Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
மூலம் குணமாக
புங்கம்பட்டையை கஷாயமாக்கி குடிக்கலாம்.
இரவில் அதிகநேரம் கண் விழித்திருத்தலைத் தவிர்த்தல்
சூடு. மூலம் வராமல் தடுக்கலாம்.
வாதநோய், மூலநோய், இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை
பலாப்பழம்.
மூலப்புண்
மஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வரபுண் ஆறும் மூலவலி குறையும்.
பவிந்திரம் தீர
குப்பைமேனி சமூலம் பொடி 2சிட்டிகை நெய்யில் காலை,மாலை சாப்பிட்டு வரலாம்.
மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிய
கஞ்சாங்கோரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வரலாம்.
மூலம் தீர
நாயுருவி விதை பொடி துத்தி கீரையுடன் சமைத்து உண்ண வேண்டும்.
மூலநோய் குணமாக
பப்பாளிபழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
மூலநோய் நீங்க
துத்தியில் பொரியல் செய்து சோற்றுடன் 120 நாட்கள் சாப்பிட்டு வரவும். (மாமிசம், புளி, காரம் சேர்க்க கூடாது)
ஆசனம் வெளித்தள்ளல் தீர
பழம்பாசி இலையைப் பொடித்த பாலில் வேகவைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும்.
உள் மூலம் பவுத்திரம் தீர
பொடுதலை உளுந்தம்பருப்புடன் நெய்யில் வறுத்து துவையலாக்கி பகலுணவில் சாப்பிடலாம்.
மூலக்கடுப்பு தீர
சுண்டைக்காய் சமைத்து சாப்பிடலாம்.
மூலக்கடுப்பு, எரிச்சல் தீர
கட்டுகொடி இலை 2மென்று தின்று வரலாம்.
மூலச்சூடு தணிய
ரோஜாபூவை சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்.
மூலம், இரத்தப்போக்கு நிற்க
குப்பைமேனி இலை 1கைப்பிடி 1கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து 1 வேளை சாப்பிடவும்.
இரத்த மூலம் குணமாக
அருகம்புல் 30கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வரலாம்.
இரத்த மூலம் தீர
துத்தி இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வரலாம்.
மூல ரணம் தீர
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்துவர மூல ரணம் தீரும்.
நரம்பு தளர்ச்சி
சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வர பலவீனம் மாறும். ஆண்மை பெருகும்.
நரம்பு சிலந்தி
சீரா செங்கழு நீர் இலையை அரைத்துக் கட்ட குணமாகும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வரதீரும்.
நரம்பு வலி
துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
மூளை, நரம்பு சம்பந்தமான நோய் குணமாக
நாயுருவி வேர், கரிசலாங்கண்ணி ஆகியவை பயன்படுத்தலாம்.
நரம்பு இழுப்பு
ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
நரம்பு தசை வலுப்பெற
கோபுரம் தாங்கி செடி வேர், பொடி கற்கண்டு சேர்த்து காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்.
நரம்பு கோளாறு நீங்க
வெள்ளறுகு சமூலம், மிளகு, சுக்கு, சீரகம் கஷாயம் 50 மி.லி. காலை, மாலை குடிக்கலாம்.
வெளிமூலம் தீர
கொய்யா வேர் கஷாயம் வைத்து மூலத்தை கழுவி வரலாம்.
நரம்பு சிலந்தி குணமாக
வேப்பம்பூ .வேப்பவிதை அரைத்து கட்டலாம்.
நரம்பு சுறுசுறுப்படைய
இலந்தை வேர் கஷாயம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வரலாம்.
நரம்பு தளர்ச்சி குணமாக
மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் உட்கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும்.
கைகால் வெடிப்புக்கு
கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வலி இராது.
கால் பித்த வெடிப்பிற்கு
அரசமரத்து பாலை தடவலாம்.
பித்த வெடிப்பு
நல்ல சுண்ணாம்பு, விளக்கெண்ணை கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
சேற்றுப்புண் குணமாகும்
காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவ குணமாகும்.
பித்த வெடிப்பிற்கு
வேப்பெண்ணை, மஞ்சள் சேர்த்து போடலாம்.
பித்த வெடிப்பு குணமாக
மாமரத்து பிசினை தடவவும்.
பல் உறுதியாக
மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெறும்.
பல் நோய்
மகிழம்இலை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர எதுவும் அணுகாது.
பல்வலி நிவாரணம் பெற
கோவைப்பழம் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் ரத்தகசிவு, பல் சொத்தை வராமல் இருக்க
செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.
பல் ஆடுதல்
மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிப்படும்.
பல்வலி நீங்க
ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.
பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற
ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.
பல்லரணை
கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.
பல் உறுதியாக
குறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
பற்கள் உறுதியாக
பிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்து வர உறுதியாகும்.
பல்லில் சீழ் வடிதல்
பிரமதண்டு இலை எரித்து சாம்பல் வைத்து பல் தேய்த்து வர பல்ஆட்டம், பல்சொத்தை,பல்கரை,பல் சீழ்வடிதல் தீரும்.
பல்வலி, பல் அரணை தீர
கண்டங்கத்திரி பழத்தை ருெப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும்.
பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர
புளியங்கொட்டை தோல். கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.
பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க
பேய்மிரட்டி இலை சாற்றை 5துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பல் உறுதியாக
காலை, இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும், சாப்பிட்ட பின் பல்துலக்கி விடுவது மிக நன்று.
ஈறு பலமடைய
மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
திமிர்பூச்சி தீர
சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வரவும்.
மலப்புழு நீங்க
விழுதி இலை.மிளகு, பூண்டு,சீரகம், விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடவும்.
மார்புச்சளி, நுண்புழு விலக
மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வரலாம்.
குடல் பூச்சி
மாங்கொட்டை பருப்பை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து 1நாள் 2வேளைக்கு கொடுக்க பூச்சி அகலும்.
மலப்புழுக்கள் வெளியேற
பிரமதண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும்.
குடல் புழுக்கள்
மாதுளம்பழம் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட புழுக்கள் அழியும்.
குடல் புழுக்கள் அழிய
மாதுளம்பழம் சாப்பிடலாம்.
வயிற்று பூச்சி அழிய
வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம்.
வயிற்று பூச்சிகள்
பப்பாளி பாலை விளக்கெண்ணையில் குடிக்க நீங்கும்.
வயிற்றுப்பூச்சிகள் ஒழிய
அன்னாசிபழம் தினம் சாப்பிடலாம்.
வயிற்றுப் புழுக்கள் வெளியேற
எருக்கம் இலைச்சாறு 3துளியை 10துளி தேன் கலந்து கொடுக்கலாம் (குழந்தைகளுக்கு கூடாது),
குடல் பூச்சி தீர
வேலிபருத்தி வேர் பொடி 4 சிட்டிகை பாலில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
நுண்புழுக்கள் அழிய
மணலிக்கீரையை உண்டு வரலாம்.
நாக்கு பூச்சி நீங்க
குப்பைமேனி வேர் பொடி கஷாயம் செய்து குடிக்கலாம்.
மலக்குடல் கிருமிகள் தீர
சுண்டைவற்றல், கறிவேம்பு. மிளகு. சீரகம், வெந்தயம் வறுத்து பொடி செய்து உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
மலக்கிருமிகள் நீங்க
ஆடுதின்னாபாளை விதை பொடி செய்து விளக்கெண்ணையில் கலந்து கொடுக்கலாம்.
தட்டை புழுக்கள் ஒழிய
தைவேளை விதையை நெய்விட்டு 3 நாட்கள் சாப்பிட்டு நான்காம் நாள் விளக்கெண்ணெய் குடிக்கலாம்.
உடலில் உள்ள நஞ்சு குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற
வாழைத்தண்டு பொரியல் வைத்து சாப்பிடலாம்.
மலக்கட்டு, நஞ்சு தீர
மகிழவித்து பருப்பை பொடி செய்து 5கிராம் பாலில் சாப்பிட்டு வரவும்.
உடல் நஞ்சு அகல
கருங்குருவை அரிசி சமைத்து சாப்பிடவும்.
உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுக்களை நீக்க
ஒரு பிடி அருகம்புல்,10 மிளகு,2கிராம் சீரகம் சேர்த்து பசும்பாலில் சாப்பிடவும்.
கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குணமாக
கொள்ளுகாய், வேளை செடி வேர், மிளகு கஷாயம் சாப்பிட்டு வரவும்.
கல்லீரல் வீக்கம் குறைய
மருதம்பட்டை, கரிசலாங்கண்ணி தூள் 1கிராம் தேனில் கலந்து சாப்பிடவும்.
கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குறைய
நொச்சி இலைச்சாறு பசுங்கோமியத்துடன் சாப்பிட்டு வர வீக்கம் குறையும்.
கல்லீரல்,மண்ணீரல் உரம் பெற
சீந்தில் கொடி சாப்பிடலாம்.
கெட்டுபோய் இருக்கும் ஈரலை குணப்படுத்த
ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.
பித்தப்பை நோய்
வேப்பம்பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர குணமாகும்.
கல்லீரல் வலி குணமாக
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி சேர்த்து 45நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.
கல்லீரல் பலப்பட
தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
இதயம், சிறுநீரகம், மண்ணீரல்
சாறுவேளை இலையை கீரை போல் சமைத்து உண்ணலாம்.
கல்லீரல் நோய் தீர
கரிசாலை இலை,வேப்பிலை, துளசி, கீழாநெல்லி வெறும் வயிற்றில் மென்று தின்று வரலாம்.
கல்லீரல் நன்கு இயங்க
வேப்பம் பூவை ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.
கல்லீரல் வீக்கம் குறைய
சித்திர மூல வேர் பட்டைபொடி வாழப்பழத்துடன் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
குடல் புண், நீரழிவு நோய் குணமாக
வில்வஇலை பொடி அரை ஸ்பூன் 50மி.லி. தண்ணீரில் சாப்பிட்டு வரலாம்.
குடலை சுத்தப்படுத்த
வில்வபழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். கசடு தங்காமல் சுத்தம் செய்ய சிறந்தது.
குடல் வெப்பம் நீங்கி குடற்புண் ஆற
எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும்படி கொடுக்க குணம் பெறலாம்.
சுவாச குழாய் அலர்ஜி, குடல்புண் குணமாக
குங்குமப் பூவுடன் சமஅளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2வேளை உட்கொள்ளலாம்.
குடல் வாதம் குணமாக
புரசப்பட்டையை நீரில் காய்ச்சி சிறுவர்களுக்கு கொடுத்து வந்தால் சரியாகும்.
குடல் வாதம் மேககிரந்தி தீர
வெள்ளறுகு சமூலம், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் 50 மி.லி. காலை, மாலை குடித்து வரலாம்.
குடல் புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும்
அகத்தி கீரை நல்ல உணவு.
வயிற்றுக் கோளாறு
புதினா துவையல் நல்ல மருந்து.
அல்சர் குணமாக
தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வரலாம்.
வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாக
ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரலாம்.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்
மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
இரைப்பை வலுவடைய
காரை இலை வேகவைத்து சாப்பிடலாம்.
குடல் வலிமை பெற
வில்வமர பூக்களை புளிசேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வரலாம்.
குடல் வெப்பம் நீங்கி புண் ஆற
எழுத்தாணி பூண்டு இலை அரைத்து மலம் போகும் அளவு கொடுக்கலாம்.
இரத்தக்குழாய்களில் அடைப்பு நீங்க
தினம் ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும்.