text
stringlengths
0
25.6k
"பலே, உங்கள் கல்லூரியில், பல, முதல்தரமான கற்றுக் குட்டிகள் உள்ளனரே ! இவர் எப்போது ஓவியம் வரைவதில் ஈடுபட்டார் ?" இது பக்க உரையாடல்.
"இக் கல்லூரியில் சேர்ந்த பிறகே, ஒவியம் வரையும் பயிற்சி பெற்றேன். ஒராண்டுப் பயிற்சிக்குப் பின் போட்டியிட்டேன்" என்றார் ஓவியக்காரர். 
"அப்ப்டியா? நீறுபூத்த நெருப்புப் போன்றிருந்த உங்கள் திறமையைப் போற்றுவதா ? தள்ளாத வயதிலும் புதுப்புதுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் உங்கள் ஊக்கத்தைப் போற்றுவதா? முழு மூச்சு ஈடுபாட்டைப் போற்றுவதா? என்று தெரியாது திகைக்கிறேன். தொடர்ந்து வெல்க நீவிர், மன்னிக்க வேண்டும். உங்கள் வயதை அறிந்து கொள்ளலாமே?" என்று இழுத்தேன்.
"அதற்கென்ன? என் வயது எழுபத்தாறு " என்று கணீரென்று உரைத்தார். ஓவியக்காரத் தாத்தா.
"நீவிர் நூறாண்டு வாழ்க" என்றேன், போகலாமென்று சாடை காட்டினேன் முதல்வருக்கு.
"இரண்டே விநாடி ; சிறு-செய்தி. ஒவியப் போட்டியில் முதற் பரிசு பெற்ற இவரும் நெசவுப் போட்டிலில் முதற் பரிச பெற்ற அந்த அம்மாளும் கணவன் மனைவி' இதை, முதல்வர் கூறி முடிப்பதற்குள், வகுப்பிலிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். முதல்வர் தொடர்ந்தார் பேச்சை. இருவரு இளைய மாணவர்கள். இவர்கள் சேர்ந்து ஈராண்டு ஆகவில்லை. இருவரும், பரிசு பெற்ற இரு பொருட்களையும் தங்களுக்ககன்று வைத்துக் கொள்ளாமல், இக் கலைகளை: கற்றுக் கொடுத்த கல்லூரிக்கே அன்பளிப்பாக்கிவிட்டனர்! இக்கொடையே இவர்கள் சிறப்புக்கெல்லாம் சிகரம்"- இதை முதல்வர், சொல்லி முடித்தது தான் தாமதம், நீண்ட பலமான கைதட்டல் வகுப்பிலே. சில விநாடிகளுக்கு முன் நிகழ்ந்ததைவிட பலமான கைதட்டல்.
மாணவத் தம்பதிகளின் ஆர்வமும் முயற்சியும் ஒரு பக்கம் பரவசப்படுத்தின சிறப்பைப் போற்றும் சக மாணவர்களின் சிறப்பு ஒரு பக்கம் பரவசப்படுத்திற்று. அரும்பொருளையும் பொதுப் பொருளாக்கும் நல்லியல்பு மற்றொரு பக்கமிருந் பரவசப்படுத்திற்று. மேலும் இருந்தால், பரவசத்தில் மூழ்கிப் போவோமென்று அஞ்சி, மெல்ல வெளியேறினோம்.
"நெசவுப் போட்டியில் வெற்றி பெற்ற அம்மாளின் வயது எழுபத்திரண்டு. ஆறு பதிலும் எழுபதிலும் முதியோர் கல்விக் கூடங்களில் சேர்ந்து , புதியன பல கற்போர், ஆணும் பெண்ணும், எண்ணிறந்தோர்!" என்ற கல்லூரி முதல்வர். காதோடு காது சென்னது ஒலித்துக் கொண்டிருக்கிறது. என் காதிலே ஒலித்துப் பயன்?
இந்தியா திரும்பிய பின், பல நண்பர்களிடம் இதைக் கூறி, என் மகிழ்ச்சியைப் பகிர்த்து கொண்டேன். கேட்டவர்கள், பயபக்தியோடு கேட்டார்கள். "ஆமாங்க அவங்க மாதிரி நாம் எப்ப வரப்போகிறோம்" என்று முடித்து விட்டார்கள்.
ஒருவர் மட்டும் ஈடு கொடுத்தார். அந்தக் கிழவனும் கிழவியும் கல்லூரிக்குப் போவதில் போட்டியிட்டார்கள். ஆளுக்கொரு புதுக் கலை கற்று, பரிசு பெறுவதில் போட்டியிட்டார்கள். இருக்கட்டுமே, நாம் மட்டும் என்ன குறைந்து போய்விட்டோம்? சென்ற ஆண்டுதான் என் மனைவிக்கும் எனக்கும் போட்டி. இருவரும் போட்டியை ஏற்றுக்கொண்டோம்.
" சம்பளம் கட்டு படியாகவில்லை. கொஞ்சம் பவுடர் வாங்குவதை......" என்று நீட்டினேன்.
"பளிச்சென்து பதில் சொன்னாள் : 'நீங்கள் மட்டும் காசைப் புகையாக ஊதலாம். நான் அச்செலவிற்கு மேக்கப் பூச்சிற்குச் செலவு செய்தால் கேளுங்கள். இந்த வீட்டில் எனக்கு இதற்குக்கூட வக்கு இல்லையா ?’ என்று கண்ணிர் வடித்தாள், என் இல்லத் தரசி. 
“இது சகவாழ்வுக் காலம், சகவிரயக் காலமும் கூட. இதற்கு ஏன் வருந்துகிறாய்” என்று சமாதானப்படுத்தினேன்.
“அன்று முதல் எங்கள் வீட்டில் சிகரெட் செலவுக்கும் பவுடர் செலவுக்கும் போட்டி. ஆனால் இக்கால விளையாட்டுப் போட்டி போல் அடிதடி கிடையாது” என்று திசை திருப்பி விட்டார், நகைச்சுவை நிபுணர்.
நாற்பதானால், நாளைக கணக்குப் பார்க்கும் நாமெங்கே! எழுபதானாலும் ஏங்கி, முடங்கிக் கிடக்காமல், புதுப் புதுக் கலைகளைக் கற்கும் பிறர் எங்கே ? யாரிடத்தில் கேட்க இதை ?
தாம் வளர்ந்து, நாட்டையும் வளர்க்க வேண்டிய காளையரோ, வழியிலே நின்று விடுகின்றனர். அறிவாற்றலைவிட, பிற திறமைகளை வளர்ப்பதிலே மூழ்கி விடுகின்றனர்.
தொன்மையையும் பண்பாட்டையும் பற்றிப் பன்னிப் பன்னிப் பேசும் பெரியவர்களோ, கமக்கு எங்கே ஐயா வரும்’ என்று சபித்து விடுகிறார்கள்.
நாகரிகவாதியோ, ‘காமிக்’கோடு நழுவி விடுகிறார்.
பொதுமக்களே, உங்களுக்கு யார் சொல்வார்? பார் கற்றுக் கொடுப்பார் ?
13 புதுயுகத் தலைவர்
'படி, படி, படி' ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு கோடி மக்களைத் தொடர்ந்து உந்துகிறது.
இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வெளிய உரைக்கு எங்கிருந்து வந்தது இத்தனைப் பேராற்றல் ? எப்போதோ ஒரு முறை எழுச்சியூட்டினாலும் பல்லாண்டுகளாக ஆற்றல் குறையாது ஊக்குவதன் இரகசியம் என்ன ?
இவ்வையப்பாடுகள் எழுந்தன. இவற்றை மெல்ல வெளியிட்டோம். விளக்கமும் பெற்றோம். அவற்றின் சாரத்தை உங்கள் முன் படைக்கின்றேன். இதோ :
இவ்வுரையை வழங்கியது யார் ? குழந்தையைப் படிக்க வைக்கப் பாடுபடும், சாதாரண தொடக்கப் பள்ளி ஆசிரியரா? இல்லை.
முதல் தலைமுறையாக ஏழை மாணவர்களுக்கு உயர் நிலைக் கல்வியளிக்க முயலும் பட்டதாரி ஆசிரியரா? இல்லை. 
‘கல்லூரிக்கு எப்படியோ வந்துவிட்டார்களே ! நமக்குத் தெரிந்தைச் சொல்லிப் பார்ப்போம்’ என்று நினைக்கும் பேராசிரியரா? அவரும் இல்லை.
கல்வி ஆய்வாளர்களா? கல்வித் துறைப் பெரியவர்களா? இல்லை. கல்வித் துறையினரல்ல, மேற் கூறிய அற, ஊக்க உரையை வழங்கியது. பின் யார் ?
“வறுமைப் பாதாளத்தில் வாடி, அறியாமைக் காரிருளில் நடுங்கி, கொத்தடிமைப் பிழைப்புப் பிழைத்து வந்த கோடானு கோடி மக்களுக்குப் புது வாழ்வு தந்த, புது யுகம் அமைத்த எங்கள் தலைவர் காட்டினார் இந்த இலட்சியத்தை” என்று பக்திப் பரவசத்தோடு கூறினார் சோவியத் கல்வியாளர்.
அத்தலைவர் யாரோ ? என்ன பேரோ ?
“அவர் லெனின் ; தோழர் லெனின்; சோவியத் நாட்டின் தந்தை லெனின் பெரியார் லெனின்” இவ்வகையிலே லெனினைப் பற்றிக் கூறக் கேட்டோரம்.
'படி, படி, படி' என்கிற இலட்சியத்தை யாருக்குக் கொடுத்தார் ? ஒரு பிரிவினருக்கா கொடுத்தார் ? இல்லை ! பலருக்கா கொடுத்தார் ? இல்லை. பல பிரிவினருக்கா கொடுத்தார் ? ஆம் அப்படியே.
மாபெருந் தலைவர் எச்சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார் தெரியுமா ?
பல்லாண்டுகளுக்கு முன், சோவியத் ஆட்சி அமைவதற்கு முன், பாட்டாளி ஆட்சிக்குத் திட்டம் தீட்டும் காலம், அது. இரகசியத் திட்டம் தீட்டும் காலம் பலப்பல குழுவினருக்குப் பலப்பல பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட மிக தெருக்கடியான காலம்.
அப்போது இளைஞர் சிலர், தோழர் லெனினை இரகசியமாகக் கண்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் ஆவலைத் தெரிவித்தனர். அவ்விளைஞர்கள், மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டார் ; அவர், அவர் களுக்கு ஒதுக்கிய பணி, படிப்பு ; வேறு பொறுப்புகள் அல்ல.
பிற பொறுப்புகளுக்குத் தேவைக்குமேல் ஆட்கள் கிடைத்துவிட்டதாலா ? இல்லையென்று கேள்விப்பட்டோம். பின் என்ன காரணத்தால் ?
லெனின் சிந்தித்தது இரஷ்யாவின் உடனடி எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல; திட்டமிட்டதும் உடனடித்தேவைக்கு மட்டுமல்ல நீண்ட எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். நீண்ட எதிர்கால வளர்ச்சிக்கும் என்னென்ன தேவை என்று சிந்தித்தார், தெரிவித்தார்.
‘நவீன கல்வியே இரஷிய நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வளத்திற்கும் துணை செய்யும். அக் கல்வி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக, ஆழமாகப் பரவுகிறதோ, அவ்வளவிற்கே, இரஷிசியாவின் எதிர்காலம் நன்றாக இருக்கும் : உறுதியாக இருக்கும். எத்தகைய நிலையையும் தாங்கக் கூடியதாக இருக்கும்’ என்று உணர்ந்தார்.
‘மாணவர்களை அப்போதைய கிளர்ச்சிக்கு இழுத்து சிட்டுவிட்டால். புதிய இரஷியாவை, பொதுவுடைமை இரஷியாவை உருவாக்குவதற்கு வேண்டிய அறிவாளிகள், விஞ்ஞானிகள், தொழில் வல்லுநர்கள் பொறுப்பேற்கும், ஆற்றல் உடையவர்கள் ஆகியோருக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும். அப்பஞ்சம் எல்லாத் துறைகளையும் பாதிக்கும’ என்று தெரிந்து மாணவர்களைக் கிளர்ச்சிக்காரர்களாக்காமல், ஆயத்தக்காரர்களாக இயங்கச் செய்தார்.
இப்படி அவர் நல்வழியில் நடத்தியதால், அதைப் பின்பற்றி எங்கள் மாணவ சமுதாயம் கற்கும் சமுதாயமாகவே இருந்து வருகிறது. கற்றது போதாது; மேலும் மேலும் கற்க வேண்டும் ; கற்றதைப் பயன்படுத்த வேண்டும் ; சமூக நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு, பெருநடை போட்டு வருகிறது . எங்கள் இளைய தலைமுறை யினரைப் பற்றி நாங்கள் பூரிப்படைகிறோம்" என்று சோவியத் கல்வியாளர்கள் கூறக் கேட்டோம்.
மாணவர்களை விதைநெல் போன்று கட்டிக் காத்த பெருத் தலைவரைப் பற்றி அவர்கள் பெருமை கொள்வதில் வியப்பில்லை. ஆனால் அவர் காட்டிய அறிவு வழியை, ஆக்க வழியை, பத்திய வழியை அவருக்குப் பின்னரும், பல்லாண்டு களாக, நாடு முழுவதும், கோடானுகோடி மக்களும், தொடர்ந்து பின்பற்றி வருவது எங்களுக்குப் பெரும் வியப்பாக, இருந்தது.
“என்னே ! உங்களுக்குத் தலைவரிடம் உள்ள பற்று” என்று பாராட்டினோம்.
“வாழ்வளித்த பெரியவருக்கு தாங்கள் செய்யக் கூடியது. வேறு என்ன இருக்கிறது ? தம் நன்மைக்காகப் பெருமைக்காக அல்லாது, மக்களின் நீண்ட எதிர்காலத்திற்காக, நாட்டின் நிலையான நல்வாழ்விற்காக வழிகாட்டினால், அதைக்கூடப் பின் பற்ற முடியாத மக்கள் இருந்தென்ன; போயென்ன ?” என்று பரவசத்தோடு ஒருவர் விளக்கக் கேட்டோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டோம். போற்ற மட்டும் கற்றுக்கொண்டு, பின்பற்றுவதற்கு வேண்டிய ஊக்கமும் உள் வலியும் அற்றுக் கிடக்கும் நம்மை எண்ணி நாணியதை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ !
“இளைஞர் சமுதாயம், மாணவர் சமுதாயம், பொதுச் சமுதாயத்தின் ஒரு பகுதி ; சிறு பகுதியும் கூட. சமுதாயம் முழுவதும், கல்வியின் தேவையையும், அருமையையும் பெருமையையும் உணர்ந்து, அதற்குத் துணை நின்றால் மட்டுமே, அப்படித் துணை புரியும்போதே, இளைஞர் கல்விப்பயிர் அழிக்கப்படாதிருக்கும்."
“ஆகவே மாணவர் சமுதாயத்தில் மட்டுமின்றி, பொதுச்சமுதாயம் முழுவதிலும் கல்விச் சூழ்நிலையை வளர்த்து விட்டார் லெனின்” என்றார்.