text
stringlengths 16
178
|
---|
அரியுஞ்சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு. |
அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெட வேண்டும். |
அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ? |
அரிவான் சுறுக்கே அரிவாள்முனை கருக்கே. |
அரிவை மொழிகேட்டால் அபத்தன் ஆவான். |
அருகாகப்பழுத்தாலும், விளாமரத்தில் வெளவால்சேராது. |
அருக்காண முத்துக் கரிக்கோலமானான். |
அருக்காணி நாய்ச்சியார் குரங்குப்பிள்ளை பெற்றாளாம். |
அருக்காமணி முருக்கம்பூ. |
அருக்கித்தேடிப் பெருக்கி அழி. |
அருங்கோடை துரும்பு அற்றுப்போகுது. |
அருஞ்சுனை நீருண்டால் அப்பொழுதே ரோகம். |
அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை. |
அருணாப் பரமே கருணாம்பரம். |
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். |
அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. |
அருமை அறியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன? |
அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை குறைந்துபோம். |
அருமை அற்றவீட்டில் எருமையும் குடியிராது. |
அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதி காலத்து உரல்போகலாகாது. |
அரும்புகோணினால் அதின் மணம் குற்றமா? |
அருவருப்புச் சோறும் அசங்கிதக் கறியும். |
அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. |
அருள்வேணும், பொருள்வேணும், அடக்கம் வேணும். |
அரைக்கவுமாயம், கரைக்கவுமாயம். |
அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது. |
அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். |
அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது. |
அரைக்காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது. |
அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண் சாதி, ஆயிரம் பொன்னை அரைக்காசாக்குகிறவளும் பெண்சாதி. |
அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிக்கிறவன் ஓன்று நினைத்துக் குடிக்கிறான். |
அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது. |
அரைக்குடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது. |
அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்தது போல. |
அரைச்சிலை கட்டக் கைக்கு உபசாரமா? |
அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமா? |
அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழுச்சொல்லாமா? |
அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையுமாய் விடுகிறவளும் பெண்சாதி. |
அரைத்த பயறு முளைத்தாற்போல. |
அரைத்துட்டுக்கு பீ தின்கிறவன். |
அரைத்துட்டிலே கலியாணம், அதிலே கொஞ்சம் பாண வேடிக்கை. |
அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி. |
அரைப்பணங் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வைசெய்த கதை. |
அரைப்பணங் கொடுத்து அழச்சொல்லி ஒருபணங்கொடுத்து ஓயச்சொன்னதுபோல. |
அரைப்பணச் சேவகமானாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? |
அரைப்பணத்துக்கு மருத்துவம் பார்க்கப்போய் ஐந்து பணத்து நெளி உள்ளே போய்விட்டது. |
அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது. |
அரைவித்தைகொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா? |
அரைவேலையைச் சபையிலே கொண்டுவருவதா? |
அலுத்துக் கொலுத்து அக்காளண்டைபோனால் அக்காள் இழுத்து மச்சானிடத்தில் விட்டாளாம். |
அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப்போனால் அக்காள் இழுத்து மச்சானண்டையிற் போட்டானாம். |
அலை அடங்கியபின் ஸ்நானம் செய்வதுபோல. |
அலை எப்பொழுது ஒழியும், தலை எப்பொழுது முழுகுகிறது? |
அலை ஓய்ந்து கடலாடலாமா? |
அலைபோல நாக்கும், மலைபோல மூக்கும், ஆகாசந்தொட்ட கையும். |
அலைமோதும்போதே தலை முழுகுகிறது. |
அலைவாய்த் துரும்புபோல் அலைகிறது. |
அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறது. |
அல்லாத வழியால் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் இவை ஆகா. |
அல்லாதவன் வாயில் கள்ளை வார். |
அல்லல் அருளாள்வார்க்கில்லை. |
அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு. |
அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம். |
அல்லவை தேய அறம் பெருகும். |
அல்லற்பட்டு அழுதகண்ணீர் செல்வத்தைக்குறைக்கும். |
அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல். |
அல்லும் பகலும் கசடறக் கல். |
அவகடம் உள்ளவன் அருமை அறியான். |
அவகுணக்காரன் ஆவாசமாவான். |
அவசரக்காரனுக்குக் காக்கிலோ பெட்டு, நேக்குச் சேத்திலோ பெட்டு. |
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. |
அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததுபோலச் சொல்லுகிறாய். |
அவசரத்தில் அரிக்கண் சட்டியிலும் கை நுழையாது. |
அவசரத்தில் உபசாரமா? |
அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடே மாரடிக்கிறாள். |
அவசரத்தில் குண்டுச் சட்டியில் கை நுழையாது. |
அவசரத்துக்குப் பாவமில்லை. |
அவசரப்பட்ட மாமியார் மருமகனைப் புணர அழைத்தாளாம். |
அவசாரி ஆடினாலும் அதிருஷ்டம் வேண்டும், திருடப் போனாலும் திசை வேண்டும். |
அவசாரி ஆமூடையான் ஆபத்துக் குதவுவானா? |
அவசாரி என்று ஆனைமேல் ஏறலாம், திருடி என்று தெருவில் வரலாமா? |
அவதாரி போகவும் ஆசை யிருக்கிறது, அடிப்பான் என்று பயமுமாய் இருக்கிறது. |
அவசாரிக்கு ஆணையில்லை, திருடிக்குத் தெய்வமில்லை. |
அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது. |
அவசாரியிலே வந்து பெருவாரியிலே போகிறது. |
அவதந்திரம் தனக்கு அந்தரம். |
அவதிக் குடிக்குத் தெய்வமே துணை. |
அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை. |
அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது. |
அவமானம் பண்ணி வெகுமானாம் பேசுகிறான். |
அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார். |
அவரவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார். |
அவரவர் மனசே அவரவர்க்குச் சாட்சி. |
அவரை விதைத்தால் துவரை முளைக்குமா? |
அவரா சுறுக்கே அரிவாள்மணைக் கருக்கே? |
அவருடைய சிறகு முறிந்துபோயிற்று. |
அவலட்சணம் உன்ள குதிரைக்கு சுழிசுத்தம் பார்க்க வேணுமா? |
அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான். |
அவலைச் சாக்கிட்டு உரலை இடிக்கிறது. |
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள். |