news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
127,479
12/23/2019 3:48:44 PM
தமிழகம்
ஓட்டேரியில் காவலன் செயலி விழிப்புணர்வு
பெரம்பூர்: ஓட்டேரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெண்கள் பாதுகாப்பு நிர்வாகிகள் நமீதா நாயக், வந்தனா வாலே  ஆகியோர் தலைமை வகித்தனர். ஓட்டேரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வள்ளி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு  காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது, அதிலுள்ள வழிமுறை, பொது இடத்தில் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்வது, சந்தேகப்படும்படியான  நபர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரை வழங்கினர்.  நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண் குழந்தை உள்ளிட்ட  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தனியார் அமைப்பினர் செய்திருந்தனர்.
127,480
12/23/2019 3:49:54 PM
தமிழகம்
கிராமங்களில் களைகட்டும் தேர்தல் சாலைகளில் சின்னங்கள் வரைந்து வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு  உறுப்பினர் பதவிகள் என 14 ஒன்றியங்களில் 3,924 பதவிகளுக்கு 13,350 பேர் போட்டியிடுகின்றனர்.இவர்களில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் சுயேச்சை சின்னங்களில் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு சில நாட்களே  உள்ளதால் கிராமப்புறங்களில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தங்களது சின்னங்களை மக்கள் மனதில் பதிய வைக்க பல்வேறு யுக்திகளை  வேட்பாளர்கள் கையாளுகின்றனர்.வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். பிளக்ஸ், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேன்,  ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகள் மூலமும், தெருக்கள், குப்பை தொட்டிகள், பஸ் நிறுத்தம் ஆகியவற்றில் போஸ்டர்கள் ஒட்டியும் வருகின்றனர்.தனியார் சுவர்களில் சின்னங்கள் வரைய அனுமதி தேவை என்பதால், கிராம பஸ் நிறுத்தம் உட்பட நெடுஞ்சாலைகள், கிராம தார்ச்சாலைகளில்,  வெள்ளை நிற பெயின்டால் தங்களது சின்னத்தை, விதிகளை மீறி வரைந்துள்ளனர். குறிப்பாக திருவள்ளூர்-பேரம்பாக்கம், பேரம்பாக்கம்-தண்டலம்,  மப்பேடு-சுங்குவார்சத்திரம் ஆகிய நெடுஞ்சாலைகளில் சின்னங்கள் வரையப்பட்டுள்ளன.இதேபோல மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் கட்சிகளும் சின்னங்களை வரைகின்றனர். இதனால் வேட்பாளர்கள்  இடையே தார்ச்சாலைகளில் இடம்பிடிக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்உள்ளாட்சி தேர்தலின்போது, தலைமை மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வாக்குச்சாவடியில்  தயாராக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அல்லது மண்டல அலுவலருக்கு தலைமை அலுவலர்கள் தெரிவித்து  மாற்று அலுவலரை பெற்று கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில், தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க, தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள  நபர்களை மட்டுமே உள்ளே இருக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக பணிசெய்யும் அலுவலர்கள், போலீசார், தேர்தல் பார்வையாளர்கள்,  மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர், அவருடைய முகவர், வாக்காளருடன் வரும் கைக்குழந்தை, மாற்றுத்திறனாளிகளுக்கு  துணையாக வரும் ஒரு நபர், வாக்காளர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு அல்லது சோதனையிடுவதற்கு உதவியாக தலைமை அலுவலர்  அனுமதிக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் பிரச்னை ஏற்படும் சமயங்களில் தலைமை அலுவலர் அல்லது தேர்தல்  நடத்தும் அலுவலர், போலீசாரின் உதவியை அணுக அவர்களை உள்ளே அனுமதிக்கலாம்.
127,481
12/23/2019 3:50:20 PM
தமிழகம்
மதங்களை கடந்த நினைவுச்சின்னம் குழந்தை இயேசு பேராலயம்
சேலம் மாநகரின் பரபரப்பான ஓமலூர் சாலையில், புதிய பஸ் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது அழகே உருவான குழந்தை இயேசு பேராலயம்.  மதங்களை கடந்து மனங்களை இணைக்கும் ஒப்பற்ற புகழ் பெற்றது இந்த பேராலயம். தியாகமும், கருணையும், அன்பும், அறமும் போற்றும் குழந்தை  இயேசு பேராலயம் வளர்த்தெடுத்த வரலாறும் மிகவும் அரியது என்கின்றனர் பங்குத்தந்தைகள். 1930ம் ஆண்டில் திருத்தந்தை பதினோராம் பத்தி நாதரின் ஆணையின் பேரில், பாண்டிச்சேரி உயர்மறை மாவட்டத்தின் கீழுள்ள பகுதிகளைப் பிரித்து  சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கி, சேலம் மறை மாவட்டம் உதயமானது. புதிய மறை மாவட்டத்தின் முதல் ஆயர் ஹென்றி  புரூனியர். வசதிகளே இல்லாத காலத்தில் அன்றைய குருக்களின் தியாகத்தால், கடின உழைப்பால் சேலம் மறை மாவட்டம் வளர்ந்தது.சேலம் மறை மாவட்டத்தின் தலைமைப் பங்காகிய செவ்வாய்பேட்டையிலிருந்து 1953ம் ஆண்டு அரிசிபாளையம் பங்கு பிரிக்கப்பட்டது. சேலம் நான்கு  ரோட்டில் உள்ள புனித சவேரியார் இளங்குருமட ஆலயத்தை மையமாக கொண்டு அரிசிபாளையம் பங்கு அமைக்கப்பட்டது. டி.அருள் இப்பங்கின்  முதல் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். புதியதாக உருவாக்கப்பட்டபோது இப்பங்கு அரிசிபாளையம், பெரமனூர், சாமிநாதபுரம், பள்ளப்பட்டி, அழகாபுரம்,  ஜான்சன்பேட்டை, வீராணம் ஆகிய பகுதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது. இதுதான் தற்போது இதயங்களை ஈர்க்கும் குழந்தை இயேசு பேராலயமாக  திகழ்கிறது.1991ல் குழந்தை இயேசு பேராலய நேர்ந்தளிப்பு விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று முதல் தூய சவேரியார் பங்கு, குழந்தை இயேசு  பேராலயப் பங்காகப்பெயர் மாற்றமும், இடமாற்றமும் பெற்று விளங்குகிறது. குழந்தை இயேசு பேராலயம், சேலம் மாநகர மைய பகுதி  அரிசிபாளையத்தில் நான்கரை ஏக்கரில் பிரான்ஸ் நாட்டு கோத்திக் கட்டட வடிவமைப்புப்படி கட்டப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 5,000 பேர் கூடி  ஜெபிக்கும் வண்ணம் உள்ளது. ஆலயத்தினுள் உள்ள வண்ணக்கண்ணாடி வேலைப்பாடு, இயேசுவின் வாழ்வியல் கலை நயத்தோடு  அமைக்கப்பட்டுள்ளது.அழகிய பீடத்தில் குழந்தை இயேசு திருச்சொரூபம், ஒரே பளிங்கு கல்லால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் சகோதரரால் செதுக்கப்பட்டது.  இதற்கான செலவினத்தை சேலத்தை சேர்ந்த இந்து சகோதரி ஏற்றுக்கொண்டார். மேலும், இறைமக்களின் நிதியுதவி சேர்ந்து மதங்களை கடந்து, சேலம்  மாநகரின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.இப்பங்கு ஆன்மீகத்திலும், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் போன்ற பல நிலைகளிலும் வளர்ந்துள்ளது. மறைந்த முன்னாள் மறைமாவட்ட  முதன்மை குருவாகிய  எஸ்.அமல்ராஜ் தம் பணி வாழ்வில் வெளிபடுத்திய ஆன்மீக அக்கறையும், சமூக, பொருளாதார, கல்வியில் மக்கள் பால்  கொண்ட அன்பும், இரக்கமுமே இப்பங்கின் இன்றைய நிலைக்கு வித்தாக அமைந்துள்ளது. இன்று 11300 கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொண்ட  இப்பங்கு இதுவரை 10 குருக்களையும், 32 அருட்சகோதரிகளையும், 3 துறவறச் சகோதரர் களையும் உருவாக்கியுள்ளது என்கின்றனர் மூத்த கிறிஸ்தவ  முன்னோடிகள்.
127,482
12/23/2019 3:50:38 PM
தமிழகம்
பொன்னேரியில் சிகிச்சையின்றி வாலிபர் பலி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
பொன்னேரி: பொன்னேரியில் லாரி மோதி படுகாயம் அடைந்த வாலிபருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் பலியானதை கண்டித்து  நேற்றிரவு மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நேற்று மாலை லாரி மோதிய விபத்தில் பொன்னேரி அடுத்த ஆறு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்  (35) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். அவருக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்  மேல்சிகிச்சைக்காக நேற்றிரவு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அங்கு வினோத்குமார் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக பலியானார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள்  உள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் இரவு நேர பணியில் 3 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஒரே மருத்துவர் பணியில்  இருந்ததால் வினோத்குமார் சிகிச்சையின்றி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.இதையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையின் மெத்தனப் போக்கினால் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்ததை கண்டித்து, நேற்றிரவு 11  மணியளவில் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததை கண்டித்து மக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்தனர். இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை உயர் அதிகாரிகளுடன்  பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று போராட்டத்தை மக்கள் கலைந்து சென்றனர்.
127,483
12/23/2019 3:51:00 PM
தமிழகம்
ஆதனூர் ஊராட்சியில் குண்டும் குழியுமான தரமற்ற சிமென்ட் சாலை: மக்களின் 6.50 கோடி வீண்
கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில் ₹6.50 கோடியில் போடப்பட்ட தரமற்ற சிமென்ட் சாலை தற்போது குண்டும் குழியுமாக உருமாறியுள்ளது. இதனால் வாகன  ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சி பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசிக்கின்றனர். ஆதனூரில் இருந்து ஊரப்பாக்கம், எம்.ஜி.நகர் செல்லும் கண்ணதாசன் நகர் பிரதான சாலை நீண்ட காலமாக தார்சாலை  சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது.இதையடுத்து காஞ்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு ₹6.50 கோடியில் புதிய சிமென்ட் சாலை  அமைக்கப்பட்டது. எனினும், இந்த தரமற்ற சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாகவும் புழுதி நிறைந்த மண்சாலையாக  உருமாறி பரிதாபமாக காட்சியளிக்கிறது.இதனால் மக்களின் வரிப் பணமான 6.50 கோடி வீணாகியுள்ளது.இதனால் இவ்வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வாகனங்களில் செல்ல முடியாமல் பெரிதும்  அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பல இருசக்கர வாகன ஓட்டிகள் ராட்சத பள்ளங்களில் விழுந்து அடிபடுகின்றனர். இங்கு வாகன விபத்துகளும்  அதிகரித்து உயிர்ப்பலிகள் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
127,484
12/23/2019 3:51:19 PM
தமிழகம்
அதிமுக ஆட்சி எடப்பாடிக்கு பிடிக்கல: பிரசாரத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதுகுண்டு
நாகை: நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில், மாவட்ட ஊராட்சி அதிமுக வேட்பாளர் கணேசன், ஒன்றிய வார்டு வேட்பாளர் மணிவண்ணனை  ஆதரித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். திறந்து ஜீப்பில் கிராமம் கிராமமாக சென்று ஆதரவு  திரட்டி பேசினார். வடக்கு பொய்கைநல்லூரில் அவர் பேசும்போது,  ‘இந்த ஆட்சி எடப்பாடிக்கு பிடிக்கல’ என்று அவர் ஒரு பெரிய குண்டை தூக்கி  போட்டதால் வேட்பாளர்கள் மட்டுமல்ல, அங்கு திரண்டிருந்த அதிமுகவினரும் அதிர்ச்சியடைந்தனர்.அமைச்சர் ஓ. எஸ். மணியன் பேசியதாவது: ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்த அரசுபல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இது ஒரு விவசாயியின் ஆட்சி. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சி. அது தான் எடப்பாடிக்கு பிடிக்கல என்றார்.அமைச்சர் இவ்வாறு பேசியதும் வேட்பாளர் திருதிருவென விழித்தார். அமைச்சர் பேசிவிட்டார். அவரிடம் உடனடியாக தவறை சுட்டிக்காட்ட  முடியாதநிலையில் அப்படியே விட்டு விட்டார். அமைச்சரின் பேச்சை கேட்ட உடன் வந்த அதிமுகவினரும் அமைச்சர் ஏன் இப்படி பேசினார் என  பரபரப்புடன் பேசிக்கொண்டனர்.பிரசாரம் முடிந்ததும் இதுபற்றி அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் அதிமுக நிர்வாகிகள் கூறினர்.  இதுபற்றி முதல்வர் கேட்டால் விளக்கம் அளித்து  விடுகிறேன். ‘‘இது ஒரு பெரிய பிரச்னையே இல்லை. இதைவிட பெரிய பெரிய தப்புதாளம் போடுகிற, அபத்தமாக பேசுகிற அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறாங்க. விடுங்க’’ என்று நிர்வாகிகளிடம் கூறினார்.
127,485
12/23/2019 3:51:39 PM
தமிழகம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறப்பு
கூடுவாஞ்சேரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம்  அறிவித்துள்ளது.  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும் கிண்டி சிறுவர் பூங்காவுக்கும் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும். கிறிஸ்துமஸ், ஆங்கில  புத்தாண்டு மற்றும் பொங்கல் தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு, 24-ம் தேதி(நாளை), 31-ம் தேதி மற்றும் ஜனவரி 14ம் தேதி ஆகிய  செவ்வாய்க்கிழமைகளில் மேற்கண்ட 2 பூங்காக்களும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
127,486
12/23/2019 3:51:56 PM
தமிழகம்
மாதவரத்தில் 10 கிலோ குட்கா பொருள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது
திருவொற்றியூர்: மாதவரம் நடராஜ் நகரில் வாகனங்களில் கொண்டு வந்து கடைகளுக்கு போதை பொருள்  சப்ளை செய்வதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல்  வந்தது.அதன்படி மாதவரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் தனியார் வாகன சோதனை மையத்துக்கு சென்றனர். அங்கிருந்த  ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் 10 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆட்டோ ஓட்டி வந்த மாதவரம், பொன்னியம் மன்மேடு, பிருந்தாவன் தோட்டம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (58) என்பவரை  போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வாங்கி வந்து, இப்பகுதியில் உள்ள  கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இவரிடமிருந்து ஆட்டோவுடன் 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட செல்வராஜை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
127,487
12/23/2019 3:52:11 PM
தமிழகம்
மதநல்லிணக்கம் வலியுறுத்தி மாதவரத்தில் மரக்கன்று நடும் விழா
திருவொற்றியூர்: மாதவரம் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும்   அரபி கல்லூரி சார்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மரக்கன்று நடும்  நிகழ்ச்சி மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் நீலகண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்  மாதவரம் மூர்த்தி  கலந்துகொண்டு மாதவரத்தில் உள்ள குளப்பன் குளத்தை சுற்றிலும் 1000 மரக்கன்று நட்டார். கல்லூரி முதல்வர் முகமது யூசுப் ரஹாதி, முன்னாள் கவுன்சிலர் சாந்தி எத்திராஜ், இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் கூட்டமைப்பினர், அரபி கல்லூரி  நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
127,488
12/23/2019 3:52:32 PM
தமிழகம்
மோடியும் அதிமுகவும் ஒண்ணுதான்.. ஓட்டு போடாதீர்கள்...: வீதிவீதியாக பிரசாரம்
பாபநாசம்: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள். மோடியும், அதிமுகவும் ஒன்று தான் என்று சக்கராப்பள்ளி ஜமாத்தார்கள் வீதிவீதியாக  பிரசாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி பிரசாரம் கிராமங்களில் சூடுபிடித்துள்ளது. தற்போது நாடு முழுவதும்  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற அதிமுகவும், பாமகவும் வாக்களித்ததால் அந்த இரு கட்சிகள் மீதும் இஸ்லாமியர்கள்  வெறுப்படைந்து உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியார்கள், அதிமுகவுக்கும், பா.ஜகவுக்கும் வாக்களிக்க கூடாது என்று முடிவு எடுத்து  உள்ளனர்.இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஜமாத்தார்கள் கூட்டம் 2 தினங்களுக்கு முன் நடந்தது. இதில் பா.ஜ.,  அதிமுகவுக்கு வாக்களிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் கடந்த 2 தினங்களாக ஜமாத்தார்கள்  20 பேர் மைக் மூலம் வீதி வீதியாக பிரசாரம் செய்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது: இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இதற்கு அதிமுகவும் துணையாக  உள்ளது. அதிமுகவும், மோடியும் ஒன்று தான். எனவே இருவருக்கும் வாக்களிக்க வேண்டாம். இதுதான் ஜமாத் முடிவு.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்தனர். இந்த முடிவு அடங்கிய துண்டு பிரசுரங்களும் வீடு வீடாக வழங்கப்பட்டது.
127,489
12/23/2019 3:52:51 PM
குற்றம்
திருவொற்றியூரில் வழிப்பறி திருடன் கைது
திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஜீவன்லால் நகரை சேர்ந்தவர் ஓஜா (25). மெட்ரோ ரயில் கட்டுமான ஒப்பந்த பணியாளர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு  திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், ஓஜாவை கருங்கல்லால் சரமாரியாக அடித்துவிட்டு அவரிடமிருந்த 2,500 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு  மின்னல் வேகத்தில் தப்பினர்.இதுகுறித்த புகாரின்பேரில், திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூரை சேர்ந்த சிலம்பரசன் (25) என்பவரை கைது செய்து  விசாரித்து வருகின்றனர். தப்பிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
127,490
12/23/2019 3:53:07 PM
குற்றம்
குன்றத்தூர் அருகே சென்டர் மீடியனில் கார் மோதல்
குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே நேற்றிரவு டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் பயணம் செய்தவர்கள்  அதிர்ஷ்டவசமாக தப்பினர்.மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் (37). இவர், தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உறவினர் வீட்டு  நிகழ்ச்சிக்கு நேற்று மாலை சென்றார்.நிழச்சியை முடித்து விட்டு, சொகுசு காரில் இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஷேக் ஓட்டியதாக கூறப்படுகிறது.குன்றத்தூர்-குமணன்சாவடி சாலை சிவன்தாங்கல் பகுதியில் கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி,  சாலை தடுப்பு சுவரில் மோதியது. காரில் இருந்த ஷேக் குடும்பத்தினர், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி அலறி துடித்தனர். சத்தம் கேட்டு  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இடிபாடுகளில் சிக்கிய ஷேக் குடும்பத்தினர் மற்றும் காரையும் பொதுமக்களே மீட்டனர். பின்னர், ஷேக் குடும்பத்தினரை  பாதுகாப்பாக அதே காரில் அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோர மின்விளக்குகள் எரியாததால், இதே தடுப்பு சுவரில் பலமுறை அரசு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகி  வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
127,491
12/23/2019 3:53:27 PM
தமிழகம்
தண்டையார்பேட்டையில் 4 கோடி செலவில் தேவாலயம் திறப்பு
தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் 56 ஆண்டு பழமை வாய்ந்த தூய யோவான் திருத்தூதர் நற்செய்தியாளர் ஆலயம்  உள்ளது. இந்த ஆலயத்தின் கட்டிடம் பழுதானதால் கடந்த  2018ம் ஆண்டு டிசம்பர் மாதம்  ஆலயத்தை இடித்தனர். பின்னர், ₹4 கோடி  செலவில் கடந்த ஜனவரி மாதம் புதிய தேவாலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.பணி நிறைவடைந்ததையொட்டி இன்று  மேள தாளம், நாதஸ்வரம் முழங்க  சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட மேதகு பேராயர் ஜார்ஜ்  அந்தோணிசாமிக்கு  சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தேவாலயம் வளாகத்தில் உள்ள மாதா உருவம் பொறித்த கொடியை ஏற்றி,  ரிப்பன் வெட்டி தேவாலயத்தை ஜார்ஜ் அந்தோணிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து அர்ச்சிப்பு   திருப்பலி நடந்தது. பங்கு  தந்தைகள், கிறஸ்துவர்கள் கொண்டு பிராத்தனை செய்தனர்.
127,492
12/23/2019 3:53:46 PM
தமிழகம்
காட்டாங்கொளத்தூரில் பரபரப்பு 4 பேர் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கி செல்போன், பைக் கொள்ளை: மர்ம கும்பலுக்கு வலை
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூரில் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த வாலிபர்களை தாக்கி, செல்போன் மற்றும் பைக்கை ஒரு மர்ம கும்பல் கொள்ளையடித்து  சென்றது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர், காமராஜ் தெருவில் ஒரு வாடகை வீட்டில் நாகர்கோவில் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆதிசங்கர்,  சுபாஷ் தங்கியுள்ளனர். இவர்களுடன், வடமாநிலத்தை சேர்ந்த முகமது நிகால், வாசிம் அக்ரம் ஆகியோரும் வசிக்கின்றனர். இவர்கள் மகேந்திரா  சிட்டியில் ஒரு தனியார் தொழிற்சாலை ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.இவர்களது வீட்டுக்கு 2 பைக்குகளில் மர்ம நபர்கள் நேற்று மாலை வந்தனர். பின்னர் திபுதிபுவென வீட்டுக்குள் புகுந்து, ஆதிசங்கர் உள்ளிட்ட 4  வாலிபர்களையும் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர். பின்னர் வாலிபர்களின் கழுத்தில் கத்தியை வைத்து, 2 செல்போன்கள் மற்றும் ₹1.50  லட்சம் மதிப்புள்ள பைக்கை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்றது.படுகாயம் அடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம கும்பல் குறித்து தீவிரமாக  விசாரித்து வருகின்றனர். இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை பொத்தேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தனியார் கல்லூரி மாணவர்களை தாக்கி  செல்போன் மற்றும் பைக்கை ஒரு மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.இப்பகுதிகளில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க போதிய ரோந்து பணிகளில் போலீசார் செயல்படுவதில்லை என மக்கள் வேதனை  தெரிவித்தனர்.
127,493
12/23/2019 3:54:05 PM
தமிழகம்
கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னை: 7 கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கோ ஆப்டெக்ஸில் 175 விற்பனை நிலையம், 8 ஒப்பந்த விற்பனை நிலையம், 18 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதில், 500க்கும் மேற்பட்ட  விற்பனையாளர்கள், 200க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்துக்கம் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள், 7 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு கட்டாயம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து  கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் மேலாண் இயக்குனருக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தமிழக அரசின் கைத்தறித்துறை மற்றும் கைவினைத்துறை செயலாளர் 1.7.2018 முதல் 7 சதவீதம் ஊதிய  உயர்வுக்கு உத்தரவிட்டும் தற்போது வரை வழங்கவில்லை. கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டு சம்பள உயர்வு அறிவிப்பு ஆணையில் அரசு  ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி கோ ஆப்டெக்ஸ்  ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை தற்போது வழங்கப்பட்டு  வரும் வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியில் 20 சதவீதம் மட்டும் உயர்வு என்பதை தொழிற்சங்கங்கள் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகம்  தன்னிச்சையாக முடிவு செய்ததை எங்கள் சங்கம் ஏற்கவில்லை. முன்பு வழங்கப்பட்டது போன்று அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு  வாடகைப்படி, நகரஈட்டுப்படி 1.10.2017 முதல் வழங்க வேண்டும். கடன் விற்பனை நிலுவைகளை விற்பனை செய்த ஊழியர்களிடம் பிடித்த ம்  செய்யக்கூடாது. நிலுவை தொகைகளை வசூலிக்க நிர்வாகமே சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணடும்.  விற்பனை நிலையங்களை  மூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது.
127,494
12/23/2019 3:54:22 PM
தமிழகம்
மரப்பல்லி, மரநாய் கடத்தி வந்தவர் கைது
சென்னை: வாடகை விடும் நோக்கத்தில் மரப்பல்லி, மரநாய்கள், சிவப்பு காது அணில் ஆகியவற்றை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு  வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன்  என்பவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி கிரீன்சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். ஆனால்  அவர் கையில் பெரிய சூட்கேஸ் வைத்திருந்தார். இதனால் அவரை தடுத்து நிறுத்தி  சூட்கேஸ் பைகள், பிளாஸ்டிக் கூடைகளை அதிகாரிகள்  திறந்துபார்த்தனர். அதில் வட அமெரிக்கா கண்ட வனப்பகுதியில் இருக்கும் மரப்பல்லிகள் 5, மர எலிகள் எனப்படும் கங்காரு எலிகள் 12, மரநாய்கள் 3,  சிவப்பு காது அனில் 1. என மொத்தம் 21 அரியவகையான விலங்குகள் இருந்தன. அவற்றை கூடையில் போட்டுவிட்டனர்.  விசாரணையில் முகமது மொய்தீன் கூறியதாக சுங்கத்துறையினர் தெரிவித்ததாவது: நான் தாய்லாந்துக்கு சொந்த வேலையாக சென்றுவிட்டு திரும்பி  வந்தேன். பாங்காக் விமான நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் என்னிடம் இந்த சூட்கேஸ்ஸையும் ஒரு பையையும் கொடுத்து இதை  எடுத்துச்செல்லுங்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து நீங்கள் இறங்கியதும் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் உங்களை சந்திப்பார்கள்  அவர்கள் இந்த சூட்கேஸையும் பையையும் கொடுத்தால் உங்களுக்கு ₹20,000 சன்மானம் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். பணத்துக்கு  ஆசைப்பட்டுத்தான் வாங்கிவந்தேன் என்றார். எனினும்  சுங்க அதிகாரிகள் முகமதுவை கைது செய்தனர். அத்துடன் சென்னையில் உள்ள மத்திய வன குற்றத்தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சென்ட்ரல் வையில்ட் லைன்ஸ் பீரோ  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் விரைந்து வந்து விலங்குகளை ஆய்வு செய்துவிட்டு விலங்குகளுக்கான மருத்துவ நிபுணர்களுக்கு  தகவல் கொடுத்தனர். இந்த விலங்குகளிலிருந்து கிருமிகள் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விலங்குகளை இந்தியாவில் வைத்திருப்பது ஆபத்தானது. உயிரியல் பூங்காக்களிலோ மற்றும் தனியார் விலங்குகள் கூடங்களிலோ  அனுமதிக்கவும் முடியாது என்று கூறினர். இதையடுத்து அதிகாரிகள் 21 அரிய வகைவிலங்குகளையும் நாளை காலை (இன்று அதிகாலை)  சென்னையிலிருந்து பாங்காங்க் செல்லும் விமானத்தில் தாய்லாந்துக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான செலவுகளை கடத்தல்  ஆசாமியிடம் வசூலிக்கவும் முடிவு செய்தனர். மேலும் இந்த விலங்குகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று அதிகாரிகள் விசாரித்தனர். மத்திய  வனத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர், இந்த அரியவகை விலங்குகளை கடத்திக் கொண்டுவந்து ரகசியமாக வளர்த்து சர்க்கஸ்,  சினிமா குழுவினர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு பயன்படுத்தலாம்.அதோடு இந்த விலங்குகளை பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளில் காட்சிப் பொருட்களாகவும் வைக்கலாம் என்பது தெரியவந்தது. முகமது மொய்தின்  ஏற்கனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டாரா அல்லது கடத்தல் காரர்களுடன் தொடர்பு உடையவரா இந்த விலங்குகளை சென்னையில் இவரிடம்  வாங்க வந்தவர் யார் என்று விசாரிக்கின்றனர்.
127,495
12/23/2019 3:54:40 PM
தமிழகம்
பட்டாபிராம் பகுதியில் கிடப்பில் விளையாட்டு அரங்க பணி: சமூக விரோதிகள் ஊடுருவல்
ஆவடி: பட்டாபிராம் பகுதியில் விளையாட்டு அரங்க கட்டிட பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது. இதனால் அப்பகுதியை சமூகவிரோதிகள்  ஆக்கிரமித்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி மாநகராட்சி, 36-வது வார்டான பட்டாபிராம், நேதாஜி நகர்-சஞ்சீவி நகர் பிரதான சாலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு  அரங்கம் அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு, அப்போதைய திருவள்ளூர் எம்பியின்  தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ₹5.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இதன்படி, அங்கு கடந்த 2014-ம் ஆண்டு கலையரங்கம் கட்டப்பட்டது. அதன்பிறகு விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் மதில்சுவர் கட்டும் பணிகள்  துவங்கின. ஆனால், இன்றுவரை அந்த சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இதனால் அந்த விளையாட்டு அரங்க பகுதியை சமூகவிரோதிகள் ஆக்கிரமித்து, இரவு நேரங்களில் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு, மது  அருந்துதல், பெண்களிடம் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சஞ்சீவி நகர் பிரதான சாலையில் காவல் உதவி மையம் ஆட்கள் இன்றி எந்நேரமும் பூட்டியே கிடக்கிறது. இங்கு போலீசாரும் இரவு ரோந்து  பணிகளிலும் ஈடுபடுவதில்லை. இங்கு விளையாட்டு அரங்கம் பயன்பாட்டுக்கு வராததால், இப்பகுதி இளைஞர்கள் உடல் திறனை அதிகரிக்கும்  பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து அப்போதைய நகராட்சி மற்றும் இப்போதை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளர். எனினும், இந்த விளையாட்டு  அரங்கை திறப்பதற்கு அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, இந்த விளையாட்டு அரங்கின் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை விரைவில் முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆவடி மாநகராட்சி  உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
127,496
12/23/2019 3:54:57 PM
தமிழகம்
கிறிஸ்துமஸ் குடில் அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு
சாத்தான்குளம்: கிறிஸ்துமஸ் குடில் அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த பெரியதாழை நடுத்தெருவைச் சேர்ந்த கிளைட்டன் மகன் மரியடினாப் (26). இன்ஜினியரிங் முடித்துள்ள  இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துக்கொண்டிருந்தார். அப்போது  எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மரியடினாப் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றி அறிந்ததும்  தட்டார்மடம் போலீசார் சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
127,497
12/23/2019 3:55:15 PM
தமிழகம்
சாப்ட்வேர் இன்ஜினியர் கொலையில் தொடர்பு பெண்ணுக்கு வலைவீச்சு
கோவை: கோவையில் சாப்ட்வேர் இன்ஜினியர் கொலையில் தொடர்புடைய பெண்ணை தேடி வருகின்றனர்.கோவை சுந்தராபுரம் கல்லுக்குழி வீதியில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவல்படி குனியமுத்தூர் போலீசார் அங்கு சென்று  பார்த்தபோது வீட்டிற்குள் உடல் உருக்குலைந்த நிலையில் எலும்பு கூடு கிடந்தது. விசாரணையில், இறந்து கிடந்தது சாப்ட்வேர் இன்ஜினியர்  சக்திவேல்  (45). இவருக்கு 15 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்துள்ளது. குழந்தைகள் இல்லை. சில ஆண்டிற்கு முன்பு சக்திவேல் மனைவி  அழகுமணி, குடும்பத்தகராறு காரணமாக அவரை பிரிந்து சென்று விட்டார்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சக்திவேல், தனது வீட்டிலேயே ஆர்டரின்பேரில் பணிகளை எடுத்து செய்து வந்துள்ளார். இவரது வீட்டின்  முன்கதவு மற்றும் கேட் கடந்த 4 மாதங்களாக பூட்டப்பட்டு கிடந்தது. சடலத்தின் அருகே ஒரு சாக்கு பை மற்றும் தேங்காய் ெதாட்டி கிடந்தது. மர்ம  நபர்கள் யாரோ அவரை கொலை செய்து சடலத்தை சாக்கில் போட்டு தூக்கி செல்ல முயன்றிருக்கலாம். வெளியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால்  அப்படியே போட்டுவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இவரை தேடி சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்  அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே, சக்திவேல் கொலையில் இவருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. போலீசார், அந்த  பெண்ணை தேடி வருகின்றனர்.
127,498
12/23/2019 3:55:31 PM
தமிழகம்
27 மாவட்டங்களில் வெற்றி பெறுவோம் : முத்தரசன் நம்பிக்கை
திருத்துறைப்பூண்டி: உள்ளாட்சி தேர்தலில் எங்களது கூட்டணி 27 மாவட்டங்களிலும் வெற்றிப்பெறும் என்று முத்தரசன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் அளித்த பேட்டி:மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்கு இருக்கிற பெரும்பான்மையை பயன்படுத்தி தேசிய குடியுரிமை சட்டத்தை திருத்தி நிறைவேற்றியிருக்கிறது.  இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கட்சி பேதம் இல்லாமல் பொதுமக்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர். கடுமையான  அடக்குமுறைகளை மேற்கொண்டு போராட்டத்தை ஒடுக்குவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் பாஜ அரசு மேற்கொண்டு வருகிறது. மோடி  சர்வாதிகாரமாக ஆட்சி நடத்துகிறார். அமித்ஷா ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறார்.தமிழ்நாட்டில் இன்று திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளும், இதர பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து மிக அமைதியான  முறையில் பேரணி நடத்துவதற்கு கூட அனுமதி இல்லை என்றால் அது ஜனநாயகம் அல்ல. மோடியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக தமிழக  அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும். ஆளும் கட்சி தங்களுக்கு  ஆட்சி அதிகாரம் இருப்பதை தவறாக பயன்படுத்தி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக அறிவிப்பது என்ற  நோக்கத்தோடு இருக்கிறார்கள். இது ஜனநாயத்திற்கு ஏற்புடையதல்ல. இவைகளையும் எதிர்த்து எங்களது கூட்டணி 27 மாவட்டங்களிலும் வெற்றி  பெறும்.இவ்வாறு முத்தரசன் கூறினார்.
127,499
12/23/2019 3:55:50 PM
தமிழகம்
டெங்கு காய்ச்சலுக்கு பேத்தி பலி விஷம் குடித்து பாட்டி தற்கொலை: ஆலங்குளத்தில் உருக்கம்
ஆலங்குளம்: டெங்கு காய்ச்சலுக்கு பேத்தி இறந்த வேதனையில் பாட்டி தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் விவசாயி. இவரது மனைவி  உத்தமி(50). இவரது பேத்தி வாணி (7). இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலன்  அளிக்காமல் கடந்த 10ம் தேதி வாண உயிரிழந்தாள். பேத்தி மீது அதிக பாசம் வைத்திருந்ததால் அவது இழப்பை உத்தமியால் தாங்கிக்கொள்ள  முடியவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குருவன்கோட்டையில் உள்ள தனது வீட்டில் உத்தமி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை  நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உத்தமி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
127,500
12/23/2019 3:56:08 PM
தமிழகம்
காலிபணியிடம் நிரப்ப வலியுறுத்தி ஜன.8ல் அஞ்சல் ஊழியர்கள் ஸ்டிரைக்
மதுரை: காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது  உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அஞ்சலக ஊழியர்கள் ஜன.8ம் தேதி  வேலைநிறுத்தம் செய்கின்றனர்.இதுகுறித்து தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தென் மண்டல செயலாளர் ஆறுமுகம் கூறியதாவது:பழைய பென்ஷன் திட்டம் தொடர்ந்திட வேண்டும். இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். அஞ்சல் மற்றும் ரயில்வே  அஞ்சலகங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நிரப்ப வேண்டும். 6வது மற்றும் 7வது ஊதியக்குழு  ஊதியத்தின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதியத்தையும், நிலுவைத் தொகையையும் அனைத்து பகுதி நேர ஊழியர்கள், தினக்கூலி, மஸ்தூர்  ஆகியோருக்கு வழங்க வேண்டும். அனைத்து கேசுவல் ஊழியர்களின் பணியை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் ஜன.8ம் தேதி நடத்தப்படும் ஒருநாள் வேலைநிறுத்ததில் அஞ்சலக ஊழியர்களும் ஈடுபட முடிவு செய்து  இருக்கிறோம். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் அஞ்சல் துறையை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க  உள்ளனர்.இவ்வாறு கூறினார்.
127,501
12/23/2019 3:56:25 PM
குற்றம்
கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏர்கூலரில் மறைத்து கடத்தப்பட்ட 7 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: 2 பேர் கைது
கோவை: ஏர்கூலரில் மறைத்து கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.கோவை விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து நேற்று காலை ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி  வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்படி, அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.  அப்போது 2 வாலிபர்கள் கொண்டு வந்த மடக்கும் தன்மையுடைய சிறியரக ஏர்கூலரை அதிகாரிகள் சோதித்து பார்த்தபோது அதற்குள் தங்க கட்டிகள்  கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது. தங்க கட்டிகள் என்று தெரியாத அளவுக்கு அதன் மேல்புறத்தில் மெர்குரி முலாம் பூசி கடத்தி வந்துள்ளனர்.இதையடுத்து அவர்களிடம் இருந்து 6.977 கிலோ கிராம் எடை கொண்ட ரூ.2 கோடியே 74 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.  இதை தொடர்ந்து விமானத்தில் தங்க கட்டிகளை கடத்தி கொண்டு வந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த முகமது ஷாருக்கான்(19),  ஹமீமு அக்தார்(21) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
127,502
12/23/2019 3:56:41 PM
தமிழகம்
திமுகவில் அமமுக வேட்பாளர்
தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள சின்னையம்பாளையம் ஊராட்சி மற்றும் கழுகூர் பகுதிகளை இணைத்து 1வது வார்டு கவுன்சிலர்  பதவிக்கு போட்டியிட்ட அமமுக வேட்பாளர் கந்தசாமி திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.  இதன்பிறகு குளித்தலை எம்எல்ஏ ராமரை சந்தித்து சின்னையம்பாளையம் 1வது வார்டில் போட்டியிடுவதாகவும் அதற்கு ஆதரவு கேட்டார். ஏற்கனவே  திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டு மதிமுக சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஆனந்தராஜ் என்பவரை அதே வார்டில் அதிமுக  வேட்பாளராக போட்டியிடும் முருகேசன் என்பவர் பேரம் பேசி வாபஸ் பெற செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது கந்தசாமி திமுகவில் இணைந்து உள்ளதால் அவர் 1வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
127,503
12/23/2019 3:57:09 PM
தமிழகம்
லஞ்சம் வாங்கினால் சவுக்கால் அடிங்க : வேட்பாளர் பிரசாரம்
அரியலூர்: லஞ்சம் வாங்கினால் சவுக்கால் அடியுங்கள் என பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சமூக ஆர்வலர் வாக்கு சேகரித்து வருகிறார்.அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் உள்ள கீழக்காவட்டாங்குறிச்சியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சமூக ஆர்வலர் தங்க.சண்முகசுந்தரம்  போட்டியிடுகிறார். இவருக்கு கிணறு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்துவரும் சண்முகசுந்தரம், கையில் ஒரு துண்டு பிரசுரமும்  சவுக்கும் வைத்துள்ளார். அந்த துண்டுபிரசுரத்தில், ‘’தான் வெற்றிப்பெற்றால் லஞ்சம் வாங்க மாட்டேன். லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் இந்த சவுக்கால் என்னை  அடிக்கலாம்’’ எனக்கூறி சவுக்கை சுழற்றி சுழற்றி வாக்கு கேட்கிறார். இதனால் அவரது பிரசாரத்தை வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டு வருகின்றனர்.
127,504
12/23/2019 3:57:28 PM
இந்தியா
லாரியில் கஞ்சா கடத்தல்: தேனியை சேர்ந்த 4 பேர் கைது
திருமலை: ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், ரம்பசொடவரம், ராஜம்கி, ரமபசெருலா பகுதிகளில் இருந்து லாரியில் கஞ்சா  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓங்கோல்-சீராளா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த லாரியை மறித்தபோது நிற்காமல்  சென்றதால் போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.லாரியில் 400 கிலோ கஞ்சாவை 2 கிலோ பாக்கெட்டுகளாக வைத்து கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் லாரியை  பறிமுதல் செய்தனர். லாரியில் வந்த தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த அறிவழகன், கனகராஜன், தியாகராஜன், தேவராஜ் ஆகிய 4 பேரை  கைது செய்தனர்.
127,505
12/23/2019 3:57:50 PM
இந்தியா
ஆற்றில் பாலம் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை மக்கள் சுமந்து செல்லும் அவலம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பத்து கிராமத்தில் மாதாகோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள  தெருக்களில் மொத்தம் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தை சேர்ந்தவர்களில் யாரேனும் உறவினர்கள் இறக்கும்போது  அவர்களை அடக்கம் செய்வதற்குரிய சுடுகாடு அங்குள்ள புத்தாற்றின் எதிர்க்கரையில் உள்ளது. இதன் காரணமாக கோடைகாலங்களில் இறந்தவர்களின்  உடல்களை எடுத்துச் செல்வதில் எவ்வித சிரமமும் இல்லாத நிலையில் மழை காலங்களில் இறந்தவர்களின் உடல்களை இடுப்பளவு நீரில் சுமந்து  செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.நேற்றுமுன்தினம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் (55) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த நிலையில் அவரை இதேபோன்று  இடுப்பளவு நீரில் தூக்கி சென்றனர். அரை கிலோ மீட்டர் தூரத்தில் திருவிடைச்சேரி அருகே மூங்கிலால் ஆன நடைபாலம் ஒன்று இருந்து வந்தாலும்,  அதில் இறந்தவர் உடலை தூக்கிக்கொண்டு செல்வது, அல்லது சாகுபடி செய்த நெல் மூட்டைகளை அந்த கரையில் இருந்து இந்த கரைக்கு கொண்டு  வருவது என்பது இயலாத காரியமாக இருந்து வருகிறது. எனவே இந்த அவல நிலையை போக்குவதற்கு அந்த பகுதியில் கான்கிரீட் நடை பாலம்  ஒன்று கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
127,506
12/23/2019 3:58:32 PM
தமிழகம்
கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
கோவை: கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டிபிடிக்கப்பட்டது.கோவை குரும்பபாளைத்தில் உள்ள காளிங்கராயன் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டபோது  குளக்கரையில் 2.5 அடி நீளமுள்ள கல்வெட்டின் துண்டுப்பகுதி கிடைத்தது. இதையடுத்து கல்வெட்டு ஆய்வாளர் ரவி, தொல்லியல் அறிஞர்  ராஜகோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கல்வெட்டு கொங்கு சோழர்கள்  காலத்தை சேர்ந்தது என்பதும், இடைக்கால வட்டெழுத்து முறையில் பொறிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதில் ‘‘ஸ்வஸ்தி கோக்கலி மூர்க்க  விக்கிரம சோழன்.. வடபரி, சாரநாட்டு கவையம்புத்தூரி... ஆகைக்கொண்டு பாலமுது படிக்கும்...சந்திராதித்தவற் சேவகவும்...’’ என எழுதப்பட்டிருந்தது.கோக்கலிமூர்க்க விக்கிரம சோழன் ஆட்சிகாலத்தில் வடபரிசார நாட்டில் உள்ள கவையம்புத்தூர் இறைவனுக்கு பசுக்களை தானமாக கொடுத்ததன்  பேரில் பாலமுது படையல் சந்திர சூரியன் இருக்கும் வரை கோயில் கொடையாக தரவேண்டும் என்பது இதன் அர்த்தம் ஆகும். இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கொங்கு நாட்டு பிரிவுகள் கி.பி 12ம் நூற்றாண்டில் தோன்றியிருக்கும் என்ற கருத்து இதுவரை  இருந்தது. ஆனால் கி.பி 11 நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டு மூலம் கொங்கு நாட்டு பிரிவுகள் நூறாண்டு காலம் முந்தியிருக்கிறது. கல்வெட்டின்  ஒரு துண்டுப்பகுதி தான் கிடைத்துள்ளது. முழு கல்வெட்டும் கிடைத்தால் விக்கிரம சோழனின் ஆட்சிகாலம், கொடையளித்தவர்களின் விவரங்களை  முழுமையாக அறியமுடியும்,’’ என்றனர்.
127,507
12/23/2019 3:58:48 PM
தமிழகம்
தண்டவாளத்தில் கிளிப்புகளை அகற்றி நாகர்கோவில் ரயிலை கவிழ்க்க சதி
திருவனந்தபுரம்: நாகர்கோவில் மங்களூர் இடையே தினசரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து தினசரி காலை 5 மணி  அளவில் புறப்படும் இந்த ரயில் இரவு 9 மணி அளவில் மங்களூரை அடையும். நேற்று காலை மங்களூருக்கு புறப்பட்டு சென்றது. மாலை 4.30 மணி  அளவில் கோழிக்கோடு அருகே வடகரை-ஐயனிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பயங்கர சத்தம் கேட்டது. ரயில் நன்றாக குலுங்கவும்  செய்தது. இதை கவனித்த இன்ஜின் டிரைவர் அடுத்த ஸ்டேஷன் வந்ததும் அதிகாரிகளிடம் விவரத்தை கூறினார். தொடர்ந்து அந்த ரயில் மங்களூர்  புறப்பட்டு சென்றது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில்  தண்டவாளங்களை இணைக்கும் 20க்கும் மேற்பட்ட கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தது. இது தவிர தண்டவாளத்தில் பல இடங்களில் கற்களும் அடுக்கி  வைக்கப்பட்ட நிலையில் இருந்தது.பரசுராம் எக்ஸ்பிரசை கவிழ்ப்பதற்காக யாராவது இந்த சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களில் ரயில் மறியல், தண்டவாளங்களை  சேதப்படுத்தும் சம்பவமும் நடந்துள்ளன. இந்த நிலையில் கோழிக் கோட்டில் தண்டவாளத்தில் கிளிப்புகள் அகற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
127,508
12/23/2019 3:59:14 PM
விளையாட்டு
கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமங்களில் பாரபட்சம் பிசிசிஐ வருவாயில் கை வைக்கும் ஐசிசி: கைகோர்க்கும் ஆஸ்திேரலியா, இங்கிலாந்து வாரியம்
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈ.சி.பி) ஆகியவை கூட்டாக  இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) எதிரான ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. அதாவது, சர்வதேச அமைப்பின் திருத்தப்பட்ட  நிர்வாக அமைப்பு கொண்டுவந்த, நிதி மற்றும் எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தை எதிர்க்கின்றன. மேற்கண்ட இரண்டு வாரியங்களும்,  ஆஸ்திரேலியாவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனை ‘பிக் த்ரீ’ கூட்டணி என்கின்றனர். முன்னதாக, பி.சி.சி.ஐ மற்றும் ஈ.சி.பி. ஆகியவை இந்த மாத தொடக்கத்தில் லார்ட்ஸில் நடந்த சந்திப்பின் போது, ஐ.சி.சி விஷயங்களைப் பற்றி  விவாதித்தன. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஐ.சி.சி.யில் நடக்கும் விஷயங்களைப் பற்றி பி.சி.சி.ஐ - ஈ.சி.சி போலவே,  ஆஸ்திரேலியாவும் உணர்கிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) விரைவில் எங்களுடன் இருக்கும். ஜன. 14ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவின்  மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. அதற்காக பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின்  தலைவர்  ஏர்ல் எடிங்க்ஸ் மற்றும் அவரது தூதுக்குழுவை சந்திப்பார்.கடந்த அக்டோபரில் துபாயில் நடந்த ஐசிசி கூட்டத்தின் போது, எட்டு ஆண்டுகளில் எட்டு முக்கிய நிகழ்வுகளை முன்மொழிந்தது. அதாவது, 2023  முதல் 2031 வரை அவர்களின் அடுத்த விளையாட்டு ஒளிபரப்பு உரிமைகளில், பிசிசிஐ மற்றும் ஈ.சி.பி, சி.ஏ.-வுக்கு சாதகமற்ற முடிவுகள்  எடுக்கப்பட்டன. இதனால், பி.சி.சி.ஐ-யின் திட்டமிடப்பட்ட வருவாய் 570 மில்லியன் டாலரிலிருந்து 400 மில்லியனுக்கு குறைந்துள்ளது. ஐ.சி.சி.யின் வருவாயில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இந்தியா அளிக்கிறது. இதேபோல், ஈ.சி.பி மற்றும் சி.ஏ ஆகிய வாரியங்களும்  பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து ஐ.சி.சி.-க்கு எதிரான முடிவை எடுத்துள்ளன’ என்றார்.
127,509
12/23/2019 3:59:28 PM
விளையாட்டு
கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு டைசனிடம் செரினா பயிற்சி: ரசிகர்கள் உற்சாகம்
வாஷிங்டன்: பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு  தீவிரமாக தயாராகி வருகிறார். இந்நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், செரினாவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.  குத்துச்சண்டையில் உள்ள நுட்பங்களை செரினாவிற்கு அவர் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்த வீடியோவை மைக் டைசன் தனது ட்விட்டர்  பக்ககத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இவருடன் நான் ரிங்கில் களமிறங்க விரும்பவில்லை.மிகவும் அன்பான, மரியாதை உள்ளவர்’ என்று  பதிவிட்டுள்ளார். வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் என்பதால் அதில் வெற்றி பெறும் முனைப்பில் செரினா  உள்ளார். குத்துச்சண்டை ஜாம்பவானும், டென்னிஸ் ஜாம்பானும் இணைந்து பயிற்சி பெற்ற வீடியே இணையத்தில் ரசிகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது. மைக் டைசனிடம் பயிற்சி பெறும் வீடியோவை செரினா வில்லியம்ஸ் மற்றும்  அவரது பயிற்சியாளரும் தங்களது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
127,510
12/23/2019 3:59:47 PM
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாதனை 17 முறை சேஸ் செய்த ‘300 பிளஸ்’: சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா முதலிடம்
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20  தொடரை விண்டீஸ் அணி இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நேற்று நடைபெற்றது. முதல் இரண்டு ஒருநாள்  போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. கட்டாக்கில் நடைபெற்ற  கடைசி போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணிக்கு, நிக்கோலஸ் பூரான் 89 ரன்களும், ஷாய் ஹோப் 42 ரன்களும் எடுத்ததால், 50 ஓவர்கள் முடிவில் 5  விக்கெட்டுகளை இழந்த விண்டீஸ் அணி 315 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய  இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா 63 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும், விராட் கோஹ்லி 85 ரன்களும் எடுத்து கைகொடுத்ததால் 48.5  ஓவரிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் 300 மற்றும் அதற்கு அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்றதன் மூலம், அதிகமுறை ஒருநாள் போட்டிகளில் 300  ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை 17 முறை 300க்கும் மேற்பட்ட  ரன்களை சேஸ் செய்து வென்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து  11 முறை, ஆஸ்திரேலியா  10 முறை, இலங்கை  10 முறை,  தென்னாபிரிக்கா 6 முறை, பாகிஸ்தான் 6 முறை என்ற நிலையில் பட்டியலில் உள்ளன.
127,511
12/23/2019 4:00:04 PM
விளையாட்டு
பிஃபா யு-17 மகளிர் கோப்பை: முதன்முறையாக குஜராத்தில் நடக்கிறது
அகமதாபாத்: பிஃபா யு - 17 மகளிர் உலகக் கோப்பை - 2020 குஜராத் மாநிலம் அகமதாபாத் டிரான்ஸ்ஸ்டியா போட்டிக்கான தற்காலிக இடமாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எல்.ஓ.சி இயக்குனர் ரோமா கன்னா கூறுைகயில், “அகமதாபாத்திற்கு தற்காலிக அனுமதி  வழங்கப்பட்டுள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஃபிஃபா யு -17 மகளிர் உலகக் கோப்பை இந்தியா - 2020 நடப்பதால், குஜராத் அரசு தனது முழு  ஆதரவையும் உதவிகளையும் செய்துள்ளது. டிரான்ஸ் ஸ்டாடியா தற்போது நாட்டின் மிகச் சிறந்த வசதிகளில் ஒன்றான மைதானம்.  மேலும் இந்திய  கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான இப்போட்டிக்கு ஆதரவளித்த அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களைத்  தெரிவிக்க விரும்புகிறோம்’’ என்றார். குஜராத்தின் விளையாட்டு அமைச்சர் ஈஸ்வர்சிங் படேல் கூறுகையில், “நாட்டில் பெண்களுக்கான முதல் பிஃபா போட்டியை நடத்துவது குஜராத்துக்கு  கிடைத்த மிகப்பெரிய மரியாதை. போட்டியை வெற்றிகரமாக ஆக்குவதில் எங்களது அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்ற நாங்கள் முழுமையாக  கடமைப்பட்டுள்ளோம். இந்த போட்டி அடுத்த ஆண்டு நவ. 2 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று பிஃபா குழு அறிவித்துள்ளது’’ என்றார்.
127,512
12/24/2019 2:31:27 PM
தமிழகம்
பண மதிப்பிழப்பு நேரத்தில் அரசு சத்துணவு கான்ட்ராக்டருக்கு சசிகலா கொடுத்த 237 கோடி
சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா தொழிலதிபர்களை மிரட்டி செல்லாத நோட்டுக்களை கொடுத்து சொத்துக்களை வாங்கி குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த காலகட்டத்தில் அரசு  சத்துணவு கான்ட்ராக்டர் ஒருவரை மிரட்டி செல்லாத பணம் ரூ.237 கோடிக்கு வட்டியுடன் புதிய ரூபாய் நோட்டுகள் திருப்பித்தர சசிகலா ஒப்பந்தம் போட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தற்போது சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக்கோரி சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நேரத்தில் சசிகலா தொழிலதிபர்களை மிரட்டி செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை கொடுத்து ரூ.1674 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மால்கள், தொழிற்சாலைகள், எஸ்டேட்டுகள் என சசிகலா வாங்கிக்குவித்த சொத்துக்களின் முழு பட்டியலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் வருமானவரித்துறை அறிக்கையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அவை வருமாறு: நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகத்தில் கடந்த 2017 நவம்பர் 9ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடந்தது. அப்போது அங்கு கிடைத்த ஒரு நோட்டில் சில தாள்கள் இருந்தன. இந்த நோட்டும், தாள்களும் சசிகலா உறவினர் சென்னை தி.நகரில் உள்ள டி.என்.அரிச்சந்தனா எஸ்டேட் நிறுவனத்தின் சிவக்குமாருக்கு தொடர்புடையது என அங்கிருந்த மேலாளர் பாலாஜி தெரிவித்தார். இந்த தாளில் சிலருக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.இதையடுத்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தில், 2016 நவம்பர் 8ம் தேதி அப்போலோவில் வந்து தன்னை சந்திக்குமாறு சசிகலா கூறினார். அதன்படி அப்போலோ சென்று சசிகலாவை சந்தித்தேன்.அப்போது திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி பிரைடு கிராம் தொழிற்சாலையின் உரிமையாளர் குமாரசாமியிடம் பேசி, செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும்படி கூறினார்.குமாரசாமி மதிய உணவு திட்டத்துக்கு மளிகை பொருட்கள் சப்ளை செய்யும் அரசு கான்ட்ராக்ட் எடுத்திருந்தார். சசிகலா ஆலோசனைப்படி நான் குமாரசாமியை சந்தித்து, ரூ.240 கோடி செல்லாத நோட்டுக்கள் தருவோம். அதற்கு பதிலாக ஒரு வருடம் கழித்து 6 சதவீத வட்டியுடன் ரூ.2000 புது நோட்டுக்களாக தர வேண்டும் என்று டீல் பேசி, பணம் கைமாறியது. பழைய நோட்டுக்களை மாற்ற அவகாசம் அளிக்கப்பட்ட கடைசி நாளுக்கு முந்தைய நாள் கைமாற்றப்பட்டது. இந்த பணத்தை சென்னை தி.நகர் வன்னியர் தெருவில் உள்ள காட்டேஜ் பில்டு ரிசார்ட் நிறுவனத்தில் இருந்து முதல் தவணையாக டிசம்பர் 29 அன்று ரூ.101 கோடி, 2வது தவணையாக டிசம்பர் 30 ரூ.136 கோடி என 237 கோடி வழங்கப்பட்டது. பேசிய 240 கோடியில், 237 கோடி மட்டும் இரு தவணைகளாக வழங்கப்பட்டது. இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக 2018 ஜூலை 5ம் தேதி திருச்செங்கோட்டில் உள்ள குமாரசாமிக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது குமாரசாமியும், அவரது மருமகன் திருப்பதியும் சசிகலா மூலம் பணம் வாங்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதுதவிர ரூ.1911.50 கோடி வருமானம் வந்துள்ளது. அதை சசிகலா வெளியில் காட்டவில்லை. வருமானவரியும் செலுத்தவில்லை. மேலும் நமது எம்ஜிஆர் நாளிதழில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சியினர் பெயரில் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்துள்ளனர். ஆனால் கட்சியினரிடம் விசாரித்த போது நாங்கள் யாரும் விளம்பரம் தர வில்லை என்று தெரிவித்துள்ளனர். சசிகலாவே அந்த விளம்பரத்தை வெளியிட்டு வருமானம் வந்தது போல் காட்டி, பல கோடிக்கு கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றி உள்ளார். இவ்வாறு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.யார் இந்த கிறிஸ்டி நிறுவனம்?திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு சொந்தமான கிறிஸ்டி நிறுவனம் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு பணிகளில் பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்துள்ளது. குறிப்பாக, முட்டை கொள்முதல், சத்துணவு திட்டத்திற்கு பருப்பு மற்றும் சத்து மாவு வழங்குவது உள்ளிட்ட டெண்டர்களை எடுத்துள்ளது. முட்டை டெண்டர் இந்த நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு முன்பு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கான்ட்ராக்டர்களுக்குதான் டெண்டர் வழங்கப்பட்டு வந்தது. இவர்கள் வந்த பின்பு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு டெண்டர் விடப்பட்டது. ஒட்டு மொத்தமாக கிறிஸ்டி நிறுவனத்திற்கு முட்டை கொள்முதல் டெண்டர் விடப்பட்டதால், பல கோடி ரூபாய்களில் கமிஷன் கைமாறியது. மேலும், பல கோடி ரூபாய் அளவில் முறைகேடுகளும் நடந்தது.அரசு டெண்டர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெறும். அதன்படி, இந்த முட்டை டெண்டரும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி மேற்பார்வையில் நடந்தது. இவர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர். கிறிஸ்டி நிறுவனத்தின் வற்புறுத்தலாலேயே இந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி தமிழகத்திற்கு மாற்றப்பட்டதாகவும், கிறிஸ்டி நிறுவனத்திற்கு முட்டை டெண்டர் கிடைக்க வேண்டும் என்பதாலேயே இவரை நியமித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, மதிய உணவு திட்டத்திற்கு வழங்கப்படும் பருப்பு, சத்து மாவு ஆகிய டெண்டரும் கிறிஸ்டி நிறுவனம்  எடுத்துள்ளது. இந்த டெண்டரிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை 5 முதல் ஒரு வாரம் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டில் பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, சசிகலா வீட்டில் நடந்த ஐடி சோதனையிலும் இதுதொடர்பான துண்டுச்சீட்டு சிக்கி உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
127,513
12/24/2019 2:33:51 PM
தமிழகம்
காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம்: மு.க.ஸ்டாலினுக்கு சம்மன்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 7 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. கடந்த 2018, ஏப்ரல் மாதம் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடந்ததாக கூறி மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், ஸ்டாலின் உள்ளிட்டோர் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்து, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா, சரத்குமார், காதர் மொய்தீன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் நாளை மறுநாள் (26ம் தேதி) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு மீண்டும் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
127,514
12/24/2019 2:35:39 PM
தமிழகம்
வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்தனர்: கிறிஸ்துமஸ் கோலாகலம்
நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகைைய முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இது கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று.இத்தகைய சிறப்புடைய வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை கிறிஸ்துமஸ் விழாகோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு ஆலயத்தில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன்பிறகு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வழக்கமாக விழா காலங்களில் பேராலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்தாண்டு முதன் முறையாக லேசர் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக இந்த விளக்கு அலங்காரம் இருக்கும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பேராலயம் பல வண்ணங்களில் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. விண்மீன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய பாதை, கீழ் கோயிலுக்கு செல்லக்கூடிய பாதை, தியான மண்டபம் ஆகிய இடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இதனால் வேளாங்கண்ணி பேராலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது.பக்தர்கள் வசதிக்காக குடந்தை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
127,515
12/24/2019 2:40:59 PM
தமிழகம்
2வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பாஜக-வின் 71% ஆட்சி நிலப்பரப்பு 35% ஆக சரிந்தது எப்படி?
புதுடெல்லி: மத்தியில் பாஜ தலைமையிலான கட்சி 2வது முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், அக்கட்சி 71 சதவீத நிலப்பரப்பில் ஆட்சியில் இருந்த நிலையில், தற்போது 35 சதவீதமாக சரிந்துள்ளது. பாஜ எதிர்ப்பால், ஓராண்டில் 5 மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.கடந்த 2014ம் ஆண்டை தொடர்ந்து, நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜ கட்சி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சில மாநிலங்களில் ஆட்சிகளை இழந்துள்ளது. அதன்படி, 2017ம் ஆண்டு நிலவரப்படி, பாஜக தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தது. ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக இருந்தது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலான மாநிலங்களில் தனியாகவோ, கூட்டணியிலோ பாஜக ஆட்சி நடத்தி வந்தது.அதாவது, 2017ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மொத்த பரப்பில் 71 சதவீத பரப்பளவில் பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை ‌பறிகொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் ஆட்சியை இழந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிராவிலும் ஆட்சியை பறிகொடுத்தது. இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கூட்டணியை இழந்தது.மாறாக, கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. ஜார்க்கண்ட் தேர்தலுக்கு முன் 40 சதவீதம் என்ற நிலையில் இருந்து தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த பரப்பில் பாஜக வசமுள்ள மாநில ஆட்சிகளின் பங்கு 35 சதவீதமாக சரிந்துள்ளது. இந்திய வரைபடத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களும் பரப்பளவும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடந்த, மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 543 இடங்களில் 303 இடங்களை வென்றது. 2014ம் ஆண்டின் முற்பகுதியில் வெறும் 7 மாநிலங்களை வைத்திருந்ததோடு, 2018க்குள் 21 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது.ஆனால், பாஜகவின் ஆட்சியில் இருந்து வெளியேறும் மாநிலங்களின் பட்டியலில் ஜார்கண்ட் இணைந்துள்ள நிலையில், அதன் பாதிப்புகள் அடுத்தாண்டு நடக்கவுள்ள டெல்லி மற்றும் பீகார் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும். பிரதமர் மோடி பொதுத் தேர்தலில் பாஜகவை ஒரு மகத்தான வெற்றியை நோக்கி அழைத்து சென்றிருந்தாலும்கூட, கடந்த 7 மாதத்திற்கு முன் பாஜகவின் வாக்கு சதவீதம் ஜார்கண்டில் 55 சதவீதத்திற்கும், அரியானாவில் 58 சதவீதமாகவும் இருந்தது. ஆனால் தற்ேபாது முறையே 33 சதவீதமாகவும் 36 சதவீதமாகவும் சரிந்ததுள்ளது.ஜார்க்கண்டில் சமீபத்திய வெற்றியுடன் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏழு மாநிலங்களில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், அதன் கடைசி இரண்டு வெற்றிகளும் கூட்டணி ஆதரவுடன் கிடைத்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், ​​மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் கூட்டணி கட்சிகளான சிவசேனா தலைமையிலும், ஜார்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலும் ஆட்சியில் பங்கு பெற்றுள்ளது.மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற 2 சட்டமன்றத் தேர்தல்களில், அரியானாவில் பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறவில்லை. அங்கு, தேர்தல் பின்னர் ஏற்பட்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜன்னாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. மகாராஷ்டிராவில் கூட்டணியில் அங்கம் வகித்த சிவசேனா, திடீரென காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றி பாஜகவுக்கு சவால் விடும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தத்தில், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் பின்னடைவுகளுடன், 2019ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்துடன் பாஜக தனது ஐந்தாவது இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஜார்க்கண்ட் தோல்வி ஏன்?குடியுரிமை (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜார்கண்டில் நடந்த ஐந்து கட்ட வாக்குப்பதிவின் கடைசி இரண்டு கட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு போன்றவற்றை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களால் பாஜபெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும், சுதேஷ் மகாடோவின் ஏ.ஜே.எஸ்.யு கட்சியுடனான கூட்டணியை முன்னெடுக்க பாஜக தவறியதும், அக்கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு  அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டம், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி,  வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன.சோனியா தலைமையில் 2 வெற்றிகடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதால், கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதையடுத்து, அவரின் தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சில மாநிலங்களில் இடைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. அதில் கணிசமான இடங்களையும் கைப்பற்றியது. மேலும், குறைந்தளவு எண்ணிக்கையில் இடங்களை கைப்பற்றினாலும்கூட, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. அதேபோல், ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்துள்ளது. அதனால், சோனியா காந்தி தலைமையில், பாஜ ஆட்சி செய்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.27ம் தேதி பதவியேற்பு விழாஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் இறுதியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜக 25, ஜே.எம்.எம் 30, காங்கிரஸ் 16, ஆர்.ஜே.டி 1 (கூட்டணி 47), ஏஜெஎஸ் 2, ஜே.வி.எம் (பி) 3, என்சிபி 1, சிபிஐ (எம்எல்) (எல்) 1, சுயேட்சை 2 இடங்கள் என, 81 தொகுதிக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஜே.எம்.எம் தலைவர் ஹேமந்த் சோரன், வரும் 27ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை பட்டியல் ஜே.எம்.எம் கட்சியில் 6 அமைச்சர்கள், காங்கிரசுக்கு 5 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி, ஆர்.ஜே.டி-க்கு  ஒரு அமைச்சரவை இடங்கள் ஒதுக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று காலை 11 மணிக்கு நடத்தியது. அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், ஹேமந்த் சோரனும் அம்மாநில ஆளுநர் துருபதி முர்முவைச் சந்தித்து ஆட்சிமைக்க உரிமை கோர உள்ளார். முன்னதாக பாஜ முதல்வராக இருந்த ரகுபர் தாஸ், தனது முதல்வர் பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்தார்.
127,516
12/24/2019 2:46:32 PM
தமிழகம்
வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கல் அதிமுக முன்னாள் சேர்மன் வீட்டில் ரூ.38 லட்சம், மது பாட்டில் பறிமுதல்
சாயல்குடி: அதிமுக முன்னாள் சேர்மன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.38 லட்சம் மற்றும் 1,192 வெளி மாநில மது பாட்டில்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் பாலு. அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த முறை கமுதி யூனியன் சேர்மனாக இருந்தார். இவரது தந்தை தர்மலிங்கம் அரசு ஒப்பந்ததாரராகவும் பைனான்சியராகவும் உள்ளார். தற்போது பாலு கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும் இவரது தாயார் ராணியம்மாள் மண்டலமாணிக்கம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் தடபுடல் விருந்துகளுடன், வாக்காளர்களை கவனித்து, கவரும் பணியில் தொடர்ந்து இவர்கள் ஈடுபட்டுவருவதாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் எஸ்பி வருண்குமார் உத்தரவின்படி, போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பாலுவின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தி, அவரது வீட்டில் இருந்து ரூ.38 லட்சத்து 67 ஆயிரத்து 300 மற்றும் 1,192 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கமுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,517
12/24/2019 2:47:59 PM
தமிழகம்
திருப்புவனம் அருகே போலீசார் சோதனையில் 23 டன் வெங்காயம் பறிமுதல்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வெங்காய லோடு ஏற்றிச்சென்ற லாரியை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நான்கு வழிச்சாலை நரிக்குடி ரோடு பிரிவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வெங்காய மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று வந்தது. போலீசார் கை காட்டியும் நிற்காமல் மதுரை நோக்கி வேகமாக சென்றது. இதனால் போக்குவரத்து போலீசார் விரட்டி சென்று தட்டான்குளம் பகுதியில் அந்த லாரியை மடக்கினர்.இதனிடையே பதுக்கல் வெங்காயத்தை கடத்திக் கொண்டு போவதாக கருதி பொதுமக்கள் கூடிவிட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும் தட்டான்குளம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் மதுரையில் வெங்காய மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர்தான் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வெங்காயத்தை கொண்டு வந்துள்ளார் என தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையிலான திமுகவினர் வந்து லாரியை முற்றுகையிட்டனர். திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி, எஸ்ஐ பாலமுருகன் லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் லாரியை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.இதுபற்றி தாசில்தார் மூர்த்தி கூறுகையில், ‘‘லாரியை ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். குஜராத்தில் இருந்து தென்காசி அருகே உள்ள பாவாசத்திரத்துக்கு லாரி செல்வதாக தெரிவித்தார். இப்பகுதிக்கு வழிதவறி வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். லாரியில் 425 சிப்பத்தில் பெரிய வெங்காயம் 23 டன் இருப்பதாக பில் உள்ளது. ஆவணங்களை லாரி உரிமையாளர் கொண்டு வருகிறார். அதுவரை லாரியை தாலுகா அலுவலகத்தில் வைத்துள்ளோம். லாரியை எதற்காக நிறுத்தாமல் சென்றார் என்றும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
127,518
12/24/2019 2:49:57 PM
தமிழகம்
வாக்காளர்களுக்கு கொண்டு சென்றார்களா? பணம், காமாட்சி விளக்குகள் பறிமுதல்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட காமாட்சி விளக்குகள், பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே வண்ணான்குடிக்காடு கிராமத்தில் செல்வமணி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சாரதி என்பவர் வடலூரில் உள்ள தனது உறவினர் மருத்துவ செலவிற்காக ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 எடுத்து செல்வதாக கூறினார்.  ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லாததாலும் வடலூர் செல்வதற்கு அரியலூர் நோக்கி பயணம் செய்வதை பற்றி கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணான பதில் கூறியதாலும் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.ஆண்டிமடம் அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் 100 காட்சி விளக்குகள் மற்றும் 100 சில்வர் தட்டுடன் காரில் செல்லும்போது மடக்கி பிடித்த தேர்தல் பறக்கும் படையினர், ஆவணம் இன்றி எடுத்துச் சென்றதால் அவற்றை கைப்பற்றி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சில்வர் தட்டுக்கள் பறிமுதல்பெரம்பலூர் ஒன்றிய பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொம்மனப்பாடியில் கிராம ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் செங்கமலை என்பவர் சில்வர் தட்டுகளை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த 46 சில்வர் தட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
127,519
12/24/2019 2:51:44 PM
தமிழகம்
கடற்கரையில் விளையாடியபோது கடல் அலையில் இழுத்துச் சென்ற அண்ணன், தங்கை பரிதாப சாவு
புதுச்சேரி: கடற்கரையில் விளையாடியபோது அலையில் இழுத்துச்செல்லப்பட்ட அண்ணன், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபன் (35). இவர் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மளிகை கடையில் வேலை செய்கிறார். இவரது மனைவி கவிதா (எ) தமிழரசி. இவர்களுக்கு நித்திஷ் (7) என்ற மகனும், தன்ஷிகா (5) என்ற மகளும் இருந்தனர். புதுவை- கடலூர் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் நித்திஷ் 3ம் வகுப்பும், தன்ஷிகா யுகேஜியும் படித்து வந்தனர்.தற்போது புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கவிதாவின் தாயார் சுந்தரி வீட்டிற்கு நித்திசும், தன்ஷிகாவும் சென்றனர். நேற்று மாலை நித்திசும், தன்ஷிகாவும் வம்பாகீரப்பாளையம் பகுதியில் கலங்கரை விளக்கம் அருகே உள்ள பாண்டி மெரினா கடற்கரையில் விளையாடியபோது திடீரென ராட்சத அலையில் சிக்கி நித்திஷ், தன்ஷிகா ஆகியோர் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள், இறங்கி அவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, இருவரும் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,520
12/24/2019 2:53:59 PM
குற்றம்
உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி திருமணத்துக்கு எதிர்ப்பு: கற்பூர வியாபாரி சரமாரி குத்திக்கொலை
தண்டையார்பேட்டை: உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கற்பூர வியாபாரி சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர் (எ) அம்மன் சேகர் (54). அதே பகுதியில் கற்பூர வியாபாரம் செய்து வந்தார். இவர், நேற்றிரவு புதுவண்ணாரப்பேட்டை  துறைமுகம் குடியிருப்பு விளையாட்டு மைதானம் அருகே ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சேகரின் சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:சேகருக்கும், திருவொற்றியூர் சாத்மா நகரை சேர்ந்த பவித்ரா (23) என்ற இளம்பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு  சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் பவித்ராவுக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் ஈடுபட்டனர். இது சேகருக்கு தெரியவர, பவித்ராவை சந்தித்து “நீ திருமணம் செய்ய கூடாது. என்னுடன்தான் வாழ வேண்டும்” என வற்புறுத்தியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஜாலியாக இருந்த ஆபாச படத்தை பவித்ராவிடம் காட்டி சேகர் மிரட்டியுள்ளார். இது பவித்ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று சேகரும், பவித்ராவும் அடையாறு, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஜாலியாக பைக்கில் சுற்றிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு விளையாட்டு திடல் அருகே வந்ததும் பைக்கை நிறுத்தி விட்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது, ‘உங்களுக்கு ஒரு பரிசு தர உள்ளேன், கண்களை மூடுங்கள்’ என்று சேகரிடம் பவித்ரா கூறியுள்ளார். உடனே சேகரும் கண்களை  மூட, மறைத்து வைத்திருந்த ஸ்பிரேயை முகத்தில் அடித்து, சேகரின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பினார் பவித்ரா. இதை சற்றும் எதிர்பாராத சேகர், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். வலியையும் பொருட்படுத்தாமல் பைக்கை இயக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் சிறிது தூரம் சென்றதும், மயங்கி கீழே சாய்ந்து பரிதாபமாக இறந்தார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த பவித்ராவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
127,521
12/24/2019 2:55:52 PM
தமிழகம்
46வது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: தந்தை பெரியாரின் 46வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 46ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரின் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் ரங்கநாதன், மோகன்,  சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் அமைச்சர் ரகுமான் கான், திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகர் ராஜா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஈரோட்டு பூகம்பம்மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஈரோட்டு  பூகம்பம் என முத்தமிழறிஞர் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆகிறது. ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு தேவை. அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும். வாழ்க பெரியார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
127,522
12/24/2019 2:58:00 PM
இந்தியா
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருநள்ளாறு கோயிலில் தரிசனம்
காரைக்கால்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். அவர் இன்று காலை திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.  அவருடன் கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.  அங்கு அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் காரில் ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு சென்றார். ஜனாதிபதி வந்ததையொட்டி புதுச்சேரி ஐ.ஜி மற்றும் எஸ்.எஸ்.பி மகேஷ்குமார் பன்வால் தலைமையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி சென்ற வழி எங்கும் 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. நேற்றும், இன்றும் பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காரைக்கால் மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதுக்கடைகள் மூடப்பட்டன. 1984ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி திருநள்ளாறு கோயிலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
127,523
12/24/2019 2:59:51 PM
தமிழகம்
தம்பி தூக்கிட்டு தற்கொலை பிரிவை தாங்க முடியாமல் அண்ணனும் அதே இடத்தில் தற்கொலை
தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு, காசிதோட்டம், 2வது தெருவை சேர்ந்தவர் அலெக் சாண்டர் (48). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் இருதயராஜ் (24), பி.டெக் படித்துள்ளார். இளைய மகன் ஆரோக்கிய ஆகாஷ் (23) பிஇ பட்டதாரி. 2வது மாடியில் உள்ள அறையில் இருதயராஜும், 3வது மாடியில் உள்ள அறையில் ஆரோக்கிய ஆகாசும் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு ஆரோக்கிய ஆகாஷ், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே நண்பரும், 2வது மாடியில் இருந்த இருதயராஜும் 3வது மாடியில் தங்கியிருக்கும் ஆரோக்கிய ஆகாஷ் அறைக்கு சென்றனர்.  அங்கு ஆரோக்கிய ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் ஆரோக்கிய ஆகாஷை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆரோக்கிய ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார், ஆரோக்கிய ஆகாஷின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மருத்துவமனைக்கு வந்த இருதயராஜை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து அவரை பெற்றோர் தேடினர். 3வது மாடியில் ஆரோக்கிய ஆகாஷ் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, ஆரோக்கிய ஆகாஷ் இறந்த அதே இடத்தில் அதே துணியில் இருதயராஜும் தூக்குப்போட்டு  தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஆரோக்கிய ஆகாஷ் பிரபல தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். போதைக்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து ஆரோக்கிய ஆகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. தம்பியின் பிரிவை தாங்க முடியாமல் இருதயராஜ், அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொறியியல் பட்டதாரியான அண்ணன், தம்பி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,524
12/24/2019 3:03:20 PM
இந்தியா
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது: உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து
புதுடெல்லி: ‘குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’ என்று உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகூர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி மதன் லோகூர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றார்.  கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பிஜி தீவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. நாடாளுமன்ற விவாதத்தின்போதே சட்டப்பிரிவு 14-ன் கீழ் கூறப்பட்டுள்ள சமத்துவத்தை உறுதி செய்வது மறக்கப்பட்டுவிட்டது. டிச. 11ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமானது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்தச் சட்டத்தை எதிர்த்து நிகழ்ந்துவரும் போராட்டங்களில் குறைந்தது 24 பேர் பலியாகியுள்னர். ஐதராபாத்தில் பெண் டாக்டர் திஷா பாலியல் பலாத்காரம் செய்து எரித்து ெகால்லப்பட்டவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் காவல்துறையினரால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டருக்கும் சட்டத்தை மீறிய கொலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. தெலங்கானாவில் நடந்திருப்பது சட்டத்தை மீறிய கொலை. எந்த போலீசாரின் உயிருக்காவது ஆபத்து வந்ததா? விசாரணையின்போது நான்கு பேரையும் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? 2018ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மேலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், செய்தியாளர் சந்திப்பின்போது, அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அந்த சந்திப்பில், அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி செல்லமேஷ்வர், நீதிபதி குரியன் ஜோசப் ஆகியோருடன் நீதிபதி மதன் லோகூரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
127,525
12/24/2019 3:07:04 PM
குற்றம்
பிரபல மாடல் அழகி மர்மச்சாவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையை சேர்ந்தவர் ஜேஜி ஜாண் (45). பிரபல மாடல் அழகி மற்றும் பாடகி. இவர் டிவிக்களில் ஏராளமான சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி பிரபலமானவர். சில ஆண்டுகளாக திருவனந்தபுரம் குறவன்கோணத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது வயதான தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜேஜி ஜாணின் நண்பர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவரது செல்போனுக்கு தொடர்புக்கொண்டிருக்கிறார். பலமுறை அழைத்தும் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த விவரத்தை நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள இன்னொரு நண்பரிடம் கூறி விசாரித்து இருக்கிறார். இதையடுத்து அந்த நண்பர் நேற்று இரவு ஜேஜி ஜாணின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டார். பலமுறை கதவை தட்டியும் யாரும் திறக்க முன் வரவில்லை.இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூர்க்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜேஜி ஜாண் சமையல் அறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே ஜேஜி ஜாணின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி அவரது தாயிடம்போலீசார் விசாரித்தனர். ஜேஜி ஜாண் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அதன் பிறகு தாயுடன் தான் வசித்துள்ளார். பக்கத்து வீட்டினருடனும் எந்தவித தொடர்பும் வைக்கவில்லை. அவர் தற்கொலை செய்தாரா, தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
127,526
12/24/2019 3:11:00 PM
தமிழகம்
பாஜவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது: நெல்லையில் சஞ்சய்தத் பேட்டி
நெல்லை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி நெல்லையில் நேற்று காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை முடித்து வைத்து காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் அளித்த பேட்டி: நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பாஜ, பண மதிப்பிழப்பு மூலம் சாமானிய மக்களை திண்டாட வைத்தது. ஜிஎஸ்டியை கொண்டுவந்து தொழில் வர்த்தகத்தை சீரழித்தது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என பொய்யான வாக்குறுதி அளித்து இளைஞர்களை ஏமாற்றினர். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலைவாய்ப்பின்மை 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாஜ ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. பாஜ நிர்வாகிகளே அவ்வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளனர்.இவ்வளவு பிரச்னைகளுக்கு பின்னரும் மத்திய அரசு மதத்தின் பெயரால் மக்களை பிரித்து ஆட்சி நடத்துகிறது. பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இருப்பதால் குடியுரிமை திருத்த சட்டத்தை எளிதாக நிறைவேற்றிவிட்டனர். பிரிட்டிஷ் அரசு எப்படி பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி இந்தியாவை ஆண்டதோ, அதே மாதிரி பாஜ அரசும் மக்களை மதத்தின் பெயரால் பிளவுப்படுத்தி ஆள நினைக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருகிறது. பல மாநிலங்களில் அக்கட்சியின் ஆட்சி காணாமல் போய் விட்டது. மத்திய பாஜ அரசின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. அதிமுக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. பிரதமர் மோடியின் டியூனுக்கு ஏற்றாற்போல் இங்குள்ளவர்கள் ஆடுகின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் எனக்கூறுவோர், இலங்கை தமிழர்களின் குடியுரிமை பற்றி பேச தயாரில்லை. இவ்வாறு கூறினார்.
127,527
12/25/2019 2:27:54 PM
இந்தியா
என்ஆர்பி, என்ஆர்சிக்கு அமைச்சரவை ஒப்புதல்: 30 லட்சம் பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு
புதுடெல்லி: என்ஆர்பி, என்ஆர்சி ஆகிய கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், அதற்கான கணக்கெடுப்பை நடத்த 30 லட்சம்  பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2021ல் ேதசிய குடிமக்கள்  பதிவேடு (என்ஆர்சி) கணக்கெடுப்பு நடத்தவும், தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) பதிவேட்டை புதுப்பிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த  திட்டங்களோடு நிலத்தடி நீர் மேலாண்மை திட்டம், ரயில்வே துறையை புனரமைக்கும் திட்டம், முப்படைகளுக்குத் தனியாக புதிய தலைமை உருவாக்கும் திட்டம்  ஆகியவற்றிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் நாட்டில் உள்ள சுற்றுலா கட்டமைப்புகளை புனரமைத்து புதுப்பிக்க ரூ.2 ஆயிரத்து  400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ரூ. 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படும் இந்த மக்கள் தொகை  கணக்கெடுப்பை 2 கட்டங்களாக நடத்த மத்திய அமைச்சரவை வழி வகை செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 2020 ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம்  வரை நாட்டில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்தும் வீடுகளின் தன்மை குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பின், 2012 பிப்ரவரி 9ம் தேதி முதல்  தேசிய மக்கள் தொகை எண்ணிக்கையைக் கணக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பை நடத்த நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும்  தரவுகள் செல்போன் மூலமாக மத்திய மக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுக்கு ஒரு முறை  நடத்தப்படுவது வழக்கம். அதன்படிதான் 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த முறை வீடுகள் குறித்தும் வீடுகளின் தன்மை குறித்தும்  கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
127,528
12/25/2019 2:28:48 PM
இந்தியா
வாஜ்பாயின் 95வது பிறந்த நாள்: லக்னோவில் 25 அடி உயர சிலை திறப்பு...ஜனாதிபதி உட்பட தலைவர்கள் மரியாதை
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள  அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை  செலுத்தினர். லக்னோவில் 25 அடி உயர வாஜ்பாய் சிலை திறக்கப்படுகிறது. பாஜ மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 95வது பிறந்தநாள்  இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக  மூத்த தலைவர் அத்வானி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர்  தூவி மரியாதை செலுத்தினர். நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக  அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்  உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு  அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார். இந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் அனந்தி பென் பாட்டீல், முதல்வர் யோகி ஆதித்யநாத்  உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதால் வழக்கமான பாதுகாப்பு  ஏற்பாடுகளை விட கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
127,529
12/25/2019 2:29:33 PM
இந்தியா
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது: முதல்வராக பதவியேற்கவுள்ள ஹேமந்த் சோரன் அறிவிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக வரும் 29ம் தேதி பதவியேற்கவுள்ள ஹேமந்த் சோரன், மாநிலத்தில் குடியுரிமைச் திருத்த சட்டம்  அமல்படுத்தப்படமாட்டாது என்று அறிவித்துள்ளார். பாஜகவின் ஐந்தாண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜார்க்கண்ட் மாநில  சட்டமன்ற  தேர்தல் முடிவுகள் வெளியானது. எதிர்க்கட்சியான  ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி, பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.  இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல்வராக வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ள ஹேமந்த் சோரன், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்  கூறியதாவது: மத்திய அரசு செயல்படுத்த விரும்பும் என்ஆர்சி மற்றும் சிஏஏ சட்ட ஆவணங்களை நான் பார்க்கவில்லை. மக்கள் இந்த சட்டங்களுக்கு எதிராக சாலைகளில் போராடுகின்றனர். நாங்கள் ஜார்க்கண்டில் அச்சட்டங்களை செயல்படுத்தமாட்டோம். இந்தச் சட்டத்தின்படி, ஒரு  ஜார்கண்டி கூட அவரது வீட்டிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றியானது,  ஜனநாயகத்திற்கான வெற்றி; பாஜக மாநிலத்தில் நடைமுறைப்படுத்திய பிளவு கொள்கைகளுக்கு எதிரானது. மாநிலத்தில் உள்ளூர் பிரச்னைகளுக்கு முன்னுரிமை  அளிக்கப்படும். அவர்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும். நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க நில உரிமைச் சட்டத்தில் கவனம் செலுத்தப் போகிறேன். பொது விநியோக முறையுடன் ஆதாரை நீக்குவது மற்றும் பொது  விநியோக முறையை மறுஆய்வு செய்து குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். வேலை வாய்ப்பின்மையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது  சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை புதுப்பிக்கப்படும். புதிய அரசாங்கத்தின் பங்களிப்பில் பழங்குடியினர், பின்தங்கியவர்கள் மற்றும் சிறுபான்மையினரின்  நலன் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
127,530
12/25/2019 2:30:13 PM
தமிழகம்
கொடநாடு எஸ்டேட் யாருக்கு சொந்தம் சசிகலா ஆடிட்டர் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சசிகலா சொத்து குவித்தது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்த அறிக்கையில் தினமும் ஒரு பரபரப்பு தகவல்  வெளியாகிக்கொண்டிருக்கிறது. அந்தவரிசையில் தற்போது கொடநாடு எஸ்டேட் பங்குதாரர் பொறுப்பில் இருந்து சசிகலா விலகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தற்போது சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு  பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக்கோரி  சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டது.அதில், மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நேரத்தில் சசிகலா தொழிலதிபர்களை மிரட்டி செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை கொடுத்து  மால்கள், எஸ்டேட்டுகள், தொழில் நிறுவனங்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருச்செங்கோடு தொழில்அதிபர் குமாரசாமியிடம் செல்லாத  நோட்டு ரூ.237 கோடியை கொடுத்து, ஒரு வருடம் கழித்து 6 சதவீத வட்டியுடன் புதுப்பணமாக தர வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் பேரம் பேசப்பட்டதாக  கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கையில் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் பற்றியும்,  மேலும் பல தகவல்களும் இடம்பெற்றுள்ளது. அவை வருமாறு: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத நோட்டுக்களை வைத்து சசிகலா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வந்த புகாரின்  பேரில், சசிகலா 5 நாள் பரோலில் வந்து விட்டு சென்ற பிறகு 2017 மார்ச்சில் போயஸ் கார்டன் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில்  சுமார் 1,900 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி குவித்தது, தொழிலதிபருக்கு கடன் கொடுத்தது அம்பலமானது.மேலும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ஒரு புத்தகம் கைப்பற்றப்பட்டது. அதில், கொடநாடு எஸ்டேட், ராயல் வேலி புளோரிடேல் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிக்கேஷன்ஸ், சசி எண்டர் பிரைசஸ், ஜெய பார்ம்  ஹவுஸ், ஜெஎஸ் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஆகிய நிறுவனங்களில் ஜெயலலிதா இறக்கும் வரை(டிச 5, 2016) சசிகலா பங்குதாரராக இருந்துள்ளார். மேலும்  இந்தோ தோகா கெமிக்கல் நிறுவனம், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் சசிகலா பங்குதாரராகவும், ஜாஸ் சினிமாசில் ரூ.41.66 லட்சம், அரே  லேண்ட் நிறுவனத்தில் ரூ.3.6 லட்சம், மாபிள் ஷேட் காம் நிறுவனத்தில் 7.2 லட்சம், ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் நிறுவனத்தில் ரூ.36,000 ஷேர் ஹோல்டராகவும்  சசிகலா இருந்துள்ளார். மேலும் நமது எம்ஜிஆர், ஜெயா பப்ளிக்கேஷன்சையும் சசிகலாவே நிர்வகித்து வந்துள்ளார்.சொத்துக்களை வாங்கி குவித்தது, பங்குதாரராக இருப்பது பற்றியெல்லாம் விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு, 2017 அக்டோபர் 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அதில் 22ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சசிகலாவின் ஆடிட்டர் தரப்பில் இருந்து 22ம் தேதி அளிக்கப்பட்ட  பதிலில், 19ம் தேதி தான் எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. 3 நாட்களுக்குள் பதில் அளிக்க சாத்தியமில்லை. அதுவுமில்லாமல் சசிகலா சிறையில் இருப்பதால்  அவரை நேரடியாக சந்திப்பதில் சிக்கல் உள்ளது. எனவே பதில் அளிக்க 1 மாதம் அவகாசம் கேட்டிருந்தார். அதன்படி 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்  சசிகலா தரப்பு ஆடிட்டர் டிசம்பர் 11ம் தேதி விளக்கம் அளித்தார்.அதில், டிசம்பர் 2016 வரை (ஜெயலலிதா இறப்பு வரை) மட்டுமே மேற்கண்ட நிறுவனங்களில் சசிகலா பங்குதாரராக இருந்தார். அதன்பிறகு அவர் பங்குதாரர்  பொறுப்பில் இருந்து விலகி விட்டார். இதன்பிறகு தனக்கு சொந்தமான வணிக ரீதியிலான தொழில்களை மட்டுமே சசிகலா செய்து வருகிறார். இவ்வாறு ஆடிட்டர்  அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லாம் சிறையில் சசிகலாவை சந்தித்து வருமானவரித்துறை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால்  செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியது பற்றியும், தொழிலதிபருக்கு கடன் கொடுத்தது பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என சசிகலா  கூறி விட்டார். இவ்வாறு வருமானவரித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சசிகலா வசம் இருப்பதாக கூறப்படும் சொத்துக்களில் கொடநாடு எஸ்டேட் மிக மிக்கியமானது. இங்கு தான் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பார். இந்த  எஸ்டேட்டில் ஜெயலலிதா இருக்கும் வரை பங்குதாரராக இருந்ததாக சசிகலா தெரிவித்துள்ளார். அதன்பிறகு அந்த எஸ்டேட்டை நிர்வகிப்பது யார் என்ற விவரம்  தெரியவில்லை. இதனால் கொடநாடு எஸ்டேட் விவகாரம் மர்மமாகவே உள்ளது. பண மதிப்பிழப்பு நேரத்தில் கோவையில் ஒரு சர்க்கரை ஆலையை சசிகலா  வாங்கியதற்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மூலம் தான்கடந்த 2016 டிசம்பர் 23ம் தேதி ரூ.400 கோடி கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை  தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
127,531
12/25/2019 2:31:20 PM
தமிழகம்
ஊரக உள்ளாட்சிக்கு இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல்...4,700 ஊராட்சி தலைவர் உள்பட 45,336 பதவிகளுக்கு வாக்குப்பதிவு
சென்னை: தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. 4,700 ஊராட்சி தலைவர் பதவி உள்பட 45,336  பதவிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9  மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.  முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம்  45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாகவும், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2544 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4924 ஊராட்சி தலைவர் பதவி, 38,916  ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 46,639 பதவிகளுக்கு 2ம் கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, அந்தநல்லூர்,  மணிகண்டம், மருங்காபுரி, வையம்பட்டி, திருவெறும்பூர் ஒன்றியங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் அன்னவாசல்,  விராலிமலை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, அம்மாப்பேட்டை, பூதலூர் ஆகிய ஒன்றியங்களிலும், கரூர்  மாவட்டத்தில் கரூர், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களிலும், நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி,  செம்பனார்கோவில், கொள்ளிடம் ஒன்றியங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலுர், வேப்பூர் ஒன்றியங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,  திருமானூர, செந்துறை ஒன்றியங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி ஒன்றியங்களிலும்  முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படை இல்லாமலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம்  தேதி நிறைவடைந்தது.  3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், 3,643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.  48 ஆயிரத்து 891  வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் படி 18  ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில்  போட்டியிடுகின்றனர்.கடந்த இரு வாரங்களாக தீவிரமாக பிரசாரம் நடந்து வந்தது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. 2ம்  கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் 28ம் தேதி மாலை 5 மணியுடனும் பிரசாரம் ஓய்கிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று இறுதி நாள்  பிரசாரம் விறுவிறுப்பாக நடந்தது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். மாலை 5 மணிக்கு பிரசாரம் முடிந்ததும் வெளியூர்களில் இருந்து  பிரசாரத்துக்கு அழைத்து வரப்பட்ட அனைவரும் வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, விரலில் வைக்கும் மை, பேனா, முத்திரை, குண்டூசி, தீப்பெட்டி, படிவங்கள் என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 72 பொருட்கள்  அனுப்பி வைக்கப்படும். இந்த பொருட்களை பைககளில் போட்டு பேக்கிங் செய்யும் பணி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.  இந்த பொருட்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் நாளை ஒப்படைக்கப்படும். அவர்கள் இந்த பொருட்களுடன் வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். அந்தந்த  மாவட்டங்களில் வாக்குப்பதிவுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1 முதல் 5 ஊழியர்களும்,  பதற்றமான சாவடியில் ஒரு ஊழியர் கூடுதலாகவும் பணியில் இருப்பார். முதல்கட்ட வாக்குப்பதிவின் போது 60,918 காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர், 30ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட  வாக்குப்பதிவின் போது 61,004 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலையொட்டி இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை 5  மணி வரையிலும், 28ம் தேதி மாலை 5 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ம் தேதியும்  மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
127,532
12/26/2019 2:40:36 PM
தமிழகம்
9 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம்: லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்
சென்னை: தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். கோயில் நடைகள் சாத்தப்பட்டன. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.  பூமியும், சந்திரனும் சூரியனுக்கு நேராக ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சந்திரன் சூரியனை மறைக்கும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை விட சந்திரன் அளவு குறைவாக இருப்பதால் முழுமையாக சூரியனை மறைக்காது. சூரியனை முழுமையாக நிலவு மறைக்காமல் சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைக்கும் போது சூரியனின் விளிம்பில் நெருப்பு வளையம் போல் தென்படுவதே வளைய சூரிய கிரகணம் ஆகும். கடந்த 2010 ஜனவரி 15ம் தேதி கடைசியாக இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. அதற்குப் பிறகு தற்போது அந்த நிகழ்வு நடக்கிறது. இந்த அரிய நிகழ்வு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை நடைபெற்றது. அதன்படி, தமிழகத்தில் இந்த அரிய சூரிய கிரகண நிகழ்வு இன்று காலை 8.08 மணிக்கு தொடங்கியது. சூரியனை நிலவு மெல்ல, மெல்ல மறைக்க தொடங்கியது. தொடர்ந்து 9.27 மணிக்கு சூரியனை முழுமையாக மறைக்காமல் 93 சதவீதம் மட்டுமே நிலவு மறைத்திருந்தது. இதனால், வானில் அழகிய வளையம் போல் காட்சி அளித்தது. இந்த நிகழ்வு தொடர்ந்து 3 நிமிடங்கள் 16 விநாடிகள், அதாவது 9.30 மணி வரையில் நீடித்தது. சென்னையில், முழுமையாக சூரியனை மறைக்காமல் ஒரு பிறை போல் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டு காட்சி அளித்தது. பின்னர், சூரியனின் மையப்பகுதியில் இருந்து நிலவு மெல்ல, மெல்ல நகரத்தொடங்கியது. 11 மணி வரையில் இந்த அரிய நிகழ்வு நடந்தது. இந்த சூரிய கிரகண நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடற்கரை மற்றும் கோளரங்கங்களில் திரண்டனர். சென்னையில் பிர்லா கோளரங்கத்தில் 4 தொலைநோக்கிகள் மூலம் வளைய சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சூரிய கிரகண நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் கோளரங்கத்தில் ஆர்வமுடன் திரண்டனர். அவர்களுக்கு வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பின்னர், பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டு அதன்மூலம் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்வையிடும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வளைய சூரிய கிரகணத்தை காணுவதற்கு ஏதுவாக சூரிய வடிகட்டி கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மேலும், சூரிய கிரகணத்தின் போது அனைவரும் வெளியே வரலாம். எப்போதும் போல் நடமாடலாம். இதனால் எந்த பிரச்னையும் ஏற்படாது. கர்ப்பிணி பெண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எடுத்துரைத்தது. காலை 9.32 மணிக்கு ஊட்டி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தென்பட்டது. கோவை மண்டல அறிவியல் மையத்தில் சூரிய கிரகணத்தை காண ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் முழுமையான கிரகணத்தை காணமுடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒருசில இடங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பெரிய திரைகளில் சூரிய கிரகண நிகழ்வை நேரடியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கிரகணம் முழுமையாக தெரிந்தது. சென்னையில் பகுதி கிரகணம் காரணமாக மாலை நேரம் போல் காட்சி அளித்தது. கிரகணத்தை முன்னிட்டு இன்று திருப்பதி, சபரிமலை மற்றும் தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் நடைகள் சாத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் குறைந்த அளவே இயங்கின. பலர் பயத்தின் காரணமாக வீட்டை விட்டு கூட வெளியில் வரவில்லை. அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் அலுவலகத்துக்கு தாமதமாகவே வந்தனர். தனியார் நிறுவனங்கள் பலவற்றில் ஊழியர்கள் வரவில்லை. திருப்பதி, சபரிமலை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன. சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருத்தணி முருகன் கோயில், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் நடைகள் சாத்தப்பட்டன.கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. டெல்லியில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு தெரியவில்லை. பிரதமர் மோடி, கிரகணத்தை பார்க்க விரும்பியிருந்தார். அதற்காக சோலார் கண்ணாடியும் அணிந்திருந்தார். ஆனால் மேக மூட்டம் காரணமாக அவரால் பார்க்க முடியவில்லை. மதுரையில் சிவப்பு, சென்னை, புதுவையில் பச்சையாகவும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நிறத்தில் சூரிய கிரகணம் தெரிந்தது. சரியாக பகல் 11.15 மணியளவில் சூரிய கிரகணம் நிறைவடைந்தது. அதன் பிறகே சாலைகளில் மக்கள் தலையை அதிகமாக காண முடிந்தது.பார்க்க முடியவில்லையே: மோடி ஏமாற்றம்இன்று காலை வானில் தோன்றிய சூரிய கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியதை போல பிரதமர் மோடியும் அதை பார்க்க இன்று ஆர்வமாக காத்திருந்தார். ஆனால் அவரால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய மக்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக என்னால் அந்த கிரகணத்தை பார்க்க முடியவில்லை. காரணம் மேக மூட்டம் காரணமாக சூரியன் மறைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோழிக்கோடு மற்றும் இதர இடங்களில் தெரிந்த சூரிய கிரகணத்தை ஊடகத்தின் உதவியால் பார்த்தேன். மேலும், இந்த சூரிய கிரகணம் குறித்து தக்க வல்லுநர்களுடன் கலந்துரையாடி இது தொடர்பான செய்திகளை நிறைய தெரிந்து கொண்டேன். இவ்வாறு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த கிரகணம் 2031ல் தான் தெரியும் 25 ஆண்டுகளில் இதுவரை 4 முழு சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. 1 முறை வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. எனவே, இன்று நிகழ்ந்த வளைய சூரிய கிரகண நிகழ்வு போல் அடுத்த நிகழ்வு தென்பட இன்னும் 12 ஆண்டுகள் ஆகும். அதாவது இனி 2031ல் தான் இந்த அரிய வளைய சூரிய கிரகண நிகழ்வை பொதுமக்கள் காண முடியும்.
127,533
12/26/2019 2:41:19 PM
தமிழகம்
முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்: நாளை வாக்குப்பதிவு
சென்னை: தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு துவங்குகிறது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நாளை (27ம் தேதி) மற்றும் 30ம் தேதி 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படை இல்லாமலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது. 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், 3,643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 48 ஆயிரத்து 891 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல்படி 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாக நாளை காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட தேர்தலில் வாக்களிப்பதற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட தேர்தலுக்கு 48 ஆயிரத்து 579 போலீசாரும், ஊர்க்காவல்படை, முன்னாள் ராணுவத்தினர் 14,500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. பிரசாரம் முடிந்த பிறகு வாக்காளர்கள் தவிர்த்து வெளியாட்கள் யாரும் அந்த பகுதிக்குள் இருக்க கூடாது என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் சோதனை நடத்தினர்.அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி இன்று நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அலுவலர்களிடம் வாக்குச்சாவடி பணிக்கான ஆணை மற்றும் வாக்குச் சீட்டு, மை, பேனா, முத்திரை, படிவங்கள் என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான 72 பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. இந்த பொருட்களோடு அவர்கள் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு சென்றடவுடன் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக என்பது உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்து. அதன்படி மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், வீல்சேர் உள்ளிட்ட வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 60,918 காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்யவும், இணையதள கண்காணிப்பு மூலம் கண்காணிக்கவும் மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல்கட்டம் மற்றும் 2வது கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜன.2ம் தேதி எண்ணப்படுகிறது.
127,534
12/26/2019 2:42:10 PM
தமிழகம்
தமிழகத்தில் 7,941 பேரை பலி வாங்கிய 15ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் மீனவர்கள், பொதுமக்கள் அஞ்சலி
சென்னை: பதினைந்தாம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகை, கன்னியாகுமரி, சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில், கல்லறைகளில் அஞ்சலி செலுத்தினர். 2004 டிசம்பர் 26ம் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்றது. சுனாமி கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கிறிஸ்துமஸ் தினத்துக்காக வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 536 பேர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 240 பேர் பலியாயினர். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்தனர். அன்று ஒலிக்கத் தொடங்கிய மரண ஓலம் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஓய்ந்த பாடில்லை.இந்த கோரச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆண்டு தோறும் தமிழக கடற்கரைகளில் சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டத்தில் இன்று சுனாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வேளாங்கண்ணி, அக்கரைபேட்டை, ஆரிய நாட்டு தெரு, நாகூர் பட்டினச்சேரி, செருதூர் ஆகிய இடங்களில் சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர், காரைக்கால்மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட வடக்கு பகுதியிலும், வாஞ்சூர் உள்ளிட்ட தெற்கு பகுதி மீனவ கிராமங்களில் 500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அவர்களது உடல்கள் நண்டலாறு, திருப்பட்டினம் பகுதியில் குவியலாக அடக்கம் செய்யப்பட்டடது. அவர்களது நினைவிடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்தவர்களின் உறவினர்கள் அங்கு குவிந்து இறந்தவர்களுக்கு படையலிட்டும், மெழுகுவர்த்தி ஏற்றியும் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள நினைவு ஸ்தூபியில் அனைத்து கட்சியினர், மாவட்ட நிர்வாகம், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள் தங்கள் உறவுகளை நினைத்து கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் தங்கள் அஞ்சலியை காணிக்கையாக்கினர். குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள  கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம்  செய்யப்பட்டனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில்  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். 119 பேர்  பலியான மணக்குடியில் இன்று காலை பங்குதந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை  நடந்தது. தொடர்ந்து பலியானவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில்  மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். சுனாமி  தாக்குதலில் குளச்சலில் பலியான 414 பேரின் உடல்கள் குளச்சல் புனித  காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள நினைவு  மண்டபத்திலும், ஆலயத்திலும் பங்குத்தந்தை தலைமையில் நினைவு திருப்பலி இன்று  மாலையில் நடைபெறுகிறது. இதேபோல் கடலூர், சென்னை காசிமேடு, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் மற்றும் கடலோர மாவட்டங்களில் 15ம் ஆண்டாக சுனாமி நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லைசுனாமியில் நாகை உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்களில் பல்லாயிரம் பேர் இறந்தனர். மீனவர் உள்ளிட்டோர் கடலுக்கு இரையாகினர். இத்துயரம் நிகழ்ந்து, 15 ஆண்டுகள் கடந்து, மீனவர்கள் ஆண்டுதோறும் இந்நாளை அனுசரிக்கின்றனர். இதனால் நாகை, காரைக்கால், சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றியும், மலர்கள் தூவியும் கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர்.
127,535
12/26/2019 2:43:35 PM
தமிழகம்
சந்திரகாசி, கவுகாத்தி உள்பட பல நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாளை (27ம் தேதி) மதியம் 2.40 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 2.30 மணிக்கு பிளாஸ்பூர் சென்றடையும். ஜனவரி 5ம் தேதி திருநெல்வேலியில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ஜனவரி 3ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29; மார்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரயில், மறுமார்க்கத்தில் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணியிலிருந்து ஜனவரி 12, 19, 26; பிப்ரவரி 2, 9, 16, 23; மார்ச் 1,8,15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். சென்ட்ரலில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாசி சென்றடையும். பாண்டிச்சேரியில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24, மார்ச்-2 ஆகிய தேதிகளில், சந்திரகாசியை காலை 4.30 மணிக்கு சென்றடையும். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31; பிப்ரவரி 2, 7, 9, 14, 16, 21, 23, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்தை அடையும். விழுப்புரத்தில் ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். விழுப்புரத்திலிருந்து ஜனவரி 5ம் தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயில், எஸ்வந்த்பூருக்கு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்றடையும். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 6.5 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு கவுகாத்தி சென்றடையும். கோவையில் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு அசன்சல் சென்றடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,536
12/26/2019 2:44:22 PM
தமிழகம்
பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்யாவிடில் போராட்டம்; மக்கள் அறிவிப்பு
ஆவடி: பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்துதராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பயணிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில்  ஆவடி அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள்  வேலை நிமிர்த்தமாக வந்து செல்கின்றனர். ஆனால் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; பட்டாபிராம் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன. 1வது, 2வது நடைமேடையில் பயணிகள் அமர்வதற்கு நிழற்குடை வசதிகள் இல்லை. குடிநீர் தொட்டிகளில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. 2வது நடைமேடையில் இருந்து 3வது நடைமேடைக்கு செல்லும் பாதை வசதி இல்லை. 3வது நடைமேடையில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.இங்கிருந்து தான் பட்டாபிராம், மிலிட்டரி சைடிங் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். 3வது நடைமேடையில் பெயரவிற்கு பயணிகள் அமர ஒரே ஒரு  நிழற்குடை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. இருட்டை பயன்படுத்தி பெண்களிடம் செயின்  பறிப்பு, வழிப்பறி, சில்மிஷம் நடைபெறுகிறது.ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடு‘படுவது கிடையாது. இதனால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 3வது நடைமேடை அருகில் உள்ள டிக்கெட் கவுண்டர் கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. பட்டாபிராம் ரயில் நிலைய பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காவிட்டால் பயணிகள் நல சங்கம் மூலம்ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினர்.
127,537
12/26/2019 2:58:04 PM
தமிழகம்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவசர கால அழைப்பு, கேமரா, சென்சார் கருவி ஒலிபெருக்கி வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள்: சோதனை ஓட்டம் தொடக்கம் மாநகராட்சி அதிகாரி தகவல்
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவசர கால அழைப்பு, கேமரா, சென்சார் கருவி ஒலிபெருக்கி வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 1000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பல்வேறு திட்ட பணிகள் மற்றும் வசதிகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 150 கோடி செலவில் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டு வருகிறது. கேரள அரசு நிறுவனமான கேரளா ஸ்டேட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், அவரச கால பட்டன், பேரிடர் கண்காணிப்பு, சுழல் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கம்பத்தின் கீழ் பகுதியில் அவசரகால பட்டன் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேரிடர் உள்ளிட்ட பல்வேறு அவசர காலங்களில் இந்த பட்டனை அழுத்தலாம். இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை சென்றடையும். அங்கிருந்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, அந்த இடத்திற்கு உடனடியாக உதவி குழு அனுப்பி வைக்கப்படும்.இதற்கு மேலே வாகன நிறுத்த கண்காணிப்பு கேமரா மற்றும் 360 டிகிரி சுழலும் கண்காணிப்பு கேமரா, பொது அறிவிப்பு ஒலி பெருக்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள் இந்த ஒலி பெருக்கு மூலம் தெரிவிக்கப்படும். மேலும், வை-பை வசதி மற்றும் ஸ்மார்ட் எல்இடி ெதரு விளக்கு வசதியும் இந்த கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மழையின் அளவை கண்காணிப்பதற்கான சென்சார் மற்றும் இயற்கை நிகழ்வுகளை கண்காணிப்பதற்கான சென்சார்களும் இந்த கம்பத்தில் அமைக்கப்பட உள்ளன. எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதை அறிந்து,  மழை பாதிப்பு குறித்த அறிவிப்பு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இயற்கை நிகழ்வுகளை கண்காணிக்கும் சென்சார்கள் மூலம் காற்றின் தரத்தை காண்காணிக்க முடியும். இதன்மூலம் காற்று மாசு அதிகமாக இருந்தால், இது தொடர்பான தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்க முடியும். ஜீவா பூங்கா, சிவன் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, உஸ்மான் சாலை, நியூ ஆவடி சாலை, வாலாஜா சாலை, கொங்கு ரெட்டி சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் இது கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக சிறப்பு திட்டங்கள் துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. காவல், தீயணைப்பு, போக்குவரத்து, வானிலை, ேபரிடர் மேலாண்மை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து தகவல் பெறப்படும். இதைக் கொண்டு அனைத்து துறைகளுடன் இணைந்து பல்வேறு கண்காணிப்பு பணிகளை செய்ய முடியும். இதற்கான சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.செயலிகள்இந்த திட்டத்தின்கீழ், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பயன்பாட்டுக்காக 2 செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வெர்க் ஸ்பேஸ் எனப்படும் அதிகாரிகளுக்கான செயலியில் அனைத்து அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இருக்கும். இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியின் குறைகளை அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம். இந்த திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை கம்பங்களும்  அமைக்கப்படவுள்ளது. இந்த கம்பங்களில் கேமராக்களும், குப்பை ெதாட்டிகள்  சென்சார்களும் இடம் பெற்றிருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், தொட்டிகளில் குப்பை சேர்ந்து விட்டால் சென்சார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்  தெரிவித்துவிடும். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் அந்த குப்பையை தொட்டியை  சுத்தம் செய்வார்கள். மேலும் தொட்டியை சுற்றி உள்ள பகுதிகளை கேமரா மூலம்  கண்காணிக்க முடியும்.
127,538
12/26/2019 2:58:49 PM
தமிழகம்
திருவொற்றியூர், பழவேற்காட்டில் சுனாமி பேரலை தாக்குதலில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
சென்னை: கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். இன்றுவரை இந்த சோகத்தின் வடு மாறவில்லை. இன்று சுனாமி நினைவு தினத்தையொட்டி திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மீஞ்சூர் மற்றும் பழவேற்காடு கடற்கரையில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி, கடல் அன்னைக்கு மலர் தூவி, இறந்தவர்களுக்கு பால் ஊற்றியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.திமுக மீனவரணி சார்பில் மாநில செயலாளர் கேபிபி.சாமி எம்எல்ஏ, முன்னாள் கவுன்சிலர் கே.பி.சங்கர் ஆகியோர், திருவொற்றியூர் குப்பத்தில் சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது தங்களது சொந்தங்களை பறிகொடுத்தவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். இதுபோல் மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு மீனவப் பகுதிகளில் சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு மீனவர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், பொதுமக்கள் திரண்டுவந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
127,539
12/26/2019 2:59:25 PM
தமிழகம்
கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கத்தில் புதர்கள் நடுவே சுடுகாடு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் நடுவே சுடுகாடு உள்ளதால் சடலத்தை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்காக  மங்காவரம்   செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது. தற்போது இந்த சுடுகாட்டை பராமரிக்காமல் விட்டுவிட்டதால் புதர்கள் மண்டி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. ஆங்காங்கே குப்பை குவிந்துகிடப்பதால் சடலத்தை கொண்டு செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.சமீபத்தில் பெய்த மழையால் சுடுகாட்டை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பிணத்தை எடுத்துச்செல்லும்போது பாம்பு, தேள் உள்ளிட்டவை வந்துவிடுகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதவிர சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்துகின்றனர். எனவே, சுடுகாட்ைட சீரமைக்க திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்துப்பாக்கம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
127,540
12/26/2019 3:09:37 PM
தமிழகம்
நிரந்தர பாலம் கட்டும் பணி முடங்கியது: திருமுடிவாக்கம் பகுதி அடையாறு ஆற்றில் தற்காலிக பாலம் துண்டிப்பு
பல்லாவரம்: சென்னை பல்லாவரத்தில் இருந்து திருமுடிவாக்கம் செல்லும் பிரதான சாலை வழியாக திருமுடிவாக்கம், பெரும்பதூர் உள்பட பல பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. திருநீர்மலை, திருமுடிவாக்கம் மற்றும் பழந்தண்டலம் பகுதிகளை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளில் வசிக்கின்றவர்களும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்றவர்களும் மேற்கண்ட சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், திருமுடிவாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டப்படுகிறது. இதனால் மக்கள் வசதிக்காக அருகில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கன மழையாலும் அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் தற்காலிக தரைப் பாலம் நீரில் அடித்துசெல்லப்பட்டு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்களும் மாணவர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.இதன்காரணமாக குன்றத்தூர், தாம்பரம் வழியாக பல கி.மீ.தூரம் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் தவிக்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’அடையாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் அதனை சீரமைக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச்செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளும் வர முடியவில்லை. சாலை துண்டிக்கப்பட்டுள்ளது குறிக்கும் வகையில் நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்துவரும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அடையாறு ஆற்றுப்பால பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்’ என்றனர்.
127,541
12/26/2019 3:13:36 PM
தமிழகம்
இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ரூ.21.31 கோடி முறைகேடு: கைத்தறித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
சென்னை: இலவச வேட்டி -  சேலை திட்டத்தில் ரூ.21 கோடியே 31 லட்சம் முறைகேடு நடந்திருப்பது, தொடர்பாக  கைத்தறித் துறை  அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி-சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை,  தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் ஒரு சேலை நெசவு செய்ய ரூ.260 கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்வதற்காக தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை நூலை கொள்முதல் செய்து கொடுத்துள்ளது. அவை தரம் குறைந்த நூல்கள் என்பதால், ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை வழங்கியதால் ஒரு நாளைக்கு 3 சேலைகளை மட்டுமே நெய்ய முடிகிறது. ஒரு சேலைக்கு ரூ.260 கூலியாக வழங்கப்படுகிறது. இதனால் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், ரூ.21 கோடியே  31 லட்சத்து 21 ஆயிரத்து 250 அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு மனு அளிக்கப்பட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
127,542
12/26/2019 3:24:22 PM
தமிழகம்
சூரியகிரகணத்தை முன்னிட்டு காஞ்சி. திருவள்ளூர் மாவட்டத்தில் கோயில்களில் இன்று நடை அடைப்பு
காஞ்சிபுரம்: சூரியகிரகணத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இன்று நடை அடைக்கப்பட்டது. சூரியகிரகணம் இன்று காணப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில் மற்றும் உலகளந்தபெருமாள் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில் மற்றும் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் நடைகள் இன்று அடைக்கப்பட்டது. சூரிய கிரகணம் முழுமையாக முடிந்த பின் மாலை 4 மணிக்கு கோயில் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு நடை திறக்கப்பட்டது.  இதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருவள்ளூர்திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் வழக்கமாக காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். இப்போது, மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று காலையில் கோயில் திறக்கப்படவில்லை. இதே போன்று நரசிங்கபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலும் இன்று காலையில் திறக்கப்படவில்லை.
127,543
12/26/2019 3:25:15 PM
தமிழகம்
குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீனியாரிட்டியில் முன்னுரிமை: 98 பேருக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கியதில் குளறுபடி
சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் 98 பேருக்கு செயற்பொறியாளராக பதவி உயர்வில் குளறுபடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கடந்த 1998ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி 165 உதவி பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்தனர். அப்போது, நியமனத்தில் முதுநிலை பட்டியல் நிர்ணயம் செய்ததில் குளறுபடி ஏற்பட்டு தவறான முதுநிலை பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, ஒரே வகுப்பை சேர்ந்தவர்களில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை முன்னிலையிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பின்னால் வைத்தும் சீனியாரிட்டி வெளியிடப்பட்டது. இதையறிந்த பொறியாளர்கள் சிலர் 2006ம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் குளறுபடிகளை சரி செய்து வெளியிடக்கோரி தனி நீதிபதி அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதி அமர்வுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமர்வு நீதிமன்றம் கடந்த 31.3.2015ல் மனுதாரரர்களுக்கு, தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட குளறுபடியான முதுநிலை பட்டியல் தவறு என்றும், பட்டியல் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே திருத்தி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இத்தீர்ப்பினை எதிர்த்து தேர்வாணையமும், முதுநிலை பட்டியலில் குறைவான மதிப்பெண் பெற்று முதுநிலை பட்டியலில் முன்னிலையில் உள்ள சிலரும் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016 ஜன.22ம் தேதியில் ஏற்கனவே உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பினை உறுதி செய்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பினை மறு பரிசீலினை செய்யும் படி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அது நிலுவையில் உள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, அந்த வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் செயற்பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்ப பொறியாளர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.இதில், அரசால் திருத்தி வெளியிடப்பட்ட முதுநிலை பட்டியலுக்கு பதிலாக, பழைய முதுநிலை பட்டியலின் அடிப்படையில், அதாவது குளறுபடியாக உள்ள முதுநிலை பட்டியலை கொண்டு அவசர, அவசரமாக முதல்வர் எடப்பாடி ஒப்புதலை பெற்று கடந்த நவம்பர் 27ம் தேதி 98 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இதனால், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் செயற்பெறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது பொதுப்பணித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
127,544
12/26/2019 3:26:10 PM
தமிழகம்
நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு ‘சுதந்திரமாக ஜனநாயக கடமையாற்றுங்கள்’: வாக்காளர்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் அறிவுறுத்தல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் நாளை ஊராட்சி தேர்தல் நடக்கிறது. ‘ஒவ்வொருவரும் மறக்காமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மாவட்ட கவுன்சிலர், 230 ஒன்றிய கவுன்சிலர், 526 ஊராட்சி தலைவர், 3,945 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 4,725 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 22 ஊராட்சி தலைவர்கள், 767 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன. மீதமுள்ள 3,924 பதவிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, திருவாலங்காடு ஆகிய 8 ஒன்றியங்களில், 16 மாவட்ட கவுன்சிலர், 126 ஒன்றிய கவுன்சிலர், 298 ஊராட்சி தலைவர், 1,722 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2,162 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 1,403 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு  ஓட்டுப்பெட்டிகள் உட்பட 76 வகையான பொருட்கள், சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்திலிருந்து சரிபார்க்கப்பட்டு வாகனங்களில் இன்று பகல் 12 மணி முதல் போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று மதியமே வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேர்தல் பணிகளை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவை துவக்க வேண்டும் என வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் பாதுகாப்புப் பணியில், 2,400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான 164 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ஓட்டுப்பெட்டிகள், தேர்தல் பொருட்கள், படிவங்கள், கவர்கள், இன்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுகிறது. கூடாரம் வேய்ந்த சரக்கு வாகனங்கள் அல்லது சிறிய ‘கன்டெய்னர்’ ரக சரக்கு வாகனத்தில் வாக்கு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது. வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், வாக்குச்சாவடி அருகே உள்ள வகுப்பறைகளையும், மக்கள் காத்திருக்க திறந்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யும் சூழல் இருந்தாலும், வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் பாதுகாப்பாக காத்திருந்து, வாக்களிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிழல் தரும் மரங்கள் இல்லாத சாவடிகளுக்கு முன், சாமியானா அமைத்து, இருக்கை வசதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘வாக்களிப்பது நமது உரிமை, கடமை. இதை ஒவ்வொருவரும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி, சுதந்திரமான முறையில் வாக்குகளை வாக்குச்சாவடியில் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் மறவாமல் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.
127,545
12/26/2019 3:27:05 PM
தமிழகம்
பேரணிக்கு பாஜவுக்கு அனுமதி; திமுகவுக்கு மறுப்பு 8000 பேர் மீது வழக்கு போட்ட கோழைத்தனமான தமிழக அரசு: முத்தரசன் காட்டம்
புதுக்கோட்டை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய பேரணிக்கு அனுமதி  மறுத்து விட்டு, பாஜக நடத்திய பேரணிக்கு அனுமதி வழங்கியது ஏன் என்றும், மத்திய  அரசை திருப்திப்படுத்துவதற்காக 8 ஆயிரம் பேர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு  செய்துள்ளது கோழைத்தனமானது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி நடத்திய பேரணியில் கலந்து கொண்டதற்காக 8000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது அச்சுறுத்தலாக தான் செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய பேரணிக்கு அனுமதி மறுத்து விட்டு பாஜக நடத்திய பேரணிக்கு அனுமதி வழங்கியது ஏன்? மத்திய அரசை திருப்திப்படுத்துவதற்காக இந்த வழக்கை தமிழக அரசு பதிவு செய்துள்ளது கோழைத்தனமானது.மத்திய அரசு பாரம்பரிய விதைகளை அளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் மரபணு விதைகளை ஊக்குவித்தது. அதன் விளைவாக கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அதிக அளவு சம்பாதித்தது. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தான் தமிழக அரசு கால்நடை இனப்பெருக்க சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மூலமாக நாட்டின் கால்நடைகளை அழிக்க நினைக்கிறது. இந்த சட்டத்தை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தற்போது செயற்கை கருவூட்டல் முறையை ஊக்குவிப்பதற்காக தான் இந்த சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தில் தான் தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
127,546
12/26/2019 3:27:40 PM
தமிழகம்
திருச்சி அருகே மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர்(50). எரகுடி விவசாய சங்க தலைவர். இவரது மனைவி பானுமதி(40). மகள் தீபா(23) திருமணமாகிவிட்டது. மகன் சதீஷ்குமார்(21), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்து வருகிறார். இளைய மகன் சூர்யா(19) பிளஸ் 2 முடித்துள்ளார். நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். சங்கர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் கவரப்பட்டவர். தனது நிலத்தில் மோடிக்கு கோயில் கட்ட முடிவு செய்தார். அதன்படி 8 மாதங்களுக்கு முன் 8 அடி நீளம், 8 அடி அகலத்தில் கோயில் கட்டுமான பணியை துவக்கினார். இப்போது கோயில் கட்டி முடித்துள்ளார். துறையூர் தனபால் ஸ்தபதியிடம் மோடியின் மார்பளவு சிலை வாங்கி வந்து அதை கடந்த வாரம் தான் கட்டிய கோயிலில் நிறுவினார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் கும்பாபிஷேகம் செய்து கோயிலை திறக்க எண்ணியிருந்தார். இதற்கிடையே பேரன் கிருத்திக் சர்வீன் பிறந்தநாளை சங்கர் குடும்பத்தினர் கடந்த 22ம் தேதி மோடி கோயில் முன் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது எடுத்த புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சங்கர் அனுப்பினார். அப்போதுதான் அவர் மோடிக்கு கோயில் கட்டிய விவரம் பரவியது.
127,547
12/26/2019 3:42:40 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க பாத்திரக் கடையில் திரண்ட கூட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்காக பாத்திரக்கடைகளில் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக நாளையும், 2வது கட்டமாக வரும் 30ம்தேதியும் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளதால், திருவண்ணாமலையில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாக்குகளை பெற, வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். இதற்காக திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் உள்ள பாத்திர கடைகளில் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதற்காக, எவர் சில்வர் பாத்திரங்களை போட்டி போட்டு வாங்கினர்.காமாட்சி விளக்குகடலூர் ஒன்றியத்தில் நாளை (27ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவசமாக பொருள்கள், பணம் போன்றவற்றை தருவதை தடுக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுவை மாநிலம் வில்லியனூரில் இருந்து கடலூரை நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காருக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமாட்சி விளக்குகள் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர்.
127,548
12/26/2019 3:43:31 PM
விளையாட்டு
‘2020ம் ஆண்டில் ஓய்வு’..லியாண்டர் பயஸ் அறிவிப்பு
சென்னை: ‘‘வரும் 2020ம் ஆண்டில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்க உள்ளேன். எனவே 2020 நான் அனைவருக்கும் நன்றி சொல்லும் ஆண்டாக அமையும்’’ என்று இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ‘ட்வீட்’ செய்துள்ளார். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், கடந்த 1991ம் ஆண்டு தனது முதலாவது சர்வதேச டென்னிஸ் போட்டியை துவக்கினார். தற்போது 46வது வயதில் உள்ள இவர், 18 இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.  தவிர கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றையர் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.30 ஆண்டுகளாக இரட்டையர் போட்டிகளில் ஜொலித்து வருகிறார் பயஸ். 100க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் ஆடியுள்ள பயஸ், 54 பட்டங்களை வென்றுள்ளார். மேலும் டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் இரட்டையர் பிரிவில் 56 போட்டிகளில் ஆடி, அவற்றில் 43 போட்டிகளில் வெற்றி பெற்று, தனி முத்திரை பதித்துள்ளார். ‘‘வரும் 2020ம் ஆண்டில் சர்வதேச மற்றும் அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளில் இருந்து என்னுடைய ஓய்வை அறிவிக்க உள்ளேன். 2020ம் ஆண்டில் குறிப்பிட்ட சில டோர்னமென்ட்களை தேர்ந்தெடுத்து ஆட உள்ளேன். அவற்றில் ஆடுவதன் மூலம் சக வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் பிடித்த நாடுகளுக்கு பயணம் செய்து, இந்த ஆண்டை கொண்டாட உள்ளேன். அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய வேளை வந்து விட்டது. என்னுடைய இந்த சாதனைகளுக்கு எல்லாம் குடும்பத்தினரும், ரசிகர்களுமே காரணம் என்பதை நான் ஒவ்வொரு நொடியும் உணர்ந்திருக்கிறேன்’’ என்று பயஸ் தற்போது ‘ட்வீட்’ செய்துள்ளார்.மகேஷ் பூபதியும், லியாண்டர் பயசும் இணைந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிகளில் ஆடி, சர்வதேச டென்னிஸ் அரங்கை அதிர வைத்தனர். அந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்று, ரசிகர்களின் இதயத்தில் இந்த ஜோடி இடம் பிடித்தது. இந்த ஜோடி 1997ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 26 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
127,549
12/26/2019 3:44:16 PM
விளையாட்டு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் காய்ச்சலால் அவதி
செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று துவங்க உள்ள நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆடவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி இன்று பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களாக கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் , தற்போது ஃபுளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவருமே நன்கு தேறி வருகின்றனர் என்று அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். எனினும் நேற்று வரை அவர்கள் 3 பேரும் வலை பயிற்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டிக்கான அணியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மற்றொரு வீரரான பென் ஸ்டோக்சின் தந்தை, மிகவும் கவலைக்கிடமான நிலையில் செஞ்சுரியனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தையை அருகில் இருந்து கவனித்து வந்த பென் ஸ்டோக்ஸ், நேற்று வலை பயிற்சியில் பங்கேற்றார். இதனால் அவர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம் பெறுவார் என்பது இங்கிலாந்துக்கு ஆறுதலான செய்தி.
127,550
12/26/2019 3:45:01 PM
தமிழகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய வழக்கில் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர்: விசாரணை ஜன.17க்கு ஒத்திவைப்பு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2018, ஏப்ரல் மாதம் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, முழு அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம், சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடந்ததாக கூறி மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், சரத்குமார், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் மீதும், இந்திய தண்டனை சட்டத்தின்படி அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், ஸ்டாலின் உள்ளிட்டோர் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்றம் வரும் 26ம் தேதி(இன்று) மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது.  அதன்படி, வழக்கு இன்று நீதிபதி ரமேஷ் முன்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசிக தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் ஆஜராகினர். மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், ஜவாஹிருல்லா ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்கில் இன்னும் எங்களுக்கு சம்மன் வரவில்லை என்று கூறி மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி, ஆஜராகி இருந்த திருமாவளவன், கராத்தே தியாகராஜனுக்கு வழக்கு குறித்த விவரத்தை தெரிவித்து வழக்கு நகலை கொடுத்தார். தொடர்ந்து மற்ற தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்களிடமும் வழக்கு குறித்த நகலை வழங்கினார். மு.க.ஸ்டாலின் தரப்பினருக்கு சம்மன் வந்ததும் ஆஜராகும் படி கூறி வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
127,551
12/26/2019 3:45:49 PM
தமிழகம்
மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் மோடி அரசு: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
நாகை: நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த மோடி அரசு முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 1968ம் ஆண்டு கூலி உயர்வு கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நிலச்சுவான்தாரர்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட 44 பேரை ஒரே குடிசையில் அடைத்து தீ வைத்து படுகொலை செய்தனர். இந்த படுகொலை சம்பவம் ஒவ்வொரு ஆண்டும் வெண்மணி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று நாகை அருகே கீழவெண்மணி கிராமத்தில் 51வது வெண்மணி தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். வெண்மணி நினைவு ஸ்தூபி அமைந்துள்ள இடத்தில் பாலகிருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் அரசாங்கம் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தொழில் வளர்ச்சி இல்லை. மத கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறது மத்திய அரசு. இதற்காக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதால் இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை அதிமுக கூட்டணி அரசு பிரதமர் மோடியுடன் இணைந்து செய்துள்ளது. பொருளாதாரத்தை நாசம் செய்துள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிர்வாகத்தை அடிமாடு விலைக்கு விற்பனை செய்துள்ள மோடி அரசையும், இதற்கு துணையாக செயல்படும் எடப்பாடி அரசையும் கண்டித்து வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று மோடியின் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
127,552
12/27/2019 2:31:26 PM
இந்தியா
சபரிமலையில் 41 நாள் மண்டல காலம் இன்றுடன் நிறைவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைகள் இன்றுடன் நிறைவடைகிறது. சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கபப்ட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. தினமும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதிஹோமம், உஷபூஜை, ெநய்யபிஷேகம் உள்பட பூஜைகள் நடந்தன. கடந்த வருடத்தைவிட இவ்வருடம் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இதனால் கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. இது குறித்து சபரிமலையில் நேற்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியது; இந்த மண்டல காலத்தில் கடந்த 39 நாளில் கோயில் மொத்த வருமானம் 156 கோடியே 60 லட்சத்து 19 ஆயிரத்து 661 ஆகும். கடந்த வருடம் இதே நாளில் 105 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 864 ரூபாயாகும். கடந்த ஆண்டை விட ரூ.51 கோடிக்கு மேல் அதிகம் கிடைத்துள்ளது.அரவணை பிரசாதம் விற்பனை மூலம் தான் அதிகமாக 67 கோடியே 76 லட்சத்து 87 ஆயிரத்து 780 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இது 40 கோடியே 98 லட்சத்து 91ஆயரித்து 175 ரூபாயாகும். உண்டியல் மூலம் 53 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரத்து 95 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் மணியாடர் மூலம் 80 ஆயிரத்து 580 ரூபாய் காணிக்கை வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே பிரிசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்கிரகத்துக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த தங்க அங்கி ஊர்வலம் ேநற்று மதியம் பம்பையை அடைந்தது. பக்தர்களின் வழிபாட்டுக்காக பம்பை கணபதி கோயிலில் அங்கி வைக்கப்பட்டது. மாலையில் அங்கி ஊர்வலமாக சன்னிதானத்துக்கு எடுத்து வரப்பட்டது. மாலை 6.25 மணியளவில் தங்க அங்கி 18ம் படி வழியாக கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஐயப்பன் விக்ரகத்துக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. இன்று மண்டல பூஜையையொட்டி காலை 8 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. அதன்பிறகு மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. காலை 10 மணிக்கும் 11.40க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இன்றுடன் 41 நாள்கள் நடந்த மண்டல காலம் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று மற்ற நாட்களை விட கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. தொடர்ந்து வரும் 28, 29 ஆகிய நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஜனவரி 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு தெரியும்.
127,553
12/27/2019 2:32:27 PM
குற்றம்
கோவை சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : வாலிபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
கோவை: கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குற்றவாளி என கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு கூறியது. இதற்கான தண்டனை விவரம் மாலையில் அறிவிக்கப்படுகிறது. கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான சதீஷ்-வனிதா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். முதல் குழந்தை ரிதன்யா (6). இவர், திப்பனூர் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 25ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். இரவு முழுவதும் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தடாகம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் 26ம்தேதி காலை சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள மறைவான சிறிய சந்து பகுதியில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்டு, கை கால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலில் கத்தியால் கீறிய காயங்கள் இருந்தன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தடாகம் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். கோவையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம்தான் திறக்கப்பட்டது. இந்நீதிமன்றம் திறக்கப்பட்டு இது முதல் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
127,554
12/27/2019 2:33:14 PM
இந்தியா
தொடரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்; உ.பி-யில் 8 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு; டெல்லியில் 2 இடங்களில் 144 தடை
புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடப்பதால், டெல்லியில் மேலும் 2 இடங்களில் 144 தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நாள் என்பதால், உத்தரபிரதேசத்தில் 8 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ம் தேதி சீலாம்பூரில் நடந்த வன்முறையில் கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவம் தொடர்பாக, பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், ஆம் ஆத்மி கவுன்சிலர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆகியோர் மீது கலவரத்தை தூண்டியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எஃப்ஐஆரில், முன்னாள் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மத்தீன் அகமதுவின் தலைமையின் கீழ் பல எதிர்ப்பாளர்கள் போலீஸ் விதிகளை மீறி கோஷங்களை எழுப்பியதாகவும், பைக் பேரணியை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த எஃப்ஐஆரில் கிழக்கு எம்சிடி கவுன்சிலர் அப்துல் ரஹ்மான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மத்தீன் அகமது கூறுகையில், “என்னை அவதூறு செய்யும் வகையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது முற்றிலும் பொய்யானது. நான் வன்முறையை கண்டிக்கிறேன். நாங்கள் எந்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கவில்லை” என்றார். இதற்கிடையில், தர்யா கஞ்சில் வன்முறை போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 பேரில் 9 பேரின் ஜாமீன் மனுவை டெல்லி போலீசார் நேற்று எதிர்த்தனர். இதையடுத்து ஜாமீன் மனுக்கள் குறித்து நீதிமன்றம் தனது உத்தரவை நாளை அறிவிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில், டெல்லி உத்தரபிரதேச பவனுக்கு வெளியே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 213 பேரை டெல்லி போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இவர்கள் மந்திர் மார்க் மற்றும் கன்னாட் பிளேசா காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சில மணி நேரங்களுக்கு பின் போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தில் உள்ள அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது ஜனநாயக விரோத தாக்குதல் நடத்தப்படுவதாக கூறி டெல்லியில் உள்ள உ.பி. பவனுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால், அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மேலும், இப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இன்று, சீலாம்பூர், ஜாஃப்ராபாத் மற்றும் உ.பி. பவன் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.இதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, நேற்றிரவு 10 மணி முதல் எட்டு மாவட்டங்களில் இணைய சேவைகள் 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக் கிழமை முஸ்லீம்களின் தொழுகை நாள் என்பதால், கடந்த வாரம் டெல்லி, அலிகார், லக்னோ போன்ற நகரங்களில் நடந்த போராட்டம் மற்றும் வன்முறை போல் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதாக உ.பி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
127,555
12/27/2019 2:33:58 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்; ஜெர்மன் மாணவரை போல் நார்வே பெண்ணுக்கும் சிக்கல்
புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் போராடிய ஜெர்மன் மாணவர் அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தற்போது, கேரளாவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நார்வே பெண்ணிடம் வெளிநாட்டு பிராந்திய அதிகாரிகள் விசாரித்து வருவதால், அவரும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி) இயற்பியல் துறை மாணவர்களுடன் இணைந்து ஒரு பரிமாற்றத் திட்டத்தில் படித்துவரும் ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெந்தால், இன்ஸ்டிடியூட் வளாகத்தின் முன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றார். அவர் வைத்திருந்த பதாகையில், ‘ஹிட்லர் ஆட்சியின் போது 1933-45 ஆண்டுக்கு இடையில் ஜெர்மனியில் யூதர்களை நாஜி துன்புறுத்தினார்’ என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜெர்மன் மாணவர் ஜாகோப்பை, இந்தியாவை விட்டு வெளியேறும்படி இந்திய வெளியுறவு துறை கேட்டுக் கொண்டதாக பேஸ்புக் பதிவில் அவர் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த பதிவில் உலகெங்கிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பாராட்டி, இந்த ஆர்ப்பாட்டங்கள் சிறந்த மாற்றத்தை விரும்புபவர்களை ஒன்றிணைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை லிண்டெந்தால் தனது பேஸ்புக் பதிவில், ‘இன்று காலை நான் ஆம்ஸ்டர்டாமில் பாதுகாப்பாக வந்து இறங்கினேன். நீங்கள் காட்டிய மிகப்பெரிய ஒற்றுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் செய்திகளுக்கும், சட்ட ஆலோசனைகளுக்கும், நன்றி. இந்தியாவுக்கு வெளியே எனது விமானம் ஒரு நாள் தாமதமாக வந்தபோதும், எனக்கு தங்குமிடம் வழங்கியதற்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். ஜெர்மன் மாணவர் பிரச்னை முடிந்துள்ள நிலையில், சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள நார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவரது பங்களிப்பு தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியானது. இதனை கண்காணித்த வெளியுறவு துறை பணியக அதிகாரிகள், அந்த பெண்ணை தற்போது தங்களது வலையத்து க்குள் கொண்டு வந்துள்ளனர். ேமலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆர்ஆர்ஓ) அந்த பெண் குறித்து விசாரித்து வருகிறது. விசாரணையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நார்வே பெண், ‘விசா’ விதிமுறைகளை மீறியதால், அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர். இதுகுறித்து, கேரளாவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலர் அனூப் கிருஷ்ணன் கூறுகையில், “வெளிநாட்டவர் விசா விதிமுறைகளை மீறியுள்ளாரா இல்லையா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். ஜேன்-மெட் ஜோஹன்சன் எங்கள் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. எங்களுக்கு சமூக ஊடகங்களின் வெளியான வீடியோ அடிப்படையில் விசாரித்ேதாம். அவர் கொச்சிக்கு வந்து அங்கிருந்து சில இடங்களில் ேபாராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்’’ என்றார். இதற்கிடையே, வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் உள்ள ஜோஹன்சன், தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றதாக, தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மன் மாணவரை தொடர்ந்து, தற்போது நார்வே பெண்ணும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றே தெரிகிறது.
127,556
12/27/2019 2:34:41 PM
தமிழகம்
முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் : 27 மாவட்டங்களில் விறுவிறு வாக்குப்பதிவு
சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது. திருவள்ளூர், கடலூர், மதுரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சில இடங்களில் அதிமுகவினர் பூத்துகளை கைப்பற்றியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 7 முதல் 8 அலுவலர்கள் வீதம் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தலைமையில் அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச் சாவடிக்கு சென்ற அலுவலர்கள் அந்த வாக்குச்சாவடியில் அனைத்து விதமாக வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்துவிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளித்தனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை கண்காணிக்க நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திலிருந்து வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கிராமப்புறங்களில் விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடைப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட சிலுவம்பாளையம் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார். அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி வாக்களித்ததாக புகார்கள் எழுந்தன. மாநிலம் முழுவதும் ஆளும் கட்சியினர் கிராமம் கிராமமாக சென்று பணம், புடவை, குத்துவிளக்கு, எவர்சில்வர் பாத்திரங்கள், கொலுசு வழங்கினர். இதனால் முழுமையாக பணம் சென்றடைந்ததால், பெரிய அளவில் மோதல்கள் எழவில்லை. விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மதுரை வலைச்சேரிப்பட்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுமாயக்குளம் பகுதியில் ஒரு பிரிவினர் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓட்டளிக்க சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், ஈக்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக பிரமுகரின் மனைவி போட்டியிடும் சின்னத்தில் ஏற்கனவே வாக்களித்திருந்த சீட்டுகளை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதனால் அங்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுபோன்ற சிறு சிறு பிரச்னைகளைத் தவிர அனைத்து பகுதிகளிலும் விறு விறு வாக்குப்பதிவு நடந்தது.
127,557
12/28/2019 2:45:41 PM
தமிழகம்
பொங்கல் நாளில் மோடி உரையை கேட்க பள்ளிக்கு வரச்சொல்வதா?...கல்வி இயக்குனர் ஆபீஸ் முன் திமுக போராட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: ‘பிரதமர் ஆற்றும் உரையைக் கேட்பதற்காக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஜன. 16ம் தேதி பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால், தி.மு.க மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் விடுமுறையை ரத்து செய்து, தமிழர்களின் மனதில் நீங்காத கோபத்திற்குள்ளான பாஜ அரசு, இப்போது பொங்கல் திருநாள் நேரத்தில் இப்படியொரு உரையாற்றும் நிகழ்ச்சியை பிரதமர் மூலம் ஏற்பாடு செய்து, அதைத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று தமிழக அரசு மூலம் கெடுபிடி செய்து ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குரியது.பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும் மனமகிழ்ச்சியையும் கெடுக்கும் உள்நோக்கத்திலிருந்து இன்னும் பாஜ அரசு விடுபடவில்லை என்பதும், அதற்கு இங்குள்ள அதிமுக அரசும், எல்லாவற்றுக்கும் தலை ஆட்டுவதைப் போல, இதற்கும் துணை போவதும் வெட்கக்கேடானது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும் பாஜவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாகி, இப்படி மாணவ மாணவிகள் மத்தியில் கல்வியைக் காவி மயமாக்கவும், தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்கவும் வழிவகுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை யாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதிலும், மோடியின் உரையைக் கேட்பதற்காக பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் மற்றும் இன்வெர்ட்டர்கள் மூலம் மின்னூட்டம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள கட்டாயப் படுத்தியிருப்பது, பாஜவின் பிரசாரத்திற்காக அரசுப் பணத்தைச் செலவழிப்பது உட்பட, எதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது என்பது தெரியவருகிறது. அரசுத் தேர்வுகள் குறித்துத்தான் பிரதமர் உரை நிகழ்த்துகிறார் என்றால் அதை மாணவ மாணவிகள் கேட்பதற்கு - மனிதவள மேம்பாட்டுத்துறையே கூறியிருப்பது போல், தகவல் தொழில் நுட்பத்தில் நேரலைத் தளங்கள் இருக்கின்றன. அவற்றை மாணவ, மாணவிகள் விரும்பினால் தங்களின் இல்லங்களில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். அதற்காக அவர்கள் பொங்கல் விழாவை விட்டு விட்டு, பள்ளிக்கு வர வேண்டியதில்லை. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் இந்த உத்தரவு பாஜவின் பிரசாரத்திற்காக பள்ளிக்கூடங்களைப் பயன்படுத்தவும், இளைஞர்களின் உள்ளங்களைத் திசைதிருப்பும் எண்ணத்துடனும் போடப்பட்டுள்ள உத்தரவாகும். எனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் வரும் 16ம் தேதி அன்று பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற நிர்வாக நடைமுறைகளுக்கு எதிரான உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் திமுக மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
127,558
12/28/2019 2:49:33 PM
தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம்: தமிழகம் முழுவதும் 50,000 பேர் மீது வழக்கு
சென்னைகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராடிய எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகள் என 50 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டம் வாபஸ் பெரும் வரை போராட்டம் ஓயாது என இஸ்லாமியர்கள் அறிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த டிசம்பர் 9ம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். மக்களவையில் பா.ஜ. தனி மெஜாரிட்டியுடன் இருப்பதால் இந்த மசோதா அங்கு எளிதில் நிறைவேறியது. மாநிலங்களவையில் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 12ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததால் இது சட்டமாக நிறைவேறியது. இந்த சட்ட திருத்தத்தின்படி தற்போது தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கப்படும். அதே நேரத்தில் 1955ம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்கிறது. இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை சான்று வழங்காது என்பது உள்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.இந்தியா முழுவதும் இந்த போராட்டம் கடந்த 10 தினங்களாக நடந்து வருகிறது. பா.ஜ. ஆளும் மாநிலமான உ.பியில் இந்த போராட்டம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. போராட்டத்தை அடக்க அங்குள்ள பா.ஜ.அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 17 பேர் பலியானார்கள். இதுபோல பா.ஜ. ஆளும் இன்னொரு மாநிலமான கர்நாடகத்திலும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலியானார்கள். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தாங்கி பிரமாண்ட பேரணி நடத்தி வருகிறார். கேரளாவிலும் முதல்வர் பினராயி விஜயன் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் கேரளாவில் அதை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து விட்டார். இதேபோல், பல மாநில முதல்வர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்டம் வலுத்து வருவதால் போராட்டத்தை அடக்க மத்திய அரசு போராட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் இணைய சேவையை முடக்கி வைக்கிறது.இந்த சட்ட திருத்தத்தினால் இஸ்லாமியர்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனகூறி இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறார்கள். இதுபோல இலங்கை தமிழர்களுக்கும் இந்த சட்டம் பாதகமாக அமைந்துள்ளது என தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் இந்த போராட்டம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதால் கல்லூரிகளுக்கு 2ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி சென்னையில் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இந்த பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். அதே நேரத்தில் இந்த பேரணிக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிபதிகள் தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் எம்.பி., காதர்மொய்தீன் உள்பட 8 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் , பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தடையை மீறுதல், சட்டவிரோதமாக கூடுதல், உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், திருவாரூர், கரூர், நாகை, நாகூர், மயிலாடுதுறை, புதுகை மாவட்டம் மணமேல்குடி ஆகிய இடங்களிலும் நடந்தது. ஒவ்வொரு இடத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் திமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று காமராஜர் சிலையருகே ஐக்கிய ஜமாஅத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் தடை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதையடுத்து தடைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தனுஷ்குமார் எம்.பி, மற்றும் மேலப் பள்ளி வாசல் ஜமாத்தலைவர் முகம்மது இஸ்மாயில், கீழ பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ரிசவப்பா, திமுக நகர செயலாளர் செல்வகுமார், மதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் நகர தலைவர் பால்ராஜ், விடுதலை சிறுத்தை தெற்கு மாவட்ட செயலாளர் துரைஅரசு, சிபிஐ மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், சிபிஎம் நகர செயலாளர் மணிகண்டன், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ஜாபர்அலி உஸ்மான், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் சுலைமான், சிபிஐ நகர செயலாளர் வேலு உள்பட 3 ஆயிரத்து 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் மீதுபுளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல தென்காசி மாவட்டம் புளியங்குடியில் போராட்டம்நடத்திய 4 ஆயிரம் பேர் மீதும், தென்காசியில் 2 ஆயிரம் பேர் மீதும், திருச்சியில் 2 ஆயிரம் பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சர் இது தொடர்பாக பல விளக்கங்கள் அளித்தார். இதில் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என கூறினார். ஆனால் அவரது விளக்கத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய சட்ட திருத்தத்தை விளக்கும் வகையில் ஆங்காங்கே பா.ஜ.வினர் விளக்க கூட்டங்களும் நடத்தினர். ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.இதுவரை தமிழகம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு பிரச்னைக்காக இவ்வளவு அதிகமான பேர் மீது இப்போது தான் தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பதால் போலீசார் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என விழி பிதுங்கி நிற்கிறார்கள். அதே நேரத்தில் குடியுரிமை சட்டம் வாபஸ் பெறும்வரை போராட்டம் ஓயாது என இஸ்லாமியார்கள் அறிவித்து உள்ளனர்.
127,559
12/28/2019 2:52:07 PM
தமிழகம்
தமிழகத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நாளை மறுநாள் 2ம் கட்ட வாக்குப்பதிவு: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு
சென்னை: தமிழகத்தில் இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் நாளைமறுநாள் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. முன்னதாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின்படி 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதன்படி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 முதல் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆங்காங்குள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்ததுபோல், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (டிச. 30) நடக்கிறது. இரண்டாம் கட்டத்தில் 158 ஊராட்சி  ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி  இடங்களுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 38,916 கிராம ஊராட்சி  வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வருகிற 30ம் தேதி ஓட்டுப்பதிவு  நடைபெறுகிறது. முன்னதாக இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அரசியல் கட்சியின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் செல்கின்றனர். அப்போது பல வேட்பாளர்களால், அநேக இடங்களில் ‘உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே எங்களுக்கு வாக்களித்தால், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருகிறோம்’ என்ற வாக்குறுதி முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு அனல்பறக்கும் இரண்டாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. தேர்தல் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார், 60,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நேற்று நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவு மற்றும் நாளை மறுநாள் நடக்கவுள்ள வாக்குப்பதிவு முடிந்தவுடன், வருகிற ஜன. 2ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
127,560
12/28/2019 2:55:30 PM
இந்தியா
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் நாளை பதவியேற்பு: நாடு முழுவதும் 30 தலைவர்களுக்கு அழைப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக நாளை ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ள நிலையில், நாடு முழுவதும் 30 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன்  கூட்டணி வைத்து ஜே.எம்.எம் கட்சி வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் 47 இடங்களை ேமற்கண்ட கூட்டணி வென்றது. ஜே.எம்.எம் 30 இடங்களையும், காங்கிரஸ்  16 இடங்களையும், ஆர்.ஜே.டி முறையே 1 இடங்களையும் வென்றன. ஜார்க்கண்ட் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 22ம் தேதியன்று, ஜார்கண்டில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் துருபதி முர்முவை ஹேமந்த் சோரன் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, தனக்கு  50  எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தார். அதையடுத்து, நாளை (டிச. 29) பிற்பகல் 2 மணிக்கு முதல்வராக நியமிக்கப்பட்ட ஹேமந்த்  சோரனுக்கு பதவிப் பிரமாணத்தை ஆளுநர் துருபதி முர்மு செய்து வைப்பார். இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிகளவில் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி உட்பட 30 தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, என்.சி.பி தலைவர் சரத்பவார், முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக சோனியாகாந்தியை ஹேமந்த் சோரன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்று, விழாவிற்கு அழைப்பு விடுத்தார். அதனால், சோனியா காந்தி இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டாலும், அழைப்பு விடுக்கப்பட்ட பிரமுகர்களின் பட்டியலில் சோனியாவின்  பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
127,561
12/28/2019 2:57:20 PM
இந்தியா
டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிப்பு: காங். தேர்தல் அறிக்கை குழு நியமனம்
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22, 2020  அன்று முடிவடைகிறது. அதாவது பிப்ரவரி 22ம் தேதிக்கு முன்பு டெல்லியில் சட்டப்பேரவை  தேர்தல் நடைபெறும். ஆம் ஆத்மி கட்சி சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்ள தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கி உள்ளது. கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பாஜக மற்றும் காங்கிரசில்  இருந்து, யார் முதல்வர் வேட்பாளர் முகம் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.  தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முதல் மறுஆய்வுக் கூட்டம்  வியாழக்கிழமை நடைபெற்றது.இந்நிலையில், வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி குழுவை நியமித்துள்ளது. இதற்கு ஹிங்கோலியைச் சேர்ந்த முன்னாள் எம்பி ராஜீவ் சதவ் தலைமை தாங்குவார். குழுவின் மற்ற உறுப்பினர்கள் வீரேந்தர் சிங் ரத்தோர், சல்லா வம்ஷி சந்த் ரெட்டி, பி.சி.சாக்கோ, டெல்லி பி.சி.சி தலைவர் சுபாஷ் சோப்ரா, ஏ.ஐ.சி.சி செயலாளர் குல்ஜித் சிங் நக்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சோப்ராவை டெல்லி மாநிலத் தலைவராகவும், கீர்த்தி ஆசாத்தை பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
127,562
12/29/2019 2:21:11 PM
தமிழகம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய 50 ஆயிரம் பேர் மீதான வழக்கை தொடர்ந்து 10 ஆயிரம் பேர் மீது சென்னையில் வழக்கு: தமிழக அரசு அடுத்த அதிரடி
சென்னை: தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக நேற்றுவரை 50 ஆயிரம் ேபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சென்னையில் இன்று மேலும் 10 ஆயிரம் பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. பாஜ ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு போராட்டத்தை அடக்க துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 பேர் பலியானார்கள். அதே போன்று கர்நாடகா மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். இதையடுத்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. தமிழகத்தில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்த நிலையில் தமிழக அரசு போராட்டத்தை கட்டுப்படுத்த வரும் ஜன.2ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், காதர்மொய்தீன் உட்பட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட தென்காசி எம்பி தனுஷ்குமார் உட்பட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை, மயிலாடுத்துறை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 50 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆலந்தூர் நீதிமன்ற பகுதியில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பேரணியாக சென்றவர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றதாக கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கட்சி தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில பொதுச்செயலாளர் முகமது, பொருளாளர் அப்துல் ரஹீம் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி உட்பட 10 ஆயிரம் பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,563
12/29/2019 2:21:34 PM
தமிழகம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 2 சதவீதம் கூடுதலாக பதிவு: சென்னையில் 19 சதவீதம் குறைவு
சென்னை: தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் இயல்பைவிட 19 சதவீதம் குறைந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கும் என்றும், சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை  பெய்தது. ஆரம்பத்தில் மழை பொழிவு பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக குறைந்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழை பொழிவு குறைய தொடங்கியது. வங்கடலில் உருவான கியார், புல்புல் உட்பட 3 புயல்கள் தமிழகத்தை தாக்காமல் வட மாநிலத்துக்கு நகர்ந்து விட்டது. இதனால், வட தமிழகத்தில் படிப்படியாக மழை பொழிவு குறைந்தது. ஒரு பக்கம் மழை குறைந்தாலும், மறுபக்கம் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், அங்குள்ள அணைகள், ஏரிகள் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பருவமழை காலகட்டத்தில் தமிழகத்தில் 2 சதவீதம் இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் இயல்பை விட 19 சதவீதம், புதுச்சேரியில் 15 சதவீதம் பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது.தமிழகத்தின் வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களிலேயே அதிகளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக, ராமநாதபுரத்தில் 47 சதவீதம், புதுக்கோட்டை 28 சதவீதம், சிவகங்கை 17 சதவீதம், நெல்லை 46 சதவீதம், தூத்துக்குடி 33 சதவீதம், நீலகிரி 65 சதவீதம், நாகை 12 சதவீதம், கன்னியாகுமரி 2 சதவீதம், ஈரோடு 9 சதவீதம், காஞ்சிபுரம் 1 சதவீதம் என இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.அதே நேரத்தில் திருவண்ணாமலை 25 சதவீதம், திருவள்ளூர் 10 சதவீதம், திருவாரூர் 7 சதவீதம், திருச்சி 16 சதவீதம், வேலூர் 27 சதவீதம், விழுப்புரத்தில் 16 சதவீதம் சராசரி அளவை காட்டிலும் குறைந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
127,564
12/29/2019 2:22:02 PM
தமிழகம்
ஊரக உள்ளாட்சிகளில் 46,639 பதவிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது
* அமைதியான முறையில் தேர்தல் நடக்குமா?* துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புக்கு கோரிக்கைசென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 91,975 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30ம் ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ம் தேதி தொடங்கி, 16ம் தேதி முடிந்தது. இந்த தேர்தலில் போட்டியிட 3 லட்சத்துக்கு அதிகமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில், 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் இடம் பெற்றனர்.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 250 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம வார்டு ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட்ட 45 ஆயிரத்து 330 பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் நடந்த பகுதிகளில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம் நடந்துள்ளது. சில இடங்களில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. அதே போல் தவறாக வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டதால் சில இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குபதிவு நிறுத்தப்பட்ட இடங்களில் மறு வாக்குப்பதிவு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குபதிவு நடக்கிறது. இதில், 38,916 கிராம வார்டு உறுப்பினர் பதவிகள், 4924 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள், 2544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 46,639 பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது.இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. வெளியூர் நபர்கள் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு குறைபாடு, அலுவலர்களின் தவறால் ஏற்பட்ட குளறுபடிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காவது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரிக்ைக விடப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் மொத்தம் 1 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மெத்தம் 25,508 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான படிவங்கள், ஆவணங்கள், வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நாளை காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல்படையினர் என 61,004 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 1551 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு, இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாநில தேர்தல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையில், முதற்கட்ட தேர்தலை காட்டிலும் இம்முறை அதிக இடங்களில் தேர்தல் நடக்கிறது. எனவே, பதட்டம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள வாக்குசாவடிகளில் அதிக எண்ணிக்கையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வேட்பாளர்கள் கோரியுள்ளனர்.
127,565
12/29/2019 2:22:35 PM
இந்தியா
அசாமில் நடைமுறைக்கு வருகிறது குடியுரிமை திருத்தச் சட்டம் 3,000 பேரை அடைத்து வைக்க 46 கோடியில் தடுப்பு மையம்
* கட்டுமான பணிகள் முடிந்து மார்ச்சில் திறக்க திட்டம்* குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாதவர்களுக்கு சிக்கல்கவுகாத்தி: குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் நடைமுறைப்படுத்தும் வகையில், 3,000 பேரை அடைத்து வைக்கும் வகையில் ரூ.46 கோடி மதிப்பில் தடுப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் மார்ச்சில் திறந்து நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் ெதாடங்கி இன்று நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய பாஜ அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘இந்தியாவில் தடுப்புக்காவல் முகாம்கள் எதுவும் இல்லை’ என்றார். இவரது பேச்சு டெல்லி அரசியலில் புயலை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரதமர் மோடி பல இடங்களில் பொய் சொல்வதாக கூறி குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அசாமில் இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மையத்தின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கவுகாத்தியில் இருந்து 129 கி.மீ தூரத்தில் உள்ள கோல்பாராவில் உள்ள மத்தியாவில் ரூ.46 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பு மையத்தில் 3,000 கைதிகளை தங்க வைக்க முடியும். இந்த மாதத்தில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், மழைக்காலத்தால் தற்காலிகமாக பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. கட்டுமானத்தை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு, மூலப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சமணர்களுக்கு இந்திய குடியுரிமையை விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்திய குடியுரிமை வழங்க புதிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குடியுரிமை சட்டம் அமல்படுத்தும் போது, மேற்கண்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தடுப்பு மையத்தில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “காங்கிரசும், அதன் நண்பர்களும், சில நகர்ப்புற நக்சல்களும் அனைத்து முஸ்லிம்களும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்திகளை பரப்புகிறார்கள்” என்று பேசினார். நிலைமை இவ்வாறிருக்கமாத்தியாவில், 15 நான்கு மாடி கட்டமைப்புகளுடன் கூடிய தடுப்பு மைய பணிகள் வேகமாக நடக்கிறது. ஒவ்வொன்றிலும் தலா 200 கைதிகள் வரை தங்க வைக்க முடியும். தடுப்பு மையத்தின் பணிகள் டிசம்பரில் தொடங்கப்பட்டன. வீட்டுவசதி குடியிருப்புகள் தவிர, 20-22 அடி உயர எல்லை சுவர்களால் சூழப்பட்ட இந்த தடுப்பு மையத்தில், ஒரு பணியாளர் குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி, ஒரு அலுவலக வளாகம், சமையலறை மற்றும் உணவு மற்றும் சமூக இடம் ஆகியவை இருக்கும். மேலும், ஆறு கழிப்பறை தொகுதிகள் உள்ளன; ஒவ்வொன்றிலும் 15 கழிப்பறைகள் மற்றும் சம எண்ணிக்கையிலான குளியலறைகள் உள்ளன.நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெறும் நிலையில், தடுப்பு மையப்பணிகளும் தீவிரமாக நடப்பதால், சந்தேகத்திற்கு இடமான குடிமக்கள் தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. இதில், பாஜ ஆளும் மாநிலங்களில் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று, அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். அதனால், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களாக அடையாளம் காணப்படுபவர்களை தடுப்பு மையத்திற்கு அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அசாம் மாநில அரசாங்க அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான வீட்டு குடியிருப்புகளின் கட்டுமானம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்; மாநிலத்தில் உள்ள பிற தடுப்பு மையங்களின் கைதிகள் இங்கு மாற்றப்படுவார்கள். அசாமில் இதுபோன்று 10 தடுப்புக்காவல் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அசாமின் மற்ற ஆறு தடுப்புக்காவல் நிலையங்களும் (கோல்பாரா, கோக்ராஜர், ஜோர்ஹாட், திப்ருகார், தேஸ்பூர், சில்சார்), 2009 மற்றும் 2015 ஆண்டுக்கு இடையில் மாவட்ட சிறைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. அரசாங்க பதிவுகளின்படி, 1985 முதல் (அசாம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது) அக்டோபர் 2019 வரை, கிட்டத்தட்ட 1,29,000 பேர் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 73,000 பேர் காணவில்லை. அவர்கள் நாடு கடத்தப்படவில்லை அல்லது காவலில் வைக்கப்படவில்லை. அசாம் அரசாங்க பதிவுகளின்படி, 2019 நவம்பர் வரை, ஆறு தடுப்பு மையங்களில் மொத்தம் 988 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 957 பேர் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டாலும், 31 குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் சேர்ந்து தங்கியுள்ளனர். 2016 முதல் அக்டோபர் 2019 வரை 28 கைதிகள் இறந்துள்ளனர்.இந்த மையங்களின் கைதிகள், வாக்காளர் பட்டியலில் டி-வாக்காளர்களாக (குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள்) குறிக்கப்பட்டவர்கள் மற்றும் மாநில காவல்துறையினரால் வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்படுபவர்கள். இவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க அதற்கான அலுவலகத்தை அணுக வேண்டும். அதில் அவர்கள் நிரூபணம் செய்யவில்லை என்றால், தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட என்ஆர்சியில் 19 லட்சம் மக்களின் பெயர் பதிவேட்டில் இல்லை. அவர்கள் இன்னும் தடுப்பு மையங்களில் வைக்கப்படவில்லை. அவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினர்கோல்பாரா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ஏ.ஆர்.புகான் கூறுகையில், “தற்போது கோல்பாரா மாவட்ட சிறையில் 366 கைதிகள் உள்ளனர். அவர்களில் 184 பேர் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்டு வேறு பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டுள்ள ‘அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கு’ நிபந்தனை ஜாமீன் வழங்கியதால், நாங்கள் 56 கைதிகளை விடுவித்தோம். எங்கள் தடுப்பு மையத்தில் வசதிகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். உணவின் தரம் மேம்பட்டுள்ளது’’ என்றார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம், மத்திய உள்துறை அமைச்சகம் தடுப்பு மையங்களுக்கான ஒரு கையேட்டை வெளியிட்டது. அதில், தடுப்பு மையங்களில் இருப்பவர்கள் சுய கவுரவத்துடன் இருக்க வேண்டும். அங்கு, அறைகள் காற்றோட்டமாகவும், நன்கு வெளிச்சமாகவும், சுகாதாரமாகவும், நீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் இருக்க வேண்டும். கைதிகள் சுற்றுவதற்கு திறந்தவெளி, குடும்ப உறுப்பினர்களை ஒரே வசதியில் தடுத்து வைத்தல், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் திருநங்கைகளின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. என் கணவர் இங்கு எப்படி வந்தார்? மேற்குவங்காளத்தைச் சேர்ந்த மிருணல் மொண்டால், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் மளிகைக் கடையை  நடத்தி வந்தபோது, ​​அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின், அவர் வாக்காளர் பட்டியலில் டி-வாக்காளராக (குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள்) பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், தொடர்ந்து அவர் ஒரு வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டார். இந்த ஆண்டு  ஆகஸ்டில் கோல்பாரா தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து, அவரது மனைவி கலிதா மொண்டல் கூறுகையில், ‘‘தடுப்புக்காவல் நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, ​​அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடினமான மனநிலையில்தான் வாழ வேண்டி உள்ளது. உள்ளே தங்கியிருந்த கணவர் மிருணலை சந்திக்க எனது 10 வயது மகளுடன் கவுகாத்தி அடுத்த கோல்பாரா சென்றேன். என் கணவர் எப்படி இங்கே வர முடிந்தது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. என் வாழ்க்கை சிதைந்துவிட்டது” என்றார்.
127,566
12/29/2019 2:23:13 PM
இந்தியா
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை பார்க்க சென்ற போது பிரியங்கா காந்தியின் கழுத்து நெரிக்கப்பட்டதா?: பாதுகாப்பு போலீஸ் அதிகாரி அர்ச்சனா சிங் விளக்கம்
லக்னோ: லக்னோவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை பிரியங்கா காந்தி பார்க்க சென்ற போது, போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், அவரின் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை மறுத்து, அவரது பாதுகாப்பு போலீஸ் அதிகாரி அர்ச்சனா சிங் உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சி நிறுவன நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைதான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியின் குடும்பத்தினரை சந்திக்க சென்றார். எஸ்.ஆர்.தாராபுரியின் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் வழியில், திடீரென நடுவழியில் பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் காரில் இருந்து இறங்கி சில கிமீ தூரம் வரை நடந்து சென்றார். ஒருகட்டத்தில், இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி தொடர்ந்து பயணித்தார். பின்னர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், ‘‘நடந்து சென்ற போது என்னை பெண் போலீசார் தாக்கினார். தாராபுரி வீட்டை நோக்கி நடந்து சென்ற போது, பெண் போலீசார் என்னை சூழ்ந்து கொண்டனர். அப்போது, பெண் போலீஸ் ஒருவர் என் கழுத்தை நெரித்தார். பின்புறமாக மற்றொரு போலீஸ் என்னை தள்ளிவிட்டார். இதில் நிலை தடுமாறி விழுந்தேன். ஆனாலும் நான் உறுதியோடு இருக்கிறேன். போலீசாரின் அடக்குமுறையை சந்தித்து வரும் ஒவ்வொரு குடிமகனோடும் துணை நிற்கிறேன். இதுவே எனது சத்யாகிரகம்; நகரின் மையப்பகுதியில் என்னை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. பாஜ அரசு கோழைத்தனமாக நடந்து கொள்கிறது. நான் எங்கு செல்ல வேண்டும், செல்லக்கூடாது என்பதை அரசு நிர்ணயிக்க முடியாது’’ என்றார். இந்நிலையில், பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பேட்டியளித்த போலீஸ் பெண் அதிகாரி டாக்டர் அர்ச்சனா சிங், ‘‘இது உண்மையல்ல. நான் அவருடைய பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்தேன். யாரும் அவருடன் தவறாக நடந்து கொள்ளவில்லை, நான் என் கடமையை மட்டுமே செய்தேன். இந்த சம்பவத்தின் போது நானும் கஷ்டப்பட்டேன்’’ என்றார். இதற்கிடையே, டாக்டர் அர்ச்சனா சிங்கிற்கு ஆதரவாக இணையவாசிகள் #IStandWithArchanaSingh என்ற ஹஷ்டாக்கை பதிவிட்டு வருகின்றனர். தற்போது, அந்த ஹேஷ்டாக் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரு சக்கர வாகனத்தில் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல், தலைகவசம் அணியாமல் சென்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, லக்னோ மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கலனிதி நைத்தினி கூறுைகயில், ‘‘பிரியங்கா காந்தியை கழுத்தை நெரித்ததாக ஊடகங்களில் வதந்திகள் வருகின்றன. அதுஎதுவாக இருந்தாலும் அது தவறு. இன்று காலை காவல் அதிகாரி டாக்டர் அர்ச்சனா சிங், உயர் அதிகாரிக்கு ஒரு அறிக்கையை வழங்கியுள்ளார். அங்கு பிரியங்கா காந்தியின் கார் திட்டமிடப்பட்ட பாதையில் செல்வதற்கு பதிலாக வேறு வழியில் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்’’ என்றார்.
127,567
12/30/2019 2:40:18 PM
தமிழகம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக கோலம் போட்டு போராட்டம்
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பொது இடங்களில் வீடுகள் முன் கோலமிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை இன்று காலை நூதன போராட்டம்  மூலம் நடத்தினர்.குடியுரிமை சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தை அடக்க பா.ஜ. ஆளும் உபி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தமிழகத்திலும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் புதுப்புது யுத்திகளில் நடத்தப்பட்டு வருகிறது.திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இலங்கை தமிழ் ஆதரவு அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். போராட்டத்தை கட்டுப்படுத்த கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.போராடுபவர்கள் மீது தமிழக காவல்துறையும் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால், தற்போது போராட்டம் புதிய வடிவம் எடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் அமைதி போராட்டம், மக்களை எளிதில் ஈர்க்கும் போராட்டமாக இப்போது மாறியுள்ளது.சென்னை பெசன்ட்நகர் 4வது அவென்யூ சாலையில் பெண்கள், ஆண்கள் 8 பேர் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி ‘நோ டூ சிஏஏ, நோ டூ என்ஆர்சி, என்பிஆர்’ என்று எழுதி கோலம் போட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் அங்கு வந்து கோலம் போட்ட 8 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களை எச்சரித்து பின்னர் விட்டு விட்டனர். அறவழியில் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவர்களை போலீசார் பிடித்து சென்று மிரட்டிய சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அறவழியில் போராட்டம் நடத்தக்கூட தமிழகத்தில் அனுமதி கிடையாதா என பெண்கள் கொதிப்படைந்தனர்.கோலம் போட்டவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்ைக எடுத்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று திமுக மகளிர் அணியினர் தங்கள் இல்லங்களின் முன் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடுமாறு மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்திருந்தார்.சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் வீட்டு முன்பும், ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு கோலம் போடப்பட்டிருந்தது. அதில், ‘வேண்டாம் சிஏஏ, நோ என்ஆர்சி, என்பிஆர்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதேபோல,  மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், கனிமொழி எம்.பி. வீடு உள்பட மாநிலம் முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு கோலம் போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.கோலமிட்ட மூதாட்டிநாடுமுழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சில தினங்களாக பெண்கள் நூதனமாக வீட்டு வாசலில் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அதிகளவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் ரஹ்மத்நகரில் முல்லையம்பாள் (82) என்ற மூதாட்டி தனது வீட்டு வாசலில் இன்று காலை “நோ சிஏஏ.. நோ.. என்ஆர்சி..” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு கோலமிட்டார். இது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது.100 வீட்டு முன்பு கோலம்சேலத்தில் மாநகராட்சியின் 17வது வார்டுக்கு உட்பட்ட தென்அழகாபுரம் அம்பேத்கர் தெருவில் இன்று காலை, 100 வீட்டின் முன் “வேண்டாம் சிஏஏ, என்ஆர்சி,’’ என குறிப்பிட்டு கோலம் போடப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள், பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெண்கள், தங்களை வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள், நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றனர். இதையடுத்து போலீசார், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
127,568
12/30/2019 2:42:03 PM
தமிழகம்
உள்ளாட்சியில் 2ம் கட்ட வாக்குபதிவு இன்று தொடங்கியது பல இடங்களில் முறைகேடு புகார்
சென்னை: மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் 2-ம்  கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் முறைகேடு புகார்களும், இரட்டை இலை சின்னத்தில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரு கட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை  வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், தற்போது ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குபதிவு கடந்த 27ம்தேதி நடைபெற்றது. அப்போது, 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்தது. சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டது. வாக்குச்சீட்டுகள் எரிக்கப்பட்டது. மேலும் பல வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்ற ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை கண்டித்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தா வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. முதல் கட்ட வாக்குப்பதிவின் போது 76 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.வாக்குச்சாவடி சூறையாடல், வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மொத்தம் 91, 975 பதவிகளில் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 2-ம் கட்ட தேர்தலில் மீதமுள்ள 46,639 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4,924 பஞ்சாயத்து தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதன் படி, இன்று காலை 7 மணிக்கு 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையத்தில் வாக்குச்சீட்டில் குத்தும் போது இங்க் மறுபக்கமும் பரவுவதாக எழுந்த குற்றச்சாட்டால் வாக்குபதிவு தாமதமானது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மலை கிராங்மங்களில் தார்சாலை அமைக்காததை கண்டித்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் யாரும் வரவில்லை. அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று சத்தியமங்கம் அடுத்த பவானி சாகர் ஊராட்சி ஒன்றியம் புங்கம் கிராமத்தில் வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஓன்றியங்களில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடியவிடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ஓட்டுக்கு ரூ. 200 முதல் ரூ.350 வரையிலும், ஒன்றிய கவுன்சிலர் ஓட்டுக்கு ரூ. 300 முதல் ரூ.500 வரையிலும், ஊராட்சி மன்ற தலைவர் ஓட்டுக்கு ரூ. 500, ரூ.1000, ஒரு மூட்டை அரிசி, சேலை, கட்டில், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல் அரிசி மூட்டை வாங்குவதற்கு டோக்கன் வினியோகப்பட்டது. மேலும் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கிவிட்டு, வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் ஊறுதிமொழி வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆரணியில் உள்ள ஜவுளிகடை, பாத்திரக்கடைகளில் நேற்றிரவு 10.30 மணி வரை கூட்டம் அலைமோதியது.முதல் கட்ட தேர்தலின் போது வாக்குசாவடிகளை கைப்பற்ற முயற்சி போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் பதற்றமான வாக்குசாடிகளில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் சூறையாடப்பட்ட திருவள்ளூர் மாவட்ட கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாம்பரம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு வாக்குசாவடிகளிலும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மறுவாக்குபதிவு நடைபெற்று வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் வேலன் புதுக்குடியிலும் மறுவாக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவையொட்டி சுமார் 61000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. 2ம் கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் 2ம் 310 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
127,569
12/30/2019 2:57:59 PM
இந்தியா
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: பக்தர்கள் குவிகின்றனர்
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜைகளுக்காக கடந்த நவ.16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்கள் நடந்த மண்டல காலம் கடந்த 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. 28, 29, ஆகிய தேதிகளில் நடை சாத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. மாலை 5 மணி அளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறக்கிறார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். நாளை முதல் நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட பூஜைகள் ெதாடங்கும். ஜனவரி 15ம் தேதி மிகவும் சிறப்பு பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தரிசனம் நடை பெறும்.ஜனவரி 19ம் தேதியுடன் மண்டல, மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். 20ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 21ம் தேதி காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்று நடைதிறப்பை முன்னிட்டு சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
127,570
12/30/2019 2:58:39 PM
குற்றம்
ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி சென்னை மெக்கானிக்கை கொல்ல முயற்சி: கூலிப்படையை ஏவியதாக மனைவி மீது புகார்
அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து 3 பேர் கும்பல் மெக்கானிக்கை கீழே தள்ளி கொல்ல முயன்றுள்ளனர். குடும்ப தகராறில் மனைவியே கூலிப்படையை ஏவி இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கணவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயிலில் இருந்து ஒரு வாலிபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாகவும், அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரயில்வே போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன்(30) என்பதும், இவர் அம்பத்தூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.இதுதொடர்பாக ராஜேந்திரன், போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்வதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் ஆவடி அருகே ஏறினேன். அரக்கோணத்திற்கும், திருத்தணிக்கும் இடையே காட்டு ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென 3 பேர், என்னை கொலை செய்வதற்காக ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தேன். மாலை நினைவு திரும்பியதும் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.எனக்கும், எனது மனைவி அஸ்வினிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அஸ்வினி, கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ராஜேந்திரனை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக கூறப்படும் 3பேரை தேடி வருகின்றனர். அதேபோல் ராஜேந்திரனின் மனைவி அஸ்வினியிடமும் இன்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
127,571
12/30/2019 2:59:15 PM
குற்றம்
பெண் அதிகாரி முன்பு நிர்வாண போஸ்: வாலிபரை பிடித்து விசாரணை
திருவனந்தபுரம்: திருவனந்தரம் மியூசியம் பூங்காவில் பெண்கள் முன் நிர்வாண போஸ் கொடுத்த ஆசாமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே முளந்துருத்தி பகுதியை சேர்ந்தவர் இந்து. கேரள மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் திட்ட அதிகாரியாக பணியற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சிக்காக திருவனந்தபுரம் வந்தார். நேற்று காலை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்து இருந்தார்.அப்போது அவரது அருகில் வந்த ஒருவர் திடீரென உடைகளை களைந்து நிர்வாண போஸ் கொடுத்தார். இது குறித்து இந்து மியூசியம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி அவரை விடுவிக்க முயன்றனர்.ஆனால் அதிகாரி இந்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர் விசாரணையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்காணூர் பகுதியை சேர்ந்த சன்னி என்பதும். இவர் இதுபோல் அடிக்கடி பூங்காவுக்கு வருகிறவர்களிடம் நிர்வாண போஸ் ெகாடுத்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
127,572
12/30/2019 3:00:47 PM
தமிழகம்
3 மாதமாக வழங்கப்படவில்லை ரேஷன் கடைகளில் மார்ச்சில் பச்சரிசி: அதிகாரிகள் தகவல்
வேலூர்: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நிறுத்தப்பட்டுள்ள பச்சரிசி வினியோகம் வரும் மார்ச் மாதம் முதல் வழங்கப்பட  இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 1.83 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாகவும், 18.62 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு என்ற நிலையை சில மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இது அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியில் பச்சரிசி வினியோகத்தை நிறுத்தி புழுங்கல் அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, ‘பச்சரிசி வினியோகத்தை முழுமையாக அரசு நிறுத்தியுள்ளது. இனி புழுங்கல் அரிசிதான் வழங்கப்படும். ஆனால் பொங்கலுக்கு மட்டும் இலவச பொங்கல் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி கண்டிப்பாக இடம்பெறும்’ என்றனர். இதுதொடர்பாக பொதுவிநியோகத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரேஷன் கடைகளில் பச்சரிசி வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது உண்மைதான். மத்திய தொகுப்பில் இருந்து மொத்தமாக பச்சரிசி நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதேநேரத்தில் தமிழக அரசால் பொங்கலுக்காக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் நிச்சயம் பச்சரிசி வழங்கப்படும். அதோடு மார்ச் மாதம் முதல் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’ என்றனர்.
127,573
12/30/2019 3:01:28 PM
குற்றம்
தஞ்சை, குடந்தையில் கள்ளநோட்டு தாராளம்: வங்கியிலேயே டெபாசிட் செய்த துணிகரம்
தஞ்சை: தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள அரசு வங்கிகளிலேயே ₹500, ₹100 கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனை வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் யார், அவர்களுக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா என போலீசார் விசாரிக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணமும், தஞ்சையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்கள்  டெபாசிட் செய்த பணமும் 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது.அங்குள்ள அதிகாரிகள் இந்த 3 கிளைகளின் பணத்தை ஆய்வு செய்தனர். அதில் 37 கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இவை 500 மற்றும் 100 ரூபாய்கள். இதையடுத்து இந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் யார், அதை வாங்கிய அதிகாரிகள் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் சேனாதிபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.பணக்கட்டுகளில் இருக்கும் தேதியை கொண்டு அந்த தேதியில் யார், யார் பணம் டெபாசிட் செய்தனர். அதில் ₹500, ₹100 டெபாசிட் செய்தவர்கள் யார் என கண்டுபிடிக்கும் பணியில் முதல்கட்டமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளநோட்டு வந்த தேதியில் வங்கிக்கு வந்து டெபாசிட்செய்த அனைவரின் முகவரி, அவர்களது வங்கி கணக்கு அவர்களது தொழில் ஆகியவை குறித்து ரகசியமாக விசாரணை நடத்தி விட்டு பின்னர் சம்பந்தப்பட்ட நபரை நேரடியாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
127,574
12/30/2019 3:02:25 PM
குற்றம்
வேலூர் மலையடிவாரத்தில் 2 வயது பெண் குழந்தை கொன்று புதைப்பு
வேலூர்: வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமம் முருகர் கோயில் மலையடிவாரத்தில் 2வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு சிறிய அளவில் பள்ளம் தோண்டி அதில் சடலத்தை வைத்து பாறாங்கற்கலால் மூடப்பட்டு இருந்தது. இதை நேற்று அப்பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டரை வரவழைத்து, குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த குழந்தை யார்?, எந்த ஊரை சேர்ந்தது, கோயில் அருகே குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பதால் யாரேனும் புதையலுக்காக நரபலி கொடுத்தார்களா? அல்லது குடும்ப பிரச்னை காரணமா? முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்தி கொலை செய்தனரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,575
12/30/2019 3:04:46 PM
தமிழகம்
ஈரோட்டில் விசைத்தறிகள் ஸ்டிரைக் 50 ஆயிரம் பேர் வேலை இழப்பு
ஈரோடு: ஈரோடு மாநகரில், வீரப்பன் சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் 60ஆயிரம் விசைத்தறிகள் இயங்குகிறது. இந்த விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன் துணிகள், அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ரயான் துணிகள் மட்டும் 25 ஆயிரம் தறிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகள் டையிங்கிற்காக வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பல்வேறு வண்ணங்களாக மாற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் குடியுரிமை சட்டத்திருத்த போராட்டத்தினால், அங்கு டையிங் தொழில் பாதிக்கப்பட்டது. இதனால், தேக்கம் அடைந்துள்ள ரயான் துணிகளை விற்பனை செய்ய முடியாமல் அவதியடைந்தனர்.இதைத்தொடர்ந்து தேக்கம் அடைந்துள்ள ரயான் துணிகளை ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆட்டோலூமில் ரயான் துணிகள் உற்பத்தி செய்ய தடை விதிக்க வலியுறுத்தியும் மாவட்டத்தில் நேற்று முதல் ஜனவரி 12ம் தேதி வரை ரயான் துணிகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகள் மட்டும் நிறுத்தப்படும் என ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணிகள் உற்பத்தியை நேற்று முதல் விசைத்தறி உரிமையாளர்கள் நிறுத்தியுள்ளனர். இதனால், விசைத்தறி தொழிலை நம்பியுள்ள 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கந்தவேல் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 60 ஆயிரம் தறிகளில், 24,500 தறிகள் இலவச வேட்டி சேலை தயாரிப்பிலும், 25 ஆயிரம் தறிகள் ராயன் துணி தயாரிப்பிலும், மீதமுள்ள தறிகள் காட்டன் போன்ற இதர ரக துணிகள் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளன.ரயான் துணிகள் விலை சரிவு, உற்பத்தி தேக்கம் போன்ற காரணங்களால் 15 நாட்களுக்கு ரயான் துணிகளை மட்டும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளோம். அதற்குள் தேக்கம் அடைந்துள்ள ரயான் துணிகளை ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயான் துணிகளை ஆட்டோலூம் மூலம் தயாரிக்க தடை விதித்தால் எங்களது வாழ்வாதாரம் மட்டும் அல்லாது தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மீட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
127,576
12/30/2019 3:08:36 PM
தமிழகம்
திருமணத்தடை நீக்கும் திருத்தலம் அழகிரிநாதசுவாமி அருள்பாலிக்கும் கோட்டை சொர்க்கவாசல் கோயில்
என்னும் தாயார் குழந்தையாக பிறந்த தலம் என்பதால் ‘சைலம்’ எனப்பட்ட ஊர் பின்னாளில் சேலம் என்று உருமாறியது. சைலம் என்றால் புனிதம் மிக்க இடம் என்பதும் ஒரு பொருள். இப்படி பெருமை வாய்ந்த சேலத்தின் கோட்டை பகுதியில் சுந்தரவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அழகிரிநாத பெருமாள் சுவாமி. மகாவிஷ்ணு வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்த போது பிருகு முனிவர் அவரை காண வந்தார். ஆனால் விஷ்ணுவோ, அவரை கண்டும் காணாதது போல் இருந்துள்ளார். இதனால் தன்னை அவமதிக்கிறார் என்று ஆத்திரமடைந்த முனிவர், கோபம் கொண்டு விஷ்ணுவை உதைக்கச் சென்றுள்ளார். இதைக்கண்ட லட்சுமி திடுக்கிட்டு கோபித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். முனிவரின் அகங்காரத்தை குறைக்க எண்ணிய விஷ்ணு, அவரது பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து சக்தியை இழக்கச் செய்தார். தவறை உணர்ந்த பிருகு முனிவர், இதற்கான சாபவிமோசனம் கேட்டு பெருமாளை வணங்கினார்.கோபித்துக் கொண்டு சென்ற தாயாரை மனமுருக வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார் விஷ்ணு. அதன்படி சைலத்திற்கு வந்த பிருகுமுனிவர், இங்குள்ள வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தார். அப்போது மரத்தடியில் குழந்தையாக தோன்றிய மகாலட்சுமியை அழகியவல்லி எனப் பெயரிட்டு பிருகு முனிவர் வளர்த்தார்.  குறிப்பிட்ட நாளில் நான்கு கரங்களுடன் எழுந்தருளிய பெருமாள், அழகிய வல்லியை கரம் பிடித்து, பிருகு முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து, திருமணக்கோலத்தில் காட்சியளித்தார். தன்னைப்போல, மக்களுக்கும் இத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று பிருகுமுனிவர் வேண்டினார். அதன்படி அழகிரிநாதராக பெருமாள் அருள்பாலிக்கும் கோயில் இது என்பது விஷ்ணு புராணத்தில் இடம் பெற்றுள்ள தலவரலாறாகும். மூலவர் அழகிரி நாதர் இந்த கோயிலில் ஆறடி உயரம் கொண்ட அற்புத சிலை வடிவாக சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேலுள்ள விமானம் சர்வதோபத்ரி என்று அழைக்கப்படுகிறது. இதயத்திலிருந்து வெளிப்படும் ஒளியிலிருந்து உருவம் உண்டாக்கும் விஷ்ணுவின் விகனச உத்பவ கோலம், ஆதிசேஷன் மீது அமர்ந்த நரசிம்மரை தூக்கியிருக்கும் கருடன் சிற்பங்கள் விமானத்தில் இருப்பது பெரும் சிறப்பாக கருதப்படுகிறது. இங்கு எட்டு அடி உயரத்தில் சிம்மமுக ஆஞ்சநேயர் கம்பீரமாக காட்சியளிக்கிறார். பிரம்மபட்டம் பெறுவதற்காக ஆஞ்சநேயர், இங்கு திருமாலை வணங்கியதாகவும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. சுவாமிக்கு வலப்புறம் தாயார் யோக பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆதியில் இருந்த வேணுகோபாலரும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.திருமண தோஷம் உள்ளவர்கள் இங்கு நடக்கும் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதேபோல் புத்திர பாக்கியம் வேண்டி பொன்னமரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது. இத்தல இறைவனை வேண்டினால் நரம்பு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. வைகாசியில் இங்கு நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ராமநவமி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி என்று அனைத்தும் இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடக்கிறது. இதனால் சொர்க்கவாசல் கோயில் என்ற பெயரும் இத்தலத்திற்கு உள்ளது. இந்த வகையில் இன்னும் சில தினங்களில் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது அழகிரிநாதர் கோயில் வளாகம்.
127,577
12/30/2019 3:09:21 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் தெருவில் குப்பை அள்ளிய மக்கள்
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய சாத்தங்குப்பம் கிராமத்தில் வீராணம் சாலை, எஸ்ஆர்எஸ் நகர், சண்முகா நகர், ராஜேஸ்வரி நகர் மற்றும் சொக்கம்மாள்  நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகளில் குப்பை தேங்கிக் கிடப்பதால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கிநிற்கிறது.இதுகுறித்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், திருப்போரூர் ஒன்றிய அலுவலகம், கேளம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில்  பலமுறை மனு அளித்தும் குப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.இதனால் சாத்தங்குப்பம்  விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம், டி.என்.01 சமூக சேவை இயக்கம், சாத்தங்குப்பம் விளையாட்டு குழு மற்றும் திருவள்ளுவர் கல்விக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தெருக்கள் மற்றும் கால்வாய்களில் தேங்கிய குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர். இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
127,578
12/30/2019 3:11:42 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
வில்லிவாக்கம் ஒன்றியத்தில் அடங்கிய வாக்குச்சாவடிகளில் கியூவில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு
ஆவடி: சென்னை வில்லிவாக்கம் ஒன்றித்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் உள்ள149 வாக்குச்சாவடிகளில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆவடி பகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஒன்றியத்தில் அயப்பாக்கம், வானகரம், அடையாளம்பட்டு, பொத்தூர், வெள்ளானூர், மோரை, கர்லப்பாக்கம், பாண்டேஸ்வரம், பாலவேடு, வெள்ளச்சேரி, பம்மதுகுளம், அரக்கம்பாக்கம் மற்றும் ஆலத்தூர் ஆகிய 13 ஊராட்சிகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர். மேற்கண்ட ஊராட்சிகளில் பொதுமக்கள் வாக்களிக்க 149 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 6 மணிக்கே மக்கள் வரிசையில் வந்து நின்றனர். பாதுகாப்பு பணியில் ஒரு போலீஸ் இணை கமிஷனர், 3 துணை கமிஷனர்கள், 8 உதவி கமிஷனர்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், 72 எஸ்ஐக்கள், 195 போலீசார் மற்றும் 350 ஆயுதப்படை போலீசார், 300 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பாப்பரம்பாக்கத்தில் மறுவாக்குப்பதிவு பாப்பரம்பாக்கம் ஊராட்சியில், 83, 84, 85 என மூன்று வாக்குச்சாவடிகள் ஒரே பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 83, 84 ஆகிய வாக்குச்சாவடிகளில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் வேட்பாளருக்கு அதிகளவு வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது. இதையறிந்த மற்ற கட்சியை சேர்ந்த மர்ம கும்பல், திடீரென இரு வாக்குச்சாவடிக்குள் புகுந்து, ஓட்டுப்பெட்டிகளை உடைத்து சூறையாடினர். வாக்குச்சீட்டுகளை எரித்தனர். எஸ்.பி., அரவிந்தன் தலைமையிலான அதிரடிப்படையினர் விரைந்து சென்று, தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், இரு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குச்சாவடி எண், 85ல் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புகாரின்பேரில், மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிந்து 14 பேரை கைது செய்தனர். ரவி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இந்நிலையில் 83, 84 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சசிகுமார், பாமக சார்பில் தினேஷ் குமார், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாந்தி நித்யானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 83வது வாக்குச்சாவடியில் 419 வாக்குகளும், 84வது வாக்குச்சாவடியில் 362 வாக்குகளும் உள்ளன. காலை 10 மணி நிலவரப்படி 160 ேபர் வாக்களித்துள்ளனர். பதற்றம் நிலவுவதால் டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.