text
stringlengths
0
25.6k
கல்வியாளருக்குப் புலமை மட்டும். போதாது ? பயிற்சி மட்டும் போதாது ; திறமை மட்டும் போதாது ; மனித்த் தன்மையும் வேண்டும்; தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற உணர்வு ஊடுருவியிருக்க வேண்டும். நசுக்காமல், குத்தி மகிழாமல், ஊக்கி உதவுபவரே, வளர உரமிடுவோரே, கல்வியாளர்.
11. ஊக்கும் கல்வி
முதியோர் கல்வி நிலையத் தலைவர் ; மாணவ,மாணவியருடன் பழகும் இனிமையைக் கண்டு மகிழ்ந்தேன். முதியோர் கல்வி பற்றிப் பொதுப்படையாகச் சில மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தேன்.
முதியோர் கல்வி-தொடர் கல்வி-நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருவதை அறிந்தேன். பல நூறாயிரவர் அதில் ஈடுபட்டு அதனால் பலன் அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். முதியோர் கல்வி ஈடுபாட்டில், ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவர்கள் அல்லர் என்று தெரிந்து இரசித்தேன்.
இக் கல்விக்கூடங்களை (தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும்) உள்ளாட்சிக் கல்வி மன்றங்கள் நடத்துகின்றனவாம்.
முதியோர் வகுப்புகளைக் காண விரும்பினேன். முதல்வரே, என்னை அழைத்துச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த வகுப்புகள் நூற்றுக்கு மேல், பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோல், இரண்டொரு குப்புகளுக்குள் நுழைந்து இருந்து கவனித்தேன், அவற்றிலே ஒன்று. இக்காலத்துக்கு வேண்டிய போட்டோ பிடிக்கக் கற்றுக்கொள்ளும் வகுப்பு.
"என்ன ? கல்வியில் இது எப்படிச் சேரும் ? என்னும் எழுத்துமல்லவா கல்வி" என்று மிரளாதீர்கள்.
ஆத்திசூடியும், கொன்றைவேத்தனும், நாலடியாரும், சுந்தர காண்டமும், வழக்குரை காதையுமே கல்வி என்ற மயக்கப்பட்ட நமக்கு, இது புதுமையாகவே தோன்றும்.
'ஆயகலைகள் அறுபத்து நான்கு' என்னும் வழக்கினை ஆழ்ந்து சிந்தித்தால், மொழிப் பாடங்களுக்கு அப்பாலும் கல்வி விரிவதை உணரலாம். கணக்கோடு, கல்விக் கணக்கு முடிந்துவிடவில்லை என்பதை அறியலாம்.
'அத்தனையும் கல்வியே. ஆகவே எத்தனைப் பாடங்களை, 'பயிற்சிகளை திணிக்க முடியுமோ அத்தனையையும் திணித்து விடுவோம் பள்ளியிறுதிக்குள்' என்ற போக்கு தீங்கானது.
வாழ்வு முழுவதற்குமான கலைகள் பலவற்றையும் பள்ளிப் பருவத்திலேயே புகுத்தி விடாலாமென்ற போக்கு அறிவு அஜீரணத்தையே விளைவிக்கும். அடிப்படைக் கலைகள் சிலவற்றில் ஆழ்ந்த அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதே பள்ளிக்கூடங்களின் வேலை. விரும்பும் தேவைப்படுகிற சில பல கலைகளைப் பின்னர் வீட்டிலோ ,தொழிற்கூடங்களிலோ, கழகங்களிலோ, முதியோர் கல்வி கூடங்களிலோ பெறவேண்டும். அதற்கு வாய்ப்புகள் அமைத்து வைக்க வேண்டும். இத்தெளிவு பரவினால் கல்விச் சிக்கல்களில் பல தீர்ந்துவிடும்.
சிக்கல்களை விட்டு, நிழற்பட வகுப்பிற்குப் போவவோம். நான் எதைக் கண்டேன் ? அவ் வகுப்பில் இருந்தவர்கள் கற்றுக் குட்டிகள். முந்திய வகுப்பில் கொடுத்த வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வந்திருந்தனர். அதாவது ஒவ்வொருவரும் தாங்களே சில 'போட்டோ'க்களை எடுத்துவந் ருந்தனர். அவை தேர்ச்சி பெற்றவரால் கழுவப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
ஒரு மாணவர், தான் எடுத் படமொன்றை குைப்பு முழுவதற்கும் காட்டினார். எல்லோரும் சில விநாடிகள் கவனித்தனர். அது போர்டில் மாட்டப்பட்டிருந்தது. அதை ஆசிரியர் மதிப்பிடவில்லை. சக மாணவர்களை மதிப்பிடச் சொன்னார்.
அதில் 'போகஸ்' சரியாக இல்லை என்று எனக்குத் தோன்றிற்று. என்னைக் கேட்டிருந்தால் அப்படியே சொல்லியிருப்பேன். ஆனால் அதைப் பற்றிக் கூறின மாணவர் என்ன சொன்னார் தெரியுமா? " 'போகஸ்' இன்னும் சிறிது வலப்புறம் வந்திருந்தால் படம் அருமையாக இருக்கும்” என்று மதிப்பிட்டார். இன்னொருவ 'இன்னும் சிறிது நேரம் 'எக்ஸ்போஸ்' செய்திருந்தால் படத்தின் தெளிவு அதிகமாயிருக்கும்" என்று குறிப்பிட்டார். இப்படி, இன்னும் இரண்டொருவர்,' இதை இப்படிச் செய்யலாம்; இன்ன பலன் அதிகமாகும்' என்று மதிப்பிட்டார்கள்.
யாருமே எதிர்மறைவில் பேசவில்லை. குற்றஞ் சாட்டவில்லை. போகஸ் சரியில்லை, 'எக்ஸ்போஸர்' போதாது என்று குறை காட்டிப் பேசாமல் இதை இப்படிச் செய்ய வேண்டும்; இது இன்னும் அதிகம் தேவை" என்று மட்டுமே வழி காட்டினர். தெளிவான வொரு கருத்தை ஆக்க முறையில் சொன்னதால் ஏற்றுக் கொள்வதைப் பற்றி மற்றவர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். கருத்துப் போர் நிகழவில்லை.கருத்து வளர்ச்சி நிகழ்ந்தது. இம்முறையில், அவர்கள் பயிற்சி வளரக் கண்டேன்.
உள்ளது சிறக்க வழிகூறும் முறையை, இங்கிலாத்தின், மற்ற கல்விக்கூடங்களிலும் கண்டேன். தொடக்கப்பள்ளியிலுஞ்சரி உயர்நிலைப் பள்ளியிலும் சரி. குறை காண்பதை விட| நிறைவுக்கு வழி சொல்வதே அங்கு மரபு, இங்கு ?
அப் படம். நம் வகுப்பில் காட்டப்பட்டு மதிப்பிடப்பட்டிருந்தால்,
" எவன் சார் இதை எடுத்தான்?”
" இவனுக்கு சுட்டுப் போட்டாலும் இக்கலை வராது."
'ஆனைப் பார்க்காமல், தோளைப் பார்க்கிறது நோக்கு'
'அமாவாசையிலே எடுத்த படமா ஐயா' இது?
இப்படிப் பிய்த்துத் தள்ளியிருப்பார்கள், நம் அறிவாளிகள், 'பிய்த்து எடுத்தே' பிழைக்கிற கூட்டம் நாம், இல்லாத வற்றை மட்டுமே பட்டியல் போட்டு, பறைசற்றி, சோர்ந்து போகிற கூட்டம் நாம்.
என்ன செய்ய வேண்டும் ; எப்படிச் செய்ய வேண்டும்; எதை அதிகப்படுத்த வேண்டும்; ; எதை விரைவுபடுத்த வேண்டும்; எதை மெல்லச் செலுத்த வேண்டும் என்று ஆக்க வழியிலே, உள்ளது சிறக்க, சொல்லிப் பழகாத மக்கள் நாம். எனவே சாண் ஏறினால் முழம் சறுக்கி ஒப்பாரி வைத்தோ காட்டுக் கத்தல் கத்தியோ, ஒயும் மக்கள் நாம்.
இங்கிலாந்து கல்விக்கூடங்களில் கண்டமுறை, ஊக்கு வழி, வளர்க்கும் வழி நம் பள்ளிகளுக்கும் வத்திடாதோ ? இந்த ஏக்கத்தோடு அவ் வகுப்பை விட்டு வெளியேறினேன். அச்சிந்தனை இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
கற்க வந்தோமா, கல்லெறிய வந்தோமா என்பதே தெரியாத நிலையில் தம்பிகளை வைத்திருக்கிறோம். தொழில் திறமையைப் பற்றிச் சிந்திப்பதைவிடத் தகுதி என்கிற பொய்மான் வேட்டையிலே விரைகிறது ஆசிரியர் சமுதாயம்.
பெற்றோரோ, பிள்ளையைச் சீராக்குவதைத் தவிர மற்றெல்லா முயற்சிகளிலும் முனைந்து நிற்கின்றனர், சீராக்கக் கூட உரிமையுண்டா என்பதே வழக்கு இனியென்ன குறை?
12. முதிய இளைஞர் இருவர்
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் ஆண்டு, ஸ்காட்லாந்தின் தலைநகரமாகிய எடின்பரோவில் இருந்தேன்.
ஒரிரவு ஏழு மணிக்கு, முதியோர் கல்விக் கூடமொன்றைக் காண ஏற்பாடாகி இருந்தது. அப்போது, மழை துாறிக் கொண்டிருந்தது. குளிர் காற்று சீறிக் கொண்டிருந்தது.
ஒட்டல் அறையிலே தங்கிவிட ஆசை. ஆனாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற உண்ர்ச்சியால் உந்தப்பட்டு இரவுக் கல்விக்கூடம் போய்ச் சேர்ந்தேன்.
கல்லூரி முதல்வரைக் கண்டேன். அவர் அறையில் மேசையின் மேல் அழகிய விரிப்பொன்று இருந்தது. அது என் கண்ணைக் கவர்ந்தது; கருத்தையும் கவர்ந்தது.
அதிலே, மயிலொன்று பின்னப்பட்டிருந்தது. மயிலின் இயற்கைத் தோற்றம் என்னைத் தொட்டது. அதைப்பாராட்டினேன். முதல்வர் மகிழ்ந்தார். பலரும் பாராட்டினதாகக் கூறினார்.
கல்லூரியின் நடைமுறையைப் பற்றி விளக்கினார், அன்றைய குளிரிலும் மழையிலும்கூட, வழக்கமான வருகை இருப்பதாகக் கூறினார். 
கல்லூரி மாணவ மாணவியார்-முதியோர்-கல்வியின் மீதே கண்ணாயினார் என்பதை அறிந்தேன், மகிழ்ந்தேன்.
இதோ உங்களிடம் உரைத்து விட்டேன். நம் தம்பிகள், தங்கைகள் - மாணவ, மாணவியர்-காதுகளிலும் போட்டு வையுங்கள்.
பின்னர் கல்லூரியின் பல பகுதிகளையும் காட்டிக் கொண்டு வந்தார். சிற்சில வகுப்புகளுக்குள்ளும் நுழைந்தோம். ஒரு வகுப்பில் அம்மையார் ஒருவர் பெயரைச் சொன்னார். பின் வரிசையில் இருந்த ஓர் அம்மாள் கையை உயர்த்தினார்.
"வேலு. நீங்கள் பார்த்துப் பாராட்டிய மயில் விரிப்பை நெய்தவர் இவரே" என்றார் முதல்வர்.
“ஆகா ! உங்கள் வேலைப்பாடு மிக நன்றாயிருக்கிறது. எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீர்கள். இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறீர்களே !” என்றேன் நான்.
“ஒராண்டு காலம் : இக்கல்லூரியில் கற்றுக் கொண்டேன். பலன், அந்த விரிப்பு” என்று அடக்கமாகக் கூறினார் அந்த அம்மாள்.
“அப்படியா ? முந்தைய பழக்கமின்றி, இந்த வயதில், புதிய கலையைக் கற்றுக்கொண்டு, இவ்வளவு பெரும் வெற்றி பெற்றுள்ள உங்களுக்குப் பரிசு கொடுக்கலாம்” என்றேன்.
"கொடுக்கலாமென்ன ! ஏற்கனவே இதற்குப் பரிசு பெற்று விட்டார்கள். சென்ற ஆண்டு. ஸ்காட்லாண்ட் முழுமைக்கும், கற்றுக்குட்டி நெசவாளர்களுக்கென்று போட்டி நடந்தது. அப்போட்டியில், இவ்விரிப்பிற்காக, இந்த அம்மாளுக்கு முதற் பரிசு கிடைத்தது" என்று பூரிப்போடு உரைத்தார் முதல்வர். 
"ஆர்வங் கலந்த பாராட்டு ! மேலும் பல வெற்றிகள் கிட்டுவதாக" என்று கூறினேன். வாழ்த்துவதற்கு எனக்கு வயது போதாது. என்னைக் காட்டிலும் பல ஆண்டு மூத்தவர், அந்தப் பாட்டி.
சில நிமிடங்களுக்குப் பின், வேறொரு வகுப்பறையில் இருந்தோம். வகுப்பறைச் சுவர் ஒன்றில் அழகிய ஓவியம் ஒன்று காட்சியளித்தது. மலையும் காடும், அருவியும் ஆறும் அழகாகத் திட்டப்பட்டிருந்தன. அப்படத்தைக் கண்டு சொக்கினேன்.
"ஆகா ! எவ்வளவு திறமையாகத் தீட்டப்பட்டிருக்கிறது இவ்வோவியம் !" என்று வியந்தேன்.
"இதைத் திட்டியவரும் இங்கேயே இருக்கிறார்" என்றார் முதல்வர். அதே மூச்சிலே, ஒரு பெயரைச் சொன்னார். பெரியவர் ஒருவர் ஒரு பக்கத்திலிருந்து கையைத் தூக்கினார்.
"இவர்தான், இதன் கர்த்தா. இதுவும் பரிக பெற்ற வேலைப்பாடு. சென்ற ஆண்டு, ஸ்காட்லாண்டு முழுமைக்கும் கற்றுக்குட்டி ஒவியர்களுக்கென்று போட்டி யொன்று வைத்தார்கள். அதற்காகத் தீட்டிய படம் இது. இதற்கு முதற் பரிசு கிடைத்தது" என்று இதன் வரலாற்றை விளக்கிக் கூறினார் முதல்வர்.