news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
127,272
12/12/2019 2:42:06 PM
குற்றம்
பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: மூத்த அதிகாரி இடமாற்றம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வாட்ஸ்-அப்பில் ஆபாச வார்த்தைகள் அடங்கிய தகவல்களை அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் முக்கிய பொறுப்பில் உள்ளார். கடந்த 1992ல் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். இவரது செல்போனில் இருந்து சில இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச வார்த்தைகள் அடங்கிய தகவல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி இதுகுறித்து தலைமை செயலாளர் டோம் ஜோசிடம் புகார் செய்தார். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தான் எழுத்துப்பூர்வமாக முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளிக்கப்போவதாகவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்திருந்தார்.இதையடுத்து தலைமை செயலாளர் உடனடியாக அந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியை அழைத்து பேசினார். முதலில் தான் அவ்வாறு தவறு எதுவும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, தலைமை செயலாளரிடம் கொடுத்திருந்ததால் அதை காண்பித்ததும் தான் தவறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் புகார் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை செயலாளர் வலியுறுத்தினார். இதையடுத்து அந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அந்த பெண் அதிகாரி எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் கொடுக்கவில்லை.இதற்கிைடயே இந்த தகவல் முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியவந்தது. அவர் அந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் முதல்வர் அலுவலகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத வேறொரு பொறுப்புக்கு தூக்கியடிக்கப்பட்டார். கடந்த ஆண்டும் இதேபோல இந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது புகார் கூறப்பட்டது. அப்போதும் அவர் முதல்வர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்த சமயத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக மாற்றப்பட்டார். ஆனால் மீண்டும் அதே பொறுப்புக்கு வந்துவிட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியே இவ்வாறு நடந்து கொண்டது அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
127,273
12/12/2019 2:45:20 PM
குற்றம்
மகளுக்கு மருத்துவ செலவு செய்ய முடியாததால் வேதனை: 4 குழந்தைகளுக்கு விஷம் தந்து தாயும் தற்கொலை முயற்சி
கோவை: மகளுக்கு மருத்துவ செலவு செய்ய முடியாததால் மனவேதனையில் இருந்த தாய், 4 குழந்தைகளுக்கும் நூடுல்சில் விஷம் கலந்து கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் அருகே உள்ள தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். டிரைவர். இவரது மனைவி அம்சவேணி (33). இவர்களுக்கு சவுமியா (16), சத்யபிரியா (13) என்ற இரு மகள்களும், மணி (10), சபரிகிரி (7) என 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் கோவையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.மூத்தமகள் சத்யபிரியா நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உரிய சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மேலும் மகளுக்கு மருத்துவ செலவு செய்ய தம்பதியால் முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மகள் மருத்துவ செலவுக்காக கோவிந்தராஜ், யாரிடமாவது கடன் வாங்கி வருகிறேன் என கூறி வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.மகளை காப்பாற்ற மருத்துவசெலவு செய்ய வழியில்லையே? என மனவேதனையில் அம்சவேணி இருந்தார். இந்த நிலையில் இரவு குழந்தைகளுக்கு சாப்பிட அம்சவேணி நூடுல்ஸ் தயாரித்தார். அதில் தான் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த அரளி விதையை கலந்து நூடுல்சை தட்டில் போட்டு 4 குழந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் விஷம் கலந்த நூடுல்சை தானும் சாப்பிட்டார். ‘நூடுல்சை சாப்பிட்ட குழந்தைகள், வழக்கம் போல் நூடுல்ஸ் இல்லை, கசக்கிறது, வாயில் வைக்க முடியவில்லை’ என கூறி உள்ளனர். ஒரு நொடியில் மனம் மாறிய அம்சவேணி, விஷம் கலந்த நூடுல்சை சாப்பிடவேண்டாம் என குழந்தைகளிடம் கூறியபடி தட்டை பறித்தார்.அப்போது 4 குழந்தைகளும் அலறி கூச்சல் போட்டனர். இதை கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறி அம்சவேணி அழுதார். உடனடியாக அவர்கள் 5 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
127,274
12/12/2019 2:47:25 PM
தமிழகம்
மலைப்பாதையிலேயே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: சாலை, மருத்துவ வசதி இல்லாததால் அவலம்
அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கிமீ. தூரத்தில் குருமலை, நச்சுமேடு, வெள்ளக்கல் மலை என 3 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மலைவாழ் மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.  இந்த மலைக்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. மேலும் அங்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில் குருமலையில் வசிப்பவர் கார்த்தி. இவரது மனைவி த்ருதி(19). நிறை மாத கர்ப்பிணியான இவர் கடந்த 2 நாட்களாக பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். வழக்கம்போல் தங்கள் வழக்கப்படி அங்குள்ள மக்கள் சிகிச்சை அளித்தும் பிரசவம் ஆகவில்லை.இதனால் அவரை நேற்று டோலி கட்டி மலையிலிருந்து கீழே தூக்கி வந்தனர்.  பாதி வழியில் வந்தபோது, ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சுடன் வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மலைப்பாதையிலேயே த்ருதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், சேயையும் மருத்துவக்குழுவினர் ஆம்புலன்ஸில் ஏற்றி ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பொதுவாக மலைக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சரியாக கண்டுகொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாகும்.
127,275
12/12/2019 2:50:02 PM
குற்றம்
அம்பத்தூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது: உறவினருக்கு வலை
அம்பத்தூர்: அம்பத்தூரில் தம்பதி போல் மொபெட்டில் வந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரது உறவு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம், இந்திரா நகர், சர்வீஸ் சாலையை சேர்ந்தவர் குமார் (50). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள் (43). கடந்த 6-ம் தேதி மதியம் குமார் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது மனைவி பேச்சியம்மாள் கடை வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அங்கு ஒரு தம்பதியர் கடைமுன் மொபெட்டில் வந்திறங்கினர். பின்னர் பேச்சியம்மாளிடம் வந்த வாலிபர், பொருள் வாங்குவது போல் நடித்தார். இதையடுத்து பேச்சியம்மாள் கழுத்தில் இருந்த 5 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த வாலிபர், மொபெட்டில் தயார்நிலையில் நின்றிருந்த பெண்ணுடன் தப்பி சென்றார். இப்புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியாக வந்து வழிப்பறி செய்த ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.பின்னர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிரா பதிவுகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில், வழிப்பறி செய்த மொபெட் வில்லிவாக்கம், நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரனுக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. இவர் ஐசிஎப் பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி ரேவதி (30). இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர், தனது உறவினரான ராஜேஷ் (31) என்பவருடன் சேர்ந்து  நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட ரேவதியை நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 5 சவரன் நகை மற்றும் மொபெட்டை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ரேவதி காலை நேரங்களில் டிபன் கடை நடத்துவதுடன், மதிய நேரங்களில் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் இவர் மொபெட் பதிவெண்ணை மாற்றி, தனது உறவினருடன் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவர் வேறு ஏதேனும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டாரா என விசாரிக்கின்றனர். இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக, தலைமறைவான ராஜேஷ் என்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
127,276
12/12/2019 2:52:05 PM
உலகம்
அமெரிக்காவில் 9,811 இந்தியர்கள் கைது
அமெரிக்கா: அமெரிக்காவில் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி 9,811 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தேசப் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,  2015ம் ஆண்டில் 3,532 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே  9,811 ஆக  அதிகரித்துள்ளது. மேலும், 831 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
127,277
12/12/2019 2:53:49 PM
தமிழகம்
விபத்தில் படுகாயமடைந்த தம்பதி: காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
புதுக்கோட்டை: சாலை விபத்தில் படுகாயமடைந்த தம்பதியை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே குறிச்சிப்பட்டியை சேர்ந்தவர் முத்தையா (60) இவரது மனைவி அங்கம்மாள்(50). இருவரும் இலுப்பூரில் இருந்து அன்னவாசல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது சென்னப்பநாயக்கன்பட்டி அருகே சாலையோரத்தில் பழுதாகி லாரி ஒன்று நின்றுள்ளது. அந்த லாரி மீது முத்தையா ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் பலத்தகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியாக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் பார்த்த அவர், அவர்களை மீட்டு அவரது காரில் ஏற்றி அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
127,278
12/12/2019 2:58:56 PM
குற்றம்
மூதாட்டியை கொலை செய்த மாணவன் கைது
திட்டக்குடி: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மனைவி பொன்னம்மாள் (65). இவர் கடந்த 1ம் தேதி மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் தேதி பொன்னம்மாள் இறந்தார்.பொன்னம்மாளின் வீட்டின் அருகே கீழகல்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பொன்னம்மாள் வீட்டு தோட்டத்தில் விளைந்துள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சம் ஆகிய பழங்களை வாங்கி செல்வது வழக்கம். பழம் வாங்குவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் மாணவ, மாணவிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது கீழகல்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பத்தாம்  வகுப்பு படிக்கும் மாணவன், சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு பணத்தை பொன்னம்மாளிடம் கொடுத்து அவரிடம் இருந்து பழங்களை வாங்கி சாப்பிட்டுள்ளான். ஆனால் மாணவன் கொடுத்த பணம் செல்லாது என தெரிந்த பொன்னம்மாள் பள்ளிக்குள் சென்று அந்த சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அதற்கான ரூபாயை பொன்னம்மாள் பெற்றுக்கொண்டார்.பின்னர் சிறுவன் செலவுக்கு தாயிடம் பணம் கேட்டுள்ளான். ஆனால் அவரது தாய் கொடுக்கவில்லை. பொன்னம்மாள் அதிக பணம் வைத்திருந்ததை பார்த்த சிறுவன் சம்பவத்தன்று இரவு பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று பணத்தை திருட முயற்சி செய்துள்ளான். இதனை பார்த்த பொன்னம்மாள் சிறுவனை பிடித்து கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன் அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து பொன்னம்மாள் தலையில் அடித்துள்ளான். ரத்தவெள்ளத்தில் பொன்னம்மாள் மயங்கி விழுந்தார். உடனே சிறுவன் அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் செல்போனை பயன்படுத்திய சிறுவனின் தாய் மாட்டிக்கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுவன் நேற்று வடகரா பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜிடம் சரணடைந்தான். ராமநத்தம் போலீசார், அவனிடம் விசாரித்ததில், பொன்னம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்தனர். பின்னர் மாணவன் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
127,279
12/12/2019 3:03:03 PM
குற்றம்
பெண் டாக்டர் கொலை வழக்கில் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை அறிக்கை ஒப்படைப்பு
திருமலை: தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் டிஷாவை எரித்துக்கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தது குறித்து நடத்திய விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் இன்று அதன் பிரதிநிதிகள் ஒப்படைக்கின்றனர்.தெலங்கானா மாநிலம் செம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை டாக்டர் டிஷாவை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முகமதுஆரீப், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதுகுறித்து ஊடக காட்சிகளின் ஆதாரப்படி மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி டெல்லி மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் 7 பேர் கொண்ட குழுவினர், கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தினர்.இதில் என்கவுன்டர் நடந்த சட்டான்பள்ளி மேம்பாலம், டிஷா பலாத்காரம் செய்யப்பட்ட தொண்டபள்ளி சுங்கச்சாவடி, எரித்துக்கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், என்கவுன்டரில் பலியானோரின் பெற்ேறார், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலமாக சேகரித்தனர். தடயவியல் ஆய்வும் மேற்கொண்டனர்.அதேபோல் என்கவுன்டர் சம்பவத்தின்போது காயம் அடைந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 போலீஸ்காரர்களையும் சந்தித்து விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து 5 நாட்கள் நடந்த விசாரணை அறிக்கையை தயார் செய்தனர். பின்னர் விசாரணை முடிந்து மனித உரிமைகள் ஆணைய குழுவினர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இந்த அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணையத்தில் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது என்கவுன்டர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில், இந்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் சமர்ப்பிக்கும் என கூறப்படுகிறது.
127,280
12/12/2019 3:06:09 PM
குற்றம்
ராகு-கேது பூஜை பிரசாதத்தில் மோசடி காளஹஸ்தி கோயில் அர்ச்சகர் சஸ்பெண்ட்
காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாகவும், ராகு, கேது, சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்யும் தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் மற்றும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் செய்து பிரசாதங்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்து பக்தர்களிடம் மோசடி செய்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க மாநில அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகம் உத்தரவிட்டது. இதையடுத்து நடத்திய ஆய்வில், கோயிலுக்கு தொடர்புடைய ஒரு சில இணையதளங்கள் போலியாக செயல்படுவது தெரிய வந்தது. அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது கோயில் அர்ச்சகரான சூரியநாராயணமூர்த்தி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.அவரிடம் சாதாரண பக்தர் போல் பேச்சுக்கொடுத்ததில் ராகு-கேது பூஜைக்கு ரூ.2500 கூடுதலாக ரூ.500 என்று மொத்தம் ரூ.3 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தினால் பிரசாதம் அனுப்பப்படும் என்றாராம். இதையடுத்து ஆந்திர வங்கிக்கு தொடர்புடைய அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் கடந்த ஓராண்டிற்கான பண பரிவர்த்தனையில் ரூ.3 ஆயிரம் வீதம் அதிகளவில் பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோயில் அர்ச்சகர் சூரிய நாராயணமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாக அதிகாரி சந்திரசேகர் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,281
12/12/2019 3:08:55 PM
தமிழகம்
வீட்டில் குவித்து வைத்திருந்த ராக்கெட் லாஞ்சரை பயிற்சி மையத்தில் போட சென்றபோது வெடித்தது
செங்கல்பட்டு: அனுமந்தபுரத்தில் ஏற்கனவே உயிரிழப்பு நடந்ததால் பீதியில் வீட்டில் குவித்து வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களை பயிற்சி மையத்தில் போட சென்றபோது வெடித்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு, ராணுவத்தினர், ரயில்வே துறை, தமிழக காவல் துறை உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள்  அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கும்.இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை துப்பாக்கி பயிற்சி நடந்தது. அங்கு, நேற்று முன்தினம் மதியம் அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (47), வெடிக்காத ஒரு வெடி பொருளை பைக்கில் எடுத்து கொண்டு புளியந்தோப்பு தெரு வழியாக சென்றபோது, கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமகிருஷ்ணனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் வீட்டின் வாசலில் துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் ஓட்டு வீடு, மின்கம்பம் சேதமானது. சிமெண்ட் ரோட்டில் விரிசல் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த கோவிந்தம்மாள், சென்னை அரசு  மருத்துவமனையிலும், ராமகிருஷ்ணன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் காணப்பட்டது.இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து ராமகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, குவியல் குவியலாக ராக்கெட்  லாஞ்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை கைப்பற்றி,  வண்டலூர் அருகே முருகமங்கலத்தில் உள்ள வெடிகுண்டு கிடங்கில் வைத்துள்ளனர். அவைகளை செயலிழக்க வைக்க நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அனுமதி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் செயலிழக்கப்படும். கமாண்டோ போலீசாரும், வெடிக்காத குண்டுகள் ஏதாவது உள்ளதா என்று  சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பித்தளைகளை வாங்கிய காயலான் கடைக்காரர்  யார், அவர் யாரிடம் இதை விற்றார் எனவும், வேறு யாருக்கேனும் இந்த  சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ராக்கெட் லாஞ்சர் எந்த ரகம் என்பதை அறிய மீனம்பாக்கம்  ராணுவ பயிற்சி அதிகாரிகள் வந்து சோதனையிட உள்ளனர்.இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமகிருஷ்ணனிடம் மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம்,  எஸ்ஐக்கள் சசிகுமார், ஜோதி விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: அனுமந்தபுரம் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்கள், போலீசார் பயிற்சியில் ஈடுபடும்போது, ராமகிருஷ்ணன், தர்பூசணி விற்க சென்றுள்ளார். அந்த நேரங்களில் வெடிக்காத குண்டுகளை பைக்கில் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அவைகளை பிரித்து அதிலுள்ள பித்தளைகளை காயலான் கடையில் எடைக்கு போட்டுள்ளார். இதில் அதிகளவில் பணம் கிடைத்துள்ளது. ராக்கெட் லாஞ்சரில் கிலோ கணக்கில் பித்தளை கிடைக்கும் என்பதால், கடந்த 15 வருடமாக இதுபோன்று செய்து வந்துள்ளார். தற்போது, இரும்பு கடைக்காரர் குறைவான விலைக்கு பித்தளைகளை கேட்டதால், விற்காமல் வீட்டிலேயே சேமித்து வைத்துள்ளார்.இந்நிலையில், மானாம்பதியில் வயல்வெளியில் கிடந்த ஒரு ராக்கெட் லாஞ்சரை அவ்வழியாக சென்ற 2 பேர் தெரியாமல் மிதித்து விட்டனர். அது வெடித்து 2 பேரும் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ராமகிருஷ்ணனுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரும் எச்சரித்துள்ளனர். இதனால், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ராக்கெட் லாஞ்சரை பயிற்சி மையத்திலேயே போட்டு விடலாம் என்று முடிவு செய்துள்ளார். மொத்தமாக கொண்டு சென்றால் சிக்கி கொள்வோம் என்ற எண்ணத்தில் தினமும் 2 லாஞ்சரை பைக்கில் எடுத்து சென்று போட்டு வந்துள்ளார். அந்த வகையில்தால், நேற்று முன்தினம் பைக்கில் எடுத்து செல்லும்போது, இந்திரா காந்தி சாலையில் மாடு குறுக்கே பாய்ந்துள்ளது. பிரேக் போட்டபோது, ேகாணியில் கட்டி வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர் கீழே விழுந்து வெடித்துள்ளது. இதில் ராமகிருஷ்ணன் மற்றும் கோவிந்தமாளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும்போது, வன விலங்குகள், வீட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை. கிராமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்றனர்.
127,282
12/12/2019 3:11:11 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை எதிரொலி: கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளாட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையில் இடஒதுக்கீட்டை மேற்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உட்பட 5 கட்சிகள் மற்றும் வாக்காளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தேர்தல் நடத்த வேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 3 மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.இந்நிலையில், தேர்தலில் எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களே கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வார்கள் என்று அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து, தாங்கள் போட்டியிடும் வார்டுகள் குறித்த விவரத்தை மாவட்ட வாரியாக கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளாட்சி பணிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டிய சீட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 9ம்  தேதி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களில் 16,654 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். கட்சிகள் சார்பில் பெரிய அளவில் யாரும் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 16ம் தேதி (திங்கள்) வேட்புமனு தாக்கல் முடிகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. வருகிற சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. கட்சிகள் சார்பில் இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.இந்த மூன்று நாட்களுக்குள் கூட்டணி முடிவு செய்யப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. அதனால், இன்று அல்லது நாளைக்குள் கூட்டணி குறித்து இறுதி செய்யப்பட்டு, வருகிற 16ம் தேதி (திங்கள்) வேட்புமனு இறுதி நாளன்று கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
127,283
12/12/2019 3:14:02 PM
குற்றம்
வேலியே பயிரை மேய்வதா? திருத்தணி நந்தி ஆற்றில் கேரிபேக் குவியல்
திருத்தணி: திருத்தணி நந்தி ஆற்றில் கேரி பேக் உள்பட தடை செய்யப்பட்ட கழிவுகளை நகராட்சியே கொட்டி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கடைகளில் கேரி பேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடை, கடையாக சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்துவந்தனர். இதன்பிறகு சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, திருத்தணி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடை உரிமையாளர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பிளாஸ்டிக் பேரி பேக்குகளை பொதுமக்கள் கண்ட இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால் சாலை, தெருக்களில் பிளாஸ்டிக் கேரி பேக் குவிந்துகிடக்கிறது. இவற்றை துப்புரவு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இவ்வாறு அகற்றப்படும் கேரி பேக்குகளை திருத்தணி நந்தி ஆற்றில் கொட்டுகின்றனர். தற்போது நந்தி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்துள்ளதால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. ஆற்றின் கரையோரம் உள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயில்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் நந்தி ஆற்றின் வழியாக செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நந்தி ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூகலந ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
127,284
12/13/2019 1:55:39 PM
இந்தியா
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா 7 இலாகா
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் உள்ள 6 அமைச்சருக்கும் தலா 7 இலாகா வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதால், தற்போது இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவரும் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, தன்னுடன் பதவியேற்ற ஆறு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யாமல் இருந்தார். இந்நிலையில், அமைச்சர்கள் பட்டியலில் தலா 2 வீதம் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற 16 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடருக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நகர்ப்புற வளர்ச்சி, காடு, சுற்றுச்சூழல், நீர் வழங்கல், நீர் பாதுகாப்பு, சுற்றுலா, பொது நிறுவனங்கள் மற்றும் சட்டப்பேரவை விவகாரங்கள் ஆகிய அமைச்சகங்களுடன் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சகமும், அவரது கட்சியைச் சேர்ந்த சுபாஷ் தேசாய்க்கு விவசாயம், தொழில்கள், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தோட்டக்கலை, போக்குவரத்து, மராத்தி மொழி மற்றும் கலாச்சார விவகாரங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளன.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் வீட்டுவசதி, பொது சுகாதாரம், கூட்டுறவு, உணவு மற்றும் சிவில் பொருட்கள், தொழிலாளர் மற்றும் சிறுபான்மை நலன்களுடன் முக்கியமான நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தை கையாள்வார். மற்றொரு அமைச்சரான சாகன் பூஜ்பாலுக்கு நீர்ப்பாசனம், கிராமப்புற மேம்பாடு, சமூக நீதி, கலால், திறன் மேம்பாடு மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத்துக்கு வருவாய், எரிசக்தி, மருத்துவக் கல்வி, பள்ளி கல்வி, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் மேம்பாடு, மற்றும் மீன்வளத்துறை அமைச்சகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் சகா நிதின் ரவுத்துக்கு பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், ஜவுளி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, விமுக்த ஜாதி, நாடோடி பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியன வழங்கப்பட்டுள்ளன.உத்தவ் தாக்கரே எந்தவொரு அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத துறைகளை வைத்திருப்பார் என்று அவரது அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, 6 அமைச்சருக்கும் தலா 7 இலாகா வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கூறுைகயில், “அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு என்பது அடுத்த வாரம் தொடங்கும் குளிர்கால அமர்வைக் கருத்தில் கொண்டு ஒரு தற்காலிக ஏற்பாடாகும்” என்றார்.
127,285
12/13/2019 1:59:02 PM
இந்தியா
நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நள்ளிரவு முதல் குடியுரிமை சட்டம் அமல்
புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனால், நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இருந்தும், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் மாநிலங்களில் இச்சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என்று அறிவித்துள்ளனர். குடியுரிமை (திருத்த) மசோதா நேற்று முன்தினம் மாநிலங்களவையிலும், மக்களவையில் கடந்த திங்கட்கிழமையன்றும் கடுமையான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அசாமில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் அனைத்து தொலை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.மேகாலயாவின் தலைநகரின் சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமை மேலும் மோசமடையும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்துடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அசாமில் உள்ள எதிர்ப்பாளர்கள், இந்த நடவடிக்கை வெளிநாட்டு புலம்பெயர்ந்தோரிடையே மதவாத எதிர்ப்பினை தூண்டும் எனக்கூறி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். புதிய சட்டத்தின் மூலம், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி, எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன.இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்றிரவு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. முன்னதாக, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல்கோரி, குடியரசுத் தலைவருக்கு அதன் சரத்துகள் அனுப்பப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்-2019, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கிறது. முன்னதாக, மத்திய அரசின் புதிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, நேற்று உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இதற்கிடையே, பாஜ மற்றும் பாஜ ஆதரவு மாநிலங்களில் குடியுரிமை மசோதா சட்டம் அமல்படுத்த அந்தந்த மாநில அரசுகள் இசைவு தெரிவித்தாலும்கூட, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால், அந்தந்த மாநில முதல்வர்கள் இச்சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இருந்தும், குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின், மூன்றில் இருமடங்கு மாநிலங்கள் அமல்படுத்தினால், அச்சட்டம் தானாகவே நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.‘குடியுரிமை திருத்த மசோதாவை மேற்கு வங்கத்தில் சட்டமாக மாற்றினாலும் அதை செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரும் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். ஆனால்,  தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  வாக்களித்ததால், தமிழக எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின்  எதிர்ப்பை மீறி, தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலுக்கு வரவிருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.ஜப்பான் பிரதமர் பயணம் திடீர் ரத்துஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்த தனது இந்திய பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஜப்பானின் ஜிஜி பதிப்பகத்தை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அபே மற்றும் பிரதமர் மோடி இடையே உச்சிமாநாட்டிற்கான திட்டமிடப்பட்ட இடமாக கவுகாத்தி தேர்வு ெசய்யப்பட்டது. ஆனால், குடியுரிமை திருத்த மசோதா தொடர்பாக அப்பகுதியில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டிச. 15-17ம் தேதி வரை திட்டமிடப்பட்ட இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டை மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் நடத்துமா என்பதும் சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக, தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சகம் கூறியிருந்தது. முன்னதாக, வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மொய்தீன் இந்தியாவில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவர் திடீரென தனது பயணத்தை ரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
127,286
12/13/2019 2:06:14 PM
தமிழகம்
எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1,000 கோடி ஊழல் குறித்து விசாரித்து அமைச்சர் மீது தாமதமின்றி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அரசில், உள்ளாட்சி துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இத்துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, திமுக, அறப்போர் இயக்கம் சார்பில், 349 டெண்டர்கள் ஊழல் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, “48 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்” என்று தனியாகவே ஒரு காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்து, டிசம்பர்- 18ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.இதை பற்றி சிறிதும் கவலைப்படாமல், “மழை நீர் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்” என்று, அண்மையில், சென்னையில் உள்ள ‘ஹார்லிஸ் ரோடு’ நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.ஆற்றுமணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன. அனைத்து மாநகராட்சிகளிலும், 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ‘திடீர் சோதனை’ எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன?  ஊழல்களை ரகசியமாக விசாரித்து “விஜிலென்ஸ் ரிப்போர்ட்” போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்பு துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா?அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு ‘விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது’ லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்து போட்டிருக்கிறதா? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தை, ‘ஊழல் நாறும் நிர்வாகமாக’ மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சரின் வலது, இடது கரமாக திகழ்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டு  கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி,  அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் ‘கைகட்டி’ நின்று ‘கப்பம்’ வசூல் செய்யும்  பணியை கச்சிதமாய் செய்து வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. அமைச்சர்  வேலுமணி மட்டுமல்ல; இதற்கு துணை போகும் ஐஏஎஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும். தப்பி ஓடிவிட முடியாது.ஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள இந்த, ‘ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்’ என்ற ரூ.1000 கோடி ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி - மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைச்சரையும், அவருக்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,287
12/13/2019 2:08:10 PM
தமிழகம்
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணியினர் இன்று திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது. அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.மக்களவை, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த மசோதா, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி, 2014ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது. இலங்கை தமிழர்களும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த மசோதாவை எதிர்த்து மக்களவை, மாநிலங்களவையில் திமுக தனது கடுமையான எதிர்ப்பு குரலை பதிவு செய்தது. இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தது. சிறுபான்மையினர் மற்றும் ஈழ தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் வருகிற 17ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து இருந்தார்.இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு திடீரென திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. சென்னை, சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள திமுக தென்சென்னை மாவட்ட அலுவலகம் அருகே இருந்து 1000க்கும் மேற்பட்டோர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கையில் திமுக கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். அப்போது, அவர்கள் மத்திய பாஜ மற்றும் தமிழக அதிமுக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சென்றனர்.சைதாப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சைதாப்பேட்டை வளைவு அருகே போலீசார் பேரிகார்டு அமைத்து திமுகவினர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது திமுகவினர் பேரிகார்டை நகர்த்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் திமுகவினர் சாலையின் ஒருபக்கம் வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து உதயநிதி தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதேபோன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று காலை திமுக இளைஞர் அணியினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். சில இடங்களில் ஊர்வலமாக சென்ற இளைஞர் அணியினரை போலீசார் மறித்து, கைது செய்தனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதசார்பின்மை, சமஉரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜக அரசும், அதற்கு துணை நின்று சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது. இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதாவுக்கு மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிமுக அளித்த ஆதரவே வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது இதற்கு திமுக கடும் கண்டனத்தை தொிவித்துக் கொள்கிறது” என்றார்.
127,288
12/13/2019 2:10:42 PM
தமிழகம்
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து
கரூர்: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியுள்ளார். லோக்சபா, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்வது கட்டாயமாக இருந்தது. இதனவால், அவர்கள் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர். அடுத்த முறை தேர்தலில்போட்டியிடும்போது எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்ற விவரங்கள் எல்லாம் நமக்கு தெரிந்து விடும். அதேபோலத்தான் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் சொத்துக் கணக்குகளை காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வேட்பு மனுவுடன் ‘3ஏ’ என்ற உறுதி படிவமும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் உள்ளாட்சி வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல் மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் தாந்தோன்றி மலை ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மனைவி சாந்தி போட்டியிடுகிறார். இவர் மற்றும் இவரது கணவர் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரொக்கம் என ரூ.8கோடிேய 90 லட்சத்து 84 ஆயிரத்து 30க்கு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.அதேபோல கரூர் ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாகரன், ரூ.2 கோடியே 28 ஆயிரம் என சொத்து மதிப்பை காட்டியுள்ளார். இதே பஞ்சாயத்தில் செல்லையா சிவா என்ற வேட்பாளர் ரூ.2 கோடியே 12 லட்சமும், லீலாஎன்பவர் ரூ.2 கோடியே 28 ஆயிரமும் சொத்து இருப்பதாக காட்டியுள்ளனர்.
127,289
12/13/2019 2:12:49 PM
தமிழகம்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் அம்மன் ஊஞ்சலில் ஆடுவது போன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, இது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 10ம் தேதி கார்த்திகை தீபத்தன்று இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. 11ம் தேதி காலை கோயில் செயல் அதிகாரி சரவணன் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தார். அதில், நடை சாத்தப்பட்ட பிறகு இரவு 11 மணிக்கு கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடுவதுபோல் ஒளி அசைந்தாடியது தெரிந்தது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த ஒளிபிம்பம் குறித்து கோயில் செயல் அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, சுமார் இரண்டு மணி நேரம் அம்மன் ஊஞ்சலில் ஆடுவதுபோல் தெரிந்தது என கூறினார். இந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக பத்ரகாளியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.
127,290
12/14/2019 1:59:46 PM
தமிழகம்
டிச. 6ம் தேதி வரை விண்ணப்பித்த வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 6ம் தேதி  விண்ணப்பித்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, வாக்காளர்கள் ‘1950’ என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும், என்.எஸ்.வி.பி. என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவை பிரிவுகள் ஆகியவற்றுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். திருத்தம் இருந்தால், வாக்காளர்களே செய்து கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த 30ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி (திங்கள்) வெளியிடப்படும் என்றும், இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படும் என்றும், புதிய வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தமிழக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் பட்டியல் அடிப்படையிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதனால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியை தேர்தல் ஆணையம் வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வருகிற 23ம் தேதி வரைவு வாக்காளர் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த தேதியும் தற்போது மாற்றப்பட்டு, அது எந்த தேதியில் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்ததால், 30-6-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பட்டியல்தான் உள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி புதிதாக அறிவிக்கப்பட்டு, வருகிற 16ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வழக்கமாக, வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், 6-12-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களிடம் மனு வாங்கப்பட்டுள்ளது. இவர்களில் தகுதியான பெயர்களை, தேர்தல் ஆணையம் அனுமதியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான துணை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
127,291
12/14/2019 2:01:40 PM
தமிழகம்
இரு கட்டமாக நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் கடைசி
சென்னை: இரண்டு கட்டமாக நடக்கும்  ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசி நாள். இதுவரை 1 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு கடந்த 9ம் தேதி தொடங்கியது.இதன்படி 9ம் தேதி 3,217  பேரும், 10ம் தேதி 1,784 பேரும், 11ம் ேததி 16,654 பேரும், 12ம் தேதி 16, 360 பேரும், 13ம் தேதி 71,763 பேர் என மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 778  இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  இந்நிலையில் சனிக்கிழமையான இன்று பொது விடுமுறை நாள் இல்லை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏதுவாக தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன் வேட்பாளர்கள் அனைவரும் இன்றும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.நாளை ஞாயிற்று கிழமையன்று பொது விடுமுறை நாள் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை ) வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும். வேட்பாளர்கள் அன்றைய தினம் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். 19ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். இதற்கிடையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் தேர்தல் பார்வையாளர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் கூட்டம் நடத்தி, தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுது செய்ய வேண்டும் உன்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.மேலும், நடத்தை விதிகள் முறையாகவும் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பதற்றமான வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தேர்தல் வெளிப்படை தன்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென என்று கேட்டுக் கொண்டார்.
127,292
12/14/2019 2:03:46 PM
தமிழகம்
உள்ளாட்சியில் குறைந்த இடங்கள் ஒதுக்கீடு மாவட்டங்களில் அதிமுக கூட்டணி முறிவு?
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி பதவிகளில் குறைந்த இடங்களை கூட்டணிக்கு ஒதுக்குவதால், பல மாவட்டங்களில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம் இறங்கியுள்ளன. இது தொடரும் பட்சத்தில் கூட்டணியில் பெரிய அளவில் விரிசல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜ, தேமுதிக, தமாகா, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அன்றே கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தனர். மொத்தமாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து ஒவ்வொருவரையும் அழைத்து பேசினர். ஏதோ, தனியார் கம்பெனிக்கு ஊழியர்களை இன்டர்வியூ செய்வதுபோல அழைத்து பேசியது கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.அப்போது, உள்ளாட்சித் தேர்தல் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளூர் செல்வாக்கிற்கு ஏற்றார்போல மாவட்ட அளவில் தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று கூறி அனுப்பி விட்டனர். இதை மாவட்ட நிர்வாகிகளிடம் கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.கூட்டணிக் கட்சியினர் மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது 75 சதவீத இடங்களில் அதிமுக போட்டியிடும். 25 சதவீதம் மட்டுமே கூட்டணிக்கு வழங்கப்படும். அதில் வட மாவட்டங்களில் பாமகவுக்கு 15 சதவீதம், பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு சேர்ந்து 10 சதவீதம் வழங்கப்படும். கன்னியாகுமரி, கோவை போன்ற மாவட்டங்களில் பாஜகவுக்கு 15 சதவீதம் மற்ற கட்சிகளுக்கு அங்கு 5 முதல் 10 சதவீதம் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டனர்.இது பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தலைமை கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கூறியதால் பல மாவட்டங்களில் அதிமுக போட்டியிடும் இடங்களில் கூட்டணிக் கட்சியினர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தை முடியாததால், கூட்டணிக் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தால், உடன்பாடு ஏற்பட்ட பிறகு மனுவை வாபஸ் பெறலாம் என்று கூட்டணிக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளதால், ஒரு பதவிக்கு அதிமுகவும், கூட்டணிக் கட்சியினரும் மனு தாக்கல் செய்துள்ளனர். பல மாவட்டங்களில் கூட்டணியில் மோதல் ஏற்பட்டு மாவட்ட நிர்வாகிகளே தனித்து போட்டி என்று அறிவித்து விட்டனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மேலும், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், பாஜவுக்கு ஒன்றிய அளவில் தலா 2 இடங்களும், 4 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான இடங்களும் அதிமுகவிடம் கேட்கப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் பாஜவுக்கு பெருந்துறை மற்றும் பவானிசாகர் பகுதியில் தலா ஒரு ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் மட்டும் தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பவானி, அந்தியூர், கோபி சட்டமன்ற தொகுதிகளில் ஒரு இடம்கூட வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த இடங்கள் வழங்காததால் பாஜ கடும் அதிருப்தியில் உள்ளது. பாஜ மாநில தேர்தல் பார்வையாளர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட தலைவர் சித்தி விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோரிடம் கடந்த இரு நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், அனைத்து ஒன்றியங்களிலும் ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் பாஜ தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள ஊராட்சித் தலைவர் பதவிக்கும் பாஜவினரை சுயேச்சையாக களமிறக்கவும் முடிவு எடுத்துள்ளனர்.ஈரோடு வடக்கு மாவட்டத்தைப் போல கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நெல்லை மாவட்டங்களிலும் மோதல் எழுந்துள்ளது. அதேபோல, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பாமகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை முடியாமல் மோதல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தேமுதிகவினரை அதிமுகவினர் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினரை எதிர்த்து கூட்டணிக் கட்சியினரே போட்டியிடஉள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கூட்டணியும் முறியும் நிலை உருவாகியுள்ளது.
127,293
12/14/2019 2:08:05 PM
இந்தியா
கவுகாத்தி பகுதியில் தொடரும் வன்முறை: டிவி சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குதல்
கவுகாத்தி: குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கும் நிலையில்,  உலுபரியில் உள்ள டிவி சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. குடியுரிமை சட்டம் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து வன்முறை, போராட்டம், கல்வீச்சு போன்ற சம்பவங்களால் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 2 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், கவுகாத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போது, அசாம் காவல்துறையினர் தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல் அலுவலகத்திற்குள் நுழைந்து அதன் ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.முன்னதாக உலுபரி வட்டாரத்தில் உள்ள மேற்கண்ட டிவி சேனல் வளாகத்திற்குள் காவல்துறையினர் முதலில் நுழைந்து, கட்டிடத்திற்கு வெளியே அமர்ந்திருந்த சில ஊழியர்களை அடித்து உதைத்தனர். பின்னர், கட்டிடத்திற்குள் நுழைந்தபோது, ​​வரவேற்பு பகுதிக்கு அருகிலுள்ள மற்ற ஊழியர்களை அடித்து தாக்கினர். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்னர், போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துவிட்டு, அதன்பின் டிவி சேனல் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த டிவி சேனல் நிர்வாக ஆசிரியர் ஸ்க்ரோல் கூறுகையில், ‘‘எந்த செய்தியும் தூண்டப்படவில்லை. அசாம் போலீசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்” என்றார்.இதற்கிடையே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு ஒரு ஆலோசனையை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில், ‘சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் அல்லது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் எதையும் ஒளிபரப்ப கூடாது’ என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உலுபரி பகுதியில் செயல்பட்டு வரும் டிவி ேசனல் அலுவலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
127,294
12/14/2019 2:10:11 PM
இந்தியா
மண்டல காலத்தில் முதன்முறையாக சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதால் 10 மணிநேரத்துக்கும் மேல் நீண்ட வரிசையில் காத்து நின்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் ேகாயிலில் தற்போது மண்டல கால பூைஜகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நடைதிறந்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதற்கிடையே கடந்த 3 வாரங்களாக பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். இருந்த போதிலும் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்காமல் எளிதில் தரிசனம் செய்து சென்றனர். ஆனால் நேற்று இந்த மண்டல காலத்தில் முதல் முறையாக மிக அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் தரிசனத்துக்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் 18ம் படி முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். நேற்று காலை 8 மணிக்கு வரிசையில் நின்ற பக்தர்களால் மாலை 6 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் பம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்களை தடுத்து நிறுத்தி கட்டம் கட்டமாக அனுப்பி வைத்தனர். ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேற்று பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து பக்தர்களும் ஒரே வரிசையில்தான் செல்ல முடிந்தது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரூ.100 கோடி வருமானம்சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து இந்த மண்டல காலத்தில் நடை திறந்து நேற்று வரை 27 நாட்களில் மொத்த வருமானம் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் ரூ.60 கோடி மட்டுமே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரூ. 40 கோடிக்கு மேல் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.இதில் உண்டியல் மூலம் மட்டும் ரூ.35 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.21 கோடி மட்டுமே கிடைத்திருந்தது. இது தவிர ரூ.6 கோடி மதிப்பிலான நாணயங்கள் எண்ணும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை 15.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
127,295
12/14/2019 2:14:39 PM
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு: ஊராட்சி தலைவர் தேர்வுக்கு வாக்குச்சீட்டுகளுடன் தேர்தல்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்சிகள் சார்பிலும், பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் பெண்களும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர்.தங்கச்சிமடம் பகுதியில் வசிக்கும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த பல பெண்கள், தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்தனர். ஆனால், குறிப்பிட்ட ஒரு பெண் தவிர்த்து, மற்றவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் பிரச்னை செய்வதாகவும், குறிப்பிட்ட நபர்களால் மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் நால்வர் போட்டியிட்ட நிலையில், நேற்று தங்கச்சிமடத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜென்சி, லோவியா தெரஸ், குயின்மேரி, ரெஜி ஆகிய 4 பெண்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இவர்களது புகைப்படங்களுடன் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டது. நேற்று காலை தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் போட்டியிடும் 4 பெண்களின் புகைப்படம் ஒட்டப்பட்ட நான்கு சில்வர் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் வந்து வாக்குச்சீட்டு பெற்று ஓட்டளித்து சென்றனர். குறிப்பிட்ட நபருக்கு வாக்களிப்பதற்கு இரவோடு இரவாக வீடுதோறும் பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து தகவல் கிடைத்தும் தங்கச்சிமடம் போலீசார் முதலில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயரதிகாரிகளுக்கு புகார் சென்ற நிலையில் வேறு வழியின்றி காலை 10 மணியளவில் தேர்தல் நடைபெற்ற மண்டபத்துக்கு சென்ற ராமேஸ்வரம் தாசில்தார் சந்திரன், டிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீசார் தேர்தலை தடுத்து நிறுத்தினர். அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றி மகாலை பூட்டினர். ராமநாதபுரம் அருகே சுமைதாங்கி கிராமத்தில் நேற்று முன்தினம் இதேபோல வாக்குப்பதிவு நடந்த நிலையில், தங்கச்சிமடத்திலும் தேர்தல் மூலம் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரை தேர்ந்தெடுக்க முயன்ற சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குலுக்கல் முறையில் தேர்வுதேனி மாவட்டம் ஸ்ரீரெங்கபுரம் கிராம கமிட்டியினர், தேர்தல் நடந்தால் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால், போட்டியின்றி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக குலுக்கல் நடத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி 8 வார்டுகளில் போட்டியிட விரும்புவோரின் பெயர்களை எழுதி குலுக்கி போட்டு, சிறுமி மூலம் எடுக்க வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்தனர். இதன்படி, 1வது வார்டுக்கு சுப்புராம், 2வது வார்டுக்கு சுந்தரேசன், 4வது வார்டுக்கு மகாலட்சுமி, 5வது வார்டுக்கு பாரதி, 6வது வார்டுக்கு சுதா, 7வது வார்டுக்கு நடராஜன், 8வது வார்டுக்கு ராமசாமி, 9வது வார்டுக்கு லட்சுமி ஆகியோர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், குலுக்கல் முறையை வாபஸ் பெற வேண்டுமென கூறி, கிராம மக்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர் தேர்வுக்கான குலுக்கல் முறை வீரபாண்டி போலீசார் முன்னிலையிலே நடந்தது குறிப்பிடத்தக்கது.
127,296
12/14/2019 2:16:41 PM
தமிழகம்
தினகரன் நாளிதழ் சார்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவை காண அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை: தினகரன் நாளிதழ் சார்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவை  காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானவர்கள் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சென்றனர். மனித உடலின் ஆரோக்கியம் சாப்பிடும் உணவு பொருட்களைதான் சார்ந்துள்ளது.  இதனால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல்வேறு உணவு பொருட்களை தேடிச் சென்று பொதுமக்கள் வாங்குகின்றனர். இவ்வாறு தேடிச் சென்று பல்வேறு உணவு பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு ஏதுவாக அனைத்து உணவு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தினகரன் நாளிதழ் சார்பில் மாபெரும் உணவுத் திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றுவருகிறது.தினகரன் நாளிதழுடன் இணைந்து எவரெஸ்ட் மசாலா, மெசின் பேக்டரி, சன் இன்டஸ்ட்ரீஸ், பீதாம்பரி புராடெக்ட், தன்யா அசோசியேட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் உணவுத் திருவிழா நாளை வரை (15ம் தேதி) நடைபெறுகிறது. சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.இதில் இயற்கை உணவு பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்புகள், குளிர்பான தயாரிப்புகள், மசாலா தயாரிப்புகள், சுத்தமான, சுகாதாரமான எண்ணெய் போன்றவைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உணவுத் திருவிழாவில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம், மசாலா பொருட்கள், தேன், பெருங்காயம், எவரெஸ்ட் மசாலா பொருட்கள் உள்ளிட்ட சமையல்களுக்கு தேவையான பொருட்கள் என 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் 2து நாளான இன்று கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கண்காட்சியில் பங்கேற்ற ஒவ்வொரு நிறுவனமும் தங்களிடம்  வாங்கும் பொருட்களை சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் வழங்கியதால் பலர் போட்டிப் போட்டு வாங்கி சென்றனர். அரங்கிற்கு வந்த பொதுமக்களுக்கு மில்கா ஒன்டர் கேக், பிளன்டி மசாலா டீ தூள் பொடி இலவசமாக வழங்கப்பட்டது.
127,297
12/15/2019 2:05:32 PM
தமிழகம்
இன்று முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாஸ்டேக் காலக்கெடு நீட்டிப்பு
சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த ஜன.15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கரை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்துள்ளது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாடு முழுவதும் 540 சுங்கசாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.  இதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் காலநேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும்.இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் கார்டு அனைத்து சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, வாகன உரிமையாளர்கள் லைசென்ஸ் நகல், ஆர்சிபுக், பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தர வேண்டும். இந்த பாஸ்டேக் கார்டை பெறும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சராசரியாக ரூ.400 வரை கார்டில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ரூ.200க்கு கீழ் சென்றால் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  தற்போது இந்த பாஸ்டேக் கார்டு ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கடக்கும் போது தானாக கட்டணத்தை வசூலித்து கொள்கிறது. இந்த நடைமுறை மிகவும் எளிதானது என்றாலும், பாஸ்டேக் ஸ்டிக்கர் பெரும்பாலான வாகன ஓட்டிகளால் பெற முடியவில்லை. இதனால், கடந்த டிசம்பர் 1ம் தேதி பாஸ்டேக்  மூலம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.ஆனாலும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 60 சதவீதம் பேர் மட்டுமே தற்போது வரை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் பாஸ்டேக் கட்டணம் வசூலிக்கும் முறையை கட்டாயமாக்கப்படவிருந்தது. ஆனால், பலரும் ஸ்டிக்கர் வாங்காத நிலையில், அவர்கள் சுங்கச்சாடிகளில் இருமடங்கு அபராதம் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் 25 சதவீதம் சுங்கச்சாவடிகளில் வழிபாதைகளில் பாஸ்டேக் முறையை மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த நிலையில், பாஸ்டேக் முறை இன்று அமல்படுத்தும் பட்சத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மேலும், 30 நாட்கள் கால அவகாசம் வழங்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது, வரும் ஜனவரி 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய  தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதிசெய்வதும், பணமில்லா பேமென்ட்டை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் நோக்கமாக இருப்பதால், டோல் பிளாசாக்களில் உள்ள அனைத்து பாதைகளிலும், பாஸ்டேக் வசதி கொண்டுவரப்படுகிறது. தற்போது வரை சுங்கவழிப்பாதைகளில் சிப் பொருத்தும் பணி நடக்கிறது. மேலும்,  பாஸ்டேக் கார்டு பலர் வாங்க வேண்டியுள்ளது. எனவே தான் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு பாதை மட்டும், ஹைப்ரிட் பாதையாக வைக்கப்படும். அதாவது, பாஸ்ட்டேக்குடன், பிற வகையில் கட்டணம் செலுத்துவோரும் இந்த வழியில் போகமுடியும் இவ்வாறு அவர் கூறினார்.
127,298
12/15/2019 2:09:13 PM
தமிழகம்
தமிழினத்தின் உரிமையைக் காக்க இப்போதும் போராட்டக் களம் காணத் தயாராகி விட்டது திமுக
சென்னை:  திமுகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற தலைப்பில் தனது முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் பேசியுள்ள விவரம் பின்வருமாறு:குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற புதியச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரான, மக்கள் விரோத, மக்களைப் பேதப்படுத்தி - பிளவுபடுத்தும் பிற்போக்கான சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திமுக எதிர்த்து வாக்களித்தது. ஆனால், அதிமுக ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. அதனைச் சட்டமாக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.இந்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல்; நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடந்துகொண்டு இருக்கிறது. திமுகவும் தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இதை எதற்காக எதிர்க்கிறோம் என்றே தெரியாமல், மத்திய அரசு எதைக் கொண்டுவந்தாலும் திமுக எதிர்க்கும் என்று சிலபேர் வழக்கம்போல் அவதூறு கிளப்புகிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்து, நாம் கேட்கும் எந்தக் கேள்விக்குமே அவர்களால் முறையாக பதில் சொல்ல முடியவில்லையே ஏன்?ஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதிகளாக நம்முடைய நாட்டுக்கு வருபவர்களுக்கு, வாழ்வு தரக்கூடிய, உன்னதமான சட்டம் தான் குடியுரிமைச் சட்டம். 1955ம் வருடம், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு, இந்திய நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை, இப்போது திருத்துவதற்கு அப்படி என்ன அவசியம் வந்தது?பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல பிரச்னைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றத்தையும், குமுறலையும் திசைதிருப்புவதற்காகவே, இந்தச் சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதில், அகதிகளாக வரும் எல்லோருக்குமே, குடியுரிமை வழங்கப்படும்னு சொல்லி இருந்தால், நாம் எதிர்க்கப் போவதில்லை. சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களை மட்டும், புறக்கணிக்கின்ற வகையில், ஓரவஞ்சனையான, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக அதை பாஜக மாற்றி உள்ளது. அதற்கு அதிமுக பக்கபலமாக இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்!இந்திய அரசியல் சட்டம், இந்த நாட்டு அரசை, மதச்சார்பற்ற அரசு என்று சொல்கிறது. அதன்படி, மத அடிப்படையில், எந்த ஒரு சட்டத்தையும், இங்கே கொண்டு வர முடியாது. ஆனால், பாஜ அதைத்தான் செய்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இந்தியாவுக்குள் வரலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.நாம் கேட்பது; இஸ்லாமியர்களை மட்டும் ஏன் வெறுத்து புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதத்தவரெல்லாம் வரலாம் என்கிறார்கள். அப்படியென்றால், இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறாங்க?இதுதான், ஈழத்தமிழர்களுக்கு பாஜ, அதிமுக  இழைக்கின்ற மாபெரும் துரோகம். அதனால்தான் தமிழர்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம்.ஈழத் தமிழர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் இலங்கையில் வாழ முடியாமல், தமிழகத்த்தில் வந்து முகாம்களிலும், வெளியிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் குறித்தோ, மனிதர்களுக்குரிய கண்ணியத்தோடு வாழ்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்தோ, மத்திய அரசுக்கு கவலை இல்லை. அதுமட்டுமல்ல; தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. இதனை அ.தி.மு.க. தட்டிக் கேட்க முடியாமல், முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!மத்திய அரசுக்கு தமிழர்கள் அப்படி என்னதான் துரோகம் பண்ணாங்க என்பதுதான் என்னுடைய கேள்வி.அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்கிறார்கள். அப்படியென்றால் இலங்கை, அண்டை நாடு இல்லையா?மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம். ஈழத்தமிழர்கள் மட்டும் வரக்கூடாது என்றால், அவர்களை மத்திய அரசும் அதிமுக அரசும் இந்துக்களாக பார்க்கவில்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை மட்டும் குறிவைத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கான நோக்கம்; இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிற நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானோ!முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுற மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றால், பவுத்த சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் பாஜ அரசு கவலைப்படவில்லை?ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றாலும், அவர்களுடைய சமய நம்பிக்கை இந்து மற்றும் சைவம்தானே! அவர்களைப் புறக்கணித்தால், இந்துத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று நினைப்பதாகத் தானே அர்த்தம்?இதை எதிர்த்தால், எடப்பாடியும், அவரது கூட்டாளிகளும் கொள்ளையடிக்க மத்திய பாஜ அரசு அனுமதிக்காது. லஞ்ச - லாவண்யத்தை மட்டுமே லட்சியமாக கொண்ட இவர்களது ஆட்சியும் பறிபோக நேரும். அதனால்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையே காவு கொடுத்து, தமிழினத்தை காட்டிக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுவரை கொலைகார, கொள்ளைக்கார ஆட்சியாக இருந்துவரக் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி, இப்போது தமிழின துரோக ஆட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது.இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர்ப்பலியே ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரவே தயங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம்; சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு இந்தச் சட்டம் உட்பட்டதா என்பதை இந்திய உச்சநீதிமன்றம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையமே வலியுறுத்தி இருக்கிறது. யார் சொன்னால் என்ன; நாங்கள் கேட்க மாட்டோம் என்கிற தொனியில் - மக்கள் விரோத, மதச்சார்பின்மையை குழி தோண்டிப் புதைக்கிற இந்தச் சட்டத்தை பிடிவாதமாக அமல்படுத்தி இருக்கிறது மத்திய பாஜ அரசு. அதை அடிபிசகாமல் அடிபணிந்து ஆதரித்திருக்கிறது தமிழ்நாட்டை ஆளும் அடிமை அதிமுக அரசு.ஆனால், தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிராக கொதித்தெழும் திமுக இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. உரிமையையும், மானத்தையும் உயிராக போற்றிய அண்ணா - கலைஞரின் வழிவந்த இந்த இயக்கமும், அதற்கு தலைமை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினும் அப்படி இருந்து விட மாட்டான். தமிழினத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் தெம்பும், திராணியும் திமுகவுக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன்தான், தமிழினத்தின் உரிமையைக் காக்க இப்போதும் போராட்டக் களம் காணத் தயாராகி விட்டது திமுக. எப்போதும் இனத்துக்கான நமது போராட்டம் தொடரும்!  இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
127,299
12/15/2019 2:13:04 PM
தமிழகம்
கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில் உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று துவங்கியது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 26 கோயில் யானைகள் பங்கேற்கின்றன.  இந்து அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் துவங்கப்பட்ட இந்த யானைகள் நலவாழ்வு முகாம், கடந்த 2012ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான 12வது யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் இன்று காலை துவங்கியது. இந்த முகாமில், தமிழகம் முழுவதும் இருந்து 26 யானைகள் பங்கேற்கின்றன. யானைகளுக்காக மொத்தம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை குளிக்க வைக்க குளியல் மேடை, ஷவர் மேடை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் 48 நாட்கள் நடக்கிறது.முகாமில் பங்கேற்பதற்காக முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமாலியதாவும், 2வதாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் யானை கோதையும், 3வதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரியும், 4வதாக காளையார் கோவில் யானை சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவல்லியும், 5வதாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணியும், 6வதாக மதுரை கள்ளழகர் கோயில் யானை சுந்தரவல்லி தாயாரும், 7வதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவும், 8வதாக திருச்சி தாயுமானவர் சுவாமி கோயில் யானை லட்சுமியும் 9வதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாளும் 10வதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதியும் வந்து நேற்று மாலை வந்து சேர்ந்தன. தொடர்ந்து இன்று காலை யானைகள் பவானி ஆற்றில் குளிக்கவைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.மண் குளியலில் ஈடுபட்ட ஜெயமாலியதா யானைஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமாலியதா புத்தணர்வு முகாமுக்கு நேற்று மதியம் வந்தது. முகாமுக்கு வந்ததும் அந்த யானை தரையில் படுத்து உருண்டு, மண்ணை தனது உடலில் வாரி இறைத்துக்கொண்டது. இதுபற்றி பாகன் விமல்குமார் கூறுகையில், யானைகளுக்கு காடுகளில் மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் மண் குளியல். காரணம் யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது, பொதுவாக உடல் உஷ்ணத்தை குறைக்க வனப்பகுதியில் யானைகள் தங்களுடைய உடலில் சேறும் சகதியுமான மண்ணை எடுத்து பூசிக் கொள்ளும். இதன் மூலமாக யானைகள் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளும். எனவேதான் ஜெயமாலியதா யானையும் தன்னுடைய உடலில் சேற்று மண்னை எடுத்துப் பூசி, மண்ணில் உருண்டு விளையாடியது என்றார்.
127,300
12/15/2019 2:15:25 PM
இந்தியா
நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்
புதுடெல்லி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்’ என்று, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரத்தத்தில் கடிதம் எழுதி உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.கடந்த டிச. 16, 2012ல் நடந்த கொடூரமான டெல்லி பேருந்து கூட்டு பாலியல் வழக்கு (நிர்பயா) அதன் இறுதி முடிவை நோக்கி வேகமாக நகர்கிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற திகார் சிறை தயாராகி வருகிறது. பீகார் பக்ஸர் சிறையில் தூக்கு கயிறை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டிச. 6ம் தேதி, நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினயின் கருணை மனுவை நிராகரிக்கக் கோரிய டெல்லி அரசாங்கத்தின் பரிந்துரையை, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பியிருக்கிறது.மற்றொரு குற்றவாளி, அக்‌ஷய், உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார், வருகிற 17ம் தேதி விசாரணைக்கு வரும். பாதிக்கப்பட்டவரின் தாய், குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரி, சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார்.இதுகுறித்து, வர்த்திகா சிங் கூறுகையில், ‘‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட  வேண்டும். மரண தண்டனையை, ஒரு பெண் நிறைவேற்ற முடியும் என்று உலகத்திற்கு ஒரு ெசய்தி அனுப்பும். பெண் நடிகர்கள், பெண் எம்பிக்கள் என்னை ஆதரிக்க வேண்டும். இந்த தண்டனையை நிறைவேற்ற நான்  விரும்புகிறேன். இது சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று  நம்புகிறேன்’’ என்றார்.
127,301
12/15/2019 2:18:03 PM
இந்தியா
கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்
திருமலை: டிக்-டாக் மோகத்தால் கணவரை பிரிந்து 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு இளம்பெண்ணுடன் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், ஆதோணி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் அர்ச்சனாவின் சகோதரி லட்சுமி பெங்களூருவுக்கு பணி நிமித்தமாக சென்றார். பணிபுரியும் இடத்தில் லட்சுமிக்கு, அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் அஞ்சலி, அர்ச்சனாவுடன் போனில் தொடர்ந்து பேசி வந்தார். இதில் இருவரும் போனில் பேசியபடியே டிக் டாக் வீடியோவில் பதிவு செய்ய தொடங்கினர். பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது மற்றும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பாட்டுபாடி அதை டிக்டாக் வீடியோவில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த இருவரின் நட்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. இவர்களுக்கிடையே ஓரின சேர்க்கை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அஞ்சலி ஒரு வாரத்திற்கும் மேலாக அர்ச்சனா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். இவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த அர்ச்சனாவின் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் இனி இருவரும் எவ்வித தொடர்பும வைத்துக்கொள்ளக்கூடாது என எச்சரித்தனர்.இதனால் ஆவேசம் அடைந்த அஞ்சலி, ‘என்னையும் அர்ச்சனாவையும் பிரிக்க நினைக்கும் குடும்பத்தில் இருந்து அர்ச்சனாவை நிரந்தரமாக பிரிப்பேன்’ எனக்கூறிவிட்டு சென்றாராம். அதன்படி அஞ்சலி, யாருக்கும் தெரியாமல் அர்ச்சனாவுக்கு போன் வாங்கி கொடுத்து தொடர்ந்து பேசி வந்தார். இதனை கவனித்த பெற்றோர் மற்றும் கணவர் ரவிகுமார் ஆகியோர் அர்ச்சனாவை கண்டித்தனர். கணவரின் கண்டிப்பு அதிகமானதால் அர்ச்சனா தனது வீட்டிலிருந்து வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அர்ச்சனா, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டில் இருந்தும் வெளியேறி அஞ்சலியுடன் சென்றுவிட்டார்.இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் கர்னூல் முதலாவது நகர காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். டிக்-டாக் மோகத்தால் 2 குழந்தைகளின் தாய், கணவனை விட்டு இளம்பெண்ணுடன் வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
127,302
12/16/2019 3:03:18 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் போராட்டம் பரவியது: எங்கும் கலவரம்-தீ வைப்பு-தடியடி கண்ணீர்புகை குண்டு வீச்சு
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் மட்டும் நடந்து வந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், பல இடங்களில் வன்முறையும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறி உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக  இருக்கும் இந்த சட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள்  தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வரவாய்ப்புள்ளதாக  கூறி இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வலுத்த போராட்டம் தற்போது மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், டெல்லி மாநிலத்திலும் தீவிரமடைந்துள்ளது. 3ம் நாளாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ரயில் நிலையம், ரயில்கள், பேருந்துகள் என பொது சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் மால்டா, உத்தர் தினாஜ்பூர், முர்ஷிதாபாத், ஹவுரா, வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 6 மாவட்டங்களின் சில பகுதிகளில் வதந்திகள் பரப்பப்படுவதையும், போலி செய்திகள் பரப்பப்படுவதையும் தடுக்கும் பொருட்டு, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று  வரும் நிலையில், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்களும் தொடர்ந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில்  ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த  சம்பவத்தில் 6 போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக  காயம் அடைந்தனர். மாணவர்கள் போராட்டத்தில் நடந்த  வன்முறை காரணமாக ஜாமியா பல்கலைக்கழகம் ஜன. 5ம் தேதி வரை மூடப்பட்டது. விடுதியில் இருந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு இன்று புறப்பட்டு  சென்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட  மாணவர்களை விடுவிக்கக் கோரி டெல்லி காவல் துறை தலைவர் அலுவலகம் முன்,  இன்று காலை நூற்றுக் கணக்கான மக்கள் குவிந்தனர். இதையடுத்து, கைது  செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று மாலை கொல்கத்தாவில் பேரணி நடத்துகிறார். அதேபோல், கேரளாவில் நேற்று மலப்புரம், கோழிக்கோடு கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கண்டன பேரணிகளும் நடத்தப்பட்டன. இன்று காலை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்பட இரு கட்சிகளின் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் நாளை ஆர்பாட்டம் நடத்துகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் போராட்டம் நடத்துகிறார். சேப்பாக்கத்தில் இன்று மாலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதைத் தவிர சென்னை, புதுவை, கோவை, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களும், மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். வடமாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.மைசூருவில் 144 உத்தரவு கர்நாடகா மாநிலம் மைசூரு, நகர காவல்துறை ஆணையர் கே.டி.பாலகிருஷ்ணா இன்று காலை பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மைசூரு டவுன்ஹால் பகுதியில் சிஆர்பிசியின் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்படுகிறது. டவுன்ஹால் அருகே குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு எதிரான போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இது, சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் இன்று மதியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
127,303
12/16/2019 3:04:08 PM
இந்தியா
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வன்முறை: டெல்லி சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்
புதுடெல்லி: குடியுரிமை சட்டத்துக்க எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை, வாகனங்கள் எரிப்பு சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 50 மாணவர்கள் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக காயம் அடைந்தனர். இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக ஜாமியா பல்கலைக்கழகம் ஜன. 5ம் தேதி வரை மூடப்பட்டதால் விடுதியில் இருந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு இன்று புறப்பட்டு சென்றனர். மேலும், அறிவிக்கப்பட்ட விடுமுறைக்குப் பின் தேர்வுகள் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி டெல்லி காவல் துறை தலைவர் அலுவலகம் முன், இன்று காலை நூற்றுக் கணக்கான மக்கள் குவிந்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர். டெல்லி வன்முறை சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துகளை தெரிவித்துள்னர். * காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘ஜாமியா பல்கலைக்கழக வளாக நூலகத்திற்குள் காவல்துறையினர் நுழைந்து மாணவர்கள்மீது, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தாக்கியது நியாயமா? டெல்லி எரிகிறது; அசாம், திரிபுரா, மேகாலயா எரிகிறது. வங்காளத்தில் வன்முறை பரவி வருகிறது; உள்துறை அமைச்சருக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல தைரியம் இல்லை; ஜப்பான் பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஜார்கண்டில் வாக்கெடுப்பு பிரசாரத்தில் மோடிஜி மகிழ்ச்சியாக இருக்கிறார். இவர்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதற்கு ஜாமியாவே சமீபத்திய உதாரணம்’’ என்றார். * காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில், ‘நாட்டில் அமைதியைக் காக்க வேண்டிய கடமையில் பாஜ அரசு தோல்வியுற்றது. அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவை தொடர்ந்து டெல்லியும் எரிகிறது. வடகிழக்கில் இருந்து அசாம், மேற்கு வங்கம் மற்றும் இப்போது டெல்லியில் சம்பவங்கள் நடக்கின்றன. தேசத்தில் அமைதியைக் காக்க வேண்டிய கடமையில் பாஜ அரசு தவறிவிட்டது. மத்திய அரசு இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று நாட்டில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. * சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘‘மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டிக்கிறோம். போலீஸ் நுழைந்தது சட்டவிரோதமானது. டெல்லியில் வன்முறை மற்றும் அதன் கையாளுதல் முறையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசின் கீழ் நேரடியாக வரும் டெல்லி காவல்துறையின் நடத்தை கேள்விக்குறியாக இருப்பதை நாங்கள் கண்டோம்’’ என்றார். * பாஜ-வின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா கூறுகையில், ‘‘டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் ஏன் தேவை என்பதைக் காட்டுகிறது’’ என்றார். * மத்திய நிதி மற்றும் வெளிவிவகார முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ​​கூறுகையில், “இது மோடி சர்க்காரின் 1974ம் ஆண்டு தருணம். ஆட்சியின் முடிவின் ஆரம்பம்” என்றார்.
127,304
12/16/2019 3:04:55 PM
தமிழகம்
தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும், கடலோர மாவட்டங்களில் 20,21ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. ஏறத்தாழ 4 மாதங்கள் பெய்ய வேண்டிய இந்த பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இந்த  ஆண்டு புயல்கள் ஏதும் வங்கக் கடலில் உருவாகவில்லை. இருப்பினும் தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்தம், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்தாலும் இந்த காலத்தில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவான 44 செ.மீட்டர் அளவுக்கு மழை தற்போது பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான  நீர்நிலைகள் நிரம்பியும் உள்ளன. இந்நிலையில், கேரளா, தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில இடங்களில்  லேசான மழை பெய்யும். வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வதை பொறுத்து மழையின் அளவு அமையும். மேலும் இந்த கனமழை பெய்வது எந்தெந்த பகுதிகளில் என்பது மேலடுக்கு சுழற்சியின் நகர்வை பொறுத்து தான் தெரியவரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காமராஜர் சாலை,  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று  காலை முதல் கனமழை பெய்தது. இதனால் ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவி வருவதால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
127,305
12/16/2019 3:05:47 PM
தமிழகம்
‘ரேப் இன் இந்தியா’ விவகாரம் ராகுல்காந்தி என்னதான் பேசினார்?....மாநில அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
புதுடெல்லி: ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என்ன பேசினார் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, அம்மாநில தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது கோடா மாவட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “இந்தியாவில் எல்லாவற்றையும் ‘மேக் இன் இந்தியா’ என்று பாஜ கட்சி சொல்கிறது. ஆனால் அது, மேக் இன் இந்தியா அல்ல; ரேப் இன் இந்தியா. பிரதமர் மோடி பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால், பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களிடமிருந்து தான் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது’’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி, மக்களவையில் ராகுல்காந்திக்கு எதிராக ஆவேசமாக பேசினர். அப்போது அவர், “வரலாற்றில் முதல் முறையாக ஒரு தலைவர் பேசுகிறார். இந்தியாவின் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட வேண்டும் என்று வெளிப்படையான அறைகூவல் விடுப்பதைப்போல அவரது பேச்சு இருக்கிறது. இதற்காக ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கைக்கு பாஜகவைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினர். இந்நிலையில், ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தின் ேபாது, ராகுல்காந்தி பேசிய வீடியோ, ஆடியோ பதிவு மற்றும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் ேதர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், ஜார்க்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
127,306
12/16/2019 3:09:57 PM
தமிழகம்
கல்பாக்கம் அணுமின் நிலைய சாலைகளில் நுழைய தடையை கண்டித்து மக்கள் முற்றுகை
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் பகுதியில் மக்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சாலையில் தற்போது அணுமின்நிலைய நிர்வாகம் தடுப்பு வேலியுடன் கூடிய நுழைவு வாயில் அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அதிவேக ஈணுலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தனித்தனியே இயங்கி வருகின்றன. இங்க பணிபுரியும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியில்தான் அரசு போக்குவரத்து துறை, கல்பாக்கம் காவல் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, வங்கிகள் உள்ளன. மேலும் சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம், மற்றும் அரசு மருத்துவமனைக்கு இந்த குடியிருப்பு வழியாகத்தான் செல்லவேண்டும்.சமீபத்தில் இந்த குடியிருப்பு பகுதியின் பல்வேறு இடங்களில் அணு மின்நிலைய நிர்வாகத்தினர் தடுப்பு வேலியுடன் கூடிய கேட் அமைத்தனர். இங்கு ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வரும் சாலையில் தடுப்பு கதவு அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த சில நாட்களுக்கு முன் பல்வே இடங்களில் தடுப்பு வேலி அமைத்து, அதன் நுழைவுவாயிலை அணுமின்நிலைய அதிகாரிகள் பூட்டிவிட்டனர். இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகளின் அடாவடி போக்கை கண்டித்து, இன்று காலை சதுரங்கபட்டினம் சாலையில் உள்ள நுழைவு வாயில் கேட், புதுப்பட்டினம் பஜார் வீதி நுழைவு கேட் ஆகியவற்றை மக்கள் பூட்டு போட்டு மூடிவிட்டு, 100-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அணுமின் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.மேலும் கல்பாக்கம் பணிமனை அரசு பேருந்துகள் வெளியூர் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. இதனால் கல்பாக்கம் பகுதியில் இன்று காலை 11 மணிவரை பெரும் பதட்டம் நிலவியது. அப்பகுதியில் கல்பாக்கம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், நாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்திய சாலைகளின் குறுக்கே தற்போது அணுமின்நிலைய அதிகாரிகள் தடுப்பு வேலி அமைத்து கேட் அமைத்துள்ளனர்.அதன் வழியே அணுமின்நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் மட்டுமே சென்றுவர அனுமதிக்கின்றனர். இதனால் கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தடுப்பு வேலியை உடனடியாக அகற்ற அணுமின்நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
127,307
12/16/2019 3:11:09 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கேரளாவில் முதல்வர் திடீர் போராட்டம்: நாளை முழு அடைப்புக்கு அழைப்பு
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று காலை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திடீர் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். இதற்கிடையே நாளை கேரளாவில் முழு அடைப்புக்கு வெல்பேர் கட்சி உள்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லியில் நேற்று இந்த போராட்டம் நடந்தது. பேரணியாக சென்ற ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் சரமாரியாக தாக்கினர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீசார் புகுந்து இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குலில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். அரசு பஸ்களும் தீவைத்து ெகாளுத்தப்பட்டன. டெல்லியை போல் கேரளாவிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் எதிரொலியாக நேற்று கேரளாவில் போராட்டங்கள் வெடித்தன. டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நேற்று நள்ளிரவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடத்தியது. இதையொட்டி கவர்னர் மாளிகை முன்பு போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அதையும் தாண்டி கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து உஷாரான போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யூவை சேர்ந்தவர்களும் கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்தினர். அவர்களும் தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.அவர்களையும் ேபாலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டி அடித்தனர். நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் நேற்று மலப்புரம், கோழிக்கோடு கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கண்டன பேரணிகளும் நடத்தப்பட்டன.இந்த நிலையில் இன்று காலை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி  கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்பட இரு கட்சிகளின் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நாளை முழு அடைப்புகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரளாவில் நாளை (17ம் தேதி) முழு அடைப்பு போராட்டத்துக்கு வெல்பேர் கட்சி உள்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக வெல்பேர் கட்சி மாநில தலைவர் ஹமீது வாணியம்பலம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை கேரளாவில் 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதில் எஸ்டிபிஐ, பிஎஸ்பி உள்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. நாளை காலை 6 முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு ேபாராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றார். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் அறிவித்து உள்ளன.கவர்னருக்கு கருப்புக்கொடிமணிப்பூர் மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா லட்சத்தீவு செல்வதற்காக இன்று காலை விமானம் மூலம் கொச்சி வந்தார். தொடர்ந்து ஆலுவா விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் திரண்டிருந்த ஏராளமான இளைஞர் காங்கிரசார் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றினர்
127,308
12/16/2019 3:11:56 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அதிருப்தி
புதுடெல்லி: குடியுரிமை திருத்திச் சட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, நடைபெறும் போராட்டத்தை கைவிட்டால் வழக்கை நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தயார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.  தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. 6 போலீஸ்காரர் உட்பட 35 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக, 50க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லி சிறுபான்மை ஆணையம், கல்காஜி காவல் நிலையத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.  அதில், காயமடைந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை விடுவியுங்கள்.  அல்லது உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக மதிப்புமிக்க மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லுங்கள்; இன்று மாலை 3 மணிக்குள் இணக்க அறிக்கை ஒன்றை பதிவு  செய்ய வேண்டும்  என்று, போலீஸ் அதிகாரிக்கு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  இதனை அடுத்து இன்று காலை 50 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  தென்கிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்ததால், டெல்லி மெட்ரோ ரயில்வே கழகம் நேற்று மாலை 13 மெட்ரோ நிலையங்களின் வாயில் கதவுகளை மூடியது.  இதனால் மெட்ரோ ரெயில் பயணிகள் பாதிப்பிற்கு ஆளாகினர். இன்று டெல்லி மெட்ரோ ரெயில்வே கழகம் ட்விட்டர் பதிவில், ‘அனைத்து மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன.  அனைத்து நிலையங்களிலும் வழக்கம்போல் மீண்டும் சேவை தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்து உள்ளது. இந்நிலையில், ெடல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. ெடல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. அதேநேரம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ,பாப்ேட தலைமையிலான அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அவர், ‘‘டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது. கண்டிக்கத்தக்கது. வன்முறையை போலீசார் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மருத்துவமனையில் 50க்கும் ேமற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விசயத்தில் விரிவான விசாரணை தேவைபடுகிறது. அமைதியான போராட்டம் நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளிக்கின்றது. எனவே, இவ்விவகாரம் ெதாடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார். தொடர்ந்து.  மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் கூறுகையில், ‘‘ஓய்வுபெற்ற  உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் ஜாமியா விவகாரம் குறித்து விசாரிக்க  வேண்டும்’’ என்றார். அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  எஸ்.எ.பாப்டே, ‘‘நாங்கள் வீடியோக்களைப் பார்க்க விரும்பவில்லை (வீடியோக்கள்  இருப்பதாக ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியபோது). வன்முறை மற்றும்  பொது சொத்துக்களை அழித்தல் தொடர்ந்தால், நாங்கள் உங்கள் கோரிக்கைகளை கேட்க  மாட்டோம்’’ என்றார். மேலும், எஸ்.ஏ.பாப்டே கூறுைகயில், ‘‘சட்ட ஒழுங்கு காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமைதி நிலவ வேண்டும். ெபாது சொத்துக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அரசியல் சாசனம் அனுமதிக்காது. ஆனால், அமைதியான போராட்டம் நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. தற்போது நடைபெற்றுள்ள சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. இவ்வழக்கை விசாரிப்பதற்கு முன், அங்கு அமைதி நிலவ வேண்டும். போராட்டங்கள், வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்யப்பட்டால், நாளையே இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முதலில் கலவரத்தை நிறுத்த விடுங்கள்;  நீங்கள் தெருக்களுக்கு செல்ல விரும்பினால், அதைச் செய்யுங்கள்; ஆனால் பின்னர் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம்’’ என்றார்.
127,309
12/16/2019 3:13:13 PM
இந்தியா
மேற்குவங்கத்தில் வன்முறை, குடியுரிமை சட்ட விளம்பரம் விவகாரம்: தலைமை செயலாளருக்கு ஆளுநர் சம்மன்
கொல்கத்தா: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது. இந்த குடியுரிமைத்திருத்த சட்டத்தின்படி, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்படமாட்டார்கள். இந்தியாவில் அவர்கள் குடியேறிய 5 ஆண்டுகளில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த சட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வரவாய்ப்புள்ளதாக கூறி இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வலுத்த போராட்டம் தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் தீவிரமடைந்துள்ளது. 3ம் நாளாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ரயில் நிலையம், ரயில்கள், பேருந்துகள் என பொது சொத்துகள்  தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் மால்டா, உத்தர் தினாஜ்பூர், முர்ஷிதாபாத், ஹவுரா, வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 6 மாவட்டங்களின் சில பகுதிகளில் வதந்திகள் பரப்பப்படுவதையும், போலி செய்திகள் பரப்பப்படுவதையும் தடுக்கும் பொருட்டு, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. கிழக்கு ரயில்வே மற்றும் வட கிழக்கு எல்லைப் பிரிவுகளில் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் பல ரயில்கள் முற்றுகை காரணமாக கால அட்டவணைக்கு பின்னால் ஓடுகின்றன. கரக்பூர் பிரிவில் நடந்த போராட்டத்தின் போது இதுவரை ரயில்வே சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.15.77 கோடிக்கு மேல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில், ‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வன்முறை போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதேநேரம், ‘குடியுரிமைச் சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்’ என்ற உத்தரவாதத்துடன் மேற்குவங்க மாநில அரசின் சார்பில், பத்திரிகை மற்றும் டிவி சேனல்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கும் அரசியலமைப்பு முறைக்கும் விரோதமானது என்ற புகார் எழுந்துள்ளதால், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் நேற்றிரவு மேற்குவங்க மாநில தலைமை செயலாளர் ராஜீவா சின்ஹா மற்றும் மாநில காவல் துறை தலைவர் வீரேந்திரா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளார். அதில், ‘குடியுரிமை சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். மேற்கு வங்காளத்தின் நிலைமை அரசியலமைப்பின் மதிப்புகளை மீறி உள்ளது. மாநிலத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நிலவும் சூழ்நிலை குறித்து திங்கட்கிழமை (இன்று) நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கொல்கத்தாவில் நிருபர்களிடம் ஆளுநர் ஜகதீப் தங்கர் கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக மாநில அரசு செய்துள்ள விளம்பரங்களை திரும்ப பெற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகியவை மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்று கூறும் விளம்பரங்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி திரும்பப் பெறுவார் என்று நம்புகிறேன். இவை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவர், பொது நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விதிமுறை உள்ளது. என்ஆர்சி, சிஏஏ இருக்காது என்று எப்படி அரசே விளம்பரம் செய்ய முடியும். எனக்கு மிகப் பெரிய கவலை என்னவென்றால், சமூகத்தின் ஒரு பிரிவில், குறிப்பாக மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் நதியாவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அரசாங்கம் உடனடியாக அதைக் கவனித்து மிக வேகமாக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் விளையாட்டோ அல்லது அரசியல் லாபங்களைத் தேடுவதற்கோ எந்த சந்தர்ப்பமும் இல்லை. அமைதியை நிலைநாட்ட மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார். மம்தா நள்ளிரவு ஆலோசனைேமற்கு வங்காளத்தில் 3வது நாள் வன்முறையால் சட்டம்ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்றிரவு அவசர கூட்டம் கொல்கத்தாவில் உள்ள காளிகட் இல்லத்தில் நடந்தது. உளவு தகவல்களின் அடிப்படையில் இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், போராட்டங்கள் காரணமாக சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், போலீஸ் படைகள் விரைந்து செயல்பட ேவண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வன்முறை மற்றும் ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடும் சமூக ஊடக குற்றவாளிகளை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது.
127,310
12/16/2019 3:14:04 PM
தமிழகம்
பிரபல கடையில் வாங்கிய பிரியாணியில் அட்டைபூச்சி: சாப்பிட்டவருக்கு வாந்தி, மயக்கம்
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டை ஜவான்மால் சவுகார்தெருவை சேர்ந்தவர்  சீனிவாசன் (30). இவர் வேன் டிரைவர்.  நேற்று மதியம் இவரும் நண்பர்கள் சுதாகர் (40), வினோத்குமார் (25) ஆகியோர் தண்டையார்பேட்டை  சேணியம்மன் கோயில் தெருவில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு சென்று 2  பிரியாணி பார்சல் வாங்கினர். இதன்பிறகு புதுவண்ணாரப்பேட்டை, இளையமுதலி தெருவில்  வேனை நிறுத்திவைத்துவிட்டு அனைவரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது ஒரு பார்சலில் அட்டைபூச்சி கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே பிரியாணியை சாப்பிட்ட சீனிவாசனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து புகார் கொடுக்க சீனிவாசனின் நண்பர்கள், புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்துக்கு சென்றனர். அவர்களிடம் விசாரித்த போலீசார், ‘’பிரியாணி கடை இருக்கும் இடம் தண்டையார்பேட்டை காவல்நிலைய எல்லையில் வருவதால் அங்கு புகார் கொடுங்கள்’ என்றனர். இதையடுத்து தண்டையார்பேட்டை காவல்நிலையத்துக்கு அவர்கள் சென்றபோது கடை எங்கள் எல்லையில் இல்லை. புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் புகார் கொடுக்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,311
12/16/2019 3:15:09 PM
தமிழகம்
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு மத்திய அரசை கண்டித்து 50,000 பேர் ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிரான்ட் ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசியதாவது: அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்தச்சட்டத்தின்மூலம் மத்திய பாஜ அரசு தகர்த்து சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. மத்திய அரசின் சிறுபான்மையினர் விரோத - தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து துணை நின்று வரும் தமிழின விரோத அதிமுக அரசை கண்டித்தும், மத்திய பாஜ அரசை கண்டித்தும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார்.எனவே, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில், மாவட்ட அவைத்தலைவர் ஜி.சுகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், நாகன், விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார்,  குமணன், ஞான சேகரன், சாலவாக்கம் குமார், சத்யசாய், தம்பு, சேகர், சரவணன், ஏழு மலை, கே.எஸ்.ராமச்சந்திரன், இளைஞரணி அப்துல் மாலிக், துணை அமைப்பாளர்கள் சோபன்குமார், யுவராஜ், மணி, பால்ராஜ், மாணவரணி அபுசாலி, துணை அமைப்பாளர்கள் ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், வித்தக வேந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
127,312
12/16/2019 3:16:12 PM
விளையாட்டு
ஹோப் - ஹெட்மயர் ஜோடியை பிரிக்க முடியாமல் தவிப்பு தோல்விக்கு காரணம் 2 பகுதி நேர பவுலர்கள்: அணி தேர்வில் கேப்டன் கோஹ்லி சொதப்பல்
சென்னை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸில் தோல்வி அடைந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க திணறினர். ஷெல்டன் காட்ரல் வீசிய முதல் 5 ஓவர்களில் 3 ஓவர்கள் மெய்டனாக வீசினார். அவரது பந்துவீச்சில் 7 வது ஓவரில் ராகுல் 6, கோஹ்லி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ரோஹித் சர்மா 36 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்தியா 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில்,  அடுத்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பண்ட் 71 ரன்கள் குவித்தனர். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்களை இந்தியா குவித்தது. காட்ரல் 2, கீமோ பால் 2, ஜோசப் 2, பொல்லார்டு 1 விக்கெட் வீழ்த்தினர். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான, மந்தமான சென்னை ஆடுகளத்தில், 288 ரன்கள் என்பது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் சுனில் ஆம்ப்ரிஸ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹோப் - ஹெட்மயர் 35 ஓவர்களையும் தாண்டி சீராக ரன் குவித்து வந்தது. இவர்களை பிரித்தால் தான் இந்தியாவுக்கு வெற்றி பெற வாய்ப்பு என்ற நிலையில் இந்தியா தவித்தது. அந்த மோசமான நிலைக்கு காரணம், இந்திய அணியின் அணித் தேர்வுதான்.கேப்டன் கோஹ்லி இந்தப் போட்டிக்கு ஷமி, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ஜடேஜா என நான்கு முழு நேர பந்துவீச்சாளர்களையும், கேதார் ஜாதவ், சிவம் துபே என இரண்டு பகுதி நேர பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்தார். ஆனால், 2 பகுதி நேர பந்துவீச்சாளர்களையும்தான், மேற்கண்ட ஹோப் - ஹெட்மயர் கூட்டணி விளாசித் தள்ளியது. ஹெட்மயர் 106 பந்துகளில் 139 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹோப் - நிக்கோலஸ் பூரன் ஜோடி மீண்டும் நிதான ஆட்டம் ஆடி விக்கெட் விழாமல், ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் போட்டியை 48வது ஓவர் வரை எடுத்துச் சென்று சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தனர். ஹோப் 102 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஒருநாள் தொடரில் 1 - 0 என பின்தங்கி உள்ளது. 2வது ஒரு நாள் போட்டி வருகிற 18ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 3வது மற்றும் இறுதிேபாட்டி வருகிற 22ம் தேதி ஒடிசாவின் கட்டாக்கில் நடக்கிறது.இந்திய மண்ணில் ஹெட்மயர்சென்னை போட்டியில் 139 ரன்கள் விளாசிய ஹெட்மயர், இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக சேஸிங் செய்த போது அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் இலங்கையின் தில்ஷன் (160, ராஜ்கோட், 2009), இங்கிலாந்தின் ஆண்டிரு ஸ்டிராஸ் (158, பெங்களூரு, 2011), இலங்கையின் சனத் ஜெயசூர்யா (151*, மும்பை, 1997), சந்தர்பால் (149, நாக்பூர், 2007) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
127,313
12/16/2019 3:17:06 PM
விளையாட்டு
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு 3 கால்பந்து வீரருக்கும் தலா 38 ஆண்டு சிறை: ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஸ்பெயின்: கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் வடக்கு ஸ்பெயினில் உள்ள அராண்டா டி டியூரோ நகரில் ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள் கார்லோஸ் குவாட்ராடோ (24), விக்டர் ரோட்ரிக்ஸ் (22), ரவுல் கால்வோ (19) ஆகியோர் ஒரு பிளாட்டில் தங்கியிருந்தனர். அப்போது, இவர்களது பிளாட் வழியாக சென்ற 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றனர். பின்னர், திடீரென மின் விளக்குகளை அணைத்துவிட்டு, துன்புறுத்தலுக்கிடையே மூவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அந்த சிறுமியை தங்களது பிளாட்டில் இருந்து வௌியேற்றிவிட்டனர். இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து கால்பந்தாட்ட வீரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் இருந்து பின்பு ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த ஸ்பானிஷ் நீதிமன்றம் 3 கால்பந்தாட்ட வீரர்களுக்கும் தலா 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 3 வீரர்கள் தாங்கள் அந்த சிறுமிைய பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்ேற நீதிமன்றத்தில் தெரிவித்தனர். முன்னதாக சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 வீரர்களும், ஸ்பானிஷின் மூன்றாம் பிரிவு அணியான அராண்டினா எஃப்சிக்காக விளையாடிய நிலையில், அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களுக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயினின் சட்டத்தின்படி அவர்கள் விளையாடும் அதிகபட்ச காலம் 20 ஆண்டுகள்தான். அதனால், அவர்களின் விளையாட்டு கேரியர் இத்தோடு முடிந்துவிட்டது.
127,314
12/16/2019 3:21:55 PM
தமிழகம்
திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் வழிப்பறி: வாகன ஓட்டிகள் அச்சம்
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் வழிப்பறி அதிகரித்துள்ளது. பூந்தமல்லி மற்றும் பெரும்புதுார் பகுதியில் இருந்து, திருவள்ளூருக்கு வரும் வாகனங்கள், கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர். பாலத்தின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை, திருவள்ளூர் நகராட்சி பராமரித்து வருகிறது. பாலத்தில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரியவில்லை. இதனால், பாலத்தில் வரும் வாகனங்கள், தங்களது வாகன முகப்பு விளக்கு ஒளியைப் பயன்படுத்தி கடக்க வேண்டியுள்ளது.கனரக வாகனங்கள் வரும்போது, அவற்றின் முகப்பு விளக்கு வெளிச்சத்தால், ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறுகின்றனர். மேலும், பாலத்தின் மேல் நடந்து செல்பவர்களும், மிதிவண்டியில் செல்பவர்களும், விபத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதோடு, இருளை பயன்படுத்தி நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களிலும் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
127,315
12/16/2019 3:23:09 PM
தமிழகம்
செங்கல்பட்டு நீதிமன்ற லோக் அதாலத்தில் 2370 வழக்குகள் தீர்வு: மாவட்ட நீதிபதிகள் பங்கேற்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் 2,370 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் வசூலித்த தொகையை பாதிக்கப்பட்டவர்களிடம் மாவட்ட நீதிபதி காசோலையாக வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மெகா லோக் அதாலத் நடைபெற்றது. இந்த நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், ஆலந்தூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம், பெரும்புதூர் ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகனம், வங்கி, குற்ற, குடும்பநல, இன்சூரன்ஸ் வழக்குகள் என 7,187 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2,370 வழக்குகள் மெகா லோக் அதாலத் மூலம் முடித்து வைக்கப்பட்டன. இவ்வழக்குகளில் ₹28.22 கோடி வசூலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் காசோலையாக மாவட்ட நீதிபதி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தநீலா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மாவட்ட கூடுதல் நீதிபதி ராமநாதன், முதன்மை குற்றவியல் நீதிபதி கபீர் உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த நீதிமன்ற நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.
127,316
12/16/2019 3:24:04 PM
தமிழகம்
போராட்டம் அறிவிப்பு எதிரொலி: 50 நாளுக்கு பின் குடிநீர் குழாய் சீரமைப்பு
திருவொற்றியூர்: போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் அறிவித்ததால் 50 நாளுக்கு பிறகு குடிநீர் குழாயை அதிகாரிகள் சீரமைத்துள்ளனர். சென்னை மாதவரம் ராஜாஜி தெரு அருகே மாதவரம் சாலையில் புழல் ஏரியில் இருந்து மணலி நீரேற்று நிலையத்திற்கு  செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து குடிநீர் வீணாகிக்கொண்டிருந்தது. இதுபற்றி மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கடந்த 50 நாளுக்கு மேலாக குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வாகனங்கள் செல்வதற்கு கடும் சிரமப்பட்டது. ைபக்கில் ெசல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்தனர். குடிநீர் பைப்பை சரிப்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் எச்சரித்தனர். இந்த நிலையில், மாதவரம் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம்  குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்தனர். ‘’ஓரிரு தினங்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனால் பொதுமக்களின் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
127,317
12/17/2019 4:35:27 PM
தமிழகம்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய பாஜ,அதிமுகவை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் போராட்டம்: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய பாஜக, அதிமுகவைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. தமிழகம்  முழுவதும் திமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அசாம், டெல்லி, மேற்கு வங்கம்,  ஐதராபாத், பீகார், உத்தரபிரதேசம், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளும்  போராட்ட களத்தில் குதித்துள்ளது. மாணவர்களும் ஈடுபட்டு வருவதால் போராட்டம் தீவிரமாகியுள்ளது.தமிழகத்தில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாவட்டம் முழுவதும் இன்று போராட்டம் நடந்தது.  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், காஞ்சிபுரம் தேரடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் சுகுமார், துணைச் செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை,  தசரதன், வசந்தமாலா, தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், நாகன், விஸ்வநாதன், நெசவாளர் அணி அன்பழகன், தொண்டர் அணி சுகுமாரன், பொதுக்குழு  உறுப்பினர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, ஒன்றிய, நகர செயலாளர்கள் பி.எம்.குமார், ராமச்சந்திரன்,  கண்ணன், தரன், ஞானசேகரன், டி.குமார், சேகர், சத்யசாய், குமணன், ஏழுமலை, தம்பு, சரவணன், மாநில வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்,ராமகிருஷ்ணன்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், துணை அமைப்பாளர்கள் யுவராஜ். பெ.மணி, டாக்டர் சோபன்குமார், எழிலரசன், மாவட்ட மாணவரணி  அமைப்பாளர் அபுசாலி, துணை அமைப்பாளர்கள் ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், நகர அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர்கள் கருணாநிதி ஜெகநாதன்,  கன்னியம்மாள் தேவராஜ், பொருளாளர் வெங்கடேசன் மற்றும் எஸ்கேபி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த ஆர்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை  தாங்கினார். மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் கண்டன உரையாற்றினார். பகுதிச் செயலாளர் எஸ்.மதன்மோகன் வரவேற்புறையாற்றினார்.சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு  எம்எல்ஏ தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்  நடந்தது.  இதில் கனிமொழி எம்பி சிறப்புரையாற்றினார். எம்எல்ஏக்கள் தாயகம் கவி,  ரங்கநாதன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவரம்  சுதர்சனம் தலைமை வகித்தார். கலாநிதி வீராசாமி எம்பி, ஆர்.டி.சேகர் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டு, மத்திய,  மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மருதுகணேஷ், யுவராஜ், நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டு ேகாஷம்  எழுப்பினர்.திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர்  ரயில் நிலையம் அருகில், மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர்  தலைமையில் இன்று  கண்டன  ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, நகர செயலாளர்  சி.சு.ரவிச்சந்திரன்   முன்னிலை வகித்தனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள்  சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிடபக்தன், நடுகுத்தகை ஜெ.ரமேஷ்,  க.பிரபு கஜேந்திரன்  மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள்,  அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி, வார்டு, வட்ட  செயலாளர்கள்  கலந்து கொண்டனர்.அதேபோல, திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி, திருச்சியில் கே.என்.நேரு, விழுப்புரத்தில் பொன்முடி, ஈரோட்டில் முத்துச்சாமி, கோவையில் கோபால், வேலூரில்  காந்தி, விருதுநகரில் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உள்பட மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடந்தது.
127,318
12/17/2019 4:36:08 PM
இந்தியா
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் திமுக தரப்பில் தாக்கல்
புதுடெல்லி: உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில், மேலும் ஒரு நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், ‘உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் முழுமையாக  செயல்படுத்தப்படவில்லை. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்தப்படவில்லை. இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை முறையாக  மேற்கொள்ளவில்லை. இடஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தாததால் தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தரப்பில் மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில், ‘2011ம் ஆண்டு மக்கள் தொகை  கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவ்வாறு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே,  மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமை செயலாளர், மறுவரையறை ஆணைய அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகள், புத்தாண்டு விடுமுறைகளுக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படும் என்று தெரிகிறது.
127,319
12/17/2019 4:36:39 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது
சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை  இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல் கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி  தலைவர் பதவிகளுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. 2வது கட்டமாக 158 ஊராட்சி  ஒன்றியங்களில் 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 4924 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 39  ஆயிரத்து 916 பதவிகளுக்கு 30ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி ேநற்று முடிந்தது. இந்நிலையில் பல ஊராட்சிகளில் ஊருக்கு கோயில் கட்டுதல், மண்டபம்  கட்டுவதற்கு லட்சக்கணக்கில் நிதி கொடுப்பவர்களுக்கு என்பதை முன்வைத்து உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டன. விருதுநகரில் நடைபெற்ற ஏலத்தை  தட்டிக் கேட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல்  அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு 2 லட்சத்துக்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணைய  அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும்  அலுவலர் முன்னிலையில் தொடங்கியது.வேட்பு மனு பரிசீலனையின்போது, வேட்பு மனு குறித்த ஆட்சேபனைகளை எழுத்து மூலமாகத்தான் தெரிவிக்க வேண்டும். மேலும் அவற்றை  உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிடும் நேரத்திற்கு முன் அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனுவை ஏற்றுக்  கொண்டது மற்றும் நிராகரிப்பது தொடர்பான காரணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத்து மூலமாக தெரிவிப்பார். 19ம் தேதி மாலை 3 மணி வரை  வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
127,320
12/17/2019 4:38:06 PM
இந்தியா
பலாத்கார வழக்கில் பாஜ எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு காப்பாற்ற முயன்ற உ.பி அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
லக்னோ: பலாத்கார வழக்கில் பாஜ எம்எல்ஏவை காப்பாற்ற முயன்ற உத்தரபிரதேச அரசுக்கு, பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பாஜக எம்எல்ஏவான குல்தீப்சிங் செங்கார், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இந்த வழக்கு  விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி  மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞரும் அவரது உறவுக்கார பெண்ணும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக விசாரித்த  உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். டெல்லி நீதிமன்றம் வழக்கை 45 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க  வேண்டும் என்றும் உத்தரவிட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று நேற்று  தீர்ப்பளித்தது. அப்போது குல்தீப் செங்கார் நீதிமன்ற வளாகத்தில் தனது சகோதரி முன்னிலையில் கண்ணீர்விட்டு கதறி அழுதார். போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு  செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பாலியல்  வன்கொடுமை வழக்கு தவிர இதர 4 வழக்குகளின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உன்னாவ் வழக்கில், பாஜ எம்எல்ஏ குல்தீப் செங்கார் பாலியல்  பலாத்கார குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எம்எல்ஏவை காப்பாற்ற, உத்தரபிரதேசத்தின் பாஜ அரசாங்கம், அதன் முழு இயந்திரத்தையும்  பயன்படுத்தியது. தீர்ப்பிற்கு பின், செங்காரை காப்பாற்ற முயன்ற உத்தரபிரதேச பாஜ தலைவர்களின் கூட்டு பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்வது அவர்களின்  தார்மீக கடமையாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
127,321
12/17/2019 4:38:29 PM
இந்தியா
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தென்கொரியா பயணம்
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தென்கொரியா நாட்டிற்கு சொந்த அலுவல் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் குடியுரிமை எதிர்ப்புச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக தென் கொரியாவுக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டார்.ஆனால், அவரது சகோதரியும் காங்கிரஸ் பொது  செயலாளருமான பிரியங்கா காந்தி, நேற்று டெல்லி ஜாமியா இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து இந்தியா கேட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டார். இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘ராகுல் காந்தி உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக தென் கொரியா  சென்றுள்ளார். அவர் திங்கள்கிழமை காலை டெல்லியில் இருந்து தென் கொரியாவுக்குப் புறப்பட்டார். ஆனால், அவர் எவ்வளவு நாள் கழித்து திரும்புவார் என்று  தெரியவில்லை’ என்று ெதரிவித்துள்ளது.
127,322
12/17/2019 4:38:58 PM
இந்தியா
நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகமாகிவிட்டது ஆபாச இணைய தளங்களை முடக்குங்கள் : பாஜ கூட்டணி முதல்வர் மோடிக்கு கடிதம்
பாட்னா: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு ஆபாச தளங்களை குற்றம் சாட்டி வரும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நேற்று பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதி, அதில் ஆன்லைனில் கிடைக்கும் அனைத்து ஆபாச தளங்கள் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களை தடை செய்யுமாறு வலியுறுத்தி  உள்ளார்.இதுகுறித்து, பாஜ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார வழக்குகள் வேதனையையும் தீவிர கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. தீவிரமான பிரச்னைக்கு உரிய கவனம்  செலுத்த வேண்டி உள்ளது. அனைத்து ஆபாச தளங்களையும் இணையத்தில் கிடைக்காத வகையில், பொருத்தமற்ற உள்ளடக்கத்தை தடை செய்ய தகுந்த  நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இணைய தளத்தில் ஆபாச, வன்முறை மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை வரம்பற்ற அளவில் பார்க்கின்றனர்.  இந்த தளங்களின் தாக்கத்தால் சில சந்தர்ப்பங்களில் (கும்பல் கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்) சம்பவங்கள் நடைபெறுகின்றன. பெண்களுக்கு  எதிரான கொடூரமான செயல்களின் (பாலியல் பலாத்கார) வீடியோக்களை உருவாக்கி அவற்றை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில்  பதிவேற்றுகிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதை கடுமையாக பாதிக்கும் இத்தகைய வீடியோக்கள், குற்றங்களுக்கான காரணிகளாக உள்ளன. இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இது சமூக பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம்  2000 (2008ல் திருத்தம் போன்றவை) சில விதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அவை சிக்கலைக் கையாள்வதில் திறம்பட நிரூபிக்கப்படவில்லை. இந்த விவகாரம்  தொடர்பாக உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனது பார்வையில், இதுபோன்ற வக்கிர வீடியோக்களை பேச்சு மற்றும்  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிக்க முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கு பயனுள்ள  நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. விரிவான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
127,323
12/17/2019 4:39:31 PM
தமிழகம்
வரும் 2020ம் ஆண்டுக்கான மின் வாரிய விடுமுறை நாட்கள்
சென்னை: வரும் 2020ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை, தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள்,  தொழிற்சங்கத்தினருக்கு தெரிவிக்கும். அந்தவகையில் வரும் 2020ம் ஆண்டுக்கான விடுமுறை குறித்த விவரம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி-1 புத்தாண்டு; ஜன. 15 ெபாங்கல்; ஜன.16 திருவள்ளுவர் தினம்; ஜன.17 உழவர் தினம்; ஜன.26 குடியரசு தினம்; மார்ச் 25 தெலுங்கு வருடப்பிறப்பு;  ஏப்.10 மகாவீர் ஜெயந்தி; ஏப். 10 புனித வெள்ளி; ஏப்.14 தமிழ் புத்தாண்டு; மே 1 மேதினம்; மே 25 ரம்ஜான்; ஆக.1 பக்ரீத்; ஆக. 11 கிருஷ்ண ஜெயந்தி; ஆக. 15  சுதந்திர தினம்; ஆக. 22 விநாயகர் சதுர்த்தி; ஆக.30 மொகரம்; அக்.2 காந்தி ஜெயந்தி; அக்.25 ஆயுத பூஜை; அக்.26 விஜயதசமி; அக்.30 மீலாது நபி; நவ. 14 தீபாவளி;  டிச. 25 கிறிஸ்துமஸ் ஆகிய நாட்கள் இடம்பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
127,324
12/17/2019 4:40:09 PM
இந்தியா
ஜாமியா பல்கலை அருகே வன்முறை குற்ற பின்னணி கொண்ட 10 பேர் கைது: மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததா?
புதுடெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே வன்முறையில் ஈடுபட்டதாக குற்றவியல் பின்னணி கொண்ட 10 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்து புதிய சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் அதனையொட்டி தென்கிழக்கு டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் புதிய குடியுரிமைத் திருத்தச்  சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் காவல்துறையினரிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த  வன்முறையில் ஏராளமான மாணவர்களும் போலீசாரும் காயமடைந்தனர். இதுகுறித்து, டெல்லியில் அரசு சஃப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவ  கண்காணிப்பாளர் கூறுகையில், ‘ஜாமியாவில் போராட்டம் நடத்திய இரண்டு மாணவர்கள் புல்லட் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார். ஆனால்,  துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லி ஜாமியா போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்களா? என்ற சர்ச்சை பெரிய அளவில் வெடித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய  இரண்டு மாணவர்களும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்த  சர்ச்சைக்கு டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட சிறு சிறு காயங்கள் என்று போலீசார் கூறினர். இந்நிலையில்  பல்கலைக்கழகத்திற்கு அருகே  வன்முறையில் ஈடுபட்டதாக குற்றவியல் பின்னணி கொண்ட 10 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். இதுகுறித்து, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எந்தவொரு மாணவரும் கைது செய்யப்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மாணவர்கள்  எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீசார் அங்கு சென்றதும் பல்கலைக்கழக வளாகம் ஞாயிற்றுக்கிழமை போர்க்களமாக மாறியது. இது, வன்முறை மற்றும்  தீ விபத்து சம்பவத்துக்கு வழிவகுத்தது. டிடிசி பேருந்துகள், 100 தனியார் வாகனங்கள் மற்றும் 10 போலீஸ் பைக்குகள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவம்  தொடர்பாக, பல்கலைக்கழக மாணவர்களின் பின்னணியில் குற்றவியல் சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்’  என்றார்.
127,325
12/17/2019 4:40:31 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி
சென்னை: மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் இயங்கும் புகார் மையம்  அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரக, உள்ளாட்சி தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். கட்டண மில்லா தொலைபேசி எண்கள்- 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074.
127,326
12/17/2019 4:41:02 PM
இந்தியா
காங்கிரஸ், என்சிபி மூத்த தலைவர்கள் நாற்காலியை விட தயாராக இல்லை: நாற்காலியை விட தயாராக இல்லை
மும்பை: கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், என்சிபி மூத்த தலைவர்கள், அமைச்சர் பதவிக்கான நாற்காலியை விட தயாராக இல்லை என்று, சிவசேனா கட்சி  பத்திரிகையில் அந்த கட்சிகளை சாடி எழுதப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, கடந்த நவ. 28ம் தேதி முதல்வராக 6 அமைச்சர்களுடன்  பதவியேற்றார். சிவசேனா,  என்சிபி மற்றும் காங்கிரசைச் சேர்ந்த தலா இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு, கடந்த 12ல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. மகாராஷ்டிரா  சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடருக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்ேற தெரிகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சீண்டும் வகையில் கட்டுரை  எழுதப்பட்டுள்ளது. அதில், எந்தவொரு நேரடி குறிப்பையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இரண்டு மூத்த காங்கிரஸ்காரர்கள் பிருத்விராஜ் சவான் மற்றும்  அசோக் சவான் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆகியோரை குறிப்பிடும் வகையில் உள்ளது. மேலும் ‘அரசுக்கு அல்லது நாட்டிற்கு சேவை செய்ய அரசாங்கத்தில் ஒரு சிறந்த அமைச்சரவை இருக்க வேண்டும். அது, அவர்களின் ஆன்மாவிலிருந்து வெளியே  வர வேண்டும். சிவசேனாவும் இளைஞர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மகாராஷ்டிராவின் அரசியலில் புதிய முகங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் பழைய மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு அமைச்சர் பதவிக்கான நாற்காலிகளை விட தயாராக இல்லை. மகாராஷ்டிரா அரசியலில் பெரிய மனிதர்கள்  வெளியே வர வேண்டும். முதல்வர் (தாக்கரே) தனக்காக அதிக அதிகாரத்தை வைத்திருக்கவில்லை. மாறாக ஒரு தாராள மனப்பான்மையுடன் இலாகாக்களை  ஒதுக்குவார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், அந்த பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.
127,327
12/17/2019 4:41:31 PM
தமிழகம்
மாவோயிஸ்ட் நடமாட்டம் எதிரொலி மலை கிராம வாக்குசாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கோவை: கோவை மாவட்ட மலை கிராமங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் காரணமாக அங்குள்ள வாக்குசாவடிகளில் உள்ளாட்சி தேர்தலின்போது துப்பாக்கி ஏந்திய  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  தேர்தலையொட்டி 18 பறக்கும் படை, 119 மண்டல கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. 12 ஒன்றியங்களில் உள்ள 228 ஊராட்சிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.  இதற்காக 1,520 ஓட்டுச்சாவடி அமைக்கப்படவுள்ளது. இதில் 80 இடத்தில் உள்ள 214 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம், காரமடை வட்டாரத்தில் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கே துப்பாக்கி  ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆனைக்கட்டி, தூமனூர், கோபநாரி, தோலம்பாளையம், பில்லூர் உள்ளிட்ட பகுதிகளில்  மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் மாவோயிஸ்ட் அமைப்பின் கொரில்லா படை பயிற்சியாளர் தீபக் சிக்கினார். இவருடன் வந்த 2 பேர்  தப்பினர். இவர்கள் ேகாவை வனத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களுடன் மேலும் சில மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருக்கலாம், இவர்கள் உள்ளாட்சி தேர்தலை சீர் குலைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வன கிராம ஓட்டுச்சாவடிகளை மாவோயிஸ்ட் கும்பல் கைப்பற்ற சாதகமான  நிலையிருப்பதாக நக்சல் தடுப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இந்த பகுதி ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும். பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். ஓட்டுப்பெட்டிகளை பலத்த பாதுகாப்பு உள்ள  இடத்தில் வைக்கவேண்டும் என நக்சல் தடுப்புப்பிரிவினர் தேர்தல் பிரிவினருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்  பாதுகாப்பு போடப்பட உள்ளது.
127,328
12/17/2019 4:41:59 PM
தமிழகம்
செம்மஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது: 7 பட்டா கத்தி பறிமுதல்
துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் கஞ்சாவிற்பனை செய்த 3 பேரை கைது செய்து பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர்.சென்னை  அடுத்த செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக அடையார் போலீஸ் துணை கமிஷனர் பகலவனுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து துணை கமிஷனர் தலைமையில் தனிப்படையினர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் தீவிர சோதனை  நடத்தினர். அப்போது ஆட்டோவில் கஞ்சா விற்றுகொண்டிருந்த கண்ணகி நகரை சேர்ந்த வீரமருது (எ) தினேஷ் (28), பெரும்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (25),  சந்தோஷ் (27) ஆகியோரை கைது செய்தனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும்  இளைஞர்களுக்கு ஆட்டோவில் சென்று விற்பனை செய்துவந்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் வீட்டில் வைத்திருந்த 7  பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு 3 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
127,329
12/17/2019 4:44:15 PM
குற்றம்
பைக் நிறுத்தும் பிரச்னையை விசாரிக்க சென்ற போது பெண் எஸ்ஐ முன்பு காவலருக்கு சரமாரி அடிஉதை
சென்னை: பைக் நிறுத்தும் பிரச்னையை விசாரிக்க சென்ற போது, பெண் உதவி ஆய்வாளர் முன்னிலையில் காவலருக்கு சரமாரி அடி உதை விழுந்தது. இந்த சம்பவம்  எம்ஜிஆர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை எம்ஜிஆர் நகர் அன்பானந்தம் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். முத்துக்குமாருக்கும் பக்கத்து  வீட்டில் வசிக்கும் சிவகாமி(25) என்ற பெண்ணுக்கும் பைக் நிறுத்துவதில் வெகு நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ேநற்று நள்ளிரவு 1 மணிக்கு  முத்துக்குமார் பைக் நிறுத்தும் இடத்தில் சிவகாமி தனது ஸ்கூட்டரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிவகாமிக்கும் முத்துக்குமாருக்கும் இடையே கடும்  வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது சிவகாமிக்கு ஆதரவாக அவரது உறவினர்களான சமுத்திரபாண்டி, ஜோதிநாதன், தமிழ்நிறைச்செல்வன் ஆகியோர் முத்துக்குமாரை கடுமையாக  தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துக்குமார் எம் ஜிஆர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இரவு ரோந்து பணியில் இருந்த உதவி  ஆய்வாளர் பூவரி மற்றும் ரோந்து வாகன ஓட்டுனர் காவலர் அகஸ்டின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில்  இருந்த தமிழ்நிறைச்செல்வன் மற்றும் சமுத்திரபாண்டி ஆகியோர் பெண் உதவி ஆய்வாளர் முன்னிலையில் காவலர் அகஸ்டினை கடுமையாக தாக்கினர், இதில்  நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது.இதையடுத்து காவலர் அகஸ்டின் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி குடிபோதையில் காவலரை தாக்கிய தமிழ்நிறைச்செல்வன் மற்றும்  சமுத்திரபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் எம்ஜிஆர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
127,330
12/17/2019 4:44:49 PM
இந்தியா
ஜாமியா பல்கலைக்கழக விவகாரம் காங்கிரஸ் கட்சி நிலைப்பாட்டில் மாற்றம்: சோனியா அறிக்கைக்கு நிர்மலா சீதாராமன் பதில்
புதுடெல்லி: ‘பிரதமர் மோடி அரசாங்கம், தனது சொந்த மக்கள் மீது போரை அறிவித்துள்ளது’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட ஓர் அறிக்கைக்கு  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளார். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் ஒடுக்குமுறை குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாஜ அரசு தனது சொந்த  மக்கள் மீது போரை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அதனை நிறைவேற்றுகின்றனர் என்று, காங்கிரஸ்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை நிராகரித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் வடிக்கிறது. 1984ல் சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின்போது கும்பல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு  தண்டனை வழங்க காங்கிரஸ் என்ன செய்துள்ளது? சோனியா காந்தி மாணவர்களுக்காக முதலை கண்ணீர் சிந்துகிறார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்,  கடந்த 2003ல் வங்கதேச சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதில் தாராளமாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால்,  தற்போது காங்கிரஸ் தலைவரும் அவரது கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்களா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். ஒரு பொறுப்பான  எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது, டெல்லியில்  உள்ள ஒரு மத்திய பல்கலைக்கழக  மாணவர்கள் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டது  குறித்து காங்கிரஸ் கருத்து கூற வேண்டும். சோனியா காந்தி கூறிய கருத்துகள் பொறுப்பற்றவையாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.
127,331
12/17/2019 4:45:19 PM
தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இனரீதியான பிரிவினை ஏற்படுத்த பாஜ முயல்கிறது : தயாநிதி மாறன் கண்டனம்
சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் மூலம் மக்களிடையே இனரீதியான பிரிவினையை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முயல்வதாக மத்திய சென்னை நாடாளுமன்ற  உறுப்பினர் தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்தார்.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்து சிறுபான்மையினர், ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர்க்கு துரோகம் இழைத்த பாஜக, அதிமுக அரசை கண்டித்து  சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலை  வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், சண்முகம், கு.க.செல்வம் எம்.எல்.ஏ, பகுதிச் செயலாளர் மதன் மோகன், மா.பா.அன்புதுரை,  வட்ட செயலாளர் மாரி, வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின்போது பாஜகவின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்த அதிமுகவை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய  சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது:மத்தியில் உள்ள பாஜக அரசு சிறுபான்மை இன மக்களை பிரிக்க பார்க்கிறது, அது நிறைவேறாது. சிறுபான்மையின மக்களை பிரிக்க விடமாட்டோம்.  இஸ்லாமியர்களை பயமுறுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பாஜக அரசு பிரிக்கப்பார்க்கிறது. மக்களவையில் பாஜக தனி  மெஜாரிட்டியுடன் இருந்ததால், குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் 11 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம்  நிறைவேறி இருக்காது. ஆனால் அதிமுகவில் உள்ள 12 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அன்புமணி ராமதாஸ் எம்பியும்  ஓட்டுபோட்டுள்ளார். இதுதான் அவர்களின் தோழமை கூட்டணி தர்மம் என்று சொல்கிறார்கள், இது எந்த வகையில் நியாயம். தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள். இந்தி பேசும் மக்களின் வாக்கு வங்கிக்காக இந்தியாவை கூறுபோடாதீர்கள். திமுக தலைவர் ஸ்டாலின் சிறுபான்மையின  மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பார். இவ்வாறு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார்.
127,332
12/17/2019 4:45:51 PM
தமிழகம்
தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பிரமுகர் சாவு
புழல்: தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட அதிர்ச்சியினால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த அதிமுக பிரமுகர் உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், புழல், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் 30ம் தேதி உள்ளாட்சி  தேர்தல் நடக்கிறது. சோழவரம் ஒன்றிய அதிமுக  சிறுபான்மைப்பிரிவு செயலாளர் ராஜேந்திரன் (59) தனது மகள் வழக்கறிஞர் பேபியுடன்,  புதிய எருமைவெட்டி  பாளையம் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ேவட்பு மனு தாக்கல் செய்ய மாலை 3 மணிக்கு வந்தார்.அப்போது அங்கிருந்த  அதிமுக கூட்டணி கட்சியினர்,  11வது வார்டு தமாகாவை சேர்ந்த லலிதாவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். இதனால்  ராஜேந்திரனும் அவரது மகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு அங்குள்ள ஜெராக்ஸ் கடையில் சான்றிதழ்களை  ராஜேந்திரன் ஜெராக்ஸ் எடுத்தபோது  திடீரென ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். உடனடியாக அவரை பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக  இறந்தார்.
127,333
12/17/2019 4:46:21 PM
குற்றம்
வியாசர்பாடியில் பயங்கரம் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை
பெரம்பூர்: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொடூரமாக கொல்லப்பட்டது வியாசர்பாடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் சவுந்தர் (37) இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி பலாத்தா கருத்து வேறுபாடு காரணமாக  சண்டைபோட்டுவிட்டு கடந்த 9 மாதத்துக்கு முன் 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இதன்பிறகு சவுந்தர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுவது, அங்குள்ள கடைகளில் வேலை செய்வது  உள்ளிட்ட வேலை செய்தார்.இன்று காலை கணேசபுரம், அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் சவுந்தர் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். அவரது உடல் அருகில் கடப்பா  கல் கிடந்ததால் கல்லால் தலை நசுக்கி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து சவுந்தரின் உடலை எஸ்ஐ புருஷோத்தமன் மற்றும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். சம்பவம் நடந்துள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் போலீசார்  ஆய்வு செய்து வருகின்றனர். குடிபோதை தகராறில் சவுந்தர் கொல்லப்பட்டாரா, வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
127,334
12/17/2019 4:46:45 PM
குற்றம்
கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் கணவன் மீது மனைவி புகார்
தண்டையார்பேட்டை: கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் என்று கணவன் மீது மனைவி புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ராகுல்கான் (34). இவர் தனியார்  நிறுவன ஊழியர். இவரது மனைவி பேகம் (30). தம்பதி இடையே கருத்துவேறுபாடு  காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கணவனை தீர்த்துக்கட்ட கூலிப்படையின் உதவியை நாடினார் பேகம். இதையடுத்து ராகுல்கானை  கூலிப்படையினர் கொல்ல முயன்றபோது கும்பலிடம் இருந்து தப்பிவிட்டார். அந்த சமயத்தில் ராகுல்கானின் நண்பருக்கு கையில் வெட்டு விழுந்தது. இதுபற்றி ராகுல்கான் ெகாடுத்த  புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து பேகத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சில  நாட்களுக்கு முன்பு பேகம் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்தநிலையில் நேற்று வழக்கு சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்வதற்காக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு பேகம்  வந்தபோது அங்கு ராகுல் கானும் வந்திருந்தார். இதனால் அவர்களிடையே மீண்டும் கடும்வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வடக்கு கடற்கரை போலீசில் பேகம் கொடுத்த புகாரில், “தன்னை கொலை செய்து விடுவதாக கணவன் மிரட்டுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.  இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக  விசாரித்து வருகின்றனர்.
127,335
12/17/2019 4:47:15 PM
தமிழகம்
ஆம்பூரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நாக தோஷம் நீக்கும் நாகநாத சுவாமி: பிரம்மன் வழிபட்ட தலம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சுயம்புவாக உருவாகி நாகநாத சுவாமி என்ற திருநாமத்தோடு அருள்பாலித்து வருகிறார் ஈசன். கிருஷ்ணதேவராயர்  காலத்தில் அவரது பண்ணையில் இருந்த ஒரு பசு அடிக்கடி இப்பகுதிக்கு வந்து அங்குள்ள ஒரு புற்றில் பால் சொறிந்தது. அன்றாடம் பால் வழங்க இந்த பசு  தனியாக வந்து செல்வதை கண்ணுற்ற காவலாளி இதுபற்றி அரசருக்கு தெரிவித்தார். ஏதோ ஒரு சிறப்பின்றி அந்த இடத்தில் பசு பால் சொறியாது என்பதை  அறிந்த அரசன், ஆர்வத்துடன் அந்த இடத்தில் உள்ள புற்றை அகற்ற உத்தரவிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆயுதம் பட்டதில் லிங்கத்தின் மேற்பாகம்  சற்று சேதமாகி அதில் இருந்து ரத்தம் வழிய தொடங்கி உள்ளது. இதை கண்ட அரசன் உள்ளிட்டோர் அங்கிருந்து அதிர்ச்சியுடன் சென்றனர். அரசனின் கனவில்  சிவபெருமான் தோன்றி அந்த இடத்தில், தான் நாகநாதராக விளங்குவதாகவும், ஆலயம் அமைத்து வழிபடவும் உத்தரவிட்டார். பாலாற்றங்கரையின் கிழக்கே அமைந்துள்ள சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நேர்கோட்டில்  அமைந்துள்ள தலமாகும்.  பிரம்மன் அடிமுடி காண ஏற்பட்ட சாபத்தை நீக்க 7 பிறவிகளில் 7தலங்கள் தரிசிக்க வேண்டியதாயிற்று. ஆம்பூர் நாகநாத சுவாமி  கோயில் இதில் 6வது தலமாக விளங்குகிறது. துவாபர யுகத்தில் தோன்றிய இந்த சுயம்பு லிங்கம் பிரம்மனால் பூஜிக்கபட்டு, சாப நிவர்த்தி வழங்கிய தலம். தரை மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி கீழே அமைந்துள்ள இந்த கோயில் 3 நிலை ராஜகோபுரங்களை கொண்டது.  பக்தர்களை வரவேற்கும் விதமாக விநாயக  பெருமான் அருள்பாலிக்கிறார். கோயிலின் அக்னி மூலையில் உலகில் எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில் நவகிரகங்கள் அமைந்து பக்தர்களுக்கு அருள்  பாலிக்கின்றனர். குறிப்பாக சனி பகவான் வலதுபுறம் காக வாகனத்தை கொண்டு காட்சியளிப்பார். ஆனால், இங்கு சனிபகவான் திருநள்ளாற்றை நோக்கி இடபாகமாக காக  வாகனத்தை கொண்டு சிவபக்தர்களுக்கு அருள் செய்கிறார். ஆலயத்தின் எமபாகத்தில் திருவண்ணாமலையில் பிரம்மன் வாங்கிய சாபத்தின் காரணமாக விமோசனம் பெற மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் சன்னதி  அமைந்துள்ளது. அம்மனாக திகழும் சமயவல்லி தாயாரின் சன்னதி மூலவரான நாகநாதரின் சன்னதியை விட சற்று உயரத்தில் அமைந்திருப்பது சிறப்பு.  சிறந்த  நாக தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்த கோயில் நந்தி பச்சை கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தி துவாரத்தில் இருந்து மூலவரான நாகநாதரை தரிசிக்க   இடையில் நவ துவார ஜன்னல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மூலவரை தரிசிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி  செய்யப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாக தோஷ நிர்வர்த்தி தலமான காளஹஸ்தி போன்ற இந்த அமைப்பு இந்த கோயிலில் அமைந்துள்ளது. கோயிலின் தென்மேற்கில் சப்த கன்னியர், 63  நாயன்மார்கள் சன்னதி அமைந்துள்ளன. கோயிலின் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி, நித்ய கணபதி, வள்ளி, தேவசேனா சமேத முருகன் சன்னதி,  ராதாகிருஷ்ணர் சன்னதி, விஷ்ணு துர்க்கை சன்னதி, சபரிமலை ஐயப்பன் சன்னதி, அஸிதாங்க பைரவர் சன்னதி, கண்ணப்பர் சன்னதி, ஆறுமுகம் சன்னதி, பழனி  முருகன் சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன. தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம், சூரசம்ஹார பெருவிழா, அன்னாபிஷேகம், விநாயக சதுர்த்தி ஆகியவை மிக சிறப்பாக  கொண்டாடப்படுகின்றன. பங்குனி மாதத்தில் கிருத்திகை துவங்கி உத்திரம் நட்சத்திரம் வரை பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதமிருந்து நாகநாதரை தரிசிக்க அனைத்து வகையான நாக மற்றும் நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாவதுடன், திருமணமான  பெண்களுக்கு குழந்தைபேறு, திருமண தடை, வியாபார விருத்தி, மன அமைதி தரும் தலமாக இத்தலம் விளங்குகிறது.
127,336
12/17/2019 4:47:45 PM
குற்றம்
பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது
பல்லாவரம்: பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பல்லாவரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக பல்லாவரம் காவல் ஆய்வாளர் இளங்கோவனுக்கு ஏராளமான புகார்கள்  சென்றது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி, கடந்த ஒரு வாரத்தில் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.நேற்று காலை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் அருகே போலீசார் சோதனை நடத்தி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தேனியை சேர்ந்த கல்லூரி  மாணவர் பிரவீண்குமார்(22), மதுரையை சேர்ந்த முகமது அன்சார்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல்  செய்தனர். பின்னர் இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
127,337
12/17/2019 4:48:09 PM
குற்றம்
அண்ணாநகரில் பரபரப்பு பெண்ைண தாக்கி செயின் பறிப்பு
அண்ணாநகர்: அண்ணாநகரில் பெண்ணை தாக்கி செயினை பறித்துதப்பிய நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் லட்சுமி(40). இவர்  அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர், நேற்றிரவு அண்ணாநகர் 2வது தெரு வழியாக  கடைக்கு நடந்துசென்றார். அப்போது பைக்கில் வந்த நபர் திடீரென லட்சுமியை மறித்து அவர் அணிந்திருந்த 8 பவுன்  செயினை பறித்தான். ஆனால் செயினை விடாமல் லட்சுமி போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள், லட்சுமியை சரமாரி தாக்கி அவரது செயினை பறித்து தப்பினர்.இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின்படி, அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம  நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று விசாரிக்கின்றனர்.அமைந்தகரை, அரும்பாக்கம், நொளம்பூர், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அண்ணா நகர், வில்லிவாக்கம், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் தனியாக நடந்துசெல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறி நடக்கிறது. எனவே, போலீசார் ரோந்து தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
127,338
12/17/2019 4:48:37 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் 16,672 பேர் மனு தாக்கல்
திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிந்தது. 4,725 பதவிகளுக்கு 16,672 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 14 ஒன்றியங்களுக்குட்பட்டு  4,725 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, பாஜ, தமாகா உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள்  வேட்புமனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காலை 9.30 மணி முதலே ஏராளமான வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய  ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்தனர். ஏராளமான  சுயேட்சை வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில்  கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. காலையிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர்.  பிற்பகலில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. முதல் நாளில் 179 வேட்பாளரும், 2வது நாள் 123 வேட்பாளரும், 3வது நாள் 1,134 வேட்பாளரும், 4வது நாள் 945 வேட்பாளரும், 5வது நாள் 4,743 வேட்பாளரும், 6வது  நாள் 2,440 வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இறுதி நாளான நேற்று 6,908 வேட்பாளர்கள் மனுதாக்கல்  செய்துள்ளனர். 24 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 168 வேட்பாளர்கள், 230 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 1,582 வேட்பாளர்கள், 526 ஊராட்சி தலைவர் பதவிக்கு 2,937 வேட்பாளர்கள்,  3,945 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,982 வேட்பாளர்கள் என மொத்தம் 4,725 பதவிகளுக்கு 16,672 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் வரும் 19ம் தேதி பிற்பகல் 3 மணியாகும். அன்றிரவு  வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சின்னங்கள்  ஒதுக்கப்பட்டுவிட்டது. சுயேட்சைகளுக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.தேர்தல் கமிஷன் புது உத்தரவுஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் என 4 பதவிகளுக்கு, தலா 30 வகையான  சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி, மாநிலக்கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர், அதற்கான படிவம் ‘ஏ’ மற்றும் ‘பி’ ஆகியவற்றை சமர்ப்பித்தால்,  கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும். சுயேட்சை வேட்பாளர் தலா 3 சின்னங்கள் கேட்டிருப்பர். ஒருவர் கேட்ட சின்னத்தை மற்றவர் கேட்கவில்லை எனில்,  முதலாவதாக கேட்ட சின்னம் ஒதுக்கப்படும். மற்றவர் கேட்டிருந்தால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். 3 சின்னங்களும், குலுக்கல் முறையில்  கிடைக்கவில்லை எனில், கட்சிகளின் பிற வேட்பாளளுக்கு ஒதுக்கிய பிறகு, எஞ்சியுள்ள சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படும்.கட்சி சார்பற்ற ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, தலா 30 சின்னங்களை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது.  குறிப்பிட்ட சின்னத்தை கேட்க முடியாது. வரும், 19ம் தேதி மாலை வாபஸ் நேரம் முடிந்து, போட்டியிட தகுதியான வேட்பாளர்களின் இறுதி பட்டியல் (படிவம்-9 )  ‘அகர’ வரிசைப்படி தயாரித்து வெளியிடப்படும். அகர வரிசையில் எழுதிய வேட்பாளர் பெயரை, சீட்டில் எழுதி குலுக்கல் நடத்துவர். முதலில் வரும்  வேட்பாளருக்கு, வரிசையில், முதலாவதாக உள்ள சின்னம் ஒதுக்கப்படும். அடுத்த சீட்டில் வரும் வேட்பாளருக்கு, 2வது சின்னம் ஒதுக்கப்படும் என உள்ளாட்சி  தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
127,339
12/17/2019 4:49:03 PM
தமிழகம்
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கவுன்சிலர் வார்டுகளுக்கு போட்டியிட அனைத்து கட்சியினர் வேட்பு மனு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 26 வார்டுகளுக்கும், 3 மாவட்ட கவுன்சிலர் வார்டுகளுக்கும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக, இந்திய  கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜ, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 127 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் 1 வார்டுக்கு திமுக சார்பில், தேவி முனுசாமியும், அதிமுக சார்பில் ரோஜா ரமேஷ்குமார் 2வது வார்டுக்கு சுயேச்சை  வேட்பாளர்களான ஜெ.ரவக்கிளி, சந்தானம், அதிமுக சார்பில் சுுரேஷ், 3வது வார்டிற்கு திமுக சார்பில் சுஜன்யா மோகன்பாபு, அதிமுக சார்பில் ஆரோக்கியமேரி,  4வது வார்டில் திமுக சார்பில் மாலதி குணசேகர், அதிமுக சார்பில் சங்கீதா சரவணன் போட்டியிடுகின்றனர்.5வது வார்டில் திமுக சார்பில் கே.கதிரவன், தேமுதிக சார்பில் சோனியா பாபு, 6 வது வார்டில் , திமுக சார்பில் சந்திரசேகர், அதிமுக சார்பில் மதன்குமார்,  தேமுதிக சார்பில் ரமேஷ் 7 வது வார்டில் திமுக சார்பில், சித்ரா காளத்தி, பாமக சார்பில் சர்க்கரை ரெட்டி, சுயேச்சை வேட்பாளர் உஷா ரவி போட்டியிடுகின்றனர்.  8 வது வார்டில் பாஜக சார்பில் வி.சரவணன்,  திமுக சார்பில் ஜெயராமன், 9 வது வார்டில் திமுக சார்பில் கவுரி ஹரிதாஸ், அதிமுக சார்பில் மனோன்மணி  தீனதயாளன் களத்தில் உள்ளனர்.10வது வார்டில் திமுக சார்பில் சரவணன் உதவி தேர்தல் அலுவலர் உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 11 வது வார்டில்  அதிமுக சார்பில், செல்வம், காங்கிரஸ் சார்பில் ரவிக்குமார், 12வது வார்டில்  நர்மதா நாகராஜ், பாமக சார்பில் மணிமேகலை கேசவன், 13 வது வார்டில்  , திமுக  சார்பில் பிரபாகர், அதிமுக சார்பில் ஏ.கே.சுரேஷ், சுயேச்சை வேட்பாளர் மகிமைதாஸ், 14 வது வார்டில் , திமுக சார்பில் பரத்குமார், அதிமுக சார்பில்   கே.எம்.எஸ்.சிவக்குமார், 15 வது வார்டில் வீரபத்ரன், அதிமுக சார்பில் தியாகராயம், 16 வது வார்டிற்கு திமுக சார்பில் கே.சிவா, அதிமுக சார்பில் கோபி  போட்டியிடுகின்றனர். 17 வது வார்டில் , திமுக சார்பில் வனிதா இளங்கோ, அதிமுக சார்பில் சுமதி உலகநாதன்,18வது வார்டுக்கு திமுக சார்பில் பாசம் அன்பு, அதிமுக சார்பில் ஷியாமளா தன்ராஜ், 19வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவிக்குமார்,  திமுக வேட்பாளர் ராஜேஷ், பாமக சார்பில் ரவி,  20வது வார்டில் திமுக வேட்பாளர் மணிகண்டன் களம் காணுகின்றனர்.21வது வார்டில் அதிமுக வேட்பாளர் லட்சுமி சிவையா, காங்கிரஸ் வேட்பாளர் மதன்மோகன், சுயேட்சை வேட்பாளர் ஜெயலட்சுமி மணி, 22 வது வார்டில் திமுக  சார்பில் இ.ஜோதி, அதிமுக சார்பில் எஸ்.டி.வீரன்,23 வது வார்டில் அதிமுக சார்பில் நாகராஜ், 24வது வார்டில் திமுக சார்பில் தனலட்சுமி, அதிமுக சார்பில் தேவி  சங்கர், 25வது வார்டில் திமுக சார்பில் ஜெயந்தி  கஜா, அதிமுக சார்பில் பொற்செல்வி தயாளன், 26வது வார்டில் , திமுக சார்பில் இந்திரா திருமலை, அதிமுக  சார்பில் மஞ்சுளா ஜெயராமன், தேமுதிக சார்பில் ராஜலட்சுமி சத்தியநாராயணா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் 8வது வார்டிற்கு அதிமுக சார்பில் ஏரோநாடிக்கல் பொறியாளர் பிரியா காட்வின், திமுக சார்பில் சாரதம்மா முத்துசாமி, 9வது  வார்டில் திமுக வேட்பாளர் ராமஜெயம், பாமக வேட்பாளர் எம்.செல்வராஜ், காங்கிரஸ் வேட்பாளர் ஷோபா செந்தில்குமார், 12வது வார்டில் திமுக வேட்பாளர்  உமா மகேஷ்வரி, அதிமுக வேட்பாளர் பிரபாவதி முரளி,  வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 104 பேரும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 127 பேரும்  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 15 பேரும் போட்டியிடுகின்றனர்.
127,340
12/17/2019 4:49:26 PM
தமிழகம்
வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடத்தப்படும். இதன்படி  இந்தாண்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி அலங்காரம் செய்யப்பட்ட சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர்  யாகசாலை பூஜை நடத்தப்பட்டு மூலவருக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு பிற்பகல் மலைக்கோயிலில் உள்ள வேதகிரீஸ்வரருக்கு சங்காபிஷேகம்  செய்யப்பட்டது. விழாவில் திருக்கழுக்குன்றம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
127,341
12/17/2019 4:49:52 PM
தமிழகம்
ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுராந்தகத்தில் இன்று கடையடைப்பு
மதுராந்தகம்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து மதுராந்தகம் நகரில் இன்று கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காஞ்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட வணிகர்கள் சங்கம் சார்பில் காஞ்சி மண்டல தலைவர் எம்.அமல்ராஜ் தலைமையில் இன்று கடையடைப்பு மற்றும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் செயலாளர் அப்துல்சமத், பொருளாளர் ஹீராலால், மாவட்ட இணை செயலாளர் பவித்ரா சீனிவாசன் மற்றும்  நிர்வாகிகள் ராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ஜே.பிரபாகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் ஜி.பிரபாகரன், எஸ்.மகேஸ்வரன்,  ஏ.வெள்ளைச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக மதுராந்தகம் பகுதியில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டது.  மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வணிகர்கள், குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
127,342
12/17/2019 4:58:10 PM
தமிழகம்
கல்குவாரி வேண்டாம் என சப்-கலெக்டர் காலில் விழுந்து கதறிய முதியவர்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பழவேறி கிராமத்தில் உள்ள மலையடிவார பகுதியில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி கல்குவாரி தொடங்கப்பட்டது. இதை அறிந்த கிராம  மக்கள், கல்குவாரி பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், உண்ணாவிரத போராட்டம், கிராம சபை புறக்கணிப்பு என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தவிர, கல்குவாரி அமைந்தால் ஏற்படும் பாதிப்புகள்  குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு அலுவலர்களுக்கு விளக்கி கூறி, ‘புதிய குவாரிக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினர்.இந்நிலையில் கடந்த 14ம் தேதி கல்குவாரியில் மீண்டும் மணல் எடுக்கும் பணி நடந்தது. இதை அறிந்த மக்கள், கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பயனில்லை.  இதையடுத்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், வீடுகளை காலி செய்துவிட்டு கடந்த 2 நாட்களாக சுடுகாட்டில் தஞ்சமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன்  சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ஒரு பெரியவர், ‘எங்கள் கிராமத்தில் கல்குவாரி அமைக்க கூடாது’ என்று சப்-கலெக்டர் காலில் விழுந்து  கதறினார். ‘கல்குவாரிக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டத்தை தொடர்வோம்’ என்று கிராம மக்களும் கூறினர்.இதையடுத்து, கல்குவாரிக்கான இடத்தினையும் கிராமத்தையும் சப்-கலெக்டர் பார்வையிட்டு தற்காலிகமாக கல்குவாரியினை நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தார்.  இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
127,343
12/17/2019 4:58:31 PM
தமிழகம்
ஏரியில் மூழ்கி முதியவர் சாவு
ஆவடி: ஆவடி அருகே விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் கடற்பாலை இலை பறித்தபோது முதியவர் உயிரிழந்தார். ஆவடி பாரதிதாசன் நகர், பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி (65). இவர் ஆவடியில் உள்ள பூக்கடையில் பணியாற்றினார். நேற்று  முன்தினம் பூமாலை கட்டுவதற்கு தேவையான கடற்பாலை இலையை பறிப்பதற்காக விளிஞ்சியம்பக்கம் ஏரிக்கு சென்றார். அங்கு  இலையை பறித்தபோது  ஏரியில் மூழ்கி தண்ணீரில் தத்தளித்தார். இதனிடையே அய்யாசாமியை உறவினர்கள் தேடியபோது ஏரியில் அவரது சடலம் மிதந்தது. இதுபற்றிய புகாரின்  அடிப்படையில், இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
127,344
12/17/2019 4:58:52 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் போலீசாருக்கு 12 கட்டளை தேர்தல் கமிஷன் உத்தரவு
திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தல் அன்று செய்ய வேண்டியது பற்றி போலீசாருக்கு 12 கட்டளைகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. உத்தரவில் கூறியுள்ளதாவது:பணி  ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவிற்கு 20 மணி  நேரத்திற்கு முன்னர் ஆஜரில் இருக்க வேண்டும். வாக்குச் சாவடியில் எல்லா   ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மின் விளக்கு  வசதி செய்யப்பட்டு, வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுக்கள் உட்பட மற்ற   பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரத்தில்  வாக்குச் சாவடியை பாதுகாக்க வேண்டும்.வாக்குச்சாவடியை சுற்றி  சின்னங்கள், கொடிகள் இருந்தால் அகற்ற வேண்டும். ஆண், பெண் வாக்காளர்களை  தனித்தனியே வரிசைப்படுத்த வேண்டும்.  வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்  சாவடிக்குள் ஒழுங்கை பாதுகாக்க உதவ வேண்டும்.சட்டம்- ஒழுங்கு பிரச்னை  ஏற்பட்டால் எந்த மொபைல் குழு, அதிரடிக்குழு, போலீஸ் நிலையத்துக்கு தகவல் தர  வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க  வேண்டும். வாக்குப்பதிவு முடிந்து  வாக்கு பெட்டிகளை உரிய பாதுகாப்புடன் எடுத்துச்செல்லும் வரை வாக்குச்சாவடி  பணியில் காவல் இருக்க வேண்டும்.  வாக்குச்சாவடி முன் கூட்டம் கூட அனுமதிக்க  கூடாது. வரிசையில் உள்ள வாக்காளர்களை எந்த கட்சியினரும் சென்று வாக்கு  கேட்க அனுமதிக்க கூடாது.  பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் நடுநிலையுடன்  செயல்படுவதை, மற்றவர்கள் உணரும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும்  நடவடிக்கைகள்  அமைய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,345
12/17/2019 4:59:18 PM
தமிழகம்
குடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக எம்பியிடம் தொலைபேசியில் பேசியது யார்?: முதல்வர் விளக்கமளிக்க திமுக வலியுறுத்தல்
சென்னை: “குடியுரிமை மசோதாவை ஆதரித்து மாநிலங்களவையில் அதிமுக வாக்களிக்க  வேண்டும் என்று, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் ஒருவர்  எஸ்.ஆர்.பி.யிடம் பேசியது, முதல்வரின் உத்தரவிற்குக்  கட்டுப்பட்டா? அல்லது நேரடியாக மத்திய பாஜக அரசின் கட்டளையை ஏற்றா?  என்பதை நாட்டு  மக்களுக்கு முதல்வர் விளக்கிட  வேண்டும்” என்று திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:மூத்த அரசியல்வாதியும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், “குடியுரிமை மசோதா குறித்து அதிமுக அலுவலகத்தில்  விவாதித்துக் கொண்டிருந்த போது, தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த மசோதாவை  மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாக” தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகம்,  எப்படி அரசியல் மயமாகியுள்ளது என்பதற்கும், அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிப் பணியில் எப்படி தங்களது தரத்தைத் தாழ்த்திக் கொண்டு ஈடுபடுகிறார்கள்  என்பதற்கும், இந்த நிகழ்வும் ஒரு உதாரணம். ஒரு மசோதாவில் வாக்களிப்பது அல்லது எதிர்த்து வாக்களிப்பது என்பது, அதிமுக தலைமை எடுக்க வேண்டிய  கொள்கை முடிவு. அதை அதிமுக தனது கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, ஒருவர் மூலம் தெரிவிக்கலாமே தவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள  துணைச் செயலாளர் ஒருவர் மூலம் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் போன்ற அனுபவமிக்க மாநிலங்களவை உறுப்பினரிடமே இப்படித் தெரிவித்திருப்பது, மிகுந்த  வேதனை தருகிறது. மாநிலங்களவை உறுப்பினருக்கே உத்தரவிடும் அதிகாரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அந்தத் துணைச் செயலாளருக்குக்  கொடுக்கப்பட்டதா? அல்லது, நேரடியாக மத்திய பாஜக அரசில் இருந்து வந்த நிர்பந்தத்தால் தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர், இப்படியொரு  உத்தரவைப் பிறப்பித்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ஆகவே, அரசியல் பணிகளுக்காக, குறிப்பாக, அதிமுகவின் கட்சிப் பணிக்காக தலைமைச் செயலகம் பயன்படுவதும், அங்குள்ள அதிகாரிகள் அதிமுக  மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அரசியல் உத்தரவு போடுவது போன்ற கட்சிப் பணிகளில் ஈடுபடுவதும் கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை தமிழக தலைமைச் செயலாளர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்தக்  குறிப்பிட்ட துணைச் செயலாளர், முதலமைச்சரின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு எஸ்.ஆர்.பியிடம் பேசினாரா அல்லது நேரடியாக மத்திய பாஜக அரசின்  கட்டளையை ஏற்று அப்படிப் பேசினாரா என்பதை நாட்டு மக்களுக்கு முதல்வர் விளக்கிட வேண்டும்.
127,346
12/17/2019 4:59:49 PM
தமிழகம்
திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தி பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பிரித்திவிநகர் பகுதியை சேர்ந்தவர் மந்திரகுமார் (39). இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் சரியான வரன் அமையவில்லை.  இதனால் விரக்தியில் இருந்த அவர், கடந்த 12ம் தேதி இரவு நெற்பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். மயங்கிக் கிடந்த அவரை உடனடியாக  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மந்திரகுமார் பரிதாபமாக இறந்தார்.மற்றொரு சம்பவம்: கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (27). இவர், கடந்த 9ம் தேதி கும்மிடிப்பூண்டி சென்றுவிட்டு வீட்டுக்கு  அங்குள்ள அரசு மகளிர் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வேகமாக வந்த பைக் தினேஷ் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட தினேஷ் தலையில் பலத்த  காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,347
12/17/2019 5:00:15 PM
தமிழகம்
இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய கருத்து மாநில மகளிர் ஆணையத்தில் வருத்தம் தெரிவித்த பாக்யராஜ்
சென்னை: கருத்துக்களை பதிவு செய் என்ற திரைப்படத்தின் இசை வௌியீட்டு விழாவில் நடிகர் பாக்யராஜ் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக  அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை தொடர்ந்து, அவரின் இந்த பேச்சை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு மாநில மகளிர்  ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணைய தலைவர் வாசி ரெட்டி பத்மா கடிதம் எழுதினார்.இதைதொடர்ந்து கடந்த டிச.2ம் தேதி நடிகர் பாக்யராஜ் நேரில் ஆஜராக தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அன்றைய தினம்  படப்பிடிப்பு இருந்த காரணத்தால் பாக்யராஜ் வழக்கறிஞர் சுரேஷ் காலஅவகாசம் கோரியிருந்தார். அதன்பேரில் அவர் டிசம்பர் 16ம் தேதி ஆஜராக ஆணையம்  சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில், நேற்று காலை 11.45 மணியளவில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர்  ஆணையத்தில் நடிகர் பாக்யராஜ் ஆஜரானார். அவரிடம் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமையிலான குழுவினர் சுமார் 1.45 மணி நேரத்திற்கு  மேலாக விசாரணை நடத்தினார். அப்போது, நடிகர் பாக்யராஜ் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த விசாரணைக்கு பிறகு நடிகர் பாக்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கருத்துக்களை பதிவு செய் என்கிற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய  பேச்சு, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக சிலர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். நான் பெண்களுக்கு ஆதரவாக தான் படம் எடுத்து வருகிறேன். எந்த விதத்திலும் பெண்களை காயப்படுத்தி நான் படம் எடுத்ததில்லை. அன்றைய விழாவில்  பெண்கள் பாதுகாப்பு கருதியும், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். நான்  பேசிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி பண்ண முடியாத அளவுக்கு சங்கடமாக இருக்கும். எனவே, அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தான்  பேசினேன். நான், ஆண்களும் தவறு செய்கிறார்கள். அவர்களும் காரணம், நீங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றேன். ஆனால், நீங்கள் (பெண்கள்)  மட்டுமே தான் காரணம் என்று நான் பேசியதாக கூறியதால் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மனதில் காயம் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான்  வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நான் பேசியது யாரையும் குறிப்பிட்டு இல்லை. என்மீதான விசாரணை இன்றோடு முடிந்து விட்டது.இவ்வாறு கூறினார்.
127,348
12/17/2019 5:00:43 PM
குற்றம்
கூடுவாஞ்சேரி அருகே துணிகரம் தலைமை ஆசிரியர் வீட்டில் 20 பவுன், 50,000 கொள்ளை
கூடுவாஞ்சேரி: சென்னை அருகே கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பிருந்தாவன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் இன்பென்டா பெர்னான்டோ (46). இவர் நந்திவரம் அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவருக்கு  2 மகள்கள் உள்ளனர்.கடந்த 13ம் தேதி இரவு  சொந்த ஊரான திருநெல்வேலிக்கு  குடும்பத்துடன் சென்றுவிட்டு பின்னர், நேற்று இரவு அனைவரும் வீடு திரும்பினர்.  அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த  அவர்கள் உள்ளே  சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ₹50 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது.இதுகுறித்து இன்பென்டா  பெர்னான்டோ கொடுத்துள்ள புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து  கதவு, பீரோவில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.
127,349
12/17/2019 5:01:11 PM
தமிழகம்
எரிபொருள் செலவுக்காக 72 ஆயிரம் போலீசாருக்கு மாதம் 370: தமிழக அரசு உத்தரவு
சென்னை:  தமிழகத்தில் பணியாற்றும் 72 ஆயிரம் போலீசாருக்கு ஒவ்வொரு மாதமும் எரிபொருள் செலவுக்காக ₹370 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு  பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் போலீசார் உள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உணவுப் படி வழங்கப்படுகிறது. கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான  படி, உடைகள் பராமரித்தல் படி வழங்கப்படுகிறது. அதில் சென்னையில் உள்ள போலீசாருக்கு மட்டுமே உணவுப் படி வழங்கப்படுகிறது. மாவட்டங்களில்  பணியாற்றும் போலீசாருக்கு போக்குவரத்து படி வழங்கப்படுகிறது.இந்தநிலையில் தமிழகத்தில் பணியாற்றும் 74 ஆயிரத்து 355 காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.க்களுக்கு வாகனங்களை இயக்குவதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு  மாதத்திற்கு தலா ₹365.75 வீதம் வழங்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை தமிழக அரசு  பரிசீலித்து வந்தது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்தில் பணியாற்றும் ₹72 ஆயிரம் காவலர்களுக்கு ₹370 வீதம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.இது குறித்து உள்துறை மற்றும் நிதித்துறையில் இருந்து அனுமதி பெறப்பட்ட பிறகு, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘இரண்டாம்  நிலை காவலர்கள் முதல் சிறப்பு எஸ்.ஐ.க்கள் வரை பணியாற்றும் 72 ஆயிரம் காவலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ₹370 வழங்கப்படும். இதற்காக  ஒவ்வொரு மாதமும் ₹30 கோடி செலவாகும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமல்படுத்தப்படும் என்று டிஜிபி திரிபாதி  அறிவித்துள்ளார்.
127,350
12/17/2019 5:01:43 PM
குற்றம்
திருமுல்லைவாயலில் பரபரப்பு வங்கி ஊழியரை தாக்கி பணம் பறிப்பு : 5 பேர் கும்பலுக்கு வலை
ஆவடி: ஆவடி, திருமுல்லைவாயல் முருகப்பா காலனியை சேர்ந்தவர் கிரண் (30). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து  வருகிறார். இவர், நேற்றிரவு வேலை முடிந்ததும், வழக்கம் போல பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, கிறிஸ்துமஸ் செலவுக்காக வங்கியில் முன்பணமாக  வாங்கியிருந்த ரூ.5 ஆயிரத்துடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சரஸ்வதி நகர் மெயின் ரோடு வழியாக இரவு 10.30 மணியளவில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கும்பல், திடீரென கிரணிடம் தகராறு செய்தனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்து, அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை  பறித்து கொண்டு தப்பினர். புகாரின் பேரில், திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தம் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
127,351
12/17/2019 5:02:14 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல் சுவாரஸ்யங்கள்
ஏலம் என்பது சகஜமப்பா:அமைச்சர்திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘உள்ளாட்சி தேர்தலில்  கூட்டணியில் குழப்பம் இருக்கத்தான் செய்யும். உள்ளாட்சித் தேர்தலில் ஒரே கட்சியில் கூட 2, 3 பேர் இருக்கத்தான் செய்வார்கள். கூட்டணி கட்சிகளாக  இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் ஒருமித்த கருத்து இருக்காது. காலத்திற்கு ஏற்றாற்போல் தக்காளி, வெங்காயம் விலை உயரத்தான் செய்யும். அதன்பின்பு  சரியாகிவிடும். தேர்தலில் பதவி ஏலம் என்பது காலம், காலமாக நடப்பது தான். தேர்தல் வந்தால் அடிதடி சண்டைகள் நடக்கிறது. தேர்தல் நேரத்தில் கொலைகள்  நடப்பது ஏனென்றால், ஏற்கனவே இருக்கும் வன்மங்களை தேர்தலில் தீர்த்து விடுவார்கள்’’என்றார்.அதிமுக வேட்பாளர் கறி விருந்தில்குளவி கொட்டி 10 பேர் படுகாயம்பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அமரபூண்டி ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவர் பதவி மற்றும் ஒன்றியக்குழு  உறுப்பினர் பதவிக்கு கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுகவை சேர்ந்த சிலர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு,  தங்களது தோட்டங்களில் உடன் வந்தவர்களுக்கு ‘கமகம கறி விருந்து’ வைத்துள்ளனர்.அப்போது தோட்டத்தில் உள்ள குளவிகள் கலைந்து விருந்தில் கலந்து கொண்டவர்களை விரட்டி விரட்டி கொட்டின. இதில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர்  ஆட்டோ மூலமாக பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 8 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.சில்லறை காசுகளுடன் வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது.  வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கருப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மூர்த்தி,  தனது வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகை ரூ.300ஐ சில்லறை காசுகளாக ஒரு தட்டில் கொண்டு வந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கினார்.இதை எதிர்பார்க்காத அதிகாரி, காசுகளை வாங்க மறுத்தார். ஆனால், வேட்பாளர் மூர்த்தி தன்னிடம் வேறு பணம் இல்லை என கூறியதையடுத்து,  வேறுவழியின்றி சில்லறை காசுகளை அதிகாரி வாங்கிக் கொண்டார். அதிமுக மாஜி எம்எல்ஏ தொண்டர்கள் மோதல்உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி யூனியன் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. அப்போது  அதிமுக தலைமைக்கழகம் சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உசிலம்பட்டி தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்  சுதாகரன், ஆதரவாளர்களுடன் காலை யூனியன் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.மதியம் ஆண்டிபட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தவசி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, தனது மனைவி மஞ்சுளாவை தலைமைக்கழகம் வேட்பாளராக  அறிவித்துள்ளதாக கூறி தனது ஆதரவாளர்களுடன் மனுத்தாக்கல் செய்ய வந்தார். இதைக் கண்ட சுதாகரன் ஆதரவாளர்கள், ‘‘எல்லாம் முடிந்த பிறகு,  வேண்டுமென்றே வந்து ஏன் தகராறு செய்கிறாய்’’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பு உண்டானது.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யாத கிராமம்சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கார் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில், முதலாவது வார்டுக்கு  உட்பட்ட சுஜில்குட்டை கிராமம் அடர்ந்த வனப்பகுதியில், பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள குடும்பத்தினர் அணையில்  மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்துவரும் இவர்களுக்கு, இதுவரை வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.  இதனால் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. இக்கிராமம் அமைந்துள்ள பகுதி  பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்பதால், இக்கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. 4 நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் வீட்டு மனைப்பட்டா  வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் 1-வது வார்டு உறுப்பினர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வேட்பு மனுதாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை  இந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. உசுப்பேற்றிய நண்பர்கள் வேடிக்கை பார்க்க வந்தவரின் மனைவி வேட்புமனு தாக்கல்ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் தேவராஜ் (35). இவர் பழமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு  உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் நேற்று தனது  ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். அப்போது அங்கு வந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர், பழமங்கலம் ஊராட்சியில் நீங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தால் எளிதில்  வெற்றி பெறலாம் என கூறி அவரை உசுப்பேற்றினர்.இதனால் மனம் மாறிய தேவராஜ் மதியம் பழமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பொது பிரிவில் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அவரது  மனைவி ரேவதியை தேர்தலில் நிற்க வைக்க முடிவு செய்தார். உடனடியாக மனு தாக்கல்் செய்ய அதே இடத்தில் ஆவணங்களை சேகரித்தார். தொடர்ந்து தனது  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி ரேவதியை உடனடியாக மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். பரபரப்பான  நிலையில் இறுதி கட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 நிமிடங்கள் இருக்கையில் ஆவணங்களுடன் வேட்பாளர் ரேவதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
127,352
12/17/2019 5:02:37 PM
தமிழகம்
கலெக்டர் ஆபீசில் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம்: வேறொருவரின் பெயரில் நிலத்தை மாற்றி எழுதிய சர்வேயர், கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகளுடன் கூலி  தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக  வந்திருந்தனர். இந்நிலையில் செஞ்சி அருகே மேல்அருங்குணத்தை சேர்ந்த சுப்ரமணி(56), சகோதரிகள் தேவி, சின்னா ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தின்  நுழைவுவாயிலுக்கு வந்தனர். திடீரென்று தான் வைத்திருந்த மண்ணெண்யை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த  போலீசார் கேனை பிடிங்கி அவர்களை காப்பாற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுடைய பூர்வீகசொத்தான 1 ஏக்கர் 81 சென்ட் இடத்தை தந்தை கோபால் அனுபவித்து வந்தார். அவர் இறந்த பிறகு அந்த  நிலத்தை நான் பயன்படுத்தி வருகிறேன். இதனிடையே கிராமநிர்வாக அலுவலர், சர்வேயர் தவறாக உட்பிரிவு செய்து வேறொருவர் பெயரில் சேர்த்து விட்டனர்.  இதுகுறித்து கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்கின்றனர். மேலும், திண்டிவனம் சப்- கலெக்டர் அலுவலகம், மேல்மலையனூர் தாலுகா  அலுவலகத்தில பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து நாங்கள் அனுபவித்து வந்த நிலத்தை  மீட்டுத்தர வேண்டும் என்றனர்.தொடர்ந்து தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்திய போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
127,353
12/17/2019 5:03:05 PM
குற்றம்
2 கிலோ தங்கம் கடத்திய எஸ்ஐ, இளம்பெண் கைது: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் துபாயில் இருந்து 2 கிலோ தங்கம் கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இளம்பெண் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக துபாய், குவைத், பக்ரைன் உட்பட  பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த விமான நிலையங்களில் சுங்க இலாகா மற்றும் வருவாய்  புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு பலரும் தங்கத்தை கடத்தி  வருகின்றனர்.திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் மட்டும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த மே வரை 8 மாதங்களில் 680 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தங்கம் கடத்தலுக்கு திருவனந்தபுரம் விமான நிலைய  சுங்க இலாகா கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனே உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட  அவரை சிபிஐ சமீபத்தில் கைது செய்தது.இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று திருவனந்தபுரம் வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் அடிரடி சோதனை நடத்தினர். ஆனால் யாரிடமும் தங்கம் சிக்கவில்லை.  இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்தினர். இதில் ஒரு இருக்கையின் அடியில் 2 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த இருக்கையில் பயணம் செய்தது திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஒரு  இளம்பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளம்பெண்ணை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தங்கத்தை கடத்தியது உறுதி  செய்யப்பட்டது.மேலும் அந்த இளம்பெண்ணுடன் வஞ்சியூர் சப்-இன்ஸ்பெக்டரும் பயணம் செய்துள்ளார். அவருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு உள்ளதால் அதிகாரிகள்  அவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டரே தங்கம் கடத்தலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
127,354
12/17/2019 5:03:35 PM
தமிழகம்
திருமணமான 3 நாளில் இளம்பெண் காதலனுடன் விஷம் குடிப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கோவில்பட்டி: திருமணமான 3 நாளில் இளம்பெண் காதலனுடன் சேர்ந்து விஷம் குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த பிறவிபட்டியைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் மனோஜ் பாண்டியன் (19). அங்குள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் 2ம்  ஆண்டு படித்து வருகிறார். சாத்தூர் அருகே கோட்டூர் அடுத்த காலபெருமாள்பட்டியை சேர்ந்த முருகன் மகள் ரஞ்சிதா (19), விருதுநகரில் இயங்கும் தனியார்  கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவந்ததும் ரஞ்சிதாவை கண்டித்து  பெற்றோர், கடந்த 13ம் தேதி உறவுக்காரரான ரமேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.இதனால் அதிர்ச்சியில் இருந்து வந்த காதலர்கள் இருவரும், ஊரில் இருந்து புறப்பட்டு நேற்று கோவில்பட்டி வந்தனர். பின்னர் அருகேயுள்ள மந்தித்தோப்பு  கிராமத்தில் உள்ள மலையடிவாரத்திற்கு சென்ற இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த கிராம மக்கள் அளித்த தகவலை அடுத்து  கோவில்பட்டி மேற்கு  போலீசார், இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுவியை அடுத்து மேல்  சிகிச்சைக்காக மனோஜ் பாண்டியன் தூத்த்குக்குடி அரசு மருத்துவமனையிலும், ரஞ்சிதா நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
127,355
12/17/2019 5:03:56 PM
தமிழகம்
‘குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு’ முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகல்
கடையநல்லூர்: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற ஆதரித்து அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததை கண்டித்து கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது  அக்கட்சியிலிருந்து இருந்து விலகினார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் நயினா முகமது. இவர் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுகவில் கடையநல்லூர் சட்டமன்ற  உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து முதலில் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு  செயலாளராக பதவி வகித்தார். தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது முகநூல் பக்கத்தில் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரிடம் தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘அதிமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய மதவாத அரசின் ஊதுகுழலாக செயல்படுவதாகவும், மேலும்  சமீபத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல்  செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அந்த சட்டத்தை நிறைவேற்ற அதிமுக எம்பிக்கள் ஆதரித்து வாக்களித்ததை கண்டித்து அதிமுகவிலிருந்து  விலகுகிறேன்’ என்று கூறினார்.
127,356
12/17/2019 5:04:20 PM
தமிழகம்
மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை பட்டில் ஆண்டாள்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவில்லிபுத்தூர்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை அணிந்து ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத பிறப்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் நேற்று இரவு 8.30 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்காக ஆண்டாளுக்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள திருப்பாவை  பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆண்டாள் காட்சி அளித்தார்.இந்த மார்கழி மாத பூஜையை முன்னிட்டு ஆண்டாளை தரிசனம் செய்ய திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான  பக்தர்கள் வந்திருந்தனர்.ரங்கம்  108 திவ்ய தேசங்களில் முதலிடம் பெற்றுள்ளதும், தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ரங்கம் ரங்கநாதர் கோயில்.   திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ராமர் பூஜித்த பெருமை கொண்டது ரங்கம்.மார்கழி மாதத்தில் திருப்பாவையை ஆண்டாள் அருளியதாக வரலாறு கூறுகிறது. அதை போற்றும்  வகையில் மார்கழி மாதம் 30 நாட்களும் ரங்கம்  ரங்கநாதர்கோயில்  கண்ணாடி அறையில்  திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தின்படியும் பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் பல்வேறு அலங்காரங்கள்  செய்யப்படுகிறது.அதன்படி இன்று மார்கழி  மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் முதல் பாசுரமான மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப, நந்தகோபாலன் குமரன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதை  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.30 நாட்களும் இந்த அலங்காரம் நடைபெறும்.
127,357
12/17/2019 5:04:50 PM
தமிழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மதுரையில் எங்கு சிலை வைக்கலாம்?: அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மதுரையில் எங்கு சிலை வைக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை  உத்தரவிட்டுள்ளது.மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:- தமிழ் மொழிக்காகவும், தமிழினத்துக்காகவும் தன்  வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. தமிழகத்தில் கடந்த 1969ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 5 முறை  முதல்வராக பதவி வகித்துள்ளார். கிட்டதட்ட 6,863 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார். தமிழகத்தில் அதிகப்படியான காலம் முதல்வர் பதவியில்  இருந்துள்ளார். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்.திமுகவின் தலைவராக மட்டுமின்றி, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்கும் வழிகாட்டினார். தனது 94வது வயதில் கடந்த 7.8.2018ல் மறைந்தார். அரசியல்  மட்டுமின்றி இலக்கியத்திலும் திறம்பட பணியாற்றினார். ‘தென்பாண்டி சிங்கம்’ நூலிற்காக அவருக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டது. அவருக்கு புகழ்  சேர்க்கும் வகையில், மதுரையில் அவருக்கு திமுக சார்பில் சிலை அமைக்க முடிவு செய்து, கடந்த 3.9.2018ல் அனுமதி ேகாரி மதுரை கலெக்டரிடம் மனு  அளித்தோம்.இந்த மனு மதுரை மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டரை பலமுறை நேரில் சந்தித்து  வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அனுமதியும் வழங்கவில்லை. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை வைக்க மட்டும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மதுரை அழகர்கோவில் சாலையில் தமுக்கம் மைதானம் அருகிலோ, ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பிலோ, கே.கே.நகர்-அண்ணாநகர் சந்திப்பு பகுதியிலோ  கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கடந்தாண்டு செப்.3ம் தேதியும், கடந்த டிச.6ம் தேதி அளித்த மனுவில், மதுரை-சிவகங்கை  சாலையில் கே.கே.நகர் பால்பண்ணை சந்திப்பிலோ, மதுரை பழங்காநத்தம்-திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை ரவுண்டானா சந்திப்பிலோ அமைக்க அனுமதி  கோரியுள்ளோம். எனவே எங்கள் மனுவை பரிசீலித்து, மேற்கண்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் சிலை அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்யவும், அனுமதி  வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல் வீராகதிரவன், வக்கீல்கள் பழனிச்சாமி, லிங்கதுரை ஆகியோர்  ஆஜராகி,‘‘நாங்கள் மனு அளித்து கடந்த 15 மாதங்களுக்கும் மேலாகி விட்டது. இந்த மனுக்களை நிலுவையில் வைத்துக்கொண்டு, பரிசீலனையில் உள்ளதாக  கண் துடைப்பாக மாநகராட்சி கமிஷனர் ெதரிவித்துள்ளார். எனவே, இடத்தை தேர்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்’’ என்றனர்.அரசுத் தரப்பில் வக்கீல் பத்மாவதிதேவி ஆஜராகி,‘‘ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதனால், அங்கு சிலை வைக்க  சாத்தியமில்லை. மற்ற பகுதி குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, கால அவகாசம் ேவண்டும்’’ என்றார்.இதையடுத்து நீதிபதி, எந்தப் பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து அரசு தரப்பில் முடிவு செய்து பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை  ஜன.2க்கு தள்ளி வைத்தார்.
127,358
12/17/2019 5:05:14 PM
தமிழகம்
கோவை சூலூர் பள்ளி விவகாரம் 2 மாணவர்கள் அதிரடி கைது பெற்றோர் மீதும் வழக்குபதிவு
கோவை: கோவை அடுத்த சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் தங்களுக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் பாலியல்  தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, சூலூர் போலீசார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில்  வழக்குப்பதிவு செய்தனர். இதைக்கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் போராட்டத்தில்  குதித்தனர்.இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை எம்.பி. நடராஜனும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், பள்ளியின் பொறுப்பு  முதல்வர் நாகேந்திரன், சூலூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர், ‘‘சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக பள்ளியில்  இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களது பெற்றோரின் தூண்டுதலின்பேரில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து முதல்வருக்கு மிரட்டல்  விடுத்து, அவரை பணிசெய்யவிடாமல் தடுத்துள்ளனர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.இதன்பேரில் 2 மாணவர்கள், அவர்களது பெற்றோர் மீது பணிசெய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2  மாணவர்களை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
127,359
12/17/2019 5:05:36 PM
தமிழகம்
முதல்வர் எடப்பாடி சேலம் பயணம்: துணை முதல்வர் டெல்லி பயணம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் சென்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்கிறார்.தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30ம் தேதி ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி சேலத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்  தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை  சென்று, அங்கிருந்து காரில் சேலம் சென்றார். நாளை மதியம் அவர் சென்னை திரும்புகிறார்.அதேபோன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், இன்று  இரவு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். பின்னர் நாளை காலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும், அனைத்து  மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.வருகிற பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு, முன்னதாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெறுவது  வழக்கம். அந்த கூட்டத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம், தமிழக நிதி அமைச்சர் என்ற முறையில் பங்கேற்கிறார். பின்னர் நாளை மாலையே சென்னை திரும்ப  திட்டமிட்டுள்ளார்.
127,360
12/17/2019 5:06:01 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி, ஆணையம் கூட்டு: கே.எஸ்.அழகிரி பேட்டி
புவனகிரி: கடலூரில் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அளித்த பேட்டி: ஆளுங்கட்சி அதிகார பலம், பணபலம், ஆள்பலத்தை வைத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறது.  தேர்தல் ஆணையம் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒதுக்கப்படவில்லை  என்பதுதான் எங்களது வாதம். ஒரு நாடாளுமன்ற தேர்தலையே ஒரே நாளில் தமிழகத்தில் நடத்துகிறோம். ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக  நடத்துகிறார்கள்.ஏனென்றால் ஓட்டு போடுவதற்கும், கலவரம் செய்வதற்கும், வேட்பாளர்களை தூக்குவதற்கும்தான் இவ்வாறு செய்கிறார்கள்.
127,361
12/17/2019 5:06:31 PM
தமிழகம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் திருவாரூர் மத்திய பல்கலை. மூடல் 75 மாணவர்கள் மீது வழக்கு பதிவு: தஞ்சையில் மறியல்
திருச்சி: குடியுரிமை  சட்ட திருத்தத்தை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக  மாணவர்களும் நேற்று போராட்டத்தில் குதித்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவபொம்மையை  பல்கலைக்கழக வளாகத்திற்கு  வெளியே எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு 20ம் தேதி வரை  விடுமுறை அறிவிக்கப்பட்டது.(21ம் தேதி முதல்  கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது) விடுதியில் தங்கியிருந்த பல்வேறு மாநில மாணவ, மாணவிகளை  வெளியேறும்படி  உத்தரவிட்டனர். இரவில் தங்களால் எங்கும் போகமுடியாது என மாணவ, மாணவிகள் இரவில் 1 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்  அவர்கள் இரவில் அங்ேகயே தங்கியிருந்தனர்.   பிரதமர் உருவபொம்மை எரித்ததாக மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 75 பேர் மீது ஜாமீனில்  வரமுடியாத பிரிவுகளில்போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் திருவிக அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று தண்டவாளத்தில் அமர்ந்து ரயில்  மறியல் செய்தனர்.தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து தஞ்சையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு  ஆடவர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
127,362
12/17/2019 5:07:00 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு: தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை
புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு  நாளை விசாரணைக்கு வருகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014ம் ஆண்டு டிச. 31ம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய இந்துக்கள்,  சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம்  மேற்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதற்கு, வடகிழக்கு மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் போராட்டங்களும்  நடக்கின்றன. இந்தச் சட்டத்துக்கு எதிராக திரிபுரா மன்னர் வம்சத்தைச் சேர்ந்த திரிபுரா பிரத்யோத் கிஷோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்யப்பட்டது.அதேபோல், காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அனைத்து இந்திய அசாம்  மாணவர் அமைப்பு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள்  மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று வந்தது. அப்போது, இந்த மனுக்கள் வரும் 18ம் தேதி  (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று, தலைமை நீதிபதி தெரிவித்தார்.இந்நிலையில், திமுக தரப்பில் இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டில் பிரிவினைவாதம் ஏற்படும். மக்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக தரப்பில் தாக்கல்  செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து 18 மனுக்கள் மீதான விசாரணை நாளை, தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.
127,363
12/17/2019 5:07:27 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்: அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு:100க்கும் மேற்பட்டோர் கைது
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கேரளாவில் இன்று எஸ்டிபிஐ உள்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.  இதையடுத்து பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன. 10 தமிழக மற்றும் கேரள பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் கைது  செய்யப்பட்டு உள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரளாவில் எதிர்ப்பு பலமாக உள்ளது. இதன்  ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற கண்டன கூட்டம் நடந்தது. இதில்  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் உள்பட பெரும்பாலான கட்சி  தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ேகாழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் உள்பட பல பகுதிகளில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கண்டன  பேரணிகளும் நடத்தப்பட்டன. இதுதவிர திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலும், ரயில் நிலைய  முற்றுகை போராட்டங்களும் நடந்தன.இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு எஸ்டிபிஐ, வெல்பேர் கட்சி உள்பட 30க்கும்  மேற்பட்ட முஸ்லீம் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இருப்பினும் கேரள அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும், பள்ளி தேர்வுகள் வழக்கம்போல  நடத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல பகுதிகளில்  வழக்கம் போல காலை முதலே அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் ஓடின. பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஆனால் ஒருசில இடங்களில் வன்முறை  வெடித்தது. கோட்டயம் அருகே திருவனந்தபுரம் - மூணாறு பஸ் மீது ஒரு கும்பல் கல் வீசியது. இதே போல ஆலப்புழா, வயநாடு, கண்ணூர் உள்பட பல  இடங்களில் அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.பாலக்காடு அருகே வாழையாறில் தமிழக அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. ஆலப்புழா மண்ணஞ்சேரியில் அரசு பஸ்சை மறித்த ஒரு கும்பல் சாவியை எடுத்து  சென்றது. வயநாடு மாவட்டம் புல்பள்ளி, வெள்ளமுண்டா ஆகிய இடங்களில் பஸ் மீது கல் வீசப்பட்டது. மொத்தம் 10 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம், ஆழப்புழா, கண்ணூர் உள்பட பல பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. உடனே போராட்டக்காரர்கள் கடைகளை மூடக்கோரி  ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடைகள் மூடப்பட்டன.கண்ணூர் கலெக்டர் அலுவலகம் அருகே பெண்கள் உள்பட எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார்  கைது செய்தனர். கண்ணூரில் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. கேரளா முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் மட்டும் முழு அடைப்பால் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில்  பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் ஓடவில்லை. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  எஸ்டிபிஐ, வெல்பேர் கட்சி சார்பில் கண்டன பேரணிகளும் நடந்தன. திருவனந்தபுரத்தில் சால மார்க்கெட் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி  காணப்பட்டது.
127,364
12/17/2019 5:08:04 PM
விளையாட்டு
32வது கோடைகால ஒலிம்பிக் போட்டி 32வது கோடைகால ஒலிம்பிக் போட்டி: முதல்போட்டி ஜன. 1ம் தேதி ெதாடக்கம்
ேடாக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டு ஜூலை 24 முதல் ஆக. 9ம் தேதி வரை  32வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் இப்போட்டிகளை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக்  போட்டிக்காக டோக்கியோவில் புதிதாகக் கட்டப்பட்ட மைதானம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, டோக்கியோ  ஆளுநர் யூரிகோ கொய்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 68 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் கட்டப்பட்டது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் கெங்கோ குமா, ஜப்பான் நாட்டின் பாரம்பரிய முறையில் சுமார் 157 பில்லியன் யென் (1.4 பில்லியன் டாலர் - இந்திய ரூபாயில் 9,952  ஆயிரம் கோடி) செலவில் மைதானத்தை வடிவமைத்து உள்ளார். மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் மரக்கட்டைகளால் கட்டப்பட்டு உள்ளன. ஒலிம்பிக்  போட்டியின் தொடக்க விழாவும் நிறைவு விழா நிகழ்ச்சிகளும் இதே மைதானத்தில்தான் நடக்கவுள்ளன. முதல் போட்டியாக எம்பரர் கோப்பை ஜேஎஃப்ஏ 99வது  ஜப்பான் கால்பந்து சாம்பியன்ஷிப் வருகிற 2020ம் ஆண்டு ஜன. 1ம் தேதி நடத்தப்படுகிறது.
127,365
12/17/2019 5:08:32 PM
விளையாட்டு
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி குரங்கு என்று எப்படி சொல்லலாம்?: சவுதி நடுவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு
பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்.) கால்பந்து போட்டி தொடரில் பெங்களூருவில் காந்தீராவா ஸ்டேடியத்தில் நடந்த 39வது லீக் ஆட்டத்தில் மும்பை  சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த போட்டி முடிவில் மும்பை சிட்டி அணியின் தலைமை  பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா பத்திரிகையாளர் மத்தியில் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், ‘மும்பை சிட்டி அணியின் வீரர் செர்ஜி கெவினை பார்த்து  போட்டியின் போது  சவுதி அரேபியாவைச் சேர்ந்த நடுவர் துர்கி அல்குதார் ‘குரங்கு’ என்று திட்டி இருக்கிறார். குரங்கு போன்று சைகைகளையும் ெசய்து  காட்டினார். இதுபோன்ற செயல்களை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.  என்னால் கண்களை மூடிக்கொள்ள முடியாது. வெளிநாட்டு வீரர்களை மதிக்க  வேண்டும். இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போட்டி அமைப்பாளர்கள் வலியுறுத்த வேண்டும்’  என்று தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ்எல் விதிகளின்படி, இதுபோன்ற விஷயங்கள் அனைத்தும் ஏஐஎப்எப்-இன் ஒழுக்காற்றுக் குழுவால் தீர்க்கப்படுகின்றன. கெவின்  ஆப்பிரிக்க நாடான காபோனைச் சேர்ந்தவர். அவர் ஐஎஸ்எல் கிளப்பின் மிட் பீல்டராக விளையாடுகிறார். மும்பை சிட்டி எஃப்சி நடப்பு சாம்பியனான பெங்களூரு  எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.
127,366
12/17/2019 5:09:03 PM
விளையாட்டு
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வன்முறை திட்டமிட்டபடி நாளை மறுநாள் கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம்: பிசிசிஐ நிர்வாகி தகவல்
கொல்கத்தா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள்  அல்லாத இந்துக்கள், சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை  அளிக்கப்படும் என்ற  குடியுரிமைச் சட்டத்தை வடகிழக்குப் பகுதிகள் மட்டுமின்றி மேற்கு  வங்கத்தில் பெரும் போராட்டமே வெடித்துள்ளது. இதேபோல் நாடு  முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உள்ளூர்  டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் நாளை மறுநாள் (டிச. 19)  கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டது. வழக்கமாக பெங்களூருவில் வீரர்கள் ஏலம் நடப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில்  குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து கொல்கத்தாவில் போராட்டம் நடப்பதால், ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால்  போராட்டத்தால் வீரர்கள் ஏலத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது.
127,367
12/18/2019 2:27:45 PM
தமிழகம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 23ல் பேரணி, உண்ணாவிரதம்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வருகிற 23ம் தேதி பிரமாண்ட கண்டன பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பல்வேறு மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் 2 நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்தன.வட மாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த போராட்டம் தற்போது தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. சென்னையில் திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், கனிமொழி ஆகியோர் போராட்டம் நடத்தினர். இன்று சென்னையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து சென்ைன அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் திமுக சார்பில் பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதி, டி.ஆர்.பாலு, மதிமுக சார்பில் வைகோ, மல்லை சத்யா, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகீதின், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, அப்துல் சமது, இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், திராவிடகழகம் சார்பில் பூங்குன்றன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஐஜெகே பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். கூட்டத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் அல்லது பந்த் நடத்துவது குறித்து சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. முடிவில் வருகிற 23ம் தேதி சென்னையில் பிரமாண்ட கண்டன பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
127,368
12/18/2019 2:31:23 PM
இந்தியா
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் காங். ஆர்ப்பாட்டம்: 28ம் தேதி மாநில தலைநகரங்களில் நடக்கிறது
புதுடெல்லி: நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்ைத எதிர்த்து போராட்டம் வலுத்துள்ள நிலையில், குடியுரிமை சட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அமித் ஷா அறிவித்துள்ளார். காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வருகிற 28ம் தேதி மாநில தலைநகரங்களில் காங். ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குடியுரிமைச் சட்டம் தொடர்பாக டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம், வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று, ‘‘தேசிய தலைநகரில் அமைதியை உறுதி செய்ய டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவொரு மாணவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என்றார். ஆனால், காவல்துறையினர் ஜாமியா மில்லியா  இஸ்லாமியா மாணவர்கள் மூன்று பேர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதை கண்டித்து, நேற்று பிற்பகலில், வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையிலான மோதலில் 12 போலீசார் மற்றும் மூன்று விரைவு வாகன (ஆர்ஏஎப்) பணியாளர்கள் உட்பட மொத்தம் 21 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர். பின்னர் அவர்கள் கும்பலைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். தொடர்ந்து, அருகிலுள்ள பகுதிகளில் உள்ள ஐந்து மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் சில மணி நேரம் மூடப்பட்டன. ெதாடர்ந்து பதற்றம் நீடித்ததால், நேற்று நள்ளிரவு ஜாமியா நகர் காவல் நிலையத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து தென்கிழக்கு டெல்லி டி.சி.பி சின்மாய் பிஸ்வால், “நாங்கள் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும், நாங்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம்” என்றார். இருந்தும் மாணவர்கள் விடியவிடிய சீலாம்பூர் பகுதியில் குவிந்து காணப்பட்டதால், சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர், அவர்களுக்கு குடிநீர், உணவு பொட்டலங்களை வழங்கினர். ெதாடர்ந்து போராட்டங்கள் நடப்பதால், தலைநகரில் பதற்றமான நிலையே நீடிக்கிறது. இதற்கிடையே, காங்கிரஸ்  முன்னாள் எம்.எல்.ஏ ஆசிப் கான் உட்பட ஏழு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு  செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேர் உள்ளூர்  அரசியல்வாதிகள் ஆவர். அவர்கள், ஆஷு கான், முஸ்தபா, ஹைதர், ஏஐஎஸ்ஏ உறுப்பினர் சந்தன்  குமார், எஸ்சிஓ உறுப்பினர் ஆசிப் தன்ஹா, சிஒய்எஸ்எஸ் உறுப்பினர்  காசிம் உஸ்மானி என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, ‘மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ஜாமியாவின் மாணவர் மற்றும் ஆர்வலர்கள் மீது டெல்லி  காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது’ என்று ஏ.ஐ.எஸ்.ஏ ஒரு அறிக்கையில்  தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.வி.வேணுகோபால் கூறுகையில், ‘‘டெல்லியில் நடந்த ‘பாரத பச்சாவ்’ பேரணியின் வெற்றியின் வேகத்தை தொடர்ந்து, அந்தந்த மாநில தலைமையில் அனைத்து மாநில தலைநகரங்களிலும் ‘இந்தியாவை காப்பாற்றுங்கள் - அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கத்துடன் ஊர்வலம் நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. அது, டிச. 28ம் தேதியாக இருக்கலாம். அதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான எதிர்ப்பு நாடு முழுவதும் பரவிய நிலையில், அது மும்பையிலும் தீவிரமடைந்துள்ளது. பல சமூக அமைப்புகள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் என பலரும் எதிர்வரும் நாட்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். குர்லாவில் சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நாளை ‘ஆகஸ்ட் கிரந்தி’ மைதானத்தில் ஒரு பெரிய அமைதியான போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் 27ம் தேதி பைக்குல்லாவிலிருந்து மற்றொரு எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமித் ஷா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘குடியுரிமைச் சட்டம் விவகாரத்தில்  மத்திய அரசு பின்வாங்காது; மத்திய அரசு அதனை செயல்படுத்துவதில் பாறை போன்று உள்ளது. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம்,  சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மாணவர்கள் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் காழ்ப்புணர்ச்சியில்  ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தில் சிறுபான்மை எதிர்ப்பு  எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் சிஏஏ குறித்து தவறான  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேசிய தலைநகரில் அமைதியை உறுதி செய்ய டெல்லி  காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார். குடியுரிமை சட்ட விவகார துளிகள்* நேற்றைய டெல்லி சீலம்பூர் வன்முறை தொடர்பாக மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட வேறு சிலரைக் கைது செய்ய நேற்றிரவு முதல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. * டெல்லி இணை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட செய்தியில், ‘வடகிழக்கு மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு -144 விதிக்கப்பட்டுள்ளது’ என்றார். * டெல்லி சீலாம்பூர் பகுதியில் இன்று காலை போலீஸ் ரோந்துப்  பணியை மேற்கொண்டது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் தொடர்வதாகல நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்தில் இன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. * டெல்லியில் நேற்று இரவு வரை மெட்ரோ ரயில் நிலையங்கள் முடக்கப்பட்ட நிலையில், இன்று காைல முதல் வழக்கம் போல் செயல்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. * குடியுரிமை திருத்த சட்டத்தை கர்நாடகா மாநிலத்தில் அமல்படுத்துவோம் என்று, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்தார். * தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுைகயில், ‘‘ஜாலியன் வாலாபாக் நகரில் ஜெனரல் டயர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது போல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டின் குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார். அமித் ஷா டையரை விட குறைவானவர் இல்லை’’ என்றார். * ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் (டெல்லி) சம்பவம் மற்றும் சம்பவத்தின் போது காயமடைந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவி ஆகியவற்றைக் கையாள்வதற்கு உண்மை கண்டறியும் குழுவை அமைக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. * வடகிழக்கு மாநிலங்களின் திப்ருகரின், கவுகாத்தி நகர் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் திப்ருகரில் திணிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 14 மணி நேரம் தளர்த்தப்பட்டது. கவுகாத்தியில் இயல்புநிலை திரும்பி வருகிறது.
127,369
12/18/2019 2:35:45 PM
தமிழகம்
முதல்வர் வீட்டு முன் தற்கொலை அறிவிப்பு சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு: எஸ்பி அலுவலகம் முற்றுகை
கள்ளக்குறிச்சி: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தற்கொலை செய்வேன் என்று கூறிய சமூகநல ஆர்வலர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி, எஸ்பி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவர் சமூக ஆர்வலர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சி நகராட்சி வருவாய் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கோரி அதிகாரிகளிடம் இவர் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், ராமநாதன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. இதனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் எதிரே விஷம் குடித்து தற்கொலைபோராட்டம் செய்யபோவதாக ராமநாதன் அறிவித்திருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் ராமநாதனை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த அவரது மனைவி ஜெயகுமாரி மற்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி முகாம் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.இதுபற்றி எஸ்பியிடம் கொடுத்த புகாரில், ‘’கள்ளக்குறிச்சி நகராட்சி வருவாய் ஆய்வாளர் சட்டத்திற்கு புறம்பாக 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வருவதை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி சமூக ஆர்வலர் ராமநாதன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பொய் வழக்கு போட்ட கள்ளக்குறிச்சி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று சென்னையில் முதல்வர் வீட்டின் எதிரே விஷம் குடித்து தற்கொலை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்த ராமநாதனை கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர், தனி பிரிவு ஏட்டு மற்றும் 4 போலீசார் விசாரணை என்ற பெயரில் காரில் கடத்தி சென்றனர். அவரை மீட்டு தரவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘’தற்கொலை போராட்டம் அறிவித்ததால் உரிய விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்படுவார்’’ என்றார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன்பின்னர் சமூக ஆர்வலர் ராமநாதனை போலீசார் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சமூக ஆர்வலர் ராமநாதன் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனிடம் கடிதம் எழுதி வாங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டார்.
127,370
12/18/2019 2:38:04 PM
தமிழகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 201 வகை பறவை; 157 இன பட்டாம்பூச்சி: கணக்கெடுப்பில் தகவல்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 201 வகை பறவைகள், 157 வகை வண்ணத்துப்பூச்சிகள் வசிப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தில் மிகப்பெரிய வனப்பகுதியாகும். இங்கு பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பறவையினங்கள் உள்ளதால் வருடாந்திர கணக்கெடுப்பு பணி கடந்த 2 ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. 2ம் ஆண்டு கணக்கெடுப்பு கடந்த டிச.14 மற்றும் டிச.15ம் தேதிகளில் நடந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி மற்றும் ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் 200க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 2 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்பில் 201 வகையான பறவை இனங்களும், 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களும் உள்ளதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரிய வகையான சிங்கள ஐந்து வளைய பட்டாம்பூச்சி புலிகள் காப்பக வனப்பகுதி முழுவதும் உள்ளது தெரியவந்துள்ளது.மொத்தம் 201 பறவைகளில், 28 நீர் பறவைகளும், 20 கழுகுகள் மற்றும் ராப்டர்களுக்கும், 10 ஆந்தைகள் மற்றும் நைட்ஜார்களுக்கும், மீதமுள்ள 143 பறவைகளின் குடும்பத்திற்கும் சொந்தமானது. பிளாக் ட்ரோங்கோ, ஸ்பாட் டவ், லாஃபிங் டோவ், கிரீன் பீ-ஈட்டர், ரூஃபஸ் ட்ரீபி, இந்தியன் ஜங்கிள் காகம், ஓரியண்டல் மேக்பி ராபின், இந்தியன் ராபின், பைட் புஷ்சாட், மஞ்சள்-பில்ட் பாப்லர், ரெட்-வென்ட் புல்பல், காமன் மைனா மற்றும் பர்பில் சன்பேர்ட், இந்தியன் கிரே ஹார்ன்பில், கிரீன் இம்பீரியல் புறா இருப்பது தெரியவந்துள்ளது.இதுதவிர, மஞ்சள்-கால் பச்சை புறா, பெயிண்டட் சாண்ட்க்ரூஸ், இந்தியன் திக்-முழங்கால், வெள்ளை-வளைந்த கழுகு, சிவப்பு தலை கழுகு, இந்திய கழுகு, மஞ்சள் கால் பச்சை புறா, பச்சை இம்பீரியல் புறா, பெரேக்ரின் பால்கன், குறைந்த மீன் ஈகிள், டவ்னி ஈகிள், கிரேட்டர் ஸ்பாட் ஈகிள், மோட்ல்ட் வூட் ஆந்தை, சவன்னா நைட்ஜார், இந்தியன் கிரே ஹார்ன்பில், வெள்ளை-வயிற்று மினிவெட் மற்றும் வெள்ளை வால் அயோரா உள்ளிட்ட பறவை இனங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.பதிவு செய்யப்பட்ட மொத்த 157 பட்டாம் பூச்சிகளில், 10 ஸ்வாலோடெயில்கள் (பாபிலியோனிடே), 25 வெள்ளையர் மற்றும் மஞ்சள் (பியரிடே), 44 நிம்பலிடே குடும்பத்தைச் சேர்ந்தவை, 46 ப்ளூஸ் மற்றும் ஜூடிஸ் (லைசெனிடே மற்றும் ரியோடினிடே) மற்றும் 32 ஸ்கிப்பர்கள் (ஹெஸ்பெரிடே), காமன் ரோஸ், காமன் புல் மஞ்சள், காமன் எமிகிரன்ட், மோட்ல்ட் எமிகிரன்ட், காமன் ஜெசபெல், யப்திமா இனங்கள் (மோதிரங்கள்), காமன் சைலர், டவ்னி கோஸ்டர், சாக்லேட் பான்ஸி, எலுமிச்சை பான்சி, லெசர் புல் நீலம், இந்திய ஸ்கிப்பர், செஸ்ட்நட் பாப், ரைஸ் ஸ்விஃப்ட், நீலகிரி டிட், காமன் ஓனிக்ஸ், வெளிர் நான்கு-வரிவரிசை, வெற்று ஸ்விஃப்ட், சிங்கள ஐந்து வளையம், நீல அட்மிரல், வட்டமான பாம்-ரீடீ, கோணல் பிளாட், காமன் ஷாட் சில்வர்லைன் மற்றும் ஸ்கார்ஸ் ஷாட் சில்வர்லைன் உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
127,371
12/18/2019 2:40:52 PM
தமிழகம்
24வது திருமண விழா கொண்டாடி திரும்பிய போது பாஜ மேயர் மீது துப்பாக்கிச்சூடு: நாக்பூரில் நள்ளிரவு பரபரப்பு
நாக்பூர்: நாக்பூரில் பாஜ மேயர் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். நள்ளிரவு நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாநகராட்சியின் பாஜ கட்சியைச் சேர்ந்த மேயர் சந்தீப் ஜோஷியின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஜோஷி காயமின்றி தப்பினார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஜோஷி தனது காரில் ஒரு திருமண விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது, வர்தா சாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரான நாக்பூரில் நடந்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நாக்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர். விசாரணையில், நேற்று இரவு 11.59 மணியளவில் ஜோஷி தனது 24வது திருமண ஆண்டு விழாவை வர்தா சாலையில் உள்ள உணவகத்தில் கொண்டாடிய பின்னர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, நண்பர்கள், உறவினர்களுடன் 15 வாகனங்களில்  வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். மேயரின் அதிகாரப்பூர்வ கார் டிரைவர் காரை ஓட்டினார். வர்தா சாலையின் சந்திப்பை கார் அடைந்தபோது, ​​காரின் பின்னால் இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள், மேயரின் வாகனத்தின்மீது மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஒரு புல்லட் டிரைவரின் ஜன்னலை துளைத்துள்ளது.  மற்றொன்று டிரைவரின் இருக்கைக்கு பின்னால் பயணிகள் ஜன்னல் வழியாகத் துளைத்தது. மூன்றாவது, காரின் பின்புற விண்ட் ஷீல்ட்டைத் தாக்கியது. ைபக்கில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இந்த மாத தொடக்கத்தில், நாக்பூர் மாநகராட்சியின் புகார் பெட்டிகளில் ஜோஷிக்கு இரண்டு கடிதங்கள் வந்தன. நகரத்தில் அத்துமீறல்கள் அகற்றப்படுவதால் அவருக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. அவரது உத்தியோகபூர்வ வாகனம் கடந்த மாதம் அவரது இல்லத்தில் இருந்து திருடப்பட்டது, ஆனால் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. கார் திருட்டு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.