|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tiruvAcakam of mANikka vAcakar- part I (in tamil script, unicode format) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tiruvAcakam of mAnikka vAcakar -part I |
|
|
|
in Tamil script, Unicode/UTF-8 format) |
|
|
|
திருவாசகம் -I |
|
|
|
(மாணிக்க வாசகர் அருளியது) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Acknowledgements: |
|
|
|
Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for the preparation of this work for publication. |
|
|
|
This work (tiruvAcakam) was first released in Mylai, Inaimathi formats in March 1998 and then in TSCII encodng from Dec 12, 2000 |
|
|
|
The work is presented in Unicode encoding (utf-8 format). |
|
|
|
|
|
|
|
© Project Madurai, 1998-2021. |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
https://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
Feel free to send the corrections by email to the webmaster "pmadurai@gmail.com". |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tiruvAcakam of mAnikka vAcakar |
|
|
|
திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது) |
|
|
|
|
|
|
|
பொருள் அடக்கம் |
|
|
|
|
|
1 சிவபுராணம் (1) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
2. கீர்த்தித் திரு அகவல் (2) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
3. திருவண்டப் பகுதி (3) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
4. போற்றித் திருஅகவல் (4) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
5. திருச்சதகம் (5 - 104) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
6. நீத்தல் விண்ணப்பம் (105 - 154) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
7. திருவெம்பாவை (155 - 174) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
8. திரு அம்மானை (175 - 194) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் (195 - 214) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் (215 - 234) |
|
மின்பதிப்பு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
1. சிவபுராணம் |
|
|
|
(திருப்பெருந்துறையில் அருளியது) |
|
|
|
தற்சிறப்புப் பாயிரம் |
|
|
|
|
|
|
|
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க |
|
|
|
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க |
|
|
|
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க |
|
|
|
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க |
|
|
|
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 |
|
|
|
|
|
|
|
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க |
|
|
|
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க |
|
|
|
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க |
|
|
|
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க |
|
|
|
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 |
|
|
|
|
|
|
|
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி |
|
|
|
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி |
|
|
|
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி |
|
|
|
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி |
|
|
|
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 |
|
|
|
|
|
|
|
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி |
|
|
|
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் |
|
|
|
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் |
|
|
|
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை |
|
|
|
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 |
|
|
|
|
|
|
|
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி |
|
|
|
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி |
|
|
|
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், |
|
|
|
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் |
|
|
|
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 |
|
|
|
|
|
|
|
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் |
|
|
|
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் |
|
|
|
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் |
|
|
|
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் |
|
|
|
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 |
|
|
|
|
|
|
|
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் |
|
|
|
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் |
|
|
|
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற |
|
|
|
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் |
|
|
|
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 |
|
|
|
|
|
|
|
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா |
|
|
|
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி |
|
|
|
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே |
|
|
|
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே |
|
|
|
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 |
|
|
|
|
|
|
|
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் |
|
|
|
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் |
|
|
|
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் |
|
|
|
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே |
|
|
|
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 |
|
|
|
|
|
|
|
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் |
|
|
|
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று |
|
|
|
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் |
|
|
|
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த |
|
|
|
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 |
|
|
|
|
|
|
|
மறைந்திட மூடிய மாய இருளை |
|
|
|
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி |
|
|
|
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, |
|
|
|
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை |
|
|
|
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 |
|
|
|
|
|
|
|
விலங்கு மனத்தால், விமலா உனக்கு |
|
|
|
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் |
|
|
|
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி |
|
|
|
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, |
|
|
|
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 |
|
|
|
|
|
|
|
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே |
|
|
|
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே |
|
|
|
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே |
|
|
|
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே |
|
|
|
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 |
|
|
|
|
|
|
|
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே |
|
|
|
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே |
|
|
|
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே |
|
|
|
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே |
|
|
|
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 |
|
|
|
|
|
|
|
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் |
|
|
|
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே |
|
|
|
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே |
|
|
|
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே |
|
|
|
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 |
|
|
|
|
|
|
|
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே |
|
|
|
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே |
|
|
|
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே |
|
|
|
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற |
|
|
|
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 |
|
|
|
|
|
|
|
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் |
|
|
|
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் |
|
|
|
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே |
|
|
|
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப |
|
|
|
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 |
|
|
|
|
|
|
|
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் |
|
|
|
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே |
|
|
|
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே |
|
|
|
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே |
|
|
|
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 |
|
|
|
|
|
|
|
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று |
|
|
|
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் |
|
|
|
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் |
|
|
|
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் |
|
|
|
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
2. கீர்த்தித் திரு அகவல் |
|
|
|
|
|
|
|
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) |
|
|
|
|
|
|
|
தில்லை மூதூர் ஆடிய திருவடி |
|
|
|
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி |
|
|
|
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி |
|
|
|
மண்ணும் விண்ணும் வானோர் உலகும் |
|
|
|
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 |
|
|
|
|
|
|
|
என்னுடை இருளை ஏறத்துரந்தும் |
|
|
|
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் |
|
|
|
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் |
|
|
|
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் |
|
|
|
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10 |
|
|
|
|
|
|
|
கல்லா டத்துக் கலந்து இனிது அருளி |
|
|
|
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் |
|
|
|
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் |
|
|
|
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் |
|
|
|
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 |
|
|
|
|
|
|
|
விராவு கொங்கை நல்தடம் படிந்தும் |
|
|
|
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் |
|
|
|
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் |
|
|
|
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து |
|
|
|
உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20 |
|
|
|
|
|
|
|
நந்தம் பாடியில் நான் மறையோனாய் |
|
|
|
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும் |
|
|
|
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும் |
|
|
|
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி |
|
|
|
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25 |
|
|
|
|
|
|
|
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் |
|
|
|
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக் |
|
|
|
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் |
|
|
|
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக் |
|
|
|
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30 |
|
|
|
|
|
|
|
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர் |
|
|
|
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் |
|
|
|
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி |
|
|
|
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் |
|
|
|
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35 |
|
|
|
|
|
|
|
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் |
|
|
|
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி |
|
|
|
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று |
|
|
|
ஈண்டு கனகம் இசையப் பெறா அது |
|
|
|
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40 |
|
|
|
|
|
|
|
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் |
|
|
|
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி |
|
|
|
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் |
|
|
|
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து |
|
|
|
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45 |
|
|
|
|
|
|
|
ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப் |
|
|
|
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் |
|
|
|
உத்தர கோச மங்கையுள் இருந்து |
|
|
|
வித்தக வேடங் காட்டிய இயல்பும் |
|
|
|
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50 |
|
|
|
|
|
|
|
தூவண மேனி காட்டிய தொன்மையும் |
|
|
|
வாத வூரினில் வந்து இனிது அருளிப் |
|
|
|
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் |
|
|
|
திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக் |
|
|
|
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55 |
|
|
|
|
|
|
|
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப் |
|
|
|
பாவம் நாசம் ஆக்கிய பரிசும் |
|
|
|
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து |
|
|
|
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் |
|
|
|
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60 |
|
|
|
|
|
|
|
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் |
|
|
|
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு |
|
|
|
அட்ட மாசித்தி அருளிய அதுவும் |
|
|
|
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு |
|
|
|
காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65 |
|
|
|
|
|
|
|
மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு |
|
|
|
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் |
|
|
|
ஓரி ஊரில் உகந்து இனிது அருளி |
|
|
|
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் |
|
|
|
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70 |
|
|
|
|
|
|
|
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் |
|
|
|
கோவார் கோலம் கொண்ட கொள்கையும் |
|
|
|
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில் |
|
|
|
ஞானம் தன்னை நல்கிய நன்மையும் |
|
|
|
இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75 |
|
|
|
|
|
|
|
படிமப் பாதம் வைத்த அப்பரிசும் |
|
|
|
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து |
|
|
|
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் |
|
|
|
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து |
|
|
|
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80 |
|
|
|
|
|
|
|
சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் |
|
|
|
பாவகம் பலபல காட்டிய பரிசும் |
|
|
|
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் |
|
|
|
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் |
|
|
|
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85 |
|
|
|
|
|
|
|
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் |
|
|
|
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் |
|
|
|
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் |
|
|
|
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் |
|
|
|
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90 |
|
|
|
|
|
|
|
குற்றாலத்துக் குறியாய் இருந்தும் |
|
|
|
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து |
|
|
|
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு |
|
|
|
இந்திர ஞாலம் போலவந்து அருளி |
|
|
|
எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத் 95 |
|
|
|
|
|
|
|
தானே ஆகிய தயாபரன் எம் இறை |
|
|
|
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி |
|
|
|
அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் |
|
|
|
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் |
|
|
|
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100 |
|
|
|
|
|
|
|
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் |
|
|
|
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் |
|
|
|
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு |
|
|
|
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் |
|
|
|
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105 |
|
|
|
|
|
|
|
ஆனந் தம்மே ஆறா அருளியும் |
|
|
|
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் |
|
|
|
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் |
|
|
|
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் |
|
|
|
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110 |
|
|
|
|
|
|
|
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் |
|
|
|
தூய மேனிச் சுடர்விடு சோதி |
|
|
|
காதலன் ஆகிக் கழுநீர் மாலை |
|
|
|
ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும் |
|
|
|
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115 |
|
|
|
|
|
|
|
பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் |
|
|
|
மீண்டு வாராவழி அருள் புரிபவன் |
|
|
|
பாண்டி நாடே பழம்பதி ஆகவும் |
|
|
|
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் |
|
|
|
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120 |
|
|
|
|
|
|
|
ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய |
|
|
|
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் |
|
|
|
இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி |
|
|
|
அருளிய பெருமை அருள்மலை யாகவும் |
|
|
|
எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125 |
|
|
|
|
|
|
|
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி |
|
|
|
நாயினேனை நலம்மலி தில்லையுள் |
|
|
|
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன |
|
|
|
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி |
|
|
|
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130 |
|
|
|
|
|
|
|
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் |
|
|
|
எய்த வந்திலாதார் எரியில் பாயவும் |
|
|
|
மாலது வாகி மயக்கம் எய்தியும் |
|
|
|
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் |
|
|
|
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135 |
|
|
|
|
|
|
|
நாத நாத என்று அழுது அரற்றி |
|
|
|
பாதம் எய்தினர் பாதம் எய்தவும் |
|
|
|
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற |
|
|
|
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் |
|
|
|
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140 |
|
|
|
|
|
|
|
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் |
|
|
|
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு |
|
|
|
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை |
|
|
|
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் |
|
|
|
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145 |
|
|
|
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
3. திருவண்டப் பகுதி |
|
|
|
|
|
|
|
( தில்லையில் அருளயது - இணைக் குறள் ஆசிரியப்பா) |
|
|
|
|
|
|
|
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் |
|
|
|
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி |
|
|
|
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் |
|
|
|
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன |
|
|
|
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5 |
|
|
|
|
|
|
|
சிறிய ஆகப் பெரியோன் தெரியின் |
|
|
|
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் |
|
|
|
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய |
|
|
|
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் |
|
|
|
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10 |
|
|
|
|
|
|
|
எறியது வளியின் |
|
|
|
கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் |
|
|
|
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை |
|
|
|
காப்போன் காக்கும் கடவுள், காப்பவை |
|
|
|
காப்போன், கரப்பவை கருதாக் 15 |
|
|
|
|
|
|
|
கருத்துடைக் கடவுள், திருத்தகும் |
|
|
|
அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் |
|
|
|
வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி |
|
|
|
கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் |
|
|
|
அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20 |
|
|
|
|
|
|
|
மதியில் தண்மை வைத் தோன், திண்திறல் |
|
|
|
தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் |
|
|
|
வானில் கலப்பு வைத்தோன், மேதகு |
|
|
|
காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் |
|
|
|
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25 |
|
|
|
|
|
|
|
மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று |
|
|
|
எனைப் பல கோடி எனைப் பல பிறவும் |
|
|
|
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று |
|
|
|
முன்னோன் காண்க, முழுதோன் காண்க |
|
|
|
தன்நேர் இல்லோன் தானே காண்க 30 |
|
|
|
|
|
|
|
ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க |
|
|
|
கானம் புலியுரி அரையோன் காண்க |
|
|
|
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் |
|
|
|
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் |
|
|
|
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35 |
|
|
|
|
|
|
|
அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க |
|
|
|
பரமன் காண்க, பழையோன் காண்க |
|
|
|
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க |
|
|
|
அற்புதன் காண்க, அநேகன் காண்க |
|
|
|
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40 |
|
|
|
|
|
|
|
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க |
|
|
|
பத்தி வலையில் படுவோன் காண்க |
|
|
|
ஒருவன் என்றும் ஒருவன் காண்க |
|
|
|
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க |
|
|
|
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45 |
|
|
|
|
|
|
|
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க |
|
|
|
அரிய அதில் அரிய அரியோன் காண்க |
|
|
|
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க |
|
|
|
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க |
|
|
|
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50 |
|
|
|
|
|
|
|
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க |
|
|
|
பந்தமும் வீடும் படைப்போன் காண்க |
|
|
|
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க |
|
|
|
கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க |
|
|
|
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55 |
|
|
|
|
|
|
|
தேவரும் அறியாச் சிவனே காண்க |
|
|
|
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க |
|
|
|
கண்ணால் யானும் கண்டேன் காண்க |
|
|
|
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க |
|
|
|
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60 |
|
|
|
|
|
|
|
புவனியல் சேவடி தீண்டினன் காண்க |
|
|
|
சிவன் என யானும் தேறினன் காண்க |
|
|
|
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க |
|
|
|
குவளைக் கண்ணி கூறன் காண்க |
|
|
|
அவளுந் தானும் உடனே காண்க 65 |
|
|
|
|
|
|
|
பரமா னந்தம் பழம் கட லதுவே |
|
|
|
கருமா முகிலில் தோன்றித் |
|
|
|
திருவார் பெருந்துறை வரையில் ஏறித் |
|
|
|
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய |
|
|
|
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 |
|
|
|
|
|
|
|
வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப |
|
|
|
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர |
|
|
|
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து |
|
|
|
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் |
|
|
|
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75 |
|
|
|
|
|
|
|
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் |
|
|
|
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் |
|
|
|
கேதக் குட்டம் கையற வோங்கி |
|
|
|
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை |
|
|
|
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80 |
|
|
|
|
|
|
|
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் |
|
|
|
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன |
|
|
|
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் |
|
|
|
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் |
|
|
|
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85 |
|
|
|
|
|
|
|
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் |
|
|
|
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து |
|
|
|
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் |
|
|
|
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் |
|
|
|
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90 |
|
|
|
|
|
|
|
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் |
|
|
|
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி |
|
|
|
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் |
|
|
|
தொண்ட உழவர் ஆரத் தந்த |
|
|
|
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95 |
|
|
|
|
|
|
|
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க |
|
|
|
அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க |
|
|
|
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க |
|
|
|
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க |
|
|
|
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100 |
|
|
|
|
|
|
|
எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க |
|
|
|
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க |
|
|
|
பேர்அமைத் தோளி காதலன் வாழ்க |
|
|
|
ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க |
|
|
|
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105 |
|
|
|
|
|
|
|
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி |
|
|
|
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி |
|
|
|
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை |
|
|
|
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் |
|
|
|
நிற்பன நிறீஇச் 110 |
|
|
|
|
|
|
|
சொல்பதம் கடந்த தொல்லோன் |
|
|
|
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் |
|
|
|
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் |
|
|
|
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் |
|
|
|
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115 |
|
|
|
|
|
|
|
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை |
|
|
|
இன்று எனக்கு எளிவந்து அருளி |
|
|
|
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் |
|
|
|
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி |
|
|
|
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 20 |
|
|
|
|
|
|
|
ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி |
|
|
|
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி |
|
|
|
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் |
|
|
|
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் |
|
|
|
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125 |
|
|
|
|
|
|
|
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் |
|
|
|
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் |
|
|
|
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து |
|
|
|
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் |
|
|
|
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130 |
|
|
|
|
|
|
|
இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு |
|
|
|
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் |
|
|
|
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி |
|
|
|
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து |
|
|
|
வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135 |
|
|
|
|
|
|
|
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் |
|
|
|
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை |
|
|
|
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் |
|
|
|
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் |
|
|
|
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140 |
|
|
|
|
|
|
|
ஒளிfக்கும் சோரனைக் கண்டனம் |
|
|
|
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் |
|
|
|
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் |
|
|
|
தொடர்மின் விடேன்மின் |
|
|
|
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145 |
|
|
|
|
|
|
|
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை |
|
|
|
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி |
|
|
|
அறைகூவி ஆட்கொண்டருளி |
|
|
|
மறையோர் கோலம் காட்டி அருளலும் |
|
|
|
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150 |
|
|
|
|
|
|
|
அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் |
|
|
|
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் |
|
|
|
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து |
|
|
|
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் |
|
|
|
கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155 |
|
|
|
|
|
|
|
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு |
|
|
|
கோற்றேன் கொண்டு செய்தனன் |
|
|
|
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் |
|
|
|
வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் |
|
|
|
அடியோம் அடிக்குடில் 160 |
|
|
|
|
|
|
|
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் |
|
|
|
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் |
|
|
|
சொல்லுவது அறியேன் வாழி முறையோ |
|
|
|
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது |
|
|
|
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165 |
|
|
|
|
|
|
|
அருளியது அறியேன் பருகியும் ஆரேன் |
|
|
|
விழுங்கியும் ஒல்ல கில்லேன் |
|
|
|
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து |
|
|
|
உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப |
|
|
|
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 |
|
|
|
|
|
|
|
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை |
|
|
|
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே |
|
|
|
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய |
|
|
|
அற்புதம் ஆன அமுத தாரைகள் |
|
|
|
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 |
|
|
|
|
|
|
|
உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு |
|
|
|
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய |
|
|
|
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை |
|
|
|
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் |
|
|
|
கருணை வான்தேன் கலக்க 180 |
|
|
|
அருளொடு பரா அமுது ஆக்கினன் |
|
|
|
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
4. போற்றித் திருஅகவல் |
|
|
|
|
|
|
|
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) |
|
|
|
|
|
|
|
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ |
|
|
|
ஈர் அடியாலே மூவுலகு அளந்து |
|
|
|
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் |
|
|
|
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று |
|
|
|
அடிமுடி அறியும் ஆதரவு அதனில் |
|
|
|
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து |
|
|
|
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து |
|
|
|
ஊழி முதல்வ சயசய என்று |
|
|
|
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் |
|
|
|
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 |
|
|
|
|
|
|
|
யானை முதலா எறும்பு ஈறாய |
|
|
|
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் |
|
|
|
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து |
|
|
|
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் |
|
|
|
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் |
|
|
|
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் |
|
|
|
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் |
|
|
|
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் |
|
|
|
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் |
|
|
|
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20 |
|
|
|
|
|
|
|
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் |
|
|
|
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் |
|
|
|
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் |
|
|
|
தக்க தசமதி தாயொடு தான்படும் |
|
|
|
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும் |
|
|
|
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை |
|
|
|
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் |
|
|
|
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி |
|
|
|
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் |
|
|
|
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30 |
|
|
|
|
|
|
|
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக் |
|
|
|
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து |
|
|
|
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து |
|
|
|
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் |
|
|
|
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் |
|
|
|
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் |
|
|
|
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் |
|
|
|
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் |
|
|
|
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் |
|
|
|
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40 |
|
|
|
|
|
|
|
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் |
|
|
|
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி |
|
|
|
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும் |
|
|
|
ஆறு கோடி மாயா சக்திகள் |
|
|
|
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின |
|
|
|
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி |
|
|
|
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் |
|
|
|
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் |
|
|
|
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் |
|
|
|
விரதமே பரம் ஆக வேதியரும் 50 |
|
|
|
|
|
|
|
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் |
|
|
|
சமய வாதிகள் தம்தம் தங்களே |
|
|
|
அமைவது ஆக அரற்றி மலைந்தனர் |
|
|
|
மிண்டிய மாயா வாதம் என்னும் |
|
|
|
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து |
|
|
|
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின் |
|
|
|
கலா பேதத்த கடுவிடம் எய்தி |
|
|
|
அதில் பெருமாயை எனைப்பல சூழவும் |
|
|
|
தப்பாமே தாம் பிடித்தது சலியாத் |
|
|
|
தழலது கண்ட மெழுகு அது போலத் 60 |
|
|
|
|
|
|
|
தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து |
|
|
|
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் |
|
|
|
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென |
|
|
|
படியே ஆகி நல் இடைஅறா அன்பின் |
|
|
|
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் |
|
|
|
கசிவது பெருகிக் கடல் என மறுகி |
|
|
|
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் |
|
|
|
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப |
|
|
|
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை |
|
|
|
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70 |
|
|
|
|
|
|
|
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் |
|
|
|
கதியது பரமா அதிசயம் ஆகக் |
|
|
|
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் |
|
|
|
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது |
|
|
|
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து |
|
|
|
குருபரன் ஆகி அருளிய பெருமையைச் |
|
|
|
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் |
|
|
|
பிறிவினை அறியா நிழல் அது போல |
|
|
|
முன் பின்னாகி முனியாது அத்திசை |
|
|
|
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 |
|
|
|
|
|
|
|
அன்பு எனும் ஆறு கரை அது புரள |
|
|
|
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி |
|
|
|
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப |
|
|
|
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் |
|
|
|
கண்களி கூர நுண் துளி அரும்ப |
|
|
|
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் |
|
|
|
தாயே ஆகி வளர்த்தனை போற்றி |
|
|
|
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் |
|
|
|
கைதரவல்ல கடவுள் போற்றி |
|
|
|
ஆடக மதுரை அரசே போற்றி 90 |
|
|
|
|
|
|
|
கூடல் இலங்கு குருமணி போற்றி |
|
|
|
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி |
|
|
|
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி |
|
|
|
மூவா நான்மறை முதல்வா போற்றி |
|
|
|
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி |
|
|
|
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி |
|
|
|
கல் நார் உரித்த கனியே போற்றி |
|
|
|
காவாய் கனகக் குன்றே போற்றி |
|
|
|
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி |
|
|
|
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100 |
|
|
|
|
|
|
|
இடரைக் களையும் எந்தாய் போற்றி |
|
|
|
ஈச போற்றி இறைவா போற்றி |
|
|
|
தேசப் பளிங்கின் திரளே போற்றி |
|
|
|
அரைசே போற்றி அமுதே போற்றி |
|
|
|
விரை சேர் சரண விகிர்தா போற்றி |
|
|
|
வேதி போற்றி விமலா போற்றி |
|
|
|
ஆதி போற்றி அறிவே போற்றி |
|
|
|
கதியே போற்றி கனியே போற்றி |
|
|
|
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி |
|
|
|
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110 |
|
|
|
|
|
|
|
கடையேன் அடிமை கண்டாய் போற்றி |
|
|
|
ஐயா போற்றி அணுவே போற்றி |
|
|
|
சைவா போற்றி தலைவா போற்றி |
|
|
|
குறியே போற்றி குணமே போற்றி |
|
|
|
நெறியே போற்றி நினைவே போற்றி |
|
|
|
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி |
|
|
|
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி |
|
|
|
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை |
|
|
|
ஆழாமே அருள் அரசே போற்றி |
|
|
|
தோழா போற்றி துணைவா போற்றி 120 |
|
|
|
|
|
|
|
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி |
|
|
|
முத்தா போற்றி முதல்வா போற்றி |
|
|
|
அத்தா போற்றி அரனே போற்றி |
|
|
|
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி |
|
|
|
விரிகடல் உலகின் விளைவே போற்றி |
|
|
|
அருமையில் எளிய அழகே போற்றி |
|
|
|
கருமுகி லாகிய கண்ணே போற்றி |
|
|
|
மன்னிய திருவருள் மலையே போற்றி |
|
|
|
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் |
|
|
|
சென்னியில் வைத்த சேவக போற்றி 130 |
|
|
|
|
|
|
|
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி |
|
|
|
அழிவிலா ஆனந்த வாரி போற்றி |
|
|
|
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி |
|
|
|
முழுவதும் இறந்த முதல்வா போற்றி |
|
|
|
மான்நேர் நோக்கி மணாளா போற்றி |
|
|
|
வான்அகத்து அமரர் தாயே போற்றி |
|
|
|
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி |
|
|
|
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி |
|
|
|
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி |
|
|
|
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 |
|
|
|
|
|
|
|
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி |
|
|
|
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி |
|
|
|
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி |
|
|
|
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி |
|
|
|
இடைமருது உறையும் எந்தாய் போற்றி |
|
|
|
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி |
|
|
|
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி |
|
|
|
சீர் ஆர் திருவையாறா போற்றி |
|
|
|
அண்ணாமலை எம் அண்ணா போற்றி |
|
|
|
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150 |
|
|
|
|
|
|
|
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி |
|
|
|
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி |
|
|
|
பராய்த் துறை மேவிய பரனே போற்றி |
|
|
|
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி |
|
|
|
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி |
|
|
|
குற்றாலத்து எம் கூத்தா போற்றி |
|
|
|
கோகழி மேவிய கோவே போற்றி |
|
|
|
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி |
|
|
|
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி |
|
|
|
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 |
|
|
|
|
|
|
|
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி |
|
|
|
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு |
|
|
|
அத்திக்கு அருளிய அரசே போற்றி |
|
|
|
தென்னாடுடைய சிவனே போற்றி |
|
|
|
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி |
|
|
|
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி |
|
|
|
மானக் கயிலை மலையாய் போற்றி |
|
|
|
அருளிட வேண்டும் அம்மான் போற்றி |
|
|
|
இருள் கெட அருளும் இறைவா போற்றி |
|
|
|
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 |
|
|
|
|
|
|
|
களம் கொளக் கருத அருளாய் போற்றி |
|
|
|
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி |
|
|
|
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி |
|
|
|
அத்தா போற்றி ஐயா போற்றி |
|
|
|
நித்தா போற்றி நிமலா போற்றி |
|
|
|
பத்தா போற்றி பவனே போற்றி |
|
|
|
பெரியாய் போற்றி பிரானே போற்றி |
|
|
|
அரியாய் போற்றி அமலா போற்றி |
|
|
|
மறையோர் கோல நெறியே போற்றி |
|
|
|
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 |
|
|
|
|
|
|
|
உறவே போற்றி உயிரே போற்றி |
|
|
|
சிறவே போற்றி சிவமே போற்றி |
|
|
|
மஞ்சா போற்றி மணாளா போற்றி |
|
|
|
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி |
|
|
|
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி |
|
|
|
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி |
|
|
|
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி |
|
|
|
குவைப்பதி மலிந்த கோவே போற்றி |
|
|
|
மலை நாடு உடைய மன்னே போற்றி |
|
|
|
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190 |
|
|
|
|
|
|
|
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி |
|
|
|
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி |
|
|
|
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி |
|
|
|
மருவிய கருணை மலையே போற்றி |
|
|
|
துரியமும் இறந்த சுடரே போற்றி |
|
|
|
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி |
|
|
|
தேளா முத்தச் சுடரே போற்றி |
|
|
|
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி |
|
|
|
ஆரா அமுதே அருளா போற்றி |
|
|
|
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200 |
|
|
|
|
|
|
|
தாளி அறுகின் தாராய் போற்றி |
|
|
|
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி |
|
|
|
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி |
|
|
|
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி |
|
|
|
மந்திர மாமலை மேயாய் போற்றி |
|
|
|
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி |
|
|
|
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி |
|
|
|
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி |
|
|
|
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி |
|
|
|
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210 |
|
|
|
|
|
|
|
படி உறப் பயின்ற பாவக போற்றி |
|
|
|
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி |
|
|
|
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் |
|
|
|
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி |
|
|
|
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி |
|
|
|
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி |
|
|
|
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி |
|
|
|
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி |
|
|
|
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் |
|
|
|
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220 |
|
|
|
|
|
|
|
புரம்பல் எரித்த புராண போற்றி |
|
|
|
பரம் பரம் சோதிப் பரனே போற்றி |
|
|
|
போற்றி போற்றி புயங்கப் பெருமான் |
|
|
|
போற்றி போற்றி புராண காரண |
|
|
|
போற்றி போற்றி சய சய போற்றி 225 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
5. திருச்சதகம் |
|
|
|
|
|
|
|
(திருப்பெருந்துறையில் அருளியது) |
|
|
|
|
|
|
|
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) |
|
|
|
|
|
|
|
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் |
|
|
|
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் |
|
|
|
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் |
|
|
|
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5 |
|
|
|
|
|
|
|
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் |
|
|
|
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் |
|
|
|
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா |
|
|
|
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6 |
|
|
|
|
|
|
|
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி |
|
|
|
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் |
|
|
|
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் |
|
|
|
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7 |
|
|
|
|
|
|
|
சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி |
|
|
|
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே |
|
|
|
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் |
|
|
|
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8 |
|
|
|
|
|
|
|
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் |
|
|
|
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் |
|
|
|
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் |
|
|
|
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9 |
|
|
|
|
|
|
|
பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி |
|
|
|
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் |
|
|
|
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும் |
|
|
|
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10 |
|
|
|
|
|
|
|
முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள் |
|
|
|
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் |
|
|
|
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் |
|
|
|
உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11 |
|
|
|
|
|
|
|
உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும் |
|
|
|
இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின் |
|
|
|
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக் |
|
|
|
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12 |
|
|
|
|
|
|
|
பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் |
|
|
|
சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும் |
|
|
|
அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே |
|
|
|
புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 13 |
|
|
|
|
|
|
|
புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே |
|
|
|
தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை |
|
|
|
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே |
|
|
|
நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14 |
|
|
|
|
|
|
|
2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) |
|
|
|
|
|
|
|
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே |
|
|
|
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் |
|
|
|
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் |
|
|
|
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15 |
|
|
|
|
|
|
|
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் |
|
|
|
வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் |
|
|
|
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் |
|
|
|
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16 |
|
|
|
|
|
|
|
வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் |
|
|
|
இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் |
|
|
|
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் |
|
|
|
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17 |
|
|
|
|
|
|
|
ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் |
|
|
|
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் |
|
|
|
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் |
|
|
|
சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18 |
|
|
|
|
|
|
|
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி |
|
|
|
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் |
|
|
|
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு |
|
|
|
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19 |
|
|
|
|
|
|
|
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் |
|
|
|
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக் |
|
|
|
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன் |
|
|
|
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20 |
|
|
|
|
|
|
|
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் |
|
|
|
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் |
|
|
|
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் |
|
|
|
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21 |
|
|
|
|
|
|
|
அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம் |
|
|
|
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ் |
|
|
|
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன் |
|
|
|
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22 |
|
|
|
|
|
|
|
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய |
|
|
|
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே |
|
|
|
ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் |
|
|
|
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23 |
|
|
|
|
|
|
|
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு |
|
|
|
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே |
|
|
|
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் |
|
|
|
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24 |
|
|
|
|
|
|
|
3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் |
|
|
|
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் |
|
|
|
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் |
|
|
|
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு |
|
|
|
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் |
|
|
|
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா |
|
|
|
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் |
|
|
|
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25 |
|
|
|
|
|
|
|
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று |
|
|
|
போதுநான் வினைக் கேடன் என்பாய் போல |
|
|
|
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை |
|
|
|
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை |
|
|
|
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ |
|
|
|
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் |
|
|
|
முனைவனே முறையோ நான் ஆனவாறு |
|
|
|
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26 |
|
|
|
|
|
|
|
ஆயநான் மறையனும் நீயே ஆதல் |
|
|
|
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய |
|
|
|
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும் |
|
|
|
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் |
|
|
|
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் |
|
|
|
அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர் |
|
|
|
பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே |
|
|
|
எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. 27 |
|
|
|
|
|
|
|
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை |
|
|
|
பெருமானே என்று என்றே பேசிப் பேசிப் |
|
|
|
பூசின்தான் திருமேனி நிறைப் பூசி |
|
|
|
போற்றி எம்பெருமானே என்று பின்றா |
|
|
|
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை |
|
|
|
ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை |
|
|
|
மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ |
|
|
|
என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28 |
|
|
|
|
|
|
|
வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று |
|
|
|
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு |
|
|
|
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம் |
|
|
|
எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன் |
|
|
|
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி |
|
|
|
மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத் |
|
|
|
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் |
|
|
|
எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29 |
|
|
|
|
|
|
|
சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் |
|
|
|
கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி |
|
|
|
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் |
|
|
|
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர |
|
|
|
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை |
|
|
|
மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத் |
|
|
|
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித் |
|
|
|
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30 |
|
|
|
|
|
|
|
தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம் |
|
|
|
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக் |
|
|
|
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் |
|
|
|
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு |
|
|
|
இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி |
|
|
|
அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை |
|
|
|
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற் |
|
|
|
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31 |
|
|
|
|
|
|
|
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் |
|
|
|
கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் |
|
|
|
நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே |
|
|
|
நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே |
|
|
|
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் |
|
|
|
கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை |
|
|
|
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் |
|
|
|
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32 |
|
|
|
|
|
|
|
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் |
|
|
|
மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி |
|
|
|
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி |
|
|
|
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர |
|
|
|
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி |
|
|
|
ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற |
|
|
|
செச்சை மலர் புரையும் மேனி எங்கள் |
|
|
|
சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33 |
|
|
|
|
|
|
|
தேவர்க்கோ அறியாத தேவ தேவன் |
|
|
|
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை |
|
|
|
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி |
|
|
|
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை |
|
|
|
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான் |
|
|
|
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் |
|
|
|
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் |
|
|
|
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34 |
|
|
|
|
|
|
|
4. ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப் |
|
|
|
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் |
|
|
|
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே |
|
|
|
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35 |
|
|
|
|
|
|
|
அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் |
|
|
|
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப் |
|
|
|
பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே |
|
|
|
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36 |
|
|
|
|
|
|
|
மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே |
|
|
|
தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல் |
|
|
|
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் |
|
|
|
கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37 |
|
|
|
|
|
|
|
கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை |
|
|
|
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திருப் பாதம் |
|
|
|
முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் |
|
|
|
அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. 38 |
|
|
|
|
|
|
|
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு |
|
|
|
அடியவர்க்கு எளியான் நம் |
|
|
|
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் |
|
|
|
கசிந்து உணர்ந்து இருந்தேயும் |
|
|
|
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் |
|
|
|
செய்ததும் இலை நெஞ்சே |
|
|
|
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை |
|
|
|
பரகதி புகுவானே. 39 |
|
|
|
|
|
|
|
புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் |
|
|
|
குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு |
|
|
|
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி |
|
|
|
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40 |
|
|
|
|
|
|
|
வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத் |
|
|
|
திசையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதணாலே |
|
|
|
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன் |
|
|
|
இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே. 41 |
|
|
|
|
|
|
|
ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத |
|
|
|
தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனையென் சிவலோகக் |
|
|
|
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் |
|
|
|
ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே. 42 |
|
|
|
|
|
|
|
ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து |
|
|
|
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் |
|
|
|
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் |
|
|
|
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43 |
|
|
|
|
|
|
|
வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே |
|
|
|
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் |
|
|
|
தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன் |
|
|
|
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 44 |
|
|
|
|
|
|
|
5. கைம்மாறு கொடுத்தல் (கலிவிருத்தம்) |
|
|
|
|
|
|
|
இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் |
|
|
|
கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே |
|
|
|
வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு |
|
|
|
ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 45 |
|
|
|
|
|
|
|
உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் |
|
|
|
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை |
|
|
|
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் |
|
|
|
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 46 |
|
|
|
|
|
|
|
மேலை வானவ ரும்மறி யாததோர் |
|
|
|
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே |
|
|
|
ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் |
|
|
|
கால மேயுளை யென்றுகொல் காண்பதே. 47 |
|
|
|
|
|
|
|
காண லாம்பர மேகட் கிறந்ததோர் |
|
|
|
வாணி லாப் பொரு ளேயிங்கொர் பார்ப்பெனப் |
|
|
|
பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனைப் |
|
|
|
பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. 48 |
|
|
|
|
|
|
|
போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று |
|
|
|
ஆற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் |
|
|
|
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் |
|
|
|
கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே. 49 |
|
|
|
|
|
|
|
கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி |
|
|
|
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் |
|
|
|
நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும் |
|
|
|
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 50 |
|
|
|
|
|
|
|
எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் |
|
|
|
தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் |
|
|
|
முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ் |
|
|
|
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 51 |
|
|
|
|
|
|
|
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் |
|
|
|
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள் |
|
|
|
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் |
|
|
|
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 52 |
|
|
|
|
|
|
|
கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு |
|
|
|
இட்ட அன்பரொ டியாவருங் காணவே |
|
|
|
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை |
|
|
|
எட்டி னோடிரண் டும் அறி யேனையே. 53 |
|
|
|
|
|
|
|
அறிவ னேயமு தேஅடி நாயினேன் |
|
|
|
அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது |
|
|
|
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் |
|
|
|
அறிவ னோவல்ல னோஅரு ளீசனே. 54 |
|
|
|
|
|
|
|
6. அநுபோகசுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி |
|
|
|
நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான |
|
|
|
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே |
|
|
|
தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. 55 |
|
|
|
|
|
|
|
செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் |
|
|
|
பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா |
|
|
|
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் |
|
|
|
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. 56 |
|
|
|
|
|
|
|
போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி |
|
|
|
வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற |
|
|
|
சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட |
|
|
|
ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே. 57 |
|
|
|
|
|
|
|
உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் |
|
|
|
பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிக்கொண்டாய் |
|
|
|
மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் |
|
|
|
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. 58 |
|
|
|
|
|
|
|
மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட |
|
|
|
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் |
|
|
|
கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட |
|
|
|
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. 59 |
|
|
|
|
|
|
|
உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் |
|
|
|
உடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் |
|
|
|
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன் |
|
|
|
முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக் முடித்தாயே. 60 |
|
|
|
|
|
|
|
முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரைப் |
|
|
|
பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் |
|
|
|
துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் |
|
|
|
பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. 61 |
|
|
|
|
|
|
|
தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம் |
|
|
|
ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் |
|
|
|
தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத் |
|
|
|
தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே. 62 |
|
|
|
|
|
|
|
தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன |
|
|
|
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ |
|
|
|
என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் |
|
|
|
பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே. 63 |
|
|
|
|
|
|
|
புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று |
|
|
|
நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன் |
|
|
|
நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனுந் |
|
|
|
தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. 64 |
|
|
|
|
|
|
|
7. காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான |
|
|
|
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் |
|
|
|
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை |
|
|
|
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. 65 |
|
|
|
|
|
|
|
போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன் |
|
|
|
போற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை |
|
|
|
போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கில் கண்டாய் |
|
|
|
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66 |
|
|
|
|
|
|
|
போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல் |
|
|
|
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி |
|
|
|
போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் |
|
|
|
காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. 67 |
|
|
|
|
|
|
|
கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி |
|
|
|
விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி |
|
|
|
உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி |
|
|
|
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. 68 |
|
|
|
|
|
|
|
சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் |
|
|
|
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணைக் கரிய வாட்கண் |
|
|
|
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி |
|
|
|
இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. 69 |
|
|
|
|
|
|
|
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி |
|
|
|
பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி |
|
|
|
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி |
|
|
|
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. 70 |
|
|
|
|
|
|
|
எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி |
|
|
|
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி |
|
|
|
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி |
|
|
|
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. 71 |
|
|
|
|
|
|
|
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் |
|
|
|
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி |
|
|
|
வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி |
|
|
|
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே. 72 |
|
|
|
|
|
|
|
தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி |
|
|
|
பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி |
|
|
|
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமா வள்ளல் போற்றி |
|
|
|
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. 73 |
|
|
|
|
|
|
|
போற்றிப் புவனம் நீர்தீர் காலொடு வான மானாய் |
|
|
|
போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் |
|
|
|
போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய் |
|
|
|
போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. 74 |
|
|
|
|
|
|
|
8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் |
|
|
|
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம் |
|
|
|
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே |
|
|
|
புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. 75 |
|
|
|
|
|
|
|
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும் |
|
|
|
ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான் |
|
|
|
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே |
|
|
|
ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. 76 |
|
|
|
|
|
|
|
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் |
|
|
|
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான் |
|
|
|
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே |
|
|
|
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. 77 |
|
|
|
|
|
|
|
வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே |
|
|
|
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ |
|
|
|
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும் |
|
|
|
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. 78 |
|
|
|
|
|
|
|
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு |
|
|
|
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் |
|
|
|
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு |
|
|
|
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79 |
|
|
|
|
|
|
|
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால் |
|
|
|
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே |
|
|
|
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா |
|
|
|
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80 |
|
|
|
|
|
|
|
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு |
|
|
|
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் |
|
|
|
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு |
|
|
|
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81 |
|
|
|
|
|
|
|
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் |
|
|
|
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் |
|
|
|
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால் |
|
|
|
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82 |
|
|
|
|
|
|
|
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால் |
|
|
|
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் |
|
|
|
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் |
|
|
|
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83 |
|
|
|
|
|
|
|
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள் |
|
|
|
கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும் |
|
|
|
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் |
|
|
|
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84 |
|
|
|
|
|
|
|
9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) |
|
|
|
|
|
|
|
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய் |
|
|
|
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் |
|
|
|
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் |
|
|
|
மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85 |
|
|
|
|
|
|
|
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே |
|
|
|
பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று |
|
|
|
ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால் |
|
|
|
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86 |
|
|
|
|
|
|
|
அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ |
|
|
|
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் |
|
|
|
செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா |
|
|
|
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 87 |
|
|
|
|
|
|
|
காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் |
|
|
|
பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி |
|
|
|
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் |
|
|
|
ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88 |
|
|
|
|
|
|
|
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே |
|
|
|
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் |
|
|
|
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் |
|
|
|
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89 |
|
|
|
|
|
|
|
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு |
|
|
|
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் |
|
|
|
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் |
|
|
|
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90 |
|
|
|
|
|
|
|
தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு |
|
|
|
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் |
|
|
|
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு |
|
|
|
ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91 |
|
|
|
|
|
|
|
அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த |
|
|
|
மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு |
|
|
|
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே |
|
|
|
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92 |
|
|
|
|
|
|
|
பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன் |
|
|
|
அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால் |
|
|
|
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் |
|
|
|
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93 |
|
|
|
|
|
|
|
யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் |
|
|
|
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே |
|
|
|
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் |
|
|
|
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94 |
|
|
|
|
|
|
|
10. ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே |
|
|
|
வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை |
|
|
|
வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின் |
|
|
|
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் |
|
|
|
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து |
|
|
|
ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் |
|
|
|
கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன் |
|
|
|
கடையன் நாயினன் பட்ட கீழ்மையே. 95 |
|
|
|
|
|
|
|
மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே |
|
|
|
வந்து என்னைப் பணிகொண்ட பின்மழக் |
|
|
|
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் |
|
|
|
அரியை என்று உனைக் கருது கின்றேன் |
|
|
|
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய் |
|
|
|
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் |
|
|
|
பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ |
|
|
|
போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே. 96 |
|
|
|
|
|
|
|
பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் |
|
|
|
போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும் |
|
|
|
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் |
|
|
|
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே |
|
|
|
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் |
|
|
|
நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை |
|
|
|
இருத்தினாய் முறையோ என் எம்பிரான் |
|
|
|
வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே. 97 |
|
|
|
|
|
|
|
இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே |
|
|
|
ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே |
|
|
|
கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு |
|
|
|
என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் |
|
|
|
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் |
|
|
|
ஏதுகொண்டு நான் ஏது செய்யினும் |
|
|
|
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் |
|
|
|
காட்டி மீட்கவும் மறு இல் வானனே. 98 |
|
|
|
|
|
|
|
வான நாடரும் அறி ஒணாத நீ |
|
|
|
மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ |
|
|
|
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ |
|
|
|
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா |
|
|
|
ஊனை நாடகம் ஆடு வித்தவா |
|
|
|
உருகி நான் உனைப் பருக வைத்தவா |
|
|
|
ஞான நாடகம் ஆடு வித்தவா |
|
|
|
நைய வையகத்து உடைய விச்சையே. 99 |
|
|
|
|
|
|
|
விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய் |
|
|
|
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் |
|
|
|
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் |
|
|
|
புலையனேனை உன்கோயில் வாயிலிற் |
|
|
|
பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு |
|
|
|
உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் |
|
|
|
நச்சு மாமரம் ஆயினும் கொலார் |
|
|
|
நானும் அங்கனே உடைய நாதனே. 100 |
|
|
|
|
|
|
|
உடைய நாதனே போற்றி நின் அலால் |
|
|
|
பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி |
|
|
|
உடையனே பணி போற்றி உம்பரார் |
|
|
|
தம் பராபரா போற்றி யாரினும் |
|
|
|
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் |
|
|
|
கருணையாளனே போற்றி என்னை நின் |
|
|
|
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் |
|
|
|
அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே. 101 |
|
|
|
|
|
|
|
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே |
|
|
|
அகம்நெக அள் ஊறு தேன் |
|
|
|
ஒப்பனே உனக்கு அரிய அன்பரில் |
|
|
|
உரியனாய் உனைப் பருக நின்றது ஓர் |
|
|
|
துப்பனே சுடர் முடியனே துணை |
|
|
|
யாளனே தொழும்பாளர் எய்ப்பனில் |
|
|
|
வைப்பனே எனை வைப்பதோ சொலாய் |
|
|
|
நைய வையகத்து எங்கள் மன்னனே. 102 |
|
|
|
|
|
|
|
மன்ன எம்பிரான் வருக என் எனை |
|
|
|
மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் |
|
|
|
முன்ன எம்பிரான் வருக என் எனை |
|
|
|
முழுதும் யாவையும் இறுதி உற்ற நான் |
|
|
|
பின்ன எம்பிரான் வருக என் எனைப் |
|
|
|
பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால் |
|
|
|
பன்ன எம்பிரான் வருக என் எனைப் |
|
|
|
பாவ நாச நின் சீர்கள் பாடவே. 103 |
|
|
|
|
|
|
|
பாடவேன்டும் நான் போற்றி நின்னையே |
|
|
|
பாடிநைந்துறைந்துறுகி நெக்குநெக்கு |
|
|
|
ஆடவேன்டும் நான் போற்றி அம்பலத் |
|
|
|
தாடுநின்கழற்போது நாயினேன் |
|
|
|
கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக் |
|
|
|
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் |
|
|
|
வீடவேண்டும் நான் போற்றி வீடுதந் |
|
|
|
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 104 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
6. நீத்தல் விண்ணப்பம் |
|
|
|
|
|
|
|
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) |
|
|
|
|
|
|
|
கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட |
|
|
|
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் |
|
|
|
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே |
|
|
|
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105 |
|
|
|
|
|
|
|
கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் |
|
|
|
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் |
|
|
|
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே |
|
|
|
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106 |
|
|
|
|
|
|
|
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் |
|
|
|
வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் |
|
|
|
ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே |
|
|
|
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107 |
|
|
|
|
|
|
|
வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் |
|
|
|
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று |
|
|
|
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே |
|
|
|
தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108 |
|
|
|
|
|
|
|
செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள் |
|
|
|
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் |
|
|
|
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே |
|
|
|
வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109 |
|
|
|
|
|
|
|
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே |
|
|
|
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி |
|
|
|
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே |
|
|
|
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110 |
|
|
|
|
|
|
|
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட |
|
|
|
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று |
|
|
|
மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111 |
|
|
|
|
|
|
|
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று |
|
|
|
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ |
|
|
|
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112 |
|
|
|
|
|
|
|
இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த |
|
|
|
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு |
|
|
|
ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113 |
|
|
|
|
|
|
|
பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று |
|
|
|
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி |
|
|
|
ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114 |
|
|
|
|
|
|
|
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள் |
|
|
|
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே |
|
|
|
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115 |
|
|
|
|
|
|
|
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு |
|
|
|
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ |
|
|
|
அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே. 116 |
|
|
|
|
|
|
|
கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம் |
|
|
|
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் |
|
|
|
உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117 |
|
|
|
|
|
|
|
வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும் |
|
|
|
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் |
|
|
|
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118 |
|
|
|
|
|
|
|
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள |
|
|
|
வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம் |
|
|
|
ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119 |
|
|
|
|
|
|
|
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் |
|
|
|
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே |
|
|
|
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120 |
|
|
|
|
|
|
|
பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார் |
|
|
|
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் |
|
|
|
அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121 |
|
|
|
|
|
|
|
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் |
|
|
|
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் |
|
|
|
அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122 |
|
|
|
|
|
|
|
மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும் |
|
|
|
விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர் |
|
|
|
ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123 |
|
|
|
|
|
|
|
கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே |
|
|
|
வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா |
|
|
|
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே |
|
|
|
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124 |
|
|
|
|
|
|
|
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண் |
|
|
|
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் |
|
|
|
தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து |
|
|
|
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125 |
|
|
|
|
|
|
|
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் |
|
|
|
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு |
|
|
|
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் |
|
|
|
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126 |
|
|
|
|
|
|
|
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் |
|
|
|
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் |
|
|
|
மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே |
|
|
|
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127 |
|
|
|
|
|
|
|
உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி |
|
|
|
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் |
|
|
|
பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா |
|
|
|
மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128 |
|
|
|
|
|
|
|
எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த |
|
|
|
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க |
|
|
|
உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் |
|
|
|
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129 |
|
|
|
|
|
|
|
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த |
|
|
|
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி |
|
|
|
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் |
|
|
|
குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130 |
|
|
|
|
|
|
|
கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி |
|
|
|
விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து |
|
|
|
அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் |
|
|
|
கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131 |
|
|
|
|
|
|
|
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே |
|
|
|
விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் |
|
|
|
கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே |
|
|
|
துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. 132 |
|
|
|
|
|
|
|
குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் |
|
|
|
விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை |
|
|
|
அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே |
|
|
|
மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133 |
|
|
|
|
|
|
|
மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி |
|
|
|
வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக் |
|
|
|
கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் |
|
|
|
தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134 |
|
|
|
|
|
|
|
சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் |
|
|
|
விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய் |
|
|
|
பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக் |
|
|
|
கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. 135 |
|
|
|
|
|
|
|
அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை |
|
|
|
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால் |
|
|
|
தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக் |
|
|
|
கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136 |
|
|
|
|
|
|
|
கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து |
|
|
|
மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள் |
|
|
|
பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் |
|
|
|
கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137 |
|
|
|
|
|
|
|
குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில் |
|
|
|
விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய |
|
|
|
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து |
|
|
|
எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே. 138 |
|
|
|
|
|
|
|
பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு |
|
|
|
விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின் |
|
|
|
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் |
|
|
|
பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139 |
|
|
|
|
|
|
|
பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ |
|
|
|
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம் |
|
|
|
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு |
|
|
|
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140 |
|
|
|
|
|
|
|
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால் |
|
|
|
விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண் |
|
|
|
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா |
|
|
|
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந் தடர்வனவே. 141 |
|
|
|
|
|
|
|
அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம் |
|
|
|
விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ் |
|
|
|
சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே |
|
|
|
தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142 |
|
|
|
|
|
|
|
தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த |
|
|
|
வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய |
|
|
|
மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக் கெய்ப்பில்வைப்பே |
|
|
|
தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143 |
|
|
|
|
|
|
|
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு |
|
|
|
மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் |
|
|
|
கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் |
|
|
|
மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே. 144 |
|
|
|
|
|
|
|
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி |
|
|
|
விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக் கூன்மிடைந்த |
|
|
|
சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ |
|
|
|
திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145 |
|
|
|
|
|
|
|
கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா |
|
|
|
விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற் |
|
|
|
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி |
|
|
|
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146 |
|
|
|
|
|
|
|
மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி |
|
|
|
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல் |
|
|
|
சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர் |
|
|
|
முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147 |
|
|
|
|
|
|
|
முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுதும் |
|
|
|
விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள் |
|
|
|
தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் |
|
|
|
பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னைப் பாடுவனே. 148 |
|
|
|
|
|
|
|
பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன் |
|
|
|
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித் |
|
|
|
தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று |
|
|
|
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149 |
|
|
|
|
|
|
|
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் |
|
|
|
விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண் |
|
|
|
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் |
|
|
|
பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150 |
|
|
|
|
|
|
|
பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து |
|
|
|
விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் |
|
|
|
கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை |
|
|
|
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151 |
|
|
|
|
|
|
|
தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் |
|
|
|
வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார் |
|
|
|
ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின் |
|
|
|
சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152 |
|
|
|
|
|
|
|
சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று |
|
|
|
விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின் |
|
|
|
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு |
|
|
|
எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே. 153 |
|
|
|
|
|
|
|
ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து |
|
|
|
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின் |
|
|
|
தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக் |
|
|
|
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7. திருவெம்பாவை |
|
|
|
|
|
|
|
(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது) |
|
|
|
(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா) |
|
|
|
|
|
|
|
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் |
|
|
|
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் |
|
|
|
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் |
|
|
|
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் |
|
|
|
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து |
|
|
|
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் |
|
|
|
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே |
|
|
|
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155 |
|
|
|
|
|
|
|
பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் |
|
|
|
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே |
|
|
|
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் |
|
|
|
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி |
|
|
|
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத் |
|
|
|
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் |
|
|
|
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் |
|
|
|
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156 |
|
|
|
|
|
|
|
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் |
|
|
|
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் |
|
|
|
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் |
|
|
|
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் |
|
|
|
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ |
|
|
|
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ |
|
|
|
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை |
|
|
|
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157 |
|
|
|
|
|
|
|
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ |
|
|
|
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ |
|
|
|
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் |
|
|
|
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே |
|
|
|
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் |
|
|
|
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் |
|
|
|
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து |
|
|
|
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158 |
|
|
|
|
|
|
|
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் |
|
|
|
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் |
|
|
|
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் |
|
|
|
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் |
|
|
|
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் |
|
|
|
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) |
|
|
|
ஓலம் இடினும் உணராய் உணராய்காண் |
|
|
|
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159 |
|
|
|
|
|
|
|
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை |
|
|
|
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே |
|
|
|
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ |
|
|
|
வானே நிலனே பிறவே அறிவரியான் |
|
|
|
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் |
|
|
|
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் |
|
|
|
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் |
|
|
|
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160 |
|
|
|
|
|
|
|
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் |
|
|
|
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் |
|
|
|
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் |
|
|
|
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் |
|
|
|
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும் |
|
|
|
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ |
|
|
|
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் |
|
|
|
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161 |
|
|
|
|
|
|
|
கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும் |
|
|
|
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் |
|
|
|
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை |
|
|
|
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ |
|
|
|
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் |
|
|
|
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ |
|
|
|
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை |
|
|
|
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162 |
|
|
|
|
|
|
|
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே |
|
|
|
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே |
|
|
|
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் |
|
|
|
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் |
|
|
|
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து |
|
|
|
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம் |
|
|
|
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் |
|
|
|
என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163 |
|
|
|
|
|
|
|
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் |
|
|
|
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே |
|
|
|
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன் |
|
|
|
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் |
|
|
|
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன் |
|
|
|
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள் |
|
|
|
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் |
|
|
|
ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164 |
|
|
|
|
|
|
|
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் |
|
|
|
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி |
|
|
|
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற் |
|
|
|
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல் |
|
|
|
மையார் தடங்கண் மடந்தை மணவாளர் |
|
|
|
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் |
|
|
|
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங் |
|
|
|
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165 |
|
|
|
|
|
|
|
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் |
|
|
|
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் |
|
|
|
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும் |
|
|
|
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி |
|
|
|
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் |
|
|
|
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் |
|
|
|
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம் |
|
|
|
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166 |
|
|
|
|
|
|
|
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் |
|
|
|
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் |
|
|
|
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால் |
|
|
|
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த |
|
|
|
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் |
|
|
|
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப் |
|
|
|
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் |
|
|
|
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167 |
|
|
|
|
|
|
|
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் |
|
|
|
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் |
|
|
|
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி |
|
|
|
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி |
|
|
|
சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி |
|
|
|
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் |
|
|
|
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன் |
|
|
|
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168 |
|
|
|
|
|
|
|
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் |
|
|
|
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர |
|
|
|
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் |
|
|
|
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள் |
|
|
|
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் |
|
|
|
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் |
|
|
|
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி |
|
|
|
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169 |
|
|
|
|
|
|
|
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான் |
|
|
|
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் |
|
|
|
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் |
|
|
|
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் |
|
|
|
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் |
|
|
|
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு |
|
|
|
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே |
|
|
|
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170 |
|
|
|
|
|
|
|
செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் |
|
|
|
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் |
|
|
|
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி |
|
|
|
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் |
|
|
|
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை |
|
|
|
அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை |
|
|
|
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் |
|
|
|
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171 |
|
|
|
|
|
|
|
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் |
|
|
|
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் |
|
|
|
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் |
|
|
|
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் |
|
|
|
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர் |
|
|
|
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் |
|
|
|
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் |
|
|
|
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172 |
|
|
|
|
|
|
|
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று |
|
|
|
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் |
|
|
|
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் |
|
|
|
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க |
|
|
|
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க |
|
|
|
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க |
|
|
|
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் |
|
|
|
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173 |
|
|
|
|
|
|
|
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் |
|
|
|
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் |
|
|
|
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் |
|
|
|
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் |
|
|
|
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் |
|
|
|
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் |
|
|
|
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் |
|
|
|
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
8. திரு அம்மானை |
|
|
|
|
|
|
|
(திருவண்ணாமலையில் அருளியது - |
|
|
|
தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு ) |
|
|
|
|
|
|
|
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய |
|
|
|
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி |
|
|
|
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு |
|
|
|
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் |
|
|
|
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் |
|
|
|
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175 |
|
|
|
|
|
|
|
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் |
|
|
|
ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய |
|
|
|
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி |
|
|
|
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த |
|
|
|
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் |
|
|
|
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176 |
|
|
|
|
|
|
|
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் |
|
|
|
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி |
|
|
|
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் |
|
|
|
சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான் |
|
|
|
பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த |
|
|
|
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177 |
|
|
|
|
|
|
|
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் |
|
|
|
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய |
|
|
|
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு |
|
|
|
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து |
|
|
|
தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த |
|
|
|
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178 |
|
|
|
|
|
|
|
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை |
|
|
|
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் |
|
|
|
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை |
|
|
|
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் |
|
|
|
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் |
|
|
|
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179 |
|
|
|
|
|
|
|
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் |
|
|
|
திIட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் |
|
|
|
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் |
|
|
|
தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி |
|
|
|
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த |
|
|
|
ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180 |
|
|
|
|
|
|
|
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் |
|
|
|
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் |
|
|
|
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை |
|
|
|
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் |
|
|
|
தாயான தத்துவனைத் தானே உலகேழும் |
|
|
|
ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய். 181 |
|
|
|
|
|
|
|
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் |
|
|
|
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் |
|
|
|
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் |
|
|
|
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை |
|
|
|
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு |
|
|
|
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 |
|
|
|
|
|
|
|
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் |
|
|
|
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் |
|
|
|
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் |
|
|
|
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் |
|
|
|
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் |
|
|
|
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183 |
|
|
|
|
|
|
|
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை |
|
|
|
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் |
|
|
|
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் |
|
|
|
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் |
|
|
|
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட |
|
|
|
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 184 |
|
|
|
|
|
|
|
செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் |
|
|
|
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் |
|
|
|
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த |
|
|
|
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே |
|
|
|
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும் |
|
|
|
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185 |
|
|
|
|
|
|
|
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் |
|
|
|
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் |
|
|
|
இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து |
|
|
|
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் |
|
|
|
எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் |
|
|
|
அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186 |
|
|
|
|
|
|
|
கையார் வளைசிலம்பக் காதர் குழையாட |
|
|
|
மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச் |
|
|
|
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் |
|
|
|
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு |
|
|
|
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை |
|
|
|
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187 |
|
|
|
|
|
|
|
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் |
|
|
|
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை |
|
|
|
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து |
|
|
|
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய |
|
|
|
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் |
|
|
|
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188 |
|
|
|
|
|
|
|
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் |
|
|
|
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து |
|
|
|
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் |
|
|
|
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து |
|
|
|
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் |
|
|
|
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189 |
|
|
|
|
|
|
|
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து |
|
|
|
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் |
|
|
|
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும் |
|
|
|
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் |
|
|
|
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் |
|
|
|
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190 |
|
|
|
|
|
|
|
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் |
|
|
|
கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று |
|
|
|
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் |
|
|
|
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் |
|
|
|
வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி |
|
|
|
ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191 |
|
|
|
|
|
|
|
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை |
|
|
|
வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் |
|
|
|
தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில் |
|
|
|
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் |
|
|
|
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ |
|
|
|
அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192 |
|
|
|
|
|
|
|
முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் |
|
|
|
பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின் |
|
|
|
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் |
|
|
|
தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை |
|
|
|
என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை |
|
|
|
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193 |
|
|
|
|
|
|
|
பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் |
|
|
|
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் |
|
|
|
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் |
|
|
|
சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே |
|
|
|
பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் |
|
|
|
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் |
|
|
|
|
|
|
|
(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்) |
|
|
|
|
|
|
|
முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி |
|
|
|
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் |
|
|
|
சக்தியும் சோமியும் பார்மகளும் |
|
|
|
நாமகளோடுபல்லாண்டிசைமின் |
|
|
|
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் |
|
|
|
கங்கையும் வந்து கவரிகொண்மின் |
|
|
|
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி |
|
|
|
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195 |
|
|
|
|
|
|
|
பூவியல் வார்சடை எம்பிராற்குப் |
|
|
|
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் |
|
|
|
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் |
|
|
|
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் |
|
|
|
கூவுமின் தொண்டர் புறநிலாமே |
|
|
|
குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் |
|
|
|
தேவியுந் தானும்வந்தெம்மையாளச் |
|
|
|
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196 |
|
|
|
|
|
|
|
சுந்தர நீறணந் தும்மெழுகித் |
|
|
|
தூயபொன்சிந்தி நிதிநிரப்பி |
|
|
|
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் |
|
|
|
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் |
|
|
|
அந்தார் கோன்அயன் தன்பெருமான் |
|
|
|
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை |
|
|
|
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் |
|
|
|
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197 |
|
|
|
|
|
|
|
காசணி மின்கள் உலக்கையெல்லாம் |
|
|
|
காம்பணி மின்கள் கறையுரலை |
|
|
|
நேசமுடைய அடியவர்கள் |
|
|
|
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் |
|
|
|
தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் |
|
|
|
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் |
|
|
|
பாசவினையைப் பறிந்துநின்று |
|
|
|
பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198 |
|
|
|
|
|
|
|
அறுகெடுப்பார் அயனும்அரியும் |
|
|
|
அன்றிமற்றிந்திர னோடமரர் |
|
|
|
நறுமுது தேவர்கணங்கெளெல்லாம் |
|
|
|
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம் |
|
|
|
செறிவுடை மும்மதில் எய்தவில்லி |
|
|
|
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி |
|
|
|
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் |
|
|
|
காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199 |
|
|
|
|
|
|
|
உலக்கை பலஒச்சு வார்பெரியர் |
|
|
|
உலகமெலாம்உரல் போதாதென்றே |
|
|
|
கலக்க அடியவர் வந்துநின்றார் |
|
|
|
காண உலகங்கள் போதாதென்றே |
|
|
|
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு |
|
|
|
நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த |
|
|
|
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து |
|
|
|
பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200 |
|
|
|
|
|
|
|
சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத் |
|
|
|
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப |
|
|
|
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப |
|
|
|
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் |
|
|
|
பாடக மெல்லடி யார்க்கு மங்கை |
|
|
|
பங்கினன் எங்கள் பராபரனுக்கு |
|
|
|
ஆடக மாமலை அன்னகோவுக் |
|
|
|
காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201 |
|
|
|
|
|
|
|
வாள்தடங்கண்மட மங்கைநல்லீர் |
|
|
|
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் |
|
|
|
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் |
|
|
|
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி |
|
|
|
நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி |
|
|
|
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை |
|
|
|
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி |
|
|
|
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202 |
|
|
|
|
|
|
|
வையகம் எல்லாம் உரலதாக |
|
|
|
மாமேரு என்னும் உலக்கை நாட்டி |
|
|
|
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி |
|
|
|
மேதரு தென்னன் பெருந்துறையான் |
|
|
|
செய்ய திருவடி பாடிப்பாடிச் |
|
|
|
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி |
|
|
|
ஐயன் அணிதில்லை வாணனுக்கே |
|
|
|
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203 |
|
|
|
|
|
|
|
முத்தணி கொங்கைகள் ஆடஆட |
|
|
|
மொய்குழல் வண்டினம் ஆடஆடச் |
|
|
|
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் |
|
|
|
செங்கயற் கண்பனி ஆடஆடப் |
|
|
|
பித்தெம் பிரானொடும் ஆடஆடப் |
|
|
|
பிறவி பிறரொடும் ஆடஆட |
|
|
|
அத்தன் கருணையொ டாடஆட |
|
|
|
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204 |
|
|
|
|
|
|
|
மாடு நகைவாள் நிலாவெறிப்ப |
|
|
|
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் |
|
|
|
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் |
|
|
|
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் |
|
|
|
தேடுமின் எம்பெருமானைத்தேடி |
|
|
|
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி |
|
|
|
ஆடுமின் அம்பலத் தாடினானுக் |
|
|
|
காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205 |
|
|
|
|
|
|
|
மையமர் கண்டனை வானநாடர் |
|
|
|
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை |
|
|
|
ஐயனை ஐயர்பிரானைநம்மை |
|
|
|
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் |
|
|
|
பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் |
|
|
|
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் |
|
|
|
பையர வல்குல் மடந்தைநல்லீர் |
|
|
|
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206 |
|
|
|
|
|
|
|
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் |
|
|
|
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் |
|
|
|
என்னுடை ஆரமுதெங்களப்பன் |
|
|
|
எம்பெருமான் இம வான்மகட்குத் |
|
|
|
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் |
|
|
|
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் |
|
|
|
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் |
|
|
|
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207 |
|
|
|
|
|
|
|
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் |
|
|
|
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் |
|
|
|
செங்கனி வாயிதழுந்துடிப்பச் |
|
|
|
சேயிழை யீர் சிவலோகம் பாடிக் |
|
|
|
கங்கை இரைப்ப அராஇரைக்குங் |
|
|
|
கற்றைச் சடைமுடி யான்கழற்கே |
|
|
|
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் |
|
|
|
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208 |
|
|
|
|
|
|
|
ஞானக் கரும்பின் தெளியைப் பாகை |
|
|
|
நாடற் கரிய நலத்தை நந்தாத் |
|
|
|
தேனைப் பழச்சுவை ஆயினானைச் |
|
|
|
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல |
|
|
|
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட |
|
|
|
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் |
|
|
|
பானல் தடங்கண் மடந்தைநல்லீர் |
|
|
|
பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209 |
|
|
|
|
|
|
|
ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ |
|
|
|
டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் |
|
|
|
தேவர் கனாவிலுங் கண்டறியாச் |
|
|
|
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் |
|
|
|
சேவகம் ஏந்திய வெல்கொடியான் |
|
|
|
சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச் |
|
|
|
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் |
|
|
|
செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210 |
|
|
|
|
|
|
|
தேனக மாமலர்க் கொன்றைபாடிச் |
|
|
|
சிவபுரம் பாடித் திருச்சடைமேன் |
|
|
|
வானக மாமதிப் பிள்ளைபாடி |
|
|
|
மால்விடை பாடி வலக்கையேந்தும் |
|
|
|
ஊனக மாமழுச் சூலம்பாடி |
|
|
|
உம்பரும் இம்பரும் உய்யஅன்று |
|
|
|
போனக மாகநஞ் சுண்டல்பாடிப் |
|
|
|
பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211 |
|
|
|
|
|
|
|
அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி |
|
|
|
அருக்கன் எயிறு பறித்தல்பாடி |
|
|
|
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் |
|
|
|
காலனைக்காலால் உதைத்தல்பாடி |
|
|
|
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி |
|
|
|
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட |
|
|
|
நயந்தனைப் பாடிநின் றாடியாடி |
|
|
|
நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212 |
|
|
|
|
|
|
|
வட்டமலர்க்கொன்றை மாலைபாடி |
|
|
|
மத்தமும்பாடி மதியம்பாடிச் |
|
|
|
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் |
|
|
|
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் |
|
|
|
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக் |
|
|
|
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் |
|
|
|
இட்டுநின் றாடும் அரவம்பாடி |
|
|
|
ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213 |
|
|
|
|
|
|
|
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு |
|
|
|
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் |
|
|
|
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத் |
|
|
|
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் |
|
|
|
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப் |
|
|
|
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு |
|
|
|
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு |
|
|
|
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் |
|
|
|
|
|
|
|
(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) |
|
|
|
|
|
|
|
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த |
|
|
|
நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் |
|
|
|
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் |
|
|
|
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215 |
|
|
|
|
|
|
|
நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் |
|
|
|
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி |
|
|
|
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் |
|
|
|
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216 |
|
|
|
|
|
|
|
தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே |
|
|
|
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் |
|
|
|
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் |
|
|
|
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217 |
|
|
|
|
|
|
|
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் |
|
|
|
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி |
|
|
|
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் |
|
|
|
கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218 |
|
|
|
|
|
|
|
அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் |
|
|
|
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே |
|
|
|
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற |
|
|
|
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219 |
|
|
|
|
|
|
|
வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் |
|
|
|
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் |
|
|
|
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த |
|
|
|
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220 |
|
|
|
|
|
|
|
சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் |
|
|
|
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை |
|
|
|
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் |
|
|
|
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221 |
|
|
|
|
|
|
|
ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு |
|
|
|
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த |
|
|
|
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் |
|
|
|
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222 |
|
|
|
|
|
|
|
கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் |
|
|
|
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு |
|
|
|
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த |
|
|
|
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223 |
|
|
|
|
|
|
|
நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து |
|
|
|
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந் |
|
|
|
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத் |
|
|
|
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224 |
|
|
|
|
|
|
|
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே |
|
|
|
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட |
|
|
|
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் |
|
|
|
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225 |
|
|
|
|
|
|
|
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் |
|
|
|
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் |
|
|
|
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந் |
|
|
|
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226 |
|
|
|
|
|
|
|
நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம் |
|
|
|
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் |
|
|
|
ஆன கருணையும் அங்குற்றே தானவனே |
|
|
|
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227 |
|
|
|
|
|
|
|
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே |
|
|
|
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி |
|
|
|
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட |
|
|
|
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228 |
|
|
|
|
|
|
|
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் |
|
|
|
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் |
|
|
|
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் |
|
|
|
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229 |
|
|
|
|
|
|
|
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் |
|
|
|
கள்ளப் படாத களிவந்த வான்கருணை |
|
|
|
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் |
|
|
|
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230 |
|
|
|
|
|
|
|
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் |
|
|
|
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட |
|
|
|
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன் |
|
|
|
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231 |
|
|
|
|
|
|
|
தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் |
|
|
|
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் |
|
|
|
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் |
|
|
|
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232 |
|
|
|
|
|
|
|
கள்வன் கடியன் கலதியிவன் என்னாத |
|
|
|
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே |
|
|
|
உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந் |
|
|
|
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233 |
|
|
|
|
|
|
|
பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று |
|
|
|
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க |
|
|
|
நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த |
|
|
|
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234 |
|
|
|
|
|
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
Back |
|
|
|
|
|
|
|
This Unicode version was last revised on 13 Sept. 2012 |
|
|
|
Please send your comments and corrections to the Webmaster (pmadurai@gmail.com) |
|
|
|
|