செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
கும்ப மலைமேல் எழுத்தோர் கொம்புண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள் வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.புலன் நோக்கம் அடங்கிய சித்தம் கும்பமலை எனப்பட்டது. அதன்கண் உண்டாகிய திருவடிப் பேரின்பம் என்னும் கிளையொன்று உண்டு. அப் பகுதியாகிய பேரின்பம் தொடர்ந்து வருமாறு திருவருளால் வீசுவதோர் தென்றலாகிய தமிழ் மென்காற்று ஒன்று உண்டு. இயற்கை நறுமணங் கமழும் மெய்யுணர்வு வடிவாய் விளங்கும் அழியா ஆருயிர் மலர் ஒன்றுண்டு. அப் பூவினுள் விழுமிய முழுமுதற் சிவன் வண்டாகப் பின்னிக்கிடந்து மணங்கொண்டு இன்புறுத்துவன். மணங்கொள்ளுதல்: கலத்தல். குறிப்புரை: கும்பம் - இந்திரியச் சேட்டைகள், அடங்கிய மனம். கொம்பு - இன்பம். காற்று - இன்ப உணர்ச்சி. வம்......பூ - ஞான மயமான ஆன்மா.
வீணையுந் தண்டும் விரவி யிசைமுரல் தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது வாணிபஞ் சிக்கென் றதுவடை யாமுன்னங் காணியும் அங்கே கலக்கின்ற வாறன்றே. பொருளுரை: அகத்தவம் என்று சொல்லப்படும் உயிர்ப்புப் பயிற்சியால் பத்துவகையான முழக்கம் அகத்தே எழும். அவற்றுள் யாழொலி யும், தண்டு என்று சொல்லப்படும் புல்லாங்குழலொலியும் உள்ளன. இவ்விரண்டும் ஒன்றுகூடி இசையொத்து முரல் உயிர்ப்பானது நிலைபெற்ற பொருளாதலின் தாணு எனப்பட்டது. அவ் வுயிர்ப்புப் பயில்வார்க்கு வயமாகப் பொருந்தித் தடுத்தலாகிய கும்பகத்தைச் செய்ய வாய்த்தது. வாணிகமாகிய புலனுகர்வு விரைந்து வந்து அதனைக் கெடுத்தற் பொருட்டுச் சேருவதற்கு முன்னர், யாவற்றையும் ஒரு காலத்து ஓரிடத்திருந்து ஒருங்கு அறியும் காட்சி யோகக் காட்சி. அத்தகைய யோகக் காட்சியால் எல்லாவற்றையும் இருந்த இடத்திருந்தே காணுவதாகிய அறியும் தன்மை உண்டாம். அவ் வறியும் தன்மையும் அவ் வுயிர்ப்புப் பயிற்சியின் கண்ணே வந்து கலந்து கொள்ளும் முறைமையுண்டாகும். ஆங்கு - அவ் வுயிர்ப்புப் பயிற்சியில். யோகக் காட்சி நீருள் மூழ்கினான் நிலையினை ஒக்கும். நீருள் மூழ்கினானுக்கு நீரால் நனையப்படாத இடம் உடம்பில் ஒன்றும் இன்றல்லவா? அதுபோல் யோகக் காட்சியினர் எல்லாப் பொருள்களையும் ஓரிடத்தே இருந்து காண்பர். இஃது அவர்தம் அறிவு சிவனையே நோக்குவதால் அவர்களுடைய அறிவுக் காட்சிக்குக் கருவியாக இருப்பது சிவனுடைய எங்கு நிறைந்த மங்கா அறிவு. அதனால் எங்கு நிறைந்த பொருள்கள் எல்லாவற்றையும் அறிதல் கூடும். நீருள் பரட்டளவு நின்றார், முட்டுக்காலளவு நின்றார், இடுப்பளவு நின்றார் அவ்வவ் வெல்லை வரையுமே நீரின் நனைவினைப் பெற்றிருப்பர். அதுபோல் ஆருயிரும் கண் முதலிய புலனால், இறுப்புமெய்யாகிய புத்தியினால், உணர்வு மெய்யாகிய உழைப்பு உணர்வு உவப்புஎன்னும் கருவிகளால் அறியும் அறிவு அவ் வவ்வெல்லை வரையுமே அறியும். குறிப்புரை: வீணை - யாழ். தண்டு - புல்லாங்குழல். தாணு - சிவம். தகுதலை - இன்பத்தை. வாணிபம் - இந்திரியச் சேட்டை. காணி - முத்தி உலகம்.
கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்தது அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமன்றே. பொருளுரை: புலப்பசையாகிய விசயவாசனையில் வெளிவந்து மனம் புகுவரே வாணிகம் செய்வதென்பதாம் கொங்கு, மணம் என்னும் பொருளையும் உடையது. மணம், அடங்கிய மனத்தைப் புறத்து ஈர்ப்பது. அதனால் ஆருயிரின் அறிவு புறத்துவர வாயிலாக இருப்பவர் சிறப்பிலாச் சிறியோராவர் அவர் தம் சேர்க்கையினையே கொங்கு என்றனர். இச் சிறியாருடன் பயின்று சிறப்பிலாத் தொழிலை, பிறப்புலாந் தொழிலைப் புரிகின்றோ மென்னும் எண்ணம் இவரைவிட்டு நீங்கிச் சிறப்புளார்பால் சேர்ந்து செயலற்றிருக்குமிடத்தே புலனாவதாகும். அதுபோல் அங்கென்று சொல்லப்படும் செயலறும் இடமாகிய நன்னிலத்துப் போனாலல்லாமல் சிறப்பில்லாத் தொழில் புலனாகமாட்டாது. நன்னிலம் தூரியநலம். நிலவு வெளிப்பட்டால் இருளையறிய முடியாதல்லவா? அதுபோல் நன்னிலமாகிய தூரியம் புகுந்தாரும் புலப் பொருள்களை யறியார். புலப்பொருள் கண் முதலிய பொறிகட்குப் புலனாகும் பொருள். தங்குமிடமாகிய நன்னிலம் சில அகத்தவத்தோர் - தாபதர் புகுந்தனர். குறிப்புரை: கொங்கு புக்காரொடு - இந்திரிய வழிச்சென்றவரோடு. அங்கு - துரிய அவத்தையில். திங்கள் புக்கால் - தண்ணிய ஒளி வெளிப்படுமாகில். தங்கு புக்கார் - துரியத்தில் நின்றார்.
போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கு மிருகரை ஏதமில் ஈசன் இயங்கு நெறியிது மாத ரிருந்ததோர் மண்டலந் தானன்றே. பொருளுரை: திருவருள் நினைவால் அறியாமையாகிய இருட்பொழுதும் விடிந்தது. பேரறிவாகிய சிவஞாயிறு எழுந்தது. பொன்னிறம் பேரறிவு. பூந்தூள் சிந்தும் புன்னை மரங்கள் என்பது திருவருளைப் பொழியும் பெரும் பொருளாம் சிவம் என்பதாகும். அச் சிவன் அகமும் புறமுமாகிய இரு கரைகளிலும் வெளிப்பட்டு நின்றருள்வன். எக்குற்றமுமில்லாத முக்கணானாகிய சிவபெருமான் செவ்வியுயிர்க்கு உடனாய் நின்று உதவும் ஒப்பிலாவுதவி இதுவாகும். நெறி ஈண்டு நெறியின் பயனாகிய உதவி. அது காரியத்தைக் காரணமாக ஏற்றிக் கூறினார். மாதர் - அழகு. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகாகும். அத்தகைய அழகு நிறைந்த நிலவுலகம் இத்தகைய நற்றவர் வாழுமிடம். குறிப்புரை: போது - அஞ்ஞான இருள். புலர்ந்தது - நீங்கிற்று. பொன்னிறம் - ஞான ஒளி. தாதவிழ்புன்னை - அருளைப் பொழியும் சிவம். இருகரை தங்கும் - உள்ளும் புறமும் விளங்கும். மாதர் - அழகு. மண்தலம் - பூமி. மாதர்ம. சம்பந்தர், . - .
கோமுற் றமருங் குடிகளுந் தம்மிலே காமுற்ற கத்தி இடுவர் கடைதொறு மீவற்ற வெல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாகுமே. பொருளுரை: கோபமுற்றென்பது கோமுற்றென நின்றது. எனவே வெறுப்புற்றென்பதாகும். இனம்பற்றி விருப்பும் கொள்ளப்படும். வெறுப்பு விருப்புக்கள் காரணமாக ஆருயிராகிய குடிகள் தாங்கள் விரும்பிய புலப்பொருள்களை அடைய முயன்று அப் பொருள்கள் உள்ள இடங்களின் வாயில்கள்தோறும் சென்று உரத்தகுராலில் குறையிரந்து நிற்கும். அங்ஙனம் நிற்கும் அவ் வுயிரைத் திருவருட் சிவகுரு மீ ஆகிய மேற்பிறப்பு வற்றுதற்பொருட்டு உள்ளத்தை உலக வியல்புகளிலே செல்லவொட்டாது நன்னெறிக்கு உய்க்கும் நாதன் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்தியருள்வன். ஆருயிர் முனைப்பையும் நீக்கியருள்வன். நீக்கினால் என்பது தட்டினாலென்னும் சொல்லாற்றலாற் பெற்றாம். அம் முனைப்பு நீங்கவே திருவைந்தெழுத்தாற் பெறப்படும் திருவடிப்பேரின்பம் நுகரலாம். இதற்கமை திருவைந்தெழுத்துச் 'சிவய சிவ' என்ப இது 'நால்வர்நம் மூலர் நயந்தெமையாள் ஐங்குரவர், சால்பாம் 'சிவயசிவ' சார்ந்து' என்பதனாற் காண்க. குறிப்புரை: கோமுற்று - வெறுப்பு விருப்பு உற்று குடிகள் - சீவர்கள். காமுற்று அகத்தி -விருப்பு வெறுப்புக்களை மகிழ்ந்து நீக்கி. கடைதோறும் - நேர்ந்த இடந்தோறும். மீவற்ற - பிறவி கெட எல்லை விடாது வழிகாட்டி - ஆகம மார்க்கம் தவறாமல் உபதேசித்து.
தோட்டத்தில் மாம்பழந் தொண்டி விழுந்தக்கால் நாட்டின் புறத்தில் நரியழைத் தென்செயும் மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுக் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறன்றே. பொருளுரை: தோட்டத்தில் மம்பழம் தொண்டி விழுந்தக்கால் என்பது ஆருயிரின் செயலறலாகிய நிட்டை கலைந்தவிடத்தென்பதாம். தோட்டம் நற்றவம்புரியும் சுற்றிடம். மாம்பழம் நிட்டை. தொண்டி விழுதல் உள்ளே வண்டிருந்து குடைந்து தொளையாக்குதல். அதுபோல் ஆருயிரின் நாட்டத்தின்கண் பண்டைப் பயிற்சிப் பசையினால் மாற்றம் ஏற்படும். ஏற்படவே நிட்டை கலையும். நிட்டை கலைந்தால் உள்ளம் புறத்துச் செல்லும். செல்லவே நோன்பு என்னும் பூசை முறையை மேற்கொள்வர். அதனால் அடையும் பெரும்பயன் யாது? ஒன்றுமின்றென்பதாம். நரி யழைத்தல் - செயல்செய்தல். திருவருளால் சிவகுருவானவர் நிட்டைபுரியுமாறு தூண்டித் துணைசெய்து, முதல்வனாகிய ஆலமர் செல்வனை முன் நிறீஇத் திருவைந்தெழுத்தைச் செவியறிவுறீஇச் சிவபெருமான் திருவடியிணையினைச் காட்டிக்கொடுத்தனர். அங்ஙனம் காட்டிக்கொடுத்தவரை நாம் நினையாது தினைப்பெழுது இருப்பினும் அவரும் நினையாமையாகிய கையினைச் சோரவிடுவர். இவையெல்லாம் அவர் சோரவிட்டமையால் நேர்வன. அங்ஙனம் நேராவண்ணம் அச் சிவகுருவினை இடையறாது நாடுதல் வேண்டும். நாடுதல் - சிந்தித்தல். முன்நிறீஇ - முன்நிறுத்து. செவியறிவுறீஇ: சொல்லொணா அருமறைத் திருவைந்தெழுத்தை உபதேசித்து. சிவகுருவை யன்புடன் ஓவாது எண்ணிக்கொண்டிருப்பதே நம் கடமை என்னும் உண்மை வரும் திருமூலர் திருப்பாட்டான் உணர்க. "தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் " குறிப்புரை: தோட்......கால் - சுகசமாதி கலைந்தால் நாட்........செயும் - உலகத்தில் கிரியா மார்க்கத்தைக் கைக்கொண்டு என்செய்ய முடியும். மூட்டிக் கொடுத்து - சமாதிக்கு ஏற்பாடு செய்து. முதல்வனை - தென்முகக் கடவுளை. முன்னிட்டு - முன்னிலையாக வைத்து.
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பி னவளோடும் போக நுகரும் புலம்பனுக் கென்றும் புலர்ந்திலை போதே. பொருளுரை: நெறி நூலும் துறைநூலுமாகிய செந்தமிழ் வேதாகமங்களும், அந் நூல்கள் ஓதியும் ஓதுவித்தும் வரும் ஒண்மைக் குருமாரும், நுண்ணுணர்வாகிய தன் நுகர்வும் ஆகியவற்றைப் புட்கள் என்று ஓதினர். அப்புட்கள் அறியாமையாகிய இருள் அருளால் கெட்டதென்று ஒலித்தன. அங்ஙனம் ஒலித்துக்கொண்டிருப்பவும் அதனை உறுதி என்றுணர்ந்து அவ்வழியொழுகாது பலர் பொழுதுவிடிந்தது என்று வந்து கண்டுங், கேட்டும், கொண்டும், கூடியும், 'உண்டும், உறங்கியும் இன்புறலாமென்று பூங்கொடியாகிய மாயாகாரியப் பொருள்களையும், இணைவிழைச்சையும் நாடியலைகின்றனர். இணைவிழைச்சை விடாது பற்றி ஒருவுவதின்றி மருவுகின்றனர். நல்லாரிணக்கமில்லாத அல்லார் நிலை புலம்புநிலையேயாகும். புலம்புநிலை - இருள்நிலை. அஃதாவது அறியாமை நிலையுடன் ஐம்புலனுகர்வுச் சிறப்பாகிய பெண்களுடன் கூடும் கூட்டத்தையே பெரிதென்று நாடிப்போக நுகர்கின்றனர். அப்போகம் சிவபோகமாக வேண்டுமென்பது நல்லோர் குறிக்கோள். அஃதாவது சிவனடியை மறவா நினைவுடன் ஆண்டான் அடிமைமுறை பூண்டு நுகர்தல். அங்ஙனமின்றித் தன் முனைப்புடன் இறையை மறந்து எந் நுகர்வு நுகரினும் அது பிறவிக்கு வித்தாம். அறமுறை திறம்பிய பாவமுமாகும். அறக்கூழ்ச் சாலையில் அமைக்கப்பட்ட உணவினை அவர்கள் அருளுடன் வாக்க உண்பார் நன்றிமறவா நினைவும் அன்புங் கொண்டு உண்ணின் அஃது அறமாகும். அங்ஙனமின்றி நன்றி மறத்தலும் கட்டுண்டலும் செய்வரேல் அது பாவமாகும். இவையே மேலனவற்றிற்கு ஒப்பாவன கட்டுண்டல் - களவுசெய் துண்டல். அறியாமை வயப்பட்ட ஆருயிர்க்கிழவன் புலம்பனெனப்படும். அத்தகைய புலம்பனுக்கு எந்தநாளிலும் அறியாமையாகிய அகவிருள் விடிந்த தில்லை என்க. ஆருயிர்க்கிழவன்: ஆன்மா. குறிப்புரை: புலர்ந்தது போது - அஞ்ஞான இருள் கெட்டது புட்கள் - அனுபவங்கள். பூங்கொடி - பெண். போற்றியென். . திருப்பள்ளி எழுச்சி, . " கூவின பூங்குயில். " .
போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந் தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறன்றே. பொருளுரை: காலை மாலை என்று சொல்லப்படும் இருவேளைகளிலும் நெறிநூல் துறைநூல்களாகிய வேதாகமங்களை முறையுற ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதவே அகம் புறமாகிய இரண்டிடத்தும் திருமகள், ஒத்துத் துணைசெய்தருள்புரிவள்; மகிழந்துடனாகி நிற்பள். தாதாகிய வெண்ணீர் செந்நீர் என்னும இரண்டன் கலப்பால் கருவுட்புகுந்து ஆருயிர் பிறக்கும். அவ் வுயிர்களைப் பறவைகள் என்று உருவகித்தனர். 'இலக்கம் உடம்பு இடும்பைக்கு' ஆதலின் உடம்பினை வேதென்றனர். அஃது ஆண் பெண் என இரண்டென்றனர். வேது - துன்பம். அவ் வுடலைக்கண்டு அவ் வுயிர் செய்வதறியாது நடுங்குகின்றது. குறிப்புரை: மாது - இலக்குமி. தாது இரண்டு - சுக்கில சுரோணிதம். பறவைகள் - சீவர்கள். வேதிரண்டு - ஆண் பெண் சரீரங்கள். இலக்கம். திருக்குறள், .
தோணியொன் றுண்டு துறையில் விடுவது ஆணி மிதித்துநின் றைவர்கோ லூன்றலும் வாணிபஞ் செய்வார் வழியிடை யாற்றிடை ஆணி கலங்கில் அதுவிது வாகுமே. பொருளுரை: ஆருயிர்கள் பிறவிப்பெருங்கடலைக் கடந்தாகவேண்டும். அதற்கு மக்கட்பிறப்பே தக்கதும் மிக்கதும் ஆகும். அத்தகைய பிறப்பைத் தோணியென்றுருவகித்தனர். தோணியாகிய வுடம்பு மெய்யுணர்ந்தாரைத் திருவடிக்கரையாகிய பெருந்துறையிற் கொண்டுய்க்கும். தோணியின் பக்கஇடம் ஆணி எனப்படும். அவ் வாணியிணை மிதித்தேறுதல் வேண்டும். ஏறி நெறிநின்று ஐம்புலத் தொழில்களைக் கோலூன்றி யகற்றுதல்வேண்டும். அருளால் அகற்றவே சிவகுரு வந்தருள்வர். அவரொரு பெருவணிகர். முதலிலா வணிகர். ஊதியமே தருவணிகர். அவர் எழுந்தருளி நம்முடைய அறியாமையாகிய இருட்டை வாங்கிக்கொண்டு, தனது முற்றுணர்வாகிய ஒளியைத் தந்தருள்வர். இது 'தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர்' என்னு மறைமுடிவான் நன்குணரலாம். ஒருபுடையொப்பாகத் திருநீலகண்டத் துள்ளுறையும் இதனை விளக்குவதாகும். மேலும் ஆற்றின் இடைநடுவில் உடம்பாகிய தோணியின் இருப்புக்கு ஆணியென்னும் அறியாமை நீங்குமானால் அதுவாகிய சிவன் இதுவாகிய ஆருயிராகும். குறிப்புரை: தோணி - சரீரம். துறை - முத்தித் துறை. வாணி - மனத்தை ஐவர் கோல் ஊன்றலும் - இந்திரியங்கள் வேலைக்கு ஆரம்பித்ததும். வாணிபம் செய்வார் அஞ்ஞானத்தை வாங்கிக்கொண்டு ஞானத்தைக் கொடுக்கும் குரு. ஆணி கலங்கின் - பிறவிக்கு ஏதுவாகிய அஞ்ஞானம் கெட்டால். அது விதுவாகும் - சீவன் சிவனாகும். தந்ததுன். . கோயிற்றிருப்பதிகம், .
ஒன்பதாம் தந்திரம். மோன சமாதி நின்றார் இருந்தார் கிடந்தார் எனவில்லை சென்றார் தருஞ்சித்த மோனச மாதியாம் மன்றேயு மங்கே மறைப்பொரு ளொன்றுண்டு சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறன்றே. பொருளுரை: மேன்மையான சமாதி மோனசமாதி எனப்படும். அதனை அருளால் அடையல்வேண்டி முயற்சிப்பார் காலத்தாழ்ப்பின்றி உடனே பயில்வர். அவர்கள் அப் பயிற்சிக்கண் நின்றார் சிலகாலம், பின் சிறிது பயின்று இருந்தார் சிலகாலம், பின் தோய்ந்துகிடந்தார் சிலகாலம் எனக் கால இடையீடு கூறுவார் எவருமிலர். புறத்துக் காணப்படும் ஐவகை மன்றங்களினும் மிக்கதாய் அகத்துக் காணப்படும் நெஞ்சக மன்றத்து உயிர்க்கு உயிராய் நுண்பொருளாய் நிற்கும் மறைபொருள் ஒன்றுண்டு. அப்பொருளே சிவபெருமான். நெஞ்சக மன்றத்தின்கண் நிகழ்த்தும் நடிப்பே முதற்கண் நடித்த நடிப்பகும். மறவா வுணர்வாற் சென்று அச் சிவபெருமான் திருவடிக்கீழ் உறைபவர் அவனுடன் பின்னிப் புணர்ந்து மன்னி யின்புறும் அணைந்தோராவர். அணைந்தவர் திருவடியினைச் சேரும் ஆறு இதுவாம். ஆறு: வாயில்; வழி. குறிப்புரை: என இல்லை - என இல்லாமல். சென்றார் - சமாதியை அடையப் பயிற்சி செய்பவர். அங்கே - மோன சமாதியில். மறைப் பொருள் - பரமசிவம். ஆங்கணைந்தவர் - சமாதி கூடியவர்.
காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. பொருளுரை: ஆருயிர்களின் செவ்வி பார்த்துத் திருவருளே திருமேனியாகக்கொண்டு வெளிப்பட்டு வந்தருளும் சிவபெருமான் சிவகுருவாவன். அவனும் ஒருபுடையொப்பாகக் காட்டுவதன்றி நுகர்வினை முற்றவுணர்த்தலாகாமையின் காட்டுங் குறியும் கடந்தவன் சிவபெருமான் என்றருளினர். அவனே அடையும் காரணமாகிய பயிற்சிகளைக் கூறியுணர்த்தியவாறே இடையறாது பயிலுதல் வேண்டும். அங்ஙனமன்றி ஏட்டின் புறத்து எழுதிவைத்துக் கொண்டமையால் விளையும் பயன் யாது? திருவடியிணைக்கீழ் கூட்டுவித்தருளும் குருநந்தி கூட்டினால் அல்லாமல் வேறு நன்னெறிக்கு உய்க்கும் வாயில் இல்லை. மற்றுள்ள நூற்பயிற்சி முதலன அத்தனையும் ஆட்டின் கழுத்தில் பயனின்றித் தொங்கும் மடியோ டொக்கும். அதர்போன்று பயனிலவாம் என்க. வாயில் - வழி. மடி - முலை. குறிப்புரை: காட் . . . . பயன் - அடையாளத்துக் கொண்டு அப்பாற்பட்ட சிவத்தை அடையும் நெறியை ஏட்டில் எழுதிவைத்துக் கொண்டால் மாத்திரம் பயன் இல்லை. கூட்டும் . . . . . ல்லது - குரு உபதேசித்த நெறியில் நின்றால் அல்லது. ஆட்டி . . . . . தற்றே - வெள்ளாட்டின் கழுத்தில் தொங்கும் பயனற்ற அதர்போல முடியும். காவலனை. பழமொழி நானூறு, . " சாத்திரத்தை. திருக்களிற்றுப்படியார், .
மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன் பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன் சிறப்புடை யான்திரு மங்கையுந் தானும் உறக்கமில் போகத் துறங்கிடுந் தானே. பொருளுரை: ஆருயிர்கள் அறியாமை வயப்பட்டுப் புலம்பு எய்தின. புலம்பு - கேவலம். பின்னர் அருளால் அவ் வறியாமையைத் தேய்த்து மாய்த்தற்பொருட்டு மாயாகாரிய உடம்பினை எய்தின. எய்திப் புணர்வு நிலையையடைந்தன. அடைந்து மயக்கமுற்றன. புணர்வு - சகலம். இம் முறையால் அவ் வுயிர்கள் தம்மையும் தம்மைவிட்டுப் பிரியாது உடனின்று செலுத்தும் தலைவனையும் மறப்பதுவே தொழிலாகி உழல்கின்றன. அத்தகைய மறப்பிற்கு ஏதுவாய மாயாகாரிய உடம்பினையே அவ்வுயிர்கள் பெற்றிருக்கின்றன. அதனால் 'மாயநன் நாடன்' என்றனர். என்றும் பிறவாப் பெருமைசேர் முழுமுதல்வன் சிவன். அவன் பேரருளையும் உடையவன். பேரின்பப்பெருவாழ்வாம் சிறப்பினையுடையவனும் அவனே. பேரறிவுப் பெருந்திருவாம் திருவருளம்மையையுமுடையவன். அம் மங்கையும் தானுமாய் ஆருயிர்களின் யோகநிலையில் ஏற்படும் உறக்கமில்லாத பேரின்ப நுகர்வில் அச் சிவபெருமானும் அவ் வுயிர்களுடன் உடனாய் நின்று கண்டு காட்டும் பண்டைப் பண்பாளனாகலின் தானும் உடன் உறங்கிடுவன் என்க. ஈண்டு உறங்கிடுதல் நன்றாகத் தங்கிடுதல். "பிறவாப் பெருந்தெய்வம் பேணுசிவன் ஏனோர் பிறப்பால் சிறுதெய்வம் பேசு" என்பதனை நினைவுகூர்க. மேலும், "கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதி யானை இருங்கட லமுதந் தன்னை இறப்பொடு பிறப்பி லானை பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும் "என அப்பரருண் மொழியினையும் நினைந்தின்புறுக. குறிப்புரை: மறப்பது வாய் - மறப்பதுவே தொழிலாய். மாய நன்னாடன் - மாயா சரீரத்தை உடையவன். திருமங்கை - திருவருட் சத்தி. உறக்கமில் போகம் - சிவயோக சமாதி. உறங்கிடும் - அமைந்திருப்பான்.
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரியம் அதில்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி யுமிழ்ந்தே உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. பொருளுரை: ஆருயிர்ச் செயலறல், அருட்செயலறல், அருளோன் செயலறல் என்னும் மூன்றும் முத்துரியம் என்ப. இம் மூன்று நிலையினையும் கடந்து ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் பேரொளிப்பிழம்பு சிவன். அம் மூன்றன் அப்பால் நிலையாகிய துரியாதீதமும் மூன்றாம் என்ப. அந்நிலைக்கண் ஆருயிர்க்கு விரிவு குவிவாகிய நினைப்பும் மறப்புமுண்டாகா. விழுங்கி உமிழ்தல் என்பது கொண்டும் ஒழிந்தும் வருதலில்லாத சொற்கழிவாகிய பேரின்பநுகர்வு நல்லார்தம் நுகர்வுணர் வாகுமேயன்றி வேறன்று. நுகர்வுணர்வு - அனுபவம். அந் நுகர்வுணர் வின்கண் நுகரின்பமாய்ச் சிவபெருமான் நீங்காதுறைந்தருள்வன். குறிப்புரை: துரியங்கண் மூன்றும் - சீவதுரியம். சீவதுரியம் - பரதுரியம். அதன்மீது மூன்றாய் - சீவ, சிவ, பரதுரிய அதீதங்கள். விரிவு குவிவு - நினைப்பு மறப்பு. விழுங்கி உமிழ்ந்து - ஒழித்து. உரையில் - சொல்ல இயலாத. அநுபூதிகம் - அனுபவம்.
உருவிலி யூனிலி யூனமொன் றில்லி திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்தென் மனம்புகுந் தானே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் மலம் வினைகளுக்கு ஈடாக வரும் உருவினையுடையவன் அல்லன். பிறப்பில்லாதவன். இயல்பாகவே மலமில்லாதவன். சென்றடையுந் திருவில்லாதவன். குற்ற மற்றவன். தேவர்கட்கும் தேவனாயுள்ளவன். ஒப்பில்லாதவன். பூதப் படைகளை யுடைமையாகக் கொண்டாள்பவன். தான் எல்லாப் பொருட்கும் சார்பாக இருப்பதல்லாமல் தான் ஒன்றையும் சார்ந்திருக்குந் தன்மையனல்லாதவன். இத் தன்மையாவன ஒன்பது ஒப்பில்பண்புகள் வாய்ந்த அவன் வலியவந்து அடியேன் உள்ளம் புகுந்தருளினன். திருவிலி: திரு + வில்லி = அழகிய பொன்மலையை வில்லாக வுடையவன் என்றலும் ஒன்று. மருவிலி என்பதற்குத் தொடக்குண்ணாதவன் என்றலும் ஒன்று. பூதம் என்பது ஆருயிர்களையே. இத் திருப்பாட்டு ஒருபுடையொப்பாக 'சிவஞ்சத்தி' என்னும் திருப்பாட்டின் பொருளின் கருவாகத் திகழும். 'வில்லி', 'விலி' என இடை குறைந்ததெனக் கொள்க. குறிப்புரை: ஊனிலி - மாயை இல்லாதவன். திருவிலி - திரு + வில்லி மேருவில்லி. மரு - குற்றம்.
கண்டறி வாரில்லைக் காயத்தின் நந்தியை எண்டிசை யோரும் இறைவனென் றேத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறையறி யோமன்றே. பொருளுரை: சிவபெருமான் ஆருயிர்களின் தவமார் உள்ளத்திடைப் பள்ளஞ்சேர் வெள்ளமென நீங்காது நின்றருள்வன். ஏனைப் புறத்துக் காணப்படும் திருக்கோவில் முதலியனவெல்லாம் உள்ளத்துள்ள நீங்கா இறைவனை நினைப்பூட்டும் வழியடையாளங்களாகும். இவ் வுண்மையினையுணர்ந்து உள்ளம் பெருங்கோவிலாக்கொண்டு நந்தி எழுந்தருளியுள்ள மெய்ம்மையினைத் திருவருள் நினைவால் கண்டறிவாரில்லை. எட்டுத் திசையினுமுள்ள மட்டிலன்பர் அனைவர்களும் சிவபெருமானையே முழுமுதல் இறைவனென்று தொழுது வணங்குகின்றனர். அண்டங்கள் அனைத்தையும் கடந்த அளவிடப்படாத பேரின்பத் திருத்தொண்டர்கள் தம் உணர்வுறு நுகர்வாய் உண்ணும் திருவடிப் பேரின்பத் துறையினை முறையுற அறவேயுணர நாம் அறியோம். அறவே - முற்றாக. குறிப்புரை: காயத்தின் - உடம்பினுள். முகந்த - அனுபவித்த.
உடலாங் குகையில் உணர்வாகும் பீடத்து அடலார் சமாதி இதயத்த தாக நடமா டியகுகை நாடிய யோகி மிடையாகா வண்ணம்சா திக்குமெல் வல்வே. பொருளுரை: உடலென்னும் குகையில், உணர்வென்னும் இருக்கையில் மல முதலியவற்றை வெல்லும் திண்மைவாய்ந்த நிட்டைகூடும் நிலையம் நெஞ்சமாகும். இந் நெஞ்சத்தை இடமாகக்கொண்டு இறைவன் நடமாடு கின்றனன். யோகியர் அவனையே நாடிநிற்கின்றனர். திருவருள் நினைவால் இடையூறு ஒருசிறிதும் நேராவண்ணம் நிட்டையினை நிலைபெறச் செய்தின்புறுவர். குறிப்புரை: உணர்வாகும் பீடம் - உள்ளம் மிடையாகா வண்ணம் - இடறு இல்லாமல்.
தற்பர மல்ல சதாசிவன் தானல்ல நிட்கள மல்ல சகள நிலையல்ல அற்புத மாகி யநுபோகக் காமம்போற் கற்பனை யின்றிக் கலந்துநின் றானன்றே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் தற்பரத் திருவுருவாம் ஆண்டானு மல்லன். அதன்மேலுள்ள அருளோனுமல்லன். உருஉறுப்புக்கள் உடையனுமல்லன். அவை இல்லானுமல்லன். இன்னவாறுள்ளான் என்று எவராலும் கூறவொண்ணாததோர் வியத்தகு நிலையனாக வுள்ளவன் அவன். கருத்தொத்த காதலர் மருவி நுகர்ந்த அக் காமவின்பம்போல் அவன் நிலையும் அவன் திருவடியின்பமும் நுகர்வாம் நுண்ணுணர்வால் உணர்வனவாகும். நொடிப்பாம் கருவியுணர்வான் உணர வாராவென்க. அதனால் பொய்யெனப் புகலும் கற்பனையுமன்று மெய்யெனக் காணுமாறு கலந்து நின்றருளினன்.
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே. பொருளுரை: பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும் ஆனால் அப்பொருளின் முடியாப் பண்பினை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காணுதல்கூடும். அறிவுக் கண்ணால் காணப்படும் அம்மெய்ப்பொருளை முகக்கண்ணால் காணலாம் என்று நாடியும் நவின்றும் வருவார் மூடராவர். அவர்களையே நோக்கி முகத்திற்கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் என்றனர். மேலும் முகக்கண் பொருள்களைக் காணுங்கால் பொருட்கண்ணாகும். புலமை பெறுங்கால் புலமைக் கண்ணாகும்; நலம்புரியுங்கால் நாகரிகக்கண்ணாகும்; குறிப்புணருங்கால் அறிவுக் கண்ணாகும்; சிவத்தினையுணரத் துணை செய்யுங்கால் புண்ணியக் கண்ணாகும். திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக்
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரஞ் சேர்பர மும்விட்டுக் கப்புறு சொற்பத மாளக் கலந்தமை எப்படி யப்படி என்னுமவ் வாறன்றே. பொருளுரை: வேறாய் நின்ற இருபொருள் பிரிக்கமுடியாவாறு ஒன்றாய்க் கலந்து இரண்டும் அழியாது ஒன்றாய்நிற்பதற்கு ஒப்பு உப்பும் அப்பும். ஆதலால் நீரிற்கலந்து கரைந்து ஒன்றாய்நிற்கும் உப்பென்று சொல்லும்படி அத்தனாகிய சிவபெருமான் ஆருயிருடன் அணைந்தருள்வன். அணையவே பொருளாகப் பராபரமாகிய பேருயிரென்றும் பரமாகிய ஆருயிரென்றும் பேசப்படும் ஆண்டானும் அடிமையும் ஆகிய இரண்டும் புணர்ப்பல் ஒன்றாகும். ஒன்றாங்கால் இறவா இன்பம் என்னும் ஒரு பெயரே பெறப்படும். கவர்பட்டுச் சொல்லும் நிலையும் மாறும். கவர்பட்டுச் சொல்வதாவது அவன் நான், அல்லது ஆண்டான் அடிமை, இன்பு அன்பு எனக் கூறுவன. திருக்கோவில் செல்வார் பலராய்ப் பல பெயருடையராய்க் காணப்படினும் அத் திருக்கோவிற் சார்பால் எல்லாரும் 'கோயிற் பிணாப்பிள்ளைகாள்' என்பது போன்று கோவிலார் என்றே பெயர் பெறுவர். இதுபோல், கல்லூரி, வகுப்பு, அலுவலகம், மணமனை முதலியனவும் சார்புநிலையால் ஒருபெயரே பெறுதல் காண்க. இதனைத் 'தன்நாமங் கெட்டாள்' என்னும் அப்பர்மொழியும் வலியுறுத்தும். கோப்பெருஞ் சோழன் தனக்கும் பிசிராந்தையார்க்கும் உள்ள வேறன்மையைக் கூறப்போந்தபோது பிசிராந்தையார் 'தன்பெயர் கிளக்கும் காலை என்பெயர், பேதைச் சோழன் என்னும் சிறந்த, காதற் கிழமையும் உடையன்' என்பதும் இந்நிலையினை உணர்த்தும். மேலும் பின்னல், புணர்ப்பு, கலப்பு என மன்னும் பெயர்களும் அவ்வாறேயாம். மெய்ஞ்ஞானம். சிவஞானபோதம், . - . " இரும்பைக். சிவஞானசித்தியார், . - . " கொண்ட. திருக்களிற்றுப்படியார், . " சிவனெனவே. " .
கண்டார்க் கழகிதாங் காஞ்சிரத் தின்பழந் தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை பெண்டா னிரம்பி மடவிய ளானாற் கொண்டான் அறிவன் குணம்பல தானே. பொருளுரை: எட்டிப்பழம் தின்பாரைக் கொல்லும் தன்மைத்து. ஆனால் பார்ப்பாரைத் தன் வனப்பினால் ஈர்க்கும் தன்மைத்து. அதுபோல் மாயாகாரியமாகிய வுலகமும் தன்பாற் பற்றுக்கொண்டாரை மருட்டிப் பிறப்பில் புகுவிக்கும் தன்மைத்து. ஆனால் அது காண்பார்க்குக் கடல், மலை, கான்யாறு, நானிலப்பகுப்பு, நல்லுயிர் வாழ்க்கை முதலாக வுள்ளனவற்றால் மிக்கவனப்பினைக் காட்டி ஈர்க்கும் தன்மைத்தாக இருக்கிறது. எட்டிப்பழத்தை அறிவால் மருண்டு தின்றவர் உண்மை யறியுமாறுபோன்று உலகிடைச் சிக்குண்டவர் தாமே உண்மையறிவர். உருவும் திருவும் பருவமும் எய்திய ஒரு பெண்ணை அவை முற்றவும் உடையனாய் மணந்தவன் மட்டுமே அப் பெண்ணின் இன்பினை நுகர்ந்துணைர்ந்து எழிலுறுவன். அதுபோல் ஆருயிர்கள் சிவத்தைப் பேணிப் பேரின்பம் பெறுதல் வேண்டும். அம்முறையால் அவைகள் பெண்ணெனப்படும். பெண் நிலையில் ஆருயிர்கள் ஆண்டான் திருவடியின்கண் வேறறக் கூடும். அப்பொழுது திருவடியின்பத்தினை எய்தும் இவ்வுண்மை வரும் திருச்சிற்றம்பலக் கோவையாரின் திருப்பாட்டானும் உணர்க: "சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா " குறிப்புரை: காஞ்சிரம் - எட்டி. மடவியள் - மடந்தைப் பருவத்தினள். கொண்டான் - கணவன்.
நந்தி யிருந்தான் நடுவுள் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே யொழிந்தன உந்தியி னுள்ளே யுதித்தெழுஞ் சோதியைப் புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனன்றே. பொருளுரை: திருவருள் நினைவால், சிவகுருவருளால் அகத்தவப் பயிற்சியால் உள்ளத்தின் நடுவில் நந்தி எழுந்தருளியிருந்தனன். தாலி கட்டி முடிந்தபின் மணச் சடங்குப் பொருள்கள் தாமே கழிவன போன்று நந்தி எழுந்தருளினமையால் சந்தி சமாதிகள் தாமே அகன்றன. உள்ளத்தின்நடு - சித்தத்தின் மத்தி. மேல் வயிறாகிய மணி பூரகத்தினிடத்துத் தோன்றி மிக்கு எழும் திருவருள் பேரொளிப்பிழம்பாகிய சிவபெருமானை 'உயிராவணமிருந்து உற்றுநோக்' குதலாகிய உள்ளத்தினால் தள்ளரிய அடிமையாய்ப் புணர்ந்துகொண்டேன். புந்தி - உள்ளம். குறிப்புரை: நடு உட்டெரு - சித்தத்தின் மத்தியில், அஃதாவது உள்ளத்தில். சந்தி - சமாதி; யோகமும் சமாதியும்.
விதறு படாவண்ணம் வேறிருந் தாய்ந்து பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. பொருளுரை: திருவருள் நினைவால் சோர்வுண்டாகாமல் தனித்திருந்து ஆராய்தல்வேண்டும். பழமறையாகிய 'சிவசிவ' என்னும் செந்தமிழ்த் திருமறையினை உணர்விற்கணித்து ஓவாவுறுதியுடன் நிற்றல்வேண்டும். இவ்விரண்டும் முறையே கைகூடினால் நம்மை மயக்கிக் கட்டுறுத்துக் கதறவைக்கும் பாழாகிய மாயை அடங்கியொடுங்கும். மாயை அடங்கி யொடுங்கவே, அப்பாற்பட்ட கற்பனைக்கு எட்டாத நனிமிகு வியப்பாய்த் தனிநிலைப் பொருளாய்த் தோன்றும் முழுமுதற் சிவத்தில் ஒடுங்குகின்றேன். குறிப்புரை: விதறு - சோர்வு. வேறிருந்து - தனித்திருந்து. பதறுபடாது - பதையாது. கதறிய பாழ் - ஓட்டெடுக்கும் மாயை. அந்தக் கற்.........பாழில் - சிவத்தில்.
வாடா மலர்புனை சேவடி வானவர் கூடார் அறநெறி நாடொறு மின்புறச் சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று நாடார் அமுதுற நாடார் அமுதமே. பொருளுரை: சிவவுலகினர் நறுமனம் கமழும் வாடாமாலையினைக் கொண்டு நாடொறும் முக்கணப்பனாம் சிவபெருமான் திருவடியிணையினைத் தொழுவர். அத்தகைய சேவடியினையுடைய சிவனை மனத்தால் ஓவாது உன்னி உழைத்தல்வேண்டும். அங்ஙனம் உழைப்பார் அறநெறியினைக் கூடுவர்; ஏனையார் கூடார் ஆருயிர்கள் நாடொறும் நிறையின்பம் முறையுற எய்துதற்பொருட்டுச் சிவபெருமான் அழகிய தாமரை மலரை யொத்த அவ்வுயிர்களின் நெஞ்சகத்தினுள் செழுஞ்சுடராய்ச் சென்று திகழ்கின்றனன். ஒன்றிய பெருஞ்சுடராய் நின்றும் அதனை இனிமையுற நாடார். அதனால் அவன் திருவடித் தேனமிழ்தினைத் தினைத்தனையும் நாடார். குறிப்புரை: வாடா.........ஆனவர் - பரமசிவம். கூடார் - தம்மை அடையாதவர். கேடார் கமலம் - உள்ளக் கமலம். நாடார் - விரும்பார்.
அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும் பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண மதுக்கொன்றைத் தாரான் வளந்தரு மன்றே. பொருளுரை: வாழ்க்கைத் துணைநலம் பெற்றச் சிறந்தது பெற வாழும் சீரியோர் காதலராவர். அவ்விருவரும் 'மனையறத்திலின்பமுறும் மகப் பெறுவான்வேண்டி' உடனுறைவின்பம் பெற்றுத் திடனுற வாழுதற் பொருட்டே திருமணம் புணர்ந்து மனையறம் புக்கனர். அவ்விருவரும் சிவனடி மறவாச் சிந்தையராய்க் குடும்ப வாழ்க்கையினையே தவநெறியாகக் கொண்டு ஒழுகுபவர் ஆவர். அவ்விருவரும் மகவுவேண்டுமென்று விரும்பி ஒருவரோ டொருவர் உரையாடுவர். அவ்வுரையினைக் கேட்டதும் காரணமுள்வழி அன்பு வெளிப்படுமாறு போன்று விரைவாக அவர்களிடையே காமம் வெளிப்படும். இவையனைத்தும் சிவபெருமான் திருவாணை என்று சிரமேற்கொள்ளும் வரத்தினர். அதுபோல் அகப்புறக்கலன்கள் நான்கும் மிக்பெரும் செவ்விவாய்த்து நனிமிகு விரைவில் உலகியலைத் துனியெனக் கொள்வர். கொண்டு திருவடி பூண்டு வாழச் சமைவர். அத்தகையாரைத் திருவுள்ளத்தாற் காண்பன் சிவன். கண்ட அப்பொழுதே தேன் துளிக்கும் கொன்றை மாலையினைத் திருவடையாள மாலையாகப் பூண்டு திகழும் சிவபெருமான் தன் திருவடிவளப் பேரின்பமுற்றும் ஈந்தருள்வன். சிவன்பெருமானுக்குக் 'கண்ணியும் தாரும் கார்நநுங் கொன்றையே.' கண்ணி தலைமாலை. கொன்றையின் சிறப்பை வருமாறு நிறைவுகூர்க: ஆருயிர்கள் தம்முனைப்பை ஆண்டான்கொன் றையானான், ஏர்கொன்றை அக்குறிப்பாம் எண்.' குறிப்புரை: அதுக்கென்று இருந்தார் - காம இன்பத்தை அனுபவிப்பதற்கே இருந்தவர்களாகிய மங்கையருடைய. பொதுக்கென - விரைவாக.
தானும் அழிந்து தனமும் அழிந்துநீ டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும் அழிந்தமை நானறி யேனன்றே. பொருளுரை: திருவருள் நினைவால் எழுந்தருளிய சிவகுருவின் மறையால் தானாகிய உடம்பு அழிந்தது. அழிந்தது என்பது பற்றகன்றது என்பதாம். ஈட்டும் பொருளும் அழிந்தது. வளமுள்ள ஊனும் அழிந்தது. உயிர்ப்பும் அழிந்தது. வான்முதலிய பூதங்களும் அழிந்தன. மனமும் அழிந்தது. இவையனைத்தும் பற்றற்றான் திருவடிக்கே பற்றுக்கொள்ளத் துணையாயினவென்பதே யழிந்ததென்பதாம். அங்ஙனமாகவே தன்முனைப்பாகிய நான் என்பதும் அழிந்தது. கதிர்வரவால் இருள் நீங்குதலும், மருந்துண்ண நோய் நீங்குதலும், திருத்துங்கல்வி கற்க அறியாமை நீங்குதலும், பொருள்வர வறுமை நீங்கலும், அருள்வர அகவிருள் நீங்கலும், மழைவரப் பீழை நீங்கலும் முதலியன இதற்கொப்பாகும். ஆனால் அவை எங்ஙனம் நீங்கின என அறியவாராமை போன்று இவையனைத்தும் அகன்றமை நானறியேனே என ஓதினர். இவற்றை அடியொற்றி எழுந்த திருவாசகச் செழும்பாட்டு வருமாறு: "வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டென் உள்ளமும்போய் " குறிப்புரை: தான் - உடம்பு. தனம் - பொருள். ஊன் - மாமிசம். வான் - ஆகாயம். மனம் - நினைப்பு, மறப்பு. நான் - சீவபோதம்.
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மன முற்றுநின் றேனே. பொருளுரை: இருளாகிய மறப்பும், வெளியாகிய நினைப்பும் என்னும் இரண்டினையும் திருவருள் நினைவால் மாற்றுதல்வேண்டும். மாற்றவே பொருள்கள் அனைத்தினும் சிறந்து செம்பொருளாய்த்திகமும் சிவத்துடன் பொருந்துதல் வாய்க்கும். வாய்க்கவே அச் சிவன் நாட்டத்தினுள்ளே எழுந்தருளி ஆட்கொண்டருள்வன். ஆட்கொள்ளவே காமம் வெகுளி மயக்கம் கையகன்றழியும். அழியவே அத்தனாகிய சிவபெருமான் திருவடிக்கண் முன் உருகாத மனம் உருகி நன்மனம் பொருந்தித் திருந்தநின்றேன். அதுவே அந்தமில் இன்பத்து அழிவில் வீடாகும். நாட்டம் - சித்தம். குறிப்புரை: இருளும் வெளியும் - நினைப்பும் மறப்பும். பொரு . . . . . . பொருந்த பொருள்களுள் சத்துப்பொருளாய் அமைய. உள்ளாகி - உள்ளத்தில் எழுந்தருளி. அழித்திடும் - மோகத்தைக் கெடுத்த உருளாத - சென்று உருகாத.
ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் பரபாரம் ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல வூழிகண் டேனன்றே. பொருளுரை: திருவருள் நினைவால் உள்ளம் ஒருங்கி உன்னினேன். உன்னலும், பராபரமாகிய பெரும்பொருளை யுணர்ந்தேன். அதுபோன்று சிவகதியினையும் உணர்ந்தேன். அதுபோன்று திருவடியுணர்வினையு முணர்ந்தேன். அதுபோன்று பலவூழிகளையும் கண்டுணர்ந்தேன். ஊழி - யுகமுடிவு. சிவகதி நிலையினை அப்பர் பெருமான் ஓதியருளும் வரும் அருமறையானும் உணர்க: "கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி யீசனைப் "குறிப்புரை: ஒன்றிநின்று - ஒருமுகப்பட்டு. உணர்வினை - தத்துவ அறிவை. பல ஊழி - பல யுகங்கள்.
ஒன்பதாம் தந்திரம். வரைஉரை மாட்சி தான்வரை வற்றபி னாரை வரைவது தானவ னானபி னாரை நினைவது காமனை வென்றகண் ணாரை யுகப்பது தூமொழி வாசகஞ் சொல்லுமின் நீரன்றே. பொருளுரை: ஒருவன் ஒன்றிலும் பற்றில்லாமல் இருக்கவேண்டுமானால் பற்றற்றான் பற்றினைப் பற்றுதல்வேண்டும். நிலையிலா ஊசலில் இருப்பவன் நிலையாக நிற்கவேண்டுமானால் தரையில் நிற்றல்வேண்டும். இவ்வுண்மை மெய்கண்டார் அருளிய செந்தமிழ்ச் சிவஞானபோதத் தனி முழுமுதல் நூற்கண் "ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந்துணையான்" எனவரும் ஏதுவான் உணர்க. தான் சிவபெருமானைப் பற்றியே ஏனைப் பற்றுக்களை விட்டமையால் பின்பு ஒன்றனையும் பற்றவேண்டுவது இன்று. அதனால் யாரை வரைவது என்று இயம்பினர். நிலத்தைப் பற்றிய பின்பே ஊர்தியை விலக்குவதும் நாடுக. அதுபோல் தான் திருவருளால் சிவனுடன்கூடிச் சிவனானபின் நினைப்பதற்கு ஒன்றும் இன்மையான் யாரை நினைப்பது என்றனர். ஒருவன் திருமந்திர ஏடு வாங்குவதன்முன் அதனை வாங்கவேண்டும் என்று பெருங்காதலொடு நினைப்பான். அதனை வாங்கிய பின்பு வாங்கவேண்டுமென்னும் நினைப்பு நீங்குவது இதற்கு ஒப்பாகும். ஆனால் பின் அவ்வேட்டினை ஓதியின்புறுவன். அதுபோல் திருவடியிணையினைச் சார்ந்த ஆருயிர்கள் அதனை மட்டும் அறிந்து, பற்றி, அழுந்தி இன்புறும். அதனால் திருவடிசேர்ந்த ஆருயிர்க்குச் செயல் இல்லையென்பது மெய்யுணராதார் சொல்லும் பொய்யுரை என்க. காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றமும் நீங்கிய திருவடியுணர்வுக்கண் பெற்றாரை யுகப்பதும், அவர் பாடியருளிய திருநெறிய தமிழ்வாசகஞ் செப்புவதும் சிறப்பினுக்கு வாயில்களாகும். அதனைத் தெளிந்து கூறுவீராக. திருவடியுணர்வுக்கண்: திருவருட்கண். குறிப்புரை: தான் - ஆன்மா. வரைவற்றபின் - பற்றுதல் அற்றபின். காமனை - மாதர் போகத்தை. வென்றகண் - வெற்றிகொண்ட அறிவினால். நானவனென். சிவஞானபோதம், . - . " சிறைசெய்ய " . - . " உறுகயி. அப்பர், . - . " ஈசனைஎவ். அப்பர், . - .
உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே. பொருளுரை: மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவன். மாற்றம் - உரை. மறையோன் - நுண்ணியோன். சொல்லிறந்து நின்ற தொன்மைப் பொருளாம் ஒன்றைச் சொல்லுவேனென்று மடிதற்றுத் தான் முந்துறும்வாயிலாப் பேதையர்களே! எல்லையில்லாத ஒன்றை எல்லை கண்டுள்ளவாறு சொல்லுவார் யார்? நுகர்வுப் பொருளை நுவலவும் ஒண்ணுமோ! 'ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே' என அடிகளும் அருளி அவனை நுகர்வுப் பொருளென நுவன்றனர். காற்றிலாவிடத்து அலையின் தோற்றம் இன்மையால் முந்நீர் தெளிந்திருக்கும். அதுபோல் சிவனைமறவா நாட்டத்தால் சிந்தை தெளிவார்க்குச் சிவபெருமான் மறைவின்றி அச் சிந்தையினுள்ளே வெளிப்பட்டருள்வன். அவன் பின்னல் திருச்சடையை உடையவன். பின்னல்: புணர்ப்பு; அத்துவிதம். சிவபெருமான் அகல் நிறைவு; ஆருயிர் அமைநிறைவு; மாறுலகு அடக்க நிறைவு. இவை முறையே வியாபகம், வியாப்பியம், வியாத்தி எனப்படும். சடைப் பின்னலும் பெரும்பாலும் தலைமுடியினை மூன்றாய் வகுத்து ஒன்றின்மேல் ஒன்றாய்ப் பின்னல். இதுவே சடை. திருச்சடையின்கண் உள்ள சலமகள் நடப்பாற்றல். வளர்மதி ஆருயிர் ஐவாயரவு மாறுலகு.
மனமாயை மாயைஇம் மாயை மயக்க மனமாயை தான்மாய மற்றொன்று மில்லை பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா தனையாய்ந் திருப்பது தத்துவந் தானே. பொருளுரை: மாயையின் தொடக்கு அம் மாயைக்கண் மனம் பற்றினார்க்கே உண்டாம். பற்றாதார்க்கு இன்று. வளர்த்த விலங்கினம் வழிப்படுமாறு போல் சிவனை மறவா மனத்தினர்க்கு மாயையும் வழிப்படும் மனம் சிவத்தில் ஒடுங்கினால் மாயையும் ஒடுங்கி மாயும். மாயை மாயவே வினையும் செருக்கும் நினையாமுன் மாயும், வீடு அழிந்தால் வீட்டுறுப்புக்களும், புழங்கிய பண்டங்களும் பிறவும் உடன் மாயும்; இதற்கிவை ஒப்பாகும். அதுவேயன்றி மாயை இல்பொருள் என்று கூறுவது அடாது. அங்ஙனம் பிதற்றவும் வேண்டா? திருவருள் நினைவால் தனை ஆய்ந்திருப்பதே தத்துவ உண்மையாகும். தத்துவ ஆராய்ச்சி, சோதனை என்பனவும் இதுவே. ஆருயிர்களின் சிவனுக் கடிமை என்னும் உண்மையுணர்தலே தத்துவ வுணர்வால் தன்னை யுணர்தல். இதுவே சாலச் சிறந்ததாகும். குறிப்புரை: மயக்க - சங்கற்பத்தை ஒழிக்க. மற்றொன்றுமில்லை - வேறு சாதனம் வேண்டாம். பினை மாய்வதில்லை - அதற்குமேல் மாள்வதற்கு வேறொன்று இல்லை. நானார் என். . திருக்கோத்தும்பி, . " வேண்டிய நாள். தாயுமானவர், . மண், .
ஒன்பதாம் தந்திரம். அணைந்தோர் தன்மை மலமில்லை மாசில்லை மானாபி மானங் குலமில்லை கொள்ளுங் குணங்களு மில்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலமன்னி யன்பிற் பதித்துவைப் போர்க்கே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமானை நந்தி யெனவும் அழைப்பர். அவனை அவனுடைய திருவடி ஞானத்தினாலே பேரன்பு பெருகி அவ் அன்பும் எத்திறத்தானும் மாற்றொணா உறுதியுடைத்தாய்க் கொண்டு மனத்தில் பதித்தல் வேண்டும். அப்படிப் பதித்து வைப்பார் சித்தாந்த சைவச் செந்நெறி யுலகத்துச் சீரியோராவர். அவர்கள் ஏனை யுலகோர் கட்டிக் கூறும் பொய்ந்தூல் = ஒழுக்கங்களைப் பெரிதெனக் கொள்ளார். அந்நிலையே, 'அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை' என்னும் நிலையாகும். அவர்களுக்கு . ஒன்றாய் மூன்றாய் ஐந்தாய் விரிந்து பிணிக்கும் மலமில்லை. . அகம்புறம் தூயராதலின் மாசில்லை. அகத்தே ஐந்தெழுத்தும் புறத்தே திருவெண்ணீறும் சிவமணியும் கொள்ளுதலால் அகம்புறம் தூய்மையாகும். . ஒழுக்கம் பற்றாது கட்டுப்பாடு பற்றித் தோன்றும் மானாபிமானமில்லை. . உலகோர் வகுத்த ஒவ்வாக் குலமில்லை. . ஏனையோர் கொள்ளும் முக்குணங்களும் இல்லை. . தந்நலமில்லை. இவை யாறும் அற்றவரே அற்றவராவர். 'அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்'றாரும் ஆவர். அபிமானம் - பற்று. சிவமணி: கடவுட் கண்மணி; உருத்திராக்கம். குறிப்புரை: பலமன்னி - உறுதியாக அடைந்து. ஞாலமதில். சிவஞானசித்தியார், . - .
ஒழிந்தேன் பிறவி யுறவென்னும் பாசங் கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன் அழிந்தாங் கினிவரு மாக்கமும் வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே. பொருளுரை: 'சார்பினால் தோன்றாது தானருவாய் எப்பொருட்கும், சார்பென நின் றெஞ்ஞான்றும் இன்பந்தகைத்'தாக விருப்பவன் சிவபெருமான். அன்பு நாவாகவும் இன்பு தேனாகவும் கொள்ளுதல் வேண்டும். அன்பும் இன்பும் ஒன்றானால் ஆரா அருஞ்சுவை உண்பாம். உண்பே அனுபவம். அனுபவம் - அழுந்தியறிதல். அத்தகைய செழுஞ்சார் புடைய சிவனை அவன் திருவடியுணர்வரல் திருவருள் தர உணர்வினுள் உணர்வாய்ப் புணர்ந்து நின்றுணர்ந்து ஓவா இன்புற்றேன். அதனால் ஒன்றாலும் ஒழிக்க வொண்ணாத எல்லையில் பிறவித் தொல்லையை ஒரு வாறு ஒழிந்தேன். உறவென்று சொல்லப்படும் பாசம் அறவே கழிந்தது. கடவுளும் நானும் ஒன்றானோம். ஒன்றாதல் என்பது தெளிந்த பளிங்கிற் பதித்த மணிபோன்றும், மலரின் மருவும் மணம் போன்றும் அகல்வும் அமைவுமாய் ஒன்றாதல். மணி - செம்மணி; மாணிக்கம். அகல்வு - வியாபகம். அமைவு - வியாப்பியம். பிறந்திறந்துழலும் இளிவு வரும்வழி வேண்டேன். அழிந்தாங்கு என்பது இறந்தது போன்று மீண்டும் பிறந்திறந்துழலுதல். மேலும் நாரும் நறுமணப் பூவும் கண்ணியாய்ச் சூடிமகிழ்கின்றோம். கண்ணியாக்கும்போது வேறாக இருந்த இரு பொருளும் புணர்ந்து ஒன்றாகின்றது. அம் முறையே புனிதப் புணர்ப்பிற்கு நனிமிகப் பொருந்திய துனியில் ஒப்பாகும். மாலை கட்டும்போது முதலில் நாரைக் கையில் வைத்து நார் தோன்ற அதனுடன் பூவைத்துக் கட்டுகின்றோம். இது கட்டு நிலை. நார் உயிராகும்; பூ உயிருக்கு உயிராகும். பூ ஒட்ட ஒட்ட நார் மறைந்து பூத்தோன்றுகின்றது. அப்பொழுது அது பூமாலை எனப் பெயர் பெறுகின்றது. நார் உள்ளடங்கிவிடுகின்றது. இஃது ஒட்டுநிலை. இதுவே ஒன்றாம் உண்மைக்கு ஒன்றாம் ஒப்பு. 'கட்டுங்கால் நார்முன்னாம் கண்ணியாங் காற்பூமுன், ஒட்டிலிறை முன்னுயிர்பின் ஓது' என்பதனை நினைவு கூர்க. மேலும், "ஆணவத்தோ டத்துவிதம் ஆணபடி மெய்ஞ்ஞானத் " என்பதுங் காண்க.
ஆலைக் கரும்பும் அழுதும்அக் காரமுஞ் சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறைவொன்று மில்லையே. பொருளுரை: திருவருள் நினைவால் திருவடியுணர்வால் அத் திருவடிக்கண் அழுந்தியறிதலாகிய தன்னுகர்வு நாட்டில், ஆலையிலிட்டு எடுத்த கரும்பின்சாறும், அமுதாகிய நல்லாவின் தூய பாலும், வெல்லக் கட்டியும், வானாளவும் வண்தருக்கள் நிறைந்துள்ள சோலை நாப்பண் வற்றா ஊற்றாய் முற்றப்பருக உற்று நிற்கும் இனிய தண்ணீரும் உண்டு. மயிற்பீலி போலும் நனிமிகு வியத்தகு வடிவுகளை அவ்வப்பொழுது படைத்தளித்தருளும் செல்வி அருட்பெருந் திருவாகும். அவளே கோலப் பெண்ணாவாள். அவளே வனப்பாற்றலினளாவள். அத்தகைய உலக அன்னையைச் சார்ந்த மெய்யடியார்கட்குக் குறை வொன்றும் இல்லை என்க. ஆருயிர்களைக் கோலஞ் செய்யும் அன்னை கோலப் பெண்ணாள் என்று கூறப்பட்டாள். கோலஞ் செய்தல் - வனப்புறுத்தல்; அழகு படுத்தல்; ஒப்பனை செய்தல். சீலத்தார் பெறுபயன் ஆலைக் கரும்பு. நோன்பினர் பெருபயன் அமுது. செறிவினர் பெறுபயன் செறிந்தகட்டி. அறிவினர் பெறுபயன், சோலைத் தண்ணீர். சோலைத்தண்ணீர்; உம்மைத் தொகையாய்ச் சோலையும் தண்ணீரும் எனப் பொருள் தந்து சோலை திருவடி நீழலையும், தண்ணீர் திருவடிப் பேரின்பத்தையும் குறிப்பனவாகும். கனியினும். அப்பர், . - . " ஆனையாய்க். . திருவம்மானை, .
ஆராலும் என்னை அமட்டவொண் ணாதினிச் சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி யங்கே திரிவதல் லால்இனி யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனன்றே. பொருளுரை: பொறிபுலன் கரணம் ஆகிய இவை பெறும் உயிர்க் கிழவர் யாராலும் என்னை இனிமேலும் கட்டுறுத்த ஒண்ணாது. காரணம், சீரார் பிரானாகிய சிவபெருமானும் எளியேன் நாட்டத்தினுள் புகுந்து நிறைந்து நின்றருளினன்; அதனான் என்க. சிவனடியார் என்னும் சிறப்புநிலை உறப்பெற்று நீங்கா வாழ்வுற்று ஆங்குந் தூங்குகின்றேன். இனி என்ன நேரினும் சிவனை நினையாச் சிறப்பிலார் எவர் பாலும் சேர்வதில்லை. அங்ஙனம் சாராதிருக்கும் அறிவினைத் திருவருளால் ஒருவா வண்ணம் பெற்றனன். அதனால் இனி யார் பாடும் அணுகேன் என்றோதினர். அமட்டுதல் - கட்டுறுத்தல். சிந்தை - நட்டம். மூள்வாய. அப்பர், . - . " நண் அனல். சிவஞானபோதம், . - . " கோணிலா. . அச்சப்பதிகம், .
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசந் தெரிந்தேன் சிவகதி செல்லு நிலையை அரிந்தேன் வினையை அயில்மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. பொருளுரை: பண்டே புல்லிய மலநோய் நீங்குதற் பொருட்டுப் படைப் போனால் கூட்டிப் பிணிக்கப்பட்ட வினைமாயைகளைப் பாசம் என அருளால் தெரிந்தேன். அதனால் மும்மலப் பிணிப்பினின்றும் பிரிந்தேன். என்றும் பொன்றாச் சிவநிலையினை அவ் வருளாலே தெரிந்தேன். அந் நிலையினை எய்தும் நெறியினையு முணர்ந்தேன். திருவைந்தெழுத்தை இடையறாது மருவும் = மனம் ஞான அயில்வாளாகத் திகழும். அதனால் வினைப் பிணிப்பினை அறுத்தேன். வினைப் பிணிப்பறலால் முப்புரமனைய இவ் வுடல் இடை முரிந்து இற்றொழியுமாறு செய்தேன். திருவடிப் பேற்றினை எய்துமாறு முந்துகின்றேன். குறிப்புரை: முரிந்தேன் - கெடுத்தேன். புரத்தினை - உடம்பினை. படைக்கல. அப்பர், . - .
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவதும் நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறன்றே. பொருளுரை: காரியவுலகம் பலவாயினும் காரணமாயை ஒன்றே. அப்பொருண் முதற் காரணத்தினின்றும் பல காரியத்தையும் உண்டாக்கி உதவும் வினைமுதலாகிய நிமித்த காரணமும் ஒன்றே. அக் காரிய ஆக்கப்பாட்டைப் பெற்றுப் பயன் எய்துவதும் உண்பதும் பலவாம். ஆக்கப்பாடெய்துவதற்குத் துணை நிற்கும் துணைக்காரணமாகிய அறிவாற்றலும் ஒன்றே. அவ் வறிவாற்றலுக்குத் துணை அறிவில் ஆற்றலாம் கருவிகள் பல. இக் கருவிகளும் ஆக்கப்பாடுகளே. எனவே ஆக்குவோன் ஆக்க முதல் ஆக்கத்துணை ஆகிய காரணங்கள் ஒவ்வொன்றே. ஆக்கப்பாடுகளும் அவ் வாக்கப்பாட்டைப் பெறறுப் பயன் துய்க்கும் ஆக்கப்பாடும் ஆக்கமுதலும் இல்லாத ஆருயிர்களும் பல என்க. ஆக்குவோன், ஆக்க முதல், ஆக்கப்பாடு, ஆக்கத்துணை, ஆக்கக்கோள் எனப்பொருள் ஐந்தாம். இவை திருவைந்தெழுத்தால் பெறப்படுவனவுமாம். ஆக்குவோன் சிறப்பு, ஆக்கமுதல் ஆக்கப்பாடுகள் மறைப்பு, ஆக்கத்துணை வனப்பும், நடப்பும், ஆக்கக்கோள் யாப்பு. இம் முறையான் பல்வேறு உலகங்கட்கும் தெய்வம் ஒன்றே காண்மின். அது நடப்பென்னும் ஆதியாகும். எனவே உடம்பொடு புணர்த்தலென்னும் உத்தியால் மறைப்பும் ஈண்டே பெறப்படும். உலகையும் ஆருயிர்களையும் கட்டு நிலையில் நடத்தும் திருவருள் நடப்பு. ஒட்டு நிலையில் நடத்தும் திருவருள் வனப்பு இவ் விரண்டும் ஈண்டு உலகென ஓதப்பெற்றன. இவ் வுலகுக்கு உயிராவது சிறப்பு. ஆருயிரையும் அவ் ஆருயிர்க்குப் பேரின்பம் அருளும் பேருயிராம் சிவபெருமானையும் பழுக்கச் செய்வது வனப்பு. அப் பழத்தை யுண்டு என்றும் பொன்றாது இயைந்து நின்று இன்புறுவது யாப்பு. அதுவே 'நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்' என்று ஓதப்பெற்றதை நுகரும் உரிமையுடையது. இனி என்பது இனிப்பு என்பதன் முதனிலை இனிப்பையுடைய பழம் என்றாகும். திருவருளால் அதனைச் சார்ந்து அஃதூட்டத் தின்று கண்ட அடியேனுக்கு அது தெவிட்டா இனிப்பாய் இன்பாய்த் திகழ்கின்றது. சிவபெருமான் நால்வேறு நிலையினனாய் நின்று உலகு உயிர்களை நடத்துகின்றனன். அவை கடந்தநிலை, காரணநிலை, கடத்துநிலை, கலப்புநிலை என்பன. இவை முறையே சிறப்பு, நடப்பு, வனப்பு, மறைப்பு, யாப்பு என்பனவற்றைக் குறிப்பனவாம். கலப்பு நிலையின்கண் மறைப்பும் யாப்பும் அடங்கும். இவ் வுண்மை யனைத்தும் அங்கை நெல்லிக்கனியென விளக்கும் மங்காச் சிவஞானசித்தியாரின் திருப்பாட்டு வருமாறு: "உலகினை யிறந்து நின்ற தரனுரு வென்ப தோரார் உலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடு மென்று மோரார் உலகினுக் குயிரு மாகி யுலகுமாய் நின்ற தோரார் "இந் நிலை நான்கும் வருமாறு நினைவு கூர்க: கடந்தகா ரண்ணம் கடத்தல் கலப்பாம், உடலின்பம் வேறுடனாய் ஒன்று. கடந்தநிலை பேரின்பப் பெருவடினனாகிய சிவபெருமானைக் குறிக்கும் குறிப்பாகும். அஃது உடலின்பம் எனக் குறிக்கப்பட்டது. இன்பவுடல் என மாறுக. அவன் ஐயஞ்சின் அப் புறத்தான் என்றும் ஓதப் பெறுவன். ஐயஞ்சாவன: ஐவகையஞ்சு: அவை பூதம் பொறி , எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு, குணம் , ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு உவப்பு, அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் . என்பன. சமயமே, பையஞ்சுடர்விடு. அப்பர், . - . - .
சந்திரன் பாம்பொடுஞ் சூடுஞ் சடாதரன் வந்தென்னை யாண்ட மணிவிளக் கானவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவித் தியக்கறுத் தானன்றே. பொருளுரை: ஆருயிர் நினைவாம் திங்களும், ஐம்புலன் நினைவாம் பாம்பும்,திருவருள் வெளியாம் சடைக்கண் அவற்றின் பிறப்புப் பகையை அகற்றி ஆருயிர் சிறப்புற ஐம்புலனும் துணையாக நிற்குமாறு பணித்தருளுபவன் சிவன். அக் குறிப்பே திங்களும் அரவும் சூடும் திருக்குறிப்பாகும். அத்தகைய திங்களும் பாம்பும் சூடும் திருச்சடையினைடையவன் சிவன். வலிய வந்து எளியேனை ஆட்கொண்டருளும் வரம்பிலா இயற்கைப் பெரும் பேரறிவுடைய மணி விளக்கானவன் சிவன். முடிவும் முதலுமில்லாத 'மாற்றம் மனம் கழிய நின்ற மறையோ' னானவன் சிவன். அத்தகைய அரும் பெரும் பொருளாகிய அவன் 'யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்' 'யாவர்க்குங் கீழாம் அடியேனை' ஆட்கொண்டு அடியேன் எண்ணத்தின்கண் வண்ணமுற வீற்றிருந்தருளினன். அதனால் அடியேன் யான் எனது என்னும் செருக்காகிய தியக்கை அறுத்தனன். திருவடி முயக்கை உறுதல் உற்றேன். தேனுங் . கூற்றுவ, . " கந்தமலர்க். அப்பர், . - .
பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டங் கிருக்குங் கருத்தறி வாரில்லை விண்டங்கே தோன்றி வெறுமன மாயிடில் துண்டங் கிருந்ததோர் தூறது வாகுமே.சிவபெருமான் தொன்மைக்கண் படைப்பாதி ஐந்தொழிலைக் கூட்டொருவரை வேண்டாக் கொற்றவனாய் நின்று திருவருள் வழியாகத் திருவுள்ளத்தளவானே புரிந்தருள்வன். அக் காலத்து நெடுமால் பிரமனையும் வடுவிலா அவனே படைத்துக் காத்தருள்வன். ஊழிக்காலத்து அவர்களையும் ஒடுக்கி மீண்டும் படைத்தருள்வன். இவ் வுண்மையினை அறிவார் அரியர். அங்கு விண்டுவாகிய மேகம்போற்றோன்றும் திருவடிப் பேரின்பப் பெரு வெள்ளத்தின்கண் உள்ளம் பதிதல் வேண்டும். அங்ஙனம் பதிதற்கு வேறு எதனையும் எண்ணாத திண்ணஞ் சேர் எண்ணம் வேண்டும். அதுவே வெறுமனம். அதுவே தூயவிருக்கை. அந் நிலை எய்தினால் அனைத்துலகினுக்கும் அப்பாலாய்ப் பொருள் தன்மையில் துண்டாக நிற்கும் சிவபெருமான் கலப்புத் தன்மையில் ஒன்றாய் உடனாய் ஒருங்கிருப்பன். அத்தகைய தூய வுள்ளப் பள்ளியறை அவனுக்குத் தூறாகிய இருக்கையாகும். குறிப்புரை: கண்டு - படைத்து. விண்டு - சிவானந்தம். இலயித்த. சிவஞானபோதம், . - . " பெருங்கடன். அப்பர், . - .
அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது அன்னையும் அத்தனு மாரறி வாரென்னை அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து அன்னையும் அத்தனை யான்புரந் தேனன்றே. பொருளுரை: ஈன்ற தாய் தந்தையரை அன்பு ஒன்றே காரணமாகக் கொண்டு அறிவதன்றி வேறு எதனைக் காரணமாகக் கொண்டு அறிய முடியும்? முடியாதென்பதாம். அக் குறிப்பு 'என்னை' என்பதனால் பெறப்படும். அன்னையாகிய திருவருளோடும், அத்தனாகிய பெரும் பொருளோடும் அடியேனும் உடனிருந்தேன். கூடியிருந்து அவர்கள் மாட்டு அளவிலாப் பேரன்பாம் பெருங்காதல் கொண்டமையால் அவர்களுக்கு அடிமையாய் நின்று அவர்தம் நிறைவிலடங்கி அவர்களை உணர்வின்கண் உணர்ந்தேன். உணரவே நொசிப்பாகிய சமாதியால் என்னுள் நீங்காவாறு மன்ன அமைத்தேன். இதுவே சமாதி என்னும் மயலுறுஞ் செயலறு நிலை; உயலுறுஞ் செயலுறும் நிலை. குறிப்புரை: அன்னை - திருவருள் சத்தி. அத்தன் - சிவன். யான் - உயிர். அன்பினால். . கோயிற்றிருப்பதிகம், . " செய்யாச். திருக்களிற்றுப்படியார், .
கொண்ட சுழியுங் குலவரை யுச்சியும் அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனன்றே. பொருளுரை: எங்குமாய் நீக்கமற நிறைந்து நிற்கும் சிவபெருமான் 'தானே உலகாம்' தன்மையன். அவன் 'தமியேன் உளம் புகுந்'தருளினன். அதனால் 'இன்று யானே உலகென்பன்' என்பதற்கிணங்கக் கடல், சிறந்த பனிமலையுச்சி, அண்டர்கள், அண்டத் தலைவர்கள், ஆதியாகிய அரன், எண்புலக் காவலர் முதலாகிய அனைவரும் என் வயப்பட்டனர். என்னை யெனின்? சிவபெருமான் என் வயப்பட்டதால் என்க. வேந்தற்கு வயப்பட்டார் அனைவரும் வேந்தன் உரிமைக்கும் வயப்படுவதிதற் கொப்பாகும். இவ் வுண்மை "தொழப்படும் தேவர்தம் மால் தொழுவிக்குந்தன் தொண்டரையே" என்னும் அப்பர் அருண்மொழியான் உணர்க. வயப்படவே அடியேனும் உய்ந்தொழிந்தேன். உரிமை - மனைவி. குறிப்புரை: சுழி - கடல். அண்டத் தலைவர் - இந்திரர். ஆதியும் மாயையும் உண்டனர் - வசப்பட்டனர். அரக்கொடு. சிவஞானபோதம், ; - . " முழுத்தழல். அப்பர், . - .
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன் தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே. பொருளுரை: பிறப்பு இறப்புகட்கு உட்படும் ஆருயிர் சிவனை மறந்தவுயிர். அவ்வுயிர் சிவனை நினைப்பதற்கும் பிறவாமையிற்றிளைப் பதற்குமாக நமன்முன் செல்லும். இவ்வுண்மை வரும் போற்றிப் பஃறொடையடிகளான் உணர்க: ."வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து நானா விதத்தால் நலம்பெறுநாள் - தான்மாள வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட - இற்றைக்கும் இல்லையோ பாவி பிறவாமை என்றெடுத்து நல்லதோர் இன்சொல் நடுவாகச் - சொல்லியிவர் செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று " அத்தகைய நமன்றன் வெந்தூதுவர் சிவனைமறவா நமக்கு உறவாவர். மறந்து வருவரேல் அடியேன் சிவன்றன் மீளாவடிமை என்று தாமே உணருமாறு அவன்றன் அடையாளமாகிய திருவைந்தெழுத்துப் படைக் கலத்தை வெளிப்பட வழுத்துவேன். இதுவே ஞானவாள். 'ஞானவாள் ஏந்துமையர்' என்பதும் இப்பொருட்டு. சிவபெருமான்றன் தூதுவர் வருவராயின் அடியேன் வணங்கி உடன்செல்வது மாறா உறுதியாகும். பிறப்பிற்கு ஏதுவாகிய இருள்சேர் இருவினைகளையும் திருவருளால் பண்டே அறுப்பித்துள்ளேன். 'சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு' என்பது செந்தமிழ் முதுமொழி அத்தகைய சிவத்தைப் பேணும் சிந்தையர்க்கு எதிராவர் யாரே? ஒருவரும் இலர் என்பதாம். 'எதிராமே ' என்னும் பாடத்திற்குத் தவம் வரும் சிந்தையர்க்குச் சிவபெருமான் வெளியாவர் எனக் கூறுக. ஞமனென்பான். அப்பர், . - . " கார்கொள். " " . - . " வரையார். " . - .
சித்தஞ் சிவமாய் மலமூன்றுஞ் செற்றவர் சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தங் கத்துஞ் சிலுகுங் கலகமுங் கைகாணார் சத்தம் பரவிந்து தானாமென் றெண்ணியே. பொருளுரை: இடையறாது திருவைந்தெழுத்தையே கணிக்கும் நற்றவப் பேற்றால் கணிப்போர் நெஞ்சகம் சிவனிருக்கையாய் சிவவடிவாய்த் திகழும். அச் சிவபுண்ணியப் பேற்றினர் மும்மலப் பிணிப்பும் அற்றவ ராவர். அத்தகையோர் இயல்பாகவே முக்குணமற்றவராய், மிக்க எண்குணம் உற்றவராய் உள்ள சிவபெருமான் அடியவராவர். சிவனடியாராதலே சிவனாதல். அது, "பெருமையால் தம்மையொப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்" என்னும் சேக்கிழார் திருமொழியால் உணரலாம். முக்குணம் மாயாகாரியம். எண்குணம் மாயாத திருவருட் காரியம். மலப்பசையாகிய வாசனைப் பிணிப்பிலும் தொடக்குறார். எனவே அவர்கள்பால் பிதற்றுரையும், சிறு சண்டையும், பெரும் பெரும் பூசலும் உண்டாகா. சொல்லும் பொருளும் பரவிந்துவாகிய மாயாகாரிய மென்று விட்டொழிவர். பரவிந்து: நாதவிந்துக்களைப் பயக்கும் மாமாயை. நிர்க்குணனாய். சிவஞானபோதம், . - .
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறிலவன் நீளிய னாமே. பொருளுரை: நினைப்பும் மறப்பும் சிவனைக் கலவாது வேறிருக்கும் நிலையில் நிலவுவன. இவ்விரண்டும் இல்லாதவர் நெஞ்சம் வினைப் பற்றறுக்கும் விழுமிய நெஞ்சமாகும். படிக்கவேண்டுமென்னும் நினைப்பும் படித்தபின் மறப்பும் பாடம் கைவரப்பெறாத முற்றாநிலையின்கண் உண்டாம். பாடம் கைவந்தபின் அவை இரண்டும் உளவாகா. அதுபோல் இறைவன் திருவடிக்கலப்பு எய்தியபின் நினைப்பும் மறப்பும் தாமாகவே அகலும். கற்புறுநல்லார் சொல்லரும் கழுத்தில் மாண்கலமாம் திருத்தாலி பூட்டப்படுவதன் முன்பூட்ட வேண்டுமே என்னும் நினைப்பும் கால இடையீட்டால் அதன்கண் மறப்பும் உண்டாவன இயற்கையேயாம். திருத்தாலி கழுத்தில் பூட்டப்பட்டதன்பின் அத் திருத்தாலி தாமாகவே அந்நல்லார் திகழ்வர். அதுபோன்றதே சிவபெருமானாகவே நிற்றல். அங்ஙனம் நிற்பார்தம் வினைப்பற்றுத் தாமே அறுபடும். வினைப்பற்றறவே விமலன் மேலோங்கி விளங்குவன். வினைப்பற்றறுக்கும் விமலனை நாடி இடையறாது ஒழுகப்பெறின் என்றும் ஒன்றுபோல் நின்று இயலும் இயல்பினனாவன்.
சிவபெரு மானென்று நானழைத் தேத்தத் தவபெரு மானென்று தான்வந்து நின்றான் அவபெரு மானென்னை யாளுடை நாதன் பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. பொருளுரை: திருவருட்டுணையால் சிறப்பும் வனப்பும் பெருமையும் இயல்பாகவே ஒருங்குடைய சிவபெருமானென்று அடியேன் காதலால் கசிந்துருகிக் கண்ணீர் மல்கநின்று மெல்லிய இனிய தமிழால் வல்லை அழைத்தேன். அழைத்தலும் அவன் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோனாதலின் முழுநீறு பூசிய முனிவனாய்த் தவக்கோலத்துடன் தவப் பெருமானாக எழுந்தருளிவந்து காட்சி தந்தருளினன். அவமாகிய பற்று அற்ற பெருமானும் அவனே. அதனால் அவன் பற்றற்றான் என்று பரவப்படுகின்றனன். அவனே அடியேனை ஆளுடைய நாதன். உண்மைப் பெருமானாய் உலக முழுமுதல்வனாய் என்றும் பொன்றாதுநின்று நன்றருளும் நம்பனை 'நமசிவய' என நற்றமிழால் பற்பல்காலம் வாழ்த்திப் பணிந்து நின்றேன்.
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத் துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன் அணிந்துநின் றேனுடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. பொருளுரை: யாவர்க்கும் எவைக்கும் யாண்டும் மேலாகவும் முழுமுதற் காரணமாகவும் விளங்கும் சிவபெருமானைத் திருஅருளால் பணிந்து நின்றேன். 'பணிதல் எல்லார்க்கும் நன்றாம்' என்னும் பண்பினை மறவாது துணிந்து பணிந்து நின்றேன். அச் சிவபெருமான் புகலே மாறாப் புகலெனத் துணிந்து நின்றேன். அதனால் இனி மற்றொன்றும் வேண்டேன். உடலாகிய உள்ளத்தின்கண் அவனை அணியாக அணிந்து சேர்ந்து நின்றேன். ஆதிப்பிரான் அடியிணைக்கீழ் அடங்கினமையால் எல்லா அல்லலும்போய் அமைதிபெற்று நின்றேன். சிவனே விழுமிய முழுமுதல் என்றும், இறப்புப் பிறப்பில்லா இறைவனென்றும், எட்டுவான் குணத்து எம்மான் என்றும், பிழைபொறுக்கும் விழைதகு பெரியோனென்றும், ஆருயிர்கட்கு இறவா இன்பப் பெருவாழ்வாம் சிறப்பருளும் செம்பொருளென்றும், இயற்கை உண்மை அறிவு இன்பப் பண்ணவனென்றும், இயற்கை அன்பு அறிவு ஆற்றல்சேர் 'வினையினீங்கி விளங்கிய அறிவுசேர் முனைவன்' என்றும், ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் என்றும், பொன்றா இனியன் என்றும், 'போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணிய' னென்றும், ஐந்தொழில் அருளால் புரியும் மைந்துசேர் மன்றவாணனென்றும், 'சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்' என்றும், செம்பொருட்டுணிவினர்தம் சீருடைநெஞ்சகம் அகலா ஏருடை ஏறோனென்றும், 'பொக்கமிலாதவர் நெஞ்சில் புக்குநிற்கும் பொன்னார் சடைப்புண்ணிய' முக்கணனென்றும், 'தென்னா டுடைய சிவனே போற்றி' எனவும் 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனவும் இயம்பப்படும் இயவுள் என்றும், 'கல்லார் நெஞ்சில் நில்லாக் கடவு'ளென்றும், இவை முதலாகிய பிறவும் பெம்மான் சிவன் தன்மைகளை விளக்கும் செந்தமிழ் மறைமொழிகளை அவனருளால் கண்டுகொண்டேன். "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்னும் அப்பர் அருளிய செந்தமிழ்ச் செழுமறையும் காண்க. வேண்டேன். . உயிருண்ணிப் பத்து, .
என்னெஞ்சம் ஈசன் இணையடி தாஞ்சேர்ந்து முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறுந் தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னஞ்செய் தென்னைப் பிணக்கறுத் தானன்றே. பொருளுரை: அடிமையாகிய என்னுடைய எளிய நெஞ்சம் சிவபெருமானின் அறிவு ஆற்றல்களாக விளங்கும் எங்கும் பங்கமில் செறிவாகத்தங்கும் திருவள்ளுவநாயனார் அருளிச்செய்த பெருவாழ்வாம் திருக்குறளின் இணையடிகள் நேர் இணையடிகளைப் புணையென அருளால் சேர்ந்தது. சேர்தல் - இடைவிடாது நினைத்தல். ஆதலால் அங்ஙனம் நினைக்கும் குறிப்பாகிய முன்னஞ்செய்து 'பாடிப் பரவிப் பணிந்தது'. பணியவே பிறப்பு முழுவதும் அறுந்தது. முழுவதும் அறுவது வழிப்பேறும் ஒழிந்து விழுப்பேறு ஒன்றே எய்துவது. வழிப்பேறு பதமுத்திகளும் அபரமுத்திகளும் விழுப்பேறு இரண்டறக்கலந்து எங்குமிலாத திரண்ட இன்பத்தினை அன்புடன் நுகர்ந்து அழுந்தல். ஆருயிர்கள் தம்முனைப்போ டுள்ளவரையும் அவர்தம் நெஞ்சம் சிவனெஞ்சமாகாது. அஃதாவது சிவனை இடைவிடாது நினைப்பதால் சிவன் மேலோங்கித்திகழும் நெஞ்சம் சிவனெஞ்சம். அஃது ஆகாது என்பதாம். சிவனெஞ்சம் ஆகாதெனவே அம்முனைப்புள்ள நெஞ்சத்தில் சிவன் விளங்காத தலைவனாக இருக்கின்றான். இது "துஞ்சுங்கால் தோண்மேலராகி விழிக்குங்கால், நெஞ்சத்த ராவர் விரைந்து" என்னும் திருவள்ளுவப்பயனை மெய்ப்பிக்கின்றது. துஞ்சுதல்: சிவனை மறத்தல். விழித்தல்: அவனை நினைத்தல். தோண்மேலாதல்: பிறப்பினிற் செலுத்தல். நெஞ்சத்தராதல் சிறப்பினிற் செலுத்தல். மேலும் "நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல், அஞ்சுதும் வேபாக் கறிந்து" என்னும் செந்தமிழ்ப் பொதுமறைக்கண் மேல்நோக்காக நோக்கின் அன்பியற் பொருளும், நுணுகிநோக்கின் அருளியற் பொருளும், நுகர்ந்து நோக்கின் அடியியற் பொருளும் விளங்க அருளிய வற்றானும் உணரலாம.் அன்பியல் - உலகியல். அருளியல் - வீட்டியல். அடியியல் - பேற்றியல். முதற்கண் அன்பியலாக நோக்கின் உடலுறவாங் காதலர் நெஞ்சத்தாராயுளர். அதனால் வெப்பமான பொருள்களை உண்ண நினைக்கவும். அஞ்சுகின்றேன்; அவர்தம்மைச் சுட்டுவிடுமெனக் கொள்ளலான். அருளியலாக நோக்கின் ஆருயிர்க் காதலானாகிய சிவபெருமான் நெஞ்சத்து என்றும் துஞ்சாது வஞ்சித்து நிற்கும் என் உள்ளங்கவர்கள்வன்: ஆதலால் தீய நினைவுகளாகிய வெப்பமானவற்றை நினைக்க அஞ்சுகின்றேன்; அவர்க்கு வெறுப்பினைத் தருமாகலான். அடியியலாக நோக்கின், என்னெஞ்சம் அவர்க்கு அடிமைப்பட்ட ஞான்றே அவருடைமை எனப் புதுப்பிக்கப்பட்டது. எனவே அவர் நினைப்பித்தாலன்றி ஏதும் நினைக்கும் நினைப்பினேன் அல்லேன். இது 'மறக்குமாறிலாதவென்னை மறப்பித்துப், பிறக்குமாறு காட்டினாய்' என்னும் திருநெறிய தமிழால் விளங்கும். ஆதலால் ஏனையார் நன்னெறி நான்மையிற் புகாது புன்னெறிபுக்குப் பிறப்புக்கு வித்தாம் தீயன அவர் எண்ண அஞ்சுகின்றேன் அவர்க்கு வெறுப்பினைத் தருமாகலான். இப் பொருட்கு வெய்துண்டலென்பதை உண்ண எனத் திரிக்க. ஆயின் என்னெஞ்சம் அவர் தன்னெஞ்சமாயது. "நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" என்றிருப்பதல்லால் ஏதுமிலேன். தலைவிதியாகிய ஊழ் ஏன்ற வினை எனப்படும். அதுகாரணமாக நிகழ்வது ஏறு வினையாகும். அவற்றைத் தன்னடிநினைவால் முறையே உடலூழாய், பிறர் ஊழுக்கு உரமாய்க் கழித்தொழிப்பன். ஆதலால் பின்னஞ்செய்தலாகிய வேறுபடுத்தினன். படுத்தவே என்னைப் பிணக்கினின்றும் விடுவித்தனன் 'என்னைப் பிணக்கறுத்தான்' என்பதை 'என் பிணக்கு ஐ அறுத்தான்' எனக்கொண்டு என்னைச் சார்ந்த ஐவகை மலங்களையும் அறுத்தான் என்பதனை ஆய்ந்தாய்ந்துணர்ந்தின்புறுக.
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணுங் கணக்கறுத் தாண்டனன் காணந்தி என்னைப் பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம் வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே. பொருளுரை: அடியேனை நந்தியாகிய சிவபெருமான் உலகியற் பிணக்குகளினின்றும் விடுவித்தான். மூப்பினையகற்றினான். வாழ்நாட்கணக்கை எண்ணி ஆண்டு முடிந்தது மாண்டு மடியவேண்டு என்னும் உலகோர் சொல்லும் கணக்கினையும் அறுத்து ஆண்டுகொண்டனன். அதனால் அடியேன் முன்வந்து தோன்றும் துன்பங்களை அகப்புறக்கலன்களாகிய எண்ணம், எழுச்சி, இறுப்பு என்னும் கருவிகளின் தன்மைகள் எனக் கண்டு கெடுத்தொழிந்தேன். ஒழியவே முழுமுதற் சிவபெருமான் வெளிப்பட்டுத் திருவருள்புரிந்தனன். பிணக்கி. . திருக்கழுக்குன்றப் பதிகம், . " ஓவுநாளுணர். ஆரூரர், . - .
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப் பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு அவனெந்தை யாண்டருள் ஆதிப் பெருமான் அவன்வந்தென் னுள்ளே யகப்பட்ட வாறே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் பேரருளால் நந்தி முதலிய தேவர் குழாத்துடன் எழுந்தருளி வந்தனன். வந்து அடியேனுக்குப் பிறப்பு இறப்புக்களைத் தந்து பேராப் பெரும் துன்பந்தரும் சிற்றறிவு சுட்டறிவுகளாகிய உயிர்மை, உடைமை என்னும் பசு பாசத் தன்மைகளை அறுத்தருளினன். அவனே அடியேனைப் பழுதின்றி எழுமையும் புரக்கும் எந்தையாவன். அடியேனை ஆண்டுகொண்டருளிய ஆதிப் பெருமானும் அவனே. அவன் தன்னருளால் அடியேன் உள்ளத்துள் வந்துற்றனன். குறைவிலா. . கோயிற்றிருப்பதிகம், . " நெடிதுபோ. . கண்ணப்பர், .
கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில் அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே. பொருளுரை: கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும் சரக்குநிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முளையும் கிழங்கும்போன்று தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ்வின்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக் கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டுகொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது. குறிப்புரை: கரும்பும் தேனும் - உண்டலும் உறங்கலும். அரும்பும் கந்தமும் - தோன்றுதலும் நிலைத்தலும். வெளியுறக் கண்டபின் நன்றாய் அனுபவித்த பின். கரும். . . . . . . . புளித்ததே - உண்டலும் உறங்கலும் ஒழிந்தன. அண்டர் வாழ்வும். அப்பர், . - . " விடையும். " . - . " கொள்ளேன். . மெய்யுணர்தல். .
உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச் செய்வன எல்லாஞ் சிவமாகக் காண்டலாற் கைவள மின்றிக் கருக்கடந் தேனன்றே. பொருளுரை: என்றும் உள்ளதாய் நின்று பயன் அருளுவதாய் உள்ள 'சீலம், நோன்பு, செறிவு, அறிவு' என்னும் நன்னெறி நான்மையின் வாயிலாக அடியேனைப் பயிற்றுவித்து அவற்றினின்று மீட்டுவித்தருளினன். பின்பு வள்ளலாகிய சிவபெருமான் தன் திருவடியின்பத்தினை உண்பித்தருளினன். அவனருளால் அச்சிறப்பினைப் பாடிக்கொண்டிருக்கின்றேன். பாடுதல் என்பது படர்தலும் பாடலும் ஆடலும் ஆகிய முத்திற வினைகளும் நத்தும் அவனடிக்கே ஆக்குவித்து அன்பின் விளைவாம் இன்பமொன்றே துய்த்துக்கொண்டிருத்தல். ஆண்டான் கருவியாகப்பூண்ட அடியேன் வாயிலாக ஈண்டு நிகழ்த்தப்பெறும் செயலெல்லாம் சிவச் செயலெனவும், காண்பனவெல்லாம் உள்ளுறையும் அவன் திருவருளெனவும் உணர்வின்கண் உணர்த்திக் கண்டுகொண்டிருக்கப் பணித்தருளினன். எஞ்சுவினையாகிய கைவளம் எரிசேர் வித்தென மாய்ந்தமையானும், ஏறுவினை 'உணக்கிலா வித்தென' ஓய்ந்தமை யானும், ஏன்றவினை உடலூழாய்த் தேய்ந்தமையானும் இன்னமோர் அன்னைவயிற்றில் புக்குப் பின்னைப் பேதுறுவிக்கும் கருநிலை கடந்து அருநிலையாம் சிவனிலை எய்தினேன். அயன் தலை. . திருப்பொற் சுண்ணம், . " பாட. " ஆனந்தாதீதம், . " குலம் பாடிக். " திருத்தெள்ளேணம், .
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று தூண்டா விளக்கின் றகளிநெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி மாண்டா னொருவன்கை வந்தது தானன்றே. பொருளுரை: புலன்வடிவாகச் செல்லும் உள்ளத்தாமரையினைத் திருவருளால் திருப்பிச் சிவபெருமான் திருவடிக்கண் வைத்தல்வேண்டும். வைக்கவே அங்கியாகிய திருவடிமெய்யுணர்வு மேன்மேன் முறுகிவளரும். தூண்டாவிளக்கின் தகளித்தன்மை தொன்மையே வாய்ந்த நன்மைக்குரிய ஆருயிரினிடத்து நெய்யாகிய திருவடிப் பேரின்பத்தைத் திருவருளால் சேர்த்தல்வேண்டும். சேர்க்கவே அவ் வுள்ளமாகிய அமைதிமிக்க அருள்நிறை ஒருத்தி ஏற்றுக்கொண்டனள். அவளே நல்லாள். அவளே படியிலா முடிமணியனையாள். அந்நிலை அருளால் கைவந்துறவும் அறியாமையைச் செய்யும் ஆணவவல்லிருளென்னும் கொடியோன் செயலற்று மாண்டு மடிந்து ஒடுங்கினன். குறிப்புரை: மீண்டார் - இந்திரியப் போக்கினின்றும் மீண்டார். கமலம் - உள்ளக்கமலம் தூண்டாவிளக்கு - சீவன். தகளி - உள்ளம். ஒளிக்கு. கொடிக்கவி, .
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருவ இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் தானன்றே. பொருளுரை: திருவருள் நினைவால் நீங்காதோங்கும் பேரன்பால் உள்ளுருகி இன்பவேட்கைப் பெருக்க இயல்பாம் இனிய அழுகையினைப் புரிவேன். அழுது குறையிரந்து முறையிடுதலாகிய அரற்றுதலைச் செய்வேன். எலும்பும் உருகுமாறு இரவும் பகலும் இடைவிடாது 'தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று அழுது காமுற்று அரற்றி' வணங்குவேன். என் உணர்வாகிய பொன்னின்கண் அருளால் அழுத்திய விலைவரம்பில்லா இயற்கைநிலைசேர் செம்மணியை, தென்னாட்டார்க்குரிய சிவனே. எந்நாட்டவர்க்கும் இறைவனாகலின் அத்தகைய இறைவனை, 'என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளிய' ஆண்டவனை அவன் திருவடியுணர்வால் காணப்பெறுவேன். காணப்பெறின் தின்பதாகிய ஊடுதலைப் புரிவேன். கடிப்பதாகிய உணர்தலை ஆற்றுவேன். திருத்துவதாகிய புணர்தலைப் பூணுவேன். தான் - அசை.
மனம்தான் விரிந்து குவிந்தமா தவ்வம் மனம்தான் விரிந்து குவிந்தது வாயு மனம்தான் விரிந்து குவிந்தமன் னாவி மனம்தான் விரிந்துரை மாண்டது வீடே பொருளுரை: நன்னெறிநான்மை நற்றவத்தால் திருவருள் வீழ்ச்சி எய்தப்பெறுவர். அங்ஙனம் பெற்றவர் மனம் திருவருளியிலில் விரியும். பின்பு திருவடியியலின்கண் வேட்கையுண்டாகும். வேட்கையுண்டாகவே அடியேனைப் 'போக்கருளீர்' என்று முறையிட நேரும். நேரவே திருவடிப் பெருவாழ்வின்கண் உள்ளம் குவிதலாகிய ஒடுங்குதலை எய்தும். இவ் வுண்மை வரும் திருநெறிய தமிழான் உணர்க. "தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம் " "பாடிப் பலநாள் பயின்றதற்பின் மூவரடி நாடினரே நம்மடிகள் நாயனருள்-கூடியதும் வீடே விழைந்துள்ளார் வேண்ட இருந்தஅவர் " என்பதனையும் நினைவு கூர்க. அந் நிலையின்கண் உறைத்து நின்றார்க்கு இயல்பாகவே உரை மாண்டகலும். அதனால் உயிர்ப்பு ஒடுங்கும். முன் உயிர்ப்பின்கண் விரிந்தமனம் இப்பொழுது குவிந்து ஒடுங்கும் திருவடியின்பின்கண் நிலைபெற்ற ஆருயிரின் மனம் திருவருளியலில் விரிந்தநிலை நீங்கி திருவடியியலின்கண் ஒடுங்கும். உரைமாண்டதொன்றை உரைமாண்ட நிலையிலேயே எய்துதல் ஏற்புடைத்தாகும். உடைமாண்டதொன்று - மாற்றம் மனங்கழிய நிறை மறையோன். உரைமாண்ட நிலை-மேன்மை ஞானமாகிய மோனநிலை.
ஒன்பதாம் தந்திரம். தோத்திரம் மாயனை நாடி மனநெடுந் தேரேறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக் காயமின் னாட்டிடைக் கண்டுகொண் டேனன்றே. பொருளுரை: மாயை நிலைப்பதற்குத் தாரகமாகிய நிலைக்களமாக இருப்பவன் சிவபெருமான். அவன் அந் நிலையின்கண் மாயன் என்று அழைக்கப்படும். ஆருயிர்கள் அவனை அடைய நாடி மனமாகிய நெடிய தேரேறி ஓடும். ஓடுவதென்பது எல்லையிலா எண்ணத்தை அல்லும் பகலும் ஓயாது எண்ணுதல். அவ் வெண்ணத்தினையே நாடு என நவின்றனர். அவ் வெண்ணத்தினுக்கோர் எல்லை காணாமையால் புலம்புறுவர். இதுவே 'போயின நாடறியாது புலம்புவர்' என்பதாம். தேயமும் நாடும் நேயமிக்கு ஓயாது ஓடிச்சென்று நாடுவர். அடியேனும் புகுவார் பின் புக்குப் பன்னாள் அலைந்தேன். பொன்னான இவ் வுடம்பெனும் நாட்டின்கண் நல்லருளால் நாடிக் கண்டுகொண்டேன். குறிப்புரை: மாயனை - மாயையோடு கூடிய சிவபிரானை. போயின நாடு - சங்கற்பத்தின் எல்லை. காயமின்னாட்டிடை - உடம்பினுள்.
மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவ ராரெனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றேமெய்ப் பாடறி வீரன்றே. பொருளுரை: நிலைபெற்ற கைலாயமலை என்று சொல்லப்படும் அகப் புறக்கலனாம் அந்தக் கரணங்களுள், அம் மலைபோல் காணப்படும் மதயானையாகிய உணர்வெழுச்சியில் தோன்றும் தூயமனத்தின்மேல் மெய்யடியார்கள் செந்தமிழ் இன்னிசை வந்தவர் பாட எழுந்தருளி இருந்தவர் யாரெனில் காலமெய்க்குக் காலமாக விளங்கும் காலகாலனாகிய விழுமிய முழுமுதற் சிவபெருமான் என்க. அவர்தம் திருப்பெயராம் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தைப் பலகால் எடுத்து ஓதினர் என்க. அவர்கள் யாரெனில் பெருமைசேர் திருநீலகண்டப் பெருமானாகிய சீகண்டவுருத்திரன், திருநந்திதேவர் முதலியோர் என்க. குறிப்புரை: மன்னுமலை - உடம்பு. மதவாரணம் - மனம். கால முதல்வனார் - தத்துவங்களைப் படைத்தவன். பாடு - பெருமை.
முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணா தரற்றுகின் றேனையோர் பித்தன் இவனென்று பேசுகின் றாரன்றே. பொருளுரை: தென்றலும் தமிழும் என்றும் நின்று நிலவும் தென்கடல் பிறந்த வான்பெரும் முத்தினுள் சிறந்த முத்து ஆணிமுத்து எனப்படும். அம் முத்தினும் சிறந்தவன் சிவபெருமானாவன். ஆருயிர் உள்ளத்தினுள் பேரறிவுப் பேரொளிப்பிழம்பாய்த் தோன்றுபவனும் அவனே. அந் நிலையில் அவன் முகிழிள ஞாயிறெனப்படுவன். அவன் திருவடி இணையினை எல்லாத் தேவரும் வல்லவாறு தொழுவர். அத்தகைய சிவபெருமானை உண்மைநிலையில் - உணர்வுநிலையில் அருளால் கண்டு தன்னைக் காணாக்கண், கண்ணாடியைக் காணுங்கால் தன்னை அகக் கண்ணாடியினகத்துக் காணுமாறு போன்று காணப்பெற்றிலேனே என அல்லும் பகலும் ஒல்லும் வாயெல்லாம் ஓவாதரற்றினன். அதனைக் கண்ட பிறர் அடியேனைப் பித்தனென்று முடிவுசெய்து படியின்மிசைத் தூற்றுகின்றனர். கண் தன்னைக் காணுமாற்றைப் பின்வருமாறு நினைவு கூர்க: "கண்ணா டியைக்காணும் கண்ணே தனைக்காணும் பெண்ணார்தாள் காணவுயிர் பேசுங்கால்-கண்ணாடி உள்தோன்றும் பல்பொருளும் ஓர்வாம் திருவடியின் உள்தோன்றும் பல்லுயிரும் ஓர். குறிப்புரை: முகிழ் - உள்ளத்தில் இருக்கின்ற.
புகுந்துநின் றானெங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் றானெங்கள் போதறி வாளன் புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம் புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. பொருளுரை: திருவருள் நினைவால் பொருவரும் பெண்ணொரு கூறனாம் பண்ணமர் புண்ணியன் அடியேன் நெஞ்சகத்துப் புகுந்து நின்றனன். அவனே அறவாழி அந்தணன். அடியேங்களுக்குச் செவ்வி வருவித்துத் திருவடியுணர்வினைப் போதிக்கும் முற்றுணர்வினனும் அவனே. அத்தகைய போதறிவாளன் என்னுள்ளம் புகுந்துநின்றனன். மெய்யடியார்கள்தம் திருவுள்ளத்தை 'நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பித்து'ப் புகுந்து நின்றவனும் அவனே. அத்தகைய பெரும்பொருட்கிளவியானை அவன் என்னகம் புகுந்தமையால் போற்றுகின்றேன். இது, பாடப் பயிற்றியான் பண்பதனைப் பாடலொக்கும், கூடச்செய் தான்தாள் கூறல், என்பதனையொக்கும். குறிப்புரை: போதறிவாளன் - எல்லாம் அறிபவன்.
பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன் வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும் நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனன்றே. பொருளுரை: பூதக் கண்ணாடி யென்பது முகத்துக் காணும் கட்பொறியாகும். அக்கண்ணுக்குப் புலனாம் வண்ணம் அமைந்த நிலைமையன் " என்னும் திருக்குறளான் உணர்க. பிறப்பு: திருவருளால் கொடுக்கப்படும் வினை முயற்சிக்கேதுவாம் கருவுறா நுண்ணுடல். குறிப்புரை: பூதக்கண்ணாடி - தூலக்கண். போதுளன் - உள்ளத் தாமரையில் இருப்பவன். வேதக்கண்ணாடி - ஞானக்கண். நீதிக்கண்ணாடி - தத்துவஞானம். கீதக்கண்ணாடி - இசை.
நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள் ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரங் கண்டொழிந் தாரன்றே. பொருளுரை: 'நந்தி நாமம் நமசிவய' என்பது பொருள்மறை ஆதலின் அதனை அகம்புறம் தூயராய்க் கணித்தும் ஓதியும் சிவபெருமானை வழிபடுங்கள். அங்ஙனம் வழிபட்டால் ஏமமாகிய இன்பம் அளவின்றிப் பெருகும். ஈண்டு ஆயிரம் என்பது அளவின்மையாகும். அதுவும் நும் உள்ளத்துள்ளே ஊற்றெடுத்து வெள்ளம்போன்று மேன்மேலும் பெருகும். அத் திருவைந்தெழுத்தால் சிவவேள்வியினையும் அளவின்றிப் புரியுங்கள். அங்ஙனம் புரிந்தோர் 'வேண்ட முழுவதும்' பெற்று வேட்கையடங்கினர். குறிப்புரை: ஆயிரம் என்பது ஈண்டு அளவின்மை. ஏமம் - சுகம். ஓமம் - ஐம்பெரும் வேள்விகள். காமம் - சுகதுக்கங்களை அனுபவிக்கும் உடல்.
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம் வானோர் உலகம் வழிப்பட மீண்டபின் தேனார வுண்டு தெவிட்டலு மாகுமே. பொருளுரை: செம்பொருட்டுணிவின் சிறப்பினை எய்துதல்வேண்டும். அதற்கு நன்னெறி நான்மையினை நாடொறும் விடாது நயனுறச் செய்தல்வேண்டும். நானெறி 'சீலம், நோன்பு, செறிவு, அறிவு.' இவை ஒவ்வொன்றும் நந்நான்காக விரியும் எனவே அவை பதினாறாகும். இவையே 'நானாவிதம்' என ஓதப்பட்டன. இவ்வகைத் திருத்தொண்டினை அருளால் நாடொறும்புரிந்து நந்தியை நாடுங்கள். உடம்பகத்துக் காணப்படும் மூலாதாரம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைகளும் தனித்தனித் தாமரை வடிவாக இருப்பன என்ப. இத் தாமரைகளின் ஊடு முறையாக உயிர்ப்பின்வழிச் சென்று உணர்தல் வேண்டும். உணர்ந்தபின் அவ்வாதாரங்களினின்று இயைந்து இயக்கும் தெய்வங்கள் புலனாகும். இயைந்தியக்கும் தெய்வம் அதிட்டான தெய்வம். அவை, 'பிள்ளையார், அயன், அரி, அரன், ஆண்டாள், அருளோன்' என்ப. புலனாகியதும் அத் தெய்வங்கள் வழிபடுவார்க்கு வயப்பட்டருளும். இந்நிலையில் திருவடியின்பத் தெவிட்டாச். செழுந்தேனை ஆரப்பருகி அளவிலா இன்பத்தழுந்துதல் உண்டாம். குறிப்புரை: நானாவிதம் - சரியையிற் சரியை முதல். ஊனார் கமலம்- ஆறு ஆதாரங்கள். வானோர் உலகம் - நிராதாரங்கள். தேன் - சிவானந்தம்.
வந்துநின் றானடி யார்கட் கரும்பொருள் இந்திர னாதி இமையவர் வேண்டினுஞ் சுந்தர மாதர் துழனியொன் றல்லது அந்தர வானத்தின் அப்புற மாகுமே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமானைக் கெழுமிய செந்தமிழ்த் திருமுறை மறையினால் வழிபடுவோர் சிவனடியாராவர். அவ் வழிபாட்டின் பெறுபேறாக எல்லா நிலைகட்கும் அப்பாலாகி நின்றினிதருளும் அவன் அரும்பொருள் எனப்படுவன். அவன் அகம்புறமாய் ஈரிடத்தும் முன்னேவந்து எதிர்தோன்றியருளினன். அருளவே 'செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால். எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக' என்பது போன்று பேரின்பம் பெருகுவதாயிற்று. இந்திரன் முதலாகச் சொல்லப்படும் தேவர்கள் விரும்பினும் ஆண்டெல்லாம் மாண்டு மடிவதும், மீண்டும் பிறப்பினைத்தருவதுமாய பெண்ணின்பமே உண்டாகும். கண்ணுதலோன் காட்டிக் காணும் திருவடியின்பம் அவ்விண்ணுலகில் கனவு காண்டற்கும் ஒண்ணாத தொன்றென்க: 'அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்தொன்றிலோம்' எனவும், 'கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' எனவும் முறையே அருளான் எழுந்த மறையும் மறை முடிவும் மேலதனை வலியுறுத்தும் என்க. குறிப்புரை: சுந்தர மாதர் - அழகு பொருந்திய மாதர். துழனி - போகம். அந்தரவானம் - ஒளிஉலகம்.
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள் எண்ணிற் கலங்கி இறைவன் இவனென்னார் உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத் தெண்ணிற் படுத்தச் சிவனவ னாகுமே. பொருளுரை: விண்ணின்கண் நீருக்கு வெண்மையும் இன்சுவையும் தன்னியல்பான் உள்ளன. ஆனால் அந்நீர் மண்ணின்கண் வந்தபின், தான் சேர்ந்த மண்ணினுக்கேற்றவாறு வண்ணமும் சுவையும் எண்ணமின்றித் திரிந்து நண்ணுகின்றது. இதுவே சார்ந்ததன் வண்ணமாய் விளங்கும் இயல்பும் உரிமையும் உள்ள ஆருயிர்கட்கு ஒப்பாகும். மண்ணிற்சார்ந்து எண்ணமின்றித் திரிந்த நீர்போல் மாக்களும் சார்ந்த இடத்துக்கு ஏற்றவாறு உள்ளந் திரிபுறுவர். அத் திரிபுணர்ச்சியினால் அறியாமையான் மூடப் பெறுவர். உண்மைத் தன்மைத் தெய்வம் இதுவென வுணரார். இறைவன் இவன் என மெய்ம்மை யுணரார். எண்ணித்திற் கலங்குவர். நல்லார் அத் தண்ணீரை வீட்டிற்குக் கொண்டுவந்து தேற்றுவித்தினால் தெளித்து இன்சுவைத்தாய் விடாய் தணியப் பருகுவர். அதுபோல் 'முத்திநெறியாத மூர்க்கரொடு முயலும்' ஆருயிர்களைப் 'பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்' சித்தமலம் அறுவித்துச் சிவமாக்குவன்' செம்பொருட் செல்வன். அதனால் அவ்வுயிரும் கலக்கத்தினின்றும் நீங்கி நலக்க நலமருளும் சிவனாகும். குறிப்புரை: கலங்கிய நீரின் தன்மை தெரியாததுபோல, எண்ணங்களால் கலக்குண்ட மனத்தையுடையார் சிவத்தின் தன்மையை அறியமாட்டார். சித்தத்தைக் கலங்கவிடாமல் தெளியவைத்தால் சிவம் வெளிப்படும் என்பது இம் மந்திரக் கருத்து. தெள்ளத். அப்பர், . - .
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனன்றே. பொருளுரை: நன்னெறிநான்மை நற்றவமாம் மெய்த்தவப் பயனருளும் மெய்ப்பொருளாம் ஒருவன் சிவபெருமான். அவன் திருவடியிணையினைப் பத்திமேலீட்டினால் விழையும் மெய்யடியார்கட்கு 'தடக்கை நெல்லிக்கனி யெனக்காயினன்' என்பது போன்று அவன் 'கைத்தலஞ் சேர்நெல்லிக்கனி' யொத்து விளங்குவன். அவன் இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய தூயோன். சிவவுலகத்தின்கண் நின்று வழி பாடாற்றித் தூநெறிக்கண் நிற்கும் தேவர்களுக்குச் சிறந்த அத்தன். அத்தகையோனை நாடிநாளும் தொழுதேன். அதனால் என்செயல் மாண்டு அவன் வழிநின்று அடிமையாயினேன். நெல்லிக்கனியின் தன்மையை வருமாறு நினைவுகூர்க: 'நெல்லிக் கனிவிடாய் நீக்குமுடன் நீர்பருகச், சொல்லொணா இன்சுவைத்தாம் சொல்.' இதுபோல் திருவடிப்பேற்றால் பிறவிப்பிணி உடன் நீங்குதலும், பேரின்பநுகர்வு என்றும் ஓங்குதலும் உண்டென்பது தெளிக. 'மெய்த்தவம்' எனினும் 'இறப்பில் தவம்' எனினும் ஒன்றே. தவப்பயன் என்றும் பொன்றாதிருப்பது மெய்த்தவம். குறிப்புரை: மெய்த்தவத்தான் - சிவன். அமைந்து ஒழிந்தேன் - செயல் மாளப்பெற்றேன். செய்ய. அப்பர், . - .
அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானஞ் சமைந்தொழிந் தேன்தடு மாற்றமொன் றில்லை புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே. பொருளுரை: திருவருள் நாட்டத்தால் அளவில்லாத புகழை உடைய திருவடியுணர்வின்கண் அமைந்து அடங்கியுள்ளேன். அதனால் திரிபுணர்வாகிய தடுமாற்றம் ஏதும் இன்றி நன்னெறி நான்மையின்கண் ஒழுகிச் செம்பொருட்டுணிவின்கண் ஆளாய்ச் சமைந்தொழிந்தேன். அதனால் அடியேற்குப் பிறப்பு இறப்புக்களாகிய தடுமாற்றமின்று. 'காமம் வெகுளி மயக்கம்' ஆகிய மூன்றும் புகைந்து அகப்பகையாய் ஆருயிர்கள் மாட்டு எழுகின்றன. அத்தகைய வுயிர்கள் நிறைந்துள்ள இந்நிலவுலகத்தின்கண் புண்ணியத் திருவுருவினனாகிய சிவபெருமான் சிவகுருவாக நண்ணியருளினன். அவன் முப்பொருளுண்மையினையும் அருஞ்சைவர் மெய் முப்பத்தாறினையும் திட்பமுற வகைப்படுத்தி உணர்த்தியருளினன். அப்பெருமான் இயல்பாகவே ஆருயிர்க்கு வேண்டுவன நல்கும் யாண்டும் உயர்வொப்பில்லா ஒருபெரும் வள்ளலாவன். குறிப்புரை: தடுமாற்றம் - மயக்க உணர்ச்சி, புகைந்து எழுபூதலம் - காமாதிகளால் பதைப்புண்டு திரிகின்ற மக்களை. புண்ணியன் - சிவன். வகைந்து - தத்துவ உபதேசம் செய்து உண்மை காட்டி. வெள்ளி. . திருநாவுக்கரசர், .
வள்ளற் றலைவனை வானநன் னாடனை வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர்கொ லோஎன்று உள்ளத்தி னுள்றே ஒளித்திருந் தாளுமே. பொருளுரை: வள்ளல் தலைவனாக யாண்டும் விளங்குபவன் சிவபெருமான். அவனே சிவ வுலக முதல்வன். சலமகள் என்று சொல்லப்படும். நடப்பாற்றலின் உருவகமாம் வெள்ளப் புனல்மகளைத் திருச்சடையில் வைத்துள்ளான். அங்ஙனம் வைத்தருளியது ஆருயிர்களின் அகங்காரமாகிய முனைப்பெழுச்சியை அகற்றுதற் பொருட்டேயாம். இக் குறிப்புத் 'தரணியெல்லாம், பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ' என்னும் செந்தமிழ்த் திருமுறை முடிவினால் விளங்கும்.அவன் வாலறிவனாதலின் அவனே மறைமுதல்வனாவன். அவன் அடியேன் உள்ளத்துள் மறைந்து நின்றருளினன். செவ்வி வருதலும் 'தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தல்' தமிழ்த்தகவாதலால் வெளிப்பட்டு வந்து தலையளி புரிந்தருளினன். அவன் அவ்வாறு மறைந்து நிற்பதற்குக் காரணம் பிறப்பு இறப்பில் மீண்டும் மீண்டும் உட்படுவார் கள்ளப் பெருமக்கள் ஆவர். சொல்லுறுதி யின்மையும் சொல்வழி வாராமையும் உடையாரைக் கள்ளரென்பது உலகியல் வழக்கு. இது மேலதனை வலியுறுத்தும். அத்தகைய கள்ளர்கள் காண்பார்களோ என்று ஒளித்து நிற்பன் ஒளிக்கெலாம் ஒளிகொடுத்து உலப்பின்றி ஒளிரும் ஒண்மையோனாகிய சிவபெருமான். இக் குறிப்பு 'விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்' என்னும் செந்தமிழ்த் திருமறை முடிவான் உணர்க.
ஆளும் மலர்ப்பதந் தந்த கடவுளை நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்குங் குரிசிலின் வாளு மனத்தோடும் வைத்தொழிந் தேனன்றே. பொருளுரை: மெய்யடியார்களையும் வையத்தாரையும் திருவுள்ளத் திருக்குறிப்பான் நோக்கி ஆண்டருள்பவன் சிவபெருமான். அத்தகைய கடவுள் திருவடித் தாமரையைத் தந்தருள்வன்: அவனை அகனமர்ந்த அன்பினராய் முகனமர்ந்த மொழியினராய் நற்றமிழ் மறையால் நாளும் வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுவோர் நன்மையுள் நின்றவராவர். அவர்தம் தீப் பண்பையும், தீத் தொழிலையும் அகற்றி யருளும் குரிசிலாகிய அண்ணல் சிவபெருமானே. அவன் வாளாகிய கண்ணினுள்ளும் மனமாகிய கருத்தினுள்ளும் வாளாது வந்தருள்வன். அங்ஙனம் வந்தருளுமாறு உறுதியுடன் ஓவாதுளத்தமைத்துவைத் தடங்கினன். இனிக் கோளும் வினையும் என்பதற்கு நாளும் கோளும் எனவும், பகைவரான் வரும் வினை எனவுங்கொண்டு வழிபாட்டு மெய்யடியார்க் கடியாரையும் அவை துன்புறுத்தா என்றலும் ஒன்று. இவ் வுண்மை வரும் ஆளுடைய அடிகள் திருநெறிய தமிழானும் உணர்க: "காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் நீளமாய்நின் றெய்த காமனும் பட்டன நினைவுறின் நாளுநாதன் னமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் " குறிப்புரை: நன்மையுள் - சன்மார்க்கத்தில். கோளும் வினையும் - தீக் குணத்தையும், தீத்தொழிலையும். குருசில் - சிவன். வாளும் மனத்தொடும் - கண்ணையும் மனத்தையும்.
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவனடி புண்ணிய லோகந் திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும் வருந்தி யவனடி வாழ்த்தவல் லார்க்கே. பொருளுரை: நன்னெறி நான்மை நற்றவத்தின் வழி நின்று வாய்த் தொண்டும் கைத்தொண்டும் வருந்தி வழாது புரியும் திருந்து சீரடியார் விரும்பில் சிவபெருமான் திருவடியே மறமாணுலகமுமாகும். அடியார் உள்ளம் பொருந்தில் அவன் திருவடியே புண்ணியப்பேற்றின் பொருவிலாவுலகமுமாகும். அவனருளால் உள்ளம் உரை உடல் மூன்றும் கள்ளமின்றித் திருந்துமே யானால் அவர்க்கு அச் சிவபெருமான் திருவடியே தீர்த்தமுமாகும். சிவனடியார் வேண்டுவன எல்லாம் சிவபெருமான் திருவடிக் கீழே பெறுவர். வேறு வேறு உலகங்களில் வேறு வேறு காலங்களில் பெறுவன அனைத்தும் ஒருவர் சிவபெருமான் திருவடிக்கீழ் ஒருகாலத்து ஒருங்கு பெறுவர். விரும்பில் என்பதற்கு விரும்புதலில்லாத என்றலும் ஒன்று. மறமாணுலகம்: வீரசுவர்க்கம். குறிப்புரை: திருந்தில் - சன்மார்க்கத்தில் நின்றால்.
வானக மூடறுத் தானிவ் வுலகினில் தானக மில்லாத் தனியாகும் போதகன் கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும் பானகச் சோதியைப் பற்றிநின் றேனன்றே. பொருளுரை: சிவபெருமான் தன்மெய்யடியார்க்குத் தன் எண்பெருங் குணங்களைப் பதிவித்தருள உன்னுவன். உன்னலும் ஆருயிர்கட்கு உடற்சார்பால் ஏற்படும் முக்குணமும் அக்கணமே நீங்கும். அதுவே இவ் வுலகில் வானகம் ஊடறுத்தல் எனக் கூறினர். கானக வாழையாகிய திருநெறிய திருத்தமிழின் செவ்விய பண்ணினை அன்புடன் பாடி அவனடிக்கீழ் அழுந்தி நிற்பார்க்குத் திருவடியின்பம் எளிதின் வந்துறும். அவன் இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய பண்பினனாதலின் அவன் தனிப்பெரும் உண்மை யறிவின்ப வடிவினனாவன். அவன் திருவடி இன்பத்தேனினைப் பானகமாகப் பருகாநின்றேன். அவன் அருளறிவுப் பேரொளிப் பொருளாவன். அப் பொருளினை அருளால்பற்றி எங்கு மிலாததோர் ஈறில் இன்பம் வீறுபெற எய்தினேன். அதனையே பற்றி நின்றேன். கானக வாழை என்பதற்குக் குறிஞ்சி நிலத்து வாழை என்றலும் ஒன்று. இஃது உலகினைப்பற்றாது உடையானைப் பற்றுகின்ற உள்ளத்தூறும் தெள்ளத் தெளிந்த சிவனார் திருவடியின்பத்தேன் பற்றி நின்றேன். குறிப்புரை: வானகம் - முக்குணம். தானகம் - அகம்பாவம். கானகம்... உள்ளுறும் - இசைக்கு வயப்பட்டு உள்ளத்தில் தோன்றும். பானகச் சோதி - ஆனந்த சொரூபனாகிய சிவன்.
விதியது மேலை யமரர் உறையும் பதியது பாய்புனற் கங்கையும் உண்டு துதியது தொல்வினைப் பற்றறு விக்கும் பதியது வவ்விட்ட தந்தமு மாமே. பொருளுரை: தேவர், மூவர், மற்று யாவர்க்கும் அவரவர்தம் வினைக்கீடாகத் தன் திருவாணைவழி விதியமைக்கும் விதிப் பொருளாகவுள்ள விழுமியோன் சிவன். தூமாயைக் கண்ணுள்ளார் உறையும் சிவவுலகமாகவுள்ளவனும் அவனே. அவன் வளர்சடைமேல் பாய்ந்தோடும் பெருவெள்ளம் மிக்க கங்கையும் உண்டு. அனைவரும் புகழும் பொன்றாப் பொருள் சேர் புகழுக்கு என்றும் உரிய முதல்வனும் அவனே. அவனைப் போற்றும் செந்தமிழ்ப் பாமாலைகளே அவன் விழையும் சிறந்த படிமக்கலமாகும். அவன் அப் பாமாலைகளை ஏற்றருளிப் பண்டைப் பழவினைப் பற்றை அறுத்தருளினன். பழவினைப் பற்றறுக்கும் பான்மையால் அவன் பதியாகிய இறைவனாவன். 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தில் காணப்படும் 'வ'கரமாகிய வனப்பாற்றல் திருவருளை நமக்கருள்பவனுமவனே. அவனை அனைத்திற்கும் அந்தமுமாவன். படிமக் கலத்துண்மை வரும் அப்பர் திருமுறையான் உணர்க: "பூம்படி மக்கலம் பொறபடி மக்கல மென்றிவற்றால் ஆம்படி மக்கல மாகிலும் ஆரூ ரினிதமர்ந்தார் தாம்படி மக்கலம்வேண்டுவ ரேல் தமிழ் மாலைகளால் "குறிப்புரை: விதி - பிரமனுக்குப் பிரமனானவன். பதி - ஒளி உலகங்கள். துதியது - தோத்திரத்திற்கு உரியது. வவ்விட்டது - அருளைத் தருவது. அந்தமும் ஆம் - முடிவானதும் ஆம்.
மேலது வானவர் கீழது மாதவர் தானிடர் மானுடர் கீழது மாதனங் கானது கூவிள மாலை கமழ்சடை ஆனது செய்யுமெம் ஆருயிர் தானன்றே. பொருளுரை: எத்தகைய வானவர்க்கும் மேலாய் அவர்களால் நத்தப் படும் அத்தனாய் விளங்குபவன் சிவன். மாதவஞ் சேர் மாதவர் மனத்தகத்தானும் அவனே. நன்னெறி நான்மை நற்றவஞ்சேர் மானிடர்தம் பிறவி இடரை நீக்கி அவர்தம் தூயவுள்ளமே கோயிலாகக் கொண்டருள்பவன் சிவன். வாராத செல்வமும் செல்வாய செல்வமுமாகத் திகழ்பவனும் அவனே. இதனையே எய்ப்பில் வைப்பென இயம்புவர். மணமிக்க கூவிளமாகிய வில்வமாலை அச் சிவபெருமானுடைய திருச்சடைக்கண் கமழாநிற்கும். அடியேன் ஆருயிர்க்கு உயிராய் எழுந்தருளி ஆவன செய்யும் தாவில் தனி முதல்வனும் அவனே. ஐந்தொழிற் றலைவனும் அவனே. 'மாதனங்கானது' என்பதனை அனங்கு மாது ஆனது என மாறி உண்மை அறிவின்ப வடிவினது என்றலும் ஒன்று. குறிப்புரை: மேலது வானவர்-தேவர்களுக்கு மேலானவர். கீழது மாதவர் - தவசிகள் உள்ளத்தவர். தானிடர் மானிடர் கீழது - தான் ஆட்கொண்ட அடியார் உள்ளத்தவர். மா தனம் - பெரிய வைப்பு. கானது கூவிளம் - காட்டில் உள்ள வில்வம். செய்யும் - ஐந்தொழில் நடத்தும். உயிர் - உயிர்போன்ற சிவன் அல்லது உயிரில் இருக்கும் சிவன்.
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி ஆழுஞ் சுனையும் அடவியும் அங்குளன் வாழும் எழுத்தைந்து மன்னனு மாகுமே. பொருளுரை: ஆணவ வல்லிருள் சூழ்ந்துள்ள தன் முனைப்பாகிய கருங்கடற்கண் சிவனை மறத்தலாகிய தவாப் பெருங்குற்றப் பெருநஞ்சு தோன்றிற்று. அதனைக் கண்டஞ்சிய மாலுள்ளிட்ட தேவர்கள் சிவபெருமான்பால் முறையிட்டனர். சிவபெருமான் மன்னித்தருளலாகிய உண்டலைப் புரிந்தருளினன். உண்டதுமட்டுமன்றிக் கண்டத்தும் நிறுத்தருளினன். மாப்பெருங் குற்றம் மன்னிக்கப்பட்டமையால் அக் குற்றம் இடர்ப்பாடாகிய கண்டத்துட்பட்டது. அதுவே நஞ்சு கண்டத்து நிற்பதென்பதாகும். அத்தகைய நஞ்சுண்ட கண்டன். அவனே பதினான்கு உலகங்களுக்கும் பதியாவன். அவனே பிறவாயாக்கைப் பெரியோன். அவன் வீற்றிருந்து அருளும் திருமலை திருக்கயிலைத் திருமலை. அங்கு என்றும் நின்று நிலவுந் திருவருள்போல் நீரறவறியா ஆழமான சுனையும், மந்தியுமறியா மரன்பயில் காடும் உள்ளன. அதன்கண் உள்ளவன் சிவபெருமான். அவன் என்றும் நிலைபெற்றுள்ள செந்தமிழ்த் திருமறைத் திருவைந்தெழுத்தால் நன்று பெறப்படும் வேந்தனுமாவன். அதனாலேயே 'நந்தி நாமம் நமசிவய' என்ற அருள் நூல்கள் நவில்வவாயின. குறிப்புரை: ஏழுமிரண்டிலும் - பதினான்கு உலகங்களிலும். யாழும் . . . . . அங்குளன்-யாழ்ப்பாணர்களும் சுனைகளும் காடுகளும் நிறைந்த கயிலையில். எழுத்தைந்து - நமசிவாய.
உலகம தொத்துமண் ணொத்துயர் காற்றை அலர்கதிர் அங்கியொத் தாதிப் பிரானும் நிலவிய மாமுகில் நீரொத்து மீண்டச் செலவொத் தமர்திகைத் தேவர்பி ரானே. பொருளுரை: யாண்டும் செறிந்து வேண்டுவார்க்கு வேண்டுவ வேண்டி யாங்கீயும் பெரு வள்ளல் சிவபெருமான். அவன் ஒன்றாம் கலப்புத் தன்மையால் உலகத்துயிராய், மண்ணாய், உயர் காற்றாய், விளங்கா நின்ற கதிர்களையுடைய ஞாயிறு திங்கள்மா என்பது மாகம் என்பதன் கடைக்குறை. அன்றி மாமுகில் என முகிலுக்கு அடையாக்கி, விசும்பை இனம்பற்றிக் கூறலும் ஒன்று. குறிப்புரை: திகைத்தேவர் - திக்குப்பாலகர்.
பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன் பரிசறிந் தங்குளன் மாருதத் தீசன் பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப் பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே. பொருளுரை: தீயின் தன்மையினையும் ஞாயிற்றின் தன்மையினையும் அறிந்தாக்கி யருள்பவன் சிவன். அதுபோல் காற்றினும் உள்ளான். அதுபோல் திங்களின்கண்ணும் உளன். பேரறிவின்கண்ணும் உளன். அல்லாகிய ஆணவச் சார்பால் மாசடர்ந்த நிலம் அல்+நிலம் - அன்னிலம் எனப்பட்டது. அத்தகைய நிலத்தைக் காத்தருள்பவனும் சிவனே. குறிப்புரை: பரிசறிந்து - நன்மை அறிந்து. அன்னிலம் - மயக்கமுடைய உலகினரை. பாரிக்குமாறு - காத்து அருளும்படி.
அந்தங் கடந்தும் அதுவது வாய்நிற்கும் பந்த வுலகினிற் கீழோர் பெரும்பொருள் தந்த வுலகெங்குந் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாகுமே. பொருளுரை: எல்லாப்பொருண் முடிவாகிய அந்தங்கடந்து நிற்கும் விழுமிய விழுப் பொருள் சிவபெருமான். அவன் அந்தங்கடந்து நின்றும் கலப்பால் அது வதுவாய் நிற்பன். பிணிப்புற்றுத் துணிவின்றி வருந்தும் இவ்வுலகினில் திருவருளால் பிணிப்பற்றுத் திருவடிக்கு மீளா ஆளாயினார் அடியாராவர். அவர், திருவடிக்கீழ் நீங்கா நினைவினராய் இருப்பதால் கீழோர் எனப்படுவர். அவர்க்கு என்றும் வேண்டுவ பிரிவின்றி நின்று நிரப்பும் பெரும்பொருள் சிவன். அவன்றன் திருவருட்டிருக் குறிப்பால் ஆயது இவ் வுலகம். இவ் வுலகெங்கும் நிறைந்திருக்கும் பெரும்பொருளும் அவனே. அவன், தானே சிவகுருவாக எழுந்தருளி வந்து அவ்வப்போது நன்னெறி நான்மை நல்லியல்சேர் நல்லாரை ஆட்கொண்டருள்வன். இவையனைத்தும் அவன்றன் திருவருள் மாண்பாகும். குறிப்புரை: அந்தங்கடந்து - முடிவிறந்து. கீழோர் பெரும் பொருள் - தனக்கு அடியார் ஆனோருடைய வைப்பு. தந்த - தான் படைத்த. வந்து படைக்கின்ற - தான் குருவாய் வந்து நன்னெறியை அருளுகின்ற.
முத்தண்ட வீரண்ட மேமுடி யாயினும் அத்தன் உருவம் உலகே ழெனப்படும் அத்தன்பா தாளம் அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துண ராரன்றே. பொருளுரை: வழிப்பேற்றின் நிலைக்களமாகிய முத்தியண்டம் பெருமை மிக்க அண்டமாகும். அதுவே அவன்றன் றிருமுடியாகும். ஆயினும் அச் சிவபெருமானின் திருவுருவம் ஏழுலகமுமாகும். அதுபற்றியே 'உலகமே உருவமாக' எனத் தமிழ்ப்பொருள் நூலும் ஓதுவதாயிற்று. அவன் திருவடி பாதாளம் ஏழினுக்கும் அப்பாற்பட்டது. உன்மத்தமாகவுள்ளார் அறிவும் செயலும் திரிபுற்று நெறியல்லா நெறிச் சென்றுழலும் நீரர். இத்தகைய தெளிவில்லாதவர் மேலோதியவற்றை விரும்பி உணரார் என்க. குறிப்புரை: முத்தண்ட வீரண்டம் - சிவலோகம். மத்தர் - தெளிவு இல்லாதவர்.
ஆதிப் பிரான்நம் பிரானவ் வகலிடச் சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும் ஆதிப் பிரான்அண்டத் தப்புறங் கீழவன் ஆதிப் பிரான்நடு வாகிநின் றானன்றே. பொருளுரை: அனைத்திற்கும் காரணமாவுள்ள ஆதிப்பிரானும் சிவனே. அவனே நம் பெருமானுமாவன். அவனே விரிந்த வெவ்வேறுலகம் அனைத்தினுக்கும் பேரொளிப் பிழம்பாகவுள்ளான். ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடருக்கும் உள்ளொளியாக நின்று ஒளி யருள்பவனும் அவனே. ஆதியாகிய நடப்பாற்றலை யுடையவனும் அவனே. அவனே கீழ்மேல் அண்டங்கள் அனைத்திற்கும் அப்பாலுள்ளவன். அவன் 'சிவசிவ' என்னும் ஒப்பில் பெருமறையுள் நடுவாகி நிற்பது போலவும், ஆருயிர்களின் நெஞ்சகத்து நிற்பது போலவும், தில்லைப் பொன்னம்பலத்து நிற்பது போலவும் எங்கும் நடுவாகி நின்றருள்கின்றனன். இனி நடுவுநிலை குன்றாது நின்றருள்கின்றனன் என்பதூஉம் ஒன்று. குறிப்புரை: சுடர் மூன்று - இரவி, மதி, தீ. அண்டத்தப்புறம் - இப்பூமி சுற்றிவரும் அண்டத்துக்கு அப்பாற்பட்ட. நாம் பார்க்கும் சூரியனும் சூரியனைச் சுற்றி ஓடுகின்ற கிரகங்களும் சேர்ந்தது ஒரு அண்டம். இப்படிப் பல அண்டங்கள் இவ் வண்டத்துக்கு மேலும் கீழும் பக்கங்களிலும் உள்ளன.
அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன் பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன் தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறுந் தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானன்றே. பொருளுரை: அண்டங்கள் அனைத்தையும் கடந்து அப்பாலாய் உயர்ந்தோங்கும் பெருமையுடையவன் சிவன். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிப் பிறப்புக்கு உட்படாத நுண்மையனும் அவனே. மேலும் மால் முதலான தெய்வங்கள் பிறந்திறந்துழலும் பெற்றியன. அச்சிறுதெய்வங்களை மயக்கத்தால் தொழும் அவர்கள், தம் கடவுளர் பிறப்பதினாலேயே பேராப் பெருமையுடையவரென்கின்றனர். இவ்வுண்மை "உடல்சுமந்துழலுமக் கடவுளர்க் கல்லதை. பிறவியின் துயர்நினக் கறிவரிதாகலின் அருளாதொழிந்தனை போலும் கருணையிற் பொலிந்த கண்ணுதலேயோ" என்பதனாற் பெறப்படும். அத்தகைய பிறவி எடுக்கும் பிணிப்பு இல்லாதவன் சிவனாகலின் நகைச்சுவை தோன்ற பிறப்பில்லாச் சிறுமையன் என்றனர். தொண்டர் அருளால் நடந்து கண்ட ஆண்மைக் கழலணிந்த ஆண்டவன் சிவன். அவ் வொலிக்கும் கழலிணையைக் கொண்டாறும் தொண்டர் அளவிலா இன்பம் எய்துவர். அத்தொண்டர்க்குத் தூநெறியாக நிற்பவனும் அவனே. அத் தூநெறிக்கண் தங்கி அருள்பவனும் தானே. குறிப்புரை: பின் . . . . . சிறுமையன் - பிறப்பற்றவன். தூங்கி - பொருந்தி. தொண்டர்க்குத். அப்பர், , - .
உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ நிலமுழு தெல்லா நிறைந்தனன் ஈசன் பலமுழு தெல்லாம் படைத்தனன் முன்னே புலமுழு பொன்னிற மாகிநின் றானே. பொருளுரை: எங்கணும் இடைவிடாது சென்று மீள்வதாகிய உலாவுதலைச் செய்வது சிவபெருமானின், திருவருட்கண்கள். அக்கண்களையுடைய சிவபெருமான் பெருநீர்க்கடலாற் சூழப்பட்ட நிலவுலக முழுவதும் நீக்கமற எங்கணும் நிறைந்த நின்றனன். அவனே முதன்மைசேர் ஆண்டான். வேண்டும் பயனுடைப் பொருள்கள் முழுவதையும் படைத்தருளியவனும் அவனே. மெய்யடியார்களைக் காத்தருளும்படி பொன்மேனியுடன் பொலிந்திலங்குபவனும் அவனே. குறிப்புரை: உலவு செய் - எல்லா இடத்தையும் கடைக்கணிப்பதின். பலம் - பயனுள்ளவை. புலம் - உலகத்தில். பொன்னிறமாகி - ஞான குருவாகி.
பராபர னாகிப்பல் லூழிகள் தோறும் பராபர னாயிவ் வகலிடந் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே. பொருளுரை: பேருலகனைத்தும் ஒருங்கு முடியுங்காலம் ஓர் ஊழி என்ப. அத்தகைய பல்லூழிகளைப் புரிந்து நிற்கும் பராபரன் சிவபெருமான். அவனே முழுமுதல்வனாய் இவ்வுலகங்களைத் தாங்கிக் காத்தருள்பவன் ஆவன். அவனே தாங்கி நிற்பதுடன் தலைவனுமாகி நிற்கின்றனன். திருவருளால் தனக்கோர் பற்றுக்கோடின்றிச் சிவபெருமானையே பற்றி அவனைத் தாங்கும் ஆண்மை மிக்கது ஆனேறு. அவ்வானேற்றை ஊர்ந்து வருபவனும் சிவனே. அவன் எங்கணும் நீக்கமற நிறைந்து நின்றருளினன். குறிப்புரை: பராபரன் - கடவுள். தராபரன் - உலகில் தலைவன். நிராபரன் - நிர் + ஆ + பரன் ஆண்மையுள்ள இடபத்தை உடையவன்.
போற்றும் பெருந்தெய்வந் தானே பிறரில்லை ஊற்றமும் ஓசையும் ஒசை யொடுக்கமும் வேற்றுடல் தானென் றதுபெருந் தெய்வமாங் காற்றது ஈசன் கலந்துநின் றானன்றே. பொருளுரை: மண்ணவர் விண்ணவர் மற்றுமுள்ளார் அனைவர்களாலும் போற்றப்படும் அன்பறிவாற்றல்சேர் இன்பப் பெரும் பொருள் சிவபெருமான். அவனே கலப்புத் தன்மையால் அனைத்தையும் ஊற்றமாகத் தாங்குகின்றவன் ஆவன். ஓசை தோன்றுமிடமாகிய நாதமெய்யின் நிலைக்களனும் அவனே. அஃதொடுங்கும் ஒடுக்கச் சிவனும் அவனே. தனக்கு வேறாக ஏதும் இன்மையால் வேற்றுடல்களென்று கூறப்படுவதனைத்தும் அவனே யாகும். படிப்போர் பள்ளிக்கூடத்தையும், குடியிருப்போர் வாடகை வீட்டையும், ஊர்ந்து செல்வோர் கூலி ஊர்தியையும் தம்முடைய என்று பேசுந் தன்மை இதற்கொப்பாகும். உண்மையான் நோக்கினால் இவ்வுடைமைகளுக்குரிய உடையார் வேறென்பது புலனாகும். அதுபோல் எல்லாப் பொருளுக்கும் உடையவன் சிவனே. அவனே பெருந்தெய்வம். எல்லாவற்றையும் இயைந்தியக்கும் காற்றுப் போல் தோற்றமின்றித் தொழிலால் தோன்றுபவனும் அவனே. அவனே ஈசன் எனப்படுவன். அவன் விண்போல் எங்கணும் கலந்து நின்றருளினன். சிவபெருமான் விண்போல் இடங்கொடுத்தும், காற்றுப் போன்றியைந்தியக்கியும், தீப்போல் ஒளிகொடுத்தும், நீர்போல் துப்பருளியும், நிலம்போல் நலமுறத் தாங்கியும் நின்றருள்கின்றனன். துப்பு - உணவு. குறிப்புரை: ஊற்றமும்- ஆதாரமும். ஓசை - நாதம். வேற்றுடல் - உயிர்க்கு வேறாகிய உடலும். காற்றது - காற்றுப்போல.
திகையனைத் துஞ்சிவ னேயவ னாகின் மிகையனைத் துஞ்சொல்ல வேண்டா மனிதரே புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானன்றே. பொருளுரை: உற்றுணரும் நற்றிறமில்லா மனிதரே! எல்லாத் திசைகளிலும் சிவபெருமான் நீக்கமற நிறைந்து நின்றருள்கின்றனன். அங்ஙனமிருப்பவும் அவனுக்குப் புறம்பாக ஓரிடத்து ஓரிறைவன் உண்டெனக் கூறுவது உண்மைக்கு மாறாகும். எப்பெயரிட்டு எவ்வுருவமைத்து எங்ஙனங் கூறி வழிபடினும் அவையனைத்தும் சிவபெருமானையே சாரும். நீரனைத்தும் ஒன்றாய், மின்சாரம் அனைத்தும் ஒன்றாயிருப்பினும் வெளிப்பட்டுப் பயன்தரும் காலமும் இடமும் கோலமும் பெயரும் வெவ்வேறாதலின் வேறுபடுத்தி வழங்குகின்றோம். அங்ஙனம் வழங்கற் பெயரான் வேறுபடினும் பொருள் ஒன்றேயாம் உண்மை இதற்கொப்பாகும். மேலோங்கிக் காணப்படும் புகையெல்லாம் தீயின்கண் ஒடுங்கி நின்று தோன்றுவனவே. அதுபோல் வெளித்தோன்றும் உலகப் பொருள்கள் அனைத்தும் எங்க ஆதிப்பிரானாகிய சிவபெருமானின்கண் ஒடுங்கி நின்று தோன்றும் முகை-தோற்றம். குறிப்புரை: திகை-திக்குகள். புகை . . . . . முகையனைத்தும் - புகை மண்டிய வேள்வித்தீயில் சேரும் பொருள்கள் எல்லாம்.
கலையொரு மூன்றுங் கடந்தப்பால் நின்ற தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பன் நரையில்லை யுள்ளுறு முள்ளவன் தானே. பொருளுரை: இடப்பால் நாடி, வலப்பால் நாடி, நடுநாடி ஆகிய முக்கலைகளையும் கடந்து அப்பால் நின்றருள்கின்றவன் சிவபெருமான். அவனே அனைத்துலகினுக்கும் அனைத்துயிர்கட்கும் அரும்பெறற் றலைவனாவன். அவனை அகனமர்ந்த அன்பினராய்ப் படர்ந்து பரவிப் பணிந்து நினைமின்கள். படர்ந்து - நினைந்து. அவனே மெய்க்கடவுள். தத்துவம் - மெய். பிறப்பு ஆணவமலத்தேய்வின் பொருட்டு நல்கியருளப்பட்ட பெருங்கொடை. அப் பிறப்பின் விலையே வினையாகும். விலையில்லை எனவே வினையில்லை. வினையின் விளைவாம் பிறப்பும் இல்லை என்பது தாமே போதரும். விண்ணவரனைவர்களாலும் 'ஊற லாயரு ளா' யென்று உரைக்கப்பட்டு ஓவாது வழிபடப்பெறும் பெரும் பொருளும் சிவனே. நரை - வெண்மையாகிய வெள்ளறிவெனப்படும் அறியாமையில்லை. இந்நிலைக்கண் உம்மைவிட்டு என்றும் பிரிப்பின்றி நிற்கும் சிவபெருமான் உமக்குள் வேறறநின்று வெளிப்பட்டருள்வன். வேறறநிற்றல் - ஏகமாய் நிற்றல் மூன்று கலையென்பதற்குத் தந்திரம், மந்திரம், செவியறிவுறூஉ எனலும் ஒன்று. குறிப்புரை: கலை ஒரு மூன்றும் - இடகலை, பிங்கலை, சுழுமுனை. விலை இல்லை - பிறக்கும் வினை இல்லை. உரைப்பன் - துதிக்கப்படுவான். நரையில்லை - சிறப்பில்லை. உலகெலா. சிவஞானசித்தியார், .
படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினிற் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத் தன்புகொண் டானே. பொருளுரை: படைப்போன் ஆருயிர்களைப் பூமிக்கண் பிறக்குமாறு படைத்தற்றொழிலைப் புரிவதற்கு அவ்வுயிர்கள் செய்யும் இருவினையே காரணமாகும். அவ்வினை எஞ்சுவினை எனப்படும். அதுவே ஈண்டுப் பாசம் எனக் குறிக்கப்பட்டது. அப் பாசத்தை அறுத்தருளியவன் சிவன். நெடியானாகிய காப்போன் செய்யும் இழிவு குறுமை எனப்படும். அதற்குரிய வாயில் நேசம். அதுவே ஏறுவினை எனப்படும். அவ் ஏறு வினையையும் சிவபெருமானே அறுத்தருளினன். நன்னெறிநான்மை நற்றவப் பேரொளி செடி எனப்படும். அத்தகைய பெருந்தவத்தால் ஊழ் வினையுந்த உஞற்றும் தொழிலினையும் ஒழித்தருளினன். இவ்வாற்றால் அடியேன் அன்பினைக் கைக்கொண்டருளி உய்யவைத்தனன். சிவமாகச் செய்தருளித் திருவடிப்பேரின்பில் திளைப்பித்தருளினன். குறிப்புரை: படிகால் - பிறக்குமாறு. பாசம் - சஞ்சிதம். நெடியான் - மால். குறுமை செய் - இழிவைச் செய்வதற்கு ஏதுவாகிய. நேசம் - ஆகாமியம். செடியார் தவம் - கடுந்தவம். செய்தொழில் - பிராரத்துவத்தின் வன்மையை. கல்லாத. . கண்டபத்து, .
ஈசனென் றெட்டுத் திசையும் இயங்கின ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி தேசமொன் றாங்கே செழுங்கண்டம் ஒன்பதும் வாச மலர்போல் மருவிநின் றானன்றே. பொருளுரை: எண்பாற் புலத்தினும் சிவபெருமானின் திருவடிவமே விளங்கி ஒளிதருவதாயிற்று. முப்பத்தாறாம் மெய்யாம் ஓசையினின்று எழும் சத்தமாகிய எழுத்துக்கள் என்றும் உள்ளன. அதுபோல் விழுமிய முழுமுதல்வனாம் சிவபெருமானும் என்றும் பொன்றா இயல்பினன். தேசம் ஒன்றாகக் கண்டமாகிய பிரிவு ஒன்பது என்ப. யாண்டும் அச் சிவபெருமான் 'உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போற், பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்'என்னும் செந்தமிழ் மறைமுடிபினுக்கு ஏற்ப மலர்மணம் போன்று மன்னிநின்றருள்வன். குறிப்புரை: ஈசன் . . . . . இயங்கின-எல்லாத் திக்குகளிலும் சிவமே விளங்கின. ஓசையில்.....சத்தம்-நாத தத்துவத்தினின்றும் எழும் அக்கரங்கள் போல. உலப்பிலி - கெடுதல் இல்லாதவன். தேசம்-உலகம். செழுங்கண்டம் ஒன்பதும் - திருமூலர் காலத்தில் இப் பூமி அண்டம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இப்போது கண்டங்களாக இருக்கிறது.
இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானன்றே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் பழுதில் திருவடியுணர்வு கைவந்த நாயன்மார்பால் அவர்தம் உணர்வுக்கு உணர்வாய் நின்று தன் இயற்கை உண்மையறிவின்ப வடிவினை உணர்த்தியருள்வன். அதனால் அவன் அவர்கட்கு இல்லாதவனும் அல்லன். உணர்வினில் உள்ளவனாகவே என்றும் காணப்படுவன். அத்தகைய தவப்பேறு ஒரு சிறிதும் கிட்டாத அறியாமை மிக்க புல்லறிவினர்க்கு முனைப்பு முன்னிற்கும். அந்நிலையில் கல்லாதார்க்கு வரிவடிவம் புலனாதல் இல்லாமை போன்று அவர்தம் உணர்வுக் காட்சிக்குச் சிவபெருமானும் புலனாகான். அதனால் அவன் அவர்கட்கு உள்ளவனும் அல்லன். அவன் நம் நெஞ்சகத்துக் காணப்படும் 'காராரும் ஆணவக் காட்டைக் களைந்து அறக்கண்டு அகங்கார மென்னும், கல்லைப் பிளந்தருள்வன்' மேலும் அவன் 'கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லானு'மாவன். அம்முறையின் எளியேன் நெஞ்சினை உருகுவித்தருளினன். அதன்மேல் அவனே உணர்வினுக்குணர்வாக வெளிப்படும் காட்சியனுமாவன். காட்சியன்-உணருருவாவோன். அவன் தொன்மையிலேயுள்ள நன்மையன். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய தூயோனும் அவனே. என்றும் ஒன்றுபோல் நிற்கும் திரிபிலாத் தன்மையனும் அவனே. அவனே மாசிலாச் செம்மணி. சொல்லுதற்கரிய அருட்பேரொளி. அவன் நம்மையெல்லாம் அன்றுதொட்டு இன்றுகாறும் தொடர்ந்து நின்றருளும் தடங்கடலந்தணன் ஆவன். குறிப்புரை: இல்லனுமல்லன் - ஞானிகளுக்குத் தெரிபவன் ஆனதால் இல்லாதவனுமல்லன். உளனல்லன் - அஞ்ஞானிகட்குத் தெரியாதவன் ஆனதால் உள்ளவனும் அல்லன். கல்லது நெஞ்சம் - கல்போன்ற வலிய நெஞ்சத்தாரையும். பிளந்திடும் - உருகச்செய்யும். காட்சியான் - உருவமுடையவன். கல்லா. . திருவம்மானை, .
உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனுங் கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும் வள்ளற் பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம் அள்ளற் கடலை அறுத்துநின் றானன்றே. பொருளுரை: சிவபெருமான் 'நும்பின் எம்மை நுழையப் பணியே' என்னும் நற்றவநிலை பெற்றிலாதார்க்கு அவர்தம் உள்ளத்து அடங்கிப் புலனாகாதிருப்பன். இஃது 'அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு, இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன்' என்னும் பொருள் நூல் அருள்மொழியினை யொக்கும். புறத்தேயும் அவ்வுயிர்கள் நான் என முனைத்திடுமாறு 'அவையே தானேயாய்' நிற்பன். அவன் 'கரவாடும் வன்நெஞ்சர்க்க அரியான். கரவார்பால் விரவாடும் பெருமான்' ஆதலால் 'கள்ளத் தலைவன்' என அழைக்கப்படுவன். அவன் நறுமணம் கமழும் கொன்றை மாலையணிந்த பின்னுதலமைந்த திருச்சடையினையுடையவன். நந்தியென்னும் திருப்பெயரினையுமுடையவன். அவனே 'பொன்னும் மெய்ப் பொருளும் தருவானாகிய' பெருவள்ளல். அவனை நீங்காநினைவுடன் அவன் திருவருட்பாங்காய் ஒழுகவல்லார்க்கு வழுவிலா வாய்மைப் பெருமானாவன். அவர்தம் 'அவாவெனும் தவாப் பிறப்பீனும் வித்து' முளைத்தற்குத் தக்கதாகிய அள்ளலாம் சேறுசேர் பிறவிப் பெருங்கடலை ஒருங்கறுத்தருளினன். விரவாடும் பெருமான்: விரவியாடும் பெருமான். குறிப்புரை: வழக்கம் செய்வார்கள்தம் - சிந்திக்கின்றவர்களுடைய அள்ளல் கடல் - துன்பக்கடல்.
மாறெதிர் வானவர் தானவர் நாடொறுங் கூறுதல் செய்து குரைகழல் நாடுவர் ஊறுவர் உள்ளத் தகத்தும் புறத்துளும் வேறுசெய் தாங்கே விளக்கொளி யாகுமே. பொருளுரை: இன்ப வேட்கையராகிய வானவரும் பொருள் வேட்கையராகிய தானவரும் என்றும் தம்முண் மாறுபட்டு ஒருவரோடொருவர் மாறாப் போரிடுவர். அப் போரின்கண் வெற்றியுற்றார் திளைப்பர். தோல்வியுற்றார் இளைப்பர். இளைத்தவர் மீண்டும் வென்று திளைத்தற் பொருட்டுச் சிவபெருமான் திருவடியிணையினை நாளும் வழிபடுவர். இவ்வுண்மை, 'வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான், மனம் நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டி' என்னும் செந்தமிழ் மறைமுடிவான உணரலாம். இவ்விரு திறத்தாரும் ஒழிந்த அறநெறிப் பேற்றினராகிய மனிதர் உள்ளங்கனிந்து ஊற்றெடுத்து வாழ்த்தி வணங்குவர். அவர் உள்ளத்தகத்தும் புறத்தும் சிவபெருமான் வெளிப்பட்டருள்வன். அவ்வெளிப் பாட்டால் அவை சிறந்தனவாகத் தோன்றும். இது 'புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் திகழ்ந்த வான்சுதையும் போக்கிச் சிறப்புடையத் தீபம் ஏற்றி' விளங்குந் திருமனையின் சிறப்பினை யொக்கும். சிவபெருமான் தூண்டாமணி விளக்காய் அவர்தம் உள்ளத்துப் பூண்டு நின்றருள்வன். " சுந்தரர்.
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன் கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணிலா னந்தமும் எங்கள் பிரானன்றே. பொருளுரை: சிவபெருமான் 'உலகமே உருவமாகக்' கொண்டு இடைவெளி ஒருசிறிதுமின்றி எங்கணும் நிறைந்துள்ள திருமேனியையுடையவன். 'கண்முதற் புலனாற் காட்சிக்கும்' அப்பாற்பட்டவன். ஆனால் அவன் திருவடியுணர்வால் கண்டு மீண்டுவாராவழி பூண்டு பேரின்பம் எய்தும் பெருங் காட்சிக்குப் புலனாம் தன்மையும் உள்ளவன். காட்சி - அறிவு. நம் உள்ளப் பண்பால் கொள்ளத்தகும் பான்மைப் பயனுடையவனல்லன். உணர்வினுக்கு உணர்வாய் உண்ணின்று எண்ணில்லாத பேரின்பப் பெருவாழ்வைத் துய்ப்பிக்கும் பான்மைப் பண்ணவன். அவனே நம்முடைய பெருமானாவன்.
உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல் நித்திலச் சோதியின் நிலக் கருமையன் எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரன்றே பொருளுரை: 'சார்ந்தாரைக் காக்கும்' தலைமைப்பாடுடைய தனி முதல்வன் சிவபெருமான். யாண்டும் எல்லாரும் வேண்டி உகக்கும் பேரின்பப் பெருங்கடலும் அவனே. தெண்ணீர் வண்ணமுத்தின் தண்ணளிசேர் பேரொளியுடையவன் சிவன். திருநீலகண்டப் பெருமை சேர் கருமையனும் அவனே. அவன் திருவடியிணையினை அவன் திருவருளால் தொழுதலே அமைவுடைத்து. அங்ஙனமின்றித் தம்முனைப்பால் சித்தரும் அமரரும் எத்தனை காலமும் எண்ணாநிற்பர். அங்ஙனம் எண்ணினும் அச் சிவபெருமானாகிய ஈசனை உள்ளவாறு ஆய்ந்தறியார். அவன் "சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி" என்னும் சொல்லரும் திருமுறைப் பண்பின் தொடர்பினன். அதனால் அவனை அவன் திருவடியுணர்வாலேயே காணுதல்வேண்டும். குறிப்புரை: பெருங்கடல் - ஆனந்தக்கடல் போன்றவன். நீலக்கருமையன் - நீலமிடற்றன்.
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமானின் திருநிறம் மெய்யடியார்கள் எவ்வண்ணம் நினைக்கின்றார்களோ அவ்வண்ணம் காணப்படும். அவன் எல்லாங் கடந்தவன் ஆதலினானும் அவன் எல்லாங் கொள்பவன் ஆதலினாலும் அடியவர் நினைத்தவண்ணத்தை அப்படியே கொண்டருள்கின்றனன். அவன் 'அறவாழி அந்தண'னாதலின் அவன் புரிந்தருளும் அறப்பாங்காம் தலையளியும் பலவாகும். தலையளி - கருணை. மெய்யடியார்களின் தலையன்பு எவ்வண்ணமாக விளங்குகின்றதோ அவ்வண்ணமாகும் அவன் புரிந்தருளும் இன்பம். மேலும் அவன் புரிந்தருளும் மறத்தலையளி நெறியல்லா நெறிச் சென்று வெறியராய், பறிதலையராய், கிறியராய்க் கொடுமை பல செய்து வடுவுடன் மாண்டழிந்த கொடியோர் பாவம் எவ்வண்ணம் அவ் வண்ணமாகும். இவையனைத்தும் வெளிப்படுமாறு உலகிடைப் புறத்தே நூல் வழக்காகவும் உலக வழக்காகவும் காட்டியருள்கின்றனன். அங்ஙனமிருந்தும் நற்றவஞ்சேர் பொறியிலார் போற்றாதகலுகின்றனர். பொறி - புண்ணியம்; நல்லூழ். குறிப்புரை: நிறம்பல - சிவத்தின் ஒளி பலவாம். எவ்.....ஈசன் - அன்பரது மனஒளி எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்; "தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் " சேரமான் பெருமாள். அறம்பல-அறக்கருணை பல. எவ்.....இன்பம் - அடியாரது அன்பு எவ்வண்ணமோ அவ்வண்ணம். மறம் பல - மறக்கருணை பல. எவ் . . . . . பாவம் - கொடியரது பாவம் எவ்வண்ணமோ அவ்வண்ணம் புறம்பல காணினும் போற்றகிலார் - இம்மாதிரி உலகில் கண்டாலும் மக்கள் வழிப்படுவதில்லை.
இங்குநின் றானங்கு நின்றனன் எங்குளன் பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு எங்குநின் றான்மழை போலிறை தானன்றே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் என்றும் எங்கணும் நீக்கமின்றி நின்றருள்கின்றனன். அதனால் அவனை இங்கு நின்றான் அங்கு நின்றான் என்றோ, இவ் வுலகத்துள்ளான் அவ் வுலகத்துள்ளான் என்றோ சுட்டிக்கூற வொண்ணாது. அன்றியும் எங்குளன் என வினவவும் ஒண்ணாது. என்னை, அவன் இல்லாதவிடம் இருந்தாலன்றோ, வினவுதலுண்டாகும் என்க. அவன் மெய்யன்பர்தம் அகக்கண்ணிற்கும் புறக்கண்ணிற்கும் பொங்கி விளங்கி அருள்கின்றனன். அவனே உலக முழுமுதல்வன். அவனே புண்ணிய வடிவினன். அவன் இரவின் கண்ணும் நின்றருள்கின்றனன். இது "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்" என்பதனால் விளங்கும். நிலவுக்கதிர் சேர் திங்களாகவும் நின்றருள்கின்றனன். வெம்மைக் கதிர் சேர் செம்மை ஞாயிறாகவும் நின்றருள்கின்றனன். எங்கும் மழைபோல் பேரருள் பொழியும் பெரும் பொருளாகவும் நின்றருள்கின்றனன். அவனே எல்லாம் வல்ல இறைவனாவன். குறிப்புரை: புவனாபதி - உலகநாயகன். கங்குல் - இரவு. மழைபோல் - மேகம்போல்.
உணர்வது வாயுமே யுத்தம மாயும் உணர்வது நுண்ணறி வெம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுடல் அண்டமு மாகிநின் றானே. பொருளுரை: சிவபெருமான் ஆருயிர்கட்கு அறிவை விளக்குந் தன்மையில் அவ் வுயிர்களின் அறிவிற்கு அறிவாய் நிற்கின்றனன். ஆதலின் உணர்வதுவாயும் என்றனர். மேலும் இயற்கை யுணர்வு, முற்றுணர்வு முதலியன உடையனாதலின் சார்ந்தாரைக் காக்கும் தலைவனும் ஆகின்றனன். பொருள்களைத் திரிபின்றி யுணர்வது நுண்ணறிவாகும். எம்பெருமான் எல்லாவற்றுடனும் வேற்றுமையின்றிப் புணர்ந்து நிற்கின்றனன். அங்ஙனம் பின்னற்புணர்ப்பாய்ப் புணர்ந்து நிற்பினும் அவன்றன் அருட்கண்ணால் மட்டுமே அவனை உணர்தல் முடியும். ஆருயிர்களின் கண்ணாலும் கருத்தாலும் அறிய வொண்ணா நுண்மையன். இவ்வுண்மை 'நூலுணர்வு உணரா நுண்ணியோன் காண்க'. என்னும் செந்தமிழ் மறைமுடிவினால் உணரப்படும். உணர்வு உடல் உலகம் அண்டம் எல்லாமாய் நிறைந்து நின்று அருள்பவனும் அவனே. குறிப்புரை: உணர்வதுவாய்-அறிவாய் நுண்ணறிவு - மெய்ப்பொருள் காணும் ஆராய்ச்சி அறிவு. புணர்வதுவாய் - எல்லாவற்றோடும் கூடியதாய். புல்லியதாய் - அறிதற்கு நுண்ணியதாய்.
தன்வலி யாலுல கேழுந் தரித்தவன் தன்வலி யாலே அணுவினுந் தானொய்யன் தன்வலி யான்மலை எட்டினுந் தான்சாரான் தன்வலி யாலே தடங்கட லாகுமே. பொருளுரை: சிவபெருமான் தன்னுடைய முடிவிலாற்றலால் எழுவகை உலகங்களையும் தாங்குகின்றனன். தன் ஆற்றலாலேயே 'அணுவோர் அண்டமாம் சிறுமை கொள்' நுண்ணியனும் அவனே. 'அண்டமோர் அணுவாம் பெருமை கொள்' பரியனும் அவனே. தன் ஆற்றலாலேயே எண் பெரும் மலையும் ஒருங்கு கூடினும் ஒப்பாகாப் பெருமையுமுடையன். அவன்றன் பேராற்றலுக்கு அளப்பருங் கடலும் ஒப்பாகா என்க.
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே யறியுந் தவத்தின் அளவன்றே. பொருளுரை: சிவன் மண்ணவர் விண்ணவர் மற்றுமுள்ளவர் எல்லாரினும் மேம்பட்ட பெருமையை உடையவன். ஆயினும் மெய்யன்பர்தம் ஊனார் சிறுமை உடலுட் கலந்து அங்கு நின்றருள்கின்றனன். அவனே எம் இறையாகிய சிவன். உட்கலந்து - உள் கலந்து; உள்ளம் கலந்து என விரிந்து உள்ளமாகிய ஆருயிர்களுடன் கலந்து எனப் பொருள்படும். அவன் காப்போனுள்ளிட்ட எத்தகைய வானவராலும் அளந்தறிய வொண்ணா அளப்பருங் காட்சியன். அவனே எல்லாத் தெய்வங்கட்கும் அவர் தம் தவத்துக்கு ஈடாக அருளாற்றல் நல்கும் திருவாணையன். அதனால் அவனே மாதேவன். நன்னெறி நான்மை நற்றவத்தின் அளவாகத் தன்னைத்தானே ஆருயிர்கட்கு அறியப்படுத்தும் தண்ணளியோன். மாதேவன் - பெரும்பொருட்டெய்வம். குறிப்புரை: ஏனோர் - எத்தன்மை உடையவரினும். ஊனே சிறுமையுள் - அற்ப சரீரத்திலும். உட்கலந்து - ஆன்மாவோடு கூடி.
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக் குண்டாலங் காயத்துக் குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே. பொருளுரை: ஆருயிர்களின் உடம்பு ஆலமரத்திற்கு ஒப்பாகும். அம்மரத்தை அதன்கட் டோன்றிய விழுது மதலையாய்த் தாங்குவது போன்று மக்களும் பெற்றோரைத் தாங்குகின்றனரல்லவா? அதனால் அஃதோர் அரிய ஒப்பாகும். அத்தகைய உடம்பாகிய ஆலவிதையினின்று ஒரு பெரு முளை எழுந்தது. அதுவே உள்ளத் துறவாகிய உறுதியென்னும் வைராக்கியமாகும். அம் முளை வளர்ந்து மரமாகி அதனினின்று உருள்வடிவாகிய நிறை பேரின்பமாம் ஆலங்காய் காய்த்தது. அக் காய் சிவனுகர்வாகிய மாங்கனியாகப் பழுத்தது. குதிரை - மா. திருவருளால் அச் சிவப்பெருங்கனியினை உணர்வின்கண் நுகர்ந்தவர் உண்டவராவர். அவர்களே திருவடியுணர்வு கைவந்த பெருந்தவத்தோர்; அவ் வுணர்வு பெறும் நற்றவப் பேறு இல்லார் முழு மூடர்களாவர். அவர்கள் பிண்டமாகிய உடம்பிற் புகுந்து பிறப்பு இறப்புகளுக்கு உட்பட்டு நிங்காப் பெருந்துன்பிற் றூங்குவர். அவர்கள் நன்னெறிக்கு வாராது புன்னெறிப்பட்டு மாறுபடுகின்றனர். குறிப்புரை: பிண்டாலம் வித்து - ஆலமரத்துக்கு ஒப்பாகிய உடம்பில் பெருமுளை - சித்த வைராக்கியம். குண்டாலம் - ஆனந்தம்.
ஒன்பதாம் தந்திரம். சர்வ வியாபி ஏயுஞ் சிவபோக மீதன்றி யோரொளி ஆயும் அறிவையும் ஆயா உபாதியால் ஏய பரிய புரியுந் தனதெய்துஞ் சாயுந் தனது வியாபகந் தானன்றே. பொருளுரை: நன்னெறி நான்மை நற்றவப்பேற்றால் சிவக்களிப்பாகிய சிவபோகம் பொருந்தும். அதுவல்லாமலும் திருவருட் பேரொளியால் ஆயும் அறிவு உண்டாகும். நிலைப்பதும் நிலையாததுமாகிய பொருள்களின் வேறுபாடுகளை அறியும் அறிவே ஆயும் அறிவெனப்பட்டது. இவற்றை உள்ளவாறு ஆராயவொட்டாது தடைசெய்து நிற்கும் அறியாமையால் பொருள்களில் பசை யென்னும் பரிவுண்டாகும். பசை - வாசனா மலம். அதனால் பருவுடல் உண்டாகும். பரியபுரி - பருவுடல். அவ் வுடம்பையும் அருந்தவப் பேற்றால் தன் வயமாக்கும் தன்மையுண்டாகும். சிவபெருமானின் அகல் நிறைவுள் ஆருயிர்கள் அமை நிறைவாக அடங்கியிருக்கும். அதனால் அவ் வுயிர்களின் முனைப்புச் சாய்ந்து கெடும். நிறைவு - வியாபகம். அவை மூன்றுவகைப்படும். . அகல் நிறைவு. . அமை நிறைவு. . அடங்கு நிறைவு. இவற்றை முறையே வியாபகம், வியாப்பியம், வியாத்தி எனவும் வழங்குப. குறிப்புரை: ஏயும் சிவபோகம் - சிவானந்தம் உண்டாம். ஆயும் அறிவு - ஆராய்ச்சி அறிவு. ஆயாவுபாதி - அவிச்சை. பரியபுரி - பூரித்துள்ள உடம்பு. தனதெய்தும் - தன் வசமாக அடையும். சாயும் - கெடும்.
நானறிந் தப்பொருள் நாடவிட மில்லை வானறிந் தங்கே வழியுற விம்மிடும் ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தானறிந் தெங்குந் தலைப்பட லாகுமே. பொருளுரை: அடியேனுடைய சுட்டறிவினாலேனும் சிற்றறிவினாலேனும் அச் சிவபெருமானை, நாடியறிவதற்குரிய இடமில்லை. வானாகிய திருவடியுணர்வு கை வந்த மேலோர் அவனருளாலே அவன்தாள் வணங்கும் பேரன்பு வாய்ந்த சீர்மிகு நாயன்மாராவர். அவர்வழியே சென்று நாமும் தொழுதல் வேண்டும். அப்பொழுது அச் சிவபெருமான் விளங்கி வெளிப்படுவன். வான்: ஆகுபெயர், நாயன்மார். விம்மிடும் - விளங்கி வெளிப்படும். அருளால் உயிர் அறிந்து உய்யுமாறு நின்று ஒளிரும் ஒண்சுடர் அச் சிவன். அவ் வுண்மை கைவரப் பெற்றால் 'தமியேன் உளம் புகுதல் யானே யுலகென்பன் இன்று' என்பதற்கிணங்க அவ் வுயிர் எங்கணும் செறிவாய் நிற்கும். பாலுட் கரந்த தேனும், சோறுட் கரந்த நெய்யும் முறையே அப் பால் முழுவதினும் நிறைந்தும், அச் சோறு முழுவதினும் நிறைந்தும் விளங்குவன இதற்கு ஒப்பாகும். குறிப்புரை: வான் - மேலோர். வழியுற - ஞானயோக வழியேசெல்ல. விம்மிடும் - பூரணம் ஆவர். ஊனறிந்து - உயிர்ச்சாட்சியாகி.
கடலிடை வாழ்கின்ற கவ்வை யுலகத்து உடலிடை வாழ்வுகொண் டுள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக் கடலின் மலிதிரை காணலு மாமே. பொருளுரை: ஆருயிர்கள் கடலிடைக் காணும் கலத்து நாப்பண் வாழ்வார் படும் பெரும் துன்பம் போன்று துன்புடனே வாழ்கின்றன. இதுவே உலக வியல்பின் உண்மை. இவ் வுலகில் உடம்பிடை வாழும் ஆருயிர்கள் தம் அறிவு வடிவத் தன்மையை ஆராய்தல் வேண்டும். அங்ஙனம் ஆராயின் அருளால் உயிருக்கு உயிராய் விளங்கும் இயற்கைப் பேரறிவுத் தெய்வமாகிய சிவபெருமானைக் காணுதல் அமையும் அக்காட்சி கடலின் கண்ணுள்ள நீர் தன்பால் தோன்றும் பேரலையைக் காண்பதனோடொக்கும். இதனால் நீரே நீரைக் காண்கின்றதாம் என மயங்கிப் பொருள் ஒன்றென மாறுபடக் கூறுவாருமுளர். அது பொருந்தாது. ஈண்டுக் கடல் என்பது நீருக்கு இடங்கொடுத்து விரவி நிற்கும் வெளி. இது சிவபெருமானுக்கு ஒருபுடையொப்பாகும். நீர் ஆருயிர்கட்கு ஒப்பாகும் நீரின்கண் அலை யெழுந்து தோன்றுமாறு துணை புரியும் காற்று திருவருளுக்கு ஒப்பாகும். அலை ஆருயிர்களின் புடை பெயர்ச்சிக்கு ஒப்பாகும். இந்நான்கு பொருளும் கெடாது. ஒரு பொருளுமாகாது, பின்னிப் புணர்ந்து வேறற நிற்கும் நிலையிற்றான் இக்காட்சி புலனாகின்றது. இதனைத் தெளியவுணர்வரேல் மயங்காரென்க. குறிப்புரை: கவ்வை - துன்பம். உள்ளொளி - ஆன்ம சித்தொளி உள்ளுறு தேவன் - சிவன். கடலின் மலிதிரை - ஓயாமல் வரும் கடல் அலைபோல எப்போதும் தவறாமல்.
பெருஞ்சுடர் மூன்றிலும் உள்ளொளி யாகித் தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும் இருஞ்சுடர் விட்டிட டிகலிட மெல்லாம் பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. பொருளுரை: ஞாயிறு திங்கள் தீ என்று சொல்லப்படும் பெருஞ்சுடர் மூன்றும சிவபெருமானுக்குரிய எண்பெரும் வடிவங்களைச் சார்ந்தனவாகும். ஏனைய ஐந்தும் முறையே நிலம், நீர், காற்று, விசும்பு, ஆருயிர்கள் என்று சொல்லப்படும். சிவபெருமான் அம் முச்சுடர்களையும் வடிவாகக் கொண்டிருப்பது போன்று அவற்றை ஒளிரச் செய்து அவற்றிற்கு உள்ளொளியாக நிற்பவனும் ஆகின்றான். அவனே தேவர் பிரானுமாவன். உலகிடை எங்கணும் எக்காலத்தும், பிறப்பால், சிறப்பால், பேசும் மொழியால், குறிக்கோளால் ஒருவரோடொருவர் மாறுபடு கின்றனர். அவரிடையே சிவபெருமான் கலந்து நின்றருள்கின்றனன். ஆயினும் மெய்யன்பர்கட்கு அவர்தம் அழியா அன்பிற்கிணங்கி அவரவர் பால் மிக எளிமையனாய் எழுந்தருள்கின்றனன். அவன் பல்வேறு வகையாகக் காணப்படும் சிறிய கோரைப் புற்போன்ற மிக நுண்ணியனாய்க் கலந்தருள்கின்றனன். குறிப்புரை: தெரிந்து உடலாய் நிற்கும் - அம் முச்சுடரையும் ஆராய்ந்து உணர உடம்பாகக்கொண்டு இருக்கின்ற. இகலிடம் எல்லாம் - மாறுபாடுடைய தேசங்கள் முற்றும். பரிந்து உடன்போகின்ற - அன்பரை விரும்பி அவரோடு போகின்ற பல் கோரை - புல்லியன்; சிறுவன்.
உறுதியி னுள்வந்த வுள்வினைப் பட்டும் இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகுஞ் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. பொருளுரை: ஆருயிர்க்கிழவர்கள் உடம்பின்மாட்டுக் கொண்டுள்ள அளவிறந்த பற்றினால் இருவினைக் குட்பட்டு உழல்வர். அவ் விருவினையும் மிக நுண்மையவாய் வந்து கூடும். கூடவே பொறுக்கலாற்றாத் துன்பம் எய்துவர். அத் துன்பத்தைப் போக்கும் புகலிடம் நாடிவிரைகுவர். அப் புகலிடம் வேறு எங்கும் இலாமையால் சிவன்பால் வந்து சார்வர். அச் சிவபெருமான் தன்னை அடைந்தார் வினை தீர்க்கும் தலைமைப் பண்பாடுடையன். அதனால், வந்தடைந்தார் வினையை வாட்டி யகற்றுவன். ஈண்டுவினை என்பது எஞ்சுவினையாகும். அதுவே எரி சேர்ந்த வித்துப் போன்றிறுவதுமாகும். அதுவே மன்னிக்கப்படுவதுமாகும். சிவர் தப்பாக எண்ணுகின்றனர், பாவம் செய்யச் செய்ய மன்னிப்பன் பரமன் என. பரமனையடைந்தார் மீண்டும் பாவஞ் செய்வரேல் யாண்டும் மன்னிப்பு எய்தார். 'இதுவே பின்னை மறத்தல் பிழை' என்பதாகும். மேலும் 'செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்னும் செந்தமிழ்ப் பொதுமறையின் செம்பொருளும் இதுவேயாம். சார்ந்தார் சிவப்பணிக்கண் சாரார் இருவினையை, நோந்தார்க்காம் எஞ்சகலல் நேர் என்பதே வாய்மையாகும். அவரைப் பொன்போற் பொலியச் செய்வன். சிறுதியாகிய ஒடுங்கிய உள்ளத்தின்கண் உள்ளொளியாக விளங்குவன். அவனே உயர்வற உயர்ந்த ஒரு பெரும் ஒண்மைக் கடவுள். 'அன்பறாது என்னெஞ்சு அவர்க்கு' எனவும், 'வீடும் வேண்டா விறலின் விளங்கினார்' எனவும் காதலர் தன்மை கட்டுரைப்பதற்கிணங்க வேறு எதன்கண்ணும் பெறுமாறுள்ள சிறு வேட்கையும் இல்லாதார் மேலோராவர். அவரே நாயன்மாராவர். அவர்க்குச் சிவபெருமான் உணர்வினுள் உணர்வாய் ஒளிரும் பெருஞ்சுடராவன். குறிப்புரை: உறுதியினுள் - தேக அபிமானத்தால் உள்வினைப்பட்டு - இருவினையின் வசமாய். வீழ்ந்தார் - தன்னை விரும்பி வந்தடைந்தவர்க்கு இரணமதாகும் - பொன்போல் உதவுவன். இறுதியினுள் - ஒடுங்கிய சித்தத்தில். ஒளி - விளங்கும். பெறுதி இல் மேலோர் - விருப்பு வெறுப்பு இல்லாத தவசிகளுக்கு.