text
stringlengths
3
79k
(அக்கால மாலை வகைகள் என்ற மட்டில் நாம் இவற்றைக் கருதிப் பார்க்கலாம்)
கருவிநூல்
ஆலோஅல்கேன்கள் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டுள்ளது. 15ம் நூற்றாண்டில் எதைல் குளோரைட்டு செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் சேதன ரசாயனவியலின் வளர்ச்சியாலும், அல்கேன்களின் கட்டமைப்பு பற்றி அறிந்து கொண்டமையாலும், முறையான தயாரிப்புக்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட C-அலசன் பிணைப்பு உருவாக்கத்துக்கான வழிமுறைகளும் வளர்ச்சியடைந்தன. சிறப்பான பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள், அல்கீன்களுக்கு அலசன்களைச் சேர்த்தல், அல்கீன்களுக்கு ஐதரசன் ஏலைட்டுக்களைச் சேர்த்தல் மற்றும் அல்ககோல்களை அல்கைல் ஏலைட்டுக்களாக மாற்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இம் முறைகள் மிகவும் நம்பகரமானவையாக இருந்தமையால், ஹலோ அல்கேன்கள் கைத்தொழில் இரசாயனவியல் பயன்பாடுகளுக்கு இலகுவாகப் பெறக்கூடியதாக இருந்தன. மேலும், ஏலைட்டுக்கள் இலகுவாக வேறு தொழிற்படு கூட்டங்களாக மாற்றக்கூடியதாகவும் இருந்தன.
பெரும்பாலான ஹலோஅல்கேன்கள் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டாலும், இயற்கையான முறையிலும் இவை வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும் பக்டீரியா, ஃபங்கசு மற்றும் கடற்களைகள் ஆகியவற்றின் நொதியச் செயற்பாடுகளின் மூலம் இவை வெளியாகின்றன. 1600க்கும் மேற்பட்ட அலசனேற்றப்பட்ட சேதனப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் புரோமோஅல்கேனே முக்கிய சேர்வையாகும். உயிரியலில் புரோமினேற்றப்பட்ட சேதனப் பொருட்களாக உயிரியல் ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மெதைல் புரோமைட்டிலிருந்து அல்கேன் இல்லாத அரோமட்டிக்குகள் மற்றும் நிரம்பாச் சேர்வைகள் (இந்தோல்கள், தேர்ப்பீன்கள், அசெற்றோஜெனின்கள் மற்றும் பீனோல்கள்) வரை காணப்படுகின்றன.
நிலத் தாவரங்களில் அலசனேற்றப்பட்ட அல்கேன்கள் காணப்படுவது மிகவும் அரிதாகும். எனினும், 40 வகையான தாவரங்களில் ஃபுளோரோ அசற்றேற்று எனும் நச்சுப்பொருள் உருவாக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பக்டீரியாக்களில்,ஹேலோஅல்கென் களிலிருந்து அலசன்களை அகற்றும் சிறப்பான, அலசனகற்றி நொதியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வகைப்பாடு
கட்டுமானத் தோற்றத்தின் அடிப்படையில் ஆலசன்கள் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுவின் இணைப்பிற்கு ஏற்ப ஆலோ ஆல்க்கேன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு ஒரேயொரு ஆல்க்கைல் குழுவுடன் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால் அது முதல்நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படுகிறது. இதற்கு உதாரணம் குளோரோ ஈத்தேன் (CH3CH2Cl) ஆகும். ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு இரண்டு C–C பிணைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அது இரண்டாம் நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படும். ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு மூன்று C–C பிணைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அது மூன்றாம் நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படுகிறது.
ஏழாவது குழுவில் இடம்பெற்றுள்ள ஆலசனின் தன்மைக்கு ஏற்பவும் ஆலோ ஆல்க்கேன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கார்பனுடன் பிணைக்கப்பட்டுள்ள புளோரின், குளோரின், புரோமின், மற்றும் அயோடின் போன்ற ஆலசன்கள் அடிப்படையில் கரிமபுளோரின், கரிமகுளோரின், கரிமபுரோமின் மற்றும் கரிம அயோடின் சேர்மங்கள் என்றும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆலசன்களைப் பெற்றுள்ள சேர்மங்கள் உருவாகவும் சாத்தியங்கள் உள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணற்ற ஆலோ ஆல்க்கேன்கள் இவ்வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. குளோரோபுளோரோ கார்பன்கள், ஐதரோ குளோரோபுளோரோ கார்பன்கள், ஐதரோ புளோரோ கார்பன்கள் உள்ளிட்டவை இவ்வகைப்பாட்டில் அடங்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு விவாதங்களில் இந்த ஆலோ ஆல்க்கேன்கள் சுருக்கக் குறியீடுகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
பண்புகள்
ஆலோ ஆல்க்கேன்கள் பொதுவாக தாய் ஆல்க்கேன்கள் போல நிறமற்றும், ஒப்பீட்டளவில் மணமற்றும் நீர் விலக்கிகளாகவும் காணப்படுகின்றன. குளோரோ-, புரோமோ- மற்றும் அயோடோ ஆல்க்கேன்களின் கொதிநிலை, உருகுநிலை போன்றவை ஒத்தவரிசை ஆல்க்கேன்களை விட அதிகமாக உள்ளன. அணு எடையையும் ஆலைடுகளின் எண்ணிக்கையும் இந்த அளவிடலில் பயன்படுகின்றன. மூலக்கூறிடை விசைகளின் வலிமை அதிகரிப்பு இதற்குக் காரணமாகும். இதனால் கார்பன் டெட்ரா அயோடைடு திண்மமாகவும் அதேவேளையில் கார்பன் டெட்ராகுளோரைடு நீர்மமாகவும் காணப்படுகின்றன. பல புளோரோ ஆல்க்கேன்கள் இப்போக்கிற்கு மாறாக செயல்படுகின்றன. புளோரினேற்றம் அடையாத அதனுடைய ஒத்தவரிசை சேர்மங்களைக் காட்டிலும் குறைவான உருகுநிலையும் கொதிநிலையும் கொண்டவையாக இவை உள்ளன. உதாரணமாக மீத்தேனின் உருகுநிலை -182.5 °செல்சியசு வெப்பநிலை ஆகும். ஆனால் டெட்ராபுளோரோமீத்தேனின் உருகுநிலை -183.6 ° செல்சியசு வெப்பநிலை ஆகும்.
குறைவான C–H பிணைப்புகள் கொண்டிருப்பதால் ஆலோகார்பன்கள் ஆல்க்கேன்களைக் காட்டிலும் குறைவான தீப்பற்றும் வெப்பநிலையைக் கொண்டுள்ளன. சில ஆலோகார்பன்கள் தீத்தடுப்பான்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகரித்த முனைவுத் தன்மையின் காரணமாக தொடர்புடைய ஆல்க்கேன்களைக்க் காட்டிலும் இவை சிறந்த கரைப்பான்களாகச் செயல்படுகின்றன. புளோரினைத் தவிர இதர ஆலசன்களைக் கொண்டிருக்கும் ஆலோ ஆல்க்கேன்கள் தாய் ஆல்க்கேன்களை விட அதிக வினைத்திறன் கொண்டவையாக உள்ளன.
தோற்றம்
ஆலோ ஆல்க்கேன்கள் பரவலாக இருப்பதாலும் பல பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கும் பண்புகள் கொண்டிருப்பதாலும் கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன. கடல்கள் வருடந்தோறும் 1-2 மில்லியன் டன் புரோமோமெத்தேனை விடுவிக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் ஆலசன்களைக் குறிப்பாக புளோரினைக் கொண்டுள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஐந்தில் ஒரு பாகம் மருந்துகளில் புளோரின் இடம்பெற்று உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 5-புளோரோர்சில், புளோசெட்டின், பாரோசெட்டின், சிப்ரோபுளோவசின், மெப்ளோகுயின், புளோகோனசோல் உள்ளிட்ட மருந்துகள் இதற்கு உதாரணங்களாகும். C-F பிணைப்பு ஒப்பீட்டளவில் வினைத்திறன் அற்று இருப்பதால் சில நன்மைகள் ஏற்படுகின்றன. புளோரின் பதிலீடு செய்யப்பட்ட ஈதர்கள் ஆவியாகும் மயக்க மருந்துகளாகும். மெத்தாக்சிபுளோரேன், என்புளோரேன், ஐசோபுளோரேன், செவோபுளோரேன் மற்றும் டெசுபுளோரேன் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். புளோரோ கார்பன் மயக்கமருந்துகள் டை எத்தில் ஈதர் மற்றும் வளைய புரோப்பேன் ஆகியவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் போது தீங்கு விளைவுகள் குறைகின்றன. பெர்புளோரினேற்ற ஆல்க்கேன்கள் இரத்த பதிலீடுகளாக பயன்படுகின்றன.
குளோரினேற்றம் அல்லது புளோரினேற்றம் பெற்ர ஆல்க்கீன்கள் பலபடியாக்க வினைகளில் ஈடுபடுகின்றன. பாலிவினைல் குளோரைடு, டெப்ளான் போன்றன இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
மேற்கோள்கள் 'நெடுவாசல் ஜமீன்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், "திருவரங்குளம்" பகுதி 'நெடுவாசல்' என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "பன்றிகொண்டார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.
1879 ஆம் ஆண்டு, விஜயரகுநாத முத்தையன் பன்றிக்கொண்டாரின் கீழ் 15 கிராமங்கள் இருந்தன (9532 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 2037 ரூபாய் 6 அணா 6 பைசா ஆகும்.
புதுக்கோட்டை அரச குடும்பத்துடன் திருமண உறவு மூலம் நெய்வாசல் ஜமீன்கள் இணைந்திருந்தார்கள். அய்யாசாமி பன்றிகொண்டார் அவர்கள், புதுக்கோட்டை மன்னரின் மகள் மங்களாம்பாள் ராஜா அம்மணி சாகிப் அவர்களை திருமணம் செய்துகொண்டார்.
ரகுநாத பன்றிகொண்டார் என்பவர் புதுக்கோட்டை மன்னரின் சாகிர்தார் ஆவார். ஜாகிர் (Jagir) என்பது படைத்தலைவர்களின் சேவை கருதி அவர்களுக்கு வழங்கப்படும் சிறிய ஆட்சிப் பகுதியைக் குறிக்கும். கட்டக்குறிச்சி பன்றிகொண்டார் மற்றும் முத்துசாமி பன்றிகொண்டார் , புதுக்கோட்டை மன்னருக்கு எதிராக கலகம் செய்தனர். மக்களை கிளர்ச்சிக்கு தூண்டிய முத்துசாமி பன்றிகொண்டார் புதுக்கோட்டை மன்னரின் சொந்த மைத்துனர் ஆவார்.
நெடுவாசல் பன்றிக்கொண்டார் மற்றும் செரியலூர் பன்றிக்கொண்டார் ஜமீன்கள் சகோதரர்கள் ஆவர்.
மேற்கோள்கள் பட்டியாலா ஊரக சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:110) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பட்டியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல்பீர் சிங் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 77,155 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மோஹித் மொகிந்திரா என்பவரை 53,474 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள் நைஜல் புளோய் (Nigel Bloy, பிறப்பு: சனவரி 2 1923, இறப்பு: சனவரி 7 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1946-1958 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
நைஜல் புளோய் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 7 2011.மலயகேது அலெக்ஸான்டரை எதிர்த்து போரிட்ட போரஸின் மகனாவர். போரஸுக்கு பிறகு விதஸ்தா நகரை தலைநகராக கொண்டு பஞ்சாப் பகுதிகளை ஆண்டார். இவரது மனைவியின் பெயர் சொர்ணமயி என்பதாகும். இவரை பற்றிய குறிப்புகள் சாணக்கியரின் அர்த்தசாஸ்த்திரத்தில் காணப்படுகின்றன. இவரை சந்திரகுப்தர் வெற்றி கொண்டார்.2019–21 ஐசிசி உலகத் தேர்வு துடுப்பாட்ட வாகையின் இறுதிப் போட்டி 18-22 சூன் 2021 இந்தியா நியூசிலாந்து அணிகளுகிடையில் சவுத்தாம்ப்டனில் உள்ள உரோசு பவுலில் நடைபெறகிறது. போட்டி வெற்றி/தோல்வி இன்றி அல்லது சமனில் முடிந்தால் இரு அணிகளும் கூட்டாக வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
குழுநிலைப் போட்டிகள் முடிவில்
அணிகள்
இறுதிப்போட்டி முக்கார்பனேட்டு (Tricarbonate) என்பது கரிம வேதியியலில் ஈரிணைதிறன் [–O–(CO)–O–(CO)–O–(CO)–O–] வேதி வினைக்குழுவைப் பெற்றுள்ள ஒரு சேர்மம் ஆகும். இதை டிரைகார்பனேட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். இச்சேர்மத்தில் மூன்று கார்பனேட்டு தொகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் வரிசையில் இரண்டு ஆக்சிசன் அணுக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இத்தகைய சேர்மங்களை கருத்தியல் டிரைகார்பானிக் அமிலத்தின் HO–(CO)–O–(CO)–O–(CO)–OH. இரட்டை எசுத்தர்களாகக் கருதமுடியும். டை-டெர்ட்-பியூட்டைல் முக்கார்பனேட்டை இதற்கு ஒரு முக்கியமான உதாரணமாகக் கூறுவார்கள். இதுவொரு வேதியியல் வினையாக்கியாகும். பென்டேனில் இது கரையும். நிறமற்ற பட்டகச் சேர்மமான இது 62-63 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும் .
டிரைகார்பனேட்டு என்ற பெயர் சில சமயங்களில் மூன்று கார்பனெட்டு எதிர்மின் அயனிகளை விகிதவியல் வாய்ப்பாட்டில் பெற்றுள்ள சீரியம் டிரைகார்பனேட்டு Ce2(CO3)3 போன்ற சேர்மங்களையும் குறிக்கிறது.
இதையும் காண்க
இருகார்பனேட்டு
மேற்கோள்கள் ஈரானின் குடியரசுத் தலைவர்கள் (List of presidents of Iran) 1979 ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈரான் குடியரசுத் தலைவர் பொதுத் தேர்தல் மூலம் இப்பதவி ஏற்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் ஆகும். ஈரானின் அதியுயர் தலைவருக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் கொண்டவர் ஈரான் குடியரசுத் தலைவர் ஆவார். இறுதியாக 18 சூன் 2021 அன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் பொதுத்தேர்தலில், ஈரானின் குடியரசுத் தலைவராக இப்ராகிம் ரையீசி பொதுமக்களால் 62% வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் இரண்டாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தின் படி, 1989-இல் ஈரானில் பிரதம அமைச்சர் பதவி ஒழிக்கப்பட்டது. எனவே தற்போது குடியரசுத் தலைவர் ஈரானின் அரசுத் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் செயல்படுவார்.
ஈரானின் குடியரசுத் தலைவர்களும் பதவிக்காலமும்
அபோல்ஹசன் பானிசதர் (4 பிப்ரவரி 1980 - 22 சூன் 1981
மொகம்மத்-அலி ரஜாய் (2 அகஸ்டு 1981 - 30 ஆகஸ்டு) 1981)
அலி காமெனி (13 அக்டோபர் 1981 - 3 ஆகஸ்டு 1989)
அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி (3 ஆகஸ்டு 1989 3 ஆகஸ்டு 1997
முகமது கத்தாமி (3 ஆகஸ்டு 1997 - 3 ஆகஸ்டு 2005
மகுமூத் அகமதிநெச்சாத் (3 ஆகஸ்டு - 3 ஆகஸ்டு 2013)
அசன் ரூகானி (3 ஆகஸ்டு 2013 - 3 ஆகஸ்டு 2021)
இப்ராகிம் ரைசி (3 ஆகஸ்டு 2021 - பதவியில் உள்ளார்.
ஈரானியப் புரட்சி
ஈரானின் அதியுயர் தலைவர் -
ரூகொல்லா கொமெய்னி - முதலாவது ஈரானின் அதியுயர் தலைவர்
அலி காமெனி - இரண்டாவது ஈரானின் அதியுயர் தலைவர்
வல்லுநர்கள் மன்றம்
பாதுகாவலர்கள் மன்றம்
ஈரான் நாடாளுமன்றம்
மேற்கோள்கள் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 12 பாடல்கள் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளன. அவை: அகநானூறு 56, 124, 230, 254, 272, 302, குறுந்தொகை 185, நற்றிணை 33, 157, 221, 344, புறநானூறு 329 ஆகியவை.
மூதில் முல்லையான்
ஊருக்குப் பக்கத்தில் நடுகல் இருக்கும். வீட்டில் காய்ச்சிய கள்ளை அதற்குப் படைப்பர். பலி உணவு ஊட்டுவர். நெய் பூசி நீராட்டுவர். மணப்புகை ஊட்டுவர். இது ஊரெல்லாம் கமழும்.
இப்படிப்பட்ட ஊரில் மூதில்லில் வாழ்ந்தவன்தான் ஒரு மூதின்முல்லையான். இவன் தன்னைப் புரந்த இல்லத்தார் வறுமையில் வாடினாலும் இரவலர்களின் இன்மையைப் போக்குபவனாக வாழ்ந்துவந்தான். அன்று அவன் வழங்கினான். இன்று நடுகல்லாய் இருக்கும் அவனுக்குப் படையல். என்ன விந்தை!
புறநானூறு 329
திதலை வாடல்
திதலை மேனிச்செழுமை
படமெடுத்த பாம்பு தன் படத்தைச் சுருக்கிக்கொள்வது போல் காந்தள் பூக்கும் நாடன் அவன். அவன் இரவில் இன்னலுற்று வருவதை எண்ணி என் நெற்றி பசக்கிறது. திதலை வாடுகிறது. பருத்த தோள் இளைக்கிறது. அதனால் வளையல் நழுவுகிறது. தலைவி தன் தோழியிடம் இப்படிச் சொல்லி அவன் இரவில் வருவதைத் தடுக்கிறாள்.
குறுந்தொகை 185
செல்வன் செல்லுங்கொல்
மலையில் யானையின் கை போல் வளைந்த தினைத்தோட்டம் காவலுக்குச் சென்றால் அந்த வழியாகச் சந்தனம் மணக்கும் அந்த மார்புச் செல்வன் சொல்வானோ மாட்டானோ என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். தொலைவில் காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு சொல்கிறாள்.
நற்றிணை 344
வந்தீகு எந்தை
பாக! புதல்வன் தூக்கக் கலக்கத்தில் "வந்தீகு எந்தை" என்று வாய் முணுமுணுத்துக் கொண்டிருப்பான். அந்த அந்தீங்கிளவியை நான் கேட்கவேண்டும். விரைந்து தேரைச் செலுத்து என்கிறான் தலைவன்.
நற்றிணை 221
குயில் விளி
தலைவன் செல்லும் வழியில் மழை பொழிந்த மறுநாள் மரத்திலிருக்கும் குயில் கூவுகிறது. அதனைக் கேட்டதும் வேங்கைப்பூ கொட்டிக் கிடப்பது போல் மேனியில் தித்தி படர்ந்திருக்கும் தன் மாயோள் தன்னை நினைக்கிறாளோ என்று எண்ணித் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.
நற்றிணை 157
குறைக் கூண் நல்லில்
வழிப்பறி செய்யும் செந்தொடை மறவர் குறைந்து கூணிக் கிடக்கும் நல்லில்லில் வாழ்வர். அவர்கள் துவராடை(காவியுடை) அணிந்திருப்பர். அவர்கள் திரியும் வழியில் நீ செல்லப்போவதை எண்ணித் தலைவி என்னிடம் விம்முகிறாள். அவளது வனமுலையில் மலர்க்கண் புனல் பாய்கிறது. - இப்படித் தலைவனிடம் சொல்லித் தோழி தலைவன் பிரிவைத் தடுக்க முனைகிறாள்.
நற்றிணை 33
அறன் இல் யாய்
பள்ளிகொண்டிருக்கும் யானையின் முதுகை மலைவாழை தடவிக்கொடுக்கும் நாட்டை உடையவன் அவன். அவனோடு அருவி ஆடுதல், சுனையில் நீலமலர் பறித்தல், வேங்கைமரச் சோலையில் விளையாடுதல் போன்றவை இனி நிகழ வாய்ப்பில்லை பால் இருக்கிறது. தினையில் கிளி மேய்வதை அறிந்தும் தாய் அதனை ஓட்ட அனுப்பமாட்டாள் போல் இருக்கிறது. சுணங்கு அணிந்த என் முலையைப் பார்க்கிறாள். என் கூந்தல் அழகைப் பார்க்கிறாள். திரும்பத் திரும்பப் பார்க்கிறாள். (என்ன செய்வோம்) - இப்படித் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
அகம் 302
பணியலை முனியான்
வேங்கை மரத்தில் ஏறி மயில் அகவும் நாடன் அவன். அவன் தனியனாக வந்து நம்மைப் பணிதலில் வெறுப்பே இல்லாதவனாகக் காணப்படுகிறான். குளவிப் பூவையும், கூதளம் பூவையும் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொண்டு பூ மணம் கமழ வருகிறான். பெரிய பாறாங்கல்லுக்குப் பக்கத்தில் மிளகுக் கொடி ஏறிப் படர்ந்திருக்கும் நம் குரம்பை வீட்டில் அவன் நுழையும்போது அன்னை அவனை முருகு என என எண்ணி முகமனுரை கூறி வரவேற்கிறாள். அதனைக் கண்டு அவன் மெய்ம்மலி உவகை கொள்கிறான். இனி அவனோடு நமக்குள்ள தொடர்பு என்ன ஆகுமோ தெரியவில்லை! - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
அகம் 272
விளையாடு ஆயத்து இளையோர்
தலைவன் போர்தொழில் முற்றுப்பெற்று இல்லம் மீள எண்ணித் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். பாகன் உடனே ஊருக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறான். அவன் வந்து சேர்வதற்கு முன் தலைவியின் நிலை என்ன? - தோழிமார் ஒன்றுகூடி விளையாடுவர். அவற்றை நரைத்த தலையினை உடைய பெண்கள் வேடிக்கைப் பார்ப்பர். அவளோ(தலைவியோ) முற்றத்தில் வீட்டுப்புறா தன் துணையுடன் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு என்னை நினைப்பாள். அவள் அஞர்(துன்பம்) இப்போது நீங்கியது. - என்கிறான்.
அகம் 254
விளையாட்டு ஆயம்
கழியில் மலர்ந்த நெய்தல் போல் கண். மாந்தளிர் மறைக்கும் அல்குல். சுணங்கு(நாணம் தெறிக்கும் உடல்) பூத்த உடல். கூரிய பற்கள். மேகம் போல் இருண்ட கூந்தல். இவள்தான் வாணுதல் குறுமகள்.
இவள் விளையாட்டுத் தோழிமாரோடு பொன்போல் உதிர்ந்துகிடக்கும் புன்னை மலர்களை அள்ளித் தன் விளையாட்டு மனையில் (மணல்வீட்டில்) சேர்த்துகொண்டிருந்தாள். தலைவன் இந்த விளையாட்டில் தன்னையும் சேர்த்துக்கொண்டால் தவறு உண்டோ என்கிறான்.
அகம் 230
துனி தீர்க் கொள்கைக் காதலி
ஊடல் இல்லாத கொள்கை உள்ளவள் அவன் காதலி. அவள் அரமியம் என்னும் நிலா முற்றத்தில் மாலை வேளையில் கோவலரின் குழலோசையைக் கேட்டுக்கொண்டு என்னை எண்ணிக்கொண்டிருப்பாள்.
பகைவர் பணிந்து தந்த திறையைப் பெற்ற மன்னன் அவர்களைச் சென்றுவாருங்கள் என்று வழிமொழிந்துகொண்டிருக்கிறான். இன்றே அவன் நாடு திரும்புதல் உறுதி. பாக! பூக்களில் ஊதும் வண்டுகள் பறந்தோட விரைவாகத் தேரைச் செலுத்துக - என்று தலைவன் தன் பாகனிடம் கூறுகிறான்.
அகம் 124
மெய்ம்மலி உவகை
தோழி! சிரிப்புத்தான் வருகிறது. எருமை ஆம்பல் இலை கிழிய, குவளைப் பூக்களை மேய்ந்தபின், காஞ்சிமர நிழலில் படுத்துக்கொண்டு அசைபோடும் துறையை உடையவன் அவன். அவன் புதிய பெண்களிடம் வதுவை(வதிதல்) வைத்துக்கொண்டான். அவனது பாணன் தெருவில் வந்துகொண்டிருந்தான். அப்போது சினைப் பசு ஒன்று அவனை முட்ட வந்தது. அதற்குப் பயந்து அவன் நம் மனையில் நுழைந்துகொண்டான். அதைக் கண்ட நான் என் உடம்பெல்லாம் குலுங்க வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு, "உன் மனை இது அன்று" என்றேன். அதைக் கேட்ட அவன் தன் நெஞ்சிலுள்ள மம்மரை(மாசை) வெளிப்படுத்த முடியாமல் என்னைத் தொழுதுகொண்டு நின்றான். அதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது - என்கிறாள் தலைவி.புதுப்பை அத்தம்பெரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், புதுப்பை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.
இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள் கோகுல் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 2011ல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் ரௌத்திரம் (திரைப்படம்) என்பதை இயக்கினார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்திக் சிவகுமார் நடிப்பில் காஷ்மோரா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
ஆதாரங்கள் வேற்றுலக வாழ்வைப்பற்றிக் கற்றலே வான் உயிரியல் எனப்படும். வேற்றுலகில் வாழ்வதற்கு திரவ நீர், சிறந்த வெப்பநிலை, ஒக்சிசன்வாயு போன்றவை அவசியமாகும். ஞாயிற்றுத் தொகுதியில் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக புவியைத்தவிர ஐரோப்பா மற்றும் கனிமிடு போன்ற வியாழனின் துணைக்கோள்களும், டைட்டன் மற்றும் இன்செலடசு போன்ற சனியின் துணைக்கோள்களும் ஆகும். இவை திரவ நீரைக் கொண்டிருக்கக் கூடும். உயிர் வாழ்வதற்குத் தேவையான ஏற்ற தட்பவெட்ப மாற்றங்களையும் இவை கொண்டிருக்கக் கூடும். வான் உயிரியலாளர்கள் இவ்விடங்களின் மேற்பரப்புக்குக் கீழ்த் திரவ நீர்ச் சமுத்திரம் இருக்கக்கூடும் எனத் தேரிவிக்கின்றனர்.
உசாத்துணை விசயன் விசிறிவால் (Visayan fantail)(ரைபிதுரா அல்பிவென்ட்ரிசு) என்பது பிலிப்பீன்சில் உள்ள நீக்ரோஸ், பனாய், குய்மராஸ், மஸ்பேட் மற்றும் டிகாவோ தீவுகளில் உள்ள ஒரு விசிறிவால் சிற்றினம் ஆகும். சமீப காலம் வரை, இது நீலத் தலை விசிறிவால் மற்றும் தப்லாசு விசிறிவால் ஆகியவற்றுடன் ஒத்த சிற்றினமாகக் கருதப்பட்டது.
விளக்கம்
ஈபேர்டு இந்தப் பறவையினை "நடுத்தர அளவிலான, நீண்ட வால் கொண்ட காடுகளில் காணப்படும் பறவை என்றும், தலை, மார்பு, முதுகு மற்றும் தோளில் மந்தமான நீல நிறமும், மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெளிர் நீல நிற கோடுகளுடனும், வெள்ளை வயிறு மற்றும் கீழ் முதுகு, வெளிப்புற வால் இறகுகள் மற்றும் இறக்கை, இருண்ட மத்திய வால் இறகுகள் மற்றும் இறக்கையின் இருண்ட விளிம்புடன் காணப்படும்” எனக் கூறுகிறது. உணவு தேடும் போது பெரும்பாலும் ஆண் பறவைகள் வாலினை விசிறிபோல ஆட்டுகின்றன. கறுப்புத் தலையுடைய மொனார்க்கைப் போன்று இவை செம்பழுப்பு தொடையினையும் வாலினையும் கொண்டுள்ளன. குரல் என்பது ஒரு ஒற்றை, நாசி "ஜெப்" குறிப்பு இடைவெளியில் கொடுக்கப்பட்ட அல்லது விரைவான தொடராக வேகப்படுத்தப்படும்" வகையில் உள்ளது.
இது நீலத்தலை விசிறிவால் மற்றும் தப்லாசு விசிறிவால் ஆகியவற்றிலிருந்து இதன் வெள்ளை வயிறு மற்றும் பொதுவாக நிறத்தால் வேறுபடுகிறது.
இது பெரும்பாலும் கலப்பு இன மந்தைகளுடன் காணப்படுகிறது.
வாழ்விடம் மற்றும் பாதுகாப்பு நிலை
இதன் வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் முதல் மலைப்பகுதிகள் வரை காடுகளின் விளிம்பில் காணப்படும்.