text
stringlengths
3
79k
சிட்டகாங் மாவட்ட இணையதளம்கார்ஜியஸ் (Gorgias, கிரேக்கம்: Γοργίας ; கிமு 483-375) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க சோபிஸ்டு ஆவார். இவர் சாக்ரடீசுக்கு முந்தைய மெய்யியலாளர் மற்றும் சொல்லாட்சிக் கலைஞர் ஆவார். இவர் சிசிலியில் உள்ள லியோன்டினோயை பூர்வீகமாகக் கொண்டவர். புரோட்டோகோராசுடன் சேர்ந்து சோபிஸ்டுகளின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவராக இவர் உள்ளார். பல டாக்ஸோகிராஃபர்கள் இவர் எம்ப்பிடோக்ளீசின் மாணவர் என்று தெரிவிக்கின்றனர். "மற்ற சோபிஸ்டுகளைப் போலவே, இவர் பல்வேறு நகரங்களில் பயணித்து பனிபுரிந்து, ஒலிம்பியா மற்றும் டெல்பியின் மையங்களில் தனது திறமையைக் காட்டும் பொது நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும் இவரது நிகழ்ச்சிகளுக்கு வரும் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்தார். பார்வையாளர்களிடமிருந்து எழுப்பப்படும் பலதரப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதில்களை அளிப்பது இவரது நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சமாகும்." இவர் "மறுப்புவாதி கர்ஜியஸ்" என்று அழைக்கப்படுகிறார், இருப்பினும் இந்த அடைமொழி அவரது தத்துவத்தை போதுமான அளவில் விவரிக்கிறதா என்பது சர்ச்சைக்குரியது.
இவரது முக்கிய அங்கீகாரமாக தனது சொல்லாட்சி திறைமை மூலமாக தனது சொந்த பகுதியான சிசிலியிலிருந்து அட்டிகாவிற்கு இடம்பெயர்ந்தார். மேலும் இலக்கிய உரைநடை மொழியாக அட்டிக் பேச்சுவழக்கு பரவுவதற்கு பங்காற்றினார்.
கார்ஜியஸ் கிமு 483 இல் ஏதென்சுடன் இணைந்த கிழக்கு சிசிலியில் உள்ள கால்சிடியன் குடியேற்றமான லியோன்டினோய் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சார்மண்டைட்ஸ். இவருக்கு ஹெரோடிகஸ் என்ற ஒரு சகோதரர் இருந்தார், அவர் ஒரு மருத்துவர், சில சமயங்களில் இவரது பயணங்களின் போது இவருடன் இருந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இருந்தார், அவருடைய பெயர் தெரியவில்லை, ஆனால் அவரது பேரன் தெல்பியில் உள்ள தனது பெரிய மாமாவுக்கு தங்கத்தாலான சிலையை செய்தார். கார்ஜியசுக்கு திருமணம் ஆனதா, குழந்தைகளைப் பெற்றாரா என்பது தெரியவில்லை. கார்ஜியஸ் சிசிலியன் மெய்யியலாளர் எம்ப்பிடோகிளீசிடம் பயின்றதாகக் கூறப்படுகிறது ( அண். கிமு 490 - அண். 430 ), ஆனால் எப்போது, எங்கே, எவ்வளவு காலம் என்று தெரியவில்லை. இவர் சொல்லாட்சிக் கலைஞர்களான கோராக்ஸ் ஆஃப் சைராக்ஸ் மற்றும் டிசியாஸ் ஆகியோரிடமும் பயின்றிருக்கலாம். ஆனால் இந்த இருவரைப் பற்றியும் மிகக் குறைவாகவே அறியப்படுகிறது அல்லது கார்ஜியசுடனான அவர்களின் உறவு பற்றி எதுவும் அறியப்படவில்லை.
இவரது சொந்த ஊரான லியோன்டினோய் அரசியலில் கார்ஜியஸ் எந்த வகையான பாத்திரத்தை வகித்திருப்பார் என்பது தெரியவில்லை, ஆனால், கிமு 427 இல், இவருக்கு அறுபது வயதாக இருந்தபோது சிராகூசன்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஏதெனியன் பாதுகாப்பைக் கேட்க இவர் தனது சகவரால் ஏதென்சுக்கு தூதுக்குழு தலைவராக அனுப்பப்பட்டார் என்பது அறியப்படுகிறது. கிமு 427க்குப் பிறகு, ஏதென்ஸ் மற்றும் லாரிசா உட்பட பல நகர அரசுகளில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த கோர்கியாஸ் கிரேக்கத்தின் நிலப்பரப்பில் குடியேறியதாகத் தெரிகிறது. இவர் பன்ஹெல்லெனிக் திருவிழாக்களில் சொற்பொழிவுகளை ஆற்றியதற்காக நன்கு அறியப்பட்டவர் மற்றும் ஒலிம்பியாவில் "வெளிப்படையானவர்" என்று விவரிக்கப்படுகிறார். திருவிழாக்களை ஒழுங்கமைப்பதில் இவர் வகித்த பங்கு குறித்து எந்த பதிவுவும் எஞ்சி இல்லை.
கார்ஜியசின் முதன்மையான தொழில் சொல்லாட்சிக் கலையின் ஆசிரியராக இருந்தது. அரிசுடாட்டிலின் கூற்றுப்படி, இவரது மாணவர்களில் ஐசோக்ரேட்ஸ் போன்றவர் அடங்குவர். (பிற மாணவர்களாக பிற்கால குறிப்புகளில் பெரிக்கிளீசு, போலஸ் அல்சிடமாஸ் ஆகியோரை சுடா குறிப்பிடுகிறார், ஆண்டிஸ்தீனசை டியோஜெனெஸ் லார்டியஸ் குறிப்பிடுகிறார் . ) மேலும் இவரது மாணவர்களாக குறிப்பிடப்படாவிட்டாலும் என்றாலும், கோர்கியாஸ் வரலாற்றாசிரியர் துசிடிடிஸ், துன்பிய நாடக ஆசிரியர் அகத்தான், மருத்துவர் இப்போகிரட்டீசு, சொல்லாட்சிக் கலைஞர் அல்சிடமாஸ், கவிஞரும் வர்ணனையாளருமான லைகோஃப்ரான் ஆகியோரின் பாணிகளில் இவர் தாக்கம் செலுத்தியதாக பரவலாக கருதப்படுகிறது.
கார்ஜியஸ் நூற்றி எட்டு வயது வரை வாழ்ந்ததாகப் புகழ் பெற்றவர். எந்தவொரு விசயம் குறித்தும் பேசும் திறனுக்காக இவர் பாராட்டப் பெற்றார். ஒரு பொதுக் கோவிலில் தங்க சிலை ஒன்றை அமைக்க போதுமான அளவு பெரும் செல்வத்தை ஈட்டினார். சாதுரியமாக பேசுவதில் வல்லவரான இவர் கிரேக்கர்களுக்குள் சண்டை கூடாது என்பதை வலியுறுத்தி கிமு 408 ஆம் ஆண்டு ஒலிம்பிய விழாவில் நீண்டதொரு சொற்பொழிவை ஆற்றினார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவரின் சொற்பொழிவில் மயங்கினர். இவரது பேச்சு வசனக் கவிதை போல இருக்கும். இவரது பைத்தியன் சொற்பொழிவுக்குப் பிறகு, கிரேக்கர்கள் தெல்பியில் உள்ள அப்பல்லோ கோவிலில் இவருக்கு திடமான ஒரு தங்க சிலையை நிறுவினர். இவர் தெசலியில் உள்ள லாரிசாவில் இறந்தார்.
குறிப்புகள் சுஊனுல் இஸ்லாம் இலங்கை கொழும்பிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
பொருள்
"சுஊனுல் இஸ்லாம்" என்றால் "இஸ்லாமியச் செய்திகள்" என்று பொருள்படும்
உள்ளடக்கம்
இது இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஒரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை இது அதிகளவில் வெளிப்படுத்த முயற்சி செய்திருந்தது.
ஆதாரம்
இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்இடையாத்தாங்குடி வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், இடையாத்தாங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவிபூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள் கிழுமத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.
இக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள் ஆக்ரோஷ் (Aakrosh) என்பது 1980 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழியில் வெளியான சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகத் திரைப்படமாகும். இயக்குநர் கோவிந்த் நிஹலானியின் அறிமுகத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது விஜய் டெண்டுல்கரால் எழுதப்பட்டது. நசிருதீன் ஷா, ஓம் பூரி மற்றும் அம்ரிஷ் பூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பரவலான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 8வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க மயில் (சிறந்த திரைப்படம்) விருது மற்றும் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் பல கௌரவங்களைப் பெற்றது.
அர்த் சத்யா மற்றும் தாமஸ் போன்ற பிற முக்கிய மாற்றுத் திரைப்படங்களில் வெளிப்படுத்தப்பட்ட விதத்தில் மனித கோபத்தின் இருண்ட மற்றும் பயமுறுத்தும் உண்மையான சித்தரிப்புகளுக்காக நிஹலானி நன்கு அறியப்பட்டார். ஆறு பதின்ம ஆண்டுகளாக இந்தியத் திரைப்படத் துறையை வடிவமைத்த 60 படங்களில் ஆக்ரோஷ் பட்டியலிடப்பட்டுள்ளது.
கதைக்களம்
நில உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகளின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் அன்றாடக் கூலியாகப் பணிபுரியும் ஒரு விவசாயியைப் பின்தொடர்கிறது கதை. கதை நாயகனான விவசாயியின் மனைவி (ஸ்மிதா பாட்டீல்), முதலாள் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். பின்னர், அவர் செய்யாத குற்றத்திற்காக அவரைக் கைது செய்யப்படுகிறார். அவமானம் தாங்காமல் கூலி விவசாயியின் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார்.
விவசாயியின் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக காவல்துறை அவரை வழிக்காவலுடன் இறுதிச் சடங்கிற்கு அழைத்துச் செல்கிறது. அவர் எரியும் இறுதிச் சடங்கின் அருகே நின்று கொண்டிருக்கும்போது, முதலாள் தனது இளம்வயதுடைய சகோதரியின் மீது காமப் பார்வையை வீசுவதை அவர் கவனிக்கிறார். ஒரு நிரந்தரமான பலியாக அவளது தவிர்க்க முடியாத விதியை நொந்துகொண்டு, அவன் ஒரு கோடரியைப் பிடித்து, தானும் தனது மனைவியும் துன்பப்பட்டதைப் போன்று தன் தங்கையும் துன்பப்படக்கூடாது என்று தன் சகோதரியின் தலையை வெட்டுகிறான். இந்த அவநம்பிக்கையான மற்றும் சோகமான செயலுக்குப் பிறகு, உரிமைகள் மறுக்கப்பட்ட மனிதன் மீண்டும் மீண்டும் வானத்தை நோக்கி அலறுகிறான்.
மையக்கருத்து மற்றும் தாக்கங்கள்
உள்ளூர் செய்தித்தாளின் பக்கம் 7-ல் வெளியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படும் இந்தப் படம், நீதித்துறையில் உள்ள ஊழல் மற்றும் திறன் வாய்ந்தவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களால் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவது பற்றிய கடுமையான நையாண்டியாக இத்திரைப்படம் இருந்தது.
பிரபல நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கரால் வன்முறை பற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஷியாம் பெனகலின் நிஷாந்த் (1974) கோவிந்த் நிஹலானியின் இத்திரைப்படம் மற்றும் இதே கூட்டணியின் அர்த் சத்யா (1983) ஆகியவை ஒரு வெற்றித் தொடராக அமைந்தன.
இங்கே பாதிக்கப்பட்டவர், அதீத அடக்குமுறை மற்றும் மனிதாபிமானத்தை மீறுவதால் மிகவும் அதிர்ச்சியடைந்தவராகக் காட்டப்படுகிறார். கிட்டத்தட்ட படத்தின் நீளத்தில் அவர் ஒரு வார்த்தை கூட பேசுவதாகக் காட்டப்படவில்லை. மேலும், அவர் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்துடன் காட்டப்பட்டுள்ளார். இருப்பினும், பின்னர் அவர் தனது சொந்த ஆத்திரத்தை வெளிப்படுத்த அதே வன்முறையை ஒரு கருவியாக வெளிப்படுத்துகிறார்.
படத்தின் முடிவில், பாதிக்கப்பட்டவரின் குரலை நாம் இரண்டாவது முறையாகக் கேட்கிறோம். (முதலாவது நினைவுமீட்சிக் காட்சியில், அவர் தனது மனைவியைக் காப்பாற்ற செய்த முயற்சிக்கிகள் வீணாகிய போது)
வழக்கறிஞர்பாஸ்கர் குல்கர்னியாக நசிருதீன் ஷா,
லஹன்ய பிகுவாக ஓம் பூரி
நாகி பிகுவாக சுமிதா பாட்டீல்
அம்ரிஷ் பூரி, துசானே, அரசு வழக்கறிஞர்
போன்ஸ்லே, ஜில்லா பரிஷத் தலைவராக மோகன் ஆகாஷே
மகேஷ் எல்குஞ்ச்வார் சமூக சேவகர்
பிகுவின் தந்தையாக நானா பால்சிகர்
வன ஒப்பந்ததாரர் மோராக அச்யுத் போட்தார்,
ரஃபியனாக தீபக் ஷிர்கே
பிகுவின் சகோதரியாக பாக்யஸ்ரீ கோட்னிஸ்
லாவ்னி நடனக் கலைஞராக ரீமா லகூ
டாக்டர் வசந்த் எம். பாட்டீலாக அரவிந்த் தேஷ்பாண்டே
மேற்கோள்கள் லலிதா சிவகுமார் (Lalitha Sivakumar) என்பவர் ஒரு முதன்மையான கர்நாடக இசை ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் தனது மாமியார் மற்றும் பிரபல கர்நாடக இசைப் பாடகர், மறைந்த டி. கே. பட்டம்மாள், இசை நிகழ்ச்சிகளில் வாய்ப்பாட்டுக் கலைஞராக இவர் அறியப்படுகிறார். லலிதா சிவகுமார் இந்திய இசையில் ஒரு முக்கிய பாடகரான டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் தாய் மற்றும் குரு என்றும் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் டி. கே. பி கர்நாடக இசை பள்ளியின் மிகவும் பிரபலமான மூத்த குரு (ஆசிரியர்) ஆவார்.
லலிதா சிவகுமாரின் தந்தை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் ஆவார். அவர் கர்நாடக இசை துறையில் மூத்த மிகவும் புகழ்பெற்ற மிருதங்க வித்வான் ஆவார். மேலும் சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூசண் விருதுகளை பெற்ற முதல் மிருதங்க வித்தானும் ஆவார். லலிதா சிவகுமார் தன் 18 வயதில் டி. கே. பட்டம்மாளின் மகன் ஐ. சிவகுமாரை மணந்தார். திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்து, டி. கே. பட்டம்மளிடமிருந்து கர்நாடக இசையில் பயிற்சி பெற்றத் துவங்கினார்.
அதன்பிறகு, விரைவில் ஒரு தனிப் பாடகராகவும், டி. கே. பட்டம்மளுடன் சேர்ந்து பாடுபவராகவும் மிளிர்ந்தார். மேலும் டி. கே. ஜெயராமன், கே. வி. நாராயணசாமி, எம். எஸ். சுப்புலட்சுமி உள்ளிட்ட பல முன்னணி கர்நாடக இசைப் பாடகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். இருப்பினும், ஒரு தனிப் பாடகராக இவர் குறைந்த காலமே பாடியுள்ளார். பெரும்பாலும் தன் இவரது குருவுடன் சேர்ந்தே குரல் கொடுத்துள்ளார்.
லலிதா சிவகுமார் பல்வேறு இந்திய மொழிகளில் பல கிருதிகள், தில்லான்கள் மற்றும் பஜனைகளைகளுக்கு இசை அமைத்துள்ளார்.
பல அமைப்புகள் திருமதி. லலிதா சிவகுமாரின் திறமை மற்றும் கர்நாடக இசை உலகிற்கு அளித்த பங்களிப்புகளை அங்கீகரித்துள்ளன. சமீபத்தில், இந்த இசை மரபு தொடர்ச்சியை அங்கீகரிப்பததா, மெட்ராஸ் சவுத் லயன்ஸ் நற்பணி மன்றம் & ரச - ஏ. ஆர். பி. ஐ. டி. ஏ - இந்திய நாடகக் கலைகளின் ஆராய்ச்சி மற்றும் செயல்திறனுக்கான அகாடமியானது 2016 சனவரி 4 அன்று லலிதா மற்றும் ஐ. சிவகுமார் ஆகிய இருவருக்கும், 'இசை ரச மாமணி' என்ற பட்டத்தை வழங்கியது.
லலிதா சிவகுமாரின் ஆசிரியர் வாழ்க்கையானது பெரும் வெற்றியாகும். லலிதா சிவகுமார் தலைமையில் செயல்படுவது டி. கே. பி கர்நாடக இசை பள்ளி ஆகும். ஒப்பீட்டளவில், இந்த பள்ளியானது உலகம் முழுவதும் இருந்தும் மாணவர்களைப் பரவலாக கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் நடிப்புக் கலைஞர்களாக மாறியதாகக் கூறப்படுகிறது. இவரிடமிருந்து இசை கற்ற மாணவர்கள் உலகின் பல பகுதிகளில் நல்ல ஆசிரியர்களாக பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்தத் துறையில் ஒரு மூத்த ஆசிரியராகக் கருதப்படும் இவர், டி.கே.பியின் இசை மரபுகளை உலகளவில் பல மாணவர்கள் வழியாக அனுப்பி வருகிறார். இவரது கற்பித்தல் முறை தனித்துவமானது என்று கூறப்படுகிறது. பல புகழ்பெற்ற அறிஞர்களால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட கர்நாடக இசையின் மரபுகளை கடைபிடிப்பதை இவர் வலியுறுத்துகிறார், மொழிக்கு இவர் முக்கியத்துவம் அளிக்கிறார், கலைஞர்களின் உச்சரிப்பு மற்றும் நிகழ்த்துகை திறன்களுக்காக நன்கு அறியப்படுகிறார்.
இவர் மாணவர்களுக்கு நேரடியாகவும், இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மாணவர்களுக்கும் மேம்பட்ட கர்நாடக வாய்பாட்டு பயிற்சி அளித்துள்ளார். லலிதா சிவகுமாரின் சீடர்களாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் மட்டுமல்லாமல், லலிதா லாவண்ய சுந்தரராமன் (இவரது பேத்தி), டாக்டர் நிரஞ்சனா சீனிவாசன், பல்லவி பிரசன்னா, நளினி கிருஷ்ணன், மகாராஜபுரம் சீனிவாசன், டாக்டர் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.
இவரது இசை அறிவுக்கு சான்றாக, இந்தியாவில் ஆண்டு முழுவதும் நடைபெறும் பல கர்நாடக இசை போட்டிகள் மற்றும் பக்தி இசை போட்டிகளுக்கு லலிதா சிவகுமார் நடுவராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள் தண்டலை ஊராட்சி (Thandalai Gram Panchayat), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5310 ஆகும். இவர்களில் பெண்கள் 2581 பேரும் ஆண்கள் 2729 பேரும் உள்ளனர்.
மங்கலம்
மருக்காலங்குறிச்சி
வடவீக்கம்
தண்டலை
வடவீக்கம் ஏ.டி. காலனி
சான்றுகள் சிவஞானப்பிரகாச வெண்பா என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான வள்ளல் என்பவரால் எழுதப்பட்டது.
சிவஞான வள்ளல் எழுதிய 20 நூல்களில் இது ஒன்று.
இது ஆகமச் செய்திகளைக் கூறும் நூல்.
இந்நூல் அப்பர், மெய்கண்டார், அருள்நந்தி, உமாபதி, கண்ணுடைய வள்ளல், காரைக்கால் அம்மை, நக்கீரர், திருமூலர், சம்பந்தர் ஆகியோரைக் குறிப்பிட்டு அஅவர்களின் அரிய செயலைப் போற்றுகிறது.
திருக்குறளை வியந்து போற்றுகிறது.
இதன் பாடல் (எடுத்துக்காட்டு)
சைவம் வேறு, சிவம் வேறு அன்று. இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடங்கியுள்ள அத்துவிதம் என்று இந்தப் பாடல் கூறுகிறது.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005பேட்டன் (Patton) 1970 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படம். பிராங்க் மக்கார்த்தியால் தயாரிக்கப்பட்டு பிராங்க்ளின் ஜே. சாப்பரால் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பேட்டான்
அழுகிய தக்காளிகளில் பேட்டான்
Opening Speech from the Movie in Text, Audio and Video from AmericanRhetoric.comதுருக் ட்ஸெந்தென ("விரித்திரநாக (டிராகன்) இராச்சியம்") என்று தொடங்கும் பாடல் பூட்டான் நாட்டின் நாட்டுப்பண் ஆகும்.
இது 1953இல் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டது. "அகு டொங்மி" இசை அமைத்த இப்பாடலை எழுதியவர் தஷொ கியால்டுன் தின்லி. இந்தியாவில் கல்விபெற்ற டொங்மி, ராணுவ பிராஸ் பாண்டின் தலைவரானார். அப்போது இந்தியப் பிரதமரான நேருவின் வருகையை ஒட்டி நாட்டுப்பண் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டது. டொங்மியின் முதல் இசை பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நாட்டுப்பண்களுடன், த்ரி னியம்ப மெட் பா பெமாய் த்ரி (தமிழில்: மாறாத தாமரை சிம்மாசனம்) பூட்டானிய கிராமிய இசையயும் அடியொற்றி அமைந்திருந்தது. டொங்மிக்குப் பின் இசைக் குழுத் தலைவர்களாகப் பதவி ஏற்றவர்கள் இரண்டு முறை இப் பாடலின் இசையில் மாற்றம் செய்தனர்.
தொடக்கத்தில் இந் நாட்டுப்பண் 12 வரிகளைக் கொண்டிருந்தது. ஆனால் 1964 இல் அரசரின் செயலாளர் நாட்டுப்பண்ணைத் தற்பொழுது பயன்படும் 6 வரிகளைக் கொண்ட பாடலாக மாற்றினார்.
கிராமிய இசையைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்பாடலுக்கு நடன வடிவம் ஒன்றும் உண்டு. டொங்மியே இதனையும் இயக்கினார்.
ஜொங்கா
பூட்டானிய வரிகளின் ஒலிபெயர்ப்பு
த்ருக் ட்ஸெண்டென் கொய்பி க்யெல்காப் னா
பெல் லூக் னிக் டெண்ஸி சொங்வாய் க்யொன்
த்ருக் ஙாதக் கியெல்பொ ரின்பொக்
கு ஜ்ர்மெ டென்சிங் சம் ட்ஸிட் பெல்
சொ சாங்யெ டென்பா டார்ஷிங்க் கியெல்
பாங் டெக்யெட் ன்யிமா ஷார் வர் ஷொ.
தமிழ்
சைபிரசு மரங்கள் சூழ்ந்த டிராகன் சாம்ராச்சியத்தில்,
துறவிமாடங்களும், பாரம்பரியங்களும் கொண்ட புண்ணியபூமியில்,
டிராகன் பேரரசரின், செங்கோலாட்சியில்,
அவரின் நல்ஆசியாலும், வளமான ஆட்சியாலும்,
அறிவொளி செழித்து தழைத்தோங்கி,
மக்கள் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டு கதிரவனாக பிரகாசிக்கட்டும்மார்டன் எவர்ட் ரெய்னூட் செரார்ட் நிக்கோலாசு சான்சன் (Maarten Evert Reinoud Gerard Nicolaas Jansen) இடச்சு கல்வியாளர் மற்றும் இடைஅமெரிக்கன் தொல்லியல் மற்றும் வரலாற்று பேராசிரியர் ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியன்று சீசுட்டில் பிறந்தார். 2007 ஆம் ஆண்டு நிலவரப்படி, சான்சன் நெதர்லாந்து நாட்டின் லைடன் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் பீடத்தின் டீன் பதவியை வகித்தார். சான்சன்,கொலம்பியனுக்கு முந்தைய மெசோ அமெரிக்கன் ஆய்வுகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நபராக உள்ளார். மத்திய-தெற்கு மெக்சிக்கோவின் ஓக்சாகன் பகுதியிலிருந்து மிக்சுடெக் நாகரிகத்தின் கலாச்சாரம், வரலாறு மற்றும் கையெழுத்துப் பிரதிகள் தொடர்பான நிபுணத்துவத்தின் குறிப்பிட்ட துறைகளில் இவர் பங்களித்துள்ளார் .
லைடன் பல்கலைக்கழகத்தில் சான்சனின் ஆசிரியப் பக்கம்எர்சில் மலை (Mount Herzl, எபிரேயம்: הר הרצל‎), மேலும் Har HaZikaron (எபிரேயம்: הר הזכרון‎ நேரடி மொழிபெயர்ப்பு: "நினைவு கூரல் மலை") இசுரேலின் தேசியக் இடுகாட்டையும் மற்ற நினைவக, கல்வி அமைப்புக்களையும் உள்ளடக்கி எருசலத்தின் மேற்குப் பகுதியில் எருசலக் காடுகளை அடுத்து அமைந்துள்ள பகுதியாகும். தற்கால அரசியல் சீயோனிச நிறுவனரான தியோடர் எர்சில் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குன்றின் சிகரத்தில் எர்சிலின் கல்லறை உள்ளது. பெரும் இன அழிப்பின் நினைவுச் சின்னமான யாட் வசெம், எர்சில் மலைக்கு மேற்கே உள்ளது. போரில் இறந்த இசுரேலிய வீரர்கள் இங்கு அடக்கம் செய்யப்படுகின்றனர்.
1948 ல் இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், அது மவுண்ட் ஹெர்செலுடன் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வீரர்கள் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர், 1951 ஆம் ஆண்டில் தெற்கு மவுண்ட் ஹெர்செலுடன் கூட நாட்டின் தலைமை புதைக்காமல் ஒரு தேசிய கல்லறையில் Isral இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர் இது தேசிய இராணுவ கல்லறையில், போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு படைகள் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
எர்சில் குன்று கடல் மட்டத்திலிருந்து 834 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. இங்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த விரிந்த முன்றில்கள் உள்ளன. போரில் இறந்தோருக்கான அஞ்சலிக் கூட்டங்கள் தேசிய படைத்துறை மற்றும் காவலர் இடுகாட்டில் நடக்கிறது.
எர்சில் மலை தேசிய இடுகாட்டின் காட்சிகள்
மேற் சான்றுகள் பிரேமதாசா புலிகள் ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அப்போதையை இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட உத்யோகபூர்வமற்ற ஒரு ரகசிய உடன்படிக்கையை குறிக்கின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 காரணமாக இலங்கையில் இருந்த இந்திய சமாதானப் படைகளை வெளியேற்றும் நோக்குடன் இவ்வுடன்படிக்கை அமைந்தது. இவ்வுடன்படிக்கை 1990 இறுதிப்பகுதியில் முறிவடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே பிரேமதாசா பின்னர் கொலை செய்யப்பட்டார் என பொதுவாக கருதப்படுகின்றது.பகதூர் சிங் தாகத் (Bahadur Singh Dhakad) (இறப்பு : 19 செப்டம்பர் 2007) இந்திய அரசியல்வாதி ஆவார். தாகத் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசுட்) மத்தியக் குழு உறுப்பினராகவும், அக்கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலக் குழுச் செயலாளராகவும் இருந்தார்.
1968 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிசுட்) சேர்ந்தார். மேலும் விவசாயிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். 1986 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை, மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் சபாவின் பொதுச் செயலாளராக இருந்தார். 1980 ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநிலக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1987 ஆம் ஆண்டு மாநிலச் செயலக உறுப்பினரானார். 2001 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிசுட்) மாநிலக் குழுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 17வது கட்சி மாநாட்டில், கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று குவாலியரில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.
மேற்கோள்கள் சொகராப் பெசோதன் கோத்வால் (S. P. Kotval)(செப்டம்பர் 1910 - 6 மார்ச் 1987) பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆகத்து 1, 1966 முதல் 27 செப்டம்பர் 1972 வரை பணியாற்றியவர் ஆவார்.
இவர் தனது பள்ளிக் கல்வியை நாக்பூரில் உள்ள புனித வளனார் கன்னிமாடப் பள்ளியிலும், பின்னர் பஞ்ச்கனியில் உள்ள பில்லிமோரியா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் மோரிசு கல்லூரியில் (தற்போது நாக்பூர் மகாவித்யாலயா என்று அழைக்கப்படுகிறது) கல்லூரிக் கல்வியினையும் நாக்பூரில் உள்ள பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டமும் பயின்றார்.
இவர் 1932ஆம் ஆண்டு முதல் நாக்பூரில் உள்ள வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். பின்னர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பயிற்சி செய்தார். 1956-ல் மாநிலங்களின் மறுசீரமைப்பு தொடர்பாக, இவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் இருக்கையில் நீதிபதியாகப் பதவி வகித்தார்.
பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சுருக்கமான சுயசரிதைதளவாய் கருப்பனார் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், தளவாய் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.
இக்கோயிலில் கருப்பனார் சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள் சித்ரகாரர் ( Chitrakar ) அல்லது சித்திரகார் என்பது நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கின் நேவார் சமூகத்தில் உள்ள ஒரு சாதியாகும். நேவார் சாதி அமைப்பு தொழிலுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சித்திரகாரர்கள் ஓவியர்கள் மற்றும் முகமூடிகள் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
நேபாள பாசாவில் (நேவார் சமூகத்தின் மொழி), இந்த சாதி “புன்” அல்லது “புனா” என்று அழைக்கப்படுகிறது.
சமசுருதத்தில் "சித்ரகாரர்" என்ற வார்த்தை 'படத் தயாரிப்பாளர்' எனப் பொருள்படுகிறது. “சித்திரம்” என்றால் 'ஒரு உருவம்' மற்றும் “காரர்” என்றால் அதைத் தயாரிப்பவர்.
பாரம்பரியத் தொழில்