்திருக்கும் சிவம். உள்ளச் செய் - மனமாகிய வயல். உழவு-தத்துவ ஆராய்ச்சி. வெள்ளச்செய் - சிவானந்த வெள்ளம்.
மூவணை யேரு முழுவது முக்காணி தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும் நாவணை கோலி நடுவிற் செறுவுழார் காலணை கோலிக் களருழு வாரன்றே.இடப்பால்நாடி வலப்பால்நாடி நடுநாடி என்று சொல்லப்படுவன மூவணையாகும். அவற்றின்கண் பயிலப்படும் உயிர்ப்பு ஏராகும். அவ் ஏரினால் உழப்படும் நிலம் மூலாதாரமாகும் அம் மூலாதாரம் முக்கோண வடிவிற்று. அதனால் அதனை முக்காணி என்று ஓதினர். அவ் வுயிர்ப்பினை முறையாக நிறுத்தியமைத்தால் நடுநாடியாகிய தறியுறப் பாய்ந்திடும். தறி - வீணாத்தண்டு. நெற்றியமிழ்தினை வற்றா வூற்றினை நெறிப்பட வுண்ணுவார், நாவினை மேலோக்கி எழுப்பி உண்ணாக்கை யொட்டிச் சிறு தொளையினை அழுத்தி அடைப்பர். அம் முறையால் நாக்கை அணையாகச் செய்தென்றோதினர். அறுபகையாகிய செருக்குச் சினம் சிறுமை, இவறல், மாண்பிறந்தமானம், மாணா வுவகை என்னும் அறு பகையும் நடுதல் இல்லாத அகத்தவம் எனப்படும் யோக வயலைச் சிலர் பயிலுவதாகிய உழவினைச் செய்கின்றிலர். வயல் - செறு. ஈண்டு உயிர்ப்பினைச் செறுத்தலால் செறு வென்னும் பெயர் அமைவதாயிற்று. இங்ஙனம் நன்னெறிப்படாதார் பிறப்பு இறப்புக்களாகிய பிணிப்பாம் விலங்குகளைக் காலில் பிணித்துக்கொண்டு பயனில் களராம் பிறவி நிலத்தில் உழுவார் என்க. கால் என்பது வழியென்னும் பொருளுமுடையது. அதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் முயற்சியில் பிணிக்கப்படுவர் என்பதும் ஒன்று. குறிப்புரை: மூவணை ஏர் - முந்நாடிக்குரிய வாயு. முக்காணி - மூலாதாரத்துள்ள முக்கோணம். அணிகோலி - வாயுவை முறையாகக் கட்டி. தறி - வீணாத்தண்டு. நாவணை கோலி - நாவை அணைாயகச் செய்து. நடுவிற்செறு - காமாதியாகிய களைகள் இல்லாத யோகமாகிய வயல். கால் அணைகோலி - காலில் விலங்கிட்டு, அதாவது பாசவயப் பட்டு. களர் உழுவார் - களர் நிலத்தை உழுவார், அதாவது பயனற்ற காரியம் செய்வார். மெய்ம்மையாம். அப்பர், . - . " அகனமர்ந்த. சம்பந்தர், . -. " படியின். . வெள்ளானைச் சருக்கம், . " உளரென்னும். திருக்குறள், .
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர் பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடிற் கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாகுமே. பொருளுரை: இடப்பால் நாடியாகிய இடைகலையும், வலப்பால் நாடியாகிய பிங்கலையும் ஆகிய இரண்டும் ஏற்றம் என ஓதப்பட்டன. அதனால் ஏற்றம் இரண்டுள என்றனர். நீர்நிலை யொத்த மூல முதலாய நிலைக்களம் ஆறும், ஆயிரவிதழ்த்தாமரையாகிய உச்சித்துளை ஒன்றும் ஆகிய ஏழும் துரவுகள் எனப்பட்டன. மூத்தான் என்று சொல்லப்படும் இடப்பால் நாடியாகிய சந்திரகலை வாயிலாக விடுத்தலைச் செய்யும் மூச்சு இறைத்த நீர் எனப்பட்டது. இளையான் என்று சொல்லப்படும் வலப்பால் நாடியாகிய பிங்கலை வாயிலாக எடுத்தலைச் செய்யும் மூச்சு படுத்த நீர் எனப்பட்டது அவ் வுயிர்ப்பு நடுநாடியின்கண் தடுத்தலைச் செய்து நிறுத்துதல் வேண்டும். அங்ஙனம் செய்யும் வழிவகைகளை அறியாது மீட்டும் விடுத்தலையே புரிவாராயின் அது வீணாகப் பாய்ந்து போகும். அங்ஙனம் போனால் அச் செயல் 'கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாமே' என்னும் வாய்மைக்கு ஒப்பாகும். கூத்தியாவாள் விலைமகள். கோழிப்புள் என்பது அவளீன்ற செழுமை வாய்ந்த மக்கள் என்பதாம். அம் மக்கள் குலமக்கள் போன்று தந்தையார் இன்னார் என வரை செய்ய முடியாமையான் தமக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்படும் செம்மையராகார் என்பது துணிபு. அம் முறையான் ஈண்டுக் கொள்ளப்படுதலுமாகும். மேலும், ஆடவரால் வெளிப்படுத்தப்படும் வித்து ஆருயிர் வித்து. அது விலை வரம்பில்லா அருமுதலாகும் அறியாமை மேலிட்டால் சில்லோர் நெல் வித்தினும் புல்லிதாக அவ் வுயிர்வித்தினை எண்ணிப் புறக்கணிக்கின்றனர். காலமும் இடமும் நோக்காது, பருவமும் மனமும் பாராது, விளைவின் விழுப்பயன் தூக்காது மருவி வீணாக்குகின்றனர். ஒருகால் அப் பொருள் விளைந்து வளர்க்கப்பட்டு வாழினும் பயன்பெறாது என்பது இருவகை வழக்கினும் பயிலப்படுவதொன்றாகும். அது கூத்திபிள்ளை ஏத்துங்கொள்ளிக்காகா என்பதாம். வித்து - விந்து. குறிப்புரை: ஏற்றம் இரண்டு - இடைகலை, பிங்கலை. ஏழுதுரவு - ஆதாரமாறும் - அமுது ஊறும் சகசிர அறை. மூத்தான்-சந்திரகலை. இளையான் - சூரியகலை. படுத்த - பாய்ச்சிய. பாத்தி -- நாடிகள். பாழ்ப் பாய்ந்து - வீணாக.
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோ ரேழுள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. பொருளுரை: ஆருயிர்கள் சீர்பெற்றுய்ய உடன்மெய் இருபத்து நான்கும் முழுமுதலால் படைத்தளிக்கப்பட்டன. அவற்றை ஆன்மதத்துவம் என்ப. பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள என்பதும் அவையே. உணர்வு மெய்யாகிய ஏழும் குட்டிப் பசுக்கள் என்று கூறப்பட்டன. மேலும் உணர்த்து மெய்யாகிய ஐந்தும் குட்டிப் பசுக்கள் என்றே கூறப்படும். உணர்வுமெய் - வித்தியா தத்துவம். உணர்த்துமெய்-சிவ தத்துவம். குட்டிப் பசுக்கள் அளவில்லாத பால் சொரியினும் என்பார் குடப் பால் சொரியினும் என்றனர். இவ் வொப்பால் உணர்வுமெய் உணர்த்து மெய்கள் வாயிலாக வரும் அகமுக இன்பம் அளவில்லனவாகும். அங்ஙன மிருப்பினும் ஆருயிர்கட்கு அவற்றின்கண் நாட்டமின்று. புறமுக நாட்டமே மிக்குப் பொலிகின்றது. அக் குறிப்புத் தோன்றப் 'பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்த 'தென்றனர். பனவன் - அறிவுடை ஆருயிர். குறிப்புரை: இருபத்து நாலு-ஆன்மதத்துவங்கள் . ஏழு-வித்தியா தத்துவங்கள் , ஐந்து-சிவ தத்துவங்கள் . பனவற்கு-ஆன்மாவுக்கு.
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவறி யோமன்றே. பொருளுரை: ஆருயிர்கட்குப் புறமுகப் புலன் இன்பங் கொள்ளுதற்கு வாயிலாகிய உடன்மெய் இருபத்து நான்கும் ஈற்றுப் பசுக்கள் எனப்பட்டன. வற்றா ஊற்றாக வளமிகத் தரும் அறிவமிழ்திற்கு வாயிலாக வுள்ள உணர்வுமெய் ஏழும் ஊற்றுப் பசுக்கள் எனப்பட்டன. அவை தரும் புலன் அளவிடற்கரிய விழுப்பம் வாய்ந்தது. புலன் - அறிவு. அதனால் ஒருகுடம் பால் போதும் என ஓதினர். காற்றுப் பசுக்கள் என்பது இடப்பால் வலப்பால் நாடிகள் வாயிலாகப் பெறும் உயிர்ப்புக்களாகும். உயிர்ப்பு மூச்னெவும், காலெனவும் ஓதப்படும். கால் - காற்று எனவும் கூறப்படும். அதனால் காற்றுப் பசுக்கள் என்றனர். எனவே அகத்தவ வாயிலாகச் செறிவினை எய்தி ஆருயிர் இன்புறும். அங்ஙனம் அக இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருக்குங்கால், ஐம்புல இன்பங்கள் வந்து தொடரா. அக் குறிப்பு, 'மாற்றுப் பசுக்கள் வரவறியோமே' என்றோதினர். குறிப்புரை: ஊற்றுப் பசுக்கள் - வித்தியா தத்துவங்கள். காற்றுப் பசுக்கள். பத்துவித வாயுக்கள். மாற்றுப் பசுக்கள் - புலன்கள்.
தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல் மொட்டா யெழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானன்றே. பொருளுரை: ஆருயிர் தட்டான் என்று அழைக்கப்படும். தட்டான் - சார்பாய்ப் பொருந்துபவன். தட்டல் - பொருந்துதல். ஆருயிர் அகத்தில் தோன்றுவதற்கு நிலைக்களமாகவுள்ளது உடல். அவ் வுடலின்கண் மச்சுப் போன்று உயர்ந்த இடத்திலுள்ளது உச்சித்துளையாகும். அதுவே முதன்மையான இடமாகும். அவ் விடத்து அரும்புபோன்று பொருந்தியிருப்பது அமிழ்தூற்றத் தோற்றமாகும். பின் அது விளைந்து செவ்விய அமிழ்தப்பாலாய்ச் செறிந்தது. அதுவே ஆயிர விதழ்த் தாமரையாகும். வட்டமாகிய ஓங்காரம் உள்ளடங்க வாய்மையாகிய திருவைந்தெழுத்துத் தன்னகத்ததாக அருளால் அவ் வுயிர் அமைத்துக்கொண்டது. தகைந்து கொண்டான் - தனதாக்கிக் கொண்டான். குறிப்புரை: தட்டான் - சீவன். அகத்தில் - உடம்பின்கண். மச்சின் மேல் - கபாலத்தில். செம்பால் - செம்மைத்தன்மை. வட்டம் - பிரணவம். வாய்மை - அஞ்செழுத்து. அதனை - அந்த அமுதை. தகைந்து - தடுத்துத் தன்னுடையதாக ஆக்கி.
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனி திரிக்கின்ற வொட்டஞ் சிக்கெனக் கட்டி வரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. பொருளுரை: கூல அரிக்கட்டுக்கள் நிறைந்துள்ள நாற்றங்காலாகிய துன்பவயல் உடலாகும். அவ் வுடலின்கண் உயிர்ப்பு விடுக்கும்போது பன்னிரண்டு விரல் அளவு வெளியிற் செல்லும். அதனை எடுத்தலாகிய பூரகம் செய்யுங்கால் எட்டு விரல்தான் உள்ளே தடுத்தலாகிய கும்பகத்தின்கண் அடங்குகின்றது. எஞ்சிய நான்குவிரல் உயிர்ப்பு வெளியே நின்று விடுகின்றது. அங்ஙனம் அவற்றை வெளியில் நிறுத்திவிடாமல் உள்ளே இழுத்து நிறுத்தி விடுதல் வேண்டும். அதுவே சிக்கெனப் பிடித்தலென்ப. அந் நான்கு விரல் உயிர்ப்பும் உள்ளே தங்கச் செய்யும் மனம் நல்லான் கறவை எனப்படும். அம் மனத்தினை உயிர்ப்புடன் பூட்டுதல் வேண்டும். அங்ஙனம் பூட்டினால் விரிந்து விளைந்து வெண்மையாகக் காணப்படும் உயிர்வித்து வீடுபேற்றின் வித்தாய் அருள் நினைவாய் அடியின்பாய்த் திகழும். வெள்ளரி - வெண்மை. குறிப்புரை: அரிக்கின்ற - தானிய அரிக்கட்டுக்கள் உண்டாதற்கு உரிய. நாற்றங்கால் அல்லற்கழனி - நாற்றங்கால் ஆகிய வயல்போலும் துன்பம் நிறைந்த உடல். திரிக்கின்ற ஓட்டம் - வெளியில் திரியும் நாலு விரல் அளவுள்ள சுவாசம்சிக்கெனக் கட்டி - அந்த நான்கு விரல் அளவு உள்ள சுவாசத்தையும் கூடிக் கொள்ளும்படி செய்து. வரிக்கின்ற - கொள்ளத்தக்க. நல்லான் கறவை - மனம். பூட்டில் - பிராணவாயுவாகிய சுவாசத்துடன் கூட்டினால். வெள்ளரி வித்து - சுக்கிலம். வித்தாமே - முத்திக்கு வித்தாமே.
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக் கிடாக்கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக்கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. பொருளுரை: தாளாண்மையை முன்னிட்டுக்கொண்டு தூவுதலாகிய மனத்தைப் பண்படுத்தி, திருவடிநினைப்பாகிய தூய பயிற்சியை எருவாக இட்டு, மேன்மையுணர்வாம் மோனமாகிய விதையினை விதைத்து, முயற்சியாகிய இடையறாத் தொண்டினைக் கிடாவாகப் பூட்டி, திருவடிப் பேரின்பத்தினை வெளிப்படுமாறு கிளறி, மோனத்தினின்றும் தோன்றும் தேனனைய திருவடியுணர்வின்பத்தினை விசுத்தி எனப்படும் மிடற்றின்கண் திருவருள் நினைவாம் மிடாக்கொண்டு அமைத்தல்வேண்டும். அதன்கண் திருவடிப்பேரின்ப அமிழ்தாம் சோற்றினைச் சமைத்துப் 'பப்பற வீட்டிருந்துணர்தலாகிய' மெல்ல விழுங்குதலைச் செய்யார். விளை வறுத்துக்கொண்டுவர வேண்டுவதாய முயற்சியுடன் சென்று விளைவு ஏதும் இன்மையால் அவர் அறுக்கின்றது ஏதும் இன்றென்க. குறிப்புரை: இடர்கொண்டு - வருந்தி முயன்று. தூவி - மனதைப் பண்செய்து. எருவிட்டு - சுத்தவாதனையாகிய எருவினை இட்டு. வித்தி - மோனமாம் வித்தைப் பதித்து. கிடர்க்கொண்டு பூட்டி - முயற்சியினால். கிளறி - வெளிப்படச்செய்து. முளையை மவுனத்தினின்றும் முளைக்கும் ஞானத்தை. மிடர்கொண்டு - விசுத்தி ஆதாரத்திலுள்ள ஈசன் அருளினால். சோறட்டு - அமுதம் வரச்செய்து. அடர்க்கொண்டு - துன்பம் எய்தி. செந்நெல் - சிவானுபவம்.
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுமுக் காதே. பொருளுரை: திருவடிப் பேற்றிற்கு வேண்டும் நன்னெறிநான்மைத் தவமுயற்சி விளைந்துகிடந்தது. அதுவே வீடுபேற்றிற்கு வித்தாகும். அமிழ்த நிறைவாகிய அமுதக்கேணி காதம் எனப்படும். அதுவும் மேலைக்கு வேண்டும் திருவடிநினைவாம் அமுதம் விளைந்துகிடந்தது. அவ்விளைவினை நனிமிகு விழைவுடன் கொள்வார்க்கு உடம்பகத்துக் காணப்படும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முக்காதமாகிய மூன்று மண்டலங்களிலும் விளைந்துகிடந்ததென்க. நன்னெறிநான்மை: சீலம், நோன்பு, செறிவு, அறிவு. காதம் என்பது செய்யுட்டிரிபால் காதெனக் கடை குறைந்து நின்றது. குறிப்புரை: மேலைக்கு - மோட்சத்துக்கு. காதம் - அமுத கேணி. விளைந்து என்னும் அடுக்கு அளவின்மையைக் குறித்தது. முக்காதம் - மூன்று மண்டலம். சோமன் - சூரியன் அக்கினி.
களருழு வார்கள் கருத்தை யறியோங் களருழு வார்கள் கருதலு மில்லை களருழு வார்கள் களரின் முளைத்த வளரிள வஞ்சியின் மாய்தலு மாமே. பொருளுரை: களராகிய உவர்நிலத்தை உழுவார்கள் என்ன எண்ணத்துடன் உழுகின்றார்கள் என்பதை யாம் அறிவதற்கில்லை. அங்ஙனம் உழுவார் என்ன குறிக்கொண்டு உழுகின்றார் என்பதும் தெரியவில்லை. அதுபோல் தவமுயற்சியின்றி மீண்டும் பிறப்பதற்கே ஆளாகி இறக்கின்றார்கள். இவர்தம் செயல் வீண்செயலாகின்றது. அதற்கு ஒப்புக்களரின் முளைத்த வளருந் தகுதிவாய்ந்த இளவஞ்சிக் கொடியானது சார்ந்த நிலத்தின் புன்மையால் பட்டுமாய்வதாகும். குறிப்புரை: வஞ்சி - வஞ்சிக்கொடி. மாய்தல் - கேடு அடைதல்.
கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்து ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாட்பட நின்று நலம்புகுந் தாயிழை ஏற்பட இல்லத் தனிதிருந் தானன்றே. பொருளுரை: மிகவும் நுண்மைவாய்ந்த அசைவில் கொட்டகமாகிய நெஞ்சத்திடத்து, திருவைந்தெழுத்தால் செய்யப்படும் தண்சுடர்த் தழலினுள் ஆருயிரைக் கட்டுறுத்தும் ஆப்பினை வைத்திடுதல்வேண்டும். திருவருள் பிறைபோன்று ஆருயிர்களுடன் நாட்படநின்று நிலைபெற்று நலம்புரிந்து அருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதமும் எய்தும். எய்தவே திருவடிப்பேரின்பப் பேரில்லத்தின்கண் அவ்வுயிர் இனிது வீற்றிருந்து இன்புறும். குறிப்புரை: குறுநரிக் கொட்டகம் - அணு அளவு ஆய மனம் இருக்கும் உடல். ஆப்பிடு - கட்டப்பட்ட. அங்கியுள் - சிவாக்கினியில் ஆயிழை ஏற்பட - சத்தி பதிய.
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. பொருளுரை: மலையாகிய புருவநடுவின்மேல் மழையாகிய உச்சித்துளை யமிழ்து இடையறாது ஓழுகுகின்றது. மான்கன்றாகிய ஆருயிர் அமிழ்த நுகர்வால் சிவப்பேரின்பந் திளைத்துத் துள்ளுகின்றது. குலையாகிய கரையின்மேலிருந்த உணர்வுக்கு உணர்வாம் கொழுங்கனி ஆருயிரின் மேல் விழுகின்றது. அவ்வுயிர் அதனை யுண்டு மகிழ்கின்றது. கனி: திருவைந்தெழுத்து;கொப்பூழின்கண் திருவைந்தெழுத்தால் செய்யப்படும் வேள்விக்குழி உலை என்று ஓதப்பட்டது. அவ் வேள்விக்கு உறுப்பாகச் சிறந்துநிற்கும் கொல்லன் சிவபெருமானாவன். அவன் திருவருளாற்றலாம் உலக அன்னையின் முலையினின்றும் வழிந்தொழுகும் மேலாகிய திருவடியுணர்வென்னும் அமிழ்தினை இடையறாது பொழியவைத்தருளினன். குறிப்புரை: மலை - புருவமத்தி. மழை - அமுத தாரை. மான் கன்று - சீவன். குலைமேல் - அம் மலையிலுள்ள மாமரக்கொத்து ஆகிய அறிவில் இருந்து. கொழுங்கனி - ஆன்ம அனுபவம். வீழ - உண்டாக. உலை - தவம். கொல்லன் - சிவன். முலைமேல் அமிர்தம் பொழிய - சத்தியபதிய. போதையார். சம்பந்தர், . - . " சிவனடியே. . " .
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. பொருளுரை: பார்ப்பானாகிய ஆருயிர்களின் அகமாகிய உடம்பின்கண் பால்தருந் துணையாம் பசுக்கள் ஐந்துள்ளன. அவை அறிபுலனாம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ப. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன். அச் சிவபெருமானை ஆருயிர்கள் திருவைந்தெழுத்தாகிய தனித் தமிழ்ச் சிறப்பு மறையான திருவைந்தெழுத்தினை இடையறாது எண்ணுதல் வேண்டும். அங்ஙனம் எண்ணினால் அவன் திருவருள் அப் பசுக்களை மேய்க்கும். உயிர்கள் அச் சிவபெருமானை எண்ணாவிட்டால் அவன் மேய்க்காதுவிட்டு விடுகின்றனன். மேய்த்தல் - அடக்குதல். மேய்ப்பாரின்மையாலே அப் பசுக்கள் வெறித்துத் திரிகின்றன. வெறித்துத் திரிவன என்பது உலகியற் புலன்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்வன என்பதாம். அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவ பெருமான் வெளிப்பட்டால் அப் பசுக்களுக்கு வெறியடங்கும். வெறி யடங்கினால் அப் பசுக்கள் அவ் வுயிர் சிவப்புலனை நுகருமாறு துணை நிற்கும். அப் பசுக்கள் பாலாகச் சொரியுமென்பது பாலை முகந்து வாக்கும் வெண்பொற்கரண்டியே பாலைச் சொரிகின்ற தென்பதனை யொக்கும். அப் புலன்கள் திருவடியின்பத்தினை நுகரத் துணைநிற்கும். துணைநிற்பதால் பாலுடன் விரவிநிற்கும் கரண்டி பால்வண்ணமாவது போன்று அப்புலன்களும் சிவவண்ணமாகும். இதுவே பசு கரணங்கள் பதிகரணங்களாகத் திரியுமென்பதாகும். குறிப்புரை: பார்ப்பான் அகம் - பிரமனால் படைக்கப்பட்ட சரீரம். பாற்பசு ஐந்து - ஐம்பொறிகள். பால் - ஆனந்தம். நாமல்ல. சிவஞானபோதம், . - . " அஞ்செழுத்தால். சிவஞானபோதம், . - . " தெய்வச். அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், .
ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதுந் தேமா இரண்டொடு திப்பிலி யொன்பதுந் தாமாக் குரங்கொளிற் றம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரன்றே. பொருளுரை: உயிர்க்காற்று, மலக்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தொழிற்காற்று ஆகிய ஐந்தும் ஆமாக்களையொக்கும். ஆமா - காட்டுப்பசு, அறிதற்கருவியாகிய செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் ஐந்தும், செய்தற்கருவியாகிய, வாய், கால், கை, எருவாய், கருவாய் என்னும் ஐந்தும்; எண்ணம், எழுச்சி, இறப்பு என்னும் மூன்றம் ஆகிய பதின்மூன்றும் அரியேறு ஒக்கும். தேமா என்பது தே + மா எனப் பிரிந்து முறையே இனிப்பும் புளிப்பும் எனவும் பொருள்தரும். இனிப்பு, இன்பத்தினையும், புளிப்பு, துன்பத்தினையும் குறிக்கும் குறிப்பாகும். அவ் விரண்டனையும் திருவடியுணர்வால் ஒப்பக் கருதுதல் இருவினையொப்பாகும். வாய் பூசுதலும் கால் கழுவுதலும் மணத்தால் நேர்மாறானவையாகும். எனினும் ஒப்பக்கருதிச் செய்யும் கடமைச் செயலாவதன்றிப் பிறிதுண்டோ? அம்மட்டோ, இரண்டனையும் கழுவியகற்றுவதன்றி வேறென்செய்குவம். இரண்டனையும் வழுவென்று ஒப்பக்கொள்ளாது முரண்படுவாருண்டோ? உயிர்வாழ வேண்டுமென்னும் ஒருநோக்கத்தால் இரண்டையும் இயற்றிவருகின்றனம். அதுபோல் திருவடி சேரவேண்டுமென்னும் ஒருபெரு நோக்கத்தால் 'சித்தம் சிவனொடும் ஆட ஆட....பிறவி பிறரொடும் ஆட ஆட' நிற்கும் நல்லார் உடலூழாய்க் கொண்டு இருவினையொப்பு எய்துவர் திப்பிலி திப்பி-கோது. இலி - இல்லாதது. எனவே கோதற்றது. குற்றமற்றது என்றாகும். சுக்கு மிளகு திப்பிலி மூன்றும் முறையே வாதம், பித்தம், கோழை மூன்றற்கும் மாற்று மருந்தாகும். இம் மூன்றனுள் கோழையே மிகக் கொடுமை வாய்ந்தது. அதுவே இறப்பினைத் தருவது. அதனை நீக்குவது திப்பிலி. இவ்வொப்பையொத்த பண்புகள் வருமாறு: நினைத்தல், கற்றல், நெடும் புகழ் உரைத்தல், தொண்டுபுரிதல், மலர்தூவிப் போற்றல், நட்டம், வணங்கல், நாடியின்புறல், முனைப்பறல் என்னும் ஒன்பதும் அரும்பெரும் பண்புகளாகும். இவையே திப்பிலி என்ப. இவை நம்மனத்து நினைத்து எல்லைப்பட்டு நம்வயப்படுதல்வேண்டும். அப்பொழுது செருக்கு முதலிய அறுபகையும் அகன்று அறும். என்றும் கெடாத பற்றறுதி என்னும் வைராக்கியம் கடா எனப்பட்டது. விடின் - அதனைக் கைவிட்டால் அறுபகையும் மூளச் செய்கின்றவராவர். குறிப்புரை: ஆமாக்கள் ஐந்து-பஞ்சப் பிராணன். அஃதாவது அபானன், உதானன், சமானன், பிராணன், வியானன். அரியேறு - ஆண்சிங்கத்தின் தன்மை வாய்ந்த முப்பது-மூன்று+பத்து. ie. கன்மேந்திரியம் , ஞானேந்திரியம் ஆக . புத்தி, சித்தம், அகங்காரம் . தேமா இரண்டு - சுகம், துக்கம். திப்பிலி ஒன்பது- நினைத்தல், படித்தல், புகழ்தல், தொண்டு செய்தல், அருச்சனை, நட்டல், வந்தித்தல், பார்த்து ஆனந்தித்தல், தற்போதம் இழத்தல் ஆக . தாமா - தமக்கு உரியனவாக குரங்கொளின்-வசப்படுமாயின். மனத்துள்ளன - மனத்துள்ள காமக் குரோத ஆதிகள். மூவா-வளர்ச்சி அடையா. கடாவிடின் - வைராக்கியம் வளர்ச்சி அடைதலின். மூட்டுகின்றார் - காமாதிகளைக் கொடுக்கின்றார்.
எழுதாத புத்தகத் தேட்டின் பொருளைத் தெருளத கன்னி தெளிந்திருந்த தோத மலராக பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே. பொருளுரை: அருளோன் ஆகிய சதாசிவநாயனார் செவ்வி வாய்ந்த நல்லார் உள்ளத்து வெளிப்பட்டு நின்று நெறி நூலாகிய மறையினையும், துறை நூலாகிய முறையினையும் உணர்வு அளவான் எழுப்பியருள்வன், பின்னர் அந்நல்லார் நூல்வடிவாக ஆக்கியருள்வர். அதனால் மறைகள் எழுதாக்கிளவி என்றழைக்கப்படுகின்றன. அவ்வெழுதாத உள்ளுணர் புத்தக ஏட்டின் பொருளைத் திருவருளின் அறிவாற்றற் பெருந்திரு தெளிந்திருந்து ஒதினள். அவள் தானே தெளிந்து கொண்டது அன்றி ஒருவர் தேளிவிக்கத் தெளிந்தாளல்லள். பிறப்பு இறப்பு இல்லாத பெருமானென்பார் மலராத பூ என்றனர். மலர்தல் என்னும் சொல்லே முன் மலராமையையும், பின் வாடுதலையும் குறிக்கும். மேலும் மலர்தல் என்பது துணைக் காரணங்கள் கூடிய வழிச் செயற்கையான் மலர்வது என்றாகும். ஆகவே இயற்கை இறைவன் என்பதனைக் குறிப்பதற்கு இயற்கைப் பூவே குறித்தல்வேண்டும். அதனால் செயற்கையான் மலராத மலர் என்றனர். அளவிடப்படாத அம் மலராகிய இறைவன் திருவடிக்கண் உள்ள எல்லையில்லாத நல்ல மணமாகிய தேனைத் திருவருளா லுண்ணும் தொன்மைக்கணுள்ள ஆருயிர் பிறவாத வண்டு என உருவகிக்கப்பட்டது. அவ் வண்டு திருவடிப் பெருந்தேன். இன்பத்தினை உணர்விலழுந்தி ஒப்பில் இன்பம் எய்துகின்றது. குறிப்புரை: எழுதாத புத்தகத்து எட்டின் பொருளை - சதாசிவ நாயனாரைத் தவிர வேறு எவராலும் எழுதப்படாத புத்தகத்தால்வர்ணத்தைக் குழைத்து எழுதப்பட்ட தமிழ் வேதப்பொருளை தெருளாத - இருதுவென்பதே இல்லாத கன்னி - மனோன்மணி (மனோன்மனி கையில்தான் வேதபுத்தகம் உள்ளது என்பதை, "ஏடங்கை நங்கை" என்ற திருமந்திரப் பாட்டாலும் அறிக). மலராத பூ - சிவம். பிறவாத வண்டு - பிறப்பற்ற சீவன். மணம் - சிவானந்தம். .ஒழுகலரி. சம்பந்தர், . - . " . - . " தெய்வச்சுருதி. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், . " துணையி. அப்பர், . - .
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்துங் கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற வரை விருத்திபெற் றாரன்றே. பொருளுரை: போகின்ற பொய்யாகிய விடுத்தல் மூச்சும், புகுகின்ற பொய்யாகிய எடுத்தல் மூச்சும், ஓவாது பயிலப்படுதலால் வீணாகக்கழியும் நால்விரல் மூச்சு கூகின்ற வித்தெனப்படும். கூகின்ற-அழைக்கின்ற வெளியிற் செல்லும் உயிர்ப்பினை உள்ளிழத்தலால் அழைக்கின்ற என ஓதப்பட்டது. வித்து நிலையாகநிற்பது. தடுத்தல் மூச்சினைக் கும்பகம் என்ப. அம்முறை உயிர்ப்புப் பயிற்சியான் நாவலனைய உடம்பகத்து இருவினைப் பயனாகிய பைங்கூழை ஆருயிர் உண்ணும். ஐவராகிய அறிதற்கருவி ஐந்தும் அழியும் தன்மைத்தாகிய இவ்வுடம்பினின்றும் நுகர்வு பெற்றார் என்க. விருத்தி - ஆக்கம்; நுகர்வு. குறிப்புரை: போகின்ற பொய் - இரேசக வாயு. புகுகின்ற பொய்வித்து - பூரக வாயு. கூகின்ற- கூடுகின்ற வாயு, அஃதாவது நான்கு விரற்கடையுள்ள வாயு. நாவலின் கூழை - சரீரம். பைங்கூழ் - இரு வினைப்பயன். ஐவர் - ஞானேந்திரியங்கள். வேகின்ற கூரை - சரீரம்.
மூங்கின் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினிற் சார்ந்து கிடந்த பனையிலோர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறன்றே. பொருளுரை: மூங்கில் முளையாகிய மனத்தின்கண் திருவருளால் ஆருயிர்களை உயிர்விக்கவேண்டி எழுந்ததோர் வேம்பாகிய சிவன் உண்டு. சிவனார் வேம்பென்னும் மருந்தொன்றுண்டு. அது பூண்டு வகையைச் சார்ந்தது. அச் சிவனார் வேம்பினைச் சார்ந்துகிடந்தது. ஒப்பில்லாத பனையொன்று. பனையென்பது கற்பகத்தருவாகும். பனையென்பது நடப்பாகிய மறைப்பாற்றலாகும். அந்நடப்பாற்றலாற் செலுத்தப்படுவது அறியாமையாகிய பாம்பென்ப. அப் பாம்பாகிய அறியாமையைத் திருவருட்டுணையால் துரத்தித் தின்பா ரரியராகின்றனர். துரத்தித் தின்றல் - நீக்குதல். அருளால் அறியாமையை நீக்குவாரின்மையால் சிவம் என்னும் வேம்பு கூடுதலின்றிப் பிரிந்துகிடக்கின்றது. வெடிக்கின்றது - பிரிகின்றது. அறியாமையாகிய ஆணவம் பாம்பாகிய மாயையின் வழித் தொழிற்படுதலால் காரணத்தைக் காரியமாக ஏற்றிக் கூறப்பட்டது. குறிப்புரை: மூங்கில் - மனம். வேம்பு - சிவம். பனை - திரோதானம். பாம்பு - அஞ்ஞானம். வெடிக்கின்றவாறு - அறியப்படாத தன்மை.
பத்துப் பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரன்றே. பொருளுரை: பத்துநாடிகளும் பத்துப் பெரும்புலி எனப்பட்டன. பூதம் ஐந்து, பூதமுதலைந்து, புலனைந்து ஆகிய பதினைந்தும் யானை என்று உருவகிக்கப்பட்டன. பூதமுதல் - தன்மாத்திரை. புலன் - ஓசை முதலிய நுகரப்படும் பொருள்கள். அறிதற்கருவி ஐந்தும் வித்தகர் எனப்பட்டன. காற்றுக்கள் பத்தும் வினோதகர் எனப்பட்டன. ஈரெண்மர்: இரண்டு + எட்டு - இருவர் எண்மர் = பதின்மர். அமைதி, ஆற்றல், அபந்தல் என்னும் குணம் மூன்றும் மூவர் எனக் கூறப்பட்டது. பிறத்தல், கற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு என்னும் அறுவகை நிலையினையும் மருத்துவராகக் கூறினர். அவ்விடத்து ஐம்பாடுகள் உண்டு. அவை நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பன. பத்துநாடிகள்: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு, என்பன. இவற்றை முறையே இடைகலை. பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு எனவும் கூறுப. காற்றுக்கள் பத்து: உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்ப. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனவும் கூறுப. குறிப்புரை: பத்துப் பெரும்புலி - தசநாடி. யானை பதினைந்து - மண் முதலைந்து, சுவை முதலைந்து, வாக்காதி - ஐந்து. வித்தகர் ஐவர் - ஞானேந்திரியங்கள். வினோதகர் - உடலின்கண் ஊழியம் செய்பவர். ஈரெண்மர் - பத்து வாயுக்கள். மூவர் - முக்குணம். அறுவர் - பிறத்தல் முதலிய விகாரங்கள். அத்தலை - அவ் வுடம்பில். ஐவர் - ஐந்து அவஸ்தைகள்.
இரண்டு கடாவுண்டு இவ்வூரி னுள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில் இரண்டு கடாவும் ஒருகடா வாமே. பொருளுரை: இவ்வூராகிய உடம்பகத்து விடுத்தல் எடுத்தலாகிய உயிர்ப்புப் பயிற்சிக்குரிய இருதொழிலும் கடாக்கள் எனப்பட்டன. இவ்விரண்டினையும் மேய்த்து நடத்தும் உயிர் ஒன்றுண்டு. அவ்வுயிர் தொழும்பன் எனப்பட்டது. விடுத்தல் எடுத்தல்களாகிய மூச்சினை இருத்திப் பிடித்துத் தடுத்தலைச் செய்யின் அவ்விரண்டு கடாவும் ஒரு கடாவாகும். தடுத்தல் - கும்பகம். குறிப்புரை: இரண்டு கடா - இரேசகம், பூரகம். இவ்வூர் - இவ் வுடம்பு. தொழும்பன் - சீவன். ஒருகடா - கும்பகம்.
ஒத்த மனக்கொல்லை யுள்ளே சமன்கட்டிப் பத்தி வலையிற் பருத்தி நிறுத்தலால் முத்தக் கயிறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்பநின் றாரன்றே. பொருளுரை: நேர்மையான மனக்கொலையினைச் செம்மைப்படுத்திப் பத்திவலையினைப் பரப்பினால் பருத்தியாகிய சிவன் ஆண்டு வெளிப்பட்டு நிற்பன். அளவின்றி முறுக்கேறிய கயிறு அறந்து அழிவதுபோல் முக்குணங்களும் அழிந்தன. ஊராகிய எண்ணத்தினுள் தன்னைச் சார்ந்த மெய்யடியார்களைக் காத்தல் தலைவராகிய சிவபெருமானார் தனிக் கடனாதலின் 'நித்தம் பொருதென்றனர்.' முக்குணம் அகலவே எக்காலுமுள்ள மிக்க சிவபெருமான் நிரம்ப நின்றருளினன். முக்குணத்தையும் ஒருபுடையொப்பாக மும்மலகாரியம் எனல் அமையும். அமைதிக் குணம் மாயையின் காரியம். ஆட்சிக்குணம் கன்மத்தின் காரியம், அழுந்தற்குணம் மலத்தின் காரியம். குறிப்புரை: சமன்கட்டி - செவ்விதாக அமைத்து. பருத்தி - சிவம். முத்தக்கயிறு - முறுக்கு அதிகப்பட்டு அறுபட்ட கயிறுபோல. மூவர் - முக்குணங்கள். ஊரினுள் - சித்தத்தில். நிரம்ப - பூரண சிவமாக.
கூகையுங் பாம்புங் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுக லுறுதலுங் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறன்றே. பொருளுரை: கூகையாகிய அறியாமையும், பாம்பாகிய சுட்டறிவும், கிளியாகிய அறமும், பூஞையாகிய பாவமும், நாகையாகிய சிற்றறிவும், பூழாகிய அறுபகையும், உடம்பின் நடுவாகிய எண்ணம் என்னும் சித்தத்தின்கண் உறைவன. உறைதல் - தங்கியிருத்தல். நாகையாகிய சிற்றறி வினைக் கூகையாகிய அறியாமை நணுகமுயலும். அப்பொழுது அருள் ஒளிபெற்ற வெள் எலியாகிய ஆருயிர் சிவனை நினைந்து கூவும். சிவனும் வெளிப்பட்டுக் கூகையை அடக்கியருளவன். குறிப்புரை: கூகை - அஞ்ஞானம். பாம்பு - காமம். கிளி - அறம். பூஞை - மறம். நாகை - சிற்றறிவு. பூழும் - குரோதமும். நடுவில் - சித்தத்துள். எலி - சீவன்.
குலைக்கின்ற நன்னகை யாங்கொங் குழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறமெனில் ஓடு மிருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. பொருளுரை: மனத்தகத்து எழும் நன்மைகளைக் குலைத்தலைச் செய்வது தீய எண்ணங்கள். அவற்றைத் திருவருள் நன்னகை என்று சொல்லப் படும்அருயொளியாம் பூந்தூளால் விலக்குதல்வேண்டும். சார்ந்ததன் வண்ணமாக இருக்கும் தன்மை வெண்ணிறத்திற்கே உண்டு. அதனால் ஆருயிரை வெள்ளெலி என உருவகித்தனர். நிலைபெற்று நிற்கின்ற வெள்ளெலியாகி உயிர் அமைதி, ஆட்சி, அழுந்தல் என்னும் முக்குணங்களையும் உடன்கொண்டு வந்தது. உலையாகிய உடம்புக்குப் புறமாக அவ்வுயிர் செல்லுமானால் அக்குணங்கள் மூன்றும் கெடும். புறம்பாகச் செல்லுதல் என்பது உயிரின் உள்ளம் சிவத்தின் பேரிலேயே பதிந்து கிடத்தல். அவ்வுயிர் உடம்பின்கண் பற்றுக்கொண்டிருக்குமானால் அம் முக்குணங்களும் முனைத்து நிற்கும். புலையாகிய மாயைக்குப் பிறந்த அக் குணங்கள் அகலும்வழி இவையாகும். பிறத்தல் என்பது மாயையின் காரியமாகத் தோன்றுதல். குறிப்புரை: குலை.....உழக்கின் - எழுகின்ற கெட்ட எண்ணங்களை அடக்கினால். வெள்ளெலி - சார்ந்ததன்வண்ணம் ஆகும் சீவன். உலை - உடம்பு. ஓடும் - முக்குணங்கள் கெடும். இருக்கும் - உள்ளாயின நிலை பெறும். புலைக்கு - மாயைக்கு.
காடுபுக் காரினிக் காணார்கடுவெளி கூடுபுக் கானவை ஐந்து குதிரையும் மூடுபுக் கானவை ஆறுள ஒட்டகம் மூடுபு காவிடின் மூவணை யாகுமே. பொருளுரை: மாயையின் பேரொடுக்கப் பெரு வெளி சிவமாகும். அதனைக் காடென ஓதினர். அக் காட்டின்கண் அருளாற் சேர்ந்து நிலைபெற்றன ஆருயிர்கள். கடுவெளியாகிய பாழினைச் சிறிதும் காணார். கூடாகிய உடம்பின்கண் ஐந்து குதிரையாகிய அறிதற் கருவிகள் புகுந்தன. செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்னும் ஆறும் பெரும்பகையாகும். இவற்றை ஒட்டகம் என உருவகித்தோதினர். ஆருயிர்கள் அருட்டுணையால் இவ் வொட்டகங்களை அடக்கி மேற்செல்லுதல் வேண்டும். அங்ஙனம் சென்றால் அவ்வுயிர்கள் மூவணை எய்தும். மூவணையாவது ஆருயிர்ச் செயலறல், அருட் செயலறல், அருளோன் செயலறல் என்ப. இவற்றைச் சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் எனவும் கூறுப. ஒட்டகம் பாலைநிலக் கருப்பொருள். குறிப்புரை: காடு - மாயையாகிய காடு. கடுவெளி - சூனியம். கூடு - உடல் ஐந்து. குதிரை - ஞானேந்திரியம் ஐந்து. மூடு புக்கானது அடங்கி ஒழிந்தது. ஆறுள ஒட்டகம் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம். மூடுபு - அடக்கி. தாவிடின் ஒழுகினால். மூவிணை - சீவதுரியம், சிவதுரியம், பரதுரியம்.
கூறையுஞ் சோறுங் குழாயகத் தெண்ணெயுங் காறையும் நாணும் வளையலுங் கண்டவர் பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரன்றே. பொருளுரை: உடுக்கும் உடையும், உண்ணும் சோறும், குழாய்க் கலத்து எண்ணெயும், கழுத்தணியாகிய காறையும், அரைஞாணும், கைவளையலும் கண்டவர் அவற்றின்கண் பெருமயக்குக் கொள்கின்றனர். இவையனைத்தும் நிலையில்லாத மாயாகாரியப் பொருள்களாகும். இவற்றின் உண்மையினை உணராது இவை நிலைக்குமென மயங்கித் தடுமாற்றம் எய்துகின்றனர். அவர்கள் உள்ளம் அப் பொருள்களினிடத்து விரைந்து பறந்து செல்கின்றது. அதற்கு ஒப்புப் பாறையில் உலரும்படி விரித்த சீலை பெருங்காற்றால் பறந்து செல்வதாகும். அவ் வுயிர்கள், ஆறைக்குழியில் வீழ்ந்து அழுந்தும். ஆறைக்குழி என்பது செருக்குச் சினம் முதலாகிய ஆறுபகையுமாகும். ஆறு என்பது ஆறை என ஐகாரச் சாரியை பெற்றதாகும். குறிப்புரை: கூறை - ஆடை. குழாய் - பாத்திரம்;. காறை - கழத்தணி. நாணும் - அரை நாண். ஆறைக்குழி - உபத்தம்.
துருத்தியுள் ளக்கரை தோன்று மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்தியுள் நின்ற மலையைத் தவிர்ப்பாள் ஒருத்தியுள் ளாளவர் ஊரறி யோமே. பொருளுரை: நோக்கமும் நீக்கமும் என்பன முறையே பிரவிருத்தி நிவிர்த்தி என்று பேசப்படும். இவை இரண்டும் ஒருங்கு நிகழ்வனவாகும். ஊதுந் துருத்தி காற்றை வாங்கி வெளிவிடும் கருவி. அக் கருவியே இவற்றிற்கு ஒப்பாகும். நோக்கமும் நீக்கமும் ஆகிய இச் செயல்களுள் விருத்தியாகிய நோக்கத்தினைக் கண்காணித்தற் பொருட்டு ஆருயிர்க் கிழவர் முபோதும் போவர். திருவருளம்மை உடனின்று சித்தவிருத்தியாகிய நோக்கத்தினைத் தவிர்த்தலாகிய நீக்கத்தினைப் புரிந்தருள்வள். இந் நோக்கத்தினை மலையென உருவகித்தனர். அவள் ஒப்பில்லாத பேரறிவுப் பேராற்றற் பேரருட் பெருந்திருவினளாவள். அவள் இணை பிரியாது துணையாக ஒட்டி வாழும் ஊராகிய சிவபெருமானாரை நாமாக அறியவல்லோம் அல்லோம். திருவருள் காட்டச் சேர்ந்து காண்போம் என்க. இதுவே "தாயுடன் சென்றுபின் தாதையைக்கூடி" என்பதன் பொருளாகும். குறிப்புரை: துருத்தி - பிரவிருத்தி, நிவிர்த்தி. அக்கரை - எல்லை. மலைமேல் விருத்தி - சித்தவிருத்தி; காமாதிகள். ஒருத்தி - சிவசத்தி. ஊர் - இருப்பிடம்.
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் பெறலுரு வாகும் இருந்திய பேற்றினில் இ,ன்புறு வாரே. பொருளுரை: ஆருயிர் செய்துகொண்ட வினைப் பயனுக்குத் தக்கவாறு திருவாணையால் இன்பத்துன்பங்கள் வருகின்றன. இவற்றை இன்பந் தருங் கிளியாகவும் துன்பந்தரும் பருந்தாகவும் உருவகித்தனர். மேலும் கிளியைக்கண்டு மகிழ்கின்றோம். பருந்தைக் கண்டு நடுங்கின்றோம். பறைகொட்ட என்பது பலரறியக் கொடுப்பதெனவும், மலந்தேயக் கொடுப்பதெனவும் பொருள்படும். எனவே துன்பமும் இன்பமும் மலந்தேயக் கொடுக்கப்படுவன. அவற்றை நுகர்விப்பதன் பொருட்டு எண்ணம், மனம், எழுச்சி, இறப்புகளாகிய உட்கரணங்கள் ஆருயிர்களுடன் திருந்தப்பொருந்தின. இதனைத் திருந்திய மாதர் திருமணம் பட்டார் என்றனர். முதற்கண் தோன்றும் எண்ணம் பூதம் எனப்பட்டது. எண்ணமென்றாலும், நாட்டமென்றாலும், சித்தமென்றாலும் ஒன்றே. அவ் வெண்ணம் சிவத்தைப் பேணுதலாகிய தவத்தான் நன்மை எய்தும். அது கைகூடவே பெறதற்கரிய திருவடிப் பேற்றின் இன்ப வுரு வெளிப்பட்டிருக்கும். அதுவே திருந்திய பேறெனப்பட்டது. அப் பேற்றின்கண் இருந்து இன்புறுவா ரென்க. 'ஊண்பேறாம் பிள்ளை உறுபுணர்வாம் நாச்சுவையும், காண்பரறிவோர்மணத்தாற் காண' என்பதனை நினைவு கூர்க. குறிப்புரை: பருந்தும் கிளியும் - அறமும் மறமும். படுபறை கொட்ட சுகதுக்கங்களை உண்டாக்க. மாதர் - மனம் முதலிய உட்கரணங்கள் திருமணப்பட்டார் - ஒருமை அடைந்தோர். பெருந்தவப்பூதம் பெறல் - பெருந்தவத்தினைச் சித்தம் அடைதலால். உருவாகும் இருந்திய பேறு - உண்டாகும் முதிப்பேறு.
கூடும் பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னொக்குஞ் சூடெறி நெய்யுண்டு மைகான் றிடுகின்ற பாடறி வார்க்குப் பயனெளி தாகுமே. பொருளுரை: ஆருயிரின் உடம்பகத்து திடம்படவிருக்கும் மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் அறிதற்கருவி ஐந்தும் கூடும் பறவை என உருவகிக்கப்பட்டன. இக் கருவிகள் முறையே தத்தமக்குரிய ஊறு, சுவையொளி, நாற்றம், ஓசை என்னும் புலப் பொருள்களுடன் கூடும். கூடி நுகர்ந்து கொண்டிருக்கும். அதனையே இரை கொத்தி என்றனர். கொத்தி என்பதன்பின் இருக்கும் என்னும் ஒரு சொல் சொல்லெச்சமாக வந்து பொருந்திற்று. திருவருள் வலத்தால் ஆருயிர் அதனூடு புகுந்து உண்டியாகிய அந் நுகர்வினை அறத்தல் வேண்டும். அங்ஙனம் அறுத்தால் கைகூடுவது என்னெனில் கூறுதும். சூடாகிய மெய்யுணர்வுத் தழலால் எறிதலாகிய நெய் திருவடிப் பேரின்பமாகும். அவ் வழியா வின்பத்தினை நுகர்தல் வேண்டும். நுகர்வார்க்கு மைபோலும் அறியாமையைக் கக்கும் புல்லுமலமாகிய இருளையொழிக்கும் தன்மை ஏற்படும். அங்ஙனம் அம்மலம் ஒழிக்கப்படவே திருவடிப்பேறு எளிதாகக் கைகூடும். அறுத்தல் - கொள்ளாது தள்ளுதல். குறிப்புரை: பறவை - இந்திரியம். இரை - சுவை முதுலிய ஐந்து. அதனூடுபுக்கு - அவ் விந்திரியவழிச் சென்று. உண்டி அறுக்குறில் - சுவை முதுலிய விஷயாதிகளை நீக்கில். என்னொக்கும் என்ன கிடைக்கும். சூடு ஏறி - தவத்தால் உண்டாகும். நெய் - சிவானந்தம். மை கான்றிடும் - அவிச்சையை ஒழிக்கின்ற. பாடு - தன்மை. இந்திரிய. . கண்டபத்து, .
இலையில்லை பூவுண் டினவண் டிங்கில்லை தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின் குலையில்லை கொய்யும் மலருண்டு சூடுந் தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே. பொருளுரை: இலையாகிய இறைநூற் பயிற்சி யில்லை. பூவாகிய நோக்கமுண்டு. நோக்கம் - பிரவிருத்தி. வண்டின் கூட்டம் என்று சொல்லப்படுகிற தொண்ணூற்றாறு மெய்களின் ஆராய்வு இங்கில்லை. தலையாகிய பயிற்சிப் பயனாம் பேறு இல்லை. வேராகிய காரணப் பயிற்சியுண்டு. தாளாகிய முயற்சியில்லை. பூங்கொத்தாகிய புலப்பொருட்சுவைச் சேர்க்கை இங்கில்லை. ஆனால் உடலூழாம் கொய்யும் மலருண்டு. அம் மலர் உடலூழாகக் கழிதலின் அம் மலரினைச் சூடும் தலையாகிய ஆருயிர் முனைப்பு இங்கில்லை. அம் முனைப்பு கிளைத்துத் தோன்றுதலுமின்று. புலர்தல் - தோன்றுதல். நான்முகன் தலைகிள்ளப்பட்டதென்பது முனைப்பதற்றப்பட்டதென்னு மெய்ம்மையினை ஈண்டுன்னுக. குறிப்புரை: இலை - நூற்பயிற்சி. பூ - பிரவிருத்தி. வண்டு - தத்துவ ஆராய்ச்சி. தலை - சாத்தியம். வேர் - சாதகம். தான் - சாதக முயற்சி. பூவின் குலை - சவை முதலிய விசயக் கூட்டம். கொய்யும் மலர் - சுகதுக்க அனுபவம். கொய்யும் தலை - ஆன்ம அனுபவம். கிளை - சீவபோதம்.
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவ ரஞ்சு துயரமுங் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறன்றே. பொருளுரை: திருவடிப் பேறாகிய அக்கரைக்கண் சீர்மிகு சிறப்பினனாகிய சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற் பொருட்டு நெறி நூலும் துறை நூலும்ஆக்கவிக்கத் திருவுள்ளங்கொண்டருளினன். அதன்பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகச் செல்வராய் வீற்றிருந்தருளினன். நூலும் தோற்றுவித்தருளினன். அக் குறிப்பே ஆல் + அமர் + அம் = ஆலமரம் கண்டு என ஓதப்பட்டது. உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்துணர்ந்து அப்பொழுதே தோன்றும் அருளாளர் நக்கர். நக்கர் - தோன்றுபவர். அவர் சிவபெருமானாவர். அவரைத் திருமுறை வாயிலாக வழிபட்டு அடியார் நடுவே யிருக்கும் பயன் கொள்வார் மிக்கவராவர். ஐவகைத்துன்பமாவன: தொன்மை இருள், செருக்கு, அவா, ஆசை, சினம் என்பன. இவை காரியத்தைக் காரணமாக மொழியப்பெற்றன. இவ்ஐவகைத் துன்பத்தினுக்கே தக்கவராய் அவற்றுள் ஆழ்ந்து கண்டதே கண்டு கொண்டதே கொண்டு செல்வார் பிறப்புச் சூழலில் தாழ்ந்து கிடக்கும். முறையினராவர். குறிப்புரை: அக்கணம் நின்றதோர் - ஆன்மாவிற் பொருந்தியதோர். ஆலமரம் கண்டு - ஆல் அமர் அம் கண்டு - சிவத்தைக் கண்டு. நக்கண - வெளிப்படையாக. நடுவே - நடுநிலையுடன். அஞ்சு துயரம் - அஞ்சு துன்பம்:. அக்கண. . நக்கண.
கூப்பிடு மாற்றிலே வன்கா டிருகாதங் காப்பிடு கள்ளர் கலந்துநின் றாருளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிடு மீண்டதோர் கூரைகொண் டாரன்றே. பொருளுரை: சிவனோ டொருங்கும் பாவனை முறையில் உலகக் கட்டுகள் நீங்கும். கூப்பிடும்: கூம்பிடுமென்பதன் திரிபு. மிகவும் வன்மையான காடுகள் இரண்டுள. அவை நினைப்பும் ஐயமும் ஆகிய சங்கற்ப விகற்பங்கள் என்ப. இவை அறியாமையால் விளைவன. மேற்போக வொட்டாது தடுக்கும் கள்வர் பலர் கலந்து நின்றனர். இவர்களையே ஐம்புலக் கள்வரெனவும், ஐம்புலவேடரெனவும் கூறுப. அங்ஙனம் காப்பிடுங் கள்ளரை நீக்கி நிறுத்தும் வெள்ளராகிய சிவனடியார் தொடர்ந்து நிற்கின்றனர். அருளால் அக்கள்வரைக் கூப்பிடச் செய்தனர். இவர்கள் திருவடிப் பேரின்ப வெள்ளப் பெருக்குடையராவர். வாவா என்று கூப்பிடும் பெரியதோர் கூரையாகிய வீடு கொண்டாரென்க. குறிப்புரை: கூப்பிடும் - உலகபந்தம் நீக்கும். ஆற்றில் - சிவோகம் பாவனா முயற்சியில். வன்காடு இருகாதம் - சங்கற்ப விகற்பத்தோடு கூடிய இருவிதக் காடு ஆகிய அஞ்ஞானம். காப்பிடு கள்ளர் - காவல் செய்யும் இந்திரியக் கள்வர். வெள்வர் - சிவானந்த வெள்ளப்பெருக்கு உடைய அடியவர். கூப்பிடும் - வாக்கு வியாபாரமும். கூரை - வீடு, சீவன்முத்தி. வெள்ளநீர்ச். அப்பர், . - .
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையுங் கட்டியுந் தேனுங் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறன்றே. பொருளுரை: குளமாகிய ஆருயிரின்கண் புணர்வும் புலம்புமாகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துக்கிடந்தன. சுட்டியுணரப்படுவதாகிய பெயரும் வடிவும் விடத்தக்கன. ஆதலின் அவற்றை எட்டியும் வேம்பும் என உருவகித்தனர். இவையகலவே இனியதோர் வாழையும், கட்டியும், தேனும் கலந்துண்ணலாகும். இம் மூன்றும் முறையே உண்மை அறிவு, இன்ப, வடிவ உருவமாகும். திருவருளால் இவற்றைக் கலந்து நுகரும் நன்னெறி அறியமாட்டாதார் எட்டிப்பழம் போன்று வடிவும் தோற்றமும் வனப்பும் கண்டு மயங்குவதற்கு வாயிலாகிய நிலையாத உலக இன்பத்தினையே பெரிதென நினைத்து நுகர்ந்து பின் இனைதலாகிய துன்புற்று இளைத்தொழிகின்றனர். எட்டிப் பழம் காட்சி இன்பமும் நுகர்ந்தால் மீட்சியில் இறப்புத்துன்பமும் தரும் தன்மைத்து. அதனால் அவ் வொப்பு உலகவின்பத்துக்குப் பொருந்திய ஒப்பாகும். எட்டிப்பழம்: எட்டு + இப் பழம் எனப் பிரித்து மிகவும் எளிதாக எட்டக்கூடிய இவ் வுலக இன்பமாகிய பழம் என்றலும் ஒன்று. குறிப்புரை: கொட்டியும் ஆம்பலும் - சகல, கேவலம். குளம் - ஆன்மா. எட்டி - வேம்பு; நாமமும் - உருவமும். வாழை - கட்டி, தேன்; சத்து - சித்து, ஆனந்தம். எட்டிப்பழம் எட்டு + இப் பழம் - எளிதிற் சித்திக்கும் இவ் வுலகபோகம். or எட்டிப்பழம் - கண்கவர் வனப்பினதாகிய எட்டிப்பழம் விசத்தன்மையுடையபோல, இன்பம் போலத் தோன்றும் உலக இன்பங்களாகிய துன்பங்கள்.
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக் குடைகொண்ட பாசத்துக் கோலமுண் டானுங் கடைவண்டு தானுண்ணுங் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே. பொருளுரை: ஆருயிர்கள் மல நீக்கத்தின் பொருட்டு அருளால் உடல் கொண்டு உலகிடை உலாவவேண்டிய இன்றியமையாக் கடப்பாடுடையனவாகின்றன. அதன் பொருட்டு உலக அன்னையாகிய பெடைவண்டும் உலக அத்தனாகிய ஆண் வணடும் ஒன்று கலந்து திருவுள்ளக் குறிப்பான் ஏவுதலை மேற்கொள்கின்றனர். அதனால் மாயாகாரியமாகப் பீடிகை வண்ணமாக மண் தோன்றுகின்றது. குடைபோன்று வானம் தோன்றுகின்றது. ஏனையவும் முறையாகத் தோன்றுகின்றன. அவ் வுயிர்கள் வினைக்கீடாக நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பினுள் ஏற்ற கோலஞ்சேர் உடல் கொண்டு பிறக்கின்றன. அதுவே கோலமுண்டான் எனக் கூறப்பட்டது. கடைவண்டு எனப்படும் இழிந்த மனத்தால் வினைக்கீடாக விளையும் இன்பத்துன்பங்களை ஆருயிர்கள் நுகரும். கண்போல் எங்கும் செறிந்து எவற்றினும் நிறைந்து நீக்கமற நிற்கும். திருவருளாற்றல் பெடை வண்டு எனப்பட்டது. அத் திருவருளாற்றலால் அவ் வுயிர்கள் பெற்று நுகர்வது பேரின்பப் பெருவாழ்வேயாம். குறிப்புரை: பெடைவண்டும் ஆண்வண்டும் - சத்தியும் சிவனும் ஏவ. பீடிகை வண்ணக் குடைகொண்ட - பூமியில் பிறந்த. பாசத்துக் கோலமுண்டான் - சீவன். கடைவண்டு - மனத்தால். தான் உண்ணும் - சுகதுக்கங்களை அனுபவிக்கும். கண்கலந்திட்ட பெடைவண்டு - அருட்சத்தியால்.
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குடடத்து நீரிற் குவளை எழுந்தது விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தி லிட்டதோர் கொம்மட்டி யாகுமே. பொருளுரை: தட்டத்து நீராகிய வலது மூக்கின்வழி எடுத்தலைச் செய்யும் இரேசக மூச்செனப்படும் தாமரை பூத்துளது. குட்டத்து நீராகிய இடது மூக்கில் விடுத்தலைச் செய்யும் பூரக மூச்செனப்படும் குவளை எழுந்துளது. வலது மூக்கைப் பிங்கலை யென்றும், இடது மூக்கை இடைகலை யென்றும் கூறுப. விட்டமாகிய நடுநாடியினுள் தடுத்தலெனப்படும் கும்பகஞ் செய்து அவ் வுயிர்ப்பினை அருளால் அகத்தே விளங்கிக் காண வல்லார்க்குச் சிவபெருமான் அல்லது திருவடிப்பேறு மிகஎளிதாகக் கிடைக்கும். இடையறாப் பேற்றின் பேரின்பம் எய்துவர். இதற்கு ஒப்பு கொல்லையில் தானாகவே காய்த்து அளவின்றிப் பல்கிக் கிடக்கும் கொம்மட்டிப் பழமாகும். அதுவே 'குட்டத்திலிட்டதோர் கொம்மட்டி யாமே' என்றருளினா. குறிப்புரை: தட்டத்துநீர் - வலதுமூக்கு, பிங்கலை, தாமரை - இரேசக வாயு. குட்டத்து நீர் - இடதுமூக்கு, இடைகலை. குவளை - பூரகவாயு. விட்டம் - சுழுமுனை. விளங்க - கும்பகம் செய்ய.
ஆறு பறவைகள் ஐந்தகத் துள்ளன நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின் மாறுத லின்றி மனைபுக லாகுமே. பொருளுரை: ஐந்தகம் என்று சொல்லப்படுகின்ற ஐம்பூதக் கூட்டரவாலாகிய இவ் வுடலகத்துச் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண் பிறந்தமானம், மாணாவுவகை என்று சொல்லப்படும். அறுபகையாகிய பறவைகள் ஆறும் உள்ளன. நுனிக்கொம்பாகிய எழுச்சியின்கண் எண்ணிலா எண்ணங்களாகிய நூறு பறவைகள் உள்ளன. ஏறும் பெரும்பதியாகிய புலம்பு, புணர்வு, நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்று சொல்லப்படும் ஏழினையும் கடந்தபின் எவ்வகை மாறதல்களுமில்லாமல் திருவடிப் பேற்றின்பமாகிய மனை புகுதலாகும். நூறு : அளவின்மைக்கோர் காட்டு. இயற்கைப் புலம்பினைச் செயற்கைப் புணர்வு முதலியவற்றுடன் ஒருங்கு வைத்துச் செயற்கைபோன்று உருவகித்து ஓதினார்; இஃது ஏனைய வேற்றுமைகட்டு இடனாகிய எழுவாயினையும் எழுவாய் வேற்றுமை எனக் கூறுவது போன்றாகும். குறிப்புரை: ஆறு பறவைகள் - காமாதி ஆறு. ஐந்தகத்து ஐம்பூதங்களால் ஆகிய உடலகத்து.
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங் கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாகுமே. பொருளுரை: ஆருயிர்களின் நோக்கமாகிய விருத்திகளையும், முனைப்பையும் அடக்குவதே கொட்டனம் செய்தல் எனப்படும். அங்ஙனம் அருளால் அடக்கித் திருவடிப் பேரின்பமாகிய பெரு வெள்ளத்தில் மூழ்குதல் வேண்டும். அக் குறிப்பே குளிக்கின்ற கூவலுள் என ஓதப்பெற்றது. வட்டனப் பூமியாகிய நீங்காப் பேரின்ப நிலை ஓங்கிப் பெருகும். வட்டனப் பூமி: வட்டு + அல் + ந + பூமி எனப் பிரிந்து சூதாடு காய்போன்று மாறுதல் எய்தாத சிறந்த பூமியாகிய பேரின்ப நிலை எனப் பொருள்படும். அப் பேரின்ப நிலையைத் தங்கச் செய்வதாகிய கட்டுப்பாட்டினைப் பத்தி யென்னும் பருங்கயிற்றால் கட்டுதல் வேண்டும். உள்ளத்தினுள்ளே சிவபெருமானின் பெரும் பேரொளி யாவர்க்கும் ஒட்டுதலைப் பொருந்தி விளக்கமுறும் என்க. கட்டணம் என்பதற்குக் கட்டுச்சோறு என்றலும் ஒன்று. உள் ஒட்டனம் என்பதற்கு உணர்வினுள் ஒட்டியுறும் சோறாகிய பேரின்பம் என்றலும் ஒன்று. குறிப்புரை: கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவல் - சீவபோதத்தை அடக்கிச் சிவபோதத்தில் திளைக்கில். வட்டனப்பூமி - சுகநிலை. கட்டனம் செய்து கயிற்றாற் றொழுமி - அந் நிலையைக் கட்டுப்படுத்தி நிலைக்கச் செய்து. உள் ஒட்டனம் செய்து - உள்ளத்துள்ளே ஓங்கவைத்தால். ஒளி - சிவத்தின் ஒளி.
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாகுமே. பொருளுரை: உலகங்கள் ஏழையும் தனித்தனி எழுந்து வளைவாகச் சூழ்ந்திருக்கும் கடல்கள் ஏழு. நிலத்தினை அழுத்திக்கொண்டிருக்கும் ஓங்கி உயர்ந்த சிறந்த மலைகள் எட்டு. இவை ஆழ்ந்திருக்கும். விசும்பாகிய வானமும், வளியாகிய காற்றும், அங்கியாகிய தீயும் மழையாகிய நீரும், இவற்றைத் தாங்கித் தாழ்ந்திருக்கம் நிலமும் என்னும் ஐம்பூதச் சேர்க்கையாலாகிய இவ் வுலகமும் இவ் வுடலும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்களாகும் . இவ் வுண்மையினை அருளால் பொருளாய்வின்வழிக் காணுதல் வேண்டும். உலகைச் "சுவை யொளி யூறோசை நாற்றமென் றைந்தின் " என்னும் தமிழ்மறையின்படி ஆய்தல் வேண்டும். இத்திருப்பாட்டினிற்கு எல்லாரும் நிலையாமை யொன்றே குறிக்கோளாகக் கொண்டனர். இந்நிலையாமை புற ஆய்வாகும். அக ஆய்வாகக் கொள்ளுங்கால் 'இருதிறன் அல்லதாய் சிவசத்தாய்'க் காணப்படும் மெய்ப்பொருட்டெளிவு தோன்றும் தோன்றவே அம் மெய்ப்பொருட்சிவத்தை அடைதற்கு இவ்வுடலும் உலகமும் துணைக் கருவிகளென்னும் துணிவு தோன்றும். தோன்றவே, இவற்றைத் திருக்கோவிலெனக் கொண்டு 'உடல்பினை நானிருந் தோம்புகின்றேனே' என்னும் முறைமைப்படி ஒம்பப்படும். அதுவே வாழ நினைக்கின்றதாகும். இதுவே 'அற்குப ஆங்கே செயல்' என்னும் செந்தமிழ்ப் பொதுமறையின் செம்பொருளாகும். குறிப்புரை: ஏழு வளைகடல் - அக்காலத்துக் குறிப்பிட்ட பூமி அண்டத்து ஏழு கடல். எட்டுக் குலவரை - சிறந்த எட்டு மலை. ஆழும் - இருக்கும். விசும்....இருநிலம் - நிலம், நீர், தீ, வளி, வெளி. அது ஆலயமாமே - அந் நிலம் ஆலயம் போன்றது. ஆ + லயம் - ஆன்மா சிவத்தோடு இலயிக்கும் இடம்.
ஆலிங் கனஞ்செய் தகஞ்சுடக் சூலத்துச் சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோலிங் கமைத்தபின் கூபப் பறவைகண் மாலிங்கன் வைத்தது முன்பின் வழியன்றே. பொருளுரை: பெருங்காதலுடன் கவவுக்கை நெகிழாமல் காற்றூடறுக்காமல் கட்டித்தழுவி அகம்சூடுண்டாக இருவரும் மருவினர். அதனால் அருஞ்சூல் உண்டாயிற்று. 'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை' என்னும் ஐம்பெரும் சால்பினையும் அச் சூலுற்ற மகவின்பால் வைத்துத் தம்முனைப்பாம் தலைமை தவிர்த்தனர். இல்லொழுக்க முறையாகிய கோலினை அமைத்தனர். அஃதாவது குடும்பவாழக்கையினை முறையுறச் செய்தனர் என்பதாகும். செய்யவே கிணற்றகத்துள்ள பறவைகளையொப்பப் பொறிபுலன்கள் மயங்கி நெறியல்லா நெறிச் செல்லாவாயின. எனினும் ஒரோவழி அங்ஙனம் செல்லநேரின் அஃது அவ்வுயிர்கள் முன்செய்து கொண்ட வினைக்கீடாக நேர்வதாகும். அங்ஙனம் நேரின் அருளால் அவ்வுயிர்கள் அவற்றின்பின் செல்லாது நெறிமுறையே சென்று நிலைபெறும். குறிப்புரை: ஆலிங்கனம் செய்து - மோகத்துடன் கூடி. அகம் சுட உள் வருந்த. சூலத்து - கருப்பையில். சால் இங்கு - உடம்பை இவ் வுலகத்தில். கோல் - ஆட்சி, ஈண்டு வாழ்க்கை. கூபப் பறவைகள் - உடம்பின்கண் அமைந்த இந்திரியங்கள். மால் மயக்கம். முன்பின் முன்னர்.
கொட்டுக்குந் தாலி இரண்டே இரண்டுக்குங் கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளன்றே. பொருளுரை: புலன் நுகர்ச்சியின் பொருட்டு இருவரும் தெய்வ அடையாளமாகிய தீ, ஆசான், சான்றவர், ஊரவர், உறவினர் முதலிய பலரும் சான்றாகத் திருமணம் செய்துகொள்கின்றனர். அங்ஙனம் செய்த உரிமையின் அடையாளமாகத் தாலி காணப்படுகிறது. ஒருவர்பால் காணப்படும் தாலி இருவர் உரிமையினையும் எடுத்தியம்புகின்றது. புலன் நுகர்ச்சியென்பது புலன்கள் தீநெறிக்கட் செல்லாது நன்னெறிக்கட் செல்லுமாறு ஒருவருக்கொருவர் துணையாகச் செலுத்தும் உரிமையை மாற்றிக் கொள்ளுதல். இது, 'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், ஒண்தொடி கண்ணே யுள.' என்னும் செந்தமிழ்ப் பொது மறையான் உணரலாம். ஒண்தொடிக்கு உரிமையாக்கப் பெற்ற இப்பொறிகள் என்பால் அவள் உடைமையாக இருக்கின்றன. இவற்றிற்கு உரிய முதன்மையும் உரிமையும் அவள் பாலுள்ளன. என் விழைவுபோல் பிழைபாடேதும் செய்ய இயலாது. அவள் விழைதக்கனவே யான் செய்ய இயலும். அதனாலேயே அவள் வாழ்க்கைத்துணை எனப்பட்டாள். வாழ்க்கை இம்மை, உம்மை, அம்மை என மூவகைப்படும். இம்மை - இப்பிறப்பு. உம்மை - மேற் பிறப்பு. அம்மை - பிறவாச் சிறப்பு. இவையே உரிமைத் தாலியின் அருமை பெருமையாகும். இறை நினைவு நீங்கிய உரிமைப் புலனுகர்ச்சி தோறும் விளையும் பயன் இரண்டே. அவை இன்ப துன்பம் என்பன. புலனுகர்வாகிய கொட்டுக்கும் அதன் உரிமையாகிய தாலிக்கும் மேலாகிய வன்மையுடையது பாரையாகிய விழைவென்ப புலனுகர்வு, அதன் உரிமை. வலனாம் விழைவு இம் மூன்றற்கும் வலிது திருவடிக்கண் வைக்கும் அன்பு. அவ்வன்பே சிவபெருமான் திருவருள் இன்பினைத் தரவல்லது. பொற்றாலியின் சிற்ப்பினை வருமாறு நினைவுகூர்க: "பெண்ணே அணிபூணும் பெய்வர்பிற எல்லாரும் கண்ணேய்நற் காதலன்றான் கட்டுவனால் - கண்ணேயாம் நற்றாலி என்னும் நழுவா நகையாகும் " குறிப்புரை: கொட்டு - இந்திரிய நுகர்ச்சி. தாலி - சுகதுக்க அனுபவம். பாரை - பொருள்களை அனுபவிக்கும் ஆசை. இட்டம் - திருவருட்சத்தியின் சம்பந்தம். மணவன்காண். அப்பர், . - . " யாதொன்று. . குங்கலியக்கலயர், . " அரும்பெறன், " கண்ணப்பர், .
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர் முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பா னொருவன் மறையொன்று கண்ட துருவம்பொன் னாமே. பொருளுரை: கயல்போல் மாறிமாறிப் பிறழும் இவ்வுலகியல்பினை நிலையும் உறுதியும் உலைவில் தலைமையும் உடைய ஒன்றென மாறான எண்ணங்கொண்டு கண்டவர், பிறப்பு இறப்பு என்னும் பெரும் பிறழ்வுத்துன்பினைக் கண்டுகொண்டேயிருப்பர். அழிவில் முயல்வாம் நற்றவமாகிய சீலம், நோன்பு, செறிவு என்னும் முந்நிலையும் கண்ட மூவரும் செந்நெறிச் சென்று 'நடுவாக நன்றிக்கண் தங்கியான்' எய்தும் வாழ்வினராய் வாழ்வுறுவர். நடுவாக நன்றிக்கண் தங்கியான் வாழ்வு சமரச சன்மார்க்க வாழ்வு. இதனையே பொதுநெறி வாழ்வெனக் கூறுப. இதுவே திருவள்ளுவர் உள்ளிட்ட செம்பொருட்டுணிவினராம் தென்புலச் செல்வர் வாழ்வு. போர்ப் பறையனையவாய் வாய்ப்பறை கொட்டும் சமயக்கணக்கர் தரும் பூசலை நேகமெனப் பிடித்து நிற்பானொருவன் பாசவலைப்பட்டு ஆசைமிக்குற்றுப் பிறப்பன். செந்தமிழ் நெறிநூல் துறைநூல்களாகிய வேதாகம மறையொன்று உறுதியாகப் பற்றி வாழ்பவன் அசையா நிலையென்னும் துருவம் போன்றவன் ஆவன். அவன் சுடச்சுடரும் பொன்போல் மலம்நீங்கி ஒளிவிட்டுத் திருவருட்டுணையால் சிவனடி எய்திச் செம்பு செழும் பொன்னாம் விழுமிய சிறப்பு நிலையினை எய்துவன். செங்கல் செழும் பொன்னாக்கும் விழுமியோன் சிவனல்லவா? அவன் ஆருயிரைத் தன் வண்ணம் ஆக்கியருளும் உண்மை வண்மை அருளுக்கு அடையாளம் அல்லவா அது? அங்ஙனமே அருள்வன். துருவம் - அசையாநிலை. குறிப்புரை: கயல் - மாறி மாறி வருகின்ற உலகம். முயல் - தவ முயற்சியால் அடையக்கூடிய சிவம். மூவர் - சரியை, கிரியை, யோகவான்கள். பறையொன்று பூசல் - ஆரவாரமுடைய சண்டை. மறையொன்று கண்ட - தமிழ் வேதப் பொருளாயுள்ள ஒன்றைக் கண்ட. துருவம் - ஆன்மா. பொன்னாமே - மலம் நீங்கிச் சிவத்தோடு கலக்கும்.
கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுகின்றாற் போலல்ல நாதனார் பாரை கிடக்கப் படிகின்ற வாறன்றே. பொருளுரை: ஆருயிர்களின் எண்ணமாகிய சித்தம் குளம் என்பபடும். அக் குளத்தின்கண் விரிந்த அறிவாகிய கோரை எழுந்து கிடந்தது. ஆரைச் செடிபோன்று பின்னிக்கிடக்கும் ஆசை அவ் விரிந்த அறிவினை மறைத்துப் படர்ந்து மூடிக்கிடந்தது. குளத்தினிலுள்ள மீன்களைத் தனக்கு இரையாகத் தன் நன்மையின் பொருட்டு நாரையாகிய கொக்கு கவரக் கருதுகின்றது. அதற்குரிய செவ்வி பார்த்து அக்குளத்தில் தங்கியிருக்கின்றது. அதுபோன்று அல்லாமல் விழுமிய முழுமுதற் சிவன் ஆருயிர்களின் நன்மையின்பொருட்டே அவ்வுயிர்களின் உள்ளமாகிய வன்பாரையிடத்துச் செவ்விநோக்கிக் காத்திருக்கின்றனன். இவ்வுண்மை தெரிந்தால் அவரை அப்பொழுதே கூடி யின்புறலாம். நாரை உவமை மறுதலைப் பொருளின்கண் வந்தது; "மற்றாங்கே" என்பது போன்று. வினையென். . திருச்சதகம், .
கொல்லைமுக் காதமுங் காடரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்கா தியங்கவல் லார்கட்கு ஒல்லை கடந்துசென் றூர்புக லாகுமே. பொருளுரை: பிறப்பினைக் கொல்லும் தலைமைப் பாடமைந்த 'ஓ' மொழி கொல்லை எனப்பட்டது. அவ் ஓ மொழிக்கண் அகர உகர மகரமாகிய மூன்றெழுத்தும் கூடியுள்ளன. அ + உ + ம் என்பது இரண்டரை மாத்திரைகளைக் கொண்டதாகும். அகர உகரம் குற்றெழுத்துக்கள். அவை இரண்டும் மூன்றும் மாத்திரை பெற்ற எழுத்தாகவேண்டுமாயின் ஒன்று நெடிலாதல்வேண்டும். எனவே உகரம் ஊகாரமாகக் கொள்ளுதலமையும். குற்றெழுத்தாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் ஒரு புடையொப்பாக முறையே வனப்பாற்றல், நடப்பாற்றல், அன்பாற்றல், அறிவாற்றல், உழைப்பாற்றல் எனக் கொள்க. இவ்வைவகையாற்றல்களும் ஆருயிர்களுடன் கலந்து தொழிற்படுத்து முறையினை நெட்டெழுத்தாகக் கொள்ளுதல்வேண்டும். அந்த முறையில் அ + ஊ + ம் = ஓம் என்றாகும். மந்திரமாதலின் மறைத்தும் குறைத்தும் கூட்டியும் கூறுதன் மரபு. இதன்கண் குறைத்துக் கூறப்பட்டது. 'சிவாயநம' என்பதன்கண் 'வா' கூட்டிக் கூறப்பட்டது. எனவே ஓ என்பது இருமாத்திரையாக இருப்பினும் மூன்று மாத்திரையாக அளபெடுத்து ஒலித்தல்வேண்டும். அப்பொழுது 'ஓஒ' என்றாகும.் இதுவே 'முக்காதம்' என மொழியப்பட்டது. காடாம் 'ம'கரம் அரைமாத்திரையாகும். திருவடி எல்லை காணவொட்டாது நன்னெறியும் புன்னெறியுமாகிய இருநெறிகள் மயங்கிக் கிடந்தன. இவ்விருநெறிகளையும் முறையே அருள் நெறியும் மருள்நெறியுமென்று கூறலாம். எல்லை மயங்காது அருள் நெறியில் ஒழுகவல்லார்கட்குத் திருவருட் பெருந்துணையால் நனிமிக விரைந்து சென்று தனிப்பெருவாழ்வாம் திருவடிப்பேரூர் புகுந்து பேரின்புறலாம். குறிப்புரை: கொல்லை - பிரணவம்முக்காதம் - அகரமும் உகரமும் மூன்று மாத்திரை அளவின. காடு அரைக்காதம் - மலக் காடாகியம் அரைமாத்திரை அளவினது. எல்லை - அளவு. ஒல்லை - விரைவாக. ஊர் - முத்தி உலகம்.
உழவொன்று வித்து ஒருங்கின காலத்து எழுமழை பெய்யாத் திருநிலச் செல்வி தழுவி வினைசென்று தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யோனே. பொருளுரை: நன்னெறிநான்மை நற்றவமாம். உழவினை அருளால் ஒருங்கிய மனத்துடன் நெருங்கித் திருந்தச் செய்தால், இருவினையொப்பு வாய்ந்த செவ்விநேர்ந்த காலத்துத் திருவருண்மழை எழுந்து பெய்யும். பெய்யா: செய்யா என்னும் வாய்பாட்டு வினைஎச்சம். திருவருள் வீழ்ச்சியாகிய திருநிலச் செல்வி தழுவுவள். தழுவவே எஞ்சுவினை, ஏன்றவினை, ஏறு வினையாகிய முத்திறவினைகளும் மூளா. வளர் சடையோன் ஆகிய சிவபெருமான் கன்றின்பின் அனையும் ஆன்போல் தவறாது வந்து திருவருள்புரிவன். குறிப்புரை: உழ........காலத்து - தவம் கைகூடிய காலத்து. எழுமழை பெய்யா - ஞானத்தை எழுப்புகின்ற அருள்மழையைப் பெய்து. திருநிலச் செல்வி தழுவி - திருவருட்சத்தி பதிந்து. வினை சென்று தான் பயவாது மூவகை வினைகளும் இன்பதுன்பங்களைத் தராது. வழுவாது போவன் - தவறாமல் அருள்செய்வான்.
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ மதுங்கிய வார்களி யாதமு தூறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. பொருளுரை: ஏதும் முயற்சியின்றி வாளா ஒரிடத்தில் நாம் அடங்கியிருந்தாலும், நம்முடைய வாழ்நாளை வரைசெய்யும் உயிர்ப்பு கண்ணிமைப் பொழுதினும் குறைந்த காலநுட்பமுடைய இறைப்பொழுதும் வாளாயிராது விடுத்தலும் எடுத்தலுமாகிய வேலையினைத் தொடுத்துச் செய்துகொண்டேயிருக்கிறது. அதனால் அவ்வுயிர்ப்பினை உவம ஆகுபெயராகப் பாய்புலி என்றனர். வாழ்நாளைப் பெருக்குவதென்பது ஓர் அரும்பெறற்றந்தை சீர்சால் மக்கள் ஏர்பெறவேண்டிக் கைமுதல் கொடுப்பது போன்று 'முதலிலார்க்கு ஊதியமில்லை' ஆதலின் மதலையாஞ் சார்பாக உயிர்ப்பினை நல்கியருளினன். அவ்வுயிர்ப்பு இத்துணைத்து நம் வாழ் நாட்கு அலகாய் - எண்ணிக்கையாய் அமைந்ததென்பது நம்மனோரால் அறிய வாராது. தந்தை ஈந்த கைமுதல் பெருகுவதாகிய வளர்ச்சியின்றிச் செலவே செய்துகொண்டிருந்தால் பின் அருகி உள்ளதுபோன்று தோன்றிய தோற்றமுமின்றிக் கெட்டுவிடுமல்லவா? பணம் முற்றும் அற்றவிடத்து அவன் நற்றந்தையை உற்றுக் குறையிரந்து சற்றும் பேறின்றி நிற்பன். முயன்றுதொழில் செய்துவளர்த்தவன், தந்தை முந்திவந்தணுக மைந்துடன் நிற்பன். வந்த தந்தையும் மனமகிழ்ந்து பாராட்டித் தன்னுடன் அணைத்துக்கொள்வன். அளவறிந்து வாழவேண்டுமென்பதே திருவள்ளுவநாயனார் அருளிய பொதுமறை; அதுவருமாறு: "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். நம்முடைய உயிர்ப்பு ஓய்வின்றி விடுத்தல் பதினாறு விரலளவும் செல்கின்றது. அதனை அவ்வளவில் எடுக்காமல் நான்கு விரலளவை வெளியில் வீணாக்கி விட்டுவிட்டுப் பன்னிரண்டு விரலளவே பற்றிக் கொள்கின்றோம். இங்ஙனம் செல்லும் நான்கு விலளவையையும் வீணாக்காமல் அப்படியே முற்றாக எடுத்தல் வேண்டும். முற்றாக எடுத்து விட்டால் செலவில்லையேயன்றி வளர்ச்சியுண்டாகாது. வளரவேண்டுமாயின் அவ்வுயிர்ப்பினைத் தடுத்தலாகிய கும்பகம் செய்தல்வேண்டும். இப்பயிற்சியை இறைப்பொழுதாய்க் கண்ணிமைப்பொழுதாய், நாழிகையாய், நாளாய், திங்களாய், ஆண்டாய், ஊழியாய்ப் புரிந்து வளர்தல் வேண்டும். புலி வீணாய் ஆசைப்பட்டு உணவினைத் தொகுக்கப் பாய்வதும், அரிமா ஆசைப்படாது வேண்டும் வேளை பசிக்கு உண்டு அடங்குவதும் கண்கூடு ஆசையை வென்றானைச் சிங்கம் என்பது மரபு. எனவே அரிமா யோகநிலை எல்லையாகும். ஆனேறு ஞானநிலையாகும். ஒரு நூற்கயிற்றுச் சுருளினைப் பதினாறு விரலளவு வெளிவிட்டுப் பன்னிரண்டு விரலளவு உள்ளிழுத்தால் நான்குவிரல் வெட்டப்பட்டுப் போகின்றது. அங்ஙனமே போய்க்கொணடிருந்தால் நாளடைவில் அச் சுருள் ஒன்றுமில்லாது போய்விடுமன்றோ? அங்ஙனமின்றி நான்குவிரலளவையும் உள்ளே கூட்டிக்கொண்டால் நம்முடன் ஒன்றாய் வேறாய் உடனாய் ஒதுங்கியிருக்கும் தண்கடலனைய திருவடிப்பேரின்பப் பெருங்கடல் நம்மாட்டு மேலோங்கி நிறைந்து கசிந்து எங்கணும் உலவும். இஃது அளவின்றி ஊறும் கிணற்றுநீர் மண் முதலியவற்றால் மூடப்பட்டு மறைந்து இல்லையெனும்படி சொல்லிறந்து கிடக்கும். உரனுடை நல்லாரிணக்கத்தால் அம்மூடிய மண் முதலியவற்றை அகற்றிவிட்டால் அவ்வூற்றுப் பெருக்கெடுத்து எங்கணும் பாய்வதனையொக்கும். மதுக்களி மிக்க தேன்நிறை அழிவிலாக் காழில் கனியாகிய நிறைந்த துன்பில் இன்பமிழ்து. நுகர நுகரப் பெருகி ஊறும். அங்ஙனம் ஊறலால் முன் நம்மைப் பொசுங்கும்படி வருத்திய ஐம்புலன்களை இன்று நாம் பொசுங்கும்படி வளைத்து வெல்வோம். இதுவே "நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றானை" யென்னும் மெய்ம்மறையினை ஐயமில் உய்யும் குறிப்பாகும். புலன் வென்றான் அன்றாலின் கீழிருந்து அறஞ்சொன்னான்; அதூஉம் நால்வர்க்கெனவும் நவில்ப. நால்வர் நாற்பொருளாளர். நானெறியாளர் எனவும் கூறுப உண்மையான் நோக்குவார்க்கு எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் நாற்பாலாரேயாவர். எனவே அறம் சொல்லுதல் பிறர்க்கன்று நமக்கேயாம். பிறர்க்கு நடைமுறையில் நடந்து திடம்பெறக் காட்டல் நன்றாம். இதனை வரும் வெண்பாவால் நினைவுகூர்க. "ஆலாம் அடிநினைவு அந்நால்வர் உட்கரணம் மேலாம் அறமவர்க்கே மேவுவித்தல் - நூலாம் அடையாளத் தன்கைபோன் றாண்டாண்டுள் ளார்க்கு " குறிப்புரை: பதுங்கிய.......காதம் - பன்னிரண்டங்குலம் பரிந்திடும் பிராணன். ஓது . . . . . . உலவ - சிவானந்தக் கடலின் உணர்ச்சி தோன்ற நாலங்குலம் கூடிக்கொளின். மது . . . . . . ஊற - தேன் துளிக்கும் சிவக்கனியின் இன்பம் பெருக. பொது......வளைத்தான் - இதுவரை வருத்திய ஐந்து இந்திரியங்களை வென்றவன் ஆவன்.
தோணியொன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபஞ் செய்து வழங்கி வளர்மகன் நீலிக் கிறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பன்றே. பொருளுரை: பிறவிப் பெருங்கடலிலே மிதந்து கரை ஏறும்படி சிவனருளால் தரப்பட்ட அறிவித்தோணி இவ்வாறறிவுசேர் ஏறனைய சீருடல். இதன்கண் ஆருயிர்கள் ஏறித்தொடர்ந்து வினைக்கீடாகப் பிறந்தும் இறந்தும் இக்கரையும் அக்கரையுமாக அலைகின்றன. காலினும் கலத்தினும் வாணிகம் புரிவது நூலின் வழிவந்தார் நுண்செயலாகும். அதுபோல் நூன்முறையும் கோன்முறையும் கைக்கொண்டு மறப்பினைக் கொடுத்தும் நினைபபினைக் கொண்டும் பண்டமாற்றுதலாகிய கொண்டு விலையினைச் செய்து வளர்ந்துவருமகன், நீலியாகிய மாயாகாரியப் பொருள்களினிடத்துத் தினையினும் சிறிதளவாகவேனும் பற்றுள்ளம் கொள்ளுதல் ஆகாது. கொள்ளின் நிலைதளரும். நிலைதளரின் 'தலையினிழிந்த மயிரனையராவர்.' சலிக்குந் தன்மைவாய்ந்தது நீர். அதனால் அது சலம் எனப்பட்டது. சலம், தமிழ்ச் சொல். அலைதல் - ஓய்வின்றி எழுந்து மடங்கிவருதல். அதனால் அலை நீரின் உறப்பாயிற்று. பசை போன்று அப்புதலால் அப்பென்பதும் தண்ணீருக்குப் பெயராயிற்று. அத்தகைய அப்புப்போன்ற ஓயா அலைவுசேர் எண்ணமாகிய சித்தத்தின்கண் அம் மாயாகாரியப் பொருள்கள். நச்சுக் கனியாகிய ஆலிப்பழம் போன்று அருளால் அகற்றப்படுதல்வேண்டும். அறவி: அறநெறி; அறம். குறிப்புரை: தோணி - உடல். கடல் - உலகமாய குடும்பக்கடல். வாணிபம் செய்து - நினைத்தல் மறத்தலாகிய வியாபாரங்களைச் செய்து. வழங்கி - ஒழுகி. நீலிக்கு - பெண்ணின்பொருட்டு. இறையும் - சிறிதேனும். நெஞ்சின் நிலைதளரின் - மனம் நிலைகுலைந்தால். அப்பு - சலிக்கும் தன்மையுள்ள நீரைப்போன்ற மனம். ஆலிப்பழம் - நச்சுக்கனி.
முக்காத மாற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலங் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. பொருளுரை: அமைதி, ஆட்சி, அழுந்தல் என்னும் முக்குணம் விரவிய வழியிலே புக்கு ஓய்வின்றி வழிவழியாய் வருகின்ற வாழைகளாகிய நனவு கனவு உறக்கமென்னும் மூன்றும் நன்னெறிநான்மை நற்றவச் செக்கால் செம்மையுறும். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் காய்த்துப் பழுத்து வீழ்ந்து அடங்கின திருவருளால் திருவடி யுணர்வின் பக்கமானார் பக்கனார் எனப்படுவர். அவர் அறிவினுள் அறிவினராவர். அஃதாவது பதினாறாம் நிலையாகிய ஞானத்தின் ஞானமாகிய நன்னெறியின் நிற்போர். அதனால் அவரே எல்லாரினும் மிக்காராவர். அவர் ஆடல், பாடல், அழகு, அணி, உடை, பூச்சு, நடை, ஊடல், கூடல், மிலைதல், மலைதல், முதலியவற்றால் ஆடவரை மயக்கும் படங்காகிய படாமுலைமேல் துகிலணிந்து நகிலுடன் வரும் பொலமகளிரைச் சிரித்து ஒதுக்குவர். அத்தகைய பிறன்மனை நோக்காத பேராண்மை என்னும் நல்லொழுக்கால் செங்கமலத் திருவடித்தேனை இடையறாது நுகர்ந்து அடியார் நடுவுள் படியிலாப் பரிவுடன் இருப்பர். இதுவே முடியாப் பிறவியின் முடிவு மருந்தாம் என்க. மலர்: செம்மலர் நோன்றாள். வாழ்க்கைத் துணைநலமாகிய நல்லாரிணக்கம் என்றும் வேண்டத்தக்கதே. வீழ்க்கைப் பிணிப்பொலமாகிய அல்லார் இணக்கம் வேண்டத்தகாதென்க. ஆனால் அவ் அல்லார் பிணக்கம் வேண்டத்தக்கதே. குறிப்புரை: முக்காதம் ஆற்றில் - முக்குண வழியில் மூன்றுள வாழைகள் - நனவு, கனவு, சுழுத்தி நிலைகள். செக்கு . . . . . . . காய்த்தன தவத்தால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் பக்குவப்பட்டன. பக்கனார் - பக்குவப்பட்ட ஆன்மாக்கள். மிக்கார் மேம்பட்டார். படங்கினார் கன்னியர். நக்கு - மேகலை அணிந்த கன்னியர் மோகத்தை வென்று. மலருண்டு - சிவனாந்தபோகத்தைப் பருகி.
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில் கொடியும் படையுங் கோட்சரன் ஐயைந்து மடியும் வலம்புரி வாய்த்ததவ் வாறே. பொருளுரை: தோற்றமும் மறைவும் பொருந்தியுள்ள இவ்வுலகம் ஓர் ஆத்தி என்று உருவகிக்கப்பட்டது. ஒருபுடையொப்பாக ஆத்திமலர் வெண்மை நிறம்பற்றி மாயையாகக் கொள்ளலுமாம். அம்மாயையின் மாட்டுள்ள பற்று அருளால் அற்று அகலும். அகலவே சுற்றந்தழுவும் காட்டாகிய முற்றிய மூங்கிலின்முத்து வீழ்ந்தனைய திருவடிப் பேற்றின்பம் கைகூடும். முத்தலையென்பதற்கு மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமான் எனவும் முத்தலை வேற்படை தாங்கும் முக்கண்ணன் எனவும் கூறலுமாம். கொடியாகிய திருவடிநினைப்பும், படையாகிய திருவடி மறப்பும் இல்லாமல் அதுவே தானாய்நிற்கும் நிலையில் குற்றல் பொருந்திய அறிதற்கருவி ஐந்தும் செய்தற்கருவி ஐந்தும் தாமே அகலும். ஐ + ஐந்து = ஐயைந்து; ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. ஐயைந்து என்பதற்கு இருபத்தைந்து எனக்கொண்டு உடன்மெய் இருபத்துநாலும் சிறப்புத் தன்மைசேர் ஆள் ஒன்றும் ஆக இருபத்தைந்து என்றலும் ஒன்று. அவ்விடத்து அருள் துணையால் "ஞானவாள், ஏந்தி நாதப் பறையறைந்து, மானமா ஏறி, மதிவெண்குடைகவித்து, நீற்றுக் கவசம் பூண்டு" மாயப்படையினை வெல்லுவர். தூய இவ்வெற்றியின் அடையாளமாகத்தூவெண் வலம்புரிச் சங்கு நலம்புணர முழங்கும். குறிப்புரை: அடியும் முடியும் - தோற்றமும் சிறப்பும். ஆத்தி - உலக சம்பந்தம். முடிய - கெட. முத்தலை மூங்கில் - முத்தியை அளிக்கும் மூன்று கண்களுடைய சிவம். கொடியும், படையும் - நினைப்பும் மறப்பும். கோட்சரன் ஐ ஐந்து - குற்றம் பொருந்திய ஞானேந்திரியம் ஐந்து. கன்மேந்திரியம் ஐந்து. மடியும் - கெடும். வலம்புரி - வெற்றிநாதமாகிய சங்கொலி.
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரந் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறன்றே. பொருளுரை: பதுங்கிக் கிடக்கும் பன்றியனைய தோல்வியும், பாம்பின் சீற்றமனைய வெற்றியும், பசுவாகிய ஆடனைய அடக்கமும், முசுவானர மனைய அடங்காமையும் எங்கணும் விரவிக்கிடந்தன. தென் + திக்கு + இடந்த எனப்பிரித்து நன்றாக எல்லாப் புலங்களிலும் இடம் கொண்டிருந்தன என்றலும் ஒன்று. இப் பொருட்கு இடத்த என்பது மெலிந்து நின்றதெனக் கொள்க. சிறுநரிக் கூட்டமாகிய பயனில்லாத நினைப்புகளுள், ஒருவன் சோர்வடையாது திருவடி நினைப்பிற் கூடித், தராசின் நாநுனிபோன்று எண்ணத்தால் உணரும் உணர்ச்சியினைச் சிவபெருமான் மாட்டு மாறின்றி நிறுத்தினால் பன்றியனைய இருள்மலமிகுதியை நாளும் ஒளிவரக் குன்றிமணியொப்பச் சிறிது சிறிதாகக் குன்றவைத்தல் கூடும். இருண்மலம் பன்றியாகவும் மருண்மலம் அன்னமாகவும் உருவகிக்கப்படும். இருண்மலம் ஆணவமலம். மருண்மலம் - மாயாமலம் இக்குறிப்பு முறைமே மாலும் அயனும்கொண்ட வடிவாற்புலனாம். குறிப்புரை: குன்றியும் பாம்பும் - தோல்வியும் வெற்றியும். பசு - முசுவானரம்; அடக்கமும் அடங்காமையும். தென்றி . . . . . . . கூட்டத்து செறிந்த புன் மன எண்ணங்களில். குன் . . . . . . . . பின் - ஈடுபடாது சிவத்திடை மனதை நிறுத்தினால். பன்றி . . . . . வாறே - அஞ்ஞானத்தைப் போக்கலாம்.
மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட் டோடின் மலர்தலுங் காணலாம் பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினாற் கட்டுவிட் டார்க்கன்றிக் காணவொண் ணாதன்றே. பொருளுரை: திருவருளால் திருவடிப் பேரின்பம் சிற்றரும்பாய் எழுந்து ஒப்பில் பேரரும்பாய் மொட்டிக்கும். அம் மொட்டினைக் கட்டாகிய பற்றினைவிட்டு ஆருயிர் ஓடிச்சென்று உணர்வினிற் கைக்கொண்டால் அம் மொட்டுப் பேரின்ப மலராக மலரும். மலரவே அதனை நுகர்ந்து பேரின்பங் கொள்ளலுமாம். மருள் நிலையாகிய உலக வியல்பிற் பற்றினைச் செலுத்தி நின்றால் அம் மனையாகிய திருவடிப் பேறு எய்தாது பாழ்பட நோக்கும். திருவடிப் பேரின்பம் கட்டுவிட்டார்க்கே உணர்வினிற் கண்டு நுகரும் உண்மையாகும். ஏனையார்க்குக் காணவொண்ணாதென்க. பற்றுவிட்டு - பற்றினைச் செலுத்தி. கைவிட்டு எடுத்தான் என்பது போலாகும். அல்லது பற்று + இட்டு என்பது வகர உடம்படு மெய் பெற்றுப் பற்றுவிட்டு என்றாயிற்று எனலும் ஒன்று. 'உயிர்வரின்' உக்குறள் மெய்விட்டோடும்' என்பதன்கண் 'ஓடும்' என்றமையால் ஒரோவழிக் குற்றுகரமும் முற்றுகரம்போற் புணரும் என்பது காண்க. குறிப்புரை: மொட்டித்து - தவத்தால். வெளிப்பட்டு. மொட்டு = சிவானந்தம். கட்டுவிட்டு - யான், எனது என்னும் கட்டை நீக்கி. மலர்தல் - சிவானந்தம் வெளிப்படுதல். பற்றுவிட்டு - மனதைப் பற்றில்விட்டு. மனை - முத்திவீடு.
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம் யாவரும் என்றும் அறியவல் லாரில்லை கூரு மழைபொழி யாது பொழிபுனல் தேரினிந் நீர்மை திடரினில் லாதன்றே. பொருளுரை: எண்ணமாகிய சித்தச் செலவு நீரெனப்பட்டது. சிவன் 'சித்தமும் செல்லாச் சேட்சியன்'; ஆதலின் அவன் சித்தம் ஒடுங்கிய விடத்துத் தானே பாய்ந்து வெளிப்படுவன். அதனால் நீரின்றிப் பாய்வன் என்றனர். நிலமாகி உணர்வெண்ணத்துள் சிவப்பெரின்பம் வெளிப்பட்டு விளங்கும். பச்சை யென்பது அவ் வின்பம் என்றும் பொன்றாது ஒன்றுபோல் விளங்குவது பற்றிக் கூறப்பட்டதொன்றாகும். இவ்வுண்மையினைத் திருவருள் எய்தாத எவரும் யாண்டும் அறியவல்லாரல்லர். மிக்கோங்கும் பொறிபுலனின்பம் பொழியாது. பொழியாதாகவே சிவப் பேரின்பம் கழியா அழியாப் பெருவெள்ளமாகச் சுரந்து நிற்கும். ஆராய்ந்துணரின் இத் தன்மையனாகிய அவன் 'கள்ளமுள்வழிக் கசிவானலன்'. அஃதாவது சிவன் திருவடியைப் பற்றாது நிற்கும் பாவிகள் உள்ளம் தூர்ந்த கிணறுபோல் திடராகும். திடரில் நீர் நில்லாமை யாவரும் தெரிந்ததே. அம்முறையில் சிவனும் நில்லான் பொல்லார் எண்ணத்தின்கண். குறிப்புரை: நீர் - நினைந்து எண்ணும் எண்ணங்கள். பாயும் சிவானந்த வெள்ளம் பாயும். நிலம் - சித்தம். பச்சையாம் - சிவம் வெளியாம். கூரும் மழை பொழியாது - இந்திரியச் சேட்டைகள் இல்லாது. பொழிபுனல் - சிவானந்த வெள்ளம். இந் நீர்மை - இத் தன்மை. திடர் - இந்திரிய வயப்பட்ட சித்தம்.
கூகை குருந்தம தேறிக் குணம்பயில் மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனு மாகின்ற பண்பனு மாகுமே. பொருளுரை: அருட்கண்ணாகிய அகக்கண் திறப்பிக்கும் வரை ஆருயிர்க்கிழவர் 'பொருட் கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த' பகல் குருடராவர். அதனால் அவர் கூகை என உருவகிக்கப்பட்டனர். சிவகுரு வீற்றிருக்கும் தவநிறை திருமரம் குருந்தம் என்பது பொருந்தும் இயற்கையன்றோ! அதனால் சிவகுருவின் திருவடியிணையினைச் சேர்வதைக் 'குருந்தம தேறி' என உருவகித்தனர். அஃது ஆளுடைய அடிகட்குத் 'திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்த மேவி' ஆட்கொண்டருளினமையான் உணரலாம். சிவகுருவின் திருவருளால் சுட்டியுணரப்படும் உடலும், உலகும், உலகியற் பொருள்களும் முக்குண விரிவாயுள்ளன; மயக்கும் தன்மையன என்னும் உண்மையினை உணர்தல் வேண்டும். உணரவே நாகமாகிய மனக்குரங்கு பாகம் எய்தி அடங்கும். 'காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட' எனத் தாயுமானச் செல்வர்அருளியவாற்றான் உணர்க. மனமடங்கவே நடுவுரையாகிய திருவைந் தெழுத்தைச் சிவதீக்கை பெற்று ஓவாது ஓதிவரும் தாவாச் செவ்வியராவர். எண்குணம் நிறைந்த சிவப் பண்பருமாவர். குறிப்புரை: கூகை . . . . . . ஏறி - அஞ்ஞானமுள்ள சீவன் சிவமாகிய குருவை அடைந்து குணம் . . . . . . காலத்து - உலகுக்கு முக்குணமாயை காரணம் என்று அறிகின்றபோது நாக. . . . . .டும் - குரங்கையொத்த மனமும் அடங்கும். பாக . . . . பண்பறும் ஆமே - மனத்தை அடக்கி நடத்துகின்ற தன்மையுடையவன் அவன். இருடரு. அப்பர், . - . " அருக்கனேர். சிவஞானபோதம், . - . " ஐம்புல வேடரின். " .
வாழையுஞ் சூரையும் வந்திடங் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர் வாழையுஞ் சூரையும் வன்துண்டஞ் செய்திட்டு வாழை யிடங்கொண்டு வாழ்கின்ற வாறன்றே. பொருளுரை: வாழையாகிய இன்பமும், சூரையாகிய துன்பமும் இருவினைக்கீடாக வந்து அகப்புறக்கலனாம் எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் நான்கனுள் சிறப்பாக இறுப்பு மெய்யென்னும் புத்தி தத்துவத்தை உறைவிடமாகக் கொண்டன. இன்பத்தினும் துன்பம் மிக்க வலியுடையது என்று கூறுவர். என்னை, இன்பமும் துன்பமும் தாமே வருவன அல்ல. பெரும்பாலும் வேறொரு வாயிலாகவே வருவன. அவ்வாயிலை மூன்றாகப் பகுத்தனர். அவை தன்னைப்பற்றி வருவன, பிறவுயிர்களைப்பற்றி வருவன, இயற்கையாகிய தெய்வத் தூண்டுதலான் வருவன என்பன. ஆயின் ஒருவர் வாயிலாக நமக்கு இன்பம் வரும்போது நாம் மகிழ்ந்து அவர்க்கு இன்புறத் தக்க நன்றி பாராட்டுதலைச் செய்வோம். அல்லது வாளா மறந்திருப்போம். அனால் துன்பம் வருமேல் அத் துன்பம் வருதற்கு வாயிலாக வுள்ளாரைத் துன்பம் பலவுறுத்தி மகிழ்வோம். இயலவில்லையேல் மறவாது நினைந்து நெஞ்சம் புண்ணாவோம். அதனால் பாவமும் பெருகும். இம் முறையான் என்க. தெய்வம் ஈண்டு ஊழ். வாழையும் சூரையும் ஆகிய இன்பத் துன்பங்களைத் திருவருட்டுணையால், இருவினையொப்பால் வன்மையாக வேறுபடுத்துதல் வேண்டும். வேறுபடுத்தலாவது 'நாமல்ல இந்திரியம், நம் வழியின் அல்ல, வழி நாமல்ல' என்று உண்மை கண்டிருத்தல். அங்ஙனமிருந்தால் என்றும் ஒன்றுபோல் வாழும் தலைமைப்பாடமைந்த சிவபெருமான் நம்முடைய வுள்ளத்தை விட்டகலாது மேலோங்கி விளங்கி இடங்கொண்டருள்வன். கொள்ளவே நாமும் நன்றாக வாழ்ந்து இன்புற்றிருப்போம். குறிப்புரை: வாழையும் சூரையும் - இன்பமும் துன்பமும் வந்து இருவினையால் வந்து. வன் துண்டம் செய்திட்டு - இன்ப துன்பங்களில் மனம் வையாது இரண்டினையும் ஒப்ப நோக்கினால். வாழ் + ஐ இடங்கொண்டு - என்றும் உள்ள சிவம். மனத்தின்கண் இடம் கொண்டு.
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஒட்டிப் புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன் விலக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது அருத்தமு மின்றி யடுவது மாமே. பொருளுரை: ஆருயிர் திருவருள் வலத்தாலும் நல்லாரிணக்க நலத்தாலும் சிவபெருமானின் திருவடியுணர்வை எய்துதல் வேண்டும். அந் நெறிச் செல்லாது நிலத்தை உழுதலானும், நிலத்தைப் பிளந்தும் காலிற் போதலானும், கலத்திற் சென்று கடல்கடந்து மிடலொடும் பெரும் பொருள் ஈட்டலானும் கொன்னே காலம் போக்குவர். நில ஒப்பினால் உடலைப் பெரிதெனச் செருக்கலும், காலினும் கலத்தினும் புகுதலான் உடைமையைப் பெரிதெனச் செருக்கலும் ஆகிய தம் முனைப்புடையாராயிருப்பர். முனைப்புடையராகவே ஐம்புல வேடருட்படுவர். அதனால் அறிவு திரிந்து வேடராவர். புணர்ந்த கொழுமீன் என்றதனால் இருவினைத் துடக்குட்பட்டுப் பிறப்பு இறப்புக்குட்படும் சிறப்பிலராவர். அருள் நாட்டத்தால் இவற்றை யகற்றுதல் வேண்டும். அகற்றாதொழியின் குறைவிலா நிறைவாய் வளரும் திருவடியின்பமாகிய அருத்தம் எய்தாது. அதுமட்டுமன்றி ஆருயிர்களை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பினுக்குட்படுத்தி அளவில் துன்பத்தினையும் எய்துவிக்கும். குறிப்புரை: நிலத்தைப் பிளந்து - பூமியின்கண் சகலபோகத்தையும். நெடுங்கடலோட்டி - கடல் யாத்திரை செய்து வேண்டிய செல்வங்களை ஈட்டியும் புனத்துக் குறவன் - ஐம்புல அனுபவியாகிய சீவன். புணர்ந்த கொழுமீன் - அடைந்த தேக உலக பாசங்கள். அருத்தம் - நற்பயன். அடுவது - பிறந்து இறந்து உழல்வதுமாம்.
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டா னகத்தில் விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக் களிக்குங் குசவர்க்குங் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன்றிங் காய்ந்துகொள் வார்க்கே. பொருளுரை: சிவபெருமான் திருவடியையன்றி எண்ணத்தின்கண் வேறொன்றும் மருவுவதற்கு இடங்கொடாதவன் தட்டானாவன். தட்டுதல் - மருவுதல். தளைதட்டுதல் - தளைபொருந்துதல் என்பதனான் உணர்க. பற்றற்று நிற்பார் தம் உள்ளத்துப் பிளவுபடாத ஒப்பில் தலைமைத் திருவடியின்பம் பெருகும். பிள்ளை: பிள் + ஐ - பிள்- பிளவுபடுதல். ஐ - தலைமைத் திருவடியின்பம் வெற்றி முழக்கம் செய்வதோர் சங்கொலியுண்டு. வேந்தனாகிய ஆருயிர்களை நாடிக் களிக்கும் குசவராகிய விடுத்தல் மூச்சும், காவிதியாகிய எடுத்தல் மூச்சும் என்னும் இரண்டன் பாலும் மனத்தைச் செலுத்தினால் அம் மனம் அவற்றிற்கு இரையாகும். விடுத்தல் - இரேசகம். எடுத்தல் - பூரகம். அப்பொழுது அகத்தவப் பயிற்சி ஆசான் வாயிலாக ஒப்பற்ற தடுத்தல் மூச்சாகிய கும்பகத்தை ஆய்ந்து கொண்டு அதன்வழி யொழுகுவார்க்கு அழியாப் பேரின்பம் உண்டாம். குறிப்புரை: தளிர்......அகத்து - பற்று அற்றவனது உள்ளத்தில் சுகம் உண்டாகும். விளிப்பதோர் சங்குண்டு - அது பத்துவித நாதங்களில் சங்கோசை கேட்கும்போது. வேந்தன் - ஆத்மா. குசவர் காவிதி; இரேசக பூரகம் பதம் ஒன்று - கும்பகம்.
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி யுள்ளலும் ஊரார் அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே. பொருளுரை: உள்ளங் கவிந்து கள்ளப் புலன்வழிச் செல்லும் பற்றுதலினின்றும் நீங்குதல் வேண்டும். அங்ஙனம் நீங்கிய எண்ணமாகிய சித்தத்தைக் கோவில் எருமை என்றனர். கோவில் எருமை: ஆருயிரின் நிலைக்களமாகிய எண்ண வளர்ச்சி. உயிர்ப்புப் பயிற்சிக்குத் தடையாகிய காம முதலிய அறுபகையும் படைபோல் வருவதைக் கண்டு பாதி வழியில் அவ்வெண்ணம் மீண்டது. அவ் வுயிர்க்கு நெருங்கிய உடையவனாகிய வலிய அமைச்சனாம் இறுப்புமெய் உண்மையை நினைக்கும் நினைக்கவே அவ்வுயிர் ஐந்தும் நான்கும் கூடிய தொகை ஒன்பது; இவை உடம்பகத்துள்ள ஒன்பது வாயில்களாகும். இத்தகைய உடம்பினுள் புகார் என்க. குறிப்புரை: குடைவிட்டு - கவிந்துள்ள ஆசை நீங்கி. போந்தது - சிவத்திடம் சென்றது. கோவில் எழுமை - மனக்கோவிலில் உள்ள சித்தம் படைகண்டு - காமாதி சேனைகளைக் கண்டு. பாதி வழியில் - யோக அப்பியாசத்தின' நடுவில். மீண்டது - தப்பித்துக் கொண்டது. உடையவன் மந்திரி - புத்தி. உள்ளலும் - விசாரித்தால் ஊரார் - தேகியாராகிய சீவனார். அடையார் நெடுங் . . . . கே ஒன்பது வாயிலையுடைய தேகத்தில். புகார் - பிறவார்.
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடிற் பன்றியு மாகுமே. பொருளுரை: புலன்களிற் செல்லும் நலமில் விருப்பமும், உள்ளே புகுந்து பற்றக்கூடிய உயிர்ப்பின் மாத்திரை அளவு எட்டும், ஆகிச் சமைந்தன கண் முதலாகிய ஒன்பது துளையுள்ள வாயில்கள். நிலையான எண் விரல் மூச்சும் நால்விரல் மூச்சும் முறையே நாகம் எனவும் புரவி எனவும் கூறப்பட்டன. இவற்றைச் செலுத்தும் ஆருயிரான பாகன் செலுத்தாது அடக்குதல் வேண்டும். அங்ஙனம் அடக்கினால் மெய்யுணர்வு வெற்றியுண்டாகும். பன்றி - வென்றி. குறிப்புரை: போகின்ற வெட்டும் - இந்திரியங்களில் செல்லும் விருப்பமும். புகுகின்ற.........பத்தெட்டு - உள்ளே புகுகின்ற பற்றக்கூடிய எட்டு மாத்திரையான பிராணன். நாக.........புரவியும் - நிலையான எண்விரல் பிராணனோடு நால்விரல் பிராணனையும் பன்றி - வெற்றி.
பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக் கூசி யிருக்குங் குருகிரை தேர்ந்துண்ணுந் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசங் கிடந்து பதைக்கின்ற வாறன்றே. பொருளுரை: குளமாகிய ஆருயிர்களின் உள்ளத்தினிடத்துப் 'பாசியாகிய காமம் வெகுளி மயக்கங்கள் படர்ந்து கிடந்தன. அவ் வுள்ளத்துடன் கூடியிருக்கும் குருகாகிய ஆருயிர் இரையாகிய ஐம்புல நுகர்ச்சிகளை நலம் பொலம் ஆய்ந்து நுகரும் உய்யவேண்டும் துணைக்கருவிக் கூட்டங்களுள் ஒன்றாகிய பற்றறுதி என்றும் கொடிப்படை தாங்கி முற்செல்லும் ஆண்மை மறவன் துணைவழிச் செல்வன். செல்லவே காமம் வெகுளி மயக்கமென்னும் பாசங்கள் நிலையின்றி மெலிந்து பதைபதைத்து அடங்கி யழியும். அதுவே அவற்றை வெல்லும் வழியுமாகும். பற்றறுதி - வெறுப்பு; வைராக்கியம். தூசி - கொடிப்படை; முற்படை. குறிப்புரை: பாசி - ஆசை. குளம் - சித்தம். குருகு - சீவன். இரை - இந்திரிய விடயங்களை தூசி மறவன் - வைராக்கியம் பதைக்கின்றவாறு - கெடும்.