text
stringlengths
3
79k
கோவில்களில் பூச அறைகள் மற்றும் சுவர் ஓவியங்களில் பயன்படுத்தப்படும் பன் அல்லது சித்ரகார் வண்ணப்பூச்சுகள், சடங்கு நடனங்களுக்குப் பயன்படுத்தப்படும் முகமூடிகள், மட்பாண்டங்களில் ஓவியங்கள் மற்றும் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் மரக்கட்டை போன்றவை இவர்களின் பணிகள். பழங்காலத்திலிருந்தே வகுக்கப்பட்ட உடல் உழைப்புப் பிரிவின்படி கைவினைத் தொழில் தந்தையிடமிருந்து மகனுக்குக் கொடுக்கப்படுகிறது. பெண்கள் பொதுவாக கலை முயற்சிகளில் இரண்டாம் பங்கே வகிக்கிறார்கள்.
இனரீதியாக, மற்ற நேவார் சமூகங்களைப் போலவே சித்ரகாரர்களும் பல்வேறு இந்திய-ஆரிய மற்றும் திபெத்-பர்மிய பழங்குடியினர் உட்பட பல்வேறு தோற்றம் கொண்டவர்கள். எனவே, சித்ரகார்கள் ஒரு உறவினர் அல்லது இன ரீதியாக ஒரே மாதிரியான குழுவைக் காட்டிலும் பன்முகத்தன்மை கொண்ட குழுக்கள் என்று ஊகிக்கலாம். காத்மாண்டுவில் சாதி அமைப்பு அழிந்து வருகின்ற போதிலும், இன்னும் சில புன்/சித்ரகாரர் குடும்பங்கள் கலைஞர்களாக தங்கள் பாரம்பரிய பாத்திரத்தை பின்பற்றுகின்றன. பௌத்தம் மற்றும் இந்து சமயம் இரண்டையும் தாந்திரீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பன்/சித்திரக்காரர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
பிரெஞ்சு அறிஞர் ஜெரார்ட் டாஃபின் ஓவியர் சித்ரகாரர்கள் பற்றிய தனது படைப்பில், அவர்கள் இரண்டு முக்கிய குதிகள் (குதி மற்றும் டெஸ்லா குதி) மீது கவனம் செலுத்துகிறார்கள். உறவுமுறை மற்றும் திருமண முறைகள் மற்றும், நிச்சயமாக, அவர்களின் கலை, சில நேரங்களில் மருந்தாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியின் ஓரங்களில் இரண்டு சிங்கங்களை ஓவியமாக வரைந்து, பாம்புகளால் ஏற்படுவதாகக் கருதப்படும் பாதிப்புக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதை விவரிக்கிறார்.
குறிப்பிடத்தக்க சித்திரக்காரர்கள்
ரூபினா சித்ரகார்: விருது பெற்ற கவிஞரும் மற்றும் ஆத்திரேலியாவின் சிட்னி, மற்றும் பிரான்சின் பாரிசு ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மிகவும் திறமையான மனநல மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர்,.
ஜெயதேஜ புனா (சுமார் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்): கி.பி.1420 விஷ்ணு மண்டலத்தில் உள்ள பிரதிஷ்டை கல்வெட்டில் இவர் அந்த ஓவியத்தை வரைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்யாயராஜா புனா மற்றும் உத்ராயராம புனா (சுமார் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி): தோலாகாவைச் சேர்ந்த உயர் பதவியில் இருந்த ககன்சிம்மன் தனது இரண்டு மனைவிகளுடன் இரும்மும் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தார்.
இந்திரராஜா சித்ரகாரர் மற்றும் ஜோகிதேவ சித்ரகாரர் (சுமார் 17 ஆம் நூற்றாண்டு): 17 ஆம் நூற்றாண்டின் மாதிரி புத்தகத்தில் (தயாசஃபூ) குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ் மான் சிங் சித்ரகாரர் (1797-1865): நேபாளத்தில் தண்ணீர் ஓவியத்தை அறிமுகப்படுத்தினார். பிரித்தானிய குடியுரிமை பெற்ற பிரையன் ஹொக்டன் ஹோட்ஸனுக்கு அதிகாரப்பூர்வ ஓவியர்.
பாஜு மான் சித்ரகர்: கலைஞர்/நீதிமன்ற ஓவியர், பிரதமர் ஜங் பகதூர் ராணாவுடன் 1850 இல் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸுக்கு பயணம் செய்தார்
திர்கா மான் சித்ரகர்: அரசவை புகைப்படக் கலைஞர், முதல் நேபாள புகைப்படக் கலைஞர்களில் ஒருவர், இவர் பெரிய வடிவ புகைப்படிவக்கருவிகளைப் பயன்படுத்தினார். 1908 இல் பிரதம மந்திரி சந்திரா ஷம்ஷருடன் இங்கிலாந்து சென்றார்
கணேஷ் மன் சித்ரகாரர்: புகைப்படக் கலைஞர், நேபாளத்தின் முதல் வான்வழி புகைப்படங்கள் இவரால் எடுக்கப்பட்டது. [1] பரணிடப்பட்டது 2019-09-15 at the வந்தவழி இயந்திரம்
காசி கிருஷ்ண லால் சித்ரகார்: மன்னர் திரிபுவன் பிர் பிக்ரம் ஷாவிற்காக பணிபுரிந்தார். காசி பதவியை அடைந்தார். இது அந்த நேரத்தில் மிக உயர்ந்த தரவரிசையில் ஒன்றாகும்.
தேஜ் பகதூர் சித்ரகார் (1898-1971): பிரபல ஓவியர், ஜூத்தா கலைப் பள்ளியின் தலைவர், 'சித்ரகலா உத்யோக் சங்கம்' (இப்போது செயலிழந்துவிட்டது) தொடங்கினார். பிரதம மந்திரி சந்திரா ஷம்ஷேர் ஜங் பகதூர் ராணா, கொல்கத்தாவில் உள்ள அரசு கலைப் பள்ளியில் இவரது பயிற்சிக்கு நிதியுதவி அளித்து, நேபாள கலை காட்சியில் பாரம்பரிய மதக் கலையிலிருந்து நவீன மேற்கத்திய பாணி ஓவியங்களுக்கு மாற்றத்தை அறிவித்தார்.
அமர் சித்ரகார் : கலைஞர், அரச கழக நேபாள அகாதமியின் வாழ்நாள் உறுப்பினர், இவரது ஓவியங்கள் அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் உள்ளன.
தில் பகதூர் சித்ரகார்: கலைஞர்.
மாணிக் மான் சித்ரகார்: பௌபா கலைஞர்
பிருத்வி மான் சித்ரகார்: கலைஞர்
தனா பகதூர் சித்ரகார்: கலைஞர்
மனோகர்மன் புனா (1914-1990): கலைஞர்
மதன் சித்ரகர்: கலைஞர், கலை எழுத்தாளர்
லோக் சித்ரகார் : கலைஞர், கலை ஆசிரியர்
சுஜன் சித்ரகார் : கலைஞர், கலை ஆர்வலர் மற்றும் காத்மாண்டு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் திட்ட ஒருங்கிணைப்பாளர், கலைப் பள்ளி, கலை மற்றும் வடிவமைப்பு மையம்
பிரேம் மன் சித்ரகார் : மூத்த நேபாள பௌபா கலைஞர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
http://www.artsofnepal.com/nepali-art-news/6/giving-their-art-and-soul.html பரணிடப்பட்டது 2021-01-21 at the வந்தவழி இயந்திரம்
http://www.nepalhomepage.com/ganeshphoto/photographers பரணிடப்பட்டது 2019-09-15 at the வந்தவழி இயந்திரம்உலக வர்த்தக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT)) வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறது; பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளுக்கு, உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமுகமான தீர்வுகாண வழிவகுக்கிறது, இந்த ஒப்பந்தங்களைப் பங்கு பெறும் நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டு, அவற்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்புறுதி செய்ய வேண்டும். இது வரையில் உலக வணிக அமைப்பின் (WTO) கவனத்தை ஈர்த்த மிகையான விவகாரங்கள் இதற்கு முன்னால் நடந்த முடிவுறாத வணிகப் பேச்சு வார்த்தைகளாகும், அவற்றிலும் குறிப்பாக உருகுவே சுற்றை (1986-1994) சார்ந்தவையாகும். இந்த அமைப்பானது, தற்போது 2001 ஆம் ஆண்டில் துவங்கிய தோகா மேம்பாட்டுக் கூட்டப்பொருள் (அல்லது தோகா சுற்று) என்ற வணிகமுறைப் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் மிகுதியாக உள்ள நலிந்த நாடுகளின் பங்கேற்பினைச் செழுமைப்படுத்திச் சம நிலையில் வாதம்புரிந்து பங்கேற்பதற்கான பெரும் முயற்சியாகும். இருந்தாலும், "வேளாண் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் எண்ணற்ற ஏழ்மையில் வாடும் குடியானவர்கள் கொண்ட நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில், அதிகமாக இறக்குமதி செய்யும் காலகட்டங்களில், ஏழைக்குடியானவர்களுக்குத் 'தனி பாதுகாப்பு கவசம்' அளிப்பது பற்றிய துல்லியமான செயல்பாட்டிற்கு ஒவ்வாமை இருப்பதனால் வாக்குவாதங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தற்போது, தோகா சுற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இப்போது உலக வணிக அமைப்பில் 153 உறுப்பினர்கள் உள்ளனர், இது உலக அளவிலான வணிகத்தின் மொத்த அளவின் 95% ஆகும். இந்த அமைப்பில் தற்பொழுது 30 பார்வையாளர்களும் உள்ளனர், இவர்களும் உறுப்பினர் ஆவதற்கு முனைந்து வருகின்றனர். இந்த உலக வணிக அமைப்பு, அதன் செயல்பாடுகளை, அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்களை இவ்வப்போது செயல்படுத்தி முறைப்படுத்தி வருகிறது. இரண்டாண்டுகளில் ஒருமுறை அவர்கள் கூடுவார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்களின் ஒரு பொதுக்குழு, கூட்டத்தில் எடுத்த கொள்கை அளவிலான முடிவுகளை செயல்படுத்தி நிர்வாகத்திற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு தலைமை தாங்க, அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தால் தெரிவு செய்த ஓர் உயரதிகாரி, நியமிக்கப்படுவார். உலக வணிக அமைப்பின் (WTO) தலைமைச் செயலகம் செண்டர் வில்லியம் ரப்பர்ட், ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் உள்ளது.
உலக வணிக அமைப்பு மற்றும் ஜிஏடிடி 1947
இரண்டாவது உலகப் போர் நடந்த பிறகு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த பலவகையான நிறுவனங்கள் குறிப்பாக பிரெட்டன் வூட்டின் நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் உலக வணிக அமைப்பின் முன்னோடியான ஜேஏடிடி (GATT) என்ற அமைப்பை நிறுவியது. வணிகம் செய்வதற்காக, இதே அளவிற்கு ஒப்பிடக்கூடிய ஒரு நிறுவனத்தை, சர்வதேச வணிக அமைப்பு என்ற பெயரில், பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்த முடிவானது. சர்வதேச வர்த்தக அமைப்பானது, ஐக்கிய நாடுகளின் (United Nations) தனிச்சிறப்பு பெற்ற அமைப்பாக, வியாபாரத்தில் ஏற்படும் தடைகளை நீக்குவதோடல்லாமல், வியாபாரத்துடன் மறைமுகமாக தொடர்புகொண்ட இதர பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, முதலீடுகள், குறுகிய நோட்டத்துடன் தொழில் செய்வது, பயன்படு பொருள்களுக்கான ஒப்பந்தங்கள் போன்றவைகளையும் மேற்பார்வையிட வல்லதாகும். ஆனால் இந்த சர்வதேச வர்த்தக அமைப்பிறகான ஒப்பந்தத்தை அமேரிக்கா மற்றும் சில இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, இதனால் இவை நிறைவேற்றப்படவில்லை.
வர்த்தகத்திற்கான ஒரு சர்வதேச அமைப்பு இல்லாது போனதால், ஜி ஏ டி டி (GATT) இன்னும் சில வருட நடைமுறையில் ஒரு சர்வதேச நிறுவனமாக 'தன்னைத் தானே' மாற்றியமைத்துக்கொள்ளும்.
ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தை சுற்றுகள்
1948 ஆண்டு தொடங்கி, 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதுவரை, சர்வதேச வாணிபத்தை முறைப்படுத்திய ஒரே ஒரு பலதரப்பட்ட சாதனமாக ஜிஏடிடி (GATT) விளங்கியது. 1950 மற்றும் 1960 ஆண்டுகளுக்கிடையில், சர்வதேச வர்த்தகத்திற்காக ஒரு விதமான நிறுவன இயக்கமுறையை செயல்படுத்த முயன்ற போதிலும், ஜிஏடிடி (GATT) தொடர்ந்து அரை நூற்றாண்டிற்கும் மேல், ஒரு தற்காலிக அடிப்படையில், ஒரு பலவகை ஒப்பந்த ஆட்சிபுரியும் பங்களவு நிறுவனமாக செயல்பட்டுவந்தது.
ஜெனீவாவில் இருந்து டோக்கியோ வரை
ஜிஏடிடி (GATT) யின் கீழ் ஏழு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. முதல் சுற்று ஜிஏடிடி (GATT) பேச்சு வார்த்தைகள் கட்டணங்களை மேலும் குறைப்பதை நோக்கமாக கொண்டது. அப்புறம், அறுபதுக்கிடையில் நடந்த கென்னடி சுற்றில் ஜிஏடிடி (GATT) கொட்டுதலுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்துடன் வணிக மேம்பாட்டிற்காக ஒரு பிரிவை நிறைவேற்றியது. எழுபதுகளில் நடந்த டோக்கியோ சுற்றுகளில் கட்டணங்கள் அல்லாத இதர வணிகத்தடைகளை நீக்குவதற்கும் செய்முறைகளை மேம்படுத்துவதற்கும் முதல் பெரிய முயற்சி நடைபெற்றது, தொடர்ச்சியாக கட்டணங்கள் அல்லாத தடைகள் நீக்கும் பல ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொண்டது, சில நிகழ்வுகளில் ஜிஏடிடி (GATT) யில் நிலவிய புழக்கத்தில் இருக்கும் முறைகளை ஏற்றுக்கொண்டது, மேலும் சில இதர நிகழ்வுகள் முற்றிலும் புதிய பிரிவுகளுக்கு வழிவகுத்தது. இவ்வகையான பலதரப்பு ஒப்பந்தங்களில் சில ஜிஏடிடி (GATT)யின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப் படாததால், அவை அடிக்கடி இயல்பாக "குறிகள்" என வழங்கின. இவற்றில் பல குறிகள் உருகுவே சுற்றில் மாற்றியமைந்தன, மேலும் அவை அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்ட பலவகையான நிற்பந்தங்களாக (கடமை / உத்தரவு) திரிந்தன. அவற்றில் நாலு மட்டுமே பலவகையானதாக எஞ்சியது (அரசு கொள்முதல் செய்வது, மாட்டிறைச்சி, குடியியல் வானூர்தி மற்றும் பால்பண்ணை சார்ந்த பொருட்கள்), ஆனால் 1997 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மாட்டிறைச்சி மற்றும் பால்பண்ணை சார்ந்த ஒப்பந்தங்களை நீக்க முடிவுசெய்தனர், அதனால் எஞ்சியது இரண்டு மட்டுமே.
உருகுவே சுற்று
ஜிஏடிடி (GATT) யின் நாற்பதாவது ஆண்டுவிழாவிற்கு முன்னதாகவே, அதன் உறுப்பினர்கள் ஜிஏடிடி (GATT) யின் முறைகளால் புதிய உலகளவில் விரிந்துவரும் உலக பொருளாதாரத்துடன் தாக்குப்பிடித்து ஒத்துவர இயலவில்லை என்பதை உணர்ந்தனர். 1982 ஆம் ஆண்டில் அலுவலகப்பணித் தொகுதி கூட்ட சாற்றுரையில் அடையாளம் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக (அமைப்பிற்குரிய குறைபாடுகள், உலக வணிகத்தைப்பற்றிய சில நாடுகளின் கொள்கைகளால் ஏற்பட்ட நிரம்பி வழிந்த தாக்கங்களால் ஏற்பட்ட நிலைகுலைவு ஜிஏடிடி (GATT) யால் நிர்வாகம் செய்ய இயலாமல் போனது போன்றவை), எட்டாவது ஜிஏடிடி (GATT) சுற்று, உருகுவே சுற்று என்று அறியப்படுவது- உருகுவேயில் உள்ள புண்டா டெல் ஈஸ்டேயில் 1986 செப்டம்பரில் துவங்கியது. இதுவரை எங்கும் நடைபெறாத வணிகம் சார்ந்த மற்றும் ஒப்புமை கொண்ட மிகப்பெரிய உரிமைக்கட்டளை அதுவேயாகும்: பேச்சுவார்த்தைகள் வணிக முறைகளையும் தாண்டியது மற்றும் பல புதிய துறைகளை சீண்டியது, குறிப்பாக சேவைகள் புரிவதற்கான வணிகம் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை, மேலும் வேளாண் மற்றும் நெசவுத்தொழில் போன்ற உணர்ச்சிவசப்படக்கூடிய துறைகளில் வணிக செய்முறைகளில் சீர்திருத்தங்கள்; அனைத்து அசல் ஜிஏடிடியின் உடன்பாடு விதிகள் திரும்பவும் பரிசீலிக்கப்பெற்றது ஏப்ரல், 1994 ஆம் ஆண்டில் நடந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம், மோரோகொவில் உள்ள மர்ரகேஷில் நடைபெற்றது, அத்துடன் உருகுவே சுற்றின் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அதிகார பூர்வமாக உலக வணிக அமைப்பின் ஆட்சியை நிறுவியதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது, அதனால் இது மர்ரகேஷ் ஒப்பந்தம் என அறியப்படுகிறது.
ஜிஏடிடி (GATT) இன்றும் உலக வணிக அமைப்பின் பொருட்களுக்கான வணிகத்தின் குடை ஒப்பந்தமாக இருந்துவருகிறது, உருகுவே சுற்று பேச்சுவார்த்தைகளின் காரணமாக அவை நிகழ்நிலைப்பட்டுள்ளன.(ஆவணங்களான ஜிஏடிடி (GATT) 1994, நிகழ்நிலை ஜிஏடிடி (GATT) பாகங்கள், மற்றும் GATT 1947, வேறுபடுத்திய பின்னர் அசலான GATT 1947 ஒப்பந்தக்குறிப்பு, இன்னும் GATT 1994 இன் இதயமாக திகழ்கிறது). ஜிஏடிடி 1994 (GATT) ஒப்பந்தம் கூடாமல் மற்றும் மர்ரகேஷ் இறுதி கூட்டத்தில் இதர ஒப்பந்தங்களும் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுள்ளன; 60 ஒப்பந்தங்கள், இணைப்புகள், முடிவுகள், மற்றும் ஏற்றுக்கொண்டவை போன்ற நீண்ட பட்டியலில் அவை பதிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஆறு முதன்மை பாகங்களுடன் கூடிய அமைப்பாக கட்டமைத்துள்ளது:
உலக வணிக அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம்
சரக்கு மற்றும் முதலீடு — சரக்குகளில் வணிகம் செய்வதற்கான பலவகை ஒப்பந்தங்கள், அவற்றில் ஜிஏடிடி 1994 (GATT) 1994 மற்றும் வணிகம் சார்ந்த முதலீட்டு நடவடிக்கைகள் அடங்கும்
சேவைகள் புரிதல் — சேவைகள் புரிவதற்கான பொது ஒப்பந்தம்
அறிவுத்திறனுடையார் சொத்துடமை — அறிவுத்திறனுடையார் சொத்துடமை உரிமைக்கான வணிகம் சார்ந்த பாங்குகளுக்கான ஒப்பந்தம் (ட்ரிப்ஸ்) (TRIPS)
தகராறுகளுக்கான தீர்வு (DSU)
அரசின் வணிக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல் (TPRM)
அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள்
முதல் அலுவலகப்பணித் தொகுதி கூட்டம்
தொடக்க விழா அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் சிங்கப்பூரில் 1994 ஆண்டில் நடந்தது. இந்த கூட்டத்தில், முதல் முறையாக விவாதத்திற்கு கொண்டுவந்த நான்கு விவகாரங்களில், மிகையாக மேம்பாடடைந்த நாடுகள் மற்றும் மேம்பாடடைந்த மற்றும் மேம்பட்டு வரும் பொருளாதாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன, அதன் காரணமாக அவை நான்கையும் சுட்டிக்காட்டும் வகையில் அவற்றை "சிங்கப்பூர் விவகாரங்கள்" என அழைத்தனர்.
இரண்டாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம்
இக்கூட்டம் ஜெனீவா சுவிட்சர்லாந்தில் நடந்தேறியது.
மூன்றாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம்
சீயாட்டில், வாஷிங்டனில் நடந்த மூன்றாவது கூட்டம் தோல்வியில் முடிவுற்றது, பெரிய அளவில் மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மேலும் காவல் துறையினர் மற்றும் தேசீய பாதுகாவலர்களுடைய மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் முறை உலகளவில் சர்ச்சைக்குள்ளாயிற்று.
நான்காவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம்
இது பாரசீக வளைகுடாவில் உள்ள நாடான கட்டாரில் உள்ள தோஹவில் நடைபெற்றது தொஹ மேம்பாட்டு சுற்று இந்த கூட்டத்தில் தொடங்கியது. இந்தக்கூட்டத்தில் சீனா உறுப்பினராக சேர்வதையும் அனுமதித்தது, அந்நாடு 143 ஆவது உறுப்பினர் நாடாகும்.
இந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் கான்கன் , மெக்ஸிகோ வில் நடைபெற்றது, தொஹ சுற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நோக்குடன் அது நடந்தது. 22 தெற்கு நாடுகள் கொண்ட ஒரு கூட்டு, G20 மேம்பாடடையும் நாடுகள், இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் தலைமையில், வடக்கு நாடுகளுடைய சிங்கப்பூர் விவகாரங்கள் குறித்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர் மேலும் அவர்கள் வேளாண் தொழிலுக்கு ஐக்கிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகள் அளித்துவரும் மானியத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பேச்சு வார்த்தைகள் அத்துடன் முறிந்தன மேலும் அவை முன்னேறவில்லை.
ஆறாவது அலுவலகப் பணித் தொகுதி கூட்டம்
ஆறாவது உலக வணிக அமைப்பு சார்ந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் ஹாங் காங் இல் 13 டிசம்பர் முதல் 18 டிசம்பர், 1995 வரை நடந்தது. நான்கு ஆண்டுகள் பழமையான தோஹ மேம்பாட்டு நிகழ்ச்சி நிரல் பேச்சுவார்த்தைகளுக்கு தீர்வு காண்பதை முக்கியமாகவும் மற்றும் அந்த சுற்றை 2006 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்குடனும் நடந்தது.
இந்த கூட்டத்தில், நாடுகள் வேளாண் ஏற்றுமதி தொழிலுக்கு வழங்கிவரும் மானியத்தை படிப்படியாக 2013 ஆண்டின் முடிவுக்குள்ளும் மேலும் பஞ்சு ஏற்றுமதிக்கான மானியத்தை 2006 ஆண்டுக்குள்ளும் முடிவுக்கு கொண்டுவர இசைந்தனர். மேம்பாடு அடைந்து வரும் நாடுகளுக்கு அளித்த இதர சலுகைகளில் வரியில்லாத, கட்டணமில்லாத சரக்குகளை மிகவும் குறைந்த அளவிற்கு மேம்பட்ட நாடுகளில் இருந்து பெறுவதற்கான உடன்பாடு, அது ஐரோப்பிய ஒன்றியத்தின் "அனைத்தும் ஆனால் படைக்கலம் மட்டும் இல்லாமல்" (Everything But Arms) என்ற முனைப்பை ஆதாரமாக கொண்டதாகும். மேலும் 3% வரையிலான கட்டண வரிகள் விலக்கு அளிக்காததாக இருக்கும். இதர பெரிய விவகாரங்களை பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2010 ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்தது.
ஏழாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம்
உலக வணிக அமைப்பின் பொதுக்குழு, 26 மே 2009 அன்று, ஏழாவது உலக வணிக அமைப்பு (WTO) அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தை ஜெனீவாவில் 30 நவம்பர் முதல் டிசம்பர் 2009 வரை நடத்த முடிவுசெய்தனர். தலைவர் அம்ப விடுத்த ஒரு குறிப்பு மரியோ மடுஸ் கூறியதாவது இரு வருடங்களுக்கு ஒரு முறை சந்திக்கும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளை நீக்குதல் வேண்டும், அதுவே 2005 தொஹ சுற்று, முடிவில் காலம் கடந்து தோல்வி கண்டது, மேலும் நடக்கவிருக்கும் 'அளவு குறைந்த' கூட்டமானது பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள் கொண்டதாக இருக்காது, ஆனால் "சிறு குழுக்கள் கொண்ட பேரம் பேசும் அமைப்பாக அல்லாமல் மற்றும் இயல்பான பேச்சுவார்த்தை நடத்தும் கட்டமைப்பாக இல்லாமல், ஒளிவு மறைவில்லாமல் மற்றும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் நடக்கும் சூழ்நிலைகளை வலியுறுத்தும்".
தோகா சுற்று
உலக வணிக அமைப்பு தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கான சுற்றை, தோகா மேம்பாட்டு நிகழ்ச்சிநிரல் என அறியப்படுவது, அதன் நான்காம் அலுவலகப்பணித்தொகுதி கூட்டத்தில், நவம்பர் 2001 முதல் தோகா, கத்தாரில் துவங்கியது. தோகா சுற்று மிகவும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய, உலகமயமாக்குவதற்கான எண்ணத்தை கருத்தில் கொண்டு, மேலும் உலகத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு உதவி புரியும் நோக்குடன், குறிப்பாக வேளாண் தொழில் தடைகள் மற்றும் மானியத்தொகை விவகாரங்களை அகற்றுவதற்கான ஒரு வெளிப்படை முயற்சியாகும். அதன் துவக்க நிகழ்ச்சிநிரல் வணிக குறைகளை மேலும் தளையகற்றி விடுவித்து, தற்காலத்துக்கேற்ற புதிய விதிமுறைகளை அமுல்படுத்தி, மேம்பாடு அடையும் நாடுகளுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைப்பை வலுவூட்டுவதே.
பல முறை பேச்சுவார்த்தைகள், அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடந்தாலும், பேச்சுவார்த்தைகள் மிகவும் காரசாரமாக இருந்ததோடல்லாமல் எந்த முடிவுக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பல முக்கிய விவகாரங்களில், வேளாண் மானியம் போன்றவையும் அடங்கும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
பணிகள்
உலக வணிக அமைப்பின் பல்வேறுபணிகளில், கீழே கொடுக்கப்பட்டவை மிகவும் முக்கியமானதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்:
முடிவெடுத்த ஒப்பந்தங்களை நடைமுறையில் நிறைவேற்றுதல், நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் போன்றவற்றை மேற்பார்வையிடுதல்.
பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சுமுகமான சூழ்நிலையுடன் கூடிய ஒரு மன்றத்தை அளித்து விவகாரங்களை தீர்த்து வைத்தல். கூடுதலாக, தேசிய வணிகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அவற்றை பபரப்புதல், மற்றும் வணிகக் கொள்கைகளின் முன்-பின் ஒத்திணக்கம் மற்றும் ஒளிவு மறைவின்மை சரியாக உள்ளதா என்பதை உலக பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் போது கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது போன்றவை உலக வணிக அமைப்பின் முதலாய கடமையாகும். உலக வணிக அமைப்பின் மற்றுமொரு தலையாய கடமை மேம்பட்டுவரும், மிக குறைவாக மேம்பட்ட மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுககளுக்கு இந்த சூழ்நிலைகள் மாறிவரும் வேளையில், உலக வணிக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் பிரிவுகளை தொழில்நுட்ப கூட்டுமுயற்சி மற்றும் பயிற்சிகள் மூலம் தெரிந்துகொள்ள வைப்பதுமாகும். உலக வணிக அமைப்பு பொருளாதார ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளது: உலக வணிக உண்மைநிலை குறித்த மதிப்பீடுகள் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் போன்றவைகளை தயாரித்து அவ்வப்போது மற்றும் ஆண்டறிக்கைகளில் வெளியிட்டு வருகிறது. இறுதியாக, உலக வணிக அமைப்பு பிரெட்டன் வுட்டினுடைய இரு முறைகளான, ஐ எம் எப் மற்றும் உலக வங்கியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.
வணிக முறையின் கொள்கைகள்
உலக அரங்கில் அனைத்து நாடுகளும் பங்கேற்று வாணிபம் புரிந்திடும் நோக்குடன் வணிகத்திற்கான கொள்கைகளை வரையறுத்து உலக வர்த்தக அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தை கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்பு விளைவுகளை வரையறுக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை. அதாவது, வணிக கொள்கைகளுக்கான விளையாட்டுகளுக்கான விதிமுறைகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. 1994 ஆண்டிற்கு முந்தைய ஜிஏடிடி அமைப்பு (pre-1994 ஜிஏடிடி (GATT)) மற்றும் உலக வணிக அமைப்பினை பற்றி தெரிந்துகொள்ள ஐந்து விதிமுறைகள் முக்கியமாகும்:
பாகுபாடு இல்லாமை. இதில் இரண்டு பெரிய பாகங்களுண்டு: மிகவும் வேண்டிய நாடு (MFN) விதிமுறை, மற்றும் தேசிய நடத்துதல் கொள்கை
இவை இரண்டும், சரக்குகள், சேவைகள் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை உலக வணிக அமைப்பின் விதிமுறைகளில் வரையறுத்துள்ளது, ஆனால் அவற்றின் துல்லியமான நோக்கம் மற்றும் இயல்பு ஒவ்வொரு வகைக்கும் வேறுபடும். இந்த மிகவும் வேண்டிய நாடு MFN விதிமுறைகளின் படி உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரே மாதிரியான நியமங்களை இதர உலக வணிக அமைப்பின் உறுப்பினருடைய அனைத்து வணிக விவகாரங்களுக்கும் அமைக்க வேண்டும், அதாவது ஒரு உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக வணிகம் செய்யும் போது அதற்காக அளிக்க விரும்பும் மிகவும் உன்னதமான நிலவரங்களை மற்ற இதர உறுப்பினர்களுக்கும் பாகுபாடில்லாமல் அளிக்க முன்வரவேண்டும். "யாராவது ஒருவருக்கு சில சலுகைகளை அளித்தால், அச்சலுகைகளை எஞ்சி இருக்கும் அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுக்கும் அளிக்க வேண்டும்." தேசிய நடத்துகை என்றால் இறக்குமதி சரக்குகள் மற்றும் உள்நாட்டில் தயாரித்த சரக்குகள் இரண்டும் பாகுபாடில்லாமல் ஒரே முறையில் சீராக பார்க்க வேண்டும் (குறைந்தது வெளிநாட்டு சரக்குகள் சந்தையில் வந்த பிறகாவது) மேலும் இந்த விதிமுறைகள் வணிகம் செய்வதில் கட்டணம் இல்லாத தடைகளை அகற்றுவதற்காகவே ஏற்பட்டன. (எடுத்துக்காட்டு:தொழில்நுட்ப தரங்கள், பாதுகாப்பு தரங்கள் போன்றவை இறக்குமதி சரக்குகளுக்கு எதிராக பாகுபடுவது).
பிரதிச்சலுகை. எம்எப்என் விதிமுறை (MFN rule) காரணமாக எழும் இலவச சலுகைகளில் நோக்கெல்லையை ஒரு அளவிற்குள் வைத்திடவும் மற்றும் வெளிநாட்டு சந்தையில் பங்குபெற ஒரு நல்ல அணுக்கம் கிடைப்பதற்குமான விருப்பத்தையும் தெரிவிக்கிறது. இது தொடர்பாக ஒரு நாடு பேரம்பேசி கலந்துரையாட, அதனால் கிடைக்கும் ஆதாயம் ஒரு தலைப்பட்சமான தாரளமயமாக்குதலை விட மிகையாக இருத்தல் வேண்டும்; பிரத்திச்சலுகைகள் மூலமாக இவ்வாறான ஆதாயங்கள் கிடைக்க வழி வகுக்கிறது.
கட்டமைத்த மற்றும் வலிந்து செயற்படுத்துதலுக்கான கடமைகள். உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் பலவகை வணிக பேச்சுவார்த்தைகளில் அறிவித்த கட்டண வாக்குறுதிகள் மற்றும் அணுக்கத்திற்கான வழிமுறைகள் ஒரு கால அட்டவணையில் எண்ணிக்கையுடன் பட்டியலிட வேண்டும். இது போன்ற கால அட்டவணைகள் "மேல் மட்ட கடமைகளை " நிலைநாட்டும்: ஒரு நாடு தனது கட்டமைப்புகளை மாற்றலாம், ஆனால் அவற்றை அந்நாட்டு வணிக கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே செய்யலாம், அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு வணிகத்தில் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் திருப்தி அடையவில்லை என்றால், குற்றத்தை முறையிடும் நாடு உலக வணிக அமைப்பின் தகராறுகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை அழைத்து செயல்படுத்தலாம்.
ஒளிவின்மை. உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் தங்கள் நாட்டின் வணிக விதிமுறைகளை அச்சிட்டு வெளியிடவேண்டும், வணிக ரீதியில் பாதிக்கும் நிர்வாக முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான நிறுவனங்களை தடங்கலில்லாமல் கட்டிக்காக்க வேண்டும், இதர உறுப்பினர்களுக்கு தேவைப்படும் தகவல்களை அவ்வப்போது வழங்குதல் வேண்டும், மேலும் வணிக ரீதியிலான கொள்கை மாற்றங்களை உடனுக்குடன் உலக வணிக அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறான உட்புறத்து ஒளிவுமறைவின்மையுடன் கூடிய தேவைகளுடன் காலமுறையில் தனி நாட்டை குறிக்கும் அறிக்கைகள் (வணிக கொள்கை மறுபரிசீலனைகள்) வணிக கொள்கைகளுக்கான மறுபரிசீலனை இயக்க அமைப்பு (TPRM) மூலமாக மிகைநிரப்பி இணைப்புகளை சேர்த்து உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு உலக வணிக அமைப்பு முறைகள், முன்னறிந்து கொள்ளக்கூடிய தன்மை மற்றும் நிலைத்தன்மைகளை மேம்படுத்தி, மேலும் ஒதுக்கீடு மற்றும் அது போன்ற தடைகளை விதிக்கும் நடைமுறைகளை நீக்கி, இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்கின்றன.
பாதுகாப்பு வால்வுகள் . சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அரசுகளால் வணிகத்தை கட்டுப்படுத்த இயலும். இத்திசையில் மூன்று வகையிலான முன்னேற்பாட்டு ஒதுக்கங்களை காணலாம்: பொருளாதாரமல்லாத கொள்கைகளை அடைவதற்கான விதிமுறைகள், நியாயப் போட்டிகளை அனுமதிக்கும் நோக்குடைய விதிமுறைகள்; மற்றும் பொருளாதார காரணங்களுக்காக குறிக்கீடுகளை அனுமதிக்கும் தனிவகைமுறைகள்.
எம்எப்என் கொள்கைகளுக்கு விதிவிலக்கானவை மேம்பாடடைந்து வரும் நாடுகளுக்கு அளிக்கும் சலுகைகள், தடையிலா வணிகம் புரிவதற்கான இடங்கள் மற்றும் சுங்க ஒன்றியங்கள்.
சரக்கு மன்ற அமைப்பில் 11 வகை குழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியை செயல்படுத்துகின்றன. உலக வணிக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குழுக்களில் பங்கேற்கின்றனர். நெசவுத்தொழில் கண்காணிப்புக்குழு மற்ற குழுக்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தாலும், அதுவும் சரக்கு மன்றத்திற்குள் அடங்கியதே. இந்த அமைப்பிற்கு அதனுடைய தனித் தலைவர் உண்டு மேலும் அது 10 உறுப்பினர்கள் கொண்டது. நெசவுத்தொழில் சார்ந்த பல குழுக்களுடன் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளது.
அறிவுசார் சொத்துரிமை சார்ந்த வணிக முறையிலான கோட்பாடுகளுக்கான குழு
உலக வணிக அமைப்பிலுள்ள அறிவுசார் சொத்துக்களுக்கான தகவல்கள், செய்திகள் மற்றும் TRIPS குழுமத்தின் (TRIPS Council) அலுவலகக்குறிப்புகள், மற்றும் இத்துறையில் உலக வணிக அமைப்பு இதர சர்வதேச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பணிகள்
சேவைகள் வழங்குவதற்கான குழுமம்
பொதுக்குழுவின் அமைப்பின் வழிகாட்டுதலுடன் சேவைகள் புரிவதற்கான குழுமம் செயல் படுகிறது மேலும் அக்குழு சேவைகள் அளிப்பதற்கான வணிகத்திற்கான பொது ஒப்பந்தங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது அதன் பொறுப்பாகும் (GATS) இந்த குழுமம் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் திறந்து வைத்ததாகும், மேலும் தேவைகளுக்கேற்றபடி துணைக்குழுமங்களையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
சேவைக் குழுவிற்கு மூன்று துணைக்குழுக்கள் உள்ளன: நிதி சேவைகள், வீட்டுக்குரிய ஒழுங்கு முறைகள், GATS விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள்.
இதர குழுக்கள்
பொதுக் குழுவில் பலவகை குழுக்கள், பணிக்குழுக்கள் மற்றும் பணி புரியும் கட்சிகள் உள்ளன.
குழுக்களின் விவரம்
வணிகம் மற்றும் சூழல்
வணிகம் மற்றும் மேம்பாடு (மிகக்குறைவாக மேம்பாடடைந்த நாடுகளுக்கான துணைக்குழு)
வட்டார வணிக ஒப்பந்தங்கள்.
வெளிக் கொடுப்பு நிலைதொடர்புள்ள கட்டுப்பாடுகள்.
வரவு செலவுத் திட்டம், நிதி மற்றும் நிர்வாகம்.
பணிகள் செய்யும் கட்சிகள்
வாரிசாக ஏற்றல் அல்லது இணக்கம்
பணிக் குழுக்கள்
வணிகம், கடன் மற்றும் நிதி
வணிகம் மற்றும் தொழில் நுட்பப்பரிமாற்றம்
வணிக ஒப்பந்த உடன்பாட்டுக் குழு
வணிக ஒப்பந்த உடன்பாட்டுக் குழு (TNC) தற்போது வணிக சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் தலைவர் உலக வணிக அமைப்பின் உயரதிகாரியாகும். இக்குழு தற்போது தோகா மேம்பாட்டு சுற்றின் பேச்சுவார்த்தைகளில் சமரசம் காண முயன்று வருகிறது.
வாக்களிப்பு முறை
உலக வணிக அமைப்பு ஒரு நாடு, ஒரு வோட்டு முறையில் செயல்படுகிறது, ஆனால் இது வரை வோட்டு எடுப்பதற்கான சூழ்நிலைகள் எழவில்லை. பொதுவாக கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகள் எடுப்பதே முறையாகும், மற்றும் ஒப்புநோக்கத்துடைய சந்தையின் அளவே அவர்களுக்கு பேரம் பேசுவதற்கான வலிமையை அளிப்பதாகும். கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகளால் உள்ள நன்மையானது அதன் மூலமாக மிகவும் பரவலாக பங்கேற்பவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையிலான முடிவுகளை ஏற்பதாகும். கருத்தொருமை கொண்ட முடிவுகள் எடுப்பதில் உள்ள குறைபாடுகளில் முடிவெடுப்ப்பதற்குண்டான நீண்ட நேரம் மற்றும் பல சுற்றுகள் கொண்ட பேச்சுவார்த்தைகளாகும். இறுதி முடிவுகளுக்கான ஒப்பந்தங்களில் கருத்தொருமை பெறாத பொருட்களுக்கு தெளிவற்ற இருசொல்படும் வார்த்தைகள் பயன்பாட்டினால் விளையக்கூடிய எதிர்கால குழப்பங் களும் அடங்கும்.
உண்மை நிலவரம் என்ன என்றால், உலக வணிக அமைப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களின் கருத்தொருமையுடன் நடப்பதில்லை, ஆனால் நாடுகளின் சிறு சிறு குழுக்கள் நடத்தும் இயல்பான பேச்சுவார்த்தைகள் மூலமாக நடைபெறுகின்றன. இவ்வகை பேச்சுவார்த்தைகளை "பச்சை அறை" (Green Room) பேச்சுவார்த்தைகள் என அழைக்கப்படுகிறது, (ஜெனீவாவிலுள்ள உலக வணிக அமைப்பு மேலதிகாரியின் அலுவலக அறையின் வண்ணம்), அல்லது "சிறு -அமைச்சுகள்", இதர நாடுகளில் அவற்றை மேற்கொள்ளும் போது. இவ்வகை செயல்முறைகளை உலக வணிக அமைப்பின் மேம்பாடடைந்த் நாடுகளின் உறுப்பினர்கள் மிகவும் விமரிசனம் செய்துள்ளனர், ஏன் என்றால் அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைத்திருப்பதாகும்.
ரிச்சர்ட் ஹரோல்ட் ச்டீன்பேர்க் (2002) கூறுவது என்னவென்றால், உலக வணிக அமைப்பின் கருத்தொருமை கொண்ட ஆட்சி மாதிரி சட்டத்திற்குட்பட்ட துவக்க பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுத்தாலும், இறுதி சுற்றுகளில் அவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் சக்தி வாய்ந்த பேரங்கள் காரணம் அவை அந்நாடுகளுக்கு சாதகமாக அமைகின்றன, அதனால் அது சம நிலையிலான மேம்பாடாக கருத இயலாது.
சிக்கல்களுக்கு தீர்வு காணல்