Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
117,629
Human history has many examples of stalwarts who have excelled in diverse areas.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அறிஞர்களுக்கான பல உதாரணங்களை மனிதகுல வரலாறு கொண்டுள்ளது.
117,630
Be it Aryabhata, Leonardo da Vinci, Helen Keller, Gurudev Tagore.
அது ஆரியபட்டாவாக, லியனார்டோ டா வின்சியாக, ஹெலென் கெல்லராக, குருதேவ் தாகூராக இருக்கலாம்.
117,631
Now, we have done away with some traditional boundaries between arts, science and commerce.
கலைகள், அறிவியல், வணிகம் ஆகியவற்றுக்கு இடையேயான சில பாரம்பரிய இணக்கங்களை இப்போது நாம் கைவிட்டுவிட்டோம்.
117,632
If someone is interested, they can learn: Maths and Music together, or Coding and Chemistry together.
சிலருக்கு ஆர்வம் இருந்தால் கணிதத்தையும் இசையையும் இணைத்து அல்லது கோடிங் மற்றும் வேதியியலைச் சேர்த்து அவர்கள் கற்கலாம்.
117,633
This will ensure the focus is on what the student wants to learn rather than what the student is expected to, by society.
சமூகத்தால் மாணவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதைவிட, அந்த மாணவர் எதை விரும்புகிறாரோ அதைப் படிப்பதில் கவனம் செலுத்துவதை இது உறுதி செய்யும்.
117,634
Inter-disciplinary studies gives you control.
பலதுறைப் படிப்புகள் உங்களைக் கட்டுப்படுத்துவதாக இருக்கலாம்.
117,635
In the process, it also makes you flexible.
நடைமுறையில் அது உங்களிடம் நெகிழ்ச்சியை உருவாக்கும்.
117,636
In the National Education Policy, flexibility has been given great importance.
தேசிய கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மைக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
117,637
The Under-Graduate experience can either be a three or four year journey.
இளநிலை பட்டப்படிப்பு அனுபவம் மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் பயணமாக இருக்கலாம்.
117,638
Students will enjoy the advantages of an Academic Bank of Credit, which will store all the academic credits acquired.
கல்வி வங்கியில் செலுத்துகை எனும் ஆதாயங்களை மாணவர்கள் பெறுவார்கள்; அவர்களின் கல்விச் செலுத்துகை அனைத்தும் மொத்தமாகசேரும்.
117,639
These can be transferred and counted in the final degree.
இறுதிப் பட்டத்தில் இவை கணக்கிடப்பட்டு மாற்றப்படும்.
117,640
Such flexibility was long needed in our education system.
நமது கல்விமுறையில் இத்தகைய நெகிழ்வுத்தன்மை நீண்டகாலத் தேவையாக இருந்தது.
117,641
I am happy the National Education Policy has addressed this aspect.
இந்த அம்சத்தை தேசிய கல்விக் கொள்கை கணக்கில்கொண்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
117,642
Friends, National Education Policy is big on access to education starting from primary education.
நண்பர்களே, ஆரம்பக் கல்வி தொடங்கி கல்வி எளிதாகக் கிடைக்க தேசிய கல்விக் கொள்கை பெரிதும் உதவும்.
117,643
In Higher Education, the aim is to increase Gross Enrolment Ratio to 50 per cent by 2035.
2035க்குள் மொத்த சேர்ப்பு விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்துவது உயர்கல்வியின் நோக்கமாகும்.
117,644
Other efforts be it Gender Inclusion Fund, Special Education ones, options for Open and Distance Learning will also help.
பாலினத்தை உள்ளடக்கிய நிதியம், சிறப்புக் கல்வி மண்டலங்கள், திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி தெரிவு போன்ற பிற முயற்சிகளும் உதவியாக இருக்கும்.
117,645
Friends, Baba Saheb Ambedkar, the great educationist of our country and the chief architect of the Constitution of India used to say that education should be such that it is accessible to all.
நண்பர்களே, அனைவருக்கும் எளிதில் கிடைப்பதாகக் கல்வி இருக்க வேண்டும் என்று நமது நாட்டின் மகத்தான கல்வியாளரும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியுமான பாபா சாஹேப் அம்பேத்கர் கூறுவார்.
117,646
This education policy is also dedicated to his ideals.
இந்தக் கல்விக் கொள்கையும் அவரது சிந்தனைகளுக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
117,647
This education policy emphasizes on creating job creators rather than job seekers.
இந்தக் கல்விக் கொள்கை வேலை தேடுபவர்களைவிட வேலை உருவாக்குகின்றவர்களை உருவாக்குவதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது.
117,648
That is, in a way it is an attempt to bring reform in our mindset, in our approach.
நமது மனோபாவத்தில், நமது அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான பாதையில் இதுவும் ஒரு முயற்சியாக இருக்கிறது.
117,649
The focus of this policy is to create a self-reliant youth who will be able to decide whether to do a job, take up a service or become an entrepreneur.
வேலை செய்வதற்கா, சேவை செய்வதற்கா, தொழில்முனைவர் ஆவதற்கா என்பதை முடிவுசெய்யும் திறன்கொண்ட தற்சார்பு இளைஞரை உருவாக்க இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.
117,650
Friends, Language has always been a sensitive topic in our country.
நண்பர்களே, மொழி என்பது நமது நாட்டில் உணர்ச்சிகரமான தலைப்பாக எப்போதும் இருந்துவருகிறது.
117,651
One of the major reasons for the same is that we have left the local languages to their own fate.
இதுவே உள்ளூர் மொழிகளை அதன் சொந்த முடிவுக்கே நாம் விட்டுவிட்டதற்கான பெருங்காரணங்களில் ஒன்றாகும்.
117,652
They have very little chance to grow and thrive.
அவை வாழ்வதற்கும் வளர்வதற்கும் மிகக்குறைந்த வாய்ப்பே உள்ளது.
117,653
Now with the changes brought in the education policy, the languages of India will progress, and develop further.
இப்போது கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களால் இந்திய மொழிகள் முன்னேறும், மேலும் வளரும்.
117,654
These will not only increase the knowledge about India, but will also strengthen the unity of India.
இது இந்தியாவைப் பற்றிய ஞானத்தை அதிகரிப்பது மட்டுமின்றி இந்தியாவின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும்.
117,655
There are many rich compositions in our Indian languages.
நமது இந்திய மொழிகளில் வளமான அம்சங்கள் பல இருக்கின்றன.
117,656
We have centuries of knowledge and experience all of them will expand further.
பல நூற்றாண்டு கால ஞானத்தையும் அனுபவத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்; இவை அனைத்தும் மேலும் விரிவாக்கப்படும்.
117,657
This will also introduce the world to the rich languages of India.
இந்திய மொழிகளின் வளத்தை இது உலகுக்கு அறிமுகமும் செய்யும்.
117,658
And a huge benefit will be that the students will get to learn in their mother tongue in their formative years.
தாங்கள் வளரும் அடிப்படை ஆண்டுகளில் தங்களின் தாய்மொழியில் கற்பது மாணவர்களுக்குப் பெரும் பயனைத்தரும்.
117,659
With this, there will be a lot of opportunity for them to grow and blossom their talent.
இத்துடன் தங்களின் திறமையை வளர்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கும்.
117,660
They will be able to become comfortable and motivated to learn new things without pressure and will be able to connect with education.
நிர்பந்தம் இல்லாமல் புதிய விஷயங்களைக் கற்பதற்கான வசதியையும் ஊக்குவிப்பையும் அவர்கள் பெறமுடியும்; கல்வியோடு இணைய இது வாய்ப்பளிக்கும்.
117,661
Anyway, if you look at the list of the top 20 countries of the world on the basis of GDP, you will see that most of the countries provide education in their mother tongue.
ஜிடிபி அடிப்படையில் உலகில் முதலிடத்தில் உள்ள 20 நாடுகளின் பட்டியலை நீங்கள் பார்த்தால் அந்த நாடுகளில் பெரும்பாலானவை அவற்றின் தாய்மொழியில் கல்வி வழங்கியதை நீங்கள் காணலாம்.
117,662
These countries develop the thinking and understanding of the youth in their own language and also emphasize on other languages to communicate with the world.
இளைஞர்கள் தங்களின் சொந்த மொழியில் சிந்தனையையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் இந்த நாடுகள், உலகத்துடன் தொடர்புகொள்ள மற்ற மொழிகளுக்கும்கூட முக்கியத்துவம் அளிக்கின்றன.
117,663
The same policy and strategy is going to be very useful for 21st century India as well.
இதே கொள்கையும் அணுகுமுறையும் 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப்போகிறது.
117,664
India has an amazing treasure of languages, one life is not enough to learn them and today the world too is eager for it.
மொழிகளின் வியத்தகு களஞ்சியத்தை இந்தியா கொண்டுள்ளது; இவற்றைக் கற்பதற்கு ஒரு வாழ்க்கை போதாது; இப்போது உலகம் கூட இதில் ஆர்வமாக உள்ளது.
117,665
Friends, The New Education Policy has another special feature.
நண்பர்களே, புதிய கல்விக் கொள்கை இன்னொரு சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது.
117,666
The focus is on integrating it with Global as much as the focus is on Local.
உள்ளூர் மீது கவனம் செலுத்தும் அதே அளவு உலகத்துடனும் அதனை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
117,667
While emphasis has been laid on giving a natural place to local folk arts and disciplines, classical art and knowledge, the Top Global Institutions are also invited to open campuses in India.
உள்ளூர் நாட்டுப்புற கலைகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கும், செவ்வியல் கலை மற்றும் ஞானத்திற்கும் இயற்கையான இடத்தை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கும்போதே தலைசிறந்த உலகக் கல்விநிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் திறக்கவும்கூட அழைக்கப்பட்டுள்ளது.
117,668
With this, our youth will not only get Word Class Exposure and Opportunities in India but will also be more prepared for the Global Competition.
இதன் மூலம் நமது இளைஞர்கள் இந்தியாவில் உலகத் தரத்திலான வெளிப்பாட்டையும் வாய்ப்புகளையும் பெறுவது மட்டுமின்றி உலகளாவிய போட்டிக்கும் கூட அதிகம் தயாராவார்கள்.
117,669
This will also help in building world-class institutions in India, making India a hub of global education.
இந்தியாவில் உலகத் தரத்திலான கல்விநிறுவனங்கள் அமையவும் உதவுவதோடு உலகளாவிய கல்வியின் குவிமையமாகவும் இந்தியாவை இது உருவாக்கும்.
117,670
Friends, I have always trusted the youth power of the country.
நண்பர்களே, நாட்டின் இளையோர் சக்தியில் நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
117,671
The youth of the country has proved again and again why I have faith in them.
நான் ஏன் அவர்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பதை நாட்டின் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
117,672
Recently, to fight corona, the demand for Face Shields had gone up.
அண்மையில் கொரோனாவை எதிர்த்துப் போராட முகக்கவசங்களின் தேவை அதிகரித்தது.
117,673
To meet this demand, the youth of the country came forward on a large scale with 3D printing technology.
இந்தத் தேவையை நிறைவேற்ற முப்பரிமாண(3டி) அச்சுத் தொழில்நுட்பத்துடன் பெருமளவு உற்பத்திக்கு நாட்டின் இளைஞர்கள் முன்வந்தார்கள்.
117,674
The manner in which young innovators, young entrepreneurs, have come forward to develop PPEs and other medical devices is discussed everywhere.
இளம் கண்டுபிடிப்பாளர்களும் இளம் தொழில்முனைவோரும் முன்வந்து முழுஉடல்கவச ஆடைகளையும் (பிபிஇ), இதர மருத்துவ சாதனங்களையும் உற்பத்திசெய்த விதம் எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட்டது.
117,675
Young developers have prepared a great medium for tracking Covid in a very short time with Aarogya Setu App.
மிகக் குறுகிய காலத்தில் ஆரோக்ய சேது செயலியுடன் கொவிட்டைக் கண்டறிவதற்கு மகத்தான வழிமுறையை இளம் அறிவியலாளர்கள் உருவாக்கினர்.
117,676
Friends, all of you are the source of aspiration for the youth of self-reliant India.
நண்பர்களே, தற்சார்பு இந்தியாவின் இளைஞர்களுக்கு நீங்கள் அனைவரும் ஆதார வளமாக இருக்கிறீர்கள்.
117,677
The role of all of youth is very important in achieving our goal of Ease of Living, to give a better life to the poor of the country.
வாழ்க்கையை எளிதாக்கும் நமது இலக்கை அடைவதற்கும் நாட்டின் ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கையை அளிப்பதற்கும் அனைத்து இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
117,678
I have always believed that there is no such challenge facing the country that our youth cannot face for which they cannot find a solution.
நமது இளைஞர்களால் எதிர்கொள்ள முடியாத , அவர்களால் தீர்வுகாண முடியாத எந்த சவாலையும் நாடு எதிர்கொண்டிருக்கவில்லை என்பதில் நான் எப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
117,679
Whenever in the time of need the country has looked up to its young innovators, they have not disappointed.
தேவை ஏற்படும் தருணத்தில் எல்லாம், நாடு அதன் இளம் கண்டுபிடிப்பாளர்களை எதிர்நோக்குகிறது, அவர்கள் ஏமாற்றம் அளித்ததில்லை.
117,680
Through the Smart India Hackathon, the country has received amazing innovations in the past years.
பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் மூலம் கடந்த ஆண்டுகளில் வியத்தகு புதிய கண்டுபிடிப்புகளை நாடு பெற்றுள்ளது.
117,681
I am confident that even after this Hackathon, all the young friends will understand the needs of the country and continue to work on new solutions to make the country self-reliant.
இந்த ஹேக்கத்தானுக்குப் பிறகும் கூட இளம் நண்பர்கள் அனைவரும் நாட்டின் தேவையை உணர்வார்கள், தற்சார்புள்ள நாட்டை உருவாக்க புதிய தீர்வுகள் குறித்த பணிகளைத் தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
117,682
Once again I wish you all the very best
நீங்கள் மிகவும் சிறப்புற மீண்டும் ஒருமுறை நான் வாழ்த்துகிறேன்!
117,683
Prime Minister's Office English rendering of text of PMs speech at Higher Education Conclave Namaskar
பிரதமர் அலுவலகம் உயர்கல்வி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை வணக்கம்!
117,684
I extend greetings to my colleagues in the Cabinet, Shri Ramesh Pokhriyal Nishank Ji and Shri Sanjay Dhotre Ji, Indias well-known scientist Dr. Kasturirangan, who has played an important role in the National Education Policy, and his team, vice-chancellors, educationists and all those taking part in this conclave.
எனது அமைச்சரவை சகாக்களான திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, திரு.சஞ்சய் தோத்ரே அவர்களே, தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதில் முக்கியப் பங்கு வகித்த பிரபல விஞ்ஞானி திரு.கஸ்தூரி ரங்கன் மற்றும் அவரது குழுவினரே, துணைவேந்தர்களே, கல்வியாளர்களே மற்றும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளவர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
117,685
This event today is very important in the context of the National Education Policy.
தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
117,686
The education world of the country will get detailed information about the different aspects of the National Education Policy.
தேசிய கல்விக் கொள்கையின் வேறுபட்ட அம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை நாட்டின் கல்வி உலகம் அறிந்துகொள்ளும்.
117,687
The implementation of the National Education Policy will become easier once the finer points of the policy are discussed in detail.
தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை விரிவாக விவாதித்து விட்டால், அதனை அமல்படுத்துவது எளிதானதாக மாறிவிடும்.
117,688
The National Education Policy has been approved after comprehensive deliberations and suggestions from lakhs of people spread over 3-4 years.
விரிவான விவாதம் நடத்தியும், லட்சக்கணக்கான மக்களிடம் 3-4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலோசனைகளைப் பெற்றும், தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
117,689
It is being discussed in detail in the country.
இது நாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
117,690
People from different regions and different ideologies have been reviewing the National Education Policy and giving their views.
தேசிய கல்விக் கொள்கையை வேறுபட்ட பிராந்தியங்கள் மற்றும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட மக்கள் ஆய்வுசெய்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
117,691
The countrys education system will benefit a lot through these debates.
இந்த விவாதங்கள் மூலம், நாட்டின் கல்வி அமைப்பு மிகப்பெரும் அளவில் பயனடையும்.
117,692
This is a matter of happiness that nobody from any region or strata said that it was a biased policy.
இந்தக் கொள்கை ஒருதலைபட்சமானது என்று எந்த பிராந்தியத்தை அல்லது பிரிவைச் சேர்ந்த மக்களும் கூறவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய அம்சம்.
117,693
This is an indicator that people are finally getting to see the changes that they wanted in the decades-old education system.
இது பல ஆண்டுகால பழைய கல்வி முறையில் மக்கள் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.
117,694
It is natural for some people to question how such a big reform which has been decided upon will be implemented.
எந்தவொரு மிகப்பெரும் சீர்திருத்தத்தை அமல்படுத்த முடிவுசெய்தாலும், அதுகுறித்து சிலர் கேள்வி எழுப்புவது இயற்கையானது.
117,695
People are now looking forward to its implementation.
தற்போது இதனை அமல்படுத்துவதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
117,696
In keeping with this challenge, all of us need to see to it how it can be made possible through improvements, wherever necessary.
இந்த சவால்களை கவனத்தில் கொண்டு, தேவைப்படும் இடங்களில் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம்.
117,697
All of you are directly involved with the implementation of the National Education Policy.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் நீங்கள் அனைவரும் நேரடியாக ஈடுபடுபவர்கள்.
117,698
Therefore, you have a larger role to play.
எனவே, நீங்கள் மிகப்பெரும் பங்கை செய்ய உள்ளீர்கள்.
117,699
As far as the political will is concerned, I am fully committed, I am completely with you.
அரசியல் ஆர்வத்தைப் பொருத்தவரை, நான் முற்றிலும் உறுதியாக உள்ளேன், உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.
117,700
Friends, every country reforms its education system according to its national values and national goals.
நண்பர்களே, ஒவ்வொரு நாடும், தனது கல்விக் கொள்கையில் தனது தேசிய மதிப்புகள் மற்றும் தேசிய இலக்குகள் அடிப்படையிலேயே சீர்திருத்தங்களை மேற்கொள்கின்றன.
117,701
The idea is that the countrys education system should ensure the future of not only its present but future generations as well.
நாட்டின் கல்விக் கொள்கை என்பது தற்போதைய மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமன்றி, எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
117,702
This is the idea behind Indias National Education Policy.
இது, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக உள்ளது.
117,703
The National Education Policy will lay the foundation of the new India, the 21st century India.
21-ம் நூற்றாண்டுக்கான புதிய இந்தியாவுக்கு தேசிய கல்விக் கொள்கை அடித்தளம் அமைக்கும்.
117,704
The National Education Policy focuses on the education and skills needed for the youth of the 21st century India.
21-ம் நூற்றாண்டு இந்தியாவின் இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் தேவைகளை தேசிய கல்விக் கொள்கை கவனத்தில் கொண்டுள்ளது.
117,705
This education policy lays special emphasis to make India more powerful, to take it to new heights, to empower the Indian citizens and to make available maximum opportunities to them.
இந்தியாவை அதிக சக்திவாய்ந்ததாக மாற்றுவது, புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வது, இந்திய குடிமக்களை மேம்படுத்துவது, அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை கிடைக்கச் செய்வது ஆகியவற்றுக்கு இந்த கல்விக் கொள்கையில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
117,706
Indian student will be able to play a constructive role in the nation building if he studies in a scientific way and according to the changing environment, whether he is in nursery or in college.
மாணவர்கள் பள்ளியில் இருந்தாலும் அல்லது கல்லூரியில் படித்தாலும், கால மாற்றத்துக்கு ஏற்பவும், அறிவியல்பூர்வமாகவும் படித்தால், அவர்களால் தேச கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
117,707
Friends, our education system did not undergo reforms for the last several years, resulting in the encouragement to rat race rather than promoting values of curiosity and imagination.
நண்பர்களே, கடந்த பல்வேறு ஆண்டுகளில் நமது கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, ஆர்வம் மற்றும் யூகிக்கும் திறனை ஊக்குவிக்காமல், சொத்து அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டியையே (எலிப் போட்டியை) ஊக்குவிப்பதாக இருந்தது.
117,708
There was a competition to become a doctor, or an engineer, or a lawyer.
மருத்துவர் அல்லது பொறியாளர் அல்லது வழக்கறிஞராக வேண்டும் என்பதற்கான போட்டியே இருந்தது.
117,709
It was necessary to take the education system out from that competitive mindset without the mapping of interest, ability and demand.
ஆர்வம், திறன், தேவை ஆகியவற்றைப் பார்க்காமல், போட்டி மனநிலையை மட்டும் ஏற்படுத்துவதிலிருந்து கல்வி அமைப்பை மாற்ற வேண்டியது அவசியமாகிறது.
117,710
How can our youth develop critical and innovative thinking if there is no passion for education, philosophy of education and purpose of education
கல்வி மீதான ஆர்வம் இல்லாமலும், கல்வியின் தத்துவம் மற்றும் கல்வியின் நோக்கம் தெரியாமலும், முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புத்தாக்க சிந்தனைகளை நமது இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு உருவாக்க முடியும்?
117,711
Friends, today is the death anniversary of Guru Rabindranath Tagore.
நண்பர்களே, குரு ரவீந்திரநாத் தாகூரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
117,712
He used to say: The highest education is that which does not merely give information but makes our life in harmony with all existence. Definitely, the far-reaching goal of the National Education Policy is based on it.
அவர் கீழ்வருமாறு கூறியுள்ளார்: “உயர்ந்த கல்வி என்பது தகவல்களை அளிப்பது மட்டும் இல்லை. அனைத்து உயிரினங்களுடனும் நல்லிணக்கத்துடன் நமது வாழ்க்கையை ஏற்படுத்துவது.” நிச்சயமாக, இதனை அடிப்படையாகக் கொண்டே தேசிய கல்விக் கொள்கையின் நீண்டகால நோக்கம் அமைந்துள்ளது.
117,713
There was a need for a holistic approach rather than a piece-meal approach to achieve this and the National Education Policy has succeeded in it.
இதனை நிறைவேற்றுவதற்கு படிப்படியான நிலைப்பாடுகள் இல்லாமல், முழுமையான நிலைப்பாடு தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய கல்விக் கொள்கை வெற்றிபெற்றுள்ளது.
117,714
Friends, now that the National Education Policy has taken a concrete shape, I would like to discuss with you the challenges that came before us during the initial days.
நண்பர்களே, தேசிய கல்விக் கொள்கை தற்போது முழு வடிவம் பெற்றுள்ளது. தொடக்க காலத்தில் நமக்கு முன்பு ஏற்பட்ட சவால்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
117,715
There were two important questions then -- Does our education policy motivate our youth for a creative, curiosity and commitment-driven life
அப்போது இரண்டு கேள்விகள் எழுந்தன. நமது இளைஞர்களை படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைக்கு நமது கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறதா என்பது முதல் கேள்வி.
117,716
You have been in this field for so many years.
இந்தத் துறையில் நீங்கள் பல ஆண்டுகளாக உள்ளீர்கள்.
117,717
Friends, the second question was whether our education system empowers our youth and helps create an empowered society
நண்பர்களே, இரண்டாவதாக நமது கல்வி முறை நமது இளைஞர்களை மேம்படுத்துவதாகவும், மேம்படுத்தப்பட்ட சமூகத்தை உருவாக்க உதவுவதாகவும் அமைந்ததா? என்பது இரண்டாவது கேள்வியாக இருந்தது.
117,718
You all are well aware of these questions and answers.
இந்த கேள்விகள் மற்றும் விடைகளை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.
117,719
Friends, I am satisfied that these questions were seriously considered while formulating Indias National Education Policy.
நண்பர்களே, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும்போது, இந்தக் கேள்விகள் மிகவும் முக்கியத்துவத்துடன் கருதப்பட்டது என்பது எனக்கு திருப்தியை அளிக்கிறது.
117,720
Friends, a new world order is emerging with a new look in the changing scenario.
நண்பர்களே, மாறிவரும் சூழலில் புதிய கண்ணோட்டத்துடன் புதிய உலக அமைப்பு உருவாகிவருகிறது.
117,721
A new global standard is also getting readied.
புதிய உலக தரநிலையும் தயாராகியுள்ளது.
117,722
Therefore, it was necessary that India should effect changes in its education system.
எனவே, தனது கல்வி முறையில் இந்தியா மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியமாகிறது.
117,723
In order to change the school curriculum from 102 structure to 5334 is a step in this direction.
இதன் அடிப்படையிலேயே, பள்ளிக் கல்வி முறை 10+2 என்ற கட்டமைப்பிலிருந்து 5+3+3+4 என்ற கட்டமைப்புக்கு மாறுகிறது.
117,724
We have to make our students global citizens.
நமது மாணவர்களை சர்வதேச குடிமக்களாக நாம் மாற்ற வேண்டும்.
117,725
Simultaneously, we also have to keep in mind that they stay connected to their roots.
அதேநேரத்தில், அவர்களை, அவர்களது அடிவேரில் தொடர்ந்து பிணைந்திருக்கச் செய்ய வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
117,726
The format of this national education policy has been decided after encompassing all points from roots to the world, from man to mankind, from past to modernity.
வேரிலிருந்து உலகம் வரை, மனிதர்களிலிருந்து மனிதத்தன்மை வரை, பழமையிலிருந்து நவீனத்துவம் வரை என அனைத்து நிலைகளையும் கடந்தபிறகே, இந்த தேசிய கல்விக் கொள்கையின் அமைப்பு முடிவுசெய்யப்பட்டுள்ளது.
117,727
Friends, there is no dispute that children learn faster if they have the same language which they speak at home and the language which is taught in school.
நண்பர்களே, வீடுகளில் பேசும் மொழியிலேயே பள்ளிகளில் கற்பித்தால், குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்ளும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
117,728
This is the main reason why a consensus has been arrived at to provide education to the children till Class 5 in their mother tongue, as far as possible.
இதன் காரணமாகவே, குழந்தைகளுக்கு முடிந்த அளவுக்கு, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி அளிப்பது என்பதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளது.