news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
127,579
12/30/2019 3:12:52 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
மணலி புதுநகர் குழந்தை இயேசு ஆலய பெருவிழா: 4ம் தேதி தேர் திருவிழா
திருவொற்றியூர்: மணலிபுது நகரில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில்  40ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதை முன்னிட்டு திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மந்திரிக்கப்பட்டது. பின்னர் சாம்பிராணி தூபமிட்டு மயிலை முன்னாள் மறை மாவட்ட பேராயர் சின்னப்பா,  திருக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த கிறிஸ்துவர்கள் மரியே வாழ்க என முழங்கினர். 9 நாள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜனவரி 4ம் தேதி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்துள்ளது.
127,580
12/30/2019 3:14:49 PM
குற்றம்
திருவள்ளூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது விற்பனை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி, டாஸ்மாக் மதுபான கடைகள், அதை சார்ந்த பார்கள் அனைத்தும், மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த அரசு உத்தரவை மீறி நேற்று திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதுபான விற்பனை பரவலாக நடந்தது. திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெரு அருகே உள்ள பார் ஒன்றில், சுவரை துளை போட்டு விற்பனை ஜோராக நடந்தது.திருவள்ளூர் எரிமேடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, முட்புதரில் பெட்டி, பெட்டியாக சரக்குகளை வைத்து, முட்புதரில் விற்பனை நடந்தது. அங்கேயே மதுபானங்களை அருந்த கேன்களில் குடிநீரும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பாரிலும் தடுப்பில் துளை போட்டு மது விற்பனை கனஜோராக நடந்தது. குவாட்டருக்கு ரூ.30லிருந்து 50 வரையும், முழு பாட்டிலுக்கு ரூ.100லிருந்து 150 வரையிலும் அதிக விலை வைத்து விற்பனை நடப்பதாக, ‘குடி’மகன்கள் சிலர் கூறினர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை எந்த போலீசுமே கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
127,581
12/30/2019 3:16:56 PM
தமிழகம்
விபத்தில் பலியான மதுராந்தகம் ஊராட்சி பணியாளருக்கு நிதி உதவி
மதுராந்தகம்: மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பானுமதி பணியாற்றினார். இவர் சில தினங்களுக்கு முன் நடந்த விபத்தில், பானுமதி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்துக்கு மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய  அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பில், 2 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கும் நிகழ்ச்சி மெய்யூர் கிராமத்தில் நடைபெற்றது.மாவட்ட திட்ட இயக்குனர் தர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரணி, செயலாளர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, தண்டபாணி, பாபு ஆகியோர் கலந்துகொண்டு நிதி உதவியை பானுமதியின் பிள்ளைகளிடம் வழங்கினர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் மற்றும் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி செயலர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
127,582
12/30/2019 3:18:13 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
கோயம்பேட்டில் பஸ்சுக்கு காத்திருந்த வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர்
அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணலோகன் (16). இவர் கடந்த 22ம் தேதி இரவு தஞ்சாவூர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சரவணலோகனை சரமாரி தாக்கி, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ₹20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து தப்பி சென்றனர்.இதுபற்றி சரவணலோகன் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் செல்போன் பறித்த 3 மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த காய்ஸ் கான் (18), புழல், காவாங்கரையை சேர்ந்த கபீர் (20) ஆகியோரை நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
127,583
12/30/2019 3:21:21 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
சென்ட்ரலில் பரபரப்பு வாலிபரிடம் செல்போன் பறிப்பு
தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்து தப்பியவர்களை தேடி வருகின்றனர். சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சைத்தானி (27). இவர், நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து  நண்பர்களுடன்  வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், சைத்தானி வைத்திருந்த செல்போனை பறித்துகொண்டு பைக்கில் தப்பிவிட்டனர். இதுகுறித்து பூக்கடை போலீசில் சைத்தானி கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
127,584
12/30/2019 3:22:49 PM
தமிழகம்
வாக்குச்சாவடி மாற்றியதால் ஓட்டுப்போட மக்கள் மறுப்பு: மீஞ்சூர் அருகே பரபரப்பு
பொன்னேரி: மீஞ்சூர் அருகே வாக்குச்சாவடியை மாற்றியதால் வாக்களிக்க மக்கள் மறுத்துவிட்டனர். அதிகாரிகள் சமாதானப்படுத்தியதையடுத்து வாக்களித்தனர். மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் நாலூர் மற்றும் நாலூர் கம்மவார்பாளையம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் அப்பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் உள்ள வாக்காளர்கள் அக்கரம்பேடு வாக்குப்பதிவு மையத்துக்கு மாற்றப்பட்டனர். இதனால் மக்கள் சுமார் 5 கிமீ தூரம் நடந்து செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது.இதையடுத்து, இன்று காலை அப்பகுதி மக்கள் ‘’அக்கரம்பேடு வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்களிக்க மாட்டோம்’ என்று கூறி வாக்குப்பதிவை புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அறிந்ததும் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதானப்படுத்தினர். இதுபோல் இனிமேல் நடக்காது என்று அதிகாரிகள் எழுத்துபூர்வமாக உறுதியளித்தனர். இதன்பிறகு மக்கள் அக்கரம்பேடு வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றுவர அரசு வேன் ஏற்பாடு செய்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.
127,585
12/30/2019 3:24:02 PM
தமிழகம்
கள்ளக்காதல் விவகாரத்தில் காதலனை கொன்ற துணை நடிகை: கொளத்தூரில் பயங்கரம்
பெரம்பூர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாலிபரை அடித்துக்கொலை செய்த துணை நடிகை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கொரட்டூர் சியாமத்தமன் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவி (42). இவர் சினிமாவில் துணை நடிகையாக நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது கணவன் சங்கர் (49). இவர் சென்னை தேனாம்பேட்டையில் பர்னிச்சர் கடை  நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் தேவி நடித்தபோது கடந்த 8 வருடத்துக்கு முன் மதுரையை சேர்ந்த ரவி (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன்பிறகு இருவரும் பல இடங்களுக்கு சென்றதாக தெரிகிறது. திடீரென கடந்த 2 ஆண்டாக இருவருக்கும் எந்த தொடர்பும் கிடையாதாம்.இந்தநிலையில் நேற்று நள்ளிரவு கொளத்தூர், ராஜிவ்காந்தி நகரில் வசித்து வரும் தேவியின் தங்கை லட்சுமி (40) வீட்டுக்கு ரவி வந்துள்ளார். அப்போது லட்சுமியிடம் தேவி பற்றி விசாரித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி லட்சுமி கொடுத்த தகவல்படி தேவியும் லட்சுமியும் வந்து ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அங்கு கிடந்த உருட்டுக்கட்டை மற்றும் சுத்தியலால் ரவியில் தலையில் சரமாரி அடித்தனர். இதில் ரத்த  வெள்ளத்தில் விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜமங்கலம் போலீசார் சென்று ரவியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் தேவி, அவரது கணவன் சங்கர் (49) மற்றும் லட்சுமி, இவரது கணவன் சவரியார் (53) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடித்துக்கொலை செய்யப்பட்ட ரவி சினிமா மோகத்தில் சென்னை வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில்  தங்கியுள்ளார். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மதுபோதைக்கு அடிமையானதாக தெரிகிறது.
127,586
12/30/2019 3:24:57 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
நாடாளுமன்ற தேர்தலில் பறக்கும் படையில் பணியாற்றிய காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காததால் அதிருப்தி
உத்திரமேரூர்: தமிழகத்தில் தேர்தலின் போது வருவாய் துறை சார்பில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்படும். இந்த தேர்தல் பறக்கும் படையில் சிறப்பு வட்டாட்சியர் ஒருவரை நியமித்து, அவர் தலைமையில் சிறப்பு துணை ஆய்வாயர் உட்பட 4 காவலர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். இவர்கள் 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடியும் வரை பணியாற்றுவர். தகுந்த ஆவணங்களின்றி தேர்தல் விதிகளை மீறி பணம் கொண்டு சென்றாலோ அல்லது வாக்காளர்களுக்கு கொடுக்க இலவச பொருட்களை கொண்டு சென்றாலோ அவைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இந்த தேர்தலுக்கு உத்திரமேரூரில் 3 பறக்கும் படை குழுவினர் அமைத்து பணியாற்றினர்.இவர்கள் பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு பணியாற்றிய வருவாய் துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் 7 மாதங்கள் முடிந்தும், பறக்கும் படையில் பணியாற்றிய காவலர்களுக்கு இது நாள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால் காவலர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே பறக்கும் படையில் பணியாற்றிய காவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையினை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
127,587
12/30/2019 3:25:28 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
2 வீட்டில் கொள்ளை; வாலிபர் கைது: 12 பவுன் பறிமுதல்
அண்ணாநகர்: கோயம்பேட்டில் அடுத்தடுத்த வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு, ஜெய்நகர் பூங்கா பின்புறம் உள்ள தெருவில் வசிப்பவர் கவிதா (43). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மேல்மாடி அறையை உள்பக்கமாக பூட்டாமல் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது வீட்டுக்குள் மர்ம கும்பல் நைசாக புகுந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியது. காலையில் கண்விழித்துபார்த்த கவிதா, அதிர்ச்சியடைந்தார். இதேபோல் அங்கு வசிக்கும் செல்வகுமார் என்பவரது வீடும் திறந்து கிடந்தது. அந்த வீட்டிலும் புகுந்து, பீரோவில் வைத்திருந்த ₹5 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. காலையில் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.இரு சம்பவங்கள் குறித்தும் கோயம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு வாலிபர் இருவரது வீடுகளிலும் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அரும்பாக்கம், ஜெய்நகரை சேர்ந்த மகேந்திரன் (21) என்பரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
127,588
12/30/2019 3:27:52 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
இயல்பான அளவை விட 2% அதிகம் வடகிழக்கு பருவமழை நாளை முடிவு: சென்னை, கடலூரில் கனமழை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை மூலம் இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இந்த பருவமழையால் நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட அதிக மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நேற்று வரை இயல்பாக 444.1 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 452 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாகும். இருந்தபோதிலும் சென்னையில் இயல்பான அளவை விட 19 சதவீதம் குறைவான அளவு மழை பெய்துள்ளது.இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி இருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் சென்னை, கடலூர் மாவட்டங்களில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு இன்று காலை வரை கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
127,589
12/30/2019 3:28:53 PM
தமிழகம்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சித்தாமூரில் கிரிக்கெட் போட்டி: 80 அணிகள் பங்கேற்பு
மதுராந்தகம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட்  போட்டி சித்தாமூர் அடுத்த அகரம் கிராமத்தில் நேற்று தொடங்கியது. விழாவுக்கு காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பக்தவச்சலம், முன்னாள் எம்எல்ஏக்கள் வாசுதேவன், ராஜி, ஒன்றிய செயலாளர்கள் அப்பாதுரை, விஜயரங்கன், நிர்வாகிகள் மஞ்சுளா ரவிக்குமார், தண்டபாணி, இந்திரீஸ், ரவி, ராகவன், கோபுராஜ், பூபதி, உதயமணி, மதுரைவீரன், வேதகிரி, ஜெகநாதன், ராஜேந்திரன், முருகேசன், ஜெயராமன், முத்துவேல், அரசு மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து 80 கிரிக்கெட் அணி கலந்து கொள்கின்றனர். பிப்ரவரி 23ம் தேதி போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றிப்பெறும் அணிகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டாக்டர் பிரவீன்குமார் கூறினார்.
127,590
12/30/2019 3:29:58 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
சேலத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சின்னத்தில் வாக்கு குத்தப்பட்ட சீட்டு வழங்கல்: திமுகவினர் முற்றுகை போராட்டம்
கெங்கவல்லி: சேலத்தை அடுத்த கூடமலையில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட் பாளருக்கான சின்னத்தில் ஓட்டு குத்தப்பட்ட சீட்டுக்கள் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த 27ம்தேதி நடந்தது. இதையடுத்து மீதியுள்ள 8 ஒன்றியங்களுக்கான 2ம்கட்ட தேர்தல் இன்று (30ம்தேதி) காலை 7மணிக்கு தொடங்கியது. இதில் கெங்கவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடமலை ஊராட்சியின் 12 வார்டுகளுக்கான உறுப்பினர், ஒன்றியக்குழு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு அங்குள்ள அரசுப்பள்ளியில் நடந்து வருகிறது.இதில் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் யசோதாதுரைசாமி, அதிமுக சார்பில் சந்திராரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் ஏற்கனவே வாக்களித்தது போன்று சீல் குத்தப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் வாக்கு மையத்தில் திமுகவினர் திரண்டனர். ஏற்கனவே வாக்கு குத்தப்பட்ட சீட்டுகள் வந்தது எப்படி என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர்கள் அளித்த பதில் முரணாக இருந்ததால் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் திமுகவினர் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘வாக்குச்சீட்டுக்கு சீல் வைத்து அனுப்பிய போது, அது தவறுதலாக பட்டிருக்கலாம் என்கின்றனர். ஆனால் ஓட்டுமொத்த சீட்டுகளிலும் அப்படி இருப்பதை தவறுதல் என்று ஏற்க முடியாது. இது அதிமுகவினர் திட்டமிட்டு செய்யும் சூழ்ச்சியாகும். எனவே வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்’’ என்றனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில், டிஎஸ்பி அண்ணாமலை உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் நிறுத்தி வைப்புசேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பைத்தூர் ஊராட்சியில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில், 2வது வார்டுகான வாக்குச்சாவடியில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டில் தேமுதிக சின்னத்தில் முத்திரை குத்தப்பட்டு வந்ததால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வாக்காளர்கள், வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையிட்டனர். அதன்பேரில், அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், பைத்தூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
127,591
12/30/2019 3:31:17 PM
தமிழகம்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து இறைச்சி கடைகள்: பக்தர்கள் வேதனை
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் தங்காதலி அம்மன் சமேத ஸ்ரீவாசீஸ்வரர் கோயில் உள்ளது. மூங்கில் வனமாக இருந்த இப்பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்த புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று தினந்தோறும் பால் சுரந்தது. இடையன் மூலமாக இதை அறிந்த மன்னன் ஒருவன் அங்கு சென்றான். புற்றின் அடியில் லிங்கம் இருந்ததை கண்டு கோயில் எழுப்பினான். மூங்கில் வனத்தில் தோன்றியதால் சிவனுக்கு “பாசூர் நாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாக தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது. இங்குள்ள ஈஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது.சுவாமி தீண்டா திருமேனி என்று அழைக்கப்படுகிறார். தற்போது, இக்கோயில் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. மேலும், சாலையை ஆக்கிரமித்து இறைச்சி விற்பனை கடைகள் அதிகரித்து வருகின்றன. இந்த கடைகளில் ஆடு, மாடு இறைச்சி, பிரியாணி விற்கப்படுகிறது. இதை வாங்கி சாப்பிடுபவர்கள் அங்கேயே கழுவுகிறார்கள். இதுபோன்ற செயல்களால் கோயிலின் புனிதம் கெட்டு வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இவ்வாறு அசுத்தப்படுத்துவதை இந்து அறநிலையத்துறையினரும், சுகாதார துறையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே, கோயிலை சுற்றிலும் உள்ள இறைச்சி கடைகளை இந்து அறநிலையத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
127,593
12/30/2019 3:34:08 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
பூத்தில் கள்ள வாக்குப்பதிவு அலுவலர், ஏட்டு சஸ்பெண்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட 7 ஒன்றியங்களுக்கு கடந்த 27ம் தேதி நடந்தது. சாத்தான்குளம் ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவையொட்டி வேலன்புதுக்குளம் கிராமத்தில் உள்ள பள்ளியில் இருபாலருக்கான 27ம் எண் பூத் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வாக்குப்பதிவின்போது கள்ள வாக்குகள் பதிவாகின. இதுதொடர்பான புகார்களை அடுத்து அந்த பூத்தில் இன்று மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அங்கு மறு வாக்குப்பதிவு இன்று (30ம் தேதி) நடக்கிறது.இதற்கிடையே கள்ளவாக்குகள் போட்டதாக 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த பூத்தில் கள்ளவாக்குகள் பதிவை அனுமதித்து, பணியில் மெத்தனமாக இருந்ததாக அந்த பூத்தில் தேர்தல் பணியில் இருந்த தலைமை தேர்தல் அலுவலர் சார்லஸ் திரவியம், பெண் ஏட்டு முருகேஷ்வதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
127,594
12/30/2019 3:34:36 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
கடை மூடினால் என்ன? ஆட்டோவில் மொபைல் டாஸ்மாக்
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணி தொடங்கி இன்று மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கள்ளத்தனமாக பார்களில் மது விற்பனை ஆங்காங்கே நடந்தது. இந்நிலையில், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில்  போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழன்குறிச்சி பிரிவு சாலை காங்கேயன்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த கருப்பையன் (51) என்பவர் 400 மதுபாட்டில்களை ஆட்டோவில் பதுக்கி வைத்து ஆங்காங்கே கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
127,595
12/30/2019 3:35:09 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
போதையில் தேர்தல் பணி 2 போலீசார் சஸ்பெண்ட்
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பணியில் இருந்த போலீசாரில் 2 பேர் குடிபோதையில் இருந்ததாக எஸ்பி மணிவண்ணனுக்கு புகார் வந்தது. விசாரணையில், மதுரை அருகே மேலவளவு அருகில் உள்ள உப்போடைபட்டி வாக்குச்சாவடியில் பணியில் இருந்த திருமங்கலம் நகர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டு செல்வம், கொட்டாம்பட்டி அருகே வி.புதூர் வாக்குச்சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரர்  சிவகணேஷ் ஆகியோர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மணிவண்ணன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
127,596
12/30/2019 3:35:59 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
வாக்குச்சாவடி பணியில் இருந்த தலைமை காவலா் திடீர் சாவு
கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் ஜான்சன்(42). இவர் நேற்று தோலைமலை ஒன்றியம் ஆர்.டி.மலை வாக்குசாவடிக்கு 2ம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்சில் திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜான்சன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் குளித்தலை அரசு ஆஸ்பத்திாிக்கு எடுத்து செல்லப்பட்டது.
127,597
12/30/2019 3:37:09 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
சின்னம் ஒதுக்கியதில் குளறுபடி அருப்புக்கோட்டையில் தேர்தல் ரத்து
மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1, 3, 5, 6, 7, 8 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட விண்ணப்பங்களின் வரிசைப்படி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தவறுதலாக ஒட்டுமொத்தமாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், வில்லிபத்திரி கிராம ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1, 3, 5, 6, 7, 8 ஆகிய ஆகிய வார்டுகளில் இன்று (டிச. 30) நடைபெற இருந்த கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
127,598
12/30/2019 3:38:22 PM
குற்றம்
3.5 கோடி வெளிநாட்டு கரன்சியுடன் 6 பேர் கும்பல் அதிரடி கைது
கூடலூர்: குமுளி பகுதியில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பிரேசில் நாட்டு பணத்துடன் சுற்றித்திரிந்த கேரள கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வெளிநாட்டு பணம் எப்படி கிடைத்தது என அமலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலம் தேக்கடி. தமிழக எல்லையான குமுளிக்கு அருகே இது உள்ளது. தேக்கடிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அதனால் வெளிநாட்டு பணம் இங்கு புழக்கத்தில் உள்ளது. பிரேசில் நாட்டு பணத்துடன் சிலர் குமுளி பகுதியில் திரிவதாக கட்டப்பனை டிஎஸ்பி ராஜ்மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கார்களில் வந்தவர்களை நிறுத்தி போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.3.5 கோடி இந்திய மதிப்பிலான பிரேசில் நாட்டு பணம் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த பைசல் (44), மொய்தீன் குட்டி (37), அப்துல் ஹக் (26), பாஹிம் கபூர் (25), ரியாஸ் (28), பேராவூரைச் சேர்ந்த அஷ்ரப் (28) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் வந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள் பிரேசிலில் தடை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரேசில் நாட்டு பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,599
12/30/2019 3:39:58 PM
தமிழகம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா: ஜனவரி 1ல் கொடியேற்றம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில். சபாநாயகர் கோயில் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதத்துக்கான மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோயில் உத்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைக்கிறார். அதை தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.ஜனவரி 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வரும். அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுப்பர். அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும். 10ம் தேதி அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறும். பின்னர் பல்வேறு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக மதியம் 2 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பர். புத்தாண்டு தினத்தன்று நடைபெற உள்ள கோயில் கொடியேற்றம் மற்றும் தேரோட்டம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்பர்.
127,600
12/30/2019 3:41:49 PM
தமிழகம்
கோவை அருகே பங்களாவில் கட்டுக்கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கின: 4 பேர் கும்பலுக்கு வலை
கோவை: கோவை வடவள்ளியில் கட்டுக்கட்டாக செல்லாத ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவை வடவள்ளி-தொண்டாமுத்தூர் ரோட்டில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை கோவை உக்கடத்தை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வரும் ரஷீத் (47) என்பவர் மாதம் ரூ.2.7 லட்சம் வாடகைக்கு எடுத்து அங்கு தன்னுடைய அலுவலகத்தை நடத்தி வந்தார்.ரஷீத்தின் தொழில் பார்ட்னர்கள் பலர் இங்கு அடிக்கடி வந்து சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த பங்களாவில் உள்ள ரகசிய அறையில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஐ.ஜி. அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பங்களாவை ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவில் வடவள்ளி போலீசார் அந்த பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். சோதனையின்போது ரஷீத் அங்கு இல்லை. அப்போது பங்களாவின் உள் அறையில் இருந்த அலமாரியை திறந்து பார்த்தபோது அதனுள் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் சென்று பார்த்தபோது அங்கு கட்டுக்கட்டாக பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 268 கட்டுகள் இருந்தன.ஒவ்வொரு கட்டிலும் மேலே உள்ள ஒரு நோட்டு மட்டும் ஆயிரம் ரூபாயாகவும், மற்ற அனைத்தும் ரூபாய் நோட்டுகள்போல வெட்டப்பட்ட தாள்களாகவும் இருந்தன. அதில் இருந்த ரூ.2.68 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பங்களாவில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம், ஒரு துப்பாக்கி, பைக் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு 425 கட்டுகள் பணம் போன்று செதுக்கப்பட்ட வெற்றுத்தாள்களும் இருந்தன.இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் ரஷீத் தலைமையிலான கும்பல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி மோசடி செய்து வந்ததாக தெரிகிறது. மத்திய அரசு விரைவில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்போகிறது என்றும், தற்போதுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு விரைவில் செல்லாததாகிவிடும் என்றும் கூறி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ேமலும் ரூ.1 லட்சம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.2 லட்சம் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் கூறி வெள்ளைத்தாள்களுடன் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பார்டனரான சேக், ஆனந்தன், பரோஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி செய்தல், பதுக்கி வைத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கேரள மாநிலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
127,601
12/30/2019 3:42:52 PM
தமிழகம்
பாகன் குடும்பத்தினருடன் வீடியோகால் கள்ளழகர் கோயில் யானை அசத்தல்: புத்துணர்வு முகாமில் ருசிகரம்
கோவை: கோவை அடுத்த மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 15ம் தேதி துவங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 28 கோயில் யானைகள் பங்கேற்றுள்ளன. முகாம், பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. யானைகள் முகாமை சுற்றி 24 மணி நேரமும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முகாம் நடக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லித்துறை காப்புக்காட்டில் 23 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. மேலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டியூர் அருகே 2 காட்டு யானைகள் தனித்தனியாக முகாமிட்டு உள்ளன. ஒரு கூட்டத்தில் குட்டியுடன் கூடிய 22 யானைகளும், மற்றொரு கூட்டத்தில் 12 யானைகளும் உள்ளன. முகாமை சுற்றி மூன்று கூட்டமாக மொத்தம் 57 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன.இந்த யானைகள், புத்துணர்வு முகாம் நடைபெறும் இடத்தில் நுழைவதை தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இக்குழுவினர் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் ஆற்றை கடந்து வராமல் தடுக்கும் வகையில் 10 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, முகாமை சுற்றி 6 இடங்களில் உயர்கோபுரம் அமைக்கப்பட்டு காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.முகாமில் பங்கேற்றுள்ள கள்ளழகர் கோயில் யானை சுந்தரவள்ளி தாயார் யானை பாகன்கள் தங்களின் மனைவி, குழந்தைகளுடன் போனில் வீடியோகால் பேசினார். பின்னால், யானை இருந்தை பார்த்தவர்கள், யானையுடன் பேச வேண்டும் என கூறினர். அப்போது, பாகன் யானைக்கு முன்பு தனது செல்போனை கொண்டு சென்றார். போனில் பாகனின் குடும்பத்தினரை பார்த்த யானை உற்சாகமடைந்தது. யானையிடம் அவர்கள் புதிய இடம் எப்படி இருக்கு?, சாப்பாடு எப்படி?, நல்லா இருக்கியா? என கேட்டனர். இதைக்கேட்ட யானையும் அதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
127,602
12/30/2019 3:45:44 PM
இந்தியா
நல்லதா, கெட்டதா என்பதெல்லாம் தெரியாது... 2019ல் செய்தியின் தலைப்பை ஆக்கிரமித்த தலைவர்கள்
புதுடெல்லி: இந்தாண்டு ஊடகங்களின் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்த 10 தலைவர்கள் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், அதன் பின்னணி விவரங்களில் இந்திய பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார். இவர்களின் நடவடிக்கை நல்லதா கெட்டதா என்பதையெல்லாம்விட, அவர்களின் நடவடிக்கைகள் பரபரப்பாக சர்வதேச அளவில் பேசப்பட்டன. சர்வதேச அரசியலில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஆதிக்கம் இருப்பது வாடிக்கையான ஒன்றானாலும்கூட, 2019ம் ஆண்டில் பல அரசியல் தலைவர்கள் பத்திரிகை, டிவி ஊடங்களின் வாயிலாக செய்திகளின் தலைப்புகளை வெகுவாக ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் தங்கள் பெயர்களை முன்னிலைபடுத்தும் விதமாக செய்திகளை அவ்வப்போது கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதுபோன்ற செய்திகள் சர்வதேச கவனத்தையும் பெற்று வருகின்றன.அவற்றில் சில விஷயங்கள் நல்ல காரணங்களுக்காகவும், சில விஷயங்கள் தவறான முடிவுகளை கொண்டிருப்பதையும் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை வளர்ச்சியின் பாதையில் பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக செய்தி பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், அவர் மீதான எதிர்ப்பும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. சரி... 2019ல் செய்திகளின் தலைப்பை ஆக்கிரமித்த தலைவர்கள் பட்டியலில், சர்வதேச அளவில் முதல் 10 இடங்களை பிடித்த தலைவர்கள் குறித்த பின்னணி வருமாறு:நரேந்திர மோடிஇந்தியப் பிரதமர் மோடி இந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலை இரண்டாவது முறையாக வென்றது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகையின் வாசகர்களால் ‘உலகின் மிக சக்திவாய்ந்த தலைவராக’ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதும், இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதும் இந்தியாவில் ஒரு வரலாற்று நிகழ்வாக  பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜ கட்சி, சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய செய்தி, நாடு முழுவதும் போராட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து முஸ்லிம் அல்லாத துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை திரும்பப் பெறுமாறு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரி வருகின்றனர். பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படை வழித் தாக்குதலை இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தியது. இது, உலகளவில் கவனத்தை பெற்றது. 2019 செப்டம்பரில் டெக்சாஸின் ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்வு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சில முக்கிய தலைவர்களுடனான சந்திப்பு சர்வதேச அளவில் பேசப்பட்டது. டிஸ்கவரி சேனலின் சாகச நிகழ்ச்சியான ஹோஸ்ட் பியர் கிரில்ஸுடன் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ சிறப்பு எபிசோடில் மோடி தோன்றியது இந்தியா உட்பட 180 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டதால் பிரபலம் அடைந்தார்.டொனால்டு டிரம்ப்அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். அமெரிக்காவின் வரலாற்றில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியாக டிரம்ப் ஆளாகி உள்ளார். அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உனுடன் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான செய்திகளில் அதிகம் இடம் பெற்று இருந்தார். இரு தலைவர்களுக்கிடையில் இரண்டாவது உச்சிமாநாடு இந்த ஆண்டு பிப்ரவரியில் வியட்நாமில் நடைபெற்றது. ஆனால், எந்த ஒரு உடன்பாடும் இல்லாமல் முடிந்தது.ஜூன் 30ம் தேதி, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் முன்னிலையில், கொரிய ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலத்தில் (டி.எம்.ஜெட்) டிரம்ப் மற்றும் கிம் ஜாங் ஆகிேயார் ஆலோசனை நடத்தியது முக்கியமாக பேசப்பட்டது. ஈரான் மீதான அமெரிக்க கொள்கை முடிவுகள், அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் ஆகியன முக்கிய செய்திகளாகின. சிரியாவில் இட்லீப் மாகாணத்தில் அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு பயந்து ஐ.எஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். பக்தாதியைக் கொல்லும் பணியில் 4 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நாயை `ஹீரோ டாக், திறமை மிக்க நாய்’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளினார்.இம்ரான் கான்முன்னாள் கிரிக்கெட் வீரரான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு - காஷ்மீர் பிரச்னையில் உலகளாவிய ஆதரவைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இம்ரான் கான் ஊடகங்களில் உரையாற்றினார். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை அவர் நிராகரித்தார். இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தனை சமாதானத்தின் ஒரு முன்னேற்றமாக, அவரை விடுவித்ததற்காக இம்ரான் கான் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஐ.நா கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கட்டுப்பாடுகளை நீக்கவில்லை என்றால், பயங்கர பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரித்தார். இதற்கிடையில், பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடிக்கு எதிராக நாடு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், ‘எப்ஏடிஎப்’ தடுப்புப்பட்டியலில் வைக்கப்படுவதைத் தவிர்க்க பாகிஸ்தான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், 6 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) கடன் பெற்றிருந்தாலும், அடுத்த தவணையாக 452.4 மில்லியன் டாலர்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது.கிம் ஜாங் உன்பிப்ரவரி மாதம் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான உச்சிமாநாடு முறிந்ததிலிருந்து பேச்சுவார்த்தைகள் முறிந்தன. அணுசக்தி விவகாரத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், வடகொரிய கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்தது. அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைக்கு ஆண்டு இறுதி காலக்கெடுவை கிம் நிர்ணயித்துள்ளார். அந்த காலக்கெடுவை அமெரிக்கா புறக்கணித்தது. இந்த ஆண்டு அக்டோபரில், கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை கடலுக்குள் அமெரிக்கா வீசியது. சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம், ஒரு வெள்ளை குதிரையில் ஒரு மலையில் சவாரி செய்தும், அவ்வப்போது ஏவுகணைகளை வான்வெளியில் ஏவியும் சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றார்.ஜி ஜின்பிங்ஹாங்காங்கில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய நிதி மையத்தில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர கோரிக்கை விடுத்தார். இந்தாண்டு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் அதிக ஊடக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில்  ஜின்பிங் மற்றும் டிரம்ப் கையெழுத்திட உள்ளனர்.இந்த ஆண்டு அக்டோபரில் ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடியை தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்தார். காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பாதித்துள்ள நிலையில், இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. சீனாவில் அதிகளவிலான பத்திரிக்கையாளர்களை சிறைபிடித்து வைத்திருத்தல், சீனாவில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான நடவடிக்கை, ஹாங்காங் பிரச்னையில் சீனாவின் செயல்பாடுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன.பர்வேஸ் முஷாரஃப்பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் இந்த ஆண்டு ஒரு சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதோடு, உயர் தேசத்துரோகம் மற்றும் அரசியலமைப்பை முறியடித்த குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஜூலை 31, 2009ல், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 14 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 2007 நவம்பரில் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் அவசரநிலையை அறிவித்த நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.72 ஆண்டுகால வரலாற்றில் ஏறக்குறைய அதன் சக்திவாய்ந்த ராணுவத்தால் ஆளப்பட்ட ஒரு நாட்டில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முஷாரப்பின் தண்டனைக்கு சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட தீர்ப்பு, முன்னாள் ஜனாதிபதியின் சடலத்தை பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஒருவர் கூறினார். இருந்தும், இந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து முஷாரஃப் லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளார்.போரிஸ் ஜான்சன்பிரிட்டனில் டிச. 12ம் தேதி நடந்த தேர்தல் வாக்குப்பதிவுகளின் முடிவுகளில் மொத்தமுள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களையும் தொழிலாளர் கட்சி 203 இடங்களையும் கைப்பற்றின. சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்றது. பிரிட்டனைப் பொறுத்தவரை பிரெக்ஸிட் (Brexit) விவகாரம் பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது பேசிய போரிஸ், ``எனக்கு வாக்களிக்க மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்வேன். விரைவில் பிரெக்ஸிட் நிறைவேற்றப்படும். தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்கள் முதல்முறையாக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்றார். இவரது தேர்தல் வெற்றிக்கு காரணம், ‘நோ-டீல் பிரெக்ஸிட்’ என்ற முழக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக உறுதியளித்ததன் பேரில் இங்கிலாந்து பிரதமரானார்.பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சமீபத்தில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நெதன்யாகு அரசுக்கு எதிரான 63 பக்க குற்றச்சாட்டை, இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல் அவிச்சாய் மண்டெல்பிட் விசாரித்தார். பிரதமரும் அவரது மனைவி சாராவும் அரசியல் உதவிகளுக்காக பல கோடி மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை ஏற்றுக்கொண்டதாகவும், நேர்மறையான செய்திகளை வெளியிட இரண்டு ஊடக நிறுவனங்களில் தலையிட்டதாகவும் நெதன்யாகு மீது வழக்குகள் பதியப்பட்டது.கடந்த 26ம் தேதி இஸ்ரேலில் ஆளும் லிக்குட் கட்சித் தலைமைக்கு நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றார். ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவர், வரும் மார்ச்சில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இஸ்ரேலில் மிக நீண்ட காலமாக பிரதமர் பதவியை வகித்து வரும் அவர், வரும் தேர்தலில் லிக்குட் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்பார்.முகமது பின் சல்மான் அல் சவுத்சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி பத்திரிகையாளரும், இளவரசரின் விமர்சகருமான ஜமால் கஷோகி கொலையில் நேரடி தொடர்பு இருப்பது உறுதியானது. கஷோகியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 15 பேரில் ஏழு பேர் முகமது பின் சல்மானின் தனிப்பட்ட மெய்க்காப்பாளரின் உறுப்பினர்கள் என்று ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன. கஷோகியின் கொலையில் பங்கு வகித்ததற்காக ஐந்து பேருக்கு இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி கிணறுகள் மீது ட்ரோன் தாக்குதலால் தட்டுப்பட்டபோது சவுதி அரேபியா முக்கிய செய்தியானது. இது, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது. சவுதி கலாசாரத்தில் புரட்சிகர மாற்றங்களை சல்மான் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக சவுதி பெண்களுக்கு ஓட்டல் அறைகளை வாடகைக்கு விட அனுமதிப்பது, பாஸ்போர்ட் வழங்கல், ஆண் பாதுகாவலர் வெளிநாடு செல்லலாம் போன்றவை முக்கியமாக பேசப்பட்டது.ஹசன் ரூஹானிஈரானின் தொடர்ச்சியான சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் இந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் மீதான பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகள், அமெரிக்காவுடனான பரிவர்த்தனைகளுக்கு தடை மற்றும் ஈரானிய விமான நிறுவனங்களுக்கு விமானம் மற்றும் பழுதுபார்க்கும் பாகங்களை விற்பனை செய்வதற்கான தடை ஆகியன அடங்கும்.சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிலையங்களை ஈரான் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியைச் சுற்றி சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இந்த குற்றச்சாட்டை கிளப்பினாலும்கூட, அதற்கான ஆதாரங்களை வௌியிட வேண்டும் என்று ரூஹானி கேட்டுள்ளார். இதற்கிடையே இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியது. அதில் ஒன்று இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்டது. மற்றொன்று லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டது.
127,603
12/30/2019 3:46:49 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
வீரர்களின் தகவல்கள் கசிவு எதிரொலி ‘பேஸ்புக்’ பயன்படுத்த திடீர் தடை: கடற்படை நிர்வாகம் அறிவிப்பு
புதுடெல்லி: கடற்படை வீரர்களின் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதால், ‘பேஸ்புக்’ பயன்பாட்டுக்கு கடற்படை நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது. இந்திய கடற்படையில் 67,252 வீரர்கள் பணியாற்றும் நிலையில், கடற்படை  விதிகளின் கீழ் துறைமுகங்கள் மற்றும் கடற்படை கப்பல் துறைகளில் பணியாற்றும்  ஊழியர்கள் இதில் அடங்காது. இந்திய கடற்படையின் சாதனைகள், மனித உதவி  மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியன பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் மூலம்  ஆட்சேர்ப்பு விளம்பரம் போன்ற தகவல்கள் வௌியிடப்படுகின்றன. இருந்தும், இந்த இணைய சமூக வளைதளங்கள் மற்றும் சமூக ஊடக வலையமைப்பைப் பயன்படுத்தி கடற்படை வீரர்களை எதிரிகள் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அதனால், சமூக ஊடக தளமான பேஸ்புக் பயன்பாட்டை தடை செய்ய இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு டிச. 27ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. கடந்த 20ம் தேதி 8 பேர், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட ஹவாலா கும்பலை கடற்படை வீரர்கள் கைது செய்தனர். ஆந்திர புலனாய்வுத் துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் கடற்படை புலனாய்வுத் துறையுடன் இணைந்து மேற்கண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தானுடனான தொடர்புகளைக் கொண்ட மோசடி கும்பல் என்று உளவு தகவல்கள் தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாக இந்த தடை உத்தரவு வந்துள்ளது.பேஸ்புக் பயன்பாட்டை தடை செய்வதுடன், கடற்படை பகுதிகளுக்குள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. செய்தி பயன்பாடு மற்றும் சமூக வலைதளங்களுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை பேஸ்புக்கிற்கு சொந்தமானவை என்பதால், இந்த தடை அவற்றுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. தற்போதைய தடைக்கான காரணம், சமூக வலைதளங்களை பயன்படுத்தி கடற்படை வீரர்களை எதிரி குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
127,604
12/30/2019 3:48:52 PM
இந்தியா
முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவிகாலம் 65 வயது: தற்போதைய தளபதிக்கு கூடுதலாக 3 ஆண்டு ‘லக்’
புதுடெல்லி: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தலைமை தளபதியின் பதவிக்காலம் அவரது 65 வயது வரை பணியில் இருக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவை கடந்தவாரம் ஒப்புதல் அளித்தது. இதன்படி, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரம் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக தலைமை தளபதி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை தளபதிக்கான தகுதிகளை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, தலைமை தளபதி தனது 65வது வயது வரை அந்த பதவியில் இருப்பார். தற்போதுவரை, முப்படை தளபதிகளின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆக இருந்து வருகிறது. மேலும், தலைமை தளபதியாக நியமிக்கப்படுபவர், தனது பதவிக்காலத்துக்குப் பிறகு எந்த அரசு பணியிலும் நியமிக்கப்படமாட்டார் என்றும், ஓய்வுபெற்ற பிறகு 5 ஆண்டுக்குள் தனியார் பணியில் சேர விரும்பினால் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளில்‌ யார் வயதில் மூத்தவரோ அவரே முப்படைத் தளபதிகளின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அந்தப்பதவியை வகித்து வருகிறார். அவர் நாளை ஓய்வு பெறுவதால் அடுத்த இடத்தில் உள்ள கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முப்படைத் தளபதிகளின் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக நேற்று நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிபின் ராவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது. மேலும் அவரே முப்படைத் தளபதிகளின் தலைவராகவும் நீடிப்பார் எனத் தெரிகிறது.
127,605
12/30/2019 3:50:46 PM
இந்தியா
மகாராஷ்டிர மாநிலத்தில் நெகிழ்ச்சி அயர்லாந்து பிரதமர் இந்தியா வருகை: தந்தை பிறந்த ஊரில் உற்சாகம்
மும்பை: இந்தியா வந்துள்ள அயர்லாந்து பிரதமர், மகாராஷ்டிராவில் உள்ள தனது தந்தையின் கிராமத்துக்குச் சென்றார். அவரை, அக்கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வராட் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் வராட்கர். மருத்துவரான இவர் 1960ம் ஆண்டு அயர்லாந்தில் குடியேறினார். அசோக்கின் மகனான லியோ வராட்கர் தற்போது அயர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்தியா வந்த அவர், சிந்து துர்க் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் தனது தந்தை வசித்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள கோயிலில் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். தந்தையின் சொந்த ஊருக்கு வந்துள்ளது சிறப்பான தருணம்’’ என்றார். அயர்லாந்து பிரதமர், மகாராஷ்டிராவில் உள்ள தனது தந்தையின் கிராமத்துக்குச் சென்ற சம்பவம், அம்மாநில மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
127,606
12/30/2019 3:51:49 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
டெல்லி பனிமூட்டத்தால் சாலை விபத்தில் 8 பேர் பலி
நொய்டா: நொய்டா பகுதியில் சாலையில் சென்று கொண்டியிருந்த கார் கால்வாயில் விழுந்து 8 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரேசத்தில் உள்ள நொய்டா பகுதியில் நேற்று இரவு காரில் 11 பேர் டெல்லியை நோக்கி சென்று கொண்டியிருந்தனர். அப்போது, கஹேரில் கானல் என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கால்வாயில் விழுந்தது. தகவலறிந்த போலீசார் மீட்பு குழுவினருடன் சென்று, விபத்தில் சிக்கிய காரை மீட்டு பாதிக்கப்பட்ட 11 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 6 பேர் ஏற்கனவே இறந்ததாக கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இச்சம்பத்தில் இறந்தவர்கள் மகேஷ் (35), கிஷன் லால் (50), நீரேஷ்  (17), ராம் கிலாடி (75), மல்லு, (12), நேத்ராபால் (40)  என்பது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரணையில் கடும் பனிமூட்டம் காரணமாக கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தால், கார் கால்வாயில் விழுந்ததாக கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, சாம்பல் பகுதியில், கார் விபத்து ஏற்பட்டது. 2 பேர் பலியானார்கள். தற்போது, பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட வெவ்வேறு விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
127,607
12/31/2019 2:54:35 PM
தமிழகம்
கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு: களை கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவதால் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேநேரம் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.2020 ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாலிபர்கள் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாட உள்ளனர்.  ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதால் மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 2,500 போக்குவரத்து போலீசார் மற்றும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் இன்று காலை முதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர குதிரைப்படை வீரர்கள் மற்றும் 25 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.புத்தாண்டு என்றாலே நட்சத்திர விடுதிகள், ரிசார்டுகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை நடனங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விடுதிகளுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள ரிசார்டுகள் மற்றும் பண்ணை வீடுகளில் போலீசாரின் தடையை மீறி கேளிக்கை நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக இணையதளங்களில் ஜோடியாக வரும் இளம்  பெண்களுக்கு மது இலவசம் என்று சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நட்சத்திர விடுதிகள் மது அருந்தியவர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்ப வாகன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் 2008ம் ஆண்டு மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நீச்சல் குளத்தில் மேடை அமைத்து நடனம் ஆடிய போது மேடை சரிந்து 3 பேர் மது போதையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில் போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து கண்காணித்து வருகின்றனர்.புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய 100 கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாந்தோம் தேவாலயம், கதீட்ரல் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் இரவு 11 மணி முதல் நாளை காலை 4 மணி வரை சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கோயில் மற்றும் தேவாலயங்களுக்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்தை போன்றே இரவு நேரத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 12 துணை கமிஷனர்கள் தலைமையில் தீவிர ரோந்து பணிகளிலும் போலீசார் ஈடுபடுகின்றனர்.இதுதவிர மாநகரம் முழுவதும் 368 இடங்களில் சிறப்பு வாகன சோதனைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுக்களும் ஆங்காங்கே முகாம் அமைத்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண்களிடம் யாரேனும் தவறாக நடத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். நகரில் விபத்துக்களை குறைக்க 75 மேம்பாலங்கள் மூடப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டையொட்டி மாநகரம் முழுவதும் 2,500 போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2020 புத்தாண்டு விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடும் வகையில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலிபர்கள் உற்சாக மிகுதியில் யாரும் பைக் ரேசில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசாரின் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாசாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓஎம்ஆர் சாலைகள் என முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் யாரேனும் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். அதோடு இல்லாமல் குற்ற ஆவண காப்பகத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டு பாஸ்போர்ட் மற்றும் விசாவுக்கான சான்றுகள் போலீசார் சார்பில் வழங்கப்படாது.சட்டம் ஒழுங்கு போலீசாருடன் போக்குவரத்து போலீஸ் இணைந்து விபத்து இல்லா புத்தாண்டு கொண்டாடும் வகையில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் தடையை மீறி யாரும் பைக் ரேசில் ஈடுபடுவோர் போலீசாரிடம் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்க கூடாது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டிப்பாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் பெண்களை கண்காணிக்க போக்குவரத்து பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதி நவீன சிறப்பு ரோந்து வாகனங்களில் காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். எனவே, இந்த புத்தாண்டு விபத்து இல்லா புத்தாண்டாக கொண்டாட பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
127,608
12/31/2019 2:56:27 PM
இந்தியா
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனவரி முழுவதும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஜனவரி மாதம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த 100 அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் கூட்டு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மேதா பட்கர், கணேஷ் தேவி, யோகேந்திர யாதவ் மற்றும் கவிதா கிருஷ்ணன், இம்மானுவல் யோகினி உள்பட 100 அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து, சுவராஜ் அபியான் கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘‘குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவு மற்றும் தேசிய குடியுரிமை பதிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் அனைத்து மக்களும் ஒரே குடையின்  கீழ் வருமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார்.மறைந்த முக்கிய தலைவர்களின்  பிறப்பு அல்லது இறப்பு ஆண்டு நிறைவைக் குறிக்கும் குறிப்பிடத்தக்க நாட்களில் இந்த அமைப்புகள் 2020  ஜனவரி மாதம் தொடர்ச்சியான நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த நாளான ஜன. 3 முதல் தொடர் போராட்டங்கள் தொடங்கும். ஜன. 8ம் தேதி போராட்டத்தில் ஈடுபடும், விவசாய அமைப்புகள் மற்றும் இடது ஆதரவு தொழிற்சங்கங்களும் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.ஜன. 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம், ரோஹித் வெமுலா இறந்த நாளான ஜன. 17ம் தேதி சமூக நீதி தினம், ஜன. 14 மற்றும் 15ம் தேதிகளில் சங்கராந்தி ஆகிய தினங்களில் அனைத்து கலாசாரங்களையும் சேர்ந்த அனைவரையும் ஒன்றாக இணைத்தும், ஜன. 26ம் தேதி நள்ளிரவில் போராட்டமும், மகாத்மா காந்தியின் நினைவு  ஆண்டை முன்னிட்டு ஜன. 30ம் தேதி நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளனர்.
127,609
12/31/2019 2:58:38 PM
தமிழகம்
2020ம் ஆண்டில் நெருக்கடியை சமாளிக்க ஒரு லட்சம் டன் வெங்காயம் இருப்பு வைக்க திட்டம்
புதுடெல்லி: 2020ம் ஆண்டில் நெருக்கடியை சமாளிக்க ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து இருப்பு வைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து ஏழை,  எளிய மக்களை கடுமையாக பாதித்ததோடு, மத்திய அரசுக்கும் கடும் நெருக்கடியை  ஏற்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.150க்கு  மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, அரசு நடத்தும்  எம்.எம்.டி.சி மூலம் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய  அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. இதே நிலை அடுத்த ஆண்டும் தொடரக்கூடாது என்பதில் கவனம்  செலுத்தியுள்ள மத்திய அரசு, ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க  திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் வெங்காயம் விலை திடீரென உயர்வதைத்  தடுத்து, விலையை கட்டுக்குள் வைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.  நடப்பாண்டு 56 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இருப்பு  வைத்திருந்தபோது, விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், 2020ம் ஆண்டில்  வெங்காயத்தை இறக்குமதி செய்து 1 லட்சம் டன் அளவிற்கு இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் சமீபத்திய கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் சார்பில் கூட்டுறவு நிறுவனமான நாஃபெட், அடுத்த ஆண்டு தொடர்ந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும். மேலும் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
127,610
12/31/2019 3:01:26 PM
தமிழகம்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் நியமனம்
சென்னை: இன்று இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில்  ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் எண்ணிக்கையில் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக செல்லாமல் மெதுவாகவும், விபத்துக்குள்ளாகாமலும் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொண்டு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.  காவல் துறையுடன் இணைந்து சுகாதாரத்துறை சார்பில் தேவையான விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற இடங்களில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து, உயிரை காப்பாற்றும்வகையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நள்ளிரவு நேரங்களில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விபத்து காய நிலைப்படுத்துதல் மையங்களிலும் (எமர்ஜென்சி கேர் சென்டர்) கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் நடைபெறும் பகுதிகளில் விபத்துகள்  ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு 50 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்சுகள் மற்றும் 15 எண்ணிக்கையிலான இரு சக்கர ஆம்புலன்சுகள் என மொத்தம் 65 எண்ணிக்கையிலான  108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் வைக்கப்படவுள்ளது.  தமிழகம் முழுவதும்  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
127,611
12/31/2019 3:04:41 PM
இந்தியா
2019ம் ஆண்டை புரட்டி போட்ட அரசியல் நிகழ்வுகள்
புதுடெல்லி: மத்தியில் பாஜ அரசு 2014ம் ஆண்டில் வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றினாலும்கூட, அக்கட்சியின் அடுத்த கொள்கை முடிவுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மக்களை வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களை சந்திக்க வைத்தது என்றால் மிகையல்ல. அந்தவகையில், கடந்த ஓராண்டில் இந்திய அரசியலில் முக்கியமாக சில நிகழ்வுகள் வரலாற்றில் முக்கிய இடங்களை பிடித்துள்ளது. அதில் சிலவற்றின் பின்னணி வருமாறு: சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தின் போது விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக 60 மணி நேர போராட்டத்திற்கு பின் அபிநந்தன் இந்தியா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இவரது வீரத்தை பாராட்டி சமீபத்தில் அவருக்கு ‘வீர் சக்ரா’ விருதை மத்திய அரசு வழங்கியது.நாடாளுமன்ற மக்களவை தேர்தல்கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், 303 தொகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த காங்கிரஸ் 2014 தேர்தலை விட சற்றே கூடுதலான இடங்களை கைப்பற்றியது. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான போது, இதுவரை இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை புதிய உச்சத்தை தொட்டன. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 24 கேபினட் அமைச்சர்கள், 9 இணை அமைச்சர்கள் (தனி ெபாறுப்பு), 24 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர்.பதவியை துறந்த ராகுல் காந்திமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் அவர் போட்டியிட்டிருந்தாலும் வயநாட்டில் மட்டுமே வெற்றி பெற்றார். தற்போதைய மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். இவர், தலைவர் பதவியில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மறுப்பு தெரிவித்த போதிலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் ராகுல்காந்தி தலைமை பொறுப்பிற்கு வர கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.நிலவை நோக்கி சந்திரயான் - 2கடந்த ஜூலை 22ம் தேதி நிலவிற்கு இரண்டாவது செயற்கைக்கோளான சந்திரயான் 2-வை இஸ்ரோ அனுப்பியது. எடை மிகுந்த ஜி.எஸ்.எல்.வி எம்.கே-3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் ஆக. 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. ஆர்பிட்டர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை பிரிந்து சென்றன. செப். 6ம் தேதி பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டரை நிலவின் தரையில் இறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக லேண்டரில் இருந்து தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதால், ஆர்பிட்டர் மட்டும் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறது. பல நாட்கள் தேடலுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை நாசா கண்டறிந்து தெரிவித்தது. ஆனால், நாசா தெரிவிப்பதற்கு முன்னதாகவே இஸ்ரோ தெரிவித்ததாக விஞ்ஞானிகள் கூறினர்.காஷ்மீர் அந்தஸ்து ரத்துஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ஆக. 5ம் தேதி மத்திய அரசு திடீரென நீக்கியது. மேலும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதுதொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பை கிளப்பினார். சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன்னதாக, இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க ஜம்மு - காஷ்மீரின் அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத தலைவர்கள் உள்ளிட்டோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மறுசீரமைப்பு பணிகள் அக். 31ம் தேதி செயல்படத் தொடங்கின. ஆனால், ஜம்மு - காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் விடுவிக்கப்படவில்லை.அசாமில் என்ஆர் சி ரிலீஸ்உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி ஆக. 31ம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர் சி) இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. வடகிழக்கு மாநிலமான அசாமில் இருந்து 1.9 மில்லியன் (1 மில்லியன் 10 லட்சம்) மக்கள் விடுபட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தம் 33 மில்லியன் பேர் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 31.1 மில்லியன் பேர் மட்டும் குடிமக்களாக தகுதி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக அசாமில் போராட்டங்கள் வெடித்தன. இந்த பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.அயோத்தி தீர்ப்புநவ. 9ம் தேதி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட ராம் ஜன்மபூமி நியாஸிற்கு அனுமதி வழங்கியது. முஸ்லீம் அமைப்பினருக்கு இழப்பீடாக வேறொரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை ஒன்றை அமைத்து நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் தீர்வு எட்டப்படாமல் இருந்த அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்தது. இருந்தும், சில முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்தன. ஆனால், அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கர்தார்பூருக்கு சிறப்பு சாலைசீக்கிய மதத்தை சேர்ந்த குரு நானக் தேவின் 550வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு செல்ல சிறப்பு சாலையை நவ. 9ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். ‘இந்தியாவின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி நன்றி கூறினார். பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குர்த்வாராவில் இருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 500 சீக்கியர்கள் கர்தார்பூர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.பெண் மருத்துவர் பலாத்கார கொலைநவ. 28ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் சம்பவம் நடந்த இடத்திற்கு டிச. 6ம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி செல்ல முயன்றதாக கூறி குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். போலீசின் நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து இருப்பினும், என்கவுன்டர் செய்த தெலங்கானா போலீசாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மகாராஷ்டிரா தேர்தல் களேபரம்மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சிவசேனா - பாஜக இடையிலான பல ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்தது. திடீர் திருப்பமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா கட்சி ஆட்சி அமைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, முதல்முறையாக உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இங்கு நடந்த அரசியல் களேபரம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தாண்டில், ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஒடிசாவில் தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சியை பிடித்தது.கர்நாடகாவில் பாஜக ஆட்சி2018ல் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே சில குழப்பங்களை பயன்படுத்திக் கொண்டு பாஜக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியது. அந்த வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் உட்பட சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங். கூட்டணி அரசு ஆட்சி கவிழ்ந்தது. எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தது. சமீபத்தில் நடைபெற்ற 15 தொகுதிக்கான இடைத்தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்று பாஜக அரசு ஆட்சியை தக்க வைத்துள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டம்சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் 311, மாநிலங்களவையில் 125 வாக்குகளுடன் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதற்கு டிச. 12ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதனால், குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தை சேர்ந்த நபர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதால், பலமாநிலங்களில் பதற்றமான நிலையே நீடிக்கிறது.
127,612
12/31/2019 3:06:46 PM
இந்தியா
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் குற்றவியல் நடவடிக்கை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதுடெல்லி: பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்கள், பல இடங்களில் இனி செல்லுபடியாகாது என்று சிலர் வதந்தி பரப்பி வருவதால், தொடர்ந்து பலர் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தது. ஆனால், 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்றும், இதனை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவித்து வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘புழக்கத்தில் இருக்கும் அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்; ரிசர்வ் வங்கி அறிவிப்பின்றி ஒரு நாணயத்தை செல்லாது என சொல்வதோ, வாங்க மறுப்பதோ குற்றம். ரிசர்வ் வங்கியின் 1906ம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி, இந்தப் பத்து ரூபாய் நாணயம் செல்லத்தக்கது. இந்த நாணயத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது. 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
127,613
12/31/2019 4:31:41 PM
தமிழகம்
40 வாக்குப்பெட்டிகளில் சீல் வைக்கப்பட்ட உறை பிரிப்பு: காரைக்குடியில் கட்சி ஏஜென்டுகள் வாக்குவாதம்
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பெட்டிகளை சுற்றியிருந்த சீல் வைக்கப்பட்டிருந்த உறை பிரிக்கப்பட்டிருந்ததால் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை மற்றும் கல்லல் ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் முடிந்ததும், வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை வெள்ளைத்துணியால் சுற்றி சீல் வைத்து, காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களான அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு நேற்றிரவு அதிகாரிகள் கொண்டு வந்தனர். அங்குள்ள அறைகளில் வாக்குப்பெட்டிகளை பத்திரமாக வைத்த அதிகாரிகள், அந்த அறைக்கு சீல் வைத்து பூட்டினர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று காலை அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்டுகள் வந்தனர். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது, 40 வாக்குப்பெட்டிகளை சுற்றி வைத்திருந்த வெள்ளைத்துணியிலான சீல் வைக்கப்பட்ட உறை பிரிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘எந்த பஞ்சாயத்துக்கான வாக்குப்பெட்டிகள் அவை என்பதில் எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதனால் உறைகளில் இருந்த சீல்களை மட்டும் அகற்றி, தகவல் சிலிப்களை ஆய்வு செய்தோம்’’ என்று ஏஜென்டுகளிடம் கூறினர்.ஆனால் தங்கள் முன்னிலையில் சீலை அகற்றி வாக்குப்பெட்டிகளை ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் கட்சி ஏஜென்டுகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து சங்கராபுரம் திமுக ஒன்றிய கவுன்சில் வேட்பாளர் சொக்கலிங்கம் கூறுகையில், ‘‘அந்த அறையில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்குப்பெட்டிகள், திருவேலங்குடி பஞ்சாயத்துக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கான 96 வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குப்பெட்டிகளில் வார்டு உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களுக்கான வாக்குச்சீட்டுகள் உள்ளன. இவற்றில் 40க்கும் மேற்பட்ட வாக்குப்பெட்டிகளின் உறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. வாக்குப்பெட்டிக்குள் மை தெளிக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
127,614
12/31/2019 4:36:05 PM
குற்றம்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே எஸ்.பி.பட்டினத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதையறிந்த கடத்தல்காரர்கள், கஞ்சாவை கடற்கரையில் போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். கடற்கரையில் சாக்கு மூட்டைகளில் 11 பண்டல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 380 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் செக் போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கஞ்சா கடத்திய  கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி. கஞ்சாவை கடத்தி வந்தவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்றனர். கடந்த 25ம் தேதி இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் காரில் எடுத்து வந்த 80 கிலோ கஞ்சாவை சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு வார இடைவெளியில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் தீவுப்பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
127,615
12/31/2019 4:37:37 PM
இந்தியா
மண்டல கால பூஜையில் சபரிமலையில் 45 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் இதுவரை 45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் கூறினார். மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மண்டல காலத்துக்காக நடை திறந்திருந்த 41 நாட்களில் மொத்த வருமானம் 163 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது கடந்த வருடத்தை விட 55 சதவீதம் அதிகமாகும். காணிக்கையாக வந்த நாணயங்கள் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி வரை வரும்.இதுபோல் கடைகள், ஹோட்டல்கள், நிறுவனங்கள் ஏலம் விடப்பட்ட தொகையும் இன்னும் கணக்கிடப்படவில்லை. இவற்றையும் சேர்த்தால் மொத்த வருமானம் மேலும் அதிகரிக்கும். இந்த மண்டல காலத்தில் இருமுடி கட்டுடன் 30.59 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். மொத்தத்தில் 40 முதல் 45 லட்சம் வரை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அரவணை பாயாசம் மற்றும் அப்பம் ஆகியவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
127,616
12/31/2019 4:43:28 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலம் புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு எழுதும் மடல். ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றி அழித்து  கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக அரசின் காதுகளை திருகி, தேர்தல் நடத்தும்படி கண்டிப்பான உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதன்பிறகும்கூட, முழுமையாக தேர்தலை நடத்தி மக்களை சந்திக்கும் துணிவின்றி, ஊரக பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல், அதுவும் இரு கட்டமாக வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கி கட்டுப்பாட்டில் கொண்டு செயல்பட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.விளைந்திருக்கும் பயிரை கவனமாக அறுவடை செய்திட வேண்டும். ஒரு நெல்மணிகூட வீணாகிவிட கூடாது, ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டுவிட கூடாது என்பதை கடந்த மடலிலேயே நினைவுபடுத்தியிருந்தேன். அதற்கேற்ப கழகத்தின் சட்டத்துறையும்  செயலாற்றியது. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஆளுந்தரப்பின் முறைகேடுகளை முறியடிக்கவும், வாக்குப்பதிவின் போது, அவர்கள் நடத்தவிருக்கும் தில்லுமுல்லுகளை தடுத்திடவும் ஆர்.எஸ்.பாரதி எம்பி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை, சட்டத்திற்குட்பட்டவை என்பதை நீதிமன்றம் ஏற்று கொண்டது. வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம், வாக்குகள் பதிவான சீட்டுகளை கேமராவில் பதிவு செய்ய மறுப்பதையும் திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியபோது, அதில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இறுதியாக, திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளாட்சி தேர்தல் சட்டத்தின்படி அமைந்தவைதான் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்து, அதற்கான சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கினை முடித்து வைத்துள்ளது.உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள  வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகளின் எதிர்பார்ப்பாகும். இதை திமுக மட்டும் வலியுறுத்தவில்லை. பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. ஜனவரி 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள், நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டன. நீதிபதிகள் ‘வீடியோ பதிவுக்கு 2 நாட்கள் அவகாசம் போதாதா? ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது? தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும்’ என தெரிவித்ததுடன், வீடியோ பதிவு  குறித்து தேர்தல்  ஆணையரிடம் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர். நீதியின் மாண்பு காக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கைக்கு காத்திருக்கிறது திமுக. நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிகளும் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டிய இடத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களும், முகவர்களும் இருக்கிறார்கள். உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என கவனித்து, ஆளுந்தரப்பின் அத்துமீறல்களையும் முறைகேடுகளையும் தடுத்திட வேண்டியது அவசியமாகும். அதற்கு திமுக சட்டத்துறை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும். உயர்நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கையை மக்களின் தீர்ப்பும் நிச்சயம் நமக்கு வழங்கும். புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும்.
127,617
12/31/2019 4:45:29 PM
தமிழகம்
அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணனுக்கு போலீஸ் வலை
நெல்லை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவரை உடனே கைது செய்ய வலியுறுத்தி டவுனில் அவரது வீட்டு முன்பு பா.ஜ. மற்றும் இந்து அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக பேசி, இரு பிரிவினரிடையே மோதலையும், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாஜ சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் சென்னையில் டிஜிபி அலுவலகத்திலும் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, நெல்லை கண்ணன் மீது வழக்குபதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தார். இதுபோல் தச்சநல்லூர், மேலப்பாளையம், டவுன், பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதன்பேரில் மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாகவும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நெல்லை கண்ணனை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் உத்தரவின் பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு பா.ஜ. மாநில இளைஞரணி செயலாளர் வேல்ஆறுமுகம், எஸ்சி அணி மாநில துணைச் செயலாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.அவர்களிடம் டவுன் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். அவரை கைது செய்யும் வரை வீட்டை விட்டு நகர மாட்டோம் என்று கூறி வீட்டு முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையிலும் பாஜ சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
127,618
12/31/2019 4:49:19 PM
இந்தியா
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோயிலில் அனைத்து சேவைகளும் ரத்து
திருமலை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை வரை அனைத்து சேவைகளையும் முழுமையாக ரத்து செய்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நேற்று தேவஸ்தான விஜிலென்ஸ், போலீசார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியையொட்டி  நேற்று(30ம்தேதி) முதல் நாளை (1ம்தேதி) வரை சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை தரிசனம், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்யதரிசனம், அங்கபிரதட்சணை சேவை என அனைத்து சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி வரும் 5ம்தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், (ஆர்ஜித சேவை) கட்டண சேவைகள், சர்வ தரிசனம் (நேரம் ஒதுக்கீடு), திவ்யதரிசனம், அங்கபிரதட்சணம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.ஏற்கனவே 7ம் தேதி துவாதசிக்கான ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான 5 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 2 மணி முதல் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு சாதாரண பக்தர்கள்அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக நான்கு மாட வீதி, நாராயணகிரி தோட்டம் முதல் கல்யாண மேடை வரை சிறப்பு வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுழற்சி முறையில் அன்ன பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
127,619
12/31/2019 4:51:29 PM
இந்தியா
பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம்: நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு அறிக்கை
திருவனந்தபுரம்: பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கலாபவன்மணி. தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் நடித்த ஜெமினி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கலாபவன்மணி மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து கொச்சி அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் மீத்தைல் ஆல்கஹால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலாபவன்மணி இறப்பதற்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மது விருந்தில் கலந்துகொண்டார். ஆகவே யாராவது மதுவில் விஷம் வைத்து கொன்று இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக சாலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.இந்த விசாரணையில் கலாபவன்மணிக்கு ஏற்கனவே கல்லீரல் நோய் இருந்தது என்றும், அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரியவந்தது. இருப்பினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கலாபவன்மணியின் தம்பி மற்றும் உறவினர்கள் உள்பட பலரும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிஐ விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை அறிக்கை நேற்று, எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிரபல நடிகர் கலாபவன்மணியின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை. அவருக்கு ஏற்கனவே கல்லீரல் நோய் பாதிப்பு இருந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 வருடமாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
127,620
12/31/2019 5:07:40 PM
இந்தியா
மகாராஷ்டிரா மாநில முதல்வர் அலுவலகத்தில் பீதி: 3 பாஜ அமைச்சர்களை காலி செய்த அறை எண்: 602
மும்பை: மகாராஷ்டிர மாநில முதல்வர் அலுவலகத்தில் அறை எண்: 602, ஏற்கனவே 3 பாஜ அமைச்சர்களை காலி செய்ததாக கூறப்படுவதால், துணை முதல்வர் அஜித்பவாரும் அந்த அறைக்கு செல்ல மறுத்து வருகிறார். இதனால், முதல்வர் அலுவலக அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் உள்ள அறை எண்: 602 ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அதனை ஏற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உள்ளதாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.முதல்வர் அலுவலகத்தின் 6வது மாடியில் 3,000 சதுரஅடியில் உள்ள அறை எண்: 602-ல் பிரம்மாண்ட கூட்ட அரங்கம், உட்புற கேபின், அலுவலக ஊழியர்களுக்கு தனி அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த 6வது மாடி தான் அரசின் அதிகார மையம். காரணம், இங்கு வழக்கமாக முதல்வர், இதற்கடுத்த இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரின் அலுவலகங்கள் இருக்கும். கடந்த 2014ம் ஆண்டு பாஜகவின் சிறுபான்மை, வருவாய் துறை அமைச்சர் ஏக்நாத் காத்சேவிற்கு 602ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இவர், சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கில் சிக்கி அடுத்த 2 ஆண்டுகளில் தனது பதவியை இழந்தார்.அதன்பின், ஒருமாதம் அந்த அறை காலியாக இருந்தது. எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், விவசாயத்துறை அமைச்சர் பாண்டுரங் பண்ட்கருக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், மே 2018ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு நடப்பாண்டு ஜூன் வரை அறை எண்: 602 காலியாகவே இருந்தது. தொடர்ந்து பாஜக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அனில் பாண்டேவிற்கு விவசாயத்துறை அளிக்கப்பட்டது. இவர், அறை எண் 602-ல் இருந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபரில் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இவருக்கு என்ன சோதனை என்றால், விதர்பாவின் மோர்ஷி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இப்படியாக, 3 அமைச்சர்களை காலி செய்த இடம்தான் அறை எண்: 602. இந்நிலையில், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு பின்னர். அவருடன் பதவியேற்ற 6 அமைச்சர்களும்கூட இந்த அறையில் தங்கள் பணிகளை மேற்கொள்ளவில்லை. இவர்கள் யாருக்கும் அறை எண் 602 ஒதுக்கப்படவில்லை.தற்போது, மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதால், இரண்டாவது மூத்த அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என்ற அடிப்படையில் அஜித் பவார் தான், அறை எண் 602-க்கு செல்ல வேண்டும். ஆனால், அவருக்கு முதல் மாடியில் இருக்கும் அறை தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாலும், பாஜகவுடன் சேர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் துணை முதல்வராக பதவியேற்ற 80 மணி நேரத்தில் பதவியை இழக்க வேண்டியிருந்ததால், இவரும் அறை எண்: 602-க்கு செல்வதை தவிர்த்து வருகிறார்.இதுமற்றுமின்றி கடந்த 2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சியின் போது அஜித் பவார் துணை முதல்வராக இருந்தார். அப்போது அறை எண் 602ல் ஓராண்டு மட்டும் இருந்தார். இந்த அறையில் இதுவரை யாரும் தங்கள் பதவிக் காலத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை. அதனால், அஜித் பவாரும் அந்த அறையை ஏற்க மாட்டார் என்றே முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர். இருந்தாலும், அஜித் பவாருக்கு பெரிய அறை தேவைப்படும் என்பதால், அறை எண் 602-க்கே ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவிப்பதால் முதல்வர் அலுவலகம் பெரும் குழப்பத்தில் உள்ளது.
127,621
12/31/2019 5:09:47 PM
இந்தியா
தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி மரியாதை
புதுடெல்லி: டெல்லியில் இன்று தேசிய போர் நினைவிடத்தில், முப்படைகளின் தலைமை தளபதியாக நாளை பதவியேற்க உள்ள பிபின் ராவத், தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமையகத்திற்கு அதன் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவி ஏற்பு டெல்லியில் நாளை நடக்கவுள்ள நிலையில், ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து பிபின் ராவத்துக்கு ராணுவ மரியாதையுடன் பிரியாவிடை உபசரிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பின் நிருபர்களிடம் பிபின் ராவத் கூறுகையில், ‘‘ராணுவ தளபதி பொறுப்பிலிருப்பது இன்றே கடைசி. இந்த நேரத்தில் ராணுவத்தில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் கடினமான நேரங்களில் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி. பாகிஸ்தான், சீன எல்லைகளில் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதா? என்று கேட்கப்படுகிறது. ஆம், அனைத்தும் தயார் நிலையில் உள்ளன’’ என்றார். இதற்கிடையே பிபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து விமர்சித்ததால், பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்திய வரலாற்றிலே ராணுவ தளபதி அரசியல் பேசியது அதுவே முதல் முறை. ராணுவ தளபதி பொறுப்பிலிருந்தவர் இதுபோன்ற கருத்தைக் கூறியதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ராணுவ தளபதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
127,622
1/1/2020 2:28:02 PM
தமிழகம்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபரீதம்: தமிழகம் முழுவதும் 15 பேர் பலி
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் 15 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழந்தனர். 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 100 பேர் படுகாயமடைந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த சாலை விபத்துக்களில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 2020 ஆங்கில புத்தாண்டு உலக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல் விடிய விடிய மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மெரினா மணி கூண்டு அருகே கேக் வெட்டி அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பின்னர் உற்சாக மிகுதியில் வாலிபர்கள் பலர் தங்களது பைக்குகளில் மாநகரம் முழுவதும் வலம் வந்து புத்தாண்டை கொண்டாடினர். பலர் மது போதையில் உற்சாகமாக கத்தியபடி சுற்றி சுற்றி வந்த வண்ணம் இருந்தனர். புத்தாண்டில் பைக் ரேசை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும் 75 மேம்பாலங்களை மூடியும் தீவிரமாக கண்காணித்தனர். விபத்து இல்லா புத்தாண்டாக கொண்டாட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்து இருந்தது.சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு தங்களது வீடுகளுக்கு செல்லும் போது அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலைகளில் பைக்கில் செல்லும் போது பலர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். குறிப்பாக, தாம்பரம் பகுதியில் நின்று இருந்த பேருந்து மீது மின்னல் வேகத்தில் வந்த பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் தங்கவேலு(20) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அதேபோல், புழல் சிறைச்சாலை அருகே செங்குன்றத்தில் இருந்து புத்தாண்டை கொண்டாடிவிட்டு பைக்கில் வந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமலிங்கம்(40) என்பவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதவிர எண்ணூர் பகுதியில் மின்னல் வேகத்தில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மீன் வியாபாரி சுந்தர்(48) என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அதேபோல் போரூர் அடுத்த குமணன் சாவடி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் முகமது (45) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், செங்குன்றத்தில் இருந்து கதிர்வேடு சிக்னலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கிருஷ்ணகுமார்(31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணா பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தரமணி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது மின்னல் வேகத்தில் வந்த பைக் மோதியது. இதில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிவிட்டார். உடன் வந்த வாலிபரை கோட்டூர்புரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், சாந்தோம் தேவாலயம் அருகே ஸ்கூட்டரில் இருந்து விழுந்த விபத்தில் பெண்ணும் அவரது குழந்தையும் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் உடனே அருகில் இருந்த மீட்பு குழுவினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மெரினா கடற்கரையில் புத்தாண்டு பாதுகாப்பு பணி முடிந்து எழும்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் போது பூந்தமல்லி நெடுஞ்சாலை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் சிக்னல் அருகே பின்னால் அதிவேகமாக வந்த ஆட்டோ மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் சாலை விபத்தில் படுகாயமடைந்து ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 19 பேர், ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் 6 பேர் மற்றும் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 50 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 15க்கும் மேற்பட்டோர் தலைக்காயங்களுடன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாகர்கோவில் கீழகலுங்கடி பகுதியில் வசித்து வரும் முத்து என்பவரின் மகன்கள் சுனில் (19), அஜய் (18) ஆகியோர் தனது நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடினர். நேற்று இரவில் இவர்கள் இருவரும் பைக்கில், வடசேரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இவர்களுடன் அதே பைக்கில் இவர்களது நண்பர்கள் வாத்தியார்விளையை சேர்ந்த கண்ணன் (18), ராஜ்குமார் (18) ஆகியோரும் வந்தனர். நால்வரும் ஒரே பைக்கில், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தவாறு வந்தனர்.நாகர்கோவில் வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு அருகில் வரும் போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் நின்ற டாரஸ் லாரி மீது மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுனில் மற்றும் அவரது சகோதரர் அஜய் இறந்தனர்.புதுக்கடை அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுபின் (25). இவர் நேற்று இரவு தனது பைக்கில் நண்பருடன் சென்றார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், சுபின் பலியானார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதி அம்பேத்கர்நகரில் வசித்து வந்தவர் வேல்முருகன் (27), இவர் பண்ருட்டியில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்தார். இவருக்கு சவுமியா (25) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்றிரவு மேல்பாதி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடித்து விட்டு புத்தாண்டு கொண்டாடினர். அவர்கள் சத்தம் போட்டு கொண்டே இருந்ததால், வேல்முருகன் மற்றும் அப்பகுதி மக்கள் தட்டி கேட்டனர். போலீசார் சென்று சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில், இன்று காலை அங்குள்ள வயல்பகுதியில் வேல்முருகன் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் சென்று வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடலூர் அருகே நெத்தனாங்குப்பம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நெத்தனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த காந்தாராவ் (40) நண்பருடன் மது அருந்தி புத்தாண்டை கொண்டாடினர். நள்ளிரவு 12.30 மணியளவில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் காந்தாராவ் அடித்து கொல்லப்பட்டார்.புதுச்சேரி, வேல்ராம்பேட், ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் முருகன் (28). சமீபத்தில் புதிய வண்டி வாங்கிய இவர், புத்தாண்டு பிறந்ததும் அதை சவாரிக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டு ஏரிக்கரை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். இன்று அதிகாலை அவரது வாகனத்தில் பைக் மோதி விபத்து நடந்து ஒருவர் அடிபட்டு இறந்துகிடந்தார். தகவல் அறிந்ததும் புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார் சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் புதுச்சேரி நைனார்மண்டபம், ஆனந்தா நகர் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் (35) என்பதும் சென்னையை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் இவரது தந்தை ஓய்வுப்பெற்ற தாசில்தார் என்பதும் தெரியவந்தது.ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் அருகே உள்ள மங்கான் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (27). இவர் சென்னையில் வேன் டிரைவர். நேற்று புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஊருக்கு வந்த கார்த்தி, ஆற்காடு அடுத்த காவனூருக்கு பைக்கில் வந்தபோது சாலை ஓரமாக குழந்தையுடன் நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் திடீரென சாலையை கடந்து உள்ளார். இதில் நிலைதடுமாறி பைக் சாய்ந்ததில் கார்த்தி படுகாயம் அடைந்தார் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம், நடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர், தனது நண்பர்களான சங்கர்ஷா (25), சுரேஷ்ஷா (23), மணிஷா (28), அரவிந்த் (21), சுந்தர் ஷா (23) ஆகியோருடன் இன்று அதிகாலை 4 மணியளவில்  புத்தாண்டை கொண்டாட ஒரு காரில் சென்னை நோக்கி சென்றனர். இருங்காட்டுகோட்டை அருகே வேகமாக சென்றபோது, முன்னால் சென்ற ஒரு சரக்கு லாரி, திடீரென வலது பக்கமாக திரும்பியது. அப்போது கார், லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில், கார் நொறுங்கியது. இதில் விக்னேஷ் (24), சங்கர் ஷா (24) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 15 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
127,623
1/1/2020 2:31:34 PM
தமிழகம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை மாலையில் முடிவு தெரியும்
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. வெற்றி அல்லது முன்னணி குறித்த விவரங்கள் நாளை மாலை முதல் தெரியவரும். மேலும் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.முதல்கட்டமாக கடந்த 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 45,336 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 76 சதவீதம் வாக்குப்பதிவானது. இரண்டாவது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 77 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்த வாக்குப்பதிவின் போது பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. முதல் கட்ட வாக்குப்பதிவில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் காரணமாக 30 வாக்குச்சாவடிகளில் 30ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலின் போது பல்வேறு குளறுபடிகள் நடைபெற்ற 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. இதற்காக 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னணி நிலவரம் பிற்பகலுக்கு பிறகும் இறுதி முடிவு மாலையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள், ஊழியர்கள் அனைவரும் 100 மீட்டர் அப்பால் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இருந்தால் மட்டும் ஏஜென்ட்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி 27 மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி, காவல் துறை தலைவர் சேஷசாய், கண்காணிப்பாளர் கண்ணம்மாள் உள்ளிட்ட மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில் மறு வாக்குப்பதிவு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், மையங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு, வாக்கு  எண்ணிக்கையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கினார். மேலும் வாக்கு எண்ணிக்கை முறையாகவும் அமைதியாகவும் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
127,624
1/1/2020 2:35:00 PM
தமிழகம்
விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
சென்னை: சென்னையில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். 2019ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2020ம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக நடந்தது. மெரினா கடற்கரையில் நேற்று மாலை 7 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் புத்தாண்டை வரவேற்க திரண்டனர். வாகன போக்குவரத்து மெரினா சாலையில் 8 மணிக்கு நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் இடையூறு எதுவும் இல்லாமல் மெரினா சாலையில் திரண்டனர். நள்ளிரவு 12 மணி ஆனவுடன் பொதுமக்கள் ஆரவாரம் எழுப்பி ஒருவருக்கொருவர் கைகொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலர் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பரிசுகளை வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.புத்தாண்டையொட்டி சென்னையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் தேவாலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், வெஸ்லி தேவாலயம், பெரம்பூர் மாதா தேவாலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து தேவாலயம், எழும்பூர் கதீட்ரல் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஆலயங்களுக்கு வந்தவர்களுக்கு புத்தாண்டு கேக் வழங்கப்பட்டது. தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலை சாய்பாபா கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதல் கோயில்களில் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அனைத்து கோயில்களிலும் பிரசாதமாக சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், சாம்பார் சாதம் போன்றவை வழங்கப்பட்டன.இதேபோல் கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருககாட்சி சாலைகளிலும் புத்தாண்டையொட்டி இன்று காலை மக்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் இளைஞர்கள், சிறுவர்களின் கூட்டம் பூங்காக்களில் அதிகம் காணப்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பான்மையான நட்சத்திர ஓட்டல்களிலும் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
127,625
1/1/2020 2:37:15 PM
தமிழகம்
வாக்கு பெட்டிகளை பள்ளியில் வைத்து பூட்டிச்சென்ற அதிகாரிகள்
சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சி துவக்கப் பள்ளியில் 3வது வார்டு வாக்குச் சாவடி எண் 133ல் நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்த பின்னர், அதே பள்ளியில் அமைந்துள்ள மேலும் இரண்டு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் உபகரணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எடுத்துச் சென்றனர்.தேர்தல் நாளன்று அலுவலர்களுக்கு உணவு வழங்கிய ஓட்டல் கடைக்காரர் பாத்திரங்களில் ஒன்றிரண்டை காணவில்லை என்று நேற்று காலை ஊராட்சி அலுவலரிடம் பள்ளியின் சாவியை வாங்கி வந்து பள்ளியைத் திறந்து பாத்திரங்களை தேடியுள்ளார். அப்போது 133ம் எண் வாக்குச் சாவடி அமைந்திருந்த வகுப்பு அறையில் இருந்த இரண்டு சாக்கு பையை பிரித்து பார்த்த போது இரண்டு வாக்குப் பெட்டிகள் இருந்துள்ளது. இதுபற்றி ஊராட்சி செயலர் சண்முகவேலுவிடம் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்து விட்டு சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.இதுபற்றி அறிந்ததும் அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. மாலை 6 மணி வரை போலீசார் வராததால் அரசியல் கட்சியினர் பள்ளியில் அமர்ந்து தர்ணா செய்தனர். ஊராட்சி செயலர் வகுப்பறையைத் திறந்து வாக்குப் பெட்டிகளை அரசியல் கட்சியினருக்கு காண்பித்தார். அதில் ஓட்டுச் சீட்டுகள் இல்லை, காலி பெட்டியாக இருந்தது. இதன்பிறகு பரபரப்பு அடங்கியது.
127,626
1/1/2020 2:40:15 PM
தமிழகம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கி, 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வை உடனடியாக அமல்படுத்த முடியாது என தமிழக அரசு கால அவகாசம் கோரியது. அந்த ஆண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து கோச்சிங் சென்டரில் நீட் பயிற்சி பெற முடியாத மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்தல் டிசம்பர் 2ம் தேதி தொடங்கியது. www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1,500, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர்/ ஒபிசி நான் கிரிமிலேயர் மாணவர்களுக்கு ரூ.1,400 எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி மாணவர்கள் நீட் தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 6 இரவு 11.50 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை ஜனவரி 7ம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
127,627
1/2/2020 3:54:43 PM
தமிழகம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுக தொடர்ந்து முன்னிலை: பல வாக்கு எண்ணிக்கை மையங்களில் குளறுபடியால் பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. மாவட்டக் கவுன்சிலர் பதவிகளில்  திமுக அதிக இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான இடங்களில் குளறுபடியால் ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த மாதம் 27 மற்றும் 30ம்  தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 3 லட்சத்து 2  ஆயிரத்து 994 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி  18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்கட்டமாக கடந்த 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 37,830  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 76.19 சதவீத வாக்குகள்  பதிவானது. அதேபோல் 2ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2,544 ஒன்றிய குழு உறுப்பினர், 38,916 ஊராட்சி  வார்டு உறுப்பினர், 4,924 ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.  தமிழகம் முழுவதும் மொத்தமாக 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதில் மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்  பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது.  வாக்குப்பதிவின் போது வன்முறை நடந்த 30 பூத்களில் கடந்த 30ம் தேதியும், 9 பூத்களில் நேற்றும் மறுவாக்குப்பதிவு நடந்தது.  30ம் தேதி நடந்த வாக்குப்பதிவில்  72.70 சதவீதம், நேற்று நடந்த வாக்குப்பதிவில் 59.42 சதவீதம் வாக்குகள் பதிவானது. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக அந்தந்த  ஒன்றியங்களில் 315 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து சீல் வைத்திருந்தனர். மையங்களுக்கு 3  அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை இன்று(2ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கே வேட்பாளர்கள், முகவர்கள் மையங்களுக்கு வந்து விட்டனர்.  அவர்களில் அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டும் தீவிர சோதனைக்கு பின் உள்ளே அனுப்பப்பட்டனர். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின்  முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் மேஜைகளுக்கு கொண்டு வரப்படும்.  மேஜையில் வைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான  வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்படும். பின்னர் 4 பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள்  எண்ணும் பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்பாடுகளை முறையாக செய்யாததால் பல இடங்களில் வாக்கு எண்ணும் பணியில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் திட்டமிட்டபடி  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவில்லை. திருவாரூர் திருவிக அரசு கல்லூரி  மையத்தில் காலை 7.45 மணிக்கு ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு,   வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால்  போலீசார் சோதனை செய்து முகவர்களை உள்ளே அனுப்புவதில் தாமதம்  ஏற்பட்டது.  இதனால் 8.30 மணிக்கு தான் முகவர்கள் முன்னிலையில் பெட்டிகள் சீல்  உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி துவங்கியது. புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதி  வலம்புரி வடுநாதர் மேல்நிலைப்  பள்ளியில்   வாக்கு  எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்ய தாமதமானதால் 40  நிமிடம் வாக்கு  எண்ணும் பணி  தாமதமானது. திருச்சி மாவட்டம் மணப்பாறை,  வையம்பட்டி ஒன்றியங்களின்  ஓட்டுகள் குறிஞ்சி கல்லூரி, ஆதவன் கல்லூரி  மையங்களில் செய்யப்பட்டிருந்தது.  இந்த மையங்களில் 8.40 மணி வரை வாக்கு  எண்ணும் பணி துவங்கவில்லை. கரூர் மாவட்டம் தாந்தோணி   ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை என்எஸ்என் தனியார் பொறியியல் கல்லூரியில்  தொடங்கியது. இங்கு முகவர்கள் செல்லும் அறைகளுக்கான சரியான   வழிகாட்டி பலகை வைக்கப்படாததால், முகவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அலைந்து,  சுற்றி சுற்றி வந்தனர். இதனால் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  அதேபோல் மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் குளறுபடி காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகவே துவங்கியது. பெரம்பலூர் ஊராட்சி  ஒன்றிய வாக்குகள்  அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு  வருகிறது. இங்கு தபால் வாக்குப்பெட்டியை திறக்க  முயன்றபோது  யாரிடமும் அதற்கான சாவி  இல்லை. அந்த சாவி   ஒன்றிய மேலாளரிடம் இருப்பது தெரியவந்தது.  அவர் அங்கு இல்லை. எனவே அவரிடம்  இருந்து சாவி  வாங்கி வந்தபிறகு தபால்  ஓட்டுக்கள் எண்ணிக்கொள்ளலாம் என ஒரு  ஓரமாக எடுத்து வைக்கப்பட்டது. செய்யாறு அருகே செம்பாக்கம்  ஒன்றியத்தில்  பயன்படுத்தப்பட்ட தபால் ஓட்டு பெட்டியின் சாவி தொலைந்து  விட்டது. இதனால் அதிகாரிகள், முகவர்கள் முன்னிலையில் தபால்  ஓட்டுப்பெட்டியின் பூட்டு  உடைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் ஒன்றிய  ஓட்டுக்கள் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  எண்ணப்படுகிறது.  இன்று காலை 7 மணிக்கே  ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும்  அலுவலர்கள் 50க்கும்  மேற்பட்டவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கு ஓட்டு  எண்ணும் மையத்தில்  டிபன் வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உணவு வழங்கப்படாததால்  வாக்கு எண்ணும் பணியை அலுவலர்கள் புறக்கணித்தனர். இதனால் அவசர அவசரமாக  உணவு  கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து 9.20 மணிக்கு தான் வாக்கு எண்ணிக்கை  துவங்கியது. அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்துக்கான வாக்கு   எண்ணிக்கை ஆயக்காரன்புலத்தில் நடந்தது. இங்கும் உணவு வழங்காததால்  அலுவலர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் 9.30 மணி வரை இங்கு வாக்கு   எண்ணிக்கை துவங்கவில்லை. தஞ்சை மாவட்டம் பாபநாசம்  ஒன்றிய  ஓட்டுகள் அங்குள்ள பள்ளியில் எண்ணப்படுகிறது. இந்த பணியில்  ஈடுபட்டுள்ள  அலுவலர்களுக்கு காலையில் இட்லி,  பொங்கல் வழங்கப்பட்டது.  இதற்கு சாம்பார்  போதுமான அளவு வழங்கப்படவில்லை. இதனால் வெறும் இட்லியை அலுவலர்கள் சாப்பிட்டனர். இதனால், வாக்கு  எண்ணிக்கை தாமதமானது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்  ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை குண்டூர் எம்ஐடி கல்லூரியில் நடந்தது.  இங்கு அலுவலர்களுக்கு டிபனுடன்  வழங்கப்பட்ட சட்னி கெட்டுப்போய் இருந்தது.  இதை சாப்பிட்ட ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் அரசு கல்லூரி மையத்தில் காலை 9.45 மணி வரை உணவு வழங்கவில்லை. அலுவலர்கள் வெளியே சாப்பிட கிளம்பினர். அவர்கள் வௌியே  செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பட்டினியுடனே அவர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அவிநாசி பெரியபாளையத்திலும் காலை  உணவு வழங்காததால் அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதேபோல் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் உணவு   வழங்கப்படவில்லை. இதனால் அவர்களும் அவதிக்கு ஆளாகினர். இப்படி பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடந்து வருகிறது. இதில் பல இடங்களில் மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு  உறுப்பினர் பதவி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பல இடங்களில் அதிமுகவும் முன்னணியில் இருந்தது. எனினும்  முழு முடிவு தெரிய இன்று மாலை ஆகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தபால் வாக்கிலும் குளறுபடி தபால் வாக்குடன் படிவம் 16ஐ இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இவ்வாறு இணைக்கப்படவில்லை. இதனால் இந்த  வாக்குகளை எண்ணுவதா, வேண்டாமா என்ற குழப்பம் அலுவலர்கள் மத்தியில் ஏற்பட்டது. கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று பல இடங்களில்  வாக்குச்சீட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் இவ்வாறு படிவம் இணைக்காத 17 தபால் ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.  வில்லிவாக்கத்திலும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு செலுத்தப்பட்ட 19 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.பின்னர் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்தது. அதில் 515 மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக 65 இடங்களிலும், அதிமுக 40  இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது. 5090 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக 120 இடங்களிலும், 96 இடங்களிலும் முன்னிலை  பெற்றிருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் விறு விறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. சேலத்தில் 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 3,  அதிமுக, பாமக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அதேபோல தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
127,628
1/2/2020 3:55:05 PM
தமிழகம்
சமையல் காஸ் விலை 20 உயர்வு டீ, காபி, உணவு பொருட்களின் விலை எகிறுகிறது: புத்தாண்டு பரிசாக நடுத்தர, ஏழை மக்கள் தலையில் அடுத்தடுத்து இடி
சென்னை: ரயில் கட்டணத்தை தொடர்ந்து சமையல் காஸ் விலையையும் மத்திய அரசு தடாலடியாக உயர்த்தி உள்ளது. இதன்மூலம் ஓட்டல்களில் உணவு பொருட்கள்  விலை உயரும் அபாயம் உள்ளது. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி, ரயில் கட்டணத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் இரவு உயர்த்தியது. புத்தாண்டு பரிசாக இந்த திடீர்  கட்டண உயர்வு பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த புத்தாண்டு பரிசாக மானியமல்லாத காஸ் சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தி அறிவித்துள்ளது. நடப்பு மாதத்துக்கு  வீட்டு உபயோக சிலிண்டர்கள் சென்னையில் 20 உயர்த்தப்பட்டு 734 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  நடப்பு மாதத்துக்கு இந்த சிலிண்டர் விலை  சென்னையில் 30 உயர்த்தப்பட்டு 1,363 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ, காபி, உணவு கட்டணங்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதேபோல்,  திருச்சி உள்பட பல இடங்களிலும் விலை உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஓட்டல்களிலும் உணவு கட்டணங்கள் விலை உயர வாய்ப்புள்ளது. இது நடுத்தர மற்றும்  ஏழை மக்களை தான் வெகுவாக பாதிக்கும்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘புத்தாண்டுக்கு நல்ல திட்டங்கள், பரிசுகளை தான் வழங்கி பார்த்திருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அடுத்தடுத்து  ரயில் கட்டணம் மற்றும் மானியமல்லாத காஸ் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி மக்கள் தலையில் இடியை இறக்கி உள்ளது. இதன்மூலம் பணக்காரர்களுக்கு  பாதிப்பு இருக்காது. ஆனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ரயில் கட்டணம் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு  திரும்ப பெற வேண்டும்’’ என்றனர்.
127,629
1/2/2020 3:55:29 PM
இந்தியா
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடனான பிரதமர் மோடி கலந்துரையாடல் ரத்து: ஜன.20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுடெல்லி: தேர்வெழுதும் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 16ம் தேதி பொங்கல் பண்டிகையின்போது உரையாற்ற இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, 20ம்  தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் பொது தேர்வின்போது பதற்றமாக காணப்படுவது வழக்கம். இதனால், அவர்கள் தேர்வினை சரியாக எழுத முடியாத நிலைக்கு  தள்ளப்படுகின்றனர். எனவே மாணவர்கள் தேர்வினை அச்சமின்றி எழுத, அவர்களின் பதற்றத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி ஆண்டு தோறும் பள்ளி  மாணவர்களுடன் கலந்து பேசி வருகிறார்.இந்தநிலையில், இந்த ஆண்டு பொது தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை,  அனைத்து மாநில பள்ளி கல்வித்துறைக்கும் கடிதம் அனுப்பி இருந்தது. அந்த கடிதத்தில், பள்ளி மாணவர்கள் பொது தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எழுதும் வகையில் ‘‘பரீட்சா பே சர்ச்சா 2020’’ என்ற நிகழ்ச்சி மூலம்  ஜனவரி 16ம் தேதி டெல்லியில் உள்ள தல்காதோரா ஸ்டேடியத்தில் உரையாற்றுகிறார். எனவே, மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  அதன்படி இதில் கலந்து கொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12ம் வகுப்பு கட்டுரைப்போட்டியும் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து பிரதமரின்  உரை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனை பார்க்க பள்ளி மாணவர்கள் 16ம் தேதி பள்ளிக்கு வர வேண்டும் என்று, தமிழக  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.ஆனால் 16ம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை. இருந்தும் அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்  என அரசு கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களை பொங்கல் விடுமுறையிலும் பள்ளிக்கு வர வைப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதைப்போல் 16ம் தேதி வேறு சில மாநிலங்களிலும் மகர சங்கராந்தி, லோரி உள்ளிட்ட பண்டிகைகள் நடைபெற உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை  விடப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை பங்கேற்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.இந்தநிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 16ம் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடி  கலந்துரையாடும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிக ஆர்வமும், உற்சாகமும் காணப்பட்டது.  தனித்துவமான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மட்டுமின்றி, மன அழுத்தம், பதற்றமின்றி தேர்வுகளை எழுதி வெற்றிகளை பெறுவதற்கு பிரதமர் வழங்கும்  குறிப்புகளை பெறுவதற்கும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.ஆனால் தமிழகத்தில் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16ம் தேதி, இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,630
1/2/2020 3:55:55 PM
தமிழகம்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் மீது வழக்குப்பதிவு
பெரம்பூர்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  எஸ்டிபிஐ கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அன்று நள்ளிரவு 12 மணி அளவில்  குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து   எஸ்டிபிஐ கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் ஓட்டேரி, ஸ்டாரன்ஸ்ரோடு, தாசான் மஹால்  பள்ளி வாசல் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த ஓட்டேரி போலீசார் எஸ்டிபிஐ கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதாக எஸ்டிபிஐ கட்சியினர் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
127,631
1/2/2020 3:56:24 PM
தமிழகம்
சேலம் நாகலூர் பஞ்.தலைவர் தேர்தலில் திமுக வெற்றி
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் நாகலூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு திமுக பிரமுகர் கண்ணன், அதிமுக பிரமுகர் சுரேஷ் உள்பட 4 பேர்  போட்டியிட்டனர். இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. முதல்கட்டத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் 3242 ஓட்டுகள் பதிவாகின. வாக்கு  எண்ணிக்கை ஏற்காடு ஏரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே திமுக பிரமுகர் கண்ணன் முன்னிலையில்  இருந்தார். முடிவில், 1494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக பிரமுகர் சுரேசுக்கு 1021 வாக்குகள் கிடைத்தன.
127,632
1/2/2020 3:56:46 PM
தமிழகம்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வர உள்ள நிலையில் தொடர்ச்சியாக வெப்ப சலனம் நீடித்து வருகிறது. இதனால், சில இடங்களில் இயல்பைவிட  கூடுதலாக மழை பெய்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வளிமண்டல  சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்தது. இந்தநிலையில், தொடர்ந்து நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும்  புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், வரும் 5ம் தேதி வரையில்  இதேநிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின்  குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.
127,633
1/2/2020 3:57:10 PM
இந்தியா
டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு
புதுடெல்லி: டெல்லியில் காற்று வீசுவது குறைந்திருப்பதாலும், தட்பவெப்ப நிலையில் சாதகமின்மையாலும் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது.கடந்த 2 மாதங்களில் 12வது முறையாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி மக்களுக்கு உடல்நிலை முன்னெச்சரிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், வெளியில் நடமாடுவதை தவிர்க்கும்படி சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், காற்று மாசு அளவு, 500 என்ற  அளவை தாண்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு  வாரிய குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அளவு 418, ஆர்.கே. புரத்தில் 426, ரோகினியில் 457 அளவில் இருந்தது என்று  கூறப்பட்டுள்ளது.
127,634
1/2/2020 3:59:29 PM
தமிழகம்
கடந்த ஆண்டில் ரயில்வே காவல் நிலையங்களில் 2,393 விபத்து மரண வழக்குகள் பதிவு: ரயில்வே காவல்துறை தகவல்
சென்னை: 2019ம் ஆண்டில் ரயில்வே நிலையங்களில் 2,393 இயற்கைக்கு மாறான விபத்து மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு ரயில்வே காவல்துறை  தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:ரயில்களில் பயணம் செய்து பயணிகளிடம் மயக்க மருத்து கொடுத்து ஏமாற்றியது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் மயக்க மருந்து கொடுத்து உடைமைகளை திருடும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுபாங்கர், சக்கரபெர்த்தி கைது செய்யப்பட்டனர்.ஈரோடு, சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 11 குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த சாகுல் அமீது, அருண்  ஆகியோர் கைது செய்யப்பட்டு, ரூ.5,41,000 கைப்பற்றப்பட்டது. நள்ளிரவு நேரத்தில்சிக்னலுக்காக நிற்கும் போது விரைவு ரயில்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட  மகாராஷ்டிராவை சேர்ந்த பாலாஜி சங்கர் சின்டே, தனஞ்சல் மனோகர் சின்டே, சுனில் மனோகர் சின்டே, பப்பு ஈஸ்வர் பவார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் திருடி வந்த கேரளாவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் தொடர்  திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். ரயில்வே காவல் நிலையங்களில் 2,393 இயற்கைக்கு மாறான விபத்து மரண வழக்குகள்  பதிவு செய்யப்பட்டன.இதில் 1,760 ேபரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 93 தற்ெகாலை வழக்குகளும், 1,993 விபத்து மரண வழக்குகளும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றித்திரிந்த 2,239 சிறார்கள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். கல்லூரி  மாணவர்கள், பெண்கள், பொதுமக்களிடத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,635
1/2/2020 3:59:56 PM
இந்தியா
வங்கி கடன் மோசடி 18 கோடி சொத்து முடக்கம்
புதுடெல்லி: டெல்லியில்  வங்கிகளில் கடன் வாங்கி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடிக்கு காரணமான குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த, ‘நகோடா’ என்ற நிறுவனத்தின்  மீது, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து,  அந்த நிறுவனத்துக்கு சொந்தமான, 18 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து, இந்த நிறுவனத்துக்கு  சொந்தமான, 393 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடந்து வருகின்றது.
127,636
1/2/2020 4:00:18 PM
தமிழகம்
நாமக்கல் மாவட்டம் குப்பிரிக்காபாளையம் தலைவர் தேர்தல் சுயேச்சை வேட்பாளர் முதல் வெற்றி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் குப்பிரிக்காபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் கபிலர்மலை ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை பரமத்திவேலூர்  கந்தசாமி கண்டர் கல்லூரியில் நடந்தது. இதில் குப்பிரிக்காபாளையம் ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட பழனிசாமி, பிரகாஷ்  ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர். இந்த ஊராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆயிரத்திற்கும் குறைவான  வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் பழனிசாமி 482 வாக்குகளும், பிரகாஷ் 251 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து பழனிசாமி வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி அறிவிப்பில் இதுதான் முதலில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
127,637
1/2/2020 4:35:55 PM
இந்தியா
பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்
ஸ்ரீ நகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காதி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல் நடத்தியது.  நேற்றிரவு சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  பாகிஸ்தானின் அத்துமீறிய  தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த  தாக்குதல்  சுமார் 2 மணி நேரம்  நடந்தது.
127,638
1/2/2020 4:36:28 PM
தமிழகம்
தைலாபுரத்தில் வரும் 5ம் தேதி பாமக துணை அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு
சென்னை: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: பாமக மற்றும் பாட்டாளி இளைஞர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 5ம் தேதி காலை 10   மணிக்கு நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள மாங்கனி  அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலர்கள் ஆகியோர் இந்த  கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.  துணை அமைப்புகளில்  பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி  மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள், மாநில துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  கலந்து கொள்வார்கள். பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில்  எடுக்கப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்துவது  குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
127,639
1/2/2020 4:36:50 PM
தமிழகம்
மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு நெல்லை கண்ணன் கோர்ட்டில் ஆஜர்
நெல்லை: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக பெரம்பலூரில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனை மேலப்பாளையம்  போலீசார் இன்று காலை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த 29ம்தேதி குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, உள்துறை  அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாஜ சார்பில் புகார் மனு  அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 153 (ஏ) தேச துரோக  பிரிவின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வினர் நெல்லை கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு அவரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். அதன்பிறகு  போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை கண்ணன் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த இந்து அமைப்புகள்,  நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால், சிகிச்சைக்கு அவர் எடுத்துகொள்ளவில்லை. பின்னர் மதுரையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு நெல்லை கண்ணனை அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை முடித்துவிட்டு நெல்லை வரும்போது, வழியில் மதுரை அருகே மற்றொரு  காரில் மாறி கேரளாவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக ெநல்லை போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நெல்லை  கண்ணனை கைது செய்யக்கோரி நேற்று மதியம் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம்  வலுத்ததால் அவரை சிறப்பு தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று மாலை நெல்லை கண்ணன் நெல்லையிலிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இரவு உணவுக்காக பெரம்பலூர்  நகருக்குள் வந்த நெல்லை கண்ணன், பழைய பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக  சரியாக 7.15 மணிக்கு, ஹோட்டல் அறை எண் 203ல் தங்கியிருந்த நெல்லை கண்ணனை மேலப்பாளையம் போலீசார் தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார்  கைது செய்தனர்.இதுகுறித்து பெரம்பலூர் நகரில் தகவல் பரவியதையடுத்து பாஜகவினரும், எஸ்டிபிஐ கட்சியினரும் நெல்லை கண்ணன் தங்கியிருந்த ஓட்டல் முன்பு திரண்டனர்.  அப்போது பாஜகவினர், தேசத் துரோகியை கைது செய் என்று கோஷமிட, அவர்களுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் எச் ராஜாவை கைது செய்யக் கோரி  கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பெரம்பலூர் டிஎஸ்பி கென்னடி தலைமையில் போலீசார் பதற்றத்தை தணிக்க முயன்றனர். ஆனால்  இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதால் பெரம்பலூர் போலீசார் 9.40 மணி அளவில் ஹோட்டலின் பின்புறவாயில் வழியாக நெல்லை  கண்ணனை காரில் ஏற்றிச் சென்றனர்.அப்போது காரை கைகளால் தட்டி நெல்லை கண்ணனை பாஜகவினர் தாக்க முற்பட்டனர். அதனால் எஸ்டிபிஐ கட்சியினர் சுற்றி நின்று பாதுகாப்பாக காரில் ஏறச்  செய்தனர். இதற்கிடையில் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் தலைமையிலான போலீசார் நேற்றிரவு பெரம்பலூர் சென்றனர். அவர்களிடம் நெல்லை கண்ணனை,  பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர். அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் நெல்லை கண்ணன் இன்று காலை 6 மணியளவில் மேலப்பாளையம் காவல் நிலையம்  அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையொட்டி  மருத்துவமனை வளாகத்தில் பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பெரியசாமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்பிறகு  அவரை, நெல்லை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையொட்டி அங்கும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
127,640
1/2/2020 4:37:11 PM
தமிழகம்
கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 3 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு: பொதுப்பணித்துறை தகவல்
சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு பிப்.29ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட ஆந்திரா சம்மதித்துள்ளது. இதனால், மேலும், 3 டிஎம்சி தமிழகத்துக்கு  கிடைக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்.25ம் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த  தண்ணீர் செப்டம்பர் 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. இந்த தவணை காலத்தில் 5 டிஎம்சியாவது தமிழகத்துக்கு தர வேண்டும் என்று தமிழக அரசு  கோரிக்கை வைத்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில், சென்னையில் 4 ஏரிகளின் நீர் மட்டம்  உயரவில்லை.  குறிப்பாக, 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளில் 6 டிஎம்சி வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு வரும் அக்டோபர் மாதம் வரை  சென்னை மாநகர் குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்துக்கு  தண்ணீர் திறக்க வேண்டும் என்று  சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆந்திர நீர்வளத்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். தற்போது 68 டிஎம்சி  கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 44 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது  என்பதால், பிப்ரவரி 29ம் தேதி வரை தண்ணீர் திறக்க ஆந்திரா சம்மதித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு மேலும், 3 டிஎம்சி கிடைக்க வாய்ப்புள்ளது.இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி இதுவரை 3.9 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. தொடர்ந்து தமிழக எல்லைக்கு 381 கன  அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
127,641
1/2/2020 4:37:29 PM
தமிழகம்
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான அண்ணா பல்கலை. அறிவிப்புக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மணிக்கணக்கில் சம்பளம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடுதல் பதிவாளர்  அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு தடை கோரி ஜி.அருட்பெரும்ஜோதி என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். “ஏற்கனவே 518 தற்காலிக ஆசிரியர்கள், கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன, எத்தனை பணியிடங்கள் தேவை ஆகியவற்றை  கண்டறியாமல் புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கும், பல்கலைக்கழக மானியக்  குழுவின் விதிகளுக்கும் முரணானது. பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிரந்தர உதவி பேராசிரியர்களை நியமிக்காமல் தொடர்ந்து இதுபோன்று கவுரவ,  தற்காலிக ஆசிரியர்களை அவர்கள் பணி செய்யும் நேரத்திற்கு ஏற்ப சம்பளம் என்ற அடிப்படையில் நியமனம் செய்வதும் விதிமுறைகளுக்கு முரணானது. உதவி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என்ற 3 பிரிவு ஆசிரியர்கள் மட்டும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் விதிகளில்  கூறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 10 சதவீத நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் தற்காலிகமாகவே  நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.  ஏற்கனவே, உள்ள 518 ஆசிரியர்களை நிரந்தரம் செய்யாமல் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது சட்ட  விதிகளுக்கு எதிரானது. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்”  என்று கூறியிருந்தார்.இந்த மனு விடுமுறைகால நீதிமன்றத்தில் நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
127,642
1/2/2020 4:37:59 PM
தமிழகம்
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் பயணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி ஜூன் மாதம் சீனா செல்கிறார்: தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்
சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி வருகிற ஜூன் மாதம் சீனா செல்கிறார். சீனாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள  கலாச்சாரம், வர்த்தகம் போன்றவற்றை வலுப்படுத்தவும் அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் முதல்வர்  திட்டமிட்டுள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக 13 நாட்கள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில்  உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். தொழில்  நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் நுட்பங்களையும் பார்வையிட்டு அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும்  கேட்டறிந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள சில தொழில்  நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து  பேசினார்கள். இப்போது இருநாட்டு கலாச்சார உறவுகள், வர்த்தகம், குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பேட்டி அளித்த சீன அதிபர் ஜின்பிங்,  தமிழ்நாட்டின் கலாச்சாரம் அன்பான உபசரிப்பால் நெகிழ்ந்ததாக வெகுவாக பாராட்டினார். சீனா சென்றதும் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்து  கடிதம் எழுதினார்.இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சீனா நாட்டு பிரதிநிதிகள் குழுவினர் சென்னைக்கு வந்து தலைமை செயலாளர் சண்முகம்  மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். அதன்பிறகு தமிழக அதிகாரிகள் குழுவினர் சீனா சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். சீனா  மற்றும் தமிழக அதிகாாரிகள் சந்தித்து பேசியதை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஜூன் மாதம் சீனா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டு  வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதற்கான அனுமதியை வழங்கி சுற்றுப்பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க  உள்ளது. சீனாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள கலாச்சாரம், வர்த்தகம் போன்றவற்றை வலுப்படுத்தவும், அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  அழைப்பு விடுக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீனா செல்கிறார். அவருடன் தொழில்துறை அமைச்சர், மற்றும் அரசு துறை செயலாளர்களும் செல்ல  உள்ளனர். இதன்மூலம் சீனாவில் உள்ள மிகப்பெரிய செல்போன் நிறுவனங்கள் மற்றும் பட்டு நெசவு நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரும் வாய்ப்பு ஏற்படும் என்று  கூறப்படுகிறது.
127,643
1/2/2020 4:38:16 PM
தமிழகம்
கல்லூரி உதவி பேராசிரியர் தகுதி தேர்வு: 60 ஆயிரம் பேர் தேர்ச்சி
சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு(நெட்) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தகுதித் தேர்வு எழுதிய 60 ஆயிரம் பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். நாட்டில் உள்ள பல்கலைக் கழக மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் தேசிய  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த தேசிய தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.  இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்தது. தகுதித் தேர்வில்  பங்கேற்க 10 லட்சத்து 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் எழுதினர். இதற்காக நாடு முழுவதும் 219 நகரங்களில் 700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 81 பாடங்களில் இருந்து தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வு  மையங்களில் 1450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. தேர்வுக்கான விடைக்குறிப்புகள் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் இரவு தேர்வு  முடிவுகளை இணையத்தில் வெளியிட்டது. அதில் 60 ஆயிரத்து 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர்  http://ugcnet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
127,644
1/2/2020 4:38:55 PM
உலகம்
மெக்சிகோ சிறையில் கைதிகள் மோதல்: 16 பேர் பலி
மெக்சிகோ: மெக்சிகோவில் சிறைக் கைதிகள் மோதலில் 16 பேர் பலியானார்கள். மெக்சிகோவில் உள்ள பல சிறைகளில் அளவுக்கதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை  உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் போதிய  வசதிகள் இல்லாததால் கைதிகள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவதும் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஜகாடெகாஸ் நகரிலுள்ள செரெரெஸ்கோ பகுதியில் அமைந்துள்ள சிறையில் ஆத்திரமடைந்த கைதிகள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டம் மோதலாக மாறியது. இதில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர் என கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கைதிகளிடம்  துப்பாக்கி, மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள்  இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
127,645
1/2/2020 4:39:16 PM
தமிழகம்
தூய்மை நகரங்கள் பட்டியலில் 43வது இடத்தில் சென்னை: பின்னடைவை சந்தித்த தமிழக நகரங்கள்
சென்னை: தூய்மையான நகரங்கள் தொடர்பாக மத்திய அரசு  வெளியிட்டுள்ள ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசை பட்டியலில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தை  பிடித்துள்ளது. கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களும் பின்னடைவை சந்தித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016ம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில்  நடத்தப்படும் இந்த ஆய்வு 2016ம் ஆண்டு 73 நகரங்களிலும், 2017ம் ஆண்டு 413 நகரங்களிலும், 2018ம் ஆண்டு 4023 நகரங்களிலும், 2019ம் ஆண்டு 4237  நகரங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான ஆய்வை நடத்துவதற்கு முன்பாக ஸ்வத் சர்வேக்ஷன் லீக் என்ற பெயரில் ஆண்டுக்கு மூன்று முறை தொடர் ஆய்வு நடத்த  மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி  ஏப்ரல், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்படும். இந்நிலையில் முதல் மற்றும்  இரண்டாம் காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 25 ஆயிரத்திற்கு குறைவு, 25 ஆயிரம்  முதல் 50 ஆயிரம், 50 ஆயிரம் முதல் 1 லட்சம், 1 லட்சம் முதல் 10 லட்சம், 10 லட்சத்திற்கு மேல் என்று 5 வகையாக பிரித்து தரவரிசை பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் 10 லட்சத்திற்கு அதிகமாக மக்கள் தொகை கொண்ட 49  நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் மதுரை  27வது இடத்தையும், கோவை 31வது இடத்தையும், சென்னை 38வது இடத்தையும் பிடித்துள்ளன. இரண்டாம் காலாண்டிற்கான பட்டியல் மதுரை 5 இடங்கள்  பின்தங்கி 32வது இடத்தையும், கோவை 3 இடங்களில் பின்தங்கி 34வது இடத்தையும், சென்னை 5 இடங்களில் பின்தங்கி 43வது இடத்தையும் பிடித்துள்ளது. 1  முதல் 10 லட்சம் வரை மக்கள் ெதாகை உள்ள நகரங்களின் முதல் காலாண்டு பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி  திருச்சி 38வது இடத்தையும், கும்பகோணம் 48வது இடத்தையும், சேலம் 77வது இடத்தையும், வேலூர் 83வது இடத்தையும், தாம்பரம் 84வது இடத்தையும்,  பல்லாவரம் 91வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால் 2ம் காலாண்டில் முதல் 100 இடங்களுக்குள் 2 நகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதில் திருச்சி 56வது இடத்தையும், பல்லாவரம் 76வது  இடத்தையும் பிடித்துள்ளன. கண்டோன்மென்ட் போர்டுகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் காலாண்டில் பரங்கிமலை போர்டு முதல் இடத்தையும், வெல்லிங்டன் இரண்டாவது  இடத்தையும் பிடித்துள்ளது. ஆனால் இரண்டாவது காலாண்டில் வெல்லிங்டன் போர்டு 10வது இடத்தையும், பரங்கிமலை போர்டு 24வது இடத்தையும்  பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் ஆய்வு ஜனவரி 4ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை 4370க்கு மேற்பட்ட நகரங்களில்  நடைபெறவுள்ளது.
127,646
1/2/2020 4:39:36 PM
தமிழகம்
சங்கடங்கள் தீர்க்கும் சித்தர் முத்து வடுகநாதர்
சிவகங்கையிலிருந்து 54 கிமீ தொலைவில் சிங்கம்புணரி உள்ளது. இங்குள்ள வேங்கைப்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயில்  உள்ளது. ‘வாத்தியார் கோயில்’ என்ற பெயரிலும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது.சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் மற்றும் கருப்பணசாமி சிலைகள் உள்ளன.  விழா காலங்களின்போது கலை நிகழ்ச்சிகள் நடத்த கோயில் வளாகத்தில் கலையரங்கம் ஒன்றும் உள்ளது.தல வரலாறுசெம்பிநாடு முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் பெண் வழி வாரிசு பூவலத்தேவன்-குமராயி தம்பதிக்கு 1787ல் முத்து வடுகநாதர் பிறந்தார். பூவலத்தேவன் திடீரென  இறந்ததையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற எதிரிகள், அவரது வாரிசான முத்து வடுகநாதருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர். இதனை அறிந்த  குமராயி முத்து வடுகநாதருடன் நாட்டை விட்டு வெளியேறி மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியேறினார். பின்னர் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில்  குடியேறியதால் பட்டூர் வாத்தியார் என்ற பெயரிலும் முத்து வடுகநாதர் அழைக்கப்பட்டார்.அப்போது அருகில் உள்ள சிங்கம்புணரியில் ஒரு கொள்ளை கும்பல் மாந்திரீக வேலை செய்து அப்பகுதி மக்களிடம் கொள்ளையடித்தது. மக்களின்  வேண்டுகோளை ஏற்று சிங்கம்புணரி வந்த முத்து வடுகநாதர், அங்கு தனது சித்து வேலைகளால் கொள்ளையர்களை விரட்டியடித்தார். இந்த சம்பவத்திற்கு  பின்னர் அப்பகுதி முழுவதும் அவரது புகழ் பரவியதுடன், திரளான பக்தர்கள் கூட்டமும் உருவானது.தொடர்ந்து அவர் தன்னை நாடி வந்த பக்தர்களின் துன்பங்களை தீர்த்து வைத்தார்.96 ஆண்டுகள் வாழ்ந்த முத்து வடுகநாதர் 1883ல் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். அவருக்கு வணிகர் சங்கம் சார்பில் சிங்கம்புணரி  வேங்கைப்பட்டியில் சிறிய பீடம் அமைத்து, அதில் அவரது சிலை நிறுவப்பட்டது. பின்னர் 1993ல் இந்த கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த  கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு  பவுர்ணமி தினத்தன்று இரவிலும், அமாவாசை தினத்தன்று பகலிலும் சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன சித்ரா பவுர்ணமி அன்று   வணிகர் சங்கம் சார்பில் பிரமாண்டமான பால்குட விழா நடக்கிறது. ஊர் எல்லையில் உள்ள சீரணி அரங்கிலிருந்து கிளம்பும் பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி  ஊர்வலமாக கோயிலை வந்தடைவர். அன்றிரவில் சித்தர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.  ஆடி  18ம் பெருக்கு தினத்தன்று  10 ஆயிரம் பேருக்கு  அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும். சித்தரின் ஆசி பெறுவதற்காக இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.சித்தர் ஜீவ சமாதியான ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் முத்து வடுகநாதர் பக்தர் உருவில் வருவார் என்பது  பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அன்று கோயில் பூசாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இங்கு சித்தரை வழிபட்டு மனமுருகி திருநீறு பூசி வேண்டினால் நோய் குணமடைவதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு  குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்றும், மனச் சங்கடங்கள் அனைத்தையும் முத்து வடுகநாதர் தீர்த்து வைப்பார்  என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
127,647
1/2/2020 4:40:01 PM
குற்றம்
வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பரிதாப பலி: 2 ஆட்டோ டிரைவர் கைது
பூந்தமல்லி: சென்னீர்குப்பம் பகுதியில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்துக்களில் 2 பேர் உயிரிழந்தனர். இதுசம்பந்தமாக ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது மோடி (45). இவர் சென்னை அருகே சென்னீர்குப்பத்தில்  உள்ள தனியார் லெதர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  நேற்று சைக்கிளில் குமணன்சாவடி நோக்கி சென்றபோது அங்கு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ, அவரது சைக்கிள் மீது  வேகமாக மோதியது. இதில் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு முகமது படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு முகமது மோடி பரிதாபமாக பலியானார்.மற்றொரு சம்பவம் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி, எத்திராஜ் அவென்யூவை சேர்ந்தவர் ராஜகோபாலன் (70). இவர் நேற்று சென்னீர்குப்பம்-ஆவடி  சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் ராஜகோபாலன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ  இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக பலியானார். அவரது உடலை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர்.இந்த விபத்துக்கள் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர்கள்  பூந்தமல்லி பூபதி (27) மற்றும் ஆவடி சம்சுதீன் (24) ஆகியோரை கைது செய்தனர்.
127,648
1/2/2020 4:40:25 PM
தமிழகம்
ஊத்துக்கோட்டை அருகே நள்ளிரவில் சோகம் கிருஷ்ணா கால்வாயில் கார் பாய்ந்தது பாட்டி, பேத்தி மூச்சுத் திணறி சாவு: 4 பேர் உயிர் தப்பினர்
ஊத்துக்கோட்டை: த்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் கார் பாய்ந்ததில் பாட்டி, பேத்தி ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 4 பேர் உயிர் தப்பினர். ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலை எட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசபாண்டியன் (45). இவர் பிஸ்கட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி  பாக்கியலட்சுமி (40). இவர்களது மகன் மோனீஸ்வரன் (15), மகள் வைஷ்ணவி (17). முருகேசபாண்டியனின் தாய் தெய்வானை (65) மற்றும் உறவினர் சீனிவாசன்  (40). இவர்கள் அனைவரும் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள முருகேச பாண்டியனின் மைத்துனர் சரவணன் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு  சென்றுவிட்டு அங்கிருந்து நள்ளிரவு ஆம்னி வேனில் ஊத்துக்கோட்டைக்கு புறப்பட்டனர்.நள்ளிரவு 1 மணி அளவில் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் அருகே வந்தபோது முருகேசபாண்டியனின் கட்டுப்பாட்டை இழந்த கார்,  பூண்டிக்கு செல்லும்  கிருஷ்ணா கால்வாயில் பாய்ந்தது. இதில் கார் தண்ணீரில் மூழ்கியதால் அதில் இருந்தவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவித்தனர்.ஆனால் கார் கதவை திறந்த முருகேச பாண்டியன், அவரது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் மகன் மோனீஸ்வரன், உறவினர் சீனிவாசன் ஆகியோர் கார் மீது  நின்றுக்கொண்டு யாராவது வந்து காப்பாற்றுங்கள் என்று ரொம்ப நேரமாக சத்தம்போட்டுள்ளனர்.அவர்களது சத்தம் கேட்டு அம்பேத்கர் நகர் மக்கள் வந்து பார்த்துவிட்டு உடனடியாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர்  அப்பகுதி மக்கள், காரில் சிக்கி தவித்த 4 பேரை காப்பாற்றினர்.காரில் சிக்கி தவித்த தெய்வானை, வைஷ்ணவி ஆகியோரை மீட்க முயன்றபோது மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். இதனிடையே ஊத்துக்கோட்டை  போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக  திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.கிருஷ்ணா கால்வாயில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தில் 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
127,649
1/2/2020 4:40:44 PM
தமிழகம்
தேக்வாண்டோ போட்டியில் காஞ்சி. வீரர்கள் சாதனை
காஞ்சிபுரம்: பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டாரோ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் பகுதியில் கடந்த வாரம் தேசிய மற்றும் சர்வதேச டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடந்தன. இதில் பல மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும் காஞ்சிபுரம் ஸ்மார்ட் கேம்ஸ் அகாடமி சார்பில், 52 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.  வெற்றிப்பெற்ற காஞ்சிபுரம் வீரர், வீராங்கனைகள் 30 பேருக்கு தங்க பதக்கம் மற்றும் 20 பேருக்கு வெள்ளி, 17 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.  சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் செந்தாமரைக்கண்ணன், யுவராணி, பிரகாஷ் மற்றும் வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.
127,650
1/2/2020 4:41:08 PM
குற்றம்
ஐசிஎப் ரயில்வே காலனியில் நர்ஸ் வீட்டில் 22 பவுன் திருட்டு
அண்ணாநகர்: கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்ற நர்ஸ் வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்டது.சென்னை ஐசிஎப், ரயில்வே காலனியில் வசிப்பவர் விஜி (48). இவர் ரயில்வே மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரளாவுக்கு சென்றார். அங்கிருந்து அனைவரும் நேற்றிரவு வீடு  திரும்பினர்.அப்போது தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ  உடைக்கப்பட்டு 22 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஐசிஎப் போலீசில் விஜி புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் நகைகளை கொள்ளையடித்த  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.கடந்த ஆண்டு, ஜூலை மாதம் ஐசிஎப் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் குமாரின்  வீட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடித்தனர்.
127,651
1/2/2020 4:41:32 PM
தமிழகம்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 121 பேருக்கு 75 லட்சம் நலத்திட்ட உதவி: பங்காரு அடிகளார் வழங்கினார்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2020ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கலச விளக்கு வேள்வி பூஜை, கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு மேடை  நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி சித்தர்பீடம் மலர்களாலும், ஒளி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 2 நாள் விழா நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில்  மங்கள  இசையுடன் துவங்கியது. காலை 4 மணிக்கு கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.மாலை 5 மணிக்கு கலச, விளக்கு வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவங்கி வைத்தார். இரவு 6.30  மணிக்கு சித்தர்பீட ஓம் சக்தி மேடை அருகே கலை நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார்இரவு 11 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு வழிபாடு துவங்கியது. சித்தர் பீடத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புத்தாண்டு  வாழ்த்தொலி எழுப்ப நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை 9.35 மணிக்கு சித்தர்பீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அடிகளாருக்குபாதபூைைஜையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அன்னதானத்தை இயக்க  துணைத்தலைவர் தேவி ரமேஷ் துவங்கி வைத்தார்.மதியம் 11.30 மணியளவில் மேடை நிகழ்ச்சி தொடங்கின. விழாவில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், விளையாட்டு மற்றும்  இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சக்தி கே.எஸ்.ஈஸ்வரப்பா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் 10 பேருக்கு மடிக்கணினி, 22 பேருக்கு தையல் இயந்திரம், 11 பேருக்கு மருத்துவ நெபுலைஸர் கருவி, 10 பேருக்கு எலெக்ட்ரிக்கல் பழுதுபார்க்கும் கருவி,  10 பேருக்கு துளையிடும் இயந்திரம், 2 பேருக்கு ஜெய்பூர் செயற்கை கால் கருவி, 15 பேருக்கு ரத்த அழுத்த அளவு கண்டறியும் கருவி, 33 பேருக்கு ரத்தத்திலுள்ள  சர்க்கரை அளவை கண்டறியும் கருவி, 3 பேருக்கு பயணிகள் ஆட்டோ வழங்கப்பட்டது. பெங்களூர் ஜெயதேவ் மருத்துவமனைக்கு ₹12 லட்சம், மேல்மருவத்தூர்  கலை அறிவியல் கல்லூரிக்கு ஒரு பஸ், சங்கரா புற்றுநோய் நிறுவனத்திற்கு ₹10 லட்சம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆதிபராசக்தி அன்னை  இல்லத்திற்கு ₹3 லட்சம் மற்றும் ஷிமோகா தமிழ் வழி உயர்நிலைப்பள்ளிக்கு ₹1 லட்சம் நன்கொடை என 121 பயனாளிகளுக்கு ₹75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட  உதவி வழங்கப்பட்டது.இதையடுத்து, ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் விழாப்பேருரை ஆற்றினார்.  ஆன்மிக இயக்க துணை தலைவர் உமாதேவி, மோனலஷ்மி  சிறப்புரையாற்றினர். விழா ஏற்பாடுகளை கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் ராஜகோபால் மற்றும் உதயகுமார் தலைமையில்  தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
127,652
1/2/2020 4:41:49 PM
தமிழகம்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உணவின்றி தவிப்பு
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் வாக்கு  எண்ணும் பணிகள் துவங்கின. இதற்காக காலை 6 மணிக்கு தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு போலீசார் வந்துவிட்டனர். ஆனால் அவர்களுக்கு காலை 9.30  மணிவரை காலை உணவு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘’ தேர்தல் பணிக்கு நாங்கள் காலை 5 மணிக்கே வந்துவிட்டோம். காலை 7 மணிக்கு டிபன் சாப்பிட்டு மாத்திரை  போட்டால்தான் பணி செய்ய முடியும். ஆனால், எங்களுக்கும் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசாருக்கும் காலை 9.30 மணிவரை காலை உணவு  வழங்கப்படவில்லை’ என்றனர். இதனிடையே உணவின்றி தவித்த ஊழியர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடாமல் வெளியே வந்தனர். இதுபற்றி அறிந்ததும்  அரசு ஊழியர்கள் விரைந்து சென்று மாதானப்படுத்தியதையடுத்து மீண்டும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் காலை 10 மணிக்கு உணவு வழங்கப்பட்டது.
127,653
1/2/2020 4:42:06 PM
தமிழகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் தொடங்கியது
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது.  ஒவ்வொரு சுற்றும் எண்ணி முடிந்தவுடன் முடிவுகளை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 14  ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 3,951 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 2,577  வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த  பகுதியில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு,  பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இந்நிலையில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாவட்டம் முழுவதும் 5,953 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 925 மேஜைகள் போடப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகளுக்கு இடையூறு இல்லாமல் பணி மேற்கொள்ள  பேரிகார்டு, வலை அடிக்கப்பட்டிருந்தது.வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட் உட்காருவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டு சீட்டுக்களை வெவ்வேறான  நிறங்களில் பயன்படுத்தியதால், ஓட்டுப்பெட்டிகளை திறந்து அதிலுள்ள ஒரே வகையான நிறமுள்ள வாக்குச்சீட்டுகளை பிரித்து கட்டுக்கட்டி, மற்றொரு அறையில்  வைத்து எண்ணப்படுகிறது.அதிகபட்சமாக 22 சுற்றுக்களில் முடிவுகள் முழுவதும் தெரிந்து விடும். அவ்வப்போது ஒவ்வொரு சுற்றின் முடிவும் மைக்கில் அறிவிப்பதோடு, இணையதளத்திலும்  பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் 84 மைக்ரோ கண்காணிப்பாளரால் ஓட்டு  எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது.1 மணி நேரம் தாமதம் பூண்டி ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை, பாண்டூர் டிஇஎல்சி மேல்நிலை பள்ளியிலும், கடம்பத்தூர் ஒன்றிய வாக்குகள், கீழச்சேரி செயின்ட் ஜோசப் மேல்நிலை  பள்ளியிலும் இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்தது. வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் காலை 7 மணிக்கே வர துவங்கி விட்டனர். வீடியோகிராபர்கள்  குறித்த நேரத்தில் வரவில்லை.வாக்கு எண்ணிக்கையை முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும். எனவே, வீடியோகிராபர்கள் வந்தால்தான் வாக்கு எண்ணிக்கை துவங்க வேண்டும் என  வேட்பாளர்கள் கூறினர். நேரம் செல்ல செல்ல பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக காலை 9 மணிக்கு வீடியோகிராபர்கள் வந்தனர். அதற்குபிறகு வாக்கு  எண்ணிக்கை துவங்கியது.கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கும்மிடிப்பூண்டி, கேஎல்கே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த  அறையை திறப்பதில் தாமதமானது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
127,654
1/2/2020 4:42:39 PM
தமிழகம்
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 பதவிக்கான தரவரிசை பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 8 இடங்களை பெண்கள் பிடித்து சாதனை படைத்தனர்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் 27, போலீஸ் டிஎஸ்பி 90, வணிக வரித்துறை உதவி  ஆணையர்-18. கூட்டுறவு சங்கம் துணைபதிவாளர்-13, மாவட்ட பதிவாளர்-7, ஊரகவளர்ச்சி துறை உதவி இயக்குநர்-15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்-8,  தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மாவட்ட அலுவலர்-3 இடங்கள் என 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, 3  கட்டங்களாக தேர்வுகள் நடந்தப்பட்டது. அதாவது, முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வரை  மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது  இணையதளத்தில் வெளியிட்டது. அதில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக முதல் 8 இடங்களில்  பெண்கள் தான் இடம் பெற்றுள்ளனர். அர்ச்சனா என்ற மாணவி முதல் இடத்தையும், யுரேகா 2வது இடத்தையும், 3வது இடத்தை தனலட்சுமி, 4வது இடத்தை  மகாலட்சுமி, 5வது இடத்தை அஜிதா பேகம், 6வது இடத்தை ஜெயா ராஜா பவுலின், 7வது இடத்தை ரூபினா, 8வது இடத்தை லோக நாயகியும் பிடித்தனர். இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: முதன்மைத் தேர்விலிருந்து தேர்ச்சி பெற்ற 363  மாணவர்களுக்குக்கான நேர்காணல் தேர்வானது கடந்த 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி முடிவானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இதில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியிலிருந்து 54க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். அஜிதா பேகம் 5வது இடத்தையும், 19வது இடத்தை வினோத்குமார்,  21வது இடத்தை எம்.அரவிந்த், 24வது இடத்தை எஸ்.தரணியும் பிடித்துள்ளனர். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குரூப் 1 பதவிகளுக்கான கலந்தாய்வு சென்னையில்  வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ேதர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். அதன் பின்னர், அவர்கள் பணியில் சேர்வார்கள். இவ்வாறு  அவர் கூறினார்.
127,655
1/2/2020 4:43:00 PM
தமிழகம்
கோயில்களில் 400 கோடி செலவு செய்ததற்கான கணக்குகள் இல்லை
சென்னை: தணிக்கை ஆய்வாளர் காலி பணியிடங்களால் கோயில்களில் தணிக்கை செய்யப்படாத நிலையில், ₹400 கோடி செலவு செய்ததற்கான கணக்குகள் இல்லை என்று  கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அறநிலையத்துறையில் புதிதாக 18 தணிக்கை ஆய்வாளர்கள் நியமனம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வரவு செலவு விவரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை தணிக்கை ஆய்வாளர்கள் ஆய்வு  செய்ய வேண்டும். ஆனால், 100க்கும் மேற்பட்ட தணிக்கை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கோயில்களில் வரவு-செலவு விவரங்களை  தணிக்கை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் பல கோயில்களில் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தணிக்கை செய்யப்படாமல் உள்ளது. இதனால் வரவு-செலவு விவரங்களை  முறையாக கணக்கு பதிவேடுகளில் ஊழியர்கள் பதிவு செய்வதில்லை.  இது போன்று சமீபத்தில் அறநிலையத்துறை தணிக்கை குழு நடத்திய ஆய்வில் ₹400 கோடி வரை கோயில் உண்டியல் மற்றும் வாடகை வருவாய் எந்த  அடிப்படையில் செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக கணக்கு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் பெரும்பாலான  கோயில்களில் வரவு-செலவு விவரங்களை முறையாக கணக்கு பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிவில் ஊழியர்கள் பலர் சிக்குவார்கள்  என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், கோயில்களில் வரவு செலவு விவரங்களை அவ்வபோது ஆய்வு செய்யும் பட்சத்தில் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது என்று கூறப்படுகிறது.  தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் தணிக்கை ஆய்வாளர் தேர்வு நடத்தி புதிதாக நபர்களை நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்படும். எனவே, உதவியாளர்களுக்கு  பதவி உயர்வு மூலம் தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறநிலையத்துறை முடிவு செய்தது. இதை தொடர்ந்து அறநிலையத்துறையில் தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தணிக்கை ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க கமிஷனர் பணீந்திர ரெட்டி  முடிவு செய்தார். அதன்படி, உதவியாளர்கள் பாரதமணி, சுந்தரி, மகேஷ்வரி, லட்சுமி பிரபா, சண்முகம், வீரப்பன், வெங்கடலட்சுமி, இந்திரா, சாந்தி உள்ளிட்ட 18  பேருக்கு தணிக்கை ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கி கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
127,656
1/2/2020 4:43:27 PM
தமிழகம்
குடியிருப்பை சுற்றி மழைநீர் தேக்கம் கேளம்பாக்கத்தில் மக்கள் மறியல்
திருப்போரூர்: குடியிருப்பை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி கேளம்பாக்கத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில்  சண்முகாநகர், எஸ்ஆர்எஸ். நகர், சொக்கமாள்நகர், கனகாபரமேஸ்வரன்நகர், நகர்,  கணபதிநகர் மற்றும் லட்சுமி அவென்யூ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வீட்டுமனை  பிரிவுகள் உள்ளன. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.நேற்று இரவு பெய்த மழையில் மேற்கண்ட குடியிருப்பை சுற்றிலும்  தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில்  வரமுடியாமல் தவித்தனர். நேற்று இரவு பணிமுடித்துவிட்டு வீடு திரும்பியவர்களும், புத்தாண்டு கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வந்தவர்களும் பெரிதும்  அவதிப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கேளம்பாக்கத்தில் வீராணம் சாலையில் இன்று காலை 10.30 மணி  அளவில் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சசிகுமார்  சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
127,657
1/2/2020 4:43:48 PM
குற்றம்
குடிபோதை தகராறில் முதியவருக்கு கத்திக்குத்து
பெரம்பூர்: சென்னை மகாகவி  பாரதிநகர், 11வது கிழக்கு குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ெசபாஸ்டீன் (65). கூலி தொழிலாளி. இவரது நண்பர் அன்வர். நேற்று இருவரும் மது  அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் திடீரென அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அன்வர், வீட்டில் இருந்த  கத்தியை எடுத்து ெசபாஸ்டீனை சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த செபாஸ்டீனை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவ  மனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து மகாகவி பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அன்வரை தேடி வருகின்றனர்.
127,658
1/2/2020 4:44:12 PM
தமிழகம்
வெங்காயம், பூண்டு விலையை தொடர்ந்து புளி விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிருப்தி
சென்னை: தமிழகத்தில் விளைச்சல் குறைவால் புளி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் ஏராளமான புளியமரங்கள் இருந்தன. இவை, சாலையை அகலப்படுத்துவதாக கூறி அழிக்கப்பட்டு விட்டன.  இருக்கும் சில மரங்களிலும் மழை குறைவு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டை விட தற்போது விளைச்சல் குறைந்துள்ளது.இதனால், அருகில் உள்ள ஆந்திர, கேரள மாநிலங்களில் இருந்து புளி வரவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை  கொட்டை நீக்கிய புளி கிலோ ₹60க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை இரு மடங்குக்கு மேல் உயர்ந்து கிலோ ₹130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் அனைத்து விவசாயங்களும் கேள்விக் குறியாகி உள்ளது.  கடந்த ஆண்டு 10 கிலோ எடை கொண்ட கொட்டை நீக்கப்பட்ட புளி 600க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் இல்லாததால் 1,200க்கு மேல்  விற்பனை செய்யப்படுகிறது. இதை மளிகை கடைகளில் கிலோ ₹130க்கு விற்கின்றனர். புளி சீசன் இல்லாத காரணத்தால் மேலும் விலை உயர வாய்ப்பு  உள்ளது’’என்றனர்.ஏற்கனவே பூண்டு விலை உயர்ந்துள்ள நிலையில், புளி விலையும் உயர்ந்துள்ளதால், ரசம் வைப்பதிலும் இல்லத்தரசிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புளி விலை  உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை சரிந்துள்ளது ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
127,659
1/2/2020 4:44:29 PM
தமிழகம்
திருவள்ளூரில் 266 மி.மீ மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
திருவள்ளூர்: 2020ம் ஆண்டு உற்சாகமாக நேற்று பிறந்த நிலையில், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 266 மி.மீட்டர் மழை பெய்து பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்வித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விட்டது எனவும், மேலும் சில நாட்கள் மழை இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம்நள்ளிரவு புத்தாண்டை மக்கள் உற்சாகமுடன் வரவேற்ற நிலையில், நேற்று அதிகாலை முதலே ஜில்லென்ற காற்றுடன் மழை பெய்தது. மார்கழி குளிர் ஒருபுறம் வாட்டியெடுக்க, மழையும் பெய்ததால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்) விவரம்சோழவரம்- 47, செங்குன்றம்- 33, தாமரைப்பாக்கம்- 29, செம்பரம்பாக்கம்- 28, திருத்தணி- 26, திருவள்ளூர்- 21, ஜமீன்கொரட்டூர்- 21, பூந்தமல்லி- 19, கும்மிடிப்பூண்டி- 17, பூண்டி- 13, திருவாலங்காடு- 7, ஊத்துக்கோட்டை- 4, ஆர்.கே.பேட்டை- 1. மொத்தம்- 266 மி.மீட்டர்.
127,660
1/2/2020 4:44:46 PM
தமிழகம்
வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் தடியடி
புழல்: புழல் வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.சென்னை சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று காலை வாக்கு எண்ணும் மையத்தில் ஊழியர்களுக்கு காலை உணவு வழங்க காலதாமதமானதால்  அங்கிருந்த ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார், லேசான தடியடி  நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதன்பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை பணி துவங்கியது.
127,661
1/2/2020 4:45:07 PM
தமிழகம்
தமிழகத்தில் 10 ஆண்டு இல்லாத அளவில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு
சென்னை:  வடகிழக்கு பருவமழை எதிரொலியால் கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் 32 மாவட்டங்களில் அதிகரித்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் பயன்பாடு அதிகரித்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வந்தது. குறிப்பாக, மாநிலத்தில் 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் மட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது. இவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழக முழுவதும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உட்பட 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 3.08 மீட்டர், சேலத்தில் 5.42 மீட்டர், அரியலூர் 3.55 மீட்டர், பெரம்பலூர் 3.85 மீட்டர், திருச்சி 2.73 மீட்டர், விழுப்புரத்தில் 2.23 மீட்டர், திருவண்ணாமலை 2.79 மீட்டர், காஞ்சிபுரத்தில் 2.01 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்த முறை வடகிழக்கு பருவமழையால் அனைத்து மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
127,662
1/2/2020 4:45:27 PM
தமிழகம்
காட்டில் விறகு சேகரித்த இளம்பெண் பலாத்காரம் 3 காமக்கொடூரன்கள் கைது
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நிம்மனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். திருமணமானவர். இவர் நேற்று முன்தினம் அருகே உள்ள  வனப்பகுதியில்  சமையல் செய்வதற்காக விறகு சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்(20), அவரது நண்பர்கள்  விஜய்(21), சிவா(20) ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டம் தீட்டினர்.இதையடுத்து, 3 பேரும் சென்று இளம்பெண்ணிடம் சென்று உனது பாட்டி இறந்துவிட்டார். இதனால் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறினர் என  தெரிவித்தனர். இதை நம்பிய இளம்பெண் அவர்களுடன் புறப்பட்டார். மகேஷின் பைக்கில் இளம்பெண்ணும், மற்றொரு பைக்கில் விஜய், சிவா ஆகியோரும்  சென்றனர். கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்தில் பைக்கை நிறுத்திய மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் விஜய், சிவா ஆகியோர் திடீரென இளம்பெண்ணின்  வாயை பொத்தி மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று 3பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் 3 பேரும் தப்பிஓடிவிட்டனர். இதையடுத்து  வீட்டிற்கு வந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை பெற்ேறாரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நிம்மனபல்லி காவல்  நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மகேஷ், விஜய், சிவா ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
127,663
1/2/2020 4:45:59 PM
குற்றம்
அதிமுக மாநில நிர்வாகிக்கு கத்திக்குத்து
கடலூர்: கடலூர் கேடிஆர் நகரில் மறைந்த பாஜக மாநில தலைவர் கிருபாநிதியின் மகனும் அதிமுக மாநில மருத்துவரணி தலைவருமான டாக்டர் சீனுவாசராஜா(55)  வசித்து வருகிறார். நேற்று மதியம் 2.30 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தனது காரிலிருந்த பொருட்களை எடுத்து வருமாறு மாடியிலிருந்த  மகன் டாக்டர் வசந்தை(26) அழைத்தார். தந்தையின் அழைப்பை கேட்டு மாடியிலிருந்து வசந்த் கீழே இறங்கிவந்தார். அப்போது பக்கத்தில் பூட்டப்பட்டிருந்த அவரது  அத்தை வீட்டில் ஒரு மர்ம நபர் சுற்றிவருவதை கண்டார். சந்தேகமடைந்த அவர், மர்ம நபரிடம் யார் நீ? என்ன செய்கிறாய் எனக் கேட்கவே சுதாகரித்துக்கொண்ட  மர்ம நபர், தான் ஒரு பிளம்பர் என்றும் வேலைக்காக அழைத்ததால் வந்ததாகவும் கூறினான்.அப்படி நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. நீ எதற்காக அத்துமீறி  உள்ளே சென்றாய் என கேட்டுக்கொண்டிருக்கும் போது அந்த நபர் சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றான்.  அப்போது வெளியே வந்த டாக்டர் சீனுவாச ராஜா  ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து, போலீசுக்கு தகவல் கூறி அழைக்குமாறு கூறினார்.இதனால் பதற்றமடைந்த மர்ம நபர் டாக்டரின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து  சீனுவாசராஜாவின் இடது தோள்பட்டையில் குத்தி தப்பினான். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சீனுவாசராஜா வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
127,664
1/2/2020 4:46:20 PM
தமிழகம்
இறந்தது தெரியாமல் வள்ளிக்காக காத்திருக்கும் லட்சுமி: புத்துணர்வு முகாமில் நெகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்: யானைகள் புத்துணர்வு முகாமில், 10 ஆண்டு தோழியான வள்ளிக்காக, இரட்டை திருப்பதிகோயில் யானை லட்சுமி காத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் கோயில் மற்றும் மடங்களைச் சேர்ந்த 26 யானைகளுக்கும் புதுவை மாநிலத்தைச்  சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 28 யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முகாமில் காலை, மாலை நடைபயிற்சியும் பவானி  ஆற்றின் கரையோரத்தில் ஷவர் குளியலும், பசும் தீவனம், அரிசி மற்றும் தானியங்கள் கலந்த ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு முழு ஓய்வு அளிக்கப்பட்டு  வருகிறது. இதுதவிர முகாமில் தேவைப்படும் யானைகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.முகாமில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு யானைக்கும் தோழிகள் உண்டு. நடைபயிற்சியின் போதும், குளிக்கும்போதும் அந்த யானைகள் தங்கள் தோழிகளை  அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். அந்நேரங்களில் துதிக்கையால் ஒருவரை ஒருவர் வருடிக் கொள்ளுவதும் பலத்த சத்தம் எழுப்பி தங்கள் அன்பை  பரிமாறிக் கொள்வதும் வழக்கம்.கடந்த 10 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் தூத்துக்குடி மாவட்டம் இரட்டைத் திருப்பதி கோயில் யானை லட்சுமியும், குற்றாலம்  இலஞ்சி குமாரர் கோயில் வள்ளியும் இணைபிரியா தோழிகளாக வலம் வந்தன. இரு யானைகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்படி எதிரெதிரே  கட்டப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்தாண்டு நடந்த முகாமிலும் பங்ேகற்று 48 நாட்கள் இரு யானைகளும் தங்களது அன்பை பரிமாறி பிரிந்து சென்றன.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வள்ளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இது பற்றி அறியாத லட்சுமி முகாமுக்கு வந்த நாள் முதல் தன்  தோழியை தேடிக்கொண்டிருக்கிறது. இதுவரை தன் தோழி வராத காரணத்தினால் பல சமயங்களில் இரவு நேரத்தில் தன் தோழியை காணவில்லை என்ற  நிலையில் சத்தம் எழுப்பும் அப்போது பாகன் எழுந்து வந்து, வள்ளி வருவாள் கவலைப்படாதே அவள் லாரியில் வந்து கொண்டிருக்கிறாள் என்று ஆறுதல் கூறி  தேற்றுவதோடு, பேரீச்சம் பழத்தை கொடுத்து, மீண்டும் லட்சுமியை ஆசுவாசப்படுத்தி தூங்க வைக்கிறார். பகல் நேரங்களில் தன் யானைக்கு எதிரே வள்ளி  கட்டப்பட்டு இருந்த இடத்தில் பசுந்தீவனத்தை போட்டு வைத்திருக்கிறார். மேலும் தனக்கு உணவு வழங்கும் போதெல்லாம் வள்ளியை தேடும் லட்சுமி உற்சாகம்  இழந்து காணப்படுகிறது.10 ஆண்டு கால தோழியான வள்ளி முகாமில் இல்லாத குறையை போக்க, முகாம் ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தலின்பேரில், முகாமில் இருக்கும் மற்ற  யானைகளுடன் லட்சுமியை புதிய தோழியை கண்டுபிடிக்க முடிவு செய்து பழகவிட்டனர். ஆனால் லட்சுமியோ வள்ளியைத் தவிர யாரையும் தன் தோழியாக  ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
127,665
1/2/2020 4:47:00 PM
தமிழகம்
ஒரு கிலோ உப்பு 33 ஆயிரத்துக்கு ஏலம்
கரூர்: கரூரில் நடந்த பிள்ளையார் நோன்பு விழாவில் ஒருகிலோ உப்பு ₹33 ஆயிரத்திற்கு ஏலம்போனது.கரூர் வாழ் நாட்டுக்கோட்டைநகரத்தார் சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார்நோன்பு விழா அதன்தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.  குமரப்பன் முன்னிலையில் பிள்ளையார் நோன்பின் மாண்பு குறித்து செயலாளர் மேலை பழனியப்பன் பேசினார். பின்னர் விநாயகர் சிறப்பு கூட்டு வழிபாடு  தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து வழிபாட்டில் பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, மாலை, குபேரன்விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட  21பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் உப்பு ஒருகிலோ ரூ.33ஆயிரத்திற்கும், மாலை ரூ.16ஆயிரம், கற்கண்டு ஒருகிலோ ரூ6ஆயிரம் என மொத்தம் 2லட்சத்து  ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
127,666
1/2/2020 4:47:20 PM
தமிழகம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 2019ல் 29.72 லட்சம் ேபர் வருகை
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2019ம் ஆண்டு, 29.72 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். இது கடந்த ஆண்டைவிட சுமார் ஒரு லட்சம்  அதிகமாகும்.நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள்,  ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டப்பெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம் போன்ற சுற்றுலா தளங்களை  பார்த்து மகிழ்கின்றனர். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை அனுபவிக்க அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஊட்டி வருவோர்  தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. இதில், கடந்த 2018ம் ஆண்டில் 28 லட்சத்து 72 ஆயிரத்து 758 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இம்முறை  கடந்த 2019 ஆண்டு தாவரவியல் பூங்காவிற்கு 29 லட்சத்து 72 ஆயிரத்து 584 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது கடந்த 2018ம் ஆண்டை காட்டிலும் 99  ஆயிரத்து 800 பேர் அதிகமாக வந்துள்ளனர். பூங்காவிற்கு வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது  குறிப்பிடத்தக்கது. இதேபோல் தாவரவியல் பூங்காவிற்கு அடுத்து சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல கூடிய இடமாக ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லம்  விளங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டில் மட்டும் 21 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர்.
127,667
1/2/2020 4:47:42 PM
தமிழகம்
பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு அறிவிப்பு ஜனாதிபதியின் சபரிமலை பயணம் ரத்து
திருவனந்தபுரம்: உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாது என கேரள அரசு கூறியதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்தார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை  சேர்ந்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் ேகாவிந்த் வரும் 5ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தனி விமானத்தில் கொச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சபரிமலை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.அவருக்காக பாண்டி தாவளத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் ஹெலிபேட் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பூஜை  செய்வதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஹெலிபேட் அமைப்பதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு சபரிமலை சென்றது.  அப்போது ஹெலிபேட் அமைக்கும் அளவுக்கு நீர்த்தேக்க தொட்டி பலமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும் ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  இதில் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர், எஸ்பி, அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், தற்போது மகர விளக்கு காலம் நடந்து வருவதால் பக்தர்கள்  அதிகளவில் வருகின்றனர். இந்த நேரத்தில் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.இது பற்றி ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளதாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து கேரள  அரசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. அதோடு ஜனாதிபதியின் சுற்று பயணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 6ம் தேதி கொச்சி வரும் அவர் அன்று  லட்சத்தீவுக்கு செல்கிறார். அங்கிருந்து 9ம் தேதி திரும்பி வந்து கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
127,668
1/2/2020 4:48:06 PM
தமிழகம்
சொத்துக்காக 6 பேரை கொன்ற வழக்கு ஜோளி உள்பட 4 பேர் மீது 1800 பக்க குற்றப்பத்திரிகை
திருவனந்தபுரம்: கோழிக்கோடு அருகே சொத்துக்காக 6 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொன்ற ஜோளி உட்பட 4 பேர் மீது போலீசார் 1800 பக்க குற்றப்பத்திரிகையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் டோம் தாமஸ். இவரது மனைவி அன்னம்மா. இவர்களது மகன் ராய் தாமஸ்.  இவரது மனைவி ஜோளி(47). ராய் தாமஸ், ஜோளி தம்பதிக்கு கடந்த 1997ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ேஜாளி கோழிக்கோடு  என்ஐடியில் பணிபுரிந்து வருவதாக கூறி வந்தார். இந்த நிலையில் கடந்த 2002ம் ஆண்டு அன்னம்மா வீட்டில் திடீரென சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் ேசர்த்தனர். ஆனால்  சிகிச்சை பலனின்றி அன்னம்மா இறந்தார். இதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து ேடாம் தாமஸ், ராய் தாமஸ், டோம் தாமசின் சகோதரர் மேத்யூ, ஜோளியின்  2வது கணவர் ஷாஜூவின் மனைவி சிலி, இவர்களது ஒன்றரை வயது மகள் ஆல்பைன் ஆகிய 5 பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தனர். இந்த  சம்பவத்தில் முதல் மரணம் 2002லும் கடைசி மரணம் 2017லும் நடந்தது.ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மரணமடைந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கோழிக்கோடு எஸ்பி சைமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஜோளிக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோளியை போலீசார் அவருக்கு  தெரியாமல் கண்காணித்து வந்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ள ஜோளி என்ஐடியில் வேலை பார்க்கவில்லை. ஆனால் அவர் என்ஐடியில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பியூட்டி பார்லர்  உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று நேரத்தை போக்கி வந்துள்ளார். முதல் கணவர் ராய் தாமஸ் இறந்த பின்னர் இவர் 2வதாக ஷாஜூவை திருமணம் செய்து  கொண்டார். மாமனார், மாமியார் பெயர்களில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காகவே ேஜாளி கணவர் உட்பட அனைவரையும் 15 ஆண்டுகளில் கொலை செய்தது  தெரியவந்தது. மாமனார், மாமியார் இறந்த பின்னர் அவர்களது சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தன் பெயருக்கு மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடைசியாக மரணமடைந்த 2 பேரின் உடல்களை கல்லறையில் இருந்து போலீசார் தோண்டியெடுத்து பரிசோதித்தனர். இதில் அவர்களது உடலில்  சயனைடு விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஜோளியை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்தான் 6 பேரையும் கொலை  செய்ததை ேஜாளி ஒப்புக்கொண்டார். இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த ராய் தாமசின் உறவினர் மேத்யூ, ஜோளிக்கு சயனைடு விஷம் விநியோகம் செய்த நகைத்தொழிலாளி பிரஜூ  குமார், போலி உயில் தயாரிக்க உதவிய மனோஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் நேற்று ஜோளி உட்பட 4 பேர் மீது கோழிக்கோடு நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1,800 பக்கங்கள் கொண்ட இந்த  குற்றப்பத்திரிகையில் இவர்கள் மீது கொலை, சதித்திட்டம், போலி ஆவணங்கள் தயாரித்தல் உட்பட 10 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்து எஸ்பி சைமன் கூறுகையில், பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ள ஜோளி இளங்கலை, முதுகலை சான்றிதழ்களை போலியாக தயாரித்துள்ளார்.  குடிகாரரான முதல் கணவர் ராய் தாமசால் தனக்கும், குடும்பத்துக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என தெரிந்ததால், குடும்ப சொத்தை அபகரிக்க ஜோளி  கொலைகளை செய்துள்ளார்.ஜோளியை இப்போது கைது செய்திருக்காவிட்டால் தனது 2வது கணவர் ஷாஜூ உட்பட மேலும் 3 பேரை கொலை செய்திருப்பார். ஷாஜூவுக்கு கொலைகளில்  நேரடியாக பங்கில்லை என்றாலும், சதித்திட்டத்தில் அவருக்கு தொடர்பிருக்க வாய்ப்பு உண்டு என்றார்.
127,669
1/2/2020 4:48:26 PM
தமிழகம்
தண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை-மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே ஊழியர்கள் நேற்று நள்ளிரவு  முதல் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது காட்பாடியில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை  பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்துஅரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செல்லும்  காவேரி எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து கோரக்பூர் செல்லும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ்,  பெங்களூருவிலிருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் போராடி தற்காலிகமாக சுமார் 5.50 மணியளவில் சரி செய்தனர். இதைதொடர்ந்து ஆங்காங்கே  நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் காட்பாடி-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் சுமார் 1.30 மணி நேரம் ரயில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.உரிய நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் கண்டறிந்ததால் பெரிய விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.  தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்  குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் மின்சார ரயில் இன்றுகாலை காலதாமதமாக சென்றது.
127,670
1/2/2020 4:48:48 PM
தமிழகம்
வாக்கு சீட்டுகளை திருடி அதிமுகவினர் கள்ள ஓட்டு?: தஞ்சை அருகே பரபரப்பு
தஞ்சை: வல்லம் அருகே வாக்குச்சாவடியில் இருந்த 50 வாக்குச்சீட்டுகள் திருட்டு போனது. இந்த ஓட்டுச்சீட்டுகளை அதிமுகவினர் திருடி கள்ள ஓட்டு போட்டிருக்கலாம்  என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தஞ்சை அடுத்த மருதக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாசாமிப்பட்டியில் கடந்த 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அய்யாச்சாமிப்பட்டி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில் 205ம் எண் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் அங்குள்ள வார்டு எண் 7 மற்றும் வார்டு எண் 8 ஆகிய 2  வார்டுகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்தனர். கடந்த 30ம் தேதி காலை தேர்தல் அலுவலர்கள் பார்த்தபோது அந்த வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு  சீட்டுகள் வரிசை எண் 2931801 முதல் 2931850 வரை 50 சீட்டுகள் மாயமாகி இருந்தது. முதல்நாள் இரவு வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டபோது சரியாக  இருந்த சீட்டுகள் இரவோடு இரவாக மாயமாகி இருந்தது.ஆனாலும் அந்த பகுதியில் 30ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வல்லம் காவல் நிலையத்தில் வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் நேற்று புகார் செய்தார்.  இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்த சீட்டுகள் கள்ள ஓட்டு போட ஆளுங்கட்சியினரால்  திருடப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
127,671
1/2/2020 4:49:05 PM
தமிழகம்
இறங்க இறங்க ஏற்றுவதற்கு கைவசம் குவார்ட்டர் ஃபுல் போதையில் வாக்கு எண்ண வந்த ஆசிரியர்
கும்பகோணம்: கையில் குவார்ட்டர் மது பாட்டிலுடன் ஃபுல் போதையில் ஓட்டு எண்ணுவதற்கு வந்த ஆசிரியரை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய வாக்குகள் திருவாவடுதுறை ஆதீன மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இன்று காலை வாக்கு எண்ணும்  பணிக்கு ஒரு ஆசிரியர் வந்தார். அவர் கையில் ஷோல்டர் பேக் ஒன்றும் வைத்திருந்தார். அவரை போலீசார் சோதனை செய்தனர்.அப்போது ஆசிரியர் ஃபுல் போதையில் இருந்தார். பையை உள்ளே கொண்டு செல்லக்கூடாது என போலீசார் கூறி உள்ளனர். நான் நீரிழிவு நோயாளி. என்னால்  வேளாவேளைக்கு சாப்பிடாமல் இருக்க முடியாது. எனவே கைவசம் சாப்பாடு, ஸ்நாக்ஸ் கொண்டு செல்கிறேன். அதைத்தான் பையில் வைத்திருக்கிறேன் என்றார்.அவர் போதையில் இருந்ததால் போலீசார் அந்த பையை வாங்கி சோதனை போட்டனர். அப்போது பைக்குள் ஒரு துண்டில் சுற்றி குவாட்டர் மது பாட்டல்  வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. தேர்தல் அதிகாரிக்கு இதுபற்றி தெரிவித்தனர்.அதிகாரி அங்கு வந்து அவரது பணி ஆணையை ரத்து செய்தார். அவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்துஎச்சரித்து  அனுப்பிவிட்டனர். அந்த ஆசிரியரின் பெயர் விவரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
127,672
1/2/2020 4:49:26 PM
குற்றம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பெரம்பூர்: சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் கமலா (27,பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று  புகார் அளித்தார்.  அதில், தனது உறவுக்கார 16 வயது சிறுமியை, அவளது  தந்தையுடன் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் பஷீர் (23) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால்  அப்துல்  பஷீர் அங்கிருந்து தப்பினார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்த வார்னிஷை குடித்து தற்கொலைக்கு முயன்றாள். சிறுமியின் அத்தை  சிறுமியை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, உரிய விசாரணை நடத்தி  அப்துல்பஷீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து, தலைமை செயலக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் பஷீரை  போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல்  சிறையில் அடைத்தனர்.
127,673
1/2/2020 4:50:12 PM
தமிழகம்
மெரினா கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய இன்ஜினியரிங் மாணவன் மாயம்
சென்னை: மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான வடமாநில இன்ஜினியரிங் மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ்(21). இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை  புத்தாண்டு என்பதால் வேதபிரகாஷ் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். பின்னர் உற்சாக மிகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே  உள்ள கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது எழுந்த ராட்சத அலையில் வேதபிரகாஷ் சிக்கி கொண்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அலறி  அடித்துக் கொண்டு கடலில் இருந்து வெளியேறினர்.பின்னர் சிறிது நேரத்தில் வேதபிரகாஷ் அலையில் சிக்கி மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  மீனவர்கள் உதவியுடன் மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
127,674
1/2/2020 4:50:30 PM
விளையாட்டு
நடிகையுடன் நிச்சயதார்த்தம் ஹர்திக் பாண்டியாவுக்கு கோஹ்லி வாழ்த்து
மும்பை: நடிகையுடனான தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு, கேப்டன் விராட்  கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (26). முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது ஓய்வில் உள்ளார். அடுத்து  நியூசிலாந்து செல்ல உள்ள இந்தியா ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். அதில் தனது உடல் தகுதியை பரிசோதித்த பின்னர், மீண்டும் முழு வீச்சில் இந்திய  அணிக்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று தனது நிச்சயதார்த்த செய்தியை அவர் பதிவிட்டுள்ளார். செர்பியாவை சேர்ந்த நடிகை நடாசா  ஸ்டான்கோவிச்சுடன் தனக்கு திருமணமாக உள்ளது என்றும், அதற்கான எங்கேஜ்மென்ட் முடிந்துள்ளது என்பதை அறிவிக்கும் வகையிலும், அவருடன்  நெருக்கமாக உள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ‘எனக்கு நீ... உனக்கு நான்... தேசத்துக்கே அது தெரியும் 01.01.2020 எங்கேஜ்டு’ என்ற தகவலை  பகிர்ந்துள்ளார். அவரது நிச்சயதார்த்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.தற்போது மனைவி அனுஷ்காவுடன் நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஹர்திக்  பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு உடனடியாக ரியாக்ட் செய்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து விராட் கோஹ்லி தனது பதிவில், ‘வாழ்த்துக்கள்  ஹெச் (ஹர்திக்). உண்மையில் இது சந்தோஷமான செய்தி. கடவுளின் அருளால் உங்களுக்கு இன்பமான தருணங்கள் காத்திருக்கின்றன’ என்று கூறியுள்ளார். விராட் கோஹ்லியை தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
127,675
1/2/2020 4:50:51 PM
விளையாட்டு
அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விருப்பம்
மும்பை: ‘அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும் என்பதே இலக்கு. இந்த ஆண்டு அதற்கே முன்னுரிமை’ என்று இந்திய கிரிக்கெட்  அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து அணிகளின் கவனமும் இப்போட்டித்  தொடரில்தான் உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடர்களை வெல்ல  வேண்டும். அதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த ஆண்டுக்கான இலக்கு’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சாஸ்திரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை வெற்றிகரமான ஆண்டை (2019) கடந்து  வந்திருக்கிறோம். இந்த ஆண்டும் அதே போல் அமைய வேண்டும். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் நாம் எட்ட வேண்டியது இன்னமும் உள்ளது.  குறிப்பாக அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும். இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவே இலக்காக இருக்கும்’’ என்று  தெரிவித்துள்ளார். கேப்டன் விராட் கோஹ்லியும், சாஸ்திரியின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘டெஸ்ட் போட்டிகள்தான் உண்மையிலேயே  சவாலானவை. அதிலும் அந்நிய மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் பெறும் ஒவ்வொரு வெற்றியும், நமது அணியின் உண்மையான தரத்தை வெளிப்படுத்தும்  என்று நான் கருதுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
127,676
1/2/2020 4:51:12 PM
விளையாட்டு
2020 மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்: மரியா ஷரபோவா உற்சாகம்
பிரிஸ்பேன்: ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு, பிரிஸ்பேன் ஓபன் போட்டிகளில் ஆட வைல்ட் கார்ட் என்ட்ரி வழங்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் எனது  ரசிகர்களை சந்திக்கப் போகிறேன். 2020ம் ஆண்டு எனக்கும், எனது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்’  என ஷரபோவா உற்சாகமாக  பேட்டியளித்துள்ளார்.திறமையான வீராங்கனை, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளுக்கு அச்சுறுத்தல் என வலம் வந்த மரியா ஷரபோவா, ஒரு கட்டத்தில்  டென்னிசை விட மாடலிங்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக இடம் பிடித்த ஷரபோவா, இன்னமும் எனக்கு திறமை  இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இடை இடையே டென்னிஸ் போட்டிகளில் முத்திரை பதித்து வந்தார்.கடந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் உட்பட முன்னணி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் ஷரபோவா ஆடவில்லை. ஒன்றிரண்டு  போட்டிகளில் மட்டுமே தலை காட்டினார். அதிலும் பெரிய அளவில் வெற்றிகள் பெறவில்லை.இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அடுத்த வாரம் துவங்க உள்ள இந்த ஆண்டின் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டியான பிரிஸ்பேன்  ஓபனில், ஆடுவதற்கு அவருக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி வழங்கப்பட்டுள்ளது.பொதுவாக வைல்ட் கார்ட் என்ட்ரி (நேரடி அனுமதி) என்பது, தரவரிசையில் இடம் பெறாத, அதே சமயம் திறமையாக ஆடிவரும் வீரர்கள், வீராங்கனைகள்  சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. ஆனால் இதே பிரிஸ்பேனில் கடந்த 2015ம் ஆண்டு, மகளிர் ஒற்றையர் பட்டத்தை  வென்ற ஷரபோவாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2017ம் ஆண்டு யு.எஸ்.கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதே போல் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தார் ஷரபோவா என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த என்ட்ரி குறித்து உற்சாகமாக பேட்டியளித்துள்ள ஷரபோவா, ‘மீண்டும் வருகிறேன். எனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறேன் என்பதில் எனக்கு  மகிழ்ச்சி. இந்த 2020ம் ஆண்டு எனக்கும், எனது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தோள்பட்டை காயம் காரணமாக கடந்த ஆண்டு, பெரும்பாலான போட்டியில் ஷரபோவா ஆடவில்லை. இப்போது பிரிஸ்பேன் என்ட்ரி மூலம் வெளிச்சத்துக்கு  வந்துள்ளார். தொடர்ந்து இந்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடுவேன் என்று முன்னணி வீராங்கனைகளுக்கு ஷரபோவா மறைமுகமாக எச்சரிக்கை  விடுத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
127,677
1/3/2020 2:07:52 PM
தமிழகம்
உள்ளாட்சி தேர்தல்: 2ம் நாளாக வாக்கு எண்ணிக்கை பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது திமுக
சென்னை: இரண்டாம் நாளாக தொடரும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் திமுக மெஜாரிட்டி இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பல இடங்களில் எண்ணிக்கை முடிந்தும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர் வெற்றி முகத்தில் இருக்கும் பகுதிகளில் முடிவு வெளியாகவில்லை. இதனால் பல இடங்களில் விடிய விடிய மறியல் போராட்டம் நடந்தது. நள்ளிரவில் தேர்தல் ஆணையரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சந்தித்து புகார் செய்தார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.தமிழகம் முழுவதும் மொத்தமாக 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதில் மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று (2ம் தேதி) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் திமுக முன்னிலையில் இருந்தது. ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு ஆரம்பத்தில் அதிமுக முன்னிலையில் இருந்தது. ஆனால், பின்னர் திமுக, அதிக வித்தியாசத்தில் முன்னிலை பெறத் தொடங்கியது. நேற்று இரவு 10 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 1135 இடங்களிலும், அதிமுக 935 இடங்களிலும், மற்றவர்கள் 106 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 515 மாவட்டக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 166 இடங்களிலும் அதிமுக 164 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் திமுக வெற்றி பெற்ற இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.பல இடங்களில் வெற்றியை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தனர். இரவில் தேர்தல் நிலவரத்தை மாற்ற ஆளும் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தொண்டர்கள் ஓட்டு எண்ணும் இடம் முன்பு குவிந்தனர். இதனால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். பல இடங்களில் தடியடி நடத்தப்பட்டன. இதனால் இரவு முழுவதும் பல பகுதிகளில் பதட்டம் நிலவி வந்தது.மணப்பாறையில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் முடிவுகளை அறிவிப்பதற்கு கால தாமதம் செய்வது ஏன் என கேட்டு, திமுக மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ. கட்சியினர் திடீரென திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை தேர்தல் அதிகாரிகள் உடனுக்குடன் அறிவிக்காமல் பல்வேறு காரணங்களை சொல்லி காலதாமதம் செய்தனர். அந்த இடங்களில் அதிமுகவை வெற்றி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகள் சூழ்ச்சி செய்வதை அறிந்து சேலம் உள்பட பல இடங்களில் திமுகவினர் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா நடத்தினர். இதில் திமுக எம்.பி. பார்த்திபனும் மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து சரமாரி புகார் கூறினார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையரை சந்தித்தபின் அதற்கு போட்டியாக அதிமுகவினரும் சந்தித்து திமுக மீது புகார் தெரிவித்தனர். அதன் பிறகும் வாக்கு எண்ணும் யைமங்களில் எந்தவித நேர்மையும் காணப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் சர்வர் வேலை செய்யவில்லை. இன்டர்நெட் இணைப்பு இல்லை என பல காரணங்களை கூறி அறிவிப்பு செய்வதில் காலதாமதம் செய்தனர்.பணத்தை வாரி இறைத்தும், அதிகாரிகளை சரிக்கட்டி துஷ்பிரயோகம் செய்தும் வெற்றிபெற முடியவில்லையே இனி அதிரடியாக என்ன செய்யலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும், எப்படியாவது முடிந்த இடங்களில் திமுக வெற்றியை மாற்றி அதிமுகவுக்கு சாதகமாக அறிவிக்க ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆங்காங்கே உள்ள அதிகாரிகளையும் சரிக்கட்டி நள்ளிரவில் ரகசிய பேரத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் அதிமுகவின் சூழ்ச்சிகளை அறிந்த திமுகமற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆங்காங்கே மாவட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் செய்தனர். கோர்ட்டுக்கும் சென்றனர். வாக்கு எண்ணும் இடத்தில் ஏஜென்ட்களை உஷார்படுத்தினர். இதனால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் முடிவுகளை அறிவிக்காமல் இழுத்தடித்து காலதாமதம் செய்து வந்தனர்.இதுபோல திமுகவின் வெற்றியை தடுக்க நடக்கும் சூழ்ச்சியையும், அதை முறியடிக்கும் வியூகம் குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மீண்டும் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் செய்தார். தேர்தல் முடிவுகளை நியாயமாக அறிவிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். தர்ணா போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என கூறினார். ஆனாலும் இரவு விடிய விடிய ஓட்டுகள் எண்ணப்பட்டு பெரும்பாலான இடங்களில் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடாமல் தேர்தல் அதிகாரிகள் முடிந்தவரை இழுத்தடித்து வருகிறார்கள்.இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி திமுகவே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 2295 இடங்களிலும், அதிமுக 2103 இடங்களிலும், மற்றவர்கள் 539 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 515 மாவட்டக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 261, அதிமுக 240 இடங்களிலும் மற்றவர்கள் 2 இடத்திலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மெஜாரிட்டி இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து, இன்றும் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. எனினும் இன்று மாலை அல்லது இரவு தான் முழு முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.இந்நிலையில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு இன்று காலை மீண்டும் தேர்தல் ஆணையரை சந்தித்து, கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவுகள் அறிவிக்காமல் கால தாமதம் செய்து வருவதாக புகார் அளித்தார். கரூரில் செந்தில்பாலாஜியும், ஜோதிமணி எம்பியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் விடிய விடிய சாலை மறியல், ஆர்பாட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் என்று பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்தன. போலீசார் பல இடங்களில் தடியடி நடத்தினர். இதனால் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
127,678
1/3/2020 2:10:00 PM
இந்தியா
2 டிஐஜி, 14 எஸ்பிக்கள் உட்பட 19 சிபிஐ மூத்த அதிகாரிகள் இடமாற்றம்
புதுடெல்லி: சிபிஐ ஏஜென்சியில் பணியாற்றும் 2 டிஐஜி, 14 எஸ்பி உட்பட 19 மூத்த அதிகாரிகளை, சிபிஐ இயக்குனர் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். சிபிஐ ஏஜென்சி சமீபத்தில் இடமாற்றம்  குறித்த தனது கொள்கையை புதுப்பித்துள்ளது, அதன்படி, எந்த அதிகாரியும் ஒரு  குறிப்பிட்ட கிளையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்க மாட்டார்  என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐ இயக்குனர் ரிஷி குமார் சுக்லா, சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி இரண்டு டிஐஜி, 14 எஸ்பி-க்கள் உட்பட 19 மூத்த சிபிஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார்.முக்கிய இடமாற்றங்களில் விவேக் பிரியதர்ஷி (ஏ.ஐ.ஜி கொள்கை) ஜெய்ப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிரியதர்ஷியின் இடத்தில் எஸ்.பி. பார்த்தா முகர்ஜி இருப்பார். இவர், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பொருளாதார குற்றங்கள் - 4 மற்றும் சிட் ஃபண்ட் வழக்குகளை விசாரித்து வந்தார். சந்தா கோச்சர் வழக்கை 2019 ஜனவரி வரை விசாரித்த எஸ்.பி. சுதான்ஷு தார் மிஸ்ரா, அப்போதைய இடைக்கால சிபிஐ இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், டெல்லியில் உள்ள பொருளாதார குற்றங்கள் -2 பிரிவில் இப்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூர் இல்லத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையை முன்னெடுத்து விசாரித்து வந்த துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அபய் சிங், டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர், தொடர்ந்து பாலியல் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவுக்கு தலைமை தாங்கும் டி.ஐ.ஜி நிதின் டீப் பிளாகனுக்கு ஊழல் தடுப்பு பிரிவு - 5 கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.பொருளாதார குற்றங்கள் - 3 பிரிவின் எஸ்.பி. விஜயேந்திர பிடாரி, இன்டர்போல் ஒருங்கிணைப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவர், நிறுவனத்தின் அமைப்புகள் பிரிவையும் கவனிப்பார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட், விஜய் மல்லையா விசாரிக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் கிரண், ஏசி-4 அலகுக்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்பிக்கள் பட்டியலில் அபிஷேக் துலார், அனூப் டி.மேத்யூ, ராஜ்பால் மீனா, ஏ.ஷியாஸ், ஏ.ஜெயதேவன், சுதான்ஷு தார் மிஸ்ரா, பி.கே.மஞ்சி, ஜெய் நாராயண் ராணா, சந்தானு கார் மற்றும் பி.கே.பாண்டே ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். கூடுதல் எஸ்.பி.க்கள் சஞ்சய் குமார் சின்ஹா, எஸ்.டி.மிஸ்ரா மற்றும் கஜானந்த் பைர்வா ஆகியோரும் வெவ்வேறு பிரிவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
127,679
1/3/2020 2:13:57 PM
தமிழகம்
ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணிக்கு வயல்வெளியில் திடீர் பிரசவம்
ஆம்பூர்: ஆம்பூர் அருகே இன்று காலை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு  வயல்வெளியில் பிரசவம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி சோனியா (22). இவர் 3வது முறையாக கர்ப்பமானார். இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நரியம்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் சோனியாவை அழைத்து சென்றனர். நரியம்பட்டு அடுத்த ரகுநாதபுரம் அருகே சென்றபோது பிரசவவலி ஏற்பட்டு துடித்தார். ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனே அவரை அதேப் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு அழைத்து சென்றனர். அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள், சோனியாவுக்கு பிரசவம் பார்த்தனர். அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.பின்னர் அங்கிருந்த பெண்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவமனை ஊழியர், சோனியாவின் உறவினர்கள் நன்றி கூறிவிட்டு மீண்டும் ஆம்புலன்சில் நரியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.வயல்வெளியில் பிரசவம் பார்த்த அப்பகுதி பெண்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான படங்கள் வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகள் குவிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.