text
stringlengths
0
6.49k
சுபிமல் பாட்டசார்ஜி சுட்டிக் காட்டுகிறார்,
அபினவ் அகர்வால் இந்த நூலானது என்று சுட்டிக் காட்டுகிறார்,
வணிகம் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கும் பிசினஸ் ப்ரேக்பாஸ்ட் மற்றும் கிராஸ்பயர் போன்ற பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு தலைமை தாங்கியுள்ளார்.
</doc>
<doc id="73704" url="https://ta.wikipedia.org/wiki?curid=73704" title="சுவடி (நிறுவனம்)">
சுவடி (நிறுவனம்)
சுவடி எனக் குறித்தழைக்கப்படும் இப் பொறுப்பு வரையறுக்கப்பட்ட இலாப நோக்கற்ற கம்பனியானது இலங்கைத் தீவின் வடபுலத்தேயுள்ள யாழ்நகரில் தலைமைப் பணிமனையைக் கொண்டுள்ளது. 19 ஆம் திகதி, சூலை, 2010 அன்று உத்தியோகபூர்வமாகப் இலங்கையில் பதியப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக நவீன கல்வி முறைகள் மூலமாக ஓர் அறிவார்ந்த சமூகத்தினைக் கட்டியெழுப்புவதைக் குறிப்பிலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. எண்ணிம நூலகங்கள் உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குதல், அவற்றின் நிலைபெறுகையை உறுதிப்படுத்துதல், பல்துறைக் கல்வி வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல், திறமூல மென்பொருள் பயன்பாட்டுக்கான பரப்புரை என்பன இந் நிறுவனத்தின் தலையான பணிகளாகும்.
2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ’சுவடி எண்ணிம நூலகச் செயற்திட்டமே’ இந் நிறுவனத்தின் தேவைப்பாட்டினை உணரச் செய்தது. இச் செயற்திட்டம் யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள், சமுக செயற்பாட்டாளர்கள், உயர்தர மாணவர்களிற்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் எனப் பலரின் கடின உழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட போதும் பொதுமக்களிடையே எண்ணிம நூலகங்கள் தொடர்பான போதிய தெளிவு காணப்படாமையால் பெரிதும் அணுகப்படவில்லை. மிகச் சொற்ப எண்ணிக்கையானவர்களே இந் நூலகத்தினைப் பயன்படுத்த எத்தணித்தனர். ‘எண்ணிம நூலகங்கள்’ தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடையே கட்டி எழுப்ப நீண்டகாலம் தேவை என்பதை உணர்ந்து கொண்ட செயற்திட்ட வழிகாட்டற் குழுவினர் அப் பணியைச் சிறப்புற மேற்கொள்ள எடுத்த ஓர் உறுதியான முன்னகர்வே நிறுவன உருவாக்கத்திற்கு அடிப்படையாகியது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் செயற்திட்ட வழிகாட்டற் குழுவினர் இலங்கைத் தீவின் சகல பகுதிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற கம்பனியாக சுவடி நிறுவனத்தினை உருவாக்க எத்தணித்தனர். இதன் விளைவாக சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலான நீண்ட திட்டமிடலின் பலனாக சுவடி நிறுவனம் உதயமானது.
இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ள சுவடி நிறுவனம் தன் நிலைபெறுகையை உறுதியாக்கியுள்ளது ஆயினும் குறைந்தளவான வலிந்துதவு பணியாளர்கள், நிறுவனத்தில் குறிப்பிலக்கின் அவசியத்தன்மை தொடர்பில் சமுக அளவில் போதிய தெளிவின்மை, செயற்பாடுகளை வட மாகாணத்தின் சகல பகுதிகளிற்கும் தீவின் ஏனைய மாகாணங்களிற்கும் விஸ்தரிக்க போதிய நிதி மற்றும் ஆளணிப் பற்றாக்குறை போன்றவற்றினை பிரதான சவால்களாக எதிர்நோக்கியுள்ளது.
</doc>
<doc id="73708" url="https://ta.wikipedia.org/wiki?curid=73708" title="இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு">
இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு
இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 10 சனவரி 1863 அன்று இச்சேவை தொடங்கப்பட்டது.270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது.
ஒய்ஸ்டர் அட்டை எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை இங்கும் பயன்படுத்தலாம்.
இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு 11 சேவைகளைக்கொண்டுள்ளது. அவை முறையே பார்க்கலூ சேவை, சென்றல் சேவை, சேர்கிள் சேவை, டிஸ்திரிக் சேவை (H)காமசிமித் அன்ட் சிட்டி சேவை, யுபிளி சேவை, மெற்றோபொலிட்டன் சேவை, நொதேர்ன் சேவை, பிக்காடிலி சேவை, விக்ரோரியா சேவை,வாட்டர்லூ அன்ட் சிட்டி சேவை என்பனவாகும்.
</doc>
<doc id="73711" url="https://ta.wikipedia.org/wiki?curid=73711" title="ஒய்ஸ்டர் அட்டை">
ஒய்ஸ்டர் அட்டை
ஒய்ஸ்டர் அட்டை என்பது இலண்டனில் பேருந்து, பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு, தெருத்தண்டவாளத்தில் ஓடும் டிராம், டொக்லான்ட் இலகுத் தொடருந்து (டீ.எல்.ஆர்) மற்றும் லண்டன் தொடருந்து ஆகியவற்றில் பயணங்களை மேற்கொள்ளப் பயன்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டையை குறிக்கும்.
இவ் ஒய்ஸ்டர் அட்டை சூலை 2003 முதல் சில வரம்புகளுக்குட்பட்ட அம்சங்களுடன் பொதுமக்கள் பாவனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது (சூன் 2010 கணக்கெடுப்பின்படி), 34 மில்லியன்களுக்கும் மேற்பட்டவர்களிடம் பாவனையிலுள்ளது. இவ்வட்டையின் சிறப்பம்சம் என்னவெனில் பொதுவாக போக்குவரத்து சேவைகளுக்காக வசூலிக்கப்படும் கட்டனத்தில் 80 கட்டணத்தையே இதன் மூலம் வசூலிக்கப்படுகிறது.
ஒய்ஸ்டர் அட்டை மீளப்பயன்படுத்தப்படக் கூடியது. அதன் செயற்பாட்டை இணையத்தினூடாகச் செய்யலாம். மேலும் அதில் உங்கள் வரவில் உள்ள பருவகாலச் சீட்டையும் பயணம் செய்யப் பணம் செலுத்தும் வசதியையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
பயணம் செய்யும்போது சரியான கட்டணத்தைச் செலுத்துவதை உறுதி செய்ய, நீங்கள் எப்போதும் பயணத் தொடக்கத்தில் மஞ்சள் வாசிப்புப் பொறியில் தொட்டு உள்நுழைந்து பயண முடிவில் தொட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் உங்களிடம் கூடியபட்ச காசுக்கட்டணம் அறவிடப்படும். பேருந்துகளைப் பொறுத்தவரை, ஏறும்போது தொடவேண்டும். டிராம்களில் ஏறுமுன் டிராம் தரிப்பு மேடையில் உள்ள மஞ்சள் வாசிப்புப் பொறியில் தொடவேண்டும். ஆனால் இரு விடயங்களிலும் பயண முடிவில் தொட்டு வெளியேறலாகாது.
உங்கள் ஒய்ஸ்டர் அட்டையை மஞ்சள் வாசிப்புப் பொறியில் வைத்துத் தொடும்போது ஒரு ‘பீப்’ ஒலியுடன் பச்சை வெளிச்சம் வந்தால் உங்கள் அட்டை பயணத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதென்று அர்த்தமாகும். இரண்டு ‘பீப்’ ஒலியுடன் சிவப்பு வெளிச்சம் வந்தால் உங்கள் ஒய்ஸ்டர் அட்டை நிராகரிக்கப்பட்டு விட்டதென்று அர்த்தமாகும். உங்கள் ஒய்ஸ்டர் அட்டை பயணத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் வரை அல்லது உங்கள் பயணத்துக்கு
வேறாகக் கட்டணம் செலுத்தும் வரை நீங்கள் மேற்கொண்டு செல்லலாகாது.
இவ் அட்டையை இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பின் 11 சேவைகளான பார்க்கலூ சேவை, சென்றல் சேவை, சேர்கிள் சேவை, டிஸ்திரிக் சேவை ஹாமசிமித் அன்ட் சிட்டி சேவை, யுபிளி சேவை, மெற்றோபொலிட்டன் சேவை, நொதேர்ன் சேவை, பிக்காடிலி சேவை, விக்ரோரியா சேவை, வாட்டர்லூ அன்ட் சிட்டி சேவை என்பனவற்றிலும் தேசிய புகையிரத சேவை புகையிரதங்களிலும் டீ.எல்.ஆர் எனப்படும் இரயில் சேவையிலும் பேரூந்துகளிலும் டிராம் வண்டிகளிலும், இலண்டன் படகு சேவைகளிலும் பயன்படுத்தலாம்.
Transport for London லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம்
</doc>
<doc id="73718" url="https://ta.wikipedia.org/wiki?curid=73718" title="செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்">
செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்
செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் தென் யார்க்சையரில் செஃப்பீல்ட் நகரில் அமைந்துள்ள ஓர் முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகும். உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களுக்குள் இருந்து வருகிறது . இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். சிவப்புச் செங்கல் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படும் சிறப்புக் கல்வியகங்களின் பட்டியலில் துவக்கத்திலிருந்தே இருந்து வரும் செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் 18வது இடத்தில் உள்ளது..
</doc>
<doc id="73720" url="https://ta.wikipedia.org/wiki?curid=73720" title="தக்சசீலா">
தக்சசீலா
தட்சசீலம் (சமசுகிருதம்- तक्षशिला) ,(உருது - ٹیکسلا) அல்லது தக்சீலா பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமாகும். தக்சீலா இசுலாமாபாத் தலைநகரப் பகுதி மற்றும் ராவல்பிண்டியின் வடமேற்கே தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ளது. இதனருகில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட ஜௌலியன் விகாரை உள்ளது.
இது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. "தக்சசீலா "என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. இந்து மற்றும் புத்த சமயத்தினருக்கு மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் இராமனின் தமையன் பரதனின் மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
வரலாற்றில், தக்சசீலா மூன்று முதன்மை வணிக வழிகளின் சந்திப்பில் இருந்துள்ளது:
1. உத்தரபாதை, "வடக்குச் சாலை" - பின்னாளில் GT சாலையாக உருமாறிய இராசபாட்டை - காந்தார நாட்டையும் கிழக்கில் கங்கைச் சமவெளியில் அமைந்த மகத நாட்டின் பாடலிபுத்திரத்தையும் இணைத்தது.
2. வடமேற்கு சாலை பாக்ட்ரியா, கபிசா மற்றும் புஷ்கலாவதி வழியே சென்றது.
3. சிந்து பாதை காஷ்மீர் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்ரீநகர், மனேசெரா,அரிப்பூர் வழியே குஞ்செராப் கணவாய் மூலமாக சீனத்திற்கும் தெற்கே இந்தியப் பெருங்கடலுக்கும் அமைந்திருந்தது. தற்போதைய காரகோரம் நெடுஞ்சாலையை இப்பாதை அன்றே உள்ளடக்கியிருந்தது.
1980ஆம் ஆண்டு, யுனெசுகோ தக்சீலாவை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது. பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக "த கார்டியன்" கணித்துள்ளது.
கிமு 327ல்பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெத்த போது முதலில் தக்சசீல நகரத்தை முற்றுகையிட்டார். தக்சசீலா மன்னர் அம்பி, அலெக்சாண்டருக்கு யானைகள், குதிரைகள், காளைகளை அன்பளிப்பாக வழங்கி சமாதானம் செய்து கொண்டார்.
</doc>
<doc id="73722" url="https://ta.wikipedia.org/wiki?curid=73722" title="ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்">
ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்
ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள் என்னும்போது அது ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழுகின்ற பல்வேறு இனக்குழுக்களைக் குறிக்கின்றது. ஆப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் வாழுகின்றன. பொதுவாக இவை ஒவ்வொன்றும் தமக்கெனத் தனியான ஒரு மொழியை அல்லது மொழியொன்றின் தனியான வட்டார வழக்கைக் கொண்டவையாகவும், தனியான பண்பாட்டைச் சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன.
</doc>
<doc id="73729" url="https://ta.wikipedia.org/wiki?curid=73729" title="மனித வள மேலாண்மை முறைமை">