செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர் முற்றினு முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரு மற்றவ னாய்நின்ற மாதவன தானன்றே. பொருளுரை: 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பதனால் பற்றப்படும் பொருள்கள் பலவற்றுள்ளும் மாறாததும், சிறந்ததும், வேறாகாததும், கூறாகாததும் ஆகிய மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே. அவனையே பற்றுதல்வேண்டும். அவன் யாண்டும் நீக்கமற நிறைந்து விளங்கியருள்கின்ற அன்பறிவு ஆற்றலாகிய மூன்றொளி. அவன் ஆருயிர்களின் புருவநடுவின்கண் அவ் வுயிர்களுக்கு நினைப்பிக்கும் நினைவாய் நிலைத்தருள்வன். அவன் 'உள்குவார் உள்ளத்துள்ளே அவ் வுருவாய் நிற்கின்ற அருளுடையவன்' ஆதலின் அத்தகைய வடிவுசேர் பெருந்தவத்தோனும் அவனே. மாதவன் - மாதோடு கூடிய தவன் என்றலும் ஒன்று. குறிப்புரை: பற்றினுள் - பற்றப்படும் பொருள்களுள். பரமாய - மேலாய. முற்றினுமுற்றி - எங்கும் நிறைந்து. மூன்றொளி - இரவி, மதி, தீ. நெற்றியினுள்ளே - ஆஞ்ஞையில். நினைவாய் - கருதியவண்ணமாய். மற்று அவனாய் - அக்கருதியவன் வடிவமாய்.
தேவனு மாகுந் திசைதிசை பத்துளும் ஏவனு மாம்விரி நீருல கேழையும் ஆவனு மாமமர்ந் தெங்கு முலகினும் நாவனு மாகி நவிற்றுகின் றானன்றே. பொருளுரை: சிவபெருமான் பதின் புலமாகிய பத்துத் திசையுள்ளும் தானே விழுமிய முழுமுதற் கடவுளாய் விளங்குவன். அவன் எல்லாரினும் மேம்பட்ட 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனும்' ஆவன். விரி நீர் வியனுலகம் ஏழினும் நிறைந்து நிற்குமவனும் ஆவன். அவன் எங்கணும் விரும்பி இயைந்தியக்கும் இயவுளுமாவன். அவன் எல்லாவுலகிடை வாழும் உயிர்கள் அனைத்திற்கும் நாவில் நின்று நவிற்றுவிக்கும் நன்மொழியுமாவன். எனவே எல்லா நிகழ்வுகளும் சிவபெருமானின் திருவருள் நிகழ்வின் ஏரினாலேயே ஆகும். அச் சிவபெருமான் நாயன்மார் நாவின்நின்று அவர்களும் உலகமும் உய்தற்பொருட்டுத் தன்னைப் பாடுவித்தருள்கின்றனன். இது சிவபெருமான் உடனாய் நின்று செய்து போதரும் காட்டும் உதவியாகும். நம்பியாரூரருக்குப் பித்தனென்று பாடுகவென்று பணித்தருளியதும், 'தில்லை வாழந்தணர்த மடியார்க்கு மடியேன்' என்று பாடப் பணித்தருளியதும், சேக்கிழாரடிகளுக்கு 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தருளியதும் 'காட்டிக் காண்டல்' கடனாதலின் காணும் உதவியாகும். அம் மட்டுமன்றி முழுவதும் தானே கண்டது 'மதிமலி புரிசை' எனத் தொடங்கும் திருமுகப் பாசுரமாகும். இத் திருப்பாசுரம் திகழும் பதினொராம் திருமுறையும், சிவஞானபோதப் பதினொராம் நூற்பாவும் முறையே இலக்கிய இலக்கண முறையாய்த் திகழ்வன காண்க. குறிப்புரை: ஏவனும் ஆம்-எம் மேம்பாடு உடையவனும் ஆம். ஆவனும்-வியாபித்திருப்பவனும். நாவனும்-நாக்கு வல்லவனும் ஆகி.
நோக்குங் கருடன் நொடியே ழுலகையும் காக்கு மவனித் தலைவனு மங்குள நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி போக்கும் வரவும் புணரவல் லானன்றே. பொருளுரை: விண்ணிடை மிகச் சேய்மையினின்றும் மண்ணிடை மிக நுண்ணிய பொருளையும் குறிக்கொண்டு நோக்கி எண்ணியவாறு நண்ணிக்கைக் கொள்ளும் திண்மைப் பண்பு கருடன் பாலுளது. அதனால் சிவபெருமானைக் கருடனை ஒத்தவன் என்று ஓதினர். அச் சிவபெருமான் நொடிப்பொழுதினுள் ஏழுலக முதலிய அனைத்துலகங்களையும் காக்கும் முழுமுதல்வனாவன். ஆங்காங்குள்ள மெய்யடியார்களது வினைகளை நீக்கியருள்வன். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன்; அதனால் நின்மலன் எனப்படுவன். அழியாப் பொருள்களினின்றும் அகல்வதே அமைவுடைத்து. அவற்றை அகற்றுவது அமையாது. ஆதலின் நீக்குவதென்று ஓதாது நீங்கியதென ஓதுகின்றனர். 'ஏலா இயற்கையினில் நீங்கல் எவர்க்குமாம், ஏலா அவை நீக்கல் இங்கு' என்பதனை நினைவு கூர்க. அவன் 'பிறவா யாக்கைப் பெரியோ'னாதலின் பிறப்பிலி. போக்கும் வரவும் புணர்வும் இன்றிப் புணரவல்லான். உடலின் உறுப்பு உறுப்பியாகிய உடலோடும், பாலுண் குழவி ஈன்ற மாலுண் தாயோடும் போக்கும் வரவும் புணர்வுமிலாப் புணர்ப்பாய் அமைவன இதற்கு ஒப்பாகும். கருடன் உவம ஆகுபெயராகச் சிவனைக் குறித்தது. குறிப்புரை: நோக்குங் கருடன்-எப்பொருளையும் எளிதில் காணும் கருடன் ஒத்தவன். அங்குள - எவ்விடத்தும் உள்ள அடியார்களது.
செழுஞ்சடை யன்செம்பொ னேயொக்கு மேனி ஒழிந்தன வாயும் ஒருங்குடன் கூடுங் கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன் ஒழிந்தில கேழுல கொத்துநின் றானே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் செழுமைவாய்ந்த பின்னல்வார்சடையன். அவன் செம்பொனேயொக்கும் திருமேனியன். அவன் ஆக்கப்பாடாகிய காரிய நிலை ஏதும் எய்தாதவன். அங்ஙனமிருந்தும் முழுமுதற் சார்புத் தன்மையினால் சாரப்படும் காரியப்பாடுகள் அனைத்துடனும் ஒருங்குடன் கூடி உறையும் ஒப்பில்லாதவன். அவன் யாண்டும் எவற்றையும் விட்டு நீங்கும் நிலைமையனல்லன். பிறப்பிலன். எல்லாவற்றையும் இறைந்தியக்கி ஆளும் ஆண்டானுமாவன். தன்பொருட்டு ஒன்றும் வேண்டாது ஆருயிர்களின் பொருட்டே அனைத்தும் வேண்டி அவற்றுடன்கலந்து விளங்கிநிற்கும் அம்மானும் அவனே. இவ்வாறே ஏழுலகங்களுடனும் கலந்துநின்றருள்பவன் சிவன். குறிப்புரை: ஒழிந்தனனாயும் - ஒன்றும் ஆகாதவனாயிருந்தும். ஒருங்குடன் கூடும் - எல்லாவற்றோடும் கூடியிருப்பன். கழிந்திலன்-நீங்கான். ஒழிந்திலகு - தனக்கெனப் பொருள் இன்றி விளங்கும்.
புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமு மாகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்துநின் றானே. பொருளுரை: சிவபெருமான் இயற்கையுணர்வும் முற்றுணர்வும் ஒருங்குடையவன். அதனால் செயற்கைப் புலமையின் நாற்றமும் இல்லாதவன். அவன் புண்ணியவடிவினன். அவனே எந்தையாவன். நன்மைப் பாடமைந்த மெய்யுணர்வு வடிவினன். ஆருயிர்களை விட்டுநீங்காப் பெரு வழக்குள்ளவனும் அவனே. வேதியர் தாங்கற்ற வேதங்களைக் கூறிவிற்கின்றனர். அதனால் அச் சிவபெருமான் அவர்கள்பால் பாலின் நெய் போல் மறைந்து பரந்துநிற்கின்றனன். குறிப்புரை: புலமை.......புண்ணியன் - செயற்கை அறிவு சிறிதும் இல்லாத புண்ணியன். நலமை.......பலமையில் - நன்மையைத் தாராத ஞானாப்பியாசத்தைக் காசு கொடுப்பவருக்கு விற்கும் ஆரிய வேதத்தை ஓதும் வேதியர் கூறும் பல பொருள்களில் ஒன்றிலும் சேராதவன்.
விண்ணவ னாயுல கேழுக்கு மேலுளன் மணணவ னாய்வலஞ் சூழ்கடல் ஏழுக்குந் தண்ணவ னாயது தன்மையின் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்துநின் றானன்றே. பொருளுரை: சிவபெருமான் தூய விண்ணின்கண் உறைபவனாய் ஏழுலகங்களுக்கும் அப்பாலுள்ளான். மண்ணுலகத்துள் உறைபவனாய் கடல் ஏழுக்கும் இப்பாலுள்ளான். அவன் 'அறவாழியந்தணன்' ஆதலின் மிக்க தண்ணளியை உடையவன். தண்ணளி - திருவருட்குளிர்ச்சி. இதுவே அவனுக்குரிய என்றும் பொன்றாவியற்கைத் தன்மையாகும். அவனே ஆருயிர்கட்குக் கண்போன்ற நனிமிகு பெருமையை உடையவன். அவன் அனைத்துயிருடனும் அனைத்துலகுடனும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கும் பேரருட் பெருமையன். குறிப்புரை: கண்ணவனாகி - பெருமையுடையவனாய்.
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி நின்றனன் தான்நிலங் கீழொடு மேலென நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாயன்றே. பொருளுரை: சிவபெருமான் மாலொடு நான்முகன் தானாகவும் நின்றனன். அஃதாவது அவர்களுடன் விரவி அவர்களைக்கொண்டு காப்புப் படைப்பு ஆகிய தொழில்களைப் புரிவிக்குங்கால் நிற்பது மேலும் பேரூழிக்குப்பின் தானே நேரில் படைத்தலும் காத்தலும் புரிந்தருள்வனாதலின் அப்பொழுது நேரே அவ்வப் பெயர்களுடன் விளங்குவன். அவன் எங்கணும் பரம்பியிருக்குந் தன்மையில் நிலத்தின்மேலும், கீழும், நிலத்திலும் நிறைந்துநிற்கின்றனன். மேலும் பெருமலையாய், ஏழுகடலாய் நின்றவனும் அவனே. அவன் மெய்யடியார்தம் உணர்வுள்ளத்து வளமிக்க சிவமாம் மாணிக்கத் தீங்கனியாய் விளங்கி இன்புற்றிருந்தனன். குறிப்புரை: வளங்கனி - அன்பர்க்கு வளப்பம் பொருந்திய மாங்கனி ஒத்து.
புவனா பதிமிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனு மாகும் அவனே இறையென மாலுற்ற வாறே. பொருளுரை: சிவபெருமான் இருநூற்று இருபத்துநான்கெனும் எண்ணுட்பட்ட புவனங்கள் முற்றிற்கும் ஒரே ஒப்பில்லாத முழுமுதல் தலைவன். அவன் புண்ணியந் திரண்டு நண்ணிய புண்ணிய வடிவினன். எம்மனோர்க்கு ஆர் உயிர்த் தந்தையாவன். அவனே உயிர்க்குயிராய் அண்ணித்துநின்று அவ்வுயிர்களைத் திருவடிப் பெருமை எய்துமாறு இடையறாது இயக்கும் பாக இயவுளும் ஆவன். அவனே ஆருயிர்கள் அனைத்துடனும் நேர்நிற்றலால் அவ்வுயிர்களுமாவன். இஃது உயிர் உடலாயிருப்பது போன்றதோர் ஒப்பாகும். அவனையே இறையென்று அருளால் உணர்ந்த தெருளாளர் மாலுற்று நீங்காநினைவினராய் ஒங்கும் இன்பம் எய்தினர். பாகஇயவுள்: செவ்விவரச் செய்யும் சிவபெருமான் மால் - பெருங்காதல். குறிப்புரை: அவனே.....சீவனும் ஆம்-பூமியிலுள்ள உயிர் வருக்கங்களை நடத்துபவன். மால் - விருப்பம்.
உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும் விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கும் வாயுவு மாய்நிற்குங் கண்ணின் றிலங்குங் கருத்தவன் தானன்றே. பொருளுரை: ஆருயிரின் உள்ளத்துள் நின்று ஓவாது இயங்கும் கேடில் உயிர்ப்பும் அவன் அருள் துணையால் இயங்குகின்றது. அதனால் அவ் வுயிர்ப்பும் சிவனே எனப்படும். வானத்தியங்கும் விரிந்த கதிர்களையுடைய பகலவனும் அவனே. பகலவன் - ஞாயிறு. மண்ணுலகினின்று ஒலித்தசைத்துத் திரட்டும் காற்றும் அவனே. ஆருயிர்களின் நெஞ்சகத்து நின்றியக்கும் கருத்தாகின்றவனும் அவனே. குறிப்புரை: கண்ணின்று - அன்பர் உள்ளத்தின்கண் இருந்து. கருத்தவன் - கருதும் பொருளவன்.
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப் பண்ணுந் திறனும் படைத்த பரமனைக் கண்ணிற் கவருங் கருத்தில் அதுவிது உண்ணின் றுருக்கியோர் ஆயமு மாகுமே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமானை இடையறாது எண்ணி ஈடேறுவதற்குரிய செந்தமிழ்த் திருமறை திருவைந்தெழுத்தாகும். அதனை ஓதுதற்குரிய திருவெண்ணீறணிதல் சிவமணி பூணுதல் சிவனடியாரையும் திருக்கோவிலையும் சிவனெனவே வழிபடுதல் முதலிய இனச் செயல்களுடன் கணித்தல்வேண்டும். அவற்றின் தொடர்பாய் திருமுறைத் திருப்பாட்டுக்களைப் பண்ணொடும் திறனொடும் பாடுதல் வேண்டும். அவ்வைந்தெழுத்தாய் இமைாய்ப், பண்ணாய்த் திறனாய்த் திகழ்பவனும் அவனே. அவற்றைப் படைத்தருளிய பரமனும் அவனே. அவனை அவனருளால் உணர்வின்கண் உணருங்கள். உணர்ந்தால் அது இது எனச் சுட்டறிவால் தோன்றும் வேறுபாட்டை நீக்கியருள்வன். உள்நின்று உருக்கி அன்பைப் பெருக்குவிப்பன். அதன் வாயிலாகத் திருவடிப் பேரின்பமாகிய ஊதியத்தை ஈந்தருள்வன். குறிப்புரை: எண்ணும் - கணிக்கும். எழுத்தும் - ஐந்தெழுத்தும். இனம் செயல் - முறைப்படி கணித்தல் அவ்வழிப் பண்ணும் திறனும் - அம்மாதிரி சாதனம் செய்யும் முறையும். கண்ணிற் கவரும் - அறிவினால் அறியுங்கள். கருத்தில். . . . .ஆமே - அறிந்தால் சித்தத்தில் விகற்பத்தை நீக்கி ஒப்பற்ற ஊதியம் ஆவான்.
இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம் உருக்கொண்டு தன்னடு வோங்கவிவ் வண்ணங் கருக்கொண்டு எங்குங் கலந்திருந் தானே திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. பொருளுரை: யாண்டும் காரியமாய் நிலைபெற்றிருக்கின்ற எண்புலத் தோடும், அவ்வப் புலங்களில் காணப்படும் பல்வேறு அண்டங்களோடும், பாதாளத்தோடும் கலப்பால் 'உலகமே உருவமாகத்' திருவுருக்கொண்டுள்ளான். அவையனைத்தும் நெறிமுறையான் இயங்குதற் பொருட்டுத் தன்னிடத்து ஓங்கத் தான் நடுவாய்க்காரணமாய் நின்றுள்ளான். இம்முறையான் செம்மையுற எங்கணும் கலந்துள்ளான். அவனே திருக்கொன்றை மாலையினைப் பின்னல் திருச்சடைக்கண் சூடியருளிய சிவபெருமானாவன். குறிப்புரை: உருக்கொடு - தோன்றி. தன்னடுவோங்க - தன்னிடத்து ஓங்க. இவ்வண்ணம் கருக்கொண்டு - இவ்வகையாய ஏதுவினால்.
பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன் செலவறி வாரில்லை சேயன் அணியன் அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே. பொருளுரை: இயங்குதிணையும் நிலைத்திணையுமாகவுள்ள அளவில்லாத பல பொருள்களுடன் கூடியது அழகினையுடைய இந்நிலவுலகம். இவ்வுலக முழுவதும் கலப்புத் தன்மையால் ஒன்றாய்ப் பிரிப்பின்றி விரவி நிற்கும் முழுமுதற் பரம்பொருள் சிவபெருமான் ஒருவனே. அவனே ஈசன். அவன் இவ்வுலகுடன் இயைந்து இவ்வுலகை நடத்தும் இயல்பின் மெய்ம்மைத் தன்மையை உள்ளவாறுணர்வாரில்லை. அவன் அன்பர்க்கு மிகவும் அணியனாகவுள்ளான். அல்லாதார்க்கு மிகவும் சேயனாகவுள்ளான். அணிமை - கிட்டம் சேய்மை - எட்டம். அவன் எவ்வகை மாறுபாடும் இல்லாதவன். எல்லாவுயிர்க்கும் யாண்டும் இன்பஞ் செய்தலின் அவன் திருப்பெயர் சங்கரன். அவன் ஆதியாகிய நடப்பாற்றலோடு கூடியவன். எம்முடைய அன்பறிவாற்றல் யாண்டும் செம்மையாக நிகழ்வதற்கு என்றும் காரணமாகவுள்ளவனும் அவனே. அவன் ஒன்றாய் வேறாய் உடனாக என்றுரைக்கப்படும் பலவாகக் கலப்புற்றிருப்பினும் அவன் ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஒரு முதல்வனேயாவன். மேலும் பலவாய்க் காணப்படும் பான்மையனும் அல்லன். அவன் எவ்வகையா நோக்கினும் 'ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்' என்னும் செந்தமிழ்த் திருமறையின் வண்ணம் ஒழுகுவதே சாலச் சிறந்ததாகும் 'ஆதி' இரண்டனுள் முன்னது நடப்பாற்றல்; பின்னது காரணம். குறிப்புரை: பரிவுடன் - இயங்குவன நிற்பன முதலிய பல பொருள்களுடன். செலவு - ஆணை. அலைவிலன் - மாறாதவன். பல இலவாய் - பல என்பது இல்லாது நிறைந்து.
அதுவறி வானவன் ஆதிப் புராணன் எதுவறி யாவகை நின்றவன் ஈசன் பொதுவது வான புவனங்கள் எட்டும் இதுவறி வான்நந்தி எங்கள் பிரானே. பொருளுரை: ஆருயிர்களின் அறிவை விளக்கி அவற்றின் அறிவினுக்கு அறிவாக நிற்பவன் சிவன். இது மோர் பாலுடன்கூடி அப் பாலினைத் தயிராக்குவது போன்றாகும். ஆசிரியன் அறிவு மாணாக்கன் அறிவுடன் கூடி மாணாக்கண் அறிவை விளக்குவதும், ஞாயிற்றின் ஒளி கண்ணொளியுடன்கூடி கண்ணை விளக்குவதும் இதற்கு ஒப்பாவன. எல்லாவற்றினுக்கும் காரணமான ஆதியாற்றலையுடைய பழையோன். எவ்வகை அளவைகளானும் அறியவொண்ணா நிலைமையில் என்றும் பொன்றாது இயற்கையாக நின்றோன். அவனே அருளாட்சிச் செல்வன். அவனே ஆருயிர் அனைத்திற்கும் பொதுவுடைமையாகப் புகலப்படும் பேருலகங்களாகிய புவனங்களெங்கணும் நிறைந்துநிற்கும் பொருவில் பெரும் பொருள். எட்டும் - நிறைந்துநிற்கும். என்னுடன் முப்பாலாயிருந்து 'என்னைப் படைத்துத் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறு' பாடுவித்தஇத் தனிப்பெரும் செந்தமிழ்த் திருவாகமம் என்னும் இத் 'திருமந்திர மாலையினை' அறிபவன் அச் சிவபெருமானே. அவனே திருநந்தி. அவனே எங்கள் ஆருயிர் இன்றமிழ்ப்பெருமான். இத் திருப்பாட்டுக் கேட்பித்தல் அருளுகின்றது. முப்பால்: ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்கும் மூன்று நிலை. குறிப்புரை: அதுவறிவானவன் - அச் சீவர்களின் அறிவுருவானவன். ஆதிப் புராணன் - தலைமையுடைய பழையோன். எது அறியா வகை - எப் பிரமாணத்தாலும் அறியாவகை. பொதுவதுவான - பொதுவான. புவனங்கள் - உலகங்களில். எட்டும் - வியாபித்தவன். இது அறிவான் - யான் கூறும் இதனை அறிபவன்.