text
stringlengths
3
79k
உலளாவிய நிலையில், அவரைக்காய் 2016 இல் 23.6 மில்லியன் டன் விளைந்தது. இதில் சீனா மட்டும் மொத்தத்தில் 79% அளவுக்கு விளைவித்தது (பட்டியல்). உலளாவிய நிலையில், அவரைக்கொட்டை 2016 இல் 26.8 மில்லியன் டன் விளைந்தது. இதில் பெரும்பங்கை மயன்மார், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் விளைவித்தன (பட்டியல்).
பிற பயன்பாடுகள்
அவரையிலைகள் வீடுகளில் உள்ள மூட்டைப்பூச்சிகளைப் பிடிக்க அல்லது கட்டுபடுத்த பயன்படுகின்றன. Microscopic hairs (trichomes) on the bean leaves entrap the insects.
பண்டைய காலத்தில் இருந்து அவரை பலவகை தெய்வமேறல் அல்லது வெறி அயர்தல் (சாமியாட்டம்) முறைகளுக்குப் பயன்பட்டு வருகிறது. அவரையைப் பயன்படுத்திக் குறிசொல்லுதல் அவரைச்சுட்டல் எனப்படும்.
A Bean Collector Window, an extensive gallery of bean varietiesத. மங்கள பிரியதர்சினி (D. Mangala Priyadarshini) ஒரு குறிப்பிடத்தக்க இந்திய பெண்ணியவாதி மற்றும் கன்னட விமர்சகர் ஆவார். நவோதயா, சுருஜனா சைத்யா, வீரசிவா மற்றும் சிறீவதா (பெண்ணியம்) ஆகிய இலக்கியங்களில் பரவலாக அறியப்படும் பேச்சாளராகவும் உள்ளார். 2012 ஆம் ஆண்டு வரை, இவர் வித்யா வர்தக சங்க பட்டப்படிப்பு கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். சேசாத்ரிபுரம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். சுமார் 20 புத்தகங்கள் மற்றும் பல கட்டுரைகளை வெளியிட்டார். "சிறந்த பெண் விமர்சகர்" விருதினையும் பெற்றுள்ளார். இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் வானொலி பேச்சு நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்.
சல்லக்கரேயில் முலுகாநாடு பிராமண குடும்பத்தில் பி.வி. தக்சிணா மூர்த்தி என்பாருக்கு மகளாகப் பிறந்தார். பெங்களூரில் வளர்ந்த இவர், சிறு வயதிலிருந்தே இலக்கிய படைப்புகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். 22 வயதில், விஞ்ஞானி எஸ்ஏ பண்டிட்டை மணந்தார். இவருக்கு மிருதுளா பண்டிட் என்ற ஒரு மகள் உள்ளார்.
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்
ஆய்வறிக்கை: நவோதயா காவியதல்லி அனுபவதா அம்சகலு
சிறீவதா மாட்டு மஹிலா அத்யாயனா
பெலகெரே பர்வதம்மா
பிரசீனா காவ்யா தாரே - 1
மொழிகே மகாதேவம்மா
ஆதுனிகா கன்னட காவ்யதா ஸ்வரூப* பேந்திரே - ஞானபீட பிரசஸ்தி விஜேதரு
மங்களாவின் நூல்கள்இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் அரசர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த போது பாண்டியர் மரபிலிருந்து இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டிய வேந்தர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான சூல வம்சம் குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய பாண்டு என்னும் பாண்டிய மன்னன் அதற்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட மித்தசேனன் என்னும் மன்னனை தோற்கடித்து அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இராசராட்டிர ஆட்சியை தொடங்கி வைத்தான். இவனுக்குப் பிறகு ஐந்து பாண்டியர்கள் வட இலங்கையை ஆண்டார்கள். தாதுசேனன் என்ற இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன் ஆறு இராசராட்டிர பாண்டியர் மன்னர் ஆட்சியிலும் இராசராட்டிரம் மீது படையெடுத்தான். அனைத்து படையெடுப்பிலும் பாண்டிய மன்னர்களுக்கே வெற்றி கிட்டினாலும் திரிதரன் மற்றும் தாட்டியன் போன்ற இராசராட்டிரப் பாண்டியர்கள் இவனால் கொல்லப்பட்டனர். முடிவாக ஆறாம் இராசராட்டிரப் பாண்டிய மன்னனான பிட்டியன் ஆட்சியில் அவனைக்கொன்று இலங்கையைக் கைப்பற்றினான். அதிலிருந்து இராசராடிரப் பாண்டியர் ஆட்சி முடிவு பெற்றது.
உச்ச நிலை
உரோகணம் நாட்டிலுள்ள கதிர்காமம் என்ற முருகன் படைவீட்டில் தாட்டியன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனால் இவனது ஆட்சியில் இராசராட்டிரம் அரசு இலங்கை முழுதும் பரவியிருந்ததை அறிய முடிகிறது. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் உரோகணம் நாட்டில் சில காலம் தங்கியிருந்தான் எனவும் தெரிகிறது.
மூலநூல்
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
சூல வம்சம்
மேற்கோள்கள் சஞ்சய் காந்தி (Sanjay Gandhi; 14 திசம்பர் 1946 – 23 சூன் 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திரா காந்தி மற்றும் பெரோஸ் காந்தியின் இளைய மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் நேரு-காந்தி குடும்ப உறுப்பினராவார். இவரது வாழ்நாளில், தனது தாய்க்குப் பின் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விமான விபத்தில் ஏற்பட்ட மரணத்தைத் தொடர்ந்து இவரது மூத்த சகோதரர் இராஜீவ் காந்தி அவர்களின் தாயின் அரசியல் வாரிசாகி, இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரானார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.
சஞ்சய் புது தில்லியில் 1946 திசம்பர் 14 அன்று இந்திரா காந்திக்கும் பெரோஸ் காந்திக்கும் இளைய மகனாகப் பிறந்தார். மூத்த சகோதரர் ராஜீவைப் போலவே, இவரும் தில்லியில் உள்ள புனித கொலம்பா பள்ளி, டெஹ்ரா டன், வெல்ஹாம் ஆண்கள் பள்ளி , தேராதூன் டூன் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச உறைவிடப் பள்ளியான எகோல் துமாண்டேயில் கல்வி பயின்றார். காந்தி பல்கலைக்கழகத்தில் சேரவில்லை. ஆனால் வாகனப் பொறியியலை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டார். இங்கிலாந்தின் கிரூவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார் அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். இவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டும் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்சய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.
மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு
1971-இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரித்த, நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான தானுந்து' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்சயிடம் அனுபவமோ, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான தயாரிப்பு உரிமத்தையும், ஒப்பந்த உரிமையையும் இவர் பெற்றார். இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971-இல் நிகழ்ந்த வங்காளதேச விடுதலைப் போரும், பாக்கித்தான் மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன. இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரசு பெற்ற மகத்தான வெற்றியும் இந்திரா காந்தியை மேலும் அதிகார ஆற்றல் மிக்கவராக்கின. இன்று இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி உத்யோக் என்ற நிறுவனத்தை, சஞ்சய் காந்தி நிறுவினா. ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் காட்சிப் பொருளாக முன் வைத்தது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்சய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலர் ஊழல் பெருகி வருவதாக ஆட்சேபம் தெரிவித்தனர். மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்சய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். மேலும் ஜப்பான் நாட்டு சுசூக்கி வாகன நநிறுவனத்திடம் இந்தியாவில் மக்களுக்கான மலிவான வாகனங்களை தயாரிப்பதற்கான வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது. ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (சப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெற்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.
நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு
1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார். செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரசு அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயண், ஆச்சார்ய கிருபளானி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள்.
நெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்சய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்சய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. எந்தப் பதவிக்கும் தெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. மார்க் டுல்லி பின்வருமாறு கூறுகிறார், "காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை இந்திரா காந்தி, நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.
அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு
சஞ்சய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்சய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் எனக் கூறப்பட்டது. மிகவும் விரோதமான அரசியல் சூழலில், காந்தி இந்திராவின் ஆலோசகராக முக்கியத்துவம் பெற்றார். இவரது செல்வாக்கு வியத்தகு முறையில் அதிகரித்தது. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்சய் நியமித்ததாகக் கூறப்படுகிறது
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால் தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்சய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.
ஜமா பள்ளி சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்
1976 இல், சஞ்சய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தில்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் இசுலாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான ஜக்மோகன் தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்சய் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டு நபர்களாவது இறந்திருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது. இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.
நெருக்கடி நிலையின் போது, இந்திரா 20 அம்ச பொருளாதார திட்டத்தை வளர்ச்சிக்காக அறிவித்தார். காந்தி தனது சொந்த மிகக் குறுகிய ஐந்து அம்சத் திட்டத்தையும் விளம்பரப்படுத்தினார்.
எழுத்தறிவு
குடும்பக் கட்டுப்பாடு
சாதி ஒழிப்பு
வரதட்சணை ஒழிப்
பின்னர் அவசரகாலத்தின் போது சஞ்சயின் திட்டம் இந்திராவின் 20 அம்சத் திட்டத்துடன் இணைக்கப்பட்டு இருபத்தைந்து அம்சங்கள் கொண்டத் திட்டத்தை உருவாக்கியது.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்சய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஐந்து அம்சத் திட்டங்களில், சஞ்சய் இப்போது குடும்பக் கட்டுப்பாடு முயற்சிக்காக முக்கியமாக நினைவுகூரப்படுகிறார். இது இந்தியாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியது.
கட்டாயக் கருத்தடைத் திட்டம்
செப்டம்பர் 1976 இல், சஞ்சய் காந்தி மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு பரவலான கட்டாய கருத்தடை திட்டத்தைத் தொடங்கினார். திட்டத்தைச் செயல்படுத்துவதில் சஞ்சய் காந்தியின் பங்கு எவ்வளவு என்பது சற்றே சர்ச்சைக்குரியது. சில எழுத்தாளர்கள் காந்தியை அவரது சர்வாதிகாரத்திற்கு நேரடியாகப் பொறுப்பேற்கிறார்கள். சிலர், காந்தியை விட திட்டத்தை செயல்படுத்தின அதிகாரிகளைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
படுகொலை முயற்சி
சஞ்சய் காந்தி மார்ச் 1977 இல் கொலை முயற்சியில் இருந்து தப்பினார். அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, புதுதில்லியில் இருந்து தென்கிழக்கே 300 மைல் தொலைவில் அவரது வாகனம் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
1977-1980: அவமானமும் மீட்சியும்
பிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், ஜனதா கட்சி கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போது, சஞ்சய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திராவையும் சஞ்சயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்சய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.
நாளடைவில், இந்திரா காந்தி கைதானது நியாயமற்றதாக மக்களிடையே தோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரசு கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியிலிருந்து சஞ்சய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்
சஞ்சய் காந்தி 24 செப்டம்பர் 1974 அன்று புதுதில்லியில் தன்னைவிட 10 வயது இளையவரான மேனகா ஆனந்த் என்பவரை மணந்தார். இவர்களுக்கு வருண், இவரது மரணத்திற்கு சற்று முன்பு பிறந்தார். மேனகாவும் வருணும் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகளாக உள்ளனர்.
1980 சூன் 23 அன்று புதுதில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையத்திற்கு அருகே நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி தலையில் காயம் ஏற்பட்டு உடனடியாக இறந்தார்
இவரது மனைவி மேனகாவின் கூற்றுப்படி, சஞ்சய் காந்தி தனது குடும்பத்தை ஜோராஸ்ட்ரிய நம்பிக்கையில் தனது குழந்தைகளை வளர்க்க விரும்பினார்.
இறப்பிற்குப் பின்னர்
காந்தியின் மரணம் இந்தியாவின் அரசியல் முகத்தை பாதித்தது. காந்தியின் மரணம் அவரது தாயார் தனது மற்றொரு மகன் ராஜீவை அரசியலில் ஈடுபடுத்த வழிவகுத்தது. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, அவருக்குப் பிறகு ராஜீவ் இந்தியாவின் பிரதமரானார் . காந்தியின் விதவையான மேனகா இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு தனது மாமியாரிடமிருந்து பிரிந்து, ஐதராபாத்தில் சஞ்சய் விசார் மஞ்ச் என்ற பெயரில் சொந்தக் கட்சியைத் தொடங்கினார். மேனகா பல ஆண்டுகளாக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் பணியாற்றினார். தற்போது, அவரும் அவரது மகன் வருணும் இந்தியாவில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளனர். மே 2014 இல் பிரதமர் நரேந்திர மோதியால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் அமைச்சராக அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மேனகா, தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் மக்களவைத் தொகுதி) பாஜகவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வருண் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபிட் தொகுதியின் பாஜக உறுப்பினர் ஆவார்.
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சஞ்சய் காந்திதிருகோணமலை மாணவர் படுகொலை என்பது 2006 சனவரி 2 ஆம் நாள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
நிகழ்வு
படுகொலைகள் 2006 சனவரி 2 திங்கட்கிழமை இடம்பெற்றன. இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஆவர். இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலித் தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:
மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)
தாக்கங்கள்
இலங்கை அரசு
இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்புள்ள நிகழ்வுகள்
இறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டது.
எல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணை
இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெற்று வந்தது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 சூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2019 சூலை 3 அன்று திருகோணமலை பிரதான நீதவான் முகம்மது அம்சா குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 13 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இவற்றையும் பார்க்க
இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்
Terrible truth of the Trincomalee tragedy பரணிடப்பட்டது 2013-09-06 at the வந்தவழி இயந்திரம், டி. பி. எஸ். ஜெயராஜ்
கோம்பையன்பட்டி
வண்ணார் தெரு
முஸ்லீம் தெரு
திருமல்சாமிபுரம்
அன்னை நகர்
பெரியகோட்டை
கோவுகவுண்டன்பட்டி
பெரியகோட்டை ஆதிதிராவிடர்காலனி
கஷ்தூரிநாயக்கன்பட்டி
குரும்பப்பட்டி
நடுப்பட்டி
பாறைப்பட்டி
பில்லமநாயக்கன்பட்டி
வன்னியபாறைப்பட்டி
கலராம்பட்டி
மேற்கோள்கள் பகாத்தனி இரட்டை அல்லது இரட்டைப் பகாத்தனி (twin prime) என்பது இரண்டு பகா எண்கள் (பகாத்தனிகள்) தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு இரண்டு ஆக உள்ளவை (p, p+2). எடுத்துக் காட்டாக பகாத்தனி எண்களாகிய (5, 7) ஐக் கூறலாம். இவற்றை ஈரகல் பகாத்தனி என்றும் அழைக்கலாம். பகா எண்களிலேயே மிகக்குறைந்த வேறுபாடு கொண்ட எண்கள் பகா எண்கள் (2, 3). ஆனால் இப்படி வேறுபாடு 1 (ஒன்று) என்னும் வகையில் உள்ள இரு பகா எண்கள் வேறு ஏதும் கிடையாது. அடுத்த குறைந்த அளவு வேறுபாடு, (2) இரண்டு என்னும் எண். அப்படிப்பட்ட பகா எண்கள் (பகாத்தனிகள்) : (5, 7), (11, 13), (17, 19), (29, 31), (41, 43), (821, 823) முதலானவை.
முதல் 35 பகாத்தனி இரட்டைகள்
1000 கும் குறைவான பகாத்தனிகளில் மொத்தம் 35 பகாத்தனி இரட்டைகள் உள்ளன. அவையாவன::
Weisstein, Eric W., "Twin Primes", MathWorld.சின்னதடாகம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், சின்னதடாகம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.
இக்கோயிலில் பெருமாள், அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள் 'சிட்டகாங் மாவட்டம் (சட்டோகிராம் மாவட்டம்) (Chittagong District) now Chattogram (வங்காள மொழி: চট্টগ্রাম জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிட்டகாங் நகரம் ஒரு மாநகராட்சியும் ஆகும். இம்மாவட்டத்தின் பெரும் பகுதி வங்காள விரிகுடாவின் கிழக்கிலும், சிறு பகுதி மேற்கிலும் அமைந்துள்ளது.
இயற்கை துறைமுகமான சிட்டகாங் துறைமுகம், வங்காளதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும்.
சிட்டகாங் மாவட்டம் பதினான்கு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் இருபத்தி ஆறு காவல் நிலையங்களும், 1,267 கிராமங்களும் கொண்டுள்ளது.
5282.92 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சிட்டகாங் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 76,16,352 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 38,38,854 ஆகவும், பெண்கள் 37,77,498 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,442 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 58.9% ஆக உள்ளது.
வேளாண்மை, மீன் பிடித்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் ஆகும்.
சமயங்கள்
சிட்டகாங் மாவட்டத்தில் 13148 பள்ளிவாசல்களும், 1025 இந்துக் கோயில்களும், 535 பௌத்த விகாரங்களும் மற்றும் 192 கிறித்தவ தேவாலயங்களும் உள்ளது.