Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,629
The steady rise in recoveries has ensured that the percentatge caseload of the country is reducing.
மீட்டெடுப்புகளின் தொடர்ச்சியான உயர்வு நாட்டில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சதவிகிதம் குறைந்து வருவதை உறுதி செய்துள்ளது.
118,630
The current active cases (6,77,444) compose the actual case load of the country.
தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (6,77,444) மட்டுமே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
118,631
It is 26.16 of the total positive cases today, registering further drop in the last 24 hours.
இது இன்று மொத்த நேர்மறையான நிகழ்வுகளில் 26.16 சதவீதம் ஆகும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்கிறது.
118,632
They are under active medical supervision.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.
118,633
With efficient and aggressive testing India is rapidly moving towards completing 3 crore COVID tests 2,93,09,703 samples tested so far. 7,46,608 tests were done in the last 24 hours.
தீவிரமான திறமையான சோதனை மூலம் இந்தியா 3 கோடி கோவிட் பரிசோதனைகளை முடித்து வேகமாக முன்னேறுகிறது; இதுவரை சோதனை செய்யப்பட்ட 2,93,09,703 மாதிரிகளையும் சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் 7,46,608 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
118,634
This has been made possible by a rapidly growing national network of diagnostic labs which comprises 969 labs in the government sector and 500 private labs, adding up to 1469.
நோய்த் தொற்றைக் கண்டறியும் ஆய்வகங்களின் வேகமாக வளர்ந்து வரும் தேசிய கட்டமைப்பால் இது சாத்தியமானது. அரசாங்கத் துறையில் 969 ஆய்வகங்கள் மற்றும் 500 தனியார் ஆய்வகங்களை உள்ளடக்கிய 1469 ஆய்வகங்கள் வரை பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளன.
118,635
The different types of labs include: Real-Time RT PCR based testing labs: 754 (Govt: 450 Private 304) TrueNat based testing labs: 598 (Govt: 485 Private: 113) CBNAAT based testing labs: 117 (Govt: 34 Private: 83) Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in and CovidIndiaSeva .
பல்வேறு வகையான ஆய்வகங்கள் பின்வருமாறு: • Real-Time RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 754 (அரசு: 450 + தனியார்: 304) • TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 598 (அரசு: 485 + தனியார்: 113) • CBNAAT அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 117 (அரசு: 34 + தனியார்: 83)
118,636
Ministry of Power NTPC develops infrastructure at Rihand for increasing the use of Fly Ash Utilization NTPC Ltd., a central PSU under Ministry of Power and countrys largest power generation company, has developed an infrastructure at Rihand project in Uttar Pradesh to transport fly ash in bulk to cement plants, located at distance, at a cheaper cost.
எரிசக்தி அமைச்சகம் என்டிபிசி நிறுவனம் சாம்பல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு வசதியை ரிஹாண்டில் வடிவமைத்துள்ளது நாட்டில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமும், மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமுமான என்டிபிசி நிறுவனம் உத்தரப் பிரதேசத்திலுள்ள ரிஹாண்ட் திட்டத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு, குறைந்த செலவில் சாம்பலை, அதிக அளவில் எடுத்துச் செல்வதற்காக கட்டமைப்பு வசதி ஒன்றைத் தயாரித்துள்ளது.
118,637
The development is in line with NTPC's commitment towards 100 percent utilization of fly ash from power plants.
மின்உற்பத்தி ஆலைகளில் இருந்து சாம்பலை நூறு சதவிகிதம் பயன்படுத்துவதற்கான என்டிபிசியின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
118,638
As per a statement issued by NTPC Ltd., the first rake of 59 BON type of railway wagons carrying 3450 Metric Tonne (MT) of fly ash was flagged off from NTPCs Rihand Super Thermal Power station by Shri Balaji Iyengar, Executive Director (NTPC Rihand) for ACC Cement Manufacturing Plant, Tikaria, U.P.
முதல் கட்டமாக 3450 மெட்ரிக் டன் கொண்ட சாம்பலை ஏற்றிக்கொண்டு 59 பிஓ எக்ஸ் என் ரக ரயில்வே வாகன்கள் என்டிபிசி நிறுவனத்தின் ரிஹாண்ட் சூப்பர் அனல் மின் நிலையத்திலிருந்து உத்தரபிரதேசத்தில் திகாரியாவில் உள்ள ஏசிசி சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டது. இந்த ஆலை 458 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
118,639
located at a distance of 458 kms , in presence of other senior officials of NTPC Rihand.
என்டிபிசி ரிஹாண்ட்டின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.
118,640
The innovation will pave the way for efficient and safer transportation of fly ash from the power plants to cement production units located at a distance in larger quantity.
தொலைதூரத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள சாம்பல், நுகர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பயன்படுத்தப்படுவது புதிய சகாப்தத்தை துவக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
118,641
The effort marks the beginning of a new era for the transportation of fly ash from a remote location to a consumption centre, enabling power plants for upgrading the utilization of fly ash with the availability of additional material loading avenues for Indian Railways and accessibility of fly ash to the cement plants in an environment-friendly manner at a competitive price.
குறைந்த விலையில், சுற்றுச்சூழலுடன் இணக்கமான முறையில், சிமெண்ட் ஆலைகளுக்கு சாம்பல் கிடைப்பது; இந்திய ரயில்வே துறைக்கு கூடுதலான சரக்கு ஏற்றும் வழிகள் கிடைப்பதால் சாம்பல் பயன்பாட்டை அதிகரிப்பது; ஆகியவற்றுக்கு இந்த முயற்சி பெரிதும் உதவும்.
118,642
During the financial year 2019-20, almost 44.33 million tonnes of fly ash was utilized for various productive purposes, being 73.31 of the ash generated.
2019- 20 ஆம் நிதியாண்டில் பல்வேறு உற்பத்தி நோக்கங்களுக்காக 44.33 மில்லியன் டன் சாம்பல் பயன்படுத்தப்பட்டது. சாம்பலின் மொத்த உற்பத்தியில் இது 73.31 சதவிகிதமாகும்.
118,643
Also, NTPC has plans to set up fly ash classifier unit for export purposes.
என்டிபிசி குழுமத்திற்கு 70 மின் நிலையங்கள் உள்ளன.
118,644
President's Secretariat President of India virtually unveils a portrait of Shri Atal Bihari Vajpayee at ICCR Headquarters The President of India, Shri Ram Nath Kovind, virtually unveiled the portrait of Shri Atal Bihari Vajpayee, former Prime Minister of India today (August 16, 2020) on his second death anniversary, at the headquarters of Indian Council for Cultural Relations (ICCR).
குடியரசுத் தலைவர் செயலகம் இந்திய கலாச்சார உறவுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரு.அடல் பிகாரி வாஜ்பேயி-யின் திருவுருவப்படத்தை குடியரசுத்தலைவர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார் முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பேயி-யின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியக் கலாச்சார உறவுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்தை, குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், இன்று (ஆகஸ்ட் 16, 2020) காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
118,645
Shri Atal Bihari Vajpayee served as the ex-officio President of ICCR from March 1977 to August 1979 when he was Foreign Minister.
திரு.அடல் பிகாரி வாஜ்பேயி, 1977 முதல் 1979 வரை வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், இந்தியக் கலாச்சார உறவுகள் நிறுவனத்தின் மரபுவழித் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
118,646
Speaking on the occasion, the President said that today, through this virtual ceremony, we are paying our respects to such a brilliant nationalist who created many glorious chapters in the politics of India.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சி மூலம், இந்திய அரசியலில் ஒளிமயமான அத்தியாயத்தைப் படைத்த அறிவாற்றல் மிக்க தேசியவாதிக்கு, காணொளிக் காட்சி வாயிலாக நமது மரியாதையை செலுத்தி வருவதாகக் கூறினார்.
118,647
He said that Atal ji was always committed to liberal thinking and democratic ideals.
அடல் பிகாரி வாஜ்பேயி, சுதந்திரமான சிந்தனை மற்றும் ஜனநாயக ரீதியில் கருத்து தெரிவிப்பதில் உறுதியாக இருந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
118,648
He left indelible mark of his unique personality and contributed a great deal during his different roles as party worker, Member of Parliament, Chairman of important standing Committees of Parliament, Leader of Opposition, Foreign Minister and Prime Minister.
தனித்துவமிக்க அடையாளத்தை விட்டுச் சென்றுள்ள வாஜ்பேயி, கட்சித் தொண்டர், நாடாளுமன்ற உறுப்பினர், பல்வேறு முக்கியத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், மற்றும் பிரதமர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த போது, சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
118,649
Atal ji, by his conduct, taught all political parties and people active in public life that the national interest was always paramount.
தேச நலன் தான் தலையானது என்பதை, தமது செயல்பாடுகள் மூலமாக, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைத்தவர் வாஜ்பேயி என்றும் அவர் குறிப்பிட்டார்.
118,650
The President said that today the whole world was in peril due to Covid-19.
கோவிட்-19 காரணமாக, ஒட்டு மொத்த உலகமும் தற்போது பெரும் அபாயத்தில் இருப்பதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
118,651
But he shows his confidence that after recovering from this pandemic we will move rapidly on the path of progress and prosperity and will be successful in realising Atalji's dream of making the 21st century India's century.
எனினும், இந்த பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு, நாம் முன்னேற்றம் மற்றும் வளமான பாதையை நோக்கி அதிவேகமாக செல்வதுடன், 21-ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டுமென்ற வாஜ்பேயி-யின் கனவை நனவாக்குவதில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
118,652
Earlier this morning, the President visited the memorial of Shri Atal Bihari Vajpayee - Sadaiv Atal to pay homage to the former Prime Minister on his second death anniversary.
முன்னதாக இன்று காலை, முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பேயி-யின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடமான சடைவ் அடல் சென்ற குடியரசுத்தலைவர், திரு.வாஜ்பேயி-யிக்கு தமது மரியாதையை செலுத்தினார்
118,653
Bihar, Jharkhand, Madhya Pradesh, Odisha, Rajasthan and Uttar Pradesh. Shri Piyush Goyal, Minister of Railways and Commerce Industry is closely monitoring the progress made in these projects and generation of work opportunities for the migrant labours of these states under this scheme.
ரெயில்வே அமைச்சகம் பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில், ஏழைகள் நலவாழ்வு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித வேலை நாட்களை உருவாக்கியுள்ளது பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில், ஏழைகள் நலவாழ்வு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித வேலை நாள்களை உருவாக்கியுள்ளது.
118,654
Shri Piyush Goyal, Minister of Railways and Commerce Industry is closely monitoring the progress made in these projects and generation of work opportunities for the migrant labours of these states under this scheme.
இத்திட்டத்தின் கீழ், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, ரயில்வே மற்றும் வர்த்தக-தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்.
118,655
Around 165 Railway infrastructure projects are being executed in these states worth Rs.2988 Crores.
இந்த மாநிலங்களில், சுமார் ரூ.2,998 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
118,656
Till 14th August, 2020, 11296 workers have been engaged in this Abhiyaan and the payment of Rs 1336.84 Crores has been released to the contractors for the projects being implemented.
14 ஆகஸ்ட், 2020 வரை 11,296 தொழிலாளர்கள், இத்திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களுக்கு, ரூ.1,336.84 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
118,657
Railway has appointed nodal officers in each district as well as in the States so that a close coordination is established with the State Government.
மாநில அரசுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறப்பு அதிகாரிகளையும் ரயில்வே துறை நியமித்துள்ளது.
118,658
Ministry of Personnel, Public Grievances Pensions Centre to assist JK to establish Grievances Portal in each district: Dr Jitendra Singh Forging further the collaboration between DARPG and JK Government for Online Public Grievance Redressal portals at each of the 20 DistrictsAwaaz e-Awam Portal to be revamped with mapping of last mile grievance officers for improved quality of grievance redressal and reduced response time lines Union Minister of State (Independent Charge) Development of North Eastern Region (DoNER) MoS PMO, Personnel, Public Grievances,Pensions,Atomic Energy and Space, Dr Jitendra Singh announced here today that Centre will assist the Union Territory Government of Jammu Kashmir to establish Grievance Portal in each of the 20 districts of the UT.
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைகேட்பு வலைதளம் உருவாக்க மத்திய அரசு உதவும்- டாக்டர் ஜித்தேந்திர சிங் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 20 மாவட்டங்களிலும் குறைகேட்பு வலைதளம் உருவாக்க மத்திய அரசு உதவும் என்று வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு (தனிப்பொறுப்பு) , பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.
118,659
In a significant drive to strengthen the ongoing good governance initiatives in Jammu and Kashmir, Dr Jitendra Singh and Lieutenant Governor of Jammu Kashmir held a telephonic discussion on the plan for next phase of expansion of the online Public Grievance Redressal portal in the Union Territory.
ஜம்மு காஷ்மீரில், சிறந்த நிர்வாக முன்முயற்சிகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, டாக்டர் ஜித்தேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஆகியோர் தொலைபேசி மூலம் உரையாடினர். யூனியன் பிரதேசத்தில் குறைதீர்வு வலைதளம் உருவாக்குவது பற்றி அவர்கள் பேச்சு நடத்தினர்.
118,660
Following the discussion, Dr Jitendra Singh immediately convened a meeting of senior officers dealing with Public Grievances, including Secretary ARPG Dr.Kshatrapati Shivaji and Additional Secretary V. Srinivas.
இந்த விவாதத்தை தொடர்ந்து, டாக்டர் ஜித்தேந்திர சிங் உடனடியாக நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை ஏஆர்பிஜி செயலர் டாக்டர் சத்ரபதி சிவாஜி , கூடுதல் செயலர் வி.சீனிவாஸ் உள்ளிட்ட பொதுமக்கள் குறைதீர்வு தொடர்பான மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
118,661
A plan was finalised to extend and establish a Portal in each of District Headquarters in Jammu Kashmir for addressing the grievances of citizens and for providing services seamlessly at their doorstep.
ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர்களிலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களது வீடு தேடித் தீர்வுகளை அளிக்கும் வலைதளம் ஒன்றை உருவாக்குவது பற்றிய திட்டம் முடிவு செய்யப்பட்டது.
118,662
To implement this initiative, it has been decided that Department of Administrative Reforms and Public Grievances (ARPG), Government of India will further enhance the ongoing collaboration with the Jammu Kashmir Government to revamp the "Awaaz e-Awam" Portal with mapping of last mile grievance officers for improved quality of grievance redressal and reduced timelines in effective disposal of cases.
இந்த முன்முயற்சியை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை , யூனியன் பிரதேச அரசுடன் ஒருங்கிணைந்து அந்த அரசின் ‘’ ஆவாஸ் இ-அவாம் ‘’ தளத்தை சீரமைத்து மேம்பட்ட தரத்துடன் உரிய நேரத்திற்கு முன்னதாகவே தீர்வு காணும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.
118,663
Jitendra Singh informed that in pursuance of this endeavour, a focused team of officials from DARPG would be constituted to work with Jammu Kashmir Government in the coming days.
இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.
118,664
Pertinent to mention, after the conversion of Jammu Kashmir into a Union Territory, the DARPG had organized two important Conferences there on Good Governance.
இக்குழு, வரும் நாட்களில், யூனியன் பிரதேச அரசுடன் தொடர்பு கொண்டு செயல்படும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
118,665
Special Service and Features SYSTEM OF RICE INTENSIFICATION TO ENSURE RECORD FOOD GRAIN OUTPUT Prime Minister announces Rs 1,00,000 crore aid to enhance agriculture infrastructure.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் உணவு தானிய விளைச்சலில் சாதனை நிகழ்த்துவதை உறுதி செய்ய அரிசி உற்பத்தியைத் தீவிரப்படுத்தும் திட்டம் வேளாண்மைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியுதவித் திட்டங்களை அறிவித்தார் பிரதமர் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக, முடக்கநிலைக் காலத்தில் சிரமத்துக்கு ஆளாக இருக்கும் நபர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது.
118,666
Narendra Modi in his recent address, had praised farmers for making agriculture sector self reliant.
வேளாண்மையை தற்சார்பாக ஆக்கியதற்காக, அண்மையில் தனது உரையில் பிரதமர் திரு.
118,667
He had pointed out that our farmers not only produce enough food grains for citizens of India but for other countries in need.
இந்தியக் குடிமக்களுக்கு போதிய உணவு தானியங்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மற்ற நாட்டு மக்களுக்கும் சேர்ந்து விவசாயிகள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்வதாகப் பிரதமர் கூறினார்.
118,668
He said that the government has sanctioned 1,00,000 crore rupees for boosting agriculture infrastructure even during the Corona pandemic.
கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும், வேளாண்மைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவித் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
118,669
The duration of the Agriculture Infrastructure Fund shall be for 10 years from this fiscal to 2029.
இந்த வேளாண்மைக் கட்டமைப்பு நிதியம் இந்த நிதியாண்டு தொடங்கி 2029 வரையில் பத்தாண்டு காலத்துக்கு அமலில் இருக்கும்.
118,670
1 Lakh Crore will be provided by banks and financial institutions as loans with interest subvention of 3 per annum and credit guarantee coverage for loans up to Rs.
இத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆண்டுக்கு 3 சதவீத வட்டி சலுகையிலும், கடன் உத்தரவாதம் இல்லாமல் ரூ.2 கோடி வரையிலும் கடன்கள் அளிக்கும்.
118,671
2 Crore. The beneficiaries will include farmers, Marketing Cooperative Societies, Farmer producer Organisation FPOs, Self help groups SHGs, Joint Liability Groups (JLG), Multipurpose Cooperative Societies.
விவசாயிகள், மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் (எப்.பி.ஓ.க்கள்), சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பேற்புக் குழுக்கள் (ஜே.எல்.ஜி.
118,672
Agri officials with farmer in Manachanallur paddy field Farmers need technology to survive with optimum use of water fertilizers and soil manure.
மணச்சநல்லூர் நெல் வயலில் விவசாயி உடன் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நீரில் கரையும் உரங்கள் மற்றும் மண் உரங்களை தேவைக்கேற்ப அதிக அளவுக்குப் பயன்படுத்த விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது.
118,673
In Tamil Nadu, System of Rice intensification is being successfully implemented by farmers with great success.
தமிழகத்தில் தீவிர நெல் சாகுபடி முறை வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டு வருகிறது.
118,674
The system of rice intensification is targeted to be expanded to 27.18 lakh acres in 2020-21 according to state government.
2020-21 ஆம் ஆண்டில் தீவிர நெல் சாகுபடி திட்டம் 27.18 லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
118,675
With continuous water being released from Mettur Dam into Cauvery, food grain production in Tamil Nadu is expected to rise and reach the target of 28 lakh metric tonne paddy procurement by September.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தொடர்ந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், தமிழகத்தில் உணவுதானிய உற்பத்தி அதிகரித்து செப்டம்பருக்குள் 28 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இலக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
118,676
Agriculture officials say that paddy nurseries had to be made and transplanted to the field for System of rice intensification.
தீவிர நெல் சாகுபடிக்கு நாற்றங்காலில் பயிர்களை வளர்த்து பின்னர், வயலில் நடவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
118,677
All expert and technological advise is given to the farmers in Tiruchirapalli according to Agri officials.
திருச்சியில் விவசாயிகளுக்கு இதுதொடர்பான நிபுணர் ஆலோசனைகளும், தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
118,678
They say that paddy nursery can be made in plastic sheet or used polythene gunny bags spread on the shallow raised bed to prevent roots growing deep into soil.
மண்ணில் வேர்கள் ஆழமாக இறங்கிவிடாமல் தவிர்ப்பதற்காக, பயன்படுத்திய பாலிதீன் சாக்குப் பைகளை அல்லது பிளாஸ்டிக் தாள்களை விரித்து நாற்றங்கால் உருவாக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
118,679
When seedlings reach sufficient height for planting at 15 days, it has to be transplanted into the fields.
நடவு செய்வதற்கேற்ற உயரத்தை 15 நாட்களில் எட்டியதும், பயிர்களை வயலுக்கு மாற்றி நடவு செய்திட வேண்டும்.
118,680
Manachanallur field System of rice intensification In Tiruchirapalli, agriculture officials are directly visiting the fields even during covid 19 pandemic period and giving farmers agro technological help.
தீவிர நெல் சாகுபடியில் மணச்சநல்லூர் வயல் கோவிட்-19 நோய் பாதிப்புச் சூழ்நிலையிலும் திருச்சி பகுதியில் வயல்களை நேரில் பார்வையிட்டு, வேளாண் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
118,681
Joint Director Agriculture Smt Shanthi inspected Kuruvai cultivation in Mannachanallur Vengangudi village.
மணச்சநல்லூர் வேங்கன்குடி கிராமத்தில் குறுவை சாகுபடி வயல்களை வேளாண்மைத் துறை இணை இயக்குநர் திருமதி சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.
118,682
Team of agri officials including Assistant Director, Agriculture Shri Tagore, Agri officer Uma Maheswari, Asst Agri officers Partheban, Baskar interacted with farmers to find out their problems.
வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் தாகூர், வேளாண் அதிகாரி உமா மகேஸ்வரி, வேளாண் அதிகாரிகள் பார்த்திபன், பாஸ்கர் ஆகியோர் விவசாயிகளிடம் கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.
118,683
Assistant Director Pullambady Shri Mohan said that Rs 7 crore has been allotted for Trichy District under supplementary water management under PM Krishi Sinchayi scheme.
பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டத்தின் கீழ் கூடுதல் நீர் மேலாண்மைக்காக திருச்சி மாவட்டத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்பட்டிருப்பதாக புல்லம்பாடி உதவி இயக்குநர் திரு. மோகன் தெரிவித்தார்.
118,684
This Scheme is well taken by Trichy district particularly by Pullambady Block Farmers.
திருச்சி மாவட்டத்தில், குறிப்பாக புள்ளம்பாடி ஒன்றிய விவசாயிகள் இத் திட்டத்தில் தீவிரமாக இணைந்துள்ளனர்.
118,685
He said that JD Agriculture inspected the agri activities in the block and advised officials to show good financial Progress under Supplementary water management Activity SWMA by adopting weekly workplan.
வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஒன்றியத்திற்கு வந்து பணிகளை ஆய்வு செய்து, கூடுதல் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் நல்ல நிதி முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்றும், வாராந்திரச் செயல்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் யோசனைகள் கூறியதாகவும் மோகன் தெரிவித்தார்.
118,686
She also inspected Kuruvai paddy machine planting at Alambadi village in Trichy.
திருச்சி ஆலம்பாடி கிராமத்தில் இயந்திரம் மூலம் நடைபெறும் குறுவை நாற்று நடவுப் பணிகளையும் இணை இயக்குநர் பார்வையிட்டார்.
118,687
Many farmers in Trichy blocks are following system of rice intensification which they say are beneficial and cost effective.
திருச்சி மாவட்டத்தில் பல விவசாயிகள் தீவிர நெல் சாகுபடித் திட்டத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இத் திட்டம் நல்ல பயன் தருவதாகவும், குறைந்த செலவு பிடிப்பதாக உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
118,688
Ministry of Chemicals and Fertilizers Shri Mansukh Mandaviya visits NFL Panipat Unit Shri Mandaviya emphasises on balanced use of fertilizers Union Minister of State for Chemicals and Fertilizers Shri Mansukh Mandaviya visited Panipat unit of National Fertilizers Limited (NFL) today.
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தேசிய உர நிறுவனத்தின் பானிபட்டு தொழிற்சாலைக்கு திரு மன்சுக் மண்டாவியா வருகை மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா, பானிபட்டில் உள்ள தேசிய உர நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு இன்று வருகை தந்தார்.
118,689
Shri Mandaviya Reviewed the ongoing works and congratulated team NFL Kisan for their outstanding services during this pandemic situation.
அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த திரு மன்சுக் மண்டாவியா, பெருந்தொற்றுக் காலத்திலும் சிறப்பான பணிகளைச் செய்ததற்காக தொழிற்சாலை அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
118,690
Despite the stringent restrictions during lockdown due to COVID19 NFL sale jumps by 71.
கொவிட்-19 முடக்க நிலைக் காலத்தில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையேயும், தேசிய உர நிறுவனத்தின் விற்பனை 71 விழுக்காட்டை அடைந்துள்ளது.
118,691
Speaking on the occasion, the Minister said that soil testing is essential to obtain maximum quality production and to maintain soil fertility, He also visited Mobile Soil Testing Laboratry and asked officers for special focus on the balanced use of Fertilizers.
அந்தத் தொழிற்சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர், தரமான அதிகபட்ச உற்பத்தியை எட்டவும், மண் வளத்தைத் தக்க வைக்கவும், மண் பரிசோதனை அவசியம் என்று தெரிவித்தார். அங்குள்ள நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தைப் பார்வையிட்ட அவர், உரங்களை சமவிகிதத்தில் பயன்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு, அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.
118,692
After the meeting Shri Mandaviya planted a tree - symbol of growth and strength.
வலிமையையும் குறிக்கும் வகையில், மரக்கன்று ஒன்றையும் திரு மண்டாவியா நட்டார்.
118,693
President's Secretariat Presidents Greetings on the Eve of Parsi New Year The President of India, Shri Ram Nath Kovind in his message on the eve of the Parsi New Year has said: - On the auspicious occasion of the Parsi New Year, I extend my heartiest greetings and best wishes to all the fellow citizens especially to my Parsi brothers and sisters.
குடியரசுத் தலைவர் செயலகம் பார்சி புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து பார்சி புத்தாண்டை ஒட்டி குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில்:- “பார்சி புத்தாண்டின் சிறப்பான தருணத்தில், அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக எனது பார்சி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரித்துக் கொள்கிறேன்.
118,694
New Years Day is an occasion of devotion, enthusiasm and celebration for the Parsi Community.
பார்சி சமூகத்தினருக்கு அன்பு, ஆர்வம் மற்றும் கொண்டாட்டத்துக்கான தருணமாக புத்தாண்டு தினம் உள்ளது.
118,695
This festival also gives us the message of extending our helping hand towards the needy and maintaining cleanliness in our homes, workplaces and neighborhood.
இந்தத் திருவிழா, தேவைப்படுவோருக்கு நமது உதவிக்கரத்தை நீட்ட வேண்டும், நமது வீடுகள், பணியிடங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற செய்தியையும் நமக்கு அளிக்கிறது.
118,696
The contribution of the Parsi community in nation-building and development is a matter of inspiration and pride for all of us.
தேசக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டில் பார்சி சமூகத்தினரின் பங்களிப்பு, நமக்கு ஊக்குவிப்பாகவும், பெருமையளிப்பதாகவும் திகழ்கிறது.
118,697
May this festival of Parsi society based on the ideals of goodness in thoughts, words and deeds inspire all of us to imbibe positivity and to keep progressing in our social life through mutual harmony.
நல்ல எண்ணம், சொல், செயல் என்ற கொள்கையின் அடிப்படையில் உள்ள பார்சி சமூகத்தினரின் இந்தத் திருவிழா, நல்லவற்றை ஏற்றுக் கொள்ளும் வகையில் நம் அனைவருக்கும் உந்துதலாக இருக்கும்.
118,698
Addressing the Nation on the occasion of the 74th Independence Day from the ramparts of Red Fort Prime Minister said that Government is taking care of the health and hygiene of poor daughters and sisters and has made them available health related products at an affordable price.
1- என்ற குறைந்தபட்ச விலையில் ஏழைப் பெண்களுக்கு 5 கோடிக்கும் அதிகமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கி இருக்கிறோம்: பிரதமர் 74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது “ஏழை சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கவேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் தொடர்ந்து அக்கறை கொண்டிருக்கிறது.
118,699
He said working in this direction more than 5 crore Sanitary Napkins have been distributed to underprivileged women from 6000 Jan Aushdhi Kendras at the minimum price of Rs.1 each.
குறுகிய காலத்தில், 6 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைப் பெண்களுக்கு 5 கோடிக்கும் அதிகமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கி இருக்கிறோம்.
118,700
Speaking about the announcement the Prime Minister, Union Chemicals and Fertilizers minister Shri DV Sadananda Gowda said that the achievement has been possible due the constant guidance and support of the Prime Minister.
அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், நமது மகள்களின் திருமண வயது பற்றி பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும்.” என்று கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து பேசுகையில், மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா பிரதமரின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது என்று கூறினார்.
118,701
Shri Gowda stressed that Govt will continue to provide access to essential and quality medicines at affordable price through PM Jan Aushadhi Kendras to fulfil prime Minister's vision.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்காக பிரதமர் மக்கள் மருந்தகங்கள் மூலம் அத்தியாவசிய மற்றும் தரமான மருந்துகளை மலிவு விலையில் அரசு தொடர்ந்து வழங்கும் என்று திரு.
118,702
Ministry of Road Transport Highways MoRTH invites suggestions on CEV road map notification The Ministry of Road Transport and Highways has issued a draft notification GSR 502 (E) dated 13 Aug 2020 to address the issue of safety requirements, safety of the operator and to ensure safety while such machines are running on public roads along with other vehicles, for Construction Equipment Vehicles holistically in a phased manner ( Phase-I : April 21 Phase-II : April 24).
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சாலைக் கட்டுமானப் பணிகளுக்கான வாகனங்கள் பற்றிய அறிக்கை குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஆலோசனைகளை வரவேற்கிறது சாலை கட்டுமானப் பணிகளுக்கான வாகனங்களின் பாதுகாப்பு, இவற்றை இயக்குபவர்களுக்கான பாதுகாப்பு, இந்த வாகனங்கள் சாலைகளில் இதர வாகனங்களுடன் பயணிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஆகியவை குறித்த பிரச்சினைகள் குறித்துத் தீர்வு காண்பதற்காக கட்டம் கட்டமாக (முதல் கட்டம் ஏப்ரல் 21 இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24) வரைவு அறிவிக்கை வரைவு அறிவிக்கை எண் ஜி எஸ் ஆர் 502 (இ) ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 13 ஆகஸ்ட் 2020 அன்று வெளியிட்டுள்ளது.
118,703
Currently, certain safety requirements are already mandated for Construction Equipment Vehicles in CMVR, 1989.
தற்போது, கட்டுமானப் பணிகளுக்கான, வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிகள் சில ஏற்கனவே மத்திய மோட்டார் வாகன விதிகள்1989 படி வரையறுக்கப்பட்டுள்ளன.
118,704
This Standard aims to introduce AIS (Automotive Industry Standard) 160, to introduce several safety requirements viz Visual Display Requirements, requirements for Operator Station and Maintenance Areas, Non-metallic Fuel Tanks, Minimum Access Dimensions, Access Systems for steps, primary access, alternate exit path and opening, maintenance opening, handrail and handholds, Guards, Visual Display Requirements, Machine mounted audible travel alarms, Articulated Frame Lock, Lift Arm Support Device, Dimensions and requirements for Operators Seat, Electro Magnetic Compatibility (EMC), Seat Belt and Seat belt anchorages, Roll over Protective Structure (ROPS), Tip over protection structure (TOPS), Falling Object Protective Structure (FOPS), , Operator Field on View, Operator Seat Vibrations for suspended seats, etc.
இதனால் பாதுகாப்புக்குத் தேவையான பல அம்சங்களுக்கான பாதுகாப்புத் தேவைகள் அறிமுகப்படுத்தப்படும். சில அம்சங்கள் பின்வருமாறு: காட்சிப்பட வசதிகள்; இயக்குபவர் இடத்தின் தேவைகள்; பராமரிப்புப் பகுதிகளின் தேவைகள்; உலோகத்தால் அல்லாத எரிபொருள் டேங்க்; மினிமம் ஆக்சஸ் டைமென்ஷன் குறைந்தபட்ச ஆக்சஸ் கொண்ட பரிமாணங்கள்; படிகளுக்கான வழி அமைப்பு; முதன்மை வழி; வெளியேறுவதற்கான மாற்றுப்பாதை, மாற்று வாயில்; பராமரிப்பு வாயில்; கைப்பிடிகள்; கரம் பற்றிக் கொள்வதற்கான அமைப்புகள்; பாதுகாப்பான்கள்; காட்சிப்படத் தேவைகள்; இயந்திரங்களில் பொருத்தப்பட்ட பயண எச்சரிக்கை ஒலிக்கருவிகள்; ஆர்டிக்குலேட்டர் ஃபிரேம்லாக்; லிஃப்ட் ஆஃப் கருவிக்கான உதவிக்கருவிகள்; வாகனங்களை இயக்குபவரின் இருக்கைக்கான பரிமாணங்கள்; தேவைகள்; மின்காந்த இசைவுத் தன்மை; இருக்கை இடுப்புப்பட்டைகள், அவற்றைப் பொருத்துவதற்கான அமைப்புகள்; ரோல் ஓவர் பாதுகாப்புக் கட்டமைப்பு (ஆர் ஓ பி எஸ்); டிப் ஓவர் பாதுகாப்புக் கட்டமைப்பு (டி ஓ பி எஸ்) கீழே விழும் பொருள்களுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பு (எஃப் ஓ பி எஸ்); இயக்குபவர்கள் இயக்கப் பகுதியைப் பார்ப்பதற்கான வியூ; சஸ்பெண்டெட் இருக்கைக்கான இயக்குபவர் இருக்கைகள் அதிர்வுகள்; போன்றவை.
118,705
Additionally, requirements with respect to pass by noise and noise measured at operator ear level are proposed, amend CMVR 96-A and 98-A for brakes and steering effort and turning circle diameter respectively, which were earlier notified vide G.S.R 642 (E) dated 28th July 2000.
இவை தவிர, கூடுதலாக, வெளியிலிருந்து வரும் சத்தங்களும், வாகனத்தை இயக்குபவரின் காதுக்கு அருகே கேட்கப்படும் சத்தங்களின் ஒலி அளவும் சரியான விகிதத்தில் இருப்பதற்கான தேவைகள்; மத்திய மோட்டார் வாகன விதிகள் முன்னதாக ஜி எஸ் ஆர் 642 அறிவிக்கை 28 ஜூலை 2000 இன் படி வரையறுக்கப்பட்டிருந்த இரு விதிகளை -- 96 ஏ பிரேக் ஸ்டீயரிங் எஃபர்ட்;98 ஏ வாகனத்தைத் திருப்பும் போதான வட்டத்தின் விட்டம் ஆகியவற்றைத் திருத்தியமைத்தல்.
118,706
Construction Equipment Vehicles are extensively used for carrying out various infrastructure projects.
பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக கட்டுமானப் பணிகளுக்கான வாகனங்கள் வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
118,707
To provide for safety of operator and to ensure safety while such machines are running on public roads along with other vehicles, it is proposed to notify various safety requirements for such vehicles.
இந்த வாகனங்களை இயக்குபவர்களின் பாதுகாப்பு; இந்த வாகனங்கள் பொதுச் சாலைகளில் செல்கையில் பாதுகாப்பு; ஆகியவற்றுக்கான தேவைகளை, அறிவிக்கைகள் மூலமாக தெரியப்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
118,708
The suggestions or comments in this respect can be sent to the Joint Secretary (MVL), Ministry of Road Transport and Highways, Transport Bhavan, Parliament Street, New Delhi-110001 (email: jspb-morthgov.in) within thirty days from the date of notification.
இது தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை எம் விஎல் இணைச் செயலருக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்றத் தெரு, புதுடில்லி 1110001என்றமுகவரிக்குஅனுப்பலாம்.
118,709
Ministry of Minority Affairs Mukhtar Abbas Naqvi : Pandemic peril has proved to be a positive period of Care, Commitment and Confidence for Indians, which has set an example for the entire humanity across the world Flags off mobile clinic under CSR given by NMDFC under the Ministry to Holy Family Hospital, New DelhiIt is equipped with Emergency Multi Para Monitor, Oxygen facility and Auto Loading Stretcher, which are essential and lifesaving facilities for any emergency patientMukhtar Abbas Naqvi : 1500 Health Care Assistants, trained under skill development programme of the Minority Affairs Ministry, are assisting in treatment of Corona patients16 Haj Houses across the country have been given to state governments for quarantine and isolation facilities for Corona affected people Union Minister of Minority Affairs Shri Mukhtar Abbas Naqvi today said here that pandemic peril has proved to be a positive period of Care, Commitment and Confidence for Indians, which has set an example for the entire humanity across the world.
சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் முக்தர் அப்பாஸ் நக்வி: இந்தியர்களுக்கு பெருந்தொற்றுப் பேரிடர் ”பராமரிப்பு, அக்கறை மற்றும் நம்பிக்கை” ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான காலகட்டமாக இருந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் இது ஒரு முன்னுதாரணம் ஆகும் இந்தியர்களுக்கு பெருந்தொற்றுப் பேரிடரானது ”பராமரிப்பு, அக்கறை மற்றும் நம்பிக்கை” ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான காலகட்டமாக இருந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளதோடு உலகம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் இது ஒரு முன்னுதாரணம் ஆகும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்தார்.
118,710
While flagging off a mobile clinic, equipped with latest health care facilities, given by the Ministry of Minority Affairs National Minorities Development and Finance Corporation (NMDFC), to Holy Family Hospital, New Delhi, Shri Naqvi said that there has been a significant change in the life style of the people and work culture.
சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதிக்கழகமானது (NMDFC) புதுதில்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு வழங்கி உள்ள நவீன சுகாதார பராமரிப்பு வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனையைக் கொடியசைத்து வைத்துப் பேசிய போது திரு நக்வி மக்களின் வாழ்க்கை முறையிலும் பணிசார்ந்த கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டார்.
118,711
The people are now more committed to service and responsibilities towards the society.
மக்கள் இப்போது சமுதாயத்திற்கு சேவையாற்றுதல் மற்றும் பொறுப்பேற்றல் ஆகியவற்றில் கூடுதலான கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
118,712
Shri Naqvi said that the passionate commitment of the people and the strong will of the Government during the Corona pandemic, has resulted in India speedily becoming self-reliant in the health sector.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசாங்கத்தின் மனஉறுதியும், மக்களின் இரக்க மனோபாவமும் இணைந்து இந்தியாவில் சுகாதாரப் பிரிவில் சுயசார்பு நிலையை விரைவாக அடைய வழிவகுத்து உள்ளன.
118,713
India has not only become self-reliant in production of N-95 masks, PPE, ventilators and other equipment the country has also helped other nations.
என்-95 முகக்கவசங்கள், பிபிஇ, வென்ட்டிலேட்டர்கள் மற்றும் இதர உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா சுயசார்பை அடைந்துள்ளதோடு, பிற நாடுகளுக்கும் உதவிகளைப் புரிந்து வருகிறது என்று திரு.நக்வி தெரிவித்தார்.
118,714
Today there is a network of 1400 Labs, spread in every corner of the country.
கரோனா தொற்றின் ஆரம்ப நெருக்கடி காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 300 பரிசோதனைகள் மட்டுமே இந்தியாவில் செய்யப்பட்டன.
118,715
In the initial stage of the Corona crisis, only 300 tests could be conducted in one day, but in such a short span of time, today we can conduct more than 7 lakh tests per day, he said.
ஆனால், குறுகிய காலகட்டத்திலேயே இன்று நாம் ஒரு நாளைக்கு 7,00,000 பரிசோதனைகளை செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
118,716
He added, National Digital Health Mission has been launched.
தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
118,717
Every Indian will be given a health ID.
இதன் மூலம் ஒவ்வாரு இந்தியருக்கும் சுகாதார ஐடி தரப்படும்.
118,718
National Digital Health Mission will bring a new revolution in India's health sector.
இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கமானது இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
118,719
All tests of an individual, every disease, which doctor gave which medicine, reports, all these information will be contained in this one health ID. Shri Naqvi said that the worlds largest health care scheme Modi Care has become the guarantee of health and well-being of the people.
தனிநபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து பரிசோதனைகள், அவருக்கு வந்த அனைத்து நோய்கள், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், அறிக்கைகள் என இத்தகைய அனைத்து தகவல்களும் இந்த ஒரே ஆரோக்கிய ஐடியில் இடம் பெற்றிருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பராமரிப்பு திட்டமான ”மோடி கேர்” மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிப்பதாக உள்ளது.
118,720
Modi Care has covered about 40 per cent of the countrys population.
”மோடி கேர்” நாட்டின் மக்கள் தொகையில் 40% நபர்களுக்கு பலன் அளிப்பதாக உள்ளது.
118,721
The steps taken by the Government in health care sector during the last 6 years have ensured that despite of huge population, India has been successful in containing the affect of the Corona pandemic to a great extent.
கடந்த 6 ஆண்டுகளில் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவில் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மிகப் பெரும் மக்கள் தொகை என்ற தடையைத் தாண்டியும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளை மிகப் பெரிய அளவில் இந்தியா வெற்றிகரமாகத் தடுப்பதற்கு உதவி உள்ளது என்று திரு நக்வி குறிப்பிட்டார்.
118,722
Shri Naqvi said that the Government is making continuous efforts towards modernization of health facilities.
சுகாதார வசதிகளை நவீனப்படுத்த அரசு தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது என்று திரு நக்வி தெரிவித்தார்.
118,723
22 new AIIMS and 157 new Medical Colleges are being constructed in the country.
22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுவதும் கட்டப்பட்டு வருகின்றன.
118,724
In five years, the MBBS and MD seats have been increased for more than 45 thousand students.
5 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு கூடுதலாக 45,000 மாணவர்கள் படிப்பதற்கு வழி ஏற்பட்டு உள்ளது.
118,725
More than 1.5 lakh wellness centres have been started in the villages.
கிராமங்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ”நல்வாழ்வு மையங்கள்” தொடங்கப்பட்டு உள்ளன.
118,726
These wellness centres have helped the villages immensely during the Corona pandemic.
இந்த நல்வாழ்வு மையங்கள்தான் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கிராமங்களுக்கு பேருதவியாக இருந்தன.
118,727
Ministry of Defence BRO constructs 180-feet bailey bridge under three weeks providing connectivity to 20 villages in Uttarakhand Border Roads Organisation (BRO) has constructed a 180-feet bailey bridge in Jauljibi sector of Pithoragarh district, Uttarakhand in less than three weeks despite frequent landslides and heavy rains.
பாதுகாப்பு அமைச்சகம் உத்தரகாண்டில் 20 கிராமங்களுக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் வகையில் 180 அடி நீள பெய்லி பாலத்தை மூன்று வார காலத்தில் எல்லை சாலைகள் நிறுவனம் அமைத்துள்ளது உத்தரகாண்டில் பித்தோர்கர் மாவட்டம் ஜாலிஜிபி பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு மற்றும் கன மழை ஆகியவற்றுக்கிடையே 180 அடி நீள பெய்லி பாலத்தை மூன்று வார காலத்தில் எல்லை சாலைகள் நிறுவனம் அமைத்துள்ளது தா இடத்தில் இருந்த 50 மீட்டர் நீள கான்க்ரீட் பாலம், 2020 ஜூலை 27ம் தேதி கன மழை காரணமாக ஓடைகளிலும், சிற்றாறுகளிலும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.
118,728
This caused a mud flow of tremendous force.
இதனை அடுத்து மிகுந்த விசையுடனான சேற்று வெள்ளம் ஏற்பட்டது.