செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
கொடுகொட்டி பாண்டரங் கோடுசங் கார நடமெட்டோ டைந்தாறு நாடியுள் நாடுந் திடமுற் றெழுந்தேவ தாருவாந் தில்லை வடமுற்ற மாவன மன்னவன் தானே. பொருளுரை: சிவபெருமான் செய்தருளும் திருக்கூத்தின் திருப்பெயர்கள் வருமாறு: கொடுகொட்டி, பாண்டரங்கம், கோடு, ஐவகைச் சங்காரத்துடன் காளிக்கூத்து முனிக்கூத்து இன்பக் கூத்துங் கூடிய எட்டு, ஐந்தொழிற்கூத்து, அறுசமயக்கூத்து என இருபத்திரண்டென்பன. இக்கூத்துக்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் நிகழ்த்தியருளப் பெற்றனவாகும். அவற்றுள்ளும் சிறந்தன இரண்டென்ப. அவை முறையே உறுதியின் விழைவு பொருந்த எழுந்த தெய்வத் தன்மை வாய்ந்த தில்லைவனக்காட்டிலும், அதுபோன்று சிறந்த ஆலவனக் காட்டிலும் நிகழ்த்தியன என்ப. தில்லைவனம் உலக நிகழ்வாம் அன்பியற் கூத்தாகும். ஆலவனம் திருவடி நிகழ்வாம். அருளியற் கூத்தாகும். இவற்றால் நிகழ்வன இன்பியல் வாழ்வாகும். ஐவகைச் சங்காரம்: நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் முதலிய கலைப் பகுதிகள் ஒடுங்கும் ஒடுக்கமாகும். கலை: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என ஐவகைப்படும். இவற்றை முறையே நீக்கல் முதலாகக் குறிக்கப் பெற்றுள்ளன. பாண்டரங்கம் என்பது 'பாண்டரங்' எனநின்றது செய்யுளின் திரிபு. ஆடலினை அல்லிய முதல் கொடுகொட்டியீறாகப் பதினொன்றென்ப. அவற்றை வரும் சிலப்பதிகார அரங்கேற்றுகாதையின் மேற்கோள் செய்யுளான் உணர்க: "கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன் குடைதுடிமா லல்லியமல் கும்பம் - சுடர்விழியாற் பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம் " "பாண்டரங்கம் முக்கண்ணா னாடிற் றதற்குறுப், " "கொட்டி கொடுவிடை யோனாடிற் றதற்குறுப், " "புரமெரித்தல் சூர்மாத் துளைபடுத்தல் கஞ்ச னுர னெரித்தல் வாணனைவான் உய்த்தல் - பெரிய அரன்முத லாகவே லன்முதன் மாயோ " குறிப்புரை: இம்மந்திரம் கூத்துக்களின் வகைகளை விளக்குகின்றது :- கொடு கொட்டி - எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடும் கூத்து. பாண்டம் - பாண்டரங்கம் எனவும்படும் முப்புரங்களை எரித்த காலத்தில் அந் நீற்றினை அணிந்து ஆடிய கூத்தின் பெயர். கோடு - காபாலக் கூத்து. பிரமனது சிரசைக் கையில் ஏந்திக் கொண்டு ஆடிய கூத்து. சங்காரம் - நாள்தோறும் நடக்கும் அழித்தற் றொழிலுக்காக ஆடும் கூத்து. நடம் எட்டு - ஐந்தொழில் நடத்துடன் காளிக்கூத்து, முனி நடனம், ஆனந்த நடனம் ஆக எட்டு. ஐந்து - குற்றாலம், கூடல், தில்லை, பேரூர், ஆலங்காடு இவைகளில் ஆடிய கூத்துக்கள் ஐந்து. ஆறு - ஆறு சமயங்களிலும் அவ்வவர் சமயத்துக்கேற்ற கூத்துக்கள் தேவதாருவாம் தில்லை - தெய்வத்தன்மை பொருந்திய தில்லை மரங்கள் உள்ள வனம். வடம் - ஆலமரம். மாவனம் - பெரியகாடு. ஆறறி. கலித்தொகை. கடவுள் வாழ்த்து, . " கொள்ளைக். அப்பர், . - . " பற்றார் " - .
பரமாண்டத் தூடே பராசத்தி பாதம் பரமாண்டத் தூடே படரொளி ஈசன் பரமாண்டத் தூடே படர்தரு நாதம் பரமாண்டத் தூடே பரன்நட மாமே. பொருளுரை: பரமாண்டம் எனப்படும் அப்பால் அண்டத்தூடு பராசத்தியாகிய வனப்பாற்றலின் திருவடி காணப்படும். அவ்வண்டத்தூடு நனிமிகு ஒளியுடைய ஆண்டவன் காணப்படுவன் அதனூடு ஓசை மெய்யாகிய நாதம் காணப்படும். அவ்வண்டத்தூடு பரனாகிய சிவபெருமான் நடமாடி யருள்கின்றனன்.
அங்குச மென்ன எழுமார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனுந்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. பொருளுரை: செம்பொருட்டுணிவின் நன்னெறியே சன்மார்க்கம் எனப்படும். அந்நன்னெறி அங்குசம் என்னும் தோட்டியை ஒத்தது. அஃதாவது 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்துங் காக்கும், வரனென்னும் வைப்பு' நெறியெனக் குறிக்கும் குறிப்பாகும். அந்நன்னெறியின் முழுமுதல்வன் சங்கரன் ஆவன். அவன் நடுநாடியினுள் அறிவினில் தங்கித் தொம்திம் எனத் தாளமிசைத்துத் திருக்கூத்தாடுவன். அக்காலம் திருவருள் பொங்குங் காலமாகும். அத் திருவருள் நம்மாட்டுப் புகும். ஆனால் புறம்போகும் போக்கு இல்லை என்க. குறிப்புரை: அங்குசம் என்ன எழுமார்க்கம் - பிற சமயங்களை அடக்குவதில் அங்குசம் போன்றுள்ள சன்மார்க்கமாகிய சைவம். போதத்தில் - ஞானத்தில் தொந்தி - தொம்தீம் எனத் தட்டும் தாளம். மூலநாடி - சுழுமுனை நாடி பொங்கிய காலம் நெடுங்காலம் போகல் - அழிதல்.
ஆனத்தி யாடிப் பின்னவக் கூத்தாடிக் கானத்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான்என் நாதனே. பொருளுரை: ஆருயிர்களை உய்வித்தற்பொருட்டு அவ்வுயிர்கள்மாட்டு அளவிறந்த அன்பு பூண்டு படைத்தல் முதலிய ஐந்தொழிற் றிருக்கூத் தாடுகின்றனன் சிவன். ஆடியபின்பு அருவம் நாலு, உருவம் நாலு, அருவுருவம் ஒன்று ஆக ஒன்பது திருவுருவங்களிடமாக நின்று ஒன்பது வகையான திருக்கூத்தாடுகின்றனன். பேரொடுக்கப் பெருங்காட்டை விழைந்து பேரூழிப் பெருங்கூத்தாடுகின்றனன். ஆருயிர்களின் கருத்தினிலும் தங்கியாடுகின்றனன். மூன்று நாடிகளும் ஒருங்குகூடும் நடுவிடமாகிய சுழுனையுள்ளும் திருக் கூத்தாடுகின்றனன். எவற்றிற்கும் மேலாய் முடிவு பேறில்லாத மெய் யுணர்வின்கண் படிப்படியாக வந்து திருக்கூத்தாடி நிறைந்துநின்றனன். அவனே அடியேனுடைய ஆருயிர் நாதனாவன். குறிப்புரை: இம் மந்திரம் ஆனத்தி, அதாவது ஐந்தொழில் நடன முதல் ஞானக்கூத்து ஈறாக ஆடும் ஆட்டங்களைக் குறித்தது. நவக்கூத்து சிவத்தின் ஒன்பது பேதமான கூத்து. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், . - .
சத்திகள் ஐந்துஞ் சிவபேதந் தானைந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதமெட்டுஞ் சித்திகள் எட்டுஞ் சிவபதந் தானெட்டுஞ் சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே. பொருளுரை: திருவருளாற்றலின் வகை ஐந்தாகும். அவை முறையே வனப்பாற்றல் நடப்பாற்றல் எனவும், நடப்பாற்றலின் வகையாகிய அறிவாற்றல், தொழிலாற்றல், அன்பாற்றல் எனவும் வழங்கப்படும். இத் திருவருளாற்றல் ஐந்தும் முறையே பராசத்தி, ஆதிசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி, இச்சாசத்தி எனப்படும். இவ்வாற்றல் நிலைக்கு ஏற்றவாறு சிவபெருமானும் ஐவகையாக நின்றருள்வன். முத்தியாகிய வீடுபேறு எட்டென்ப. அவை முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையின் பேறுகள் நான்கு. அவை உருவ நிலையிலும் அருவ நிலையினுமாக எட்டாகும். ஆண்டான் மெய்யின்கண் உறையும் அறிவு முதல்வர் எண்மர் நிலையும் பதமெட்டாகும்; எண்பெரும் சித்திகளும் சித்தி எட்டாகும். ஐம்பெரும் பூதங்கள், ஞாயிறு, திங்கள், ஆருயிர் என்னும் எட்டும் சிவனிலை எட்டாகும். இவ்வெட்டின் உண்மை காண்டல் சுத்தியாகிய தூய்மை எட்டாகும். இவையனைத்தினும் முழுமுதற் சிவபெருமான் முடிவு பேறில்லாத தொன்மைத் திருநடம் நடிப்பன். சிவபெருமான் திருநடமே சிறப்பாக உலகுயிர்களை ஆடவும் பாடவும் கூடவும் செய்கின்றது. இவையே திருநடக் குறிப்பாகும். குறிப்புரை: சத்திகள் ஐந்து - பரை, ஆதி, இச்சை, கிரிபை, ஞானம். சிவபேதந்தான் ஐந்து - சிவத்தின் உருவ பேதங்களாகிய அயன், அரி, அரன், ஈசன். அருவுருவ பேதமாகிய சதாசிவமும். முத்திகளெட்டும் - பதமுத்திகள் எட்டும். கணபதி - அயன், அரி, முருகன், உருத்திரன், இந்திரன், சண்டி, ஈசன் கயிலை ஆக எட்டு. பதம் எட்டும் - உருவ அருவ பேதமாயுள்ள சாலோகாதி எட்டும். சித்திகள் எட்டும் - அணிமா முதலிய சித்திகள் எட்டும். சிவபதம் தானெட்டும் - சைவ சம்பந்தமான பதங்கள் எட்டும். சுத்திகள் எட்டும் - பார்த்தல்.
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழுந் தேகங்கள் ஏழுஞ் சிவபாற் கரன்ஏழுந் தாகங்கள் ஏழுடன் சாந்திகள் தாம்ஏழும் ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே. பொருளுரை: எழுவகை மேகங்களும், எழுவகைத் தீவுகளும், எழுவகை யுடல்களும், சிவ ஞாயிறு ஏழும், ஏழுநாவினையுடைய தீயும், சாந்தியாகிய எழுவகை அடக்கங்களும் சிவபெருமான் திருவடிக்கீழ் அடங்கும். எழுவகை மேகங்கள் ஆவன: 'சம்வர்த்த மாவர்த்தம் புட்கலாவர்த்தஞ், சங்காரித்தந் துரோணம் காளமுகி, நீலவருணமேழ் மேகப் பெயரே'என்னும் அறிதற்கருவி ஏழுமாகும். சிவபாற்சுரன் சிவசூரியன். எழுவகையடக்கம் மேற்கூறிய பொறிகள் ஐந்து, மனம், இறுப்பு ஆகிய ஏழும் அடங்குதல். இறுப்பு: புத்தி. குறிப்புரை: தேகங்கள் ஏழு - எழுவகைத் தோற்றங்கள். சிவபாற்கரன் ஏழும் - சிவசூரியன் என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும் புத்தியம் ஆக ஏழு. தாகங்கள் ஏழு - எழுநா. அக்கினி சாந்திகள் ஏழு - ஐம் பொறிகளையும் மனம், புத்தி இவைகளையும் அடக்கி இருக்கும் நிலை.
பொன்பதிக் கூத்து தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில் அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடஞ் செய்யுமே. பொருளுரை: தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, உச்சி ஆகிய வியத்தகு திருமுகங்கள் ஐந்தும் அருளோன் குறியிற் காணப்படும். அருளோன் குறி - சதாசிவலிங்கம். ஒப்பில் பேரின்பத்தினையே வடிவமாகவுடைய சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் முத்திறப் பாகுபாட்டினின்று மேலோதிய திருமுகங்களினிடமாகத் தனிநடம் புரிந்தருள்வன். இதுவே பொற்புறு நடமாகும். திருமுகங்கள் ஐந்தும் முறையே நடுக்கம், விளக்கம், ஆட்சி, தோன்றுவித்தல், இயக்கம் என்பன. இவற்றை முறையே அகோரம், வாமதேவம், தற்புருடன், சத்தியோசாதம், ஈசானன் எனவும் கூறுப. இவ்வுண்மை வரும் சிவ தருமோத்திரச் செய்யுளான் உணரலாம்: "உச்சிமுகம் ஈசானம் ஒளிதெளியப் பளிங்கே உத்தரபூ ருவதிசையை நோக்கியுறும் உகந்தே நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி நிகழுமுகம் தற்புருடம் கோங்கலர்போல் நிறமே அச்சுறுத்தும் அகோரமும் அறக்கரிது கராளம் அவிழ்தாடி வலத்தோளில் தென்னோக்கி அமரும் செச்சைநிறத் தெரிவைமுகம் இடத்தோண்மேல் வாமம் " ஒப்பில் பேரின்பம் - நிரதிசய இன்பம். குறிப்புரை: உபய உபயத்துள் - அருவத்தும் உருவத்தும் அருவுருவத்தும்.
அடியார் அரனடி யானந்தங் கண்டோர் அடியா ரவராவ ரத்தரு ளுற்றோர் அடியார் பவரே யடியவ ராமால் அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே. பொருளுரை: சிவபெருமான் திருவடியின்பத்தினைத் திருவருளால் கண்டோர் மெய்யடியாராவர். சிவபெருமானின் திருவருளைப் பெற்றோர் அருளடியாராவர். திருவடியின்பத்தினைச் சிவகுருவினருளால் நுகர்பவரே திருவடியாராவர் திருச்சிற்றம்பலமாகிய பொன்னம்பலத்தின்கண் நிகழும் திருக்கூத்தினைக் கண்டோர் சிவனடியாராவர். இவர்கள் மெய்யே அருட்டிரு மேவுசிவம் நான்மைமுன் பெய்யடியார் நானிலையர் பேச, எனப்படுவர். குறிப்புரை: அத்தர் - சிவன். அடி ஆர்பவர் - அடிசேர்ந்தோர்.
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படந்தான்செய் துள்ளுட் படிந்திருந் தானே. பொருளுரை: பொறிபுலன் அடங்கி நன்னெறிக்கண் செல்லாத என்னைச் சிவகுருவாய் எழுந்தருளித் திருவடிசூட்டி அடங்கியொழுகுமாறு செய்தருளினன். எங்கணும் நிறைந்து என்றும் பொன்றாது ஊறும் பேரின்பப் பெருந்தேனை ஊட்டியருளினன். என் உணர்வின்கண் தன்னிகரில்லாத் திருக்கூத்தைப் புரிந்தருளுகின்றனன். அவன் திருப்பெயர் நந்தி என்ப. அவனே நன்ஞானக்கூத்தன். அடியேனைப் படத்தின்கண் காணப்படும் உயிர் ஓவியம் போன்று அசைவற நிற்றலாகிய நிட்டையில் கூட்டுவித்தனன். அதன்மேல் அடியேன் உணர்வினுள் படிந்திருந்தருளினன். குறிப்புரை: இடங்காண் - பரந்த படந்தான். செய்து - சித்திரம் போல் அசைவறச் செய்து.
உம்பரிற் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனன்றே. பொருளுரை: திருக்கயிலையாகிய உம்பரின்கண் ஆருயிர் உய்யத் திருக் கூத்தியற்றும் கூத்தனை, முதல்வனாய்நின்று தலையாய திருக்கூத்தியற்றும் கூத்தனை, அழகிய செம்பொன்னம்பலத்தில் திருக்கூத்தியற்றும் சேவகக் கூத்தனை, ஆருயிரினோடு வேறற விரவிநின்று அவ்வுயிர்களைத் திருவடித் தொடர்வுபடுத்தும் சம்பந்தக் கூத்தனை, தானே முழுமுதலாக இருந்து திருக்கூத்தியற்றும் தற்பரக் கூத்தனை, அடியேன் இன்புறும் வண்ணமாக நாடி அத் திருக்கூத்தினைப் புரிந்தருளுகின்ற சிவனை அடியேன் அன்பினுள் வைத்து வழிபடுகின்றேன்.
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரன்றே. பொருளுரை: மணிமன்றினுள் நடம்புரியும் மாணிக்கக் கூத்தனை, செந்தமிழும் செந்நெறியும், சித்தாந்தமும் மிக்குப் பயிலும் வண்தில்லைக் கூத்தனை, சிறப்புப் பொருந்திய பெரியோர் வாழும் மூவாச் சீருடைத் திருச்சிற்றம்பலக் கூத்தனை, திருச்சடைக் கூத்தனை, அளவுபடாத சேணுற்ற அறிவுப் பேரொளியோடு நன்மை மிகுமாறு திருக்கூத்தியற்றும் சிவானந்தக்கூத்தனை, ஆணிப்பொன்னம்பலத்தே ஆருயிர்களைப் பேணிக் கூத்தியற்றும் ஆணிப்பொற்கூத்தனை அளவிட்டுரைக்கும் வன்மையர் யாவர்?
விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோருந் தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே. பொருளுரை: அழிவில்லாத வியத்தகு செம்மைவாய்ந்த சிறந்த திரு அம்பலத்தின்கண் கூத்தியற்றும் அம்பலக்கூத்தினுள் அழகிய பொன் போலும் திருவடித் தாமரைக்கண் நீங்காப் பேரன்பு பூண்பார்க்குக் காதலான் நினைக்கும் நினைவு மிகுதியான் உயிர்ப்புப் புலனாகும் கிடைக்கப் பெறாமையின் பேரச்சங்கொள்ளும் அச்சந்தோன்றும். தானே எழுந்துவிழும்; பின்னும் மெய் சோரும். திருவைந்தெழுத்தே திருவம்பலத்திற்குக் கொண்டுய்க்கும். காதன்மீக் கூர்தலினால் மேலென நிகழும் என்பதனைக் கண்ணப்ப நாயனார் திருவரலாற்றின்கண் மோகமாயோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்' என்பதனால் கண்டு தெளிக. குறிப்புரை: திருவம்பலக் கூத்தில் அன்பு வைப்பவர்கட்கு ஏற்படும் மெய் அடையாளங்களை இம் மந்திரம் கூறுகிறது.
தேட்டறுஞ் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறுங் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறு மாசை அறுமுளத் தானந்த நாட்ட முறுக்குறு நாடகங் காணவே. பொருளுரை: புறஞ்சென்று ஒன்றைத் தேடுதல்வேண்டும் என்னும் எண்ணம் தோன்றாது. நாட்டமாகிய சிந்தை ஒன்றைத் தூக்கியும் எணணாது. அதனால் சிந்தைத் தேட்டறும் என்றனர். நாட்டம் ஈது யாதாகற் பாற்று எனத் தூக்கி எண்ணிய பொருளை மனம் பற்றி முற்பழக்கத்தால் இன்னதாகற் பாற்றென நினைந்தும், ஆமோ அன்றோ என ஐயுற்றும் திகைப்புறும். அத் திகைப்பும் எழுச்சி தூண்டத் தொழிற்படும் இறுப்பால் நீங்கும். எனவே மனம் என ஒருசொல் வருவித்து மனத்திகைப்பறும் என முடிக்க. உடம்பகத்து ஏற்படும் தளர்வு முதலிய வாட்டங்கள் நீங்கும் உயிர்ப்பு, இறுப்பு என்று சொல்லப்படும் புத்தியின் வயப்படும். வயப்படவே, புலன்களிலோடும் உயிர் அறிவின் ஓட்டறும். இவையெல்லாம் அறவே வேட்கையும் அவாவும் அறும். 'வேட்கையாவது பொருள்கள் மேற்செல்லும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை. ஆருயிரின் உள்ளத்துணர்வின்கண் திருவடிப் பேரின்பநாட்டம் முறுகி வளரும். இவையனைத்தும் அம்பலவாணரின் பொற்பதிக் கூத்தினை அன்புறக்கண்டு வழிபட்டு இன்புறுவார்க்கு நிகழ்வனவாகும். குறிப்புரை: தேட்டறும் - ஆசைகெடும். வாட்டறும் - தளர்ச்சி நீங்கும். கால் - பிராணவாயு. புந்தியாகி - புத்தியின் வசப்பட்டு. புலன் ஓட்டறும் - புலன்கள் அடங்கும். முறுக்குறும் - முதிரும்.
காளியோ டாடிக் கனகா சலத்தாடிக் கூளியோ டாடிக் குவலயத் தேயாடி நீடிய நீர்தீக்கால் நீள்வா னிடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. பொருளுரை: சிவபெருமான் காளியை அடக்குவதன்பொருட்டுக் காளியுடன் ஆடியருளுகின்றனர். பொன்மலையாகிய மேருநன்மலைக்கண் ஆடியருளுகின்றனர். பேய்க் கூட்டங்களுடன் ஆடியருளுகின்றனர். நிலவுலகத்தே ஆடியருளுகின்றனர். ஐம்பெரும் பூதங்களினிடமாக நின்று ஆடியருளுகின்றனர். எல்லையில் காலமாகத் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் சிறப்புற நின்று ஆடியருளுகின்றனர். ஆடுதல்: உலகுயிர் தொழிற்படும் பொருட்டுத் தலைவனாகிய சிவபெருமான் தொழிற்படுதல். அவன் தொழிற்படுதலாவது திருவுள்ளங்கொள்ளுதல். திருவுள்ளங் கொள்ளுதலென்பது இன்னவாறு ஆகுக எனச் சிவன் அறிவிற் கணித்தல். வென்றிமிகு. சம்பந்தர். . - . " பைதற். அப்பர், . - . " பூத்தா. " . - .
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ் சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே. பொருளுரை: அண்டத்தின் நடுவாகப் பொன்மலையாகிய மேரு விளங்குகின்றது. இதுபோல் பிண்டமாகிய உடம்பகத்து நடுநாடி விளங்குகின்றது. நடுநாடியினைச் சுழுமுனை என்ப. மேருவினை நிலத்தின் நடுக்கோடு என்ப. நடுக்கோட்டின் வடபாலும் தென்பாலுமுள்ள கோடுகளை வழிக்கோடுகள் என்ப. அதுபோல் உடம்பகத்து இடப்பால் நாடி வலப்பால் நாடி என்பன உள்ளன. இடப்பால் நாடி இடைகலை எனவும் வலப்பால் நாடி பிங்கலை எனவும் கூறப்படும். சொல்லப்படும் இவ் வான வெளியில் நடுக்கோட்டின் நிலையினை இலங்கை எனக் கூறுப. இவ் விலங்கைக் கோட்டுடன் தில்லைத் திருச்சிற்றம்பலக்கோடும் பொருந்தியிருக்கின்றது. தில்லைக்கும் பொதியின் மலைக்கும் ஊடாகச் செல்லும் நாடி நடுநாடியாகும். இவையே தென்னாட்டுச் சிவபூமியாகும். இம் முறை சிறப்பு முறையாகும். பொதுமுறையான் நோக்கும் வழி இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவின்கண் உள்ளது தில்லை. இவ் விரண்டற்கும் இடைப்பட்டது சிவபூமியாகும். திருத்தொண்டர் புராணத்துள் 'மாதவஞ் செய் தென்றிசையின்' மாண்புரைக்குங்கால் பெரும்பற்றப் புலியூர், திருஆரூர், திருக்காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம் முதலிய சிவ வழிபாட்டிடங்கள் பல என அருளியதூஉங் காண்க. குறிப்புரை: மேரு நடுநாடி - அண்டத்துள் நடுரேகையும், பிண்டத்துள் சுழுமுனையும். அண்டத்துள் இதன் வட அயன வரை களும் பிண்டத்துள் இடைகலை பிங்கலை நாடிகளுமாகும். இலங்கைக் குறியுறும் - இலங்கையில் மேருவின் குறியைப் பார்க்கலாம்.யில் இருக்கின்றன என்பதை இம் மந்திரம் குறிக்கின்றது.
பொற்றில்லைக் கூத்து பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலையொண் சுழுனையாம் பாதி மதியோன் பயில்திரு வம்பலம் ஏதமில் பூதாண்டத் தெல்லையி னீறன்றே. பொருளுரை: பூதமேரு எனப்படும் வடபாலுள்ள பொன்மலையும் தெக்கணப்புறத்ததான இலங்கையும் முறையே இடைகலை பிங்கலை எனப்படும். இவ் விரண்டன் நடுவணதாகக் காணப்படும் திருத்தில்லை நடுநாடியாகிய சுழுனையாகும். பாதிமதியாகிய ஆருயிர் ஐந்தெழுத்தின் நடுவண் நிற்கும் 'ய'கரத்தால் பெறப்படும் ஆவியேயாம். அதனையே சிவபெருமான் சூடியருளினன். அவ் வுண்மை "முடி 'ய'ப்பார்" என்னும் உண்மை விளக்கத் திருப்பாட்டான் உணரலாம். அப் பாதிமதி சூடிய சிவபெருமான் இத் தில்லையின்கண் இடையறாது திருக்கூத்தியற்றி யருளுகின்றனன். குற்றமற்ற இந் நிலவுலக அண்டத்து எல்லையும் அவ் வெல்லையிரண்டும் நடுவண் வந்து முற்றுறும் நடுக்கோடு திருத் தில்லையாகும். சிவபெருமானின் திருத்தலை அன்பியலாகும். திருவடி அருளியலாகும். ஆருயிர் அன்பியலின்வழிப் பாதிமதியாக விருக்கும். அருளியலின்வழி முழுமதியாகும். பாதிமதி யாங்கால் ஆருயிர் சுட்டுணர்வும் சிற்றுணர்வுமாக இருக்கும் முழுமதியாங்கால் அவ் வுயிர் முற்றுணர்வாக விருக்கும் சுட்டுணர்வு நிலையில்லாத உலகியல் இன்பமாகும். சிற்றுணர்வு நிலையில்லாத உலகியற் பொருளாகும். இவ்விரண்டின் சார்பாம் வடிவம் பொருள் வடிவமாகும். முற்றுணர்வு நிலையுடைப் பொருளும் நிலையுடை இன்பமும் பற்றியதாகும். இவ் விரண்டின் சார்பாம் வடிவம் அறிவியல்பால் பெறப்படும் அன்பு வடிவமாகும். பொருள் வடிவினைப் பிறை யெனவும், அறவடிவினை ஆனேறெனவும் உருவகிக்கப்படும். இவ்வடிவங்களெல்லாம் ஆருயிர்களின் உளப்பண்பை முகமெனக் கூறும் உருவகமேயாம். அதனை வரும் வெண்பாவால் நினைவு கூர்க: 'ஆணவ மாமெருமை ஆனைகரி ஆம்மருள்காண் ஏணஅரி மாவினையாம் ஏர்பரியும் - ஆண்மார் நற்செறிவாம் வெள்ளானை ஞானமாம் ஆனேறும் இற்புகலன் பின்புருமேல் எண்.' அறிவு நிரம்புவதன் முன் பெற்றோர் பிள்ளையினைத் தம் தோளிலோ, இடுப்பிலோ, ஓரோவழித் தலையிலோ தங்கி இருக்குமாறு செய்வர். அறிவு நிரம்பியபின் பெற்றோர்தம் திருவடியிலே அவ்வடிவினைச் சிறந்த அணியெனப்பூண்டு முடிமிசைக் கொண்டு வழிபட்டுத் திருந்திய நன்னெறி சேர் மக்கள் தங்கி யிருக்கும். அது திருவள்ளுவ நாயனாரருளிய, "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் " என்னும் செந்தமிழ்ப் பொதுமறையான் நன்குணரலாம். அம் முறை போன்று சிவபெருமான் பிறைக்கு இருப்பிடமாகின்றான். ஆனேற்றை ஊர்பவனாகின்றான். இதனால் யாண்டும் சிவபெருமான் சார்பாகவே ஆருயிர்கள் வாழும். இவ் வுண்மை விளக்கும் குறிப்பு வருமாறு: 'எம்மான் இருப்பும் இருப்பதுவு மாயிருப்பன் செம்மான் பிறைஏறு சேர்ந்துதமிழ் - அம்மான்பால் பேணுபிறை ஆருயிராம் பெம்மான் தலையிடத்தாம் பேணுநிறை முற்றடிக்கீழ்ப் பேசு.' குறிப்புரை: பூமி நடுரேகை, இவைகளுக்கு இடைநிலையே மூன்றாம் பிறையை அணிந்த சிவபெருமான் ஆடும் எல்லைகளாகும் என்று இம் மந்திரம் குறிக்கின்றது. ஐந்து அம்பலங்களும் இவ் வெல்லையிலேயே இருப்பதை நாம் காண்கின்றோம்.
பொற்றில்லைக் கூத்து அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டையா காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருஅம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானன்றே. பொருளுரை: ஏழுவகை அண்டங்களும் விழுமிய முழுமுதற் சிவபெருமானார் தழுவும் அழகிய பொன்போலும் ஊராகவும், அவற்றின் உறுப்பாகக் காணப்படும் ஐம்பெரும் பூதங்களிலும் விரவி நிற்கும் பானங்கள் ஐந்தும் பதியாகவும் கொண்டு அவன் புறத்துத் திருக்கூத்தியற்றுகின்றனன். அதுபோல் அவன் ஆருயிரின் அகத்து நடுநாடிக்கண் திருவருளாற்றலை அம்பலமாகக் கொண்டு திருக்கூத்தியற்றுகின்றனன். அவனே அறிவுப் பேரொளியாம் பரஞ்சோதியாவன். ஆகாசங்கள் ஐந்தனையும் முறையே குணங்கடந்த வெளி, குணவெளி, பெருவெளி, மெய்வெளி, ஞாயிற்று வெளி எனக் கூறலுமொன்று. பதி: தலைநகர். குறிப்புரை: ஆகாசங்கள் ஐந்து - மண்ணில் ஆகாயம், நீரில் ஆகாயம், தீயில் ஆகாயம், வாயுவில் ஆகாயம், ஆகாயத்தில் ஆகாயம் ஆக ஐந்து.
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாஞ் சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையுந் தானும் நிரானந்த மாகி நிருத்தஞ்செய் தானே. பொருளுரை: சிவகுருவால் அருளப்பட்ட இன்ப நெறியாய், அந் நெறி யொழுக்கால் மேம்பட்ட சிவபெருமானின் எட்டுவான் குணத்தின்பம் நிறைந்து நிற்றல் வேண்டும். அது மாதவம்செய் தென்திசை சேர்ந்தார்க்கே கைகூடுவதொன்றாம். இன்பமே வடிவாய் ஆருயிர்கட்குப் போகத்தைப் புரிதற் பொருட்டுப் பூவைப் பூப்போலும் திருமேனியையுடைய திருவருளம்மையும் தானுமாகப் புணர்ந்து நின்று சார்பு பற்றாத ஏரின்பமாய்த் திருக் கூத்தியற்றி யருளுகின்றனன். நிரானந்தம் - என்றும் பொன்றா ஏரின்பம். நின்று பொன்றின்பம் - சாரின்பம். பூவைப்பூ - காயாம்பூ. குறிப்புரை: குரு ஆனந்த ரேகை - குருவால் அருளப்பட்ட ஆனந்த மார்க்கம். சிரம் ஆனந்தம் - மேலான ஆனந்தம். புரானந்தம் - புரி ஆனந்தம் - சரீர ஆனந்தம். பூவை - உமாதேவி. நிரானந்தம் - நித்தியானந்தம்.
ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே. பொருளுரை: ஆதிபரனாகிய சிவபெருமான் ஆடுதலாகிய திருவுள்ளக் குறிப்பு நேர்பட அவன் திரு அங்கையின்கண் விளங்கும் கனலாடிற்று. அனைத்திற்கும் அருட்புகலிடமாக நிலவும் திருச்சடையும் ஆடிற்று. அச்சடை எல்லாராலும் போற்றிப் புகழப்படுவதொன்று அத் திருச்சடையின்கண் காணப்படும் உன்மத்தம் ஆகிய ஊமத்த மலரும் ஆடிற்று. திருச்சடையிற்றிகழும் ஆருயிராகிய பாதிமதியும் ஆடிற்று. நில அண்டங்களும் ஆடின. அருஞ்சைவர் கொள்ளும் முப்பத்தாறாம் மெய்யாகிய நாதத்தின்கண் திருவருளாற்றலுடன் சிறந்தாடினன். இதனையே நாதாந்த நட்டம் என்ப. நட்டம் - நடனம். ஆட்டம் - புடை பெயர்ச்சி; அசைவு. உன்மத்தம் - மிக்க களிப்பு என்றலும் ஒன்று. குறிப்புரை: பார் அண்டம் - பூமி அண்டம். நாதமோடு - நாத சத்தியோடு.
கும்பிட அம்பலத் தாடிய கோனடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாஞ் செம்பொரு ளாகுஞ் சிவலோகஞ் சேர்ந்துற்றால் உம்பர மோனஞா னாந்தத்தில் உண்மையே. பொருளுரை: அனைத்துயிர்களும் அன்புடன் வழிபட்டு இன்புற்றுய்ய முழுமுதற் சிவபெருமான் ஆடிய திருநடம் திருச்சிற்றம்பலத்தின்கண்ணாகும். அத் திருக்கூத்து அழகிய சிவபெருமான் புரிந்தருளும் அகிலாண்டத் திருக்கூத்தாகும். சிறப்பென்னும் செம்பொருள் விளங்கும் திருச்சிற்றம்பலம் சிவ வுலகமாகும். அதனைச் சார்ந்தவர் சிவ வுலகத்தவரே யாவர். ஈண்டுப்புரியும் திருக்கூத்தே மேலான ஞானவரம்பின் முடிந்த ஞானத்தின் உண்மைத் திருக்கூத்தாகும். ஞானத்தின் ஞானம் என்பது நன்னெறி நான்மையின் பதினாறாம் பேறாகிய முடிந்த உண்மைப் பேறாகும் அதுவே அறிவில் அறிவாகும். திருத்தில்லையே திருவடிப் பேற்றைச் செயன் முறையில் எளிதிற் கூட்டுவிக்கும் திருவூர். திருவாரூரிற் பிறக்கப்பேறெய்தும். திருக்காசியில் இறக்கப் பேறெய்தும். தோன்ற மறையத் தொழப்பேறாரூர்காசி, ஆன்றதில்லை முப்பால் அறி. குறிப்புரை: கும்பிட - யாவரும் வணங்கும்படி. சிவலோகம் - பொற்றில்லை.
மேதினி மூவேழ் மிகுமண்டம் ஓரேழு சாதக மாகுஞ் சமயங்கள் நூற்றெட்டு நாதமோ டந்த நடானந்த நாற்பதப் பாதியோ டாடிப் பரனிரு பாதமே. பொருளுரை: நாதத்தையும் நாத அந்தத்தையும் மேற்கொண்டு 'சீலம் நோன்பு செறிவு அறிவு' என்னும் நானிலையும் நாற்பாதம் எனப்படும். அதனை அருள்பவள், திருவருளம்மையாவள். அவள் ஆண்டவனின் செம்பாதியாவள். அவளுடன் சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றனன். அவன்றன் திருவடியிணையே மூவேழ் உலகினையும் ஆட்டுவிப்பதாகும். ஓரேழண்டத்தையும் ஆட்டுவிப்பதும் அவையே. கைக்கொள்வோர் தகுதிக்கேற்பப் படிமுறை போன்று விரிந்த நெறிகள் நூற்றெட்டு. அவற்றையும் அவன் திருவடியே ஆட்டுவிக்கின்றன. குறிப்புரை: பாதி - சிவன் பாதிச் சரீரி ஆகிய தேவி. பரிதி. அப்பர், . - .
இடைபிங் கலையிம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமன்றே. பொருளுரை: அகத்துக் காணப்படும் இடைகலை பிங்கலை இரண்டும் புறத்து முறையே பொன்மலையாகவும் இலங்கையாகவும் கொள்ளப்படும். நடுநாடியாகிய சுழுனை தில்லைவனம் எனப்படும். நடுநாடியே எல்லாவற்றையும் நடத்துகின்றது. அதுபோல் புறத்துத் தில்லைவனம் பொன்மலை முதல் இலங்கை யீறாகக் கொள்ளப்படும் நிலமனைத்தையும் நடுநின்று நடத்துகின்றது. அதனால் 'கடவும் தில்லைவனம் கைகண்ட மூலம்' என ஓதியருளினர். யாங்கணும் நீக்கமற நிறைந்தொன்றி நிற்பவன் 'படர்வொன்றி' யாவன். அவனே பரமாம் பரமுமாவன். பரமாம்பரம் - மேலாம் விழுப்பொருள்.
ஈறான கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே. பொருளுரை: தமிழகத்தின் தென்பால் எல்லை கன்னியாகுமரியாகும்.இது நன்னெறி நான்மையின் நற்பகுப்பாம். இதனகத்துச் சிறப்பாக ஓதப்பெறும் தீர்த்தங்கள் ஒன்பது. அவை முறையே 'காவிரி, யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, கோதாவரி, குமரி, தாமிரபரணி' என்பன. ஏழு மலைகளும் ஓதப்படுகின்றன. அவை முறையே கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி என்பனவாகும். இவற்றிற்கிடையே மாதவம் செய் தென்திசைக்கண் செம்பொருளைத் தம் பொருளாகக் கொண்டு திகழும் செந்தமிழ் மொழிப்பால் நெறி நூலாகிய வேதமும், துறை நூலாகிய ஆகமமும் தொன்மைக்காலத்தே தோன்றின வென்க. அவற்றால் நன்னெறிப்படரும் தூயோர் கொலை புலை நீத்த தமிழ் நெறி நின்று நனி நாகரிகராயினர். ஒரு முழுமுதலாம் சிவபெருமானை வழுவின்றித் தொழும் தமிழ்த்துறை நின்று விழுமியராயினர். அம் முறையான் ஒழுகலாற்றில் தலைதடுமாற்றமில்லாத தென்திசைத் தமிழகம் என்றும் பொன்றா இயற்கை உண்மைத் தூய்மையேயாகும். யாறுகள் திருத்தொண்டர் புராணத்து வைப்புமுறைப்படி வருவனவற்றை வரும் வெண்பாவால் உணர்க. "காவிரியே பெண்ணையம ராவதி பொன்முகலி- மேவு பொருநை மிளிர்வையை - தாவில்கம்பை கொள்ளிடம்பா லிக்கெடிலம் கூறுமண்ணி முத்தாறு " குறிப்புரை: ஈறான கன்னி - தமிழ்நாட்டுக்குத் தெற்கு எல்லையாக விளங்கும் கன்னி ஆறு. கன்னி நதியும் - குமரி நதியும்;ஒன்பது தீர்த்தங்களும் ஏழு வெற்புக்களும் தென்னாட்டுக்குள் இருப்பன. இம் மந்திரத்தால் முதல்முதல் வேத ஆகமங்களும் தென்னாட்டில்தான் பிறந்தன என்பது தெளிவாகின்றது. ஏவியிடர்க். அப்பர், . - .
நாதத் தினிலாடி நாற்பதத் தேயாடி வேதத்தி லாடித் தழலந்த மீதாடி போதத்தி லாடிப் புவன முழுதாடுந் தீதற்ற தேவாதி தேவர் பிரானன்றே. பொருளுரை: இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய இயற்கை உண்மை அறிவு இன்பப் பெருமான் தேவாதி தேவர் பிரானாவன். அவன், திருவருளால் நாதத்தினில் ஆடியருளுகின்றனன். சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நாற்பாதத்தினும் ஆடியருளுகின்றனன். நெறிநூலாகிய தமிழ்வேதத்தின்கண் ஆடியருளுகின்றனன். சிவ வேள்வித் தழலுச்சியிலும் ஆடியருளுகின்றனன். சிவஞான போதம் நல்கும் துறைநூலாகிய தமிழாகமத்தின்கண்ணும் ஆடியருளுகின்றனன். இம் முறையான் இரு நூற்றிருபத்து நான்கு புவன முழுவதும் ஆடியருளுகின்றனன். அவன் விழுமிய முழுமுதற் சிவபெருமானாவன். குறிப்புரை: நாற்பதம் - சரியையாதி நான்குபதம் தழலந்தம் - ஓமாக்கினி. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், . - . " பூமென். அப்பர், . - .
தேவரோ டாடித் திருவம்பலத் தாடி மூவரோ டாடி முனிசனத் தோடாடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியிலாடிக் கோவினுள் ஆடிடுங் கூத்தப் பிரானன்றே. பொருளுரை: நால் வேறியற்கைப் பதினொரு மூவர் என்று சொல்லப்படும் தேவரோடு ஆடியருளுகின்றனன் சிவன். அவனே திரு அம்பலத்தின் கண்ணும் ஆடியருளுகின்றனன். இருபத்து நான்காம் மெய்யாகக் கருதப்படும் குணமெய்யின்கண் உள்ளாராகிய, சிவபெருமான் திருவாணையான் முத்தொழிற்குரிய அயன், அரி, அரன் என்னும் மூவருடனும் ஆடியருளுகின்றனன். முனிவர் கூட்டத்துடனும் ஆடியருளுகின்றனன். செந்தமிழ்த் திருமுறைத் திருப்பாட்டுக்களுடனும் ஆடியருளுகின்றனன். திருமுறைப் பாவின் செழும் பொருளாய் விளங்கியருள்பவள் திருவருளம்மை. அவளுடனும் ஆடியருளுகின்றனன். கோ என்று சொல்லப்படும் ஆருயிரின் கண்ணும் ஆடியருள்கின்றனன். கோ - இயமானன். குறிப்புரை: மூவர் - அயன், அரி, அரன். முனிசனம் - தவத்தர். கோவினுள் - சீவனுள். பண்ணிற். அப்பர், . - .
ஆறு முகத்தில் அதிபதி நானென்றுங் கூறு சமயக் குருபரன் நானென்றுந் தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே. பொருளுரை: ஆறு திருமுகங்களையுடைய அருளார் திருவுருவினுக்குரிய செம்பொருட் செல்வனும் விழுமிய. முழுமுதல்வனாம் சிவபெருமானேயாவன். அவனே அம்பலவாணனாவன். -இல் ஓதப்பெற்ற ஐந்து திருமுகங்களுடன் மறைவாகக் கீழ்நோக்கிய திருமுகம் ஒன்றுங்கூட்டித் திருமுகங்கள் ஆறாகும். மறைமுகம் அருமறை யருளும் துறைமுகமாகும். அருமறை - உபதேசம். ஒருபுடையொப்பாக ஐந்து திருமுகங்களும் ஐந்தொழிலுக்கும் அமைந்தனவாகும். அவை வருமாறு: மேற்குமுகம் படைத்தல், கிழக்குமுகம் காத்தல், தெற்குமுகம் துடைத்தல், வடக்கு முகம் மறைத்தல், உச்சிமுகம் அருளல் என்ப. எனவே ஆறாவது திருமுகம் சிவகுரு. ஆறு திருமுகக் குறிப்பு ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் உண்மையாகும். அவ் வுரு 'குமரகுருபரன்' என இருவகை வழக்கிலும் பெருக வழங்குவதானானும் உணரலாம். மேலும் அவ் வுண்மை வரும் அப்பர் அருண்மொழியானும் உணரலாம்: "முன்னை யார்மயில் ஊர்தி முருகவேள் தன்னை யாரெனில் தானோர் தலைமகன் என்னை யாளும் இறையவன் எம்பிரான் "திருமுருகனுக்கும் சிவபெருமானுக்கும் திருப்பெயர் முறை வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடின்று. முறையே அகத்து நீரும் ஆற்று நீரும் போன்று ஒன்றேயாம். இவ் வொப்பாலும் உணர்க. அவ் வுண்மை தேற்றவே திருமுருகப் பெருமான், தெய்வ நாச்சியாரையும், வள்ளி நாச்சியாரையும் ஒருங்கு திருமணம் புரிந்துகொண்டனர். ஈண்டுத் திருமணம் என்பது செவியறிவுறுத்து ஆட்கொள்ளுதல். இருவரும் ஆருயிர்களின் இருவேறு நிலைகளைக் குறிக்கும் குறிப்பாகும். ஒருவகை செம்புலத்தேவருள் வளர்தல். மற்றொருவகை ஐம்புல வேடருள் வளர்தல். இருவகையினரையும் சிவகுருவாக வந்து ஆட்கொள்பவன் திருமுருகன் ஒருவனே யாம். இஃதன்றித் திருமுருகனின் தொழிலாற்றல் விழைவாற்றல் எனக் கூறுவது உண்மைக்கு மாறாகும். திருவருளாற்றலின் நிலை பலவாமெனினும் பொருள் ஒன்றேயாம். முழுமுதற் சிவபெருமானின் திருவருளாற்றலையே அவனுக்கு மனைவி மக்களாக உருவகஞ் செய்வர் உண்மையுணர்ந்த நல்லார். அவ் வாற்றலுக்குப் பின்பு வேறோர் மனைவி மக்களாக உருவகிக்கும் மரபு யாண்டுமின்று. இவ் வுண்மை, 'செப்பும் சிவனார் திருவருளே மக்கள் மனை ஒப்பாம் அவர்க்கவையின் றோர்.' என்பதனால் நினைவு கூர்க. படி முறையான் வெவ்வேறு நெறிகளினுள்ளாரனைவர்கட்கும் சிவகுருவாய் - அறுமுகக் குருபரனாய் விளக்கஞ் செய்தருளி அவ்வந் நெறிக்கண் நிற்பவனும் சிவனே. இவ் வுண்மைகளைத் திருவருளால் தேர்ந்து தெளிந்தவர் தென்பால் தில்லைக்கண் திருச்சிற்றம்பலத்தினிடத்தே வேற்றுமையின்றி விரவி நின்றருள்பவன் சிவனே எனவும் அவனே அண்ணலாகவும் விளங்கியருளுகின்றனன் எனவும் திருமுறைகள் ஓதும் செவ்விய நுட்பத்தினை அருளால் உணர்வர். குறிப்புரை: ஆறுமுகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், அதோமுகம். ஆறுகொ. அப்பர், . - . " தக்கனது. " . - .
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளி னீரொளி உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. பொருளுரை: திருச்சிற்றம்பலமே ஆடும் அரங்கமாகக்கொண்டு அதன் கண் எம்பெருமானாகிய சிவபெருமான் திருக்கூத்தியற்றுகின்றனன். எம்பெருமான் தன் இரண்டு திருவடிகளிலும் இருபெரும் அறிவொளி தோன்றுமாறு திருக்கூத்தியற்றுகின்றனன். இருபெரும் ஒளி நூலுணர்வும் நுண்ணுணர்வுமாகும். மேலோங்கி ஒளிரும் ஐவகை ஓசையின் கோட்டின் கண்ணும் நின்று திருக்கூத்தியற்றுகின்றனன். அம்மட்டோ? அவ்வோசைகள் திகழும் தூமாயையினையே தன் நேர்நிலையாகக் கொண்டு எழுந்தருளிவந்து அருள்கின்றனன். ஐவகை ஓசை: நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை கேட்பிக்கும் ஓசை. நூலுணர்வு - அபரஞானம். நுண்ணுணர்வு - பரஞானம். குறிப்புரை: ஐந்து நாதம் - ஐவகை வாக்குகளாயுள்ள நாதங்கள்.
ஆடிய காலும் அதிற்சிலம் போசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமுங் கூடிய கோலங் குருபரன் கொண்டாடத் தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறன்றே. பொருளுரை: திருக்கூத்துப் புரியும் திருவடியும், அத் திருவடிக்கண் கிடந்து ஒலிக்கும் மறைச்சிலம்பொலியும், அச் சிலம்பொலியின் விரிவாகக் காணப்படும் திருமுறைத் திருப்பாட்டுக்களும், அத் திருப்பாட்டுக்களின் மறைப்பொருளாய் விளங்கும் பலவகையான திருநடனங்களும் சிவபெருமான் திருவருளால் புரிந்தருளுகின்றனன். அதன்பொருட்டுக்கொண்டருளிய திருக்கோலமும் பலவாம். அவ்வகை அருட்டிருக் கோலங்களைக் கொண்டு வருபவன் குருபரன். அவ்வாறு வருவதும் மெய்யுணர்வினர் கொண்டாடுதற்பொருட்டும் உய்தற்பொருட்டுமாம். அவனைத் திருவருளால் அடியேன் உணர்வின் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன். காண்டலும் அற்றது பிறப்பு. உற்றது சிறப்பு. சிறப்பெனினும் திருவடிப் பேறெனினும் ஒன்றே. குறிப்புரை: அற்றவாறு - பிறப்பு அற்றவாறு. தேடிக் அப்பர், திருவங்கமாலை, .
இருதயந் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினின் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணுங் கூத்துகந் தானே. பொருளுரை: மாணிக்கக் கூத்தன் என்று சொல்லப்படும் ஒப்பில் ஒரு பெரும் முதன்மைக் கூத்தன் சிவபெருமான். அவன் திருவாலங் காட்டின்கண் மணிமன்றம் அணிபெறத் தணியாப் பெருங்கூத்தியற்றுகின்றனன். அவனே அனைவர்க்கும் மெய்க்குரவனாவன். மணிமன்றம் ஐவகை மன்றினும் முதன்மை வாய்ந்தது. ஏனைநான்கு மன்றங்களும் பொன், வெள்ளி, செம்பு, ஓவியம் எனப்படும். இவ்வைந்தும் ஒருபுடை யொப்பாகச் 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தினைக் குறிப்பதாகும். இவ்வுண்மையினை வரும் வெண்பாவால் நினைவுகூர்க: "மேலாம் 'சிவயநம' மேவுமணி பொன்வெள்ளி பாலாம்செம் போடுமண் பற்றல்போல் - மேலாம் அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல் " மண் - ஓவியம். ஆல் - திருவாலங்காடு. கூடல் - மதுரை. மேலும் எல்லா இடங்களிலும் அவன் இடையறாதியற்றும் திருக்கூத்தை உகந்தருளினன். அத் திருக்கூத்தின் திருவாணைத் தொடர்பால் நெஞ்சத்தின் கண்ணெழுந்த உயிர்ப்பு கைகால் முதலிய பொறிகளைக் கலந்து இயக்குவதாயிற்று.
அற்புதக் கூத்து குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம் அருவுரு வாவதும் அந்த அருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாகும் உமையவள் தானே. பொருளுரை: குருவின் திருவுருவையல்லாமல் இடையறாது நினைத்து இன்புறும் திருவுரு வேறொன்றுமின்று. குனித்தல் - இடையறாது நினைத்தல்; தியானித்தல். கட்புலனாகாத அருவவடிவமாவது அருமை வாய்ந்த அக்குருவேயாகும். திரிபுரை என்னும் திருவருள் திகழ்ந்து விளங்குவதும் அக்குருவடிவே. உருவமாயும், அருவமாயும் உற்று விளங்குபவள் உமையவளாவள். குறிப்புரை: குனிக்கும் - நினைக்கும்.
திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவே உருவரு வாவது முற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே. பொருளுரை: சிவபெருமான் திருவடியினைச் சேர்ந்து இன்புறுதற்கு என்றும் வாய்ப்பான திருவழி நன்னெறி நான்மையாகும். அதுவே சிற்றம்பலத் திருக்கூத்தாகும். சிவகுருவடிவினை அகமுற இடையறாது எண்ணுவார்க்கு அவ்வுருவே சிற்றம்பலத்திற் குனிக்கும் திருவுருவென்பது தெள்ளத்தெளிய வுள்ளத்துப் புலனாம். சிவகுருவின் திருவுருவே அருவுருவாய் நடிக்கும் அம்பலவாணரின் அருளுருவாகும். இவ்வுண்மையினை அருளால் முற்றுமுணர்ந்தோர்க்குத் திருவருள் வழியாவதும் அத் திருச்சிற்றம்பல வழியேயாகும். குறிப்புரை: திருவழி - நன்னெறி. உள்ளாக் குனிக்கும் - உள்ளத்தில் நினைக்கும்.
நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந் தாடும் இடந்திரு அம்பலந் தானன்றே. பொருளுரை: சிரசின்கண் உச்சிக்குமேல் பன்னிரண்டு விரற்கிடைவரை உயிர்ப்பு எழுந்து ஓடும். ஆண்டு ஓங்கி எழுந்து தோன்றிடுமாறு நீரும் நாடுமின். நாதமுடிவாகிய நம்பெருமான் மிக்க உகப்புடன் திருக்கூத்தாடும் இடம் அதுவாகும். அதுவே திருவம்பலமாகும். திருவம்பலம் - தில்லைத் திருச்சிற்றம்பலம். குறிப்புரை: உயிர் - பிராணவாயு.
வளிமேக மின்வில்லு வானக வோசை தெளிய விசும்பில் திகழ்தரு வாறுபோல் களியொளி யாறுங் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. பொருளுரை: வானத்தின்கண் காற்று வீசுகின்றது. மேகம் தவழ்கின்றது. மின்னல் மின்னுகின்றது. வானவில் தோன்றுகின்றது. ஓசை எழுகின்றது. இவற்றிற்கெல்லாம் வானம் இடங்கொடுப்பினும் அவ்வானம் இவற்றினால் தொடக்குண்ணாது வேறாகத் தனித்துநின்று திகழ்கின்றது. அதுபோன்று சிவபெருமானும் களிப்பினைத் தரும் ஒளிகள் ஆறுடனும் கலந்து அவற்றிற்கும் ஒளிகொடுத்து நிற்கின்றனன். அங்ஙனம் நிற்பினும் தான் தனிப் பேரறிவொளி வடிவாய், மறைந்து நின்றருள்கின்றனன். அறுவகையொளி: அகநிலை ஆதாரங்கள் ஆறினும் காணப்படும் அருள்விளக்கவொளி, ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாகக் காணப்படும் அறிவொளி. 'அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்'த் தோன்றும் சமயவொளி. குறிப்புரை: களியொளி ஆறும் - மேலான தூவொளி முதலிய ஆறு ஒளிகளும்.
தீமுதல் ஐந்துந் திசையெட்டுங் கீழ்மேலும் ஆயும் அறிவினுக் கப்புறம் ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடஞ்செய்யும் மாறன்றே. பொருளுரை: ஐம்பெரும் பூதங்களினுள் ஒளியுருவாய் நடுநின்று ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஒளிதருவது தீ. அத் தீ ஒளியால் புறவிருளைப் போக்குகின்றது. சூட்டால் வெப்பத்தையும் உணா முதலியவற்றைப் பதஞ் செய்வதையும் புரிகின்றது. அதுபோல் சிவபெருமான் அறிவொளியையும் அருட்பதத்தையும் புரிந்தருளுகின்றனன். அம்முறையால் தீ அவனுக்கு ஒருபுடையொப்பாகும். அத்தகைய தீ முதலிய பெரும் பூதங்கள் ஐந்தும், திசை எட்டும், கீழும் மேலும் ஆகிய பத்துப்புலனும் நிலைக்களனாகக் கொண்டு ஆயும் ஆருயிரின் அறிவினுக்கு அப்புறமாகக் காணப்படுவது திருவடிப் பேரின்பம் தூவாமாயை தூமாயை என்று சொல்லப்படும் மாயை மாமாயையைக் கடந்துநின்ற மெய்யுணர்வினர் அறிவுக்கண்கொண்டு காணுமாறு நாயகன் நீங்காதுநின்று நடஞ்செய்தருளுகின்றனன். இதுவே அம்பலவாணன் இம்பரிடையும் ஆருயிரின் அகத்திடையும் அறிவிடையும் இடையறாது செய்து போதரும் திருவருட்கூத்தாகும். குறிப்புரை: தீ முதல் ஐந்தும் - ஐந்து பூதங்களும்.
கூத்தன் கலந்திடுங் கோல்வளை யாளொடுங் கூத்தன் கலந்திடுங் கோதிலா ஆனந்தங் கூத்தன் கலந்திடுங் கோதிலா ஞானத்துக் கூத்தனுங் கூத்தியுங் கூத்ததின் மேலன்றே. பொருளுரை: கூத்தனாகிய சிவபெருமான் அழகிய புள்ளிகளையுடைய வளையலை யணிந்து கிளையுற விளங்கும் திருவருள் அம்மையுடன் கலந்து ஆருயிர்கட்கு அளவிலாநலம் உளமொடும் புரிகின்றனன். அவன்தன் திருவருட்கலப்பால் குற்றமற்ற பேரின்பம் சீருறப் பெருகும். அவன் திருவடியுணர்வெனப்படும் குற்றமிலாத சிவஞான விளக்கமுண்டாகும். கூத்தனும் கூத்தியும் ஆகிய சிவனும் சிவையும் திருக்கூத்தின்மேல் திருநோக்கம் கொண்டருளுகின்றனர். குறிப்புரை: கூத்தி - நடமாடும் சிவகாமி.
இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே. பொருளுரை: சிவபெருமானின் இடப்பாகத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு திகழ்பவள் திருவருளம்மையாகிய சத்தி. அவளுடன் விட்டுப் பிரிவின்றி இருவேறுருவின் ஒரு பேரியாக்கையாய் ஒட்டித் திகழ்பவன் சிவபெருமான். அவன் திருநடம்புரியும் சீரொடு நின்றமையை அவனருளால் அடியேனும் அறிந்துள்ளேன். படம்போலும் மறைப்பினைச் செய்யும் ஆணவ வல்லிருளைப் பொருந்தியுள்ள பலவேறு உயிர்கட்கெல்லாம் பேரறிவும் பேராற்றலும் பேரின்பும் என்றும் மாறாதியை தற்பொருட்டு அச் சிவபெருமான் அடங்கலும் தாமாகநின்று ஆடியருள்கின்றனன். ஆடுதல் - அனைத்தையும் புடைபெயர்விக்கத் திருவுள்ளங் கொள்ளுதல். படம் - துணி; திரைச்சீலை. குறிப்புரை: இடங்கொண்ட - இடப்பாகம் கொண்ட. படங்கொடு - ஆணவமல மறைப்புக்கொண்டு.
சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாஞ் சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்டு ஒத்தஆ னந்தம் ஒருநட மாகுமே. பொருளுரை: எப்பொருளால் எவ்விடத்து எவ்வகை இன்பம் காணப்பெறினும் அவ்வனைத்தும் அருளாற்றலாம் சத்தியின் உரிமையே. அதனால் அனைத்தின்பமும் அருளாற்றலின் திருவடிவென்றனர். உண்மை அறிவு, இன்பம் என்னும் ஒப்பில் பொருள் மூன்றனுள் உடைமையாகிய உலகமும், உலகியற் பொருள்களும் அவற்றின் முதலாகிய மாயையும் உண்மை ஒன்றுமட்டும் உள்ளன. அடிமையாகிய ஆருயிர்கள் உண்மையும் அறிவும் உடையன. உடையானாகிய முழுமுதற்சிவன் உண்மையும், அறிவும், இன்பமும் என்னும் மூன்று முடையன். தனக்குத் தானே ஒத்ததாய் ஈடும் எடுப்பும் இல்லதாய்க் காணப்படும் விழுமிய அழியாப் பேரின்பம் திருவருளின் திருமேனியாகும். சத்தியின் வடிவம் அரிசி மாவொத்து உள்ளது. அம்மாவினின்றும் பல்வேறு உருவம், சமைப்பார் நினைவிற்கேற்றவாறு அமையும். அதுபோல் திருவருளின்கணின்றும் சிவன் திருவுள்ளத்திற்குத் தக்கவாறு சிறந்துதோன்றும். அதனால் சத்தியின்வடிவு சகளமாகிய வடிவ நிலைக்களத்துத் தோன்றி எழும். எழுந்த சிவனும் சிவையுமாகிய இரண்டும் ஒத்துத் திரண்டு ஆருயிர்கட்குப் பேரின்பத்தினை ஊட்டுவதாக வுவந்தநிலை ஒப்பில் திருநடமாகும். குறிப்புரை: இரண்டு ஒத்த - சத்தி-சிவ நடமிரண்டும்.
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடஞ் சிற்றம் பலமென்று தேர்ந்துகொண் டேனன்றே. பொருளுரை: நெற்றியின்கண் நேர்நடுவாம் புருவமத்தியில் காணப்படும் இடைவெளி தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். ஆண்டு உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் 'சிவசிவ' என்னும் செந்தமிழ்த் திருமறையாகும். பற்றற்றார் பற்றுக்குப் பற்றாய் நிற்பவன் சிவபெருமான். அவனே பரமன். அவன் உடனாக இருக்கும் இருப்பிடம் மேலோதிய புருவநடுவாகிய தில்லைத் திருச்சிற்றம்பலமென்று திருவருளால் தேர்ந்து தெளிந்து கொண்டேன் என்க. சிறைவான். . திருக்கோவையார், .
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவந் தண்டினிற் சாத்தவி சாம்பவி யாதனந் தெண்டினில் ஏழுஞ் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானன்றே. பொருளுரை: அண்டங்களும் அவற்றின் அடக்கமாகிய தத்துவங்களாகும், அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் நிலைகளும், சத்தியின்வடிவாயுள்ள சாத்தவி, சாம்பவி என்னும் இரண்டும் கூடிய ஏழுநிலைகளும் அடைவுபட - முறைமையாய்ச் சிவன் இருக்கையாகும். அவ்வெழுநிலைகளும் இருக்கையாகக்கொண்டு பரஞ்சோதியாகிய விழுத்திணைச் சிவன் திருக்கூத்துகந்தனன். குறிப்புரை: தெண்டினில் - முறைமையில்.
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தானிதழ் நாலொடு நூறவை சென்றது தானொரு பத்திரு நூறுள நின்றது தானெடு மண்டல மாகுமே. பொருளுரை: செம்பொன் அம்பலம் - தில்லைத் திருச்சிற்றம்பலம் முதலிய மன்று நிறைந்த திருவிளக்கொளிபோன்று கதிர் காலும் பெருமலர். இது நன்மைதரும் மென்மை மலராகும். இதன் இதழ்கள் நூற்று நான்கெனவும், இருநூற்றுப்பத்தெனவும் கூறப்படும். இம் மலர்கள் ஆறாதாரத்துக் காணப்படும் என்ப. இவையனைத்தும் சிவபெருமான் நின்றருளும் நெடுமண்டலமாகும். குறிப்புரை: நாலொடுநூறு - . பத்திருநூறு - இருநூற்றுப் பத்து.
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்டன் நடஞ்செயும் ஆலயந் தானன்றே. பொருளுரை: அளவில்லாத எழுகோடி அண்டங்களும், அவைபோன்று எழுகோடிப் பிண்டங்களும், தெளிந்த திரையையுடைய கடலாற் சூழப்பட்ட திசைகளும் விளங்கும் எழுகோடித் தீவுகளும், எட்டுத் திசைகளிலும் காணப்படும் அளவில்லாத சிவக்கொழுந்து எனப்படும் சிவலிங்கங்களும் எழுகோடி என்ப. இவ்விடங்களனைத்தும் அண்டனாகிய சிவபெருமான் நடனஞ்செய்யும் திருக்கோவில்களாகும்.
ஆகாச மாமுட லங்கார் முயலகன் ஏகாச மாந்திசை யெட்டுந் திருக்கைகள் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானன்றே. பொருளுரை: வெளியாம் உடலும், காற்கீழ் கரிய நிறமுடைய முயலகனும், மேலாடை போன்று காணப்படும் எட்டுத் திசைகளும் கைகளாகவும் கொண்டு, மிக்க வேட்கையினையுடைய மூன்று கண்களும் மூன்றொளிப் பொருள்களாகவுள்ள ஞாயிறு திங்கள் தீயாகவும் கொண்டு திகழ்வோன் சிவன். அவன் அறிவுப் பேரொளியாகிய பெருவெளியில் அறிவுப் பெருநடஞ்செய்தருளுகின்றனன். 'முயலகன்' என்பது நன்னெறி நான்மையின்கண் முயல்வுறும் நல்லாரை முயலவொட்டாது தடுக்கும் ஆணவம். அதன் சார்பாம் மருள், பிறப்புறுவார்கட்குச் சிறந்த கரும்பு போன்று இனிக்கும். அதனை அரைத்து அடிக்கீழ் அமுக்குவது ஆண்டவன் அருட்செயலாகும். அவ்வுண்மை வரும் பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாட்டானுணர்க: "பெறுவது பெற்ற உறுதியுத் தமர்கட்கு ஆயினும் சிறந்த நேயநெஞ் சினனே யாகக் கழனியின் யோகத் தபோதனர் ஆன பேருழவர் மானமோ டாக்கிய முய லகனென்னு மியல்பெருங் கரும்பை. உதிர மென்னும் முதிர்சா றொழுக நகையெனு முத்தந் தொகையுறத் தோன்றச் சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்டு அரைத்தக வயிரங் கரைத்தவித் தகனே . . . . . . . . . . . . . .குறிப்புரை: ஏகாசம் - மேலாடை. மோகாய - விருப்பமுள்ள. மாகாயமன்று - ஆகாயமன்று. நாயகன். சிவஞானசித்தியார், . - .
அம்பல மாவ தகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவது அப்புத்தீ மண்டலம் அம்பல மாவது அஞ்செழுத் தாகுமே. பொருளுரை: அனைத்துலகின்கண் காணப்படும் இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் முற்றும் சிவபெருமான் திருக்கூத்தியற்றும் திருவம்பலமாகும். ஆதியாகிய நடப்பாற்றலையுடைய நாயன் திருவடியும் அம்பலமாகும். நீர் மண்டலம், தீ மண்டலம்ஆகியவைகளும் அம்பலமாகும். மெய்ம்மை அம்பலமாவது செந்தமிழ்த் திருவைந்தெழுத்தேயாம். திருவைந்தெழுத்து அம்பலம் என்பதை ஆம் திருப்பாட்டின்கண் விளக்கியுள்ளாம்; ஆண்டுக் காண்க. குறிப்புரை: இம் மந்திரம் எல்லாம் சிவத்தின் நாடகசாலைகள் என்று கூறிற்று.
கூடிய திண்முழ வங்குழ லோமென்று ஆடிய மானுடர் ஆதிப் பிரானென்ன நாடிய நற்கண மாரம்பல் பூதங்கள் பாடிய வாறொரு பாண்டரங் காகுமே. பொருளுரை: சிவபெருமான் ஆடிய திருக்கூத்தினைக் காணும் பேறு திருவருளால் பெற்ற மானுடர் ஆண்டு முழங்கிய குடமுழாவாகிய திண்ணிய முழவோசையினையும், புல்லாங்குழல் ஓசையினையும் பொலிவு பெறக் கேட்டனர். எல்லாம் ஓம் என்று ஒலிக்கும் நுண்மையினையும் உணர்ந்தனர். ஆதிப்பிரானென்று போற்றினர். சிவபெருமானையே நாடி நிற்கும் வரிசை யமைந்த நற்கணமும், பல்வேறு வகையான பூதகணங்களும் அவன் ஆடும் பாண்டரங்கக் கூத்தினைக்கண்டு பாடியாடித் தொழுதனர். பாண்டரங்கம் வருமாறு. "ஏறமர் கடவுண் மூவெயில் எய்வுழிக் கூறுகூ றாகக் கொடியொடும் படையொடும் வேறுவே றுருவின் விண்மிசைப் பரத்தர் அவ்வழி யொளியொடு முருவொடுந் தோன்றித் தேர்மு னின்று திசைதலை பனிப்பச் சுவையும் குறிப்பும் ஒழிவில தோன்றி அவையவை யல்வழி யாடினன் ஆட மைந்தரு மகளிரும் தந்நிலை யழிய மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக் கடிய காலக் காற்றென ஏற்றவன் " மானிடர் என்னும் பாடத்திற்கு மானை இடக்கையின்கண் உடைய சிவபெருமான் என்க. குறிப்புரை: மானிடர் - மான் + இடர் - மானை இடக்கரத்துப்பக்கம் உடையவர். கணம் ஆரம் - வரிசையாக உள்ள கூட்டங்கள்.
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. பொருளுரை: வெவ்வேறாகிய அண்டங்களில் உள்ள தேவர்களும், ஏனைப் புற அண்டங்களிலுள்ள தேவர்களும், தெளிந்த அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட உலகங்களுக்குள்ளுள்ள தேவர்களும், செந்தாமரை மலரை யொத்த திருவடித் தாமரையைத் தூக்கிப் பொன்னம்பலத்தின் கண்ணே முழுமுதற் சிவபெருமான் புரியும் திருக்கூத்தினைக் கண்டு தொழுது வழிபட்டனர். அதனால் அவர்தம் பெருநிலையினை எய்தியுள்ளார்கள். இன்னும் வழிபடுவதனால் மேனிலையும் அடைவார்கள். குறிப்புரை: அப்பாலை - புறவண்டம்.
புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோற் களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குளா னந்தத் தமுதூறும் உள்ளத்தே. பொருளுரை: புளியினைக் கண்டவருக்கு நாக்கின்கண் புனலூறுவது இயல்பு. இது காட்சியினாலேயே மீட்சியில் மாட்சியின்பம் உண்டென்பதனை உணர்த்துகின்றது. அதுபோன்று அனைவர்க்கும் தனை நிகர் களிப்பினைத் தரும் தில்லைத் திருச்சிற்றம்பலக் கூத்தனைக் காதலுடன் கண்டவர்கட்கெல்லாம் இன்பக் கண்ணீர் துளித்து முத்து முத்தாக வடியும். நெஞ்சமானது அன்பின் மேலீட்டினால் தழல் கண்ட வெண்ணெய் போன்று உருகா நிற்கும். உள்ளத்தின்கண்ணே உணர்வொளிக்குள் விளைந்த வற்றாப் பேரின்பத்தமுதூறும்.
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க் குணவுண்டால் உன்மத்தஞ் சித்திக்குங் கொண்டாடு மன்றுட் குனிக்குந் திருக்கூத்துக் கண்டார் வருங்குணங் கேட்டார்க்கும் ஒக்குமே. பொருளுரை: கொடும் பிறவிக்கஞ்சிப் பற்றைவிடும் வேட்கையுடன் வரும் மெய்யன்பர்கட்கு விரும்பித் தங்குமிடம் சிவானந்தமாகிய திருவடிப்பேறேயாம். அச் சிவானந்தம் உணர்வினின் உணவு என உண்டார்க்குச் செயலறுதலாகிய உன்மத்தம் கை கூடும். எல்லாராலும் கொண்டாடப்படும் தில்லைச் சிற்றம்பலத்தினுள் சிவபெருமான் புரியும் திருநடனத்தைக் காதலித்துக் கண்டார்க்கு வரும் கணக்கிலாப் பேரின்பப் பண்பு சொல்லக் கேட்டார்க்கும் ஒப்பக்கிடைத்துப் பேரின்புறுத்தும். செயலறுதல் - உலகை மறத்தல். குறிப்புரை: உன்மத்தம் - உலகை மறந்திருக்கும் நிலை.
அங்கி தமருகம் அக்குமா லைபாசம் அங்குசஞ் சூலங் கபால முடன்ஞானந் தங்கு பயந்தரு நீல மும்முடன் மங்கையோர் பாகமாய் மாநட மாடுமே. பொருளுரை: சிவபெருமான் திருக்கூத்துப் புரியுங்கால் கைக்கொள்ளும் பொருள்களும் துணையும் வருமாறு: மழு, உடுக்கை, சிவமணி, கயிறு, தோட்டி, முத்தலைவேல், நான்முகன் மண்டையோடு முதலியன. துணையாக விட்டுப்பிரியாது திருவடியுணர்வாகிய அழியா விழுப்பயனைத் தந்தருளத் தங்கும் நீலத் திருக்கடைக்கண்ணுடன் எழுந்தருளியிருக்கும் மங்கையினை ஓர் உடம்பின்கண் ஒப்பில் ஒரு கூறாகக்கொண்டு மாநடம் புரிகின்றனன் சிவன். குறிப்புரை: நீலமும்முடன் - நீல விழிகளோடுங் கூடிய.
ஆடல் பதினோ ருறுப்பும் அடைவாகக் கூடிய பாதஞ் சிலம்புகைக் கொள்துடி நீடிய பாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறமகத் தானன்றே. பொருளுரை: சிவபெருமான் முறையாக ஆடலுக்கு வேண்டிய பதினொரு உறுப்பும் குறைவில்லாமல் நடித்தருளுகின்றனன். திருவடிக்கண் மறைச்சிலம்பும், திருக்கையிற் கொள்ளும் உடுக்கையும் என்றும் பொன்றாது நின்று ஓம் எனும் துன்றிய ஒலியினை நன்றாக ஒலிக்கும். 'மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய' இயற்கை உண்மை அறிவு இன்பவடிவத்தே நின்று திருக்கூத்தருளுகின்றனன். அத் திருக்கூத்துப் புறமாகிய அண்டத்துள்ளும் அகமாகிய உடம்பினுள்ளும் அவனருளால் ஓவாது இயற்றப்படுகின்றன. உடம்பு - பிண்டம். "கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன் குடைதுடிமா லல்லியமல் கும்பம் - சுடர்விழியாற் பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம் "எக்கூத்து எவரால் ஆடப்படினும் அவை யனைத்தும் சிவபெருமான் திருவருளேயாம்.
ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழைம்பத் தாறாட அன்பது மாடினான் ஆனந்தக் கூத்தன்றே. பொருளுரை: 'சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன், உவந்தருள் உருத்திரன்றான், மால், அயன்' என்று சொல்லப்படும் சிவபெருமானின் பெருநிலைகள் ஒன்பதும் சிவபெருமான் புரிந்தருளும் திருக்கூத்தால் ஆடுதலாகிய தொழில்நிலை எய்தும். எட்டுத் திசையும், எட்டுத் திருவுருங்களும் ஆகிய பதினாறும் திருக்கூத்தால் ஆடுவனவாகும். இறவாத இன்பவாயிலாம் அன்புசேர் நெறிகள் சமயங்களெனப்படும். அவை தொகையான் அறுவகைப்படும். வகையான் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகும். விரியான் இருபத்து நான்காகும். அவைகளும் ஆடுவனவாகும். இன்பம் எய்தும் நிலைக்களமாகக் காணப்படும் உலகங்கள் ஏழும் ஆடுவனவாகும். ஆருயிர்களின் பிறப்பின்வகை ஏழாகக் காணப்படும். அவ்வேழும் ஆடுவனவாகும். நாடுகள் ஐம்பத்தாறென்று நவிலப்படும். அவைகளும் ஆடுவனவாகும். இவை யனைத்தும் அன்பதுவாகச் சிவபெருமான் ஆடும் ஆனந்தக் கூத்தினான் நிகழ்வனவாகும். அத்தகைய பேரின்பப் பெருங்கூத்தினைச் சிவபெருமானாடியருளினன்.
ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந் தேழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாகி ஏழினிற் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத் தேஇசைந் தானன்றே. பொருளுரை: பண்ணமைவு ஏழென்று கூறப்படும். அவை: குரல், துத்தம், கைக்கிளை, விளரி, தாரம்., உழை, இளி என எழுவகைப்படும். அவ் வேழும் உறழ நாற்பத்தொன்பதாகும். இகழ்ந்தெழுத்து ஆறும் திகழ்ந்தெழுத்து ஒன்றும் ஆகிய ஏழு எழுத்துக்களாகும். அவையாவன: ஆதாரமாகிய நிலைகள் ஆறுக்கும் உரிய எழுத்துக்கள் ஆறு. ஓமொழிப் பிரணவ எழுத்தொன்றும் ஆக ஏழு. இவ் வேழினுள்ளும் முதன்மை வாய்ந்தது ஓமொழியே. அதனால் ஏழினில் ஒன்றாயென்றனர். அறுவகை நெறியும் நடுவாக நன்றிக்கண் தங்கியான் நெறியும் என் நெறிகள் ஏழாம். நடுவாக நன்றிக்கண் தங்கல்: சமரச சன்மார்க்கம். இதனை நடுநெறி எனவும் கூறுப. நடுநெறியினைச் சமயாதீதம் எனவும் கூறுப. சமயாதீதமே சித்தாந்த சைவம். இவ் வுண்மை வரும் தாயுமான அடிகள் திருப்பாட்டான் உணரலாம். "சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதரும் "எங்கள் பரஞ்சோதி நாடகத்து இசைந்து திருக்கூத்தியற்றியருளுகின்றனன். குறிப்புரை: இம் மந்திரம் இசையில் உள்ள பண்கள் வகைகளை நாடகப் பண்புக்கேற்பக் கூறுகிறது.
மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தாமே. பொருளுரை: ஒருமலமுடையார், இருமலமுடையார், மும்மலமுடையார் என ஆருயிர்கள் மூவகைப்படும். மும்மலமும் ஆணவம் கன்மம் மாயை எனப்படும். இவை விரியுங் காலத்து, ஆணவம், கன்மம் மாயை, மாயையாக்கம், இவற்றைத் தொழிற்படுத்தும் நடப்பாற்றலாம் திருவருள் ஆக ஐந்துமாம். ஆருயிர்களின் மூச்சு முந்நூற்றறுபதுடன் ஆறு உறழ இரண்டாயிரத்தொருநூற்றறுபது உயிர்ப்பாகும். பன்னிரண்டு ஆதாரங்களும் வழியாய் அக்கமாகிய ஆன்மாவின் கண்ணும், மூன்றுலகின்கண்ணும் தொன்மையே சிவன் ஆடிருளினன். மூன்றினில் என்பதற்கு மூன்று மண்டலங்களிலெனவும், ஐந்தினில்: நடுக்கம், விளக்கம், ஆட்சி, தோன்றுவித்தல், இயக்கம் என்று சொல்லப்படும் ஐம்பெரு மந்திரங்களெனவும், மூச்சு வேறுபாடு முந்நூற்றறுபது, ஆறாதாரங்கள் எனவும் கூறலுமொன்று. குறிப்புரை: மூன்றினில் - ஒருமலமுடையவர். இருமலமுடையவர், மும்மலமுடையவர். அஞ்சாகி - ஐந்து மலங்களாய். முந்நூற்றறுபதாய் மூன்றினில் ஆறாய் - மூன்றுவித உயிர்களிடத்திலும் x = சுவாசபேதமாய் முதற்பன்னீர் மூலமாய் - மூலாதாரமாய். அக்கம் - ஆன்மா.
தாமுடி வானவர் தம்முடி மேலுறை மாமணி ஈசன் மலரடித் தாளிணை வாமணி யன்புடை யார்மனத் துள்ளெழுங் காமணி ஞாலங் கடந்துநின் றானன்றே. பொருளுரை: அழகிய சிறந்த மணிகண்டத்தையுடைய சிவபெருமானின் செங்கமலத் தாளிணைகள் பிறந்திறக்கும் பெற்றிமை வாய்ந்த ஆருயிர் இனத்தராய்ப் புண்ணியப் பேற்றினால் வானவராய்த் திரியும் வானவர் முடிக்கண் உறைந்தருளின. அழகு பொருந்திய சிவ அன்புடையார் மனத்துள் எழுந்தோங்கி நிற்கும் சிவபெருமான் வேண்டக் கொடுக்கும் கற்பகத்தையும், சிந்தித்தது கொடுக்கும் சிந்தாமணியையும் ஒருபுடையொப்பாகவுள்ளவன். அவன் அம் மெய்யன்பர்களைத் தானாக்கித் கொண்டருளினன். அவன் ஞாலங்கடந்து நின்றருளும் மேலோனாயினன். குறிப்புரை: முடிவானவர் - ஒருகாலத்தில் இறக்குந் தன்மையுள்ளவானவர். வாமணி - வாமம் + அண்ணி - அழகுபொருந்தி. காமணி - கா + மணி - கற்பக தருவும் சிந்தாமணியும்.
புரிந்தவன் ஆடிற் புவனங்க ளாடுந் தெரிந்தவன் ஆடும் அளவெங்கள் சிந்தை புரிந்தவ னாடிற்பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே. பொருளுரை: சிவபெருமான் புரிதலாகிய திருவுள்ளங்கொண்டு உலகு தொழிற்பட வேண்டுமென நோக்கல் நோக்காகிய ஆடுதலைப் புரிவன். புரியவே புவனங்கள் ஆடும். இயற்கை யுணர்வும் முற்று முணரும் முழுமுதற்றன்மையும் இயல்பாக வாய்ந்த விழுமியோன் சிவன். அதனால் அவன் அனைத்துந் தெரிந்த அருளாளனாவன். அவன் ஆடுமளவும் எங்கள் சிந்தையும் ஆடும். இதற்கு ஒப்புப் பகலும் நிலவும், விளக்கும் உள்ள துணையும் கண்ணும் கருத்தும் அண்ணித் தொழிற்பட்டு இன்பம் நண்ணுவதாகும். புரிந்தவனாகிய சிவபெருமான் ஆடில் பல பூதங்களும் ஆடும். இயற்கைப் பேரறிவுப் பேரொளி வண்ணன் சிவபெருமான். அதனால் அவன் எரிந்தவன் என ஓதப்பெற்றனன். அல்லதூஉம் மலமாயை கன்மமாகிய முப்புரங்களையும் எரிந்தவன் எனினும் அமையும். இப் பொருட்குப் பிறவினை தன்வினையாக நின்றதெனக் கொள்க. அத்தகைய பெரும் பொருட் கிளவியான்றன் பேரருள் ஆடலைக் கண்டு அனைத்துயிரும் இன்புற்றன என்க. குறிப்புரை: புரிந்து - விரும்பி. எரிந்தவன் - தீப்பிழம்பாயுள்ள சிவன். நோக்காது. சிவஞானபோதம், . - . " கரும்பினு அப்பர், . - . " சாட.. " " - .
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடமாட லாரும் அறிந்தபின் ஆதி நடமாட லாமருட் சத்தியே. பொருளுரை: மேலோதிய வுண்மையினை உள்ளவாறுணரும் நல்லறி வில்லாத புல்லறிவாளர்கள் ஆதியைப் பாதித் திருமேனியாகவுடைய சிவபெருமான் ஏனையோரைப்போலத் தன் பொருட்டு நடம் புரிகின்றனன் என்பர். அப் பெருமானார் 'அவையே தானேயாய்' நின்று திருவருளாடல் புரியும் உண்மை நுண்மைச் செய்கையினை அவனருளிலார் யாரும் அறிகிலர். அவன்றன் திருவாடலை அவனருளால் அறியும் பேறு பெற்றபின் அவ் வாடல் அருட் சத்தியினால் நிகழ்வதென்னும் உண்மையினையும், அதுவும் ஆருயிர்களின் உய்வின்பொருட்டு என்னும் நன்மையினையும் கண்டு புகழ்வர். தாமும் திருவருள் வண்ணமாகத் திகழ்வர்.
ஒன்பதோ டொன்பதாம் உற்ற இருபதத்து அன்புறு கோணம் அசிபதத் தாடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடவே அன்புறு எந்தைநின் றாடலுற் றானன்றே. பொருளுரை: ஆருயிர்கட்கு அமைந்த நுண்ணுடம்பு புரியட்டகம் எனப்படும். அது புலனாகிய தன்மாத்திரை ஐந்தும், மனம் எழுச்சி இறுப்புஎன்னும் மூன்றும் கூடிய எட்டினாலும் ஆயதாகும். அவ்வுடலே 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்னும் மாறாப் பிறப்புடலாகும். அவ் வுடலும், ஐம்போர்வையும் பொருந்திய விடத்து அமைந்து விளங்கும் ஆள்நிலை ஒன்றுங்கூட்டி மெய் ஒன்பதாகும். அவ் வொன்பது வகையான் பின்னும் ஒன்பதாகும். வகை பொதுமையும் தனிமையும் இவற்றைப் பொதுவும் சிறப்பும் எனவுங் கூறுப. சமட்டி வியட்டி எனினும் பொருந்தும். பருவுடலுடன் கூடித் தொழிற்படு நிலை தனிமை அல்லது சிறப்பு. கூடாது நிற்கும் நிலைமை பொதுமை. 'தத்', 'துவம்' என்னும் இருமொழிக்கண்ணும், அன்பான் இரண்டும் விட்டு நீங்காது ஒட்டியோங்குவது தூங்குவது என்னும் கூட்டத்தினைப் புலப்படுத்தும் 'அசி' மொழிக்கண்ணும் சிவபெருமான் ஆட அவை நிகழும். அஃதாவது ஆருயிரும் பேருயிரும் ஓருயிராய்ச் சேர்வுற்றுப் புணர்ந்து தீர்வரிய இன்பந்திளைத்தல். தேனினை நுகர்வான் தேனும் நாவும் தானும் ஒன்று கூடிய விடத்து நுகரும் இன்ப நுகர்வு இதற்கு ஒப்பாகும். ஆருயிர்களின் சீரில் நிலைகண்டு துன்புறும் நடப்பாற்றலாகிய ஆதி சத்தியினுள் நின்று ஆடியருள்வன். அச் சத்தி, அதனால் ஆருயிர்களை நடத்தியருள்வள். குறிப்புரை: இருபதம் - தத்பதம் - துவம்பதம்.
தத்துவம் ஆடச் சதாசிவந் தானாடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட வைத்த சராசரம் ஆட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தன்றே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் திருவருள் திருவுள்ளத் திருநோக்கமாகிய திருவாடலைப் புரிவது உலக நன்மையும் உலகோர் நன்மையும் நின்று நிலவுதற் பொருட்டேயாம். அதனால் அவன் ஆடவே அனைத்தும் ஆடுகின்றன என ஓதியருளினர். அவை வருமாறு மெய்களாகிய தத்துவங்களாடின. அவற்றுள்ளும் சிறந்து ஐந்தீ. நாப்பண் நிற்கும் அருளோனாகிய சதாசிவனும் ஆடினன். சிவனார் திருவுள்ளமாகிய சித்தமும் ஆடிற்று. சிவனருளாகிய சத்தியும் ஆடினள். முன்னேறி ஓங்கி உயருமாறு அமைத்த இயங்குதிணைப் பொருள்கள், நிலைத்திணைப் பொருள்களும் ஆடின. அவற்றினுக்கு உறுதிபயக்கும் மறைகளும் ஆடின என்க. அத்தனாகிய அச் சிவபெருமானும் என்றும் பேரின்பப் பெருங்கூத்தாடினன்.
இருவருங் காண எழில்அம் பலத்தே உருவோ டருவோ டுருபர ரூபமாய்த் திருவருட் சத்திக்குள் சித்தனா னந்தன் அருளுரு வாகநின் றாடலுற் றானே. பொருளுரை: பதஞ்சலி முனிவர் புலிக்கால் முனிவர் என்னும் இருபெரும் செம்பொருட்டுணிவினராகிய சிவனடியார்களிருவரும் தொன்மைத் தென்னாட்டினர். "தென்னாடுடைய சிவனேபோற்றி" என அன்பால் தொழுது ஆடல் கண்டு இன்புற்று மன்னும் நன்மையர். அப்பெருமுனிவர் காண அழகிய பொன்னம்பலம் மன்னித் திருக்கூத்தியற்றியருளினன். பாதஅஞ்சலியார்: பதஞ்சலியார் என்றாயிற்று. இது சிவபெருமான் திருவடியை வணங்குபவர் என்பதாம். புலிக்காலர்: திருவடியைப் புல்லியவர் என்பதாம். இவை முன்பின்னாகத் தொக்கது. புல்லி என்பது புலியென நின்றது. அத் திருவம்பலம் காண்பார் செவ்விக்கேற்றவாறு விளக்கமுற்றருளும் திருவருளாற்றலின் வண்ணமாயது. அத் திருவருள், உருவாய் அருவாய் உருவருவாய் விளங்கிநிற்பள். சொல்லின் வரிவடிவம் கட்புலனாம் உருவமாகும். சொல்லின் ஒலிவடிவம் செவிப்புலனாம் அருவமாகும். சொல்லின் உள்ளப் பதிவு உருவருவமாகும். திருவருளும் இம் முத்திறப் பாகுபாட்டினுள் நின்று ஆருயிரை இயைந்தியக்கி அருளுகின்றனன். அத் திருவருளுக்குள் சித்தனாகிய சிவபெருமான், பேரின்பமே பெரு வடிவமாகவுள்ளவன். அருளுருவாக நின்று ஆடல்புரிகின்றனன். திருச்சிற்றம்பலம் திருவருள் உருவம் என்பதனை வரும் சேக்கிழாரடிகளின் திருமொழியான் உணர்க: "கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று "குறிப்புரை: இருவரும் - பதஞ்சலி, வியாக்கிரமர்.
சிவமாடச் சத்தியும் ஆடச் சகத்தில் அவமாட ஆடாத அம்பரம் ஆட நவமான தத்துவ நாதாந்த மாடச் சிவமாடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே. பொருளுரை: மெய்களாகிய தத்துவங்களை இயக்கும் அத்தனாகிய சிவனும் ஆடியருளுகின்றனன். அன்னையாகிய சத்தியும் ஆடியருளுகின்றனள். இவ்விருவர்தம் திருக்கூத்தால் நிலவுலகத்தில் ஆருயிர்களைப் பிணிக்கும் மலமுதலிய குற்றங்களும் ஆட்டங்கண்டு அகல்வதாயின. தத்துவமாகிய மெய்களுக்கும் சுழற்சி நல்கித் தானும் சுழன்று கொண்டு நிற்கும். ஒலிமுடிவாய்த் தத்துவங்கடந்த வியத்தகு புதுமை சேர் தத்துவமும் ஆடுவதாயிற்று. கடந்த நிலையில் விளங்கும் முழுமுதற் சிவமும் ஆடியருள்வதாயிற்று. இத்திரு ஆடலினாலேயே ஏனையவும் ஆடுவதாயிற்று. இவ்வுண்மையெல்லாம் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையினுட் காணலாம். குறிப்புரை: அவமாட - தீமையெலாம் ஒழிய.
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமஞ் சிவநட மாகுமே. பொருளுரை: நாதமாகிய ஒலியின்முடிவும், அவ்வொலியாற் பெறப்படும் நால்வகையான அறிவின்முடிவும், வேதத்தின் முடிவும், என்றும் உலைவின்றி நிலைபெற்று நிற்கும் மெய்ம்மைச் சிவபெருமானின் பேரின்பமும், திருவருள் நடத்தால் வந்தெய்தும். குற்றமற்ற நன்மைக்கொள்கலமாம் அருளோனாகிய சதாசிவப் பேரின்பத்து நாதப்பிரமமாகிய ஓம் மறை சிவநடம்புரியும் தவநிலையமாகும். குறிப்புரை: தாது - குற்றம்.
சிவமாதி ஐவர்திண் டாட்டமுந் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் பரனெங்குந் தானாக ஆடுந் தவமாஞ் சிவானந்தத் தோர்ஞானக் கூத்தே. பொருளுரை: அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் என்று சொல்லப்படும் தூமாயைக் கண்ணுள்ள திருவுருவினர் ஐவர். அவர் முறையே சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் நிலைகளிலுள்ள திருவருட்பேற்றினராவர். அவர் உலகநோக்கிச் செய்யும் உழைப்பாகிய திண்டாட்டமும் மெய்யுணர்வுக் கூத்தால் விலகும். அத் திருக்கூத்தாலேயே நன்னெறி நான்மைநற்றவ மேற்கொண்டார்பால் ஒட்டாது விட்டுநிற்கும் சிற்றுணர்வாகிய உயிரிமையும், சுட்டுணர்வாகிய பிணிமையும் ஆங்குத் தனித்து நீங்கும். தவமே வடிவமாகவுள்ள விழுப்பொருளாம் சிவன் தனது பேரருளால் தானாக ஆடியருள்வன். இத் திருக்கூத்தால் மேலன நிகழும். இதுவே நற்றவமே வடிவமாகச் சிறந்த சிவானந்தத்தோர் அருளால் கண்டு நுகரும் திருவடி ஞானத் திருக்கூத்தென்க. உயிரி: உயிரையுடையது. உயிர் - மூச்சு. குறிப்புரை: திண்டாட்டம் - உழைப்பு. தவமாம் பரன் - தவ உருவனான சிவன்.
கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள் வீடநின் றான்விகிர் தாவென்னு நாமத்தைத் தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறன்றே. பொருளுரை: ஆருயிர்களின் அரும்பெரும் நன்மைக்கு இடமாக நிற்பது மாயை. அம்மாயை தொழிற்படும் பொருட்டு அதனுடன் கூடிநின்றருள்பவன் சிவன். ஒருகாலத்துத் தேவர்கள் வினைக்கீடாக மாள்வெய்தினர். அக்காலத்தும் ஆண்டுநின்றருளினன். விண்ணவர்கள் விகிர்தா என்னும் திருப்பெயரை ஒதித் தேடும்படியாக நின்றருளினன். விகிர்தன் - செய்யப்படாதவன்; இயற்கையாகவுள்ளவன்; ஒருவழிப்பட்ட செயலில்லாதவன். விகிர்தன் - ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிப் பொருள்கட்கும் ஒளிகொடுத்து ஆட - தொழிற்பட நிற்பவனும் அவனே. அவனே ஆரருளால் அடியேனை ஆட்கொண்டருளினன். குறிப்புரை: கூடி - மாயையோடு கூடி. வீட - அழிய ஒளியாட - ஒளி உண்டாக.
நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே. பொருளுரை: நாததத்துவங்கடந்த ஆதியாகிய அம்மையோடுகூடிய சிவபெருமான் வேதப்பொருளாய் விளங்கும் நம்பியாவன். அவனை அருளால் கண்டு அடிபணிந்தோர் அழகிய சிவதத்துவத்தின்கண் சிறந்து எய்தி இன்புற்றனர். நேதத்துவமாகிய தத்துவ நீக்கச் சுத்தியும் நேதி செய்வதாகிய அன்று அன்று என விலக்கும் நேதியும் அம் மெய்யுணர்ந்தார் கைக்கொண்டனர். அவர்கள் அவ்வுண்மையினை எய்தும் பொருட்டுச் சிவபெருமான் திருவருளால் அம்மெய்யுணர்ந்தாருடன் வேறறப் புணர்ந்து நின்றருளினன். புணர்ப்பு, பின்னல் அத்துவிதம் என்னும் பொருளுண்மையினை அறுதியிட்டுக் கூறும் உறுதியுரையாகும். குறிப்புரை: நாதத்துவம் - நாத தத்துவம். நேதத்துவமும் பிரிக்கப்படுவன். நேதி - பிரிப்பது.
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர் ஆனந்த மாநட மாரும் அறிகிலர் ஆனந்த மாநட மாரும் அறிந்தபின் தானந்தம் அற்றிடம் ஆனந்த மாகுமே. பொருளுரை: இன்பம் இன்பம் என்று உண்மை காணாது அறிவிலார் உரைப்பர். ஆனந்தமாகிய இன்பம் மெய்யுணர்வுமாநடத்தின்கண் உள்ளது என்னும் உண்மையை யாரும் அறிகிலர். ஆனந்த மாநடம் அஃதென்னும் உண்மையை யாரும் அறிந்தபின் தன்முனைப்பு அறும். அறவே பசையாகிய பழக்கவாசனையும் அறும். அந்த இடமே திருவடிப் பேரின்பம் அருளால் பொருந்தும் ஒரு பெருநிலைக்களமாகும். ஆனந்தம்: ஆன் + நந்தம். நந்தம் - பெருக்கம். ஆவியின் இன்பப் பெருக்கம். குறிப்புரை: தான் - ஆன்மா. அந்தம் - முடிவு.
திருந்துநற் சீயென் றுதறிய கையும் அருந்தவர் வாவென் றணைத்த மலர்க்கையும் பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையுந் திருந்தத்தீ யாகுந் திருநிலை மவ்வே. பொருளுரை: முன் ஓதியவாறு மந்திரங்களை மறைவாக ஓதும் முறை பற்றி எழுத்துக்களின் மாத்திரைகளைக் கூட்டியும் குறைத்தும் வழங்குவர். அம்முறை பற்றி இத் திருப்பாட்டின்கண் சிகரம் சீகாரமாக ஓதப்பட்டது. இவ்வுண்மை வரும் சித்தியார்த் திருப்பாட்டான் உணரலாம்: "அவ்வுடன் உவ்வு மவ்வும் மனம்புத்தி யகங்கா ரங்கள் செவ்விய விந்துநாதம் சித்தமோ டுள்ள மாகும் ஒவ்வெனும் எழுத்தா மைந்தும் உணர்வுதித் தொடுங்கு மாறும் "'பிரணவமாகலின் உள்ளவாறே வெளிப்படக் கூறாது ஒவ்வெனக் கடைக் குறைத்துக் குறுக்கல்விகாரமாக்கிக் கூறினார்.'திருந்திய நல்ல 'சி' கரத்தின் நீட்டலாகிய சீ என்னும் எழுத்தினைக் குறிப்பது துடிசேர் வலது பொற்கையாகும். உதறிய திருக்கை இடது கையாகும். இதனை வீசுகரம் எனவும் கூறுப. இது 'வ' கரமாகும். நன்னெறிநான்மையின் நற்றவம்புரிந்த அருந்தவத்தோரை வாவென்று அழைத்து அணைத்துக்கொண்ட பொருந்துமுறையில் இமையாநாட்டம் சேர்முக்கண்ணினானது வலது அஞ்சலிக்கை 'ய' கரமாகும். மழுவேந்திய இடது திருக்கை 'ந' கரமாகும். திரு என்பது ஈண்டு நகரத்தின் மேற்று. நிலையாகிய ஊன்றிய வலது திருவடி 'ம' கரமாகும். இவ்வுண்மை வரும் உண்மைவிளக்கத் திருவெண்பாவால் உணரலாம். "சேர்க்குந் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் " குறிப்புரை: திருந்தத் தீயாகுந் திருநிலை - குற்றம் நீங்கத் தீவடிவான தன்மை. நாயோட்டு. . திருமூலர், .
மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையுங் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமவென வோதே. பொருளுரை: பொருந்திய துடிசேர் வலது திருக்கையால் சிகரமும், நிலைபெற்ற வீசும் இடது திருக்கையால் வகரமும், அப்பு என்னும் திருவருள் நிலைசேர் வல அஞ்சலிக்கையால் யகரமும், அங்கியாகிய மழுவேந்திய இடது திருக்கையால் நகரமும்,வலது திருவடியால் மகரமும் பெறப்படுதல் காண்க. உருவில் என்பது உருவில்லாத அருவாகிய நுண்மை என்பதாகும். எனவே நுண்மைச் 'சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தின் சிறப்பு மறையினைக் குறிக்கும் குறிப்பாவது காண்க. குறிப்புரை: துடி - உடுக்கை. கருவில் - முயலகன்மீது. உருவில் - சூக்குமமான.
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன்அங்கி தன்னில் அறையிற்சங் காரம் அரனுற் றணைப்பில் அமருந் திரோதாயி அரனடி யென்றும் அனுக்கிர கம்மே. பொருளுரை: பேரொடுக்கப் பெருமானாராகிய அரனார் உடுக்கையால் படைப்பும், அமைவுக் கையால் காப்பும், மழுவேந்திய திருக்கையால் துடைப்பும், ஊன்றிய திருவடியால் மறைப்பும், நான்றதிருவடியால் அருளிப்பாடும் முறையே நிகழ்வனவாகும். அணைப்பில் - ஊன்றிய திருவடியில். அரனடி - எடுத்த பொற்பாதம். இவ்வுண்மை வரும் உண்மை விளக்கத் திருப்பாட்டான் உணர்க: "தோற்றந் துடியதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி " குறிப்புரை: அணைப்பில் - ஊன்றிய பாதத்தில். அரனடி - தூக்கிய பாதம்.
தீத்திரட் சோதி திகழொளி யுள்ளொளி கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைசெல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானன்றே. பொருளுரை: அளவில்லாத தழற்கூட்டங்கள் ஒன்று திரண்டு கொழுந்து விட்டு விளங்கும் திகழொளியாகவுள்ளவன் சிவன். அவன் ஒளிகள் அனைத்தினுக்கும் ஒளிகொடுத்து ஒளிரும் பேரொளி. அவனே பெருங்கூத்தன் அவனை ஆருயிர் உய்ய அகமுறக்கண்ட அழகிய திருக்கண்களையுடையவள் சிவகாமி அம்மை. அயன், அரி, அரன் என்னும் மூவரும் முறையே ஒடுங்குங்காலத்து அருளோன்கண் ஒடுங்குவர். அருளோன் - சதாசிவன். மேலோதப்பட்ட மூவரும் ஆசான் மெய்க்கண் உறைபவர். ஆசான்மெய் - சுத்தவித்தை. அச் சிவகாமியம்மையார் திருவுள்ளங்கொண்டருளினள். அவள்தானே அருமறை பாடியருளினள். பாடியருளுதல்: பாடுவாருள்ளத்துள் நின்று பாடுவித்தல். குறிப்புரை: கோமளம் - அழகு. முதல்வன் - சதாசிவம்.
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திர மொன்றுள் மருவி யதுகடந்து அந்தர வானத்தின் அப்புறத் தப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லும் மாறன்றே. பொருளுரை: நந்தியாகிய முழுமுதலை, எந்தையை, எழிலார் மெய்யுணர்வுத் தலைவனை ஒப்பில்லாத ஓமொழி வண்ணமாம் திருவைந்தெழுத் தினுள் 'சிறப்பாம்' சிவத்தினை வழிபடும் மந்திரம் சிகரம். அதனை முன்னாகப் பொருந்தச் 'சிவயநம' என ஓதுக. அங்ஙனம் பயின்று வருவதல்லாமல் அதன்மேல் 'சிவயசிவ' எனப் பயிலுக. அதற்கு மேல் 'சிவசிவ' எனப் பயிலுக. இதுவே அப்பெரும் பொருளாகும். அவனே சுந்தரக் கூத்தனாவன். இவ்வாறன்றி வேறு என் சொல்வது.
சீய குருநந்தி திருஅம்ப லத்திலே ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்பொடு மத்தன்மை ஆயுறு மேனி அணிபுக லாகுமே. பொருளுரை: அரிமா அனைய நந்தி சிவகுருவாவன். அரிமா - சீயம். சிங்கம். அவன் திரு அம்பலத்திலே பெருங்கூத்துப் புரிகின்றனன். ஆராயத்தக்க அவன் திருமேனி உண்மையினை யாரும் அறிகிலர்; ஒருபுடையொப்பாகத் தீயின்கண் காணப்படும் செம்மையும் வெம்மையும் கூறலாகும். அத் தன்மைவாய்ந்த ஆரறிவினுள் அறிவாய் விளங்கும் அவனை அவனருளால் ஆய்வதே வாய்வதாம். அவன் திருவடியே அனைத்துயிர்க்கும் அனைத்துலகினுக்கும் நினைத்தற்கெட்டா நிலைத்த புகலிடமாகும். குறிப்புரை: சீயம் - சிங்கம் போன்ற. அணைபுகல் - அணைதற்குரிய புகலிடம்.
தானான சத்தியுந் தற்பரை யாய்நிற்குந் தானாம் பரற்கும் உயிர்க்குந் தகுமிச்சை ஞானாதி பேத நடத்து நடித்தருள் ஆனால் அரனடி நேயத்த தாகுமே. பொருளுரை: சிவம்வேறு சத்திவேறு அல்ல. சிவமும் சத்தியும் மரமும் காழ்ப்பும் போன்றன. காழ்ப்பு - வைரம். அச் சத்தி வனப்பாற்றலாகிய பராசத்தியாய் நிற்கும். மேலும் அவ்வாற்றல் தானாய் விளங்கும் சிவனுக்கும் தன்னை நாடும் ஆருயிர்கட்கும் தொழில் அறிவுகளுக்கு வழியாக நிற்கும் விழைவாகிய இச்சையாக நிற்கும். ஆருயிர்கட்கு நிகழும் அறிவு அறியாமை முதலிய வேறுபாடுகளை உணர்த்தி நடத்தும் நடப்பாற்றலாகவும் நிற்கும். திருவருட்கூத்தையும் திறம்பெற நடிக்கும். ஆனால் அடியிணையினை வழுத்தும் ஆருயிர்களை அவ்வடிக்கண் அழுத்துவிக்கும் அன்புப்பொருளாகவும் நிற்கும். நேயம் - அன்பு. குறிப்புரை: தருமிச்சை - பொருந்திய இச்சாசத்தி.
பத்தி விதையிற் பயிரொன்று நாணத்தைச் சித்தி தருவயி ராக்கத்தாற் செய்தறுத்து உய்த்த சமாதி சிவானந்த முண்டிடச் சித்தி திகழ்முத்தி யானந்தஞ் சித்தியே. பொருளுரை: திருவடிசேர்ந் தின்புறுதற்குச் சிறந்தவாயில் பத்தியொன்றேயாம். மெய்ம்மையாம் உழவைச் செய்து அப் பத்தியினை விதைத்தல்வேண்டும். அஃது அன்பு நீரால் பயிராகி வளரும் நாணமென்று சொல்லப்படும். களையினைச் சித்தினைப் பயக்கும் வயிராக்கியமாகிய பற்றறுதியினால் அறுத்தல்வேண்டும். களைகட்டவே சிவானந்தத்துச் செலுத்தும். செயலறலாகிய சமாதிக்காவல் காத்தல்வேண்டும். காக்கவே சிவபோகம் விளையும். விளையவே சிவனடி நீங்கா நினைவாகிய அப்போகத்தை அருளால் உண்டிடுதல் வேண்டும். உண்ணவே கைகூடித் திகழும் திருவடிப்பேறு, பேரின்பவிளைவாய்ப் பெருகி நிலைக்கும். வயிராக்கியம் வயிராக்கம் என நின்றது செய்யுட்டிரிபு. மெய்ம்மையாம். அப்பர், , - .
ஒன்பதாம் தந்திரம். ஆகாசப் பேறு உள்ளத்து ளோமென ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய வொருவனை உள்ளத்து ளேநீதி யாய வொருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாகுமே. பொருளுரை: திருவருளால் உள்ளத்துள் ஒம் என்று ஓவாது கணிக்க ஒப்பில் இறைவன் அப்பொழுதே எழுந்தருள்வன். அவன் அவ்வோ மொழியுருவாய் நிற்பன் என்றும் உணர்க. அவனை உள்ளத்தின்கண் அறிவொளிப் பிழம்பாய் நிற்கின்றான் எனத் தெளிக. அவனை 'நெஞ்சத்துள்நின்று நினைப்பிக்கும் நீதியை' உடையான் உன நேர்க. அவன் ஒப்பில் ஒருவன். அவன் உள்ளத்துள் திகழ்கின்றமையால் அவ்வுள்ளமமைந்தவுடல் அறிவுவெளியாக விளங்கும். குறிப்புரை: உள்ளத்துள் ஓம் என - உள்ளத்தில் ஓம் என்று உணர. உடல் ஆகாயம் - உடல் சிதாகாயமாக விளங்கும்.
பெருநில மாயண்ட மாயண்டத் தப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் கலப்பினால் பெருநிலமாகவும், அண்டமாகவும், அண்டத்து அப்பாலுள்ள சிறந்த நிலமாம் மாயையாகவும் தோற்றம் அளித்து நிற்கும் தூக்கொள்கையையுடையவன். எல்லாவற்றையும் பெருநிலம்போன்று ஒருங்கு தாங்கி நிற்கும் பெருந்தாளோன் ஆவன். அவனே பொருட்டன்மையில் காண்டற்க அரிய நிலையாக நிற்கும். ஆதிப்பிரானாவன். ஆதிப்பிரான் என்பது ஆதியையுடைய பிரான் என்க. குரு - சிறப்பு. தூ - பற்றுக்கோடு. குறிப்புரை: அண்டத்தப்பாற் குருநிலம் - மாயை. வித்துண்டா. சிவஞானபோதம், . - .
அண்ட வொளியும் அகண்ட வொளியுடன் பிண்ட வொளியாற் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானன்றே. பொருளுரை: அண்டத்துக்குத் திருவாணையால் ஒளிதரும் ஞாயிற்றின் ஒளியும், எல்லையில்லாது எல்லாவற்றிற்கும் ஒளிகொடுத்தொளிரும் அகண்ட வொளியாகிய சிவவொளியும், பிண்டமென்று சொல்லப்படும் ஆருயிர் உடம்பகத்துக் காணப்படும் அறிவொளியும் அருளால் ஆயுங்கால் நீயே என்ற பேரன்பால் பிதற்றத்தகும். பெருமையையுடையை. உண்டவெளி: உண்டு + அவ்வெளி. ஆருயிரின் உடம்பகத்து ஒளியை அண்டவொளியாகிய ஞாயிற்றின் ஒளி விழுங்கிற்று. அதனால் உடம்பின்நிலை, கட்டுக் குலைவதாயிற்று. குறிப்புரை: அண்ட ஒளி - சூரிய ஒளி. அகண்ட ஒளி - சிவ ஒளி. பிண்ட ஒளி - சீவ ஒளி. கொண்டகுறி - சரீர அமைப்புக்கள்.
பயனுறு கன்னியர் போகத்தி னுள்ளே பயனுறு மாதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மாலறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாயொளி யொன்றது வாமே. பொருளுரை: அன்பியற் சிற்றின்ப நுகர்வின்கண் கற்புறுகன்னியர் எங்ஙனம் துணையாகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த இயல்புடைய ஒன்று. அதுபோல் அருளியற் பேரின்பத்தின்கண் ஆதிப்பரஞ்சுடர்ச் சோதியானவன் அம்மைப் பயனுறு துணையாகச் செம்மையாக நிற்பன். அவன் அயனொடு மாலும் அறியாவகைத் துளங்கா எரிசுடராய் நின்றவன். அங்ஙனம் நின்று உயர்நெறியாயவன். அவன் ஒப்பில் ஓரொளியாயவன். அப்பொருள் முழுமுதல் ஒன்றேயாகும். குறிப்புரை: பயனுறு....சோதி - சிற்றின்பத்துக்குக் கன்னியர் பயன் படுவர்; பேரின்பத்துக்குச் சிவன் பயன்படுவர்.
அறிவுக் கறிவாம் அகண்ட வொளியும் பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும் அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியா திருக்கிற் பெருங்கால மாமே. பொருளுரை: அறிவுக்கு அறிவாய் விளங்கும் எல்லையில் பேரொளி அறிதற்கரிய சிவவொளி எனப்படும். அவ்வொளியின் வயப்பட்டு விட்டு நீங்காது நிற்கும் பேரொளி மூன்று. அவை அண்டவொளி அகண்டவொளி, பிண்டவொளி என்ப. இவற்றை எல்லை சேரொளி எல்லை தீரொளி, நல்ல உடலொளி என நவில்ப. இவ்வொளிகள் மூன்றும் ஒன்றும் தோன்றா நிலையாய்ச் சிவன் நினைவாகவே நிற்றல் வேண்டும். நின்று அவன் திருவடிக்கீழ் அடங்குதல்வேண்டும். அடங்கிப்
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து ஏகாச மாசுண மிட்டங் கிருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம் ஆகாச மாயங்கி வண்ணனு மாகுமே. பொருளுரை: அறியவொண்ணாத அறிவுப் பெருவெளி வண்ணத்தன் சிவன். அவன் சிவவுலகில் வாழும் நற்றவத்தமரர் குலக்கொழுந்தாவன். தூமாயை என்று சொல்லப்படும் ஐந்தலை அரவினை மேலாடையாகவுடையவன் சிவன். அவன் சிவவுலகின்கண் வீற்றிருந்தருளுகின்றனன். வெளியானது எங்கும் நிறைந்திருப்பது போன்று சிவபெருமான் எங்கும் நீங்காது நிறைந்து நின்றருளுகின்றனன். அப்பால் நிலவும் அறிவுப் பெருவெளியாய்ச் செஞ்சுடர் வண்ணத்தனாய்த் திகழ்பவன் சிவன். குறிப்புரை: ஏகாச மாசுணமிட்டு - பாம்பை மேல்வேட்டியாகத் தரித்து. ஆகாச வண்ணம் அமர்ந்து - எங்கும் நிறைந்து.
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயிற்கொண்ட பேதை குலாவி யுலாவி வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் உலகு உடல்களைப் படைத்தருளுகின்றனன். அவைகள் தொழிற்படுமாறு உயிர்க்கு உயிராய் உள்ளொளியாய்நின்று உயிர்த்தலாகிய புடைபெயர்ச்சிக்குத் திருவுள்ளங் கொண்டருள்கின்றனன். அத் திருவுள்ளத் திருநோக்கம் திகழுங்கால் குயில் போலும் இனிய மொழியினையுடைய திருவருளம்மை சிறந்து விளங்கு வெளிப்பட்டருள்வள். வெளிப்பட்டு அருள்ஒளிபுரிவள். அப்பொழுது ஆருயிர் உள்ளம் அறிவுப் பெருவெளியாய்த் திகழும். குறிப்புரை: உயிர்க்கின்ற - படைக்கின்ற. உள்ளொளி - சிவம். குயிற் கொண்ட பேதை - உமை. வெயிற்கொண்டு - ஒளியுடையதாகி.
நணுகி லகல்கில னாதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலு மாமே. பொருளுரை: ஆருயிர்கள் சிவபெருமானை நீங்காநினைவுடன் அடிமைத் தொண்டுபுரிவதே அவனை நணுகுவதாகும். அங்ஙனம் நணுகினால் நாதனாகிய அவன் அவ்வுயிரை விட்டகலாது அவ்வுயிர்களைத் தன்பின் நுழையுமாறு பணித்தருள்வன். அங்ஙனமன்றி ஆருயிர்கள் உலகத்தை நினைந்து அதனை அணுகுமாகில் சிவபெருமானாகிய நந்தி அவ்வுயிர்க்கு அகன்று நிற்கும் பெரும்பதியாவன் நன்னெறி நான்மை நற்றவத்தார்க்கு மிகநெருங்கிய மின்னொளிச் சோதியாய்ச் சிவபெருமான் விளங்குவன். அவன் பேரறிவுப் பேரொளி வெளியாவன். அவனை 'அனுசயப்பட்டு அதுவிது என்னாது, கனிமனத்தொடு கண்களும் நீர்மல்கி'த் தொழுதல் வேண்டும். அங்ஙனம் தொழுதால் அவனுடைய திருவடிப் பேரின்பப் பெருநலத்தை ஓரின்பமாக அவனருளால் நுகரலாம். குறிப்புரை: அமுதம் பருகல் - ஆனந்தானுபவம்.
புறத்துளா காசம் புவனம் உலகம் அகத்துளா காசமெம் மாதி யறிவு சிவத்துளா காசஞ் செழுஞ்சுடர்ச் சோதி சகத்துளா காசத்தின் தானஞ் சமாதியே. பொருளுரை: புறத்துக் காணப்படும் பூதவெளி இருநூற்று இருபத்து நான்கு புவனங்கட்கும், அப் புவனங்கட்கு உட்பட்ட உலகங்கட்கு இடங்கொடுத்துக் கொண்டு நிற்பதொன்று. ஆருயிர்களின் அகத்துக் காணப்படும் அறிவுவெளி ஆதியாகிய சிவபெருமானினதுவாகும். சிவபெருமானின் உள்வெளியாகக் காணப்படுவது அவன்றன் செழுஞ்சுடர்ச் சோதி வடிவமாகும். இச் சோதி வடிவம் அவன்றன் இயற்கை அறிவொளி வடிவமேயாம். நிலவுலகவெளி செயலறலாகிய சமாதியின் இடமாகும். தானம் சமாதி : சமாதித்தானம்; முன்பின்தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. குறிப்புரை: தானம் சமாதி - நிட்டை கூடும் இடம்.
ஒன்பதாம் தந்திரம். ஞானோதயம் மனசந் தியிற்கண்ட மன்னன வாகுங் கனவுற ஆனந்தங் காண்டல் அதனை வினவுற ஆனந்த மீதொழி வென்ப இனமுற்றா னந்தியா னந்த மிரண்டே. பொருளுரை: மனமானது ஐம்பொறிகளுடன் கலந்து ஐம்புலன்களையும் கண்டு அறிவின்பம் எய்துநிலை நனவாகும். இதற்கு இடம் புருவநடு. இங்ஙனம் கண்ட பொருள்களைக் கண்டவாறே அம் மனத் தொடர்பினால் கனவின்கண் கண்டு அறிவின்பம் எய்துதல் கனவாகும். இதற்கு இடம் கண்டம். இத்தகைய நனவின்பம் கனவின்பம் இரண்டும் ஓரின்பமாகக் கொண்டு மேல் வினவுவோமானால் இவை இரண்டுங்கடந்த அப்பால் நிலையில் ஓரின்பமுண்டு. அது மீதொழிவின்பம் என்று சொல்லப்படும். இவற்றை இனப்படுத்துக் கூறுங்கால் மனங்கலந்த நனவிடத்துங் கனவிடத்துங் காணும் இன்பம் ஒன்று, மனங்கடந்த அறிவுகலந்த அப்பாலை இன்பம் ஒன்று ஆக இரண்டென்ப. குறிப்புரை: மன ஒற்றுமையால் பொருள்களை நனவில் கண்டு ஆனந்தித்தல் ஒன்று, அதே பொருள்களைக் கனவில் கண்டு ஆனந்தித்தல் ஒன்று ஆக ஆனந்தங்கள் இரண்டென்ப என்று இம் மந்திரம் கூறுகின்றது.
கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியனென் றாட்பட்ட தல்லால் கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. " குறிப்புரை: கரிஅட்ட - யானையை உரித்த. கரியன் கொல் சேயன் கொல் - கருப்போ சிவப்போ. மைப்படிந்த. அப்பர், . - . " இன்னவுரு. சம்பந்தர், . - . " அன்றுந். . காரைக்காலம்மையார், அற்புதத், . " கேள்விவாய்க். சீவகன், .
உண்ணல் உறங்கல் உலாவல் உயிர்போதல் நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப் பண்ணல் அவன்பணி யாலிவன் பாலிடை திண்ணிதிற் செய்கை சிவன்பணி யாகுமே. பொருளுரை: ஆருயிர்களுக்குத் திருவருளால் நிகழும் உண்ணலும், உறங்கலும், உலாவுதலும், அவ்வுயிர்க்கு அன்பறிவாற்றல்களின் நிகழ்ச்சி கைகூடுவதாகிய போதம் பொருந்தல்களும் நிகழ்கின்றன. இவற்றால் இருவினை நிகழ்வு ஏற்படுகின்றது. அவ்வினைப் பயனின் பகுதி நுகர்வை ஒளியுலகத்தும் இருளுலகத்தும் இயைந்து நுகருமாறு நாட்டுதலைச் செய்தலும் நிகழ்கின்றது. அனைத்தும் சிவபெருமான் திருப்பணியேயாகும். அச் செயல்களைச் செய்யும் உயிர் சிவனை மறவாத உறவுள்ளத்துடன் அறம் எனக் கருதிச் செய்தல்வேண்டும். அப்பொழுது அது சிவன் பணியாவதற்கு ஏதும் ஐயுறவுவின்று. உடலை நீங்கியவுயிர் 'இருவிசும்பு ஏறும்.' இருவிசும்பு: ஒளியுலகு, இருளுலகு என்பன. சிவன்முதலே. திருக்களிற்றுப்படியார், . " தேசமிடங். சிவஞானசித்தியார், . - .
ஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும் பாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம் கூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே. பொருளுரை: திருவருளால் பலவுயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடும். அது கைகூடிய காலத்து அவ்வின்பம் அருட்கதிராய்ப் புறத்துப் பொசியும். அந்நிலையில் அவ்வுயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் முடியாது. எனினும் வருமாறுள்ள குறிப்புக்களால் அவ்வுண்மை புலனாகும். அவ்வுயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும். வேண்டுமேல் பறக்கவும் செய்யும். இருந்த இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் செய்திகளையெல்லாம் ஒன்றொழியாமல் உரைக்கும். பண்ணொடு பொருந்தப் பாடும் இவையனைத்தும் தற்செயலற்ற நற்றவத்தோர் நற்செயலாகும். இவ்வுண்மை வரும் திருவுந்தியாரானறிக: "நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன் தன்செயல் தானேயென் றுந்தீபற "
மிக்கா ரமுதுண் ணநஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறி யேசென்று புக்கா லருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் கழல்வழி நாடுமின் நீவிரே. பொருளுரை: நல்வினைப்பயன் மிக்காராகிய தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு அவர்கள் முன்பு தன்னைமறந்த தீவினைப் பயனாம் நஞ்சினை மன்றாடிக்கேட்டுக்கொண்டதற்கு இரங்கிப் பொறுத்தலாகிய உண்டலைச் செய்தவன் சிவபெருமான். அதனால் அவன் மேலோனாயினன். நஞ்சுண்டவன் என்பது பிழைபொறுத்தவன் என்பதாம். செந்நெறிச் செல்வர், செம்பொருட்டுணிவினர், சித்தாந்தச் சைவர் தக்காராவர். அவர்கள் அருளால் உரைத்தருளும் நன்னெறிநான்மையே நற்றவ நெறியாகும். அந்நெறியே பயின்று ஒழுகினால் சிவகுருவினால் அருளப்பெறும் பொன்போன்றுயர்ந்த திருவைந்தெழுத்தின் அருமறை அடியுணர்வு கைகூடும். கைகூடவே ஒளி மிகுந்த மறைச் சிலம்பாகிய கழல்பூண்டுள்ள திருவடிசேர் திருவழி புலனாகும். அதனை நீங்கள் நாடுங்கள். நக்கார் கழல் - ஒளிமிகுந்த திருவடி. சிவபெருமான் சாவாமூவாத் தனிமுதற் பொருளென்றும் திருமால் உள்ளிட்ட தேவர் செத்துச் செத்துப் பிறக்கும் உயிரினங்கள் என்றும் உண்மை தெளிவிப்பதே சிவன் நஞ்சுண்டும் சாகாமையும், விண்ணவர்கள் அமுதுண்டும் இறந்தமையும் ஆகும். இவ்வுண்மை சிலப்பதிகாரத்துக்கண் இளங்கோவடிகள் வேட்டுவவரியில் சாலினி வாய்மொழியாகச் சாற்றுவது காண்க: "துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் "மேலும் திருநாவுக்கரசு நாயனாரருளிய திருமுறைத்திருப் பாட்டும் இவ் வுண்மையினை அருளுவது காண்க : "வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னை யோதாதே வேத முணர்ந்தான் தன்னை அப்புறுத்த கடனஞ்சம் உண்டான் தன்னை அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை அப்புறுத்த நீரகத்தே அழலா னானை "குறிப்புரை: மிக்கார் - தன்னையொழித்து மிகுந்துள்ளவர். பொன்னுரை - பொன்போலும் அருமையான உபதேசம். நக்கார் - நக்கன், சிவன்.
விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலு மாமே. பொருளுரை: திருவருளால் ஆருயிர் அறிவொளியாய் உள்ளத்தின்கண் விளங்குவது. அதனால் அவ்வொளியினை உடல் உறுப்பு முதலிய தத்துவக் கூட்டங்களின் வேறு எனப் பிரித்துக் காட்டுவதும் காண்பதும் அறிவாகும். பிரித்துக் கண்டபின் உள்ளத்துள்ளே சிவவிளக்கினை ஏற்றுவாயாக. சிவவிளக்கினை ஏற்றுவதென்பது அச் சிவனை மறவாது நினைப்பதேயாம். பாடத்தை வரப்படுத்துவதென்பது இதற்கு ஒப்பாகும். அச்சிவ விளக்கினுள் ஆருயிர் விளக்கு ஒட்டியுறுமாறு தூண்டுக. தூண்டுதல் - விடாது அன்பு பூணல். திருவடியுணர்வாம் விளக்கினால் ஆருயிரின் அறிவுவிளக்கை விளங்குமாறு செய்யும் பெருங்காதலாம் பத்திவல்லார்க்கு அனைத்தையும் ஒருங்கு விளக்கும் சிவபெருமான் திருவடியிணையினைப் பொருந்திப் பேரின்பப் பெருவாழ்வு எய்துதலும் உண்டு. குறிப்புரை: விளக்கைப் பிளந்து-தத்துவங்களினின்றும் ஆன்ம ஒளியை வேறுபடுத்தி. விளக்கினை ஏற்றி-சிவ ஒளி பரவும்படி செய்து, விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி - சிவ ஒளிக்குள் சீவ ஒளி விளங்கும்படிசெய்து. விளக்குடையான் - ஒளிக்கு ஒளியாயுள்ளவன். உடம்பெனும். அப்பர், . - .
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானன்றே. பொருளுரை: திருவருளால் மெய்யென்று கூறப்படும் தத்துவங்களின் உண்மையை அறிதல்வேண்டும். தத்துவ உண்மை அறிதலாவது அவைகள் காரியப் பொருள்களென்றும், அறிவில்லன என்றும், ஆண்டானால் உள்ளதாகிய மாயையினின்றும் படைக்கப்பட்ட அவன்றன் உடைமைப் பொருள்களென்றும், தோன்றிமறையும் தன்மைய என்றும், நமக்கு நாயகனளித்துள்ள இரவல் பொருள்களென்றும் உணர்தல். அங்ஙனம் உணருங்கால் அவற்றை உடைமையாகவுடைய உடையானாகிய சிவபெருமானும் அங்குத் தோன்றியருள்வன். அவனே தத்துவனாவன். அவனை அவனருளால் அறியும் ஆருயிர்களனைத்தும் மீளா அடிமைகளாகும். இவ்வகை உண்மையினையுணராதார் தத்துவ உணர்ச்சியிலராவர். தத்துவ உணர்ச்சி எங்கில்லை அங்குத் தத்துவனாகிய சிவபெருமானின் அருள் விளக்கமும் உண்டாவதில்லை. இவ்வகைய தத்துவ ஞானத்தின் தன்மையறிந்தபின் தத்துவனாகிய சிவபெருமானும் அங்கே தலைப்பட்டருள்வன். மெய் - தத்துவம்.
விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே அசும்பினின் றூறிய தாரமு தாகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தங் கூடிநின் றானே. பொருளுரை: விசும் பொத்து எல்லையின்றி விரிந்த திருவடியுணர்வாகிய மெய்ஞ்ஞானத்தினுள்ளே, திருவடியின்பம் குறைவிலா நிறை வாய்க் கோதிலா அமுதாய் ஊறிப் பெருகும். அப் பெருக்கின் நிலைக்களம் சிவபெருமானாவன். அதனால் சிவக்கேணியினின்றும் பெருகுவது என ஓதினர். பசும்பொன் போன்று திகழ்ந்து விரிந்து விளங்கும் திருச்சடையின்மீது செங்கழுநீர் மலரும் மணமுங் கலந்து பிரிப்பின்றி இரு பொருளும் கெடாது இருப்பும் இருப்பதுமாய் இருப்பதுபோல் சிவனும் அடிமையும் கூடி நிற்பர். குசும்பம் : செந்துருக்கம்; ஈண்டுச் செங்கழுநீர். குறிப்புரை: விசும்பொன்று தாங்கிய - விரிந்த. காலையே போன். . காரைக்காலம்மையார், அற்புதத், .
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம் ஒத்துயர் அண்டத் துள்ளமர் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரன்றே. பொருளுரை: முத்தும், வயிரமும், முந்நீர்ப் பவழக் கொத்தும், பசும் பொன்னும், தூவொளி மாணிக்கமும், அவ்வவற்றின் ஒளியும் வேறு பிரிக்கப்படாமை போன்று சிவபெருமானும் எல்லா அண்டங்களினும் பிரிக்கப்படாத பேரொளியாய் நின்றருள்கின்றனன். அதனால் அவன் உள்ளமர் சோதியாகின்றான். அங்ஙனம் கூறுவதல்லாமல் வேறு எங்ஙனம் பிரித்துக் கூறமுடியும்; சொல்லுவீராக.
நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்றுந் தானென் றிரண்டில்லை யென்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் தேனன்றே. பொருளுரை: ஒட்டி நின்று உணரும் ஒன்றனை விட்டு எட்டி நின்றுணர்வது என்றும் இயையாத தொன்றாகும். தேனின் சுவையினைத் தேனும் நாவும் உள்ளமும் உயிரும் ஒட்டிநின்றே உணர்தல் வேண்டும். விட்டு எட்டி நின்றால் ஒருகாலமும் உணர ஒண்ணாது. அப்படி ஒட்டி நிற்பதால் இரு பொருளும் ஒரு பொருளாகிவிடாது. அதுபோலவேதான் ஆருயிராகிய அடிமையும் பேருயிராகிய ஆண்டானும் புணர்ப்பால் ஒன்றுபட்டுத் திகழ்வதன்றிப் பொருள் ஒன்றாவதில்லை. ஆயின் திருவருளால் நானென்றும் தானென்றும் நாடினேன். நாடுதலும் நானென்றும் தானென்றும் வேறுபட்டு இரண்டாகக் காண்பதற்கு இல்லையென்னும் மெய்ம்மையினைச் சிவபெருமான் உணர்த்தியருளினன். நானென்ற வுணர்வினை முன்னம் நடப்பாற்றல் வழியாக நல்கிய சிவபெருமானே இப்பொழுது வனப்பாற்றல் வழியாக நானென்னும் எண்ணம் அகலுமாறு செய்தருளினன். ஒருவர் படிக்கத் துவங்குவதன் முன்னம் தாம் படித்தல் வேண்டும் என்னும் நினைப்பும் சொல்லும் அவர்பால் நிகழக் காண்கின்றோம். ஆனால் படிக்கத் துவங்கியதும் அவ் விரண்டினையும் அறவே மறந்து விடுகின்றனர். தன்னையும் மறந்து விடுகின்றனர். படிப்பே தாமாக நிற்கின்றனர். அப்படி நிற்பினும் படிப்பும் அவரும் இரு பொருளேயாம். அவ் வுண்மை அவர் பயின்ற திருக்குறளை ஓதுங்கால் அது திருவள்ளுவப்பயன் என்ற அறிந்து விடுகின்றனர், அன்புடன் செறிந்து கேட்போர், இதுவும் ஒப்பாகும். திருவடியுணர்வால் நான் என்னும் எண்ணத்தை நானும் நினையாதொழிந்தேன். நடப்பாற்றல் - திரோதான சத்தி; ஆதி சத்தி. வனப்பாற்றல் - பராசத்தி. குறிப்புரை: நானென்றும் தானென்றும்-நான்வேறு, சிவன்வேறு என்று. இரண்டில்லை - ஒன்றும் அல்ல இரண்டும் அல்ல என்பது.
ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நானென் றறிவோர்தல் ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோன நாதாந்த வேதமே. பொருளுரை: திருவடியுணர்வாம் நன்னெறியும், நாதாந்த முடிவாம் நன்னெறியும் என நெறி இருவகைப்படும். அவற்றுள் ஞானத்தின் நன்னெறியாவது நானென்ற முனைப்பற்றுத் திருவடியுணர்வாய் நின்று அத் திருவடியினையுணர்தல். இது நீருள் மூழ்குவான் நீருள் நின்று நீரின் தன்மையால் நீரினை யுணர்வது போன்றாகும். நாதாந்தநெறியென்பது அறிவிற் செறிவாம் ஞானயோக நெறியாகும். அதன் மேல் அறிவின் அறிவாம் ஞானத்தின் ஞானம் நன் மோன நிலையாகும். மோனம்: மேன்மை என்னும் அடியாகவுள்ளது. மேன்மை யுணர்வு மோனம் எனப்படும். அதுவே நாதமுடிவுங் கடந்த 'சிவசிவ' என்னும் நான்மறையாகும். குறிப்புரை: நாதாந்த - நாத தத்துவங்கடந்த.
உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட் கொடுக்கம் பிரணவம் உய்யவல் லாரறி வுள்ளறி வாகுமே. பொருளுரை: பிறப்பு இறப்பாகிய தடுமாற்றத் துன்பத்தினின்றும் விடுமாறு நினைந்து திருவருளால் உய்ய வல்லார்கட்குத் திருவடியுணர்வாகிய சிவஞானமே உயிராகும். அதுபோல் சிவவுலகு சிவனண்மை, சிவவுரு எனப்படும் நிலையினின்றும் உய்யவல்லார்க்குச் சிவ முதலே விழுப்பொருளாகும். உய்யவல்லார்கட்கு ஒடுக்கம் ஓமொழியாகும். உய்யவல்லார் அறிவு உண்மைப் பொருளாம் சிவத்தினைச் சார்ந்தமையால் மாறுதல் இல்லா உள்ளறிவாகும்.
காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும் பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணவல் லார்க்கே அவன்துணை யாகுமே. பொருளுரை: திருவருளால் காணவேண்டுமென்னும் அன்புடன் முயல்வார்கட்குச் சிவபெருமான் கண்ணுக்குள் மணிபோன்று உடனாகவிருந்து தன்னைக் காட்டிக் காண்பன். அதனால் அவன் கருமணி போன்றவனாவன். அவ் வழியாகக் காணும் பேறுடையார்க்கு அவன் கடல் போன்ற எல்லையில்லாத கோதிலா அமுதினை யொப்பான். கடல் உப்புத் தன்மை வாய்ந்ததே என்னுங் கருத்தால் திருப்பாற்கடல் என்னும் அடை புணர்த்திக் கூறுவாராயினர். ஆருயிரனைத்தையும் சிவபெருமான் தொடர்பு கொண்டு வேறுபாடின்றிப் பேண வல்லார்கட்கு அவன் அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அம் முறையில் அவன் என்றும் தவிரான். அவன் திருப்பெயர் நந்தி. ஆணமாகிய அன்பு வல்லார்க்கு அச் சிவபெருமான் என்றும் துணையாவன். குறிப்புரை: பிழைப்பிலன் - தவறுதல் இலன். ஆணவல்லார்க்கு - அன்புமிக்கார்கட்கு. ஈசனுக்கன். சிவஞானசித்தியார், . - " அன்பிலார். திருக்குறள், .
ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல் மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி ஆய்நின்ற தேவர் அகம்படி யாகுமே. பொருளுரை: ஒப்பில்லாத ஓமென்னும் ஒரு மொழிக்கண் காணப்படும் பிரிவில்லாத ஓசைபோல் விண்ணுறை தேவர்கள் விழையும் விழுப்பொருள் சிவபெருமானாவன். அவன் மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன். மறையோன் உயிருக்கு உயிராகிய நுண்பொருள் - காரண சிவன். அவன் எட்டா நிலைக்கண் உள்ளவன். அவன் செழுஞ்சுடராகவுள்ளவன். அவனே எம்பெருமான். அவன் திருவடியிணையினை ஆராய்ந்து அன்பு பூண்டு ஒழுகும் தேவர் பலராவர். அவர்தம் உள்ளத்துள் அச் சிவபெருமான் விளக்கமாய் நின்று வேண்டும் துணை புரிந்தருள்வன். அகம்படி - உள்ளத்துள். குறிப்புரை: சேய்நின்ற - மனம், வாக்குகளுக்கு எட்டாமல் நின்ற. தேவர் அகம்படி - தேவர் மனத்தின் தன்மை.
ஒன்பதாம் தந்திரம். சத்திய ஞானாந்தம் எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழுங் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவா றென்பதி லாவின்பத் தற்பர ஞானானந்தந் தானது வாமே. பொருளுரை: இன்ன நிலைமைத்தென்று எவராலும் கூறவொண்ணாததனைப் பாழ் என்பர். அப்பாழ் மாயைத் தொடர்பாக மூன்று கூறுவர். அவை உடனமெய், உணர்வுமெய், உணர்த்துமெய் எனபன இவற்றைப் பகுதி மாயை, தூவாமாயை, தூமாயை எனவுங் கூறுப. மேலும் உணர்வுத் தொடர்பால் ஆருயிர்ச் செயலறல், அருட்செயலறல், அருளோன் செயலறல் என முப்பாழ் கூறுவர். இவற்றைச் சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் எனவும் கூறுப. இவையனைத்தையும் எப்பாழும் என்று ஓதினர். பின்னர்க்கூறும் பாழ், காரணமாயையைக் கூறுவதாகும். ஆங்காங்குள்ள உயிர்களும் பொருள்களும் ஆகிய அனைத்துடனும் கலந்து கலப்புத் தன்மையால் அவையேயாய் நிற்பன் சிவன். அவனே பொருட்டன்மையால் அன்றாகி நிற்பன். மேலுள்ள முப்பாழ் என்பது அருட் செயலறலாகிய பரதுரியத்தில் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்று பாழாகும். இம் மூன்றும் நிகழாமையே ஈண்டுப் பாழென்ப. அவற்றை அபாவம் என்பர். இவை தொகை என்னும் சமட்டியாகும். கீழுள்ள முப்பாழ் ஆருயிர்ச் செயலறலாகும். அவை சீவதுரியம். அதன் கண்ணும் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்றும் நிகழாமை பாழென்ப. இவற்றை வகையென்னும் வியட்டி என்ப. இவற்றைப் பொருந்தி இவற்றையும் கடந்து இன்னவாறென்று எவராலும் கூறவொண்ணாதாகியுள்ள நிலையின்பத்தினையுடையதாய்த் தானே முழுமுதலாய் உண்மை அறிவின்ப உருவுடையதாய் விளங்குபவன் சிவபெருமான். அவனே புணர்ப்பால் ஆருயிர் என்னும்படி நின்றருள்வன். குறிப்புரை: எப்பாழும்-மாயை சம்பந்தமானவைகளும். பாழ் - மாயை. யாவும்-மாயா சம்பந்தமற்ற பொருள்களும். முப்பாழ்-சுத்தமாயை, அசுத்தமாயை மூலப்பிரகிருதி மாயை. கீழுள்ள முப்பாழ்-பூமியிலுள்ள மண், பெண், பொன் ஆகியவை.
மன்னுஞ் சத்தியாதி மணியொளி மாசோபை அன்னதோ டொப்ப மிடலொன்றா மாறது இன்னிய வுற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகராறு மானதே. பொருளுரை: சிவத்துடன் பொருந்திய திருவருளாற்றல் சத்தி யெனப்படும். அது மணியொளி போன்று மிக்க அழகினையுடையதாகும். அச்சத்தி மெய்யுணர்வாகும். அவற்றுடன் ஒப்புரைத்தலாகும் பொருள் ஒன்றும் இன்று. இனிமை பொருந்திய கருங்குவளையாகிய வுற்பல மலருக்குத் தூய்மை, சிறப்பு, நிறம், மணம், அழகு உள்ளன போன்று சிவபெருமானுக்கும் ஐவகையாற்றல்களும் உண்டாகும். அவற்றொடும் கூட அழகிய பொருள்கள் ஆறாகும். குறிப்புரை: சத்தியாதி-ஞானமாதி. சோபை-அழகு. ஒப்பமிடல் - ஒப்புரைத்தல். ஒன்றாமாறது - பொருந்தாத தன்மை இன்னிய - இனிய. உற்பலம் - நீலோற்பலம், கருங்குவளை. ஒண் - ஒண்மை, தூய்மை. சீர் - சிறப்பு. ஆறுமானதே - சிவத்தோடு சத்திகள் உற்பலம் என்றும் மலருக்குத் தூய்மை - சிறப்பு, நிறம், மணம், அழகு போல்வதாம். மலருக்கு குணங்கள் உள்ளனபோல சிவத்துக்கு ஐந்து சக்திகள் உண்டு.
சத்தி சிவன்பர ஞானமுஞ் சாற்றுங்கால் உய்த்த அனந்தஞ் சிவமுயர் ஆனந்தம் வைத்த சொருபத்த சத்தி வருகுரு உய்த்த வுடலிவை யுற்பலம் போலுமே. பொருளுரை: திருவருளாற்றலாகிய சத்தியும், சிவபெருமானும், திருவடியுணர்வும், சொல்லுமிடத்து உலகுயிர்களைச் செலுத்தும் ஒப்பில் பொருள்கள் ஆம். இவை யனைத்தும் முடிவெய்தாது. சிவத்தின் ஒப்புயர்வில்லாத பேரின்பமுமுடையதாகும். வைத்த திருவருளும் உண்மை நிலைக்கண் சிவகுருவாக வந்தருள்வன். அத் திருவருள் கொள்ளும் திருமேனி நீலோற்பல மலரை யொத்து விளங்கும். குறிப்புரை: சத்தி சிவன் பரஞானம்-சத்தியோடு் கூடிய சிவத்தைப் பரஞானத்தால் அறியவேண்டும். அபரஞானத்தால் அறியமுடியாது. அனந்த சிவம்-ஆனந்தம் சிவம், சிவானந்தம்,உயர் ஆனந்தம்-உண்மையறிவு ஆனந்தம். வைத்த . . . . . போலுமே - திருவருட் சத்தி பதிந்து, குரு உபதேசம் பெற்ற ஆன்மாக்கள். ["ஓண் சீர் நிறம் மணம் பன்னிய சோபை" மன்னிய நீலோற்பலம் போலும். உடல் - உடலோடு கூடிய ஆன்மாக்கள்.]
உருவுற் பலநிறம் ஒண்மணஞ் சோபை தரநிற்ப போலுயிர் தற்பரந் தன்னின் மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின் சொருபத்தன் சத்தியாதி தோன்றநின் றானே. பொருளுரை: அழகிய உற்பல மலரில் நிறம், சிறந்த மணம், அழகுமுதலியன வேறறப் பிரிப்பின்றிக் கலந்திருக்கின்றன. அதுபோல் ஆருயிர் சிவபெருமானிடத்தில் எப்பொழுதும் பிரிப்பின்றி வேறறக் கலந்திருக்கின்றது. சிவபெருமான்பாலுள்ள எண்பெருங்குணங்களும் அவ் வுயிரின்மாட்டும் பதிந்து விளங்கித் தோன்றும். பள்ளி மாணவன் எப்பொழுதும் ஆசானைச் சார்ந்திருக்கின்றான். அதனால் ஆசிரியனின் நற்பண்புகள் மாணவனிடம் பதிகின்றன அல்லவா? இஃது இதற்கு ஒப்பாகும், ஆருயிர்களின்மாட்டுச் சிவபெருமானின் எண்குணங்களும் பதியவே ஆருயிர், அருள், அருளோன் - ஆருயிர், பேரருள், பெருமான் என்ற மூன்று நிலையுமாகச் சிவபெருமான் மறைந்து நின்றருளியவன் இப்பொழுது வெளிப்பட்டு அவ் வுயிரின்மாட்டுத் திருவருள் ஆற்றல்கள் தோற்றநின்றருள்புரிவன். அதனால் அவ் வுயிர் சிவமாகவே நிற்கும் சத்தியாதி என்பது 'சத்தியா' எனநின்றது. குறிப்புரை: உயிரானது எப்பொழுதும் சிவத்தோடு பொருந்திநிற்க, நீலோற்பலத்துக்கு அஞ்சு குணங்கள் பிரிவற இருப்பதுபோல், உயிருக்கும் சிவத்தின் குணங்கள் சிவசத்தியால் உடல் உள்ளபோதே தோன்ற நிற்பன என்பது இம் மந்திரம்.
நினையும் அளவின் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலு மாகும் எனையுமெங் கோன்நந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே. பொருளுரை: சிவபெருமானைத் திருவருட்டுணையால் மறவாது நினையுமுறையில் உள்ளம் கள்ளமின்றி வெள்ளமாயுருகித் தாளை வணங்கிப் 'பன்னியநூல் தமிழ்ப்'பாப் பல புனைந்து வழிபட்டு நிற்றல் வேண்டும். அங்ஙனம் வழிபட்டால் அப் பெருமானாரை உள்ளத்தின்கண் பொதிந்து வைத்தலும் வாய்க்கும். இதுவே 'சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே' என்னும் திருமுறையின் அரும் பண்பாகும். பொதிதல் - வேறறக் கலந்து நிற்றல். தொன்னை நெய்யைப் பொதிந்து கொண்டு வேறற நிற்பது இதற்கொப்பாகும். பாப்புனை பணியால் அடியேனையும் எம் முழுமுதல்வனாகிய சிவபெருமான், நந்தியென்னும் திருப்பெயரை உடைய நாதன் திருவருளுடன் கூட்டுவித்தனன். மறவாது நினைந்துகொண்டேயிருக்குந் துணையாய் என்னை நிலைப்பித்தருளினன். நினைந்த அப்பொழுதே அந் நினைவின்கண் நினைப்பித்தருளினன் என்றலுமொன்று. குறிப்புரை: நெகிழ - மனம் உருக. புனையில் - பாக்கள் புனைந்து அவன் புகழைப் பாடினால். பொதியலும் ஆகும் - அவனோடு இரண்டறக் கலக்கலாம்.