cheranga-uom
ta-en added
a13a3d2
ta_106773_0 விருப்பு வாக்கு முறையை ரத்து செய்து புதிய தேர்தல் முறையொன்றுக்காக அரசியலமைப்பில் திருத்தம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பில் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ta_106773_1 இன்று தேசிய நிறைவேற்று சபையில் இது தொடர்பான தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.
ta_106773_2 குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கட்சி தலைவர்களிடம் கையளிக்கவுள்ளதாக ஜே.வி;.பியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் அனுர குமார தெரிவித்தார். எவ்வாறாயினும், இன்று தேசிய நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ta_106773_3 அல்லாத பட்சத்தில் தாம் நிறைவேற்றுச் சபையில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அனுர குமாரதிசாநாயக்க தெரிவித்தார்.