செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா காமமுதிரி னுயிர்க்கின்னாவாங்கின்னா யாமென் பவரொடு நட்பு. பதவுரை: ஏமம் இல் - காவல் இல்லாத, மூதூர் - பழைய ஊரிலே, இருத்தல் - வாழ்தல், மிக இன்னா - மிகவுந் துன்பமாம்; தீமை உடையார் - தீச்செய்கையுடையவரது, அயல் இருத்தல் பக்கத்திலேயிருத்தல், நன்கு இன்னா - மிகவும் துன்பமாம்; காமம் முதிரின் - காமநோய் முற்றினால், உயிர்க்கு இன்னா உயிர்க்குத் துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, யாம் என்பவரொடு யாமென்று தருக்கியிருப்பவரோடு செய்யும், நட்பு - நட்பானது, இன்னா - துன்பமாம் எ-று. ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந்தொழுகுதல் கூறவேண்டாதாயிற்று. காமம் உயிரைப்பற்றி வருத்து மென்பதனைக் ‘காமமு நாணு முயிர் காவாத் தூங்குமென், னோனா வுடம்பி னகத்து' என்னும் முப்பாலானு மறிக.
நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா நட்ட கவற்றினாற் சூது. பதவுரை: நட்டார் - நட்புக் கொண்டவருடைய, இடுக்கண்கள் துன்பங்களை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஒட்டார் - பகைவரது, பெருமிதம் - செருக்கை, காண்டல் - பார்த்தல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; கட்டு இல்லா - சுற்றமாகிய கட்டு இல்லாத, மூதூர் - பழையவூரிலே, உறை வாழ்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, நட்ட - நட்பாகக் கொள்ளப்பட்ட, கவற்றினால் கவற்றைக்கொண்டு ஆடுகின்ற, சூது - சூதாட்டம், இன்னா - துன்பமாம் எ-று. கட்டு - கட்டுப்பாடும் ஆம் உறை : முதனிலைத் தொழிற் பெயர். நட்ட என்றது விருப்புடன் அடிப்பட்டுப் பழகிய என்றபடி கவறு - பாய்ச்சி; ஆவது தாயக்கட்டை, ஒரு சொல் வருவிக்கப்பட்டது. இடுக்க ணனிகண்டா னன்கின்னா. கண்டாற் பெரிதின்னா
பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா அரியவை செய்து மெனவுரைத்த லின்னா பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா பெரியோர்க்குத் தீய செயல். பதவுரை: பெரியாரோடு - பெரியவருடன், யாத்த - கொண்ட, தொடர் - தொடர்ச்சியை, விடுதல் - விடுவது, இன்னா - துன்பமாம்; அரியவை - செய்தற்கரிய காரியங்களை, செய்தும் - செய்து முடிப்போம், என உரைத்தல்- என்று சொல்லுதல், இன்னா - துன்பமாம்; பரியார்க்கு -அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் உற்ற - தாம் அடைந்த துன்பங்களைக் கூறும்; கூற்று - சொல், இன்னா - துன்பமாம்; பெரியார்க்கு பெருமையுடையார்க்கு, தீய செயல் - தீயனவற்றைச் செய்தல், இன்னா - துன்பமாம் எ-று. பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனைப் ‘பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்' என்னுந் திருக்குறளானு மறிக. பெரியார் - ஈண்டுக் கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங்களிற் சிறந்த நல்லோர். குற்றியலிகரம் அலகுபெறாதாயிற்று. ‘அரியவை செய்துமென உரைத்தல் இன்னா' என்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையாற் கூறுதல் தக்கதன்று என்றபடி; தம்மாற் செய்ய வியலாதவற்றைச் செய்து தருவேமெனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும் செய்தும் : தன்மைப் பன்மை யெதிர்கால வினைமுற்று; இறந்தகால முற்றும் ஆம். பரிதல் - அன்பு செய்தல் : இரங்குதலுமாம். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை ‘எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார், பெரியார்ப் பிழைத்தொழுகு வார்' என்னும் வாயுறைவாழ்த் தானுமறிக. உற்ற, தீய என்பன முறையே தெரிநிலையும் குறிப்புமாய வினைப்பெயர்கள்.
பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா கிழமை யுடையார்க்களைந்திடுத லின்னா வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா இளமையுண் மூப்புப் புகல். பதவுரை: பெருமை உடையாரை - பெருமையுடையவரை, பீடு அழித்தல் - பெருமை யழியக் கூறல், இன்னா - துன்பமாம்; கிழமை உடையார் - உரிமை உடையவரை, களைந்திடுதல் - நீக்கி விடுதல், இன்னா - துன்பமாம்; வளமை இலாளர் - செல்வ மில்லாதவருடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; இளமையுள் - இளமைப் பருவத்தில், மூப்பு - மூதுமைக்குரிய தன்மைகள், புகல் உண்டாதல், இன்னா - துன்பந் தருவதாகும் எ-று. பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மையெய்தி இரண்டாவதற்கு மடிபாயின. பீடழித்தலாவது பெருமையுளதாகவும் அதனை யிலதாக்கிக் கூறுதல் கிழமையுடையார் - பழையராக வரும் அமைச்சர் முதலாயினார்; நண்பரும் ஆம். கிழமையுடையாரைக் கீழ்ந்திடுதலின்னா என்று பாடங் கொள்ளுதல் சிறப்பு; ‘பழமையெனப்படுவ தியாதெனின் யாதுங்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு' என்னும் திருக்குறளுங் காண்க. வளமை வண்மையுமாம்.
கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல். பதவுரை: கல்லாதான் -சுமந்து செல்லுதல், இன்னா துன்பமாம்; வல்லாதான் - கல்வி யில்லாதவன், சொல்லும் சொல்லுகின்ற, உரையின் பயன் - சொல்லின் பொருள், இன்னா துன்பமாம்; இல்லார் - செல்வ மில்லாதவருடைய, வாய்ச் சொல்லின் - வாயிலிருந்து வரும் சொல்லினது, நயம் - நயமானது, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கல்லாதவன் - கல்வியில்லாதவன், கோட்டி கொளல் - கற்றவ ரவையில் ஒன்றைக் கூறுதல், இன்னா - துன்பமாம் எ-று. கலி - ஆரவாரமும் ஆம். வல்லாதான் ஒன்றனைச் செய்ய மாட்டாதான் எனினும் அமையும். இல்லார் வாய்ச்சொல்லின் நயமின்னா என்பதனை ‘நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்' என்னுந் தமிழ்மறை யானுமறிக. கோட்டிகொளல் : ஒருசொல் ; அவையின்கண் பேசுதல் என்னும் பொருளது; ‘அங்கணத்துளுக்க...... கோட்டி கொளல்' என்பதுங் காண்க
குறியறியான் மாநாகமாட்டுவித்த லின்னா தறியறியானீரின்கட் பாய்ந்தாடலின்னா அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா செறிவிலான் கேட்ட மறை. பதவுரை: குறியறியான் -முறைகளை அறியாதவன், மாநாகம் - பெரிய பாம்பினை, ஆட்டுவித்தல் - ஆடச்செய்தல், இன்னா - துன்பமாம்; தறி அறியான் - உள்ளிருக்கும் குற்றியை யறியாமல், நீரின்கண் - நீரில் பாய்ந்து, ஆடல் - குதித்து விளையாடுதல் இன்னா - துன்பமாம். அறிவு அறியா - அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத, மக்கள் - பிள்ளைகளை பெறல் - பெறுதல், இன்னா - துன்பமாம்; செறிவு இலான் அடக்கம் இல்லாதவன், கேட்ட மறை - கேட்ட இரகசியம், இன்னா - துன்பமாம் எ-று. தறி - குற்றி; கட்டை, அறிவறியான் என்னின் அறிவு வறியனாயினான் : ஆவது கல்லா இளமையன் என்க. ‘அறிகொன்று' என்புழிப்போல, ஈண்டு அறியென்பது முதனிலைத் தொழிற்பெயர். அறிவறியா மக்கள் - அறிவேண்டுவன அறியமாட்டாத மக்கள் : ‘அறிவறிந்த மக்கள்' என்பதற்குப் பரிமேலழகர் கூறிய பொருளை நோக்குக. செறிவு - அடக்கம் : ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்' என்னுங் குறளில் செறிவு இப் பொருட்டாதல் காண்க : அடக்கமில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் ‘கேட்ட மறையின்னா' என்றார். இன்னா தறிவறியான். கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்.
நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா கடும்புலி வாழு மதர். பதவுரை: நெடுமரம் - நெடிய மரத்தினது, நீள் கோட்டு - நீண்ட கிளையின், உயர் - உயரத்திலிருந்து, பாய்தல் கீழே குதித்தல், இன்னா - துன்பமாம்; கடும் சினம் - மிக்க கோபத்தினையுடைய, வேழத்து எதிர் - யானையின் எதிரே, சேறல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; அரவு - பாம்பு, ஒடுங்கி உறையும் - மறைந்து வசிக்கின்ற, இல் - வீடானது, இன்னா - துன்பமாம்; கடும் புலி -கொடிய புலிகள், வாழும் அதர் - வாழ்கின்ற வழியானது, இன்னா துன்பமாம் எ-று. கோட்டுயர் பாய்தல் என்பதற்குக் கோட்டின் நுனியிலேறி யதோடமையாது மேலும் பாய்ந்து சேறல் என்று பொருள் கூறலுமாம்; ‘நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி, னுயிர்க்கிறுதி யாகிவிடும்' என்பது ஈண்டு நோக்கற்பாலது. நெடுமர நீள் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணிபற்றி, முறையே தம் வலியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக்கெளியராம்படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னாவாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க' நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா
பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா எண்ணறியா மாந்தர்ஒழுக்குநாட் கூற்றின்னா மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா தண்மை யிலாளர்பகை. பதவுரை: பண் அமையா - இசை கூடாத, யாழின் கீழ் - யாழின் கீழிருந்து, பாடல் - பாடுதல், பெரிது இன்னா மிகவுந்துன்பமாம்; எண் அறியா மாந்தர் - குறி நூல்அறியாத மாக்கள், ஒழுக்கு நாள் கூற்று - ஒழுகுதற்குரிய நாள் கூறுதல், இன்னா துன்பமாம்; மண் - இல் - மார்ச்சனையில்லாத, முழவின் - மத்தளத்தினது, ஒலி - ஓசை, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலாளர் - தண்ணிய குணம் இல்லாதவரது, பகை - பகையானது, இன்னா - துன்பமாம் எ-று. பண் என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக்கொண்டு, இசைக்கரணம் எட்டனு ளொன்று என்னலுமாம் ஒழுகுதற்குரிய நாளாவது கருமங்கட்கு விதிக்கப்பட்ட நாள். நற்கணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையாராகலின் தண்மையிலாளர் பகை இன்னா வெனப்பட்டது; தீயோர்பால் பகையும் நண்புமின்றி நொதுமலாக விருத்தல் வேண்டுமென அறிக. தன்மையிலாளர்.
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா தொன்மை யுடையார் கெடல். பதவுரை: தன்னைத்தான் -தன்னைத்தானே, போற்றாது - காத்துக்கொள்ளாது, ஒழுகுதல் - நடத்தல், நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; முன்னை உரையார் - முன்னே சொல்லாமல், புறமொழிக் கூற்று - புறத்தே பழித்துரைக்கும் புறங்கூற்று, இன்னா - துன்பமாம்; நன்மை இலாளர் - நற்குணமில்லாதவரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தொன்மை உடையார் - பழைமையுடையவர், கெடல் - கெடுதல், இன்னா - துன்பமாம் எ-று. தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். முன்னை-ஐ: பகுதிப்பொருள் விகுதி. உரையார் : முற்றெச்சம். மொழிக்கூற்று : ஒரு பொருளிருசொல் தொன்மையுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி.
கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு. பதவுரை: கள் உண்பான் - கட்குடிப்பவன், கூறும் - சொல்லுகின்ற, கருமப்பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; முள் உடை காட்டில் - முட்களையுடைய காட்டில், நடத்தல் - நடத்தலானது, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; வெள்ளம் படு - வெள்ளத் திலகப்பட்ட, மா - விலங்கு, கொலை, - கொலையுண்டல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கள்ளம் மனத்தார் : வஞ்சமனத்தினை யுடையாரது, தொடர்பு - நட்பு, இன்னா துன்பமாம் எ-று. மாக்கொலை - விலங்கைக் கொல்லுதல் எனினும், நீர்ப் பெருக்கிலகப்பட்டு வருந்தும் விலங்கைக் கரையேற வொட்டாது தடுத்துக் கொல்லுதல் இன்னாவாம் என்பது கருத்து.
ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்தலின்னா விழுத்தகு நூலும்விழையாதார்க் கின்னா இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. பதவுரை: ஒழுக்கம் இலாளர்க்கு - நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே, உறவு உறைத்தல் - தமக்கு உறவுளதாகக் கூறுதல், இன்னா - துன்பமாம்; விழுத்தகு நூலும் - சீரிய நூலும், விழையாதார்க்கு - விரும்பிக் கல்லாதார்க்கு, இன்னா - துன்பமாம்; இழித்த தொழிலவர் - இழிக்கப்பட்ட தொழிலை யுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம்; கழிப்பு வாய் - நல்லாரால் கழிக்கப்பட்ட இடமாகிய, மண்டிலம் - நாட்டிலே, கொட்பு - திரிதல். இன்னா - துன்பமாம் எ-று. ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் என்னும் பாடத்திற்கு ஒழுக்கமில்லாதவரை இழித்துரைத்தல் என்று பொருள் கொள்க. இழித்த தொழில் - அறிவுடையோராற் பழிக்கப்பட்ட தொழில் ஈற்றடிக்கு, ஒழுகக் குறைத்த மதியினது செலவு காண்டல் என்று பொருள் கூறலுமாம். ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் விழித்தகுநூலும்.
எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா குழலி னினியமரத் தோசைநன் கின்னா குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா அழகுடையான் பேதை யெனல். பதவுரை: எழிலி - மேகமானது, உறை நீங்கின் - நீரைச் சொரியாதாயின், ஈண்டையார்க்கு - இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு, இன்னா - துன்பமாம்; குழலின் இனிய - புல்லாங் குழலைப்போலும் இனிய, மரத்து ஓசை - மரத்தினது ஓசை, நன்கு இன்னா மிகவுந் துன்பமாம்; குழவிகள் உற்ற - குழந்தைகள் அடைந்த, பிணி - நோயானது, இன்னா - துன்பமாம்; அழகு உடையான் - அழகினையுடையவன், பேதை எனல் - அறிவில்லாதவன் என்று சொல்லப்படுதல், இன்னா - துன்பமாம் எ-று. உறை - நீர்த்துளி, ‘குழலினினிய மரத் தோசைநன்கின்னா' என்பதன் கருத்து [காற்று ஊடறுத்துச் செல்லுதலால் மரங்களினின் றெழும் ஓசை குழலிசைபோ லினியதாயினும் பாராட்டப்படுவதின்று என்பது போலும்] குழலில் என்னும் பாடத்திற்குக் குழல் இல்லாத என்று பொருள் கூறிக்கொள்க.
பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா கெடுமிடங் கைவிடுவார் நட்பு. பதவுரை: பொருள் இலான் - செல்வ மில்லாதவன், வேளாண்மை -உதவி புரிதலை, காமுறுதல் - விரும்புதல், இன்னா - துன்பமாம்; நெடு மாடம் - நெடிய மாடங்களையுடைய, நீள் நகர் - பெரிய நகரத்திலே, கைத்து இன்மை - பொருளின்றி யிருத்தல், இன்னா - துன்பமாம்; வரு மனை - வரப்பட்ட மனையிலுள்ளாரை, பார்த்திருந்து - எதிர்நோக்கியிருந்து, ஊண் உண்ணுதல், இன்னா - துன்பமாம்; கெடும் இடம் - வறுமையுள்ள இடத்தில், கைவிடுவார் - கைவிட்டு நீங்குவாரது, நட்பு கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று. வேளாண்மை - உபகாரம் வருமனை பார்த்திருந்தூண் என்றது பிறர் மனையை அடைந்து அம் மனைக்குரியாரது செவ்வி நோக்கி யிருந்துண்டல் ஏன்றபடி. கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா வென்பதனைக் ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும' என்னுந் திருக்குறளானு மறிக.
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா துறையறியா னீரிழிந்துபோகுத லின்னா அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா சிறியார்மேற் செற்றங் கொளல். பதவுரை: நறிய மலர் - நல்ல மலரானது, பெரிய நாறாமை - மிகவும் மணம் வீசாதிருத்தல், இன்னா - துன்பமாம்; துறை அறியான் - துறையை அறியாதவன், நீர் இழிந்து போகுதல் - நீரில் இறங்கிச் செல்லுதல், இன்னா - துனபமாம்; அறியான்வினாப்படுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சிறியோர் மேல் - சிறியவர்மீது, செற்றங் கொளல் - சினங் கொள்ளுதல், இன்னா - துன்பமாம் எ-று. நறிய - நல்ல, அழகுடைய, துறை - நீரில் இறங்குதற்கும் ஏறுதற்குமுரிய வழி அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க. சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம்.
பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா திறனிலான் செய்யும் வினை. பதவுரை: பிறன் மனையான் பின் நோக்கும் - பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் றொடரக் கருதும். பேதைமை - அறிவின்மை, இன்னா - துன்பமாம்; மறம் இலா மன்னர் - வீரமில்லாத அரசர், செரு புகுதல் - போர்க்களத்திற் செல்லுதல், இன்னா துன்பமாம்; வெம் புரவி - விரைந்த செலவினையுடைய குதிரையினது, வெறும் புறம் - கல்லணையில்லாத முதுகில், ஏற்று - ஏறுதல், இன்னா - துன்பமாம்; திறன் இலான் - செய்யுங் கூறுபாடறியாதவன், செய்யும் வினை - செய்யுங் காரியம், இன்னா துன்பமாம் எ-று. புரவியின் புறமென்று மாற்றுக. திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை.
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல். பதவுரை: கொடுக்கும் - கொடுத்தற்குரிய, பொருள் இல்லான் - பொருளில்லாதவனுடைய, வள்ளன்மை - ஈகைத் தன்மை, இன்னா - துன்பமாம்; கடித்து அமைந்த - கடித்தற்கு அமைந்த, பாக்கினுள் - பாக்கில், கல் படுதல் - கல் இருத்தல், இன்னா - துன்பமாம்; கவிக்கு - புலவனுக்கு, கொடுத்து விடாமை - பரிசில் கொடுத்துனுப்பாமை, இன்னா - துன்பமாம்; மடுத்துழி - தடைப்பட்ட விடத்து, பாடா விடல் - பாடாது விடுதல், இன்னா -துன்பமாம் எ-று. கடித்து; கடிக்க என்பதன் றிரிபு; பிளந்து எனினுமாம். கல் என்றது பாக்கிற் படுவதொரு குற்றம். மடுத்துழி - பொருள் பெற்ற விடத்தில் எனினுமாம். பாடா : ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.
அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல். பதவுரை: அடக்கம் உடையவன் -அடக்கவும், அடங்காதார் - அடங்கு தலில்லாதவர்க்குக் கூறும், சொல் - சொல்லானாது, இன்னா - துன்பமாம் எ-று. மீளமை - பெருமிதமுமாம். துடக்கம் - வளைவு; உடல் வளைந்து வினைசெய்தற் கேற்ற முயற்சியை உணர்த்திற்று; தொடக்கம் என்று கொண்டு யாதானும் நற்கருமஞ் செய்யத் தொடங்குதல் என்றுரைப்பினுமாம். அடங்காதார் சொல் - அடங்காதார் அவையிற் கூறுஞ் சொல் எனினும் ஆம். இன்னா நாற்பது உரையுடன் முற்றும்.
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. பதவுரை:பிச்சை புக்கு ஆயினும் - பிச்சை யெடுத்துண்டாயினும் ; கற்றல் -வந்துதவுதல், சாலவும் - மிகவும், முன் இனிது - முற்பட வினிது ; முத்து ஏர் முறுவலார் - முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது, சொல் - வாய்ச்சொல், இனிது -; ஆங்கு - அது போல, மேலாயார்ச் சேர்வு - பெரியாரைத் துணைக் கொள்ளுதல், தெற்றவும் இனிது - தெளியவுமினிது. ‘ஆயினும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. " கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே " என்றார் பின்னோரும். சவை - ‘சபா' என்னும் வடசொல் ‘ஆ' ஈறு ‘ஐ' ஆதல் முறைபற்றிச் ‘சபை' என்றாகி, சகர வகர வொற்றுமை பற்றிச் ‘சவை' என்றாயது. நற்சவை - சபைக்கு நன்மையாவது நல்லோர் கூடியிருத்தல். அதனை, "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்பதனா னறிக. கைக்கொடுத்தலாவது கற்றன வெல்லாம் வேண்டுமுன் நினைவிற்கு வந்து நிற்றல். "நெடும்பகற் கற்ற அவையத் துதவாது உடைந்துளார் உட்குவருங் கல்வி - கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே தீதென்று நீப்பரி தால்" என்னும் நீதிநெறிவிளக்கச் செய்யுள் ஈண்டறியத்தக்கது. ஏர் : உவமவுருபு ; ‘தணிகை வெற்பேரும்' என்றார் பெரியாரும். ‘ஏர்' என்பதற்கு ‘அழகு' எனப்பொருள் கோடலுமொன்று. மகளிர் சொல் இனிதாதலைத் ‘தேன் மொழியார்' என்னும் பெயரானு மறிக. சிலப்பதிகார முடையார், "பாகுபொதி பவளந் திறந்து நிலா உதவிய நாகிள முத்தி னகைநலங் காட்டி" என்றமையும் அப் பொருளை வற்புறுத்து மென்க. தெற்ற இனிதாதலாவது, மிக வினிதாதல்.
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்இனிது நான்கு. பதவுரை: உடையான் - பொருளுடையானது, வழக்கு - ஈகை, இனிது -; ஒப்ப முடிந்தால் - மனைவி யுள்ளமுங் கணவனுள்ளமும்விடுதல், தலையாக நன்கு இனிது - தலைப்பட மிக வினிது. ஒப்பமுடிதலின அருமை தோன்ற ‘ஒப்ப முடிந்தால்' என்றார். "காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித் தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டும் ஒன்றையே காண்" என நன்னெறியும், "மருவிய காதல் மனையாளுந் தானும் இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான் இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று " என அறநெறிச்சாரமும் கூறுதல் காண்க. மனைவாழ்க்கை ஏனைய துறவற வாழ்க்கையைக் காட்டிலும் இனிதாதலை, "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் கூறினார். துறத்தல்நீட்டியாதவராய் ; இது முற்றெச்சம் இஃது இப்பொருட்டாதலை, "இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றஞ் செல்வம் வலியென்று இவையெல்லாம் - மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாமுய்யக் கொண்டு " என்னும் நாலடிச் செய்யுள் வலியுறுத்தும். ‘தலையாகத் துறத்தல் ' என முடித்து, ‘தலைப்பட்டார் தீரத்துறந்தார் என்பதற் கொப்பத் தலைப்படுமாறு துறத்தல் ' எனப் பொருளுரைப்பாரு முளர்.
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு. பதவுரை: ஏவது மாறா - ஏவலை மறாது செய்யும், இளங்கிளைமை - மக்களுடைமை, முன்இனிது - முற்பட வினிது ; நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய், நாளும் கற்றல் - நாடோறுங் கற்றல், மிக இனிது -; ஏர் உடையான் -உழுமாடுகளையுடையானது, வேளாண்மை - பயிர்த்தொழில், இனிது -; ஆங்கு - அதுபோல , தேரின் - ஆராயின், திசைக்கு - (தான் செல்லுந் திசையில், கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல், இனிது -; ஏவது ‘ஏவு' முதனிலைத் தொழிற்பெயரும், ‘உணர்வதுடையார் 'என்புழிப்போல, ‘ஏவுவது' என்பது விகாரமாயிற் றென்பது மொன்று. இனி ‘ஏவியது' என்னும் வினையாலணைந்த பெயர் ‘ஏவது எனக் குறைந்த தென்பாருமுளர். இளங்கிளையாவார் மிக்க ளென்க ; ‘ கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி ' என்னும் நாலடிச் செய்யுள் காண்க. ஏர் - எருது ; ‘ஏரழ குழுபெற்றப்பேர் ' என்னும் ஆவது நிகண்டு. நாளுங்கற்றல் - நாண்முழுதுங் கற்றலுமாம். வேற்றூராகலின் நட்புக் கோடல் நன்றென்பார், ‘கோணட்புத் திசைக்கு ' என்றார். திசைக்கு : வேற்றுமை மயக்கம் . ‘ தான் செல்லுந், திசைக்குப் பாழ் நட்டாரையின்மை என்னும் நான்மணிக்கடிகையும் ஈண்டுக் கருதத்தக்கது.
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே மான முடையார் மதிப்பு. பதவுரை: யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை, காண்டல் -உடம்பை வளர்க்காமை, முன் இனிது -; கான்யாற்று அடை கரை ஊர்-முல்லை நிலத்து யாற்றினது நீரடை கரைக்கண் உள்ள ஊர், இனிது - வாழ்தற் கினிது ; ஆங்கு - அவைபோல, மானம் உடையார் - மானமுடையவரது, மதிப்பு கொள்கை , இனிது -; "கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென வுடல்சின வுருமென" எனவும், "காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக் கூற்றென " எனவும் சிந்தாமணி யுடையார் கூறியபடி, விசையாற் காற்றும், ஒலியாற் கடலும், வடிவால் வரையும், அச்சத்தா லுருமும், கொலையாற் கூற்று மெனத்தக்க யானைகளைப் பெறுதலின் அருமையும், பெற்ற வழி யுளதாம் பயனுந் தோன்ற ‘யானையுடைய படைகாண்டன் முன்னினிதே ' எனவும். "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙன மாளு மருள் " என்றபடி, தன்னூன் வளர்த்தல் கருதிப் பிறிதோருயிரின் தசையைத் தின்பவன் அருளிலனாய் அவ்வுலகத்தை இழத்தலின், ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே' எனவும், "மானயா நோக்கியர் மருங்கல் போல்வதோர் கானயாற் றடைகரைத் கதிர்கண் போழ்கலாத் தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணல் "எனச் சிந்தாமணியுடையார் உரைத்தவாறு, நுடக்கமும் அழகுமுடைய கான்யாற்று நீரடைகரை பொழில் செறிந்து வெண்மணல் பரந்திருத்தலின் வாழ்தற்கு வசதியுண்மை தோன்றக் ‘கான்யாற்றடை கரை யூரினிது' எனவும், தம் நிலையிற் றாழாமையுந் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாகிய மானமுடையார் கொள்கை, "இம்மையு நன்றா மியனெறியுங் கைவிடா தும்மையு நல்ல பயத்தலாற் - செம்மையி னானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண் மான முடையார் மதிப்பு " என்று நாலடியாரிற் கூறிவண்ணம் இருமையும் பயத்தலின் ‘ மானமுடையார் மதிப்பு இனிதே' எனவுங் கூறினா ரென்க. காண்டல் - செய்தல் ; ‘நகரங் கண்டான் ' என்னும் வழக்குண்மை தெரிக. இனி , ‘காண்டல்'‘பார்த்தல் ' என்பாருமுளர். பின்னர் நிற்கும் ‘ஊன்' கருவியாகுபெய ரென்க.
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ் செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல் எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும் பொல்லாங் குரையாமை நன்கு. பதவுரை: கொல்லாமை -கொலை பஞ்சமா பாதகங்களி லொன்றாகலின் ‘கொல்லாமை முன்னினிது ' என்றார். ‘கோல் கோடி மாராயன் செய்யாமை ' என்பது பாடமென்ப. ‘ராயன்' என்னும் வடசொற்றிரிபு அக்காலத்து வழங்கக் காணாமையானும், ‘கோடி செய்யாமை ' என்னும் முடிபு நேரிதன்மை யானும், கோல் கோடிச் செய்யாமையே செங்கோல் னாகுதலாகலிற், கூறியது கூறல் என்னுங் குற்றம் நேர்தலானும் அது பாடமாகாதென்க. ‘மாராயம் -அரசனாற் செய்யுஞ் சிறப்பு ' என்பர் நச்சினார்க்கினியர்,. அரசன் தக்க காரணமின்றி விளையாட்டாக வேட்டமாடி உயிர்களைக் கொல்லுதலும், தன்கண் வினை செய்வார் பலருள்ளும் ஒருவன்மாட்டு விருப்புற்று நடுவு நிலைமை தவறி அவற்குரித்தாகாத சிறப்புகளைச் செய்தலும், மற்றொருவன் மாட்டு வெறுப்புற்று அவன்மீது குற்றஞ் சாற்றலும் கூடாவாம்; இவையின்றி நீதி செலுத்தல் இனிதென்பது கருத்தென்க. பொல்லாங்குரையாமையைச் சோர்வற மேற்கொள்ளுத லரிதென்பார், ‘எய்துந்திறத்தால்' என்றார். ‘கோல் கோடி' என்புழிக் கோலென்றது தராசுக்கோலை என்றுணர்க. செவ்விய கோலொத்தலின் ‘செங்கோல்' ஆயிற்றென்ப.
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக் காப்படையக் கோடல் இனிது. பதவுரை: ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும், அறஞ்செய்கை - தருமஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது ; பால்பட்டார் நன்னெறிப் பட்டார் , கூறும் - சொல்லும், பயம் மொழி - பயனுடைய சொல்லின், மாண்பு - மாட்சிமை, இனிது-; வாய்ப்பு உடையர் ஆகிபொருந்துதலுடையவராய், வலவைகள் அல்லாரை நாணிலிகளல் லாதவரை, காப்பு அடைய கோடல் - காப்பாகப் பொருந்தக் கொள்ளுதல், இனிது-. அறமாவது நல்லன நினைத்தலும், நல்லன சொல்லுதலும், நல்லன செய்தலுமாம். ஆற்றுந்துணையாவது பொருளளவிற்கேற்பச் செய்தல். "ஒல்லும் வகையான் அறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்" என்றார் பொய்யில் புலவரும். தமது தன்மையை விடாதார் பகைவராயினும், நொதுமலராயினும், நண்பராயினும் பயனுடை மொழிகளையே பகர்தலின் ‘பாற்பட்டார் கூறும் பயமொழி ' என்றார். கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய எல்லா மிருந்தும் ஒருவன் கண் நாணொன் றில்லையாயின அவன், தன்னை யடைந்தாரைக் கைவிடுவ னென்பது, ‘வாய்ப்புடையராகி வலகைளல்லாரைக், காப்படையக் கோட லினிது' என்பதன் கருத்தென்க.
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல் கொண்டடையா னாகல் இனிது. பதவுரை: அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் -அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல், இனிது-. அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை, "அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தைசெ யந்தணர்" என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின், மறக்கலாகா தென்னுங் கருத்தாற் செந்நாப்போதாரும், "மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார். "அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி" என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர். "ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் பேதையிற் பேதையா ரில்" என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழியொழுகாமை இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல் இனிது என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ.
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக் கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது. பதவுரை: ஊரும் கலிமா -செலுத்துகின்ற போருக்கு உரிய குதிரை, உரனுடைமை - வலிமையுடையதாயிருத்தல், முன் இனிது - மிக வினிது ; தார்புனை மன்னர் தமக்கு - மாலையணிந்த அரசர்களுக்கு உற்ற வெஞ்சமத்து - போர் வாய்த்த களத்தில் , கார் வரை யானை - கரிய மலை போன்ற யானைகளின், கதம் - வெகுண்டு செய்யும் போரை, காண்டல் - காணுதல், முன் இனிது -; ஆற்றவும் ஆர்வம் உடையவர் - மிகவும் அன்புடையார், நல்லவை - நல்ல கேள்விகளை , பேது உறார் - மயக்கமடையாதவர்களாய், கேட்டல் - கேட்பது ; இனிது-. அரசன் ஏறிச் செல்லுங் குதிரைக்குப் பசி தாகம் பொறுத்தற்கும் வேண்டியபோது விரைந்தோடுதற்கும் நெடிது நேரஞ்சாரி செல்வதற்கும் வலிமை வேண்டுதலின், ‘ஊருங் கலிமா வுரனுடைமை முன்னினிதே' என்றார். தார் அடையாள மாலை; ‘கண்ணியுந் தாருமெண்ணின ராண்டே' என்னுந் தொல்காப்பயிச்சூத்திர வுரை காண்க. "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்பவான் வினை " என்றவாறு யானைப்போர் காண்டற்குத் தக்க காட்சியாதலுணர்க. ‘ஆற்றவும் ஆர்வமுடையார் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது' என்றார்; பேரார்வமுடையார்க்கன்றிக் கேட்ட நற்பொருள்களை உட்கொள்ளுதலும், உள்ளத்தமைத்தலும், பின் சிந்தித்துத் தெளிதலும், தெளிந்தவழி நிற்றலுங் கூடாமையினென்க. ‘ஆற்றவும் நல்லவை' என முடிப்பாரு முளர். பேதுறார் : ஒரு சொல் லெனினுமாம். இது பஃறொடை வெண்பா.
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே பங்கமில் செய்கையராகிப் பரிந்துயார்க்கும் அன்புடைய ராதல் இனிது. பதவுரை: தங்கண் - தங்குமிடத்தே, அமர்பு உடையார் நட்புடையார், வாழ்தல் -வாழ்தல், முன் இனிது - மிக வினிது ; அம் கண் விசும்பின் - அழகிய இடமகன்ற வானத்தில் அகல் நிலா - விரிந்த நிலாவை, காண்பு - காணுதல், இனிது -; பங்கம் இல் செய்கையர் ஆகி - குற்றமில்லாத நடையுடையவராய், யார்க்கும் பரிந்து - யாவர்க்கும் இரங்கி, அன்புடையர் ஆதல் - அன்புடைய ராயிருத்தல், இனிது-. தம்மை யடுத்து ஒட்டி வாழ்பவர் நன்மைகளைப் பெற்று வாழ்தல், தம் பெருமிதத்திற்கு கேதுவாகலின், ‘தங்க ணமர் புடையார் தாம் வாழ்தல் முன்னினிதே 'எனவும் , அழகுந் தன்மையுமுடைத்தாய் விழிக்கு விருந்து செய்தலின், ‘அகனிலாக் காண்பினிதே 'எனவும். ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம்' என்றிருத்தலின், ‘யார்க்கு மன்புடைய ராத லினிது' எனவுங் கூறினாரென்க. தாம் : அசை.
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல் எனைமாண்புந் தான்இனிது நன்கு. பதவுரை: கடம் உண்டு - கடன் கொண்டு உண்டு, வாழாமை காண்டல் - வாழாதிருத்தல், இனிது-; நிறை மாண்பு இல் - கற்பு மாட்சிமையில்லாத, பெண்டிரை - மனைவியரை, நீக்கல் - விலக்கி விடுதல், இனிது-; மனம் மாண்பு இலாதவரை - மனத்தின்கண் மாட்சிமை யில்லாதவரை, அஞ்சி அகறல் - அஞ்சி நீங்குதல், எனை மாண்பும் - எல்லா மாட்சியினும், நன்கு இனிது - மிக வினிது. "உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கைஃ தின்றும் புதுவ தன்றே புலனுடைய மாந்திர்" எனவும், "விடன்கொண்ட மீனைப் போலும் வெந்தழன் மெழுகைப் போலும் படன்கொண்ட பாந்தள் வாயிற் பற்றிய தேரை போலுந் திடன்கொண்ட ராம பாணஞ் செருக்களத் துற்ற போது கடன்கொண்ட நெஞ்சம் போலுங் கலங்கின னிலங்கை வேந்தன் " எனவும் இருத்தலின், ‘கடமுண்டு வாழாமை காண்ட லினிதே' என்றார். ‘நிறை மாண்பில் பெண்டிரை நீக்க லினிதே ' என்றது. கற்பழிந்த மனைவியொடு கலந்து வாழ்தல் இம்மையிற் றலையிறக்கத்தையும் பெருந்துன்பத்தையும் தருதலே யன்றி, மறுமையினும் நரகத்தைத் தருதல் பற்றி யென்க. அது கூடாதென்பதனை, "வினையிலென் மகன்றனுடல் வேறுசெய்வித் தோனைக் குனிசிலையி னாளையுயிர் கோறல்புரி யேனேல் மனைவியய லான்மருவல் கண்டுமவள் கையாற் றினையளவு மோர்பொழுது தின்றவனு மாவேன் " "கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனு மற்றோர் பொற்புடை மனைவி தன்னைப் புணர்வதற் கெண்ணு வானுஞ் சொற்பொரு ளுணர்த்தி னானைத் தொழவுள நாணு வானும் விற்பன வலாத விற்று மெய்வளர்த் தழிகு வானும் " ‘ஆவனா னுண்மை ....... என்றிருத்தலிற்றெளிக. மன மாண்பிலாதவார் - கெட்ட எண்ணமுடையார்; துட்டர்கள். ‘துட்டரைக் கண்டாற் றூரநில்' என்னும் பழமொழி காண்க. ‘எனை, மாண்பு' என்புழி இன்னும் உம்மையும் செய்யுள் விகாரத்தாற்றொக்கன.
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப் பெருமைபோற் பீடுடையது இல். பதவுரை: அதர் சென்று - வழிபோய், வாழாமை - வாழாதிருத்தல், ஆற்ற இனிது - மிகவினிது; குதர் சென்று - தப்பு வழியிற் சென்று, கொள்ளாதஇல்லை. அதர் செல்லலாவது, "பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்" என்றபடி ஊரூராய்ச் சென்றிரத்தல். அன்றி , நாடோடியாத லெனினும் வழிபறித்த லெனினுமாம். இவற்றுள் வழிபறித்தல் வேடர்க்குக் குலத்தொழிலாகலின் ஏனையோருள் அத் தொழிலின் முயல்வார் சிற்சிலரையே நோக்கிக் கூறியதாமாகலின், அப் பொருள் சிறவாதென்க. நூற்பொருளை நுனித்தறியாது வலிந்தும் நலிந்துந் தங்கருத்திற் கியைந்தவாறு கொள்பவார் பலராகலின், ‘குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே ' என்றார். உண்ணாரெனப்படுவார் தாழ்ந்த வருணத்தோர். "தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க" என்னும் நாலடியினை ஈண்டறிக. இனி, ‘உண்ணிருண் ணீரென் றுபசரியார் தம் மனையி 'லுண்ணாமை கோடி யுறும் ' என்றிருத்தலின், ‘ஈண்டு உண்ணார் அன்போடுபசரியாதார் ' என்பாருமுளர். அன்றியும், ‘உண்ணார் என்றது குரு, தெய்வம் , வறிய ராதியரை; அவர் பொருள்கொண்டு உண்ணுதல் பெரும்பாவமாகலின் என்பாருமுண்டு ; அவர் ‘கைத்து' ‘பொருள்' என்பர், தான் ; அசை . ‘உயிர் சென்று படினும் என்புழி உடம்பின் தொழில் உயிர்மே லேற்றப்பட்டது; இஃது உபசார வழக்கு.
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றேல் இனிது. பதவுரை: குழவி - குழந்தைகள், பிணி இன்றி - நோயில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது -; கழறும்சொல்லுகின்ற , அவை அஞ்சான் - சபைக்கு அஞ்சாதவனுடைய , கல்வி - கல்வியானது, இனிது -; மயரிகள் அல்லராய் - மயக்கமுடைய ரல்லராய், மாண்பு உடையார் சேரும் - மாட்சிமையுடையாரை யடையும், திருவும் - செல்வமும் தீர்வு இன்றேல் - நீங்காதாயின், இனிது - . பாலக்கிரக தோடம் பட்சிதோட முதலிய அப் பருவத் துணமையின் ‘ குழவி பிணியின்றி வாழ்த லினிதே ' எனவும் ; "உளரெனினும் இல்லாரோ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்" என்றிருத்தலின், ‘கழறு மவையஞ்சான் கல்வி யினிதே' எனவும்: "பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப் பிரிவு " என்றிருத்தலின் , ‘மாண்புடையார்ச் சேருந் திருவுந் தீர்வின்றேலினிது ' எனவுங் கூறினா ரென்க. ‘திருவும்' என்புழி உம்மை எச்சவும்மையாம்.
மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை மானிடவர்க் கெல்லாம் இனிது. பதவுரை: மானம் அழிந்த பின் - பெருமை கெட்ட பின், வாழாமை -இருப்புச் சிதையாதபடி, தான் அடங்கி வாழ்வு - தான் அடங்கி வாழ்தல், இனிது-; ஊனம் ஒன்று இன்றி குறைவு சிறிதுமில்லாது, உயர்ந்த பொருள் உடைமை மிக்க பொருளுடையராதல், மானிடவர்க்கு எல்லாம் - எல்லா மக்கட்கும், இனிது -; மானம் அழிதல் - நிலையினின்றுந் தாழ்தல். "தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை" எனவும் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் " எனவும் பிறருங் கூறுதலின் ‘மான் மழிந்தபின் வாழாமை முன்னினிதே ' என்றார். ஒருவன் தானடங்கி வாழானாயின் அவன் குடியிருப்புச் சிதைதல் ஒருதலை யெனல் குறித்தன ரென்க. ஊனமொன்றின்றி யுயர்ந்த பொருளாவது கல்வியாம் ; என்னை? "கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை " எனவும், "தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது" எனவும் பெரியாரும் பணித்தமையி னென்க. கலித்தொகையுடையார் ஒரு காரணம் பற்றிச் செல்வப் பொருளைக் ‘கேடில் விழுச்செல்வம்' என்றாரேனும், நச்சினார்கினியர் வழுவமைத்தமையுங் கண்டு தெளிக. ‘ஒன்று' என்புழி முற்றும்மை விகாரத்தாற்றொக்க தென்க.
குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனனஞ்சான் ஆகல் இனிது. பதவுரை: குழவி - குழந்தைகளது, தளர்நடை - தளர்ந்த நடையை, காண்டல் - காணுதல்,தன்பால் வந்து சேர்ந்து , வெய்து உறும் போழ்தும் - (தான் தாபமடையுங் காலத்தும், மனன் அஞ்சான் ஆகல் - மனம் அஞ்சாது நிற்றல், இனிது-. தளர் நடையைக் குறுகுறு நடத்தல் என்ப. "குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே " என்றார் ஒரு புலவர். ‘அமிழ்தின்' என்புழிச் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. ‘இன்' உறழ் பொருளின் வந்தது; ஒப்புப் பொருளின் வந்ததெனினு மமையும். தீவினைப் பயன் நுகர்ந்தே தீரவேண்டுதலின், ‘மனனஞ்சானாக லினிது' என்றார். ‘வெய்துறும்' ஒரு சொல் லெனினுமாம்.
பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை மதமுழக்கங் கேட்டல் இனிது. பதவுரை: பிறன் மனை - பிறனுடைய மனைவியை, பின் நோக்கா - திரும்பிப் பாராத, பீடு - பெருமை, இனிது -; வறன் - நீரின்மை யால், உழக்கும் - வருந்தும், பைங்கூழ்க்கு பசிய - பயிர்க்கு, வான்சோர்வு - மழை பொழிதல், ஆற்ற இனிது - மிக இனிது ; மறம் மன்னர் - வீரத்தையுடைய அரசர், கடையுள் - கடைவாயிலின்கண், மாமலை போல்யானை - பெரிய மலைபோலும் யானைகளது, மதம் முழக்கம் - மதத்தாற் செய்யும் பிளிற்றொலியை, கேட்டல் -, இனிது-. ‘பிறன் மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா' என்றார் பிறரும். பின்நோக்குதல் - திரும்பிப் பார்த்த வண்ணம் நடத்தல் ; இது காதலின் நிகழ்வது என்பதனை, "எருத்தத் திரண்டு விழிபடை யாமையென் னாருயிரை வருத்தத் திருத்த முகம்பிறக் கிட்டு மயினடக்குந் திருத்தத்தைக் கண்டு விளர்த்த வென் னாதய னூர்தி செங்கோல் பொருத்தத்த னூர்தியும் பண்டே விளர்த்துப் புகழ்கொண்டவே"என்னும் பாவானு மறிக. இனி , மனத்துக்கொள்ளுதல் எனினுமாம். ‘பிறன்மனை நோக்காத பேராண்மை' என்பதற்குப் பரிமேலழகர் ‘பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண் தகைமை என உரை செய்திருத்தல் காண்க. வான் : ஆகு பெயர்.
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகுஇனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே எள்துணை யானும் இரவாது தான்ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது. பதவுரை: கற்றார் முன் - கற்றவர்க்கு முன்பு, கல்வி உரைத்தல் தங் கல்வியைச் சொல்லி ஏற்றுதல், மிக இனிது - மிகவினிது ; மிக்காரை கொடுத்தல், எ துணையும் - எல்லா விதத்தானும், ஆற்ற இனிது - மிக இனிது. "கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங் குற்றந் தமதே பிறிதன்று" என்றிருத்தலின, ‘கற்றார் முற் கல்வியுரைத்தன மிக வினிதே எனவும், ‘நல்லினத்தி னூங்குந் துணையில்லை என்றிருத்தலின், ‘மிக்காரைச் சேர்தன் மிகமாண முன்னினிதே எனவும்; "எள்ளுவ என்சில இன்னுயி ரேனுங் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்" என்றிருத்தலின், ‘எள்துணையானு மிரவாது தானீதல், எத்துணையுமாற்ற வினிது' எனவுங் கூறினா ரென்க.
நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும் மெய்த்துணையுஞ் சேரல் இனிது. பதவுரை: நட்டார்க்கு -பொருந்துதல், இனிது-. "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்"
கொற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்""
"எல்லாப் பொருளும் உடைத்தா யிட நல்லா ளுடைய தரண்" என்பவற்றின் பொருள் இப் பாவின்கண் அமைந்து கிடத்த லறிக. ‘ஒட்டாரை யொட்டிக் கொளல் ' என்பதற்குத் ‘தன் பகைவர் பிறரொடு கூடாமல் மாற்றிவைத்தல் எனினுமாம். ‘ அதனின்' ஐந்தனுருபு ஈண்டு உறழ்பொருளின் வந்ததென்க. உடையும் காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாதல் காண்க.
மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை இனிது. பதவுரை: மன்றின் - அம்பலத்தின்கண், முதுமக்கள் - அறிவுடையோர், வாழும் பதி - வாழ்கின்ற ஊர், இனிது-; தந்திரத்தின் - நூல் விதிப்படி , வாழும் தவசிகள், வாழ்கின்ற தவத்தோரது, மாண்பு - மாட்சிமை, இனிது-; எஞ்சா குறையாத, விழுச்சீர் - மிக்க சிறப்பினையுடைய , இருமுதுமக்களை தாய் தந்தையரை, காலை - காலையில், கண்டு -எழுதல், இனிது-. மன்றமாவது ஊர் மன்றம்; அஃதாவது சபைகூடும் பொதுவிடம் மன்றத்து அறிவுடையார் வாழின், நீதி பெறப்படுதலின், ‘மன்றின் முதுமக்கள் வாழும் பதியினிதே' என்றார். தந்திரம் - நூல் ; அஃதிலக்கணையால் நூல்விதிக்காயிற்று. ‘கண்டொழுதல்' என்பது பாடமாயின், ‘அவரிருக்கு மிடத்திற் றொழுதல் ' என்றுரை செய்க.
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது தக்குழி ஈதல் இனிது. பதவுரை: நட்டார் -அடங்கி நடத்தல், முன் இனிது - முற்பட வினிது, முட்டு இல் - குறையில்லாத, பெரும் பொருள் - பெரும் பொருளை, ஆக்கியக்கால் - தேடினால், அது அப்பொருளை, தக்க உழி - தக்க பாத்திரத்தில், ஈதல் - கொடுத்தல், இனிது-. புறங்கூறலாவது காணாவிடத்துப் பிறரை இகழ்ந்துரைத்தல் ; ‘தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா வவற்கு ' என்றர் நாலடியாரினும், ‘பொய்யா விளங்கே விளக்கு' ஆகலின் ‘பட்டாங்கு பேணி' எனவும், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' ஆகலின் ‘பணிந்தொழுகல்' எனவும், "உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்" ஆதலின் ‘தக்குழி யீதல் ' எனவுங் கூறினார். புறங்கூறான் : முற்றெச்சம் . மற்று : அசை. ‘தக்குழி என்புழி, அகரந் தொக்கது,
சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது. பதவுரை: சலவரை - வஞ்சகரை , சாரா விடுதல் - அடையாது நீக்குதல், இனிது-; புலவர்தம் - அறிவுடையாருடைய வாய்மொழி - வாய்ச் சொற்களை, போற்றல் - பாதுகாத்துக் கோடல், இனிது-; மலர்தலை - அகன்ற இடத்தையுடைய ஞாலத்து - பூமியில் வாழ்கின்ற , மன் உயிர்க்கு எல்லாம் - நிலை பெற்ற எல்லாவுயிர்க்கும், தகுதியால் - உரிமைப்பட, வாழ்தல் வாழ்வது, இனிது. சலம் - மாறுபாடு. ‘தீயினத்தி, னல்லற் படுப்பதூஉமில்' என்றார் பிறரும். புலம் - அறிவு , ‘வாய்மொழி' என்றது தீயசொற் பயிலாவென்ற சிறப்புத் தெரித்தற் கென்க. ‘நல்லார்சொற் கேட்பதுவு நன்றே ' என்றார் பிறரும். மன்னுயிர்க்கெல்லாம் உரிமைப்பட வாழ்தலாவது மன்னுயிரெல்லாந் தன்னுயிரெனக் கொண்டு ஒழுகுதல். "உலகு பசிப்பப் பசிக்கு முலகு துயர்தீரத் தீரு நிலவு நிறுத்திவாழ் வஞ்சி யுடையாள்வி யென்னு மொருத்தியா லுண்டிவ் வுலகு" என்றிருத்தல் காண்க.
பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறந்தெரிந்து வாழ்தல் இனிது. பதவுரை: பிறன் - பிறனுடைய, கை பொருள் - கைப்பொருளை, வௌவான் - அபகரியாதவனாய், வாழ்தல் - வாழ்வது, இனிது-; அறம் புரிந்து - அறத்தைச் செய்து, அல்லவை நீக்கல் பாவங்களைச் செய்யாமை, இனிது-; மறந்தேயும் - மறந்தாயினும், மாணா - மாட்சிமைப்படாத, மயரிகள் - அறிவிலிகளை, சேரா திறம் - சேராத வழிகளை, தெரிந்து வாழ்தல் - ஆராய்ந்து அறிந்து வாழ்வது, இனிது-. ‘கைப்பொருள் கொடுத்துங் கற்றல்' என்புழிக் கைப்பொருளாவது சேமநிதியென்பர் நச்சினார்க்கினியர். பிறர் பொருளெட்டியே யெனவும் என்றார் பிறரும். ‘அல்லவை நீக்கல்' என்றார், ‘அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்' ஆகலின். மேல் ‘சலவரைச் சாரா விடுத லினிது என்றார். இதனுள் 'மறந்தேயு மாணா மயரிகட் சேராத், திறந்தெரிந்து வாழ்தலினிது' என்றதென்னை யெனின், சலவரென்பார் பிறரை மயக்குவாரும், மயரிகளென்பார் தாம் மயங்குவாரு மாகலானும், மயக்குவாரைச் சேர்தலினும் மயங்குவாரைச் சேர்தல் பேரிடர் விளைத்தலானுமென்க.
வருவா யறிந்து வழங்கல் இனிதே ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்தல் இனிது. பதவுரை: வருவாய் -பொருள் வருகின்ற நெறியினள வினை, அறிந்து-, வழங்கல் - கொடுத்தல், இனிது-; ஒருவர் பங்கு ஆகாத - ஒருவர்க்குச் சார்பாகாத ஊக்கம் - மனவெழுச்சி , இனிது-; பெருவகைத்து ஆயினும்- பெரிய பயனையுடைத்தாயினும், பெட்டவை - தாம் விரும்பியவற்றை , செய்யார் - ஆராயாது செய்யாதவராய், திரிபின்றி - தம்மியல்பின் வேறுபடுதலில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது-. வருவாய் : ஆகுபெயர். பிறரும், ‘ஆற்றி னளவறிந் தீக' எனவும், ‘வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்' எனவும், ‘வந்த பொருளின் காற்கூறு வருமே லிடர்நீக் குதற்கமைந்து, மைந்த விருகானினக் காக்கி மற்றைக் காலே வழங்கிடுக' எனவுங் கூறினர். தொடர்புடையார்க்குச் சார்பாக மனஞ் செல்லுதல் இயல்பாகலின், ‘ஒருவர் பங்காகாதவூக்க மினிதே' என்றார். ‘தொழிற் பயன் பெரியதாயினும் அதனை நோக்காது' தன்மனத்தின்கட்டோன்றும் விருப்பினை யடக்கித் தம்மியல்பின் நிற்றல்வேண்டுமென்பார், ‘பெட்டவை செய்யார், திரிபின்றி வாழ்தலினிது என்றார். தம் இயல்பாவது தமக்கும் பிறர்க்கும் நல்லன செய்தல்.
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச் சூதரைச் சோர்தல் இனிது. பதவுரை: காவோடு - சோலை வளர்த்தலோடு, அறக்குளம் தருமத்திற்குக் குளத்தை, தொட்டல் - வெட்டுதல் மிக இனிது-; அந்தணர்க்கு - மறையவர்க்கு, ஆவோடு - பசுவோடு, பொன் ஈதல் - பொன்னைக் கொடுத்தல், முன் இனிது - மிகவினிது ; பாவமும் அஞ்சாராய் -பற்றுகின்ற, தொழில் - தொழிலையும், மொழி - சொல்லையுமுடைய, சூதரை - சூதாடிகளை, சோர்தல் - நீக்கல்,இனிது. "காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால் வேதங் கரைகண்ட பார்ப்பானுந் - தீதிகந்து ஒல்வது பாத்துண்ணும் ஒருவனும் இம்மூவர் செல்வர் எனப்படு வார்" "காவலர்த்துங் குளந்தொட்டுங் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கும் வளம்பெருக நல்கியும்நா னிலத்துள்ளோர் யாவருக்குந் தவிராது ஈகைவினைத் துறைநின்றார்"எனவும் ஆன்றோர் பிறருங் கூறினார். ஆவோடு பொன்னீதல் - கோதாந ஸுவர்ந தானங்கள் பற்றுந் தொழின் மொழியாவன பொய்த்தொழிலும் பொய்ம் மொழியுமாம். ‘பழிபாவங்கட்கஞ்சாத சூதரொடு சேரற்க' வென்பது கருத்தென்றுணர்க. "ஐயநீ ஆடுதற்கு அமைந்த சூதுமற்று எய்துநல் குரவினுக்கு இயைந்த தூதுவெம் பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்றதாய் மெய்யினுக்கு உறுபகை யென்பர் மேலையோர்"என்றிருத்தல் காண்க.
வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது. பதவுரை: வெல்வது - மேம்படுதலை, வேண்டி - விரும்பி, வெகுளாதான் - கோபியாதவனது, நோன்பு - தவம், இனிது-; ஒல்லும் துணையும் - கூடியவளவும் ஒன்று உய்ப்பான் - எடுத்துக்கொண்டதொரு கருமத்தை நடத்துவோனது, பொறை - ஆற்றல் , இனிது-; இல்லது -செய்யத் தக்கதொரு கருமத்தை, செய்தல் செய்வது, இனிது-. மேம்படுதாவது மேற்கொண்ட தவத்தை இடையூறு புகாது காத்து இனிது முடித்தல். ‘வெல்வது வேண்டி வெகுளிவிடல் என்றார். ஆற்றலாவது இடுக்கண் முதலியவற்றாற் றளராமை. "பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளுஞ் சிற்றுயிர்க் காக்க மரிதம்மா" என்றபடி பெறாதவற்றைக் காமுறுதல் உயிர்க்கியல்பாகலின் ‘இல்லது காமுற்றிரங்கி யிடர்ப்படார்' என்றார். இல்லது : வினையாலணைந்த பெயர்.
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே நில்லாத காட்சி நிறையில் மனிதரைப் புல்லா விடுதல் இனிது. பதவுரை: ஐவாய வேட்கை - ஐந்து வழியான் வருகின்ற ஆசையையும், அவா -நிறுத்துலில்லாத, மனிதரை-, புல்லா விடுதல் - சேராது நீங்குதல், இனிது-. ஐந்து வழியாவன : மெய், வாய், கண் , மூக்கு, செவி என்பன. "மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க் கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான் விலங்காது வீடு பெறும் " என்பது காண்க. கைவாய்ப் பொருளென்றது சேம நிதியை; ஆவது பாட்டின்குறிப்புரை காண்க. "விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்" என்றிருத்தலின், ‘கல்லார்கட் டீர்வினிதே ' என்றார். கற்றுவைத்தும் அறிவு மயங்குதலும் மனஞ்சென்றவழி யெல்லாஞ் செல்லுதலுமாகிய தீயொழுக்க முடையார், சேர்க்கை கேடு பயத்தலின், ‘நில்லாத காட்சி நிறையின் மனிதரைப் புல்லாவிடுதலினிது என்றார். நிறையாவதுநிறுத்தல். ‘நிறையெனப் படுவது மறைபிறரறியாமை' எனக் கலித்தொகை கூறுதலுமறிக. புல்லா : வினையெச்ச வீறு புணர்ந்து கெட்ட தென்க.
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்கினியது இல். பதவுரை: நச்சி -கொடுக்கக் கூடியவற்றை , கரவாத - ஒளிக்காத, பற்றினின் - அன்பினும், பாங்கு இனியது இல் - நன்றாகவினியது வேறொன் றில்லை. ‘தன் நச்சி ' எனக் கூட்டுவாரு முளர். ‘ செல்லுதல்' ஈண்டு அடைதல். நசை கொல்லலாவது ஒன்றைப் பெறலாமென்ற ஆசை நாளடைவிற் றேய்ந்து அழியுமாறு செய்தல் ; அஃதாவது கொடுத்தற்கிசைவில்லையாயின் உடனே மறாது பன்முறையும் தருவதாகப் பொய்கூறி நாளடைவில் அவ்வாசை தானே அழியுமாறு செய்தல். அஃது அப்பொருட்டாதலை, "இசையா ஒரு பொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத்து இயற்கை - நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து" என்னும் பாவா னறிக. உட்கு - உள்குதல் , நினைத்தல் ; ஈண்டு மதித்தல். "இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின்" என்றிருத்தலின் ‘எத்திறத்தானு மியைவ கரவாத' என்றார். பற்று - இல்வாழ்க்கையுமாம்.
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே மானம் படவரின் வாழாமை முன்இனிதே ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை கோள்முறையாற் கோடல் இனிது. பதவுரை: தானம் கொடுப்பான் -இடங்கொடுப்பானது, தகை ஆண்மை - பெருமை பொருந்திய வீரம் , முன் இனிது - மிக வினிது ; பட மானம் வரின் - தான் இறப்ப மானம் எய்து மெல்லை வரின், வாழாமை - உயிர் வாழாமை, முன் இனிது-; ஊனம் கொண்டாடார் - குற்றம் பாராட்டாதவராய், உறுதி உடையவை - நன்மை யுடையனவற்றை , கோள் முறையால் - கொள்ளுமுறைமைப்படி , கோடல் - கொள்ளுதல், இனிது-. தானம் கொடுப்பான் அபயப்ரதானஞ்செய்து தன் பக்கல் இடந் தந்து பாதுகாப்பவன். ‘மாவீரனல்லனாயின் அது செய்யத் துணியான் ' என்பது குறிப்பு. ‘தானங்கொடுப்பான் தகையாண்மை' என்பதற்கு அன்ன முதலிய தானங்களைச் செய்வானது தகுதியின் றலைமை என்பர் பழையவுரைகாரர். மானம் இன்னதென ஆவது பாட்டுரைக்கண் உரைத்தாம். ‘மானம் வரின்' என்பதற்குப் பரிமேலழகருரை கண்டு தெளிக. ‘நீரை நீக்கிப் பாலை யுண்ணும் அன்னப்பறவை போலக் குற்றமுடையன நீக்கிக் குணமுடையன கொள்க' என்பார். ‘ஊனங்கொண்டாடாருறுதி யுடையவை எனவும், காரணகாரியம், ஐநக ஐந்யம் முதலிய சம்பந்தங்களுள் யாதானு மொன்றுபற்றி இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென ஆன்றோர் கொள்ளுமுறைப்படி கொள்க என்பர், ‘ கோண் முறையால்' எனவுங் கூறினார். இனி, கோள்முறையாவது கோடன் மரபென்பாருமுளர். அஃதின்னதென, "கோடல் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போதல் என்மனார் புலவர்" என்னுஞ் சூத்திரத்தா னறிந்துகொள்க.
ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வினியது இல். பதவுரை: ஆற்றானை -செய்யென, அலையாமை - வருத்தாமை, முன் இனிது - மிகவினிது ; கூற்றம் - யமனது, வரவு உண்மை - வருகையின் நிச்சயத்தை சிந்தித்து வாழ்வு - நினைத்து வாழ்வது , இனிது-; ஆக்கம் அழியினும் - செல்வமழிந்தாலும், அல்லவை கூறாத - பாவச் சொற்களைச் சொல்லாமைக் கேதுவாகிய , தேர்ச்சியின் - தெளிவினும், தேர்வு-தெளிவு, இனியது இல் - பிறிதொன்றில்லை. வன்மை கண்டு ஏவினல்லது தன்மாட்டு அன்புடைமை கண்டு ஏவி வருத்தினும் வினை முடியாதாகலின் ‘ஆற்றானை யாற்றென்றலையாமை' என்றார். இதனை, "அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று" என்பதனானுந் தெளிக. மரணம் வருதலை நினைப்பிற் பாவ வழியில் மனஞ்செல்லாமையின் ‘கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு' என்றார் ‘பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ' என்றார் பிறரும். அல்லவை யென்றது பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும் வருணத்திற்கு உரிய அல்லனவுமாம். அவைகூறின் ஒருவன்மாட்டு ஒழுக்கமின்மை வெளிப்படுதலின் கூறாத தேர்ச்சியின்' என்றார். "ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்" என்றிருத்தல் காண்க. ‘கூறாத' : காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாம்.
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி ஒளிபட வாழ்தல் இனிது. பதவுரை: கயவரை - கீழ்மக்களை , கைகழிந்து - நீங்கி, வாழ்தல் - வாழ்வது, இனிது-; உயர்வு உள்ளிமனவெழுச்சியுண்டாதல், இனிது-; எளியர் இவர் என்று- இவர்வறிய ரென்று, இகழ்ந்து உரையாராகி - அவமதித்து இழிவு சொல்லாராகி, ஒளிபட வாழ்தல் - புகழுண்டாக வாழ்வது , இனிது-. ‘கையிகந்து' என்பதூஉம் பாடம் ; ‘கயவரைக் கையிகந்து வாழ்தல்' என்றார் பிறரும் "மனத்தான் மறுவில ரேனுந் தாஞ்சேர்ந்த இனத்தல் இகழப் படுவார்" ஆகலின், ‘கயவரைக் கைகழிந்து வாழ்த லினிதே' என்றார். தன்னை ‘நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும்' தானேயாமாகலின், அது செய்தற்கு மனங்கிளர்தல் நன்றென்பார், ‘உயர்வுள்ளி யூக்கம் பிறத்த லினிதே ' என்றார். இனி, ‘உயர்வுள்ளி' என்பதற்குத் ‘தான் இருக்கும் உயர்ந்த பதவியை நினைத்து எனவும் பொருள் கூறுப. ஒளிபட வாழ்தல் ஈண்டு அதற்குக் காரணமாய ஈதலையுணர்த்தி நின்றது. என்னை? ‘ஈதலிசைபட வாழ்தல் என்றிருத்தலினென்க. எனவே, ‘இகழ்ந்துரையாராகி, யொளிபட வாழ்தல்' என்பதற்கு ‘நன்கு மதித்து இனியவை கூறி ஈதல் ' என்பது பொருளாயிற்று. "இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளு ளுவப்ப துடைத்து" என்றார் திருக்குறளாசிரியரும்.
நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத நன்றியின் நன்கினியது இல். பதவுரை: நன்றி பயன் -அந்நாள், அறிவார் யார் என்று -அறிவாரொருவரு மிலரென்று, அடைக்கலம் - அடைக்கலப் பொருளை, வௌவாத -அபகரியாத, நன்றியின் - நன்மையினும், நன்கு இனியது - மிக வினியது, இல் - பிறிதொன்றில்லை. "செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ " என்றிருத்தலின், ‘நன்றிப் பயன் றூக்கி வாழ்த னனியினிதே ' என்றார். ‘மன்றம்' என்புழி அத்துச் சாரியையும் ஏழனுருபுந் தொக்கன. "நன்றிப் பயன்தூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த அடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்சம் இழந்துவாழ் வார்" எனவும், "வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை " எனவும் பிறருங் கூறியவாற்றான், ‘மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே ' என்றார். சான்றியதென அடைக்கலப் பொருளை அபகரிப்பின் தெய்வங் கண்டு ஒறுத்தலின், ‘அன்றறிவா ரியாரென் றடைக்கலம் வௌவாத, நன்றியி னன்கினிய தில்' என்றார். தெய்வங் காணுமென்பதனை, "வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தோ மென்று மகிழன்மின் - வஞ்சித்த எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி அங்கங் குலைவ தறிவு " என்பதனாலும், அடைக்கலப்பொருளை அபகரிப்பிற் பெருந்துன்பம் விளையுமென்பதனை, "அடைக்கலம் வௌவுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்கா தார் சொல் " என்பதனானுந் தேர்க.
அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. பதவுரை: அடைந்தார் -சொல்லுதல், ஆற்ற இனிது - மிக வினிது. ‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் என்றார் பிறரும். சரணாகத ரக்ஷணஞ் செய்தல் பேரறமென்பார் 'அடைந்தார் துயர்கூரா வாற்ற வினிதே ' என்றார். காகாசுர சரணாகதி, சுக்ரீவ சரணாகதி, விபீஷண சரணாகதி முதலிய பல சரணாகதிகளைப் பற்றிக் கூறுதலின் ஒருசார் இராமாயண மென்னும் இதிகாச முற்றுஞ் சரணாகதி சாத்திர மென்பதூஉந் தெரிந்து கொள்க. கூரா - கூராது என்னும் வினையெச்சங் கடைக்குறைந்து நின்றது. இனி, அதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச மெனவும், எதிர்மறை வினையாலணைந்த பெயரெனவும் கொண்டு பொருளுரைப்பாரு முளர். செய்யத்தக்கவாவன வருணத்திற்கும் நிலைக்கும் இன்றியமை யாதவும் கடமையாயவும் பெரும்பயனுடையவும் பின் இன்பம் பயப்பவும் முதலாயின. ‘கடன் கொண்டும்' என்புழி உம்மை இழிவுசிறப்பு. "அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால் இம்மை அரிதே வெளிறு" என்றவாறு கல்வி கேள்விகளின் மிக்கார் மாட்டும் ஒரோ வழி அறியாமை யுளதாகலின், ‘சிறந்தமைந்த கேள்விய ராயினுமாராய்ந் தறிந்துரைத்த லாற்ற விவினது' என்றார்.
கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையிற் பாங்கினியது இல். பதவுரை: கற்று அறிந்தார் -வினையை வைத்தாற்கு, தீங்கு ஊக்கா - கெடுதி செய்யாத, பத்திமையின் - அன்புடைமையினும், பாங்கு இனியது - நன்றாக வினியது, இல் - இல்லை. கூறுங்கால் இனிதன் றெனினும் , பயன் இனிதென்பார் ‘கருமப் பொருளினிதே' என்றார். அரசற்குக் குடிகண்மாட் டன்பில்லையாயின் குறை நீக்கலும் முறை செய்தலும் இலவாகலின், ‘பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்னினிதே' என்றார். அரசன் ஒருவன் பிறப்புக் குணம் அறிவு என்பவற்றையும் செயலையும் காட்சி கருத்து, ஆகம் மென்னும் அளவைகளான் ஆராயாது அவன்கண் வினையை வைப்பின், அவன் அன்புடையனல் லாக்கால் கெடுதி செய்த லெளிதாகலின், ‘தெற்றென வின்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப், பத்திமையில் பாங்கினிய தில்' என்றார். ‘ஊக்காப் பத்திமை' என்புழிப் பெயரெச்சங் காரியத்தின்கண் வந்ததென்க.
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர் தானை தடுத்தல் இனிது. பதவுரை: ஊர் முனியா - ஊரார் வெறுக்காதனவற்றை, செய்து ஒழுகும் - செய்து வருகின்ற, ஊக்கம் - பெருமை, மிக இனிது-; தானே -, தடுத்தல் -ஓரரசன் விலக்குதல், இனி்து-. முனிதல் - வெறுத்தல், ஊர் முனிதல் - ஒரு படித்தாய் எல்லோரும் வெறுத்தல். "கடலி னஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னாற்கிடந் தூர்முனி பண்டமே” என்றவிடத்தும் ‘ஊர் முனி பண்டம் ' என்றிருத்தல் கண்டு கொள்க. ‘தானே' என்புழி ஏகாரம் சிறப்பு. எத் துணையூக்க முடையார்க்குந் தாமதகுணத்தான் மடிவருதலியல்பெனினும் அஃது அங்ஙனம் வந்துழி அதன்கண் வீழாது, முயற்சியின் தலைநிற்றல் நன்றென்பார், ‘தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே' என்றார்.
எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளர் விடுதல் இனிது. பதவுரை: எல்லி பொழுது - இரவின்கண் ; வழங்காமை - வழி நடவாமை, முன் இனிது - மிக வினிது ; சொல்லுங்கால்பொருந்தி நட்புக் கொள்ளினும், பொருள் அல்லார் - ஒரு பொருளாக மதிக்கப்படாத கயவருடைய, கேண்மை - நட்பினை கொள்ளா விடுதல் - கொள்ளாது நீக்குதல், இனிது-. விடப்பூச்சிகள் முதலிய சரித்தலானும், பனி முதலியன நோய் செய்தலானும் ‘எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே' என்றார். சோர்வு - குற்றமாயின், சொற்குற்றம், பொருட்குற்றம் உள்ளிட்டன வென்க. பொருளல்லார் - அறிவிலாதார் இழிகுலத்தார் என்பர் பரிமேலழகர்.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்வேறில் வேந்தர்க்கு இனிது. பதவுரை: வெற்றி வேல் - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய, வேந்தற்கு - அரசனுக்கு, ஒற்றினால் - ஒற்றராலே, ஒற்றிஅறிதல், இனிது -. "ஒற்றினா னொற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில்" என்றிருத்தலின், ‘ஒற்றினா னொற்றிப் பொருள் தெரிதன் மாண்பினிதே ‘என்றார். ஒன்றி : பிறவினைப் பொருளில் வந்த தன் வினை, ‘முன்தான் தெரிந்து முறை செய்தன் முன்னினிதே ' என்றது, தன் கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் அக் குற்றத்தைத் தான் முன்னர் ஆராயாத அரசற்கு அக் குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலாரோடும் ஆராய்ந்து அதனளவிற்றாகச் செய்தல் கூடாமையி னென்க. "ஒற்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப் பொற்றோள் துணையாத் தெரிதந்துங் - குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று முறையிடினுங் கேளாமை யன்று" என்றிருத்தலின், ‘உற்றுப் பாங்கறிதல்' என்றா ரென்க. ‘வெற்றிவேல்' என்பது கருத்துடையடை: இம்மூன்றையுஞ் செய்யானாயின் இவற்குவேல் போரின்கண் வெற்றியைத்தாராதென்பது கருத்தாகலின்.
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது. பதவுரை: அவ்வித்து - மனக்கோட்டஞ் செய்து, அழுக்காறு உரையாமை - பொறாமைச் சொற்களைச் சொல்லாமை, முன் இனிது - மிக வினிது செவ்வியனாய் - மனக்கோட்ட மிலனாய், சினம் செற்று கடிந்து - கோபத்தைப் பகைத்து நீக்கி, வாழ்வு - வாழ்வது இனிது - ; கவ்விக்கொண்டு - மனம் அழுந்தி நிற்ப, தாம் கண்டது - தாங்கள் கண்ட பொருளை , காமுற்றுவிடுதல், இனிது -. "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும் " ஆகலின், ‘அழுக்கா றுரையாமை முன்னினிதே' எனவும்; "சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும் ஏமாப் புணையைச் சுடும்" ஆகலின், ‘செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே' எனவும், "நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்" ஆகலின், ‘கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று, வவ்வார் விடுத லினிது ' எனவுங் கூறினார். கவ்வித்தாங் கொண்டு என்புழி ‘கொண்டு எச்சதிரிபென்க. தாம் : அசை
இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே தடமென் பணைத்தோள் தளிரிய லாரை லிடமென் றுணர்தல் இனிது. பதவுரை: இளமையை - தனக்குள்ள இளமைப் பருவத்தை, மூப்பு என்று - முதுமைப் பருவமென்று, உணர்தல் - நினைத்தல் இனிது-; கிளைஞர்மாட்டு - சுற்றத்தாரிடத்தே, அச்சு இன்மை - அச்சத்திற்குக் காரணமாகாத இனிய சொற்களை, கேட்டல் கேட்பது, இனிது-; தட - பெரிய, மென்மை - மென்மையாகிய, பணை - மூங்கிலை யொத்த, தோள் -தோள்களையும், தளிரியலாரை - தளிரை யொத்த மென்மையையுமுடைய பிற மகளிரை, விடம் என்று - நஞ்சென்று , உணர்தல் - நினைத்தல் இனிது-. "மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்கா யுதிர்தலும் உண்டு " ஆகலின், ‘இளமையை மூப்பென் றுணர்த லினிதே ' என்றார். "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று " ஆகலின் , சுற்றத்தைக் கண்டுழி அதன் நன்மை உசாவுதல் நன்றென்பார் ‘கிஞைர்மாட் டச்சின்மை கேட்ட வினிதே ' என்றார். இதற்குப் பிற பொருள் கூறுவாருமுளர். ‘ அச்சின்மையை' ‘க்ஷேமசமாச்சார ' மெனவும் ‘அச்சின்மை கேட்டலைக் ‘குகலப் ரச்ந' மெனவுங் கூறுப வடமொழி வாணர். ‘தளிரியலாரை, விடமென் றுணர்த வினிது ' என்றமைக் கேற்பப் பிறரும். "அஞ்சனவை வேற்க ணரிவையர்தம் பேராசை நெஞ்சு புகினொருவர் நீங்கு நிலைமைத்தோ எஞ்சல்புரி யாதுயிரை யெய்ந்நாளு மீர்ந்திடுமால் நஞ்சமினி தம்மவோர் நாளு நலியாதே " "உண்ணாதே யுயிருண்ணா தொருநஞ்சு சனகியெனும் பெருநஞ் சுன்னைக் கண்ணாலே நோக்கவே பருகியதே யுயிர்நீயுங் களப்பட் டாயே " எனக் கூறியிருந்த லுணர்க.
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே எத்துணையும் ஆற்ற இனிதென் பால்படுங் கற்றா உடையான் விருந்து. பதவுரை: சிற்றாள் உடையான் - சிற்றாளுடையானது, படைக்கலம் - ஆயுதம் , மாண்பு இனிது - மாட்சிமைப்பட இனிது, நட்டார் உடையான் - சுற்றத்தாரை யுடையானது, பகை ஆண்மை - பகையையாளுந் தன்மை, முன் இனிது - மிக வினிது; பால் படும் - பால் மிகக் கறக்கும் , கன்று ஆ உடையான் - கன்றோடு பொருந்திய பசுவுடை யானது, விருந்து-, எ துணையும் - எல்லா வகையானும், ஆற்ற இனிது - மிக வினிது. இளம் பருவத்தராகிய வீர ரில்வழிப் படைக்கலத்தாற் பயனின்மையின் , ‘சிற்றாளுடையான் படைக்கல மாண் பினிதே' எனவும், ‘ தம்பிய ரின்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல் ' எனத் தம்பி யொருவன் பரிந்தவாறு சுற்றத்தார் யாவரும் பரிந்து துணைசெய்தலின், ‘நாட்டாருடையான் பகை யாண்மை முன்னினிதே' எனவும் ; "திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமற் பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல் - உண்ணுங்கால் நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம் பேருரைக்கிற் போமே பிணி " என்றபடி விருந்தைச் சிறப்பிப்பன் உருக்குநெய்யும் பெருக்கு மோருமாகலின் ‘எத்துணையு மாற்ற வினிதென்ப பால்படுங், கற்றாவுடையான் விருந்து எனவுங் கூறினார்.
பிச்சைபுக் குணபான் பிளிறாமை முன்இனிதே துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே உற்றபே ராசைகருதி அறனொரூஉம் ஒற்கம் இலாமை இனிது. பதவுரை: பிச்சை புக்கு - பிச்சைக்குச் சென்ற, உண்பான்உண்பவன், பிளிறாமை- கோபியாமை, முன் இனிது - மிக வினிது; துச்சில் இருந்து - ஒதுக்குக் குடியிருந்து, துயர் கூரா - துன்ப மிக்கடையாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; உற்றபேர் ஆசை கருதி - மிக்க பேராசையைக் கருத்துட்கொண்டு , அறன் ஒரூஉம் - அற வழியினின்று நீங்குதற்கேதுவாகிய , ஒற்கம் - மனத்தளர்ச்சி , இலாமை - இல்லாதிருத்தல்,இனிது -. "இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயுஞ் சாலுங் கரி " என்றபடி ஈவானுக்கு வேண்டிய பொழுது பொருளுதவா தொழிதலும் உண்டென்பதற்குத் தன் வறுமையே சான்றாத லறிந்து இரப்பவன் வெகுளாமை வேண்டுமென்பார் ‘பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே' என்றார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவாதலை "புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த வுயிர்க்கு " என்பதனாலும், "நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற னிலையுளே னவைதுரந் திடுமுன் வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி வந்தனன் நின்குறிப் பறியேன்" என்பதனானுங் கண்டு கொள்க. மிக்க பேராசை நிரம்பும் வரையிற் பேரிடரும் ; நிரம்பாதாயிற் பேரிடரும் நிரம்பினும் முடிவிற் பேரிடரும் விளைத்தலின் அதனைக் கருத்துட்கொண்டு. "சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும் அறத்தினூஉங் காக்க மெவனோ உயிர்க்கு " என்றபடி இம்மையினும் மறுமையினும் இன்பம் பெரிதுந் தந்து அந்தமிலின்பத் தழிவில் வீட்டையுந் தரும் அறத்தைக் கைவிடுதலடா தென்பர் , ‘உற்ற பேராசை கருதி யறனொரூஉ மொற்கமிலாமை யினிது என்றார். ‘ஒரூஉம் ' என்பது காரியத்தின்கண் வந்த பெயரெச்சம். பொலிசைஎன்பர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள்.
பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினியது இல். பதவுரை: பத்துக் கொடுத்தும் - பத்துப்பொருள் கொடுத்தாயினும், பதி இருந்து - உள்ளூரிலிருந்து, வாழ்வு - வாழ்தல் ,இனிது-; வித்து - விதைக் கெனவைத்த தானியத்தை, குற்று உண்ணா - குற்றியுண்ணாத, விழுப்பம் - சீர்மை, மிகவினிது -, பற்பல நாளும் - பற்பல நாட்களும், பழுது இன்றி - பழுது படாது, பாங்கு உடைய - நன்மையுடைய நூல்களை, கற்றலின் - கற்பதைப் போல, காழ் இனியது- மிக வினியது, இல்இல்லை. ‘சில' என்னும் பொருளிற் ‘பத்து' என்னும் சொல்லை வழங்குதலுண்மையை, ‘பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி'என்பவற்றான்றிக. ‘பத்து' என்பதற்குப் ‘பத்துப் பொருள்' என்றுரை வகுத்தார் நச்சினார்க்கினியர். தன்பாற் குற்றங் கண்டு இனத்தார் கூடிப் பத்துப்பொருள் தண்டம் விதிப்பின் அது கொடாது ஊரைவிட்டுச் செல்லுதலின் அது கொடுத்து ஊரின்கண் வாழ்தலே நன்மையா மென்பார், ‘பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே' என்றார். சாதி தருமந் தவறினார்க்கு அச் சாதியார்கூடித் தண்டம் விதித்தலும், அத் தண்டஞ் செலுத்தாராயின் நெருப்பு முதலியன வுதவாதும், வண்ணான் நாவிதன் முதலிய ஊர் வேலையாட்களைக் கட்டுப்படுத்தியும் அவர் அவ் வூரின்கண் இராதபடி செய்தன் முற்கால வழக்கென்க. இனி , ‘அரசர்க்குச் செலுத்தும் உரிய இறைப்பொருளொடு பத்துப் பணங் கூட்டிக் கொடுத்தாயினும் உள்ளூர் வாழ்தலினிது' எனப் பொருளுரைப்பினும் அமையும் ஒன்றிற்குப் பத்தாகத் தாங்கா ,இறை கொள்ளுதல் கொடுங்கோன் மன்னன் செய்கையாகலானும், கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டிலுந் கடும்புலி வாழுங் காடு நன்றாகலாலும் ‘பத்து' என்பதற்குப் ‘பதின்மடங்கு இறை' எனப் பொருளுரைத்தல் பொருந்தா தென்க. வித்தின்றேன் மேல்விளைவு மின்றாமாகாலின், ‘வித்துக் குற்றுண்ணா விழுப்பா மிகவினிதே' என்றார். உடலொடு அழியாது புண்ணிய பாவங்கள் உயிரொடு சென்று, "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து" என்றவாறு, எழுமையினும் துணைசெய்தலின், வாழ்நாட்களினொன்றேனும் பழுதுபடாவாறு கற்பவை கற்க வென்பார் ‘பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினிய தில்' என்றார்.
நூல் அருந்ததிக்கற்பினார் தோளும் திருந்திய தொல்குடியின் மாண்டார்தொடர்ச்சியும் -சொல்லின் அரில்அகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றும் திரிகடுகம் போலு மருந்து. பொருள்: அருந்ததி - அருந்ததிபோலும், கற்பினார் - கற்பையுடைய மகளிரின், தோளும் - தோள்களும், திருந்திய - குற்றமற்ற, தொல் - பழைமையான, குடியில் - குடிப்பிறப்பில்,கருத்துரை: நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணஞ்செய்திருப்பது முதலிய மூன்றும் இம்மை மறுமைகளில் நேரிடும் துன்பங்களைத் தீர்த்து இன்பங் கொடுப்பவாதலால் நோயைப் போக்கி நலத்தைக் கொடுக்கும் சுக்கு திப்பிலி மிளகுகளாகிய மருந்து போலும் என்பது. "திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு"சுக்குமுதலிய மூன்றும்போல் தோள் முதலிய மூன்றும் இல்வாழ்வானொருவனுக்குத்துன்பம் அகற்றி இன்பம் விளைத்த லால், அவை உவமைகளாயின. இம் முதற் பாட்டிற் கூறப்பட்ட ‘திரிகடுகம்' என்ற சொல்லே சிறப்பு நோக்கி இந் நூலுக்குப் பெயராகக் கொள்ளப்பட்டது : உவமையாகு பெயர். அருந்ததி - எழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி. கற்புடையார் பலரினும் இவர்க்கு உயர்வு எங்ஙனம் என்னில் விண்மீன் நிலையிலும், எழுமுனி வட்டம் என்ற நாட்கூட்டம் முன்பக்கம் அடியில் இருக்கும் மூன்று விண்மீன்களில் நடுவிலிருப்பதான வசிட்டமீனோடு துணையாய் மின்னுவது. மாண்டார் - சிறந்தார்; மாண் : முதனிலை, உரிச்சொல், அரில் - ஐயந்திரிபுகள், சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார் என்ற தொடரிலுள்ள பொருளோடு ‘நுணங்கிய கேள்விய ரல்லார்' என்ற குறளில் கருத்தை ஒப்பு நோக்குக.
தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர் இன்குணத்தார் ஏவின செய்தலும் - நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில். பொருள்: தன் குணம் - தனதுகருத்துரை: தன்குலச் சிறப்புக் கெடாத வண்ணம் ஒழுகுதலும், குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தலும், நான்மறையாளர் சொல் வழி நிற்றலும் மேலோர் செய்கை. குன்றா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தகைமை பெருமையுமாம். தாவில் என்பதைத் தாவு+இல் என்றும் பிரிக்கலாம். இங்குத் தா என்னும் முதல் நிலையே உகரச்சாரியை பெற்றுத்தாவு என்றாயிற்று. தா+இல் என்னுமிடத்துத் தா : முதனிலைத் தொழிற்பெயர். நான்மறை - நான்கு மறை : நான்கு கூறுமாய் மறைந்த பொருள்களுமுடைமையால் நான்மறை என்றார். அவை பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும் ஆம். இவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர்.
கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம் சிறியாரைக் கொண்டு புகழுமிம் மூன்றும் அறியாமை யான்வருங் கேடு. பொருள்: கல்லார்க்கு - கற்றறியாதவர்க்கு, இனன் ஆய் - உறவினனாகி, ஒழுகலும் - நடத்தலும், காழ் கொண்ட - மனவுறுதிகொண்ட, இல்லாளை - மனைவியை, கோலால் புடைத்தலும் - கோலினால் அடித்தலும், இல்லம் - தம் வீட்டுள், சிறியாரை - சிற்றறிவினரை, கொண்டு - உடன் கொண்டு, புகலும் - புகுதலும், இம் மூன்றும் - ஆகியஇம் மூன்று செயல்களும், அறியாமையான் - தன் அறியாமையினாலே, வரும் கேடு - விளைகின்ற கேடுகளாம்;கருத்துரை: மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் கேட்டைத் தருவன. இல்லாள் - மனைவி, இல்லறத்துக்கு உரியவள் என்பதுபொருள். காழ் - உறுதி, ஈண்டு மனத்திண்மை, கற்பு, கேடு : ஆகுபெயர், கேட்டைத் தருவது என்று பொருள்தருமாதலால்.
பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக் காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும் சாவ வுறுவான் தொழில். பொருள்: பகை முன்னர் - தன் பகைவர் முன்னே, வாழ்க்கை செயலும் - செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும், தொகை நின்ற - தொகுதியாக நின்ற, பெற்றத்துள் - மாடுகளின் நடுவே, கோல் இன்றி - கோல் இல்லாமல், சேறலும் - செல்லுதலும், முன் - முன்னேகருத்துரை: பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும். பகை - பகைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர், இங்கு ஆகு பெயராய்ப் பகைவரை யுணர்த்தியது பண்பாகு பெயரென்பதுமாம். பகைமுன்னர் - பகைக்கு முன்னர் : நான்காம் வேற்றுமைத் தொகை. பெற்றம் - பசுவுக்கும் எருதுக்கும் பொது : தென் பாண்டி நாட்டுத் திசைச்சொல். சேறல், கோடல் : தல் ஈற்றுத் தொழிற் பெயர்கள்; செல், கொள், என்பன முதனிலைகள். கை வாங்கல் - ஒரு சொல்லின் தன்மையில், கைவாங்கு : பகுதி. சாவவுறுவான் - இறக்கும்படி துன்பம் அடைவான், உறுதல் துயருறுதற்குரிய வினை.
வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும் - உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரம் காட்டு நெறி. பொருள்: வழங்கா - யாவரும் இறங்கப் பாராத, துறை இழிந்து - துறையில் இறங்கி, நீர் போக்கும் - பெரும் நீரில் போதலும், ஒப்ப - தனக்கு ஒப்பாக, விழைவு இல்லா - விருப்பமில்லாத, பெண்டீர் தோள் - வேசையர் தோளை, சேர்வு - சேர்தலும், உழந்து - வருந்த, விருந்தினனாய் - பிறர்க்கு விருந்தாளியாகி, வேற்றூர் - அயலூரில், புகலும் - புகுதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், அரும் -கருத்துரை: ஆறு முதலியவற்றிற் பழகாத துறையில் இறங்கிச் செல்லுதலும், தன்மேற் பற்றில்லாதவளைச் சேர்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் செல்லுதலும் இன்பமன்றித் துன்பத்தையே செய்யும். வழங்காத் துறை - வழங்காத துறை, வழங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு - போதல் : தொழிற்பெயர், ஒப்ப : செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஓ : பகுதி, விழைவு : தொழிற்பெயர், இல்லா - இல்லாத - இல்லாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பெண்டீர் - குலமாதர் அல்லாத வேசையர், பெண்டு+ஈர் : பல்லோர் படர்க்கைப் பெயர்.
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் - அறவினையைக் காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு. பொருள்: பிறர் - மற்றவர், தன்னை பேணுங்கால் - தன்னை விரும்பி மேன்மைப்படுத்துமிடத்து, நாணலும் - நாணுதலும், பேணார் - விரும்பாதவராய், திறன் - தகுதியை, வேறு கூறின் - வேறுபடச் சொல்லுமிடத்து, பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறவினையை - உபகாரச் செய்கையை, கார் - மேகம், ஆண்மை போல் - ஆளுதல் போல, ஒழுகுதலும் -கருத்துரை: பிறர் ஒருவர் தன்னை உயர்த்திப் பேசும்பொழுது தனக்கு இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவிசெய்தலும் சிறந்த செல்வமாகும். பேணுதல் - விரும்புதல், நாணுதல் - கூசுதல், பேணார் : முற்றெச்சம்; பகைவர் என்றலும் ஆம். திறன் - திறம் என்பதின் போலி. ஆண்மை : தொழிற்பெயர். கார் : பாண்பாகு பெயர். அறவினை : பண்புத்தொகை, ஊர் ஆண்மை : வினைத்தொகை. செருக்கு : காரியவாகு பெயர், செல்வம் என்னுங் காரணத்துக் காதலால்.
வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்லவையுள் அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும் துஞ்சூமன் கண்ட கனா. பொருள்: வாளைமீன் - வாளை என்னும் மீன், உள்ளல் - உள்ளான் என்னும் சிறு பறவை, தலைப்படலும் - எடுக்க முயற்சி செய்தலும், ஆள் அல்லான் - ஆளமாட்டாதவன், செல்வம்குடியுள் - செல்வமுள்ள குடியில், பிறத்தலும் - பிறந்து அதனை ஆளக் கருதுதலும், பல் அவை உள் - கற்றார் பலர் கூடிய சபையில், அஞ்சுவான் - அஞ்சும் இயல்புடையவன், கற்ற - படித்துள்ள, அருநூலும் - அருமையான நூலுணர்ச்சியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்று செயல்களும், துஞ்சு - தூங்குகின்ற, ஊமன் - ஊமையானவன், கண்ட கனா - கண்ட கனாவைப் போலாம் ;கருத்துரை: எங்ஙனம் வாய்பேசாத ஊமையன் தான் கண்ட கனவைப் பிறருக்கு எடுத்துரைத்துப் பயன்படுத்த கூடாதவனாவனோ? அதுபோல உள்ளான் வாளைமீனைத் தாக்குதலும், திறமையில்லாதவன் செல்வக் குடியிற்பிறந்து அதனைக் காப்பாற்றுதலும், சபைக்கு அஞ்சுகின்றவன் படித்த படிப்பும் இம் மூன்றும் பயன்படாதவை. வாளை மீன் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. மீன் உள்ளல் : இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்; மீனுக்கு என நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். வாளைமீன் உள்ளல் தலைப்படல் என்பது ஒருவன் தனக்கு முடித்தற்கரிய போரைச் செய்து வெற்றிபெற முயலுதல் என்னும் பொருளைக் குறிக்கிறதால் பிறிது மொழிதல் என்னும் அணி, ஆள் : ஆள்தல் என்பதில் தல் விகுதி கெட்டுவந்த முதனிலைத் தொழிற்பெயர். பிறத்தல் : ஆகுபெயர். பல்லவை - பல்+அவை : பண்புத்தொகை. நூல் - நூலுணர்ச்சிக்கு : ஆகுபெயர். கனா - கனவு, இதற்கெதிர்மொழி நனா. நனா - நினைவு. கனாத் தகைமையைத் தலைப்படல் முதலிய மூன்றில் ஆரோபித்துக் கூறுதல் உருவக அணி.
தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும் தாந்தம்மைக் கூறாப் பொருள். பொருள்: தொல் அவையுள் - பழைமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் சபையிடத்தே, தோன்றும் - தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் - குடிப்பிறப்பும், தொக்கு இருந்த - பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் - நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட - மேன்மைப்பட்ட, கல்வியும் - படிப்பும், வெல் சமத்து -வெல்லும் போரிடத்தே, வேந்து - தம் வேந்தன், உவப்ப - மகிழ, அட்டு - பகைவரைக் கொன்று, ஆர்த்த - நிறைத்த, வென்றியும் - வெற்றியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தாம் - தாமே, தம்மை - தம்மைக் குறித்து, கூறா - புகழ்ந்துபேச வேண்டாத, பொருள் - பொருள்களாம்;கருத்துரை: பேர்பெற்ற குடிப்பிறப்பு, சிறந்த கல்வி, வெற்றி மிகுந்த வீரம் இவைதாமே பிறர்க்கு விளங்குவன; இவற்றையுடையவர் தாமே எடுத்துயர்த்தல் பேதைமையுடைத்து; ஆதலால் எடுத்துரைத்த லாகாது. தொல்லவை - தொன்மை + அவை, தொன்மை - பழைமை, பண்புப் பெயர், நல்லவை - நன்மை+அவை, குடிமை; குடி+குலம் : இஃது ஆகுபெயராய் அதிற் பிறப்பைக் குறிக்கும். தொக்கு - தொகு என்ற பகுதி இரட்டித்து இறந்தகாலங் காட்டியது : வினையெச்சம். மேம்பட்ட - மேன்மைப்பட்ட; படுதல் - உண்டாதல், வேந்து - வேந்தன் தன்மை, வேந்தனுக்கு ஆகுபெயர்; கூற்று. அரசு முதலியவை போல, உவப்ப, அட்டு என்னும் வினையெச்சங்கட்கு முறையே உவ, அடு என்பன முதனிலைகள், ஆர்த்த - முழங்குதலுமாம். வென்றி : தொழிற்பெயர். சமம் - போர், இருவர் எதிர்த்து நிற்றல் என்பது.
பெருமை யுடையா ரினத்தின் அகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. பொருள்: பெருமை - பெருந்தன்மை, உடையார் - உடையவருடைய, இனத்தின் - இனத்தினின்றும், அகறல் - நீங்குதலும், உரிமைஇல் - தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை - மாதரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல - சிறந்தவை அல்லாதவற்றை, துணிதல் - சிறந்தவையாகத் துணிதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், முழுமக்கள் - மூடர், காதலவை - விரும்புபவையாம்;கருத்துரை: நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும், அறிவற்ற மூடர்கள் செயல்களாம். பெருமை - அறிவொழுக்கங்களில் மிகுதியுடைமை. அகறல்; தல் விகுதிபெற்ற தொழிற்பெயர். உரிமை கிழமை, பற்று, தன்மனைக்கு உரிமையுடையவள்; மனைவி . காமுற்று : காமுறு - பகுதி, காமம் உறு என்பதன் விகாரம் விழுமிய : பண்படியாய்ப் பிறந்த பலவின்பாற்பெயர். அறிவின்மையாகிய குறையுள்ள மக்களை முழு மக்கள் என்றது மங்கல வழக்கு : முழுமையாகிய மக்கள் : பண்புத்தொகை. படித்து வருந்தி மனத்திலாயினும் உடம்பிலாயினும் சிறிதும் புரைபடாதவர்; அஃதாவது : பிறந்தபடியிருப்பவர், "முழுமகன் சிதடன் இழுதை மூடன்" - திவாகரம். அகறல் வாழ்தல் துணிதல், இவற்றில் உம் என்னும் எண் இடைச்சொல் தொக்கு நின்றது : பெயர்ச் செவ்வெண்.
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்த லில. பொருள்: கணக்காயர் - நெடுங்கணக்கு முதலியன கற்பிப்பவரைகருத்துரை: கல்வி கற்பிக்கத்தக்கவரில்லாத ஊரிலிருப்பதும் ஏற்பட்ட வழக்கைத் தீர்க்கும் திறமில்லாதவர் சபையிலிருப்பதும், உதவி செய்யாதவர் பக்கத்திலிருப்பதும் பயனற்றவை. இருக்க வேண்டாம் என்பது கருத்து. கணக்காயர் - கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர்; கணக்கு - இஃது இலக்கணம் முதலியவற்றிற்கும் உப லட்சணம்; ஆயர் - ஆராய்ந்தவர்; ஆய் - ஆராய், இவர் மூலபாடங்கற்பிப்பவர் என்பது, "கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற், பெற்றதாம். பேதையோர் சூத்திரம்" என்ற நாலடியால் விளங்கும். பிணக்கு - பிணங்குதல். பிணங்கு என்னும் முதனிலை பிணக்கு எனத் திரிந்தது : தொழிற் பெயர்; ஒரு பொருளைக் குறித்து இருவர்க்குளதாம் மாறுபாடு. அறுக்கும் - ஐயந்திரிபற நீக்கும். மூத்தோர் - கற்றறிந்த பெரியோர். "அவைக்குப் பாழ் மூத்தோரை யின்மை" என்பது நான்மணிக்கடிகை. அவைக்களன் - சபையாகிய இடம் : இருபெயரொட்டுப் பண்புத்தொகை. களன் : களம் என்பதன் போலி. பாத்து - பகுத்து." பாத்தூண் மரீஇ யவனைப் பசி யென்னும், தீப்பிணி தீண்ட லரிது" என்ற திருக்குறள் இல் பாத்து பகுத்து என்னும் பொருளில் வந்துள்ளது. "பகடு நடந்த கூழ் பல்லாரோடுண்க" என்பது நாலடி. இல்வாழ்வான் பிரமசாரிமுதலிய ஒன்பதின்மர்க்குங் கொடுத்துண்பது முறையெனத் திருவள்ளுவர் அறுதியிட்டிருப்பினும், விருந்தினர்க்கும் உறவினர்க்குமாவது கொடுத்துண்பது இன்றியமையாதது என்பது வற்புறுத்தப்படும். "விருந்தின்றி யுண்ட பகலும்" என்ற இந் நூல் ஆம் செய்யுளடியையும் நோக்குக.
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவா துரையுந் - தெளியாதான் கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும் ஊரெல்லாம் நோவ துடைத்து. பொருள்: விளியாதான் -கருத்துரை: அழைக்கப்பெறாத ஆட்டத்தைக் காணப்போவதும், களியன்போல் காவாது உரைத்தலும், தன்னை நம்பாதவன் வீட்டிற் செல்லுதலும், வருந்தத்தக்க குற்றங்களாம். கூத்து - நாடகம்.ஆட்டு - ஆடுதல், ஆட்டு : விகாரப்பட்ட முதனிலைத் தொழிற் பெயர், "கூத்தாட் டவைக்குழாத் தற்றே" என்ற திருக்குறள் இலும் கூத்தாட்டு, கூத்தாடுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. கூத்தாகிய ஆடல் எனின் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை, களி -கள்ளுண்ணுதலால் ஏற்படும் வெறி; இதையுடையவன் களியெனப் படுவான். விளியாதான், களியாதான், தெளியாதான் : வினையாலணையும் பெயர்கள். உரை : முதனிலைத் தொழிற்பெயர். பல்காலும், உம் : முற்றுப் பொருளானது. நோவது - நோவதற்கு ஏதுவானது; நோ : பகுதி முதல் நீண்டது. அ : சாரியை, து : ஒன்றன்பால் விகுதி, இம் மூன்றும் உடைத்து என்பது பன்மையில் ஒருமை மயக்கம். ஊர் : இடவாகு பெயர். விளியாதான். கூத்தாட்டுக் காண்டல் என்பதற்கு இனிமையாகப் பாடாதவன் கூத்தாட்டத்தைச் செய்தலும் என்றும் கூறலாம். விளித்தல் - ஒலித்தல், ஈண்டுப் பாடலின் மேற்று. காண்டல் - செய்தல்; "முனைவன் கண்டது முதனூல்" என்பதிற் காண்க. கூரை : சினையாகு பெயராய் வீட்டையுணர்த்திற்று.
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. பொருள்: தாள் ஆளன் என்பான் - முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா - கடன் படாமல், வாழ்பவன் - வாழ்தலுடையவன், வேள் ஆளன் - உதவி யாளன், என்பான் - என்று சொல்லப்படுவோன், விருந்து - வந்த விருந்தினர், இருக்க - பசித்து இருக்கையில், உண்ணாதான்-கருத்துரை: கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி யென்பதும் வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி என்பதும், தான் ஒருவர் சொல்லியவற்றை மறவாது மனத்திற் கொண்டிருத்தலே நற்சிந்தை என்பதும் ஆம். தாள் - முயற்சி, வேள் - உதவி, என்பான் - என்று சொல்லப் படுபவன் : செயப்பாட்டுவினை செய்வினையாக வந்த வினையாலணையும் பெயர்; என்: இடைச்சொல்; பகுதி, "எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்" என்ற கம்பர் தனிக் கவியடியும் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற உண்மையை விளக்கும். பாடா : எதிர்மறை வினையெச்சம், து விகுதி கெட்டது. இருக்க : செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம். ஆக : செயவென் வாய்பாட்டு வினையெச்சம். கோள் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். விருந்து, கேள் : இவை பண்பாகு பெயராய் விருந்தினரையும் கேளிரையும் உணர்த்தும். கோளாளன் என்பதற்கு ஆசிரியர் கூறிய நூற்பொருளை அமையக் கொள்ளும் மாணாக்கன் என்று சொல்லப்படுவோன் கேட்டவற்றை மறத்தலில்லாதவன் எனலும் ஆம்.
சீலம் அறிவான் இளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். பொருள்: சீலம் -கருத்துரை: பிறர் குணம் அறிந்து நடக்கவல்ல சுற்றத் தானும், குடிகளைக் காக்கவல்ல அரசனும், குற்றமில்லாது துறவோடிருக்கவல்ல தவசியும் எல்லாராலும் தேடிப் பெற வேண்டுபவராவர். இளங்கிளை - புத்திரனாவான் என்பதுமுண்டு. இளமையாகியகிளை : பண்புத்தொகை. இளமை என்பதற்கு இளமை தொட்டு வந்த என இலக்கணையாற் பொருள் கொள்ளப்பட்டது; கிளை - சுற்றத்தார்க்கு உவமையாகுபெயர். சால : உரிச்சொல்; மிகுதி யென்னும் பொருட்டு. குடியோம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணல். அஃதாவது ஆறிலொன்றாகிய இறைப் பொருளையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். மாண்ட மாண், பகுதி; மாண்ட : பெயரெச்சம். தவசி : காரணப் பெயர். தவசு : பகுதி. தவமாவது - மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்கல் முதலாயின. அரியார் என்பதில் அருமை என்னும் பகுதி இன்மை யென்னும் பொருட்டு.
இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும் செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். பொருள்: இளமை - இளமைப் பருவம், இழுக்கல் - வழுவுதலை, இயல்பிற்று - இயல்பாகவுடையது; பேதைமை - அறியாமை, பழித்தவை -கருத்துரை: இயல்பாக வழுவுதலையுடையது இளமைப்பருவமாம்; வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்; எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை; இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர்அவனைச் சேரார். இழுக்கல் - வழக்குதல்; இழுக்கு : பகுதி, அல் : தொழிற் பெயர் விகுதி, இயல்பிற்று : குறிப்பு முற்று. இயல்பு ; பகுதி, இன் : சாரியை. று : விகுதி. னகரம் றகரமாகத் திரிந்தது. பழித்தவை : பலவின்பால் வினையாலணையும் பெயர். வற்று : வன்மையின் திரிபாகிய வல் : பகுதி. று : ஒன்றன்பால் விகுதி, லகரம் றகரமானது சந்தி. செறுவொடு : ஒடு என்னும் மூன்றனுருபு விசேடணப் பொருளது. சிறுமையுடன் செறுவும் உடனிகழ்தலால், உடனிகழ்ச்சிப்பொருளுமாம், இளமை, பேதைமை, சிறுமைகள் அவற்றையுடையார்க்குப் பண்பாகு பெயரென்றாயினும், இழிவுபற்றி உயர்திணையை அஃறிணையாகக் கூறியதென்றாயினும் அமைத்துக்கொள்க.
பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால ஓட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா; நட்கப் படாஅ தவர். பொருள்: பொய் - பொய்ச் சொற்களை, வழங்கி - பேசி, வாழும் -கருத்துரை: "பொய் சொல்லும் வாய்க்குப் போசனம் கிடையாது" என்றபடி பொய் சொல்பவனிடம் செல்வம் நிலையாது; தனக்கு மேம்பட்டவன் ஏதாவது காரணத்தால் தாழ்வடைந்த காலத்தும், அவனைத் தனக்கு மேலானவனாகவே கருதவேண்டும்; நட்புச் செய்யப்பட்டவனிடமிருந்து தனக்கு என்ன பயனுண்டாமென்று எதிர்பார்த்தல் தகாதது. பொறி - இலக்குமி; இங்குச் செல்வத்தைக் குறித்தது - அறை - அறுதலையுடையவன், ஐ : கருத்தாப் பொருள் விகுதி, இனிப் பொறி அறை என்பதற்கு அறிவற்றவன் என்றும் பொருள் கூறலாம். கை - ஒழுக்கம். தட்டை - மூங்கில்; மேலோரை வணங்காமையால் தட்டை என அஃறிணைப் பொருளாகக் கூறப்பட்டது; உவமையாகு பெயர். ஊழ்-முறைமை. நட்கப்படாதவர் : வினையாலணையும் பெயர்; நள் : பகுதி, கு : சாரியை, ப் : சந்தி, படு : செயப்பாட்டு வினைப் பொருள் விகுதி, உகரக்கேடும், ளகரத்திரிபும் சந்தி. நட்கப்படு என்ற பகுதியுடன் ஆ : எதிர்மறை விகுதி, த் : விரித்தல் விகாரம், அ : சாரியை, வ் : சந்தி, அர் : பலர்பால் விகுதி, பொறியறை, தட்டை என்ற இரண்டும் உயர்திணைச் சிறப்புப் பெயராகிய பார்ப்பான் என்பதோடு விரவிச் சிறப்பினால் உயர்திணை முடிபேற்றன : படாஅதவர் : இசைநிறை அளபெடை.
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி னார். பொருள்: மண்ணின்மேல் - மண்ணுலகத்தில், வான் - பெரிய, புகழ் - புகழை, நட்டானும் - நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் - பெண்களுள், மாசுஇல் - குற்றமற்ற, சீர் - சிறப்புடைய கற்பு உடையாள் - கற்புடையவளை, பெற்றானும் -கருத்துரை: உலகத்தில் ‘ஈதல் இசைபட வாழ்தல்' என்ற பொய்யாமொழிக்கிணங்க, இரப்பவர்க்கு ஈந்து சிறந்த புகழை நாட்டியவனும், சிறந்த கற்புடைய மனைவியைப் பெற்றவனும் நீரறாத கிணறு முதலியவற்றைத் தோண்டி வைத்தவனும் இறந்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார். மண் : கருவியாகு பெயர். நட்டான், தொட்டான், பெற்றான் என்பவை நடு, தொடு, பெறு என்ற வினைப் பகுதியடியாகப் பிறந்த விளையாலணையும் பெயர்கள், பெண்: சாதியொருமை சீர் கற்பு - சீரும் கற்பும் எனக் கொள்ளுமிடத்து எண்ணும்மை தொக்கது. கற்புடையாட் பெற்றான் - உயர்திணைப் பெயராயினும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால், ளகரம் டகரமாகத் திரிந்தது. கூவல் : கூவம் என்பதன் போலி, பூத உடம்பு அழிந்தும்,அதனாலாய புகழுடம்பு அழியாதிருத்தலால் சாவா வுடம்பு எனவும், அம் மூவரும் என்றும் உளர்போல விளங்குதலின் உடம்பு எய்தினார் எனவுங் கூறினார்.
மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும் - வாய்ப்பகையுள் சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர் கல்விப் புணைகைவிட் டார். பொருள்: மூப்பின்கண் - மூப்பு வந்த இடத்தும் , நன்மைக்கு - துறவறத்துக்கு, அகன்றானும் -கருத்துரை: மூப்புப் பருவத்திலும் துறக்காதிருப்பவனும், மனைவியைச் சார்ந்திருக்கக் குறித்த காலத்தில் சேராத கணவனும், வீண் மொழியாடும் துறவியும் கல்வியறிவைக் கைவிட்டவராதலின் உய்விலர். மூப்பின் - மூப்பினும் : எல்லா இன்பங்களையும் நுகர்தற் கியலாமையால். உம் : இழிவு சிறப்பினது. மூப்பு : என்ற குறிப்பால் நன்மை துறவறமெனப்பட்டது. நன்மை : பண்பாகு பெயர். அகன்றான் - அகல் : பகுதி. பூப்பு - மகளிர் சூதகம். இது கண்ட முதல் மூன்று நாளும் சேராது நான்காம் நாள்முதல் பதினாறாம் நாள்வரை பூப்புற்ற மனைவியை கணவன் சேர்ந்து வாழ்தலே முறை என்பது உடலியல் நூலோர் கூற்று. "பூத்த காலைப் புனையிழை மனைவியை, நீராடியபின் ஈராறுநாளும், கருவயிற்றுறூஉங் காலமாதலிற், பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்," என்ற அகப்பொருள் விளக்கம் ஆவது சூத்திரப்படி நீராடிய பின் பன்னிரண்டு நாளுங் கருப்படுங்காலமாதலிற் பரத்தையிற் பிரிந்த தலைமகனும் அப் பன்னிரண்டு நாளும் தலைவியைப் பிரிந்து உறைதலாகாது என்பது விளங்கும். இது, "பூப்பின் புறப்பாடீராறு நாளும், நீத்தகன் துறைதல் அறத்தா றன்றே, பரத்தையிற் பிரிந்த காலை யான" என்று தொல்காப்பியனாரும், "தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்நீ ராடியபின், ஈராறு நாளும் இகவற்க என்பதே, பேரறிவாளர் துணிவு" என்று ஆசாரக் கோவை யாசிரியர் பெருவாயில் முள்ளியாருங் கூறியவற்றானும் வலியுறுத்தப்படும். வாய்ப்பகை - வாய்மொழிப்பகை; அவை, பொய், கடுஞ்சொல், குறளை, பயனில் சொல் என்ற நான்கும், இவை தீமையைத் தருவதால் பகையெனப்படும். வென்றி, மூப்பு : தொழிற் பெயர்கள். லிங்கி - இலிங்கி - இலிங்கம் அணிந்தவர். கல்வி : காரணவாகு பெயர். "வாய்ப்பின்கட் சாராத் தலைமகனும்" என்ற பாடங்கொண்டு பொருந்துங் காலத்துச் சேராத கணவனும் என்று பொருள் கூறுதலும் ஒன்று.
ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க் கிருதலையு மின்னாப் பிரிவு - முருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங் கள்வரி னஞ்சப் படும். பொருள்: ஒருதலையான் - உறுதியாக, வந்துறூஉம் - வந்தடையும், மூப்பும் - கிழப்பருவமும்; புணர்ந்தார்க்கு - நட்பினருக்கு, இருதலையும் -கருத்துரை: கள்வருக்கு அஞ்சி எச்சரிக்கையாயிருப்பது போல உறுதியாக வரக்கூடிய மூப்பு, நண்பரிருவர்க்கும் விருப்ப மில்லாத பிரிவு, உரு அழிக்கும் நோய் இம் மூன்றுக்கும் அஞ்சிச் செய்ய வேண்டுவன செய்து எச்சரிக்கையா யிருக்கவேண்டும். ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி என்னும் இருவருள் ஒருவரிடத்து எனலுமாம். பருவம் முதலிய ஒத்த தலைமகனும், தலைமகளும் மணத்தல் மரபாதலால் ஒருதலையான் எனப் பொதுப்படக் கூறப்பட்டது. இருதலை : தலை - இடம், இது தலைமகன் தலைமகள் என்ற இருவரையுங் குறிக்கும்; பன்மையில் ஒருமை வந்த பால்வழுவமைதி. இன்னாப் பிரிவு : இன்னாமையைத் தரும் பிரிவு எனின் இரண்டாம் வேற்றுமைத் தொகை; இன்னாமையாகிய பிரிவு : பண்புத்தொகை. உறு : பண்பாகு பெயர், உள் : இடவாகு பெயர். உருக்கி : உருக்கு என்னும் பிறவினைப் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். பெரும்பிணி - பெருமையாகிய பிணி : பண்புத்தொகை, பெருமையாவது மருந்துண்ணல், மந்திரித்தல், மணி முதலியன தானஞ் செய்தல் இவைகளால் தணியாமை. கள்வரின் : இன் ஐந்துனுருபு ஒப்புப் பொருள். அஞ்சப்படும் : ஒரு சொல் நீர்மைத்து.
கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்றொழுகு வானு - மறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற் றூங்கு பவர். பொருள்: கொல் யானைக்கு - கொலை செய்வதாகியகருத்துரை: போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் வீரனும், அயலான் மனைவியை விரும்பித் தீமையாயொழுகுபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும் விரைவில் கெடுபவராவர். உணவு முதலியன கொடுத்துக் காத்த அரசனுக்குப் போர் வந்த காலத்துப் போர்க்களத்தில் யானைக்கு அஞ்சி ஓடுதலால் குணமிலி எனப்பட்டான். யானைக்கு ஓடும் குணமிலி என்பதற்கு யானைக்கு எதிரில் ஓடுகின்ற அறிவில்லாதவனுக்கு என்றுமாம். இலி : இல், எதிர்மறைப் பண்படிப் பகுதி; இ : வினைமுதற் பொருள் விகுதி. எல் - இரவு. பிறன்கடை நின்றொழுகுவான் என்றது இடக்கரடக்கல், நாடுங்கால் - கால், ஈற்று நிகழ்கால வினையெச்சம். "கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம், வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே" என்றபடி வெம்புகரிமுன் செல்லாதிருத்தலை அறியாமையின் குணமிலி என்றாரெனுலுமாம். "தூங்காமை கல்வி துணிவுடைமை" என்ற திருக்குறளில் தூங்காமை என்பதற்கு விரைவுடைமை என்று பரிமேலழகர் உரைவிரித்திருத்தலின், தூங்குதல் விரைதலில்லாமை என்று கொள்ளப்பட்டது. தூங்குபவர் என்பதற்கு இறப்பவர் என்றும் பொருள் கூறுவர்.
ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. பொருள்: பிறன்கண் - பிறனொருவனிடத்துள்ள பொருளுக்கு, ஆசைப்படுதலும் - விருப்பத்தைச் செய்தலும், பாசம் - தன் சுற்றத்தார், பசிப்ப - பசித்திருக்க, மடியை - சோம்பலை, கொளலும் - கொள்ளுதலும்; கதித்து - வெறுத்து, ஒருவன் - ஒருவனால், கல்லான் என்று - கற்றிலன் என்று, எள்ளப்படுதலும் - இகழப்படுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், எல்லார்க்கும் - யாவர்க்கும், இன்னாதன - இன்பந் தராதவைகளாம்;கருத்துரை: அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும், மக்கள் முதலிய கிளைஞர் உணவின்றி வருந்த யாதொரு முயற்சியுமின்றிச் சும்மா இருப்பதும், கல்லாதவன் என்றிகழப்படுவதும் இன்பந்தராதவை. பிறன் என்பது அவன் பொருளுக்கு ஆகுபெயர். இனி, பிறன்கண் ஆசைப்படுதலும் என்பதற்குத் தீயோனிடத்துச் செல்வம் உண்டாதலும் என்றுங் கூறலாம். இங்கு நல்லோனுக்கு மறுதலைப்பட்டவனைப் பிறன் என்றார். பாசம் : கயிற்றின் பெயராகிய இஃது ஒருவனை நீங்கவொட்டாமற் கட்டுப்படுத்துகிறதென்னும் ஒப்புமையால் ஆசைக்கு ஆயிற்று. பின்பு ஆசைக்கு இடமாகிய சுற்றத்திற்கு ஆகுபெயர். கதித்து : கதம் என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். கதி : பகுதி, கதித்து என்பதற்குப் பெருத்து வளர்ந்து எனவும் பொருள் கூறுவர். ஒருவன் : கருத்தாப் பொருளில் வந்த மூன்றாம் வேற்றுமைத் தொகை. இன்னாதன : இனிமை என்னும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று.
வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். பொருள்: வருவாயுள் - தமக்கு வரும் பொருள்களிலே, கால் - நான்கி லொரு பங்கு, வழங்கி -கருத்துரை: வரவுக்குத் தகுந்தபடி அறஞ்செய்தலும், போரில் வெற்றி பெறுதலும், நல்ல பொருள்களைக் கற்றலும் நலம் என்றபடி. வருவாய் - வரும் வழியையுடைய பொருள்; வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, கால் : எண்ணளலவை யாகுபெயர். செருவாய்ப்ப என்ற குறிப்பால் செய்தவை என்பது வெற்றிச் செய்கை என்பதன் மேலாயிற்று, வாய்ப்ப - நிகழ்காலத்தில் வந்த செயவெனெச்சம் : வாய் : பகுதி, ப் : எழுத்துப்பேறு, ப் : சந்தி, அ : விகுதி, வழக்கத்தில் வாய்க்க என வரும். உடைமை : தொழிற் பெயர். கோள் - கோட்பாடு : தொழிலாகு பெயர். ஒருவன் தன் தேட்டத்திற் பாதி தன் வகைச் செலவுக்கும், காற்கூறு அறத்திற்கும், மற்றொரு கால் சேர்த்து வைப்பதற்கும் பயன்படுத்த வேண்டுமென்பது நூற்கொள்கை.
பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடும் அவாத்தேருந் - தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. பொருள்: பற்று என்னும் - பற்று என்று சொல்லப்படுகின்ற, பாசத்தளையும் - கயிற்று விலங்கும், பலவழியும் - பல பொருள்களிலும், பற்று - பிடிப்பு, அறாது - நீங்காமல், ஓடும் - ஓடுகின்ற, அவாத் தேரும் - விருப்பமாகிய தேரும்; தெற்றென - தெளிவாக, பொய்த்து உரை என்னும் - பிறருக்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும், பகை இருளும் -கருத்துரை: பற்றையும், அவாவையும், பொய்யையும் நீக்கினால் வீடடையலாம். ஒன்றின்மேற் பற்றிருந்தால் அவை ஒழித்து அங்கங்குச் செல்வது கூடாமையால் பாசத்தளை யென்றும், ஒன்றின்மேல் ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாத்தேர் என்றுங் கூறினார். "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்ற குறளுக்கு இணங்கப் பொய்யாமை விளக்கம் எனப்படுதலால், பொய்யுரை இருள் எனப்பட்டது. பற்று - அகப்பற்று புறப்பற்று என்றிருவகைத்து; நான் என்னும் உணர்ச்சி யுடனிருப்பது அகப்பற்று. எனது என்னும் உணர்ச்சியுடனிருப்பது புறப்பற்று. பற்று - பற்றுதல் : முதனிலைத் தொழிற் பெயர். பொய்த்து பொய்ம்மை என்னும் பண்படியாகப் பிறந்த அஃறிணை யொன்றன்பாற் பெயர்ச்சொல். பொய்த்துரை : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. தெற்றென : செயவனெச்சம். வித்து - விதை, முளை. "அவா என்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து" என்றார் வள்ளுவனாரும். இதற்கு உடம்பு நீங்கிப்போங் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும், அக் கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப அவ் வுயிரை அவ்வவா அக் கதிக்கட் கொண்டு செல்லுமாதலால், அதனைப் பிறப்பீனும் வித்து என்று பரிமேலழகர் உரை விரித்திருப்பது கருதத் தக்கது. வீடும் - அழியும்; வீடுதல் - அழிதல் : தன்வினை.
தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் - தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும் நல்வினை யார்க்குங் கயிறு. பொருள்: தானம் - தானத்தை, கொடுக்கும் - கொடுக்கின்ற, தகைமையும் - பெருஞ் செய்கையும்; மானத்தார் - பழிக்கு நாணுதலுடையாரது, குற்றம் கடிந்த - குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும் - நல்லொழுக்கமும்; தெள்றென - தெளியகருத்துரை: தானங் கொடுத்தலாலும், மானங் கெடாத நல்லொழுக்கத்தாலும், பொருள் மேலே சிந்தனை யொழிந்திருப்பதனாலும் நல்வினைகளே மேன்மேலும் செய்யலாம். தானம் - அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல். தகைமை : பண்புப் பெயர். பொருள் நீங்கிய : பொருளின் நீங்கிய என்று ஐந்தனுருபு விரிக்க. வினையென்னும் காரணப் பெயர் தன் காரியமாகிய பயன்மேல் நின்றது. ஆர்க்கும் : எதிர்காலப் பெயரெச்சம்; ஆர் : பகுதி, உம் : விகுதி, கு : சாரியை, க் : சந்தி, குற்றம் : பண்புப் பெயர். கடிந்த : பெயரெச்சம்; கடி என்னும் உரிச்சொல் பகுதி.
காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந் தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும் அளறு. பொருள்: காண் தகு - காணுதற்குத் தக்க, மென்தோள் - மெல்லிய தோள்களையுடைய, கணிகை - வேசையின், வாய் - வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் - இனிய மொழியும்; தூண்டிலினுள் - தூண்டிலினிடத்து, பொதிந்த -கருத்துரை: வேசியர் பேச்சும், பகைவர் வணக்கமும், வெளிக்கு நலம்போ லிருந்து உள்ளே கவடு கொண்டிருத்தலால் நலமல்ல; ஆதலால் அவற்றை நம்புதல் தூண்டிலில் வைத்த தவளையை விழுங்கப்போய், மீன் அகப்பட்டுக் கொண்டு கெடுவது போல் கெடுதியே விளைவிக்கும். காண்தகு - காண்டகு, காண் : முதனிலைத் தொழிற்பெயர், நான்கனுருபு தொக்கதாகக் கொண்டு, காணுதற்கு என்று பொருள் சொல்லப்பட்டது. கணிகை - கணிக்கின்ற தன்மையிலிருப்பவள். அஃதாவது "செக்கூர்ந்து கொண்டாருஞ் சேர்ந்த பொருளுடையார், அக்காரம் அன்னார் அவர்க்கு" என்ற நாலடிச் செய்யுட்படி எவன் மிக்க பொருள் தருபவனென்று சிந்திக்கின்றவன் என்பதாம், வாய் என்று வேண்டாது கூறியது, பொருளுடையாரிடத்துக் கடுஞ்சொல் பயிலாமையைக் குறிக்கவேண்டியாம். தூண்டில் : தொழிலாகு பெயர் மீன்களை விரும்பத் தூண்டுவது. இனி, இல் : கருத்தாப் பொருள் விகுதியாகவுங் குறிக்கலாம். ஆழ்ச்சி - ஆழுதல் : தொழிற் பெயர். காழ்த்த : காழ் என்னும் பெயரடியாகப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம். நரகம் போலுதலாவது அழிதற் கேதுவாய துன்பம் தருவது.
செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். பொருள்: செருக்கினால் -கருத்துரை: மதிக்கத் தக்க பெரியாரை மதிக்காதவன், விலைமாது, நல்லவர் பொருட்டு ஏற்படுத்தப் பெற்ற அறச்சாலையை அழித்தவன் ஆகிய இம் மூவரிடமும் அறிஞர் உணவு கொள்ளல் ஆகாது என்பது. செருக்கு. மதம், செல்வக் களிப்பு, ஆல் : மூன்றன் உருபு; உடனிகழ்ச்சிப் பொருள். சிறியவன் என்பதில் சிறுமை அறிவின் மேல் நின்றது. கொல்லல் - அழித்தல், "இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு" என்ற திருக்குறள் இல் கொன்றது என்பதற்கு இன்னாதவற் றைச் செய்தல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. பைத்து - பையையுடையது. பை - படம். கைத்து - கையிலுள்ளது : ஒன்றன் பாற் படர்க்கை வினையாலணையும் பெயர், கை : பகுதி, த் : சந்தி, து : ஒன்றன்பால் விகுதி. "வஞ்சத்தாற் பல்கின்பங் காட்டும் பரத்தையும்" என்ற பாடங்கொள்வதும் உண்டு.
ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானும் இம்மூவர் ஞால மெனப்படு வார். பொருள்: ஒல்வதுகருத்துரை: பெற்றது கொண்டுமகிழும் அதிதியும், கொலையை நீக்கி வாழ்பவனும் உயிரினும் இனிய ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியனும் உயர்ந்தோர் என்று சொல்லப்படுவார் என்பது. ஒல்வது : தொழிலாகு பெயர். விருந்து - புதுமை. இப் பண்பு ஆகுபெயராய் விருந்தினனை யுணர்த்தும். விருந்தினன் - விருந்து : பகுதி, இன் : சாரியை, அன் : ஆண்பால் விகுதி. விருந்து - அறிவிருந்து அறியாவிருந்து என்றிரு வகைப்படும். முன் அறிந்திருந்தமையால் குறித்து வரும் விருந்து அறிவிருந்து; அறிந்திராமையால் குறியாமல் வரும் விருந்து அறியாவிருந்து. ஆருயிர் - ஆர்உயிர்; ஆர் - அருமை, ஆருயிர் : பண்புத்தொகை. அரு, இரு, பெரு முதலிய பண்புகள் வருமொழி முதலில் உயிர் வந்தால் முதல் நீளப் பெறும். கொல்வது : எதிர்காலத் தொழிற்பெயர், வல்லிது; வலிது என்பதன் விரித்தல் விகாரம் : குறிப்புவினையா லணையும் பெயர். ஆசான் - ஆசாரியன். ஞாலம் - உலகு : இங்கு ஆகுபெயராய் உலகத்து உயர்ந்தோரை உணர்த்தியது.
உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந் தூஉய மென்பார் தொழில். பொருள்: உண்பொழுது - உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி - குளித்து, உண்டலும் - உண்ணுதலும்; என் பெறினும் -கருத்துரை: நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள். விதித்த காலங்களில் நீராடக் கூடாமற் போனாலும் உண்ணும் பொழுதாயினும், நீராடுதல் இன்றியமையாத தென்பது. என் : எவன் என்னும் வினாப்பெயர். சான்று - அறிவின் நிறைவு; சால் என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த பெயர்; று : விகுதி, ஆண்மை - ஆளுதல்; தொழிற்பெயர். தோல் - உடம்பு : சினையாகு பெயர். வற்றி : வறுமை என்னும் பண்புப் பகுதி ஈறு கெட்டுப் பகுதி இரட்டித்து இகர விகுதி பெற்றது. தூஉயம் : உயிரளபெடை; இசை நிறைத்தற்கண் வந்தது. சான்றாண்மையாவது - பல குணங்களாலும் நிறைந்து அவற்றை யாடற்றன்மை. ‘ஊழி பெயரினுந் தாம் பெயரார் சான்றாண்மைக், காழி யெனப்படுவார்.' என்ற பொய்யாமொழிக் கிணங்கித் தோல்வற்றிச் சாயினும் என்றார். பால் - பக்கம். வள்ளுவரும் "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந் தொருபாற், கோடாமை சான்றோர்க் கணி" என்று கூறியுள்ளார். இதில் ஒருபாற் கோடாமை யாவது - வினாவிடைகளாற் கேட்டவற்றை மறையாது பகை நொதுமல், நட்பென்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதல். நீராடுவதனால் அழுக்கு முதலிய உடம்பின் குற்றம். நீங்குதலும், பால்பற்றிச் சொல்லாமையினால் பொய் முதலிய வாய்க்குற்றம் நீங்குதலும், சான்றாண்மை குன்றாமையினால் வஞ்சனை முதலிய மனக்குற்றம் நீங்குதலும் சொல்லப்பட்டன.
வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர் உமிக்குத்திக் கைவருந்து வார். பொருள்: வெல்வது - சொல்வென்றியை, வேண்டி - விரும்பி, வெகுண்டு உரைக்கும் -கருத்துரை: வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லக் கருதுதலும், கிட்டாததைப் பெற முயலுதலும், ஒருவன் கல்வியின் தன்மையை ஆராயாது குற்றங் கூறுதலும்; உமியைக் குத்துபவர் போல் துன்பத்தையும் பயனின்மையையும் கொடுக்கும் என்பது. வெல்வது : எதிர்காலத் தொழிற்பெயர்; வெல் : பகுதி, வ் : இடைநிலை, அ : சாரியை, து : விகுதி, "வெல்வது வேண்டின் வெகுளி விடல்," என்பது நான்மணிக்கடிகை. வெகுண்டு : இறந்தகால வினையெச்சம். வெகுள் : பகுதி, ட் : இடைநிலை, உ : விகுதி, ளகரம் ணகரமானது விகாரம். நோன்பு - உயிர்க் குறுகண் செய்யாமை. "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு" என்றார் வள்ளுவரும். இலி - இல்லாதவன். உமிக்குத்தி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. ஒப்பர் என்னும் சொல் எஞ்சி நின்றது.
பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. பொருள்: பெண் - ஒரு பெண், விழைந்து - விரும்பி, பின் செலினும் - பின் சென்றாலும், தன் செலவில் - தன்னடக்கையில், குன்றாமை - குறையாமையும்; கண் விழைந்து -கருத்துரை: முறை பிறழ்ந்து தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறன்பொருள் வலிய வந்தெய்தினும் கைக் கொள்ளாமையும், மண்ணாளுதலை விரும்பிய வாழ்நாளை மதியாமையும் நூலுணர்வுடையார் கருத்து. விழைந்து : உகரவீற்று வினையெச்சம், பின் : இடைச்சொல், செலின் : செல்லின் என்பது லகரம் தொக்கது. செலவில், செலவு : தொழிற்பெயர். இல் : ஐந்தாம் வேற்றுமை, நீக்கப் பொருள் : ஏழாம் வேற்றுமையுமாம். குன்றாமை : எதிர் மறைத் தொழிற்பெயர். குன்று : பகுதி பின்செலினும், கையுறினும் : உம், எதிர்மறை, பொருள்களின் நுண்மையை அப் பொருள்களை யுணர்த்தும் நூலின்மே லேற்றி நுண்ணூல் என்றார். விழைந்த நூலவர் என்பதை நூல் விழைந்தவர் எனப் பின் முன்னாக நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டுக. பொருட்கு என்னும் நான்கனுருபு ஏழாவதனிடப் பொருளில் வந்தது. நோக்கு : முதனிலைத் தொழிற்பெயர்; கருவிப் பொருள் விகுதிபுணர்ந்து கெட்ட பெயர் எனலுமாம்.
தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும் மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் என்று மழுக்கா றிகந்தானும் இம்மூவர் நின்ற புகழுடை யார். பொருள்: தன் நச்சி - தன்னை விரும்பி, சென்றாரை - அடைந்தவரை, எள்ளா ஒருவனும் - இகழாத ஒருவனும், மன்னிய - மிகுந்த, செல்வத்து - செல்வம் வந்த காலத்தில், பொச்சாப்பு - மறதியை, நீத்தானும் - நீக்கினவனும்; என்றும் - பிறரிடத்துப் பகைமை யுண்டாகிய காலத்திலும், அழுக்காறு - அவரது செல்வங் கண்ட இடத்து மகிழாமையை, இகந்தானும் -கருத்துரை: தன்னை மதித்து வந்தவரை இகழாமல் ஏற்றுக் கொள்வதும், செல்வம் சிறந்த காலத்தும் நண்பர் முதலியவர்களை மறவாமல் போற்றுவதும், பிறன் வாழ்வுக்கு மகிழ்வதும் புகழுக்குக் காரணமானவை என்பது. தன்நச்சி : இரண்டாம் வேற்றுமைத்தொகை. நச்சி - நச்சு : பகுதி. இ : வினையெச்ச விகுதி. எள்ளா - எள்ளாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மன்னிய : மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம். பொச்சாப்பு - பொச்சா : பகுதி, பு : தொழிற்பெயர் விகுதி; ப் : சந்தி - நீத்தான் : விணையாலணையும் பெயர் : நீ : பகுதி : அழுக்காறு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; அழுக்கறு; பகுதி. இகத்தல் - கடத்தல். இக : பகுதி. நின்ற - நிலைபெற்ற.
பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் - வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. பொருள்: பல்லவையுள் - பல நூல்களிலும், நல்லவை - நல்ல நூற் பொருள்களை, கற்றலும் - கற்றுணர்தலும்; பாத்து -கருத்துரை: கற்கத் தக்கவற்றைக் கற்றலும், இல்லறத்தை முட்டின்றிச் செய்தலும், ஊக்கத்தோடு முயற்சியால் அருஞ்செயல் ஆற்றலும் தலைசிறந்தன. பல்லவை - பல அவை, சபையுமாம். முட்டாது : எதிர் மறை வினையெச்சம்; முட்டு : பகுதி, வல்லிது : வலிமை என்னும் பண் படியாகப் பிறந்த ஒன்றன்பால் வினையாலணையும் பெயர். தாளின் : இன் : உருபு, ஐந்தாம் வேற்றுமை, ஏதுப்பொருள், ஆக்கல்: அல் ஈற்றுத் தொழிற்பெயர். கேள்வி : தொழிற்பெயர். தொழிலாகு பெயருமாம். கேள்வியுளெல்லாம் : உருபுமாறி நின்றது : இலக்கணப் போலி.
நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். பொருள்: மொழி நோக்கி -கருத்துரை: சொற் போக்குக்கு இயையப் பொருள் கொள்வதும், பயனற்ற சொற் கூறாமையும், நல்ல நூற்கருத்துக்களை அவற்றை விரும்பிப் போற்றுவார்க்குக் கற்பிப்பதும், கல்வியின் பயனாம். நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும் என்பதற்கு நுட்பமாகிய பொருளை யுணர்த்துஞ் சொற்களை ஆராய்ந்து அவற்றின் பொருளை யுள்ளபடி உணர்ந்து கொள்ளுதல் எனவும் பொருள் கூறப்படும். வெண்மொழி - வெண்மைமொழி : பண்புத் தொகை. வெண்மை - நுட்பமின்மை, கருத்தாழமின்மை வேண்டினும் : உம் எதிர்மறைப் பொருள். சிற்றினம் - சிறுமை+இனம். சிறிய இனமாவது "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லென்போரும், விடரும், தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு." இஃது அறிவைத் திரித்து. இருமையுங் கெடுக்கும் இயல்பிற்று. சொல்லாமை : இறுதி உம் தொக்கது.
கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். பொருள்: கோல் அஞ்சி -கருத்துரை: அரசியலுக்கு அடங்கி நடக்கும் குடிகளையும், குடிகளை ஓம்புவதில் சூழ்கண்ணாக விளங்கும் அமைச்சனையும், குடியை நீங்காதபடி உறுதியாகக் காக்குந் தொழிலையும் அரசன் கைவிடலாகாது என்பது. கோல் அஞ்சி - கோலை அஞ்சி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. கோலுக்கு அஞ்சி என்று நான்காம் வேற்றுமையாக்குவாரு முளர். வாழும் என்ற குறிப்பால் கோல் பொதுமையின் நீங்கிச் செங்கோலை யுணர்த்தியது. குடி - குடிப்பிறந்தோர். தழீஇ : செய்தென் வினையெச்சம் : தழுவு : பகுதி, தழுவி என்று இருக்க வேண்டியது விகுதிகெட்டு, பகுதி தழி எனத்திரிந்து உயிர்நீண்டு அளபெடுத்து வந்தது, சொல்லிசை யளபெடை, வீழ் : வீழ்வது எனக் காரணக்குறியால் வந்தது, இகர விகுதி புணர்ந்துகெட்டது, தொழிலாகு பெயருமாம். அமைச்சன் அரசனோடு இருப்பவன் என்ற பொருளில் அமாத்யன் என்ற வட சொற்றிரிபு என்ப. விடல் : எதிர்மறை வியங்கோள் வினைமுற்று ‘பற்றி விடல்' என்ற பாடங் கொள்ளுமிடத்துக் கைக் கொண்டு விடாதிருக்க என்று பொருள் கொள்க.
மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து முறைநிலை கோடா அரசுஞ் - சிறைநின்று அலவலை இல்லாக் குடியும்இம் மூவர் உலகம் எனப்படு வார். பொருள்: மூன்று கடன் - மூவருக்குஞ் செய்யுங் கடன்களை, கழித்த - செய்து முடித்த, பார்ப்பானும் - அந்தணனும்; ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால்கருத்துரை: கடன் முறை தவறாப் பார்ப்பானும், முறைமாறா அரசனும், கவலையற்ற குடியும் உயர்ந்தோர் என்று புகழப் படுவார். மூன்று கடன் - தேவர் முனிவர் பிதிரர் இவர்கட்குச் செய்யுங்கடன். இவற்றில் தேவர் கடன் வேள்வியாலும், முனிவர் கடன் வேதம் ஓதலாலும், பிதிர்க்கடன் மகப்பெறுதலாலும் தீர்க்கப்படும். ஓர்ந்து : வினையெச்சம், ஓர் : பகுதி; ஆராய்; நாடு. முறை - அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. கோடா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; கோடு : பகுதி, சிறை - ஆணை. குடி தாங் கருதியபடி தீயவழியிற் சென்றால், தண்டித்து அடக்கி நல்வழியிற் செலுத்திச் சிறை போலுதலால், ஆணை சிறை எனப்பட்டது. அலவலை : அல : பகுதி, அல் : தொழிற் பெயர் விகுதி. ஐ : சாரியை. மூன்று கடன் கழித்த என்பதற்கு வேதம் ஓதல், வேள்வியாற்றல், மகப்பேறு என்ற மூன்று கடன்களையும் நிறைவேற்றின எனலுமாம். சிறை நின்று என்பதற்கு அரசனால் செய்யப்பட்ட சிறைச் சாலைப்பட்டு என்பதுமாம். அரசு, குடி என்பன உயர்திணைப் பொருளாயினும், சொல்லால் அஃறிணையாதலால், பார்ப்பான் என்ற உயர்திணை ஆண்பாற் சிறப்புப்பற்றி அவை மூவர் என்ற உயர்திணை முடிபேற்றன : திணைவழுவமைதி.
முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர் மெய்ந்நீர்மை மேனிற் பவர். பொருள்: முந்நீர் - கடலில், திரை - அலைபோல, எழுந்துகருத்துரை: மெய்ப்பொருள் காணும் அறிவுடையவனுக்கும், நூல் தேர்ச்சி மிகுந்தவனுக்கும், உலகப் பற்றைவிட வல்லவனுக்கும் முத்திபெற ஏது உண்டு. முந்நீர் - கடல் : படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யவல்ல நீர் : காரணக்குறி; இனி ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய மூன்று நீரும் சேர்ந்தது எனவும் கொள்ளலாம். பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. திரை : தொழிலடியாய்ப் பிறந்த பெயர். இன் : ஐந்தனுருபு, ஒப்புப்பொருள். இயங்குதல் - நடத்தல், செல்லுதல். மேதை - அறிவுடைமை, இங்குப் பண்பாகு பெயர்; அறிவுடையவனுக்காயிற்று. நுண்ணூல் - நுண்மையாகிய நூல், நூற்கரை : ஆறாம் வேற்றுமைத் தொகை. நூல்போலுதலின் : உவமையாகு பெயர். மை - காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்கள். மேல் : பண்பாகு பெயர்.
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந் தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங் தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர் தாமறிவர் தாங்கண்ட வாறு. பொருள்: ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான்கருத்துரை: தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப் பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின் உண்மை யுணராதவர் செய்கைகளாம். உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். வினை - ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக் கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல் மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது - தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம். அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது. ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.
குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய சால்பினிற் றோன்றுங் குடிமையும் - பால்போலுந் தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும் வாய்மை யுடையார் வழக்கு. பொருள்: குறளையுள் - பொருட்சுருக்கத்தினால், நட்பு அளவு - ஒருவன் நட்பின் எல்லை, தோன்றும் - காணப்படும்; உறல் இனிய - பொருந்துதற்கு இனிய, சால்பினில் -கருத்துரை: நட்பளவு, குடிமை, பிரமாணம் இம்மூன்றும் ஒரு தன்மையவாய் நல்லாரிடத்து நிற்கும். குறளையுள்; குறு : பகுதி, அள் : தொழிற்பெயர் விகுதி, ஐ : சாரியை, உள: ஏழனுருபு, ஏதுப்பொருளில் மயங்கிற்று. குறளையுள் நட்பளவு தோன்றும் என்பதற்குகோட்சொல்லில் அக்கோளைக் கேட்டோனது நட்பினது அளவு விளங்கும் என்றுங் கூறலாம். பாலில் பிரை முதலிய பொருள்களுள் ஒன்று கலக்கின், அது கெடுதல் போல, மனத்தூய்மையில் காமம் முதலிய குற்றம் மூன்றனுள் ஒன்று கலக்கினும் அத் தூய்மை கெடுமாதலால், பால் போலுந் தூய்மை எனப்பட்டது. வாய்மையுடையார் வழக்கு - மெய்ந்நெறியுடையார் ஒழுங்கு எனலுமாம். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; தொழிலாகுபெயருமாம். சால்பினில் : இல் : ஐந்தனுருபு, ஏதுப்பொருள்.
தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ் செல்வ முடைக்கும் படை. பொருள்: தன்னை - ஒருவன் தன்னை, வியந்து -கருத்துரை: தற்புகழ்ந்து செருக்குவதும், வீணாகச் சினங் கொள்வதும், பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படை என்றபடி. வியந்து : தருக்கல் : விய, தருக்கு : பகுதிகள். கொன் : பயனின்மையைக் குறிக்கும் இடைச்சொல். வெகுளி : தொழிற்பெயர் - வெகுள் : பகுதி. முன்னிய - முற்பட்ட என்பதுமாம். படை : படு என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர். தன்னை வியத்தலால் அடக்கமின்மையும், வெகுளி பெருக்குதலால் துணையாயினவர் பிரிவும், பல பொருளையும் விழைதலால் குற்றமும் விளங்கும் என்பது, இம்மூன்றும் படையென்று உருவகிக்கப்பட்டன.
புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல் மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும் நன்மையி லாளர் தொழில். பொருள்: புலை - இழி தன்மையாடு, மயக்கம் - கலத்தலாவது, பொருட் பெண்டீர் - பொருளை விரும்பி நிற்கும் வேசியரை, வேண்டி - விரும்பி, தோய்தல் - கூடுதலாம்; கலம் மயக்கம் - பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது, கள் உண்டு - கள்ளைக்குடித்து வாழ்தல் - வாழ்தலாம்; சொல்லை -கருத்துரை: வேசியரைச் சேர்வதாகிய நீசத்தன்மையும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை யுண்பதும், பொய்யை மேற்கொள்வதாய சூதாடுமிடத்திற் சேர்வதும் அறவழி நில்லாதார் தொழில்களாம். புலைமயக்கம் - புலையொடு மயக்கம், புலையை மயங்கும் மயக்கம், புலையினது மயக்கம் என்று மூன்று பொருளிலும் மயங்கும். பொருட் பெண்டிர் என்பது - பொருளை விரும்பும் பெண்டிர் பொருளுக்கு முயங்கும் பெண்டிர், பொருளால் முயங்கும் பெண்டிர் என முப்பொருளில் மயங்கினவாறு காண்க. கள்ளுண்டென்ற குறிப்பால் வாழ்தல்கெடுதலை யுணர்த்தியது. பெண்டீர்த் தோய்தல் என்பதில் நிலைமொழி உயர்திணைப் பெயராதலாலும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலாலும், இயல்பில் விகாரமாயிற்று. சொல் - ஈண்டு மெய். சூது தன்னாலாகும் ஆட்டத்தையுணர்த்தியது; கருவியாகு பெயர். நன்மையிலாளர் என்பதை நன்மை + இன்மை + ஆளர் என்று முறையே ஆறாம் வேற்றுமைத் தொகையாகவும் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்க.
வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட் கொத்த வொழுக்க முடைமையும் - பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந் தொல்லறி வாளர் தொழில். பொருள்: வெகுளி -கருத்துரை: எழுந்த சினத்தை அடக்குதலும், பெண்களுக்கு வயப்படாமலும், அவர்களால் வெறுக்கப்படாமல் நடத்தலும், தக்கார்க்குக் கொடுத்துத் தானும் உண்கின்ற நன்மையோ டிருத்தலும் இன்றியமையாதன. நுணுக்கும் : நுணுக்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிற வினைப் பெயரெச்சம். தன் வினைப் பகுதி - நுணுகு. விறல் : தொழிற்பெயர்; விற : பகுதி. அல் : விகுதி. தொல்லறிவு : தொன்மை + அறிவு. தொன்மை - பழைமை. ஒத்த ஒழுக்கமாவது தன்சொற்கு இசைந்து நடக்கும்படி செய்தலும் அவரோடு இசைந்து இன்புற்றிருத்தலுமாம்.