text
stringlengths
3
79k
Tatyana Zaslavskaya, Russian sociologist
René Zavaleta Mercado (1935–1984), Bolivian sociologist
Viviana Zelizer, American sociologist
Eviatar Zerubavel, American cognitive sociologist
Tukufu Zuberi, American sociologist
மேற்கோள்கள் அகணி ஊராட்சி (Agani Gram Panchayat), தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.
சொக்கங்குளம்
ஏனாக்குடி
மன்னங்கோவில்
நந்தியநல்லூர்
ராமாபுரம்
தென்னங்குடி
சான்றுகள் உற்றுநோக்கலின் வாயிலாக கற்றல் வெளிப்பாட்டை அறியும் வகைப்பிரித்தல் (Structure of observed learning outcomes (SOLO) என்ற வகைப்பிரித்தல் என்பது மாணவன் பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் அதிகரிக்கும் சிக்கல் தன்மையைப் பற்றி விவரிக்கிறது. இந்த வகைப்பாடு ஜான் பிக்ஸ் மற்றும் கெவின் காலிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும். புளுமின் கற்பித்தல் நோக்கங்கள் குறித்த வகைப்பாடு மற்றும் திருத்தப்பட்ட புளுமின் கற்பித்தல் நோக்கங்கள் குறித்த வகைப்பாடு ஆகியவற்றிலிருந்து மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில் புளுமின் வகைப்பாடு கற்பித்தல் நோக்கங்களின் அடிப்படையிலானது. ஆனால், ஜான் பிக்ஸின் வகைப்பாடு கற்றல் வெளிப்பாட்டின் அடிப்படையிலானது ஆகும்.
மாதிரி
இந்த மாதிரியானது புரிதலின் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது.
முன் அமைப்பு (Pre-structural) – முன் அமைப்பு நிலையில் உள்ள மாணவர்கள் தொடர்பற்ற தகவல்களைப் பெறுகின்றனர். அவை முறைமைப்படுத்தப்படாமல் இருப்பதால் பொருள் உணர இயலவில்லை. .
ஒருமை அமைப்பு (Uni-structural) – மாணவனின் பதில் அல்லது புரிதல் ஒரே ஒரு தொடர்புடைய பகுதியில் மட்டுமே குவிக்கப்பட்டுள்ளது.
பல்வகை அமைப்பு (Multi-structural) – மாணவனின் புரிதல் பல தொடர்புடைய பகுதிகளில் குவிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும், சேர்க்கை நிலையிலும் அறியப்படுகிறது. இந்த நிலையிலான மதிப்பீடு முதன்மையாக அளவினடிப்படையிலானது.
தொடர் அமைப்பு (Relational) – பல்வேறு பண்புக்கூறுகளின் அடிப்படையில் ஓரியல்பான ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த வடிவமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையானது ஒரு பாடப்பொருள் அல்லது தலைப்பு சார்ந்த தேவையான அளவு இயல்பான புரிதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
விரிவாக்கமடைந்த அமைப்பு (Extended abstract) – மேலே கூறப்பட்ட ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த அமைப்பானது இன்னும் சற்று உயர்ந்த கருத்தியலான, பொதுமைக்கருத்தாக கொள்ளப்படுகிறது. மேலும், இது புதிய பாடப்பொருள் அல்லது பகுதியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
Teaching Teaching & Understanding Understanding (short-film about Constructive Alignment and The SOLO Taxonomy) பரணிடப்பட்டது 2011-02-08 at the வந்தவழி இயந்திரம்சிக்காகோ பல்கலைக்கழகம் (University of Chicago), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும்.
நோபல் பரிசு பெற்ற 89 பேர் இங்குப் படித்தவர்கள் ஆவார். மேலும், 9 பேர் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவர் ஆவர்.
நிறுவல்
இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, இருபாலரும் படிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. அமெரிக்க பாப்டிச தேவாலயத்தின் சார்பாக நிறுவப்பட்டது. ஜான் டி. ராக்பெல்லர் இதற்குப் பண உதவி வழங்கினார். முதன்முறையாக, 1890-ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ப்பர் இதன் தலைவரானார். முதல் வகுப்புகள் 1892-ஆம் ஆண்டு நடந்தன.
. தனி நிறுவனமாகத் தொடங்கினர். இதே பெயரில் முன்னர் செயல்பட்ட பல்கலைக்கழகம், நிதி நெருக்கடியால் 1886-இல் மூடப் பட்டதால், இது தொடங்கப்பட்டது,
பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளி 1898-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது,. பல்கலைக்கழக சட்டப் பள்ளி 1902-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பின்னர், ஆசிய ஆய்வியல் நிறுவனம் தொடங்கப்பட்டு தொல்பொருளியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன,
அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்த மாணவர்கள் இலவசமாகவே இங்குப் படிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நூல்களையும், ஆய்வுக் கருவிகளையும் வழங்கியது,
1929-ஆம் ஆண்டு, பல்கலையின் ஐந்தாவது தலைவரான ராபர்ட் மேனார்டு ஹட்சின்ஸ், கல்விக்கு முக்கியத்துவம் தர எண்ணிப் பல்கலைக்கழக கால்பந்து குழுவை நீக்கினார். வடமேற்குப் பல்கலைக்கழகத்தையும், சிக்காகோ பல்கலைக்கழகத்தையும் இணைக்கத் திட்டமிட்டார். இவரது காலத்தில், பல்கலைக்கழக மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டன. மருத்துவத் துறை மாணவர்கள் சேரத் தொடங்கினர்.
ராக்ஃபெல்லர் அறக்கட்டளை வழங்கிய பணத்தால், பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்து தப்பித்தது கல்லூரி நிர்வாகம். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தால் மன்காட்டன் திட்டம் செயற்படுத்தப்பட்டது.
புளூட்டோனியத்தை முதன்முறையாக இங்குதான் பிரித்தனர். செயற்கையான, அணுப்பிளவை என்ரிக்கோ பெர்மி கண்டுபிடித்தார்.
1978-ஆம் ஆண்டில், ஹன்னா ஹோல்போர்ன் கிரே, யேல் பல்கலைக்கழகத்தின் தலைவராய் இருந்தவர், பின்னர் இங்குத் தலைவராக ஏற்கப்பட்டார். பெண்ணான இவர், 15
ஆண்டுகள் இப்பதவியில் நீடித்தார்
1999 ஆம் ஆண்டில், அப்போதைய தலைவரான ஹூகோ சோன்னென்ஷென், மாணவர்களின் சுமையைக் குறைக்க எண்ணிப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கை 21-இல் இருந்து 15-ஆக குறைக்கப்பட்டது. த நியூயார்க் டைம்ஸ், தி எக்கனாமிஸ்ட் உள்ளிட்ட முன்னணிப் பத்திரிகைகள் இதைச் செய்தியாக வெளியிட்டன. பிரச்சனை எழவே, 2000-இல் தன் பதவியில் இருந்து விலகினார் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கியது.
2009-ஆம் ஆண்டில், மேக்ஸ் பலேவ்சுகி வசிப்பிடக் கட்டடம் உருவாக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டில், 10 மாடிக்கட்டடமாக உயிர்மருத்துவத் துறை மையம் கட்டப்பட்டது.
வளாகம்
முதன்மை வளாகம் 211 ஏக்கர்கள் (85.4 ha) பரப்பளவில் சிக்காகோ நகரில் உள்ளது. 1893-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி, பல்கலையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கிறது. தொடக்ககால கட்டடங்கள் ஆறு உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று அருகில் அமைந்துள்ளன,
இங்குள்ள ஹட்சிசன் அறை, ஆஃக்சுபோர்டு நகர தேவாலயத்தை ஒத்திருக்கும்.
சிக்காகோ பைல்-1 அமைந்துள்ள இடம், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிராங்க் லாய்டு ரைட் கட்டிய ராபி ஹவுஸ் கட்டடமும் தேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளென் சீபோர்க், தன் 405 அறையில், புளோட்டினியத்தை இங்குதான் பிரித்தார்.
தொலைதூர வளாகங்கள்
இந்தப் பல்கலைக்கழகம் தொலைதூரங்களிலும் வளாகங்களைக் கொண்டுள்ளது.
இதன் வணிகப் பள்ளிக்குச் சிங்கப்பூரிலும், லண்டனிலும் கிளைகள் உள்ளன. பாரிசு நகரில் ஒரு வளாகம், செய்ன் ஆறு அருகில் உள்ளது. பெய்ஜிங் நகரிலும் இதன் வளாகம் 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது,
நிர்வாகம்
பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க நிர்வாகக் குழு உள்ளது. பல்கலைக்கழகத் தலைவர் உட்பட ஐம்பது பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். பல்கலைக்குத் தேவையான நிதியைச் சேகரிப்பதும், திட்டங்களை வகுப்பதும், இதன் பொறுப்பு.
நூலகம்
இங்கு ஆறு நூலகங்கள் உள்ளன. மொத்தம் 8.5 மில்லியன் நூல்கள் உள்ளன. அமெரிக்காவின் முன்னணி நூலகங்களில் இதுவும் ஒன்று. தத்துவம், வரலாறு, வணிகம், மருத்துவம் எனப் பல துறைச் சார்ந்த நூல்களும் இவற்றுள் அடங்கும்.
பழைய மாணவர்கள்
2004-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பல்கலைக்கழகத்திற்கு 133,155 பழைய மாணவர்கள் உள்ளனர்
இவர்களில் பராக் ஒபாமா குறிப்பிடத்தக்கவர். மேலும், இங்குப் படித்தவர்கள். உலக வங்கி, கனடிய அரசு, அமெரிக்க உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலும் பணிபுரிகின்றனர்.
நேட் சில்வர், கர்ட் வானெகெட், கார்ல் சேகன், மில்ட்டன் ஃப்ரீட்மன், யூஜின் ஃபாமா, எட்வின் ஹபிள், லாரி எலிசன் ஆகியோரும் இங்குக் கற்றனர்.
தடகளம்
இங்குப் பத்து ஆண் குழுக்களும், ஒன்பது மகளிர் குழுக்களும் இயங்குகின்றன சிக்காகோ மரூன்ஸ் என்பது இந்த விளையாட்டுக் குழுக்களின் ஒட்டுமொத்த பெயர்.
என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய தடகளப் போட்டிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பர்.
மாணவர் வாழ்க்கை
இங்குள்ள மாணவர்கள் ஏறத்தாழ 400 அமைப்புகளை நடத்துகின்றனர். இவற்றில் சமயம், பண்பாடு, விளையாட்டு, ஆர்வக் குழுக்கள் ஆகியன அடங்கும். மாணவர்களே பதிப்பிக்கும் செய்தித்தாள், திரைப்படக் குழு, பல்கலைக்கழக வானொலி உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன.
இங்குத் தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.
சிக்காகோ பல்கலைக்கழக இணையத்தளம்பூலான் தேவி (Phoolan Devi, ஆகத்து 10, 1963 - சூலை 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார்.
பிறப்பும் இளமையும்
பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் பள்ளத்தாக்கின் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தார். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயது மூத்தவன். ஏற்கெனவே 2 பெண்களைத் திருமணம் செய்தவன்.
திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தார். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தார். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது.
சம்பல் கொள்ளைக்காரி
இவர் உத்தரப்பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட மல்லா இனப்பிரிவைச்சார்ந்தவர். அவ்வூரில் உயர்சாதிப் பிரிவினர்க்கும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவினர்க்கும் நிகழ்ந்த இனவெறியர்களின் இன வேற்றுமை காராணமாகவும், அவர்களின் இழி செயல்களினாலும் கொள்ளைக்காரியாக மாறினார்.
பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள்.
அவளுடைய பெற்றோரை காவலர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் காவல் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டியகாவல் துறையினர் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் இருந்த வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், காவல் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.
பாலியல் கொடுமை
பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டுக்குப் பின் திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.
சம்பல் கொள்ளைக் கூட்ட்சத் தலைவி
அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவனாகி பூலான்தேவியைத் திருமணம் செய்தான். இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இவரை ஒரு கிராமமே வரிசையில் நின்று பாலியல் கொடுமைப்படுத்தியது. துப்பாக்கி சுடுவதில் கொள்ளைக் கூட்டத்தாரிடம் பயிற்சி பெற்ற இவர் கொள்ளைக்காரியாக மிகுந்த ஆரவாரத்துடன இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக்கூட்டத் தலைவியாக வலம் வந்தவர். இதனால் சம்பல் கொள்ளைக்காரி என்று அழைக்கப்பட்டார். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள். ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை.
இந்த நிலையில் 1980_ம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு பூலான்தேவி கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள்.
விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். 1981_ம் ஆண்டு பிப்ரவரி 14_ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள். குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை_கால்களை இழந்தார்கள்.
இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982_ல் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை.
பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள்.1982_ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.
கைதும் விடுதலையும்
பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.
11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை.
இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.
மக்களவை உறுப்பினர்
கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991_ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு ஜுலை மாதம் 5_ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.
சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996_ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக நாடாளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.
பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பா.ஜனதா வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். "நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.
"பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார்.
படுகொலை
2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார். பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை செய்ததாக ராணா கூறினார் இது தொடர்பான வழக்கில் ராணா குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 2014 ஆகத்து 14 இல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
சம்பல் பிரதேசம்
மேற்கோள்கள் பெட்ரிக்கோ "கிக்கோ " மெக்கெடா (இத்தாலிய ஒலிப்பு: [maˈkɛːda]; 22 ஆகஸ்ட் 1991 அன்று பிறந்தார்) ஒரு இத்தாலியக் கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஆங்கிலப் பிரிமியர் லீக் கிளப்பான மான்செஸ்டர் யுனைட்டடின் ஸ்ட்ரைக்கராக விளையாடி வருகிறார். 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் லஜியோவில் இருந்து மான்செஸ்டர் யுனைட்டடில் இணைந்தார்.
கிளப் வாழ்க்கை
ஆரம்பகால விளையாட்டு வாழ்க்கை
இவர் ரோமில் பிறந்தார். மெக்கெடா உள்ளூர் அணி லஜியோவுடன் இணைந்து அவரது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தொழில்முறை ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது என்ற இத்தாலியக் கால்பந்து விதிமுறைகள் காரணமாக இவர் நிரந்தரமாக கிளப்பிற்காக விளையாட முடியவில்லை. அவரது 16வது பிறந்த நாளுக்குப் பிறகு விரைவில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டடுடன் கையெழுத்திட்டார். அங்கு 16 வயது அடைந்தவர்களும் அதை விட அதிக வயது உள்ளவர்களும் ஒப்பந்தமிட விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவரது குடும்பம் இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து 16 செப்டம்பர் 2007 அன்று அதிகாரப்பூர்வமாக பழகுனராக கிளப்பில் அவர் சேர்ந்தார். மேலும் கிளப்பின் அகாடமியில் மூன்று-ஆண்டு படிப்புதவித் தொகையையும் பெறத் தொடங்கினார்.
மான்செஸ்டர் யுனைட்டடு
மான்செஸ்டர் யுனைட்டடு 18 வயதுக்கு கீழ் உள்ள அணியில் அவர் நேரடியாக இணைந்தார். 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பான்ஸ்லேக்கு எதிரான 1-0 என்ற வெற்றியில் அடிக்கப்பட்ட ஒரே கோல் அணிக்காக அவர் சேர்த்ததாகும். இது அவருக்கு முதல் போட்டியாகும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான 21 பங்கேற்புகளில் மொத்தம் 12 கோல்களை சேர்த்து 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் அதிக கோல்களை சேர்த்தவராக கிளப்புடன் அவரது முதல் பருவத்தை நிறைவு செய்தார். மேலும் 26 பிப்ரவரி 2008 அன்று அவரது அறிமுகம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் 68வது நிமிடத்தில் ஜெரார்டு பிக்குவின் பதிலாளாக அவர் களம் இறங்கிய போது 2–0 என்ற கணக்கில் லிவர்பூலை அவர்களது அணி தோற்கடித்தனர். 12 மே 2008 அன்று மான்செஸ்டர் சீனயர் கப் வெற்றியாளர்கள் பதக்கத்தை மெக்கடா பெற்றார். போல்டன் வாண்டெர்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெற்ற 2-0 என்ற வெற்றியில் பயன்படுத்தப்படாத பதிலாளாக அவரது பெயர் குறிக்கப்பெற்ற போது இப்பதக்கை அவர் வென்றார்.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெக்கடா அவரது 17 வது பிறந்தநாளில் மான்செஸ்டர் யுனைட்டடுடன் அவரது முதல் தொழில்முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2008–09 பருவத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அணியிலேயே அவர் தொடர்ந்து விளையாடினார். மற்ற அணிகளிலும் சில முறை பங்கேற்றார். அந்தப் பருவம் நிறைவு பெறும் போது முக்கிய அணியில் அதிகப்படியான கோல்களை அடித்து மெக்கெடா மகிழ்ச்சியடைந்தார். எட்டு விளையாட்டுகளில் எட்டு கோல்களை அவர் நிறைவு செய்திருந்தார். 30 மார்ச் 2009 அன்று நியூகேஸ்டில் யுனைட்டடு அணிக்கு எதிரான 3-3 சமநிலையில் அவர் தொடர்ந்த 3 கோல்களும் இதில் அடக்கமாகும். மேலும் 5 ஏப்ரல் 2009 அன்று ஆஸ்டோன் வில்லாவுக்கு எதிரான போட்டிக்கான முதல் அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார். விளையாட்டின் மூன்றாவது இறுதியில் யுனைட்டடு 2–1 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த போது விளையாட்டின் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேலாளர் அலெக்ஸ் பெர்குசான், நானிக்குப் பதிலாக மெக்கெடாவை விளையாடுவதற்கு அழைத்தார். ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கிரிஸ்டினோ ரொனால்டினோ ஆட்டத்தை சமநிலைப்படுத்திய பிறகு காய நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் தண்டனைப் பகுதியில் இருந்து சுற்றும் விளைவு மூலமாக அவர் அமைத்த வியூகத்தின் மூலம் மெக்கெடா போட்டியை வெற்றி பெறச்செய்தார்.
யுனைட்டடின் அடுத்த இரண்டு விளையாட்டுகளில் மெக்கெடாவின் பெயர் இருக்கையில் இருப்பதற்காகக் குறிப்பிடப்பட்டது – அவர்களது சாம்பியன்ஷ் லீக் காலிறுதியில் முதல் கால்பகுதியில் போர்ட்டோவுக்கு எதிரான முதல் போட்டியிலும் அதன் பின்னர் லீக்கில் சுந்தர்லேண்டிற்கு எதிரான மற்றொரு போட்டியிலும் பங்கேற்பதற்காக சேர்க்கப்பட்டார்– இரண்டாவது போட்டியானது கிளப்பிற்காக அவரது இரண்டாவது பங்கேற்பாக அமைந்தது. 46 விநாடிகளுக்குப் பிறகு டிமிட்டர் பெர்பாடோவின் இடத்திற்கு மெக்கெடா கொண்டுவரப்பட்டார். சுந்தர்லாந்து கோலில் கிரைக் கார்டனைக் கடந்து மைக்கேல் கேரிக்கை விலக்கி அவரது யுனைட்டடு விளையாட்டு வாழ்க்கையில் இரண்டாவது முறையாக வலையின் பின்புறம் பந்தைக் கொண்டு வந்தார். 19 ஏப்ரல் 2009 அன்று எவெர்டனுக்கு எதிரான FA கோப்பை அரையிறுதிப் போட்டிக்கான அவரது பெரிய-பெயருடைய வீரர்களுக்கு அலெக்ஸ் பெர்கசனுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு மான்செஸ்டர் யுனைட்டு சட்டையுடன் அவரது போட்டியை மெக்கெடா தொடங்கினார். எனினும் கூடுதல் நேரம் தொடங்குகையில் டிமிட்டர் பெர்பாடோவுக்குப் பதிலாக கலம் இறங்கி அவரது யுனைட்டடு விளையாட்டு வாழ்க்கையில் முதன் முறையாக மெக்கெடா கோல் அடிக்கத் தவறினார். 2 மே 2009 அன்று மிடில்ஸ்புரோக்கிற்கு எதிரான 2-0 என்ற வெற்றியைக் கொண்டு அவரது முதல் பிரிமியர் லீக் போட்டியைத் தொடங்கினார்; ஜி-சுங்கின் கோலை நிறுத்தி வைப்பதில் அவரும் ஈடுபட்டார். ஆனால் அவராகவே ஸ்கோர்ஷீட்டை எடுக்கத் தவறினார். மேலும் இரண்டாவது பகுதியில் பத்து நிமிடங்கள் பதிலாளாகவும் விளையாடினார். மான்செஸ்டர் யுனைட்டடின் முதல் அணியில் அவரது முதல் பருவம் நிறைவு பெறுகையில் ஜிம்மி முர்பி அகாடமி பிளேயர் ஆஃப் த இயர் ஆங்கிகாரத்தை மெக்கெடா பெற்றார். 18 வயதுக்கு கீழ் உள்ளோரின் முக்கிய அணி மற்றும் முதல் அணியில் அவரது செயல்திறன்களுக்காக இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
மெக்கெடாவின் 2009–10 பருவமானது வோல்வர்ஹாம்டன் வேண்டர்ஸ் மற்றும் பார்ன்ஸ்லே ஆகிய அணிகளுக்கு எதிராக லீக் கோப்பையில் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் பங்கேற்றதன் மூலம் தொடங்கியது. நவம்பர் 3 ஆம் தேதி CSKA மாஸ்கோவிற்கு எதிராக சாம்பியன்ஷ் லீக்கில் மெக்கெடா அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி மற்றொரு பங்கேற்பில் பெசிக்டாஸை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதில் கடைசி நேரத்தில் கோல்கீப்பரிடம் இருந்து பாதுக்காப்பதற்கு மெக்கெடா உந்தப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை கிளப்பில் இணைந்து ஆடுவதற்கு நான்கு ஆண்டு ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடுவதற்கு முந்தைய நாளான டிசம்பர் 1 ஆம் தேதி லீக் கோப்பையின் ஐந்தாவது சுற்றில் டிமிட்டர் பெர்பாட்டோவுக்குப் பதிலாக அவர் விளையாடினார் அந்த ஆண்டு முடிவுறுகையில் மெக்கடா காயமுற்றது சுந்தர்லாந்துக்கு எதிரான முக்கியப் போட்டிக்கு அவர் திரும்பிய ஜனவரி 21 ஆம் தேதி வரை அவரை ஓய்வில் இருக்க வைத்தது. எனினும் விரைவில் மீண்டும் அவர் காயமடைந்தார். 2010 கால்பந்து லீக் கோப்பை இறுதியில் ஆஸ்டொனுக்கு எதிரான வெற்றியை அவர் தவறவிட்டார். மார்ச் 27 ஆம் தேதி போல்டனுக்கு எதிரான 4-0 என்ற வெற்றியைக் கொண்ட பருவத்தில் முதல் பிரீமியர் லீக் பங்களிப்பை அவர் ஏற்படுத்தினார். இதில் 84வது நிமிடத்தில் ரியான் கிக்ஸுக்கு பதிலாக அவர் ஆடினார். சாம்பியன்ஷ் லீக்கில் பேயன் முனிச்சிற்கு எதிரான போட்டியில் வெய்னே ரோனியின் கணுக்கால் எழும்பு சேதமடைந்ததன் காரணமாக ஏப்ரல் 3 ஆம் தேதி செல்சாவுக்கு எதிரான உள்ளூர் போட்டியில் பங்கேற்பதற்கு யுனைட்டடின் அட்டவணையின் உயர்ந்த இடத்தில் மெக்கெடாவின் பெயர் இருக்கையில் இருப்பதாக இடப்பட்டிருந்தது. யுனைட்டடு 1–0 என்ற கணக்கில் சரிவில் இருக்கையில் 72வது நிமிடத்தில் பால் ஸ்கோல்ஸுக்குப் பதிலாக மெக்கெடா வந்தார்; மெக்கெடா கலம் இறங்கி இரண்டு நிமிடங்களில் தன் அணிக்காக ஒரு ஆறுதல் கோலை அடிப்பதற்கு முன்பு 79வது நிமிடத்தில் செல்சா அதன் இரண்டாவது கோலை அடித்தது. எனினும் அவர் அடித்த கோல் கையால் பட்டு வலைக்குள் சென்றது என்ற சந்தேகம் அங்கு எழுந்தது.
சர்வதேசத் தொழில் வாழ்க்கை
2009 UEFA ஐரோப்பிய 21 வயதுக்கு கீழான கால்பந்து சாம்பியன்ஷிப்பைத் தொடர்ந்து அந்த நேரத்தில் போட்டிக்கான உறுப்பினர்கள் 23 ஆகக் குறைக்கப்பட்டதன் காரணமாக மெக்கெடாவின் பெயர் 40 பேரைக் கொண்ட பூர்வாங்க அணியில் இடம்பெற்றது. எனினும் மெக்கடாவின் பெயர் இறுதி அணியில் இடம்பெறவில்லை.
12 ஆகஸ்ட் 2009 அன்று ரஷ்யாவுக்கு எதிரான நட்பார்ந்த போட்டியில் இத்தாலி U-21 தேசிய அணிக்காக முதன் முறையாகக் கலம் இறங்கினார்.