news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
127,070
12/4/2019 3:25:44 PM
விளையாட்டு
15 ஆண்டாக நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கு: மாஜி ஜூடோ சாம்பியனுக்கு சிறை...ஆஸ்திரியா நீதிமன்றம் அதிரடி
வியன்னா: ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் சீசன்பேச்சர் (59). கடந்த 1984, 1988ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது  நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989ல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப்  என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1993ல் ஜூடோ விளையாட்டின் போது, ஒருவரைத் தாக்கியதால் அவர் அப்பதிவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, பீட்டர் சீசன்பேச்சர்  1999 - 2004ம் ஆண்டு காலகட்டங்களில் இவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வியன்னாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம்  செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்  தொடர்ச்சியாக பீட்டர் சீசன்பேச்சர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தற்போது நிரூபணம் ஆனதால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து  ஆஸ்திரிய நீதிமன்றம் பீட்டர் சீசன்பேச்சருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், சீசன்பேச்சர் குற்றச்சாட்டுகளை  தொடர்ந்து மறுத்து வருகிறார். அவரது ஆரம்ப வழக்கு விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பல  ஆண்டுகளாக தனது விசாரணையை தாமதப்படுத்திய நிலையில், தற்போது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
127,071
12/4/2019 3:26:20 PM
விளையாட்டு
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி: தென்னாப்பிரிக்காவில் ஜன. 17ம் தேதி தொடக்கம்...இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு
மும்பை: தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதற்காக மும்பையில் கூடிய அகில இந்திய  ஜூனியர் தேர்வுக் குழு 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தது. வரும் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறவுள்ள  இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு உத்தரபிரதேச இளம் வீரர் பிரியம் கார்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா தற்போதைய நடப்பு  சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 16 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்கின்றன. இந்திய அணியில், பிரியம்  கார்க் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்ஸேனா, துருவ் சந்த் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஷாஸ்வத் ரவாத், திவ்யான்ஷ்  ஜோஷி, சுபங் ஹெக்டே, ரவி பிஷனோய், ஆகாஷ் சிங், காா்த்திக் தியாகி, அதர்வா அன்கோல்கர், குமார் குஷாக்ரா, சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர்  பட்டீல் ஆகிேயார் இடம்பெற்றுள்ளனர். ஐதராபாத் வீரர் ரக்ஷன் தென்னாப்பிரிக்க தொடர், நான்கு நாடுகள் போட்டியில் கூடுதலாக இடம் பெற்றுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.
127,072
12/4/2019 3:27:02 PM
விளையாட்டு
பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா
காட்மாண்டு: நேபாள நாட்டின் காட்மாண்டுவில் நடைபெறும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்  போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் அனைத்து பதக்கங்களையும் வென்றனர். சிறந்த மதிப்பெண்ணுடன் மெஹுலி கோஷ் தங்கம்  வென்று உலக சாதனை படைத்தார். இருப்பினும், மெஹுலியின் முயற்சி உலக சாதனையாக கருதப்படாது. ஏனெனில் தெற்காசிய விளையாட்டு  போட்டி முடிவுகள் சர்வதேச அமைப்பால் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) அங்கீகரிக்கப்படவில்லை.இறுதிப் போட்டியில் 19 வயதான மெஹுலி 253.3 மதிப்பெண்களுடன் தங்கம் வென்றார். இது தற்போதைய உலக சாதனையான 252.9ஐ விட 0.4  அதிகமாகும். இது மற்றொரு இந்தியரான அபுர்வ் சண்டேலாவின் பெயரில் உள்ளது. யங்கா சதங்கி 250.8 மதிப்பெண்களுடன் வெள்ளி வென்றார்.  ஸ்ரேயா அகர்வால் (227.2) சடோபாடோ ஷூட்டிங் ரேஞ்சில் இந்தியர்கள் 1-2-3 வெண்கலத்தை வென்றனர். கடந்த 2018ல் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக  சாம்பியன்ஷிப் போட்டியில் மெஹுலி 10 மீ ஏர் ரைபிள் வெள்ளி வென்றார். அவர் 2018 காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கிலும்  வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், நேற்றிரவுடன் முடிந்த போட்டியில் 44 பதக்கத்துடன் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதில், 19 தங்கம், 16 வெள்ளி, 9  வெண்கலம் பதக்கங்களை வென்றது. 50 பதக்கத்துடன் இலங்கை முதலிடத்திலும், 46 பதக்கத்துடன் நேபாளம் இரண்டாம் இடத்திலும் உள்ளது  குறிப்பிடத்தக்கது.
127,073
12/4/2019 3:27:38 PM
விளையாட்டு
டிவில்லியர்ஸ், கோஹ்லி அடித்த பந்தை காணவில்லை எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க: ‘நாசா’விடம் பெங்களூரு அணி கோரிக்கை
பெங்களூரு: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகளில் இந்திய கிரிக்கெட்  கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. அந்த வகையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  இதுவரை பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பை வென்றதேயில்லை. இந்நிலையில், இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலத்தின் விக்ரம்  லேண்டரை மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில் அமெரிக்காவின் ‘நாசா’ கண்டுபிடித்தது. நாடு முழுவதும் சண்முக சுப்ரமணியன் மற்றும் நாசாவை மக்கள் பாராட்டி வரும்நிலையில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம்  நாசாவிடம் வேடிக்கையான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. இதுதொடர்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி நிர்வாகம்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா குழுவினரே... அப்படியே எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க!  டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி ஆகியோர் அடித்த பந்தை கண்டுபிடித்து கொடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.பெங்களூரு நிர்வாகத்தின் இந்த ட்வீட்டை பார்த்து கடுப்பான ரசிகர்கள், ‘பந்தை தேடுவதற்கு முன்பாக பெங்களூரு அணி எப்படி வெற்றி பெற  வேண்டும்? என சொல்லிக்கொடுங்கள்’ என்று பலவாறாக கிண்டலடித்து வருகின்றனர்.
127,074
12/4/2019 3:28:24 PM
விளையாட்டு
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் - ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு
அகமதாபாத்: உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின்  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் 90  ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய வசதி உள்ளது. இதைவிட பெரிய மற்றும் விசாலமான மைதானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். சுமார் 63 ஏக்கர்  பரப்பளவில் 700 கோடி  ரூபாய் செலவில் அகமதாபாத்தின் மொட்டேரா பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தின் பணிகள் தற்போது முடியும் தருவாயில்  உள்ளன. அடுத்தாண்டு திறப்பு விழா காணவுள்ளதால், இதன் கட்டுமான பணி முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்தப் பெரிய மைதானத்தில்  அடுத்தாண்டு மார்ச் மாதம் வாக்கில் நடக்கவிருக்கும் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை  முதல் போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிசி ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உலக லெவன்  மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
127,075
12/4/2019 3:29:22 PM
குற்றம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு வீடுகளில் ஒயின் தயாரிப்பது வழக்கம். பெரும்பாலானோர் கடைகளில் வாங்குவதைவிட  வீடுகளில் தயாரிப்பதையே விரும்புகிறார்கள். வீடுகளில் தயாரிக்கும் ஒயின் அதிக விலைக்கு கடைகளில் விற்பனை செய்வதும் உண்டு. கிறிஸ்துமஸ்  பண்டிகை நெருங்குவதால் சமூக வலைதளங்களில் வீடுகளில் தயாரிக்கும் ஒயின் விற்பனைக்கு இருப்பதாக கூறி ஏராளமான விளம்பரங்களும்  வந்துகொண்டிருக்கின்றன. யூடியூப் சேனலிலும் ஒயின் தயாரிப்பது குறித்த வீடியோக்களும் வெளியாகி வருகிறது. வீடுகளில் ஒயின் தயாரித்தால் சட்ட நடவடிக்கை பாயும்  என்று கலால்துறை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள வேளியில் ஒரு வீட்டில் ஒயின் தயாரிக்க புளிக்க வைத்திருந்த திராட்சை பழம் மற்றும் பொருட்களை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு அந்த வீட்டில் உள்ள வாலிபரை கைது செய்தனர்.இதனிடையே கேரள கலால்துறை ஆணையர் கூறியிருப்பதாவது: கிறிஸ்துமஸ், புதுவருடத்தை முன்னிட்டு சர்ச்சுகளுக்கு மட்டுமே ஒயின் தயாரிக்க தனி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த லைசென்ஸ் இதுவரை  ரத்து செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் ஒயின் தயாரிக்க ரூ.3.25 வரி கட்ட வேண்டும். ஆனால் தனிப்பட்டவர்கள் வீடுகளில் ஒயின் தயாரிக்க அனுமதி  கிடையாது. வீடுகளில் தயாரிக்கப்படும் ஒயினை விற்பனை செய்வதாக கூறி சமூக வலை தளங்களில் விளம்பரங்கள் வருகின்றன. இதுசட்டப்படி  குற்றமாகும். அவர்களை பிடித்தால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
127,076
12/4/2019 3:30:01 PM
குற்றம்
வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தேனி: வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 67 அடியை எட்டியுள்ளதால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த உயரமான 71 அடியில் இன்று  காலை நிலவரப்படி 67 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,243 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 60 கனஅடி  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணை நேற்று காலை 66 அடி உயரத்தை எட்டியது. இதையடுத்து  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்  வைகை கரையோரம் உள்ளவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  அணை நீர் மட்டம் 68.5 அடியை எட்டியதும்  இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். நீர் மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் நீர் முழுவதும், அப்படியே  வெளியேற்றப்படும். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 71 அடியாக இருந்தாலும், 69 அடி வரை மட்டுமே  தண்ணீரை தேக்கி வைப்பது வழக்கம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.152 அடி உயரமுள்ள பெரியாறு அணையில், தற்போது 128.50 அடி நீர் நிரம்பியுள்ளது. வினாடிக்கு 1,752 கனஅடி நீர் வருகிறது. வினாடிக்கு 1,600  கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 57 அடி உயரமான மஞ்சளாறு அணையில் 52.8 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. வினாடிக்கு 279 கனஅடிநீர் வந்து  கொண்டிருக்கிறது. வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் மஞ்சளாறு கரையோர  மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
127,077
12/4/2019 3:30:58 PM
தமிழகம்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை; வெங்காயம் வாங்க மக்கள் மோதல்
சித்தூர்: உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால்  போலீஸ் பாதுகாப்புடன் வெங்காயம் விற்பனை செய்தனர். விளைச்சல் குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயம் கிலோ ₹80 முதல் ரூ.120 வரை  விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் சாம்பார் வெங்காயம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள், வெங்காயம் வாங்க  முடியாமல் தவிக்கின்றனர். இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பொதுமக்களின் நலன் கருதி ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு மானிய விலையில்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் அருகே உள்ள உழவர் சந்தையில் மானிய விலையில் வழங்கப்பட்ட வெங்காயத்தை  வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்தனர். கூட்டம் அலைமோதியதால் வெங்காயம் வாங்குவதில்  மக்களிடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ்  பாதுகாப்புடன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `சங்கராந்தி (தை பொங்கல்) வரை வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்காது. இருப்பினும்  பொதுமக்களின் வசதிக்காக மாநில அரசு சார்பில் மானிய விலையில் வெங்காயம் வழங்கப்படுவது தொடரும். எனவே, பொதுமக்கள் உழவர்  சந்தைகளில் வந்து வெங்காயத்தை வாங்கிச்செல்லலாம்’’ என்றனர்.
127,078
12/4/2019 3:31:33 PM
தமிழகம்
7வது நாளாக உண்ணாவிரதம் நளினிக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு
வேலூர்: வேலூர் சிறையில், 7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் நளினிக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி  நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை  உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கினார்.7வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நளினிக்கு குளுக்கோஸ் ஏற்ற முடியு செய்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நளினியின் கணவன் முருகனும் 5வது  நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
127,079
12/4/2019 3:32:31 PM
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: வயல்கள் மூழ்கியது; வீடுகளில் வெள்ளம்
நாசரேத்: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் நாசரேத் பகுதியில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வயல்கள் மூழ்கியது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வட்டாரத்தில் கடம்பாகுளம், வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிகுளம், பிள்ளையன்மனை குளம், முதலைமொழி குளம்  மற்றும் புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் பெருக்கெடுத்த  தண்ணீரால் குளங்கள் நிரம்பத் துவங்கின. கடந்த இருநாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் நிரம்பிய வெள்ளமடம் பெரியகுளத்தில் உள்ள 10  மடைகளில் 9 மடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் 10 மடைகளில் எஞ்சிய ஒரு மடை சேதமடைந்த நிலையிலேயே உள்ளதால் குளம் உடையும்  அபாயம் நிலவுகிறது. கடம்பாகுளம் உடைந்து நாசரேத் அருகே வெள்ளரிக்காயூரணி- வளவன் நகரில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் தற்காலிகமாக  மணல் மூடைகளை வைத்து உடைந்த பகுதிகளை சீரமைத்தனர். வெள்ளத்தால் அப்பகுதியிலுள்ள வயல்கள் தண்ணீரில் மூழ்கின. இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘’மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் சமையல் செய்யமுடியவில்லை.  இதுவரை அரசு அதிகாரிகளும்  பார்வையிடவில்லை. மழை நீரால் குழந்தைகள் மற்றும் பெரியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு வழங்கும் மழைக்கால வெள்ள நிவாரணம் எங்கள்  பகுதி மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போலீசார் பார்வையிட்டனர். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து கடம்பாகுளத்தில் கரை உடைந்த  இடங்களில் மணல் மூட்டைகளை வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.ஜேசிபியில் அமர்ந்து பெண் தர்ணாதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே நாகல்குளம் வேதக்கோவில் தெருவில், சாலையின் நடுவே மழைநீரும் கழிவுநீரும் தேங்கி கிடப்பதால்  அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து  தாசில்தார் பட்டமுத்து தலைமையில் தேங்கி கிடந்த தண்ணீரை வெளியேற்ற ஜேசிபி மூலம் கால்வாய் தோண்டுவதற்கு நடவடிக்கை  மேற்கொண்டனர். அங்கிருந்த காலி நிலத்தின் வழியாக கால்வாய் தோண்ட முயன்றபோது அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் மனைவி அன்புச்செல்வி,  தன்னுடைய காலி நிலம் வழியாக கால்வாய் தோண்டக்கூடாது எனக்கூறி ஜேசிபி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால்  பணியை  தொடராமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
127,080
12/4/2019 3:33:17 PM
குற்றம்
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி
திருமலை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரி அடித்து  உதைத்தனர். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஜி.வேமவரம் கிராமத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில்  தனியாக வசித்து வந்தார்.  நேற்றுமுன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த நாகபாபு என்பவர் குடிபோதையில் திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரது  நடவடிக்கையை பார்த்து பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.  இதனால் நாகபாபு, தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி  பாலியல்  பலாத்காரம் செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க பெண் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த நாகபாபு, சரமாரி கத்தியால் குத்தி கொலை  செய்துள்ளார்.  வழக்கமாக அந்த பெண் அதிகாலை எழுந்துவிடுவார். ஆனால் நேற்று காலை நீண்டநேரமாகியும் அந்த பெண் வெளியே வராததால் அப்பகுதி மக்கள்   சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் மும்மடிவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தது விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் உதவியுடன்  நாகபாபுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள், நாகபாபுவை சரமாரியாக அடித்து உதைத்தனர். நாகபாபுவை இதே இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று மக்கள் ஆவேசமாகமாக  கூறினர். பொதுமக்களை சமாதானம் செய்த போலீசார், பின்னர் நாகபாபுவை மீட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இதுபற்றி வழக்கு பதிவு  செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,081
12/4/2019 3:34:05 PM
தமிழகம்
யானை மிதித்து பாகன் உயிரிழப்பு சேலம் உயிரியல் பூங்கா மூடல்...ஆண்டாளுக்கு தீவிர சிகிச்சை
சேலம்: மதுரை ஆண்டாள் கோயில் யானை காசநோய் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக பத்து வருடங்களுக்கு முன்பு, சேலம் குரும்பப்பட்டி உயிரியல்  பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. 68 வயதாகும் இந்த ஆண்டாள் யானை மிகவும் சாதுவாக காணப்படும். ஆனால் திடீரென கோபம் ஏற்படும். இதன்  காரணமாக மதுரை அழகர்கோவிலில் வைத்து 3 பக்தர்களை கொன்றது. இதனால் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இதற்கென தனி இடம்  அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பத்மினி என்ற ஊழியரை கொன்றது.கடந்த 2ம் தேதி, யானையை பரிசோதித்த கால்நடை டாக்டரை, அது தூக்கி வீசியது. அவரை மீட்ட பாகன் காளியப்பன் மீது ஆத்திரம் கொண்டு  தும்பிக்கையால் தூக்கி எறிந்து கொன்றது. இந்த சம்பவம் அதிகாரிகள், பூங்கா ஊழியர்கள், சுற்றுலா பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  தற்போது யானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. காளியப்பனிடம் உதவி பாகனாக பணியாற்றிய பழனி என்பவர், தற்போது ஆண்டாள் யானையை  பூங்காவில் வைத்து பராமரித்து வருகிறார். இந்த யானையை தொடர்ந்து இங்கு வைத்து பராமரிக்க முடியாது. இதனால் உடனடியாக முகாமிற்கு  அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக குரும்பப்பட்டி  உயிரியல் பூங்கா, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் பெரியசாமி செய்திக்குறிப்பில், ‘‘சேலம் வனக்கோட்டம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள ஆண்டாள்  என்ற பெண் யானைக்கு தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உயிரியல் பூங்கா இன்று முதல், மறு உத்தரவு வரும்வரை  தற்காலிகமாக மூடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
127,082
12/4/2019 3:34:51 PM
இந்தியா
அரசியல் ரீதியாக மோத முடியுமா?....ஆந்திர முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு சவால்
திருமலை: தைரியம் இருந்தால் அரசியல் ரீதியாக போட்டி போடுங்கள், மோதுங்கள் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர்  சந்திரபாபு சவால் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் 2நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான  சந்திரபாபு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது: ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நாற்காலிகளை கொண்டு சென்றதாக முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் சிவபிரசாத்தை இந்த அரசு அவமானப்படுத்தி  மிரட்டி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியது. இது முழுக்க முழுக்க அரசு செய்த கொலையாகும். அமராவதி நகரில் சுற்றுப்பயணம் செய்ய சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் என் மீது  தாக்குதல் நடத்தினர். செருப்பு மற்றும் கற்களை வீசினர். தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீது பொய் புகார்களை வழங்கி வழக்குப்பதிவு செய்து பழி  வாங்கி வருகின்றனர். டாக்டர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த  அளவிற்கு உள்ளது என்பது இதன் மூலமாக தெரிய வருகிறது. பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகரீகமான உலகில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். சில போலீசார்  வேண்டுமென்று தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கின்றனர்.  ஆளும் கட்சி அமைச்சர்கள் ஆபாசமாக திட்டி வருகின்றனர். ஓரளவுக்கு மட்டுமே பொறுமையாக இருக்க முடியும். தைரியம் இருந்தால் எங்களுடன்  அரசியல் ரீதியாக போட்டி போடுங்கள். எங்களை விட மாநிலத்தில் அதிக வளர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினீர்களே. அதனை செய்து காண்பிக்க  வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
127,083
12/4/2019 3:35:34 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலையொட்டி வியாபாரிகள் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது: விக்கிரமராஜா வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டி: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதையொட்டி தேர்தல் நேரத்தில் வியாபாரிகள் ெகாண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது  என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருத்துறைப்பூண்டியில் அளித்த பேட்டி: தற்போது தமிழகம் முழுவதும் பெய்து  வரும் பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன்  வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களுடன் வியாபாரிகள், வியாபாரம் நிமித்தமாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல்  செய்யக்கூடாது. இது குறித்து தேர்தல் ஆணையம் சரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
127,084
12/4/2019 3:36:15 PM
தமிழகம்
திருவள்ளூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு கிடைக்குமா?
திருவள்ளூர்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 5,19,334 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.  பொங்கல் பரிசு பொருளுடன் 2 அடி நீள செங்கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.குடும்ப அட்டைகளுக்கு தேவையான செங்கரும்பு, கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்து மாவட்ட வழங்கல் துறைக்கு வழங்கப்படுகிறது.  தற்போது மாவட்டத்தில் செங்கரும்பு சாகுபடி செய்யாததால் வெளி மாவட்டங்களில் இருந்து செங்கரும்பு கொள்முதல் செய்யவேண்டிய நிலையுள்ளது.  மற்ற மாவட்டங்களில் கடந்த மாதமே வியாபாரிகளுக்கு, செங்கரும்பு விலை நிர்ணயம் செய்து விற்றுவிட்டதால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு  தேவையான செங்கரும்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி கூறுகையில், “வெளி மாவட்டங்களில் இருந்து செங்கரும்பு கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கவேண்டும். கடலூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களுக்கு சென்று 5,19,334 குடும்பத்தினருக்கு தேவையான கரும்பு கொள்முதல் செய்யும்  பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், ஏற்கனவே வியாபாரிகள் கரும்புக்கு விலையை நிர்ணயித்து விவசாயிகளிடம் ஆர்டர்  கொடுத்துள்ளதால் தேவையான கரும்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்குவது  முடியாத காரியம்”  என்றார்.
127,085
12/4/2019 3:37:13 PM
தமிழகம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்தும் நிரம்பாத ஏரிகள்..அதிகாரிகளின் அலட்சிய போக்கு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தும், அங்குள்ள 2 ஏரிகளில் மழைநீர் நிரம்பவில்லை. அதற்கு பதிலாக அந்த நீர்  வீணாக சென்று கடலில் கலந்து வருகின்றது. அவற்றை ஏரிக்கு திருப்பி விடுவதில் பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு, மறைமலை நகர்,  சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர்  வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.இம்மாவட்டத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகள், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பியது. எனினும், இங்கு  விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கும் மிகப் பெரிய ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. குறிப்பாக, இம்மாவட்டத்தின் ஆறாவது பெரிய ஏரியான  பொன்விளைந்த களத்தூர் ஏரியின் முழு கொள்ளளவு 15 அடி. தற்போது 12 அடி வரை மட்டுமே நிரம்பியுள்ளது. இங்குள்ள நீஞ்சல்மடு அணையிலிருந்து களத்தூரான்  கால்வாய் மூலம் பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு மழைநீர் வராதால் ஏரி முழுமையாக  நிரம்பவில்லை. இதற்கு பதிலாக, அணை நீரை ஏரிக்கு திருப்பாமல் பாலாற்றில் பொதுப்பணி அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர். இதனால் அந்த நீர்  வீணாக கடலுக்கு சென்று கலந்து வருகிறது.இதேபோல், செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பாலூர் பெரிய ஏரியின் கொள்ளளவு 15.30 அடி. ஆனால், தற்போதைய மழையில் இங்கு வெறும் 3.50  அடி தண்ணீர் மட்டுமே நிரம்பியுள்ளது. இங்கு வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, ஏரியில் மணல் கொள்ளை போன்றவற்றால் இந்த ஏரிக்கு நீர்வரத்து  மிகவும் குறைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக மழை பெய்தும் இந்த 2 ஏரிகளிலும் நீர் நிரம்பாததால் பாலூர், கரும்பாக்கம்  உள்ளிட்ட 10 கிராம விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர். மேலும் கொளவாய் ஏரியில் 15 அடிக்கு 10.60 அடி நிரம்பியுள்ளது. செய்யூர் ஏரி 15.70 அடிக்கு, தற்போது 7.20 அடி மட்டுமே  நிரம்பியுள்ளது.இம்மாவட்டத்தில் இந்த வருடம் தமிழக அரசு சார்பில் பல கோடி செலவில் அனைத்து ஏரிகளிலும் குடிமராமத்து பணி நடைபெற்றது. எனினும், இங்கு  போதுமான மழை பெய்தும் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இதனால் மழை பெய்தும் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. மக்களின் வரி  பணம்தான் வீணானது என பொதுமக்களும் விவசாயிகளும் புலம்புகின்றனர்.
127,086
12/4/2019 3:38:18 PM
தமிழகம்
17 பேர் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுச்சுவர் கட்டியவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை...கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான காம்பவுண்ட் சுவர் கட்டியவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த  விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து, 17 பேர் பலியான இடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மழை காரணமாக மேட்டுப்பாளையம் நடூர் காலனியில் உள்ள 3 வீடுகள் மீது  அருகில் இருந்த மதில் சுவர் விழுந்து, வீடுகள் தரைமட்டமானது. இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இடிபாடுகளில் கிடந்தவர்கள்  மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தடுப்பு சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த உயிரிழப்பு மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. இறந்த 17 பேர் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அரசு சார்பில் தலா ரூ.4  லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. அத்துடன், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் என மொத்தம் தலா  ரூ.10 லட்சம் வழங்கப்படும். இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு,  அவர்களது தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இப்பகுதியில், பல வீடுகள் ஓட்டு வீடுகளாக இருப்பதை கண்டேன். இந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள்  கட்டித்தரப்படும். ஏற்கனவே, பவானி ஆற்றங்கரையோரம் வசித்து வந்த 300 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை  குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு முடிவு எடுத்து, தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள், ஆற்றங்கரையோரம் வசித்து வருபவர்கள்,  பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.இந்த உயிரிழப்புக்கு காரணமான, காம்பவுண்ட் சுவர் கட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை  எடுக்கப்படும். காம்பவுண்ட் சுவர் பலம் இழந்துள்ளது என ஏற்கனவே புகார் கொடுத்தார்களா?, இல்லையா?, புகார் கொடுக்கும்போது எந்த அதிகாரிகள்  இருந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆய்வின்போது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி  ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆகியோர்  உடனிருந்தனர்.செல்பி மோகம்காம்பவுண்ட் சுவர் இடிந்து 17 பேர் பலியான செய்தி கேள்விப்பட்டு, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று  இரண்டாவது நாளாக அப்பகுதியில் குவிந்தவண்ணம் இருந்தனர். பலர், இடிந்த வீடுகளை புகைப்படங்கள் எடுத்தனர். இளைஞர்கள் சிலர்,  இடிபாடுகளுக்கு நடுவே நின்று, செல்பி எடுத்துக்கொண்டனர். அதை, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.அரசியல் கட்சிகள் படையெடுப்புமேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர், நேற்று மேட்டுப்பாளையத்துக்கு படையெடுத்தனர்.  குரூப் குரூப்பாக சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மீடியாக்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால், வீடு மற்றும் உடமைகளை இழந்த  மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. வெறும் ஆறுதல் மட்டும் கூறிவிட்டு,் அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டனர்.துணிக்கடை அதிபர் சிறையில் அடைப்புதுணிக்கடை அதிபர் சிவசுப்ரமணியத்தை மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர்  கோவை மதுக்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் ரபீனா பர்வீன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சிவசுப்ரமணியம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
127,087
12/4/2019 3:39:07 PM
தமிழகம்
புதிதாக உருவான தென்காசிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி இல்லாததால் கட்சியினர் ஏமாற்றம்
தென்காசி: புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி உருவாக்கப்படாததாலும் இங்குள்ள 5 நகராட்சிகள், 18  பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறாததாலும் வாக்காளர்களும் அரசியல் கட்சியினரும் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம்  வெளியிடப்பட்டது. அதுவும் ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இல்லாமல் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் நகராட்சிகளும் பேரூராட்சிகளும் உள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி,  சங்கரன்கோவில் என 5 நகராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஐந்து நகராட்சிகளுக்கும் தற்போது தேர்தல்  அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படாதால் நகர்ப்புற மக்கள் பெரிதும்  ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோன்று ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து  தலைவர் ஆகிய 4 பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி  வழங்கப்படவில்லை. தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட பஞ்சாயத்து பதவி மட்டுமே உள்ளது. இதனால்  தென்காசி மாவட்ட மக்களுக்கு தனி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் வாக்காளர்களும் அரசியல்  கட்சியினரும் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறோம் என்று நீதிமன்றத்தை திசை திருப்புவதற்காகவே பெயரளவிற்கு ஏராளமான குறைகளுடன் தேர்தலை  அறிவித்திருப்பதன் மூலம் இந்த குறைகளையே காரணமாக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைத்து தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் என்ற  கருத்தும் பரவலாக உள்ளது. அரசு ஊழியர்கள் மன உளைச்சல்ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு நடத்தப் போகிறோம் என்ற கவலையில் ஊராட்சி ஒன்றியத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு  ஆளாகியுள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் எவ்வாறு தேர்தல் பணிகளை மேற்கொள்வது என  செய்வதறியாது திகைத்து வருகின்றனர். குறிப்பாக வாக்குப்பதிவிற்கு ஆசிரியர்களை அதிக அளவில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது  அரையாண்டு தேர்வு காலமாக இருப்பதால் எப்படி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடியும் என்பது தெரியவில்லை. தேர்தல் நாள்  மட்டுமன்றி தேர்தல் நடைமுறை குறித்து அவர்களுக்கு மூன்று முறை அதாவது மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பதும்  குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி தேர்தலுக்கு தடை வாங்குவது குறித்து பொதுநல ஆர்வலர்கள் பலரும்  ஆலோசித்து வருகின்றனர்.‘பிரசாரத்திற்கு’ பயன்படுத்த திட்டம்இதுபோன்று கிராம ஊராட்சி தேர்தல்களை தனியாக இதுவரை தமிழகத்தில் நடத்தியது இல்லை. அதனையும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என  இரண்டு கட்டமாக நடத்துகின்றனர். இவ்வாறு நடத்துவதற்கான காரணமும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. அதாவது இரண்டு  கட்டமாக நடத்தும்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும் ஊர்களில் உள்ள கட்சி நிர்வாகிகளையும்  முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஆளும் கட்சியினர் தங்கள் ‘பிரசாரத்திற்கு’ பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.
127,088
12/4/2019 3:39:47 PM
தமிழகம்
சுவர் இடிந்து 17 பேர் பலி: தலித் மக்கள் மீது போலீஸ் தாக்குதல்...பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம்
திருவள்ளூர்: பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த ஏ.டி.காலனியில் 50-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு  அருகே ஒரு துணிக்கடை உரிமையாளர் சுமார் 20 அடி உயரத்தில் கருங்கற்களால் தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளார்.அப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வசித்த தலித் சமுதாயத்தை சேர்ந்த 17 பேர் பலியாகினர். இதைத்  தொடர்ந்து நீதி கேட்டு போராடிய 500-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இவர்களை வழிநடத்திய நாகை  திருவள்ளுவனை போலீசார் தாக்கி கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, ஜாதி வெறியுடன் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், துணிக்கடை உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.
127,089
12/4/2019 3:40:31 PM
தமிழகம்
போக்குவரத்து நெரிசலின்போது தகராறு ஆட்டோ டிரைவரின் விரலை கடித்த வாலிபர்
பெரம்பூர்: ஓட்டேரி அடுத்த எஸ்எஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (39). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று மதியம் ஓட்டேரி இடுகாடு எதிரே ஆட்டோவை  ஓட்டி சென்றபோது,  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென ஆட்டோவை திருப்பியுள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த கவுதம் (21) என்பவர், “திடீரென  ஆட்டோவை ஏன் திருப்பினீர்கள்” என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதம் முற்றியதால்  ஆத்திரமடைந்த கவுதம், கர்ணனின் கை விரல்களை பிடித்து கடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை  பார்த்ததும் கவுதம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தலைமை செயலக குடியிருப்பு போலீசாரிடம் கர்ணன் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் கவுதமை போலீஸ் நிலையம் வரவழைத்து  விசாரணை நடத்தினர். தனது செயலுக்கு கவுதம் மன்னிப்பு  கேட்டதால், இருவரும் சமாதானமாக செல்லும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த  சம்பவம் காவல்நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
127,090
12/4/2019 3:41:11 PM
தமிழகம்
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகைகள்...அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை 18 கிமீ தூரம் கொண்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நல்லம்பாக்கம் மற்றும்  வெங்கம்பாக்கம் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள 4 இடங்களில் விபத்து பகுதி என்றும், வளைவு பகுதியில் எந்த ஊர்களுக்கு  செல்வது குறித்தும் ராட்சத பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சரிவர பெயர் பலகை வைக்காததால் சில மாதத்திலேயே உடைந்தும் மடிந்தும்  அந்தரத்தில் தொங்குகிறது. பலத்த காற்று வீசும்போது பெயர் பலகைகள் ஆடுகின்றது. அதிலுள்ள போல்டு, நட்டுகள் கழன்று விழுகின்றன. எந்த  நேரத்தில் பெயர் பலகைகள் விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த பிரச்னையில் உயரதிகாரிகள் தலையிட்டு அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
127,091
12/4/2019 3:41:46 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு ‘லீவ் கட்’
திருவள்ளூர்: தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம்  தேதி துவங்குகிறது. ஜனவரி 2ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தேர்தல் பிரசாரம், ஒன்றிய அலுவலகங்களில் மனு தாக்கல் உள்ளிட்ட பல்வேறு  நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட உள்ளனர். ஒரே நேரத்தில் பல்வேறு கட்சி தொண்டர்களும், தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம்-ஒழுங்கு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை ஆரம்பிக்க உள்ள நிலையில், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.  போதுமான பாதுகாப்பு அளிக்க 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசர அவசியம்,  துக்க நிகழ்ச்சிக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க முடியும் என மாவட்ட எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
127,092
12/4/2019 3:42:26 PM
தமிழகம்
சுற்றுச்சுவர் விழுந்து 17 பேர் பலி இழப்பீடு வழங்க கோரி மா.கம்யூ. ஆர்ப்பாட்டம்
பெரம்பூர்: கோயம்புத்தூர் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் சமீபத்தில் பெய்த கன மழையில் பங்களா வீட்டின் 22 அடி உயர  காம்பவுன்ட் சுவர் இடிந்து  விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இவர்களின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்   பெரம்பூர் ஜமாலியா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிக நகர் பகுதி செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, மேட்டுப்பாளையத்தில்  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிகப்படியான இழப்பீடு வழங்கவேண்டும், இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தி உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும்  உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த ஓட்டேரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் சமரச  பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
127,093
12/4/2019 3:43:10 PM
தமிழகம்
கோயம்பேடு மார்க்கெட்டில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
அண்ணாநகர்: கோயம்பேடு கீரை மார்க்கெட் பகுதியில் பணம் தர மறுத்த 2 வாலிபர்கைள ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக 3 பேரை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை கோயம்பேடு, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (23). இவர், அண்ணாநகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் கேஷியர் ஆக  பணிபுரிகிறார். இவரது நண்பரான அசாருதீன் (23), அதே நிறுவனத்தில் சர்வீஸ் பாயாக வேலை செய்கிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று மாலை கோயம்பேடு கீரை மார்க்கெட் வழியாக ஒரு ஓட்டலில் உணவு வாங்க நடந்து சென்றனர். அப்போது  அவ்வழியே 2 பைக்கில் வந்த ஒரு கும்பல் இருவரையும் வழிமறித்தது. பின்னர் இருவரிடமும் அக்கும்பல் கத்தியை காட்டி, பணம் பறிக்க  முயற்சித்தனர்.அசாருதீன் பணம் தர மறுக்கவே, அவரது இடது கைமுட்டியின் அருகே கும்பலில் ஒருவர் அரிவாளால் வெட்டினார். இதை தினேஷ்குமார் தடுக்க,  அவரது இடது கண்ணில் ஒருவர் கையால் குத்தினார். இதில் தினேஷ், அசாருதீன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கும்பல் பைக்கில் தப்பி  சென்றுவிட்டது. இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி  காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மாடாவிக்கி (எ) விக்னேஷ் (24), தியாகராஜன்  (41), மதுரவாயல், தனலட்சுமி நகரை சேர்ந்த அருண் (எ) ஆரோக்கியராஜ் (19) ஆகிய 3 பேரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இதில் மாடாவிக்கி, அருண் ஆகிய இருவர் மீதும் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, செல்போன் பறிப்பு, அடிதடி  வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
127,094
12/4/2019 3:43:51 PM
தமிழகம்
ரயில் இன்ஜினில் கோளாறு :பாதி வழியில் நிறுத்தம்
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கும், மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம், மீனம்பாக்கம், கிண்டி,  நுங்கம்பாக்கம், எழும்பூர் வழியாக சென்னை கடற்கரைக்கும் ஒரு நாளைக்கு 120க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில்  டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறின்றி விரைந்து செல்ல முடியும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு  மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் என ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கு அதிகமான  மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து விரைவு ரயில்களில் வருபவர்கள்  மீனம்பாக்கம், கிண்டி, மவுண்ட், சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தாம்பரம் ரயில்நிலையத்தில் இறங்கி மின்சார ரயில்களில்  சென்று தங்கள் வீடுகளுக்கு செல்ல வசதியாக இருப்பதால் நிறைய மக்கள் மின்சார ரயில்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் கிண்டி, சைதாப்பேட்டை,  மாம்பலம், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வரும் முன்பு திடீரென்று இன்ஜின்  கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த ரயில்வே ஓட்டுநர் வேறுஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்குள் ரயிலை இயக்காமல் பாதியிலே  நிறுத்திவிட்டார். ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இன்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு 6  மணிக்குள் சரி செய்தனர். இதனால் சிறிது நேரம்  தாமதமாக இயக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும்  அதிகாலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் பயணிகளுக்கு பாதிப்பு இல்லை.
127,095
12/4/2019 3:44:22 PM
தமிழகம்
மேட்டுப்பாளையத்தில் வெட்ட வெளியில் 16 சடலம் எரிப்பு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் நேற்று முன் தினம் பலியாகினர். இவர்களது உடல்கள் பிரேத  பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடல்களை  வைக்க போதிய இடவசதி இல்லாததால் வெட்ட வெளியில் மழையில் நனைந்தபடி உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இது குறித்த புகைப்படம் சமூக  வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் 16 பேரின் உடல்களை எரியூட்ட மின் மயானத்திற்கு எடுத்து சென்றனர். அங்கும் சடலங்களை எரியூட்ட போதிய வசதியில்லாததால்  வெட்ட வெளியில் 16 பேரின் சடலங்களும் ஒரே சமயத்தில் எரியூட்டப்பட்டது. இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்  மத்தியில் பெரும் அதிர்வலையையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சடலம் மட்டும் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டிக்கு எடுத்து  செல்லப்பட்டது.
127,096
12/4/2019 3:45:03 PM
தமிழகம்
எழும்பூர் ரயில்நிலையத்தில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்...ரயில்வே போலீசார் விசாரணை
சென்னை: எழும்பூர் ரயில்நிலையத்தில் 2000 கிலோ ரேசன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம் போன்ற  பகுதிகளுக்கு தினம் 42க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், வசதியாக செல்ல முடியும்  என்பதால் அதிக மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கூட்ட நெரிசலில் அதிக திருட்டு சம்பவம் நடைபெறுவதால் அதை தடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். அதைப்போன்று நேற்று இரவு நடைமேடை 5,6ல் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  திருச்சியில் இருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 4.30 மணியளவில் திருச்சியில்  இருந்து புறப்பட்டு ஹவுராவுக்கு, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர்  வழியாக நெல்லூர், ஓங்கேல், விஜயவாடா, எளுரு, ராஜமுந்திரி, விளைநகரம், பிரகாம்பூர், குர்தா ரோடு, புவனேசுவர், கட்டாக், பாட்ரக், பலசூர், ஹரக்பூர்  ஆகிய ரயில் நிலையங்களில் நின்று ஹவுரா சென்றடைகிறது. இந்நிலையில் இந்த ரயில் நேற்று இரவு 10.30 மணியளவில் எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ஹவுரா எக்ஸ்பிரசில் 30க்கும்  மேற்பட்ட மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக ரயில்ேவ போலீசார் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரயில்வே போலீசார் மற்றும்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடைமேடை5,6 வந்து நின்ற ரயிலை சோதனை செய்த போது அதில் 33 மூட்டைகளில் 60 கிலோவில் 1980 கிலோ  அரிசியும், 2 மூட்டைகளில் 10 கிலோவில் 20 கிலோ அரிசி என 2000 கிலோ( 2டன்)  ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார்  வருவதையறிந்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ரயில்வே போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இத்தனை மூட்டைகளும்  ஒரே ரயில்நிலையத்தில் ஏற்றப்பட்டதா? அல்லது வெவ்வேறு ரயில்நிலையத்தில் ஏற்றப்பட்டதா? எங்கே கொண்டு செல்கின்றனர், பொது மக்களிடம்  வாங்கினார்களா? அல்லது ரேசன் கடைகளில் மொத்தமாக வாங்கினார்களா? என்ற விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து பறிமுதல்  செய்யப்பட்ட ரேஷன் அரிசியை சிவில் சப்ளை சிஐடி வசம் ஒப்படைக்க உள்ளனர். ரயில்நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்  பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,097
12/4/2019 3:46:10 PM
உலகம்
கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை...தமிழருக்கு குவியும் வாழ்த்துக்கள்
வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல்  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் பிறந்த ெபாறியாளர் சுந்தர் பிச்ைச, கோரக்பூர் ஐ.ஐ.டி.யில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்  எம்எஸ்  பட்டமும், பென்சில்வேனியாவில் வார்டன் கல்லூரியில்  எம்பிஏ பட்டமும் பெற்ற சுந்தர் பிச்சை, கடந்த 2004ம் ஆண்டு முதல்  கூகுள் நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார். தொடர்ந்து கூகுள்  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2015ம் ஆண்டு  நியமிக்கப்பட்டார். கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ் என்பவர், அல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வந்தார். இந்நிலையில்  அப்பதவிக்கு சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கூகுளின் நிறுவனர்களுக்கு சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி  தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் தானியங்கி கார், வாழ்வியல் அறிவியல் என பல்வேறு சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கிய நிலையில்,   அத்தொழில்கள் அனைத்தும் அல்ஃபாபெட் என்ற நிறுவனத்தின் ஒரே குடையின் கீழ் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  அப்போது கூகுள்  நிறுவனத்தை மட்டும் நிர்வகித்து வந்த சுந்தர் பிச்சை, தற்போது அக்குழுமத்தின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பையும் ஏற்க உள்ளார். உலகின்  மிகப்பெரிய தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் தலைமைப் பதவியில் தமிழர் ஒருவர் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் கூகுள் நிறுவன சிஇஓ  பொறுப்புடன் கூடுதலாக அல்ஃபாபெட் நிறுவனத்தின்  சிஇஓ பொறுப்பையும் சுந்தர் பிச்சை கவனித்து கொள்வார் என்று தகவல்கள்  கூறுகின்றன.  தற்போது, அல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.
127,098
12/4/2019 3:47:08 PM
இந்தியா
அதிகாரிகளிடம் விவரம் கொடுத்துள்ளேன்: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு உடன்படித்தவர்கள்தான் முக்கிய காரணம்...தந்தை பகீர் பேட்டி
திருவனந்தபுரம்: சென்னை ஐஐடியில் படித்துவந்த மாணவி பாத்திமா தற்கொலைக்கு சக மாணவர்கள்தான் காரணம் என்று அவரது தந்தை கூறியுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் கிளிகொல்லூர் பகுதியை சேர்ந்தவர் லத்தீப். இவரது மகள் பாத்திமா. இவர் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். கடந்த  மாதம் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பேராசிரியர் ஒருவர் தான் காரணம் என்று கடிதம் எழுதி  வைத்திருந்தார். இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த  விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பாத்திமா மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மாணவர்கள்  போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் மாணவி பாத்திமாவின் பெற்றோர் பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் இன்று பிரதமரை சந்திக்க  திட்டமிட்டுள்ளனர். இதனிடையே மாணவியின் தந்தை லத்தீப் கூறியது: எனது மகளின் மரணத்துக்கு அவருடன் படிக்கும் சிலர் தான் முக்கிய காரணம். அவர்கள் எனது மகளை மன ரீதியாக தினமும் கொடுமைப்படுத்தி  வந்துள்ளனர். அவர்களது பெயர் விவரங்களை எனது மகள் தெளிவாக குறிப்பிட்டு வைத்துள்ளார். அவர்கள் யார்? என்பது எனக்கு தெரியும். இந்த  விவரங்களை நான் விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இன்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.  சந்தித்த பின்னர் கூடுதல் விவரங்களை தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார்.
127,099
12/4/2019 3:47:54 PM
இந்தியா
10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும்: ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்...மாவோயிஸ்ட் கடிதத்தால் உ.பி-யில் பரபரப்பு
லக்னோ: உத்தரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்ய நாத்தும், ஆளுநராக பாஜ கட்சியின் மூத்த தலைவரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான  ஆனந்திபென் படேல் பணியாற்றி வருகிறார். அவரது பெயருக்கு, நேற்று மாவோயிஸ்ட் தரப்பில் கடிதம் ஒன்று ஆளுநர் மாளிகைக்கு வந்தது.  இதுதொடர்பாக, மாநில தலைமை செயலகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் (ஆளுநர்) ஹேமந்த் ராவ்,  இந்த கடிதம் குறித்து மாநில உள்துறை துறைக்கு அனுப்பியுள்ளார்.ஜார்க்கண்டில் இருந்து வந்துள்ள அந்த கடிதத்தை, மாவோயிஸ்ட் அமைப்பான திரிதியா சம்மலன் பிரஸ்துட்டி கமிட்டி (டிஎஸ்பிசி) எழுதியுள்ளது  தெரியவந்தது. அதில், ‘ஆளுநர் பத்து நாட்களுக்குள் ராஜ் பவன் வீட்டை விட்டு  வெளியேறாவிட்டால் டைனமைட்டுடன் வெடிவைத்து ராஜ் பவன்  தகர்க்கப்படும்’ என்று அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் (வீட்டு) அவனிஷ் குமார் அவஸ்தி கூறுகையில், ‘‘ஆளுநரின்  வீட்டிற்கு வந்த அச்சுறுத்தல் கடிதத்தை,  உள்துறை மிகவும் தீவிரமாக  விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணை செய்ய மாநில டிஜிபி, புலனாய்வு  அமைப்புகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன்,  ஆளுநரின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலைக்குள்  (இன்று) விசாரணை  அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உள்துறை கேட்டுள்ளது. இதுதொடர்பாக, உள்துறையின் மாநில காவல் புலனாய்வு இயக்குனர் ஜெனரல், கூடுதல்  பாதுகாப்பு டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’’  என்றார். இதற்கிடையில், மூத்த அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதால், வெடிகுண்டு அச்சுறுத்தல் கடிதம் குறித்து தங்களுக்கு தெரியாது  என்று லக்னோ காவல்துறை தெரிவித்தது.
127,100
12/4/2019 3:48:42 PM
தமிழகம்
பாலிதீன் சோதனை என்று கூறி கடைக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பு: போலி அதிகாரிக்கு தர்மஅடி
அம்பை: கடைகளில் பாலிதீன் பொருட்கள் ஒழிப்பு தனி அதிகாரி எனக்கூறி மிரட்டி பணம் பறித்த போலி அதிகாரியை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து  போலீசில் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த வேலு மகன் பாஸ்கரன் என்ற யாசீர்கான் (31). இவர்,  கல்லிடைக்குறிச்சி 6ம் நம்பர் சாலையில் இயங்கி வரும் மளிகை  கடை, டீக்கடை, முருக்கு விற்பனை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்குள்  நுழைந்து பாலிதீன் பொருட்கள் தணிக்கை செய்ய வந்த சிறப்பு அதிகாரி எனக்கூறி ஆய்வு செய்துள்ளார். பின்னர் கல்லாப்பெட்டியை திறந்து மிரட்டி  பணம் பறித்துள்ளார். இதே சாலையில் உள்ள மொபைல் கடையில் நுழைந்து பணம் கேட்டபோது சந்தேகமடைந்த அதன் உரிமையாளர் அல் அமீன், கடையில் இருந்து  வெளியே வந்து பேரூராட்சி அலுவலக பணியாளரிடம் விசாரித்துள்ளார். அப்போது யாசீர்கான் போலி அதிகாரி என தெரியவந்தது. இதையடுத்து கடை  வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு யாசீர்கானை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் யாசீர்கான் மீது பாப்பாக்குடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
127,101
12/4/2019 3:49:28 PM
தமிழகம்
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு 9முதல் 12ம்தேதி வரை சிறப்பு ரயில் இயக்கம்
திருவண்ணாமலை: திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து வரும் 10 மற்றும் 11ம் தேதி காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு பகல் 11  மணிக்கு வந்தடையும். பின்னர் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இதே வழித்தடம் வழியாக மீண்டும் விழுப்புரம்  ரயில் நிலையத்தை மதியம் 3 மணிக்கு சென்றடையும்.கடலூர் திருப்பாதிரிபுலியூரில் இருந்து 9 மற்றும் 10ம்தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம்,  வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.08 மணிக்கு  வந்தடையும். பின்னர், திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு போளூர் ரயில் நிலையம், ஆரணி சாலை வழியாக வேலூர்  கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்கு சென்றடைகிறது.வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆரணி சாலை, போளூர் ரயில்  நிலையம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அதிகாலை 3.02 மணிக்கு வந்தடைகிறது. அங்கிருந்து அதிகாலை 3.04 மணிக்கு புறப்பட்டு,  வந்த வழித்தடம் வழியாகவே சென்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது. வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு  11.25 மணிக்கு வந்தடைகிறது.திருவண்ணாமலையில் இருந்து 10, 11 மற்றும் 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் வேலூர்  கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11ம் தேதி இரவு  9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர் மற்றும் திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை  ரயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் திருவண்ணாமலையில் இருந்து 10, 11  மற்றும் 12ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு  சென்றடைகிறது. ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 10ம் தேதி அதிகாலை 5.22  மணிக்கு நிறுத்தப்பட்டு, 5.23 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் திருவண்ணாமலையில் 11ம்தேதி மதியம் 2.48 மணிக்கு நிறுத்தப்பட்டு, 2.49 மணிக்கு  புறப்பட்டு செல்லும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,102
12/4/2019 3:50:32 PM
தமிழகம்
திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர் 4ம் நாள் தீப திருவிழாவை முன்னிட்டு நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாளான இன்று விநாயகர் மூஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் நாக  வாகனத்திலும் பவனி வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதை முன்னிட்டு அலங்கார  மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்த பஞ்சமூர்த்திகள், ராஜகோபுரம் எதிரே 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் சிம்ம  வாகனத்தில் அண்ணாமலையாரும், அன்ன வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் பவனி  வந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாடவீதி முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 4ம் நாளான இன்றுகாலை மூலவர் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து  மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. மூஷிக வாகனத்தில் விநாயகரும், நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மங்கள வாத்தியங்கள்  முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  மாலை 6 மணியளவில் கோயிலில் உள்ள கலையரங்கில் பரத நாட்டியமும்,  ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும், காமதேனு  வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி நடைபெறும்.
127,103
12/5/2019 2:25:43 PM
தமிழகம்
தமிழக பாஜ துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் திமுகவில் இணைந்தார்
சென்னை: தமிழக பாஜ துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். புதுக்கோட்டையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் இல்லத்திருமண விழாவில், தமிழக பாஜ துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘’தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார் ‘’ என்று புகழ்ந்து பேசினார். அவரது இந்த பேச்சு பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக கட்சி மேலிடம் அரசகுமாரிடம் விளக்கம் கேட்டது. இதையடுத்து கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அரசகுமாருக்கு தமிழக பாஜ தடை விதித்தது. பாஜவின் இந்த நடவடிக்கையால் அரசகுமார், திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவியது. இந்தநிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அரச குமார் சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அவருக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.
127,104
12/5/2019 2:26:37 PM
தமிழகம்
இன்று ஜெயலலிதாவின் 3வது ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், தொண்டர்கள் அஞ்சலி...அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்
சென்னை: ஜெயலலிதா மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக தொண்டர்கள், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் பேரணியாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு சென்னை, ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்தார்.இன்று ஜெயலலிதாவின் 3வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள், பொதுமக்களும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் சென்னை, வாலாஜா சாலையில் அண்ணா சிலையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் நின்றபடி துணை முதல்வர் உறுதிமொழி வாசிக்க முதல்வர், அமைச்சர்கள், தொண்டர்கள் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர். இவர்களை தொடர்ந்து, அமமுக  பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.ஜெயலலிதா நினைவுநாளையொட்டி ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் அந்த பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
127,105
12/5/2019 2:27:10 PM
இந்தியா
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது
பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 15 பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜவினர் எத்தனையோ வழிகளில் முயன்றாலும் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்களின் மனதை மாற்றினர். அதன் பயனாக ஆர்.ரோஷன்பெய்க், எஸ்.டி சோமசேகர், கே.கோபாலய்யா, ஆனந்த்சிங், எம்டிபி நாகராஜ், பைரதி பசவராஜ், வி.முனிரத்னம், ரமேஷ்ஜாரகிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி, பி.சி.பாட்டீல், எச்.விஷ்வநாத், கே.ஆர்.நாராயணகவுடா, பிரதாப்கவுடா பாட்டீல், சீமந்தபாட்டீல், டாக்டர் கே.சுதாகர், ஆர்.சங்கர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ அரசு பதவியேற்றது. இதனிடையில் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் மஸ்கி ஆகிய இரு தொகுிதிகள் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜ சார்பில் தலா 15, மஜத சார்பில் 12, தேசியவாத காங்கிரஸ் சார்பில் 1, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 45, சுயேட்சைகள் 75 என மொத்தம் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சிவாஜிநகரில் அதிக பட்சமாக 19 பேரும் குறைந்த பட்சமாக யல்லாபுராவில் 6 பேரும் போட்டியில் உள்ளனர்.முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சி தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை 15 தொகுதி வாக்காளர்கள் இன்று பதிவு செய்யும் வாக்கின் மூலம் தீர்மானிக்கவுள்ளனர். இடைத்தேர்தல் மூலம் கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி பெங்களூருவில் மூன்று இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 11 மையங்களில் எண்ணப்படுகிறது. மின்னனு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அன்று பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கட்டுகட்டாக பணம் பட்டுவாடா செய்யும் பாஜக தலைவர்உத்திர  கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் தொகுதியில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பாஜக வேட்பாளர் சிவராம் ஹெப்பாரின் நெருங்கிய  ஆதரவாளர் தொட்டமணி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் வீடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க 100  நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை அவர் எண்ணி வினியோகம் செய்வது  வீடியோவில் பதிவாகியுள்ளது. பாஜக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு  இடைத்தேர்தலில் வெற்றி பெற முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியினர்  குற்றம்சாட்டியுள்ளனர்.
127,106
12/5/2019 2:27:42 PM
தமிழகம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்: 13ம் தேதி கடைசி நாள்
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இறுதிநாள் வரும் 13ம் தேதியாகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான  இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டரீதிரியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிச. 13ம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி, பின்னர் அறிவிக்கப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 13ம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 16ம் தேதி நடைபெறும். 18ம் தேதி வரை வேட்பு மனுக்களை திருப்ப பெறலாம். தமிழகத்தில் மொத்தமுள்ள 1,18,974 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.முதல் கட்டத்தில் 194 ஊராட்சிகள் உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 194 ஊராட்சி ஒன்றியங்கள் எவை என்றும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மீதமுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எவை என்றும் அறிவிக்கப்படும். வேட்பு மனுதாக்கல் நாளை முதல் தொடங்குவதால், வேட்பாளர்கள், அவர்கள் பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். கல்வித்தகுதி, சொத்து விவரம், குற்றவியல் வழக்குகளின் விவரங்களை வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், தங்களுக்கான சின்னம் குறித்த படிவங்களை வேட்புமனு திரும்ப பெறும் நாளன்று 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்காவிட்டில் அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வைப்பு தொகையாக ரூ.200ம், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1000 வைப்புதொகை செலுத்த வேண்டும். இதற்கிடையில் வார்டு மறுவரை முழுமையாக முடித்து பின்பு தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் உத்தரவை பொறுத்தே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா, இல்லையா என்பது தெரிய வரும்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
127,107
12/5/2019 2:28:15 PM
தமிழகம்
சசிகலா வீட்டை உடனே இடிக்க உத்தரவு: தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது
தஞ்சை: தஞ்சையில் உள்ள சசிகலாவின் வீட்டை உடனே இடிக்கும்படி மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன. தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.இந்நிலையில், கடந்த மாதம் கட்டிடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், யாரும் அங்கு வசிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் சசிகலா, கட்டிட உபயோகிப்பாளர் மனோகர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த அறிவிப்பு நோட்டீசில் கூறப்பட்டு இருந்ததாவது: தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்  பள்ளி ரோட்டில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும், பள்ளிக்கும் அருகாமையில் வீடு உள்ளது.15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும்எனவே அபாயகரமான கட்டிடத்தை எவ்விதமான உபயோகத்திற்கும் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தை தக்க முன்னேற்பாடுடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பாவார்கள். மேலும் தாங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.எச்சரிக்கை நோட்டீஸ்இந்த நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கட்டிடம் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீட்டிற்கு வந்தனர். அங்கு இருந்த மனோகரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். பழுதடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நாய்கள் மட்டும் தான் உள்ளன. நாங்கள் பின்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறோம் என்றார்.இதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டின் வாசலில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், செப்டம்பர் மாதம் கொடுத்த எச்சரிக்கை நோட்டீசின்படி, இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால், உள்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறது. இப்படிக்கு தஞ்சை மாநகராட்சி ஆணையர் என கூறப்பட்டு உள்ளது. நோட்டீசை ஒட்டிய அதிகாரிகள் வீட்டில் தங்கியிருந்த மனோகரிடம் நீங்கள் உடனே வீட்டை காலி செய்யுங்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?. ஏற்கனவே கால அவகாசம் அளித்தும் நீங்கள் வீட்டை இடிக்காததால், உங்களுக்கான கெடு முடிந்துவிட்டது. இதனால், தற்போது இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், உடனடியாக வீட்டை இடிக்க வேண்டும் என்று உரிய நபரிடம் கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர். சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,108
12/5/2019 3:13:24 PM
குற்றம்
குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்
மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் சாமி சிலைகளை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 3 பேரை  தனிப்படை போலீசார் கேரளாவில் மடக்கிபிடித்து கைது செய்தனர். விசாரணையில் இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு  கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.  குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றாக மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயம்  உள்ளது. சிவாலய ஓட்டத்தில் இது 2வது சிவாலயமாகும். மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு பல சிறப்பு  தன்மைகள் உள்ளன. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் இங்கு ஏராளமான  பக்தர்கள் வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இந்த கோயில் கதவு உடைக்கப்பட்டு கருவறையில் இருந்த சாமி சிலைகள்,  உண்டியலில் இருந்த காணிக்கை பணம், செம்பால் செய்யப்பட்ட நந்தி, வெள்ளி மற்றும் செம்பால் ஆன திருமுகங்கள்,  செம்பினால் ஆன திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. புராதனமான கோயிலில் கொள்ளை  நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள்  அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.  கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களை கண்காணித்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்து சென்ற ஒரு கும்பல் மீது  சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று அந்த கும்பலை ரகசியமாக  கண்காணித்தனர். அப்போது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷானவாஸ் (35) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் பல திடுக்கிடும்  தகவல்களை தெரிவித்தார். ஷானவாஸ், அவரது நண்பர் உசேன் (36), இவரது கள்ளக்காதலி அமரவிளையை சேர்ந்த  இளம்பெண் எஸ்மிதா ஆகியோர் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கொள்ளையடித்தது தெரியவந்தது. போலீசார் 3  பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: உசேனும், எஸ்மிதாவும் கணவன் மனைவி போல் பக்தர்கள்  வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டமிடுவர். மிக பழமையான கோயில்களில்  உள்ள புராதன பொருட்களுக்கு வெளிநாடுகளில் கோடிகணக்கில் மதிப்பு உள்ளது. இதனால் புராதன பொருட்கள் உள்ள  கோயில்களை தொடர்ந்து பல நாட்களாக நோட்டமிட்டுவர். பாதுகாப்பு குறைவான, கண்காணிப்பு கேமரா இல்லாத கோயில்கள் மற்றும் எளிதாக தப்பி செல்ல வசதி உள்ள  கோயிலை தேர்ந்தெடுத்து அங்கு தொடர்ந்து பல நாட்கள் பூஜை செய்வது போல் செல்வர். திக்குறிச்சி மகாதேவர்  கோயில் ஆற்றங்கரையில் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்ததாலும், எளிதாக கேரளா தப்பி  சென்றுவிடலாம் என்பதாலும் இந்த கோயிலில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.  அங்கு முதல் முறை கொள்ளையடிக்க முயன்றபோது அவர்களுக்கு உடல் நடுக்கம் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் அன்று கொள்ளையடிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு திரும்பியுள்னர். பின்னர் 2வது முறையாக மீண்டும்  ஆகஸ்ட் 31ம் தேதி வந்து கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் காரில் வந்து பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை பெயர்த்து எடுத்து காரில் வைத்துக் கொண்டு  திருவல்லா சென்றுள்ளனர். அங்குள்ள பாலத்தின் இருந்து மதிப்பு குறைவான பொருட்களை ஆற்றில் வீசியுள்ளனர்.  பின்னர் விலைமதிப்பு மிக்க சிலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இந்த சிலைகளை வெளிநாடுக்கு கடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போது சிலைகளை வெளிநாட்டுக்கு கொண்டு  செல்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதோடு உசேன் விபத்தில் சிக்கியுள்ளார். மேலும் எஸ்மிதாவுக்கும் உடல் நல  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலையை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
127,109
12/5/2019 3:14:16 PM
இந்தியா
‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி  செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரி மடத்தை சேர்ந்த  கன்னியாஸ்திரியை ஜலந்தர் பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. பிஷப் பிராங்கோ மீது கன்னியாஸ்திரி புகார் கூறி பல நாட்கள் ஆன பின்னரும் முதலில் அவர் மீது  ேபாலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து கேரளாவில் பல்வேறு பகுதிகளை ேசர்ந்த  கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோவை கைது செய்ய கோரி கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற லூசி என்ற கன்னியாஸ்திரிக்கு எதிராக அவர் சார்ந்த சபை கடும் நடவடிக்கை எடுத்தது.  சமீபத்தில் அவரை மடத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும் கன்னியாஸ்திரி பொறுப்பில் இருந்தும் அவரை  நீக்கியது. இதையடுத்து இந்த நடவடிக்கையை ரத்து செய்ய கோரி கன்னியாஸ்திரி லூசி, வாடிகனில் உள்ள ேபாப்  ஆண்டவருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி  ‘கர்த்தாவின்றே நாமத்தில்’ என்ற பெயரில் தனது சுய சரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாக  உள்ளது. இந்த புத்தகத்தில் பாதிரியார்களுக்கு எதிராக பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புத்தக விற்பனையை தடை செய்ய கோரி கொச்சி களமசேரி எஸ்எம்ஏ கான்வென்டை சேர்ந்த  லிசியா ஜோஸ் என்ற கன்னியாஸ்திரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர்  கூறியிருப்பதாவது:  கன்னியாஸ்திரி லூசி எழுதியுள்ள ‘கர்த்தாவின்றே நாமத்தில்’ என்ற புத்தகத்தில் பாதிரியார் குறித்து அவதூறாக  எழுதியுள்ளார். இது பலரின் மனதை புண்படுத்தி உள்ளது. எனவே இந்த புத்தக விற்பனையை தடை செய்ய வேண்டும்  என குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர் புத்தகத்துக்கு எதிராக போலீசில் புகார் செய்யவோ,  கீழ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவோ இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறினார்.உயிருக்கு  அச்சுறுத்தல்கன்னியாஸ்திரி லூசி எர்ணாகுளம் அருகே காரக்காமலையில் உள்ள மடத்தில் தங்கி உள்ளார். நேற்று நள்ளிரவு  அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தீ பந்தங்களுடன் அந்த மடத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். கன்னியாஸ்திரி  லூசிக்கு எதிராக மடத்தின் முன் நின்று கோஷமிட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து லூசி  கூறியது. கடந்த சில தினங்களாகவே வாட்ஸ் அப், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் எனக்கு மிரட்டல்கள்  வருகிறது. இது குறித்து போலீசுக்கு புகார் செய்வேன். எந்த காரணம் கொண்டும் புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து  பின் வாங்குவதில்லை என கூறினார்.
127,110
12/5/2019 3:15:25 PM
குற்றம்
வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை
சாமியார்மடம்: குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே கஞ்சிக்குழி தெற்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜய்யன் (60). ஜவுளி  வியாபாரி. இவரது மனைவி ராஜம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு  திருமணமாகி விட்டது. ஒரு மகனுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில்  கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு சொந்தமான தங்க நகைகளை வீட்டில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து இருந்தனர். இந்த நிலையில்  நேற்று அனைவரும் குடும்பத்துடன் குமாரகோயிலுக்கு சாமிகும்பிட சென்றனர். அப்போது ராஜய்யனின் மூத்த மருமகள்  பிரீத்தாவுக்கு ஒரு போன் வந்தது. உடனே அவசரம் அவரசமாக அவர் வீட்டுக்கு திரும்பினார். மற்ற அனைவரும்  கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பினர்.அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. உடனே குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பிரீத்தா கழுத்தில்  துப்பட்டாவால் இறுக்கப்பட்டு, மிளகாய்பொடி தூவப்பட்ட நிலையில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். தொடர்ந்து  குடும்பத்தினர் அவரை மீட்டனர். குடும்பத்தினரிடம் மர்ம நபர்கள் தன்னை தாக்கி விட்டு நகைகளை எடுத்து சென்றுவிட்டதாக கூறினார். இந்த நிலையில்  குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது புதைத்து வைத்திருந்த 100 பவுன் நகைகளும் மர்நபர்களால்  தோண்டி எடுத்து திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜய்யன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க  தனிப்படை அமைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராஜய்யனின் மூத்த மகன் சுரேஷ்பாபுவின் மனைவி  பிரீத்தா. இவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் வேண்டுதலுக்காக அனைவரும் குடும்பத்துடன் கோயிலுக்கு  சென்றுள்ளனர். கோயிலுக்கு செல்லும் வழியில் பிரீத்தாவுக்கு ஒரு போன் வந்துள்ளது. இதையடுத்து அவர் மட்டும் வீடு  திரும்பியுள்ளார். இந்த சமயத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக   பிரீத்தாவிடம் விசாரணை நடத்தினோம். அவர் கோயிலுக்கு செல்லும் போது தனக்கு உறவினரிடம் இருந்து போன்  வந்தது என்றார். சிறிது நேரம் கழித்து கணவரிடம் இருந்து போன் வந்தது என்று கூறினார். அவர் முன்னுக்கு பின்  முரணாக கூறிய தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜய்யனிடம் விசாரித்தோம். அப்போது வீட்டில்  இருந்த நகைகள் தனது வீட்டில் உள்ளவர்கள் தவிர யாருக்கும் தெரியாது என்று கூறினார். இதனால் அவர் மீதும் சந்தேகம் வந்ததால் அவரிடமும் விசாரித்தோம். தொடர்ந்து ராஜய்யன், சுரேஷ்பாபு, பிரீத்தா,  அவரின் தந்தை, தாய் என்று 5 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
127,111
12/5/2019 3:15:59 PM
விளையாட்டு
‘பேபி பவுலர்’ பும்ரா....சொல்கிறார் ரசாக்
லாகூர்: ‘என்னைப் பொறுத்த வரை இந்திய அணியின் பவுலர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பேபி பவுலர்தான். அவரது பந்துவீச்சை  எதிர்கொள்வதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்  அப்துல் ரசாக் கூறியுள்ளார்.  லாகூரில் நேற்று செய்தியாளர்களிடம் அப்துல் ரசாக் கூறுகையில், ‘‘நாங்கள் ஆடிய காலத்தில் மெக்ராத், வாசிம் அக்ரம்  உள்ளிட்ட திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களது பந்துவீச்சையே எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன்.  அதனால் பும்ரா எல்லாம் எனக்கு குழந்தை மாதிரி. என்னைப் பொறுத்தவரை அவர் ‘பேபி பவுலர்’ தான். அவரது  பந்துவீச்சை என்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும்’’ என்று தெரிவித்தார். ஆனால் பாக். கிரிக்கெட் ரசிகர்களே,  ரசாக்கின் இந்தப் பேட்டியை விமர்சித்து வருகின்றனர். ‘ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரசாக்கின் சராசரியே 30  ரன்களுக்கும் குறைவுதான். ஏதோ சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறார். அதற்காக பும்ராவின் பந்துவீச்சு குறித்து  இப்படி சொல்வதெல்லாம் ஓவர்’ என்று கூறி வருகிறார்கள்.  பாகிஸ்தானில் விராட் கோஹ்லிக்கும், பும்ராவுக்கும் அதிக எண்ணிக்கையில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.
127,112
12/5/2019 3:16:47 PM
விளையாட்டு
தெற்காசிய விளையாட்டு போட்டி: அசத்தி வரும் தடகள வீரர்கள்...இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது
காட்மண்ட்: நேபாளத்தில் நடந்து வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள், தொடர்ந்து  பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். இதுவரை மொத்தம் 32 தங்கம், 26 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என 71  பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. மேலும் பல போட்டிகளில் அரையிறுதி வாய்ப்புகளை இந்திய வீரர்கள்,  வீராங்கனைகள் உறுதி செய்துள்ள நிலையில், இந்தியாவின் கணக்கில் இன்னும் பதக்கங்கள் சேரும் என்று வீரர்கள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நேபாள் தலைநகர் காட்மண்டுவில் தெற்காசிய விளையாட்டு போட்டிகள்-2019 கடந்த 1ம் தேதி துவங்கின. வரும் 10ம்  தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும்.இதில் இந்திய தடகள வீரர்கள், வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க வகையில் முத்திரை பதித்து வருகின்றனர். கடந்த  செவ்வாய் கிழமை தடகள போட்டிகள் துவங்கின. முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 4  தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை அள்ளினர். மகளிர் 200 மீ ஓட்டத்தில் அர்ச்சனா 23.67 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய  வீராங்கனை சந்திரா வெண்கலம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேஷ்குமார் தங்கம் வென்றார்.  மகளிர் வட்டு எறிதல் போட்டியில் நவ்ஜீத் கவுர் தில்லான் தங்கம் வென்றார். அதே பிரிவில் சுர்வி பிஸ்வாஸ் வெள்ளி  வென்றார்.தொடர்ந்து தடகளத்தில் இந்திய வீரர்கள் பிரகாசிக்க, நேற்று மாலை நிலவரப்படி இந்தியா 32 தங்கம், 26 வெள்ளி  மற்றும் 13 வெண்கலம் என 71 பதக்கங்களை குவித்துள்ளது.பாட்மின்டனில் இந்தியாவின் சிரில் வர்மா, ஆர்யமான் டண்டன் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நுழைந்து  பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த், இறுதிப்போட்டிக்கு தகுதி  பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கார்க்-அனுஷ்கோ ஜோடியும், மேக்னா-நெல்குர்தி ஜோடியும்  அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கலப்பு டரட்டையரில் துருவ் கபிலா-ஜக்கம்புடி ஜோடி அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளது.டேபிள் டென்னிசில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி, தங்கம்  வென்றது. அவர்களுடன் மோதிய இந்திய வீரர்கள் சனில் ஷெட்டி-குரோவர் ஆகியோர் வெள்ளி வென்றனர். மகளிர்  இரட்டையர் பிரிவிலும் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்களைகளே மோதினர். இதில் மதுரிகா-ஜா தங்கம்  வென்றனர். சுகிர்தா-அகிகாவுக்கு வெள்ளி கிடைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணிக்கே தங்கம்  கிடைத்தது.
127,113
12/5/2019 3:17:19 PM
விளையாட்டு
இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி
ஐதராபாத்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெறுகிறது.  கிரன் போலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது.  கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டிகள் அனைத்தும்  இந்தியாவில் லக்னோ நகரில் நடந்தன. தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரிலும் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஐதராபாத்தில்  துவங்குகிறது.இத்தொடருக்காக இந்திய அணியின் வீரர்களும் மே.இ.தீவுகள் அணியின் வீரர்களும் நேற்று தனித்தனியாக  தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர். மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். அவரை  கட்டுப்படுத்துவது கடினம். அவரது விக்கெட்டை வீழ்த்துவதுதான் முக்கியமானது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய  அணியை, இந்தியாவில் மட்டுமல்ல.. வேறு எந்த நாட்டிலும் எதிர்கொள்வது கடினம்தான். ஆனால் கோஹ்லியை பார்த்து  ஒரேடியாக பயந்து விடாதீர்கள் என்று எங்கள் பவுலர்களிடம் கூறியுள்ளேன். இதற்கு முன்னர் இந்திய அணியுடன்,  இந்தியாவில் ஆடிய ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளோம். அதனால் தைரியமாக ஆடுங்கள் என்று எங்கள் வீரர்கள்  அனைவருக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.
127,114
12/5/2019 3:17:48 PM
தமிழகம்
தருமபுர ஆதீனம் உடல் அடக்கம்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ஆண்டுகளுக்கு முன் குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது தருமபுர  ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26வது சன்னிதானமாக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் (93) கடந்த 12.11.1971ல்  பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2ம்தேதி அன்று ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் மூச்சுத்திணறலால்  பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நினைவு திரும்பாமலேயே நேற்று மதியம் 2.40  மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் நேற்று மாலை 5.40 மணிக்கு மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திற்கு  கொண்டு வரப்பட்டு பக்தர்கள் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.இன்று (5ம்தேதி) மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடக்கிறது. மேலவீதியில் முன்னாள் ஆதீனங்கள் அடக்கம்  செய்யப்பட்ட இடத்தில் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. 27வது  சந்நிதானமாக மாசிலாமணிதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்னும் ஓரிரு நாளில் பதவி ஏற்பார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்திற்குள் நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது தலைமையில்  தருமபுரத்தில் அனைத்து ஆதீனங்களும் கூடி தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
127,115
12/5/2019 3:19:29 PM
தமிழகம்
நீட் ஆள்மாறாட்ட வழக்கு சென்னை மாணவரின் தந்தை தேனி போலீசில் சரண்
தேனி: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில்  சேர்ந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மருத்துவக்  கல்லூரிகளில் படித்த ஐந்து மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். தேனி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் இந்த வழக்கில் கைதான மாணவர்கள் ஐந்து பேருக்கும் ஐகோர்ட் மதுரை  கிளை ஜாமீன் வழங்கியது. பெற்றோர்கள் சரவணன், டேவிஸ், வெங்கடேசன், முகமதுசபி ஆகிய நான்கு பேருக்கும்  தேனி நீதித்துறை நடுவர் மன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் சென்னை, கோபாலபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாரின் மகன் ரிஷிகாந்த்தும் ஆள்மாறாட்டம்  செய்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் மாணவருக்கு ஜாமீன் வழங்கிய  ஐகோர்ட் மதுரை கிளை, அவரது தந்தை ரவிக்குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்து சிபிசிஐடி போலீசிடம் சரணடைய  அறிவுறுத்தியது. இந்த நிலையில், ரவிக்குமார் நேற்று பிற்பகல் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் சித்ரா  முன் சரணடைந்தார்.
127,116
12/5/2019 3:20:19 PM
தமிழகம்
சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம்: நடூர் கிராமத்தில் விலகாத சோகம்
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி காலனியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் ஓட்டு வீடுகள் மீது  ஜவுளிக்கடை அதிபரின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானார்கள்.பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பிறகு, இப்பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் இன்னமும் தங்களது  அன்றாட பணிகளுக்கு திரும்பவில்லை. இக்காலனி மட்டுமின்றி, ஒட்டுமொத்த நடூர் கிராமமே இன்னமும்  சோகத்தில்தான் உள்ளது. பல வீடுகளில் சமையல் பணிகூட நடைபெறவில்லை. தொழிலாளர்கள் பலர் வேலைக்கு  செல்லவில்லை.17 பேர் உயிர்ப்பலிக்கு காரணமான ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் (60) மேட்டுப்பாளையம் போலீசாரால்  கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304  ஏ-வின்படி வழக்குப்பதியப்பட்டது. அஜாக்கிரதையாக ஒரு செயலை செய்து, அதன் மூலம் யாருக்காவது மரணம்  ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல் புரிந்தால், இப்பிரிவின்கீழ் விசாரிக்கப்படும். இப்பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்,  அதிகபட்சமாக அபராத தொகையுடன் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.இந்த நிலையில் சிவசுப்பிரமணியம் மீது 304 ஏ பிரிவுக்கு பதிலாக 304 (2) என்ற பிரிவு நேற்று முன்தினம்  சேர்க்கப்பட்டது. தன் செயலால் பிறருக்கு மரணம் ஏற்படும் என தெரிந்தே ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டால்  இப்பிரிவின்கீழ் விசாரிக்கப்படும். இக்குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை  தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.இந்த சம்பவத்தில், தங்களது சொந்த, பந்தங்களை இழந்த நடூர் பகுதி மக்கள் கூறும்போது, ‘‘வீடுகளை, உறவுகளை  இழந்து தவிக்கும் எங்களுக்கு மாற்று இடம் இல்லை. கூலி வேலைக்கு சென்று, அன்றாட வாழ்க்கையை நடத்தும் பலர்  கூலி வேலைக்குக்கூட செல்ல முடியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் ஏதாவது ஒரு வகையில்  இங்குள்ளவர்களுக்கு சொந்தமாக உள்ளனர். ஒவ்வொரு நாளும் இரவு தூங்க செல்லும்போது பார்த்த அவர்களை, மீண்டும்  பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. வலி தொடர்கிறது. இந்த பெரும்  வலியை உண்டாக்கிய ஜவுளிக்கடை அதிபருக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது.’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
127,117
12/5/2019 3:21:29 PM
குற்றம்
வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது
திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கதிரியில் உள்ள சோமேஷ் நகரில் வசித்து வருபவர் மல்லேஷ் (40), மேஸ்திரி.  இவரது மனைவி ஈஸ்வரி (36). 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மல்லேஷ் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன்  தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். அவ்வாறு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு மது குடித்த மல்லேஷ் தனது  நண்பரான அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்தாராம்.  தொடர்ந்து மதுபோதையில் மல்லேஷும், விஜயகுமாரும், வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த  ஈஸ்வரியின் கை, கால்களை கட்டிபோட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனராம். இதனால் அதிர்ச்சியடைந்த  ஈஸ்வரி, அலறி கூச்சல்போட்டார். அப்போது ஆவேசமடைந்த மல்லேஷ், ஈஸ்வரியின் உடைகளை கழற்றி அவரின்  உடலில் பல இடங்களில் சரமாரியாக அடித்து உதைத்தாராம். இதனால் மறுநாள் தனது குழந்தைகளை  அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறிஅழுதார். இதுதொடர்பாக சித்தக்கூறு  போலீஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து சென்று ஈஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஈஸ்வரியை மீட்டு, சிகிச்சைக்காக கதிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மல்லேஷ் மற்றும் விஜயகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.  இந்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
127,118
12/5/2019 3:23:08 PM
இந்தியா
ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்: நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி
திருப்பதி: ஆந்திராவில் ஜனசேனா கட்சித்தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மக்கள் நலப் பணிகளுக்காக எதுவும்  செய்யாமல் செயலற்ற அரசாக உள்ளது. விஜயவாடாவில் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ள கிருஷ்ணா நதிக்கரையில் 40 பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். ஜெகன்மோகன் ஆட்சி  ஏற்பட்ட பின் மதமாற்றம், மதபிரசாரம் அதிகரித்துள்ளது. நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகனுக்கு அதிக அளவிலான  மக்கள் வாக்களித்து அவரை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி உள்ளனர். மாநிலத்தில் நடைபெறும் தீவிர மதமாற்றத்தை  அனுமதிப்பதற்காக அவருக்கு பொதுமக்கள் ஓட்டு போடவில்லை என்பதை முதல்வர் ஜெகன்மோகன் நினைவில்  கொள்ள வேண்டும். இப்பிரச்னை குறித்து பேசுவதால் எனது கட்சிக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுக்கள் குறைந்தாலும் அதைப் பற்றி நான்  கவலைப்படப் போவது கிடையாது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறுவது போல நான் பாஜக, தெலுங்கு தேச  கட்சிகளோடு ரகசிய கூட்டணியில் சேர்ந்திருந்தால் ஜெகன் முதல்வராகியிருக்க முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.
127,119
12/5/2019 3:24:23 PM
தமிழகம்
திருவண்ணாமலை தீபத்திருவிழா 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. வரும் 10ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர தீபமலை உச்சியில்  மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழாவின் 4ம் நாளான நேற்றிரவு பஞ்சமூர்த்திகள் ராஜகோபுர திருவீதியுலா நடந்தது. வெள்ளி மூஷிக  வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி கற்பக  விருட்சத்தில் அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், வெள்ளி ரிஷப  வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  விழாவின் 5ம் நாளான இன்று காலை மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி  தரிசனம் செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து காலை உற்சவத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும்  ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மேளதாளம் முழங்க  மாடவீதியில் பவனி வந்தனர். இன்றிரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி  தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையரர், வெள்ளி ரிஷப வாகனத்தில்  உண்ணாமுலையம்மன், வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க  உள்ளனர்.கலெக்டர் பேட்டிஇந்நிலையில், திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் செய்யும் பகுதிகளில்  மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர்  நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது:போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பஸ், மினி வேன் போன்ற வாகனங்கள் நிறுத்த 15 தற்காலிக  பஸ் நிலையங்களும், 24 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் 90 இடங்களில் கார் பார்க்கிங் வசதியும்  செய்யப்பட்டுள்ளது.ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. ஹவுரா எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை ரயில்  நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டளைதாரர், உபயதாரர் அனுமதி சீட்டு பெற்றவர்களில் கோயிலில் இடவசதியை பொறுத்து பரணி தீபம் தரிசனத்திற்கு  4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபம் தரிசனத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், பொது  தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பரணி தீபத்திற்கு 2 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு 3  ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் அழைத்து வருவதற்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.எஸ்பி சிபிசக்கரவர்த்தி கூறுகையில், `பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட உள்ளனர்’ என்றார்.
127,120
12/5/2019 3:24:58 PM
குற்றம்
நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்
நாமக்கல்: நாமக்கல் அருகே முட்புதரில் வீசப்பட்ட 35 கள்ளதுப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சிலர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்து கொண்டு வனவிலங்குகளை  வேட்டையாடி வருவதாக எஸ்பி அருளரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாழவந்திநாடு போலீசார்,  கொல்லிமலை முழுவதும் அவ்வப்போது சோதனை நடத்தி உரிமம் இல்லாத கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்து  அதை வைத்திருப்பவர்களை கைது செய்து வந்தனர்.இதற்கிடையே, கொல்லிமலையில் அதிகளவில் உரிமம் இல்லாத கள்ள துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கள்ள  துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டால், அவர்கள்  மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. மேலும், கைது செய்வதில் இருந்து தப்பித்து விடலாம். போலீசார்  கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அருளரசு எச்சரித்திருந்தார்.இந்நிலையில், கொல்லிமலை அரியூர் சோளக்காடு, பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, சோளக்காடு சுடுகாடு அருகில் உள்ள முட்புதரில் உரிமம் இல்லாத 35 கள்ள துப்பாக்கிகளை மர்ம நபர்கள்,  போலீசாருக்கு பயந்து வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, வாழவந்தி நாடு போலீசார் துப்பாக்கியை பறிமுதல்  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,121
12/5/2019 3:26:01 PM
தமிழகம்
பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் ‘லிங்க்’ கால்வாயில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் நோய் அபாயம்
திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 470 கன அடி தண்ணீர் செல்லும் ‘லிங்க்’ கால்வாய் கரையில், ஈக்காடு  பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடுவதோடு மக்களுக்கு நோய் ஏற்படும்  அபாயமும் உள்ளது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்  வரத்தால் அணை நிரம்பினால், லிங்க் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.  இந்த கால்வாயின் இருபுறமும் கரைகளின் மீது பொருத்தப்பட்ட சிமெண்ட் சிலாப்கள் அனைத்தும் பெயர்ந்துள்ள  நிலையில், குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் மாசுபட்டுள்ளது.  மேலும், கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.குறிப்பாக ஈக்காடு பகுதியை சேர்ந்தவர்கள், அருகில் உள்ள லிங்க் கால்வாயில் குப்பைகளையும், இறைச்சி  கழிவுகளையும் கொட்டுகின்றனர். பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இக்கால்வாய் வழியாக தற்போது வினாடிக்கு 470  கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.  சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்க்க செல்லும் இந்த தண்ணீரில், கொட்டப்படும் குப்பைகளாலும்,  சீமைக்கருவேல மரங்களாலும், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்,  தண்ணீர் மாசுபட்டு இதை அருந்தும் சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு ஆபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே, பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் லிங்க் கால்வாயில்  குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்துவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
127,122
12/5/2019 3:26:55 PM
தமிழகம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையை மாற்றியமைக்க வேண்டும்: முன்னாள் நகராட்சி தலைவர் மனு
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோயில் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையை மாற்றி அமைக்க   வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் முன்னாள் நகராட்சி தலைவரும், வியாபாரிகள் சங்க மாவட்ட துணைத்  தலைவருமான தி.ராசகுமார் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்துக்கு, பட்டறைபெரும்புதூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை  ஆற்றுப்படுகையில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீரை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆங்காங்கே  ராட்சத பைப்புகள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, திருவள்ளூர் பஜார் வழியாக குழாய் பதிக்கும் பணி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு  அடிக்கடி சாலைமீது சாலை போட்டதால், பஜார் வீதி மேடாகவும் கடைகள் பள்ளத்திலும் உள்ளது. இந்நிலையில்  அவ்வழியே பைப்லைன் புதைத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும். பட்டறைபெரும்புதூரில் இருந்து டோல்கேட், சி.வி.நாயுடு சாலை வழியாக குளத்துக்கு பைப்லைன் அமைத்து தண்ணீர்  கொண்டு செல்ல வழி இருக்கிறது. சி.வி.நாயுடு சாலையின் குறுக்கே பெரும்பாக்கம் ஏரியின் கலங்கல் நீர், புங்கத்தூர்  ஏரியின் மதகு நீர் ஒன்றாக சேர்ந்து குளத்துக்கு செல்லும் வகையில் வழி உள்ளது.எனவே, இப்பாதை வழியாக பைப்லைன் அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையேல், வியாபாரிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மனுவை பெற்ற நகராட்சி ஆணையர், இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவருடன்  வியாபாரிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் டி.விக்னேஸ்வரன், த.பாலாஜி உட்பட பலர் உடனிருந்தனர்.
127,123
12/5/2019 3:27:35 PM
தமிழகம்
திருவள்ளூரில் ஜெயலலிதா நினைவு தினம்
திருவள்ளூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் அவரது உருவ  படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருவள்ளூர் பல்லவன் தெருவில் உள்ள அலுவலகத்தில்  ஜெயலலிதா படத்துக்கு மாநில பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார், மலர்தூவி மரியாதை  செலுத்தினார்.  எம்ஜிஆர் சிலை அருகே மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன் தலைமையிலும், ஆவடி சாலை சந்திப்பில்  ஆர்.ராஜி தலைமையிலும் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் கலந்துகொண்டு,  ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், அவைத்தலைவர்  ராதாகிருஷ்ணன், எம்.பி.லோகநாதன், செந்தில்குமார், வெங்கடேசன், குமரேசன், தேவிபாபு, சேகர், ஜெயச்சந்திரன்,  எம்.ஆர்.சி.பிரபாகரன், பொன்முடி, ஏழுமலை, ராமதாஸ், சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மணவாளநகர் அண்ணா சிலை அருகே ஊராட்சி செயலாளர் ஞானகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்,  க.லோகநாதன், பட்டாபி, முரளி, கண்ணதாசன், சுரேஷ், யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல், பூந்தமல்லி ஒன்றியம் காட்டுப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, முன்னாள் ஊராட்சி  தலைவர் கே.ஜி.டி.கவுதமன் ஆகியோர் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நேமம்  ஊராட்சியில் யு.ராக்கேஷ் தலைமையில் கிளை செயலாளர் கே.நடராஜ், பார்த்தசாரதி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்  தலைவர் கே.தாமோதரன், ராஜாராம், வெங்கடேசன், ஸ்ரீதர், ஆண்டாள், முனுசாமி, ராணி, மணி, கன்னியம்மாள், ரவி,  கருணாகரன், விக்னேஷ், செல்வகுமார், மோனீஷ், மனோகர், பானு, தரணி, சரஸ்வதி, பூபதி, சுகுமார் ஆகியோர்  மலரஞ்சலி செலுத்தினர்.
127,124
12/5/2019 3:28:39 PM
தமிழகம்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு 2016ம் ஆண்டு இடஒதுக்கீடுதான் பின்பற்றப்படுகிறது
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீட்டை தான் மாநில  தேர்தல் ஆணையம் பின்பற்றுவதாக தகவல் வெளியாகிவுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள்,  எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள்  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  சட்டரீதிரியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை  வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி  அறிவித்தார். இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் வாக்குப்பதிவு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர்  அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்த்தும் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடித்த  பின்புதான் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வருகிறது. தற்போது, தேர்தல் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு 2016ம் ஆண்டு  வெளியிடப்பட்ட இடஒதுக்கீட்டைதான் மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றுவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதன்படி  12 ஆயிரத்து 524 ஊராட்சி மன்ற தலைவர், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்  பதவிகளுக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு தான் பின்பற்றப்படுகிறது. இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:  2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறை ெசய்யப்பட்டு 2016ம் ஆண்டு தேர்தல்  அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு தடைவித்த சென்னை உயர் நீதிமன்றம், 2011ம் ஆண்டு மக்கள்தொகை  கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்து தேர்தல் நடத்த உத்தரவிட்டது. அதன்படி வார்டு மறுவரையறை  செய்யப்பட்டது. இதில் வார்டுகளின் எல்லைகள் மட்டுமே மாறியுள்ளது. எண்ணிக்கை மாறவில்லை. எனவே தலைவர் பதவிகளுக்கான  இடஒதுக்கீடு மாற்றப்படவில்லை. இதன்படி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட  இடஒதுக்கீடுதான் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
127,125
12/5/2019 3:29:17 PM
தமிழகம்
மீஞ்சூர் சுகாதார நிலையத்தில் 15 ஆண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்
பொன்னேரி: மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில், குடும்பநல இணை இயக்குநர் டாக்டர்  தயாளன், துணை இயக்குனர் இளங்கோவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் ஆகியோர்  அறிவுரையின்படி, மீஞ்சூர் வட்டார மருத்துவர் ராஜேஷ் தலைமையில், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15  ஆண்களுக்கு பொன்னேரி மருத்துவ குழுவினர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். இதில் வட்டார சுகாதார  மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், வட்டார சுகாதார புள்ளியிலாளர் பசுபதி, சுகாதார ஆய்வாளர் அப்துல் வகாப்,  ஏழுமலை, செல்லம்மாள், கிராம சுகாதார செவிலியர்கள் உமாதேவி, பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார  செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
127,126
12/5/2019 3:30:07 PM
தமிழகம்
அம்பத்தூரில் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபருக்கு வலை
அம்பத்தூர்: காதலித்த பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அம்பத்தூர், விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்த 25 வயது பெண், பி.டெக் முடித்துவிட்டு சென்னை  சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூர்,  பள்ளம் தெருவை சேர்ந்த தீபக் சுவாமிநாதன் (28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலிக்க ஆரம்பித்தனர். வடபழனியில்  தீபக், செல்போன் கடை நடத்தி வருகிறார். தனது காதலை வெளிப்படுத்தி அந்த பெண்ணிடம் தீபக் கொஞ்சம், கொஞ்சமாக ரூ.1.50 லட்சம் வரை வாங்கியுள்ளார்.  இதன்பிறகு தீபக் சுவாமிநாதனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்பதால் அவரிடம் இருந்து அந்த பெண் விலகி  வந்துள்ளார்.இதைத் தொடர்ந்து தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இருவரும்  சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளப் பக்கங்களில் வெளியிடுவேன் என தீபக் சுவாமிநாதன்  மிரட்டியிருக்கிறார். இதுகுறித்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் அந்த பெண் புகார் கொடுத்தார். இந்த புகார், அம்பத்தூர்  தொழிற்பேட்டை போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து தீபக்  சுவாமிநாதனை தேடி வருகின்றனர்.
127,127
12/5/2019 3:30:42 PM
தமிழகம்
பொன்னேரியில் மாணவி மாயம்: கடத்தலா? போலீசார் விசாரணை
பொன்னேரி: பொன்னேரியில் மாயமான பள்ளி மாணவியை யாராவது கடத்தினார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மகள் பானு (16).  இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால்,  பொன்னேரியில் உள்ள உறவினர் முகமது ஆசிப் (36) என்பவரின் வீட்டில் பானு தங்கி சிகிச்சை பெற்றுவந்ததாக  தெரிகிறது.கடந்த 1ம் தேதி பானு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.  அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொன்னேரி போலீசில் பானுவின் தந்தை  அப்துல்காதர் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை யாராவது கடத்தினார்களா, வேறு ஏதேனும் காரணமா  என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.
127,128
12/5/2019 3:31:21 PM
தமிழகம்
மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர், ஜேசிபிக்கு அபராதம்
திருவொற்றியூர்: மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி,  பொக்லைன் இயந்திரத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை மணலி புதுநகர் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில், மாநகர பஸ், கன்டெய்னர் லாரி, கார் மற்றும் பைக்  என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார்குப்பம் அருகே  சர்வீஸ் சாலையில், கன்டெய்னர், டேங்கர் லாரி மற்றும் தனியார் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற  வாகனங்கள் செல்ல முடியாமல் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். இதற்கு தீர்வுகாண  வேண்டும் என்று மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், மணலியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள்  எழிலன், சாந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று காலை மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதிகளில் ஆய்வு  செய்தனர். பின்னர் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி, டேங்கர் லாரி மற்றும் பொக்லைன்  இயந்திரம் உள்பட 180 வாகனங்களுக்கு 700 முதல் 3,700 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். பின்னர் அந்த லாரிகளை  அப்புறப்படுத்தினர். இதையடுத்து, சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது என்ற நோ பார்க்கிங் அறிவிப்பு  பலகை வைத்தனர்.
127,129
12/5/2019 3:32:00 PM
தமிழகம்
ஆவடி மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட 142 பேரிடம் நேர்காணல்: சா.மு.நாசர் பங்கேற்பு
ஆவடி: ஆவடி மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில், போட்டியிட விருப்ப மனு அளித்த கட்சியினரிடம்  ஆவடி மாநகர அலுவலகத்தில் நேற்று காலை நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஆவடி  சா.மு.நாசர் பங்கேற்று 48 வார்டுகளில்  போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வார்டு வாரியாக தனித்தனியாக  அழைத்து நேர்காணல் நடத்தினார். இதில் 48 வார்டுகளில் விருப்ப மனு கொடுத்த 142 பேரிடம் கட்சியில் பொறுப்பு,  ஆற்றிய பணிகள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்றது, சிறை சென்றது தொடர்பான பல்வேறு கேள்விகள்  கேட்கப்பட்டன.ஆவடி மாநகராட்சி, 23வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த மாவட்ட செயலாளர்  சா.மு.நாசரிடம், மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன் நேர்காணல் நடத்தினார். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ,  மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், மாவட்ட துணைச்செயலாளர் நடுக்குத்தகை ரமேஷ், ஆவடி மாநகர  செயலாளர் ஜி.ராஜேந்திரன், அவைத்தலைவர் ருக்கு, துணைச்செயலாளர் பேபி சேகர், மாநகர நிர்வாகிகள் சண்பிரகாஷ்,  கலை சேகர், நளினி கோபி, வக்கீல் சேகர், பொன்விஜயன், பதாகை சிங்காரம் மற்றும் வழக்கறிஞர்கள் புரட்சிதாசன்,  ரவிக்குமார், வட்ட செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
127,130
12/5/2019 3:33:01 PM
குற்றம்
டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி
அம்பத்தூர்: வீடுகளுக்கு டெலிவரி செய்துவிட்டதாக கூறி, நூதனமுறையில் செல்போன் திருடிய ஆன்லைன் நிறுவன ஊழியர்களிடம்  போலீசார் விசாரிக்கின்றனர். ஆன்லைன் மூலம் செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் பலர் ஆர்டர் கொடுத்து வாங்குகின்றனர்.  இவ்வாறு புக்கிங் செய்யப்படும் பொருட்களை தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டெலிவரி  கொடுக்கின்றனர். இதன்படி அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ஆன்லைன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்,  ஆர்டர் செய்யும் செல்போன்களை டெலிவரி செய்யாமல், வீடு பூட்டியிருக்கிறது என்று கூறி திரும்ப கம்பெனியில்  ஒப்படைக்கின்றனர். பின்னர் அந்த செல்போனை டெலிவரி  செய்வதாக கம்பெனியில் கூறி, அவற்றை திருடியுள்ளனர்.இவ்வாறு அந்த டெலிவரி நிறுவனத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன உதவி மேலாளர் கமலக்கண்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கம்பெனியில்  பணியாற்றும் 3 ஊழியர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
127,131
12/5/2019 3:34:18 PM
குற்றம்
யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்
ஆவடி: செல்போனில் யூ டியூப் பார்த்து அதன்மூலம் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடித்துவந்த வாலிபர் சிக்கினார். அவரிடம்  இருந்து 2 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் உள்ளது.  நேற்று நள்ளிரவு ஒரு வாலிபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருப்பது பெங்களூரில் உள்ள அந்த வங்கியின்  தலைமை அலுவலக கண்காணிப்பு  கேமரா மூலம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்து   முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து எஸ்ஐக்கள் ரங்கநாதன்,  ராமச்சந்திரன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது ஏடிஎம் மையத்தில் வாலிபர் ஒருவர்,  இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து, அந்த வாலிபர் தப்பிச்செல்லாமல் இருக்க ஏடிஎம் மையத்தின் ஷட்டரை போலீசார் இழுத்து மூடிவிட்டு  பட்டாபிராம் சரக பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். இதன்பிறகு இன்ஸ்பெக்டர்  தலைமையில் போலீசார் ஏடிஎம் மைய ஷட்டர் கதவை திறந்து வாலிபரை பிடித்தனர். பின்னர் அந்த நபரை  முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில் அவர் திருநின்றவூர் அருகே பாக்கம்,  வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த உதயசூரியன் (32), டிப்ளமோ படித்துவிட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’முத்தாபுதுப்பேட்டை அருகே காவனூர் பகுதியில் ஒன் இந்தியா ஏடிஎம்  மெஷினை உடைத்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்ததையும் திருநின்றவூர், சிடிஎச் சாலை, பாடி-முகப்பேர் சாலையில்  உள்ள ஏடிஎம் மையத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதையும்  ஒப்புக்கொண்டார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’உதயசூரியனுக்கு வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல்  அவதிப்பட்டுள்ளார். பங்கு சந்தையில் பணம் கட்டி நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் யூ டியூப் மூலம் ஏடிஎம்  மையத்தை எந்தெந்த வகையில் திறக்கலாம் என்பதை அறிந்து கொண்டு இதன்படி ஏடிஎம் மையங்களில் உள்ள  இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடித்துள்ளார். ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்ததும் சிசிடிவி கேமராவில் சோப்பு நுரையை ஸ்பிரே செய்துவிடுவார்’ என்று தெரிவித்தனர்.  இதையடுத்து, உதயசூரியனிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
127,132
12/5/2019 3:34:54 PM
தமிழகம்
75 புதிய கால்நடை கிளை நிலையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழக  அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட 19வது மாநில கணக்கெடுப்புபடி 227.23 லட்சம் கால்நடைகள் இருப்பதாக  தெரியவந்துள்ளது. செயற்கை கருவூட்டல் திட்டத்தின் கீழ் கால்நடைகள் அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் பால்  உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கால்நடை துணை மையங்கள் மூலம் இனப்பெருக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் சார்பாக புதிய கால்நடை மையங்கள் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  இதை ஏற்று தமிழகத்தில் 3000 கால்நடைகளுக்கு மேல் உள்ள கிராமங்களில் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள்  அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கால்நடை கிளை நிலையங்கள் தலா  ரூ.4 லட்சம் வீதம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதன்படி அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில்  புதிதாக 75 கிளை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
127,133
12/5/2019 3:35:40 PM
தமிழகம்
சிறுமியை தகாத வார்த்தையால் பேசிய விவகாரம் புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் 8 பேருக்கு சரமாரி கத்தி வெட்டு
பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர் (34). இவரது 13 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த  கமலக்கண்ணன் (45) என்பவர் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த, சங்கர் தட்டி  கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில், கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர்களான குமார், மஸ்தான்,  ரஜினி, நந்தகுமார், சஞ்சய், ஆளி ஆகியோர் சங்கரை கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் சங்கரின் தோள் பட்டை, தலை,  கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், சங்கரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர்.இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் சங்கர் தரப்பினர், கமலக்கண்ணன், ரஜினி (40) ஆகியோரை கத்தியால் தாக்கினர்.  இதில் காயமடைந்த இருவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்த  புகாரின் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணன், சஞ்சய் ஆகியோரை கைது செய்து  சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,134
12/5/2019 3:36:19 PM
தமிழகம்
மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு
சென்னை: பணிக்கு தாமதமாக வருவதை தடுக்கும் வகையில் மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவை விரைவில்  அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அனைத்து பகிர்மான அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே எங்கெங்கு கருவி பொருத்த வேண்டும், பணியாளர்களின் எண்ணிக்கை, பதவி, மொபைல் எண், மெயில் ஐடி  உள்ளிட்ட விபரங்களை 10ம் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மை பொறியாளர்களுக்கு  மின்வாரிய தலைமை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.  ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்வாரிய அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.
127,135
12/5/2019 3:37:03 PM
தமிழகம்
ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது
சென்னை: புவி கண்காணிப்பு பணிக்காக ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை வரும் 11ம் தேதி பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம்  இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.  புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்ட ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள்  மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான நானோ செயற்கைகோள்களை கடந்த மாதம் 27ம் தேதி  பிஎஸ்எல்வி-சி47  ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதேபோல், அடுத்தடுத்து வரும் மார்ச்  மாதத்திற்குள் 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறித்தார். இதில், 6 ராக்கெட்டில் 7  செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பும் பணிகளில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்,  பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை வரும் 11ம்  தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி  ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து மதியம் 3.25 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.  இதனுடன்  இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளுக்கு சொந்தமான தலா ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 6  செயற்கைகோள்கள் என 9 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவிற்கு சொந்தமான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது. விண்ணில் 576 கி.மீ  தொலைவிலும், 37 டிகிரி கோணத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளது. பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டானது  ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 75வது ராக்கெட் ஆகும். இதேபோல், முதலாவது ஏவுதளத்திலிருந்து  விண்ணில் ஏவப்படும் 37வது ராக்கெட்டும் இதுவாகும்.
127,136
12/5/2019 3:37:50 PM
தமிழகம்
வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி
சென்னை: வீட்டை சுத்தம் செய்யும் போது ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார். போதிய மருந்து  இல்லாததே பெண் இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை கே.கே.நகர் கண்ணிகாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பழனி(39). மனைவி சுமித்ரா(35) மற்றும்  குழந்தைகளுடன் வசித்து வரும் இவர், திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் கார்பெண்டராக வேலை செய்து  வருகிறார். கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் கன மழை செய்து வருகிறது. இதனால் வீடுமுழுவதும் சகதியாக  இருந்ததால் அதை சுத்தம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டின் கழிவறை  அருகே இருந்த ஷூவை எடுத்து வைக்கும் போது, அதில் இருந்த நச்சு பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்தது. இதில் வலி  தாங்க முடியாமல் பயத்தில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அவரது கணவர் பழனி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி  வந்து சுமித்ராவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  நச்சு பாம்பு என்பதால் உடல் முழுவதும் விஷம் பரவியதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களின் பரிந்துரைப்படி  உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று  வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடிக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து  இல்லாததே பெண் இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
127,137
12/5/2019 3:38:40 PM
தமிழகம்
‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு
அவிநாசி: கோவை மாவட்டம் அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியும் வரை தேர்தல் வருமா, வராதா என்ற நிலைதான் இருக்கின்றது.  இப்போதுகூட உச்சநீதிமன்றம் டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சி சட்ட நடைமுறைகளை உள்ளடக்கி தேர்தல் தேதியை  அறிவிக்க உத்தரவிட்டதால்தான் தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதிலும் கிராம ஊராட்சிகளுக்குத்தான்  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மோசடிகள் செய்ய, தேர்தலைப் பிரித்துப் பிரித்து  நடத்துகிறார்கள். எப்படி இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் நீதி வழங்கப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு  ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. அதையும் முறையாக கொடுப்பதில்லை. கார்பரேட்டுகளுக்கு தவணை,  தவணையாக சலுகை வழங்கும் பாரதிய ஜனதா அரசு, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது.பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒழித்துக் கட்டவும் முடிவு செய்துள்ளனர். அதில் வேலை செய்யும் ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு 8 மாத சம்பளத்தை வழங்காமல் பாக்கி வைத்திருக்கின்றனர். ரூ.7 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள். சேலம் உருக்காலை, திருச்சி பெல் போன்ற  பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடுகிறார்கள். ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளை திருச்சி துப்பாக்கி  தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை ஆகியவற்றை ஏலம் போடுகிறார்கள். பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி முதலாளிகளுக்கு அதிக சலுகைகள் தருகிறார்கள். நெருக்கடி  அதிகரிக்கும்போது, மக்கள் நலத்திட்டங்களை மிகவும் குறைக்கிறார்கள். 70 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய  கட்டமைப்பைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.வரும் 8ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
127,138
12/5/2019 3:39:31 PM
உலகம்
அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிசூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்...2 வீரர்கள் பலி, 3 பேருக்கு சிகிச்சை
ஹவாய்: அமெரிக்கா ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்திய விமானப்படை தளபதி  பதாரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அமெரிக்க வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று  வருகின்றனர்.அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பரில் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை தளம் அமைந்துள்ளது.  இந்த தளத்தில் பசிபிக் விமானப்படை கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் பங்குபெறுவதற்காக  இந்தியா விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா தலைமையில் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து சென்றிருந்தனர்.இந்தநிலையில் இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடற்படை மற்றும் இந்திய விமானப்படை  கூட்டுப் பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தது. அதில் இந்திய விமானப்படை தளபதி, அமெரிக்கா அதிகாரிகள் பலர்  பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் கப்பல் கட்டும் தளத்திற்குள் திடீரென கடற்படை வீரர்கள் உடையில் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.  அவர் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் பயிற்சியில்  ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் விமானபடையினர் மீது குண்டு சரமாரியாக பாய்ந்தது. அதில், அமெரிக்காவை சேர்ந்த  பாதுகாப்புத்துறை வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர், மேலும் 3 பேர் மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர், தாக்குதலுக்கு பின்பு தனது தலையில் தானே  சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.  இந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா சம்பவ இடத்தில் இருந்தார். ஆனால் அவர்  மீது துப்பாக்கி தாக்குதல் நடக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் உடனிருந்த இந்திய  அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமானப்படை தெரிவித்துள்ளது. பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில்  ஈடுபட்டவர் அமெரிக்க  பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரி என்று தெரிவந்துள்ளது. மேலும் இறந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று   வருபவர்களின் விவரங்களை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இந்திய விமானப்படை தளபதி பங்குபெற்ற நிகழ்ச்சியில்  இந்த திடீர் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஹவாய் பியர்ல் ஹார்பரில் கடந்த 1941ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 2403 வீரர்கள் உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.
127,139
12/5/2019 3:40:16 PM
தமிழகம்
காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்
ராமேஸ்வரம்: தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள்  இன்று முதல் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இதனால்  விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.  இதனால் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ராமநாதபுரம்  மாவட்ட மீனவர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.  மேலும் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தெற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி அனுமதி டோக்கன் இன்று  வழங்கப்படவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 800 விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு  பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று காலை பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் இன்று  காலை கரை திரும்பினர். படகுகளில் அதிகபட்சமாக 100 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.
127,140
12/5/2019 3:41:02 PM
இந்தியா
வேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு
நாக்பூர்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், தன் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல்  ஆணையத்திடம் மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, ஜன.4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவு களில், இரு  வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை, பட்ந விஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல்  ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக, வழக்கறிஞர் சதிஷ் உகே, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு  தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து, சதிஷ் உகே, உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு அடிப்படை ஆதாரமிருப்பதாக  கூறி, வழக்கை விசாரிக்குமாறு, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, பட்நவிசின் நாக்பூர் வீட்டிற்கு, கடந்த வாரம், ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.  இந்நிலையில், நேற்று, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்நவிஸ்  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதய் தாப்லே, ‘’தவிர்க்க முடியாத காரணங்களால், பட்நவிஸ் நேரில் வர  முடியவில்லை. இவ்வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,’’ என கேட்டுக்  கொண்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சதிஷ் உகே, ‘’நேரில் ஆஜராகக் கூடாது என, பட்னவிஸ் முடிவெடுத்துள்ளார். அவர் ஆஜராக  தேவையில்லை’ என, அவரது வழக்கறிஞர், நவம்பர் 4ம் தேதி பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். ‘’ஆகவே, திட்டமிட்டு  நீதிமன்றத்திற்கு வராத பட்நவிசுக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும்,’’ என, வலியுறுத்தினார். இரு தரப்பு  வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் எஸ்.டி.மேதா, வழக்கு விசாரணையை, ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்து  உத்தரவிட்டார்.
127,141
12/6/2019 2:19:58 PM
இந்தியா
மறுவரையறை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை
* பழைய தேர்தல் அறிவிப்புகளும் ரத்து* புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியீடு* சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவுபுதுடெல்லி: புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்யாமல் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதால், 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பழைய தேர்தல் அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகிற 27, 30ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ‘தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் ஏற்கெனவே இந்த மாவட்டங்கள் அங்கம் வகித்த வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி என மொத்தம் 9 மாவட்டங்களில் மறுவரையறைப் பணிகளை சட்ட ரீதியாக முடிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் அவசரகதியில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி திமுக மற்றும் 9 வாக்காளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘புதிதாக மாவட்டங்களைப் பிரிக்கும் முன்பாகவே மறுவரையறைப் பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுவிட்டன. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் மறுவரையறைப் பணிகளுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘புதிதாக மாவட்டங்களைப் பிரித்து விட்டு, அந்த மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யத் தேவையில்லை என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? அது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். இதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் பாதிக்கப்படும். எனவே, தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம் இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் மறுவரையறை உள்ளிட்ட அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி அதன்பிறகு தேர்தலை நடத்துங்கள் என தள்ளிப்போடலாம்’ என கருத்து தெரிவித்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘ஒட்டுமொத்தமாக தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றனர். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ அதன்படி தேர்தல் நடக்க வேண்டும். புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பிற்பகலுக்குள் (நேற்று மாலை) பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி விசாரணையைத் தள்ளிவைத்தனர். தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ‘புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம்’ என்ற கருத்து தெரிவித்தனர். வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு அறிவிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளிக்கிறது. அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், ‘புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம். அந்த 9 மாவட்டங்களுக்கும் மறுவரையறையை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதன்பின், தேர்தல் ெதாடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு தேர்தலை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தற்போதைய தீர்ப்பால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் (இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்) அறிவிப்பாணை செல்லாததாகிவிடுகிறது. ேமலும், 9 மாவட்டங்களுக்கும் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், மாநில தேர்தல் ஆணையம் புதியதாக அறிவிப்பாணையை ெவளியிடும். அவ்வாறு, உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்பட்சத்தில், அதில் ஊரக உள்ளாட்சி மற்றுமின்றி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலையும் சேர்த்து அறிவிப்பாணை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தடை விதிக்கப்பட்ட 9 மாவட்டங்கள்* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* வேலூர்* திருப்பத்தூர்* ராணிப்பேட்டை* விழுப்புரம்* கள்ளக்குறிச்சி* திருநெல்வேலி* தென்காசிபிப்ரவரியில் நடத்தப்படுமா?தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். காரணம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல முன்பே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை முடித்து 27 அல்லது 28ம் தேதிதான் ஊர் திரும்பவும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27ம் தேதி என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், புத்தாண்டு அதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறையையும் சொந்த ஊரில் கொண்டாட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் திட்டமிட்டிருந்தனர். இதுபோன்ற நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருக்கும். மாநில தேர்தல் ஆணையம் மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தனர்.இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றம் இன்று தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த அறிவிப்பின்படி வருகிற 27 மற்றும் 30ம் தேதி தேர்தல் நடைபெறாது. மாநில தேர்தல் ஆணையமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
127,142
12/6/2019 2:21:34 PM
இந்தியா
பலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை
* தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்டர்* பொதுமக்கள் வரவேற்புதிருமலை: ஐதராபாத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவத்தில் கைதான 4 பேர் இன்று அதிகாலை தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள செம்ஷாபாத்தை சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் டிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 28ம்தேதி தொண்டேப்பள்ளி சோதனைச்சாவடி அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு மாதப்பூர் சென்று மீண்டும் தொண்டப்பள்ளி சோதனை சாவடி அருகே வந்தார். அப்போது நாராயணபேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ஆரிப், சென்னகேசவன், கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து, அவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர், அலறி கூச்சலிட்டார். ஆனாலும் இதை கண்டுகொள்ளாத 4 பேரும் ஆடைகள் களைந்த நிலையில் அவரை  லாரி கேபினில் வீசி அங்கேயும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இரவு 9.20 மணி முதல் 10.30 மணி வரை இந்த வெறியாட்டம் நடந்துள்ளது. சுயநினைவு இழந்த பெண் டாக்டரை சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டான்பள்ளி என்ற இடத்திற்கு லாரியில் கடத்திச்சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 4 பேரையும் நடுரோட்டில் வைத்து என்கவுன்டர் செய்யவேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு மகளிர் அமைப்பினர், மாணவர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தினர். குற்றவாளிகளை பெற்ற தாய்மார்களும் தவறு நடந்திருந்தால் அவர்களை கொன்றுவிடலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முகம்மது ஆரிப் உள்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரிப்பதற்காக தெலங்கானா மாநில அரசு, விரைவு நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி குற்றவாளிகளிடம் விசாரணை தொடங்கியது. நேற்று முன்தினம் குற்றவாளிகள் 4 பேரையும் 10 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அனுமதி வழங்கவேண்டும் என போலீசார் மனு அளித்தனர். ஆனால் 7 நாட்களுக்கு கஸ்டடி வழங்கி நீதிமன்றம் அனுமதி அளித்தது. வழக்கு விசாரணையை விரைவில் முடித்து விரைவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர தெலங்கானா மாநில காவல்துறை ஆணையாளர் சஜ்ஜனார் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். இதற்காக துணை ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தடயவியல் ஆய்வக நிபுணர்கள் இணைந்து குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் ஆதாரமாக நான்கு பேரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியாக போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். சட்டான்பள்ளி மேம்பாலம் கீழ் பெண் டாக்டர் உடலை எரித்த இடத்தின் அருகில் தங்க கொலுசு மற்றும் ஜீன்ஸ் பேண்ட் கிழிந்த நிலையில் போலீசார் கண்டுபிடித்து சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் 500 மீட்டர் தொலைவில் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிகளில் போலீசார் 4 குற்றவாளிகளையும் அழைத்து வந்து விசாரிக்க முயன்றனர். ஆனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பல்வேறு அமைப்பினர், 4 குற்றவாளிகளையும் கடுமையாக தாக்குவதற்கு தயாராக இருந்த காரணத்தால் போலீசார் சற்று தயக்கம் காட்டி வந்தனர். குறிப்பாக 4 குற்றவாளிகளும் வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டும், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தியும் தங்கள் கோபத்தை காட்டினர். குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு போலீசார் மட்டன் பிரியாணி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். ஒவ்வொரு முறையும் 4 குற்றவாளிகளையும் பகலில் விசாரணைக்கு அழைத்து செல்ல முயலும்போது, பல்வேறு அமைப்பினர் இடையூறு செய்து, உடனே தூக்கில் போடும்படி கோஷமிட்டு வந்தனர். இதனால் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அதன்படி காவல்துறை ஆணையாளர் சஜ்ஜனார் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 2.30 மணிக்கு 4 குற்றவாளிகளையும், சம்பவம் நடந்த சட்டான்பள்ளி மேம்பாலம் அருகே பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர். விவரங்களை வீடியோவில் பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்கவும் 2 தனிப்படையினரும் உடன் சென்றிருந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு குற்றவாளிகள் 4 பேரும் போலீசார் மீது திடீரென சரமாரி கற்களை வீசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் சுதாரிப்பதற்குள் 4 பேரும் அங்கிருந்து தப்ப ஓட முயன்றனராம். இதனால் தற்காப்புக்காக காவல்துறை ஆணையாளர் சஜ்ஜனார் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே சிவா, நவீன் உயிரிழந்தனர். குண்டு காயமடைந்த சென்னகேசவன், முகமது ஆரிப் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தில் ஏற்றியபோது அவர்களும் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் டாக்டர் எரித்துக்கொலை சம்பவத்தில் பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மகளிர் சங்கத்தினர் என நாடு முழுவதும் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவந்த நிலையில் போலீசார் அதனை சிறப்பாக செய்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் துணிவான முயற்சியை மேற்கொண்ட போலீசாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். பெண் டாக்டரை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூரன்கள், அவரை லாரி கேபினில் வீசியுள்ளனர். அங்கேயும் வெறியாட்டம் போட்டுள்ளனர். இரவு 9.20 மணி முதல் 10.30 மணி வரை  இந்த வெறியாட்டம் நடந்துள்ளது. சுயநினைவு இழந்த பெண் டாக்டரை சுமார் 24  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டான்பள்ளி என்ற இடத்திற்கு லாரியில்  கடத்திச்சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை  செய்தனர்.
127,143
12/6/2019 2:33:48 PM
இந்தியா
மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க ஐதராபாத் போலீசிடம் மாநில போலீஸ் உத்வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, மாயாவதி அறிவுரை கூறியுள்ளார். தெலங்கானாவில் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்காக, பல்வேறு தரப்பினரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர். * இதுகுறித்து, மத்திய முன்னாள் விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இன்றைய சம்பவம் நாட்டில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் தீமைக்கு மேலாக நல்லது இருக்கிறது என்ற செய்தியை இந்தியா வழங்கும் என்பது தெளிவாகி உள்ளது. ஐதராபாத் காவல்துறையையும், காவல்துறையினரைப் போல செயல்பட அனுமதிக்கும் தலைமையையும், நான் வாழ்த்துகிறேன். தீமைக்கு மேலாக எப்போதும் நன்மை நிலவும் இந்த நாடு என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். * தெலங்கானா என்கவுன்டர் குறித்து, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான மாயாவதி கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. இங்கேயும் டெல்லியிலும் உள்ள போலீசாரும், ஐதராபாத் காவல்துறையினரிடமிருந்து உத்வேகத்தை பெற வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இங்கு குற்றவாளிகள் அரசு விருந்தினர்களாக கருதப்படுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் காட்டாட்சிதான் நடக்கிறது’’ என்றார்.
127,144
12/6/2019 2:36:57 PM
இந்தியா
இளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது...? 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்
ஐதராபாத்: இளம் எஸ்பியாக இருந்த காலத்தில் ஆசிட் வீச்சு விவகாரத்தில் 3 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது இன்றைய சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையிலான போலீஸ் படைதான். அவரது தலைமையிலான குழுதான், இன்று பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது. இது, 2008 சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ெதலங்கானா மாநிலத்தின் ககாதியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இரண்டு பெண் பொறியியல் மாணவிகள், கடந்த 2008 டிசம்பரில் ஆசிட் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில், பொதுமக்கள் பெரும் கோபத்தை வெளிப்படுத்தினர். வாரங்கலில் ஆசிட் வீசிய மூன்று இளைஞர்கள் 48 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் போலீசார் ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொன்றனர். கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஆதாரங்களை சேகரிப்பதன் ஒரு பகுதியாக 3 குற்றவாளிகளும் குற்றம் நடந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ‘அந்த 3 பேரும் ஆயுதம் மற்றும் ஆசிட்டால் போலீசாரை தாக்க முயன்றனர். அதனால், காவல்துறையினர் தற்காப்புக்காக மூவரையும் சுட்டுக் கொன்றனர்’ என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வாரங்கல் மாவட்ட இளம் போலீஸ் சூப்பிரண்ட்டாக இருந்த விஸ்வநாத் சஜ்ஜனாரை, பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினர். அவரை தங்களது தோள்களில் ஏற்றி கொண்டாடினர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது சம்பவம் நடந்திருந்தாலும்கூட, ஆந்திர காவல்துறையின் வரலாற்றில் அந்த இளம் எஸ்பி சஜ்ஜனார், அவரது சகாக்களால் ‘அமைதியான ஆப்ரேட்டர்’ என்று அழைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும், சைபராபாத்தின் போலீஸ் கமிஷனருமான சஜ்ஜனார், மீண்டும் தற்போது ஒரு புதிய சூழலை எதிர்கொண்டுள்ளார். அதுதான், ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் டிசா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வை, 4 பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றது. பொதுமக்களின் பெரும் கோபத்தால், தெலங்கானாவே போராட்டக் களமாக மாறியது. இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியது. குற்றம்சாட்டப்பட்ட அந்த 4 பேரையும் சுட்டுத் தள்ள வேண்டும். பொது இடத்தில் வைத்து தாக்கி ெகால்ல வேண்டும் என்றெல்லாம் பெண் எம்பிக்கள் பேசி, தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். ேமலும், ‘தனது சகோதரியை அழைத்ததற்கு பதிலாக, ‘100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை டயல் செய்திருக்க வேண்டும்’ என்று உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி அளித்த அறிக்கை, மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது. போலீசாரும், இந்த வழக்கைக் கையாண்ட விதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். ‘தெலங்கானா போலீசார் மீண்டும் தங்களை ‘ஹீரோ’வாக வெளிப்படுத்த வேண்டும். வெறும் கைது செய்வதைத் தவிர வேறொன்றையும் செய்ய வேண்டும்’ என்ற அர்த்தங்களில் கடந்த ஒருவாரமாக ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு பிரசாரங்கள் நடந்தன. இவ்விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், கடந்த ஒருவாரமாக போலீஸ் உயரதிகாரிகள் ‘வேறு ஏதாவது’ என்ற அடிப்படையில் தீவிர ஆலோசனை நடத்தினர். முன்னதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை பெற்றுத் தருவதற்காக சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிட்டார். ஆனால், போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார், டிச. 13, 2008 இரவு வாரங்கல் ‘என்கவுன்டர்’ சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ‘அந்த’ சம்பவத்தை நடத்தி முடித்தனர். ஆனால், டிசா விஷயத்தில், அப்படி உடனடியாக நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். காரணம், குற்றவாளிகளிடம் இருந்து  வாக்குமூலம், தடயவியல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற ஆதாரங்களை பெற்று, சம்பவத்தை உறுதிசெய்த பின்னரே, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் இன்று அதிகாலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இன்றைய சம்பவத்திலும், வழக்கம்போல் போலீசாரை குற்றவாளிகள் தாக்க முயன்றதால், போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ள, என்கவுன்டர் நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், என்கவுன்டர் திட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சிலர் கருதினாலும், சில அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகள் வந்த பின்னரே, இன்றைய முடிவு எடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
127,145
12/6/2019 2:38:57 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்ப பெறப்படுவதாகவும், புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டரீதியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது.இதையடுத்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த திங்கள் கிழமை அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,18,974 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.முதல் கட்டத்தில் 194 ஊராட்சி உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி வேட்புமனு தாக்கல் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி, மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு அவசர உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தடையில்ைல என்று தெரிவித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை முடித்து நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெறப்பட்டு விட்டதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்படாது. உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவிப்புகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து புதிதாக மீண்டும் அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
127,146
12/6/2019 2:41:53 PM
தமிழகம்
இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு
சென்னை: முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 1,18,974 ஊரக உள்ளாட்சிகளுக்கான பதவியிடங்களுக்கு வருகிற 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்து 4 நாட்கள் ஆகி விட்டாலும், கூட்டணி குறித்து பேச எந்த கட்சிகளும் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. அதே நேரம், அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவார்கள் என்று முடிவு செய்வார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 31 மாவட்டங்களில் உள்ள அதிமுக பொறுப்பாளர்களுடன் கூட்டணி கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் அதிமுகவில் உள்ள 56 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதன்படி, தங்கள் மாவட்டங்களில் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை கூட்டத்தில் தெரிவிப்பார்கள். மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை, கட்சி தலைமை ஏற்றுக்கொண்டு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், ஊரக உள்ளாட்சி அதிக இடங்களில் அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுவது குறித்தும் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ள தீர்ப்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அதேபோன்று, மற்ற மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை ரத்து செய்ததுடன், மீண்டும் புதிதாக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
127,147
12/6/2019 2:43:42 PM
தமிழகம்
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நாளை அண்ணாமலையார் தேர் உள்பட 5 தேர்களின் (பஞ்ச ரதங்கள்) பவனி நடக்கிறது. இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் காலையிலும் இரவிலும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 5ம் நாளான நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என பக்தி முழக்கமிட்டனர். இன்று காலை 6ம் நாள் உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர், யானை வாகனத்தில் சந்திரசேகரர் மற்றும் தனித்தனி விமானத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இரவு வெள்ளி ரத உற்சவம் நடைபெறுகிறது.7ம் நாளான நாளை மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நடக்கிறது. நாளை காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலாவதாக விநாயகர் தேர் மாடவீதிகளில் பவனி வந்தபிறகு சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வரும். ‘மகாரதம்’ என அழைக்கப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரின் பெரிய தேர் பவனி நடைபெறும். மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் எழுந்தருளும் அம்மன் தேர் மாடவீதிகளில் பவனி வரும். இந்த அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்து செல்வார்கள் என்பது தனிச்சிறப்பாகும். நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும். காலை முதல் இரவு வரை நடைபெறும் தேரோட்டத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என தெரிகிறது. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இதேபோல், அம்மன் தேரோட்ட பாதுகாப்பு பணியில் சுமார் 200 பெண் போலீசார் ஈடுபட உள்ளனர்.மகாதீபத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. வரும் 10ம்தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.
127,148
12/7/2019 2:01:38 PM
தமிழகம்
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ேதர்தல் தொடர்பான அனைத்து உத்தரவுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டரீதியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது.இதையடுத்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 3ம் தேதி அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பாணை நேற்று வெளியிடப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி வேட்புமனு தாக்கல் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி, மாநில தேர்தல் ஆணையம்  கடந்த 5ம் தேதி இரவு அவசர உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தடையில்ைல என்றும் தெரிவித்தது.புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடித்து 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெறப்பட்டு விட்டதாக, நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக நேற்று இரவு முதல்வருடன் தலைமை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது? 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது தொடர்பாக 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில், ‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து உத்தரவுகளும் திரும்ப பெறப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அமலில் இருந்த ேதர்தல் நடத்தை விதிகள் அனைத்து திரும்ப பெறப்பட்டுவிட்டன. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் பெரிய மாவட்டங்கள். இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக மொத்த உள்ளாட்சி பதவிகளின் எண்ணிக்கையில் 20 சதவீத பதவிகள் இந்த மாவட்டங்களில் உள்ளன. இந்த பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2 அல்லது 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம். இது தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
127,149
12/7/2019 2:03:26 PM
இந்தியா
ஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் 5 பேர் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட மற்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். வழக்கை வாபஸ் செய்யக் கோரி, பலாத்கார கும்பல் தீ வைத்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணை, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்களில் ஒருவன் தப்பி விட்டான். கைதான மற்றொருவன் கடந்த 10 நாள்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தான். இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக ரேபரேலி நீதிமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார். அப்போது, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் உள்பட 5 பேர் கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கி, அந்தப் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர்.அலறி துடித்த அந்த பெண்ணை, அப்பகுதியினர் மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங்  மருத்துவமனைக்கு விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து, அந்தப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளித்து வந்த டெல்லி மருத்துவமனை மருத்துவர் சுனில் குப்தா கூறுகையில், அந்த பெண் சுயநினைவோடுதான் இருந்தார். அவர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தாலும், எங்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். குற்றவாளிகளை விடுவிக்க வேண்டாம் எனத் திரும்பத் திரும்ப எங்களிடம் கூறிக்கொண்டே இருந்தார். நான் உயிரோடு திரும்பி வருவேனா?’ என எங்களிடம் கேட்டார். `என்னைக் காப்பாற்றுங்கள். நான் வாழ விரும்புகிறேன்’’ என்றார். இந்நிலையில், வெண்டிலேட்டரில் சுயநினைவை இழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், நேற்று இரவு 11.10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, சஃப்தர்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு தலைவர் சலப் குமார் கூறுகையில், ‘‘90 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த ெபண்ணுக்கு, இரவு 11.10 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இரவு 11.40 மணிக்கு உயிரிழந்துவிட்டார்’’ என்றார். முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணிடம், உள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், வாக்குமூலம் பெற்றுச் சென்றார். தற்ேபாது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தற்ேபாது உயிரிழந்ததால் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:  பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிய 5 பேரில் குற்றம் சாட்டப்பட்ட சிவம் திரிவேதி மற்றும் சுபம் திரிவேதி ஆகியோர் தீவைத்து கொளுத்தியவர்கள். ஹரிசங்கர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய், ராம் கிஷோர் திரிவேதி ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ெபண்ணிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர் மறுத்துவிட்டதால், தீவைத்து ெகாளுத்தி உள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தால் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்த பெண் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க லக்னோ காவல் ஆணையர், உன்னாவ் ஏஎஸ்பி வினோத் பாண்டே தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.போலீசார் அலட்சியம்பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், ‘‘என் பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இதுெதாடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. வழக்கை வாபஸ் செய்யக் கோரி தொந்தரவு செய்தனர். என் மகளை எரித்த ஐந்து பேரையும் உன்னாவோ காவல்துறையினர் சுட்டுக் கொன்றால்தான் நான் ஆறுதலடைவேன். அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் கிடைத்த போதிலும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது. எனது உறவினரின் கடைக்கு தீ வைப்பதாக மிரட்டினர். உங்களால் வாழ அனுமதிக்கமாட்டோம். போலீசாரிடம் தெரிவிப்போம் என்று கூறியபோதும், பெரிய மனிதர்கள் மூலம் எங்களை அடிக்கவைத்தனர். அதனை மீறியும் போலீசில் புகார் அளித்தோம். ஆனால், மகளை கொன்றுவிட்டனர்’’ என்றார்.
127,150
12/7/2019 2:06:30 PM
தமிழகம்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை தொடர்பான சட்டத்தை மீறிய பாஜ அரசு மீது வழக்கு தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் அறிக்கை: ‘சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால் வழங்க முடியாது’ என்று மத்திய பாஜ அரசு கைவிரித்துள்ளதை, அதிமுக அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், நிதியமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜி.எஸ்.டி சட்டத்தை செயல்படுத்துவதால், உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் முன் வைத்தன. திமுகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போது, ‘ஜி.எஸ்.டி சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும். குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்’ என்று மத்திய பா.ஜ.க. அரசு பொது வெளியிலும், சட்டரீதியாக நாடாளுமன்றத்திலும் உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்றி தெரிவித்தார். ஜி.எஸ்.டி சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்பு வைத்து நிறைவேற்ற முனையும் போது - அ.தி.மு.க. எப்படி இந்த மசோதாவை முதலில் எதிர்த்தது என்ற விவரங்களை எல்லாம் எதிர்க்கட்சித்  தலைவர் என்ற முறையில் விளக்கிக் கூறி - “வணிகர்களை, மாநில நிதி உரிமையைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவசரகோலத்தில் நிறைவேற்ற வேண்டாம். தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புங்கள்” என்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டேன். எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு, அன்றைக்கு ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்தது.ஆனால் ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. பிறகு, 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தத் தொகை பெறப்பட்டதா?. ஜி.எஸ்.டி சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?.அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு?. நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? உள்ளிட்ட எது பற்றியும் அதிமுக அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது. ஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும்.ஏற்கனவே அதிமுக ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து - கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும் - ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
127,151
12/7/2019 2:08:05 PM
இந்தியா
பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு
திருமலை: கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களையும் அடக்கம் செய்ய ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் டிசாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் முகமது ஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் 4 பேரும் பெண் டாக்டரை எப்படி எரித்துக்கொன்றார்கள்? என சம்பந்தப்பட்ட இடத்தில் அவர்கள் நடித்துக் காண்பிப்பதை வீடியோவில் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக, நேற்று அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்திற்கு போலீசார்  அழைத்து சென்றனர்.அங்கு வேனில் இருந்து இறங்கிய 4 குற்றவாளிகளையும் நடித்து காண்பிக்கும்படி போலீசார் கூறினர். ஆனால் அதிகாலை என்பதால் கும்மிருட்டில் 4 குற்றவாளிகளும் போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க முயன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட மற்ற போலீசார் 4 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 மீட்டர் இடைவெளியில் 4 குற்றவாளிகளும் பலியாயினர். மேலும் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயமடைந்தனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் மெகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் இரவு இறுதிச்சடங்கு செய்ய முகமது ஆரிப் சொந்த ஊரான ஜெக்சல், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகியோரின் ஊரான குடிகன்லாவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது தொடர்பாக தெலங்கானா ஐகோர்ட்டில் நேற்றிரவு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இரவு 8.30 மணிக்கு இந்த வழக்கை ராமச்சந்திர ராவ், லட்சுமண்ராவ் தலைமையிலான நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.பிரசாத் ஆஜராகி, என்கவுன்டரில் உயிரிழந்த குற்றவாளிகளின் சடலங்கள் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்ததாகவும், பிரேத பரிசோதனைகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை 4 பேரின் சடலங்களையும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ காட்சிகளை மெகபூப்நகர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் 4 பேரின் சடலங்கள் இறுதிச்சடங்கு செய்யப்படாமல் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும் ஊடகங்களில் வந்த காட்சிகளின் ஆதாரமாக வைத்து தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
127,152
12/7/2019 2:10:04 PM
விளையாட்டு
208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி
ஐதராபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார்.  இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸ்  2 ரன்னில் ஆட்டம் இழக்க லீவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்னும், பிரண்டன் கிங் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அரைசதம் அடித்த ஹெட்மயர் 41 பந்தில் 2பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன் விளாசினார். கேப்டன் பொல்்லார்ட் தனது பங்கிற்கு 19 பந்தில் (ஒருபவுண்டரி,4 சிக்சர்) 37 ரன் எடுத்தார். 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்னிலும் ராம்டின் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் சஹால் 2, ஜடேஜா, வாஷிங்டன், தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 208 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித்சர்மா 8 ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.  இதையடுத்து கே.எல்.ராகுல்- கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தனர். 11.4 ஓவரில் இந்தியா 100ரன்னை எட்டியது. 37 பந்தில் அரைசதம் அடித்த கே.எல்.ராகுல், 62 ரன்னில் (5பவுண்டரி, 4சிக்சர்) ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ரிஷப் பன்ட் முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். 9 பந்தில் 2 சிக்சருடன் 18 ரன் எடுத்து வெளியேற, மறுபுறம் விராட் கோஹ்லி 35 பந்தில் அரை சதம் அடித்தார். பின்னர் அவர் கோரத்தாண்டவம் ஆடினார். இடையே ஸ்ரேயாஸ் அய்யர்  வந்த வேகத்தில் (4ரன்) பெவிலியன் திரும்பினார். 18.4 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. கேப்டன் கோஹ்லி 50 பந்தில் தலா 6பவுண்டரி,6 சிக்சருடன் 94 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தவெற்றி மூலம் இந்தியா1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.வெற்றிக்கு பின் கேப்டன் கோஹ்லி கூறுகையில், இளம்வீரர்கள் இன்று எனது இன்னிங்சில் முதல்பாதி ஆட்டத்தை பின்பற்றவேண்டாம். அந்த நேரத்தில் நான் மோசமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். கே.எல்.ராகுல் இதனால் அழுத்தம் அடைந்தார். ஆனால் அதனை குறைக்க என்னால் முடியவில்லை. நல்லவேளையாக ஹோல்டரின்  நல்ல ஓவர் கிடைத்தது. அதன்பின்னர் நான் எந்த தவறு செய்வேன் என்பதை பகுப்பாய்வு செய்து பேட்டிங் பாணியை மாற்றினேன். ரோகித் அல்லது நான் நீண்ட நேரம் விளையாடவேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்கள் பங்கு இது தான். டி.20 போட்டியில் எனது பேட்டிங்கை அதிகமாக மாற்ற விரும்புகிறேன். இதுபோன்ற பெரிய ஸ்கோரை சேசிங் செய்யும் போது  நிறைய கவனச்சிதறல்கள் உள்ளன. ஆனால் விளையாட்டில் மீண்டும் கவனம் செலுத்துவதை தவிர வேறு வழியில்லை. ஜமைக்காவில் நடந்த போட்டியின் போது வில்லியம்ஸ் பந்தில் ஆட்டம் இழந்ததால் அதனை கவனத்தில் வைத்து ஆடினேன்.  ஆக்ரோஷமாக ஆடினாலும் எதிரியை மதிக்கவேண்டும், என்றார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில் எக்ஸ்ட்டிராவாக அதிகம் கொடுத்ததால் நாங்கள் கிட்டத்தட்ட 2 அல்லது ஒன்றரை ஓவர் கூடுதலாக பந்து வீசி விட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாகி விட்டது. இது ஒரு பேட்டிங் பிட்ச். கிங், ஹெட்மயர் சிறப்பாக ஆடினர். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டனர்.  தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம், என்றார். அதிக பட்ச சேசிங்இந்திய அணி 208 ரன் இலக்கைசேசிங் செய்து அசத்தியது. சேசிங்கில் இந்தியாவின் அதிகபட்ச ரன் இதுவாகும்.  இதற்கு முன் 2009ம் ஆண்டு மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 207 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்ததே சிறந்த சேசிங்காக இருந்தது.
127,153
12/8/2019 1:56:11 PM
இந்தியா
தொழிற்சாலையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்: டெல்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப பலி
* தூங்கிக் கொண்டிருந்த பல தொழிலாளர்கள் மரணம்* நெரிசலான பாதையால் மீட்பு பணி தாமதம்புதுடெல்லி: டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 43 பேர் பலியானதாகவும், அதில் பல தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது தீவிபத்தில் சிக்கி பலியானதாகவும், நெரிசலான பாதை மற்றும் குடியிருப்புகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர் டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியின் ராணி ஜான்சி சாலையில் உள்ள 6 மாடி கொண்ட ஒரு தொழிற்சாலையில், இன்று அதிகாலை 5.22 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிற்சாலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் பெரும் கூச்சலிட்டனர். ஒரே மரண பீதியால், அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவலறிந்த தீவிபத்து மீட்பு குழுவினர் 35 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று, சம்பவ இடத்தில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். முதற்கட்டமாக மீட்கப்பட்ட சிலர் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் முதற்கட்ட தகவலில் தெரிவித்தது. மீட்கப்பட்ட மற்றும் காயமடைந்த பலர் ஆர்.எம்.எல் மருத்துவமனை மற்றும் இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், 2 தனியார் மருத்துவமனைக்கும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீ விபத்து சம்பவம் காரணமாக உடனடியாக இப்பகுதியில் சாலை போக்குவரத்தை மூடினர். வாகன ஓட்டிகள் ராணி ஜான்சி ஃப்ளைஓவரைப் பயன்படுத்துமாறும், செயின்ட் ஸ்டீபனில் இருந்து ஜான்டேவலனுக்கு வரும் பயணிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தீயணைப்பு தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், “600 சதுர அடி நிலப்பரப்பில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே மிகவும் இருட்டாக இருந்தது. இது ஒரு தொழிற்சாலை; பள்ளி பைகள், பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் இதுவரை 56 பேரை மீட்டு மருத்துவ உதவிக்காக எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவர்களில் சிலர் காயமடைந்த நிலையில், மற்றவர்கள் மயக்கம் அடைந்தனர். சம்பவம் நடந்தபோது சுமார் 20 முதல் 25 தொழிலாளர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததாக உரிமையாளர் கூறினார். இதுவரை 43 பேர் உயிரிழந்து உள்ளதாக போலீஸ் தகவல் கூறுகிறது’’ என்று தெரிவித்தார். முன்னதாக, நெரிசலான பாதைகள் மற்றும் குறுகிய நுழைவாயில்களால், தீயணைப்பு வீரர்களுக்கு வாகனங்களை கொண்டு செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் செல்வதற்கு முன்பே, அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஏற்கனவே மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். ராணி ஜான்சி சாலை மத்திய டெல்லியில் அமைந்துள்ளது. இது அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களும் அதிகளவில் உள்ளன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொழிற்சாலையின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். தொழிற்சாலையின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மிகப்பெரிய தீவிபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவையின் தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறுகையில், ‘‘மூச்சுத்திணறல் காரணமாக சிலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் சிலர் கட்டிடத்திற்குள் இன்னும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க, தீயணைப்பு மீட்பு குழுவினர் முயன்று வருகின்றனர். தீ முழுவதும் அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள் நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும்’’ என்று கூறினார். இன்று அதிகாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி அமைச்சர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.
127,154
12/8/2019 1:58:45 PM
இந்தியா
மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு பின்னணி அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றது எதற்காக?... முதன்முதலாக வாயை திறந்தார் மாஜி முதல்வர் பட்நவிஸ்
மும்பை: மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியின் பின்னணி குறித்து, அம்மாநில முன்னாள் முதல்வர் பட்நவிஸ் முதன்முதலாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், அஜித் பவாருக்கு எதற்காக துணை முதல்வராக பதவி கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்  பேரவையில் பாஜக 105 இடங்களையும், 56 இடங்களுடன் சிவசேனா இரண்டாவது  இடத்தையும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 54 இடங்களையும், காங்கிரஸ் 44  இடங்களையும் பெற்றது. பாஜவுடன் தேர்தலை சந்தித்த சிவசேனா, அக்கட்சியுடனான  உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி  அமைத்தது. இதற்கிடையே, என்சிபி மூத்த தலைவர் அஜித் பவாருடன் இணைந்து பட்நவிஸ், புதிய முதல்வராக பதவியேற்றார். பெரும் அரசியல்  திருப்பம் ஏற்பட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி பட்நவிஸ் அரசு  நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், அவரும், துணை  முதல்வராக இருந்த அஜித் பவாரும், 80 மணி நேரம் மட்டுமே நீடித்த பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பின், சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில்,  ‘பட்நவிசுடன் அஜித்பவார் எப்படி இணைந்து அரசு அமைத்தார்; எதற்காக பாஜவுடன்  திடீர் உறவை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் எதற்காக பல்வேறு அரசியல்  களேபரங்களுக்கு இடையே மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கே திரும்பினார்’ என  பல்வேறு கேள்விகளுக்கும் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக,  பட்நவிசிடம் அப்போது கேட்ட போது, ‘சமயம் வரும்ேபாது சொல்கிறேன்’ என்றார். ஆனால், பல நாட்களாக எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில்,  தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். பட்நவிஸ் கூறியதாவது: மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார்தான் என்னை அணுகினார். அஜித் பவார் அனைத்து 54 என்சிபி எம்எல்ஏக்களும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். பாஜவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, அவர்கள் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களிடம் என்னை பேச வைத்தார். அவர்களும் என்னிடம் பேசினர். அஜித் பவார் என்சிபி தலைவரான சரத்பவாருடன் விவாதித்ததாக என்னிடம் கூறினார். மேலும், அஜித் பவார் எங்களை அணுகி, என்சிபி கட்சி காங்கிரசுடன் செல்ல விரும்பவில்லை. மூன்று கட்சி அரசாங்கம் (சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்) இயங்க முடியாது. பாஜவுடன் ஒரு நிலையான அரசை ஏற்படுத்த தயாராக உள்ளோம் என்றார். பாஜ மூத்த தலைவர்களும், அஜித் பவாரின் கருத்துக்கு இசைவு தெரிவித்தனர். அதன்படியே, அஜித்பவார் துணை முதல்வராகவும், நான் முதல்வராகவும் பதவியேற்றோம். ஆனால், அவர் கூறியபடி நடக்கவில்லை. திரைக்குப் பின்னால் நடந்த அரசியல் நாடகம் பற்றிய கதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படும். நீர்ப்பாசன முறைகேட்டில் அஜித் பவார் விடுவிக்கப்பட்டதாக ஏசிபி அறிக்கை வெளியிட்டதாக கூறுகின்றனர். அவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏசிபி பிரமாணப் பத்திரம் நவ. 27ம் தேதி வெளியானது. நான் நவ. 26ம் தேதியன்றே ராஜினாமா செய்துவிட்டேன். ஏசிபி-யின் அறிக்கை வழக்கில் நிற்காது. இவ்வாறு அவர் கூறினார்.
127,155
12/8/2019 2:02:13 PM
தமிழகம்
ஆபாசபடம் பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் ரெடி: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு
சென்னை: குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் தயாராகியுள்ளது. மாவட்ட வாரியாக பிரித்த பின் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன் அதற்கான லிஸ்ட்டை எப்.பி.ஐ மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படத்தை பார்ப்பது குற்றம். தற்போது வந்துள்ள இந்த லிஸ்ட் இந்தியாவில், தமிழகத்தில் இதுபோன்று குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் பட்டியல் ஆகும். இந்த லிஸ்டில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை ஐபி முகவரியை வைத்து யார் யாரெல்லாம் பார்த்தார்கள் என்ற லிஸ்ட்டை எடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கான ஆபாசப்படம் பார்த்தவர்கள், 18 வயதுக்கு கீழுள்ளவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதை ஷேர் செய்வதோ, டவுன்லோட் செய்வதோ, அப்லோட் செய்வதோ சட்டப்படி குற்றம். அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தற்போது இந்த விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில் அனைவரும் ஒருவித பயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு, போலீஸார் பேசுவது போன்று தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோ பின்னணியில் வாக்கி டாக்கி ஒலியுடன் பேசும் நபர் போலீஸ் போல் மிரட்டி அந்த இளைஞரிடம் அப்பா நம்பரை கேட்கிறார். நாளை உன் அப்பா நம்பருக்கு போன் வரும் என்பது போன்று பேசும் ஆடியோ வெளியாகி இருப்பது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று தங்களுக்கும் போன் வருமோ என்ற பயத்தில் பலர் உள்ளனர். ஆனால், இது போன்று போலீசார் செல்போனில் அழைத்து விசாரிக்க மாட்டார்கள். அவர்கள், நேரில் அழைத்து தான் விசாரணை செய்வார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது, குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ‘‘3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப் படுவார்கள்’’ என்று தெரிவித்தனர்.  எனவே இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள். அப்படி பேசினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று போலீசார் தெரிவித்தனர்.
127,156
12/8/2019 2:14:40 PM
இந்தியா
ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு
சென்னை: ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கமாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ெசன்ைன வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இன்றைய அரசியல் சூழல் என்ற தலைப்பில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்பி ராணி, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ், சிரஞ்சீவி, தாமோதரன், வக்கீல் செல்வம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, இரா.மனோகர், நாஞ்சில் பிரசாத், சுமதி அன்பரசு, ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: பாஜ ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. அவர்களது நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவது தான். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தார்கள். அவர்களில் 2 பேர் வீடுகளில் பாஜ அரசு சோதனை நடத்தியது. இதற்கு பயந்து மற்றொரு எம்.பி., பாஜவில் போய் இணைந்துவிட்டார். ஆந்திராவிலும் இதே நிலைமை தான்.டெல்லியில் வெங்காயம் விலை ரூ.200ஐ தொட்டுவிட்டது. நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. 3.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியில் நாடு எவ்வாறு உயரும்?. இப்போது கார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு லட்சம் பேர் வரை வேலை இழந்து தவித்து வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை பறித்து 800 முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டம் தொடங்கும்போது அவர்கள் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதாவது, 5 முதல் 8 சதவீதம் வரையிலும், 8 முதல் 12 சதவீதம் வரையிலும், 12 முதல் 18 சதவீதம் வரையிலும் வரியை கூடுதலாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறார்கள். நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் இருப்பது பெரிய விஷயம் அல்ல. காமராஜர், வ.உ.சி. போன்றவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதனால் சிறையில் இருந்தது மகிழ்ச்சி தான். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
127,157
12/8/2019 2:18:11 PM
இந்தியா
என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு
திருமலை: தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் டிஷா (பெயர் மாற்றம்). இவர் கடந்த மாதம் 27ம்தேதி ஐதராபாத் அடுத்த சட்டான்பள்ளியில் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாரி டிரைவர்கள் முகமதுஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் நீண்ட நாட்களாக டிஷாவை நோட்டமிட்டு திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக தெரிந்தது. தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைத்து ஜாமீனில் எடுக்கப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்தின் கீழ் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் டாக்டரை எரித்துக் கொன்றது எப்படி என நடித்துக் காண்பிக்கும்படி போலீசார் ெதரிவித்தனர்.ஆனால் அவர்கள் திடீரென போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து, கற்களை வீசி தப்பிச் செல்ல முயன்றனர். இதில் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து 4 பேரின் சடலங்களை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் என்கவுன்டர் தொடர்பான பொதுநல வழக்கு தெலங்கானா ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திரராவ், லட்சுமண் ராவ் ஆகியோர், பலியான 4 பேரின் உடலையும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை மகபூப்நகர் கோர்ட்டில் போலீசார் ஒப்படைக்க வேண்டும். மெகபூப்நகர் மாவட்ட நீதிபதி அந்த காட்சிகளை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் 4 பேரின் சடலங்களும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.இந்நிலையில், டிஷாவை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற வழக்கில் துப்பாக்கி சூட்டில் பலியான முகமதுஆரிப் உட்பட 4 பேரும், பலாத்கார சம்பவம் நடந்த தினத்தில், டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கியது தொடர்பான சிசிடிவி பதிவுகாட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிகள் என்கவுன்டர் நடந்த இடத்தையும், மெகபூப்நகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களையும் நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று தெலங்கானா டிஜிபி மகேந்திரை சந்தித்து என்கவுன்டர் குறித்து விவரங்களை கேட்க உள்ளனர்.அழுகும் சடலங்கள்மெகபூப் நகர் மாவட்ட எஸ்பி ரமா ராஜேஸ்வரி ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், என்கவுன்டரில் உயிரிழந்த 4 பேர் உடல் அழுகும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், இந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உடனடியாக குடும்ப உறுப்பினர்களிடம் வழங்க ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும், மேலும் குடும்ப உறுப்பினர்களும் சடலங்களை கேட்பதாக தெரிவித்தார்.
127,158
12/8/2019 2:31:26 PM
இந்தியா
குருவாயூரில் கஜராஜன் கேசவனுக்கு நினைவஞ்சலி: 22 யானைகள் பங்கேற்றன
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் தேவஸ்தானத்தில் உள்ள கஜராஜா விருதுபெற்ற கேசவன் யானையின் உருவ சிலைக்கு நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 22 யானைகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தின. கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் ஏகாதசி திருவிழாவையொட்டி, குருவாயூர் கேசவன் என்ற யானையின்  சிலைக்கு குருவாயூர் தேவஸ்தான வளர்ப்பு யானைகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிலம்பூர் ராஜா குடும்பத்தை சேர்ந்த சாமூதிரி ராஜா, குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக கேசவன் என்ற யானையை அளித்தார். இந்த யானை குருவாயூர் கோயிலின் அனைத்து திருவிழாக்களிலும் முதன்மையாக பங்கேற்று வந்தது. கேரள அரசின் கஜராஜா என்ற விருதை பெற்ற இந்த யானை 54 ஆண்டுகளாக குருவாயூர் தேவஸ்தான நிர்வாகத்தின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டு தனது 72வது வயதில் மரணமடைந்தது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் குருவாயூர் கோயிலில் கஜராஜா கேசவனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று குருவாயூர் கோயிலில் நடந்தது. கேசவனுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக கோயில் யானைகள் ஊர்வலமாக சென்றன. தற்போதைய கோயில் தலைமை யானையான பத்மநாபன் மீது கேசவனின் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று குருவாயூர் தேவஸ்தான அலுவலகத்தில் அமைந்துள்ள கேசவன் உருவசிலைக்கு முன்பாக மலர் தூவி யானைகள் அஞ்சலி செலுத்தின. பின்னர் யானைகளுக்கு யானையூட்டும் நடைபெற்றது.
127,159
12/8/2019 2:32:27 PM
தமிழகம்
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று காலை மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின், 7ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை முதலாவதாக விநாயகர் தேர், 2வதாக சுப்பிரமணியர் தேர், 3வதாக சுவாமி தேர் என அழைக்கப்படும் `மகா ரதம்’  மாடவீதியில் பவனி வந்தது. மகா ரதத்தின் மீது  பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். மாடவீதியில் வலம் வந்த மகாரதம் இரவு சுமார் 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் தேர் புறப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் பவனி வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். தேரோட்டத்தின் நிறைவாக இரவு சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.இந்நிலையில், தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று பகல் மரக்குதிரை வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் புறப்பட்டு பவனி வந்தனர். மாலை 4.30 மணியளவில் தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறும். 6 மணியளவில் கோயில் கலையரங்கில் பரதநாட்டியம் நடக்கிறது.இரவு உற்சவமாக மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். தீபத்திருவிழாவின் 10ம் நாளான நாளை மறுநாள் அதிகாலை பரணி தீபமும், மாலை மகாதீப பெருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை கோயிலில் ஏகன் அனேகன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 5 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் ஒரே தீபமாக சேர்க்கப்படும். பின்னர் மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றப்படும் தீபக்கொப்பரையும், நெய்யும், 1000 மீட்டர் துணியும் தயார் நிலையில் உள்ளது. மகாதீப கொப்பரை நாளை காலை மலைக்கு ெகாண்டு செல்லப்படும். மகா தீபத்தை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கியது. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் சுமார் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
127,160
12/9/2019 2:29:15 PM
தமிழகம்
மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலமாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதால், விவசாய பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்த பருவமழையால் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இந்த தொடர் மழையால் பெரும்பாலான பெரிய அணைகளில் தண்ணீர் முழு கொள்ளளவை அடைந்துள்ளது. இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் என அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாகவே 12 சதவீதம் மழை பெய்துள்ளது.தற்போது வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் லேசான தூறலுடன் கூடிய மழையே பெய்தது. வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக மேகங்கள் திரண்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், இலங்கைக்கு தென் கிழக்கே மேலடுக்கு சுழற்சி தற்போது உருவாகி வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
127,161
12/9/2019 2:30:00 PM
இந்தியா
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (டிச. 9) 73வது பிறந்த நாளாகும். பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்திக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்செய்தியில், ‘சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,  நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன்  வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.இதற்கிடையே, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களினால் துயரம் அடைந்த சோனியாகாந்தி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட காலமாக பணியாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முன்மாதிரியான தன்மை, மூத்த காங்கிரஸ் தலைவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது பலம், கண்ணியம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவை எங்களை ஒன்றிணைத்து எங்களை பலப்படுத்தியுள்ளன. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குமாரி செல்ஜா, மணீஷ் திவாரி, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, மஹிலா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் ஆகியோர் தங்கள் கட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
127,162
12/9/2019 2:31:00 PM
இந்தியா
கர்நாடக இடைத்தேர்தலில் முன்னிலை எடியூரப்பா அரசு தப்பியது
பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரு தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளனர். இதனால், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசு ஆபத்திலிருந்து தப்பியது.கர்நாடகாவில் 2018ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஜத, பாஜ, காங்கிரஸ் ஆகிய எந்தக்கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். 14 மாதங்கள் இந்த கூட்டணி அரசு நீடித்தது. இதன் பின்னர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறி தங்களின் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மாறாக 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார். மேலும், இந்த 17 பேரும் இப்போதுள்ள சட்டப்பேரவை காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தார். ரமேஷ்குமாரின் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் 17 பேரில், 15 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 ெதாகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.முதல்வர் எடியூரப்பா ஆட்சிக்கு சோதனை தரக்கூடிய தேர்தலாகவே இது அமைந்தது. எடியூரப்பாவின் ஆட்சி தப்புமா அல்லது வீழ்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒரு வேளை பாஜ வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை என்றால், மஜத-காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. ஆனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் எடியூரப்பா தனது காலில் சக்கரம் கட்டிக்கொண்டு 15 தொகுதிகளிலும் அதிரடி சுற்றுப்பயணம் மேற்ெகாண்டு பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் தேர்தலாகவே இந்த இடைத்தேர்தல் கருதப்பட்டது.இவரும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. ஆரம்பம் முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டதில், பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர். ஒசக்கோட்டையில் பாஜ வேட்பாளருக்கு போட்டியாக, அதாவது இத்தொகுதியின் பாஜ எம்.பி. பச்சேகவுடாவின் மகன் சரத் பச்சேகவுடாவுக்கு பாஜவில் டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் ஆதங்கத்தில் இருந்த சரத் பச்சேகவுடா சுயேட்சையாக போட்டியிட்டார். இத்தொகுதியில் சரத் பச்சேகவுடா ெவற்றி பெற்றார். அதேபோல, 9 தொகுதிகளில் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். கே.ஆர்.பேட்டை தொகுதியில் பாஜ வேட்பாளர் கே.சி.நாராயணகவுடா,. மகாலட்சுமி லே அவுட் பாஜ வேட்பாளர் வி.கோபாலய்யா, சிக்கபல்லாபூர் தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் கே.சுதாகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையுடன் தொடர 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது பாஜ வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், முதல்வர் எடியூரப்பாவின் அரசு ஆபத்தில் இருந்து தப்பியது.
127,163
12/9/2019 2:31:50 PM
தமிழகம்
ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
சென்னை: ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்காகன வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதே நேரம் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறைக்கு பிறகு தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 91,975 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில், இரண்டு கட்டங்களுக்கும் வேட்பு மனுதாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வேட்பாளர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களின் வேட்புமனுக்களை மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசி நாள் ஆகும். 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்.  இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து இன்று அல்லது நாளை மறுநாள் திமுக சார்பில் இது தொடர்பாக நீதிமன்றத்ைத அணுக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
127,166
12/9/2019 2:34:17 PM
இந்தியா
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
புதுடெல்லி: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டை பின்பற்றிய பிறகு தேர்தல் நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நாளை மறுநாள் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால், பழைய அறிவிப்பினை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டது.அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.  வேட்பு மனு தாக்கல் செய்ய டிச. 16ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்பு மனு பரிசீலனை 17ம் தேதியும், மனுக்களை திரும்ப பெற 19ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்படும் என்றும், தேர்வாகும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு ஜன. 6ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியாகவில்லை என, திமுக உள்ளிட்ட கட்சிகள் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகின்றன.  இந்நிலையில், இன்று 27 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் ெதாடங்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 5 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதியதாக இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தற்போது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அட்டவணையில் எஸ்சி-எஸ்டி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றவில்லை. உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. 2011 வார்டு வரையறையை பின்பற்றாமல், புதியதாக வார்டு வரையறை செய்து தேர்தல் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். 7ம் தேதி அறிவித்த தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும். புதிய அட்டவணையை அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.  இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, ‘புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை மறுநாள் (டிச. 11) விசாரிக்கப்படும்’ என்று அறிவித்தனர். எதிர்க்கட்சிகள் தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை போன்று, அதே கோாரிக்கையை வலியுறுத்தி வாக்காளர்கள் தரப்பில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
127,167
12/9/2019 2:57:04 PM
இந்தியா
மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்
மும்பை: பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் (90) இந்தி உள்பட 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப்பை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் கடந்த 11ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். பின்னர், அவரது உடல்நிலை சற்று தேறியது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் நேற்று டிஸ்சார்ஜாகி வீடு திரும்பினார். 28 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய மகிழ்ச்சியை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘நான் நலம் பெற அருளிய தெய்வங்களுக்கும் பிரார்த்தித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
127,168
12/9/2019 2:59:08 PM
இந்தியா
கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை
கோவை: கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கவும், கர்ப்பிணிகளின் உடல் நலத்தை மேம்படுத்தவும் மத்திய அரசின் சார்பில் போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து குழுமம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் 11 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கோவை, திருவண்ணாமலை உள்பட 21 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைப்பது, ரத்த சோகை விகிதம் குறைத்தல், ஊட்டச்சத்து குறைவு இல்லாத குழந்தைகள் இருக்கும் சூழல் உருவாக்குதல் போன்றவற்றை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இதில், கர்ப்பிணியாவது முதல் குழந்தையின் 2 வயது வரை கண்காணிக்கப்படும். இத்திட்டத்திற்காக, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கி ஆன்ட்ராய்டு மொபைல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணிகள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை மாவட்ட அளவில் செயல்படுத்தும் விதமாக, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் மாதம் சம்பளம் ரூ.20 ஆயிரம் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், வட்டார திட்ட உதவியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கோவை உள்பட 21 மாவட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் கூறுகையில், ‘‘இந்த பணிக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர். அரசு பணி என்பதால் ஆர்வத்துடன் சேர்ந்தோம். இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
127,169
12/9/2019 3:01:19 PM
குற்றம்
பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சேலம்: சேலத்தில், பேஸ்புக் பழக்கத்தில் திருமண ஆசைவார்த்தை கூறி பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் களரம்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் இருளர் காலனியை சேர்ந்த பிரதீப் (20)என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பிரதீப், அந்த மாணவியை சந்திப்பதற்காக சேலத்திற்கு வந்தார். பின்னர், சீலநாயக்கன்பட்டியில் ஊத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் 2 பேரும் சந்தித்து பேசினர்.அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை செங்கல்பட்டுக்கு அழைத்துச் சென்று அவருடன் குடும்பம் நடத்தினார். கடந்த மாதம் சேலம் கிச்சிப்பாளையத்திற்கு மாணவியுடன் வந்த அவர் மாணவியை மட்டும் விட்டுவிட்டு சென்று விட்டார். மேலும், மாணவியை திருமணம் செய்யவும் பிரதீப் மறுத்து விட்டார். இந்நிலையில் மாணவி 3 மாதம் கர்ப்பமானார். இதையடுத்து தன்னை ஏமாற்றிய பிரதீப் மீது பாதிக்கப்பட்ட மாணவி சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தார்.
127,170
12/9/2019 3:03:56 PM
உலகம்
தென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி  என்பவர் 2019ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அட்லாண்டாவில் நடந்த உலக அழகிகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி (26), 2019ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டார். புவேர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் ரன்னர்-அப் ஆகவும், மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாவது இடத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போட்டியில், இந்தியா சார்பில் 26 வயதான வர்திகா சிங்  கலந்துகொண்டார். ஆனால் அவரால் முதல் 10 இடங்களுக்குள் தகுதி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அழகு ராணியாக தேர்வு செய்யப்பட்ட சோசிபினி துன்சி முதலிடத்தை பெற்றார். ஏற்கனவே, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மார்கரெட் கார்டினர் மற்றும் டெமி-லே நெல்-பீட்டர்ஸ் ஆகியோர் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளனர். சோசிபினி துன்சி, மூன்றாவது பட்டம் பெறும் தென்னாப்பிரிக்கர். சோசிபினி தேர்வு செய்யப்பட்டதால், அவர் உலகளவில் ட்விட்டரில் பிரபலமாகி, உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறார்.
127,171
12/9/2019 3:06:10 PM
இந்தியா
உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசாரை, அம்மாநில காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்த வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த 5ம் தேதி ரயில் நிலையம் சென்ற வழியில் பாலியல் பலாத்கார கும்பலைச் சேர்ந்த சிவா, சுபம் உள்ளிட்ட 5 பேர் அப்பெண்ணை அடித்து, கத்தியால் குத்தி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்.இதில் அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. டெல்லியில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அப்பெண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவத்தை, பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், உன்னாவ் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் எரிக்கப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக காவல் நிலைய அதிகாரி உட்பட ஏழு போலீஸ் அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.காவல் நிலைய பொறுப்பாளர் (இன்ஸ்பெக்டர்) எஸ்.ஓ.அஜய் திரிபாதி, இரண்டு துணை ஆய்வாளர்கள் அரவிந்த் சிங் ரகுவன்ஷி மற்றும் ஸ்ரீ ராம் திவாரி மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றக் கட்டுப்பாடு மற்றும் வழக்குகள் தொடர்பான சம்பவங்களில் பணியில் அலட்சியம் காட்டியதாக இடைநீக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘‘ஏற்கனவே இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனையை உறுதி செய்யும்’’ என்றார்.