செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந் தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. பொருள்: அலந்தார்க்கு -கருத்துரை: வறுமையால் வருந்துவோர்க்கு ஈதலும், வறுமை யுற்ற விடத்தும் தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வனவற்றைச் செய்யாமையும். நட்புச்செய்தவரை மேன்மேலும் பெருக்குவதும் சிறந்த அறம். அலந்தார்க்கு : அல என்ற பகுதியடியாகப் பிறந்த வினையாலணையும் பெயர். ஈந்த புகழ் - ஈந்ததனாலாய புகழ் : காரணப் பொருளில் வந்த பெயரெச்சம். இன்னாத்தகைமை - இன்னாமைக்கு ஏதுவாகிய தகைமை : காரணப் பொருள்தரும் பெயரெச்சம். கேள்வி - கேட்டலா லுண்டாகிய அறிவு : காரணவாகு பெயர்.
கழகத்தால் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தல்இம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. பொருள்: கழகத்தால் - சூதாட்டத்தினால், வந்த - கிடைத்த பொருள் - பொருளை, காமுறாமை - விரும்பாமையும்; பழகினும் -கருத்துரை: சூதாடிப் பொருள் சம்பாதியாதிருத்தலும், பிராமணரை நெருப்புக்கு ஒப்பாக நினைந்து நடத்தலும், உழுது பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்குச் சிறந்த அறம் ஆகும். காமுறாமை, ஒழுகல், வாழுதல் என்பன பெயர்ச்செவ்வெண்ணாதலால், மூன்றும் என்னும் தொகையோடு ஈற்றில் முற்றும்மை பெற்றது. காமுறாமை : எதிர்மறைத் தொழிற்பெயர். பழகினும் : உம் : எதிர்மறை. கழகம் - சூதாடுமிடம், இடவாகுபெயராய்ச் சூதை யுணர்த்திற்று. தீப்போல் ஒழுகலாவது - குளிர் காய்வார் நெருப்பை மிக நெருங்காமலும் நீங்காமலும் ஒத்த இடத்து இருப்பதுபோல் பார்ப்பார் இடத்தும் நின்று நடத்தல். பார்ப்பார் - மறைநூல். பார்ப்பார் : காரண இடுகுறிப் பெயர்.
வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற செய்கை யடங்குதல் திப்பியமாம் . பெய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். பொருள்: வாயின் அடங்குதல் - தீவழிச் செல்லாமல் காக்குதலால், துப்புரவு ஆம் - இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை - உடலின் செய்கை, அடங்கல் - அடங்குதலால், மாசு அற்ற - குற்றம் அற்ற, திப்பியம் ஆம் -கருத்துரை: உளம், உரை, செயல் ஆகிய மூன்றும் அடக்கமாயிருப்பவர் முத்தி யடைவர். துப்புரவு - உறுதியான அனுபவம்; இங்குச் செல்வம், திப்பியம் : திவ்வியம் என்ற வட சொற்றிரிபு : சொர்க்கத்தில் பிறப்பது என்பது பொருள். வீடு - அவா முதலியவற்றை விடுதலால் உளதாகும் முத்தி : காரணவாகு பெயர். நெஞ்சம் : இடவாகு பெயர். வஞ்சத்தின் : இன் ஐந்தனுருபு, நீக்கப் பொருள்.
விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு. பொருள்: விருந்து இன்றி - விருந்தினரை இல்லாமல், உண்ட - தனித்து உண்ணக் கழிந்த, பகலும் - பகற்பொழுதும், திருந்து இழையார் - திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல - பொருந்துவதால், புடை பெயரா - கழிதல் இல்லாத, கங்குலும் - இரவும்; இல்லார்க்கு - வறியவர்க்கு, ஒன்று - ஒன்றை, ஈயாது - கொடாமையினால், ஒழிந்து அகன்ற - கழிந்த, காலையும் - நாளும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், உரன் உடையார்க்கு - அறிவுடையார்க்கு, நோயே -கருத்துரை: விருந்தில்லாப் பகலும், மனைவியில்லா இரவும், வறிஞர்க் கீயாக் காலைவேளையும் அறிவுடையோர்க்கு நோய் செய்வன. பகல் : தொழிலாகுபெயர். ஈயாது : வினையெச்சம். ஒழிந்து அகன்ற : ஒரு பொருட் பன்மொழி. நோயைத் தருபவற்றை நோய் என்றது காரணத்தைக் காரியமாகக் கூறுவதோர் உபசார வழக்கு. உரன்; உரம் என்பதன் போலி. உடையார் : உடைமை என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர் திருந்திழையார் என்பதற்கு மேற்பொருளின்றி, திருந்து என்பதை இழைக்கு அடையாகக் கொள்ளாது பொருள் சிறப்புக்கருதி இழையார் என்பதற்கு அடையாகக் கொள்வதும் ஆம். இழை - அணி : தொழிலாகுபெயர்
ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி யேற்றார்க் கியைவ கரப்பானும் - கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச் சென்றுவீழ் வார். பொருள்: ஆற்றானை -கருத்துரை: செயல்வலி அற்ற ஏவலாளனை வேலைவாங்குவோனும், இரந்தவர்க்கு இயைந்ததில்லை யென்று சொல்வோனும், இறப்பை நினையாது தீத்தொழில் புரிவோனும் நரகத்து வீழ்வர். ஆற்றான் :வினையாலணையும் பெயர். ஆற்று : ஆல் விகுதி புணர்ந்துகெட்டு நின்ற ஏவலொருமை வினைமுற்று. ஏற்றார் இயைவ :வினையாலணையும் பெயர்கள் : ஏல், இயை : முதனிலைகள்,நிரயம் : வடசொல்.
கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் - சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். பொருள்: கால் - நடையில், தூய்மை - தூயது ஆகுந் தன்மை, இல்லா - இல்லாத, கலிமாவும் - குதிரையும், காழ் - கட்டுத்தறியை, கடிந்து - முறித்து, மேல்தூய்மை -கருத்துரை: நடைச் சிறப்பற்ற குதிரையும், ஏறிச்செல்ல உதவாத யானையும், முகமலர்ச்சியுடன் கூறாதான் பள்ளியும் வீண் என்பது. கால் : எண்ணலளவை யாகுபெயராகிய கால் என்பது முதலாகு பெயராய் நடையை யுணர்த்தியது. இந் நடை ஐவகைப் படும். அவை : மென்னடை, விரைநடை, ஆடுநடை, சுற்றுநடை, ஓட்டநடை, கலிமா - கலினமா என்பது னகரந்தொக்கு மருவியது போலும். கலினம் - கடிவாளம் : கலிக்கின்ற மா என்னலுமாம். கலித்தல் - கனைத்தல். காழ் : பண்பாகு பெயர். சீற்றம் - சிறிது பொழுது நிகழும் சினம். பள்ளி : உம் தொக்கது. குறுகார் : எதிர்மறை வினைமுற்று.
சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந் தாளினால் தந்த விழுநிதியும் - நாடோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும் காப்பிகழல் ஆகாப் பொருள். பொருள்: சில்சொல் - மெல்லிய சொல்லையும், பெரும்தோள் - பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் - பெண்டிரும்; பல்வகையும் - பலவகையாலும், தாளினால் - முயற்சியினால், தந்த - தேடிய, விழுநிதியும் - சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் - எப்பொழுதும், நா - நாக்கு, தளிர்ப்ப - நீர் அருந்தும்படி, ஆக்கிய - சமைத்த, உண்டியும் - உணவும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், காப்பு - காத்தலை, இகழல் ஆகா - தாழ்த்திக் கூறுதலாகாத, பொருள் பொருள்களாம்;கருத்துரை: பெண்டிரும், பொருளும், உண்டியும் காப்பாற்று முறையில் காப்பாற்றப்படாமற் போனால் கெட்டுப்போம் என்றபடி. சிறுசொல் என்பது சில்சொல் என்றாயிற்று. சிறுமை நிரம்பாமை. தந்த : இடவழுவமைதி, விழுநிதி : பண்புத்தொகை நிலைத்தொடர். தோறு : ஏழாம் வேற்றுமை இடப் பொருண்மையையும் பன்மையையும் உணர்த்தும் இடைச்சொல். உண்டி தொழிலடியாகப் பிறந்த பெயர்.
வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். பொருள்: வைததனை - ஒருவன் வைததை, இன் சொல் ஆ - இனிய சொல்லாக, கொள்வானும் - கொள்கின்றவனும், நெய்பெய்த - நெய் வார்த்த, சோறு என்று - சோறு இது ஆம் என்று, கூழை மதிப்பானும் - கூழை மதிக்கின்றவனும், கைப்பு அதனை - கைக்கின்ற பொருளை, கட்டி என்று - வெல்லக்கட்டி என்று ஊறிய தன் வாயில் ஊறும்படி, உண்பானும் - உண்கின்றவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், மெய்ப்பொருள் - உண்மையாகிய பரம் பொருளை, கண்டு வாழ்வார் - கண்டு - வாழ்பவர் ஆவார். கருத்துரை: வன்சொல்லை மென்சொல்லாகவும், கூழைப் பாற் சோறாகவும், கைப்புணவை இனிப்புணவாகவும் கருதுகின்றவர் மெய்ப்பொரு ளுணர்ந்தவர். வைதது : படர்க்கை ஒன்றன்பால் இறந்தகாலச் செயப்பாட்டு வினையாலணையும் பெயர். ஆ : ஆக என்பதன் ஈறு தொக்கது. ஊறிய : செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம் மெய்ப்பொருள் உணர்ந்தவர்கட்கு உடலுக்கும் உயிருக்குமுள்ள குண வேற்றுமைகள் தெரியுமாதலால்வைதல் உடலையன்றி உயிரைச் சேராதென்றும், கைப்பும் இனிப்பும் மண்ணின் நிலைகளேயன்றி உண்மையல்லவென்றும் அறிந்ததனால், அறிவில் வேற்றுமையில்லையென்று தோன்றி உடம்பின்மேல் பற்று இல்லாதது பற்றி அவற்றைப் பாராட்டார் என்பது. கூழ் - புல்லரிசி, ஊறிய கைப்பதனை என்று கொண்டு ஊறிய என்பதற்கு மிகுந்த என்றும் பொருள் கூறலாம்; இப்பொருளில் பெயரெச்சம்.
ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர் இம்மைக் குறுதியில் லார். பொருள்: ஏவு -கருத்துரை: ஏவிய சொற் கேளா மக்களும், மனைவியைப் போற்றாக் கணவனும், வீட்டுப் பொருளை வீணே அழிக்கின்ற மனைவியும் இம்மையில் எவருக்கும் பயனற்றவர். ஏவாதும் ஆற்றும் இளங்கிளை என்று கொண்டு சொல்லாத காரியத்தையும் தன் விருப்பம்போல் செய்கின்ற புதல்வன் எனலுமாம். ஆது : யாது என்பதன் மரூஉ; உம் : இழிவு சிறப்பும், முற்றுப் பொருளும் தர நின்றது. எள்ளி : எள் என்னும் முதனிலையடியாகப் பிறந்த வினையெச்சம். தலைமகன் - கணவன். இம்மைக்கு என்பதில் இழிவு சிறப்பு உம் தொக்கது; கு : உருபு மயக்கம். மனை தன்னிடத்திலுள்ள செல்வத்தை யுணர்த்தலால் இடவாகு பெயர். தேய்க்கும் : பிறவினைப் பெயரெச்சம். தேய் : தன்வினை பிறவினை இரண்டுக்கும் பொது. உறுதி : தொழிலாகு பெயர்.
கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர் வல்லே மழையருக்குங் கோள். பொருள்: கொள்பொருள் - தான் கொள்ளுதற்குரிய பொருளை, வெஃகி - விரும்பி, குடி அலைக்கும் - குடிகளை வருத்துகின்ற, வேந்தனும் - அரசனும்; உள்பொருள் - உண்மை நிகழ்ச்சியை, சொல்லா - சொல்லாமல், சலம் மொழி - பொய் சொல்லுகின்ற, மாந்தரும் - மனிதரும்; இல் இருந்து -கருத்துரை: குடிகொன்று இறைகொள்ளும் கொடுங்கோல் மன்னனும், பொய் பேசுகின்றவனும், பெண் தன்மையை மீறி நடக்கின்ற பெண்ணும் இருக்கும் நாட்டில் மழை பெய்யாதென்பது. கொள் பொருள் : வினைத்தொகை. இறை - வரி. உள் பொருள் : பண்புத்தொகை. சொல்லா : மல் ஈறு தொக்க வினையெச்சம். வல்லே : இடைச்சொல். அருக்கும் : பிறவினைப் பெயரெச்சம், அருகு : தன்வினைப்பகுதி; கோள் - வலி; தங்கள் இயக்கத்தால் ஒருவனுக்கு நன்மையேனும் தீமையேனும் வருவிக்கும் கிரகங்களுக்கு ஆதலால், பண்பாகு பெயர்.
தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர் தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். பொருள்: தூர்ந்து -கருத்துரை: வறுமைக் காலத்தும் உறவினர்களே உதவி புரிபவர்; எவ்வளவு நெருங்கிப் பழகினும் பகைவர் பகைவரே,கற்பிளப்பைப்போல் என்றும் ஒன்று கூடாதவர் அற்பர்; இவர்கள் தன்மை ஆராய்ந்து சொல்லப்பட வேண்டுபவை. ஒழுகியக்கண் என்பதில் அகரம் தொக்கு ஒழுகிக் கண் என்று வந்தது; கண் : ஈற்று வினையெச்சம். தேர்ந்தக்கால் : இது கால் ஈற்று வினையெச்சம். உம் இரண்டும் இறந்தது தழீஇயதனோடு உயர்வு சிறப்பில் வந்தன. ஏ இரண்டும் தேற்றம் - துணை : பண்பாகு பெயர். கல், பொருள் : இரண்டும் உவமையாகு பெயர்கள். தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். எனவே, தேராவிடத்து இத்தன்மையது எனத் தோன்றாப் பொருளாவார்.
கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலம் கல்வியிம் மூன்றும் குறியுடையோர் கண்ணே யுள. பொருள்: கண்ணுக்கு - கண்களுக்கு, அணிகலம் - அணியத் தக்க பூணாவது, கண்ணோட்டம் - கண்ணோடுதல்; காமுற்ற -கருத்துரை: கண்ணோட்டத்தாற் கண்ணும், நாணத்தாற் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது. அணிகலம் : வினைத்தொகை. கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை; அஃது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி. கண்ணோட்டம் காரண ஆகுபெயர். நாணம் - பெண்கட்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன. ஓட்டம் - அம் : கருவிப் பொருளணர்த்தும். உடைமை : இடைநிலைத் தீவகவணி. சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார். உள : உண்மை என்னும் பண்படியாகப் பிறந்த பலவின்பால் வினைமுற்று.
குருடன் மனையாள் அழகும் இருள்தீரக் கற்றறி வில்லான் தழ்ந்துரையும் - பற்றிய பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும் எண்ணின் தெரியாப் பொருள். பொருள்: குருடன் - குருடனுடைய, மனையாள் - மனைவியினது, அழகும் - அழகும்; இருள்தீர - மயக்கம் நீங்க, கற்று -கருத்துரை: குருடனுக்கு அவன் மனைவியழகும், படிப்பில்லாதவன் அவையிற் பேசும் பேச்சும், இசையில்லாதவன் கேட்கும் பாட்டும் பயனற்றவை என்பது. இருள் - பேதைக்குணம் : உவமையாகு பெயர். கதழ்ந்து - கதழ் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். உரை : முதனிலைத் தொழிற் பெயர். யாழ் : கருவியாகுபெயர் கேட்பு : பு ஈற்றுத் தொழிற்பெயர். பற்றிய - விரும்பப்பட்ட எனலுமாம். பண் : காரிய வாகுபெயர்.
தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா நன்பயம் காய்வின்கண் கூறலும் - பின்பயவாக் குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். பொருள்:தன்பயம் - தனக்கு வரும் பயனை, தூக்காரை - ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை, சார்தலும் - அடுத்தலும்; காய்வின்கண் - ஒருவன் சினமுற்ற காலத்து, தாம் பயவா - தாம் பயன்படாமல் போவனவாகிய, நல் பயம் - நன்மையாகிய பயனைத் தரும் மொழிகளை, கூறலும் - சொல்லுதலும்; பின் பயவா - பின்னே பயன் படுதலில்லாத, குற்றம் - குற்றங்களை, பிறர்மேல் - மற்றவர்கள்மேல், உரைத்தலும் - சொல்லுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தெற்றென -கருத்துரை:தனக்கு உதவியற்றவரைச் சேர்தலும், சினமுற்ற காலத்தில் பயனற்ற மொழிகளைப் பேசுதலும், மனவருத்தத்துடன் வீணாகக் குற்றத்தைச் சாட்டுதலும் அறிவின்மையாம். பயம் - பயன். தூக்கார் : விணையாலனையும் பெயர். தெற்றெனவு; தெற்று என்னும் முதனிலையடியாகப் பிறந்த தொழிற்பெயர். காய்வு : தொழிற் பெயர்.
அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர் ஒற்றாள் எனப்படு வார். பொருள்: அருமறை - பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடா மறை மொழியை, காவாத - காப்பாற்றாத, நட்பும் - நட்பாளனும்; பெருமையை - பெருமைக்குணத்தை, வேண்டாது, விரும்பாமல், விட்டு - தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, ஒழிந்த - தருமத்தினின்றும் நீங்கிய, பெண்பாலும் - பெண்ணும்; யாண்டானும் - எங்காயினும், செற்றம்கொண்டு - கோபங்கொண்டு; ஆடும் - அவன்மேல் குற்றங் கூறுகின்ற, சிறு தொழும்பும் - குற்றலாளனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், ஒற்றாள் எனப்படுவார் - ஒற்றர்களை ஒப்பரென்று சொல்லப்படுவார்;கருத்துரை: ஒருவன் மறைமொழியை வெளிப்படுத்தும் நண்பனும், உள்ள பெருமையும் ஒழிக்கக்கருதும் பெண்ணும் தலைவரிடம் பகை பாராட்டும் வேலையாளனும் ஒற்றரை ஒத்தவர் என்பது. அருமறை - அருமை மறை. அருமை - சொல்லக்கூடாமை. மறை - மறைக்கப்படுவது; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டது. நட்பு, தொழும்பு; அவற்றையுடையவர்க்கு ஆகுபெயர். பெருமை - ஒரு பெண்ணுக்குக் கற்பால் உண்டாகும் பெருமை. அறத்தின் நீங்கிய பெண் உருவில் மட்டும் பெண்ணே என்பார் பெண்பால் என்றார். யாண்டு என்பது தன் தலைவனுக்குப் பகைவர் அயலார் நட்பினராகிய இடம். ஆன் : ஆயின் என்பதன் மரூஉ. ஆடுதல் - பேசுதல். ஒற்றாள் : இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. ஒற்று - துறந்தார்முதலியமாற்றுருக்கொண்டு பகைவரிடஞ்சென்று ஒன்றுபட்டு அங்கு நடப்பனவற்றை ‘அறிந்துவந்து உரைப்பவர். ஒற்று : முதனிலைத் தொழிலாகுபெயர்.
முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. பொருள்: முந்தை -கருத்துரை: இளமையில் கல்வி கற்றுப், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றிச், சான்றோர் செல்லும் நெறியிற் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம். முந்தை : பண்புப் பெயர். இஃது இளமையின்மேல் நின்றது எழுத்தின் வரவு - எழுத்தினது வரவு. ஆறாவது வினைமுதற் பொருண்மையில் வந்த காரகம். தூரா என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முதல் நிலையாகிய தூர் என்பது தன்வினை பிறவினை யிரண்டுக்கும் பொது. விழுப்ப நெறி : விழுப்பத்தையுடைய நெறி எனின் இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்க தொகை.
கொட்டி யளந்தமையாப் பாடலும் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான் ஆளுங் கலங்கா முறுதலும் இம்மூன்றும் கேள்வியுள் இன்னா தன. பொருள்: கொட்டி - தாளவோசையால், அளந்து - அளவிட்டு அமையாப் பாடலும் - அதற்குத் தகுந்தபடி பாடாத பாடலும் தட்டி - கைதட்டி, து பிச்சை - சோற்றுப் பிச்சைக்கு, புக்கு - போய், உண்பான் - வாங்கி உண்ணுபவனுடைய, பிளிற்றலும் - இரைதலும் துச்சு இருந்தான் - ஒதுக்குக்குடி யிருந்தவன், ஆளும் கலம் -கருத்துரை: தாளத்துக்கு ஒவ்வாப் பாட்டும், பிச்சையெடுத்துண்பான் பேரிரைச்சலும், ஒட்டுக்குடியன் பெருவீட்டின் பொருளைக்குக் கருதுதலும் இன்பத்தைத் தராதவை. காட்டி : தொழிலடியாகப் பிறந்த பெயர்; இ : செயப்படு பொருள் விகுதி, ஓசையை யுணர்த்தின் கருவியாகு பெயர். து - உணவு : முதனிலைத் தொழிலாகு பெயர். துச்சு - சிறிது பொழுது தங்குமிடம்.
பழமையை நோக்கி அளித்தல் கிழமையால் கேளிர் உவப்பத்தழுவுதல் - கேளிராய்த் துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும் மன்னற் கிளையான் தொழில். பொருள்: பழமையை -கருத்துரை: இளவரசனா யிருப்பவன் முன்னோரோடு பழகிவந்த அமைச்சர் முதலியோரைப் பேணுதலும், இனத்தாரை உரிமையுடன் காப்பாற்றுதலும், நல்லவரைத் தனக்கு நட்பாக்குதலும் செய்ய வேண்டும் என்பது. பழமையாவது பழமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவர்க்கு உடன்படும் நட்பு. துன்னிய : செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். அமைச்சன் அரசனுக்குக் கிளையாயிருத்தல் பற்றி மன்னற்கிளையான் அமைச்சன் எனலுமாம். திரட்டல் : பிறவினைத் தொழிற்பெயர்.
கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும் - இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும் உள்ளன போலக் கெடும். பொருள்: கிளைஞர்க்கு - சுற்றத்தார்க்கு, உதவாதான் - உதவாதவனுடைய, செல்வமும் - பொருளும்; பைங்கூழ் - பசிய பயிர், விளைவின்கண் - தனக்குப் பயன் கொடுக்குங் காலத்து, போற்றான் - அதனைக் காக்கும் இயல்பில்லாதவனுடைய, உழவும் - உழவுத் தொழிலும்; இளையனாய் - இளையனாயிருந்து, கள்உண்டு - கள்ளைக் குடித்து, வாழ்வான் - வாழ்கின்றவனுடைய, குடிமையும் - குடிப்பிறப்பும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், உள்ளனபோல - நிலை நிற்பனபோலத் தோன்றி, கெடும் - அழியும்;கருத்துரை: செழுங்கிளை தாங்காதான் செல்வமும், விளையுங் காலத்திற் காவாதான் பயிரும், இளமைதொட்டே கள்ளுண்கின்றவன் நற்குடி வாழ்க்கையும் கெட்டுப்போம் என்பது. கிளைஞர் - சுற்றத்தார், இளையன் - அறிவில் சிறியவன் எனலுமாம். தோன்றி; சொல்லெச்சம். பைங்கூழ் - பசுமை + கூழ் : பசுமை - இளமை.
பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்தபின் வெருவும் - புலந்தெரியா மக்கட் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும் துக்கப் பிறப்பாய் விடும். பொருள்: பேஎய் பிறப்பில் - பேயினது பிறப்புடையவர்களில், பெரு பசியும் - மிக்க பசியும்; பாஅய் விலங்கின் பிறப்பின் - பாயும் இயல்புடைய மிருகப்பிறப்படைந்த உயிர்களில், வெருவும் - அச்சமும்; புலம் தெரியா - அறிவாகியபொருளை உணராத, மக்கள்பிறப்பின் - மனிதப் பிறப்படைந்த உயிர்களில், நிரப்பு - வறுமையும், இடும்பை - துன்பந் தருவனவாம்; இ மூன்றும் - இம் மூன்று பிறப் புயிர்களும், துக்கப் பிறப்பு ஆய்விடும் - துன்பமாகிய பிறப்புள்ள உயிர்களாய்விடும்;கருத்துரை: பேய்ப்பிறப்பில் பசி வருத்தமும், விலங்குப் பிறப்பில் கொலைப்பயமும், மக்கட்பிறப்பில் வறுமைத்துன்பமும் மிகுந்திருக்கின்றமையால் எப்பிறப்பும் நலமுடையதன்று. பிறப்பு நீங்க முயல வேண்டும் என்பது. பேஎய், பாஅய் : செய்யுளிசைநிறை அளபெடைகள். வெருவு : தொழிற் பெயர். நிரப்பு - மங்கல வழக்கு : எதிர்மறை இலக்கணையால் நிரம்பாமையை யுணர்த்தி அதன் காரணமாகிய மறுமைக்கு ஆகுபெயராயிற்று.
ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். பொருள்: ஐஅறிவும் - ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய -கருத்துரை: பேரமைச்சர்கள் ஐம்பொறிகளை அடக்கி நடத்தவும், அரசனுக்குத் தீங்கு வராமல் காக்கவும், பகைவருடைய நிலைமையை அறிந்து நடக்கவும் வல்லவர்களாயிருக்க வேண்டும். ஐம்பொறிகள் - மெய், வாய், கண், மூக்கு, செவி, எய்துவது : எய்து என்னும் வினையினடியாகப் பிறந்த எதிர்கால வினையாலணையும் பெயர், மாறு : முதனிலைத் தொழிற் பெயர். நிலை : தொழிற்பெயர்.
நன்றிப் பயன் தூக்கா நாணிலியும் சான்றோர்முன் மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர் எச்சம் இழந்துவாழ் வார். பொருள்: நன்றிப்பயன் - ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பயனை, தூக்கா - அளந்தறியாத, நாண் இலியும் - நாணமில்லாதவனும்; சான்றோர் முன் - பெரியவர் முன்னே, மன்றில், அறநிலையத்தில், கொடும்பாடு - பொய்ச் சொல்லை, உரைப்பானும் - சொல்லுகின்றவனும்; நன்று இன்றி - நற்செய்கை இல்லாதவனாய், வைத்த - ஒருவன் வைத்த, அடைக்கலம் - அடைக்கலப் பொருளை, கொள்வானும் - கைப்பற்றிக் கொள்பவனும்; இ மூவர் - ஆகிய இந்த மூவரும், எச்சம் இழந்து - தம் மக்களை இழந்து வருந்தி, வாழ்வார் - உயிர் வாழ்வார்;கருத்துரை: நன்றி மறந்த நாணிலியும், மன்றிற் பொய்ச் சாட்சி புகன்றவனும், அடைக்கலப் பொருளை வௌவியவனும் மக்கட்பேறற்று வருந்துவர் என்பது. கொடும்பாடு : பண்புத்தொகை. கொடுமை - வளைவு. எச்சம் - எஞ்சுவது : தொழிற்பெயர்; ஒருவன் இறந்தபின் மிகுந்து நிற்பது மக்களும் புகழும் ஆதலால் இரண்டும் கூறலாம். நாணிலி என்பதில் இகரம் ஆண்பாலை யுணர்த்தியது வாழ்வார் : வாாழார் என உடன் பாட்டில் வந்த எதிர்மறை. அடைக்கலம் : பண்பாகுபெயர்.
நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலும் - சீர்பயவாத் தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்த லில. பொருள்: நோ -கருத்துரை: வருந் துன்பத்துக்கு அஞ்சா நண்பரின் நட்பும் விருந்தோம்பாத மனைவியோடிருப்பும், நற்குணமில்லாதவர் அயலிற் குடியிருப்பும் பயனற்வை என்பது. நோ : முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஈர்வளை : பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; பைந்தொடி என்னும் பொருளது. ஈர் : வினைத்தொகையாயின் அறுக்கப்பட்ட என்னும் பொருட்டு. வளை : பண்பாகு பெயர்.
நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். பொருள்: நல் விருந்து - நன்மையான விருந்தினரை, ஓம்பலின் - பாதுகாத்தலால், நட்டாள் ஆம் - கணவனுக்கு நட்பினளாம்; வைகலும் - நாடோறும், இல் - இல்லறத்தை, புறஞ் செய்தலின்கருத்துரை: விருந்தோம்பல், மனையறம் போற்றல், மக்கட் பெறுதல் இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் என்பது. மனைக்கிழத்தி - மனைவி. கிழத்தி - கிழமையுடையவள். புறஞ் செய்தல் என்பதில் புறஞ்செய் ஒரு சொல். விருந்தினர்க்கு நன்மையாவது, இல்வாழ்வானால் இயன்றவளவு தந்த உண்டி முதலியவற்யை ஏற்று மகிழ்தல். ஆம் என்பதனை, தாய், கிழத்தி என்பவற்றோடுங் கூட்டுக. தொன்மை குடி - தொல் குடி. தொன்மை - பழைமை, அஃதாவது தொன்று தொட்டு வருவது.
அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற விட்டகல் கில்லாத வேட்கையும் - கட்டிய மெயந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும் தந்நெய்யில் தாம்பொரியு மாறு. பொருள்: அலைகடலின் அலைகின்ற - கடலைப்போல், அச்சம் தோன்றலும்; மாறி - மாறிப் பெரும் பயம்கருத்துரை: நெஞ்சில் எஞ்சா அச்சமும், நீக்க மாட்டாத வேட்கையும், உண்மை யுணராமையா லுண்டாகும் சினமும் ஒருவனுக்கு மிகுந்த வருத்தத்தைச் செய்வனவாம். அலைகடல் : வினைத்தொகை. கடலின் : இன் : ஐந்தனுருபு, ஒப்புப் பொருள், ஆர்வு : தொழிலாகுபெயர். கட்டிய மெய்ந்நிலை என்பதற்குப் பெரியோரால் உறுதியாகத் தழுவப்பட்ட மெய்யினது நிலை எனினுமாம். ஆடு முதலானவை : இசையெச்சம். அகலகில்லாத : இதில் கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை.
கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும் சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும் சால்போடு பட்ட தில. பொருள்: கொழுநனை - கணவனை, இல்லாள் - இல்லாதவளது. கறையும் - மாதவிடாயும்; வழிநிற்கும் - தன் ஏவலின் வழியில் நிற்கின்ற, சிறு ஆள் - சிற்றளை, இல்லாதான் - இல்லாதவனுடைய, கை மோதிரம் - கைவிரல் அணிந்த மோதிரமும், பற்றிய - தான் மேற்கொண்ட, கோல் - ஆளும் முறை, கோடி - தப்பி, வாழும் அரசனும் - வாழ்கின்ற அரசனும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும்; சால்போடு - நிறையோடு, பட்டது இல - பொருந்திய சிறப்புடையன அல்லவாம்;கருத்துரை: புருடன் இல்லாதவள் பூப்பும் சிற்றாளில்லான் செங்கையாழியும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவை என்பது. கொழுநன் - மனையாளுக்கு உறுதியாகிய துணையாயுள்ளவன். கறை - கறுப்பு, கோடு : முதனிலை; இகரம் வினையெச்ச விகுதி, சால்பு - நிறைவு; அஃதாவது அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையாகிய ஐந்து நற்குணங்களும் நிறைந்தது. கொழுநனையில்லாள் நலனும் பாடங்கொள்ளின், நலன் என்பது அழகாம்.
எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும் செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும் நொந்தார் செயக்கிடந்த தில். பொருள்: எதிர் நிற்கும் -கருத்துரை: கணவனை எதிர்த்து நிற்கும் மனைவியும் நன்னடக்கையில்லா அடிமையும், பகை பாராட்டும் உறவினரும் பழவினைப் பயன்போற் பரிகரிக்கப்படாதவர் என்பது. தொழும்பு : தொழிலாகு பெயர், செயிர் : குற்றம்; ஈண்டுப் பகை. மயிர் நரைப்ப என்பது முதுமைப் பருவத்தை யுணர்த்த வந்த குறிப்புச் சொல்.
இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள. பொருள்: இல்லார்க்கு - வறியவர்க்கு, ஒன்று ஒருபொருளை ஈயும் - கொடுக்கும், உடைமையும் - செல்வமும்; இவ்வுலகில் - இவ்வுலகத்தின் பொருள்களின், நில்லாமை - நிலையாமையை, உள்ளும் ஆராய்ந்து அறியும், நெறிப்பாடும் - வழியில் பொருந்துதலும்; எவ்வுயிர்க்கும் - எல்லா வுயிர்க்கும், துன்பு உறுவ - துன்பம் அடைவதற்கு ஏதுவாகிய செய்கைகளை, செய்யாத தூய்மையும் - செய்யாத தூய தன்மையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நன்று - அறத்தை, அறியும் - அறியக்கூடிய மாந்தர்க் மக்கட்கு, உள - உண்டு;கருத்துரை: வறியோரைக் காக்கும் செல்வமும், பொருள்களின் நிலையாமையை யறிந்து நடக்குந் தன்மையும் எவ்வுயிர்க்கும் இன்பம் அளிக்கும் செம்மையும் அறமுணர்ந்தவர்களிடத்திலேயே உண்டு என்பது. ஒன்று - எண்ணல் அளவையாகு பெயர். உடைமை : பண்பாகு பெயர். உலகு : இடவாகு பெயர். நில்லாமை . நிலையாமை, நில்லாதவற்றை நிலையின வென்றுணர்வது புல்லறிவாண்மை எனப்படும். உருவ : பலவின்பால் வினையாலணையும் பெயர்.
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும் பெறுமா றரிய பொருள். பொருள்: அரும்தொழில் -கருத்துரை: நிலத்தையுழவல்ல பாரம் சுமக்கும் எருதும், உடலுறுப்பிலக்கணம் அமைந்த கன்னியும், வழிதப்பிப் பசித்து வருந்தும் விருந்தும் கிடைத்தற்கரிய பொருள் என்பது. மெய் - மெய்யின் இயல் : பொருளாகுபெயராய்த் தன் இலக்கணத்தை யுணர்த்திற்று. வந்த : இடவழுவமைதி. உயர் திணையாகிய கன்னி மிகுதி பற்றி மூன்றும் என்னும் அஃறிணை முடிபேற்றது.
காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால் வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந் தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர் செல்வ ரெனப்படு வார். பொருள்: காவோடு - சோலையை உண்டாக்குதலுடன், அறக்குளம் - அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் - தோண்டுவித்தவனும்; நாவினால் - நாவினால் ஓதி, வேதம் - வேதத்தை, கரை கண்ட - முடிவுகண்ட, பார்ப்பானும் - அந்தணனும்; தீது - தீய வழியை, இகந்து - கடந்து, ஒல்வது -கருத்துரை: தோப்பும் குளமும் அமைத்தவனும் மறைநூலோதி யுணர்ந்தவனும், பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துண்ணும் இல் வாழ்வானும் உண்மைச் செல்வராவர் என்பது. காவோடு குளந்தொட்டான் என்பதில் மூன்றனுருபு வேறு வினை உடனிநிகழ்ச்சியாதலால், கா என்றதற் கேற்ப உண்டாக்குதல் என்னுந் தொழில் வருவிக்கப்பட்டது. கரை கண்ட என்பது ஒரு சொல்லின் தன்மையது.
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும் காண அரியவென் கண். பொருள்: உடுத்த ஆடை - உடுக்கப்பட்ட ஆடை, இல்லாதார் - இல்லாதவர், நீர் ஆட்டும் - நீராடுதலும்; பெண்டிர் பெண்கள், தொடுத்து -கருத்துரை: ஆடையின்றி நீரில் இறங்கிக்குளிப்பதும், பெண்கள் வழக்குத் தொடுத்து மன்றேறுதலும், கொடையாளர்கள் வறுமை யுறலும் காணக்கூடிய வல்ல என்பது. உடுத்தாடை என்பதில் உடுத்த என்ற பெயரெச்சத்து ஈறு தொகுத்தல். ஆட்டு : பிறவினை முதனிலைத் தொழிற்பெயர். நல்குரவு என்ற தொழிற் பெயரில் நல்கூர் முதனிலை. "உடுத்தலால் நீராடார், ஒன்றுடுத் துண்ணார், உடுத்தாடை நீருட் பிழியார் - விழுத்தக்கார், ஒன்றுடுத்தென்றும் அவைபுகார் என்பதே, முந்தையோர் கண்ட முறை" என்ற ஆசாரக்கோவை யடிகளும் காண்க.
நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும் அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும் மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும் திறவதில் தீர்ந்த பொருள். பொருள்: நிறை - புலன்கள்மேற் போகாமல் நிறுத்தப்படும், நெஞ்சு உடையானை - நெஞ்சுடையவனுக்கு, நல்குரவு அஞ்சும் - வறுமை பயப்படும்; அறனை - அறத்தையே, நினைப்பானை - நினைக்கின்றவனுக்கு, அல்பொருள் - பாவம், அஞ்சும் - பயப்படும்; மறவனை - கொலையாளிக்கு, எவ்வுயிரும் - எல்லா உயிர்களும், அஞ்சும் - பயப்படு; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும் திறவதில் - வன்மைகளுள், தீர்ந்த பொருள் - சிறப்பாக முடிந்த பொருள்களாம்;கருத்துரை: வறுமை நிறைநெஞ்சுடையானைச் சேரவும், மறம் அறநினைப்பாளனை யணுகவும், எவ்வுயிரும் கொலையாளியைக் காணவும் அஞ்சும் என்பது. நிறை நிறுத்தல், தொழிற்பெயர். முன்னர் அறம் என்றமையால் அல்பொருள், பாவம் அல்லது மறம் எனப்பட்டது. திறவது : பண்புப் பெயர். திறவதிற் றீர்ந்த பொருள் என்பதற்கு வேறுபாட்டில் நீங்கித் தம்முட் சிறந்த பொருளுள்களாம் என்றும் பொருள் கூறலாம்.
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர் அரிய துணிந்துவாழ் வார். பொருள்: இரந்துகொண்டு -கருத்துரை: பிச்சையெடுத்துப் பெரும்பொருள் ஈட்டுதலும், வேசை தன்னிடம் மெய்யன்புடையவளென்று நம்புதலும், வேண்டிய கருவிகளில்லாமல் திரைகடலோடித் திரவியந் தேட முயலுதலும் முடியாத செயல் என்பது. ஒண்பொருள் - ஒருவனைப் பலருள்ளும் ஒண்மையுடையவனாகச் செய்யவல்ல செல்வம்; செய்வல் : அல் ஈற்றுத் தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. பரந்தொழுகுதலாவது - உள்ளம் ஒருவனைப் பற்றி நில்லாது பொருள்வளம் மிக்க பலரிடத்தும் செல்லுதல். பாசம் - பற்று; பண்பாகுபெயர். கடலூடு : ஊடு : ஏழனுருபு.
கொலைநின்று திதின்றொழுகு வானும் பெரியவர் புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன் றீகென் பவனை நகுவானும் இம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார். பொருள்: கொலைநின்று - கொல்லுந் தொழிலில் நீங்காது நிலைபெற்று, தின்று ஒழுகுவானும் -கருத்துரை: கொலைசெய் துண்பதும், பெரியோர் தழுவினால் அவர்க்கு வணக்கஞ் செய்யாது தானும் அவரைத் தழுவுவதும் இல்லை என்று இரப்பவனைப் பார்த்து இகழ்தலும் நல்லொழுக்கத்தை மேற் கொள்ளாதவர் செயல்களாம். ஈக எனப்படுவது தொகுத்தல் விகாரம் பெற்றது.
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். பொருள்: வள்ளன்மை - வரையாது கொடுத்தலை, பூண்டான்கண் - அணியாக மேற்கொண்டவனிடத்துள்ள, செல்வமும் - பொருளும்; உள்ளத்து - உள்ளத்தில், உணர்வு உடையான் -கருத்துரை: கொடையாளனிடத்துற்ற செல்வமும், அறிவொடு கற்ற அறநூலும், தன்னை யடுத்தவர்க்குச் செய்யத்தக்கதைத் தெரிந்தவனும் உறுதியான பொருள்கள் என்பது. வள்ளன்மை : பண்புப் பெயர்; ‘வள்' முதனிலை; ‘ள்' : சந்தி. நூல் : காரண வாகு பெயர். செல்வமும் நூலும் தலைமகனும் எனத் திணைவிரவிச் சிறப்பினால் அஃறிணை உயர்தினை முடிபேற்றது. பொத்து : பொந்து என்பதின் வலித்தல்.
மாரிநாள் வந்த விருந்தும் மனம்பிறிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர் போற்றற் கரியார் புரிந்து : பொருள்: மாரிநாள் - மழைக்காலத்தில், வந்த விருந்தும் - வந்த விருந்தினரும், மனம் பிறிதாய் - தன் மனம் வேறொன்றிற் சென்றும், காரியத்தில் - பொருள் வருவாயினை மேற்கொள்ளுதலில், குன்றா - குறைவுபடாத, கணிகையும் - வேசையும்; வீரியத்து -கருத்துரை: மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், காம மயக்கமில்லாத வேசையும், வெற்றியையே சிறப்பாகக் கருதும் வீரனும் பாதுகாத்தற்கு அரியவராவர். பிறிது : பிற என்னும் இடைச்சொல் லடியாகப் பிறந்த பெயர். சேவகன் : சேவகம் என்னும் பண்படியாகப் பிறந்த பெயர்.
கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும் குடிமா சிலர்க்கே யுள. பொருள்: கயவரை - கீழ்மக்களை, கையிகந்து - கைவிட்டுகருத்துரை: கீழ்மக்கள் கூட்டுறவை விட்டிருப்பதும், மேன் மக்களை எப்பொழுதும் பிரியாதிருப்பதும், தமக்குப் பழி வராமற் காப்பதும் நல்லோர்க்கு உரியன என்பது. கயவர் : கய என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். நயம் : நீதி. நள் - நடுக்கம்; இப் பொருளில் நள்ளிரா அச்சத்தைத்தரும் நடு இரா எனக் கொள்க. இருள் : பண்பாகுபெயர். உம் : உயர்வு சிறப்பு. வடுவான : பலவின்பாற் பெயர்.
தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும் தவத்தில் தருக்கினார் கோள். பொருள்: தூய்மை உடைமை - மனத் தூய்மை யுடையராயிருத்தலும்; துணிவு ஆம் -கருத்துரை:தூய்மையும், வாய்மையாயிருப்பதுவும், தீமையை நினையாமலும் சொல்லாமலு மிருப்பதும் நற்றவமுடையார் செயல் என்பது. துணிவு - துணியப்பட்டது : தொழிலாகுபெயர். அகற்றும் - அகல் என்னும் முதனிலை யடியாகப் பிறந்த பிறவினைப் பெயரெச்சம். தவத்தினரை நோக்கினமையின் வனப்பு பெண்ணின் வனப்புக்காயிற்று. மனத்தினாற் சொல்லாமையாவது இலக்கணையால் நினையாமையாம். தீமை - தீமையைத் தருவது - காரணம் காரியமாகச் சொல்லப்பட்டது.
பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால் கொண்ட அருந்தவம் விட்டானும் - கொண்டிருந் தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர் நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய். பொருள்: பழி அஞ்சான் -கருத்துரை: பழிக்கு கஞ்சாதவனும், கேடுற்றதென்று தவத்தை விட்டவனும், மனையாளுக்குப் பயந்து நடக்கும் கணவனும் உண்ணாது ஒழியத் தக்கவர் என்பது. அஞ்சான் : முற்றெச்சம். பசு, எருது : உவமை யாகுபெயர்கள். நெல் அரிசிக்காகி; அது சோற்றுக்கு ஆயினமையின் இரு மடியாகுபெயர். ‘நெல்லுண்ட நெஞ்சிற்கோர் நோய்' எனப் பாடங் கொள்ளின் நெல்லைத்தின்னநெஞ்சுக் குண்டாகும் துன்பத்தோடு ஒத்தவர் எனப் பொருள் கொள்க.
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. பொருள்: முறை செய்யான் - முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற - அடைந்த, தலைமையும் - தலைமைத் தன்மையும், நெஞ்சில் - மனத்தில், நிறை இலான் - உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட - மேற்கொண்ட தவமும் - தவமும்; நிறை ஒழுக்கம் - குறைவற்ற ஒழுக்கத்தை, தேற்றாதான் - தெளிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் - பெற்ற அழகும்; இவை மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தூற்றின்கண் - புதலினிடத்து, தூவிய - விதைத்த, வித்து - விதையை யொக்கும்;கருத்துரை: முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அலுகும் வீண் என்பது. நிறை இரண்டனுள் முன்னது தொழிற்பெயர். பின்னது காலங் கரந்த பெயரெச்சம், தேற்றாதான் : தன்வினை, வினையாலணையும் பெயர். தேறு : முதனிலை.
தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். பொருள்: துறைபோல் -கருத்துரை: பொருட் பெண்டிர் ஆகிய வேசையும், சூதாடியும், மிகுந்த வட்டி வாங்கிப் பொருள் ஈட்டுவானும் பேராசை பிடித்தவர் என்பது. ஆசைக்கு முடிவில்லை யாதலால் அதனைக் கடலென உருவகித்துள்ளார்; கணிகைத்துறை போலுதலாவது வேண்டினார் யாரும் அடைந்து இன்பங்கொள்ள இசைதல். நாள் - நாளும் : உம் : முற்றுப் பொருள்; தொக்கது. வாசி - வட்டம், வட்டி : திசைச்சொல்.
சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும் நல்லான் வழங்கும் நெறி. கருத்துரை: நல்லாருள் நல்லா ரெனப்படுதலும், நண்பரொடு நட்புக்கொள்ள வல்லா ரெனப்படுதலும், தன்பேச்சுச் செல்லா இடத்திற் செல்லாதிருத்தலும் நல்லவர் குணம் என்பது. கொள்ளாத : பலவின்பால் வினையாலணையும் பெயர், உள் உருபு மூன்றனுள் முன்னிரண்டும் உருபு மயக்கம். ஆள் : தொழிலாகு பெயர்.
உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும் நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும் செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும் செப்ப நெறிதூரா வாறு. பொருள்: உப்பின் - உப்பினது, பெருங்குப்பை - பெரிய குவியல், நீர் படியின் - தன்னில் நீர் படிந்தால், இல் ஆகும் - இல்லாமற் போகும்; நட்பின் கொழுமுளை - நட்பினது செழித்த முளையானது, பொய் வழங்கின் - பொய்யாகிய நெருப்பைப் பெய்தால், இல் ஆகும் - அழிந்துபோம்; செப்பம் உடையார் - நடுவுநிலைமையுடையார், மழை அனையர் - மழை போல எல்லார்க்கும் ஒப்ப உபகரிப்பார்; இ மூன்றும் - நீர் படியாமையும் பொய் வழங்காமையும் மழையை ஒத்தலும் ஆகிய மூன்றும், செப்பநெறி - நல்வழியை, தூரா ஆறு - தூராமைக்குக் காரணமாகிய சாதனங்களாம்;கருத்துரை: உப்பின் குவியல் நீர் படியாமையும், நட்பினர் பொய் வழங்காமையும், மழையனையார் செப்பமுடைமையும் நல்வழியைக் கெடுக்கா முறைகள் என்பது. படியின் : வினையெச்சம். படிதல் - தோய்தல், பொருந்தல், செப்பம் இரண்டனுள் முன்னது பண்பாகுபெயர்; பின்னது பண்புப் பெயர்.
வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில் கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர் நல்குரவு சேரப்பட் டார். பொருள்: வாய் - நீர் வரும்வழி, நன்கு அமையாக் குளனும் - நன்றாக அமைந்திராத குளமும்; வயிறு ஆர - தன் வயிறு நிரம்பும்படி, தாய்முலை உண்ணா - தாயின் முலைப்பாலை உண்ணாத, குழவியும் - குழந்தையும்; சேய் மரபில் - உயர்ந்த முறைமையில், கல்வி மாண்பு - நூல்களைக் கற்றலினது மாட்சிமைப்பட்ட அறிவு, இல்லாத மாந்தரும் - இல்லாத மனிதரும்; இ மூவர் - ஆகிய இம்மூவரும், நல்குரவு சேரப்பட்டார் - வறுமையால் பீடிக்கப்பட்டவராவர்;கருத்துரை: குளத்துக்கு நீர் இன்மையும், குழவிக்குப் பாலின்மையும்; மாந்தருக்கு அறிவின்மையும் நல்குரவு எனப்பட்டன என்பது. வாய் - வழி, குளன் : குளம் என்பதன் போலி. சேய மரபில் - உயர்ந்த குலத்தில் எனவும், உயர்ந்த முறையில் எனவும் பொருள் கொள்ளலாம். இம் மூவரும் நல்குரவு அடைந்து வருந்துதல் உறுதியாதலால், துணிவுபற்றி நல்குரவு சேரப்பட்டார் என இறந்த காலத்தாற் கூறினார். சேய் மரபில் என்றதாவது நல்லாசிரியரிடத்து அவர் குறிப்பின்வழி ஒழுகி முன்னர் நிகண்டு கற்று ஆராய்ச்சி செய்து இலக்கணநூல் முதலியவற்றைக் கற்பது என்பதாம்.
எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம். பொருள்: எள்ளப்படும் -கருத்துரை: பகைவன் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் கருதத் தக்கது ஆகாதபடி செய்தலும், அவன் கருத்தறிந்து மறவாதிருத்தலும் அக் கருத்தை அரசர்க்குச் செவ்வையாகத் தெரிவிக்கும் வலிமை பெற்றிருத்தலும், வேவுகாரர்க்குரிய குணங்களாம் என்பது. மரபிற்று : குறிப்பு வினைமுற்று; குறிப்பு வினையாலணையும் பெயருமாம். உள் பொருள் - உண்மையாகிய பொருள் : பண்புத்தொகை - முட்டு - முட்டுதல் : முதனிலைத் தொழிற்பெயர்.
அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல் நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும் குற்றந் தரூஉம் பகை. பொருள்: அன்பு பெருந்தளை - அன்பினாலாகிய பெருந்தளையினது, யாப்பு - கட்டு, நெகிழ்ந்து ஒழிதல் - தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்; கற்பு - கல்வியாகிய, பெரும்புணை - பெரிய தெப்பத்தை, காதலின் - பொருள் முதலியவற்றின் விருப்பினால், கை விடுதல் - முற்றும் விட்டுவிடுதலும்; நட்பின் - ஒருவரிடத்தில் வைத்த நட்பினால், நயம் நீர்மை - நீதித் தன்மையினின்று, நீங்கல் - நீங்குதலும், இவை மூன்றும் - ஆகிய இவை மூன்றும், குற்றம் தரூஉம் -கருத்துரை: உயிரிடத்தில் அன்பற்றிருப்பதும், பொருட்பற்றால் கல்வியை விடுதலும்; நட்பினால் ஒருபாற் கோடுதலும் பகைபோற் குற்றந் தருவன என்பது. அற்புத் தளை : மூன்றும் வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்க தொகை; அன்பாகிய தளையெனின் பண்புத்தொகையாம். தளை : முதனிலைத் தொழிலாகு பெயர். கல்வி, ஒருவனை அறிவு நூல்களை யுணர்ந்து பொருளியலறிந்து பிறவிக் கடலைக் கடந்து வீடுபெறச் செய்வதால், பெரும்புணை யென உருவகிக்கப் பட்டது. குற்றம் - இருமைப் பயனு மிழத்தல் - தரூஉம் : செய்யுளிசைநிறை யளபெடை.
கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக் ககன்ற இனம் புகுவானும் இருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் - மூவர் முழுமக்க ளாகற்பா லார். பொருள்: கொல்வது -கருத்துரை: அஞ்சாது ஓருயிரைக் கொலை புரியக் கருதுவதும், படிப்பிற் பற்றற்றவரோடு சேர்வதும், முன்னோர் பொருளைப் பெருக்காமல் செலவழிப்பதும் மூடர் செய்கை என்பதாம். கொல்வது : தொழிற்பெயர். அஞ்சான் : முற்றெச்சம். கல்விக்கு : கு உருபு நீக்கப் பொருளில் வந்தது. அறிவின்மையால் மக்கட்டன்மையில் குறைந்தவரை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு. இதை இலக்கணமுடையதாகக் கொண்டு அறிவு நுழையப் புரையில்லாத மக்கள் எனப் பொருள் கூறுவாருமுண்டு. பாலார் : பண்படியாகப் பிறந்த பெயர்.
பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும் புணையின் நிலைகலக்கும் ஆறு. பொருள்: பிணி - நோயானது, தன்னை - , தின்னுங்கால் - வருத்தும்போது, தான் வருந்தும் ஆறும் -கருத்துரை: நோயால் வருந்துவதும், உயிர்போக நோவதும் செல்வம் அழிவதும் மனவுறுதியைக் கலக்குவன என்பது. பிணி : கருத்தாப் பொருள் உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்ட தொழிற்பெயர். மாண்பு - நிலைமை. இயங்கல் என்பதன் இறுதியில் உம் தொக்கது, ஆறு என்பதை இயங்கலோடும் கூட்டுக.
அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். பொருள்: அருளினை - அருளை, நெஞ்சத்து - மனத்திடத்து, அடை கொடா தானும் - நிறைத்து வையாதவனும்; பொருளினை - செல்வத்தை, துவ்வான் -கருத்துரை: அருளில்லாதவனும், பொருளை வீணாய்ப் புதைத்து வைக்கின்றவனும், பிறர்க்கு மனம் மிகவும் வருந்தும்படி பேசுகின்றவனும் மக்கட் பிறப்பைச் சார்ந்தவராகக் கருதப்படார் என்பது. அடை - அடைக்கப்படுவது, துவ்வான் : முற்றெச்சம்; து : முதனிலை, இறந்து - கடந்து : இற - கட. இறந்து இன்னா சொல்லகிற்பான் என்பதற்குத் தன் பகைவன் இறக்க அதன் பின்னும் தீய சொல் சொல்லவல்லவன் என்றுரைத்தலுமாம்.
ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும் அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு. பொருள்: பொருளை - செல்வத்தை, ஈதற்கு - பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு, செய்க - தேடக்கடவன்; அறம்நெறி - அறத்தின் வழியில், சேர்தற்கு - சேரும் பொருட்டு, பெரும் நூலைச் செய்க - பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; யாதும் சொல்லை - எத்தன்மைத்தாகிய சொல்லையும், அருள் புரிந்து - அருளை விரும்பி, சொல்லுக - சொல்லக் கடவன்; இமூன்றும் -ஆகிய இம் மூன்றும், இருள் உலகம் - நகர உலகை, சேராத ஆறு - சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம்;கருத்துரை: அறஞ் செயற்காகப் பொருளையும், அறநெறியிலொழுகுவதற்காகப் படிப்பையும், அருள் விளங்கும்படி பேச்சையும் ஒருவர் கொள்ளவேண்டுமென்பது. ஈதற்கு : கு, பொருட்டுப் பொருள். நூலைச் செயல் என்பது இங்குத் தகுதியால் கற்பதன்மேற் கூறப்பட்டது. யாதும் : உம் உயர்வு சிறப்பு. யாதும் என்பதன் உம்மையைச் சொல்லை யென்பதனோடு கூட்டுக.
பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் - மறுவந்து தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும் மன்னா உடம்பின் குறி. பொருள்: உயிரை -கருத்துரை: தாய் தந்தையர் இருக்கும்போது அவரை இகழ்ந்து நடப்பதும், அவர்கள் இறந்தபோது வீணாய்த் துன்பப்படுவதும் துன்பம் நேர்ந்தபோது அறஞ்செய்யாது போனோமே யென்று நாணுவதும் உடற்பற்று மிக்க மூடர்கள் செய்கை என்பது. பெறுதி, இறுதி : தி விகுதி பெற்ற தொழிற்பெயர்கள். நடு நின்ற ‘உயிரை' என்னுஞ் சொல் பெறுதிக்கண் என முன்னும். இறுதிக்கண் எனப் பின்னும் சென்றடைதலால் தாப்பிசைப் பொருள் கோள். செய்யுங் கடமைகளைச் செய்த சிறப்புப்பற்றித் தாய்தந்தை முதலியோரை அறிவுப் பொருளாகிய உயிரென்றும், செய்ந்நன்றியறிதல் முதலிய உயிர்க்குணம் இவனிடத்துத் தோன்றாமையாகிய இழிவுபற்றி இவனை உடம்பு என்றுங் கூறினமையால், அவ்விரண்டும் முறையே அவ்வுயர்வு இழிவுகளைப்பற்றி வந்த திணைவழுவமைதி, பொச்சாந்து : பொச்சா : பகுதி
விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை யொன்றும் உணராத ஏழையும் - என்றும் இறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவா தவர். பொருள்: விழுத்திணை -கருத்துரை: நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர் என்பது. விழுத்திணை - விழுப்பமாகிய திணை : பண்புத்தொகை. எழுத்து - தன்னை யுணர்த்தும் இலக்கண நூலக் காதலால் காரியவாகுபெயர். ஒன்றும் : உம் முற்றுப் பொருளுடன் இழிவு சிறப்புப் பொருளிலும் வந்தது.
இருளாய்க் கழியும் உலகமும் யாதும் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும் பேதைமை வாழும் உயிர்க்கு. பொருள்: இருளாய் -கருத்துரை: அறிவில்லாதவர் இருக்கும் இடமும், நன்மை தீமை தெரியாது கோபித்துரைப்பதும், தீயவற்றில் செல்லும் விருப்பமும் மேன்மேலும் அறியாமைக்கு ஏதுவாகிய காரியங்களாம் என்பது. இருள் : அறியாமைக்கு உவமையாகுபெயர். இடத்தின் நிகழும் உயிர்களின் தன்மையை அவ்விடத்தின்மே லேற்றி இலக்கணையால் இருளாய்க் கழியும் உலகம் என்றார். அல்ல : பண்படியாகப் பிறந்த பெயர்.
நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியா தார். பொருள்: நண்பு - நட்புக்குணம், இல்லார்மாட்டு - இல்லாதவரிடத்தும், நசைக்கிழமை - அன்புரிமையை, செய்வானும் - செய்கின்றவனும்; பெண்பாலை - மனைவியை, காப்பு - காப்பதை, இகழும் - இகழுகின்ற, பேதையும் - அறிவில்லாதவனும்; பண்பு இல் - குணமில்லாத இழுக்கு ஆன - வழுவுதலான, சொல் ஆடுவானும் - சொல்லைச் சொல்பவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், ஒழுக்கம் - தமக்குரிய ஒழுக்கத்தை, கடைப்பிடியாதார் - உறுதியாகக் கொள்ளாதவராவர்;கருத்துரை: நண்பராகத் தகாதாரை நட்புச் செய்கின்றவனும் மனைவியைக் காவாதவனும், இழிமொழி பேசுகின்றவனும் நல்லொழுக்கமில்லாதவர் என்பது. மாட்டு : ஏழனுருபு. நசைக்கிழமையாவது, நண்பர்கட்குச் செய்யவேண்டிய கடமை. இழுக்கு : முதனிலைத் தொழிற்பெயர்.
அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின் வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. பொருள்: அறிவு அழுங்க - நல்லறிவு கெடும்படி, தின்னும் - வருத்துகின்ற, பசிநோயும் - பசியாகிய நோயும், மாந்தர் - நல்லோர், செறிவு அழுங்க - நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் - உண்டாகும் விருப்பமும்; செறுநரின் - பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை - கொடிய மொழிகளை, நோனா - பொறுக்காத, வெகுள்வும் - கோபமும்; இவை மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், நல்வினை - நல்ல வினையை, நீக்கும் - நீக்குகின்ற, படை - படைக் கருவிகளாம்;கருத்துரை: கொடும் பசியாலும், பெருவிருப்பாலும், கொடுமொழி பொறுக்காத கோபத்தாலும் அறமுறை கெடும் என்பது. செறிவு : தொழிற்பெயர். செறுநர் : வினையாலணையும் பெயர். நோனா - நோன் : பகுதி. வெவ்வுரை : வெம்மை + உரை. பசிநோய் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர் பெய்யெனப் பெய்யும் மழை. பொருள்: கொண்டான் - கொண்ட கணவனுடைய, குறிப்பு அறிவாள் - குறிப்பறிந்து நடக்கின்றவள், பெண்டாட்டி - மனைவியாவாள் : கொண்டன - தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை - செய்யும் முறைப்படி, செய்பவன் - செய்பவன், தவசி - தவசியாவன்; கொடிது - தீங்கினை, ஒரீஇ - நீக்கி, நல்லவை -கருத்துரை: குறிப்பறிந்து நடக்கும் பெண்டாட்டியும் நோன்புகளை முறைப்படி நடத்துகிற தவசியும், குடிகளுக்குத் தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசனும் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும் என்பது. பெண்டு ஆட்டி - பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள், தவசி செய்கையாவன : மனம் பொறிவழியிற் போகாமல் நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்குதல், மழை பனி நீர் நிலை வெயில் இவற்றில் நிற்றல் முதலியவைகளை மேற்கொண்டு, அவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல்.
ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும் நற்புடையி லாளர் தொழில். பொருள்: ஐங்குரவர் - ஐந்து பெரியோர்களுடைய, ஆணை - கட்டளையை, மறுத்தலும் - மறுத்து நடத்தலும்; ஆர்வு உற்ற - விரும்பிய, எஞ்சாத - குறையாமல் வளர்கின்ற; நட்பினுள் - நட்புச் செய்வாரிடத்து, பொய் வழக்கும் - பொய் பேசுதலும்; நெஞ்சு அமர்ந்தகருத்துரை: ஐங்குரவர் ஆணைப்படி நடவாமையும், நண்பனிடத்துப் பொய் சொல்லுதலும், கற்புடை மனைவியைத் துறத்தலும் பாவச் செய்கைகள் என்பது. ஐங்குரவர் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் நெஞ்சு : இடவாகு பெயர். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். துறத்தல் - முற்றிலும் நீக்கிவிடுதல்.
செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும் திங்கள்மும் மாரிக்கு வித்து. பொருள்: செந்தீ - வேள்விச் செந்தீயை, முதல்வர் - வளர்கின்ற அந்தணர்கள், அறம் - தமக்குரிய அறத்தை, நினைந்து வாழ்தலும் - மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் - கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன், முறை நெறியில் - முறையாக ஆளும் வழியில்; சேர்தலும் - சேர்ந்து நடத்தலும்; பெண்பால் - பெண்ணுக்கு உரிய குணம் அமைந்தவள், கொழுநன்வழி - தன் கணவனுடைய குறிப்பின் வழியில், செலவும் - நடத்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், திங்கள் - மாதந்தோறும் பெய்யவேண்டிய, மும்மாரிக்கு - மூன்று மழைக்கும், வித்து - காரணங்களாம்;கருத்துரை: அந்தணர் மறைவழி நடத்தலாலும், அரசன் செங்கோல் நெறி பிறழாததாலும், மனைவி கணவனுக்கு இசைந்து நடப்பதாலும் திங்கள் மும்மாரி பொழிந்து நாடு செழிக்கும் என்பது. தீக்களில் வேள்வித்தீ சிறந்வதாதலால் வேள்வித்தீயைச் செந்நீ என்றார். செலவு : தொழிற்பெயர், முறை : தானியாகுபெயர்.
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர் நல்லுலகம் சேரா தவர். பொருள்: கற்றாரை - கற்றறிவுடையாரை, கைவிட்டு - முற்றும் விட்டு நீக்கி, வாழ்தலும் - வாழ்பவனும்; காமுற்ற - தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு - விரும்பினாற்போல, செய்து ஒழுகும் - செய்து நடக்கும், பேதையும் - அறிவில்லாதவனும்; முட்டு இன்றி - தடையில்லாமல், அல்லவை செய்யும் - தீங்குகளைச் செய்யும், அலவலையும் - பேச்சுக்காரனும்; இ மூவர்- ஆகிய இம் மூவரும்; நல் உலகம் - நல்ல உலகங்களை, சேராதவர் - சேராதவராவார்,கருத்துரை: கற்றவரைக் கைவிட்டிருப்பதும், வேண்டியவற்றை ஆராயாமல் செய்யத் துணிதலும், தீங்குகளைச் செய்து அவற்றைப் பற்றிப் பேசுதலும் நல்ல உலகம் சேரக் காரணமாக மாட்டா என்பது. வாழ்தல் என்பது வாழ்வானுடைய தற்கிழமையாகி நிற்றலால் சேராதவர் என்ற குறிப்பால் அவ்வாழ்வோனை உணர்த்தியது; பெட்டாங்கு - பெட்ட ஆங்கு.
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும் எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்தமைந்த எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. பொருள்: பத்திமை சான்ற -கருத்துரை: படையும், மதிலரணும், மிக்க செல்வமும் நன்கமையப் பெற்றுள்ள அரசனே சிறந்தவன் என்பது. படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்க்கு உறுப்பென்று வள்ளுவர் கூறியிருக்கவும் இவர் படை அரண் செல்வம் ஆகிய மூன்றை மட்டும் குறித்தது அமைச்சையும் நட்பையும் படையுள்ளும், நாட்டை அரணுள்ளும் அடக்கியதனாலென்க. எயிலரண் என்றது மற்றை மலை நீர் காடு அரண்களையும் கருதியதாம். உறுப்பு : தொழிலாகு பெயர். மண் : கருவியாகுபெயர்.
சிறந்த பத்து ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை.ஆர்கலி உலகத்து -கடல்சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மனிதர்எல்லார்க்கும், ஒழுக்கமுடைமை - சதாசாரமுடையவராதல்,ஓதலின் - நூல்களைக் கற்றலைக் காட்டிலும், சிறந்தன்று- சிறந்ததாம். "ஓதலி னன்றே வேதியர்க்கொழுக்கம்." - ஒளவையார். "மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்." - திருக்குறள். ஆர்கலி - நிறைந்த ஓசை -நிறைந்த ஓசையையுடையது - கடல் : வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. சிறந்தன்று -உடன்பாட்டு இறந்தகால வினைமுற்று : இதில் அன்சாரியை. ஆசாரம் - விலக்கியன ஒழித்து விதித்தன செய்தல்: சீலம்.
காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். பொழிப்புரை: பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல். பதவுரை: காதலின் - ஒருவன் பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும், கண்ணஞ்சப்படுதல் - அவரால் அஞ்சப்படுதல், சிறந்தன்று -சிறந்தது. பிறருடைய அன்பினும் நன்குமதிப்பேசிறந்தது என்பதாம். காதல் - விருப்பம். கண்ணஞ்சுதல் - அஞ்சுதல் : ஒருவன் தான் பெற்றிருக்கும் மதிப்பினாலே பிறர் அஞ்சிநடத்தல். கண்ணஞ்சப்படுதல் - பிறர் அஞ்சி நடக்கத்தக்க நன்குமதிப்பு.
மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை. பொழிப்புரை: தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல். பதவுரை: மேதையின் - புத்தி நுட்பத்தால் தானே ஒன்றை அறியும் அறிவைக்காட்டிலும், கற்றது மறவாமை - கற்றநூல்களின் பொருளை மறவாருதிப்பது, சிறந்தன்று -சிறந்தது. மேதை - அறிவு. கடைப்பிடித்தல் -மறவாதிருத்தல். கற்ற கல்வியை மறவாமையானது அறிவுநுட்பத்தைக் காட்டிலும் சிறந்தது. அறிவு நுட்பம் மாத்திரம் அமைத்திருப்து போதாது : கற்ற கல்வியை மறவாமையும் வேண்டும். நுட்பமாகப் பொருள்களை மேலு மேலும் நுனித்தறிய வல்லவனாயினும், ஒருவன் முன் குருமுகமாகக் கற்றதை மறவாமல் போற்றல் வேண்டும்.
வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. பொழிப்புரை: செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை. பதவுரை: வாய்மை உடைமை - உண்மையுடைமை, வண்மையின் - செல்வமுடைமையைக் காட்டிலும், சிறந்தன்று -சிறந்தது. வண்மையை ஈகையென்று கொள்வதுமாம். செல்வத்தா லாகும் நன்மையைக் காட்டிலும் வாய்மையா லாகும்நன்மை சிறந்தது. 'யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.' - திருக்குறள் 'வளமையிற் சிறந்தன்று' - பாடபேதம்.
இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை. பொழிப்புரை: இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை. பதவுரை: மெய் பிணியின்மை - சரீர சௌக்கியம், இளமையின் - பாலியத்தைக் காட்டிலும், சிறந்தன்று - மிக்கசிறப்புடையது. நோயோடு கூடியதாயின் இளமை வேண்டா;நோயில்லையாயின் முதுமையும் அமையும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றது ஒரு மூதுரை.
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. பொழிப்புரை: அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை. பதவுரை: நாணு - அடாத காரியங்களைச் செய்யக் கூசுதலானது, நலன் உடைமையின் - ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும், சிறந்தன்று - மிக்கசிறப்புடையது. 'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் :' 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை'ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம். நாணு என்பதில் உ சாரியை. நாணாவது செய்யத் தகாதனவற்றின்கண் உள்ள மொடுங்குதல்.'
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று. பொழிப்புரை: நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து. பதவுரை: கற்பு - ஒருவர் கல்வி உடையராதல், குலன் உடைமையின் - நற்குடிப் பிறப்பு உடையராதலைக் காட்டிலும், சிறந்தன்று -சிறப்புடையது. உயர்குடிப் பிறப்பினும் சிறந்ததுகல்வி. 'மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர் பாடு'. - திருக்குறள். 'வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும், கீழ்ப்பா லொருவன் கற்பின், மேற்பா லொருவனும் அவன்கட் படுமே'. - புறம்.
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. பொழிப்புரை: தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல். பதவுரை: கற்றாரை - கல்வியறிவுடையாரை, வழிபடுதல் - உபசரித்தொழுகுதல், கற்றலின் - ஒன்றைக் கற்பதைக் காட்டிலும், சிறந்தன்று -சிறந்ததாம். ஒருவன் கற்றலும் வேண்டும்; கற்றாரை வழிபடுதலும் வேண்டும் : இவ்விரண்டிலும் வழிபாடு சிறந்ததாம். வழிபாடு செய்தலால் குருவருள் உண்டாகும் : அஃதுண்டாகவே தான் கற்கலுற்றது கைகூடும். தண்டாப்பத்திலும் இந்நூல், 'கற்றல் வேண்டுவோன் வழிபாடு தீண்டான்'என்றுரைக்கின்றது. 'தேவரனையர் புலவரும்; தேவர் தமரனையர் ஒரூர் உறைவார்; தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார்; கற்றன்னர் கற்றாரைக் காதலவர்' - நான்மணிக்கடிகை.
செற்றாரைச் செலுத்தலிற் றற்செய்கை சிறந்தன்று. பொழிப்புரை: பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல். பதவுரை: தற்செய்கை - தன்னைப் பெருகச்செய்தல், செற்றாரை - பகைவரை, செறுத்தலின் - தண்டித்தலினும், சிறந்தன்று -சிறப்புடையதாம். தற்செய்கை - தன்னைப் பகைவரினும் பெருகச் செய்தல் :அதாவது அங்கங்களை அபிவிர்த்தி செய்தல். அரசன் தன் அங்கங்களை அபிவிரித்திசெய்தால் பகைவர் தாமே அஞ்சி அடங்குவர் : தண்டோபாயத்தை அனுசரிக்கும் அவசியம் இல்லை. ஆகவேபகைவரைத் தண்டிக்கப் புகுவதைக் காட்டிலும் அரசன்தன் அங்கங்களைப் பலப்படுத்துவதே சிறப்புடையது என்பதாம். 'செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்'. - திருக்குறள்.
முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று. பொழிப்புரை: செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து. பதவுரை: முன்பெருகலின் - செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின் அழிதலைக்காட்டிலும், பின் சிறுகாமை - உள்ள அளவில் பின் குறையாமை, சிறந்தன்று -சிறப்புடையதாம். செல்வம், உள்ள அளவினும் ஓங்கி வளர்ந்து அழிவதைக் காட்டிலும், உள்ள அளவிற் குறையாதிருப்பதே சிறந்தது. 'தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர், நிலையின் இழிந்தக் கடை'ஆகையால், நின்ற நிலையில் தாழாமையே சிறந்தது. ஆகவே நின்ற நிலையில் தாழாதபடி முயற்சிசெய்தல் வேண்டும் என்பதாம்.
அறிவுப்பத்து ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரிற் பிறந்தமை ஈரத்தி னறிப. பொழிப்புரை: கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர். பதவுரை: ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மனிதர் எல்லாருள்ளும், பேரில் பிறந்தமை -ஒருவன் பெருங்குடியிற் பிறந்ததை, ஈரத்தின் - உயிர்களிடத்தில் அவனுக்குள்ள அன்பினால், அறிப -அறிவர். 'நலத்தின்கண் நாரின்மை தோன்றின்அவனைக், குலத்தின் கண் ஐயப் படும்'ஆகையால், ஒருவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதற்கு அவனிடத்துள்ள கருணையே அறிகுறி.
ஈர முடைமை ஈகையி னறிப. பொழிப்புரை: ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர். பதவுரை: ஈரம் உடைமை - ஒருவன் மனத்தில் கருணையுடையவன் என்பதை, ஈகையின் - ஏழைகளுக்குக் கொடுப்பதனால், அறிப -அறிவர். ஒருவனிடத்துக் கருணை உண்டு என்பதற்கு அவனுடைய ஈகையே அறிகுறி.
சோரா நன்னட் புதவியி னறிப. பொழிப்புரை: ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர். பதவுரை: சோரா நல் நட்பு - ஒருவன் தளராத நல்ல சிநேகம் உடையவன் என்பதை, உதவியின் - அவன் தனது சிநேகருக்குச் செய்யும் உதவியினால், அறிப -அறிவர் சோரா - இளையாத உறுதியுள்ள. ஒருவர் ஒருவரோடு உறுதியான நட்புடையவர் என்பதற்கு அவர் அவருக்கு ஆபத்திலே செய்யும் உதவியே அறிகுறி. 'ஆபத்திலே அறியலாம் அருமை சினேகிதனை' என்றது ஓர்மூதுரை. 'உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.' - திருக்குறள்.
கற்ற துடைமை காட்சியி னறிப. பொழிப்புரை: ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர். பதவுரை: கற்றது உடைமை - ஒருவன் கல்வியுடையனாயிருத்தலை, காட்சியின் - அவனுடைய அறிவினாலே, அறிப -அறிவர். காட்சி - அகக்கண்ணாற் காணுதல் :அறிவு. 'மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' ஆகையால், ஒருவன் கற்ற கல்வியின் அளவிற்கு அவனுடைய அறிவின் அளவே அறிகுறி.
எற்ற முடைமை எதிர்கோளி னறிப. பொழிப்புரை: ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர். எற்றம் - உய்த்தல். எதிர்கோள் -முற்கொண்டு பாதுகாக்கும் காப்பு. பதவுரை: எற்றம் உடைமை - ஒரு காரியத்தை ஒருவன் ஆராய்ந்து முடிக்க வல்லவன் என்பதை, எதிர்கோளின் - இடையூறுகள் வருவதற்கு முன்னே அவன் செய்யும் பாதுகாவலால், அறிப -அறிவர். ஒருவன் காரிய முடிக்கவல்லவன் என்பதற்கு, அக்காரியத்தில் வருதலான இடையூறுகளை யறிந்து அவன் செய்யும் பாதுகாப்பேஅறிகுறி என்பதாம். 'எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்' 'வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை' - திருக்குறள் 'ஏற்றமுடைமை' என்று பாடங்கொண்டு, ஒருவன் குடிப்பிறப்பு முதலிய உயர்வுடையன் என்பதை அவன் தன்னிடம் வருவாரை எதிர்கொண்டு செய்யும் உபசாரத்தால் அறிக என்றும் பொருளுரைப்பர். அவ்வுபசாரங்கள் 'இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறிந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார்'என்பதனால் அறியப்படும்.
சிற்றிற் பிறந்தமை பெருமிதத்தி னறிப. பொழிப்புரை: சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர். பதவுரை: சிற்றில் பிறந்தமை - ஒருவன் இழிகுடியிற் பிறந்தவன் என்பதனை, பெருமிதத்தின் - அவனுடைய காவத்தினால், அறிப -அறிவர். சிறுமை, பெருமிதம் ஊர்ந்து விடல்' ஆதலால், ஒருவன்இழிகுடியில் பிறந்தவன் என்பதற்கு அவன் கொண்டுள்ளகர்வமே அறிகுறியாகும். 'பணியுமாம் என்றும் பெருமை : சிறுமை அணியுமாம் தன்னை வியந்து' - திருக்குறள்.
குத்திரஞ் செய்தலிற் கள்வனாத லறிப. பொழிப்புரை: ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர். குத்திரம் - படிறு, வஞ்சகம். பதவுரை: குத்திரம் செய்தலின் - ஒருவன் ஒருவருக்குச் செய்யும் வஞ்சகச் செயலால், கள்வன் ஆதல் - அவன் திருடன் என்பதை, அறிப -அறிவர். ஒருவன் களவு செய்யும் கருத்தினன் என்பதற்கு அவனுடையவஞ்சகச் செயலே அறிகுறி. 'அளவறிந்தார் நெஞ்சத் தறம்போலநிற்கும் களவறிந்தார் நெஞ்சிற் கரவு.' - திருக்குறள்.
சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப. பொழிப்புரை: சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர். சோர்வு - வழுவுதல். சொற்சோர்வு - சொல்லவேண்டுவதை மறப்பான் ஒழிதல். பதவுரை: சொற்சோர்வு உடைமையின் - ஒருவன் சொல்லும் சொற்களில் தவறுதல் உடையனாதலால், எ சோர்வும் - அவனிடத்துள்ள எல்லாத் தவறுகளையும், அறிப -அறிவர். ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு அவனுடைய சொற்சோர்வேஅறிகுறி. 'சொற்சோர்வுபடேல்' - ஒளவையார். 'சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன்மாண்பினிதே.' - இனியா நாற்பது.
அறிவுசோர் வுடைமையிற் பிறிதுசோர்வு மறிப. பொழிப்புரை: ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர். பதவுரை: அறிவு சோர்வு உடைமையின் - ஒருவன் அறிவு தளர்ச்சியுடையனா யிருத்தலால், பிறிது சோர்வும் - அவனிடத்துள்ள ஏனைத் தளர்ச்சிகளையும், அறிப -அறிவர். ஒருவன் பலவகைத் தளர்ச்சிகளையும் உடையவன் என்பதற்கு அவனுடைய அறிவின் தளர்ச்சியே அறிகுறி.
சீருடை யாண்மை செய்கையி னறிப. பொழிப்புரை: ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர். பதவுரை: சீர் உடை - புகழ்பொருந்திய, ஆண்மை -ஆண்மையை, செய்கையின் - அவனுடைய செய்கையால், அறிப -அறிவர். ஒருவன் ஆண்மையுடையவன் என்பதற்கு அவனுடையசெயல்களே அறிகுறியாம். ஆண்மை -- ஆடவர் தன்மை : பௌருஷம் : வீரம் ஆள் + மை எனக்கொண்டு, ஆளுந்தன்மை ஆள்வினைத் தன்மை என்றலுமாம்.
பழியாப்பத்து ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்புகுணம் பழியார். பொழிப்புரை: கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார். பதவுரை: ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மக்கள் எல்லாருள்ளும், யாப்பு இலோரை -யாதொரு செய்கையிலும் உறுதியான நிலையில்லாதவருடைய, இயல்பு குணம் - இயற்கையாகிய குணத்தை, பழியார் - எவரும்பழித்துரையார். யாப்பு -- கட்டு : உறுதி : நிலை. 'அது முதற்காயின் சினைக்கையாகும்' என்றபடி, யாப்பிலோரது இயல்பு குணத்தைப் பழியார் எனமுடித்துக் கொள்ளவேண்டும். ஒருவர் இயல்பாகவே எக்காரியத்திலும் நிலையில்லாதவ ராயின் அவ்வியல்பைப் பழித்துரைத்தலால் பயனில்லை என்பதாம்.
மீப்பி லோரை மீக்குணம் பழியார். பொழிப்புரை: மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார். பதவுரை: மீப்பு இலோசை - மேன்மைக்குணம் இல்லாதவரது, மீக்குணம் - மேன்மையானவற்றைச் செய்யும் இயல்பில்லாமையை, பழியார் - எவரும்பழித்துரையார். கீழ்மக்களிடம் மேலோர்க்குரியகுணமும் செய்கையு மில்லாமையை எவரும் பழித்துரையார். மீக்குணம் என்பதை மீச்செலவு என்பதுபோலவரம்புகடந்த செய்கையைச் செய்யும் இயல்பு எனக்கொள்வது பொருந்தும்.
பெருமை யுடையதன் அருமை பழியார். பொழிப்புரை: பெருமையுடைய தொன்றனைமுடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சிதவிரார். பதவுரை: பெருமை உடையதன் அருமை - பெருமையுடைய தொருபொருளை முடித்துக்கொள்ளும் அருமையைப்பற்றி, பழியார் -அவ்வருமையைப் பழித்து முயற்சியை விடார். உடையதன் - உடைய அதன். "அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும், பெருமை முயற்சிதரும்'ஆகையால் ஒரு பெரிய பொருள் கிட்டுவது அரிதென் றெண்ணி, அதுகாரணமாக அதனைமுடித்தற்குரிய முயற்சியைச் செய்யாமலிரார். 'பெருமை யுடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமை யுடைய செயல்' - திருக்குறள்.
அருமை யுடையதன் பெருமைபழியார். பொழிப்புரை: அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத்தவிரார். பதவுரை: அருமை உடையதன் பெருமை - அருடையுடையதொரு பொருளை அரிதென்று முயற்சிப் பெருமையை, பழியார் -பழித்துத் தவிரார். கிடைத்தற் கருமையான பொருளினது அருமையைப் பழியாமல் அதுகிடைத்தற்குரிய கௌரவமான முயற்சிகளைச் செய்வர். 'செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.' - திருக்குறள்.
நிறையச் செய்யாக் குறைவினை பழியார். பொழிப்புரை: ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும்பழியார். 'செய்யாததற்கு முன்பே அக்குறை வினையை' என்றும் 'செய்வதற்கு முன் செய்த குறைவினையை'என்றும் பிரதிபேதம் உண்டு. பதவுரை: நிறைய செய்யா - நிரம்பச் செய்து முடிக்காத, குறைவினை - குறைவினையை, பழியார் - எவரும்பழித்துரையார். முழுவதும் செய்துமுடியாத குறைவேலையக் கண்டு எவரும் பழித்தல் செய்யார். அவ்வேலை பின்னும் திருத்தமெய்தி நன்கு முடிதல் கூடுமாதலால் அறிவுடையோர் பழியார்.
முறையி லரசர்நாட் டிருந்து பழியார். பொழிப்புரை: நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார். பதவுரை: முறைஇல் - நீதிமுறை இல்லாத, அரசர் நாடு - அரசருடையநாட்டில், இருந்து - வசித்திருந்து, பழியார் - அவ்வரசர் நீதிமுறை செலுத்தாமையை எவரும்பழித்துரையார். கொடுங்கோலரசருடைய நாட்டில் வசிப்பவர் அக்கொடுங்கோன்மையைப் பழித்துரைத்தால் அவவ்வரசருடைய கொடுமைக்கு உள்ளாவராதலின் அதுசெய்யார். நடுவுநிலைமை - 'பகைநொதுமல் நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை' என்றும், நடுவு - 'ஒருவன் பொருட்குப் பிறன் உரியனல்லன் என்னும் நடுவு' என்றும் உரைப்பர் பரிமேலழகர்.
செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார். பொழிப்புரை: தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப்பழியார். பதவுரை: செயத்தக்க - தமக்கு உதவிசெய்தற் குரிய, நல் கேளிர் - நல்ல உறவினர், செய்யாமை - அங்ஙனம் உதவிசெய்யாமையை, பழியார் -நல்லோர் பிறரிடம் பழித்துரையார். கேளிர் என்பது நட்பினரையும் குறிக்கும் கேளிர் என்பதில் இர் - பலர்பால் விகுதி. சுற்றத்தார் உதவிசெய்திலரென்றுபழியாமல் அவரைத் தழுவிக் கொண்டுபோதலே சிறப்புடைத்து. கேளிரை நட்பினர் என்று கொண்டால், நட்பினர் உதவிசெய்திலரென்று பழியாமல் நட்பிற் பிழைபொறுத்தலே சிறப்புடைத்து என்பதாம்.
அறியாத் தேசத் தாசாரம் பழியார். பொழிப்புரை: தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார். பதவுரை: அறியாத தேசத்து - தான் முன்னறியாத தேசத்தில் வழங்கும், ஆசாரம் - ஒழுக்கங்களை, பழியார் -பழித்துரையார். அந்தந்த தேசத்தின் வசதிக்கும்நிலமிதிக்கும் நாகரிகத்திற்கும் ஏற்றவாறு ஆசாரங்கள்வேறுபடுதலால், தான் முன்னறியாத தேசத்தின்கண் சென்றவன், அங்கு வழங்கும் ஆசாரங்கள் தன்தேசத்தில் வழங்கும் ஆசாரங்களோடு ஒத்திராமையைக் கண்டு, அவைகளைப் பழித்துரைத்த லாகாது.
வறியோன் வள்ளிய னன்மை பழியார். பொழிப்புரை: வறுமை யுடையானை வண்மையுடையானல்லனென்று பழியார். பதவுரை: வறியோன் - பொருளில்லாதவனது, வள்ளியன் அன்மை - ஈகையில்லாமையை, பழியார் - எவரும்பழித்துரையார். பொருளுடையவன் பொருளில்லார்க்கு ஈயாமையை எல்லாரும் பழிப்பர் : பொருளில்லாதவன் ஈயாமையை ஒருவரும் பழியார்.
சிறியா ரொழுக்கம் சிறந்தோரும் பழியார். பொழிப்புரை: சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார். பதவுரை: சிறியார் - கீழோருடைய, ஒழுக்கம் - துராசாரத்தை, சிறந்தோரும் - மேலோரும், பழியார் -பழித்துரையார். துராசாரம் கீழோருக் கியல்பாதலால்மேலோர் அதனைப் பழித்துரையார்.
துவ்வாப் பத்து.1ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையிற் றுவ்வாது. பொழிப்புரை: ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம்வறுமையின் நீங்கியொழியாது. பதவுரை: ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - எல்லா மக்களுள்ளும், பழியோர் - பழிக்கப்படுபவரது, செல்வம் - செல்வமானது, வறுமையின் வறுமைத்தன்மையினின்றும், துவ்வாது - நீங்கி யொழியாது. பழியோர் என்றது 'உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும், கெடாஅத நல்லறமுஞ் செய்யார்,' 'நடுவிகந்தா மாக்கமுடையார்' முதலாயினாரை.பாத்துண்ணாமையாலும் அதனால் இம்மைப் பயனையும்மறுமைப் பயனையும் பெறாதொழிதலாலும் அவர் செல்வராயிருந்தும்வறியவரையே ஒப்பர். நடுவிகந்தாம் ஆக்கத்தை ஒழியவிடாமல்ஈட்டினார் பழிப்புக்கிடமாதலால், அவர் செல்வத்தைப்பழியோர் செல்வம் என்றார். 'பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை' - திருக்குறள். 'மனந்தூய்மை ........ இனந்தூய்மை தூவா வரும்' - என்பதில் தூவ என்பது பற்றுக்கோடாக என்ற பொருளில்வந்திருக்கிறது. 'கருமஞ்செயவொருவன்கைதூவே னென்னும், பெருமையிற் பீடுடையதில்' என்னுங் குறளில், கைதூவேன் - கையொழியேன் என்ற பொருளில் வந்திருக்கிறது. ஆகவே தூவாது என்பது துவ்வாது என விகாரப்பட்டுவந்ததாகக் கொள்ளலாம்.
கழிதறு கண்மை பேடியிற் றுவ்வாது. பொழிப்புரை: இடமும் காலமும் அறியாது மிக்கதறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது பதவுரை: கழி தறுகண்மை - இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ற அளவின்மிக்க வீரம், பேடியின் - பேடித்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது. தறுகண்மை - அஞ்சாமை, மறம், வீரம். பகைவர்மேல் செல்லுதற்கேற்ற காலமும் பகைவரை வெல்லுதற்கேற்ற வசதியும் அறியாது மிக்க தறுகண்மை செய்பவன் தோல்வியடைவது நிச்சயமாதலால்,அத்தறுகண்மை பேடித்தன்மையோடொக்கும். பகைத்திறந் தெரியாது செய்யும்கழிதறுகண்மை எனக் கொள்வதும் பொருந்தும். பேடித்தன்மையை, 'தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை, வாளாண்மை போலக் கெடும்' என்றும் 'பகையகத்துப் பேடிகை யொள்வாள் அவையகத், தஞ்சு மவன்கற்ற நூல்'என்றும் வருவனவற்றால் அறியலாம்.
நாணில் வாழ்க்கை பசித்தலிற் றுவ்வாது. பொழிப்புரை: நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது. பதவுரை: நாண்இல் வாழ்க்கை - வெட்கங்கெட்டு உண்டுவாழும் உயிர் வாழ்க்கை, பசித்தலின் - பசித்தலாகிய துன்பத்தின், துவ்வாது - நீங்கி யொழியாது. நாணாவது நல்லோர் தமக்கொவ்வாதகாரியத்தைக் கண்டவிடத்து அடையும் வெட்கம் : 'கருமத்தால் நாணுதல் நாணு.'. வெட்கங்கெட்டு உயிர்வாழ்தலால்உண்டாகின்ற துன்பம் பசித்தலால் உண்டாகின்றதுன்பத்தின் வேறாயதன்று : அதனோ டொத்ததே. துன்ப அளவால் இரண்டும் ஒக்குமாயினும், பசிக்குப் பரிகார முண்டு, அழிந்த நாணுக்கு உயிர்விடுவதன்றி வேறு பரிகாரமில்லை. ஆகவே 'உயிரினும் சிறந்தன்று நாணே' என்பது பெறப்படும். படுதலால், 'நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால், நாண் துறவார் நாணாள் பவர்' என்பது கருத்தாம்.
பேணி லீகை மாற்றலிற் றுவ்வாது. பொழிப்புரை: விருப்பமில்லாதகொடை கொடையை நீக்குதலின் ஒழியாது. பதவுரை: பேண் இல் - விருப்பமில்லாத, ஈகை - ஈகையானது, மாற்றலின் - இல்லையென்று மறுத்துரைத்தலுக்கு, துவ்வாது -வேறாக ஒழியாது. விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகையாம் : விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது;அதனோடொக்கும் என்பதாம். மாற்றல் - கொடாது மறுத்தல்.
செய்யாமை மேற்கோள் சிதடியிற் றுவ்வாது. பொழிப்புரை: செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது. பதவுரை: செய்யாமை - தாம் செய்யத்தகாத காரியங்களை, மேற்கோள் - செய்வோமென்று மேற்கொள்வது, சிதடியின் - மூடத்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது. செய்யத்தகாத காரியங்களைச் செய்வதாகமேற்கொண்டு தொடங்குவது மூடத்தன்மையின் வேறாகாது. 'செய்தக்க வல்ல செயக்கெடும் : செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.' 'பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.' - திருக்குறள். சிதடி -- அறிவிலி. 'சிக்கர் சிதடர்' எனச் சிறுபஞ்சமூலத்தில் வருகின்றது.
பொய் வேளாண்மை புலைமையிற் றுவ்வாது. பொழிப்புரை: பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது. பதவுரை: பொய் வேளாண்மை - விருப்பமில்லாவிட்டாலும் விருப்பமுடையவர்போல் செய்யும் ஈகையானது, புலைமையின் - நீசத்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது. புலைமை - கீழோரது தன்மை - இழிவு. மனப்பூர்வமாய்ச் செய்யாத உபகாரம்கீழோரது தன்மையின் வேறாகாது. பிரதிஷ்டைக்குஉபகாரம் செய்வோர் நீசர்க்குச் சமானமாவர். 'புலையிற் றுவ்வாது' - பாடபேதம்.
கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது. பொழிப்புரை: ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது. பதவுரை: கொண்டு - ஒருவரை ஒருவர் நட்பாகக்கொண்டு, கண்மாறல் - பின்பு அவரிடத்துக் கண்ணோட்டம் ஒழிதல், கொடுமையின் - அவருக்குக் கொடுமை செய்தலின், துவ்வாது - நீங்கி யொழியாது. கண்ணோட்டம் - தன்னோடு பழகினவரைக் கண்டால் அவர் கூறியவற்றை மறுக்கமாட்டாமை : இஃதுஅவர்மேல் கண் சென்றவழி நிகழ்வதாகலின் அப்பெயர் பெற்றது :தாட்சண்ணியம். ஒருவனோடு சிநேகம் பண்ணிப் பின்பு அவனிடம் தாட்சண்ணியம் காட்டாதவர் அவனுக்குக் கொடுமைசெய்தவ ரன்றி வேறாகார்.
அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது. பொழிப்புரை: அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது. பதவுரை: அறிவிலி - அறிவில்லாதவனை, துணைப்பாடு - ஒருவன் துணையாகக் கொண்டிருத்தல், தனிமையின் - தனித்திருத்தலின்; துவ்வாது - நீங்கி யொழியாது. அறிவில்லாதவனைத் துணையாகக்கொண்டிருப்பதுதனித்திருப்பதற்குச் சமானமேயன்றி வேறாகாது. ஆகவே அறிவில்லாதவனைத் துணைக்கோடல் வேண்டா. சிற்றினம் சேராமல் பெரியாரைத் துணைக்கொள்க.என்பதாம். 'துணைநல மாக்கந் தரும்' - திருக்குறள்.
இழிவுடை மூப்புக் கதத்திற் றுவ்வாது. பொழிப்புரை: இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது. "இனிவரவினையுடைய மூப்பு' 'பிறரைவெறுத்து' - பாட பேதம். பதவுரை: இழிவு உடை மூப்பு - இழிவோடுகூடிய மூப்பு, கதத்தின் - கோபத்தின், துவ்வாது - நீங்கி யொழியாது. கோபம் பிறரால் வெறுக்கத்தக்கதே : இழிவுடை மூப்பும் பிறரால் வெறுக்கத்தக்கதே. ஆகவே இரண்டையும் ஒழித்தல் வேண்டும். நல்லறம் நல்லொழுக்கம் உடையோர் மூப்பு வந்தவிடத்தும் கௌரவ குணங்கள் வாய்ந்திருப்பர்.அங்ஙனமான மூப்பு எல்லாராலும் போற்றப்படுவதாகும். 'மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.' - திருக்குறள்.
தானோ ரின்புறல் தனிமையிற் றுவ்வாது. பொழிப்புரை: தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது. பதவுரை: ஓர்தான் - ஒருவன்தான் மாத்திரமே, இன்புறல் - இன்புற்றிருப்பது, தனிமையின் துவ்வாது -வறுமையின் நீங்கியொழியாது. பொருளுடையவனாய் எவர்க்கும் உதவாமல்தான் மாத்திரமே இன்புற்றிருப்பவன்பொருளில்லாமையால் தனித்துண்ணும் தரித்திரனுக்குச்சமானமாவதன்றி வேறாகான். ஒன்றுமில்லாதவன் இரந்துபெற்றதைத்தனியாக உண்பான் : ஆதலால் அவன் வறுமையைத் தனிமையென்றுஉபசரித்தார். 'இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்.' - திருக்குறள்.