text
stringlengths
16
178
அவலை முக்கித்‌ தின்னு, எள்ளை நக்கித் தின்னு.
அவளவன்‌ என்பதைவிட அரிஅரி என்பது நலம்‌.
அவளுக்கிவள்‌ எழுந்திருந்து உண்பாள்‌.
அவளுக்கு ரொம்பத்‌ தக்குத்தெரியும்‌.
அவளுக்கெவள்‌ ஈடு அவளுக்கவளே சோடு
அவளைக்‌ கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக்‌ காணுகிறதா?
அவள்‌ அழகுக்குத்‌ தாய்‌ வீடு.
அவன்‌ அழகுக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கண்‌ சிமிட்டினால்‌ ஆயிரம்பேர்‌ மயங்கிப்‌ போவார்கள்‌.
அவள்‌ எமனைப்‌ பலகாரம்‌ பண்ணுவாள்‌.
அவள் சமர்த்துப்‌ பானை சந்தியில்‌ கவிழ்ந்தது.
அவன்‌ சம்பத்து அறியாமல்‌ கவிழ்ந்தது.
அவள்‌ சாட்டிலே திரை சாட்டா.
அவள்‌ சொல்‌ உனக்கு குரு வாக்கு.
அவள்‌ பலத்தை மண்கொண் டொளிச்சுது.
அவன்‌ பாடுகிறது குயில்‌ கூவுகிறது போல.
அவன்‌ பேர்‌ தங்கமாம்‌ அவள்‌ காதில்‌ பிச்சோலையாம்‌.
அவன்‌ பேர்‌ கூந்தலழகி அவள்‌ தலை மொட்டை
அவளிடத்தில்‌ எல்லாரும்‌ பிச்சை வாங்கவேண்டும்‌.
அவனருளுற்றால்‌ அனைவரு முற்றார்‌, அவனருளற்றால்‌ அனைவருமற்றார்‌.
அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு.
அவனுக்கு ஆகாசம்‌ மூன்று விரற்கடை.
அவனுக்குக்‌ கப்படாவுமில்லை வெட்டுக்‌ கத்தியுமில்லை.
அவனுக்குச்‌ சாண்‌ ஏறினால்‌ முழம்‌ சறுக்குது.
அவனுக்குச்‌ சுக்கிரதிசை அடிக்கிறது.
அவனுக்குச்‌ சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது.
அவனுக்குப்‌ பொய்ச்சத்தியம்‌ பாலும்‌ சோறும்‌
அவனுக்கு ஜெயில்‌ தாய்‌ வீடு.
அவனுக்கும்‌ இவனுக்கும்‌ எருமைச்‌ சங்காத்தம்‌.
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதாம்‌ என்‌ பிழைப்‌பெல்லாம்‌.
அவனுடைய பேச்சு காற்சொல்லும்‌ அரைச்சொல்லும்‌.
அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல்‌ இருக்கிறது.
அவனை தரித்து வைத்தாற்போல்‌ இருக்கிறான்‌.
அவனைப்‌ பேச்சிட்டுப்‌ பேச்சுவாங்கி ஆமை மல்லாத்துகிறாப்போல்‌ மல்லாத்திப்போட்டான்‌.
அவனே இவனே என்பதைவிடச்‌ சிவனே சிவனே என்கிறது நல்லது.
அவனே வெட்டவும்‌ விடவும்‌ கர்த்தன்‌.
அவனோடு இவனை ஏணிவைத்துப்பார்த்தாலும்‌ காணாது.
அவன்‌ அசையாது (அசையாமல்‌) அணு அசையாது.
அவன்‌ அதிகாரம்‌ கொடிகட்டிப்‌ பறக்கிறது.
அவன்‌ அண்டை அந்தப்பருப்பு வேகாது.
அவன்‌ அவன்‌ எண்ணத்தை, ஆண்டவன்‌ ஆக்கினாலும்‌ ஆக்குவான்‌, அழித்தாலும்‌ அழிப்பான்‌.
அவன்‌ அவன்‌ செய்த வினை அவன்‌ அவனுக்கு
அவன்‌ அவன்‌ மனசே அவன்‌ அவனுக்குச்‌ சாட்சி.
அவன்‌ அன்றி ஓர்‌ அணுவு மசையாது.
அவன்‌ ஆகாசத்தை வடுப்படாமல்‌ கடிப்பேனென்‌கிறான்‌.
அவன்‌ இட்டதே சட்டம்‌.
அவன்‌ இராச சமுகத்திற்கு எலுமிச்சம்பழம்‌.
அவன்‌ உள்ளெல்லாம்புண்‌, உடம்பெல்லாம்‌ கொப்பளம்‌.
அவன்‌ உனக்குக்‌ கிள்ளுக்கீரையா?
அவன்‌ எங்கே இருந்தான்‌, நான்‌ எங்கே இருந்தேன்‌.
அவன்‌ எரி பொரியென்று விழுகிறான்‌.
அவன்‌ எனக்கு அட்டமத்துச்சனி.
அவன்‌ என்‌ தலைக்கு உலை வைக்கிறான்‌.
அவன்‌ என்னை ஊதிப்பறக்கடிக்கப்‌ பார்க்கிறான்‌.
அவன்‌ ஒரு குளிர்ந்த கொள்ளி.
அவன்‌ ஓடிப்பாடி நாடியில்‌ அடங்கினான்‌.
அவன்‌ கழுத்துக்குக்‌ கத்தி தட்டுகிறான்‌.
அவன்‌ காலால்‌ இட்ட வேலையைக்‌ கையால்‌ செய்வான்‌.
அவன்‌ காலால்‌ இட்ட வேலையைத்‌ தலையால்‌ செய்வான்‌.
அவன்‌ காலால்‌ கீறினதை நான்‌ நாவால்‌ அழிக்கிறேன்‌.
அவன்‌ காலால்‌ முடிந்ததைக்‌ கையால்‌ அவிழ்க்க முடியாது.
அவன்குடித்தனத்தை கமுக்கமாய்கொண்டுபோகிறான்‌.
அவன்‌ கெட்டான்‌ குடியன்‌ எனக்கு இரண்டு இராம்‌ வாரு (மொந்தைபோடு).
அவன்‌ கை மெத்தக்‌ கூராச்சே!
அவன்‌ கையைக்கொண்டே அவன்‌ கண்ணில்‌ குத்தினான்‌.
அவன்‌ கொஞ்சப்‌ புள்ளியா?
அவன்‌ சாதிக்கு எந்த புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அது தான்‌ வரும்‌.
அவன்‌ சாயம்‌ வெளுத்துப்‌ போய்விட்டது.
அவன்‌ சிறகில்லாப்பறவை.
அவன்‌ சிறகொடிந்த பறவை.
அவன்‌ சூத்தைத்‌ தாங்குகிறான்‌.
அவன்‌ சொன்னதே சட்டம்‌ இட்டதே பிச்சை
அவன்‌ சோற்றுக்குத்‌ தாளம்‌ போடுகிறான்‌.
அவன்‌ சோற்றை மறந்து விட்டான்‌.
அவன்‌ தலையில்‌ ஓட்டைக்‌ கவிழ்ப்பான்‌.
அவன்‌ தன்னாலே தான்‌ கெட்டால்‌ அண்ணாவி என்ன செய்வார்‌?
அவன்‌ தொட்டுக்‌ கொடுத்தான்‌, நான்‌ இட்டுக்‌ கொடுத்‌தேன்‌.
அவன்‌ தொத்தி உறவாடித்‌ தோலுக்கு மன்றாடுகிறான்‌.
அவன்‌ நடைக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கைவீச்சுக்‌குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌.
அவன்‌ நா அசைய நாடு அசையும்‌.
அவன்‌ பசியாமல்‌ கஞ்சி குடிக்கிறான்‌.
அவன்‌ பூராயமாய்ப்‌ பேசுகிறான்‌.
அவன்‌ பேசுகிறதெல்லாம்‌ தில்லும்‌ பில்லும்‌ திருவாதிரை.
அவன்‌ பேச்சு விளக்கெண்ணெய்‌ சமாசாரம்‌.
அவன்‌ பேச்சைத்‌ தண்ணீர்மேல்‌ எழுதிவைக்க வேண்டும்‌.
அவன்‌ மிதித்த இடத்தில்‌ புல்லும்‌ சாகாது.
அவன்‌ மிதித்த இடம்‌ பற்றி எரிகின்றது.
அவன்‌ மூத்திரம்‌ விளக்காய்‌ எரிகிறது.
அவன்‌ மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்‌.
அவன்‌ ரொம்ப வைதீகமாய்ப்‌ பேசுகிறான்‌.
அவன்‌ வல்லாள கண்டனை வாரிப்‌ போரிட்டவன்‌.
அவிவேகி உறவிலும்‌ விவேகி பகையே நன்று.
அவிழ்‌ என்ன செய்யும்‌ அஞ்சுகுணம்‌ செய்யும்‌, பொருள்‌ என்னசெய்யும்‌ பூவை வசம்‌ செய்யும்‌.
அவையிலும்‌ ஒருவன்‌ சவையிலும்‌ ஒருவன்‌.
அவ்வளவு இருந்தால்‌ அடுக்கிவைத்து வாழேனோ?
அழ அழச்‌ சொல்லுவார்‌ தன்‌ மனிதர்‌, சிரிக்கச்‌ சிரிக்கச்‌ சொல்லுவார்‌ புறத்தியார்‌.
அழகிருந்தென்ன, அதிருஷ்டம்‌ இருக்கவேணும்‌.
அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே பிறந்த சாணிக்கூடை.
அழகிற்கு மூக்கை அழிப்பார்‌ உண்டா?
அழகு இருந்து அழும்‌, அதிருஷ்டம்‌ இருந்து உண்ணும்‌.
அழகு ஒழுகுது, மடியிலே கட்டடா கலயத்தை.