File size: 1,840 Bytes
c7c24dc
 
 
 
 
1
2
3
4
5
6
ta_1768342_0	கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
ta_1768342_1	ஒருகொடவத்தை கம்பி கொட்டுவ பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் ரொஷான் குணவர்த்தன தெரிவிக்கின்றார்.
ta_1768342_2	கசிவாகும் எண்ணையை பவுசர் மூலம் சேகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ta_1768342_3	குறித்த குழாயினூடாக விமானத்திற்கு பயன்படுத்தக்கூடிய எரிபொருளை கொண்டு செல்லும் போதே கசிவு ஏற்பட்டதாகவும் ரொஷான் குணவர்த்தன கூறியுள்ளார்.
ta_1768342_4	எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.