text
stringlengths
0
6.49k
இப்பொழுது இல்லை தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் பற்றாக்குறை எல்லாரும் வெளிநாட்டு மோகமூம்,
பண்ணை நிலங்கள் வீட்டுநிலமாகவும் மாறியதால் சிறிது அளவே பயிர்செய்யப்படுகிறது.
பெரியபட்டினம் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் கபடி.
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிக பெரிய கிரிக்கெட் மைதானம் இங்குதான் உள்ளது. இங்கு மாவட்ட கிரிக்கெட் லீக் மற்றும்
கால்பந்து போட்டிகளில் பல நடத்தியிருந்தது. இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணியில் பிரபலமானவர்கள்
பெரியபட்டினம் மக்கள் நடைமுறையில் உணவு பழக்கம் இலங்கை தமிழ் முஸ்லீம் உணவு மற்றும் மலாய் உணவு ஒற்றுமைகள் இருக்கின்றன.
உதாரணமாக ஆப்பம், இடியாப்பம், வட்டலப்பம் , போன்ற உணவுகள். பெரியபட்டினம் மக்கள் உணவு நடைமுறையில் பெரும்பாலான கடற்கரை
பகுதிகளில் வாழும் கடல் சார்பை பின்பற்றியே இருக்கின்றனர்.
பஸ் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இலக்கு புள்ளி அல்லது 60 நிமிடங்களில் அதிகபட்சமாக சென்றடையும் ...
</doc>
<doc id="73745" url="https://ta.wikipedia.org/wiki?curid=73745" title="சவ்வூடு பரவல்">
சவ்வூடு பரவல்
சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் ("Osmosis") எனப்படுவது நீரழுத்தம் மிகுந்த கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு ("semi-permeable membrane") ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு என்பது கரையம் அல்லது கரைபொருளை உட்செல்ல விடாது, கரைப்பானை மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் ஒரு மென்சவ்வாகும். இந்த மென்சவ்வானது வெவ்வேறு செறிவுத்திறன் கொண்ட இரு கரைசல்களுக்கு இடையில் உள்ளபோது, எந்த ஆற்றல் உள்ளீடும் இன்றி கரைப்பான் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து, செறிவு கூடிய கரைசலுக்கு முனைப்பற்ற முறையில் பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் செயல்முறையாகும். இந்த சவ்வூடு பரவலின்போது எந்தவொரு ஆற்றல் உள்ளீடும் வேண்டாமென்றாலும் இயக்கு ஆற்றலை பயன்படுத்துகிறது; வெளியேறும் ஆற்றலானது வேறு செயல்முறைகளில் அல்லது உயிரணுவின் மற்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப் படலாம்..
சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக, முனைப்பின்றி நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே சவ்வூடு பரவல் அழுத்தம் எனப்படும்.
உயிரினங்களில் இருக்கும் பல மென்சவ்வுகளும் தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வாக இருப்பதனால், இந்த சவ்வூடு பரவல் செயல்முறையானது, உயிரின செயல்முறைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் போன்ற பெரிய மூலக்கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக்கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன. உயிரணுக்களில் முதலுருவைச் சுற்றி இருக்கும் உயிரணு மென்சவ்வு (முதலுருமென்சவ்வு/கலமென்சவ்வு) இத்தகைய ஆற்றலைக் கொண்டிருப்பதனால், உயிரணுக்களின் உள்ளிருந்து வெளியேயும், வெளியிருந்து உள்ளேயும் நீர் மூலக் கூறுகள் பரவுவதில், சவ்வூடு பரவல் செயல்முறையே முக்கிய பங்கு வகிக்கின்றது. உயிரணுக்களின் விறைப்பு அழுத்தம்/ வீக்கவமுக்கத்திற்கு இவ்வகை செயல்முறையே உதவுகின்றது.
உயிரணுக்களின் வெளியுறையாக இருக்கும் கலமென்சவ்வானது, ஒரு தேர்ந்து புகவிடும் மென்சவ்வாகும். உயிரணு ஒன்றை நீரினுள் அமிழ்த்தும்போது, நீர் மூலக் கூறுகள், கரைய செறிவு குறைவான வெளிப்பக்கம் இருந்து, கரைய செறிவு கூடிய உள்பக்கம் நோக்கி செல்லுதலே சவ்வூடுபரவல் எனப்படும்.
இரு சம கன அளவுகொண்ட நீரானது ஒரு தேர்ந்துபுகவிடும் மென் சவ்வினால் பிரிக்கப்படும்போது, இரு பக்கமிருந்தும் நீர் மூலக் கூறுகள் ஒரே வேகத்தில் இரு திசையிலும் நகர்வதனால், நிகர அசைவு (net flow) இருக்க மாட்டாது. அதேவேளை தேர்ந்து புகவிடும் ஒரு மென்சவ்வானது ஒரு புறம் கரைசல் ஒன்றையும், மறுபுறம் தூயநீரையும் கொண்டிருக்கையில், இரு பக்கமிருந்தும் ஒரே வேகத்தில் மூலக்கூறுகள் அந்த மென்சவ்வை உந்திச் செல்ல முயன்றாலும், கரைசலில் உள்ள பெரிய மூலக்கூறுகளை மென்சவ்வு உட்புக விடாமையால், கரைசலிலிலிருந்து நீர் மூலக் கூறுகள் மென்சவ்வினூடாக ஊடுசெல்லும் அளவு, தூய நீரிலிருந்து கரைசலை நோக்கி செல்லும் நீர் மூலக் கூறுகளின் அளவைவிட குறைவாகவே இருக்கும். இதனால் தூய நீரிலிருந்து கரைசலை நோக்கி ஒரு நிகர அசைவு ஏற்படும்.
சவ்வூடு பரவல் அமுக்கமென்பது, கரைப்பானின் அல்லது நீரின் நிகர அசைவு எதுவுமில்லாமல், ஒரு சமநிலையை அடைவதற்கு தேவைப்படும் அமுக்கமாகும்.
தாவரங்கள் நிமிர்ந்து உறுதியாக நிற்க இவ்வகை சவ்வூடு பரவல் அமுக்கமே காரணமாகும். சவ்வூடு பரவலினால் உயிரணுக்களின் உள்ளே அசையும் நீர் மூலக் கூறுகள், தாவரக் கலங்களில் கலச்சுவருக்கு எதிராக கொடுக்கப்படும் விறைப்பு அமுக்கத்தை (turgor pressure) அதிகரிக்கச் செய்யும். இதனால், தாவரங்கள் நிமிர்ந்து உறுதியாக நிற்க முடிகின்றது. தாவரங்களுக்கு நீர் போதியளவு கிடைக்காதவிடத்து, நீர் மூலக் கூறுகளின் நிகர அசைவு ஏற்படாமல் போவதால், விறைப்பு அமுக்கமின்றி வாடி விடுகின்றன.
உருளைக் கிழங்கு துண்டுகளை செறிவு கூடிய கரைசல் ஒன்றினுள் போட்டால், கலங்களிலிருந்து நீர் வெளியேறுவதால், கிழங்குத் துண்டுகள் விறைப்பு அமுக்கத்தை இழந்து சுருங்கும். வெளியேயுள்ள கரைசலின் செறிவு அதிகரிக்குமாயின், கிழங்கின் சுருங்கும் அளவும் அதிகரிக்கும்.
தாவர உயிரணு ஒன்று அதியழுத்தமுள்ள ("hypertonic") கரைசல் ஒன்றினுள் அமிழ்த்தப்படும்போது, உயிரணுக்களின் உள்ளிருந்து நீர் மூலக் கூறுகள், வெளியேயுள்ள செறிவு கூடிய கரைசலுக்கு நகர்வதால், தாவரக் கலம் சுருங்கி தளர்ந்த நிலையை அடையும். அதேவேளை, தாழழுத்தமுள்ள ("hypotonic") கரைசல் ஒன்றினுள் உயிரணுவானது அமிழ்த்தப் படும்போது, நீர் மூலக் கூறுகளின் நிகர அசைவு வெளியேயிருக்கும் செறிவு குறைந்த கரைசலில் இருந்து உள்நோக்கி இருப்பதால் உயிரணுக்கள் வீக்க நிலையை அடையும். சம பரவலமுக்கமுள்ள ("isotonic") ஒரு கரைசலினுள் உயிரணுவானது இடப்படும்போது, நீர் மூலக் கூறுகளின் நிகர நகர்வின்மையால், உயிரணுவில் மாற்றமின்றி அதே நிலையில் இருக்கும்.
மண்ணிலிருந்து வேர்களினூடாக நீரானது உறிஞ்சப்படுவதிலும் இந்த சவ்வூடு பரவல் முக்கிய பங்கு வகிக்கின்றது. வேரின் கலங்களின் உள்ளே இருக்கும் கரைசலானது, வேரின் வெளியே இருக்கும் கரைசலை (அல்லது நீரை) விட செறிவு கூடியதாக இருக்கும். எனவே நீரானது வேர்க்கலங்களின் வெளியே இருந்து உள்நோக்கி நகரும்.
தாவர உயிரணுக்கள் செறிவு குறைந்த கரைசலில் அல்லது தூய நீரில் அமிழ்த்தப்படும்போது, வெளியே இருந்து நீர் உள்ளே செல்வதானால் வீக்க நிலையை அடையும். ஆனால் அங்கே கலச்சுவர் இருப்பதனால் இலகுவில் வெடிப்பதில்லை. ஆனால், விலங்கு உயிரணுக்கள் செறிவு குறைந்த கரைசலில் அல்லது தூய நீரில் அமிழ்த்தப்படும்போது, வெளியே இருந்து நீர் உள்ளே செல்லும்போது, உயிரணுக்கள் வீங்கும். அங்கே உயிரணு மென்சவ்விற்கு ஆதரவாக கலச் சுவர் இல்லாமையால், மென்சவ்வானது வெடிக்கும். இங்கே தாவர உயிரணுக்கள் போலன்றி ஒரு குறிப்பிட்டளவு அமுக்கத்தை விட அதிகரிக்கும்போது, உயிரணுக்கள் வெடிக்கின்றன. அதேவேளை செறிவு கூடிய கரைசலில் இடும்போது உயிரணுக்களிலிருந்து நீர் வெளியேறுவதால் உயிரணுக்கள் சுருங்கி விடும். அட்டைகள் , கூடற்ற நத்தைகள் போன்றவற்றை அழிக்க உப்புக் கரைசல் பாவிக்கப்படும். செறிவு கூடிய இக்கரைசலில் அவற்றை இடும்போது, நீர் வெளியேறி விடுவதால் உயிரணுக்கள் சுருங்கி அழிந்து விடும். இரு வழிகளாலும் விலங்கு உயிரணுக்களுக்கு ஆபத்து இருப்பதால், அவை ஈடான செறிவுள்ள கரைசல்களிலேயே வைத்திருக்கப்பட வேண்டும்.
உலர் நிலங்களில் வாழும் விலங்குகளும், உப்புச் செறிவு கூடிய கடலில் வாழும் விலங்குகளும் நீரை சேமித்து வைக்க வேண்டியவையாக உள்ளன. ஆனால் தூய நீரில் வாழும் மீன்கள் அவற்றின் உடலினுள் செல்லும் நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டிய தேவையைக் கொண்டிருக்கின்றன.
செறிவு குறைந்த கரைசல் ஒன்றிலிருந்து, செறிவு கூடிய கரைசல் ஒன்றினுள் கரைப்பான் மூலக் கூறுகள் தொடர்ந்து பரவும்போது, செறிவு கூடிய கரைசலினுள் ஒருவகை அழுத்தம் உருவாகும். தேர்ந்து புகவிடும் மென்சவ்வினூடாக, இவ்வாறு ஏற்படும் நிகர அசைவை தடுக்க ஒரு அலகு பரப்பில் பிரயோகிக்கப்பட வேண்டிய விசை அல்லது அழுத்தமே சவ்வூடு பரவல் அழுத்தம் எனப்படும். இந்த அழுத்தமானது எந்த கரையம் என்பதைப் பொறுத்திராமல், என்ன செறிவு என்பதை மட்டுமே பொறுத்திருக்கும்.
சவ்வூடு பரவல் விகிதம் என்பது தேர்ந்து புகவிடும் மென்சவ்வினால் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இரு கரைசல்களினதும் கரைய செறிவில் இருக்கும் வேறுபாட்டை குறிக்கும். இவ்வேறுபாடானது கரைசலிலுள்ள குறிப்பிட்ட துணிக்கையின் வீதத்தில் உள்ள வேறுபாடாகும். நீர் மூலக் கூறுகள் அதிகளவில் செறிவு குறைந்த கரைசலிலிருந்து செறிவு கூடிய கரைசலுக்கு செல்வதனால், அந்த நிகர அசைவினால், செறிவு வேறுபாடு குறைந்து ஒரு சமநிலையை அடையும். சமநிலைக்கு வந்தாலும் நீர் மூலக் கூறுகளின் அசைவு தொடர்ந்தாலும், இரு புறமிருந்தும் சம அளவிலான நீர் மூலக் கூறுகள் அசைவதனால், சமநிலை குழப்பப்படாது.
சவ்வூடு பரவல் அமுக்கத்திற்கு எதிராக, கரைசல்களைப் பிரித்து வைத்திருக்கும் மென்சவ்வினூடாக, செறிவு கூடிய கரைசலிலிருக்கும் கரைப்பானை செறிவு குறைந்த கரைசலை நோக்கி நகர்த்த கொடுக்கப்படும் விசையாகும்.
</doc>
<doc id="73748" url="https://ta.wikipedia.org/wiki?curid=73748" title="மணிவாசகர் பதிப்பகம்">
மணிவாசகர் பதிப்பகம்
மணிவாசகர் பதிப்பகம், சென்னையில் அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று. இப்பதிப்பகம் மொழிக் கொள்கை, வெளியீட்டுக் கொள்கை, விலைக்கொள்கை என்கிற மூன்றின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இப்பதிப்பகத்தைப் முனைவர் ச. மெய்யப்பன் என்பவர் நிறுவினார். இப்பதிப்பகம் வெளியிட்டுள்ள பல நூல்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மணிவாசகர் பதிப்பகத்தின் சிறப்புகளாகக் கீழ்க்காணும் தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.
</doc>
<doc id="73749" url="https://ta.wikipedia.org/wiki?curid=73749" title="காங்கோ இனக்குழு">
காங்கோ இனக்குழு
காங்கோ இனக்குழு என்பது பாண்டு இனத்தைச் சேர்ந்த ஒரு இனக்குழு ஆகும். இவர்கள் ஆப்பிரிக்காவின் அத்திலாந்திக் கடலோரம் காங்கோ சனநாயகக் குடியரசில் உள்ள பொயிண்டே நொய்ரே என்னும் இடத்தில் இருந்து, அங்கோலாவில் உள்ள லுவாண்டா வரையான பகுதிகளில் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவர்களது எண்ணிக்கை 10,220,000 ஆக இருந்தது. கிகாங்கோ மொழியில் இவ்வினத்தை பன்மையில் "பெசிகாங்கோ" என்றும் ஒருமையில் "முவிசிகாங்கோ" என்றும் குறிப்பிடுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் கிகாங்கோ மொழியைப் பேசுகின்றனர். இம் மொழி பல வட்டார வழக்குகளாகப் பிரிந்து காணப்படுகின்றது. சில வட்டார வழக்குகளிடையே புரிந்து கொள்ளக்கூடிய தன்மை மிகவும் குறைவு. அங்கோலாவில் வாழும் இம்மக்கள், எறத்தாழ அனைவருமே போத்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் சிலருக்கு இம்மொழி முதல்மொழியாகவும் ஏனையோருக்கு இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இதுபோலவே காங்கோவிலும், காங்கோ சனநாயகக் குடியரசிலும் வாழ்வோர் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். இவ்வினக்குழுவினரில் சிலர் மேற்குக் காங்கோவின் பொது மொழியாகிய லிங்காலா மொழியை அல்லது கித்துபா என அழைக்கப்படும் கிகாங்கோ யா லேட்டா பேசுகின்றனர். "கிகாங்கோ யா லேட்டா" என்பது கிகாங்கோ மொழியின் ஒரு கிரியோல் வடிவம் ஆகும்.
</doc>
<doc id="73763" url="https://ta.wikipedia.org/wiki?curid=73763" title="வன்னி எலி">
வன்னி எலி
வன்னிஎலி ஒரு தமிழ் குறும்படம் ஆகும்.
வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.
தமிழியம் சுபாஸ் இயக்கிய வன்னி எலி குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த திரு. எஸ். ஜே. ஜோசெப் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இம் மனித முகாமினுள் பெருமளவு தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
இவ் இரு எலிகளையும் சாட்சியாக வைத்து முள்கம்பி வேலிக்குள் அப்பாவித்தமிழ் மக்கள் படும் அவலத்தை பேசப்படாத உண்மைகளை வெளிக்காட்டும் படமாக அத்திரைப்படம் அமைந்துள்ளது. இவ் இரு எலிகளும் இவ்நிலைமையில் இருந்து தப்புகின்றனவா என்பதுதான் படத்தின் முடிவு.
இப்படம் பெரியார் குறும்பட விழா 2009 ல் சிறப்பு பரிசினை பெற்றுக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை 2010 ஒஸலோவில் இடம்பெற்ற தமிழ் திரைப்படவிழா நிகழ்வில் சிறப்பு பரிசினையும் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இப்படம் பரிசில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சுதந்திர படவிழாவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இதன் இயக்குனர் 26 அகவையுடைய சுபாஸ் என்பதுவும் இவர் வவுனிக்குளம் வன்னியை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுவும் தனது 13வது வயதில் ஐரோப்பாவிற்கு வந்தவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவர் ‘எனக்கு ஒரு கனவு காணலாமா?’ என நோர்வே தமிழ் சிறுபிள்ளை ஒன்றி;னை வைத்து மற்றும் ஒரு குறும்பட ஒன்றினை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குறும்பட விழா பற்றி பங்களாதேஸ் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள்.
http://www.newagebd...ar/14/time.html
http://www.thedailys...php?nid=130088