text
stringlengths
3
79k
மேற்கோள்கள் பிசுமத் பெர்ரைட்டு (Bismuth ferrite) என்பது BiFeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொருளறிவியல் துறையில் இதைப் பொதுவாக BFO என்ற குறியீட்டால் குறிப்பிடுவார்கள். பெரோவ்சிகைட்டு கட்டமைப்பு எனப்படும் கால்சியம் தைட்டானியம் ஆக்சைடின் கட்டமைப்பை பெற்றுள்ள இது பெர்ரோகாந்தப் பண்புப் பொருள்களில் முக்கியமான ஒரு பொருளாகும். BiFeO3 சேர்மம் அறைவெப்ப நிலை கட்டத்தில் R3c என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுர கட்டமைப்பில் உள்ளதாக வகைப்படுத்தப்படுகிறது. பெருமளவிலும் மெல்லிய படலங்களாகவும் பிசுமத் பெர்ரைட்டு தயாரிக்கப்படுகிறது. பெர்ரோகாந்தவெதிர் நீல் வெப்பநிலை (தோராயமாக 653 கெல்வின்) மற்றும் பெர்ரோமின் கியூரி வெப்பநிலை (தோராயமாக 1100 கெல்வின்) இரண்டும் அறைவெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளன போலி கனசதுரத்தின் திசையில் 90–95 μC/செ.மீ2 பெருமத்தில் பெர்ரோமின் முனைவாக்கம் தோன்றுகிறது.
பிசுமத் பெர்ரைட்டு இயற்கையாகத் தோன்றும் ஒரு கனிமம் அல்ல. இச்சேர்மத்தை தயாரித்துப் பெறுவதற்கான பல தொகுப்புமுறை வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திண்மநிலை தொகுப்பு முறை
பிசுமத் ஆக்சைடு (Bi2O3), இரும்பு ஆக்சைடு (Fe2O3) சேர்மங்கள் 1:1 என்ற மோல் விகிதத்தில் குழவிக்கல்லில் இட்டு அல்லது உருளை கொண்டு இடித்து கலக்கப்பட்டு பின்னர் உயர்ந்த வெப்பநிலையில் சுடப்படுகின்றன. இவ்வாறு உயர் வெப்பநிலையில் சுடப்படும்போது பிசுமத்தின் நிலையற்ற தன்மை காரணமாக தூய விகிதவியல் அளவு BiFeO3 தயாரிப்பது சவாலானது ஆகும். ஏனெனில் நிலையான இரண்டாம் நிலை Bi25FeO39 (செலனைட்) மற்றும் Bi2Fe4O9 (முல்லைட்) நிலைகள் உருவாகிவிடுகின்றன. பொதுவாக 800 முதல் 880 செல்சியசு வரையிலான உயர் வெப்பநிலை 5 முதல் 60 நிமிடங்கள் வரை பயன்படுத்தப்பட்டு அடுத்த்தாக விரைவாக குளிரூட்டல் செயல்முறை நிகழ்கிறது. பிசுமத்தின் நிலையற்ற தன்மையை ஈடுசெய்யவும் Bi2Fe4O9 நிலை உருவாதலை தவிர்க்கவும் கூடுதல் Bi2O3 சேர்ப்பதை ஒரு நடவடிக்கையாகப் பின்பற்றப்படுகிறது.
ஒற்றைப்படிக வளர்ச்சி
பிசுமத் பெரைட் பொருத்தமற்ற முறையில் உருகும். ஆனால் இது பிசுமத் ஆக்சைடு நிறைந்த 4: 1: 1 என்ற விகித்த்திலுள்ள Bi2O3, Fe2O3 மற்றும் B2O3 ஆகியவற்றின் கலவை பாய்மத்திலிருந்து சுமார் 750-800 செல்சியசு வெப்பநிலையில் ஓற்றைப் படிகத்தை வளர்க்கலாம். பிசுமத் பெரைட்டின் மின்காந்தவியல் பண்புகளை ஆய்வு செய்வதற்கு உயர் தரமான ஒற்றை படிகங்கள் முக்கியமானவையாகும்.
வேதி வழிமுறைகள்
குழைமக்கரைசல் வேதியியலை அடிப்படையாகக் கொண்ட ஈர இரசாயன தொகுப்பு வழிகள், மாற்றியமைக்கப்பட்ட பெச்சினி வழிகள், நீர் வெப்ப தொகுப்புமுறை மற்றும் வீழ்படிவாக்கம் ஆகியவை தூய நிலை BiFeO3 சேர்மத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. முன்னோடிச் சேர்மங்களின் தொகுப்பியல் ஒருமைப்பாடு மற்றும் தேவைப்படும் மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக ஏற்படும் பிசுமத்தின் இழப்பு போன்றவை வேதியியல் பாதைகளின் நன்மைகளாகும். குழைமக்கரைசல் பாதையில் கரிமக் கசடுகளை நீக்கும் பொருட்டும் பிசுமத் பெரைட்டு பெரொவ்சிகைட்டு நிலையில் படிகமாவதை ஊக்குவிக்கவும் படிக உருவமற்ற முன்னோடிச் சேர்மங்கள் 300 முதல் 600 பாகை செல்சியசு வெப்பநிலை வரை நெருப்பிலிடப்படுகின்றன. விளையும் தூளை அடர்த்தியான பல்படிகமாக்க கண்டிப்பாக உயர் வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படவேண்டும் என்பதே இம்முறையின் குறைபாடாகும்.
நீர்ம எரிப்பு வினை என்பது நுண்ணிய BiFeO3 சேர்மத்தை தொகுக்கப் பயன்படுத்தப்படும் குறைந்த செலவு தயாரிப்பு முறையாகும். இந்த முறையில் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையை உருவாக்க கிளைசின், சிட்ரிக் அமிலம், யூரியா போன்ற ஓர் ஒடுக்கும் முகவர், நைட்ரேட்டு, நைட்ரிக் அமிலம் போன்ற ஓர் ஆக்சிசனேற்ற முகவர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. தீச்சுடரின் தோற்றம் மற்றும் அதன் விளைவாகத் தோன்றும் கலவையின் வெப்பநிலை முதலியன பயன்படுத்தப்படும் ஆக்சிசனேற்ற / ஒடுக்க முகவர்களின் விகிதத்தைப் பொறுத்து அமைகிறது. 600 ° செல்சியசு வெப்பநிலை வரை காய்ச்சிக் குளிரவைத்தல் சில நேரங்களில் வேதியியல் இடைநிலைகளாக உருவாக்கப்படும் பிசுமத் ஆக்சோ-நைட்ரேட்டுகளைச் சிதைக்க தேவைப்படுகிறது. இக்குறைக் கடத்தி சேர்மத்திலுள்ள இரும்பு நேர்மின் அயனிகள் இந்நிலையிலுள்ள பாரா காந்தப்பண்பின் இருப்பை உணரப் பயன்படும் பொருத்தமான மாசுபவர் நிறமாலையியல் நுட்பமாகும்.
மெல்லிய படச்சுருள்கள்
பிசுமத் பெரைட்டின் உயர் தரமான ஆடைப்படல மென் படச்சுருள்களின் மின்னியல் மற்றும் காந்தப் பண்புகள் 2003 ஆம் ஆண்டில் அறியப்பட்டன. எனவே இச்சேர்மத்தின் அறிவியல் ஆர்வங்கள் புதுப்பிக்கப்பட்டன. எபிடாக்சியல் மெல்லிய படலங்கள் எனப்படும் இப்படச்சுருள்கள் மின்னணு சுற்றுகளில் ஒருங்கிணைக்கக்கூடிய பெரிய நன்மையைக் கொண்டுள்ளன. பிசுமத் பெரைட்டை விட வெவ்வேறு அளவுருக்கள் கொண்ட ஒற்றை படிக அடி மூலக்கூறுகளால் தூண்டப்பட்ட மென்படல திரிபு படிக அமைப்பை ஒற்றைச்சரிவு அல்லது நாற்கோன சமச்சீராக மாற்றவும், பெரோ மின்னாற்றல், பைசோ எனப்படும் அழுத்த மின்னாற்றல் அல்லது காந்த பண்புகளை மாற்றவும் பயன்படுத்தலாம். ஆடைப்படல BiFeO3 படச்சுருள்களுக்கு துடிப்புள்ள சீரொளி படிவு என்பது மிகவும் பொதுவான ஒரு பாதையாகும். மேலும் SrTiO3 அடித்தளப் பொருட்களுடன் SrRuO3 மின்முனைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒலி உமிழ்வு, கரிம உலோக வேதி நீராவி படிவு, அணு அடுக்கு படிவு, மற்றும் இரசாயனக் கரைசல் படிவு ஆகியவை ஆடைப்படல பிசுமத் பெரைட் மெல்லிய படலங்களைத் தயாரிக்க உதவும் பிற முறைகளாகும். காந்த மற்றும் மின்சார பண்புகளைத் தவிர பிசுமத் பெரைட்டு ஒளிமின்னழுத்த பண்புகளையும் கொண்டுள்ளது, இது பெரோமின் ஒளிமின்னழுத்த விளைவு என அழைக்கப்படுகிறது.
பயன்கள்
அறை வெப்பநிலையில் பிசுமத் பெரைட்டு ஒரு பல்நிலைமாற்ற பொருளாக இருப்பதாலும் அதன் பெரோமின் ஒளிமின்னழுத்த விளைவு காரணமாகவும், காந்தவியல், சுழல் மின்னணுவியல், ஒளிமின்னழுத்தியம் இத்யாதி போன்றவற்றில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஒளிமின்னழுத்தவியல்
பெர்ரோமின் ஒளிமின்னழுத்த விளைவில் , ஒளியூட்டப்பட்ட ஒரு பெர்ரோமின் பொருளில் ஒளிமின்னாற்றல் உருவாக்கப்படுகிறது. இதன் திசை அந்த பொருளின் பெர்ரோமின் துருவமுனைப்பைப் பொறுத்து அமைகிறது. வழக்கமான ஒளிமின்னழுத்த சாதனங்களுக்கு மாற்றாக பெர்ரோமின் ஒளிமின்னழுத்த விளைவு ஒரு நம்பிக்கைக்குரிய திறனைக் கொண்டுள்ளது. ஆனால் முக்கியத் தடை என்னவென்றால் LiNbO3 போன்ற பெர்ரோமின் பொருட்களில் மிகக் குறைந்த அளவு ஒளிமின்னாற்றல் உருவாக்கப்படுகிறது. பெரிய ஆற்றல் இடைவெளியும் குறைந்த கடத்துத்திறனும் இதற்கான காரணங்களாகும். இந்த போக்கில் பிசுமத் பெர்ரைட் ஒரு மிகப்பெரிய திறனை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் ஒளியூட்டத்தின் கீழ் இதில் ஒளிமின்னாற்றல் விளைவும் ஆற்றல் இடைவெளிக்கு மிகையான மின்னழுத்தமும் காணப்படுகின்றன. பிசுமத் பெர்ரைட்டை ஒளிமின்னழுத்த பொருளாகப் பயன்படுத்தும் பெரும்பாலான படைப்புகள் அதன் மெல்லிய படல வடிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில அறிக்கைகளில் பலபடிகள், கிராபீன், பிற குறைக்கடத்திகள் போன்ற பிற பொருட்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஈரடுக்கு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். பிசுமத் பெர்ரைட்டு நுண் துகள்களுடன் இரண்டு ஆக்சைடு அடிப்படை கடத்தி போக்குவரத்து அடுக்குகள் கொண்ட p-i-n பல்லின இடைமுகம் உருவாக்கப்பட்டது என ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும், பிசுமத் பெர்ரைட்டிலிருந்து பெறப்பட்ட சக்தி மாற்றும் திறன் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது.
மேற்கோள்கள் பௌத்த சூத்திரங்களில், கௌதம புத்தருக்கு முன்பு இந்த பூமியில் பல புத்தர்கள் அவதரித்துள்ளதாக கூறிகின்றன. அவ்வாறாக இந்த கல்பத்தில் அவதரித்த 28 புத்தர்களின் பட்டியல்;
இவற்றையும் பார்க்கவும்
மைத்திரேய புத்தர்
போதிசத்துவர்
பௌத்த யாத்திரை தலங்கள்நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு (Niobium(V) oxynitrate) NbO(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நாற்கோணகப் படிகங்களாக திண்மநிலை இது காணப்படுகிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து நையோபியம் ஐந்தாக்சைடை கொடுக்கிறது.
NbO(NO3)3 + H2O → Nb2O5 + HNO3
நையோபியம் பெண்டாகுளோரைடுடன் டைநைட்ரசன் பெண்டாக்சைடு சேர்மத்தைச் சேர்த்து 30 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு உருவாகிறது.:
NbCl5 + 4N2O5 → NbO(NO3)3 + 5NO2Cl
நைட்ரைல் குளோரைடு இவ்வினையில் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது. அசிட்டோநைட்ரைல் முன்னிலையில் டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் நையோபியம் பெண்டாகுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அசிட்டோநைட்ரைல் நையோபியம் டையாக்சைடு டைநைட்ரேட்டு அணைவுச் சேர்மம் உருவாகிறது. இச்சேர்மம் தண்ணீருடன் வினைபுரிந்து நையோபியம் பென்டாக்சைடை உருவாக்கி 65 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது.
மேற்கோள்கள் குஞ்ஞுலட்சுமி சாரதாமணி ( Kunjulekshmi Saradamoni) (1928 - 2021) ஒரு இந்திய வரலாற்றாசிரியரும, பொருளாதார நிபுணரும் மற்றும் தலித் மற்றும் பாலின ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவரும் ஆவர். மேலும் இவர் இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். தென்னிந்தியாவில் வரலாற்று அடிமைத்தனம் இருந்ததில்லை என்ற மரபுவழி ஞானத்தை உயர்த்திய கேரளாவில் கீழ் சாதியினரை அடிமைப்படுத்துவது பற்றிய ஆய்வுகளுக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.
வாழ்க்கை
சாரதாமணி, 1928ல் கேரளாவின் பட்டத்தனத்தில் பிறந்தார். இவர் திருவனந்தபுரம், அரசு மகளிர் கல்லூரியில் பயின்றார். மேலும் நகரின் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருளாதாரப் பட்டதாரிகளின் முதல் குழுவிலும் இருந்தார். அங்கு இவர் இந்தியவியலாளரான மேடலின் பியர்தோ என்பவரை சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் இவர் முனைவர் பட்டப்படிப்புக்காக பாரிசுக்குச் சென்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1969 மற்றும் 1971 க்கும் இடையில், இவர் லூயிஸ் டுமாண்டின் கீழ் பாரிசு VII பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு ஆராய்சியில் இருந்தார்.
திருமணம்
சாரதாமணி, ஜனயுகம் பத்திரிகையை நிறுவிய பத்திரிகையாளரான என்.கோபிநாதன் நாயரை மணந்தார். இவர்களுக்கு ஆஷா மற்றும் அருணிமா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர், அவர்களில் பிந்தையவர் கேரள வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
தொழில்
சாரதாமணி கேரளாவில் உள்ள பொருளாதார மற்றும் புள்ளியியல் ஆய்வுக் கழகத்தில் தனது பணியைத் தொடங்கினார். 1961 இல் புது தில்லியில் உள்ள இந்திய புள்ளியியல் கழகத்தில் சேர்ந்தார். மேலும் 1988 இல் ஓய்வு பெறும் வரை அங்கு கற்பித்தார்.
இவரது சமூக-பொருளாதார வளர்ச்சியின் கேரள மாதிரி மிகவும் ஆய்வு செய்யப்பட்டு பாராட்டப்பட்டது. பெண்களின் அதிகாரமளிப்பதற்கான அதன் முதன்மையான குறியீடாக ஆண்களுக்கு சமமான ஆரோக்கியம் மற்றும் கல்வியறிவு நிலைகள் இருந்தன. இந்த குறுகிய நோக்கம் பற்றிய சாரதாமணியின் விமர்சனங்கள் கவனிக்கத்தக்கவை. மேலும் அரசியல் அதிகாரத்தில் பெண்கள் தொடர்ந்து பின்தங்கியிருப்பதையும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த வளர்ச்சியடைந்த மற்றும் ஆணாதிக்கம் நிறைந்த இந்தியாவின் வட மாநிலங்களை விட குறைவாக இல்லை என்பதையும் இவர் சுட்டிக்காட்டினார்.
இவர் கேரளப் பெண்கள் மீதான தாய்வழி மரபுவழியின் விளைவுகளை ஆராய்ந்தார். இது ஓரளவு பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும், கேரளாவில் மறுபகிர்வு சட்டம் ( கேரளா விவசாய உறவுகள் சட்டம், 1960) நில உரிமையாளர்களிடமிருந்து குத்தகைதாரர்களுக்கு அதிகப்படியான நிலத்தை பகிர்ந்தளித்தது, தாய்வழி குடும்பங்களின் சொத்துக்களை குறைத்து அதன் மூலம் பெண்களின் அதிகாரத்தை குறைத்தது. நிலத்தை வைத்திருக்கும் பெண்கள் தங்கள் நிலங்களை நிர்வகித்தல் அல்லது பயிரிடுவதில் தொடர்ந்து செயலில் ஈடுபட்டாலும், பல சந்தர்ப்பங்களில் அவர்கள் சீர்திருத்தத்திற்குப் பின் விதவை அல்லது உரிமையின் உச்சவரம்பு காரணமாக தங்கள் உடைமைகளை இழந்தனர், மேலும் அவர்களுக்கு ஆதரவாக ஆண் உறவினர்கள் இருந்தால் மட்டுமே நிலத்தின் கட்டுப்பாட்டைப் பராமரிக்க முடிந்தது.
இறப்பு
இவர் தனது கடைசி ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். அங்கு கவர் பாரம்பரிய நடை போன்ற சமூக முயற்சிகளில் தீவிரமாக இருந்தார். இவர் 26 மே 2021 அன்று இறந்தார்.
நூல் பட்டியல்
Deconchy, Jean-Pierre; Chalot, Chantal (1972). "Thèses et Mémoires présentés en France, touchant à la sociologie et à la psychologie des religions". Archives de Sciences Sociales des Religions 33.
அவரைக்காய்
ஈரப்பலாக்காய்
கத்தரி
காராமணி
காளான்
களாக்காய்
கொத்தவரை
கொத்தவரைக்காய் - cluster beans
கெக்கரிக்காய்
கோவக்காய்
சாம்பல் பூசணி
சாத்தாவாரி (Asparagus)
சிறகவரை
சுரைக்காய் - bottle gourd
சுண்டைக்காய்
சுண்டங்கத்தரிக்காய்
செங்கிழங்கு - beet root
நீத்துப் பூசணி
நெல்லிக்காய்
பறங்கிக்காய்
பயத்தங்காய்
பாகற்காய் (பாவற்காய்) - bitter gourd
பிசிக்கங்காய்
பீர்க்கங்காய்
புடலங்காய்
மாங்காய்__ Mango
முருங்கை__ Drumstick
முள்ளங்கி - turnip, radish ??
வட்டுக் கத்தரிக்காய்
வழுதுணங்காய்
வாழை (வாழைக்காய்)
வாழைக்காய் - green plantain
வாழைத்தண்டு
வெள்ளரிக்காய் - cucumber
வெண்டி (வெண்டை)
ப்ரோக்கோளி
Bamboo Shoots
brocolliகேரளாவின் பொருளாதாரம் இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய பொருளாதரம்.
இந்தியாவில் மக்கள் தொகையின் கேரளா 2.8% ,ஆனால் அதன் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 4% பங்களிக்கிறது.இதனால், தென் மாநிலத்தின் வருமானம் இந்தியாவின் சராசரியை விட 60% அதிகம்.
விவசாயம் மற்றும் கால்நடைகள்
கேரளா இந்தியாவின் மிளகு உற்பத்தியில் 97% செய்கிறது மற்றும் நாட்டின்இயற்க்கை ரப்பரின் 85% பரப்பளவை கொண்டுள்ளது. தேங்காய், தேநீர்,ஏலக்காய்,இலவங்கப்பட்டை முதலியன முக்கியமான விவசாயத் துறையை உள்ளடக்கியது.
சுற்றுலா
கேரளா இந்தியர்களுக்கும் இந்தியர்ல்லாதவர்களுக்கும் நிறுவப்பட்ட சுற்றுலாத் தலமாகும்.மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10% சுற்றுலா பங்களிக்கிறது.சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் வருகை மலைவழிதடங்களுக்குட்பட்டவை. கோழிக்கோடு மற்றும் அலப்புழா போன்ற நகரங்கள் பிரபலமான இடங்களாகும்.மாநிலத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது.இரவு குடியிருப்பாளர்களுக்கு கேரளா ஒரு விருப்பமான இடமாகும், மேலும் திருவனந்தபுரம்,கோவளம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் வர்கலா ஆகிய மாவட்டங்கள் இரவில் சுற்றுலா பயணிகள் ராசிக்கும் இடமாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல்
32 மில்லியன் மக்கள் தொகையீல் 1.6 மில்லியன் கேரளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்.2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, வளைகுடா நாடுகளில் உள்ள கேரளவாதிகள் ஆண்டுதோறும் 9.25 பில்லியன் அமெரிக்க டாலர்களை வீட்டிறக்கு அனுப்புகிறார்கள்.இது இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் 10% ஆகும்.
2018 ஆம் ஆண்டில், மாநிலத்திலிருந்து 2.1 மில்லியன் குடியேறியவர்கள் 851 பில்லியன் டாலர் (12 பில்லியன் அமெரிக்க டாலர்) பணம் அனுப்பினர்.
2013-18 காலப்பகுதியில் மாநிலத்திலிருந்து சுமார் 3 லட்சம் குடியேறியவர்கள் குடியேறியவர்கள் குறைந்துள்ளது இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமாக பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது.
கப்பல் கட்டிடம்
கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் தளம் கேரளாவில் மிகப்பெரிய கப்பல் கட்டும் வசதி கொண்டது. கொச்சின் கப்பல் தளம் 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் முழு சொந்தமான நிறுவனமாக இணைக்கப்பட்டது.
உள்கட்டமைப்பு
கேரளாவில் 145,704 கிமீ சாலைகள் உள்ளன (இந்தியாவின் மொத்த சாலைகளில் 4.2% பங்கு).கிட்டத்தட்ட கேரளாவின் கிராமங்கள் அனைத்தும் சாலைவழியாக இணைக்கப்பட்டுள்ளன.கேரளாவில் போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் 10-11% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது.இதன் விளைவாக அதிக போக்குவரத்து மற்றும் சாலைகளில் அழுத்தம் ஏற்படுகிறது.2003 மற்றும் 2004க்கு இடையில் கேரளாவில் மொத்த சாலை நீளம் 5% அதிகரித்துள்ளது.கேரளாவில் சாலை அடர்த்தி தேசிய சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்,இது கேரளாவின் தனித்துவமான தீர்வு முறைகளின் பிரதிபலிப்பாகும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் கேரளாவில் மொத்த 1524 கிமி உள்ளது இது தேசியசாலைகளின் 2.6% ஆகும்.
மின் ஆற்றல்
டீசல் அடிப்படையிலான வெப்ப மின்சார உற்பத்தியில் கேரளாஇந்தியாவில் இரண்டாவது இடத்தீல் உள்ளது,தேசிய சந்தை பங்கு 21%க்கும் அதிகமாக உள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு
கொச்சி சுத்திகரிப்பு நிலையம் கொச்சி நகரில் அமைந்துள்ள ஒரு பொது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.இங்கு ஆண்டுக்கு 15.5 மில்லியன் டன் எண்ணெய் உற்பத்தி செய்யபடுகிறது.கொச்சி சுத்திகரிப்பு நிலையம் பெட்ரோலிய பொருட்களின் சுத்திகரிப்பு மற்றம் சந்தைபடுத்தலில் ஈடுபடு.
பாசியா(Fazia) என்பது ஒரு திட்டம் ஆகும். மின்னூட்டத்துகள்களுக்காக ஒரு புதிய 4pi துகளை கண்டுபிடித்து உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். பெர்மி ஆற்றலைச் சுற்றி தூண்டப்பட்ட கன அயனிகளின் வினைகளில் செயல்படுகிறது. இது உலகளாவிய அணுக்கரு இயற்பியலில் உலகளவில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒன்றாக இத்திட்டம் இணைகிறது. இத்திட்டம் 2013-2014 இல் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்செயலாக கதிரியக்க அணுக்கரு கற்றைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய உயர் செறிவு கொண்ட துகள் முடுக்கிகளின் வருகையும் இத்திட்டத்துடன் ஒத்துப்போனது. தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மீது அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக எண்முறை மின்னணுவியல் மற்றும் துடிப்பு வடிவ பகுப்பாய்வை மேம்படுத்துகிறது. மேலும் பல்வேறு பிராந்தியத்தில் உள்ள துகள் கண்டுபிடிப்புக் கருவியின் கண்டுபிடிப்பு திறமையை மேம்படுத்துகிறது. இது போன்றே நிறை மற்றும் மின்னூட்டங்களை கண்டறியவும் மற்றும் குறைவான தொடக்க ஆற்றலையும் கோண பிரிகையும் கண்டுபிடிக்க இத்திட்டம் மேம்படுத்தப்படுகிறது.
G. Verde (GANIL, France), presentation for the SPIRAL2 meeting, GANIL, October 2006கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகரில், ரெட் பீல்ட்சு சாலையில் அமைந்துள்ள ஒரு ஆங்கில வழிக் கல்விப் பள்ளியாகும். கோவை ரோமன் கத்தோலிக்க ஆயர், சவரிமுத்து என்பவரால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி கோயம்புத்தூரில் உருவான ஆண்களுக்கான முதல் பதின்மப் (மெட்ரிக்குலேஷன்) பள்ளியாகும்.தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பில் 'பொற்கைப் பாண்டியன்' என்ற ஓரங்க நாடகம் இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்கள் சிர்சா மாவட்டம் (Sirsa district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிர்சா நகரம் ஆகும்.சிர்சா நகரம் புதுதில்லியிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அமைவிடம்
சிர்சா மாவட்டத்தின் வடக்கில் பதிண்டா மாவட்டம் (பஞ்சாப்), வடகிழக்கில் மான்சா மாவட்டம், தென்கிழக்கில் பதேகாபாத் மாவட்டம், தென் மேற்கில் முக்த்சர் சாகிப் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.
பொருளாதாரம்