text
stringlengths
3
79k
சிர்சா மாவட்டம், இந்தியாவின் 250 மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும்.
இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கான மானிய உதவி பெறும் மாவட்டங்களில் ஒன்றாகும்.
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் சிர்சா, தாப்வாலி, ரானியா மற்றும் எல்லனாபாத் என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.
ஊரக வளர்ச்சிக்கான சிர்சா, தாப்வாலி, ரானியா, எல்லனாபாத், நாதுசரி சோப்டா, ஒதான் மற்றும் பராகுத்தா என ஏழு ஊராட்சி ஒன்றியங்களை உடையது.
இந்த மாவட்டம் காலன்வாலி, தாப்வாலி, ரானியா, சிர்சா மற்றும் எல்லனாபாத் என ஐந்து சட்டமன்ற தொகுதிகளையும், சிர்சா நாடாளுமன்ற மக்களவை தொகுதியும் கொண்டது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1295189 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 975941 மக்களும்; நகரப்புறங்களில் 319248 மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.64% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில்
682582 ஆண்களும் மற்றும் 612607 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 897
பெண்கள் வீதம் உள்ளனர். 4277 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் 303 வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 68.82% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.43% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.40% ஆகவும் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 387381 ஆக உள்ளது.
மொழிகள்
அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழியான அரியான்வியும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
District- Sirsa district official websiteசோவனூர் புதை குகை (Chovvanur burial cave) என்பது கேரளத்தின், திருச்சூர் மாவட்டம் சோவனூரில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறையில் வெட்டி அமைக்கபட்ட குகை ஆகும். இந்த குகைக்குள் நுழைய ஒற்றை நுழைவாயில் உள்ளது. குகை அறையானது வட்டமாக உள்ளது. ஒற்றை அறை கொண்ட குகையில் இரண்டு திண்ணைகள் உள்ளன. இந்திய தொல்லியல் துறையானது இந்தக் குகையை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.
குறிப்புகள் பரசினிக்கடவு (Parassinkkadavu) என்பது அந்தூர் நகராட்சியில் உள்ள ஒரு சிறிய கோயில் நகரமாகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் நகரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது வடக்கு மலபாரிலுள்ளா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
ஈர்ப்புகள்
இந்த ஊர் புகழ்பெற்ற முத்தப்பன் கோயிலுக்கு புகழ்பெற்றது. கேரளாவில் தெய்யம் என்ற நடனம் தினசரி நடத்தப்படும் ஒரே இந்து கோயில் இதுதான்
பாரம்பரிய வருடாந்திர விழாவான உத்சவம் என்பது "தையில்" குலத்தை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் தலைமையில் கண்ணூர் குடும்ப வீட்டிலிருந்து ஊர்வலமாகத் தொடங்கி இந்த ஆலயத்தில் முத்தப்பன் ஆலயத்தில் முடிகிறது. இறுதியில் பிரதான பலிபீடத்தில் கடவுளுக்கு ஒரு பூசை (பிரார்த்தனை) நடைபெறுகிறது.
பர்சினிக்கடவு பாம்பு பூங்காவிற்கு இந்த ஊர் குறிப்பிடத்தக்கது. இராச நாகம் உள்ளிட்ட சுமார் 150 வகையான பாம்பினங்கள் பூங்காவில் வாழ்கின்றன.
பாம்புகளிலிருந்து விஷத்தை பிரித்தெடுப்பதற்கான ஆராய்ச்சி மையம்ம் இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் பைத்தான்கள் உள்ளிட்ட விஷமற்ற பாம்புகளின் பெரிய தொகுப்பும் உள்ளது.
விஸ்மயா என்ற கேளிக்கைப் பூங்காவும் இங்கு அமைந்துள்ளது
புகைப்படத் தொகுப்பு
மேலும் காண்க
பர்சினிக்கடவு பாம்பு பூங்கா
முத்தப்பன் கோயில்
கண்ணூர்
தெய்யம்
குன்னத்தூர் பாடி
தளிப்பறம்பு ராஜராஜேஸ்வரர் கோயில்
External links
Orkut Community of Parassinikkadavuஇருநைட்ரசன் ஈராக்சைடு (Dinitrogen dioxide) N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்திற்கு கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றியங்கள் எனப்படும் மாற்று வடிவங்கள் உருவாதல் சாத்தியமானதாகும். நைட்ரிக் ஆக்சைடின் சுழற்சி அல்லாத இருபடியான (NO) ON–NO சகப்பிணைப்பு கொண்ட மாற்றியமே தொடக்கநிலை கணக்கீடுகளின் அடிப்படையில் மிகவும் நிலையான மாற்றியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதுவே சோதனை ரீதியாகவும் தயாரிக்கப்பட்டது. திண்ம நிலையில் மூலக்கூறுகள் C2v சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளன: முழு கட்டமைப்பும் சமதள வடிவம் கொண்டது. இரண்டு ஆக்சிசன் அணுக்கள் N-N பிணைப்பின் குறுக்கே அமைந்துள்ளன.கட்டமைப்பிலுள்ள O-N பிணைப்பு இடைவெளி 1.15 Å ஆகவும் N-N பிணைப்பு இடைவெளி ஆகவும் 2.33 Å, மற்றும் ON-N பிணைப்புக் கோணம் 95° ஆகவும் உள்ளன்
Dkhissi, Ahmed; Soulard, Pascale; Perrin, Agnès; Lacome, Nelly (May 1997). "The NO Dimer". Journal of Molecular Spectroscopy 183 (1): 12–17. doi:10.1006/jmsp.1996.7249.பவானி விக்னேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பவானி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கோயில் அமைப்பு
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.
பூசைகள்
இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள் அம்மோனியம் பைகார்பனேட்டு (Ammonium bicarbonate) என்பது (NH4)HCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மமானது இதன் நீண்ட வரலாற்றுக்கேற்ப பல்வேறு பெயர்களைக் கொண்டுள்ளது. வேதியியல்ரீதியாக கூறினால் இது அம்மோனியம் அயனியினுடைய பைகார்பனேட்டு உப்பாகும். இது நிறமற்ற திண்மமாகும். இது எளிதில் சிதைவடைந்து அம்மோனியா, நீர் மற்றும் கார்பனீராக்சைடாக சிதைவடைகிறது.
அம்மோனியம் ஐதராக்சைடானது அம்மோனியாவுடன் கார்பனீராக்சைடைச் சேர்ப்பதால் தயாரிக்கப்படுகிறது.
CO2 + NH3 + H2O → (NH4)HCO3
அம்மோனியம் பைகார்பனேட்டானது நிலையற்றதாக இருப்பதால் வினைக்கரைசலானது குளிர்ச்சியான சூழலில் வைக்கப்படுகிறது. இதன் காரணமாக விளைபொருளானது வெண்மை நிறத் திண்மமாக வீழ்படிவாகிறது. 1997 ஆம் ஆண்டில் 100,000 டன்கள் அம்மோனியம் பைகார்பனேட்டு இந்த முறையில் தயாரிக்கப்பட்டது.
அம்மோனியா வாயுவானது வலிமையான செஸ்கிகார்பனேட்டின் நீர்க்கரைசலுள் செலுத்தப்படுகிறது. ( (NH4)HCO3, (NH4)2CO3, and H2O ஆகியவற்றின் 2:1:1 கலவை) அவ்வாறு செலுத்தப்பட்டவுடன் சாதாரண அம்மோனியம் கார்பனேட்டாக ((NH4)2CO3) மாறுகிறது. இது 30°செல்சியசு வெப்பநிலையில் தயாரிக்கப்பட்ட கரைசலிலிருந்து இது திட வடிவில் பிரித்தெடுக்கப்படலாம். இந்தச் சேர்மம் காற்றுடன் வினைபுரியச் செய்யும் போது அம்மோனியாவினை வெளியிட்டு அம்மோனியம் பைகார்பனேட்டாக மாறுகிறது.
ஆர்ட்சுஆர்ன் உப்பு
அம்மோனியம் கார்பனேட்டின் இயைபு மிக நீண்ட காலமாகவே அறியப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் அவை வணிகரீதியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது சால் வாலடைல் அல்லது ஆர்ட்சுஆர்ன் உப்பு என அழைக்கப்பட்டது. இது நைட்ரசனைக் கொண்டுள்ள கரிமப் பொருள்களான முடி, கொம்பு, தோல் போன்றவற்றை உலர் வடித்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பொருட்கள் அம்மோனியம் பைகார்பனேட்டுடன் கூடுதலாக அம்மோனியம் கார்பனேட்டையும் கொண்டுள்ளது. சில நேரங்களில் இது அம்மோனியம் செஸ்கிகார்பனேட்டு எனவும் அழைக்கப்படுகிறது. இது வலிமையான அம்மோனிய நெடியினை உடையது. ஆல்ககாலுடன் நொதிக்கச் செய்யப்படும் போது கார்பமேட்டானது கரைந்து அம்மோனியம் பைகார்பனேட்டின் வீழ்படிவை விட்டுச் செல்கிறது.
இதே மாதிரியான ஒரு சிதைவானது செஸ்கிகார்பனேட்டானது காற்றுடன் வினைபுரிய அனுமதிக்கப்படும் போதும் நிகழ்கிறது.
அம்மோனியம் பைகார்பனேட்டானது உணவுத் தொழிலில், குறிப்பாக அடுமைனத் தொழிலில் மிருதுவாக்கும் காரணியாகப் பயன்படுகிறது. சீனாவில் ஆவியால் வேக வைக்கப்பட்ட பன் மற்றும் பாதாம் ரொட்டிகளில் பயன்படுகிறது. முன்னதாக, இன்றைய உலகின் சமையல் சோடா வருவதற்கு முன்பாக சமையலறைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. சீனாவில் இந்த உப்பு மணமுடைய உப்பு என அழைக்கப்பட்டது. இசுகாண்டிநேவியாவிலிருந்து வெளிவந்த பல சமையல் புத்தகங்களில் இதனை ஆர்ட்சுஆர்ன் அல்லது கொம்புப்பு என குறிப்பிடுகின்றன. சமைக்கும் போது சிறிதளவு அம்மோனியாவின் நெடி இருப்பினும் அது வேகமாக மறைந்து சுவையற்றதாகி விடுகிறது. ரொட்டி சோடா மற்றும் ரொட்டி பொட்டாஷ் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஒரே அளவான காரணிக்கு அதிக வாயுவை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளது. அத்தோடு இந்தச் சேர்மம் முழுமையாக சிதைவடைந்து நீர் மற்றும் வாயுக்களாகி விடுவதாலும் வெப்பப்படுத்தும் போது அவையும் ஆவியாகிப்போய் விடுவதாலும், சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையையோ, உப்புத்தன்மையையோ இறுதியாகத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டத்தில் விட்டுச் செல்வதில்லை.
இது சீனாவில் செலவு குறைவான நைட்ரசன் உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. யூரியாவின் கண்டுபிடிப்பிற்குப் பின்ன அதன் தரம் மற்றும் நிலைத்தன்மையின் காரணமாக இதன் பயன்பாடு வழக்கொழிந்து போனது. இச்சேர்மமானது தீயணைப்புக் கருவிகளில் பயன்படும் சேர்மமாகவும், மருந்துப் பொருட்கள் தயாரிப்பின் போதும், சாயங்கள் மற்றும் நிறமிகளிலும், அடிப்படையான உரங்களிலும் இது பயன்படுகிறது. அம்மோனியம் பைகார்பனேட்டானது இன்றும் இரப்பர் மற்றும் நெகிழி தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுகிறது. தோல் பதனிடுதல், பீங்கான் தயாரிப்பு மற்றும் வினைவேக மாற்றிகளின் தயாரிப்பு ஆகியவற்றிலும் பயன்படுகிறது.
மேற்கோள்கள் எட்வர்ட் ஹக் Edward Hack , பிறப்பு: அக்டோபர் 1, 1913, இறப்பு: செப்டம்பர் 20 1987), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1937 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு
எட்வர்ட் ஹக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 23, 2011.அயப்பாக்கம் (Ayappakkam) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்தில் கணக்கெடுப்பில் உள்ள கிராமம் ஆகும். சென்னைக்கு மேற்கில் அமைந்த அயப்பாக்கம், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் குடியிருப்பாக உள்ளது. அம்பத்தூர் - திருவேற்காடு இடையே அயப்பாக்கம் அமைந்துள்ளது. இதனருகில் ஆவடி மாநகராட்சி உள்ளது. சென்னைக்கு மேற்கே, எழும்பூரிலிருந்து 18 கி.மீ. (11.2 மைல்) தொலைவில் அயப்பாக்கம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிப்பின் படி, அயப்பாக்கத்தின் மொத்த மக்கள்தொகை 29,511 ஆகும்.
சில ஆய்வாளர்கள் (பிரெஞ்சு-அமெரிக்கக் கணிதவியலாளர் செர்ஜ் லாங்) முழு ஆட்களம் என்ற பெயருக்குப் பதிலாக "முழு வளையம்" எனப் பயன்படுத்துகின்றனர். இது
Z
i
அல்லது
எனக் குறிக்கப்படுகிறது.
முழுவெண் கெழுக்களைக் கொண்ட பல்லுறுப்புக்கோவை வளையங்கள் முழு ஆட்களங்களாக இருக்கும். எடுத்துக்காட்டாக, முழுவெண் கெழுக்களுடன் ஒருமாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவை வளையம் (
x
) ஒரு முழு ஆட்களமாகும்; இதேபோல சிக்கலெண் கெழுக்களுடன் n-மாறிகளிலமைந்த பல்லுறுப்புக்கோவை வளையமும் (
x
n
) முழு ஆட்களமாகும்.
மேலும் பார்க்க
குறிப்புகள்
Bourbaki, Nicolas (1998). Algebra, Chapters 1–3. Berlin, New York: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-64243-5.
Dummit, David S.; Foote, Richard M. (2004). Abstract Algebra (3rd ed.). New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-43334-7.
Lang, Serge (2002). Algebra. Graduate Texts in Mathematics. Vol. 211. Berlin, New York: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-95385-4. MR 1878556.
B.L. van der Waerden, Algebra, Springer-Verlag, Berlin Heidelberg, 1966.
வெளியிணைப்புகள்
"where does the term "integral domain" come from?".இந்திய விடுதலை இயக்கத்தில், காங்கிரசு கட்சியி இருந்த முகமது அப்துல் ரகுமான், 1924 ல் கோழிக்கோட்டில் வெளியிட்ட நாளிதழே அல் அமீன்.
சான்றுகள் பாமிர் மலைகள் (Pamir Mountains) நடு ஆசியாவில் இமயமலையையும் காரகோரம், இந்துகுஷ் மலைத் தொடர்களை இணைக்கும் மலைத்தொடராகும். பாமிர் பீடபூமி, உலகில் மிக உயரத்தில் அமைந்துள்ளதால், பாமிர் பீடபூமியை உலகின் கூரை என்றும் பாமிர் முடிச்சு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவின், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த இராணுவப் பாசறைகள் மற்றும் இராணுவ விமான தளங்கள், பாமிர் மலைத்தொடரின் சியாச்சின் மற்றும் அக்சாய் சின் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
பாமிர் மலைத்தொடரின் அமைவிடத்தைச் சுருங்க விளக்க இயலாதபடி, விவாதத்திற்குரிய பொருளாகவே உள்ளது. பெரும்பாலான பாமிர் மலைத்தொடர்கள் தாஜிக்ஸ்தானின் கோர்னோ-படாக்சான் தன்னாட்சி பிராந்தியத்தியத்தில் அமைந்துள்ளது. பாமிர் மலைத்தொடரின் வடக்கில் கிர்கிஸ்தானின் அலாய் சமவெளியுடனும் மற்றும் தியான் ஷான் மலைத்தொடர்களுடனும், தெற்கே ஆப்கானித்தானின் இந்துகுஷ் மலைத்தொடருடனும், கிழக்கே சீனாவின் கொங்கூர் தாக் மலைத்தொடர்களுடனும் இணைந்து காணப்படுகிறது
புவியியல்
பாமிர் மலைத்தொடரின் மேற்கில் ஏழாயிரம் மீட்டருக்கும் அதிக உயரமுடைய இஸ்மொயில் சொமொனி கொடிமுடி , ஸ்டாலின் கொடிமுடி , லெனின் கொடுமுடி என மூன்று உயரமான கொடிமுடிகள் உள்ளது. பாமிர் மலைத்தொடரின் கிழக்கில், சீனாவின் பகுதியில் 7649 மீட்டர் உயரமுடைய கொங்கூர் தாக் எனும் கொடிமுடி அமைந்துள்ளது.
அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் துருவப் பகுதிகளுக்கு வெளியே பாமிர் மலைத்தொடரில் அதிக நீளமான உறைபனி மலைகள், பாமிர் மலைத்தொடரில் உள்ளது. அவற்றுள் பெட்சாங்கோ உறைபனிமலைத் தொடர் 77 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பாமிர் மலைத்தொடரின் காரகோரம் பகுதியில் சியாச்சென் பனியாறு 76 கிலோ மீட்டர் நீளமும், பிஃபோ பனியாறு 67 கிலோ மீட்டர் நீளமும், பால்தொரோ பனியாறு 63 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.
தட்ப வெப்பம்
ஆண்டு முழுவதும் பனிபடந்திருக்கும் பாமிர் மலைத்தொடரில் நீண்ட கடுமையான குளிர்காலமும், குறுகிய மிக இதமான வெப்ப காலமும் கொண்டது. ஆண்டிற்கு 130 மில்லி மீட்டர் அளவு பொய்யும் மழையினால், பாமிர் பீடபூமியின் மேய்ச்சல் புல்வெளி நிலங்கள் பயன் அடைகிறது.
பாமிர் மலைத்தொடரின் மேற்கில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது. மேலும் ஆடு வளர்ப்பு தொழில் இப்பகுதியின் முதன்மை வருவாய் ஈட்டித் தரும் தொழிலாக உள்ளது.
ஆய்வுப் பயணம்
1868 முதல் 1880 முடிய பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது பாமிர் மலைதொடரின் பஞ்ச் பகுதியை இந்தியர்கள் இரகசியமாக ஆய்வு செய்தனர்.
1871 முதல் 1893 முடிய பல ருசிய நாட்டு இராணுவ-அறிவியலாளர்கள் பாமிர் மலைத்தொடர்கள் குறித்த வரைபடத்தை தயாரித்தனர்.
1892இல் ருசிய நாட்டு இராணுவத்தின் படையணி ஒன்று பாமிர் மலையில் உள்ள முர்காப் மாவட்டத்தில் முகாமிட்டது.
1928இல் சோவியத்-ஜெர்மன் ஆய்வாளர்கள் பாமிரின் பெட்சாங்கோ கொடுமுடியை அளவிட்டு வரைபடம் தயாரித்தனர்.
பாமிர் சமவெளி
பெரிய பாமிர் சமவெளி நிலங்கள் சோர்குல் ஏரியால் சூழப்பட்டது. பெரிய பாமிர் சமவெளியின் கிழக்கில், வாகன் எனுமிடத்திலிருந்து தூரக் கிழக்கில் சிறிய பாமிர் சமவெளி அமைந்துள்ளது.
பாமிர் மலைத்தொடரில் பாமிர் ஆறு தென்மேற்கில் பாய்கிறது.
கண்டுபிடிப்புகள்
1980ஆம் ஆண்டில் தரமான சுடர் விடும் நவரத்தினக் கற்கள் பாமிர் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து
பாமிர் நெடுஞ்சாலை உலகில் இரண்டாவது உயரமான பன்னாட்டுச் சாலையாகத் திகழ்கிறது. இந்நெடுஞ்சாலை தாஜிக்ஸ்தானின் துஷான்பே நகரத்திலிருந்து முதல் கிர்கிஸ்தானின் ஓஷ் நகரம் வரை கோர்னோ-படாக்ஷான் தன்னாட்சி பிரதேசம் வழியாகச் செல்கிறது. பாமிர் மலைத்தொடர்களை கடந்து பட்டுப்பாதைகள் செல்கிறது.
சீனாவின் கிழக்கு பாமிர் மலைத் தொடர் மற்றும் தாஜிக்ஸ்தானின் பாமிர் மலைத் தொடர் பகுதிகளில் மலையேற்றப் பயிற்சியாளர்களுக்கு உரிய சுற்றுலா தலமாகும்.
போர்த் தந்திர நிலை
கிழக்கின் சீனாவின் பண்டைய தலைநகரம் ஜியாங் நகரத்தையும், மேற்கே கஷ்கர் நகரத்தையும் இணைக்கும், பாமிர் மலைத்தொடர் வழியாகச் செல்லும் 2600 கிலோ மீட்டர் நீளமுள்ள பட்டுப்பாதை வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருந்த காலத்தில், பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு வழிகோலியது. பாமிர் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் மற்றும் அக்சாய் சின் பகுதிகளின் உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது. பாமிர் மலைத்தொடர்களில் சீனா, இந்தியா, உருசியா மற்றும் அமெரிக்கா நாடுகள் தங்கள் இராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளது.
Youth hostel in Kashgar (China) Kashgar Pamir Youth Hostel பரணிடப்பட்டது 2012-01-16 at the வந்தவழி இயந்திரம்
Photos of the life of ethnic Kyrgyz in Afghan's Little Pamir பரணிடப்பட்டது 2009-02-12 at the வந்தவழி இயந்திரம்
மேலும் படிக்க
சான்றுகள் பூமாலை என்னும் நூல் கமலை ஞானப்பிரகாசர் இயற்றியது என அவரது மாணவர் துழாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய சேசிகர் குறிப்பிடுகிறார்.
நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு
இண்டைமாலை, கொண்டைமாலை முதலான மாலை வகைளும், அவற்றை இறைவனுக்குச் சாத்தவேண்டிய முறைகளும் இதில் உள்ளன என்கிறார் தேசிகர்.