news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
127,372
12/18/2019 2:43:54 PM
தமிழகம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது
திருவள்ளூர்: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஆகிய 4 ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. இந்த ஏரிகளில் இருந்துதான் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த ஏரிகளில் தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இதில், இன்று காலை நிலவரப்படி 1,556 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 782 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில், வினாடிக்கு 831 கன அடி நீர் லிங்க் கால்வாய் வழியாக மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கென புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதில், தற்போது 1,320 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 286 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 33 கன அடி மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு அனுப்பப்படுகிறது.புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,330 மில்லியன் கன அடி. இதில், இன்று காலை 2,285 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில், 89 கன அடி நீர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடி. இதில், இன்று காலை 156 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இதில், வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்த 4 ஏரிகளின் முழு கொள்ளளவான 11,057 மில்லியன் கன அடியில், 5,317 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மேலும் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், பூண்டி ஏரியில் மட்டும் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
127,373
12/18/2019 2:47:01 PM
தமிழகம்
கல்லூரி வகுப்பறையில் கத்தியால் மணிக்கட்டை அறுத்து பேராசிரியை தற்கொலை: அரும்பாக்கத்தில் பரபரப்பு
அண்ணாநகர்: அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி வகுப்பறையில் முன்னாள் பெண் பேராசிரியை ஒருவர் கத்தியால் மணிக்கட்டை அறுத்து கொண்டு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், காரம்பாக்கம் தாலுகா, எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரிசாந்தி (32). இவர், கடந்த 5 வருடத்துக்கு முன், சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் தெலுங்கு பாடப்பிரிவில் உதவி பேராசிரியையாக பணியாற்றினார். தற்போது வேறு ஒரு கல்லூரியில் பணியாற்றி வந்தார். அதற்கு பிறகும், வைஷ்ணவா கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்று நேற்றிரவும் கல்லூரிக்கு சென்றார். அங்கு, ஏற்கனவே தான் பணியாற்றிய, முதல் மாடியில் உள்ள தெலுங்கு வகுப்பறைக்கு சென்றார். பின்னர், திடீரென தனது கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, இடது கை மணிக்கட்டை சரசரவென அறுத்தார். ரத்தம் கொட்டியது. அலறினார். சிறிது நேரத்தில், வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இன்று காலையில் வழக்கம் போல கல்லூரியை சுத்தம் செய்ய ஊழியர்கள் வந்தனர். அப்போது, முதல் மாடியில் உள்ள வகுப்பறையில் ஹரிசாந்தி தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, பேராசிரியையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர் சீனிவாசலு, அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் வழக்கு பதிந்து, பேராசிரியை எதற்காக வந்தார்? இரவு நேரத்தில் செக்யூரிட்டி தடுக்காதது ஏன்? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
127,374
12/18/2019 2:49:55 PM
இந்தியா
நீதிபதி முன்பாக நடந்த அட்டூழியம்: உ.பி நீதிமன்ற அறையில் துப்பாக்கி சூடு: விசாரணை கைதி பலி
லக்னோ; உத்தரபிரதேசத்தில் நீதிமன்ற அறையில் நீதிபதி முன்பாக நடந்த துப்பாக்கி சூட்டில், விசாரணை கைதி பலியான நிலையில், மற்ற கைதிகள் தப்பி ஓடினர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் நஜிபாபாத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் ஹாஜி இஷான், கடந்த மே 28ம் தேதி அவரும் அவரது உறவினர் ஷாதபும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஷாநவாஸ், அப்துல் ஜபார், டேனிஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின் பிஜ்னோரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் யோகேஷ் குமார் வழக்கை விசாரித்து கொண்டிருந்தார். நீதிமன்ற அறையில் திடீரென 3 மர்ம நபர்கள், குற்றவாளிகளைக் குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். மாஜிஸ்திரேட், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். நீதிமன்ற வளாகத்தில் இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி கொலை வழக்கு குற்றவாளிகள் அப்துல் ஜபார், டேனிஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவான 3 பேரையும் சில மணி நேரங்களில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து எஸ்.பி.சஞ்சீவ் தியாகி கூறுகையில், “கடந்த மே மாதம் பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் ஹாஜி இஷான் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்க அவரது மகன் ஷகீல் கானும், 2 கூட்டாளிகளும் நீதிமன்றத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஷாநவாஸ் உயிரிழந்தார். 2 போலீசார் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
127,375
12/18/2019 2:52:28 PM
தமிழகம்
மேல்மருவத்தூரில் சக்தி மாலை இருமுடிவிழா|: லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2019-20 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடிவிழா இன்று துவங்கியது. இதை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவிற்கு முன்பாக சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்கின்றனர். 3 அல்லது 5 நாள் விரதம் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக இருமுடி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் இன்று இருமுடி விழா தொடங்கியது. பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து பிப்ரவரி 8ம் தேதி ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் விழா துவங்கியது. 6 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.காலை 6.15 மணிக்கு இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் துவங்கி வைத்தார். முதலில் 9 சிறுமியர்களும், 9 தம்பதியர்களும் அபிஷேகம் செய்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட செவ்வாடை தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வருகிறார்கள். இதை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. இருமுடி விழாவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் வர இருக்கின்றனர். தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருத்தூரில் நின்று செல்கின்றன. விழா ஏற்பாடுகளை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் தேவி ரமேஷ் பொறுப்பில் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
127,376
12/18/2019 2:55:48 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் திருவள்ளூரில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு: புகார் தெரிவித்தால் நடவடிக்கை
திருவள்ளூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மாவட்ட கவுன்சிலர்கள், 230 ஒன்றிய கவுன்சிலர்கள், 526 ஊராட்சி தலைவர்கள், 3,945 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 4,725 பதவியிடங்களுக்கு 16,672 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில், வரும் 27ம் தேதி, முதல் கட்டமாக கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய 8 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 30ம் தேதி 2ம் கட்டமாக எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஆகிய 6 ஒன்றியங்களில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும்.தேர்தலில் ஒரு வாக்காளர், ஊராட்சி வார்டு, ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் என 4 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இதற்காக 4 பிரத்யேகமான வண்ணங்களில், வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கென அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்காக, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும், 72 வகையான பொருட்கள் தயார் செய்யும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். அதில், 4 வகையான வாக்குச்சீட்டு கட்டு, அழியாத மை, தலைமை அலுவலரின் உலோக முத்திரை, வாக்காளிப்பு மறைவு அட்டை, வாக்குப்பெட்டி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, முத்திரை அரக்கு, வாக்காளர் பட்டியல், வாக்குப்பெட்டியை வைப்பதற்கான பிளாஸ்டிக் பை, பொருட்களை எடுத்துச்செல்ல சாக்கு, வாக்குச்சாவடி குறியீடு, ‘உள்ளே’ மற்றும் ‘வெளியே’ அறிவிப்பு அட்டை உட்பட 72 வகையான பொருட்கள், வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப பிரித்து வைக்கப்படுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், வாக்குப்பதிவுக்கான அடுத்த கட்ட பணிகள் துவங்கும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். தேர்தல் தொடர்பான விதிமீறல் புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, 18004251135 மற்றும் 18004251136 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார்களை கூறலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவுதேர்தல் நடக்கும்போது, தனிநபர்கள் உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை போலீசார் பெற்று கொள்வதும், தேர்தல் முடிந்ததும் திரும்ப வழங்குவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அனைவரும், அந்தந்த போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தனிநபர்களிடம் இருக்கும் லைசன்ஸ் துப்பாக்கிகளை வாங்கி, ஆயுத கிடங்கில் ஒப்படைக்கும் பணியில் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
127,377
12/18/2019 2:58:17 PM
தமிழகம்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: நாகை, திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கொள்ளிடம்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை அருகே கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி அரசியல் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கம் சார்பில் வட்ட தலைவர் விக்னேஸ்வர வர்மா தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மத்திய அரசு, இதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். போராட்டத்தையொட்டி அங்கு கொள்ளிடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மெயின்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் வகுப்புகளை புறக்கணித்து கைகளில் பதாகைகளை ஏந்தி கல்லூரி நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘’தொடர்ந்து போராட்டம் நடைபெறும்’ என்றனர்.
127,378
12/18/2019 3:08:11 PM
தமிழகம்
செங்குன்றத்தில் திறக்கப்படாத புதிய குடியிருப்புகள்: வீணாகி வரும் அவலம்
புழல்: செங்குன்றத்தில் பொதுப்பணி துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட 6 குடியிருப்புகள் இன்னும் திறக்கப்படாததால், அங்கு இதுவரை அதிகாரிகளோ, ஊழியர்களோ குடியேறவில்லை. இதனால் அக்குடியிருப்புகள் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் செங்குன்றம், சோழவரம் ஆகிய பகுதிகளின் பொதுப்பணி துறை அலுவலகத்தில் அதிகாரி முதல் ஊழியர்கள் வரை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு இப்பகுதியில் ஏற்கெனவே பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் 6 குடியிருப்புகள் இருந்தன. அவை பழுதானதால், கடந்த ஓராண்டுக்கு முன் இடித்து, மீண்டும் புதிதாக 6 குடியிருப்புகள் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.இதனால் அக்குடியிருப்புகளை சுற்றிலும் புதர்கள் உருவாகி, அக்கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு செடிகள் முளைத்துள்ளன. இதையடுத்து அக்குடியிருப்புகளில் பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷ ஜந்துக்கள் குடியேறியுள்ளன. மேலும், அங்கு மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, இக்குடியிருப்புகளை விரைவில் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்துறை ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
127,379
12/18/2019 3:10:47 PM
தமிழகம்
எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு பணப்பயன்கள் தொடர்ந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் வெளியிட்ட அறிக்கை: எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை அனல்மின் நிலைய அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ம் ஆண்டு மின் உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையத்தின் மின் உற்பத்தி மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின் விநியோகிக்கப்பட்டது.  இந்த மின்நிலையம் அமைக்கப்பட்டு 47 ஆண்டுகளை கடந்த நிலையில் மின் உற்பத்தி செய்யும் உலையில் ஏற்பட்ட பழுதால் அங்கிருந்த அலகுகள் மூடப்பட்டன. இதனால் இங்கு பணிபுரிந்த 470 ஊழியர்களை வடசென்னையில் உள்ள அனல்மின் நிலைய அலகு 1 மற்றும் அலகு 2 விற்கு பணியிடமாற்றம் செய்தனர். எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் பணப்பயன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் ஊழியர்களை இடம் மாற்றிய பிறகு அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கடன், ஈடுகட்டும் விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பணப்பயன்கள் கடந்த பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஊழியர்களுக்கான பணப்பயன்கள் கிடைக்காத காரணத்தால் பொருளாதர சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே அனல்மின் நிலைய அதிகாரிகள் உடனடியாக ஊழியர்களுக்கு உரிய பணப்பயன்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணப்பயன்கள் காலத்தே கிடைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்து ஊழியர்கள் நலன் காக்க வேண்டும். மாநிலத்தின் மிக முக்கியமான மின் உற்பத்தி நிலையமான எண்ணூர் அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி திறன் மேம்படவும், ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
127,380
12/18/2019 3:13:00 PM
தமிழகம்
வெளிநாட்டுக்கு கடத்த வைத்திருந்த 3டன் செம்மர கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது
திருப்பத்தூர்: வெளிநாட்டுக்கு கடத்துவதற்கு பதுக்கிவைத்திருந்த 3 டன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரம் உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தில் வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைத்து வெளிநாட்டிற்கும் வெளிமாநிலத்திற்கும் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன், வனவர் சஞ்சீவி ஆகியோர் நேற்று இரவு அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர்(45) வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. வீட்டிற்குள் இருந்து சுமார் 3 டன் எடை கொண்ட ₹15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, சங்கரை கைது செய்தனர். சங்கருக்கு செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா?  ஆந்திராவில்  இருந்து வெட்டிவந்து பதுக்கிவைத்து வெளி மாநிலத்திற்கும் வெளிநாட்டிற்கும் கடத்தினாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,381
12/18/2019 3:14:48 PM
தமிழகம்
வேட்பு மனு பரிசீலனையின்போது அதிமுக-அமமுக கடும் மோதல்: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனையின்போது, அதிமுக-அமமுகவினர் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 324 ஊராட்சி வார்டுகள், 38 ஊராட்சி தலைவர்கள், 22 ஒன்றியக் கவுன்சிலர்கள், 3 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.இதில், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மனு பரிசீலனையின்போது அதிமுக சார்பில் 14வது வார்டில் போட்டியிடும் நிலையூர் முருகனுக்கு, இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பதாகவும், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அமமுக வேட்பாளர் ராமன், மதிமுக வேட்பாளர் மருதுபாண்டி ஆகியோர் முறையிட்டனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றி, சேர்களை எடுத்து வீசியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இறுதியில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஆசிக் அறிவித்தார்.
127,382
12/18/2019 3:17:05 PM
தமிழகம்
ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கு தந்தை, மகள் போட்டி
கலசப்பாக்கம்: ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தந்தையும் ஊராட்சி தலைவர் பதவிக்கு மகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து நேற்று மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பிஇ பட்டதாரியான, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி என்பவரின் மகள் நிலவழகி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இதுபோல் நிலவழகியின் தந்தை பொய்யாமொழி மேல்வில்வராயநல்லூர், மேலாரணி மற்றும் சேங்கபுத்தேரி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 8வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். மகள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், தந்தை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
127,383
12/18/2019 3:30:05 PM
விளையாட்டு
லண்டனில் மறக்க முடியாத ஜூலை 14ம் தேதி: திக்குமுக்காட செய்த 2019 டென்னிஸ் - கிரிக்கெட் பைனல்
லண்டன்: நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஐசிசி-யால் நடத்தப்படும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வென்றிடாத இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. அதேசமயம், கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் பைனல் போட்டியும் லண்டனில் நடைபெற்றது. இதில், நட்சத்திர வீரர்களான சுவிட்சர்லாந்தின் பெடரர் - செர்பியாவின் ஜோகோவிச் மோதினர். மேற்கண்ட இரண்டு போட்டிகளும் ஒரேநாளில் நடைபெற்றதால், விளையாட்டு ரசிகர்கள் குதூகலமாக இருந்தனர். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரு வேறு போட்டிகளில் ஏற்பட்ட திருப்பங்களும் ஒரேமாதிரிதான் இருந்தன. இங்கிலாந்து - நியூசிலாந்து ஆட்டம் ‘டை’யில் முடிய, மறுமுனையில், விம்பிள்டனில் நடைபெற்ற முதல் நான்கு செட் போட்டிகளில் பெடரர் - ஜோகோவிச் இருவரும் தலா இரண்டு செட்களை வென்றிருந்தனர். இதனால் ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஐந்தாவது மற்றும் கடைசி செட் போட்டி நடைபெற, லார்ட்சிலும் சாம்பியன் யார் என்பதை தெரிந்துகொள்ள சூப்பர் ஓவர் நடைபெற்றது. பெரும் குழப்பத்துக்கு இடையே, பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் வென்று நீண்ட நாள் கனவை நனவாக்கியது. ஆனால் பவுண்டரி கவுண்ட் போன்ற விதிமுறையை பயன்படுத்தமால், விம்பிள்டனில் சாம்பியன் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆட்டம் மூன்றாவது முறையாக ‘டை’ பிரேக்கருக்கு சென்றது. ஐந்தாவது செட்டிலும் ஜோகோவிச் வென்று, ஐந்தாவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் ஆனார். டென்னிஸ் - கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் வேறுபாட்டாலும், அதன் முடிவுகள் ஒரே நாளில் இப்படி இழுபறிக்குச் சென்றதுதான் விளையாட்டின் அதிசயம். 2020 புத்தாண்டு பிறப்பதற்கு சில நாட்களே உள்ள நிலையில், கடந்தாண்டு நினைவுகளை நினைவுகூரும் விதமாக ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ெடன்னிஸ் - கிரிக்கெட் பைனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்ந்த ஜூலை 14ம் தேதியை வரலாறு பின்நாட்களில் நிச்சயம் நினைவு கூறும் வகையில் அமைந்துவிட்டது.
127,384
12/18/2019 3:32:28 PM
விளையாட்டு
மேற்கிந்திய தீவு அணியுடன் போட்டி: இன்று கோஹ்லிக்கு 400வது போட்டி....ஜாம்பவான்கள் வரிசையில் 8வது இடம்
விசாகப்பட்டினம்: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, விசாகப்பட்டினத்தில் இந்தியாவிற்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று களமிறங்கி மற்றொரு வரலாற்று சாதனையை படைப்பார். அவர், தனது 400வது சர்வதேச விளையாட்டை (84 டெஸ்ட், 240 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டி) விளையாடத் தயாராக உள்ளார். இதனால், சர்வதேச கிரிக்கெட்டில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடும் எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் - 664, எம்.எஸ்.தோனி- 538, ராகுல் டிராவிட்- 509, முகமது அசாருதீன்- 433, சவுரவ் கங்குலி- 424, அனில் கும்ப்ளே- 403, யுவராஜ் சிங்- 402 என்ற வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி- 399 *  இன்று தன்னை இணைத்துக் கொள்வார். டிராவிட்டை தவிர, மேற்கண்ட பட்டியலில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஆசியா லெவன் மற்றும் ஐ.சி.சியின் லெவன் அணியில் இடம் பெற்றிருந்தனர். ஆசியா அல்லது ஐ.சி.சி-யின் லெவன் அணிக்காக விளையாடாமல் 400 சர்வதேச போட்டிகளை விளையாடியதில் கோஹ்லி தற்போது, டெண்டுல்கர் மற்றும் அசாருதீனுடன் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
127,385
12/18/2019 3:35:10 PM
தமிழகம்
தமிழகத்தில் கேரள தீவிரவாதிகள் 4 பேர் ஊடுருவல்: முதல்வர் எடப்பாடிக்கு 3 மடங்கு பாதுகாப்பு
சேலம்: தமிழகத்தில் கேரள தீவிரவாதிகள் 4 பேர் ஊடுருவி உள்ளதாக கிடைத்துள்ள தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு திடீரென 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் செல்லும் இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. வேலூர் அதிமுக எம்பி முகமதுஜான், அங்குள்ள ஜமாத்தில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் வந்தார். இன்று காலை 11 மணி அளவில் ஓமலூர் காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்து வருவதாலும் கேரளாவில் இருந்து 4 தீவிரவாதிகள் 2 காரில் கன்னியாகுமரி வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும் உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முதல்வருக்கு 3 மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் சென்ற சாலையான ஓமலூர், இடைப்பாடி பகுதியில் எஸ்பி தீபாகனிகர் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைநகர் வீட்டில் வந்து முதல்வர் தங்கியதால், அந்த பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
127,386
12/18/2019 3:38:31 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலில் 2.98 லட்சம் பேர் மனு: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்....சின்னங்களும் ஒதுக்கப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை பிற்பகலில் வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படுகிறது. இதனால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக, 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. 2வது கட்டமாக, 158 ஊராட்சி ஒன்றியங்களில் 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 4924 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 39 ஆயிரத்து 916 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படை இல்லாமலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவடைந்தது. முதல் நாளில் 3,217 பேரும், 10ம் தேதி 1,784 பேரும், 11ம் ேததி 16,654 பேரும், 12ம் தேதி 16,360 பேரும், 13ம் தேதி 71,763 பேரும், 14ம் தேதி 55,881 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான 16ம் தேதி 1 லட்சத்து 32 ஆயிரத்து 676 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 லட்சத்து 6,657 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 54, 747 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 ஆயிரத்து 939 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,992 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்று காலை 10 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடந்தது. வேட்பு மனு குறித்த ஆட்சேபனைகள் மீது சம்பந்தப்பட்டவர்கள் அளித்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டு முடிவு எடுக்கப்பட்டது. மேலும், வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வது மற்றும் நிராகரிப்பது தொடர்பான காரணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத்து மூலமாக வேட்பாளர்களுக்கு தெரிவித்தார். இதை தொடர்ந்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டன. வேட்பாளர்கள் நாளை மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். நாளை பிற்பகலில் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாளை மாலையில் இருந்து வேட்பாளர்கள் செலவிடும் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மொத்தமுள்ள 4 பதவியிடங்களில் ஒவ்வொரு பதவியிடத்துக்கும் போட்டியிடும் வேட்பாளருக்கான செலவின வரம்பு தோ்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ₹9 ஆயிரம், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ₹34 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ₹85 ஆயிரம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ₹1.70 லட்சம் தேர்தல் செலவினத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் ஊரக பகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் கிராமங்களில் தேர்தல் களைகட்டி உள்ளது. கட்சி தலைவர்களும் இன்னும் சில நாட்களில் பிரசாரத்துக்கு வருவார்கள். அப்போது அனல்பறக்கும் பிரசாரம் நடைபெறும்.சின்னம் ஒதுக்கும் முறைகட்சி சார்ந்த ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு கட்சி சின்னம் கிடைக்கும். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு, தலா 30 வகையான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி, மாநிலக் கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர், அதற்கான படிவம் ‘ஏ’ மற்றும்‘பி’ ஆகியவற்றை சமர்ப்பித்தால், கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும். சுயேச்சை வேட்பாளர் தலா மூன்று சின்னங்கள் கேட்டிருப்பர். ஒருவர் கேட்ட சின்னத்தை மற்றவர் கேட்கவில்லை எனில், முதலாவதாக கேட்ட சின்னம் ஒதுக்கப்படும். மற்றவர் கேட்டிருந்தால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். கேட்ட மூன்று சின்னங்களும், குலுக்கல் முறையில் கிடைக்கவில்லை எனில், கட்சிகளின் பிற வேட்பாளளுக்கு ஒதுக்கிய பிறகு, எஞ்சியுள்ள சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படும்.நாளை மாலை போட்டியிட தகுதியான வேட்பாளர்களின் இறுதி பட்டியல் (படிவம் 9) ‘அகர’ வரிசைப்படி தயாரித்து வெளியிடப்படும். அகர வரிசையில் எழுதிய வேட்பாளர் பெயரை, சீட்டில் எழுதி குலுக்கல் நடத்துவர். முதலில் வரும் வேட்பாளருக்கு, வரிசையில், முதலாவதாக உள்ள சின்னம் ஒதுக்கப்படும். அடுத்த சீட்டில் வரும் வேட்பாளருக்கு, இரண்டாவது சின்னம் ஒதுக்கப்படும் என உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.விரலில் மை வைப்பது எப்படி?ஊரக பகுதிகளில் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு அளிப்பதற்கு முன்பாகவும், நகர்புறங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு செல்வதற்கு முன்பாகவும் வாக்காளர்கனின் கையில் மை வைக்க வேண்டும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலின் முதல் இணைப்பிலிருந்து நகம் முடியும் வரை மை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மாதிரி புகைப்படம் அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வேட்புமனுக்களின் விவரம்கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்    2,06,657கிராம ஊராட்சித் தலைவர்        54,747ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்    32,939மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்    3, 992மொத்தம்                              2,98,335
127,387
12/18/2019 3:41:03 PM
தமிழகம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்....ஜன. 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு
புதுடெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும், வரும் ஜன. 22ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ளது. முன்னதாக இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடங்கின. அதனை தொடர்ந்து  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் அல்லாமல் நாட்டின் பல  இடங்களில் போராட்டம் பரவி வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்  பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அனைத்து அசாம் மாணவர் சங்கம், ரிகாய் பஞ்ச், திமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.மொத்தமாக  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 59 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் டி.ஆர்.கவாய், சூரியகாந்த் அமர்வு  முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் சட்ட விரோதமானது. நாடு முழுவதும் இச்சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே, சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டாலும் கூட, அதனை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மனுதாரர்களின் வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, ‘இம்மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜன. 22ம் தேதி நடக்கும். அதற்கு முன்பாக மத்திய அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால தடை ஏதும் தற்போதைக்கு விதிக்க முடியாது’ எனக் கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
127,388
12/19/2019 4:29:45 PM
இந்தியா
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் பாஜ ஆளும் மாநிலங்களில் 144 தடை உத்தரவு: டெல்லி-குர்கான் எல்லை முடங்கியது
புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பாஜ ஆளும் மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன் வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளான இந்து, சீக்கியர், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள், ஜெயின் மற்றுமர் பார்சி இனத்தவருக்கு குடியுரிமை  வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது.டெல்லி ஜமியா பல்கலைக் கழக மாணவர்கள் சில தினங்களுக்கு முன் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இது மிகப்பெரும் சர்ச்சையாகி தற்போது நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அந்தந்த மாநில உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என்றும் தேவைப்பட்டால் வழக்கின் அவசியம்  கருதி விசாரணைக்கு குழு அமைக்கலாம் என்றும் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்,  அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் மொத்தம் 59 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ‘குடியுரிமை திருத்த சட்டம், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால், நாடு  முழுவதும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. அதனால், குடியுரிமை திருத்த சட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும், இந்த சட்டத்தை ரத்து செய்து  உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘நாங்கள் இந்த திருத்த சட்டத்துக்கு தடை  விதிக்கப்போவதில்லை. இந்த திருத்த சட்டம், அரசியல் சாசன சட்டப்படி செல்லுமா என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த மனுக்களுக்கு மத்திய அரசு ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்,’’ என தெரிவித்தனர்.இதனிடையே இந்த சட்டத்துக்கு எதிராக அசாம், மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புனே, நாக்பூர், கொல்கத்தா, ஐதராபாத், புவனேஸ்வர், போபால், சென்னை ஆகிய நகரங்களில் நேற்றும் போராட்டம் நடந்தது. இந்த  நகரங்களில் இன்றும் போராட்டம் நடக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று 3வது நாளாக பேரணியில் கலந்து கொண்டார். ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனும் போராட்டம் நடத்தி உள்ளார்.இந்த போராட்டம் கடந்த இரு நாட்களாக தென் மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்பட மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக சார்பில் நேற்று நடத்தப்பட்ட அனைத்து  கட்சி கூட்டத்தில், சென்னையில் வரும் 23ம் தேதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் வரும் 28ம் தேதி மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது.இந்தநிலையில் இன்றும் பல மாநிலங்களில் போராட்டம் அரங்கேறியது. பீகாரில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உபி தலைநகர் லக்னோவில் இன்று தடையை மீறி சமாஜ்வாடி கட்சியினர்  போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக டெல்லியில் இன்று 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக டெல்லி-குர்கான் எல்லை பகுதி தேசிய நெடுஞ்சாலையில்  இன்று வாகனங்கள் ஒட்டுமொத்தமாக படையெடுத்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அந்த பகுதியே முடங்கியது. அதேபோல் செங்கோட்டை பகுதியில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருந்தாலும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும்  பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்தநிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அரசியலை கையில் எடுத்துள்ளது. அதாவது பாஜ ஆளும் மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரம் மற்றும் ஊரக மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் வரும் 21ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பிறப்பித்துள்ளார். மாநகரில்  எந்த அமைப்பும் போராட்டம், ஊர்வலம், தர்ணா உள்ளிட்ட எதுவும் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரு மட்டுமில்லாமல் ராம்நகரம், கோலார், துமகூரு, சித்ரதர்கா, தாவணகெரே, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயபுரா, தார்வார், கொப்பள், கதக், பீதர், பல்லாரி, மைசூரு, சிக்கபள்ளாபுரா, தென்கனரா, வடகனரா, உடுப்பி, ஷிவமொக்கா,  சிக்கமகளூரு, ஹாசன், குடகு மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணி தொடங்கி 21ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. கல்புர்கி  மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இதுபற்றி கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பவசராஜ் பொம்மை கூறுகையில், கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவே இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.அதேபோல் பாஜ ஆளும் மற்றொரு மாநிலமான உபியிலும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பாஜ ஆளும் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படியே பாஜ ஆளும் மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.அதோடு பாஜவின் கூட்டணி கட்சிகள் ஆளும் தமிழகம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்த அந்தந்த மாநில முதல்வர்களிடம் பாஜ மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுவது குறித்து அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்களே முடிவு எடுக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் குதித்திருப்பதும், அதை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதும் நாடு முழுவதும்  பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.
127,389
12/19/2019 4:30:07 PM
இந்தியா
250 கோடி மோசடியை கண்டுபிடித்த ஐபிஎஸ்அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை: தமிழக டிஐஜி டார்ச்சரால் பரிதாபம்
லக்னோ: தமிழக டிஐஜி டார்ச்சரால் ஐபிஎஸ் அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள குற்றவியல் மற்றும் தடய அறிவியல் துறையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சங்கல்ப் ஆனந்த்.. இவர் நேற்று மதுராவில் தனது மனைவியுடன் ரயிலில் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சங்கல்ப் ஆனந்த் தனது சோக முடிவுக்கான காரணங்களை விளக்கி ஒரு கடிதம் எழுத்தி வைத்திருத்ததை கண்டுபிடித்தனர். அதில்  கூறியிருப்பதாவது:தானும், மனைவியும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ததற்கு குற்றவியல் மற்றும் தடய அறிவியல் துறை டிஐஜி சந்தீப் மிட்டல், ஐபிஎஸ் அதிகாரி (உபி) கமலேந்திரபிரசாத் மற்றும் மற்றும் சிலர் தான் காரணம். குற்றவியல் மற்றும் தடய  அறிவியல்துறையில் ₹250 கோடிக்கு கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனத்தில் நிர்வாகிகள் யாரும் இல்லை. விரிவான செயல்முறையும் இல்லை. ஆனால், 11 பேரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி  எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், வரைதல் மற்றும் வழங்கல் அதிகாரியாக நான் நியமிக்கப்பட்டேன். மிட்டலுக்கு பெரும் தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனக்கும் மிட்டல் பணம் கொடுத்தார்.போலி பெயர்கள் கணக்கு காட்டி பணிக்கான முன் பணம் வழங்கி மோசடி நடந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் வேலை வாங்கி தருவதாக மோசடியும் நடந்துள்ளது. இந்த விவரம் கடந்த ஜனவரி மாதம் நான் அறிந்தேன். இதுகுறித்து துறை  இயக்குனர் மற்றும் டிஐஜியிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் இந்த விவகாரத்தை நீயே பார்த்து கொள் என கூறினார்கள். இதன்பிறகு, எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததால் நான் மன உளைச்சல் அடைந்தேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தற்கொலை செய்த சங்கல்ப் ஆனந்த் குற்றம் சாட்டியுள்ள டிஐஜி சந்தீப் மிட்டல் (தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி) 2011ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் ஜெயந்தி பேரணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7  பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து சந்தீப் மிட்டல் திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். 2012ம் ஆண்டு மத்திய அரசு பணிக்கு மாறுதல் பெற்று சென்றார். தற்போது, அங்கு பெரும்  சர்ச்சையில் சிக்கி உள்ளார்.தமிழக அதிகாரி டார்ச்சரால் ஒரு ஐபிஎஸ் அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
127,390
12/19/2019 4:30:30 PM
தமிழகம்
தமிழகத்திற்குள் 4 பேர் பதுங்கல் சேலம் ஐஎஸ் தீவிரவாதி கேரளாவில் சிக்கினான்: என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை
சேலம்: தமிழகத்திற்குள் 4 தீவிரவாதிகள் ஊடுருவிய விவகாரத்தில், சேலத்தை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதியை கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் பிடித்துள்ளனர். அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ரகசியமாக செயல்பட்டு வரும் தீவிரவாத கும்பலை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளில் சோதனையிட்டு, பல முக்கிய  ஆதாரங்களை கைப்பற்றி கைது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இருப்பினும் கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இன்னும் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள், இந்தியாவில் அசம்பாவித  சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.இதுதொடர்பாக கோவை என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் கடந்த 6 மாதமாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அதில், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த லியாகத் அலி என்பவர், ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில்  இருந்து கொண்டு, கேரள இளைஞர்களை மூளைசலவை செய்து, தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வந்தது தெரியவந்தது. அதுதொடர்பாக கடந்த 2 மாதத்திற்கு முன் சேலம் அம்மாபேட்டையில் உள்ள லியாகத் அலி வீட்டில் தீவிர சோதனை  நடத்தினர். அப்போது, சில சிம்கார்டுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சிக்கின.இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதி லியாகத்அலியை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர். இச்சூழலில், கடந்த 2 நாட்களுக்கு முன் லியாகத் அலியுடன் இருந்த தீவிரவாதிகள் 4 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவினர். கன்னியாகுமரி வழியாக காரில்  தமிழகத்திற்குள் வந்ததாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதன்பேரில், மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.  முதல்வர் மற்றும் பாஜ, இந்து அமைப்பு தலைவர்களுக்கு பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கேரளாவில் பதுங்கி இருந்த லியாகத் அலி உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு சேலத்தில் இருந்து செல்போன் சிம்கார்டுகள், போலி முகவரியில் வாங்கி கொடுக்கப் பட்டிருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன்பேரில்,  கோவை என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சேலம் வந்து விசாரணை நடத்தினர். அவர்களின் பிடியில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதி லியாகத் அலிக்கு 10  சிம்கார்டுகளை கொடுத்தது உறுதியானது. அந்த 10 சிம்கார்டுகளும் போலியான முகவரியில் பெறப்பட்டதாகும். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே என்ஐஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாதி லியாகத் அலி, கேரளாவில் சிக்கியுள்ளான். அவனிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவனுடன் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவிய 4  பேரை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர். அவர்கள் எங்கு பதுங்கியுள்ளார்கள்?, எதற்காக தமிழகத்திற்குள் புகுந் தார்கள்? என்பது பற்றி விசாரிக்கின்றனர்.பிடிபட்ட லியாகத் அலியை ஏற்கனவே ஒரு முறை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றி இருந்தனர். பிறகு சிறையில் இருந்து ஜாமீனில்  வெளி வந்த லியாகத் அலி, தொடர்ந்து தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்துகொண்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிக்கியுள்ள லியாகத் அலியை கோவைக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.  முதல்வர்  மற்றும் பாஜ, இந்து அமைப்பு தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கேரளாவில் பதுங்கி இருந்த லியாகத் அலி உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு சேலத்தில் இருந்து செல்போன் சிம்கார்டுகள், போலி முகவரியில் வாங்கி கொடுக்கப் பட்டிருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன்பேரில்,  கோவை என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சேலம் வந்து விசாரணை நடத்தினர். அவர்களின் பிடியில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதி லியாகத் அலிக்கு 10  சிம்கார்டுகளை கொடுத்தது உறுதியானது. அந்த 10 சிம்கார்டுகளும் போலியான முகவரியில் பெறப்பட்டதாகும். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே என்ஐஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாதி லியாகத் அலி, கேரளாவில் சிக்கியுள்ளான். அவனிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவனுடன் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவிய 4  பேரை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர். அவர்கள் எங்கு பதுங்கியுள்ளார்கள்?, எதற்காக தமிழகத்திற்குள் புகுந் தார்கள்? என்பது பற்றி விசாரிக்கின்றனர்.பிடிபட்ட லியாகத் அலியை ஏற்கனவே ஒரு முறை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றி இருந்தனர். பிறகு சிறையில் இருந்து ஜாமீனில்  வெளி வந்த லியாகத் அலி, தொடர்ந்து தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்துகொண்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிக்கியுள்ள லியாகத் அலியை கோவைக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
127,391
12/19/2019 4:30:50 PM
தமிழகம்
வெப்பசலனம் காரணமாக தென் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வெப்பசலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் அவ்வப்போது கனமழையும், மிக கனமழையும் பெய்து வருவதால் ஏரி, குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத போதும்  காலை நேரத்தில் பனி பொழிவு காணப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை தென்  தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருக்கும். அடுத்து  வரும் ஒருசில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
127,392
12/19/2019 4:31:12 PM
தமிழகம்
மருத்துவ திடக்கழிவுகளை முறையாக கையாளாத நிறுவனங்களை மூட நடவடிக்கை : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
சென்னை: மருத்துவ திடக்கழிவுகளை முறையாக கையாளாத நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மருத்துவ திடக்கழிவுகள், காலாவதியான மாத்திரைகள், மருந்துகளை குப்பை கழிவுகளுடன் சேர்த்து கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் அவ்வப்போது  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தும், கொட்டப்பட்ட கழிவுகளை சேகரித்து பொது மருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு அனுப்பி கையாளப்பட்டு வருகிறது.இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஆய்வகங்கள், தடுப்பூசி மையங்கள், ரத்த வங்கி  முகாம்கள், பள்ளிகளில் உள்ள முதலுதவி மையங்கள் உள்ளிட்டவை மருத்துவ திடக்கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து பொது மருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.தவறும் பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986ன் படி மூடுதல் மற்றும் மின் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிலத்திலோ, நீர்நிலைகளிலோ கொட்டப்பட்டு சுற்றுச்சூழல்  பாதிக்கப்படுமேயானால், அவர்களிடமிருந்து சட்டவிரோத செயல்களினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதற்காக சுற்றுச்சூழல் இழப்பீடு தொகை பெறப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,393
12/19/2019 4:31:34 PM
தமிழகம்
5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தலைமை அலுவலகத்தில் நாளை உள்ளிருப்பு போராட்டம்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு
சென்னை: ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நாளை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கை:முறையற்ற ஆய்வுகளை ரத்து செய்ய வேண்டும். விற்பனை தொகையை வங்கி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையில் உள்ளதை போன்று வசூல் செய்ய வேண்டும். சங்க நிர்வாகிகள் மீது நடைபெறும் பழிவாங்கும்  நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது.  நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,394
12/19/2019 4:31:53 PM
தமிழகம்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து சென்னயில் 3 லட்சம் கட்டிடங்களில் ஆய்வு
சென்னை: மழைநீர் சேகரிக்க ஏதுவாக புனரமைக்கப்பட்ட சமுதாய கிணறுகளை மாநகராட்சியின் துணை ஆணையர்கள் ஆய்வு செய்தனர். சென்னையில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஆய்வு செய்ய வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,  சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் ஆகியோர் உத்தரவைத் தொடர்ந்து இந்த குழுக்கள் வீடுவீடாக சென்று மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறது. தற்போது வரை இந்த குழுக்கள் 3,19,788 கட்டடங்களில் ஆய்வு செய்துள்ளனர். இதில் 2,47,499 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 22,429 கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 43,223 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயனற்று இருந்த 300 சமுதாய கிணறுகளும் சீரமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலம் 9 வார்டு, ஈசானிமூர்த்தி கோயில் தெருவில் பயனற்று இருந்து புனரமைக்கப்பட்ட சமுதாய கிணற்றை பணிகள் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். இதேபோல்,  அண்ணாநகர் மண்டலம் 94 வார்டில், சிட்கோ நகர் 42வது தெருவில் பயனற்று இருந்து புனரமைக்கப்பட்ட சமுதாய கிணற்றை சுகாதாரத்துறை துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
127,395
12/19/2019 4:32:11 PM
தமிழகம்
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜன.21ல் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத்துறை மீண்டும் வரும் ஜனவரி 21ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது.இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வேலை நிறுத்தத்தையொட்டி கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ளது என்று காரணம் காட்டி தொழிலாளர்கள் ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 86 பேர் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டு ஊர் மாறுதல் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு  வழங்கப்படும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
127,396
12/19/2019 4:32:31 PM
தமிழகம்
சாகித்ய அகாடமி விருது மகிழ்ச்சியளிக்கிறது கண்மாய்களின் தற்போதைய நிலையே ‘சூல்’ நாவலின் மையக்கரு: எழுத்தாளர் சோ.தர்மன் பேட்டி
கோவில்பட்டி: கண்மாய்களின் தற்போதைய நிலையே சூல் நாவலின் மையக்கரு எனவும், இந்நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என  எழுத்தாளர் சோ.தர்மன் கூறினார்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உருளைக்குடி கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் - பொன்னுத்தாய் தம்பதியரின் மகன் சோ.தர்மராஜ் (66). சோ.தர்மன் எனும் புனைப்பெயர் கொண்ட எழுத்தாளரான இவர், தற்போது கோவில்பட்டி  வ.உ.சி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தை சேர்ந்த கரிசல் வட்டார எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்றழைக்கப்படும் கி.ரா.வின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட  தர்மராஜ், தனது எழுத்து பணியை தொடங்கினார்.இவரது முதல் கதை கடந்த 1980-ம் ஆண்டு பிரசுரமானது. இவர் இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார். தற்போது சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ‘சூல்’ என்ற நாவல் கடந்த 2016ம் ஆண்டு பிரசுரமானது.  இவர் வில்லிசை பற்றியும் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே தமிழக அரசு சார்பில் இரண்டு முறை விருது பெற்றுள்ளார். இவரது ‘கூகை’ எனும் நாவல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதோடு, மலையாளத்திலும் ‘மூங்கா’ என்ற பெயரில் மொழி  பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு தற்போது இலக்கியத்துக்கான உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.இதுகுறித்து எழுத்தாளர் சோ.தர்மராஜ் நிருபர்களிடம் கூறியதாவது; கடந்த 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தபோது, 39 ஆயிரத்து 640 கண்மாய்கள் இருந்தன. அந்த கண்மாய்களின் தற்போதைய நிலை என்ன என்பதே  ‘சூல்’ நாவலின் மையக்கரு ஆகும். முழுமையாக விவசாயம் நலிவுறுவதற்கு காரணமே கண்மாய்களை மராமத்து பார்க்காததும், மண் எடுக்க விடாததும் காரணம் என அதில் எழுதியுள்ளேன். அந்த கண்மாய்களை பற்றி பேசக்கூடிய நாவல்  தான் ‘சூல்’.அடிப்படையில் நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் காட்டை தண்ணீர் இல்லாமல் தரிசாக போட்டுவிட்டு தான் இங்கு வந்து உட்கார்ந்துள்ளேன். இது தான் இந்த நாவலை எழுதுவதற்கு எனக்கு மிகவும் தூண்டுதலாக இருந்தது. சாகித்ய அகாடமி  விருதினை நான் பிறந்த சொந்த ஊரான எனது உருளைக்குடி கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
127,397
12/19/2019 4:32:59 PM
இந்தியா
குடியுரிமை சட்ட திருத்தம் எதிர்த்து போராட்டம் மாணவர்களுக்கு கல்வி தருவது குரல் உயர்த்தத்தான்: மாணவர்களுக்கு கல்வி தருவது குரல் உயர்த்தத்தான்: நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து
மும்பை: மாணவர்களுக்கு கல்விதருவது குரல் உயர்த்தத்தான், ஒவ்வொரு குரலும் இந்தியாவை மாற்றும் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று  ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது.   போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர்புகை வீசியும் போராட்டத்தை ஒடுக்கினார்கள்.  ஆனாலும் நாடுமுழுவதும் போராட்டம் பரவியது. போராட்டம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு குரலும் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது நம் கனவு. கல்வி என்பது அவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்க அதிகாரம் கற்றுத்தருகிறது. குரல் கொடுப்பதற்காக நாம் அவர்களை வளர்த்துள்ளோம். வளர்ந்து வரும்  ஜனநாயகத்தில், ஒருவரின் குரலை அமைதியாக உயர்த்த வேண்டும். வன்முறையில் ஈடுபடுவது தவறு. ஒவ்வொரு குரலும் கணக்கிடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குரலும் இந்தியாவை மாற்றும் வகையில் செயல்படும்.இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.
127,398
12/19/2019 4:33:20 PM
தமிழகம்
இரவில் ரகசிய கூட்டம் போட்டு ஊராட்சி தலைவர் பதவி 12 லட்சத்துக்கு ஏலம்: கடலூர் அருகே பரபரப்பு
கடலூர்: கடலூர் அருகே இரவில் ரகசிய கூட்டம் போட்டு ஊராட்சி தலைவர் பதவி ரூ.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.இந்நிலையில் நேற்றிரவு பாலூர் ஊராட்சியில் ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலூர் பெருமாள் கோயில் அருகில் நடந்த கூட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்திற்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது. அப்போது அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது.இதில் அந்த ஊரை சேர்ந்த ஒருவர் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கு பதவியை ஏலம் கேட்டார். மேலும் ஊராட்சிக்குரிய பல திட்டங்களை செயல்படுத்துவதாகவும் உறுதி கூறி ஏலத்தொகையை உடனடியாக செலுத்துவதாகவும் கூறினார்.  அதனை அடுத்து ஏலம் நிறைவடைந்த நிலையில் கூட்டம் கலைந்தது.ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,399
12/19/2019 4:33:44 PM
இந்தியா
வெளிநாட்டில் பதுங்கியுள்ள நித்தியானந்தாவை கண்டுபிடித்து கொடுங்கள்: சிபிஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகளுக்கு பெங்களூரு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்
பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், வெளி நாட்டில் பதுங்கியுள்ள அவரை கண்டுப்பிடித்து கொடுக்கும்படி டெல்லியில் உள்ள சிபிஐ மற்றும் இன்டர்போல்  அதிகாரிகளுக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.பெங்களூருவை அடுத்த பிடதியில் நித்தியானந்தா, ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரின் ஆசிரமத்தில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் நடைபெறுவதாக பிடதி போலீசாருக்கு புகார்கள் வந்தன. அத்துடன் ஆசிரமத்தை சேர்ந்த  நித்தியானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தா ஒரு முறை மட்டும் ஆஜரானார். அதன்பிறகு 44 முறை ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து லெனின் கருப்பன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 9ம் தேதி ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 12ம் தேதி நித்தியானந்தாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று மாநில  போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மாநில ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனாலும் போலீசாருக்கு நித்தியானந்தாவை பற்றிய எந்த  தகவலும் கிடைக்கவில்லை. வழக்கை நடத்திய நீதிமன்றம் டிசம்பர் 18ம் தேதி ஒத்தி வைத்தது.அதன்படி அவ்வழக்கு நீதிபதி நாகேந்திரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணை நடத்தியபோது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நித்தியானந்தா சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். சில  ஆவணங்கள் கிடைத்திருந்தாலும், அவை முழுமையாக இல்லை. நித்தியானந்தா வெளிநாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், இன்டர்போல் போலீஸ் மூலம் ப்ளுகார்னர் நோட்டீஸ் கொடுப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.  மேலும் ஆவணங்கள் சேகரிக்க காலாவகாசம் வழங்க வேண்டும் என்றார். அரசு வக்கீலிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, நித்தியானந்தா உண்மையாக எங்குள்ளார். அவர் குறித்து முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில் பாலியல் பலாத்காரம், பாலியல் வன் கொடுமை, சிறுமிகள் கடத்தல், கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா, வெளிநாடு சென்று பதுங்கியுள்ளார். அவரை சர்வதேச அளவில்  தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். அவர் எங்கு பதுங்கியுள்ளார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான ஃபுளு கார்னர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நித்தியானந்தாவை கண்டுப்பிடித்து கொடுங்கள் என்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு ேபாலீஸ் சார்பில் டெல்லியில்  உள்ள சிபிஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
127,400
12/19/2019 4:34:05 PM
தமிழகம்
அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி பேராசிரியை தற்கொலையில் திருப்பம்: மற்றொரு பேராசிரியர் கைது?
அண்ணாநகர்: அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி வகுப்பறையில் பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மற்றொரு பேராசிரியர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.சென்னை அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வகுப்பறையில் நேற்று முன்தினம் இரவு ேபராசிரியை ஹரிசாந்தி (32) தனது மணிக்கட்டு பகுதியை கத்தியால் அறுத்துக்கொண்டு, அங்கிருந்த பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் ஏற்கனவே இந்த கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு பாடத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். தற்போது பெரம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்  பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.இங்கு ஹரிசாந்தி பணியாற்றியபோது ெதலுங்கு துறையின் தலைவராக இருக்கும் நடராஜனுடன் கடந்த 2011-15ம் ஆண்டுகளில் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.  இருவரும் காதலித்து, ஹரிசாந்தி வைஷ்ணவா கல்லூரியில் இருந்தவரை தொடர்ந்தனர். பின்னர் அரசு பள்ளிக்கு ஹரிசாந்தி சென்ற பிறகும் வைஷ்ணவா கல்லூரிக்கு வந்து நடராஜனுடன் காதலை தொடர்ந்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு  நடராஜனுக்கு திருமணமாகி, தற்போது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். எனினும், ஹரிசாந்தியை மறைமுகமாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக நடராஜன் ஏமாற்றி வந்துள்ளார்.இதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஹரிசாந்தி வலியுறுத்தவே, அதற்கு நடராஜன் மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த ஹரிசாந்தி, நேற்று முன்தினம் இரவு வைஷ்ணவா கல்லூரிக்கு வந்து, வகுப்பறையில் கை  நரம்புகளை கத்தியால் அறுத்துக்கொண்டு, அங்கிருந்த பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது.இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிசாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை 11 மணியளவில் ஹரிசாந்தியின் உடல் உறவினர்கள்  முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.பேராசிரியர் நடராஜனுடனான காதல், தனது மரணம் உள்ளிட்ட பலவற்றை ஹரிசாந்தி தனது செல்போனின் வாட்ஸ் அப்பில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு முன் ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பது  குறித்து விசாரிக்க போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஹரிசாந்தி மரணத்தில் நடராஜனுக்கு உள்ள தொடர்பு குறித்து மறைப்பதில் கல்லூரி நிர்வாகமும் காவல் துறையும் உண்மையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என மாணவர்கள்  தரப்பில் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் ஹரிசாந்தியை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் நடராஜன் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
127,401
12/19/2019 4:34:27 PM
தமிழகம்
காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி டெல்லி சென்றார்: பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு கூடுதல் நிதி கேட்க திட்டம்
சென்ைன: ஜனாதிபதி தலைமையில் டெல்லியில் நடைபெறும் காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை டெல்லி சென்றார். அவரை தமிழக எம்பிக்கள் வரவேற்றனர். டெல்லியில் பிரதமர்  மோடியை தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ள முதல்வர், தமிழகத்திற்கு கூடுதல் நிதி கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,  நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருநாள் பயணமாக இன்று காலை 7.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் 2 உதவியாளர்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு  அதிகாரி உடன் சென்றார். காலை 11.15 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் எடப்பாடியை தமிழக எம்பிக்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கிருந்து  பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு விழா நடைபெறும் ராஷ்டிரபதி பவனுக்கு செல்கிறார்.மகாத்மா காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திலேயே, பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  மனுவை பிரதமரிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார். குறிப்பாக, ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார். அதேபோன்று தமிழகத்தில் நடைபெற்று  வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி நேரில் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார். அதே அரங்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதல்வர் எடப்பாடி சந்தித்து பேச  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி இன்று இரவு 11.45 மணிக்கு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். ஒருவேளை பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச காலதாமதம் ஏற்பட்டால் நாளை காலை டெல்லியில்  இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.முதல்வர் எடப்பாடியுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகமும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
127,402
12/19/2019 4:34:47 PM
தமிழகம்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
பெரம்பூர்: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி  வருகின்றன. இந்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்களும் பிற அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் எஸ்எப்ஐ அமைப்பினர்  பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர். முன்னதாக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கடிதங்கள் எழுதி எடுத்துவந்து வெளியில் உள்ள தபால் பெட்டியில் போட்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர், குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
127,403
12/19/2019 4:35:04 PM
தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மீனம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆலந்தூர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மீனம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது,  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள்  மீது தடியடி நடத்தியதை கண்டித்தும் கோஷங்களை  எழுப்பினர்.இதுபற்றி தகவலறிந்ததும் மீனம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்குவந்து மாணவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். இதன்பிறகு சிறிது நேரம் போராட்டம் நடத்திவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
127,404
12/19/2019 4:35:26 PM
தமிழகம்
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் காவலன் செயலி விளக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு காவலன் எஸ்ஓஎஸ் செயலி பயன்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி கண்ணன் விளக்கினார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்களுக்கான காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்து விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்  டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹரிஹரன், கல்லூரி துணை முதல்வர் அனிதா முன்னிலை வகித்தனர்.செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் கலந்து கொண்டு, காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்து மருத்துவ கல்லூரி மாணவிகள், செவிலியர்களுக்கு விளக்கம் அளித்தார். ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தும் மாணவ-மாணவிகள் மற்றும்  செவிலியர்கள், தங்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்து ஏற்படும்போது, இந்த காவலன் செயலில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் காவல்துறை துரித நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கும். இதன்மூலம் பெண்கள் பெரும் ஆபத்தில் இருந்து  காவல்துறை மூலம் காப்பாற்றப்படுவார்கள் என்று எஸ்பி கூறினார். இதில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சண்முகம், பேராசிரியர்கள் சிந்துஜா, அனுபமா, செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின்,  அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
127,405
12/19/2019 4:35:47 PM
உலகம்
அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்  போட்டியிடுவார் என கருதப்படுகிறது.இந்நிலையில் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தக தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக புகார் எழுந்தது. அத்துடன் தன் மீதான புகாரை பார்லி.யில்  விசாரிக்க தடை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு  வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பார்லி.யில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது.இந்நிலையில் இந்த புகார்களின் அடிப்படையில் டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீது பார்லி.யில் ஓட்டெடுப்பு நடத்த நீதித்துறைக்கான பார்லி. குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து டிரம்ப்பை பதவி நீக்குவதற்கான கண்டன  தீர்மானம் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது.இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரதிநிதிகள் சபையில் நடந்த ஓட்டெடுப்பில், 229 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். இதனையடுத்து  பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேறியது.இங்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே, டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியும். செனட் சபையில் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 53  உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு டிரம்ப் பதவி காப்பாற்றப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டன தீர்மானம் மீது அமெரிக்க செனட் சபையில் அடுத்த மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.அமெரிக்காவில் இரு அதிபர்கள் மீது இதுவரை கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1868ல் அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் 1998ல் அதிபர் பில் கிளின்டன் ஆகியோர் மீது பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இவர்களுக்கு எதிரான கண்டன தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அவர்கள் பதவி தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
127,406
12/19/2019 4:36:06 PM
தமிழகம்
தமிழகம் முழுவதும் 7 டிஎஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் 7 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழகம் டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:சென்னை மத்திய குற்றப்பிரிவில் உதவி கமிஷனராக இருந்த ஆரோக்கிய ரவிந்தரன் காவலர் தொலைத்தொடர்பு பிரிவுக்கும், சென்னை காவலர் தொலைத்தொடர்பு பிரிவில் இருந்த ராமசந்திரமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி  கமிஷனராகவும், மாநில குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த சரவணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த செல்லமுத்து சென்னை எஸ்சி,எஸ்டி விஜிலென்ஸ் பிரிவுக்கும்,  சென்னை எஸ்சி,எஸ்டி விஜிலன்ஸ் பிரிவில் இருந்த சீனிவாசன் சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி நகர சிபிசிஐடியில் இருந்த பிராங்க் டி.ரூபான்சென்னை அசோக் நகர் உதவி கமிஷனராகவும், சென்னை  அசோக் நகர் உதவி கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் மெரேன் அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
127,407
12/19/2019 4:36:25 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் போட்டி வேட்பாளர்களால் அதிமுகவினர் ‘கிலி’
திருவள்ளூர்: உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுகவினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில், போட்டி வேட்பாளர்கள் களமிறங்கி, அதிகாரப்பூர்வ வேட்பாளரை அலற வைத்து வருகின்றனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக, பாஜ, தேமுதிக, பாமக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்த திமுக கூட்டணியும் இதேபோன்று தேர்தலை எதிர்கொள்கிறது.அதிமுகவில் வேட்பாளர் குறித்த அறிவிப்பை மாவட்ட கட்சி நிர்வாகிகள் வெளியிடவில்லை. வாக்குகளை பிரிக்கும் வங்கியில், தலைவர் பதவிக்கு போட்டியாக அதிமுகவினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பற்றாக்குறைக்கு, சில சுயேச்சை  வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளனர். பல ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு ஒரே கட்சியில் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கி, வெற்றிக்கு வேட்டு வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தில்,  முன்னணியில் இருப்பது ஆளுங்கட்சியான அதிமுகதான். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘சீட்’ பங்கீட்டில் எப்போதுமே, கருத்து வேறுபாடு இருக்கும். மாவட்ட செயலாளர் அழைத்து பேசி சரி செய்ய வேண்டும். மாறாக, போட்டி வேட்பாளர்கள் களமிறங்கினால், கட்சியின் கட்டுப்பாடு  காற்றில் பறக்கும்’ என்றனர்.இச்சூழலில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு வாபஸ் வாங்கும் நேரம் முடிகிறது. அதற்குள், போட்டி வேட்பாளர்களை சமாதானம் செய்யும் முயற்சி பல இடங்களில் நடக்கிறது. இதனால், அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கலக்கம்  அடைந்துள்ளனர்.
127,409
12/19/2019 4:36:46 PM
குற்றம்
அமைந்தகரையில் பரபரப்பு இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்: வாலிபருக்கு சரமாரி வெட்டு
அண்ணாநகர்: அமைந்தகரையில் இறுதி ஊர்வலத்தின்போது நடந்த கோஷ்டி மோதலில் வாலிபருக்கு சரமாரி வெட்டு விழுந்தது.சென்னை அமைந்தகரை பகுதியில் நேற்றிரவு ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் இரண்டு தரப்பினருக்கு இடையே டான்ஸ் ஆடுவதில் கடும் மோதல் ஏற்பட்டதால் ஈஸ்ட் கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா (26)  என்பவரை கும்பல் ஓட ஓட விரட்டி, அவரது தலை மற்றும் கைகளில் சரமாரி அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் விழுந்ததால் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியது. பின்னர் விக்னேஷ்ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன்  வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை  சேர்ந்த ஹரிஷ் (22) கைது செய்தனர். அனூப் மற்றும் விக்கி (எ) தினேஷ் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
127,410
12/19/2019 4:37:04 PM
குற்றம்
எஸ்ஐயை வெட்டிய வழக்கில் புளியந்தோப்பு ரவுடி கைது
பெரம்பூர்: போலீஸ் எஸ்ஐயை வெட்டிய வழக்கில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடியை கைது செய்தனர்.சென்னை புளியந்தோப்பு எஸ்ஐ கோபால் தலைமையில், போலீசார் கடந்த அக்டோபர் மாதம்  சென்னை கன்னிகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்களை அழைத்து போலீசார் விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒருவர் தனது கையில் வைத்திருந்த பிளேடால் எஸ்ஐ கோபாலின் கையில் கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுபற்றி போலீசார் விசாரித்து பிரபல ரவுடி ஜங்கிலி கணேஷ் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புளியந்தோப்பை சேர்ந்த ரவுடி தினேஷை (29) தேடி வந்தனர். இந்தநிலையில் கன்னிகாபுரம்  விளையாட்டு திடலில் தினேஷ்  பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்படி போலீசார் அங்கு சென்று தினேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
127,411
12/19/2019 4:37:30 PM
குற்றம்
டிஜிட்டல் இந்தியாவில் கழிவறையின்றி தவிக்கும் கட்டிட தொழிலாளர்கள்
புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 25வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு மகாலட்சுமி நகரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 75 பேர் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து  வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறியதாக கட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் வீடுகளில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் பணிக்கு சென்றால் நாள் ஒன்றுக்கு தினசரி 600 ரூபாய் வழங்கப்படுகிறது.இவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்விளக்கு வசதிகள் எதுவும் இல்லை. இன்றும் மண்ணெண்ணெய் விளக்குத்தான் பயன்படுத்துகின்றனர். இயற்கை உபாதைகள் கழிக்க ஒதுக்குப்புறமான இடத்துக்கு செல்கின்றனர். இதனால் பெண்கள்,  பகலில் செல்லமுடியாமல் இரவில்தான் செல்கின்றனர். திறந்தவெளியை பயன்படுத்துவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ‘மேலும் இவர்கள் வசிக்கும் வீடுகளை சுற்றி முட்செடிகள் வளர்ந்து உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள்  செய்துகொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’ஆந்திராவில் இருந்து தமிழகத்தில் தங்குவதற்கு வீடுகள்கூட கொடுக்காமல் வேலை வாங்குகின்றனர்.கதிர்வேடு மகாலட்சுமி நகரில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மின்சார வசதி உள்பட அடிப்படை வசதி இல்லாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கட்டிட பணிக்கு சென்று வருகின்றனர். வெயில், மழை நேரங்களிலும்  பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்களை வேலைக்கு அமர்த்தி வேலை வாங்கும் ஒப்பந்தக்காரர்கள் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பாதுகாப்பான முறையில் தங்க வைக்க வேண்டும்.எனவே, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கட்டிட தொழிலாளர்கள் குழந்தைகள் படிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.
127,417
12/19/2019 4:37:56 PM
தமிழகம்
மேற்கூரை, விளக்குகளை காணோம்... கொரட்டூர் ரயில் நிலையத்தில் பரிதவிக்கும் மக்கள்; அதிகாரிகள் செவி சாய்ப்பார்களா?
அம்பத்தூர்: சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் உள்ளது.இதன் வழியாக தினமும் 160க்கு மேற்பட்ட மின்சார ரயில் சேவைகளும், 50க்கு மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும் நடைபெறுகிறது. கொரட்டூர் மற்றும்  20க்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.கொரட்டூர் பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் ரயில் மூலமாக தான் வேலைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் கொரட்டூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லைஇதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது;கொரட்டூர் ரயில் நிலையம் 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தினமும் 25ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். பிளாட்பாரங்களில் உள்ள மின் விளக்குகள் இரவு எரிவதில்லை.  இதனால் இருளை பயன்படுத்தி  சமூக  விரோதிகள் சில்மிஷம், பாலியல் தொல்லை, வழிப்பறி செய்கின்றனர். கடந்த வாரம் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திருப்பூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர் ரயில் மோதி பலியானார். கூரை இல்லாததால் மழை காலங்களில்  அவதிப்படுகிறோம். கழிப்பறை பயன்பாடு இல்லாமல் மூடியே கிடக்கிறது. ரயில் நிலையம் தொடங்கும் போது கட்டப்பட்ட நடைமேம்பாலம் சேதம் அடைந்துள்ளது.ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபடாததால்  திருட்டு, செயின் பறிப்பு நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பவில்லை. ரயில் நிலையத்துக்கு செல்லும்  சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வந்து செல்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சுரங்கப்பாதை பணிகளால், பயணிகள் ரயில் நிலையத்துக்கு சுற்றி வர வேண்டிய அவல நிலை உள்ளது. இவ்வாறு கூறினர்.எனவே, கொரட்டூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துகொடுக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
127,418
12/19/2019 4:38:16 PM
தமிழகம்
ஆசூர் கிராமத்தில் இடியும் நிலையில் தொகுப்பு வீடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆசூர் கிராமத்தில் இடியும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஆசூர் கிராமத்தில் வசிக்கும் 25 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு கடந்த 1999-2000ம் ஆண்டு அரசு சார்பில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் இலவச தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டன. தற்போது இந்த வீடுகளில்  மேற்கூரை கான்கிரீட் கலவை பெயர்ந்து விழுந்துவிட்டதால் கம்பிகள் தெரிகிறது. இதனால் வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் வசித்து வருகின்றனர்.எனவே, வீடுகளை பழுதுபார்த்து தர வேண்டும். இல்லாவிடில் இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள், பிடிஓ அலுவலகத்தில்  பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.  இதுபற்றி மக்கள் கூறுகையில், ‘’ தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளதால் பயமாக இருக்கிறது. மழை பெய்தால் ஒழுகுகிறது. விபரீதம் நடப்பதற்குள் வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.
127,419
12/19/2019 4:38:33 PM
தமிழகம்
கொடுங்கையூர் தனியார் விடுதியில் போதை பயன்படுத்தியவர் கைது
பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள தனியார் விடுதியில் போதை பொருட்கள் பயன்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.சென்னை கொடுங்கையூர், ஜிஎன்டி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியில்  சமூக விரோத செயல் நடப்பதாக கொடுங்கையூர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு  போலீசார் அந்த விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்தனர்.  இதில் ஒருவர் சிக்கினார். 4 பேர் தப்பிவிட்டனர்.விசாரணையில் பிடிபட்ட நபர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பதும் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்காக விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு 4 பேரை தேடி வருகின்றனர். இதுபற்றி லாட்ஜ் உரிமையாளரிடமும் விசாரித்து வருகின்றனர்.
127,420
12/19/2019 4:38:53 PM
தமிழகம்
திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி திடீர் ஆய்வு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள தனிப்பிரிவு அலுவலகம், குற்றப்பதிவேடு பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, கைரேகை பிரிவுகளை பார்வையிட்டார். அலுவலக  ஆவணங்கள், வழக்குகளின் ஆவணங்கள் மற்றும் நிலை குறித்து ஆய்வு செய்து, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.பின்னர், மாவட்ட ஆயுதப்படை வளாகம், மாவட்ட மோப்ப நாய் பிரிவு, போலீசாரின் வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.பின்னர், போலீசாரின் அணிவகுப்பு பயிற்சி, கவாத்து பயிற்சி, துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளையும் பார்வையிட்டார். அப்போது, காஞ்சி சரக டிஐஜி தேன்மொழி, மாவட்ட எஸ்பி அரவிந்தன் ஆகியோர்  உடனிருந்தனர்.
127,421
12/19/2019 4:39:11 PM
தமிழகம்
கட்சியினரின் ‘ஸ்பான்சர்’ உணவை சாப்பிட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடை: தேர்தல் கமிஷன் அதிரடி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கென, மாவட்டத்தில் 2,437 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் நாளில், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்  வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தலுக்கு முதல் நாளில், வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு சென்று தங்குவர். அடுத்த நாள் மாலை வரை, பள்ளியில் தங்கியிருந்து வாக்குச்சாவடி பணிகளை கவனிப்பர்.  வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக உணவு படியை தேர்தல் கமிஷன் வழங்கி விடும்.எனினும், முதல் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்லும் பெரும்பாலான அலுவலர்களுக்கு, அந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் உணவு ‘ஸ்பான்சர்’ செய்து விடுவர்.பெரும்பாலான இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் கறி விருந்தும் ஏற்பாடு செய்வதுண்டு. அடுத்த நாளில் காலை, மதிய உணவுகளைக்கூட கட்சியினரே ஏற்பாடு செய்து விடுவர்.தேர்தல் கமிஷன், உணவுக்கு தனியாக பணம் கொடுக்கும் போதிலும், பெரும்பாலோர் கட்சியினரின் ஸ்பான்சர் உணவுகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை கட்சியினர் ஸ்பான்சர் உணவை சாப்பிட  கூடாது என தேர்தல் கமிஷன் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘கட்சியினர் வழங்கும் உணவை வாக்குச்சாவடி அலுவலர்கள் சாப்பிட கூடாது.தேர்தல் கமிஷன் வழங்கும் பணத்தில்தான் உணவு வாங்கி சாப்பிட வேண்டும். அங்குள்ள விஏஓ, கிராம உதவியாளர்களிடம் பணம் கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்லலாம். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள்  செய்து விடுவர்’ என்றார்.
127,422
12/19/2019 4:39:37 PM
குற்றம்
அம்பத்தூர் தனியார் காம்ப்ளக்சில் டிராவல் ஏஜென்சி, ஸ்டூடியோ கடை உடைத்து பணம் திருட்டு
அம்பத்தூர்: அம்பத்தூரில் தனியார் காம்ப்ளக்சில் உள்ள டிராவல் ஏஜென்சி, ஸ்டூடியோ கடை உடைத்து பணம் திருடப்பட்டது.அம்பத்தூர் சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் டிராவல் ஏஜென்சி இயங்கி வருகிறது. இதில் கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த ஹெர்பட் (72) மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு டிராவல்ஸ்  நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று காலை அவர் அலுவலகத்தை திறக்கவந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து  கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் வைத்திருந்த  ரூ.50 ஆயிரம் கொள்ளைப்போனது தெரியவந்தது.இதே காம்ப்ளக்சில் உள்ள போட்டோ ஸ்டூடியோ நடத்திவருபவர் அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், சாரங்கபாணி தெருவை சேர்ந்த அலெக்ஸ் (57). இவரது கடையை உடைத்து அங்கு வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கேமராவை  மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுபற்றி கொடுக்கப்பட்ட புகார்கள் அடிப்படையில், அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதுரை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.
127,423
12/19/2019 4:39:59 PM
தமிழகம்
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வாலாஜாபாத் பஸ் நிலையம், ராஜவீதி, ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இந்நிலையில், வளர்ச்சி  பணிகள் குறித்து வாலாஜாபாத்தில் நேற்று கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, இந்த ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு, அவைகளை அதிரடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து இன்று காலை பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ், வாலாஜாபாத் தாசில்தார் மித்ரா தேவி, வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் இன்று காலை வாலாஜாபாத் பஸ் நிலையத்துக்கு சென்றனர்.  அங்கு, சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவரையொட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற முற்பட்டனர். அதற்கு அங்குள்ள வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். வியாபாரிகள் கூறுகையில்,  ‘திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி எங்களுக்கு முன்னரே தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் நாங்களே கடைகளை அகற்றி  இருப்போம். திடீரென அகற்றினால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வோம்’ என்றனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
127,424
12/19/2019 4:40:25 PM
தமிழகம்
கோயம்பேடு 100 அடி சாலையில் கழிவுநீர் தேங்கி நின்ற சாலையை டிராபிக் போலீசார் சீரமைத்தனர்
அண்ணாநகர்: கோயம்பேடு 100 அடி சாலையில் கழிவுநீர் தேங்கி நின்ற சாலையை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்.சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன  ஓட்டிகளும் மக்களும் கடும் சிரமப்பட்டு வந்தனர். நேற்றிரவு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் இருந்த ஆய்வாளர் ஜெயகுமார், காவலர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பாதாள சாக்கடை உடைந்த இடத்தில் பேரிகார்டு அமைத்து  போக்குவரத்தை சீரமைத்தனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீசார் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, 100 அடி சாலையில் கழிவுநீர் தேங்கியிருந்த பகுதிகளில் ஆய்வாளர் ஜெயகுமார்,  போலீஸ்காரர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் முயற்சி எடுத்து மணலை கொட்டி  சாலையை தற்காலிகமாக சீரமைத்தனர்.
127,426
12/19/2019 4:40:45 PM
தமிழகம்
படிக்கட்டில் நிற்காதீர்கள் என்றதால் மாநகர பஸ் டிரைவர் மூக்கு உடைப்பு: மாணவருக்கு வலைவீச்சு
தண்டையார்பேட்டை: படிக்கட்டில் நின்று பயணம் செய்யாதீர்கள் என்று கூறியதால் மாநகர பஸ் டிரைவரின் மூக்கை உடைத்த மாணவரை  போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை திருவொற்றியூரில் இருந்து நேற்றிரவு கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (தடம் எண் 159) 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ராஜாகடை பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் 4 பேர் பஸ்சில் ஏறினர். பின்னர்  டோல்கேட் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, படிக்கட்டில் நின்றபடி மாணவர்கள் பயணம் செய்ததால் டிரைவரும் கண்டக்டரும் மேலே வரும்படி மாணவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் மாணவர்கள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து  படிக்கட்டில் பயணம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் மாணவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். இதையடுத்து டோல்கேட் நிறுத்தத்தில்  பஸ் நின்றபோது, டிரைவர் மூக்கில் ஒரு மாணவர் குத்திவிட்டு கீழே குதித்து ஓடிவிட்டார். டிரைவரின் மூக்கில்  இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திவிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுபற்றி அறிந்ததும் சக டிரைவர்களும் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும்  பரபரப்பு நிலவியது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், பஸ்சை எடுக்கும்படி கூறி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவர்களை சமாதானப்படுத்தினர். இதன்பிறகு பஸ்கள் இயக்கப்பட்டது. டிரைவர் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார்  வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய தப்பிய  மாணவனை தேடி வருகின்றனர்.
127,427
12/19/2019 4:41:03 PM
குற்றம்
ஆவடி டேங்க் பேக்டரியில் பழைய இரும்பு எடையில் மோசடி: அதிகாரிகள் உடந்தையா? 3 லாரிகள் பறிமுதல்
ஆவடி: ஆவடி டேங்க் பேக்டரியில் பழைய இரும்பு பொருட்கள் எடையில் மோசடி செய்ததால் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அதிகாரிகள் உடந்தையா என விசாரணை நடத்தப்படுகிறது.ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான ஆவடி டேங்க் பேக்டரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள வாகன கிடங்கு பிரிவில் சேரும் இரும்பு கழிவுகளை அண்ணாசாலை அருகே உள்ள பார்டர் ேதாட்டம் பகுதியை சேர்ந்த காளிமுத்து  என்பவர் ஒப்பந்த அடிப்படையில் அகற்றி வருகிறார். அவர் உரிய ரசீதுடன் இரும்பு கழிவு பொருட்களை ஏற்றும்போது, கூடுதலான இரும்பு பொருட்களையும் ஏற்றி சென்றதாக தெரிகிறது. இதற்கு அங்குள்ள அதிகாரிகளும் உடந்தையாக  இருந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே பலகோடி மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திருட்டுப்போவதாக  ராணுவ விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டுவந்தது.இந்த நிலையில், இரும்பு கழிவு பொருட்களை ஏற்றுவதற்காக காளிமுத்துவின் 7 லாரிகள் நேற்று காலை ஆவடி டேங்க் பேக்டரி தொழிற்சாலைக்கு வந்தன. இதை விஜிலென்ஸ் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். மாலை 7 லாரிகளும்  இரும்பு கழிவுகளை ஏற்றிக்கொண்டு வெளியே வந்தபோது விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் ரினிஜ் தலைமையில் போலீசார் அந்த லாரிகளை பிடித்து, திருமுல்லைவாயலில் உள்ள லாரி எடை மேடை பகுதிக்கு கொண்டு வந்தனர்.அங்கு ஒவ்வொரு லாரியையும் எடை மேடையில் நிறுத்தி இரும்பு பொருட்களை அளவை குறிப்பிட்ட பில்லின் அளவுடன் சரிபார்த்தனர். அப்போது 3 லாரிகளில் பில்லில் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக 7 முதல் 8 டன் இரும்பு கழிவு  பொருட்கள் அதிகம் இருந்தன. இதையடுத்து அந்த 3 லாரிகளையும் டிரைவருடன் ராணுவ விஜிலன்ஸ் போலீசார் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார், 3 லாரிகளின் டிரைவர்கள் தயாளன் (34), அஜித்குமார் (22), அசோக்குமார் (32) ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
127,428
12/19/2019 4:41:21 PM
தமிழகம்
வடபழனியில் நாளை மாலை நடக்கிறது ஃபெய்ரா கூட்டமைப்பு ஐம்பெரும் விழா: ஆ.ஹென்றி அழைப்பு
சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஐம்பெரும் விழா நாளை மாலை வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சிகரம் ஹாலில் நடைபெறுகிறது. இதில் அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் கலந்து கொள்ளும்படி  கூட்டமைப்பின் தலைவர் ஆ.ஹென்றி அழைப்பு விடுத்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் ஃபெய்ரா என அழைக்கப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இக்கூட்டமைப்பின் தேசிய தலைவராக டாக்டர்  ஆ.ஹென்றி உள்ளார்.ஃபெய்ரா அமைப்பின் ஐம்பெரும் விழா நாளை மாலை 5 மணியளவில் வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குமரன் காலனி, சிகரம் செலிபரேஷன் ஹாலில் நடைபெறுகிறது. விழாவுக்கு தேசிய தலைவர் ஆ.ஹென்றி தலைமை  தாங்குகிறார். தேசிய செயலாளர்கள் ராஜசேகர், ஜெயச்சந்திரன், பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை நிலைய செயலாளர் கார்த்திக் வரவேற்கிறார்.விழாவில் 2019-21-ம் ஆண்டுக்கான மாநில, மாவட்ட, தாலுகாக்களின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா மற்றும் ஃபெய்ராவின் புதிய காலண்டர் வெளியீட்டு விழா, ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த பதிவுத்துறை, வருவாய் துறை, அங்கீகார  துறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் குறைகளை சரிசெய்வதற்கான கலந்தாய்வு கூட்டம், 2019-ம் ஆண்டுக்கான நிறைவு செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த துறைகளின் அரசு ஆணைகள், சுற்றறிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஆகிய ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பொன்.குமார் நன்றி  கூறுகிறார்.ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூட்டமைப்பு தலைவர் ஆ.ஹென்றி அழைப்பு விடுத்துள்ளார்.
127,429
12/19/2019 4:41:49 PM
தமிழகம்
பெரியபாளையம் அருகே 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோமாரி நோய் தாக்கி 50 ஆடு, மாடு இறந்ததால் பீதி: இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானம்தான் இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது பருவநிலை மாற்றத்தினால் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெரியபாளையம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளது அப்பகுதி  விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோய் பரவுவதை தடுக்க, கால்நடை துறை மூலம் ஆண்டு தோறும் தடுப்பூசி போடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோமாரி நோய் தடுப்பூசி முறையாக போடப்படவில்லை  என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பேரண்டூர் கால்நடை அரசு மருத்துவமனையை நம்பி, கல்பட்டு, ஆவாஜிபேட்டை, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, மாளந்தூர், பேரண்டூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் உள்ளனர். இந்த பேரண்டூர்  கால்நடை அரசு மருத்துவமனை தினமும் திறப்பதில்லை. அப்படியே திறந்தாலும், ஒரு மணி நேரத்தில் பூட்டிவிட்டு சென்று விடுகின்றனர். கோமாரி தாக்குதலால் ஆடு, மாடுகள் இறப்பு குறித்து தகவல் தெரிவித்தாலும் கிராமத்துக்கு  வருவதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால், மேற்கண்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும், மாடுகளும் இறந்தன. 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்துபோன கால்நடைகளுக்கு  இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து கல்பட்டு கிராமத்தை சேர்ந்த முனுசாமி, லட்சுமி தம்பதியினர் கூறுகையில், ‘எங்களுக்கு சொந்தமான 30 ஆடுகள் கோமாரி நோயினால் இருந்துள்ளன. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். கடன் மூலம் கால்நடை  வாங்கி வளர்த்து வருகிறோம். தற்போது, இந்த நோயால் கால்நடைகள் இறந்ததால் உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.கடமைக்கு வரும் கால்நடை மருத்துவர்கள்மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. இங்குள்ள மருத்துவர்கள் தினமும் காலை 8-12 மணி வரையும், மாலை 3-5 மணி வரையும் மருத்துவமனையை திறந்து வைத்திருக்க வேண்டும். மேலும்,  ஞாயிறு, 2ம் சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 8-12 மணி வரையில் மருத்துவமனை திறந்திருக்க வேண்டும். இதை, பேரண்டூர் உட்பட பல கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் கடைபிடிப்பதில்லை. கடமைக்கு  காலை 10 மணிக்கு வந்து விட்டு, 11 மணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஆடு, மாடுகளுடன் வரும் விவசாயிகள், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.கால்நடை வளர்ப்போர் கூறுகையில், ‘மருத்துவர்களுக்கு, ஆபத்து கால உதவி தொகை, கிராமங்களுக்கு தடுப்பூசி போட சென்றால், போக்குவரத்து மற்றும் உணவு செலவும், கால்நடைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளுக்கு ஏற்றவாறு  ஊக்கத்தொகை உள்ளிட்ட செலவினங்களை அரசு வழங்கி வருகிறது. இதையெல்லாம் பெற்று கொண்டு மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. உயரதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை’ என்றனர்.
127,430
12/19/2019 4:42:10 PM
குற்றம்
ஓட்டேரி சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது
பெரம்பூர்: ஓட்டேரி சுடுகாட்டில் கஞ்சாவிற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.சென்னை ஓட்டேரி சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக தலைமை செயலக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (24) என்பது தெரியவந்தது.அவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
127,431
12/19/2019 4:42:34 PM
தமிழகம்
குடிபோதையில் பஸ் ஸ்டாண்டில் பெண் போலீஸ் ரகளை
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் நேற்று மாலை போலீஸ் சீருடை அணிந்த ஒரு பெண் மயங்கி கிடந்தார். அங்கிருந்த பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் என்று கருதி  அவரை எழுப்பினர். ஆனால் அவரால் எழுந்து உட்கார முடியவில்லை. அப்போது தான் அவர்  ‘குடிபோதையில்’ இருந்தது தெரிந்தது.அவரது செல்போன் மற்றும் உடமைகள் கீழே சிதறிக்கிடந்தன. அதனை எடுத்து அவரிடம் கொடுத்து ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். போதையில் இருந்த அவர் பயணிகளை ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதனை அடுத்து அவரது  செல்போன் மூலம் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அவரது மகன் அங்கு வந்து ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்த பெண் காவலர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஏற்கனவே தனது நண்பர்களுடன் மது  அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில் தற்போது போலீஸ் சீருடையிலேயே குடிபோதையில் மயங்கிக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
127,432
12/19/2019 4:42:52 PM
குற்றம்
ஆண் குழந்தையை விற்க முயற்சி புரோக்கர், 2 பேர் கைது
கோவை: கோவை மதுக்கரை குவாரி ஆபீஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் (32). ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு குழந்தை விலைக்கு தேவை எனக்கூறி ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த ஹசீனா (36), அவரது தோழி கல்யாணி (52)  ஆகியோரை தொடர்பு கொண்டார். இதையடுத்து ஹசீனாவும், கல்யாணியும் மதுரையைச் சேர்ந்த கண்ணன்(40), ஜோதி (33) தம்பதியை தொடர்புகொண்டு, அவர்களது ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி ஜாகீரிடம் கொடுக்க திட்டமிட்டனர்.  இதையடுத்து கண்ணன், ஜோதியை பச்சிளம் ஆண் குழந்தையுடன் நேற்று முன்தினம் ஹசீனாவும், கல்யாணியும் கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டிக்கு அழைத்து வந்தனர்.அங்கு தம்பதியிடம் இருந்து குழந்தையை வாங்கி ஜாகீரிடம் காட்டினர். பின்னர், மதுக்கரையில் உள்ள ஒரு மசூதியில் வைத்து குழந்தையை பெற்றுக்கொள்வதாகக் கூறி, அங்கிருந்து அனைவரும் காரில் புறப்பட்டனர். அப்போது ஜாகீரிடம்,  ஹசீனா, கல்யாணி ஆகியோர் கூடுதல் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், காருக்குள்ளேயே அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த நேரத்தில் கார் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது குழந்தையின் தாய் ஜோதி, காரில் இருந்து குதிக்க முயன்றார். இதையடுத்து கார் அங்கு நிறுத்தப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் 5 பேரையும்  கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், மதுரையை சேர்ந்த கண்ணன், ஜோதி தம்பதி தங்களது முதல் குழந்தையை இதேபோல் வேறு கும்பலிடம் பணத்திற்காக விற்றதும், தற்போது 2வது குழந்தையை விற்க முயன்றதும், ஆட்டோ ஓட்டுநர் ஜாகீர் இந்த குழந்தையை  ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கி மற்றவர்களிடம் அதிக விலைக்கு விற்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதில் புரோக்கர் ஹசீனா, ஏற்கனவே நாமக்கல்லில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார். இதையடுத்து ஹசீனா,  கல்யாணி, ஜாகீர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
127,433
12/19/2019 4:43:13 PM
தமிழகம்
5 லிட்டர் கேன் பீர் அறிமுகம்: மது பிரியர்கள் உற்சாகம்
புதுச்சேரி: டெல்லி, கோவாவுக்கு அடுத்ததாக அதிக மதுபான ரகங்கள் புதுவையில் விற்பனையாகிறது. ஒயின், ஓட்கா, விஸ்கி, பிராந்தி, பீர் உள்ளிட்ட மதுபானங்கள் 1,000க்கும் அதிகமான பிராண்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகை காலங்களில் புதுப்புது ரகங்களில் மதுபானங்கள் அறிமுகமாகிறது. அந்த வகையில் இந்தாண்டு புதுச்சேரி 2020 புத்தாண்டு வரவாக புதுரக மதுபானங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.வழக்கமாக 650 மி.லி. பீர் பாட்டிலும், 500 மி.லி. அளவு டின்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது பீர் பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக 5 லிட்டர் கோட்ஸ்பர்க் கேன் பீர் புதுவரவாக புதுச்சேரி மதுபானக் கடைகளில் விற்பனைக்கு  வந்துள்ளன.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், திவான் மார்டன் நிறுவனம் மூலம் தயாராகும் இந்த பீர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்ட்ராங் ரூ.2000க்கும், பிரீமியம் லெகர் ரூ.2,100க்கும் கிடைக்கிறது. 5 லிட்டர்  பீரின் கடைசி சொட்டுவரை கார்பன்டை ஆக்ஸைடு கலந்து வரும் வகையில் கேன் பீரின் மேற்பகுதியில் கேஸ் சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.கேன் பீரில் இருந்து முதலில் பீர் வரும் குழாய் அமைப்பை வெளியே எடுக்க வேண்டும். பின்னர் கேஸ் லிவரை ஆன் செய்துவிட்டு கேன் மேற்புறத்தில் உள்ள பட்டனை அழுத்தினால் பிரஷ் பீர் வருகிறது. மேலும் கேன் பீரை எளிதாக கையில்  தூக்கிச் செல்லும் வகையில் கைப்பிடியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருமுறை சாப்பிட்ட பின்பு 25 நாட்கள் வரை இந்த பீர்கேனை வைத்திருந்து முழுவதுமாக சாப்பிடும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுதவிர கோவாவில் பிரபலமான முந்திரி பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் “பென்னி” வகை மதுபானம் தற்போது புதுச்சேரிக்கு வந்துள்ளது. இதற்கு புதுச்சேரி மது பிரியர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட  வெளிமாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் 5 லிட்டர் பீர் கேனை ஆர்வமுடன் வாங்கிச் சென்று வருகின்றனர்.
127,434
12/19/2019 4:43:58 PM
தமிழகம்
வீட்டுக்கு ஒரு சந்தன மரம் வேட்பாளர் வாக்குறுதி
முத்துப்பேட்டை: வீட்டுக்கு ஒரு சந்தன மரக்கன்று வழங்குவேன் என்று ஜாம்புவானோடை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆசிரியை வித்தியாசமாக வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டு வருகிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை அகிலா. இவர் அதேபகுதி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வழக்கமாக சாலை  அமைப்பேன், தெரு விளக்குகளை எரிய வைப்பேன் என்று தான் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் இவர் வித்தியாசமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும். இந்த கிராமம் சந்தன மரம் வளரும் பகுதி என்பதால் வீட்டுக்கு ஒரு “சந்தன மரக்கன்று” வழங்கப்படும். கிராமத்தில் முக்கிய பகுதிகளில் “கண்காணிப்பு கேமிரா” பொருத்தப்படும். புறம்போக்கு  நிலங்களில் குடியிருப்போருக்கு அரசு உதவியுடன் பட்டா பெற்று தரப்படும். வீட்டு விசேஷங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்புடும். ‘சர்க்கரை நோயாளிகளுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு  ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு பல வாக்குறுதிகளை நோட்டீசாக அச்சடித்து வீடு வீடாக வழங்கி, வாக்கு சேகரித்து வருகிறார்.
127,435
12/19/2019 4:44:31 PM
குற்றம்
சினிமா ஆசை காட்டி மயக்கி தொழில் அதிபர்களுக்கு இளம் பெண்கள் சப்ளை: அதிமுக பிரமுகர் அட்டூழியம்; கண்டு கொள்ளாத காவல்துறை
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி தொழில் அதிபர்களுடன் நெருங்கி பழகி வந்தார். அவ்வப்போது சொகுசு கார்களில் இளம் பெண்களுடன் வலம் வருவதும் வழக்கமாம்.  அவர்களை நடிகைகள் என்று கூறி நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவாராம். அந்த பெண்கள் மீது மோகம் கொள்ளும் தொழில் அதிபர்களுடன் உடனே அனுப்பி வைத்து பணத்தை எக்கச்சக்கமாக கறந்து விடுவாராம்.இதனால் பலர் தொழிலை இழந்ததோடு, சொந்த வீட்டை விற்று வாடகை வீட்டில் குடியேறிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இளம் பெண்களை வீழ்த்துவதற்கு அந்த நபர் புது யுக்தியை கையாள்வார். மாடலிங், டிவி சீரியல் உள்பட  சினிமாவில் நடிக்க விரும்பும் இளம் பெண்களை கண்டுபிடித்து தனக்கு சினிமாத்துறையில் அதிக செல்வாக்கு உண்டு. சினிமா அல்லது டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறுவாராம்.இவரது பேச்சை நம்பி வரும் இளம் பெண்களுக்கு போட்டோ ஷூட் நடத்துவார். சினிமா ஆசையில் இருக்கும் பெண்கள் பெரிய கேமரா, டெக்னீசியன்கள் முன்னிலையில் இவர் கூறுவது போல் நடிப்பார்கள். அப்போது பெண்களை பல்வேறு  கோணங்களில் புகைப்படம், வீடியோ எடுப்பாராம். அதன் பிறகு இந்த பெண்களை இவரது கஸ்டமர்களான தொழில் அதிபர்களிடம் அழைத்து செல்வாராம்.அதன் பிறகு இவர் தான் சினிமாவின் பைனான்சியர். அவரிடம் அட்ஜஸ்ட் செய்தால் பெரிய எதிர்காலம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி இணங்க வைத்து விடுவாராம். இவ்வாறு இதுவரை சிறுமிகள், மாணவிகள் உள்பட 50க்கும்  மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இவரிடம் சிக்கும் தொழில் அதிபர்களிடம் பெரிய தொகையையும் கறந்துவிடுவார். அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வருகின்றவர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி வந்துள்ளார். அவ்வப்போது பெண்கள் சம்பந்தமான புகார்களில் சிக்கி காவல் நிலையம் செல்வதும், பின்னர் ஆளும் கட்சியினர் தலையிட்டு  அவரை காப்பாற்றுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திமுக மகளிரணி உள்பட பல்வேறு பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தியது. ஆனால் கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக அவர் வழக்கில் இருந்து தப்பித்துவிட்டார்.  இவரது நடவடிக்கைகளால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இவரது ஊரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கும் வலைவீசி வந்தார். பெண்ணின் கணவர் கேரளாவில் தொழில் செய்து வருகிறார். அந்த பெண் கடைகளுக்கு செல்லும்போதும், குழந்தைகளை பள்ளியில் விட செல்லும்போதும் ஓவராக தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கணவர் மற்றும்  மாமனாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அதிமுக பிரமுகரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர் கடந்த 3 நாளுக்கு முன்பு பள்ளியில் குழந்தைகளை அழைத்து வருவதற்காக அந்த பெண் சென்றபோது  அவரை தடுத்து நிறுத்தி ஆபாசமாக வர்ணித்ததோடு, உன்னை அடையாமல் விடமாட்டேன் என்று கூறி  உள்ளார்.அப்போது, அந்த பகுதியில் உள்ளவர்கள் இதை கவனித்து அவரை எச்சரித்துள்ளனர். இது குறித்து அப்பெண் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பள்ளி கண்காணிப்பு காமிராவில் அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும்  பதிவாகி உள்ளது என்றும் கூறினார்.உரிய ஆதாரத்துடன் பெண் புகார் அளித்த பின்னரும் அதிமுகவினரின் தலையீடு காரணமாக போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு அந்த பெண்ணிடம் இது உன் வாழ்க்கை பிரச்னை. எனவே சமாதானமாக செல்  என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.இவரது பேச்சை நம்பி வரும் இளம் பெண்களுக்கு போட்டோ ஷூட் நடத்துவார். அதன் பிறகு இந்த பெண்களை இவரது கஸ்டமர்களான தொழில் அதிபர்களிடம் அழைத்து செல்வாராம். இவர் தான் சினிமா பைனான்சியர். அவரிடம் அட்ஜஸ்ட்  செய்தால் பெரிய எதிர்காலம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி இணங்க வைத்து விடுவாராம். இதுவரை சிறுமிகள், மாணவிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
127,436
12/19/2019 4:44:52 PM
குற்றம்
இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து கொலை: கணவரின் நண்பர் கைது
திருமலை: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ராமயம்பேட்டையில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நிஜாமாபாத்  மாவட்டத்தை சேர்ந்த சைக்கோ வாலிபர் அருண்குமாரை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து டிஎஸ்பி கிரண்குமார் நேற்று கூறியதாவது:கொலையானவர் ராமயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சிரவந்தி என்பதும், அவரை கொன்றது அருண்குமார்(45) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், சிரவந்தியின் கணவருக்கும்  அருண்குமாருக்கும் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஜாமீனில் வெளியே வந்த அருண்குமார், சிரவந்தியின் கணவர் மூலமாக அவருடன் பழகி வந்தார். அப்போது தன்னிடம் ₹2 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகவும் ராமயம்பேட்டையில் உள்ள ஒரு இடத்தில் நகை மற்றும் பணத்தை பதுக்கி  வைத்திருப்பதாகவும் சிரவந்தியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.மேலும் சிரவந்தியை நம்ப வைக்கும் விதமாக தங்க நகைகள் வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்று ஆர்டர் வாங்கி வந்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் ராமயம்பேட்டைக்கு சென்று மறைத்து வைத்துள்ள தங்கம் மற்றும் பணத்தை  கொண்டு வரலாம் என கூறி அருண், சிரவந்தியை பைக்கில் அழைத்து சென்றார்.பின்னர் அங்கு சென்ற சிரவந்திக்கு பணம் மற்றும் நகைகள் எதுவும் இல்லை என்பதும் அருண்குமார் கூறிய அனைத்தும் பொய் என்பதும் தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த சிரவந்தி அங்கிருந்து செல்ல முயன்றார்.அப்போது, அருண்குமார், சிரவந்தியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை வெளியே விட்டால் உண்மையை தெரிவித்துவிடுவார் என்பதால் கழுத்து நெரித்து கொலை செய்து சடலத்தை அங்கேயே வீசிவிட்டு  தப்பிச்சென்றார். அருண்குமார், சிரவந்தியை பைக்கில் அழைத்துச்சென்றது சிசிடிவி கேமராவில் பதிவானதன் ஆதாரமாக அவர் கைது செய்யப்பட்டார்.ஏற்கனவே அருண்குமார் மீது 3 கொலை வழக்குகளும், பல திருட்டு வழக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
127,437
12/19/2019 4:45:11 PM
குற்றம்
வீட்டுக்கு டிவி பார்க்க வருமாறு அழைத்து பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய மெக்கானிக் சிறையிலடைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவியிடம் அவரது தாயும், சகோதரியும் விசாரித்த போது மாணவி 6 மாத  கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்ததால் இறந்த அக்குழந்தையை குடும்பத்தினர் மாணவியின் சகோதரி வீட்டில் புதைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை போலீசார், மாணவி, அவரது சகோதரி, பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.இதில் மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரியும், டி.வி. மெக்கானிக்குமான ராஜூ (48) என்பவர் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார்,  ராஜூவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவியின் சகோதரி வீட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் நேற்று தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதனிடையே கைதான ராஜூ குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. டி.வி. மெக்கானிக் ராஜூவின் மனைவியும், மகளும் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விடுவதாலும், மகனும்  பணி நிமித்தம் வெளியே செல்வதாலும், வீட்டில் பகலில் ராஜூ தனியாக இருப்பது வழக்கம். ஏழ்மையான நிலையில் வசிக்கும் பிளஸ் 1 மாணவியின் தந்தை உடல் நலக்குறைவால் வேலைக்கு செல்வதில்லை. தாய் கூலி வேலைக்கு சென்று  விடுவார். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட ராஜ், தனது வீட்டுக்கு டிவி பார்க்க வருமாறு மாணவியை வரவழைத்து, ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
127,438
12/19/2019 4:45:33 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலில் மனைவி போட்டி பாஜ நிர்வாகி கார் தீப்பற்றி எரிந்தது
வந்தவாசி: உள்ளாட்சி தேர்தலில் பாஜக நிர்வாகியின் மனைவி போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளநிலையில் அவர்களது கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் அகரகொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாய்பாபா(40), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக பொருளாதார பிரிவு தலைவராக உள்ளார்.இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டு அருகே நிறுத்தியிருந்த இவருக்கு சொந்தமான கார், தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த வெளியே வந்த சாய்பாபா அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் தீயை  அணைத்து அக்கம் பக்கம் பரவாமல் தடுத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது.சாய்பாபா வரும் 27ம்தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அதிமுக கூட்டணியிடம் கேட்டிருந்தார்.ஆனால் 8வது வார்டான  வெடால் ஒன்றிய கவுன்சிலர் பகுதியை பாஜவுக்கு ஒதுக்கியுள்ளனர். இதனால் சாய்பாபா தனது மனைவி புவனேஸ்வரி பெயரில் 12வது வார்டில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல், இந்த 12வது வார்டில் அதிமுக ஒன்றிய  செயலாளர் தங்கராஜ், திமுக ஒன்றிய செயலாளர் ராதா, அதிமுக போட்டி வேட்பாளராக பாண்டுரங்கன் உள்ளிட்ட 14 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 14 பேர் மனுதாக்கல் செய்துள்ளதால் இந்த வார்டு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்டாக  கருதப்படுகிறது.இந்நிலையில் சாய்பாபா கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால், தேர்தல் காரணமா அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது கார் எப்படி தீப்பற்றி எரிந்தது  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,439
12/19/2019 4:46:20 PM
தமிழகம்
தேர்தலுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்களை கடத்திய அதிமுக பிரமுகர் கைது
சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே தேர்தலுக்காக கடத்தி வரப்பட்ட 957 மதுபாட்டிகளை பறிமுதல் செய்து, அதிமுக பிரமுகர், ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் மனைவி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர், தனது ஆதரவாளர்களுக்கு மது வழங்க நேற்று அதிமுக பிரமுகர் முத்துமணியிடம்  மது வாங்கி வர பணம் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. முத்துமணி காக்கூர் டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 957 மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வந்தார். இது பற்றிய தகவல் பேரில்  முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்டார்.அப்போது புளியங்குடி அருகே வந்த ஆட்டோவை சோதனை செய்து 957 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விளங்குளத்தூரை சேர்ந்த பாலுச்சாமி(25), அதிமுக பிரமுகர் முத்துமணி (45) ஆகியோரை கைது செய்தனர்.
127,440
12/19/2019 4:47:20 PM
தமிழகம்
ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அன்புமணிக்காக ஈழத்தமிழரை காவு கொடுத்த ராமதாஸ்: டி.ஆர்.பாலு அறிக்கை
சென்னை: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியை காப்பாற்றுவதற்காக ஈழத்தமிழர் உரிமையை ராமதாஸ் காவு கொடுத்துள்ளார் என்று டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.தமிழினப் போராளி என்று, தனது நெற்றியில் தானே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக் கொண்ட பா.ம.க. நிறுவனத் தலைவர், ஈழத்தமிழினத்துக்கும் சிறுபான்மையினருக்கும் இழைத்த மாபெரும் துரோகம், நாட்டு மக்கள் மத்தியில் அம்பலமான அதிர்ச்சியில்,  மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.ஏதோ, தன் வாழ்வே ஈழத்தமிழர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது போல், தன் மனதிற்குள் ஒரு கற்பனைக் கோட்டையைக் கட்டிக்கொண்டு, தி.மு.க.,வையும் எங்கள் கழகத் தலைவரையும் விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.அடுத்தவரை விமர்சிப்பதற்கு முன்னால், தன் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லிவிட்டு விமர்சிக்க வேண்டும். விமர்சனம் செய்வதற்கான அருகதை அப்போதுதான் உண்டு.மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஒரேநேரத்தில் இரட்டைத் துரோகம் செய்கிறது. அண்டை நாட்டவர் வரலாம் என்றால், இஸ்லாமியரைத் தடை செய்வது  ஏன்? என்பதும், அண்டை நாடுகளின் பட்டியலில் இலங்கையைச் சேர்க்காதது ஏன்? என்பதும்தான் தி.மு.க. தலைவர் எழுப்பிய கேள்விகள்.நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாங்கள் இந்தக் கேள்வியைத்தான் எழுப்பினோம். இரண்டு அவைகளிலும் எதிர்த்து வாக்களித்தோம். மக்களவையில் பா.ஜ.க.,வுக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் வென்றது அந்தச்  சட்டம். மாநிலங்களவையில் வெற்றி பெற்றதற்குக் காரணம், அ.தி.மு.க. அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது. இந்தத்  துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும், ராமதாஸ், அன்புமணிதான் காரணம். நாடு இன்று பற்றி எரிய இவர்களே காரணம்.தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அந்தச் சட்டத்திருத்தத்தை ஆதரித்தார்கள் என்றால், பா.ம.க. ஆதரிக்க என்ன காரணம்?ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாசு.எனவே அ.தி.மு.க. கூட்டணி என்பது தமிழர் துரோகக் கூட்டணியாக ஆகிவிட்டது. அது வெளிச்சத்துக்கு வந்ததும்தான் எடப்பாடியும் ராமதாசும் புதிய புதிய பசப்பு வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். மக்களுக்கு  இவர்கள் இருவரையும் நன்கு தெரியும்.“யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து ஒழித்து வை” என்பது போன்ற ரகங்கள் இவர்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
127,441
12/19/2019 4:47:39 PM
குற்றம்
பெண்களை ஏமாற்றி 40 கோடி மோசடி: போலி சாமியார் கைது
திருமலை:குழந்தை இன்மை பிரச்னை, பொருளாதார பிரச்னை தீரும் எனக்கூறி பல பெண்கள் மற்றம் தொழிலதிபர்களை ஏமாற்றி ₹40 ேகாடி மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்ைத சேர்ந்தவர் மகாதேவம்மா, இவரது மகள் கலாவதிம்மா. இவர்கள் 2 பேரும், எஸ்.ஆர்.நகர் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசில் புகார் செய்தனர். அதில் பூஜை செய்து குறைகளை தீர்ப்பதாக கூறி சாமியார்  ஒருவர் தங்களிடம் ₹2.70 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக கூறினர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை மண்டலம் கொல்லமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ்சிங் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் ‘அட்வைத்தா ஸ்ரிச்சுலர்  ரீசார்ஜ் சென்டர் ஃபார் எக்சலன்ஸ்’ என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவு மையம் அமைத்து சொற்பொழிவாற்றி வந்தார். மேலும் தனது சொற்பொழிவுகளை யுடியூப்களில் பதிவேற்றி விளம்பரம் செய்து வந்தார்.குறிப்பாக இவர் பெண்களை குறி வைத்தும், அவர்களின் பல்வேறு குறைகளை நீக்குவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதில், ‘குழந்தை இல்லாதவர்கள், பொருளாதார நெருக்கடி உள்ளவர்கள், குடும்பத்தில் அமைதி இல்லாதவர்கள்  தன்னை தொடர்பு கொண்டால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக’ கூறியுள்ளார். அதனை நம்பி வந்த ஏராளமான பெண்கள் மற்றும் தொழிலதிபர்களிடம், ‘சிறப்பு பூஜைகள் செய்தால் உங்கள் குறைகள் தீரும்’ எனக்கூறி லட்சக்கணக்கில்  பணம் பறித்து வந்துள்ளார்.இதுதவிர சில போலி நிறுவனங்களை ஆரம்பித்து அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பலரை நம்ப வைத்துள்ளார். அதன்படி இவர் ஐதராபாத்தை சேர்ந்த அரவிந்த்ரெட்டி என்பவரிடம் ₹4 கோடி உட்பட மொத்தம் சுமார் ₹40  கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்ேபாது, கைதான கிரிஷ்சிங் மீது சைபர் கிரைம், மீர்பேட், மல்கங்கிரி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே ராட்சகொண்டா காவல் ஆணையர் மற்றும் போலீசார் கிரிஷ்சிங்கை கைது செய்து சிறையில்  அடைத்துள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தொடர்ந்து சாமியார் என்ற பெயரில் பல்வேறு குற்றங்களை செய்து வருவது தெரியவந்தது.
127,442
12/19/2019 4:47:56 PM
குற்றம்
மதுரையில் இன்று காலை பயங்கரம் அமமுக நிர்வாகி சரமாரியாக வெட்டி படுகொலை
மேலூர்: மேலூர் அருகே இன்று காலை வாக்கிங் சென்ற அமமுக நிர்வாகியை 8 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அ.வள்ளலாப்பட்டியை சேர்ந்தவர் அசோகன்(52), முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர். தற்போது அமமுகவில் உள்ளார். இன்று காலை தனது நண்பர்களுடன் வழக்கம் போல் அழகர்கோயில் சாலையில்  அசோகன் வாக்கிங் சென்றார். அப்போது கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கும்பல், திடீரென அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.இதில் தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்த கும்பல் தப்பிச் சென்றது. தகவலறிந்து டிஎஸ்பி சுபாஷ் மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அசோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி அசோகனின் உறவினர்கள் மேலூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியலால் அப்பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்விரோதம்  அல்லது அரசியல் பகைக்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,443
12/19/2019 4:48:20 PM
விளையாட்டு
‘ஓபனிங் பார்ட்னர்ஷிப்தான் வெற்றிக்கு காரணம்’: விராட் கோஹ்லி பாராட்டு
விசாகபட்டினம்: ‘ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுலின் ஓபனிங் பார்ட்னர்ஷிப்தான் வெற்றிக்கு காரணம். ஸ்ரேயாஸ், ரிஷப் பந்த், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் திறமையாக ஆடினர்’ என்று இந்திய அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா-மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நேற்று விசாகபட்டினத்தில் நடந்தது. சென்னை சேப்பாக்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளிடம் தோல்வியடைந்திருந்தது.  எனவே வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் நேற்று விசாகபட்டினத்தில் களமிறங்கினர். டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் கிரன் போலார்ட், எதிர்பார்த்தபடியே இந்திய அணியை பேட் செய்யுமாறு கூறினார். ஆனால் இந்திய அணியின் ஓபனர்கள் ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 37  ஓவர்களில் 227 ரன்களை குவித்து, அப்போதே இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து விட்டனர். இருவருமே சதம் அடித்தனர். ராகுல் 102 ரன்களிலும், ரோஹித் 159 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஸ்ரேயாஸ்(53 ரன்கள்) மற்றும் ரிஷப் பந்த்(39 ரன்கள்) ஆகியோரும் மே.இ.தீவுகளின் பவுலர்களை விரட்டி விரட்டி வெளுத்தனர். இதையடுத்து 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது இந்திய அணி.388 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஆடிய மே.இ.தீவுகள் அணி 43.3 ஓவர்களில் 280 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இப்போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன்  செய்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘‘ரொம்பவே தேவையான வெற்றி. கே.எல்.ராகுலோட பேட்டிங் பிரில்லியன்ட். அவரும் நன்றாக ஆடினார். எனக்கான வாய்ப்புகளையும் சரியாக கொடுத்தார். பேட்டிங்கில் அவருடைய  திறமையான ஆட்டத்தை மற்றொரு முனையில் இருந்து பார்த்தால்தான் தெரியும். அவருடைய நம்பிக்கை லெவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எங்கள் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம். ஒரே ஒரு பலவீனம்தான் இருந்தது. இருவருமே புதிதாக சேர்ந்த ஜோடி என்பதால் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் சற்று புரிதல் குறைந்திருந்தது. அதையும் போகப் போக சரி செய்து விடுவோம். என்னைப் பொறுத்தவரை 100 ரன்களை கடந்து விட்டால், அடுத்து விரைவாக ரன்களை குவிக்க வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் இந்த ஆட்டத்திலும் ஆடினேன். 200க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறேன்.அணிக்காக  ரன்களை சேகரிப்பதில் ஓபனராக எனக்கு பெரிய பொறுப்பு உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே, இப்போதும் ஆட்டத்தை துவக்குகிறேன்’’ என்று தெரிவித்தார்.  கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘ரோஹித்தும்,  ராகுலும் அற்புதமாக ஆடினார்கள்.  வெற்றிக்கு காரணம் என்று ஓபனிங் பார்ட்னர்ஷிப்பைத்தான் கூற வேண்டும். அப்புறம் ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பந்த்தின் ஆட்டமும் சூப்பர். கடைசி 10 ஓவர்களில் 127 ரன்களை குவித்து விட்டனர். குறிப்பாக  2 ஓவர்களில் 55 ரன்களை விளாசி, அணியின் இமாலய ஸ்கோருக்கு காரணமாக இருந்தனர். முகமது ஷமியின் மிரட்டலான பவுலிங், குல்தீப் யாதவின் ஹாட்ரிக் என எல்லாமே எங்களுக்கு சாதகமாக அமைந்து விட்டன’’ என்று பாராட்டு  தெரிவித்துள்ளார். மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் கிரன் போலார்ட் கூறுகையில், ‘‘நாங்களும் நன்றாகத்தான் ஆடினோம். குறிப்பாக பூரன், ஷாய் ஹோப் மற்றும் கீமோ பால் ஆகியோர் சேசிங்கில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்தப் போட்டியில்  எங்கள் பவுலர்கள் ரன்களை வாரிக் கொடுத்து விட்டார்கள். அடுத்த போட்டியில் பார்க்கலாம்’’ என்றார்.
127,444
12/19/2019 4:48:38 PM
விளையாட்டு
மகளிர் கால்பந்து பைனல் இந்தியா-ஸ்வீடன் இன்று மோதல்
மும்பை: மும்பையில் இந்தியா, தாய்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டு ஆடியது. மிகவும்  பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இந்திய அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும், தாய்லாந்து அணியின் பின்கள வீராங்கனைகள் வெற்றிகரமாக தடுத்து  விட்டனர். இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.இதில் இந்திய அணியின் சென்டர் ஃபார்வர்டு வீராங்கனை தோக் சோம், அற்புதமாக ரைட் பார்வர்டில் பாய்ந்து வந்த கிறிட்டினா தேவிக்கு பந்தை கடத்தினார். அவர் அந்த பந்தை தலையால் முட்டி, வெற்றிகரமாக கோல் அடித்தார். அதன் பின்னர் தாய்லாந்து வீராங்கனைகள் கோல் அடிக்க கடுமையாக போராடினர். தடுப்பாட்டம் என உத்தியை மாற்றிக் கொண்ட இந்திய வீராங்கனைகள், தாய்லாந்து  வீராங்கனைகளின் முயற்சியை முறியடித்து விட்டனர். இதன் மூலம் இந்திய அணி, தாய்லாந்தை இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் பைனலில் இந்திய மகளிர் அணி, ஸ்வீடன் மகளிர் அணியை எதிர்கொள்கிறது.இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பை கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்னோடியாக இந்த 3  நாடுகள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி விளங்கும். இந்திய மகளிர் அணிக்கு அரிய வாய்ப்பாக இந்த அனுபவம் கிடைத்திருக்கிறது. அதிலும் பைனலில் சற்றே வலுவான ஸ்வீடனை எதிர்கொள்கிறோம். கால்பந்து கலாசாரத்தில் நம்மை  விட சிறந்த அணி அது. இருப்பினும், இந்திய வீராங்கனைகளின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. எனவே இன்றைய பைனல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
127,445
12/20/2019 2:03:47 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து போராட்டம்: வட மாநிலங்களில் தொடர் பதட்டம்
புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் இன்று பீம் ஆர்மி அமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை பீகாரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உபியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பதட்டமான சூழல் நிலவி வருகிறது.புதிய சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதால், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவரும், மங்களூருவில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால், பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வரும் நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில், இணையம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முதல் முறையாக முடக்கப்பட்டன. கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.பாஜ ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதை தடைசெய்யும் இச்சட்டத்தால், முன்னெச்சரிக்கையாக பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் தொடர்ந்து பதற்றமான நிலையே நீடிப்பதால், மதுரா சாலை மற்றும் கலிண்டி குஞ்ச் இடையேயான சாலை எண் 13 ஏ வாகன இயக்கத்திற்காக மூடப்பட்டது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் ஜசோலா விஹார் ஷாஹீன் பாக் மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் மூடப்பட்டன. இன்று மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பையின் ஆகஸ்ட் கிரந்தி மைதானத்தில் கல்லூரி மாணவர்கள், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள், மூத்த குடிமக்கள் குடியுரிமை (திருத்த) மசோதாவை எதிர்த்து நேற்று கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ போன்ற பல பகுதிகளிலிருந்து நேற்று போராட்டங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டு, மும்பை தவிர பல நகரங்களில் பிரிவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.உத்தரபிரதேசத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து, இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகையை கருத்தில் கொண்டு ஒரு ‘சிவப்பு’ எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் சந்திர பூஷண் சிங் கூறுகையில், ‘‘அலிகார் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால், ஒரு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், மாகாண ஆயுதக் கட்டமைப்பின் (பிஏசி) 10 நிறுவனங்களும், விரைவான நடவடிக்கை படையின் (ஆர்ஏஎஃப்) நான்கு நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தொழுகையை கருத்தில் கொண்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜஷ்வி யாதவ் கூறுகையில், “நாங்கள் நாளை (டிச. 21) பீகாரில் வேலை நிறுத்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் மனிதகுலத்திற்கு எதிரானது. இது பாஜகவின் பிளவுபடுத்தும் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது” என்றார்.திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இன்று டெல்லியில் இரண்டு பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘பீம் ஆர்மி’ அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ேபரணி பழைய டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் அருகே மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜந்தர் மந்தரில் முடிகிறது. மற்ற போராட்டம் மாலை 5 மணிக்கு இந்தியா கேட்டில் நடைபெறும். ஆனால், பேரணி நடத்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. டெல்லி காவல்துறை பிஆர்ஓ மந்தீப் சிங் ரந்தாவா வெளியிட்ட அறிக்கையில், ‘எந்தவிதமான அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை. வதந்தி பரப்புவதை சரிபார்க்க சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.அசாமில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் 5 பேர் பலியான நிலையில், அம்மாநில முதல்வர் சப்ரணந்தா சோனோவால், ‘‘நிலம், மொழி மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படும்; அது அப்படியே இருக்கும், எதுவும் மாற்றப்படாது” என்றார். இருந்தும், அம்மாநிலத்தில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. வன்முறை எதிர்ப்புக்களைக் கருத்தில் கொண்டு டிச. 10ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் 44 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் ராணி ராஷ்மோனி அவென்யூவில் நடந்த பேரணியில் உரையாற்றியபோது குடியுரிமை சட்டம் மற்றும் என்.ஆர்.சி குறித்து கூறியதாவது: பாஜகவுக்கு தைரியம் இருந்தால், அது குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு வாக்கெடுப்புக்கு எடுத்து செல்ல வேண்டும். அதில், மத்திய அரசு இந்த வெகுஜன வாக்குகளை இழந்தால், பாஜ கட்சி மத்தியில் பதவியில் இருந்து விலக வேண்டும். பாஜகவின் வலையில் சிக்காதீர்கள். அவர்கள் அதை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சண்டையாக மாற்ற விரும்புகிறார்கள்.நாங்கள் இங்கே பிறந்தோம், அதுதான் எங்கள் மிகப்பெரிய அடையாளம். எங்கள் குடியுரிமையை தீர்மானிக்க பாஜகவுக்கு உரிமை இல்லை. எங்கள் குடியுரிமையை நிரூபிக்க நாங்கள் பாஜகவின் அடையாளத்தை அணிய வேண்டுமா? 1980ல் உருவான ஒரு கட்சி தற்போது ஆவணங்களை கேட்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவுகளை விதித்த போதிலும், பாஜ கட்சி மக்களின் எதிர்ப்புக்களைத் தடுப்பதில் வெற்றிபெறாது. இவ்வாறு அவர் பேசினார்.
127,446
12/20/2019 2:06:53 PM
இந்தியா
சோதனையில் சிக்கிய ஆவணம் அடிப்படையில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலம் முடக்கம்
சென்னை: கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலத்தை முடக்கி  வருமான வரித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு விஜயகுமார் எல்ஐசி ஏஜென்டாக இருந்தார். ஆனால் 1989ம் ஆண்டு, `நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்’’ என தனக்குத்தானே கூறிக் கொண்டார். விஜயகுமார் குறுகிய காலத்தில் உலகளவில் பிரபலமடைந்தார். வசதி வந்த உடன் ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை தொடங்கி நடத்தி வருகிறார்.அதன் பிறகு தான் ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக கல்கி ஆசிரமம் கட்டி தற்போது பக்தர்களை சந்தித்து வருகிறார்.  கல்கி பகவானின் மாய வித்தையால் பல ஆயிரம் வெளிநாட்டு பக்தர்களை தன் வயப்படுத்தினார். அவர்களும் கோடிக்கணக்கில் நிதி வழங்கி வருகின்றனர். பல வெளிநாட்டு பெண் பக்தர்கள் ஆசிரமத்திலேயே தங்கி கல்கி பகவானுக்கு சேவை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்த பல வெளிநாட்டு பெண் பக்தர்கள் மாயமானாதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.இந்த ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக நன்கொடை என்ற பெயரில் வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் அந்த பணத்தை வெளிநாட்டு பக்தர்கள் பெயர்களில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக  தகவல் வெளியாகியது. இதுதவிர சுவிஸ் வங்கியில் கல்கி ஆசிரம நிர்வாகிகள் பெயர்களில் பல ஆயிரம் கோடி பணம் டெபாசிட் செய்து இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமங்கள் மற்றும் கல்கி பகவான் மகன் கிருஷ்ணா நடத்தி வரும் தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அலுவலகங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கல்கி பகவான் மற்றும் அவரது மகனிடம் இருந்து கட்டுக்கட்டாக ரூ.150 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இந்திய பணம் ரூ.93 கோடியும், வெளிநாட்டு பணம் ரூ.20 கோடியும் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 93 கிலோ தங்கமும், 110 கேரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.200 கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்பிறகு இது தொடர்பாக கல்கி பகவான், அவரது மகன் கிருஷ்ணா, மருமகள்  ப்ரீத்தா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இவர்களுக்கு ஒன்எஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டுவந்து தெரியவந்து. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் பேராசி ரியர்கள் “தாசாஜி” என்று அழைக்கப்படுகிறார்கள். துறவிகளான இவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. உணவு, இருப்பிடம் மட்டும் இருந்தால் போதும். பெரிதாக சொத்துகளுக்கு ஆசைப்படமாட்டார்கள். இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் அனந்தகிரி, சந்திரசேகர் என்ற தாசாஜி பெயரில் கோவை, ஊட்டி,  ஆரணி உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதும், ஆந்திர  மாநிலத்தில் 400 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து வருமானவரித்துறையினர் கல்கி ஆசிரமத்தின் பெயரில் முறைகேடாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்கப்பட்டுள்ள 907 ஏக்கர் நிலத்தை முடக்கினர். இதில் சித்தூரில் உள்ள 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீடு அடங்கும். இவை அனைத்தும் பினாமி தடுப்பு சட்ட பிரிவின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இது குறித்து தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,447
12/20/2019 2:09:20 PM
குற்றம்
பெண் அரசு ஊழியரின் ஏடிஎம் கார்டில் ஒரு லட்ச ரூபாய் சுருட்டிய கில்லாடி
ஒரத்தநாடு: அரசு பெண் ஊழியரின் ஏடிஎம் கார்டை ஏமாற்றி வாங்கி ரூ.1 லட்சம் சுருட்டிய கில்லாடியை போலீசார் தேடி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு மேலையூர் கிராமம் மழவராயர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மனைவி கலைச்செல்வி. இவர் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவிகள் விடுதியில் சமையலர் ஆக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று ஒரத்தநாடு நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.அப்போது, ஏடிஎம் கார்டை மெஷினில் போட்டு எடுக்கும்போது பணம் கிடைப்பதில் தாமதம் ஆனதால் அருகிலிருந்த ஒரு நபர் நான் உதவி செய்கிறேன் என்று ஏடிஎம் கார்டை கேட்டிருக்கிறார். இதனால் கலைச்செல்வி ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை எடுக்க முயற்சி செய்வது போல நடித்து இறுதியாக பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஏடிஎம் கார்டை கலைச்செல்வியிடம் கொடுத்து விட்டு அந்த மர்ம நபர் ஏடிஎம் மையத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார்.பணம் எடுக்காமல் கலைச்செல்வி வீடு திரும்பி சென்று விட்டார். நேற்று இரவு தனது தொலைபேசி நம்பருக்கு எஸ்எம்எஸ் செய்தி வந்தபோது தனது அக்கவுண்டில் இருந்து ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது கலைச்செல்விக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி உடனடியாக ஒரத்தநாடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளரிடம் புகார் செய்தார். தொடர்ந்து, ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.போலீசார் ஆய்வு செய்தபோது தஞ்சை சூரக்கோட்டை அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இருந்து கலைச்செல்வி கணக்கில் பணம் எடுக்கப்பட்டதும், மீதமுள்ள பணத்திற்கு தஞ்சையில் உள்ள ஒரு நகைக்கடையில் பணம் வாங்கியதும் தெரியவந்தது. மொத்தமாக ₹1 லட்சம் அந்த ஆசாமி சுருட்டியது தெரியவந்தது.கலைச்செல்விக்கு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல நடித்து அவரது ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வேறு கார்டை கொடுத்து அவர் ஏமாற்றியது தெரியவந்தது. அவருக்கு 40 வயது இருக்கும். டிப்டாப் ஆசாமியான இவர் ஒரத்தநாடு பகுதியில் அடிக்கடி இதுபோல கைவரிசை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
127,448
12/20/2019 2:12:11 PM
தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து கோவையில் கடையடைப்பு: வீடுகளில் கருப்பு கொடி
கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றினர். கடையடைப்பு போராட்டமும் நடந்தது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா கண்டித்து, கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, மனித நேய ஜனநாயக கட்சி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத், கோவை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மனித நேய மக்கள் கட்சி, ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதிஸ், இந்திய தவ்ஹீத் ஜமாத், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் ஆகிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுதல் மற்றும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.அதன்படி கோவையிலுள்ள கோட்டைமேடு, உக்கடம், என்எச் ரோடு மரக்கடை, ஆத்துபாலம், கரும்புக்கடை, குனியமுத்தூர், போத்தனூர், சாரமேடு உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. கடைகள் திறக்கப்படவில்லை. இந்த போராட்டத்தை முன்னிட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமையில் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு, செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,500 போலீசார் மற்றும் மத்திய அதிரடி படை (ஆர்ஏஎப்) 200 பேர், சிறப்பு காவல் படை (டிஎஸ்பி) 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நெல்லைநெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எஸ்டிபிஐ, தமுமுக, மமக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மேலப்பாளையம் பகுதி வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் பேரமைப்பு, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஒரு நாள் முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, விஎஸ்டி சந்திப்பு, கொட்டிகுளம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
127,449
12/20/2019 2:16:03 PM
தமிழகம்
கொளத்தூர் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழா குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு உரிமை வழங்கவில்லை: மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு
பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று கொளத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற வாழ்த்து சொல்லும் நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அனைத்து மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் 53 பேராயர்களுக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு பேண்ட், சட்டை, ஒரு புடவை, 5 கிலோ அரிசி, கேக் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அடங்கிய பையை வழங்கினார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் நான் பங்கேற்று வருகிறேன். நீங்களும் எனக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள். இதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாய மக்களுக்காக திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குரல் கொடுத்து வருகிறது. மேலும், இச்சமுதாய மக்களுக்கு பல்வேறு சலுகைகளை கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றி தந்திருக்கிறார்.சிறுபான்மை மக்களுக்காக நாங்கள் என்றும் குரல் கொடுத்து வருகிறோம் என்பதற்கு உதாரணமாக, சமீபத்தில் மத்தியில் ஆளுங்கட்சியினர் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இதில் இலங்கை தமிழர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சலுகை கிடைக்கிறதா என்றால், எதுவும் இல்லை. இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறி, தமிழகத்தில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்து கொண்டிருக்கிற இலங்கை தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தபோது, திமுக சார்பில் தம்பி தயாநிதி மாறன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதேபோல் மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து திமுக எம்பி திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், இந்த மசோதாவை மாநிலங்களவையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக ஆதரவு தெரிவித்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற உறுதுணையாக இருந்துள்ளனர். இந்த மசோதா நிறைவேறியதில் யார் பொய் சொல்கிறார்கள் என்பது வரும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  இதில் கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் பிகே.சேகர்பாபு. ரங்கநாதன். பகுதி செயலாளர்கள் நாகராஜ், ஐசிஎப் முரளி, தேவஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
127,450
12/21/2019 2:38:44 PM
இந்தியா
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தொடர் போராட்டம் உ.பி.யில் பலி 11ஆக உயர்வு
* பீகாரில் முழு அடைப்பு; குஜராத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு* நாடு முழுவதும் இதுவரை 19 பேர் சாவுபுதுடெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தொடர் போராட்டத்தால், உத்தர பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் நடந்த மோதலில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 நாளில் 19 பேர் நாடு முழுவதும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.  குஜராத்தில் போராட்டக் காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால், நாடு முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. புதிதாக இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான எதிர்ப்பு போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை நாடு முழுவதும் 19 பேர் வரை பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மூன்று பேரும், பிஜ்னோரில் இரண்டு பேரும், வாரணாசி, பெரோசாபாத், சம்பல் மற்றும் கான்பூரில் தலா ஒருவரும் சேர்த்து 11 பேர் நேற்று உயிரிழந்தனர். லக்னோவில் ஒருவர் மற்றும் கர்நாடகாவின் மங்களூரில் இரண்டு பேர் வியாழக்கிழமை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அசாமில் இருந்து இதுவரை ஐந்து ேபர் பலியானதாக இறப்புகள் பதிவுகள் கூறுகின்றன. வாரணாசியில் நடைபெற்ற வன்முறையில் நேற்று எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையிலிருந்து திரும்பி வந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட வன்முறையால் குறைந்தது 50 காவல்துறையினர் காயமடைந்ததாக உத்தரபிரதேச காவல் இயக்குநர் (டிஜிபி) ஓ.பி.சிங் தெரிவித்தார். முன்னதாக உத்தரபிரதேச காவல்துறை, நேற்று சுமார் 3,305 பேரை வீட்டுக் காவலில் வைத்தது. மேலும் 200 பேரை கைது செய்தது. இம்மாநிலத்தில் மட்டும் 16 மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் மொபைல் இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டன.கான்பூரில் போராட்டக்காரர்கள் தடியடி மூலம் கலைக்கப்பட்டனர். கான்பூர் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் சுக்லா கூறுகையில், ‘‘காயமடைந்த 13 பேரில், ஒன்பது பேருக்கு புல்லட் காயங்கள் ஏற்பட்டன. லக்னோவில், காயமடைந்தவர்களில் ஒருவர், தன்னை முகமது சைஃப் என்று கூறினார். லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்’’ என்றார். மீரட்டில் நேற்று மாலை 5 மணியளவில் மோதல் நிகழ்ந்தது. அந்த மோதலில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மூன்று மணி நேரத்திற்குள், 14 இடங்களில் வன்முறை போராட்டங்கள் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தில் நேற்று மட்டும் வன்முறையால் ஒன்பது பேர் இறந்ததாக கூறப்படுகிறது. மீரட், கான்பூர் மற்றும் ஃபிரோசாபாத் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்தனர். பொது சொத்துக்களைச் சேதப்படுத்தினர்.தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு), பிரவீன் குமார், ‘‘குறிப்பிட்ட 16 மாவட்டங்களில் 144 தடை உத்தரவுகள் மற்றும் மொபைல் இணையத்தை நிறுத்தி வைப்பது சனிக்கிழமையும் தொடரும்’’ என்றார். நேற்றிரவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடந்தது. இதுகுறித்து அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘மாநிலத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் மத்திய துணை ராணுவப் படைகளையும், விரைவான அதிரடிப் படையையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும்  சனிக்கிழமையன்று மூடப்படும்’ என்றார். காங்கிரஸ் ஆளும் மத்தியபிரதேசத்திலும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 52 மாவட்டங்களில் 50 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜ ஆளும் குஜராத்தின் அகமதாபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிரான வன்முறையில் பலர் காயமடைந்த நிலையில், நேற்று வதோதராவின் ஹதிகானா மற்றும் ஃபெட்டுபுரா பகுதிகளில் கல் வீச்சு சம்பவம் நடந்தது. கும்பலைக் கட்டுப்படுத்த போலீசார் சுமார் 10 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் இரண்டு சுற்றுத் துப்பாக்கிச் சூட்டை போலீசார் நடத்தினர். ஷா-இ-ஆலம் பகுதியில் கும்பல் கல் வீசியதில் டி.சி.பி, ஏ.சி.பி, பி.ஐ மற்றும் பி.எஸ்.ஐ தரவரிசை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். கொலை முயற்சி, கலவரம் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பிரிவுகளில் இசான்பூர் போலீசார் 50 பேரை கைது செய்துள்ளனர். டெல்லியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ‘பிம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத் டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித்தில் இருந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஜமா மஸ்ஜிதில் நேற்று நடந்த போராட்டத்தின் போது போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்; ஆனால் அவரது ஆதரவாளர்களால் பாதுகாக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றிரவு சந்திரசேகர் ஆசாத் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட 40 பேரை விடுவிக்கக் கோரி, டெல்லி போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் கூடினர். அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், ஏராளமானோர் காயமடைந்தனர். பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விடுத்த அழைப்பின் பேரில் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால், நகர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டும், போக்குவரத்து நிறுத்தப்பட்டும் உள்ளது. இதற்கிடையே, உத்தரபிரதேச சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட ட்விட்டில், ‘இன்று ஆட்சியில் இருப்பவர்கள், மக்கள் ஒன்றாக முன்னேறும்போது, ஒடுக்குமுறையாளர்கள் பின்வாங்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. இப்போது, அவர்கள் பின்வாங்குவர். இந்திய மக்கள் அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாக்க போராடுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். உத்தரபிரதேச காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆரத்னா மிஸ்ரா கூறுகையில், ‘அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் போராட்டங்கள் அமைதியாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி நாட்டில் வன்முறைக்கு இடமில்லை’ என்றார். லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா கூறுகையில், ‘‘முஸ்லீம் சமூகத்தினரிடையே ஆளும் கட்சியால் பல்வேறு விஷயங்களில் அந்நியப்படுவதாக ஒரு உணர்வு உள்ளது. பொருளாதார மந்தநிலையும் அவர்களை மிகவும் பாதித்துள்ளது. முத்தலாக் சட்டமும், அயோத்தியில் உள்ள ஒரு ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், அவர்களின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாம்’’ என்று கூறினர். நாடு முழுவதும் இன்று காலையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் குறிப்பாக பாஜ ஆளும் மாநிலங்களில் பதட்டம் நிலவுகிறது.
127,451
12/21/2019 2:39:11 PM
தமிழகம்
பாரத ரத்னா வழங்கக் கோரி இளையராஜாவுக்கு 5 அடி உயர கேக் சிலை
சாயல்குடி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் அவருக்கு 5 அடி உயர கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது.இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி ராமநாதபுரம், பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் சதீஷ் உள்ளிட்டோர், இளையராஜாவை பெருமைப்படுத்தும்விதமாக அவருக்கு 5 அடி உயர கேக் சிலை வைத்துள்ளனர். இதை ரசிகர்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.இது குறித்து சதீஷ் கூறுகையில்,‘‘இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் காதல், தனிமை, ஏக்கம், சோகம், மகிழ்ச்சி, பயணம் என அனைத்து சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மக்களுடன் பின்னி பிணைந்துள்ளது. உரிய அங்கீகாரம், பாராட்டு மட்டும்தான் ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இளையராஜாவை நாம் பெருமைப்படுத்த வேண்டும். பாரத ரத்னா விருது பட்டியலை பார்த்தால் பலருக்கு மறைவிற்கு பின்னரே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சாதனையாளர்களை அவர்கள் வாழும்போதே அங்கீகரிப்பதே நாம் அவர்களுக்கு தரும் மிகப்பெரிய மரியாதை, கவுரவம். எனவே, இளையராஜாவை பெருமைப்படுத்தும்விதமாக அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வலியுறுத்தி, 50 கிலோ சர்க்கரை, 250 முட்டையால் 5 அடி உயர உருவச்சிலையுடன் கேக் உருவாக்கினோம். இச்சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி எடுத்துச் செல்கின்றனர்’’ என்றார்.
127,452
12/21/2019 2:40:08 PM
விளையாட்டு
கட்டாக்கில் நாளை கடைசி ஒருநாள் போட்டி தொடரை வெல்லுமா கோஹ்லி படை?: கடும் சவாலுக்கு காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்
கட்டாக்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3டி.20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றிய நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் 107 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது.இதற்காக இரு அணி வீரர்கள் நேற்று முன்தினம் கட்டாக் வந்தடைந்தனர். முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. ரோகித்சர்மா,  கே.எல்.ராகுல் சதம் விளாசியதுடன் முதல் விக்கெட்டிற்கு 227 ரன் குவித்தனர். ரிஷப்பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் மிரட்டினர். இதனால் இந்திய பேட்டிங் வரிசை வலுவாக உள்ளதால் எந்தவித மாற்றமும் இருக்காது. பந்து வீச்சில் ஷமி 3, குல்தீப் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினர். பீல்டிங்கில் கேட்ச்களை கோட்டை விடுவது தான் மைனசாக உள்ளது. அதனை கண்டிப்பாக தவிர்க்க பீல்டிங்கில் முன்னேற்றம் அவசியம். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகிய நிலையில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 27 வயதான அவர் இந்திய அணிக்காக 5 டி.20 போட்டிகளில் மட்டும் ஆடி உள்ள நிலையில் நாளை ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார்.மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது போட்டியில் தோற்றாலும் தொடரை வெல்லும் உத்ேவகத்தில் இருக்கிறது. பேட்டிங்கில் லீவிஸ், பூரன், ஹெட்மயர் அதிரடியில் மிரட்டி வருகின்றனர். ஷாய் ஹோப் ஒரு சதத்துடன் 180 ரன் குவித்து பார்மில் உள்ளார். பந்து வீச்சு தான் சற்று பலவீனமாக உள்ளது. கோட்ரெல் மட்டும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அதிக அளவில் எக்ஸ்ட்டிரா வழங்குவதும் பெரும் குறையாக இருக்கிறது. இருப்பினும் நாளை அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.இரு அணிகளும் தொடரை வெல்லும் முனைப்பில் களம் இறங்குவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.கட்டாக்கில் இந்தியாவின் அட்டாக்* கட்டாக்கில் இந்தியா இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 12 போட்டியில் வென்றுள்ளது. 4 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. * வெஸ்ட் இண்டீஸ் இங்கு 3 போட்டிகளில்  ஆடி மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா கடைசியாக இங்கு ஆடிய 7 போட்டியில் 6ல் வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பின் தோற்றதில்லை. * கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக 2017ல் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன் எடுத்ததே அதிகபட்சம். * டெண்டுல்கர் 10போட்டியில் ஒரு சதம், 3 அரைசதத்துடன் 469 ரன் எடுத்துள்ளார்.  ஒரு போட்டியில் அதிகபட்சமாக அசாருதீன் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 153 ரன் எடுத்துள்ளார். அதிகப்பட்சமாக அஜய் ஜடேஜா 2 சதம் அடித்திருக்கிறார். * பவுலிங்கில் அனில் கும்ப்ளே , இசாந்த் சர்மா ,அகர்க்கர் தலா 3 போட்டியில் 7விக்கெட் எடுத்துள்ளனர். ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீசின்  பாவல் 27 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்ததே பெஸ்ட்.133வது முறையாக மோதல்...இருஅணிகளும் 133வது முறையாக நாளை மோத உள்ளன. இதுவரை 132 போட்டிகளில் மோதியதில், தலா 63 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.  2  போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டி ரத்தாகி உள்ளது. 16 ஆண்டுக்கு பின் வாய்ப்பு?வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2002-03ம் ஆண்டு இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றது. 7 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 4-3 என கைப்பற்றியது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பின் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
127,453
12/21/2019 2:40:37 PM
இந்தியா
போராட்டம் முதல் ஆயுதத்தை ஒப்படைக்கும் வரை டெல்லி போலீசுக்கு 20 மணி நேரம் கட்டாய பணி: வீட்டுக்கு சென்றுவர அதிகாரிகள் அனுமதி மறுப்பு
புதுடெல்லி: தொடர் போராட்டங்களால் டெல்லி போலீசார் தொடர்ந்து 20 மணி நேரம் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களை வீட்டுக்கு சென்றுவர அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி காவல்துறை நிலைமை மோசமான நிலையில இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி ஜந்தர் மந்தரில் நிறுத்தப்பட்டிருந்த சில போலீஸ்காரர்கள், தேநீர் இடைவேளையில் செல்லவோ அல்லது ஓய்வறை பயன்படுத்தவோ கூட முடியவில்லை என்று புலம்புகின்றனர். பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சிலர் கூறுகையில், ‘குடியுரிமை சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எங்களை கிட்டத்தட்ட இடைவிடாமல் செயல்படச் செய்துள்ளன. மற்ற எல்லா வழக்குகளையும் ஒதுக்கி வைத்து, பதட்டத்தை தவிர்க்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முழு போலீசாரும் ரோந்து, காவல் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடத்தில் இருக்கிறோம்’ என்றனர். கொனாட் பிளேஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் கூறுகையில், ‘போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு காலை 8 மணிக்கு அந்த இடத்தை அடைய எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அரை மணி நேரம் கூட இடைவெளி இல்லாமல் நாங்கள் நாள் முழுவதும் இங்கு இருக்கிறோம். சில நேரங்களில் நேரத்துக்கு உணவு வராதபோது, ​​நாங்கள் எங்கள் சொந்த செலவில் உணவை எடுக்க வேண்டும். குடிநீர் வசதி கூட இல்லை. வீட்டுக்கு சென்று வர போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டால், அதற்காக உடனடியான அனுமதியும் கிடைப்பதில்லை. சில நேரங்களில் அனுமதி மறுத்தும்விடுகின்றனர்’ என்றனர். பாராளுமன்ற வீதி காவல் நிலைய போலீசார் கூறுகையில், ‘‘ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திலிருந்து செல்லக்கூடாது என்று எங்களுக்கு நிலையான அறிவுறுத்தல்கள் உள்ளன. அவசரநிலை அல்லது வேலைக்காக வீட்டிற்கு செல்ல ஒரு மணிநேர இடைவெளி கூட மறுக்கிறார்கள். தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக ஒரு நாளுக்கு சராசரியாக 20 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறோம். பெண் போலீசாரின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியவில்லை’ என்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், ‘டிச. 3ம் தேதி டி.சி.டபிள்யூ தலைவர் போராட்டத்தில் அமர்ந்திருந்தபோது நான் ஜந்தர் மந்தருக்கு அனுப்பப்பட்டேன். நான் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு பின்னர் காலை 8 மணிக்கு மீண்டும் பாதுகாப்பு பணிக்கு வந்தேன். கடந்த ஒரு வாரமாக வரையறுக்கப்பட்ட பணி நேரம் என்பது இல்லை. பெண் போலீசார் வரையறுக்கப்படாத மணிநேரங்களுடன் அதிகமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகும், போலீசார் அந்தந்த காவல் நிலையங்களில் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க இன்னும் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். அதன்பின்னர் தான் அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியும். அதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்து வீடு திரும்பி மீண்டும் பணியில் சேர்ந்தால் தொடர்ந்து ஒரு நாளைக்கு 20 மணிநேரம் பணியில் உள்ளோம். எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது தெரியவில்லை’ என்றார்.
127,454
12/21/2019 2:41:09 PM
இந்தியா
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி சபரிமலையில் 3.5 கோடியில் நவீன பாதுகாப்பு உபகரணங்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையே சபரிமலைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று மத்திய உள்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்கள் அதிவேக அதிரடிப்படையினர் உட்பட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலக்கலில் தொடங்கி பம்பை, சன்னிதானம் வரை கண்காணிப்பு ேகமராக்கள் ெபாருத்தப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த உபகரணங்களின் மதிப்பு ₹3.5 கோடியாகும். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மைன்ஸ் ஸ்வீப்பர், எக்ஸ்புளோசிவ் டிடெக்டர், போர்ட்டபிள் எக்ஸ்ரே மிஷின், தெர்மல் இமேஜிங் கேமரா உட்பட பல்வேறு அதிநவீன உபகரணங்கள் சபரிமலைக்கு ெகாண்டுவரப்பட்டுள்ளன. மேலும் ஒரு கி.மீட்டர் ெதாலைவு வரை வெளிச்சம் கொடுக்கும் கமாண்டோ டார்ச் லைட்டுகளும் இதில் அடங்கும். சபரிமலையில் எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால் அது எந்த வகை குண்டு என்பதை எக்ஸ்புளோசிவ் டிடெக்டர் மூலம் கண்டு பிடிக்கலாம். போர்ட்டபிள் எக்ஸ்ரே மிஷின் எந்த இடத்திலாவது வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தால் அதை ஸ்கேன் செய்து பியூஸ் இருக்கும் இடத்தை கண்டறிந்து செயல் இழக்க வைக்கும். இதில் தொலைவில் இருந்தபடியே பியூஸ் வயரை துண்டிக்கும் ரிமோட் வயர் கட்டரும் உள்ளது.தெர்மல் இமேஜிங் கேமரா மூலம்தீவிரவாதிகள் எங்காவது மறைந்திருந்தால் அவரது உடல் வெப்ப அளவை வைத்து படம் பிடிக்கும் வசதி உள்ளது. இது தவிர குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு அணிந்து செல்லும் விசேஷ உடையும் வரவழைக்கப்பட்டுள்ளது. இது 110 கிலோ எடை கொண்டது. இந்த நவீன உபகரணங்களை கையாள்வதற்கான பயிற்சிகள் ேபாலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நவீன  உபகரணங்கள் மூலம் சபரிமலையில் ஒரு இலை அசைந்தால் கூட கண்டு பிடிக்க முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
127,455
12/22/2019 2:07:51 PM
தமிழகம்
பண மதிப்பிழப்பு நேரத்தில் ரூ.1,674.50 கோடிக்கு தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா வாங்கிய சொத்துகள்: சரக்கு வேன்களில் கட்டுக்கட்டாக இரவில் பணம் கைமாற்றம்
சென்னை: பண மதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா ரூ.1.674.50 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்த பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தற்போது சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக்கோரி சசிகலா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது: கடந்த 2012-13ம் ஆண்டு முதல் 2017-18ம் வரையிலான சசிகலாவின் வருமான வரி மதிப்பீடு வருமான வரித்துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர் இந்த மதிப்பீட்டை வைத்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த காலக்கட்டத்தில் அவர் பங்குதாரராக இருந்த நிறுவனங்கள் தொடர்பான வருமான வரி அறிக்கையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் 2016 நவம்பரில் சிகிச்சை பெற்றுவந்தபோது பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டது. பண மதிப்பிழப்பு நேரத்தில் ஏராளமான சொத்துக்களை சசிகலா வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சசிகலாவின் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் தொகை விபரங்கள் இருந்தன. அந்த காகிதத்தை செல்போனில் படமெடுத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வதற்கு முன்பு கிருஷ்ணபிரியா வீட்டில் சசிகலா தங்கியிருந்தபோது இந்த பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது. அனைத்து தாள்களையும், கவர்களையும் அழித்த நிலையில் இரண்டு தாள்கள் மட்டும் வருமான வரித்துறையிடம் சிக்கியது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், அந்த தாள்களில் செந்தில் என்பவர் எழுதியது தெரியவந்தது. அவரது வாக்குமூலத்தின்படி அந்த தாள்களில் உள்ளவை சசிகலா பண மதிப்பிழப்பு நேரத்தில் வாங்கிய ரூ.1.674.50 சொத்துக்களின் விபரங்கள் என்று தெரியவந்தது.பான்ஜின் பான்ஹெர் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமாக புதுச்சேரியில் லட்சுமி ஜூவல்லரி உள்ளது. மேலும் இவருக்கு சொந்தமாக புதுச்சேரியில் ஓசேன் ஸ்பிரே என்ற பெயரில் ரிசார்ட்டும் இருந்தது. அந்த ரிசார்ட்டை சசிகலா அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் குமார் மூலம் ரூ.168 கோடிக்கு பேரம் பேசி உள்ளார். இதில் 148 கோடி செல்லாத 500, 1000 நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. இந்த 148 கோடியில் குமாருக்கு புரோக்கர் கமிஷன் ரூ.12 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.148 கோடியும் 2016 நவம்பர் 22ம் தேதி இரவு 10.30 மணியளவில் 3 டாடா ஏஸ்(குட்டி யானை) வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையின் போது சசிகலாவின் வக்கீல் செந்தில் என்பவரும் உடன் இருந்துள்ளார். இதுகுறித்து ரிசார்ட்டின் உரிமையாளர் நவீன் பாலாஜி அளித்த வாக்குமூலத்தில், எனக்கு 2016ம், ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. இதனால், ரூ.100 கோடிக்கு எனக்கு நஷ்டம் ஏற்பட்டதால், ரிசார்ட்டை விற்று நகைக்கடை தொழிலில் கவனம் செலுத்தும்படி குடும்பத்தினர் கூறினார்கள். இதனால், ரிசார்ட்டை விற்க அமைச்சரின் எம்.பி சம்பத்தின் பி.ஏ. குமார் உதவியை நாடினேன். அவர் சசிகலா வக்கீல் செந்திலை அறிமுகம் செய்து வைத்தார். அவர் ரூ.168 கோடிக்கு பேரம் பேசி ரிசார்ட்டை முடித்தார் என கூறி உள்ளார். அதேபோல் மார்க் நிறுவன உரிமையாளர் ராமகிருஷ்ண ரெட்டி தனது நிறுவனத்தின் பங்கை விற்க முயன்றார். அப்போது அவரிடம் சசிகலா தரப்பு ரூ.115 கோடிக்கு பேரம் பேசியது. இதில் பல்வேறு புரோக்கர்களுக்கு கமிஷனாக வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.105 கோடியில் ₹6 கோடி ராமகிருஷ்ண ரெட்டி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை 7 பேரின் வங்கி கணக்கில் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. முதலில் சசிகலாவுக்கு சொத்துக்களை விற்கவும், செல்லாத நோட்டுக்களை வாங்கவும் ராமகிருஷ்ணரெட்டி மறுத்துள்ளார். பின்னர், அவர் நடத்தி வரும் மற்ற தொழில்களை பாதுகாக்கவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காகவும் அவர் சொத்தை விற்க ஒப்பு கொண்டார்.அதேபோல், பிரபாத் குரூப் நிறுவனங்களின் இயக்குனர் சிவகன் பட்டேலுக்கு சொந்தமான தூத்துக்குடியில் இருந்த 137 ஏக்கர் யார்டு 200 கோடிக்கும், தேனியில் இருந்த 1897 ஏக்கர் எஸ்டேட் ரூ.100 கோடிக்கும் அதே காலகட்டத்தில் வாங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணூரில் உள்ள 16.6 ஏக்கர் யார்டு, ரூ.60 கோடிக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலை ₹450 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையை ரூ.386 கோடிக்கும், மேற்கண்ட மற்ற சொத்துகளை வாங்க பேரம் பேசப்பட்டது. 2016 நவ. 22 மற்றும் 23ம் தேதிகளில் சர்க்கரை ஆலைக்கு ரூ.286 கோடி செல்லாத நோட்டுகளை வாங்க உரிமையாளர் ஒப்பு கொண்டு உள்ளார். மீதமுள்ள ரூ.164 கோடி செல்லாத நோட்டுகள் டிச.3 முதல் 23ம் வரை படிபடியாக கைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் உள்ள செந்தில் என்ற பேப்பர் நிறுவனம் ₹600 கோடிக்கு வாங்கப்பட்டது. இதில் 400 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 400 கோடியும் ஒரு பெட்டிக்கு ஒரு கோடி வீதம், 400 அட்டை பெட்டிகளில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மூலம் டிசம்பர் 23ம் தேதி பரிவர்த்தனை நடந்துள்ளது. அதேபோல் சென்னையில் கங்கா பவுண்டேசன் இயக்குனர் செந்தில் குமாருக்கு சொந்தமாக ஸ்பெக்ட்ரம் மால் இருந்தது. இதை ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் மூலம் இளவரசி மகன் விவேக், ₹190 கோடிக்கு பேரம் பேசினார். இதில் 130 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. முதலில் ஸ்பெக்ட்ரம் மாலை சசிகலா தரப்புக்கு விற்க உரிமையாளர் முன்வரவில்லை. பின்னர் மிரட்டும் விதமாக பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் மாலில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் அந்த மாலை விற்க உரிமையாளர் முன்வந்துள்ளார்.மதுரையில் மிலான் என்ற பெயரில் டெக்ஸ்டைல் வைத்திருப்பவர் அமர்லாஜ் ஓரா. இவருக்கு மதுரை கே.கே.நகரில் மிலனம் என்ற மால் இருந்தது. 2014-15 காலகட்டத்தில் இந்த மாலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அதை விற்க முடிவு செய்த உரிமையாளர் அமர்லாஜ் ஓரா, இதற்காக உள்ளூரை சேர்ந்த ஒரு கான்ட்ராக்டரை அணுகினார். பின்னர் அவரது ஏற்பாட்டில் சசிகலா வக்கீல் இளங்கோ மூலம் நவம்பர் 27ம் தேதி ரூ.57 கோடிக்கு மால் பேரம் பேசப்பட்டது. இதில் 30 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் 13, 14 தேதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறைக்கு சென்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். ஆனால் வருமானவரித்துறையினர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தனக்கு எதுவும் தெரியாது என்றே சசிகலா பதில் அளித்துள்ளார்.இவ்வாறு வருமானவரித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நேரத்தில் ரிசார்ட், ஷாப்பிங் மால், எஸ்டேட், சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என பல நிறுவனங்களை சசிகலா மிரட்டி வாங்கி குவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,456
12/22/2019 2:10:26 PM
தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் திமுக தலைமையில் நாளை மாபெரும் பேரணி: மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட 11 கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் திமுக தலைமையில் நாளை மாபெரும் பேரணி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட 11 கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பேரணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். தினந்தோறும் வெவ்வேறு வடிவத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்-ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த பாஜக- அதிமுக அரசுகளை கண்டித்து, சென்னையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகிற 23ம் தேதி(நாளை) மாபெரும் பேரணி” நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடக்கிறது.பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பேரணியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் .ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் மற்றும் திமுக தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து பேரணி புறப்பட்டு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் முடிவடைகிறது. அங்கு தலைவர்கள் கண்டன உரையாற்றுகின்றனர். திமுக தலைமையில் நடைபெறும் பேரணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. இதனால், நாளை நடைபெறும் பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
127,457
12/22/2019 2:12:05 PM
தமிழகம்
திமுக தலைமையில் நாளை பேரணி நடைபெறவுள்ள நிலையில் மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை: மேலாண் இயக்குனர் சுற்றறிக்கையால் பரபரப்பு
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் திமுக தலைமையில் நாளை பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணியில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை விதித்து மாநகர ேபாக்குவரத்து மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும்  கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாபெரும் பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் தி.க தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட 11 கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த பேரணிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே போன்று பல்வேறு கட்சி தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள  முடிவு செய்துள்ளது. குறிப்பாக, போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் மாநகர போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேரணியில் கலந்து கொள்ளும் வகையில், அனைவரும் விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளதால், நாளை 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் ஓட வாய்ப்பில்லை. இந்த நிலையில், மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் திடீரென சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அனைத்து தொழிலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நம்முடைய மாநகர் போக்குவரத்து கழகம் ஒரு அத்தியவாசியமான போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பேற்று நடத்தும் நிறுவனம் என்பதும், பொதுமக்களுக்கு அன்றாடம் சேவை செய்யக்கூடிய முக்கியமான பொறுப்புள்ள நிறுவனம் என்பதும் நமது தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்ததாகும். எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வருகின்ற 23ம் ேததி (நாளை) வழக்கம் போல் பணிக்கு தவறாமல் ஆஜராக வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 23.12.2019 அன்று வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது மற்றும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,458
12/22/2019 2:13:26 PM
விளையாட்டு
ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள் வழக்கு எண்ணிக்கை 13% அதிகரிப்பு: ‘வாடா’ அறிக்கையில் பகீர்
மாண்ட்ரீல்: கனடாவின் மாண்ட்ரீலில் செயல்படும் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (வாடா) தனது ஆண்டு அறிக்கையில், 2017ம் ஆண்டில், சர்வதேச விளையாட்டுகளில் ஊக்கமருந்து தொடர்பான வழக்குகள் முந்தைய 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதே நேரத்தில், 2017ம் ஆண்டில் 1,804 ஊக்கமருந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2016ல் 1,595 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் பதிவான வழக்குகள் 114 நாடுகள் மற்றும் 93 வீரர்களைச் சேர்ந்தவை. இத்தாலியைச் சேர்ந்த அதிகபட்சம் 171 வீரர்கள் ஊக்கமருந்து குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். அதே நேரத்தில் பிரான்சிலிருந்து 128 வீரர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த 103 வீரர்களும் ஊக்கமருந்து குற்றவாளிகளாக உள்ளனர். தடைசெய்யப்பட்ட பொருட்களை உட்கொண்ட வழக்கில் பிரேசிலில் இருந்து 84 வீரர்களும், ரஷ்யாவைச் சேர்ந்த 82 வீரர்களும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டது. சீனா, இந்தியா, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் ஊக்கமருந்து வழக்குகள் உள்ளன. அதிகபட்சமாக 266 வீரர்கள் உடல் கட்டமைப்பில் (பாடி பில்டர்ஸ்) குற்றவாளிகள் மற்றும் தடகளத்தில் 242 பேர் குற்றவாளிகளாக உள்ளதாக ‘வாடா’ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்கள் விதிமீறல் பட்டியலில் இந்தியா 2017ம் ஆண்டு புள்ளி விவரப்படி, நேர்மறை ஊக்க மருந்து சோதனைகளின் போது ஐந்தாவது இடத்திலும், ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்கள் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட 2016ம் ஆண்டிற்கான அதே பட்டியலில், சேகரிக்கப்பட்ட 2,831 மாதிரிகளில் இருந்து 73 நேர்மறை சோதனைகளுடன் இந்தியா அதே இடத்தை பிடித்தது. 2019ம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் மட்டும் இந்திய விளையாட்டு வீரர்கள் 156 ஊக்க மருந்து பயன்படுத்திய சோதனைகளில் தோல்வியடைந்தனர். இது ஒலிம்பிக் போட்டி துவங்கும் நிலையில் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
127,459
12/22/2019 2:14:55 PM
இந்தியா
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக விவகாரம்: நீதி விசாரணை நடத்த வேண்டும்: அமைச்சகத்துக்கு 2வது அறிக்கை சமர்ப்பிப்பு
புதுடெல்லி: டெல்லி ஜாமியா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பல்கலை நிர்வாகம் இரண்டாவது அறிக்கையை சமர்பித்துள்ளது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காவல்துறையினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை இச்சம்பவம் ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் கடந்த 15, 16ம் தேதிகளில் பல்கலைக்கழகம் அறிக்கைகளை சமர்ப்பித்தது. தற்போது சமர்பித்துள்ள புதிய அறிக்கையில், ஒரு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் அல்லது சம்பவம் தொடர்பான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று  மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு இரண்டாவதாக புதிய அறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், ‘மதுரா சாலை மற்றும் ஜூலேனா சாலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் லத்தி சார்ஜ் பயன்படுத்தினர். போராட்டக்காரர்கள் பின்வாங்கும்போது மவுலானா மொஹத்தை அழைத்துச் சென்றனர். போராட்டம் நடந்தபோது, ​​டெல்லி காவல்துறை கேட் எண்கள் 4 மற்றும் 7 வழியாக வளாகத்திற்குள் நுழைந்தது. பூட்டை உடைத்தது. ஜன்னல் மற்றும் நூலகத்தின் கதவுகளையும் அடித்து நொறுக்கினர். நூலகத்திற்குள் படித்த அனைத்து மாணவர்களையும் கொடூரமாக தாக்கியது. வளாகத்தினுள் அல்லது நூலகத்திற்குள் நுழைய எந்த அனுமதியும் பல்கலைக்கழக அதிகாரிகளால் வழங்கப்படவில்லை. வன்முறையில் எந்த தொடர்பும் இல்லாத அப்பாவி மாணவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல் நடந்தது. ஒரு மாணவனை லத்தியால் தாக்கியதில் இடது கண் பார்வை பறிபோனது. காயமடைந்த மாணவர்கள் நியூ பிரண்ட்ஸ் காலனி மற்றும் கல்காஜி காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் சட்டவிரோதமாக காவல்துறையினர் நுழைந்ததை, குழு விசாரிக்க வேண்டும். நூலகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தியது குறித்து குழு ஆய்வு செய்ய வேண்டும். அந்த குழு, மாணவர்களுக்கான நீதியை மீட்டெடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
127,460
12/23/2019 3:37:18 PM
தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி
* பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்* ப.சிதம்பரம், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட  தலைவர்கள் பங்கேற்பு* பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் அணி அணியாக வந்தனர்சென்னை: குடியுரிமை  சட்டத்தை எதிர்த்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் பேரணி நடந்தது. பேரணியில் ப.சிதம்பரம், வைகோ,  பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோன்று பேரணியில் பொதுமக்கள், வணிகர்கள்,  தொழிலாளர்கள்,  மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை  எதிர்த்து நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள்  நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி அரசியல்  கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், கல்லூரி  மாணவர்கள்,  பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாள்தோறும் பல்வேறு  வடிவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நாடு  முழுவதும் இதுவரை நடைபெற்ற போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சட்டத்தால் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால், தமிழகத்தில் இந்த சட்டத்துக்கு  எதிராக கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த  புதன்கிழமை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில்  டிசம்பர் 23ம் தேதி (இன்று) சென்னையில்  மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழிபறிக்கும் குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, கட்சி   எல்லைகளுக்கு அப்பால் ஓரணியாக திரண்டு மக்களின் பேரலை போன்ற பேரணியால்  சென்னை குலுங்கட்டும். அது கண்டு டெல்லி அதிரட்டும்.  ஜனநாயகத்தில் உறுதி கொண்ட, மதசார்பின்மை கொள்கையில் தளராத  நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும்,   இளைஞர்களையும், மாணவர்களையும், திரைக்கலைஞர்களையும், வணிகர்களையும், பல  துறை சார்ந்த அனைவரையும் பேரணியில் பங்கேற்றிட  அன்புடன் அழைக்கிறேன்” என்று கூறி இருந்தார்.அதேநேரம் எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல் துறை நேற்று மாலை வரை அனுமதி தராமல் இருந்தது. அதேபோன்று, பேரணிக்கு தடை  விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று இரவு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது  நீதிபதிகள், “ஜனநாயக நாட்டில் பேரணி, ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேரணி நடத்த வேண்டும்”  என்று கூறினர். அதன்படி திட்டமிட்டபடி இன்று காலை 9 மணியில் இருந்து கட்சி தலைவர்கள் பேரணி தொடங்கும் இடமான எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை  அருகே வர தொடங்கினர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் காலை முதலே அங்கு குவிய தொடங்கினர். சரியாக காலை 10.10 மணிக்கு திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதையடுத்து அவரது தலைமையில் காலை 10.15 மணிக்கு பேரணி  ெதாடங்கியது. இந்த பேரணியில்  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தமிழக  பொறுப்பாளர் சஞ்சய்தத், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில  செயலாளர் ரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர்  ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐக்கிய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் சத்தியசிலன், தமிழர் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். கட்சி தலைவர்களுடன் அவர்களது கட்சிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் தங்கள் கட்சி கொடிகளை கையில் ஏந்தியபடி  பேரணியில் கலந்து கொண்டனர்.திமுக  தலைமையில் நடைபெறும் இந்த பேரணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர்  தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, எஸ்.டி.பி.ஐ. கட்சி  தலைவர் நெல்லை முபாரக்,  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில், மக்கள்  தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன்  உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள்  மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்,  தொழிலாளர்கள்,  பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து மாபெரும் பேரணியில் பங்கேற்றனர்.திமுக சார்பில் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன்,  ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, வில்சன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் மற்றும்  திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இன்று நடைபெற்ற பேரணியில்  பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே பேரணி தொடங்கியது.  அந்த பேரணி லாங்கஸ் கார்டன் சாலை மற்றும் புதுப்பேட்டை ஹேரிஸ் சாலை, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை(கண் மருத்துவமனை) வழியாக  11.40 மணிக்கு சுமார் 3 கி.மீ.தூரம் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்தடைந்தது. தலைவர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்தடைந்தபோதும் பேரணி  தொடங்கிய இடம் வரை கூட்டம் கட்டுக்கடங்காமல் ேபரணி முடியாமல் இருந்தது. பேரணியின் கடைசி பகுதி, இறுதி பகுதிக்கு வருவதற்கே பல  மணி நேரம் நீடித்தது. இதனால்,  சென்னை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.கருப்பு சட்டையில் உதயநிதிதிமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஊர்வலகத்தில் நடந்து வந்தனர். இளைஞர் அணியினர் அனைவரும் கருப்பு  உடையில் திமுக கொடியை ஏந்தியபடி வந்தனர்.ஒவ்வொருவரிடமும் விசாரணைதிமுக தலைமையில் இன்று நடைபெற்ற பேரணிக்கு ஏராளமான தொண்டர்கள் சென்னை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்தனர்  இவர்களை போலீசார், எங்கே இருந்து வருகிறீர்கள் என்று விசாரணை நடத்திய பிறகு பேரணி நடைபெறும் இடத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.  சிலரை போலீசார் பேரணிக்கு செல்ல அனுமதி இல்லாததால், கடும் வாக்குவாதத்துக்கு பிறகே உள்ளே வர முடிந்தது.வாகனங்கள் தடுத்து நிறுத்தம்பேரணியில் பங்கேற்க வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கார், வேன், பஸ்களில் சென்னை, எழும்பூர்  வந்தனர். அவர்களின் வாகனங்களை போலீசார் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர். மற்றொரு பக்கம் பூந்தமல்லி நெடுங்சாலை  அருகே தடுத்து நிறுத்தி, வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து வாகனங்களில் இருந்து இறங்கி, அங்கிருந்து சில கி.மீ. தூரம்  நடந்தே பேரணி நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.6 மணிக்கே குவிந்த தொண்டர்கள்குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு தான் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று  காலை 6 மணி முதலே தொண்டர்கள், பொதுமக்கள்  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே வர தொடங்கினர். சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்து திமுக மற்றும் தோழமை கட்சி தொண்டர்களும், இந்த  மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் எழும்பூர் பகுதி முழுவதும்  திரும்பிய பக்கம் எல்லாம் மனித தலைகளாகவே காட்சி அளித்தது.ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிட்ட தலைவர்கள்குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமையில்  எழும்பூரில் பேரணி நடைபெற்றது. பேரணி சென்று கொண்டிருந்தபோது, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.  இதையடுத்து தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒரு பக்கமாக ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழிவிட்டனர். இதனால்,  பல்லாயிரக்கணக்கானோர் சென்ற பேரணி பாதையில் ஆம்புலன்ஸ் எளிதாக சென்றது. அதேபோன்று, பேரணிக்கு ஆதரவு தெரிவித்து புதுப்பேட்டை  ஆதித்தனார் சாலையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டு இருந்தது.110 கேமராக்கள் மூலம் கண்காணிப்புகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக  ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் பேரணி சென்றது. இந்த பகுதியில் உள்ள வீட்டு மாடிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக  நிறுத்தப்பட்டு இருந்தனர். பல போலீசார் வீடியோ கேமரா மூலம் பேரணியை படம் எடுத்தபடி அவர்களை கண்காணித்தபடி இருந்தனர். இன்று நடந்த  பேரணியை மட்டும் போலீசார் ட்ரோன் கேமரா மற்றும் சிறிய வகை கேமராக்கள் என மொத்தம் 110 கேமராக்கள் மூலம் படம் பிடித்தபடி  கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.அதிரடிப்படை போலீஸ் உள்பட 5 ஆயிரம் போலீசார் குவிப்புகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற பேரணிக்கு சென்னை மாநகர போலீசார்  இன்று காலை வரை அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், தடையை மீறி பேரணி நடைபெற்றது. முன்னதாக, பேரணிகை முன்னிட்டு அந்த பகுதியில்  சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். குறிப்பாக, பேரணி தொடங்கும் பகுதியில் ஏராளமான அதிரடி போலீசார் மற்றும்  அதிவிரைவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள், கையில் பெரிய கம்பு வைத்து மிரட்டல் வகையில் நின்றனர். அதேபோன்று, பேரணியை  கண்காணிக்க 2 ட்ரோன் கேமராக்கள் மேலே பறக்கவிட்டு போலீசார் கண்காணித்தபடி இருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க முன்  எச்சரிக்கை நடவடிக்கையை தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்  3 வஜ்ரா வாகனங்கள் மற்றும் கண்ணீர் புகை வீசும் 6 வருண் வாணங்கள் நடைபெறும்  பகுதியில் போலீசார் கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர். பீதியை கிளப்பும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.கட்டுக்கோப்பாக நடந்த பேரணிதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 11 கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தலைமையில் பேரணி நடைபெற்றதால்  பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் எழும்பூரில் குவிந்தனர். ஆனாலும், அவர்களை திமுக தொண்டர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக நின்று  பேரணியை வழி நடத்தி சென்றனர். முதல் வரிசையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், 2வது வரிசையில் எம்பி,  எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களும், 3வது வரிசையில் கட்சிகளின் 2ம் கட்ட தலைவர்கள், 4வது வரிசையில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள்  என அணி அணியாக செல்ல சிறப்பாக ஏற்பாடு செய்தனர். அதற்கு ஏற்றபடி கட்சி தலைவர்கள் வரிசையில் மற்ற தொண்டர்கள் புகுந்துவிடாதபடி 4  பக்கமும் கயிறு கட்டி மிக நேர்த்தியாக பேரணி சென்றது. மைக் மூலமாகவும், தொண்டர்கள் பேரணியில் அமைதி காக்க வேண்டும், கட்டுப்பாடுடன்  நடந்து கொள்ள வேண்டும், எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று கட்சி தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்தபடி  சென்றனர்.
127,461
12/23/2019 3:37:48 PM
இந்தியா
பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவு: பாஜ அதிர்ச்சி தோல்வி ஜார்க்கண்டில் காங். கூட்டணி ஆட்சி
* முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க வாய்ப்பு* ஆட்சியை பறிகொடுத்தார் பாஜ முதல்வர் ரகுபர்தாஸ்ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பாஜ படுதோல்வியை சந்தித்தது. முதல்வராக  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜ கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள  சட்டப்பேரவைக்கு நவ. 30ம் தேதி தொடங்கி கடந்த 20ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தன. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள  மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.  ஜார்க்கண்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்  என்று தெரிவித்தன.இதற்கு காரணம், அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-வுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், முதல்வர் ரகுபர்  தாஸ் மீண்டும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சவால் நிறைந்ததாகவே அமைந்தது. ஜார்க்கண்ட் தேர்தலை பொறுத்தவரை உள்ளூர்  அரசியலை மையப்படுத்தி இருந்ததால், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அளித்த அயோத்தி தீர்ப்பு  மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான 370வது பிரிவை ரத்து செய்தல் போன்றவை இந்த தேர்தல்களில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை.ஆளும் கட்சி கடந்த ஐந்தாண்டு ஆட்சியில், மக்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததால் கூட்டணியில் இருந்த ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்  (ஏஜேஎஸ்யு) தனித்தே போட்டியிட்டது. அதனால், பாஜக எந்த கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.  கடந்த 2014ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெறாத பாஜ கட்சி 37 இடங்களிலும், அதனுடன் கூட்டணி அமைத்த ஏஜேஎஸ்யு 5  இடங்களையும் கைப்பற்றியது. மற்றபடி காங்கிரஸ் கட்சி 6 இடங்களையும், ஜார்க்ண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 19 இடங்களிலும், ஜார்க்கண்ட்  விகாஸ் மோர்ச்சா 8 இடங்களிலும், பகுஜன் சமாஜ், சிபிஐ (எம்எல்), ஜேகேகேபி தலா 1 இடங்களை கைப்பற்றின.இந்த தேர்தலில், பாஜ 79 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜேஎம்எம் 43 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம்  7 இடங்களிலும் போட்டியிட்டன. ஜேவிஎம் 81 தொகுதிகளிலும், ஏஜேஎஸ்யு 53 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகள்  மேற்கண்ட எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த வாக்குகள்,  இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.காலை 8.30 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் -‌ஜார்க்கண்ட் முக்தி மோர்‌ச்சா கூட்டணி பெரும்பாலான  இடங்களில் முன்னணி பெற்றது. முற்பகல் நிலவரப்படி பாஜ 27 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணியில் ஜேஎம்எம் 24 இடங்களிலும், காங்கிரஸ் 12  இடங்களிலும், ஆர்ஜேடி 5 இடங்களிலும் பெற்று 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும், ஏஜேஎஸ்யு 6 இடங்களிலும், ஜேவிஎம்பி 4  இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். அதனால், பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஜார்க்கண்டில்  அமைய வாய்ப்புள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில், 14 ஆண்டுகளுக்குபின் முதன்முறையாக முதல்வர் ரகுபர் தாஸ்தான் 5 ஆண்டு முழுமையாக  ஆட்சி நடத்தி உள்ளார். கடந்த 2000ல் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து, பாஜவை சேர்ந்த பாபுலால் மராண்டி முதல் மாநில முதல்வராக  இருந்தார். இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், அர்ஜுன் முண்டா கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இதுவரை ஜார்க்கண்ட்  மாநிலத்தில் நான்கு அரசாங்கம் அமைந்துள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த ஷிபு சோரன், பாஜகவைச் சேர்ந்த அர்ஜுன் முண்டா, தனி  கட்சியாக செயல்பட்ட மது கோடா, ஷிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் ஆகியோர் முதல்வராக இருந்தனர்.இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணி ஜார்க்கண்ட்டில் ஆட்சி அமைக்க உள்ளதால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜே.எம்.எம்) செயல் தலைவர்  ஹேமந்த் சோரன் முதல்வராக அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கூட்டணி கட்சிகளால் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் இருந்தார்  என்பதால், அவரே முதல்வராக பதவிேயற்பார் என்று கூறப்படுகிறது.
127,462
12/23/2019 3:38:21 PM
தமிழகம்
புதுச்சேரி பல்கலை பட்டமளிப்பு விழா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 19ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கினார்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 19 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை  வழங்கினார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்த் இன்று மதியம் 12 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி வந்தார். அவரை கவர்னர் கிரண்பேடி, முதல்வர்  நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர்.இதன்பிறகு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவ- மாணவியருக்கு  பட்டங்களை வழங்கினார்.74 மாணவிகள் உள்பட 205 ஆராய்ச்சி மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த 82 மாணவிகள் உள்பட 117  பேர், நேரடியாக பயின்ற 15,020 பேர், தொலைதூர திட்டத்தில் படித்த 4,269 பேர் என மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில்  பட்டங்கள் வழங்கப்பட்டது.விழாவுக்கு துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து குடியரசு தலைவரின் கையால் பட்டங்களை பெறப்போவதில்லை என தமிழக பகுதியான கோட்டக்குப்பம்  மாணவர் அருண்குமார், பல்கலை. மாணவி பூர்ணிமா உள்ளிட்ட சிலர் அறிவித்திருந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது.இதன்பிறகு இன்று மாலை 3 மணியளவில் அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். ஆரோவில் மாத்திர் மந்திரை பார்வையிடுகிறார். அங்கிருந்து மாலை 5  மணியளவில் புறப்பட்டு கவர்னர் மாளிகை வந்தடையும் குடியரசு தலைவர் இரவில் அங்கு தங்குகிறார். நாளை காலை 9 மணிக்கு கவர்னர்  மாளிகையில் இருந்து லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு சனீஸ்வரன்  கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார்.
127,463
12/23/2019 3:38:41 PM
உலகம்
நைஜீரிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர் மீட்பு
அபுஜா: நைஜீரிய கடற்கரைக்கு அருகே ஹாங்காங் கொடியிடப்பட்ட கப்பலில் இருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.கடந்த 3ம் தேதி எம்டி நேவ் கான்ஸ்டாலேஷனில் இருந்து பணயக்கைதியாக 18 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். இந்நிலையில்,  நைஜீரிய கடற்கரைக்கு அருகே ஹாங்காங் கொடியிடப்பட்ட கப்பலில் இருந்து  கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளதாக  நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடல்சார் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும்  உலகளாவிய நிறுவனமான ஏஆர்எக்ஸ் வெளியிட்ட செய்தியில், ‘டிச. 3ம் தேதி கப்பல் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பேர் கப்பலில்  இருந்து மீட்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள். இவர்களின் விடுதலை உறுதி செய்யப்பட்டதற்கு இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது’  என்று தெரிவித்துள்ளது.
127,464
12/23/2019 3:39:11 PM
இந்தியா
370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் கைதானவர் உ.பி சிறையில் காஷ்மீர் கைதி சாவு
லக்னோ: காஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், உத்தரபிரதேச சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் கைதி, கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு உடல்  நலக்குறைவால் இறந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கைதி குலாம் முகமது பட் (60)  என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவர், தடைசெய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின், ஜம்மு-காஷ்மீர் உறுப்பினராக இருந்ததாக  கூறப்படுகிறது. இவர் மீது கடந்த ஜூலை மாதம் பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீரில் கைது  செய்து அழைத்து வரப்பட்டு மேற்கண்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சிறையில் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஆக. 5ம் தேதிக்கு  பிறகு, 270க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டனர். அவர்களில், குலாம் முகமதுவும் ஒருவர். இதுதொடர்பாக, குலாம் முகமது பட் மகன்  ஹனீப் முகமது கூறுகையில், ‘அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வெள்ளிக்கிழமை மாலை  எங்களுக்கு தகவல் கிடைத்தது. சனிக்கிழமை அதிகாலை, உத்தரபிரதேசத்திற்கு சென்றோம்.  மாலை நைனி சிறையை அடைந்தவுடன், என் தந்தை  காலமான தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றார். தொடர்ந்து, ஹனீப் தனது தந்தையின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை  குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹண்ட்வாரா என்ற குலங்கம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.இதுகுறித்து குலாம் முகமது பட் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், ‘அவர் நலமாக இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் கொடுத்தனர்.  அவரை மீண்டும் அழைத்து செல்வதாக போலீசாரிடம் சொன்னோம். ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. மரணத்திற்கான காரணம்  எங்களுக்குத் தெரியவில்லை. அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்’ என்றனர்.
127,465
12/23/2019 3:39:37 PM
இந்தியா
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இது வரும் 26ம் தேதி  மாலை சன்னிதானத்தை அடையும்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராமவர்மா சபரிமலை கோயிலுக்கு 450 பவுன் எடை கொண்ட தங்க  அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது வருடந்தோறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு வருகிறது. தங்க  அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி ேகாயிலில் வைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு இங்கிருந்து ரதத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக  கொண்டு வரப்படும். இந்த ஊர்வலம் இன்று காலை 7 மணியளவில் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு இன்று அதிகாலை  5 மணியவில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த அங்கி ஆரன்முளா கோயிலில் வைக்கப்பட்டது.  பின்னர் ஊர்வலம் தொடங்கியது. ஓமல்லூர்,  கோன்னி, தெருநாடு வழியாக 26ம் ேததி மதியம் பம்பையை அடையும். பம்பை கணபதி கோயிலில் இந்த அங்கி பக்தர்களின் தரிசனத்துக்காக  வைக்கப்படும். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடையும். பின்னர் அந்த அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு  தீபாராதனை நடைபெறும். மறுநாள் (27ம் தேதி) காலை 19.11க்கும் 11.40 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறும். பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோயில்  நடை சாத்தப்படும். 26, 27 தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு சில கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்  நிலக்கல், பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறுசிறு குழுக்களாக சன்னிதானத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதுபோல் வாகனங்கள்  நிறுத்தவும், அரசு பஸ் இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.மண்டல பூஜை தினத்தன்று இரவு 9 மணிக்கு இரவு பூஜை தொடங்கும். அதுவரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  இதனால் அன்று இரவு 7 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மண்டல பூஜை முடிந்து  நடை சாத்தப்பட்ட பின்னர் 28, 29ம் தேதிகளில் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக 30ம் தேதி மாலை 5  மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் சபரிமலையில் கக்கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. நேற்று  1 லட்சத்துக்கும் மேற்பட் ேடார் தரிசனம் செய்தனர்.
127,466
12/23/2019 3:41:58 PM
தமிழகம்
தக்கலை அருகே பரபரப்பு அரசு டாக்டர் தற்கொலை
தக்கலை: தக்கலை அருகே அரசு டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாலுகிருஷ்ணா (28). பளுகல் ஆரம்ப சுகாதார  நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 9 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி அகமதாபாத்தில் எம்டி  படித்து வருகிறார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையானதால் பாலுகிருஷ்ணா வீட்டில் இருந்தார். இரவு வெகுநேரம் ஆகியும் அவரது அறையை விட்டு வெளியே  வராததால் சந்தேகம் அடைந்த தந்தை முருகன் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பாலுகிருஷ்ணா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக  கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முருகனின்  உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, பணி டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு  கோணங்களில்  விசாரித்து வருகின்றனர்.
127,467
12/23/2019 3:42:18 PM
இந்தியா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் : 26ம் தேதி சூரிய கிரகணத்தையொட்டி
திருமலை: சூரிய கிரகணத்தையொட்டி வரும் 26ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 15 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது.வரும் 26ம் தேதி காலை 8.08 மணி முதல் 11.06 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பே  தேவஸ்தான கோயில்கள் மூடப்படும் என்பதால், வரும் 25ம் தேதி இரவு 11 மணி முதல் 26ம் தேதி மதியம் 12 மணி வரை ஏழுமலையான் தரிசனம்  நிறுத்தப்பட்டு கோயில் மூடப்பட உள்ளது.அதன்பிறகு கோயில் திறக்கப்பட்டு, புண்ணியா வாசனம், சுத்தம் செய்து சூரிய கிரகண பரிகார தோஷ  பூஜைகள் நடைபெறும். மதியம் 2 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.திருமலையில் உள்ள அன்னதானக் கூடமும் சூரியகிரகணத்தை ஒட்டி மூடப்படும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை  திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை ரத்து  செய்யப்படுகிறது.இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
127,468
12/23/2019 3:42:44 PM
உலகம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர் ஆர்ப்பாட்டம்
வாஷிங்டன்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் நடப்பது போன்று, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்  நடந்தது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையின் முன்பாக ஏராளமான இந்திய -  அமெரிக்கர்கள் திரண்டு, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  நடத்தினர். இதுகுறித்து, வாஷிங்டனை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பு மையமான பன்மைத்துவத்தைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கன் மைக்  கவுஸ் கூறுகையில், “நாங்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஒரேஒரு காரணம்தான். மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம்தவிர வேறொன்றுமில்லை”  என்றார். இதேபோன்று, அமெரிக்க - இந்திய முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரேட்டர் வாஷிங்டன் பகுதியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். குடியுரிமை சட்டம் மற்றும்  என்ஆர்சிக்கு எதிராக சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காண்பித்து போராடினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் விரும்புவது இந்திய  அரசால் சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதனால் நாம் அனைவரும் ஒரே இந்தியா ஒரே மக்களாக இருக்க முடியும்’  என்றனர். இதுகுறித்து அமெரிக்க-இந்திய முஸ்லிம்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கலீம் கவாஜா கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரம் மிகவும்  வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், வேலையின்மை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதம் பரவலாக உள்ளது. ஊழல் அதிகரித்து வருகிறது. இந்த  தீவிரமான பிரச்னைகளை தீர்க்க பாஜக அரசு செயல்படுவதற்கு பதிலாக, இந்தியர்களை குடிமக்களாக நிரூபிக்க கட்டாயப்படுத்தும் விசித்திரமான  கொள்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் இந்திய குடிமக்களாகதான் இருக்கிறார்கள்” என்றார். இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைெபறும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடப்பது  குறிப்பிடத்தக்கது.
127,469
12/23/2019 3:43:04 PM
குற்றம்
குமரியில் தீவிரவாதிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ரெய்டு: லேப்டாப், செல்போன், பாஸ்புக் பறிமுதல்
நாகர்கோவில்: இந்தியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் நபர்களை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) அதிகாரிகள் கண்காணித்து  வருகின்றனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வாயிலாக  இந்தியாவில் அசம்பாவிதம் நடத்தப்படலாம் என்று தகவலும் வெளியாகின. இந்த நிலையில், கோவை என்ஐஏ அதிகாரிகள் குழு கடந்த 6 மாதமாக  இது தொடர்பாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில் சேலத்தை சேர்ந்த ஒருவர் ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில்  இருந்து கொண்டு, கேரள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு  முன்பு அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  அதைத் தொடர்ந்து அவரை என்ஐஏ  அதிகாரிகள் தேடி வந்தனர்.இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவருடன் இருந்த தீவிரவாதிகள் 4பேர் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக உளவு பிரிவு போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. கன்னியாகுமரி வழியாக இவர்கள் காரில் தமிழகத்திற்குள் வந்ததாக மத்திய உளவுத்துறையும் தெரிவித்துள்ளது. இதனால்  மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி மற்றும் பாஜ, இந்து அமைப்பு  தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே என்ஐஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாதி கேரளாவில் போலீசாரின் பிடியில் சிக்கிய நிலையில் அவரை என்ஐஏ  அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் சிக்கியவருடன் இருந்த 4தீவிரவாதிகள் தமிழகத்தில்  ஊடுருவியுள்ளனர் என்று கூறி தேடப்படும் அந்த 4பேரின் புகைப்படத்தை போலீசார் கடந்த 19ம் தேதி வெளியிட்டனர். அவர்கள் கன்னியாகுமரி  மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (25), கோட்டார், இடலாக்குடி, இளங்கடையை சேர்ந்த செய்யது அலி நிவாஸ் (25),  பரங்கிபேட்டையை சேர்ந்த அப்துல்சமது, காஜா மொகைதீன் என்பது தெரிந்தது. இவர்கள் 4 பேரையும் பொது மக்கள் கண்டால் 1512 என்ற இலவச  தொலைபேசி எண்ணில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த 4 பேரின் புகைப்படங்களுடன் தமிழகம் முழுவதும் போலீசார்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.வரும் 25ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு மாவட்டம்  முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு ள்ளனர். புகைப்படங்கள் வெளியிட்டு தேடப்படும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் நடமாட்டத்தை  கண்டறியும் வகையில் அவர்களின் வீடுகளில் எஸ்ஐயூ எனப்படும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் டிஎஸ்பி சுப்பையா தலைமையில் 80க்கும்  மேற்பட்டோர் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில், கோட்டார் இளங்கடையை சேர்ந்த செய்யது அலி நிவாஸ், அவருடன்  தொடர்பில் இருந்ததாக தவுபிக், அவரது மனைவி ஆகியோரது வீடுகளிலும், தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் சமீம் ஆகியோரின்  வீடுகளில், இந்த சோதனை இன்று நடத்தப்பட்டது. தவுபிக் என்பவரது வீட்டில் இருந்து எஸ்ஐயு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு லேப்டாப், ஒரு  செல்போன், 2 பாஸ் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். கோட்டாரில் தவுபிக் வீடு, அவரது மனைவி வீடு ஆகிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். கடைசியாக இவர்கள் எப்போது வீட்டிற்கு  வந்தார்கள், செல்போன்களில் தொடர்பு கொள்வது உண்டா, பணம் பரிசு பொருட்கள் பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா, அவர்களது நண்பர்கள்  யாரேனும் உள்ளார்களா, அவர்கள் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியுமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
127,470
12/23/2019 3:43:28 PM
இந்தியா
சித்தூர் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்
திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள தியாகராஜ வீதியில் வசித்து வரக்கூடிய அமர்நாத் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை  5.30 மணிக்கு காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டில் சுவர் இடிந்து வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடு உயிரிழந்தது. வீட்டின்  உரிமையாளர் அமர்நாத், விஜயலட்சுமி, ரஞ்சிதா, சஞ்னா, பிரனவ் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து அறிந்ததும் தீயணைப்பு துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மதனப்பள்ளி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
127,471
12/23/2019 3:44:55 PM
தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் வரும் 27ம் தேதி பந்த் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
புதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும்  போராட்டம் நீடித்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பேரணி மற்றும் பந்த் நடத்த புதுச்சேரி  காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டணி கட்சிகளின் கருத்து கேட்கும் கூட்டம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று  மாலை நடந்தது.புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் நாராயணசாமி மற்றும் தெற்கு மாநில  திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம்,  துணைச்செயலாளர் அபிஷேகம், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மதிமுக மாநில அமைப்பாளர் கபிரியேல், விடுதலை  சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:குடியுரிமை சட்டத்தை ஒருங்கிணைந்து அனைவரும் எதிர்க்க வேண்டும். குடியரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக  கூட்டணி கட்சிகள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். வரும் 26ம் தேதி மாலை 4 மணிக்கு ஏஎப்டி திடலில் இருந்து தலைமை தபால்  நிலையம் வரை தேசிய கொடியை ஏந்தி பேரணி நடத்தப்படும். மறுநாள் 27ம் தேதி காலை 6மணி முதல் மாலை 6மணி வரை புதுச்சேரியில் பந்த்  நடத்தப்படும். நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்  போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ‘’பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு  பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. இதை திசை திருப்பும் வகையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.  இச்சட்டத்தில் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் வேறு சில சமூகங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நேரு காலத்தில் இருந்து இந்தியா அமைதி பூங்காவாகவே இருந்து வந்தது. தற்போது கலவர பூமியாக மாறி வருகிறது. இச்சட்டத்தை திரும்பப்பெறும்  வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதற்காக ஆட்சியே கவிழ்ந்தாலும் கவலையில்லை. வரும் 27ம் தேதி நடக்கும் பந்த் போராட்டத்துக்கு  அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.
127,472
12/23/2019 3:45:23 PM
இந்தியா
துணி குடோனில் நள்ளிரவில் பயங்கரம் டெல்லியில் தீயில் கருகி 9 பேர் பலி: பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் பரிதாபம்
புதுடெல்லி: ெடல்லியில் துணி குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் கருகி பலியாகினர். பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால், விபத்து  நடந்ததாக கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ரோஹினியின் கிராரி பகுதியில் சட்ட விரோதமாக துணி குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த குடோனில் 20க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் அப்பகுதி குடியிருப்பு பகுதியில் பெரும் தீ விபத்து  ஏற்பட்டது. தகவலறிந்த டெல்லி தீயணைப்பு சேவைகளின் இயக்குநர் அதுல் கார்க் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு தீயின் பிடியில்  சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக களம் இறங்கின்றனர். இருந்தும் குடோனில் சிக்கியிருந்த ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 9  தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்த நிலையில் கிடந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில்  10 பேர் போராடிய நிலையில்  இருந்தனர். அவர்களை மீட்ட போலீசார், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தீவிபத்து சம்பவத்தால்  நள்ளிரவில் அப்பகுதியில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவைகளின் இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில், “நள்ளிரவில் தகவலறிந்ததும், தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்தன. துணி குடோனில் தீ பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் தரை மற்றும் மூன்று மேல் தளங்களைக்  கொண்டது. தீ காரணமாக, இரண்டாவது தளத்தில் ஒரு சிலிண்டர் வெடித்தது. சுவரின் சில பகுதியும் இடிந்து விழுந்தன. இரண்டாவது மாடியில்  இருந்து மூன்று எரிந்த உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். மேலும் 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிடத்தில் ஒற்றை வழி  படிக்கட்டு மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சஞ்சய் காந்தி மருத்துவமனையின்  மருத்துவர்கள் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் இறந்ததாக அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அந்த குடோனில் தங்கி வேலை செய்து  வந்துள்ளனர். இறந்தவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது’’ என்றார். முன்னதாக, கடந்த 8ம் தேதி, டெல்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள பொம்மை மற்றும் பயணப் பை (ட்ராலி பேக்) தயாரிக்கும் தொழிற்சாலையில்  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
127,473
12/23/2019 3:45:58 PM
தமிழகம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் தீவிரம்
சென்னை: தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக  நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. இதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை  மற்றும் வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. இதில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்களும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 35,611  வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22, 776 வேட்பாளர்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,605  வேட்பார்களும்  போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவருக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் தீவரப்படுத்த ேவண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சீட்டு  அச்சிடுவதற்கான அச்சகத்தை மாவட்ட அளவில் கண்டறிந்து அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே மாநில தேர்தல்  ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் வாக்கச்சீட்டுகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த பணியை 2 நாட்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்பிறகு கட்சி வாக்குச்சீட்டுகளை  பிரித்து அனுப்புவது, வாக்குப் பதிவுக்கான பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
127,474
12/23/2019 3:46:24 PM
தமிழகம்
மோடி, அமித்ஷாவுடன் சேர்ந்ததால் அதிமுகவினர் சர்வாதிகாரிகள் போல் பேசுகின்றனர்: கே.எஸ்.அழகிரி பேட்டி
தண்டையார்பேட்டை: வன்னியகுல  சத்திரிய மகா  சங்கத்தின்  131வது  ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று  நடந்தது. சங்க தலைவர் உ.பலராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரோஸ், மோகன்குமார், கோவி த.அறிவழகன், கோ.முத்து முன்னிலை  வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சால்வை அணிவித்து சங்க நிர்வாகிகள் கவுரவித்தனர். பின்னர், 1000 பேருக்கு  வேட்டி-சேலை சட்டை, காலண்டர் வழங்கப்பட்டது. இதையடுத்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து முதன்முறையாக  பொது மக்களும்  மாணவர்களும்  போராட்டத்தில்  இறங்கியுள்ளனர். இனிமேல்  வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள், இந்தியாவில் குடியேற கூடாது என சட்டம் கொண்டு வந்தால் தவறில்லை. ஆனால், இந்தியாவிற்கு  வந்தவர்களில் யார், யார் வெளி நாட்டினர் என பார்ப்பது பிரதமர் மோடியின் தவறு. ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் பெயரில் இதுபோன்று நடக்கிறது.  மோடி, அமித்ஷா ஆகியோருடன் சேர்ந்ததால் அதிமுகவினர் சர்வாதிகாரிகள்போல் பேசுகின்றனர்.இந்தியாவில் நடந்து வரும் போராட்டத்திற்கு காரணம் அதிமுக எம்பிக்கள்தான். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து  வாக்களித்திருந்தால் மசோதா தோல்வியடைந்திருக்கும்.இவ்வாறு அழகிரி கூறினார். விழாவில், சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, பன்னீர்செல்வம், சீனிவாசன், ப.ஆ.சண்முகம், ஜானகி வெங்கடேசன், சேனியப்பன், பாலகுமாரன், வண்ணை  நக்கீரன், சண்முகம். சந்தோஷ், மு.பன்னீர் செல்வம், சஞ்சீவிராயன், வேல்முருகன், பழனியாண்டி, காஞ்சி பார்த்திபன், ஜம்பு ராஜேந்திரன்,  கிருஷ்ணமூர்த்தி, சுமதி அன்பரசு, தசரதன், அரிஸ்வரன், பாண்டுரங்கன், கவிஞர் முத்தரசன், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
127,475
12/23/2019 3:47:23 PM
தமிழகம்
அகில இந்திய வங்கி ஊழியர் ஸ்டிரைக் தமிழகத்தில் 4 லட்சம் பேர் பங்கேற்பு
ஈரோடு: வரும் 8ம் தேதி நடைபெறும் அகில இந்திய வங்கி வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 4 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்  என்று அந்த சங்கத்தின் சிறப்பு தலைவர் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் மாநில பிரசார செயலாளர் சுகமதி  தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு பேசினார்.முன்னதாக அவர் அளித்த பேட்டி:பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்  என்பன உட்பட 20 அம்ச சோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்த போராட்டம் 8ம் தேதி நடக்கவுள்ளது. மத்திய அரசு  பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியஅரசு  ஊழியர்கள் 8ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எங்கள்  சங்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர்கள் 4 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளோம்.இந்த ஆட்சியில் 21 மாத நிலுவை தொகையை வழங்காமல் உள்ளனர். ரேஷன் கடை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாஸ்மாக்  பணியாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அங்கன்வாடி பணியாளர்கள் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு பல அரசு நிறுவனங்களை  தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டிக்கிறோம்.இவ்வாறு கூறினார்.
127,476
12/23/2019 3:47:39 PM
தமிழகம்
எண்ணூரில் மகரவிளக்கு பூஜை
திருவொற்றியூர்: எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் உள்ள  சிவா விஷ்ணு கோயிலின் 56ம் ஆண்டு மகர விளக்கு பூஜை நேற்று நடந்தது.அனல்மின் நிலைய குடியிருப்பில் இருந்து  அகல்விளக்குகள் ஏந்தியபடி 500க்கும் மேற்பட்ட பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும்  கோயிலை அடைந்தனர். பின்னர், ேகாயிலில் அலங்கரிக்கப்பட்டிருந்த  மூலவருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை  சிவா விஷ்ணு  கோயில் நிர்வாகிகள் சிவசங்கரன், ராஜேந்திரன், வீரராகவன், சிவலிங்கம் மற்றும் பகுதி மக்கள்  செய்திருந்தனர்.
127,477
12/23/2019 3:47:59 PM
குற்றம்
திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீச்சு 2 ரவுடிகள் கொலையில் 7 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.  இவர்களில் 3 பேரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.காஞ்சிபுரத்தில் ரவுடி தர் மறைவுக்கு பிறகு, அவரை போல கோலோச்ச வேண்டும் என அவரின் ஆதரவாளர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. தரின்  மைத்துனர் தணிகா, கார் டிரைவர் தினேஷ் என்பவருக்கும் பகை ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். தணிகா - தினேஷ் தொடர்  மோதலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 கொலைகள் நடந்து பதற்றத்தை உருவாக்கி இருந்தது. இந்நிலையில், 21ம் தேதி தணிகாவின் நெருங்கிய நண்பர்களான காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவை சேர்ந்த ஜீவா (25), பூக்கடை சத்திரத்தை சேர்ந்த  கோபி (25) ஆகியோரை தினேஷ் கோஷ்டியினர் 5 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்து, திருவள்ளூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசியும்,  சரமாரியாக கத்தியால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பினர்.இதையடுத்து, எஸ்.பி., அரவிந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார், தினேஷின் ஆதரவாளர்களான காஞ்சிபுரம் மாவட்டம் கிளார் கிராமத்தை  சேர்ந்த ராஜா (24), தாமல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (22), வையாவூர் காமாட்சி நகரை சேர்ந்த அருண்குமார் (23) ஆகியோரை நேற்று காலை  காஞ்சிபுரம் அருகே கைது செய்தனர்.  அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றபோது கீேழ விழுந்ததில் 3 பேரின் கால்கள் உடைந்தது.அவர்களை இன்று காலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
127,478
12/23/2019 3:48:20 PM
தமிழகம்
பாரதியார் பிறந்த நாளை எழுத்தாளர் தினமாக அறிவிக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு: பாரதியார் பிறந்த நாளை எழுத்தாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என செங்கல்பட்டு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் எழுத்தாளர்கள் சங்கம்  வலியுறுத்தியது.செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகரில் தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று புதிதாக செங்கல்பட்டு மாவட்ட கிளை  துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாரதி சுகுமாரன் தலைமை தாங்கினார். இதில் கவிஞர் கருப்பசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட புதிய நிர்வாகிகளாக அவைத் தலைவர் வீரமணி, தலைவர் தமிழரசன், செயலாளர் ப.குணா, பொருளாளர்  தேவமனோகரி, ஒருங்கிணைப்பாளராக அகநம்பி பாலசுப்பிரமணியன் மற்றும் துணைத் தலைவர்களாக ந.பரஞ்சோதி, சீனி. சந்திரசேகரன், துணை  செயலாளராக செஞ்சோலை, சா.கா.பாரதிராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இதில், பாரதியார் பிறந்த நாளை எழுத்தாளர்கள் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் நலன் கருதி எழுத்தாளர் நல  வாரியம் அமைக்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் மூன்றில் 2 மடங்கு அளவில் பெயர்கள் எழுதப்பட வேண்டும்.  இவற்றை கண்காணிக்கும் அதிகாரத்தை தமிழ் வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.அகவை முதிர்ந்த எழுத்தாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும். எழுத்தாளர் முகவரி அடங்கிய நூலை தமிழக அரசு அச்சிட்டு  வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.