text
stringlengths
0
5.49k
[←42]
ரங்கத்தார் – ரங்கூன்காரர்
[←43]
பினாங் சுற்றிலும் கடலால் சூழப்பட்ட தீவு
[←44]
மணிமேகலை ஆசிரியரான தண்டமிழாசான்’ கூலவாணிகன் சாத்தன் புத்த மதத்தைச் சேர்ந்தவர் (கூலவாணிகன் - தானிய வியாபாரி)
[←45]
கீழ்த்திசை நாட்டுப் பெண்கள்
[←46]
ப்தாஹோத்தப் - பண்டைய எகிப்தின் 5வது ராஜ (ஃபேரோ) வம்சத்தைச் சேர்ந்த அலோசிஸ் மன்னனின் மந்திரியும், மெம்பிஸ் பிரதேசக் கவர்னருமான ப்தாஹோத்தப் (சுமார் கி.மு.3000)
[←47]
சாஃபக்லீஸ் (கி.மு.495-406) - கிரேக்க மகா நாடகாசிரியர்களில் ஒருவர்.
[←48]
மார்ஷல் கொன்ஸ்தாந்தின் ரொகொசாவ்ஸ்கி - கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாக கைதாகி 4 ஆண்டு காலம் சிறைப்பட்டிருந்த இவர், ஜெர்மன் படையெடுப்புக்குப்பின் விடுதலை பெற்று, சைபீரிய 1ஆம் சேனையின் தலைமையை ஏற்றார். பிறகு, சேனைத் தொகுதி ஒன்றுக்குத் தலைவராகி, ஸ்டாலின்கிராட் வெற்றிக்குப் பின்னர் மார்ஷல் பட்டம் பெற்றார்.
[←49]
ஃபீல்ட் மார்ஷல் எரிக்வான் மான்ஸ்டைன் - ஜெர்மன் சேனாதிபதிகளில் தலை சிறந்தவர். தாக்குப் போர், காப்புப் போர்த் துறைகளிலும் போர்த் திட்டம் வகுப்பதிலும் வல்லவர். உலகை நடுக்கிய மேற்கு ஐரோப்பிய பாய்ச்சல் (1940) திட்டத்தை வகுத்தவர் இவரே! (ஸ்டாலின்:
“மான்ஸ்டைன், ஹிட்லரின் ஜெனரலக இல்லாதிருப்பின், அவரை ரஷிய யுத்தக் கழகத்தின் தலைவராக நியமித்திருப்பேன்”)
[←50]
கொழுத்த பசுமாடு
[←51]
கர்னல் ஜெனரல் ஹய்ன்ஸ் குடெரியான் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஜெர்மன் ‘மின்னல் போர்’ சேனாதிபதி. பிரெஞ்சு ராணுவத்தைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தெறிந்த பான்சர் முன்னணிக்குத் தலைமை தாங்கிய சூரன். இவர் பாய்ச்சல் வேகத்தைப் பார்த்து அரண்ட ஹிட்லர், நிற்பாட்டு உத்தரவு பிறப்பித்திராவிடின் 338 ஆயிரம் நேசத் துருப்புகள் ‘டன்கெர்க்’கில் கப்பலேறித் தப்பியிருக்க முடியாதென்பது ராணுவ நிபுணர்களின் ஒருமித்த தீர்ப்பு.
[←52]
ஃபீல்டு மார்ஷல் ஹிசாயிச்சி தெராவுச்சி - தென் மண்டல ஜப்பானியப் படைகளின் தலைமைச் சேனாதிபதி.
[←53]
ரயில்வே ஸ்டேஷன்
[←54]
யுத்தத்துக்கு முந்திய ஜப்பானில் வர்த்தகக் குடும்பங்களைச் சேர்ந்தோர் கடற்படையிலும், விவசாயிகளின் பிள்ளைகள் ராணுவத்திலும் சேருவது பொதுவான வழக்கம்.
[←55]
கூலி - ஜப்பானியர் லகரத்தை ரகரமாகவும், சீனர்கள் ரகரத்தை லகரமாகவும் உச்சரிப்பார்கள்.
[←56]
(ஜப்பானியம்) “யாமசாக்கி அவர்களே நன்றி! போய் வருகிறோம்”
[←57]
பறக்கும் கோட்டை என்று அறியப்பட்ட கனரக அமெரிக்க குண்டு வீச்சு விமானம்.
[←58]