text
stringlengths
0
6.49k
ஏனைய விருதுகள் Awards:
Won special prize at Periyar short film festival 2009
http://www.modernrat...ary/page12.html
Won special prize at Tamil film festival 2010
http://tamilnet.com/...=13&artid=31181
சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வுக்கு உள்ளாகியவை Official selection:
Vibgyor International Film Festival 2010 under theme “Focus of the Year: `South Asia’”
http://www.vibgyorfi...10/announcement
http://spreadsheets...d=0&output=html
The European Independent Film Festival 2010 under category European Dramatic Short
http://www.ecufilmfe...03/vanni-mouse/
மக்கள் தொலைக்காட்சியில் Makkal TV "10 Nimida Kathaikal" shortfilm competition
http://www.youtube.c...h?v=nAaNsp_sFj8
தமிழியம் /வன்னிஎலி/ இணையம் Vanni Mouse Official website:
http://www.tamiliam.com/?p=115
வன்னிஎலி குறும்பட முன்னோட்டம் Vanni Mouse official Trailer:
http://www.youtube.c...h?v=AzsnFpq7xvM
அனைத்துலக திரைப்பட தகவல் திரட்டியில் External Links:
http://www.imdb.com/title/tt1587374/
</doc>
<doc id="73764" url="https://ta.wikipedia.org/wiki?curid=73764" title="கல்முனை">
கல்முனை
கல்முனை ("Kalmunai") இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இதன் கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில் முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல் கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும்.
அதன் பிரதேசங்கள் பிரதானமான நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படிருக்கின்றன. .
தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2011 தரவுகளின் படி, கல்முனை மாநகரத்தின் மக்கள்தொகை வருமாறு:
மூலம்: சனத்­தொகை மற்றும் வீடு­க­ளுக்­கான புள்­ளி­வி­பரம் -2011
கல்முனை 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலையால் நேரடியாகத் தாக்கப்பட்டு உயிரழிவுகளையும், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்சேதங்களையும் எதிர் கொண்டது.
</doc>
<doc id="73765" url="https://ta.wikipedia.org/wiki?curid=73765" title="தொட்டிப்பால் பகவதி கோவில்">
தொட்டிப்பால் பகவதி கோவில்
தொட்டிப்பால் பகவதி கோவில் கேரள மாநிலத்திலுள்ள திரிச்சூர் (த்ரிஸ்ஸூர்) மாவட்டத்தில் அமைந்துள்ளது. அது புதுக்காடில் இருந்து இரிஞ்சாலக்குடாவிற்குப் (ഇരിഞ്ഞാലക്കുട) போகும் வழியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில், குருமாலி என்றார் இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட 108 தேவி கோவிலகளில் இது ஒன்றாகும். இந்தக் கோவில் தொட்டிப்பால் பகல்பூரம் திருவிழாவிற்கு பெயர் போனதாகும். ஆறாட்டுபுழா சாஸ்தாவின் சகோதரியாக இந்தக் கோவிலின் இறைவி கருதப்படுகிறாள். இந்தக் கோவிலானது திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு ஆதரவின்றி பராமரிக்கப்படாமல் இருந்துவந்தது.
19 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தக் கோவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இறைவி தொட்டிபாலம்மையார் மிகவும் கனிந்த மனம் கொண்டவளாகவும் [2] மற்றும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தமது வாழ்க்கையில் ஏற்படும் கஷடப்பாடுகளில் இருந்து மீளவும் மேலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காணவும் மனோபலம் தந்து அருளுவதற்காக பக்தர்கள் இங்கே வந்து அம்மனை வழிபடுகின்றனர்[3].
இந்தக் கோவிலுக்கு அருகாமையில் தொட்டிப்பால் மஹா விஷ்ணு கோவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த மிகவும் அமைதியுடன் காணப்படும் தொட்டிப்பால் கிராமம் அங்கு அமைந்திருக்கும் தொட்டிப்பால் அம்மையார் மற்றும் தேவரான மஹா விஷ்ணுவின் அருளால் இயற்கை வண்ணம் செழிந்ததாகவும், மனதிற்கு ஆறுதலும் சமாதானமும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.[4]
</doc>
<doc id="73766" url="https://ta.wikipedia.org/wiki?curid=73766" title="அறவழி தன்முனைப்பாக்கம்">
அறவழி தன்முனைப்பாக்கம்
அறவழி தன்முனைப்பாக்கம் என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் எனும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு ஆகும். ஒருவர் தனது இலாபத்துக்காகச் செயற்பட்டால், அவர் நல்வழியில் செயற்படுகிறார் என்றும், அந்த நடவடிக்கை சரியானது என்றும் இந்த கொள்கை கூறுகிறது.
இன்பம் தருவதே நலம் என்றும், நல் வாழ்க்கை நலம், அதிகாரம் அறிவு அல்லது ஆத்மீக நலம் என்றும் தன்னலம் என்பது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் உண்டு.
அறவழி தன்முனைப்பாக்கம் ஒருவர் தாம் விரும்பவதையே எப்போதும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஒருவருக்கு சொட்டுத் தேன் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அது அவர் உடல் நலனுக்கு கேடாக இருக்கும். ஒருவருக்கு காலை நித்திரை கொள்வது விருப்பமாக இருக்கலாம், அதனால் அவர் வேலை கெடலாம். பிறருக்கு ஒருபோது ஒத்துழைக்காமல் விட்டால், தேவைப்படும் போது அவர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே குறுகிய காலத்தில் இன்பத்தை தேடி செயற்படுவது, ஒருவருடைய நெடுங்கால நலத்துக்கு தீங்காக அமையலாம்.
</doc>
<doc id="73768" url="https://ta.wikipedia.org/wiki?curid=73768" title="மக்சு இசுரேனர்">
மக்சு இசுரேனர்
மக்சு இசுரேனர் அல்லது மேக்ஸ் ஸ்டிர்னர் ("Max Stirner") என்று பரவலாக அறியப்பட்ட யொகான் காஸ்பர் ஷ்மிட் (Johann Kaspar Schmidt, ஒக்டோபர் 25, 1806 - சூன் 26, 1856) ஒரு யேர்மன் மெய்யியலாளர். தனிமனித்தத்துவம், இருத்தலியல், அழிவியம், ஒழுங்கின்மை, அரசின்மை போன்ற கோட்பாடுகளில் இவரின் தாக்கம் முக்கியமானது. இவர் அரசு, சமயம், சட்டம், கல்வி பொருளாதார முறைமைகள் என எல்லாவற்றையும் விமர்சிக்கிறார். இவற்றுக்கப்பால் இருக்கும் தனிமனிதர்களைப் நோக்கி இவரது சிந்தனைகள் அமைகின்றன.
</doc>
<doc id="73769" url="https://ta.wikipedia.org/wiki?curid=73769" title="தமிழ் பில்லியனெயர்கள்">
தமிழ் பில்லியனெயர்கள்
தமிழ் பின்புலத்தை உடைய, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான நபர்கள் தமிழ் பில்லியனெயர்கள் ஆவர்.
</doc>