news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
127,172
12/9/2019 3:08:28 PM
இந்தியா
ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’
புதுடெல்லி: நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ள நிலையில், அடுத்தாண்டுக்கான மத்திய பட்ஜெட் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகள் பணியிடம் காலியாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து கடந்த ஜூலையில் முதல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக சரிவடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் ஜிடிபி 5 சதவீதமாக சரிவடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவாக கூறப்பட்டது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சி 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவை சந்தித்துள்ளதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதற்கிடையே, வருகிற 2020 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யவுள்ள 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் வேலையில் மத்திய நிதியமைச்சகம் இறங்கி உள்ளது.இந்நிலையில், நிதி அமைச்சக செலவுச் செயலாளரைத் தவிர, முழு பட்ஜெட் தயாரிக்கும் பணியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான இணைச் செயலாளர் (பட்ஜெட்) பதவியும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. இதனால், முக்கிய முடிவுகள் எடுப்பதில் மத்திய நிதியமைச்சகத்தில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினன்ட் கவர்னராக ஜி.சி.முர்மு நியமிக்கப்பட்ட பின்னர் செலவுச் செயலாளர் பதவி காலியாகிவிட்டது. முர்மு அக். 29ம் தேதி தனது செலவுச் செயலாளர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், செலவுத் துறையின் அதிகாரியான அதனு சக்ரவர்த்திக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சக்ரவர்த்தி, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகார செயலாளராக உள்ளார்.முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் (டிஐபிஏஎம்) ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய பின்னர், சக்ரவர்த்தி இந்த ஆண்டு ஜூலை மாதம் பொருளாதார விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்த ஆலோசனையை அக்டோபரில் நிதியமைச்சகம் தொடங்கிய நிலையில், பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சுகளுடனான தொடர் சந்திப்பு கூட்டத்தை கடந்த மாதம் முடித்துக் கொண்டது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் தற்காலிகமாக இறுதி செய்யப்பட்ட நிலையில், செலவுச் செயலாளர் மற்ற செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
127,173
12/9/2019 3:11:26 PM
தமிழகம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயர மலையில் நாளை மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மகா தீப பெருவிழா நடைபெறுகிறது. 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 8 நாட்களாக தினமும் பகலில் விநாயகரும், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்து வருகின்றனர். 7ம் நாளான நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. காலை முதல்நள்ளிரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து மாடவீதியில் பவனி வந்தன.விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மலையில் மகா தீபம் ஏற்றும்போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளிப்பார். அப்போது, கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் காட்சி தரும்.மகா தீப தரிசனத்தை காண திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லாட்ஜ், மண்டபங்கள், ஆசிரமங்கள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பியுள்ளது.நாளை மாலை ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும். மகா தீபம் ஏற்றும்போது 2500 பக்தர்கள் மட்டும் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி சீட்டு நாளை காலை 6 மணி முதல் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை பள்ளியில் வழங்கப்படும். மலை ஏற விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை நகலை காண்பித்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 13ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை மிதந்து கொண்டு இருக்கிறது.சந்திரசேகரர் வீதியுலாதீபத்திருவிழாவின் 9ம் நாளான இன்று காலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் 3ம் பிரகாரத்தை வலம் வந்து திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர். பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி வருகின்றனர். மலை உச்சிக்கு சென்றது தீப கொப்பரைமகா தீபம் ஏற்றப்படும் 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட தீபகொப்பரை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் திரி (காடா துணி) நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை 3ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் தீபகொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொப்பரையை தலை சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி, நெய், கற்பூரம் ஆகியவை நாளை காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.
127,174
12/9/2019 3:15:37 PM
குற்றம்
காவல்நிலையம் எதிரே இளம்பெண்ணை குத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர்
கடையம்: காவல்நிலையம் எதிரிலேயே இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆத்துச் சாலையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (38). இவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. கடையத்தைச் சேர்ந்த விநாயகம் மகள் முப்பிடாதி சக்தி(30). கணவரைப் பிரிந்த இவர் 2 மகள்களோடு கடையம் காவல்நிலையம் எதிரேயுள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன் தட்சிணாமூர்த்தி கடையத்தில் வேலை செய்த போது முப்பிடாதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது வீரவநல்லூரில் பணியாற்றி வந்த போதும் அவர்களுக்குள் தொடர்பு நீடித்துள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தட்சிணாமூர்த்தி கடையத்திற்கு சென்று முப்பிடாதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் கடையம் வந்த தட்சிணாமூர்த்திக்கும், முப்பிடாதிக்கும் மீண்டும் தகராறு ஏற்படவே மறைத்து வைத்திருந்த கத்தியால் முப்பிடாதியை தாக்கினார். இதில் கழுத்து, தலையில் பலத்தக்காயம் ஏற்பட்டது. கடையம் காவல்நிலையம் எதிரே இந்த சம்பவம் நடந்தது. படுகாயம் அடைந்த முப்பிடாதி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர்உசேன் மற்றும் கடையம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். காவல் நிலையம் எதிரே இளம்பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.
127,175
12/9/2019 3:18:14 PM
தமிழகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய வருகின்றனர். விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அப்படி வரும் பக்தர்களின் வசதிக்காக ஏழுமலையான் கோயிலில் ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்கள் 3 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே பிப்ரவரி மாதத்திற்கான முன்பதிவு முடிவடைந்தது.இந்நிலையில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகளை www.ttdsevaonline.com என்ற இணையத்தில் மூலமும், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தான செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
127,176
12/9/2019 3:20:58 PM
தமிழகம்
பொள்ளாச்சி கொடூரம் போல் நடக்காமல் இருக்க தெலங்கானா போல் தமிழகத்திலும் அதிர்ச்சி வைத்தியம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: அதிமுக தோல்வி பயத்தால் தான், 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முயல்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்துள்ளதால் ஒத்த கருத்துடைய கட்சிகளிடையே கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம். ஒரே சின்னம் ஒதுக்க நீதிமன்றத்தை நாடுவோம். பொள்ளாச்சி சம்பவம் போன்று, இனியும் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால், தெலங்கானாவில் நடந்த  என்கவுன்டர்  போன்ற அதிர்ச்சி வைத்தியத்தை, தமிழகத்திலும் அளிக்க வேண்டும் என்றார்.முன்னதாக, தர்மபுரி மாவட்டம் அரூரில் டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆளும் அதிமுக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளை செய்தாவது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்  உள்ளது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான ஆணையம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவர் தூக்கி வைத்து பேசினாலே, பொய் சொல்கிறார் என்று அர்த்தம். தற்போது ஜாதகம் பார்த்து, ஜோசியம் பார்த்துதான் உள்ளாட்சி தேர்தல் தேதியை முடிவு செய்துள்ளார்கள். தேர்தல் ஆணையர் வேறு, தமிழக முதல்வர் வேறு இல்லை’’ என்றார். இந்த பேட்டியின்போது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என சுப்பிரமணிய சுவாமி சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அவர் எனது நீண்டநாள் நண்பர். அவரை தொடர்பு கொண்டு பேசினால் தான், என்ன என்பது தெரியவரும் என டிடிவி தினகரன் கூறினார்.
127,177
12/9/2019 3:26:25 PM
இந்தியா
பெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு
ஐதராபாத்: தெலங்கானா போலீசாரால் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்டர் சம்பவ வழக்கை, எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டிசாவை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது கடந்த 6ம் தேதி அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுன்டரில்  சுட்டுக் கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில், சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.மேலும் இன்று வரை  உடலை பதப்படுத்தி வைக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஐதராபாத் சென்ற 7 பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மகபூப் நகர் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும் என்கவுன்டர் இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை  தெலங்கானா அரசின் தலைமை செயலாளர் எஸ்.கே.ஜோஷி அமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான்கு பேரின் மரணத்திற்கு வழிவகுத்த காரணங்கள், சூழ்நிலைகள் கண்டறியப்பட்டு உண்மையை நிலைநாட்ட வேண்டி உள்ளது. மேலும் இந்த வழக்கின் உண்மையை உறுதிப்படுத்த முழுமையான விசாரணைக்கு வசதியாக எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் எம்.பகவத் தலைமையிலான எட்டு பேர் கொண்ட எஸ்ஐடி குழு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி என்கவுன்டர் வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தும். எஸ்ஐடி விசாரணையை முடித்து, அவை நீதிமன்றத்தின் முன் அறிக்கையை சமர்ப்பிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
127,178
12/9/2019 3:27:57 PM
தமிழகம்
40 நாளில் 27 இடங்களில் கைவரிசை திருட செல்லவில்லை என்றால் தூக்கம் வராது
சேலம்: சேலத்தில் 40 நாளில் 27 இடங்களில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து முருகன் சிலை, 8 பைக், 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஒரு நாள் திருட செல்லவில்லை என்றாலும் தூக்கம் வராது என்று கொள்ளையன் தெரிவித்துள்ளான். சேலம் இரும்பாலை கணபதிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் கார்த்திகேயன் (35). கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அங்கிருந்த முருகன் சிலை, ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றார். இது குறித்து கார்த்திகேயன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கார்த்திகேயனின் வீட்டினுள் நுழையும் மர்மநபர் அங்கிருந்து முருகன் சிலை திருடிச்செல்வது தெரிந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தேடி வந்தனர். இந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து சூரமங்கலம், பள்ளப்பட்டி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்தது.கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கந்தம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஓமலூர் செல்லபிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்த சப்பாணி (எ)) திக்குவாயன் (எ) அய்யந்துரை (48) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 40 நாளில் 27 இடங்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவனிடமிருந்து முருகன் சாமி சிலை, 8 பைக்குகள், 10 பவுன் நகை, ஒரு மூட்டை கவரிங் நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் ‘ஒரு நாள் திருட செல்லவில்லை என்றாலும் தூக்கம் வராது’ என்று கொள்ளையன் அய்யந்துரை தெரிவித்துள்ளார்.
127,179
12/9/2019 3:28:59 PM
தமிழகம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு
சோமனூர்: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில், கோவை மாவட்டம் சோமனூர் பகுதியிலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளிலும் விசைத்தறிகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலானோர், கூலி அடிப்படையில் நெசவு செய்யக்கூடிய விசைத்தறியாளர்களாக உள்ளனர். இவர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு மற்றும் நூல்களை பெற்று துணி உற்பத்தி செய்து கொடுத்து மீட்டர் அடிப்படையில் அதற்கான கூலியை பெறுகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு வழங்கி வருகின்றனர்.கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒப்பந்த கூலியை கூட இதுவரை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை. தற்போது 6 ஆண்டு கடந்த நிலையில் அடுத்தகட்ட கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் கடந்த மாதம் இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை, இதனால், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் பிரேமா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும் 24ம் தேதி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு 15 சதவீத விசைத்தறிகளை பழைய இரும்புக்கு விற்றுவிட்டு விசைத்தறி தொழிலை நடத்த முடியாமல் மூடி உள்ளனர். இதனால், பல விசைத்தறி கூடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. சில விசைத்தறி கூடங்கள் வாடகை வீடுகளாக மாற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள விசைத்தறியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளும் விசைத்தறியாளர்கள் நிலைமையை கருத்தில் கொண்டு கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் 2 லட்சம் விசைத்தறியாளர்கள் அடுத்த மாதத்தில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.
127,180
12/9/2019 3:31:08 PM
தமிழகம்
கௌசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அலங்காரம்
திருவில்லிபுத்தூர்: கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு 108 புடவை சாத்தும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, தேவி, கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு கார்த்திகை மாதத்தில் 108 பட்டுப் புடவைகள் சாத்தும் வைபவம் நேற்று நடந்தது.இதையொட்டி ஆண்டாள், ரங்கமன்னார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள் ஆகியோர் கோபால விலாச மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து பட்டர் சுதர்சனன் கௌசிக புராணம் வாசிக்க, மேளதாளம் முழங்க ஆண்டாள், ரங்கமன்னார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவைகள் சாத்தப்பட்டன. குளிர்காலம் துவங்குவதை அறிவிக்கும் வகையில் இந்த பட்டுப்புடவை சாத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியையொட்டி நேற்று கோயிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. இரவு முழுவதும் விடிய, விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
127,181
12/9/2019 3:34:08 PM
குற்றம்
நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் விளையாட்டு பயிற்சிக்காக பள்ளிக்கு மாணவியை வரவழைத்து சில்மிஷம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் மாணவியை பள்ளிக்கு அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சிக்கினார். நாகர்கோவிலில் உள்ள பிரபல மேல்நிலைப்பள்ளி ஒன்றில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். விடுமுறை தினமான நேற்று (ஞாயிறு) மதியம் பள்ளியின் பின்புற நுழைவு வாயில் வழியாக ஆசிரியர் ஒருவர் உள்ளே நுழைவதை பொது மக்கள் சிலர் பார்த்தனர். இவர் அந்த பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் விளையாட்டு பயிற்சிக்காக விடுமுறை நாட்களில் மாணவ, மாணவிகளை இவர் வரவழைப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் யாருக்கும் தெரியாமல் பின்புறம் வழியாக செல்கிறாரே? என்று பொது மக்கள் சிலர் சந்தேகம் அடைந்தனர். பள்ளி வராண்டாவிலும் யாரும் இல்லை. இதற்கிடையே மாணவி ஒருவரும் உள்ேள நுழைந்ததை சிலர் பார்த்துள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், திடீரென பள்ளிக்குள் சென்றனர். அங்கு ஒரு அறையில் மாணவியிடம் வலுக்கட்டாயமாக ஆசிரியர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனால் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
127,182
12/9/2019 3:37:05 PM
தமிழகம்
குழந்தையில்லாததால் தகராறு: கணவன், மனைவி தற்கொலை
நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 நாவலர் தெருவை சேர்ந்தவர் ரஜினி முருகன் (47). இவர் தீவிர ரஜினி ரசிகர். இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு திருமணமாகி கடந்த 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சாந்தி, கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து இறந்தார். நள்ளிரவில் ரஜினி முருகன் வீட்டுக்கு திரும்பிய போது மனைவி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரும் வீட்டிக்குள் சென்று கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நேற்று ரஜினிமுருகனின் தந்தை நாராயணன், ரஜினி முருகனின் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர், கதவை தட்டிப்பார்த்தும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியுடன் ஜன்னலை உடைத்தார். இதன் வழியாக பார்த்த போது மகனும், மருமகளும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (60). இவரது மனைவி தனலட்சுமி (58). பாண்டியன் சொந்தமாக கூழையனூரில் ஸ்டுடியோ நடத்தி வந்தார். தொழில் நஷ்டமடைந்ததால் பணப்பிரச்னையால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் பாலில் விஷத்தை கலந்து குடித்தனர். இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
127,183
12/9/2019 3:50:20 PM
குற்றம்
திருப்போரூர் அருகே பரபரப்பு: அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயற்சி
திருப்போரூர்: திருப்போரூர் அருகே அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரியில் வசித்து வருபவர் விமல்சந்த் ஜெயின் (45). இவர், திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் நெல்லிக்குப்பத்தில், கடந்த 20 வருடங்களாக அடகு கடை நடத்தி வருகிறார். அதனுடன் சிறிய அளவில் நகை கடையும் நடத்தி வருகிறார். நெல்லிக்குப்பம், அகரம், கீழூர், தர்மாபுரி, அம்மாப்பேட்டை, காட்டூர், கல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், தங்களது நகைகளை இவரது கடையில் அடகு வைத்து வட்டிக்கு பணம் பெற்று செல்வார்கள்.இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் விமல்சந்த், கடையில் இருந்தபோது, பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் முகத்தில் கர்சீப் கட்டியிருந்தனர். கடையின் முன்பு பைக் நிறுத்தி விட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமல்சந்தை மிரட்டி பணம், நகைகளை கேட்டனர். இதில் சுதாரித்து கொண்ட விமல் சந்த், தனது இருக்கையின் அருகே பொருத்தி வைத்திருந்த அலார பட்டனை அழுத்தினார். சத்தம் கேட்டு அருகிலுள்ள கடைகளில் அமர்ந்திருந்தவர்கள் அடகு கடையை நோக்கி ஓடி வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத 3 பேரும், பொதுமக்கள் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி பைக்கில் தப்பி சென்றனர். உடனே திருப்போரூர் மற்றும் காயார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் பார்வையிட்டனர்.கடந்த சில மாதங்களாக திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்துள்ளது. பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையின்போது தாழம்பூர் காவல் நிலைய எல்லையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று கடந்த மாதம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். தற்போது நெல்லிக்குப்பம் அடகு கடையில் 3 வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் விழி பிதுங்கி உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்வது யார், வட மாநில கொள்ளையர்களா அல்லது உள்ளூர் கொள்ளை கும்பலா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.2 முறை முயற்சிகொள்ளை முயற்சி நடைபெற்ற இந்த அடகு கடையில் ஏற்கனவே 2 முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒரு முறை சுவரை துளை போட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இதையடுத்து கேமரா, அலாரம் போன்றவற்றை பொருத்தினார். பின்னர் மற்றொரு முறை நடைபெற்ற கொள்ளை முயற்சியில் அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
127,184
12/10/2019 2:50:22 PM
தமிழகம்
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தலை எதிர்த்த திருமாவளவன் வழக்கு தள்ளுபடி...சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மேயர், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த நவம்பர் 19ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மேயர் மற்றும் தலைவர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது. எனவே, இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல் தான் நடத்தப்பட வேண்டும்.மறைமுக தேர்தல் நடத்த மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை. எனவே, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு  இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகி வக்கீல் வாதிடும்போது, அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே, மறைமுக தேர்தல் மூலம் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க, இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. சுயேட்சைகள் போட்டியிட முடியாது. எனவே இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘தேர்தலில் எங்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யாரும் கோர முடியாது. தேர்தல் நடத்துவது என்பது, சட்ட விதிகளுக்கு உட்பட்டது. ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தலில் எதாவது பிரச்னை, குறைபாடு இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும். மறைமுக தேர்தல் என்பது அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. இதில் எந்த அரசியல் சாசன மீறலும் இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.
127,185
12/10/2019 2:51:19 PM
தமிழகம்
பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் ரிசாட்-2பிஆர்1 நாளை விண்ணில் பாய்கிறது
சென்னை: ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.  பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீனபடங்களை அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைகோள்களை கடந்த மாதம் 27ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் 11ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. எனவே, திட்டமிட்டப்படி ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை மதியம் 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது.ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 37 டிகிரி கோணத்தில் 576 கி.மீ தொலைவில் அதன் திட்டமிட்ட சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் இன்று தொடங்குகிறது. மேலும், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டானது ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 75வது ராக்கெட் ஆகும். இஸ்ரோவின் சொந்த செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 உடன் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான 3 செயற்கைகோள்கள், அமெரிக்காவிற்கு சொந்தமான 6 செயற்கைகோள்கள் என மொத்தம் 9 செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்த உள்ளது.
127,186
12/10/2019 2:52:10 PM
இந்தியா
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி...அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்வதில் இழுபறி நீடிக்கிறது. அஜித் பவார் தன்னை துணை முதல்வராக்க கட்சியினர் விரும்புவதாக கூறுவதால், அம்மாநில அரசியலில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த பிறகும், அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக புதிய சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. கடந்த நவ. 28ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றவுடன் அவருடன் ஆறு அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் எவருக்கும் இதுவரை அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மூன்று கட்சிகளின் கூட்டணிக்குள் இன்னும் ஒருமித்த கருத்தை உருவாக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக ‘துணை முதலமைச்சர்’ பதவி தொடர்பான இழுபறி நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘பட்நவிஸ் முதல்வராக பதவியேற்ற போது, என்சிபி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் நகர்வுகளை தொடர்ந்து அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் என்சிபி கட்சிக்கே வந்துவிட்டார். தற்போது, என்சிபி கட்சி தரப்பில் அஜித் பவாரை துணை முதல்வராக மீண்டும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதனால்தான், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டில் குழப்பம் நீடித்து வருகிறது’ என்று தெரிவித்தனர். இந்நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் மற்றும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் நேற்று முன்தினம் சோலாப்பூரில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒன்றாகக் காணப்பட்டனர். இந்த சந்திப்பில், இவர்கள் மகாராஷ்டிர அரசியல் வானிலை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.  இதுகுறித்து, ​​அஜித் பவார் கூறுகையில், ‘‘பட்நவிசுடனான சந்திப்பின் போது அரசியல் பற்றி விவாதிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் அமரவேண்டி இருந்தது. ஆனால் நாங்கள் ‘அரசியல் வானிலை’ குறித்து பேசவில்லை. கட்சி நிர்வாகிகள், துணை முதல்வராக பார்க்க விரும்புகிறார்கள். இது தொடர்பாக இறுதி முடிவை கட்சித் தலைவர் (பவார்) எடுப்பார். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு எடுப்பார்’’ என்றார். இதுகுறித்து, என்சிபி தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘கட்சியும் அரசாங்கமும் அவரது (அஜித் பவார்) தலைமையில் பலம் பெறும். இந்த விஷயத்தில் இறுதி முடிவு பவாரிடம் இருக்கும். அஜித் துணை முதலமைச்சராக மாறுவதை  எதிர்க்கவில்லை’’ என்றார்.
127,187
12/10/2019 2:53:55 PM
இந்தியா
மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’
புதுடெல்லி: மக்களவையில் நேற்றிரவு கடுமையான விவாதத்துக்கு பின்னர், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை முதல் 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.  கடந்த 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி, அண்டை நாடான  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து  குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள்,  சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள்  ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவை, மக்களவை ேதர்தலுக்கு முன் கடந்த ஜனவரி  மாதம், பாஜ அரசு மக்களவையில் நிறைவேற்றியது. எனினும்,  மாநிலங்களவையில் பலம் குறைந்து இருந்ததால் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16வது மக்களவையின்  பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா  காலாவதியாகிவிட்டது. பாஜ தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், தற்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கண்ட விதிமுறைகளின்படி குறைந்தது 5 ஆண்டுகள்  இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று  திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்  என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்து, மசோதாவில் கூறப்பட்ட அம்சங்கள் குறித்து, எம்பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால், காரசாரமான விவாதங்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்ததால் மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. பின்னர், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை தாக்கல் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 293 எம்பிக்களும், எதிராக 82 எம்பிக்களும் வாக்களித்தனர். இதையடுத்து, மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்தார். மசோதாவுக்கு அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. விவாதம் இரவு 12 மணி வரை நீடித்தது. தொடர்ந்து நள்ளிரவு 12.05 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில், குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து, வடகிழக்கு பிராந்திய மாணவர்களின் அமைப்புகளின் சார்பில், 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. மசோதாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் வடகிழக்கு மாணவர் அமைப்பு சார்பில்  (நேசோ) மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், ஹார்ன்பில் விழாவை முன்னிட்டு, நாகாலாந்துக்கு, ‘பந்த்’ வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், அனைத்து அசாம் மாணவர் சங்கம், கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி, அனைத்து அருணாசல பிரதேச மாணவர் சங்கம், காசி மாணவர் சங்கம் மற்றும் நாகா மாணவர் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும், அமைப்புகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  கவுகாத்தி பல்கலைக்கழகம், திப்ருகார் பல்கலைக்கழகம் ஆகியவை நாளை நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளன. இன்றைய முழு அடைப்பு போராட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதால், அப்பகுதிகளில் பதற்றமான நிலை நீடிக்கிறது.‘இன்னர் லைன் பெர்மிட்’மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதால் வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதிக்கப்படாது. அரசமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையின் கீழ் அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட வரம்புக்கு உள்பட்ட பகுதிகளுக்கு இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நுழைவு அனுமதி (இன்னர் லைன் பெர்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில், மணிப்பூர் மாநிலமும் இணைக்கப்படவுள்ளது. வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம்’’ என்றார். அவையில் இல்லாத மோடி குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில்  நிறைவேறியதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா,  மக்களவையில் நிறைவேறுவதற்கு ஆதரவு அளித்த பல்வேறு கட்சிகளின்  உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின்  பாரம்பரியத்துக்கும், மனிதநேயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில்  இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மசோதா மீதான விவாதத்தின்போது  உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்த அமித் ஷாவுக்கு  எனது பாராட்டு’ என்று பதிவில்  குறிப்பிட்டுள்ளார். ஆனால், மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும்போது பிரதமர் மோடி அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மசோதா நகல் கிழிப்பு குடியுரிமை மசோதா மீதான விவாதத்தின்போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி. அஸாதுதீன் ஒவைசி, தன்னிடம் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை திடீரென எழுந்து நின்று கிழித்தார். அப்போது அவர், ‘தென் ஆப்பிரிக்காவில் குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு காட்டியதன் காரணமாக, குடியுரிமை அட்டையை மகாத்மா காந்தி கிழித்தெறிந்தார்’ என்றார். அவரது செயல், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து ஒவைசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நள்ளிரவில் நாடே உறங்கி கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தொடர்பான கொள்கைகளுக்கு துரோகம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நான் கடுமையாக போராடினேன். இனியும் இந்த போராட்டம் ஓயாது என ஒவ்வொரு இந்தியனுக்கும் நான் உறுதியளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
127,188
12/10/2019 2:56:11 PM
தமிழகம்
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு
சென்னை: தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தற்போது பல இடங்களில் ஏல முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த தேர்தல் கேலிக்கூத்தாகியுள்ளது. பல லட்சம் கொடுத்து பதவியை ஏலம் எடுத்தவர்கள் மக்களுக்கு நன்மை செய்வார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் பணபலம் கொண்டவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வு செய்யும் வகையில் பதவிகளை விலை கொடுத்து வாங்கும் போக்கு தொடர்ந்து நடக்கிறது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் ஊராட்சியில் தலைவராக இருந்த அதிமுக பிரமுகரும், துணைதலைவராக இருந்த தேமுதிக பிரமுகரும், தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி நேற்று தலைவர் பதவிக்கான வேட்பு மனு வாங்குவதற்கு முன் அங்குள்ள ஒரு கோயிலில் கிராம மக்கள் ஒன்று கூடினர். இதில் ஊருக்கு கோயிலை யார்? கட்டி தருகின்றாரோ, அவரை தலைவராக தேர்வு செய்யலாம் எனக்கூறி விவாதம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு தலைவர், துணைத்தலைவராக இருந்தவர்களே போட்டியிடலாம் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் ஏலம் போனதாக தெரிகிறது.இந்த தகவல் வாட்ஸ்அப்பில் வீடியோவாக பரவியது. இது குறித்து ஏலம் கேட்டதாக கூறப்படும் சக்திவேலிடம் கேட்டபோது: இதுபோன்ற ஏலம் நான் கேட்கவில்லை. சென்ற முறை தலைவராக இருந்தேன். அதனடிப்படையில் ஊரில் உள்ள கோயிலை பொதுமக்களுக்காக கட்டி வருகிறேன். தற்போது தேர்தலில் நிற்பதால், மிகவும் பழமையான கோயிலை கட்டி தருவதாக வாக்குறுதியளித்துள்ளேன். நான் ஏலம் எதுவும் கேட்கவில்லை. எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருசிலர் ரூ.50 லட்சம் ஏலம் எடுத்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்றார். ஊராட்சி தலைவர் பதவி ஏலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிடிஓக்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன் நடுக்குப்பம் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சிதிருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் உள்ளது அரசலூர் ஊராட்சி. இங்குள்ள 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒரே ஒருவர் மட்டுமே இதுவரை மனு வாங்கி உள்ளார். ஊராட்சி அலுவலகத்தில் வேறு யாரும் மனு வாங்கவில்லை.இந்தநிலையில் அங்குள்ள கோயிலில் நேற்று இரவு ஊர் முக்கிய பிரமுகர்களின் கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது 4வது வார்டில் போட்டியின்றி உறுப்பினரை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை தர வேண்டும் என்று பேசப்பட்டது. இதற்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பிய அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை விவரங்களை ரூ.1 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டவரின் அண்ணன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.இதைப்பார்த்ததும், எதற்காக வீடியோ எடுக்கிறாய் என்று ஊர் பிரமுகர்களில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு வீடியோ எடுத்தவர், இங்கு பேசிய விவரங்களுக்கு ஆதாரம் வேண்டாமா, நீங்கள் பணத்தை வாங்கி விட்டு இல்லை என்று சொல்லி விட்டால், என்ன செய்வது என்று கேட்டார். இதனால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கி சமாதானப்படுத்தினர். இதுபற்றி தொட்டியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐ ரபீக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தை நடந்த கோயிலில் அப்போது யாரும் இல்லை. எனினும் ஊர் முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்தித்து, உள்ளாட்சி பதவிகளை பேரம் பேசி விற்கக்கூடாது. அவ்வாறு செய்வது சட்டப்படி தவறு. ஜனநாயகத்துக்கு எதிரானது. முக்கிய பிரமுகர்கள் நாளை(இன்று) காலை தொட்டியம் காவல் நிலையத்துக்கு வாருங்கள். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போலீசார் கூறி சென்றனர்.இதே போல் பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவிரூ.22.5 லட்சத்துக்கு ஏலம் போனது. இன்னொருவர் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் கேட்டார். ஆனால் குறைந்த விலை கேட்டவருக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. ஆலம்பாடி ஊராட்சியை சேர்ந்த சொக்கநாதபுரம், செஞ்சேரி கிராமத்தினர் இந்த ஏலத்தை நடத்தினர். அதே நேரத்தில் ஆலம்பாடி கிராமத்தினரை இதில் சேர்க்கவில்லை. ஆலம்பாடி கிராம ஆதரவு இல்லாமல் நாம் ஜெயித்து விடலாம் என கருதி அந்த கிராமத்தை இவர்கள் புறக்கணித்து இந்த ஏலத்தை நடத்தி உள்ளனர். இந்த தகவல் ஆலம்பாடி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் நேரடியாக நேற்று முன்தினம்இரவு ஏலம் நடந்த இடத்துக்கு வந்து விட்டனர். எங்களுக்கு தெரியாமல் எப்படி ஏலம் விடலாம். எங்களை சேர்த்துக்கொண்டு தான் ஏலம் நடத்தவேண்டும். அந்த தொகையில் எங்கள் கிராமத்திற்கும் பங்கு வேண்டும் என கேட்டனர். இதனால் ஏலத்தில் இன்னும் ஒரு முடிவு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.இதுபோல பெரம்பலூர் மாவட்டம் பேரையூர் ஊராட்சி தலைவர் ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கும் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுதர்மபுரிதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திலுள்ளது பனைகுளம் ஊராட்சி. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ₹24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மணல்பள்ளம், பனைகுளம், பித்திரமருதஅள்ளி, திருமால்வாடி, கூக்குட்ட மருதஅள்ளி கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் பனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியானது ஏலத்திற்கு எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ெதாடங்கியுள்ள நிலையில், ஊராட்சி தலைவர் பதவி ₹24லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூகவலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.கடந்த 2011ம் ஆண்டு முதல் பனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலத்தில் விடப்படுகிறது. இதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தும் இமானுவேல் என்பவர் ஏலம் எடுத்தார். எந்த கட்சியும் சாராத அவர், பல நன்மைகளை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து 2016ல் உள்ளாட்சி ேதர்தல் அறிவிக்கப்பட்ட போது, ₹35லட்சத்திற்கு ஏலம் எடுத்து ஊர்பெரியவர்களிடம் பணத்தை செலுத்தியுள்ளார். தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பணத்தை அவரிடமே திரும்ப வழங்கியுள்ளனர். தற்போதும், ஊராட்சி மன்ற தலைவருக்கான பதவி, நேற்றிரவு ஊர்பிரமுகர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் ₹24லட்சம் செலுத்தி இமானுவேல், ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாகவும், இதையடுத்து ஊர் கட்டுப்பாட்டின் படி, வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டுள்ளதும், அதை தொடர்ச்சியாக ஒருவரே ஏலம் எடுத்து வருவதும் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஊர் பிரமுகர்களிடம் கேட்டபோது, ‘‘பனைகுளம் ஊராட்சியில் 11 வார்டுகள் உள்ளது. இந்த ஊராட்சியை பொறுத்த வரையில் ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின் போதும், அனைத்து கட்சியினர், ஊராட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி அப்பகுதிக்கு நன்மை செய்யும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதுவரை 2 முறை தேர்தல் நடத்தாமலேயே பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுத்து உள்ளோம். இந்த முறையும் அதே ரீதியில் தேர்ந்தெடுப்போம்’’ என்றனர். இதுகுறித்து, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பணம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். குறிப்பாக ஆளும் கட்சியினர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
127,189
12/10/2019 3:37:04 PM
தமிழகம்
வைப்பு நிதி வழங்காவிடில் போராட்டம்: எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் அறிவிப்பு
திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் அனல்மின் நிலையம் 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதில் 5 அலகுடன்  420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில்  பல்வேறு  காரணங்களால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு  நிரந்தரமாக 5 அலகுகளும் மூடப்பட்டன. இதனால் இங்கு பணியாற்றிய 470 ஊழியர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம்  அலகு-1, 2 ஆகிய பிரிவுகளில்  பணியமர்த்தப்பட்டனர். இடமாறுதல் பெற்றாலும் இவர்களுக்கான சம்பளம் மற்றும் பணப்பயன் எண்ணூர் அனல்மின் நிலையத்திலேயே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அவசர தேவைக்கான வருங்கால வைப்புநிதி கடன் மற்றும் ஈடுகட்டும் விடுப்பு சரண்டர் ஆகிய பணப்பயன்கள் பலமாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள்  தங்களது குழந்தைகள் கல்வி கட்டணம், அவசர மருத்துவ உதவிக்கு  பணமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் கடன் மற்றும் பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு,  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. கடன் மற்றும் பணப்பயன்களை வழங்கவில்லை  என்றால் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
127,190
12/10/2019 3:37:46 PM
தமிழகம்
வெங்காயம் பதுக்கலா?: மார்க்கெட்களில் போலீசார் அதிரடி சோதனை
தஞ்சை: தஞ்சை, புதுகை, கரூர் மொத்த விற்பனை மார்க்கெட்களில் வெங்காயத்தை பதுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்களா என தமிழக குடிமைப்பொருள் வணிக குற்ற புலனாய்வு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  இந்தியா முழுவதும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா  போன்ற மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் பயிர்கள் அழுகி உற்பத்தி குறைந்ததால் வெங்காயம் விலை இந்த அளவுக்கு உயர்ந்து விட்டது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வெங்காயத்தை பதுக்க கூடாது என மத்திய, மாநில  அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனாலும் வெங்காயம் விலை குறையவில்லை. எனவே எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதனால் வெங்காய விலை இன்னும் உச்சத்தில் தான் உள்ளது. எனவே வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆங்காங்கே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குடிமைப்பொருள் வழங்கல்  குற்ற புலனாய்வுத்துறை போலீசார் நேற்று தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். இந்த மார்க்கெட்டில் இருந்து தான் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு காய்கறி சப்ளை செய்யப்படுகிறது. தஞ்சை காமராஜர்  மார்க்கெட்டில் உள்ள வெங்காய மொத்த வியாபாரிகள் சேகர், ராஜூ, அய்யாதுரை, சிதம்பரம் ஆகியோரது கடைகளில் திருச்சி டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். எவ்வளவு வெங்காயம் வந்தது. அதில் எவ்வளவு விற்பனையானது, கிலோ விலை என்ன என்பது உள்பட பல கேள்விகள் கேட்டனர். மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களிடமும் வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா என  விசாரித்தனர். கரூர் குடிமைப்பொருள் வழங்கல் டிஎஸ்பி ரவிக்குமார் கரூர் உழவர்சந்தை, காமராஜ் மார்க்கெட், மற்றும் வெங்காய விற்பனை குடோன்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.  புதுகை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் பெருமாள் கோவில் மார்க்கெட், பெரிய மார்க்கெட், மாலை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வெங்காய மூட்டைகள்  உள்ள குடோன்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
127,191
12/10/2019 3:38:25 PM
தமிழகம்
கும்மிடிப்பூண்டி அருகே சோகம் மாற்றுத்திறனாளி விஏஓ தற்கொலை...போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி விஏஓ தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் (27). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கொல்லானூரில் விஏஓ.வாக வேலை பார்த்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர், கண்பார்வையற்றவர். இவருடன் தாய் வசித்து  வருகிறார். இவர்களது சொந்த ஊர் திருச்சி.நிர்மலின் தந்தை, திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதால் அங்கேயே வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மகனை பார்க்க கும்மிடிப்பூண்டிக்கு வந்தார். அப்போது, வெளியே சென்று விட்டு  இரவில் வீட்டுக்கு வந்தபோது, தந்தை மது அருந்தியிருந்தாராம். இது நிர்மலுக்கு தெரியவர, மனம் உடைந்தார். அடுத்த சில நாட்களில் தந்தை, திருச்சிக்கு சென்று விட்டார். அன்று முதல், நிர்மல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்றிரவு, தாய் வெளியே சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஜன்னலில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் நிர்மல். வெளியே சென்றிருந்த தாய், வீட்டுக்கு வந்ததும், மகனின் உடலை பார்த்து  அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நிர்மலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
127,192
12/10/2019 3:39:03 PM
விளையாட்டு
ஹார்டஸ் வில்ஜோன் விளையாட வரமாட்டார் சகோதரியை இப்படியா விமர்சிப்பது?...சர்ச்சையில் சிக்கிய பாரல் ராக்ஸ் கேப்டன்
போலந்து:  தென்னாப்பிரிக்காவில் மசான்சி சூப்பர் லீக் தொடரில் பாரல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளசிஸ் (35) செயல்பட்டு வருகிறார். இதில், போலண்ட் பார்க்கில் நடைபெற்ற நெல்சன் மண்டேலா பே ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான  போட்டியில் டாஸ் போட்டு அதை இழந்த பிறகு, தனது அணியின் பிளேயிங் குறித்து பேசிய டு பிளசிஸ்,  “எங்களது அணியில் ஹார்டஸ் வில்ஜோன் விளையாட மாட்டார். ஏனென்றால் அவர் இன்று என் சகோதாரியுடன் படுக்கையில்  இருப்பார். இவர்கள் இருவருக்கும் (போட்டிக்கு முதல் நாள்) தான் திருமணம் நடைபெற்றது” என்றார். டு பிளசிஸ் ஏதோ ஒரு காரணம் சொல்லப் போகிறார் என்று தலை அசைத்துக் கொண்டிருந்த வர்ணனையாளர், அவர் இந்த காரணத்தை  சொன்ன பிறகு, ஒரு நொடி ஜெர்க் ஆனார். பின்னர், சிரித்து அப்படியே சமாளித்துவிட்டார். டு பிளசின் சகோதரி ரெமி ரைனர், ஹார்டஸ் வில்ஜோன் என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நேர்மையாக இருக்கலாம்;  ஆனால் இவ்வளவு நேர்மையாக இருக்கக் கூடாது. சகோதரியை இப்படியா விமர்சிப்பது’ என்றெல்லாம்  தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் பேச்சு குறித்து சமூக வாசிகள் பீதி  கலந்த அதிர்ச்சியுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
127,193
12/10/2019 3:39:36 PM
விளையாட்டு
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நூலிழையில் பறிபோன வெற்றி: சென்னை அணியின் கனவு கலைந்தது
ஜாம்ஷெட்பூர்: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்ஷெட்பூர் அணியை  எதிர்கொண்டது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் சென்னை அணியின் நெரிஜுஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னையின் எஃப்சி அணி முதல் பாதி, ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து  நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாம்ஷெட்பூர், ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கோலடித்து சென்னை அணியின் வெற்றிக் கனவை கலைத்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில்  ஜாம்ஷெட்பூர் அணி சென்னையின் எஃப்சி அணியுடன் ஆட்டத்தைப் பகிர்ந்து கொண்டது.  7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒரு வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. இன்று ஓய்வு நாளாகும். புனேயில் நாளை இரவு  7.30 மணிக்கு நடைபெறும் 36வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.
127,194
12/10/2019 3:40:25 PM
விளையாட்டு
தெற்காசிய விளையாட்டுப் போட்டி குத்துசண்டையில் கலைவாணி தங்கம்....300 பதக்கங்களை நெருங்கும் இந்தியா
காட்மாண்டு: நேபாளத்தில் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 8  நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 48 கிலோ பிரிவு மகளிர் குத்துசண்டை பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைவாணி பங்கேற்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலைவாணி, தெற்காசிய  குத்துசண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேபாள வீராங்கனையை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கலைவாணி, சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உடற்கல்வியியல் பயின்று வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. பதக்கப்பட்டியலில், இந்திய அணிகளின் வீரர்கள் 294 பதக்கங்களுடன் (159 தங்கம், 91 வெள்ளி மற்றும் 44 தங்கம்) முதலிடத்தில் உள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒவ்வொரு பதிப்பிலும் இந்தியா 1984ல்  துவங்கியதில் இருந்து முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
127,195
12/10/2019 3:41:18 PM
விளையாட்டு
வீரர்களின் போதை ஆய்வு அறிக்கையில் மோசடி 2022 உலக கால்பந்தில் ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை...‘வாடா’ நடவடிக்கையால் பெரும் பின்னடைவு
லொசேன் நகர்: கோடை, குளிர்கால ஒலிம்பிக் மற்றும் 2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டி கட்டாரில் நடக்கிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில், ரஷ்ய நாட்டின் தேசிய அணி பங்கேற்க  முடியாது என்று, உலக ஊக்கமருந்து  எதிர்ப்பு நிறுவனம் (வாடா) நிர்வாக குழு அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து,  வாடா தலைவர் கிரேக் ரீடி, சுவிஸ் நகரமான லொசேன் நகரில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் கூறியதாவது:  போதைப்பொருள் பயன்படுத்தும் வீரர்களை அடையாளம் காண உதவக்கூடிய ஆய்வக தரவுகளில், ரஷ்ய அதிகாரிகள் போலி ஆதாரங்களை சமர்பித்துள்ளனர். நேர்மறை ஊக்கமருந்து சோதனைகளுடன் இணைக்கப்பட்ட கோப்புகளை  நீக்கிவிட்டனர். பல விளையாட்டுகளில் பாரம்பரியமாக ஒரு அதிகார மையமாக இருந்த ரஷ்யாவின் இந்த மோசடி, அந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ரஷ்ய தேசிய அணியானது கட்டாரில் 2022ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்தில் பங்கேற்க முடியாது. நடுநிலையாளர்களாக மட்டுமே பங்கேற்க முடியும். உலகக் கோப்பையில் நடுநிலையாளர்களாக போட்டியிடுவது  நடைமுறையில் எவ்வாறு செயல்படக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த முடிவின் அளவை தெளிவுபடுத்த ‘வாடா’வுடன் கால்பந்தின் உலக குழுவான ஃபிஃபா தெரிவித்துள்ளது. இந்த தடையால், ரஷ்ய விளையாட்டு வீரர்கள்  மற்றும் வீராங்கனைகள் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது. நான்கு ஆண்டுகள் இந்த தடை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2018ம் ஆண்டு பியோங்சாங் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், ரஷ்ய அதிகாரிகள் உண்மையை மறைத்ததால், அது ‘வாடா’ குழுவால் கண்டறியப்பட்டது. தற்போதைய தடையால், ரஷ்ய  கால்பந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் சட்டமன்ற உறுப்பினரும் துணைப் பேச்சாளருமான இகோர் லெபடேவ் கூறுைகயில், ‘‘வாடா-வின் நடவடிக்கை ரஷ்ய  விளையாட்டுக்கு கடுமையான அடியாகும், இதற்கு ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து பதில் தேவை’’ என்றார்.
127,196
12/10/2019 3:43:39 PM
தமிழகம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் நடிகை நயன்தாராவை காண திரண்ட ரசிகர்கள்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
கன்னியாகுமரி: மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடிக்க உள்ள நடிகை நயன்தாரா, நேற்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  கன்னியாகுமரி பகவதியம்மனின் மகிமையை விளக்கும் வகையில் மூக்குத்தி அம்மன் என்ற படம் தயாராகிறது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்துக்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  பகவதியம்மன் கோயிலில் மிக ரகசியமாக நடந்தது. வெளிநாட்டில் இருந்ததால் படத்தின் பூஜையில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை. பட பூஜைக்கு பிறகு படக்குழுவினர் அனைவரும் விரதம் தொடங்கி விட்டனர் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் நடிகை நயன்தாரா வெளிநாட்டில்  இருந்ததால் விரதம் தொடங்க வில்லை என்று சொல்லப்பட்டது. சமீபத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, நேற்று இரவு திடீரென கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வந்தார். அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இரவு சுமார் 7 மணியளவில் நடிகை நயன்தாரா வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக கோயிலுக்குள் சென்றார். அவருடன் காதலன் விக்னேஷ் சிவனும் வந்தார். பகவதியம்மன் முன்பு  சுமார் அரை மணி நேரம் நடிகை நயன்தாரா அமர்ந்து வேண்டினார். அதைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தை சுற்றி தரிசனம் செய்தார். தற்போது சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த நடிகை நயன்தாரா, ஐயப்ப பக்தர்களை வணங்கினார். நடிகை நயன்தாரா  வந்திருந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், ரசிகர்களும் பெருமளவில் திரண்டனர். அவரது காரை சுற்றிலும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பெரும் சிரமத்துக்கு இடையே காவல்துறையினர் பாதுகாப்பாக நடிகை நயன் தாராவை அனுப்பி வைத்தனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு முழுவதும் கன்னியாகுமரியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பெண் போலீஸ் செல்பிநடிகை நயன்தாரா வருகையை முன்னிட்டு பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் போலீசாருடன் இணைந்து நடிகை நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் இணைந்து போட்டோ எடுக்க போலீசாரும்  அதிக ஆர்வம் காட்டினர்.
127,197
12/10/2019 3:44:09 PM
தமிழகம்
சேலம் மாவட்டம் மேச்சேரியில் தேர்தல் மன்னன் வேட்பு மனு தாக்கல்
மேச்சேரி: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவர் டயர் வல்கனைசிங் செய்யும் தொழில் செய்து வருகிறார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சிக்காக தேர்தலில் போட்டியிட்டு  வருகிறார். வார்டு கவுன்சிலர் பதவி முதல் ஜனாதிபதி பதவி வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள இவர், தமிழகம் மற்றும் இந்திய அளவிலான தலைவர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், இவர் தேர்தல் மன்னன்  என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். இந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக மேச்சேரி ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேலிடம் நேற்று மனுதாக்கல் செய்தார். இது அவருக்கு 209வது தேர்தலாகும்.
127,198
12/10/2019 3:44:53 PM
தமிழகம்
மரத்தில் கார் மோதி விபத்து என்எல்சி துணை பொதுமேலாளர் பலி
வேப்பூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (56). இவரது மனைவி விஜயா (50). இவர்கள் இருவரும் சொந்த வேலையாக பெங்களூர் சென்று விட்டு  நேற்றிரவு நெய்வேலி நோக்கி காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள  புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாட்டுக்குள் சிக்கிய ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது மனைவி விஜயா மற்றும் கார் ஓட்டுனர் ராஜ்குமார் ஆகிய இருவரும்  படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த விஜயா, டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
127,199
12/10/2019 3:45:51 PM
தமிழகம்
கருப்பாக மாறி துர்நாற்றம் வீசியதால் ஆவேசம் 12 நாளாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மக்கள் மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடி வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் 12 நாட்களாகியும் அகற்றப்படாததால் ஆவேசமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. 12 நாட்களாகியும் மழைநீர் அகற்றப்படாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கடுமையாக  அவதிப்படுகின்றனர். பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழைநீர், கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி சுகாதார  சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. தேங்கிநிற்கும் மழைநீர், கழிவுநீர் கலந்து கருப்பு நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுவதோடு இதில் உருவாகும்  கொசுக்களால் மக்கள் இரவில் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். இதனிடையே ஏற்கனவே முறையான பராமரிப்பின்றி  உருக்குலைந்த சாலைகளில் மழை, வெள்ளபாதிப்பால் மேலும் ராட்சத குழிகள் பல உருவாகியுள்ளன. இவற்றிலும் தண்ணீர் நாள்கணக்கில் தேங்கிநிற்கிறது. இதனால் சாலைகளில் வாகனங்களில் வருவோர் தேங்கிய நீரில் எங்கு குழிகள்  உள்ளன என தெரியாமல் தவறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இதையெல்லாம் சீரமைக்கவேண்டிய மாநகராட்சி நிர்வாகம் கண்டும், காணாமலும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மழை நீர் தேங்கிய இடத்தில் மண்ணை கூட அள்ளிப் போடாமல் அலட்சியமாக மாநகராட்சி  நிர்வாகம் இருந்து வருவதாக சாடியுள்ளனர்.இந்நிலையில் ராஜகோபால் நகர் பகுதியில் வீதிகளில் 12 நாட்களாக தேங்கிநிற்கும் மழைநீரால் கடுமையாக அவதிப்பட்டு வரும் மக்கள், தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடி - பாளை ரோட்டிற்கு நேற்று திரண்டு வந்து  மில்லர்புரம் சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சட்டவிரோதமாக மறியலில் ஈடுபட்டால் வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதாக கடுமையாக எச்சரித்தனர். ஆனால், இதை பொருட்படுத்தாத மக்கள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக அகற்றும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றனர். இவர்களில் சில பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் அமர்ந்தும், சிலர்  கையில் பீடிங் பாட்டிலை வைத்து, கைக்குழந்தைக்கு பாலூட்டியவாறே மறியலில் பங்கேற்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் தேங்கிநிற்கும் மழைநீரை முற்றிலும் அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர்.
127,200
12/10/2019 3:46:28 PM
குற்றம்
எம்பிபிஎஸ் மாணவியை பலாத்காரம்: ஆணழகன் அதிரடி கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் எம்பிபிஎஸ் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து, பணம், நகையை பறித்த ஆணழகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் ராகுல் (23). பாடிபில்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். கடந்த வருடம்  கொல்லத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு மிஸ்டர் கொல்லம் பட்டம் பெற்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெங்களூரில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். அதோடு அவரை மிரட்டி பல கட்டமாக ரூ.8 லட்சம் பணம், 10 பவுன் நகை ஆகியவையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ராகுல் திடீரென கத்தார் சென்று விட்டார். அதன்பின்னர் தான் அவர் தன்னை ஏமாற்றியதை மாணவி உணர்ந்தார். இதையடுத்து கடந்த 1ம் தேதி கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரிக்கும்படி வர்க்கலா போலீசுக்கு டிஜிபி உத்தரவிட்டார்.  இதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராகுல், வர்க்கலா திரும்பி உள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.
127,201
12/10/2019 3:47:14 PM
தமிழகம்
2 கட்ட உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகளுக்கே வழி வகுக்கும்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மன்னார்குடி: திருவாரூர்  மாவட்டம் கூத்தாநல்லூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா  நடைபெற்றது. இதில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: மோடி ஆட்சியில் நாட்டின்  ஒவ்வொரு துறையும் கடுமையான நெருக்கடியில் உள்ளது. பண மதிப்பிழப்பு  நடவடிக்கை பொருளாதார பேரழிவை உருவாக்கியுள்ளது. தவறாக அமல்படுத்தப்பட்ட  ஜிஎஸ்டி இந்த துயரங்களை அதிகப்படுத்தியுள்ளது. பல தொழில்கள்  இதனால்  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழப்பை  சந்தித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு புதிய வேலையும் கிடைக்காமல் அவதிப்பட்டு  வருகின்றனர். பாஜகவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான்  பொருளாதார  வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் படு தோல்வி  கிடைக்கும் என்பதால் அதனை நடத்தாமல் இருப்பதற்கு அதிமுக பல்வேறு வகையில்  காய்களை நகர்த்தி வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் என்பது  முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். மாநிலம் முழுவதும் வார்டுகளை முறையாக  பிரித்து தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதே  சரியாக இருக்கும். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் ஒரு போதும்  அரசியலுக்கு வர மாட்டார்.   இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.
127,202
12/10/2019 3:48:36 PM
தமிழகம்
கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமீறும் வியாபாரிகள் ரசாயனம் தெளித்த காய்கறி, பழங்கள் விற்பனை அமோகம்
அண்ணாநகர்: சென்னை கோயம்பேட்டில் 295 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 1000 மொத்த விற்பனை கடைகள் மற்றும் 2 ஆயிரம் சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யப்படுகிறது.  பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, கிவி போன்ற பழங்கள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.அதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பல வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம் மற்றும்  திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தினசரி இங்கு வந்து தங்களது கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.இங்குள்ள மொத்த விற்பனை கடைகளில் விலை குறைவு என்பதால் பண்டிகை காலம், விஷேச நாட்கள் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்களும் இங்கு வந்து காய்கறி, பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், எப்போதும்  கோயம்பேடு மார்க்கெட் பரபரப்பாக காணப்படும்.  வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பழங்கள் பாதி பழுத்த (செங்காய்) நிலையில் இருக்கும். இவை இயற்கையாக பழுக்க சில நாட்களாகும். ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில வியாபாரிகள் பழங்களை உடனே பழுக்க வைக்க  வேண்டும் என்பதால், ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு கற்கள், வாழைப்பழங்களை பழுக்க வைக்க எத்திலின், ஆப்பிள் பழம் பளபளப்பாக இருக்க மெழுகு என அனைத்து பழங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், காய்கறிகளின் நிறம், பளபளப்பு உள்ளிட்வைக்கும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு பச்சை பட்டாணி அடர் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதால் சாயப்பவுடர் பயன்படுத்தப்படுகிறது. ரசாயன பொருளில் இருந்து வெளியாகும் வெப்பத்தால் பழங்கள் விரைந்து பழுத்துவிடும். இந்த பழங்களை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால்,  கேன்சர் வரவும் வாய்ப்புள்ளது, என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு செயற்கையாக பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்வதற்கு அரசு தடை செய்துள்ளது. ஆனாலும், இதுபோன்ற சுகாதாரமற்ற பழம், காய்கறிகளை வியாபாரிகள் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது  கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு நடத்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெயரளவுக்கு சில வியாபாரிகளிடம் இருந்து சுகாதாரமற்ற பழங்களை பறிமுதல் செய்தாலும், தொடர்ந்து இதுபோன்ற விற்பனை அமோகமாக நடைபெற்று  வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரசாயனம் பயன்படுத்தாமல் எந்த பழங்களும் விற்பனை செய்வதில்லை என்ற நிலை தற்போது உள்ளதால், பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்ற நிலை மாறி, தற்போது பழங்கள் சாப்பிட்டால்  நோய் பாதிப்புக்கு ஆளாகும் அவலம் உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு பழங்களை கொடுப்பதற்கே அச்சமாக உள்ளது. தினசரி பயன்படுத்தும் வாழைப்பழங்களை ரசாயனத்தில் பழுக்க வைப்பதால், அதை வாங்கி பயன்படுத்துபவர்களின் நிலையை சொல்லி தெரிய  வேண்டியதில்லை. லாப நோக்கில் செயல்படும் இதுபோன்ற சில வியாபாரிகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் பயன்படுத்தி காய்கறி, பழங்கள் விற்பதை முற்றிலும் தடை செய்யவும், தடையை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு துணை போகும்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்,’’ என்றனர்.
127,203
12/10/2019 3:50:04 PM
தமிழகம்
அண்ணாநகரில் சென்டர்மீடியனில் கார் மோதி நொறுங்கியது: அடுத்தடுத்து 2 பைக் மோதியதால் பரபரப்பு: மருத்துவ மாணவர் உள்பட 4 பேர் காயம்
அண்ணாநகர்: அண்ணாநகரில் சென்டர்மீடியனில் கார் மோதி நொறுங்கியது. இந்த கார் மீது அடுத்தடுத்து வந்த 2 பைக்குகளும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ மாணவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ரோஷன் (24). இவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவ கல்வி பயின்று வருகிறார்.  நேற்றிரவு 10 மணியளவில் மருத்துவமனையில் பயிற்சி பணியை முடித்து விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அண்ணா நகர் சாந்தி காலனி அருகே வந்தபோது, சென்டர் மீடியனில் பயங்கரமாக கார் மோதியது. பின்னால் வந்த  பைக், கார் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபுஆனந்த் (33), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரவி (29) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களது பின்னால் வந்த திருமங்கலத்தை சேர்ந்த வாசுதேவன் (45) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல்  செய்து, ரோஷனிடம் விசாரித்து வருகின்றனர்.
127,204
12/10/2019 3:50:38 PM
தமிழகம்
அமமுக வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
சென்னை: அமமுக சார்பில் வடசென்னை வடக்கு மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை டிடிவி தினகரன் நியமித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:அமமுக வடசென்னை வடக்கு மாவட்டத்தில் மாவட்ட அவைத் தலைவராக கே. பாலன், மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ  வெற்றிவேல், மாவட்ட இணை செயலாளராக ஏ.கிரிஜா, மாவட்ட துணை செயலாளர்களாக ஆர். மங்கை ரகுபதி, ஏ.ஆர்.பழனி, மாவட்ட பொருளாளராக ஆர்.செல்வம் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகின்றனர். அதே போல் பொதுக்குழு  உறுப்பினர்களாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு கே.முத்துக்கிருஷ்ணன், பெரம்பூர் தொகுதிக்கு கே.எஸ்.ராஜேஸ்வரி, கொளத்தூர் தொகுதிக்கு ஆர்.ராஜ்குமார், வில்லிவாக்கம் தொகுதிக்கு அபிராமி ஜி.பாலாஜி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். வட  சென்னை வடக்கு மாவட்ட பகுதி கழக செயலாளர்களாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு பி.வெங்கடேசன், பெரம்பூர் தொகுதிக்கு லட்சுமி நாராயணன், கொளத்தூர் தொகுதிக்கு மு.சுந்தர், வில்லிவாக்கம் தொகுதிக்கு காளிதாஸ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மேற்கண்ட பொறுப்பு வகிப்போருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
127,205
12/10/2019 3:51:30 PM
தமிழகம்
நீதிபதி ஆய்வின்போது கண்டுபிடிப்பு பாலியல் குற்றச்சாட்டு புகாரில் மூடப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 சிறுமிகள் மீட்பு
திருமுல்லைவாயல்: பாலியல் குற்றச்சாட்டில் மூடப்பட்ட தனியார் காப்பகத்தில் இருந்து மேலும் 26 சிறுவர், சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை, வில்லிவாக்கம் முருகேசன் நகரை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி விமலா ஜேக்கப்.  இவர்கள் ஆவடி அருகே திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 7 மற்றும் 12வது தெருக்களில் நித்தியவார்த்தை என்ற பெயரில் குழந்தைகள்  காப்பகம் நடத்தி வந்தனர். இதில் 48 சிறுவர், சிறுமிகள் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 10க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு காப்பக வார்டன்கள்  சாமுவேல், பாஸ்கர் மற்றும் உதவியாளர் முத்து ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதற்கு சம்மதிக்காத சிறுவர்-சிறுமிகளை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது.இதுபற்றியபுகாரின்படி, ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  காப்பக உரிமையாளர் ஜேக்கப், விமலா மற்றும் பாஸ்கர், சாமுவேல், முத்து ஆகிய 5  பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் விடுதியில் தங்கியிருந்த 48 சிறுவர், சிறுமிகளை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்ந்தனர். இதன்பிறகு அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன்பிறகு  திருமுல்லைவாயலில் உள்ள காப்பகம் மூடப்பட்டது.இந்த நிலையில், சமீபத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வநாதன் தலைமையில் அதிகாரிகள் திருமுல்லைவாயல் தனியார் காப்பகத்தை ஆய்வு செய்தபோது  மீண்டும் அந்த காப்பகம்  அனுமதியின்றி நடத்தப்பட்டது தெரியவந்தது. அத்துடன் சிறுவர், சிறுமிகள் உள்பட 26 பேர் தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நீதிபதி செல்வநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமாருக்கு காப்பகத்தில்  குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து அதிகாரி செந்தில்குமார் தலைமையில், குழுவினர் காப்பகத்துக்கு வந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அங்கு தங்கியிருந்த 14 சிறுமிகள், 12 சிறுவர்களை பத்திரமாக மீட்டு வேன் மூலம் திருவள்ளூரில் உள்ள காப்பகத்துக்கு  அழைத்துச்சென்றனர். பெற்றோரை வரவழைத்து விசாரணைக்கு பிறகு குழந்தைகளை ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது.
127,206
12/10/2019 3:52:12 PM
தமிழகம்
திருவள்ளூர் அருகே சோகம் பைக் மீது வேன் மோதி விபத்து: பெற்றோர் கண் முன் மகன் பலி
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில், பெற்றோர் கண் முன்னே மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் துக்காராம். இவர் நேற்று மாலை, தனது மனைவி, மகன் பரத் (4) ஆகியோருடன் பைக்கில் மண்ணூர் கூட் சாலையில் இருந்து மப்பேடு நோக்கி சென்றார். காந்திப்பேட்டை சர்ச் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வேன், எதிர்பாராத விதமாக பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், பரத் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தான். துக்காராம், அவரது மனைவி லேசான காயத்துடன்  தப்பினர். பரத், படுகாயம் அடைந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து பெற்றோர் கதறினர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பரத்தை அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதனையில், வரும்  வழியிலேயே பரத் இறந்து விட்டது தெரிந்தது.இதுகுறித்து துக்காராம் கொடுத்த புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் கண் எதிரே மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
127,207
12/10/2019 3:53:15 PM
தமிழகம்
நண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப்பார்கள்?’: நடிகை ஜெயஸ்ரீ கேள்வி
சென்னை: நண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப் பார்கள்?’என நடிகை ஜெய கேள்வி எழுப்பியுள்ளார்.  சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெய. இவரும் சின்னத்திரை நடிகை. இந்நிலையில் டி.வி. தொடர் நடிகை மகாலட்சுமியுடன் கணவர் ஈஸ்வருக்கு தொடர்பு இருப்பதாகவும் இதுதொடர்பான வாக்குவாதத்தில் ஈஸ்வர் தன்னை அடித்து  உதைத்ததாகவும் போலீசில் ஜெய புகார் செய்தார். இதனால் ஈஸ்வர் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதன்பின்னும் பிரச்னை நிற்கவில்லை. இருவரும் மாறிமாறி பேட்டி கொடுத்து வருகின்றனர். சென்னையில் நேற்று ஜெயஸ்ரீ அளித்த பேட்டி: ஈஸ்வரும் மகாலட்சுமியும் நாங்கள் நண்பர்கள் என்கிறார்கள். எந்த நண்பர்களாவது லவ் யூ சொல்லி கிஸ் அடிப்பார்களா. இவர்கள் செய்தார்கள். என் கணவருடனான உறவை இப்போதே முடித்துக்கொள்ளுங்கள் என மகாலட்சுமியிடம்  கேட்டேன். எனக்கு கஷ்டமாகவுள்ளது என்றும் கூறினேன். அதற்கு அவர், ‘அவன்தான் உன்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்கிறானே. விட்டுப் போக வேண்டியதுதானே. இன்னும் ஏன் அங்கு இருக்கிறாய்’ என்று கேட்டார்.  ‘நீ யார் அதை முடிவு செய்ய..’ என்று மகாலட்சுமியிடம் நான் கேட்டேன். அதற்கு மகாலட்சுமி, ‘இனி எல்லாமே நான்தான் முடிவு செய்வேன்’ என்றார். இதற்கு என்ன அர்த்தம். எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.  ஈஸ்வர் ஏன் இப்படி  அல்பமாக நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை.  இவ்வாறு ஜெய  கூறினார்.
127,208
12/10/2019 3:54:14 PM
தமிழகம்
திருவள்ளூர் அருகே பரபரப்பு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து...சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது
திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, திருவள்ளூர் அருகே சென்டர்மீடியன் மீது மோதியது. இதில், 10 டன் வெங்காய மூட்டைகள் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கன மழை பெய்தது. இதனால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு, வெங்காய விலை கிலோவிற்கு ரூ.180 முதல் 200 வரை விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு, ஏழை மற்றும் நடுத்தர  குடும்பங்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், வெங்காய விலை  குறைந்தபாடில்லை.இந்நிலையில், ஆந்திர மாநிலம் தடா பத்ரி பகுதியில் இருந்து நேற்றிரவு ரூ.10 லட்சம் மதிப்புடைய 10 டன் வெங்காய மூட்டைகளுடன் ஒரு லாரி சென்னை கோயம்பேடுக்கு புறப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூர்  டோல்கேட் அருகே சென்டர்மீடியன் துவங்கும் பகுதியில், எதிர்பாராத விதமாக சென்டர்மீடியனில் லாரி மோதியது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி இரு டயர்களும் கழன்று தனியாக ஓடியது. லாரியில் இருந்த வெங்காய  மூட்டைகள் அனைத்தும் சிதறி சாலையில் கொட்டியது. லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஜில்லான், உரிமையாளர் மாபாஷா ஆகியோர் காயமின்றி தப்பினர்.தகவல் அறிந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெங்காயங்களை பாதுகாப்பாக வேறு கோணிகளில் கொட்ட நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது.வெங்காயம் விலை உயர்ந்துவரும் நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், வெங்காயத்தை பாதுகாப்புடன் பத்திரப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். அதிகாலையில் நடந்த விபத்தால் பொதுமக்கள் யாரும்  அங்கு வரவில்லை. இதனால், வெங்காயங்கள் பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்பட்டது.  இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ரிப்ளெக்டர் பொருத்தப்படுமா?மணவாளநகர் முதல் டோல்கேட் வரை சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில்  தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றி கொண்டு ஏராளமான கனரக வாகனங்களும் சென்று வருகிறது. இதில், டோல்கேட் பகுதியிலும், பூண்டி செல்லும் சாலையிலும் சென்டர்மீடியன் துவங்கும் இடத்தில், எச்சரிக்கை அறிவிப்பு  வைக்கப்படவில்லை. ரிப்ளெக்டரும் இல்லை. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘சென்டர் மீடியனில் ‘ரிப்ளக்டர்’ ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். விபத்து பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணமாக  அமைகிறது’ என்றனர்.
127,209
12/10/2019 3:54:58 PM
தமிழகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலால் களைகட்டிய கிராமங்கள்: ஜெராக்ஸ் கடையில் மக்கள் கூட்டம்
திருவள்ளூர்: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், தனி அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகம் இயங்கி வந்தது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிச.27 மற்றும் 30ம்  தேதி ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. இதற்கான மனு தாக்கல் நேற்று துவங்கியது. தற்போது உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில், 4,725 பதவிகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் என்றவுடன் கிராம பகுதிகள் களை கட்டியுள்ளன. ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரை சாதி, உறவினர்கள், வேண்டப்பட்டவர் என பிரித்து பார்த்து குழு, குழுவாக செயல்படுவர். ஒன்றிய, மாவட்ட கவுன்சிலருக்கு  கட்சி மற்றும் உறவு ரீதியாகவும் அணுகுவது வழக்கம். இதனால் டீக்கடை, ஓட்டல்களில் டோக்கன் முறை, மதியம், மாலை, இரவு நேரங்களில் மது கவனிப்பு என தடபுடல் உபசரிப்புகள் தற்போதே துவங்கி விட்டன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வண்டிகளில் சென்று வர வீடு, வீடாக பெண்கள் உள்ளிட்டவர்களை அழைத்து ஆதரவு திரட்டுவதிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக நின்று விவாதிப்பது என கிராமபகுதிகள் களை கட்டியுள்ளன. இதனால் வேட்பாளர் தரப்பினர் கடன் வாங்கியாவது லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இச்சூழலில் மனு தாக்கலுக்கான பணிகளில் வேட்பாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். வெற்றிக்கான வியூகம் அமைத்தலில் வாக்காளர் பட்டியல் கூடுதல் எண்ணிக்கையில் தேவைப்படுகிறது. அதற்காக, தேர்தல் ஆணையம் வெளியிட்ட  பட்டியலை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்துகின்றனர். வாக்காளர் பட்டியல், வேட்புமனு தாக்கலுக்கான ஆவணங்கள் தயாரிப்பு காரணமாக ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. கிராமப்புற கடைகளில், இதற்கான கட்டணம்  முன்பைவிட 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
127,210
12/10/2019 3:55:33 PM
குற்றம்
டாஸ்மாக் பாரில் அடிதடி வியாபாரி மண்டை உடைப்பு
ஆவடி: ஆவடி அருகே டாஸ்மாக் பாரில் நடந்த அடிதடியில் வியாபாரி மண்டையை உடைத்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, மேலப்பேடு, ஓம் சரவணா நகரை சேர்ந்தவர் அன்பு ஆரோக்கியராஜ் (31). இவர் திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில், மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் உள்ள பால்வாடி  தெருவை சேர்ந்த கார் டிரைவர் தினகரன் (31).நேற்று முன்தினம் இரவு பாலவேடு ஏ.என்.எஸ் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மேற்கண்ட இருவரும் தனித்தனியாக மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் அன்பு ஆரோக்கியராஜ் எழுந்து  சென்று தினகரனிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தினகரன், ‘’என்னிடம் ஏன் பணம் கேட்கிறாய்’’ என்று வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி  கைகலப்பமாக மாறியது. திடீரென  தினகரன், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அன்பு ஆரோக்கியராஜ் தலையில் சரமாரி அடித்ததில் மண்டை உடைந்து ரத்தம்கொட்டியதால் அன்பு ஆரோக்கியராஜ் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்து தினகரன் தப்பிவிட்டார்.இதன்பிறகு  அப்பகுதியினர் அன்பு ஆரோக்கியராஜை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய புகாரின் அடிப்படையில், முத்தாபுதுப்பேட்டை போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நேற்று தினகரனை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
127,211
12/10/2019 3:56:28 PM
தமிழகம்
ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியை உடைத்த மர்ம நபர்களை தண்டிக்கவேண்டும் என்று விவசாயிகள்  தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வளர்புரம் கிராமத்தில் உள்ள சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வளர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் விவசாய  நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.  ஏரியில் 3 மதகு மற்றும் 2 கலங்கள் உள்ளன. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியுள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏரிக்கரையின் ஒரு பகுதியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டதால் அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்புதூர் கோட்ட பொதுப்பணித்துறை  உதவிப்பொறியாளர் மணிகண்டன் தலைமையில், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் பொக்லைன் மூலம் ஏரிக்கரை உடைப்பை சரிசெய்து, தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். மணல் மூட்டைகளை அடுக்கி  ஏரிக்கரையை சரிசெய்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பல வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் சந்தோஷமாக இருந்தோம். இந்த தண்ணீரை நம்பிதான் விவசாயம் செய்து வருகிறோம். ஏரிக்கரையை மர்ம நபர்கள்  உடைத்துவிட்டதால் 25 சதவீதம் தண்ணீர் வீணாகிவிட்டது. எதற்காக ஏரிக்கரையை உடைத்தார்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஏரிக்கரையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கவேண்டும். ஏரிகளை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்’ என்றனர்.
127,212
12/10/2019 3:57:00 PM
தமிழகம்
கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பு
கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 18வது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகரில் கடந்த 2001ம் ஆண்டு பல லட்சம் மதிப்பில் ஒரு லட்சம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி அமைக்கப்பட்ட பிறகு ஒரு வருடம் மட்டும் பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.கே.நகரில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு 18வது  வார்டு பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதன்பிறகு 18 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது.இந்த குடிநீர் தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, 18வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நிரப்பி  அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
127,213
12/10/2019 3:57:55 PM
குற்றம்
காவல் நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் கைது; போக்சோ பாய்ந்தது
தண்டையார்பேட்டை: காவல்நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பாரிமுனை அங்கப்பன்நாயக்கன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர்  மலர் (30). திருமணமான இவர் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வருகிறார்.  அதே பகுதி பிளாட்பாரத்தில் வசிப்பவர் அருள் (25).  இவரும் குப்பை  பொறுக்கிவந்தார்.நேற்று முன்தினம் இரவு பிளாட்பாரத்தில் மலர் தூங்கினார்.  நேற்று அதிகாலை மதுபோதையில் அங்கு வந்த  அருள்,  மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திடீரென எழுந்த அவர் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து அருளை  மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அருளை கைது செய்தனர்.  இதன்பிறகு காவல்நிலையத்தில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அருள், கைவிலங்குடன் தப்பினார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில், இன்று அருள் கைது செய்யப்பட்டார். விசாரணையில், மலரின்  மகளுக்கும் பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார் என்பது  தெரியவந்துள்ளது. இதனால் போக்சோ சட்டத்தில் அருள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
127,214
12/10/2019 3:58:49 PM
தமிழகம்
அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம்...100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்
அண்ணாநகர்: அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறான 100 கடைகள் அகற்றப்பட்டது. மேலும் 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் ஏராளமான கடைகள் உள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து  போக்குவரத்து இணை கமிஷனர் ஜெயகௌரி, உதவி கமிஷனர் சுரேந்திரநாத், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 100 கடைகளை அதிரடியாக அகற்றினர். மேலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தி வைத்திருந்த 100 கார்கள், 300 பைக்குகளின் உரிமையாளர்கள் மீது  வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். பின்னர், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கடைகள் வைக்க கூடாது, வாகனங்கள் நிறுத்த கூடாது என போலீசார் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘நடைபாதையில் கடைகள் வைக்கப்படுவதாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்களால் நடந்து செல்ல முடியவில்லை. பொதுமக்களின் தொடர்ச்சியான புகாரை தொடர்ந்து இடையூறாக இருந்த கடைகள் மற்றும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. நடைபாதையில் வாகனங்கள் மற்றும் கடைகள் இருக்கக் கூடாது என்று நோட்டீஸ் வழங்கி எச்சரித்துள்ளோம்’  என்றனர்.
127,215
12/10/2019 3:59:44 PM
உலகம்
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை
வாஷிங்டன்:  மத்திய பாஜ அரசு நேற்றிரவு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதாவை ‘தவறான திசையில் ஆபத்தான திருப்பம்’ என்று சர்வதேச மத சுதந்திரம் குறித்த மத்திய அமெரிக்க ஆணையம் கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில், நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் முன்மொழியப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள இந்து, சீக்கிய, பவுத்த,  சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள், டிசம்பர் 31, 2014 வரை, அங்கு மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இருந்தால், அவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்; இந்திய குடியுரிமை  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச மத சுதந்திரம் குறித்த மத்திய அமெரிக்க ஆணையம் (யுஎஸ்சிஐஆர்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படுவது  குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக கூறி உள்ளது. ேமலும், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற முதன்மைத் தலைவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்க  அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும். இம்மசோதா மிகவும் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான பாதையை குறிப்பாக முஸ்லிம்களை விலக்கி, மதத்தின் அடிப்படையில் குடியுரிமைக்கான சட்ட  அளவுகோலை இந்த மசோதா அமைக்கிறது. குடியுரிமை திருத்த மசோதா என்பது தவறான திசையில் ஒரு ஆபத்தான திருப்பம்; இது இந்தியாவின் மதச்சார்பற்ற பன்மைத்துவ வரலாறு மற்றும் இந்திய அரசியலமைப்பை எதிர்த்து இயங்குகிறது’  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
127,216
12/10/2019 4:00:32 PM
தமிழகம்
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தி.மலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருநாள் இன்று மாலை விமரிசையாக நடக்கிறது. நாளை பவுர்ணமி கிரிவலம். இதை முன்னிட்டு பக்தர்கள், பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  சார்பில் திருவண்ணாமலைக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் 12ம் தேதி வரை இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து சுமார் 500 சிறப்பு பஸ்களும், தாம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு உள்பட பல்வேறு  நகரங்களிலிருந்து 1,112 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், திருச்சி பகுதிகளில் இருந்து 450 சிறப்பு பஸ்களும், சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 251 பஸ்களும்,  கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 122 சிறப்பு  பஸ்களும், மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பஸ்களும், திருநெல்வெலி, தூத்துக்குடியிலிருந்து 80 சிறப்பு பஸ்களும் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்கள்,  இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
127,217
12/10/2019 4:01:25 PM
தமிழகம்
தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை
சென்னை: தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இதன்  காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இருப்பினும் இந்த ஆண்டுக்கான இயல்பு மழை அளவை  இன்னும் எட்டவில்லை. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்  மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்துள்ளது. இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக இலங்கைக்கு தென் கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகரும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 2.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றைய அதிகபட்ச வெயில் 91.4 டிகிரி பாரன்ஹீட் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதிவானது.  அதற்கடுத்தபடியாக நாமக்கல், சேலத்தில் 89.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகள், உள்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும். ஒரு சில  பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
127,218
12/10/2019 4:02:33 PM
இந்தியா
மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்
புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நாட்டில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? என்றும், நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி, வரும் 20ம் தேதி மவுன விரதத்தை  டெல்லியில் தொடங்க உள்ளதாகவும் கடிதம் எழுதியுள்ளார்.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி ஒருவருக்கு கடைசியாக 2005ம் ஆண்டு ஆகஸ்டில் தூக்கு நிறைவேற்றப்பட்டது.  தற்போது, 426 குற்றவாளிகள் மரணதண்டனைக்கு காத்திருக்கிறார்கள். நீதிமன்ற அமைப்பின் மூலம் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள், தடைகள் மற்றும் சிரமங்களை மக்கள் அநீதி என்று உணரத் தொடங்கியுள்ளனர். சமீபத்திய ஐதராபாத் சம்பவத்தில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெகுஜன ஆதரவு இருப்பதையே இது காட்டுகிறது. கொடூர குற்றவாளிகளை, என்கவுன்டர் போன்ற சம்பவங்களை நடத்தியே ஒழிக்க வேண்டும் என்று மக்கள்  இப்போது விரும்புகிறார்கள். பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், ஏழு ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை. நிர்பயா  வழக்கின் தாமதம் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அராஜகத்தை ஏற்படுத்தக்கூடும். கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் இதுபோன்ற வழக்கில் தூக்கு எதுவும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அன்னா ஹசாரே கூறுகையில், ‘‘கடந்த 2012ல் டெல்லியில்  நடந்த சம்பவத்திற்கு நிர்பயா குடும்பத்துக்கு நீதி கோரி, வருகிற 20ம் தேதி முதல் ராலேகன்  பகுதியில் மவுன விரதம் கடைப்பிடிக்க உள்ளேன். இதுபோன்ற  குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நான் காலவரையின்றி உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.
127,219
12/10/2019 4:31:07 PM
தமிழகம்
அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு
எர்ணாகுளம்: வீரம் படத்தில் அஜீத் தம்பியாக நடித்த நடிகர் பாலா தனது பாடகி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.தமிழில் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா போன்ற படங் களில் ஹீரோவாக நடித்திருப்பவர் பாலா. அஜீத் நடித்த வீரம் படத்தில் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். தவிர பல்வேறு மலையாள படங்களில்  நடித்திருக்கிறார். இவருக்கும் மலையாள திரைப்பட பாடகி அம்ருதாவுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அவந்திகா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலாவுக்கும், அம்ருதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதையடுத்து இருவரும் கடந்த 5 வருடமாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். எர்ணாக்குளம் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு இருவர் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலா, அம்ருதாவுக்கு சட்டப்படி விவாகரத்து வழங்கி  நேற்று உத்தரவிட்டது.
127,220
12/10/2019 4:31:49 PM
குற்றம்
வாலிபரை அடித்து உதைத்து பணம், செல்போன் பறிப்பு: 2 பேர் கைது
தண்டையார்பேட்டை: புளியந்தோப்பில் வாலிபரை அடித்துஉதைத்து பணம், செல்போன் பறித்த 2 பேரை கைது செய்தனர்.சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம், கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் ஜீவா (34). இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது வழியில் குடிபோதையில் இருந்த 2 பேர், ஜீவாவை  மடக்கி அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2000 ரூபாயை பறித்து சென்றனர்.இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் வந்து, காயம் அடைந்த ஜீவாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின்படி,  புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து கன்னிகாபுரம்  தாஸ்நகரை சேர்ந்த குட்டி (எ) ஸ்டான்லி (46), கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்த அப்புன்ராஜ் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால்  இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
127,221
12/10/2019 4:33:21 PM
தமிழகம்
நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை
சென்னை: நாசிக்கில் இருந்து வெங்காயம் வாங்கியதில் ரூ.8 லட்சத்தை பிரபல துணிக்கடை அதிபரிடம் இருந்த பெற்று தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாடுமுழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை கடைகளில் விற்பனை ெசய்யப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை அதிபர்கள் மற்றும்  மொத்த வியாபாரிகள் மொத்தமாக நாசிக்கில் இருந்து வெங்காயத்தை வாங்கி சில்லறையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையில், தி.நகரில் ரெங்கநாதன் தெருவில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் தனது கடைக்கு கடந்த வாரம் மும்பை அருகே உள்ள நாசிக்கில் இருந்து சென்னை முழுவதும் உள்ள நிறுவன கிளைகளுக்கு ரூ.8  லட்சத்திற்கு பெல்லாரி வெங்காயம் கொள்முதல் செய்தார். பொதுவாக கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்திற்கான பணத்தை லாரி டிரைவர்களிடம் கொடுப்பது  வழக்கம். அதன்படி கடந்த வாரம் நாசிக்கில் இருந்து கொள்முதல் செய்த  வெங்காயத்திற்கு ரூ.8 லட்சம் பணத்தை பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் கிருஷ்ணகிரியை ேசர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் இந்த பணத்தை நாசிக்கில் உள்ள வியாபாரியிடம் லாரி டிரைவர்  பிரகாஷ் கொடுக்காமல் தனது வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.கொள்முதல் செய்த வெங்காயத்திற்கான பணத்தை நாசிக் வியாபாரிகள் துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கத்திடம் போன்  செய்து கேட்டுள்ளார். அதற்கு லாரி டிரைவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பியதாக கூறியுள்ளார். அதன் பிறகு தான்  லாரி டிரைவர் ரூ.8 லட்சம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் ரூ.8 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக லாரி டிரைவர் பிரகாஷ் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி  வருகின்றனர்.
127,222
12/10/2019 4:34:49 PM
தமிழகம்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர். இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி  உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தான் என்ற அகந்தையை அழிக்க  சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 1ம்தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.ஒவ்வொரு நாளும் பகலில் சந்திரசேகரர், விநாயகரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் 7ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் உச்சக் கட்ட  திருவிழாவான கார்த்திகை தீபதிருவிழா இன்று நடைபெறுகிது.இன்று அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.பின்னர் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத,  அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோயிலிலும், கோயிலுக்கு வெளியிலும் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் பரணிதீபமானது ஓடல், எக்காளம் இசை முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. மேலும் வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது.  இறுதியில் பக்தர்களின் தரிசனத்துக்காக சொர்ணபைரவர் சன்னதி முன்பு பரணிதீபம் வைக்கப்பட்டது.இதையடுத்து தீபவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட செம்பால் ஆன மகாதீப  கொப்பரை, ஆயிரம் மீட்டர் திரி, 3500 கிலோ நெய் ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில்  காட்சியளிப்பார். அப்போது, கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் காட்சி தரும். இன்று ஏற்றப்படும் மகாதீபமானது தொடர்ந்து 11 நாட்கள் மலையில் பிரகாசிக்கும். மகாதீப  தரிசனத்தை காண நேற்று முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். எங்கு பார்த்தாலும் திருவண்ணாமலையில் பக்தர்களே காணப்படுகிறார்கள். தீபத்திருவிழாவை கொண்டாட திருவண்ணாமலை  நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரில் 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 2615 சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு  இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவையொட்டி வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 6 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தீபம் ஏற்றும் மலையில் மீட்பு பணி மற்றும்  பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பக்தர்கள் ஏமாற்றம்வழக்கம்போல் இந்த ஆண்டும் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது. பக்தர்கள் பாஸ் வைத்திருந்தும் பரணி தீபத்தை தரிசிக்க முடியவில்ைல. கோயிலின் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரம் அருகே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இதனால் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பரணி தீபத்தை தரிசிக்க கோயிலினுள் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களை விட போலீசாரே கோயிலுனுள் அதிகளவில் காணப்பட்டனர்.இறைவன் ஒருவனேபஞ்சபூதங்களை அரசாளும் ஏகனாக இருக்கும் இறைவன் ஒருவனே அனேகனாகி (பஞ்ச மூர்த்திகளாகி) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பரணி தீபம்  ஏற்றப்பட்டது.
127,223
12/11/2019 2:14:28 PM
இந்தியா
ரிசாட்-2பிஆர்1 உட்பட 10 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
சென்னை: ரிசாட்-2பிஆர்1 மற்றும் 9 வணிக ரீதியான செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 22 மணி 45 நிமிட கவுன்ட் டவுன் நேற்று மாலை 4.40க்கு  தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி புவி கண்காணிப்பு மற்றும்  அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்க  நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது.திட்டமிட்டபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும்  ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 37 டிகிரி கோணத்தில் 576 கி.மீ தொலைவில் அதன்  திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ரிசாட் -2பிஆர்1 செயற்கைகோளுடன் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா 1  செயற்கைகோள்களும், அமெரிக்காவிற்கு சொந்தமான 6 செயற்கைகோள்கள் என மொத்தம் 9  செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்தியாவிற்கு சொந்தமான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது, புவிகண்காணிப்பு, விவசாய மேம்பாடு, காடுகள் கண்காணிப்பு மற்றும் வளம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும். மேலும், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 75வது ராக்கெட். பி.எஸ்.எல்.வி ரகத்தில் விண்ணில் ஏவப்படும் 50வது ராக்கெட் ஆகும். இதேபோல், 2019ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவும் 6வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
127,224
12/11/2019 2:26:35 PM
இந்தியா
குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்
* நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்* அதிமுக ஆதரவு அளித்தால் மட்டுமே நிறைவேறும்புதுடெல்லி: மக்களவையில் நிறைவேற்றப் பட்ட குடியுரிமை சட்டமசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக, பிஜூ ஜனதா, தெலுங்குதேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவை பாஜ திரட்டியுள்ளதால், மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் நிறைவேறியது. பாஜவுக்கு முழு மெஜாரிட்டி இருந்தது. ஆனாலும், அதிமுக, சிவசேனா, தெலுங்குதேசம், பிஜூஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் முழு மெஜாரிட்டியுடன் நிறைவேறியது. இதையடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று பகல் 12 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 6 மணி நேரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பாஜ வுக்கு 83 உள்ளது.கூட்டணிக்கு 22 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பாஜ கூட்டணிக்கு ஆதரவு 105 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் பாஜ இறங்கியது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்கப்போவதாக அறிவித்து விட்டன. இதனால், இந்த மசோதாவை அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவளித்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். அதிமுகவிற்கு அவையில் 11 எம்பிக்கள் பலம் இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 6 எம்பிக்கள் பலம் இருக்கிறது.அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கும்பட்சத்தில் பாஜகவிற்கு 129 எம்பிக்கள் ஆதரவு கிடைத்துவிடும். அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கினால் இந்த மசோதா நிறைவேறாது. மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி நிதிஷ் குமார் உத்தரவிட்டு இருந்தார். ஆனால், கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் மற்றும் பொதுச் செயலாளர் பவன் கே.வர்மா ஆகியோர் மக்களவை மசோதாவை ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள், மாநிலங்களவையில் நடக்கும் வாக்கெடுப்பின் போது, கட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே முத்தலாக் மசோதா மற்றும் ஜம்மு-காஷ்மீர் (மறுசீரமைப்பு) மசோதா போன்ற முக்கிய சட்டங்களை எதிர்த்த ஐக்கிய ஜனதா தளம், தற்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மசோதா மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரித்து வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வெளிநடப்பு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுதொடர்பாக, கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வர்மா வெளியிட்ட பதிவில், ‘இந்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது; நாட்டின் ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்திற்கு எதிரானது. ஐக்கிய ஜனதாக தளத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது’ என்று தெரிவித்துள்ளார். அதிமுக தரப்பில், அக்கட்சியின் ஒரே மக்களவை வேட்பாளர், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால், மாநிலங்களவையிலும் மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவால் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அதிமுகவில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. ஆனால் அதிமுக தலைமை கண்ணை மூடிக் கொண்டு பாஜ ஆதரவும் நிலையை எடுத்துள்ளது.மேலும், அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மற்றுமின்றி மாநிலங்களவையில் பிற கட்சிகளிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கும் என்று பாஜ நம்பிக்கை கொண்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜ கட்சியின் முன்னாள் கூட்டாளியான சிவசேனா, மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளித்த நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாவை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்டது. இருந்தும், சிவசேனா ஆதரவு அளிக்காவிட்டாலும் கூட, வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாஜ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எம்பிக்கள் கணக்கு என்ன? மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 245 எம்பிக்களை கொண்ட மாநிலங்களவையில் தற்போதுள்ள 238 எம்பிக்கள் உள்ளனர். இதில், பாஜ - 83, ஐக்கிய ஜனதா தளம் - 6, சிரோமணி அகாலி தளம் - 3, லோக் ஜனசக்தி - 1, இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) - 1, நியமன உறுப்பினர்கள் - 11 என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 105 ஆக உள்ளது. மேலும், அதிமுக - 11, பிஜு ஜனதா தளம் - 7, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 2, தெலுங்கு தேசம் - 2 என மொத்தம் 22 எம்பிக்களின் ஆதரவை ெபற்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் (105+22) 127 ஆக அதிகரிக்கும். இது, அவையில் மசோதா நிறைவேறுவதற்குத் தேவையான இடங்களைவிட (120) அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் பாஜ உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பாஜ பேச்சுவாா–்த்தை நடத்தி வருகிறது.ஐக்கிய நாடுகள் சபை கருத்துமத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்தியாவின் குடியுரிமை மசோதா குறித்து கருத்து, ஐக்கிய நாட்டு சபையின் பொதுச்செயலரின் துணை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அவர்களது உள்நாட்டு விவகாரம்; இதில் நாம் கருத்து கூற முடியாது’ என்று கூறியதாக ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.ஆர்ப்பாட்டத்தில் குழந்தை பலிகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயாவில் இடைவிடாமல் மக்கள் 2ம் நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முழு அடைப்பு, சாலை மறியல், பாதுகாப்பு படையினருடன் மோதல் என, அசாம், திரிபுரா போன்ற மாநிலங்கள் போர்க்களமாக காட்சி தருகிறது. இதனிடையே இம்மசோதாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘வடகிழக்கு மாநிலங்களில் மோடி - ஷா அரசு மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகத்தான் குடியுரிமை திருத்த மசோதா உள்ளது, வடகிழக்கு மாநில மக்கள் மீதான கிரிமினல் தாக்குதல்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், திரிபுராவின் மூன்று இடங்களில் ஏற்பட்ட மோதல்களில் சுமார் 40 பேர் காயமடைந்தனர். திரிபுராவில் உள்ள பாஜ அரசு இணைய சேவையை 48 மணி நேரம் நிறுத்தியது. இதற்கிடையே செபாஹிஜாலா மாவட்டத்தில் பிஷ்ரம்கஞ்சில் மோதல் குழுக்களை கலைக்க காவல்துறையினர் மேல்நோக்கி 4 சுற்று தூப்பாக்கி சூடு நடத்தினர். குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சாலை முற்றுகையில் சிக்கியபோது, இரண்டு மாத நோய்வாய்ப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்ததால், பதற்றம் நிலவுகிறது.
127,225
12/11/2019 2:29:26 PM
தமிழகம்
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நிறைவாக 3 நாள் தெப்ப உற்சவம் தொடக்கம்: நாளை அண்ணாமலையார் கிரிவலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, இன்று முதல் 3 நாட்களுக்கு ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. நாளை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. 10ம் நாளான நேற்று அதிகாலை 4மணியளவில் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு இதைத் தொடர்ந்து நேற்று மாலை 4.40 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் அடுத்தடுத்து எழுந்தருளி கோயில் 3ம் பிரகாரம் தீப தரிசன மண்டபத்தில் காட்சியளித்தனர். பின்னர், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மட்டுமே சில நிமிடங்கள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.58 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அப்போது, கோயில் பிரகாரத்தில் திரண்டிருந்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். பின்னர் தங்க கொடிமரம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில், ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சிதரும். வரும் 20ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். எனவே, வரும் 20ம் தேதி வரை பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். மகா தீபத்தை தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், திருவண்ணாமலையில் இன்றும் பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.தீபத்திருவிழாவின் நிறைவாக இன்று முதல் மூன்று நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று இரவு 9 மணியளவில் ஐயங்குளத்தில் அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்து அருள்பாலிக்கிறார். நாளை இரவு 9 மணி அளவில், பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 13ம் தேதி இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறும். உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே (பொங்கல் பண்டிகை, தீபத்திருவிழா) திருவண்ணாமலையை கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி நாளை காலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் கிரிவலம் செல்வார். அப்போது சுவாமியுடன் ஏராளமான பக்தர்களும் கிரிவலம் செல்வார்கள்.
127,226
12/11/2019 2:31:37 PM
தமிழகம்
சமையல் காஸ் சிலிண்டர் ரசீதில் உள்ள விலைக்கு மேல் வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகை வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை: சமையல் காஸ் சிலிண்டர் ரசீதில் உள்ள விலைக்கு மேல் வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இண்டேன் சமையல் காஸ் சிலிண்டர்கள் தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் விநியோகஸ்தர்களால் வழங்கப்படும் ரசீதில் உள்ள, சில்லறை விலை தெளிவாக அச்சிடப்பட்டு இருக்கும். சில்லறை விலை என்பது, வாடிக்கையாளர்களின் சமையல் அறை வரை சிலிண்டரை டெலிவரி  செய்வதற்கான தொகை ஆகும். ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவரிடம் கூடுதல் தொகை எதுவும் வழங்க வேண்டாம். இந்தியன் ஆயில் நிறுவனம் டிப்ஸ் வழங்குவதை என்றும் ஆதரிப்பதில்லை. எனவே ரசீதில் உள்ள விலைக்கு மேல் கேட்டால் வாடிக்கையாளர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.15 மணிவரை தொடர்பு கொள்ளலாம். சென்னை- 044-2433 9238, 2433 9246, 94440 85646 மதுரை- 0452- 2533 956 திருச்சி- 0431- 2740 066 கோவை-  0422- 2247 396 மேலும், விபத்து மற்றும் சிலிண்டர் கசிவு போன்ற அவசர உதவிகளுக்கு 1906 என்ற எண்ணிலும், இதர புகார்களுக்கு 1800 233 3555 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
127,227
12/11/2019 2:33:58 PM
உலகம்
வறுமை ஒழிப்புக்கு முன்னோடி திட்டங்களை வகுத்த அபிஜித், எஸ்தர் தம்பதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்து கலக்கல்
ஸ்டாக்ஹோம்: வறுமை ஒழிப்புக்கான முன்னோடி திட்டங்களை வகுத்த இந்திய வம்சாவளி அபிஜித் மற்றும் எஸ்தர் தம்பதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள், இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்து, விழாவை சிறப்பித்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் அபிஜித் பானர்ஜி (58). இவரது தந்தையும், தாயும் கல்லூரி விரிவுரையாளர்கள் என்பதால் இயல்பிலேயே படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார். தந்தை தீபக்கை போலவே பொருளாதாரத்தை  தேர்வு செய்து கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், நேரு யுனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டமேற்படிப்பையும் முடித்தார். பின்னர் 1988ல் பி.ஹெச்டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றவர்  அங்கேயே குடியுரிமை பெற்று தங்கிவிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்  பி.ஹெச்டி முடித்த இவர், தற்போது மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில்  சர்வதேச பொருளாதார பேராசிரியராக உள்ளார்.வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார ஆய்வில் ெதாடர்ந்து கவனம் செலுத்தி வரும் அபிஜித், ஏற்கெனவே இன்போசிஸ் விருது, ஜெரால்ட் லோப் விருது, கீல்  நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ் விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2003ம் ஆண்டே தனது சோதனைகளுக்காக தனது மனைவி எஸ்தர் ட்யூப்லோ(46) மற்றும் செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு மையத்தை  நிறுவியுள்ளார். எஸ்தர் ட்யூப்லோவும் அபிஜித்தை போல அமெரிக்கக் குடியுரிமை  பெற்ற பிரெஞ்சு பெண். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல்,  இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரிமர் உடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித்  பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோருக்கு வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல்  பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்றிரவு ஸ்டாக்ஹோமில் நடந்த நோபல் பரிசு வழங்கும் விழாவில், அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோர் கலந்து கொண்டனர். அபிஜித் வேட்டி அணிந்தும், எஸ்தர் சேலை அணிந்தும் இந்திய பாரம்பரிய உடையில் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். இதனை, மேற்கத்திய ஊடகங்கள் வெகுவாக பாராட்டி உள்ளன.
127,228
12/11/2019 2:37:51 PM
தமிழகம்
25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: நாகை வேளாங்கண்ணி சர்ச்சில் குடில் அமைக்கும் பணி தீவிரம்
நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி பேராலயத்தில் குடில் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வந்து வழிபட்டு செல்லும் பேராலயமாக உள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று.இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  கிறிஸ்துமஸ் முந்தைய நாள் நள்ளிரவில் குழந்தை ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பலி நடைபெறும் அரங்கில் வர்ணம் அடிக்கும் பணி நடைபெறுகிறது.
127,229
12/11/2019 2:40:23 PM
தமிழகம்
கன்னியாகுமரியை தொடர்ந்து திருச்செந்தூரிலும் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகை நயன்தாரா, நேற்று சுவாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி பகவதியம்மனின் மகிமையை விளக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்துக்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பகவதியம்மன் கோயிலில் மிக ரகசியமாக நடந்தது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் பூஜையில் பங்கேற்காத நடிகை நயன்தாரா நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் வந்த நயன்தாரா, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு நடந்த விபூதி அபிஷேகத்தில் பங்கேற்ற அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலில் பரிவார மூர்த்திகளை வணங்கி வழிபட்ட நயன்தாரா, பிறகு கோயிலில் இருந்து வடக்கு வாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் குலசேகரன்பட்டினம் வழியாக மீண்டும் கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு முழுவதும் கன்னியாகுமரியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
127,230
12/11/2019 2:42:17 PM
குற்றம்
செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்த விவகாரம்: விவசாயி வீட்டில் குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்.... போலீசார் தீவிர விசாரணை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக விவசாயி வீட்டில் சோதனை நடத்தியபோது, குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த  அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 வருடங்களாக  இயங்கி வருகிறது. இங்கு, ராணுவத்தினர், ரயில்வே துறை, தமிழக காவல் துறை  உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள்  அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விழுந்து  கிடக்கும். கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை துப்பாக்கி பயிற்சி நடந்தது. இந்நிலையில், ேநற்று மதியம் அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகர் பகுதியை  சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (47), பயிற்சி மையத்தில் வெடிக்காத ஒரு வெடி பொருளை பைக்கில் எடுத்து கொண்டு புளியந்தோப்பு தெரு  வழியாக சென்றபோது, கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில்  ராமகிருஷ்ணனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில்  வீட்டின் வாசலில் துணி இஸ்திரி செய்து கொண்டிருந்த  கோவிந்தம்மாள் (60) என்பவருக்கும் காயம்  ஏற்பட்டது. அப்பகுதியில் ஓட்டு வீடு  அதிர்வில் சேதமானது. இரும்பு மின் கம்பத்தில் பெரிய துளை விழுந்தது. சிமெண்ட் ரோட்டில் விரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த  மறைமலைநகர் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். செங்கல்பட்டு  எஸ்பி கண்ணன், திருப்போரூர் தாசில்தார் செந்தில்குமார், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். வெடித்த பொருளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “20  வருடங்களுக்கு மேலாக இங்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  அவ்வப்போது துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து ராக்ெகட் லாஞ்சர்கள்  மற்றும் துப்பாக்கி குண்டுகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திலும்,  வீடுகளிலும் விழுந்து வெடிக்கிறது. ஒரு முறை அங்கன்வாடி மையத்தில் விழுந்தபோது, குழந்தைகள்  இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அஞ்சூர் பகுதியில் தொகுப்பு வீட்டில்  விழுந்து கட்டிடம் சேதமானது. கடந்த 5 மாதத்திற்கு முன்பு வெடிக்கப்படாத  ஏராளமான ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டு மீனம்பாக்கம்  ராணுவ தளத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த பகுதியில் இந்த பயிற்சி மையம் வேண்டாம்  என்று பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இரவு நேரங்களில்  பயிற்சியின்போது அதிக சத்தம் கேட்பதால் பயத்தில்  வசித்து வருகிறோம்’ என்றனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  இதில், அனுமந்தபுரம் துப்பாக்கி பயிற்சி  மையத்தில் இருந்து  வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை ராமகிருஷ்ணன் பைக்கில்  எடுத்து வரும்போது கீழே விழுந்து வெடித்தது. இது தொடர்பாக ராமகிருஷ்ணன்  வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி, வண்டலூர் அருகே  முருகமங்கலத்தில் உள்ள வெடிகுண்டு கிடங்கில் வைத்துள்ளனர். இதுகுறித்து  செங்கல்பட்டு  எஸ்பி கண்ணன் கூறுகையில், லாஞ்சரை ராமகிருஷ்ணன், எடுத்து வரும்போது  விபத்து  ஏற்பட்டுள்ளது. பழைய இரும்புக்காக எடுத்து வந்ததாக கூறினார். அவைகளில்  வெடிக்காத குண்டும் இருந்தது. அவற்றை பாதுகாப்பாக வைத்துள்ளோம். நீதிமன்ற  உத்தரவை பெற்று, வெடிக்காத குண்டுகளை  செயலிழக்க வைப்போம்’ என்றார்.கடந்த 3 மாதத்திற்கு முன்பு மானம்பதி பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். வெடிக்கப்படாத அதி பயங்கர ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க வைத்தனர். இதை தொடர்ந்து அனுமந்தபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
127,231
12/11/2019 2:50:33 PM
தமிழகம்
தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் இளம்பெண் நுழைந்து ரகளை
சென்னை: தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் ேநற்று இரவு மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தி.நகர் வைத்தியராம் தெருவில் பாஜகவின் மாநில தலைமை அலுவலகம் கமலாலயம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ேநற்று இரவு இளம் பெண் ஒருவர் மனு ஒன்று கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளே நுழைந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இரவு என்பதால் நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனால் நாளை காலை வரும் படி கூறி அனுப்பி உள்ளனர். ஆனால் இந்த இளம் பெண் வெளியே செல்லாமல் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.உடனே சம்பவம் குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மாம்பலம் போலீசார் விரைந்து வந்து இளம் பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த காவியா(27) என்பதும், இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால் வீட்டை விட்டு ஓடிவந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு இளம் பெண்ணை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பாஜக மாநில அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
127,232
12/11/2019 2:53:31 PM
இந்தியா
பாரதியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்
சென்னை: பாரதியாருக்கு பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். ‘’தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்’’ என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது.
127,233
12/11/2019 2:57:08 PM
இந்தியா
சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைகளை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. 41 நாட்கள் நீளும் மண்டல காலம் வரும் 27ம் தேதி நடக்கும் மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 450 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த சித்திரை திருநாள் பாலராம வர்மா சபரிமலைக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மண்டல கால பூஜையையொட்டி தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். இந்தாண்டுமண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ம் தேதி புறப்படுகிறது. அன்று காலை 7 மணி அளவில் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஊர்வலம் புறப்படும். வரும் 26ம் தேதி மதியம் பம்பையை வந்தடைகிறது. பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக இந்த தங்க அங்கி வைக்கப்படும். அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலையில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து இந்த தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படுகிறது. மறு நாள் மண்டல பூஜைகள் நடக்கும். அன்றுடன் இந்த ஆண்டு மண்டல காலம் நிறைவடைகிறது.
127,234
12/11/2019 3:01:03 PM
தமிழகம்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் நியமனம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
சென்னை: செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளாகவும், மாவட்ட சார்பு அணி செயலாளர்களாகவும், பகுதிக்கழகம், ஒன்றியக்கழகம், நகரக்கழகம், பேரூர் கழகம் ஆகியவற்றின் செயலாளர்களாகவும் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட அவைத் தலைவராக டி.சி. செல்லமணி, மாவட்ட செயலாளர்  கரிகாலன், மாவட்ட இணைச்செயலாளர் உமாதேவி, மாவட்ட துணைசெயலாளர் உஷா ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் வேம்பரசன், மாவட்ட பொருளாளர் சுதாகர் பொதுக்குழு உறுப்பினர்கள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு செல்வம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி ரவி, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு வாசுதேவன், தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு சத்யா, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மன்றம் செல்லப்பன், இதய தெய்வம் அம்மா ேபரவை அழகு சுப்ரமணியன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி ஜெயமுருகன், மகளிர் அணி விஜயலட்சுமி. மாணவர் அணி ரகுபதி, இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை அரவிந்த், வழக்கறிஞர் பிரிவு விஜயகுமார், சிறுபான்மை பிரிவு சாகுல்அமீது, விவசாயப் பிரிவு ரவிச்சந்திரன், மருத்துவர் அணி தியாகராஜன், மீனவர் அணி பழனி, இலக்கிய அணி சிங்கராஜன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள்அணி குமார் (எ) ராஜ்குமார், இளைஞர் பாசறை மகேஷ், இளம் பெண்கள் பாசறை அபிநதியா, தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு சிலம்பரசன், தகவல் தொழில் நுட்ப மகளிர் பிரிவு மஞ்சுளா, வர்த்தக அணி வஹாப், பொறியாளர் அணி ராஜா, ஆலந்தூர் பகுதிக்கு லட்சுமிபதி. சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் பரங்கிமலை ஒன்றியம் காளிதாஸ், நகர கழக செயலாளர்கள் அனகாபுத்தூர் நகரம் பிரகாஷ், பம்மல் நகரம் ஜெயகோபி, தாம்பரம் நகரம் கிருஷ்ணமூர்த்தி, பல்லாவரம் நகரம் கோகுல்ராஜ், செம்பாக்கம் நகரம் சேகர், பேரூர் கழக செயலாளர்கள் பீர்க்கங்கரணை பேரூராட்சி சரவணன், பல்லாவரம் கண்டோன்மெண்ட் பேரூராட்சி மதியழகன், பெருங்களத்தூர் பேரூராட்சி கோபாலகிருஷ்ணன், சிட்லபாக்கம் பேரூராட்சி நந்தகுமார், மாடம்பாக்கம் பேரூராட்சி சங்கரநாராயணன், திருநீர்மலை பேரூராட்சி துரைபாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
127,235
12/11/2019 3:34:29 PM
குற்றம்
கோயம்பேடு பகுதிகளில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
அண்ணாநகர்: கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் அடுத்த பாடிகுப்பம், வண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (எ) அருணா (24). இவர் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.மேலும், இவர்மீது கடந்த 2017-ம் ஆண்டில் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிதடி மோதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அருணாசலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் தீபக்குமார் கமிஷனருக்கு பரிந்துரைத்தார். இந்நிலையில், குற்றச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அருணாசலத்தை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார் அருணாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
127,236
12/11/2019 3:35:15 PM
இந்தியா
பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து தொந்தரவு: ‘ஈவ் டீசிங்’ வாலிபருக்கு செருப்படி... கான்பூர் பெண் போலீஸ் வீடியோ வைரல்
கான்பூர்: உத்தரபிரதேச பள்ளி மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த ‘ஈவ் டீசிங்’ வாலிபரை பிடித்து, கான்பூர் பெண் போலீஸ்காரர் ஒருவர் செருப்பால் அடித்து துவைத்த சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இரு சிறுமிகளை கிண்டல் செய்த வாலிபரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸார் சரமாரியாகத் தாக்கினார். பிதூர் எனுமிடத்தில் நடத்த இச்சம்பவத்தில், ‘தாய் மற்றும் சகோதரிகள் உனக்கு இல்லையா?’ என்று கேள்வி எழுப்பியபடி ஒரு பெண் போலீஸ்காரர், தனது செருப்பை கழற்றி அந்த வாலிபரை சரமாரியாக அடித்தார். பொது இடத்தில் நடந்த இச்சம்பவத்தை, அப்பகுதியில் இருந்த மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். இருந்தும், அந்த பெண் போலீஸ்காரர் குறிப்பிட்ட சில நிமிடங்கள் அந்த வாலிபரை செருப்பால் அடித்து துவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து, கான்பூர் போலீஸ் எஸ்பி அனில்குமார் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகே மாணவிகளுக்கு சிலர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. எனவே உடனடியாக அந்த பள்ளி அருகே பாதுகாப்பை பலப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுத்தோம். கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ெதாடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு ெகாடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
127,237
12/11/2019 3:36:04 PM
தமிழகம்
கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காததால் அதிருப்தி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக ராயபுரம் மனோ முடிவு
சென்னை: கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காததால் அதிருப்தி அடைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோ காங்கிரசில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் கடந்த 30 ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருந்து வருபவர் ராயபுரம் மனோ. ஜி.கே.மூப்பனாரின் தீவிர விசுவாசியாக இருந்தவர். ஜி.கே.வாசன் தமாகாவை மீண்டும் தொடங்கியபோது காங்கிரஸ் கட்சியிலே நீடித்து வந்தார். வடசென்னை மாவட்ட தலைவராக 13 ஆண்டுகளாக பதவி வகித்தவர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றினார்.கட்சியில் பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்ந்த ராயபுரம் மனோ 3 முறை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்தார். திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்ற பின்பு கட்சி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல்கள் இருந்து வந்தது. இந்நிலையில், ராயபுரம் மனோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இன்று முறைப்படி அறிவிக்க உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியில் உரிய முன்னுரிமை அளிக்காததால் தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து விலகும் அவர் வேறு கட்சியில் இணைவாரா என்பதை இன்று அவர் முறைப்படி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
127,238
12/11/2019 3:36:36 PM
தமிழகம்
ஊராட்சி தலைவர் பதவிக்கு தாய், மகள் போட்டா போட்டி
புழல்: தீர்த்தங்கரைபட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு, நேற்று தாய், மகள் ஆகிய இருவரும் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் வரும் 27, 30ம் தேதிகளில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன் துவங்கியது. இத்தேர்தலில் பிரதான கட்சிகள் தவிர, சுயேட்சையாக போட்டியிட பலர் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தீர்த்தங்கரைபட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு அதே பகுதியை சேர்ந்த உஷா அண்ணாதுரை (54), அவரது மகள் அனிதா விமல் (32) ஆகியோர் நேற்று புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சி தலைவர், 4 ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகள் உள்ளன. இதில் நேற்று தாய், மகள் ஆகியோர் ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சித் தலைவர், 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளன. இவற்றுக்கு ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தலா 2 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
127,239
12/11/2019 3:37:13 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு விண்ணப்பம் ஒரு ரூபாய்: வேட்பாளர்கள் இன்ப அதிர்ச்சி
திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் பல ஆயிரம் ரூபாயில் விருப்பமனு வழங்கிய நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பம் ஒரு ரூபாயில் வழங்கப்பட்டதால் மனு வாங்க வந்தோர் சில்லரை காசுகளை தேடினர். தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று தெரியாத நிலையில் நேற்று முன்தினம் முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்துவதால் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்புமனு விண்ணப்பங்களை பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் ஆர்வமுடன் பெற்று செல்கின்றனர்.வேட்புமனு விண்ணப்பம் கட்டணமாக ஒரு ரூபாய் வாங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்கள், வேட்பு மனு விண்ணப்பத்துக்கு ஒரு ரூபாய் கட்டணத்தை தேர்தல் அலுவலர்கள் கேட்டபோது அதிர்ச்சியடைந்தனர். ஒரு ரூபாய் நாணயம் கிடைக்காமல் தவித்தனர். பின்னர் உடன் வந்தவர்களிடம் பெற்று அதிகாரிகளிடம் கொடுத்தனர். உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சியினரிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் விருப்பமனு பெற்ற நிலையில், மனு விண்ணப்பம் ஒரு ரூபாய்க்கு கொடுத்தது போட்டியிட விரும்பும் கட்சியினரிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
127,240
12/11/2019 3:37:54 PM
தமிழகம்
கார்த்திகை தீபம்: திருவள்ளூர் சிவன் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருவள்ளூர்: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்றிரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோயில் சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது.தொடர்ந்து உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். இரவு 7 மணியளவில் கோயில் முன் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதைத் தொடர்ந்து உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல், காக்களூர் பூங்கா நகர் சிவ விஷ்ணு கோயில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
127,241
12/11/2019 3:38:37 PM
தமிழகம்
புழல் 22-வது வார்டில் சர்வீஸ் சாலையில் மீன் கழிவுகள் தேக்கம்: அகற்றுவதில் அலட்சியம்
புழல்: புழல் 22-வது வார்டில் பாதாள சாக்கடை பணி துவங்காததால், தனியார் மீன் மார்க்கெட்டில் குவியும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் சாலை, தெருக்கள் மற்றும் வீடுகளின் முன் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இவற்றை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 22-வது வார்டு பகுதிகளான காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடபாளையம், சக்திவேல் நகர், மகாவிர் கார்டன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் இன்றுவரை பாதாள சாக்கடை பணிகள் துவக்கப்படவில்லை.இதனால் அங்குள்ள கடைகள், வீடுகள் மற்றும் சிறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. குறிப்பாக, காவாங்கரையில் உள்ள தனியார் மீன் மார்க்கெட்டில் கால்வாய் வசதி இல்லை. அங்கிருந்து வெளியேற்றப்படும் மீன் கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஜிஎன்டி சாலையின் சர்வீஸ் சாலையில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது கழிவுநீர் பீய்ச்சியடிக்கப்படுவதால் பலர் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த கழிவுநீர் இதுவரை அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயநிலை நீடித்து வருகிறது. தனியார் மீன் மார்க்கெட் நிர்வாகத்தினரும் மண்டல, வார்டு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அந்த கழிவுநீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புழல் வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும், தனியார் மீன் மார்க்கெட்டினால் ஜிஎன்டி சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
127,242
12/11/2019 3:39:09 PM
தமிழகம்
குடியுரிமை மசோதாவை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்
தண்டையார்பேட்டை: இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி துணை தலைவர் தெஹ்லான் பாகவி கலந்து கொண்டார். இதில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு எதிராகவும் 100-க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதன்பின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை தீயிட்டு கொளுத்தினர்.அவர்களை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு விடுதலை செய்தனர். இதுகுறித்து தெஹ்லான் பாகவி கூறுகையில், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அதிமுக அரசு ஆதரித்திருப்பது தமிழகத்துக்கு கிடைத்த அவமானம். சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய பாஜ அரசு கொண்டு வரும் மசோதாக்களை அதிமுக அரசு கண்மூடித்தனமாக ஆதரித்து, மத்திய ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்டது என்றார்.இதேபோல் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் அன்சாரி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.அவர்களை போலீசார் கைது செய்து, நேற்றிரவு விடுதலை செய்தனர்.
127,243
12/11/2019 3:39:48 PM
தமிழகம்
திருமுல்லைவாயலில் முட்புதர்கள் சூழ்ந்த சுடுகாட்டு பாதை: சடலம் எரிப்பதில் சிக்கல்
ஆவடி: திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரில் உள்ள சுடுகாடு முறையான பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்து, பாதைகளே இல்லாத அளவுக்கு உருமாறியுள்ளது. இதனால் அங்கு குடிநீர், மின் தகனமேடை இன்றி சடலங்களை எரிப்பதில் மக்களுக்கு சிக்கல் நீடிக்கிறது. ஆவடி மாநகராட்சி, 8-வது வார்டான திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் பிரதான சாலையில் ஒரு சுடுகாடு உள்ளது.  இந்த சுடுகாட்டை அனுமன் நகர், ஆர்த்தி நகர், முருகப்பா காலனி, சரஸ்வதி நகர், லட்சுமி நகர், தென்றல் நகர் கிழக்கு, மேற்கு, வடக்கு முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதி மக்கள் பிணங்களை புதைக்கவும், எரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு நீண்ட காலத்துக்கு முன் சுடுகாடு உருவாக்கப்பட்டது. நாளடைவில் இந்த சுடுகாடு முறையான பராமரிப்பின்றி, தற்போது முட்புதர்கள் நிரம்பிய பகுதியாக உருமாறியுள்ளது. இங்கு பிணங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் தேவையான குடிநீர், சாலை வசதி மற்றும் மின்தகன மேடைகள் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இங்கு சடலங்களை எரிக்க வரும்போது, கூடவே குடங்களில் நீரையும் சுமந்து வருகின்றனர். இங்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. எனினும், அதற்கான மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அந்த மின்விளக்குகள் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. மேலும், இங்கு பல ஆண்டுகளுக்கு முன் ₹5 லட்சத்தில் காரிய மேடை அமைக்கப்பட்டும் இன்றுவரை பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்துள்ளது. இந்த சுடுகாடு முழுவதும் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், அங்குள்ள மண்பாதையும் மறைந்துவிட்டது. இதனால் முட்புதர்களுக்கு இடையே சடலங்களை எடுத்து செல்லும்போது, அங்குள்ள பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷ பூச்சிகள் கடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்போதைய ஆவடி நகராட்சி மற்றும் தற்போதைய மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இந்த சுடுகாட்டை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, சரஸ்வதி நகர் பிரதான சாலையில் உள்ள சுடுகாட்டில் குடிநீர், மின்வசதி, எரிவாயு தகனமேடையுடன் விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
127,244
12/11/2019 3:40:22 PM
தமிழகம்
பாரிமுனை அருகே மாடியில் தவறி விழுந்த பார் ஊழியர் பலி
தண்டையார்பேட்டை: மண்ணடியில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பணி முடிந்து சென்ற ஊழியர் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு (40). இவர் பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த பாரின் 2-வது மாடியில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், இவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வேலை முடிந்து, 2-வது மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் பாபுவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு பாபுவின் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரை வேறு யாரேனும் தள்ளிவிட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
127,245
12/11/2019 3:41:00 PM
தமிழகம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு: 3 மாடி மெத்தை கடையில் தீ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 3 மாடி மெத்தை கடையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சங்குசாபேட்டையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (52). அதே பகுதியில் தலையணை, கார்ஷீட், மெத்தை, மேட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 3 மாடிகள் கொண்டது. கட்டிடத்தின் மேல் பகுதியில் குடோன் உள்ளது. இந்த கடையில் 6 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மேல் மாடியில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. 3 மாடிக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பக்கத்து வீடுகளில் புகை மண்டலம் பரவியதால் பலர், வீட்டை விட்டு வெளியேறினர். இதற்கிடையில் தகவல் அறிந்து விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
127,246
12/11/2019 3:41:47 PM
குற்றம்
ஜோலார்பேட்டையில் பயங்கரம்: சென்னை தொழிலாளியை கொன்று உடலை கிணற்றில் வீசி சென்றனர்
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் கடந்த 9ம் தேதி விவசாய கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். வாலிபரை கொன்று, அவரது இடுப்பில் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொன்றது யார் என்று விசாரித்தனர்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை சைதப்பேட்டையை சேர்ந்த சரவணன், விஜயகுமார் ஆகியோரை கோழி கூண்டு அமைக்க வெல்டிங் வேலை செய்வதற்காக அழைத்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்ததாக தெரிகிறது. கடந்த 8ம் தேதி சரவணனின் உறவினர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு ெகாண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த சரவணனின் உறவினர்கள் சென்னை சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன், விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் சடலமாக கிடந்தவர் சரவணனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இருவரையும் நேற்று மாலை ஜோலார்பேட்டை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சரவணனை, விஜயகுமார் அடித்து கொன்றது தெரியவந்தது.
127,247
12/11/2019 3:42:27 PM
தமிழகம்
மாடு குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்தது: தாய் பரிதாப சாவு; மகன் காயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மாடு குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்து தாய் பரிதாபமாக இறந்தார். மகன் காயம் அடைந்தார். திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் கணேசன் (30). இவர், நேற்று முன்தினம் இரவு தனது தாய் சரோஜாவுடன் (56), பைக்கில் திருவள்ளூர் நோக்கி சென்றார். அரண்வாயல் பீர் கம்பெனி அருகே சென்றபோது திடீரென ஒரு மாடு சாலையின் குறுக்கே வந்தது. இதை சற்றும் எதிர்பாராததால் திடீர் பிரேக் போட்டபோது, நிலைதடுமாறி மாடு மீது பைக் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். சரோஜாவுக்கு தலை, மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். கணேசன் லேசான காயங்களுடன் தப்பினார்.தகவலறிந்து வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சரோஜாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் சரோஜா இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மகன் கண்ணெதிரே தாய் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
127,248
12/11/2019 3:43:07 PM
தமிழகம்
கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு மேளதாளத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள், 3 மாவட்ட கவுன்சிலர்கள், 456க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கியது. அன்று, கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையர் சாமிநாதன் மேற்பார்வையில் ஊராட்சி தலைவர் பதவிக்காக 3 மனுக்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 43 மனுக்கள் பெறப்பட்டது.நேற்று பூவலம்பேடு ஊராட்சி வாணியமல்லி காலனியை சேர்ந்த மதுரைவீரன் என்பவர் மட்டும், 100க்கும் மேற்பட்டவர்களுடன் மேளதாளத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். பின்னர், ஊராட்சி தலைவர் பதவிக்காக உதவி தேர்தல் அலுவலர் ஹேமலதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் அவருடன் அவரின் மனைவி சரண்யாவும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
127,249
12/11/2019 3:44:08 PM
தமிழகம்
தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தேர்தல் ஆணையமும், அரசும் கைகோர்த்து செயல்படுவது மோசமான நடவடிக்கை: மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் ராஜகண்ணப்பன் பேட்டி
சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் கைகோர்த்து செயல்படுவது மோசமான நடவடிக்கையாகும் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு ராஜகண்ணப்பன்  கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தனியாக பிரித்து தேர்தல் நடத்துவது பஞ்சாயத்துராஜ் விதிகளுக்கு எதிரானது. உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியவற்றில் சரியான இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடத்தாமல் தேர்தலில் குளறுபடி செய்து அறிவிப்பு செய்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது மோசமான நடவடிக்கையாகும்.எங்கு பார்த்தாலும் ஊராட்சி சாலைகள், பேரூராட்சி சாலைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. உள்ளாட்சி நிர்வாகம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலைவிட தமிழக ஆட்சியாளர்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் அதிகமான கோபத்தில் உள்ளனர். பாராளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, குடியுரிமை சட்ட மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசியிருப்பது திமுகவின் நிலைபாட்டை தெளிவாக எடுத்து காட்டப்பட்டுள்ளது. இது தவிர சமூக நீதி ஒதுக்கீடு சம்பந்தமாக மாநிலளங்களவையில் திருச்சி சிவா பேசியிருப்பது திமுகவின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை மிக தெளிவாக எடுத்து காட்டப்பட்டுள்ளது.நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவது உறுதி. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தலைமையிலான கூட்டணி தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தார். உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலினை சந்தித்து நேற்று கூறியுள்ளார். இதையடுத்து இவர் விரைவில் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.
127,250
12/11/2019 3:44:44 PM
தமிழகம்
எஸ்எஸ்என் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருப்போரூர்: திருப்போரூர் அருகே பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நம்மாழ்வார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் தங்கதுரை (45). இவர், அப்பகுதியில் வேளாண் விதைபொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர் (18). கடந்த மே மாதம் சென்னை அருகே திருப்போரூரில் உள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் கிஷோர் முதலாமாண்டு படிப்பில் சேர்ந்துள்ளார். மேலும், இக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் வேறு பிரிவில் படிக்கும் 2 மாணவர்களுடன் கிஷோர் தங்கியிருந்தார். கடந்த 6-ம் தேதி கிஷோருடன் தங்கியிருந்த 2 மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் கோவில்பட்டியில் இருந்து அவரது சகோதரர் பிரசாந்த், கிஷோருக்கு போன் செய்தார். அவரது அழைப்பை கிஷோர் எடுக்காததால், விடுதியில் தங்கியிருந்த தனது ஊரை சேர்ந்த 2 நண்பர்களுக்கு பிரசாந்த் போன் செய்து விசாரித்தார். இதையடுத்து, அந்த மாணவர் கிஷோரின் அறைக்கு சென்று பார்த்தார். கிஷோரின் அறை உள்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகத்துடன் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தார். இரவு 11.30 மணியளவில் கிஷோரின் அறைக்கதவை உடைத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அறையில் இருந்த ஜன்னலில் டவலால் தூக்கிட்ட நிலையில் கிஷோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிஷோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ ராஜா, பெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிஷோரின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதலாம் ஆண்டு மாணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
127,251
12/11/2019 3:45:19 PM
தமிழகம்
திருவள்ளூர் அருகே ரயில்வே மேம்பால கட்டும் பணி இழுபறி: வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் திட்ட காலம் முடிந்தும் ரயில்வே மேம்பால பணிகள் இழுபறியாகி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். திருவள்ளூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கடம்பத்தூரில், ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2016, ஜூனில் தொடங்கியது. அதில், நெடுஞ்சாலை பகுதியில் 25 பில்லர்கள், ரயில்வே பகுதியில் 4 பில்லர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. இந்நிலையில், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ரயில்வே கேட் வரை பில்லர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதேபோல், கசவநல்லாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் ரயில்வே கேட் வரை நிறைவடைந்துள்ளது. இருபுறமும் உள்ள ரயில்வே கேட்களின் இடையே உள்ள ரயில்வே பகுதியில் பாலத்துக்கான பில்லர் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘பாலம் பணிகள் துவங்கி 18 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவு செய்ய வேண்டிய காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெரும்பாலான பணிகள் இன்னும் நடைபெறவில்லை. நகரின் மையப்பகுதியில் பணி நடப்பதால், பல்வேறு வகையில் மக்களுக்கு அவதி ஏற்படுகிறது. எனவே, குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும், மற்ற பாலம் பணிகளை போலவே, ரயில்வே மேம்பால பணியும் இழுத்தடிக்கப்பட்டு வருவது, மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. பஸ்கள் வந்து செல்வதில் சிரமம், போக்குவரத்து நெரிசல், பயணிகளுக்கு தேவையற்ற அலைச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், கடம்பத்தூரில் மேம்பால பணியை விரைந்து முடிக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
127,252
12/11/2019 3:45:57 PM
தமிழகம்
போலீஸ்காரர்போல் பேசி நெட்டில் ஆபாச படம் பார்த்த கல்லூரி மாணவருக்கு மிரட்டல்: நண்பர் மீது 3 பிரிவில் வழக்கு
நாங்குநேரி: இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்த்த கல்லூரி மாணவரை போலீஸ் போல் பேசி மிரட்டி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் இன்டர்நெட் மூலம் ஆபாச படம் பார்த்த ஒருவரை போலீஸ்காரர் ஒருவர் மிரட்டி விசாரிப்பது போன்ற பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் சமூகவலைதளங்களில் பரவியது. இந்த பதிவை கேட்ட நெல்லை எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நெல்லையில் இதுபோன்ற குற்ற வழக்கு விசாரணை ஏதும் நடைபெறவில்லை என்றும், போலீசார் பேசுவது போல் ஏமாற்றி வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். மிரட்டப்பட்ட வாலிபர் மூன்றடைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பதும் அவரை மிரட்டியது அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் (27) என்பதும் தெரியவந்தது. மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் சபாபதி, கல்லூரி மாணவரிடம் நடத்திய விசாரணையில், ‘’கார்த்திக் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து தன்னிடம் போலீசார் பேசுவதுபோல பேசி மிரட்டி அவமானபடுத்தி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட கார்த்திக் மீது மாணவர் புகார் அளித்தார். இதன்படி கார்த்திக் மீது ஏமாற்றுதல், மிரட்டல், இணையதள குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
127,253
12/11/2019 3:46:44 PM
தமிழகம்
கணவனுடன் ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாயை தேடும் போலீசார்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் 10 மாத பெண்குழந்தை கிடந்தது. இக்குழந்தையை நாடோடிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எடுத்து வைத்திருந்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த செல்வி(55) என்பவர் தங்கள் குடும்பத்திற்கு குழந்தை இல்லை, எனவே குழந்தையை கொடுங்கள் என கேட்டுள்ளார். இதன்காரணமாக அவர்களிடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு திருப்பத்தூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர். இதன்பிறகு குழந்தைகள் நலக்குழு சேர்மேன் சிவ கலைவாணன்,மாவட்ட நன்னடத்தை அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். அப்போது, ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி தகவலில், ‘’ குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தைக்கு மீட்க தாய், தந்தை வந்துள்ளார்’ என்று தெரிவித்தனர். இதன்பிறகு கலெக்டர் சிவன்அருள் விசாரணை மேற்கொண்டதில், ஆலங்காயம் காவல் நிலையத்தில் குழந்தையின் தாத்தா, பாட்டி புகார் அளித்தது தெரிந்தது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டம், மேல் நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரியா(28) என்பவருக்கும், ஆலங்காயம் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன்(38) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனந்தனுக்கு தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிரிந்துவாழ்ந்த அவர்களை பெரியவர்கள் முன்னிலையில் சேர்த்துவைத்தனர். கடந்த 10 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.நேற்று முன்தினம் ஆனந்தனுக்கும், பிரியாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பிரியா, தனது 10 மாத பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்றார் என்று இதுவரை தெரியவில்லை. குழந்தை குறித்து செய்திதாள், சமூக வலைதளங்களில் போட்டோவுடன் செய்தி வெளியானதால் இதைப்பார்த்த பிரியாவின் தந்தை குழந்தையும், தாயும் காணவில்லை என்று ஆலங்காயம் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவை இன்று 2வது நாளாக தேடி வருகின்றனர். இதனிடையே எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவன காப்பகத்தில் உள்ள குழந்தையை தங்களிடம் தருமாறு குழந்தையின் தாத்தா, பாட்டி கோரிக்கை வைத்தனர். ஆனால் கலெக்டர் உத்தரவுப்படி விசாரணை நடத்திய பிறகுதான் குழந்தையை தரமுடியும் என்று தெரிவித்தனர்.
127,254
12/11/2019 3:47:20 PM
தமிழகம்
சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி: துணிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் துணிக்கடை அதிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் கடந்த வாரம் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் மாணவிகள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது உரிமையாளர் சிவசுப்பிரமணியன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘’சிறையில் உள்ள சிவசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல், ‘’சம்பவ பகுதியில் போதிய அஸ்திவாரம் இல்லாமல் 20 அடி வரை சுவர் எழுப்பியது தவறு. அஜாக்கிரதையால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது, உடல்நிலை மோசமாக உள்ளது என்றால் அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது, அதனால் அவரை அங்ேகயே அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், துணிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
127,255
12/11/2019 3:47:52 PM
தமிழகம்
இந்தாண்டு முதல் வழங்க முடிவு: அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு கலர்புல் சீருடை
வேலூர்: அரசின் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்தாண்டு முதல் வண்ண சீருடை வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த குழந்தைகளுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வருவதை ஊக்கப்படுத்தும் விதமாக வண்ண சீருடைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதல்கட்டமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 243 ஒன்றியங்களில் 6.25 லட்சம் ஆண் குழந்தைகள், 5.98 லட்சம் பெண் குழந்தைகள் என மொத்தம் 12.23 லட்சம் குழந்தைகளுக்கு இந்த ஆண்டு முதல் வண்ண சீருடைகள் இரண்டு செட்கள் வழங்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு டிரவுசரும், சட்டையும், பெண் குழந்தைகளுக்கு கவுனும் வழங்கப்படும். இதற்காக ₹16.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோர வரும் 30ம்தேதி கடைசி நாள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதங்கள் முதல் கட்டமாக 12.23 லட்சம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
127,256
12/11/2019 3:48:25 PM
தமிழகம்
விவசாயம் செழிக்கவும் நோயின்றி வாழவும் மண்ணை மலையாக்கி வழிபாடு: மேலூர் அருகே விநோதம்
மேலூர்: கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கி வழிபடும் விழா மதுரை அருகே மேலூரில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் உள்ள பெருமாள்மலை முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அப்போது கோயிலை ஒட்டியுள்ள சேங்கை எனப்படும் ஓடையில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அருகில் போட்டு இறைவனை வழிபாடு செய்வார்கள். அத்துடன் மிளகு, உப்பும் அந்த மண்ணில் போடப்படும். இவ்வாறு செய்தால் விவசாயம் செழிப்பதுடன், நோய் நொடியின்றி வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை.இதன்படி நேற்று கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், கைப்பிடி மண்ணை எடுத்துப்போட்டு இறைவனை வழிபட்டனர். இரவில் இங்குள்ள பெருமாள் மலை மீது தீபம் ஏற்றியும் ஏராளமானோர் வழிபட்டனர். இதே போல் மேலவளவு கருப்பு கோயிலில் மிகவும் செங்குத்தான மலை மீது ஏறி, அங்கிருந்து கீழ் நோக்கி கற்களை வீசி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஆட்டுக்குளம் பெருமாள்மலையில் பக்தர்களின் வழிபாடு நேற்று காலை துவங்கி, இரவு வரை நடந்தது. நேற்று இரவு இம்மலையில் உள்ள பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. உலகநாதபுரம் சக்திவேல் முருகன் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலூரைச் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள அனைத்து முருகன் கோயில்களின் முன்பும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
127,257
12/11/2019 3:49:01 PM
குற்றம்
கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பல்லடம் அருகே பரபரப்பு
பொங்கலூர்: பல்லடம் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறாக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஆனந்தகுமார் (26). இவர் தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் ஆனந்தகுமார் வீட்டு கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த தனது கார் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. உடனடியாக தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ‘’ஆனந்தகுமார் எந்த கட்சியிலும் இல்லை. சொத்து தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது இப்படி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ பற்ற வைத்து கார் மீது வீசி உள்ளனர். கார் அருகில் கிடந்த தடயங்களை சேகரித்து விசாரித்து வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
127,258
12/11/2019 3:49:36 PM
தமிழகம்
ரூ60க்கு வெங்காயம் விற்பனை: முண்டியடித்த இல்லத்தரசிகள்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வாரச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டதால் பெண்கள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடக்கும் வாரச்சந்தைக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருகின்றனர். மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை அதிகரித்துவந்ததால் மக்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில், நேற்று சத்தியமங்கலம் வாரச்சந்தையில் சில கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பெண்கள் குவிந்தனர். வெங்காயத்தை வாங்க அவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
127,259
12/11/2019 3:50:11 PM
தமிழகம்
விளாத்திகுளம் ஜிஹெச்சில் முதல் திருநங்கை டூட்டியில் சேர்ந்தார்
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன் மடம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்றவரான ரத்தினபாண்டி, தேன்மொழியின் மகன் அன்புராஜ். பள்ளிப் பருவத்தில் 13வது வயதில் அன்புராஜின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறியதால் தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார். சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்ததும் காவல் கிணறு ராஜா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் படித்து முடித்தார். இதன்பிறகு தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுகள் செவிலியராக பணியாற்றினார். அப்போது மேலாண்மையில் எம்பிஏ படிப்பை தொலைதூரக் கல்விமூலம் இந்த ஆண்டு நிறைவு செய்தார். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் அன்பு ரூபிக்கு செவிலியர் பணிக்கான நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் அரசு செவிலியராக பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்ற அன்பு ரூபி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே தனக்கு பணி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
127,260
12/11/2019 3:50:50 PM
தமிழகம்
பாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள்:வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்
மயிலாடுதுறை: சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளி வழியாக தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கரநல்லூர் கிராம சுடுகாட்டுக்கு போதிய பாதை வசதி கிடையாது. இதனால் சடலங்களை வயல்வெளி வழியாக கொண்டு சென்று மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அவையாம்பாள்(60)  நேற்றுமுன்தினம் இறந்தார். அவரது உடலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால் சுடுகாட்டிற்கான பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக சுமார் 150மீ தூரத்திற்கு நட்ட வயலில் சேற்றில் இறங்கி சென்றனர். மழைக்காலத்திலும் விவசாயம் பயிர்செய்துள்ள காலத்திலும் இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல படாதபாடு படுகின்றனர்.‘’சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தித்தர வேண்டும்’’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
127,261
12/11/2019 3:52:54 PM
விளையாட்டு
ரஷ்யா மீதான தடையை தொடர்ந்து இந்தியாவில் 150 வீரர்களுக்கு சிக்கல்: ஊக்க மருந்து தடுப்பு தூதராக நடிகர் நியமனம்
புதுடெல்லி: உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் மூலம் ரஷ்யா நாட்டிற்கு நான்கு ஆண்டுகள் அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடத் தடை விதித்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேலும் அந்த அமைப்பு அனைத்து நாடுகளின் வீரர்களுடைய ஊக்க மருந்து சோதனை விவரங்களை தங்களிடம் ஒப்படைக்கும் படியும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பாடி பில்டிங் பிரிவைச் சேர்ந்த வீரர்களே ஏராளம். இவர்கள், சர்வதேச போட்டிகளில் தகுதி பெறுவார்களா என்ற அச்சமும் நிலவி வருகிறது. அதனால், வீரர்களின் ஊக்கமருந்து ெதாடர்பான பரிேசாதனைகள் தீவிரமாக நடக்கின்றன. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் தொடருக்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில் மீதமுள்ள வீரர்களின் ஊக்க மருந்து பரிசோதனைகள் நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதராக பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியை அந்த அமைப்பு நியமித்துள்ளது.
127,262
12/11/2019 3:55:54 PM
விளையாட்டு
இந்திய ரிஷப் பண்ட் முதல் பாக். சர்பராஸ் அகமது வரை இந்தாண்டின் மோசமான டெஸ்ட் ‘லெவன்’ யார்?... சர்வதேச கிரிக்கெட் கேரியரை தொலைத்த பரிதாபம்
லண்டன்: உலக கோப்பை போட்டிக்கு பின்னர், ஐசிசி-யை நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட்டில் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, முதல் சர்வதேச இளஞ்சிவப்பு பந்து சோதனை இந்திய மண்ணில் ஈடன் கார்டனில் அறிமுகமானது, பிக் பாஷ் லீக் பல சூப்பர் ஓவர் முறையை ஏற்றுக்கொண்டது. மூன்றாவது அம்பயர் நோ-பால் கொடுக்கும் திட்டத்தை சமீபத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் செயல்படுத்தப்பட்டது. மாற்றங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகவும், இருந்து வருகிறது. ஆட்டங்களின் புதிய வடிவத்திற்கு ஏற்ப வீரர்களும் ஆடி வருகின்றனர். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், அனைத்து நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும், தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும் பெருமை பெறவும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தன. பல புதிய முகங்கள் உலக அரங்கிற்கு வந்திருந்தும், சிலர் சிறப்பாக விளையாடி தங்களை தக்க வைத்துள்ளனர். இந்த 2019ம் ஆண்டை பொறுத்தவரை சில வீரர்கள் பெரிய தோல்வியுடன், அவர்களது கிரிக்கெட் கேரியரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில், மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 11 டெஸ்ட் வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ‘தி கிரிக்கெட் லாங்’ என்ற இணையதளம் அவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது. இமாம் உல் ஹக்:பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரரான இவர், முழுநேர டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஆடவில்லை. 2018ல் ஒரு நம்பிக்கைக்குரிய வீரராக அறிமுகமான பிறகு, இமாம் தன்னை அணியில் தக்கவைத்துக் கொள்ளாமல் எல்லா வாய்ப்புகளையும் வீணடித்தார். அவர் இரண்டு ஆண்டுகளில் ஒரு தொடக்க வீரராக ஒரு சதம் கூட அடித்ததில்லை. 2018ல் இரண்டு ஆறுதல் அரைசதங்களை அடித்தார். ஆறு இன்னிங்ஸ்களில் 15.7 சராசரியாக 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தினேஷ் சண்டிமால்: லோகுகே தினேஷ் சண்டிமல், இலங்கையின் ஒரு நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்; அவர் கையுறைகளை அரிதாகவே அணிந்து விளையாடுவார். இலங்கை அணியின் முதல் டி/என் போட்டியில் கேப்டனாக இருந்தார். 2018ல் பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு சண்டிமால் சிறப்பாக விளையாடவில்லை. 2019ம் ஆண்டு அவருக்கு சாதனை குறைந்த சாதனை ஆண்டாக இருப்பதை காணலாம். அவர் விளையாடிய 4 இன்னிங்சில், 6.0 சராசரியாக 46 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளார். ஷாய் ஹோப்: 26 வயதான இவர், கிரிக்கெட்டின் புத்திசாலித்தனமான பிராண்டிற்கு பெயர் பெற்றவர். சிக்கலான நேரங்களில் அணிக்கு பலமாக இருந்து ஆடியுள்ளார். மற்ற மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களை விட சிறப்பான செயல்திறனை வௌிப்படுத்துவார். ஆனால் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற நிலையில், 9 இன்னிங்ஸ்களில் 50 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த ஆண்டு 19.8 சராசரியாக 158 ரன்கள் குவித்துள்ளார்.சிம்ரான் ஹெட்மெய்ர்: இந்த பட்டியலில் உள்ள மற்றொரு மேற்கிந்திய தீவுகள் வீரரான இவர், நடுத்தர வரிசை பேட்ஸ்மேன். பல்வேறு அணிகளுக்கு எதிரான போட்டிகளில், மேற்கிந்திய தீவு அணிக்காக சிறப்பாக பங்களிப்பு தரவில்லை. இந்த ஆண்டு 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சிம்ரான் 244 ரன்கள் எடுத்துள்ளார்.சர்பராஸ் அகமது: இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனின் மோசமான கட்டமாகும். அணியின் மோசமான செயல்திறன் மற்றும் சில இனவெறி கருத்துக்கள் காரணமாக அவர் கேப்டனாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியில் கூட அவர் இடம்பெறவில்லை. சுருக்கமாக, சர்பராஸ் ஒரு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக தோல்வியடைந்துள்ளார். நான்கு இன்னிங்ஸ்களில் சர்பராஸ் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரிஷப் பண்ட்: அதிரடி வீரர் என்ற பெயரில் தான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். தோனி கிரிக்கெட்டில் தன் கடைசி காலத்தில் இருந்த நிலையில், 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரிஷப் பண்ட் டி20 மற்றும் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றார். பல வாய்ப்புகளை பெற்றாலும் அவரால் தொடர்ந்து ரன் குவிக்க முடியும் என நிரூபிக்க முடியவில்லை. சில போட்டிகளில் ரன் குவிக்கும் அவர் பல போட்டிகளில் தவறான ஷாட் அடித்து ஆட்டமிழந்து வந்தார். அது தான் அவர் மீது பெரிய புகாராக உள்ளது. இந்த ஆண்டு 300 ரன்கள் கூட எடுக்கவில்லை. இஹ்ஸனுல்லா: ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரரான இவர், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், 22 வயதான இவர், தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானதிலிருந்து மோசமாக தோல்வியடைந்தார். ஏற்கனவே போராடி வரும் ஆப்கான் அணிக்கு அவரின் பங்களிப்பு குறைவாக உள்ளது. ஆறு இன்னிங்ஸில் இஹ்ஸானுல்லா பேட் செய்ததில், அவர் 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.ஆதில் ரஷீத்: வெள்ளை பந்தைக் கொண்டு வெற்றிகரமாக செயல்படும் லெக் ஸ்பின்னராக இருந்தார்; ஆனால் சிவப்பு நிற பந்தில் தனது துல்லியத்தை மேம்படுத்தவில்லை. கடைசியாக ஜனவரி மாதம் ஒரு டெஸ்ட் விளையாடியுள்ளார். அதன்பின் அணியில் சேர்க்கப்படவில்லை. மற்ற இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்கள் வருவதால், அதில் தனது இடத்தைப் பிடிக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும். அவர் வீசிய 26 ஓவர்களில், அதிக ரன்களைக் கொடுத்து விக்கெட் இல்லாமல் முடித்துள்ளார்.டேன் பைட்: தென்னாப்பிரிக்க நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த முடியாத வீரராக ஒரு வருடத்தை முடித்துவிட்டார். ஒரு ஓவருக்கு 5.74 ரன்கள் என்று கொடுத்துள்ளார். அவர் இந்த ஆண்டு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அணியில் இந்தாண்டு பெரிய அளவில் சோபிக்கவில்லை. முஸ்தாபிசுர் ரஹ்மான்: பங்களாதேஷ் அணி இந்த வேகப்பந்து வீச்சாளரை அதிகம் நம்பியிருக்க வேண்டி உள்ளது. ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டார். எல்லா நிலைகளிலும் அவரது பங்களிப்பு குறைந்துவிட்டது. இப்போது அவரை தேர்வுக் குழுவும் கைவிட்டுவிட்டது. ரஹ்மானை பொறுத்தவரை இந்தாண்டு குறிப்பிடும் வகையிலான சாதனைகளை படைக்கவில்லை. தில்ருவான் பெரேரா: சிறப்பான பந்துகளை வீசிய இவர், முக்கியமான சூழ்நிலைகளில் அணிக்கு பயன்படவில்லை. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில், தில்ருவான் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கவில்லை. இலங்கையில் 100 விக்கெட்டுகளை மிக விரைவாக வீழ்த்தி இலங்கை பந்து வீச்சாளர் பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆண்டு 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியது அவரது சாதனை பட்டியலில் உள்ளது.
127,263
12/12/2019 2:19:12 PM
குற்றம்
உள்ளாட்சிப் பதவிகளை பிடிக்க தொடரும் கேலிக்கூத்து: ஏலத்தில் ஒருவர் படுகொலை
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவிகள் பல மாவட்டங்களில் ஏலம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கால், ஏலத்தை எதிர்த்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.ஏலம் எடுப்பது தொடர்ந்து நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. பஞ்சாயத்து தலைவர் பதவிகளை பல மாவட்டங்களில் ஏலம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. பணம் உள்ளவர்கள், ஆளும் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து பதவிகளை ஏலம் எடுத்து வருகின்றனர்.திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அரசலூர் கிராமத்தில் 4வது வார்டு உறுப்பினர் பதவி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைகுளம் ஊராட்சி தலைவர் பதவி, பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவி, பேரையூர் ஊராட்சி தலைவர் பதவி என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி ஏலம் மூலம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுஒன்றியத்திலும் ஊராட்சி தலைவர் பதவி ஏலத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது திருமங்கலக்கோட்டை கீழையூர் பஞ்சாயத்து. தலைவர் பதவிக்கான போட்டி கடுமையாக இருந்தது. இந்நிலையில் இந்த ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்வதற்கு அந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூட்டம் சிவன் கோவிலில் நடந்தது. திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி தலைவராக போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்வது என்றும், இதற்காக பதவியை ஏலம் விடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ரூ.32 லட்சத்திற்கு தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பிஞ்சனூர் ஊராட்சியில் 910 ஓட்டுகள் உள்ளன. அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 2017 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது ஊர் கிராமம் சார்பில் ஏலம் விடப்படுள்ளது.இந்த ஏலம் ரூ. 16 லட்சம் வரை சென்றுள்ளது. இதனை அக்கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் தருவதாக கிராம கூட்டத்தில் கூறி முன்பணமாக ரூ. 8 லட்சம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அந்த முன் பணம் அப்படியே இருப்பு வைக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் பிஞ்சனூர் கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஊர் கூட்டம் நடைபெற்றுள்ளது இதில் ஏற்கனவே போட்டியிட்ட சேகரை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானம் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறுகையில் ஏற்கனவே 2017ம் ஆண்டு ஏலம் விடப்பட்டு தற்போது அதே நடைமுறையை எங்கள் ஊரில் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய 5 ஒன்றியங்களுக்கு 27ம் தேதியும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், திருச்சுழி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களுக்கு 30ம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்டது கோட்டைபட்டி கிராமம். இங்கு 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வெம்பக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு சமூகத்தினர் கோட்டைப்பட்டியில் உள்ள சமுதாய கலையரங்கில் ஊர் கூட்டம் நடத்தியுள்ளனர். இதே ஊரை சேர்ந்தவர் சதீஷ் குமார் (29). பட்டதாரி. தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதற்கு ஊர் கூட்டத்தில் சதீஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சதீஷ்குமாருக்கும், சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிலர், சதீஷ் குமாரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.தகவலறிந்து வந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து இரவே அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் ஏராளமானோர் திரண்டனர். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கோட்டைபட்டியை சேர்ந்த ராமசுப்பு (46), முத்துராஜ் (36), சுப்புராம் (50), செல்வராஜ் (44), சுப்புராஜ் (22),  கணேஷ் (23) மற்றும் ராம்குமார் (24) ஆகிய 7 பேர் இன்று காலை ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த ஏலத்தை தட்டி கேட்ட வாலிபர் அடித்து படுகொலை செய்யப்பட்டது சாத்தூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த கோட்டைப்பட்டி கிராமத்திலும், சிவகாசி அரசு மருத்துவமனையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
127,264
12/12/2019 2:21:11 PM
குற்றம்
தமிழகத்தில் முதல் முறையாக ஆபாச படம் பார்த்த திருச்சி வாலிபர் கைது
திருச்சி: சமூக வலை தளங்களில் ஆபாச படம் பார்த்த திருச்சி மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். முதல் முறையாக தமிழகத்தில் ஆபாச படம் பார்த்தவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது, பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடைமீறி செயல்படுபவர்களை தமிழக சைபர் கிரைம் போலீசார் கண்காணித்தனர். இவ்வாறு செயல்பட்ட சுமார் 3000 பேர் கொண்ட பட்டியலை போலீசார் தயாரித்தனர். அவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பலர் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் ஒருவர் பிடிபட்டுள்ளார். பாலக்கரையை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்ற அந்த நபர், குழந்தைகளின் ஆபாச படங்களை நிலவன், ஆதவன் என்ற போலி பெயர்களில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மெக்கானிக் வேலை செய்யும், அவரை போலீசார் இன்று காலை கைது செய்து பாலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். கிறிஸ்டோபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனால் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
127,265
12/12/2019 2:23:24 PM
தமிழகம்
தி.மலையில் தீபத்திருவிழா நிறைவையடுத்து அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவாக அண்ணாமலையார் இன்று கிரிவலம் வந்தார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகாதீப பெருவிழா கடந்த 1ம்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி அன்று மாலை 6 மணியளவில் அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சிதருவது வழக்கம். அதன்படி 2வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் தீபத்திருவிழா நிறைவடைந்ததும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, சுவாமி கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது. இதையொட்டி இன்று காலை கோயிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது. அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அஷ்டலிங்க கோயில்களிலும், அடி அண்ணாமலை கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆண்டுக்கு 2 முறைவழக்கமாக அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கிரிவலம் வருவது வழக்கம். அதாவது, தீப திருவிழாவுக்கு பிறகும், தைப்பொங்கலையொட்டி மாட்டு பொங்கலன்று திருவூடல் நடக்கும். இதையடுத்து மறுநாள் காணும் பொங்கலன்றும் சுவாமி கிரிவலம் வருவார்.தெப்பல் உற்சவம்தீபத்திருவிழா உற்சவம் முடிந்ததும், 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
127,266
12/12/2019 2:26:06 PM
தமிழகம்
ஏலம்... ஏலம்... ஏலம்... பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.32 லட்சம்
ஒரத்தநாடு: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் வரும் 27, 30 தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஊராட்சி தலைவர் பதவிகளை ஏலத்தில் விட்டு முடிவு செய்யும் சம்பவங்களும் நடந்து வருகிறது.திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அரசலூர் கிராமத்தில் 4வது வார்டு உறுப்பினர் பதவிஅதிக தொகை கொடுப்பவர்களுக்கு நிர்ணயிப்பது. வேறு யாரும் போட்டியிடாமல் நிறுத்திக்கொள்வது என்று அறிவிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படுபவர் கோயிலுக்கு நன்கொடை தரவேண்டும் என்று பேசப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர், ரூ.2 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைகுளம் ஊராட்சி தலைவர் பதவி ரூ.25.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தும் இம்மானுவேல் என்பவர், தற்போது ஏலம் எடுத்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவி ரூ.22.5 லட்சத்துக்கும், இன்னொருவர் ரூ.25 லட்சத்துக்கும் ஏலம் கேட்டார். உடன்பாடு ஏதும் ஏற்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல பேரையூர் ஊராட்சி தலைவர் பதவி ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாகவும் உடன்பாடு ஏற்படாததால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோல தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி ஏலம் மூலம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுஒன்றியத்திலும் ஊராட்சி தலைவர் பதவி ஏலத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்கு உட்பட்டது திருமங்கலக்கோட்டை கீழையூர் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் தலைவர் பதவிக்கான போட்டி கடுமையாக இருந்தது. இந்நிலையில் இந்த ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்வதற்கு அந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூட்டம் சிவன் கோவிலில் நடந்தது.திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி தலைவராக போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்வது என்றும், இதற்காக பதவியை ஏலம் விடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 3 பேர் தலைவர் பதவி ஏலத்தில் பங்கேற்றனர். கடைசியாக தொழிலதிபர் ஒருவர் ரூ.32 லட்சத்திற்கு தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக அவர் ரூ.2 லட்சத்தை உடனடியாக ஊர் கூட்டத்தில் செலுத்தினார். மீதமுள்ள ரூ.30 லட்சத்தை வெற்றி பெற்றதும் செலுத்துவதாக முடிவானது.
127,267
12/12/2019 2:30:46 PM
தமிழகம்
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
தண்டையார்பேட்டை: திமுக தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இன்று காலை  ஆய்வு செய்தார். திருவிக நகர்  பல்லவன் சாலையில் உள்ள  கால்நடை மருத்துவமனை, ₹10 லட்சத்தில்  மேம்படுத்தும் பணிக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர், கொளத்தூர் நேர்மை நகரில் தொகுதி நிதியில் இருந்து ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நேர்மைநகரில்  கட்டப்பட்டு வரும்  துணைமின் நிலைய பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இதையடுத்து, 64வது வார்டுக்குட்பட்ட வினோபா நகர், 65வது வார்டுக்குட்பட்ட இந்திராநகர் ஆகிய பகுதிகளில் போர்வெல் அமைக்கும் பணி மற்றும் 66வது வார்டுக்குட்பட்ட  கார்த்திகேயன் சாலையில் தொகுதி நிதியில் இருந்து ₹10 லட்சம் மதிப்பீட்டில்  புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.  கொளத்தூர் தொகுதி முழுவதும் நடந்து வரும் பணிகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.இதைத்தொடர்ந்து, பேப்பர் மில் சாலையில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்  மணிவண்ணனின் தந்தை சுப்பிரமணி மறைந்ததால், அவரது குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார். சாந்திநகரில் பூமிநாதன், ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த  மோகனின் தந்தை ஆகியோரது மறைவுக்கும் துக்கம் விசாரித்தார். வெற்றிநகர், வேணுகோபால் நகரில் உள்ள தேவேந்திரன் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு எம்எல்ஏ, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், எம்எல்ஏக்கள்  ரங்கநாதன்,  தாயகம் கவி, மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர்,  பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜன் மற்றும் திமுகவினர், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துநடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து:எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நல்ல உடல் மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
127,268
12/12/2019 2:33:36 PM
தமிழகம்
ரஜினிகாந்த் 70வது பிறந்த நாள்: கமல்-நயன்தாரா திரையுலகினர் வாழ்த்து
சென்னை: ரஜினிகாந்த் 70 வது பிறந்தநாளையொட்டி அவருக்கு கமல்ஹாசன், நயன்தாரா மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 70 வது பிறந்த நாள். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் நற்பணிகள் வழங்கியும், கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ரஜினிக்கு திரையுலகினர் பலரும் இணைய தள டிவிட்டர் பக்கம் மூலம்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து கூறி உள்ளார். அதில்.’அன்பர் நண்பர் ரஜினிகாந்த்துக்கு நல் ஆரோக்கியமும், வெ்ற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்’ என குறிப்பிட்டிருக்கிறார்.நடிகர் பிரபு: சூப்பர் ஸ்டார் ரஜினிசாருக்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஏ.ஆர்.முருகதாஸ்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினிசார். வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஆரோக்கியம் சந்தோஷமுடனும் வாழ வேண்டும். எங்களது நிலையான உத்வேகம் நீங்கள். உங்களுடைய பயணத்தில் எனக்கும் ஒரு சிறு பங்கு கிடைத்ததற்கு சந்தோஷம்,நயன்தாரா: எனது உத்வேகம், எனது குரு, ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.லதாரஜினிகாந்த்: என் வாழ்க்கை தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சவுந்தர்யா(மகள்): எங்களுடைய வாழ்க்கை எங்கள் தந்தை, என்னுடைய எல்லாமுமானவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இயக்குனர் வெங்கட் பிரபு: சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இயக்குனர் அட்லி: பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.இசை அமைப்பாளர் அனிருத்: உலகில் நான் அதிகம் நேசிக்கும் ஒரே நபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்றும் இன்றும் என்றும் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ரஜினிக்கு வாழ்த்து கூறி உள்ளனர். ரஜினிக்கு ஜப்பான் நாட்டில் உள்ள ரசிகர்கள் கேக் வெட்டி ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல ரசிகர்கள் பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஒட்டுனராக காக்கி சட்டை அணிந்ததுபோல் காக்கி சட்டை அணிந்து நடனம் ஆடினார்கள். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீடு முன் இன்று காலை ரசிகர்கள் திரண்டு பிறந்த நாள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
127,269
12/12/2019 2:35:39 PM
தமிழகம்
மறைமலைநகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி
செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த செங்குன்றம்  அலர்மேல்  மங்காபுரத்தை சேர்ந்தவர் சித்ரா (35) இவர், நேற்று முன்தினம் வீட்டில்  தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகில் நாய்கள் குரைக்கும்  சப்தம் கேட்டது. எழுந்துவந்து பார்த்தார். சிறுத்தைபுலி  ஓடுவதை  பார்த்துள்ளார். அவரது வீட்டின் அருகில் 2  நாய்களின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் இறந்து  கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே வனத்துறைக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது.  செங்கல்பட்டு வனசரகர் பாண்டுரங்கன் மற்றும்  வனகாவலர்கள் நேற்று விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பின்பு  சென்னையில் இருந்து  நவீன கண்காணிப்பு கேமரா வரவழைக்கப்பட்டு அலர்மேல்மங்காபுரம் வனப்பகுதி குடியிருப்பு அருகே பொருத்தப்பட்டது.இதுகுறித்து  வனத்துறையினர் கூறுகையில், ஆண் சிறுத்தை புலி இந்த காட்டு  பகுதியில் கடந்த 5 வருடங்களாக இருந்து வருகிறது. வண்டலூர் முதல்  செங்கல்பட்டு வரை காட்டுப்பகுதியில் அடிக்கடி தண்ணீர் குடிக்க அஞ்சூர்,  தென்மேல் பாக்கம், திருவடி சூலம், திருமணி ஆகிய பகுதிகளில் வந்து செல்கிறது. இது சிறுத்தை புலியின் கால்தடம். அழுகிய இறந்த உடலை மட்டுமே விரும்பி சாப்பிடும். குறிப்பாக நாய் பிடித்தமான உணவாகும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  குடியிருப்பு பகுதி அருகே காட்டில் நவீன கண்காணிப்பு கேமரா  பொருத்தப்பட்டுள்ளது. கேமராவில் விலங்கின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டால்தான் எந்த வகையான விலங்கு என்பது தெரியவரும். இந்த பகுதி வனத்துறையினர் கண்காணிப்பில் இருப்பதால்  பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
127,270
12/12/2019 2:38:05 PM
தமிழகம்
கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த விவசாயி
கரூர்: அகல ரயில்பாதைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுபடி ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய விவசாயி அமீனாவுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர்-சேலம் அகல ரயில்பாதை அமைப்பதற்காக 1999ம் ஆண்டு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு வாங்கல் சுப்பிரமணியன் உள்ளிட்டோரின் இரண்டரை ஏக்கர் நிலம் ரயில்வேதுறை எடுத்துக்கொண்டு ரூ.1.67லட்சம் இழப்பீடு கொடுக்கப்பட்டது. இந்த தொகை குறைவாக இருப்பதாக கூறி கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். 2017ம் ஆண்டு கரூர் கூடுதல் சார்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ரூ.1 கோடியே 40 லட்சம் தொகை வழங்கவில்லை. இதனையடுத்து நிறைவேற்று மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.அதன்படி, மனுதாரர் சுப்பிரமணியன், கோர்ட் அமீனா, மற்றும் அவரது வக்கீல் ஆகியோருடன் நேற்று ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்தார். இதையறிந்த ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் வக்கீல் கூறுகையில், ‘‘ஏற்கனவே ஒருமுறை ஜப்தி உத்தரவுடன் வந்தோம், இன்று 2வது முறையாக வந்துள்ளோம். டிசம்பர் இறுதிக்குள் இழப்பீடு தருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து திரும்பிசெல்கிறோம்’’ என்றார்.
127,271
12/12/2019 2:40:17 PM
தமிழகம்
இருமாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை
சென்னை: இருமாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகள் மத்தியிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழகம் மற்றும் கேரளா இடையே பல்வேறு நதிநீர் பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக, திருவாணி அணை, பரம்பிகுளம்-ஆழியாறு, ஆணைமலை ஆறு, புன்னம்புலா ஆகிய ஆறுகளின் நீர் பங்கீட்டில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகின்றது. இதுதவிர முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக இருமாநிலங்களுக்கு இடையே தீர்வு எட்டியபாடில்லை. இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதால் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று இருமாநில விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேச முன்வர வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதன்பேரில், கடந்த செப்டம்பர் 25ம் தேதி இரு மாநில முதல்வர்கள் திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினர். அப்போது, பி.ஏ.பி திட்டம் ஒப்பந்தம் புதுப்பிப்பு, ஆணைமலை ஆறு, நல்லாறு அணைதிட்டம் மற்றும் மனக்கடவு நீர் பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்தும் பாண்டியாறு, புன்னம்புலா ஆறு திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதற்காக தொடர்ந்து இரு மாநிலங்களில் இருந்தும் இரண்டு குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இருமாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகள் சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த குழுவில், தமிழக அரசு சார்பில் பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம் குறித்த குழுவில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், காவேரி தொழில்நுட்ப குழுமத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற சிறப்பு தலைமை பொறியாளர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.இதேபோல், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கான குழுவில், க.மணிவாசன், ஆர்.சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஈ.தமிழரசன், கண்காணிப்பு பொறியாளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். கேரள அரசு சார்பிலும் கேரள அரசின் நீர்வளத்துறை செயலாளர் அசோக் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டன. இந்த இருமாநில குழுக்களும் இன்று முதல்கட்டமாக பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தன.