text
stringlengths
3
79k
1994 ஆம் ஆண்டில், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மர்ரகேஷ் ஒப்பந்தத்தில் கையிட்ட "இறுதி சட்டம்" என்ற தலைப்பின் கீழ் வழங்கிய தகராறுகளுக்கு தீர்வு காணல் (DSU) விதிமுறைகள் மற்றும் செயல் முறைகளை பற்றி நன்கு புரிந்து கொண்டதாக தெரிவித்தனர் மற்றும் அதை செயல்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். தகராறுகளுக்கு தீர்வு காண்பது என்பதை உலக வணிக அமைப்பின் பல வகை வணிகமுறைகளை தாங்கிப்பிடிக்கும் நடுவிலமைந்த தூணாக கருதுகின்றனர், மற்றும் "உலக பொருளாதார வளர்ச்சிக்கான அவர்களுடைய தனி பங்களிப்பாக அதை போற்றுகின்றனர்." மேலும், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு சார்ந்த உறுப்பினர்களில் யாரேனும் விதிமுறைகளை மீறியதாக நினைத்தால், அவர்களே நேரிடையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வணிக அமைப்பின் பலவகை தகராறுகளை தீர்வு காணும் முறையை பின்பற்றி அனுசரிப்பதாக வாக்களித்துள்ளனர்.
உலக வணிக அமைப்பின் தகராறுகளை தீர்க்கும் வழிமுறைகளை செயல்படுத்த, அதற்கான தனி DSB குழுக்கள், மேல்முறையீட்டு ஆணைக்குழு, உலக வணிக அமைப்பு செயலகம், நடுவர்கள், பிறர் சார்பற்ற வல்லுனர்கள் மற்றும் பல தனி நிறுவனங்கள் போன்றவை தேவைப்படும்.
இணக்கம் மற்றும் உறுப்பாண்மை
நடைமுறையில் உலக வணிக அமைப்பின் உறுப்பினராக ஆவதென்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்டதாகும், மேலும் அவ்வமைப்புடன் இணைவதற்கு நாட்டின் பொருளாதார மேம்பட்டு நிலை மற்றும் தற்போதைய வணிக செயல்பாட்டின் நிலைமையை பொறுத்திருக்கிறது. இந்த நடவடிக்கை சுமார் ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம், சராசரியாக, ஆனால் அதற்கும் மேலும் ஆகலாம், அந்நாடு முழுதுமாக ஒத்திசைவு செய்யவில்லை என்றால் மற்றும் அரசியல் காரணங்கள் இடைஞ்சலாக இருந்தால். உலக வணிக அமைப்பின் தனிப்பட்ட செயல்முறையாக, இணைவதற்கு ஆர்வம் காட்டும் பிரிவினருக்கிடையே கருத்தொருமை இருந்தால் மட்டுமே அதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.
இணைவதற்கான செய்முறை
உலக வணிக அமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்ட நாடுகள் முதலில் அதற்கான விண்ணப்பத்தை பொதுக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும், உலக வணிக அமைப்பின் ஒப்பந்தங்கள் சார்ந்த மற்றும் தொடர்புள்ள அந்நாட்டின் அனைத்து வணிக விவகாரங்களையும் மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பற்றியும் குறிப்பிட்டு விளக்க வேண்டும். உலக வணிக அமைப்பிறகு அளிக்கும் விண்ணப்பம் ஒரு நிகழ்ச்சிப்பதிவுக் குறிப்பாக இருக்க வேண்டும், மேலும் அதனை அதில் ஈடுபாடுள்ள அனைத்து உலக வணிக அமைப்பு அங்கத்தினரும் கொண்ட செயற்குழு ஆராய்ந்து பார்க்கலாம். சி. மைக்கேலோபௌலோஸ், உலக வணிக அமைப்பு இணக்கம், 62-63</ref> பின்னணி தகவல்களனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு, செயற்குழுவானது விண்ணப்பத்தில் அளித்த தகவல் மற்றும் உலக வணிக அமைப்பு விதிமுறைகளுக்கிடையே விளங்கும் வேறுபாடுகள் மீதுகவனம் செலுத்தும், மேலும் விண்ணப்பதாரரின் சர்வதேச மற்றும் உள்நாட்டு வணிக கொள்கைகள் மற்றும் சட்டங்களை கூர்ந்து ஆராயும். இந்த செயற்குழு, உலக வணிக அமைப்புடன் விண்ணப்பித்த நாடு இணைவதற்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கும், மேலும் உலக வணிக அமைப்பின் விதிமுறைகளுடன் ஒத்திசைந்து செயல்படுவதற்கான கால அவகாசமும் நல்கும். இணக்கத்திற்கான இறுதி கட்டங்களில் விண்ணப்பமளித்த நாடு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கிடையே இருதரப்பு விவாதங்கள் மேற்கொள்ளப்படும் மற்றும் அதில் சலுகைகள் மற்றும் கட்டண அளவிற்கான விதிமுறைகள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கான சந்தையுடன் இணைவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்படும். இரு தரப்பினரிடையே மட்டும் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், புதிய அங்கத்தினரின் கடமைகள் பொதுவான பாகுபாட்டின்மை விதிமுறைகளின் படி, ஒரேபோல மற்றும் சமமாக மற்ற இதர உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இரு தரப்பினர்களுக்கிடையே ஆன பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும், செயற்குழு பொதுக்குழுவிற்கு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்திற்கு ஒரு இணைப்பிற்கான தொகுப்பினை அளிக்கும், அதில் செயற்குழுவுடன் நடந்த அனைத்து கூட்டங்களைப் பற்றிய தொகுப்பு, இணைவதற்கான நெறிமுறை (அங்கத்தினருக்கான உறுப்பாண்மை ஒப்பந்த படிவத்தின் வடிவம்), மற்றும் பட்டியல்கள் ("கால அட்டவணை") உறுப்பினராகப்போகும் நாட்டின் கடமைகள். ஒரு முறை பொதுக்குழு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இணைவதற்கான நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு விட்டால், விண்ணப்பித்த நாடு அதனுடைய பாராளுமன்றத்தில் இணைப்பிற்கான தொகுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்குப்பிறகே அந்நாடு உறுப்பினராக சேர இயலும்.
உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள்.
உலக வணிக அமைப்பு 153 உறுப்பினர்களை கொண்டது. (உருகுவே சுற்றில் கலந்து கொண்ட 123 நாடுகளும் நிறுவிய நாள் அன்றே உறுப்பினராவதற்கு கையொப்பமிட்டனர், பின்னர் வந்தவர்கள் எல்லோரும் பிறகே உறுப்பினர்களாயினர்). ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த 27 நாடுகளும் ஐரோப்பிய சமுதாய பிரதிநிதிகள் என அறியப்பட்டனர்.
உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒரு இறையாண்மை வாய்ந்த நாட்டின் அங்கத்தினர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, அவை வெளிநாடுகளுடன் வர்த்தக உறவுகள் புரியும் மற்றும் சுங்கவரி வசூலிக்கும் ஒரு முழு சுயாட்சி கொண்ட தனி இடமாகவும் இருக்கலாம். இப்படித்தான் ஹாங் காங் (அதாவது "ஹாங் காங், சீனா" 1997) ஜிஏடிடி (GATT) அமைப்பில் ஒரு ஒப்பந்த நாடாக சேர்ந்தது, மற்றும் ரிபப்ளிக் ஒப் சீனா (ROC) (பொதுவாக தைவான் என அறியப்படுவது, அதன் சுயாட்சி நிலவரத்தை சீனா ஒத்துக்கொண்டதில்லை) உலக வணிக அமைப்பில் 2002 ஆம் ஆண்டில் "தனி சுங்கவரி விதிக்கும் தைவான், பெங்கு, கின்மேன் மற்றும் மட்சு நாடுகள் கூடிய" (சைனீஸ் தைபெய்) யாக அங்கம் வகிக்கின்றது. உறுப்பினர்கள் அல்லாத பலர் (30) பார்வையாளர்களாக உலக வணிக அமைப்பில் உள்ளனர் மேலும் அவர்களையும் அங்கத்தினர் ஆக்கும் நடவடிக்கைகள் தற்போது நடந்துவருகிறது. ஈரான், ஈராக், மற்றும் ரஷ்ய நாடுகள் பார்வையாளர்களாகவே உள்ளனர் மேலும் அவர்கள் இன்னும் அங்கத்தினர்களாகவில்லை. ஹோலி சி என்ற இடத்தை தவிர, இதர நாடுகள் பார்வையாளர்கள் ஆனதிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் புரிந்து இணக்கம் செய்துகொள்ள வேண்டும். சில சர்வதேச அரசுகளுக்கிடையேயான நிறுவனங்களும் உலக வணிக அமைப்பின் பார்வையாளர்களாக அனுமதி பெற்றுள்ளனர். இது வரை 14 நாடுகள் மற்றும் 2 வட்டாரங்கள் உலக வணிக அமைப்புடன் அதிகாரபூர்வமான தொடர்புகளை வைத்துக்கொள்ளவில்லை.
ஒப்பந்தங்கள்
உலக வணிக அமைப்பு தற்போது சுமார் 60 வேறுபட்ட ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு வருகிறது, ஒவ்வொன்றும் சர்வதேச சட்ட உரை நிலை கொண்டவையாகும். இணக்கத்திற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் உறுப்பினர் நாடுகள் உலக வணிக அமைப்பின் அனைத்து ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டு அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். சில முக்கியமான ஒப்பந்தங்களைப்பற்றிய சிறிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA)
வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA) 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு தொடக்கத்திலேயே செயல்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூன்று மையக்கருத்துகளை கொண்டது, அல்லது "தூண்கள்": உள்நாட்டு ஆதாரம், சந்தையுடன் தொடர்பு மற்றும் ஏற்றுமதிக்கான மானியங்கள்.
சேவைகள் வழங்குவதற்கான பொது ஒப்பந்தம் (GATS)
ஜிஏடிடி (GATT) அதாவது சரக்குகளில் வணிகம் செய்வதற்காக உருவாக்கிய கட்டணம் மற்றும் வணிக (முறைகளுக்கான) பொது ஒப்பந்தத்தை போலவே ஒரு உடன்பாட்டை சேவைகள் புரியும் தொழில்துறைக்கும் நீட்டுவதற்காகவே, சேவைகள் புரியும் வணிகத்திற்கான பொது ஒப்பந்த முறை (GATS) உருவானது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1995 முதல் அமுலில் உள்ளது.
அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs)
அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs) பலவகை அறிவுசார் சொத்துரிமைக்கான (IP) குறைந்த அளிவிலான தர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைப்பற்றிய பேர நடவடிக்கைகள் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தைகளுடன் உருகுவே சுற்றின் இறுதியில் மேற்கொண்டது.
துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த (SPS) ஒப்பந்தம்
துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த ஒப்பந்தத்தை பயன் படுத்துவது குறித்தான - SPS ஒப்பந்தம் எனவும் அறியப்படுவது - உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப் பேச்சுவார்த்தைகளின் போது நிகழ்ந்தது, மேலும் 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதில் இருந்து செயலாக்கத்தில் உள்ளது.
SPS ஒப்பந்தத்தின் கீழ், உலக வணிக அமைப்பு உணவுப் பொருட்களின் பாதுகாப்புடன் கூடிய பயன்பாட்டிற்கான தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான எல்லைகளை தெளிவு செய்யும் கொள்கைகளை வெளியிட்டது (நுண்மை தீங்குயிரிகள், உயிர்கொல்லிகள், சோதனை செய்தல் மற்றும் விவரச்சீட்டுகளை பொருந்துதல்) மேலும் விலங்குகள் மற்றும் தாவர உடல்நலம் (இறக்குமதி செய்த பூச்சிகள் மற்றும் வியாதிகள்).
வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT)
வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT) என்பது உலக வணிக அமைப்பின் ஒரு சர்வதேச உடன்பாடாகும். உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப்பேச்சுவார்த்தைகளின் போது அது நிகழ்ந்தது, மேலும் 1994 ஆம் ஆண்டிறுதியில் உலக வணிக அமைப்பு நிறுவிய போதிலிருந்து செயலாக்கத்தில் இருந்து வருகிறது.
தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள், தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை மேற்கொள்வது மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற காரணங்களால் வணிகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன் இவை செயல்படுகின்றன".
விமர்சனம்
உலக வணிக அமைப்பின் குறிக்கோளானது தடைகள் இல்லா வணிகத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதேயாகும். தடையிலா வணிகத்தைப்பற்றி திறனாய்வாளர்கள் கூறுவது என்னவென்றால் அதனால் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே வருவாய் அளவுகள் ஒருங்குவதற்கு பதிலாக திசை விரிந்து செல்வதே (அதாவது பணக்காரன் மேலும் பணக்காரனாவான் ஆனால் ஏழை இன்னும் ஏழ்மையில் தவிப்பான்). மார்டின் க்ஹோர், தேர்ட் வோர்ல்ட் நெட்வர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனர், சொல்வது என்னவென்றால் உலக வணிக அமைப்பு உலகப்போருளாதாரத்தை பாகுபாடில்லாமல் நிர்வாகம் புரிய தவறிவிட்டது என்றும் அதன் செயல்பாடுகள் பணக்கார நாடுகள் மற்றும் பல்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பதாகவும், மேலும் அதனால் சிறிய நாடுகளிடம் பேரம் பேசுவதற்கான ஆற்றல் குறைவாக உள்ளதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறுகிறார். உருகுவே சுற்றில் உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக மேம்பாடடையும் நாடுகளுக்கு ஒரு பயனும் இல்லை என்றும், அதற்கான காரணங்களாக, தொழில்களுக்கான சந்தை நிலவரத்தில் முன்னேற்றம் காணவில்லை என்றும்; நெசவுத்தொழில்களுக்கு வழங்கிய பத்தியமுறையை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கியதால் அவர்களுக்கு மெச்சும் படியாக எதுவும் நடக்கவில்லை என்றும்; கட்டணமில்லா தடைகள் அதாவது குவிப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும்; மற்றும் உள்நாட்டு ஆதாரம் மற்றும் வேளாண் ஏற்றுமதிக்கான மானியங்கள் பணக்கார நாடுகளில் இப்போதும் மிகையாக உள்ளதாகவும் கூறுகிறார். இருந்தாலும் ஜகதீஷ் பகவதி உறுதியாக கூறுவதென்ன வென்றால், ஏழையர் நாடுகளில் தயாரிப்பாளர்களுக்கு கட்டணப் பாதுகாப்பு மிகையாக உள்ளதாகவும், மேலும் அந்நாடுகளும் பணக்கார நாடுகளை விட அதிகமாக குவித்தல் அல்லது கொட்டிவைத்தலுக்கு எதிராக நிறைய எண்களில் தாக்கலிடுவதாகவும் கூறுகிறார்.
இதர திறனாய்வாளர்கள் தொழிலாளர் உறவுகள் மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினைகளை மறந்தேபோய்விட்டனர் என்று சொல்கிறார்கள். ஸ்டீவ் சார்நோவித்ஸ், (Steve Charnovitz) குளோபல் என்வைரன்மென்ட் அண்ட் ட்ரேட் ஸ்டடி (Global Environment and Trade Study)(GETS) என்ற நிறுவனத்தின் இயக்குனர், உலக வணிக அமைப்பு "வணிகம் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சூழல்களுக்கு இடையிலேயான கவலைகளுக்கு தீர்வு காணவேண்டும்" என்று நினைக்கிறார். மேலும், தொழிற் சங்கங்கள் மேம்பட்ட நாடுகளின் தொழில் உரிமைகள் சார்ந்த குறிப்புகளை ஏளனம் செய்கிறார், மேலும் அவர் கூறுவது என்ன என்றால், உலக வணிக அமைப்பு உலகமயமாக்கும் கொள்கையை எவ்வளவுக்கு எவ்வளவு முன்னுக்கு கொண்டு போகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சுற்று சூழலும் தொழிலாளர் உரிமைகளும் பின்னுக்கு தங்கி விடும் என்று. இன்னொரு பக்கம், க்ஹோர் பதிலளிப்பது என்ன என்றால், "சூழல் மற்றும் தொழிற்சங்கங்கள் உலக வணிக அமைப்பு முறைகளில் நுழைந்தால், [] கொள்கையளவில் சமூக மற்றும் பண்பாடு சார்ந்த விவகாரங்களுக்கும் இடம் அளிக்கலாமே" பகவதியும் "பணக்கார நாடுகளின் புறக்கூட்டங்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிநிரல்களை வணிக உடன்பாடுகளில் திணிப்பது அட்டூழியமாகும்" என்று விமர்சிக்கிறார். அதனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தை சார்ந்த பகவதி மற்றும் அரவிந்த் பணகரியா ஆகிய இருவரும், TRIPs என்ற செயல்பாட்டை உலக வணிக அமைப்பில் அறிமுகப்படுத்தியதை குறை கூறுகிறார்கள், இது போன்ற வணிகம் சாரா நிகழ்ச்சி நிரல்கள் ஒரு நாள் கட்டுக்கடங்காமல் போகலாம் மற்றும் அமைப்பை செயலிழக்க செய்யலாம் என்று ஆதங்கம் கொள்கின்றனர்.
இதர திறனாய்வாளர்கள் உலக வணிக அமைப்பின் முடிவுகள் எடுக்கும் முறையானது சிக்கலானதாகவும், பலனில்லாததாகவும், நிறுவனத்துடன் தொடர்பில்லாதது போலவும், மற்றும் உள்ளடங்காமல் இருப்பதாகவும், மேலும் அவர்கள் ஒரு சிறிய, இயல்பான வழிநடத்தி செல்லும் செயற்குழுவினை (ஒரு "ஆலோசனை மன்றம்") அமைத்து, அதன் மூலமாக உறுப்பினர் நாடுகளிடையே வணிக சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு சுமுகமாக கருத்தொரிமை ஏற்றெடுக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். தேர்ட் வேர்ல்ட் நெட்வொர்க் உலக வணிக அமைப்பு "மிகவும் ஒளிவு மறைவுடன் கூடிய சர்வதேச நிறுவனமாகும்" என அழைத்துள்ளது, ஏன் என்றால் "உலக வணிக அமைப்பு செயல்பாட்டு முறைகளில் பெரும்பான்மையினராக இருக்கும் மேம்பாடடைந்துவரும் நாடுகளுக்கு உண்மையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த ஒரு வழிமுறையும் இல்லை"; நெட்வொர்க் மேலும் அழுத்திக் கூறுகிறது "குடியியல் சமூக குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்றும் மற்றும் அவற்றின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என வலியுறுத்துகிறது." சில அரசு சாரா நிறுவனங்கள், வேர்ல்ட் பெதரலிஸ்ட் மூவ்மென்ட், உலக வணிக அமைப்பு மக்களாட்சியில் உள்ளது போல ஒரு பாராளுமன்றத்தை அமைத்து செயல் புரிவது நன்றாக இருக்கும் என்று வாதாடுகிறது, ஆனால் இதற்கு இதர திறனாய்வாளர்கள் செவி சாய்க்கவில்லை.
சில விடுதலை விரும்பிகள் மற்றும் சிற்றரசுகள், லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற ஆலோசகர்கள், உலக வணிக அமைப்பிணை எதிர்க்கின்றனர், அது ஒரு அதிகாரச் செருக்குள்ள மற்றும் முதலீட்டிற்கு எதிரான நிறுவனமாகும் என்றும், அது தடையில்லா வணிகத்திற்கு பதிலாக அரசியல் குறுக்கீடுகளுக்கு பெயர் போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் தலைவர், லேவேல்லின் எச் ரோக்வேல் சிறியவர், கூறுவது . . . உலக வணிக அமைப்பு என்ன சொல்கிறது என்றால் அமேரிக்கா அந்நாட்டு ஏற்றுமதி செய்வோரை வெளி நாடுகளில் கிளை அலுவலகங்களை அமைப்பதை தடுக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்வதால் அவர்கள் அரசிற்கு கட்டவேண்டிய வருமான வரியில் 30% அளவிற்கு சேமித்து விதி விலக்கு பெறுகிறார்கள். இப்போது அமெரிக்க வரிவிகிதத்தை ஏற்றவேண்டும் மற்றும் இதர குறைபாடுகளை நீக்க வேண்டும் இல்லா விட்டால் பெரிய அளவில் மேலும் புதிதாக மானியங்களை அளிக்கும் நிலைமை ஏற்பட்டு அது நமது நாட்டின் ஏறுமதித்துறையை பெரிதும் பாதித்துவிடும். [] சமீப காலமாக வெளிநாட்டினர் நமது நாட்டின் வளமை மற்றும் நாகரீகத்தை வெறுப்பவர்களைப்பற்றி நிறைய பேச்சுக்கள் அடிபடுகின்றன, மேலும் அவர்கள் பழிக்குப் பழியாக ஏதாவது ஒரு வழியில் நமக்கு பாதகம் விளைவிக்க பார்க்கிறார்கள். சொல்லப்போனால், இங்கே இன்னொரு வழங்குமுறை சுட்டிக்காட்டத்தக்கது, இவற்றில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை; அவர்கள் தூதர்கள் மற்றும் ராஜதந்திரிகள் ஆவார், மற்றும் அவர்கள் சந்தேகப்படும் பட்டியலில் காணப்படும் பேர்வழிகள் அல்ல.
மேலும் பார்க்கவும்
குறிப்புதவிகள் மற்றும் குறிப்புகள்
கூடுதல் வாசிப்பு
அதிகாரபூர்வமான உலக வணிக அமைப்பு பக்கங்கள்
அதிகாரபூர்வமான உலக வணிக அமைப்பு வீட்டுப்பக்கம் பரணிடப்பட்டது 2021-07-01 at the வந்தவழி இயந்திரம்
உலக வணிக அமைப்பு நிருவகிக்கும் உடன்பாடுகள் பரணிடப்பட்டது 2010-03-04 at the வந்தவழி இயந்திரம்
WTO 10th AnniversaryPDF (1.40 MB) — முதல் பத்தாண்டு செயல்பாடுகளின் சிறப்புக் கூறுகள், ஆண்டறிக்கை 2005 பக்கங்கள் 116-166
சர்வதேச வணிக மையம் - உலக நாடுகள் / உலக வணிக அமைப்பு இணைந்த அமைப்பு
உலக வணிக அமைப்பின் அரசு சார்ந்த பக்கங்கள்
உலக வணிக அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலை
உலக வணிக அமைப்பு பற்றிய செய்தித்தாளில் வெளிவந்தன
உலக வணிக அமைப்பு
பிபிசி நியூஸ் — தன்விவரம்: உலக வணிக அமைப்பு
எல்லையற்ற காப்பாளர் - சிறப்பு அறிக்கை: உலக வணிக அமைப்பு பரணிடப்பட்டது 2008-01-16 at the வந்தவழி இயந்திரம் நேரடி நிகழ்சசி
உலக வணிக அமைப்பு பற்றிய அரசு-சாரா நிறுவனங்களின் பக்கங்கள்
கட்ட்.ஒர்க் - பரோடி ஒப் ஆபீசியல் வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசன் பேஜ் பை தி எஸ் மென்
பப்ளிக் சிடிசென்
ட்ரான்ச்நேசனல் இன்ஸ்டிட்யூட்: பியோண்ட் தி வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசன்கோட்டூர் (Kottur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 637 வீடுகளும், மொத்தம் 2,712 மக்களும் வாழ்கின்றனர். இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 78 கிமீ தொலைவிலும், தேன்கனிக்கோட்டையில் இருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.
மேற்கோள்கள் கணேஷ் ஜஸ்ட் கணேஷ் 2009 இல் வெளிவந்த இந்திய தெலுங்கு திரைப்படம். இதனை எம். சரவணன் இயக்கினார். ராம் மற்றும் காசல் அகர்வால் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ராம் போதினேனி கணேஷ்
காஜல் அகர்வால் திவ்யா
பூனம் கவுர் தீபா
ஆஷிஷ் வித்யார்த்தி மகாதேவ்
பிரம்மானந்தம் யடகிரி
பர்ஷா பிரியதர்சினி
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கணேஷ் ஜஸ்ட் கணேஷ்
Ganesh Just Ganesh பரணிடப்பட்டது 2012-04-01 at the வந்தவழி இயந்திரம் at Oneindia.inஆல்வின் எலியட் அல் ரோத் (Alvin Eliot "Al" Roth, பிறப்பு திசம்பர் 19, 1951) ஆர்வர்டு வணிகப் பள்ளியில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறையில் ஜார்ஜ் குண்ட் அறக்கட்டளை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஓர் அமெரிக்க பொருளியலாளர் ஆவார். ரோத் ஆட்டக் கோட்பாடுத் துறையில் முக்கியப் பங்காற்றி உள்ளார். மேலும் சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல் போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை இலாயிடு ஷேப்லியுடன் இணையாக வென்றுள்ளார்.
Alvin E. Roth பரணிடப்பட்டது 2008-06-18 at the வந்தவழி இயந்திரம் at Harvard Business School
Compilation of research and press coverage பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் at Al Roth's game theory, experimental economics, and market design page.ஜெயதேவ் சா (Jaydev Shah, பிறப்பு: மே 4, 1983, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.கூனாக் மாவட்டம்; (மலாய்: Daerah Kunak; ஆங்கிலம்: Kunak District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கூனாக் மாவட்டத்தின் தலைநகரம் கூனாக் நகரம் (Kunak Town).
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1,846 கிலோமீட்டர்கள் (1,147 mi) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து 483 கிலோமீட்டர்கள் (300 mi)) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கூனாக் மாநிலத்தில் 68,893 மக்கள் வசிக்கின்றனர்.
2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூனாக் மாவட்டத்தின் மக்கள் தொகை 68,893 ஆகும். பெரும்பான்மையோர் பஜாவு (Bajau); மற்றும் பூகிஸ் இனக் குழுவினர். இவர்களுக்கு அடுத்து ஓராங் சுங்கை (Orang Sungei) இன மக்களும் அதிகமாக உள்ளனர்.
கணிசமான அளவில் சீன சிறுபான்மையினரும் உள்ளனர். கூனாக் நகரத்தில் கடை வணிகம் செய்கின்றனர். அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் எண்ணெய்ப் பனை மரங்களை (Oil Palms) நடுவதிலும் ஈடுபட்டு உள்ளனர்.
அத்துடன் அருகில் உள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதியின் சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); மற்றும் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் இருந்தும், கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் உள்ளனர்.
பொதுவகத்தில் Kunak District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மலேசியாவின் மாவட்டங்கள்போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினை (Bodroux–Chichibabin aldehyde synthesis) என்பது கிரின்யார்டு கரணியை ஒரு கார்பன் அதிகம் கொண்ட ஆல்டிகைடாக மாற்றும் வினையாகும்.
கிரின்யார்டு கரணி டிரைஈத்தைல் ஆர்த்தோபார்மேட்டுடன் வினைபுரிந்து அசிட்டாலைக் கொடுக்கிறது. பின்னர் அசிட்டால் ஆல்டிகைடாக நீராற்பகுப்பு அடைகிறது. எடுத்துக்காட்டு n-எக்சனால்:
Bodroux, F. (1904). Compt. Rend. 138: 92.
Tschitschibabin, A. E. (1904). "Eine neue allgemeine Darstellungsmethode der Aldehyde". Ber. 37: 186. doi:10.1002/cber.19040370133.
Tschitschibabin, A. E. (1904). "Ueber den Hexahydro-m-toluylaldehyd". Ber. 37: 850. doi:10.1002/cber.190403701140.
போவியால்ட்டு ஆல்டிகைடு தொகுப்பு
டஃப் வினைஐதராபாத்தில் உள்ள நிறுவனங்களின் பட்டியல் (List of companies based in Hyderabad) என்பது தெலங்காணாவின் ஐதராபாத்தைத் தளமாகக் கொண்ட முக்கிய நிறுவனங்களின் பட்டியல் ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல (அதாவது ஐதராபாத்தில் இவற்றின் தலைமையகம் உள்ளது).
அடையார் ஆனந்த பவன்
அரவிந்தோ பார்மா
உயிரியல் ஈ. நிறுவனம்
பாரத் பயோடெக்
பிரைட்காம் குழு
சையண்ட்
தி டெக்கான் குரோனிக்கள் (நாளிதழ்)
திவியின் ஆய்வகங்கள்
டாக்டர் ரெட்டீசு ஆய்வகங்கள்
இந்திய மின்னணு கழகம்
ஈ தொலைக்காட்சி நிறுவனம்
க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ்
ஜி. எம். ஆர். குழுமம்
ஜி. வி. கே.
கெரிட்டேஜ் பூட்சு (பாரம்பரிய உணவுகள்)
கெட்டோரோ மருந்துகள்
இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் நிறுவனம்
இந்தியன் இம்யூனாலஜிகல் நிறுவனம்
கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம்
லாரசு ஆய்வகங்கள்
சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிமிடெட்
என். எம். டி. சி.
நவயுக குழு
நாட்கோ பார்மா
அணு எரிபொருள் வளாகம்
பல்சஸ் குழு
இசுகைரூட் ஏரோஸ்பேசு
டாடா வணிக ஆதரவு சேவைகள்