text
stringlengths
3
79k
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்தப் பறவையை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், இது ஏற்கனவே குய்மராசில் அழிந்துவிட்டதாகவும், இந்த தீவுகளில் பாரிய காடழிப்பு காரணமாக மாசுபேட் மற்றும் டிகாவோ தீவில் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ADW இல் படம் பரணிடப்பட்டது 2008-12-02 at the வந்தவழி இயந்திரம்சாம்செர் சிங் (Shamsher Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் நாள் இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோவில் நடைபெற்ற ஆண்கள் வளைகோல் பந்தாட்ட போட்டியிலிருந்து சாம்செர் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். இந்திய தேசிய அணிக்கு முன்கள வீரராக விளையாடி வருகிறார். டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.
புற இணைப்புகள்
Player profile at Hockey Indiaஏ சைலன்ட் வாய்சு (சப்பானியம்-காஞ்சி: 映画 聲の形) (தமிழ்: கோய் னோ கத்தாச்சி - அமைதிக்குரல்) 2016 இல் வெளிவந்த ஒரு சப்பானிய அனிமே திரைப்படமாகும்.
கதைக்கரு
காதுகேளாத சிறுமியான சோக்கோ நிசிமியா, இடைநிலைபள்ளியில் பயிலும் போது சகமாணவன் சோயா இசிதாவால் கொடுமைப் படுத்தப்படுகிறாள். விளையவாக, நிசிமியா பள்ளியை விட்டுச்செல்ல, சகமாணவர்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறான் இசிதா. நண்பர்களே இல்லாமல் தனிமையில் நாட்களை நகர்த்தி வாழ்க்கையை வெறுக்கிறான்.
சில ஆண்டுகள் கழித்து, தற்போது உயர்நிலைப்பள்ளியில் பயிலும் இசிதா தற்கொலை முயற்சி செய்து தோற்றுவிடுகிறான். இறுதியாக நிசிமியாவைச் சந்தித்து மன்னிப்பு கோர விழைபவனை நிசிமியா மன்னித்தாளா இசிதாவின் வாழ்க்கையைச் சூழ்ந்திருந்த தனிமை விலகியதா என்பது கதை.
குரல் கொடுத்தவர்கள்
சோயோ இசிதா (石田 将也)
என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மியு இரினோ
கழிவிரக்கம் கொள்ளும் ஒரு உயர்நிலை மாணவனாக இந்த கதாப்பாத்திரம் உள்ளது.
சோக்கோ நிசிமியா' (西宮 硝子)
என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் சவோரி அயாமி
இசிதா என்ற கதாப்பாத்திரத்தால் கொடுமைப் படுத்தப்படுவதும், பின்னால் மன்னிப்பு கேட்டு வருபவனை எதிர்கொள்வதுமான இந்த கதாப்பாத்திரம் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளியாக உள்ளது.
இதே பெயரில் 2014 ஆம் ஆண்டு வெளியான மங்கா தொடரின் அனிமே வடிவமே இந்தத் திரைப்படம். 2015 ஆம் ஆண்டு வெளியான சோனென் பத்திரிக்கை, கியோட்டோ அனிமேசன் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் நாவுக்கோ யமடா இயக்க இருப்பதாகவும் அறிவித்தது. இத்திரைப்படத்தின் முகப்புப்பாடல் கோய் வோ சீட்டா நோ வாவை ஐக்கோ பாடினார். இத்திரைப்படத்தை ஆங்கில மொழிமாற்றம் செய்யும்போது காதுகேளா மாற்றுத்திறனாளி நடிகையான எலெக்சி கௌடென் நிசிமியாவின் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தார்.
செப்டம்பர் 17, 2016 அன்று சப்பான் முழுவதும் 120 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. அக்டோபர் 22,2016 ஆம் ஆண்டு இசுக்கொட்லாந்து அனிமே திருவிழாவிலும் பிப்ரவரி 5, 2017 இலண்டன் கலையரங்க கல்வி நிறுவனத்திலும் வெளியானது. மார்ச்சு 9,2017 இல் சிங்கப்பூர் மலேசியாவிலும் ஏப்ரல் 9, 2017 இல் ஆத்திரேலியா நியூசிலாந்திலும் ஏப்ரல் 16, 2017 அன்று ஐரோப்பா உருசியா துருக்கி முழுவதும் வெளியானது.
மேற்கோள் தற்காலச் சமூகத்தில் உயர் வகுப்பு (upper class) என்பது, மிகக் கூடிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்களும், பெரும் பணக்காரர்களாகவும் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட சமூக வகுப்பு ஆகும். இந்த நோக்கில் உயர் வகுப்பு, பொதுவாகத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்படும் செல்வத்தினால் அடையாளம் காணப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வகுப்பினரைக் குறிக்க உயர்குடியினர் என்னும் சொல் பயன்பட்டது.
சமூகமொன்றின் மேற்குறித்த உயர் வகுப்பினர் தாம் வாழும் சமூகத்தை இப்போது ஆட்சி செய்வதில்லை என்பதால், இவர்கள் பழம் உயர் வகுப்பினர் எனப்படுகின்றனர். இவர்கள், தற்காலச் சமூக மக்களாட்சிகளின் பொது வாழ்க்கையில் ஆதிக்கம் கொண்டுள்ள பணக்கார மத்திய வகுப்பினரிலிருந்து பண்பாட்டு அடிப்படையில் வேறுபட்டவர்களாவர். இச்சொல், சமூக அடுக்கமைவு மாதிரியில் மேல் மத்திய வகுப்பு, மத்திய வகுப்பு, உழைக்கும் வகுப்பு போன்றவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்றுப் பொருள்
சில பண்பாடுகளில் இவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்ட அல்லது பழைய தலைமுறைகளிடம் இருந்து கிடைத்த முதலீடுகளில் (பெரும்பாலும் அசையாச் சொத்துக்கள்) இருந்து வாழ்க்கையை நடத்துவதால், இவர்கள் உழைப்பதில்லை. இவர்கள் வணிகர்களை விடக் குறைவான உண்மையாக பணத்தையே வைத்திருக்கக்கூடும். உயர் வகுப்புத் தகுதி ஒருவரது குடும்பத்தில் சமூகத் தகுதிநிலை காரணமாகவே ஏற்படுகின்றதேயன்றி, அவருடைய சொந்தச் சாதனைகளாலோ செல்வத்தினாலோ ஏற்படுவதில்லை. உயர் வகுப்பில் அடங்கக்கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் குடியினர், அரச குடும்பத்தினர், பிரபுப் பட்டம் கொண்டோர், உயர்நிலை மதகுருக்கள் ஆகியோராவர். இவர்கள் பிறக்கும்போதே அத்தகுதியுடனே பிறக்கின்றனர். அத்துடன் வரலாற்றில் வகுப்புக்களிடையே நகர்வுகள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.
பல நாடுகளில் உயர் வகுப்பு என்னும் சொல் தலைமுறைகளூடான நில உடைமையோடு நெருங்கிய தொடர்புகொண்டது. பிற வகுப்பினர் நிலத்தை உடைமையாக வைத்திருப்பதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லாதிருந்தபோதும் பல முன்தொழிற் சமூகங்களில் மரபுவழியான நில உடைமையாளர்களே அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தனர்.
மேற்கோள்கள் ஆர்க்டிக் ஓநாய் (Arctic wolf, Canis lupus arctos) பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். இவை துருவ ஓநாய்கள் (Polar Wolf), அல்லது வெள்ளை ஓநாய்கள் (White Wolf) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.
வாழ்க்கை முறை
ஆர்க்டிக் ஓநாய்கள் குடும்பமாக வாழும் இயல்பு உடையவை. தாய் ஓநாய்கள் ஒரு தடவைக்கு ஆறு அல்லது ஏழு குட்டிகள் வரை ஈனும். தந்தை ஓநாய் தாய் மற்றும் குட்டிகளுக்கு இரை தேடிக் கொண்டு வந்து தரும். குளிர் அதிகமான காலங்களில் பனியில் வளை தோண்டி அதில் படுத்து உறங்கும். பிற இன ஓநாய்களும் கரடிகளும் இவற்றின் எதிரிகள் ஆகும். ஆர்டிக் ஓநாய்கள் உணவின்றி பல வாரங்கள் வரை வாழும்.
காணப்படும் இடங்கள்
இவ்வகை ஓநாய்கள் கனடா, அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் காணப்படுகின்றன.
ஆர்க்டிக் ஓநாய்கள் அழகான சிறியமுகமும் அடர்த்தியான வாலும் கொண்டவை. அப்போது உடல் வெண்மையாகவும் வால் மட்டும் பழுப்பாகவும் இருக்கும் இச்சமயங்களில் தனது வாலைத் தூக்கிபிடித்தபடி இவை அலையும். பனியில் சறுக்காமல் நடக்க ஏதுவாக இவற்றின் பாதங்களில் மயிர் உண்டு.
உணவுப் பழக்கம்
ஆர்க்டிக் ஓநாய்கள் மீன், பறவை, பூச்சிகள், ஆர்டிக் முயல் மற்றும் பிற பாலூட்டிகளை உண்ணும். அவைகள் உணவுக்காக காத்திருக்கும் போது இறந்த திமிங்கிலம் போன்ற விலங்குகளின் உடல்கள் கிடந்தால் அவற்றையும் உண்ணும். பல மைல் தூரத்திலிருந்தும் கூட நூற்றுக்க்கணக்கான ஓநாய்கள் கூடிவிடும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய இவை நீந்துவதில்லை. நகரும் பனிக்கட்டிகள் மீதேறி கடலில் இவை பயணம் செய்யும்.துருவக் கரடிகளின் பின்னால் சென்று, அவை தின்ற மிச்சத்தை சில ஓநாய்கள் உண்டு உயிர் வாழும். வேறு உணவு கிடைக்காத போது இவை ஒன்றையொன்று தின்பதும் உண்டு. இந்த ஓநாய்கள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களைப் பயன்படுத்தும். அவை தங்கள் இரையைத் துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.
உசாத்துணை
White Wolf Sanctuary website பரணிடப்பட்டது 2007-07-06 at the வந்தவழி இயந்திரம்
Wolf survival website பரணிடப்பட்டது 2006-02-08 at the வந்தவழி இயந்திரம்
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள் கொல்லம் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்க்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதியின் உறுப்பினராக 2016 கேரள சட்டமன்றத் தேர்தல் முதல் பிரபல மலையாள திரைப்பட நடிகர் முகேஷ் ஆவார்.
தொகுதியின் அமைப்பு
கொல்லம் சட்டமன்றத் தொகுதியில் கொல்லம் மாநகராட்சியின் 19 வார்டுகள், கீரிப்புழா மற்றும் 12 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியது ஆகும்.
தேர்தல் வரலாறு
திருவிதாங்கூர்-கொச்சின் சட்டமன்றத் தேர்தல்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்:
சட்டப் பேரவைத் தேர்தல் 2021
சட்டப் பேரவைத் தேர்தல் 2016
கொல்லம் தொகுதியைச் சேர்ந்த கேரள அமைச்சர்களின் பட்டியல்
மேற்கோள்கள் தொரவி திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தொரவி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
இக்கோயிலில் திரௌபதியம்மன் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள் சுவாமி ஆனந்த் (Swami Anand) (1887 - 25 ஜனவரி 1976) ஒரு துறவி, காந்திய ஆர்வலர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குஜராத்தி எழுத்தாளர் . நவஜீவன் மற்றும் யங் இந்தியா போன்ற காந்தியின் வெளியீடுகளின் மேலாளராகவும், காந்தி தனது சுயசரிதையான சத்திய சேரதனையை எழுதவும் ஊக்கப்படுத்தியதற்காக அவர் நினைவுகூரப்படுகிறார். அவர் நினைவுக் குறிப்புகள், சுயசரிதைகள், தத்துவம், பயணக் குறிப்புகள் மற்றும் சில படைப்புகளை மொழிபெயர்த்தார்.
வாழ்க்கை வரலாறு
ஆரம்ப கால வாழ்க்கை
சுவாமி ஆனந்த் வாத்வான் அருகே சியானி கிராமத்தில் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் பிறந்தார். இவர் ஒளதிச்ய பிராமண குடும்பத்தில் ராமச்சந்திர தேவ் (திவேதி) மற்றும் பார்வதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஆசிரியர். இவருடன் ஏழு பேர் உடன் பிறந்தோர் ஆவர். அவர் மும்பையில் வளர்ந்தார். மும்பையில் கல்வி பயின்றார். தனது பத்து வயதில், திருமணத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவருக்கு கடவுளைக் காட்டுவதாக ஒரு துறவி அளித்த வாக்குறுதியின் காரணமாக, அவர் பல்வேறு துறவிகளுடன் மூன்று ஆண்டுகள் அலைந்து திரிந்தார். அவர் தனது பதின்பருவத்திலேயே துறவு வாழ்க்கை வாழப்போவதாக சபதம் செய்தார். சுவாமி ஆனந்தானந்த் என்ற பெயரைப் பெற்றார், இராமகிருசுண இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு துறவியானார். அவர் தன் கல்விக்காக தங்கியிருந்த அத்வைத ஆசிரமத்திலும் வசித்து வந்தார்.
1905 ஆம் ஆண்டில் வங்காள புரட்சியாளர்களுடனான அவரது தொடர்பு மூலம் ஆனந்த் இந்திய சுதந்திர இயக்கத்தில் நுழைந்தார். பின்னர், 1907ஆம் ஆண்டில் பால கங்காதர திலகரால் நிறுவப்பட்ட மராத்தி செய்தித்தாளான கேசரியில் பணியாற்றினார். கிராமப்புறங்களில் சுதந்திர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அதே காலகட்டத்தில் மராத்தி நாளேடான ராஷ்டிரமத்தின் குஜராத்தி பதிப்பையும் அவர் தொகுத்துள்ளார். அந்த நாளேடு மூடப்பட்டபோது, அவர் 1909 ஆம் ஆண்டில் இமயமலையில் பயணம் செய்தார். 1912 ஆம் ஆண்டில், அன்னி பெசன்ட் அம்மையார் அவர்களால் அல்மோடாவில் நிறுவப்பட்ட ஹில் பாய்ஸ் பள்ளியில் கற்பித்தலில் ஈடுபட்டார்.
காந்தியின் கூட்டாளர்
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மறுநாளே காந்தி 1915 ஜனவரி 10 அன்று பம்பாயில் ஆனந்தை சந்தித்தார். காந்தி தனது வார இதழான நவஜீவனை அகமதாபாத்தில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கினார். அதன் தொடக்க வெளியீடு செப்டம்பர் 1919 இல் வெளிவந்தது, விரைவில் பணிச்சுமை அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில்தான் ஆனந்தை பதிப்பகத்தின் மேலாளராகப் பணிபுரிய காந்தி அழைத்தார். சுவாமி ஆனந்த் 1919 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதன் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு நல்ல தொகுப்பாசிரியர் மற்றும் மேலாளர் என்பதை நிரூபித்தார். யங் இந்தியா தொடங்கப்பட்டபோது, அவர் பதிப்பகத்தை பெரிய வளாகத்திற்கு மாற்றினார். முகமது அலி ஜவஹர் நன்கொடையளித்த அச்சிடும் கருவிகளுடன், அதன் வெளியீடு தொடங்கியது. 1922 ஆம் ஆண்டில் மார்ச் 18 அன்று, யங் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்காக அந்தக் கட்டுரையின் பதிப்பாளர் என்ற முறையில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தியின் சுயசரிதை 1925 - 1928 முதல் நவ்ஜீவனில் தொடராக வெளிவந்தது. இது சுவாமி ஆனந்தின் வற்புறுத்தலின் பேரில் காந்தியால் எழுதப்பட்டது. இந்த அத்தியாயங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு யங் இந்தியாவிலும் பகுதி பகுதியாக வெளிவந்தது. பின்னர், 1926 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் உள்ள சத்தியாகிரக ஆசிரமத்தில் காந்தி அளித்த பேச்சுக்களின் அடிப்படையில் காந்தியின் பார்வையில் பகவத் கீதை வெளியிடப்பட்டது. இந்த படைப்பையும் எழுத காந்தியை ஊக்குவிப்பதில் சுவாமி ஆனந்த் ஒரு பங்கைக் கொண்டிருந்தார்.
1928 ஆம் ஆண்டு பர்தோலி சத்தியாக்கிரகத்தின் போது வல்லபாய் படேலின் செயலாளராக இருந்தார். 1930 ஆம் ஆண்டில், பம்பாயில் உள்ள வைல் பார்லேயில் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1933 இல் விடுவிக்கப்பட்டபோது, பழங்குடியினரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார்.
மேற்கோள்கள் தேவந்தவாடி ஊராட்சி (Dhevanthavadi Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1251 ஆகும். இவர்களில் பெண்கள் 631 பேரும் ஆண்கள் 620 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:
கைவிடந்தாங்கல்
தேவந்தவாடி
மோடிபட்டு
தேவந்தவாடி காலனி
மோடிபட்டு காலனி
பட்டிகலர்
நத்தம்
இருளர் காலனி
கைவிடந்தாங்கல் காலனி
மேற்கோள்கள் ஜாபி அல்லது ஜபி (அசாமி:জাপি) என்பது இந்தியாவின் அசாமில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கூம்பு வடிவத் தொப்பி ஆகும். இது மற்ற ஆசியக் கூம்புத் தொப்பிகளைப் போன்றது. ஜாபி என்ற வார்த்தை ஜாப் என்பதிலிருந்து வந்தது. அதாவது டக்கு இலைகளின் கட்டு என்பது பொருளாகும். கடந்த காலத்தில், சாதாரண ஜாபி அசாமில் சாதாரண மக்களாலும், விவசாயிகளாலும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதே சமயம் அலங்கரிக்கப்பட்ட ஜாபி அரச மற்றும் நிலப் பிரபுக்களால் தகுதியின்அடையாளமாக அணிந்தனர். அலங்கார சொருடோய் ஜாபி நெசவுகளில் ஒருங்கிணைக்கப்பட்ட சிக்கலான துணி வடிவமைப்புகளுடன் (முதன்மையாகச் சிவப்பு, வெள்ளை, பச்சை, நீலம் மற்றும் கருப்பு) தயாரிக்கப்படுகிறது.
இடைக்கால சுடியா மன்னர்கள் ஜாபியை ஒரு கலாச்சார அடையாளமாக பயன்படுத்தினர். 1523ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கான முயற்சியில் அகோம் மன்னர் சுஹுங்முங்கிற்கு தங்கம் மற்றும் வெள்ளி நூற் வேலைப்பாடுடைய ஜாபிகளை பரிசாக அளித்தார். 1524-ல் சாடியாவை இணைத்த பிறகு, அஹோம் மன்னருக்கு ஏராளமான பொக்கிசங்கள் கிடைத்தன. இதில் ஜாபிகளும் அடங்கும். 1525ஆம் ஆண்டில், அஹோம் மன்னர், தற்போதைய மேல் மியான்மரில் (புராஞ்சிசில் நோரா என்று அழைக்கப்படுகிறார்) ஷான் மாநிலமான மோங்காங் தலைவரான புக்லோயிமுங்குடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சூட்டியா மன்னரிடமிருந்து பெறப்பட்ட சில வெள்ளி ஜாபிகளையும் மற்ற பொருட்களையும் பரிசாக வழங்கினார். அஹோம் ஆட்சியின் போது, ஜாபி-ஹாஜியா கேல் (ஜாபிகளை உருவாக்கும் சங்கத்தினர்) சூடியாசால் ஏகபோகமாக இருந்தது, இது அவர்கள் ஜாபிகளை நெசவு செய்வதில் வல்லுநர்கள் என்பதைக் குறிக்கிறது. இது தவிர, மத்திய அசாமின் பரோ-புயான்களும் ஜாபிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சத்சாரி புரஞ்சியின் படி, அஹோம் மன்னர்கள் டோங்காலி, ஹசோதி மற்றும் டோகோ-பாட்டியா ஜபியை பரோ-புயான்களிடமிருந்து ஏற்றுக்கொண்டனர்.
கலாச்சார சின்னம்
ஜாபி அசாமின் சின்னமாக உள்ளது. இது பிஹு நடனத்தின் பாணியில் அணியப்படுகிறது. விழாக்களில் மரியாதைக்குரிய அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் வீட்டைச் சுற்றி அலங்காரப் பொருளாக, குறிப்பாக சுவர்களில் வரவேற்பு அடையாளமாக வைக்கப்படுகிறது.
முதலில் ஜாபி என்பது மழை அல்லது வெயிலிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக விவசாயிகளால் தலைக்கவசமாகப் பயன்படுத்தப்பட்டது. விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட போடோ-கச்சாரிகள் பெரும்பாலும் நெல் வயல்களில் ஜாபியினைப் பயன்படுத்துகின்றனர். இதேபோன்ற தலைக்கவசங்கள் கிழக்கு ஆசியா முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. பிஷ்ணு பிரசாத் ரபா, போடோ சமூகத்தின் கோஃப்ரி சிப்னாய் மவ்சானையின் ஜெயமதி திரைப்படத்தின் மூலம் அசாமியக் கலாச்சாரத்தில் ஜாபி நடனத்தைச் சேர்த்தார்.
வகைகள்
சொருடோய் ஜாபி: பெண்களால், குறிப்பாக மணப்பெண்களால் பயன்படுத்தப்படுகிறது.
போர்டோய் ஜாபி: பழங்காலத்திலிருந்தே (கம்ருபா) அரச குடும்பத்தால் பயன்படுத்தப்படுகிறது.
பனிடோய்/ஹலுவா ஜாபி: விவசாயிகளால் வயல்களில் பயன்படுத்தப்படுகிறது.
கராக்கிய ஜாபி: கால்நடை மேய்ப்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
பிதா ஜாபி: சில நேரங்களில் சாகுபடியின் போது தலைக்கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது.
துப்பி/வருண் ஜாபி: மழையின் போது பாதுகாப்பு தொப்பிகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Bhuyan, Surjya K. (1960), Satsari Buranji
மேற்கோள்கள் கே. வரலகட்சுமி (K.Varalakshmi தெலுங்கு: కె.వరలక్ష్మి ; பிறப்பு 24 அக்டோபர் 1948) ஒரு தெலுங்கு சிறுகதை எழுத்தாளர்.
இவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள ஜகம்பேட்டாவில் பிறந்தார். இவர் பல்லா வெங்கட ரமணா மற்றும் பங்கராமா ஆகியோரின் மூத்த மகள் ஆவார்.
ஜகம்பேட்டாவில் பள்ளிக்கல்வி பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவர் 1964 ஆம் ஆண்டில் கலா ராமமோகன ராவை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மகன் கே.ரவீந்திர பானிராஜ் ஹைதராபாத்தில் சுற்றுலாத் திட்ட ஆலோசகர் ஆவார். இவரது மூத்த மகள் கே.கீதா ஒரு தெலுங்கு கவிதை எழுத்தாளர் ஆவார். இவர்களின் இளைய மகள் ஸ்ரீ லலிதாவும் கதை எழுத்தாளராவார்.
இவரது பெரும்பாலான படைப்புகள் கிராமப்புற பெண்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
கவிதை
ஸ்ரீ ஸ்ரீ, தேவுலப்பள்ளி கிருஷ்ணசாஸ்திரி, கந்துகுரி ராஜ்யலட்சுமி மற்றும் பல.
சுசீலா நாராயண ரெட்டி விருது
சாசோ ஸ்பூர்த்தி விருது
விமலசந்தி விருது
சஹ்ருதயா சாஹிதி விருது
ஹசன் பாத்திமா விருது
ரஞ்சனி விருது
அஜோ-விபோ விருது
ஆட்டோ கதா விருது
தனா கதா விருது
ரங்கவள்ளி விருது