text
stringlengths
3
79k
புலிகாந்தி விருது
ஆர்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி விருது
தெலுங்கு பல்கலைக்கழகத்தின் தர்மநிதி விருது
ஸ்ரீ பெடிபோட்லா சுப்பராமையா விருது மற்றும் பல
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
ஜீவரகம், 1996
மேட்டி-பங்கரம், 2001
அதாது-நேனு பரணிடப்பட்டது 2016-06-10 at the வந்தவழி இயந்திரம், 2007
க்ஷதகத்ரா பரணிடப்பட்டது 2016-08-06 at the வந்தவழி இயந்திரம், 2014
பிட்டகுல்லு, 2016
ஆமே, 2002
சான்றுகள்
அதாது-நேனு பரணிடப்பட்டது 2016-06-10 at the வந்தவழி இயந்திரம்
teluguwriter.orgஹேடன் கிறிஸ்டென்சன் (பிறப்பு: ஏப்ரல் 19, 1981) கனடா ஐக்கிய அமெரிக்க நடிகர். இவர் 1993ஆம் ஆண்டு Family Passions என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். இவர் ஸ்டார் வார்ஸ் என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை வென்றார்.
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹேடன் கிறிஸ்டென்சன்
ஹேடன் கிறிஸ்டென்சன் at the டர்னர் கிளாசிக் மூவி
ஹேடன் கிறிஸ்டென்சன் at Allmovie
Hayden Christensen Interview பரணிடப்பட்டது 2009-08-03 at the வந்தவழி இயந்திரம்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959 (1959 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1959ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.
1959ஆம் ஆண்டு பின்வரும் தேர்தல்கள் நடைபெற்றன.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
மேற்கோள்கள் திருவிதாங்கோடு அரசு மேனிலைப் பள்ளி, என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு மேனிலைப் பள்ளி ஆகும். உயர்நிலைப் பள்ளியாக இயங்கிவந்த இப்பள்ளியானது, 1980களில் மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கஞ்சிக்குழி, பாத்திரமங்கலம், கோழிப்போர்விளை, பூக்கடை, புங்கறை, வட்டம், மைலோடு, கேரளபுரம் போன்ற ஊர்களில் தொடக்கக் கல்வி கற்ற மாணவர்கள் மேல்நிலை வகுப்புக்களுக்கு இப்பள்ளியில் சேருகின்றனர்.கேம்பிரிச்சு பல்கலைக்கழகம் (University of Cambridge) என்பது இங்கிலாந்தில், கேம்பிரிச்சு என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.
31 கல்லூரிகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெறுகின்றது.
கேம்பிரிச்சு பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கில பல்கலைக்கழகங்களின் தங்க முக்கோணத்திலும் ஓர் அங்கம் வகிக்கிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இங்கிலாந்து கிங் ஹென்றி IIIஆல் 1231ல் ஒரு பட்டயம் மூலம் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது. 1223லிருந்து போப் கிரிகோரி IXயால் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எந்த ஒரு பட்டதாரியும் எங்கெல்லாம் கிறிஸ்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார்.
இந்த பல்கலைக்கழகத்தை ஒரு இடைக்கால பல்கலைக்கழகம் என்று போப் நிக்கோலஸ் IV 1290ல் அறிவித்த பிறகும் போப் ஜான் XXII மூலம் 1318ல் உறுதிசெய்யப்பட்ட பின்பு ஐரோப்பாவை சேர்ந்த பலர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திற்கு படிக்கவோ அல்லது விருந்தினர் உரை அளிக்கவோ வந்தனர்.
பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளின் அடித்தளம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகள் முதலில் அமைப்பின் ஒரு ஒரு தற்காலிகமான அம்சமாக இருந்தன, ஆனால் எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகத்தை விட பழமையானதாக இல்லை.எந்த விதமான ஆஸ்திகளும் இல்லாமல் தொடர்புடன் இருந்த நிறுவனங்களை விடுதிகள் என்றழைத்தனர். இந்த விடுதிகள் காலப்போக்கில் கல்லூரிகளுடன் ஐக்கியமாயின. ஆனாலும் கார்ரெட் லேன் விடுதி போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்துள்ளன.
ஹக் டி பால்ஷாம்,எலி ஆயர் 1284ல் பீட்டர்ஹவுஸ்,கேம்பிரிச்சு என்ற கல்லூரியை முதலில் நிறுவினார். இதுவே கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்லூரியாகும். பதிமூன்று மற்றும் பதினான்ங்காம் நூற்றாண்டுகளில் பல கல்லூரிகள் தொடங்கப்பெற்றன. ஆனாலும் 1596ல் தொடங்கப்பெற்ற சிட்னி சுச்செக்ஸ் கல்லூரிக்கும் 1800ல் தொடங்கப்பெற்ற டௌனிங் கல்லூரிக்கும் இடையை 204 ஆண்டு கால இடைவெளி இருந்தது.
இடைக்காலத்தில் தங்கள் கல்லூரிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர்களின் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்வதற்காவே இது போன்ற கல்லூரிகல் நிறுவப்பட்டன, இவை பெரும்பாலும் தேவாலயங்களும் அல்லது ஆச்சிரமங்களிலும் தொடர்புடையதாக இருந்தது. இந்த போக்கு 1536ல் மடாலயங்களின் கலைத்தலுக்கு பின்பு மாறியது.
பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்
ஸ்டீவன் ஹாக்கிங்
பியார்னே இசுற்றூத்திரப்பு
கில்லார்ட் சூக்கர்மன்
ஆதாரங்கள்
Rawle, Tim (2016). Adamson, John (ed.). Cambridge. Oxbridge Portfolio. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9572867-2-6.
கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் வலைத் தளம்
கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம்
கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் விரிவாக்கம்
talks.cam.ac.uk – கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் பல்வேறு சேவைகளின் பட்டியல்
வார்சிட்டி (Varsity) – மணவர் செய்தித்தாள்
The Cambridge Student (TCS) பரணிடப்பட்டது 2005-10-01 at the வந்தவழி இயந்திரம் – ஒரு மாணவர் செய்தித்தாள்
BlueSci – மாணவர் அறிவியல் செய்தித்தாள்
கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் பழைய மாணவர் இதழ் பரணிடப்பட்டது 2007-02-18 at the வந்தவழி இயந்திரம்
Gown – மேற்பட்டப் படிப்பு மாணவர் இதழ்
CUR1350 – மானவர்கள் நடத்தும் வானொலி
Tompkins Table – unofficial ranking of Cambridge colleges பரணிடப்பட்டது 2006-06-20 at the வந்தவழி இயந்திரம்
Aerial view – from கூகுள் நிலப்படங்கள்
பல நிறங்களில் கேம்பிரிட்ஜ் – கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தில் ஒளிப்படக் கலை
வெளியிணைப்பு
Anti-inflammatory, cytotoxic and antioxidant effects of methanolic extracts of drypetes sepiaria (euphorbiaceae)தூர்தர்ஷன் (Doordarshan) தொலை-காட்சி ) என்பது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஓர் இந்திய பொது சேவை ஒளிபரப்பாகும். இது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு சொந்தமானதும் பிரசார் பாரதியின் இரண்டு பிரிவுகளில் ஒன்றுமாகும். பதிவகம் மற்றும் அலைபரப்பி உள்கட்டமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றான, இது 1956 செப்டம்பரில் நிறுவப்பட்டது. எண்ணிம ஊடகமான் இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் வழியே, பெருநகரங்கள் மற்றும் பிராந்திய இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொலைக்காட்சி, வானொலி, இணையவழி மற்றும் மொபைல் சேவைகளை வழங்குகிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தூர்தர்ஷன் தன்னுடைய 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.
ஆரம்பம்
1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தில்லியில் ஒரு சிறிய அலைபரப்பியுடனும் ஒரு தற்காலிக அரங்கத்துடனும் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கியது. 1965 ஆம் ஆண்டு அனைத்திந்திய வானொலியின் ஒரு பகுதியாக பிரதிமா பூரி படித்த ஐந்து நிமிட செய்தி தொகுப்புடன் வழக்கமான தினசரி ஒலிபரப்பும் தொடங்கியது. சல்மா சுல்தான் 1967 இல் தூர்தர்ஷனில் சேர்ந்து முதல் செய்தித் தொகுப்பாளரானார்.
கிரிஷி தர்ஷன் 26 ஜனவரி 1967 அன்று தூர்தர்ஷனில் அறிமுகமானது. இது இந்திய தொலைக்காட்சியின் மிக நீண்ட கால நிகழ்ச்சியாகும். 1972 இல் பம்பாய் (தற்போது மும்பை) மற்றும் அமிருதசரசு வரை தொலைக்காட்சி சேவை விரிவுபடுத்தப்பட்டது. 1975 வரை ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவை இருந்தது. மேலும் தூர்தர்ஷன் நாட்டின் ஒரே தொலைக்காட்சி வழங்குநராக இருந்தது.
ஏப்ரல் 1976 அன்று வானொலியிலிருந்து தொலைக்காட்சி சேவை பிரிக்கப்பட்டது. அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவை புது தில்லியில் தனி இயக்குநர்களின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டன. 1982ல் தூர்தர்ஷன் தேசிய ஒளிபரப்பு நிறுவனமாக மாறியது.
நாடளாவிய ஒளிபரப்பு
தேசிய அளவிலான ஒளிபரப்பு 1982 ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதே ஆண்டில், இந்தியச் சந்தைகளில் அறிமுகமான வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் 1982 ஆம் ஆண்டில் ஆகத்து 15 அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் விடுதலை நாள் உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தில்லியில் 1982 ஆம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. 2021 வரை இந்திய மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் ஏறத்தாழ 1400 நிலப்பரப்பு அலைபரப்பிகளின் வலையமைப்பு வழியாக தூர்தர்ஷன் (டிடி நேஷனல், DD National, தூத நேசனல், தூரதர்சன் நேசனல்) நிகழ்ச்சிகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. 46 தூர்தர்ஷன் பதிவகங்கள் நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.
2012 கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களின் நேரடி ஒளிபரப்புகள் அதன் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. மேலும் டிடி ஸ்போர்ட்ஸ் 24 மணி நேரமும் நிகழ்ச்சியினை வழங்கியது.
தொடக்க கால நாட்டு நிகழ்ச்சிகள்
80 ஆம் ஆண்டுகள் அம் லோகு (நம் மக்கள்) (1984), புனியாது (நிறுவனம்) (1986-87) மற்றும் யே சோ ஐ சிந்தகி (இவ்வாழ்க்கை உள்ளபடி) (1984) போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளோடு தூர்தர்ஷன் யுகமாக இருந்தது.
நாள்தோறுமான நிகழ்ச்சிகளான அம் லோகு, புனியாது மற்றும் நுக்கது (தெருமுனை) மற்றும் புராண (தொன்ம) நாடகங்களான இராமாயணம் (1987-88) மற்றும் மகாபாரதம் (1989-90), இந்தியாவின் முதல் மீப்பெரும் கதாநாயகனான சக்திமான் ஆகியவையும் பின்னாளில் ஒளிபரப்பப்பட்ட பாரத் ஏக் கோச் (பாரதத்தை கண்டுபிடித்தல்), தி சுவார்ட் ஆஃப் திப்பு சுல்த்தான் (திப்பு சுல்த்தானின் வாள்) மற்றும் தி கிரேட் மராட்டா (பேராளர் மராட்டர்)ஆகியவை ஆயிரக்கணக்கானோரை தூர்தர்ஷனை நோக்கி இழுத்தன.
இந்தி திரைப்படப் பாடல்களின் அடிப்படையில் அமைந்த நிகழ்ச்சிகளான சித்ரகார், ரங்கோலி, ஏக் சே பத்கார் ஏக் மற்றும் சூப்பர்ஃகிட் முகாப்லா.
குற்ற திகில் தொடர்களான கரம்சந்த் (பங்கஜ் கபூர் நடித்தது), பாரிஸ்டர் ராய் (கன்வால்ஜித் நடித்தது), பியோம்கேஷ் பக்ஷி (ரஜித் கபூர் நடித்தது), ரிப்போர்டர் (ஷேகர் சுமன் நடித்தது), தேகிகாத் மற்றும் ஜான்கி ஜஸூஸ், சுராக் (சுதேஷ் பெர்ரி நடித்தது).
பேரி டேல் தியேட்டர், டாடா டாடி கி கஹனியன், விக்ரம் பெடால், சிக்மா, ஸ்டோன் பாய், மால்குடி டேஸ், தெனாலி ராமா, போட்லி பாபா கி (பொம்மலாட்ட நிகழ்ச்சி), ஹி-மேன், சூப்பர்ஹ்யூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட், நைட் ரைடர், ஸ்ட்ரீட் ஹாக் மற்றும் திகில் தொடரான கிலே கா ரகஸ்யா (1989) ஆகியவை குழந்தைகளை இலக்காகக் கொண்டிருந்தன.
ஓஷின் ஒரு ஜப்பானிய நாடகத் தொடர், திரிஷ்னா, மிஸ்டர். யோகி, நீம் கா பேட், சர்கஸ், ஃபாஜி (ஷாருக் கான் அறிமுகமானது),ராணி லட்சுமி பாய், தாஸ்தன்-இ-ஹதிம் தய், அலிஃப் லைலா, குல் குல்ஷன் குல்ஃபாம், உதான், ரஜனி, தலாஷ், பிர் ஓஹி தலாஷ், கதா சாகர், நுபுர், மிர்ஸா காலிப், வாலே கி துனியா, புலாவந்தி, சங்கார்ஷ், லைஃப்லைன், காஷிஷ் (மால்விகா திவாரி அறிமுகமானது), ஸ்ரீமன் ஸ்ரீமதி, து து மெய்ன் மெய்ன், ஜுனூன், அஜ்னபி (டேனி தென்சோக்பா நடித்தது), சபான் சம்பால் கே, தேக் பாய் தேக், சன்சார், ஸ்வாபிமான், சாணக்யா, ஷாந்தி (மந்திரா பேடி அறிமுகமானது), சீ ஹாக்ஸ் (ஆர். மாதவன் நடித்தது), சுரபி, டானா பானா, முஜ்ரிம் ஹஸிர் (நவ்னி பரிஹார் அறிமுகமானது), ஜஸ்பால் பட்டிஸ் ஃபிளாப் ஷோ, அலிஃப் லைலா, மேரே அவாஸ் சுனோ, கேப்டன் வியோன், மற்றும் சந்த்ரகாந்தா ஆகியவை பிற நிகழ்ச்சிகளாகும்.
தூர்தர்ஷன் "ஃபன் டைம்" என்று பெயரிட்ட நிகழ்ச்சியில் கோடைகால விடுமுறைகளின்போது ஆங்கில சித்திரக்கதைப் படங்களுடன் ஸ்பைடர் மேன், ஜியண்ட் ரோபாட் (ஜானி சோகோவும் அவருடைய பறக்கும் இயந்திர மனிதனும்), கயாப் அயா, கூச்சே, ஹி-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவர்ஸ், ஜங்கிள் புக் ஷோனன் மோக்லி (ஜப்பானிய உயிர்ச்சித்திர படத்தின் ஹிந்தி பதிப்பு விஷால் பரத்வாஜ் இசையமைத்தது), தலாஸ்பின் & டக் டேல்ஸ் ஆகியவற்றோடு சித்திரக்கதை நாடகங்களான சார்லி சாப்ளின், லாரல் & ஹார்டி மற்றும் டிதிஸ் காமெடி ஷோ போன்றவற்றையும் ஒளிபரப்பியது.
அலைவரிசை
தற்போது தூர்தர்ஷன் 21 அலைவரிசைகளை இயக்கிவருகிறது - இரண்டு அனைத்திந்திய அலைவரிசைகள் - டிடி நேஷனல், தூத நேசனல் மற்றும் டிடி நியூஸ் (தூத செய்தி), 11 மண்டல மொழி செயற்கைத் துணைக்கோள் அலைவரிசைகள் (ஆர்எல்எசுசி), நான்கு மாநில வலையமைப்புகள் (எசுஎன்), ஒரு பன்னாட்டு அலைவரிசை, ஒரு விளையாட்டு அலைவரிசை (டிடி ஸ்போர்ட்ஸ், தூத விளையாட்டுகள்) மற்றும் நாடாளுமன்ற நடப்புகளை நேரடியாக ஒளிபரப்ப இரண்டு அலைவரிசைகள் (டிடி-ஆர்எசு & டிடி-எல்எசு) உள்ளன.
தூத நேசனல் அலைவரிசையில் (டிடி-1) மண்டல நிகழ்ச்சிகளும் உள்ளூர் நிகழ்ச்சிகளும் நேரப் பகிர்வு முறையில் ஒளிபரப்பப்படுகின்றன. தூத-மெட்ரோ அலைவரிசைக்கு பதிலாக 2003 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தூத-செய்தி அலைவரிசை 24 மணிநேரமும் செய்திச் சேவைகளை வழங்குகிறது. மண்டல மொழிகள் செயற்கைத் துணைக்கோள் அலைவரிசைகள் இரண்டு பாகங்களைக் கொண்டிருக்கின்றன - குறிப்பிட்ட மாநிலத்திற்கான மண்டல சேவை அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து நிலம்சார் அலைபரப்பிகள் வழியாகவும் ஒளிபரப்பப்படுகின்றன என்பதுடன் முதன்மை நேரம் மற்றும் முதன்மையற்ற நேரங்களில் மண்டல மொழியிலான கூடுதல் நிகழ்ச்சிகள் யாவும் கம்பிவழி இயக்குநர்கள் மூலமாகவே கிடைக்கின்றன. தூத-விளையாட்டுகள் அலைவரிசை, நாடளாவிய மற்றும் பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. வருவாய்களை ஈட்டித்தராது என்று தனியார் அலைவரிசைகள் முயலாத கோ-கோ மற்றும் கபடி போன்ற நாட்டுப்புற விளையாட்டுக்களை ஒளிபரப்புகின்ற ஒரே விளையாட்டு அலைவரிசை இதுவேயாகும்.
செயல்படுநிலையில் தூர்தர்சன்
வழக்கமான அலைவரிசைகளான டாட்டா ஸ்கையில் கிடைக்காத தூர்தர்ஷனின் நான்கு தொலைக்காட்சி அலைவரிசைகளைக் காட்ட இது டாட்டா ஸ்கையின் ஒருங்கிணைந்த சேவையாக இருக்கிறது. செயல்படுநிலை தூர்தர்ஷன் அலைவரிசைகள் டிடி காஷிர், டிடி பொதிகை, டிடி பஞ்சாபி மற்றும் டிடி குசராத்தி ஆகியவையாகும்.
டிடி டைரக்ட் பிளஸ் எனப்படும் டிடிஎச் சேவையை டிடி வைத்திருக்கிறது. இது இலவசமானதாகும்.
பன்னாட்டு ஒளிபரப்பு
டிடி-இந்தியா செயற்கைத் துணைக்கோள் வழியாக பன்னாட்டு அளவில் ஒளிபரப்பப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் 146 நாடுகளில் கிடைக்கிறது என்றாலும் இந்த அலைவரிசையைப் பெறுவதற்கான தகவல் எளிதாகக் கிடைப்பதில்லை. இங்கிலாந்தில் அலைவரிசை 833 இல் உள்ள ஸ்கை சிஸ்டமில் யூரோபேர்ட் செயற்கைக்கோள் வழியாகக் கிடைக்கிறது (அதன் இலச்சினை ரயாட் டிவி என்று காட்டப்படும்). டிடி-இந்தியாவின் பன்னாட்டின் ஒளிபரப்பின் நேரமும் நிகழ்ச்சிகளும் இந்தியாவிலிருந்து மாறுபடுகின்றன. ஸ்கை டிஜிட்டல் யு.கே. ஒளிபரப்பு 2008 ஆம் ஆண்டு ஜூனில் நிறுத்தப்பட்டது, அத்துடன் டைரக்ட் டிவி யு.எஸ். ஜுலை 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
விமர்சனங்கள்
ஒருபக்கச்சாய்வுக் கண்ணோட்டங்கள்
பிபிசியைப் போன்று தூர்தர்ஷன் தனிப்பட்ட ஆசிரியர் குழுவைப் பெற்றிருக்கவில்லை. இதனுடைய தாய் நிறுவனமான பிரசார் பாரதி இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்ற, தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வழியாக செயல்படுகின்ற உறுப்பினர்களையே கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடு “பிரச்சாரம் மற்றும் பொதுமக்கள் தொடர்பிற்கென்று” ஒதுக்கப்படுகின்ற வரவுசெலவு திட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது.
அரசாங்க அவசரநிலை பிரச்சாரத்தின்போது இது சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
அவசரநிலை காலகட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஒளிபரப்புவதை இது 2004 ஆம் ஆண்டில் தணிக்கை செய்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு குறித்த பாகிஸ்தான் பிரச்சாரத்திற்கு பதிலடியாக இந்திய அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கென்று காஷ்மீரில் தூர்தர்ஷன் காஷிர் அலைவரிசையைத் தொடங்கியது. டிடி காஷிர் ஷர்காத் கே தோ ருக் (எல்லையின் இரண்டு முகங்கள்), பாகிஸ்தான் ரிப்போர்டர், பிடிவி சாச் கியா ஹை (பிடிவி ! உண்மை என்ன).
இது அனைத்திந்திய வானொலியுடன் கொண்டிருக்கும் தொடர்பால் பாகித்தானின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா-பாகித்தான் எல்லையில் அதிக சக்திவாய்ந்த அனுப்பும் கருவிகளை நிறுவியுள்ளது.
புளூஸ்டார் படைத்துறை நடவடிக்கையின்போது அந்த நிகழ்வுகளைத் தெரியப்படுத்துவதற்கு அரசு மூலாதாரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவ்விடத்தில் தூர்தர்ஷன் தனிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தவறானது என்று கண்டுபிடித்த வன்முறை நிகழ்வுகள் குறித்த ஒளிப்பட பதிவுகளை தயாரிக்க சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது.
வணிக நோக்கில் நிலைப்புத்திறன்
1991 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் அனுமதிக்கப்பட்டவுடன் வீட்டில் கம்பி மற்றும் செயற்கைத் துணைக்கோள் தொலைக்காட்சி வழியாக பார்க்கும் பார்வையாளர்களை தூர்தர்ஷன் இழந்தது. 2002 ஆம் ஆண்டில் டிடி நேஷனல் அலைவரியைப் பார்ப்பவர்கள் 2.38 விழுக்காட்டினராகவே இருந்தனர்.
துடுப்பாட்ட விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை உள்ளிட்ட நாடளாவிய நிகழ்வுகளுக்கான அதிக அளவு ஏலதாரராக கட்டாயமான முறையில் இதற்கு வழங்கப்படுவதால் இது குறிப்பிடத் தகுந்த வருவாயைப் பெறும் சமயத்தில், பிபிசியைப் போன்ற இந்தியாவில் தொலைக்காட்சியை சொந்தமாகப் பெற்றிருப்பதற்கான உரிமத்தை அளிக்க இதற்கு நிதி வழங்குவதற்கான முன்மொழிவும் இருக்கிறது. இருப்பினும் இது சராசரி இந்தியனின் நிதிசார்ந்த கட்டுப்பாடுகள் என்ற கண்ணோட்டத்தில் விதிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை.
தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்
இந்தியாவில் தரைவழி ஒளிபரப்பில் தூர்தர்சன் மட்டும் ஒளிபரப்பி வந்தது. பிற நிறுவனங்கள் இச்சேவையில் இல்லை. தாராள மயமாக்களுக்குப் பிறகு இந்தியாவில் கம்பி வட தொலைக்காட்சி மற்றும் டிடிஎச் வசதி பெருகியது. தரைவழி ஒளிபரப்பில் தூர்தர்சன் மட்டுமே ஒளிபரப்பப்படுவதால் அதை மக்கள் பயன்படுத்துவது அரிதாகியது. இதனால் நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ் மீட்டர் தொழில் நுட்பத்தை எண்ணியல் தொழிங் நுட்பத்துக்கு (டி.டி.எச்) மாற்ற பிரச்சார் பாரதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள 412 தூர்தரசன் தரைவழி ஒளிபரப்பு நிலையங்களின் சேவையை படிப்படியாக மூட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் திருநெல்வேலி, உதகமண்டலம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள தரைவழி ஒளிபரப்பு நிலையங்களின் ஒளிபரப்பு 2021 அக்டோபர் 31 முதல் நிறுத்தப்பட்டன. இராமேசுவம், திருச்செந்தூர் தொலைக்காட்சி ஒளிபரப்பானது 2021 திசம்பர் 31 முதல் நிறுப்பட்டடுவதாகவும், நெய்வேலி, ஏற்காடு ஆகியவை 2022 மார்ச் 31 அன்று நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் பாருங்கள்
பொதிகை தொலைக்காட்சி
அனைத்திந்திய வானொலி
டிடி டைரக்ட்+
Doordarshan Official Internet site பரணிடப்பட்டது 2013-07-26 at the வந்தவழி இயந்திரம்
An article at PFC பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம்
DD News on Facebookகாசிநாயக்கன்பட்டி ஊராட்சி (Kasinaickanpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கண்டிலி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4204 ஆகும். இவர்களில் பெண்கள் 2024 பேரும் ஆண்கள் 2180 பேரும் உள்ளனர்.
முருகப்பன் நகர்
வெங்கடேசபுரம்
காசிநாயக்கன்பட்டி
அம்மன்நகர்
வக்கீல் அய்யர் தோப்பு
வெங்காயப்பள்ளியான் வட்டம்
அண்ணாமலை வட்டம்