text
stringlengths
0
6.49k
1991 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் இந்திய பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதில் ரமேஷ் பெரும் பங்கு ஆற்றினார். 1992-94 ஆம் ஆண்டுகளில் திட்ட குழுமத்தின் உப தலைவருக்கு ஆலோசகராக இருந்தார். 1993-95 ஆம் ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு இயக்கத்தில் பணியாற்றினார். 1996-98 ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்திற்கு ஆலோசகராகவும், காப்பாளராகவும் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டில் சீயாடிலில் நடக்க இருந்த உலக வர்த்தக கழகத்தின் கூட்டத்திற்கு செல்லவிருந்த அதிகாரபூர்வ குழுவில் சேரும்படி மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்தது.
முன்னேற்றதிற்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வகையில், 2000 ஆண்டு முதல் 2002 வரை, கர்நாடக அரசாங்கம், மாநில திட்டக் குழுமத்தில், உப தலைவராகவும், ஆந்திர பிரதேச பொருளாதார ஆலோசனை குழுமத்திலும் பணியாற்றினார். மத்திய மின்துறை அமைச்சகத்தில் சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் மற்றும் முக்கிய அரசாங்கக் குழுக்களிலும் பணியாற்றினார்.
ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர், உப தலைவர், கர்நாடகா திட்டக் குழு (2000-2002), உறுப்பினர், ராஜஸ்தான் வளர்ச்சிக் குழுமம் (1999-2003) மற்றும் சத்திஸ்கர் மாநில அரசாங்க பொருளாதார ஆலோசகர் (2001-03) போன்ற பொறுப்புகளை வகித்தார். 2004 லோக் சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வினை முறைதிறன் குழுவில் அவர் பங்காற்றினார்.
ஜூன் 2004 ஆம் ஆண்டில், ஆந்திர பிரதேசத்திலுள்ள அடிலாபாத் மாவட்டத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உருவானபோது, தேசிய ஆலோசனைக் குழுமத்தில் அவர் சேர்ந்தார். அதன் மூலம் யுபிஏ-வின் தேசிய குறைந்த பட்ச திட்டம் உருவாக்குவதில் உதவி புரிந்தார். ஆகஸ்ட் 2004 முதல் ஜனவரி 2006 வரை மூன்று பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராக இருந்தார்: பொதுக் கணக்கு குழு, நிதி நிலைக் குழு மற்றும் அரசாங்க காப்பீடுக் குழு. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில், 15வது லோக்சபாவிற்கான தேர்தல்கள் நெருங்கிய போது, தேர்தல் சிறப்புச் செயல் திட்ட குழுவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பெற்றார். அச்சமயம், மத்திய வர்த்தக மற்றும் மின்துறை இணை அமைச்சர் பதவியையும், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
2009 ஆம் ஆண்டில் நடந்த மறு தேர்தலில் இந்திய பாராளுமன்றத்துக்கு அவர் தேர்ந்தெடுத்ததும், மே 28, 2009 அன்று காங்கிரஸ் தலைமையிலான நிர்வாகத்தில், சுற்றுபுறச்சூழல் மற்றும் வனத்துறை மத்திய இணை அமைச்சராக தனிச் சார்பு பொறுப்புடன் ரமேஷ் பதவியேற்றார். டென்மார்க், கொபென்ஹேகனில் 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் 7 முதல் 18 வரை நடைபெற்ற 2009 ஐக்கிய நாடுகள் அவை தட்பவெட்ப நிலை மாற்ற மாநாட்டில் இந்தியா சார்பாக தலைமை பேச்சு வார்த்தை நடத்தினார்.
கட்சித் தலைவி சோனியா காந்தியின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் அமைந்த அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் (ஏஐசிசி) 'நிறுவன நாள் குழுவின்' 19 உறுப்பினர்களில் ரமேஷும் ஒருவர். அக்குழு காங்கிரஸ் கட்சியின் 125 வருட ஆண்டு நிறைவு விழாவை 2010 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டது.
1980 ஆம் ஆண்டுகளில் அவரது அறிவுத்திறனையும், பொறுப்பையும் கண்டு வியந்த அபிட் ஹுசைன், 1990 ஆம் ஆண்டுகளில் பழனியப்பன் சிதம்பரமும் மற்றவர்களும் கண்டு வியந்தது, தற்போது 50 வயதுகளில் இருக்கும் ரமேஷின் திறமை மற்றும் செயல் திறன் இந்திய சுற்றுப்புறச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
2009 ஆம் ஆண்டில் மே 29 அன்று, ரமேஷ் சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, பிரதம மந்திரி அவருக்கு இட்ட கட்டளைகள்:
அது முதல், தமது துறை சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகளில் பொதுக் கருத்தை ஆதரிப்பதிலோ அல்லது எதிர்ப்பதிலோ வெளிப்படையாக பேசி வருகிறார்.
அவர் தனது தற்போதைய பணியை துவக்கும்போது திருமதி சோனியா காந்தி, அவரிடம் 1980 வனத் துறை பாதுகாப்பு சட்டம் மீற முடியாதது என்று மட்டும் கூறினார். அச்சட்டம் அவருக்கு கீதை போன்ற புனித நூலாக மாறியது. இச்சட்டம் ஏராளமான வனப்பகுதிகளைப் பாதுகாத்துள்ளது. இச் சட்டம் வருவதற்கு முன்னால் ஆண்டுதோறும் 1.40 லட்சம் ஹெக்டர் வனப்பகுதி வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டு வந்தது. இச் சட்டம் வந்த பின் அது ஆண்டிற்கு 31,000 ஹெக்டராக குறைந்தது. பல காரணங்களை சுட்டிக் காட்டி இச்சட்டத்தின் கடுமையை குறைக்க பல குழுக்கள் முயன்று வருகின்றன. குறிப்படத்தக்க வன நிலங்களை வேறு உபயோகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு முடிவிற்கும் தான் உடன்படப் போவதில்லை என்று ரமேஷ் திட்ட வட்டமாக கூறியுள்ளார்.
ஆசிய சரணாலயம் என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜெய்ராம் ரமேஷ் தனது முன்னுரிமைகளை பின்வருமாறு பட்டியலிடுகிறார்:
ஊடகங்கள் கவனத்தை அவர் கவரும் வண்ணம் தற்சமயம் நடந்த நிகழ்ச்சிகள்:
காடு வளர்ப்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையை பற்றி ரமேஷ் கூறுகையில், காடு வளர்ப்பு ஒரு பயிர் தோட்டங்களை விட பயனுள்ளது என்று நம்புகிறார். ஏனென்றால் முந்தையது பல சுற்றுப்புற அடுக்குகளைக் கொண்டது. முதன்மை சவால் தற்போதுள்ள வனப் பரப்பை பாதுகாத்து அதிகரிக்க முயல்வது. (நாட்டின் நிலப் பரப்பில் 24%) அவற்றில் ஏறக்குறைய 60 விழுக்காடு அடர்த்தி குறைந்த வனங்கள். அவற்றை காடு வளர்ப்பு திட்டம் மூலம் மிக அடர்ந்த காடுகளாக மாற்றுவது. இது கரியமிலத்தை தனியாக்குவதில் மிகவும் வியக்கத்தக்க விளைவை ஏற்படுத்தும். இந்திய இலக்கான 33% பசுமை திட்டத்தை, காடு வளர்ப்பின் மூலமே அடைய முடியும்.
தனது அமைச்சகம் காடு வளர்ப்ப்பு திட்டத்தில் குறிப்பிடத்தக்க துவக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுளார். காடு வளர்ப்பு மேலாண்மை மற்றும் திட்ட ஈடு முகவாண்மையகம் (காம்பா) மூலம் நிதி உதவி பெற முடிந்தது என்றார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் (வருடம் 1,000 கோடி ரூபாய் வீதம்) நாட்டின் தற்போதைய இயற்கை வனங்களை மறுபடி சீரமைப்பதற்கு மட்டும் பயனாகும். இந்த காம்பா நிதி ஆதாரங்களைத் தவிர, அந்த அமைச்சகம் தனது சொந்த திட்டமான காடு அழிப்பில் இருந்து வெளியேறும் மாசுப் பொருள்களைக் குறைப்பது மற்றும் காடு வளங்கள் குறைவதை தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு ரெட் பிளஸ் என்ற திட்டத்தை தயாரித்துள்ளது. இத்திட்டங்கள் காடுகள் மூலம் கரியமிலத்தை பிரித்து தனியாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க, நன்கு விளக்கிய இலக்கை அடைய உதவும்.
ரமேஷின் வற்புறுத்தலினால் காம்பா தனது கொள்கைகளை மாற்றி, இயற்கை வனங்களை மீட்டு சீரமைக்கவும், உயிரி பல்வகைமை பாதுகாப்பதிற்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்தது. அவர் அமைச்சரவையில் சேர்ந்த பின் "தோட்டங்கள் வேண்டாம்" என்பதே அறைகூவலாக இருந்தது.
அவர் மேலும் கூறினார்,
நவம்பர் 2009 ஆம் ஆண்டில், ரமேஷ், வாகன உற்பத்தியாளர்கள் 2011 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை விற்கும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான ஆற்றல் எரிதிறன் படிவங்கள் பற்றி வலியுறுத்தினார். அப்படிவங்களில் உள்ள தகவல்களுக்கு ஆற்றல் செயல்திறன் செயலகத்தின் (பிஈஈ) சான்றிதழ் அளிக்க வேண்டும். எரிபொருள் செயல்திறன் நியமங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நிலையில் அரசாங்கம் உள்ளது. இத்தகைய நியமங்களை ஆற்றல் பாதுகாப்பு சட்டம் அல்லது மோட்டார் வாகன சட்டம் மூலமாகவோ வெளியிட திட்டமிட்டுள்ளது".
கொபேன்ஹேகன் செல்வதற்கு முன்னால். உலகிலேயே தட்ப வெட்ப நிலை மாற்றத்தின் விளைவுகளில் இந்தியா "மிகவும் பலவீனமான" நிலையில் இருப்பதாக ரமேஷ் கூறினார் பின்னர் மாநிலங்கள் அவையில் தட்ப வெட்ப உச்சி மாநாட்டின் முடிவுகளைப் பற்றி கூறும்போது "அரசாங்கம் தனது கொபென்ஹேகன் உச்சி மாநாட்டிற்கு முன் எடுத்த, உள்ளூர் சாந்தப்படுத்தும் திட்டங்களைப் பற்றி யுஎன்எப்சிசிசி-க்கு அறிவித்தால் மட்டும் போதுமானது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, "சர்வதேச அளவில் கலந்துரையாடி ஆராய" வழி ஏற்படச் செய்வதற்கு அனுமதித்தோம்" என்று ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக் கொண்டார்.
டிசம்பர் 23, 2009 அன்று திரு ரமேஷ் கூறினார்:
இந்தியா தனது கரியமில வெளியேற்றத்தை 2020 ஆம் ஆண்டில் 2005 ஆம் ஆண்டின் அளவிலிருந்து 20-25 விழுக்காடு குறைத்துக் கொள்ள தனக்குத்தானே உறுதி கொண்டுள்ளது
2009 நவம்பர் 20 அன்று, நீலகிரி மலைத்தொடரில் உள்ள சிங்காரா என்னும் இடத்தில், அணு சக்தித் துறையின் இந்தியா சார்ந்த நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதி மறுத்து திரு ரமேஷ் கூறுகிறார்,
அதற்கு மாற்றாக தமிழ் நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி நீர்வீழ்ச்சி இடத்தை பரிந்துரை செய்தார். சிங்காராவில் உள்ளது போல் இந்த இடத்தில டிஏஈ துறைக்கு பிரச்சினைகள் இருக்காது என்றும், சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் "தனது அமைச்சகம் இந்த மாற்று இடத்திற்கு வேண்டிய அனுமதிகளை பெற்றுத் தர ஒத்துழைக்கும்" என்று டிஏஈ-க்கு உறுதி அளித்தார்.
ஐஎன்ஒ திட்டத்தின் பிரதிநிதியான டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நாபா கே. மோண்டல், தனது கருத்துக்களை கூறும்போது, சுருளியார் பகுதி அடர்ந்த காடுகளை கொண்டது என்றும், ஏராளமான மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும், அத்தகைய நிலை சிங்காராவில் இல்லை என்றும் கூறினார். அரசாங்கத்தின் சார்பில் வனத்துறை அனுமதி இந்த இடத்திற்கு கிடைப்பது கேள்விக்குரியதாக இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். மாற்றாக, ஐஎன்ஒ திட்டத்தை சுருளியார் நீர்வீழ்ச்சியிலிருந்து 20-30 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரம் பகுதிக்கு மாற்ற முடியுமா என்று அவர் வினவினார். அந்த வன பகுதி புதர்ச் செடிகளை கொண்டது. ஆனால் நீர் ஆதாரம் கிடையாது. 30 கி.மீ. தொலைவுள்ள சுருளியாறிலிருந்து தண்ணீரைக் கொண்டு வர வேண்டும்.
டிசம்பர் 24, 2009 அன்று, நாட்டின் மிகவும் அதிகமாக சுகாதாரக் கேடடைந்த 43 தொழில் பகுதிகளில் புதிய நிறுவனங்கள் ஆரம்பிக்க தடை விதிக்குமாறு பரிந்துரை செய்தார். அவர் கூறினார்.
2009, செப்டம்பர் 12, போபால் விஷ வாயு சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்த போது, திரு ரமேஷ், உண்மை (போபால் விஷ வாயு சம்பவம் பற்றிய) ஆறுதலில்லாதது. இத்தகைய சம்பவங்கள் கற்று கொடுத்த பாடங்களை வைத்து முன் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கருதுவதாகத் தெரிவித்தார்.
தற்போது கைவிட்ட தொழில்கூடத்தில் இருக்கும் 350 டன்கள் மதிப்புள்ள விஷக் கழிவுகள் பற்றி குறிப்பிடும்போது, சில விரும்பத்தகாத, தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் கருத்துக்களை வெளியிட்டார்.
மிக அதிகமாக பேச விரும்பாத அவர், அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஒ) கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அந்த தொழில் கூடத்தை சுற்றியுள்ள பசுமை மற்ற இடங்களைக் காட்டிலும் நன்றாக உள்ளது என்ற பொருள்படும்படி கூறினார். இத்தகைய கழிவுகளுக்கு மத்தியில் எப்படி இப்படி (மிக்க பசுமை) உள்ளது என்று வினவினார்?
இந்த பேரிடர் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்ததை நினைவுகூறும் வகையில் ஒரு நினைவகம் உருவாக்க மாநில அரசாங்கத்திற்கு ரூ. 116 கோடி (ரூ.1,160,000,000.) நிதி உதவி மத்திய அரசாங்கம் வழங்கும் என்றார். "இந்தப் பேரிடர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாகவும், இத்தகைய தவறுகளை நினைவு கூர்ந்து மேலும் இது போன்ற சம்பவங்கள் திரும்ப நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும், ஒரு தேசிய நினைவகம் உருவாக்கப்படும்"
ஒரிசாவில் அலுமினிய மூல தாதுப் பொருள் சுரங்கத்தைப் பற்றி குறிப்பிடும் போது திரு ரமேஷ் ஒரிசா நிர்வாகத்தினரை கேட்டுக் கொண்டது:
வேதாந்தா ரிசொர்செஸ் பிஎல்சி நிறுவனம் இறுதி அனுமதி பெறாமல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்த வருடம் ஆகஸ்ட் வரை அமைச்சகத்திற்கு வந்த முறையீடுகளை பற்றி, புவனேஸ்வரில் உள்ள வனங்கள் பாதுகாப்பு அலுவலரை விசாரிக்கச் சொன்ன திரு.ரமேஷ் அம்முறையீடுகள் உண்மையாக இருக்கக் கண்டார். ஒரிசாவில் உள்ள இரு மாவட்டத்தில், வன பகுதியில் இருந்து மாற்ற முடிவு செய்த 660.749 ஹெக்டர் பரப்பில், 353.14 ஹெக்டர் பரப்பு நியம்கிரி வனப் பகுதிக்குள் உள்ளது. இத்திட்டம் கோந்தா பழங்குடியினர் வாழ்க்கைமுறையில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை அடைந்தார்.
மகாராஷ்டிர நிலக்கரி சுரங்கத் திட்டமான, தி அதானி சுரங்கத் திட்டம், தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவுக்குள் இருந்தது. மற்றொரு மகாராஷ்டிரா நிலக்கரி நிறுவனத் திட்டமும் அந்த காப்பகத்தின் 10 கி.மீ. தொலைவிற்குள் இருந்தது. அவை இரண்டும் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தின் இடைப்படு எல்லைக்குள் இருந்தன. நிபந்தனை குறிப்புகள் (டிஒஆர்) அந்நிறுவனங்களுக்கு 2008 அன்றே வழங்கப்பட்டன.
இத்தகைய ஆட்சேபகரமான திட்ட மதிப்பீடு மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பியதற்கு எதிராக பாண்டு தோத்ரே தலைமையில் பசுமை ஆர்வலர்கள் போராட்டத்தை துவக்கினர். ஜூலை 19, 2009 அன்று, லோஹார வனபகுதியில் துவங்க இருந்த சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார் தோத்ரே.
ஆகஸ்ட் 1 அன்று, சமூக நல விரும்பிகள் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாவலர்களை கொண்ட குழு ஒன்று, டெல்லியில் ரமேஷை சந்தித்து, அந்த சுரங்கத் திட்டம் அடர்ந்த வனவிலங்கு சமூக வசிப்பிடத்திற்கு ஏற்படுத்தப் போகும் தீமைகளை பற்றி விளக்கினர். தோத்ரே கூறினார்,
அந்த உரையாடலுக்குப் பின் அத்தகைய கருத்துக்களைக் கொண்ட ஒரு அதிகாரபூர்வ கடிதத்தை ரமேஷ் உடனடியாக தொலைநகலி செய்தார். அந்தக் கோரிக்கையை கனிவாக மறுத்த தோத்ரே, மத்திய நிலக்கரி அமைச்சகம் லோஹாரா நிலக்கரி பகுதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் வரையோ அல்லது மாநில அரசாங்கம் லோஹாரா வனபகுதிகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபடாது என்று எழுதி கொடுக்கும் வரை தான் இறங்கி வர மாட்டேன் என்று கூறினார்.
லோஹாரா சுரங்கத் திட்டம் தன் பார்வைக்கு வரும்போது, தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தை பாதுகாப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கடிதம் மூலம் உறுதி அளித்தவுடன், ஆகஸ்ட் 2, திரு தோத்ரே தனது 14 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார்.
ஒரு அரசு ஆஸ்பத்திரியில், மோசமான உடல் நிலை காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த திரு. தோத்ரே, சந்திராபூர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் முன்னிலையில், தனது தந்தை கொடுத்த கனிச்சாற்றை பருகினார். தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டபின், திரு. தோத்ரே கூறினார்,
இந்த போராட்டத்தினால், தனது அமைச்சகம் எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக படித்து பார்க்காமல், எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்காது என்று ஜெய்ராம் ரமேஷ் உள்ளூர் மக்களுக்கு உறுதி கூறினார். மேலும், மாநில வனத்துறை, இத்தகைய திட்டத்தினால் வனங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் சீர்கேட்டைப் பற்றி ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.
நவம்பர் 24,2009 அன்று, சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அமைத்த உயர் மட்ட மதிப்பீட்டுக் குழு, தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திற்கு அருகில் நிறுவ இருந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை நிராகரித்தது. அக்குழு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்த நிபந்தனை குறிப்புகளை திரும்பப் பெற்றது. இதன் மூலம் அத்திட்டத்திற்கு சுற்றுபுறசூழல் அனுமதி பெறும் முயற்சி இறுதியாக கைவிட்டது.
செப்டம்பர் 12,2009 மத்திய பிரதேஷ் சென்றிருந்தபோது, அம்மாநிலத்தில் நடைபெற்றுகொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் வளர்ச்சியை பற்றி அமைச்சர் எச்சரிக்கை செய்தார்.
தேசிய நெடுஞ்சாலை-7 விரைவாக முடிக்க மாநில அரசாங்கம் அனுமதி கோருவதை பற்றி அவர் கவலை தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலையில் சீயோநிக்குப் பதில் சிந்த்வாரவுக்கு மாற்றுபாதையாக அமைப்பதை அது கருதவும் மறுக்கிறது. அத்தகைய நெடுஞ்சாலை அமைப்பதால், பென்ச் புலிகள் காப்பகத்திற்கு ஏற்பட போகும் சுற்றுபுறசூழல் சீர்கேட்டை கருத்தில்கொண்டு உச்ச நீதி மன்றம், அதற்கு தடை விதித்துள்ளது.
வனங்கள் பாதுகாப்பு சட்டம் 1980,-ஐ தான் கடுமையாக பின்பற்றுவது பற்றி அவர் கூறினார்,
வனங்கள் பாதுகாப்பு சட்டம் 1980,-ஐ தான் கடுமையாக பின்பற்றுவது பற்றி திரு. ரமேஷ் கூறும்போது, இந்திய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பற்றி கூறுகிறார்,
மேற்கு தொடர்ச்சி மலைகளை பற்றி ரமேஷ் கூறுகிறார்,
ஜூன் 20, 2009 எழுதிய கடிதத்தில், கர்நாடகா மின் கழகம் ஹாசன் மாவட்டத்தில் உருவாக்க நினைக்கும் 200 மெகா வாட் குண்டியா நீர் மின் திட்டத்தினால் ஏறக்குறைய 1900 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதி தண்ணீரில் மூழ்கிவிடும் என்று திரு. ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏற்கனவே பலவீனமாகவுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் விலங்கு எண்ணிக்கையை மேலும் பாதிக்கும் என்று கூறினார். இத்தகைய நிலையை கர்நாடகாவும், இந்தியாவும் ஏற்று கொள்ள முடியாது. "சுற்றுபுறசூழல் பாதுகாப்பிற்கு எதிராக மின் உற்பத்தி இருக்கக் கூடாது"
மத்திய அரசாங்கம் அமைத்த நிபுணர் மதிப்பீடு குழு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று பரிந்துரை செய்தது.
மத்திய பிரதேசத்தில் கேன்-பெத்வா நதிகளை இணைக்கும் திட்டத்தினால் ஏற்பட போகும் சுற்றுபுறசூழல் விளைவுகளை பற்றி ஆராயுமாறு மத்திய அரசாங்கத்தை திரு. ரமேஷ் கேட்டுக்கொண்டார். அத்திட்டத்தை பற்றிக் கூறினார்,
இந்த நதி இணைப்பு திட்டத்தினால், மத்திய பிரதேஷ் பண்ணா புலிகள் காப்பகம் உள்ள எச்சரிக்கை செய்யப்பட்ட உள்ளகம் மற்றும் ஆபத்தான புலிகள் வசிக்குமிடம் அமைந்த ஏராளமான வனப்பகுதி வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 1.5 கி.மீ பரப்புள்ள ஒரு அணை கட்டப்படும். மேலும் அதற்கு தேவையான சாலைகளும், மின் நிலையங்களும் உருவாக்கப் படவேண்டும். "வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972"இன் படி புலிகள் மற்றும் இதர வன விலங்குகளுக்கு வேண்டிய ஆக்கிரமிப்பு செய்ய முடியாத இடம் தரப் பட வேண்டும். அப்படி முடியாவிட்டால் புலிகள் இருப்பிடத்திற்கு தேவையான உள்ளகம் மற்றும் வசிக்கும் பகுதிக்கு குறிப்பிடத்தக்க தொந்தரவுகள் ஏற்படும்.
ஜூன் 27,2009இல் டேஹெல்காவுடன் ஒரு பேட்டியில் திரு. ரமேஷ் கூறினார்,
இந்தியாவில் உள்ள 38 புலிகள் காப்பகத்தில் பதினேழு மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக திரு ரமேஷ் டிசம்பர் 8, 2009 அன்று கூறினார். அவற்றை மேம்படுத்த திட்டம் அமைக்க ஒரு செயல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திருத்த மசோதா அடுத்த பட்ஜெட் தொடரில் அறிமுகப்படுத்தப்படும். அம்மசோதாவில் பணம் கடத்துவோர் மற்றும் அந்நிய செலாவணி சட்ட மீறல்களுக்கு தரப்படும் தண்டனைகள் போன்ற கடுமையான விதிமுறைகள் இருக்கும்.
குறுகி வரும் புலிகள் தொகைக்கு அமைச்சர் கவலை தெரிவித்தார்.
தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு பற்றி திரு. ரமேஷ் கூறுகையில், என்டிசிஏ-வுக்கு தற்சமயம் அமைச்சகம் அளித்து வரும் ஆதரவு நிலை, அதன் காலத்தில் பெற்ற நிலையை விட பெரிதாக இல்லையென்றாலும், அதற்கு சமமானதாக உள்ளதாக குறிப்பிட்டார். அதன் இயக்குனர் டாக்டர். ராஜேஷ் கோபால், ரமேஷுடன் தினமும் தொடர்பு கொண்டு என்டிசிஏ-வை வலிமைப்படுத்த முயல்கிறார். அரசியல் ஆதரவைத் தவிர, தகுதி வாய்ந்த மற்றும் குறிக்கோளுடைய ஆட்பலம் அவருக்கு தேவைப்படுகிறது. சாதாரண முறையில் இல்லாமல், வித்தியாசமாக (வேலை செய்யும் விதமாக!) சிந்தித்து புலிகள் பாதுகாப்பில் தீர்வு காணும் நபர்களை என்டிசிஏ-வில் பணியில் அமர்த்த தற்போது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட காய்கறியான பிடி கத்திரிக்காயை வியாபார நோக்கில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஏழு நகரங்களில் பொது விவாதங்களை 2010இல், மத்திய சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் நடத்தினார். இந்தப் பொது விவாதத்தில் 8000திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத நிகழ்வின் முடிவில், வேறு தனிசார்பு ஆராய்ச்சிகள் இது சரியானது என்று நிரூபிக்கும் வரை, பிடி கத்திரிக்காய் மனித மற்றும் சுற்றுப்புறசூழலுக்கு எதிரானது என்று திரு. ரமேஷ் அறிவித்தார்.
திரு. ரமேஷ் "கெளடில்யா" என்ற புனை பெயரில் பிசினஸ் ஸ்டான்டார்ட், பிசினஸ் டுடே, தி டெலிகிராப், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
அவர் எழுதிய நூல்கள்:
இரு நாடுகளும் இச்சமய சந்தர்ப்பத்தில் ஒன்று சேர்ந்து வியாபாரம், கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்றவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ், இந்நூலில் கூறுகிறார். சைனாவுடன் சேர்ந்து இந்தியா உலக அரங்கில் முக்கிய பங்காற்ற இதுவே சிறந்த தருணம் என்று அவர் கூறுகிறார்.
2009 புவி வெப்பமடைதல் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு வெளியான தீர்மானங்களிலும் திரு. ரமேஷின் செயல்களிலும் இது வெளிப்படுகிறது. இம்மாநாட்டில் பேசிக் நாடுகள் குழு (பிரேசில், தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சைனா) தங்கள் கருத்தை வலியுறுத்த எவ்வாறு ஒன்று சேர்ந்தன என்பதை ரமேஷ் சுட்டிக்காட்டுகிறார். மாநாடு முழுவதும், பேசிக் அமைச்சர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சந்தித்து பேசினர். இந்தியாவும் சைனாவும் மிக மிக நெருக்கமாக பணியாற்றின. பேசிக் குழு தட்ப வெட்ப பேச்சு வார்த்தைகளில் மிக சக்தி வாய்ந்ததாக விளங்கியதாக அவர் நம்பினார். அந்த ஒற்றுமையின் மூலம் பாலி செயல் திட்டம் மற்றும் க்யோடோ தீர்மானம்படி தீர்வு ஏற்பட முடிந்தது. இந்தியா, 77 நாடுகள் குழு "ஜி77"-வுடன் தொடர்ந்து பணியாற்றி, சைனாவுடன் சேர்ந்து தட்பவெட்ப பேச்சு வார்த்தைகளில் ஒரு குழுவாக செயல்படும். பேசிக் நாடுகள் தலைவர்களுடன் யுஎஸ் ஜனாதிபதி பராக் ஒபாமா நடத்திய கூட்டத்தில், அனைத்து தரப்பினருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் கொபேன்ஹேகன் தீர்மானம் உருவானதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த மாநாட்டில், இந்தியாவின் தேசிய நலன் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.