text
stringlengths
16
178
அழகு ஒஓழுகுகிறது, நாய்‌ வந்து நக்குகிறது, ஓட்டைப்‌ பானைகொண்டுவா பிடித்து வைக்க.
அழகுக்கு இட்டால்‌ ஆபத்துக்குதவும்‌.
அழகுக்குச்‌ செய்தது ஆபத்துக்குதவும்‌.
அழகு சொட்டுகிறது.
அழகு சோறுபோடுமா, அதிருஷ்டம்‌ சோறு போடுமா?
அழகு பெண்ணே காற்றாடி (காத்தாயி), உன்னை) அழைக்கிறாண்டி கூத்தாடி.
அழச்சொல்லுகிறவன்‌ பிழைக்கச்‌ சொல்லுவான்‌, சிரிக்‌கச்சொல்லுகறவன்‌ கெடச்சொல்லுவான்‌.
அழச்சொல்லுவார்‌ தமர்‌, சிரிக்கச்‌ சொல்லுவார்‌ பிறர்‌.
அழிக்கப்படுவானை கடவுள்‌ அறிவீனன்‌ ஆக்குவார்‌.
அழித்துக்‌ கழித்துப்போட்டு வழித்து நக்கி யென்று பெயரிட்டானாம்‌.
அழிந்த கொல்லையில்‌ குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழிந்தவள்‌ ஆரோடு போனால்‌ என்ன?
அழிந்து பழஞ்சோறாய்ப்‌ போச்சுது.
அழிவழக்குச்‌ சொன்னவன்‌, பழிபொறுக்கும்‌ மன்னவன்‌.
அழுகள்ளன்‌ தொழுகள்ளன்‌ ஆசாரக்கள்ளன்‌.
அழுகிற ஆணையும்‌ சிரிக்கிற பெண்ணையும்‌ நம்பப்‌படாது.
அழுகிறதற்கு அரைப்பணம்‌ கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம்‌ கொடு.
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்‌ காட்டுகிறபோல
அழுகிற வீட்டில்‌ இருந்தாலும்‌ ஒழு(கு)கிற வீட்டில்‌ இருக்கலாகாது.
அழுகிற வேளைபார்த்து அக்குள்‌ பாய்ச்சுகிறான்‌.
அழுகை ஆங்காரத்தின்‌ மேலும்‌, சிரிப்பு கெலிப்பின்‌ மேலும்‌ தான்‌.
அழுகையும்‌ ஆங்காரமும்‌ சிரிப்புக்‌ கெலிப்போடே
அழுக்குக்குள்‌ இருக்கும்‌ மாணிக்கம்‌.
அழுக்குச்‌ சீலைக்குள்ளே மாணிக்கம்‌.
அழுக்கை அழுக்குக்கொல்லும்‌, இழுக்கை இழுக்குக்‌ கொல்லும்‌.
அழுக்கைத்‌ துடைத்து மடியில்‌ வைத்தாலும்‌ புழுக்கைக்‌ குணம்‌ போகாது.
அழுத கண்ணும்‌ சிந்திய மூக்கும்‌.
அழுத பிள்ளை உரம்‌ பெறும்‌.
அழுத பிள்ளை பால்குடிக்கும்‌.
அழுத பிள்ளையும்‌ சிரித்ததாம்‌, கழுதைப்பாலைக்‌ குடித்‌ததாம்‌.
அழுத பிள்ளையும்‌ வாய்மூடும்‌ அதிகாரம்‌.
அழுதவனுக்கு அகங்காரமில்லை.
அழுதாலும்‌ பிள்ளை அவளே பெறவேண்டும்‌.
அழுத்த நெஞ்சன்‌ ஆருக்கு முதவான்‌, இளகின நெஞ்சன்‌ எவர்க்கும்‌ உதவுவான்‌.
அழுதபிள்ளைத்‌ தாய்ச்சிக்குப்‌ பணயம்‌ கொடுத்தால்‌ அநுபவிக்க ஓட்டுமா குழந்தை?
அழுவார்‌ அழுவார்‌ தம்‌ துக்கம்‌ அசலார்க்கல்ல
அழுவார்‌ அழுவார்‌ தம்‌ தம்‌ துக்கமே, திருவன்‌ பெண்டீருக்கு அழுவாரில்லை.
அழுவார்‌ அற்ற பிணமும்‌ ஆற்றுவார்‌ அற்ற சுடலையும்‌
அழையா வீட்டிற்கு நுழையாச்‌ சம்பந்தி.
அளகாபுரி கொள்ளையானாலும்‌ அதிருஷ்ட ஈனனுக்கு ஒன்றுமில்லை.
அளகாபுரியிலும்‌ விறகு தலையன்‌ உண்டு.
அளகேசன்‌ ஆனாலும்‌ அளவு அறிந்து செலவுசெய்ய வேண்டும்‌.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
அளந்த அளந்த நாழி ஒழிந்து ஓழிந்து வரும்‌.
அளந்த நாழிகொண்டு அளப்பான்‌.
அளந்த ஒருசாணில்லை, அரிந்தால்‌ ஒருசட்டிகாணாது.
அளவளாலில்லாதவன்‌ வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர்‌ நிறைந்தற்கு.
அளவிட்டவரைக்‌ கள விடலாமா?
அளவிற்கு மிஞ்சினால்‌ அமுதமும்‌ விஷமாகும்‌.
அளவுக்கு மிஞ்சினால்‌ அமிருதமும்‌ நஞ்சு.
அளுங்குப்‌ பிடி பிடித்தாற்போல
அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது.
அள்ளிக்குடிக்கத்‌ தண்ணீரில்லை, அவனள்பேர்‌ கங்காதேவி.
அன்ளிக்கொடுத்தால்‌ சும்மா, அளந்து கொடுத்தால்‌ கடன்‌.
அள்ளிக்கொண்டே போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்‌.
அன்ளிப்பால்‌ வார்க்கையிலே சொல்லிப்பால்வார்த்திருக்குது.
அள்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருக்கல்‌ ஆகாது, கின்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருந்தாலும்‌.
அள்ளுவது எல்லாம்‌ நாய்‌ தனக்கென்று எண்ணுமாம்‌.
அறக்கப்பறக்கப்‌ பாடுபட்டாலும்‌ படுக்கப்பாயில்லை.
அறக்கல்வி முழுமொட்டை.
அறக்காத்தான்‌ பெண்டிழந்தான்‌, அறுகாதவழி சுமந்து அழுதான்‌.
அறக்குழைத்தாலும்‌ குழைப்பாள்‌, அரிசியாய்‌ இறக்கினாலும்‌ இறக்குவாள்‌.
அறக்கூர்மை முழுமொட்டை.
அறங்கையும்‌ புறங்கையும்‌ நக்குதே.
அறச்செட்டு முழுநஷ்டம்‌.
அறத்தால்‌ வருவதே இன்பம்‌.
அறநனைந்தவருக்குக்‌ கூதல்‌ என்ன?
அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை.
அறப்படித்த பூனை காடிப்பானையில்‌ தலைபோடும்‌.
அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில்‌ விழுந்தது போல.
அறப்படித்தவன்‌ அங்காடிபோனால்‌ விற்கவும்‌ மாட்‌டான்‌ கொள்ளவும்‌ மாட்டான்‌.
அறப்படித்தவர்‌ கூழ்ப்பானையில்‌ விழுந்தார்‌.
அறப்பேசி உறவாடவேண்டும்‌.
அறமுறுக்கினால்‌ அற்றுப்போகும்‌.
அறமுறுக்கினால்‌ கொடி முறுக்குப்படும்‌.
அறமுறுக்குக்‌ கொடும்புரிகொண்டு அற்றுவிடும்‌.
அறம்‌ பொருள்‌ இன்பம்‌ எல்லார்க்கும்‌ இல்லை.
அறவடிக்குமுன்‌ சோறு காடிப்பானையில்‌ விழுந்தாற்‌ போல.
அறவுங்கொடுங்கோல்‌ அரசன்‌ கீழ்க்‌ குடியிருப்பிற்‌ குறவன்‌ கீழ்க்‌ குடியிருப்பு மேல்‌.
அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்‌.
அறிந்த ஆண்டையென்று கும்பிடப்போனால்‌, உங்கள்‌ அப்பன்‌ பத்துப்பணம்‌ கொடுக்கவேணும்‌ கொடு என்றான்‌.
அறிந்தபார்ப்பான்‌ சிநேகிதன்‌, ஆறுகாசுக்கு மூன்று தோசையா?
அறிந்தவனென்று கும்பிட அடிமைவழக்கிட்ட கதை.
அறிந்து அறிந்து செய்கிறபாவத்தை, அழுது அழுது தொலைக்க வேணும்‌.
அறிந்தும்‌ கெட்டேன்‌ அறியாமலும்‌ கெட்டேன்‌, சொறிந்து புண்‌ ஆயிற்று.
அறிய அறியக்‌ கெடுவார்‌ உண்டா?
அறியாத நாளெல்லாம்‌ பிறவாத நாள்‌.
அறியாப்பிள்ளை ஆனாலும்‌ ஆடுவான்‌ மூப்பு.
அறியாப்பிள்ளை புத்தியைப்‌ போல.
அறியாமல்‌ தாடியை வளர்த்தது அம்பட்டன்‌ கையிற்‌ கொடுக்கவா?
அறிவில்லார்‌ சிநேகம்‌ அதிக உத்தமம்‌.
அறிவீனர்தமக்கு ஆயிரம்‌ உரைக்கினும்‌ அவம்‌.
அறிவீனனிடத்தில்‌ புத்தி கேளாதே.
அறிவு ஆர்‌ அறிவார்‌? ஆய்ந்தவர்‌ அறிவார்‌.
அறிவு இல்லாச்‌ சயனம்‌ அம்பரத்திலுமில்லை.
அறிவு இல்லாதவன்‌ பெண்களிடத்திலும்‌ தாழ்வுபடுவான்‌.
அறிவு இல்லார்‌ தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவு கெட்டவனுக்கு ஆர்‌ சொல்லியும்‌ என்ன?
அறிவுடன்‌ ஞானம்‌ அன்புடன்‌ ஒழுக்கம்‌.
அறிவுடையாரை அடுத்தாற்போதும்‌.