text
stringlengths
16
178
அம்மான்‌ வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக்‌ கேட்கவேண்டுமா?
அம்மி மிடுக்கோ அரைப்பவள்‌ மிடுக்கோ?
அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப்‌ பேசுகிறாள்‌.
அம்மி யிருந்து அரணை அழிப்பான்‌.
அம்மியும்‌ குழவியும்‌ ஆகாயத்தில்‌ பறக்கச்சே, எச்சிற்‌ கல்லை எனக்கு என்னகதி என்றாற்‌ போல
அம்மியும்‌ குழவியும்‌ ஆடிக்காற்றில்‌ பறக்கச்சே, இலவம்‌ பஞ்சு எனக்கென்னகதி என்றதாம்‌.
அம்முக்கள்ளி ஆடையைத்‌ தின்றால்‌ வெண்ணெய்‌ உண்டா?
அம்மை குத்தினாலும்‌ பொம்மை குத்தினாலும்‌ வேண்டியதரிசி.
அம்மைக்‌ கமர்க்களம்‌ ஆக்கிப்படை, எனக்‌ கமர்க்களம்‌ பொங்கிப்படை.
அம்மைக்கு அமர்க்களம்‌ பொங்கிப்‌ படையுங்கள்‌.
அம்மை வீட்டுத்‌ தெய்வம்‌ நம்மைவிட்டுப்போமா?
அம்மையாரே வாரும்‌, கிழவனைக்‌ கொள்ளும்‌.
அம்மையார்‌ எப்பொழுது சாவார்‌, கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்‌?
அம்மையார்‌ நூற்கிற நூலுக்கும்‌ பேரன்‌ அரைஞாண்‌ கயிற்றுக்கும்‌ சரி.
அம்மையார்‌ பெறுவது அரைக்காசு, அவருக்குத்‌ தலை சிரைக்க முக்காற்காசு.
அம்மையார்க்கு என்ன துக்கம்‌, கந்தைத்‌ துக்கம்‌.
அயலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறான்‌.
அயலார்‌ உடைமையில்‌ அந்தகண்போல்‌ இரு.
அயலான்‌ வாழப்‌ பகலே சரக்கெடுப்பது.
அயல்‌ வீட்டான்‌ பிள்ளை ஆபத்துக்‌ குதவுவானா?
அயல்‌ வீட்டு நெய்யே, என்‌ பெண்டாட்டி கையே.
அயன்‌ இட்ட எழுத்தில்‌ அணுவளவும்‌ தப்பாது.
அயன்‌ இட்ட கணக்கு ஆருக்கும்‌ தப்பாது.
அயன்‌ சமைப்பை ஆராலும்‌ தன்ளக்கூடாது.
அயிரையும்‌ சற்றே அருக்குமாம்‌ பிட்டுக்குள்‌ போட்டுப்‌ பிசறாமல்‌.
அயோக்கியர்‌ அழகு அபரஞ்சிச்‌ சிமிழில்‌ நஞ்சு.
அய்யன்‌ அளந்தபடி.
அய்யா, அய்யா, அம்மா குறைக்‌ கேழ்வரகும்‌ அரைக்க வரச்சொன்னாள்‌.
அய்யாசாமிக்கு கலியாணம்‌, அவரவர்‌ வீட்டிலே சாப்பாடு.
அய்யா தாசி கவனம்பண்ண அஞ்சாளின்‌ சுமையாச்‌சுது.
அய்யாத்துரைக்கு (அப்பாசாமிக்கு)க்‌ கலியாணம்‌, அவரவர்‌ வீட்டிலே சாப்பாடு, கொட்டுமுழக்குக்‌ கோயிலிலே, வெற்றிலை பாக்குக்‌ கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.
அய்யா பாட்டுக்கு அஞ்சடியும்‌ ஆறடியும்‌ தாண்டும்‌.
அய்யாவையர்‌ கூழுக்கு அப்பையங்கார்‌ தாதாவா?
அரகர என்கிறவருக்குத்‌ தெரியுமா, அமுது படைக்‌கிறவனுக்குத்‌ தெரியுமா?
அள என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதா?
அரகரன்‌ ஆண்டாலென்ன, மனிதன்‌ ஆண்டாலென்ன?
அரக்குமுத்தி தண்ணீர்க்குப்‌ போனாள்‌, புண்‌ பிடித்தவன்‌ பின்னாலே போனான்‌.
அரங்கின்றி வட்டாடலும்‌, அறிவின்றிப்‌ பேசலும்‌ ஒன்று.
அரசனில்லாப்படை வெட்டுமா?
அரசனுக்கு ஒருசொல்‌, அடிமைக்குத்‌ தலைச்சுமை.
அரசனுக்குத்‌ துணை வயவானள்‌.
அரசனுக்கு வலியார்‌ அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாகிறது.
அரசனும்‌ அரவும்‌ சரி.
அரசனும்‌ அழலும்‌ சரி.
அரசனும்‌ நெருப்பும்‌ பாம்பும்‌ சரி.
அரசனைக்கண்ட கண்ணுக்குப்‌ புருஷனைக்கண்டால்‌ கொசுப்போல இருக்கிறது.
அரசனை நம்பிப்‌ புருஷனைக்‌ கைவிட்டதுபோல.
அரசன்‌ அருள்‌ அற்றால்‌ அனைவரும்‌ அற்றார்‌.
அரசன்‌ அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது).
அரசன்‌ அன்று கொல்லும்‌, தெய்வம்‌ நின்றுகொல்லும்‌.
அரசன்‌ இல்லாதநாடு, அச்சில்லாத தேர்‌.
அரசன்‌ இல்லாத நாடு, புருஷன்‌ இல்லாத வீடு.
அரசன்‌ உடைமைக்கு ஆகாயவாணி சாக்ஷி.
அரசன்‌ எப்படியோ அப்படியே குடிகள்‌.
அரசன்‌ எவ்வழி அவ்வழி குடிகள்‌.
அரசன்‌ ஒன்றை இகழ்ந்தால்‌ ஒக்க இகழவேண்டும்‌, ஒன்றைப்‌ புகழ்ந்தால்‌ ஒக்கப்‌ புகழவேண்டும்‌.
அரசன்‌ கல்லின்மேல்‌ கத்தரி (வழுதுணை) காய்க்கும்‌ என்றால்‌, கொத்து ஆயிரம்‌ குலை ஆயிரம்‌ என்பார்கள்‌.
அரசன்‌ குடுமியையும்‌ பிடிக்கலாமென்று அம்பட்டன்‌ வேலையை விரும்புவதுபோல.
அரசன்‌ வழிப்பட்டது அவனி.
அரசன்‌ வழிப்படாதவன்‌ இல்லை.
அரசில்லா நாடு அலக்கழிந்தாற்போல.
அரசில்லாப்படை வெல்லுவதரிது.
அரசுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌.
அரசுடையானை ஆகாயம்‌ காக்கும்‌.
அரணை அலகு திறக்காது.
அரணை கடித்தால்‌ அப்பொழுதே மரணம்‌.
அரண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்‌.
அரண்மனை காத்தவனும்‌ அடுப்பங்கரை காத்தவனும்‌ வீண்போகிறதில்லை.
அரண்மனைவாசல்‌ காத்தவனும்‌ பரிமடைகாத்தவனும்‌ பழுதுபோவதில்லை.
அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும்‌, குடியானவன்‌ என்ன செய்வான்‌?
அரத்தை அரம்கொண்டும்‌ வயிரத்தை வயிரம்‌ கொண்டும்‌ அறுக்க வேண்டும்‌.
அரபிக்குதிரையிலும்‌ ஐயம்பேட்டைத்‌ தட்டுவாணி நல்லது.
அரமும்‌ அரமும்‌ கூடினால்‌ கின்னரம்‌.
அரவத்தைக்‌ கண்டால்‌ கீரி விடுமா?
அரவுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌.
அரனருள்‌ அல்லாது அணுவும்‌ அசையாது.
அரிஅரி என்றால்‌ ராமா ராமா என்கிறான்‌.
அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிகாரம்‌ பண்ணலாம்‌.
அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிக்கிரமம்‌ பண்ணலாமா?
அரி என்றால்‌ ஆண்டிக்குக்‌ கோபம்‌, அர என்றால்‌ தாதனுக்குக்‌ கோபம்‌.
அரிஹர பிரமாதிகளாலும்‌ முடியாது.
அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை.
அரிசி அள்ளின காக்கை போல.
அரிசி ஆழாக்கானாலும்‌ அடுப்புக்கட்டி மூன்றுவேண்டும்‌.
அரிசி உண்டானால்‌ வரிசையும்‌ உண்டு, அக்காள்‌ உண்டானால்‌ மச்சானும்‌ உண்டு.
அரிசி உழக்கானாலும்‌ அடுப்பு மூன்று.
அரிசி கொண்டு (உண்ண) அக்காள்‌ வீட்டுக்குப்போவானேன்‌?
அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்றுகுறையா?
அரிசிக்குத்தக்க உலையும்‌ ஆமுடையானுக்குத்‌ தக்க வீறாப்பும்‌.
அரிசிக்குத்‌ தக்க கனவுலை
அரிசிப்பகையும்‌ ஆமுடையான்‌ பகையும்‌ உண்டா?
அரிசிப்‌ பொதியுடன்‌ திருவாரூர்‌.
அரிசியும்கறியும்‌ உண்டானால்‌ அக்காள்வீடு வேண்டுமா?
அரிச்சந்திரன்‌ வீட்டுக்கு அடுத்த வீடு.
அரிதாரம்‌ கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி.
அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்‌.
அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம்‌ தீர்வை உண்டா?
அரிய சரீரம்‌ அந்தரத்தெறிந்த கல்‌.
அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான்‌.
அரியுஞ்‌ சிவனும்‌ ஒண்ணு, அறியாதவன்‌ வாயிலே மண்ணு.