text
stringlengths 0
5.49k
|
---|
[←9] |
கோட்டை - மெடனா நகரில் துருப்புகளின் இருப்பிடம் |
[←10] |
நீதகா யாமா நோபுரே - நீதகா மலைமீது ஏறலாம், (போர்த் திட்டத்தை நிறைவேற்றத்தயாராகவும்) இது ஜப்பானியக் கடற்படையின் கூகமொழி (code language) |
[←11] |
மாஷ்ல் ஜியார்ஜி ஜுக்காவ்... ரஷிய சேனாபதிகளில் தலைசிறந்தவர். 5 முறை சோவியத் சூரன் (ஹீரோ ஆஃப் த சோவியத் யூனியன்) பட்டம்பெற்ற ஒரே ஆள். |
[←12] |
நீதகா மலைமீது ஏறலாம். |
[←13] |
இந்தியாவிலிருந்து வந்த டெல்லி சுல்தான் வம்சத்தினரால் நிறுவப்பட்டது. மெடான் நகர். அதன் முழுப் பெயர் மெடான் - டெலி. டெல்லி சுல்தானின் தலைநகர் அது. மைடான் என்ற உருதுமொழிச் சொல்லின் திரிபே மெடான். |
[←14] |
டச்சு கில்டர் நாணயம் |
[←15] |
ஹாலந்து பாங்க் |
[←16] |
மேஸ்திரி |
[←17] |
வட்டித் தொழிலில் தொடர்புள்ள அனைத்து சாதியினரையும் இப்படித்தான் சொல்வது வழக்கம். |
[←18] |
‘எம்மண்டலமுங் கொண்டருளிய’ சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1251 - 69) |
[←19] |
வராகன் - ரூ 3.50 |
[←20] |
தாசி வகுப்பினரல்லாத விபசாரத்தை வருவாய் தொழிலாகக்கொண்ட மேசைகள். முன் காலத்தில் இவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு ஊருக்கு வெளியே குச்சு (குடிசை) கட்டிக்கொண்டு வசித்ததால் வந்த பெயர். |
[←21] |
தண்ணீர்மலை ஆண்டவன் - பினாங் தண்ணீர் மலையில் கோயில்கொணடிருக்கும் முருகப் பெருமான். |
[←22] |
ஸ்ரீவிஜயநகர் - தென் சுமத்ராவில் முசி ஆற்றங்கரையில் (இப்போது பலம்பாதில் நகர் உள்ள இடத்தில்) இருந்த துறைமுகப் பட்டனம். |
[←23] |
மலையூர் - தென் சுமத்ராவில் ஜம்பி ஆற்றங்கரையில் (இப்போது ஜம்பி நகர் உள்ள இடத்தில்) இருந்த வணிகப் பெருநகர். |
[←24] |
கோரங்கி - ஆந்திராவில் உள்ள சிறு துறைமுகம் - ஆதியில், ஆந்திரர்கள் அங்கே கப்பலேறி அக்கரை நாடுகளுக்குச் சென்றதால் (அங்கே) அவர்களுக்கு ‘கோரங்கி’க்காரர் என்ற பெயர் வந்தது. |
[←25] |