|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
cuppiramaNiya pAratiyAr pATalkaL -tEciya kItangkaL(in unicode format) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
cuppiramaNiya pAratiyAr pATalkaL |
|
|
|
(tEciya kItangkaL) |
|
|
|
(in tamil script, Unicode/UTF-8 format) |
|
|
|
சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் |
|
|
|
1. தேசிய கீதங்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Acknowledgment: |
|
|
|
|
|
Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for his assistance in the preparation of this work. |
|
|
|
This webpage presents tEciya kItangkaL of pArati in Tamil script in Unicode encoding. |
|
|
|
|
|
|
|
© Project Madurai, 1998-2021. |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation |
|
|
|
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
https://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
|
|
|
|
|
|
சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் |
|
|
|
1. தேசிய கீதங்கள் |
|
|
|
|
|
|
|
1. வந்தே மாதரம் |
|
|
|
|
|
|
|
ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
வந்தே மாதரம் என்போம் - எங்கள் |
|
|
|
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் |
|
|
|
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் |
|
|
|
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி |
|
|
|
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) |
|
|
|
|
|
|
|
ஈனப் பறையர்க ளேனும் அவர் |
|
|
|
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? |
|
|
|
சீனத் தராய்விடு வாரோ? - பிற |
|
|
|
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) |
|
|
|
|
|
|
|
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் |
|
|
|
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர் |
|
|
|
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் |
|
|
|
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) |
|
|
|
|
|
|
|
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் |
|
|
|
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே |
|
|
|
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த |
|
|
|
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) |
|
|
|
|
|
|
|
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில் |
|
|
|
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் |
|
|
|
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் |
|
|
|
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) |
|
|
|
|
|
|
|
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு |
|
|
|
போயின நாட்களுக் கினிமனம் நாணித் |
|
|
|
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் |
|
|
|
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) |
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
2. ஜய வந்தே மாதரம் |
|
|
|
|
|
|
|
ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
வந்தே மாதரம் - ஜய |
|
|
|
வந்தே மாதரம். |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
ஜயஜய பாரத ஜயஜய பாரத |
|
|
|
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) |
|
|
|
|
|
|
|
ஆரிய பூமியில் நாரிய ரும் நர |
|
|
|
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே) |
|
|
|
|
|
|
|
நொந்தே போயினும் வெந்தே மாயினும் |
|
|
|
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே) |
|
|
|
|
|
|
|
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் |
|
|
|
சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) |
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
3. நாட்டு வணக்கம் |
|
|
|
|
|
|
|
ராகம் - காம்போதி தாளம் - ஆதி |
|
|
|
|
|
|
|
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி |
|
|
|
இருந்ததும் இந்நாடே - அதன் |
|
|
|
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து |
|
|
|
முடிந்ததும் இந்நாடே - அவர் |
|
|
|
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து |
|
|
|
சிறந்ததும் இந்நாடே - இதை |
|
|
|
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன் |
|
|
|
வாயுற வாழ்த்தேனோ? - இதை |
|
|
|
வந்தே மாதரம், வந்தே மாதரம் |
|
|
|
என்று வணங்கேனோ? |
|
|
|
|
|
|
|
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் |
|
|
|
ஈந்ததும் இந்நாடே - எங்கள் |
|
|
|
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி |
|
|
|
அறிந்ததும் இந்நாடே - அவர் |
|
|
|
கன்னிய ராகி நிலவினி லாடிக் |
|
|
|
களித்ததும் இந்நாடே - தங்கள் |
|
|
|
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் |
|
|
|
போந்ததும் இந்நாடே - இதை |
|
|
|
வந்தே மாதரம், வந்தே மாதரம் |
|
|
|
என்று வணங்கேனோ? |
|
|
|
|
|
|
|
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு |
|
|
|
வளர்த்ததும் இந்நாடே - அவர் |
|
|
|
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் |
|
|
|
தழுவிய திந்நாடே - மக்கள் |
|
|
|
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் |
|
|
|
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் |
|
|
|
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் |
|
|
|
ஆர்ந்ததும் இந்நாடே - இதை |
|
|
|
வந்தே மாதரம், வந்தே மாதரம் |
|
|
|
என்று வணங்கேனோ? |
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
4. பாரத நாடு |
|
|
|
|
|
|
|
|
|
ராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் |
|
|
|
பாரத நாடு. |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
ஞானத்தி லேபர மோனத்திலே - உயர் |
|
|
|
மானத்தி லேஅன்ன தானத்திலே |
|
|
|
கானத்தி லேஅமு தாக நிறைந்த |
|
|
|
கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) |
|
|
|
|
|
|
|
தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில் |
|
|
|
ஈரத்தி லேஉப காரத்திலே |
|
|
|
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு |
|
|
|
தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) |
|
|
|
|
|
|
|
நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப் |
|
|
|
பன்மையி லேமறத் தன்மையிலே |
|
|
|
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின் |
|
|
|
புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) |
|
|
|
|
|
|
|
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய |
|
|
|
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே |
|
|
|
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் |
|
|
|
கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) |
|
|
|
|
|
|
|
வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத் |
|
|
|
தண்மையி லேமதி நுண்மையிலே |
|
|
|
உண்மையி லேதவ றாத புலவர் |
|
|
|
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) |
|
|
|
|
|
|
|
யாகத்தி லேதவ வேகத்திலே - தனி |
|
|
|
யோகத்தி லேபல போகத்திலே |
|
|
|
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம் |
|
|
|
அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) |
|
|
|
|
|
|
|
ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல் |
|
|
|
காற்றினி லேமலைப் பேற்றினிலே |
|
|
|
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி |
|
|
|
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) |
|
|
|
|
|
|
|
தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி |
|
|
|
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே |
|
|
|
தேட்டத்தி லேஅடங் காத நதியின் |
|
|
|
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)) |
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
5. பாரத தேசம் |
|
|
|
|
|
|
|
ராகம் - புன்னாகவராளி |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் |
|
|
|
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி |
|
|
|
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் |
|
|
|
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள் |
|
|
|
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) |
|
|
|
|
|
|
|
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், |
|
|
|
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் |
|
|
|
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் |
|
|
|
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத) |
|
|
|
|
|
|
|
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் |
|
|
|
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம், |
|
|
|
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே |
|
|
|
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத) |
|
|
|
|
|
|
|
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே, |
|
|
|
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே, |
|
|
|
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே |
|
|
|
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத) |
|
|
|
|
|
|
|
சிந்து நதியின்மிசை நிலவினி லே |
|
|
|
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே |
|
|
|
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் |
|
|
|
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத) |
|
|
|
|
|
|
|
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் |
|
|
|
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம் |
|
|
|
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு |
|
|
|
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத) |
|
|
|
|
|
|
|
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் |
|
|
|
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம் |
|
|
|
ராசபுத் தானத்து வீரர் தமக்கு |
|
|
|
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத) |
|
|
|
|
|
|
|
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் |
|
|
|
பண்ணி மலைகளென வீதி குவிப்போம் |
|
|
|
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார் |
|
|
|
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத) |
|
|
|
|
|
|
|
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் |
|
|
|
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் |
|
|
|
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம் |
|
|
|
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத) |
|
|
|
|
|
|
|
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம் |
|
|
|
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம் |
|
|
|
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் |
|
|
|
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத) |
|
|
|
|
|
|
|
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் |
|
|
|
வானையளப் போம்கடல் மீனையளப்போம் |
|
|
|
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம் |
|
|
|
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத) |
|
|
|
|
|
|
|
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் |
|
|
|
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம் |
|
|
|
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம் |
|
|
|
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத) |
|
|
|
|
|
|
|
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே |
|
|
|
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம் |
|
|
|
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும் |
|
|
|
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
6. எங்கள் நாடு |
|
|
|
|
|
|
|
ராகம் - பூபாளம் |
|
|
|
|
|
|
|
மன்னும் இமயமலை யெங்கள் மலையே |
|
|
|
மாநில மீதிது போற்பிறி திலையே! |
|
|
|
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே |
|
|
|
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? |
|
|
|
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே |
|
|
|
பார் மிசை யேதொரு நூல்இது போலே? |
|
|
|
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே |
|
|
|
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. |
|
|
|
|
|
|
|
மாரத வீரர் மலிந்தநன் னாடு |
|
|
|
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு |
|
|
|
நாரத கான நலந்திகழ் நாடு |
|
|
|
நல்லன யாவையும் நாடுறு நாடு |
|
|
|
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு |
|
|
|
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு |
|
|
|
பாரத நாடு பழம்பெரு நாடே |
|
|
|
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே. |
|
|
|
|
|
|
|
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் |
|
|
|
ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம் |
|
|
|
தன்னலம் பேணி இழிதொழில்கற் போம் |
|
|
|
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் |
|
|
|
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் |
|
|
|
கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும் |
|
|
|
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே |
|
|
|
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே. |
|
|
|
----------- |
|
|
|
|
|
|
|
|
|
7. ஜயபாரத |
|
|
|
|
|
|
|
சிறந்து நின்ற சிந்தை யோடு |
|
|
|
தேயம் நூறு வென்றிவள் |
|
|
|
மறந்த விர்ந்த் நாடர் வந்து |
|
|
|
வாழி சொன்ன போழ்தினும் |
|
|
|
இறந்து மாண்பு தீர மிக்க |
|
|
|
ஏழ்மை கொண்ட போழ்தினும் |
|
|
|
அறந்த விர்க்கி லாது நிற்கும் |
|
|
|
அன்னை வெற்றி கொள்கவே! |
|
|
|
|
|
|
|
நூறு கோடி நூல்கள் செய்து |
|
|
|
நூறு தேய வாணர்கள் |
|
|
|
தேறும் உண்மை கொள்ள இங்கு |
|
|
|
தேடி வந்த நாளினும் |
|
|
|
மாறு கொண்டு கல்லி தேய |
|
|
|
வண்ணி தீர்ந்த நாளினும் |
|
|
|
ஈறு நிற்கும் உண்மை யொன்று |
|
|
|
இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே! |
|
|
|
|
|
|
|
வில்லர் வாழ்வு குன்றி ஓய |
|
|
|
வீர வாளும் மாயவே |
|
|
|
வெல்லுஞானம் விஞ்சி யோர்செய் |
|
|
|
மெய்மை நூல்கள் தேயவும் |
|
|
|
சொல்லும் இவ் வனைத்தும் வேறு |
|
|
|
சூழ நன்மை யுந்தர |
|
|
|
வல்ல நூல் கெடாது காப்பள் |
|
|
|
வாழி அன்னை வாழியே! |
|
|
|
|
|
|
|
தேவ ருண்ணும் நன்ம ருந்து |
|
|
|
சேர்ந்த கும்பம் என்னவும் |
|
|
|
மேவுவார் கடற்கண் உள்ள |
|
|
|
வெள்ள நீரை ஒப்பவும் |
|
|
|
பாவ நெஞ்சினோர் நிதம் |
|
|
|
பறித்தல் செய்வ ராயினும் |
|
|
|
ஓவி லாதசெல்வம் இன்னும் |
|
|
|
ஓங்கும் அன்னை வாழ்கவே! |
|
|
|
|
|
|
|
இதந்தரும் தொழில்கள் செய்து |
|
|
|
இரும்பு விக்கு நல்கினள் |
|
|
|
பதந்தரற் குரிய வாய |
|
|
|
பன்ம தங்கள் நாட்டினள் |
|
|
|
விதம்பெறும்பல் நாடி னர்க்கு |
|
|
|
வேறொ ருண்மை தோற்றவே |
|
|
|
சுதந்திரத்தி லாசை இன்று |
|
|
|
தோற்றி னாள்மன் வாழ்கவே! |
|
|
|
----------- |
|
|
|
|
|
|
|
|
|
8. பாரத மாதா |
|
|
|
|
|
|
|
தான தனந்தன தான தனந்தன |
|
|
|
தானனத் தானா னே. |
|
|
|
|
|
|
|
முன்னை இலங்கை அரக்கர் அழிய |
|
|
|
முடித்தவில் யாருடை வில்? - எங்கள் |
|
|
|
அன்னை பயங்கரி பாரத தேவி நல் |
|
|
|
ஆரிய ராணியின் வில். |
|
|
|
|
|
|
|
இந்திர சித்தன் இரண்டு துண்டாக |
|
|
|
எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள் |
|
|
|
மந்திரத் தெய்வம் பாரத ராணி, |
|
|
|
வயிரவி தன்னுடைய வில். |
|
|
|
|
|
|
|
ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள் |
|
|
|
உலகின்பக் கேணி என்றே - மிக |
|
|
|
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத |
|
|
|
நாயகி தன்திருக் கை. |
|
|
|
|
|
|
|
சித்த மயமிவ் உலகம் உறுதி நம் |
|
|
|
சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம் |
|
|
|
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் |
|
|
|
ஆரிய ராணியின் சொல். |
|
|
|
|
|
|
|
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் |
|
|
|
தட்டி விளையாடி - நன்று |
|
|
|
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி |
|
|
|
ஒளியுறப் பெற்ற பிள்ளை. |
|
|
|
|
|
|
|
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது |
|
|
|
கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை |
|
|
|
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் |
|
|
|
ஆரிய தேவியின் தோள். |
|
|
|
|
|
|
|
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் |
|
|
|
தந்த தெவர் கொடைக்கை? - சுவைப் |
|
|
|
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும் |
|
|
|
பாரத ராணியின் கை. |
|
|
|
|
|
|
|
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை |
|
|
|
புகன்ற தெவருடை வாய்? - பகை |
|
|
|
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத |
|
|
|
தேவிமலர் திரு வாய். |
|
|
|
|
|
|
|
தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும் |
|
|
|
தையலர் தம்முறவும் - இனி |
|
|
|
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது |
|
|
|
எம் அனை செய்த உள்ளம். |
|
|
|
|
|
|
|
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும் |
|
|
|
அன்பினிற் போகும் என்றே - இங்கு |
|
|
|
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன் |
|
|
|
மொழி எங்கள் அன்னை மொழி. |
|
|
|
|
|
|
|
மிதிலை எரிந்திட வேதப் பொருளை |
|
|
|
வினவும் சனகன் மதி - தன் |
|
|
|
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது |
|
|
|
வல்ல நம் அன்னை மதி. |
|
|
|
|
|
|
|
தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம் |
|
|
|
செய்த தெவர் கவிதை? - அயன் |
|
|
|
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத |
|
|
|
தேவி அருட் கவிதை. |
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
9. எங்கள் தாய் |
|
|
|
|
|
|
|
|
|
(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு) |
|
|
|
|
|
|
|
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு |
|
|
|
சூழ்கலை வாணர்களும் - இவள் |
|
|
|
என்று பிறந்தவள் என்றுண ராத |
|
|
|
இயல்பின ளாம் எங்கள் தாய். |
|
|
|
|
|
|
|
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த |
|
|
|
ளாயினு மேயங்கள் தாய் - இந்தப் |
|
|
|
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப் |
|
|
|
பயின்றிடு வாள்எங்கள் தாய். |
|
|
|
|
|
|
|
முப்பதுகோடி முகமுடை யாள்உயிர் |
|
|
|
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் |
|
|
|
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற் |
|
|
|
சிந்தனை ஒன்றுடையாள். |
|
|
|
|
|
|
|
நாவினில் வேத முடையவள் கையில் |
|
|
|
நலந்திகழ் வாளுடை யாள் - தனை |
|
|
|
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை |
|
|
|
வீட்டிடு தோளுடையாள். |
|
|
|
|
|
|
|
அறுபது கோடி தடக்கைக ளாலும் |
|
|
|
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச் |
|
|
|
செறுவது நாடி வருபவ ரைத்துகள் |
|
|
|
செய்து கிடத்துவள் தாய். |
|
|
|
|
|
|
|
பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும் |
|
|
|
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில் |
|
|
|
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந் |
|
|
|
துர்க்கை யனையவள் தாய். |
|
|
|
|
|
|
|
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் |
|
|
|
கைதொழு வாள்எங்கள் தாய் - கையில் |
|
|
|
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும் |
|
|
|
ஒருவனை யுந்தொழு வாள். |
|
|
|
|
|
|
|
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும் |
|
|
|
ஒன்றென நன்றறி வாள் - உயர் |
|
|
|
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும் |
|
|
|
பொற்குவை தானுடையாள். |
|
|
|
|
|
|
|
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி |
|
|
|
நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர் |
|
|
|
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் |
|
|
|
ஆனந்தக் கூத்தி டுவாள். |
|
|
|
|
|
|
|
வெண்மை வளரிம யாசலன் தந்த |
|
|
|
விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன் |
|
|
|
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ் |
|
|
|
சீருறு வாள்எங்கள் தாய். |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
10. வெறி கொண்ட தாய் |
|
|
|
|
|
|
|
ராகம் - ஆபோகி தாளம் - ரூபகம் |
|
|
|
|
|
|
|
பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும் |
|
|
|
பித்துடையாள் எங்கள் அன்னை |
|
|
|
காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக் |
|
|
|
காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்) |
|
|
|
|
|
|
|
இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து |
|
|
|
எற்றும் அலைத்திரள் வெள்ளம் |
|
|
|
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத் |
|
|
|
தாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்) |
|
|
|
|
|
|
|
தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில் |
|
|
|
தெய்வீக நன்மணம் வீசும் |
|
|
|
தேஞ்சொரி மாமலர் சூடி - மது |
|
|
|
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்) |
|
|
|
|
|
|
|
வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை |
|
|
|
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள் |
|
|
|
ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந் |
|
|
|
தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்) |
|
|
|
|
|
|
|
பாரதப் போரெனில் எளிதோ? - விறற் |
|
|
|
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள் |
|
|
|
மாரதர் கோடிவந் தாலும் - கணம் |
|
|
|
மாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி |
|
|
|
|
|
|
|
|
|
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், |
|
|
|
புன்மை யிருட்கணம் போயின யாவும், |
|
|
|
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி |
|
|
|
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, |
|
|
|
தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன் |
|
|
|
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம |
|
|
|
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே |
|
|
|
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! |
|
|
|
|
|
|
|
புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், |
|
|
|
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம் |
|
|
|
வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்! |
|
|
|
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்! |
|
|
|
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் |
|
|
|
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார், |
|
|
|
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை! |
|
|
|
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே! |
|
|
|
|
|
|
|
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம், |
|
|
|
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம், |
|
|
|
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே |
|
|
|
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம் |
|
|
|
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி |
|
|
|
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே! |
|
|
|
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்! |
|
|
|
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! |
|
|
|
|
|
|
|
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள் |
|
|
|
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ? |
|
|
|
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப் |
|
|
|
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே! |
|
|
|
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் |
|
|
|
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே? |
|
|
|
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ? |
|
|
|
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே! |
|
|
|
|
|
|
|
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? |
|
|
|
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ? |
|
|
|
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ? |
|
|
|
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே! |
|
|
|
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி |
|
|
|
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய் |
|
|
|
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்! |
|
|
|
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே! |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
12. பாரத மாதா நவரத்தின மாலை |
|
|
|
|
|
|
|
(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன) |
|
|
|
|
|
|
|
(காப்பு) |
|
|
|
|
|
|
|
வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த |
|
|
|
பாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார் |
|
|
|
நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் |
|
|
|
சிவரத்தன மைந்தன் திறம். |
|
|
|
|
|
|
|
(வெண்பா) |
|
|
|
|
|
|
|
திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி |
|
|
|
அறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள் |
|
|
|
எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன் |
|
|
|
கண்ணொத்த பேருரைத்தக் கால். |
|
|
|
|
|
|
|
(கட்டளை கலித்துறை) |
|
|
|
|
|
|
|
காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் |
|
|
|
கும்பிட்டுக் கம்பனமுற் |
|
|
|
றோலிமிட்டோ டி மறைந்தொழி |
|
|
|
வான், பகை யொன்றுளதோ? |
|
|
|
நீலக் கடலொத்fத கோலத்தி |
|
|
|
ளாள்மூன்று நேத்திரத்தாள் |
|
|
|
காலக் கடலுக்கோf பாலமிட் |
|
|
|
டாள்அன்னை காற்படினே. |
|
|
|
|
|
|
|
(எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம் |
|
|
|
ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே |
|
|
|
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள் |
|
|
|
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள் |
|
|
|
இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம் |
|
|
|
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்? |
|
|
|
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற |
|
|
|
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. |
|
|
|
|
|
|
|
(ஆசிரியப்பா) |
|
|
|
|
|
|
|
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! |
|
|
|
கற்றவ ராலே உலகுகாப் புற்றது |
|
|
|
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம் |
|
|
|
இற்றைநாள் வரையினும் அறமிலா மறவர் |
|
|
|
குற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர், |
|
|
|
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே |
|
|
|
முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார் |
|
|
|
பற்றை அரசர் பழிபடு படையுடன் |
|
|
|
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார் |
|
|
|
இற்றைநாள் |
|
|
|
|
|
|
|
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும் |
|
|
|
பாரத நாடு புதுநெறி பழக்கல் |
|
|
|
உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ |
|
|
|
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும் |
|
|
|
கவீந்திரனாகிய ரவீந்திர நாதன் |
|
|
|
|
|
|
|
சொற்றது கேளீர்! புவிமிசை யின்று |
|
|
|
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன் |
|
|
|
தர்மமே உருவமாம் மோஹன தாஸ் |
|
|
|
கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான் |
|
|
|
அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே |
|
|
|
|
|
|
|
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே |
|
|
|
அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும் |
|
|
|
வெற்றி தருமென வேதம் சொன்னதை |
|
|
|
முற்றும் பேண முற்பட்டு நின்றார் |
|
|
|
பாரத மக்கள் இதனால் படைஞர் தம் |
|
|
|
|
|
|
|
செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத |
|
|
|
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே |
|
|
|
(வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! ) |
|
|
|
|
|
|
|
(தரவு கொச்சக் கலிப்பா) |
|
|
|
|
|
|
|
ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள் |
|
|
|
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ! |
|
|
|
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோ ம் |
|
|
|
வேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே. |
|
|
|
|
|
|
|
(வஞ்சி விருத்தம்) |
|
|
|
|
|
|
|
திண்ணங் காணீர்! பச்சை |
|
|
|
வண்ணன் பாதத் தாணை |
|
|
|
எண்ணம் கெடுதல் வேண்டா! |
|
|
|
திண்ணம் விடுதலை திண்ணம். |
|
|
|
|
|
|
|
(கலிப்பா) |
|
|
|
|
|
|
|
விடுத லைபெறு வீர்வரை வாநீர் |
|
|
|
வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும் |
|
|
|
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின் |
|
|
|
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்? |
|
|
|
சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை |
|
|
|
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை |
|
|
|
எடுமி னோஅறப் போரினை என்றான் |
|
|
|
எங்கோ மேதகம் ஏந்திய காந்தி! |
|
|
|
|
|
|
|
(அறுசீர் விருத்தம்) |
|
|
|
|
|
|
|
காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி |
|
|
|
போந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும் |
|
|
|
மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார் |
|
|
|
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே |
|
|
|
|
|
|
|
(எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய் |
|
|
|
பாரத தேவியே கனல்கால் |
|
|
|
இணைவழி வால வாயமாஞ் சிங்க |
|
|
|
முதுகினில் ஏறிவீற் றிருந்தே |
|
|
|
துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம் |
|
|
|
துயர்கெட விடுதலை யருளி |
|
|
|
மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம் |
|
|
|
கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.- |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
13. பாரத தேவியின் திருத் தசாங்கம் |
|
|
|
|
|
|
|
|
|
நாமம் (காம்போதி) |
|
|
|
|
|
|
|
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப் |
|
|
|
பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில் |
|
|
|
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த |
|
|
|
பாரதமா தேவியெனப் பாடு. |
|
|
|
|
|
|
|
நாடு (வசந்தா) |
|
|
|
|
|
|
|
தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த |
|
|
|
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு |
|
|
|
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும் |
|
|
|
ஆரியநா டென்றே அறி. |
|
|
|
|
|
|
|
நகர் (மணிரங்கு) |
|
|
|
|
|
|
|
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள் |
|
|
|
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே |
|
|
|
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது |
|
|
|
தானென்ற காசித் தலம். |
|
|
|
|
|
|
|
ஆறு (சுருட்டி) |
|
|
|
|
|
|
|
வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை |
|
|
|
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத் |
|
|
|
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும் |
|
|
|
வான்போந்த கங்கையென வாழ்த்து. |
|
|
|
|
|
|
|
மலை (கானடா) |
|
|
|
|
|
|
|
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள் |
|
|
|
வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள் |
|
|
|
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும் |
|
|
|
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. |
|
|
|
|
|
|
|
ஊர்தி (தன்யாசி) |
|
|
|
|
|
|
|
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள் |
|
|
|
ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின் |
|
|
|
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும் |
|
|
|
அரிமிசையே ஊர்வாள் அவள். |
|
|
|
|
|
|
|
படை (முகாரி) |
|
|
|
|
|
|
|
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய் |
|
|
|
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர் |
|
|
|
மேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம் |
|
|
|
திண்ணமுறு வான்குலிசம் தேறு. |
|
|
|
|
|
|
|
முரசு (செஞ்சுருட்டி) |
|
|
|
|
|
|
|
ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை |
|
|
|
ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ |
|
|
|
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய் |
|
|
|
முத்திதரும் வேத முரசு. |
|
|
|
|
|
|
|
தார் (பிலகரி) |
|
|
|
|
|
|
|
வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர் |
|
|
|
தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை |
|
|
|
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள் |
|
|
|
பொற்றா மரைத்தார் புனைந்து. |
|
|
|
|
|
|
|
கொடி (கேதாரம்) |
|
|
|
|
|
|
|
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும் |
|
|
|
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார் |
|
|
|
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி |
|
|
|
குன்றா வயிரக் கொடி. |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
14. தாயின் மணிக்கொடி பாரீர் |
|
|
|
|
|
|
|
|
|
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்) |
|
|
|
|
|
|
|
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் |
|
|
|
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் |
|
|
|
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே |
|
|
|
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய |
|
|
|
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) |
|
|
|
|
|
|
|
பட்டுத் துகிலென லாமோ? - அதில் |
|
|
|
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று |
|
|
|
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை |
|
|
|
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்) |
|
|
|
|
|
|
|
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் |
|
|
|
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் |
|
|
|
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் |
|
|
|
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்) |
|
|
|
|
|
|
|
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் |
|
|
|
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் |
|
|
|
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் |
|
|
|
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்) |
|
|
|
|
|
|
|
அணியணி யாயவர் நிற்கும் - இந்த |
|
|
|
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? |
|
|
|
பணிகள் பொருந்திய மார்பும் - விறல் |
|
|
|
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்) |
|
|
|
|
|
|
|
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் |
|
|
|
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் |
|
|
|
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் |
|
|
|
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்) |
|
|
|
|
|
|
|
கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் |
|
|
|
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், |
|
|
|
பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் |
|
|
|
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்) |
|
|
|
|
|
|
|
பூதலம் முற்றிடும் வரையும் - அறப் |
|
|
|
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் |
|
|
|
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் |
|
|
|
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்) |
|
|
|
|
|
|
|
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் |
|
|
|
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், |
|
|
|
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் |
|
|
|
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்) |
|
|
|
|
|
|
|
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் |
|
|
|
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! |
|
|
|
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் |
|
|
|
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை |
|
|
|
|
|
|
|
|
|
நொண்டிச் சிந்து |
|
|
|
|
|
|
|
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த |
|
|
|
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், |
|
|
|
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் |
|
|
|
அஞ்சாத பொருளில்லை அவனியிலே |
|
|
|
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த |
|
|
|
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் |
|
|
|
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் |
|
|
|
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) |
|
|
|
|
|
|
|
மந்திர வாதி என்பார் - சொன்ன |
|
|
|
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், |
|
|
|
யந்திர சூனி யங்கள் - இன்னும் |
|
|
|
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! |
|
|
|
தந்த பொருளைக் கொண்டே - ஜனம் |
|
|
|
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம |
|
|
|
அந்த அரசியலை - இவர் |
|
|
|
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு) |
|
|
|
|
|
|
|
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச் |
|
|
|
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார், |
|
|
|
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு |
|
|
|
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார், |
|
|
|
அப்பால் எவனோ செல்வான் - அவன் |
|
|
|
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார், |
|
|
|
எப்போதும் கைகட்டுவார் - இவர் |
|
|
|
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) |
|
|
|
|
|
|
|
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த |
|
|
|
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், |
|
|
|
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு |
|
|
|
கோடிஎன் றால் அது பெரிதா மோ? |
|
|
|
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன் |
|
|
|
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால் |
|
|
|
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு |
|
|
|
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு) |
|
|
|
|
|
|
|
சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச் |
|
|
|
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே |
|
|
|
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு |
|
|
|
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார், |
|
|
|
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச் |
|
|
|
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார, |
|
|
|
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன் |
|
|
|
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு) |
|
|
|
|
|
|
|
நெஞ்சு பொறுக்கு திலையே - இதை |
|
|
|
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, |
|
|
|
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் |
|
|
|
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் |
|
|
|
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் |
|
|
|
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் |
|
|
|
துஞ்சி மடிகின் றாரே - இவர் |
|
|
|
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு) |
|
|
|
|
|
|
|
எண்ணிலா நோயுடையார் - இவர் |
|
|
|
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் |
|
|
|
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர் |
|
|
|
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார், |
|
|
|
நண்ணிய பெருங்கலைகள் - பத்து |
|
|
|
நாலாயிரங் கோடி நயந்துநின்ற |
|
|
|
புண்ணிய நாட்டினிலே - இவர் |
|
|
|
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் |
|
|
|
|
|
|
|
|
|
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்) |
|
|
|
|
|
|
|
வலிமையற்ற தோளினாய் போ போ போ |
|
|
|
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ |
|
|
|
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ |
|
|
|
பொறி யிழந்த விழியினாய் போ போ போ |
|
|
|
ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ |
|
|
|
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ |
|
|
|
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ |
|
|
|
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ |
|
|
|
|
|
|
|
இன்று பார தத்திடை நாய்போல |
|
|
|
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ |
|
|
|
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ |
|
|
|
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ |
|
|
|
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச் |
|
|
|
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ |
|
|
|
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக |
|
|
|
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ |
|
|
|
|
|
|
|
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ |
|
|
|
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ |
|
|
|
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும் |
|
|
|
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ |
|
|
|
மாறு பட்ட வாதமே ஐந்நூறு |
|
|
|
வாயில் நீள ஓதுவாய் போ போ போ |
|
|
|
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர் |
|
|
|
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ |
|
|
|
|
|
|
|
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ |
|
|
|
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ |
|
|
|
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று |
|
|
|
நீட்டினால் வணங்குவாய் போ போ போ |
|
|
|
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே |
|
|
|
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ |
|
|
|
சோதி மிக்க மணியிலே காலத்தால் |
|
|
|
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ. |
|
|
|
|
|
|
|
(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்) |
|
|
|
|
|
|
|
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா |
|
|
|
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா |
|
|
|
களிப டைத்த மொழியினாய் வா வா வா |
|
|
|
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா |
|
|
|
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா |
|
|
|
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா |
|
|
|
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா |
|
|
|
ஏறு போல் நடையினாய் வா வா வா |
|
|
|
|
|
|
|
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு |
|
|
|
வேதமென்று போற்றுவாய் வா வா வா |
|
|
|
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா |
|
|
|
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா |
|
|
|
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா |
|
|
|
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா |
|
|
|
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த் |
|
|
|
தேசமீது தோன்றுவாய் வா வா வா |
|
|
|
|
|
|
|
இளைய பார தத்தினாய் வா வா வா |
|
|
|
எதிரிலா வலத்தினாய் வா வா வா |
|
|
|
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் |
|
|
|
உதய ஞாயி றொப்பவே வா வா வா |
|
|
|
களையி ழந்த நாட்டிலே முன்போலே |
|
|
|
கலைசி றக்க வந்தனை வா வா வா |
|
|
|
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல் |
|
|
|
விழியி னால் விளக்குவாய் வா வா வா |
|
|
|
|
|
|
|
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா |
|
|
|
விநயம் நின்ற நாவினாய் வா வா வா |
|
|
|
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா |
|
|
|
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா |
|
|
|
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா |
|
|
|
கருதிய தியற் றுவாய் வா வா வா |
|
|
|
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம் |
|
|
|
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
17. பாரத சமுதாயம் |
|
|
|
|
|
|
|
|
|
ராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம் |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க! |
|
|
|
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத) |
|
|
|
|
|
|
|
அனுபல்லவி |
|
|
|
|
|
|
|
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் |
|
|
|
முழுமைக்கும் பொது உடைமை |
|
|
|
ஒப்பிலாத சமுதாயம் |
|
|
|
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத) |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
மனித ருணவை மனிதர் பறிக்கும் |
|
|
|
வழக்கம் இனியுண்டோ ? |
|
|
|
மனிதர் நோக மனிதர் பார்க்கும் |
|
|
|
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில் |
|
|
|
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த |
|
|
|
வாழ்க்கை இனியுண்டோ ? |
|
|
|
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் |
|
|
|
எண்ணரும் பெருநாடு, |
|
|
|
கனியும் கிழங்கும் தானி யங்களும் |
|
|
|
கணக்கின்றித் தரு நாடு - இது |
|
|
|
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம் |
|
|
|
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத) |
|
|
|
|
|
|
|
இனியொரு விதிசெய் வோம் - அதை |
|
|
|
எந்த நாளும் காப்போம், |
|
|
|
தனியொரு வனுக் குணவிலை யெனில் |
|
|
|
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத) |
|
|
|
|
|
|
|
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் |
|
|
|
என்றுரைத்தான் கண்ண பெருமான், |
|
|
|
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை |
|
|
|
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் |
|
|
|
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம் |
|
|
|
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத) |
|
|
|
|
|
|
|
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் |
|
|
|
எல்லாரும் இந்திய மக்கள், |
|
|
|
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை |
|
|
|
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் |
|
|
|
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் |
|
|
|
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
18. ஜாதீய கீதம் |
|
|
|
|
|
|
|
|
|
(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய |
|
|
|
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு) |
|
|
|
|
|
|
|
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை! |
|
|
|
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை! |
|
|
|
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) |
|
|
|
|
|
|
|
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை! |
|
|
|
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை! |
|
|
|
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை! |
|
|
|
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! |
|
|
|
|
|
|
|
முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும் |
|
|
|
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும் |
|
|
|
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்? |
|
|
|
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி! |
|
|
|
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! |
|
|
|
(வந்தே) |
|
|
|
|
|
|
|
நீயே வித்தை நீயே தருமம்! |
|
|
|
நீயே இதயம் நீயே மருமம்! |
|
|
|
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே) |
|
|
|
|
|
|
|
தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே! |
|
|
|
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே! |
|
|
|
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் |
|
|
|
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே) |
|
|
|
|
|
|
|
ஒருபது படைகொளும் உமையவள் நீயே! |
|
|
|
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ! |
|
|
|
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே) |
|
|
|
|
|
|
|
போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை! |
|
|
|
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை |
|
|
|
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை! |
|
|
|
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை! |
|
|
|
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
19. ஜாதீய கீதம் |
|
|
|
(புதிய மொழிபெயர்ப்பு) |
|
|
|
|
|
|
|
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் |
|
|
|
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் |
|
|
|
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே) |
|
|
|
|
|
|
|
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் |
|
|
|
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் |
|
|
|
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் |
|
|
|
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே) |
|
|
|
|
|
|
|
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் |
|
|
|
கோடி கோடி புயத்துணை கொற்றமார் |
|
|
|
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும், |
|
|
|
கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்? |
|
|
|
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை, |
|
|
|
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே) |
|
|
|
|
|
|
|
அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை |
|
|
|
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ |
|
|
|
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ. |
|
|
|
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் |
|
|
|
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே) |
|
|
|
|
|
|
|
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும் |
|
|
|
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும் |
|
|
|
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே) |
|
|
|
|
|
|
|
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை! |
|
|
|
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை |
|
|
|
மருவு செய்களின் நற்பயன் மல்குவை |
|
|
|
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை |
|
|
|
பெருகு மின்ப முடையை குறுநகை |
|
|
|
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை. |
|
|
|
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை, |
|
|
|
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே) |
|
|
|
|
|
|
|
---- |
|
|
|
|
|
2. தமிழ்நாடு |
|
|
|
|
|
|
|
|
|
20. செந்தமிழ் நாடு |
|
|
|
|
|
|
|
|
|
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் |
|
|
|
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் |
|
|
|
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு |
|
|
|
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் |
|
|
|
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல |
|
|
|
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் |
|
|
|
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் |
|
|
|
கண்டதோர் வையை பொருனை நதி - என |
|
|
|
மேவிய யாறு பலவோடத் - திரு |
|
|
|
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று |
|
|
|
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் |
|
|
|
எத்தனையுண்டு புவிமீதே - அவை |
|
|
|
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று |
|
|
|
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட |
|
|
|
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் |
|
|
|
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் |
|
|
|
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல |
|
|
|
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் |
|
|
|
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து |
|
|
|
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை |
|
|
|
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி |
|
|
|
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய |
|
|
|
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு |
|
|
|
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று |
|
|
|
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் |
|
|
|
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் |
|
|
|
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் |
|
|
|
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
சீன மிசிரம் யவனரகம் - இன்னும் |
|
|
|
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை |
|
|
|
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக |
|
|
|
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்) |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
21. தமிழ்த்தாய் |
|
|
|
|
|
|
|
|
|
தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் |
|
|
|
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) |
|
|
|
|
|
|
|
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை |
|
|
|
ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் |
|
|
|
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை |
|
|
|
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். |
|
|
|
|
|
|
|
முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை |
|
|
|
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், |
|
|
|
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் |
|
|
|
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். |
|
|
|
|
|
|
|
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல |
|
|
|
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் |
|
|
|
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல |
|
|
|
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். |
|
|
|
|
|
|
|
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் |
|
|
|
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் |
|
|
|
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் |
|
|
|
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். |
|
|
|
|
|
|
|
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன் |
|
|
|
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் |
|
|
|
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச் |
|
|
|
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். |
|
|
|
|
|
|
|
கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன் |
|
|
|
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் |
|
|
|
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் |
|
|
|
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! |
|
|
|
|
|
|
|
தந்தை அருள்வலி யாலும் - முன்பு |
|
|
|
சான்ற புலவர் தவ வலி யாலும் |
|
|
|
இந்தக் கணமட்டும் காலன் என்னை |
|
|
|
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான். |
|
|
|
|
|
|
|
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி |
|
|
|
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்! |
|
|
|
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு |
|
|
|
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! |
|
|
|
|
|
|
|
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச |
|
|
|
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும, |
|
|
|
மெத்த வளருது மேற்கே - அந்த |
|
|
|
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. |
|
|
|
|
|
|
|
சொல்லவும் கூடுவ தில்லை - அவை |
|
|
|
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை |
|
|
|
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த |
|
|
|
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் |
|
|
|
|
|
|
|
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ! |
|
|
|
இந்த வசையெனக் கெய்திடலாமோ? |
|
|
|
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் |
|
|
|
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! |
|
|
|
|
|
|
|
தந்தை அருள்வலி யாலும் - இன்று |
|
|
|
சார்ந்த புலவர் தவவலி யாலும் |
|
|
|
இந்தப் பெரும்பழி தீரும் புகழ் |
|
|
|
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
22. தமிழ் |
|
|
|
|
|
|
|
|
|
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் |
|
|
|
இனிதாவது எங்கும் காணோம், |
|
|
|
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் |
|
|
|
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, |
|
|
|
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு |
|
|
|
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! |
|
|
|
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் |
|
|
|
பரவும்வகை செய்தல் வேண்டும். |
|
|
|
|
|
|
|
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், |
|
|
|
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், |
|
|
|
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, |
|
|
|
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, |
|
|
|
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் |
|
|
|
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்! |
|
|
|
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் |
|
|
|
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! |
|
|
|
|
|
|
|
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் |
|
|
|
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும |
|
|
|
இறவாத புகழுடைய புதுநூல்கள் |
|
|
|
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் |
|
|
|
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் |
|
|
|
சொல்வதிலோர் மகிமை இல்லை |
|
|
|
திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர் |
|
|
|
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். |
|
|
|
|
|
|
|
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் |
|
|
|
வாக்கினிலே ஒளி யுண்டாகும் |
|
|
|
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் |
|
|
|
கவிப்பெருக்கும் மேவு மாயின் |
|
|
|
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் |
|
|
|
விழிபெற்றுப் பதவி கொள்வார், |
|
|
|
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் |
|
|
|
இங்கமரர் சிறப்புக் கண்டார். |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
23. தமிழ்மொழி வாழ்த்து |
|
|
|
|
|
|
|
|
|
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே |
|
|
|
|
|
|
|
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி |
|
|
|
வாழிய வாழிய வே! |
|
|
|
|
|
|
|
வான மளந்த தனைத்தும் அளந்திடும் |
|
|
|
வண்மொழி வாழிய வே! |
|
|
|
|
|
|
|
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி |
|
|
|
இசைகொண்டு வாழிய வே! |
|
|
|
|
|
|
|
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! |
|
|
|
என்றென்றும் வாழிய வே! |
|
|
|
|
|
|
|
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் |
|
|
|
துலங்குக வையக மே! |
|
|
|
|
|
|
|
தொல்லை வினை தரு தொல்லை யகன்று |
|
|
|
சுடர்க தமிழ்நா டே! |
|
|
|
|
|
|
|
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! |
|
|
|
வாழ்க தமிழ்மொழி யே! |
|
|
|
|
|
|
|
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து |
|
|
|
வளர்மொழி வாழிய வே! |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
24. தமிழச் சாதி. |
|
|
|
|
|
|
|
|
|
..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், |
|
|
|
நாட்பட நாட்பட நாற்றமு சேறும் |
|
|
|
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் |
|
|
|
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? |
|
|
|
விதியே விதியே தமிழச் சாதியை |
|
|
|
|
|
|
|
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? |
|
|
|
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் |
|
|
|
தன்மையும் தனது தருமமும் மாயாது |
|
|
|
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் |
|
|
|
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ? |
|
|
|
|
|
|
|
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று |
|
|
|
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச் |
|
|
|
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? |
|
|
|
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? |
|
|
|
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? |
|
|
|
|
|
|
|
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? |
|
|
|
விதியே தமிழச் சாதியை எவ்வகை |
|
|
|
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய். |
|
|
|
ஏனெனில் |
|
|
|
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் |
|
|
|
|
|
|
|
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் |
|
|
|
ஆழமும் விரிவும் அழகும் கருதியும் |
|
|
|
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக் |
|
|
|
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் |
|
|
|
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச் |
|
|
|
|
|
|
|
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று |
|
|
|
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம் |
|
|
|
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான் |
|
|
|
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக் |
|
|
|
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். |
|
|
|
|
|
|
|
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் |
|
|
|
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் |
|
|
|
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள |
|
|
|
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய |
|
|
|
தமிழச் சாதி தடியுதை யுண்டும் |
|
|
|
|
|
|
|
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் |
|
|
|
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் |
|
|
|
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது |
|
|
|
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் |
|
|
|
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் |
|
|
|
|
|
|
|
நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் |
|
|
|
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன், |
|
|
|
தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார், |
|
|
|
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும், |
|
|
|
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார், |
|
|
|
|
|
|
|
என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் |
|
|
|
எனினும் |
|
|
|
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு |
|
|
|
கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் |
|
|
|
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய். |
|
|
|
|
|
|
|
ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து |
|
|
|
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல், |
|
|
|
தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து |
|
|
|
ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி |
|
|
|
சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம், |
|
|
|
|
|
|
|
சாத்திர மின்றேற் சாதியில்லை, |
|
|
|
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள் |
|
|
|
பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார், |
|
|
|
நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில் |
|
|
|
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் - |
|
|
|
|
|
|
|
மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் - |
|
|
|
இவர்தம் |
|
|
|
உடலும் உள்ளமும் தன்வச மிலராய் |
|
|
|
நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும் |
|
|
|
பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு |
|
|
|
|
|
|
|
செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும் |
|
|
|
உய்வகைக் குரிய வழிசில உளவாம். |
|
|
|
மற்றிவர் |
|
|
|
சாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய |
|
|
|
கொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) -- |
|
|
|
|
|
|
|
ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின் |
|
|
|
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை |
|
|
|
இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே |
|
|
|
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார் |
|
|
|
தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன், |
|
|
|
|
|
|
|
ஒரு சார் |
|
|
|
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் |
|
|
|
செய்கையும் நடையும் தீனியும் உடையும் |
|
|
|
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை |
|
|
|
யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை |
|
|
|
|
|
|
|
முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், |
|
|
|
தமிழச் சாதி தரணிமீ திராது |
|
|
|
பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும் |
|
|
|
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை |
|
|
|
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ |
|
|
|
|
|
|
|
ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர், |
|
|
|
உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர் |
|
|
|
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை |
|
|
|
பல அவை நீங்கும் பான்மையை வல்ல |
|
|
|
என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை |
|
|
|
|
|
|
|
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் |
|
|
|
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர், |
|
|
|
என்பதே யாகும்; இஃதொரு சார்பாம் |
|
|
|
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு |
|
|
|
நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்) |
|
|
|
|
|
|
|
முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு |
|
|
|
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் |
|
|
|
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ? |
|
|
|
பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத் |
|
|
|
தவரோ? புராண மாக்கிய காலமோ? |
|
|
|
சைவரோ? வைணவ சமயத் தாரோ? |
|
|
|
இந்திரன் தானே தனிமுதற் கடவுள் |
|
|
|
என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக் |
|
|
|
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் |
|
|
|
எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்? |
|
|
|
நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய |
|
|
|
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் |
|
|
|
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே |
|
|
|
தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு |
|
|
|
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் |
|
|
|
கலிதடை புரிவன் கலியின் வலியை |
|
|
|
வெல்லலா காதென விளிம்புகின் றனரால், |
|
|
|
நாசங் கூறும் எநாட்டு வயித்தியர் |
|
|
|
இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின் |
|
|
|
இடையே நம்மவர் எப்படி உய்வர்? |
|
|
|
விதியே! விதியே! தமிழச் சாதியை |
|
|
|
என்செயக் கருவி யிருக்கின் றாயடா? |
|
|
|
|
|
|
|
விதி |
|
|
|
|
|
|
|
மேலே நீ கூறிய விநாசப் புலவரை |
|
|
|
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் |
|
|
|
எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் |
|
|
|
மற்றவை தழுவி வாழ்வீ ராயின், |
|
|
|
அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின் |
|
|
|
அறிவும் பெருமையும் - ... ...- |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
25. வாழிய செந்தமிழ்! |
|
|
|
|
|
|
|
(ஆசிரியப்பா) |
|
|
|
|
|
|
|
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! |
|
|
|
வாழிய பாரத மணித்திரு நாடு! |
|
|
|
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! |
|
|
|
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக |
|
|
|
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! |
|
|
|
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் |
|
|
|
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! |
|
|
|
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! |
|
|
|
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
சுதந்தங்ரம் |
|
|
|
|
|
|
|
|
|
26. சுதந்திரப் பெருமை |
|
|
|
|
|
|
|
( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் |
|
|
|
திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு) |
|
|
|
|
|
|
|
வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் |
|
|
|
வேறொன்று கொள்வாரோ? - என்றும் |
|
|
|
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் |
|
|
|
அறிவைச் செலுத்துவா ரோ? (வீர) |
|
|
|
|
|
|
|
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும் |
|
|
|
பொய்யென்று கண்டாரேல் - அவர் |
|
|
|
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு |
|
|
|
இச்சையுற் றிருப்பா ரோ? (வீர) |
|
|
|
|
|
|
|
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் |
|
|
|
பெற்றியை அறிந்தாரேல் - மானம் |
|
|
|
துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது |
|
|
|
சுகமென்று மதிப்பா ரோ? (வீர) |
|
|
|
|
|
|
|
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் |
|
|
|
வாய்மையை உணர்ந்தாரேல் - அவர் |
|
|
|
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற |
|
|
|
உடன்படு மாறுளதோ? (வீர) |
|
|
|
|
|
|
|
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் |
|
|
|
மின்மினி கொள்வாரோ? |
|
|
|
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் |
|
|
|
கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர) |
|
|
|
|
|
|
|
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் |
|
|
|
மாண்பினை யிழப்பாரோ? |
|
|
|
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் |
|
|
|
கைகொட்டிச் சிரியா ரோ? (வீர) |
|
|
|
|
|
|
|
வந்தே மாதரம் என்று வணங்கியபின் |
|
|
|
மாயத்தை வணங்கு வாரோ? |
|
|
|
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் |
|
|
|
என்பதை மறப்பாரோ? (வீர) |
|
|
|
|
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
27. சுதந்திரப் பயிர் |
|
|
|
|
|
|
|
|
|
தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் |
|
|
|
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? |
|
|
|
|
|
|
|
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த |
|
|
|
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? |
|
|
|
|
|
|
|
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் |
|
|
|
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? |
|
|
|
|
|
|
|
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ? |
|
|
|
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? |
|
|
|
|
|
|
|
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் |
|
|
|
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? |
|
|
|
|
|
|
|
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு |
|
|
|
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? |
|
|
|
|
|
|
|
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து |
|
|
|
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? |
|
|
|
|
|
|
|
எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து |
|
|
|
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? |
|
|
|
|
|
|
|
இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ? |
|
|
|
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? |
|
|
|
|
|
|
|
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா |
|
|
|
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? |
|
|
|
|
|
|
|
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் |
|
|
|
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? |
|
|
|
|
|
|
|
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? |
|
|
|
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? |
|
|
|
|
|
|
|
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், |
|
|
|
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? |
|
|
|
|
|
|
|
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் |
|
|
|
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? |
|
|
|
|
|
|
|
நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் |
|
|
|
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே. |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
28. சுதந்திர தாகம் |
|
|
|
|
|
|
|
|
|
ராகம் - கமாஸ் தாளம் - ஆதி |
|
|
|
|
|
|
|
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? |
|
|
|
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? |
|
|
|
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? |
|
|
|
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? |
|
|
|
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! |
|
|
|
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! |
|
|
|
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? |
|
|
|
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ? |
|
|
|
|
|
|
|
பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? |
|
|
|
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? |
|
|
|
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ? |
|
|
|
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? |
|
|
|
அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ? |
|
|
|
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ? |
|
|
|
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ! |
|
|
|
வீர சிகாமணி! ஆரியர் கோனே! |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
29. சுதந்திர தேவியின் துதி |
|
|
|
|
|
|
|
|
|
இதந்தரு மனையின் நீங்கி |
|
|
|
இடர்மிகு சிறப்பட் டாலும் |
|
|
|
பதந்திரு இரண்டும் மாறிப் |
|
|
|
பழிமிகுந் திழிவுற் றாலும் |
|
|
|
விதந்தரு கோடி இன்னல் |
|
|
|
விளைந்தெனை அழித்திட் டாலும் |
|
|
|
சுதந்திர தேவி! நின்னைத் |
|
|
|
தொழுதிடல் மறக்கி லேனே. |
|
|
|
|
|
|
|
நின்னருள் பெற்றி லாதார் |
|
|
|
நிகரிலாச் செல்வ ரேனும், |
|
|
|
பன்னருங் கல்வி கேள்வி, |
|
|
|
படைத்துயர்ந் திட்டா ரேனும், |
|
|
|
பின்னரும் எண்ணி லாத |
|
|
|
பெருமையிற் சிறந்தா ரேனும், |
|
|
|
அன்னவர் வாழ்க்கை பாழாம், |
|
|
|
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். |
|
|
|
|
|
|
|
தேவி! நின்னொளி பெறாத |
|
|
|
தேயமோர் தேய மாமோ? |
|
|
|
ஆவியங் குண்டோ ? செம்மை |
|
|
|
அறிவுண்டோ ? ஆக்க முண்டோ ? |
|
|
|
காவிய நூல்கள் ஞானக் |
|
|
|
கலைகள் வேதங்க ளுண்டோ ? |
|
|
|
பாவிய ரன்றோ நிந்தன் |
|
|
|
பாலனம் படைத்தி லாதார்? |
|
|
|
|
|
|
|
ஒழிவறு நோயிற் சாவார், |
|
|
|
ஊக்கமொன் றறிய மாட்டார், |
|
|
|
கழிவுறு மாக்க ளெல்லாம் |
|
|
|
இகழ்ந்திடக் கடையில் நிற்பார் |
|
|
|
இழிவறு வாழ்க்கை தேரார், |
|
|
|
கனவிலும் இன்பங் காணார், |
|
|
|
அழிவுறு பெருமை நல்கும் |
|
|
|
அன்னை! நின் அருள் பெறாதார். |
|
|
|
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
|
|
தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து |
|
|
|
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர் |
|
|
|
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் |
|
|
|
தாவில் வானுல கென்னத் தகுவதே. |
|
|
|
|
|
|
|
அம்மை உன்றன் அருமை யறிகிலார் |
|
|
|
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார், |
|
|
|
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை |
|
|
|
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. |
|
|
|
|
|
|
|
மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால் |
|
|
|
போற்றிநினைப் புதுநிலை யெய்தினர், |
|
|
|
கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின் |
|
|
|
பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர். |
|
|
|
|
|
|
|
அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன் |
|
|
|
என்ன கூறிஇசைத்திட வல்லனே |
|
|
|
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் |
|
|
|
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். |
|
|
|
|
|
|
|
பேர றத்தினைப் பேணுதல் வேலியே! |
|
|
|
சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய |
|
|
|
கார றுக்கக் கதித்திடு சோதியே! |
|
|
|
வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன். |
|
|
|
|
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
30. விடுதலை |
|
|
|
|
|
|
|
|
|
ராகம் - பிலகரிவிடுதலை |
|
|
|
|
|
|
|
விடுதலை! விடுதலை! விடுதலை! |
|
|
|
|
|
|
|
பறைய ருக்கும் இங்கு தீயர் |
|
|
|
புலைய ருக்கும் விடுதலை |
|
|
|
பரவ ரோடு குறவருக்கும் |
|
|
|
மறவ ருக்கும் விடுதலை! |
|
|
|
திறமை கொண்டதீமை யற்ற |
|
|
|
தொழில் புரங்ந்து யாவரும் |
|
|
|
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி |
|
|
|
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) |
|
|
|
|
|
|
|
ஏழை யென்றும் அடிமையென்றும் |
|
|
|
எவனும் இல்லை ஜாதியில், |
|
|
|
இழிவு கொண்ட மனித ரென்பது |
|
|
|
இந்தி யாவில் இல்லையே |
|
|
|
வாழி கல்வி செல்வம் எய்தி |
|
|
|
மனம கிழ்ந்து கூடியே |
|
|
|
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச |
|
|
|
மானமாக வாழ்வமே! (விடுதலை) |
|
|
|
|
|
|
|
மாதர் தம்மை இழிவு செய்யும் |
|
|
|
மடமை யைக்கொ ளுத்துவோம் |
|
|
|
வைய வாழ்வு தன்னில் எந்த |
|
|
|
வகையி னும்ந மக்குள்ளே |
|
|
|
தாதர் என்ற நிலைமை மாறி |
|
|
|
ஆண்க ளோடு பெண்களும் |
|
|
|
சரிநி கர்ச மான மாக |
|
|
|
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
31. சுதந்திரப் பள்ளு |
|
|
|
|
|
(பள்ளர் களியாட்டம்) |
|
|
|
|
|
|
|
ராகம் - வராளி தாளம் - ஆதி |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே |
|
|
|
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு) |
|
|
|
|
|
|
|
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் |
|
|
|
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை |
|
|
|
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை |
|
|
|
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு) |
|
|
|
|
|
|
|
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் |
|
|
|
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு |
|
|
|
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் |
|
|
|
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு) |
|
|
|
|
|
|
|
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும் |
|
|
|
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி |
|
|
|
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட |
|
|
|
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) |
|
|
|
|
|
|
|
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் |
|
|
|
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். |
|
|
|
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும் |
|
|
|
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு) |
|
|
|
|
|
|
|
நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது |
|
|
|
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப் |
|
|
|
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி |
|
|
|
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
தேசிய இயக்கப் பாடல்கள் |
|
|
|
|
|
32. சத்ரபதி சிவாஜி |
|
|
|
|
|
|
|
|
|
(தன் சைனியத்திற்குக் கூறியது) |
|
|
|
|
|
|
|
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்! |
|
|
|
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா! |
|
|
|
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! |
|
|
|
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்! |
|
|
|
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! |
|
|
|
|
|
|
|
அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள் |
|
|
|
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! |
|
|
|
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்! |
|
|
|
கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர். |
|
|
|
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் |
|
|
|
|
|
|
|
செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்! |
|
|
|
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய! |
|
|
|
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக! |
|
|
|
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா |
|
|
|
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு! |
|
|
|
|
|
|
|
வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் |
|
|
|
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? |
|
|
|
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் |
|
|
|
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு! |
|
|
|
தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும் |
|
|
|
|
|
|
|
நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு! |
|
|
|
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை |
|
|
|
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! |
|
|
|
பாரதப் பூமி பழம்பெரும் பூமி; |
|
|
|
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! |
|
|
|
|
|
|
|
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; |
|
|
|
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! |
|
|
|
வானக முட்டும் இமயமால் வரையும் |
|
|
|
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் |
|
|
|
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் |
|
|
|
|
|
|
|
தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் |
|
|
|
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் |
|
|
|
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! |
|
|
|
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க |
|
|
|
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு! |
|
|
|
|
|
|
|
தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் |
|
|
|
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு! |
|
|
|
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி, |
|
|
|
வானவர் விழையும் மாட்சியார் தேயம்! |
|
|
|
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? |
|
|
|
|
|
|
|
நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்! |
|
|
|
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர் |
|
|
|
பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும் |
|
|
|
ஞானமும் அறியா நவைபுரி பகைவர் |
|
|
|
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் |
|
|
|
|
|
|
|
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்! |
|
|
|
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் |
|
|
|
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் |
|
|
|
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு |
|
|
|
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! |
|
|
|
|
|
|
|
சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார் |
|
|
|
கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார் |
|
|
|
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர் |
|
|
|
கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர், |
|
|
|
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர் |
|
|
|
|
|
|
|
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர், |
|
|
|
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், |
|
|
|
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர், |
|
|
|
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் |
|
|
|
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர். |
|
|
|
|
|
|
|
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை |
|
|
|
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்? |
|
|
|
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல |
|
|
|
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம். |
|
|
|
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை |
|
|
|
|
|
|
|
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? |
|
|
|
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய் |
|
|
|
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? |
|
|
|
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி |
|
|
|
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? |
|
|
|
|
|
|
|
பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில் |
|
|
|
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன், |
|
|
|
புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு |
|
|
|
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன். |
|
|
|
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் |
|
|
|
|
|
|
|
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். |
|
|
|
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர் |
|
|
|
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக! |
|
|
|
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் |
|
|
|
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்! |
|
|
|
|
|
|
|
சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப |
|
|
|
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க, |
|
|
|
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் |
|
|
|
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக! |
|
|
|
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் |
|
|
|
|
|
|
|
பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! |
|
|
|
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு |
|
|
|
ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க! |
|
|
|
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் |
|
|
|
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன். |
|
|
|
|
|
|
|
ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்! |
|
|
|
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்! |
|
|
|
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்! |
|
|
|
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்! |
|
|
|
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்! |
|
|
|
|
|
|
|
மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! |
|
|
|
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! |
|
|
|
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்! |
|
|
|
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்! |
|
|
|
சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்! |
|
|
|
|
|
|
|
தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்! |
|
|
|
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்! |
|
|
|
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்! |
|
|
|
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்! |
|
|
|
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! |
|
|
|
|
|
|
|
நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் |
|
|
|
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? |
|
|
|
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின் |
|
|
|
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும் |
|
|
|
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் |
|
|
|
|
|
|
|
வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும் |
|
|
|
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும் |
|
|
|
நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்! |
|
|
|
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்! |
|
|
|
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் |
|
|
|
|
|
|
|
செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்! |
|
|
|
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! |
|
|
|
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! |
|
|
|
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், |
|
|
|
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் |
|
|
|
|
|
|
|
உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் |
|
|
|
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! |
|
|
|
நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும் |
|
|
|
(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ |
|
|
|
ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும் |
|
|
|
|
|
|
|
வானுறு தேவர் மணியுல கடைவோம், |
|
|
|
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத் |
|
|
|
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்! |
|
|
|
போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்! |
|
|
|
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ? |
|
|
|
|
|
|
|
ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி |
|
|
|
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே |
|
|
|
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து |
|
|
|
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம் |
|
|
|
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை! |
|
|
|
|
|
|
|
தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை! |
|
|
|
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று |
|
|
|
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட |
|
|
|
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் |
|
|
|
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று |
|
|
|
|
|
|
|
இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த் |
|
|
|
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர் |
|
|
|
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்? |
|
|
|
வையகத் தரசும் வானக ஆட்சியும் |
|
|
|
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன். |
|
|
|
|
|
|
|
மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f |
|
|
|
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது. |
|
|
|
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது, |
|
|
|
ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும், |
|
|
|
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன் |
|
|
|
|
|
|
|
சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன், |
|
|
|
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன், |
|
|
|
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி? |
|
|
|
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் |
|
|
|
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து |
|
|
|
|
|
|
|
சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த் |
|
|
|
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான் |
|
|
|
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி |
|
|
|
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால் |
|
|
|
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் |
|
|
|
|
|
|
|
செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய், |
|
|
|
உண்மையை அறியாய் உறவையே கருதிப் |
|
|
|
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய் |
|
|
|
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், |
|
|
|
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர் |
|
|
|
|
|
|
|
தம்மொடு பிறந்த சகோதரராயினும் |
|
|
|
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம். |
|
|
|
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்! |
|
|
|
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை |
|
|
|
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும் |
|
|
|
|
|
|
|
பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? |
|
|
|
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! |
|
|
|
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று |
|
|
|
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக் |
|
|
|
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் |
|
|
|
|
|
|
|
அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் |
|
|
|
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச் |
|
|
|
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் |
|
|
|
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன். |
|
|
|
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் |
|
|
|
|
|
|
|
இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும் |
|
|
|
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், |
|
|
|
தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர், |
|
|
|
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர், |
|
|
|
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் |
|
|
|
|
|
|
|
பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர் |
|
|
|
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார். |
|
|
|
|
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
33. கோக்கலே சாமியார் பாடல் |
|
|
|
|
|
|
|
|
|
(இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம் |
|
என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது) |
|
|
|
|
|
|
|
களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம் |
|
|
|
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் |
|
|
|
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ? |
|
|
|
வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? |
|
|
|
வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ? |
|
|
|
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ? |
|
|
|
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால் |
|
|
|
தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ? |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
34. தொண்டு செய்யும் அடிமை |
|
|
|
|
|
|
|
|
|
(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு |
|
|
|
ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது) |
|
|
|
|
|
|
|
நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்கு |
|
|
|
மார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டு |
|
|
|
|
|
|
|
தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு |
|
|
|
சுதந்திர நினைவோடா? |
|
|
|
பண்டு கண்ட துண்டோ ? - அதற்கு |
|
|
|
பாத்திர மாவாயோ? (தொண்டு) |
|
|
|
|
|
|
|
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள் |
|
|
|
சமயச் சண்டை போச்சோ? |
|
|
|
நீதி சொல்ல வந்தாய்! - கண்முன் |
|
|
|
நிற்கொ ணாது போடா! (தொண்டு) |
|
|
|
|
|
|
|
அச்சம் நீங்கி னாயோ? - அடிமை |
|
|
|
ஆண்மை தாங்கி னாயோ? |
|
|
|
பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை |
|
|
|
பேணு தலொழித் தாயோ? (தொண்டு) |
|
|
|
|
|
|
|
கப்ப லேறு வாயோ? - அடிமை |
|
|
|
கடலைத் தாண்டு வாயோ? |
|
|
|
குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை |
|
|
|
கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு) |
|
|
|
|
|
|
|
ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை |
|
|
|
உடல்பில் வலிமை யுண்டோ ? |
|
|
|
வெற்று ரைபே சாதே! அடிமை! |
|
|
|
வீரியம் அறி வாயோ? (தொண்டு) |
|
|
|
|
|
|
|
சேர்ந்து வாழு வீரோ? - உங்கள் |
|
|
|
சிறுமைக் குணங்கள் போச்சோ? |
|
|
|
சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள் |
|
|
|
சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு) |
|
|
|
|
|
|
|
வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி |
|
|
|
வெருவலை ஒழித் தாயோ? |
|
|
|
உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம் |
|
|
|
உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு) |
|
|
|
|
|
|
|
நாடு காப்ப தற்கே - உனக்கு |
|
|
|
ஞானம் சிறது முண்டோ ? |
|
|
|
வீடு காக்கப் போடா! - அடிமை |
|
|
|
வேலை செய்யப் போடா! (தொண்டு) |
|
|
|
|
|
|
|
சேனை நடத்து வாயோ? - தொழும்புகள் |
|
|
|
செய்திட விரும்பு வாயோ? |
|
|
|
ஈன மான தொழிலே - உங்களுக்கு |
|
|
|
இசைவ தாகும் போடா! (தொண்டு) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
35. நம்ம ஜாதிக் கடுக்குமோ |
|
|
|
|
|
|
|
|
|
(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் |
|
|
|
சொல்லுதல்) |
|
|
|
|
|
|
|
"ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? |
|
|
|
நியாயந் தானோ? நீர் சொல்லும்?" என்ற வர்ணமெட்டு |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? |
|
|
|
செய்வது சரியோ? சொல்லும் |
|
|
|
|
|
|
|
கண்ணிகள் |
|
|
|
|
|
|
|
முன்னறி யாப் புது வழக்கம் நீர் |
|
|
|
மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது |
|
|
|
எந்நகரிலு மிது முழக்கம் - மிக |
|
|
|
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே) |
|
|
|
|
|
|
|
சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள் |
|
|
|
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது |
|
|
|
மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள் |
|
|
|
மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே) |
|
|
|
|
|
|
|
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி |
|
|
|
வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு |
|
|
|
பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர் |
|
|
|
பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே) |
|
|
|
|
|
|
|
------- |
|
|
|
|
|
|
|
|
|
36. நாம் என்ன செய்வோம். |
|
|
|
|
|
|
|
|
|
("நாம் என்ன செய்வோம்! புலையரே! - இந்தப் |
|
|
|
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோ ம்" என்றவர்ணமெட்டு) |
|
|
|
|
|
|
|
|
|
ராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம் |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப் |
|
|
|
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோ ம். (நாம்) |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு |
|
|
|
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு |
|
|
|
இபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு |
|
|
|
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்) |
|
|
|
|
|
|
|
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் |
|
|
|
செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார், |
|
|
|
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார், |
|
|
|
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்) |
|
|
|
|
|
|
|
பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை |
|
|
|
பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை |
|
|
|
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை |
|
|
|
சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்) |
|
|
|
|
|
|
|
சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார் |
|
|
|
சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் |
|
|
|
தாமெத் தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார் |
|
|
|
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்) |
|
|
|
|
|
|
|
------- |
|
|
|
|
|
|
|
|
|
37. பாரத தேவியின் அடிமை |
|
|
|
|
|
|
|
|
|
(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன் அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதியது) |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான் |
|
|
|
அன்னியர் தமக்கடிமை யல்லவே. |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
மன்னிய புகழ் பாரத தேவி |
|
|
|
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்) |
|
|
|
|
|
|
|
இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம் |
|
|
|
திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்) |
|
|
|
|
|
|
|
வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம் |
|
|
|
ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்) |
|
|
|
|
|
|
|
காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள் |
|
|
|
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்) |
|
|
|
|
|
|
|
காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம் |
|
|
|
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்) |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று |
|
|
|
|
|
|
|
|
|
ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி |
|
|
|
|
|
|
|
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை |
|
|
|
நாட்டினாய், கனல் மூட்டினாய், |
|
|
|
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே |
|
|
|
மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி) |
|
|
|
|
|
|
|
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று |
|
|
|
கோஷித்தாய், - எமை தூஷித்தாய், |
|
|
|
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல் |
|
|
|
ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி) |
|
|
|
|
|
|
|
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள் |
|
|
|
கூறினாய், - சட்டம் மீறினாய், |
|
|
|
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே |
|
|
|
ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி) |
|
|
|
|
|
|
|
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் |
|
|
|
ஆக்கினாய், - புன்மை போக்கினாய், |
|
|
|
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை |
|
|
|
மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி) |
|
|
|
|
|
|
|
தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத் |
|
|
|
தூண்டினாய், - புகழ் வேண்டினாய், |
|
|
|
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் |
|
|
|
காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி) |
|
|
|
|
|
|
|
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை |
|
|
|
ஏவினாய், - விதை தூவினாய், |
|
|
|
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல் |
|
|
|
செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி) |
|
|
|
|
|
|
|
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச் |
|
|
|
சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன் |
|
|
|
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே |
|
|
|
தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி) |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி |
|
|
|
|
|
|
|
|
|
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே |
|
|
|
துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம் |
|
|
|
எந்த நாட்டினும் இந்த அநீதிகள் |
|
|
|
ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ? |
|
|
|
|
|
|
|
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை |
|
|
|
வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம் |
|
|
|
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல் |
|
|
|
ஈனமோ? - அவ மானமோ? |
|
|
|
|
|
|
|
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு |
|
|
|
போகவோ? - நாங்கள் சாகவோ? |
|
|
|
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள் |
|
|
|
அல்லமோ? - உயிர் வெல்லமோ? |
|
|
|
|
|
|
|
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் |
|
|
|
நாய்களோ? - பன்றிச் சேய்களோ? |
|
|
|
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத் |
|
|
|
நீதமோ? - பிடி வாதமோ? |
|
|
|
|
|
|
|
பார தத்திடை அன்பு செலுத்துதல் |
|
|
|
பாபமோ? - மனஸ் தாபமோ? |
|
|
|
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது |
|
|
|
குற்றமோ? - இதில் செற்றமோ? |
|
|
|
|
|
|
|
ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது |
|
|
|
ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம் |
|
|
|
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம் |
|
|
|
மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம். |
|
|
|
|
|
|
|
சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம் |
|
|
|
சாயுமோ? - ஜீவன் ஓயுமோ? |
|
|
|
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி |
|
|
|
ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ? |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
40. நடிப்பு சுதேசிகள் |
|
|
|
|
|
(பழித்தறிவுறுத்தல்) |
|
|
|
|
|
|
|
கிளிக்கண்ணிகள் |
|
|
|
|
|
|
|
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, |
|
|
|
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! |
|
|
|
வாய்ச் சொல்லில் வீரரடி. |
|
|
|
|
|
|
|
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, |
|
|
|
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! |
|
|
|
நாளில் மறப்பா ரடீ |
|
|
|
|
|
|
|
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் |
|
|
|
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! |
|
|
|
அகலிகளுக் கின்ப முண்டோ? |
|
|
|
|
|
|
|
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற |
|
|
|
பெண்களின் கூட்டமடீ! - கிளியே! |
|
|
|
பேசிப் பயனென் னடீ |
|
|
|
|
|
|
|
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், |
|
|
|
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! |
|
|
|
மாங்கனி வீழ்வ துண்டோ! |
|
|
|
|
|
|
|
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் |
|
|
|
செப்பித் திரிவா ரடீ! - கிளியே! |
|
|
|
செய்வ தறியா ரடீ! |
|
|
|
|
|
|
|
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் |
|
|
|
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே! |
|
|
|
நம்புத லற்றா ரடீ! |
|
|
|
|
|
|
|
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் |
|
|
|
பேதைகள் போலு யிரைக் - கிளியே |
|
|
|
பேணி யிருந்தா ரடீ! |
|
|
|
|
|
|
|
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய |
|
|
|
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே |
|
|
|
அஞ்சிக் கிடந்தா ரடீ! |
|
|
|
|
|
|
|
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் |
|
|
|
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே |
|
|
|
ஊமைச் சனங்க ளடீ! |
|
|
|
|
|
|
|
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா |
|
|
|
மாக்களுக் கோர் கணமும் - கிளியே |
|
|
|
வாழத் தகுதி யுண்டோ? |
|
|
|
|
|
|
|
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் |
|
|
|
ஈனர்க் குலகந் தனில் - கிளியே! |
|
|
|
இருக்க நிலைமை யுண்டோ? |
|
|
|
|
|
|
|
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் |
|
|
|
வந்தே மாதர மென்பார்! - கிளியே! |
|
|
|
மனத்தி லதனைக் கொள்ளார் |
|
|
|
|
|
|
|
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் |
|
|
|
பழமை இருந்த நிலை! - கிளியே! |
|
|
|
பாமர ரேதறி வார்! |
|
|
|
|
|
|
|
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் |
|
|
|
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! |
|
|
|
சிறுமை யடைவா ரடீ! |
|
|
|
|
|
|
|
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் |
|
|
|
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! |
|
|
|
செம்மை மறந்தா ரடீ! |
|
|
|
|
|
|
|
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் |
|
|
|
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! |
|
|
|
சோம்பிக் கிடப்பா ரடீ! |
|
|
|
|
|
|
|
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் |
|
|
|
வாயைத் திறந்து சும்மா - கிளியே! |
|
|
|
வந்தே மாதர மென்பார்! |
|
|
|
|
|
|
|
------- |
|
|
|
|
|
|
|
|
|
தேசீயத் தலைவர்கள் |
|
|
|
|
|
41. மகாத்மா காந்தி பஞ்சகம் |
|
|
|
|
|
|
|
|
|
வாழ்க நீ எம்மான் |
|
|
|
|
|
|
|
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் |
|
|
|
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் |
|
|
|
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை |
|
|
|
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! |
|
|
|
|
|
|
|
அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம் |
|
|
|
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப் |
|
|
|
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! |
|
|
|
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! |
|
|
|
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
|
|
கொடியவெந் நாக பாசத்தை மாற்ற |
|
|
|
மூலிகை கொணர்ந்தவன் என்கோ? |
|
|
|
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ? |
|
|
|
என்சொலிப் புகழ்வதிங் குனையே? |
|
|
|
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன |
|
|
|
வெம்பிணி யகற்றிடும் வண்ணம் |
|
|
|
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம் |
|
|
|
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்! |
|
|
|
|
|
|
|
தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும் |
|
|
|
பிறனுயிர் தன்னையும் கணித்தல் |
|
|
|
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் |
|
|
|
கடவுளின் மக்களென் றுணர்தல் |
|
|
|
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு |
|
|
|
இழிபடு போர், கொலை, தண்டம் |
|
|
|
பின்னியே கிடக்கும் அரசிய லதனில் |
|
|
|
பிணைத்திடத் துணிந்தனை பெருமான், |
|
|
|
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய் |
|
|
|
அதனி லுந் திறன்பெரி துடைத்தாம் |
|
|
|
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள் |
|
|
|
அறவழி யென்று நீ அறிந்தாய் |
|
|
|
|
|
|
|
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை! |
|
|
|
நெறியினால் இந்தியா விற்கு |
|
|
|
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து |
|
|
|
வையகம் வாழ்கநல் லறத்தே! |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
42. குரு கோவிந்தர் |
|
|
|
|
|
|
|
|
|
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு |
|
|
|
விக்ரம நாண்டு வீரருக் கமுதாம் |
|
|
|
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன் |
|
|
|
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக் |
|
|
|
குலத்தினை வகுத்த குருமணி யாவான். |
|
|
|
|
|
|
|
ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், |
|
|
|
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும் |
|
|
|
வீரர் நாயகன், மேதினி காத்த |
|
|
|
குருகோ விந்த சிங்கமாங் கோமகன், |
|
|
|
அவந்திருக் கட்டளை அறிந்துபல் திசயினும் |
|
|
|
|
|
|
|
பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும் |
|
|
|
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால், |
|
|
|
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம் |
|
|
|
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான் |
|
|
|
கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும், |
|
|
|
|
|
|
|
புன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும், |
|
|
|
பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும், |
|
|
|
நல்வர வாகுக நம்மனோர் வரவு என்று |
|
|
|
ஆசிகள் கூரி ஆர்ப்பன போன்ற |
|
|
|
புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் |
|
|
|
|
|
|
|
திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள் |
|
|
|
யாதவன் கூறும்? என்னெமக் கருளும் ? |
|
|
|
எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும் |
|
|
|
இன்புடைத் தாக்கும்? எனப்பல கருதி |
|
|
|
மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே |
|
|
|
|
|
|
|
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் |
|
|
|
தேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து |
|
|
|
ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும் |
|
|
|
ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம். |
|
|
|
விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் |
|
|
|
|
|
|
|
திருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப |
|
|
|
தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது |
|
|
|
கூறநா நடுங்குமோல் கொற்றக் கூர்வாள். |
|
|
|
எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி, |
|
|
|
வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச் |
|
|
|
|
|
|
|
சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு |
|
|
|
மோனமுற் றடங்கி முடிவணங் கினரால் |
|
|
|
வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன் |
|
|
|
திருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச் |
|
|
|
சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலை |
|
|
|
|
|
|
|
குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி |
|
|
|
"வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப |
|
|
|
விரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள் |
|
|
|
தருமத் தெய்வந் தான்பல குருதிப் |
|
|
|
பலவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை |
|
|
|
|
|
|
|
நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம் |
|
|
|
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப |
|
|
|
யார்வரு கின்றீர்!" என்னலும் சீடர்கள் |
|
|
|
நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர் |
|
|
|
கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது |
|
|
|
|
|
|
|
ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு |
|
|
|
வீரன்முன் வந்து விளம்புவான் இ•தே. |
|
|
|
"குருமணி! நின்னொரு கொற்றவள் கிழிப்ப |
|
|
|
விடாயறாத் தருமம் மேம்படு தெய்வத்து |
|
|
|
இரையென மாயவன் ஏற்றருள் புரிகவே!" |
|
|
|
|
|
|
|
புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம் |
|
|
|
கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல, |
|
|
|
மற்றதன் நின்றொர் மடுவின்வந் தாலெனக் |
|
|
|
குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டஜர் |
|
|
|
பார்மின்! சற்குரு பளீரெனக் கோயிலிஜ் |
|
|
|
|
|
|
|
வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம் |
|
|
|
முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய் |
|
|
|
மின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன். |
|
|
|
மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி - தூக்கிப் |
|
|
|
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன், |
|
|
|
|
|
|
|
"மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச் |
|
|
|
சித்தம்நான் கொண்டேன்; தேவிதான் பின்னுமோர் |
|
|
|
பலிகேட் கின்றாள்! பக்தர்காள்! |
|
|
|
நும்முளேஇன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇக் |
|
|
|
காளியை தாகங் கழித்திட துணிவோன் |
|
|
|
|
|
|
|
எவனுளன்!" எனலும் இன்னுமோர் துணிவுடை |
|
|
|
வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன். |
|
|
|
இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி |
|
|
|
இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன் |
|
|
|
குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். |
|
|
|
|
|
|
|
இங்ஙன மீண்டுமே இயற்றிபப |
|
|
|
லியோ ரைந்து பரமனங் களித்தனன். |
|
|
|
அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட |
|
|
|
மட்டிலே மானிடர் மாண்பெற லாகார் |
|
|
|
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி |
|
|
|
|
|
|
|
வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் |
|
|
|
அவரே மெய்மையோர் முத்தரும் அவரே |
|
|
|
தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே |
|
|
|
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே |
|
|
|
தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் |
|
|
|
|
|
|
|
கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன். |
|
|
|
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர் |
|
|
|
ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார் |
|
|
|
எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன் |
|
|
|
வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து |
|
|
|
|
|
|
|
சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும் |
|
|
|
ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும் |
|
|
|
கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்! |
|
|
|
ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்! |
|
|
|
விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர் |
|
|
|
|
|
|
|
"ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!" |
|
|
|
எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர். |
|
|
|
அப்போழ் தின்னருள் அவதரித் தனையான், |
|
|
|
நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு |
|
|
|
குறுநகை புரிந்து குறையறு முத்தர் |
|
|
|
|
|
|
|
ஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி |
|
|
|
ஆசிகள் கூறி அவையினை நோக்கிக் |
|
|
|
கடல்முழக் கென்ன முழங்குவன் காணீர்! |
|
|
|
ஏகாளியும் நமது கனகநன் னாட்டுத் |
|
|
|
தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்! |
|
|
|
|
|
|
|
நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும |
|
|
|
பலியிடச் சென்றது பாவனை மன்ற. |
|
|
|
என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்? |
|
|
|
ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும் |
|
|
|
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே! |
|
|
|
|
|
|
|
தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர் |
|
|
|
என்பது தெளிந்தேன், என்கர வாளால் |
|
|
|
அறுத்ததிங் கின்றைத் தாடுகள் காண்பீர், |
|
|
|
சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன், |
|
|
|
களித்ததென் நெஞ்சம், கழிந்தன கவலைகள் |
|
|
|
|
|
|
|
குருகோ விந்தன் கொண்டதோர் தருமம் |
|
|
|
சீடர்தம் மார்க்கம்எ எனப்புகழ் சிறந்தது |
|
|
|
இன்னுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர் |
|
|
|
காலசா என்ப, காலசா எனுமொழி |
|
|
|
முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது |
|
|
|
|
|
|
|
முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று |
|
|
|
ஐவரன் னோர்தமை அருளினன் ஆரங்யன் |
|
|
|
சமைந்தது எகாலசாஎ எனும் பெயர்ச் சங்கம் |
|
|
|
பாரத மென்ற பழம்பெரு நாட்டினர் |
|
|
|
ஆவிதேய்ந் தழித்திலர். ஆண்மையிற் குறைந்திலர். |
|
|
|
|
|
|
|
வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று |
|
|
|
புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன் |
|
|
|
அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர் |
|
|
|
தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி |
|
|
|
மண்மா சகன்ற வான்படு சொற்களால் |
|
|
|
|
|
|
|
எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள் |
|
|
|
இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை |
|
|
|
சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று |
|
|
|
உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன். |
|
|
|
ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த |
|
|
|
|
|
|
|
முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து |
|
|
|
சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச் |
|
|
|
சாதியை வகுத்தனன்; தழைத்தது தருமம். |
|
|
|
கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர் |
|
|
|
நடுங்குவ ராயினர்; நகைத்தனள் சுதந்திரை. |
|
|
|
|
|
|
|
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு |
|
|
|
விக்கிர மார்க்க னாண்டினில் வியன்புகழ்க் |
|
|
|
குருகோ விந்தன் கொற்றமர் சீடரைக் |
|
|
|
கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன் |
|
|
|
காண்டற் கரிய காட்சி! கவின் திகழ் |
|
|
|
|
|
|
|
அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன் |
|
|
|
சூழ்ந்திருந் தனர் உயிர் தொண்டர்தாம் ஐவரும் |
|
|
|
தன் திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி |
|
|
|
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக் |
|
|
|
கண்மணிப் போன்றார் ஐவர்மேற் கனிந்து |
|
|
|
|
|
|
|
குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி, |
|
|
|
"காண்டிரோ! முதலாங் 'காலசா' என்றனன் |
|
|
|
நாடும் தருமமும் நன்கிதிற் காப்பான் |
|
|
|
அமைந்ததிச் சங்கம் அறமின்நீர் என்றான் |
|
|
|
அருகினில் ஓடிய ஆற்றின்நின் றையன் |
|
|
|
|
|
|
|
இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து |
|
|
|
வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி |
|
|
|
மந்திர மோதினன், மனத்தினை அடக்கிச் |
|
|
|
சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச் |
|
|
|
சபமுரைத் திட்டான், சயப்பெருந்திரு, அக் |
|
|
|
|
|
|
|
கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள். |
|
|
|
ஆற்றுநீர் தனையோ அடித்ததந் திருவாள் |
|
|
|
அயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரதச் |
|
|
|
சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி |
|
|
|
நல்லுயிர் நல்கினன், நாடெலாம் இயங்கின. |
|
|
|
|
|
|
|
தவமுடை ஐவரைத் தன்முனா நிறுத்தி |
|
|
|
மந்திர நீரை மாசறத் தெளித்து |
|
|
|
அருள்மய மாகி அவர்விழி தீண்டினன் |
|
|
|
பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால் |
|
|
|
அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே |
|
|
|
|
|
|
|
நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது! |
|
|
|
சீடர்கள னைவரும் தீட்சை இ•தடைந்தனர். |
|
|
|
ஐயன் சொல்வான் அன்பர்காள்! நீவிர் |
|
|
|
செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம் |
|
|
|
அமிர்தம்எ என்று அறிமின் அரும்பே றாம் இது |
|
|
|
|
|
|
|
பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் |
|
|
|
நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின், |
|
|
|
ஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய |
|
|
|
மானிடரெல்லாஞ் சோதரர் |
|
|
|
மானிடர்சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர். |
|
|
|
|
|
|
|
சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும் |
|
|
|
இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே |
|
|
|
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல் |
|
|
|
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி |
|
|
|
வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும் |
|
|
|
|
|
|
|
தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் |
|
|
|
என்பவை போற்ற எழுந்திடும் வீரச் |
|
|
|
சாதியொன் றினையே சார்ந்ததோ ராவீர் |
|
|
|
அநீதியும் கொடுமையும் அழித்திடுஞ் சாதி |
|
|
|
இமழித்திடலறியா வன்முகச் சாதி |
|
|
|
|
|
|
|
இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும் |
|
|
|
கையினில் வாளும் கழன்றிடாச் சாதி |
|
|
|
இசோதர நட்புத் தொடர்ந்திடு சாதி |
|
|
|
அரசன் இல்லாது தெய்வமே யரசா |
|
|
|
மானுடர் துணைவரா, மறமே பகையாக் |
|
|
|
|
|
|
|
குடியர சியற்றுங் கொள்கையார் சாதி |
|
|
|
அறத்தினை வெறுக்கிலீர்! மறத்தினைப் பொறுக்கிலீர், |
|
|
|
தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப் |
|
|
|
புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!" |
|
|
|
என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன் |
|
|
|
|
|
|
|
அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள். |
|
|
|
குருகோ விந்தக் கோமகன் நாட்டிய |
|
|
|
கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது |
|
|
|
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி. |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
43. தாதாபாய் நௌரோஜி |
|
|
|
|
|
|
|
|
|
முன்னாலில் இராமபிரான் கோதமனா |
|
|
|
தியபுதல்வர் முறையி னீன்று |
|
|
|
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத் |
|
|
|
தியஎமது பரத கண்ட |
|
|
|
மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப் |
|
|
|
பிறரெள்ள வீழ்ந்த காலை |
|
|
|
அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில |
|
|
|
மக்களவ ரடிகள் சூழ்வாம். |
|
|
|
|
|
|
|
அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம் |
|
|
|
மைந்தன், தன் அன்னை கண்ணீர் |
|
|
|
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென் |
|
|
|
உயிர் துடைப்பேன் என்னப் போந்து, |
|
|
|
யௌவன நாள் முதற்கொடுதான் |
|
|
|
எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும் |
|
|
|
செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி |
|
|
|
யானுழைப்புத் தீர்த லில்லான் |
|
|
|
|
|
|
|
கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக் |
|
|
|
கருணையும்அக் கருணைப் போலப் |
|
|
|
பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு |
|
|
|
நிகரின்றிப் படைத்த வீரன், |
|
|
|
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம் |
|
|
|
எனஅதனை வெறுத்தே உண்மைச் |
|
|
|
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித் |
|
|
|
தனக்குழையாத் துறவி யாவோன். |
|
|
|
|
|
|
|
மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும் |
|
|
|
மதியாதே வாணாள் போக்குந் |
|
|
|
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி |
|
|
|
நன்குணர்த்துஞ் செவ்வி யாளன், |
|
|
|
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே |
|
|
|
உண்மைநெறி விரிப்போன் எங்கள் |
|
|
|
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய் |
|
|
|
நவுரோஜி சரணம் வாழ்க; |
|
|
|
|
|
|
|
எண்ப•தாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு |
|
|
|
இருந்தெம்மை இனிது காக்க! |
|
|
|
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந் |
|
|
|
துக எமது பரதநாட்டுப் |
|
|
|
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி |
|
|
|
போற்புதல்வர் பிறந்து வாழ்க |
|
|
|
விண்புல்லு மீன்களென அவனன்னார் |
|
|
|
எவ்வயினும் மிகுக மன்னோ! |
|
|
|
|
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
44. பூபேந்திர விஜயம் |
|
|
|
|
|
|
|
|
|
பாபேந்திரியஞ் செறுத்த எங்கள் |
|
|
|
விவேகானந்தப் பரமன் ஞானY |
|
|
|
ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன் |
|
|
|
விண்ணவர்த முலகை யாள்ப்ர- |
|
|
|
தாபேந்திரன் கோப முறினுமதற்கு |
|
|
|
அஞ்சியறந் தவிர்க்கி லாதான் |
|
|
|
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட் |
|
|
|
டிற்கடிமை பூண்டு வாழ்வோன் |
|
|
|
|
|
|
|
வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங் |
|
|
|
கிளைத்துவர மேலோர் தம்மைத் |
|
|
|
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு |
|
|
|
பாதகமே ததும்பி நிற்கும் |
|
|
|
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம் |
|
|
|
அருகில்வரும் பான்மை தோன்றக் |
|
|
|
காழ்த்தமன வீரமுடன் யுகாந்திரத்தின் |
|
|
|
நிலையினிது காட்டி நின்றான் |
|
|
|
|
|
|
|
மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய் |
|
|
|
திட்டாலும் மாந்த ரெல்லாம் |
|
|
|
கண்ணாகக் கருதியவன் புகழோதி |
|
|
|
வாழ்த்திமனங் களிக்கின் றாரால் |
|
|
|
எண்ணாது நற்பொருளைத் தீதென்பார் |
|
|
|
சிலருலகில் இருப்ப ரன்றே? |
|
|
|
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள் |
|
|
|
இருளினது விரும்பல் போன்றே! |
|
|
|
|
|
|
|
இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட் |
|
|
|
டிற்கிரங்கி இதயம் நைவான் |
|
|
|
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும் |
|
|
|
ஓருயிரென் றுணர்ந்த ஞானி. |
|
|
|
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம் |
|
|
|
பெருமையெதும் அறிகி லாதார், |
|
|
|
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா |
|
|
|
தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே? |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
45. வாழ்க திலகன் நாமம்! |
|
|
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே! |
|
|
|
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே! |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே! |
|
|
|
நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே! |
|
|
|
ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே! |
|
|
|
எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க) |
|
|
|
|
|
|
|
கல்வி யென்னும் வலிமை கொண்ட |
|
|
|
கோட்டை கட்டினான் - நல்ல |
|
|
|
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர் |
|
|
|
அகழி வெட்டினான் |
|
|
|
சொல் விளக்க மென்ற தனிடைக் |
|
|
|
கோயி லாக்கினான் |
|
|
|
ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக் |
|
|
|
கொடியைத் தூக்கினான் (வாழ்க) |
|
|
|
|
|
|
|
துன்பமென்னும் கடலைக் கடக்குந் |
|
|
|
தோணி யவன் பெயர் |
|
|
|
சோர்வென்னும் பேயை யோட்டுஞ் |
|
|
|
சூழ்ச்சி யவன் பெயர் |
|
|
|
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும் |
|
|
|
புதுமலர் அவன்பேர் |
|
|
|
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும் |
|
|
|
அறிகுறி யவன்பேர். (வாழ்க) |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
46. திலகர் முனிவர் கோன் |
|
|
|
|
|
|
|
|
|
நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல் |
|
|
|
நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர் |
|
|
|
தாம கத்து வியப்பப் பயின்றொரு |
|
|
|
சாத்தி ரக்கடலென விளங்குவோன், |
|
|
|
மாம கட்குப் பிறப்பிட மாகமுன் |
|
|
|
வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப் |
|
|
|
பூம கட்கு மனந்துடித் தேயிவள் |
|
|
|
புன்மை போக்குவல் என்ற விரதமே. |
|
|
|
|
|
|
|
நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான் |
|
|
|
நீத மேயோர் உருவெனத் தோன்றினோன், |
|
|
|
வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை |
|
|
|
மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன், |
|
|
|
துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே |
|
|
|
தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும் |
|
|
|
அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல் |
|
|
|
அன்பொ டோதும் பெயருடை யாவரின். |
|
|
|
|
|
|
|
வீர மிக்க மராட்டியர் ஆதரம் |
|
|
|
மேவிப் பாரத தேவி திருநுதல் |
|
|
|
ஆர வைத்த திலகமெனத் திகழ் |
|
|
|
ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன், |
|
|
|
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென |
|
|
|
நின்ற எங்கள் திலக முனிவர்கோன் |
|
|
|
சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன் |
|
|
|
சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே. |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
47. லாஜபதி |
|
|
|
|
|
|
|
|
|
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் |
|
|
|
அதன்கதிர்கள் விரைந்து வந்து |
|
|
|
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ? |
|
|
|
நினையவர் கனன்றிந் நாட்டு |
|
|
|
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் |
|
|
|
யாங்களெலாம் மறக்கொ ணாதெம் |
|
|
|
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி |
|
|
|
நீவளர்தற் கென்செய் வாரே |
|
|
|
|
|
|
|
ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு |
|
|
|
கடத்தியவர்க்கு ஊறு செய்தல் |
|
|
|
அருமையில்லை; எளிதினவர் புரிந்திட்டா |
|
|
|
ரென்றிடினும் அந்த மேலோன் |
|
|
|
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென |
|
|
|
நெஞ்சினுளே பெட்பிற் பேணி |
|
|
|
வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம் |
|
|
|
ஓட்டியெவர் வாழ்வ திங்கே? |
|
|
|
|
|
|
|
பேரன்பு செய்தாரில் யாவரே |
|
|
|
பெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்? |
|
|
|
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய் |
|
|
|
செய்ததனால் அவனுக் குற்ற |
|
|
|
கோரங்கள் சொலத் தகுமோ? பாரதநாட் |
|
|
|
டிற்பக்தி குலவி வாழும் |
|
|
|
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம் |
|
|
|
பலவடைதல் வியத்தற் கொன்றோ? |
|
|
|
|
|
|
|
------ |
|
|
|
|
|
|
|
|
|
48. லாஜபதியின் பிரலாபம் |
|
|
|
|
|
|
|
|
|
கண்ணிகள் |
|
|
|
|
|
|
|
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து |
|
|
|
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே? |
|
|
|
|
|
|
|
வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு |
|
|
|
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? |
|
|
|
|
|
|
|
ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன் |
|
|
|
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? |
|
|
|
|
|
|
|
அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால் |
|
|
|
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ |
|
|
|
|
|
|
|
வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை |
|
|
|
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? |
|
|
|
|
|
|
|
ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும் |
|
|
|
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு. |
|
|
|
|
|
|
|
சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர் |
|
|
|
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு. |
|
|
|
|
|
|
|
ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம் |
|
|
|
வெம்புலனை வென்ற எண்ணில் வீரர்க்குந் தாய்நாடு. |
|
|
|
|
|
|
|
நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம் |
|
|
|
புல்லியரைச் செற்றாழ்ந்த புனிதப் பெருநாடு. |
|
|
|
|
|
|
|
கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு |
|
|
|
வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு. |
|
|
|
|
|
|
|
கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும் |
|
|
|
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு. |
|
|
|
|
|
|
|
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் |
|
|
|
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. |
|
|
|
|
|
|
|
வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத் |
|
|
|
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம். |
|
|
|
|
|
|
|
சீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல் |
|
|
|
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு. |
|
|
|
|
|
|
|
ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த |
|
|
|
சீரியர் மெஞ்ஞான தயாநந்தர் திருநாடு. |
|
|
|
|
|
|
|
என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? |
|
|
|
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? |
|
|
|
|
|
|
|
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ? |
|
|
|
ஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ? |
|
|
|
|
|
|
|
என்னை நினைத்தும் இரங்குவரோ? அல்லாது |
|
|
|
பின்னைத் துயர்களிலென் பேருமறந் திட்டாரோ? |
|
|
|
|
|
|
|
தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில் |
|
|
|
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன். |
|
|
|
|
|
|
|
எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும் |
|
|
|
தத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன். |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
49. வ.உ.சி.க்கு வாழ்த்து |
|
|
|
|
|
|
|
|
|
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் |
|
|
|
மன்னனென மீண்டான் என்றே |
|
|
|
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ |
|
|
|
வருந்தலைஎன் கேண்மைக்கோவே! |
|
|
|
தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம் |
|
|
|
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, |
|
|
|
வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே |
|
|
|
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி! |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
பிற நாடுகள் |
|
|
|
|
|
50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை |
|
|
|
|
|
|
|
பேரருட் கடவுள் திருவடி யாணை, |
|
|
|
பிறப்பளித் தெமையெலாம் புரக்கும் |
|
|
|
தாரணி விளக்காம் என்னரு நாட்டின் |
|
|
|
தவப்பெய ரதன்மிசை யாணை |
|
|
|
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின் |
|
|
|
பணிக்கெனப் பலவிதத் துழன்ற |
|
|
|
வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த |
|
|
|
விழுமியோர் திருப்பெய ராணை. |
|
|
|
|
|
|
|
ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர் |
|
|
|
யாவர்க்கும் இயற்கையின் அளித்த |
|
|
|
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த |
|
|
|
சீருய ரறங்களி னாணை. |
|
|
|
|
|
|
|
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென் |
|
|
|
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின் |
|
|
|
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ |
|
|
|
அத்தகை யன்பின்மீ தாணை. |
|
|
|
|
|
|
|
தீயன புரிதல் முறைதவி ருடைமை, |
|
|
|
செம்மைதீர் அரசியல், அநீதி |
|
|
|
ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும் |
|
|
|
அரும்பகை யதன்மிசை யாணை |
|
|
|
தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய |
|
|
|
உரிமைகள் சிறிதெனு மில்லேன், |
|
|
|
தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம் |
|
|
|
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன். |
|
|
|
|
|
|
|
மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து |
|
|
|
மண்டுமென் வெட்கத்தி னாணை. |
|
|
|
முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று |
|
|
|
அச்செயல் முடித்திட வலிமை |
|
|
|
அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில் |
|
|
|
ஆர்ந்த பேராவலி னாணை. |
|
|
|
நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந் |
|
|
|
நலனறு மடிமையின் குணத்தால். |
|
|
|
|
|
|
|
வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண் |
|
|
|
வளர்ந்திடும் ஆசைமீ தாணை. |
|
|
|
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் |
|
|
|
மாண்பதன் நினைவின்மீ தாணை. |
|
|
|
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் |
|
|
|
வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை. |
|
|
|
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும் |
|
|
|
புன்சிறைக் களத்திடை யழிந்தும் |
|
|
|
|
|
|
|
வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும் |
|
|
|
மெய்குலைந் திறந்துமே படுதல் |
|
|
|
ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின் |
|
|
|
அன்னைமார் அழுங்கணீ ராணை. |
|
|
|
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும் |
|
|
|
வகுக்கொணாத் துயர்களி னாணை. |
|
|
|
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே |
|
|
|
யான்செயுஞ் சபதங்கள் இவையே. |
|
|
|
|
|
|
|
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக் |
|
|
|
கட்டளை தன்னினும் அதனைத் |
|
|
|
திடனுற நிறுவ முயலுதல் மற்றித் |
|
|
|
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம் |
|
|
|
உடனுறு கடமை யாகுமென் பதினும் |
|
|
|
ஊன்றிய நம்புதல் கொண்டும் |
|
|
|
தடநில மிசையோர் சாதியை இறைவன் |
|
|
|
சமைகெனப் பணிப்பனேல் அதுதான். |
|
|
|
|
|
|
|
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத் |
|
|
|
தந்துள னென்பதை யறிந்தும் |
|
|
|
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும் |
|
|
|
அன்னவர் தமக்கெனத் தாமே |
|
|
|
தமையல தெவர்கள் துணையு மில்லாது |
|
|
|
தம்மருந் திறமையைச் செலுத்தல் |
|
|
|
சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே |
|
|
|
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும், |
|
|
|
|
|
|
|
கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும் |
|
|
|
கருதிடா தளித்தலுந் தானே |
|
|
|
தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு |
|
|
|
தளர்விலாச் சிந்தனை கொளலே |
|
|
|
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற் |
|
|
|
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும், |
|
|
|
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன் |
|
|
|
ஆணைக ளனைத்து முற்கொண்டே. |
|
|
|
|
|
|
|
என்னுடனொத்த தருமத்தை யேற்றார் |
|
|
|
இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே |
|
|
|
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம் |
|
|
|
தத்தமா வழங்கினேன்; எங்கள் |
|
|
|
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச் |
|
|
|
சுதந்திரம் பூண்டது வாகி |
|
|
|
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக் |
|
|
|
குடியர சியன்றதா யிலக. |
|
|
|
|
|
|
|
இவருடன் யானும் இணங்கியே யென்றும் |
|
|
|
இதுவலாற் பிறதொழி லிலனாய்த் |
|
|
|
தவமுறு முயற்சி செய்திடக் கடவேன். |
|
|
|
சந்ததஞ் சொல்லினால், எழுத்தால், |
|
|
|
அவமறு செய்கை யதனினால் இயலும் |
|
|
|
அளவெல்லாம் எம்மவ ரிந்த |
|
|
|
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை |
|
|
|
நன்கிதன் அறிந்திடப் புரிவேன். |
|
|
|
|
|
|
|
உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம் |
|
|
|
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும் |
|
|
|
செயம்நிலை யாகச் செய்திடற் கறமே |
|
|
|
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும், |
|
|
|
பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற் |
|
|
|
பேணுமா றியற்றிடக் கடவேன், |
|
|
|
அயலொரு சபையி லின்றுதோ றென்றும் |
|
|
|
அமைந்திடா திருந்திடக் கடவேன். |
|
|
|
|
|
|
|
எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும் |
|
|
|
இச்சபைத் தலைவரா யிருப்போர் |
|
|
|
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து |
|
|
|
தலைக்கொளற் கென்றுமே கடவேன், |
|
|
|
இங்கென தாவி மாய்ந்திடு மேனும் |
|
|
|
இவர்பணி வெளியிடா திருப்பேன் |
|
|
|
துங்கமார் செயலாற் போதனை யாலும் |
|
|
|
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன். |
|
|
|
|
|
|
|
இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன் |
|
|
|
மெய்யிது, மெய்யிது; இவற்றை |
|
|
|
என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை |
|
|
|
ஈசனார் நாசமே புரிக. |
|
|
|
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க |
|
|
|
அசத்தியப் பாதகஞ் சூழ்க |
|
|
|
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து |
|
|
|
நித்தம்யா னுழலுக மன்னோ! |
|
|
|
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
|
|
பேசி நின்ற பெரும்பிர திக்கினை |
|
|
|
மாசி லாது நிறைவுறும் வண்ணமே |
|
|
|
ஆசி கூறி யருளு! ஏழையேற்கு |
|
|
|
ஈசன் என்றும் இதயத் திலகியே.- |
|
|
|
|
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து |
|
|
|
|
|
|
|
|
|
அறத்தினால் வீழ்ந்து விட்டாய், |
|
|
|
அன்னியன் வலியனாகி |
|
|
|
மறத்தினால் வந்து செய்த |
|
|
|
வன்மையைப் பொறுத்தல் செய்வாய், |
|
|
|
முறத்தினால் புலியைத் தாக்க்ம் |
|
|
|
மொய்வரைக் குறப்பெண் போலத் |
|
|
|
திறத்தினான் எளியை யாகிச் |
|
|
|
செய்கையால் உயர்ந்து நின்றாய்! |
|
|
|
|
|
|
|
வண்மையால் வீழ்ந்து விட்டாய்! |
|
|
|
வாரிபோற் பகைவன் சேனை |
|
|
|
திண்மையோடு அடர்க்கும் போதில் |
|
|
|
சிந்தனை மெலித லின்றி |
|
|
|
ஒண்மைசேர் புகழே மேலென்று |
|
|
|
உளத்திலே உறுதி கொண்டாய், |
|
|
|
உண்மைதேர் கோல நாட்டார் |
|
|
|
உரிமையைக் காத்து நின்றாய். |
|
|
|
|
|
|
|
மானத்தால் வீழ்ந்து விட்டாய்! |
|
|
|
மதங்ப்பிலாப் பகைவர் வேந்தன் |
|
|
|
வானத்தாற் பெருமை கொண்ட |
|
|
|
வலிமைதான் உடைய னேனும். |
|
|
|
ஊனத்தால் உள்ள மஞ்சி |
|
|
|
ஒதுங்கிட மனமொவ் வாமல் |
|
|
|
ஆசனத்தைச் செய்வோ மென்றே |
|
|
|
அவன்வழி யெதிர்த்து நின்றாய்! |
|
|
|
|
|
|
|
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்! |
|
|
|
மேல்வரை யுருளுங் காலை |
|
|
|
ஓரத்தே ஒதுங்கித் தன்னை |
|
|
|
ஒளித்திட மனமொவ் வாமல் |
|
|
|
பாரத்தை எளிதாக் கொண்டாய், |
|
|
|
பாம்பினைப் புழுவே யென்றாய் |
|
|
|
நேரத்தே பகைவன் தன்னை |
|
|
|
எநில்எலென முனைந்து நின்றாய். |
|
|
|
|
|
|
|
துணிவினால் வீழ்ந்து விட்டாய்! |
|
|
|
தொகையிலாப் படைக ளோடும் |
|
|
|
பிணிவலர் செருக்கி னோடும் |
|
|
|
பெரும்பகை எதிர்த்த போது |
|
|
|
பணிவது கருத மாட்டாய், |
|
|
|
பதுங்குதல் பயனென் றெண்ணாய் |
|
|
|
தணிவதை நினைக்க மாட்டாய், |
|
|
|
நில் லெனத் தடுத்தல் செய்தாய். |
|
|
|
|
|
|
|
வெருளுத லறிவென் றெண்ணாய, |
|
|
|
விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய், |
|
|
|
சுருளலை வெள்ளம் போலத் |
|
|
|
தொகையிலாப் படைகள் கொண்டே |
|
|
|
மருளுறு பகைவர் வேந்தன் |
|
|
|
வலிமையாற் புகுந்த வேளை, |
|
|
|
உருளுக தலைகள் மானம் |
|
|
|
ஓங்குகெஎன் றெதிர்த்து நின்றாய். |
|
|
|
|
|
|
|
யாருக்கே பகையென் றாலும் |
|
|
|
யார் மிசை இவன்சென் றாலும் |
|
|
|
ஊருக்குள் எல்லை தாண்டி |
|
|
|
உத்திர வெண்ணி டாமல், |
|
|
|
போருக்குக் கோலம் பூண்டு |
|
|
|
புகுந்தவன் செருக்குக் காட்டை |
|
|
|
வேருக்கும் இடமில் லாமல் |
|
|
|
வெட்டுவேன் என்று நின்றாய். |
|
|
|
|
|
|
|
வேள்வியில் வீழ்வ தெல்லாம் |
|
|
|
வீரமும் புகழும் மிக்கு |
|
|
|
மீள்வதுண்டு டுலகிற் கென்றே |
|
|
|
வேதங்கள் விதிக்கும் என்பர், |
|
|
|
ஆள்வினை செய்யும் போதில், |
|
|
|
அறத்திலே இளைத்து வீழ்ந்தார் |
|
|
|
கேள்வியுண் டுடனே மீளக் |
|
|
|
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல். |
|
|
|
|
|
|
|
விளக்கொளி மழுங்கிப் போக |
|
|
|
வெயிலொளி தோன்றும் மட்டும், |
|
|
|
களக்கமா ரிருளின் மூழ்குங் |
|
|
|
கனக மாளிகையு முண்டாம், |
|
|
|
அளக்கருந் தீதுற் றாலும் |
|
|
|
அச்சமே யுளத்துக் கொள்ளார், |
|
|
|
துளக்கற ஓங்கி நிற்பர், |
|
|
|
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே? |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
52. புதிய ருஷியா |
|
|
|
|
|
|
|
(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி) |
|
|
|
மாகாளி பராசக்தி உருசியநாட் |
|
|
|
டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே, |
|
|
|
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, |
|
|
|
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான், |
|
|
|
வாகான தோள்புடைத்தார் வானமரர், |
|
|
|
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர் |
|
|
|
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம், |
|
|
|
வையகத்தீர், புதுமை காணீர்! |
|
|
|
|
|
|
|
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன் |
|
|
|
ஜாரெனும்பே ரிசைந்த பாவி |
|
|
|
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும் |
|
|
|
சான்றோரும்; தருமந் தன்னைத் |
|
|
|
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன், |
|
|
|
பொய்சூது தீமை யெல்லாம் |
|
|
|
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த |
|
|
|
தோங்கினவே அந்த நாட்டில். |
|
|
|
|
|
|
|
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை, |
|
|
|
பிணிகள் பலவுண்டு பொய்யைத் |
|
|
|
தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க |
|
|
|
ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம் |
|
|
|
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு, |
|
|
|
தூக்குண்டே யிறப்ப துண்டு, |
|
|
|
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே |
|
|
|
ஆவிகெட முடிவ துண்டு. |
|
|
|
|
|
|
|
இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் |
|
|
|
வனவாசம், இவ்வா றங்கே |
|
|
|
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே |
|
|
|
அறமாகித் தீர்ந்த போதில் |
|
|
|
அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி |
|
|
|
உண்மைசொலும் அடியார் தம்மை |
|
|
|
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே |
|
|
|
நோக்கினாள்ஈ முடிந்தான் காலன். |
|
|
|
|
|
|
|
இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் |
|
|
|
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து |
|
|
|
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி |
|
|
|
அறங்கொன்று சதிகள் செய்த |
|
|
|
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார், |
|
|
|
புயற்காற்றுங் குறை தன்னில் |
|
|
|
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் |
|
|
|
விறகான செய்தி போலே! |
|
|
|
|
|
|
|
|
|
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு |
|
|
|
மேன்மையுறக் குடிமை நீதி |
|
|
|
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று |
|
|
|
உலகறியக் கூறி விட்டார்; |
|
|
|
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது |
|
|
|
அடிமையில்லை அறிக என்றார், |
|
|
|
இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான், |
|
|
|
கிருத யுகம் எழுக மாதோ! |
|
|
|
|
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
53. கரும்புத் தோட்டத்திலே |
|
|
|
|
|
|
|
|
|
ஹரிகாம்போதி ஜன்யம் |
|
|
|
|
|
|
|
ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு |
|
|
|
|
|
|
|
பல்லவி |
|
|
|
|
|
|
|
கரும்புத் தோட்டத்திலே - ஆ! |
|
|
|
கரும்புத் தோட்டத்திலே |
|
|
|
|
|
|
|
சரணங்கள் |
|
|
|
|
|
|
|
கரும்புத் தோட்டத்திலே - அவர் |
|
|
|
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி |
|
|
|
வருந்து கின்றனரே! ஹிந்து |
|
|
|
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய் |
|
|
|
சுருங்குகின்றனரே - அவர் |
|
|
|
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு |
|
|
|
மருந்திதற் கிலையோ? - செக்கு |
|
|
|
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) |
|
|
|
|
|
|
|
பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு |
|
|
|
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது |
|
|
|
எண்ணம் இரங்காதோ? - அந்த |
|
|
|
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும் |
|
|
|
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு |
|
|
|
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் |
|
|
|
கண்ணற்ற தீவினிலே - தனிக் |
|
|
|
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) |
|
|
|
|
|
|
|
நாட்டை நினைப்பாரோ? - எந்த |
|
|
|
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை |
|
|
|
வீட்டை நினைப்பாரோ? - அவர் |
|
|
|
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல் |
|
|
|
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக் |
|
|
|
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் |
|
|
|
மீட்டும் உரையாயோ? - அவர் |
|
|
|
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே) |
|
|
|
|
|
|
|
நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு |
|
|
|
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப் |
|
|
|
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப் |
|
|
|
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு |
|
|
|
தஞ்சமு மில்லாதே - அவர் |
|
|
|
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் |
|
|
|
மிஞ்ச விடலாமோ? - ஹே |
|
|
|
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே) |
|
|
|
|
|
|
|
|
|
தேசிய கீதங்கள் முற்றிற்று |
|
|
|
------------- |
|
|
|
|
|
|
|
|
|
This webpage was last revised on 16 September 2021. |
|
|
|
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com). |
|
|
|
|