text
stringlengths
3
79k
பெருஞ்சித்திரனார் குமணன் தம்பி இளங்குமணனைக் கண்டு பாடினார். அவன் சிறிதளவே பரிசில் வழங்கினான். அதனை ஏற்காமல் சென்ற புலவர் வேறொரு அரசன் நல்கிய களிற்றை இளங்குமணன் காவல் மரத்தில் கட்டி வைத்துவிட்டு அவனை மதிக்காத தன் பெருமை தோன்ற ஒரு பாடலைப் பாடினார்.
குமணன் தன் தலையைக் கொய்து கொண்டு போய்த் தன் தம்பியிடம் கொடுத்து அதன் விலையைப் பரிசாகப் பெற்றுக்கொள்ளும்படி புலவர் பெருந்தலைச் சாத்தனாரிடம் தன் வாளைக் கொடுத்தான். புலவர் வாளைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் காட்டி இருவரையும் ஒன்று சேரும்படி செய்தார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிக் குடை நிழலில் வாழும் எனக்குக் கடல் வற்றினாலும், கதிரவன் தென்திசையில் தோன்றினாலும் கவலையில்லை – என்று எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடுகிறார்.
ஐயூர் முடவனார் தன் பசியைப் போக்குமாறு தாமான் தோன்றிக்கோனிடம் வேண்டினார். அவனோ வானத்தில் மீன் பூத்த்து போல ஆனிரைகள் பலவற்றை ஊர்தியோடு நல்கினான்.
அடிக்குறிப்பு இமார்தி தேவி (Imarti Devi)(பிறப்பு 14 ஏப்ரல் 1975) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேச அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார். முதலில் கமல்நாத்தின் காங்கிரசு அரசாங்கத்தில் திசம்பர் 2018 முதல் மார்ச் 2020 வரையிலும், பின்னர் சிவராஜ் சவுகானின் பாஜக அரசாங்கத்தின் கீழ் சூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலும் அமைச்சராகப் பதவி வகித்தார். இமார்தி தேவி 2020 மத்தியப் பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் சுரேஷ் ராஜேவை எதிர்த்து தப்ராவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
அரசியல் வாழ்க்கை
இமார்தி தேவி 1997-ல் குவாலியர் மாவட்ட இளைஞர் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
2004-2009 காலகட்டத்தில் குவாலியர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், 2005 முதல் வட்டார காங்கிரசு தலைவராகவும் இருந்தார். 2008ஆம் ஆண்டு முதல் முறையாக மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திசம்பர் 2018-ல், இமார்தி தேவி மத்தியப் பிரதேசத்தின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் என கமல்நாத் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். 2020 மத்தியப் பிரதேச அரசியல் நெருக்கடியின் போது, இவர் மூத்த காங்கிரசு தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை ஆதரித்தார். இச்சூழலில் பதவி விலகிய 22 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
இமார்தி தேவி பூரன் சிங் சுமன் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார்.
சட்ட விவகாரங்கள்
நவம்பர் 2016-ல், குவாலியர் குற்றவியல் நீதிமன்றம் இமார்தி தேவி வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், இவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. பின்னர் இமார்தி தேவி உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை பெற்றார். வழக்கின் இறுதியில் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
மேற்கோள்கள் புலோர்கம் பார்க் ( Florham Park ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மோரிசு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.
பரப்பளவு
2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 7.54 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 7.29 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.25 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 11,696 ஆகும். புலோர்கம் பார்க் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,604.9 குடிமக்கள் ஆகும்.
மேற்கோள்கள் மொடக்குறிச்சி இளையபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள் லகாட் டத்து மாவட்டம்; (மலாய்: Daerah Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த லகாட் டத்து மாவட்டத்தின் தலைநகரம் லகாட் டத்து நகரம் (Lahad Datu Town).
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1,793 கி.மீ. (1,114 மைல்) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 430 கி.மீ. (270 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லகாட் டத்து மாவட்டத்தில் 229,138 மக்கள் வசிக்கின்றனர்.
சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
கலாபாக்கான் மாவட்டம் (Kalabakan District)
கூனாக் மாவட்டம் (Kunak District)
லகாட் டத்து மாவட்டம் (Lahad Datu District)
செம்பூர்ணா மாவட்டம் (Semporna District)
தாவாவ் மாவட்டம் (Tawau District)
சொற்பிறப்பியல்
லகாட் டத்து என்ற வார்த்தை பஜாவு மொழியில் (Bajau Language) இருந்து வந்தது. லகாட் என்றால் இடம்; டத்து என்றால் பிரபு. பிலிப்பீன்சு தீவுக் கூட்டங்களின் சுல்தானிய காலங்களில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட விருது.
டத்து என்பது பிலிப்பீன்சு தீவுக்கூட்டம் (Philippine Archipelago) முழுவதிலும் உள்ள ஏராளமான பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்களை குறிக்கும் ஒரு விருது. பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்கள் என்பது அந்த இனங்களின் தலைவர்கள், அல்லது இறையாண்மை கொண்ட இளவரசர்கள் அல்லது மன்னர்கள் எனப் பலவிதமாகக் குறிப்பிடுகிறது.
டத்து விருது
டத்து எனும் விருது; குறிப்பாக மிண்டனாவோ, சூலு தீவுக்கூட்டம் மற்றும் பலவான் ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரம்பகால பிலிப்பீன்சு வரலாற்றில், குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு லூசான், விசாயாஸ் மற்றும் மிண்டானாவ் பகுதிகளில் இந்த விருது மிகவும் விரிவாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த டத்து எனும் சொல்லில் இருந்துதான் டத்தோ எனும் இப்போதைய பயன்பாட்டுச் சொல் உருவானது. புரூணை உள்நாட்டுப் போருக்கு (Brunei Civil War) பிறகு, புரூணை சுல்தானகத்தால் (Sultanate of Brunei) இந்த லகாட் டத்து பகுதி சூலு சுல்தானகத்திடம் (Sultanate of Sulu) ஒப்படைக்கப்பட்டது.
அதன் விளைவாக டத்து புட்டி (Datu Puti) என்பவரின் தலைமையில் சுல்தானகத்தில் இருந்து சுல்தானகப் பிரபுக்கள் (Datu-Datu) லகாட் டத்துவிற்கு இடம் பெயர்ந்தார்கள். அதில் இருந்து லகாட் டத்து எனும் சொல் உருவானது.
லகாட் டத்து பகுதியை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (North Borneo Chartered Company) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, லகாட் டத்து மாவட்டம் நிறுவப்பட்டது. அதன்பிறகு தென்னை கொப்பரை உற்பத்தி; மற்றும் புகையிலை உற்பத்தியில் லகாட் டத்து பகுதி சிறந்து விளங்கியது.
2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தை, சூலு சுல்தானகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் (Royal Security Forces of the Sultanate of Sulu and North Borneo) ஆக்கிரமித்துக் கொண்டனர். இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டனர்.
சமாலுல் கிராம்
அவர்கள் சூலு சுல்தானகத்தின் அரியணைக்கு உரிமை கோரும் சமாலுல் கிராம் III (Jamalul Kiram III) என்பவரால் அனுப்பப் பட்டனர். கிழக்கு சபாவின் மீது பிலிப்பீன்சு நாட்டின் பிராந்திய உரிமையை வலியுறுத்துவதே (Philippine Territorial Claim to Eastern Sabah) சமாலுல் கிராமின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.
இந்த ஆக்கிரமிப்பிற்குப் பலடியாக மலேசியப் பாதுகாப்பு படையினர் (Malaysian Security Forces) அந்த தண்டுவோ கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். பிலிப்பீன்சு மற்றும் மலேசியா அரசாங்கங்கள் ஓர் அமைதியான தீர்வைக் காண்பதற்காக அந்தக் குழுவுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற பிறகு, இந்த மோதல் ஆயுத மோதலாக மாறியது.
அந்த மோதலில் சூலு சுல்தானகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட 56 பேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்; மற்றும் பலர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். [7][8] மோதலின் போது மலேசியத் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; பொதுமக்களில் 10 பேர் உயிர் இழந்தனர்.
லகாட் டத்து மாவட்டத்தின் மக்கள் தொகை பெரிய சமூகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, லகாட் டத்து மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 229,138 மக்கள் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
சபாவின் பிற மாவட்டங்களைப் போலவே, அருகிலுள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதிகளில் இருந்தும், முக்கியமாக சூலு தீவுக்கூட்டம் மற்றும் மிண்டனாவோவில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உள்ளனர்.
காட்சியகம்
Barangay in Enciclopedia Universal Ilustrada Europea-Americana, Madrid: Espasa-Calpe, S. A., 1991, Vol. VII, p.624:
பொதுவகத்தில் Lahad Datu District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மலேசியாவின் மாவட்டங்கள்
இலகாட் இடத்து வானூர்தி நிலையம்ஹென்ரி பேஜர் (Henry Badger, பிறப்பு: மார்ச்சு 7 1900, இறப்பு: ஆகத்து 10 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1921-1922 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஹென்ரி பேஜர் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.செம்மை நெல் சாகுபடி-நாற்றங்கால்நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தற்போதுள்ள நடைமுறையைவிட செம்மை நெல் சாகுபடி முறையினைக் கையாளுவது அவசியம்.
பாய் நாற்றங்கால் தயாரிக்கும் முறை
ஏக்கருக்கு 3 கிலோ விதை நெல் தேவைப்படும். ஓர் ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) நாற்று மேடை தேவை. அருகிலிருக்கும் மண்ணை எடுத்து நடவு வயலின் ஓரத்தில் ஒரு மீட்டர் அகலம் ஐந்து மீட்டர் நீளம் (1மீ து 5 மீ) அளவுள்ள 8 மேடைகளை உருவாக்க வேண்டும். மேடையை நன்கு சமப்படுத்தி 1 து 5 மீ அளவுள்ள பாலிதீன் சீட்டை விரித்து விட வேண்டும். தொழி மண்ணை 2 செ.மீ. உயரத்திற்கு சமமாக இடவேண்டும்.
பின் விதைநேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் மூன்று கிலோ விதைக்கு ஒரு பாக்கெட் (200 கி) என்ற அளவிலும் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றை தேவையான அளவு அரிசிக்கஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்த பின் அவற்றை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். நிழலில் உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் (24 மணி நேரம்) முளைகட்ட வேண்டும். ஒவ்வொரு 5 ச.மீ. மேடையிலும் 375 கிராம் (முளை கட்டும் முன் எடை) விதையை முளைகட்டியபின் (இரண்டாம் கொம்பு) பரவலாக விதைக்க வேண்டும். விதைத்த பின் தென்னை ஓலைகள் கொண்டு மேடைகளை மூடிவிட்டு மூன்றாம் நாள் எடுத்துவிடலாம். விதைத்த ஒரு வாரத்திற்கு பின் நாற்று வளர்ச்சி குறைவாக இருந்தால் 0.5 சத யூரியா கரைசலை (0.5 சத கரைசல் தயாரிக்க 50 கிராம் யூரியாவை 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்) பூவாளி கொண்டு தெளிக்க வேண்டும்.
நடவு வயல்
செம்மை நெல் சாகுபடியில் நடவு வயலைச் சமன்படுத்துவது சரியாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். பள்ளமாக இருக்கும் இடங்களில் நடப்படும் இளநாற்றுகள் அழுகிவிட வாய்ப்புள்ளது. மேடுபள்ளமில்லாமல் பரம்படித்து சமன்படுத்த வேண்டும். நீர் வடியுமாறு சிறு வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். தேவையான 33 கிலோ டிஏபி உரத்தையும், 7 கிலோ பொட்டாஷ் உரத்தையும் அடியுரமாக நடவு வயலில் இடவேண்டும்.
சதுர நடவு
ஒரு குத்துக்கு 1 நாற்றுவீதம் 14-15 நாட்கள் வயதுடைய நாற்றினை நடவு செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நோக்காமலும் ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது. நாற்றுக்களை 25 து 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்யவும். சதுர நடவு செய்வதற்கு அடையாளமிடப்பட்ட கயிறு அல்லது நடவு அடையாளக் கருவியையும் (மார்க்கர்) பயன்படுத்தலாம். நன்கு சமப்படுத்திய நடவு வயலை இரண்டு நாட்கள் இஞ்சவிட்டு பின்பு தண்ணீரை சுத்தமாக வடிக்க வேண்டும். அதன்பின் மார்க்கர் அல்லது நடவு அடையாளக் கருவியைக் கொண்டு உருட்டியபின் சதுர நடவை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் 25 து 25 செ.மீக்கு சதுர நடவு பின்பற்றப் பட்டு பயிருக்கு தேவையான காற்றோட்டம், சூரிய வெளிச்சம் கிடைத்து பயிர் நன்கு வளர்ச்சி அடைந்து அதிக தூர்கள் பெற முடிகிறது. மேலும் சுழலும் களைக்கருவியை கொண்டு முறையே நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40ம் நாட்களில் நெற்பயிர்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக உருட்டவேண்டும்.நவ ராய்ப்பூர் அடல் நகர் (Nava Raipur Atal Nagar), பொருள்: புதிய ராய்பூர் அடல் நகர் என்பது இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் வருங்காலத் தலைநகராகும். காந்திநகர், சண்டிகர், புவனேசுவர் ஆகிய திட்டமிடப்பட்ட தலைநகரங்கள் வரிசையில் இந்தியாவின் நான்காம் திட்டமிடப்பட்ட தலைநகர் நயா ராய்ப்பூர் அடல் நகர் ஆகும்.முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இப்புதிய பொலிவுறு நகரத்திற்கு முதன்முதலில் அடல் நகர் பெயரிடப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இப்பெயரை சூலை 2019-இல் நவ ராய்ப்பூர் அடல் நகர் என மாற்றியது.
ராய்ப்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-6க்கும் 43க்கும் இடையில் அமைந்துள்ள நவ ராய்ப்பூர் அடல் நகர், பழைய ராய்ப்பூரில் இருந்து தென்கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுவாமி விவேகானந்தா விமானநிலையம் பழைய மற்றும் புதிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
ராய்ப்பூர்
நவ ராய்ப்பூர் அடல் நகரத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம்கொதிகலன், அடுப்பு, உலை, எரி உலை ஆகியவற்றில் உருவாகும் வெப்பக் கழிவு வளிகளையும், புகையையும் வெளியே வளிமண்டலத்திற்கு வெளியேற்ற உதவும் ஒரு அமைப்பு புகைக்கூண்டு (chimney) எனப்படும். வளிமங்கள் இயல்பாக வெளியேற வேண்டும் என்பதற்காக, இது பெரும்பாலும் செங்குத்தாக இருக்கும். அவ்வாறு கழிவு வளி வெளியேறும்போது, வெளியே இருந்து காற்று எரிதலுக்காக உள்ளிழுக்கப்படுகிறது.
புகைக்கூண்டு பெரிய கட்டிடங்கள், நீராவிப் பொறிகள், கப்பல்கள் போன்றவற்றிலும் கட்டப்பட்டிருக்கும்.
மேற்கோள்கள் மேற்கு கேப் (Western Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின்படி முன்னாள் கேப் மாகாணத்திலிருந்து இது உருவாக்கப்பட்டது. இது நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஒன்பது மாகாணங்களில் இது மக்கள்தொகை, பரப்பளவு ஆகியவற்றில் நான்காவது பெரிய மாகாணமாக உள்ளது. 129,449 சதுர கிலோமீட்டர்கள் (49,981 sq mi) பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் மக்கள்தொகை 5.8 மில்லியன் ஆகும். இந்த மக்கள்தொகையில் மூன்றுக்கு இரண்டு பங்கினர் தலைநகரமான கேப் டவுன் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.
மேற்சான்றுகள் சித்வான் தேசியப் பூங்கா (Chitwan National Park) (நேபாள மொழி:चितवन राष्ट्रिय निकुञ्ज) , நேபாள நாட்டின் முதல் தேசியப் பூங்காவாகும். இப்பூங்கா 1973ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் யுனேஸ்கோ, இயற்கை சார்ந்த உலகப் பாரம்பரிய களமாக அங்கீகரித்துள்ளது.இத்தேசியப் பூங்கா 932 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வன் மாவட்டம், பர்சா மாவட்டம், நவல்பராசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.
வடக்கிலும், மேற்கிலும் பாயும் கண்டகி ஆறும், இரப்தி ஆறும் சித்வான் தேசியப் பூங்காவிற்கு இயற்கை அரண்களாக உள்ளது. சித்வான் தேசியப் பூங்காவின் கிழக்கில், பார்சா வனவிலங்கு சரணாலயமும், தெற்கில் இந்தியப் புலிகள் காப்பக அலகும் மற்றும் வால்மீகி தேசியப் பூங்காவும் உள்ளன.
நேபாள நாட்டின் தலைநகரம் காத்மாண்டிலிருந்து, சித்வான தேசியப் பூங்காவிற்குச் செல்ல, பேருந்துகள் மற்றும் விமான சேவைகள் உள்ளது.
சித்வான் தேசியப் பூங்கா பகுதி வெப்ப மண்டல பகுதியில் உள்ளதால் ஆண்டு முழுவதும் வெப்பம் காணப்படுகிறது. இப்பகுதியில் மழைக் காலம் சூன் மாத நடுவிலிருந்து துவங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை 2500 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. பின்னர் அக்டோபர் நடுவிலிருந்து பகல் வெப்ப நிலை 36 பாகையிலிருந்து 18 பாகையாக குறைந்து விடுகிறது. இரவு வெப்பநிலை 5 பாகையாகக் காணப்படுகிறது (செல்சியஸ்).
தாவரங்கள்
பூங்காவின் மொத்தப் பரப்பளவில் 70% மரங்கள், குறிப்பாக சால மரங்கள் மற்றும் பைன் மரங்கள் கொண்டுள்ளது. தெராய்-துயார் சாவன்னா புல்வெளிகள், பூங்காவின் மொத்தப் பரப்பளவில் 20% கொண்டுள்ளது. உலகின் உயரமான புல்வகைகளில் ஆசியா யாணைப் புற்கள் (Miscanthus sinensis) இப்பூங்காவில் அதிகமாக வளர்கிறது.
விலங்கின வகைகள்
இப்பூங்காவின் செடி, கொடி, மரங்களைச் சார்ந்து, பட்டாம்பூச்சிகள், பூச்சிகள் மற்றும் சிற்றுயிர்கள் மற்றும் 700 வகையான காட்டுயிர்கள் சித்வான் தேசியப் பூங்காவில் உள்ளது. மேலும் நாகப் பாம்புகள், மலைப் பாம்புகள், 17 வகையான பிற பாம்பினங்கள், நட்சத்திர ஆமைகள், உடும்புகள், இத்தேசியப் பூங்கா வழியாக பாயும் நாராயணி-இரப்தி ஆறுகளில் 113 வகையான மீனினங்கள் மற்றும் 235 கரியால் வகை முதலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
பாலூட்டி விலங்குகள்
சித்வான் தேசியப் பூங்காவில் 43 வகையான பாலூட்டிகள் உள்ளது. காடுகளின் அரசனான வங்காளப் புலிகள், இப்பூங்காவின் முக்கிய பாலூட்டியாகும். உலகில் அதிக புலிகளைக் கொண்ட தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும். தற்போது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஆறு பெண் புலிகளும், இரண்டு ஆண் புலிகளும் உள்ளது. 2010 மற்றும் 2011ஆம் ஆண்டில் கிடைத்த புகைப்படத் தகவல்களின் அடிப்படையில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 4.44 முதல் 6.35 புலிகள் வரை இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். பகலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பகலில் இப்பூங்காப் புலிகள் வேட்டைக்குச் செல்லாது அமைதியாக உள்ளது
வங்கப் புலிகளுடன், இந்தியச் சிறுத்தைகளும் இப்பூங்காவில் உள்ளது.
சித்வான் தேசியப் பூங்காவில் 200 முதல் 250 வரையிலான சோம்பேறிக் கரடிகள் உள்ளது. மேலும் நீர்நாய்கள், வங்காள நரிகள், புள்ளிகள் கொண்ட புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், உடலில் வரிகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன. 2011இல் நடந்த ஆய்வுகளின் படி, சித்வான் தேசியப் பூங்காவில் செந்நாய்கள், தங்க நிற குள்ள நரிகள், மீன்பிடிப் பூனைகள், சிறுத்தைப் பூனைகள், பெரிய மற்றும் சிறிய ஆசிய மரநாய்கள், நண்டை உண்ணும் கீரிகள், மஞ்சள் நிற தொண்டை கீரிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்ற நூற்றாண்டு முடிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் எண்ணிக்கை 544ஆக உயர்ந்துள்ளது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களைக் காக்க, இங்கிருந்து நாட்டின் பிற தேசியப் பூங்காக்களுக்கு, இன வளர்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் சித்வான் தேசியப் பூங்காவில் ஆசியக் காட்டு யானைகள், காட்டெருதுகள் அதிகமாக உள்ளது. காட்டுப்பன்றிகள், கலைமான்கள், குரைக்கும் மான்கள், புள்ளிமான் கூட்டங்கள், புல்வாய்கள், நான்கு கொம்புகள் கொண்ட மறிமான்கள், செம்முகக் குரங்குகள், அனுமார் குரங்குகள், இந்திய எறும்பு தின்னிகள், இந்திய முள்ளம்பன்றிகள், பறக்கும் அணில்கள், பல இன காட்டு முயல்கள் மற்றும் தேவாங்குகள் காணப்படுகின்றன.
பறவைகள்
இப்பூங்காவில் 543 இன பறவைகள் 2006ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. அவைகளில் மூன்றில் இரண்டு பங்கு பறவைகள் உலக அளவில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளவைகள் ஆகும். அரிய வகை சிட்டுக் குருவிகள், தேன்சிட்டு பறவைகள்,
பெருந்தலை கிளிகள், கானாங்கோழிகள், காட்டுக் கோழிகள், இந்திய மயில்கள் மற்றும் உலக அளவில் அருகி வரும் புள்ளிக் கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு இப்பூங்கா செயல்படுகிறது.
நேபாளத்தின் மிகப்பிரபலமான சித்வான் தேசியப் பூங்கா, அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சித்வான் தேசியப் பூங்காவில் சுற்றுலா குழுவினர் தங்கும் விடுதிகள், உணவகங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை காண்பதற்கு தேவையான சிற்றுந்துகள் மற்றும் யானைகள் உள்ளன. மேலும் படகோட்டும் பயிற்சி செய்வதற்கு தேவையான படகுகளும் உள்ளன. சூலை 2012 முதல் பூங்காவில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் அரசு ஆணையின்படி மூடப்பட்டுள்ளன. பூங்காவிற்கு வெளியே 350 முதல் 400 வரையிலான தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தற்போது உள்ளன. மேலும் சுற்றுலா குழுவினர் தேசியப் பூங்காவைச் சுற்றி பார்க்க 800 யானைகள் உள்ளன.
உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Chitwan National Park
சித்வான் தேசியப் பூங்கா, காணொலிக் காட்சி
BirdLife IBA factsheet : Chitwan National Park பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம்
உலகம் முழுவதும் உள்ள தேசியப் பூங்காக்கள் பரணிடப்பட்டது 2008-01-19 at the வந்தவழி இயந்திரம்
ஐநா பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தரவுத்தளம் பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்ஆந்திரேய் கியோர்கியேவிச் தரோழ்சுகேவிச் (Andrei Georgievich Doroshkevich) (உருசியம்: Андрей Георгиевич Дорошкевич, பிறப்பு, 1937) ஓர் உருசிய வானியற்பியலாளரும் முன்னாள் சோவியத் கோட்பாட்டு வானியற்பியலாளரும் ஆண்டைப்புறவியலாளரும் ஆவார். இவர் இலெபிடோவ் இயற்பியல் நிறுவனத்தின் தொடக்கநிலை புடவி இயற்பியல் ஆய்வகத்தின் தலைவர் ஆவார்.
இவர் இகோர் ந்oவிகோவுடன் ஆய்வு செய்து 1964 இல் வெளியிட்ட அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சுக்கான கோட்பாட்டு அடிப்படைகள் மிகவும் பெயர்பெற்ற வெளியீடாகும். இவர் இக்கதிர்வீச்சைச் செய்முறை வழியாகவும் அளக்கலாம் எனச் சுட்டிக் காட்டினார். இந்தக் கதிர்வீச்சுக்கான குறிகை 1957 இலேயே செய்முறை வழியாக இழ்சுமனோவால் கண்டறியப்பட்டும் சோவியத் ஒன்றியத்திலேயே தரோழ்சுகேவிச், நோவிகோவ் ஆய்வு செய்த காலத்தில் அறியப்படாமல் இருந்த்து. இந்த இருவரின் ஆய்வும் கூட 1965 இல் ஆர்னோ ஆல்லன் பெஞ்சியாசும் இராபர்ட் உட்ரோ வில்சனும் இதற்காக நோபல் பரிசு பெறும் வரை உலக அறிஞர்களால் அறியப்படவில்லை.
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
மேற்கோள்கள் பொன்னேரி பிரிவு இந்தியாவில்,தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு வருவாய் பிரிவு ஆகும். இது கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி வட்டங்ளை உள்ளடக்கியது
"Map of Revenue divisions of Tiruvallur district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.பேக்ரேசனைட்டு (Bagrationite) என்பது ஆல்லனைட்டு கனிமத்தின் ஒரு வகையாகும். சியார்ச்சிய இளவரசர் பீட்டர் பேக்ரேசனி 1847 ஆம் ஆண்டு இக்கனிமத்தைக் கண்டறிந்தார் . இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் கனிமத்திற்கு பேக்ரேசனைட்டு எனப்பெயரிடப்பட்டது .
மேற்கோள்கள் சிவரக்கோட்டை ஊராட்சி (Sivarakkottai Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2974 ஆகும். இவர்களில் பெண்கள் 1505 பேரும் ஆண்கள் 1469 பேரும் உள்ளனர்.
குளத்துவாய்பட்டி
சிவரக்கோட்டை
கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம்
சான்றுகள் அலைவரைவி ( kymograph ) என்பது ஒரு வரைபடத்தின் மூலம் நேரத்தின் அடிப்படையில் இடவெளி நிலைபாட்டை வரைகின்ற சாதனம் ஆகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் இக்கருவியை ஒர் அலையெழுதி என்றும் கூறலாம். இவ்வரைபடத்தில் இடவெளி அச்சானது நேரத்தைக் காட்டுகிறது. பொதுவாக இச்சாதனத்தின் அமைப்பு, காகிதத்தால் மூடப்பட்ட சுழல்உருளியின் மீது ஓர் எழுத்தாணி முன்னும் பின்னுமாக நகர்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்தாணி ஒரு நிகழ்வில் உணரப்பட்ட இயக்க அல்லது அழுத்த மாற்றங்களை நகர்ந்து பதிவுசெய்கிறது.
1840 ஆம் ஆண்டு கார்ல் லுட்விக் என்ற செருமானிய உடற்செயலியல் வல்லுநர் இச்சாதனத்தைக் கண்டறிந்தார். முதன்முதலில் இச்சாதனம் இரத்த அழுத்தத்தை ஊடுருவி கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது. பின்னர் மருத்துவத் துறையில் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுகிறது. உடலியக்கத்தில் நிகழும் தசைச்சுருக்க மாற்றங்கள் அல்லது பேச்சொலி உட்பட நிகழும் பிற செயல்முறைகளை அளவிடுவது இச்சாதனத்தின் முதன்மையான பயனாகும். இவை தவிர வளிமண்டல அழுத்தத்தை அளவிடல், இசைக் கவைகளின் அதிர்வுகளை அளவிடல் மற்றும் நீராவி இயந்திரத்தின் செயல்பாட்டை அளவிடல் போன்ற செயல்பாடுகளுக்கும் அலைவரைவி பயன்படுத்தப்படுகிறது.
இவற்றையும் காண்க
நிகழ்படமலைவரைவி
உள்படமலைவரைவிபொது அவரை (Phaseolus vulgaris) அல்லது இயல்பு அவரை (common bean) அல்லது பச்சை அவரை, பிரெஞ்சு அவரை, அல்லது. என்பது ஆண்டுக்கொரு முறை உலகமெங்கும் பயிரிடும் கொடிவகப் பயிராகும். அவரைக் கொட்டையை முதிராத பச்சைக் காயாகவும் முதிர்விதையை நன்கு உலர்த்தியும் பயன்படுத்துகின்றனர். அவரையின் முதன்மைப் பயன்பாட்டு வகைகளாக அவரைக்கொட்டையும் (முதிர்விதைகள்) விதையும் விதையுறையும் உருவாகாத அவரைக்காய், பச்சை அவரைப் பருப்பு அல்லது முதிர் அவரைக்கொட்டை ஆகியன அமைகின்றன. சிலபோது இதன் இலைகளும் கீரையாகப் பயன்கொள்வதுண்டு. அவரைப் பொட்டு தீவனமாகப் பயன்படுகிறது. இது அவரை, பட்டாணிப் பருப்புக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தன் வேர்க்குச்சுயிரிகள் வழியாக தழைச்சத்தை (காலகத்தை) பெற்று மண்னில் நிலைப்படுத்துகிறது. இந்நிகழ்வு காலக நிலைப்பாடு எனப்படுகிறது.
பொது அவரை நெடுங்காலமாகப் பயிரிடும் மிகவும் வேறுபாடுள்ள பல இனங்களைக் கொண்டுள்ளது. இதன்அனைத்துக் காட்டுவகைகளும் கொடிகளாகப் படர்கின்ற இயல்பு கொண்டன. இதன் பயிரிடும்வகைகள் வளர்ச்சியைச் சார்ந்து புதர் அவரை' அல்லதுr குற்றவரை அல்லது கொம்பவரை அல்லது கொடியவரை எனப்படுகின்றன. இதில் சிறுநீரக அவரை, வான் அவரை, கொப்பவரை, மெழுகவரை ஆகியனவும் அடங்கும். வணிகவியலாக பயிரிடப்படும் மற்ர அவரைக்களாக கொடியவரை (பேசியோலசு காக்கினியசு) அகலவரை (விசியாஃபாபா (Vicia faba)) ஆகியனவாகும். இது அண்டார்க்டிகா தவிர்த்த அனைத்துக் கண்டங்களிலும் பயிரிடப்படுகிறது. உலகளாவிய நிலையில், 2016 இல் 27 மில்லியன் டன் உலர் அவரையும் 24 மில்லியன் டன் பச்சையாகப் பயன்படுத்தும் அவரைக்காயும் பயிரிடப்பட்டுள்ளன. மயன்மார் 2016 இல் பேரளவில் அவரைக்கொட்டையை விளைவித்தது; சீனா 79% அளவுக்கு அவரைக்காயை விளைவித்தது.
பேசியோலசு காட்டுவகை அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையாகும். இது முதன்முதலில் அமெரிக்க இடைப்பகுதியிலும் தெற்கே ஆண்டிசு வட்டாரத்திலும் தனித்தனியாக வீட்டினமக்கப்பட்டதால் இருவக மரபன் தேக்கங்களைக் கொண்டுள்ளது. என்றாலும் அண்மை மரபியல் ஆய்வுகள் இது முதலில் அமெரிக்க நடுப்பகுத்தில் முதலில் தோன்றிப் பிறகே பரங்கிக்காய், சோளத்துடன் தெற்காக நகர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த மூன்றும் (அவரையும் பரங்கிக்காயும் மக்காச்சோளமும்) அமெரிக்கத் தாயக மக்களால் வேளாண்மையின் மூன்று அக்காத் தங்கைகள் என அழைக்கப்படுகிறது.
விளைச்சல்