text
stringlengths 0
12k
|
---|
52 |
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
இல்லவள் மாணாக் கடை? |
53 |
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
திண்மைஉண் டாகப் பெறின். |
54 |
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
பெய்யெனப் பெய்யும் மழை. |
55 |
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
சொற்காத்துச் சோர்விலாள் பெண். |
56 |
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
நிறைகாக்கும் காப்பே தலை. |
57 |
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
புத்தேளிர் வாழும் உலகு. |
58 |
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் |
ஏறுபோல் பீடு நடை. |
59 |
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் |
நன்கலம் நன்மக்கட் பேறு. |
60 |
1.2.3 புதல்வரைப் பெறுதல் |
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த |
மக்கட்பேறு அல்ல பிற. |
61 |
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் |
பண்புடை மக்கட் பெறின். |
62 |
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் |
தம்தம் வினையான் வரும். |
63 |
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் |
சிறுகை அளாவிய கூழ். |
64 |
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் |
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. |
65 |
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் |
மழலைச்சொல் கேளா தவர். |
66 |
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து |
முந்தி இருப்பச் செயல். |
67 |
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து |
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. |
68 |
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் |
சான்றோன் எனக்கேட்ட தாய். |
69 |
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை |
என்நோற்றான் கொல் எனும் சொல். |